Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    18314
  • Joined

  • Last visited

  • Days Won

    12

Everything posted by ஏராளன்

  1. சென்னை மழை: மீண்டும் 2015 போன்ற நிலைமையா? பாதிக்கப்பட்ட மக்கள் என்ன சொல்கிறார்கள்? 5 டிசம்பர் 2023, 06:50 GMT புதுப்பிக்கப்பட்டது 26 நிமிடங்களுக்கு முன்னர் மிக்ஜாம் புயலால் சென்னையில் கொட்டித்தீர்த்த பெருமழை இப்பொது நின்றிருக்கிறது. ஆனால், மாநகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. தி நகர், அண்ணா சாலை போன்ற நகரின் பிரதான பகுதிகளில் நீர் வடிந்து தற்போது நிலைமை சற்று சரியாகி விட்டிருந்தாலும், மற்ற குடியிருப்புப் பகுதிகளில் பெரும்பாலும் நீர் தேங்கியிருக்கிறது. இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறியிருக்கின்றனர். பால், உணவு போன்ற அடிப்படை தேவைகள் இன்னும் கிடைக்கவில்லை என்கின்றனர் சிலர். களத்திலிருந்து பிபிசி செய்தியாளர்கள் சேகரித்து வழங்கிய மக்களின் குரல்கள் இங்கு தொகுத்து வழங்கப்படுகின்றன. இந்நிலையில் 4,000 கோடி ரூபாய் செலவில் திட்டப்பணிகள் செய்தும் சென்னையில் இந்த அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதை எதிர்க்கட்சிகள் விமர்சித்துவரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதற்கு எதிர்வினையாற்றியுள்ளார். படக்குறிப்பு, சைதாப்பேட்டை மறைமலை அடிகள் பாலம் அருகிலுள்ள பகுதி ‘மிண்டும் 2015 நிலையா?’ செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படு நீர் வரவிருக்கிறது என்ற தகவல் அவர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்று கூறுகிறார்கள் சைதாப்பேட்டை மறைமலை அடிகள் பாலம் அருகிலுள்ள மக்கள். அந்தப் பகுதியில் உள்ள பல குடிசைகள் மூழ்கியுள்ளன. குடியிருப்பு கட்டிடத்தில் முதல்மாடி வரை தண்ணீர் வந்ததாகக் கூறுகிறார்கள் இதனால் அவர்களது வீடுகளில் நீர் புகுந்து இப்பொது அவர்கள் தெருக்களிலும் பேருந்து நிறுத்தங்களிலும் நிற்பதாகக் கூறுகிறார்கள். படக்குறிப்பு, தாட்சாயணி சைதாப்பேட்டை குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் வசிக்கும் தாட்சாயணி, 2015-ஆம் ஆண்டின் சென்னை பெருவெள்ளத்தின் போது சந்தித்த அதே சூழ்நிலையை மீண்டும் எதிர்நோக்க வேண்டுமோ என்ற அச்சத்தில் உள்ளதாகச் சொல்கிறார். ”எங்கள் வீட்டில் நீர் ஏறியிருக்கிறது. கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் சிரமப்படுகிறோம். பால், உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் இல்லை,” என்றார். படக்குறிப்பு, விஜயலக்ஷ்மி ‘இடமும் இல்லை, உணவும் இல்லை’ அதே பகுதியைச் சேர்ந்த விஜயலக்ஷ்மி, தனது வீடு முழுவதும் மூழ்கியிருக்கிறது என்றும், விட்டில் கல்விச் சான்றிதழ்கள் முதல் சமையல் பொருட்கள் வரை அனைத்தையும் விட்டுவிட்டு வெளியே வந்ததாகவும் தெரிவித்தார். “மக்களுக்கு இருக்க இடமில்லை. சாலை, பேருந்து நிறுத்தம் போன்ற பொது இடங்களில் தங்கியிருக்கிறோம். உணவு, நீர், கழிவறை, போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. இதுவரை உதவிக்கு யாரும் வந்ததை தான் பார்க்கவில்லை. உணவு தான் இப்போதைக்கு முக்கியத் தேவை,” என்கிறார் அவர். படக்குறிப்பு, திலீப் ‘சென்ற முறையை விட பாதிப்பு அதிகம்’ பிபிசி தமிழிடம் பேசிய நந்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த திலீப், ஞாயிறு நள்ளிரவு தங்கள் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்றார். படக்குறிப்பு, நந்தம்பாக்கம் “இப்போது வரை 2 நாட்களாக அதே நிலை தான். இன்று மாலைக்குள் (செவ்வாய்க்கிழமை) மின் பிரச்சனை சரி செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். தெருக்களில் தண்ணீர் ஓரளவு வடிந்துவிட்டது, வெளியே சென்று வர முடிகிறது. ஆனால் நந்தம்பாக்கம் ஏரி அருகே இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது, இன்னும் மழை நீர் வடியவில்லை, மக்கள் வீட்டிலிருந்து வெளியே வர முடியாத நிலையும் உள்ளது. இந்த்ப் பகுதி மக்களுக்கு 2015-ஆம் ஆண்டை விட பாதிப்புகள் மிகவும் அதிகம்,” என்றார். பட மூலாதாரம்,X/VISHNU VISHAL - VV நடிகர்கள் விஷ்ணு விஷால், ஆமீர் கான் மீட்பு நடிகர் விஷ்ணு விஷால், காரப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டினுள் வெள்ளம் புகுந்து அதன் அளவு விரைவாக அதிகரித்து வருவதாகத் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். தனது வீட்டில் மின்சாரம், வைஃபை, தொலைபேசி சிக்னல் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். மொட்டைமாடியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே சிக்னல் கிடைப்பதாகத் தெரிவித்திருக்கிறார். விரைவில் உதவி கிடைக்குமெனெ நம்புவதாகவும் தெரிவித்திருக்கிறார். “சென்னையிலிருக்கும் அத்தனை மக்களோடும் எனது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறேன்,” என்று பதிவிட்டிருக்கிறார். படக்குறிப்பு, விஷ்ணு விஷால், ஆமீர் கான் ஆகியோர் மீட்கப்பட்ட காட்சி விஷ்ணு விஷால் இதை பதிவிட்டதைத் தொடர்ந்து, தற்போது அவரை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் மீட்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை விஷ்ணு விஷால் சமூக ஊடகப்பக்கத்தில் பதிவிட்டிருக்கும் நிலையில், அந்தப் புகைப்படத்தில் பாலிவுட் நடிகர் ஆமிர் கான் இருப்பதையும் காண முடிகிறது. தங்களை மீட்ட பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் விஷ்ணு விஷால். ஆமிர் கான், தனது தாயாரின் சிகிச்சைக்காக சில காலம் முன்பு சென்னைக்குச் சென்று தங்கியதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பட மூலாதாரம்,VISHNU VISHAL பின்னர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட விஷ்ணுவிஷால், "எங்களது நிலையைப் பற்றி ஒரு பொது நண்பர் மூலம் கேள்விப்பட்ட அஜித் சார், எங்களைப் பார்க்க வந்ததுடன் எங்கள் குடியிருப்பில் உள்ள மற்றவர்களின் பயணம் செய்வதற்கும் ஏற்பாடு செய்தார்" என்று குறிப்பிட்டுள்ளார். அஸ்வின் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES சென்னை வெள்ளத்தால் தானும் பாதிக்கப்பட்டிருப்பதாக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். "30 மணி நேரமாக எனது பகுதியில் மின்சாரம் இல்லை. பல இடங்களில் இதுதான் நிலைமை என்று நினைக்கிறேன். வேறு வழி என்னவென்று தெரியவில்லை" என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் என்ன சொன்னார்? பட மூலாதாரம்,X/MKSTALIN படக்குறிப்பு, 4,000 கோடி ரூபாய் செலவில் செய்யப்பட்ட திட்டப்பணிகளின் காரணமாக சென்னையில் பெரும் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன என்றார் ஸ்டாலின் இந்நிலையில், சென்னையில் பத்திரிகையாளார்களைச் சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை, 2015-ஆம் ஆண்டின் மழையைக் காட்டிலும் மிக அதிகமாக இருந்ததாகக் கூறினார். ஆனாலும் வெள்ள பாதிப்புகள் 2015-ஆம் ஆண்டைக் காட்டிலும் மிகக்குறைவு என்றார். “2015-ஆம் ஆண்டின் வெள்ளம் செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டதால் ஏற்பட்ட செயற்கையான வெள்ளம், ஆனால் இப்போது ஏற்பட்டது இயற்கையான வெள்ளம்,” என்று கூறினார். மேலும் பேசிய அவர், 4,000 கோடி ரூபாய் செலவில் செய்யப்பட்ட திட்டப்பணிகளின் காரணமாக சென்னையில் பெரும் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன என்றார் அவர். 2015-ஆம் அண்டு 199 இறப்புகள் பதிவானதாகவும், தற்பொது 8 இறப்புகள் மட்டுமே பதிவாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.bbc.com/tamil/articles/c9738ved7x7o
