Everything posted by Kavi arunasalam
-
விகடன் இணையதள முடக்கத்தை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
எம்ஜிஆர் ஆட்சியில் கூட விகடன் கார்டூன் பிரச்சினைக்குள் மாட்டிக் கொண்டது. கார்டூனால் கடுப்பாகி ஆசிரியரைத் தூக்கி சிறையில் போட்டது எம்ஜிஆர் அரசு. பத்திரிகைகள் கூட்டாக கிளர்ந்து எழுந்ததால் எம்ஜிஆர் அவரை விடுதலை செய்தார். இத்தனைக்கும் எம்ஜிஆர் நடித்த ‘சிரித்து வாழ வேண்டும்” படத்தை இயக்கியவர்தான் விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியம்.
-
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
நிலாமதி, உங்கள் கருத்து உண்மையானது. ஆனாலும் இன்னும் கொஞ்சம் மிச்சம் சொற்பம் எங்களிடம் இருக்கத்தான் செய்கிறது. . இந்தக் கதை உண்மையானது. நான் வசிக்கும் மாநிலத்தில் மூன்று வருடங்களுக்கு முன் நடந்தது. இப்பொழுது காஞ்சனா மறுமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்று கேள்விப்பட்டேன்.
-
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
சுற்றுலா, வேலை, நண்பர்கள் சந்திப்பு, கொண்டாட்டம் என்று வெளியே சில நாட்கள் நாம் போய் இருந்து விட்டு வந்தாலும், வீட்டுக்கு திரும்ப வந்து சொந்தக் கட்டிலில் நித்திரை கொள்வது எப்போதும் மகிழ்ச்சியையும், அமைதியையும் நிம்மதியையும் தரும். அது தான் வீட்டின் தனித்துவமான தன்மை. ஆனால் தனது வீட்டில், தனது கட்டிலில் படுத்திருக்கும் காஞ்சனாவுக்கு மட்டும் நித்திரையும் வரவில்லை. அமைதியும் கிடைக்கவில்லை. இருட்டில் விழித்தபடி இருந்தாள். “நல்ல பெடியன், எங்கடை ஊர். ஓரளவு தூரத்துச் சொந்தம். நல்ல குடும்பம் எண்டு என்ரை அம்மா சொல்லுறா. இந்தக் கலியாணத்தைக் கட்டு. நல்ல வாழ்க்கை உனக்குக் கிடைக்கும்” அவளது தந்தை சொன்ன போது அவள் பதில் சொல்லவில்லை. யேர்மனியில் பிறந்து வேறு ஒரு கலாச்சாரத்துக்குள் வாழும் தனக்கு நாட்டில் இருந்து வரும் மாப்பிள்ளை ஒத்து வருமா? என்ற கேள்வியுடனே சில நாட்கள் போனது. அவளது நண்பிகளே கேட்டார்கள், ”என்னது? முன்பின் தெரியாத ஒருவன். நேரில் கூட பார்க்கவுமில்லை. உங்களுக்கு எப்பிடி இது சாத்தியமாகிறது?” அவர்களது கேள்வியிலும் உண்மை இருந்தது. காஞ்சனாவுக்கு ஐந்து வயாதாக இருக்கும் போது நடந்த கார் விபத்தில் தாயை இழந்திருந்தாள். அதன் பிறகு அவளது தந்தையே அவளுக்கு எல்லாமுமாக இருந்தார். எத்தனை பேர் கேட்டும், தனக்கு இன்னுமொரு