Everything posted by Kavi arunasalam
-
தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் தேர்ந்த பௌத்த துறவி!
சில உண்மைகள் கசக்கத்தான் செய்யும். தமிழரும், சிங்களவரும் இலங்கையை ஆண்டிருக்கின்றார்கள் என்பதுதானே உண்மை. மற்றைய இடங்களை விட்டு நான் பிறந்து வளர்ந்த இடத்தைச் சுற்றியுள்ள இடங்களைப் பார்க்கிறேன். புலோலி என்றொரு பிரதேசம். புல்எலிய என்பதே பின்னாளில் புலோலி ஆனது. பின்னாளில் புலவர் கந்த முருகேசனார் அவர்கள், “புலவர்கள் குரல்கள் ஓயாமல் எப்பொழுதும் கேட்பதால் இந்த இடம் “புலவர்கள் ஒலி’ என்று அழைக்கப்பட்டு அது மருவி ‘புலோலி’ ஆகிவிட்டது” என விளக்கம் கொடுத்தார். பருத்தித்துறை, நெல்லியடி இரண்டுக்கும் இடையில் மாலிசந்தி என்றொரு இடம் இருக்கின்றது. பருத்தித்துறை, இன்பருட்டி, பொலிகண்டி, வல்வெட்டித்துறை ஆகிய இடங்களில் உள்ள கடலில் பிடிக்கப்படும் மீன்களை சந்தைப்படுத்தும் மையப் பகுதியாக மாலிசந்தி என்ற இடமே இருந்தது. அப்பொழுது அந்த இடம் ‘மாலு சந்த’ என்றே அழைக்கப்பட்டிருந்தது. அடுத்து வல்லிபுரக் குறிச்சி. இந்த இடத்தில்தான் சைவருக்குச் சம்பந்தமில்லாத வல்லிபுர ஆழ்வார் கோவில் இருக்கின்றது. கிருஸ்ணருக்கு ஆந்திராவிலேயே வல்லிபுரம் என்ற பெயர் இல்லை. மண் நிறைந்த பகுதி. நாங்கள் மணற்காடு என்று சொல்வோம். மண்-வலி (சிங்களத்தில்). சிங்களத்தில் ‘வலிபுர’ என அழைக்கப்பட்டு வல்லிபுரமானது. இப்படி தும்பள, திகிரி என நான் வாழ்ந்த பகுதியில் நிறையவே இருக்கின்றன. சட்டப்படி சீட்டு நடத்தும் ஒருவர் ஊரில் இருந்தார். அவரது காணியின் அடி உறுதியில், காணியின் பெயர் புத்தர் கோயில் என்றிருக்கிறது. அந்த அடி உறுதி நிச்சயமாக பருத்தித்துறை காணி பதிவு அலுவலகத்தில் இருக்கும். நாங்கள் ஒரு வட்டத்துக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்து கொண்டு வெளியே வர மறுக்கிறோம். நேற்று புலம் பெயர்ந்து வந்தோம். இன்று போய்ப் பார்த்தால், யாரோ ஒரு முகம் தெரியாத தமிழன் காணியை அபகரித்து அங்கே குடும்பமாக இருக்கிறான். அபகரிப்பு என்பது இரண்டு பக்கமும் இருக்கத்தான் செய்கின்றன.
-
பிரிந்திருந்த கருணா பிள்ளையான் மீண்டும் இணைவு
- கருத்துப்படம் 23.03.2025
From the album: கிறுக்கல்கள்
- துரோகி ( காட்டிக் கொடுப்பவன் )
வியாபாரி இன்னும் ஒரு கௌதாரிக்கு நல்ல உணவு கொடுத்து வளர்ககப் போகிறான்.- தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் தேர்ந்த பௌத்த துறவி!
