Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  5304
 • Joined

 • Last visited

 • Days Won

  6

Everything posted by ஏராளன்

 1. காமராஜர் என்ற தமிழ்நாடு கண்டடைந்த கிங் மேக்கரின் கதை எம்.ஏ.பரணிதரன் பிபிசி தமிழ் 9 மார்ச் 2021 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER இன்று காமராஜர் நினைவு நாள். மிக சாதாரண குடும்பத்தில் பிறந்து, மாநிலத்தின் முதல்வராகி, பல அதிகாரப் பதவிகள் தேடி வந்தபோதும், அந்த அரியணைகளை ஏற்காமல் பிறரை அவற்றில் அமர வைக்கும் அதிகாரம் மிக்கவராக அந்த காலத்தில் வலம் வந்தவர் ஒருவர் வாழ்ந்தார் என்றால் அதற்கு முதல் உதாரணமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த காமராஜரை குறிப்பிடலாம். இவரது படிப்பு வெறும் ஆறாம் வகுப்பு மட்டுமே. 16ஆம் வயதில் காங்கிரஸ் கட்சியின் கடைக்கோடி தொண்டனாக அரசியல் பாதையை தேர்வு செய்த காமராஜ், 36 வயதை நிறைவு செய்யும் முன்பே காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவரானவர். ஒன்பது வருட சிறை வாழ்க்கை, ஒன்பது வருட முதல்வர் என மாறுபட்ட அரசியல் அனுபவங்களை வாழ்வில் கண்ட அவர், தனது வாழ்காலத்திலேயே காங்கிரஸ் கட்சியில் காமராஜ் அணி, ராஜாஜி அணி என இரு அணிகள் இயங்கும் அளவுக்கு தனக்கென தீவிர ஆதரவாளர்களைக் கொண்ட தலைவராக விளங்கினார். மெட்ராஸ் மாகாணத்தின் மூன்றாவது முதல்வராக 1954ஆம் ஆண்டு முதல் 1963ஆம் ஆண்டுவரை என ஒன்பது ஆண்டுகளுக்கு பதவி வகித்த காமராஜ் அரசியலில் விட்டுச் சென்ற நினைவலைகள் இன்றைய அரசியல் உலகில் பல தலைவர்களுக்கும் படிப்பினையாக கருதப்படுகிறது. காமராஜ் முதல்வர் பதவியில் இருந்தபோது அவர் நிறைவேற்றிய திட்டங்கள், எளிமையான அவரது வாழ்க்கை பல தளங்களில் பதிவாகியிருக்கின்றன. அவற்றில் அதிகம் காணப்படாத சில அரிய தகவல்களை இந்த கட்டுரையில் வழங்க முற்பட்டிருக்கிறோம். அந்தக்கால மெட்ராஸ் மாகாணத்தின் மதுரைக்கு தெற்கே 48 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள விருதுபட்டியில் 1903ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி, ஒரு நாடார் சமூக குடும்பத்தில் குமாரசுவாமிக்கும் சிவகாமியம்மாளுக்கும் மகனாக பிறந்தார் காமராஜ். அப்போதைய ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது இந்த விருதுப்பட்டி. பிறந்தவுடன் காமாட்சி என்ற பெயருடன் அழைக்கப்பட்ட காமராஜின் பெயர் பின்னர் காமராஜ் என மாற்றப்பட்டது. குமாரசுவாமி, சிவகாமியம்மாள் தம்பதிக்கு காமராஜுக்கு பிறகு பிறந்த பெண் குழந்தையின் பெயர் நாகம்மாள். பிரம்படியால் கல்வியில் குறைந்த ஆர்வம் காமராஜின் பள்ளிப்பருவம் வரவேற்புக்குரியதாக இருக்கவில்லை. தனது ஐந்து வயதில் அவர் படித்த ஆரம்பப்பள்ளி வாத்தியாரிடம் பிரம்படி வாங்கிய அனுபவங்கள் கடுமையானதாக இருந்தது. இதனால், அந்த பள்ளியில் இருந்து முருகய்யா என்பவர் நடத்தி வந்த இடைநிலைப்பள்ளியில் காமராஜை அவரது பெற்றோர் சேர்த்தனர். அங்குதான் தமிழ் மொழியில் எழுதவும் தெளிவாக பேசவும் காமராஜுக்கு வாய்ப்பு அமைந்தது. அந்த காலத்தில் விருதுப்பட்டியில் இருந்த ஒரே உயர் பள்ளி க்ஷத்ரிய வித்யாலயா. நாடார் சமூகத்துக்கு பிள்ளைகளுக்கு இலவச கல்வி, பிடி அரசி வழங்கும் வழக்கத்தை அந்த பள்ளி நிர்வாகம் கொண்டிருந்தது. அந்த பள்ளியில் 1910-11 கல்வியாண்டில் சேர்ந்தார் காமராஜ். வ.உ. சிதம்பரனார், சுப்ரமணிய சிவா, சுப்ரமணிய பாரதி போன்ற சுதந்திர போராட்ட வீரர்களின் வந்தே மாதரம் முழக்கத்தால் கவரப்பட்ட காமராஜ், 1915ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி, தென்னாப்பிரிக்காவில் இருந்து காந்தி இந்தியாவுக்கு திரும்பியபோது காமராஜின் சுதந்திரப்பற்றும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான போராட்ட உணர்வும் தீவிரமாகியது. அரசியல் பிரவேசத்தை தூண்டிய சம்பவம் பட மூலாதாரம்,BERNARD GAGNON 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸில் ரெளலட் சட்டத்துக்கு எதிராக திரண்ட மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தேசம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. அந்த சம்பவம், தனது தீவிர அரசியல் பிரவேசம் குறித்து காமராஜை சிந்திக்கத் தூண்டியது. அந்த சம்பவம், தேசத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்களை தீவிரமாக்க, காந்தி வகுத்த அகிம்சை போராட்ட உத்தியால் இந்திய இளைஞர்கள் ஈர்க்கப்பட்டார்கள். அதில் ஒருவராக இருந்த காமராஜ், 1919ஆம் ஆண்டு காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். காந்தியின் ஒத்துழமையாமை இயக்கத்தில் பங்கெடுத்தபோது, காமராஜுக்கு வயது, வெறும் 18 மட்டுமே. இந்த காலகட்டத்தில்தான் காமராஜின் தீவிர அரசியல் கவனத்தை திசை திருப்ப அவரை தனது மகள் வழி மூத்த பேத்தி மங்கலத்துக்கு திருமணம் செய்து வைக்க சிவகாமியம்மாள் முடிவெடுத்தார். ஆனால், வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளாதவராகவே தனது ஆயுளை நிறைவு செய்தார் காமராஜ். காந்தியுடன் முதல் சந்திப்பு பட மூலாதாரம்,TWITTER காங்கிரஸ் கட்சியில் காமராஜ் சேர்ந்த இரண்டு ஆண்டுகளில் சுதந்திர இந்தியா இயக்கத்தை முன்னெடுக்கும் நோக்குடன் மதுரை வந்த காந்தியை அவர் சந்தித்தார். காங்கிரஸ் கட்சியில் ஆரம்பப்பொறுப்பு அது 1922ஆம் ஆண்டு. சாத்தூர் தாலுகாவில் ஈ.வெ.ராமசாமி தலைமையில் நடந்த கட்சிக்கூட்டத்தில் மெட்ராஸ் பிரசிடென்ஸி காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக காமராஜ் தேர்வானார். அந்த மாநாட்டின் துவக்க விழா செயலாளராகவும் காமராஜ் இருந்தார். அடுத்த ஆண்டு கள்ளுக்கடை முற்றுகை போராட்டத்தில் காமராஜ் கலந்து கொண்டார். 1927ஆம் ஆண்டு சென்னை எழும்பூரில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 43ஆவது வருடாந்திர மாநாடு நடந்தது. அங்குதான் முதல் முறையாக ஜவாஹர்லால் நேரு, சத்தியமூர்த்தி ஆகியோரை சந்தித்தார் காமராஜ். முதல் சந்திப்பிலேயே நேருவை தனது சொந்த ஊரான விருதுநகரில் ஒரு கட்சி மாநாட்டில் பங்கேற்க சம்மதிக்க வைத்தார் காமராஜ். 1929ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் சைமன் ஆணையத்துக்கு எதிராக ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களை திரட்டிப் போராடியது, காமராஜின் ஆளுமை திறனை நேரு அங்கீகரிக்க காரணமாக இருந்தது. உப்பு சத்தியாகிரகமும் முதல் சிறைவாசமும் பட மூலாதாரம்,TWITTER 1930ஆம் ஆண்டில் காந்தி, பிரிட்டிஷ் அரசு நிர்வாகம் கொண்டு வந்த உப்பு சட்டத்தை எதிர்த்து உப்புச்சத்தியாகிரகத்தை தொடங்கினார். தமிழ்நாட்டில் அந்த போராட்டத்தை வழிநடத்திய ராஜாஜியுடன், திருச்சி முதல் வேதாரண்யம் வரை தொண்டர்கள் சென்றனர். அந்த போராட்டத்தில் தமது ஆதரவாளர்களுடன் பங்கெடுத்த காமராஜ் கைதானார். 1930ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி கைதான காமராஜுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் அலிபுரம் சிறையில் அடைக்கப்பட்டார். எனினும், 1931ஆம் ஆண்டில் நடந்த காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின்படி அவர் 1931ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். இதுவே, காமராஜ் தனது அரசியல் பொதுவாழ்வில் எதிர்கொண்ட முதலாவது சிறைவாசம். கட்சியில் தொடங்கிய செல்வாக்கு அது 1931ஆம் ஆண்டு. சத்தியமூர்த்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் மாகாண கூட்டம் நடந்தபோது, ராமநாதபுரத்தின் சார்பில் கட்சியின் காரிய கமிட்டி உறுப்பினராக காமராஜ் தேர்வானார். இதுவே காங்கிரஸ் கட்சியில் காமராஜுக்கு கிடைக்க முக்கியமான முதலாவது அரசியல் பதவியானது. இந்த காலகட்டத்தில் காந்தி-இர்வின் ஒப்பந்தம் வெற்றிகரமாக அமையாததால் லண்டனில் நடந்த இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டில் அதிருப்தியுடன் காந்தி வெளியேறினார். அப்போது தடை உத்தரவுக்கு எதிராக காமராஜ் செயல்படாதபோதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை பிரிட்டிஷ் அரசு கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தது. பிறகு அவர் 1933ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி விடுதலையானார். இது காமராஜின் இரண்டாவது சிறைவாசமானது. 1933ஆம் ஆண்டில் கவர்னர் சர் ஜான் ஆண்டர்சனை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகவும் அவரை கொல்ல துப்பாக்கிக்கு ஏற்பாடு செய்ததாகவும் காமராஜ் மீது குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், அந்த சம்பவத்தில் அப்ரூவர் ஆனவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த நேரத்தில் காமராஜ் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் இருந்தார் என்பதை நிரூபிக்க ஆதாரமில்லாததால் அந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இதேபோல, விருதுநகர் காவல் நிலையத்தை வெடிவைத்து தகர்க்க தனது நண்பர்கள் முத்துசாமி, மாரியப்பாவுடன் சேர்ந்து முயன்றதாக காமராஜ் மீது மற்றொரு வழக்கை காவல்துறையினர் தொடர்ந்தனர். அந்த வழக்கும் அடிப்படையற்றது என காமராஜின் வழக்கறிஞர் ஜார்ஜ் ஜோசஃப் நிரூபித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் பொதுச்செயலாளர் பட மூலாதாரம்,TWITTER 1936ஆம் ஆண்டில் சத்யமூர்த்திக்கும் சி.என். முத்துரங்க முதலியாருக்கும் இடையே கட்சித் தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவிய வேளையில், ராஜாஜி ஆதரவு பெற்ற சத்தியமூர்த்திக்கு வெற்றி கிட்டியது. அப்போது கட்சியின் பொதுச்செயலாளராக காமராஜை நியமித்தார் சத்தியமூர்த்தி. அந்த பதவியைத் தொடர்ந்து 1936இல் மாநிலத்தில் நேரு சுற்றுப்பயணம் செய்தபோது அவருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பு காமராஜுக்கு கிடைத்தது. காமராஜின் களப்பணியை நேரடியாகவே நேரு அப்போது அறிந்தார். 1937ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் தொகுதியில் இருந்து சட்டமன்றத்துக்கு காமராஜ் தேர்வானார். 14 ஆண்டுகளாக தொடர் கட்சித் தலைவர் 1940இல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தபோது, பிராமணர் அல்லாத ஒருவர் கட்சிக்கு தலைவராக வேண்டும் என்பதில் ராஜாஜி மற்றும் சத்யமூர்த்தி அணியினர் உறுதியாக இருந்தனர். இதனால் ராஜாஜி பரிந்துரைப்படி சுப்பையாவை தலைவர் பதவிக்கு முன்னிறுத்த சத்தியமூர்த்தியை இணங்க வைக்க ராஜாஜி முற்பட்டார். ஆனால், முனிசாமி பிள்ளை, ருக்மணி லக்ஷ்மிபதி குமாரசாமி ராஜா போன்றோர் தலைவராக வேண்டும் என காமராஜ் விரும்பினார். கடைசியில் ராஜாஜியும் முத்துரங்கா முதலியாரும் சுப்பையாவை பரிந்துரைக்க, சத்யமூர்த்தி காமராஜை தலைவர் பதவிக்கு முன்னிறுத்தினார். அப்போது முதல் 1954ஆம் ஆண்டுவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக காமராஜ் 14 ஆண்டுகளுக்கு நீடித்தார். வழிகாட்டியை இழந்த காமராஜ் பட மூலாதாரம்,TWITTER காமராஜ் சிறையில் இருந்த காலத்தில் அவரது அரசியல் குருநாதரும் வழிகாட்டியுமான சத்தியமூர்த்தி 1943ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி காலமானார். 1942ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி பாகிஸ்தான் பிரிவினை தேசத்தை உருவாக்க பிரிட்டிஷ் நிர்வாகத்திடம் ஜின்னா கேட்டுக் கொண்டார். அந்த திட்டத்தை எதிர்த்த ராஜாஜி, 1944ஆம் ஆண்டு தனது திட்டத்தை முன்வைத்தார். அது காங்கிரஸ், முஸ்லிம் லீக் இடையிலான உடன்பாடு தொடர்பானது. போருக்குப் பிறகு எங்கெல்லாம் முஸ்லிம் மக்கள் அதிகமாக உள்ளனரோ, அவர்களின் சம்மதப்படி தேசப்பிரிவினைக் கோரிக்கை முடிவு செய்யப்படும். இதுபோன்ற அம்சங்கள் நிறைந்த திட்டம் "ராஜாஜி ஃபார்முலா" என அழைக்கப்பட்டது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை: முக்கிய துளிகள் ஆனால், காமராஜ் உள்பட காங்கிரஸ் கட்சியில் பெரும்பாலான தலைவர்கள் ராஜாஜி திட்டத்தை ஏற்கவில்லை. இதனால், 1943ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி ராஜாஜி, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விலகினார். 1945இல் காமராஜ் சிறையில் இருந்து வெளி வரவும், காங்கிரஸ் கட்சிக்குள் ராஜாஜி மீண்டும் இணைய விருப்பம் தெரிவித்த நிகழ்வும் ஒரு சேர நடந்தது. ஆனால், ராஜாஜியின் உறுப்பினர் சேர்ப்பு நிகழ்வை காமராஜ் தள்ளி வைத்துக் கொண்டே வந்தார். இதனால் இரு தலைவர்களுக்கும் இடையிலான பனிப்போர் அதிகமாகியது. கடைசியில் அப்போதைய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மவுலானா ஆசாத், அருணா ஆசிஃப் அலி, சர்தார் படேல் ஆகியோர் காமராஜிடமும் ராஜாஜியுடனும் சமாதனம் பேச தொடர்பு கொண்டனர். இதையடுத்தே இரு தரப்பும் சமரசமாகினர். கிங் மேக்கர் ஆன வரலாறு அது 1946ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல். சாத்தூர் தொகுதியில் 30,998 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற காமராஜ், தமிழ்நாடு முதல்வராக யாரை தேர்வு செய்யலாம் என காந்தியுடன் ஆலோசனை நடத்தினார். தொடக்கத்தில் ராஜாஜி அல்லது பட்டாபி சீதாராமையாவின் பெயரை நினைவில் வைத்திருந்த காந்தி, டி. பிரகாசத்தின் முன்மொழிவை விரும்பவில்லை. விரிவான விவாதத்துக்குப் பிறகு பட்டாபி சீதாரமையாவை ஆதரிக்க ஒப்புக் கொண்ட காமராஜ், ராஜாஜியும் அவரை ஆதரிக்க கேட்டுக் கொள்ளுமாறு காந்தியிடம் வற்புறுத்தினார். ஆனால், டி. பிரகாசம், முதல்வர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்ததால் அவரே மெட்ராஸ் மாகாண முதல்வராக 1946ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி ஆனார். இருப்பினும் ஓராண்டுக்கு உள்ளாகவே நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் பிரகாசம் தோல்வி அடைந்தார். அதைத்தொடர்ந்து காமராஜ் ஆதரவுடன் ஓ.பி. ராமசாமி ரெட்டியார் 1947ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி மாகாண முதல்வரானார். காந்தியின் படுகொலையும் இந்திய சுதந்திரமும் பட மூலாதாரம்,TWITTER இந்த காலகட்டத்தில் இந்தியாவின் விடுதலைக்குப் பிந்தைய அதிகார மாற்றலை மேற்கொள்ளும் அதிகாரியாக மவுன்ட் பேட்டனை பிரிட்டன் பிரதமர் அட்லீ நியமித்தார். அதன்படியே 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய விடுதலை அறிவிக்கப்பட்டு அதிகார மாற்றல் நடவடிக்கையை மவுன்ட் பேட்டன் நடைமுறைப்படுத்தினார். ஒரு புறம் இந்திய சுதந்திரம், மறுபுறம் பாகிஸ்தான் பிரிவினை மற்றும் அதையொட்டி நடந்த வன்முறை, வகுப்புவாத கலவரங்களை தடுக்கும் முயற்சியில் காந்தி ஈடுபட்டிருந்தார். ஆனால், 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி காமராஜுக்கு பேரிடியாக இருந்தது. 1949ஆம் ஆண்டு ஓ.பி. ராமசாமி ரெட்டியாருக்கு அடுத்தபடியாக குமாரசாமி ராஜா, மெட்ராஸ் பிரசிடென்சி முதல்வரானார். அதில் காமராஜின் பங்கு மிகப்பெரியதாக இருந்தது. அவரது பதவிக்காலத்தில்தான் இந்தியாவுக்கு 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி குடியரசு ஆனது. இதன் பிறகு 1950ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவராக நான்காவது முறையாக காமராஜ் பதவியேற்றார். இந்திய அரசியலமைப்பின்படி, சுதந்திர இந்தியாவின் முதலாவது தேர்தல் 1952ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் இருந்தபோதும், தேர்தலில் அதனால் பெரும்பான்மை பலத்தைப் பெற முடியவில்லை. மொத்தம் உள்ள 375 இடங்களில் 152இல் மட்டுமே காங்கிரஸ் கட்சி வென்றது. காமராஜின் கருத்துகளை ஏற்காமல் கம்யூனிஸ்ட் கட்சிகளின் முயற்சியால் உருவான ஆறுக்கும் மேற்பட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஐக்கிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டது. அதில் இருந்த டி.டி. கிருஷ்ணமாச்சாரி, அரசின் தலைமை பதவியை ராஜாஜி வகிக்க வேண்டும் என குரல் கொடுத்தார். இதனால் காமராஜ், 1952ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து விலகினார். பிறகு பி. சுப்பராயன் மாநில தலைவரானபோதும் எட்டு மாதங்கள் மட்டுமே அவரால் அப்பதவியில் நீடிக்க முடிந்தது. அதன் பிறகு மீண்டும் காங்கிரஸ் கட்சி மாநில தலைவராக காமராஜும், இந்திய காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவராக ராஜாஜியும் நியமிக்கப்பட்டனர். 1954ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்வரை அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றினர். ராஜாஜியின் வீழ்ச்சி சிறந்த உணவு திட்டமிடல் நிர்வாகியாகவும் கம்யூனிஸ்டுகளை சமாளிக்கக் கூடியவராகவும் ராஜாஜி அறியப்பட்டபோதும், அவரது சில முடிவுகள் சொந்த கட்சி உறுப்பினர்களாலேயே எதிர்க்கப்பட்டது. இந்திய விடுதலைதான் காங்கிரஸின் நோக்கம். அது நிறைவேறி விட்டதால், காங்கிரஸ் கட்சியை கலைக்க வேண்டும் என ராஜாஜி முழக்கமிட்டார். பிறகு சிக்கன நடவடிக்கையாக சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் நிலம் ஒதுக்கீடு, காந்தியின் கொள்கைக்கு எதிரானது என்பதால், அதை வழங்கக்கூடாது என்று அவர் உத்தரவிட்டார். எல்லாவற்றுக்கும் உச்சமாக, கல்வித்துறை அமைச்சருடன் கலந்தாலோசிக்காமலேயே புதிய குலக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார் ராஜாஜி. அப்போது அவருக்கு எதிராக கிளம்பிய எதிர்ப்பு, ஒன்று குலக்கல்வி திட்டத்தை ராஜாஜி கைவிட வேண்டும் அல்லது முதல்வர் பதவியை துறக்க வேண்டும் என்ற இரு வாய்ப்புகளை அவருக்குத் தந்தது. கடைசியில், தனது திட்டத்தை எதிர்ப்பது, தன்னையே எதிர்ப்பது போல எனக்கூறி தனது பதவியை 1954ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி ராஜிநாமா செய்தார் ராஜாஜி. சென்னையை தக்க வைத்த காமராஜ், ராஜாஜி முன்னதாக, ராஜாஜி ராஜிநாமா செய்த காலத்தில், மெட்ராஸ் மாகாணம், மொழி அடிப்படையில் பிரிக்கப்படவில்லை. இதனால், மெட்ராஸ் நகரை ஆந்திர பிரதேசத்துடன் இணைக்கும் தனி திட்டத்துக்கு எதிராக நேருவின் ஆதரவை காமராஜும் ராஜாஜியும் பெற்றனர். இதன் பிறகு 1952ஆம் ஆண்டில் ராஜாஜி தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த பிறகு, ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த முதல் மக்களவை பொதுத்தேர்தலில் காமராஜுக்கு 46.77 வாக்குகளும் ஜி.டி. நாயுடுவுக்கு 34.73 சதவீதமும் வாக்குகள் கிடைத்தன. அப்போது ராஜாஜி ஏற்படுத்திய வெற்றிடத்தை உணர்ந்த காங்கிரஸ் மேலிடம், மாநிலத்தின் முதல்வராக காமராஜ் இருந்தால் அது கட்சியின் வளர்ச்சிக்கு உதவும் என நம்பியது. இதைத்தொடர்ந்து நடந்த வாக்கெடுப்பில் சி. சுப்பிரமணியத்துக்கு ஆதரவாக 41 வாக்குகளும் காமராஜுக்கு ஆதரவாக 93 வாக்குகளும் கிடைத்தன. "1980" தமிழக சட்டமன்ற தேர்தலில் எம்.ஜி.ஆர் மீண்டும் வென்றது எப்படி? 1984இல் 3வது முறையாக 'வெற்றித் திருமகன்' ஆன எம்.ஜி.ஆர்: அனுதாப அலை காரணமா? தமிழ்நாட்டில் ஏன் தேசிய கட்சிகள் மாநில கட்சிகளை நம்பியே இருக்கின்றன? 1954 - முதல் அமைச்சரவை மாநில முதல்வராக பதவி ஏற்கும் முன்பு ஒரு உறுதிமொழியை கட்சித் தொண்டர்களிடம் இருந்தும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் இருந்தும் பெற்றுக் கொண்டார் காமராஜ். 1957ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதிவரை அவரது அமைச்சரவை இருந்தது. உள்கட்சி அளவில் நடந்த முதல்வருக்கான தேர்வில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி. சுப்பிரமணியம் ராஜாஜியின் ஆதரவாளர் என்றபோதும், அவரை அழைத்து அவருக்கு நிதியமைச்சர் பதவியைக் கொடுத்தார் காமராஜ். காமராஜ் முதல்வராக இருந்தபோது அவர் எம்எல்ஏ ஆக பதவி வகிக்கவில்லை. அவர் எம்எல்சி ஆக இருந்தார். இதனால் பின்வாசல் வழியாக முதல்வர் பதவிக்கு வந்தவர் காமராஜ் என்ற விமர்சனம் வலுத்தது. அப்போது காலியாக இருந்த வட ஆற்காட்டில் உள்ள குடியாத்தம் தொகுதியில் போட்டியிட விரும்பினார் காமராஜ். இடதுசாரி கட்சிகளைத் தவிர வேறு யாரும் காமராஜை எதிர்க்கவில்லை. திராவிடர் கழகம், திமுக ஆகியவை காமராஜை ஆதரித்தன. அவருக்கு ஆதரவாக அந்த கட்சிகளின் நாளேடுகளில் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. 1957இல் மெட்ராஸ் மாகாணத்துக்கு நடந்த பொதுத்தேர்தலில் சாத்தூர் தொகுதியில் இருந்து தேர்வான காமராஜுக்கு 36,400 வாக்குகள் கிடைத்தன. அப்போது 205 சட்டமன்ற தொகுதிகளில் 151 இடங்களில் காங்கிரஸ் வென்றது. 1957ஆம் ஆண்டு, ஏப்ரல் 13ஆம் தேதி இரண்டாவது முறையாக தொடர்ந்து முதல்வரானார் காமராஜ். இரண்டாவது அமைச்சரவையிலும் காமராஜ் நீங்கலாக ஏழு பேர் இடம்பிடித்தனர். 1962ஆம் ஆண்டு பொதுத்தேர்தலிலும் சாத்தூர் தொகுதியிலேயே போட்டியிட்ட காமராஜுக்கு, மொத்தம் பதிவான 1,01,991 வாக்குகளில் 49,950 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஸ்வதந்திரா கட்சி வேட்பாளர் பி. ராமமூர்த்திக்கு 33,506 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளர் ராமசாமி ரெட்டியாருக்கு 2,811 வாக்குகளும் செல்லாத வாக்குகள் 3,044 என்றும் பதிவானது. அந்த தேர்தலில் மொத்தம் இருந்த 206 தொகுதிகளில் 136 இடங்களில் காங்கிரஸ் பெற்றது. அதுவரை ஏழு பேரை மட்டுமே தனது அமைச்சரவையில் சேர்த்து வந்த காமராஜ், மூன்றாவது அமைச்சரவையில் எட்டு பேரை தனது அமைச்சரவையில் கொண்டிருந்தார்.அந்த அமைச்சரவையில் கே. காமராஜ் நீங்கலாக, ஆர். வெங்கட்ராமன், எம். பக்தவத்சலம், ஜி. பூவராகவன், என். நல்லசேனாபதி சர்க்கரை மன்றடியார், பி. கக்கன், வி. ராமையா, ஜோதி வெங்கடாச்சலம், எஸ்.எம். அப்துல் மஜித் ஆகியோர் இருந்தனர். தோல்வி முகத்தில் காங்கிரஸ் பட மூலாதாரம்,TWITTER தமிழ்நாட்டில் 1957ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடும்போது இரண்டு சதவீத வாக்குகளை காங்கிரஸ் கட்சி கூடுதலாகப் பெற்றபோதும், அதில் அக்கட்சி 13 இடங்களை பறிகொடுத்திருந்தது. சி.என். அண்ணாதுரை தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம், முந்தைய தேர்தலில் பெற்ற 15 இடங்கள் என்ற நிலையைக் கடந்து இம்முறை 50 எம்எல்ஏக்களுடன் சட்டமன்றத்துக்குள் நுழைந்தது. முந்தைய தேர்தலில் எங்கெல்லாம் காங்கிரஸ் தோற்றதோ அங்கெல்லாம் 1962ஆம் ஆண்டு தேர்தலில் தீவிரமாக பிரசாரம் செய்தார் காமராஜ். அதில் திமுக வென்ற 15 தொகுதிகளில் 14 இடங்களை மீட்டது காங்கிரஸ். ஒரு இடத்தில் மட்டும் திமுக பொருளாளர் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருந்தார். இருந்தபோதும், அந்த தேர்தலில்தான் 50 இடங்களில் திமுக வென்று தனது வாக்கு சதவீதத்தை பெருக்கிக் கொண்டது. என்னதான் தமது அரசு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தினாலும், பெருவாரியான மக்களின் கவனம் திமுகவை நோக்கி திரும்புவதை கவனித்தார் காமராஜ். ஆட்சி, அதிகாரத்தில் தங்களின் கவனத்தை காங்கிரஸார் செலுத்துவதாகக் கூறிய அவர், அதே ஈடுபாட்டை மக்கள் சேவை மற்றும் வீழ்ச்சியை சந்திக்கும் கட்சியை மீட்பதிலும் கொண்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் காமராஜ். அந்த முடிவுக்கு அச்சாரமாக தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்து விட்டு, கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் நேரடியாகவே களமிறங்கினார் காமராஜ். அவரது இந்த திடீர் நடவடிக்கை, காங்கிரஸ் கட்சியில் ஆட்சியிலும் பதவியிலும் உள்ள தலைவர்களும் அரசுப் பொறுப்பை உதறி விட்டு கட்சியை வலுப்படுத்தும் முயற்சிக்கு வித்திட்டது. இதுவே, பிரபலமாக காமராஜ் திட்டம் அல்லது கே திட்டம் என்று அழைக்கப்பட்டது. யார் இந்த சசிகலா? - ஜெயலலிதா உடனான நட்பு முதல் அரசியலை விட்டு விலகியது வரை 1977 சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர். வென்றது எப்படி? எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கை: தொடர் தோல்விகள் முதல் திடீர் திருப்பங்கள் வரை கே-திட்டமும் காமராஜின் விளக்கமும் 1963ஆம் ஆண்டில் ஹைதராபாதில் நடந்த கட்சி மாநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய காமராஜ், கே-திட்டத்துக்கு நேருவின் ஒப்புதலை பெற்றதாக தெரிவித்தார். அப்போது அவர், ஆட்சியும் அதிகாரமும் கட்சியில் உள்ள எந்தவொரு தனி நபரின் சொத்தாக இருக்கக் கூடாது. அந்த வகையில், எந்தவொரு தனி நபரும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு பதவியிலும் தொடருவது கட்சிக்கு எந்த பயனையும் தரப்போவதில்லை என்று கூறினார். தனது ராஜிநாமா முடிவைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் கிராமம், கிராமமாக சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுடன் முழு நேரத்தை செலவிட்டு கட்சியை ஆணி வேர் அளவில் வலுப்படுத்தப்போவதாக காமராஜ் தெரிவித்தார். 1962ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி, டெல்லி சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் பேசிய நேரு, காமராஜ் வகுத்த திட்டம் இதுவரை எந்தவொரு கட்சியும் சிந்திக்காத, ஈடு இணையற்ற திட்டம் என்று புகழாரம் சூட்டினார். கே-திட்டம், தமிழ்நாடுக்கு மட்டுமின்றி இந்தியா முழுவதும் விரிவடைய வேண்டும் என்று அவர் விரும்பினார். அடுத்த இரு வாரங்களில் காங்கிரஸ் ஆளும் மத்திய, மாநில அரசுகளில் யாரெல்லாம் பதவி விலகுவார்கள், கட்சியை வலுப்படுத்துவார்கள் என்ற பட்டியலை வெளியிட்டார் நேரு. அதன் விளைவாக, அப்போது மத்தியில் அமைச்சர்களாக இருந்த லால் பகதூர் சாஸ்திரி (உள்துறை), மொரார்ஜி தேசாய் (நிதித்துறை), ஜெகஜீவன் ராம் (அஞ்சல் துறை), எஸ்.