Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  6876
 • Joined

 • Last visited

 • Days Won

  7

Everything posted by ஏராளன்

 1. நீர்வீழ்ச்சி முதல் டெட் சோன்கள் வரை: ஆழ்கடலின் ரகசியங்கள் என்ன? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,DAMIR ZURUB படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் (ஐநாவின் புகைப்படப் போட்டியில் ஆழ்கடல் காட்சிகள் பிரிவில் 2ஆம் பரிசு வென்ற படம்) நம் பூமியின் 70 சதவீத பரப்பை கடல் சூழ்ந்துள்ளது. ஆனால், கடலை பற்றி நாம் அறிந்தவை மிக அரிதே. ஆனால், ஆழ்கடலில் முழுவதும் ஆராயப்படாத ஒரு பிரபஞ்சமே உள்ளது, மனித கண்களுக்கு புலப்படாதவையாக அவை உள்ளன. கடல் குறித்து நாம் ஏன் கொஞ்சம் மட்டுமே அறிந்திருக்கிறோம்?.... ஆழ்கடலில் உள்ள அபரிமிதமான அழுத்தம், டைவர்களுக்கும் ஆழ்கடல் உபகரணங்களுக்கும் பெரும் சவாலாக விளங்குகிறது. விண்வெளிக்கு செயற்கைக்கோளளை அனுப்புவது இதைவிட எளிதானதாக உள்ளது. ஆனால், நீர்மூழ்கி ரோபோட்டுகள் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் மூலம், ஆழ்கடலில் மறைந்திருக்கும் இந்த சாம்ராஜ்ஜியத்தின் ரகசியங்கள் வெளிப்படத் தொடங்கியுள்ளன. ஆழ்கடலில் உள்ள ரகசியங்கள் என்ன? ஆம், அதிக தண்ணீர் இருக்கிறது. கொஞ்சம் துல்லியமாக சொல்ல வேண்டும் என்றால், 1,41,91,20,000 கியூபிக் கிலோமீட்டர் அளவுக்கு தண்ணீர் இருக்கிறது. 300 கோடி மக்களுக்கு புரதசக்தியின் முக்கிய ஆதாரமாக விளங்கும் மீன்கள் அந்த தண்ணீரில் இருக்கின்றன. ஆனால், ஆழ்கடலில் மீன்களை தவிர இன்னும் அதிகமானவை இருக்கின்றன. இன்னொரு உலகமான ஆழ்கடலில் அசாதாரணமான பல உயிரினங்கள் வாழ்கின்றன, ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆழ்கடலில் இருந்து புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஜெலட்டின் தன்மை கொண்ட ஜெல்லி மீன்கள், அவற்றை நீங்கள் வலைகள் மூலம் பிடிக்க முயன்றால் சிதைந்துவிடும். துருவப் பகுதியில் மட்டுமே காணப்படும் அரியவகைப் பறவை தமிழ்நாட்டுக்கு வந்தது எப்படி? அண்டார்டிகா பனியிலும் பிளாஸ்டிக் நுண்துகள்கள் - ஏன் இது கவலையானது? 2 கோடியே 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மெகலடான் சுறா அழிந்தது எப்படி? பட மூலாதாரம்,TIM GRAY 2020ஆம் ஆண்டில் பெரிய சிஃபோனோஃபோர் அபோலேமியா என்ற உயிரினத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர், ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட மில்லியன்கணக்கிலான குளோன்களால் ஆனது இந்த உயிரினம், இதன் மெல்லிய, முறுக்கப்பட்ட உடல், நீண்ட லேசான கயிற்றை நினைவுபடுத்துவதாக உள்ளது. மேலும், கடல்தளமானது, நீங்கள் கற்பனை செய்யக்கூடிய தட்டையான மற்றும் தனிச்சிறப்பில்லாத கடற்பரப்பில் இருந்து வெகுதொலைவில் உள்ளது. ஒட்டுமொத்தக் கடலும் வற்றிவிட்டால், அதன் நிலப்பரப்பு இந்த பூமியில் உள்ள எதுவொன்றுக்கும் இணையாக கண்கவரக்கூடிய ஒன்றாக இருக்கலாம், சில உயரமான சிகரங்கள், ஆழமான பள்ளத்தாக்குகள், நீளமான நதிகளை ஒத்த பெருமையை கொண்டிருக்கலாம். ஆழ்கடலில் நீர்வீழ்ச்சிகள் ஆழ்கடலில் நீர்வீழ்ச்சிகளும் உள்ளன, டென்மார்க் ஸ்ட்ரெய்ட் கேட்டராக்ட் என்பது அட்லாண்டிக் கடலில் கண்டெடுக்கப்பட்ட நீர்வீழ்ச்சியாகும். இங்கு, கிரீன்லாந்து கடலின் குளிர்ந்த நீரும் இர்மிங்கர் கடலின் வெப்பமான நீரும் சங்கமிக்கின்றன. இதில், குளிர்ந்த நீர் கீழே தள்ளப்படுவதால், அது மூன்றரை ஆயிரம் மீட்டர் நீளம்கொண்ட மாபெரும் நீர்வீழ்ச்சியை உருவாக்குகிறது. கடலின் மேற்பரப்பில் உள்ள யாராலும் இதனை கண்டறிய முடியாது. உலகின் மிக ஆழமான பகுதியான, 11,000 மீட்டர் நீள நீர்வீழ்ச்சியான மரியானா ஆழியுடன் ஒப்பிடும்போது இது ஒன்றும் இல்லை. ஆழ்கடலில் புகுந்த பிளாஸ்டிக் 2020ஆம் ஆண்டில் விஞ்ஞானிகள் கண்டறிந்த ஒன்று, உலகுக்கான அபாய ஒலியாக உள்ளது. இந்த உலகில் யாராலும் செல்ல முடியாத கடல் பிளவு ஒன்றில், சுமார் 7,000 மீட்டர் ஆழத்தில் அவர்கள் புதிய ஒட்டுமீன் இனங்களை கண்டறிந்தனர். அவற்றின் வயிற்றில் பிளாஸ்டிக் இருந்தது. அந்த பிளாஸ்டிக்கை யூரிதீன்ஸ் பிளாஸ்டிகஸ் என அழைக்கின்றனர். கடல் குறித்து நாம் அறிதாகவே ஆராயத் தொடங்கியிருக்கும் நிலையில், நம் விளைவுகளால் அதன்மீது ஏற்படும் தாக்கங்களை ஏற்கெனவே உணரத்தொடங்கிவிட்டோம். 2050 ஆம் ஆண்டில் கடலில் மீன்களைவிட அதிக பிளாஸ்டிக்குகள் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES காலநிலை மாற்றம் ஆனால், பிளாஸ்டிக் மட்டுமே பிரச்னை அல்ல. காலநிலை மாற்றம் கடலின் அடிப்படை வேதித்தன்மையை மாற்றுகிறது, கடலை வெப்பமாக்குகிறது, கடல்நீரை அமிலமயமாக்குகிறது. கடல் வாழ்வியலுக்கு துணைபுரியும் ஆக்சிஜன் போதாமையால் 'டெட் சோன்களும்' கடலில் உள்ளன. இவை அனைத்தும் மாசுபாட்டால் வழக்கமாகிவிட்டன. கடலை பொறுத்தவரையில் மனித செயல்பாடுகளின் விளைவுகள் நம் அறிவுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது என்பதே வேதனையான உண்மை. குறிப்பாக நீங்கள் கடற்கரையிலிருந்து அப்பால் வாழ்ந்தால், கடலில் இருந்து விலகியிருப்பது போன்ற உணர்வு எளிதானது. ஏன் கடலை குப்பைகளை கொட்டும் இடமாக நடத்துகிறோம் என்பதை இது விளக்குகிறது. ஆனால், கடலை நாம் எவ்வாளவு அதிகமாக ஆராய்கிறோமோ, அந்தளவுக்கு அதிகமாக கடல் நமக்கு வழங்கும். கடற்பாசிகள் மற்றும் நுண்ணுயிரிகள் போன்ற ஆழ்கடல் வாழ்வின் மரபணுக் குளம், ஆண்டிபயாடிக் எதிர்ப்பின் அவசர சிக்கலைத் தீர்ப்பதற்கான திறவுகோலைக் கொண்டிருக்கக்கூடும். மிக முக்கியமாக, கிரகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் கடல் முக்கியமானது: நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனில் பாதி, பைட்டோபிளாங்க்டன் மற்றும் கடற்பாசி போன்ற ஒளிச்சேர்க்கை கடல் தாவரங்களால் கிடைக்கிறது. கடல் நமது காலநிலையை ஒழுங்குபடுத்துகிறது, கிரகத்தைச் சுற்றி சூரிய வெப்பத்தை விநியோகிப்பதன் மூலம் வெப்பநிலையை சமன் செய்கிறது. நாம் அதை உணராமல் இருக்கலாம், ஆனால் நமது நேர்த்தியான சமநிலையான புவியமைப்பில் கடல் வகிக்கும் பங்கினால் நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்படுகிறோம். ஆயினும்கூட, இந்த முக்கிய வாழ்க்கை ஆதாரத்தைப் பாதுகாக்க நாம் இதுவரை மேற்கொண்ட முயற்சிகள், கடலில் ஒரு துளியே. கண்ணுக்குத் தெரியாத பல மூச்சடைக்கக்கூடிய பள்ளத்தாக்குகள், கண்டுபிடிக்கப்படாத பல உயிரினங்கள் என, இன்னும் நமக்குத் தெரியாத பல விஷயங்கள் கடலில் உள்ளன. ஆனால், புதிய தொழில்நுட்பங்கள் முன்பை விட கடலைப் பற்றி அதிகம் வெளிக்கொண்டு வருகிறது. ஒருவேளை கடலின் ரகசியங்களை அதிகம் அறிந்தால், அதனை சிறப்பாகக் கவனித்துக் கொள்ளலாம். (டுர்ஹாம் பல்கலைக்கழகத்தின் டாக்டர் மேத்யூ கேர்டிக்னி மற்றும் பிளைமௌத் பல்கலைக்கழக பேராசிரியர் கெர்ரி ஹோவெல் ஆகியோரின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட 'பிபிசி ஐடியாஸ்' பகுதியிலிருந்து எழுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை.) https://www.bbc.com/tamil/science-61873904
 2. அசாம் வெள்ளம்: 45 பேர் பலி, பல லட்சம் பேர் வீடிழந்தனர்- எங்கும் தண்ணீர் திலிப் குமார் ஷர்மா, அசாம் மற்றும் சோயா மேட்டீன் டெல்லி பிபிசி 21 ஜூன் 2022, 09:44 GMT புதுப்பிக்கப்பட்டது 43 நிமிடங்களுக்கு முன்னர் "எங்களை சுற்றி எங்கும் நீர் சூழ்ந்துள்ளது, ஆனால் குடிப்பதற்கு ஒரு சொட்டு நீர் இல்லை." சனிக்கிழமையன்று தனது வீட்டின் நிலையை இப்படித்தான் ராஞ்சு செளத்ரி விவரித்தார். அவர் கடுமையாக வெள்ளம் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான அசாமில் உள்ள தொலைதூர கிராமமான உடியானாவில் வசிக்கிறார். இந்த வெள்ளத்தால் பல லட்சம் பேர் வீடிழந்துள்ளனர். இதுவரை 45 பேர் இந்த வெள்ளத்தால் உயிரிழந்துள்ளனர். மழை விடாமல் தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது என அவர் நினைவு கூர்கிறார். ஒரு சில மணிநேரங்களில் சாலைகளில் வெள்ள நீர் சூழந்துவிட்டது. மழைநீர் அவர்களின் வீட்டிற்குள் புகுந்துவிட்டபோது, இருட்டில் அவரது குடும்பம் மிகவும் சிரமப்பட்டதாக அவர் தெரிவிக்கிறார். சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கு பாதிப்பு: ஆசையாக வாங்கிய வீடுகளில் அகதியாக வாழும் மக்கள் "தினமும் 3 குடம் தண்ணியே வருது" - சென்னையில் பிபிசி தமிழ் கள ஆய்வு இரண்டு நாட்கள் முடிந்த பின்னும் அவரின் குடும்பத்தால் வீட்டைவிட்டு வெளியேற முடியவில்லை. இப்போது அவர்களின் வீடு எல்லாப் பக்கமும் நீரால் சூழந்த ஒரு தீவைப் போல காட்சியளிக்கிறது. "எங்களின் வீடு எல்லாப் பக்கத்திலும் நீரால் சூழப்பட்டுள்ளது. ஆனால் குடிப்பதற்கு நீர் இல்லை. உணவும் தீர்ந்து போகும் நிலையில்தான் உள்ளது. நீரின் அளவு மேலும் அதிகரிக்கிறது என கேள்விப்பட்டேன். எங்களுக்கு என்ன நேரும்?" என்றார் செளத்ரி. அசாமில் எதிர்பாராமல் பெய்த மழையால் பலத்த வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கிராமங்கள் நீரில் மூழ்கிவிட்டன. பயிர்கள் அழிந்து, வீடுகள் சேதமடைந்தன. அசாமில் உள்ள 35 மாவட்டங்களில் 32 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த மழையால் இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர். 