Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் தன்னுடைய 102 ஆவது வயதில் காலமானார். 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டுவரை இவர் கேரளாவின் முதலமைச்சராக பதவி வகித்திருந்தார். https://thinakkural.lk/article/319195
  2. நஜீப் பின் கபூர் நெப்போலியன் ஒரு முறை தனது அதிகாரிகளிடத்தில் பேசும் போது “அரசியல் தலைவர்களாக இருந்தாலும் சரி தேசங்களாக இருந்தாலும் சரி பத்து வருடங்களுக்கு ஒரு முறையாவது நாம் கடந்து வந்த பாதை தொடர்பாக மதிப்பீடு செய்து அதற்கான சீர்திருத்தங்களை செய்து கொள்ள வேண்டும்” என்று சுட்டிக்காட்டி இருந்தார். இந்தக் கட்டுரையைத் தயாரிக்கின்ற போது அதனை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாக அமையும் என்று நாம் கருதுகின்றோம். ஐரோப்பா வரலாற்றில் நெப்போலியன் மறக்கமுடியாத ஒரு நாமம். நெப்போலியன் பொனபார்ட் 1769 – 1821 களில் வாழ்ந்து தனது 52 வது வயதில் இறந்தும் போனார். இந்த நெப்போலியன் கதை நமக்கு சில நூறு வருடங்களுக்கு முந்தியது ஒன்று. அந்தக் காலகட்டத்தில் – அப்போதைய உலக செயல்பாடுகளில் இன்றைய அளவு வளர்ச்சி வேகம் அன்று இருந்திருக்காது என்பது நாம் அனைவரும் அறிந்த தகவல்கள்தான். எனவே மின்னல் வேகத்தில் அல்லது ஒளிவேகத்தில் மாற்றங்கள் நடந்து வருகின்ற இந்தக் காலத்தில் தனிமனிதர்களும் சமூகங்களும் இந்த உலகில் வாழும் போது அதற்கேற்றவாறு தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்குத் தயாரில்லாத சமூகமும் தனிமனிதர்களும் கூட அனைத்துத் துறைகளிலும் பின்னுக்குத் தள்ளப்படுவது தவிர்க்கமுடியாத ஒன்று என்று நாம் நம்புகின்றோம். நாம் தலைப்புக்கு ஏற்று கருத்துக்களை பேசுவதாக இருந்தால் சிறுபான்மை சமூகங்களுக்கு சமகால அரசியலில் புதிய அணுகுமுறைகள் தேவை – காலத்தின் கட்டாயமாகும். அரசியல் பற்றி நேரடியாக விமர்சனங்கள் பண்ணும் போது அரசியல் கட்சிகள் அதன் தலைவர்களை சுட்டிக்காட்டாது கருத்துக்களை முன்வைப்பது என்பது முழுப்பூசணியை சோற்றில் மறைக்கின்ற ஒரு வேலை. நமது பதிவுகளில் இப்படியான கருத்துக்களை மறைத்து கதைகள் சொல்வதில்லை என்பது நமது வாசகர்களுக்குத் தெரியும். எனவே எமது சாதக – பாதக விமர்சனங்களையும் வாசகர்கள் ஜீரணித்துக் கொள்வார்கள் என்றும் நாம் நம்புகின்றோம். இந்த நாட்டில் வாழ்கின்ற சமூகங்கள் பற்றி அனைவருக்கும் தெரியும் என்றாலும் இன ரீதியில் சிங்களவர்கள், தமிழர், முஸ்லிம்கள், மலையகத்தார், ஏனையோர் என்று அது அமைகின்றது. மத ரீதியில் என்று வருகின்ற போது பௌத்தர்கள், இந்துக்கள், இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள், இதர என்று ஒரு மிகச்சிறிய குழுவும் இங்கு வாழ்ந்து வருகின்றனர். இதனால் இன ரீதியிலும் மத ரீதியிலும் இவர்களிடையே இணக்கப்பாடுகளும் முரண்பாடுகளும் இயல்பானவை. என்னதான் நாம் அனைவரும் இலங்கையர் என்று சொல்லிக் கொண்டாலும் இந்த வேறுபாடுகளை ஒவ்வொரு தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும். இங்கு மட்டுமல்ல உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் இதே நிலைதான். எனவே புரிந்துணர்வுகளும் விட்டுக் கொடுப்புகளும் சமூக ஒற்றுமைக்கு தேவை. வரலாறு தொட்டு மன்னராட்சி காலம், தென்னிந்தியப் படையெடுப்புக்கள், ஐரோப்பிய ஆக்கிரமிப்பு, அதற்குப் பின்னர் நாடு விடுதலை பெற்ற பின்னர் ஏறக்குறைய முப்பது வருடங்கள் நாட்டில் நடைபெற்ற ஆயுதப் போராட்டங்கள் இந்த நாட்டில் இன ரீதியான முரண்பாடுகளை உச்சத்துக்கு கொண்டு சென்றிருந்தன. அத்துடன் இன – மத ரீதியான செல்வாக்கும் சிறிதும் பெரிதுமாக நமது அரசியலில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தன. சுதந்திரத்துக்கு பின்னர் நாட்டில் அதிகாரத்துக்கு வந்த சில ஆட்சியாளர்கள் சிறுபான்மை சமூகங்கள் மீது தமது மேலாண்மையை செலுத்தி வந்தனர். இது ராஜபக்ஸ -கோட்டா அதிகாரத்தில் இருந்த போது உச்சம் தொட்டிருந்தது. அதே ஆணவம் அவர்களது வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்தது. ஜே.ஆர். காலத்தில் கொண்டுவரப்பட்ட விகிதாசார தேர்தல் முறை இன ரீதியான அரசியல் இயக்கங்களை, கட்சிகளை வலுப்படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக தெற்கில் இனவாதம் மேலோங்க இதுவும் ஒரு காரணமாக இருந்து வந்திருகின்றது. சிறுபான்மையினர் அரசியல் பற்றிப் பார்க்கும் முன்னர் பெரும்பான்மை சமூகத்தின் எதிர்பார்ப்புக்கள், விருப்பு வெறுப்புக்கள், அரசியல் செயல்பாடுகள் பற்றி முதலில் பார்ப்போம். இன்று இந்த நாட்டில் வாழ்கின்ற இயக்கர், நாகர்களைத் தவிர அனைவரும் வந்தேறு குடிகள். அதில் எல்லோருக்கும் ஒரு பொது உடன்பாடு இருக்கின்றது. ஆனால் இந்த நாட்டில் விஜயன் வருகை, அதற்குப் பின்னர் மஹிந்த தேரர் வரவு, மன்னன் தேவநம்பிய தீசன் பௌத்த மதத்தை பின்பற்றியது என்பன இந்த நாட்டில் புதியதோர் அரசியல் கலாசாரத்துக்கு பிரதான காரணங்களாக அமைந்தன என்பது எமது கருத்து. அதன் பின்னர் மன்னராட்சி, நாம் முன்சொன்ன இந்தியப் படையெடுப்புக்கள், ஐரோப்பியர் ஆக்கிரமிப்பு, நாடு சுதந்திரம் என்ற அனைத்துக் காலப்பகுதிகளிலும் நாட்டில் சுதேச அரசியல் இயக்கங்களின் செல்வாக்கு மேலோங்கி வந்தது. இதில் இன – மத உணர்வுகளும் கலந்திருந்தன. இதன் பின்னணியில்தான் நாட்டில் இனக்கலவரங்களும் முறுகல் நிலைகளும் அந்தக் காலப்பகுதிகளிலும் அவ்வப்போது இருந்து வந்திருந்தன என்பதை நாம் அவதானிக்க முடிகின்றது. நமது பண்டைய வரலாற்றுச் சுருக்கம் அப்படி இருக்க, சுதந்திரத்துக்குப் பின்னரான காலப்பகுதியை ஆராய்கின்ற போது நாட்டில் அதிகாரத்தில் இருந்த அரசியல் கட்சிகளைப் பார்க்கின்ற போது ஐக்கிய தேசியக் கட்சியும் (1946) சுதந்திரக் கட்சியுமே (1951) மாறிமாறி ஏறக்குறைய 2020 வரையிலும் அதிகாரத்தில் இருந்து வந்திருக்கின்றன. சமசமாஜ கட்சி (1935), இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (1943) என்பன துவக்கத்தில் செல்வாக்குடன் இருந்தாலும் பின்னர் பலயீனமடைந்தன. இன்று அவை கட்சிப் பொருட்கள் போல ஆகிவிட்டன. ஒருமுறை சமசமாஜக் கட்சியின் என்.எம் பெரேரா கொழும்பு மேயராக பதவியில் இருந்திருக்கின்றார். கூட்டணிகள் அமைத்து மேற்படி இடதுசாரிகள் செல்வாக்கான அமைச்சுகளை வகித்திருக்கின்றார்கள். அதேநேரம் வடக்கில் சில தமிழ் அரசியல் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. அவை இன்று முன்பு போல செல்வாக்குடன் இன்று இல்லை. 1981 கள் வரைக்கும் இந்த நாட்டில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் தோற்றம் பெற்றிருக்கவில்லை. என்றாலும் அவர்களின் பல சிவில் இயக்கங்கள் பெரும்பாலும் கொழும்பை மையப்படுத்தி செயல்பட்டு வந்திருக்கின்றன. உதாரணமாக பதியுதீன் மஹ்மூத் அவர்களின் இஸ்லாமிய சோஸலிச முன்னணி டாக்டர் கலீல் போன்றவர்களின் முஸ்லிம் லீக்கை கூறலாம். ஆனால் அவை நாட்டில் அதிகாரத்தில் இருக்கின்ற பிரதான கட்சிகளுக்கு துணைபோகின்ற இயக்கங்களாக செயல்பட்டு வந்திருக்கின்றன. ஜே.ஆர். ஜெயவர்தன செயல்பாடுகள் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவு ஏற்படுத்திக் கொண்டமை, முஸ்லிம்களை மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒட்டுண்ணிகள் என்று செடிகொடி என்று பேசி அவர்களைப் பண்படுத்தி வந்தமை. இதனால், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் (1981) அந்த சமூகத்தில் செல்வாக்குடன் மக்கள் மத்தியில் அங்கீகாரம் பெற ஜே.ஆர். துணைபுரிந்திருக்கின்றார். மு.கா. தலைவர் அஸ்ரபுக்குப் பின்னர் இன்று வடக்கிலும் கிழக்கிலும் பிரதேசவாத உணர்வுடைய கட்சிகள் பிறந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது தனிப்பட்ட நபர்களின் அரசியல் இருப்பை மையமாகக் கொண்ட இயக்கங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். எனவே அவற்றை தேசிய அளவில் முஸ்லிம்களின் நலன்களை மையமாக வைத்து செயல்படுகின்ற அரசியல் இயக்கங்கள் என்று சொல்ல முடியாது. பிரதான அரசியல் கட்சிகளுக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள், வெட்டுக் கொத்துக்கள் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த பண்டாரநாயக்க புதுக் கட்சி துவங்கி பெரும்பான்மை மக்களின் அங்கீகாரத்தைப் பெற்று அண்மைக்காலம் வரை நமது அரசியலில் செல்வாக்குடன் செயல்பட்டு வந்தது. சந்திரிக்காவுக்குப் பின்னர் குறிப்பாக மைத்திரி காலத்தில் சுதந்திரக் கட்சி பல கூறுகளாக பிளந்து நிற்கின்றது. அதிலிருந்து மஹிந்த தலைமையிலன மொட்டுக் கட்சி உருவாகியது. சஜித் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியும் பிற்பட்ட காலப்பகுதிகளில் செல்வாக்கான அரசியல் கட்சிகளாக வளர்ந்திருக்கின்றன. ஆனால் குறுகிய காலத்திற்குள்ளேயே மஹிந்த தலைமையிலான மொட்டு வாடிப்போயிருப்பதை நமது அரசியல் களத்தில் பார்க்க முடிகின்றது. அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களை சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தன்பக்கம் இழுத்துக் கொண்டது. இதற்கு ரணிலுக்கும் சஜித்துக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுதான் காரணமாக அமைந்தது. இதுவரை நாட்டில் மிகப் பெரும் அரசியல் கட்சியாக இருந்த ஐ.தே.க. தலைமையிலான ரணிலின் கட்சி ஆதரவாளர்களினால் நிராகரிக்கப்பட்டது. இன்று ரணில் அரசியலில் மிகவும் பலயீனமான மனிதராக இருந்தாலும் களத்தில் தனது ஆட்டத்தை அவர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மலையக அரசியலை எடுத்துக் கொண்டால் சுதந்திரத்துக்குப் பின்னர் மிகவும் செல்வாக்கான அரசியல் கட்சிகளை வைத்திருந்தவர்கள் என்று பார்க்கும் போது, சௌமியமூர்த்தி தொண்டமான், (1939) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஏ.அசிஸ் (இலங்கை இந்திய காங்கிரஸ் 1939) போன்றவர்களின் அரசியல் கட்சிகளைக் குறிப்பிட முடியும். இன்று மலையகத்தில் மலைக்கு மலை தோட்டத்துக்குத் தோட்டம் கட்சிகள் என்று அரசியல் இயக்கங்கள் முளைத்திருப்பதைப் பார்க்க முடியும். இப்போது சர்வதேசத்தையும் இந்தியாவையும் தொடர்ந்தும் நம்பி இருப்பதில் எந்தப் பயன்களும் இல்லை என்ற நமது வாதத்துக்குள் நுழைவோம். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1944ல் ஆரம்பிக்கப்பட்டது. அதன் மூலம் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை ஜீ.ஜீ. பென்னம்பலம் முன்வைத்தார். பின்னர் 1949 ல் தந்தை செல்வா தலைமையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆரம்பமானது. இவை இரண்டும் ஏதோ வகையில் வடக்கு, கிழக்கில் இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் வரையிலான காலப்பகுதி தமிழரசுக் கட்சி வீரியத்துடன் செயல்பட்டு வந்திருக்கின்றன. அதேபோல ஜீ.