Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் ஜோஷ் எல்ஜின் பிபிசி செய்திகள் 26 ஜூலை 2025, 08:00 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் மூளை சக்தியை அதிகரிக்கவும், பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்கவும், ஒரு நாளைக்கு 7,000 அடிகள் நடப்பது போதுமானதாக இருக்கும் என்று ஒரு முக்கிய ஆய்வு கூறுகிறது. 10,000 அடிகள் நடக்க வேண்டும் என்பது பொதுவாக அடைய வேண்டிய இலக்காக கருதப்படுகிறது. ஆனால், அதைவிட எளிதாக அடையக் கூடிய, யதார்த்தமான இலக்காக இது இருக்கலாம். லான்செட் பப்ளிக் ஹெல்த் இதழில் வெளியான ஒரு புதிய ஆய்வறிக்கை, புற்றுநோய், டிமென்ஷியா மற்றும் இதய நோய் போன்ற உடல்நலப் பிரச்னைகளின் அபாயம் குறைவதற்கும், இந்த எண்ணிக்கைக்கும் தொடர்புள்ளது என கண்டறிந்துள்ளது. மக்கள் தங்களது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாக, தினசரி எத்தனை அடிகள் நடக்கிறோம் என்பதை கண்காணிக்க, இந்த ஆராய்ச்சி முடிவுகள் ஊக்குவிக்கக் கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். "ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடக்க வேண்டும்" என்ற கருத்து நம்மிடம் உள்ளது, ஆனால் அது ஆதாரங்களை அடிப்டையாகக் கொண்டது அல்ல" என்கிறார் முன்னணி ஆராய்ச்சியாளர் மெலடி டிங். 10,000 அடிகள் என்ற எண்ணிக்கை, 1960-களில் ஜப்பானில் நடந்த ஒரு விளம்பர நிகழ்ச்சியில் முதன்முறையாக அறிமுகமானது. 1964 டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முன்னதாக, "10,000 அடி மீட்டர்" என்று பொருள்படும் 'மான்போ-கீ' என்ற பெடோமீட்டர் பிராண்ட் அறிமுகமானது. ஆனால், அதற்காக உருவாக்கப்பட்ட இந்த எண்ணிக்கை, "அந்தச் சூழலிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு", அதிகாரப்பூர்வமற்ற வழிகாட்டுதலாக, இன்றும் பல உடற்பயிற்சி சாதனங்களாலும், செயலிகளாலும் பரிந்துரைக்கப்படுகிறது என்று ஆராய்ச்சியாளர் மெலடி டிங் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தங்களது கண்டுபிடிப்புகள் எதிர்கால பொது சுகாதார நெறிமுறைகளை வடிவமைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். லான்செட் பப்ளிக் ஹெல்த் இதழில் வெளியான ஒரு முக்கிய ஆய்வில், உலகெங்கிலும் உள்ள 160,000 க்கும் மேற்பட்டவர்களின் உடல்நலம் மற்றும் செயல்பாடு குறித்த முந்தைய ஆய்வுகள் மற்றும் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு 2,000 அடிகள் நடப்பவர்களுடன் ஒப்பிடும் போது, 7,000 அடிகள் நடப்பவர்களுக்கு கீழ்க்கண்ட ஆபத்துகள் குறைவாக இருப்பது அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதய நோய் - 25% குறைவு புற்றுநோய் - 6% குறைவு டிமென்ஷியா - 38% குறைவு மன அழுத்தம் - 22% குறைவு ஆனால், சில நோய்களைக் குறித்த புள்ளிவிவரங்கள், குறைந்த எண்ணிக்கையிலான ஆய்வுகளிலிருந்து பெறப்பட்டவை என்பதால், அவை மற்றவற்றை விட குறைவான துல்லியத்துடன் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். சுருக்கமாகக் கூற வேண்டுமென்றால், வெறும் 2,000 அடிகள் நடப்பது என்ற மிகக் குறைந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, ஒரு நாளைக்கு சுமார் 4,000 அடிகள் நடப்பது என்ற மிதமான எண்ணிக்கை சிறந்த உடல்நலத்துக்குப் பங்களிக்கிறது என்று அந்த மதிப்பாய்வு குறிப்பிடுகிறது. பெரும்பாலான உடல்நலக் குறைபாடுகளுக்கு, 7,000 அடிகள் வரை நடந்தாலே போதுமான நன்மைகள் கிடைக்கின்றன. ஆனால் அதைவிட அதிக அடிகள் நடந்தால் இதய ஆரோக்கியத்திற்கு கூடுதல் நன்மை கிடைக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உடற்பயிற்சி சாதனங்களில் தினசரி எத்தனை அடிகள் நடந்திருக்கிறோம் என்பதை எண்ணுவது ஒரு பிரபலமான பொழுதுபோக்காக மாறிவிட்டது. உடற்பயிற்சி செய்வதற்கான பெரும்பாலான நெறிமுறைகள், எத்தனை அடிகள் நடக்க வேண்டும் என்ற எண்ணிக்கையை விட உடற்பயிற்சி செய்வதற்கு செலவிடும் நேரத்தை மையமாகக் கொண்டுள்ளன. உதாரணமாக, 18 வயதுக்கு மேற்பட்டோர் ஒவ்வொரு வாரமும் குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான ஏரோபிக் பயிற்சியோ அல்லது 75 நிமிடங்கள் தீவிரமான ஏரோபிக் பயிற்சியோ செய்ய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இந்த அறிவுரையை மக்கள் புரிந்துகொள்வது சில நேரங்களில் கடினமாக இருக்கலாம், ஆனால் தற்போதைய நெறிமுறைகள் ஒரு முக்கியமான நோக்கத்திற்கு உதவுகின்றன என்று கூறுகிறார் டிங் . "நீச்சல் பயிற்சியில் ஈடுபடுதல், சைக்கிள் ஓட்டுதல் அல்லது உடல் குறைபாடுகளின் காரணமாக நடக்க முடியாதவர்கள் உள்ளனர்," என்றும் அவர் விளக்குகிறார். ஆனால், மக்கள் எத்தனை அடிகள் நடக்க வேண்டும் என்பதற்கான பரிந்துரையை, ஒரு "கூடுதல்" தகவலாக சேர்க்கலாம் என்றும், இது மக்கள் "நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்படுவது குறித்து சிந்திக்க உதவும்" என்றும் அவர் கூறுகிறார். லண்டனின் புருனல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, செடன்டரி பிஹேவியர் மற்றும் சுகாதார நிபுணரான மருத்துவர் டேனியல் பெய்லி, "ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடப்பது அவசியம்" என்ற கருத்து, ஆதாரமற்ற 'கட்டுக்கதை' என்ற கருத்தை இந்த ஆய்வு முன்வைக்கிறது என்று கூறுகிறார். சுறுசுறுப்பாக இருப்பவர்களுக்கு 10,000 அடிகள் நடக்க வேண்டும் என்பது பொருத்தமான இலக்காக இருந்தாலும், மற்றவர்களுக்கு 5,000 முதல் 7,000 அடிகள் நடப்பது, "மிகவும் யதார்த்தமான மற்றும் அடையக் கூடிய இலக்காக" இருக்கலாம் என்று அவர் விளக்குகிறார். போர்ட்ஸ்மவுத் பல்கலைக் கழகத்தின் மருத்துவ உடற்பயிற்சி உடலியல் துறையின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் ஆண்ட்ரூ ஸ்காட், நடப்பதற்கு எண்ணிக்கை முக்கியமல்ல என்று கூறுகிறார். "அதிகமாக நடப்பது எப்போதும் நல்லது" என்று கூறும் அவர், செயல்பாடு குறைவாக இருக்கும் நாட்களில் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய வேண்டும் என்று மக்கள் அதிகமாக கவலைப்பட வேண்டாம் என்றும் அவர் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cr797rrjm3eo
  2. 26 JUL, 2025 | 05:08 PM யாழ்ப்பாணத்தில் மது போதையில் தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து மாதா சிலையை அடித்து உடைத்து, தேவாலயத்திற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் அரசியல் கட்சி ஒன்றின் தீவக அமைப்பாளர் உள்ளிட்ட 08 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஊர்காவற்துறை மெலிஞ்சிமுனை நாரயம்பதி மாதா தேவாலயத்தில் இருந்த சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான மாதா சிலையையே இந்த கும்பல் அடித்து உடைத்துள்ளார்கள். இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தேவாலயத்திற்கு அருகில் வெள்ளிக்கிழமை (25) அரசியல் கட்சியின் தீவக அமைப்பாளரின் தலைமையில் சுமார் 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று மது விருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சற்று நேரத்தில் இந்த கும்பல் மது போதையில், தேவாலயத்திற்கு சென்றவர்களுடன் முரண்பட்டு அவர்களை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். பின்னர் தேவாலயத்தினுள் அத்துமீறி நுழைந்து , இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 50 இலட்ச ரூபாய் பெறுமதியான மாதா சிலையை அடித்து உடைத்துள்ளனர். அத்துடன், தேவாலயத்தினுள் காணப்பட்ட ஏனைய பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர் சம்பவம் தொடர்பில் தேவாலய நிர்வாகத்தினரால், ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் அரசியல் கட்சியின் தீவக அமைப்பாளர் உள்ளிட்ட 08 பேரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்னர். கைது செய்யப்பட்டவர்களின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் ஏனையவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/221007 NPP தீவக அமைப்பாளரும் கைது என்ற செய்தி வாசித்தேன்.
  3. காஸாவில் மூன்றில் ஒருவர் பசியால் தவிப்பு - எச்சரிக்கும் ஐ.நா அமைப்பு பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, காஸாவை பஞ்சம் வாட்டி வதைப்பதாக எச்சரிக்கைகள் வந்துள்ளதால் சர்வதேச அளவில் கவலை அதிகரித்துள்ளது. கட்டுரை தகவல் மையா டேவிஸ் பிபிசி செய்திகள் 4 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருவர் பல நாட்களாக உணவின்றி, பட்டினியில் தவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு உதவித் திட்டம் எச்சரித்துள்ளது. உலக உணவுத் திட்டம் (WFP) வெளியிட்ட அறிக்கையில், "ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருகிறது. 90,000 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம், காஸாவில் பஞ்சம் குறித்து தீவிரமான எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை, மேலும் ஒன்பது பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்ததாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் போர் தொடங்கியதிலிருந்து ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்தவர்கள் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளது. காஸாவிற்குள் உதவிப் பொருட்கள் நுழைவதை கட்டுப்படுத்தும் இஸ்ரேல், 'உதவிப் பொருட்கள் காஸாவிற்குள் செல்வதற்கு எந்தத் தடையும் இல்லை. ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு ஹமாஸே பொறுப்பு' என்று கூறுகிறது. வரும் நாட்களில் வெளி நாடுகள் காஸாவிற்குள் வான்வழியாக உதவிப் பொருட்களை வீச அனுமதி வழங்கப்படும் என இஸ்ரேல் கூறியுள்ளது. ஆனால் இந்த முறை, உதவி பொருட்களை கொண்டு செல்வதற்கு திறனற்றது என்று உதவி நிறுவனங்கள் முன்பே எச்சரித்திருந்தன என இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸும் ஜோர்டானும் பொருட்களை வீசும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளன என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், தங்கள் ராணுவம் இன்னும் இஸ்ரேலிடமிருந்து அனுமதி பெறவில்லை என்று ஜோர்டானின் ஒரு மூத்த அதிகாரி பிபிசியிடம் கூறியுள்ளார். பட மூலாதாரம்,REUTERS காஸாவிற்குள் வான்வழியாக உதவிப் பொருட்களை அனுப்ப இஸ்ரேல் வழங்கியுள்ள அனுமதியை, ''மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி'' என்று ஐ.நா விமர்சித்துள்ளது. காஸாவில் மனிதாபிமான நிலைமைகள் மோசமடைந்து வருவதால், சர்வதேச அளவில் கவலை அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள், "உடனடியாக காஸாவிற்குள் உதவிப் பொருட்களைக் கொண்டு செல்லும் போக்குவரத்து மீதான கட்டுப்பாடுகளை இஸ்ரேல் நீக்க வேண்டும்" என்று வெள்ளிக்கிழமையன்று வலியுறுத்தின. "காஸாவில் நடைபெற்று வரும் மனிதாபிமான பேரழிவையும்", போரையும் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என்று அவர்கள் கூட்டு அறிக்கையில் வலியுறுத்தினர். மேலும், இஸ்ரேல் "சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் தனது கடமைகளை பூர்த்தி செய்ய வேண்டும்" என்றும் கூறியுள்ளனர். "பொதுமக்களுக்குக் கிடைக்க வேண்டிய அத்தியாவசிய உதவிகளை தடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. "சர்வதேச சமூகத்தில் பலர் காட்டும் அலட்சியம், இரக்கமின்மை, உண்மையின்மை, மனிதாபிமானமின்மை ஆகியவற்றை விளக்க முடியவில்லை" என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறினார். அம்னஸ்டி இன்டர்நேஷனல் உலக சபையில் உரையாற்றிய அவர், மே 27 முதல் உணவு பெற முயன்றபோது 1,000க்கும் மேற்பட்ட பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவு பெற்ற காஸா மனிதாபிமான அறக்கட்டளை (GHF), ஐ.நா. தலைமையிலான அமைப்புக்கு பதிலாக உதவி பொருட்கள் விநியோகம் தொடங்கிய பின்னர் நடந்ததாகவும் தெரிவித்தார். பட மூலாதாரம்,EPA 2025 மே மற்றும் ஜூன் மாதங்களில் காஸா மனிதாபிமான அறக்கட்டளையில் பணியாற்றிய ஒரு அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்ததாரர், "கேள்விக்கு இடமின்றி... போர்க்குற்றங்களை நேரில் கண்டேன்" என பிபிசியிடம் வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தார். உணவு விநியோகம் செய்யும் இடங்களில் பொதுமக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் மற்றும் அமெரிக்க ஒப்பந்தக்காரர்கள் நேரடியாக வெடிமருந்துகள், பீரங்கி, மோட்டார் குண்டுகள் மற்றும் டாங்கி மூலம் தாக்குதல் நடத்தியதை பார்த்ததாக அந்தோனி அகுய்லர் கூறினார். "என் பணிக்காலத்தில் எங்கும், பொதுமக்களுக்கு எதிராக இவ்வளவு கடுமையான, தேவையற்ற, மற்றும் கண்மூடித்தனமான வன்முறையை நான் பார்த்ததில்லை. ஆனால் காஸாவில், ராணுவம் மற்றும் அமெரிக்க ஒப்பந்த நிறுவனங்களின் கீழ் பணியாற்றியபோதுதான், இதுபோன்ற கொடூரத்தை நேரில் அனுபவிக்க நேரிட்டது" என்று ஓய்வுபெற்ற அந்த வீரர் கூறினார். "ஒரு மாதத்திற்கு முன்பு தவறான நடத்தைக்காக பணிநீக்கம் செய்யப்பட்ட, அதிருப்தியடைந்த முன்னாள் ஒப்பந்த வீரரரிடம் இருந்து வந்த கூற்றுகள்" எனக் கூறி, "அவை முற்றிலும் தவறானவை" என்று காஸா மனிதாபிமான அறக்கட்டளை அவரது கருத்தை மறுத்துள்ளது. இதற்கிடையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்கள் பேச்சுவார்த்தைக் குழுக்களை கத்தாரில் இருந்து திரும்பப் பெற்ற பிறகு, புதிய போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே உள்ளது. ஹமாஸ் "உண்மையில் ஒப்பந்தம் செய்வதை விரும்பவில்லை" என்று கூறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "அவர்கள் இறக்க விரும்புகிறார்கள் என நான் நினைக்கிறேன்," என்றும் கூறினார். அமெரிக்காவின் இந்தக் கருத்துக்களைக் குறித்து ஹமாஸ் ஆச்சரியம் தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தைகள் முற்றிலும் முடிந்து போய்விடவில்லை என்று மத்தியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர், மேலும் இஸ்ரேலிய பிரதிநிதிகள் அடுத்த வாரம் பேச்சுவார்த்தைக்கு தோஹாவுக்குத் திரும்புவார்கள் என ஹமாஸின் மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியின் காஸா நிருபரிடம் தெரிவித்தார். 