Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    18750
  • Joined

  • Last visited

  • Days Won

    12

Everything posted by ஏராளன்

  1. இஸ்ரேலிய படையினரின் தவறுதலான தாக்குதல் - மூன்று பணயக்கைதிகள் பலி Published By: RAJEEBAN 16 DEC, 2023 | 09:52 AM காசாவில் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின் போது ஹமாசிடம் பணயக் கைதிகளாகயிருந்த மூவரை தவறுதலாக சுட்டுக்கொன்றுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. யொட்டாம் ஹைம், சமெர் தலக்கா, அலோன் சர்மிஸ் என்ற மூன்று பணயக்கைதிகளையே தவறுதலாக சுட்டுக்கொன்றுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. காசாவின் வடபகுதியில் நடவடிக்கையில் ஈடுபட்ட இஸ்ரேலிய படையினரால் இவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஆழ்ந்த கவலையையும் மனவேதனையையும் வெளியிட்டுள்ள இஸ்ரேல் விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட மூவரின் உடல்களையும் இஸ்ரேலிற்கு கொண்டுவந்துள்ளதாக இஸ்ரேலிய படையினர் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/171802
  2. சுவாதி கொலையும் ராம்குமார் தற்கொலையும்: சுவாதியை அடித்த ஆண் நண்பர் யார்? தீராத சந்தேகங்கள் பட மூலாதாரம்,PTI 53 நிமிடங்களுக்கு முன்னர் நாள் - ஜூன் 24, 2016 நேரம் - காலை 6.50 மணி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் எப்போதும் போல பரபரப்பாக இருந்தது. செங்கல்பட்டு ரயிலுக்காக நடைபாதையில் சுமார் 60 பேர் காத்திருந்தனர். ரயில் வரும் சில நிமிடங்களுக்கு முன்னர், யாரோ ஒருவர் ஒரு பெண்ணை அரிவாளால் வெட்டும் சத்தத்தையும், அதனால் அலறும் பெண்னின் குரலையும் கேட்டு, ரயில் நிலையமே ஒரு நிமிடம் நிசப்தமானது. அடுத்த மூன்று நிமிடங்களில், அந்தப் பெண் துடிதுடித்து இறந்தார். இப்படித்தான் மென்பொறியாளர் சுவாதி கொலையை நேரில் பார்த்தவர்களில் ஒருவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வாக்குமூலம் சுவாதி கொலை தொடர்பான குற்றப்பத்திரிகையில் பதிவு செய்தது காவல்துறை. “ஆனால், கொலையை பார்த்த யாரும் அவருக்கு அருகில் செல்லவில்லை. இரண்டு பேர் மட்டும் கொலையாளியை துரத்திப் பிடிக்க முயன்றனர். ஆனால், கொலையாளி ரயில்வே தண்டவாளத்தில் செங்கல்பட்டு ரயில் வந்து கொண்டிருந்த போதும், அதில் இறங்கி, சுவர் ஏறி குதித்து தப்பிவிட்டார். ரயிலுக்காக காத்திருந்த அனைவரும், நடைமேடைக்கு வந்த செங்கல்பட்டு ரயிலில் ஏறி சென்றுவிட்டோம்,” என தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார் ராஜராஜன்*(பெயர் மாற்றப்பட்டுள்ளது) சுவாதியின் கொலை நடந்தும், அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் என்ற பொறியியல் பட்டதாரி 87 நாட்களுக்குப் பிறகு சிறையில் தற்கொலை செய்து கொண்டும், சுமார் ஏழு ஆண்டுகள் ஆனாலும், இன்று வரையிலும் இருவரின் இறப்பிலும் மர்மம் நீடித்து வருகிறது. இருவர் இறப்பிலும் இருக்கும் மர்மங்கள் என்ன? எழும் கேள்விகள் என்ன? இரண்டு வழக்குகளின் தற்போதைய நிலை என்ன? எட்டு நாட்களில் கைது செய்யப்பட்ட ராம்குமார் பட மூலாதாரம்,RPF படக்குறிப்பு, காவல்துறை வெளியிட்ட சிசிடிவி காட்சி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட பின், முதற்கட்டமாக இந்த வழக்கை ரயில்வே காவல்துறையினர் விசாரித்து வந்தனர். பின், வழக்கை விசாரிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களால், இந்த வழக்கு தமிழ்நாடு காவல்துறையின் வசமே வந்தது. வழக்கு விசாரணையை துரிதப்படுத்திய தமிழ்நாடு காவல்துறை, கொலையாளி தப்பியோடிய வழியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வெளியிட்டது. அந்தக் காட்சிகளில், முதுகில் பையை மாட்டிக்கொண்டு செல்லும் ஒரு இளைஞர் தான் கொலையாளி என அப்போதைய பெருநகர சென்னை போலீஸ் கமிஷ்னர் அறிவித்தார். சம்பவம் நடந்த எட்டாவது நாள் இரவில், சுவாதியை கொலை செய்த நபர் திருநெல்வேலி மாவட்டத்தில் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார் என்ற செய்தி வந்தது. கைது செய்யப்பட்ட நபரின் பெயர் ராம்குமார் என்றும், அவர் கொலை செய்துவிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் இருந்தார் என்றும், அவரை கைது செய்ய முற்படும்போது, அவர் தற்கொலைக்கு முயன்றார் என்றும் போலீசார் அப்போது கூறினர். “எனக்கு இப்பவும் அது நன்றாக ஞாபகம் இருக்கிறது. சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் எங்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தனர். எங்கே அவன் எங்கே அவன் என்று தேடிக்கொண்டே உள்ளே சென்றனர். எங்கள் மகனைத்தான் அவர்கள் தேடி வந்தார்கள் என்று தெரியவில்லை. பின், எங்கள் வீட்டின் பின்புறத்தில் இருந்து கழுத்தில் காயத்துடன் அவனை வெளியே இழுத்துச் சென்றனர்,”என அன்று நடந்ததை நினைவு கூர்கிறார் ராம்குமாரின் தந்தை பரமசிவம். ஜுலை 1, 2016 அன்று இரவு கைது செய்யப்பட்ட ராம்குமார், திருநெல்வேலியில் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு, இரவோடு இரவாக அவர் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். “அவனை காயத்தோடு அழைத்துச் செல்வதைப் பார்த்த எனது மகளும், மனைவியும், காவல்துறையின் வாகனத்திலேயே ஏறிச் சென்றனர். ஆனால், அவர்களையும் பார்க்கவிடாமல், மருத்துவமனையிலேயே விட்டு இரவோடு இரவாக அவனை சென்னை கொண்டு சென்றனர். பின், பேருந்துக்கு கூட காசில்லாமல், என் மனைவியும், மகளும் அங்கிருந்தவர்களிடம் பணத்தைப் பெற்று ஊர் வந்து சேர்ந்தனர்,” என்கிறார் பரமசிவம். கைதுக்கு பின் என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES கைது செய்யப்பட்ட ராம்குமார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது, அடுத்த 10 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். ஆனால், ராம்குமார் இறக்கும் வரையில் எந்தக் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை. கொலை வழக்கில் சிறையில் இருந்த ராம்குமார், 90 நாட்களுக்குள் காவல்துறையினர் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாத பட்சத்தில், அவர் ஜாமின் பெறுவதற்கு தகுதியை பெறவிருந்தார். இந்த நிலையில் தான், சரியாக 87-வது நாளில், செப்டம்பர் 18, 2016ல் ராம்குமார் சிறையில் மின் வயரைக்கடித்து தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் அறிவித்தனர். இந்த வழக்கை ஆரம்பத்தில் இருந்து கவனித்து வருபவரும், ராம்குமாரின் குடும்பத்தினருக்கு உதவி வருபவருமான திலீபன், “ராம்குமார் தான் இந்த கொலையை செய்தார் என்பதற்கு நிச்சயமான இந்த ஆதாரமும் இல்லை. ரயில் நிலையத்தில் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடமும் நான் விசாரித்துவிட்டேன். யாரும் கொலை செய்தது ராம்குமார் தான் என அடையாளம் காட்டவில்லை. ஏன், குற்றப்பத்திரிகையில் கூட, ராம்குமார் கொலை செய்ததை பார்த்தேன் என உறுதிப்பட யாரும் கூறவில்லை,” என்கிறார். இதனால், தான் ராம்குமார் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாகக் கூறுகிறார் திலீபன். ஆனால், சுவாதி கொலை வழக்கை அப்போது விசாரித்தவர்களில் ஒருவரான பெயர் வெளியிட விரும்பாத ஒரு மூத்த காவல்துறை, வழக்கில் முறையான ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளின் அடிப்படையிலேயே ராம்குமார் கைது செய்யப்பட்டதாகக் கூறினார். மேலும், வழக்கில் எழும் சந்தேகங்கள் குறித்து கேட்டபோது, இதற்கு மேல் அந்த வழக்கு குறித்து பேச முடியாது என்று கூறிவிட்டார். சுவாதியை அடித்த ஆண் நண்பர் யார்? ராம் குமார் தரப்பின் தீராத சந்தேகங்கள் பட மூலாதாரம்,SWATHI/FB இந்த வழக்கை நடத்தி வரும் வழக்கறிஞர் ராம்ராஜ், சுவாதி கொலை தொடர்பாக பல சந்தேகங்களை எழுப்பியுள்ளார். “சுவாதி கொலை குறித்த சம்பவங்களை முழுமையாக ஆராயாமல், ராம்குமார் தான் கொலை செய்தார் என்ற முடிவுக்கு வர முடியாது. நாங்கள் விசாரித்த வரை, சுவாதி பணியாற்றிய இடத்தில் இருக்கும் ஒருவருக்கு ஹவாலா பணப் பரிமாற்றம் செய்யும் நபர்களுடன் தொடர்பு இருந்துள்ளது. அவர்கள் சுவாதியை பயன்படுத்தி சில பணப் பரிமாற்றங்கள் செய்துள்ளனர். அதுதொடர்பாக சுவாதியிடம் முக்கிய ஆவணங்கள் இருந்திருக்க வாய்ப்புள்ளது. அதனாலே அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம்,” என குற்றம்சாட்டுகிறார். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டபோது, இதில் உண்மையில்லை என்றனர் வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரிகள். “இதைத் தவிர, சுவாதிக்கு ஒரு இஸ்லாமிய ஆண் நண்பர் இருக்கிறார். அவருடனும் சுவாதிக்கு அவ்வப்போது சண்டை ஏற்படுவதுண்டு. இந்த ஆண் நண்பருக்கு அவரது குடும்பத்திலும் எதிர்ப்பு இருந்து வந்துள்ளது. ஆனால், இந்த ஆண் நண்பர் பற்றி யாரும் பேசவே இல்லை,” என்கிறார் ராம்ராஜ். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலையை நேரில் பார்த்தவர்களும் சுவாதிக்கும் ஒரு ஆண் நண்பருக்கும் அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்தது குறித்து போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளனர். “சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன் நல்ல சிவப்பு நிறத்தில் ஒரு ஆண், சுவாதியை அடிப்பதை பார்த்தோம். ஆனால், சுவாதி அவரை தடுக்கவும் இல்லை, சண்டையிடவும் இல்லை. அதிலிருந்து அவர்கள் இருவரும் முன்பிருந்தே நண்பர்களாக இருக்கும் என யாரும் எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை,” என்று கூறியுள்ளார் ராஜராஜன். மேலும், “சுவாதியை அடித்த நபரும் கொலை செய்த நபரும் ஒரே ஆள் இல்லை. இருவரும் வேறு வேறு நபர்கள். சுவாதியை அடித்தவர் வெள்ளை நிறத்தில் இருப்பார். கொலை செய்தவர், மாநிறமாக இருப்பார். இருவரும் ஒரே ஆள் இல்லை என்பதை மட்டும் நிச்சயமாகக் கூற முடியும்,” என்றார் ராஜராஜன். அந்த ஆண் நண்பரிடம் விசாரணை நடத்தியதாகவும், கொலை நடந்த போது, அவர் சம்பவ இடத்தில் இல்லை என்றும் சுவாதி கொலை வழக்கை விசாரித்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ராம்குமார் தற்கொலையில் என்ன சந்தேகம்? ராம்குமார் சிறையில் தற்கொலை செய்துகொண்டார் என செப்டம்பர் 18, 2016ல் காவல்துறை அறிவித்தது. தொடர்ந்து, அடுத்த இரண்டே நாட்களில், தற்கொலையில் சந்தேகம் இருப்பதாகவும், பிரேதப் பரிசோதனையை முறையாக நடத்த வேண்டும் என்றும், தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவர் உடன் இருக்க வேண்டும் என்றும் ராம்குமார் தரப்பு வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், எய்ம்ஸ் மருத்துவர்கள் முன்னிலையில் பிரேதப்பரிசோதனை செய்ய உத்தவிட்டனர். அதன் அடிப்படையில், அக்டோபர் 1 ஆம் தேதி, எய்ம்ஸ் மருத்துவர்கள் முன்னிலையில், பிரேதப் பரிசோதனை நடைபெற்று, அக்டோபர் 3 ஆம் தேதி ராம்குமாரின் உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. இதற்கு பிறகு, ராம்குமாரின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, ராம்குமார் தரப்பினர் சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தை நாடினர். ராம்குமாரின் தந்தை பரமசிவத்தின் புகாரைப் பெற்று, தாமாக முன்வந்த இந்த வழக்கை விசாரித்து வந்தது மாநில மனித உரிமைகள் ஆணையம். கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கு விசாரணையில், பிரேதப் பரிசோனை அறிக்கையின் அடிப்படையில் சில கேள்விகள் எழுந்துள்ளன. “மனித உரிமை ஆணைய விசாரணையின்போது, ராம்குமார் மின்சாரம் பாயும் வயரினை கடித்திருந்தால், அவரது உதடுகளில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கும், ஆனால், அப்படியான காயங்கள் எதுவும் இல்லை, அதேபோல, மின்சாரம் உள்ளே பாய்ந்திருந்தால், உடலின் மற்ற திசுக்களும் பாதிக்கப்பட்டிருக்கும். ஆனால், ராம்குமாரின் உடலின் மூளை திசு, இதய திசுக்கள், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், மேல் உதடு, கீழ் உதடு, சிறுநீரகம் உள்ளிட்டவை நல்ல நிலையில் இருப்பதாக பிரேதப்பரிசோதனை செய்த மருத்துவர்களும், மேற்பார்வை செய்த எய்ம்ஸ் மருத்துவர்களும் அறிக்கை அளித்துள்ளனர்,”என்கிறார் ராம்ராஜ். மனித உரிமை ஆணைய விசாரணையும் இடைக்கால தடையும் பட மூலாதாரம்,PTI இதற்கிடையே, அப்போதைய சிறை கண்காணிப்பாளர் (தற்போது ஓய்வு பெற்றுள்ள) அன்பழகனும், 2021ல் மனித உரிமை ஆணையத்தின் முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே, அவர் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை ஆணையையும் பெற்றார். இதற்கிடையே, அக்டோர், 2022ல் ராம்குமாரின் குடும்பத்தினருக்கு ரூ 10 லட்சம் இழப்பீடு வழங்குமாறு மனித உரிமைகள் ஆணையம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. அந்த உத்தரவில், மாநில அரசு ஒரு சிறைவாசியை பாதுகாக்கும் பொறுப்பில் இருந்து தவறிவிட்டதாகவும், அது மனித உரிமை மீறல் என்றும் குறிப்பிட்டிருந்தது. மேலும், ராம்குமார் இறப்பு தொடர்பாக சுதந்திரமான ஒரு விசாரணைக் குழுவை அமைத்து விசாரிக்கவும் மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரைந்துள்ளது. இந்த வழக்கு குறித்து அன்பழகனிடம் கேட்டபோது, வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் கருத்துக்கூற முடியாது என்றார். ஆனால், இந்த வழக்கை நடத்தி, சுவாதிக்கு என்ன நடந்தது எனத் தெரிந்தால் மட்டுமே தங்களால் நிம்மதியாக இருக்க முடியும் என்கின்றனர் ராம்குமாரின் குடும்பத்தினர். “எங்களுக்கு ராம்குமார் தற்கொலைக்கு நீதியைப் பெறுவதைவிட, சுவாதிக்கு நீதி பெறுவது தான் முக்கியம். அந்த காரணத்தை கண்டுபிடித்தால்தான், ராம்குமார் தற்கொலை குறித்த விஷயங்கள் வெளிவரும். ராம்குமார் இறந்தும் நாங்கள் குற்றவுணர்வுடனே வாழ்ந்து வருகிறோம். விரைவில், உண்மைகள் வெளிவரும் என நம்புகிறோம்,” என்றார் பரமசிவம். https://www.bbc.com/tamil/articles/c3gy196x024o
  3. Published By: DIGITAL DESK 3 16 DEC, 2023 | 10:08 AM மட்டக்களப்பு மேச்சல் தரை பகுதியான மயிலத்தமடு பிரதேசத்துக்கு பண்ணையாளர் சகிதம் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் உட்பட்ட குழுவினரை நேற்று வெள்ளிக்கிழமை (15) அம்பிட்டிய சுமனரட்ண தேரர் சிலருடன் சென்று வம்பு இழுத்து கலகம் ஏற்படுத்த முயற்சித்த நிலையில் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. குறித்த மேச்சல் தரைப்பகுதியில் தொடர்ச்சியாக கால்நடை பண்ணையாளர்களின் கால்நடைகள் தினம் தினம் சட்டவிரோதமாக குடியேறி பயிர் செய்கை செய்துவரும் சிங்களவர்களால் துப்பாக்கியால் சுட்டும் வெங்காய வெடிவைத்தும் வாளால் வெட்டியும் கொன்றுவருகின்றனர். இந்நிலையில், அங்கு சென்று நிலமையை பார்வையிடுவதற்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணிகட்சி தலைவரும் நா.உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், கட்சி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் உட்பட்ட கட்சி ஆதரவாளர்கள் பண்ணையாளர் சகிதம் பொலிஸாருக்கு அறிவித்துவிட்டு இரு வாகனங்களில் சம்பவதினமான நேற்று மேச்சல் தரை பகுதிக்கு சென்றனர். அப்போது மயிலத்தமடு பொலிஸ் காவல் அரண்பகுதியில் வீதியின் குறுக்கே வீதி தடைகளை போட்டு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருந்த நிலையில், அங்கு சென்ற கஜேந்திரகுமார் குழுவின் வாகனங்களை பொலிஸார் மறித்து ஜனாதிபதி செயலாளரின் எழுத்து மூல கடிதம் இல்லாமல் உட் செல்ல அனுமதி கிடையாது என தெரிவித்த நிலையில் ஜனாதிபதி செயலாளருடன் கஜேந்திரகுமார் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு அம்பிட்டிய சுமணரட்ன தேரர் வாகனம் ஒன்றில் சிலருடன் வந்து தூசன வார்த்தைகள் பேசி யாழ்பாணத்தில் இருந்து இங்கு என்ன அலுவல், பிள்ளையான், வியாழேந்திரன் இருக்கின்றனர். அவர்கள் நல்லவர்கள். கஜேந்திரன், சுமத்திரன்,சாணக்கியன், இனவாதம் பேசிவருவதாக சத்தமிட்டு ஏசியவாறு அடாவடியில் ஈடுபட்டதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. அவர் தொடர்ந்து வாகனத்தில் இருந்த கஜேந்திரகுமாரை தம்பி வெளியேவா என வம்புக்கு இழுத்து வசைபாடினார். தேரரின் அடாவடியை பொலிஸார் தடுத்து நிறுத்தாது அசமந்த போக்கில் இருந்ததுடன், கஜேந்திரகுமாரும் தேரரின் அடாவடிக்கு கவனம் செலுத்தாது சுமார் ஒருமணி நேரம் கொட்டும் மழையில் நின்று கொண்டு ஜனாதிபதி செயலாளருடன் உரையாடிய பின்னர் அனுமதி கிடைக்காதலால் திரும்பி சென்றார். https://www.virakesari.lk/article/171803