கே. பாட்டீல் (உணவுத்துறை), கோபால் ரெட்டி (வானொலி ஒலிபரப்பு), ஸ்ரீ மாலி (கல்வி) மற்றும் மாநிலத்தில் முதல்வர்களாக இருந்த காமராஜ் (தமிழ்நாடு), பட்நாயக் (ஒரிசா), சி.பி. குப்தா (உத்தர பிரதேசம்), பினோதானந்த்ஜா (பிஹார்), மந்த்லாய் (மத்திய பிரதேசம்) ஆகியோர் பதவியை ராஜிநாமா செய்து விட்டு முழு நேர கட்சிப்பணிக்கு திரும்பினார்கள். தற்கொலைக்கு சமம்: பெரியார் விமர்சனம் பட மூலாதாரம்,TWITTER 1963ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி காமராஜ் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தபோது, அவருக்கு திராவிடர் கழக தலைவர் ஈ.வெ. ராமசாமி ஒரு தந்தி அனுப்பினார். அதில், காமராஜின் முடிவு அவருக்கு மட்டுமின்றி தமிழக மக்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு ஒப்பானது என்று ஈ.வெ.ரா குறிப்பிட்டார். காமராஜின் ராஜிநாமாவுக்குப் பிறகு தமிழக முதல்வராக பக்தவத்சலம் பதவியேற்றார். அவரது அமைச்சரவை 1963ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி பதவியேற்றது. காமராஜின் அதிரடி அறிவிப்பாலும் செயல்பாடுகளாலும் நெகிழ்ச்சி அடைந்த நேரு, அவர்தான் அகில் இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக வேண்டும் என்று விரும்பினார். ஆனால், தொடக்கத்தில் அதை ஏற்க மறுத்த காமராஜ், நேருவின் மூன்று மாத அழுத்தத்துக்குப் பிறகு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக 1964ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி பதவியேற்றார். அதே மாதம் 5ஆம் தேதி ஒரிசாவில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் திடீரென நேரு உடல் நலம் குன்றிப்போனார். உடல்நிலை மோசமடைந்து வந்த நிலையில், அதே ஆண்டு மே மாதம் 27ஆம் தேதி நேரு காலமானார். நேரு காலமானதையடுத்து அவர் வகித்து வந்த இந்திய பிரதமர் பதவிக்கு மூத்த அமைச்சரவை உறுப்பினரான குல்ஸாரிலால் நந்தாவை தற்காலிக பிரதமராக அப்போதைய குடியரசு தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன் நியமித்தார். ஆனால், லால் பகதூர் சாஸ்திரியை அப்பதவிக்கு நியமிக்கும் எண்ணத்தில் கட்சித் தலைவரான காமராஜ் இருந்தார். ஆனால், அப்போது மொரார்ஜி தேசாய்க்கும் பிரதமராகும் எண்ணம் இருந்தது. இந்த விவகாரத்தில் கருத்தொற்றுமை அடிப்படையில் பிரதமர் பதவிக்கு தகுதியானவரை தேர்வு செய்யும் அதிகாரத்தை காமராஜுக்கு காங்கிரஸ் காரிய கமிட்டி வழங்கியது. இதையடுத்து மொரார்ஜி தேசாயிடம் பேசி, லால் பகதூர் சாஸ்திரியை பிரதமராக்க ஆதரவு தருமாறு காமராஜ் கேட்டார். ஆனால், தனக்கு அதில் விருப்பம் இல்லாதபோதும் கட்சியின் ஒழுங்குக்கு கட்டுப்பட்டு அந்த முடிவை ஆதரித்தார் மொரார்ஜி. இந்த காலகட்டத்தில் 1965ஆம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. இதைத்தொடர்ந்து பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியுடன் காமராஜ் போர் முனைக்குச் சென்று களத்தில் உள்ள வீரர்களுக்கு உற்சாகமூட்டினர். அந்த போர் தாஷ்கென்ட் உடன்பாட்டில் இந்திய பிரதமரும் பாகிஸ்தான் பிரதமரும் கையெழுத்திட்டதன் மூலம் முடிவுக்கு வந்தது. காமராஜரின் தேர்தல் தோல்விக்கும் இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கும் என்ன தொடர்பு? காமராஜர் இந்திரா காந்தியை பிரதமாராக்க உதவியது எப்படி? அந்த ஒப்பந்தம் கையெழுத்தான சில மாதங்களிலேயே நெஞ்சு வலி காரணமாக லால் பகதூர் சாஸ்திரி காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து பிரதமர் பதவிக்கு தகுதி வாய்ந்தவர்களாக மொரார்ஜி தேசாய், நந்தா, சவான், ஜெகஜீவன் ராம், எஸ்.கே. பாட்டீல் ஆகியோர் தங்களைத் தாங்களே நியமிக்கும் நம்பிக்கையில் உறுதியாக இருந்தனர். இதில் மொரார்ஜி, ஜெகஜீவன் ராம், எஸ்.கே. பாட்டீல் ஆகியோர் காமராஜின் கே-திட்டத்தின்கீழ் தங்களுடைய அமைச்சரவை பதவியை துறந்தவர்கள். ஆனால், காமராஜின் எண்ணம் வேறு விதமாக இருந்தது. அவர் தனது மனதில் அடுத்த பிரதமராக நேருவின் மகளான இந்திரா காந்தியை தேர்வு செய்யலாம் என முன்மொழிந்தார். காமராஜின் முடிவைத் தொடர்ந்து, மொரார்ஜி நீங்கலாக மற்றவர்கள் தங்களுடைய நிலையில் இருந்து பின்வாங்கினர். இதையடுத்து கட்சிக்குள்ளாக மொரார்ஜிக்கும் இந்திரா காந்திக்கும் இடையே நிலவிய போட்டியில், இந்திரா காந்திக்கு ஆதரவாக 355 வாக்குகளும், மொரார்ஜிக்கு ஆதரவாக 169 வாக்குகளும் கிடைத்தன. அந்த வகையில், நேருவுக்குப் பிறகு இந்தியாவின் இரண்டு பிரதமர்களை தேர்வு செய்யக்கூடிய நிலையில், முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருந்தவராக காமராஜ் இந்திய அரசியல் உலகில் அறியப்பட்டார். காமராஜின் முதல் தேர்தல் தோல்வி 1967ஆம் ஆண்டு மீண்டும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார் காமராஜ். விருதுநகர் தொகுதியில் அந்த ஆண்டு நடந்த வாக்குப்பதிவில் மொத்தம் 82,606 வாக்குகள் பதிவாகின. அதில் காங்கிரஸ் வேட்பாளர் காமராஜுக்கு 32,136 வாக்குகள் கிடைத்தன. ஆனால், அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் பி. சீனிவாசனுக்கு 33,506 வாக்குகள் கிடைத்தன. அந்த காலகட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக காமராஜ் இருந்தார். ஒரு கட்சிக்கூட்டத்தில் பேசிய இந்திரா காந்தி, பொதுத்தேர்தலில் தோல்வியுற்ற ஒருவர், கட்சி தேர்தல்களில் போட்டியிடும் தார்மிக உரிமைகளையும் இழக்கிறார். காரணம், அவர் ஏற்கெனவே மக்களின் மதிப்பையும் நம்பிக்கையையும் இழந்தவராகி விடுகிறார் என்றார். இந்திரா காந்தியின் இந்த விமர்சனம் தன்னை மனதில் வைத்தே இருப்பதாக உணர்ந்த காரமாஜ், 1967ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை வழங்கினார். அதன் பிறகு ஓராண்டு கழித்து 1969இல் நடந்த மக்களவை தேர்தலில் நாகர்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் காமராஜ் வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் மொத்தம் 5,05,976 வாக்குகள் பதிவாகின. இதில் காமராஜ் பெற்ற வாக்குகள் 2,49,437. அதே ஆண்டு காமராஜின் தாயார் காலமானார். மக்களவை உறுப்பினரான காமராஜை மத்திய அமைச்சராக்க இந்திரா காந்தி விரும்பியபோதும், அதை ஏற்க மறுத்த அவர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக நிஜலிங்கப்பா பதவியேற்க ஆதரவாக இருந்தார். மேலும், இந்திரா காந்தியின் பல முடிவுகளுக்கு எதிரான நிலையை காமராஜ் கொண்டிருந்தார். 1969ஆம் ஆண்டில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூடி இந்திரா காந்தியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் பதவிக்கும் ஒருவரை நியமிக்க காரிய கமிட்டி கேட்டுக் கொண்டது. ஆனால், இந்த நடவடிக்கைக்கு எதிர்வினையாற்றிய இந்திரா காந்தி, கட்சியின் தலைவராக தானே இருப்பதாகவும் நிஜலிங்கப்பாவை நீக்குவதாகவும் அறிவித்தார். இதனால், ஆரம்பகால காங்கிரஸ் ஸ்தாபன காங்கிரஸ் என்ற பெயரில் காமராஜ் தலைமையிலும் இந்திரா காந்தி தலைமையிலான கட்சி காங்கிரஸ் ஆர் என்ற பெயரிலும் இயங்கின. இரு தரப்பும் ஒருவரையொருவர் பரஸ்பரம் பதவி நீக்கம் செய்து கொண்டன. 1969ஆம் ஆண்டில் உச்சத்துக்கு சென்ற இந்த மோதல் அந்த ஆண்டு டிசம்பர் வரை நீடித்தது. கடைசியில் 705 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் கமிட்டியில் 446 பேர் இந்திரா காந்தி பக்கம் சேர்ந்தனர். இதையடுத்து அவரது தலைமையிலான காங்கிரஸ் ஆர் என்ற அணியை இந்திய தேசிய காங்கிரஸ் என்று இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இதைத்தொடர்ந்து காமராஜ், தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் 1971ஆம் ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலில் மீண்டும் நாகர்கோவிலில் போட்டியிட்ட காமராஜ், 2,15,324 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் எம்.சி. பாலன் 1,14,771 வாக்குகள் பெற்றார். காமராஜ் உயிரிழக்கும் வரை இந்த தொகுதியின் எம்.பி ஆக அவர் இருந்தார். இந்திராவின் அவசரநிலை ஏற்படுத்திய தாக்கம் பட மூலாதாரம்,TWITTER 1975ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி, ரே பரேலி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட இந்திரா காந்தி, அரசு இயந்திரங்களை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தியதாக தீர்ப்பளித்தது. இதையடுத்து இந்திரா காந்தி பதவி விலக வேண்டும் என மொரார்ஜி தேசாய், ஜெய பிரகாஷ் நாராயண் குரல் கொடுத்தனர். இதனால், சிவில் ஒத்துழையாமை இயக்கத்துக்கு அந்த தலைவர்கள் அழைப்பு விடுத்தனர். இதனால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக 1975ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி நள்ளிரவில், இந்திரா காந்தியின் பரிந்துரையின்பேரில் தேசிய அளவிலான அவசரநிலையை பிரகடனப்படுத்தினார் அப்போதைய குடியரசு தலைவர் ஃபக்ருதின் அலி அகமது. உள்நாட்டு இடையூறுகளால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகக் கூறி இந்த அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அந்த காலகட்டத்தில் ஜெய பிரகாஷ் நாராயண், மொரார்ஜி, சரண் சிங் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால், காமராஜ் கைதாகவில்லை. அனைத்து ஊடகங்களும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. சரியாக ஓராண்டுக்கு முன்பு தன்னால் நாட்டின் பிரதமராக அடையாளம் காட்டப்பட்ட இந்திரா காந்தியின் இந்த செயல்பாடுகள், காமராஜுக்கு கடுமையான வலியை தந்தது. ஒரு சில நாட்களில் அவசரநிலை தளர்த்தப்படலாம் என நம்பிய காமராஜுக்கு அடுத்தடுத்து நடந்த அரசியல் கைதுப்படலம் அவரது உடல்நிலையை மோசமாக்கியது. கடுமையான காய்ச்சல், ரத்த அழுத்தம், சர்ச்கரை அளவு அதிகரிப்பு போன்றவற்றால் காமராஜின் உடல்நிலை பலவீனம் அடைந்தது. 1975ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி தனது 73ஆம் பிறந்த நாளை மிக, மிக எளிய முறையில் கொண்டாடினார் காமராஜ். அவசரநிலை காரணமாக தன்னைத்தானே வீ்ட்டுக்குள்ளேயே அடைத்துக் கொண்ட காமராஜ், 1975ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி பிற்பகல் 3.15 மணிக்கு நெஞ்சு வலியால் காலமானார். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, காமராஜுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வை நடத்த உத்தரவிட்டார். 1976ஆம் ஆண்டு, அவருக்கு குடிமக்களுக்கான உயரிய விருதாக கருதப்படும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. கலை, இலக்கியம், அறிவியல், பொது அங்கீகாரம் ஆகிய துறைகளில் தனித்து விளங்கியதற்காக இறப்புக்கு பிந்தைய அங்கீகாரமாக பாரத ரத்னா விருதை காமராஜுக்கு தருமாறு அப்போதைய குடியரசு தலைவருக்கு பிரதமராக இருந்த இந்திரா காந்தி பரிந்துரை செய்தார். https://www.bbc.com/tamil/india-56315052
 2. தமிழ்நாடு ரவுடி ஒழிப்பு நடவடிக்கையில் விசிக குறிவைக்கப்படுகிறதா? ஆபரேஷன் டிஸ்ஆர்ம் என்ன செய்கிறது? ஆ.விஜய் ஆனந்த் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,VANNI ARASU/FACEBOOK படக்குறிப்பு, வன்னி அரசு. `ஆபரேஷன் 'டிஸ்ஆர்ம்' என்ற பெயரில் தமிழ்நாடு காவல்துறை நடத்தும் `ரவுடிகள் ஒழிப்பு வேட்டை', அரசியல் ரீதியாக விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரிய ரவுடிகளை கைது செய்யவில்லை, அரசியல் போராட்டங்களில் கைது செய்யப்பட்டவர்களை ரவுடி பட்டியலில் சேர்க்கிறார்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) நிர்வாகிகள் குறிவைக்கப்படுகிறார்கள் என்றெல்லாம் குற்றம்சாட்டுகிறார் விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு. குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றச் சம்பவங்களில் தொடர்பில்லாதவர்கள், அப்பாவிகள் ஆகியோரை இலக்காக வைத்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கிறார் ஒரு காவல் துறை கண்காணிப்பாளர். இந்த நடவடிக்கையில் திமுக நிர்வாகி ஒருவரே கூட கைது செய்யப்பட்டுள்ளார் என்கிறார் அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர். என்ன நடக்கிறது? டி.ஜி.பியின் 5 உத்தரவுகள் தமிழ்நாடு முழுவதும் 'ஆபரேஷன் டிஸ்ஆர்ம்' என்ற பெயரில் ரவுடிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களிடம் இருந்து கொடூர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையின் மூலம் தற்போது வரையில் 3,325 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஏராளமான பயங்கர ஆயுதங்களும் கள்ளத் துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, ஆயுத தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் பற்றிய கணக்கெடுப்பும் நடத்தப்பட்டன. இதுதொடர்பாக, 2,548 பேரிடம் அந்தந்த மாவட்ட காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். அனைத்து மாவட்ட காவல்துறை ஆணையாளர்களுக்கும் காவல் கண்காணிப்பாளர்களுக்கும் கடந்த 30 ஆம் தேதி ஐந்து உத்தரவுகளை டி.ஜி.பி சைலேந்திரபாபு பிறப்பித்துள்ளார். அதன்படி, கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை தயாரிப்பவர்கள் விவரம், இடங்களை கண்டறிந்து வைத்திருப்பது, ஆயுதங்களை வாங்க வருவோரின் விவரம், எதற்காக இந்த ஆயுதங்கள் என்பது குறித்த பதிவேட்டு விவரம், விவசாயம், வீட்டு உபயோகம் தவிர வேறு எந்தக் காரணங்களுக்காகவும் விற்பனை செய்யாமல் இருத்தல், பட்டறைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது, குற்றவாளிகள் தொடர்பான தகவல்களை தெரிவிப்பவர்களுக்கு வெகுமதி அளிப்பது என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆதார் இல்லாமல் அரிவாளா? இதனால், அரிவாள் தயாரிப்பதில் புகழ்பெற்ற திருப்பாச்சேத்தி, திருப்புவனம் ஆகிய பகுதிகளிலும் 'ஆதார் இல்லாமல் அரிவாள் கொடுக்கக் கூடாது' என போலீஸார் உத்தரவிட்டுள்ளனர். அதேநேரம், குற்றச் செயலில் ஈடுபட்டு வருகிறவர்கள், பிணையில் வந்த பிறகு தப்பித்துச் சென்றவர்கள், சந்தேக வழக்குகளில் தொடர்புடையவர்கள் எனப்படுவோர் மீது தமிழ்நாடு முழுவதும் நடந்து வரும் இந்த ஆபரேஷன், இதுவரையில் நடக்காத ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. காவல்துறையின் இந்த நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி மற்றும் கணவருக்கு ஊழல் வழக்கில் 5 ஆண்டு சிறை விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு: எஸ்.ஏ. சந்திரசேகர் தரும் விளக்கம் என்ன? "இந்த ஆபரேஷனுக்கு `டிஸ்ஆர்ம்' எனப் பெயர் வைத்துள்ளனர். முதலமைச்சரிடம் தன்னை வெளிக்காட்டிக் கொள்வதற்காகத்தான் காவல்துறை தலைமை இயக்குநர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். உண்மையில் இவர்கள் பெயர் சொல்லும் அளவில் செயல்படும் ரவுடிகளை கைது செய்யவில்லை. என்னிடம் அப்படிப்பட்ட ரடிவுகளின் பெயர்ப் பட்டியல் உள்ளது. அவர்களில் ஒருவரைக்கூட இவர்கள் கைது செய்யவில்லை" என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு. "2 கேஸ் இருந்தாலே ரவுடி லிஸ்ட்" தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசியவர், "தமிழ்நாட்டில் கூலிப்படை கலாசாரம் எவ்வளவு மோசமாக உள்ளது என்பது போலீசுக்கு தெரியும். ரவுடிகளை உருவாக்குவதே போலீஸ்தான். இவர்கள் இருவருக்கும் இடையில் தொடர்பு இருந்து கொண்டே இருக்கும். கடந்த 10 ஆண்டுகளாக வி.சி.க மீது அ.தி.மு.க அரசு பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்தது. எங்கள் கட்சியின் நிர்வாகிகள் மீது 2 வழக்குகள் இருந்தாலே சரித்திர குற்றப் பதிவேட்டை உருவாக்கி, தினமும் காவல்நிலையத்துக்கு வந்து கையொப்பமிட வைப்பது, ஆர்.டி.ஓ விசாரணைக்கு உட்படுத்துவது எனச் செயல்பட்டனர். அந்தப் பட்டியலையே வைத்துக் கொண்டு இந்த ஆட்சியிலும் அதேபோல் செயல்படுகின்றனர். கடந்த ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர் ஆகிய பதவிகளில் உள்ள பலரும் அந்தந்த பகுதிகளில் சாதி வன்மத்தோடு செயல்பட்டனர். எஸ்.பி பதவியில் உள்ள சிலரும் அதேபோன்று செயல்பட்டனர். நாங்கள் அனைவர் மீதும் குற்றம் சுமத்தவில்லை. சேலம் மாவட்டம் ஓமலூரில் எங்கள் கட்சியின் மீது மிகுந்த பாகுபாட்டுடன் அம்மாவட்ட எஸ்.பி நடந்து கொண்டார். இதே எஸ்.பி கடலூரில் இருந்தபோது பல இடங்களில் எங்கள் கட்சியின் கொடியினை ஏற்றவிடாமல் தடுத்துள்ளார்" என்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES மேலும், `` பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த 3 காவலர்களை இதே அதிகாரி கள்ளக்குறிச்சிக்கு இடமாற்றம் செய்தார். காவல்துறை காவிமயமாக மாறி வருவதையே இது காட்டுகிறது. நாங்கள் போராட்டக்களத்தில் இருப்பதால் எங்கள் மீது வழக்குப் பதிவு செய்வது என்பது இயற்கையானது. அதனை நாங்கள் குறை சொல்லவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை எல்லாம் ரவுடிகள் பட்டியலில் வைப்பது என்பது எப்படி சரியானது?" என்கிறார். காஞ்சி, நாகை எடுத்துக்காட்டுகள் "எடுத்துக்காட்டு கூற முடியுமா?" என்றோம். "நிச்சயமாக. கடந்த ஆட்சியில் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையை பட்டப்பகலில் தகர்த்தனர். அதைக் கண்டித்து சாலை மறியல் நடத்தினோம். நாங்கள் சென்னையில் போலீசாருடன் வாக்குவாதம் செய்தோம். இதுதொடர்பாக, வேதாரண்யத்தில் எங்கள் கட்சியின் பொறுப்பாளரான வேங்கைத் தமிழ் என்பவரை அன்றைய அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்தது. அவரை தற்போது ரவுடி பட்டியலில் சேர்த்துள்ளதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளனர். அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நடுவீரப்பட்டு, எருமையூர் பகுதியில் 2 ரவுடிகள் உள்ளனர். அவர்களை போலீசார் கைது செய்யட்டும். அதனை நாங்கள் தவறு எனக் கூறவில்லை. ஆனால், அதே ஊரில் உள்ள வி.சி.க நிர்வாகிகளையும் கைது செய்துள்ளனர். பழநியிலும் இதேபோல் கைது செய்துள்ளனர். இதனை குறிப்பிடக் காரணம், கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாடு காவல்துறை கட்டமைத்த அதே பதிவேட்டை, தற்போதைய அரசின் காவல்துறையும் கையாள்வது எப்படி சரியானதாக இருக்க முடியும்? டி.ஜி.பிக்கு நாங்கள் வைக்கும் கோரிக்கை இதுதான், `ரவுடிகள் பட்டியலில் உள்ள 3,000 பேரை கைது செய்துள்ளதாகக் கூறுகிறீர்கள். அதில் பெயர் சொல்லும் அளவில் உள்ள ரவுடிகளைச் சொல்ல முடியுமா?' எனக் கேட்கிறோம். அவர்கள் இன்னமும் வெளியில் சுற்றிக் கொண்டுதானே இருக்கிறார்கள். தவிர, கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணியை சேர்ந்த பிரமுகர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதை வைத்துக் கொண்டு சிலர் கட்டப்பஞ்சாயத்து செய்து வருகின்றனர். கோவையை சேர்ந்த இந்துத்துவ இயக்க பிரமுகர் ஒருவர் சந்தையில் இருந்து வரும் மாடுகளை எல்லாம் பசுவதை செய்வதாகக் கூறி கன்மேன் எனப்படும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சென்று வண்டிகளை மறித்து வசூல் செய்கிறார். அந்தவகையில், பொய் சொல்லி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பெற்றவர்களை எல்லாம் காவல்துறை சரிபார்க்கட்டும்" என்கிறார். கொங்கு மண்டலத்தில் என்ன சிக்கல்? "முதலமைச்சர் கைகளில்தானே காவல்துறை உள்ளது. அவருக்குத் தெரிந்துதானே கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன?" என்றோம். "காவல்துறையின் சாதிரீதியான அணுகுமுறையைப் பற்றி அவருக்குத் தெரிந்திருக்குமா எனத் தெரியவில்லை. இதனை அவரது கவனத்துக்குக் கொண்டு செல்லாமல் உளவுத்துறை அதிகாரிகள் மறைக்கின்றனர். திருக்குறளில் `ஒற்றாடல்' பகுதியில் வள்ளுவர் சொல்வது போல, `நாட்டில் என்ன நடக்கிறது என்பதை நல்ல ஒற்றர்களை வைத்து கண்டறியவில்லை என்றால் ஆட்சிக்கு எதிராகப் போய்விடும்' என்கிறார். எனவே, என்ன நடக்கிறது என்பதை ஒற்றர்களை வைத்துப் பார்த்தால், அவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக என்ன செய்தார்கள் என்பது தெரியவரும். குறிப்பாக, கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் உள்ளவர்களை மாற்ற வேண்டும். அந்த மாவட்டங்களில் எல்லாம் இதுவரையில் அம்பேத்கர் சிலைகளை வைப்பதற்கு அனுமதியில்லை. அந்தப் பகுதிகளில் தி.மு.க வெற்றி பெற முடியாமல் போவதற்கு சாதிரீதியாக செயல்படும் இதுபோன்ற அதிகாரிகள்தான் காரணம். கடலூர், விழுப்புரம், திருவாரூர், நாகப்பட்டினம் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் இவர்கள் வி.சி.க நிர்வாகிகளுக்கு சிக்கலை ஏற்படுத்துகின்றனர்" என்கிறார். பட மூலாதாரம்,VANNI ARASU/TWITTER படக்குறிப்பு, சேலம் மாவட்டம், மோரூர் கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கொடி ஏற்ற முயன்றபோது காவல்துறை தடியடி நடத்தியதில் காயமடைந்ததாக சொல்லப்படும் சிறுவன் தொல்காப்பியனோடு வன்னி அரசு. ``முதலமைச்சரை வி.சி.க தலைவர் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது என்ன பேசப்பட்டது?" என்றோம். `` முதல்வர் உடனான சந்திப்பில் காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் 5 முதல் 10 வி.சி.க நிர்வாகிகள் காவல்துறையின் நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்தும் சந்திப்பின்போது முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது" என்கிறார். ``அரசியல் காரணங்களுக்காக கைதானவர்களை எல்லாம் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் பட்டியலில் வைப்பதாக வி.சி.க குற்றம் சுமத்துகிறதே?" என காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி சுதாகரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` அப்படியெல்லாம் எதுவும் இல்லை. குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றச் சம்பவங்களில் தொடர்பில்லாதவர்கள், அப்பாவிகள் ஆகியோரை இலக்காக வைத்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதாவது, குற்ற வழக்குகளில் ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருந்தவர்கள், அவர்களுக்கு குற்றத்துக்கும் எந்த அடிப்படையில் தொடர்பு என்பதை முழுமையாக ஆராய்ந்த பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்கிறார். மேலும், `` பழைய வழக்குகள், குற்றச் சம்பவங்கள், அவற்றில் சம்பந்தப்பட்ட நபரின் பங்கு ஆகியவற்றை டி.எஸ்.பியும் இன்ஸ்பெக்டரும் முழுமையாக ஆய்வு செய்கின்றனர். அதன்பிறகே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில் வேறு எந்தக் காரணங்களும் இல்லை" என்கிறார். தவறான முன்னுதாரணம் காவல்துறை மீது வி.சி.க முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, தி.மு.கவின் சட்டத்துறை இணைச் செயலாளர் வீ.கண்ணதாசனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` குற்றவாளிகள் எந்தக் கட்சியில் இருந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவர்கள் சொல்வதுபோல பொய்யாக ஒருவரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த முடியாது. இதனை சட்டரீதியாக எதிர்கொள்ளாமல் அரசியல்ரீதியாக அணுகுவது என்பது சரியான ஒன்றல்ல" என்கிறார். தொடர்ந்து பேசியவர், `` அனைத்துக் கட்சிகளிலும் குற்றச் செயலில் ஈடுபடும் சிலர் இருக்கத்தான் செய்வார்கள். ரவுடிகள் ஒழிப்பு விவகாரத்தில் டெல்டா மாவட்டங்களில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடி என்றால் ரவுடிதான். இதில் கட்சி எங்கிருந்து வருகிறது? மணப்பாறையில் தி.மு.க ஒன்றிய செயலாளர் மீது புகார் எழுந்தது. அவர் உடனே கைது செய்யப்பட்டார். சரித்திர பதிவேட்டில் உள்ளவர்களைத்தான் போலீஸார் கைது செய்கின்றனர். இவர் எந்தக் கட்சிக்காரர் என்றெல்லாம் பார்த்து கைது செய்வதில்லை. எந்தக் குற்றச்செயலிலும் ஈடுபடாத ஒருவரை போலீஸ் துன்புறுத்துகிறது என்றால், அதற்கான பட்டியலை இவர்கள் டி.ஜி.பியிடமோ, எஸ்.பியிடமோ புகார் மனு அளித்திருக்கலாம். அவ்வாறு இவர்கள் செய்யாமல் வெறுமனே பேசுவது என்பது சரியானதல்ல. சட்டத்தை மீறி நடவடிக்கை எடுத்தால் சட்டப்படியே முறையிடலாம். இதனை அரசியலாக்குவது என்பது தவறான முன்னுதாரணம்" என்கிறார். ஆதாரத்தைக் கொடுக்கட்டும் காவல்துறையின் நடவடிக்கை குறித்து, ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் கருணாநிதியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` இதை ஒரு சிறப்பான நடவடிக்கையாக பார்க்கிறோம். கொலை செய்வது என்பது நாளுக்கு நாள் இயல்பான ஒன்றாக மாறிக் கொண்டிருக்கிறது. கூலிப்படையின் செயல்பாடுகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. சிறிய விஷயங்களைக்கூட பேசித் தீர்க்காமல், `சிவில் விவகாரங்களில் காவல்துறை தலையிடக் கூடாது' என சிலர் மிரட்டுகின்றனர். சிவில் விவகாரம் என்பதையே தங்களுக்கான கேடயமாக சிலர் பயன்படுத்திக் கொள்கின்றனர்" என்கிறார். மேலும், "சில கட்சிகளில் தவறு செய்கிறவர்கள் இருப்பார்கள். எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் காவல்துறை செயல்படுவதற்கு வாய்ப்பில்லை. ரவுடிகளை போலீஸார் கைது செய்ய வரும்போது, அவர்கள் கட்சிக்காரர்கள் என்பதற்காக ஆதரவு கொடுப்பது தவறு. போலீசார் தவறாகச் செயல்பட்டால், அதற்கான ஆதாரத்தைக் கொடுக்கலாம். அதனை விசாரணை அதிகாரி சரிபார்த்து நிவர்த்தி செய்வது வழக்கம். ஒரு குறிப்பிட்ட கட்சியில் இருப்பவர்கள் என்பதற்காக எல்லாம் நடவடிக்கை எடுத்துவிட முடியாது" என்கிறார். https://www.bbc.com/tamil/india-58763431
 3. இதில் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளது போல் தெரிகிறது.