2023 அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் மீது, ஹமாஸ் தலைமையில் நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேல் காஸாவில் போரைத் தொடங்கியது, இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். அதன் பின்னர் காஸாவில் 59,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மார்ச் மாத தொடக்கத்தில் காஸாவில் உதவிப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதை, இஸ்ரேல் முற்றிலுமாகத் தடுத்தது. பின்னர் இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஹமாஸுக்கு எதிரான தனது ராணுவத் தாக்குதலை மீண்டும் தொடங்கி, இரண்டு மாத போர் நிறுத்தத்தை முறித்துக் கொண்டது. மீதமுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க, ஹமாஸுக்கு அழுத்தம் கொடுக்க விரும்புவதாக இஸ்ரேல் கூறியது. பஞ்சம் ஏற்படப் போவதாக, உலகளாவிய நிபுணர்கள் எச்சரித்த நிலையில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு இஸ்ரேலின் நடவடிக்கை ஓரளவு தளர்த்தப்பட்டாலும், உணவு, மருந்து மற்றும் எரிபொருள் பற்றாக்குறை மோசமடைந்துள்ளது. காஸாவைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் பலமுறை இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் 90% க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவோ, அல்லது அழிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் பாலத்தீனத்தை நாடாக அங்கீகரிக்கவுள்ளதாக, பிரான்ஸ் வியாழன்று அறிவித்தது. இந்த முடிவு இஸ்ரேலையும் அதன் முக்கிய கூட்டாளியான அமெரிக்காவையும் கோபப்படுத்தியது. அடுத்த நாள், பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு கடிதம் எழுதி, பிரிட்டனும் பிரான்சை பின்பற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க இயலாது என்பதை ஸ்டார்மர் உணர்த்தியுள்ளார். இது "இஸ்ரேலுடன் பாலத்தீன நாட்டை உருவாக்கும் இரு நாடு தீர்வின் பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாகவே இருக்க வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3v3xpl227zo
  4. கல்வியை அளவிடும் பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை (module) கல்வித் திட்டம் அறிமுகம் 24 July 2025 கல்வியை அளவிடும் பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை (module) கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இதன் முக்கிய நோக்கம் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து, ஜூலை 23 ஆம் திகதி பத்தரமுல்லை இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வில் பிரதமர் இதனைக் கூறினார். புதிய கல்விச் சீர்திருத்தம் பற்றிய விளக்கங்கள் இந்த சீர்திருத்தம் குறித்த விளக்கங்களை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ மற்றும் தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி அசோக டி சில்வா ஆகியோர் ஊடக நிறுவனங்களின் ஊடகவியலாளர்களுக்கு வழங்கினர். பின்னர், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர், பல்வேறு முக்கிய விடயங்களை தெளிவுபடுத்தினார்: * கற்றல் மற்றும் மதிப்பீட்டில் மாற்றம்: "ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பரீட்சைக்குத் தயாராகும் முறைக்கு நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். ஆனால், இந்த தொகுதி முறையில் பல்வேறு செயல்பாடுகளின் மூலம் கற்றுக்கொள்ளவும், மதிப்பீடு செய்யப்படவும் வாய்ப்புகள் கிடைக்கின்றன," என்று பிரதமர் விளக்கமளித்தார். * க.பொ.த சாதாரண தரப் பரீட்சை: புதிய பாடத்திட்ட வழிகாட்டுதலின்படி, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2029 ஆம் ஆண்டிலேயே நடத்தப்படும். * அமுலாக்கத்தின் தொடக்க நிலை: 2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் சீர்திருத்தத்தின் கீழ், 1 ஆம் வகுப்பு மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே புதிய கல்வித் திட்டம் கற்பிக்கப்படும். இந்த சீர்திருத்தத்தைக் கண்காணிக்க மூன்று ஆண்டுகள் அவகாசம் இருப்பதால், எதிர்காலத்தில் ஏற்படும் நிலைமைகளுக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்யப் போதுமான கால அவகாசம் இருப்பதாகவும், சீர்திருத்தம் இறுதியானது என்று கூற முடியாது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். மேலும், இந்த சீர்திருத்தம் குறித்த கருத்துக்களையும் பரிந்துரைகளையும் முன்வைக்க ஊடகவியலாளர்களுக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். * வகுப்பறை மாணவர் எண்ணிக்கை: ஒரு வகுப்பறையில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை 25 - 30 ஆகக் குறைக்க வேண்டும் என்பதே இலக்கு. தற்போது 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் வகுப்பறைகள் உள்ளன. கல்வி அமைச்சர் மற்றும் செயலாளரின் உத்தரவின்படி அதிக மாணவர்களை வகுப்பறைகளுக்குள் உள்வாங்கும் முறை தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட மாணவர் எண்ணிக்கை மட்டுமே உள்வாங்கப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்தார். * ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை: ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை ரத்து செய்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அவ்வாறு செய்வதற்கு முன், பாடசாலைகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை முதலில் நீக்க வேண்டும் என்றும், இது உடனடி செய்யக்கூடிய காரியமல்ல என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். புலமைப்பரிசில் பரீட்சையால் மாணவர்களுக்கு ஏற்படும் அழுத்தத்தைக் குறைத்து, கல்வி முறையின் சுமையைக் குறைப்பதே சீர்திருத்தத்தின் நோக்கம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். * முன்பள்ளிப் பருவ வளர்ச்சி மையங்கள்: முன்பள்ளி குழந்தைப் பருவ வளர்ச்சி மையங்களை நடத்துவது மற்றும் அங்குள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பது குறித்த முழுமையான கண்காணிப்பை கல்வி அமைச்சகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த சீர்திருத்தம் பரிந்துரைப்பதாக பிரதமர் கூறினார். * ஆசிரியர் பயிற்சிக்கு முக்கியத்துவம் இச்சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவித்த கல்விப் பிரதி அமைச்சர் மதுர சேனவிரத்ன, ஆசிரியர் பயிற்சிக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். முன்மொழியப்பட்ட ஐந்து தூண்களிலும் ஆசிரியர் பயிற்சி உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும், எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் ஆசிரியர் பயிற்சிப் பாசறைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், இந்த சீர்திருத்தம் தொடர்பாக பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் கல்வித் துறை சார்ந்தோர் போன்ற சமூகத்தினர் மத்தியில் பாரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பிரதமரின் ஊடகப் பிரிவு https://tamil.news.lk/current-affairs/kalviyai-alavitum-parampariyap-paritcai-muraikku-marraka-tokuti-murai-module-kalvit-tittattai-arimukam
  5. கிருஷாந்தி குமாரசுவாமி கொலையின் குற்றவாளி சோமரட்ண ராஜபக்ச அளித்த சாட்சியம் ஊடாக நாங்கள் செம்மணியை அணுகவேண்டும் - உள்நாட்டு பொறிமுறை சரியான விதத்தில் வேலைசெய்யவில்லை - ரஜீவ்காந் Published By: RAJEEBAN 26 JUL, 2025 | 08:00 PM கிருஷாந்தி குமாரசுவாமி கொலையின் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட சோமரட்ண ராஜபக்ச என்கின்ற வீரர் நேரடியாக அளித்த சாட்சியம் ஊடாக நாங்கள் இந்த செம்மணியை அணுகவேண்டும் என மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார். அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது கிருஷாந்தி குமாரசுவாமி கொலையின் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட சோமரட்ண ராஜபக்ச என்கின்ற வீரர் நேரடியாக அளித்த சாட்சியம் ஊடாக நாங்கள் இந்த செம்மணியை அணுகவேண்டும் என்ற பார்வை எனக்கு இருக்கின்றது. 300 முதல் 600 வரையிலான பேரை கொலை செய்து எங்களிடம் மேலதிகாரிகள் தருவார்கள் - தந்தார்கள், இங்கு கொண்டுவந்து அவர்களை புதைத்திருக்கின்றோம் என அவர் சாட்சியம் வழங்கியிருந்தார். அதன் பின்னர் சர்வதேச அமைப்புகள் சர்வதே மன்னிப்புச்சபை போன்றன மேற்கொண்ட முயற்சிகள் மூலம் 99ம் ஆண்டு வரையிலே அகழ்வு பணியை மேற்கொண்டு சுமார் 19 எலும்புக்கூடுகளை அப்போதே கண்டுபிடித்திருந்தார்கள். அதுமட்டுமின்றி இன்று கட்டிடங்களிற்கான அகழ்வு வேலை இடம்பெற்றபோது சில மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன, அதற்கான வழக்குதொடுக்கப்பட்டு பின் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, நேற்றுவரை 90 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது ஒரு இனஅழிப்பின் சான்றாக, ஒரு இனத்தின் மேல் நிகழ்த்தப்பட்ட பெரும் கொலையாக நாங்கள் பார்க்கவேண்டும் - பல சிங்கள சகோதரர்கள் எங்களுடன் பேசும்போது, தர்க்கம் செய்யும்போது விடுதலைப்புலிகளின் கொலைகளை பற்றியெல்லாம் பேசுகின்றார்கள். அதுவல்ல இங்கு பிரச்சினை, விடுதலைப் புலிகளை அரசாங்கம் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தியுள்ளது, பாதுகாப்பு படையினர் என்ற பெயரிலே மக்களை பாதுகாக்க வந்தவர்கள் கொலை செய்திருந்தால், அது மிகப்பெரிய தண்டனைக்குரிய குற்றம் என்பதை மறந்துவிடக்கூடாது. இந்த நாட்டிலே இராணுவீரர்கள் வெற்றிவீரர்களாக அனைவராலும் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதேநாட்டின் பிரஜைகளை கொன்றொழித்தவர்களை எவ்வாறு வெற்றிவீரர்களாக கொண்டாடுவது என்ற கேள்வி ஒரு சமூகத்திற்கு இருக்கின்றது. எனவே அந்த அடிப்படையில் சோமரட்ண ராஜபக்ச உயிரோடு இருக்கின்றார், உத்தரவிட்ட உயர் அதிகாரிகள் இருக்கின்றார்கள், அவர்களிற்கு எல்லாம் தலைமை தாங்ககூடிய, முப்படை தளபதியாக இன்றைய ஜனாதிபதியிருக்கின்றார், எனவே இதற்கான விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டும். இந்த பாரிய குற்றங்களை இழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும், இதற்காக உள்நாட்டு பொறிமுறை சரியான விதத்தில் வேலைசெய்யவில்லை என தமிழ் மக்களாகிய நாங்கள் உணர்கின்றோம், இங்கிருக்கும் மலையக சகோதரர்கள் அதனை உணர்கின்றார்கள். எனவே தான் சர்வதேச நீதி விசாரணையொன்று அவசியம் என நாங்கள் வலியுறுத்துகின்றோம். https://www.virakesari.lk/article/221027
  6. Published By: DIGITAL DESK 2 26 JUL, 2025 | 11:51 AM கிளிநொச்சி வலய கல்விப் பணிமனை மற்றும் துணுக்காய் கல்வி வலயங்களில் பாரிய அளவிலான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும் விசேடமாக விஞ்ஞானம் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் ( ஐ.சி.டி) போன்ற பாடங்களுக்கு அதிகமாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (25) கிளிநொச்சி தெற்கு வலய கல்வி பணிமனைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு இருந்த நிலையிலேயே அவர் ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். இதன்போது அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி வலயக் கல்வி பணிமனை மற்றும் துணுக்காய் கல்வி வலயங்களில் பாரிய அளவிலான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. இதில் விசேடமாக விஞ்ஞானம் மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் (ஐ.சி.டி) போன்ற பாடங்களுக்கு அதிகமாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது. இது மட்டுமின்றி சில பாடசாலைகள் நடத்த முடியாத அளவிலே ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. இதற்கு ஒர் தீர்வும் வழங்கப்படாத நிலைமை காணப்படுகின்றது. கிளிநொச்சி வலயத்தில் மாத்திரம் 75 பேர் இடமாற்றம் பெற்று சென்றுள்ளனர். ஆனால் 35 புதிய ஆசிரியர்களே அங்கு கடமைக்கு திரும்பி வந்துள்ளனர். இதேபோன்று முல்லைத்தீவு துணுகாய் வலயம் போன்ற பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது. அது மட்டுமின்றி கல்வியை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான வளங்களும் பற்றாக்குறையாக காணப்படுகின்றன. வடமாகாண ஆளுநருகு்கு இது தொடர்பான முழுமையான அதிகாரங்கள் காணப்படுகிறது. எனவே இதற்கான உரிய தீர்வினை அவர்களே எடுக்க வேண்டும் எனவும் இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்கே கிளிநொச்சி பகுதிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/220986
