Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. செம்மணி மனித புதைகுழிகள் சர்வதேச நீதிமன்றத்தின் முன் சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும் இவற்றிற்கு காரணமானவர்களை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதற்கும் முக்கியமான வாய்ப்பை வழங்குகின்றன - பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள். Published By: RAJEEBAN 31 JUL, 2025 | 10:54 AM இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து சுயாதீன சர்வதேச விசாரணை அவசியம் என பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரான்சின் எல்எவ்ஐ மற்றும் என்எவ்பி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்திக்குறிப்பொன்றில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். தமிழர்களிற்கு எதிரான தசாப்தகால விசாரணைகளை கண்டித்துள்ள பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதி உண்மை மற்றும் இழப்பீட்டுக்கான உரிமையை வலியுறுத்தியுள்ளனர். யுத்தத்தின் இறுதி மாதங்களில் இலங்கை அதிகாரிகளால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்ய்பட்டனர் என பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். பல அறிக்கைகள் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை 40,000 என்கின்றன என தெரிவித்துள்ள அவர்கள் பல்வேறு நிபுணர்களின் கருத்துப்படி இது பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்பட்ட எண்ணிக்கையாகும் என தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது கனரக ஆயுத தாக்குதல்களை மேற்கொள்ளுதல், சட்டவிரோத படுகொலைகள், பாலியல் வன்முறைகள், பலவந்தமாக காணாமல்போகச்செய்தல், சித்திரவதை மற்றும் போதிய மருத்துவ உணவு வசதியின்றி தமிழர்களை இடைத்தங்கள் முகாம்களில் அடைத்து வைத்திருத்தல் போன்றவற்றில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டது என பல ஆவணங்களை மேற்கோள்காட்டி பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் செம்மணியில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையில் யுத்த குற்றங்கள் இடம்பெற்றமையும் 80 வருடங்களாக தமிழர்கள் தொடர்ந்தும் அங்கு அமைதியாக வாழ முடியாத நிலை காணப்படுவதும் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்கள் நீதியை கோரி நிற்கின்ற போதும், இதுவரை சுயாதீன விசாரணையெதுவும் இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளனர். பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது செய்திக்குறிப்பில் இலங்கையின் வடக்குகிழக்கில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகளை பட்டியலிட்டுள்ளதுடன், இது இலங்கை அரசாங்கம் நீண்டகாலமாக தண்டனையிலிருந்து விலக்களித்து வருவதை வெளிப்படுத்துகின்றது என குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக இலங்கையில் தமிழ் மக்களிற்கு எதிராக போர்க்குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் இடம்பெற்றது என்பதை பிரான்ஸ் அரசாங்கம் அங்கீகரிக்கவேண்டும், என வேண்டுகோள் விடுத்துள்ள பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரான்ஸ் நம்பகதன்மை மிக்க நீதி செயற்பாட்டிற்கு ஆதரவளிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர். செம்மணி மனித புதைகுழிகள் சர்வதேச நீதிமன்றத்தின் முன் சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும் இவற்றிற்கு காரணமானவர்களை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதற்கும் முக்கியமான வாய்ப்பை வழங்குகின்றன என பிரான்ஸ்நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். பிரான்சில் வசிக்கும் 220,000 தமிழ் வம்சாவளி மக்கள், அவர்களில் பெரும்பாலோர் 1980 களில் போரிலிருந்து தப்பி ஓடி வந்தவர்கள், உலகெங்கிலும் உள்ள மற்ற தமிழ் சமூகத்தைப் போலவே, அவர்களுக்கு உண்மை, நீதி மற்றும் இழப்பீடு அவசரமாகத் தேவை” என அவர்கள் தெரிவித்துள்ளனர். கூட்டுப் பிரகடனத்தில் LFI-NFP கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய சட்டமன்ற உறுப்பினர்களான கார்லோஸ் மார்டென்ஸ் பிலோங்கோ (வால் டி'ஓய்ஸ்), எரிக் கோக்வெரல், அலி டியோரா மற்றும் தாமஸ் போர்டெஸ் (சீன்-செயிண்ட்-டெனிஸ்), பெர்செவல் கெய்லார்ட் மற்றும் ஜீன்-ஹியூஸ் ரேட்டன் (ரீயூனியன்) ஆகியோர் கையெழுத்திட்டனர். https://www.virakesari.lk/article/221420
  2. ரஷ்யா நிலநடுக்கம் பசிபிக் பெருங்கடலை அதிர வைத்தது எப்படி - முழு விவரம் 30 ஜூலை 2025 ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் புதன்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 11.25 மணிக்கு 8.8 அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் பெட்ரோபாவ்லாவ்ஸ்க் - காம்ச்சாட்ஸ்கி (Petropavlovsk-Kamchatsky) என்ற இடத்தில் இருந்து 126 கிலோமீட்டர் தொலைவில் 18 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து. நிலநடுக்கம் காரணமாக ரஷ்யாவின் கம்சட்கா க்ரே பகுதியில் கட்டடங்கள் குலுங்கின, கடல் அலைகள் ஆக்ரோஷமாக எழும்பின. ரஷ்யாவின் சகின் மாகாணத்தில் உள்ள வட குரில்ஸ் தீவுகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த தீவில் உள்ள ஒரு துறைமுகத்தில் சுனாமி அலைகள் புகுந்தன. நிலநடுக்கத்தால் ரஷ்யாவின் கம்சாட்கா விமான நிலையத்தின் கூரை பெயர்ந்து விழுந்தது. ரஷ்யாவின் ஏற்பட்ட நிலநடுத்தத்தைத் தொடர்ந்து ஜப்பானின் ஹூக்கைடோ (Hokkaido) முதல் கியூஷு வரையிலான கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அமெரிக்காவின் மேற்கு கடற்கரை, அலாஸ்காவின் தொலைதூர அலூடியன் தீவுகள், ஹவாய், குவாம் ஆகிய பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக அமெரிக்காவின் ஹவாயில் 4 முதல் 6 அடி உயரம் வரை அலைகள் எழும்பின. ஹவாய் துறைமுகத்தில் உள்ள அனைத்து வணிக கப்பல்களை அப்புறப்படுத்த வேண்டும் என அமெரிக்கக் கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது. மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டதை அடுத்து ஹவாயின் நஹாலேயூ Naalehu பகுதியில் சைரன் மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டது. மேலும் கரையோரம் இருக்கும் கப்பல்கள் சுனாமி அலைகள் கடந்து செல்கிற வரை கடலுக்குள்ளே இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈக்வடார், வடமேற்கு ஹவாய் தீவுகள் மற்றும் ரஷ்யாவின் சில கடற்கரைகளில் மூன்று மீட்டருக்கும் அதிகமான உயர அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்கச் சுனாமி எச்சரிக்கை மையங்கள் தெரிவித்துள்ளன. இதுமட்டுமின்றி, ஆஸ்திரேலியா, கொலம்பியா, மெக்சிகோ, நியூசிலாந்து, டோங்கா மற்றும் தைவான் உள்ளிட்ட பிற இடங்களில் ஒரு மீட்டர் வரை அலைகள் எழக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டது. சுனாமி எச்சரிக்கை காரணமாக ஜப்பானில் 19 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கைக் காரணமாக ஜப்பானின் தெற்கு பகுதிகளில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது, கடைகள் அடைக்கப்பட்டன. ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து ஃபுகுஷிமா டாய்ச்சி மற்றும் ஃபுகுஷிமா அணுமின் நிலையங்களிலிருந்த ஊழியர்கள் பாதுகாப்பான, உயரமான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டிருப்பதாக டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி (டெப்கோ) கூறியுள்ளது. இவற்றுள், ஃபுகுஷிமா டாய்ச்சி என்பது 2011ஆம் ஆண்டு ஜப்பானைத் தாக்கிய 9.0 அளவு நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அணுமின் நிலையமாகும். ஜப்பானின் வடக்கு பகுதியில் 30 செண்டிமீட்டர் முதல் 40 செண்டி மீட்டர் உயர சுனாமி அலைகள் தாக்கின. இதுவரை எவ்வித பாதிப்போ உயிரிழப்போ ஏற்படவில்லை என ஜப்பானின் முதன்மை கேபினட் செயலாளர் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட ஒரு பெரிய நிலநடுக்கம் காரணமாக, ஹவாயில் (Hawaii) சுனாமி எச்சரிக்கை அமலில் உள்ளது. அலாஸ்கா மற்றும் அமெரிக்காவின் பசிபிக் கரையோர பகுதிகளில் சுனாமி கண்காணிப்பு அமலில் உள்ளது" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjr14py4541o
