Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. மன்னார் - இராமேஸ்வரம் படகு சேவைக்கு அரசு அனுமதித்தால் நாங்கள் நிதி தர ஆயத்தமாக உள்ளோம் - சாணக்கியன் 23 JUL, 2025 | 04:42 PM மன்னார் - இராமேஸ்வரம் படகு சேவைக்கு அரசு அனுமதித்தால் நாங்கள் நிதி தர ஆயத்தமாக உள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) போக்குவரத்து அமைச்சிடம் கேள்வியெழுப்பி உரையாற்றியபோது மன்னார் - இராமேஸ்வரம் இடையில் பயணிகள் கப்பல் சேவைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் கோரிக்கை விடுத்திருந்தார். அதனை தொடர்ந்து, மன்னார் - ராமேஸ்வரம் படகுச் சேவை குறித்து விளக்கிக் கூறிய சாணக்கியன், போக்குவரத்து அமைச்சகம் இந்த செயல்முறையை விரைவுபடுத்த முடிந்தால், மன்னார் - ராமேஸ்வரம் படகு சேவையை மீண்டும் தொடங்குவதற்கான நிதிப் பங்களிப்பினை பெற, நாங்கள் உங்களுக்கு உதவ முடியும் என குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில், மன்னார் - இராமேஸ்வரம் இடையே குறைந்தளவான போக்குவரத்து தூரமே உள்ளது. ஆனால், காரைக்கால் - காங்கேசன்துறை இடையிலான படகு சேவைகள் தொடர்பிலேயே அரசாங்கம் கூறுகிறது. அந்தப் படகு சேவை மிக நீளமானது ஆகும். இது நீண்ட தூரமாகும். வடக்கில் இந்த சேவைகளை அபிவிருத்தி செய்வதன் ஊடாக மக்கள் மிகவும் நன்மையடைவர். அத்துடன் வியாபார நடவடிக்கைகளும் வலுப்பெறும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்களும் உருவாகும். இலங்கை - இந்திய நாடுகளுக்கு இடையில் பயணிகள் படகு சேவையை ஆரம்பிக்கும் விடயத்தில் இந்தியாவும் இதனை முன்னெடுத்துச் செல்லத் தயாராக இருக்கிறது. இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/220745
  2. சம்பூரில் மனித எச்சங்கள்; எதிர்வரும் 30ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவு Published By: DIGITAL DESK 3 23 JUL, 2025 | 03:06 PM (துரைநாயகம் சஞ்சீவன்) திருகோணமலை மாவட்டத்தில் மூதூர், சம்பூர் பகுதியில் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக எதிர்வரும் 30ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகரிக்கும், தொல்பொருளியல் திணைக்களத்திற்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். குறித்த பகுதிக்கு இன்று புதன்கிழமை (23) விஜயம் மேற்கொண்டு கள ஆய்வை மேற்கொண்டிருந்த நீதிபதி குறித்த இடத்தை பார்வையிட்டதுடன், அங்கு வருகை தந்திருந்த திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடியதோடு சட்ட வைத்திய அதிகரிக்கு குறித்த இடத்தில் அகழ்வுப்பணியை முன்னெடுப்பது தொடர்பாக மிதிவெடி அகற்றும் நிறுவனத்துடன் கலந்துரையாடி அறிக்கை சமர்ப்பிக்குமாறும், தொல்லியல் திணைக்களத்திடம் குறித்த இடத்தில் மயானம் இருந்ததா என்பது தொடர்பில் ஆராய்ந்து அது தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறும் குறித்த அறிக்கைகளை இரு தரப்பினரும் எதிர்வரும் 30 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிபதி எச்.எம். தஸ்னீம் பௌசான் உத்தரவிட்டுள்ளார். குறித்த இடத்திற்கு அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம் காணாமல் போனோர் அலுவலகம், குற்றவியல் தடய காட்சிகள் அலுவலகம் (SOCO) ஆகிய திணைக்களங்களின் அதிகாரிகள் இன்றைய தினம் (23) வருகை தந்து சம்பவ இடத்தை பார்வையிட்டிருந்தனர். சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோர பகுதியில் ஆயுபு என்ற மிதிவெடி அகற்றும் நிறுவனம் மிதிவெடி அகற்றுவதற்கான அகழ்வுப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) குறித்த பகுதியில் இருந்து சிதைந்த மனித மண்டை ஓடு மற்றும் எலும்புப்பகுதிகள் கண்டெடுக்கப்பட்டன. இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மூதூர் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.எம்.நஸ்லீம் குறித்த இடத்தை பார்வையிட்டதோடு குறித்த பணியை 23ஆம் திகதிவரை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்குமாறும் குறித்த பகுதியை நீதிமன்றின் முன்னிலையில் அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம் காணாமல் போனோர் அலுவலகம், குற்றவியல் தடய காட்சிகள் அலுவலகம் (SOCO) ஆகிய திணைக்களங்களின் பிரசன்னத்துடன் புதன்கிழமை (23) அகழ்வதற்கும் உத்தரவிட்டுள்ளதுடன் பொலிஸாரை குறித்த பகுதியில் பாதுகாப்புக் கடமைகளுக்காக ஈடுபடுத்துமாறும் பொலிஸாருக்கு நீதிபதி அறிவுறுத்தியிருந்தார். அந்தவகையில் குறித்த பகுதிக்கு இன்றைய தினம் குறித்த திணைக்களங்களின் அதிகாரிகள் பிரசன்னமாகியிருந்தனர். அத்துடன் குறித்த பகுதியானது தொடர்ந்தும் பொலிஸாரின் பாதுகாப்பின்கீழ் இருந்து வருகின்றது அப்பகுதிக்குள் எவரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. எதிர்வரும் 30ஆம் திகதி கிடைக்கப்பெறுகின்ற இரு தரப்பினரதும் அறிக்கைகளை ஆராந்தபின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிய வருகின்றது. https://www.virakesari.lk/article/220726
  3. மதராசி கேம்ப் இடிப்பு: டெல்லியில் வீடுகளை இழந்த 380 தமிழ் குடும்பங்கள் இப்போது எப்படி உள்ளன? கட்டுரை தகவல் சங்கரநாராயணன் சுடலை பிபிசி தமிழ் 23 ஜூலை 2025, 09:15 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் நேற்று வரை கூப்பிடு தூரத்தில் இருந்த பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்த உங்கள் குழந்தை நாளை முதல் பள்ளிக்குச் செல்ல 50 கி.மீ. பயணிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்? ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம் தரும் வேலைக்காக 8 ஆயிரம் வாடகை கொடுத்து பெருநகரத்தில் தங்க வேண்டிய சூழலை கற்பனை செய்து பார்க்க முடியுமா? நேற்று வரை தமிழ்வழியில் படித்த குழந்தையை, நாளை முதல் இந்தி வழிக் கல்வியில் சேர்க்க நேர்ந்தால் என்ன ஆகும்? "இதுதான் இன்று தங்களின் நிலை" எனக் கூறுகின்றனர் முன்பு டெல்லி ஜங்புராவில் வசித்த தமிழர்கள். ஜூன் 1ஆம் தேதி டெல்லி ஜங்புராவில் மதராசி கேம்ப்(Madrasi Camp) என்று அழைக்கப்படும் தமிழர் குடும்பங்கள் வசித்த பகுதி இடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்குத் திரும்பிவிட நினைக்கும் மக்களுக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய் துகொடுக்கத் தயாராக இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மறுபுறம், மதராசி கேம்ப் இடிக்கப்பட்ட நேரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் ரேகா குப்தா, "குடிசைப் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக" கூறினார். இது நடந்து ஏறக்குறைய ஒன்றரை மாதம் நிறைவடைந்துவிட்டன. அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் நிலை குறித்து அறிவதற்காக பிபிசி தமிழ் தலைநகரில் வசித்த தமிழர்களைத் தேடிப் பயணித்தது. படக்குறிப்பு, உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி குடியிருப்புகள் ஜூன் 1ஆம் தேதி இடித்து அகற்றப்பட்டன. பல ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் தலைநகரில் குடியேறிய இந்த மக்கள், இத்தனை ஆண்டுகளில் தங்கள் சொந்த ஊரின் வேரை மறந்து டெல்லிவாசிகளாகவே மாறிப் போயிருக்கின்றனர். ஆனால், இவர்கள் தற்போது தங்கள் குடியிருப்புகளை இழந்துவிட்டதாக கவலையில் உள்ளனர். அவர்கள், "ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது புதிய குடியிருப்பு கொடுப்பதற்காக அரசு வகுத்துள்ள கொள்கை விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று கோரிக்கை வைக்கின்றனர். முதலில் ஜங்புராவுக்கு சென்றபோது, மதராசி கேம்பில் இருந்த சுமார் 380 வீடுகளும் முழுமையாக இடிக்கப்பட்டு மணல் மேடுகளே எஞ்சியிருந்தன. பின்னர் அங்கிருந்து புதிதாக வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ள நரேலா பகுதி நோக்கிப் பயணித்தோம். நரேலா, தலைநகர் டெல்லியின் வடமேற்கில் அமைந்துள்ள ஒரு தொழிற்பேட்டை. ஒரு காலத்தில் விவசாய பூமியாக மிளகாய் உற்பத்திக்குப் புகழ்பெற்ற இடமாக இருந்த நரேலா தற்போது தலைநகர விரிவாக்கத்தால், தொழிற்பேட்டையாக மாறியிருப்பதாகக் கூறுகின்றனர் உள்ளூர்வாசிகள். நாங்கள் சென்ற போது டெல்லி வளர்ச்சிக் குழுமத்தால் (DDA) கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளும், வீடுகளும் எங்களை வரவேற்றன. ஆச்சரியப்படுத்தும் வகையில் இத்தனை குடியிருப்புகளுக்கும் மத்தியில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான வீடுகளிலேயே மக்கள் குடியேறியிருந்தனர். படக்குறிப்பு,முழுவதுமாக இடிக்கப்பட்டுள்ள ஜங்புரா மதராசி கேம்ப் நரேலாவில் குடியேறியுள்ள கணேஷ் பிரபு அவருடைய இருப்பிடத்தை கூகுள் மேப் மூலம் பகிர்ந்ததால் நமது வாகனத்தில் எளிதாக அங்கு செல்ல முடிந்தது. பிபிசி குழு கார் மூலம் சென்றதால் சுமார் 1 மணிநேரத்தில் இந்த இடத்தைச் சென்றடைய முடிந்தது. பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தினால் கூடுதலாக நேரம் ஆகலாம் என நரேலாவுக்கு சென்று திரும்பியவர்கள் கூறினர். ஒரு வழியாக அங்கிருந்த ஒரு மிகப்பெரிய குப்பை மேட்டில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு உள்ளாக தமிழ்க் குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 'பாக்கெட் 5' என்னும் இடத்தைக் கண்டுபிடித்தோம். அந்த வளாகத்தின் பாதுகாப்புக்கென இருந்த காவலாளி, எங்கள் வருகையைப் பதிவு செய்துகொண்டு உள்ளே அனுமதித்தார். அங்கு கணேஷ் பிரபு எங்களை வரவேற்றார். படக்குறிப்பு, மளிகைக் கடை நடத்தி வந்த கணேஷ் பிரபு தற்போது தனக்கு வாழ்வாதாரம் இல்லை எனக் கூறுகிறார் "நான் மதராசி கேம்பில் சிறிய பெட்டிக்கடை வைத்திருந்தேன். ஆக்கிரமிப்பு அகற்றத்தின்போது அது இடிக்கப்பட்டுவிட்டது. எனக்கு வேறு வேலை தெரியாது. இப்போது எனக்கு இங்கே இரண்டாவது மாடியில் வீடு கொடுத்துள்ளார்கள். கீழே வீடு இருந்தால் இங்கேயும் கடை வைத்துப் பிழைத்துக் கொள்வேன்" என்றார். அங்கும் தரைத்தளத்தில் வசிக்கும் சிலர் குடியிருப்பிலேயே கடைகளை அமைத்திருந்ததைப் பார்க்க முடிந்தது. தொடர்ந்து பேசிய கணேஷ் பிரபு, "எனக்கு இன்று பிழைக்க வழி இல்லை. வாடகை கொடுத்து குடியிருக்க என்னால் முடியாது. எனது மகன்களை மதுரையில் எனது பெற்றோரிடம் விட்டுவிட்டேன். நான் மட்டும் தனியாக இருக்க வேண்டும் என்பதால் டெல்லி நகருக்கு உள்ளாக என்னால் வாடகை கொடுக்க முடியாது. எனவே இங்கு வந்துவிட்டேன்" என்றார். "இந்த வீடுகள் ஒதுக்கப்படுவதற்காக வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் பிரசாந்த் என்பவரின் தாயார் பெயரில் 4வது தளத்தில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சில சிக்கல்களைக் காரணம் காட்டி அவர்களுக்கு வீட்டைக் கொடுக்க மறுக்கின்றனர்" என்று கூறிய கணேஷ் பிரபு அந்த வீட்டைக் காண்பித்தார். இவர்களுக்கு இருக்கும் முக்கியமான பிரச்னை தண்ணீர்தான். "பல வீடுகள் காலியாக இருக்கும் நிலையில், அவற்றில் குழாய் அடைப்புகள் சரி வரப் பொருத்தப்படாமல் இருக்கின்றன. இதனால் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீரைச் சேமிக்க முடிவதில்லை" என கணேஷ் பிரபு கூறுகிறார். படக்குறிப்பு, மொத்தம் 170 குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கப்பட்ட நிலையில் 3 தனிநபர்களை மட்டுமே நரேலாவில் பார்க்க முடிந்தது நரேலாவில் குடியேறியிருக்கும் அஞ்சலை பிபிசி தமிழிடம் பேசினார். "அங்கே (ஜங்புரா) இருக்கும்போது காலை 7.30 மணிக்கெல்லாம் வேலைக்குச் சென்று விடுவேன். 10 மணிக்கு வீடு வந்துவிட்டு, பின்பு மீண்டும் வேலைக்குச் செல்வேன். மாதத்திற்கு 8 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை என்னால் சம்பாதிக்க முடிந்தது. ஆனால் இங்கே வந்த பின்னர் என்னால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. நான் எப்படிச் சாப்பிடுவது?" எனக் கேள்வி எழுப்பினார். "நான் வீடுகளில் பாத்திரம் துலக்குவது போன்ற வேலைகளைச் செய்துதான் பிழைப்பு நடத்துகிறேன். இங்கே நரேலாவில் இப்படி வேலை கொடுப்பதற்கான மக்கள் யாரும் இல்லை. நாங்கள் எப்படி பிழைப்பு நடத்துவது?" என்று கேள்வி எழுப்பினார். தமிழ்க் குடும்பங்களைத் தேடிச் சென்ற எங்களால் மூன்று பேரிடம் மட்டுமே பேச முடிந்தது. அவர்கள் தவிர வீடு ஒதுக்கீடு பெற்ற உலகநாதன் என்பவர், மற்ற தமிழ்க் குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்யும் பணியை ஏற்றிருக்கிறார். தமக்கு வேறு வேலை ஏதுமில்லாத சூழ்நிலையில், தற்காலிக வேலையாக இது அமைந்துள்ளதாக அவர் கூறுகிறார். வீடு ஒதுக்கீடு பெற்ற மற்றவர்கள், வேலை செய்யும் இடத்திற்கு அருகில் இந்த இடம் இல்லை என்பதால் தாங்கள் வசித்த பழைய இடத்திற்கு அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்துக் குடியேறியுள்ளனர். கூலி வேலையில் சொற்ப ஊதியமே பெறும் தாங்கள் வாடகை செலுத்தவே முடியாமல் திண்டாடுவதாகவும் அவர்கள் கவலையை வெளிப்படுத்தினர். நரேலாவில் தமிழ்க் குடும்பங்கள் தவிர சிஆர்பிஎஃப் போன்ற மத்திய காவல் படைகளில் பணியாற்றுவோருக்கும் அரசு சார்பில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. டெல்லியின் பல்வேறு பகுதிகளில் குடிசைகள் அகற்றப்பட்டு வெளியேற்றப்பட்ட மக்களுக்கும் இங்கே வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சுமார் 8 மாதங்களுக்கு முன்னதாக இந்தப் பகுதியில் குடியேறிய சில இந்தி பேசும் சிறுவர்கள் தங்களுக்கு இருக்கும் பிரச்னைகளைப் பகிர்ந்து கொண்டனர். பள்ளி செல்வதற்கே காலை 5 மணிக்கு வீட்டிலிருந்து புறப்படும் நிலை இருப்பதாக அவர்கள் கூறினர். கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் மற்றொரு இளைஞரும் பிபிசி தமிழிடம் இதே கவலையைப் பகிர்ந்துகொண்டார். "என்னால் இங்கு வந்த பின்னர் கல்வியைத் தொடர முடியவில்லை. நான்தான் எனது குடும்பத்தின் முதல் தலைமுறையாக பட்டம் பயில்கிறேன். ஆனால் இங்கிருந்து டெல்லி நகருக்குள் கல்விக்காகச் சென்று திரும்புவது இயலாத ஒன்றாக இருக்கிறது. இங்கே மருத்துவ வசதிகள் இல்லை. யாருக்கேனும் உடல்நிலை சரியில்லை என்றால் 40 கி.