  7. ஜோ ரூட் குவித்த அபார சதத்தின் உதவியுடன் இந்தியாவை விட 186 ஓட்டங்கள் முன்னிலையில் இங்கிலாந்து Published By: VISHNU 26 JUL, 2025 | 12:46 AM (நெவில் அன்தனி) இந்தியாவுக்கு எதிராக மென்செஸ்டர், ஓல்ட் ட்ரஃபர்ட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் நான்காவது அண்டர்சன் - டெண்டுல்கர் கிண்ண டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முன்னாள் அணித் தலைவர் ஜோ ரூட் குவித்த அபார சதத்தின் உதவியுடன் பலமான நிலையை அடைந்துள்ள இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்கள் மீதம் இருக்க 186 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கிறது. போட்டியின் 3ஆம் நாளான இன்று வெள்ளிக்கிழமை (25) தனது முதல் இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 225 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இங்கிலாந்து மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்களை இழந்து 544 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. 11 ஓட்டங்களிலிருந்து தனது துடுப்பாட்டத்தைத் தொடர்ந்த ஜோ ரூட் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 248 பந்துகளை எதிர்கொண்டு 14 பவுண்டறிகளுடன் 150 ஓட்டங்களைக் குவித்தார். தனது 157ஆவது டெஸ்ட போட்டியில் விளையாடும் ஜோ ரூட் 38ஆவது சதத்தைப் பதிவு செய்தார். இதனிடையே டெஸ்ட் கிரிக்கெட்டில் சில மைல்கல் சாதனைகளையும் ஜோ ரூட் நிலைநாட்டினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது மொத்த எண்ணிக்கையை 13,409 ஓட்டங்களாக உயர்த்தியதன் மூலம் சச்சின் டெண்டுல்காரின் 15,921 ஓட்டங்களுக்கு அடுத்ததாக அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் வரிசையில் இரண்டாம் இடத்தை அடைந்துள்ளார். இந்தியாவின் ராகுல் ட்ராவிட் (13,288), தென் ஆபிரிக்காவின் யக்ஸ் கல்லிஸ் (13,289), அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொன்டிங் (13,378) ஆகியோரை பின்தள்ளியே ஜோ ரூட் இரண்டாம் இடத்தை அடைந்தார். அத்துடன் 38ஆவது சதத்தைத் குவித்ததன் மூலம் சச்சின் டெண்டுல்கார் (51 சதங்கள்), யக்ஸ் கல்லிஸ் (45), ரிக்கி பொன்டிங் (41) ஆகியோருக்கு அடுத்ததாக குமார் சங்கக்காரவுடன் (38) 5ஆம் இடத்தை ஜோ ரூட் பகிர்ந்துகொண்டுள்ளார். ஓல்ட் ட்ரஃபர்ட் விளையாட்டரங்கில் ஜோ ரூட் 1128 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இதன் மூலம் இந்த விளையாட்டரங்கில் 1000 ஓட்டங்களைக் கடந்த முதலாவது வீரர் என்ற சாதனையை நிலைநாட்டினர். லோர்ட்ஸ் விளையாட்டரங்கிலும் அவர் 1000க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்துள்ளார். அங்கு அவர் 2166 ஓட்டங்களை மொத்தமாக குவித்துள்ளார். இது இவ்வாறிருக்க, இந்த டெஸ்ட் போட்டியில் 71 ஓட்டங்களைப் பெற்ற ஒல்லி போப்புடன் 3ஆவது விக்கெட்டில் 144 ஓட்டங்களையும் பென் ஸ்டோக்ஸ் மற்றம் ஜெமி ஸ்மித் ஆகியோருடன் 5ஆவது விக்கெட்டில் 150 ஓட்டங்களையும் பகிர்ந்த பின்னர் ஜோ ரூட் ஆட்டம் இழந்தார். (499 - 5 விக்.) மொத்த எண்ணிக்கை 491 ஓட்டங்களாக இருந்தபோது பென் ஸ்டோக்ஸின் தொடையில் ஏற்பட்ட தசை இழுப்பு காரணமாக தற்காலிகமாக ஓய்வுபெற்றார். அப்போது அவர் ஜோ ரூட்டுடன் 142 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தார். கிறிஸ் வோக்ஸ் 7ஆவதாக ஆட்டம் இழந்த பின்னர் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் களம் புகுந்து 66 ஓட்டங்களிலிருந்து துடுப்பாட்டத்தைத் தொடர்ந்து ஆட்ட நேர முடிவில் 77 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அவருடன் லியாம் டோசன் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதுள்ளார். பந்துவீச்சில் வொஷிங்டன் சுந்தர் 57 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரவிந்த்ர ஜடேஜா 117 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இந்தியா அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 358 ஓட்டங்களைப் பெற்றது. முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் இந்தியர்கள சதங்கள் குவித்த போதிலும் இந்த டெஸ்டில் இதுவரை சதம் குவிக்கவில்லை. ஆயஷஸ்வி ஜய்ஸ்வால் (58), சாய் சுதர்சன் (61), ரிஷாப் பான்ட் (54) ஆகியோர் அரைச் களைப் பூர்த்திசெய்தனர். பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் 72 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ஜொவ்ரா ஆச்சர் 73 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/220967
  8. இந்திய நாடாளுமன்றத்தின்மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் பதவியேற்பு 25 JUL, 2025 | 12:57 PM புதுடெல்லி: மாநிலங்களவை உறுப்பினராக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் இன்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்றனர். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த திமுக வழக்கறிஞர் வில்சன் தொமுச தலைவர் சண்முகம் எம்.எம்.அப்துல்லா மற்றும் திமுக கூட்டணி சார்பில் தேர்வான மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் பதவிக் காலமும் அதிமுக ஆதரவுடன் தேர்வான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அதிமுகவின் சந்திரசேகர் ஆகிய 6 பேரின் பதவிக் காலம் நேற்றுடன் (ஜூலை 24) நிறைவடைந்தது. அவர்களுக்குப் பதில் புதிய உறுப்பினர்களாக 6 பேர் ஏற்கனவே போட்டியின்றி தேர்வாகினர். அவர்களில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன், திமுகவைச் சேர்ந்த ராஜாத்தி(கவிஞர் சல்மா), எஸ்.ஆர். சிவலிங்கம், பி.வில்சன் ஆகிய 4 பேர் இன்று மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் அவையை நடத்தி வரும் துணைத் தலைவர் ஹரிவன்ஷிடம் வாழ்த்து பெற்றனர். “மாநிலங்களவையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கமல்ஹாசன் எனும் நான் சட்டத்தினால் நிறுவப்பட்டதான இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும் பற்றுறுதியும் கொண்டிருப்பேன் என்றும் இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் உறுதியாக பற்றி நிற்பேன் என்றும் நான் இப்போது ஏற்க இருக்கும் கடமையினை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும் விழுமிய முறைமையுடன் உறுதிகூறுகிறேன்” என தமிழில் உறுதிமொழி வாசித்து பதவியேற்றுக்கொண்டனர். மற்றவர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து கேள்வி நேரம் தொடங்கியது. எனினும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அவை திங்கள்கிழமை காலை 11 மணிக்கு மீண்டும் கூடும். இதேபோல் மக்களவையும் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/220904
  9. Published By: DIGITAL DESK 2 26 JUL, 2025 | 03:50 PM வடக்கு, கிழக்கு தமிழர்கள் கோரும் சர்வதேச நீதி பொறிமுறையூடான நீதி கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, மாண்புமிகு மலையக மக்கள் சிவில் சமூகக் கூட்டிணைவு கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை காரியாலயத்திற்கு முன்பாக இன்று சனிக்கிழமை (26) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தது. https://www.virakesari.lk/article/221004
  10. படமும் இணைப்பின் மூலமும் தவறாக இணைத்துவிட்டேன், மாற்றுமாறு முறைப்பாடு செய்துள்ளேன். தவறுக்கு வருந்துகிறேன்.
  11. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் ரஜ்னீஷ் குமார் பிபிசி தமிழ் 44 நிமிடங்களுக்கு முன்னர் சுமார் 1,200 தீவுகளை உள்ளடக்கிய மிகச்சிறிய நாடு தான் மாலத்தீவு. உலக அளவில் பூகோள ரீதியாக மிகவும் சிதறுண்ட நாடாக மாலத்தீவு உள்ளது. வெறும் 5.21 லட்சம் மக்கள் தொகையே கொண்ட மாலத்தீவில், ஒரு தீவிலிருந்து இன்னொரு தீவிற்குச் செல்ல படகுப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். 1965ஆம் ஆண்டு மாலத்தீவு பிரிட்டனிடமிருந்து முழுமையாக சுதந்திரம் பெற்றது. சுதந்திரம் அடைந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, மாலத்தீவு அரசியலமைப்பு ரீதியான இஸ்லாமியக் குடியரசாக மாறியது. சுதந்திரம் பெற்றதிலிருந்து, மாலத்தீவின் அரசியலிலும் மக்களின் வாழ்க்கையிலும் இஸ்லாம் முக்கிய பங்கு வகித்துள்ளது. 2008 ஆம் ஆண்டு மாலத்தீவில் இஸ்லாம் அரசு மதமாக மாறியது. மாலத்தீவு உலகின் மிகச் சிறிய இஸ்லாமிய நாடு. மாலத்தீவின் 60வது சுதந்திர தினம் இன்று(ஜூலை 26) கொண்டாடப்படுகிறது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். இது பிரதமர் மோதியின் மூன்றாவது மாலத்தீவு பயணம் ஆகும். 2023 ஆம் ஆண்டு முகமது முய்சு அதிபரான பிறகு மாலத்தீவுக்குச் செல்லும் முதல் வெளிநாட்டுத் தலைவர் நரேந்திர மோதி ஆவார். மாலத்தீவில் முய்சு ஆட்சிக்கு வர அவரது இந்திய எதிர்ப்பு பிரசாரமும் ஒரு முக்கிய காரணமாகும். முந்தைய மாலத்தீவு அசு 'இந்தியாவுக்கு முன்னுரிமை' என்ற கொள்கையைப் பின்பற்றி வந்தது. முய்சு அந்தக் கொள்கையை முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தார். சீனாவுடனான உறவுகளை முய்சு மேலும் வலுப்படுத்தினார். 7.5 பில்லியன் டாலர் பொருளாதாரத்தைக் கொண்ட மாலத்தீவு பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த போது, இந்தியா அந்நாட்டை காப்பாற்றியது. இதனால் முய்சு இந்தியா மீதான தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் எழுதியுள்ளது. அதிபரான பிறகு, முய்சு முதலில் துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சீனாவுக்கு பயணம் செய்தார். இதற்குப் பிறகு, இந்தியாவுடனான கசப்பை நீக்க முய்சு ஒரு முயற்சியைத் தொடங்கினார். முன்னதாக இந்தியா குறித்து மாலத்தீவு அரசின் சார்பில் ஆக்ரோஷமான அறிக்கைகள் வந்தபோதும், இந்தியாவின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளில் பொறுமையும் நிதானமும் வெளிப்பட்டன. இத்தகைய சூழ்நிலையில், ஏழரை பில்லியன் டாலர்கள் மட்டுமே பொருளாதாரம் கொண்ட ஒரு மிகச் சிறிய நாட்டின் மீது இந்தியா ஏன் இவ்வளவு நிதானத்தைக் காட்டியது என்ற கேள்வி எழுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES 1. மாலத்தீவின் இருப்பிடம் மாலத்தீவு அமைந்துள்ள இடம்தான் அதற்கு சிறப்பு. மாலத்தீவு இந்தியப் பெருங்கடலின் முக்கிய கடல் பாதைகளுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் இந்தப் பாதைகள் வழியாக சர்வதேச வர்த்தகம் நடைபெறுகிறது. இந்த பாதை வழியாக வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு எண்ணெய் வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், மாலத்தீவுடனான இந்தியாவின் உறவுகள் மோசமடைவது எந்த வகையிலும் நல்லதாகக் கருதப்படவில்லை. மாலத்தீவு ஒரு முக்கியமான கடல்வழிப் பாதை என்றும், உலகளாவிய வர்த்தகத்தில் சிறப்புப் பங்கைக் கொண்டுள்ளது என்றும் வங்கதேசத்திற்கான இந்தியாவின் முன்னாள் தூதர் வீணா சிக்ரி கூறுகிறார். "இந்தப் பாதை இந்தியாவின் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களுக்கு மிகவும் முக்கியமானது. குறிப்பாக வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய், எரிவாயு இறக்குமதி இந்தப் பாதை வழியாகவே நடைபெறுகிறது. மாலத்தீவுடனான நல்லுறவு இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பையும் உறுதி செய்யும். இந்தியாவின் கடல்சார் கண்காணிப்பிலும் மாலத்தீவின் ஒத்துழைப்பு முக்கியமானது" என்று சிக்ரி கூறுகிறார். "மாலத்தீவு அமைந்துள்ள இடங்களில், முக்கியமான கடல் பாதைகள் உள்ளன. இந்தப் பாதைகள் பாரசீக வளைகுடாவிலிருந்து கிழக்கு ஆசியா வரை செல்கின்றன. இந்தியாவும் வர்த்தகத்திற்காக இந்தப் பாதையைப் பயன்படுத்துகிறது" என்று சிந்தனைக் குழுவான ORF இன் மூத்த உறுப்பினரான மனோஜ் ஜோஷி கூறுகிறார். 2.