கலியாணம் வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்து தனக்காக வாழும் தந்தையை எப்போதும் அவள் உயரத்திலையே வைத்திருந்தாள். அவரது வார்த்தைக்கு அவள் மறு பேச்சு சொன்னதும் இல்லை. சீதனமாக ஒரு இலட்சம் யூரோ, நகை, ஊரில் அவர்களுக்கு இருந்த காணி, பூமி, சிறீலங்காவில் இருந்து கல்யாணத்துக்கு உறவினர்கள் யேர்மனிக்கு வந்து போவதற்கான பயணச் செலவுகள், கல்யாணச் செலவு… என்று ஏகப்பட்ட செலவுகளுடன் எங்கள் நாட்டுக் முறைப்படி கரை சேர்ந்தாள் காஞ்சனா. கல்யாணம் முடிந்து ஒரு மாதம்தான். விடுமுறை முடிந்து விட்டது. பிரச்சினையும் தொடங்கி விட்டது. அன்று வேலை முடிந்து வீட்டுக்கதவைத் திறந்த போதே வீட்டில் புயல் மையம் கொண்டிருந்ததை காஞ்சனா விளங்கிக் கொண்டாள். “நேரம் என்ன எண்டு தெரியுதோ?” “நீங்கள்தானே கையிலை Mobile வைச்சிருக்கிறீங்கள். Mobile இலை நேரம் என்ன display செய்யேல்லையோ?” “எனக்குத் தெரியுது? உனக்குத்தான் தெரியேல்லை. ஒரு பொம்பிளை வீட்டுக்கு வாற நேரமே இது? “ “இப்பத்தானப்பா வேலை முடிஞ்சுது” “இரவு ஒன்பது மணிக்கோ? எல்லாரும் office முடிஞ்சு ஐஞ்சு ஆறு மணிக்குள்ளை வீட்டை போயிடுவாங்கள். உனக்கு மட்டும் ஒன்பது பத்து மணியாகுது” “இண்டைக்கு வேலை கூட. அதை முடிக்காமல் வரேலாது. அப்பிடி வந்து மிச்ச வேலையைச் செய்ய நாளைக்குப் போனால், ஒவ்வொரு நாளும் போக வேணுமோ எண்டு புராணம் பாடத் தொடங்கீடுவிங்கள்” “மகள் home office தான் செய்யிறாள். எப்போதாவது மாதத்திலை ஒண்டு இரண்டு நாட்களுக்குத்தான் officeக்குப் போவாள் எண்டு சொல்லித்தானே கலியாணம் செய்து வைச்சவை. “உண்மை. ஆனால் என்ரை வேலை அப்பிடி. சில வேலைகளை office க்குப் போய்த்தான் செய்யோணும்” “எனக்கென்னவோ நீ வேலைக்காக office க்குப் போறதாத் தெரியேல்லை” “மாதவன், களைச்சுப் போய் வந்திருக்கிறன். நல்லமுறையிலை கதையுங்கோ. சிறீலங்காவிலை இருக்கிற ஊர் வாழ்க்கையை இங்கை உள்ள வாழ்க்கை முறையோடை ஒப்பிட்டுப் பார்க்காதையுங்கோ. அங்கை உள்ள சூழல் வேறை. இங்கை வேறை. “நாங்கள் தமிழர்கள். எங்கை வாழ்ந்தாலும் எங்களின்ரை பண்பாடுகளை மாத்தேலாது. இரவு ஒன்பது பத்து மணிக்கு வீட்டுக்கு வாறதை என்னாலை ஒத்துக் கொள்ளேலாது” “முதலிலை நானும் மனித இனம் எண்டதை ஒத்துக் கொள்ளுங்கோ. எங்கடை கலாச்சாரம், பண்பாடுகள்... என்னை அடிமைப் படுத்தும் எண்டால் எனக்கு அது தேவையில்லை” “கலியாணம் பேசக்கை நீ நல்ல பிள்ளை, பண்பான பிள்ளை