மீ. தாண்டித்தான் செல்ல வேண்டும். அங்கே நகருக்குள் நாங்கள் இருந்த போது எங்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை அருகிலேயே இருந்தது" என்றார். படக்குறிப்பு, நரேலாவில் வீடுகள் மட்டுமே இருக்கின்றன அடிப்படை வசதிகள் இல்லை என்கின்றனர் 'மொத்தம், 170 குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டன' என்ற தகவலுக்கும், அங்கு இயல்பில் உள்ள சூழலுக்கும் முரண் இருந்ததால் மீண்டும் ஜங்புரா பகுதிக்கே திரும்பினோம். ஜங்புராவில் மீண்டும் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலைப் பொழுதில் நாங்கள் நுழைந்தோம். அங்கு மக்களைப் போராட்டத்திற்கு அழைத்துச் செல்ல ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் தயாராகிக் கொண்டிருந்தனர். நரேலாவில் வீடு ஒதுக்கப்படாத மக்களுக்கு வீடு ஒதுக்க வேண்டும், ஏற்கெனவே வீடு பெற்றவர்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்தப் போராட்டம் நடந்தது. அங்கிருந்த அன்பழகி என்ற பெண் பிபிசியிடம் பேசுகையில், "நான் இங்கிருந்து நரேலாவுக்கு வேனில் சென்று பார்த்தேன். ஓலா டாக்சியில் செல்வதற்கு 750 ரூபாய் வாங்கி விட்டனர். அங்கிருந்து திரும்ப வருவதற்கு மாலை 6 மணிக்குப் புறப்பட்டோம். இங்கு வந்து சேர இரவு 11 மணி ஆகிவிட்டது. வீட்டு வேலை செய்வதற்காக தினமும் இவ்வளவு தொலைவு என்னால் பயணிக்க முடியாது" என்றார். மேலும் "எனது பேரப்பிள்ளைகள் இங்குள்ள பள்ளியில் படிக்கிறார்கள். அவர்கள் நரேலாவுக்கு சென்றால் படிப்பைக் கைவிடும் நிலைமை ஏற்பட்டுவிடும்" என்றும் அன்பழகி கூறினார். இதேபோன்று போராட்டத்தில் பங்கெடுப்பதற்காக தயாராகிக் கொண்டிருந்த ஜானகி பேசுகையில், "ஏற்கெனவே நரேலாவில் வீடு பெற்ற 170 பேர் போக மேலும் 26 பேருக்கு வீடு கொடுக்க வேண்டும் என நீதிமன்ற உத்தரவு இருக்கிறது. ஆனால் அதிகாரிகள் அந்த வீடுகளை ஒதுக்கவில்லை" என்று கூறினார். படக்குறிப்பு, ஏற்கெனவே வீடு ஒதுக்கீடு பெற்றவர்களும் தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இல்லை என்கின்றனர் டெல்லி லோதி பார்க்கில் தில்லி தமிழ்ப் பள்ளிகள் கூட்டமைப்பு நடத்தும் பள்ளியில் இந்தக் குழந்தைகள் படிக்கின்றனர். அங்கிருந்த குழந்தை பள்ளியில் படித்த தமிழ்ப் பாடலை பாடிக் காட்டினார். இனி இந்தக் குழந்தைகளின் கல்வி எதிர்காலம் கேள்விக்குள்ளாகி இருப்பதாக மக்கள் அஞ்சுகின்றனர். இவர்கள்போக, வீரம்மா, செல்வி ஆகிய இரு பெண்கள் வீடுகளில் வேலை பார்த்துவிட்டு, ஓய்வாக ஒரு பூங்காவில் அமர்ந்திருந்தனர். இவர்களில் வீரம்மாவுக்கு வீடு கிடைத்துள்ளது. செல்விக்கு வீடு கிடைக்கவில்லை. "ஆனால் எங்கள் இருவரின் நிலையும் ஒன்றுதான்" என்கிறார் வீரம்மா. "பிழைப்பின்றி வீடு மட்டும் கிடைத்தால், அதை வைத்து என்ன செய்வது?" என்று கேள்வி எழுப்புகிறார். இதேபோன்று மூதாட்டி செல்லம்மாள் பேசுகையில், "45 வருடங்களாக இதே ஊரில் இருக்கிறேன். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சேப்பாக்கம்தான் எனக்கு சொந்த ஊர். நான் இப்போது 5 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன். ஆனால் 8 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுக்க வேண்டும். ஏற்கெனவே, வீட்டு உரிமையாளர். வாடகை பிரச்னையில் காலி செய்யச் சொல்கின்றனர்" என்றார். படக்குறிப்பு, வீடு பெற்றவர்களுக்கும், பெறாதவர்களுக்கும் பொதுவாக இருக்கும் பிரச்னை வேலைவாய்ப்பு. தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட உதவித்தொகை இந்த குடும்பத்தினர் அனைவருக்குமே கிடைத்துள்ளது. குடும்பத்திற்கு 8 ஆயிரம் ரூபாய் பணமும் 4 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மளிகைப் பொருட்களையும் பெற்றிருப்பதாக வீரப்பன் என்பவர் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார். இன்றைய சூழ்நிலையில் உணவுக்கே கஷ்டப்படும் மக்களுக்கு இது மிகப்பெரிய உதவி. ஆனால் இவர்களுக்கு நிரந்தரத் தீர்வு தேவை எனவும் வீரப்பன் கூறுகிறார். கடந்த 2010ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பு குடிசைகள் அகற்றப்படும்போது, அங்கு வசிக்கும் மக்கள் அவர்களின் வேலைவாய்ப்பு கிடைக்கும் இடத்திற்கு அருகில் மாற்று குடியிருப்பு வழங்கப்பட வேண்டும் என்று உறுதியளிக்கிறது (Gainda Ram vs. Municipal Corporation of Delhi, [2010 (10) SCC 715]). தொலைதூர இடங்களுக்கு இந்த மக்கள் மாற்றப்பட்டால், வேலை வாய்ப்புக்காக மீண்டும் அதே இடங்களில் குடியேறுவார்கள் என ஆய்வறிக்கைகளைச் சுட்டிக்காட்டி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் டெல்லி குடிசைவாசிகள் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றக் கொள்கை 2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன்படி, தலைநகர் டெல்லியின் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஓட்டுநர்கள், காய்கறி வியாபாரிகள், வீட்டுவேலை செய்பவர்கள் என முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதாரப் பங்களிப்புகளைச் செய்கின்றனர். கடந்த காலத்தில் நடுத்தர மற்றும் மேல் தட்டு மக்களுக்கான வீடுகளைக் கட்டும்போது இவர்களுக்கான வீட்டு வசதி திட்டமிடப்படவில்லை. இதன் விளைவாகவே டெல்லி முழுவதும் வேலை வாய்ப்பு கிடைக்கும் இடங்களைச் சுற்றி குடிசைகள் அதிகரித்ததாகவும் அந்தக் கொள்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்லியில் 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்த புதிய குடிசைப் பகுதியும் உருவாவது அனுமதிக்கப்படாது எனக் குறிப்பிடும் இந்த கொள்கை, ஏற்கெனவே குடிசைகளில் குடியிருப்பவர்கள் எவ்வாறு மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என்பதையும் விளக்குகிறது. தமிழ்நாடு அரசு கூறுவது என்ன? பட மூலாதாரம்,AKS VIJAYAN/X படக்குறிப்பு, டி.ஆர்.பாலுவுடன் டெல்லி முதல்வரைச் சந்தித்தபோதும் நரேலாவில் அடிப்படை வசதிகளைச் செய்து தருமாறு வலியுறுத்திதாக ஏ.கே.எஸ்.விஜயன் குறிப்பிட்டார். ஜங்புராவாசிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் செய்யப்பட்டுள்ள உதவிகள் குறித்து அறிவதற்காக தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயனிடம் பேசினோம். தமிழ்நாடு அரசு சார்பில் ஜங்புராவாழ் தமிழர்களுக்குத் தேவையான "வசதிகளைச் செய்து தரத் தயாராக இருக்கிறோம்" என முதலமைச்சர் உறுதி அளித்துள்ளதாக அவர் கூறினார். "தமிழ்நாட்டிற்கு யார் வந்தாலும் எங்கே அவர்கள் வசிக்க விரும்புகிறார்களோ அந்த மாவட்ட ஆட்சியரோடு தொடர்புகொண்டால் அங்கு அவர்களுக்கு இலவசமாக பட்டா வழங்கி வீடுகளைக் கட்டித் தருகிற திட்டதை நிறைவேற்றித் தருவோம் என்று சொல்லியிருந்தார். அதைத்தான் நாங்கள் அவர்களிடமும் கூறினோம்." ஆனால், தாங்கள் மூன்று தலைமுறைகளாக இங்கேயே இருந்துவிட்டதாகவும், இப்போது அங்கு வந்து என்ன செய்வது எனத் தெரியவில்லை எனவும் கூறிய மக்கள் தாங்கள் இங்கேயே இருந்து விடுவதாகவும் கூறியதாக அவர் குறிப்பிடுகிறார். மேலும், "தமிழ்நாட்டிற்கே வந்துவிடலாம்" என்று நினைப்பவர்களுக்குத் தேவைப்படும் அனைத்து வகையான உதவிகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் செய்துகொடுக்கத் தயாராக இருப்பதாகவும் ஏ.கே.எஸ். விஜயன் குறிப்பிட்டார். அதோடு, "திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவுடன் சேர்ந்து டெல்லி முதலமைச்சரைச் சந்தித்தபோதும், நரேலா பகுதியில் அடிப்படை வசதிகளைச் செய்து தருமாறு" தமிழ்நாடு அரசு சார்பில் வலியுறுத்தியதாகவும் அவர் கூறினார். டெல்லி அரசின் நிலைப்பாடு என்ன? மதராசி கேம்ப் இடிக்கப்பட்ட நேரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, தாம் பொறுப்பேற்ற பின்னர் குடிசைப் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளுக்காக 700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தார். "குடிசை வாழ் மக்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் யமுனை நதியும் பாதுகாக்கப்பட வேண்டும்" என ரேகா குப்தா தெரிவித்ததாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்தது. ஆக்கிரமிப்புகள் அகற்றம் நடந்து கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இது தொடர்பாக டெல்லி தென்கிழக்கு மாவட்ட ஆட்சியர் அனில் தம்பா மற்றும் ஜங்புரா எம்எல்ஏ தர்விந்தர்சிங் தாகூர் ஆகியோரைத் தொடர்புகொள்ளப் பல வழிகளில் பிபிசி முயன்றும் அவர்கள் பதில் அளிக்கவில்லை. அவர்கள் தரப்பில் விளக்கம் தரப்படும் பட்சத்தில் அதுவும் இந்தக் கட்டுரையில் சேர்க்கப்படும். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn7d5lkj56xo
  4. "அலறல் சத்தத்தை ரசித்தவர் அப்ரூவரா?" - ஆய்வாளர் ஸ்ரீதரின் மனுவை சந்தேகிக்கும் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினர் பட மூலாதாரம்,SPL ARRANGEMENT படக்குறிப்பு, வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரான ஸ்ரீதர் கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கில் முதல் நபராக (A1) குற்றம் சுமத்தப்பட்டிருந்த காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், தான் அப்ரூவராக மாறி உண்மையைக் கூற விரும்புவதாக மதுரை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். "இது வழக்கை இழுத்தடிப்பதற்கான நாடகம்" என ஜெயராஜ் குடும்பத்தினர் கூறுகின்றனர். அப்ரூவர் ஆக மாறுவதால் என்ன நடக்கும்? தண்டனை கிடைப்பதில் இருந்து விலக்கு கிடைக்க வாய்ப்புள்ளதா? 2020 ஜூன் 19. கொரோனா பெருந்தொற்று காரணமாக பொது முடக்கம் அமலில் இருந்தபோது நடந்த சம்பவம் இது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ஜெயராஜ் (58) மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் செல்போன் கடை ஒன்றை நடத்தி வந்தனர். பொதுமுடக்கம் காரணமாக இரவு கடையை மூடுவது தொடர்பாக பென்னிக்ஸ் மற்றும் போலீஸார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES தந்தை-மகன் என இருவர் மீதும் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையை போலீஸார் பதிவு செய்தனர். இதன்பிறகு, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை காவலர்கள் கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் உடல்நிலை நன்றாக இருப்பதாக, ஜூன் 20 அன்று மருத்துவ அலுவலர் சான்று அளித்ததால் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், உடல்நலக் குறைவு காரணமாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஜூன் 22 அன்று பென்னிக்ஸும் ஜூன் 23 அன்று ஜெயராஜும் உயிரிழந்தனர். காவல் மரணத்தில் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்பட பத்து காவலர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. (குற்றம் சுமத்தப்பட்டவர்களுள் ஒருவரான பால்துரை 2020ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜெயராஜ் - பென்னிக்ஸ் 2,427 பக்க குற்றப்பத்திரிகை வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், மத்திய புலனாய்வு துறைக்கு (சிபிஐ) மாற்றப்பட்டது. இதில் தொடர்புடையதாக கூறப்பட்ட காவலர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது சிபிஐ தரப்பில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இரு கட்டங்களில் 2,427 பக்கங்களைக்கொண்ட குற்றப் பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. கைதான நாளில் இருந்து காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் உள்பட ஒன்பது பேரும் மதுரை மத்திய சிறையில் அடைபட்டுள்ளனர். தன்னை ஜாமீனில் விடுவிக்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தாக்கல் செய்திருந்த மனுவை கடந்த ஜூன் மாதம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு, மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்தநிலையில், வழக்கில் இருந்து தான் அப்ரூவராக மாற விரும்புவதாக காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் சார்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,TNPOLICE படக்குறிப்பு, இடமிருந்து வலமாக முதலில் இருப்பவர் ஸ்ரீதர். அடுத்ததாக, சிறையில் உள்ள பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் அந்த மனுவில், அரசுக்கும் காவல்துறைக்கும் நேர்மையாகவும் உண்மையாக இருக்க விரும்புவதால் அப்ரூவராக மாற விரும்புவதாக கூறியுள்ளார். குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனை கிடைக்க வேண்டும் எனவும் மனுவில் அவர் தெரிவித்துள்ளார். 