  3. பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்து : அமைச்சரவைக்கு வரைவு சமர்ப்பிப்பு 30 JUL, 2025 | 11:22 PM (இராஜதுரை ஹஷான்) பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்வது தொடர்பான சட்டவரைவினை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்வதற்காக சட்டவரைஞர் திணைக்களத்தால் தயாரிக்கப்பட்ட சட்ட வரைவு நீதியமைச்சினால் பரிசீலிக்கப்பட்டுள்ள நிலையில் இறுதி மீளாய்வுக்காக சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்வதாக தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தது. இதற்கமைய சட்டவரைஞர் திணைக்களத்தால் தயாரிக்கப்பட்ட சட்டவரைவினை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு எதிர்வரும் வாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த சட்டவரைவுக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்ததன் பின்னர் வர்த்தமானி அறிவித்தலில் சட்டமூலம் பிரசுரிக்கப்படும். அதன் பின்னர் சட்டமூலத்தை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த 14 நாட்கள் காலவகாசம் வழங்கப்படும். https://www.virakesari.lk/article/221397
  4. பட மூலாதாரம், GETTY IMAGES கட்டுரை தகவல் ஆ. நந்தகுமார் பிபிசி தமிழ் 30 ஜூலை 2025 சென்னையைச் சேர்ந்த மென்பொறியாளரான வாசுகிக்கு அடிக்கடி தசை வலியும் சோர்வும் இருந்துகொண்டே இருந்துள்ளது. ''பணி அழுத்தம் அல்லது போதிய தூக்கம் இல்லாதது இதற்கான காரணமாக இருக்கலாம் என நினைத்தேன்'' என்கிறார் அவர். பல மாத போராட்டத்துக்குப் பிறகு மருத்துவரிடம் செல்ல முடிவெடுத்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ரத்தப் பரிசோதனையில் அவரது வைட்டமின் டி அளவு ஆபத்துக்குரிய வகையில் குறைவாக இருந்தது தெரியவந்தது. உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய பொது சுகாதார இதழில், 'இந்தியாவின் தலைநகர் டெல்லியின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் வைட்டமின் டி குறைபாட்டின் பரவல் மற்றும் காரணிகள்' என்ற தலைப்பில் ஓர் ஆய்வு கட்டுரை வெளியானது. அதன்படி, நகர்ப்புறத்தில் வசிப்பவர்களில் 70% பேருக்குக் கடுமையான வைட்டமின் டி குறைபாடு இருப்பதாகவும், அதேசமயம் கிராமப்புறங்களில் வசிப்பவர்களில் சுமார் 20% பேருக்குக் கடுமையான வைட்டமின் டி குறைபாடு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, சோர்வு, மூட்டு வலி, கால்களில் வீக்கம், நீண்ட நேரம் நிற்பதில் சிரமம், தசை பலவீனம், மன அழுத்தம் ஆகியவை வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகளாகும். (சித்தரிப்புப்படம்) இந்த ஆய்வில் டெல்லி என்சிஆர் எனப்படும் தலைநகரப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த நகர்ப்புற மற்றும் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். ரத்தத்தில் 10 நானோ கிராமுக்கும் குறைவாக வைட்டமின் டி இருந்தால் அது தீவிர குறைபாடாகக் கருதப்படும். இந்த ஆய்வில் பங்கேற்ற நகர்ப்புறத்தை சேர்ந்தவர்களின் சராசரி வைட்டமின் டி அளவு 7.7  நானோகிராமாக உள்ளது. கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களின் சராசரி வைட்டமின் டி அளவு 16.2 நானோ கிராமாக உள்ளது. ரத்தத்தில் 30 நானோ கிராமுக்கு மேல் வைட்டமின் டி இருப்பதுதான் போதுமான அளவாகக் கருதப்படும் நிலையில், கிராமப்புறத்தில் இருப்பவர்களும் இந்த பாதிப்புகளில் இருந்து தப்பிக்கவில்லை என்றாலும் கடுமையான குறைபாடு என்ற நிலை சற்று குறைவாகவே இருக்கிறது. வைட்டமின் டி பற்றாக்குறையால் ஆண்களை விடப் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனத்தின் இதழில் வெளியான ஆய்வு கூறுகிறது. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, வைட்டமின் டி பெறுவது தான் இலக்கு என்றால் கண்ணாடி ஜன்னலுக்கு அருகில் இருந்து சூரிய ஒளியை பெற வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தமிழ்நாட்டில் என்ன நிலவரம்? சென்னையை சேர்ந்த கர்ப்பிணிகள் மத்தியில் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில் 62% பெண்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பது தெரியவந்தது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பிரஸ்ஸில் வெளியான, 'பல்வேறு வகையான குளுக்கோஸ் சகிப்புத்தன்மை கொண்ட நகர்ப்புற தென்னிந்தியர்களில் வைட்டமின் டி குறைபாடு' என்ற ஆய்வில் சென்னையை சேர்ந்த பலர் பங்கேற்றுள்ளனர். ஆய்வில் பங்கேற்ற 66% பேருக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பது தெரியவந்தது. பங்கேற்பாளர்களுக்கு நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை அல்லது வகை 2 நீரிழிவு நோய் இருந்தாலும் சரி, வைட்டமின் டி குறைபாடு பரவலாக இருந்தது எனவும் ஆண்களை விடப் பெண்களுக்கு வைட்டமின் டி அளவு குறைவாக இருந்தது எனவும் கூறுகிறது இந்த ஆய்வு. அத்துடன் பஞ்சாப், திருப்பதி, புனே, அமராவதி போன்ற பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளும் கிராமப்புறத்தை விட நகர்ப்புறத்தில் வசிப்பவர்களுக்கு அதிகளவில் வைட்டமின் டி பற்றாக்குறை இருப்பதைக் காட்டின. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, வைட்டமின் டி குறைபாடு கரணமாக இளம் வயதிலேயே டிமென்ஷியா ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறுகிறது ஓர் ஆய்வு காரணம் என்ன? வைட்டமின் டி சூரிய ஒளியில் இருந்து இயற்கையாகப் பெறக்கூடியது. இந்திய வட மாநிலங்களில் சில மாதங்களைத் தவிர பெரும்பாலான மாதங்களில் சூரிய ஒளி நன்றாகக் கிடைக்கும் அதே சமயம் சென்னை போன்ற வெப்ப மண்டல நகர்புறபகுதியில் ஆண்டு முழுக்க சூரிய ஒளி கிடைத்தாலும் நகர்புற மக்களுக்கு அதிகளவில் வைட்டமின் டி குறைபாடு இருப்பதற்கான காரணம் என்ன? வைட்டமின் டி சூரிய ஒளி மற்றும் உணவு மூலம் மனித உடலுக்கு வருவதாகச் சென்னையைச் சேர்ந்த தோல் மருத்துவர் தட்சிணாமூர்த்தி கூறுகிறார். ''உடலுக்குத் தேவையான பெரும்பாலான வைட்டமின் டி சூரிய ஒளி மூலம் வருகிறது. மனித தோலின் மேல் பகுதி இயற்கையாகவே 7-டிஹைட்ரோகொலஸ்ட்ரால் (7-dehydrocholesterol) என்ற மூலக்கூறை உற்பத்தி செய்யும். சூரிய ஒளியின் புறஊதா கதிர் தோலில் பட்டவுடன் அந்த மூலக்கூறு வைட்டமின் டி3 ஆக மாறும். பின்னர் கல்லீரலும், சிறுநீரகமும் அதை வைட்டமின் டி ஆக மாற்றி உடலுக்கு அனுப்பும்'' என்கிறார் அவர். ''நவீனமயமாக்கல் மற்றும் மாறிவரும் வேலை கலாசாரம் காரணமாக வீட்டிற்குள் செலவிடும் நேரமும், அலுவலகத்தில் செலவிடும் நேரமும் அதிகரித்துள்ளது. வெளியில் சென்றாலும் ஆடையால் உடலை முழுமையாக மறைத்துக் கொள்ளும் வழக்கம் அதிகமாக உள்ளதால், உடலில் சூரிய ஒளி படுவதற்கான வாய்ப்பு வெகுவாக குறைந்துவிடுகிறது'' என்கிறார் புதுவை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பொது மருத்துவர் பீட்டர். சில நிமிடங்கள் வெளியே இருப்பதன் மூலம் போதுமான சூரிய ஒளி கிடைக்கும் என்று மக்கள் கருதுகிறார்கள். ஆனால் மாசுபாடு, உடைகள் மற்றும் கண்ணாடி ஜன்னல் தடுப்பு போன்றவை உங்கள் உடல் சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டி பெறுவதைத் தடுக்கின்றன என்கிறார் பீட்டர். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, வைட்டமின் டி பற்றாக்குறை ஆபத்தால் ஆண்களை விடப் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனத்தின் இதழில் வெளியான ஆய்வு கூறுகிறது. எவ்வளவு நேர சூரிய ஒளி தேவை? ஒரு இந்திய ஆண், போதிய அளவாக நிர்ணயிக்கப்பட்ட 30 நானோ கிராம் வைட்டமின் டி-ஐ பெற தினமும் 2 மணி நேரத்துக்கு மேலாக முகம், கைகள், முன்கைகள் மீது சூரிய ஒளி படும் விதமாக நடக்க வேண்டும் என்கிறது ஓர் ஆய்வு. குறைந்தபட்சம் 20 நானோ கிராம் வைட்டமின் டி-ஐ பெற தினமும் 1 மணி நேரம் வெளியில் நடக்க வேண்டும் எனவும், காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடக்க சிறந்த நேரம் எனவும் இந்த ஆய்வு கூறுகிறது வைட்டமின் டி பெறுவது தான் இலக்கு என்றால் கண்ணாடி ஜன்னலுக்கு அருகில் இருந்து சூரிய ஒளியை பெற வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ''சூரிய ஒளியின் UVB கதிர்கள்தான் வைட்டமின் டி உருவாக உதவும். இந்த கதிர்கள் வழக்கமாக காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நன்றாக கிடைக்கும். அதிகாலையிலும் மாலையிலும் சூரிய ஒளியில் UVA கதிர்கள் இருக்கும். இது வைட்டமின் டி உருவாக உதவாது. அதிகாலையில் சூரியன் பளிச்சென்று தோன்றினாலும் அதில் நீங்கள் நின்றால் அதிக பலனில்லை'' என்கிறார் மருத்துவர் தட்சணாமூர்த்தி. இதற்கான அறிவியல் காரணம் என்னவென்றால், பூமியின் வளிமண்டலம் சூரியன் கீழ்வானில் இருக்கும்போது UVB கதிர்களை தடுத்துவிடுகிறது. அதாவது, அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் சூரியன் மிகவும் குறைந்த (45 டிகிரிக்கு குறைவாக) கோணத்தில் இருப்பதால் UVB கதிர்கள் பெரும்பாலும் பூமியை அடையவே முடியாமல் தடுக்கப்படுகின்றன. வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகள் சோர்வு, மூட்டு வலி, கால்களில் வீக்கம், நீண்ட நேரம் நிற்பதில் சிரமம், தசை பலவீனம், மன அழுத்தம் ஆகியவை வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகளாகும். ''பரபரப்பான வாழ்க்கையால் இந்தியர்கள் இதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை, வைட்டமின் டி குறைபாடு உடலின் அனைத்து பாகங்களையும் படிப்படியாக பலவீனப்படுத்துகிறது, இதன் காரணமாக வயதான காலத்தில் எலும்புகள், தசைகள் மற்றும் மூட்டுகளில் அதிக வலி ஏற்படுகிறது.'' என்கிறார் மருத்துவர் பீட்டர். வைட்டமின் டி குறைபாடு காரணமாக இளம் வயதிலேயே டிமென்ஷியா ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறுகிறது ஓர் ஆய்வு பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, வைட்டமின் டி சூரிய ஒளி மற்றும் உணவு மூலம் மனித உடலுக்கு வருகிறது சமாளிப்பது எப்படி? வாசுகி போன்ற பெரும்பாலான நகர்ப்புறவாசிகளுக்குத் தினமும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலான நேரத்தில் குறைந்தது 1 மணி நேரம் நடைப்பயிற்சி செய்வது என்பது சாத்தியமற்றது. ''உணவு மூலம் வைட்டமின் டி குறைபாட்டைச் சமாளிப்பது சற்று கடினம். முட்டை, மீன், பால், வைட்டமின் டி செறிவூட்டப்பட்ட உணவு போன்றவை உதவக்கூடும்.'' என்கிறார் மருத்துவர் பீட்டர். வைட்டமின் டி குறைபாட்டை குணப்படுத்த சில சப்ளிமெண்ட்களும் பயனுள்ளதாக இருக்கும் என மருத்துவர் கூறுகிறார். ''என்னதான் பல சப்ளிமெண்ட்கள் கிடைத்தாலும் நேரம் கிடைக்கும்போது வெயிலில் நிற்பது போன்ற எளிமையான, செலவில்லாத மருந்துதான் சிறந்தது என தோன்றுகிறது'' என்கிறார் வாசுகி. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly4ny450vpo
  5. நெல்லை ஆணவக் கொலை; கவின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு 30 JUL, 2025 | 12:59 PM திருநெல்வேலி: நெல்லை ஆணவக் கொலை விவகாரத்தில், பெண்ணின் பெற்றோர்களான காவல் உதவி ஆய்வாளர்கள் இருவரையும் கைது செய்தால் மட்டுமே உடலை வாங்கப் போவதாக உறவினர்கள் உறுதிபடத் தெரிவித்துவிட்டனர். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் கடந்த 27-ம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இவர் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரன் சுர்ஜித் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சாரணடைந்த நிலையில் சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. கொலை செய்யப்பட்ட கவின் சுர்ஜித் பெற்றோர்களான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி இருவரும் காவல்துறை உதவி ஆய்வாளர்களாக உள்ளனர். எனவே இருவரையும் கைது செய்தால் மட்டுமே உடலை வாங்கி அடக்கம் செய்வோம் என கவினின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தது. இந்நிலையில், இன்று அதிகாரிகள் வன்கொடுமை பாதிப்பு முதற்கட்ட நிதியை கொண்டு சென்று கவினின் தந்தை சந்திரசேகரிடம் கொடுக்க சென்றபோது தனக்கு நிதி தேவையில்லை; நீதிதான் வேண்டும். பெண்ணின் பெற்றோரான உதவி ஆய்வாளர்கள் கைது செய்யப்பட வேண்டும் எனக் கூறி நிதியை வாங்காமல் அதிகாரிகளை திருப்பி அனுப்பினார். இதனை அடுத்து வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ள கவின் செல்போன் பாஸ்வேர்டை பெறவும் அதில் இருக்கும் தகவல்கள் குறித்து அறிந்து கொள்ளும் நடவடிக்கையிலும் காவல்துறை இறங்கியது. இதற்காக கவினின் சகோதரன் பிரவீன் மற்றும் உறவினர்களை பேச்சுவார்த்தைக்கு திருநெல்வேலிக்கு அழைத்து வந்தனர். மாநகர காவல் துறை ஆணையாளர் சந்தோஷ் முன்னிலையில் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கவின் மற்றும் அவர் காதலித்ததாக கூறப்படும் பெண் தொடர்பாக அவரது சகோதரர் உள்ளிட்ட உறவினர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. உடலை வாங்க வலியுறுத்தி காவல்துறை சார்பில் ஆணையாளர் சந்தோஷ் துணை ஆணையர் பிரசன்ன குமார் ஆகியோர் வலியுறுத்தினர். ஆனால் இவ்வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள நபர்கள் இருவரையும் கைது செய்தால் மட்டுமே உடலை பெறுவோம் என அவர்கள் கண்டிப்பாக தெரிவித்துள்ளனர். இதனால் மூன்று மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கவின் உறவினரும் வழக்கறிஞருமான செல்வம் கூறுகையில் முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் உதவி ஆய்வாளர்கள் இருவரையும் கைது செய்யலாம். ஆனால் காவல்துறை அவர்களை கைது செய்ய மறுக்கிறது. அவர்களை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்கி அடக்கம் செய்வோம். இதே நிலை தொடர்ந்தால் இந்த வழக்கை வேறு முகமைக்கு மாற்ற கோரிக்கை கொடுக்க நேரிடும் என்று தெரிவித்தனர். வழக்கில் பாதிக்கப்பட்ட எங்களிடமே அதற்கான ஆதாரங்களை காவல்துறை கேட்கிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதனிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுர்ஜித்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் காதி மணி உத்தரவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/221359