எண்டெல்லாம் எனக்குச் சொல்லிச்சினம். உடுப்பு, ஆளின்ரை நடை, செயல்பாடு எல்லாம் இஞ்சை வேறையாக் கிடக்கு” மனம் ஒரு நிலையில் இல்லாமல் கட்டிலில் நித்திரையின்றி தவித்துக் கொண்டிருந்த காஞ்சனா, அலைபேசியில் ஒலித்த “ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்“ பாடலைக் கேட்டு கட்டிலில் எழுந்து அமர்ந்து கொண்டாள். அந்தப் பாடலை தனது தந்தையின் தொலைபேசி அழைப்பாக அவள் அலைபேசியில் பதிவு செய்திருந்தாள். கட்டிலில் இருந்த படியே அலைபேசியைக் கையிலெடுத்து “சொல்லுங்கோ அப்பா” என்றாள். “மாதவன் ரெலிபோன் எடுத்தார்” “எடுப்பார் எண்டு எனக்குத் தெரியும்” “கதவைத் திறக்கேலாதாம் உனக்கு போன் எடுத்தால் answer இல்லையாம்” “அவராலை கதவைத் திறக்க ஏலாது. நான் கதவின்ரை பூட்டை முழுசா மாத்தீட்டன். Phoneஇலையும் அவரை block செய்திட்டன். எனக்கும் அவருக்கும் ஒத்து வரேல்லை. அவருக்கும் எனக்குமான கலியாண ஒப்பந்தம் முடிவுக்கு வருகுது. நான் lawyer ஓடை எல்லாம் கதைச்சிட்டன். நீங்கள் கலியாணம் என்று கேட்டபோதே நான் வேண்டாமெண்டு சொல்லியிருக்கோணும். அந்த நேரம் நான் உங்களின்ரை சொல்லை மதிச்சனே தவிர மற்றதையெல்லாம் சிந்திச்சுப் பாக்கேல்லை. இங்கை ஒவ்வொருநாளும் சண்டை. அவரின்ரை சந்தேகப் பார்வை, பேச்சு…… அப்பா, நான் நல்லா யோசிச்சுத்தான் இந்த முடிவுக்கு வந்தனான். மாதவனுக்கு சீதனமா ஊரிலை இருக்கிற சொத்துகள், பிறகு காசு, நகை எல்லாம் குடுத்தீங்கள். வேணுமெண்டால் ஒரு நட்ட ஈடாக மாதவனும் அவரின்ரை குடும்பமும் அதுகளை எடுத்துக் கொள்ளட்டும். என்னைக் கட்டினதாலை அவருக்கு யேர்மனி விசாவும் கிடைச்சிருக்கு. நல்ல வேலையையும் அவருக்கு ஏற்ற பொம்பிளையையும் அவர் தேடிக் கொள்ளட்டும். என்னைப் பொறுத்தவரை இனி அவர் எனக்கு வேண்டாம். மாதவனின்ரை சகல பொருட்களையும் கட்டி கராஜ்ஜுக்குள்ளை வைச்சிருக்கிறன். கராஜ் திறந்துதான் இருக்கு. எடுத்துக் கொண்டு போகச் சொல்லுங்கோ” அலைபேசியை வைத்து விட்டு காஞ்சனா கட்டிலில் படுத்தாள். நிம்மதியாக இருந்தது. இனி வீட்டுக் கட்டிலில் சுகமான தூக்கம் அவளுக்கு க் கிடைக்கலாம்.
-
பிட்டுக்கு மனம் சுமந்து
அது ஒரு காலம். இப்பொழுதெல்லாம் வருடத்துக்கு நான்கு முறையாவது பனி பெய்கிறதா என்பதுதான் நிலமை. இன்று மகளிர் தினம். நல்ல நேரம் பார்த்து கதை சொல்லியிருக்கிறீர்கள்.
-
பாடும் போது நீ தென்றல் காற்று
யாயினி, இது ஒருசெய்தி. அதனால்தான் இங்கே பகிர்ந்தேன்.