'மனசாட்சிக்கு உட்பட்டு தந்தை-மகனை இழந்த குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். அரசுத் தரப்பு சாட்சியாக மாறுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்' எனவும் ஸ்ரீதர் கேட்டுக்கொண்டுள்ளார். மனுவுக்கு பதில் அளிக்குமாறு சிபிஐக்கு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் பட்டியலில் முதல் நபராக ஸ்ரீதர் இருப்பதால், அவர் தாக்கல் செய்த மனு விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஜெயராஜ் குடும்பத்தினர் கூறுவது என்ன? "ஐந்தாண்டுகளாக எதுவும் பேசாமல் தற்போது அப்ரூவராக மாற உள்ளதாக ஸ்ரீதர் கூறுகிறார். இது வழக்கை இழுத்தடிக்கும் முயற்சியாகவே பார்க்கிறோம்" எனக் கூறுகிறார், ஜெயராஜின் மகள் பெர்சிஸ். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "குற்றம் சுமத்தப்பட்டவர்களில் முதல் நபராக ஸ்ரீதர் இருக்கிறார். என் அப்பா-தம்பி மீது தாக்குதல் நடத்தப்பட்ட அன்று காவல்நிலையத்தில் அவர் இருந்துள்ளார். பெண் காவலரின் சாட்சியத்தில், இவரது பங்கு குறித்தும் கூறியுள்ளார்" என்கிறார். "காவல்நிலையத்தில் இருந்தபோது, 'சத்தம் வரவில்லை, நன்றாக அடி' என உதவி ஆய்வாளரிடம் இவர் கூறியதாக சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த அலறல் சத்தத்தைக் கேட்டு அவர் ரசித்ததாகவும் சாட்சி கூறியுள்ளார். அந்தவகையில், அப்ரூவர் என்ற பெயரில் தற்போது நாடகமாடுவதாகவே பார்க்கிறோம்" எனக் கூறுகிறார், பெர்சிஸ். வழக்கை இழுத்தடிக்கும் வேலைகளை குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மேற்கொள்வதாகக் கூறும் பெர்சிஸ், "தனக்கென எந்த வழக்கறிஞரையும் ஸ்ரீதர் வைத்துக்கொள்ளவில்லை. தானே வாதாடுவதாகக் கூறி, குறுக்கு விசாரணை என்ற பெயரில் தலையிட்டு தாமதம் செய்கிறார்" என்கிறார். "தற்போது நடக்கும் வழக்கின் விசாரணை முறை திருப்தியளித்தாலும் இன்னும் வேகமாக நடக்க வேண்டும் என விரும்புகிறோம். அப்ரூவராக மாற உள்ளதாக ஸ்ரீதர் தாக்கல் செய்துள்ள மனுவை எதிர்த்து நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய உள்ளோம்" என்கிறார், பெர்சிஸ். "சட்டத்தின்படி இரண்டு வழிகள்" "அப்ரூவர் ஆக மாற உள்ளதாகக் கூறும்போது முதல் நபராக (ஏ1) குற்றம் சுமத்தப்பட்டவருக்கு மன்னிப்பு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளதா?" என, பெர்சிஸின் வழக்கறிஞர் ராஜிவ் ரூஃபஸிடம் பிபிசி தமிழ் கேட்டது. "சட்டத்தின்படி இரண்டு வழிகள் உள்ளன. அவரது கோரிக்கையில் அர்த்தம் உள்ளதாக நீதிமன்றம் கருதினால் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 305, 306 ஆகிய பிரிவுகளின்படி மன்னிப்பு கோருவதை (Tendor of burden) ஏற்றுக்கொள்ளும். அடுத்து, ஸ்ரீதரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்து, அப்ரூவராக வைத்துக்கொள்ளலாமா, வேண்டாமா என நீதிமன்றம் முடிவெடுக்கும். அதுதொடர்பாக நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும்" எனக் கூறுகிறார். "அதேநேரம், காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதரின் கோரிக்கை ஏற்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு" எனக் கூறும் ராஜிவ் ரூஃபஸ், "வழக்கில் முறையான சாட்சிகள் ஏராளமானோர் உள்ளனர். கண்ணால் கண்ட சாட்சிகளும் உள்ளனர்" என்கிறார். "சாட்சிகள் இல்லாத வழக்குகளில் இதுபோன்ற கோரிக்கைகள் தேவைப்படலாம். அந்தவகையில் ஸ்ரீதரின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்வது கடினம் என்றே பார்க்கிறேன்" எனவும் குறிப்பிட்டார். தண்டனையில் இருந்து தப்பிக்கும் வகையில் அப்ரூவர் ஆகும் முயற்சியை ஸ்ரீதர் தரப்பினர் கையில் எடுத்துள்ளதாக தான் பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். "அப்ரூவர் என்ற வாதம் எடுபடாது" "தனக்குக் கீழ்நிலையில் உள்ள காவலர்கள் மட்டுமே தவறு செய்ததாகக் கூறி அப்ரூவர் ஆவதற்கு ஸ்ரீதர் முயற்சித்தாலும், நீதிமன்றத்தின் விசாரணையில் இருந்து தப்பிக்கும் வாய்ப்புகள் குறைவு" எனக் கூறுகிறார், ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி. "ஆய்வாளரின் காவல் எல்லைக்குள் தவறு நடந்திருப்பதால் அவர் மட்டுமே பொறுப்பாவார். தனக்குத் தெரியாது என அவர் கூற முடியாது. நீதிமன்றம் இதை ஏற்றுக்கொண்டாலும் ஸ்ரீதர் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன" என்கிறார் கருணாநிதி. தொடர்ந்து பேசிய அவர், "குற்றத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களில் முதல் நபராக குறிப்பிடப்பட்டிருப்பதால், குற்றத்தில் அவர் பிரதான பங்கு வகித்ததாகவே பார்க்கப்படும். தன் மீது தவறு இல்லை என்பதை அவர் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆய்வாளரின் காவல் எல்லைக்குள் தவறு நடந்திருப்பதால் அவர் மட்டுமே பொறுப்பாவார் - ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி "ஸ்ரீதருக்கு எதிரான சாட்சிகள், ஆவணங்கள் ஆகியவை இருந்தால் தான் வழக்கில் முதல் நபராக சேர்க்கப்படுவார். இந்த வழக்கில், 'ஆய்வாளர் கூறுவது தவறு. அவர் முன்னிலையில் தான் செய்தோம்' என மற்ற காவலர்கள் கூறினால், அப்ரூவர் என்ற வாதம் எடுபடாது" எனவும் அவர் தெரிவித்தார். "சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக, புலனாய்வு அதிகாரி கூறியுள்ள விவரங்கள், ஆதாரங்கள் ஆகியவற்றைப் பார்த்து அப்ரூவராக ஏற்கலாமா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும். அவ்வாறு கேட்பதாலேயே ஏற்றுக்கொண்டதாக பார்க்க முடியாது" எனவும் கருணாநிதி குறிப்பிட்டார். "சமீபத்தில் திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் போலீஸ் விசாரணையின்போது இறந்துள்ளார். காவல் மரணங்களில் வழக்குகளை விரைந்து நடத்தும்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும்" என்கிறார். தூத்துக்குடியில் உப்பளத்தில் வேலை பார்த்து வந்து ஒருவர் காவல் மரணத்தில் இறந்து போன வழக்கில், 24 வருடங்களுக்கு பிறகு நீதி கிடைத்த சம்பவத்தையும் அவர் மேற்கோள் காட்டினார். 24 வருடங்களுக்கு பிறகு தண்டனை தூத்துக்குடி மாவட்டம், மேல அலங்காரத்தட்டு பகுதியைச் சேர்ந்த வின்சென்ட் என்ற தொழிலாளியை 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்ததாகக் கூறி, தாளமுத்து நகர் காவல்நிலைய போலீஸார் அழைத்துச் சென்றனர். மறுநாள் (18.9.1999) காவல்நிலைய லாக்கப்பில் அவர் உயிரிழந்தார். தனது கணவரை போலீஸார் அடித்துக் கொன்றுவிட்டதாக வருவாய் கோட்டாட்சியரிடம் அவரது மனைவி கிருஷ்ணம்மாள் புகார் அளித்தார். விசாரணையில் உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் உள்பட 11 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. '5 ஆண்டாகியும் நீதி கிடைக்கவில்லை' - சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கு என்ன ஆனது? சாத்தான்குளம் முதல் திருப்புவனம் வரை - காவல் அத்துமீறல்கள் ஏற்படுத்தும் அரசியல் எதிரொலி 'சடலமாக வருவான் என நினைக்கவில்லை' என்று கதறும் தாயார் - நகை திருட்டு புகார் கொடுத்த பெண் கூறுவது என்ன? பிபிசி கள ஆய்வு 'அஜித்குமார் தாக்கப்பட்ட வீடியோவை நான் எடுத்தேன்' - சாட்சிகளுக்கு கிடைக்கும் சட்டப் பாதுகாப்பு என்ன? தற்போது ஸ்ரீவைகுண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளராக உள்ள ராமகிருஷ்ணன் உள்பட ஒன்பது பேருக்கு ஆயுள் தண்டனையும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இரண்டு பேர் விடுதலை செய்யப்பட்டனர். "24 வருடங்களாக மிகவும் சிரமப்பட்டுத் தான் கிருஷ்ணம்மாள் குடும்பத்தினர் வழக்கை நடத்தியுள்ளனர். விரைந்து நீதி கிடைக்கும்போது தான் தவறு செய்யும் காவலர்களுக்கு பாடமாக அமையும்" எனக் கூறுகிறார் பெர்சிஸ். "கடந்த ஐந்தாண்டுகளாக குடும்ப உறவுகளின் சுக, துக்க காரியங்களுக்குச் செல்ல முடியவில்லை. நாங்கள் ஏதோ குற்றம் செய்தது போல சிலர் பேசும்போது வேதனையாக உள்ளது" எனவும் அவர் குறிப்பிட்டார். "அப்பாவும் தம்பியும் இறந்தபிறகு அங்கு வசிப்பது பாதுகாப்பில்லை என்பதால் தென்காசிக்கு குடிபெயர்ந்துவிட்டோம். இன்று வரை எங்கள் குடும்பத்தினர் யாரும் மகிழ்ச்சியான மனநிலையில் இல்லை" எனக் கூறுகிறார் பெர்சிஸ். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce8z76k5319o
  5. 23 JUL, 2025 | 05:12 PM (எம்.ஆர்.எம்.வசீம்) வவுனியா வடக்கில் உள்ள தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்துவந்த நிலங்கள் ஆக்கிரமிக்கப்படும் நிலைமைகள் தொடர்ந்துகொண்டு இருப்பதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற வேலையாட்களின் வரவு - செலவுத் திட்ட நிவாரணப்படி திருத்த சட்டமூலம் மற்றும் வேலையாட்களின் தேசிய குறைந்தபட்ச வேதன திருத்த சட்டமூலம் ஆகியவற்றின் மீதான விவாதத்தின்போது உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவிலுள்ள வெடிவைத்தகல்லு கிராம அலுவலர் பிரிவு தமிழ்மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த பாரம்பரிய பிரதேசம். இங்குள்ள மக்களின் பிரதான வாழ்வாதாரம் விவசாயம். 1983 காலப்பகுதியில் ஏற்படுத்தப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் அதனை தொடர்ந்து நடைபெற்ற அசம்பாவிதங்கள் காரணமாக அங்கிருந்த மக்கள் இடம்பெயர்ந்து வேறு பிரதேசங்களில் குடியேறியிருந்தனர். இதனால் நீண்டகாலமாக அங்கிருந்த தமிழ் மக்களுக்கு சொந்தமான விவசாய நிலங்கள் பயிர்ச்செய்கை செய்யப்படாது பராமரிப்பின்றி இருந்தது. “திரிவச்சகுளம்” வெடிவைத்தகல்லு கிராமத்திலுள்ள தமிழ் மக்களால் நீண்டகாலமாக கைவிடப்பட்டிருந்த மூன்று சந்ததிக்கு முற்பட்ட வரலாற்றை கொண்ட கைவிடப்பட்ட குளத்தையும் ஏறத்தாழ 150 ஏக்கருக்கு மேற்பட்ட வயற்காணிகளையும் கொண்டது. இறுதி யுத்தத்திற்கு பின்னராக மக்கள் மீள்குடியேறிய நிலையில் காணி சொந்தக்காரர்கள் சிலர் 2019 காலப்பகுதியில் தமது மூதாதையரின் காணிகளை பயிச்செய்கைக்காக துப்புரவு செய்தபோது வனப்பாதுகாப்பு திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கலும் செய்யப்பட்டது. வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் காணி உரிமையாளர்கள் தமது காணிக்குள் செல்வதற்கு தடையும் விதிக்கப்பட்டிருந்தது. 5 வருடங்கள் நீடித்த வழக்கு 2024இல் போதுமான ஆதாரங்களை வனப்பாதுகாப்பு திணைக்களத்தினரால் சமர்ப்பிக்க முடியாத காரணத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனாலும் இந்த காலப்பகுதியை தமக்கு சாதகமாக்கி கொண்ட அயற்கிராமத்தில் குடியேற்றப்பட்ட பெரும்பான்மையின விவசாயிகள் மகாவலி அதிகார சபையின் துணையுடன் குத்தகை அடிப்படையில் தமிழ் மக்களால் துப்பரவு செய்யப்பட்ட காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆரம்பத்தில் 10 விவசாயக் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகள் தற்போது 25 குடும்பங்களாக அதிகரித்துள்ளதுடன், நெடுங்கேணி கமநல சேவைகள் நிலையத்தில் “அந்தரவெவ கமக்காரர் அமைப்பு” என்று பதிவு செய்துள்ளனர். வனப்பாதுகாப்பு திணைக்களத்தால் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் காணி உரிமையாளர்களுக்கு காணிக்குள் செல்வதற்கு தடைவிதித்துள்ள காலப்பகுதியில் எவ்வாறு மகாவலி அதிகார சபை அந்தக் காணிகளை குத்தகைக்கு வழங்கமுடியும்? புதிய பெயரில் கமக்கார் அமைப்பாக பதிவு செய்ய முடியும் என்றால் இதற்கு அரசாங்க அதிகாரிகளும் பக்கச்சார்பாக செயற்பட்டுள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. ஓரிரு மாதங்களிற்கு முன்னர் அந்தப் பிரதேசத்தில் 200 ஏக்கருக்கு அதிகமான பிரதேசம் திட்டமிட்ட வகையில் காடழிப்பு செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள மக்களின் தகவலின்படி சுமார் ஒன்றரை மாதங்களுக்கு மேலாக 5 டோசர்களும் 2 ஜே.சீ.பி இயந்திரங்களும் காடழிப்பில் ஈடுபட்டதாக கூறுகின்றனர். தமிழ் மக்கள் தமது விவசாயத் தேவைக்காக வேலி அடைப்பதற்காக தடிகளை வெட்டினால் சிறையில் அடைக்கும் வனப்பாதுகாப்பு திணைக்களம் மற்றும் பொலிஸாருக்கு ஒன்றரை மாதங்கள் அதுவும் பாரிய இயந்திரங்களைக் கொண்டு காடழிப்பு செய்யப்பட்டமை தெரியாது போனமை ஆச்சரியமாக இருக்கின்றது. அத்துடன் தற்போதைய விலைவாசியில் ஒரு ஏக்கர் காணி துப்பரவாக்குவதற்கே குறைந்தது ஒரு இலட்சம் ரூபா தேவைப்படுமென்றால் 200 ஏக்கரிற்கு மேற்பட்ட காடுகளை துப்பரவு செய்வதற்கு எத்தனை மில்லியன் தேவைப்பட்டிருக்கும்? அப்படியென்றால் இதனை சாதாரணமாக பொதுமக்களால் செய்யமுடியுமா? இதன் பின்னணியில் யார் உள்ளார்கள்? அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்த பிரதேசத்திற்கு சென்று விசாரித்ததில் இந்தக் காடழிப்பு பற்றி பொலிஸாரோ வனப்பாதுகாப்பு திணைக்களத்தினரோ அறிந்திருக்கவில்லை என்று கூறப்பட்டது. இதனை நம்பக்கூடியதாக உள்ளதா? ஆக தமிழ் மக்கள் மீதான ஆக்கிரமிப்பு கொள்கைகளில் உங்கள் ஆட்சியிலும் எந்தவிதமான மாற்றத்தையும் காணவில்லை என்றார். https://www.virakesari.lk/article/220751