  6. சம்பூரில் மனித எச்சங்கள் வழக்கு; விசேட மாநாடு 06ஆம் திகதி Published By: DIGITAL DESK 3 30 JUL, 2025 | 04:08 PM திருகோணமலை சம்பூரில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் அகழ்வுப் பணியை மேற்கொள்வது தொடர்பில் ஆராயும் முகமாக குறித்த வழக்கானது வழக்கு மாநாடு ஒன்றிற்காக எதிர்வரும் 06ஆம் திகதி நியமிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த மாநாட்டுக்கு வர வேண்டியவர்களுக்கு அழைப்பு விடுக்குமாறு சம்பூர் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கானது கடந்த தவணை நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்த அறிவுறுத்தலுக்கு அமைய இன்று புதன்கிழமை (30) அழைக்கப்பட்டபோது சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்பொருளியல் திணைக்களம் ஆகியவற்றிடமிருந்து நீதிமன்ற அறிக்கையினை கோரியிருந்து. குறித்த அறிக்கைகளை ஆராய்ந்த நீதிபதி எச்.எம். தஸ்னீம் பௌசான் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார். சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின்படி, குறித்த மனித எச்சங்கள் நீண்டகாலத்திற்கு உட்பட்டவையாக இருப்பதாகவும், அவற்றை மேலதிக ஆய்வுக்கு உட்படுத்தி குறித்த எச்சங்கள் காயங்களினூடாக ஏற்பட்ட மரணமா, அல்லது இயற்கை மரணமா என்பது தொடர்பிலும் குறித்த எச்சங்கள் குற்றத்தின் ஊடான மரணத்தின் மூலம் சம்பந்தப்பட்டவையா? என அறிய வேண்டி இருப்பதால் இதனை மேலும் ஆழமான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டி இருப்பதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று தொல்பொருளியல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள அறிக்கையில் குறித்த பிரதேசத்தில் மயானம் இருந்ததாகவோ அல்லது மயானமாக பயன்படுத்தப்பட்டது சம்பந்தமாகவோ அல்லது தொல்லியல் திணைக்களத்திற்குரிய பிரதேசமாக இருந்ததாகவோ எவ்வித துல்லியமான தகவல்கள் இல்லை எனவும் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர். இந்நிலையில் குறித்த அறிக்கைகளின் பிரகாரம் குறித்த பிரதேசத்தில் அகழ்வுப்பணியை மேற்கொள்வதா, இல்லையா, என்பது தொடர்பாக வழக்கு மாநாடு ஒன்றின் மூலம் அதற்கான தீர்மானத்தை எடுப்பதற்காக எதிர்வரும் 06ஆம் திகதி புதன்கிமை வழக்கு மாநாடு ஒன்றை நடாத்துவதற்காக திகதியிடப்பட்டுள்ளதுடன் குறித்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டியவர்களுக்கு அழைப்பு விடுக்குமாறு சம்பூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோர பகுதியில் MAG என்ற மிதிவெடி அகற்றும் நிறுவனம் மிதிவெடி அகற்றுவதற்கான அகழ்வுப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) குறித்த பகுதியில் இருந்து சிதைந்த மனித மண்டை ஓடு மற்றும் எலும்புப்பகுதிகள் கண்டெடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து கடந்த 23ஆம் திகதி குறித்த பகுதியை மூதூர் நீதிமன்ற நீதிபதி மற்றும் அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம் காணாமல் போனோர் அலுவலகம், குற்றவியல் தடய காட்சிகள் அலுவலகம் (SOCO) ஆகிய திணைக்களங்களின் அதிகாரிகள் பார்வையிட்டனர். இதன்போது சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல் திணைக்களத்திடம் குறித்த பகுதியில் அகழ்வுப்பணியை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்வதற்காக இன்றையதினம் அறிக்கை கோரப்பட்டிருந்தது. அத்துடன் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது மேலும் சில மண்டை ஓடு, கை, கால், முள்ளந்தண்டு மற்றும் விலா என்புத் தொகுதிகளைக் கொண்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்ததாகவும் தெரிய வருகின்றது. https://www.virakesari.lk/article/221381
  7. 30 JUL, 2025 | 03:31 PM லலித் என அழைக்கப்படும் லலித் வீரராஜ் மற்றும் குகன் என அழைக்கப்படும் குகன் முருகானந்தன் 2011 இல் காணாமல்போனமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக யாழ்ப்பாணம் செல்ல தயாரில்லை என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு உச்சநீதிமன்றத்திற்கு தனது சட்டத்தரணி மூலம் தெரிவித்துள்ளார். கோட்டாபாய ராஜபக்ச வாக்குமூலம் வழங்க தயாராகயிருக்கின்றார் என தெரிவித்துள்ள அவரது சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா அவர் வாக்குமூலம் வழங்குவதற்காக யாழ்ப்பாணம் செல்வதற்கு தயாரில்லை என குறிப்பிட்டுள்ளார். தனது கட்சிக்காரர் கொழும்பு உட்பட நாட்டின் ஏனைய எந்த பகுதியிலும் சாட்சியமளிக்க தயார் என ரொமேஸ் டி சில்வா தெரிவித்துள்ளார். காணாமல்போன செயற்பாட்டாளர்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவேளை கோட்டாபயவின் சட்டத்தரணி இதனை தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களை சட்டத்தரணி நுவான் போபகே பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார். ஆட்கொணர்வு மனு தொடர்பில் கோட்டாபய ராஜபக்ச ஆஜராகவேண்டும் என யாழ்ப்பாண நீதிமன்றம் 2019 ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை இரத்து செய்த முன்னைய மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வழக்கு தாக்கல் செய்திருந்தன. https://www.virakesari.lk/article/221374
  8. Published By: DIGITAL DESK 3 30 JUL, 2025 | 03:51 PM வட்ஸ் அப் பயனர்களை குறி வைத்து சைபர் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பயனர்கள் ஓடிபி (OTP) எனப்படும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய கடவுச்சொற்கள் உள்ளிட்ட எந்த தகவல்களையும் பகிர்வதை தவிர்க்க வேண்டும் என சிஐடி எனப்படும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டவரின் மொபைல்போனுக்கு ஓடிபியை குறுந்தகவல்கள் (SMS) ஊடாக அனுப்பி வைப்பார்கள். பின்னர் தெரியாத செல்போன் எண்ணிலிருந்து, நமது வட்ஸ்அப்பில் ஒரு செய்தி வரும். அதில் வட்ஸ்அப் கணக்கிற்கான ஆறு இலக்க குறியீடு உங்களது எண்ணுக்கு தவறாக அனுப்பப்பட்டுவிட்டதாகவும், அந்த ஓடிபி குறியீட்டை பகிருமாறு மோசடிக்காரர்கள் கேட்பார்கள். எந்த சூழ்நிலையிலும் ஓடிபியை பகிர்வதை தவிர்க்க வேண்டும். ஓடிபியை பகிர்ந்தால், வட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டு, அது சைபர் குற்றவாளிகள் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிடும். அதன்பிறகு அவர்கள், வட்ஸ் அப்பை பயன்படுத்தி, ஆள் மாறாட்டம் செய்து, அவருடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு செய்தி அனுப்புவர். அவற்றில் அவசர உதவி, விபத்து செலவுகள், மருத்துவத் தேவைகள் போன்றவற்றிற்காக பண உதவி கோருவர். இதனால், தகவல் பெறும் நபர் பணத்தை அனுப்பிவிட்டு, பின்னர் தான் இது ஒரு மோசடி என்பதை உணர்கிறார். நீங்கள் ஓடிபி பெற்றால், அதை யாருடனும் பகிர வேண்டாம். இதுபோன்ற நிதி மோசடிகள் தொடர்ந்து இடம்பெறுவதால், பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறு சிஐடி வலியுறுத்தியுள்ளது. எந்தவொரு சூழ்நிலையிலும் எந்தவொரு ஒன்லைன் கணக்குகளின் OTP எண்கள் அல்லது சரிபார்ப்புக் குறியீடுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என பொலிஸ் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/221370
  9. முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு 30 JUL, 2025 | 04:09 PM முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (30) உத்தரவிட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடற்படைத் தளபதியாக நிஷாந்த உலுகேதென்ன கடமையாற்றிய காலத்தில் குருணாகல் - பொத்துஹெர பிரதேசத்தில் இளைஞன் ஒருவன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், நிஷாந்த உலுகேதென்ன கடந்த 28 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் கீழ் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/221382
  10. 8.8 magnitude earthquake off Russia's coast prompts tsunami warnings in Alaska, Hawaii Approximately 5,000 miles away, the earthquake was picked by a seismograph operated by the University of Pittsburgh at the Allegheny Observatory.