 4. பூமியின் அதிசய வரலாறு: 100 கோடி ஆண்டுகளை காணவில்லை - விஞ்ஞானிகள் கூறும் விளக்கம் என்ன? ஜாரியா கோர்வெட் பிபிசி பியூச்சர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES புவியியல் வரலாற்றுப் பதிவேட்டில் இருந்து நூறு கோடி ஆண்டுகள் காணாமல் போய்விட்டன. இப்படிக் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டு 150 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டாலும் இது எப்படி நடந்தது என்பதில் விஞ்ஞானிகளுக்குள் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. "சிகாகோ ட்ரிப்யூன்" என்ற பாரம்பரியம் மிக்க பத்திரிகையின் முதல் பக்கத்தில் 1869-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3-ஆம் தேதி "நடுங்கவைக்கும் விபரீதம்" என்ற தலைப்பில் ஒரு செய்தி வந்தது. ஒரேயொரு கையைக் கொண்ட புவியியலாளர் ஜான் வெஸ்லி பவெல் தலைமையிலான ஆய்வாளர்கள் அடங்கிய ஒரு குழு தொடர்புடைய சம்பவத்தை அந்தச் செய்தி குறிப்பிட்டது. அந்தக் குழுவின் பணி ஒன்றே ஒன்றுதான். ஆனால் எளிதானது அல்லது. வயோமிங்கில் உள்ள கிரீன் ஆற்றங்கரையில் இருந்து சுமார் ஆயிரம் மைல்கள் கீழ்நோக்கி நீர்ப் போக்கில் பயணிப்பது. செல்லும் வழியில் தங்களது கண்டுபிடிப்புகளைப் பட்டியிலிடுவது அவர்களது வேலை. அவர்கள் பயணத்தைத் தொடங்கிய சில வாரங்களுக்குப் பிறகு, அவர்களிடம் இருந்த எந்தத் தகவலும் இல்லை. பொதுவெளியில் கவலை அதிகரித்திருந்தது. அவர்கள் சென்ற படகு மூழ்கி விட்டதாகவும் அனைவரும் இறந்து போயிருக்கலாம் என்றும், தப்பிப் பிழைத்து வந்ததாக ஒருவர் கூறியது செய்தியாக வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால் இந்தச் செய்தியை பவலின் மனைவி நம்பவில்லை. இறுதியில் அவர் நம்பாததுதான் சரி என்றாகிப் போனது. ஆம், தப்பிப் பிழைத்து வந்தவர் என்று கூறியவர், உண்மையில் பவலை சந்தித்ததே இல்லை என்பது அதன் பிறகுதான் தெரியவந்தது. பவெலும் அவரது குழுவினரும் மூழ்கிப் போனதாக வெளியான செய்தி கட்டுக்கதை - ஜோடிக்கப்பட்டது என்பது தெளிவானது. இந்தக் கட்டுக்கதை வெளியாகிக் கொண்டிருந்த வேளையில், அதுபற்றி எதுவும் தெரியாத ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆய்வுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அந்தப் பயணத்தின் போதுதான் நம்ப முடியாத, அதிர்ச்சியளிக்கும் ஒரு விஷயத்தை பவலும் அவரது குழுவினரும் கண்டுபிடித்தார்கள். அவரது கண்டுபிடிப்பு அடுத்த நூற்று ஐம்பது ஆண்டுகளாக புவியியில் ஆராய்ச்சியாளர்களைத் திகைக்க வைத்துக் கொண்டிருக்கிறது. காணாமல் போன ஆண்டுகள் பவெலின் அந்த ஆய்வுப் பயணம் சாதாரணமானது அல்ல. அது சாகசங்கள் நிறைந்த பயணம். ஆயிரம் மைல்கள், அதாவது 1,600 கிலோ மீட்டர் தொலைவுக்கு சீறிப் பாயும் ஆற்றில் பயணிப்பதற்காக அவர்கள் பல முன்னேற்பாடுகளைச் செய்திருந்தார்கள். வேலைக்கும் பாதுகாப்புக்கும் சந்தேக நபர்கள், பூர்வகுடியைச் சேர்ந்தவர்கள், முன்னாள் குற்றவாளிகள் போன்றோரையும் கூட்டிச் சென்றனர். பட மூலாதாரம்,ALAMY படக்குறிப்பு, ஜான் வெஸ்லி பவெலின் பயணத்தை குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட தபால்தலை மொத்தம் நான்கு படகுகளுடன் அவர்களது ஆய்வுப் பயணம் தொடங்கியது. சுழலும் நீர், பாயும் நீர்வீழ்ச்சிகள், அச்சுறுத்தும் பாறைகள் என நாள்தோறும் எதையாவது சந்திக்கும் துணிச்சலும் அவர்களிடத்தில் இருந்தது. பயணம் தொடங்கிய சில நாட்களிலேயே அவர்கள் சென்ற ஒரு படகு அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. பயணம் செய்த 10 பேரில் ஆறு பேர்தான் வீடு திரும்புவார்கள் என்பது அப்போதே முடிவாகிவிட்டது. 1869-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதியன்று கிராண்ட் கேன்யான் எனப்படும் பெரும் செங்குத்துப் பள்ளத்தாக்கை அடைந்தது பவெலின் குழு. அப்போது, அவர்களிடத்தில் ஒரு மாதத்துக்குத் தேவையான உணவுப் பொருட்கள் மட்டுமே இருந்தன. நாளான ஆப்பிள்கள், அழுகிய பன்றி இறைச்சி, பூச்சிகள் இருக்கும் மாவு, ஒரு சாக்குப்பையில் காஃபி போன்றவை மட்டும்தான். ஆனால் அது மட்டுமே அல்லாமல், அவர்களுக்குத் தெரியாத பல ஆபத்துகளும் இருந்தன. இந்த இக்கட்டான காலத்தில் கூட கண்ணில் தென்பட்டவற்றைத் பவெலும் அவரது குழுவினரும் ரசித்தார்கள். துல்லியமாகக் குறிப்பெடுத்துக் கொண்டார்கள். சுற்றிலும் இருந்த பாறை அடுக்குகள், கூர்மையான வளைவுகள், பிரமாண்டமான இயற்கைக் காட்சிகள் போன்றவற்றை அவர்கள் கண்டார்கள். வண்ணமயமான புத்தகங்களை அடுக்கி வைத்ததைப் போன்ற பாறை அடுக்குகளைக் கொண்டிருந்த ஒரு குன்று மீது பவெலின் படகு மோதியது. அதை அவர் "கடவுளின் நூலகம்" என்று குறிப்பிட்டார். அந்தப் பாறை அடுக்குகள் இந்தப் பிரபஞ்சம் எவ்வாறு உருவானது என்பதை வரிவரியாகப் படிப்பதற்கான இடம் என்று அவர் கூறினார். ஆனால், பின்னர் பள்ளத்தாக்கு சுவர்களின் அடுக்கில் திகைப்பூட்டும் வித்தியாசமான ஒன்றைக் கண்டுபிடித்தார். பாறைகளின் அடிவாரத்தில் நின்று மேல்நோக்கிப் பார்த்தால், கடினமான, படிகப் பாறைகளின் அடர்த்தியான பகுதியை அவரால் காண முடிந்தது. அவை வழக்கத்துக்கு மாறாக செங்குத்தாக அடுக்கப்பட்டிருந்தன. அதற்கு மேல் நேர்த்தியான கிடைமட்ட கோடுகளில் சுமார் ஆயிரம் அடிக்கு சிவப்பு நிற மணற்கல் தொகுப்பு இருந்தது. செங்குத்து படிக பாறை இருந்த பகுதி புவியியில் விதிகளின்படி 10,000 அடி தடிமனாக இருக்க வேண்டும் என்று பவெல் மதிப்பிட்டிருந்தார். ஆனால் உண்மையில், இது 500 அடிதான் இருந்தது. ஆயிரக்கணக்கான அடி பாறையைக் காணவில்லை. அது மறைந்து போயிருந்தது. அவர் "மகா முரண்" என்று அதற்குப் பெயரிட்டார். "அது எப்படி சாத்தியம்?" என்று தனக்குள்ளே அவர் கேட்டுக் கொண்டார். பட மூலாதாரம்,ALAMY படக்குறிப்பு, பாறைகள் பொதுவாக ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருக்கும். ஆனால் "மகா முரண்" இந்த வழக்கத்தை உடைத்தது இன்று புவியியலாளர்கள் கடினமான, படிக பாறைகளில் இளமையானது 1.7 பில்லியன் ஆண்டு வயதைக் கொண்டது என்பதை அறிந்திருக்கிறார்கள். அதேபோல் மணற்கல் அடுக்குகளில் மிகப் பழமையானது 550 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என்பது தெரியும். இதன் பொருள் என்னவென்றால், பூமியின் வரலாற்றுப் பதிவில் ஒரு பில்லியன், அதாவது நூறு கோடி ஆண்டு இடைவெளி உள்ளது. இன்றுவரை, இடையில் உள்ள பாறைகளுக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. உலகளாவிய ஒழுங்கின்மை கிராண்ட் கேன்யனில் காணாமல் போன பாறை தெளிவாக இருந்தாலும், உண்மையில் இது பூமி முழுவதுமே காணப்படுகிறது. "எந்தக் கண்டத்தின் மையத்திலும் - அமெரிக்கா, சைபீரியா அல்லது ஐரோப்பாவில் போதுமான அளவு கீழே துளையிட்டால், இந்த மர்மமான புவியியல் ஒழுங்கின்மையைக் காண முடியும்" என்று கூறுகிறார் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் ஸ்டீபன் மார்ஷக். "இதன் பொருள் என்னவென்றால், உங்களுக்கு கீழே எல்லா இடங்களிலும், அந்த முரண்பாட்டின எல்லை உள்ளது. சில நேரங்களில் அது மேற்பரப்புக்கு அருகில் இருக்கலாம். சில நேரங்களில் அது சில கிலோ மீட்டர் தொலைவுக்குக் கீழே இருக்கலாம். ஆனால் எங்கும் இருக்கிறது. இது பூமியின் வரலாற்றைப் பற்றிய மிக மிக முக்கியமான கதையைச் சொல்கிறது." கடலுக்குள் புதைந்திருக்கும் உலகின் எட்டாவது கண்டம்: விலகாத மர்மங்கள் 'உலகின் முதல் கோயில்': மனித வரலாற்றை மாற்றி எழுதும் 11,000 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டுமானம் பில்லியன் ஆண்டுகள் காணாமல் போனது என்ற கண்டுபிடிப்பு அற்பமான விஷயம் அல்ல. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது, இது இன்னுமொரு விவரிக்க முடியாத நிகழ்வுக்கு முன் நிகழ்ந்திருக்கிறது. அதன் பெயர் கேம்ப்ரியன் வெடிப்பு. கடல்கள் திடீரென விசித்திரமான மற்றும் அறிமுகமில்லாத உயிரினங்களிடம் இருந்து விலகி தற்போதிருக்கும் பல உயிரினங்களின் வாழ்விடமான சம்பவம். இது 13-25 மில்லியன் ஆண்டு இடைவெளியில் நடந்திருக்கிறது. 1840 களில் இந்தச் சிக்கல் அடையாளம் காணப்பட்டது. சார்லஸ் டார்வினுக்கு இது சவாலாக இருந்தது. அவர் அதை "விவரிக்க முடியாதது" என்று அழைத்தார். இரண்டாவதாக, காணாமல் போனதாககக் கருதப்படும் ஆண்டுகளில் பூமி தீவிரமான பருவநிலை மாற்றத்திற்கு உட்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் முற்றிலும் உறைந்த மேற்பரப்பைக் கொண்ட பெரிய பனிப் பந்து போல பூமி மாறியிருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது. ஆயினும் அந்தக் காலகட்டத்தையும் தாண்டி உயிரினங்கள் எப்படி வாழ்ந்தன என்பது குறித்து போதுமான தெளிவு இல்லை. பட மூலாதாரம்,ALAMY படக்குறிப்பு, 650 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் மேற்பகுதி முழுவதும் பனியால் மூடப்பட்டிருந்தது இந்த இருண்ட யுகத்தில் என்ன நடந்தது என்பதை நாம் அறிந்திருந்தால், புதிர்களுக்கு சில பதில்களைக் கண்டுபிடித்திருப்போம். "இது பூமியின் வரலாற்றில் நிறைய சம்வங்கள் நடக்கும் போது ஏற்பட்டிருக்கும் ஒரு இடைவெளி" என்கிறார் கொலராடோ பல்கலைக்கழகத்தின் புவியியல் அறிவியல் துறையின் இணை பேராசிரியர் ரெபெக்கா ஃப்ளவர்ஸ். " இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஏதோ ஒரு வடிவத்தில் தெளிவாக தொடர்புடையவை." என்று அவர் கூறுகிறார். இந்த அடிப்படையில் காணாமல் போன அந்த நூறுகோடி ஆண்டுகளில் என்ன நடந்திருக்கலாம் என்பது பற்றிய பல கோட்பாடுகள் வெளிவந்திருக்கின்றன. கோட்பாடு 1: பனிப்பந்து இன்று பூமியின் பனிப்பாறைகளில் என்ன நடக்கிறது என்பதை வைத்து காணாமல் போன காலகட்டத்தில் என்ன நடந்திருக்கலாம் என்று கணிப்பது. பூமியின் இரண்டாவது பெரிய பனிப்பகுதியான கிரீன்லாந்து பனி அடுக்குப் பாறைகளை, இது அந்தத் தீவின் மேற்பரப்பில் 80%, அதாவது சுமார் 1.7 மில்லியன் சதுர கிமீ அளவுக்குப் படர்ந்திருக்கிறது. ஆறுகளைப் போலவே, பனிப்பாறைகளும் நகரலாம். ஆனால் மிக மெதுவாக நகரும். அவை படிந்திருக்கும் பூமயின் மேலடுக்கை விட்டு படிப்படியாக நகர்ந்து செல்கின்றன. இது பல்லாயிரக்கணக்கான அல்லது மில்லியன் ஆண்டுகளுக்கு தொடர்ந்தால், இறுதியில் இந்த அரிப்பு குறிப்பிடத்தக்க அளவு பாறைகளை அழித்துவிடும். இது கிரீன்லாந்திலும் நடந்திருக்கிறது. பூமி ஒரு பெரிய பனிப்பந்தாக இருந்தபோது, இதே செயல்முறைகள் பூமியின் முழு மேற்பரப்பிலும் நடந்திருக்கிறது. ஒரே கேள்வி என்னவென்றால், எந்த அளவு பனியும் ஒரு பில்லியன் ஆண்டு பாறையை அழித்துவிடுமா என்பதுதான். 2018 இல், பல பல்கலைக்கழக சகாக்களுடன் சேர்ந்து, பேராசிரியர் பிரஹின் கெல்லர் என்பவர் இந்த கேள்விக்கு பதிலளிக்க முயன்றார். பல ஆண்டுகளுக்கு முன்பு மற்றொரு குழு உருவாக்கிய மாதிரியின் அடிப்படையில், பனிப்பந்து பூமியின் மேற்பரப்பில் "ஈரமான" பனிப்பாறை இருந்திருக்கும் என்று அவர்கள் கருதினர். அது நகரக்கூடியதாகவும் இருந்திருக்கும். பட மூலாதாரம்,ALAMY இந்தப் பனி அடுக்கு நகர்வு, ஒட்டுமொத்தமாக, சுமார் 717 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி சுமார் 580 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வரை சுமார் 3-5 செங்குத்து கிமீ அளவுக்கு பாறையை அகற்றியிருக்கும் என்று கணித்தனர். இது பவல் கூறிய "மகா முரணுக்கு" போதுமானது. கோட்பாடு 2: ஒரு சூப்பர் கண்டத்தின் மரணம் ஒரு பில்லியன் ஆண்டுகளுக்குரிய பாறைகள் காணாமல் போனதற்கான மற்றொரு சாத்தியம் என்னவென்றால், ரோடினியா என்கிற சூப்பர் கண்டத்தின் மறைவு. கிழக்கு அண்டார்டிகா, இந்தியா, சைபீரியா, சீனா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவின் பல பகுதிகள் ஒரே இடத்தில் குவிந்துள்ள ஒரு மறக்கப்பட்ட நிலப்பரப்பு இது. இது முதன்முதலில் ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சேர்ந்திருந்தது. பின்னர் 750 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வரை படிப்படியாக உடைந்தது. "இது அடிப்படையில் உலகின் அனைத்து மேற்பரப்பையும் ஒரே மாபெரும் கண்டமாக இணைத்தது" என்கிறார் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முனைவர் பட்ட மாணவர் மைக்கேல் டெலூசியா. பூமியின் மையத்தில் இருந்து வெளியிடப்பட்ட வெப்பத்தால் அந்தக் கண்டம் உடையத் தொடங்கியது. "நிச்சயமாக, பொருள்கள் சூடாகும்போது, அவை விரிவடைகின்றன," என்கிறார் டெலூசியா. அடிப்பகுதி சூடானதால், பூமியின் மேற்பரப்பு சில கிலோமீட்டர் தொலைவுக்கு உயர்ந்திருக்கலாம். இது ரோடினியாவின் முறிவை துரிதப்படுத்தியது மட்டுமல்லாமல், முந்தைய ஒரு பில்லியன் ஆண்டுகளில் நடந்த எல்லாவற்றையும் பற்றிய பதிவையும் அழித்திருக்கலாம். இந்த கோட்பாட்டின் படி, ரோடினியா சுமார் 200 மில்லியன் ஆண்டுகளாக ஒரு பெரிய, மலைப்பாங்கான பீடபூமியைப் போல தோற்றமளித்திருக்கும். எல்லா உயிர்களும் அதைச் சுற்றியுள்ள பரந்த கடலில் இருந்திருக்கலாம். இது இறுதியில் மேற்பரப்பு மட்டும் எதுவும் இல்லாமல் அழிக்கப்பட்டிருக்கலாம். அதுவே பாறைகள் காணாமல் போனதற்கும் காரணமாக அமைந்திருக்கும். கோட்பாடு 3: இடைவெளிகளின் குழப்பம் இது மிக சமீபத்திய கோட்பாடு. ஒரு பில்லியன் ஆண்டுகள் காணாமல் போக இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. ஒன்று பாறை உருவாகவில்லை. அல்லது அனைத்தும் அகற்றப்பட்டது. கிராண்ட் கேன்யன் எனப்படும் செங்குத்துப் பெரும் பள்ளத்தாக்கில் "மகா முரண்" மிகத் தெளிவாகத் தெரிகிறது. மேலும் பல இடங்களிலும் இதுபோன்ற தோற்றங்களைப் பார்க்க முடியும். அவற்றில் ஒன்று அமெரிக்காவின் வடகிழக்கில் ஹட்சன் விரிகுடாவைச் சுற்றியுள்ள பண்டைய பாறையின் பரந்த பகுதியான கனடியன் கேடயம் (Canadian Shield). இங்கே நடந்த சமீபத்திய ஆராய்ச்சி ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. பட மூலாதாரம்,ALAMY படக்குறிப்பு, பவெல் மற்றும் அவரது குழு "பூமி பனிப்பந்தாக மாறுவதற்கு முன்னர் கிராண்ட் கேன்யனில் பெரும் அரிப்பு ஏற்பட்டதாகத் தோன்றுகிறது" என ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஃப்ளவர்ஸ் கூறுகிறார், "அதே நிகழ்வு கனேடிய கேடயத்தில் பூமி பனிப்பந்தாக மாறியபோதோ அல்லது அதற்குப் பிறகோ நிகழ்ந்திருக்கிறது." இதன்படி பார்த்தால், காணாமல் போன பாறைகள் ஒரே தொடர்ச்சியாக இல்லாமல் இரண்டு வெவ்வேறு இடைவெளிகள் நடந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. அழிக்கப்பட்ட பாறையின் இரண்டு அடுக்குகள் உண்மையில் தனித்தனியானதாக இருந்தால், அவை பூமி பனிப்பந்து ஆனது போன்ற ஒரே அசாதாரண நிகழ்வால் ஏற்படவில்லை என்று தெரிகிறது. அதனால் பூமி மேலடுக்கு உயர்ந்தது போன்ற பல்வேறு நிகழ்வுகளால் ஏற்பட்டிருக்கலாம் என்கிறார் ஃப்ளவர்ஸ். விலகாத மர்மம் ஆயினும் புதிர் விலகிவிடவில்லை. . விவாதம் இன்னும் தொடர்கிறது. அனைத்து நிபுணர்களும் அதிக தரவின் அவசியத்தை வலியுறுத்துகின்றனர். அதிர்ஷ்டவசமாக இது கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. இதில் முக்கியமானது "தெர்மோக்ரோனாலஜி" என்று அழைக்கப்படும் ஒரு நுட்பம் இதில் முக்கியப் பங்கு வகிக்கும். இது பாறைகள் உருவானதிலிருந்து அவற்றின் வெப்பநிலை எவ்வாறு மாறியது என்பதை அளவிடுவதன் மூலம் அதன் வரலாற்றை விவரிக்கும். "இந்த நுட்பத்தின் அடிப்படையில் பூமியின் வரலாற்றில் காணாமல் போன பக்கங்களை மீட்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது" என்கிறார் பேராசிரியர் மெக்டொனால்ட். அவை என்ன ரகசியங்களை கொண்டிருக்கின்றன என்று யாருக்குத் தெரியும்? https://www.bbc.com/tamil/science-58765562
 5. KKR vs PBKS: கே எல் ராகுல் அதிரடி, கோட்டைவிட்ட கேட்ச்களால் மூழ்கிய கொல்கத்தா கப்பல் - சிக்கலாகும் ப்ளே ஆஃப் கணக்குகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,BCCI/IPL படக்குறிப்பு, பஞ்சாப் vs கொல்கத்தா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நேற்று (அக்டோபர் 01, வெள்ளிக்கிழமை) துபாய் மைதானத்தில் மோதின. பஞ்சாப் அணி சார்பாக க்றிஸ் கெயில், மந்தீப் சிங், ஹர்ப்ரீத் ப்ரார் ஆகியோர் விளையாடவில்லை. ஃபேபியன் ஆலன், மயங்க் அகர்வால், ஷாரூ கான் ஆகியோர் களம் கண்டனர். இந்த மாற்றம் பஞ்சாபுக்கு சாதகமாகவே அமைந்தது. டெல்லி கேப்பிட்டல்ஸை பந்தாடிய கொல்கத்தாவின் வெற்றி அணியில் இருந்த லோகி ஃபெர்குசன் மற்றும் சந்தீப் வாரியருக்கு பதிலாக சிவம் மவி மற்றும் டிம் சைஃபர்ட் களமிறங்கினர். டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் கொல்கத்தாவை பேட் செய்ய அழைத்தது. சுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் இணை நிலைபெறத் தொடங்குவதற்குள் 2.2ஆவது பந்தில் அர்ஷ்தீப் சுப்மனை பெவிலியனுக்கு அனுப்பினார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி 34 ரன்களுக்கு ரவி பிஷ்னோயால் வெளியேற்றப்பட்டார். கொல்கத்தா தரப்பில் ராகுல் திரிபாதி - வெங்கடேஷ் ஜோடி 55 பந்துகளுக்கு 72 ரன்களைக் குவித்தனர். அவரைத் டொடர்ந்து வெங்கடேஷும் ரவியால் வெளியேற்றப்பட்டார். அப்போது கொல்கத்த ஆணில் 14.4 ஓவரில் 120 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பட மூலாதாரம்,BCCI/IPL படக்குறிப்பு, இயான் மார்கன் அடுத்து வந்த நிதிஷ் ரானா 31 ரன்களைக் குவித்தார், அவரைத் தொடர்ந்து வந்த பேட்டர்களை பஞ்சாபின் பந்துவீச்சுப் படை அதிரடியாக வெளியேற்றி ரன்ரேட்டை கட்டுக்குள் வைத்தது. கடந்த சில முக்கிய போட்டிகளில் அதகளப்படுத்தி வரும் அர்ஷ்தீப் சிங் இந்த போட்டியிலும் 4 ஓவர்களில் 32 ரன்கள் கொடுத்து சுப்மன் கில், நிதிஷ் ரானா உட்பட 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரவி பிஷ்னோய் 4 ஓவர்களில் 22 ரன்களை கொடுத்து வெங்கடேஷ் மற்றும் ராகுல் திரிபாதியின் விக்கெட்டுகளை வீழ்த்தி அதிரடி காட்டினார். அனுபவமிக்க பந்துவீச்சாளரான மொஹம்மத் ஷமி 4 ஓவர்களில் 23 ரன்களை கொடுத்து இயான் மார்கனின் விக்கெட்டை வீழ்த்தினார். 20 ஓவர் முடிவில் 165 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது கொல்கத்தா. 166 ரன்களைக் குவித்தால் வெற்றி என களமிறங்கியது பஞ்சாப். SRH vs CSK: சென்னையை அலறவிட்ட ஜேசன் ஹோல்டர், ஹெலிகாப்டர் ஷாட்டில் கரை சேர்த்த தோனி RR vs RCB: வெற்றி நடைபோடும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - காரணம் என்ன? பொறுப்போடு ஆடிய ராகுல் கே எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் இணை பஞ்சாப் அணிக்கு பிரமாதமான தொடக்கத்தைக் கொடுத்தது. முதல் ஓவரிலேயே மயங்க் அகர்வால் கொடுத்த கேட்சை இயான் மார்கன் தவறவிட்டார். 27 பந்தில் 40 ரன்களைக் குவித்திருந்த அதிரடி வீரர் மயங்க் அகர்வாலை ஒருவழியாக வீழ்த்தியது கொல்கத்தா. அடுத்து வந்த நிகோலஸ் பூரன் 12 ரன்களில் வெளியேற, ஏய்டன் மக்ரம் கே எல் ராகுலுக்கு ஜோடியாக களமிறங்கினார். அவரும் 18 ரன்களில் வெளியேற தீபக் ஹூடா 3 ரன்களில் வெளியேறினார். 16.4ஆவது ஓவரில் ஷாரூ கான் களமிறங்கி ராகுலுக்கு பக்க பலமாக நின்றார். ஒரு பக்கம் பேட்டர்கள் நிலைபெறாத போதும் கே எல் ராகுல் தலைவராக தன் விக்கெட்டை இழக்காமல் ரன்களை குவித்துக் கொண்டிருந்தார். 18 பந்துகளில் 24 ரன்கள் அடிக்க வேண்டும் என்கிற சூழலில் ஆட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியது. இரு பேட்டர்களும் லாவகமாக பேட்டைச் சுழற்றத் தொடங்கினர். 18.3ஆவது ஓவரில் ராகுல் திரிபாதி பிடித்த ஒரு கேட்ச், மூன்றாம் நடுவரால் மறுக்கப்பட, ஆட்டம் பஞ்சாபின் பக்கம் சாய்ந்தது. கடைசி ஓவரை வெங்கடேஷ் வீச, 19.2ஆவது பந்தில் கே எல் ராகுலின் விக்கெட் வீழ்ந்தது, ஆனால் ஷாரூ கான் அடுத்த பந்திலேயே சிக்ஸர் அடித்து பஞ்சாபின் ப்ளே ஆஃப் வாய்ப்பை உயிர்ப்போடு வைத்தார். சொதப்பிய கொல்கத்தா பட மூலாதாரம்,BCCI/IPL படக்குறிப்பு, மயங்க் அகர்வால் தொடக்கத்தில், பஞ்சாபை கட்டுப்படுத்தி வந்த கொல்கத்தா கடைசி ஐந்து ஓவர்களில் கோட்டை விட்டது. 30 பந்தில் 45 ரன்கள் எடுக்க வேண்டும் என்கிற நிலையில் இருந்த போட்டி சுனில் நரேன் வீசிய 16ஆவது ஓவரில் இருந்து மாறத் தொடங்கியது ஏகப்பட்ட முக்கிய கேட்ச்களை கொல்கத்தா கொட்டை விட்டது, போட்டி பஞ்சாபுக்கு சாதகமானதற்கு முக்கிய காரணம். "தொடக்கத்திலேயே நாங்கள் சரியாக ஃபீல்டிங் செய்யவில்லை. பல கேட்ச்களை கோட்டைவிடோம். நான் கூட கேட்சை தவறவிட்டேன். அது எங்களுக்கு பேரிழப்பாகிவிட்டது" என போட்டி நிறைவடைந்த பிறகு கொல்கத்தாவின் கேப்டன் மார்கன் கூறியது குறிப்பிடத்தக்கது. ப்ளே ஆஃப் கணக்கு பட மூலாதாரம்,BCCI/IPL படக்குறிப்பு, கே எல் ராகுல் இந்த வெற்றியால், பஞ்சாப் அணி புள்ளிகள் பட்டியலில் 10 புள்ளிகளோடு ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தாவும் 10 புள்ளிகளோடு ரன் ரேட் அடிப்படையில் 4ஆவது இடத்தில் உள்ளது. பஞ்சாப் நாளை பெங்களூரு உடனும், அக்டோபர் 7ஆம் தேதி சென்னையோடும் மோதவிருக்கிறது. கொல்கத்தா அணிக்கு நாளை ஹைதராபாத்தோடும், அக்டோபர் 7ஆம் தேதி ராஜஸ்தானோடும் விளையாட உள்ளது. இன்று சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன. இப்போட்டியில் ராஜஸ்தான் வென்றால், புள்ளிகள் பட்டியலில் நான்கு அணிகள் 10 புள்ளிகளோடு இருக்கும் என்பதால் இனி ஒவ்வொரு அணியின் வெற்றியும், தோல்வியும் மற்ற அணிகளின் ப்ளே ஆஃப் வாய்ப்பை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். https://www.bbc.com/tamil/sport-58771190
 6. நேச்சர் கன்சர்வென்சி 2021: பட்டாம்பூச்சிகளுக்கு மத்தியில் ஒரு கொரில்லா - மனதை கவர்ந்த வெற்றிப் புகைப்படங்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,ANUP SHAH/TNC PHOTO CONTEST 2021 நேச்சர் கன்சர்வன்சி 2021-ன் புகைப்படப் போட்டியின் வெற்றியாளராக அனுப் ஷா அறிவிக்கப்பட்டுள்ளார். மத்திய ஆப்ரிக்க குடியரசில் பட்டாம்பூச்சிகளுக்கு மத்தியில் நடந்து வரும் மேற்கு தாழ்நில கொரிலாவின் புகைப்படம்தான் அனுப் ஷாவிற்கு வெற்றியாளர் என்ற சிறப்பை பெற்று தந்துள்ளது. இந்த புகைப்படம் சுமார் 158 நாடுகளிலிருந்து வந்த ஒரு லட்சம் புகைப்படத்திலிருந்து வெற்றிப் பெற்ற புகைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டனை சேர்ந்த அனுப், 4ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பரிசை பெறுகிறார். தி நேச்சர் சன்சர்வென்சி ஒரு சர்வதேச சுற்றுச்சூழல் சார்ந்த அமைப்பு இது 72 நாடுகளில் இயங்குகிறது. இதோ போட்டியில் வெற்றி பெற்ற பிற புகைப்படங்களும், அதை எடுத்த கலைஞர்களின் விரிவாக்கமும். மக்களின் விருப்பம் பிரிவின் வெற்றியாளர்: மின்மினிப்பூச்சிகள், புகைப்படக் கலைஞர் ப்ரதாமேஷ் கடேகர், இந்தியா பட மூலாதாரம்,PRATHAMESH GHADEKAR/TNC PHOTO CONTEST 2021 மழைக்காலத்திற்கு முன், இந்த மின்மினிப்பூச்சிகள் இந்தியாவின் ஒருசில பகுதிகளில் இவ்வாறு ஒன்றுகூடும். அதிலும் சில குறிப்பிட்ட மரங்களில் இவ்வாறு ஒன்று கூடும். நிலப்பரப்பு வெற்றியாளர்: வறட்சி, டேனியல் டி க்ரான்விலே மான்கோ, பிரேசில் பட மூலாதாரம்,DANIEL DE GRANVILLE MANÇO/TNC PHOTO CONTEST 2021 அலிகேட்டர் ஒன்றின் சடலம், இது பிரேசிலில் உள்ள ட்ரான்ஸ்பாண்டனெய்ரா நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள வறண்ட பூமியில் எடுக்கப்பட்டது. 2020 வறட்சி உச்சத்தில் இருக்கும்போது ட்ரோன் கேமராவை கொண்டு எடுக்கப்பட்ட படம். நிலப்பரப்பு, இரண்டாம் இடம்: பிரேசிலில் உள்ள செரா டோ மர் மலைத்தொடர், புகைப்படக் கலைஞர் டெனிஸ் ஃப்ரெய்ரா நெட்டோ பட மூலாதாரம்,DENIS FERREIRA NETTO/TNC PHOTO CONTEST 2021 ஹெலிகாப்டரில் சென்ற கொண்டிருந்தபோது டைனோசர் தலை போன்று காட்சியளிக்கும் வெள்ளை போர்த்திய இந்த அழகிய மலைத்தொடரை கண்டேன் என்கிறார் இந்த புகைப்படக் கலைஞர். நிலப்பரப்பு சிறப்பு பிரிவு: வாழ்க்கையின் வண்ணம், ஸ்காட் போர்டெலி, ஆஸ்திரேலியா பட மூலாதாரம்,SCOTT PORTELLI/TNC PHOTO CONTEST 2021 மழைக்காலங்களில், வெப்பமண்டல வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள கார்பெண்டாரியா வளைகுடாவில் உள்ள பல ஆறுகள், கழிமுகங்கள், சிற்றோடைகள் எல்லாம் சேர்ந்து இயற்கையின் இந்த பிரமிக்கும் காட்சியை உருவாக்குகின்றன. மக்கள் மற்றும் இயற்கை பிரிவு வெற்றியாளர்: ஒரங்குட்டான்களை பாதுகாத்தல், அலெய்ன் க்ரூடெர், பெல்ஜியம் பட மூலாதாரம்,ALAIN SCHROEDER இந்த புகைப்படம் ஒரு இந்தோனீசிய ஒரங்குட்டானை மீட்டு, மறுவாழ்வு அளித்து, வெளியேவிடுவதை ஆவணப்படுத்துகிறது. சுமத்ரா ஒரங்குட்டான் பாதுகாப்பு திட்டக் குழு, ப்ரெண்டா இந்த மூன்று மாத ஒரங்குட்டானை அறுவை சிகிச்சைக்கு தயார்ப்படுத்துகின்றனர். மக்கள் மற்றும் இயற்கை பிரிவு இரண்டாம் இடம்: மணல் புயல், புகைப்படக் கலைஞர் டாம் ஓவரால், ஆஸ்திரேலியா பட மூலாதாரம்,TOM OVERALL/TNC PHOTO CONTEST 2021 மக்கள் மற்றும் இயற்கை சிறப்புப் பிரிவு: வீட்டிற்கு போகும் வழியில், மிங்சியாங், சீனா பட மூலாதாரம்,MINQIANG LU/TNC PHOTO CONTEST 2021 நீர், வெற்றியாளர்; கசி அரிஃபுஜாமன், வங்கதேசம் பட மூலாதாரம்,KAZI ARIFUJJAMAN/TNC PHOTO CONTEST 2021 நீர், இரண்டாம் பரிசு; நீச்சல், ஜோரம் மென்னஸ், மெக்சிகோ பட மூலாதாரம்,JORAM MENNES/TNC PHOTO CONTEST 2021 நீர், சிறப்புப் பிரிவு: பனி முட்டைகள், ஜார்ஜ் அண்ட்ரே ம்ரக்லியா, அர்ஜென்டினா பட மூலாதாரம்,JORGE ANDRÉS MIRAGLIA/TNC PHOTO CONTEST 2021 வனஉயிர்கள் வெற்றியாளர்: கொந்தளிப்பான நீச்சல், புத்திலினி டெ சோய்சா, ஆஸ்திரேலியா பட மூலாதாரம்,BUDDHILINI DE SOYZA/TNC PHOTO CONTEST 2021 வனவிலங்குகள், இரண்டாம் இடம்: சூரியகாந்திப்பூ, மாச்சேஸ் பியாசியாக், போலாந்து பட மூலாதாரம்,MATEUSZ PIESIAK/TNC PHOTO CONTEST 2021 வனவிலங்குகள், சிறப்பு பிரிவு: தேடல், தாமஸ் விஜயன் கனடா பட மூலாதாரம்,THOMAS VIJAYAN https://www.bbc.com/tamil/global-58767044