  6. "என்னிடம் இனிமேலும் ஊடக பணியில் ஈடுபடுவதற்கான வலு இல்லை, எனது உடல் மெலிந்து விட்டது ; காசாவிலிருந்து ஒரு ஊடகவியலாளர் " - உடனடி தலையீடு இல்லாவிட்டால் காசாவில் இறுதியாக உள்ள ஊடகவியலாளர்கள் உயிரிழப்பார்கள் ஏஎவ்பி Published By: RAJEEBAN 23 JUL, 2025 | 11:17 AM காசாவில் எஞ்சியுள்ள ஊடகவியலாளர்கள் மரணிக்கும் ஆபத்தை எதிர்நோக்குகின்றனர் என ஏஎவ்பி ஊடகவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உடனடிதலையீடு இல்லாவிட்டால் காசாவில் இறுதியாக உள்ள ஊடகவியலாளர்கள் உயிரிழப்பார்கள் என அவர்கள் எச்சரித்துள்ளனர். யுத்தத்தின் கோரபிடியில் சிக்குண்டுள்ள காசாவிற்கு வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் செல்வதற்கு இஸ்ரேல் அனுமதி மறுத்து வரும் நிலையில் ரொய்ட்டர்ஸ் ஏஎவ்பி போன்ற நிறுவனங்கள் காசாவில் உள்ள உள்ளுர் பத்திரிகையாளர்களையே செய்திக்காக நம்பியுள்ளன. 21 மாதமோதலில் 60000 பேர் உயிரிழந்துள்ள காசாவில் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு மற்றும் பட்டினி போன்றவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். காசாவில் ஊடகவியலாளர்களின் நிலை குறித்து ஏஎவ்பியின் ஊடகவியலாளர்கள் குழுவொன்று பலவிடயங்களை தெரிவித்துள்ளது. காசாவில் உள்ள மோசமான நிலை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும் அங்குள்ள சுயாதீன செய்தியாளர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பல மாதங்களாக அவர்களின் வாழ்க்கை மிக மோசமான நிலைக்கு சென்றுகொண்டிருப்பதை நாங்கள் வேறுவழியின்றி பார்த்துக்கொண்டிருந்தோம் என ஏஎவ்பி அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. அவர்களிடம் துணிச்சல்,தொழில்முறை அர்ப்பணிப்பு,மீள் எழுச்சி தன்மை இருந்தபோதிலும் அவர்களின் நிலைமை தற்போது தாங்க முடியாததாக மாறியுள்ளது என ஏஎவ்பி தெரிவித்துள்ளது. என்னிடம் இனிமேலும் ஊடக பணியில் ஈடுபடுவதற்கான வலுஇல்லை,எனது உடல் மெலிந்து விட்டது என்னால் முடியவில்லை என காசாவில் உள்ள ஏஎவ்பியின் புகைப்படப்பிடிப்பாளர் பசார் சமூக ஊடக செய்தியொன்றை பதிவு செய்துள்ளார். பசார் 2010 முதல் ஏஎவ்பிக்காக பணியாற்றிவருகின்றார்,கடந்த பெப்ரவரி முதல் அவர் தனது குடும்பத்தவர்களுடன் இடிந்த வீட்டில் வசித்து வருகின்றார்.தனது சகோதரர் ஒருவர் பட்டினியால் உயிரிழந்துவிட்டார் என அவர் தெரிவித்தார் என ஊடகவியலாளர்கள் குழு தெரிவித்துள்ளது. பத்திரிகையாளர்கள் ஏஎவ்பியிடமிருந்து மாத சம்பளம் பெறுகிறார்கள், ஆனால் விலை அதிகரிப்பினால் அவர்கள் போதியளவு உணவுப்பொருட்களை வாங்க முடியாத நிலையில் உள்ளனர். மற்றொரு ஏஎவ்பி ஊழியரான அஹ்லம் ஒரு நிகழ்வைச் செய்தி சேகரிக்க அல்லது ஒரு நேர்காணலைச் செய்ய தனது தங்குமிடத்தை விட்டு வெளியேறும் ஒவ்வொரு முறையும் "நான் உயிருடன் திரும்பி வருவேனா என்று எனக்குத் தெரியவில்லை" என்று கூறினார். உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறைதான் அவரது மிகப்பெரிய பிரச்சினை என்று அவர் கூறினார். 1944 ஆம் ஆண்டு ஏஎவ்பி நிறுவப்பட்டதிலிருந்து "நாங்கள் மோதல்களில் பத்திரிகையாளர்களை இழந்துள்ளோம் சிலர் காயமடைந்துள்ளனர் மற்றவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். ஆனால் எங்களில் யாரும் சக ஊழியர்கள் பசியால் இறப்பதைப் பார்த்ததை நினைவில் கொள்ள முடியாது" என்று .ஏஎவ்பியின் ஊடகவியலாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. அவர்கள் இறப்பதைப் பார்க்க நாங்கள் மறுக்கிறோம்" என்று ஏஎவ்பியின் ஊடகவியலாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. 2024 இல் காசாவிலிருந்து அதன் ஊடகவியலாளர்கள் வெளியேறியதிலிருந்து ஏஎவ்பி சுயாதீன ஊடகவியலாளர் மூன்று படப்பிடிப்பாளர்கள் ஆறு சுயாதீன வீடியோ படப்பிடிப்பாளர்களுடன் காசாவில் பணிபுரிகின்றது. ஏபி ரொய்ட்டரின் ஊடகவியலாளர்களும் தங்களின் காசா சகாக்களின் நிலை குறித்து கரிசனை வெளியிட்டுள்ளனர். காசாவில் உள்ள எங்கள் ஊழியர்களைப் பற்றி நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம் மேலும் அவர்களுக்கு ஆதரவளிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்" என்று அசோசியேட்டட் பிரஸ்ஸின் செய்தித் தொடர்பாளர் லாரன் ஈஸ்டன் கூறினார். "தரையில் என்ன நடக்கிறது என்பது குறித்து உலகிற்குத் தெரியப்படுத்த எங்கள் குழு தொடர்ந்து செய்து வரும் பணி குறித்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்." https://www.virakesari.lk/article/220700
  7. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கருவாட்டில் மேம்பட்ட புரதம், கால்சியம், இரும்புச் சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலம் ஆகியவை உள்ளன. கட்டுரை தகவல் அன்பு வாகினி பிபிசி தமிழுக்காக 9 மணி நேரங்களுக்கு முன்னர் கருவாடு, தமிழர்களின் உணவுப் பழக்கத்தில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாகக் கடலோரப் பகுதிகளில் இது பல நூற்றாண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் 3000 ஆண்டுகளுக்கு முன்பே மீனை சூரிய ஒளியில் காயவைத்து கருவாடு ஆக்கும் முறை இருந்ததை சங்க இலக்கியக் குறிப்புகள் காட்டுகின்றன. உலகளாவிய மீன் உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் மொத்த மீன் உற்பத்தி 16.5 மில்லியன் மெட்ரிக் டன். இதில் 75% நன்னீர் மீன்பிடிப்பு, 25% கடல் மீன்பிடிப்பு. புதிதாகப் பிடித்த மீனைவிட நீண்ட காலம் பாதுகாக்கப்படக் கூடிய கருவாடு எனப்படும் உணவு வகை கடலோர மக்களின் ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, அவர்களின் பொருளாதாரத்திற்கும் ஒரு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. கருவாட்டில் மேம்பட்ட புரதம், கால்சியம், இரும்புச் சத்து, ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளதால் நம் உடல்நலத்தைக் காக்கும் ஒரு 'சூப்பர் ஃபுட்' ஆகவும் இது கருதப்படுகிறது. கருவாட்டில் ஊட்டச்சத்து அதிகம் உள்ளதால் சிறிய அளவில் உட்கொண்டாலே நமக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைத்துவிடும். ஆனால், கருவாட்டின் ஊட்டச்சத்து முக்கியத்துவம், உணவுப் பாதுகாப்பில் அதன் பங்கு, சிறிய மீன்களின் சிறப்புகள், மருத்துவர்களின் எச்சரிக்கைகள், நவீன தீர்வுகள் பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியம். அதுகுறித்து இங்கு விரிவாகப் பார்ப்போம். கருவாட்டின் ஊட்டச்சத்து எவ்வளவு மதிப்பு வாய்ந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நூறு கிராம் கருவாட்டில் 60-80% வரை புரதம் உள்ளது தமிழர்களின் பாரம்பரிய சமையல் முறையில், கருவாடு பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தப்படுகிறது. கருவாட்டுக் குழம்பு, கருவாட்டுப் பொடி சாம்பார், கருவாட்டு வறுவல் போன்றவை தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பிரபலமான உணவு வகைகள். குறிப்பாக கடலோர மாவட்டங்களான நாகப்பட்டினம், தூத்துக்குடி, ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் கருவாடு அன்றாட உணவில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. கருவாடு ஊட்டச்சத்து நிறைந்த ஒரு சக்தி வாய்ந்த உணவு. 100 கிராம் கருவாட்டில் 60-80% வரை புரதம் உள்ளது. இது இறைச்சி, முட்டையைவிட அதிகமான அளவு. இந்த மேம்பட்ட புரதம் அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் கொண்டுள்ளது. இது எளிதில் செரிமானமாகி, தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. சிறிய மீன்களான நெத்திலி, கெளுத்தி, பாறை போன்றவற்றில் கால்சியம், இரும்புச்சத்து அதிக அளவில் காணப்படுகிறது. இவை எலும்புகளின் வலிமைக்கும், ரத்த சோகையைத் தடுப்பதற்கும் அவசியம். சிறிய மீன்களின் முழு உடலையும் (எலும்புகள் உள்பட) உண்ண முடியும் என்பதால், இவை பெரிய மீன்களைவிட 2-3 மடங்கு அதிக கால்சியம், 5-10 மடங்கு அதிக இரும்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளதாக இந்திய ஊட்டச்சத்து நிறுவனத்தின் (NIN) ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இது குறிப்பாக வளரும் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்களுக்கு மிகவும் ஏற்ற சத்தான உணவு. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கருவாட்டில் வைட்டமின் டி, ஏ, பி12 போன்ற முக்கியமான வைட்டமின்கள் அதிக அளவில் உள்ளன மேலும், ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளை, இதய ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும், குழந்தைகளின் கற்றல் திறன், நினைவாற்றலை அதிகரிக்கவும் உதவுகின்றன. இவை ரத்த அழுத்தம், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. கருவாட்டில் வைட்டமின் டி, ஏ, பி12 போன்ற முக்கியமான வைட்டமின்கள் அதிக அளவில் உள்ளன. வைட்டமின் டி எலும்புகளின் வலிமைக்கு அவசியமானது. வைட்டமின் ஏ கண்பார்வை, நோய் எதிர்ப்பு சக்திக்கு நல்லது. வைட்டமின் பி12 நரம்பு மண்டலம், ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்திக்கு மிகவும் அவசியம். துத்தநாகம், செலீனியம் போன்ற தாது உப்புகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கின்றன. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) சமீபத்திய ஆய்வுகளும், ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள நாடுகளில் கருவாட்டைப் பயன்படுத்தி அதைக் குறைக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துகின்றன. கருவாட்டை எவ்வாறு பாதுகாப்பான முறையில் உணவுத் திட்டங்களில் ஒருங்கிணைக்கலாம் என்பதற்கான நடைமுறைப் பரிந்துரைகளையும் அந்த அமைப்பு வழங்குகிறது. எந்த கருவாட்டில் என்ன ஊட்டச்சத்து அதிகம் உள்ளது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நெத்திலி, கெளுத்தி, பாறை, வாளை, சூரை போன்ற மீன் வகைகள் கருவாடு தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன உலகம் முழுவதும், குறிப்பாக வளரும் நாடுகளில், உணவு, ஊட்டச்சத்துப் பாதுகாப்பு பெரிய சவாலாக உள்ளது. இந்த சவாலைச் சமாளிக்க சிறிய மீன்கள் ஒரு முக்கியத் தீர்வாக மாறியுள்ளன. சிறிய மீன்கள் விலை குறைவாகவும் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருப்பதால் அவற்றை 'ஊட்டச்சத்து சூப்பர் ஸ்டார்ஸ்' என்று உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு அழைக்கிறது. வங்கதேசம், கம்போடியா போன்ற நாடுகளில் சிறிய மீன்கள் உள்ளூர் மக்களின் அன்றாட ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. இந்தியாவில் ஒடிசா மாநிலம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி சேவை (ICDS ) திட்டத்தில் சிறுமீன் கருவாட்டை குழந்தைகளின் உணவில் சேர்த்து, ஊட்டச்சத்துக் குறைபாடுகளைக் குறைப்பதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு வெற்றிகரமான முடிவுகளை வெளியிட்டுள்ளது. கருவாடு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மீன் வகைகளும் முக்கியமானவை. நெத்திலி, கெளுத்தி, பாறை, வாளை, சூரை போன்றவை பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு மீன் வகையும் தனித்துவமான ஊட்டச்சத்துச் சிறப்புகளைக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, நெத்திலி, கால்சியம் அதிகம் கொண்டது. கெளுத்தி, ஓமேகா-3 கொழுப்பு அமிலங்களை அதிகம் கொண்டது. பாறை புரதத்தை அதிக அளவில் கொண்டது. கருவாடு தயாரிக்கும் முறைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அதை வெயிலில் 3-5 நாட்கள் காய வைப்பது, கருவாடு தயாரிக்கும் முறைகளில் ஒன்று. கருவாடு தயாரிப்பதற்கு, கடலில் பிடித்த மீன்களைக் கழுவிச் சுத்தம் செய்து வெயிலில் 3-5 நாட்கள் காய வைக்கப்படும். மாதக்கணக்கில் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக இதில் 20% முதல் 30% வரை உப்பு சேர்த்து காயவைக்கப்படுகிறது. புகை போடுவதன் மூலம் கருவாடு தயாரிப்பது மற்றொரு பாரம்பரிய முறை. குறிப்பாக தூத்துக்குடி, மண்டபம் போன்ற பகுதிகளில் இந்த முறை பிரபலமாக உள்ளது. இதில், விறகுகளை எரிப்பதில் வெளியாகும் புகையில் மீன்களைக் காய வைக்கின்றனர். இது கருவாட்டிற்குத் தனித்துவமான சுவையைக் கொடுப்பதோடு, நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் அதைப் பாதுகாக்கவும் உதவுகிறது. நொதித்தல் மூலம் கருவாடு தயாரிப்பது, மற்றொரு சுவையான முறை. இதில் உப்புடன் சேர்த்து மீன்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை நொதிக்க வைக்கப்படுகிறது. இந்த முறையில் தயாரிக்கப்படும் 'மாசி' எனப்படும் கருவாட்டு பொடி தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம். இந்த நடைமுறையில் புரதங்கள் பகுதியளவு ஹைட்ரோலைஸ் ஆகி செரிமானத்தை எளிதாக்குகின்றன. மருத்துவர்கள் கருவாட்டைத் தவிர்க்கச் சொல்வது ஏன்? கருவாட்டுக்கு ஊட்டச்சத்து நன்மைகள் பல