  11. 30 JUL, 2025 | 11:21 AM யாழ். நாவற்குழி பகுதியில் கடந்த 1996 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட 22 பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனு யாழ். மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் நடைபெற்ற பகுதியானது சாவகச்சேரி நீதிமன்றத்தின் நியாயாதிக்க எல்லைக்குள் உட்படுவதால் குறித்த வழக்கு சாவச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் குறித்த வழக்கானது தீர்ப்புக்காக இன்றையதினம் திகதியிடப்பட்டது. இருப்பினும் நீதிவான் இன்றையதினம் விடுமுறையில் இருந்த காரணத்தினால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதி குறித்த வழக்கு தீர்ப்புக்காக திகதியிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/221344
  12. கலிபோர்னியாவில் சுனாமி அலைகள் 30 JUL, 2025 | 02:01 PM அமெரிக்க தேசிய வானிலை சேவையின்படி சுனாமி கலிபோர்னியாவின் கடற்கரையை அடைந்துள்ளது இது மாநிலத்தின் வடக்கே உள்ள அரினா கோவ் மற்றும் மான்டேரியில் தோன்றி மேலும் கீழ்நோக்கிச் செல்கிறது என்று அமெரிக்க தேசிய வானிலை சேவைதெரிவித்துள்ளது. கலிபோர்னியாவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள ஓரிகான் எல்லைக்கு அருகிலுள்ள கிரசென்ட் நகரில், நீர் மட்டம் உயர்ந்துள்ள நிலையில், கலிபோர்னியா தனது முதல் சுனாமி அலைகளைக் காணத் தொடங்கியுள்ளது. தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் தரவுகளின்படி, 1 அடிக்கு மேல் அலை காணப்பட்டுள்ளது, விரைவில் அதிக அலைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த நகரம் வடக்கு கலிபோர்னியாவின் கடற்கரையின் 100 மைல் நீளத்தில் அமைந்துள்ளது, இது மிக உயர்ந்த எச்சரிக்கை மட்டமான சுனாமி எச்சரிக்கையின் கீழ் உள்ளது. இந்த பகுதியின் தனித்துவமான நீருக்கடியில் புவியியல் "அலை ஆற்றலை புனலப்படுத்தும்" திறனைக் கொண்டிருப்பதால், இந்த பகுதி உயர்ந்த சுனாமி அபாயத்தில் உள்ளது என்று தேசிய வானிலை சேவை தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/221367 கலிபோர்னியாவில் வசிக்கும் நம்மகள உறவுகள் அவதானமாக இருங்கோ.
  13. 30 JUL, 2025 | 03:50 PM வடக்கில் யாழ். போதனா வைத்தியசாலை தற்போது சகல பிரிவுகளையும் கொண்டு இயங்குகின்றது. இருப்பினும் வைத்தியசாலையின் மேலும் கட்டட வசதிகளும் உபகரண மற்றும் ஆளணி வசதிகளும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவ விடுதிகளுக்காக இரண்டு கட்டில்களும் சில உபகரணங்களும் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வருகை தந்திருந்த அன்பரினால் வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது. போதனா வைத்தியசாலையில் சில விடுதிகள் அண்மையில் திறக்கப்பட்டதும் மற்றும் இவ்வாறு புதிய உபகரணங்கள் வழங்கப்படுவதும் வைத்திய சேவையை மேலும் வலுப்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/221375
  14. அவர் என்புமூட்டு சிகிச்சை நிபுணர். அவரின் கதைகளை நம்ம @நிழலி அண்ணை இணைக்கிறவர்.
  15. சீனாவில் தலைகீழாக மாறிய நிலைமை: குழந்தை பெற்றால் பணம் கொடுப்பதாகக் கூறும் அரசு பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்பு அதன் சர்ச்சைக்குரிய 'ஒரு குழந்தை கொள்கையை' ஒழித்த பிறகும், நாட்டின் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. கட்டுரை தகவல் ஆஸ்மண்ட் சியா வணிக செய்தியாளர், பிபிசி செய்திகள் பிரிவு 29 ஜூலை 2025 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவில் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்காக அரசு அறிவித்த முதல் நாடு தழுவிய மானியத்தின் கீழ், மூன்று வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுக்கு 3,600 யுவான்( 500 டாலர்) பெற்றோருக்கு வழங்கப்படுகிறது. சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்பு, அதன் சர்ச்சைக்குரிய 'ஒரு குழந்தை கொள்கையை' கைவிட்ட பிறகும், நாட்டின் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த மானியங்கள் சுமார் 20 மில்லியன் குடும்பங்களுக்கு குழந்தைகளை வளர்ப்பதற்கான செலவுகளை ஈடுசெய்ய உதவும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் சீனா, மக்கள் தொகை நெருக்கடியை எதிர்கொள்கிறது. இதனால், மக்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள ஊக்குவிக்க, பல மாகாணங்கள் முன்னோட்டமாக சில மானியங்களை வழங்கி வருகின்றன. திங்களன்று அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், பெற்றோருக்கு ஒரு குழந்தைக்கு மொத்தம் 10,800 யுவான் வரை வழங்கும். இந்தக் கொள்கை, 2025 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே அமல்படுத்தப்படும் என சீனாவின் அரசு ஊடகமான சிசிடிவி தெரிவித்துள்ளது. 2022 மற்றும் 2024 க்கு இடையில் பிறந்த குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களும் பகுதி மானியங்களைப் பெற விண்ணப்பிக்கலாம். சீனாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க உள்ளூர் அரசாங்கங்கள் மேற்கொண்ட முயற்சிகளைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம், XIQING WANG/BBC மார்ச் மாதத்தில், சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஹோஹோட் நகரம், குறைந்தது மூன்று குழந்தைகளைக் கொண்ட தம்பதிகளுக்கு ஒரு குழந்தைக்கு 100,000 யுவான் வரை வழங்கத் தொடங்கியது. பெய்ஜிங்கின் வடகிழக்கில் உள்ள ஷென்யாங் நகரம், மூன்று வயதுக்குட்பட்ட மூன்றாவது குழந்தையைக் கொண்ட உள்ளூர் குடும்பங்களுக்கு மாதத்திற்கு 500 யுவான் வழங்குகிறது. கடந்த வாரம், உள்ளூர் அரசாங்கங்களை இலவச மழலையர் கல்வி திட்டங்களை உருவாக்குமாறு சீனா வலியுறுத்தியது. சீனாவைத் தளமாகக் கொண்ட யுவா மக்கள்தொகை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வின்படி, குழந்தைகளை வளர்ப்பதற்கு அதிக செலவாகும் நாடுகளில் சீனாவும் ஒன்று. சீனாவில், ஒரு குழந்தையை 17 வயது வரை வளர்ப்பதற்கு சராசரியாக 75,700 டாலர் வரை செலவாகும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், சீனாவின் மக்கள்தொகை மூன்றாவது ஆண்டாக தொடர்ச்சியாக குறைந்துள்ளது என்று அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. தேசிய புள்ளிவிவர பணியகத்தின் தகவல்படி, 2024 ஆம் ஆண்டில் சீனாவில் 9.54 மில்லியன் குழந்தைகள் பிறந்துள்ளனர். இது முந்தைய ஆண்டை விட சற்று அதிகம்தான், ஆனால் நாட்டின் ஒட்டுமொத்த மக்கள்தொகை தொடர்ந்து சுருங்கிக்கொண்டே வருகிறது. அதேபோல், சீனாவின் 140 கோடி மக்கள் தொகையும் வேகமாக முதுமை அடைந்து வருகிறது. இது அந்நாட்டின் மக்கள்தொகை குறித்த கவலைகளை மேலும் அதிகரிக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c39dlg3l4leo