47 லட்சம் பேர் தங்களின் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர். கனத்த மழையால் அருகாமை மாநிலமான மேகாலயாவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். அசாமில் 1,425 தற்காலிக பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் மழையின் தீவிரம் மிக கடுமையாக இருப்பதால் அதிகாரிகள் தங்களின் பணி அத்தனை எளிமையானது இல்லை என்கின்றனர். "முகாமில் குடிக்க நீர் இல்லை. எனது மகனிற்கு காய்ச்சல் அடிக்கிறது. அவனை மருத்துவரிடம் கொண்டு செல்ல முடியவில்லை," என்கிறார் ஹஸ்னா பேகம். இவரும் உடியானா கிராமத்தை சேர்ந்தவர் மழைநீர் அவரின் வீட்டை சூழ்ந்த போது அவர் நீந்திக் கொண்டே யாரேனும் உதவிக்கு வருவார்களா என்று தேடினார். தற்போது ஒரு கிழிந்த பிளாஸ்டிக் டென்டில் தனது இரு குழந்தைகளுடன் தவித்து வருகிறார் 28 வயது பேகம். தன்னுடைய வாழ்நாளில் இப்படி ஒரு வெள்ளத்தை அவர் பார்த்தது இல்லை என்கிறார். அசாம் மக்களின் வாழ்க்கையின் ஆதாரம் என்று சொல்லப்படும் பிரம்மபுத்ரா நதி கரையில் வசிக்கும் மக்களுக்கு இம்மாதிரியான வெள்ளம் புதியதல்ல. ஆனால் பருவநிலை மாற்றம், தீவிர தொழில்மயம், முறையற்ற கட்டுமானம் இவற்றால் தீவிர வானிலை பேரழிவுகள் அதிகமாக நடக்கின்றன. கடந்த மே மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் அசாமில் 39 பேர் உயிரிழந்தனர். இந்த மாதம் ஏற்கனவே சராசரியைக் காட்டிலும் 109 சதவீதம் அதிக அளவிலான மழை பொழிந்துவிட்டதாக வானிலை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பல இடங்களில் பிரம்மபுத்ரா நதி அபாய அளவை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வெள்ளம் குறித்து அசாம் மக்கள் மற்றும் அதிகாரிகளிடம் பேசியது பிபிசி. தற்போதைய இந்த பேரழிவை அசாமின் சமூக மற்றும் பொருளாதார அமைப்பை மாற்றும் ஒரு பேரழிவாக அவர்கள் பார்க்கிறார்கள். இந்த முறை நிலைமை மேலும் மோசமாகவுள்ளது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவுடன் ராணுவமும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட அனைத்து பகுதியும் நீரில் மூழ்கி புதியதாக தோன்றிய ஒரு நதியை போல காட்சியளிக்கின்றன. அசாமின் பொருளாதார மையமாக விளங்கும் கெளஹாத்தி நகரம், அதன் அருகாமை பகுதிகள் இடிபாடுகள் சூழ்ந்த பகுதியாக காட்சியளிக்கிறது. நெல் விளையும் நிலங்கள் சேறு நிறைந்த பகுதியாக தோன்றுகிறது. உடியானா கிராமத்தில் பள்ளிகள், மருத்துவமனைகள், கோயில்கள், மசூதிகள் என எதையும் பார்க்க முடியவில்லை. எங்கும் நீர் மட்டுமே காட்சியளிக்கிறது. மக்கள் வாழை இலையாலும், மூங்கில் குச்சிகளாலும் ஆன படகுகளால் பயணிக்கின்றனர். இல்லையேல் அந்த நீரில் விரக்தியுடன் நீந்தி ஆரஞ்சு நிற உடையணிந்த மீட்புப் பணியாளர்களை மக்கள் தேடுகின்றனர். காமரூப் மாவட்டத்தில் இன்னும் பலர் வீடுகளில் சிக்கி தவிக்கின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES 64 வயதான சிராஜ் அலி, தனது கிராமத்தில் வெள்ள நீர் சூழந்து அனைத்தையும் அழித்தபோது தனது உயிருக்கு ஆபத்து வந்துவிட்டதாக கருதினார். இருப்பினும் பகுதியளவில் நீரால் மூழ்கிய தனது வீட்டில் தொடர்ந்து தங்கி வருகிறார் சிராஜ் அலி. தனது பிள்ளைகளை மட்டும் சாலையோரத்தில் இருக்கும் முகாமிற்கு அனுப்பி வைத்துள்ளார். "நீரால் சூழந்தபோதும், குடிநீர் இல்லை. உணவு இல்லை. மூன்று நாட்களாக பட்டினியாக இருக்கிறேன். எங்கு செல்வேன் என்ன செய்வேன்? என்று புரியவில்லை" என்கிறார் கண்ணில் கண்ணீர் மல்க. படக்குறிப்பு, சிராஜ் அலி அலியை போலவே அவரின் பக்கத்து வீட்டுக் காரர் முகமது ரபுல் அலியும் தனது வீட்டை பாதுகாக்க அங்கேயே தங்க முடிவெடுத்துவிட்டார். "சைக்கிள், வீட்டுக்கு தேவையான மெத்தை, நாற்காலி என அனைத்தும் மிகவும் சிரமப்பட்டுதான் வாங்கினேன் ஆனால் அது அத்தனைதும் இப்போது அழிக்கப்பட்டுவிட்டது," என்கிறார் ரபுல். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வருக்கும் நீர் மற்றும் உணவு வழங்குவது சிரமமாக உள்ளது என்கின்றனர் அதிகாரிகள் வெள்ளத்தை தாங்கும் மாநிலத்தின் நீடித்த முயற்சிகளை பருவநிலை மாற்றம் கடினமாக்கிக் கொண்டு வருகிறது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். "இந்த முறை ஏற்பட்ட வெள்ளம் மிக ஆபத்தானது என்பதில் சந்தேகமில்லை. அதேபோல மழையின் அளவும் அதிகரித்துள்ளது" என்கிறார் அசாம் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் பேராசிரியர் ஜெயஸ்ரீ ரவுட். இருப்பினும் இதற்கு பருவநிலை மாற்றம் மட்டுமே காரணம் என்று சொல்வதற்கு முன்னால் காடுகளை அழிப்பது போன்ற மனிதர்களின் செயல்பாடுகள் குறித்தும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார் அவர். மரங்கள் வெட்டப்படுவதை உடனடியாக தடுக்க வேண்டும் என்று கூறும் ரவுட், குறிப்பாக நதிக் கரைக்கு அருகாமையில் இருக்கும் மரங்களை வெட்டுவதை நிறுத்த வேண்டும். ஏனென்றால் இந்த மரங்களின் வேர்கள் நீண்ட நேரம் நீரை பிடித்து வைக்க பயன்படும். ஆனால் இந்த காரணங்கள் குறித்து ஆராய தனக்கு எந்த நேரமும் இல்லை என்று கூறும் செளத்ரி, மேகம் சூழந்த வானத்தில் சூரியன் ஏதோ துளிகளை போல காட்சியளிக்க பாதியளவு மூழ்கிய தனது வீட்டில் மிகுந்த வருத்தத்துடன் அமர்ந்திருக்கிறார் அவர். "இதுவரை இங்கு யாரும் வரவில்லை எந்த நிவாரணமும் தரவில்லை. யாராவது வருவார்களா என்று தெரியவில்லை" என்கிறார். https://www.bbc.com/tamil/india-61876415
 3. உடல்நலம்: 100 ஆண்டுகள் வாழ என்ன செய்ய வேண்டும்? 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS தேதி ஜனவரி 2 , நாள் வெள்ளிக்கிழமை. ஜப்பானில் ஒரு சிறிய கிராமத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவருக்கு கனே என்று பெயர் சூட்டப்பட்டது. இது நடந்தது 1903 ஆம் ஆண்டு. கனே தனாகா 119 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2022 ஏப்ரலில் காலமானார். அவர் அதிகாரப்பூர்வமாக உலகின் மிகவும் வயதான நபர் ஆவார். அவர் தனது வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளை நர்ஸிங் ஹோமில் கழித்தார். காலை ஆறு மணிக்கு எழுவார். கணித கேள்விகளுக்கு விடை காண்பார். போர்ட் கேம்களை விளையாடுவார். சாக்லேட் சாப்பிடுவார். காபி மற்றும் சோடா குடிப்பார். நூறு ஆண்டுகள் வாழ பெரியவர்கள் ஆசிர்வதித்தாலும், இந்த எண்ணம் உண்மையாவது சாத்தியமில்லை என்று கருதப்பட்டது, ஆனால் இப்போது அப்படி இல்லை. எனவே நூறு ஆண்டுகள் வாழ்வதற்கு என்ன செய்யவேண்டும் என்ற கேள்விக்கான பதிலைக் கண்டுபிடிக்க, பிபிசி நான்கு நிபுணர்களிடம் பேசியது. பட மூலாதாரம்,GETTY IMAGES மனித வாழ்வில் மறுபிறப்பு சாத்தியமா? அறிவியல் சொல்வது என்ன? “கடல் மரணித்தால் மனித குலமும் மரணிக்கும்” - எச்சரிக்கும் செயற்பாட்டளர்கள் காற்று மாசால் இந்தியர்களின் ஆயுள் குறையும்- அதிர்ச்சி தரும் அமெரிக்க ஆய்வு மறு பிறவி ஜப்பானின் அறிவியல் கவுன்சிலின் துணைத் தலைவராக இருந்த டாக்டர் ஹிரோகோ அகியாமா, "இப்போது நூறு ஆண்டுகள் வரை வாழ்வதில் அசாதாரணம் எதுவுமில்லை" என்கிறார். 'ஸ்டடி ஆஃப் ஏஜிங்' எனப்படும் முதுமையடைதல் குறித்த ஆய்வில் நிபுணத்துவம் பெற்றவர் ஹிரோகோ அகியாமா. ஜப்பானின் மக்கள் தொகைக்கு வேகமாக வயதாகி வருவதாக அவர் கூறுகிறார். ஜப்பானில் இப்போது பெண்களின் சராசரி வயது 88 ஆகவும், ஆண்களின் சராசரி வயது 82 ஆகவும் உள்ளது. ஜப்பானின் மக்கள் தொகையில் 29 சதவிகிதம் பேர் 65 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள். சராசரி வயதைப் பொருத்தவரை, ஹாங்காங், சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, இத்தாலி மற்றும் ஸ்பெயின் மட்டுமே ஜப்பானுக்கு அருகில் வருகின்றன. கடந்த ஆண்டு நாட்டின் 86 ஆயிரத்து 510 குடிமக்களின் வயது, நூறாக இருக்கும் அல்லது அதற்கு மேலும் இருக்கும் என்று ஜப்பானின் சுகாதார அமைச்சகம் தெரிவிக்கிறது. "ஜப்பானில் மக்களின் நீண்ட ஆயுளுக்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று 'யுனிவர்சல் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் சிஸ்டம்'. நாங்கள் 1960 களில் இதைத் தொடங்கினோம். மக்கள் இங்கு சுகாதார வசதிகளை எளிதாகப் பெறுகிறார்கள். மற்றொரு காரணம். ஜப்பான் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டுள்ளது மற்றும் அவர்களின் வாழ்க்கை முறை ஆரோக்கியமானது."என்று கூறுகிறார் டாக்டர் ஹிரோகோ . ஜப்பானியர்கள் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கிறார்கள். ஜப்பான் மக்கள் உணவில் கவனம் செலுத்துகிறார்கள். குறைந்த கொழுப்பு உட்கொள்கிறார்கள். மீன், காய்கறிகள் மற்றும் கிரீன் டீ போன்றவற்றை அதிகம் உட்கொள்கிறார்கள். ஜப்பானில் மக்களின் சராசரி வயது அதிகரித்து வருகிறது ஆனால் மொத்த மக்கள் தொகை குறைந்து வருகிறது. உண்மையில், பிறப்பு விகிதம் சில காலமாக குறைந்து வருகிறது. மேலும் வேலை செய்யக்கூடிய வயதுடையவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது என்று டாக்டர் ஹிரோகோ கூறுகிறார். முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், முதியவர்களின் தேவைகள் வேறுபட்டவை என்ற புரிதலும் உருவானது. அரசின் முக்கிய கவனம் சுகாதார அமைப்பு மற்றும் ஓய்வூதிய முறை மீது உள்ளது. வீட்டுவசதி மற்றும் போக்குவரத்து அமைப்புகள் மீதும் கவனம் செலுத்தப்படுகின்றன. ஆனால் சமூகத்தின் அடிப்படை உள்கட்டமைப்பு மீண்டும் புதுப்பிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது என்கிறார் டாக்டர் ஹிரோகோ. தனது குழுவுடன் சேர்ந்து அவர், வயதானவர்கள் யாரையும் சார்ந்திருக்காமல் வாழக்கூடிய வழிகளைக் கண்டறிய பல சமூகப் பரிசோதனைகளை மேற்கொண்டார். "வயதான சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும்விதமாக நாங்கள் சமூகங்களை மறுகட்டமைக்க முயற்சிக்கிறோம். 100 வயது வரை மக்கள் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும், ஒருவருக்கொருவர் தொடர்புகொண்டும், பாதுகாப்பாகவும் உணரும் சமூகத்தை உருவாக்க விரும்புகிறோம். நாங்கள் முதியவர்களுக்காக மட்டுமல்ல, எல்லா வயதினருக்காகவும் வேலை செய்கிறோம்." என்று டாக்டர் ஹிரோகோ கூறுகிறார். ஜப்பானில் மக்கள் ஓய்வு பெற்ற பிறகு புதிய வேலைகளைத் தொடங்குகிறார்கள். அவர்கள் தங்கள் இரண்டாவது தொழில் வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். இது தினசரி பழக்கவழக்கத்தை பராமரிக்கிறது மற்றும் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. டாக்டர் ஹிரோகோ அகியாமாவுக்கு 78 வயதாகிறது. அவர் தனது இரண்டாவது தொழில் வாழ்க்கையை அனுபவித்து வருகிறார். "பல ஆண்டுகள் பல்கலைகழகத்தில் பேராசிரியராக நான் இருந்தேன். 