ஜீ. பொன்னம்பலம் துவங்கிய தமிழ் காங்கிரஸ் இன்று ஒரு பிராந்தியக் கட்சி என்ற அளவுக்கு போய் நிற்கின்றது. அத்துடன் விக்னேஸ்வரன் ஒரு கட்சி வைத்திருக்கின்றார். பார் அனுமதிப்பத்திரத்துடன் அவர் மீது இருந்த இமேஜ் கெட்டுப்போய் நிற்கின்றது. டக்ளஸ் மற்றும் முன்னாள் போராளிகள் குழுக்களின் பேரில் பல அரசியல் கட்சிகள் வடக்கு கிழக்கில் செயல்பட்டு வருகின்றன. கிழக்கிலும் அம்மான் மற்றும் பிள்ளையானின் அரசியல் செய்பாடுகளும் காணப்படுகின்றன. அதேநேரம் அனுரவுடன் சேர்ந்து அனைவருக்கும் விமோசனம் என்ற கருத்தும் இப்போது அங்கு பலமாக இருந்து வருகின்றது. இதுபோல தமது இருப்புக்கான ஒரு அரசியல் செயல்பாடுகள்தான் பொதுவாக இப்போது வடக்கு, கிழக்கில் காணப்படுகின்றன. எனவே, வடக்கு, கிழக்கில் செயல்படுகின்ற அரசியல் இயக்கங்கள் இன்று அவற்றின் தனிப்பட்ட இருப்புக்காகத்தான் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். எனவே இவர்கள் ஒருபோதும் தமிழர்களுக்கு விமோசனங்களைப் பெற்றுத் தரப்போவதில்லை என்பதனை வடக்கு, கிழக்கு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்கள் நலன்களைவிட இவர்கள் தமது அரசியல் இருப்புக்குத்தான் முன்னுரிமை கொடுத்து போராடி வருகின்றார்கள். அத்துடன் இன்று தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற இலங்கை தமிழரசுக் கட்சி சம்பந்தன் காலத்தில் பதவியில் இருக்கின்ற அரசுக்கு விசுவாசமான ஒரு முகவர் அணியாகத்தான் இயங்கி வந்திருக்கின்றது. அதனால்தான் ஆட்சியாளர்களை நம்பி இவர்கள் தமிழர்களின் அரசியல் விமோசனம் பற்றி அவ்வப்போது இன்று – நாளை எனக் காலகெடுக்களை கொடுத்து தமிழ் மக்களை ஏமாற்றி வந்திருக்கின்றனர். இதில் சுமந்திரன் பங்கு அளப்பரியது என்பதுதான் நமது கணிப்பு. இன்று உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்குப் பின்னர் தமது கட்சி மீண்டும் மக்கள் மனதை வென்றுவிட்டதாக இவர்கள் கதை விட்டாலும் மாகாண சபைத் தேர்தல் வருமாக இருந்தால் யதார்த்தத்தை நமக்கு புரிந்து கொள்ள முடியும். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வரும் ஒரு இயல்புநிலை தான் இது என்பதும் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். விடுதலைப் போராட்ட காலத்தில் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, முழு நாட்டுக்கும் கடும் சேதாரங்கள் நிகழ்ந்தாலும் விடுதலைப் புலிகள் மற்றும் அதன் அரசியல் தலைமையை தமிழ் மக்கள் வரலாற்றில் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். பல தசாப்தங்கள் பிரபாகரன் தலைமையில் அங்கு ஒரு அரசு இயங்கி வந்திருப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். தெற்கில் பிரபாகரன் பயங்கரவாதி என்றாலும் வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல, தமிழ் உலகத்தில் அப்படி ஒரு நிலை இல்லை. என்னதான் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இந்த என்.பி.பி. அரசு அதிகாரத்தில் இருந்தாலும் அதற்கு எதிரான விமர்சனங்கள் இருப்பது போலதான் பிரபாகரன் பற்றிய மதிப்பீடும். ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், மாகாணசபைத் தேர்தல் என்று வந்து அதில் தமிழர் பிரதிநிதித்துவம் என்பதனை விட தமிழ் மக்களுக்கு அடிப்படைத் தேவை ஒரு அரசியல் தீர்வு. இது விடயத்தில் மேற்சொன்ன தேர்தல்களோ அதில் தமிழர்களுக்கு வரும் பிரதிநிதித்துவமோ சமூகத்தின் விமோசனத்துக்கு காரணிகளாக அமையப்போவதில்லை. அதேநேரம், சர்வதேசமும் இந்தியாவும் ஈழத்தமிழர்களை இன்று கைவிட்டு விட்டது. இதற்குக் காரணம் வடக்கு, கிழக்கில் அரசியல் செயல்பாடுகள் – போராட்டங்கள் பலயீனப்பட்டதே காரணம். இப்போது செம்மணி விவகாரம் பேசு பொருளாக இருந்தாலும் அது பற்றி ஒட்டுமொத்த தமிழர்கள் மத்தியில் ஒன்றுபட்ட கருத்து இல்லை. இப்போது இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் தேர்தல் பற்றி பெரிதாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எங்காவது ஒரு இடத்தில் ஈழத்தமிழர் விவகாரம் ஒரு பேசுபொருளாக அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கின்றார்களா என்பதை சிந்தித்துப் பாருங்கள். சர்வதேசமும் இப்போது ஈழத்தமிழர் விவகாரத்தை ஒரு தலைப்பாக எடுத்துக் கொள்வதே கிடையாது. அது கிடப்பில் போடப்பட்ட கோவைகளாகத்தான் இருந்து வருகின்றன. எனவே நாம் முகவுரையில் சொல்லி இருப்பது போல நெப்போலியன் உபதேசத்தை கட்டாயமாக இன்று ஈழத் தமிழர்கள் பரிசீலித்துப் பார்க்க வேண்டும். எனவே, வடக்கு, கிழக்கில் இன்று இயங்கி வருகின்ற அரசியல் கட்சிகளும் அவற்றின் மக்கள் பிரதிநிதிகளும் தமிழர் விமோசனங்களைப் பெற்றுத்தர முடியாது நிலையிலேயே இருக்கிறார்கள். அவர்கள் செல்லாக் காசுகள் என்பதனைப் புரிந்து புதிய வியூகங்களுடன் ஒரு பலமான அரசியல் இயக்கம் தமிழர்களுக்கு தேவை. முஸ்லிம் மற்றும் மலையக தனித்துவ அரசியல் இயக்கங்களின் நிலையும் இதுதான். இவர்கள் சமூகத்தை விற்று தன்னல அரசியல் செய்கின்றார்கள் என்ற ஒரு வலுவான குற்றச்சாட்டும் அந்த சமூகங்களின் மத்தியில் நிலவி வருகின்றன. https://thinakkural.lk/article/319267
  3. இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கியுள்ள டெய்ர் அல் பலா - தரை வழிதாக்குதலை ஆரம்பித்தது இஸ்ரேல் Published By: RAJEEBAN 21 JUL, 2025 | 04:12 PM தென்காசாவிலிருந்து இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கியுள்ள மத்திய காசாவில் உள்ள டெய்ர் அல் பலா நகரத்தின் மீது இஸ்ரேலிய இராணுவம் தரை மற்றும் வான்தாக்குதலை ஆரம்பித்துள்ளது. ஹமாசினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்கள் இந்த நகரத்திலேயே உள்ளனர் என ஊகம் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. கடும் ஆட்டிலறி மற்றும் வான்தாக்குதலின் மத்தியில் இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் இராணுவ வாகனங்கள் இந்த நகரத்தை நோக்கி செல்வதாக உள்ளுர் ஊடகவியலாளர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். டெய்ர் அல் பலா நகரின் மீது இஸ்ரேலிய படையினர் மேற்கொண்டுள்ள முதலாவது தரை நடவடிக்கை இது. கடந்த 21 மாதங்களாக இந்த நகரத்தை இலக்குவைத்து இஸ்ரேல் தரைநடவடிக்கை எதனையும் மேற்கொள்ளாதமை குறிப்பிடத்தக்கது. இந்த நகரத்தில் ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ளனர். மேலும் காசாவின் ஏனைய பகுதிகளை விட இந்த நகரத்தில் கட்டிடங்களிற்கு குறைவான சேதங்களே ஏற்பட்டுள்ளன.. இந்த நகரில் மருத்துவமனைகள் இயங்குகின்றன. ஒருவருடத்திற்கு முன்னர் காசா பள்ளத்தாக்கின் தென்பகுதிக்குள் இஸ்ரேலிய படையினர் நுழைந்த பின்னர் ஐநாவினது அலுவலங்களும் ஏனைய மனிதாபிமான அமைப்புகளின் அலுவலகங்களும் டெய்ர் அல் பலா நகரத்திலேயே இயங்குகின்றன. https://www.virakesari.lk/article/220550
  4. '15 ஆண்டுகள்; 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கொலை...' - கர்நாடகா தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் வழக்கு 22 JUL, 2025 | 10:24 AM கர்நாடகா தர்மஸ்தலா கோயிலில் சிறுமிகள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக, முன்னாள் ஊழியர் கொடுத்த வாக்குமூலமும், புதைக்கப்பட்ட உடல்கள் குறித்த புகாரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. "2003-ம் ஆண்டு, எனது மகள் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலில் காணாமல் போனார். அக்கம் பக்கத்தில் விசாரித்ததில், என்னுடைய மகள் அடையாளம் கொண்ட பெண்ணை கோயில் ஊழியர்கள் தூக்கி சென்றதாக கூறினார்கள்.இதை கோயில் நிர்வாகத்திடம் கேட்டப்போது, என்னை மிரட்டி, அடித்தனர். அதனால், நான் கோமாவிற்கு சென்றேன்.இந்தப் பயத்தில் தான், இவ்வளவு காலம் இது குறித்து வெளியே சொல்லவில்லை'. இப்படி கடந்த 15-ம் தேதி, தட்சின கன்னடாவின் காவல் கண்காணிப்பாளரிடம் பெண் ஒருவர் புகார் அளித்தார். என்ன நடந்தது? கர்நாடகா மாநிலம் தட்சின கன்னடாவில் உள்ளது தர்மஸ்தலா. இங்கே மஞ்சுநாதர் கோயில் உள்ளது. இது மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். அரசியல்வாதிகள், பிரபலங்கள் என பலரும் வந்து செல்லும் கோயில் இது. கடந்த ஜூலை 11-ம் தேதி, இந்தக் கோயிலின் முன்னாள் தூய்மை பணியாளர் ஒருவர், "1995-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரை, பல பெண்கள் மற்றும் மாணவிகளின் உடல்களை அடக்கம் செய்ய சொல்லி என்னை கோயில் நிர்வாகத்தினர் கட்டாயப்படுத்தினார்கள். இதை நான் செய்யவில்லை என்றால் என்னை கொன்றுவிடுவதாக மிரட்டினார்கள். பல பெண்களை பள்ளி சீருடையிலேயே புதைத்து இருக்கிறேன். பெண்களின் உடலில் பாலியல் வன்முறைக்கான காயங்களும், சில நேரம் ஆசிட் தழும்புகளும் காணப்படும்" என்று பெல்தங்கடி நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இவர் ஜூன் மாதமே இது குறித்து புகார் அளித்துள்ளார். கோரிக்கைஅந்த இடத்தை தோண்டி பார்க்க வேண்டும் என்கிற கோரிக்கையும் நீதிமன்றத்தின் முன் வைத்துள்ளார். மேலும், இவர் எலும்புகூடுகளின் புகைப்படங்களையும் சமர்பித்துள்ளார். இவர் நீதிமன்றத்தில் ஆஜராகும் போதும் கூட, சில எலும்புகளை கொண்டு வந்திருக்கிறார். ஆரம்பத்தில் இவர், அந்த உடல்கள் தற்கொலை செய்துகொண்டவர்களுடையது என்று நினைத்துள்ளார். அதன் பின் தான், தர்மஸ்தலாவை சுற்றி நடக்கும் குற்றங்களை மறைக்க கொலை செய்யப்பட்ட உடல்கள் என்று அறிந்திருக்கிறார். இதே நிலை, அவர் சொந்தகாரர்களுக்கே நடந்த நிலையில், 2014-ம் ஆண்டு அந்தப் பணியில் இருந்து நின்றிருக்கிறார். இவர் இந்த வாக்குமூலத்தைக் கொடுக்கவே, மேலே கூறிய பெண்மணி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். சிறப்பு புலனாய்வு குழு இதனையடுத்து, கர்நாடகா பெண்கள் அமைப்பு, கர்நாடக அமைச்சர் சித்தராமையா இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. கர்நாடகாவின் சுகாதார துறை அமைச்சர், 'இந்த சம்பவம் குறித்து அரசு விசாரணை நடத்தும்' என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து தட்சின கன்னடா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண், "புகார் அளித்த மஞ்சுநாதர் கோயிலின் முன்னாள் ஊழியர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. அவர் சொல்லும் இடத்தில் குழி தோண்டி உடல்களை எடுப்பதற்கான பணிகள் நடைபெற உள்ளது. இது சாதாரண விஷயம் இல்லை. அதற்கு சில சட்ட நடைமுறைகள் தேவை. அதற்காக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/220598