 7. Sinopharm போட்டவர்களுக்கு அனுமதி இல்லையோ?! சுற்றுலா போகலாம் என இருந்தேன்! அனுமதிக்கும் வரை காத்திருக்க வேணும்.
 8. இதில கொம்பு சீவ என்ன இருக்கு! உண்மையை சொன்னேன். சக மனிதனை மனிதனாக மதித்து நடக்காவிடில் பதிலுக்கு பதில் நடவடிக்கை மாற்றத்தை தரும். எனது கிராமத்தில் கடந்த 22 ஆண்டுக்கு முன் நடந்த வரலாற்றை சொன்னேன்.
 9. பொருளாதார நிலையும் அவர்கள் வாழும் ஊரில் சிறுபான்மையாக இருப்பதும் தான் இந்நிலைக்கு காரணம். இல்லாவிடில் உடல் உழைப்பாளிகளான அவர்களின் வலிமைக்கு முன் இவர்கள் எம்மாத்திரம்.
 10. எங்கட ஊர்ல செய்த மாதிரி திரும்ப வெட்டினால் கப்சிப் என்று இருப்பாங்கள்.
 11. ஓல்எல்எக்ஸ், சுலேகா விளம்பரங்கள்: ஆன்லைனில் இப்படியும் ஒரு நூதன மோசடி - எப்படி தடுப்பது? எம்.ஏ. பரணிதரன் பிபிசி தமிழ் 30 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இணையம் வழியாக உங்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள், அதனால் நீங்கள் சந்திக்கும் சவால்கள், அதற்கான தீர்வுகள் குறித்து விரிவாகச் சொல்லும் பிபிசி தமிழின் சைபர் செக்யூரிட்டி தொடரின் நான்காம் பகுதி இது. இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் ஃபோன், ஒரு வாட்ஸ்ஆப் செயலி, பேடிஎம் அல்லது கூகுள் பேவுடன் இணைக்கப்பட்ட ஒரு வங்கிக்கணக்கு - இவை இருந்தால் போதும், நூதன மோசடி தொழிலில் ஈடுபடலாம் என்பதை நிரூபித்து கடந்த சில ஆண்டுகளாகவே சைபர் கிரைம் காவல்துறைக்கு சவால் விடுத்து வருகின்றன பல மோசடிக்குழுக்கள். சில இடங்களில் இந்த மோசடி தனி நபர்களாலும் மேற்கொள்ளப்படுகிறது. முதலில் இது என்ன மோசடி, இது எப்படி நடக்கிறது என்பதை விளக்க சில சம்பவங்களை இங்கே தொகுத்தளிக்கிறோம். சென்னையின் பிரபல பன்னாட்டு தனியார் நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் அனாமிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது சொந்த மாநிலம் கர்நாடகா. பொறியியல் பட்டதாரியான இவர் 15-20 பேர் கொண்ட அணியை வழிநடத்தி வருகிறார். கொரோனா பெருந்தொற்று தணியத் தொடங்கிய நிலையில், பெங்களூரு கிளையில் பணியாற்ற செல்லுமாறு உத்தரவிடுகிறது இவரது நிறுவனம். பெங்களூரு தனது சொந்த ஊர் என்பதால், சென்னை குடியிருப்பில் வாங்கிப் போட்ட சில பொருட்களை விற்க முடிவு செய்தார். நண்பர்களிடம் சொல்லி வைத்தபோதும் பொருளை வாங்க யாரும் ஆர்வம் காட்டவில்லை. இதனால் இலவச விளம்பர தளங்களான ஓஎல்எக்ஸ், சுலேகா டாட் காம் போன்ற விளம்பர தளங்களில், ‘நான் அவசரமாக பணி மாற்றல் பெறுகிறேன், புதிய, வண்ணமயமான ஃபிரிட்ஜ் 8 ஆயிரம் ரூபாய், கேஸ் ஸ்டவ் ரூ. 1,000, 3+2 சோஃபா ரூ. 8,000, கட்டில் - ரூ. 10 ஆயிரம் என்ற விலையில் விற்க விரும்புகிறேன். இது நியாயமான விலை,’ என்று ஆங்கிலத்தில் விளம்பரம் செய்கிறார். தமது பொருட்கள் சிலவற்றின் படங்களையும் அந்த தளங்களில் அவர் பதிவேற்றி தமது செல்பேசி எண்ணையும் பகிர்கிறார். தொடரின் முந்தைய கட்டுரைகள்: ஆன்லைன் ஷாப்பிங்: ரூ.10 ஆயிரத்துக்கு கேமரா வாங்க ஆசைப்பட்டு 22 லட்சம் இழந்த இளைஞர் `உங்கள் தனிநபர் தரவுகள் நிச்சயம் திருடப்படும்` - எச்சரிக்கையாக இருப்பது எப்படி? ஆச்சரியமூட்டும் வகையில் அடுத்த சில நொடிகளிலேயே அவருக்கு அழைப்புகள் வருகின்றன. சாதாரண அழைப்பாக இல்லாமல் வாட்ஸ்ஆப்பில் அவருக்கு அழைப்பு வருகிறது. "உங்கள் விளம்பரங்களை பார்த்தோம். நாங்கள் கல்லூரி மாணவர்கள். உங்களுடைய பொருட்கள் எல்லாவற்றையும் நாங்களே வாங்கிக் கொள்கிறோம். விலை பிரச்னையில்லை. நாளையே வாங்கிக் கொள்கிறோம்," என்று மறுமுனையில் பேசியவர்கள் இணைப்பை துண்டிக்கின்றனர். ஆசையை தூண்டி நடக்கும் மோசடி பட மூலாதாரம்,OLX பொருட்களை விற்கும் ஆர்வத்தில் இப்போது அனாமிகா, அவர்களுக்கு வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் செய்து, "எப்போது வாங்க வருகிறீர்கள்? நீங்கள் வரும்போது நான் வீட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக கேட்கிறேன்...." என்கிறார். அதற்கு அவர்கள், "முதலில் பணத்தை செலுத்தி விடுகிறோம். எங்களுடைய நண்பர்களில் ஒருவர் வந்து வாங்கி கொள்வார்," என்று இரு வரிகளில் பதில் தந்தனர். "இல்லை, இல்லை.... பொருட்களை வாங்கும்போதே பணத்தை கொடுத்து விடுங்கள்," என அனாமிகா கூற, "நாங்கள் கல்லூரிக்கும் கூடுதல் பயிற்சி வகுப்புகளுக்கும் இடையே அங்குமிங்குமாக செல்பவர்கள். அதனால் பேடிஎம்மில் பணத்தை அனுப்புகிறோம். பொருட்களை மட்டும் வேறு யாருக்கும் கொடுக்காதீர்கள்," என்று எதிர்முனையில் மீண்டும் பதில் வருகிறது. விளம்பரம் செய்த ஒரே நாளில் விற்பனை, அதுவும் கல்லூரி மாணவர்கள். இன்னும் கொஞ்சம் கூடுதலாக பொருட்களுக்கு விலை போட்டிருக்கலாமோ என்று அனாமிகா மனதில் ஆசை துளிர்விடுகிறது. மாலை வரை அழைப்புக்காக காத்திருந்தும் எதிர்தரப்பில் இருந்து பதில் வரவில்லை. இப்போது அவரே வாட்ஸ்ஆப்பில், "எப்போது வருவீர்கள் என உறுதிப்படுத்த முடியுமா?" என மெசேஜ் அனுப்பினார். உடனே மறுமுனையில், "சரி உங்களுக்கு இந்த எண்ணில் இருந்து பேடிஎம் மூலம் ரூ.1 பணம் அனுப்புகிறோம். கிடைத்ததை உறுதிப்படுத்தியவுடன் எல்லா பொருட்களுக்குமாக சேர்த்து ரூ. 27 ஆயிரத்தை டிரான்ஸ்ஃபர் செய்கிறோம்," என்று பதில் வந்தது. ஆனால், ரூ. 1 பணம் வரவில்லை. அதற்கு பதிலாக ஒரு பார் கோடை அனுப்புகிறார்கள். அதில் ரூ. 1 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. "உங்கள் செல்பேசி எண்ணை பேடிஎம்-இல் டைப் செய்யும்போது சுற்றிக் கொண்டே இருக்கிறது. சரி.... நீங்களே எங்களுக்கு ரூ. 1 செலுத்துங்கள். உங்கள் எண்ணை சேவ் செய்து கொண்டு பணத்தை டிரான்ஸ்பர் செய்கிறோம்," என எதிர்முனையில் இருந்து மீண்டும் பதில் வர, பரிவர்த்தனை கை கூடும் ஆர்வத்தில் டெஸ்க்டாப் வெப் வாட்ஸ்ஆப்பில் ஸ்கேன் கோடை டவுன்லோடு செய்த அனாமிகா, கையில் இருந்த செல்பேசி உதவியுடன் பார்கோடை தனது பேடிஎம் செயலியில் ஸ்கேன் செய்தார். அது நேராக பணத்தை குறிப்பிடும் பக்கத்துக்கு செல்லாமல் பணப்பரிமாற்றத்துக்கான பாஸ்வோர்ட் ஸ்க்ரீனுக்கு சென்றது. ரூ. 1 தானே நமது கணக்கில் இருந்து கழியப்போகிறது என பரிவர்த்தனை பாஸ்வோர்டை டைப் செய்கிறார். அடுத்த நொடியே அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 30 ஆயிரம் கழிக்கப்படுகிறது. இப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை அறிகிறார் அனாமிகா. அலுவலகத்தில் 20 பேர் கொண்ட அணியை வழிநடத்தும் டேட்டா அனாலிஸ்ட் இப்படி ஒரு மோசடியில் சிக்கி விட்டோமே என்ற எண்ணத்துடன், அடுத்து எப்படி பிரச்னையை சமாளிப்பது என்று குழம்பியிருக்கிறார். எதிர்முனையில் பேசிய நபர்கள் அவரது எண்ணை இப்போது வாட்ஸ்ஆப்பில் பிளாக் செய்து விட்டனர். நண்பர்கள் சிலர் சைபர் கிரைமில் புகார் தெரிவியுங்கள் என்று அறிவுறுத்தினார்கள். ஆனால், வெளியே தெரிந்தால் தான் அவமானப்படுத்தப்படுவோமோ என்ற அச்சத்தில் தொலைத்த ரூ. 30 ஆயிரத்துடன் தமது நிலையை நொந்து கொண்டு அடுத்த வேலையை பார்க்க தயாராகி விட்டார் அனாமிகா. இவர் பற்றி நண்பர் மூலம் அறிந்து அவரை பிபிசி தமிழுக்காக தொடர்பு கொண்டபோது இப்படி கூடவா ஏமாற்றுவார்கள் என்று நம்மிடம் ஆதங்கப்பட்டார் அனாமிகா. பட மூலாதாரம்,SOCIALMEDIA படக்குறிப்பு, பணம் வாங்க முயலும் பயனரை ஏமாற்ற மோசடி பேர்விழிகள் பல சேட்டிங் உத்திகளை பயன்படுத்துவார்கள் அனாமிகா ஏமாந்தது ஒரு வகை என்றால் அவரைப் போல இதேபாணியில் பணத்தை பறிகொடுத்தவர்கள் பல வகை. அனாமிகா விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் தோற்றத்தில் வந்த மோசடி பேர்விழிகள், பல இடங்களில் ராணுவ வீரர்கள் போர்வையில் மோசடியில் ஏமாந்திருக்கிறார்கள். சிலர், காணொளி காட்சியில் ராணுவ சீருடையில் கூட தோன்றி நான் அவசரமாக மாற்றலாகி வெளி மாநிலம் செல்கிறேன். எனது மோட்டார் பைக்கை விற்கிறேன் என்று பைக்கை எல்லாம் காட்டுவார்கள். பணப்பரிவர்த்தனை பேரத்துக்கு முன்பாக தமது அடையாள அட்டை என கூறும் ஒரு சில ஆவணங்களையும் அவர்கள் பகிருவார்கள். கடைசியில் ஆயிரக்கணக்கில் பணத்தை பறிகொடுத்த பிறகே இப்படியும் மோசடி நடக்குமா என்று பலரும் அறியத் தொடங்குகின்றனர். "வேகமாக வளர்ந்து வரும் இன்டர்நெட் உலகில், அரசாங்கமே ரொக்கப் பரிவர்த்தனையை தவிருங்கள் - ஆன்லைன் பரிவர்த்தனையை செய்யுங்கள் என ஊக்குவிக்கிறது. சாலையோர வியாபாரி முதல் நட்சத்திர விடுதி வரை இன்று எங்கும் பேடிஎம், கூகுள் பே, யுபிஐ செயலிகள் மூலம் பரிவர்த்தனைகள் நடக்கின்றன. இது வரவேற்கக் கூடிய தொழில்நுட்ப புரட்சி என்றாலும், இதைப் பயன்படுத்தியே மோசடிகளும் தடையின்றி தொடருவதுதான் வேதனை தரும் விஷயம்," என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். சரி... இந்த மோசடிகளை எப்படி தடுப்பது? பட மூலாதாரம்,USER DEFINED படக்குறிப்பு, எங்கள் பொறுப்பை தட்டிக்கழிக்காமல் இருக்க எச்சரிக்கை விளம்பரங்களை இயன்றவரை பயனர் உள்ளே நுழையும்போதே வெளியிடுகிறோம் என்று இந்த தளங்களின் நிறுவனங்கள் கூறுகின்றன. இப்படிப்பட்ட மோசடி பேர்வழிகளை ஓஎல்எக்ஸ், சுலேகா, லோகான்டோ போன்ற தளங்களே ஏன் தடுக்க முடியாது? ஒரு சில டேட்டிங் செயலியில் மோசடி நபர்களை தடுக்க, அவர்களின் அசல் அடையாள அட்டை சரிபார்ப்பு, முகநூல், ட்விட்டர் போன்ற அசல் முகவரியுடன் ஒப்பீடு செய்யப்பட்ட பயனர்களை மட்டுமே தளத்துக்குள் அனுமதிக்கும் வழக்கம் உள்ளது. அது போல, இந்த இலவச விளம்பர தளங்கள் ஏன் தங்களுடைய பயனர்களை தணிக்கை செய்ய முடியாது என்று பலரும் கேட்கின்றனர். இந்த ஓஎல்எக்ஸ், சுலேகா போன்ற தளங்கள், "நாங்கள் இலவசமாக தளத்தை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கிறோம். நல்லது, கெட்டது போன்றவற்றை தரம் பிரிப்பது பயனர்களின் கடமை. அதில் நாங்கள் தலையிடுவதில்லை. எங்கள் பொறுப்பை தட்டிக்கழிக்காமல் இருக்க எச்சரிக்கை விளம்பரங்களை இயன்றவரை பயனர் உள்ளே நுழையும்போதே வெளியிடுகிறோம். அதன் பிறகும் அவர்கள் மோசடி வலையில் சிக்குகிறார்கள்," என்று கூறுகின்றன. முன்பு நாம் குறிப்பிட்ட அனாமிகாவின் அனுபவத்தில் அவர் ஒரு முறை மட்டுமே ரூ. 30 ஆயிரத்தை தொலைத்து விட்டு பரிதவித்தார். சென்னை பல்லாவரத்தில் ஒருவர் இதேபாணியில் ரூ. 13 ஆயிரத்துக்கு மோட்டார் சைக்கிள் விற்பனை என்ற விளம்பரத்தை பார்த்து அந்த விளம்பரதாரரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். மறுமுனையில் இருந்தவர், நான் பல்லாவரம் ராணுவ அலுவலகத்தில் இருந்து ராஜஸ்தானுக்கு இடமாற்றலாகி விட்டேன் என்று கூறி தமது அடையாள அட்டை, வாகன பதிவுச்சான்றிதழ், காப்பீடு பக்கம் போன்றவற்றை அனுப்பி வைக்கிறார். வாகனத்தை பார்க்க எப்போது வருவது என கேட்டபோது, "நான் இருப்பது பொதுமக்களுக்கு தடை செய்யப்பட்ட பகுதி. முதலில் ரூ. 5,000 முன்பணம் செலுத்துங்கள். நானே வாகனத்தை பல்லாவரம் ராணுவ முகாமுக்கு வெளியே கொண்டு வந்து தருகிறேன். அங்கேயே போக்குரவத்து துறையின் வாகன டிரான்ஸ்ஃபர் படிவத்தில் கையெழுத்து போட்டு மீத பணத்தை கொடுத்தால் போதும்," என்கிறார் அந்த ராணுவ வீரர். சரி ராணுவ வீரர்தானே என்ற நம்பிக்கையில் பணம் செலுத்த முடிவு செய்தார் வாகனத்தை வாங்க விரும்பிய இளைஞர். அனாமிகா சந்தித்த அதே அனுபவம். இங்கே வேறு ஒரு க்யூஆர் கோட். இம்முறை மோட்டார் சைக்கிள் வாங்க ஆசைப்பட்டவர் இழந்தது ரூ. 50 ஆயிரம். ஐயோ நாம் ஏமாந்து விட்டோமே என்று மறுமுனையில் ராணுவ வீரரை தொடர்பு கொண்டு பேச, "அப்படியா, இது எப்படி நடந்தது என தெரியவில்லையே.... என் அம்மாவுக்கு அனுப்பிய கியூஆர் கோடை உங்களுக்கு அனுப்பி விட்டேன் என நினைக்கிறேன். சரி உங்களுடைய மீத பணத்தை திருப்பித் தருகிறேன் இப்போது அனுப்பும் கியூஆர் கோடை ஸ்கேன் செய்யுங்கள். உங்கள் பணம் உங்களுக்கு வந்து விடும்" என்று ராணுவ வீரர் கூற, பதற்றத்தில் தமது யுபிஐ பாஸ்வோர்டை தட்டச்சு செய்த அடுத்த சில நிமிடங்களில் மேலும் சில ஆயிரங்கள், பைக் வாங்க ஆசைப்பட்டவரின் கணக்கில் இருந்து கழிகிறது. பொருளை வாங்க ஆசைப்படுபவரின் குரல், வயது, சூழ்நிலை போன்றவற்றை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வது இதுபோன்ற மோசடி பேர்விழிகளின் பாணி என சைபர் கிரைம் நிபுணர்கள் கூறுகின்றனர். பணத்தை தொலைத்த நபர் தான் ஏமாற்றப்பட்டது பற்றி பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், பகிரப்பட்ட ராணுவ ஆவணங்கள், வாகன ஆவணங்கள் அனைத்தும் போலி என தெரிய வருகிறது. எதிர்முனையில் பேசிய நபரின் செல்பேசி எண் ராஜஸ்தான், கொல்கத்தா போன்ற நகரங்களில் பதிவானவை அல்லது இன்டர்நெட்டில் கிடைக்கும் இலவச செல்பேசி எண் மூலம் நடக்கும் மோசடி என தெரிய வந்தது. எப்படி கவனமாக இருப்பது? பட மூலாதாரம்,SARAVANAN படக்குறிப்பு, எஸ். சரவணன், காவல்துறை கண்காணிப்பாளர் - திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு, தமிழ்நாடு காவல்துறை இந்த மோசடியை எப்படி தடுப்பது என்று தமிழ்நாடு காவல்துறையின் திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு பிரிவின் கண்காணிப்பாளர் எஸ். சரவணனிடம் பிபிசி தமிழ் கேட்டது. "பல இடங்களில் இதுபோன்ற மோசடிகளுக்கு படித்தவர்களே இரையாகிறார்கள். போதிய கவனம் இல்லாமல் அலட்சியமாக பணப்பரிவர்த்தனை செய்வது, அஜாக்கிரதை போன்றவை தான் இதுபோன்ற மோசடி பேர்வழிகளுக்கு சாதகமாகிறது. பொருட்களை விற்கவோ, வாங்கவோ முதலில் அவர்கள் உங்களுடைய ஆசையை தூண்டுவார்கள். நம்பிக்கை தரும் வகையில் பேசுவார்கள். ஆவணங்கள் என கூறப்படும் சில பக்கங்களை பகிருவார்கள். அவர்களுடன் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்யும் முன்பாக ஒரு நிமிடம் யோசித்தால் போதும். பொருளை வாங்குபவராக இருந்தால், 'அவர்தானே பணத்தை தர வேண்டும். நாம் ஏன் கியூஆர் கோடில் ஸ்கேன் செய்து நமது பரிவர்த்தனை பாஸ்வோர்டை டைப் செய்ய வேண்டும்?' என சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும்" என்கிறார் சரவணன். "பொருளை விற்பவராக இருந்தால், சம்பந்தப்பட்ட நபரை நேரில் சந்திக்காமல் வாகனங்கள், மின்னணு பொருட்களை விற்கக் கூடாது. அப்படியே சந்தித்தாலும், விற்பது நீங்கள். உங்களுக்குத்தான் அவர்கள் பணம் செலுத்த வேண்டுமே தவிர, நீங்கள் அவர்களுக்கு ரூ. 1 அல்லது வேறு எந்த தொகையோ செலுத்தக் கூடாது. இது ஒன்றும் பிரபல கடைகள் அல்லது மருந்தகங்களில் இருப்பது போல பேடிஎம் வாலட்டில் இருந்து கழித்துக் கொள்ளப்படும் பரிவர்த்தனை கிடையாது. முழுக்க, முழுக்க முன்பின் அறிமுகமில்லாத இரு நபர்களிடையே நடக்கும் பரிவர்த்தனை என்பதால் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்," என்று அறிவுறுத்துகிறார் காவல்துறை அதிகாரி சரவணன். கடந்த ஆண்டு ஓஎல்எக்ஸ் தளத்தை பயன்படுத்தி நடந்த ஒரு மோசடியில் ராஜஸ்தான் மாநிலத்தில் குற்றவாளிகள் இருப்பதை அறிந்து அவர்களை பிடிக்க தமிழக காவல்துறையின் தனிப்படை சென்றது. அங்குள்ள பரத்பூர் என்ற இடத்தில் நரேஷ் பால் சிங், பச்சு சிங் ஆகிய இரண்டு குற்றவாளிகளை ஒப்படைக்க ஒரு கிராமமே எதிர்ப்பு தெரிவித்தது. காரணம், இந்த கும்பல் பிறரிடம் மோசடி செய்து சுருட்டிய கோடிக்கணக்கான பணத்தை கிராமத்தினருடன் பகிர்ந்து உல்லாசமாக வாழ்ந்திருந்தது விசாரணையில் தெரிய வந்ததாக சைபர் கிரைம் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது கிட்டத்தட்ட நடிகர் கார்த்தி நடித்த தீரன் படத்தை ஒத்த காட்சி போல இருக்கிறது. இது ஏதோ தமிழ்நாட்டில் மட்டும் நடக்கும் ஆன்லைன் குற்றம் அல்ல. இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த குற்றங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே நடக்கின்றன. டெல்லி காவல்துறை கடந்த ஆண்டு பகிர்ந்த தகவலின்படி தலைநகரில் பதிவான ஆன்லைன் மோசடி குற்றங்களில் கிட்டத்தட்ட 62 சதவீதம் சமூக ஊடக தளங்கள் தொடர்புடையவை. இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு விழிப்புணர்வு காணொளியை தயாரித்து தமது சமூக பக்கங்கள் வாயிலாக டெல்லி காவல்துறை வெளியிட்டது. Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 டெல்லியை அடுத்த ஹரியாணாவின் குருகிராமிலும் இதுபோன்ற மோசடிகள் அதிகமாக நடக்கின்றன. "இந்தியாவில் சட்டங்கள் கடுமையாக இல்லை" இந்தியாவில் வங்கியில் பதிவு செய்யப்பட்ட செல்பேசி எண் மூலம் இணைக்கப்பட்ட யுபிஐ பரிவர்த்தனை செயலி, பேடிஎம் செயலி போன்றவை ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், அவற்றில் மோசடி நடக்கும்போது அந்த நிறுவனங்களை பொறுப்புடைமை ஆக்க முடியாது. Twitter பதிவை கடந்து செல்ல, 2 Twitter பதிவின் முடிவு, 2 அமெரிக்காவில் இதுபோன்ற பணப்பரிவர்த்தனையில் மோசடிகளை தடுக்கும் பொறுப்பு அந்தந்த பரிவர்த்தனை செயலிகளுக்கே உண்டு. அதை சார்ஜ் பேக் என்று அந்நாட்டில் அழைக்கிறார்கள் என்கிறார் ஹரியாணா காவல்துறையின் சைபர் பிரிவு காவல்துறை உயரதிகாரி ஒருவர். இது குறித்து ஓஎல்எக்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது, இதுபோன்ற குற்றங்களை தடுக்க மூன்று வழிகளை கையாளுவதாகக் கூறியது. அந்த நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர், "ஆரம்பத்திலேயே தங்களுடைய விவரங்களை பதிவிடும் நபர் போலியானவர் என தெரிய வந்தால், அவரது பதிவையே தடுப்போம். இரண்டாவதாக, எங்களுடைய தளத்தை எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்தலாம் என்ற யோசனையை பயனர்களுக்குத் தருகிறோம். மூன்றாவதாக, மோசடி நடப்பது குறித்து எங்களுடைய கவனத்துக்குத் தெரிவித்தால், உடனடியாக காவல்துறையிடம் அது தொடர்பான புகாரை எப்படி செய்வது என்ற வழிகாட்டுதல்களை பயனருக்கு வழங்குவோம்," என்று கூறினார். Twitter பதிவை கடந்து செல்ல, 3 Twitter பதிவின் முடிவு, 3 பேடிஎம் நிறுவனமும் தமது பங்குக்கு 'விழிப்புடன் இருங்கள்' என்ற ஒரு பக்கத்தை தமது இணையதளத்தில் பகிர்ந்து கியூஆர் கோட் ஸ்கேன் செய்யும்போது எப்படி கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது. ஆனால், இவை எல்லாம் மோசடி நடக்கும்போது பயனர்களின் கவனத்தில் படுவதில்லை என்றே தோன்றுகிறது. டெல்லி முதல்வரின் மகள் ஏமாந்த சம்பவம் பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, ஹர்ஷிதா, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் மகள் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா கேஜ்ரிவால். இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐஐடி-டெல்லி) வேதிப் பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றவர். ஓஎல்எக்ஸில் தமது வீட்டு சோஃபாவை விற்பதற்காக விளம்பரம் செய்திருந்தார். அதை பார்த்த நபர், ஹர்ஷிதாவுக்கு ஒரு QR குறியீட்டை அனுப்பினார்., அதைத்தொடர்ந்து தொகையைப் பெறுவதற்காக அதை ஸ்கேன் செய்தபோது, அவரது நம்பகத்தன்மையை பெற முதலில் ஒரு சிறிய தொகையை மாற்றினார் ஹர்ஷிதா. பிறகு, அவரது கணக்கில் இருந்து முதலில் ரூ .20,000 மற்றும் ரூ .14,000 என மொத்தம் ரூ. 34 ஆயிரம் டெபிட் ஆனது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இந்த மோசடிக்குப் பிறகு விசாரணை நடத்திய டெல்லி சிவில் லைன்ஸ் காவல் நிலைய அதிகாரிகள், சாஜித், கபில், மனவேந்திரா ஆகியோரை கைது செய்தது. போலி கணக்குகளை தொடங்குதவற்கு உதவி செய்த நான்காவது நபர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். மத்திய உள்துறை சைபர் கிரைம் பிரிவின் அறிவுரைகள் இதுபோன்ற ஆன்லைன் மோசடிகள் நடக்கும்போதெல்லாம் சம்பந்தப்பட்ட பயனர் எப்படி தான் ஏமாறாமல் தற்காத்துக் கொள்வது? மத்திய உள்துறை சைபர் பிரிவு என்ன அறிவுரைகளை வழங்குகிறது? பட மூலாதாரம்,MHA வங்கியில் இருந்த பணம் மோசடி செயல்பாடுகள் மூலம் டெபிட் ஆகியிருந்தால், உடனே அந்த வங்கியின் கிளை அல்லது ஆன்லைனில் அதுபற்றிய புகாரை பதிவு செய்வது அவசியம். பிறகு மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையில் புகார் தெரிவிக்க வேண்டும். மத்திய உள்துறை அமைச்சகமும் https://cybercrime.gov.in/ என்ற இணையதளத்தை நடத்தி வருகிறது. அதில் எழுத்துபூர்வமாகவோ 24 மணி நேரமும் இயங்கும் புகார் சேவை மையம் மூலமாகவோ புகாரை பதிவு செய்யலாம். ஆன்லைன் விளம்பர தளங்கள் அல்லது கியூஆர் கோடு தொடர்புடைய பணப்பரிவர்த்தனையில் ஈடுபடும்போது முதலில் பொருட்களை வாங்குபவர் அல்லது விற்பவரின் நம்பகத்தன்மையை பல வழிகளில் உறுதிப்படுத்த வேண்டும். வாட்ஆப் செல்பேசி எண்ணாக இருந்தால் அதில் இடம்பெற்ற 'டிபி", அதன் பெயர் போன்ற விவரங்களையும் அதில் பேசும் நபரும் ஒன்றுதானா என அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். அப்படி இல்லாவிட்டால், அழைப்பு வந்த எண்ணை கூகுள் சர்ச்சில் தட்டச்சு செய்து, பேசிய நபரின் விவரங்கள் கூகுள் சர்ச்சில் வருகிறதா என பார்க்கலாம். பெரும்பாலும்இந்த முயற்சியிலேயே அழைக்கும் எண்கள் மோசடியானவை என்பதை அதைக் குறிப்பிட்டே பலரும் செய்த முந்தைய புகார்கள் மூலம் அறியலாம். பொருளை வாங்குபவரும், விற்பவரும் காட்டும் அவசரத்தனம் அல்லது ஆசையைத் தூண்டும் பேச்சுகளை தரம் பிரித்து அறிந்து கொள்ள வேண்டும். எந்தவொரு கட்டத்திலும் ஆன்லைனில் பொருளை விற்பதாகவோ வாங்குவதாகவோ இருந்தால், கியூஆர் கோட் பரிவர்த்தனையை செய்யாதீர்கள். அத்தகைய பரிவர்த்தனை அனைத்துமே மோசடியின் அடையாளம். ஆன்லைனில் யுபிஐ பணப் பரிவர்த்தனை என்பது நேரடியாக யுபிஐ அல்லது யுபிஐ தொடர்புடைய செயலிக்குள் நுழைந்து உங்களால் 'அப்ரூவ்ட்'' செய்யப்பட்டு பாஸ்வோர்ட் அழுத்திய பிறகே வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை டெபிட் செய்யும் வசதியைத் தருவது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆன்லைனில் முன்பின் அறிமுகமில்லாத நபரிடம் இருந்து முன்பணத்தை வாங்காதீர்கள். பொருட்களை விற்பதாகவோ வாங்குவதாகவோ இருந்தால் இயன்றவரை நேரில் பேசி பணத்தை தரும் வகையில் கொண்ட பரிவர்த்தனையை மேற்கொள்ளுங்கள். ஆன்லைன் பரிவர்த்தனை மோசடியின் உச்சமாக, வாடிக்கையாளர் அல்லது பயனரின் நம்பிக்கையை பெற, இந்திய பாதுகாப்புப் படை, காவல்துறை, எல்லை பாதுகாப்புப்படை அல்லது மத்திய, மாநில அரசுகளில் பணியாற்றுவதாகக் கூறி தங்களுடைய அடையாள அட்டையை பகிர்வது, சீருடையில் தோன்றி காணொளி காட்சியில் பேசும் போக்கு நடக்கிறது. அத்தகைய நபர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள். சைபர் குற்றங்களில் சட்ட அமலாக்க அமைப்புகள் அவற்றின் கடமையை செய்வது ஒருபுறமிருந்தாலும், இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க, பயனரின் விழிப்புணர்வும் எச்சரிக்கை உணர்வும் மட்டுமே கைகொடுக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். நீங்கள் இதுபோன்ற சவால்களைச் சந்தித்திருந்தால், உங்கள் அனுபவங்களை bbctamizh@gmail.com என்ற மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ளலாம். https://www.bbc.com/tamil/india-58746148