நாங்கள் எந்த நாட்டிலும் கோயில்களைக் கட்டுவோம். வாழும் நாடுகளில் பாராளுமன்றத் தேர்தல்களிலும் பங்கு பற்றுவோம். எங்களிடம் எந்தவித உள் நோக்கங்களும் கிடையாது. நாங்கள் எல்லாவற்றிலும் சமரசம் காண்பவர்கள்.- பம்மாத்து - சுப.சோமசுந்தரம்
‘பம்மாத்து’ என்பதே எங்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து கிடைத்ததுதான்- எங்கள் பாசமிகு தந்தையார் மறைவு.
“தந்தையைப் போல் உலகிலே தெய்வம் உண்டோ ஒரு மகனுக்கு சகலதும் அவரெண்டால் விந்தையுண்டோ” ஆழ்ந்த இரங்கல் நெடுக்ஸ்.- மின்சார துண்டிப்பால் மூடப்பட்ட ஹீத்ரோ விமான நிலையம்!
பாதிக்கப்பட்ட அந்தப் பயணிகளில் நானும் ஒருவன். வெள்ளிக்கிழமை மதியம் 2.40க்கு யேர்மனிக்குப் பயணிக்க இருந்தேன். இன்று விமானம்இல்லையென காலையில் செய்தி வந்திருந்தது. ஒருவாறு இன்று (சனிக்கிழமை) காலை 7.05க்கு புறப்பட்ட விமானத்தில் இடம் கிடைத்தது. யேர்மனிக்கு வந்தபின் செய்திகளைப் பார்த்தால், “யேர்மனிக்கான பல விமானங்கள் இன்று பறக்கவில்லை என இருந்தது”- வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் முறுகல்
குற்றவாளிகளுடன் காவல்துறை நட்பாக இருக்கிறது என்று ஆளுனரே சொல்லிவிட்டாரே. இதற்குமேல் என்ன செய்ய இருக்கிறது?- தலைவரை கண்டா வரச்சொல்லுங்க
- யாழ்-27
- ‘பரமசிவன் பாத்திமா’: டிரைலரை வெளியிட்ட சீமான், அண்ணாமலை
அவளைத் தொடுவானேன்? கவலைப் படுவானேன்? கச்சேரி முன் கைகட்டி நிற்பானேன்?- அமெரிக்க, ஆஸி. தூதுவர்களுடன் சுமந்திரன் தனித்தனியாகச் சந்திப்பு
குமாரசாமி, செய்தியிலேயே சந்தித்தற்கான காரணம் சொல்லப்பட்டிருக்கிறதே- இராணுவத்தினர் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டனர் எனக்கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - நாமல் ராஜபக்ஷ
- கருத்துப்படம் 15.03.2025
From the album: கிறுக்கல்கள்
- தின்னாதே
ஒஸ்ரியாவில் லின்ஸ் நகரில் உள்ள பல் பொருள் அங்காடியான HOFER க்கு வார இறுதியில் ஒரு பெண் பொருட்கள் வாங்கச் சென்றிருந்தாள். முள்ளங்கி வாங்குவதற்காக அவள் ஒரு கட்டு முள்ளங்கியை எடுத்த போது அதில் இருந்து ஒரு முள்ளங்கி தரையில் விழுந்து விட்டது. அவள் தனது கையில் இருந்த முள்ளங்கிக் கட்டை எடுத்த இடத்தில் திரும்ப வைத்துவிட்டு கீழே விழுந்த முள்ளங்கியை எடுத்துக் கொண்டாள் அத்துடன் புதிதாக இன்னுமொரு முள்ளங்கிக் கட்டையும் எடுத்துக் கொண்டாள். வாங்கிய பொருட்களுக்கு பணத்தைச் செலுத்திவிட்டுப் புறப்பட்டால், வாசலில் இடைமறித்துக் கொண்டு அங்காடியில் பணியில் இருந்த பெண் டிடெக்டிவ் நின்றாள். "நீங்கள் தரையில் விழுந்த முள்ளங்கியை எடுத்து முதலில் உங்கள் ஜக்கெற்றுக்குள் போட்டீர்கள். பின்னர் அதை எடுத்து உங்கள் வாயில் போட்டு விட்டீர்கள். இந்தக் காட்சி வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது ஒரு குற்றச்செயல்" என்று அந்த டிடெக்டிவ் கூறினாள் . ‘என்னது, ஒரு முள்ளங்கியை வாயில் போட்டது குற்றமா?’ என அவள் திகைத்து நின்றாள். பல்பொருள் அங்காடியில் இலவச சிற்றுண்டி தடை செய்யப்பட்டிருக்கிறது. அந்த அங்காடியில் உணவு உட்கொள்வது ஒரு நிபந்தனையின் கீழ் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அதாவது அந்தப் பொருளுக்கான பணம் செலுத்தப்பட்டதின் பின்னரே அவற்றை உட்கொள்ள முடியும். இந்தச் செயலுக்காக அந்தப் பெண்மணி 246யூரோக்களும் 03 சென்ற்களும் செலுத்த வேண்டியிருந்தது. திருட்டை க் கண்டுபிடித்தற்கான செலவு 246 யூரோக்கள். முள்ளங்கியின் விலை 3 சென்ற்கள்.- அமெரிக்க, ஆஸி. தூதுவர்களுடன் சுமந்திரன் தனித்தனியாகச் சந்திப்பு
விளங்க நினைப்பவன், எதற்காக அதை எழுதினேன் என்பதை ஏன் விளங்க நினைக்கவில்லை?- கிழவனை கண்டா வரச்சொல்லுங்க
- அமெரிக்க, ஆஸி. தூதுவர்களுடன் சுமந்திரன் தனித்தனியாகச் சந்திப்பு
வேண்டாப் பெண்டாட்டி, கைபட்டாலும் குற்றம். கால்பட்டாலும் குற்றம்- வாழ்ந்து பார்க்க வேண்டும்
மூன்று அல்லது நான்கு நாட்களாக சவரம் செய்யாத முகம், கலைந்த தலை மயிர், அழுக்கான ஜக்கெற், நிறைந்த சோகம்... என பஸ் தரிப்பிடத்தில் அவன் நின்றிருந்தான். விரும்பத்தகாத ஒருவித நெடியும் அவனிடம் இருந்து வந்து கொண்டிருந்தது. அவனது முகத்தைப் பார்த்ததும் தமிழன்தான் என்று புரிந்து கொண்டேன். சனிக்கிழமை காலை நேரம், பஸ் தரிப்பிடத்தில் நானும் அவனும்தான் நின்றிருந்தோம். பஸ் வர இன்னும் சில நிமிடங்கள் இருந்தன. அவன் என்னைப் பார்ப்பதைத் தவிர்ப்பது எனக்குத் தெரிந்தது. அவனது பிரச்சினைதான் என்ன என்பதை அறிய விரும்பினேன். கொஞ்சம் நெருங்கிப் போனேன். நான் வருவதை உணர்ந்து ஒரு கணம் என்னைப் பார்த்தான் அந்தக் கணம் எனக்குப் போதுமானதாக இருந்தது. “தமிழோ?” குளிரில் வெடித்த அவனது வறண்ட இதழில் தோன்றிய ஒரு சிறிய புன்னகை தமிழன் என்பதை ஒத்துக் கொண்டது. “நீங்களும் பஸ்ஸுக்குத்தான் நிக்கிறீங்களோ?” தலையை ஆட்டி ஒப்புக் கொண்டான். சைகையால் மட்டும்தான் பேசுவான் என்று நினைத்தேன். ஆனால் பேசவும் செய்தான். “உங்களை எனக்குத் தெரியும். அடிக்கடி கண்டிருக்கிறன்” நான் இருக்கும் நகரில் இப்பொழுது பல தமிழர்கள் வசிக்கிறார்கள். எனக்கும் அவர்களுக்குமான தொடர்புகள் மிக மிகக் குறைவு. ஒவ்வொரு வார