பூகோள ரீதியாக இந்தியாவுடனான நெருக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES மாலத்தீவு இந்தியாவிற்கு மிக அருகில் உள்ளது. மாலத்தீவு இந்தியாவின் லட்சத்தீவிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர் தொலைவிலும், இந்தியாவின் பிரதான நிலப்பரப்பில் இருந்து 1,200 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. மனோஜ் ஜோஷி கூறுகையில், "சீனா மாலத்தீவில் கடற்படை தளத்தை அமைத்தால், அது இந்தியாவின் பாதுகாப்புக்கு சவாலாக இருக்கும். சீனா மாலத்தீவில் வலுவாக மாறினால், போர் போன்ற சூழ்நிலையில் இந்தியாவை அடைவது சீனாவுக்கு மிகவும் எளிதாகிவிடும். சீனா மாலத்தீவில் பல திட்டங்களைக் கொண்டுள்ளது. சீனா மாலத்தீவில் கடற்படை தளத்தை உருவாக்க விரும்புவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், இந்தியா எச்சரிக்கையாக இருப்பது அவசியம்." என்கிறார். மேலும் மனோஜ் ஜோஷி கூறுகையில் "மாலத்தீவு இன்னும் இந்தியாவிற்கு ஒரு சவாலாகவே உள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோதியை அழைத்திருந்தாலும், மாலத்தீவு அதிபர் முய்சு பொருளாதார நிர்ப்பந்தம் காரணமாக அவ்வாறு செய்துள்ளார். மாலத்தீவின் பொது மக்கள் கருத்து இன்னும் இந்தியாவிற்கு எதிராக உள்ளது. முய்சு இதைப் பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெற்றார். முய்சு இந்தியாவுடனான உறவை மேம்படுத்தியிருப்பது, விருப்பத்தின் பேரில் அல்ல கட்டாயத்தால் நிகழ்ந்துள்ளது" என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES 3. மாலத்தீவில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பு மாலத்தீவு சீனாவுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. சீனாவின் லட்சியத் திட்டமான பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தை மாலத்தீவு வெளிப்படையாக ஆதரித்து, ஈடுபாடு காட்டுகிறது. இந்தியப் பெருங்கடலில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை தடுப்பதில் மாலத்தீவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மாலத்தீவின் பல முக்கிய திட்டங்களில் இந்தியா முதலீடு செய்துள்ளது. இவற்றில், கிரேட்டர் மாலே இணைப்புத் திட்டம் ( Greater Malé Connectivity Project ) சீனாவிற்கு எதிரானதாகக் கருதப்படுகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம், பாதுகாப்புத் துறையில் சீனா தங்களுக்கு உதவும் என்று மாலத்தீவு கூறியிருந்தது. பின்னர் மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில், "சீனாவுடன் நாங்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தம் பாதுகாப்பு உதவியையும் வழங்கும். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் பலப்படுத்தப்படும்" என்று எழுதியிருந்தது. சீனா மாலத்தீவில் 200 மில்லியன் டாலர் செலவில் சீனா-மாலத்தீவு நட்புப் பாலத்தைக் கட்டி வருகிறது. மாலத்தீவில் சீனாவின் அதிகரித்து வரும் இருப்பு இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக பல ஆய்வாளர்கள் நம்புகின்றனர். கடந்த ஆண்டு ஜனவரியில், முய்சு சீனாவுக்கு சென்றார், இரு நாடுகளும் 20 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு வருடாந்திர மதிப்பாய்வு 2018 இன் படி, டிசம்பர் 27, 2016 அன்று, மாலத்தீவின் மாலே விமான நிலையத்தை ஒட்டியுள்ள ஒரு தீவை சீனா 50 ஆண்டுகளுக்கு $4 மில்லியனுக்கு குத்தகைக்கு எடுத்தது. ஃபெய்தூ பினோல்ஹு என்பது தலைநகருக்கு அருகிலுள்ள ஒரு மக்கள் வசிக்காத தீவாகும், இது சீனாவிற்கு குத்தகைக்கு விடப்பட்டது. பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியின் கீழ் சீனா இந்தியப் பெருங்கடலில் தனது இருப்பை அதிகரித்து வருகிறது, இதற்காக மாலத்தீவில் பல திட்டங்களில் சீனா பங்கெடுத்து வருகிறது. புதிய திட்டங்களுக்கு ஏலச் செயல்முறையிலிருந்து விலக்கு அளிக்கும் சட்டத்தை மாலத்தீவு ஜூலை 2016 இல் இயற்றியது. இந்த செயல் சீனாவிற்கு சாதகமாகக் கருதப்பட்டது. "பாரசீக வளைகுடாவிலிருந்து வரும் கச்சா எண்ணெய் தொடர்ந்து பாதுகாப்பாக வந்தடைவதற்கு அரபிக் கடலில் ஒரு இராணுவ கட்டமைப்பை உருவாக்க சீனா விரும்புகிறது. மறுபுறம், மாலத்தீவுகள் சீனாவிற்கு எளிதான இடமாக மாறி விடக்கூடாது என்று இந்தியா விரும்புகிறது" என்று மனோஜ் ஜோஷி கூறுகிறார். 4. இந்தியா மீதான முய்சுவின் நிலைப்பாடு "மே 10 ஆம் தேதிக்குப் பிறகு, மாலத்தீவில் எந்த வடிவத்திலும் இந்திய ராணுவ வீரர்கள் இருக்க மாட்டார்கள். சீருடையில் இருந்தாலும் சரி, சிவில் உடையில் இருந்தாலும் சரி, இந்திய ராணுவத்தினர் இனி மாலத்தீவில் இருக்க மாட்டார்கள். இதை நான் முழு உறுதியுடன் சொல்கிறேன்" என்று முய்சு கடந்த ஆண்டு மார்ச் மாதம் கூறியிருந்தார். கடந்த ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி முய்சு சீனாவுக்கு சென்றார். இதன் பின்னர் அவருடைய பேச்சுகளில் இந்தியாவின் பெயரை குறிப்பிடாமல் விமர்சனங்களை முன் வைத்தார். "மாலத்தீவுகள் ஒரு சிறிய நாடாக இருக்கலாம், ஆனால் அது தன்னை அச்சுறுத்த யாருக்கும் உரிமை தராது" என்று முய்சு கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், "அச்சுறுத்தும் நாடு 4.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள உதவியை வழங்காது" என்று கூறியிருந்தார். அனந்தா மைய சிந்தனைக் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி இந்திராணி பாக்சி கூறுகையில், மாலத்தீவில் இந்தியாவுக்கு எதிரான உணர்வு இன்னும் இருப்பதால் இந்தியாவிற்கும் மாலத்தீவு முக்கியமானது. "மாலத்தீவுகள் இந்தியாவை நேசிக்காது, ஆனால் அது ஒரு பாதுகாப்பு சவாலாக மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று பாக்சி கூறுகிறார். கிழக்கு-மேற்கு கப்பல் போக்குவரத்து பாதைக்கு அருகில் இருப்பதால், மாலத்தீவு சீனாவிற்கும் மிகவும் முக்கியமானது. வளைகுடாவிலிருந்து சீனாவிற்கு வரும் அனைத்து எண்ணெய் பொருட்களும் இந்தப் பாதை வழியாகவே வருகின்றன. இது தவிர, மாலத்தீவுக்கு அருகிலுள்ள டியாகோ கார்சியாவில் அமெரிக்கா ஒரு முக்கியமான கடற்படைத் தளத்தைக் கொண்டுள்ளது. 1988ஆம் ஆண்டு, ராஜீவ் காந்தி இராணுவத்தை அனுப்பி அப்துல் கயூமின் அரசாங்கத்தைக் காப்பாற்றினார். 2018 ஆம் ஆண்டில், மாலத்தீவு மக்கள் குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டபோது, இந்தியா தண்ணீரை கப்பலில் அனுப்பியது. -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியுஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c6273lx2x5ko
  12. உயிர்த்தஞாயிறு தாக்குதலில் மறைப்பதற்கு எதுவுமில்லை; பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகள் எமது அரசாங்கத்திலிருந்தாலும் நடவடிக்கை என்கிறார் பிரதமர் ஹரிணி அமரசூரிய 25 JUL, 2025 | 03:38 PM (எம்.ஆர்.எம்.வசீம்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையை நாங்கள் முன்னெடுத்துச்செல்வோம். அதில் மறைப்பதற்கு எங்களுக்கு ஒன்றும் இல்லை. அனைத்து விடயங்களையும் முன்வைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுப்போம். அதேநேரம் தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகள் எமது அரசாங்கத்துக்கு கீழ் இருக்குமானால், அவர்களுக்கும் சட்டத்தை ஒரேமாதிரி யாக செயற்படுத்த நடவடிக்கை எடுப்போமென பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் சமிந்த விஜேசிறி கேட்ட கேள்விக்கு மேலதிக கேள்வியாக முஜிபுர் ரஹ்மான் கேட்ட வினவிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். முஜிபுர் ரஹ்மான் தனது கேள்வியின்போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சாரா உயிரிழந்ததாக இறுதியாக தெரிவிக்கப்பட்ட டீ.என்.ஏ. அறிக்கையை நாங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோன்று அன்று எதிர்க்கட்சியில் இருந்த நீங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் பிரகாரம் தற்போது இந்த தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் விசாரணை ஆரம்பித்திருக்கிறது. அதற்கு நாங்கள் பூரண ஆதரவை வழங்கத் தயார். ஆனால் தாக்குதல் நடந்த சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாண கட்டளை தளபதியாக இருந்தவர் தற்போது அரசாங்கத்தில் இருக்கும் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அநுர ஜயசேகர, அன்று சாய்ந்தமருதில் குண்டு வெடித்தபோது, அந்த இடத்துக்கு ஆரம்பமாக வந்தது இராணுவத்தினராகும். அப்படியானால் சாராவுக்கு என்ன நடந்தது? அவரை யார் கடத்திச்சென்றார்கள் என்பது தொடர்பான தகவல் இராணுவத்துக்கு தெரிந்திருக்க வேண்டும். அநுர ஜயசிங்கவுக்கு தெரியாமல் இராணுவத்தினர் அங்குவர முடியாது.அவரும் அந்த சந்தர்ப்பதில் தெரிந்திருக்காவிட்டாலும் பின்னராவது இதனை தெரிந்திருப்பார். அன்றைய அரசாங்கத்துக்கு இந்த தாக்குதல் தொடர்பில் சம்பந்தம் இருப்பதாக ஜனாதிபதியும் தெரிவித்திருந்தார். அப்படியானால் அன்றைய அரசாங்கத்தின் கிழக்கு மாகாண கட்டளை தளபதியாக இருந்த அநுர ஜயசிங்க, தற்போது அரசாங்கத்தின் பிரதி அமைச்சராக இருக்கும் நிலையில், அவருக்கு கீழ் உள்ளவர்களே தற்போது இந்த தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும்போது, அந்தி விசாரணை எவ்வாறு நீதியான விசாரணை என தெரிவிக்க முடியும்? என்றார். அதற்கு பிரதமர் தொடர்ந்து பதிலளிக்கையில், அநுர ஜயசிங்க 2024லேயே பிரதி பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2019லே இடம்பெற்றது. இந்த தாக்குதல் தொடர்பில் 2019இல் இருந்து விசாரணை இடம்பெற்று வருகிறது. அப்போது விசாரணைகளை சுயாதீனமாக நடத்த இடமிருந்தது. ஆனால் செய்யவில்லை. இவர்கள் அதிகாரத்தில் இருக்கும்போது இந்த விசாரணையை மேற்கொள்ளவில்லை. அதுதான் பிரச்சினை. ஆனால் நாங்கள் விசாரணை மேற்கொள்வோம். யாரும் குழப்பமடைய தேவையில்லை. எமது பிரதி அமைச்சர் இததொடர்பில் பாராளுமன்றத்திலும் தெரிவித்திருக்கிறார். குற்றப்புலனாய்வு பிரிவிலும் வாக்குமூலம் வழங்கி இருக்கிறார். இவர்களுக்கு பல வருடங்களாக செய்ய முடியாமல் போன இந்த வேலையை, தற்போது நாங்கள் மேற்கொள்வதை பொறுத்துக்கொள்ள முடியாமல் இருப்பது தொடர்பில் எங்களுக்கு செய்வதற்கு ஒன்றும் இல்லை. எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையை நாங்கள் முன்னெடுத்துச்செல்வோம். அதில் மறைப்பதற்கு எங்களுக்கு ஒன்றும் இல்லை. அனைத்து விடயங்களையும் முன்வைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுப்போம் என்றார். அதேநேரம் சமிந்த விஜேசிறி எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பிரதமர் பதிலளிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவில் அவர்களுக்கு வழங்கப்பட்ட கடமை, பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற தவறியமைக்காக குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுவது வழக்கு விசாரணைகளுக்கு பாதிப்பாக அமைவதால் அந்த விபரங்களை தற்போது வெளியிட முடியாது. என்றாலும் அறிக்கையை ஆராய்ந்து பார்க்க யாருக்குவேண்டுமானாலும் முடியும். அத்துடன் விசாரணைகளின் முடிவில் சட்டமா அதிபரின் பரிந்துரைக்கமைய தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்துக்கு கீழ் தண்டனை பெற்றுக்கொடுக்க எமது அரசாங்கம் பின்வாங்கப்போவதில்லை. அதேநேரம் இதற்கு பொறுப்புக்கூக்கூடிய அதிகாரிகள் தற்போது அரசாங்கத்துக்கு கீழ் இருக்குமானால், அவர்களுக்கும் சட்டத்தை ஒரே மாதிரி செயற்படுத்த நடவடிக்கை எடுப்போம் என்றார். https://www.virakesari.lk/article/220921
  13. சச்சின் சாதனையை நெருங்கிய ஜோ ரூட் - விவேகத்தை விட்டு ஆட்டத்தை தொலைத்த இந்தியா பட மூலாதாரம்,STU FORSTER/GETTY IMAGES கட்டுரை தகவல் எஸ். தினேஷ் குமார் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஆண்டர்சன்–சச்சின் தொடரில், இந்த டெஸ்டில்தான் இங்கிலாந்து பெரும்பாலான செஷன்களை கைப்பற்றியிருக்கிறது. செஷன்களை அதிகம் கைப்பற்றியும் தொடரில் பின்தங்கியுள்ள இந்திய அணி, தொடரில் முதல்முறையாக பலவீனமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. முன்றாம் நாளில் பேட்டிங்கிற்கு சாதகமான சீதோஷ்ண நிலை நிலவியதை இங்கிலாந்து அணி பயன்படுத்திக்கொண்டது. இனி, இந்த டெஸ்டை இங்கிலாந்து பறிகொடுப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. அதேபோல இந்தியா வெல்வதற்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. இந்த தொடரில் முதல்முறையாக முன்றாம் நாள் முடிவிலேயே ஆட்டம், எந்த திசையில் செல்லப் போகிறது என்பதை யூகிக்க முடிகிறது. இரண்டாம் நாளை இங்கிலாந்துக்கு தாரைவார்த்த இந்தியா, முன்றாம் நாளிலும் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. இன்னிங்ஸ் மீண்டும் தொடங்கியவுடன் ரூட்டும் போப்பும் எந்த சிரமமுமின்றி ரன் சேர்ப்பில் ஈடுபட்டனர். நேற்றும் லைன் அண்ட் லென்த்தில் கோட்டைவிட்ட பும்ரா, கால் பக்கமாக தொடர்ச்சியாக பந்துவீசி அடிவாங்கினார். ஆடுகளம் முழுக்கவும் பேட்டிங்கிற்கு சாதகமாக தட்டையாக மாறியதால், இந்திய வேகப்பந்து வீச்சாளர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. விக்கெட்டுக்கு வாய்ப்பு இருப்பது போல தெரியவில்லை என்றால், குறைந்தபட்சம் ரன் வேகத்தையாவது கட்டுக்குள் கொண்டுவந்திருக்க வேண்டும். ஆனால், விக்கெட் கிடைக்காத அதிருப்தியில், விவேகத்தை தொலைத்து கண்டதையும் முயன்று ரன்களை வாரி இறைத்தனர். ரன் ரேட்டை கட்டுப்படுத்தும் விதமாக, ஒரு முனையில் ஜடேஜாவை விரைவாக கொண்டுவந்திருக்க வேண்டும். ரூட், போப் இருவரும் வலக்கை பேட்ஸ்மேன்கள் என்பதால், அதுவொரு நல்ல உத்தியும் கூட. ஆனால், இந்திய கேப்டன் கில் அதையும் செய்யவில்லை. பட மூலாதாரம்,STU FORSTER/GETTY IMAGES சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்துவதில் கோட்டை விட்ட கில் சுழற்பந்து வீச்சாளர்கள் தொடர்பான இந்திய அணியின் அணுகுமுறை இந்த தொடர் முழுக்கவே, மோசமாக உள்ளது. 