 12. SRH vs CSK: சென்னையை அலறவிட்ட ஜேசன் ஹோல்டர், ஹெலிகாப்டர் ஷாட்டில் கரை சேர்த்த தோனி 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,BCCI/IPL படக்குறிப்பு, ஹைதராபாத் - சென்னை போடி - கோப்புப் படம் ஐபிஎல் 2021 சீசனின் 44ஆவது போட்டி செப்டம்பர் 30ஆம் தேதி வியாழக்கிழமை ஷார்ஜா மைதானத்தில் நடந்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. சென்னை போன்ற வலுவான அணிக்கு எளிய இலக்கு இருந்த போதிலும் திடீரென விக்கெட்டுகள் வீழ்ந்ததால் ஆட்டம் கடைசி ஓவர் வரை சென்றது. சென்னை அணித் தலைவர் மகேந்திர சிங் தோனி, தன் அக்மார்க் சிக்ஸர் அடித்து சூப்பர் கிங்ஸை கரை சேர்த்தார். டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. ஜேசன் ராய் 2 ரன்களோடு வெளியேறினார். மறு புறம் விரித்திமான் சாஹா நிதானம் காட்டி ரன்களைக் குவித்தாலும், மறு பக்கம் கேன் வில்லியம்சன் 11 ரன்களோடும், ப்ரியம் கார்க் 7 ரன்களோடும் பெவிலியன் திரும்பினர். விரித்திமான் சாஹாவுக்கு ஈடு கொடுத்து நின்று விளையாட ஆள் இல்லாமல் தடுமாறினார். 12.3ஆவது ஓவரில் விரித்திமான் சாஹாவும் வீழ்ந்தார். அப்போதே ஹைதராபாத் 4 விக்கெட் இழந்து 74 ரன்களை மட்டுமே அடித்திருந்தது. அவருக்குப் பின் களமிறங்கிய அபிஷேக் ஷர்மா, அப்துல் சமத் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் முறையே 18, 18, 5 ரன்களுக்கு தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். RR vs RCB: வெற்றி நடைபோடும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - காரணம் என்ன? MI vs PBKS: பஞ்சாபை வென்று ப்ளே-ஆஃப் கனவை தக்க வைத்த மும்பை இந்தியன்ஸ் சொல்லப் போனால் சன்ரைசர்ஸ் அணியிலேயே அபிஷேக் மற்றும் அப்துல் ஜோடி தான் அதிகபட்சமாக 35 ரன்களைக் குவித்தனர். கடைசி சில ஓவர்களில் களமிறங்கிய ரஷீத் கான் 17 ரன்களை அடித்தார். இதெல்லாம் போக சென்னை அணிகூடுதலாக 10 ரன்களைக் கொடுத்திருந்தது. 20 ஓவர் முடிவில் 134 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்திருந்தது ஹைதராபாத். சென்னையின் ஜோஷ் ஹேசில்வுட் 4 ஓவர்களுக்கு 24 ரன்களைக் கொடுத்து ஜேசன் ராய் உட்பட 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ட்வெயின் ப்ராவோ 4 ஓவர்களை வீசி 17 ரன்களை மட்டுமே கொடுத்து கேன் வில்லியம்சன் உட்பட 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஹைதராபாத்தின் ரன் ரேட்டுக்கு பெருந்தடை ஏற்படுத்தினார். ஷர்துல் தாகூர் 4 ஓவர்களில் 37 ரன்களை கொடுத்து ஜேசன் ஹோல்டரின் விக்கெட்டையும், ரவீந்திர ஜடேஜா 3 ஓவர்களில் 14 ரன்களை கொடுத்து விரித்திமான் சாஹா விக்கெட்டையும் வீழ்த்தினர். 135 இலக்கு... இருப்பினும் தடுமாறிய சென்னை பட மூலாதாரம்,BCCI/IPL படக்குறிப்பு, ஜேசன் ஹோல்டர், கோப்புப் படம் எளிய இலக்கோடு களமிறங்கிய ரிதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஃபாஃப் டூப்ளசி நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். 10.1ஆவது பந்தில் ரிதுராஜ் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுமுனையில் நல்ல ரன்களோடு டூப்ளசி ஆடிக் கொண்டிருந்தார். ஆனால் அடுத்தடுத்த வந்த மொயின் அலி 17 ரன்களோடும், சுரேஷ் ரெய்னா 2 ரன்களோடும் சடசடவென சரிந்தனர். அவர்களைத் தொடர்ந்து டூப்ளசியும் வெளியேற்றப்பட்டார். 10.1 ஓவரில் 75 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்றிருந்த நிலை, 15.5 ஓவரில் திடீரென 108 ரன்களுக்கு 4 விக்கெட் என சென்னையை கதிகலங்கச் செய்தது. இதற்கு ஒற்றை காரணம் ஜேசன் ஹோல்டர். ஆம், அந்த ஒற்றை மனிதர் தான் ரிதுராஜ், ரெய்னா, டூப்ளசி என சென்னையின் முக்கிய பேட்டர்களை வெளியேற்றி ஆட்டத்தை கடைசி ஓவர் வரை கொண்டு சென்றார். 4 விக்கெட் வீழ்ச்சிக்குப் பிறகு மகேந்திர சிங் தோனி மற்றும் அம்பதி ராயுடு இணை களத்தில் நிதானம் காட்டி அணியை வெற்றி பெறச் செய்தது. குறிப்பாக தோனி அடித்த அந்த சிக்ஸரை இணையவாசிகள், தோனி ரசிகர்கள் மற்றும் சென்னை விசிறிகள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். பட மூலாதாரம்,BCCI/IPL படக்குறிப்பு, மகேந்திர சிங் தோனி, கோப்புப் படம் இப்போட்டியின் வெற்றி மூலம் சென்னை முதல் அணியாக தன் ப்ளேஆஃப் வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது. ஐபிஎல் தொடங்கியதிலிருந்து சென்னை அணி 2020ஆம் ஆண்டு தவிர மற்ற எல்லா சீசனிலும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஹைதராபாத் அணி இந்த ஐபிஎல் சீசனில் அதிகாரபூர்வமாக தன் ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. செப்டம்பர் மாதம் ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கியதிலிருந்து நடைபெற்ற நான்கு (அனைத்து) போட்டிகளிலும் சென்னை வெற்றி பெற்றுள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய கடும் போட்டி நிலவும் நிலையில் இன்று கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரிட்சை நடத்தவிருக்கின்றன. நாளை டெல்லியும், மும்பையும் மோத உள்ளன. https://www.bbc.com/tamil/sport-58757679
 13. RR vs RCB: வெற்றி நடைபோடும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - காரணம் என்ன? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,BCCI/IPL படக்குறிப்பு, ரியான் பராக் கோப்புப் படம் ஐபிஎல் 2021 சீசனின் 43ஆவது போட்டி துபாய் மைதானத்தில் நேற்று (செப் 29, புதன்கிழமை) நடைபெற்றது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் பெங்களூரு வெற்றி என்கிற ஒற்றை இலக்கோடு, ஓரணியாக மோதி ராஜஸ்தானை வென்றது. டாஸ் வென்ற பெங்களூரு, முதலில் பந்துவீச தீர்மானித்தது. ராஜஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களான எவின் லெவிஸ் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் நல்ல தொடக்கம் கொடுத்தனர். சரியான நேரத்தில் 31 ரன்களோடு யஷஸ்வியின் விக்கெட்டை வீழ்த்தி இந்த இணைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் டேன் க்றிஸ்டின். 5 பவுண்டரியுடன் மூன்று சிக்ஸர்களை விளாசி அதிரடி காட்டிக் கொண்டிருந்த எவின் லெவிஸின் விக்கெட்டை வீழ்த்தி ராஜஸ்தானின் அதிவேக ரன் குவிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்தார் ஜார்ஜ் கார்டன். அப்போது ராஜஸ்தான் 11.1 ஓவர் முடிவில் 100 ரன்களுக்கு இரு விக்கெட்டை இழந்திருந்தது. அதன் பிறகு வந்த அணித் தலைவர் சஞ்சு சாம்சன் உட்பட எந்த ஒரு பேட்டரும் நிலைத்து நின்று ரன்களைக் குவிக்கவில்லை. சஞ்சு சாம்சன் 19 ரன்கள் மற்றும் க்றிஸ் மோரிஸ் 14 ரன்களைக் குவித்ததே அதிகபட்ச ரன்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். பட மூலாதாரம்,BCCI/IPL படக்குறிப்பு, சஞ்சு சாம்சன் கோப்புப் படம் ராஜஸ்தானின் மிடிஸ் ஆர்டர் பேட்டர்களான மஹிபால் லோம்ரார், லியாம் லிவிங்ஸ்டன், ராகுல் தீவாட்டியா, ரியான் பராக் என அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் வீழ்ந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டு இழப்புக்கு 149 ரன்களை குவித்திருந்தது ராஜஸ்தான். முதல் இரு விக்கெட்டுகளை வீழ்த்தியது எந்த அளவுக்கு முக்கியம் என விளையாடியதோ, அதே வேகத்தோடு அடுத்தடுத்த விக்கெட்டுகளை வீழ்த்தியது பெங்களூரு. மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா போன்ற ஆபத்தான பேட்டர்களின் விக்கெட்டை ஒரே ஓவரில் வீழ்த்தி, பெங்களூரின் வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்திய ஹர்ஷல் படேல், இந்த முறையும் க்றிஸ் மோரிஸ் உட்பட 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தானை கட்டுக்குள் வைத்தார். யுவேந்திர சாஹல், ஷபாஸ் அஹ்மத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த போட்டியில் பெங்களூரு அணி ஏழு பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 150 எடுத்தால் வெற்றி பட மூலாதாரம்,BCCI/IPL படக்குறிப்பு, பெங்களூரு ஓப்பனர்கள் - கோப்புப் படம் பெங்களூரு தரப்பில் களமிறங்கிய விராட் கோலி 25 ரன்களோடும், தேவ்தத் படிக்கல் 22 ரன்களோடும் பெவிலியம் திரும்பினர். சென்னைக்கு எதிரான போட்டியில் ஓப்பனர்கள் இருவரும் 110 ரன்களுக்கு மேல் அடித்துக் கொடுத்த பிறகு கூட, எந்த ஒரு பேட்டரும் நிலைத்து நிற்காமல் சீட்டு கட்டு போல சரிந்ததை பார்த்திருக்கிறோம். அப்படி இந்த முறையும் நடந்துவிடுமோ என பெங்களூரு ரசிகர்கள் அச்சத்தில் இருந்த போது, ஸ்ரீகர் பரத் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் கைகொடுத்தனர். அந்த ஜோடி, நிதானமாக ரன்களைக் குவித்து அணியை வெற்றி இலக்கை நோக்கி நகர்த்தினர். மேக்ஸ்வெல் 30 பந்துகளுக்கு 50 ரன்களைக் குவித்தார். இதில் 6 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸரும் அடக்கம். ஐபிஎல் 2021 - DC vs KKR : டெல்லியைத் தடுமாற வைத்த கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் MI vs PBKS: பஞ்சாபை வென்று ப்ளே-ஆஃப் கனவை தக்க வைத்த மும்பை இந்தியன்ஸ் பெங்களூரு அணி 17 பந்துகளுக்கு முன்பே தன் வெற்றி இலக்கை அனாயாசமாக அடைந்தது. ராஜஸ்தான் அணியும் ஏழு பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தி இருந்தது. ஆனால் அது பெங்களூருவின் ரன் குவிப்பை தடுக்கவோ, விக்கெட்டுகளை வீழ்த்தவோ உதவவில்லை. முஸ்தஃபிசுர் ரஹ்மான் மட்டுமே 3 ஓவர்களுக்கு 20 ரன்களைக் குவித்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். க்றிஸ் மோரிஸ்ஸின் 4 ஓவர்களில் 50 ரன்கள் போனது. தொடக்க வீரர்களை வீழ்த்திய வேகத்தில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை ராஜஸ்தான் வீழ்த்தவில்லை. க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் பரத் இணை வலுவாக நிலைபெற்று ரன்களை அடிக்கவிட்டது ராஜஸ்தான் அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமானது. திரும்பி வந்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் பட மூலாதாரம்,BCCI/IPL படக்குறிப்பு, பெங்களூரு அணி கோப்புப் படம் ஏப்ரல் 2020-ல் இந்த ஐபிஎல் சீசன் தொடங்கிய போது பெங்களூரு அணி, ஹைதராபாத், கொல்கத்தா, ராஜஸ்தான் என தொடர் வெற்றிகளைக் குவித்தது. செப்டம்பர் மாதம் மீண்டும் போட்டிகள் தொடங்கிய போது கொல்கத்தாவிடம் தோல்வி, சென்னையிடம் தோல்வி என துவண்டிருந்த அணி, மும்பை இந்தியன்ஸை 54 ரன்கள் வித்தியாசத்தின் வீழ்த்தி தன்னை போட்டியில் நிலைநாட்டிக் கொண்டது. நேற்று ராஜஸ்தானை வீழ்த்தி ஒரு அணியாக தன் ப்ளே ஆஃப் வாய்ப்பை உயிர்ப்போடு வைத்திருக்கிறது பெங்களூரு. ஒரு சில பேட்டர்கள் மட்டுமே ரன்களைக் குவிப்பது, டாப் ஆர்டர் பேட்டர்கள் வீழ்ந்தால் மொத்த அணியும் சடசடவென சரிவது போன்ற பிரச்சனைகளை எல்லாம் சரி செய்து, டீம் ஸ்பிரிட்டோடு விளையாடத் தொடங்கியுள்ளனர். பிரத்யேகமாக மிடில் ஆர்டர் பேட்டர்கள் பொறுப்பை உணர்ந்து பேட்டை சுழற்றத் தொடங்கியுள்ளனர். வரும் அக்டோபர் 3ஆம் தேதி பஞ்சாபையும், 6ஆம் தேதி ஹைதராபாத்தையும், 8ஆம் தேதி டெல்லியையும் எதிர்கொள்ளவிருக்கிறது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ். கடந்த இரு போட்டிகளைப் போல வரும் போட்டிகளிலும் ஜொலிக்குமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம். சீசனின் மத்தியில் தடுமாறிக் கொண்டிருந்த பெங்களூரு தற்பொது 11 போட்டிகளில் 7-ல் வென்று புள்ளிகள் பட்டியலில் 3ஆம் இடத்தை பிடித்திருகிறது. கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் 11 போட்டிகளில் 5-ல் வென்று 4 மற்றும் 5ஆவது இடத்தில் உள்ளன. https://www.bbc.com/tamil/sport-58744219
 14. இலங்கைக்கு கஞ்சா கடத்தினாரா யூடியூபர்? 270 கிலோ மூட்டைகள் சிக்கிய பின்னணி என்ன? பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, நாகை கடலோர பகுதியில் ஃபைபர் படகில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகளுடன் சுங்கத்துறை அதிகாரிகள் நாகையில் இருந்து பைபர் படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருந்த 270 கிலோ கஞ்சா, நாகை மாவட்ட சுங்கத்துறை அதிகாரிகளால் பைபர் படகுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 'நாகை மீனவன்' யூடியூப் பக்கத்தை நடத்தி வரும் குணசீலன் உட்பட நான்கு சந்தேக நபர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். நாகை துறைமுகம் அடுத்த கீச்சாங்குப்பம் ஆற்றுப்பகுதியில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக கஞ்சா கடத்த இருப்பதாக நாகை சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கடந்த 10 நாட்களாக நாகப்பட்டினம் துறைமுகம் மற்றும் கீச்சாங்குப்பம் பகுதியில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை அதிகாலையில் கீச்சாங்குப்பம் ஆற்றங்கரையோரத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில், நான்கு இரு சக்கர வாகனங்களில் வந்த 4 பேர், மீன்பிடி பைபர் படகில் பெரிய அளவிலான பொட்டலங்களை படகின் ஐஸ்பெட்டியில் ஏற்றிக் கொண்டு இருந்தனர். வாழைப்பழ கூழுக்குள் ஒளித்து 1,000 கோடி ரூபாய் கொக்கைன் கடத்தல் 3,000 கிலோ ஆப்கன் ஹெராயின் கடத்தியதாக சென்னை தம்பதி கைது - யார் அந்த டெல்லி புள்ளி? அதை பார்த்த சுங்கத்துறையினர் அந்த நபர்களை படகுடன் சுற்றி வளைக்க முயன்ற போது கடத்தல்காரர்கள் 4 பேர் படகிலிருந்து ஆற்றில் குதித்து தப்பினர். படக்குறிப்பு, பறிமுதல் செய்யப்பட்ட நாகை மீனவன் படகுடன் அதிகாரிகள் அந்த படகை அதிகாரிகள் சோதனை செய்த போது படகிற்குள் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பொட்டலங்களில் இருந்த 270 கிலோ கஞ்சாவை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய நான்கு இரு சக்கர வாகனம் மற்றும் ஒரு பைபர் படகையும் கைப்பற்றிய சுங்கத்துறையினர் தப்பி ஓடிய நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைபர் படகு 'நாகை மீனவன்' என்கின்ற யூடியூப் சேனல் நடத்தும் மீனவருக்கு சொந்தமானது என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தப்பி ஓடிய 4 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்த சுங்கத்துறையினர் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் சர்வதேச மதிப்பு 2 கோடி ரூபாய் இருக்கலாம் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து நாகை மாவட்ட சுங்கத்துறை கண்காணிப்பாளர் கழுகாசலமூர்த்தி பிபிசி தமிழிடம் பேசுகையில், "நாகை மாவட்டம் வேதாரண்யம், கோடியக்கரை, கீச்சாங்குப்பம், வேளாங்கண்ணி உள்ளிட்ட கடற்கரையில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கஞ்சா, சமையல் மஞ்சள் கடத்தப்பட்டு வருவதாக தகவல் கிடைத்து வருகிறது. தமிழக கடற்கரையில் இருந்து கடத்தி செல்லப்படும் கஞ்சா இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்படுவதுடன், கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய இலங்கையை சேர்ந்த நபர்கள் அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இலங்கையில் கைது செய்யப்படுபவர்களுடன் தொடர்பில் உள்ள தமிழகத்தை சேர்ந்தவர்கள் குறித்த தகவல்கள் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்டு அவர்களை கைது செய்து வருகிறோம். கடத்தல் சம்பவங்களை தடுக்க கடற்கரை ஒரங்களில் உள்ள மீனவ கிராமங்களை சேர்ந்த நபர்களிடம் ரகசிய தகவல்கள் பெறப்பட்டு சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கடற்கரை பகுதியில் சோதனை மேற்கொண்டு வருகிறோம். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கீச்சாங்குப்பம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து சுங்கத்துறை அலுவலர்கள் மீனவர்கள் போல் வேடமிட்டு கடற்கரை பகுதியில் மறைந்து இருந்தோம். அப்போது நான்கு இரு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் அங்கு நின்று கொண்டிருந்த பைபர் படகில் ஒரு பெரிய மூட்டையை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தனர். அதனைக் கண்டதும் மறைந்திருந்த சுங்கத்துறை அலுவலர்கள் படகுக்கு அருகே சென்றபோது அவர்கள் தண்ணீரில் குதித்து தப்பி சென்றனர். கைப்பற்றப்பட்ட பைபர் படகின் உரிமையாளரின் தகவல்கள் அடிப்படையில் தப்பி சென்ற நால்வரை தேடி வருகிறோம்," என்றார். சுங்கத்துறையினரின் விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட படகின் உரிமையாளர், நாகை மீனவன் என்கின்ற யூடியூப் சேனல் நடத்தி வருபவர் என்றும் இவர் சமீப காலமாக கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. "தலைமறைவாகிய நான்கு நபர்களின் வீடுகளில் இன்று காலை முதல் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். நால்வரும் இதுவரை கைது செய்யப்படவில்லை, நால்வரும் பிடிபடும் பட்சத்தில் இவர்களுடன் தொடர்பில் உள்ள முக்கிய கடத்தல்காரர்கள் பிடிபடுவார்கள்" என அதிகாரிகள் தெரிவித்தனர். போதை பொருள் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடும் முக்கிய கடத்தல்காரர்கள் சென்னை மற்றும் ஆந்திரா மாநிலத்தின் சில இடங்களில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர்களை பிடிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிகிறது. இது குறித்து சுங்க அதிகாரி கழுகாசலமூர்த்தி கூறுகையில், "வடக்கு கடல் பகுதியான பாக்ஜலசந்தி கடல் பகுதியில் நடைபெற்று வரும் கடத்தல் சம்பவங்களை தடுப்பதற்காக நவீன ரோந்து படகுகள் மூலம் கடலில் ரோந்து பணியில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்" என்று கூறினார். "சுங்கத்துறை, இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை, தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீசார், மத்திய உளவுத்துறை மற்றும் மாநில உளவுத்துறை என அனைத்து பாதுகாப்புதுறை அதிகாரிகளும் தொடர்ந்து கடத்தல் சம்பவங்களை தடுத்து நிறுத்துவதற்கான தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்." "வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரை ஓரம் அடர்ந்த காடுகள் இருப்பதால் அந்த பகுதி கடத்தல்காரர்கள் போதை பொருட்களை மறைத்து வைக்க சாதகமாக உள்ளது. எனவே, அந்த பகுதியில் கூடுதல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட நாங்கள் முடிவு செய்துள்ளோம்." "தொடர்ச்சியாக அந்த பகுதியில் இருந்து இலங்கைக்கு ஆட்களை சட்டவிரோதமாக அனுப்பி வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அது குறித்தும் முழுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றும் அவர் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/india-58735952
 15. இலங்கை கோயிலில் பல நூற்றாண்டு தமிழ், தெலுங்கு செப்பேடு - யாழ். பல்கலை பேராசிரியர் கண்டுபிடிப்பு ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,NAGULESWARAN PRAVEEN இலங்கையின் வடமத்திய மாகாணத்தையும், கிழக்கு மாகாணத்தையும் இணைக்கும் பகுதியில் அமைந்துள்ள பாரம்பரிய தமிழ் பிரதேசமொன்றுக்கான சான்றுகளை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவர் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் கண்டுபிடித்துள்ளார். பொலநறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியுடன் இணைந்திருக்கும் மன்னம்பிட்டிப் பிரதேசம் ,வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இடமாகும். வரலாற்றுத் தொடக்க காலத்தில் இருந்து கிழக்கிலங்கைக்கு உட்பட்டிருந்த இந்த பாரம்பரிய பிரதேசமானது, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து நிர்வாக வசதிக்காக பொலநறுவை மாவட்டத்துடன் இணைந்து செயற்பட்டுள்ளது. இந்த பிரதேச எல்லைக்குள் முக்துக்கல், சமணன்பிட்டி, தம்பன்கடவை, கருப்பளை கண்டக்காடு, சொரிவில், திரிகோணமடு, கல்லூர், பிள்ளையாரடி ஆகிய பழம்பெரும் தமிழ்க் கிராமங்கள் காணப்படுகின்றன. மக்கள் வாழாத இந்த கிராமங்கள் சிலவற்றின் ஒதுக்குப்புறங்களில் கைவிடப்பட்ட வயல் நிலங்கள், காடுகள், சிறு மலைகள், ஆதிகால மக்கள் வாழ்ந்த கற்குகைள் என்பன காணப்படுகின்றன. இந்த ஆதாரங்கள் இக்கிராமங்களுக்கு தொன்மையான தொடர்ச்சியான வரலாற்று மரபு இருப்பதை உறுதி செய்வதாக உள்ளன. இந்த உண்மையை இக்கிரமங்களில் ஆங்காங்கே காணப்படுகின்ற இந்து, பௌத்த ஆலயங்கள், ஆலய எச்சங்கள் மேலும் உறுதி செய்கின்றன. தமிழர் வரலாறு: ‘மன்னர் மனைவியின் சாபம் பெற்ற‘ பகுதியில் நடக்கவுள்ள தொல்லியல் ஆய்வு தமிழ்நாடு தொல்லியல் துறை வெளிநாடுகளில், வெளி மாநிலங்களில் அகழாய்வு செய்ய விரும்புவது ஏன்? அவ்வாறான வரலாற்றுப் பழைமைவாய்ந்த ஆலயங்களில் ஒன்றே தற்காலத்திலும் வழிபாட்டிலிருந்து வரும் தம்பன்கடுவையில் உள்ள சித்திரவேலாயுதர் கோயிலாகும். வரலாற்றுக் கதைகளில் இருந்து... இந்த ஆலயம் தோன்றிய காலத்தை துல்லியமாகக் கணிக்கக் கூடிய நம்பகரமான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. ஆயினும் இந்த பிரதேச மக்களிடையே நிலவிவரும் வாய்மொழி வரலாற்றுக் கதைகளின் மூலம், இந்த ஆலயம், முன்பொரு காலத்தில் ஆகம மரபு சாராத கிராமிய ஆலயமாக இருந்துள்ளதாக தெரிய வருகிறது. வேல் சின்னத்தை கொண்டிருந்த இந்த ஆலயம், காலப்போக்கில் ஆகம மரபில் கற்கள் கொண்டு கட்டப்பட்ட ஆலயமாக வளர்ந்துள்ளதை உறுதிப்படுத்த முடிவதாக பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் கூறுகிறார். பட மூலாதாரம்,NAGULESWARAN PRAVEEN படக்குறிப்பு, ஆதிகால மக்கள் வாழ்ந்த கற்குகைள் அண்மை காலங்களில் இந்த ஆலய கட்டமைப்பில் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டு மிகப் பெரிய ஆலயமாக மீள் உருவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மீள் உருவாக்கப் பணிகளின் போது கிடைத்த பழைய ஆலயத்தின் கட்டடப்பாகங்களும், சில வழிபாட்டுச் சின்னங்களும் புதிய ஆலயத்தில் வைத்துக் கட்டப்படாது அவை ஆலயத்தின் ஒரு பகுதியில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் ஒன்றே பழைய ஆலயத்தின் மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டிருந்த செப்பு பட்டயத்துடன் கூடிய அலங்காரத் தூணாகும். மன்னம்பிட்டி பிரதேசத்தில் காணப்படும் தொல்லியல், வரலாற்றுச் சின்னங்களை தேடிக் கண்டறிந்து அவற்றைப் பதிவு செய்து வரும் இப்பிரதேசத்திற்குரிய வரலாற்று ஆர்வலர் நகுலேஸ்வரன் பிரவின் என்பவர், இவ்வாலயத்தில் காணப்படும் செப்பு பட்டயத்தின் புகைப்படப் பிரதியொன்றை ஊடகவியலாளரும், அரசியல்வாதியுமான உமாச்சந்திரா பிரகாஷின் ஊடாக தனக்கு அனுப்பி வைத்ததாக பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவிக்கின்றார். இந்த செப்பு பட்டயம் ஏறத்தாழ ஐந்தடி நீளமான தூணில் பொருத்தப்பட்டுள்ளது. தூணின் தொடக்கத்திலும், முடிவிலும் அரைவட்ட தாமரை வடிவம் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. வலப்பக்கமாக தெலுங்கு மொழியிலும், இடப்பக்கமாக தமிழ் மொழியிலும் தூணின் நடுப்பகுதில் முழுவடிவத்தில் வடிவமைக்கப்பட்ட தாமரை புடைப்புச் சிற்பத்திற்கு வலப்பக்கமாக தெலுங்கு மொழியிலும், இடப்பக்கமாக தமிழ் மொழியிலும் சாசனங்கள் எழுதப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. 'உலகின் முதல் கோயில்': மனித வரலாற்றை மாற்றி எழுதும் 11,000 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டுமானம் தமிழ்நாடு சிவகளை அகழாய்வில் கிடைத்த நெல்லின் வயது சுமார் 3,200 ஆண்டுகள் சாசனம் அக்கால மொழிவழக்கில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது: "(1) திருமுருக்கர் ஆலியம் ஆரு (2) முக சுவாமி மூலஸ்த் (3) தானம் வெங்கப்படி (4) பலபேர் செத்து யா (5) சக தற்மம்" என முடிகின்றது. தெலுங்கு வரிவடிவத்திலும் தெலுங்கு மொழியிலும் எழுதப்பட்ட சாசனத்தைப் படிப்பதற்கு அம்மொழியில் புலமையுடைய அறிஞர்களான பேராசிரியர் வை. சுப்பராயலு, பேராசிரியர் பொ. இரகுபதி, கலாநிதி சு.