70 வயதில் விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். நான் உட்பட பல்வேறு திறமைகள் கொண்ட நான்கு பேர் சேர்ந்து ஒரு நிறுவனம் அமைத்து விவசாயம் செய்ய ஆரம்பித்தோம். நான் விவசாயியாக ஆக வேண்டும் என்பது என் சிறுவயது கனவு." என்றார் அவர். அவர் நூறு வயது வரை வாழ விரும்புகிறாரா என்ற கேள்விக்கு பதிலளித்த டாக்டர் ஹிரோகோ அகியாமா, தனது தாயார் இறந்தபோது அவருக்கு 98 வயது என்று கூறுகிறார். நூறு ஆண்டுகள் வாழ்ந்தால் போதும் என்கிறார் அவர். ஆனால் அவருக்கு நூறு வருடங்களுக்கு மேல் வாழ வேண்டும் என்ற விருப்பம் இல்லை. பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY முதுமை என்றால் என்ன? "முதுமை என்பது மிகவும் தனிப்பட்ட செயல்முறையாகும். எந்த இரண்டு பேரின் முதுமையடையும் செயல்முறையும் ஒரே போல இருக்காது," என்கிறார் பர்மிங்காமின் ஹெல்தி ஏஜிங்கிற்கான ஆஸ்டன் ஆராய்ச்சி மையத்தின் மூத்த விரிவுரையாளர் கேத்தி ஸ்லாக். நமக்கு ஏன் வயதாகிறது? இந்த உயிரியல் செயல்முறையை மெதுவாக்க முடியுமா, கேத்தியின் ஆய்வகம் இந்தக் கேள்விக்கான பதில்களைத் தேடுகிறது. முதுமையின் வெளிப்புற அறிகுறிகள் அனைவருக்கும் தெரியும். தோல் சுருக்கங்கள் மற்றும் முடி நரைப்பது போல. ஆனால் நம் உடலிலும் நிறைய நடக்கிறது. வயதானதன் விளைவு உடலின் அனைத்து திசுக்களிலும் தெரியும் என்று கேத்தி விளக்குகிறார். அதன் விளைவு மூளை முதல் கருவுறுதல் வரை இருக்கும். இந்த மாற்றங்கள் முதுமையின் முக்கிய அடையாளங்கள் என்று அழைக்கப்படுகின்றன. "இதில் பல செயல்முறைகள் இருக்கலாம். செல்லுக்குள் புரதத் தரக் கட்டுப்பாடு இழப்பு, மைட்டோகாண்ட்ரியா செயலிழத்தல் போன்றவை. மைட்டோகாண்ட்ரியா, ஆற்றலை உற்பத்தி செய்யும் செல்லின் ஒரு பகுதியாகும். வயது அதிகரிக்கும்போது அது வேலை செய்வதை நிறுத்தலாம்."என்கிறார் அவர். முதுமை தொடங்கும் போது, நீரிழிவு போன்ற நிரந்தர நோய்களின் அபாயமும் அதிகரிக்கிறது என்று கேத்தி கூறுகிறார். செல்கள் செயல்பட ஊட்டச்சத்துக்களின் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவது அவசியம். பிரச்னை ஏற்படும் போது, ஸ்டெம் செல்கள் அழிகின்றன. ஸ்டெம் செல்கள், செல்களை சரிசெய்யும் பணியை செய்கின்றன. மனதிலும் மாற்றங்கள் வரும். "சிலருக்கு வயதாகும்போது மூளையின் அளவு குறையலாம். இதனால் பல முதியவர்களின் நினைவாற்றல் பலவீனமடைகிறது. ஒரே நேரத்தில் பல விஷயங்களைச் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. அவர்களின் நடத்தையிலும் மாற்றங்கள் வரும். ஒன்று மிகவும் கவலையாக இருப்பது அல்லது மனச்சோர்வுக்கு ஆளாவது. ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால், எல்லா முதியவர்களிடமும் இவை எல்லாம் ஒரே மாதிரியாக இருக்காது. நபருக்கு நபர் மாறுபடும்," என்று கேத்தி ஸ்லாக் விளக்குகிறார்,. நூறு வருடங்கள் வாழ்வதற்கான நமது எதிர்பார்ப்புகளை எப்படி அதிகரிப்பது என்ற கேள்விக்கும் கேத்தி பதிலளிக்கிறார். "இன்று மிகவும் வயதானவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் உடல்நிலை நன்றாக இல்லை. இது தொடர்பாக வேலை செய்யும் அவசியம் உள்ளது. இது ஒரு பழமையான அறிவுரையாகத் தோன்றலாம். ஆனால் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நாம் பின்பற்ற வேண்டும். சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். வயதாகும்போது உங்கள் செயல்பாடுகளைத் தொடர முயற்சி செய்யுங்கள். நன்றாகச் சாப்பிடுங்கள். அதிகமாக வேண்டாம். மிகக் குறைவாகவும் வேண்டாம். புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள்." என்று கேத்தி ஸ்லாக் குறிப்பிட்டார். முதுமை பற்றி நாம் அறியாத பல விஷயங்கள் இன்னும் உள்ளன. வரலாற்று ரீதியாக நாம் நோய் செயல்பாடு மீது அதிக கவனம் செலுத்தியுள்ளோம் என்று கேத்தி ஸ்லாக் கூறுகிறார். புற்றுநோய் மற்றும் பிற நோய்களில் ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள் பலர் உள்ளனர். ஆனால் நோய்களை, வயதுடன் தொடர்புடைய நோய்களாகப் பார்க்கும் ஒரு குழுவினரும் இப்போது உள்ளனர். இந்த வழியில் பல நோய்களுக்கான சிகிச்சையின் புதிய முறைகளை உருவாக்க முடியும். பட மூலாதாரம்,GETTY IMAGES சுவாரசியமான பரிசோதனை "சில முயற்சிகள் மூலமாக, முதுமையடையும் செயல்முறையை மெதுவாக்கமுடியும் என்று எங்களது ஆய்வகத்தில் காட்டுகிறோம். சில சமயங்களில் அதை நிறுத்தவும், அதன் போக்கை திருப்பவும் முடியும். இதை செய்வது சாத்தியம்தான்,"என்கிறார் நியூயார்க் நகரத்தில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவக்கல்லூரியின், முதுமையடையல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் நீர் பார்சிலாய். உலகில் எத்தனை பேர் 100 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் என்று மதிப்பிடுவது கடினம். ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை கணக்கெடுப்புத்துறை, 2021 ஆம் ஆண்டில், இதுபோல 5 லட்சத்து 73 ஆயிரம் பேர் இருந்ததாக மதிப்பிடுகிறது. டாக்டர் நீர் பார்சிலாய் தனது ஆராய்ச்சியைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். அதிகமான மக்கள் நூறு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் வாழ்வதற்காக தாங்கள் பரிசோதனைகளை செய்வதாகவும், வழிகளைத்தேடுவதாகவும் அவர் குறிப்பிட்டார். நூறு வயதை நிறைவுசெய்துள்ள எழுநூற்று ஐம்பது பேரிடமும் அவர்களது குடும்பத்தினரிடமும் அவர் உதவி பெற்று வருகிறார். முதுமையின் வேகத்தை குறைக்கக்கூடிய மரபணுக்களை அவர் தேடிவருகிறார். இந்த தகவலை மருந்து தயாரிக்கவும் பயன்படுத்தலாம். அவரது குழு முதுமை தொடர்பான மூன்று சாத்தியக்கூறுகளில் வேலை செய்கிறது. இவற்றில் முதல் நோக்கம் செயல்முறையை மெதுவாக்குவதாகும். வயதால் பாதிக்கப்படாத ஆனால் இந்த விளைவு ஒளிந்திருக்கின்ற அவரது ஓவியத்தில் தெரியக்கூடிய, 'டோரியன் கிரே' என்ற கற்பனைக் கதாபாத்திரத்தின் பெயர் அதற்கு சூட்டப்பட்டுள்ளது. "இரண்டாவது கட்டத்தை 'இளமையின் நீரூற்று'(Fountain of youth) என்று அழைக்கிறோம். இதில் அனைவரையும் இளமையாக்குவது பற்றி பேசப்படுகிறது. அதை செய்துகாட்டுவது மிகவும் கடினம். மூன்றாவது மிகவும் சுவாரசியமானது. இதற்கு Peter Pan என்று பெயரிடப்பட்டது. இந்த கற்பனைக் கதாபாத்திரத்தின் வயது கூடுவதில்லை. இருபது அல்லது முப்பது வயதிற்குட்பட்டவர்களை இதில் தேர்வு செய்ய திட்டமிடுகிறோம். சில மாதங்களுக்கு ஒருமுறை அல்லது வருடத்திற்கு ஒருமுறை அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும், மேலும் முதுமையடையும் செயல்முறையை நிறுத்தவேண்டும் அல்லது வேகத்தைக் மிகவும் குறைக்க வேண்டும்." பயோமார்கர்ஸ் என்பது இதய நோய், கொலஸ்ட்ரால் போன்ற உள் நோய்களைக் குறிக்கும் மூலக்கூறுகள். ஆனால் முதுமையை அடையாளம் காண இத்தகைய குறிப்பான்களைக் கண்டுபிடிப்பது எளிதல்ல. "நமக்கு நிறைய பயோமார்கர்கள் தேவை. நாங்கள் இரண்டு தகவல்களைத் தரக்கூடிய பயோமார்கர்களை தேடுகிறோம். உண்மையான வயதுக்கும் உயிரியல் வயதுக்கும் உள்ள வித்தியாசத்தை அது சொல்லவேண்டும். சிலர் தங்கள் வயதைக்காட்டிலும் அதிகமாக அல்லது குறைவாகத்தெரிவார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இரண்டாவதாக, வயதாவதை மெதுவாக்க நாம் தயாரிக்கும் மருந்துகளை பயன்படுத்தும்போது, பயோமார்கர்களில் மாற்றம் தெரியவேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம்," என்கிறார் டாக்டர் நீர் பார்சிலாய். முதுமையைத் தடுக்கும் நோக்கில் தயாரிக்கப்படும் சில மருந்துகள், கட்டுப்பாட்டாளர்களிண் ஒப்புதல் பெறப்பட்டு, தயாரிக்கப்பட்டும் வருகின்றன. அவை மற்ற சூழ்நிலைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அந்த உடல் உறுப்பு நிராகரிக்கப்படாமல் இருப்பதற்காக இந்த மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. டைப் 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் 'மெட்ஃபோர்மின்' என்ற மருந்தின், 'இரண்டாவது நோக்கத்திற்கான மருத்துவப் பரிசோதனைகள் இயக்கத்தை' டாக்டர் நீர் பார்சிலாய் வழிநடத்துகிறார். நீங்கள் இருக்கும்போதே இந்த திசையில் ஏதேனும் பெரிய வெற்றி ஏற்படும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா என்ற கேள்வியை பிபிசி அவரிடம் கேட்டது. "ஆமாம், நிச்சயமாக. நாம் இரண்டு ஆண்டுகளில் என்ன செய்ய முடியும் என்பதை மிகைப்படுத்தி ஊகிக்கிறோம். ஆனால் ஐந்து அல்லது 10 வருடங்களில் என்ன செய்யமுடியும் என்பது பற்றி குறைத்தே மதிப்பிடுகிறோம். இந்தத் துறையில் மிகப்பெரிய அலை காணப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள பணக்காரர்களும் இதில் முதலீடு செய்கிறார்கள், அது நிச்சயமாக வேகமெடுக்கப் போகிறது,"என்று அவர் பதில் அளித்தார். பட மூலாதாரம்,THINKSTOCK வயதைக்கூட்டும் நண்பர்கள் "மற்றவர்களுடன் நன்றாகப் பழகுபவர்கள் மற்றும் அன்பான உறவைக் கொண்டவர்கள், அப்படி இல்லாதவர்களை விட நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கின்றனர்," என்று ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் மனநலப் பேராசிரியரான ராபர்ட் வால்டிங்கர் கூறுகிறார். ராபர்ட் வால்டிங்கர், ஹார்வர்ட் ஸ்டடி ஆஃப் அடல்ட் டெவலப்மென்ட்டின் (வயது வந்தோர் குறித்த ஆராய்ச்சி) இயக்குநராகவும் உள்ளார். "இது எங்கள் ஆய்வின் 84 வது ஆண்டு. எங்களுக்குத் தெரிந்தவரை, ஒரே மக்கள் குழுவின் மீது நடத்தப்பட்ட மிக நீண்ட ஆய்வு இது. அவர்கள் டீன் ஏஜ் பருவத்தில் இருந்தபோது இது தொடங்கியது. இது அவர்கள் முதுமை அடைந்தபிறகும் தொடர்கிறது. இப்போது நாங்கள் அவர்களின் குழந்தைகளைப் பற்றிய ஒரு ஆய்வைத் தொடங்கியுள்ளோம். மனித வாழ்க்கையில் என்ன தவறு நடந்துள்ளது என்பதைக் கண்டறிய முயற்சித்தோம். வாழ்க்கை சரியான பாதையில் செல்வதற்கான ஆய்வுக்கும் இது உதவும்." இந்த ஆய்வு 1938 இல் தொடங்கியது. ஆரம்பத்தில் 724 பங்கேற்பாளர்கள் இருந்ததாக ராபர்ட் விளக்குகிறார். அவர்களில் பெரும்பாலானோர் உயிரிழந்துவிட்டனர். ஆனால் தொண்ணூறு, நூறு வயதைக் கடந்த சிலர் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள். இந்த ஆய்வில் நமக்க்கு ஏற்கனவே தெரிந்த சில விஷயங்கள் வெளிவந்ததாக