இருக்கும் போதிலும், சில சுகாதார சவால்களும் அதில் உள்ளன. பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் கருவாட்டில் உப்பு அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. சராசரியாக, 100 கிராம் கருவாட்டில் 5-10 கிராம் உப்பு இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் 20-30% உப்பு சேர்க்கப்படுகிறது. இது உயர் ரத்த அழுத்தம், இதய நோய்களுக்கு வழிவகுக்கும். இதைப் பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியம். அதோடு கருவாடு தயாரிப்பு சுகாதாரமின்றி இருந்தால், அதில் நுண்ணுயிர்த் தொற்று அபாயம் இருக்கவும் வாய்ப்புள்ளது. சுத்தமற்ற சூழலில் காயவைப்பது, பூச்சிகள், மண் கலப்படம் போன்றவற்றுக்கான சாத்தியம் உள்ளது. சில வேளைகளில் கெட்டுப்போன மீனை கருவாடு தயாரிக்க சிலர் பயன்படுத்துவதால், உணவுப் பாதுகாப்பில் மிகப்பெரிய சவால் உள்ளது. புகை போடுவதன் மூலம் தயாரிக்கப்படும் கருவாட்டில் பாலிசைக்ளிக் அரோமாடிக் ஹைட்ரோகார்பன்கள் (PAHs) உருவாகலாம். இவை புற்றுநோய்க்கான காரணிகளாக இருக்கலாம். உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுகள், அதிகம் புகை போடப்பட்ட உணவு வகைகளை உட்கொள்வது சில வகை புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் எனக் காட்டுகின்றன. கருவாட்டில் கன உலோகங்கள் கூடுதல் அளவில் சேர்ந்துவிடும் அபாயமும் உள்ளது. குறிப்பாக கடல் மாசுபாடு அதிகமுள்ள பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்களில் பாதரசம், காட்மியம் போன்ற கன உலோகங்கள் அதிக அளவில் இருக்கலாம். இவை நீண்ட காலத்திற்கு உடலில் சேர்ந்து நரம்பு மண்டல பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இந்தக் காரணங்களாலேயே, கருவாட்டு உணவு வகைகளை மருத்துவர்கள் தவிர்க்குமாறு வலியுறுத்துகிறார்கள். இருப்பினும், இந்த சவால்கள் அனைத்தையும் சரியான உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் முறைகளின் வாயிலாகச் சரிசெய்ய முடியும். குறைந்த உப்பு, சுகாதாரமான உற்பத்தி முறைகள், நவீனப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் தரமான கருவாடு மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய முடியும். பாதுகாப்பான கருவாடு தயாரிப்பு முறைகள் என்ன? இந்தப் பிரச்னைகளுக்கு சூரிய ஒளியில் (solar dryer) காய வைக்கப்படும் மீன் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. இந்த முறையில் குறைந்த உப்பு (5 சதவிகிதத்திற்கும் குறைவாக) பயன்படுத்தப்படுகிறது. சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுவதால் பாக்டீரியா தொற்று ஏற்படுவதில்லை. இயற்கையான ஊட்டச்சத்துகள் பாதுகாக்கப்படுகின்றன. இப்படிச் செய்வது வெப்பப்படுத்துவதால் இழக்கப்படும் வைட்டமின் ஏ, ஒமேகா-3 போன்ற ஊட்டச்சத்துகளைப் பாதுகாக்கிறது. பூச்சிகள், தூசி மற்றும் பிற மாசுபடுத்திகளில் இருந்து மீனைப் பாதுகாக்கிறது. இதனால் கருவாட்டின் சுகாதாரம் மேம்படுகிறது. இத்தகைய முறையில் கருவாடு தயாரிக்க குறைந்த நேரமே போதுமானது என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஓர் அம்சம். கருவாட்டின் பொருளாதார, சமூகப் பங்கு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறு மீன்களில் தயாரிக்கப்படும் கருவாடுகள் அதிக ஊட்டச்சத்து கொண்டவை கருவாடு தயாரிப்பும் விற்பனையும் கடல்சார் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக சிறு குறு மீனவர்கள், மகளிர் கூட்டுறவு அமைப்புகள் மற்றும் கடற்கரை சமூகங்களுக்கு இது வாழ்வாதார ஆதாரமாக உள்ளது. 70% கடலோர மீனவப் பெண்கள் மீனை காய வைத்தல், வகைப் பிரித்தல், விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ளனர். கருவாடு உற்பத்தியின் பொருளாதார முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள சில புள்ளிவிவரங்கள் உதவுகின்றன. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 50,000 டன் கருவாடு உற்பத்தி செய்யப்படுகிறது. இது ரூ.500 கோடிக்கும் மேல் மதிப்பு கொண்டது. கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (MPEDA) தரவுகள்படி, இந்தியாவின் மொத்த கருவாடு ஏற்றுமதியில் தமிழ்நாடு 25% பங்களிக்கிறது. இந்தியாவின் கருவாடு உள்நாட்டில் மட்டுமின்றி, குறிப்பிடத்தக்க ஏற்றுமதி சாத்தியத்தையும் கொண்டுள்ளது. காயவைத்த மீன்கள், அது சார்ந்த பொருட்கள் இலங்கை, வங்கதேசம், நேபாளம், மலேசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நைஜீரியா, கானா போன்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நவீன தொழில்நுட்பங்கள், புதுமுறை தீர்வுகள் கருவாடு உற்பத்தியில் நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடு பல நன்மைகளை வழங்குகிறது. இது கருவாட்டின் தரம், பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து மதிப்பை மேம்படுத்துகிறது. சூரிய உலர்த்திகள் (Solar dryers) மிகவும் பயனுள்ள தொழில்நுட்பமாக உள்ளன. இவை பாரம்பரிய வெயில் உலர்த்தும் முறையைவிட மேம்பட்டவை. சூரிய உலர்த்தியின் மூடப்பட்ட கட்டமைப்பால் பூச்சிகள், தூசிகளில் இருந்து மீன் பாதுகாக்கப்படுகிறது. இந்த முறையில் வெப்பநிலை, காற்றோட்டம் கட்டுப்படுத்தப்படுவதால், காய வைக்கும் நேரம் குறைகிறது, ஊட்டச்சத்துகள் பாதுகாக்கப்படுகின்றன. சூரிய உலர்த்தியில் மீன் காய வைக்கப்படும்போது, உப்பின் அளவை கணிசமாகக் குறைக்க முடியும். இதற்கு 5% உப்பு மட்டுமே போதுமானது. உப்பின் அளவை 5 சதவிதமாகக் குறைப்பதன் மூலம், ஆரோக்கியம் தொடர்பான அபாயங்களைக் குறைக்க முடியும். சில நவீன முறைகளில், உப்புக்குப் பதிலாக பிற பாதுகாப்புப் பொருட்கள் (சிட்ரிக் அமிலம், ரோஸ்மேரி சாறு போன்றவை) பயன்படுத்தப்படுகின்றன, அவை உப்பின் பாதுகாப்புப் பண்புகளைப் போலவே செயல்படுகின்றன. காற்றில்லா முறையில் உறையில் அடைக்கும் (Vaccum packaging) தொழில்நுட்பம் கருவாட்டின் பயன்படுத்தத்தக்க காலத்தை கணிசமாக அதிகரிக்கிறது. இது பாக்டீரிய வளர்ச்சியைத் தடுத்து, பல மாதங்களுக்கு கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது. உணவுத் திட்டங்களில் கருவாட்டை ஒருங்கிணைத்தல் பட மூலாதாரம்,GETTY IMAGES கருவாட்டின் ஊட்டச்சத்து நன்மைகளை அதிகமான மக்கள் பெறவும், ஊட்டச்சத்துக் குறைபாடுகளைக் குறைக்கவும், அரசு, சமூகத் திட்டங்களில் இதை ஒருங்கிணைப்பது அவசியம். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி சேவை (ICDS), மதிய உணவுத் திட்டங்களில் கருவாட்டை சேர்ப்பது ஒரு சிறந்த முன்முயற்சி. ஒடிசா மாநிலம் இதில் முன்னோடியாக உள்ளது. அங்கு குழந்தைகளுக்கு மீன் பொடி வழங்கப்படுகிறது. இதே மாதிரியை தமிழ்நாட்டிலும் பின்பற்றலாம். பள்ளி ஊட்டச்சத்துத் திட்டங்களில் கருவாட்டைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கருவாட்டுப் பொடியை சாம்பார் அல்லது குழம்புகளில் சேர்ப்பதன் மூலம் குழந்தைகளின் புரதம், தாதுப்பொருள் தேவைகளைப் பூர்த்தி செய்யலாம். குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கர்ப்பிணி, தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்துத் திட்டங்களில் கருவாட்டைச் சேர்ப்பது மற்றொரு நல்ல வாய்ப்பு. கருவாட்டில் உள்ள இரும்புச்சத்து, கால்சியம் அவர்களுக்கு மிகவும் அவசியம். குறைந்த உப்புகொண்ட கருவாட்டுப் பொடியை அவர்களுக்கான உணவில் சேர்த்துக் கொடுக்கலாம். கருவாடு தமிழர்களின் பாரம்பரிய ஊட்டச்சத்து மூலப்பொருளாகும். இதன் மேம்பட்ட புரதம், கால்சியம், இரும்புச் சத்து, ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அனைவருக்கும், குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். - கட்டுரையாளர் உணவுத் தொழில்நுட்ப வல்லுநராக இருக்கிறார். இதில் பேசப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தும் அவரது சொந்தக் கருத்துகளே. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1wpvr9lq0xo
  8. கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் மற்றும் படகுகள் சேதமடைந்தவர்களின்குடும்பத்தவர்களிற்கு இழப்பீடு - இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவேண்டும் என வைகோ வேண்டுகோள் 23 JUL, 2025 | 01:32 PM கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் மற்றும் படகுகள் சேதமடைந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்குவதற்கு இலங்கை அரசிற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். கச்சத் தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து கச்சத் தீவை திரும்பப் பெற வேண்டும் எனமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ இந்திய நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதும் கைது செய்யப்படுவதும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இது வரை கைது செய்யப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை 150 ஆகவும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளின் எண்ணிக்கை 20 ஆகவும் உயர்ந்துள்ளன. இதனால் மீனவ குடும்பத்தினர் பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் தங்கள் உறவினர்களை விடுவிப்பதற்காக பெரிய அபராதங்களை கட்ட வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. அண்மையில் 13.07.2025 அன்று ஆறு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களின் மோட்டார் பொருத்தப்பட்ட மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்ட கொடூரம் நடைபெற்றுள்ளது. பாக் விரிகுடாவில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளைப் பறிக்கும் வகையில்இ இலங்கை கடற்படை தொடர்ந்து அத்துமீறி வருகிறது. இது இந்திய ஒன்றிய அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது. அடிக்கடி தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதாலும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதாலும் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றன. எனவே கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன். எதிர்காலத்தில் மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும் மீனவ சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கவும் ஒன்றிய அரசு தீர்வுகாண வேண்டும். தொடர்ச்சியான கைதுகள் மீனவர்களுக்கு நெருக்கடியை உருவாக்குவது மட்டுமல்லாமல்இ பாக் விரிகுடா பகுதியில் மீன்பிடிப்புத் தொழிலையும் கேள்விக்குள்ளாக்குகிறது. மீன்பிடி தொழிலின் நீண்டகால நிலைத்தன்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்றது. கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் மற்றும் படகுகள் சேதமடைந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்குவதற்கு இலங்கை அரசிற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். கச்சத் தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்துஇ கச்சத் தீவை திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன். https://www.virakesari.lk/article/220722
  9. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் சிராஜ் பிபிசி தமிழ் 52 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழைந்த நபர், கருவியின் காந்த புலத்தால் இழுக்கப்பட்டு உயிரிழந்தார். உடற்பயிற்சிக்கான 9 கிலோ சங்கிலியுடன் இந்த அறைக்குள் அவர் நுழைந்ததால் எந்திரத்தின் காந்தப்புலம் அவரை இழுத்ததாக விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர். இது எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பது குறித்து பல சந்தேகங்களை உங்களுக்கு எழுப்பியிருக்கலாம். முதல்முறையாக மருத்துவமனைகளில் எம்ஆர்ஐ (MRI) ஸ்கேன் எடுத்துக்கொள்ள செல்லும் பலருக்கும், ஒருவித தயக்கம் இருக்கலாம். இதற்கு முதன்மையான காரணமாக இருப்பது, எம்ஆர்ஐ ஸ்கேன் கருவியின் வடிவமைப்பு. எம்ஆர்ஐ ஸ்கேனர் என்பது சக்திவாய்ந்த காந்தங்களைக் கொண்ட ஒரு பெரிய குழாய் போன்ற அமைப்பாகும். ஸ்கேன் செய்யும்போது, அந்த குழாய் அமைப்பின் உள்ளே ஒருவர் அனுப்பப்படுவார். அப்போது மின்காந்த எம்ஆர்ஐ ஸ்கேன் பாதுகாப்பானது மற்றும் மருத்துவ ரீதியாக மிகவும் உதவிகரமானது என்றே பெரும்பாலான மருத்துவ அமைப்புகளின் ஆய்வுக் கட்டுரைகள் தெரிவிக்கின்றன. எம்ஆர்ஐ ஸ்கேன் என்றால் என்ன? யாருக்கெல்லாம் இதனை பரிந்துரைப்பதில் கட்டுப்பாடுகள் உள்ளன? எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? இந்த கேள்விகளுக்கான பதில்களை கட்டுரையில் பார்க்கலாம். எம்ஆர்ஐ ஸ்கேன் என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எம்ஆர்ஐ ஸ்கேன் ஒரு வலியில்லா செயல்முறையாகும். எம்ஆர்ஐ (Magnetic Resonance Imaging) என்பது உடலின் உள்ளுறுப்புகள், மென்மையான திசுக்கள், எலும்புகள் மற்றும் பிற உள் கட்டமைப்புகளின் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை உருவாக்கப் பயன்படும் ஒரு மருத்துவ தொழில்நுட்பம் ஆகும். எக்ஸ்-கதிர்கள் அல்லது சிடி ஸ்கேன்களைப் போல, எம்ஆர்ஐ கதிர்வீச்சைப் பயன்படுத்துவதில்லை. மாறாக, வலுவான