இராஜகோபால் ஆகியோருக்கு சாசனத்தின் புகைப்படங்களை பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் அனுப்பி வைத்துள்ளார். அவர்கள் மூவரும் தமிழ்ச் சாசனத்தில் சொல்லப்பட்ட செய்தியையே பெரும்பாலும் அக்கால மொழிநடைக்கு ஏற்ப தெலுங்கு மொழியிலும் எழுதப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளதாக பேராசிரியர் குறிப்பிடுகின்றார். அதன் வாசகம் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது: "(1) திருமுருகா ஆலயம் ஆரு (2) முகசுவாமி மூலஸ்த் (3) தானம் வெங்கலப்படி (4) பலபேர் சேர்த்து யா (5). சக தற்மம்" என முடிகின்றது. பட மூலாதாரம்,NAGULESWARAN PRAVEEN இரு மொழிச் சாசனங்களும் சொல்லும் செய்தி தம்பன் கடுவையில் உள்ள சித்திர வேலாயுத கோயில் கற்பக்கிரகத்தில் உள்ள மூலஸ்தானத்திற்கு வெங்கலப் படியை அமைப்பதற்கு பலரும் ஒன்று சேர்ந்து மக்களிடம் இரந்து (யாகசம் செய்து) பெற்றதை தானமாக வழங்கியது பற்றிக் கூறுகின்றன. 18ஆம் நூற்றாண்டு அல்லது 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதி பேராசிரியர் இரகுபதி தமிழில் உள்ள சாசனத்தின் தொடக்க நிலை வரிவடிவங்களில் புள்ளியிடாமலும், தொடர்ந்து வரும் வரிவடிவங்களில் புள்ளியிடப்பட்டும் சாசனம் எழுதப்பட்டிருப்பதால் இச்சாசனம் எழுதப்பட்ட காலம் 18ஆம் நூற்றாண்டு அல்லது 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாக இருக்கலாம் எனக் கருதுகின்றார். இக்காலப் பகுதியில் மட்டக்களப்பு தேசத்துக் கோயில்களின் வரலாறு கூறும் கல்வெட்டுக்கள் சில பொறிக்கப்பட்டதற்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன. அவை பெரும்பாலும் தமிழில் எழுதப்பட்டவை. ஆனால் தம்பன்கடவை சித்திரவேலாயுதர் ஆலயத்து செப்புபட்டயத்தில் தமிழோடு தெலுங்கு மொழியிலும் எழுதப்பட்டுள்ளமை புதிய வரலாற்றுச் செய்தியாகக் காணப்படுகின்றது. இதற்கான காரணங்கள் வரலாற்று ரீதியாக நோக்கப்படவேண்டியவை. 15ஆம் நூற்றாண்டிலிருந்து கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு தேசம் பெரும்பாலும் கண்டி அரசின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பிராந்தியமாகவே இருந்துள்ளது. இவ்வரசின் ஆதிக்கம் அநுராதபுரம், பொலநறுவை இராசதானியின் எல்லை வரை பரந்திருந்தது. கண்டியின் கடைசி சிங்கள மன்னன் ஸ்ரீவீரபராக்கிரம நரேந்திர சிங்கனுக்குப் பின்னர் அவ்வரசில் ஆட்சி புரிந்த ஸ்ரீவிஜயராஜசிங்கன் (1739- 1747), கீர்த்தி ஸ்ரீஇராஜசிங்கன் (1747-1782), ராஜாதிராஜசிங்கன் 1782-1798), ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கன் (1798- 1815) ஆகியோர் தமிழக மதுரை நாயக்க வம்சத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் ஆட்சி மொழி தமிழக இருப்பினும் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் என்பவர்களில் தாய் மொழி தெலுங்காகவும் இருந்துள்ளது. இதனால் இவ்வரச அதிகாரிகளின் பங்களிப்பால் தம்பன்கடவை சித்தியவேலாயுதர் ஆலயத்து வெண்கலப்படி அமைக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறுவதற்கும் இடமுண்டு. ஆனால் ஆலயத்தில் உள்ள செப்பு பட்டயம் அவ்வாலய வெண்கலப் படியானது பலர் ஒன்று கூடி பல இடங்களுக்கு சென்று மக்களிடம் இரந்து (யாசகம் பெற்று) பெற்ற நிதி உதவியைக் கொண்டே வெண்கலப் படி அமைக்கப்பட்டதாகக் கூறுவதால் இப்பணியைக் கண்டி ஆட்சியாளர்களுடன் தொடர்புபடுத்துவது பொருத்தமாகத் தோன்றவில்லை. தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட மக்கள் ஆனால் இலங்கையில் கண்டி இராசதானிக்கு முன்னரே தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களும் வாழ்ந்ததற்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன. சிறப்பாக யாழ்ப்பாண இராசதானி காலத்தில் இருந்த படைப்பிரிவுகளில் சுதேச தமிழ்ப்படை வீரர்களுடன் பிறநாட்டுப் படைவீரர்களும் இணைந்து பணியாற்றியமைக்குப் பல சான்றாதாரங்கள் காணப்படுகின்றன. அவர்களுள் தென்னிந்திய கன்னட, தெலுங்குப் படைவீரர்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கனர். இவ்வரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து இப்படை வீரர்களில் ஒரு பிரிவினர் தமிழ் பேசும் மக்களாக இங்கேயே நிரந்தரமாகத் தங்கியுள்ளனர். இவர்களில் சிலர் தமிழர்களுடன் இணைந்து வட இலங்கையில் உள்ள ஆலயங்கள் சிலவற்றில் பண்டாரம் என்ற பெயரில் அவ்வாலயங்களை மேற்பார்வை செய்பவர்களாகவும், பூசகர்களாகவும், மாலைகட்டுபவர்களாகவும் கடமையாற்றி வருகின்றனர். இவர்களை கோயில் பண்டாரம் என்ற பெயரில் தனியொரு சமூகமாகவும் அழைக்கப்படுகின்றது. அவர்களின் வழிவந்தவர்கள் தற்காலத்தில் மொழியால் தமிழ்ச் சமூகங்களுடன் இரண்டறக் கலந்திருந்தாலும் பண்பாட்டால் சில தனித்துவமான அம்சங்களுடன் யாழ்ப்பாணத்தின் சில ஊர்களில் வாழ்ந்து வருவதைக் காணமுடிகின்றது. இது கிழக்கிலங்கைக்கும் பொருந்தும். கிழக்கிலங்கையில் அதிலும் குறிப்பாக மட்டக்களப்பின் வரலாற்றுப் பழமைவாய்ந்த ஆலயங்களின் தோற்றப் பின்னணிகள், மக்களின் சமய நம்பிக்கைகள், சடங்குகள், கிரிகை முறைகள், வழிபாட்டு மரபுகள் என்பவை சில தனித்துவமான அம்சங்களைக் கொண்டவை. இங்கு தோன்றிய பாசுபத சமயத்திற்கு தொன்மையான, தொடர்ச்சியான வரலாறு உண்டு. இவ்வாலயங்களில் நீண்ட காலமாக பிராமணர்கள் அல்லாதவர்களே பூஜைசெய்து வந்துள்ளனர். இதற்கு கோணேஸ்வரர் கல்வெட்டே சிறந்த ஆதாரமாகக் காணப்படுகின்றது. மேலும் இங்கிருக்கும் ஆலயங்களை நிர்வகிப்பவர்கள், மேற்பார்வை செய்பவர்கள் பொதுவாக வண்ணக்கர் என்றே அழைக்கப்படுகின்றனர். பட மூலாதாரம்,NAGULESWARAN PRAVEEN இம்மரபு 2200 ஆண்டுகளுக்கு முன்பிருந்து தோன்றி வளர்ந்ததை அண்மையில் மட்டக்களப்பில் கண்டுபிடிக்கப்பட்ட பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்டச் சாசனமும் உறுதிப்படுத்துகின்றது. இந்நிலையில் மட்டகளப்பு பூர்வசரித்திரம் என்ற மூல நூலில் இங்குள்ள ஆலயங்களில் பணி செய்த சமூகங்களில் ஒன்றாக பண்டாரத்தையும் குறிப்பிடுகின்றது. அப்பண்டாரங்களில் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர்களும் இருந்திருக்க வாய்ப்புண்டு. ஆயினும் அதை உறுதிபடுத்த மேலும் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இருப்பினும் இப்பிரதேசத்தில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட சில சமூகங்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வருவதற்கு சில ஆதாரங்கள் காணப்படுகின்றன. மட்டகளப்பு தேசத்து வாய்மொழி வரலாற்றுக் கதைகள் அப்பிரதேசத்தில் தோன்றிய புராதன ஆலயங்கள் சிலவற்றை அங்கு வாழ்ந்து வரும் வேடர் அல்லது பழங்குடி மக்களுடன் தொடர்புடுத்திக் கூறுகின்றன. நீண்டகாலமாக ஏனைய சமூகங்களில் இருந்து விலகி காடுகளிலும், மலைகளிலும், இயற்கையான குகைகளிலும் வாழ்ந்த இம்மக்களில் ஒரு பிரிவினர் அண்மைக்காலத்தில் நடைபெற்ற யுத்தங்களுக்கு அஞ்சி நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்த போது ஏனைய மக்கள் தொடர்ந்தும் தமது பூர்வீக இடங்களிலேயே வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலும் தெலுங்கு மொழிச் சொற்கள் இங்குள்ள இம்மக்களின் தனித்துவமான வாழ்வியல் அம்சங்கள் பற்றி அண்மையில் விரிவாக ஆராய்ந்த பேராசிரியர் கா.குகபாலன் அம்மக்களின் பேச்சு மொழியில் உள்ள பல சொற்களைப் புரிந்து கொள்வதற்காக அம்மொழியைப் பதிவு செய்து தமிழக அறிஞர்களான பேராசிரியர் வை.சுப்பராயலு, பேராசிரியர் விஜயவேணுகோபால் ஆகியோருக்கு அனுப்ப வைத்தார். அம்மொழிப் பதிவை விரிவாக ஆராய்ந்த இரு அறிஞர்களும் அம்மொழியில் பெரும்பாலும் தெலுங்கு மொழிச் சொற்களே காணப்படுவதாக அடையாளப்படுத்தியிருந்தமை இவ்விடத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. 2017 ஆம் ஆண்டுகாலப் பகுதியில் இப்பழங்குடி மக்கள் வாழ்ந்து வரும் மட்டக்களப்பின் வாகரை போன்ற இடங்களில் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தலைமையிலான குழு களவாய்வு மேற்கொண்ட சந்தர்ப்பத்தில், அம்மக்கள் சிறு குடிசைகளிலும், குகைளிலும் வாழ்ந்து வருவதைக் காணமுடிந்தது. இந்நிலையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் மன்னம்பிட்டி தம்பன்கடுவையில் பண்டைய குடியிருப்புகள், வயல் நிலங்கள் இருந்த இடங்கள் அண்மைக்காலங்களில் கைவிடப்பட்டு அவ்விடங்களின் ஒருபகுதி காடுகள், மலைகள், குகைகள் என்பவற்றைக் கொண்ட பிரதேசமாகக் காணப்படுகின்றது. அத்துடன் அங்குள்ள குகைகளில் செயற்கையான சில மாற்றங்களைச் செய்து அண்மைக்காலம் வரை பழங்குடி மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் காணப்படுவதுடன், அச்சமூகத்தினரைச் சார்ந்த சில குடும்பங்கள் தற்காலத்திலும் வாழ்ந்து வருவதாக அறிய முடிகின்றது. இதனால் அவர்களின் தாய் மொழி தெலுங்காக இருந்திருக்கலாம். இவ்வரலாற்றுப் பின்னணியில் இங்கிருக்கும் சித்திரவேலாயுதர் ஆலயத்தில் காணப்படும் தெலுங்கு மொழிச் சாசனத்தை இங்கு வாழ்ந்த, வாழ்ந்து வருகின்ற பழங்குடி மக்களுடனும் தொடர்புபடுத்திப் பார்க்கவும் இடமுண்டு. இருப்பினும் இக்கருத்தை உறுதிப்படுத்த மேலும் ஆய்வுகள் செய்யப்படுவது அவசியமாகும் என யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவர் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார். https://www.bbc.com/tamil/sri-lanka-58730342
 16. MI vs PBKS ஐபிஎல் 2021 கிரிக்கெட்: பஞ்சாப் கிங்ஸை வென்று ப்ளே-ஆஃப் கனவை தக்க வைத்துள்ள மும்பை இந்தியன்ஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,BCCI / IPL நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து மூன்று தோல்விகளுக்கு பிறகு ஒருவழியாக வெற்றியை ருசித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. நேற்று அபுதாபியில் நடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ். இதற்கு முன்பு அந்த அணி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தோல்வியையே சந்தித்திருந்தது. நேற்றைய போட்டியிலும் தோல்வியடைந்திருந்தால் மும்பை அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் மங்கி இருக்கும். ஆனால் நேற்றைய வெற்றியின் மூலம் ப்ளே-ஆஃப் சுற்றுக்குச் செல்வதற்கான நம்பிக்கையை தங்கள் ரசிகர்கள் இழக்க வேண்டாம் என்று உணர்த்தியுள்ளனர் மும்பை இந்தியன்ஸ் அணியினர். நேற்று நடந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பவுலிங் செய்யத் தீர்மானித்தது. ஐபிஎல் 2021 - DC vs KKR : டெல்லியைத் தடுமாற வைத்த கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் விராட் கோலியுடன் இணையும் தோனி - இந்தியா கொண்டாடுவது ஏன்? பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்கம் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கிய அந்த அணியின் கேப்டன் கே.எல். ராகுல் மற்றும் மன்தீப் சிங் ஆகியோர் முறையே 21 மற்றும் 15 ரன்களை எடுத்தனர். அடுத்ததாக வந்த கிறிஸ் கெயில் 4 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். பட மூலாதாரம்,BBCI / IPL பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக ஸ்கோர் எடுத்தவர் 42 ரன்கள் எடுத்த எய்டன் மார்க்ரம். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 135 ரன்கள் எடுத்திருந்தது. மும்பை அணிக்காக பும்ரா மற்றும் பொல்லார்டு ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் உதவிகரமாக இருந்தனர். சௌரப் திவாரி 37 பந்துகளில் 45 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 30 பந்துகளில் 40 ரன்களும் எடுத்து இருந்தனர். 19வது ஓவரின் இறுதியில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 137 ரன்களை எட்டியது மும்பை இந்தியன்ஸ். இதன் மூலம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வென்றுள்ளது. நேற்றைய வெற்றி மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் மேலே செல்வதற்கு உதவியுள்ளது. Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 தற்போதைய நிலவரப்படி தான் விளையாடிய 11 ஆட்டங்களில் ஐந்தில் வெற்றியும் ஆறில் தோல்வியும் அடைந்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 10 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது. நான்காம் இடத்தில் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் 10 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், நெட் ரன் ரேட் அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ் அணியை விட அதிகமாக உள்ளது. எனவே மும்பை அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் தனது இடத்தை உறுதி செய்ய வேண்டுமானால் இனிவரும் போட்டிகளில் வெற்றி பெறுவதில் மட்டுமல்லாது, அதிக ரன்கள் எடுத்து வெல்ல வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். டெல்லி கேபிட்டல்ஸ், ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக தொடர்ந்து இரு தோல்விகளைச் சந்தித்த பஞ்சாப் அணி, நேற்றைய போட்டிக்கு முன்பு விளையாடிய ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வென்றது. நேற்று மும்பைக்கு எதிரராக மீண்டும் தோற்றுள்ளது பஞ்சாப் கிங்ஸ். இப்போது அந்த அணி 11 போட்டிகளில் நான்கில் மட்டுமே வென்று புள்ளிப்பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளது. https://www.bbc.com/tamil/sport-58729805
 17. ஐபிஎல் 2021 - DC vs KKR : டெல்லியைத் தடுமாற வைத்த கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் 28 செப்டெம்பர் 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் சார்ஜா ஆடுகளத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியை ரன் குவிக்க விடாமல் அழுத்தம் கொடுத்த சுனில் நரைன் கொல்கத்தா அணிக்கு மிக முக்கியமான வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கிறார். மூன்று விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியதன் மூலம் புள்ளிப் பட்டியலில் கொல்கத்தா அணி நான்காவது இடத்தை வலுவாகப் பிடித்திருக்கிறது. தோல்வியடைந்திருந்தாலும் டெல்லி அணி தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 127 ரன்களை மட்டுமே எடுத்தது. நான்கு ஓவர்களை வீசிய கொல்கத்தா அணியின் சுனில் நரைன் வெறும் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். தொடக்கத்தில் டெல்லி அணி சிறப்பான அடித்தளத்தை அமைத்திருந்தாலும், அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தன. வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் அய்யர், ஃபெர்குசன் என கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளர்கள் டெல்லி அணியை ரன் குவிக்க விடாமல் கட்டுப்படுத்தினர். ஒருபுறம் ரிஷப் பண்ட் ரன் எடுத்துக் கொண்டிருந்த நிலையில், மறு முனையில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தன. ஸ்டீவன் ஸ்மித், ரிஷப் பண்ட், ஷிகர் தவான் ஆகியோரைத் தவிர மற்றவர்கள் யாரும் களத்துக்குள் நீடித்து நிற்கவில்லை, கணிசமாக ரன் எடுக்கவும் இல்லை. இறுதியில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்களை மட்டுமே டெல்லி அணி எடுத்தது. அச்சுறுத்திய சார்ஜா ஆடுகளம் கொல்கத்தாவின் பேட்டிங்கும் சிறப்பாக அமைந்துவிடவில்லை. டெல்லி அணியின் பந்துவீச்சு கொல்கத்தாவையும் தடுமாற வைத்தது. 14-ஆவது ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது அந்த அணி. சற்று சறுக்கினாலும் தோல்வியடையும் நிலை இருந்தது. Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 எனினும் நிதிஷ் ராணா சிறப்பாக ஆடி 36 ரன்களை எடுத்திருந்தார். கடந்த சில போட்டிகளில் ஒற்றை இலக்கத்தைத் தாண்டாத சுனில் நரைன் இந்தப் போட்டியில் பந்துவீச்சைப் போலவே பேட்டிங்கிலும் அசத்தினார். கொல்கத்தா அணி தடுமாறிக் கொண்டிருந்தபோது, பத்தே பந்துகளில் 21 ரன்களை எடுத்து வெற்றிக்கு அருகில் அணியைக் கொண்டு வந்தார் நரைன். கடைசியில் 10 பந்துகள் மீதமிருந்த நிலையில், ஒரு பவுண்டரியை அடித்து டெல்லி அணிக்கு வெற்றிபெற வைத்தார் ராணா. பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்பட்ட சுனில் நரைன் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். சார்ஜா மைதானத்தின் மிக மெதுவான ஆடுகளமே இரு அணிகளும் ரன் எடுக்கத் தடுமாறியதற்கு முக்கியக் காரணம். அதிரடி ஆட்டம் பெரும்பாலும் எடுபடவில்லை. இந்த நிலைமையை கொல்கத்தா அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் தங்களுக்குச் சாதமாக்கிக் கொண்டார்கள். கொல்கத்தாவில் ஆண்ட்ரே ரஸல் இல்லாத நிலையிலும் அந்த இடத்தை வெங்கடேஷ் அய்யர் நிரப்பினார். பழிதீர்த்த அஸ்வின் முதலில் டெல்லி அணி பேட்டிங் செய்யும்போது கடைசி ஓவரில் அஸ்வின் அவுட் ஆனார். அப்போது கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மார்கனுக்கும் அவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. தினேஷ் கார்த்திக் குறுக்கே வந்து அவர்களைத் தடுத்தார். இதற்குப் பதிலடியாக கொல்கத்தா பேட்டிங் செய்யும்போது, இயான் மார்கனை இரண்டாவது பந்திலேயே ரன் எதுவும் எடுக்காத நிலையில் அஸ்வின் வெளியேற்றினார். அப்போது மார்கனை நோக்கி குரல் எழுப்பியபடி ஓடிவந்து பழிதீர்த்துக் கொண்டார். https://www.bbc.com/tamil/sport-58726042
 18. லேண்ட்சாட் 9 செயற்கைக் கோள்: பூமியை 49 ஆண்டுகளாக வட்டமிடும் ஜோனதன் அமோஸ் அறிவியல் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ULA படக்குறிப்பு, கலிஃபோர்னியாவிலிருந்து ஏவப்பட்ட லேண்ட்சாட் உலகின் மிக முக்கியமான செயற்கைக்கோள், கலிஃபோர்னியாவிலிருந்து நேற்று செப்டம்பர் 27ஆம் தேதி திங்கட்கிழமை ஏவப்பட்டது. லேண்ட்சாட்-9 என்பது சுமார் கடந்த 50 ஆண்டுகளாக பூமியை கண்காணித்து வரும் விண்கலன்களின் தொடர்ச்சியாக இருக்கிறது. வேறு எந்த ரிமோட் சென்சிங் அமைப்பும் நமது பூமியின் மாறி வரும் நிலை குறித்த நீண்ட, தொடர்ச்சியான பதிவை வைத்திருக்கவில்லை. லேண்ட்சாட் - 9 வான்டன்பெர்க் விண்வெளிப்படை தளத்திலிருந்து அட்லஸ் ராக்கெட்டில் உள்ளூர் நேரப்படி காலை 11:12-க்கும் ஏவப்பட்டது. அப்பல்லோ விண்வெளி வீரர்கள் பூமியைத் திரும்பிப் பார்த்த எடுத்த படங்கள்தான், நம் பூமிக்கு மேல் நிரந்தரக் கண்காணிப்பு வேண்டும் என்கிற எண்ணத்தை உறுதிப்படுத்தியது. 1972 ஆம் ஆண்டில், அமெரிக்க விண்வெளி நிறுவனம் (நாசா), அமெரிக்க புவியியல் ஆய்வு (யுஎஸ்ஜிஎஸ்) ஆகிய இரண்டும் இணைந்து, அவற்றின் புவி வள ஆற்றல் தொழில்நுட்ப செயற்கைக்கோளை ஏவத் தொடங்கின. பட மூலாதாரம்,NASA/USGS படக்குறிப்பு, அண்டார்டிகாவில் பிரிந்த பிரம்மாண்ட பனிப்பாறை நேற்று, ஒன்பதாவது இமேஜிங் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டுள்ளது, அத்திட்டம் தான் பின்னர் லேண்ட்சாட் திட்டம் என்று அழைக்கப்பட்டது. நாசா மற்றும் யுஎஸ்ஜிஎஸ் விண்கலத் தொடர் தான் பூமியின் மாற்றத்தின் வலுவான பதிவுகள். லேண்ட்சாட் செயற்கைக் கோள்கள், பெருநகரங்களின் வளர்ச்சி, விவசாயத்தின் பரவல், கடற்கரைகள், காடுகள், பாலைவனங்கள், பனிப்பாறைகளின் வளர்ச்சி மற்றும் அதன் மாற்றங்களை பட்டியலிட்டுள்ளது. காட்டெருமை, வோம்பாட்ஸ், மரங்கொத்திப் பறவை, வால்ரஸ் என பல விலங்குகளைக் கூட கண்காணிக்க இந்த செயற்கைக் கோள்கள் பயன்படுத்தப்பட்டன. பட மூலாதாரம்,NASA "கடந்த அரை நூற்றாண்டில் பூமி எவ்வாறு மாறியது என்பதற்கான ஒரு அற்புதமான வரலாற்றை நாங்கள் சேகரித்துள்ளோம்," என்கிறார் நாசாவின் லேண்ட்சாட் - 9 திட்ட விஞ்ஞானி முனைவர் ஜெஃப் மாசெக், நிலவில் மனித இனம் காணா இடத்துக்குச் செல்ல தயாராகும் வைபர் ரோவர் சூரியன் நிரந்தரமாக 'மறையும்': மனித இனம் எதிர்கொள்ள வேண்டிய 6 அச்சுறுத்தல்கள் "உதாரணமாக, காட்டுத் தீ, சூறாவளி, பூச்சி வெடிப்புகள் போன்ற இயற்கை இடையூறுகளை நாம் காண முடிகிறது," "சுற்றுச்சூழல் அமைப்புகளில் பருவநிலை மற்றும் பருவநிலை மாற்ற பாதிப்புகளை நாம் குறிப்பாக பார்க்க முடிகிறது. வெப்பமான பருவநிலை காரணமாக உயர் அட்சரேகை பகுதிகளில் செடி கொடிகளின் அதிகரிப்பு மிகுந்த பகுதிகளை நாங்கள் வரைபடமாக்கியுள்ளோம். அதே நேரத்தில் குறைவான நீர் கிடைக்கும் மற்றும் பாதி வறண்ட சுற்றுச்சூழலைக் கொண்ட பகுதிகளில் தாவரங்கள் குறைந்து வருவதையும் நாங்கள் பார்த்தோம். " 1982ஆம் ஆண்டு முதல், லேண்ட்சாட் - 4 செயற்கைக் கோள் முதல், இந்த அமைப்பு தரையில் உள்ளவைகளை 30 மீட்டர் தொலைவு வரை நுட்பமாக காண முடிந்தது. இப்போது மிகவும் கூர்மையாக உற்று நோக்கும் (பத்து சென்டிமீட்டர் வரை காணப்படும்) ஏராளமான பிற இமேஜிங் தொழில்நுட்ப விண்கலங்கள் உள்ளன, ஆனால் நீண்ட காலத்துக்கு எந்த ஒரு விண்கலங்களும் லேண்ட்சாட் அருகில் கூட வருவதில்லை. பட மூலாதாரம்,NASA/USGS படக்குறிப்பு, மாறி வரும் கடற்கரைகள்: சீனாவின் யாங்பு கடற்கரையில் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஃப்ளவர் தீவு இந்த தரவுகளை எங்கும், யார் வேண்டுமானாலும் இலவசமாக பயன்படுத்தலாம். லேண்ட்சாட் - 9 செயற்கைக் கோள், அதன் அட்லஸ் ராக்கெட்டின் உச்சியில் இருந்து செயல்பாட்டுக்கு வருவதற்கு முன் சில பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது. அட்லஸ் ராக்கெட் இந்த செயற்கை கோளை 680 கிலோமீட்டருக்குக் கீழ் கொண்டு சேர்த்துவிட்டது. லேண்ட்சாட் செயற்கைக் கோள் தன் த்ரஸ்டர்களைப் பயன்படுத்தி, தன் கண்காணிப்பு உயரமான 700 கிலோமீட்டரை விட சற்று உயரத்தை அடைய வேண்டும். சில வாரங்களுக்குப் பிறகு, லேண்ட்சாட் 9 செயற்கைக் கோள் படங்களை எடுக்கத் தொடங்கும், அதை 2013ஆம் ஆண்டில் ஏவப்பட்ட லேண்ட்சாட் - 8-ன் படங்களோடு ஒப்பிடலாம். இந்த பகுப்பாய்வு புதிய விண்கலத்தால் கண்டறியப்பட்ட வண்ணங்களை ஐந்து தசாப்தங்கள் பழமையான லேண்ட்சாட் காப்பகத்தில் உள்ள பழைய படங்களுடன் நேரடியாகப் பொருத்துவதை உறுதி செய்யும். கடந்த ஆறு ஆண்டுகளாக, லேண்ட்சாட் ஐரோப்பிய ஒன்றியத்தின் சென்டினல் -2 செயற்கைக்கோள்களின் விண்மீன் தொகுப்பில் பறந்து வருகிறது. மீண்டும், அவர்களின் உருவப்படங்கள் துல்லியமாக அமைக்கப்பட்டன, இதனால் அவர்கள் தங்கள் அமெரிக்க சகாக்கள் பூமியைப் பார்ப்பது போலவே பார்க்கிறார்கள். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அமைப்புகள் இரண்டையுமே கட்டமைப்பதற்கும், இயங்குவதற்கு அதிகம் செலவாகும். லேண்ட்சாட் - 9 செயற்கை கோளின் வாழ்க்கைச் சுழற்சிக்கான செலவு $1 பில்லியனுக்கு அருகில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில மில்லியன் டாலர்களில் ஏவப்படும் வணிக ரீதியிலான புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் இருக்கும்போது, இதுபோன்ற திட்டங்களின் பணத்திற்கான மதிப்பு குறித்து சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். பட மூலாதாரம்,NASA/USGS படக்குறிப்பு, கிரீஸில் காட்டுத் தீ ஏற்பட்ட எவியா தீவு "நிறைய விஷயங்களைச் செய்ய வணிக நிறுவனங்கள் எங்களை அனுமதிக்கின்றன, ஆனால் அவை லேண்ட்சாட் மூலம் நாங்கள் செய்யும் கண்காணிப்புகளுக்கு மாற்றாக இல்லை. உதாரணமாக வணிக அமைப்புகள், பொதுவாக - அவர்கள் அடிக்கடி கண்காணிக்க முடியும், ஆனால் நாங்கள் லேண்ட்சாட் செயற்கைக் கோளைக் கொண்டு கண்காணிக்கும் எல்லா அலைவரிசையையும் அவர்கள் கவனிப்பதில்லை," என்று நாசாவின் எர்த் சயின்ஸ் இயக்குனர் முனைவர் கரேன் செயின்ட் ஜெர்மைன் பிபிசி செய்திக்கு தெரிவித்தார். இந்த கருத்தை சான்-பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்டு இயங்கும் பிளானட் என்கிற நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி முனைவர் வில் மார்ஷல் எதிரொலித்தார், இந்நிறுவனம் இன்று 200 க்கும் மேற்பட்ட சிறிய இமேஜர்களை சுற்றுப்பாதையில் இயக்கி வருகிறது. நாசா தனது நிறுவனத்தின் (பிளானட்) தரவை, அதன் காலநிலை மாதிரிகளை மேம்படுத்துவதற்காக வாங்கியதாகவும், பிளானட் நிறுவன பொறியாளர்கள் தங்கள் சொந்த தயாரிப்புகளை மேம்படுத்த லேண்ட்சாட்டின் படங்களை நம்பியிருப்பதாகவும் அவர் கூறினார். https://www.bbc.com/tamil/science-58713327