அவர் கூறுகிறார். அவை, சத்தான உணவு மற்றும் வாழ்க்கை முறை தொடர்புடைய பழக்கவழக்கங்கள். இவை நீண்ட ஆயுளுக்கு உதவும். மற்றவர்களுடன் அதிக உறவு வைத்திருப்பது, தன்னைச் சுற்றியுள்ளவர்களுடன் அதிகம் இணைந்திருப்பது மற்றும் அன்பு, அரவணைப்பைக் காட்டுவது ஆகியவை மக்கள் ஆரோக்கியமாக இருக்க உதவியது என்பதை இந்த ஆய்வு காட்டியது என்கிறார் ராபர்ட். "இதைப் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. இந்த விஷயத்தில் சிறந்த கருதுகோள், மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை சமாளிப்பது பற்றியது. பகலில் நடக்கும் ஏதோ ஒன்று உங்களை வருத்தப்படுத்தியது அல்லது யாருடனாவது சண்டை ஏற்பட்டதால் உங்கள் உடலில் இறுக்கத்தை உணர்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் வீட்டிற்கு வரும்போது, உங்கள் பேச்சை செவிமடுக்கும் நம்பகமான நபர் இருந்தால், உங்கள் சோர்வு தணிவதாக நீங்கள் உணருவீர்கள். தனியாக இருப்பவர்களின் கோபம் ஒருபோதும் முற்றிலும் மறையாது என்று நாங்கள் நம்புகிறோம். உடலில் லேசான அழுத்தம் எப்போதும் இருக்கும். அது உடலின் அமைப்பைக் கெடுக்கத் தொடங்குகிறது. நல்ல உறவுகள் மன அழுத்தத்திலிருந்து வெளியே வருவதற்கு உதவுகின்றன என்ற தகவலை ஆராய்ச்சியின் மூலம் பெறுகிறோம்,"என்று ராபர்ட் வால்டிங்கர் கூறுகிறார். நீண்ட ஆயுளுக்கு உறவுகள் முக்கியம். ஆனால் தனிமையை விரும்பும் சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம், "இது ஒரு முக்கியமான விஷயம். நாம் அனைவரும் நல்ல மனிதர்களுடன் தொடர்பில் இருக்க விரும்புகிறோம். நம்மில் சிலர் உள்முக சிந்தனையாளர்கள்(Introvert). அது ஒரு பிரச்னையல்ல. உள்முக சிந்தனையாளர்கள் தங்களைச் சுற்றியுள்ள பெரும்பாலான மக்கள் மன அழுத்தத்தில் இருப்பதாக நினைக்கிறார்கள். அவர்களுக்கு. ஒன்று அல்லது இரண்டு நெருங்கிய நபர்கள் மட்டுமே தேவை. அவர்களுக்கு அதுவே போதும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நீங்கள் எத்தனை உறவுகளுடன் இருக்க வேண்டும் என்பதற்கான ஒரே ஃபார்முலா அனைவருக்கும் பொருந்தாது. செல்லப்பிராணிகளும் நமக்கு மகிழ்ச்சியைத் தருவதோடு நமது மன அழுத்தத்தையும் குறைக்கும்." என்கிறார் ராபர்ட் வால்டிங்கர். பட மூலாதாரம்,GETTY IMAGES வாழ்க்கையில் முதல்முறையாக உறவுகொள்ள முயற்சித்த எழுபது அல்லது எண்பது வயதுக்கு மேற்பட்டவர்களையும் தாங்கள் ஆய்வு செய்துள்ளதாக ராபர்ட் விளக்குகிறார். சிலர் முதல் முறையாக காதலித்துள்ளனர். எனவே மிகவும் தாமதமாகிவிட்டது என்று எதுவுமே இல்லை என்று சொல்லலாம். மீண்டும் அதே கேள்விக்கு வருகிறோம். நூறு ஆண்டுகள் வாழ்வதற்கு என்ன ஃபார்முலா? அத்தகைய செய்முறையை உத்தரவாதத்துடன் சொல்ல முடியாது. ஆனால் நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட விஷயங்களைச் செய்தால் அது உதவக்கூடும். உங்கள் உணவை சரியாக வைக்கவும். உடல் செயல்பாடுகளை பராமரிக்கவும். நீங்கள் பேசக்கூடிய நண்பர் அல்லது செல்லப்பிராணியைக் கண்டறியவும். இளைஞர்களை விட வயதானவர்கள் அதிகமாக இருக்கும் நாட்டில் நீங்கள் வசிக்கிறீர்கள் என்றால், உங்கள் வாழ்க்கையின் மாலை, பிரகாசமாகவும் நிதானமாகவும் இருக்கும் மாற்றங்கள் நிகழலாம். முதுமையடையும் செயல்முறையை மெதுவாக்கும் அல்லது முழு செயல்முறையையும் மாற்றுவதற்கான சூத்திரம் இன்னும் கிடைப்பதற்கு இல்லை. ஆனால் விஞ்ஞானிகள் இந்த திசையில் பணியாற்றுகிறார்கள். ஆனால் இது நடக்கும் வரை, உங்கள் உடலை நூறு ஆண்டுகளுக்கு தேவைப்படும் வகையில் கவனித்துக்கொள்வதற்கு ராபர்ட் வால்டிங்கரின் இந்த அறிவுரை பயனுள்ளதாக இருக்கும். https://www.bbc.com/tamil/science-61874159
 4. சிறுவாணி ஒப்பந்தம்: தமிழ்நாடு - கேரளா இடையே என்ன சிக்கல்? மோகன் பிபிசி தமிழுக்காக 20 ஜூன் 2022 தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்திற்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையிலிருந்து தமிழ்நாட்டிற்கு உரிய அளவில் பங்கு கிடைப்பதில்லை என்பது தமிழ்நாடு - கேரள அரசுகளுக்கு இடையே விவாதப் பொருளாகியிருக்கிறது. கோவை மாநகராட்சிக்கு சிறுவாணி, பில்லூர் மற்றும் ஆழியார் திட்டங்களின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணை தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கேரள முதல்வருக்கு சமீபத்தில் இரண்டு கடிதங்களை எழுதியுள்ளார். சமீபத்தில் கோவை வந்திருந்த அமைச்சர் கே.என்.நேரு, கேரள அரசு சிறுவாணியிலிருந்து உரிய அளவில் தண்ணீர் வழங்குவதில்லை என குற்றம்சாட்டியிருந்தார். ஜூன் 19ஆம் தேதி எழுதிய கடிதத்தில் ஸ்டாலின், `சிறுவாணி அணையின் நீர் சேமிப்பை அணையின் முழு கொள்ளவுக்கு உயர்த்திப் பராமரிக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கேரள முதல்வர் உத்தரவிட வேண்டும்` என தெரிவித்திருந்தார். தமிழ்நாடு முதல்வரின் கடிதத்தை தொடர்ந்து சிறுவாணி அணையில் வழங்கப்படும் தண்ணீர் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வரின் ட்வீட்டிற்கு பதிலளித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் அதிகபட்சம் வெளியேற்ற அளவு தண்ணீர் வழங்கப்படுகிறது. விரைவில் முதல்வர் அளவிலான சந்திப்பின் மூலம் அடுத்த கட்டம் விவாதிப்போம் என பதிலளித்திருந்தார். “காவிரியின் குறுக்கே அணை கட்ட விட மாட்டோம்” – முதல்வர் ஸ்டாலின் மேகேதாட்டு: கர்நாடகத்துக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேறிய தமிழக சட்டப்பேரவை கேரள முதல்வர் பினராயி விஜயனை எதிர்த்து விமானத்துக்குள் போராட்டம் - பின்னணி என்ன? அதற்குப் பதிலளித்த மு.க.ஸ்டாலின், `ஒத்துழைப்பு மற்றும் தோழமை உணர்வுடன் பிரச்சினைகளை விவாதித்து தீர்வு காண எதிர்நோக்கியுள்ளேன். இரு மாநிலங்களும் இணைந்து வளர்ச்சியடைவதை நாம் உறுதி செய்வோம்,` என்றுள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 சிறுவாணி திட்டம் எப்போது உருவாக்கப்பட்டது? பிபிசி தமிழிடம் பேசிய கோவையைச் சேர்ந்த எழுத்தாளர் இளங்கோவன், `கோவையில் முதல் குடிநீர் திட்டமான சிறுவாணி திட்டம் கடந்த 1929-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தியாவிலேயே ஒரு நகராட்சியால் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட முதல் குடிநீர் திட்டம் சிறுவாணி தான். அப்போது மாநிலங்கள் மொழி வாரியாக பிரிக்கப்படவில்லை. 1956இல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது சிறுவாணி அணை கேரளா வசம் சென்றது. ஆனால் அதன் பயன்பாடு தமிழ்நாட்டில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சிறுவாணி அணை பராமரிப்புக்கான கட்டனத்தை தமிழ்நாடு அரசு கேரள அரசுக்கு செலுத்தி வருகிறது. முல்லைப் பெரியாறு அணையில் உள்ள அதே சிக்கல் தான் சிறுவாணியிலும் உள்ளது. 1973-ம் ஆண்டு தமிழ்நாடு - கேரளா இடையே சிறுவாணி குடிநீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் முதல் முறையாக மேற்கொள்ளப்பட்டது. கோவை மாநகராட்சியின் குடிநீர் தேவைக்காக சிறுவாணி நீர் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், வெயில் காலங்களிலும், மழை பொய்த்துவிடும் போதும் சிறுவாணியில் குடிநீர் பெறுவது சிக்கலாகி விடுகிறது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு முறையும் இரு மாநிலங்களில் உள்ள அதிகாரிகள், அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும். இதற்கு நிரந்தரமாக ஒரு தீர்வு காணப்பட வேண்டும்,' என்றார். ஒப்பந்தம் என்ன? பிபிசி தமிழிடம் பேசிய கோவை குடிநீர் வடிகால் வாரியத்தின் சிறுவாணி பிரிவு நிர்வாக பொறியாளர் மீரா, "சிறுவாணி அணை கட்டப்பட்டதே தமிழ்நாட்டின் குடிநீர் தேவைக்காக தான். தற்போது அதன் கட்டுப்பாடு கேரள அரசிடம் உள்ளது. சிறுவாணி அணையிலிருந்து பெறப்படும் குடிநீர் 7 நகராட்சிகளுக்கும், 28 ஊராட்சிகளுக்கும் கோவை மாநகராட்சியின் ஒரு பகுதிக்கும் பயன்படுகிறது. சிறுவாணி அணையின் நீர், பாசனத்திற்கு பயன்படுவதில்லை," என்கிறார். கேரள அரசுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி சிறுவாணியிலிருந்து நாளொன்றுக்கு 10 கோடி லிட்டர் தண்ணீர் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும். மாதம் ஒன்றுக்கு 304 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்பட வேண்டும். ஆண்டு ஒன்றுக்கு (1 ஜூலை முதல் 30 ஜூன் வரையிலான காலகட்டத்தில்) 1.30 டி.எம்.சி குடிநீர் வழங்கப்பட வேண்டும். ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளாக ஒப்புக்கொள்ளப்பட குடிநீரின் அளவு முழுமையாக வழங்கப்படவில்லை என முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 300 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டது. இந்த அளவு ஜனவரியிலிருந்து (ஜனவரி - 237 கோடி லிட்டர், பிப்ரவரி - 179 கோடி லிட்டர், மாட்ச் 179 கோடி லிட்டர், ஏப்ரல் - 162 கோடி லிட்டர், மே - 161 கோடி லிட்டர்) படிப்படியாக குறைய ஆரம்பித்தது. மே மாதம் வழங்கப்பட வேண்டிய குடிநீர் அளவில் பாதியே வழங்கப்பட்டுள்ளது. வெயில் காலங்களில் குடிநீர் வரத்து சற்று குறைவாக இருக்கும். ஆனால் கடந்த காலங்களில் இந்த அளவுக்கு குறைந்ததில்லை. ஜனவரி மாதத்திலிருந்து கேரள அதிகாரிகள் குடிநீர் வழங்கும் அளவை குறைத்தனர். ஆனால் அதற்கான சரியான காரணம் தெரிவிக்கப்படவில்லை. தமிழ்நாடு அரசின் கோரிக்கை என்ன? படக்குறிப்பு, கோப்புப்படம் இரு மாநில ஒப்பந்தத்தின்படி சிறுவாணி அணை 878.5 மீட்டர் கொள்ளளவில் தண்ணீரை பராமரிக்க வேண்டும். ஆனால் கேரள அர்சு 877 மீட்டர் அளவில் தான் தண்ணீரை பராமரிக்கிறது. இதனால் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய 122 மெட்ரிக் கன அடி தண்ணீர் பற்றாக்குறை ஆகிறது. எனவே தண்ணீர் அளவை ஒப்பந்தத்தில் உள்ள நிலையில் பராமரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு கேரள அரசிடமிருந்து அதிகாரபூர்வ பதில் எதுவும் வரவில்லை. அதிகாரிகள் தரப்பிலான பேச்சுவார்த்தை மீண்டும் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. அப்போது இந்த கோரிக்கை விரிவாக விவாதிக்கப்பட உள்ளது` என்கிறார் சிறுவாணி பிரிவு நிர்வாக பொறியாளர். கேரளாவின் பதில் என்ன? இது தொடர்பாக கேரள அரசின் குடிநீர் வடிகால் வாரியத்தின் தலைமை பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ் பிபிசி தமிழிடம் பேசுகையில், `சிறுவாணி ஒப்பந்தம் தான் 1973-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அணை அதற்கு முன்பே கட்டப்பட்டுவிட்டது. மதகுகள் கடுமையாக பழுதடைந்துள்ள நிலையில் அணையும் பலவீனமடைந்துள்ளது. அதனால் தான் முழு கொள்ளளவில் தண்ணீரை தேக்கி வைக்க முடிவதில்லை. பல இடங்களில் கசிவுகள் ஏற்படுகிறது. தமிழ்நாடு அரசிடம் இதை முறையாக தெரிவிக்க உள்ளோம். ஆனாலும் தண்ணீரை முறையாக வழங்கி வருகிறோம். தற்போது வரை 1.15 டி.எம்.சி தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் இறுதிக்குள் நிர்ணயிக்கப்பட்ட 1.30 டி.எம்.சி வழங்கப்பட்டுவிடும். சிறுவாணி அணையால் கேரளாவுக்கு எந்தப் பலனும் இல்லை. கோவையின் குடிநீர் தேவைக்காக தான் சிறுவாணி அணை உள்ளது. சிறுவாணி அணை தொடர்பான கூட்டு கட்டுப்பாட்டு வாரியத்தின் கூட்டம் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கூட்ட முடியவில்லை. இந்த கூட்டம் கூடிய விரைவில் நடத்தப்படும். அப்போது இந்த விவாகரங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும்` என்கிறார். https://www.bbc.com/tamil/india-61872163