  2. 05 DEC, 2023 | 08:46 PM சர்வதேச விசேட தேவையுடையோர் தினம் டிசம்பர் மூன்றாகும். இதனை முன்னிட்டு மருதமுனை ஹியூமன் லின்க் விசேட தேவையுடையோர் வளப்படுத்தல் மத்திய நிலையம் ஏற்பாடு செய்த போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு வீதி ஊர்வலம் மருதமுனையில் இன்று செவ்வாய்க்கிழமை (05) நடைபெற்றது. மருதமுனை பிரதான வீதியின் பெரியநீலாவணை சந்தியில் ஆரம்பித்த இந்த விழிப்புணர்வு வீதி ஊர்வலம் பிரதான வீதி வழியாக வந்து மருதமுனை வைத்தியசாலை, ஷம்ஸ் மத்திய கல்லூரி பாடசாலை அமைந்திருக்கும் பிரதான வீதி வழியாக மீண்டும் வளப்படுத்தல் மத்திய நிலையத்தை வந்தடைந்தது. "போதை ஆயுளை அளிக்கும்", "ஒன்றிணைவோம் போதையை ஒழிக்க", "எங்களை ஒதுக்காதீர்கள்", போன்ற சுலோகங்கள் மற்றும் சித்திரங்களை தாங்கியவாறு மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். வீதி வழியாக சென்ற விசேட தேவையுடையோர் மாணவர்களுக்கு தனவந்தர்கள் தமது அன்பளிப்புக்களையும் வழங்கினார்கள். இதில் வளப்படுத்தல் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் ஏ.கமறுத்தின், பணிப்பாளர் சபை உறுப்பினர் எஸ்.எல்.அஜமல்கான் உட்பட வளப்படுத்தல் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், சமூக மட்டத்திலான ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/171039
  3. Published By: RAJEEBAN 05 DEC, 2023 | 08:54 PM அமெரிக்கா கனடாவை பின்பற்றி இலங்கையின் இராணுவ அதிகாரிகள் சவேந்திரசில்வா ஜகத்ஜெயசூரிய ஆகியோருக்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதிக்கலாம் என லிபரல்ஜனநாயக கட்சியின் தலைவர் எட்டேவே வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரிட்டனின் நாடாளுமன்றத்தில் இலங்கை குறித்து இடம்பெற்றுவரும் விவாதத்தின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை மீது செல்வாக்கு செலுத்துவதற்காக சர்வதேச நாணயநிதிய செயற்பாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை வர்த்தக உடன்படிக்கைகள் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு இலங்கையை பிரிட்டன் கேட்டுக்கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/171058
  4. 05 DEC, 2023 | 02:46 PM மறைந்த தமிழகமுதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி அவரது படத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினா். இந்த நிகழ்வின்போது அதிமுக மூத்த நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். பின்னர் உறுதி ஏற்பு நிகழ்வும் நடைபெற்றது. முன்னதாக இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் "எல்லோரும் எல்லாமும் பெற எந்நாளும் உழைத்தஇ ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாபெரும் அரசியல் ஆளுமைநம் அனைவருக்கும் தலைவியாய் வாழ்ந்துஇ என்றென்றைக்கும் வழிகாட்டியாய்த் திகழும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை அவர்தம் நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன்.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 7 -ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டிஇ மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது திருவுருவ படத்துக்கு சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று (டிச.5) மலர் தூவி மரியாதை செலுத்தினேன். அவரது வழியில் மக்களால் மக்களுக்காக என்றென்றும் பயணிப்போம். ஜெயலலிதாவின் நூற்றாண்டு கனவை நெஞ்சில் நிலைநிறுத்தி மக்களுக்கான ஒரே இயக்கம் அஇஅதிமுக என்பதை நம் செயலில் உறுதிப்படுத்தி இமக்கள் பணியே மகேசன் பணியாய்க் கொண்டு அயராது உழைப்போம்" என்று அவர் பதிவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/171022
  5. ஹமாஸ் தலைவர்களுக்கு நாள் குறித்தது இஸ்ரேல் - சர்வதேச அளவில் தேடி கொலை செய்ய திட்டம் Published By: RAJEEBAN 05 DEC, 2023 | 03:38 PM காசாவில் நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் சர்வதேச அளவில் ஹமாஸ் தலைவர்களை கொலை செய்வதற்கு இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. காசாவிற்கு வெளியே கத்தார் துருக்கி லெபனானில் வசிக்கின்ற ஹமாஸ் அமைப்பின் சிரேஸ்ட தலைவர்களை படுகொலை செய்வதற்கான அனுமதியை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு உத்தரவிட்டுள்ளார் அமெரிக்காவின் வோல்ஸ்ரீட் ஜேர்னல் இதனை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் பல வருடங்களாக ஹமாஸின் முக்கிய தலைவர்களை கொலை செய்து வருகின்றது அதனை மேலும் விரிவுபடுத்தவுள்ளது. கத்தார் ரஸ்யா துருக்கி ஈரான் போன்ற நாடுகள் ஹமாஸ் தலைவர்களுக்கு அடைக்கலம் வழங்கியுள்ளன, கடந்த காலங்களில் பெய்ரூட் லெபானில் இஸ்ரேல் பலரை கொலை செய்திருந்தது. ஹமாசின் தலைவர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடு;க்குமாறு 22 ம் திகதி இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட் ஹமாஸ் தலைவர்கள் நீண்டகாலம் உயிர்வாழப்போவதில்லை என்ற அடிப்படையில் கருத்து தெரிவித்திருந்தார். அவர்கள் மரணத்திற்காக குறிக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு எதிரான போராட்டம் உலகளாவியது காசாவில் உள்ளவர்களுக்கும் விமானங்களில் பயணிக்கும் பயங்கரவாதிகளுக்கும் எதிரானது எனவும் அவர் குறிப்பிட்டார் ஒக்டோபர் ஏழாம் திகதி தாக்குதலிற்கு பின்னர் சில இஸ்ரேலிய அதிகாரிகள் ஹமாஸ் தலைவர் காலித் மெசாலையும் வெளிநாட்டில் வசிக்கின்ற தலைவர்களையும் கொலை செய்வதற்கான உடனடி அனுமதியை கோரினார்கள் என விடயங்களை நன்கு அறிந்த ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும் துருக்கி கத்தாரில் அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் அது பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான இராஜதந்திர முயற்சிகளை பாதித்திருக்கும். இதேவேளை இஸ்ரேலின் இந்த திட்டம் பிழையான ஆலோசனைகளை அடிப்படையாக கொண்டது என இஸ்ரேலின் மொசாட்டின் முன்னாள் தலைவர் எவ்ரெய்ம் ஹலேவி தெரிவித்துள்ளார். ஹமாசை சர்வதேச அளவில் தேடிக்கண்டுபிடித்து அதன் தலைவர்கள் அனைவரையும் அழிக்க முயல்வது பழிவாங்கும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டது மூலோபாய நோக்கங்களை அடிப்படையாக கொண்டது இல்லை நம்பமுடியாதது என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/171027
  6. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜோசபின் போனபர்ட்டை நெப்போலியன் விவாகரத்து செய்துவிட்டாலும், அவரது வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாத உறவாகவே தொடர்ந்தார். கட்டுரை தகவல் எழுதியவர், அலிசியா ஹெர்னாண்டஸ் பதவி, பிபிசி நியூஸ் உலகம் 4 டிசம்பர் 2023 "பிரான்ஸ். ராணுவம். ஜோசபின்” நெப்போலியன் போனபார்ட் இறப்பதற்கு முன், ஏற்கனவே மயக்க நிலையில் இருந்த போது பேசிய கடைசி வார்த்தைகள் இவை. இது தன்னை பிரெஞ்சு பேரரசராக அறிவித்துக் கொண்ட ஒருவரின் அல்லது ஐரோப்பாவின் ராணுவம் அடிபணிவதற்கு முன்பு ஒரு மூத்த இராணுவ மூலோபாயவாதியாக இருந்தவரின் மிக சுருக்கமான சுயசரிதையாக இருக்கலாம். அவருடைய பெயருடன் நெருங்கிய உறவுடைய பெயர் ஒன்று இருந்தால், அது அவரது முதல் மனைவி ஜோசபினின் பெயராகத் தான் இருக்க வேண்டும். அவரால் நெப்போலியனுக்கு ஒரு வாரிசைப் பெற்றுத்தர முடியாது என்று தெரிந்ததும் அவர்கள் பிரிந்துவிட்டாலும், அவர்களின் பந்தம் அவருடைய வாழ்க்கை முழுவதும் நிலைத்து நின்றது. ஆனால் கரீபியன் பகுதியில் பிறந்த இந்த பிரெஞ்சு கிரியோலுக்கு வரலாறு இரக்கம் காட்டவில்லை. பொதுவாக, அவர் படிக்காதவர், அற்பமானவர், வீணானவர் என்று அழைக்கப்படுகிறார். அவரது கொந்தளிப்பான பாலியல் பசியை முன்னிலைப்படுத்தித்தான் அனைவரும் பேசுகின்றனர். இந்த குணாதிசயங்களில் சில உண்மையானவை என்றாலும், மற்றவை அவரது வாழ்க்கையின் ஒரு பகுதிக்கு மட்டுமே உண்மையானவை அல்லது அவரது கருப்பு பக்கத்துக்குத் தொடர்புடையவையாக இருக்கின்றன. ஆனால் ஜோசபினின் வாழ்க்கை ஒரு நிலையான மறு கண்டுபிடிப்பாக உள்ளது. "சாதாரண" பெண் என்ற நிலையிலிருந்து பிரான்சின் பேரரசியாக அவர் மாறியது முக்கியத்துவம் பெறுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES உலகம் அவரை