 19. ஆப்கன் போர் மூலம் பல பில்லியன் டாலர்கள் லாபம் பார்த்தது யார்? அகேல் பெர்முடெஸ் பிபிசி செய்திகள், முண்டோ சேவை 27 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராணுவ வீரர்கள் கோப்புப் படம் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா, மிக நீளமான மற்றும் அதிக செலவு பிடித்த போரை நடத்தியது. ஆகஸ்ட் 30ஆம் தேதி, கடைசி அமெரிக்க வீரர் காபூலை விட்டு வெளியேறியபோது அந்தப்போர் முடிவுக்கு வந்தது. பிரவுன் பல்கலைக்கழகத்தின் 'போர் செலவு' ஆய்வில், அமெரிக்க கருவூலத்துக்கு 2.3 ட்ரில்லியன் டாலர் போர் சுமை ஏற்பட்டதாக மதிப்பிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறிய பிறகு, தாலிபன்களின் அதிகரித்து வரும் வலு, நாட்டின் ஆக்கிரமிப்பு மற்றும் குழப்பமான சூழல் ஆகியவை அமெரிக்காவின் தோல்வி என்று பல நிபுணர்கள் விவரிக்கின்றனர். சிலருக்கு இது ஒரு தோல்வியடைந்த போராக இருந்தாலும், பலருக்கு இது ஒரு லாபகரமான விஷயமாக இருந்தது. 2001 க்கும் 2021 க்கும் இடையில், இந்த போரில் செலவழித்த 2.3 ட்ரில்லியன் டாலரில், சுமார் 1.05 ட்ரில்லியன் டாலர் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயல்பாடுகளுக்கு செலவிடப்பட்டது. ஐ.நாவில் இந்தியா, பாகிஸ்தானுக்காக குரல் கொடுத்த பெண் அதிகாரிகள் இஸ்லாமிய நாடுகள் பாகிஸ்தானுக்கு கொடுத்த அதிர்ச்சி இந்த தொகையின் பெரும் பகுதி ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் தனியார் நிறுவனங்களின் சேவைகளுக்காக செலவிடப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விமானங்களில் எரிபொருள் நிரப்புதல், லாரி ஓட்டுதல், சமையல், சுத்தம் செய்தல், ஹெலிகாப்டர்கள் இயக்குவது போன்ற பணிகளை ஒப்பந்தக்காரர்கள் செய்தனர். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் கென்னடி ஸ்கூல் ஆஃப் கவர்னன்ஸின் பேராசிரியர் லிண்டா பில்ம்ஸ், "இந்தப் போரில் அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கவில்லை. தன்னார்வ ராணுவ வீரர்கள், ஒப்பந்தக்காரர்களால் வழங்கப்பட்டனர். அமெரிக்க வீரர்களை விட ஒப்பந்தத்தில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக இருந்தது," என்று குறிப்பிடுகிறார். ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட வேண்டிய துருப்புக்களின் எண்ணிக்கை அரசியல்ரீதியாக மட்டுப்படுத்தப்பட்டதாகவும், இதன் அடிப்படையில் ஒப்பந்தக்காரர்களின் எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டது என்றும் லிண்டா பில்ம்ஸ் பிபிசியிடம் கூறினார். "விமானங்களில் எரிபொருள் நிரப்புதல், லாரி ஓட்டுதல், சமையல், சுத்தம் செய்தல், ஹெலிகாப்டர்கள் இயக்குவது மற்றும் அனைத்து வகையான உபகரணங்கள் மற்றும் பொருட்களை கொண்டு வருவது மற்றும் எடுத்துச் செல்வது போன்ற பல்வேறு வேலைகளைச் செய்ய ஒப்பந்தக்காரர்கள் இருந்தனர்," என்று அவர் கூறுகிறார். அதிகம் பயனடைந்த 5 நிறுவனங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய்க்கு டைன்கார்ப் நிறுவனம் மெய்க்காப்பாளர்களை வழங்கியது அமெரிக்கா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஆப்கானிஸ்தானில் எல்லா வகையான சேவைகளுக்காக அமெரிக்க பாதுகாப்புத் துறையியிடமிருந்து ஒப்பந்தங்களைப் பெற்றன. இவற்றில் சில நிறுவனங்கள் பில்லியன் கணக்கான டாலர்களை சம்பாதித்தன. '20 வருடப் போர்' திட்டத்தின் இயக்குநர் பேராசிரியர் ஹெய்டி பெல்டியரும் 'போர் செலவு' ஆய்வின் ஒரு பகுதியாக இருந்தார். எந்த நிறுவனங்கள் அதிகம் பயனடைந்தன என்பதைக் காட்ட எந்த அதிகாரப்பூர்வ தரவும் இல்லை என்று பிபிசியிடம் குறிப்பிட்ட அவர், திட்டத்தின் மதிப்பீடுகளை பிபிசி முண்டோவிடம் பகிர்ந்து கொண்டார். இந்த மதிப்பீடுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த மதிப்பீடுகள் அமெரிக்க அரசின் வலைத்தளமான usaspending.gov இல் கிடைக்கும் தரவுகளின் மறுஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தத் தரவு அமெரிக்க நிதிச் செலவுகள் குறித்த அதிகாரபூர்வ தகவலை அளிக்கிறது. இது 2008 நிதி நெருக்கடிக்குப் பிறகு தயாரிக்கப்பட்டது. "இந்த புள்ளிவிவரங்கள் முக்கியமாக 2008 முதல் 2021 வரையிலான காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. இருப்பினும், சில திட்டங்கள் 2008ஆம் ஆண்டுக்கு முன்பே உள்ளன. எனவே 2001 ஆம் ஆண்டு முதல் பார்த்தால், உண்மையான புள்ளிவிவரங்கள் அதிகமாக இருக்கலாம்," என ஹெய்டி பெல்டியர் கூறுகிறார், இந்த மதிப்பீடுகளின்படி, ஆப்கானிஸ்தானில் ஒப்பந்தங்கள் அதிகம் கிடைக்கப்பெற்ற முதல் மூன்று அமெரிக்க ஒப்பந்த நிறுவனங்கள், டைன்கார்ப் (Dinecorp), ஃப்ளூயர் (Fluer), கெல்லாஜ் ப்ரவுன் & ரூட் (Kellogg Brown & Root - KBR). 'ராணுவத்திற்கான தளவாடங்கள் மற்றும் ஏற்பாடுகளை செய்வதில், பொது மக்களை ஈடுபடுத்தும் திட்டத்தின் ' (LogCAP) ஒரு பகுதியாக இந்த நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. "லாக்கேப் என்பது விரிவான பல ஆண்டு கால ஒப்பந்தங்கள். அவை தளவாடங்கள், மேலாண்மை, போக்குவரத்து, உபகரணங்கள் விமான பராமரிப்பு மற்றும் உதவி ஆகியவற்றில் பல்வேறு சேவைகளுக்கு வாய்ப்புகளை வழங்குகின்றன" என்று ஹெய்டி பெல்டியர் விளக்குகிறார். டைன்கார்ப் ஆப்கானிஸ்தானின் காவல்துறை மற்றும் போதைப்பொருள் எதிர்ப்புப் படைகளுக்கு உபகரணங்கள் மற்றும் பயிற்சிகளை வழங்குவது Dinecorp இன் பல பணிகளில் ஒன்றாகும். ஹமீத் கர்சாய் ஆப்கானிஸ்தானின் அதிபராக இருந்தபோது அவருக்கு பாதுகாவலர்களையும் நிறுவனம் வழங்கியது. ஹெய்டி பெல்டியரின் மதிப்பீட்டின்படி, லாக்கேப்பில் இருந்து 7.5 பில்லியன் டாலர் உட்பட, 14.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்களை டைன்கார்ப் பெற்றது. டைன்கார்ப் நிறுவனம் சமீபத்தில் அமெண்டம் கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது. "2002 முதல், டைன்கார்ப் இன்டர்நேஷனல் தனது அரசு வாடிக்கையாளர்கள் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள தனது கூட்டாளிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது" என டைன்கார்ப் செய்தித் தொடர்பாளர் பிபிசி முண்டோவிடம் அதன் செயல்பாடுகள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார். தனியார் நிறுவனமாக இருப்பதால், அது தனது ஒப்பந்தங்கள் மற்றும் பிற நிதி விவரங்களை பொதுவில் வெளியிடுவதில்லை என்று அவர் மேலும் கூறினார். ஃப்ளூயர், டெக்சாஸை தளமாகக் கொண்ட நிறுவனம். இது தெற்கு ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவத் தளங்கள் நிர்மாணத்தை மேற்பார்வையிட்டது. நிறுவனத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்ட தகவலின் படி, இது ஆப்கானிஸ்தானில் 76 முன்னரங்க இயக்க தளங்களை (சிறிய ராணுவ தளங்கள்) செயல்படுத்தியது. ஒரு லட்சம் வீரர்களுக்கு உதவியது மற்றும் ஒரு நாளில் ஒரு லட்சத்து 91 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கியது. ஃப்ளுயர் கார்ப்பரேஷன் 13.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்களைப் பெற்றது. அதில் 12.6 பில்லியன் டாலர்கள் லாக்கேப் மூலமானது என்று ஹெய்டி பெல்டியர் தெரிவிக்கிறார். பிபிசி முண்டோ ஃப்ளூயர் நிறுவனத்தை ஆப்கானிஸ்தான் போரில் அதன் செயல்பாடுகள் பற்றிய தகவல்களை அளிக்குமாறு கோரியது. ஆனால் இந்த செய்தி வெளியிடப்படும் வரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. கேபிஆர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஃப்ளுயர், டெக்சாஸில் இருந்து செயல்படும் நிறுவனமாகும். தெற்கு ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ தளங்கள் நிர்மாணத்தை மேற்பார்வையிட்டது. கெல்லாக் பிரவுன் ரூட் (KBR) அமெரிக்கப் படைகளுக்கு உதவ பொறியியல் மற்றும் பிற வசதிகளை வழங்கும் பணிகளை மேற்பார்வையிட்டது. வீரர்களுக்கு தற்காலிக தங்குமிடம், உணவு மற்றும் பிற அடிப்படை சேவைகளை வழங்கி வந்தது. இந்த நிறுவனம் நேட்டோ விமானத் தாக்குதல்களுக்காக, ஆப்கானிஸ்தானில் உள்ள பல விமான நிலையங்களுக்கு தரையிலிருந்து ஆதரவையும் வழங்கியது. ஓடுபாதைகள் மற்றும் விமானங்களின் பராமரிப்பு, வான் தகவல் தொடர்பு ஆகியவை இதன் பணிகளில் அடங்கும். கேபிஆர் KBR அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து 3.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்களைப் பெற்றது என்று ஹெய்டி பெல்டியரின் மதிப்பீடு தெரிவிக்கிறது. "கேபிஆர் ஆப்கானிஸ்தானில் 2002 முதல் 2010 வரை லாக்கேப் கீழ் போட்டியிட்டுப் பெற்ற ஒப்பந்தத்தின் மூலம், அமெரிக்க ராணுவத்தை ஆதரித்தது. நாங்கள் 2001 ஆம் ஆண்டில் இந்த ஒப்பந்தத்தை பெற்றோம்," என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார். "இந்த திட்டத்தின் மூலம் நிறுவனம், 82 அமெரிக்க ராணுவ தளங்களுக்கு உணவு, சலவை, மின்சாரம், சுத்தம் செய்தல் மற்றும் பராமரிப்பு சேவைகளை வழங்கியது. 2009 ஜூலையில் ராணுவம் இந்த ஒப்பந்தத்தை டைன்கார்ப் மற்றும் ஃப்ளூயர் நிறுவனங்களுக்கு வழங்கியது. அவை இணைந்து பணியாற்றின. கேபிஆர் 2010 ஆம் ஆண்டில் தன் சேவைகளை நிறுத்தியது," என்று அவர் மேலும் கூறினார். ரேதியன் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, போர் விமானம் அமெரிக்காவின் மிகப்பெரிய விண்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களில் ஒன்றான ரேதியன், அதிக வருவாய் ஈட்டிய நான்காவது நிறுவனமாகும். இந்த நிறுவனம் ஆப்கானிஸ்தான் சேவைகளுக்காக 2.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களை பெற்றது. அதன் சமீபத்திய பணி, ஆப்கானிஸ்தான் விமானப்படைக்கு பயிற்சி அளிப்பதாகும். இதற்காக 2020 ஆம் ஆண்டில் 145 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தம் கிடைத்தது. ஏஜிஸ் எல்எல்சி என்பது வெர்ஜீனியாவை தளமாகக் கொண்ட ஒரு பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை நிறுவனம் ஆகும். இது சேவைகள் வழங்கல் மூலம் ஆப்கானிஸ்தானில் அதிக வருவாய் ஈட்டிய ஐந்தாவது நிறுவனமாகும். இது 1.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்களைப் பெற்றது. இந்த நிறுவனம் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு பாதுகாப்பு அளித்தது. ஆப்கானிஸ்தானில் அதன் செயல்பாடுகள் குறித்து அறிய பிபிசி முண்டோ, ஏபிஸை தொடர்புகொண்டது. ஆனால் இந்தக்கட்டுரை வெளியாகும் வரை அதன் தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை. பாதுகாப்பு நிறுவனங்களின் லாபம்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் பிளாக்ஹாக் ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்கிறது அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்த நிறுவனங்களான போயிங், ரேதியன், லாக்ஹீட் மார்ட்டின், ஜெனரல் டைனமிக்ஸ் மற்றும் நார்த்ரோப் க்ரூம்மெய்ன் ஆகியவை ஆப்கான் போரிலிருந்து பெரிதும் பயனடைந்தன என்று பிபிசி முண்டோவிடம் நிபுணர்கள் தெரிவித்தனர். "அந்த நிறுவனங்கள் போரிலிருந்து நிறைய பணம் சம்பாதித்தன."என்று லிண்டா பில்ம்ஸ் கூறுகிறார். இருப்பினும், ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் நடவடிக்கைகளுக்கும், நிறுவனங்களின் ஒப்பந்தங்களுக்கும் இடையே நேரடியாக தொடர்பு இல்லாததால் அவை எவ்வளவு தொகையை பெற்றன என்பதைக் கண்டறிவது கடினம். "இந்த நிறுவனங்களுக்கு, ஆப்கானிஸ்தானில் பயன்படுத்தப்பட வேண்டிய பொருட்களை தயாரிக்க அமெரிக்காவில் ஒப்பந்தங்கள் கிடைத்தன. எனவே இந்த செலவுகள், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட செலவுகளில் சேர்க்கப்படவில்லை," என்று ஹெய்டி பெல்டியர் விளக்குகிறார். 9/11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க ராணுவச் செலவிலிருந்து அதிக நன்மைகளை இந்த நிறுவனங்கள்தான் பெற்றுள்ளன என்று 'காஸ்ட் ஆஃப் வார்' திட்டம், இந்த வாரம் வெளியிட்ட ஒரு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. "2001 - 2020 நிதியாண்டுகளுக்கு இடையில், இந்த ஐந்து நிறுவனங்கள் அமெரிக்க பாதுகாப்புத் துறையிலிருந்து 2.1 டிரில்லியன் டாலர் (2021ல் கணக்கிடப்பட்டது) மதிப்புள்ள ஒப்பந்தங்களைப் பெற்றன," என்று அறிக்கை கூறுகிறது. ஆப்கானிஸ்தானில் நடந்த போர் அவர்களின் வணிகத்திற்கும், ஒப்பந்தங்களுக்கும் எவ்வாறு உதவியது என்று பிபிசி முண்டோ இந்த ஐந்து நிறுவனங்களிடமும் கேட்டது. ஜெனரல் டைனமிக்ஸ் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. இந்த கட்டுரை வெளியிடப்படும் வரை மற்ற நிறுவனங்கள் பதிலளிக்கவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, போயிங், F-15 மற்றும் F-18 போர் விமானங்களை தயாரிக்கிறது. ரேதியன் நிறுவனத்தை உதாரணமாக சுட்டிக்காட்டும் ஹெய்டி பெல்டியர், 2.5 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இந்த நிறுவனம் சம்பாதித்தது என்றாலும் இந்தப் புள்ளிவிவரம் ஆப்கானிஸ்தானில் நேரடியாக வழங்கப்பட்ட ஒப்பந்தங்களுக்கானது மட்டுமே என்று கூறுகிறார். "ரேதியன், ஆயுதங்கள் அல்லது தகவல்தொடர்பு அமைப்புகளுக்கான ஒப்பந்தத்தைப் பெற்று, அவை அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு ஆப்கானிஸ்தானில் பயன்படுத்தப்பட்டால், அந்த ஒப்பந்தம் ஆப்கானிஸ்தானுடன் இணைந்ததாக கருதப்படாது," என்று அவர் கூறுகிறார். போயிங், F-15 மற்றும் F-18 போர் விமானங்களை தயாரிக்கிறது. ஆனால் போயிங், முக்கிய ஒப்பந்த நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. அதேபோல், பிளாக்ஹாக் ஹெலிகாப்டரின் உற்பத்தியாளரான லாக்ஹீட் மார்ட்டினும் இந்தப் பட்டியலில் இல்லை. "ஜெனரல் டைனமிக்ஸ் பெரும்பாலும் இலகுரக ராணுவ வாகனங்களை தயாரிக்கிறது. ஆப்கானிஸ்தானில் நிறைய சைபர் பாதுகாப்பு பணிகளையும் அது செய்தது," என்று லிண்டா பில்ம்ஸ் கூறுகிறார். பிபிசி முண்டோவின் கேள்விகளுக்குப் பதிலளித்த பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜெசிகா மேக்ஸ்வெல், ஆப்கானிஸ்தானில் உபகரணங்கள் மற்றும் சேவைகளை வழங்குவதன் மூலம் இந்த ஐந்து பாதுகாப்பு ஒப்பந்த நிறுவனங்கள் எவ்வளவு தொகை ஈட்டினார்கள் என்பதைக் கண்டறிவது கடினம் என்பதை உறுதிப்படுத்தினார். "இந்த நிறுவனங்களிடமிருந்து பாதுகாப்பு அமைச்சகம் பல்வேறு தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பெறுகிறது. ஆனால் அவை ஆப்கானிஸ்தானுக்கு மட்டுமானதல்ல. உலகெங்கிலும் உள்ள செயல்பாடுகளுக்காக நாங்கள் அவற்றை வாங்குகிறோம். சில ஆப்கானிஸ்தானில் பயன்படுத்தப்பட்டன," என்று அவர் குறிப்பிட்டார். விலைகளில் ஏகபோகம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜெனரல் டைனமிக்ஸ் பெரும்பாலும் இலகுரக ராணுவ வாகனங்களை தயாரிக்கிறது. ஆப்கானிஸ்தான் போரில் சேவைகளின் விலைகள் தொடர்பாக நிறுவனங்கள் தாங்கள் வைத்ததுதான் சட்டம் என்று இருந்தன என்று லிண்டா பில்ம்ஸ் கூறுகிறார். "பல ஒப்பந்தங்கள் போட்டியின்றி வழங்கப்பட்டன அல்லது மிகக் குறைந்த போட்டி இருந்தது. அத்தகைய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் மிகக் குறைவு. எனவே சில நிறுவனங்களின் ஏகபோகம் இருந்தது," என்று அவர் கூறுகிறார். பல சந்தர்ப்பங்களில் நிறுவனங்கள் விலையை உயர்த்திவிடுகின்றன. சேவை வழங்கும் இடத்தின் மோசமான பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் அங்கு செல்வதில் உள்ள சிரமங்களை மேற்கோள் காட்டி, அவை இதைச்செய்கின்றன என்று லிண்டா தெரிவிக்கிறார். ஆளில்லா ஐ.நா அரங்கில் உரையாற்றினாரா நரேந்திர மோதி? உண்மை என்ன? ஆப்கன் பெண்களுக்கு தாலிபன்கள் கல்வி மறுப்பது இஸ்லாத்துக்கு எதிரானது - இம்ரான் கான் ஆப்கானிஸ்தான் போரில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்ட விதம் குறித்து, பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "முடிந்தவரை போட்டியின் அடிப்படையில் ஒப்பந்தங்களை வழங்குவதே பாதுகாப்பு அமைச்சகத்தின் கொள்கையாகும். இருப்பினும், பெரும்பாலான ஆயுத அமைப்புகளுக்கு, அதன் உருவாக்கத்தின் ஆரம்ப கட்டங்களிலேயே டெண்டர்கள் விடப்பட்டன, "என்றார். அதில் ஊழல் இருப்பதாக லிண்டா கூறுகிறார். "ஒரு சுவரை வண்ணம் பூச 20 மடங்கு அதிகம் கட்டணம் பெறுவது ஒரு விஷயம். ஆனால் பணம் பெற்றுக்கொண்டு, சுவருக்கு வண்ணமும் பூசாதது ஊழல். அதாவது வண்ணம் தீட்ட எதுவும் இல்லை, ஆனாலும் பணம் பெறப்பட்டுள்ளது," என்றார் அவர். அதே நேரத்தில், துணை ஒப்பந்தக்காரர்களுக்கும் ஆப்கானிஸ்தானில் வேலை வழங்கப்பட்டது என்று அவர் கூறுகிறார். இதன் பொருள் அரசிடம் இருந்து வேலை வாங்கிய முக்கிய ஒப்பந்ததாரர் வேறு ஒருவருக்கு ஒப்பந்தம் கொடுத்து வேலையை முடித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புப் படையினர் துணை ஒப்பந்தக்காரர்கள் எவ்வளவு பணம் பெற்றார்கள் என்கிற கணக்கு இல்லை என்று லிண்டா பில்ம்ஸ் தெரிவிக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்த பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர், " ஒரே ஒரு சேவை வழங்குபவர் மட்டுமே இருக்கும் நிலையில்கூட , பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு நியாயமான விலையின் உத்தரவாதத்தை அளிக்கும் ஒரு வலுவான பாதுகாப்பு அமைப்பை நாட்டின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் வழங்குகின்றன," என்றார். மோசடி, துஷ்பிரயோகம் அல்லது ஊழல் பற்றிய எந்த ஆதாரம் இருந்தாலும் அது பாதுகாப்பு ஆய்வாளர் ஜெனரலுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்று ஜெசிகா மேக்ஸ்வெல் கூறினார். ஆப்கானிஸ்தானின் புனரமைப்பு முயற்சிகளில் துஷ்பிரயோகம் அல்லது மோசடி காரணமாக 2008 மற்றும் 2017 க்கு இடையில் அமெரிக்கா சுமார் 15.5 பில்லியன் டாலர் இழப்பை சந்தித்ததாக இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலுவலகம் தெரிவித்ததாக, நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. "போர் காரணமாக ஒரு வகையான நிறுவனத்திற்கு மட்டுமே பயன் ஏற்பட்டது என்று சொல்லமுடியாது. பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்பான நிறுவனங்கள், தளவாட நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் எரிபொருள் சப்ளையர்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இதன்மூலம் பயன்பெற்றன," என்று லிண்டா பில்ம்ஸ் குறிப்பிட்டார். https://www.bbc.com/tamil/global-58713325
 20. கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் மனிதர்களை முந்தும் எலி - மிஸ்டர் கோக்ஸ் 27 செப்டெம்பர் 2021 பட மூலாதாரம்,GOXX CAPITAL பலரைப் போலவே மிஸ்டர் கோக்ஸும் கிரிப்டோகரன்சி என்ற வணிகக் கடலுக்குள் குதித்துவிட்டார், என்றாவது ஒருநாள் அது தன்னை பணக்காரர் ஆக்கிவிடும் என்ற நம்பிக்கையுடன். பலரைப் போலவே என்று சொன்னோம் அல்லவா, ஆனால் இரண்டு விஷயத்தில் அவர் மற்றவர்களை விட மாறுபட்டவர். ஒன்று சாதாரண மனிதர்களைப் போல அவர் குறைந்த அளவு லாபம் ஈட்டுவதில்லை. பல தொழில்முறை வர்த்தகர்கள், நிதியங்கள் போன்றவற்றை எல்லாம் அவர் தோற்கடித்துவிட்டார். இரண்டாவது வேறுபாடு, அவர் மனிதர் அல்லர். அவர் ஒரு எலி. வெள்ளெலி. மிஸ்டர் கோக்ஸுக்கு அலுவலகம் உண்டு. ஆனால் அது அவரது கூண்டுக்குள்ளேயே அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் அவர் அலுவலகத்துக்குள் வந்துவிட்டார் என்றால் ட்விட்டரில் அவரைப் பின் தொடருவோருக்கு தகவல் வந்துவிடும். ட்விட்ச்(Twitch) தளத்தில் நேரலை தொடங்கிவிடும். மிஸ்டர் கோக்ஸ் தனது வர்த்தகத்தைத் தொடங்குவார். அந்த அலுவலகத்தில் ஒரு சக்கரம் இருக்கிறது. அதில் ஓடுவதன் மூலம் எந்த கிரிப்டோ கரன்சியை வர்த்தகம் செய்ய வேண்டும் என்பதை அவர் தேர்வு செய்கிறார். சரி, அதை வாங்க வேண்டுமா, அல்லது விற்க வேண்டுமா என்பதை எப்படித் தீர்மானிப்பது. அதற்கும் அவரது அலுவலகத்துக்குள்ளேயே வசதி இருக்கிறது. இந்தியாவுக்கு தனி கிரிப்டோ கரன்சி: அரசின் அடுத்த அதிரடி என்ன? கிரிப்டோ கரன்சிக்கு இந்தியாவில் பெருகி வரும் திடீர் வரவேற்பு - ஏன் தெரியுமா? இரண்டு சுரங்க வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒன்று வாங்குவதற்கு, மற்றொன்று விற்பதற்கு. ஒவ்வொரு முறையும் சுரங்கப் பாதைக்குள் ஓடும்போது, அதற்கேற்ப அங்கு இணைக்கப்பட்டிருக்கும் மின்னணுக் கம்பிகள் வர்த்தககத்தை நிறைவு செய்கின்றன. இந்த எலி முதலீட்டாளரின் பின்னாள் இருக்கும் மூளைகள், இரு ஜெர்மானிய இளைஞர்களுக்குச் சொந்தமானவை. "இப்போதெல்லாம் எல்லாமே விலை உயர்ந்துவிட்டன. வாடகை அதிகமாகிவிட்டது, சேமிப்பது கடினமாகிவிட்டது. " என்று அவர்கள் கூறுகிறார்கள். "எங்கள் தலைமுறையைச் சேர்ந்த பலர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்கிறேன் என்கிறார்கள். ஆனால், எந்தப் புரிதலும் இல்லாமல், தங்களது சேமிப்பை எல்லாம் கிரிப்டோ கரன்சி சந்தையில் வீசுகிறார்கள். " "இதுபோன்றோரின் கவனத்தை ஈர்க்க செய்ய முடிவெடுத்தோம். மனிதர்களை எங்களது வெள்ளெலி புத்திசாலித்தனமாக முடிவெடுக்கும் என்று கூறினோம்" அதனால் திட்டமிட்டேதான் கோக்ஸ் என்ற பெயர் வைக்கப்பட்டது. எம்டி கோக்ஸ் என்ற நிறுவனம் ஒரு காலத்தில் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் உலகத்திலேயே மிகப்பெரிய நிறுவனமாக இருந்தது. ஆனால் பல லட்சம் கிரிப்டோ கரன்சிகள் திருடப்பட்டதால் அது திவாலானது. சரி, நமது மிஸ்டர் கோக்ஸ் வெள்ளெலி என்ன செய்திருக்கிறார் என்று பார்ப்போம். பட மூலாதாரம்,GOXX CAPITAL அவரது முதல் மாதம் கடினமாக இருந்தது. கடந்த ஜூன் மாதம் 12-ஆம் தேதி அவர் தனது முதல் வர்த்தகத்தைத் தொடங்கினார். 326 யூரோக்கள் அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. முதல் மாதத்தில் 95 வர்த்தகங்களை முடித்த பிறகு அவரது மூலதனம் 7.3 சதவிகிதம் குறைந்தது. ஆனால் செப்டம்பர் 27-ஆம் தேதி கணக்குப்படி அவரது மூலதனத்தின் நிகர மதிப்பு 19.41 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. இது சாதாரணமல்ல. உலகின் முன்னணி பங்குச் சந்தை முதலீடுகளின் லாபத்தை விடவும், ஏன் முதலீட்டு வித்தகரான வாரன் பஃப்பெட்டின் பெர்க்ஸயர் ஹேத்தாவே நிறுவனத்தின் லாபத்தை விடவும் இது அதிகம். கிரிப்டோ கரன்சி சந்தையில்கூட பிட்காயின் போன்ற முன்னணி கரன்சிகளை மிஸ்டர் கோக்ஸ் முந்தியிருக்கிறார். ஆனால், மிஸ்டர் கோக்ஸ் பெயரில் இருக்கும் கோக்ஸ் கேபிடல் என்ற நிறுவனம் உண்மையான முதலீட்டு நிறுவனமல்ல. மிஸ்டர் கோக்ஸ் என்ற வெள்ளெலியைப் பயன்படுத்தும் இரு ஜெர்மானிய இளைஞர்களும் தங்களது ஒவ்வொரு ட்விட்டர் பதிவிலும் இதை வலியுறுத்திக் கூறுகிறார்கள். தங்களது முதலீட்டை ஆலோசனையாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்கிறார்கள். ஆயினும் தங்களைப் பற்றிய விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க அவர்கள் விரும்பவில்லை. "கிரிப்டோ கரன்சி பற்றிய பெரும்பாலான விவாதங்கள் சர்ச்சைக்குரியவையாக மாறிவிடுகின்றன. அது நாகரிகமற்றதாகவும் இருக்கின்றன" என்று பிபிசியிடம் அவர்கள் தெரிவித்தனர். பட மூலாதாரம்,GOXX CAPITAL அதனால் தங்களது "வேடிக்கையான திட்டத்தின்" முகமாக மிஸ்டர் கோக்ஸ் இருக்கட்டும் என்று அவர்கள் முடிவெடுத்துவிட்டனர். கொரோனா பொது முடக்கத்தின் காரணமாக வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தபோது வேடிக்கையாக இந்தத் திட்டத்தை தொடங்கியதாக அவர்கள் கூறுகின்றனர். அவர்களில் ஒருவர் விரிவுரையாளர் மற்றும் மாதிரிகளை வடிவமைக்கும் நிபுணர். மக்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலான, நகைச்சுவை கலந்த தொழில்நுட்பங்களை தாம் விரும்புவதாக அவர் கூறுகிறார். மற்றொருவர் ஒரு புரோகிராமர். பல்கலைக்கழகத்தில் இருந்து இருவரும் நல்ல நண்பர்கள். எலி நினைத்தபடி செய்யும் வர்த்தகங்கள் ஆன்லைனில் பலரது ஆர்வத்தை ஈர்த்துள்ளது. "வெள்ளெலி தனது வர்த்தகத்தைத் தொடங்கிய நாள் முதல் கிரிப்டோ கரன்சி என்றால் என்ன என்று பலரும் என்னைக் கேட்கத் தொடங்கிவிட்டார்கள்" என்கிறார் அவ்விருவரில் ஒருவர். "பொதுவாக மக்கள் 'பிளாக்செயின்' என்ற வார்த்தையைக் கேட்டாலே ஓடிவிடுவார்கள். . " மிஸ்டர் கோக்ஸின் பெட்டி மிஸ்டர் கோக்ஸின் அலுவலகம் அடங்கிய பெட்டியின் பெரும்பாலான பாகங்கள் வீட்டிலேயே தயாரிக்கப்பட்டவை. சாஃப்ட்வேர் ஸ்கிரிப்ட், மைக்ரோகண்ட்ரோலர்கள், 3 டி பிரிண்டிங், லேசர் கட்டிங் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த அலுவலகம் முழுமையாக தானியங்கி முறையில் இயங்குகிறது. பட மூலாதாரம்,GOXX CAPITAL இதை விரிவுபடுத்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள். "எங்கள் மனதில் பல அம்சங்கள் உள்ளன, அவை அனைத்தையும் பார்க்க மிகவும் வேடிக்கையாக இருக்கும், மேலும் மிஸ்டர் கோக்ஸ் விளையாடுவதற்கு இன்னும் அதிக இடத்தைக் கொடுக்கும்" என்று அவர்கள் கூறினர். ஆனால் மிஸ்டர் கோக்ஸ் ஒரு திறமையான, வெற்றிகரமான நிர்வாகியைப் போல தனது நேரத்தை வைத்திருக்கிறார். ஆனால் மிஸ்டர் கோக்ஸ், ஓர் உண்மையான வெற்றிகரமான நிர்வாகியைப் போல, தனது நேரத்தை வைத்திருக்கிறார். எப்போது வேண்டுமானாலும் அவர் அலுவலகத்துக்கு வரலாம். அவரைப் பார்க்க விரும்புவோர் அடுத்த நேரலை வரை காத்திருக்க வேண்டும். https://www.bbc.com/tamil/global-58710984