  4. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 15 டிசம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் ஐபிஎஸ் அதிகாரி ஜி. சம்பத் குமாருக்கு 15 நாள் சிறை தண்டனை விதித்துள்ளது. தோனி தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தையும் சென்னை உயர் நீதிமன்றத்தையும் இழிவுபடுத்தும் வகையில் சம்பத் குமார் கருத்துகளைத் தெரிவித்ததாகக் குற்றம் சாட்டியிருந்தார். நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த வழக்கில், சம்பத் குமாருக்கு விதிக்கப்பட்ட தண்டனை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவகாசம் கிடைத்துள்ளது. மேல் முறையீட்டுக்கு சம்பத் குமார் கோரிக்கை வைக்கவில்லை என்றாலும், தண்டனை நிறுத்தப்படுவதற்கான முடிவை நீதிமன்றமே எடுத்தது. கடந்த 2014ஆம் ஆண்டு தோனி, சம்பத் குமார் மீது 100 கோடி ரூபாய் மானநஷ்ட வழக்கு தொடுத்தார். ஐபிஎல் சூதாட்ட ஊழலில் தோனி தொடர்புடையவர் என்று குற்றம் சாட்டியதற்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாகத் தனது கூற்றை வழங்கியிருந்த சம்பத் குமார், நீதிமன்றம் சட்டத்தின் பாதையிலிருந்து விலகுவதாகக் குறிப்பிட்டிருந்தார். ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி முட்கல் கமிட்டி, அறிக்கையை சரியாகக் கையாளவில்லை என்றும் தெரிவித்திருந்த சம்பத் குமார், உச்சநீதிமன்றம் சில ஆவணங்களை சிபிஐக்கு வழங்காதது குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார். தோனி தனது மனுவில், சம்பத் குமாரின் இந்தக் கருத்துகள் நீதித்துறை மீது இழிவானவை மற்றும் அவமதிப்பானவை என்றும், அவரது கருத்துகளின் மூலம் நீதித்துறையின் நேர்மையைக் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். மூத்த வழக்கறிஞர் பி.ஆர்.ராமன் மூலம் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், சம்பத் குமாரின் கருத்துகளுக்காக கடுமையான நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. வழக்கை ஆய்வு செய்த தமிழ்நாடு தலைமை வழக்கறிஞர் ஆர். சுண்முகசுந்தரம், தோனிக்கு அவமதிப்பு வழக்கில் மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கினார். அந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. தோனி தொடுத்த ரூ.100 கோடி மான நஷ்ட வழக்கு பட மூலாதாரம்,GETTY IMAGES ஐ பி எல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடந்திருப்பதாக 2013ஆம் ஆண்டு, குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. இது தொடர்பாக டெல்லி காவல்துறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடிய ஸ்ரீசாந்த், அஜித் சந்திலா, அன்கீத் சவன் ஆகியோரைக் கைது செய்தது. அதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் பலர் சம்பந்தப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்து, நீதிமன்ற வழக்குகள் பலவும் நடந்தன. ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரிக்க, நீதிபதி முகுல் முட்கல் கமிட்டியை உச்சநீதிமன்றம் 2014ஆம் ஆண்டு மே மாதம் நியமித்தது. இந்திய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் என்.ஸ்ரீநிவாசன், அவரது மருமகன் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் இணை உரிமையாளர் ராஜ் குந்த்ரா மற்றும் 12 வீரர்களின் பங்கு குறித்து விசாரிக்க இந்த கமிட்டி நியமிக்கப்பட்டது. இந்த கமிட்டியின் அறிக்கை 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த விவகாரத்தில் தனது மதிப்புக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக, ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் மற்றும் இந்த அறிக்கை குறித்து விவாதம் நடத்திய ஊடகத்தின் மீதும் தோனி ரூ.100 கோடி ரூபாய் மானநஷ்ட வழக்கை 2014ஆம் ஆண்டு தொடுத்திருந்தார். இதற்குப் பதிலளித்த அந்த ஊடகம், கமிட்டியின் முன்பு சம்பத் குமார் கொடுத்த அறிக்கையைத்தான் தாங்கள் செய்தியாக வெளியிட்டதாகத் தெரிவித்தனர். தேசிய அளவில் முக்கியமான விவகாரம் ஒன்று ஊடகங்கள் பேசுவதைத் தடுக்க தோனி நினைக்கிறார் என்றும் கூறியிருந்தது. தோனி வழக்கை தள்ளுபடி செய்ய நீதிமன்றம் மறுப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES தோனி தொடுத்த மானநஷ்ட வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். சம்பத் குமார் க்யூ பிரிவின் காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது, ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட அதிகாரி என்ற முறையில், கமிட்டியின் முன்பு சமர்ப்பித்த அறிக்கையை வைத்துக்கொண்டு அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்வது சரியல்ல என்று கூறி இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் வழக்கின் விசாரணை தொடங்கவுள்ள நேரத்தில், தோனி தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய முடியாது என்று 2021ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் கூறியிருந்தது. எனவே, உச்ச நீதிமன்றத்தில், சம்பத் குமார் இந்த விவகாரம் குறித்து எழுத்துப்பூர்வமான மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் சம்பத் குமார் கருத்துகளைத் தெரிவித்திருந்தார் என்று அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை 2022ஆம் ஆண்டு தொடர்ந்தார் தோனி. தோனி தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அவர் தனது மனுவில், 2014ஆம் ஆண்டு தாம் தொடுத்த வழக்குக்கு 2021ஆம் ஆண்டுதான் ஐபிஎஸ் அதிகாரி பதிலளிக்க விரும்பியுள்ளார் என்றும், அவரது கூற்றைப் படிக்கும்போது, மிக அதிர்ச்சிகரமான வகையில், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். “உச்சநீதிமன்றம் நீதியின் பாதையிலிருந்து தனது கவனத்தைத் திருப்பிவிட்டதாக சம்பத் குமார் குறிப்பிட்டுள்ளார்” என்று தோனி தனது மனுவில் தெரிவித்திருந்தார். மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை தோனி தொடர்வதற்குக் காரணமே வாய்ப்பூட்டு உத்தரவு பெறுவதற்காக என்றும், தோனி நியமித்திருக்கும் வழக்கறிஞரை பார்க்கும்போதே இந்த வழக்கின் பின்னால் உள்ள திட்டம் தெரிகிறது எனவும் குமார் தெரிவித்திருப்பதாக தோனி தனது மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனுவை எடுத்துக்கொண்ட நீதிமன்றம், ஐபிஎஸ் அதிகாரியின் கூற்று நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் கூட்டாளியாக இருக்கிறது எனக் கூறுவது போல் உள்ளது என்று தெரிவித்தது. எனவே தோனி தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க உத்தவிட்டது. இந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், நீதிமன்ற அவமதிப்புக்காக ஐபிஎஸ் அதிகாரி ஜி.சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. https://www.bbc.com/tamil/articles/cpexwzxkgkqo