  16. அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தவுமில்லை, மோசடி செய்யவுமில்லை - நாமல் ராஜபக்ஷ Published By: VISHNU 30 JUL, 2025 | 02:16 AM (இராஜதுரை ஹஷான்) அரச சொத்துக்களை நாங்கள் முறைகேடாக பயன்படுத்தவுமில்லை, மோசடி செய்யவுமில்லை. நீதிமன்ற கட்டமைப்பை அரசியல் மயப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. நீதித்துறையின் மீது எமக்கு நம்பிக்கை உள்ளது. எமது தரப்பு நியாயத்தை குறிப்பிட்டு நீதியை பெற்றுக்கொள்வோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (29) முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவதற்கு நல்லாட்சி அரசாங்கம் எடுத்த தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதியில் இறங்கி போராடினோம். எம்முடன் மக்கள் விடுதலை முன்னணியினரும் அன்று வீதியில் இறங்கி போராடினார்கள். இந்த போராட்டத்தின் போது நாங்கள் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றோம். அந்த வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகாத காரணத்தால் தான் அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் என்னை கைது செய்வதற்கு திங்கட்கிழமை (28) பிடியாணை பிறப்பித்தது. செவ்வாயக்கிழமை (29) நீதிமன்றத்தின் முன்னிலையாகி அந்த பிடியாணையை நீக்கிக் கொண்டேன். நீதிமன்ற கட்டமைப்பை அரசியல்மயப்படுத்த இந்த அரசாங்கம் முயற்சிக்கிறது. எம்மை கைது செய்வதால் நடைமுறையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது. போராட்டங்களினால் நாட்டை அபிவிருத்தியடைய செய்ய முடியாது என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார். கடந்த 75 ஆண்டுகாலமாக யார் போராட்டங்கள் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டது. மக்கள் விடுதலை முன்னணி கடந்த 75 வருட காலமாக ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்கள் முன்னெடுத்த அபிவிருத்தி எதிராகவே போராடியது. அன்று போராடியது. இன்று ஏதும் தெரியாமல் தள்ளாடுகிறது. எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 1 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதுவரையில் தொழிற்றுறையை விருத்தி செய்யும் எவ்வித திட்டங்களும் செயற்படுத்தப்படவில்லை. இவ்வாறான நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் இலக்கிடப்பட்ட பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு அடைய முடியும் என்றார். https://www.virakesari.lk/article/221323
  17. இந்தியப் பெருங்கடலுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை Published By: DIGITAL DESK 3 30 JUL, 2025 | 08:54 AM ரஷ்யாவின் தூர கிழக்கு பிராந்தியமான கம்சட்காவில் 8.8 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளை சுனாமி தாக்கலாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதேவேளை, இந்திய பெருங்கடலுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என இந்தோனேசியாவில் உள்ள அதன் சுனாமி சேவை வழங்குநர் (InaTEWS-BMKG) ஊடாக இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மற்றும் தணிப்பு அமைப்பு (IOTWS) உறுதிப்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/221332
  18. Published By: VISHNU 29 JUL, 2025 | 10:47 PM யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகங்களில் 9 பிரதேச செயலகங்களில் மட்டும் நிரந்தர நிர்வாக உத்தியோத்தர் (AO) காணப்படுகின்ற நிலையில் ஏனைய 6 பிரதேச செயலகங்களிலும் நிரந்த உத்தியோகத்தர் இன்றி பதில் கடமை உத்தியோகத்தர்களே கடமையில் உள்ளமை தகவல் அறியும் சட்ட மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் உள்ள பிரதேச செயல்களான யாழ்ப்பாணம், நல்லூர், சங்கானை, உடுவில், சாவகச்சேரி, கரவெட்டி, பருத்தித்துறை மற்றும் மருதங்கேணி ஆகிய பிரதேச செயலகங்களில் கடமையில் உள்ள நிர்வாக உத்தியோத்தர்கள் அனேகமாக 2021 ஆம் ஆண்டு பொறுப்பேற்றவர்களாக காணப்படுகின்றனர். இந்நிலையில் கோப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றம் நிர்வாக உத்தியோத்தர் மட்டும் 2011 இருந்து இன்று வரை இடமாற்றம் ஏதும் இன்றி கோப்பாய் பிரதேச செயலகத்தில் 14 வருடங்களாக தொடர்ந்து கடமையில் உள்ளார். ஏனைய பிரதேச செயலகங்களான வேலனை, நெடுந்தீவு ஊர்காவற்துறை, காரைநகர், தெல்லிப்பழை மற்றும் சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலகங்களில் நிர்வாக உத்தியோத்தர் நிரந்தரமாக நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/221319
  19. கடைசி டெஸ்டிற்கான பிட்ச் எப்படி இருக்கும்? பார்வையிட்ட கம்பீர் மைதான ஊழியருடன் வாக்குவாதம் பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கட்டுரை தகவல் ஃபியோன் வின் பிபிசி விளையாட்டு செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ள ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பான பயிற்சியின் போது சர்ரே மைதான பணியாளருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சர்ரே மைதானத்தின் தலைமை பணியாளர் லீ ஃபோர்டில் உடன் விரலை நீட்டி கம்பீர் பேசியது வலைப் பயிற்சி காணொளியில் பதிவாகியுள்ளது. அந்தக் காணொளியில் கம்பீர், "நாங்கள் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் கூற முடியாது" மற்றும் "நீங்கள் ஒரு களப் பணியாளர் மட்டுமே, அதற்கு மேல் எதுவும் இல்லை" என உரக்க கூறியதை கேட்க முடிந்தது. சம்பவம் நடந்த போது அங்கிருந்த இந்தியாவின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக், அதன் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது "டெஸ்ட் போட்டிகாக விக்கெட்டை (ஆடுகளத்தை) பார்வையிட பயிற்சியாளர்கள் சென்ற போது விலகிச் செல்லுமாறு கூறப்பட்டனர்" எனத் தெரிவித்தார். "நாங்கள் விக்கெட் மீது நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்த போது, மைதான பணியாளர்களில் ஒருவர் வந்து அங்கிருந்து இரண்டரை மீட்டர் தள்ளி நிற்குமாறு கூறினார். என்னுடைய கிரிக்கெட் கரியரில் யாரும் அப்படிச் சொல்லி நான் பார்த்ததில்லை" என கோடக் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சர்ரே மைதானப் பணியாளர்கள் ஆடுகளத்தை பார்வையிட இடையூறாக இருந்ததாகக் கூறுகிறார் கோடக். "அவர் தலைமை பயிற்சியாளரிடம் கயிற்றுக்கு வெளியே நின்று விக்கெட்டை(ஆடுகளத்தை) பாருங்கள் எனக் கூறினார். அவ்வாறு நின்று எப்படிப் பார்க்க முடியும் என எனக்குத் தெரியவில்லை." "ஒருவர் அவருடைய ஷூக்களை தேய்த்ததாகவோ அல்லது விக்கெட்டில் ஏதேனும் போட முயற்சித்தாகவோ அல்லது ஸ்பைக் அணிந்திருந்தாகவோ பொறுப்பாளர்கள் உணர்ந்தால் அவ்வாறு சொல்வதில் அர்த்தம் உள்ளது. ஆனால் அதைச் சொன்ன விதம் விசித்திரமானது" என்றார் கோடக். "மைதானத்தில் குறிப்பாக, ஸ்கொயர் மீது பொறுப்பாளர்கள் சற்று கூடுதல் கவனமாக இருப்பார்கள். தங்களிடம் பேசுகிறவர்கள் மிகவும் திறன்மிக்க, புத்திசாலியான நபர்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார். மேலும் அவர், "நீங்கள் மிகவும் புத்திசாலியான, அதிக திறன் மிக்க நபர்களுடன் வேலை செய்கிற போது, ஒருவர் ஆணவமாகப் பேசினால், நீங்கள் பதிலளிக்கலாம். ஆனால் இறுதியில் அது ஒரு கிரிக்கெட் மைதானமே. அது நீங்கள் தொடக் கூடாத, உடைந்துவிடக்கூடிய 200 ஆண்டுகள் பழைய கலைப்பொருள் அல்ல" எனத் தெரிவித்தார். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, பயிற்சியில் இந்திய அணி (கோப்புப்படம்) பயிற்சிக்கென குறிப்பாக எந்த வெளிப்புற களமும் இல்லாத நிலையில், அடுத்த டெஸ்டுக்கான ஆடுகளத்திற்கு அருகே வலை அமைக்கப்பட்ட 3 ஆடுகளங்களை இந்தியா பயிற்சிக்குப் பயன்படுத்தியது. இது தான் வழக்கமான நடைமுறைதான். பிபிசி ஸ்போர்ட் இதுகுறித்து சர்ரே நிர்வாகத்திடம் கருத்து பெற முயன்றபோது அவர்கள் மறுத்துவிட்டனர். பின்னர் ஒரு காணொளி மூலம் இந்திய ஊடகங்களுக்குப் பதிலளித்த ஃபோர்டிஸ், "இதில் பேசுவதற்கு எதுவும் இல்லை. இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை" எனத் தெரிவித்தார். இரு அணிகளுக்கும் இடையே காரசாரமான மற்றும் போட்டி மிகுந்த இந்தத் தொடரில் நிகழ்ந்த சம்பவங்களில் சமீபத்திய நிகழ்வு இது. ஓல்ட் ட்ராஃபோர்டில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் சதமடிக்க வேண்டும் என்பதற்காகவே போட்டியை முன்கூட்டியே டிரா செய்ய இந்தியா மறுத்துவிட்டது. இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லும் இங்கிலாந்து வீரர்கள் "கிரிக்கெட்டின் மாண்புக்கு எதிராக நடந்து கொள்கிறார்கள்" எனத் விமர்சித்திருந்தார். லார்ட்ஸில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து நேரத்தைக் கடத்தும் உத்திகளில் ஈடுபட்டதாக அவர் ஏற்கெனவே கூறியிருந்தார். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, நான்காவது டெஸ்டில் டிரா செய்வதில் சர்ச்சை ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 2-1 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. மான்செஸ்டர் போட்டியைத் தொடர்ந்து அடுத்த போட்டிக்கு மூன்று நாட்கள் மட்டுமே இடைவெளி உள்ள நிலையில் இங்கிலாந்து தனது பந்துவீச்சில் மாற்றங்களை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டோக்ஸ் பல்வேறு காயங்களுடன் அவதிப்படுகிறார். ஜேமி ஓவர்டன், அட்கின்சன் மற்றும் ஜோஷ் டங் மாற்று வேகப்பந்து வீச்சாளர்களாக அணியில் உள்ளனர். கிறிஸ் வோக்ஸ், ப்ரைடன் கார்ஸ் இதுவரையிலான நான்கு போட்டிகளிலும் விளையாடி உள்ளனர். ஜோப்ரா ஆர்ச்சர் நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு அணிக்கு திரும்பி, அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடியுள்ளார். மறுபக்கம் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியிலிருந்து விலகியுள்ளார். இந்திய அணி ஜஸ்ப்ரித் பும்ரா அடுத்த டெஸ்டில் ஆடுவாரா என்பது பற்றியும் முடிவெடுக்க வேண்டியுள்ளது. தொடருக்கு முன்பே அறிவிக்கப்பட்ட அதிகபட்சம் மூன்று போட்டிகளில் அவர் விளையாடிவிட்டார். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, கவுதம் கம்பீர் சர்ரே மைதான பணியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. "ஓவல் டெஸ்டு முன்பே அழுத்தம் அதிகரித்துள்ளது" பிபிசி ஸ்போர்ட்ஸின் தலைமை கிரிக்கெட் செய்தியாளர் ஸ்டீபன் ஷெமில்டின் பகுப்பாய்வு கீழே தரப்பட்டுள்ளது. கவுதம் கம்பீர் மற்றும் லீ ஃபோர்டிஸ் இருவருமே வெளிப்படையான நபர்கள். எந்தவொரு கருத்து வேறுபாட்டிலும் இருவருமே விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இந்தத் தொடரின் அதீத உணர்வுகளுக்கு இது மற்றுமொரு உதாரணம். முதலில் லார்ட்ஸில் நிகழ்ந்த எரிச்சலூட்டும் நிகழ்வுகள், அடுத்து ஓல்ட் ட்ராஃபோர்டில் நிகழ்ந்த கைகுலுக்கல் சர்ச்சை, தற்போது இந்த சர்ச்சை நிகழ்வு. ஓவலில் நடைபெறவுள்ள கடைசி டெஸ்டுக்கு முன்பே அழுத்தம் அதிகரித்துள்ளது. இது உச்சபட்ச விளையாட்டு. இங்கு ஒவ்வொரு முடிவும் முக்கியம். சம்மந்தப்பட்டவர்கள் அதன்மீது அக்கறையுடன் இருப்பார்கள். இதனால் சில சந்தப்ப்பங்களில் நிலைமை கைமீறிச் செல்வது ஒன்றும் புதிதல்ல. தற்போது இருந்து ஓவல் பிட்ச் (ஆடுகளம்) வெளிச்சத்திலே இருக்கும். வரலாற்று ரீதியாக இந்த மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு உகந்ததாக இருந்து வந்துள்ளது. தற்போது நிலைமை அவ்வாறு இல்லை. அடுத்த டெஸ்டுக்கான இங்கிலாந்து அணியில் லியம் டாவ்சன் இடம் பெற மாட்டார் என்ற ஊகங்கள் உள்ளன. பென் ஸ்டோக்ஸ் தலைமையேற்ற பிறகு சுழற்பந்து வீச்சு ஸ்பெஷலிஸ்ட் இல்லாமல் இங்கிலாந்து அணி ஒரே ஒரு டெஸ்டில் மட்டுமே விளையாடியுள்ளது. இதன் மூலம் சுழற்பந்து வீச்சுக்கு அவர் தரும் முக்கியத்துவம் புரிய வரும். ஆனால், அது ஸ்டோக்ஸின் முடிவைப் பொருத்தது. ஓல்ட் ட்ராஃபோர்ட் டெஸ்டில் அதிக ஓவர்களை வீசி ஓய்ந்து போயுள்ள அவர் கடைசி டெஸ்டில் என்ன மாதிரியான பங்கு வகிப்பார் என்பது பற்றி கேள்விகள் உள்ளன. ஸ்டோக்ஸ் 4 வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருப்பார் என்றால் டாவ்சன் அணியில் இடம்பெறுவார். ஸ்டோக்ஸ் பந்துவீசுவதில் சிரமம் இருந்தால், இங்கிலாந்து அணிக்கு கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளர் தேவைப்படும் நிலை வரலாம். அவ்வாறான பட்சத்தில் டாவ்சன் அணியில் இடம் பெறுவது கடினம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj0yjmper0go
  20. பட மூலாதாரம், REUTERS 30 ஜூலை 2025, 02:28 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து ஃபுகுஷிமா டாய்ச்சி மற்றும் ஃபுகுஷிமா அணுமின் நிலையங்களில் இருந்த ஊழியர்கள் பாதுகாப்பான, உயரமான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டிருப்பதாக டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி (டெப்கோ) கூறியுள்ளது. இவற்றுள், ஃபுகுஷிமா டாய்ச்சி என்பது 2011ஆம் ஆண்டு ஜப்பானை தாக்கிய 9.0 அளவு நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட அணுமின் நிலையமாகும். ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ள இரு அணுமின் நிலையங்களிலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அங்கே எந்தவொரு அசாதாரண சூழலும் இல்லை என்றும் டெப்கோ கூறியுள்ளது. ஆனாலும் நிலைமையை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபுகுஷிமா டாய்ச்சி அணுமின் நிலையத்தில் சேதமடைந்த எரிபொருள் சிதைவுகளை முழுமையாக அப்புறப்படுத்தும் பணி 12 முதல் 15 ஆண்டுகள் தாமதமாகும் என்று டெப்போ இந்த வார தொடக்கத்தில் அறிவித்திருந்தது. அந்த அணுமின் நிலையத்திற்குள் கதிர்வீச்சு அளவு குறைவதற்கு போதுமான கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்பதே இதற்குக் காரணம் என்று அந்நிறுவனம் தெரிவித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்யாவின் காம்ச்சாட்கா பிராந்திய கடற்கரை முன்னதாக, ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் 8.8 என்கிற அளவுக்கு மிகக் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், ரஷ்யா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் பெட்ரோபாவ்லாவ்ஸ்க் - காம்ச்சாட்ஸ்கி என்ற இடத்தில் இருந்து 126 கிலோமீட்டர் தொலைவில் 18 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் அளவை முதலில் 8.7 புள்ளிகளாக கணித்திருந்த அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் பின்னர் தனது கணிப்பை 8.8 என்பதாக திருத்தியது. "கடந்த பல தசாப்தங்களில் கண்டிராதது" இந்த நிலநடுக்கத்தால் காம்ச்சாட்கா பகுதியில் 3 முதல் 4 மீட்டர் வரை சுனாமி அலைகள் எழுந்ததாக அந்த பிராந்திய அமைச்சர் செர்கெய் லெபெடெவ் தெரிவித்துள்ளார். இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும் ஒரு குழந்தைகள் பள்ளி சேதடைந்தது என்று அவர் கூறியுள்ளார். "இன்றைய நிலநடுக்கம் மிகத் தீவிரமானது மற்றும் கடந்த பல தசாப்தங்களில் கண்டிராதது" என்று காம்ச்சாட்கா ஆளுநர் விளாடிமிர் சோலோடோவ் தனது டெலிகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த வீடியோவில் தெரிவித்திருந்தார். ஜப்பானில் மக்களுக்கு எச்சரிக்கை ஜப்பானில் சுனாமி அலைகள் தாக்கக் கூடும் என்று கருதப்பட்ட பல நூறு கிலோமீட்டர் நீண்ட கடற்கரைப் பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். "பாதுகாப்பான, மேடான இடங்களுக்குச் செல்லுங்கள். சுனாமி அலைகள் விரைவிலோ அல்லது சற்று நேரத்திற்குப் பிறகோ தாக்கக் கூடும். எச்சரிக்கை அமலில் இருக்கும் வரை பாதுகாப்பான இடங்களில் தொடர்ந்து இருங்கள்" என்று ஜப்பானின் அந்த எச்சரிக்கை அறிவிப்பு கூறுகிறது. சுனாமி அலைகள் 3 அல்லது 4 மீட்டர் வரை எழக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம், REUTERS படக்குறிப்பு, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள் ஜப்பான்: ஹொக்கைடோ முதல் கியூஷு வரையிலான கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, அதேநேரத்தில் ஜப்பானின் பிற பகுதிகளில் குறைந்த அளவிலான எச்சரிக்கைகள் அமலில் உள்ளன அமெரிக்காவின் மேற்கு கடற்கரை முழுவதும் அலாஸ்காவின் தொலைதூர அலூடியன் தீவுகள் ஹவாய் குவாம் ஈக்வெடார் நாட்டையும் 10 அடி உயர சுனாமி அலைகள் தாக்கக் கூடும் என்று அமெரிக்கா சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. பசிபிக் பெருங்கடலின் கரையோர நாடுகள் பலவற்றிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. (இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4g62665l9do
  21. யாழ். செம்மணி மனித புதைகுழிகளில் மேலும் 7 எலும்புக்கூட்டு தொகுதிகள் கண்டுபிடிப்பு ; இதுவரையில் 111 எலும்பு கூட்டு தொகுதிகள் மீட்பு Published By: VISHNU 29 JUL, 2025 | 09:12 PM யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை புதிதாக 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 03 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி அகழ்வுப்பணிகள் இரண்டாம் கட்டத்தின் 24 ஆவது நாள் யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் மேற்பார்வையில் செவ்வாய்க்கிழமை (29) முன்னெடுக்கப்பட்டது. அகழ்வு பணிக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா இதனை தெரிவித்தார். அதன் போது, 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 03 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 111 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழி பகுதிகளை இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிறிவோல்ட்டு தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் நேரில் பார்வையிட்டதுடன், துறைசார் நிபுணர்களுடன் புதைகுழிகளின் அகழ்வு பணிகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர். அதேவேளை, செம்மணி மனிதப் புதைகுழியில், ஸ்கான் நடவடிக்கைகளை முன்னெடுக்க பாதுகாப்பு அமைச்சின் அனுமதிகள் கிடைக்க தாமதிக்கப்படுவதால், ஶ்ரீஜெயவர்வத்தன புர பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்கானர் கருவியை பெற்று அதனை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஸ்கான் நடவடிக்கை முன்னெடுக்கபடும் - என்றார். https://www.virakesari.lk/article/221315
  22. இனிய பாரதியின் இன்னும் ஒரு சகாவான் சபாபதி மட்டு கிரான் வைத்து சிஜடி யினரால் கைது இதுவரை இனிய பாரதியின் சகாக்கள் 4 பேர் கைது Published By: VISHNU 29 JUL, 2025 | 08:41 PM இனியபாரதியின் இன்னுமொரு சகாவான வெலிகந்தை தீவுச்சேனையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் சபாபதி என்பவரை மட்டக்களப்பு கிரானில் வைத்து செவ்வாய்க்கிழமை (29) மாலை 4.00 மணியளவில் கொழும்பிலிருந்து சென்ற குற்ற விசாரணைப் பிரிவு சிஜடி யினர் கைது செய்துள்ளனர். ரி.எம்.வி.பி கட்சியைச் சேர்ந்த இனியபாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பாளருமான கே. புஷ்பகுமார் மற்றும் அவரது சகாவான சசீந்திரன் தவசீலன் ஆகியோரை 2007-6-28 ம் திகதி திருக்கோவில் பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த 6ம் திகதி திருக்கோவில் மற்றும் மட்டு சந்திவெளி பகுதிகளில் வைத்து சிஜடியினர் கைது செய்தனர். இதில் கைது செய்த இனியபாரதியிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் வெலிகந்தை தீவுச்சேனையை வதைமுகாமில் இருந்து செயற்பட்டுவந்தவரும் ; இனிய பாரதியின் சகாவான அந்த பிரதேசத்தைச் சேர்ந்த பா.சபாபதியை கிரான் வைரவர் கோவில் வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து சம்பவதினமான செவ்வாய்க்கிழமை(29) மாலை 4.00 மணியளவில் சிஜடியினர் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவரை கொழும்புக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை சிஜடி யினர் மேற்கொண்டுவருகின்றனர் இதேவேளை இனியபாரதியை கைது செய்து விசாரணையின் பின்னர் இனிய பாரதியின் முன்னாள் சாரதி செந்தூரன், அவரது சாகாவான சந்திவெளியைச் சேர்ந்த சசீந்திரன் தவசீலன் மற்றும் சகாவான திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த தொப்பி மனாப் என்றழைக்கப்படும் விக்கினேஸ்வரன் மற்றும் தற்போது கைது செய்யப்பட்டவர் உட்பட இனியபாரதியின் சகாக்கள் ஆகிய 4 பேரை சிஜடி யினர் தொடர்ச்சியாக கைது செய்துவருவதையிட்டு இனியபாரதி மற்றும் பிள்ளையானுடன் தொடர்புபட்டவர்கள் பயப் பீதியில் இருந்துவருவது குறிப்பிடதக்கது. https://www.virakesari.lk/article/221313

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.