 5. உலக அகதிகள் தினம்: திருச்சி முகாமில் இலங்கை தமிழர்கள் தொடர் போராட்டம் - பின்னணி என்ன? ஜோ. மகேஸ்வரன் பிபிசி தமிழ் 17 ஜூன் 2022 புதுப்பிக்கப்பட்டது 20 ஜூன் 2022 பட மூலாதாரம்,FERNANDO தமிழ்நாட்டின் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர், தங்களை விடுதலை செய்யக் கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அடிக்கடி போராட்டம் நடப்பது ஏன்? இது குறித்து அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்? தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் வெளிநாட்டினர், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுகின்றனர். இதன்படி, இலங்கைத் தமிழர்கள் 104 பேர் மற்றும் நைஜீரியா, பல்கேரியா, வங்கதேசம், இந்தோனீசியா உட்பட வெளி நாட்டினர் என மொத்தம் 145 பேர் தற்போது திருச்சி சிறப்பு முகாமில் உள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை முடிந்து, விடுதலை செய்யப்பட்டும் வரை சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுவார்கள். சிறப்பு முகாமிற்குள் சமைத்து உண்ணும் வசதி, செல்போன் பயன்படுத்திக் கொள்வது உள்ளிட்டவை அனுமதிக்கப்பட்டுள்ளன. இலங்கைத் தமிழர்களுக்கு தினசரி உணவுப் படியும் வழங்கப்படுகிறது. குறிப்பாக, சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயன்றது, போலி கடவுச் சீட்டு முறைகேடு உள்ளிட்ட வழக்குகளில் இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டு சிறப்பு முகாமில் உள்ளனர். திருச்சி சிறப்பு முகாமில் மரக்கன்றுகள் வளர்த்து விநியோகிக்கும் இலங்கைத் தமிழர் “கைக்குழந்தைக்கு மருந்துகூட வாங்க முடியவில்லை” – தமிழகம் வந்த இலங்கை தமிழர்கள் தங்களை விடுதலை செய்து, குடும்பத்தினருடன் வாழ வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இவர்களில் பலர் உண்ணாவிரதம், தற்கொலை முயற்சி என பல வடிவங்களில் அடிக்கடி போராட்டங்களை நடத்துகிறார்கள். மீண்டும் போராட்டம் பட மூலாதாரம்,EPYSTON இந்நிலையில், திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள், தங்களை விடுதலை செய்யக் கோரி கடந்த மே மாதம் 20ஆம் தேதி மீண்டும் போராட்டத்தை தொடங்கினர். இலங்கைத் தமிழர்கள் டிளச்சன், கபிலன், எப்சிபான், தினேஷ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தினால், உடல் நலம் பாதிக்கப்பட்ட 4 பேர் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கி அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து, மேலும் 5 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இவர்கள் 9 பேரும் மருத்துவர்களின் அறிவுறுத்தலாம், உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டனர். ஆனாலும், சிறப்பு முகாமில் உள்ள மற்ற இலங்கைத் தமிழர்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். இதையடுத்து, தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்ட மகேந்திரன், மயூரதன் ஆகிய இருவரும் தற்போது, திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நான்கு பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் 60 பேர் காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளதாக இலங்கை தமிழர்கள் தெரிவித்துள்ளனர். கோரிக்கைகள் என்ன ? பட மூலாதாரம்,FERNANDO போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெர்ணாண்டோ பிபிசி தமிழிடம் கூறுகையில், 'விசா காலம் முடிந்து தங்கியிருந்ததாகவும் சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்றதாகவும் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி கைது செய்யப்பட்டேன். வழக்கு முடிந்து 3 மாதங்களாகியும் என்னை விடுதலை செய்யவில்லை. சிறப்பு முகாமில் இருக்கும் காலத்தை வழக்கின் தண்டனைக் காலமாக கருத வேண்டும். வழக்கு முடிந்தவர்களை விடுதலை செய்து, வழக்கமான முகாம், வெளிப்பதிவு, இலங்கைக்கு என அவர்கள் விரும்பும் இடத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்திதான் இந்த போராட்டத்தை நடத்தி வருகிறோம்.''என்றார். மேலும், ''பலர் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கு முடிந்து ஆண்டுக் கணக்கில் இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். தொடர் போராட்டங்களை நடத்தி வந்தாலும் காவல் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவே இல்லை. உயிருக்கு ஆபத்த நிலை ஏற்பட்ட பிறகே மருத்துவ வசதி கூட கிடைக்கிறது. எனவே தமிழ்நாடு முதலமைச்சர் இதில் தலையிட்டு எங்களுக்கு உதவ வேண்டும்,'' என்றார். 'மனித உரிமை மீறல்' - இலங்கைத் தமிழர் பட மூலாதாரம்,MAHENDRAN அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர் மகேந்திரன் பிபிசி தமிழிடம் கூறுகையில், '' கடந்த 2014ஆம் ஆண்டு சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டேன். என் மீதான வழக்கு முடிந்தும் விடுதலை செய்யவில்லை. இதனால் 8 ஆண்டுகளாக சிறப்பு முகாம் எனும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி சிறப்பு முகாமிலேயே அடைத்து வைத்துள்ளனர். உறவினர், குடும்பத்தினரை காண முடியாமல் தவித்து வருகிறேன். அதிகாரிகளே நீதிமன்றத்தை அவமதிக்கிறார்கள். மனித உரிமை மீறலை செய்கிறார்கள். பட மூலாதாரம்,FERNANDO பல முறை அறவழிப் போராட்டங்களை நடத்தியும் பயன் இல்லை. அதிகாரிகளும் கண்டு கொள்வதேயில்லை. சிறப்பு முகாமில் உள்ளவர்களை விடுதலை செய்வதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. ஆகையால்தான் மீண்டும் மீண்டும் போராட்டங்களை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது,''என்றார். மேலும், "தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு பொய் என்று நான் நிருபித்துள்ளேன். இதனால், என்னை பழிவாங்க வேண்டும் என்று, பொய்யான காரணங்களை சொல்லி என்னை சிறப்பு முகாமிலேயே முடக்கி வைத்துள்ளனர். எட்டாண்டுகளாக சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதற்கு என்ன இழப்பீடு கொடுக்கப்போகிறார்கள்? என் இளமையே தொலைந்து போனாலும், பல்லாயிரம் மரக் கன்றுகளை வளர்த்து விநியோகித்து வருகிறேன். அவைகளாவது சுதந்திர காற்றை சுவாசிக்கட்டும்,'' என்கிறார் மகேந்திரன். சீமான் வலியுறுத்தல் ''சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இலங்கைத் தமிழர்களின் வதை கூடமாக உள்ள சிறப்பு முகாம்களை மூட வேண்டும். காவல் துறையின் க்யூ பிரிவை கலைக்க வேண்டும். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் '' என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். அதிகாரிகள் தரும் விளக்கம் இது குறித்து தமிழ்நாடு காவல்துறையின் க்யூ பிரிவு அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, ''திருச்சியில் உள்ளது இலங்கைத் தமிழர்களுக்கான சிறப்பு முகாம் அல்ல. குற்றச் செயல்களில் கைது செய்யப்பட்டு, பிணையில் இருக்கும் வெளிநாட்டினரை தங்க வைத்துள்ள முகாம். இதில், இலங்கை மட்டுமின்றி பிற நாட்டினரும் உள்ளனர். பிணையில் வெளிவரும் வெளிநாட்டினர் தப்பிச் சென்று விடுவதால், இந்த முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், சிறப்பு முகாமில் உள்ளவர்கள் தவறான தகவல்களை சொல்கிறார்கள். யாரையும் பொய் வழக்கில் கைது செய்யவில்லை. ஒரு வழக்கு முடிந்திருந்தாலும் வேறு வழக்கு முடியாமல் இருக்கும். ஆகையால் அவர்கள் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுகின்றனர். வழக்கு முடிந்த சிலரை விடுதலை செய்வதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன,'' என்றார். "இந்த நெருக்கடியை முன்பே தடுத்திருக்கலாம்" - என்ன சொல்ல வருகிறது இலங்கை மத்திய வங்கி? பழைய படகுகளில் இலங்கை அகதிகளை அழைத்துச் செல்லும் ஆட்கடத்தல்காரர்கள் - அதிகாரிகள் கூறுவது என்ன? இது குறித்து அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸிடம் பிபிசி தமிழ் கேட்டதற்கு, ''தமிழ்நாட்டில் மொத்தம் 106 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 58,325 பேர் தற்போது உள்ளனர். ஆனால், திருச்சி சிறப்பு முகாமில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் மட்டுமே உள்ளனர். மறுவாழ்வு முகாம்களில் இருந்து, குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட, கிட்டத்தட்ட 30 பேர் மட்டுமே சிறப்பு முகாமில் உள்ளனர். மற்றவர்கள் வெளிப்பதிவு மற்றும் சட்டவிரோதமாக வந்த போது கைது செய்யப்பட்டவர்கள். சிறப்பு முகாம்களில் உள்ளவர்களை விடுதலை செய்வது குறித்து உள்துறையும் மாவட்ட ஆட்சியரும்தான் முடிவு செய்ய முடியும்,'' என்றார். https://www.bbc.com/tamil/india-61843432