ஜோசபின் போனபார்ட் என்று அறிந்திருந்தாலும், அவர் ஜூன் 1763 இல் கரீபியன் கடலின் அண்டிலிஸில் உள்ள பிரெஞ்சு பிரதேசமான மார்டினிக் தீவில் மேரி ஜோசப் ரோஸ் டாஷர் டி லா பேஜரி என்ற பெண்ணாகத் தான் வளர்ந்து வந்தார். பிரபுத்துவ வம்சாவளியைச் சேர்ந்த பெரிய நில உரிமையாளர்களுக்கு சொந்தமான ஒரு தோட்டத்தில் இருந்த அவருடைய வீட்டில் அவரை ரோஸ் அல்லது யெயெட்டே என்று அனைவரும் அழைத்தனர். நெப்போலியன் தான் அவருக்கு ஜோசபின் என்ற பெயரை வைத்தார். “அவரை விரும்பிய மற்றவர்கள் அவரை ரோசா என்று அழைத்ததை அவரால் தாங்க முடியவில்லை என்று அவர் நெப்போலியனிடம் தெரிவித்தார்” என 18 ஆம் நூற்றாண்டு குறித்து நிபுணத்துவம் பெற்ற மற்றும் அவருடைய சுயசரிதையை எழுதிய பத்திரிகையாளர் ஈவா மரியா மார்கோஸ் கூறுகிறார். “அப்போது அவர் சாதாரணமான பெண்ணாக இருக்கவில்லை என்பது மட்டுமல்ல, ஜோசபின் போனபார்ட் ஒரு புத்திசாலியாகவும் திகழ்ந்தார்.” அவருக்கு விஸ்கவுண்ட் ராணுவத்தில் பணியாற்றிய அலெக்சாண்டர் டி பியூஹர்னாய்ஸ் என்பவருடன் ஏற்கெனவே திருமணமான நிலையில், நெப்போலியனுடன் இணைந்து பயணிக்க, அவர் இன்னும் ஒரு திருமணத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது. 1780 நடைபெற்ற முதல் திருமணத்தின் போது அவருக்கு 17 வயது தான் ஆகியிருந்தது. ரோஸின் கணவர் அலெஜான்ட்ரோ அவருக்கு எந்த வித உதவியையும் செய்யாத போதும், அவருடைய வளர்ச்சிக்கு ஒரு முக்கிய பங்காக இருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES வெர்சாய்ஸில் பணியாற்றிய அவரது தந்தை அவரிடம் விதைத்த ஒரு கனவுடன் ரோஸ் பிரான்சுக்கு வந்தார் என்று கூறுகிறார் ஈவா மரியா மார்கோஸ் ஆனால் உண்மை என்னவென்றால், அவர், அப்படி வளர்க்கப்பட்ட ஒரு "சாதாரண" பெண் அல்ல. அவர் எதிர்பார்க்கும் வாழ்க்கைக்குப் பொருத்தமானவராக இருக்கவில்லை. குறிப்பாக 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரான்சின் வாழ்க்கை முறைகளுக்கு ஏற்றவாறு அவர் இருக்கவில்லை. "அவரது கணவர் அலெஜான்ட்ரோ வெளியில் அழகாக இருக்கும் ஒரு பெண்ணைக் கண்டார். ஆனால் பெண்களுக்கு அழகு மட்டும் முக்கியமில்லை என்றும், அவர் புத்திசாலித்தனமாக இருக்கவேண்டும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட காலம் அது.” என்கிறார் மார்கோஸ். இருப்பினும் புத்திசாலித்தனத்தை எதிர்பார்த்த அவரது கணவர் அலெஜாண்ட்ரோ அவரை வெறுக்கிறார். முதலில் அவரை வீட்டில் மறைத்து வைத்து, அவருக்குக் கற்பிக்க ஆசிரியர்களைத் தேடுகிறார். ஆனால் ரோஸ் எதையும் கற்காததால் ஆசிரியர்கள் மிகவும் சலிப்பாகவோ அல்லது கசப்பாகவோ இருந்திருக்க வேண்டும். எனவே அலெஜான்ட்ரோ அவரை வெறுக்கத் தொடங்கி, அவரை நிராகரித்தார். "மகள் பிறந்தவுடன் செலவுக்குப் பணம் இல்லாமல், 2 குழந்தைகளுடன் அவர் வீட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது," என்று மார்கோஸ் விளக்குகிறார். 1783 ஆம் ஆண்டு ரோஸுக்கு 20 வயதுதான் ஆகியிருந்தது. அப்போதுதான் அவருடைய உண்மையான புரட்சி தொடங்குகிறது. ரோஸ் ஒன்றும் இல்லாமல் ஒரே இரவில் தெருவில் விடப்பட்டார் என்பதல்ல உண்மை. இது போன்ற நேரத்தில் அவருக்கு உதவும் வசதிகளைக் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதை மறுக்கமுடியாது. அவர் தனது குழந்தைகளுடன் பாரிஸில் உள்ள பென்டிமாண்ட் அபேயில் 6 அறைகள் மற்றும் ஒரு சமையலறை கொண்ட கட்டடத்தில் ஒரு அத்தையின் நிதி உதவியுடன் வசிக்கத் தொடங்கினார். பட மூலாதாரம்,GETTY IMAGES துறவற விதிகளால் நிர்வகிக்கப்பட்டு, கன்னியாஸ்திரிகளால் நடத்தப்படும் இந்த இடம் பெண்களுக்கு ஒரு வகையான வசிப்பிடமாக இருந்தது. முன்னாள் மன்னர்களின் காதலிகள், திருமணமாகாமல் கர்ப்பமடைந்து அதை மறைப்பதற்காகத் தவித்த பெண்கள், குடும்ப கவுரவம் கருதி பெற்றோரால் சிறையில் அடைக்கப்பட்ட மகள்கள் என அங்கிருந்த பெண்களுடன் ரோசாவும் இணைந்து கொண்டார். "இந்தப் பெண்கள் ரோசாவிடம் தங்கள் கதைகளைச் சொன்னார்கள். அவர்கள் ரோசாவை முரட்டுத்தனமான முத்துவைப் போல பார்த்தார்கள். மேலும் அவர்கள் ஒரு உயர்ந்த சமுதாயத்தின் பெண்ணாக எப்படி இருக்க வேண்டும் என்பதை அவருக்குக் கற்பித்தார்கள். மேலும் அழகு சாதனப் பொருட்களைக் கொண்டு கண்களை எப்படி அழகுபடுத்திக்கொள்வது, எப்படி நடப்பது, பேசுவது, நடனமாடுவது என்பது வரை ரோசாவுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது,” என மார்கோஸ் கூறுகிறார். அவர் இரண்டு வருடங்கள் அங்கு செலவிடுகிறார். மேலும் பிரெஞ்சு உயர் சமூகத்தில் மீண்டும் வெளியே செல்வதற்கான பயிற்சியைத் தவிர, அந்தக் கால பாரிஸில் பல பெண்கள் செய்யாத ஒன்றைச் செய்வதற்கான உந்துதலை இந்த வாழ்க்கை அவருக்கு அளிக்கிறது. கணவரை எதிர்க்கும் தன்மை தான் அது. அவரை நிராகரிக்க, அலெஜான்ட்ரோ முதலில் அண்டிலிஸிடமிருந்து ஒரு அடிமையை விலைக்கு வாங்கி பொய் சாட்சி சொல்ல ஏற்பாடு செய்கிறார். அவர் திருமணம் செய்வதற்கு முன்பு பல காதலர்களை வைத்திருந்ததாக அந்த அடிமை சாட்சியம் அளிக்கிறார். அதன் அடிப்படையில், அவரது தற்போதைய திருமணம் முடிவுக்கு வந்தால், அவள் தனது குடும்பப்பெயர், விஸ்கவுண்டஸ் என்ற பட்டம், அவளுடைய குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் சொத்துக்களை இழக்கநேரிடும். மன்னரின் வழக்கறிஞரிடம் புகாரளிக்க ரோசா சென்ற போது, அந்த வழக்கறிஞர் இப்படிக் கூறியதாக எவா மரியா மார்கோஸ் தெரிவிக்கிறார்: "நான் ஒரு கண்கவர் இளம் பெண்ணை சந்தித்திருக்கிறேன். வித்தியாசமும் நேர்த்தியும் கொண்ட ஒரு பெண்ணாக அவர் இருக்கிறார். சரியான நடை, நிறைய அழகு மற்றும் மிகவும் இனிமையான குரலை அவர் பெற்றிருக்கிறார்." அந்த வழக்கில் அவர் வெற்றி பெறுகிறார். மேலும் ரோசா தனது விஸ்கவுண்டஸ் பட்டம், உடைமைகள் மற்றும் அவரது குழந்தை வைத்துக் கொள்ளும் உரிமையைத் தக்கவைத்துக்கொள்கிறார். அங்கிருந்து அவர் பிரான்ஸ் திரும்பி செல்வாக்கு பெறத் தொடங்கினார். பட மூலாதாரம்,GETTY IMAGES நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு (1789), பிரெஞ்சுப் புரட்சி நடந்தது. இது சில ஆண்டுகளுக்குப் பிறகு பயங்கரவாதத்தின் ஆட்சி என்று வர்ணிக்கப்பட்டது. ரோபஸ்பியர் தலைமையில் நடந்த அந்தப் புரட்சியின் போது, குடியரசிற்கு எதிராகச் செயல்படுவதாக சந்தேகிக்கப்படும் அனைவரும் துன்புறுத்தப்பட்டனர். பயங்கரவாதக் காலத்தின் போது பெரும் எண்ணிக்கையில் மேற்கொள்ளப்பட்ட கைதுகள், பெரும்பாலும் தலைதுண்டிக்கப்பட்ட படுகொலையில் முடிந்தன. ரோசா வீட்டிற்கு மிக அருகில் தான் இந்த படுகொலைகள் நடந்தன. (("அவருக்கு அரசியலிலும் நீதிமன்றங்களிலும் மிகுந்த செல்வாக்கு உள்ளது. அவர் இரண்டு நீர்நிலைகளுக்கு இடையில் நன்றாக நகர்கிறார், மேலும் அவர் மக்கள், நண்பர்கள், பிரபுக்களைக் காப்பாற்றத் தொடங்குகிறார்" என்று மார்கோஸ் கூறுகிறார்.)) 