 21. SRH vs RR ஐபிஎல் 2021 கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,BCCI / IPL படக்குறிப்பு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 82 ரன்கள் எடுத்திருந்தார் கேப்டன் சஞ்சு சாம்சன். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று துபாயில் நடந்த ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. டாஸ் வென்ற இந்த அணியால் ஆட்டத்தை வெல்ல முடியவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்தபோது தொடக்க வீரர் எவின் லெவிஸ் 4 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வல் 23 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 57 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் மூன்று சிக்சர்களுடன் 82 ரன்கள் எடுத்து அசத்தினார். ஆனால் இவரது இந்த ஆட்டம் சிறப்பாக இருந்தும் ராஜஸ்தான் அணியால் பெரும் அளவில் ஸ்கோர் எடுக்க முடியவில்லை. அதற்குக் காரணம் இவரைத் தவிர பிற ஆட்டக்காரர்கள் யாரும் அதிரடியாக ஆடவில்லை. விராட் கோலி: டி20 போட்டிகளில் 10,000 ரன்களை கடந்த முதல் இந்தியர் - 6 சுவாரசிய தகவல்கள் டி20 உலக கோப்பை: இலங்கை அணி ஆலோசகராக மஹேல ஜயவர்தன நியமனம் கடைசிவரை நிலைத்து நின்று ஆடிய சஞ்சு சாம்சன் ஆட்டம் முடிய 4 பந்துகளில் இருந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் சித்தார்த் கௌலின் பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டருக்கு கேட்ச் கொடுத்து அவுட்டானார். 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்திருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 164 ரன்களை எடுத்திருந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் இழந்து 5 விக்கட்டுக்களில் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியின் சித்தார்த் கௌல் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஆரம்பமே அமர்க்களம் பட மூலாதாரம்,BBCI/IPL படக்குறிப்பு, ஜேசன் ராய் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஹைதராபாத் அணிக்கு சேசிங் ஒன்றும் அவ்வளவு கடினமானதாக இல்லை. சன்ரைசர்ஸ் தொடக்க வீரர் ஜேசன் ராய் 42 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். இன்னொரு தொடக்க வீரர் வ்ருத்திமான் சஹா 16 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார். அடுத்ததாக வந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்ஸ்மேன் பிரியம் கர்க் ரன் எதுவும் எடுக்காமல் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனாலும் இது அந்த அணிக்கு ஒன்றும் பெரிய பாதிப்பாக இருக்கவில்லை. 13வது ஓவரின் கடைசி பந்தில் அவர் ஆட்டமிழந்த பொழுது சன்ரைசர்ஸ் அணி ஏற்கனவே 119 ரன்களை எடுத்திருந்தது. இறுதியாக ஆட்டம் முடிய 9 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 167 ரன்கள் எடுத்தது ஹைதராபாத். இதன் மூலம் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி உள்ளது ஹைதராபாத் அணி. ஆனால் நேற்றைய வெற்றிதான் இந்த அணிக்கு 2வது வெற்றி. மீதமுள்ள எட்டு போட்டிகளிலும் இந்த அணி தோல்வியையே இதுவரை சந்தித்துள்ளது வெறும் நான்கு புள்ளிகளுடன் தற்போதைய புள்ளிப் பட்டியலிலும் ஹைதராபாத் அணி கடைசி இடத்திலேயே இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. https://www.bbc.com/tamil/sport-58715763
 22. வாழ்த்துக்கள் அண்ணை, எந்த இடம் என்று சொல்லவில்லை! யாழ்ப்பாணமா இருக்காது, இவ்வளவு ஆழம் போனால் சவர் தண்ணி தான் வரும். வன்னி என்று தான் நினைக்கிறேன்.
 23. CSK vs KKR ஐபிஎல் 2021 கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது 27 செப்டெம்பர் 2021, 01:47 GMT பட மூலாதாரம்,BCCI/IPL அபுதாபியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்றதன் மூலம் ஐபிஎல் 2021 புள்ளிப் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் முதல் இடத்திற்கு சென்றுள்ளது. கடைசி ஓவரின் கடைசி பந்து வரை பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் உண்டாக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆட்டத்தில் மட்டுமல்லாது அதன் ரசிகர்கள் மனதையும் வென்றுள்ளது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. கொல்கத்தா அணிக்காக அதிகபட்சமாக ராகுல் த்ரிபாதி 45 ரன்களும், நிதிஷ் ரானா ஆட்டமிழக்காமல் 37 ரன்களும் தினேஷ் கார்த்திக் 26 ரன்களும் எடுத்தனர். பந்துவீச்சாளர்களை பொருத்தவரை சென்னை அணியின் ஜோஷ் ஹேசல்வுட் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். நான்கு ஓவர்கள் வீசிய தாக்கூர் வெறும் 20 ரன்கள் மட்டுமே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு விட்டுக் கொடுத்தார். அதில் ஒரு ஓவர் மெய்டன் ஓவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 18 வயதில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் பட்டம் வென்ற இளம்புயல் எம்மா ரடுகானு - யார் இவர்? விராட் கோலியுடன் இணையும் தோனி - இந்தியா கொண்டாடுவது ஏன்? 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்கம் நன்றாகவே இருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ரிதுராஜ் கெய்க்வாட் 28 பந்துகளில் 40 ரன்களும், பஃப் டூப்ளெசீஸ் 30 பந்துகளில் 43 ரன்களும் எடுத்தனர். பட மூலாதாரம்,BCCI / IPL படக்குறிப்பு, கொல்கத்தா அணியின் தினேஷ் கார்த்திக் அடுத்து களமிறங்கிய மொயீன் அலி 28 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். ஆனால் சென்னை அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிதாக ஜொலிக்கவில்லை. 16-வது ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன்பின்பு மளமளவென விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. மகேந்திர சிங் தோனி 4 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்து வருண் சக்ரவர்த்தியின் பந்தில் பவுல்டு-அவுட் ஆனார். ஆட்டத்தின் இறுதி கட்டம் நெருங்க நெருங்க பரபரப்பும் அதிகரித்தது .18-வது ஓவரில் சுரேஷ் ரெய்னா மற்றும் எம்.எஸ். தோனி ஆகிய இருவருமே ஆட்டமிழந்தனர். 15 பந்துகளில் 30 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு சென்னை அணி தள்ளப்பட்டது. கடைசி ஓவரின் போது சென்னை அணியின் வெற்றிக்கு நான்கு ரன்கள் தேவைப்பட்டன. ஆனால் அந்த ஓவரின் முதல் பந்திலேயே சாம் கரன் ஆட்டமிழந்தார். இரண்டு பந்துகளில் ஒரு ரன் மட்டும் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்த பொழுது கடைசி ஓவரின் 5வது பந்தில் 22 ரன்கள் எடுத்திருந்த ரவீந்திர ஜடேஜா வெளியேற்றப்பட்டார். சென்னை வெல்லுமா, சூப்பர் ஓவர் தேவை வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், சூப்பர் ஓவர் வீச வேண்டிய தேவை ஏற்படவில்லை. ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழந்த பின்பு அவருக்கு அடுத்ததாக களமிறங்கிய தீபக் சஹார், சுனில் நரைன் பந்து வீச்சில் கடைசி ஓவரின் கடைசி பந்தில் அந்த ஒற்றை ரன்னை எடுத்து சென்னை அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். புள்ளிப்பட்டியலில் சென்னை முதலிடம் Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 இந்த சீசனில் இதுவரை தாம் விளையாடியுள்ள 10 ஐபிஎல் போட்டிகளில் 8 போட்டிகளில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதே போல பத்துக்கு எட்டு போட்டிகளில் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் 16 புள்ளிகளை பெற்றிருந்தாலும், நெட் ரன் ரேட் அடிப்படையில் சென்னை அணியை விட பின்தங்கி இருப்பதால் தற்போது அந்த அணி இரண்டாம் இடத்தில் உள்ளது. இதுவரை விளையாடியுள்ள ஒன்பது போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடைசி இடத்திலும், பத்தில் நான்கு போட்டிகளில் மட்டுமே வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி இடத்திற்கு முந்தைய இடம் அதாவது 7-வது இடத்திலும் உள்ளன. https://www.bbc.com/tamil/sport-58702541
 24. உடல் முழுக்க கொம்பு முளைத்த அங்கிலோசர்: 16.8 கோடி ஆண்டு பழைய முள் எலும்பு அதிசயம் ஜோனாத்தன் அமோஸ் அறிவியல் செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அங்கிலோசர்: கவசம் பூட்டிய காஃபி டேபிள் நகர்ந்து வந்தால் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்குமோ? குட்டையான, அகலமான காபி டேபிளுக்கு உடம்பெல்லாம் கொம்பு முளைத்து உங்களை நோக்கி நகர்ந்து வருவதாக கற்பனை செய்து பாருங்கள். அதுதான் அங்கிலோசர். டைனோசர் போல அழிந்துபோன ஒரு தொல் பழங்கால விலங்கு. இது போன்ற அங்கிலோசர் ஒன்றின் உடலில் இருந்த முள் முள்ளாய் நீட்டிக்கொண்டிருக்கும் ஒரு எலும்புத் துண்டு ஒன்றின் புதைபடிவம், ஆப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தை சேர்ந்த ஆய்வாளர் டாக்டர் சூசி மெய்டமெண்ட் தன்னிடமுள்ள அற்புதமான இந்த புதைபடிவம் பற்றி விளக்குகிறார். அவரிடம் இருப்பது விலா எலும்பின் ஒரே ஒரு துண்டுதான். அந்த விலா எலும்புத் துண்டில்தான் முள் முள்ளாக நீட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால், இதை மட்டுமே வைத்துக்கொண்டு இது ஒரு புதுமையான கவசம் போர்த்திய டைனோசர் வகையைச் சேர்ந்த விலங்கினுடையது என்று எந்த ஒரு தொல்லுயிரியல் அறிஞரும் கூறிவிடமுடியும். இதுவரை கண்டறியப்பட்டதிலேயே மிகப்பழமையான அங்கிலோசர் எலும்பு இது என்பதையும் அவரால் கூறிவிட முடியும். இதில் முக்கியமானது என்னவென்றால் இது ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மொராக்கோ நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்த வகை உயிரிகளின் எலும்பு எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில்லை. "இது மிக ஆச்சரியமானது என்றாலும் அதைவிட விநோதமான ஒன்று இந்த கண்டுபிடிப்பில் உள்ளது. இந்த நீட்டிக்கொண்டிருக்கிற முட்கள் நேரடியாக எலும்பில் ஒட்டிக்கொண்டிருக்கின்றன. இது எப்படி என்பதுதான் புதிராக உள்ளது," என்றார் டாக்டர் மெய்டமென்ட். 23 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்களின் காலடித் தடம்: அமெரிக்க வரலாற்றை மாற்றி எழுதுகிறதா? இஸ்லாமிய நாடுகள் பாகிஸ்தானுக்கு கொடுத்த அதிர்ச்சி அசாமில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது ஏற்பட்ட மோதல்; போலீசார் துப்பாக்கிச் சூடு – என்ன நடந்தது? உடலில் முள் முளைத்த கவச டைனோசர்களில் வழக்கமாக விலா எலும்பைச் சுற்றி சதை இருக்கும். அதன் மீது தோல் மூடியிருக்கும். அந்த தோல் மீது கேரடின் என்று சொல்லக்கூடிய நம் நகம் போன்ற ஒரு புரதம் முள்ளாக முளைத்திருக்கும். ஆனால், இந்த அங்கிலோசர் உடலில் விலா எலும்பில் இருந்தே ஈட்டிபோல கொம்புகள் முளைத்திருக்கின்றன. இது மிகவும் வித்தியாசமானது. இது போன்ற அமைப்பு இருந்தால், தசைகள் விரிவடைவதை அது தடுக்கும், விலங்குகள் நகர்வதற்கே அது தடையாக இருக்கும். எனவே இது மிகவும் விந்தையானது என்று பிபிசி நியூசிடம் கூறினார் டாக்டர் மெய்டமென்ட். "இது போன்ற ஒரு அமைப்பை எந்த ஒரு வாழும் அல்லது அழிந்துபோன முதுகெலும்புள்ள உயிரினங்களிலும் பார்த்ததில்லை. இப்படிப்பட்ட ஒரு உடலமைப்பு புவிக் கோளின் உயிரின வரலாற்றிலேயே முன்னெப்போதும் காணாதது," என்கிறார் அவர். டாக்டர் மெய்டமென்ட்டின் குழுவினர் இந்த புதைபடிவத்தை பார்த்து அசந்துபோய்விட்டனர். இந்த புதைபடிவம் ஏதேனும் போலியான ஒன்றா என்று அவர்கள் கொஞ்ச நாள்கள் சந்தேகத்தில் இருந்தனர். பிறகு, அங்கிலோசர் இல்லாமல் ஏதேனும் ஒரு பிரும்மாண்ட மீனின் எலும்பாக இருக்குமா இருக்குமா என்றுகூட யோசித்தனர். ஆனால், விரிவான ஸ்கேனிங் மற்றும் ஆய்வுக்குப் பிறகு இந்த மாற்று யோசனைகளை அவர்கள் கைவிட்டு, இது அங்கிலோசர்தான் என்ற முடிவுக்கு வந்தனர். காணொளிக் குறிப்பு, கிடைத்த இந்த அரிய எலும்புத் துண்டினை ஆராய்சியாளர்கள் ஸ்கேன் செய்து பார்த்தனர். நிறைய பேருக்கு ஸ்டெகோசர்ஸ் என்ற தொல்பழங்கால விலங்கைத் தெரியும். அவையும் டைனோசர்களில் ஒரு வகையே. மேலே கவசம் போர்த்திய டைனோசர்கள் அவை. அவற்றின் முதலுகெலும்புக்கு இரு பக்கமும் இருந்து தட்டுபோன்ற ஒரு பாகம் வெளியே வரிசையாக நீட்டிக்கொண்டிருக்கும். லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்துக்கு சென்றால் சோஃபி என்று பெயரிடப்பட்ட பிரும்மாண்டமான ஸ்டெகோசர்ஸ் எலும்புக்கூட்டினைப் பார்க்கலாம். அங்கிலோசர்கள் அவற்றின் பரிணாம உறவினர்கள். மிக வெற்றிகரமாக வாழ்ந்தவையும்கூட. கிரெட்டேஷியஸ் யுகம் முழுவதும் இவை வாழ்ந்திருக்கின்றன. 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு புவியை ஒரு மிகப்பெரிய விண்கல் தாக்கிய நிகழ்வு வரை இந்த இனம் இருந்தது. இந்த விண்கல் தாக்கிய நிகழ்வில்தான் புவியில் இருந்த தாவர மற்றும் விலங்கினங்களில் 75 சதவீதம் அழிந்தன. அங்கிலோசர்கள் முதல் முதலாக எப்போது தோன்றின என்பது இன்னும் ஆராய்ச்சிக்குரியதாகவே இருக்கிறது. அதனால்தான் இந்த புதிய எலும்புத் துண்டு கண்டுபிடிக்கப்பட்டது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இந்த எலும்புத் துண்டு 16.8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அங்கிலோசருடையது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த காலம் நடு ஜுராசிக் யுகத்தில் வருகிறது. பட மூலாதாரம்,NHM படக்குறிப்பு, லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது, முழுமையாக கண்டறியப்பட்ட ஸ்டெகோசர் எலும்புக்கூடு. இதற்கு சோஃபி என்று பெயரிடப்பட்டுள்ளது. டைனோசர் வரலாறு தொடர்பான நமது அறிவில் உள்ள முக்கியமான இடைவெளிகளை நிரப்ப இந்த கண்டுபிடிப்பு உதவுகிறது. அங்கிலோசர்கள் உலகம் முழுவதும் பரவியிருந்தன என உறுதியாக வாதிடுவதாகவும் இது உள்ளது. பட மூலாதாரம்,NHM படக்குறிப்பு, எலும்பில் ஒட்டி வளர்ந்துள்ள கொம்பு போன்ற கூர்முனைகள். "வட பகுதி கண்டங்களில், குறிப்பாக வட அமெரிக்கா, ஆசியாவில், அங்கிலோசர்கள் இருந்தது நன்கு அறியப்பட்டது. ஆனால் தென் பகுதி கண்டங்களில் அவை இருந்தது குறித்து பெரிதாகத் தெரியாது," என்று விளக்கினார் டாக்டர் மெய்டமெண்ட். "அவை இருந்தன என்று நம்பத் தூண்டும் பல எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நல்ல எச்சத்தைத் தவிர, நம்மிடம் பெரிய ஆதாரங்கள் இல்லை. ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் அங்கிலோசர் புதைபடிவம் இது. தவிர, இது உண்மையிலேயே மிக மிகப் பழைய காலத்தை சேர்ந்தது. நடு ஜுராசிக் யுகத்தில் ஸ்டெகோசர்கள் இருந்ததால் அங்கிலோசர்களும் அதே யுகத்தில் இருந்திருக்கவேண்டும் என்று நீண்ட காலமாக நாம் சந்தேகித்து வந்தோம். ஸ்டெகோசர்களும் அங்கிலோசர்களும் மிக நெருங்கிய உறவு கொண்டவை. எனவே ஸ்டெகோசர்கள் அப்போது பரிணமித்திருந்தால் அதே காலத்தில் அங்கிலோசர்களும் அப்போது பரிணமித்திருக்கவேண்டும் என்று கருதுவது அறிவுபூர்வமானதே," என்கிறார் அவர். பட மூலாதாரம்,NHM படக்குறிப்பு, மொராக்கோ: ஆப்பிரிக்காவில் இன்னும் பல டைனோசர் கண்டுபிடிப்புகள் நிகழும். இந்த புதிய டைனோசருக்கு Spicomellus aferஎன்று பெயரிட்டுள்ளார் மெய்டமெண்ட். Spicomellus என்பதற்கு முள் விலா என்றும் afer என்பதற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த என்றும் பொருள். மொராக்கோவின் நடு அட்லாஸ் மலையைச் சேர்ந்த விவசாயி ஒருவர் இந்த எலும்புத் துண்டினை கண்டுபிடித்தார். இதே இடத்தில்தான் லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியக ஆராய்ச்சியாளர்கள் மிகப் பழமையான ஸ்டெகோசர் புதைபடிவத்தையும் கண்டுபிடித்தனர். பட மூலாதாரம்,NHM படக்குறிப்பு, முள் முளைத்த எலும்பு - ஓர் உயிரியல் அதிசயம். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மேற்கொண்டு அகழாய்வுகள் செய்ய முடியாமல் போனது. அதற்கு முன்பாக அங்கு சென்று வந்தார் மெய்டமெண்ட். சகஜ நிலை திரும்பிய பிறகு வேறு அங்கிலோசர் எலும்புத் துண்டுகள் ஏதும் கிடைக்குமா என்று பார்க்க அவர் மீண்டும் மொராக்கோ செல்வார். கிடைத்தால் அவை அவற்றின் அசாதாரண உடற்கூறு குறித்து மேலும் புரிந்துகொள்ள உதவி செய்யலாம். இந்தப் புதிய கண்டுபிடிப்பு குறித்த விவரிப்புகள் Nature Ecology & Evolution சஞ்சிகையில் இடம் பெற்றுள்ளன. https://www.bbc.com/tamil/science-58697271
 25. கள்ளக்குறிச்சியில் தேர்தல் அலுவலரை தாக்கினாரா அதிமுக நிர்வாகி? 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, ராஜசேகர், அதிமுக ஒன்றிய செயலாளர் கள்ளக்குறிச்சியில் தேர்தல் அலுவலரை அதிமுக ஒன்றியச் செயலாளர் ராஜசேகர் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படும் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட அதிமுக சார்பில் தாக்கல் செய்த வேட்பு மனுவை நிராகரித்ததாகக் கூறி அந்த தேர்தல் அதிகாரியை ராஜசேகர் கன்னத்தில் அறைந்ததாக கூறும் காணொளி தற்போது தமிழக அரசு ஊழியர்கள் வட்டாரத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தேர்தல் அதிகாரி தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகர் உள்பட ஐந்து பேர் மீது கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் வரும் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி மாலை 5 மணி வரை அனுமதிக்கப்பட்டது. வேட்பு மனுவை திரும்பபெறுவதற்கான கடைசி நாள் செப்டம்பர் 25ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3,773 உள்ளாட்சி பதவிகளுக்கு பெறப்பட்ட 13,957 மனுக்களில் 224 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 2,530 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. 487 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க - பா.ஜ.க உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி: 20 % இடங்கள்; 6 வாய்ப்புகள் உள்ளாட்சி தேர்தலில் சமரசம் - திமுக கூட்டணியில் என்ன நடக்கிறது? இந்த நிலையில், கள்ளக்குறிச்சி ஒன்றியத்தின் 11ஆம் வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் அலமேலு என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அதே வார்டில் கவுன்சிலர் பதவிக்கு திமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த அனைவரும் திரும்பப் பெற்றனர். இதைத்தொடர்ந்து அலமேலு போட்டியின்றி தேர்வானதாக அறிவித்து அதற்கான சான்றிதழை அவரிடம் தேர்தல் நடத்தும் அலுவலர் வழங்கினார். இருப்பினும், அதிமுக வேட்பாளர் சலேத் மேரி தனது வேட்பு மனுவை திரும்பப் பெறவில்லை எனக்கூறிய அதிமுகவினர் சிலர், தேர்தல் அலுவலர் சாமிதுரையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகர், திடீரென காவல் துறையினரின் கட்டுப்பாட்டை‌ மீறி சாமிதுரையை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. படக்குறிப்பு, தேர்தல் அலுவலர் அறையில் திரண்ட அதிமுகவினர் இந்தக் காணொளி சமூக வலைதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இரு தரப்பிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தராஜை பிபிசி தமிழுக்காக தொடர்பு கொண்டு பேசியபோது, "தேர்தல் நடத்தும் அலுவலர் சாமிதுரையிடம் அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு எப்படி நிராகரிக்கப்பட்டது என்று கள்ளக்குறிச்சி அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகர் கேள்வி எழுப்பி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் தன்னை ராஜசேகரன், அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் உள்ளிட்டோர் பணி செய்ய விடாமல் தடுத்ததாக சாமிதுரை புகார் அளித்துள்ளார். அதன் மீது விசாரணை நடத்தி வருகிறோம்," என்று தெரிவித்தார். சாமிதைுரையை ராஜசேகர் கன்னத்தில் அறைந்ததாக ஒரு காணொளி இணையத்தில் பகிரப்பட்டு வருவதால் அது தொடர்பாக வழக்குப் பதிவு செய்தீர்களா என்று கேட்டதற்கு, "தன்னை இழிவுபடுத்தும் வகையில் திட்டியதாகவே சாமிதுரை புகாரில் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் அத்துமீறி வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்குள் நுழைந்தது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ராஜசேகர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம்," என்று காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி ஒன்றிய தேர்தல் அதிகாரியிடம் கேட்டபோது, "அதிமுக சார்பில் சலேத் மேரி, கள்ளக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 11ஆம் வார்டில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் சலேத் மேரியை ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு முன்மொழிந்த வேலு என்ற நபர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். அதாவது முன்மொழிந்த நபர் வேட்பு மனுவை வாபஸ் பெற வருகிறார் என்றால், வேட்பாளரிடம் இருந்து கடிதம் பெற்று வர வேண்டும். அந்தக் கடிதத்தை காட்டியே முன்மொழிந்த நபர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றுள்ளார். வேட்புமனுவை மூன்றாவது நபர் வாபஸ் பெறவில்லை. வேட்புமனுவை வாபஸ் பெற வேட்பாளர் மற்றும் அவரை முன்மொழிந்த நபருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது," என்று தெரிவித்தார். https://www.bbc.com/tamil/india-58698603
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.