  5. பாலியாறு பெருக்கெடுப்பு ! மன்னாரில் பல பகுதிகள் நீரில் மூழ்கின 16 DEC, 2023 | 10:43 AM மன்னாரில் வியாழக்கிழமை (14) மதியம் முதல் நேற்று வெள்ளிக்கிழமை (15) அதிகாலை வரை பெய்த கடும் மழை காரணமாக கட்டுக்கரை குளம் வான் பாய ஆரம்பித்துள்ளதுடன் மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதி உள்ள பாலியாறு பெருக்கெடுத்துள்ளது. குறிப்பாக பாலியாறு, சிப்பியாறு, முழுவதும் நிறைந்து வீதிக்கு மேலாக நீர் பாய்ந்து வருவதுடன் அருகில் உள்ள கிராமங்கள் முழுவதும் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. மேலும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆட்காட்டிவெளி மற்றும் மாந்தை கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள வயல் நிலங்கள் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அதே நேரம் மன்னார் பிரதேச செயலக பிரிவில் கடும் மழை காரணமாக ஜீவபுரம், ஜிம்ரோன் நகர், சாந்திபுரம் போன்ற கிராமங்களும் தீவுக்கு வெளியில் தேத்தாவட, தேவன் பிட்டி, மூன்றாம் பிட்டி போன்ற கிராமங்களும் நீரில் மூழ்கியுள்ளது. தொடர்ச்சியாக மழையுடன் கூடிய காலநிலை நிலவும் பட்சத்தில் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம் பெயர வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/171806
  6. மீண்டும் அதே வாளி! பாதிக்கப்பட்ட மக்களை கொண்டே எண்ணெய் அகற்றம் - எண்ணூரில் என்ன நடக்கிறது? படக்குறிப்பு, தினக்கூலி என்ற அடிப்படையில் இந்த பகுதி மக்கள் எண்ணெயை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் கட்டுரை தகவல் எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை இயல்பு நிலைக்கு திரும்பிவிட்ட போதிலும் எண்ணூர் பகுதி மக்களின் வாழ்க்கை 10 நாட்களுக்கும் மேலாக ஸ்தம்பித்துள்ளது. கடந்த 5ம் தேதி சிபிசிஎல் எண்ணெய் நிறுவனத்தில் இருந்து கசிந்ததாக கூறப்படும் எண்ணெய் கழிவுகள் பக்கிங்காம் கால்வாயில் கலந்து எண்ணூர் முகத்துவாரம் தொடங்கி காசிமேடு மீன்பிடி துறைமுகம் வரை பரவியுள்ளதாக கூறுகின்றனர் இப்பகுதி மக்கள். ஆனால், எண்ணெய் தங்கள் நிறுவனத்தில் இருந்து கசியவில்லை என்று மறுக்கிறது சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன். இந்நிலையில் ஆற்றுப்பகுதியில் உள்ள எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் இதே பகுதியை சேர்ந்த 8 மீனவ கிராம மக்களே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாளி மற்றும் பேப்பர் கொண்டு தினசரி நூறு படகுகள் மூலமாக இந்த மீனவர்கள் எண்ணெய் கழிவுகளை அகற்றி வருகின்றனர். இதில் 17, 18 வயதை சேர்ந்த இந்த பகுதி கல்லூரி மாணவர்களும் அடங்குவர். இந்த எண்ணெய் கழிவுகள் மீனவ கிராமங்களை தாண்டி ஆற்றை சார்ந்து வாழாத மக்களின் குடியிருப்புகளையும் கூட கடுமையாக பாதித்துள்ளது. இதன் தாக்கம் எந்தளவு எண்ணூர் சுற்றுவட்டார பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் இதன் உடனடி மற்றும் நீண்டகால தாக்கங்கள் என்ன என்பது குறித்தும் பிபிசி கள ஆய்வு செய்துள்ளது. படக்குறிப்பு, எண்ணூரில் 8 மீனவ கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. எண்ணூரில் கடும் பாதிப்பு கடந்த 4ம் தேதி எர்ணாவூர் சத்தியமூர்த்தி நகர், ஜோதிநகர் பகுதிகளில் உள்ள பக்கிங்காம் கால்வாய் வழியாக வெள்ள நீரோடு சேர்த்து எண்ணெய் கழிவுகள் எண்ணூர் சுற்றுவட்டார பகுதிகளுக்குள் நுழைந்துள்ளது. இதில் ஆற்றோர பகுதிகளான காட்டுக்குப்பம், சிவன்படை வீதி, தாளான்குப்பம், முகத்துவாரகுப்பம், எண்ணூர்குப்பம், நெட்டுக்குப்பம், சின்னக்குப்பம், பெரியக்குப்பம் ஆகிய 8 கிராமங்களின் கரை வரை எண்ணெய் பரவியுள்ளது. இது தவிர பிருந்தாவன் நகர், ஆதிதிராவிடர் காலனி, திருவீதியம்மன் கோவில், கிரிஜா நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் எண்ணெய் புகுந்துள்ளது. இதனால் பொருளாதார ரீதியாகவும், உடல் ரீதியாகவும் இந்த பகுதி மக்கள் கடுமையான விளைவுகளை சந்தித்து வருகின்றனர். படக்குறிப்பு, எண்ணெய் கழிவுகளை அப்புறப்படுத்த 8 மீனவ கிராம மக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். எண்ணெய் அகற்றும் பணியில் மாணவர்கள் எண்ணெய் கழிவுகள் ஆற்றில் கலந்து முதல் 5 நாட்கள் யாரும் வரவில்லையென்றும் அதன் பின்னரே அரசு மீட்பு பணிகள் உதவிக்கு வந்ததாகவும் கூறுகின்றனர் இந்த பகுதி மக்கள். எண்ணூர் முகத்துவாரம் முதல் 20 சதுர கிலோமீட்டர் வரை பரவியிருப்பதாக கூறப்படும் எண்ணெய் கழிவுகளை அப்புறப்படுத்த 8 மீனவ கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளையே பயன்படுத்தி வருகிறது தமிழ்நாடு அரசு. இதற்காக ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தங்கள் மீனவர்களை படகுகளுடன் அனுப்பியுள்ளதாகவும், எந்த நவீன இயந்திரங்களும் வரவில்லை. கையால் சிறிய வாளியைக் கொண்டு அள்ளியே எண்ணெய் கழிவுகளை அப்புறப்படுத்தி வருவதாகவும் கூறுகிறார் ஊர் தலைவர் குமாரவேல். இதில் இதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்களும் அடக்கம். 13ம் தேதி எண்ணூர் முகத்துவார பகுதிக்கு சென்ற போது அங்கிருக்கும் சிதிலமடைந்த கப்பல்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார் தியாகராய கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு படிக்கும் 17 வயது மாணவர் அஜய். அவரோடு அவர் வயதை ஒத்த மாணவர்கள் சிலரும், படித்து முடித்த சில இளைஞர்களும், மற்ற மீனவர்களும் அந்த பணியில் ஈடுபட்டிருந்தனர். வாளியில் எண்ணெயை அள்ளும் மீனவர்கள் தினக்கூலி என்ற அடிப்படையில் இந்த பகுதி மக்கள் எண்ணெயை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். “முதலில் சிபிசிஎல் கொடுத்த பஞ்சு போன்ற காகிதத்தை எண்ணெயில் முக்கி எடுத்து 220 லிட்டர் பேரல் ட்ரம்மில் பிழிய சொன்னதாக கூறுகிறார்” மீனவர் ஆறுமுகம். பின்னர் இது சாத்தியமற்ற ஒன்று என்று அதிகாரிகளிடம் தெரிவித்த பிறகே இந்த மக்களுக்கு சிறிய வாளி வழங்கப்பட்டுள்ளது. “ஒவ்வொரு படகிற்கும் மூன்று பணியாளர்கள் இருப்பார்கள். தினசரி ஒரு படகு ஒரு ட்ரம்மை நிரப்ப வேண்டும். இதற்காக குறைந்தது 6 மணி நேரங்களுக்கும் மேலாக இந்த மீனவர்கள் குனிந்து அந்த எண்ணெயை அள்ளி ட்ரம்மில் நிரப்ப வேண்டும்” என்று கூறுகிறார் அவர். படக்குறிப்பு, ஆற்றை சார்ந்து வாழாத மக்களின் குடியிருப்புக்குள்ளும் எண்ணெய் புகுந்துள்ளது குடியிருப்புகளுக்குள் புகுந்த எண்ணெய் ஆற்றில் கலந்த எண்ணெய் கழிவுகளை தாண்டி பக்கிங்காம் கால்வாய் வழியாக ஆற்றை சார்ந்து வாழாத மக்களின் குடியிருப்புக்குள்ளும் எண்ணெய் புகுந்துள்ளது. இதனால், பிருந்தாவன் நகர், ஆதிதிராவிடர் காலனி, திருவீதியம்மன் கோவில், கிரிஜா நகர் பகுதிகளில் நீர் ஆதாரமாக உள்ள ஒட்டுமொத்த கிணறுகளிலும் எண்ணெய் கலந்துள்ளது. மேலும், வீடுகளுக்குள்ளும் எண்ணெய் கழிவுகள் புகுந்ததால் கழிவறை, பைப் இணைப்புகள் என அடிமட்டம் வரை பரவியுள்ளது. இது இன்னும் என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது யாருக்கும் தெரியாத நிலையே நிலவுகிறது. இந்த மக்களும் மீனவ மக்களை போலவே உடல் மற்றும் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்படைந்துள்ளனர். மனிதர்கள் மட்டுமல்ல இந்த எண்ணெய் கசிவினால் மனிதர்கள் மட்டுமல்ல, இந்த பகுதியை சார்ந்து வாழும் பிற உயிரினங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் இதே பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் விஷாந்த். “சுவாசிக்க முடியாமல் மீன்கள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் பலவும் இறந்து விட்டது. இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் நீண்ட காலத்திற்கு பாதிக்கப்பட்டுள்ளது” என்று கூறுகிறார் அவர். படக்குறிப்பு, நுரையீரல் மருத்துவர் திருப்பதி மற்றும் தோல் மருத்துவர் ஷர்மதா நீண்ட நாள் உடல் உபாதைகள் எண்ணெய் கழிவுகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்ததால் அதன் நெடியாலும் மற்றும் உடலில் அதிகம் பட்டதாலும் இப்பகுதி மக்கள் பல்வேறு உடல்நல பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் அந்த எண்ணெயை அகற்றும் பணியில் இந்த மீனவர்களே ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் தோல் நோய்கள், சுவாசக்கோளாறுகள் என