  5. 22 JUL, 2025 | 12:32 PM கறுப்பு ஜூலை வன்செயல்களுக்குப் பிறகு 42 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், ஆயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்வைச் சிதறடித்த அந்த வன்செயல்களின் நிழலிலேயே தொடர்ந்தும் இலங்கை வாழ்ந்துகொண்டிருக்கிறது. வீடுகள் எரிக்கப்பட்டன, வாழ்வாதாரங்கள் நிர்மூலம் செய்யப்பட்டன, அப்பாவி உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. தலைநகர் கொழும்பில் தொடங்கி நாடுபூராவும் அந்த கலவரங்களும் வன்செயல்களும் பரவின. நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்தார்கள். ஆனால், அந்தக் கொடிய வன்செயல்களுக்காக இன்னமும் பொறுப்புக் கூறப்படவில்லை. உத்தியோகபூர்வ நீதி கிடைக்கவில்லை. மீண்டும் அத்தகைய வன்செயல்கள் மூளாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தேசிய சமாதானப் பேரவை கறுப்பு ஜூலையில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தவும் மாத்திரமல்ல, முதலில் கடந்த காலத்துக்கு முகங்கொடுத்து பிரச்சினைக்கான காரணிகளை கையாளக்கூடிய அரசியல் தீர்வொன்றைக் காணாவிட்டால், நிலைபேறான நல்லிணக்கத்தை ஒருபோதும் காணமுடியாது என்பதை வலியுறுத்திக் கூறுவதற்காகவும் கறுப்பு ஜூலையின் வருடாந்தத்தை நினைவுகூருகிறது. 1983 ஜூலை நிகழ்வுகள் ஒன்றும் தன்னியல்பானவை அல்ல. வன்முறையாக மாறிய நீண்டகாலமாக புரையோடிப்போன இனநெருக்கடியின் விளைவானதே அது. வடக்கில் வளர்ந்துகொண்டிருந்த தமிழ்த் தீவிரவாதத்தின் பின்னணியில், 13 படைவீரர்களை பலியெடுத்த விடுதலைப் புலிகளின் தாக்குதல் ஒன்றைத் தொடர்ந்தே தெற்கில் கலவரங்கள் மூண்டன. அரசியல் சூழ்ச்சி, அரசின் செயலின்மை மற்றும் தண்டனையின்மைக் கலாசாரம் (Culture of impunity) ஆகியவற்றின் விளைவானதே தெற்கின் வன்முறை எதிர்வினை. இந்த உண்மையை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளும் வரை, குணப்படுத்தலை தொடங்க முடியாது. 1983 கறுப்பு ஜூலை வன்செயல்களுக்கு யார் பொறுப்பு, எத்தனை பேர் இறந்தார்கள், ஏன் அரசு தவறியது என்ற பதிலளிக்கப்படாத கேள்விகள் நாட்டை தொடர்ந்தும் தொந்தரவு செய்து கொண்டிருக்கின்றன. 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள், 1995ஆம் ஆண்டில் இருந்து செம்மணியில் கண்டுபிடிக்கப்படும் மனிதப் பதைகுழிகள் மற்றும் நீதி தாமதிக்கப்பட்ட, மறுக்கப்பட்ட அல்லது புதைக்கப்பட்ட ஏனைய பல சம்பவங்கள் உட்பட அண்மைய தேசிய அனர்த்தங்கள் பலவற்றில் இந்த தீர்வு காணப்படாத உண்மைகள் எதிரொலிக்கின்றன. காலம் கடந்து சென்றுகொண்டிருக்கும் நிலையில், 1983 ஜூலையில் நடந்தவற்றை தெரிந்து வைத்திருப்போர் மிகச் சிலராகவே இருப்பர். ஆனால், கடந்த காலத்தை நாம் தெரிந்துகொள்ளாவிட்டால், பிரச்சினையின் மூலவேர்க் காரணிகளை கையாளக்கூடிய சமாதான எதிர்காலம் ஒன்றுக்கான பயனுறுதியுடைய அத்திவாரத்தை போடமுடியாது. இத்தகைய பின்புலத்தில், அரசாங்கத்தின் உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு 1983 ஜூலை நிகழ்வுகளை முழுமையாக ஆராயவேண்டிய தேவையையும் அதன் ஆணையில் உள்ளடக்கவேண்டியது அவசியமாகும். நீதி மற்றும் பரஸ்பர மதிப்பின் மீது கட்டியெழுப்பப்பட்ட ஒரு நாட்டை எதிர்காலச் சந்ததி பொறுப்பேற்க வேண்டுமானால், நடந்தவை பற்றிய உண்மையையும் அதற்கான காரணங்களையும் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். தீர்வு காணப்படாமல் இருக்கும் இனநெருக்கடியின் விளைவாக உயிரிழந்த சகலரையும் முழு நாடும் நினைவுகூருவதற்கும் அத்தகைய வன்முறைகள் மீண்டும் ஒருபோதும் நிகழாதிருப்பதற்கு உறுதிபூணுவதற்குமான ஒரு தினமாக ஜூலை 23 பிரகடனம் செய்யப்பட வேண்டும் என்று தேசிய சமாதானப் பேரவை யோசனை முன்வைக்கிறது. இனம், மதம், சாதி மற்றும் வர்க்க வேறுபாடுகளுக்கு அப்பால் சகல சமூகங்களையும் அரவணைத்துப் பாதுகாக்கக்கூடிய அதிகாரப் பரவலாக்கம், அதிகாரப்பகிர்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட நீதியான அரசியல் முறைமை ஒன்றின் ஊடாக சுபீட்சமும் அபிவிருத்தியும் நிறைந்த நாடொன்றை கட்டியெழுப்புவதில் இன்றைய தலைமுறையினரிடமும் அரசாங்கத் தலைமைத்துவத்திடமும் இருக்க பற்றுறுதிக்கான ஒரு குறிகாட்டியாக அந்த யோசனை அமையும். https://www.virakesari.lk/article/220610
  6. நான்கு இந்திய மீனவர்கள் கைது Published By: DIGITAL DESK 3 22 JUL, 2025 | 11:41 AM இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களே மீன்பிடிப்படகு ஒன்றுடன் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில், குறித்த படகையும் அதிலிருந்த நான்கு மீனவர்களையும் கைது செய்து மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். இந்நிலையில், ஆரம்பகட்ட விசாரணையை முடித்துக் கொண்டு மீனவர்கள் நான்கு பேரையும் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை கடற்படையின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். இதேவேளை, இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை இராமேஸ்வரத்தை சேர்ந்த 25 மீன்பிடிப்படகுகளும் 185 மீனவர்களும் இலங்கை கடற்படையால் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/220605
  7. திருவனந்தபுரத்தில் 5 வாரமாக சிக்கியிருந்த பிரிட்டனின் அதிநவீன போர் விமானம் புறப்பட்டது - என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோப்புப் படம் கட்டுரை தகவல் கீதா பாண்டே, அஷ்ரஃப் படன்னா பிபிசி செய்திகள் திருவனந்தபுரம், கேரளா 21 ஜூலை 2025 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஐந்து வாரங்களுக்கும் மேலாக நிற்கும் பிரிட்டனின் அதிநவீன போர் விமானம் இன்று புறப்பட்டுச் சென்றது. கடந்த ஜூன் 14-ஆம் தேதி, இந்தியப் பெருங்கடலின் மீது பறந்து கொண்டிருந்த போது மோசமான வானிலை காரணமாக, கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் F-35பி விமானம் தரையிறக்கப்பட்டது. பின்னர், அதில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இந்தியாவில் இவ்வளவு நீண்ட காலம் இந்த விமானம் தங்கியிருந்தது மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியது. இவ்வளவு நவீன விமானம் எப்படி ஒரு வெளிநாட்டில் இவ்வளவு நாட்கள் சிக்கியிருக்க முடியும் என்ற கேள்விகளையும் எழுப்பியது. பட மூலாதாரம்,PTI படக்குறிப்பு, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் உள்ள பராமரிப்பு மற்றும் பழுது சரிசெய்யும் மையத்திற்கு, ஜெட் விமானம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. எச்.எம்.எஸ். (HMS) பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் போர்க்கப்பலைச் சேர்ந்த F-35பி விமானம் திரும்ப முடியாமல் போனதால், ராயல் கடற்படையின் பொறியாளர்கள் அதைச் சரிசெய்ய வந்தனர். ஆனால், அவர்களால் விமானத்தைப் பழுதுபார்க்க முடியவில்லை. இரண்டு வாரங்களுக்கு முன், பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் 14 பொறியாளர்கள் கொண்ட குழுவை, "திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு F-35பி விமானத்தை ஆய்வு செய்து பழுதுபார்க்க" அனுப்பியதாகத் தெரிவித்தது. அந்தக் குழு, விமானத்தின் இயக்கம் மற்றும் பழுது பார்க்கும் செயல்முறைக்குத் தேவையான சிறப்பு உபகரணங்களுடன் வந்ததாக ஓர் அறிக்கை தெரிவிக்கிறது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்களில், F-35பி விமானம் இழுத்துச் செல்லப்படுவது தெரிந்தது. தொழில்நுட்ப வல்லுநர்களால் விமானத்தை சரிசெய்ய முடியாவிட்டால், அதைப் பிரித்து சி-17 குளோப்மாஸ்டர் போன்ற பெரிய சரக்கு விமானத்தில் எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும் என்பது போன்ற ஊகங்கள் இருந்தன. கடந்த இரண்டு வாரங்களாக, இந்தியாவில் உள்ள பிரிட்டன் தூதரகமும் பாதுகாப்பு அதிகாரிகளும் பழுதுபார்ப்பு விவரங்களைப் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என்று பிபிசியிடம் தெரிவித்தனர். ஆனால் திங்களன்று, "விமானம் பறக்கத் தகுதியாகி விட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது" என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறினார். செவ்வாய்க் கிழமை புறப்பட்டுச் சென்றுள்ள அந்த விமானத்திற்கு, லண்டனுக்கு செல்லும் வழியில் எந்த விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பப்படும்" என்பது இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவைச் சேர்ந்த லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் எஃப்-35பி போர் விமானங்கள் மிகவும் நவீன ஸ்டெல்த் (எதிரி ரேடார்களுக்கு எளிதில் புலப்படாத) போர் விமானங்களாகும். குறுகிய தூரத்தில் மேலெழும்பிப் பறக்கும் திறன் மற்றும் செங்குத்தாகத் தரையிறங்கும் இவற்றின் ஆற்றல் மிகவும் பாராட்டப்படுகிறது. திருவனந்தபுரம் விமான நிலைய ஓடுதளத்தில் தனியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த "எஃப் -35பி" விமானம் கேரளாவின் பருவமழையில் நனையும் காட்சிகள் சமூக வலைதளங்களில் நகைச்சுவைகளும், மீம்ஸ்களும் உருவாகக் காரணமாக அமைந்தன. "கடவுளின் சொந்த நாடு" என்று வர்ணிக்கப்படும் கேரளாவின் இயற்கை அழகை விட்டு இந்த விமானம் வெளியேற விரும்பவில்லை என்று பலரும் கூறத் தொடங்கினர். மேலும், 110 மில்லியன் டாலர் (80 மில்லியன் யூரோ) மதிப்புள்ள இந்த போர் விமானம் சிக்கியிருந்த விவகாரம், பிரிட்டன் நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd6gdjq1vx9o