 6. விற்பனைக்கு வந்தது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை 20 ஜூன் 2022 பட மூலாதாரம்,REUTERS தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்யவுள்ளதாகவும், வாங்க விருப்பம் உள்ளவர்கள் வரும் ஜூலை 4ம் தேதிக்கு முன்னதாக விண்ணப்பங்களை அனுப்பவேண்டும் என்றும் வேதாந்தா நிறுவனம் நாளிதழ்களில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் தாமிர உருக்கு வளாகம், கந்தக அமில தொழிற்சாலை, தாமிர சுத்திகரிப்பு ஆலை, தொடர் தாமிர கம்பி ஆலை, பாஸ்பாரிக் அமில தொழிற்சாலை, ஆக்சிஜன் உற்பத்தி ஆலை, ஊழியர்கள் குடியிருப்பு வளாகம் என10 பிரிவுகள் விற்பனைக்கு வருவதாக விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஸ் கேபிடல் என்ற நிறுவனத்தின் மூலம் இந்த விற்பனைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரிய வேதாந்தா மனுக்கள் தள்ளுபடி ஸ்டெர்லைட் வழக்கு கடந்து வந்த பாதை ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், ஆயிரக்கணக்கானவர்களுக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக கூறி 2016ல் தொடர் போராட்டங்களில் பொது மக்கள் ஈடுபட்டனர். 2018 மே மாதம் 22ம் தேதி, ஆயிரக்கணக்கான போராட்டக்கார்கள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக வந்தபோது, காவல்துறையினர் துப்பாக்கிசூடு நடத்தினர். அதில் குறைந்தபட்சம் 13 பேர் பலியாகினர். அதன் எதிரொலியாக, தமிழக அரசு அந்த ஆலையை மூட உத்தரவிட்டது. மூடப்பட்ட ஆலையை மீண்டும் திறக்க வேதாந்தா குழுமம் வழக்குகளை நடத்திவரும் நிலையில், அந்த ஆலையை விற்பனை செய்ய இன்று விளம்பரம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. போராட்டக்காரர்கள் சந்தேகம் பிபிசி தமிழிடம் பேசிய ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த பாத்திமா பாபு, ஸ்டெர்லைட்டின் இந்த விளம்பரம் அந்த நிறுவனம் வேறு பெயரில் மீண்டும் இயங்குவதாக செய்யப்படும் ஏற்பாடாக இருக்கலாம் என போராட்டக்காரர்கள் கருதுவதாக கூறுகிறார். ''ஸ்டெர்லைட் ஆலையை விற்கப்போவதாக விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள். அந்த விளம்பரத்தில், அந்த ஆலை இயங்கும் நிலையில் தயாராக இருப்பதாக சொல்கிறார்கள். அதோடு, ஆலையின் எல்லா பகுதிகளும் முழுத்திறன் கொண்டதாக இருப்பதாக கூறுகிறார்கள். இந்த ஆலை இயக்கத்தால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளை கணக்கில் கொண்டுதான் மக்கள் போராடினார்கள், ஆலை மூடப்பட்டது. தற்போது அந்த நிறுவனம் வழக்குகளில் இருந்து தப்பித்துக்கொண்டு மீண்டும் ஆலையை செயல்படவைப்பதற்காக, ஆலையை விற்பதுபோல தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் என்றே தோன்றுகிறது,''என்கிறார். மேலும் ஸ்டெர்லைட் நிறுவனத்தில் வேலையில் இருந்தவர்கள் பலருக்கும் வேலையிழப்பு ஏற்பட்டது குறித்து கேட்டபோது, ''ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு முக்கிய காரணம் அந்த ஆலை இயங்குவதால், நிலம், நீர் மாசுபாடு அதிகரித்து, பொது மக்கள் உடல் நலன் பாதிக்கப்பட்டார்கள் என்பதுதான். இதற்கு முன்பாக தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் மாசுபாட்டை ஏற்படுத்திய ஆலைகள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் மாற்று வேளைகளில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் சாய ஆலைகள், பட்டாசு தொழிற்சாலைகள் மூடப்பட்டது இதற்கு எடுத்துக்காட்டு. இதுபோல பல ஆலைகள் இந்தியாவில் மூடப்பட்டுள்ளன,''என்கிறார் பாத்திமா பாபு. https://www.bbc.com/tamil/india-61861890
 7. பிரான்சில் இடதுசாரிகள், தீவிர வலதுசாரிகள் முன்னிலை: மக்ரோங் கட்சி பெரும்பான்மை இழந்தது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, அதிபர் இம்மானுவேல் மக்ரோன், இடதுசாரி கூட்டணி மற்றும் தீவிர வலதுசாரிகளின் எண்ணிக்கை அதிகமானதால், பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் தனது கட்டுப்பட்டை இழந்தார். ஒரே நேரத்தில், பிரான்சிலும், கொலம்பியாவிலும் இம்மானுவேல் மக்ரோங், மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள், இடதுசாரி கூட்டணி மற்றும் தீவிர வலதுசாரிகளின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் அவரது கட்சி பெரும்பான்மை இழந்தது. இந்நிலையில், அறுதிப் பெரும்பான்மையை வழங்குமாறு தனது வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், அவருடைய மையவாத கூட்டணி, தேர்தலில் டஜன் கணக்கான இடங்களை இழந்தது. பிரெஞ்சு அரசியல் களம் தற்போது தீவிர வலது சாரிகள், இடது சாரிகள் என்ற இரண்டு தீவிர நிலைகளுக்கு இடையில் பிளவுபட்டுள்ளது. மக்ரோங் சமீபத்தில் நியமித்த பிரதமர் எலிசபெத் போர்ன், இது முன்னெப்போதும் இல்லாத நிலைமை என்று கூறுகிறார். அதிபரின் எலிசி அரண்மனையில் ஒரு நீண்ட கூட்டத்திற்குப் பிறகு அவர் தனது மேட்டிக்னான் இல்லத்திற்குத் திரும்பியபோது, நவீன பிரான்ஸ் இதுபோன்றதொரு தேசிய சட்டமன்றத்தைப் பார்த்தில்லை என்று கூறினார். பிரான்ஸ் அதிபராக எமானுவேல் மக்ரோங் மீண்டும் வெற்றி: "அனைவருக்குமான அதிபராக இருப்பேன்" மேற்கத்திய துரித உணவு ஜாம்பவான்கள் இந்தியர்களின் மனதில் இடம்பிடித்தது எப்படி? இலங்கையில் கஞ்சா சாகுபடியை அனுமதித்து சட்டமியற்ற முயற்சி: 'போதை பொருளா மூலிகையா' என விவாதம் "இந்த நிலைமை நம் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள ஓர் ஆபத்தைக் காட்டுகிறது. தேசிய மற்றும் சர்வதேச அளவில் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களைக் கருத்தில் கொண்டு, நடைமுறை பெரும்பான்மையை உருவாக்க நாளை முதல் நாங்கள் வேலை செய்வோம்," என்றார். நாடாளுமன்றத்தில் உள்ள மற்ற இரண்டு பெரிய கூட்டணிகளும் மையவாத கூட்டணியோடு ஒத்துழைப்பதில் ஆர்வம் காட்டாதபோது இது தொடரும் எனத் தெரிகிறது. பொருளாதார அமைச்சர் ப்ரூனோ லி மாய்ரே, பிரான்ஸில் ஆட்சி அமைக்க முடியாது என்றில்லை, ஆனால், அதற்கு நிறைய முயற்சி தேவை என்று கூறினார். பெரும்பான்மையை உருவாக்க வலதுசாரி கட்சிகள் உதவுமா? மைய நீரோட்ட இடதுசாரி கட்சிகள், கம்யூனிஸ்டுகள், பசுமைவாதக் கட்சியான கிரீன்ஸ் ஆகியவற்றை ஒருங்கிணைத்து நியூப்ஸ் கூட்டணி என்ற ஒன்றை உருவாக்குவதில் தீவிர இடதுசாரி தலைவர் ஜான் லுக் மெலென்கான் வெற்றியடைந்தார். அதிபரின் கட்சி மொத்தமாக தோல்வியடைந்துவிட்டதாகவும் அனைத்து வாய்ப்புகளும் இப்போது தங்கள் கைகளில் இருப்பதாகவும் அவர் தனது ஆதரவாளர்களிடம் கூறினார். இதற்கிடையில், மரைன் லு பென் மற்றும் அவருடைய தீவிர வலதுசாரி தேசிய பேரணி கட்சியும் 8 இடங்களை 89 ஆக மாற்றிய மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கிறார். மக்கள் தங்கள் முடிவைக் காட்டிவிட்டார்கள். இம்மானுவேல் மக்ரோங்கின் சாகசப் பயணம் முடிந்து சிறுபான்மை அரசாகச் சுருங்கியது அவரது கட்சி அரசு," என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, பிரதமர் எலிசபெத் போர்ன், இது முன்னெப்போதும் இல்லாத நிலைமை என்று கூறினார் வலதுசாரி குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மையை உருவாக்க உதவுவார்கள் என்று பிரதமர் எதிர்பார்த்தால், அவர்களுடைய செயல்பாடு அந்த நம்பிக்கையை வழங்கும் விதத்தில் இல்லை. மக்ரோங்கின் அதிகாரம் மீதான ஆசையைக் கேலி செய்யும் பழைய புனை பெயரைக் குறிப்பிட்டு, "மக்ரோங்குக்கு இந்த ஐந்து ஆண்டுகள் நாடாளுமன்ற சமரசம் மற்றும் பேச்சுவார்த்தைகள் நிரம்பியதாக இருக்கும்," என்று ஏ.எஃப்.பி-யிடம் பேசிய அரசமைப்புச் சட்ட பேராசிரியர் டொமினிக் ரூஸ்ஸோ கூறியுள்ளார். மக்ரோன் கட்சியில், தங்கள் இடங்களை இழந்த அமைச்சர்களில், வெறும் 56 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த சுகாதார அமைச்சர் பிரிஜிட் போர்குய்னன்னும் ஒருவர். பசுமை மாற்றத்திற்கான அமைச்சர் அமெர்லி டி மோண்ட்சாலினும் தோற்கடிக்கப்பட்டார். ஆனால், மற்றொரு முக்கிய நபரான ஐரொப்பிய அமைச்சர் க்ளெமெண்ட் பியூன், முதல் சுற்றில் பின் தங்கினாலும், பிறகு வெற்றி பெற்றுவிட்டார். மக்ரோங்கின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரும் நாடாளுமன்றத்தின் தலைவருமான ரிச்சர்ட் ஃபெராண்ட், அவருடைய எதிராளியும் நியூப்ஸ் கூட்டணியைச் சேர்ந்தவருமான மெலனி தாமினிடம் தோல்வியடைந்தார். அவருடைய ஆதரவாளர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் உரையில், இடதுசாரிகள் மரைன் லூவுடன் நேருக்கு நேர் போட்டியிடும் இடங்களில் தெளிவான வழிகாட்டுதலை வழங்க மறுப்பதன் மூலம், ஆளும் கட்சி தீவிர வலதுசாரிகளுக்கு உதவுவதாகக் குற்றம் சாட்டிய ஜான் லுக் மெலென்கான், இது "மக்ரோனின்" தார்மீக தோல்வியைக் குறிக்கும் முடிவு என்று கூறினார். பட மூலாதாரம்,REUTERS தனது பிரதமராகும் லட்சியத்தை அடைய வாய்ப்பில்லை என்று மறைமுகமாக ஒப்புக்கொண்ட தீவிர இடதுசாரி தலைவர், இப்போது தனது பங்கை மாற்றிக்கொண்டிருப்பதாகக் கூறினார். ஆனால், அவர் போட்டியிடாததால், நாடாளுமன்றத்தில் அவர் இடம்பெற மாட்டார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இம்மானுவேல் மக்ரோன் ஒரு நம்பிக்கை அலையைப் பயன்படுத்தி, குடிமைச் சமூகத்திலிருந்து புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு வந்தார். இந்த முறை நியூப்ஸ் மற்றும் தேசிய பேரணியில் இருந்து புதிய முகங்கள் வந்துள்ளன. கொலம்பியாவில் அதிபராகும் முன்னாள் கொரில்லா போராளி பொகோட்டாவின் முன்னாள் மேயரும் முன்னாள் கொரில்லா போராளியுமான குஸ்தாவோ பெட்ரோ கொலம்பியாவின் முதல் இடதுசாரி அதிபராகிறார். தற்போதைய செனட்டரான பெட்ரோ, ஞாயிற்றுக் கிழமை நடந்த தேர்தலில் வலதுசாரி அதிபர் ரொடால்ஃப் ஹெர்னாண்டஸை தோற்கடித்தார். சுமார் 700,000 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தனது போட்டியாளரைத் தோற்கடித்து 50.5% வாக்குகளைப் பெற்றதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. பல தசாப்தங்களாக மிதவாதிகள், பழைமைவாதிகளால் வழிநடத்தப்பட்டு வந்த நாட்டுக்கு இந்தத் தேர்தலின் விளைவாக ஏற்படவுள்ள ஒரு பெரிய மாற்றத்தை இந்த வெற்றி குறிக்கிறது. நாடு நிர்வகிக்கப்படும் விதத்தில் மக்களிடையே நிலவிய பரவலான அதிருப்திக்கு நடுவே இந்த வாக்கெடுப்பு நடந்தது. கடந்த ஆண்டு நடந்த அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் டஜன் கணக்கான மக்கள் உயிரிழந்தனர். 