பல நோய்களுக்கு ஆளாகியுள்ளதாக கூறியுள்ளனர் அவர்கள். இதுகுறித்து நுரையீரல் மருத்துவர் திருப்பதி கூறும்போது, "இந்த பகுதிகளில் வாழக்கூடிய மக்கள் எண்ணெய் கழிவுகளில் காணப்படும் ஹைட்ரோ கார்பனை சுவாசிப்பதால் அது சுவாசப்பாதையில் பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறுகிறார். இதனால் உடனடி பிரச்சனைகளாக இருமல், காய்ச்சல், சுவாச கோளாறு உள்ளிட்டவை ஏற்படலாம் என்றும், நீண்ட நாள் பிரச்சனைகளாக ஆஸ்துமா மற்றும் அரிதாக புற்றுநோய் கூட ஏற்படலாம்" என்று தெரிவிக்கிறார். மேலும் அடர்த்தி மிகுந்த எண்ணெயில் நேரடியாக நமது சருமம் படும்போது அதில் உள்ள வேதியியல் கூறுகள் பூஞ்சை தொற்று, படர் தாமரை, தேமல், அலர்ஜி உள்ளிட்ட தோல் பிரச்னைகள் ஏற்படலாம் என்று கூறுகிறார் தோல் மருத்துவர் ஷர்மதா. படக்குறிப்பு, எண்ணெய் கழிவுகளால் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்துவிட்டன. பொருளாதார ரீதியாக இழப்பு எண்ணூர் பகுதியில் உள்ள 8 மீனவ கிராமங்களில் 1000த்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர். தற்போது எண்ணெய் கழிவுகளால் 700க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்துள்ளன. மேலும் டன் கணக்கில் வலைகள் நாசமாகியுள்ளன. இந்நிலையில் ஒவ்வொரு படகையும் முறையாக நவீன முறையில் சுத்தப்படுத்தி மறுகட்டமைப்பு செய்யவே குறைந்தது 50,000 முதல் 1,00,000 ரூபாய் செலவாகும் என்று கூறுகிறார் மீனவர் வெங்கடேசன். “இது மீன்களின் இனப்பெருக்க காலம். எண்ணெய் கழிவுகளால் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்துவிட்டன. மீதமுள்ள மீன்களும் ஆழ்கடலை நோக்கி சென்றுவிட்டன. இதனால் அடுத்த 1 ஆண்டில் தொடங்கி 5 ஆண்டுகள் வரை சாதாரண மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவது கடினம்” என்கிறார் குமாரவேல். அப்படியே ஆழ்கடலுக்குள் சென்று மீன்பிடித்து வந்தாலும் இந்த பகுதியில் இருந்து வரும் மீன்களில் எண்ணெய் கழிவின் பாதிப்பு இருக்கக் கூடும் என்று யாரும் வாங்க முன்வருவதில்லையாம். இது முழுவதுமாக மீனவர்களின் வாழ்வாதாரத்தையே பாதித்துள்ளது. “இப்படி நாங்கள் இயற்கையோடும் போராடுறோம், இது போன்ற செயற்கை விபத்துகளையும் எதிர்கொண்டு வாழ்கிறோம். இதற்கு பதில் அரசே ஒரு பாட்டில் விஷத்தை கொடுத்து விடுங்கள். அதைக் குடித்து நாங்கள் இறந்து விடுகிறோம்" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் குமாரவேல். இது தவிர குடியிருப்புகளுக்குள் சென்றுள்ள எண்ணெய் கழிவு “பல ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வாங்கிய பிரிட்ஜ், வாஷிங் மெஷின், சோஃபா என வீட்டில் இருந்த எல்லா பொருட்களையும் நாசம் செய்து விட்டதாக” கூறுகிறார் காஞ்சனா. மேலும் இந்த பகுதியில் உள்ள மக்களின் பல பொருட்கள் ஒட்டுமொத்தமாக எண்ணெய் கழிவுகள் படிந்து மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் மக்கள் 20 வருடங்கள் பின்னுக்கு இழுக்கப்பட்டுள்ளனர். படக்குறிப்பு, குற்றச்சாட்டை மறுத்துள்ளது சிபிசிஎல் சிபிசிஎல் காரணமா? இந்த எண்ணெய் கசிவு வெள்ள நீரில் கலந்ததற்கு சிபிசிஎல் நிறுவனமே காரணம் என்று எண்ணூர் பகுதி மக்களும் , சூழலியல் ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், ஆரம்பம் முதலே இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது அந்நிறுவனம். இதுகுறித்து பிபிசி தமிழ் அந்நிறுவனத்திடம் கேட்டபோது, தங்கள் நிறுவனத்தில் எந்த விதமான கசிவும் இல்லை என்று பதிலளித்துள்ளது. இந்த பகுதியில் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் உள்ளன, இந்த பிரச்னையில் அவற்றையும் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் எண்ணெய் அப்புறப்படுத்தும் பணியில் தாங்கள் அதிக பங்களிப்பை செலுத்துவதாகவும், மக்களும் மருத்துவ முகாம், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதில் அரசுடன் சேர்ந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளது சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன். படக்குறிப்பு, குறிப்பிட்ட நிறுவனம்தான் இந்த கசிவிற்கு காரணம் என்று அரசு முடிவுக்கு வரவில்லை தமிழ்நாடு அரசு சொல்வது என்ன? இந்த எண்ணெய் கசிவுக்கு சிபிசிஎல் காரணமா? நிவாரணம் சிபிசிஎல் வழங்குமா அல்லது அரசு வழங்குமா என்ற கேள்வியை முன்வைத்த போது, சிபிசிஎல் என்பது வேறு பிரச்னை. இதுவரை குறிப்பிட்ட நிறுவனம்தான் இந்த கசிவிற்கு காரணம் என்று அரசு முடிவுக்கு வரவில்லை என்று கூறியுள்ளார் நிவாரண பணிகளுக்கான சிறப்பு அதிகாரி கந்தசாமி ஐஏஎஸ். மேலும், இந்த பகுதியில் உள்ள நிறுவனங்களிடம் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்கு உதவிகள் கேட்டுள்ளதாகவும், அதில் அதிக பங்களிப்பு சிபிசிஎல் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நிவாரணம் உயர்த்தி வழங்கப்படுமா? வெள்ளம் பாதிக்கப்பட்ட இதர பகுதிகளை விட எண்ணூர் பகுதி மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளனர். இவர்களுக்கு நிவாரணம் அதிகமாக வழங்கப்படுமா? என்ற கேள்விக்கு, இந்த மக்களுக்கு தனி பேக்கேஜ் எனவும், அது அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும் முதற்கட்டமாக இவர்களுக்கு தேவையான உடைகள், அடுப்பு, பாத்திரங்கள் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் கந்தசாமி ஐஏஎஸ். படக்குறிப்பு, இந்த எண்ணெய் கசிவிற்கு சிபிசிஎல் தான் காரணம் யார் பொறுப்பேற்பது? “இந்த எண்ணெய் கசிவிற்கு சிபிசிஎல் தான் காரணம்” என்று உறுதியான குற்றச்சாட்டை முன்வைக்கிறார் சூழலியல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன். ஆனால், அந்த சிபிசிஎல்-லை பொறுப்பேற்க வைக்க வேண்டியது அரசின் கடமை என்று கூறுகிறார் அவர். “ஆறும் கடலும் இணையக்கூடிய இயற்கையான ஆரோக்கியமான பரவல் அமைப்பு இருக்கக்கூடிய இடம்தான் இந்த எண்ணூர். ஆனால், மத்திய, மாநில அரசுகளின் நிறுவனங்கள் இந்த பகுதியை ஏதோ மதிப்பில்லாத பகுதி போல் அழித்து வருகின்றன. அனல் மின் நிலையங்கள், அதன் சாம்பல் குட்டைகள், துறைமுகம் அதன் கட்டுமானங்கள் மற்றும் சிவப்பு பட்டியலில் இருக்கும் 34 நிறுவனங்களின் கழிவுகள், பக்கிங்காம் கால்வாய் கழிவு என அனைத்தும் இந்த ஆற்றில் கலக்கப்பட்டுள்ளது. 1996இல் இருந்தே இந்த நீரில் சாம்பல் கலப்பது, எண்ணெய் கலப்பது நடந்து வருகிறது. ஆனால் அரசு மற்றும் நீதிமன்றங்களின் கண்களுக்கு இது போன்ற பேரிடர்கள் வரும்போது மட்டுமே இது தெரிகிறது” என்கிறார் நித்தியானந்த் ஜெயராமன். மேலும், “தற்போது சுத்திகரிப்பு பணியில் ஈடுபடும் மக்களுக்கும் இது ஒரு ஆரோக்கிய அழிவுதான். அவர்களுக்கு முறையான முகக்கவசம் இல்லை. நவீன இயந்திரங்கள் பல இருந்த போதும் அவர்கள் வாளி மற்றும் பேப்பர் கொண்டுதான் இந்த எண்ணெய் கசிவுகளை அகற்றி வருகிறார்கள். இந்த எண்ணெய் கழிவில் இருந்து வரும் விஷ வாயுக்களை சுவாசிக்கும் அவர்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தலாம். ஸ்கிம்மர் இயந்திரம் உள்ள போதும் கூட மீனவர்கள் வாளியில் அள்ளி எண்ணெயை அகற்றிக் கொண்டிருக்கின்றனர். இது என்னை பொறுத்தவரை நீதிமன்ற கண்காணிப்பில் நடக்கும் குற்றமே” என்கிறார் அவர். நிவாரணம் என்ன? “ஜூலை 2022ல் வெளியான நீதிமன்ற உத்தரவான, இந்த நீர்நிலையை பாதுகாக்கப்பட்டதாக அறிவிக்க வேண்டும். 6 மாதத்திற்குள் இதை சீர்படுத்துவதற்கான விரிவான திட்டத்தை உருவாக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு விரிவான ஆய்வு செய்து நீண்ட கால விளைவுகளை கணக்கில் கொண்டு சுகாதார கண்காணிப்பு, பொருளாதார ரீதியான இழப்பீட்டை வழங்க வேண்டும்” என்று கூறுகிறார் நித்தியானந்த் ஜெயராமன். https://www.bbc.com/tamil/articles/cp6re18gnkro
  7. நிழலி அண்ணைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள், வாழ்க வளத்துடன்.