  8. செம்மணி குறித்து சர்வதேச விசாரணை அவசியம் - அவுஸ்திரேலியாவில் தமிழர்கள் பேரணி Published By: RAJEEBAN 22 JUL, 2025 | 11:10 AM செம்மணி மற்றும் ஏனைய மனித புதைகுழிகள் குறித்து முழுமையான சர்வதேச விசாரணை அவசியம் என அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தமிழர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பேரணியின் போது இலங்கை தமிழர்கள் ஐநா மற்றும் வெளிநாடுகளின் தூதரகங்களிடம் இந்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பில் தமிழ் ஏதிலிகள் பேரவை தெரிவித்துள்ளதாவது. இலங்கை அரசாங்கத்தினால் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளமை செம்மணிமனித புதைகுழிகள் மூலம் மீண்டும் தெரியவந்துள்ளதை தொடர்ந்து அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தமிழர்கள் இது குறித்த கவனத்தை ஈர்க்கும் விதத்தில் நேற்று பேரணியொன்றை முன்னெடுத்தனர். இந்த மனித புதைகுழிகள் தனியானதொரு சம்பவம் இல்லை, அமைதியான விதத்திலும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்பட்ட நிலையிலும் தொடரும் இனப்படுகொலையின் ஒரு பகுதியே இந்த மனித புதைகுழிகள். அவுஸ்திரேலியாவிற்கான ஐநா தூதரகத்தின் முன்னாள் ஆரம்பமான பேரணி ஐநா அலுவலகங்களை நோக்கியும் பல தூதரங்களை நோக்கியும் சென்றது. ஐநா அலுவலகத்திடமும் உலக நாடுகளின் தூதரங்களிடமும் தமிழர்கள் சர்வதேச சமூகத்தின் உறுதியான நடவடிக்கை மற்றும் நீதியை கோரும் மகஜர்களை கையளித்தனர். இந்த பேரணியில் இலங்கையில் உள்ள செம்மணி மற்றும் ஏனைய மனித புதைகுழிகள் குறித்து முழுமையான சர்வதேச விசாரணையை ஆரம்பிக்கவேண்டும். செப்டம்பரில் இடம்பெறவுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் இலங்கை தொடர்பில் வலுவான தீர்மானமொன்றை நிறைவேற்றவேண்டும். அமெரிக்கா பிரிட்டன் கனடா போன்று அவுஸ்திரேலியாவும் இலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபட்ட இலங்கை இராணுவ அதிகாரிகளிற்கு எதிராக பயணதடைகளை விதிக்கவேண்டும். இனப்படுகொலையிலிருந்து உயிர்தப்பியவர்கள் மற்றும் முக்கிய சாட்சிகளிற்கு பாதுகாப்பு மற்றும் புகலிடத்தை வழங்கவேண்டும். இலங்கை இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை விடுவிப்பதற்கான அழுத்தங்களை கொடுக்கவேண்டும். நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான ஒடுக்குமுறை சட்டங்களை நீக்குவதற்கான அழுத்தங்களை கொடுக்கவேண்டும். தமிழர்கள் இனப்படுகொலைக்குள்ளானார்கள் என்பதை சர்வதேச சமூகம் அங்கீகரிக்கவேண்டும் போன்ற வேண்டுகோள்களை பேரணியில் கலந்துகொண்டவர்கள் முன்வைத்துள்ளனர். செம்மணி மனித புதைகுழிகள் இனப்படுகொலைக்கான ஆதாரங்கள் மாத்திரமல்ல உலகிற்கான ஒரு அழைப்பு என தெரிவித்துள்ள தமிழ ஏதிலிகள் பேரவையின் பேச்சாளர் ரேணுகா இன்பகுமார் ஒவ்வொரு புதைகுழியும் நீங்கள் நீதிக்காக குரல்கொடுப்பீர்களா அல்லது பாராமுகமாகயிருப்பீர்களா என்ற கேள்வி எனவும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/220600
  9. துப்பாக்கி, தோட்டாக்கள், போதைப்பொருளுடன் இளைஞன் கைது! 22 JUL, 2025 | 12:45 PM பேலியகொடை பிரதேசத்தில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கிரிபத்கொடை பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (21) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். கிரிபத்கொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் பேலியகொடை பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த முச்சக்கரவண்டியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபரான இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் வவுனியாவைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஆவார். சந்தேக நபரான இளைஞனிடமிருந்து ரி - 56 ரக துப்பாக்கி, 30 தோட்டாக்கள் மற்றும் 5 கிராம் 560 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபத்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/220608
  10. பிரிக்ஸை மிரட்டும் டிரம்ப்: இந்தியா, சீனா, ரஷ்யா ஓரணியில் திரளுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிடாமல் பிரிக்ஸ் கூட்டமைப்பை குறிவைத்து வருகிறார். 21 ஜூலை 2025 புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் பிரிக்ஸ் நாடுகளின் மீது வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார். இந்தக் குழு விரைவில் முடிவுக்கு வரும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளியன்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசும்போது பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தைக் கைப்பற்ற முயற்சித்ததாகக் குற்றம்சாட்டிய டிரம்ப் கடினமான நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். எனினும் எந்த நாட்டின் பெயரையும் டிரம்ப் குறிப்பிடவில்லை. பிரிக்ஸ் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களான இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா இடையே முத்தரப்பு உறவுகளை மேம்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் வேளையில் டிரம்ப்பிடமிருந்து இந்த அச்சுறுத்தல் வந்துள்ளது. சமீபத்திய பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்குப் பிறகு, இந்த கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள் மீது வரிகள் அதிகரிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்திருந்தார். இந்தியா மற்றும் சீனா இடையேயான உறவுகளை இயல்புநிலைக்கு கொண்டு வர ரஷ்யா தொடர்ந்து முயற்சித்து வருகிறது, சீனாவும் அதற்கு நேர்மறையாக பதிலளித்துள்ளது. சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா இடையேயான முத்தரப்பு ஒத்துழைப்பு இந்த மூன்று நாடுகளின் நலன்களை மட்டுமல்ல, இந்தப் பிராந்தியம் மற்றும் உலகத்தில் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை பராமரிக்க உதவுகிறது என சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்துள்ளார். முத்தரப்பு ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்ல ரஷ்யா மற்றும் இந்தியா உடன் பேச்சுவார்த்தை நடத்த சீனா தயாராக இருப்பதாகவும் லின் தெரிவித்துள்ளார். ரஷ்யா-இந்தியா-சீனா (ஆர்ஐசி) அமைப்பை மீண்டும் தொடங்குவது தொடர்பாக இந்தியா மற்றும் சீனா உடன் ரஷ்யா பேச்சுவார்த்தையில் உள்ளது என அந்நாட்டின் துணை வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரெய் ருடென்கோ முன்னர் தெரிவித்திருந்தார். இதே கருத்து தொடர்பாக தான் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியானும் பேசியிருந்தார். டாலர் மற்றும் பிரிக்ஸ் பற்றி டிரம்ப் என்ன கூறினார்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டாலரை வலுப்படுத்துவது பற்றியும் அதனை உலகளாவிய நாணயமாக வைத்திருப்பது பற்றியும் பேசியுள்ளார் டிரம்ப் கடந்த வெள்ளியன்று வெள்ளை மாளிகையில் மசோதாவை ஒன்றைப் பற்றி பேசிய டிரம்ப் அதனை புகழ்ந்ததோடு, இந்த மசோதா அமெரிக்கா டாலரை வலுப்படுத்தும் என்று தெரிவித்திருந்தார். அப்போது பிரிக்ஸ் பற்றி குறிப்பிட்ட டிரம்ப், "பிரிக்ஸ் என்று அழைக்கப்படுகிற சிறிய குழு ஒன்று உள்ளது, அது விரைவில் முடிவுக்கு வர உள்ளது. அது அமெரிக்க டாலர், அதன் ஆதிக்கம் மற்றும் தரங்களைக் கைப்பற்ற முயற்சித்தது. பிரிக்ஸ் தற்போதும் இதைத்தான் விரும்புகிறது." என்றார். "பிரிக்ஸ் குழுவில் உள்ள அனைத்து நாடுகள் மீது 10 சதவிகிதம் வரி விதிக்கப்போவதாக நான் கூறினேன். அதற்கு அடுத்த நாள் அவர்கள் சந்திப்பு நடைபெற இருந்தது, ஆனால் ஒருவருமே வரவில்லை." என டிரம்ப் நகைச்சுவையாக தெரிவித்திருந்தார். டாலரை வலுப்படுத்துவது பற்றியும் அதனை உலகளாவிய நாணயமாக வைத்திருப்பது பற்றியும் பேசிய டிரம்ப், "நாங்கள் டாலரை வீழ்ச்சியடைய விடமாட்டோம். டாலர் உலகளாவிய நாணயம் என்கிற நிலையை நாம் இழந்தால். அது ஒரு உலகப் போரை இழப்பதற்குச் சமம்" எனக் கூறினார். மேலும் அவர், "நான் இந்த பிரிக்ஸ் நாடுகள் குழுவைப் பற்றி கேள்விப்பட்டபோது அவர்கள் மீது கடினமான நிலைப்பாட்டை எடுத்தேன். இந்த நாடுகள் எப்போதாவது ஒன்றாக வந்தால், இந்தக் குழு முடிந்துவிடும்," எனத் தெரிவித்தார். 'டாலருக்குப் பதிலாக புதிய நாணயம்': பிரிக்ஸ் நாடுகளை மிரட்டும் டிரம்ப் - இந்தியாவை பாதிக்குமா? '100% வரி விதிப்போம்' - இந்தியா, சீனா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் விடுத்த எச்சரிக்கை - ஏன்? இந்தியா - சீனா உறவை மேம்படுத்தும் மோதியின் எண்ணம் ஈடேறுமா? அமெரிக்கா என்ன செய்கிறது? 17வது பிரிக்ஸ் உச்சிமாநாடு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஜூலை 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த சந்திப்பிற்குப் பிறகு டிரம்ப் கூடுதலாக 10 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என எச்சரித்திருந்தார். "பிரிக்ஸின் அமெரிக்க எதிர்ப்பு கொள்கைகளுடன் தங்களை தொடர்புபடுத்திக் கொள்ளும் எந்த நாடுகளின் மீதும் 10 சதவிகிதம் கூடுதல் வரி விதிக்கப்படும். இந்த கொள்கையில் எந்த விதிவிலக்கும் இருக்காது" என ஜூலை 7ஆம் தேதியிட்ட சமூக ஊடகப் பதிவில் டிரம்ப் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் வியாழன் அன்று (ஜூலை 17) வெள்ளை மாளிகையில் டிரம்ப் ஆற்றிய உரையிலும் இந்த அச்சுறுத்தலைக் குறிப்பிட்டிருந்தார். பிரிக்ஸின் நிகழ்ச்சி நிரலில் என்ன இருந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரிக்ஸ் உச்சிமாநாடு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஜூலை 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. பிரிக்ஸ் ரியோ பிரகடனத்தில் உலகளாவிய நிர்வாகம் மற்றும் சர்வதேச நிலைத்தன்மையை மேம்படுத்துவது தொடர்பான பேச்சுக்கள் இருந்தன. இதோடு ஒருதலைபட்சமான வரிகளும் விவாதிக்கப்பட்டன. எனினும் அறிக்கையில் அமெரிக்கா பற்றிய குறிப்பு இல்லை. வர்த்தகப் போக்கை சிதைத்த உலக வர்த்தக நிறுவனத்தின் விதிகளை மீறும் ஒருதலைபட்சமான வரி மற்றும் வரியில்லா நடவடிக்கைகளின் அதிகரித்த பயன்பாடு பற்றி பிரிக்ஸ் நாடுகள் கவலை கொள்வதாக ரியோ பிரகடனம் தெரிவிக்கிறது. இவை போக, ஒருதலைபட்சமான அச்சுறுத்தல் நடவடிக்கைகளைத் திணிப்பது சர்வதேச சட்ட மீறல் மற்றும் ஒருதலைபட்சமான பொருளாதார தடைகள் தீங்கான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அந்த பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வர்த்தக நிறுவனத்தின் விதிகளின் படி வர்த்தகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் பலதரப்பு வர்த்தக அமைப்புகள் பற்றியும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டிரம்ப்பின் அச்சுறுத்தலும் ஆர்ஐசியை வலுப்படுத்தும் முயற்சிகளும் பட மூலாதாரம்,X/DR S JAISHANKAR 2020ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் சீனா இடையேயான மோதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மோசமடைந்தது. அதன்பிறகு ஆர்ஐசி தொடர்பாக எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. ஜூலை 17 ஆம் தேதியன்று ஆர்ஐசி அமைப்பை மீண்டும் தொடங்குவது பற்றி வெளியுறவு அமைச்சகம் பரிசீலிப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில் இது தொடர்பாக எந்த முடிவும் "பரஸ்பரம் சவுகரியமான முறையில்" மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொள்ள டியான்ஜினுக்குச் சென்றபோது ஆர்ஐசி பற்றி விவாதிக்கப்பட்டது. "ஒருதலைபட்சவாதம், பாதுகாப்புவாதம் மற்றும் அதிகார அரசியல் மற்றும் அச்சுறுத்தும் போக்கு உலகிற்கு தீவிரமான சவால்களாக உள்ளன" என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கடந்த ஜூலை 14 அன்று அமைச்சர் ஜெய்சங்கர் உடனான கூட்டத்தில் தெரிவித்தார். எனவே இரு நாடுகளும் "நல்லிணக்கத்துடன் வாழ்ந்து இருவரும் வெற்றி பெற