இறுதியிலும், பிறந்தநாள், பூப்புனித நீராட்டு விழா... என்று ஏதாவது நம் மத்தியில் நடந்து கொண்டேயிருக்கும். எல்லாவற்றுக்கும் போய்க் கொண்டிருக்க முடியாது. ஒரு விழாவுக்குப் போய் இன்னொன்றுக்குப் போகாவிட்டால் பிரச்சினை ஆகிவிடுகிறது. எங்களது கொண்டாட்டங்கள் வரம்பு வரையற்றவை. அதனால் இப்பொழுதெல்லாம் தமிழர்களுக்கு நான் வசிக்கும் நகரத்தில் யாரும் மண்டபங்களைத் தருவதில்லை. நாங்களும் விடுவதாயில்லை. எங்கள் நகரத்தில் இருந்து நாற்பது கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள இன்னொரு நகரத்தில் கொண்டாட்டங்களை ஆரம்பித்திருக்கின்றோம். இப்படியான அசௌகரியங்களால் நான் முற்று முழுதாக விழாக்களைத் தவிர்த்துக் கொண்டு வருகிறேன். அதனால் பலரது தொடர்புகள் எனக்கு இல்லாமற் போய் விட்டன.. புதிதாக வருபவர்களும் என்னுடன் பழக்கம் வைத்துக் கொள்வதில்லை. அதனால் பலரை எனக்குத் தெரியவில்லை. “வேலையாலை வாறீங்களோ?” “இல்லை அண்ணா. நேற்று ஒரு விசயமா வந்தனான். இப்ப திரும்பப் போறன்” “ அப்ப நீங்கள் இந்த Stadt (நகரம்) இல்லையோ?” “முந்தி இங்கை தான் இருந்தனான். இப்ப கிறைல்ஸ்ஹைம் எண்ட இடத்திலை இருக்கிறன்” “அங்கையோ வேலை செய்யிறீங்கள்?” “இல்லை, வேலை இல்லை” “ஏன்?” ஏதோ சொல்ல நினைத்தான். அதற்குள் பஸ் வந்துவிட்டது. சனிக்கிழமை அதுவும் காலை நேரம் என்பதால் ஆட்கள் இன்றி பஸ் வெறுமையாக இருந்தது. பஸ்ஸுக்குள் எனது இருக்கையைத் தாண்டிப் போக எத்தனித்தவன் என்னை ஒரு தரம் உற்று நோக்கினான். “இதிலை இருங்கோவன்” எனது இருக்கைக்கு நேரெதிரே இருந்த இருக்கையை அவனுக்குச் சுட்டிக் காட்டினேன். இந்த வார்த்தைகளை எதிர்பார்த்தவன் போல் சட்டென்று அதில் அமர்ந்து கொண்டான். “உங்களுக்கு என்னதான் பிரச்சினை? என்னத்துக்கு இந்தக் கோலம்?” “நான் நாட்டுக்குத் திரும்பிப் போறன்” அவன் இதைச் சொன்னதும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எவ்வளவோ சிரமங்களைச் சமாளித்து, பல இலட்சங்களைச் செலவழித்து வெளிநாடு போக வேண்டும் என்று நாட்டில் பலர் இருக்கும் போது, இவன் எதிர்மறையாக இருக்கிறானே என எண்ணிக் கொண்டேன். அவனேயே பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் தலை குனிந்திருந்தது. கொஞ்ச நேர அமைதிக்குப் பிறகு அவனே தொடர்ந்தான். “என்னை அவள் டிவோர்ஸ் எடுத்திட்டாள். இப்ப எனக்கு விசாவும் இல்லை” அவனுடைய நிலைக்கான காரணத்தைப் புரிந்துகொண்டேன். ஆனால் எதற்காக விசா இல்லாமல் போனது? என்ற கேள்வி என்னிடம் இருந்தது. ஆனால் அதைப் பற்றி அவனிடம் கேட்கவில்லை. அவன் சொல்ல விரும்பினால் சொல்லட்டும் என்று