'சைனாமேன்' குல்தீப் யாதவ், தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகிறார். இங்கிலாந்து அணி, 68 ஓவர்கள் விளையாடிய பிறகு, நேற்று வாஷிங்டன் சுந்தர் பந்துவீச அழைக்கப்படுகிறார். இதற்கும் லார்ட்ஸ் டெஸ்டில் அட்டகாசமாக பந்துவீசி, தனது கரியரின் சிறந்த பந்துவீச்சை அவர் பதிவுசெய்திருந்தார். கில்லின் கேப்டன்சி, உள்ளுணர்வை அடிப்படையாக கொண்டதாக தெரியவில்லை. பயிற்சியாளர்கள், அனலிஸ்ட்கள் கொடுக்கும் ஆலோசனையின்படி களத்துக்கு செல்கிறார். திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை எனில், வியூகத்தை மாற்றாமல் அதையே திரும்பத் திரும்ப முயன்று பார்த்து சோர்ந்துவிடுகிறார். இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் அப்படியே கில்லுக்கு நேரெதிராக இருப்பதை பார்க்கலாம். வாய்ப்பே இல்லாத ஒன்றை கூட, தனது வியூகத்தை பயன்படுத்தி, கடைசி வரைக்கும் முயன்று நிகழ்த்திக்காட்டுகிறார். பட மூலாதாரம்,CLIVE MASON/GETTY IMAGES கடைசியில், ரூட்–போப் பார்ட்னர்ஷிப்பை, வாஷிங்டன் சுந்தர்தான் உடைத்தார். சுந்தரை சீக்கிரம் கொண்டுவந்திருந்தால், இவ்வளவு ரன்களை போப் குவித்திருக்க மாட்டார். பந்து தாறுமாறாக எல்லாம் திரும்பவில்லை என்றபோதும், காற்றில் டிரிஃப்டை (Drift) பயன்படுத்தி, வலக்கை பேட்ஸ்மேனுக்கு வெளியே பந்தை கொண்டுசென்றார். சுந்தரின் டிரிஃப்டை கணிக்க முடியாமல்தான் போப் தவறான லைனில் ஆடி, ஸ்லிப்பில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அபாயகரமான பேட்ஸ்மேனான புரூக், இறங்கிவந்து விளையாட முயன்று ஸ்டம்பிங் ஆனார். வழக்கம் போல, கிடைத்த தொடக்கத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்றாவிட்டாலும், போப்பின் இன்னிங்ஸ் சிறப்பாக இருந்தது. குறிப்பாக, தலை, உடல் இரண்டையும் முன்னகர்த்தி அவர் வேகப்பந்து வீச்சை எதிர்கொண்டு ரன் சேர்த்த விதம் அபாரமாக இருந்தது. ஒரு பேட்ஸ்மேனுக்கு கால் நகர்வுக்கு நிகராக தலை நகர்வும் அவசியம். சுழற்பந்து வீச்சையும் நன்றாகவே எதிர்கொண்டு ரன் குவித்தார். அவருடைய துருதுருப்பான பேட்டிங், இங்கிலாந்து முன்னாள் பேட்ஸ்மேன் இயன் பெல்லை ஞாபகப்படுத்தியது. நாயகனாக மிளிர்ந்த ஜோ ரூட் சந்தேகமே இன்றி நேற்றைய நாளின் நாயகன் ஜோ ரூட்தான். இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் ரூட் அளவுக்கு சுழற்பந்து வீச்சை திறம்பட எதிர்கொண்ட ஒரு பேட்ஸ்மேன் வேறு எவருமில்லை. எப்போது ரன் சேர்த்தார் என்று தெரியாத அளவுக்கு, நேற்றைய நாள் முழுக்கவும் அடக்கமாக ரன் சேர்த்தார். ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்லாக் ஸ்வீப் உள்பட தனக்குப் பிடித்தமான ஷாட்களையும் தேவைக்கேற்ப பயன்படுத்தி சதத்தை எட்டினார். இந்த தொடர் முழுக்க பிரமாதமாக விளையாடாவிட்டாலும், தொடரில் இங்கிலாந்து முன்னணியில் இருப்பதற்கு ரூட்டின் பேட்டிங்கும் ஒரு முக்கிய காரணம். இங்கிலாந்து பேட்டிங் வரிசையில் இருந்து ரூட்டை எடுத்துவிட்டால், அது ஒரு சாதாரண அணியாக மாறிவிடும். நேற்று ஒரே நாளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில், டிராவிட், காலிஸ், பாண்டிங் என மூன்று ஜாம்பவான்களையும் முந்தினார். கம்போஜ் பந்தை ஃபைன்லெக் திசையில் தட்டிவிட்டு தனது 38வது சதத்தை பதிவுசெய்த அவர், அதிக சதங்கள் எடுத்தவர்கள் வரிசையில், சங்கக்காராவை சமன்செய்தார். பட மூலாதாரம்,STU FORSTER/GETTY IMAGES ரூட் சதத்தை கடந்த பிறகு, இந்தியா முழு நம்பிக்கையும் இழந்துவிட்டது. களத்தில் இந்திய வீரர்களின் உடல்மொழி, அதிர்ஷ்டத்தில் விக்கெட் ஏதும் கிடைக்காத என ஏங்குவதை போலிருந்தது. பும்ரா வழக்கத்தை விட வேகம் குறைவாக பந்துவீசியது, அவர் உடற்தகுதி குறித்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அறிமுக வேகப்பந்து வீச்சாளர் கம்போஜ் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. சராசரியாக மணிக்கு 120 கிமீ வேகத்தில் செல்லும் அவருடைய பந்துகளை மிகவும் அலட்சியமாக இங்கிலாந்து வீரர்கள் எதிர்கொண்டு ரன் குவித்தார்கள். பிரசித் கிருஷ்ணாவுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்திருக்கலாமோ என்று நிச்சயம் அணி நிர்வாகம் நினைத்திருக்கும். தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக, 20 விக்கெட்களை வீழ்த்துவதுதான் இலக்கு என கில் பேட்டி கொடுத்தார். ஆனால், மேட்ச் வின்னர்களை அணியில் சேர்க்காமல், 10-20 உதிரி ரன்களுக்கு ஆசைப்பட்டு ஆல்ரவுண்டர்களை வைத்து அணியை நிரப்பினால், 20 விக்கெட்கள் எடுக்க முடியாது என்பதை கில் இப்போது உணர்ந்திருப்பார். பட மூலாதாரம்,STU FORSTER/GETTY IMAGES இங்கிலாந்து அணி, ஒரே நாளில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ரன்கள் குவித்துள்ளது. பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய பும்ராவை, 28 ஓவர்கள் பந்துவீச பணித்துள்ளார் கேப்டன் கில். அணித் தேர்வில் கவனம் செலுத்திருந்தால், பும்ராவுக்கு இவ்வளவு வேலைப்பளு ஏற்பட்டிருக்காது. கடைசி 3 விக்கெட்களை விரைவாக இழந்தாலும், ஸ்டோக்ஸ் களத் நிற்பதால், நான்காம் நாளில் பெரிய ஸ்கோரை பதிவுசெய்ய இங்கிலாந்து முயற்சிக்கும். நான்காம் நாளில், மதிய உணவு இடைவேளை வரை விளையாடினாலே, பெரிய லீடை (Lead) இங்கிலாந்து எட்டமுடியும். பிறகு, 150 ஓவர்களுக்கு மேல் விளையாட வேண்டிய நெருக்கடிக்கு இந்தியா தள்ளப்படும். தசைப்பிடிப்பால் ரிட்டர்ட் ஹர்ட் ஆன ஸ்டோக்ஸ், வோக்ஸ் ஆட்டமிழந்த பிறகு, மீண்டும் களத்துக்கு வந்தது, அவர் உடற்தகுதி குறித்த சந்தேகங்களை களைந்தது. பட மூலாதாரம்,STU FORSTER/GETTY IMAGES இந்தியா தோல்வியை தவிர்க்க முடியுமா? இந்தியா தோல்வியை தவிர்க்க வேண்டுமானால், கேஎல் ராகுல் எண்ணிலடங்கா பந்துகளை எதிர்கொள்ள வேண்டும். கடைசி 3 இன்னிங்ஸ்களாக ரன்னின்றி தவிக்கும் கேப்டன் கில், பெரிய இன்னிங்ஸ் ஒன்றை விளையாடியாக வேண்டும். இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் சொன்னபடி, ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் உள்ள சுவாரசியம் என்னவென்றால், தொடரின் இறுதிக்கட்டத்தில் வீரர்களுக்கு உடலும் மனதும் சோர்ந்து போயிருக்கும். ஆரம்பகட்டத்தில் இருந்த ஆக்ரோஷம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டு வரும். தோல்வியின் விரக்தியில் இருக்கும் அணி, நிதானத்தை இழந்து நிறைய தவறுகளை செய்யத் தொடங்கும். கில் தலைமையிலான இந்திய அணி, இப்போது அப்படிப்பட்ட நிலையில் தான் உள்ளது. இரண்டாம் நாளின் கடைசியில் புதிய பந்தை எடுக்காதது, புதிய பந்தை அனுபவம் இல்லாத கம்போஜிடம் கொடுத்தது, தவறான நேரத்தில் பவுன்சர் பொறியை கையில் எடுத்தது என இந்தியா செய்த தவறுகள் அநேகம். நான்காம் நாள் ஆட்டத்தில் ஏதேனும் அதிசயம் நிகழ்ந்து இந்திய அணி எழுச்சி பெறுமா என்று பார்ப்போம். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5ye388y7l2o
  14. பாராளுமன்றத்தின் சிறந்த ஆளுமை : அரசியல்வாதிகளுக்கு உதாரணம் காலஞ்சென்ற இரா. சம்பந்தன் - அரசியல் கட்சி தலைவர்கள் Published By: VISHNU 25 JUL, 2025 | 10:30 PM (எம்.ஆர்.எம்.வசீம்) பாராளுமன்றத்தில் காணக்கிடைத்த மிகச் சிறந்த ஆளுமையாகவும் அரசியல்வாதிகளுக்கு உதாரண புருஷராகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காலஞ்சென்ற இரா.சம்பந்தன் திகழ்ந்தார் என அரசியல் கட்சி தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்தனர். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜவரோதயம் சம்பந்தன், ஏ. பிலபிற்றிய, டபிள்யூ.ஏ.ஏக்கநாயக்க, லக்கி ஜயவர்த்தன மற்றும் மாலனீ பொன்சேக்கா ஆகியோர் மீதான அனுதாபப் பிரேரணையில் உரையாற்றும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். இதன்போது, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் எம்.பியுமான ரவூப் ஹக்கீம் உரையாற்றுகையில், இரா. சம்பந்தன் இந்த பாராளுமன்றத்தில் நாங்கள் காணுகின்ற மிக அபூர்வமான ஆளுமையாகும். சம்பந்தனின் அரசியல் என்பது வெவ்வேறு யுகங்களாக ஆராயப்பட வேண்டியது. சரிதம் எழுதப்படும் போது ஒவ்வொரு யுகங்களில் அவரின் பங்களிப்பு இருந்துள்ளது. தமிழ் சமூகத்தின் விடுதலைக்காக எப்படி செயல்பட்டது என்பது பற்றி நிறைய பேசலாம். தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஒரு வகிபாகத்தை அவர் வகித்தார். அதற்கு இந்த சபையில் பலரும் சான்று பகிர்வார்கள். அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும் என்று பிரார்த்திக்கின்றேன். என்றார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் எம்.பியுமான ரிஷாத் பதியூதின் கூறுகையில், இரா.சம்பந்தன் இந்த நாட்டில் எல்லோருக்கும் முன்னுதாரமாக திகழ்ந்தவர். நல்ல பண்பான அரசியல் தலைவர். திருகோணமலை மாவட்ட மக்களால் நன்கு நேசிக்கப்பட்டவர். அவர் சகல பிரச்சினைகளின் போதும் அந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பங்கு வகித்தார். நடுநிலையான போக்கையும், சிறந்த அரசியல் அறிவையும் கொண்ட சம்பந்தன் ஐயாவை இழந்துள்ளோம். இவரை சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உயர்ந்த அந்தஸ்துள்ளவராக இருந்ததுடன், எதிர்க்கட்சித் தலைவராகவும். இருந்தார். இவர் இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு உதாரண புருஷராவார் என்றார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ கூறுகையில், தேசிய அரசியலில் சிறந்தவொரு நபராக சம்பந்தன் இருந்தார். எப்போதும் அரசியல் தீர்வுக்காக முன்னின்றார். பலரும் பயங்கரவாத தீர்வை தேடிப் போன போது, அந்த விடயத்தில் அரசியல் தீர்வு காண செயற்பட்டார். அவர் ஜனநாயக முறைமையில் பாராளுமன்றத்தில் இருந்து மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முயற்சித்தார். அவரின் குடும்பத்தினருக்கும் அவரின் கட்சியினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார். இலங்கை தொழிலாலளர் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் கூறுகையில், சம்பந்தன் ஐயாவுடன் எனக்கு நெருக்கமான உறவு இல்லாவிட்டாலும் அவரின் அனுபவங்கள் அவரின் ஆலோசனைகளை பெற்றுள்ளேன். என்னால் கூறக் கூடிய முன்னுதாரணத்திற்கு அவரையே குறிப்பிடுவேன். மறைந்த ஆறுமுகன் தொண்டமானுக்கும் சம்பந்தன் ஐயாவுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது. அவருக்கு எமது மறியாதை எப்போதும் இருக்கும் அவரின் மறைவு தொடர்பில் அவருடைய குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/220966
  15. கல்வி மறுசீரமைப்பு என்ற பெயரில் பாடசாலைகளை மூடுவதற்கு முற்பட வேண்டாம் - பிரேம்நாத் சி தொலவத்த 25 JUL, 2025 | 06:08 PM (எம்.மனோசித்ரா) கல்வி மறுசீரமைப்பிற்கு 20 எதிர்ப்பினை வெளியிட்ட மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) இன்று எமது ஆட்சியில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. எது எவ்வாறிருப்பினும் கல்வி மறுசீரமைப்பு என்ற பெயரில் எந்தவொரு பாடசாலையையும் மூடுவதற்கு முயற்சிக்க வேண்டாம் என அரசாங்கத்தை வலியுறுத்துவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்தார். கொழும்பில் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், 10 மாதங்களில் எவ்வாறு கல்வி மறுசீரமைப்பினை முன்னெடுப்பார்கள்? 20 ஆண்டுகளாக கல்வி மறுசீரமைப்பிற்கு எதிர்ப்பினை வெளியிட்ட இவர்கள், எமது ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களையே தற்போது நடைமுறைப்படுத்துகின்றனர். எம்மால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த முடியாமல் போனமையில் சுனில் ஹந்துன்னெத்தி போன்றோர் பிரதான காரணமானவர்களாவர். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் கல்வி மறுசீரமைப்பு யோசனைகள் முன்வைக்கப்பட்ட போது இவர்கள் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைகழக கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த முயற்சித்த சந்தர்ப்பங்களிலும் அவர்கள் அவற்றுக்கு வாய்ப்பளிக்கவில்லை. இந்த அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிப்பவர்கள் கடந்த காலங்களில் நாட்டுக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியவர்களாவர். ஆனால் இன்று அவர்கள் எம்மால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எமக்கு அழைப்பு விடுக்கின்றனர். சரியான தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் ஒத்துழைப்பினை வழங்குவோம். பாடசாலைகளை மூடுவது தொடர்பிலும் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். எமது ஆட்சி காலத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கவில்லை. எனவே இந்த அரசாங்கமும் எந்தவொரு பாடசாலையையும் மூடுவதற்கு முயற்சிக்க வேண்டாம் என வலியுறுத்துகின்றோம். கல்வி மறுசீரமைப்பு எனக் கூறிக் கொண்டு பாடசாலை கட்டமைப்பில் கைவைக்க வேண்டாம் என அரசாங்கத்தை எச்சரிக்கின்றோம். வரலாறு மற்றும் அழகியல் பாடங்களை தெரிவு பாடத்தொகுதிக்குள் உள்ளடக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்துகின்றோம். முதலில் அரசாங்கம் ஆளுந்தரப்பினருக்கு இது தொடர்பான உண்மைகளைக் கூற வேண்டும். அதன் பின்னர் எம்முடன் கலந்தாலோசிக்கலாம் என்றார். https://www.virakesari.lk/article/220942