1794 வரை அவரது கணவர் அலெஜான்ட்ரோ கைதியாக இருந்தார். அவரும் அப்படித்தான். அவர் சில மாதங்கள் மட்டுமே சிறைச்சாலையில் இருந்தார். ஆனால் இது புரட்சிக் காலத்தின் போது இருந்த மிக மோசமான சிறைகளில் ஒன்றாக கருதப்பட்டது. மிகவும் ஆபத்தான நிலைமைகள், அதிக நெரிசல் என்பதுடன் ஒரு நாளைக்கு மிக அதிக எண்ணிக்கையிலான மரண தண்டனைகள் அங்கு நிறைவேற்றப்பட்டன. “தினமும் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்படுவதற்காக வண்டியில் ஏறப்போகும் கைதிகளின் பெயர்கள் வாசிக்கப்பட்டன. அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த மக்கள், அடுத்த நாள் தாங்கள் இறக்கப் போகிறோமா என்று அறியாத நிலையில், மிகுந்த வெறித்தனத்துடன் இருந்ததோடல்லாமல், பாலுறவு போன்ற செய்கைகளில் ஈடுபட்டு அதன் உச்சத்தில் இருந்தனர். அங்கே ரோசாவுக்கு தன் கணவனைப் போலவே ஒரு காதலனும் இருந்தான்,” என்று விளக்குகிறார் மார்கோஸ். இந்த வேதனை ரோசாவுக்கு ஆரம்பகால மாதவிடாய் நிறுத்தத்தை ஏற்படுத்துகிறது. அலெஜான்ட்ரோவும் அந்தப் படுகொலையில் இருந்து தப்பவில்லை. அதன்பின் ரோப்ஸ்பியர் தனது மனதை மாற்றிக்கொண்டு டெஸ் கார்ம்ஸில் இருந்த அனைவரையும் விடுவித்ததால் ரோஸ் காப்பாற்றப்பட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES அப்போதைய அன்றாட வாழ்க்கையில், டெஸ் கார்ம்ஸ் சிறைக்குள் அனுபவித்த அந்த தீவிர பாலியல் மகிழ்ச்சியுடன் அவர் தெருக்களில் சென்றார். ரோசா, அவர் சிறையில் சந்தித்த ஸ்பானிய தெரேசா கபாரூஸுடன் சேர்ந்து, அனைவரும் கவனிக்கும் வகையில் உடையணிந்து பாரிஸ் முழுவதும் நடந்து செல்கிறார். இப்போது ரோசா சக்தி வாய்ந்த, செல்வாக்கு மிக்க, சிற்றின்பத்தை அளிக்கும் படித்த பெண்ணாக இருந்தார். அப்போதுதான் அவர் நெப்போலியன் என்ற ஒருவரைச் சந்திக்கிறார். அவர் இத்தாலிய உச்சரிப்புடன் கூடிய பிரெஞ்சு மொழியைப் பேசுகிறார். கடினமான மற்றும் சில சமூகத் திறன்களைக் கொண்டவரான, அவருக்கு பிரான்ஸ் வாழ்க்கையைப் பற்றி எதுவும் தெரியாது. "ரோசா ஒரு அசிங்கமான வாத்து குஞ்சை அப்போது பார்க்கிறார். அவர் பாரிஸுக்கு வந்தபோது இருந்ததைப் போலவே அந்த வாத்தும் இருந்தது." அந்த நேரத்தில் அவருக்கு பல காதலர்கள் இருந்தாலும் நெப்போலியனுடனும் அவர் இருக்கிறார். "ரோசா சக்திவாய்ந்தவராகவும், சுறுசுறுப்பாகவும் இருந்ததால் தான் நெப்போலியன் அவர் மீது பைத்தியமாக இருந்தார்.” பட மூலாதாரம்,GETTY IMAGES 1796 ஆம் ஆண்டில், அவரை நிராகரித்த கணவர் சிறையில் படுகொலை செய்யப்பட்டு, அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நெப்போலியனை மணந்தார். அதன் பின் தான் அவர் ஜோசபின் போனபார்ட் ஆகிறார். நவம்பர் 9, 1799 இல், பிரான்சில் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, லூயிஸ்-நெப்போலியன் போனபர்ட் (Louis-Napoléon Bonaparte) அதிகாரத்தை கைப்பற்றத் தொடங்கினார். நெப்போலியன் பிரான்ஸ் நாட்டின் சிறந்த வாய்ப்புக்களைக் கண்டுபிடித்தது மட்டுமின்றி நவீன பிரான்சின் நிறுவனர், உரிமையியல் சட்டத்தை முறைப்படுத்தி ஊக்குவித்தவர் என்றெல்லாம் கருதப்படுகிறார். மேலும், கிறிஸ்தவ மதத்தையும் அரசியலையும் தனித்தனியாகப் பிரித்தவர் என்றாலும், அடிமைத்தனத்தை ஊக்குவித்தவர் என்றும், பெண்களின் உரிமைகளைக் குறைத்தவர் என்றும் விமர்சனங்களும் அவருக்கு எதிராக நிலவுகின்றன. அவர் பேரரசராக இருந்த காலத்தில் ஐரோப்பாவின் ஒரு பகுதியை முழுமையாகக் கைப்பற்றினார். பலதரப்புக்களுடன் சமாதான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட அவர், பழமையான முடியாட்சிகளுக்கு எதிராகச் செயல்பட்டார். அவர் ஒரு மூலோபாயவாதியாகவும், ஒரு சிறந்த வீரராகவும் விளங்கினார். அவருக்குப் பின்னால் 60 க்கும் மேற்பட்ட போர்களில் ஈடுபட்ட வீரம் இருந்தது. நெப்போலியன் தனது நினைவுக் குறிப்புகளில், தான் ஒரு வாளை ஏந்தியதாகவும், ஜோசபின் எப்போதும் அன்பை ஏந்தியதாகவும் கூறினார். அவர் ஐரோப்பாவின் மற்ற ஆட்சியாளர்களுடன் போரில் ஈடுபட்டபோது அல்லது சவால் விடுத்தபோது, பல முறை அவர்களைச் சந்தித்துப் பேசினார். இப்படிப்பட்ட ஒரு பேச்சின் நடுவில் அவர், கோபமாக ஒரு கோப்பை காபியை தரையில் வீசி எறிந்தார். ஜோசபின் தனது கணவர் அவமதித்தவர்களைச் சமாதானம் செய்யும் ராஜதந்திர வேலைகளைப் பின்னர் செய்தார் . இதற்கு உதாரணமாக காம்போ ஃபார்மியோ உடன்படிக்கையில், ஆஸ்திரியாவுடன் சமாதானத்தில் கையெழுத்திட்ட சம்பவத்தை எடுத்துக்கொள்ளலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES "ஜோசஃபின் 5 மாத காலம் ராஜதந்திர மற்றும் அரசியல் பணிகளில் ஈடுபட்டார். அவர் இல்லாமல் அமைதி சாத்தியமில்லை என்பதை ஆஸ்திரியர்களே உணர்ந்திருந்தனர். நன்றியுடன் அவர்கள் அவருக்குப் பரிசாக குதிரைகளைத் தந்தார்கள்," என்று மார்கோஸ் கூறுகிறார். அதிகாரம் மற்றும் தனது காலடியில் ராணுவம் என்ற ஆசை கொண்ட நெப்போலியனிடம், தமக்கு எதிரான சதிகளைத் தவிர்க்க, 1802 இல் பரம்பரை சாம்ராஜ்யத்திற்காக அவர் நிறுவிய வாழ்நாள் தூதரகத்தை மாற்றுமாறு அறிவுறுத்தினார் என்று அரசியல்வாதியான ஜோசப் ஃபோச்சே கூறுகிறார். 1804 இல் நெப்போலியன் தன்னை பிரெஞ்சு பேரரசராக அறிவித்தார். அங்கு அவர் ஜோசபின் ஒரு மனைவியாக மட்டுமின்றி ஒரு பேரரசியாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார். நெப்போலியன் தொடர்ந்து அரசின் நடவடிக்கைகளைக் கவனித்துக்கொண்டிருந்த போது, ஜோசபின் பிரான்சில் தூதர்கள், தூதரகங்கள் மற்றும் வணிகர்களுடனான அரசியல் ரீதியான உறவுகளைப் பராமரித்துவந்தார். மார்கோஸ் சொல்வது போல்,ஜோசபின் மனித உறவுகளை மேம்படுத்த நெப்போலியனைக் கட்டாயப்படுத்தினார். மேலும் அவர் கண்கவர் ஆடைகளை அணிவதன் மூலமும் பலரது கவனத்தையும் ஈர்த்தார். ஜோசபின் எப்போதும் அதிக அளவில் செலவு செய்பவர். இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக 700 க்கும் மேற்பட்ட ஆடைகள் மற்றும் 500 ஜோடி ஷூக்கள் அவரது ஒப்பனை அறையில் வைத்திருந்தார் என்பதை எடுத்துக்கொள்ளலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES அதிக அளவில் செலவழிக்கும் ஜோசபின் பற்றிய தகவல்கள் பல விதங்களில் ( அப்போது அவரது வருடாந்திர உதவித்தொகை பொதுவாக ஒரு மில்லியன் பிராங்குகள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது ) வேறுபடுகின்றன. சிலர் அவர் அதிகமாகச் செலவழித்ததாகக் கூறுகின்றனர். ஆனால் இப்படிக் கூறுபவர்கள் மேரி ஆன்டோனெட் போன்ற முன்னோடிகளை விட மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர். மற்ற சிலரின் கூற்றின்படி, தூய்மையின் மீதான நெப்போலியனின் அதீத ஆவல் மற்றும் ஐரோப்பிய முடியாட்சிகளுக்கு இணையாக இருக்கவேண்டும் என்பதற்காக அவர் தான் ஜோசபினை ஒரு நாளில் மூன்று முறை ஆடைகளை மாற்ற அறிவுறுத்தியதாகத் தெரியவருகிறது. தொடர்ந்து அவரது வாழ்வில், அவர் எளிமையானதாக தோற்றத்தை விரும்பிய நிலையில், தெருவில் எளிதாகப் பிரதிபலிக்கும் பாணியில் தமது செய்கைகளை மாற்றிக்கொண்டார். இதனால், அவரது புகழ்பெற்ற பேரரசு பாணி ஆடைகள் இன்னும் இருக்கின்றன. அவை பல ஆடை வடிவமைப்பு நிறுவனங்கள் நடத்தும் கேட்வாக் (catwalk) நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் மஸ்லின் ஆடைகள் அணிவதை நிறுத்திக்கொண்ட ஜோசபின் புகழ்பெற்ற லையான் பட்டு ஆடைகளை அணியத் தொடங்கினார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஜோசபினின் உச்சகட்ட வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத ஒரு நிராகரிப்பை அவர் எதிர்கொள்ளும் நிலை காத்திருந்தது. 1809 ஆம் ஆண்டு நெப்போலியன் அவரிடம் விவாகரத்து கேட்டது தான் அது. ஏனென்றால், அவர் ஜோசபின் மீதான காதலை இழந்திருந்தது, அவருக்கு நெப்போலியன் எழுதிய கொடூரமான கடிதங்களில் இருந்து பார்க்க முடிந்தது. ஜோசபினிடம் அவர் அதிக ஆர்வமாக எதிர்பார்த்தது என்னவென்றால், ஒரேயொரு வாரிசை மட்டுமே. ஆனால், ஜோசபினுக்கு ஆரம்பகாலத்திலேயே மாதவிடாய் நின்றுவிட்டதால் அந்த ஆசையும் நிறைவேறவில்லை. அதனால், ஜோசபின் ஒரு வயதானவர் என்றும், வறட்டுப் பெண் என்றும் நெப்போலியன் கருதினார். நெப்போலியன் தனது இரண்டாவது மனைவின் மூலம் பெற்ற மகனைக் காண ஜோசபினுக்கு சிலகாலம் தடைவிதிக்கப்பட்டிருந்தது. அதன் பின் அவர் மல்மைசன் அரண்மனைக்கு தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டார். அங்கு செடிகளை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டதால் 200 க்கும் மேற்பட்ட புதிய இனச் செடிகளை வளர்க்கவும் வழிவகுத்தது. 1814 இல் நிமோனியாவால் இறக்கும் வரை , ஜோசபின் மற்றும் நெப்போலியனின் உறவு தொடர்ந்து கொண்டிருந்தது. "அவர் துணிச்சலில் எல்லோருக்கும் ஒரு முன்மாதிரி. அதுமட்டுமின்றி ஒரு சக்திவாய்ந்த பெண்" என்று முடிக்கிறார் ஈவா மரியா மார்கோஸ். https://www.bbc.com/tamil/articles/crgp739dzeqo
  7. 05 DEC, 2023 | 03:20 PM லங்கா அசோக் லேலண்ட் நிறுவனம் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மின்சார பஸ்களை உள்நாட்டில் பொருத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. ஆரம்பக் கட்டமாக பயணிகள் போக்குவரத்துக்கு 5 பஸ்கள் இணைக்கபடவுள்ளதாக நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. இவ்வாறான பஸ்களுக்கு ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கிலோமீற்றர் தூரம் செல்லக் கூடியதென தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/171025