  8. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் சிங்கம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த இளைஞன் சிங்கம் அடைக்கப்பட்டிருந்த கூண்டுக்கு சென்று செல்ஃபி எடுக்க முற்பட்ட வேளையிலேயே குறித்த இளைஞனை சிங்கம் தாக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 வயதான இளைஞரே இவ்வாறு சிங்கத்தால் தாக்கப்பட்டுள்ளார். https://thinakkural.lk/article/284675
  9. 15 DEC, 2023 | 01:51 PM (எம்.வை.எம்.சியாம்) போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை அடையாளம் காணும் செயல்முறையை நெறிப்படுத்தும் புதிய அமைப்பை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதற்காக அனைத்து பொலிஸ் நிலையங்களையும் இணைக்கும் விசேட தரவு அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புதிய முறையின் கீழ் போதைப்பொருள் குற்றத்துடன் தொடர்புடைய எந்தவொரு நபரின் உள்ளீட்டையும் செயல்படுத்துவதன் மூலம் பொலிஸாரினால் கடந்த கால குற்றவியல் பதிவுகளை மீட்டெடுக்க முடியும். போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான அனைத்து கைதுகளின் விவரங்களும் தரவு அமைப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தரவு அமைப்பை அறிமுகப்படுத்தும் நிகழ்வொன்று பொலிஸ் தலைமையகத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ஆகியோரின் பங்களிப்புடன் இடம்பெற்றது. அதன்போது மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் பிரிவுகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் ஆகியோருக்கு திட்டமிடப்பட்ட விசேட போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கும் செயலமர்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. https://www.virakesari.lk/article/171772
  10. கல்லறைக்கான இடம் தேர்வு செய்து விட்டேன்; அது வாடிகன் அல்ல- போப் பிரான்சிஸ் போப் பிரான்சிஸ் அவருடைய கல்லறையை தேர்வு செய்திருக்கிறார். ஆனால் அது, இதற்கு முன் போப் பதவி வகித்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா அல்ல. 87 வயதுடைய பிரான்சிஸ், ரோம் நகரில் உள்ள சான்டா மரியா மேகியோர் பசிலிக்காவில் என்னுடைய உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என விரும்புகிறேன் என்று அவருடைய பேட்டியில் தெரிவித்திருக்கிறார். இதனால், நூறாண்டுகளுக்கு பின் வாடிகன் நகருக்கு வெளியே அடக்கம் செய்யப்படும் முதல் போப் ஆகிறார். கடந்த 1903-ம் ஆண்டு செயின்ட் பீட்டர்ஸ் தவிர்த்து வேறிடத்தில் அடக்கம் செய்யப்பட்டவர் போப் லியோ 8 ஆவார். அவருடைய உடல் ரோமில் உள்ள செயின்ட் ஜான் பசிலிக்காவில் அடக்கம் செய்யப்பட்டது. போப் ஆவதற்கு முன்பு, ரோம் நகருக்கு பிரான்சிஸ் செல்லும்போது, சான்டா மரியா மேகியோர் பசிலிக்காவுக்கு செல்வது வழக்கம். 2013-ம் ஆண்டு போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும், அறுவை சிகிச்சை செய்த பின்பும் அவர் ரோமிற்கு சென்று பசிலிக்காவில் வழிபட்டிருக்கிறார். இதற்கு முன் வாடிகனில் உள்ள பசிலிக்காவில் 7 போப்புகள் அடக்கம் செய்யப்பட்டு இருக்கின்றனர் என வாடிகனின் அதிகாரப்பூர்வ ஊடக தகவல் தெரிவிக்கின்றது. https://thinakkural.lk/article/284657
  11. இணையத்தில் தகவல்களை தேடுவோரின் முதன்மைத் தேர்வாக கூகுள் தேடுபொறி இருக்கிறது. எந்த விஷயமாக இருந்தாலும் கூகுளில் தேடினால் கிடைக்கும் என்று சொல்லும் அளவுக்கு கூகுள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. இவ்வாறு கூகுள் மூலம் தேடப்படும் விஷயங்களை ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அந்நிறுவனம் பட்டியலிடுகிறது. அவ்வகையில் 2023ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட நிகழ்வுகளை பட்டியலிட்டிருக்கிறது. செய்திகளைப் பொருத்தவரை உலகம் முழுவதும் இப்போது பேசப்படும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பான தேடல் இந்த ஆண்டு முதலிடத்தில் இருக்கிறது. டைட்டானிக் கப்பலை ஆய்வு செய்ய சென்ற நீர்மூழ்கிக் கலன், பெப்ரவரியில் துருக்கி மற்றும் சிரியாவில் பேரழிவுகளை ஏற்படுத்திய நிலநடுக்கம் ஆகிய தேடல்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. பொழுதுபோக்கு குறித்த தேடலில், இந்த ஆண்டு பார்பி திரைப்படம் ஆதிக்கம் செலுத்தியது. அதைத் தொடர்ந்து ஓப்பன்ஹைமர், இந்திய த்ரில்லர் திரைப்படமான ஜவான் ஆகிய படங்கள் உள்ளன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தி லொஸ்ட் ஆஃப் அஸ், வெனஸ்டே மற்றும் ஜின்னி அண்ட் ஜார்ஜியா ஆகியவை உள்ளன. டொப் -10 செய்திகள் இஸ்ரேல் மற்றும் காசாவில் போர் டைட்டானிக் நீர்மூழ்கி துருக்கி நிலநடுக்கம் ஹிலாரி சூறாவளி இடாலியா சூறாவளி லீ சூறாவளி மைனே துப்பாக்கி சூடு நாஷ்வில்லே துப்பாக்கி சூடு சந்திரயான்-3 சூடான் போர் டொப் -10 திரைப்படங்கள் பார்பி ஓப்பன்ஹைமர் ஜவான் சவுண்ட் ஆப் ஃப்ரீடம் ஜான் விக்: சாப்டர் 4 அவதார்: தி வே ஆப் வாட்டர் எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் கடார் 2 கிரீட்-III பதான் டொப் -10 விளையாட்டு பிரபலங்கள் டாமர் ஹேம்லின் (கால்பந்து) கிலியன் மாப்பே (கால்பந்து) டிராவிஸ் கெல்ஸ் (கால்பந்து) ஜா மோரன்ட் (கூடைப்பந்து) ஹாரி கேன் (கால்பந்து) நோவக் ஜோகோவிச் (டென்னிஸ்) கார்லஸ் அல்காரஸ் (டென்னிஸ்) ரச்சின் ரவீந்திரா (கிரிக்கெட்) ஷுப்மன் கில் (கிரிக்கெட்) கைரி இர்வின் (கூடைப்பந்து) டொப் -10 தொலைக்காட்சி நிகழ்ச்சி தி லாஸ்ட் ஆப் அஸ் வெனஸ்டே கின்னி அண்ட் ஜார்ஜியா ஒன் பீஸ் கலைடாஸ்கோப் கிங் ஆப் லேண்ட் டி குளோரி தட் 90s ஷோ தி பால் ஆப் தி ஹவுஸ் ஆப் அஷர் ஷேடோ அண்ட் போன் https://thinakkural.lk/article/284645
  12. வங்கிக் கணக்குக்கே Tax No 😩 | Sri Lanka 🇱🇰 New Tax 18% | Rj Chandru Report இது பதிவு செய்தலுக்கான இ - சேவையின் பழக்கத்தினைப் பெறுவதற்கு ஆரம்பிக்க வேண்டிய இடமாகும். இந்த செயல்முறை மேலோட்டாமானது, மனித அல்லது இணையத்தள மூலமான வேறுபட்ட செயல்முறைகளினை நிறைவேற்றுவதற்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்குகின்றது. விரிவான துரித வழிகாட்டுதல்கள் இலத்திரனியல் சேவைப் பக்கங்கள் அனைத்திற்குமான வழிகாட்டுதல்களை வழங்கும். நீங்கள் ஏற்கனவே செயல்முறைக்குப் பழக்கப்பட்டிருந்து இ-சேவைகளினைப் பயன்படுத்த வேண்டிய தேவையிருப்பின், இந்த தெரிவினை தெரிவு செய்க. http://www.ird.gov.lk/ta/eservices/sitepages/registration.aspx?menuid=180101
  13. Published By: DIGITAL DESK 3 15 DEC, 2023 | 04:31 PM ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு கொழும்பில் ஆரம்பமானது. இந்நிகழ்வு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்க்ஷ ஆகியோரின் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (15) பிற்பகல் சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமானது. இதன்போது பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் இணக்கப்பாட்டுடன் கட்சியின் தலைவராக மஹிந்த ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டார். மஹிந்த ராஜபக்‌ஷவின் பெயரை காமினி லொகுகே முன்மொழிந்தார். அதனை ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ வழிமொழிந்தார். https://www.virakesari.lk/article/171785