  16. நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் பதவிகளுக்குப் பொருத்தமானவராக இரா. சம்பந்தன் இருந்தார் - பிமல் ரத்நாயக்க 25 JUL, 2025 | 05:41 PM (எம்.ஆர்.எம்.வசீம்) காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன், இந்த நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளுக்கும் பொருத்தமானவராக இருந்தார். அந்த அதிஷ்டம் நாட்டுக்கு கிடைக்காவிட்டாலும் அவரின் குணாம்சங்களை கொண்ட தலைவர்கள் அந்த பதவிகளுக்கு செல்ல வேண்டும் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜவரோதயம் சம்பந்தன், ஏ. பிலபிற்றிய, டபிள்யூ.ஏ.ஏக்கநாயக்க,லக்கி ஜயவர்த்தன மற்றும் மாலனீ பொன்சேக்கா ஆகியோர் மீதான அனுதாபப் பிரேரணையில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத சிறந்தவொரு அரசியல்வாதியாக இரா.சம்பந்தன் இருந்தார். அவரின் மறைவு தொடர்பில் அவரின் குடும்பத்தினருக்கு எமது கவலைகளை தெரிவித்துக்கொள்கின்றேன். அவருடன் நான் 2001 முதல் 2010 வரையிலும் 2015 முதல் 2020 வரையிலும் எதிர்க்கட்சியில் இருந்துள்ளேன். அதன்போது எமது கொள்கைகள் எதுவாக இருந்தாலும் இந்த பாராளுமன்றத்தில் வேறு அரசியல்வாதிகளிடம் இருந்து மாறுபட்ட ஒருவராக இருந்தார். அவரின் அரசியல் கொள்கைகளில் நூறுவீதம் இணங்காதவர்களாக இருந்தாலும் நாங்கள் எப்போதும் மதிப்பளிக்கும் தலைவராக இருந்துள்ளார். இவருக்கும் எமக்கும் இடையிலான வயது வேறுபாடுகள் இருந்தாலும் மிகவும் மதிக்கத்தக்க ஒருவராக அவரை பார்த்தோம். அவருடன் 2010 - 2019 வரையிலான காலத்தில் புதிய அரசியலமைப்பு தொடர்பான குழுவில் நெருக்கமாக பழகக் கிடைத்தது. சகல கூட்டங்களிலும் கலந்துகொண்டார். அவர் திம்பு பேச்சுவார்த்தையில் இருந்து பல்வேறு அனுபவங்களை கொண்டவர். நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு அரசியலமைப்பை தயாரித்தாலும் அதனை சர்வஜன வாக்கெடுப்புக்கு விட வேண்டும் என்று கூறியிருந்தார். இவரின் இந்தக் கருத்து மிகவும் முக்கியமானதாக பார்க்கின்றோம். அவர் உரையாற்றும் போது மனசாட்சிக்கு இணங்கிய பலமான உரையாக இருக்கும். அவ்வாறானவர்கள் இன்னும் இருப்பார்களாக இருந்தால் பாராளுமன்றத்தின் தரம் இன்னும் மேலுயரும். அவர் இந்த நாட்டின் பிரதமர் பதவி மற்றும் ஜனாதிபதி பதவிக்கும் பொருத்தமானவர் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் இந்த நாட்டுக்கு அந்த அதிஷ்டம் கிடைக்காவிட்டாலும் அவரின் குணாம்சங்களை கொண்ட தலைவர்கள் அந்த பதவிகளுக்கு செல்ல வேண்டும். இதனால் அவரின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் கௌரவமளிக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/220936
  17. இலங்கை அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத ஒருவரே மறைந்த இரா.சம்பந்தன் - சஜித் பிரேமதாச 25 JUL, 2025 | 05:43 PM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கை அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத ஒருவரே மறைந்த இரா.சம்பந்தன். எமது அரசியல் வரலாற்றில் உருவாகிய சிரேஷ்ட தலைவர்களிடையே சிறந்த குணாம்சங்களுடன் மதிப்பு மிக்க அரசியல்வாதி என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜவரோதயம் சம்பந்தன், ஏ. பிலபிற்றிய, டபிள்யூ.ஏ.ஏக்கநாயக்க, லக்கி ஜயவர்த்தன மற்றும் மாலனீ பொன்சேக்கா ஆகியோர் மீதான அனுதாபப் பிரேரணையில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத ஒருவராக மறைந்த இரா.சம்பந்தன் இருந்தார். அவரின் செயற்பாடுகள் அனைவருக்கும் முன்மாதிரியானவையே. எப்போதும் அவர் மக்கள் தொடர்பிலேயே சிந்தித்து நடந்துகொண்டார். அவர் ஒரு மனிதாபிமானத்திற்கு சிறந்ததொரு ஆலோசகரும் கூட. பல சந்தர்ப்பங்களில் சமுக, பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கதைத்துள்ளார். அரசியலில் சிறந்தவொரு தலைவராக செயற்பட்டார். எமது அரசியல் வரலாற்றில் உருவாகிய சிரேஷ்ட தலைவர்களிடையே சிறந்த குணாம்சங்களுடன் மதிப்பு மிக்க அரசியல்வாதியாக, நாட்டின் இறையாண்மை, அரசியல் சுதந்திரத்திற்காக பங்களிப்பு செய்த, தான் பிரதிநிதித்துவப்படுத்திய மக்களின் சிவில், கலாசாரம் உள்ளிட்ட மனித உரிமைகளுக்காக பங்களிப்பு வழங்கிய அவரின் மறைவுக்காக அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/220940
  18. இந்திய மீனவர்கள் 7 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு! 25 JUL, 2025 | 05:51 PM நெடுந்தீவு கடற்பரப்பில் ஜூலை 13ம் திகதி கைது செய்யப்பட்ட 7 ராமேஸ்வரம் மீனவர்களையும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க யாழ். ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (25) உத்தரவு பிறப்பித்துள்ளது. யாழ் ஊர்காவற்றுறை நீதவான் நளினி சுபாஸ்கரன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ஜூலை 13ம் திகதி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக்கொண்டிருந்த போது கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இந்திய இழுவைப் படகினையும் அதிலிருந்து 7 இந்திய மீனவர்களையும் கைது செய்திருந்தனர். இலங்கை வேலைவாய்ப்பு பின்னர் குறித்த மீனவர்களையும், இழுவை படகினையும் கடற்படையினர் காங்கேசன்துறை கடற்படையினரிடம் ஒப்படைத்தனர். கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். விசாரனைகளின் பின்னர் 7 தமிழகம் ராமேஸ்வரம் மீனவர்களையும் கடந்த 13ஆம் திகதி நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து குறித்த மீனவர்களை ஜூலை 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில், குறித்த மீனவர் வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்றைய தினம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 25 படகுகளுடன் 185 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/220941
  19. அண்ணை, முத்தற்ற கவிதையை முத்தின கத்தரிக்காய் என இப்பத்தையான் 2கே கிற்ஸ் பகிடி பண்ணுங்கள். அவையளுக்கு ஔவையின்ர பாணி குறுங்கவிதை தான் சரிவரும்!
  20. நல்லூர் ஆலயத்தில் வருகிற செவ்வாய் கொடியேற்றம் - ஏற்பாடுகள் மும்முரம் 25 JUL, 2025 | 05:49 PM வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (29) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. அதனை முன்னிட்டு ஆலய வெளிவீதியினை சுற்றி சிவப்பு வெள்ளைத் துணிகள் கட்டப்பட்டு, திருவிழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா எதிர்வரும் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. மகோற்சவ திருவிழாக்களின் 10ஆம் திருவிழாவான மஞ்ச திருவிழா எதிர்வரும் 7ஆம் திகதியும், 22ஆம் திருவிழாவான மாம்பழ திருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 19ஆம் திகதியும், 24ஆம் திருவிழாவான தேர் திருவிழா ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி காலையும், மறுநாள் 22ஆம் திகதி காலை தீர்த்தத் திருவிழாவும் நடைபெற்று, மாலை கொடியிறக்கம் நிகழ்த்தப்படுவதோடு, மகோற்சவம் நிறைவு பெறும். https://www.virakesari.lk/article/220939
  21. பட மூலாதாரம்,@SUPERGOODFILMS_ 4 மணி நேரங்களுக்கு முன்னர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவான மாரீசன் திரைப்படம் இன்று (ஜூலை 25) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. வடிவேலு, ஃபகத் ஃபாசில், கோவை சரளா, லிவிங்ஸ்டன், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 'மாமன்னன்' படத்தில் எதிரும் புதிருமான கதாபாத்திரங்களில் நடித்திருந்த வடிவேலு மற்றும் ஃபகத் ஃபாசில், இந்தப் படத்தில் இணக்கமாக இருப்பது போன்ற காட்சிகளைக் கண்ட ரசிகர்களுக்கு படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இருவரும் தங்களுக்குக் கிடைக்கும் கதாபாத்திரங்களை கச்சிதமாக கையாளக் கூடியவர்கள் என்பதும் எதிர்பார்ப்புக்கான மற்றொரு காரணம். இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள மாரீசன் திரைப்படம் அதைப் பூர்த்தி செய்துள்ளதா? ஊடக விமர்சனங்கள் சொல்வது என்ன? மாரீசன் திரைப்படத்தின் கதை என்ன? படத்தின் கதை கன்னியாகுமரியில் தொடங்குகிறது. பிரபல திருடன் தயா (ஃபகத் ஃபாசில்) கண்ணில் சிக்குவதை எல்லாம் கொள்ளையடிக்கிறார். ஒரு நாள் ஒரு வீட்டிற்கு கொள்ளையடிக்கச் சென்றபோது கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்த வேலாயுதத்தை (வடிவேலு) சந்திக்கிறார். தன்னை விடுவித்தால் பணம் தருவதாகக் கூறுகிறார் வேலாயுதம். வேலாயுதத்தை விடுவித்த பிறகு, அவர் ஞாபக மறதி நோயால் (Alzheimer) பாதிக்கப்பட்டு இருப்பதையும், அவரது வங்கிக் கணக்கில் 25 லட்சம் ரூபாய் பணம் இருப்பதையும் தயா தெரிந்துகொள்கிறார். அதைத் திருடுவதற்குத் திட்டமிட்டு, வேலாயுதத்திற்கு உதவுவது போல முன்வரும் தயா, தனது இருசக்கர வாகனத்திலேயே திருவண்ணாமலைக்கு அழைத்துச் செல்கிறார். இவர்களுடைய பயணத்தின்போது என்ன நடந்தது, இறுதியாக தயா பணத்தை திருடினாரா என்பதுதான் படத்தின் மீதி கதை. மாரீசன் திரைப்படம் எப்படி இருக்கிறது? பட மூலாதாரம்,@SUPERGOODFILMS_ "இயக்குநர் சுதிஷ் சங்கருக்கு காட்சிகளை எப்படி எடுக்க வேண்டும், கதாபாத்திரங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்கிற சினிமா உத்தி நன்றாகத் தெரிந்திருப்பதால் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை படம் எங்குமே சலிப்பின்றிச் செல்கிறது" என தினமணி தனது விமர்சனத்தில் பாராட்டியுள்ளது. "ஏற்கெனவே பல படங்களில் அலசியிருந்தாலும், முக்கியமான சமூகப் பிரச்னையை புதிய பாணியில் சொல்லி கவனம் இயக்குநர் ஈர்த்துள்ளார்" எனவும் அந்த விமர்சனம் புகழாரம் சூட்டியுள்ளது. ஆனால், "படத்தின் ப்ரோமோவை பார்த்துவிட்டு, இது 'மெய்யழகன்' படத்தைப் போல இருவருக்கு இடையே நடப்பவை குறித்த கதையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. முதல் பாதியில் அந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்தபோதிலும், இரண்டாம் பாதி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை," என தி இந்து ஆங்கில நாளிதழ் விமர்சித்துள்ளது. இந்தியா டுடே விமர்சனத்தின்படி, காமெடி கலந்த த்ரில்லர் படமாக உருவாகியுள்ள மாரீசன், நிச்சயம் சிரிக்க வைக்கும். அதோடு, "படத்தில் இருக்கையின் நுனியில் அமர வைக்கும் அளவுக்கு சுவாரஸ்யங்களும் இருக்கின்றன." வடிவேலு, ஃபகத் ஃபாசில் நடிப்பு எப்படி? பட மூலாதாரம்,@SUPERGOODFILMS_ "இந்திய அளவில் சிறந்த நடிகர்களாக விளங்கும் வடிவேலுவும், ஃபகத் ஃபாசிலும் இப்படத்தில் வழக்கமான தங்கள் பாணிகளைக் கடந்து கதாபாத்திரங்களுக்கு வலு சேர்த்துள்ளனர். தொண்டி முதலும் த்ரிக்ஷாஷியும், வேட்டையன் ஆகிய படங்களில் ஃபகத் திருடனாக நடித்திருந்தாலும் இதில் அந்தச் சாயல் எதுவுமே இல்லாமல் திருடனாக நடித்திருக்கிறார். அந்த வித்தியாசம்தான் ஃபகத் ஃபாசில்" என தினமணி தனது விமர்சனத்தில் பாராட்டியுள்ளது. தி இந்து நாளிதழும் "மாமன்னன் படத்தில் இந்தக் கூட்டணி தொடங்கியது. இவர்களை திரையில் பார்ப்பது மனதிற்கு இதமாக உள்ளது. இந்தக் கூட்டணியை நிறைய படங்களில் இணைந்து பார்க்க மக்கள் விரும்புவார்கள்" என்று கூறியுள்ளது. "மாமன்னன் படத்திற்குப் பிறகு இந்தப் படத்திலும் தனது நகைச்சுவை கதாபாத்திரத்தைப் புறந்தள்ளிவிட்டு இதுபோன்ற ஆழமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள வடிவேலுவை பாராட்டியாக வேண்டும்" என டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டுள்ளது. "ஃபகத் ஃபாசில் எப்போதும் போலத் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார்" என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா பாராட்டியுள்ளது. "நீண்ட நாட்களுக்குப் பின் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையுடன் காட்சிகளைப் பார்க்க உயிர்ப்பாக இருந்தது. முதல் பாதியில் ஃபகத், வடிவேலு இடையிலான நகைச்சுவைக் காட்சிகளுக்கு பின்னணி இசை கச்சிதமாகப் பொருந்தியிருந்தது" என தினமணி பாராட்டியுள்ளது. மாரீசன் திரைப்படத்தின் குறைகள் என்ன? பட மூலாதாரம்,@SUPERGOODFILMS_ "முதல் பாகம் மற்றும் இடைவெளியில் எகிறிய எதிர்ப்பார்ப்புகள் மெல்ல மெல்லக் குறைவது போல் இரண்டாம் பாகம் அமைந்துவிட்டது. படத்தின் 'ஒன்லைன்' சரியாகக் கையாளப்படவில்லை. ஒரு கட்டத்தில் படம் கொலைகளை நியாயப்படுத்துவது சரியாக இல்லை" என்று தினமணி விமர்சித்துள்ளது. அதே போல, "ஃப்ளாஷ்பேக் காட்சிகளை கொஞ்சம் குறைத்திருக்கலாம். முன்னணி கதாபாத்திரங்கள் தவிர பிற கதாபாத்திரங்கள் பெரியளவில் கையாளப்படவில்லை" எனக் கூறுகிறது தி இந்து விமர்சனம். மேலும், "கிளைமேக்ஸ் காட்சி வரை உடைக்கப்படாத ரகசியம் படத்தின் பலம். ஆனால், சில காட்சிகளை எளிதில் ஊகிக்க முடிவது பலவீனம்" எனவும் விமர்சிக்கிறது. தினமணி விமர்சனத்தின்படி, "மொத்தத்தில் மாரீசன் திரைப்படத்தை எதிர்பார்ப்புகளுக்கு ஏமாற்றமின்றி பார்க்கலாம்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckg5gpxk3myo