  8. 05 DEC, 2023 | 03:19 PM உலங்கு வானூர்தியொன்றை வாடகைக்கு அமர்த்தி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நேற்று திங்கட்கிழமை (04) நெடுந்தீவுக்கு விஜயம் செய்து பார்வையிட்டு திரும்பியுள்ளனர். நெடுந்தீவில் உள்ள தனியார் சுற்றுலாத்துறை நிறுவனமொன்றின் ஏற்பாட்டிலேயே குறித்த சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். நெடுந்தீவின் சுற்றுலாத்துறையின் இது முதன்மையாக ஒரு சிறந்த முன்னேற்ற படிக்கல்லாக இவ் வருகை அமைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/171024
  9. 5 டிசம்பர் 2023, 05:13 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையில் மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 3) தொடங்கி நேற்று முழுதும் (டிசம்பர் 4) பெய்த பெரும் மழை காரணமாக நகரத்தில் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கின. இதனால், மாநகர் முழுதும் போக்குவரத்துச் சேவைகள் ஸ்தம்பித்தன. பல இடங்களில் மின்சாரம் இல்லாமலும், தொலைதொடர்பு இணைப்புகள் இல்லாமலும் மக்கள் அவதிப்பட்டனர். பல இடங்களில் வீடுகளுக்குள்ளும் குடியிருப்பு வளாகங்களுக்குள்ளும் நீர் புகுந்ததாலும் மக்கள் சிரமத்திற்குள்ளாயினர் இந்நிலையில், இன்று (டிசம்பர் 5) சென்னையில் மழை நின்றிருக்கிறது. ஆனாலும் நகரின் பல இடங்களிலும் நீர் தேங்கி நிற்கிறது. பிபிசி செய்தியாளர்கள் களத்திலிருந்து அளிக்கும் தகவல்களின்படி, பல இடங்களில் வீடுகளிலும் குடியிருப்பு வளாகங்களிலும் நீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (புதன்கிழமை, டிசம்பர் 6) விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. படக்குறிப்பு, திருவான்மியூர், காமராஜர் நகர் சென்னையில் பல இடங்களில் தேங்கி நிற்கும் மழைநீர் மாநகரில் பல இடங்களில் தேங்கிய நீர் இன்னும் வடியாமல் இருக்கிறது. களத்தில் இருக்கும் பிபிசி செய்தியளர்கள் அளித்த தகவலின்படி, அடையாறு, கூவம் நதியின் கரைப்பகுதிகள், முகப்பேர், சைதாப்பெட்டை, சூளைமேடு, திருவான்மியூர், ஆகிய பகுதிகளில் நீர் இன்னும் தேங்கியிருக்கிறது. தி நகர் இருந்து கோடம்பாக்கம் செல்லும் சாலையில் நீர் தேங்கியிருக்கிறது. சைதாப்பேட்டையின் பல பகுதிகளிலும் நீர் தேங்கியிருக்கிறது. சூளைமேட்டில் கிருஷ்ணாபுரம் போன்ற பகுதிகளில் இருக்கும் சில தெருக்களிலும் வீடுகளிலும் தேங்கியிருக்கிறது. சூளைமேட்டில் விழுந்த மரங்கள் இன்னும் விழுந்துகிடக்கின்றன. ஆனால், 100அடி சாலை, போரூர்-கிண்டி சாலைம் அண்ணா சாலையின் பல பகுதிகள், ஆகிய சென்னையின் முக்கியச் சாலைகளில் தேங்கியிருந்த நீர் வடிந்திருக்கிறது. சென்னை பெருநகரக் காவல்துறையின் அறிக்கையின்படி, நீர் தேங்கியுள்ளதால் 17 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டிருக்கின்றன. சூளைமேடு, கோயம்பேடு புதுபாலம், வியாசர்பாடி, சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதை ஆகியவையும் இதில் அடக்கம். படக்குறிப்பு, சைதாப்பேட்டை மறைமலை அடிகள் பாலம் பலி 8 ஆக உயர்வு மழை தொடர்பான சம்பவங்களில் நேற்று 5 பேர் இறந்திருந்த நிலையில், இன்று அந்த எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஒருவர் மின்சாரம் தாக்கியும், ஒருவர் மரம் விழுந்ததாலும், ஒருவர் சுவர் இடிந்து விழுந்ததாலும் இறந்திருக்கின்றனர், என்று சென்னை பெருநகரக் காவல்துறை தெரிவித்திருக்கிறது. சீர்செய்யப்பட்டு வரும் மின் இணைப்புகள் மழையால் நேற்று சென்னை முழுதும் மின் விநியோகம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மின் இணைப்புகளை சரிசெய்யும் பணி நடந்து வருவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, அண்ணா சாலை, அண்ணா நகர், நுங்கம்பாக்கம், கிண்டி, செயிண்ட் தாமஸ் மவுண்ட் ஆகிய பகுதிகள் உட்படப் பல பகுதிகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையம் திறப்பு சென்னை விமான நிலையத்தில் நீர் தேங்கியிருந்ததால் விமானச் சேவைகள் நேற்று நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று சேவைகளுக்காக விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/articles/c0k2d9v900wo
  10. Published By: VISHNU 05 DEC, 2023 | 03:24 PM தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் டாக்டர் நளின் ஆரியரத்தின தலைமையிலான தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (5) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்தனர். மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள பொலிஸ் நிலையம், பொலிஸ் அத்தியாச்சகர் பணிமனை, சமுர்த்தி வங்கி,மட்டக்களப்பு மாநகர சபை,மட்டக்களப்பு மங்கள ராம விகாரை உட்பட அரச மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பணியாக அதிகாரிகள், மற்றும் பொதுச் சுகாதார பரிசோதரர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் டெங்கு சுற்றி வளைப்பு தேடுதலின் போது 45 இடங்களில் டெங்கு குடம்பிகள். பரவும் இடங்கள் அடையாளம் காணப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணியக பூச்சிகளாளர் திருமதி தர்ஷினி கணநாதன் தெரிவித்தார். மாவட்ட சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர் எஸ் திச வீரசிங்கம் தலைமையிலான பொது சுகாதார பரிசோதரர்கள் குறித்த டெங்கு பரிசோதனை வேலை திட்டத்தில் இணைந்திருந்தனர். மேற்குறித்த இடங்களில் நடத்தப்பட்ட தேர்தல்களின் போது டெங்கு பரவும் இடங்களாக வைத்திருந்த இடங்கள் அடையாளம் காணப்பட்டன. டெங்கு குடம்பிகள் உற்பத்தியாகியிருந்த 45 இடங்கள் இவ்வாறு அடையாளம் காணப்பட்டதாக மேற்பார்வை சுகாதார பரிசோதகர் எஸ்.தசவீரசிங்கம் தெரிவித்தார். டெங்கு பரவும் இடங்களாக சூழலை வைத்திருந்த அரச மற்றும் அரசு சார்பற்ற நிறுவன பொறுப்பாளர்களுக்கு விழிப்பூட்டல் நிகழ்வுகளும் நடத்தப்பட்டன. https://www.virakesari.lk/article/171026
  11. பாலியல் கல்வி முறைமை அமுல்படுத்தப்பட வேண்டும் - அமைச்சர் ஜீவன் வலியுறுத்தல் Published By: VISHNU 04 DEC, 2023 | 06:54 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பற்றிய தரவுகளை முன்வைப்பதால் மாத்திரம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.பாலியல் கல்வி முறைமையை அமுல்படுத்த வேண்டும் அப்போது தான் சிறந்த மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (04) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரங்கள் அமைச்சு மற்றும் மகளிர்,சிறுவர் விவகார அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள்,தரப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் சபையில் குறிப்பிடப்பட்டது.ஆனால் இந்த பிரச்சினையில் உள்ள உண்மை அம்பலப்படுத்தப்படவில்லை. தற்போதைய நிலையில் பாலியல் கல்வி கட்டாயப்படுத்தப்பட வேண்டும். பாலியல் கல்வி மற்றும் உறவு நிலைகளின் முக்கியத்துவம் தொடர்பில் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். இன்றைய நிலையில் பாலியல் தொடர்பான அறிவு அல்லது தெளிவு சமூக மட்டத்தில் மிகவும் குறைவான மட்டத்தில் உள்ளதை அவதானிக்க முடிகிறது. ஆகவே பல்வேறு காரணிகளை குறிப்பிட்டுக் கொண்டு பாலியல் கல்வி முறைமையை அமுல்படுத்தாமல் இருந்தால் ஒருபோதும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகிறது. களனி பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வுக்கமைய, 62 சதவீதமான பெண்கள் தமது நெருக்கமானவர்களினால் தாக்கப்படுகிறார்கள், 50 சதவீதமான பெண்கள் தமது கணவன்மார்களினால் கொலை செய்யப்படுகிறார்கள்., 82 சதவீதமான பெண்கள் தமது வீட்டில் இடம்பெறும் முரண்பாடுகளினால் கொலை செய்யப்படுகிறார்கள்.ஆகவே இவ்வாறான நிலைமை குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும். நாட்டிலுள்ள பாடசாலைகளில் 23 சதவீதமான பாடசாலைகளில் மாத்திரம் ' சிறுவர் பாதுகாப்பு மையங்கள்' உள்ளன.ஆகவே பாலியல் வன்கொடுமைகள் தொடர்பில் தரப்படுத்தல்களை முன்வைப்பது முன்னேற்றகரமானதல்ல,நடைமுறைக்கு சாத்தியமான வகையில் தீர்மானங்களை எடுத்து அவற்றை செயற்படுத்த வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/170967