காந்தப்புலங்கள் மற்றும் ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. மூளை மற்றும் முதுகுத் தண்டு எலும்புகள் மற்றும் மூட்டுகள் மார்பகங்கள் இதயம் மற்றும் ரத்த நாளங்கள் கல்லீரல், கருப்பை அல்லது புரோஸ்டேட் சுரப்பி போன்ற உள்ளுறுப்புகள் என உடலின் பல்வேறு பகுதிகளை பரிசோதிக்க எம்ஆர்ஐ ஸ்கேன் பயன்படுகிறது. இந்த ஸ்கேனின் முடிவுகள் உடலின் நிலையைக் கண்டறியவும், சிகிச்சைகளைத் திட்டமிடவும், முந்தைய சிகிச்சை எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது என்பதை மதிப்பிடவும் உதவும் என பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை தெரிவிக்கிறது. எம்ஆர்ஐ ஸ்கேன் செயல்முறையின்போது என்ன நடக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எம்ஆர்ஐ ஸ்கேனர் ஒரு நிபுணத்துவம் பெற்ற ரேடியோகிராஃபரால் இயக்கப்படுகிறது. பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையின் கட்டுரையின்படி, எம்ஆர்ஐ ஸ்கேனர் கருவி என்பது சக்திவாய்ந்த காந்தங்களைக் கொண்ட, இரு முனைகளிலும் திறந்திருக்கும் ஒரு பெரிய குழாய் போன்ற அமைப்பாகும். எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யும்போது, ஸ்கேனர் கருவியுடன் பொருத்தப்பட்ட ஒரு தட்டையான படுக்கையில் நீங்கள் படுக்க வேண்டும். பின்னர் அந்த படுக்கை கருவிக்குள் நகர்த்தப்படும். உங்கள் உடலின் எந்தப் பகுதியை ஸ்கேன் செய்யப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்து, தலை அல்லது கால் முதலில் என ஸ்கேனருக்குள் நகர்த்தப்படுவீர்கள். எம்ஆர்ஐ ஸ்கேனர் ஒரு நிபுணத்துவம் பெற்ற ரேடியோகிராஃபரால் இயக்கப்படுகிறது. சில சமயங்களில், ஸ்கேன் செய்யப்படும் உடல் பகுதியின் மேல், அதாவது தலை அல்லது மார்பு போன்றவற்றின் மேல் ஒரு ஃபிரேம் வைக்கப்படலாம். இந்த ஃபிரேம்-இல் ஸ்கேன் செய்யும் போது உங்கள் உடலால் அனுப்பப்படும் சிக்னல்களைப் பெறுவதற்கான ரிசீவர்கள் இருக்கும். சிறந்த, தரமான எம்ஆர்ஐ படத்தை உருவாக்க இது உதவும். ஸ்கேன் செய்யப்படும் பகுதியின் அளவு மற்றும் எத்தனை படங்கள் எடுக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்து, ஸ்கேன் 15 முதல் 90 நிமிடங்கள் வரை நீடிக்கும். இதுவொரு வலியில்லா செயல்முறையாகும். எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கும்போது முடிந்தவரை அசையாமல் இருப்பது மிகவும் முக்கியம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எக்ஸ்-கதிர்கள் அல்லது சிடி ஸ்கேன்களைப் போல, எம்ஆர்ஐ அயனியாக்கும் கதிர்வீச்சைப் பயன்படுத்துவதில்லை. எம்ஆர்ஐ ஸ்கேனரை இயக்க ஒரு கணினி பயன்படுத்தப்படுகிறது. இது ஸ்கேனரால் உருவாக்கப்படும் காந்தப்புலத்திலிருந்து விலகி இருக்கும் வகையில் வேறு அறையில் வைக்கப்பட்டிருக்கும். அங்கிருந்து ரேடியோகிராஃபர் அந்தக் கணினியை இயக்குவார். "ரேடியோகிராஃபர் வழங்கக்கூடிய வழிகாட்டுதல்களையும், எம்ஆர்ஐ தொடர்பான விதிகளையும் முறையாக பின்பற்றினால் எம்ஆர்ஐ ஸ்கேன் ஒரு சிறந்த மருத்துவ தொழில்நுட்பமாகும்" என்கிறார் மருத்துவர் விஸ்வநாத். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் கதிரியக்கவியல் துறையில் மூத்த ஆலோசகராகப் பணிபுரிகிறார். "எம்ஆர்ஐ ஸ்கேன் செயல்முறையின்போது குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர் ஒருவர் உங்களுடன் இருக்க அனுமதிக்கப்படலாம். குழந்தைகள் என்றால், பெற்றோர்களில் ஒருவர் குழந்தையுடன் இருக்கலாம். ஆனால், அவர்களுக்கும் நோயாளிக்கான அனைத்து விதிகளும் பொருந்தும்" என்கிறார் அவர். எம்ஆர்ஐ அறைக்குள் நுழைவதற்கு முன், உங்களிடம் பல்வேறு கேள்விகள், ஒரு சிறப்பு ஸ்கிரீனிங் படிவத்தைப் பயன்படுத்தி கேட்கப்படும். உங்கள் உடலில் 'பேஸ்மேக்கர்' போன்ற கருவிகள் ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளனவா என்பதை அந்த படிவம் மூலம் தெரிவிக்க வேண்டும். எந்தெந்த பொருட்களை அகற்ற வேண்டும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எம்ஆர்ஐ ஸ்கேன் செயல்முறைக்கு முன் காது கேளாமைக்கான வெளிப்புற கருவிகள் போன்றவற்றை நிச்சயம் அகற்ற வேண்டும். அடுத்து, உங்களிடமுள்ள அனைத்து உலோகப் பொருட்களையும், உலோக நகைகளையும் அகற்றுமாறு அறிவுறுத்தப்படும். உங்களுடன் எம்ஆர்ஐ அறையில் இருக்கப்போகும் நபரும் அனைத்து விதமான உலோகப் பொருட்களையும் அகற்றிவிட வேண்டும், ஸ்கிரீனிங் படிவத்தையும் பூர்த்தி செய்யவேண்டும். "காரணம், எம்ஆர்ஐ கருவி சக்திவாய்ந்த காந்தங்களைப் பயன்படுத்துகிறது. உங்கள் உடலில் உலோகம் இருந்து, அது காந்தத்தால் ஈர்க்கப்பட்டால், பெரும் ஆபத்திற்கு வழிவகுக்கும். எனவே உடலில் ஏதேனும் உலோகம் அல்லது மின்னனுக் கருவிகள் இருந்தால் நிச்சயம் தெரியப்படுத்த வேண்டும்." என்கிறார் மருத்துவர் விஸ்வநாத். பர்ஸ், பணப்பை, கிரெடிட் கார்டுகள், காந்தப் பட்டைகள் கொண்ட அட்டைகள் செல்போன்கள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்கள் போன்ற மின்னணு சாதனங்கள் காது கேளாமைக்கான வெளிப்புற கருவிகள் உலோக நகைகள் மற்றும் கடிகாரங்கள் பேனாக்கள், சாவிகள், நாணயங்கள் ஹேர்பின்கள், ஹேர் கிளிப்புகள் மற்றும் சில ஹேர் ஆயின்மென்ட்கள் ஷூக்கள், பெல்ட் கொக்கிகள், பாதுகாப்பு பின்கள் உலோகப் பொருள் கொண்ட எந்தவொரு ஆடை போன்ற வெளிப்புற பொருட்களை எம்ஆர்ஐ அறைக்கு நிச்சயம் கொண்டு செல்லக்கூடாது என 'ரேடியாலஜிஇன்ஃபோ' இணையதளம் எச்சரிக்கிறது. "சுத்தத் தங்கம் காந்தத்தால் ஈர்க்கப்படாது, ஆனால் தங்க நகைகள் உலோகங்கள் கலந்திருக்க வாய்ப்பு உள்ளது என்பதால் அதை நாங்கள் அனுமதிப்பதில்லை. ஒருவரின் உடலுக்கு ஆபத்து என்பதோடு மட்டுமல்லாது உலோகப் பொருட்கள் எம்ஆர்ஐ படங்களை சிதைத்துவிடும்." எனக் கூறுகிறார். பொதுவாக எம்ஆர்ஐ பரிசோதனை செய்வதற்கு முன், மருத்துவமனை நிர்வாகத்தால் 'மெட்டல் டிடக்டர்' போன்ற சாதனம் கொண்டு ஒருவர் சோதிக்கப்படுவார் என்கிறார் விஸ்வநாத். உடலுக்குள் பொருத்தப்பட்ட கருவிகள் குறித்த எச்சரிக்கை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 'பேஸ்மேக்கர் போன்ற சாதனங்கள் இப்போது நவீன தொழில்நுட்பம் கொண்டு எம்ஆர்ஐ மூலம் பாதிக்கப்படாத வகையில் தயாரிக்கப்படுகின்றன' "ஒருவரின் உடலுக்குள் இருக்கும் உலோக அல்லது மின்னணு கருவி (இம்பிளான்ட்), எம்ஆர்ஐ மூலம் பாதிக்கப்படாது (MRI Compatible) என சான்று பெற்றது என்றால் அவர்கள் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பதில் பிரச்னையில்லை" என்கிறார் விஸ்வநாத். இத்தகைய இம்பிளான்ட் சாதனங்கள் அல்லது உடலுக்குள் இருக்கும் உலோகங்களுக்கு உதாரணமாக பின்வருபவற்றை குறிப்பிடுகிறது அமெரிக்காவின் 'மாயோ கிளினிக்' மருத்துவ அமைப்பு. பேஸ்மேக்கர்- ஒழுங்கற்ற இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு சிறிய மின் சாதனம். செயற்கை இதய வால்வுகள். இதய டிஃபிபிரிலேட்டர். மருந்து உட்செலுத்துதல் பம்புகள். நரம்பு தூண்டுதலுக்கான கருவிகள். உலோக கிளிப்புகள். அறுவை சிகிச்சையின்போது பொருத்தப்படும் உலோக பின், ஸ்க்ரூ, பிளேட், ஸ்டென்ட் அல்லது ஸ்டேபிள்ஸ். கோக்லியர் இம்பிளான்ட்ஸ் (காது கேளாமை போன்ற பிரச்னைக்கு) தோட்டா அல்லது வேறு எந்த வகையான உலோகத் துண்டு. கருப்பையக சாதனம். தொடர்ந்து பேசிய மருத்துவர் விஸ்வநாத். "கர்ப்பிணிப் பெண்களுக்கும் எம்ஆர்ஐ ஸ்கேன் பரிந்துரைக்கப்படுகிறது. இதில் காந்தப் புலன்கள் மற்றும் ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுவதால், சிடி ஸ்கேன் போல கதிர்வீச்சு அபாயம் இல்லை என்பதால் பாதுகாப்பானது தான்" என்கிறார். பிற சவால்கள் என்ன? படக்குறிப்பு, கிளாஸ்ட்ரோபோபியா உடையவர்களுக்கு எம்ஆர்ஐ செயல்முறை சற்று சிக்கலானதாக இருக்கும் என்கிறார் மருத்துவர் விஸ்வநாத். ஆனால், கிளாஸ்ட்ரோபோபியா எனப்படும் குறுகிய அல்லது மூடப்பட்ட இடங்களில் தனியாக இருப்பது தொடர்பான அச்சம் கொண்டவர்களுக்கு எம்ஆர்ஐ செயல்முறை சற்று சிக்கலானதாக இருக்கும் என்றும் விஸ்வநாத் குறிப்பிடுகிறார். "எம்ஆர்ஐ செயல்முறை பெரும்பாலும் 30 நிமிடங்களுக்கும் அதிகமாக இருக்கும் என்பதால், கிளாஸ்ட்ரோபோபியா கொண்டவர்களுக்கு அப்படியே அசையாமல் படுத்திருப்பது ஒரு பதற்றத்தை ஏற்படுத்தும். அதைத் தணிக்க அவர்களுடன் உறவினர் அல்லது நண்பர் இருக்கலாம்" என்கிறார் அவர். ஸ்கேனர் கருவிக்குள் கால்கள் முதலில் செல்வது பதற்றத்தைக் குறைக்க உதவலாம், ஆனால் அது எப்போதும் சாத்தியமில்லை என பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையின் கட்டுரை தெரிவிக்கிறது. சில எம்ஆர்ஐ ஸ்கேன்களில் கான்ட்ராஸ்ட் ஏஜென்ட் எனப்படும் பொருளும் ஒருவரது உடலுக்குள் செலுத்தப்படும். இது உடலின் சில திசுக்கள் மற்றும் ரத்த நாளங்களை இன்னும் தெளிவாகவும் விரிவாகவும் காண்பிக்கும். சில நேரங்களில் இந்த கான்ட்ராஸ்ட் ஏஜென்ட்கள், காய்ச்சல், சோர்வு தோல் வெடிப்பு தலைவலி தலைச்சுற்றல், போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும், ஆனால் இந்த பக்க விளைவுகள் பொதுவாக லேசானவை மற்றும் நீண்ட காலம் நீடிக்காது என்றும் தேசிய சுகாதார சேவையின் கட்டுரை தெரிவிக்கிறது. அதேநேரம், கடுமையான சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கான்ட்ராஸ்ட் ஏஜென்ட் திசு மற்றும் உறுப்பு சேதத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது என்பதால், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் 'கான்ட்ராஸ்ட் ஏஜென்ட்' குறித்து மருத்துவரிடம் முன்பே கலந்தாலோசிப்பது சிறந்தது என்றும் அந்தக் கட்டுரை பரிந்துரைக்கிறது. "எம்ஆர்ஐ ஸ்கேன்களின் போது பயன்படுத்தப்படும் காந்தப்புலங்கள் மற்றும் ரேடியோ அலைகள் மனித உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து விரிவான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆபத்து இருப்பதாகக் கூறுவதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை, எனவே எம்ஆர்ஐ ஸ்கேன்கள் பாதுகாப்பான மருத்துவ நடைமுறைகளில் ஒன்றாகும். அதைக் குறித்து அச்சம், பதற்றம் கொள்ள தேவையில்லை" என்கிறார் மருத்துவர் விஸ்வநாத். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz09kxzyl39o
  10. 4) சுழிபுரம் கிழக்கைச் சேர்ந்த அமரர் பூலோகதேவி ஆண்டியப்பன் ஞாபகார்த்தமாக உருவாக்கப்பட்டுள்ள "சுழிபுரம் பூலோகதேவி அறக்கட்டளை" ஊடாக பேரன் அபிஷேக் அசோக் (சென்னை, அமெரிக்கா) குடும்பத்தினர் வீட்டுத்திட்ட பணிகளை நிறைவு செய்ய உதவும் வகையில் திரு லக்சன் அவர்களுடைய வங்கிக் கணக்கில் 35000 ரூபாவை வைப்பிட்டுள்ளனர். 23/07/2025 இன்றுவரை மொத்தமாக 139970 ரூபா திரு லக்சனுடைய வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.
  11. மட்டு. வவுணதீவு பொலிஸார் இருவர் படுகொலை தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவலை வழங்கிய பொலிஸ் பரிசோதகர் கைது 23 JUL, 2025 | 10:17 AM மட்டக்களப்பு, வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு வெட்டி கொலை செய்த சம்பவம் தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவலை வழங்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸ் பரிசோதகர் ஒருவரை திங்கட்கிழமை (21) குற்றபுலனாய்வு பிரிவினர் கொழும்பில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கைதான பொலிஸ் பரிசோதகர் மட்டு. மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பின்னர் தற்போது கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருபவர் என பொலிஸ் உயர் அதிகாரி மேலும் ஒருவர் தெரிவித்தார். இது பற்றி தெரியவருவதாவது, கடந்த 2018 நவம்பர் 29 ஆம் திகதி வவுணதீவு வலையிறவு பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இருந்த பொலிஸ் சாஜன்ட் மற்றும் பொலிஸ் கொஸ்தாபர் ஆகியோரை இனந் தெரியாதோர் இருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கத்தியால் வெட்டியும் கொலை செய்துவிட்டு பொலிஸார் இருவரின் துப்பாக்கிகளையும் எடுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் விடுதலைப்புலிகளில் இருந்து புனர்வாழ்வு பெற்று வெளிவந்த வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பாவித்து வந்த ஜக்கட் பாலத்தின் கீழ் வீசி எறிந்து கிடப்பதாகவும் அவர் இந்த படுகொலையை செய்ததாக அரச மற்றும் புலனாய்வு பிரிவினர் அறிக்கையிட்டதையடுத்து அவரை கடந்த 2018 நவம்பர் 30 ம் திகதி பொலிஸார் கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கொழும்பிலுள்ள குற்ற புலனாய்வு திணைக்களத்தின் நான்காம் மாடியில் தடுத்துவைக்கப்பட்ட நிலையில் 2019 ஏப்பிரல் 21 உயித்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான ஜ.எஸ்.ஜ.எஸ் பயங்கரவாத அமைப்பின் சஹரானின் குழுவைச் சேர்ந்த கபூர் மாமா என அழைக்கப்படும் சஹரானின் சாரதி உட்பட நால்வரை கைது செய்ததன் பின்னர் அவர்கள் தான் இந்த படுகொலையை செய்துள்ளதாக தெரியவந்ததையடுத்து கைது செய்யப்பட்ட முன்னாள் பேராளியை விடுதலை செய்தனர். இதனையடுத்து தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைபற்றியதையடுத்து இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மீண்டும் முன்னெடுத்த நிலையில் இந்த பொலிஸார் படுகொலைச் சம்பவத்தின் உண்மை சம்பத்தை மூடிமறைத்து விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி மீது சுமத்தப்பட்டதை கண்டறிந்தனர். இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பாக அப்போது மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியாக கடமையாற்றிவரும் தற்போது கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் பரிசோதகர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு விசாரணைக்கு திங்கட்கிழமை (21) அழைக்கப்பட்டு விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பாக கடந்த ஏப்ரல் 8ம் திகதி மட்டக்களப்பு கரடியனாறு தேசிய புலனாய்வு சேவை பிரிவில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை குற்றபுலனாய்வு பிரிவினர் கைது செய்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது. https://www.virakesari.lk/article/220695