  22. 25 JUL, 2025 | 06:44 PM ஆர்.சேதுராமன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய நண்பராக விளங்கிய, உலகின் முதல்நிலை கோடீஸ்வரர் இலோன் மஸ்க், 'அமெரிக்கா கட்சி' எனும் புதிய அரசியல் கட்சியை ஸ்தாபிக்கப்போவதாக அறிவித்துள்ளார். அந்நாட்டு அரசியலில் மஸ்க்கின் கட்சி எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது தொடர்பாக விவாதங்கள் எழுந்துள்ளன. 'டெஸ்லா' மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனம், 'ஸ்பேஸ் எக்ஸ்' எனும் ரொக்கெட் தயாரிப்பு மற்றும் விண்வெளி ஆய்வு நிறுவனம் மற்றும் 'எக்ஸ்' சமூக வலைதள நிறுவனங்களின் அதிபரான இலோன் மஸ்க், உலகின் முதல்நிலை கோடீஸ்வரராக விளங்குகிறார். அவரின் செல்வ மதிப்பு 400 பில்லியன் டொலர்களுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2024 ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பின் பிரசாரத்துக்காக 277 மில்லியன் டொலர்களை இலோன் மஸ்க் செலவிட்டார். அரச வினைத்திறன் திணைக்களத்தின் தலைவராக இலோன் மஸ்க் பதவியேற்ற பின்னர் வெளிநாடுகளுக்கான நிதியுதவிகளை குறைத்தல், அரச நிறுவனங்களின் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்தல் உட்பட கடுமையான திட்டங்களை மஸ்க் அறிமுகப்படுத்தினார். வெளிநாடுகளுக்கு உதவுவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட அமெரிக்க முகவர் நிறுவனமான 'யூ.எஸ்.எயிட்' நிறுவனத்தையே மஸ்க்கின் ஆலோசனையைடுத்து, ஜனாதிபதி ட்ரம்ப் இழுத்து மூடினார். மஸ்க்கின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அவரின் டெஸ்லா வாகனத் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன. அதேவேளை, தனது சிக்கன நடவடிக்கைகள் மூலம் அரசின் செலவுகளை குறைத்த போதிலும், ட்ரம்பின் வரி, செலவின சட்டமூலம் காரணமாக பெருந்தொகை நிதி வீணாகிறது என குற்றம் சுமத்திய மஸ்க், கடந்த மே மாதம் அவர் அரச வினைத்திறன் திணைக்களத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகினார். 'ஒரு பெரிய அழகிய சட்டமூலம்' என ஜனாதிபதி ட்ரம்பினால் வர்ணிக்கப்பட்ட மேற்படி சட்டமூலத்துக்கு குடியரசுக் கட்சி காங்கிரஸ் (பாராளுமன்ற) உறுப்பினர்கள் ஆதரவளித்தால் 3 ஆவது அமெரிக்கா கட்சியை ஸ்தாபிக்கப்போவதாக மஸ்க் அறிவித்திருந்தார். அச்சட்டமூலம் ஜூலை 4 ஆம் திகதி காங்கிரஸில் 218 : 214 விகித வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. ஜூலை 4 ஆம் திகதி, ஜனாதிபதி ட்ரம்ப் அச்சட்டமூலத்தில் கையெழுத்திட்டார். மறுநாள் 'அமெரிக்கா கட்சியை' (America Party) ஸ்தாபிக்கப்போவதாக இலோன் மஸ்க் அறிவித்தார். எனினும், புதிய அரசியல் கட்சியை ஸ்தாபித்து. அதன் இலக்குகளில் அடைவதில் இலோன் மஸ்க் வெற்றிபெற முடியுமா என்பதில் விவாதங்கள் உள்ளன. தென் ஆபிரிக்காவில் பிறந்த இலோன் மஸ்க், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது. தனது 'அமெரிக்கா கட்சி' குறித்த தனது அறிவிப்பையடுத்து, புதிதாக ஸ்தாபிக்கப்படும் கட்சி 2 அல்லது 3 செனட் ஆசனங்களிலும் 8 முதல் 10 பிரதிநிதிகள் சபை ஆசனங்களிலும் கவனம் செலுத்தலாம் என இலோன் மஸ்க் தெரிவித்திருந்தார். சர்ச்சைக்குரிய சட்டமூலங்கள் தொடர்பில் தீர்மானகரமான வாக்குகளாக விளங்குவதற்கு இந்த ஆசனங்கள் போதுமானவை என்கிறார் மஸ்க். அத்துடன், காங்கிரஸ் தேர்தல்களில் கவனம் செலுத்துவதற்கு தான் முதலில் திட்டமிடுவதாகவும், ஆனால், ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை ஆதரிக்கும் சாத்தியம் நிராகரிக்கப்படக்கூடியதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இடைக்கால தேர்தல்களில் தாக்கம் செலுத்துவது மஸ்கின் திட்டமாக இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. இரு கட்சிகள் முறைமை அமெரிக்காவில் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இரு கட்சிகளே தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆனால், அந்நாட்டில் தேசிய ரீதியாகவும், மாநிலங்கள் ரீதியாகவும் பதிவுசெய்யப்பட்ட ஏராளமான கட்சிகள் உள்ளன. 'அமெரிக்கன் கட்சி' (American Party) என்ற பெயரிலும், 1969 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட கட்சியொன்று ஏற்கெனவே உள்ளது. ஆனால், 3 ஆவது கட்சியாக குறிப்பிடத்தக்க தாக்கம் செலுத்தக்கூடிய கட்சி பலமான எதுவும் இல்லை. கடந்த பல தசாப்தங்களில், அமெரிக்க கோடீஸ்வரர்கள் பலர் வலுவான 3 ஆவது கட்சியை ஸ்தாபிப்பதற்கு முயன்று வந்தனர். ஆனால், இரு கட்சி ஆதிக்க முறைமையை அவர்களால் அசைக்க முடியவில்லை. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் கடந்த நூற்றாண்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய 3 ஆவது கட்சி வேட்பாளர்களாக தியோடர் ரூஸ்வெல்ட், ரொபர்ட் லா பொலெட், ரொஸ் பெரோட் முதலானோர் விளங்குகின்றனர். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தியோடர் ரூஸ்வெல்ட் 1901 முதல் 1909 வரை ஜனாதிபதியாக பதவி வகித்தவர். அவர் 1912 ஆம் ஆண்டு தேர்தலில் முற்போக்கு கட்சியின் சார்பில் போட்டியிட்டு 27.4 சதவீத வாக்குகளுடன் இரண்டாமிடத்தைப் பெற்றார். 1924ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் முற்போக்கு கட்சியின் வேட்பாளர் ரொபர்ட் லா பொலெட் 16.6 சதவீத வாக்குகளுடன் 3 ஆம் இடத்தைப் பெற்றார். 1992ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் சுயேச்சையாக போட்டியிட்ட ரொஸ் பெரோட் எனும் கோடீஸ்வரர் 18.9 சதவீத வாக்குகளுடன் 3 ஆம் இடத்தைப் பெற்றார். வேர்மன்ட் மாநிலத்தில், செனட்டர் பதவிக்கான தேர்தலில் பேர்னி சான்டர்ஸ் 2006 ஆம் ஆண்டு முதல் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றியீட்டி வருகிறார். ஆனால், அவர் சுயேச்சையாக போட்டியிட்டாலும் ஜனநாயகக் கட்சியினரின் ஆதரவு அவருக்கு உள்ளது. செனட் சபைத் தேர்தலில் பேர்னி சான்டர்ஸுக்கு எதிராக ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களை நிறுத்தியதில்லை. பிரதான கட்சிகளுக்கு சார்பான சட்டங்கள் அமெரிக்க மாநிலங்களின் சட்டங்கள், இரு பெரிய கட்சிகளுக்கும் சார்பானவை, 3 ஆவது கட்சியொன்று தலைதூக்குவதற்கு அச்சட்டங்கள் சிரமங்களை ஏற்படுத்துகின்றன எனவும் விமர்சனங்கள் உள்ளன. புதிய அரசியல் கட்சிகளை அங்கீகரிப்பது தொடர்பில் அமெரிக்காவில் ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறான விதிகளைக் கொண்டுள்ளன. உதாரணமாக, கலிபோர்னியா மாநிலத்தைப் பொறுத்தவரை, அம்மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களில் 0.33 சதவீதத்தினரின் அதாவது சுமார் 75,000 பேரின், கையொப்பத்தை சேகரித்தாலேயே புதிய கட்சியொன்று அங்கீகரிக்கப்படும். அதன் பின்னர் அங்கீகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு மாநில ரீதியான தேர்தல்களில் குறைந்தபட்சம் 2 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும். அல்லது 0.33 சதவீத பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்டிருக்க வேண்டும். அமெரிக்காவில் ஒருவர் பெரும் கோடீஸ்வரர் என்பதால் அவர் கட்சி ஆரம்பித்து, தாராளமாக நிதி அளிக்க முடியாது. அதற்கு இறுக்கமான கட்டுப்பாடுகள் உள்ளன. தேசிய ரீதியிலான இலட்சியங்களுடன் அரசியல் கட்சியொன்றை கட்டியெழுப்புவது மேலும் சிரமமானது. அதற்கு அதிக காலமும் தேவைப்படும். புதிய கட்சியை ஆரம்பிப்பது தொடர்பாக இலோன் மஸ்க் பேசிவந்த போதிலும், அவர் குடியரசுக் கட்சியினருக்கும் தொடர்ந்து ஆதரவாக உள்ளார். குறிப்பாக, அக்கட்சியில் டொனால்ட் ட்ரம்புக்கு எதிரானவர்களை இலோன் மஸ்க் ஆதரிக்கிறார். ட்ரம்பின் 'பெரிய அழகிய சட்டமூலத்துக்கு' எதிராக வாக்களித்த குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர் தோமஸுக்கு உட்கட்சித் தேர்தலில் ஆதரவு வழங்குவதாக மஸ்க் அறிவித்துள்ளார். எவ்வாறெனினும், இலோன் மஸ்க் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டால் அவரால் சில தாக்கங்களை ஏற்படுத்த முடியும் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக, குடியரசுக் கட்சியின் ஒரு தரப்பினரை இலோன் மஸ்க் கவரமுடியும். சொற்ப வித்தியாசங்களில் குடியரசு முன்னிலை வகிகக்கூடிய தேர்தல்களில் இலோன் மஸ்க்கின் கட்சி வாக்குகளை உடைக்க முடியும். இது குடியரசுக் கட்சியினருக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். அமெரிக்கவரின் குய்னிபியாக் பல்கலைக்கழகம் தேசிய ரீதியில் கடந்த மாதம் நடத்திய கருத்துக் கணிப்பில் 62 சதவீதமான குடியரசுக் கட்சி வாக்காளர்கள் இலோன் மஸ்க்குக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். ஜனநாயகக் கட்சி வாக்காளர்களிடையே அவருக்கான ஆதரவு வெறும் 3 சதவீதமாகவே இருந்தது. அதாவது, இலோன் மஸ்க் கட்சி ஆரம்பித்தால் அது, ஜனநாயகக் கட்சியினரைவிட குடியரசுக் கட்சியினருக்குதான் அதிக பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இந்நிலையில், ஒரு 3ஆவது கட்சியை ஸ்தாபிப்பது அபத்தமானது என தான் கருதுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளர். “குடியரசுக் கட்சியுடன் நாம் பிரமாண்ட வெற்றியீட்டுகிறோம். ஜனநாயகக் கட்சி அதன் இலக்கை தவறவிட்டுள்ளது. ஆனாலும் அது எப்போதும் இரு கட்சி முறைமையாகவே இருக்கும். 3 ஆவது கட்சியை ஸ்தாபிப்பது குழப்பதையே அதிகரிக்கும் என எண்ணுகிறேன். “அமெரிக்காவில் 3 ஆவது அரசியல் கட்சி வெற்றியீட்டியதில்லை என்ற உண்மைக்கு மத்தியிலும் மஸ்க் 3 ஆவது கட்சியை ஸ்தாபிக்க விரும்புகிறார். அமெரிக்க முறைமை அவற்றுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பபடவில்லை” என்கிறார் ட்ரம்ப். https://www.virakesari.lk/article/220954
  23. கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில், குடும்பப் பிணக்கு தொடர்பாக விசாரணைக்காக தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த 66 வயது கைதி ஒருவர், இன்று (25) மதியம் 12:20 மணியளவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கிளிநொச்சி, புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த இரத்தினம் ராசு என அடையாளம் காணப்பட்ட இவர், தான் அணிந்திருந்த சாரத்தின் ஒரு பகுதியை கிழித்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி நீதிமன்ற நீதிபதி ஜெமீல் சென்று பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டார். கிளிநொச்சி பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். -கிளிநொச்சி நிருபர் சப்தன்- https://adaderanatamil.lk/news/cmdj2htun01ngqp4kj6slv95l
  24. "உள்ளக பொறிமுறைக்கு ஆதரவான ஐநா மனித உரிமை ஆணையாளரின் கருத்து ஏமாற்றமளிக்கின்றது" - சர்வதேச பொறிமுறையை வலியுறுத்தி வடக்குகிழக்கு சமூகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் 25 JUL, 2025 | 04:59 PM உண்மைக்கும் நீதிக்குமான இந்த போராட்டத்தில் தமிழ்தேசிய பரப்பில் பயணிக்கும் அனைவரும் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவிக்கவேண்டும் என வடக்குகிழக்கு சமூக இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையின் உள்ளகபொறிமுறை குறித்து நம்பிக்கையில்லை சர்வதேச பொறிமுறையையே நாங்கள் வேண்டிநிற்கின்றோம் என்பதை உலகிற்கு வெளிப்படுத்துவதற்காக நாளை வடக்குகிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வடக்குகிழக்கின் சிவில் அமைப்புகள் தெரிவித்துள்ளன. இலங்கை விஜயத்தின் இறுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமையாளர் உள்ளகப்பொறிமுறையை வலியுறுத்தும் விதத்தில் கருத்து தெரிவித்தமை ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும் வடக்குகிழக்கின் சிவில் சமூகத்தினர் தெரிவித்துள்ளனர். தமிழ் சிவில் சமூக அமையத்தின் பொன்சிங்கம் மெய்நிகர் கலந்துரையாடலில் இது குறித்து தெரிவித்துள்ளதாவது ஏன் தற்போது இந்த போராட்டம் என்ற கேள்வி எழக்கூடும். 