விட்டு விட்டேன். “அவள்தான் கல்யாணம் கட்டுறதுக்கு ஸ்பொன்சர் பண்ணி என்னை இஞ்சை கூப்பிட்டவள். கலியாணம் கட்டி வேலையும் செய்து கொண்டிருந்தனான். பிறகு இப்பிடி ஆகிப் போச்சு… டிவோர்ஸ்க்குப் போட்டுது…” பெருமூச்சு ஒன்று அவனிடம் இருந்து வந்தது. அவனே தொடர்ந்தான், எனக்கு விசா முடிஞ்சு போட்டுது. விசாவைப் புதுப்பிக்கப் போனால், அங்கை வைச்சே பிடிச்சு அனுப்பிப் போடுவாங்கள் எண்டு வேலையிடத்திலை சொன்னாங்கள்” “யார் சொன்னது? பைத்தியக்காரத்தனமா இருக்கு. நீங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறீங்கள். உங்களை ஏன் பிடிச்சு அனுப்பப் போறாங்கள்?” கோபத் தொனியில் வந்த என் பேச்சைக் கேட்டு நிமிர்ந்து என்னைப் பார்த்தான். “என்னோடை வேலை செய்யிற தமிழாக்கள்தான் சொன்னவையள்” யாரை நோவது என்று எனக்குத் தெரியவில்லை. “சரி.. டிவோர்ஸ் கேஸ் என்னாயிற்று?” “அது முடிஞ்சு ஒரு வருசமாச்சு. இப்ப அவள் இந்தியாவுக்குப் போய் கலியாணமும் கட்டிக் கொண்டு வந்திட்டாள். எங்கடை ஊர்க்காரன்தான். பேஸ்புக்கிலை படங்கள் போட்டிருக்கிறாள்” பேச்சை முடித்துக் கொண்டு அமைதியாகிப் போனான். அவனுக்கு உதவ வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். பஸ் நகரத்தை அடைந்திருந்தது. என்னை முதலில் இறங்கவிட்டு பின்னால் இறங்கினான். “தம்பி. ஒரு லோயரை வைச்சு உங்களின்ரை விசாப் பிரச்சினையைச் சரி செய்யலாம். டைவோர்ஸ் பிரச்சினையாலை நீங்கள் மன அழுத்தத்திலை இருந்ததாகச் சொல்லலாம். அதாலைதான் விசாவைப் புதுப்பிக்கப் போகேல்லை எண்டு… இன்னும் வழி இருக்கு" “நன்றியண்ணா. இந்தப் பிரச்சினைக்குப் பிறகு, எனக்கு ஒரு இந்தியன்தான் தன்ரை ரெஸ்ரோரண்டிலை வேலை தந்தவன். வேலை களவுதான். அவனின்ரை ரெஸ்ரோரண்டிலைதான் தங்கியிருந்தனான். போதும். ஒரு இடமும் போக வரேலாது. நான் முடிவெடுத்திட்டன். போன கிழமை பொலிஸிட்டைப் போய் நாட்டுக்குப் போகப் போறன் எண்டு சொன்னன். அவையள் வெளிநாட்டு அலுவலகத்துக்குப் போகச் சொல்லிச்சினம். அங்கை போய் அவையளோடை கதைச்சன். தங்கிறதுக்கு கிறைல்ஸ்ஹைமிலை ஒரு இடம் ஒழுங்கு செய்து தந்து வெள்ளிக்கிழமை வரச் சொல்லிச்சினம். நேற்றுத்தான், வெள்ளிக்கிழமை போனனான். சிறிலங்காவுக்குப் போறதுக்கு ரிக்கெற் செய்து தந்திருக்கினம். 