உதவுவதற்கு" வழிகளை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். இந்தியா-அமெரிக்கா உறவில் சீனாவின் கருத்து என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியா மற்றும் சீனா இடையேயான உறவுகளை இயல்புநிலைக்கு கொண்டு வர ரஷ்யா தொடர்ந்து முயற்சித்து வருகிறது, சீனாவும் அதற்கு நேர்மறையாக பதிலளித்துள்ளது. ரஷ்யாவின் எண்ணெய்யை அதிகமாக வாங்கும் நாடுகளில் இந்தியாவும் சீனாவும் ஒன்று. இந்த இரு நாடுகளும் டிரம்ப்பின் 100 சதவிகித கூடுதல் வரி அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளன. இதன் மூலம் ரஷ்யாவை ஒரு ஒப்பந்தத்திற்கு சம்மதிக்க அழுத்தம் கொடுத்து யுக்ரேன் போரை 50 நாட்களுக்குள் முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா நினைக்கிறது. டிரம்ப்பின் இரண்டாம் ஆட்சிக் காலத்தில் இந்தியா-அமெரிக்கா உறவுகளில் ஏற்பட்ட கசப்புத்தன்மை பற்றி சீன வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஜூலை 13 அன்று சீன செய்தி ஊடகமான குவான்சாவில் எழுதியுள்ள கட்டுரையில் ஃபுடான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜீ சாவோ தற்போது அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே நடைபெற்று வரும் வர்த்தக மோதல் பற்றி குறிப்பிட்டிருந்தார். அமெரிக்கா, இந்தியாவைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானைப் பயன்படுத்தும் உத்தியை எடுத்து இரு நாடுகளுக்கும் இடையே "வற்புறுத்தப்பட்ட இணக்கத்தை" ஊக்குவிக்கிறது எனத் தெரிவித்துள்ளார். சீனாவின் முன்னணி விமர்சகரான பேராசிரியர் ஜின் கன்ரோங் இது போன்ற கருத்தை தெரிவித்துள்ளார். "இந்தியா-அமெரிக்க உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையேயான உறவுகள் சமீபத்தில் மேம்பட்டுள்ளன" என்றார். ஜூன் மாதம் கனடாவில் ஜி-7 உச்சிமாநாட்டில் கலந்து கொண்டபோது பிரதமர் நரேந்திர மோதி டிரம்பை சந்திக்க தவறினார். அதன் பிறகு டிரம்ப் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனிரை வெள்ளை மாளிகையில் வைத்து சந்தித்ததால் இந்தியா மேலும் ஏமாற்றமடைந்தது. பிரிக்ஸ் நாடுகள் டாலருக்கு மாற்றைத் தேடுகின்றவா? பட மூலாதாரம்,GETTY IMAGES சீனா மற்றும் ரஷ்யா உடனான அமெரிக்காவின் உறவுகள் பதற்றமாக உள்ளன. யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்குப் பிறகு சீனாவும் ரஷ்யாவும் நெருக்கமாகியுள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இருநாடுகளும் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் உலக ஒழுங்கை நிராகரிப்பது பற்றியும் பல்முனை உலகை உருவாக்குவது பற்றியும் பேசுகின்றன உலகில் நீண்ட காலமாக அமெரிக்காவின் நாணயமான டாலரின் ஆதிக்கத்திற்கு சவால்விட இருநாடுகளும் முயற்சி செய்வதற்கு இது தான் காரணம் 2023ஆம் ஆண்டு சீன அதிபர் ஜீ ஜின்பிங் தான் ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடன் டாலருக்குப் பதிலாக சீன நாணயமான யுவானில் வர்த்தகம் செய்ய விரும்புவதாக தெரிவித்திருந்தார். சீனா ஏற்கெனவே ரஷ்யாவுடன் யுவானில் தான் வர்த்தகம் செய்து வருகிறது. ரஷ்யாவும் அதே தான் செய்து வருகிறது, ஏனென்றால் அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் அதன் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் மற்றும் அதன் கூட்டாளிகள் பல ரஷ்ய வங்கிகளை முக்கியமான சர்வதேச பேமெண்ட் அமைப்பான ஸ்விஃப்டில் இருந்து விலக்கியுள்ளன. பிபிசியின் 2024ஆம் ஆண்டின் பிபிசி இந்தியின் செய்தியின்படி வெளிநாட்டு விவகார வல்லுநர் மற்றும் தி இமேஜ் இந்தியா இன்ஸ்டிட்யூடின் தலைவருமான ரபிந்திர சச்தேவ் கூறுகையில், "பிரிக்ஸ் நாடுகள் இதைச் செய்ய முயற்சித்து வருகின்றன. அவர்களால் மாற்று நாணயத்தை உருவாக்க முடியவில்லையென்றாலும் அவர்கள் குறைந்தபட்சம் ஒரு நிதி வலையமைப்பை உருவாக்க முயற்சிக்கின்றன" "ஸ்விஃப்ட் பேங்கின் இண்டர்நேஷனல் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மேற்குலக நாடுகளால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. எந்த நாட்டின் மீதும் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டால் அவை இந்த அமைப்பிலிருந்து விலக்கி வைக்கப்படும்" என்றார். "ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளைப் பார்க்கையில், தங்களுடைய வங்கிகளும் எதிர்காலத்தில் முடக்கப்படலாம் என பிரிக்ஸ் நாடுகள் அச்சம் கொள்கின்றன. இதனால் அவை ஒரு நிதி வலையமைப்பை உருவாக்க முயற்சிக்கின்றன" எனத் தெரிவித்தார். நிஜமாகவே டாலரின் மாற்றுக்கான தேடல் உள்ளதா? இந்தக் கேள்விக்குப் பதிலளித்த ரபிந்திர சச்தேவ், "பிரிக்ஸ் நாடுகள் அத்தகைய ஒன்றை திட்டமிட்டு வருகின்றன, ஆனால் அது கூடிய விரைவில் நடக்கப்போவதில்லை. எனினும் சில முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டுள்லன. பிரேசில் உடன் யுவானில் வர்த்தகம் செய்கிறது சீனா. சவுதி அரேபியா உடன் நாணயம் தொடர்பான ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளது சீனா, இந்தியா ரஷ்யாவுடன் இதே போன்ற ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளது. இத்தகைய போக்குகள் தொடங்கிவிட்டன" எனத் தெரிவித்தார். ஆனால் டாலருக்கு எதிராக வேறு நாணயத்தை நிறுத்துவது என்பது அசாத்தியமானது என ரபிந்திர சச்தேவ் நம்புகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp86gkzrlv6o
  11. வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் கொலைக் களமா? - போராட்டத்தில் குதித்த மக்கள்! 22 JUL, 2025 | 03:36 PM வட்டுக்கோட்டை பொலிஸாரின் அடாவடியான செயற்பாடுகளுக்கும், தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் நீதி கோரி, இன்றைய தினம் (22) மூளாய் பகுதி மக்கள் யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் அலுவலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கையில், மூளாயில் உள்ள மதுபான நிலையம் ஒன்றுக்குள் இடம்பெற்ற மோதல் சம்பவமே கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வன்முறைக்கு காரணமாக அமைந்துள்ளது. மதுபான நிலையத்தில் வைத்து எமது பகுதியைச் சேர்ந்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது எமது பகுதியைச் சேர்ந்த இன்னொருவர் எழுந்து ஏன் அவரை தாக்குகின்றீர்கள் என கேட்டபோது அவரையும் தாக்கி படுகாயம் ஏற்படுத்தினர். இதனால் தாக்குதலுக்கு உள்ளானவரின் மகன்கள் இருவர் மதுபான நிலையத்துக்கு கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டனர். பின்னர் காயமடைந்த எமது பகுதியைச் சேர்ந்த இருவரும் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்றுவிட்டு வந்தபோது பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு பதிவு செய்வதற்கு சென்றபோது பொலிஸார் முறைப்பாடு பதிவு செய்யவில்லை. ஆனால், தாக்குதல் நடாத்திய ஒருவரை கைது செய்து வைத்திருந்தனர். தாக்குதல் நடாத்திய மற்றவர்களையும் அழைத்து, எமது தரப்பினரையும் அழைத்து விசாரணை செய்யுமாறு நாங்கள் கோரினோம். ஆனால் பொலிஸ் அதனை செய்யவில்லை. எங்களை பொலிஸ் நிலையத்தில் இருந்து விரட்டியடித்தனர். பின்னர் எமது பகுதியைச் சேர்ந்த ஒருவர் வேலை முடிந்து வரும்போது மற்றைய குழுவினர் பிடித்துச் சென்று அவர் மீது கொடூர தாக்குதல் நடாத்தினர். பின்னர் நாங்கள் சம்பவம் அறிந்து சென்றபோது அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். பொலிஸார் அவரை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றவேளை ஏற்கனவே தாக்குதலுக்கு உள்ளானதால் அவர் பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்தார். அவரை வைத்தியசாலைக்கு அனுப்புமாறு கோரியவேளை பொலிஸார் தகாத வார்த்தையால் எம்மை திட்டி, எம்மையும் இப்படித்தான் தாங்கள் தாக்கிவிட்டு உள்ளே தூக்கிப் போடுவோம் எனக் கூறினர். பின்னர் நாங்கள்தான் நோயாளர் காவு வண்டியை அழைத்து அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம். பொலிஸார் மயங்கிய நபரை வைத்தியசாலைக்கு கூட கொண்டு செல்ல முன்வரவில்லை. இதற்கு பின்னர்தான் ஞாயிற்றுக்கிழமை கலவரம் ஏற்பட்டது. அவர்கள் ஒரு குழுவாக இணைந்து எமது ஊருக்குள் தாக்குதல் நடாத்துவதற்கு வரும்போதே எமது ஊர் மக்கள் இணைந்து அவர்களை விரட்டியடித்துவிட்டு கலவரத்தில் ஈடுபட்டனர். வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரி வந்த பின்னர் பொலிஸ் காவலில் வைத்து ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார். பொன்னாலை பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றில் மாணவர் ஒருவர் தனது உழைப்பில் தனது வீட்டில் குழாய் கிணறு அமைக்கும்போது அங்கு சென்ற பொலிஸார் அது தவறான விடயம் என கூறி இலஞ்சம் பெற்றுச் சென்றனர். பொன்னாலை பகுதியில் இருந்து சந்தேக நபர் ஒருவரை கிராம சேவகர், பிரதேச செயலர் ஆகியோர் பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில் அவர் சில தினங்களுக்கு பின்னர் பொன்னாலையில் புதர் ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இதுபோன்ற பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே, இந்த பொறுப்பதிகாரி எமக்குத் தேவையில்லை. ஒரு திறமையான பொறுப்பதிகாரியை எமது பொலிஸ் நிலையத்திற்கு வழங்குங்கள். இந்த பொலிஸ் பொறுப்பதிகாரியால் எமது மக்களுக்கு சீரான சேவையை வழங்க முடியாது என்றனர். மக்களையும் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரையும், உதவி பொலிஸ் அத்தியட்சகரையும், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியையும், அழைத்த யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை கடுமையாக எச்சரித்து, உடனடியாக சந்தேக நபர்களை கைது செய்யுமாறு உத்தரவிட்டார். https://www.virakesari.lk/article/220637
  12. பிறந்தநாளை முன்னிட்டு விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது 21/07/2025 டென்மார்க்கைச் சேர்ந்த ஐங்கரன் சிவகுமார் மற்றும் லண்டனைச் சேர்ந்த அருணேஸ் கணேஸ்குமார் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு சிற்றுண்டிகள், பிஸ்கற் வழங்கப்பட்டது. இருவரும் பல்கலையும் கற்று பல்லாண்டுகள் வளத்துடன் வாழ வாழ்த்துகிறோம். இந்நிகழ்வை சிறப்புற ஒழுங்கமைத்து நடத்திய செயலாளர் திரு த.மோகன்றூபன் (PHI) முன்னாள் உபசெயலாளர் திரு இ.சிறிதரன் (அதிபர்) ஆகியோருக்கு எமது நன்றிகள். மேலும் இந்நிழவுக்கு உறுதுணையாகவும் ஊக்கமாகவும் இருக்கும் திரு இ.சிவகுமார் அவர்களுக்கும் எமது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறோம். மேலும் இது போல உதவிகள் வழங்க விரும்பின் எம்மைத் தொடர்பு கொள்ளலாம். T.P : +94 77 777 5448. ஒளிப்பதிவு திரு த.மோகன்றூபன்.