62 வயதான பெட்ரோ இதை, "கடவுளுக்கும் மக்களுக்கும் கிடைத்த வெற்றி," என்று அழைத்தார். "இன்று தாயகத்தின் இதயத்தை நிரப்பியிருக்கும் மகிழ்ச்சியில் பல துன்பங்கள் தணியட்டும்," என்று பெட்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, பொகோட்டாவின் முன்னாள் மேயரும் முன்னாள் கொரில்லா போராளியுமான குஸ்தாவோ பெட்ரோ கொலம்பியாவின் முதல் இடதுசாரி அதிபராகிறார் ஒற்றை பெற்றோரால் வளர்க்கப்பட்டவரும், சமூக-சூழலியல் ஆர்வலருமான பிரான்சியா மார்க்வெஸ், கொலம்பியாவின் முதல் ஆப்பிரிக்க-கொலம்பிய (கருப்பின கொலம்பியர்) பெண் துணை அதிபராகிறார். சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில், டிக்டோக் மற்றும் பிற சமூக ஊடகங்களைப் பெரிதும் நம்பியிருக்கும் பாரம்பரியமற்ற பிரசாரத்தை நடத்திய ஹெர்னாண்டஸ், பெட்ரோவிடம் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். அதில் அவர், "இந்தத் தேர்தல் முடிவுகளை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றார். குஸ்தாவோ பெட்ரோவுக்கு நாட்டை எப்படி நடத்த வேண்டுமென்பது தெரியும். ஊழலுக்கு எதிரான அவருடைய சொற்பொழிவுக்கு அவர் உண்மையாக இருக்கும் என்று நம்புகிறேன்," என்று அவர் கூறினார். பெட்ரோ, 1980-களில் இப்போது கலைக்கப்பட்ட எம்-19 இயக்கத்தில் உறுப்பினராக இருந்தார். அரசுக்கு எதிராகப் போர் தொடுத்த பல கொரில்லா அமைப்புகளில் இவருடைய இடதுசாரிக் குழுவும் ஒன்று. அவர் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்தமைக்காக சிறையிலிருந்தார். அரசியல் எதிர்ப்பில் இணைவதற்கு முன்பு அவர் செனட்டராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இலவச பல்கலைக்கழக கல்வி, ஓய்வூதிய சீர்திருத்தங்கள், உற்பத்தி செய்யாத நிலத்துக்கு அதிக வரி ஆகியவற்றின் மூலம் சமத்துவமின்மையை எதிர்த்துப் போராடுவதாக அவர் பிரசாரத்தின்போது உறுதியளித்தார். கம்யூனிஸ்ட் கொரில்லா குழுவான ஃபார்க் உடனான 50 ஆண்டுக்கால நீண்ட மோதலை முடிவுக்குக் கொண்டு வந்த 2016-ஆம் ஆண்டு அமைதி ஒப்பந்தத்தை முழுமையாகச் செயல்படுத்துவதாகவும் இன்னும் செயலிலுள்ள இ.எல்.என் கிளர்ச்சியாளர்களோடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். https://www.bbc.com/tamil/india-61861695
 8. உலக அகதிகள் தினம்: அகதிகள், புலம் பெயர்ந்தோர், குடியேறிகள், தஞ்சம் கோரிகள் என்ன வேறுபாடு? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவில் இருந்த 4 பேர் கொண்ட இலங்கைத் தமிழ் குடும்பம் ஒன்று ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற விரும்பாததால் அவர்களை கிறிஸ்துமஸ் தீவில் உள்ள முகாமில் அடைக்க உத்தரவிடப்பட்டது. அவர்களுக்கு ஆதரவாக மெல்பர்ன் நகரில் நடந்த ஒரு போராட்டம். கடந்த இரண்டு தசாப்தங்களில், மனிதர்கள் ஓரிடத்தில் இருந்து வேறிடம் சென்று வாழ்வது இதுவரை இல்லாத அளவை எட்டியுள்ளது. 2000இல் 17 கோடியே 30 லட்சம் பேர் தாய் நாட்டிற்கு வெளியே வாழ்ந்தததாகவும், 2020-ல் அந்த எண்ணிக்கை 28 கோடியே 10 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது. இது உலக மக்கள் தொகையில் 3.6 சதவிகிதம் ஆகும். ஆனால் மக்கள் வேறு நாட்டிற்குச் செல்வதைப் பற்றி நாம் அனைவரும் பேசும் விதம் குழப்பமாக இருக்கும். புலம்பெயர்ந்தோர், அகதிகள், புகலிடம் கோருவோர் மற்றும் குடியேறிகள் என்ற வெவ்வேறு சொற்களை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அவற்றை விவரிக்க சரியான வழி இருக்கிறதா? சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில், Centre for Migrationல் மூத்த விரிவுரையாளராக உள்ள Dr Charlotte Taylor, எல்லைகளைக் கடக்கும் மக்களை விவரிக்க ஊடகங்கள் எவ்வாறு மொழியைப் பயன்படுத்துகின்றன என்பதைப் பற்றி எழுதியிருக்கிறார். நாம் அவ்வப்போது கேட்கும் சில சொற்களைப் பற்றிய விளக்கங்களுக்கு அவரது உதவியைப் பெற்றோம். Migrant-புலம் பெயர்ந்தவர் நீங்கள் அடிக்கடி கேட்கக்கூடிய வார்த்தை இது. வேலை அல்லது மேம்பட்ட வாழ்க்கையைத் தேடுவதற்காக ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லும் நபரை புலம் பெயர்ந்தவர் எனலாம். தமிழகம் வந்த இலங்கை அகதிகள்: “ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ. 1,000க்கு விற்றால் எப்படி வாழ்வது?” திருச்சி முகாமில் இலங்கை தமிழர்கள் தொடர் போராட்டம் - பின்னணி என்ன? உதாரணமாக, நீங்கள் இங்கிலாந்தில் வசிக்கிறீர்கள் என்றால், இந்த கோடையில் சில மாதங்களுக்கு ஸ்பெயினில் வேலைக்குச் செல்ல முடிவு செய்தால், நீங்கள் புலம் பெயர்ந்தவர் என்று விவரிக்கப்படலாம். "புலம் பெயர்ந்தோர் என்ற சொல் தற்போதைக்கு ஒப்பீட்டளவில் சர்ச்சைக்குரியது அல்ல, ஆனால் அது பாதுகாப்பான வார்த்தையாக தொடராது. காலப்போக்கில் அவை மாறும்" என்று, சார்லட் டெய்லர் கூறுகிறார். அரசியல் காரணங்களுக்கான இடம்பெயர்வு என்பது சற்று வித்தியாசமானதாக இருக்கும். ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன்களைப் போல, ஒரு குறிப்பிட்ட ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்து விலகிச்செல்வதற்காக யாராவது இடம்பெயர்வது அப்படி ஒரு வேறுபட்ட இடபெயர்வாக இருக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுக்ரேனில் இருந்து வெளியேறும் ஒரு குடும்பம். இடம்பெயர்வுகளை மையப்படுத்தி பயன்படுத்தப்படும் "அலை, ஓட்டம், வெள்ளம்" போன்ற வார்த்தைகள் பற்றிதான் சார்லட் கவலைகொள்கிறார். புலம்பெயர்பவர்கள் தொடர்ந்து வருகைதரும் நாட்டில் உள்ள மக்கள், அவர்களை "மக்களாக அல்லாமல் பொருள்களாக " பார்க்க முடியும் என்ற அர்த்தத்தை அந்த வார்த்தைகள் வெளிப்படுத்துவதாக அவர் நம்புகிறார். Immigrant-குடியேறியவர் ஒரு நபர் வெளிநாட்டில் நிரந்தரமாக வாழ வரும்போது அவர் குடியேறியவர் எனப்படுகிறார். அவர்கள் தங்கள் சொந்த நாட்டிலிருந்து வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டிருக்க வேண்டியதில்லை, அது ஒரு தேர்வாக இருக்கலாம். நாடுவிட்டு நாடு மாறி வாழ்வதற்குச் சரியான காரணங்கள் இருந்தாலும், சட்டப்பூர்வ குடியேற்றத்திற்கும், சட்டவிரோத குடியேற்றத்திற்கும் வேறுபாடு உண்டு. அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்கள் மூலம் ஒருவர் ஒரு நாட்டிற்கு வர அனுமதிக்கப்படுகிறார் என்றால், அவர் சட்டவிரோதமாக குடியேறியவர் அல்ல. ``ஊடகங்கள் பெரும்பாலும் குடியேற்றத்தைப் பற்றி விவாதிக்கின்றன, வெளியேற்றத்தைப் பற்றி அல்ல. அதாவது, மக்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறும்போது ஊடகங்கள் விவாதிப்பதிலை`` என்று கூறும் சார்லட், "அவை இப்போது உண்மையில் தனித்தனி செயல்முறைகளாகக் பார்க்கப்படுகின்றன. இரண்டுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை மக்கள் அடையாளம் காண்பதில்லை" என்கிறார். Refugee-அகதி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2015ல் குரேயேஷியாவில் இருந்து ஸ்லோவேனியாவுக்குள் நுழைந்த அகதிகளை ஒரு வயல் வழியாக இட்டுச் செல்கிறார்கள் போலீசார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பெரிய அகதிச் சிக்கலை எதிர்கொண்டது ஐரோப்பா. போர், இயற்கை பேரழிவு, துன்புறுத்தப்படுதல் ஆகியவற்றிலிருந்து தப்பிப்பதற்காக, தங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளவரே அகதி எனப்படுவர். "இது மிகவும் வித்தியாசமான நிலை" என்கிறார் டாக்டர் சார்லட் டெய்லர். "ஒருவரை அகதி என்று நீங்கள் ஒப்புக்கொண்டவுடன், அவர்களுக்கு குறிப்பிட்ட சில உரிமைகள் உள்ளன என்பதையும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்." என்றும், "அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளால் இயக்கப்படுகிறார்கள்." என்றும் சார்லட் டெய்லர் கூறுகிறார். Asylum seeker - தஞ்சம் கோரிகள் இந்த நபர் வேறு நாட்டில் சர்வதேச பாதுகாப்பைக் கோரினாலும், மேற்கூறியவற்றின் கலவையாக இருக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2015ம் ஆண்டு செர்பியாவை கடந்து ஹங்கேரிக்குள் நுழையும் ஒரு அகதிகள் குழு. துருக்கியில் இருந்து கிரீஸ் வந்து அங்கிருந்து மாசிடோனியா வழியாக செர்பியா வந்து அங்கிருந்து ஹங்கேரிக்குள் நுழையும் அகதிகள் எண்ணிக்கை அந்த ஆண்டில் 1 லட்சத்தைக் கடந்தது. இதையடுத்து எல்லையில் முள்வேலி அமைக்க உத்தரவிட்டார் ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன். அதில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து நிலம் அல்லது நீர் நிலைகளைக் கடந்து தங்கள் இலக்கை அடைய முயற்சிக்கும் நபர்களும் அடங்குவர். தஞ்சம் கோரிகள் எனும் வார்த்தையை, இந்தச் சூழ்நிலையில் பயன்படுத்துவதற்கு வசதியாக உணர்கிறார் சார்லட். "யாராவது தஞ்சம் கோரினால், அவர்கள் தஞ்சம் கோருகிறார்கள் என்றுதான் அர்த்தம். ஆனால் சில நாடுகளில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்கள், தஞ்சம் கோரிகளின் சட்டபூர்வமான தன்மை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி எழுப்பியுள்ளன. "நேர்மையான காரணங்களுக்காக தஞ்சம் கோருவதற்கும், அதற்கு மாறாகத் தஞ்சம் கோருவதற்கும் உள்ள வேறுபாட்டைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். அது நிராகரிக்கப்படலாம், ஆனால் தஞ்சம் கோருவது உண்மை." என்கிறார், டாக்டர் சார்லட் டெய்லர். https://www.bbc.com/tamil/india-61861889
 9. யாழ் மானிப்பாய் காரைநகர் வீதி 98 ஆம் ஆண்டின் பின் புனரைக்கப்படவில்லை. இப்ப இடையிடையே காப்பற் போடப்பட்டுவிட்டது. உடுவில் சண்டிலிப்பாய் சந்தி வரை நன்றாக இருக்கு, ஆனால் காப்பற் இல்லை அண்ணை.