-
பாடும் போது நீ தென்றல் காற்று
பாடும் போது நீ தென்றல் காற்று அவள் துன்பத்தின் குவியலாகக் காணப்பட்டாள். சீரற்ற முறையில் அள்ளிப் போடப்பட்டிருந்த போர்வைகளும், சில பைகளும் நிறைந்த ஒரு நீல நிற ஷொப்பிங் டிரொலிக்குப் பக்கத்தில் அவள் அமர்ந்திருந்தாள். அவளது உடலை ஒரு தடிமனான ஜக்கெட் மூடியிருந்தது. இத்தாலியின் தென் பகுதியில் உள்ள அவெலினோ நகரத்தின் வீதியில் யாருமற்று அவள் அநாதையாக இருந்தாள். என்ஸோ கோஸ்டான்சா என்பவர், வீதியில் வீடற்றவளாக அமர்ந்திருந்த அந்தப் பெண்ணை தற்செயலாகக் கண்டு கொண்டார். அவருக்கு அவளை யாரென்று தெரியாது. ஆனாலும் அவளுக்கு ஏதாவது வழியில் உதவ வேண்டுமென நினைத்தார். அவள் வீதி ஓரத்தில் அமர்ந்திருந்த கோலத்திலேயே ஒரு புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டார். அவள் தெருவிலேயே தூங்கி அல்லல் படாமல் இருக்க, வீடற்றவர்களைப் பொறுப்பேற்று பராமரிக்கும் நிலையத்துக்கு அழைப்பை மேற்கொண்டு, அவளுக்கு உதவும்படியும் கேட்டுக் கொண்டார். அவர்களும் அவளுக்கு உதவ முன் வந்தார்கள். ஆனால் அவள் யாருடனும் தான் போக மாட்டேன் என பிடிவாதமாக மறுத்து விட்டாள். அவளிடம் பேச்சை வளர்த்ததில் அவள் நெதர்லாந்தைச் சேர்ந்தவள் என்ற விபரம் மட்டும் தெரிய வந்தது. வேறு வழிகளில் அவளுக்கு உதவலாமா என, என்ஸோ அவளிடம் கதைக்க எத்தனித்த போது, அவள் அந்த இடத்தைவிட்டு விலகி நடக்க ஆரம்பித்தாள். "இன்று காலையிலிருந்து இவள் இலக்கின்றி அலைந்து திரிந்து கொண்டு தனக்குத்தானே பேசிக்கொண்டிருக்கிறாள். தெற்கு இத்தாலியில் கடும் குளிர் நிலவும் காலம் இது. குளிரைத் தாங்கப் போதுமான உடைகளை அவள் அணிந்திருக்கவில்லை. என்னைப் போன்று பலரும் அவளுக்கு உதவ முன் வந்தார்கள். எல்லாமே வீணாகிப் போனது. யாருடைய உதவியையும் அவள் ஏற்பதாக இல்லை. என்னுடைய நகரத்தில் ஒரு பலவீனமான பெண் இத்தகைய சூழ்நிலையில் பல நாட்கள் வாழ்வது வேதனையைத் தருகின்றது. எதுவுமே செய்ய முடியாத நிலையில் நான் இருக்கிறேன். என்னுடைய இந்த நிலையை நான் அவமானமாக உணர்கிறேன்” என்ற நிலைத்தகவலை, தான் எடுத்த அவளது புகைப்படத்துடன் என்ஸோ பிப்ரவரி 21 அன்று முகநூலில் பதிவிட்டார். என்ஸோ பதிவிட்ட அந்தத் தகவல் பலன் கொடுத்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகு ரொபின் என்பவர் நெதர்லாந்தில் இருந்து என்ஸோவின் முகநூல் பதிவுக்குப் பதில் போட்டிருந்தார். அந்தப் பதிவில், “அவளது பெயர் ராணியா ஜெரிரி (39). 