  13. செம்மணி மனித புதைகுழிகள்: மேலும் 7 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு Published By: VISHNU 21 JUL, 2025 | 07:45 PM யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் 07ஆம் திகதி திங்கட்கிழமை 07 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இன்று அடையாளம் காணப்பட்டுள்ள 07 மனித எலும்பு கூட்டு தொகுதிகளுடன் சேர்த்து மொத்தமாக 72 எலும்பு கூட்டு தொகுதிகள் இங்கே கண்டெடுக்கப்பட்டுள்ளன. செம்மணி பகுதியில் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 01" மற்றும் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 02" என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல் 15 நாட்கள் தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் கடந்த 10ஆம் திகதியுடன் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டு 11 நாட்களின் பின்னர் இன்றைய தினம் 16ஆவது நாளாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது. அதன் போது இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றினை நாளைய தினம் செவ்வாய்க்கிழமை அகழ்ந்து எடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மனிதப்புதைகுழி தொடர்பான விசாரணைகள் இதுவரை யாழ்ப்பாணம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைய, இந்த விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் கீழ் ஒப்படைக்கபட்டுள்ள நிலையிலையே குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அகழ்வு இடம்பெறும் இடத்தில் பிரச்சன்னமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/220579
  14. 21 JUL, 2025 | 05:34 PM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தமிழர் இறையாண்மையை மீட்டுத் தந்தால், 50 இலட்சம் கையெழுத்துக்களை திரட்டி நோபல் அமைதிப் பரிசுக்கு அவரைப் பரிந்துரை செய்வோம் என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியாவில் சங்கத்தினரால் இன்று (21) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னர், அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே இதனைத் தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறுகையில், 1948 முதல் அடுத்தடுத்து வந்த சிங்கள ஆட்சியாளர்களால் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் பாகுபாடு, நில அபகரிப்புகள், காணாமல் ஆக்குதல், கொலைகள் என்ற வரையறைக்குள் மாத்திரமே செயற்பட்டன. அந்த வகையில் பல உலகத் தலைவர்கள் வந்து போய்விட்டார்கள். ஆனால், இன்று ஒரே ஒரு தலைவருக்கு மட்டுமே செயற்பட தைரியமும் தெளிவும் உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பேசும்போது உலகம் அதை கேட்கிறது. சிலர் மரியாதைக்காகவும், மற்றவர்கள் பயத்திற்காகவும் அதனை கேட்கின்றனர். ஆனால், அவர் காரியங்களைச் செய்து முடிக்கிறார். ஜனாதிபதி டிரம்பிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தால் தமிழர்களுக்கு நீதியை மீட்டெடுக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். தமிழ் இறையாண்மையை மீட்டெடுக்க அவர் எங்களுடன் நின்றால், உலகெங்கிலும் உள்ள தமிழ் தாய்மார்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர், நோபல் அமைதிப் பரிசுக்கு அவரைப் பரிந்துரைக்கும் வண்ணம் ஐந்து மில்லியன் கையெழுத்துக்களை சேகரிப்போம் என உறுதியளிக்கிறோம். உலகம் ஒருபோதும் எதிர்பார்க்காத அமைதித் தூதராக டிரம்ப் மாறட்டும் என்றனர். https://www.virakesari.lk/article/220562
  15. நுவரெலியாவில் பலத்த மழை ; கிரகரி வாவியில் மட்டுப்படுத்தப்பட்ட படகுச் சவாரி 21 JUL, 2025 | 04:20 PM நுவரெலியாவில் பெய்துவரும் பலத்த மழை மற்றும் காற்று காரணமாக கிரகரி வாவியில் இடைநிறுத்தப்பட்டிருந்த படகுச் சவாரி இன்று (21) மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவையினை வழங்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் நுவரெலியா கிரகரி வாவியில் படகுச் சவாரியானது சனி (19), ஞாயிறு (20) ஆகிய இரு தினங்களும் முற்றாக நிறுத்தப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, மீண்டும் இன்று காலை காற்றின் வேகம் சற்று குறைந்து காணப்பட்ட நிலையில், ஒரு சில படகுகளுக்கு மாத்திரம் சேவையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பு கருதி கிரகரி வாவியில் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நுவரெலியாவில் மழையுடன் காற்றின் வேகம் அதிகரித்ததால் சுற்றுலாப்பயணிகளின் வருகை சற்று குறைந்துள்ளது. மேலும், சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பு கருதி, மிதி படகுகள் இயக்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வாவி பகுதியில் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து கடும் குளிர் நிலவி வருகிறது. அத்துடன் மழையால் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/220549
  16. Published By: RAJEEBAN 21 JUL, 2025 | 04:12 PM மனிதபுதைகுழிகளில் காணப்படும் மனித எச்சங்களை அகழ்வதற்கு அவசியமான நிதி நிபுணத்துவம் மற்றும் வளங்களை இலங்கை அரசு வழங்கவேண்டும் என பரிந்துரைத்துள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம்சட்டத்தினை ஏற்றுக்கொள்வது குறித்து இலங்கை ஆராயவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது அறிக்கையொன்றில் மேலும் தெரிவித்துள்ளதாவது- இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஐக்கிய நாடுகளின் பலவந்தமாக காணாமல்போனோர் தொடர்பான குழுவிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் பலவந்தமாக காணாமல்போனோர் தொடர்பான குழுவின் 29 வது அமர்வு செப்டம்பர் 22 முதல் ஒக்டோபர் 3ம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையிலேயே இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த அமர்வில் ஐநாவின் குழு பலவந்தமாக காணாமல்போதலில் இருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பது தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் இன் கீழ் இலங்கை தனது கடப்பாடுகளை எவ்வாறு நிறைவேற்றியுள்து என்பது குறித்து ஆராயவுள்ளது. இலங்கை இந்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பல பரிந்துரைகளையும் அவதானிப்புகளையும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் 25 பக்க அறிக்கை முன்வைக்கின்றது. நபர் ஒருவர் பலவந்தமாக காணாமலாக்கப்படுதல் மனித உரிமையை மிக மோசமாக மீறும் செயல் என்பதை இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மீண்டும் நினைவூட்டியுள்ளது. பலவந்தமாக காணாமலாக்கப்படுதல் என்பது இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் இடம்பெற்றுள்ளதுடன் அனைத்து சமூகங்களையும் பாதித்துள்ளது. குறிப்பாக தெற்கில் கிளர்ச்சி வடக்குகிழக்கில் ஆயுத மோதல்கள் குறித்த சூழமைவின் பின்னணியில். பல ஆண்டுகளாக பலவந்தமாக காணாமலாக்கப்படுதல் உண்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பதில் குடும்பங்கள் ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளின் முக்கிய முயற்சிகளையும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அங்கீகரிக்கின்றது. பொருளாதார சவால்கள் மற்றும் பராமரிப்பு பொறுப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களைச் சமாளிக்க வேண்டியிருந்த போதிலும் இலங்கையில் பலவந்தமாக காணாமலாக்கப்படுதல் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உண்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்காக வாதிடவும் பெண்கள் முயற்சிகளை வழிநடத்தியுள்ளனர் என்பதை இது குறிப்பாக அங்கீகரித்தது இலங்கை அரசாங்கம் கடந்த காலங்களில் வெளியிட்ட உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் அடிப்படையில் மனிதஉரிமைகள் ஆணையத்தின் அறிக்கை கடந்த கால விசாரணை ஆணையங்களால் 27000க்கும் மேற்பட்ட காணாமல் போனோர் வழக்குகள் பரிசீலிக்கப்பட்டன என்பதையும் காணாமல் போனோர் தொடர்பான 21000க்கும் மேற்பட்ட புகார்களை காணாமல்போனோர் அலுவலகம் பெற்றுள்ளது என்பதையும் நினைவு கூர்ந்தது. மே 17 மற்றும் 18 2009 அன்று பாதுகாப்புப் படைகளிடம் சரணடைந்த பின்னர் 1000க்கும் மேற்பட்ட காணாமல் போன சம்பவங்கள் தொடர்பாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் கண்டுபிடிப்புகளையும் இந்த அறிக்கை மேற்கோள் காட்டியது. மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை இலங்கையில் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கும் பிரச்சினையை குறிப்பாக எடுத்துக்காட்டியது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை அரசாங்கத்திற்கு பின்வரும் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. வழமையான சட்ட அமுலாக்கல் அதிகாரிகளிடமிருந்து சுயாதீனமான இபலவந்தமாக காணாமலாக்கப்பட்டமை குறித்து விசாரணை செய்வதற்கான குற்றவாளிகளை நீதியின் முன்நிறுத்துவதற்கான பரந்துபட்டஅதிகாரங்களை கொண்ட புதிய நிரந்தர நிறுவனமொன்றை உருவாக்கவும் ஆட்கொணர்வு வழக்குகள்பலவந்தமாக காணாமலாக்கப்படுதல் சட்டத்தின் கீழ் உள்ள வழக்குகள் மற்றும் உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அவற்றின் விரைவான முடிவை உறுதி செய்வதற்குத் தேவையான சட்ட சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துதல் வலுக்கட்டாயமாக காணாமல் போதல் சட்டத்தின் கீழ் ‘பரந்துபட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட காணாமலாக்கப்படுதலை ஒரு குறிப்பிட்ட குற்றமாகச் சேர்க்கவும் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் பண பணமற்ற மற்றும் முன்மாதிரியான சேதங்களுக்கு இழப்பீட்டு வழிகாட்டுதல்களை சர்வதேச தராதரங்களின் அடிப்படையில்வகுத்தல்; ஆதாரங்கள் பாதுகாக்கப்படுவதையும் உயிரிழந்தவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக வலுவான விசாரணை இடம்பெறுவதையும் உறுதி செய்வதற்காக மனித புதைகுழிகளில் உள்ள மனித எச்சங்களை அகழ்வதற்கு அவசியமானநிதி உதவி தொழில்நுட்ப உதவி ஏனைய வளங்களை வழங்குங்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்தின் ஒரு தரப்பினராக மாறுவதைக் கருத்தில் கொள்ளுங்கள். இது பரந்துபட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட காணாமலாக்கப்படுதலைமனிதகுலத்திற்கு எதிரான குற்றமாக பட்டியலிடுகிறது. https://www.virakesari.lk/article/220545
  17. அவராக போகவில்லையாம் அண்ணை! மனைவி ஸ்கான் செய்ய சென்றவர், உதவிக்கு அழைத்து ஆபத்தில் மாட்டிவிட்டுள்ளார்.