  12. பட மூலாதாரம்,JASON MOORE /COMEDY WILDLIFE 2023 படக்குறிப்பு, காற்றில் கிட்டார் வாசிக்கும் கங்காரு 4 டிசம்பர் 2023 ஒரு கங்காரு கிட்டார் வாசித்துப் பார்த்திருக்கிறீர்களா? ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் சாம்பல் நிற குட்டி கங்காரு ஒன்று வெறுங்கையில் காற்றில் கிட்டார் வாசிப்பது போன்ற படம் ஒன்றை எடுத்துள்ளார் ஜேசன் மூர். ‘ஏர் கிட்டார் ரூ’ என்ற தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படம்தான், 2023-ஆம் ஆண்டின் காமெடி காட்டுயிர் புகைப்பட விருதுகளின் ஒட்டுமொத்த வெற்றியாளராக இந்த வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் க்ரியேச்சர்ஸ் ஆஃப் லேண்ட் பிரிவிலும் இது பரிசு வென்றுள்ளது. "உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், பெரும்பாலான நேரம் கங்காருக்கள் மிக சாந்தமாகவும், சலிப்பாகவும் இருக்கும் என்பது பலருக்கும் தெரியாது. இருந்த போதிலும் இந்த கங்காரு ஏர் கிட்டார் போஸ் தருவதை பார்த்தபோது, உடனடியாக என் முகத்தில் புன்னகை மலர்ந்தது. மேலும் உண்மையிலேயே நான் ஒரு சிறப்புமிக்க படத்தை பதிவு செய்துள்ளேன் என்பது எனக்குத் தெரிந்தது," என்று கூறுகிறார் மூர். இந்த படம் 85 நாடுகளில் இருந்து வந்த 5,300 பதிவுகளோடு போட்டியிட்டது. இந்த பட்டியலில் மற்ற பிரிவுகளில் வெற்றியை ஈட்டியுள்ள சிங்கப்பூரை சேர்ந்த 'ஓட்டர் பாலேரினா' என்ற பெயரிடப்பட்ட நீர்நாய் ஒன்று நடனமாடும் படமும், தென்னாபிரிக்காவில் உள்ள ஜிமாங்கா தனியார் கேம் ரிசர்வ் நீர்நிலையில் விட்டோரியோ ரிச்சி பதிவு செய்த எதிர்பாராவிதமாக விழும் நாரையின் படமும் அடங்கும். பட மூலாதாரம்,JACEK STANKIEWICZ / COMEDY WILDLIFE 2023 படக்குறிப்பு, டிஸ்ப்யூட் எனப்படும் இரண்டு கிரீன்ஃபின்ச் பறவைகளின் படத்திற்காக ஜூனியர் விருது மற்றும் மக்கள் தேர்வு விருது கிடைத்துள்ளது பறவைகளுக்குள் சண்டை மற்றொரு இளம் புகைப்படக்கலைஞர் ஜேசெக் ஸ்டான்கிக்ஸுக்கு இரு பிரிவுகளில் வெற்றி கிடைத்துள்ளது. அவரின் டிஸ்ப்யூட் எனப்படும் இரண்டு கிரீன்ஃபின்ச் பறவைகளின் படத்திற்காக ஜூனியர் விருது மற்றும் மக்கள் தேர்வு விருது ஆகிய இரண்டையும் தன்வசப்படுத்தியுள்ளார் இவர். இந்த விருதுகள் புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பாதுகாவலர்களான பால் ஜாய்சன்-ஹிக்ஸ் மற்றும் டாம் சுல்லம் ஆகிய இருவரால் முதன் முதலில் 2015-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த புகைப்படங்கள் அனைத்தும் மனிதகுலம் தனது கிரகத்தைப் பகிர்ந்து கொள்ளும் மாறுபட்ட, துடிப்பான மற்றும் எப்போதும் ஆச்சரியமூட்டும் உயிரினங்களை நினைவூட்டுவதாக உள்ளது. பட மூலாதாரம்,OTTER KEWK / COMEDY WILDLIFE 2023 படக்குறிப்பு, காட்டு விலங்குகளின் எண்ணிக்கை சராசரியாக 70% குறைந்துள்ளது. ஆனாலும், விலங்குகளின் உலகில் இருந்து வரும் கதைகள் எப்போதும் மிகவும் உற்சாகமானதாக இருப்பதில்லை : கடந்த 50 ஆண்டுகளில், உலகளவில் காட்டு விலங்குகளின் எண்ணிக்கை சராசரியாக 70% குறைந்துள்ளது. அடிக்கடி ஏற்படும் வெப்ப அலைகள், வறட்சி மற்றும் காட்டுத்தீ ஆகியவை விலங்குகளின் நடத்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி மனிதர்கள் மற்றும் காட்டு விலங்குகள் சந்திக்கும் வாய்ப்பை அதிகரிக்கின்றன. தங்கள் வீட்டின் பின்புறத்தில் ஒரு கங்காருவைக் காண விரும்புவோருக்கு வேண்டுமானால் இது ஒரு நல்ல செய்தியாகத் தோன்றலாம், ஆனால் இது பிரச்னைக்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது. பட மூலாதாரம்,VITTORIO RICCI / COMEDY WILDLIFE 2023 படக்குறிப்பு, வனவிலங்கு ஆர்வலர்கள் துபாயில் நடந்து வரும் COP28 காலநிலை மாநாட்டை உற்றுநோக்கி கொண்டிருக்கலாம் இந்நிலையில் வனவிலங்கு ஆர்வலர்கள் துபாயில் நடந்து வரும் COP28 காலநிலை மாநாட்டை உற்றுநோக்கி கொண்டிருக்கலாம். காரணம் பல்லுயிர் இழப்புக்கான ஐந்து முக்கிய காரணிகளில் காலநிலை மாற்றமும் ஒன்றாகும், இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும் நாடுகள் இந்த அச்சுறுத்தலைத் தடுக்க உதவும் வாய்ப்பைப் பெற்றுள்ளன. இது ஒரு பெரிய எதிர்பார்ப்புதான், ஆனாலும் உண்மையில் மகிழ்ந்து சிரிக்குமளவிற்கான பெரிய விஷயம். https://www.bbc.com/tamil/articles/czk2j8150mno
  13. 'நாய்களை ஏவினர், வல்லுறவு மிரட்டல் விடுத்தனர்' - இஸ்ரேல் சிறையில் துன்புறுத்தப்பட்டதாக பாலத்தீன மக்கள் குற்றச்சாட்டு கட்டுரை தகவல் எழுதியவர், லூசி வில்லியம்சன் பதவி, பிபிசி செய்திகள், ஜெனின், வெஸ்ட் பேங்க் 2 டிசம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 3 டிசம்பர் 2023 அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்திய சில வாரங்களில், இஸ்ரேல் சிறையில் வைக்கப்பட்டிருந்த தங்கள் எல்லோரையும் காவலர்கள் ஒட்டுமொத்தமாகத் துன்புறுத்தி தண்டித்ததாக இஸ்ரேலிய சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட பாலத்தீனிய கைதிகள் கூறியுள்ளனர். தாம் தடிகளால் தாக்கப்பட்டதாகவும், வாய்க்கவசம் அணிந்த நாய்களைத் தம்மீது ஏவி விட்டதாகவும், அவர்களின் உடைகள், உணவு மற்றும் போர்வைகள் பறிக்கப்பட்டதாகவும் கைதிகள் விவரித்துள்ளனர். ஒரு பெண் கைதி தனக்கு பாலியல் வல்லுறவு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும், சிறைச்சாலைகளுக்குள் இருமுறை கண்ணீர்ப்புகை குண்டுகளை கைதிகள் மீது காவலர்கள் பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளார். பிபிசி மொத்தம் ஆறு பேரிடம் பேசியது, அவர்கள் அனைவரும் சிறையிலிருந்து வெளியேறும் முன் தாக்கப்பட்டதாகக் கூறினர். சில காவலர்கள் கைவிலங்கிடப்பட்ட கைதிகள் மீது சிறுநீர் கழித்ததாகக் குற்றம் சாட்டப்படுவதாக பாலத்தீனிய கைதிகள் சங்கம் கூறுகிறது. கடந்த ஏழு வாரங்களில் ஆறு கைதிகள் இஸ்ரேலிய காவலில் இறந்துள்ளனர். இது குறித்து இஸ்ரேல் கூறுகையில், தங்களது சிறையில் இருக்கும் கைதிகள் அனைவரும் சட்டத்திற்குட்பட்டே சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது. பட மூலாதாரம்,REUTERS காஸாவில் ஹமாஸால் பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்ட இஸ்ரேலியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுவிக்கப்பட்டதற்கு பதிலாக, இந்த வாரம் இஸ்ரேலால் விடுவிக்கப்பட்டவர்களில் 18 வயதான முகமது நஜலும் ஒருவர். ஆகஸ்ட் மாதம் முதல் குற்றப்பத்திரிகை பதியப்படாமல் நஃப்ஹா சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், தான் எதற்காக கைது செய்யப்பட்டேன் என்று தெரியவில்லை என்று முகமது நஜல் கூறுகிறார். மேலும் அவர் கூறுகையில், பத்து நாட்களுக்கு முன்பு, இஸ்ரேலிய சிறைக் காவலர்கள் மைக் மற்றும் ஸ்பீக்கருடன் அவரது அறைக்குள் வந்து கைதிகளின் பெயரைக் சத்தமாக கத்தி தங்களை தூண்ட முயன்றதாக தெரிவித்தார். மேலும், "நாங்கள் எதிர்வினையாற்றவில்லை என்றதும், அவர்கள் எங்களை அடிக்க ஆரம்பித்தார்கள்," என்று அவர் கூறுகிறார். “இளைஞர்களை முன் வரிசையிலும் வயதானவர்களை பின் வரிசையிலும் அவர்கள் நிறுத்தினர். பின்னர், அவர்கள் என்னை அழைத்துச் சென்று அடிக்கத் தொடங்கினர். நான் என் தலையைப் பாதுகாக்க முயன்றேன், அவர்கள் என் கால்களையும் கைகளையும் உடைக்க முயன்றார்கள்," என நஜல் கூறினார். திங்கட்கிழமை விடுவிக்கப்பட்ட நஜலின் மருத்துவ அறிக்கையில் அவரது இரு கைகளிலும் எலும்பு முறிவு இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்ததாக