18ந்திகதி பிளைற்” “இப்பவும் நீங்கள் இங்கை இருக்கிறதுக்கு வழி செய்ய முடியும். அவசரப்படாதையுங்கோ” “இல்லையண்ணா. போறதெண்டு முடிவெடுத்திட்டன். தாங்ஸ் அண்ணா” இதற்குமேல் நான் அவனை வற்புறுத்த விரும்பவில்லை. “ உங்களுக்குத்தானே கிறைல்ஸ்ஹைமிலை தங்கிறதுக்கு இடமிருக்கு. இஞ்சை, சனிக்கிழமை அதுவும் காலைமை வெள்ளென, என்ன செய்து கொண்டிருக்கிறீங்கள்?” “நான்.. நேற்றே ரிக்கெற்றெல்லாம் அவையிட்ட வேண்டிட்டன். இனி இஞ்சாலை வரமாட்டன். கலியாணம் கட்டின புதுசிலை நானும் அவளும் சுப்பர்மார்க்கெற்றிலை சாமான்கள் வாங்கிட்டு அந்த பஸ்ஸ்ராண்டிலை இருந்துதான் வீட்டுக்குப் போறதுக்கு பஸ் எடுக்கிறனாங்கள். அதுதான் சும்மா நடந்து வந்து அந்த பஸ்ஸ்ராண்டிலை இருந்தனான். அப்பிடியே இரவு முழுக்க அங்கையே வாங்கிலிலை படுத்திட்டன். சரி அண்ணை..” அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தேன். கிறைல்ஸ்ஹைம் போகும் பஸ்ஸை நோக்கி நடந்து கொண்டிருந்தான். பஸ்ஸில் ஏறப் போகும் நேரத்திலேயாவது திரும்பிப் பார்ப்பான் என்று நினைத்துக் கொண்டு நின்றேன். அவன் பார்க்கவேயில்லை.- தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
எங்கள் நாட்டவர்- ட்ரம்பிற்கு எதிராகத் திரும்பும் ஐரோப்பிய நாடுகள்?
சத்தியமா முடியேல்லை- டிராகன்: அரியர் வைப்பது கெத்தா? திரைப்படங்கள் கல்லூரி மாணவர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?
நானும் பார்த்து, சிரித்து மகிழ்ந்தேன். கையில் தாலியை. வைத்துக் கொண்டு கடைசி நேர கிளைமாக்ஸ் காட்சி பழைய படங்களில் பார்த்து சலித்துப் போனதொன்று.- தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
வில்லவன், நீங்கள் சொல்வது சரி. ஆனாலும் காஞ்சனாவுக்கு வாழ்நாள் முழுதும் அமைய இருந்த ஒரு அடக்குமுறையான வாழ்க்கையில் இருந்து விடுதலை கிடைத்திருக்கிறது அல்லவா? ஆக இருவருக்கும் ஒரு சுகமான முடிவு. Suvy, காஞ்சனாவின் நிலமை நன்றாகத்தான் இருக்கிறது. அவள் தன் விருப்பம்போல் வாழலாம்.- போலந்தில் அனைத்து ஆண்களுக்கும் கட்டாய இராணுவ பயிற்சி - டொனால்ட் டஸ்கின் அதிரடி அறிவிப்பு!
யேர்மனியிலும் பெண் இராணுவ வீரர்கள் இருக்கிறார்கள் அவர்களின் தொகை 24,000க்கு மேல். விகிதாசாரத்தின்படி யேர்மனிய இராணுவத்தில் 13 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள். உண்மை. யேர்மனி 500 பில்லியன் யூரோக்களை தனது பாதுகாப்புக்காக ஒதுக்க உள்ளது. ட்ரம்ப்தான் ஆட்சிக்கு வருவார் என்பதை ஏற்கனவே கணித்திருந்ததால், சென்ற வருடமே யேர்மனி இராணுவத்துக்கான பயிற்சிகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அதிகரித்திருந்தது. தாங்கள்தான் அடுத்த இலக்கு என சுவீடனிலும் ஒரு கருத்து இருக்கிறது என இன்றைய யேர்மனிய பத்திரிகைகளில் செய்தி இருக்கிறது. - கருத்துப்படம் 23.03.2025
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.