2008இல் யேர்மனியத் தொலைக்காட்சி ஒன்றில், ’யேர்மனி சுப்பர்ஸ்ராரைத் தேடுகின்றது’ என்ற பாடகர் நிகழ்ச்சியில், தெரிவு செய்யப்பட்ட பத்துப் பேரில் ஐந்தாவதாக வந்திருந்தவள்தான் ராணியா ஜெரிரி. ராணியா பாடகி மட்டுமல்ல ஒரு வானொலித் தொகுப்பாளரும் கூட. ராணியாவின் தாய் பல ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட அவள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு விட்டாள். அவளுக்கு ஒரு சகோதரன் இருக்கின்றான். அவன் நெதர்லாந்தில் வசிக்கின்றான். அல்ஜீரியரான அவளது தந்தைக்கு அவளுடன் எந்த தொடர்பும் இல்லை. மனச்சோர்வில் அவள் உட்கொண்ட மாத்திரைகளே அவளது இந்த நிலைக்கு காரணம் எனக் கருதுகிறோம்” என்றிருந்தது. ராணியா ஜெரிரியின் நண்பர் ரொபின், என்ஸோவுக்கு ஒரு வீடியோ பதிவையும் அனுப்பியிருந்தார். அதில், “உன்னைப் பெரிதும் தவறவிட்டு விட்டோம். நாங்கள், உன்னை நெதர்லாந்தில் பெரிதாகத் தேடினோம். நீ கிடைக்கவில்லை. உனக்கு உதவி ஏதும் தேவையெனில் நாங்கள் அவற்றைத் தரத் தயாராக இருக்கின்றோம். உனக்கு எங்களது உதவி ஏதும் தேவையில்லை என்று நீ கருதினால் கூட அதை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். நீ எங்களுடன் உரையாடினால் போதும். அதனால் நாங்கள் பெரிதும் மகிழ்ச்சி கொள்வோம். உனது குரலைக் கேட்க பெரிதும் விரும்புகின்றோம்” என்றிருந்தது. அந்த வீடியோவை ராணியாவி டம் என்ஸோ காட்டிய பொழுது அவள் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் என்ஸோ, அந் நகர மேஜரைத் தொடர்பு கொண்டு அவளது நிலைக்கு உதவும்படி கேட்டுக் கொண்டார். மீண்டும் ராணியாவிடம் இருந்து மறுப்பு வந்தது. “நான் என் சுய விருப்பில்தான் தெருவில் வசிக்கிறேன்” என்பது அவளது பதிலாக இருந்தது. பெப்ரவரி 24,25 இல் இரவு மீண்டும் கடுமையான குளிர். ராணியா குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தாள். அவளது மோசமான நிலையைப் புகைப்படம் எடுத்து மீண்டும் என்ஸோ முகநூலில் பதிய, அவரது நட்பு வட்டங்கள் ஒன்று சேர்ந்து உதவ முன் வந்தார்கள். இந்தமுறை ராணியா அசைந்து கொடுத்தாள். அவளுக்கான மருத்துவ உதவிகள், சூடான உணவு, தங்குவதற்கு ஹோட்டல் வசதிகள் கிடைத்தன. ராணியாவின் நிலையில் இப்பொழுது நல்ல முன்னேற்றம் வந்திருக்கின்றது. மார்ச் 1இல் இருந்து தொழில் அதிபர் ஒருவரின் வீட்டைப் பராமரிக்கும் வேலையை அவள் ஏற்றிருக்கின்றாள். இந்த நிலை தொடர்ந்தால் மீண்டும் அவள் பாடலாம், நல்லதொரு வாழ்வை அவள் தொடரலாம். வீதிகளில் வீழ்ந்திருப்போருக்குப் பின்னால் பல வலிமிக்க கதைகள் இருக்கும். நாங்கள் அவர்களைக் கடந்து போகும் போது, எங்கள் அவசரங்களில் இதை எல்லாம் எண்ணிப் பார்ப்பதில்லை. என்ஸோ போன்றவர்களால் மட்டும் அது முடிகிறது. படங்கள் விக்கிபீடியா, முகநூல்
-
விதியற்றவர்
உண்மை. அனுபவித்த சிலரை எனக்குத் தெரியும். ஆனாலும் வாழும் போதே போய் பார்த்துவிடுவது மனதுக்கு ஒரு நிம்மதியைத் தரும்.