அவர் தெரிவித்தார். ‘என் கைகள் உடைக்கப்பட்டன’ நஜல் மேலும் கூறுகையில், "ஆரம்பத்தில், நான் மிகவும் வேதனையில் இருந்தேன். பின்னர் சிறிது நேரம் கழித்து, எனது கை எலும்புகள் உடைந்துவிட்டன என்று எனக்குத் தெரியும். அதனால் நான் எனது கையை கழிப்பறைக்குச் செல்லும்போது மட்டுமே பயன்படுத்தினேன்," எனத் தெரிவித்தார். மற்ற கைதிகள் தனக்கு சாப்பிடவும், குடிக்கவும், குளியலறையைப் பயன்படுத்தவும் உதவினார்கள் என்றும், மீண்டும் அடிக்கப்படுவார்களோ என்ற பயத்தில் காவலர்களிடம் மருத்துவ உதவி கேட்கவில்லை என்றும் அவர் கூறுகிறார். இஸ்ரேல் சிறைத்துறை முகமதுவின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. சிறையிலிருந்து வெளியேறும் முன் ஒரு மருத்துவரால் அவர் பரிசோதிக்கப்பட்டார், எந்த மருத்துவ பிரச்சனையும் கண்டறியப்படவில்லை என்று சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞன் சிறையிலிருந்து வெளியேறி செஞ்சிலுவைச் சங்கப் பேருந்தில் ஏறும் வீடியோவையும் சிறைத்துறை வெளியிட்டு நஜலின் குற்றச்சாட்டு பொய் எனக் கூறியது. ஆனால், முகமது கூறுகையில், தனக்கு முதல் முதலில் சிகிச்சை அளிக்கப்பட்டதே செஞ்சிலுவை சங்கத்தில்தான் எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பாலத்தீனியர்களை கட்டி அணைக்கும் உறவினர்கள் ‘நாயை என் மீது ஏவிவிட்டனர்’ அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய சிறைகளில் காவலர்களின் நடந்துகொண்ட விதமே மாறிவிட்டதாக நஜல் கூறுகிறார். காவலர்கள் அவர்களை உதைத்ததாகவும், அவர்களை அடிக்க தடிகளைப் பயன்படுத்தியதாகவும் அவர் கூறுகிறார். மேலும் ஒரு காவலர் தனது முகத்தில் மிதித்ததாகவும் சிறை அதிகாரிகள் நாய்களை வைத்து தங்களை தாக்க வைத்ததாகவும் அவர் கூறினார். "அவர்கள் மெத்தைகள், எங்கள் உடைகள், தலையணைகளை வெளியே எடுத்து, எங்கள் உணவை தரையில் வீசினர்,” என்றும் அவர் கூறினார். "என்னைத் தாக்கும் நாய் மிகவும் கூர்மையான விளிம்புகளைக் கொண்ட முகவாய் அணிந்திருந்தது. அதன் முகவாய் மற்றும் நகங்கள் என் உடல் முழுவதும் அடையாளங்களை விட்டுச் சென்றன," என்று முகமது கூறுகிறார். ‘கைதிகள் மீது சிறுநீர் கழித்தினர்’ மெகிடோ சிறைச்சாலையில் இது போன்ற தாக்குதல்கள் இரண்டு முறை நடந்தன என்று அவர் கூறுகிறார். மேலும் நாஃபா சிறைச்சாலையில் அவரால் கணக்கு வைத்துக்கொள்ள முடியாத அளவிற்கு தாக்குதல்கள் நடந்தன என அவர் தெரிவித்தார். ஹமாஸ் தாக்குதல்களுக்குப் பிறகு இஸ்ரேலின் சிறைகளுக்குள் இதேபோன்ற தாக்குதல்களை பிபிசி பேசிய மற்ற பாலத்தீனக் கைதிகளும் தெரிவித்துள்ளனர். இது ஹமாஸின் நடவடிக்கைகளுக்கு பாலத்தீனிய கைதிகள் மீது நடத்தப்பட்ட 'பழிவாங்கல்' என்று அவர்கள் புரிந்துகொண்டதாகக் அவர்கள் கூறினர். பாலத்தீனக் கைதிகள் சங்கத்தின் தலைவர் அப்துல்லா அல்-ஜாகாரி பிபிசியிடம் கூறுகையில், “பல கைதிகள் அவர்களது முகத்திலும் உடலிலும் தாக்கப்படுவதைக் கண்டதாக சக கைதிகள் எங்களிடம் தெரிவித்தனர். மேலும், காவலர்கள் கைவிலங்கிட்ட கைதிகள் மீது சிறுநீர் கழித்ததாகவும் கேள்விப்பட்டோம்,” என அவர் தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்குமாறு இஸ்ரேல் சிறைத்துறையிடம் கேட்டோம். அனைத்து கைதிகளும் சட்டத்தின்படி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், சட்டப்படி தேவையான அனைத்து அடிப்படை உரிமைகளும் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். "நீங்கள் விவரித்த உரிமைகோரல்கள் எங்களுக்குத் தெரியாது," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. "இருப்பினும், கைதிகள் மற்றும் கைதிகளுக்கு புகார் அளிக்க உரிமை உண்டு, அது அதிகாரப்பூர்வ அதிகாரிகளால் முழுமையாக ஆய்வு செய்யப்படும்," அந்த அறிக்கை கூறியது. பட மூலாதாரம்,REUTERS ‘பாலியல் வல்லுறவு அச்சுறுத்தல் விடுத்தனர்’ இந்த வாரத் தொடக்கத்தில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட லாமா கட்டர், அக்டோபரின் பிற்பகுதியில் கைது செய்யப்பட்ட உடனேயே, உளவுத்துறை அதிகாரி ஒருவர் "பாலியல் வல்லுறவு செய்வதாக வெளிப்படையாக மிரட்டியதாக," சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டார். "எனக்குக் கைவிலங்கிட்டி என் கண்களைக் கட்டினர்," என்று அவர் வீடியோவில் ஒரு நேர்காணலில் கூறினார். "என்னை வல்லுறவு செய்வதாக மிரட்டினார்கள். என்னை மிரட்டுவதே குறிக்கோள் என்பது தெளிவாகத் தெரிந்தது," என்றார். அவரின் இந்தக் குற்றச்சாட்டுகளையும் இஸ்ரேல் சிறைத்துறை மறுத்துள்ளது. ஆனால் பெண் கைதிகள் - தான் உட்பட - உண்மையில் பாலியல் வல்லுறவு அச்சுறுத்தலுக்கு உள்ளானதாகவும், டாமன் சிறைச்சாலையில் உள்ள அவர்களது தங்குமிடத்தில் கைதிகளுக்கு எதிராக கண்ணீர்ப்புகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் லாமா கட்டர் பிபிசியிடம் தொலைபேசியில் தெரிவித்தார். அக்டோபர் 7-ஆம் தேதி நடந்த தாக்குதலுக்குப் பிறகு காவலில் வைக்கப்பட்ட பாலத்தீனர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்தது. அன்று முதல் 6 பாலஸ்தீன கைதிகள் சிறையில் இறந்துள்ளனர். இதைப் பற்றிய பிபிசியின் கேள்விக்கு இஸ்ரேல் நேரடியாக பதிலளிக்கவில்லை. ஆனால் கடந்த வாரங்களில் 4 கைதிகள் நான்கு வெவ்வேறு தேதிகளில் இறந்துள்ளனர் என்றும், தங்களுக்கு மரணத்திற்கான காரணங்கள் பற்றி எதுவும் தெரியாது என்றும் கூறியது. கபாட்டியா கிராமத்தைச் சேர்ந்த முகமது நஜல் தனது கைகள் தனக்கு இன்னும் வலியைக் கொடுக்கின்றன எனத் தெரிவித்தார். அவருக்கு தெரிந்த வாலிபர் ஒருவர் சிறையில் இருந்து திரும்பவில்லை என்று அவரது சகோதரர் முதாஸ் பிபிசியிடம் கூறினார். "இது எங்களுக்குத் தெரிந்த முகமது அல்ல," என்று அவர் கூறினார். "அவர் தைரியமானவர், தைரியமானவர். இப்போது அவரது இதயம் உடைந்து பயத்தால் நிறைந்துள்ளது," என அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/c19228ry9d7o
  14. Published By: VISHNU 04 DEC, 2023 | 10:01 PM டுபாயில் நடைபெற்ற COP 28 மாநாட்டுடன் இணையாக ஈஷா அறக்கட்டளையின் நிறுவனரும் தலைவருமான சத்குரு ஜக்கி வாசுதேவுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஞாயிற்றுக்கிழமை (03) சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டார். https://www.virakesari.lk/article/170976
  15. 04 DEC, 2023 | 06:38 PM யாழ் மாவட்டத்தில் இந்த வருடத்தின் இறுதிவரையான காலப்பகுதியில் 2203 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டதுடன் இரண்டு இறப்புக்களும் பதிவாகியுள்ளன. யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த செய்தி குறிப்பில்,யாழ் மாவட்டத்தில் இந்த வருடத்தின் செப்ரெம்பர் மாதத்தில் 110 டெங்கு நோயாளிகளும், ஒக்டோபர் மாதத்தில் 118 டெங்கு நோயாளிகளும் நவம்பர் மாதத்தில் 427 டெங்கு நோயாளிகளும் டிசம்பர் மாதத்தின் முதல் மூன்று நாட்களில் 82 டெங்கு நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். நவம்பர் மாதத்தில் கூடிய டெங்கு நோயாளர்கள் நல்லூர், யாழ்ப்பாணம், கோப்பாய் மற்றும் சண்டிலிப்பாய் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலேயே இனங்காணப்பட்டுள்ளனர். நவம்பர் மாதத்தில் அதிகூடிய டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்ட நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் செப்ரெம்பர் மாதத்தில் 19 டெங்கு நோயாளர்களும் ஒக்டோபர் மாதத்தில் 23 டெங்கு நோயாளர்களும் நவம்பர் மாதத்தில் 108 டெங்கு நோயாளர்களும் டிசம்பர் மாதத்தின் முதல் மூன்று நாட்களில் மாத்திரம் 34 டெங்கு நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொக்குவில், கோண்டாவில், திருநெல்வேலி மற்றும் வண்ணார்பண்ணை ஆகிய பிரதேசங்களில் இருந்து இனங்காணப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/170957