  12. இங்கிலாந்தின் பலவீனம் இந்தியாவின் பலமாக மாறுமா? 4-வது டெஸ்ட் இன்று தொடக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் கட்டுரை தகவல் தினேஷ்குமார் கிரிக்கெட் விமர்சகர் 23 ஜூலை 2025, 01:38 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஆண்டர்சன்–டெண்டுல்கர் தொடரின் நான்காவது டெஸ்ட், இன்று மான்செஸ்டரில் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த தொடரின் பெரும்பான்மை செசன்களில் ஆதிக்கம் செலுத்தியும், முக்கியமான தருணங்களை கோட்டைவிட்டதால் இந்திய அணி 2–1 என பின்தங்கியுள்ளது. சுமாரான அணியாக இருந்தபோதும், ஸ்டோக்ஸ், ரூட், ஆர்ச்சர் என மேட்ச் வின்னர்கள் தக்க சமயத்தில் தோள் கொடுப்பதால், இங்கிலாந்தின் கை தற்சமயம் ஓங்கியுள்ளது. வரலாற்று சிறப்பு வாய்ந்த ஓல்ட் டிராஃபோர்ட் மைதானம், இந்தியாவுக்கு என்றைக்கும் சாதகமான ஒன்றாக இருந்ததில்லை. 1936 முதல் இதுவரை 9 டெஸ்ட்களில் இந்திய அணி, மான்செஸ்டரில் விளையாடியுள்ளது. ஆனால், ஒருமுறை கூட வெற்றிக்கோட்டை தொடவில்லை. டெஸ்ட் மட்டுமல்ல வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலும், ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் இந்தியாவுக்கு நல்ல நினைவுகள் என்று எதுவுமில்லை. 2019 உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா மண்ணைக் கவ்வியது இங்குதான். பட மூலாதாரம்,GETTY IMAGES ஒருகாலத்தில் தாறுமாறாக சீறிய ஓல்ட் டிராஃபோர்ட் மைதானம், மறுகட்டுமானத்துக்கு பிறகு தட்டையாக மாறிவிட்டது. ஆகவே, லார்ட்ஸ் டெஸ்ட் போலவே இந்த டெஸ்ட்டும் 'லோ ஸ்கோரிங் திரில்லர்' ஆக (Low scoring thriller) மாறுவதற்கு வாய்ப்பதிகம் உள்ளது. சுழலுக்கு சாதகமான ஆடுகளம் என்பதால், 'சைனா மேன்' சுழலர் குல்தீப் யாதவ் லெவனில் இடம்பிடித்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால், யார் இடத்தில் குல்தீப் விளையாடப் போகிறார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. காயத்தால் தொடரில் இருந்து விலகிய ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக சேர்க்கலாம். ஒருவேளை, நிதிஷ் இடத்தில் மற்றொரு ஆல்ரவுண்டர் ஷார்துலை கொண்டுவர அணி நிர்வாகம் விரும்பினால், ஆஃப் ஸ்பின்னிங் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர்தான் குல்தீப்புக்கு வழிவிட்டாக வேண்டும். நீண்ட பேட்டிங் வரிசையை விரும்பும் இந்திய அணி நிர்வாகம், தற்காப்பு பேட்டிங்கில் வித்தரான சுந்தர் தலையில் கை வைக்குமா என்பது சந்தேகம். ஒன்று, இரண்டு, ஐந்தாம் நாள்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், பும்ரா–சிராஜ், மூன்று சுழலர்கள் என இந்தியா களமிறங்கவும் வாய்ப்புள்ளது. 1956 மான்செஸ்டர் டெஸ்டில் மழையால் பாதிக்கப்பட்ட இதே மைதானத்தில், இங்கிலாந்தின் ஜிம் லேக்கர் 19 விக்கெட்களை எடுத்து உலக சாதனை படைத்தார் என்பதை மறந்துவிட முடியாது. பட மூலாதாரம்,GETTY IMAGES ரிஸ்க் எடுப்பதற்கான சமயம் இதுவல்ல என்று குல்தீப்பை எடுக்காமல், 3 வேகப்பந்து வீச்சாளர், 2 ஸ்பின்னிங் ஆல்ரவுண்டர்கள் (சுந்தர், ஜடேஜ்) என இந்தியா களமிறங்கவும் தயங்காது. காயத்தால் அர்ஷ்தீப் சிங், ஆகாஷ் தீப் விலகியதாலும் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சு எடுபடாததாலும் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக கம்போஜ் களமிறங்கலாம். ஷான் பொல்லாக் பாணியில் 5–15 செமீ லெங்த்தில் தையலை (seam) பிடித்து பந்துவீசும் கம்போஜ், இங்கிலாந்து மண்ணுக்கு என்றே அளவெடுத்து செய்தது மாதிரியான ஒரு பவுலர். பேட்டிங் வரிசையில் மாற்றம் இருப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. நல்ல தொடக்கம் கிடைத்தும் பெரிய இன்னிங்ஸாக மாற்ற முடியாமல் திணறும் கருண் நாயருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்து பார்ப்பார்கள். ஸ்லிப் பிராந்தியத்தில் கருணுக்கு நிகரான ஒரு ஃபீல்டர் இப்போது அணியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பேட்டிங்கை பலப்படுத்துவதற்காக கூடுதல் பேட்ஸ்மேனாக சுதர்சனை அணியில் சேர்க்கவும் அணி நிர்வாகம் தயங்காது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவின் காம்பினேஷன் எப்படி இருக்கப் போகிறது என்பது தெளிவில்லாத நிலையில், வழக்கம் போல ஆட்டத்துக்கு முன்பே லெவனை அறிவித்துவிட்டு இங்கிலாந்து களம் காண்கிறது. காயத்தால் ஆஃப் ஸ்பின்னர் பஷீர் விலகிய நிலையில், இடக்கை சுழல் ஆல்ரவுண்டர் லியாம் டாசனை இங்கிலாந்து உள்ளே கொண்டுவந்துள்ளது. ஆஷ்லி கைல்ஸ், பனேசர் பாணியில் தற்காப்பு இடக்கை சுழற்பந்து வீச்சில் கை தேர்ந்தவர் இவர். பல் பிடுங்கப்பட்ட இங்கிலாந்து பந்துவீச்சுக்கு, கேப்டன் ஸ்டோக்ஸ் ஒருவர்தான் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறார். 4.5 ஆண்டுகளுக்கு பிறகு மறுவருகை நிகழ்த்திய ஆர்ச்சர், லார்ட்ஸில் தூள்பரத்தினாலும், பவுன்ஸ் அதிகமில்லாத ஓல்ட் டிராஃபோர்டில் அவருடைய பாட்சா பலிக்காது என்கிறார்கள் விமர்சகர்கள். அதுமட்டுமின்றி, ஆர்ச்சரின் பணிச்சுமையையும் கருத்தில் கொள்ள வேண்டிய நெருக்கடி இங்கிலாந்துக்கு உள்ளது. அனுபவ வீரர் வோக்ஸ் பந்துவீச்சு இந்த தொடரில் சுத்தமாக எடுபடவில்லை. கடந்த டெஸ்டில் கார்ஸ் நம்பிக்கை அளித்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, இங்கிலாந்தின் பந்துவீச்சு படை பலவீனமானவே தெரிகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES 'சமர்த்து பையன்கள்' என வலம்வரும் இங்கிலாந்து அணியினர், கடந்த டெஸ்டில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக சேசிங்கின் போது ஸ்லிப் பிராந்தியத்தில் நின்றுகொண்டு புரூக் உள்ளிட்ட வீரர்கள், இந்திய அணியின் டெயில் எண்டர்களை கடுமையாக வசைபாடினர். கில் தலைமையிலான இந்திய அணியும் தன் பங்குக்கு களத்தில் சீற்றத்தை வெளிப்படுத்தியதை பார்த்தோம். ஆனால், கில்லின் ஆக்ரோஷம் இந்திய அணிக்கு வெற்றியை தேடி கொடுக்காததோடு அவருடைய பேட்டிங் ஃபார்மையும் பாழ்படுத்தியது. இந்தமுறை, கோலியை அப்படியே போலச் செய்ய முயலாமல், கட்டுப்பாட்டுடன் கூடிய ஆக்ரோஷத்தை கில் கையில் எடுப்பார் என நம்புவோம். இங்கிலாந்து பேட்டிங் வரிசையை பொருத்தமட்டில், கிராலி, போப் ஆகியோரின் ஃபார்ம் கவலையளிக்கும் விதமாக உள்ளது. லீட்ஸ் டெஸ்டில் சதமடித்த போப், 3 டெஸ்டில் மொத்தமாக 186 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 21.33 சராசரியில் ஒரு அரைசதத்துடன் 128 ரன்கள் மட்டுமே தொடக்க வீரர் கிராலி அடித்துள்ளார். புரூக் நிறைய ரன்கள் குவித்தாலும், உள்ளே வரும் பந்துகளுக்கு (Nip backer) இந்த தொடர் முழுக்க அவர் திணறுவதை பார்க்கலாம். அதிர்ஷ்டமும் அவருக்கு சிலமுறை கைகொடுத்ததை சொல்லியாக வேண்டும். முக்கியமான சமயங்களில் கேப்டன் ஸ்டோக்ஸ் அணியை தாங்கிப் பிடித்தாலும், ஜேமி ஸ்மித், பென் டக்கெட்டையே இங்கிலாந்து அணி பேட்டிங்கில் பெரிதும் நம்பியுள்ளது. பாஸ்பால் பாணியில் இருந்து வெளியே வந்து விளையாட முடியும் என நிரூபித்த இங்கிலாந்து, ஃபார்முக்கு திரும்பியுள்ள ஜோ ரூட்டை பெரிதும் நம்பியுள்ளது. ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக மாறினால், ரூட்டின் விக்கெட் ஆட்டத்தை தீர்மானிக்கும் ஒன்றாக மாறும். ரூட்–பும்ரா இடையிலான ஆடுபுலி ஆட்டமும், குல்தீப் விளையாடும் பட்சத்தில் ரூட்–குல்தீப் இடையிலான உள்ளே வெளியே ஆட்டமும் ஒரு தனி நிகழ்வாக (Event) பரபரப்பை கூட்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES நிதிஷ் குமார் ரெட்டி விலகியது, அணியின் சமநிலையை பாதித்தாலும் இந்தியாவின் பேட்டிங் வரிசை வலிமையாகவே உள்ளது. கேஎல் ராகுல், தனது கிரிக்கெட் வாழ்வின் ஆகச்சிறந்த ஃபார்மில் உள்ளார். கடந்த டெஸ்டில் தவறான ஷாட் விளையாடி, விமர்சனத்துக்கு ஆளானாலும் ஜெய்ஸ்வாலும் முதலிரு டெஸ்ட்களில் ரன்கள் குவித்ததை மறுக்க முடியாது. டிரைவ், கட் ஷாட் ஆடும்போது கவனத்தை குவித்து, சூழலுக்கு ஏற்ப வேகத்தை கூட்டியும் குறைத்தும் விளையாடினால், அவர் ஆட்டம் மீண்டும் மிளிரும். பிராட்மேன் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கில், கவனம் தொலைத்ததால் அழுத்தத்துக்கு ஆட்பட்டு கடந்த டெஸ்டில் சறுக்கினார். 2 சதங்களுடன் 425 ரன்கள் குவித்துள்ள பந்த், முழு உடற்தகுதியுடன் விக்கெட் கீப்பர்– பேட்ஸ்மேனாக களமிறங்குவதில் பிரச்சினை இருக்காது என கூறப்படுகிறது. ஒரு ஸ்பெசலிஸ்ட் பேட்ஸ்மேனாக விளையாடுவதற்கு முழு தகுதி கொண்டவர் என்றாலும், விக்கெட் கீப்பிங் பொறுப்பை பந்த் ஏற்காவிட்டால், அணியின் காம்பினேஷன் அடிவாங்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த தொடரில் தனது கடைசி டெஸ்டில் விளையாடும் பும்ரா, ரூட், புரூக் உள்ளிட்ட முக்கிய விக்கெட்களை குறிவைத்து நிச்சயம் வியூகம் வகுத்திருப்பார். இந்த டெஸ்டை இந்தியா வென்றால், மூன்று டெஸ்ட் மட்டும்தான் அவர் விளையாட வேண்டும் என்ற விதியை தளர்த்தி, கடைசி டெஸ்டில் பும்ராவை கம்பீர் விளையாட வைப்பதற்கு வாய்ப்புள்ளது. அதிக விக்கெட் கைப்பற்றியவர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் சிராஜ், ஆகாஷ் தீப் இல்லாத நிலையில் பவுன்ஸ் குறைவான ஆடுகளத்தில் கட்டுக்கோப்பாக பந்துவீசி இங்கிலாந்துக்கு நெருக்கடி ஏற்படுத்துவது அவசியம். மணிக்கட்டு ஸ்பின்னரான குல்தீப்பை ரிஸ்க் எடுத்து இந்திய அணி நிர்வாகம் விளையாட வைத்தால், நிச்சயம் பலனுண்டு. 1993 இல், இதே ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில்தான் மறைந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் 20 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த பந்தை வீசினார் என்பது வரலாறு. பட மூலாதாரம்,GETTY IMAGES ஜடேஜா உள்பட கீழ் வரிசை பேட்ஸ்மேன்களும் நம்பிக்கையுடன் உள்ளதால், இந்தியாவின் பேட்டிங் படை வலுவாக உள்ளது. மிகச் சிறப்பான கிரிக்கெட் விளையாடியும், பின்தங்கியுள்ளதற்கு இந்திய அணியின் தைரிய குறைபாடும் ஒரு காரணம் என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள். லார்ட்ஸ் டெஸ்டில் 9 விக்கெட்கள் விழுந்தவுடன் ஜடேஜா, தாக்குதல் பாணி கிரிக்கெட்டை கையில் எடுத்திருக்க வேண்டும். ஆனால், விதியின் மீது பாரத்தை போட்டுவிட்டு சிராஜுக்கு ஸ்ட்ரைக் கொடுத்து குருவி போலச் சிறுக சிறுக ரன் சேர்த்தார். 2019 ஆஷஸ் தொடரில் ஹெடிங்லி டெஸ்டில் இதே போன்றதொரு சூழலில், ஸ்டோக்ஸ் ரிஸ்க் எடுத்து விளையாடி விதியை மாற்றி எழுதி ஆட்டத்தை வென்றார். இந்திய அணி தேவையற்ற வாய்ச் சவடாலை தூக்கி கடாசிவிட்டு, பயமறியாமல் ஆட்டத்தை அணுகினால் இந்த டெஸ்டை வென்று தொடரை சமன் செய்யலாம். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdx51vx59p9o
  13. இலங்கையில் தமிழர்களும், முஸ்லிம்களும் பிட்டும் தேய்காய்ப்பூவும் போல வாழ்ந்துவருகின்ற பிரதேசம் என்று கூறப்படுகின்ற ஒரு பிரதேசம்தான் கிழக்கு மாகாணம். அங்கு தமிழர்களையும் முஸ்லிம்களையும் மோதவிட்டு- அவர்களை நிரந்தரமாகவே பிரித்துவைப்பதற்காகவென்று- சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட ஏராளமான சம்பவங்களில் ஒரு சில உதாரணங்களை மீட்டுப் பார்க்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி. தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடாத்திவிட்டு, அந்தத் தாக்குதல்களின் பழியினை முஸ்லிம்களின் மீது போடுவதையும், முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடாத்திவிட்டு- அந்தத் தாக்குதல்களின் பழியை தமிழர் தரப்பின் மீது போடுவதையும் ஒரு முழுநேரத் தந்திரோபாயமாச் செய்துகொண்டிருந்த சிறிலங்காப் புலலாய்வுப் பிரிவின் ஒழு முக்கிய சதியினை அம்பலப்படுத்துகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி: https://ibctamil.com/article/military-intelligence-units-conspiracyin-the-east-1753197859