-
ராணுவ ரகசியம்
விளங்கிக் கொண்டேன். ஒரு பக்கம் இருந்தாலே சொல்லத் தேவையில்லை. இங்கே மூன்று பக்கமும் சூழ்ந்திருப்பதால்…. பெயரை புரிந்து கொள்ள முடிகிறது ஏதோ ஒரு வாசம் உங்களிடம் இருக்கிறது🤪
-
பூனைகளின் பேச்சுவார்த்தை
பொதுவாக ட்ரம்ப்பை வடவமைக்கும் போது தலைமயிரை மஞ்சள் நிறத்தில் வடிவமைப்பார்கள். நீங்கள் (உடல் பருத்த) பூனையை முழுவதுமாக மஞ்சள் நிறத்தில் வடிவமைத்து அவரை கண் முன்னே கொண்டு வந்திருக்கிறீர்கள். பூனையும் அதன் பார்வையும் அருமை. பாராட்டுக்கள். தொடர்ந்து தாருங்கள்
-
ஆனந்தி சூரியபிரகாசம் , வானொலி
From the album: கலைஞர்கள், சமூக சேவையாளர்கள்
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
- கருத்துப்படம் 19.02.2024
From the album: கிறுக்கல்கள்
- நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
- கருத்துப்படம் 19.02.2025
From the album: கிறுக்கல்கள்
- ஒரு காரின் கடைசி வாக்குமூலம்
சின்னப் பெண், பெரிய பெண் இருவரையும் விடுங்கள். வாங்கினவருக்கு என்ன வந்தது? கொஞ்சம் கவனித்திருக்கலாம் அல்லவா? நான் உங்களைச் சொல்லவில்லை.- வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம்.
இடை தழுவி தனிமைநாடி தனியிடம் தேடினவர்களை ‘அம்போ’ என்று விட்டு விட்டு வாழும் வரை போராடுவதில் என்ன இருக்கப் போகிறது? கதை சொன்ன விதம் அருமை. உங்களுக்கு ‘ஜ’வில் ஒருவித மயக்கம் இருக்கிறது என நினைக்கிறேன். ஆரம்பத்தில் காதல் ஜோடி. பிறகு ஜவுளி. வடமராட்சிப் பக்கம் புடவை அல்லது சாரிதான்.- இலங்கையின் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் அருந்ததி ஸ்ரீரங்கநாதன் காலமானார்
- அருந்ததி ஸ்ரீரங்கநாதன் - இசை, நடனம், வானொலி
From the album: கலைஞர்கள், சமூக சேவையாளர்கள்
- காற்றாடி
அழகான படத்தை AI மூலம் உருவாக்கியிருக்கிறீர்கள். மழைத் துளிகள் உடலில் விழுந்து தெறிக்கும் அழகும் அதன் மேல் செலுத்தப்பட்ட ஒளியும் அருமை. சித்திரத்துக்கு அருகில்தான் அமர்ந்திருக்கிறீர்கள். தொடருங்கள்.- அர்ச்சுனா எம்.பி.யின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் படுகாயம்!
- கருத்துப்படம் 12.02.2025
From the album: கிறுக்கல்கள்
- தையிட்டி விகாரை விவகாரம்: மக்களின் விருப்பமே எமது தீர்மானம்; இன, மத வாதத்துக்கு இடமில்லை - அமைச்சர் சந்திரசேகரர்
- கருத்துப்படம் 10.02.2025
From the album: கிறுக்கல்கள்
- இராசநாயகம் பாரதி, ஊடகவியலாளர்
From the album: கலைஞர்கள், சமூக சேவையாளர்கள்
- பாட்டுக் கதைகள்
கொப்பி அடிப்பதை புகழ் பெற்ற கவிஞர்களே செய்கிறார்கள். தொழிலாளி திரைப்படத்தில், கவிஞர் ஆலங்குடி சோமு, “ஆண்டவன் உலகத்தின் முதலாளி அவனுக்கு நான் ஒரு தொழிலாளி..” என்றொரு பாடல் எழுதியிருந்தார். ரஜினி படத்தில், “ ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி..” என வைரமுத்து எழுதியிருப்பார் - கருத்துப்படம் 19.02.2024
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.