  16. 04 DEC, 2023 | 08:25 PM யாழ் தெல்லிப்பழை பகுதியில் ஹயஸ் வானில் வந்த இனந்தெரியாத குழு மோட்டார் சைக்கிள் வந்த இளைஞர் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இதன்போது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் குறித்த வன்முறை சம்பவம் இன்று திங்கட்கிழமை மாலை 5.30 இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் இளைஞர்கள் சிலர் தெல்லிப்பழை பகுதியில் பயணித்துள்ளனர். இதன்போது ஹயஸ் வானில் வந்த வாள்வெட்டு குழுவினரை பார்த்து மோட்டார் சைக்கிளில் வந்த ஏனையவர்கள் தப்பித்து செல்ல ஒருவர் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதலை நடாத்திவிட்டு கும்பல் மருதனார்மடம் நோக்கி தப்பிச் சென்றுள்ளது. பொலிஸ் நிலையம் முன்பாக காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மோட்டார் சைக்கிளில் வாள்வெட்டு குழுவை துரத்தி சென்ற போதும் ஹயஸ் வானில் குறித்த குழு தப்பிச் சென்றுள்ளது. ஹயஸ் வானை நோக்கி பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாகவும் தெரியவருகிறது. சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக தெல்லிப்பழை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/170978
  17. Chennai-ஐ கலங்கடித்த Michaung; ஒரே இரவில் 2015-ஐ நினைவுபடுத்திய புயல் - சென்னை எப்படி இருக்கு?
  18. சென்னை | கனமழை -வேளச்சேரி அருகே அடுக்குமாடி கட்டடம் மண்ணுக்குள் புதைந்தது 04 DEC, 2023 | 12:38 PM தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை வேளச்சேரி அருகே அடுக்குமாடி கட்டடம் மண்ணுக்குள் புதைந்தது. இதற்குள் பலர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையின் காரணமாக, சென்னை வேளச்சேரியில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்று மண்ணுக்குள் இறங்கி உள்ளது. இந்த கட்டிடத்திற்குள் கேஸ் நிலைய ஊழியர்கள் சிக்கியுள்ளதால் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ‘மிக்ஜாம்’ புயல் நேற்று உருவானது. புதுச்சேரிக்கு கிழக்கு- வடகிழக்கே சுமார் 210 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே சுமார் 150 கிலோமீட்டர் தொலைவிலும் புயல் நிலை கொண்டுள்ளது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும். அதன்பிறகு தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து நாளை தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கடக்க உள்ளது. இந்த புயல் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் விடியவிடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பல இடங்களில் இரவில் இருந்தே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளமாக ஓடுகிறது. குறிப்பாக சென்னை வேளச்சேரியில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் தான் சென்னை ரேஸ்கோர்ஸ் சாலை அருகே கிண்டி 5 பர்லாங்க் ரோட்டில் கியாஸ் நிரப்பும் நிலையம் உள்ளது. இந்த நிலையத்துக்கு சொந்தமான கட்டடம் உள்ளது. ஊழியர்கள் தங்கும் வகையில் இந்த கட்டடம் அமைந்துள்ளது. இந்நிலையில் தான் இன்று காலையில் கனமழை தொடர்ந்து பெய்த நிலையில் திடீரென்று அந்த கட்டடம் தரையில் இறங்கியது. இதனால் கட்டடம் மண்ணுக்குள் சென்றது. இந்த கட்டத்தில்எரிவாயு நிலைய ஊழியர்கள் இரவு பணியை முடித்து தங்கியிருந்தனர். முதலில் 10 பேர் இருந்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால் 3 ஊழியர்கள் மட்டுமே அந்த கட்டத்துக்குள் சிக்கினர். இதில் 2 பேர் மீட்கப்பட்ட நிலையில் ஒருவரை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த மீட்பு பணியில் கிண்டி, வேளச்சேரி தீயணைப்பு வீரர்கள், கிண்டி போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே கட்டடம் மண்ணில் புதைந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. https://www.virakesari.lk/article/170923
  19. 04 DEC, 2023 | 11:02 AM (இராஜதுரை ஹஷான்) தேசிய ரீதியில் நடைபெறும் அடுத்த தேர்தலில் விழிப்புலன் அற்ற வாக்காளர்களுக்காக ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திலும் தொட்டுணரக்கூடிய விசேட வாக்குச் சீட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். விசேட தேவையுடையவர்களுக்கு விசேட அடையாள அட்டை ஒன்று வழங்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்தார். இயலாமையுடைய நபர்களுக்கான சர்வதேச தினம் டிசம்பர் 03ஆம் திகதி நேற்று ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் இதனை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள், இயலாமையுடைய நபர்களுக்கான சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணி, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம், தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள்,சிவில் சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட தரப்பினர் கலந்துகொண்டனர். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட,தேர்தல்கள் ஆணையாளர் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 10 வாக்களிப்பு நிலையங்களில் முன்னோடித் திட்டமாக முன்னெடுக்கப்பட்ட இத்திட்டம் வெற்றியளித்துள்ளது. செவித்திறன் குறைபாடுள்ள சமூகத்தினரின் தேவைகள் மற்றும் இயலாமையுடைய நபர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லக்கூடிய வசதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் . அத்துடன் இயலாமையுடைய நபர்களுக்கு விசேட அடையாள அட்டையொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். இங்கு கருத்துத் தெரிவித்த இயலாமையுடைய நபர்களுக்கான சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் தலைவர் ரசாஞ்சலி பத்திரகே, நாட்டின் சனத்தொகையில் 8.7 சதவீதம் அதாவது கிட்டத்தட்ட 16 இலட்சம் பேர் இயலாமையுடைய நபர்களைக் கொண்ட சமூகமாகக் காணப்படுகிறது. அத்தரப்பினருக்காகக் குரல்கொடுக்க செப்டம்பர் 6 ஆம் திகதி பாராளுமன்ற ஒன்றியமொன்றை அமைக்கக் கிடைத்திருப்பது மிகப்பெரிய சாதனை என்றும் கூறினார். இந்த நாட்டில் பல பொது இடங்களில் வசதிகள் இல்லாததால், இயலாமையுடைய நபர்களுக்கு பஸ், ரயில் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து வசதிகள் இல்லையென்றும் சுட்டிக்காட்டினார். இவ்வாறான நபர்கள் பாரிய அளவில் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகுவது மற்றும் அவர்களின் கல்விக்குக் காணப்படும் தடைகள் குறித்தும் அவர் பிரஸ்தாபித்தார். எனவே, இயலாமையுடைய நபர்களின் உரிமைகளை சட்டரீதியாக அமுல்படுத்தும் வகையில் புதிய சட்டத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், அவர்களின் பிரதிநிதித்துவம் அரசியலில் இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் இச்சமூகத்துக்கு ஆற்றிவரும் பங்களிப்பைப் பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/170905
  20. Published By: VISHNU 04 DEC, 2023 | 02:36 PM சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு AHRC நிறுவனத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை, வெருகல் பிரதேச சிவில் அமைப்புகளினால் திங்கட்கிழமை (04) வட்டவன் பகுதியில் கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்தில் மனித உரிமைகள் தின வாரம் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது வெருகல் பகுதியில் மீறப்பட்டு வருகின்ற மனித உரிமைகள் தொடர்பாக மக்கள் கருத்து தெரிவித்திருந்தனர். குறிப்பாக தமது பிரதேசத்தின் மணல் வளம் சுரண்டப்படுகின்றமை, காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளமை, பொலிஸ் நிலையத்தில் தமிழ் மொழியில் முறைப்பாடுகளை பெறுவதற்கு மறுப்பு தெரிவிக்கப்படுகின்றமை உட்பட பல மனித உரிமை மீறல் தொடர்பான விடயங்களை தெரிவித்ததோடு அது தொடர்பான மகஜர் ஒன்றினை மனித உரிமைகள் தினத்தன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கையளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/170932
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.