2009 இல் தங்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு அழிப்பிற்கு வன்முறை, கொலை, பாலியல்வன்முறை போன்றவற்றிற்கு பலவழிகளில் நீதி கோரி தமிழனம் தோற்றுப்போயுள்ளது. இந்த அடிப்படையில் சர்வதேசநீதியை கோரிநிற்கின்றோம். செம்மணி மீண்டுமொருமுறை சர்வதேச பொறிமுறையின் அவசியத்தை உணர்த்தியுள்ளது. என்ன நடந்தது என்பதை இந்த அரசாங்கம் மறை முயல்கின்றது என தமிழ் மக்கள் கருதுகின்றனர். அப்படியாயின் நீதியான விசாரணைகள் நடப்பது சாத்தியமில்லை. தமிழ் மக்கள் கடந்தகாலங்களில் பல விசாரணைகளில் ஆஜராகியிருந்தார்கள். ஆனால் எந்த பொறிமுறையும் நம்பகதன்மை மிக்கதாக அமையவில்லை. ஐநா மனித உரிமையாளர் இலங்கை வருகின்றார் என்றவுடன் இந்தவிடயம் உரத்துப்பேசப்பட்டது. தமிழ்மக்கள் நீதி கோரி நின்றார்கள். ஆனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமையாளர் உள்நாட்டு பொறிமுறையை ஊக்குவிக்கும் விதத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இலங்கைக்கு இந்த விடயத்தில் இயன்ற பல விடயங்களை செய்வதாக தெரிவித்துள்ளார். இது பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் பல கேள்விகளையும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தியுள்ளது. ஆகவே இந்த பொறிமுறையில் எங்களிற்கு நம்பிக்கை இல்லை என்பதை வெளிப்படுத்தவே இந்த போராட்டம். 26ம் திகதி வடகிழக்கு சமூக இயக்கம் ஒரு பெரும் எதிர்ப்பு போராட்டத்தை வடக்குகிழக்கின் 8 மாவட்டங்களிலும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. உள்நாட்டு பொறிமுறை ஏற்புடையதல்ல என்பதை மீண்டும் சர்வதேச சமூகத்திற்கு தெரிவிப்பதற்காக இந்த போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். தமிழ் சிவில் சமூக அமையம் அவர்களிற்கு தங்கள் ஆதரவை வழங்குகின்றது. வடக்குகிழக்கு சமூக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் லவகுசராசா தெரிவித்துள்ளதாவது இனப்படுகொலை இடம்பெற்ற செம்மணியை பார்த்த பின்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் ஊடகங்களிற்கு தெரிவித்த கருத்துக்கள் வடக்குகிழக்கில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இதற்கு மறுநாள் இலங்கைக்கான ஐநாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி தெரனவிற்கு தெரிவித்த கருத்துக்களும் பாரிய ஏமாற்றத்தை அளிக்கும் விதத்தில் காணப்படுகின்றது. உள்ளக பொறிமுறையில் நம்பிக்கையில்லை என்பதை வெளிப்படுத்தவே இந்த போராட்டம். கடிதங்களை அனுப்ப திட்டமிட்டுள்ளோம். 26ம் திகதி வடக்குகிழக்கில் உள்ளக பொறிமுறை மீது நம்பிக்கையில் என்பதை தெரிவித்து சர்வதேச பொறிமுறையை வலியுறுத்தி நாம் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவுள்ளோம். யுத்தம் நிறைவடைந்த 16 வருடங்களில் எங்கள் ஆதரவை வெளியிடாவிட்டாலும் உள்ளக பொறிமுறை ஊடாகவும் நாங்கள் நீதியை பெற முயற்சி செய்தோம். உள்ளக பொறிமுறை மூலம் நீதி கிடைக்கும் என்பதற்கான எந்த ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை. குமாரபுரம் தீர்ப்பு உள்ளக பொறிமுறை எவ்வாறு இயங்கும் என்பதற்கான ஒரு சிறந்த உதாரணம். 2016 ஜூலைமாதம் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டனர். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உட்பட அனைவருக்கும் உள்ளக பொறிமுறை மீது நம்பிக்கையில்லை. இதனை வெளிப்படுத்தவே ஆர்ப்பாட்டம். சட்டத்தின் ஆட்சி என்பது இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களிற்கு சாதகமாக உள்ளது. தங்கமுலாம் பூசப்பட்ட ரி56 துப்பாக்கியை வைத்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அனைத்து விடயங்களும் ஒரு பக்கசார்பாகவே கையாளப்படும் நிலை காணப்படுகின்றது. இலங்கை தொடர்பான ஐக்கியநாடுகளின் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை வெளியில் எடுத்து பொதுச்சபையில் பாரப்படுத்தவேண்டும். ஆகவே மேற்கூறப்பட்ட காரணங்களால் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களும் அவர்களிற்காக குரல்கொடுக்கும் சிவில் சமூகத்தினராகிய நாங்களும் சர்வதேச பொறிமுறையை வேண்டிநிற்கின்றோம். வெளிநாட்டு தரப்பினர் இது குறித்து எதிர்காலத்தில் ஆராய்வதே பொருத்தமாகயிருக்கும். https://www.virakesari.lk/article/220932
  25. எளிமையும், நேர்மையும், அறமும் சார்ந்த தூய அரசியற் செல்நெறியில், நெகிழ்வுகளினூடே கட்டிறுக்கத்தைக் கடைப்பிடித்த தலைமைத்துவ வழிகாட்டியாக வாழ்ந்த சம்பந்தன் ஐயாவின் மறைவென்பது, ஈழத்தமிழினத்தின் இரு தலைமுறை அரசியல் வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத இழப்பாகவும், அவரது அரசியல் தலைமையை ஏற்றிருந்த எங்களுக்கு இனியொருபோதும் நிரப்பவே முடியாத அரசியல் வழிகாட்டியின் இழப்பாகவுமே நிகழ்ந்திருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் மறைவுகுறித்த அனுதாபப் பிரேரணை மீது உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவரது உரையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை பாராளுமன்றத்தின் மேனாள் உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான அமரர்.இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் காலமாகி ஒருவருடம் நிரம்பியுள்ள சூழலிலும், அவரது மறைவினால் தமிழ்த்தேசிய அரசியற் தளத்தில் ஏற்பட்ட இடைவெளியை உணர்ந்த ஒருவனாக, இந்தச் சபையில் அவரின் மறைவுக்கான ஆழ்ந்த துக்கத்தையும் மரியாதையுடனான இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன். தமிழ் மக்களின் நீண்டகால இன விடுதலைப் பயணத்தில், அறம், அரசியல் நுண்ணறிவு, அனுபவம் என்பவற்றின் முழுமையான ஆளுமை வடிவமாகத் திகழ்ந்த சம்பந்தன் ஐயா அவர்கள், 1933 பெப்ரவரி 5ஆம் திகதி தமிழர்களின் தலைநகரான திருகோணமலையில் பிறந்து, தமது கல்வியை திருகோணமலையிலுள்ள புனித வளனார் தமிழ் பாடசாலையில் ஆரம்பித்து, யாழ்ப்பாணம் புனித பற்றிக்ஸ் கல்லூரி, குருநாகல் புனித ஆன்ஸ் கல்லூரி, மொறட்டுவை புனித செபஸ்தியன் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் பயின்று, கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டக் கற்கையைப் பூர்த்திசெய்து, தனது தொழில்முறை வாழ்க்கையை சட்டவாளராக ஆரம்பித்த போதும், 23 வயது நிரம்பிய 1956 ஆம் ஆண்டிலேயே தமிழரசுக் கட்சியின் உறுப்பினராக இணைந்து, தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்திருந்தார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் இணைப் பொருளாளர், உப தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளையும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் பதவியையும் அலங்கரித்ததோடன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும், 2015 முதல் 2018 வரையான காலத்தில் இலங்கை பாராளுமன்றத்தின் 14 ஆவது எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்து, தமிழின விடுதலைப் போரியல் காலகட்டத்திலும், தமிழர்கள் அரசியல் வெறுமைக்குள் தள்ளப்பட்ட 2010 முதல் 2024 வரையான கடந்த 14 ஆண்டுகளிலும் சம்பந்தர் என்கின்ற அரசியல் பேராளுமை ஆற்றிய செயல்களின் கனதி மிகப் பெறுமதியானது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினராக இணைந்து முழுமையாக இருபத்தொரு ஆண்டுகளின் பின்னர், 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் திருகோணமலைத் தொகுதியின் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டதன் மூலம், தனது நேரடி அரசியற் பிரதிநிதித்துவத்தை ஐயா ஆரம்பித்திருந்தார். இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம், தனிநாடு கோருவதற்கு ஆதரவளிக்க முடியாது என பாராளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுக்க மறுத்தமைக்காகவும், 1983இன் இதே ஜுலை மாதத்தில், மூவாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் சிங்களக் காடையர்களால் படுகொலை செய்யப்பட்டதற்கும், அவர்களது உடைமைகள் சேதமாக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மூன்று மாதங்கள் தொடர்ந்து பாராளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றாமல் புறக்கணித்ததால் பதவியிழந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவராக, சம்பந்தன் அவர்களும் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை 1983 செப்டம்பர் 7 இல் இழந்தார். அதன்பிற்பாடு, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரர்.அருணாசலம் தங்கத்துரை அவர்களது மறைவின் பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்தின் அடிப்படையில், 1997 இல் மீளவும் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட சம்பந்தன் அவர்கள், 2001.10.20ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக பதவியேற்ற அதே காலப்பகுதியில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற்றிருந்தார். அதன் தொடர்ச்சியாக 2004, 2010, 2015 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அத்தனை பாராளுமன்றப் பொதுத் தேர்தல்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட அவரை திருகோணமலை மாவட்ட மக்கள் தமது பிரதிநிதியாக தேர்ந்தெடுத்தனர். ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்பதற்கு அப்பால் தமிழினத்தின் அரசியற்தலைவராக அவரது பிரதிநிதித்துவம் மிகப்பெரியது. இலங்கையின் முன்னாள் அரசுத் தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன காலத்தில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக 1984இல் நடைபெற்ற முதலாவது வட்டமேசை மாநாட்டிலும், 1985இல் நடைபெற்ற திம்புப் பேச்சுவார்த்தையிலும் தமிழர் பிரதிநிதியாக கலந்து கொண்டமை, ஈழத்தமிழர்களின் நிரந்தர அரசியல் தீர்வு குறித்து இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையாருடன் பல்வேறு சந்திப்புகளில் ஈடுபட்டமை, பாரதத்தின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுடனான பேச்சுவார்த்தைகளின் போது தமிழர் தரப்பு பிரதிநிதிகளில் ஒருவராக பங்கேற்றமை, இந்திய மற்றும் சர்வதேச இராஜதந்திரிகள் பலருடன் சந்திப்புகளிலும் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டமை, 13 ஆவது திருத்தச் சட்டத்தின் குறைபாடுகள் தொடர்பிலும், மாகாண சபைகளுக்கான அதிகாரங்களின் பலவீனங்கள் குறித்தும் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களை வரைவதில் முக்கிய பங்காற்றியமை உள்ளிட்ட விடயங்கள் அவரது அரசியல் வாழ்வின் மிக முக்கிய செயற்பாடுகள் எனலாம். இலங்கை இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில் உருவாக்கப்பட்ட 'பிராந்தியங்களின் ஒன்றியம்' என்ற தீர்வுத் திட்ட வரைவினை வடிவமைப்பதில் அமரர் நீலன் திருச்செல்வம் அவர்களுடன் சம்பந்தன் ஐயாவின் பங்கும் இருந்திருக்கிறது. இவற்றுக்கு மேலாக 2010 - 2015வரையான காலத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து இலங்கையின் அரச தரப்புகளோடு நடைபெற்ற 14 பேச்சுவார்த்தைகளையும், மைத்திரிபால - ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்காலமான 2015 - 2019வரையான காலத்தில் நடைபெற்ற அனைத்துப் பேச்சு வார்த்தைகளையும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒருங்கிணைவோடு திரு.சம்பந்தன் அவர்களே தலைமை தாங்கி நடத்தியிருக்கிறார். விடுதலைப் போராட்ட மௌனிப்பின் பின்னர் திக்குத் தெரியாதிருந்த ஈழத்தமிழர்களின் அரசியல் ஆபத்பாந்தவனாக காலத்தால் அடையாளப்படுத்தப்பட்ட சம்பந்தன் அவர்களின் தலைமைத்துவ முதிர்ச்சிதான், இதுவரை காலமும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டுப் பயணத்திற்கு அடித்தளமிட்டிருந்தது. அரசியல் வெறுமை சூழ்ந்த கடந்த 14 ஆண்டுகளை இராஜதந்திர ரீதியாக சரிவரக் கையாண்ட அரசியற் தலைவராகவும், அவரைப் பின்பற்றும் எங்களின் அரசியற் பயணத்திற்கான வழிவரைபடத்தை உருவாக்கித் தந்த ஒருவராகவும், சம்பந்தன் அவர்கள் சாணக்கியம் மிக்க அரசியற் தலைவராக தனது பயணத்தில் வெற்றிகண்டிருந்தார் என்பதே உண்மை. சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளால் மதிக்கப்பட்ட, ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வு குறித்தும் தமிழினப் படுகொலைக்கான நீதி விசாரணை குறித்தும் ஈழத்தமிழர்களின் பிரதிநிதியாக அணுகத்தக்க அரசியற் தலைவராகவும் சம்பந்தன் அவர்களே அடையாளம் பெற்றிருந்தார். அது அவரது அரசியல் அனுபவத்திற்கும், தலைமைத்துவ ஆளுமைக்கும், இனம்சார் அரசியலில் அவர் ஆற்றிய வகிபங்குக்கும் கிடைத்த அடையாளமே. எளிமையும், நேர்மையும், அறமும் சார்ந்த தூய அரசியற் செல்நெறியில், நெகிழ்வுகளினூடே கட்டிறுக்கத்தைக் கடைப்பிடித்த தலைமைத்துவ வழிகாட்டியாக வாழ்ந்த சம்பந்தன் ஐயாவின் மறைவென்பது, ஈழத்தமிழினத்தின் இரு தலைமுறை அரசியல் வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத இழப்பாகவும், அவரது அரசியல் தலைமையை ஏற்றிருந்த எங்களுக்கு இனியொருபோதும் நிரப்பவே முடியாத அரசியல் வழிகாட்டியின் இழப்பாகவுமே நிகழ்ந்திருக்கிறது. இருந்தபோதும் அவரது தடங்களைப் பின்பற்றும் ஒருவனாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இருப்பை உறுதிசெய்யவும், ஈழத்தமிழர்களது அரசியல் உரித்துக்கான தமிழ்த் தேசியப் பயணத்தில் எனக்கிருக்கும் தார்மீகப் பங்கை உறுதிசெய்யவும், இதயசுத்தியோடு பணியாற்றுவேன் என்ற உறுதியோடு ஐயாவின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்தித்து, அவரது குடும்பத்தினருக்கான அனுதாபங்களையும் பகிர்ந்து நிறைவுசெய்கிறேன்" என்றார். https://adaderanatamil.lk/news/cmdiptf1001n2qp4k3i340ksv

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.