  14. இலங்கையின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு கடல் கடந்த சொத்துக்கள்- புலனாய்வு பத்திரிகையாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு Published By: RAJEEBAN 15 DEC, 2023 | 04:47 PM பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசிற்கு கடல்கடந்த சொத்துக்கள் பன்டோரா பேப்பர்களை வெளியிட்ட ;- புலனாய்வு பத்திரிகையாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு அமைப்பு சற்று முன்னர் தகவல் வெளியிட்டுள்ளது. கசிந்த ஆவணங்கள் மற்றும் பிரிட்டனின் ஆவணங்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து ஐசிஐஜே இந்த தகவலை வெளியிட்டுள்ளது. லண்டனில் செல்வந்தர்கள் வசிக்கும் பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் புரொம்டன் புரொபெர்ட்டிஸ் நிறுவனத்திற்கு தொடர்மாடியொன்று உள்ளதாகவும் 2006 இல் 960,000 டொலர்களிற்கு இந்த சொத்தினை அவர் கொள்வனவு செய்தார் எனவும் ஐசிஐஜே தகவல் வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் பன்காம் வென்ஞசர்ஸ் நிறுவனத்திற்கு 2008 முதல் லண்டனின் செல்சியாவிற்கு அருகில் சொத்தொன்று உள்ளதாகவும் ஐசிஐஜே தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/171787
  15. ரம்பா திறந்து வைத்த தனியார் பல்கலைக்கழகம்! யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் பல்கலைக்கழகமான நொதேர்ன் யுனி (Nothern uni) கட்டடத்துக்கான கிரக பிரவேச பூஜை நேற்று (14) இடம்பெற்றது. நொதேர்ன் யுனியின் நிறுவுனரான இந்திரகுமார் பத்மநாதன் யாழ்ப்பாணம் மானிப்பாயை பூர்வீகமாக கொண்ட கனடா முதலீட்டாளராவார். இவரின் முயற்சியாக யாழ்ப்பாணம் – கந்தர்மடம் பகுதியில் நொதேர்ன் யுனி தனியார் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயிலில் விசேட வழிபாடுகளை தொடர்ந்து புதிதாக உருவாக்கப்பட்ட நொதேர்ன் யுனியில் கிரக பிரவேச பூஜை இடம்பெற்றது. இதில், நொதேர்ன் யுனியின் நிறுவுனர் இந்திரகுமார், அவரது மனைவியான தென்னிந்திய நடிகை ரம்பா மற்றும் நொதேர்ன் யுனி பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். https://thinakkural.lk/article/284767
  16. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சார்லி ஜோன்ஸ், லாரா ஃபாஸ்டர் பதவி, பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பேறு காலத்தின் முதல் மூன்று மாதங்களில் பெண்களுக்கு வாந்தி மற்றும் குமட்டல் ஏற்படுவது சாதாரணமானதுதான். ஆனால், சிலருக்கு இது மிகத் தீவிரமாக இருக்கும். அந்த நிலை, ஹைப்பர்மெசிஸ் கிராவிடாரம் (HG) என்ற நோயாகும். புதிதாக நடத்தப்பட்டுள்ள ஆய்வில், இந்த நோய்க்குக் காரணம், சிசுக்களில் உள்ள GDF15 என்ற ஹார்மோன் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது கர்ப்பிணிப் பெண்களுடைய மூளையின் அடிப் பாகத்தில் உள்ள மிகச்சிறிய பகுதியில் செயல்படும் ஹார்மோன் ஆகும். இது குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தி, வாந்தியை உண்டாக்குகிறது. ஜிடிஎஃப்15 ஹார்மோனால் சில கர்ப்பிணிப் பெண்கள் நாளொன்றுக்கு 50 முறைகூட வாந்தி எடுக்க நேரிடுகிறது. பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஸ்டீபன் ஓராஹில்லி, "ஒரு தாய் இந்த ஹார்மோனால் எவ்வளவு எளிதாகத் தூண்டப்படுகிறாரோ, அவ்வளவு அதிகமாக அவர் சிரமப்படுவார்,” என்று கூறினார். "இதை அறிந்து கொள்வதன் மூலம் இதை எவ்வாறு தடுக்க முடியும் என்பதற்கான வழி கிடைக்கிறது," என்று அவர் கூறினார். நூறு கர்ப்பிணிப் பெண்களில் 1 முதல் 3 பேர் ஹைப்பர்மெசிஸ் கிராவிடாரம் (HG) என்ற நோயால் பாதிக்கப்படுகின்றனர். இது கருவின் உயிரையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதனால் பாதிக்கப்படும் பல பெண்களுக்கு நீரிழப்பைத் தடுக்க ஊசி மூலம் திரவச்சத்து செலுத்தப்பட வேண்டும். வாழ முடியாது என்ற மனநிலை படக்குறிப்பு, சூசி வெரில் தான் கர்ப்ப காலத்தில் மிகவும் சிரமப்பட்டதாக கூறுகிறார் தனது HG அனுபவம் மோசமாக இருந்ததால், கருக்கலைப்பு செய்யலாமா என்று யோசித்ததாக 35 வயதான சூசி வெரில் கூறுகிறார். வெரில் மூன்று குழந்தைகளின் தாய். அவர் தனது மூன்று கர்ப்பங்களில் இரண்டின்போது இந்த நோயை அனுபவித்தார். அவர் தனது நிலையை பொதுவில் பகிர்ந்துகொண்டதால், இந்த நோயால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் தினமும் அவரைத் தொடர்பு கொள்கின்றனர். "இனிமேல் வாழ முடியாது என்ற மனநிலை எனக்கு இருந்தது, என் குடும்பத்தினருடன் இருக்க முடியவில்லை," என்று அவர் விளக்கினார். "நான் என் கர்ப்பத்தைத் தொடர வேண்டாம் என்று கருதினேன், ஏனென்றால் அது மோசமாக இருந்தது, HG இருக்கும்போது இது மிகவும் பொதுவானது,” என்றார். "நான் மூச்சுவிட்டால்கூட குமட்டல் ஏற்படும். இரண்டு கர்ப்ப காலத்தின்போதும் எனது அறையில் ஐந்து மாதங்களுக்கு பூட்டப்பட்டிருந்தேன். உயிர்வாழ என் உலகத்தை மிகச் சிறியதாக மாற்றிக் கொண்டேன், என் கணவர் தான் என்னை கவனித்துக் கொண்டார்," என்று வெரில் கூறுகிறார். "அது எல்லாவற்றையும் பாதிக்கிறது, குழந்தை பிறக்கும் முன் ஒவ்வொரு நாளையும் எப்படியாவது கடந்துவிட வேண்டும் என்றுதான் கடந்து வந்தேன்,” என்றார். ஹார்மோனை தடுக்க என்ன வழி? படக்குறிப்பு, தனது கணவர்தான் தன்னை கவனித்துக் கொண்டார் என்று சூசி கூறுகிறார். கர்ப்ப காலத்தில் ஏற்படும் நோய்கள் GDF15 ஹார்மோனுடன் தொடர்புடையவையாக இருக்கலாம் என்று முந்தைய ஆய்வுகள் சுட்டிக்காட்டினாலும், புதிய ஆய்வின் ஆராய்ச்சியாளர்கள் "இதுவரை, இந்த ஹார்மோனால் ஏன் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது என்ற புரிதல் இல்லை,” என்று கூறினார். கேம்பிரிட்ஜ் மற்றும் ஸ்காட்லாந்து பல்கலைக்கழகங்கள், அமெரிக்கா மற்றும் இலங்கையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இணைந்து, நேச்சர் (Nature) இதழில் வெளியிட்ட ஆய்வில், நோயின் தீவிரம் கருப்பையில் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோனின் அளவைப் பொருத்தது என்றும், அதற்கு முன்பு அந்த ஹார்மோன் உடல் எவ்வளவு இருந்தது ஆகியவற்றுடன் தொடர்புடையது என்று கண்டறிந்தனர். இந்த ஆய்வில், கேம்பிரிட்ஜில் உள்ள ரோஸி மகப்பேறு மருத்துவமனையில் பெண்களை ஆய்வு செய்தனர். ஹைப்பர்மெசிஸ் கிராவிடாரம் (HG) அபாயத்தை அதிகரிக்கும் ஒரு மரபணு மாற்றம் கொண்ட பெண்களுக்கு இந்த ஹார்மோன் குறைவாக இருந்ததைக் கண்டறிந்தனர். மேலும், கர்ப்பத்திற்கு முன்பே மிக அதிக அளவு GDF15ஐ உண்டாக்கும் ரத்த நோயான பீட்டா தலசீமியா பாதித்த பெண்களுக்கு குமட்டல் அல்லது வாந்தி மிகக் குறைவாக இருப்பதைக் கண்டறிந்தனர். "இந்த ஹார்மோன் தாயின் மூளையில் பொருந்துவதைத் தடுப்பதே, இந்த நோயைக் குணப்படுத்தும் பாதுகாப்பான, பயனுள்ள வழியாகும்,” என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் வளர்சிதை மாறுபாட்டு நோய்கள் பிரிவின் இயக்குநர் பேராசிரியர் ஓராஹில்லி விளக்கினார். படக்குறிப்பு, விவியென் குமார் பேறு காலத்தில் மிகவும் தனிமையாக உணர்ந்ததாகக் கூறினார். விவியென் குமார் இரண்டு குழந்தைகளின் தாய், கர்ப்ப காலத்தில் மணிக்கு 10 முறை குமட்டல் ஏற்பட்டது. உறங்கும்போது மட்டுமே வாந்தி எடுக்கவில்லை. "இது வெறும் காலை நேரத்தில் ஏற்படும் வாந்தி அல்ல, அது சகிக்க முடியாதது," என்று அவர் கூறினார். "ஒருமுறை அனுபவித்தால், மீண்டும் மீண்டும் நினைவில் இருக்கும், எப்போதும் உங்களுடன் இருக்கும்,” என்றார். "உலகத்திலிருந்து மிகவும் தனிமைப்படுத்தப்பட்டு, நான் மட்டும் தனியாக ஒரு உலகத்தில் இருப்பது போலவும் உணர்ந்தேன். இதற்கான முடிவு இருப்பதாகவே அப்போது தோன்றவில்லை. வீட்டைவிட்டு வெளியேறுவதே