  18. Published By: DIGITAL DESK 2 21 JUL, 2025 | 01:43 PM வடக்கு ஊடகத் துறையிலும் பகிர்ந்தறியும் கற்றல் மற்றும் துறைமட்ட ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு இந்திய தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி தெரிவித்துள்ளார். இந்தியா துணைதூதரகத்தின் ஏற்பாட்டில், “பிரஸ் ஃபார்வர்ட்: பத்திரிகைத் துறை, கதையாக்கம் மற்றும் தொழில்நுட்பத்தைப் பற்றிய உரையாடல்” எனும் தலைப்பில் யாழ்ப்பாணத்தில் கடந்த 19ஆம் திகதி ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி பட்டறை நடாத்தப்பட்டது. அதில் வடமாகாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகவியல் துறை மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் என சுமார் 100 பேர் பங்கேற்றனர். குறித்த நிகழ்வினை ஆரம்பித்து உரையாற்றும் போதே துணைத்தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஊடகத் துறையிலும் பகிர்ந்தறியும் கற்றல் மற்றும் துறைமட்ட ஒத்துழைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தில் இந்தியா வைக்கும் நம்பிக்கையை வலியுறுத்தினார். அத்துடன் தொழில்முறை மேம்பாடு மற்றும் திறன்மூட்டலுக்கான ஒத்துழைப்பு ஆகியவற்றில் இந்தியா தொடர்ந்த அக்கறையுடன் செயல்படுவதாக உறுதிபட தெரிவித்தார். மேலும் வடமாகாணத்தில் இந்தியா மேற்கொள்ளும் விரிவான ஒத்துழைப்பு முயற்சிகளில் இந்திய வீடமைப்பு திட்டம், பண்டைய கோயில்களின் மறுசீரமைப்பு, புகையிரத உட்கட்டமைப்பு அபிவிருத்தி, மின் திட்டங்கள், பல்கலைக்கழக கட்டிடங்கள், மற்றும் யாழ் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் போன்ற இந்தியாவின் பன்முக செயல்பாடுகள் மானுடய உதவி, கல்வி ஒத்துழைப்பு, கலாசார பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாட்டுப் பட்டறைகள் போன்றவற்றையும் உள்ளடக்கியது என்றார். குறித்த பயிற்சி பட்டறையில், இந்தியாவின் முன்னணி ஊடக நிறுவனமான ‘பிஹைண்ட்வுட்ஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த சிவதனுஷ் மற்றும் கிருத்திகா மருதநாயகம் ஆகியோர் நேரில் கலந்து கொண்டதுடன், ‘தி ஹிந்து’ பத்திரிகையின் பிரதான நிருபர் (தரவுப் பத்திரிகைத் துறை) விஞ்ஞேஷ் ராதாகிருஷ்ணன் மற்றும் ‘பிபிசி தமிழ்’ ஊடக நிறுவனத்தின் ஊடகவியலாளர் பிரபுராவ் ஆனந்தன் ஆகியோர் மெய்நிகர் ஊடாக கலந்துகொண்டனர். அவர்கள் தமது ஊடகத் துறையின் நடப்பு போக்குகள் மற்றும் நடைமுறை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். பயிற்சி பட்டறையின் நிறைவில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ்களை இந்திய துணை தூதுவர் வழங்கி வைத்தார். https://www.virakesari.lk/article/220533
  19. நிலாந்த ஜெயவர்த்தனவிற்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என்பது கத்தோலிக்க திருச்சபையின் நிலைப்பாடில்லை - அருட்தந்தை சிறில் காமினி 21 JUL, 2025 | 01:31 PM உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ள பிரதி பொலிஸ்மா அதிபர் நிலாந்த ஜெயவர்த்தனவிற்கு மரணதண்டனை வழங்கவேண்டும் என்பது கத்தோலிக்க திருச்சபையின் நிலைப்பாடில்லை என கொழும்பு மறைமாவட்டத்திற்கான தகவல் தொடர்பு இயக்குநர் அருட்தந்தை சிரில் காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார் . இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் மக்கள் தொடர்பு இயக்குநர் அருட்தந்தை ஜூட் கிரிசாந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ள பிரதி பொலிஸ்மா அதிபர் நிலாந்த ஜெயவர்த்தனவிற்கு மரணதண்டனை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கையில் அருட்தந்தை சிரில்காமினி பெர்ணாண்டோ இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜூட் தனது தனிப்பட்ட கருத்தினையே ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாக குறிப்பிட்டார் என தெரிவித்துள்ள சிரில் காமினி பெர்ணாண்டோ இந்த விடயம் தொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லை என தெரிவித்துள்ளார். இலங்கை கத்தோலிக்க திருச்சபையும், உலகளாவிய திருச்சபையும் மரணதண்டனையை ஏற்றுக்கொள்வதில்லை என அவர் தெரிவித்துள்ளார். 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே நிலாந்த ஜெயவர்த்தன பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ள சிறில் காமினி பெர்ணாண்டோ ஜனாதிபதி ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்தவேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம், என குறிப்பிட்டுள்ளார் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த விசாரணையின் மூலம் மேலும் பல விடயங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். சிஐடியின் இயக்குநராக ஷானி அபயசேகரவையும்,பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ரவிசெனிவிரட்னவையும் நியமிக்கவேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை 2020இல் பதவி இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளை மீண்டும் பணிக்கு அமர்த்தவேண்டும், என்பதே கர்தினாலின் விருப்பம் அவர் பெயர் எதனையும் குறிப்பிடவில்லை என அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/220532
  20. திருவனந்தபுரத்தில் 5 வாரமாக சிக்கியுள்ள பிரிட்டனின் அதிநவீன போர் விமானம் புறப்படத் தயார் - என்ன நடந்தது? படக்குறிப்பு,அவசரநிலையைத் தொடர்ந்து F-35B விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. கட்டுரை தகவல் கீதா பாண்டே அஷ்ரஃப் படன்ன பிபிசி செய்திகள் திருவனந்தபுரம், கேரளா 8 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஐந்து வாரங்களுக்கும் மேலாக நிற்கும் பிரிட்டனின் அதிநவீன போர் விமானம் செவ்வாய்க்கிழமையன்று புறப்பட உள்ளது. F-35பி எனும் அந்த போர் விமானம், "இன்று ஹேங்கரிலிருந்து வெளியே கொண்டு வரப்படும். பிறகு செவ்வாய்க்கிழமை புறப்பட வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது," என்று பிபிசியிடம் தெரிவித்த விமான நிலைய செய்தித் தொடர்பாளர், அதுகுறித்து, "எங்களிடம் தொழில்நுட்ப விவரங்கள் எதுவும் இல்லை"என்று கூறினார். கடந்த ஜூன் 14-ஆம் தேதி, இந்தியப் பெருங்கடலின் மீது பறந்து கொண்டிருந்த போது மோசமான வானிலை காரணமாக, கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் F-35பி விமானம் தரையிறக்கப்பட்டது. பின்னர், அதில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இந்தியாவில் இவ்வளவு நீண்ட காலம் இந்த விமானம் தங்கியிருந்தது மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியது. இவ்வளவு நவீன விமானம் எப்படி ஒரு வெளிநாட்டில் இவ்வளவு நாட்கள் சிக்கித் தவிக்க முடியும் என்ற கேள்விகளையும் எழுப்பியது. பட மூலாதாரம்,PTI படக்குறிப்பு,திருவனந்தபுரம் விமான நிலையத்தில் உள்ள பராமரிப்பு மற்றும் பழுது சரிசெய்யும் மையத்திற்கு, ஜெட் விமானம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. எச்.எம்.எஸ். (HMS) பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் போர்க்கப்பலைச் சேர்ந்த F-35பி விமானம் திரும்ப முடியாமல் போனதால், ராயல் கடற்படையின் பொறியாளர்கள் அதைச் சரிசெய்ய வந்தனர். ஆனால், அவர்களால் விமானத்தைப் பழுதுபார்க்க முடியவில்லை. இரண்டு வாரங்களுக்கு முன், பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் 14 பொறியாளர்கள் கொண்ட குழுவை, "திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு F-35பி விமானத்தை ஆய்வு செய்து பழுதுபார்க்க" அனுப்பியதாகத் தெரிவித்தது. அந்தக் குழு, விமானத்தின் இயக்கம் மற்றும் பழுது பார்க்கும் செயல்முறைக்குத் தேவையான சிறப்பு உபகரணங்களுடன் வந்ததாக ஓர் அறிக்கை தெரிவிக்கிறது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்களில், F-35பி விமானம் இழுத்துச் செல்லப்படுவது தெரிந்தது. தொழில்நுட்ப வல்லுநர்களால் விமானத்தை சரிசெய்ய முடியாவிட்டால், அதைப் பிரித்து சி-17 குளோப்மாஸ்டர் போன்ற பெரிய சரக்கு விமானத்தில் எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும் என்பது போன்ற ஊகங்கள் இருந்தன. கடந்த இரண்டு வாரங்களாக, இந்தியாவில் உள்ள பிரிட்டன் தூதரகமும் பாதுகாப்பு அதிகாரிகளும் பழுதுபார்ப்பு விவரங்களைப் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என்று பிபிசியிடம் தெரிவித்தனர். ஆனால் திங்களன்று, "விமானம் பறக்கத் தகுதியாகி விட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது" என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறினார். திங்கட்கிழமை காலை அதனை ஹேங்கரில் இருந்து வெளியே எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது, அது புறப்படும் சரியான நேரம் "இன்னும் தெரிவிக்கப்படவில்லை, லண்டனுக்கு செல்லும் வழியில் எந்த விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பப்படும், அல்லது தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் உபகரணங்களை திருப்பி கொண்டு செல்லும் விமானம் எப்போது வரும்" என்பது இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவைச் சேர்ந்த லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் எஃப்-35பி போர் விமானங்கள் மிகவும் நவீன ஸ்டெல்த் (எதிரி ரேடார்களுக்கு எளிதில் புலப்படாத) போர் விமானங்களாகும். குறுகிய தூரத்தில் மேலெழும்பிப் பறக்கும் திறன் மற்றும் செங்குத்தாகத் தரையிறங்கும் இவற்றின் ஆற்றல் மிகவும் பாராட்டப்படுகிறது. திருவனந்தபுரம் விமான நிலைய ஓடுதளத்தில் தனியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த "எஃப் -35பி" விமானம் கேரளாவின் பருவமழையில் நனையும் காட்சிகள் சமூக வலைதளங்களில் நகைச்சுவைகளும், மீம்ஸ்களும் உருவாகக் காரணமாக அமைந்தன. "கடவுளின் சொந்த நாடு" என்று வர்ணிக்கப்படும் கேரளாவின் இயற்கை அழகை விட்டு இந்த விமானம் வெளியேற விரும்பவில்லை என்று பலரும் கூறத் தொடங்கினர். மேலும், 110 மில்லியன் டாலர் (80 மில்லியன் யூரோ) மதிப்புள்ள இந்த போர் விமானம் சிக்கியிருந்த விவகாரம், பிரிட்டன் நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd6gdjq1vx9o