 10. Australian Dollar Date Buy Rate (LKR) Sell Rate (LKR) 2022-06-20 245.7166 256.9557 Canadian Dollar Date Buy Rate (LKR) Sell Rate (LKR) 2022-06-20 271.9302 284.1514 Swiss Franc Date Buy Rate (LKR) Sell Rate (LKR) 2022-06-20 365.2845 381.9083 Euro Date Buy Rate (LKR) Sell Rate (LKR) 2022-06-20 372.9539 387.4353 British Pound Date Buy Rate (LKR) Sell Rate (LKR) 2022-06-20 433.6026 450.3472 Singapore Dollar Date Buy Rate (LKR) Sell Rate (LKR) 2022-06-20 255.5192 265.8667 United States Dollar Date Buy Rate (LKR) Sell Rate (LKR) 2022-06-20 356.2897 366.8380 https://www.cbsl.gov.lk/en/rates-and-indicators/exchange-rates/daily-buy-and-sell-exchange-rates
 11. QR கோட் மோசடிகள்: கவனமாக இருக்க உதவும் கேள்வி பதில்கள் ஹேமா ராக்கேஷ் பிபிசி தமிழுக்காக 19 ஜூன் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES QR குறியீடுகள் வாயிலாக நடக்கும் மோசடிகள் டிஜிட்டல் உலகில் தொடரந்து நடைபெற்று வருகின்றன. நம்மில் பெரும்பாலோனோர் டிஜிட்டல் பேமென்ட் முறையைப் பயன்படுத்துவதால் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் குறித்த விழிப்புணர்வைப் பெறுவது அவசியம். பணப் பரிவர்த்தனைகள் மற்றும் அதிக தகவல்களை அறிய நாம் பயன்படுத்தும் QR குறியீடு மூலம் மோசடிகள் அரங்கேறுகின்றன. QR குறியீடு என்றால் என்ன, அது எவ்வாறு செயல்படுகிறது இந்த மோசடியை எப்படித் தவிர்க்கலாம் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். QR குறியீடு என்றால் என்ன? QR என்பது Ouick response என்பதைக் குறிக்கிறது. இது ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனமான டென்சோ வேர் மூலம் 1994 இல் உருவாக்கப்பட்டது. இது மேட்ரிக்ஸ் பார் குறியீடு. இதை மிஷின் மூலம் படிக்க முடியும். இந்தக் குறியீடு ஒரு பொருள், சேவை மற்றும் ஒரு நிறுவனம் குறித்துத் தேவைப்படும் கூடுதல் தகவல்களைக் கொண்டிருக்கும். தொழில்நுட்ப விஷயங்களை அடையாளம் காண, கண்காணிக்க அல்லது பிற தகவல்களுக்காக உங்களைச் சம்பந்தப்பட்ட இணையதளத்திற்கு அனுப்பவும் இது பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, காரில் உள்ள குறியீட்டை ஸ்கேன் செய்தால், காரின் செயல்பாடு தொடர்பான தகவல்கள் தெரியத் தொடங்கும். கார் அதன் உற்பத்தி செயல்முறையின் போது கடந்து வந்த நிலைகள் பற்றிய தகவல்களும் கிடைக்கும். இந்த QR குறியீடு உங்களை காரின் இணையதளம் வரையிலும்கூட அழைத்துச் செல்லும். இதனால் இருந்த இடத்தில் இருந்தே அதிக தகவல்களைத் தெரிந்து கொள்ள முடியும். ஆன்லைன் ரம்மியால் கொலை, கொள்ளை: தமிழ்நாடு டி.ஜி.பி எச்சரித்தது ஏன்? முதியோர்களை குறிவைக்கும் ஆன்லைன் மோசடி கும்பல்: தற்காத்து கொள்வது எப்படி? ஜெராக்ஸ் கடை முதல் வசீகர குறுஞ்செய்திகள் வரை தொடரும் மோசடிகள் - தப்பிப்பது எப்படி? QR குறியீடு பயன்கள் என்ன? கார் உற்பத்தித் துறையில் இருந்து இதை, மற்ற தொழில்களும் விரைவில் பயன்பாட்டிற்கு எடுத்துக்கொண்டன. இதன் மூலமாகக் கிடைக்கும் வசதி, இதை ஏற்றுக் கொள்வதில் ஓர் உந்துதலாக அமைந்தது. UPC பார் குறியீட்டை விட (மேலிருந்து கீழ் நோக்கி வரும் நேரான அகலமான கோடுகள்) அதிகமான தகவல்களை இதில் சேமிக்க முடியும். ஜப்பானில் உள்ள கல்லறைகளிலும் QR குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. நீங்கள் QR குறியீட்டை ஸ்கேன் செய்தவுடன் எல்லா இரங்கல் செய்திகளும் உங்கள் மொபைல் ஃபோன் திரையில் வந்துவிடும். QR குறியீட்டில் நமது வங்கிக் கணக்கு மற்றும் கிரெடிட் கார்ட் விவரங்களை உருவாக்கி பணம் செலுத்துபவருக்கும் வேலை செய்யும் வகையில் இதை வடிவமைக்கலாம். பொதுவாக யாருக்காவது பணம் அனுப்ப வேண்டுமென்றால், அவருடைய வங்கிக் கணக்கு விவரங்களை நாம் கேட்போம். அந்தக் கணக்கு எண்ணை உங்கள் கணக்குடன் இணைத்து பின்னர் பணத்தை அனுப்புவோம். ஆனால் அந்தக் கணக்கின் QR குறியீடு இருந்தால், அதை ஸ்கேன் செய்தவுடன் நீங்கள் பணம் அனுப்புபவர் அல்லது சேவை நிறுவனத்தின் முழு விவரங்கள் நமக்குக் கிடைக்கும். அதன் பிறகு உடனடியாக நம் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை அனுப்பலாம். QR குறியீட்டில் என்ன மோசடி நிகழும்? QR குறியீடுகள் நமக்கு ஏற்றவாறான வசதிகளை வழங்குகின்றன. ஆனால் தவறுகள் மற்றும் மோசடிக்கான வாய்ப்பும் இதில் அதிகளவில் உள்ளது. QR குறியீடுகள் மூலம் பல வகையான சைபர் குற்றங்கள் நடக்கின்றன. எனவே நீங்கள் இரண்டு விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். உங்கள் வங்கியில் ஏதாவது தொகை டெபாசிட் செய்யப்பட வேண்டும் என்றால், நீங்கள் ஓ.டி.பி-யை யாரிடமும் சொல்ல வேண்டியதில்லை. நீங்கள் யாருக்காவது பணம் அனுப்பும்போது, உங்களுக்கு வந்த ஓ.டி.பி-யை நீங்கள் உள்ளிட்டு உறுதிசெய்ய வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES உங்கள் கணக்கில் பணம் பெற வேண்டுமானால், எந்த QR குறியீட்டையும் ஸ்கேன் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஒரு கணக்கில் பணம் செலுத்தும் போது மட்டுமே QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும். இந்த இரண்டு விஷயங்களையும் மனதில் வைத்துக் கொண்டால், இதுபோன்ற மோசடி வலையில் சிக்காமல் இருப்பீர்கள். தெரியாதவர்கள் அனுப்பும் க்யூஆர் கோட் லிங்கை ஸ்கேன் செய்வதற்கு முன் நாம் எப்படி கவனமாக இருக்கிறோமோ அதே போல, அது எங்கிருந்து உருவானது அதாவது அது எங்கிருந்து வந்தது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். சில சைபர் கிரிமினல்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொண்டு, குறியீட்டில் உடனடியாக மாற்றங்களைச் செய்கிறார்கள். அதை எளிதில் கண்டுபிடிக்கமுடியாது. இந்த வழியில் அவர்கள் ஒரு புதிய கணக்கைத் திறக்கிறார்கள். கடைகளில் இந்த வகையான குறியீடு நிறுவப்பட்டால், வாங்குபவர் செலுத்தும் பணம் கடைக்காரருக்குச் சென்றடையாது, மேலும் வாங்குபவரும் பாதிக்கப்படுகிறார். எனவே ஸ்கேன் செய்வதற்கு முன் QR குறியீட்டை சரிபார்க்கவும். QR குறியீடு என்ற போர்வையில் உங்கள் கணினியில் சில malware நிறுவப்படலாம். இதனால் உங்கள் கணினிகளில் உள்ள தகவல்கள் திருடப்படலாம். அதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட உங்களால் முழுமையாகப் பரிசோதிக்கப்பட்ட QR குறியீடு சேவையை மட்டும் பயன்படுத்துவது நல்லது. பட மூலாதாரம்,GETTY IMAGES QR குறியீடு மோசடிகளில் மக்கள் எப்படி சிக்குகிறார்கள்? சமூக இணையதளங்களில் பொருட்களை வாங்குபவர்கள் இந்த மோசடிகளில் சிக்குகிறார்கள். குறிப்பாக பாதுகாப்பு அதிகம் இல்லாத இணையதளங்களை பொருட்கள் வாங்கப் பயன்படுத்தும் போது, இறுதியில் பணம் செலுத்துவதற்குக் குறிப்பிட்ட QR குறியீடு மூலமாக பணம் செலுத்த வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கேட்கப்படுகிறார்கள். குறிப்பிட்ட நேரத்திற்குள் பணம் செலுத்தினால் அட்டகாசமான ஆஃபர் என்று அவசரப்படுத்துவதால் மக்கள் QR குறியீடு விவரங்களைச் சரிபார்க்காமல் உடனடியாக பணத்தைச் செலுத்திவிடுகிறார்கள். ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு தான் ஏமாற்றப்பட்டது மக்களுக்குத் தெரியவருகிறது. அதனால் டிஜிட்டல் முறையில் பணத்தைச் செலுத்துவதற்கு SSL சான்றிதழ் அல்லது டொமைளில் "https "இல்லாத இணையதளங்களில் இருந்து பொருட்கள் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. அடுத்து நம்முடைய கைபேசி எண்ணுக்கு லட்சக்கணக்கில் பணம் பரிசு கிடைத்திருப்பதாகவும் உங்களுக்கு ஒரு பரிசுப்பொருள் காத்திருப்பதாகவு சொல்லி, அனுப்பட்ட QR குறியீட்டை ஸ்கேன் செய்யமாறு குறுஞ்செய்தி வரும். அதில் கூறும்படி செய்தால் நாம் பணத்தை இழக்க வேண்டியிருக்கும். QR குறியீடு பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியது என்ன? QR குறியீட்டை ஸ்கேன் செய்வதற்கு முன், எதிர் தரப்பினரின் விவரங்களைச் சரிபார்க்கவும். விவரங்களை உறுதி செய்த பின்னரே பணம் செலுத்தவும். ஸ்கேனர் அல்லது அவற்றின் குறியீட்டில் ஏதேனும் பிழை இருந்தால் உடனடியாக இது உங்களுக்கு தெரியவரும். பட மூலாதாரம்,GETTY IMAGES உங்கள் கணக்கில் இருந்து பணம் கழிக்கப்பட்டதை உறுதிசெய்த பிறகு, செலுத்தப்படவேண்டிய நபருக்குப் பணம் வந்துவிட்டதா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்கள் கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டு, அது சென்றடைய வேண்டிய நபரை அடையவில்லை என்றால், சம்பந்தப்பட்ட செயலி மூலம் உடனடியாக வங்கியைத் தொடர்பு கொள்ள வேண்டும். இது இழப்புக்கான வாய்ப்பைக் குறைக்கிறது. QR குறியீடு விஷயத்தில் மட்டுமல்ல, எந்தவொரு டிஜிட்டல் பணம் செலுத்தும் முறையிலும் அவசரம் காட்டக்கூடாது. பணம் சென்றடையச் சிறிது நேரம் ஆகும். QR குறியீடு, பொதுவாக எல்லா கட்டண செயலிகளிலும் இருக்கும். இது தவிர, QR குறியீட்டை ஸ்கேன் செய்ய சில சிறப்பு செயலிகளும் உள்ளன. ஆனால் அவற்றைப் பதிவிறக்கம் செய்வதற்கு முன், அந்த செயலிகளின் மதிப்பீடு மற்றும் மதிப்பாய்வுகளை நீங்கள் சரிபார்க்க வேண்டும். நீங்கள் முழுமையாகத் திருப்தி அடைந்த பிறகே இந்த செயலிகளைப் பதிவிறக்க வேண்டும். இல்லையெனில் இதுபோன்ற செயலிகள் மோசடிக்கு வழி வகுக்கக்கூடும். https://www.bbc.com/tamil/science-61850415
 12. அந்த வீதி(சண்டிலிப்பாய் சந்தில இருந்து உடுவில் சந்தி வரை) காப்பற் போடல, ஆனால் காப்பற்றை விட தரம் குறைவாக போட்டிட்டாங்கள். வலி மேற்கு மக்கள் கைதடி வரை போக பாவிக்கும் ஒரே குறுந்தூர பாதை இது தான். மருதனார் மடத்தில இருந்து உடுவில் மகளிர் கல்லூரிச் சந்தியால மானிப்பாய் சந்திவரை காப்பற் போட்டாச்சு.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.