மிகவும் கடினம்,” என்றார். "ஆனால், நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. என் கணவர் மற்றும் தாயாரின் முழு ஆதரவு கிடைத்தது. அவர்கள் இல்லாமல், என்னால் குழந்தை பெற்றிருக்க முடியாது," என்றார். மூன்றாவது முறையாக கர்ப்பமானபோது, அவர் எட்டு நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது குழந்தை இறந்துவிட்டது. "நான் பலவிதமான மருந்துகளை எடுத்தேன். எனக்கு , ஸ்டிராய்டுகளை வழங்கினார்கள். அது வேலை செய்யவில்லை. துரதிருஷ்டவசமாக குழந்தை உயிர் பிழைக்கவில்லை," என்று அவர் கூறினார். இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவளிக்கும் கர்ப்பகால ஆதரவு அமைப்பின் தலைமை நிர்வாகி ஷார்லோட் ஹோவ்டன், இது நீண்டுகாலமாகப் புறக்கணிக்கப்பட்ட மருத்துவ பிரச்னை என்றார். "ஆராய்ச்சியாளர்களின் அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டத்தக்கது," என்று ஹோவ்டன் கூறினார். "ஏனென்றால் பலர் இது ஆராய்ச்சி செய்வதற்கான விஷயம் என்றே கருதவில்லை. . அது வெறும் காலையில் ஏற்படும் லேசான வாந்திதானே. நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?" என்று நினைக்கின்றனர். https://www.bbc.com/tamil/articles/c3gyldz959jo
  17. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றிரவு பலத்த மழை பெய்யும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றிரவு மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடுமென அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பகுதிகளில் காற்று அதிகரித்து வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. https://thinakkural.lk/article/284832
  18. இந்தியாவின் கரிசனைகளிற்கு மத்தியில் ஜனவரியில் மற்றுமொரு சீன கப்பல் கொழும்பு வருகின்றது ? - இந்திய ஊடகம் Published By: RAJEEBAN 15 DEC, 2023 | 03:25 PM Hindustan Times சீனாவின் சியான்6 ஆராய்ச்சி கப்பல் தனது ஆராய்ச்சிகளை முடித்துக்கொண்டு டிசம்பர் 2ம் திகதி சிங்கப்பூர் திரும்பிய பின்னர் இலங்கையின் துறைமுகத்திலும் மாலைதீவிலும் தனது மற்றுமொரு கப்பல் தரித்து நிற்பதற்கு அனுமதிக்குமாறு சீனா கொழும்பிடம் வேண்டுகோள் விடுத்தது. 2024 ஜனவரி ஐந்தாம் திகதிமுதல் மே மாதம் வரை தனது கப்பல் தென்னிந்திய சமுத்திரத்தில் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கான அனுமதியை சீனா கோரியுள்ளது. இந்தியா ஏற்கனவே தனது எதிர்ப்பை இலங்கைக்கும் மாலைதீவிற்கும் தெரிவித்துள்ளதுடன் சீன கப்பல் இனிமேல் இந்து சமுத்திரத்தில் இராணுவ நோக்கங்களிற்காக ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு அனுமதிக்ககூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜியாங் யாங் கொங்3 என்றகப்பல் தென்சீனாவின் சியாமென் கரையோர பகுதியில் தரித்து நிற்கின்றது. இந்த நாடுகளிடம் அனுமதியை பெற்ற பின்னர் மலாக்கா நீரிணை ஊடாக பயணிக்கும். 2016 தயாரிக்கப்பட்ட இந்த கப்பல் நவீன கண்காணிப்பு ஆராய்ச்சி சாதனங்களை தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது. இந்தியாவின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் ரணில் விக்கிரமசிங்க அனுமதி வழங்கிய சீனாவின் சியான்6 கப்பல் இலங்கையின் விசேட பொருளாதார வலயத்திலும் தென்னிந்திய சமுத்திரத்திலும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட பின்னர் நவம்பர் 20 ம் திகதி மலாக்கா நீரிணையிலிருந்து வெளியேறியது. கொழும்பு துறைமுகத்திற்குள் ஒக்டோபர் 25 ம் திகதி நுழைவதற்கு முன்னர் சென்னையிலிருந்து 500 கடல்மைல் தொலைவில் இந்த கப்பல்காணப்பட்டது. சீனாவின் ஏவுகணை கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி கப்பல்களிற்கு இலங்கை அனுமதி வழங்குவது குறித்தும், தற்போது மாலைதீவில் உள்ள சீனா சார்பு அரசாங்கம் குறித்தும் இந்தியா கரிசனைகளை கொண்டுள்ளது. கடல்சார் ஆராய்ச்சி என்ற பெயரில் இந்த கப்பல்கள் இந்தியாவை வேவு பார்ப்பதற்காக பயன்படுத்தப்படுவதாக இந்தியா கரிசனை கொண்டுள்ளது. கடந்த வருடம் ஜூலை மாதம் 21ம் திகதி இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டவேளை இந்திய பிரதமர் இது குறித்த தனது கரிசனைகளை பகிர்ந்துகொண்டார். இந்தியாவின் மூலோபாய கரிசனைகளிற்கு இலங்கை மதிப்பளிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். சீன கடற்படை மூன்று விமானம்தாங்கி கப்பல்கள் அணுவாயுத நீர்மூழ்கிகள் ஏவுகணைகளை அழிக்கும் நாசகாரிகள் போன்றவற்றை கொண்டு தனது கடல்சார் வளங்களை வேகமாக அதிகரித்து செய்துவருகின்றது. கம்போடியா முதல் செங்கடல் வரை பல கடற்படை தளங்களை அமைப்பதன் மூலம் சீனா இந்து சமுத்திரத்தில் தனது காலடியை விரிவுபடுத்துகின்றது. https://www.virakesari.lk/article/171779
  19. வாழ்க்கையே நாடக மேடை! அதில் இதுவும் ஒரு நடிப்பென விட்டுத் தள்ளுங்கய்யா!! என்னண்ணை செய்தியை இணைச்சதுக்கு படம் எடுக்கிறன் என்று கொழுத்திப் போடுறியள்!
  20. நான் சிறுவயது முதல் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளேன் - மனம் திறந்தார் அவுஸ்திரேலியாவின் சகலதுறை வீரர் Published By: RAJEEBAN 14 DEC, 2023 | 05:01 PM அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் கமரூன் கிறீன் தான் சிறுவயது முதல் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தனது தாய் கர்ப்பமாகயிருந்த காலத்திலேயே தான் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமையை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர் என அவர் தெரிவித்துள்ளார். தனது மகன் 12 வயதிற்கு மேல் உயிர்பிழைப்பானா என்ற சந்தேகம் ஒரு காலத்தில் நிலவியது என கமரூன் கிறீனின் தந்தை ஹரி தெரிவித்துள்ளார். 2022 இல் டி 20 போட்டிகளில் விளையாட ஆரம்பித்த கிறீன் அவுஸ்திரேலியாவிற்காக மூன்று வகையான போட்டிகளிலும் விளையாடி வருகின்றார் உலககிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலிய அணியிலும் கிறீன் இடம்பெற்றிருந்தார். நான் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளேன் என அறிந்ததும் எனது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர் என கிறீன் சனல் 7க்கு தெரிவித்துள்ளார். நான் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதற்கான அறிகுறி எதுவும் இருக்கவில்லை. அல்டிரா சவுன்ட் சோதனை மூலமே இது தெரியவந்தது என அவர் தெரிவித்துள்ளார். நாள்பட்ட சிறுநீரகநோய் உங்கள் உடல் நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம், துரதிஸ்டவசமாக என்னுடைய சிறுநீரகம் ஏனையவர்களின் சிறுநீரகங்கள் போல செயற்படுவதில்லை என அவர்தெரிவித்துள்ளார். எனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் நான் நோயை சிறப்பாக கையாண்டுள்ளேன். கடந்த வருடம் நியுசிலாந்திற்கு எதிரான ஒரு நாள் போட்டியின்போதுமாத்திரம் பிரச்சினை ஏற்பட்டது என கிறீன் தெரிவித்துள்ளார். 89 ஓட்டங்களை பெற்ற பின்னர் ஐந்து ஓவர்கள் பந்து வீசிய பின்னர் கால் தசைப்பிடிப்பினால் கிறீன் பாதிக்கப்பட்டார் நான் ஒழுங்காக நீர் அருந்தாதே காரணம் என நினைத்தேன் ஆனால் சிறுநீரக பாதிப்பே காரணம் என அவர் தெரிவித்துள்ளார். நான் அன்று நீண்டநேரம் துடுப்பெடுத்தாடினே; பந்து வீசினேன் அதன் பின்னர் தசைப்பிடிப்பு ஏற்பட்டது என குறிப்பிட்டுள்ள கமரூன் கிறீன் எனது நோயே அதற்கு காரணம் என்பதை நான் உணர்வதற்கு நீண்டநேரம் எடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/171718
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.