  21. Published By: RAJEEBAN 21 JUL, 2025 | 02:26 PM இஸ்ரேல் உணவு விநியோகத்தினை முடக்கியுள்ள நிலையில் காசாவில் பட்டினியால் நான்குவயது சிறுமி உயிரிழந்த பரிதாபம் இடம்பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நான்கு வயது ரஜான் அபு ஜகெர் உயிர்வாழ்வதற்கான தனது போராட்டத்தினை முடித்துக்கொண்டுள்ளாள். பட்டினி மற்றும் மந்தபோசாக்கினால் ஏற்பட்ட பாதிப்புகளால் இந்த சிறுமி மத்திய காசாவில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2023 ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் காசாவில் 76 சிறுவர்கள் மந்தபோசாக்கினால் உயிரிழந்துள்ளனர் என காசாவின் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மார்ச் மாதம் இஸ்ரேல் உணவுவிநியோகத்தை தடை செய்த பின்னரே மந்தபோசாக்கு பட்டினியால் அனேக மரணங்கள் இடம்பெற்றுள்ளன என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் உயிரிழந்த சிறுவர்களில் ரசானும் ஒருவர் .மூன்று மாத குழந்தையொன்றும் உயிரிழந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் காசாவில் பட்டினி காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ள காசாவின் சுகாதார அமைச்சு இது அந்த பகுதியில் நெருக்கடி நிலை மேலும் மோசமடைவதை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. ரசானை சிஎன்என் ஒரு மாதத்திற்கு முன்னர் சந்தித்தது, அவ்வேளை அவள் ஏற்கனவே பட்டினியால் பலவீனமானவளாக உடல் மிகவும் மெலிந்தவளாக காணப்பட்டாள். சிறுமியின் தாயார் தஹிர் அபு டகெர் பால்மா வேண்டுவதற்கு தன்னிடம் பணம் இல்லை என தெரிவித்திருந்தார். யுத்தத்திற்கு முன்னர் அவளது உடல்நிலை சிறப்பானதாக காணப்பட்டது, ஆனால் யுத்தம் ஆரம்பித்த பின்னர் மந்தபோசாக்கு காரணமாக அவளின் உடல்நிலை மோசமடைய தொடங்கியது, அவளை வலுப்படுத்துவதற்கு எதுவுமில்லை என தாயார் தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/220540
  22. 21 JUL, 2025 | 03:15 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நடத்தப்படும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் அடுத்த மூன்று அத்தியாயங்களினது இறுதிப் போட்டிகளையும் இங்கிலாந்திலேயே நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த பொதுச் சபைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்க அமைய 2027, 2029, 2031 ஆகிய வருடங்களில் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அத்தியாயங்களினதும் இறுதிப் போட்டிகள் இங்கிலாந்தில் அரங்கேற்றப்படும். 2021, 2023, 2025 ஆகிய மூன்று வருடங்களில் நடைபெற்ற இறுதிப் போட்டிகளை இங்கிலாந்து மற்றம் வேல்ஸ் கிரிக்கெட் சபை வெற்றிகரமாக நடத்தியதை கருத்தில் கொண்டே அடுத்த மூன்று அத்தியாயங்களுக்கான இறுதிப் போட்டிகளை நடத்துவதற்கான அனுமதியை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபைக்கு ஐசிசி வழங்கியுள்ளது. இந்தக் கூட்டத்தின்போது இடம்பெயர்ந்துள்ள ஆப்கானிஸ்தான் வீராங்கனைகளுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பான முன்னேற்றம் குறித்தும் ஆராயப்பட்டது. ஐசிசியின் பிரதித் தலைவர் இம்ரான் கவாஜாவின் மேற்பார்வையில் ஐசிசி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை, கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியா ஆகியன கூட்டிணைந்து இதற்கான முயற்சியைத் தொடர்கின்றன. இந்த திட்டம் உயர் செயல்திறன் கொண்ட முயற்சிகள், உள்நாட்டு விளையாட்டு வாய்ப்புகள் மூலம் கட்டமைக்கப்பட்ட ஆதரவு வழங்குவதையும் இந்தியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம், இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2026 ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணம் உட்பட முக்கிய ஐசிசி உலகளாவிய நிகழ்ச்சிகளில் ஆப்கானிஸ்தானை பங்குபற்றச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதேவேளை, ஐக்கிய அமெரிக்க கிரிக்கெட் நிறுவனத்தின் முந்தைய நிலைப்பாட்டை உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐசிசி கூறியுள்ளது. அடுத்த மூன்று மாத காலத்திற்குள் விரிவான நிருவாக சீர்திருத்தங்களை செய்வதுடன் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்த வேண்டும் எனவும் ஐசிசி வலியுறுத்தியுள்ளது. இதேவேளை, ஐக்கிய அமெரிக்க கிரிக்கெட் நிறுவனமானது பொருத்தமானதாகக் கருதும் நடவடிக்கைகளை எடுக்கும் உரிமையை ஐக்கிய அமெரிக்க கிரிக்கெட் நிறுவன ம் கொண்டுள்ளதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/220543
  23. மூளாயில் தொடரும் பொலிஸ் பாதுகாப்பு! Published By: DIGITAL DESK 2 21 JUL, 2025 | 06:43 PM யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலுக்குப் பின்னர், அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் பாதுகாப்பு தற்போது தீவிரமாக நடைமுறையில் வைக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல்களின்படி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட இரண்டு தனி நபர்களுக்கிடையிலான சிக்கல், ஞாயிற்றுக்கிழமை (20) இரு குழுக்களுக்கு இடையிலான மோதலாக மாறியுள்ளது. இந்த மோதலின்போது, ஒரு மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் மற்றொரு மோட்டார் சைக்கிள் கடுமையாக சேதமடைந்துள்ளது. மேலும், சிலர் காயமடைந்துள்ளனர். இதன்போது, பதற்ற நிலையை கட்டுப்படுத்தும் பொருட்டு, பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், நேற்றிலிருந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, அங்கு பொலிஸ் கண்காணிப்பு தொடர்ந்து நடைமுறையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/220572
  24. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் செல்வதற்கு முன்பாக நோயாளிகள் தங்கள் உடலில் உள்ள அணிகலன்களை அகற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர் கட்டுரை தகவல் மேடலின் ஹால்பர்ட் பிபிசி 3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் 9 கிலோ எடை கொண்ட செயினை சுமந்து கொண்டு எம்ஆர்ஐ அறைக்குச் சென்றபோது, அது உள்ளே இழுத்ததில் 61 வயது நபர் உயிரிழந்தார். நியூயார்க் நகரில் உள்ள நசாவ் என்ற இடத்தில் உள்ள எம்ஆர்ஐ சென்டரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. அதிகாரிகளின் அனுமதியின்று இவர் ஸ்கேனிங் அறைக்குள் நுழைந்ததாக நசாவ் கவுன்டி போலீஸார் கூறுகின்றனர். 'எனக்கு ஸ்கேன் எடுக்கும்போது நான்தான் உதவிக்காக என் கணவரை உள்ளே அழைத்தேன்' என உயிரிழந்தவரின் மனைவி கூறுகிறார். மேலும் 'உள்ளே நுழைந்ததும் அவரை இந்தக் கருவி இழுத்துவிட்டது. சட்டென்று இயந்திரம் மீது மோதினார். அங்கிருந்த தொழில்நுட்ப வல்லுநர் விரைந்து வந்து அவரை காப்பாற்ற முயன்றார். இயந்திரத்தை அணைக்குமாறு அவரிடம் கேட்டுக்கொண்டேன்' என மனைவி ஜோன்ஸ் தெரிவித்தார். எம்ஆர்ஐ இயந்திரம் அவரை உள்ளே இழுத்தது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES பொதுவாக இந்த இயந்திரம் துல்லியமாக ஸ்கேன் செய்வதற்காக சக்திவாய்ந்த காந்த ஈர்ப்புகளை கொண்டிருக்கும். அதனால்தான் இந்த அறைக்குள் செல்வதற்கு முன்பாக நோயாளிகள் தங்கள் உடலில் உள்ள அணிகலன்களை அகற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். உயிரிழந்த நபர் உடற்பயிற்சிக்கு பயன்படும் பெரிய உலோகச் சங்கிலியை உடலுடன் இணைத்திருந்ததால் இயந்திரத்தின் உள்ளே இழுக்கப்பட்டுள்ளார் என நசாவ் கவுன்டி போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். போலீசார் இவரின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், அவர் பெயர் கெய்த் என மனைவி ஜோன்ஸ் தகவல் தெரிவித்துள்ளார். "அவர் எனக்கு குட்-பை சொன்னார். பின் அப்படியே உருக்குலைந்துவிட்டார்" என மனைவி வேதனை தெரிவிக்கிறார். "முழங்காலில் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பதற்காக சென்றபோது, எனது கணவரை நான்தான் உதவிக்கு உள்ளே அழைத்தேன். அவர் 9 கிலோ எடையுள்ள சங்கிலியை அணிந்திருந்தார். அவர் உள்ளே நுழைந்ததும் இயந்திரம் அவரை உள்ளே இழுத்துக்கொண்டது. அவர் சட்டென்று இயந்திரத்தின் மீது மோதினார். அங்கிருந்த தொழில்நுட்ப வல்லுநர் அவரை மீட்க முயற்சித்தார். 'மெஷினை அணையுங்கள், 911-க்கு போன் செய்யுங்கள்' எனக் கதறினேன்" என சம்பவத்தை நேரில் பார்த்த ஜோன்ஸ் விவரிக்கிறார். இது குறித்து மேலும் அறிய, வல்லுநர்களை தொடர்புகொண்டது பிபிசி. எம்ஆர்ஐ இயந்திரத்தில் உள்ள சக்தி வாய்ந்த காந்தம் சாவி, செல்போன் என எந்த அளவில் உள்ள பொருட்களையும் எளதில் உள்ளே இழுக்கக் கூடியதாகும். இது இயந்திரத்தை பாதிக்கும் அல்லது நோயாளிகளுக்கு ஆபத்து விளைவிக்கும் என்கிறது அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம். இதற்கு முன்பு 2001ம் ஆண்டு, எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யும்போது 6 வயது சிறுவன் உயிரிழந்தார். எம்ஆர்ஐ இயந்திரத்தின் சக்திவாய்ந்த காந்த ஈர்ப்பு, ஆக்ஸிஜன் டேங்கை அறையில் அங்குமிங்கும் இழுத்தது. ஆக்ஸிஜன் டேங்க் அச்சிறுவன் தலையில் தாக்கியதில் உயிரிழந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg8dny42pgo
  25. அண்ணை எனக்கொரு சந்தேகம், வவுனியா சென்று வந்த நம்ம ஊரவர்கள் எல்லோரும் சலக்கடுப்புக்கு ஏற்பட்டதாக கூறுவார்கள், அது ஏன்? கொதித்து ஆறிய நீரைப்பருகினால் வருவதில்லையாம். நன்றி அண்ணை. 2015 முன்பே மக்கள் குடிநீர் அள்ளும் கிணறுகளில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் ஈகோலி அளவு கூடுதலாக இருப்பதால் அடிக்கடி குளோரின் கலப்பார்கள். எதனால் ஈகோலி அளவு கூடுதலாக இருக்கிறது என வினவியபோது சுண்ணக்கற்பாறைகளூடாக கசிந்து கிணற்று நீரை அடைவதாகவும் யாழில் உள்ள எந்த கிணறும் தப்பவில்லை என்றும் கூறினார்கள். முதல் இரண்டும் ஏற்றுக்கொள்ளத்தக்கது, கல்சியச் செறிவு யாழ்ப்பாணத்தவர்களுக்கு பழகிய ஒன்றே. மலசலக்கூட குழிகள் மண்ணுக்குள் கலக்கும் வகையிலேயே உள்ளன. இப்போது இறுக்கமான சட்டம் இருந்தாலும் பொதுச்சுகாதார பரிசோதகர் பரிசோதித்து சென்றபின் கிடங்கின் உள்ளே உடைக்கிறார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.