  14. கறுப்பு ஜூலைக்கு பொறுப்புக்கூறலை மடைமாற்றும் ஜே.வி.பி.யின் செயற்பாடே சகோதரத்துவ தினம் - நிரோஷ் 23 JUL, 2025 | 10:51 AM தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட படுகொலைகள் நடைபெற்றன என்ற உண்மையையும் அநீதிகளுக்கு பொறுப்புக் கூறவேண்டும் என்ற கடப்பாட்டினையும் மூடி மறைக்கும் செயலாகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அடிப்படையான ஜே.வி.பியின் உத்தியோகபூர்வ இளைஞர் அமைப்பான சோசலிச இளைஞர் சங்கம் சகோதரத்துவ நாளாக கறுப்பு ஜூலை நிகழ்வுகளை மடைமாற்றம் செய்ய எத்தனிக்கின்றது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். இலங்கையில் தமிழ் மக்கள் அடையாளப்படுத்தப்பட்டு தேடியழிக்கப்பட்ட கறுப்பு ஜூலை நினைவுகளின் 42 ஆவது ஆண்டினை உணர்வுபூர்வமாக எமது இனம் அனுஷ்டிக்கின்றது. கடந்த 42 ஆண்டுகளுக்கு முன் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட 54 அரசியல் கைதிகள் வெலிக்கடை சிறையில் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். தமிழர்களை வாக்காளர் பட்டியலுடன் தேடிச் சென்று மூவாயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்களை உயிருடன் தீயில் இட்டும் இதர கொடூரங்களுக்குள்ளாகவும் கொன்றழித்தனர். ஒன்றரை இலட்சம் பேர் வீடற்றவர்கள் ஆயினர். 8 ஆயிரம் வீடுகளும் 5 ஆயிரம் வணிக நிறுவனங்களும் கொள்ளையிடப்பட்டன, அழிக்கப்பட்டன. இக்காலகட்டத்தில் 300 மில்லியன் டெலர்கள் அழிக்கப்பட்டன. இதனை பன்னாட்டு மனித உரிமைகள் ஆணையம் தமிழருக்கு எதிரான திட்டமிட்ட இனப் படுகொலை என விபரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இவ் இனப்படுகொலையை அரச இயந்திரமே தகவமைத்து வழிப்படுத்தியது என்பதற்கு சகல ஆதாரங்களும் உள்ளன. இவ்வாறாக நாட்டில் இனப்படுகொலை நடைபெற்றமைக்கு பொறுப்புக் கூறல் எதையும் முன்வைக்காமல் அத் தேவையினை போர்த்தி மூடிவிடும் உத்தியுடன் இன்றைய அரசாங்கம் நிதானமாகச் செயற்படுகின்றது. இப்படுகொலைகளுக்கு ஜே.வி.பியும் பொறுப்புடையது. ஆதலால் அரசாங்கத்தின் மாணவர் அமைப்பான ஜே.வி.பி தலைமைச் செயலகத்திற்குள்ளேயே இயங்கும் உத்தியோகபூர்வ இளைஞர் அமைப்பான சோசலிச இளைஞர் அமைப்பு ஊடாக அரச அனுசரணையுடன் இன்றைய நாளை சகோதரத்துவ நாள் பிரகடனப்படுத்தப்படுகின்றது. இதற்காக யாழில் அரச வளங்கள் ஈடுபடுத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையினையும் அதற்கான பொறுப்புக்கூறலையும் திட்டமிட்டு மறைக்கின்ற இல்லாமலாக்குகின்ற முயற்சியாகும். இதனை நாம் கண்டிக்கின்றோம். ராஜபக்சாக்களை ஒத்ததாக இன்றைய அரசாங்கம் மென்வலு அணுகுமுறையில் தமிழருக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது என்ற வழிப்புணர்வை ஏற்படுத்துகின்றோம் என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/220696
  15. எம் ஆர் ஐ ஸ்கேன் செய்யும் அறைக்குள் நுழைந்த நபர் ஒருவர் அந்த இயந்திரத்தால் அதிவேகமாக ஈர்க்கப்பட்டு, விபத்தின் தாக்கத்தால் மரணமடைந்திருக்கிறார்.. அன்னாரை இழந்து வாடும் அவருடைய மனைவிக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்து இந்த விழிப்புணர்வுக் கட்டுரையை ஆரம்பம் செய்கிறேன். சம்பவம் நிகழ்ந்திருப்பது அமெரிக்காவில் என்றாலும் நவீன மருத்துவ முறை சிகிச்சை வழங்கும் பெரிய மருத்துவமனைகள் அனைத்திலும் தற்போது எம் ஆர் ஐ ஸ்கேன் செய்யும் வசதி உள்ளது. நமக்கோ நமது உறவினர்களுக்கோ ஸ்கேன் செய்து பார்க்கும் தேவை என்பது எப்போதும் வரக்கூடும் என்பதால் நிச்சயம் எம் ஆர் ஐ குறித்த விழிப்புணர்வு நமக்கு அத்தியாவசியமாகிறது. முதலில் எம்.ஆர்.ஐ என்றால் என்ன? அது இயங்கும் தத்துவம் குறித்து அறிந்தால் நாம் அந்த ஸ்கேன் செய்யும் அறைக்குள் செல்லுமுன் எடுத்துக் கொள்ள வேண்டிய எச்சரிக்கை குறித்து புரிந்து கொள்ள முடியும். எம் ஆர் ஐ என்றால் மேக்னெட்டிக் ரெசோனன்ஸ் இமேஜிங் என்று பொருள். MRI - MAGNETIC RESONANCE IMAGING அதாவது காந்தப் புலத்தில் அதிர்வை உண்டாக்கி அதன் வழியாக படம் பிடித்தல் என்பதாகும். எம் ஆர் ஐ இயந்திரமே ஒரு அதிசக்தி வாய்ந்த காந்தமாகும். மின்சாரம் இந்த இயந்திரத்தில் பாய்ச்சப்படும் போது அதி கடத்தல் காந்தமாக உருமாற்றம் பெறுகிறது. மனித உடலில் உள்ள அனைத்து செல்களிலும் நீர் இருக்கிறது. நீர் என்பது இரண்டு ஹைட்ரஜனும் ஒரு ஆக்சிஜனும் இணைந்து உருவாக்கும் வெற்றிக் கூட்டணி என்பது நாம் அனைவரும் கற்ற பால பாடமாகும். எம்.ஆர்.ஐ இயந்திரத்தின் காந்தப் புலத்துக்குள் மனித உடல் படுத்த வாக்கில் காந்த புலத்துக்கு பக்கவாட்டில் நுழையும் போது, நமது உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லுக்குள் இருக்கும் நீர் மூலக்கூறில் உள்ள ஹைட்ரஜன் அணுவில் உள்ள ப்ரோடான்கள் அனைத்தும் எம் ஆர் ஐ இயந்திரத்தின் காந்தப் புலத்துடன் ஒன்றுபட்டும் வரிசைப்பட்டும் இருக்கும். இப்போது எம் ஆர் ஐ இயக்குநர், ரேடியோ அலைகளை குறிப்பிட்ட இடைவெளியில் உடல் மீது பாயச் செய்வார். இவ்வாறு மின்காந்த விசை பெற்ற ரேடியோ அலைகள் ஊடுறுவும் போது, ஹைட்ரஜன் அணுவில் உள்ள ப்ரோடான்கள் இந்த அலைகள் மூலம் சக்தியைப் பெற்று தனது முந்தைய சுழலும் நிலையில் இருந்து அடுத்த சுழலும் நிலைக்கு சற்று முன்னேறிச் செல்லும். ரேடியோ அலை பாய்ச்சுவது நிறுத்தப்படும் போது, தான் உள்வாங்கிய சக்தியை வெளியிட்டு விட்டு மீண்டும் பழைய மாதிரி எம்.ஆர்.ஐ காந்தத்தின் காந்தப் புலத்துடன் ஓர்மையில் ஓரணியில் நிற்க பழைய நிலைக்குத் திரும்பும். இவ்வாறு பழைய நிலைக்குத் திரும்ப அந்த ப்ரோடான்கள் வெளியிட்ட சக்தியைக் கொண்டும் ஏற்கனவே இருந்த பழைய நிலையில் அதற்கு இருந்து சக்தியையும் முன்வைத்து கணிணியானது நமது உடலின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை படமாக ஆக்கி நமது திரையில் கொண்டு வரும். இதன் வழியாக சிறுநீரகம், கல்லீரல், குடல் , நுரையீரல் உள்ளிட்ட உள்ளுறுப்புகள் தசை, ஜவ்வு, மூளை ஆகியவற்றில் உள்ள மாற்றங்களைத் துல்லியமாகக் காண முடிகிறது. இதுவே எம் ஆர் ஐ தத்துவம். எம்.ஆர்.ஐ இயந்திரம் என்பது ஒவ்வொரு ஸ்கேன் செய்யும் போதும் ஆஃப் செய்து ஆன் செய்யும் இயந்திர வகை அல்ல. காரணம் - எம் ஆர் ஐ இயந்திரம் மிகக் குறைவான வெப்பத்தில் இயங்கக் கூடிய அதி கடத்தல் மின் காந்தமாகும். இத்தனை அதி திறன் கொண்ட காந்தப் புலத்தை உருவாக்க குறைந்த வெப்ப நிலை அவசியமாகிறது. இதனால் எம் ஆர் ஐ இயந்திரத்தின் காந்தம் - திரவ ஹீலியத்தால் சூழப்பட்டிருக்கும். ஹீலியம் திரவ நிலையிலேயே இருப்பதற்கு எம் ஆர் ஐ இயந்திரம் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். அதை ஆஃப் செய்தாலோ அல்லது திடீரென அது ஆஃப் ஆனாலோ திரவ ஹீலியம் - வாயு நிலையை அடையும். அப்போது அந்த அறைக்குள் வாயு நிலை ஹீலியம் கசியலாம். இது அறைக்குள் இருப்பவர்களுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தக்கூடும். எம் ஆர் ஐ இயந்திரமானது குறைவான மின் உபயோகத்தில் இயங்கும் ஆற்றல் கொண்டது. ஆனால் அதை அடிக்கடி ஆஃப் செய்து ஆன் செய்யும் போது மின் தேவை அதிகரிக்கும். மேற்கூறிய காரணங்களால் நோயாளிகளுக்கு ஸ்கேன் செய்யப்படும் போதும் சரிநோயாளிகள் உள்ளே இல்லாத நிலையிலும் சரி எப்போதும் எம் ஆர் ஐ இயந்திரம் "ரெடி டு டேக்" நிலையில் தான் இருக்கும். எனவே எம் ஆர் ஐ அறைக்குள் இரும்பு, ஸ்டீல் உள்ளிட்ட காந்தத்தால் ஈர்க்கப்படக்கூடிய சாதனங்களுடன் நுழைவது பேராபத்தை வரவழைக்கும் செயலாகும். முதல் ரூல்ஸ் எம் ஆர் ஐ அறைக்குள் அந்த அறையின் இயக்குநரின் அனுமதியின்றி உள்ளே நுழைதல் கூடாது. இரண்டாவது ரூல்ஸ் அப்படி நோயாளியாக உள்ளே நுழைய வேண்டுமெனில் கட்டாயம் தங்கள் உடலில் ஆபரணங்கள், ஹேர் க்ளிப், ஹேர் பின் உள்ளிட்ட எந்த காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருளும் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்த பின் நுழைய வேண்டும். மூன்றாவது ரூல்ஸ் மருத்துவ ரீதியாக பேஸ் மேக்கர்/ இதய வால்வு உள்ளிட்ட இயந்திரங்கள் / உபகரணங்கள் உங்களுக்கு பொருத்தப்பட்டிருக்குமானால் தாங்கள் அது குறித்து முன்கூட்டியே தெரிவித்து ஸ்கேன் அறைக்குள் நுழையும் அனுமதி பெற்ற பிறகே உள்ளே நுழைய வேண்டும். உங்களது உடலில் உள்ள உபகரணம் எம் ஆர் ஐ பாதுகாப்பானதா என்பதை அறிய mrisafety.com சென்று உபகரணம் குறித்த தயாரிப்பு தகவல்களைக் கொடுத்து பயன்பெறலாம். இவையெல்லாம் எம் ஆர் ஐ ஸ்கேன் செய்யுமுன் நாம் கற்க வேண்டிய முக்கியமான பாலபாடங்கள். காந்தத்தின் புலத்தின் வலிமை குறித் கணக்கீடு "டெஸ்லா" கொண்டு கூறப்படுகிறது. பொதுவாக எம் ஆர் ஐ எடுக்க 0.5 (குறைவான காந்தப்புலம்) முதல் 3.0 (அதி காந்தப் புலம்) வரை கொண்ட இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன. இதில் பொதுவாக பெரும்பான்மையான இடங்களில் 1.5 டெஸ்லா இயந்திரங்கள் புழக்கத்தில் உள்ளன. இவை நமது பூமியின் காந்தப் புலத்தைக் காட்டிலும் 21,000 மடங்கு வலிமையானவை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய காந்தப் புலத்துக்குள் சாதாரண காகிதம் கோர்க்கும் க்ளிப்போ அல்லது ஹேர் பின் உள்ளே போனாலும் உடனடியாக அவை "ஏவுகணைகள்" போன்ற வேகத்தில் ஈர்க்கப்படும். சுமார் ஒரு மணிநேரத்திற்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் ஈர்க்கப்படும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். தற்காலத்தில் வடிவமைக்கப்படும் நோயாளிகளை கொண்டு செல்லும் ஸ்ட்ரெட்சர்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஆகியவை இரும்பு , ஸ்டீல் அல்லாத காந்தத்தால் ஈர்க்கப்படாத உலோகங்களால் செய்யப்படுகின்றன. தற்காலத்தில் செய்யப்படும் பேஸ் மேக்கர்கள்/ இதய வால்வுகள் அனைத்தும் எம் ஆர் ஐ இயந்திரத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. எனினும் கட்டாயம் தங்களது உடலுக்குள் மருத்துவ உபகரணங்கள்/ இயந்திரங்கள் இருப்பின் வெளிப்படுத்தி அதற்குரிய எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த பின்னரே எம் ஆர் ஐ அறைக்குள் நுழைய வேண்டும். 2 டெஸ்லா அளவுள்ள எம் ஆர் ஐ இயந்திரங்கள் வரை செய்யப்பட்ட ஆய்வுகளில் அவற்றால் மனிதர்களின் செல்களுக்கு எந்த பாதகமும் விளைவிக்க இயலவில்லை. இவற்றால் புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கவில்லை. தற்காலத்தில் குறைவான டெஸ்லா அளவுகள் எம் ஆர் ஐ இயந்திரங்கள் பரவலாக்கம் அடையத் தொடங்கியுள்ளன. எம் ஆர் ஐ என்பது நவீன மருத்துவத் துறையில் முக்கியமான அங்கமாக விளங்கி வருகிறது. அதன் வழியாக பல நோய்களை அதன் ஆரம்ப நிலையில் கண்டு சிகிச்சை அளிக்க முடிகிறது. பல அறுவை சிகிச்சைகளை துல்லியமாகவும் கனகச்சிதமாகவும் செய்து முடிக்க முடிகிறது. தற்போது அமெரிக்காவில் நடந்த நிகழ்வுக்கு வருவோம்.. மத்திய வயது மனைவி கால் மூட்டு பகுதிக்கு எம் ஆர் ஐ எடுக்க உள்ளே சென்று ஸ்கேன் செய்யப்பட்டு இருக்கிறார். . பிறகு ஸ்கேன் படுக்கையில் இருந்து கீழிறங்க தனது 61 வயது கணவரை உள்ளே அழைக்கக் கூறியிருக்கிறார். ஸ்கேன் எடுத்த நபர் வெளியே சென்று அன்னாரது கணவரை உள்ளே செல்லக் கூறியிருக்கிறார். ஆனால் ஸ்கேன் எடுத்த நபரும் கணவரும் ஒன்றைக் கருத்தில் கொள்ளவில்லை. ஸ்கேன் எடுத்த நபர் - உள்ளே செல்லும் நபரிடம் இரும்புப் பொருட்கள் இல்லை என்பதை உறுதி செய்திருக்க வேண்டும். உள்ளே சென்ற நபர் - தன்னிடம் இரும்பு உள்ளிட்ட பொருட்கள் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு உள்ளே சென்றிருக்க வேண்டும். நிச்சியம் ஸ்கேன் அறைக்கு வெளியே பல பெரிய எச்சரிக்கை ஸ்டிக்கர்கள் ஒட்டியிருக்கும். ஆனால் வயது 60+ என்பதால் கவனிக்காமல் விட்டிருக்கலாம். தனது கழுத்து வலிக்காகவோ அல்லது எடை பயிற்சிக்காவோ தனது கழுத்தில் 9 கிலோ எடை கொண்ட இரும்புச் சங்கிலியை அவர் அணிந்திருந்திருக்கிறார். அந்த சங்கிலியோடு உள்ளே சென்றதால் சங்கிலி வேகமாக எம் ஆர் ஐ இயந்திரத்தால் ஈர்க்கப்பட வேகமாக இயந்திரத்தில் மோதியதால் அவர் இறந்திருக்கலாம். இந்த சம்பவத்தில் நமக்கும் படிப்பினை உண்டு சொந்தங்களே... எம் ஆர் ஐ இயந்திரங்கள் மீதோ எம் ஆர் ஐ தொழில்நுட்பம் மீதோ பிழையில்லை. எம் ஆர் ஐ இயந்திரங்கள் நமக்கு நன்மை செய்பவை. நாள்தோறும் நன்மை செய்து வருபவை. எனினும் அவற்றிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை நாம் அறிந்து நடந்து கொண்டால் எல்லாம் சுகமே... நன்றி Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை https://web.facebook.com/story.php?story_fbid=24502030766120102&id=100002195571900&rdid=6q8I3kLMv1557NMI#
  16. தற்போதைய வன்னி பா.உ துரைராசா இரவிகரன் அவருடைய மகன் என நினைக்கிறேன் அண்ணை. வேட்டி கட்டி படம் போட்டிருந்ததாகவும் நினைவுள்ளது.
  17. செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று 8 எலும்புக்கூடுகள் அடையாளம் : இதுவரை 80 மனித எலும்புக்கூடுகள்! Published By: VISHNU 22 JUL, 2025 | 07:12 PM யாழ். அரியாலை செம்மணி சிந்துப்பாத்தி பகுதியில் அடையாளங்காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழியிலிருந்து செவ்வாய்க்கிழமை (22) 8 எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கையின் 2 ஆம் கட்டத்தின் 17ஆவது நாள் அகழ்வு இன்று இடம்பெற்றது. அந்தவகையில், இன்று மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன. எச்சங்களில், 6 முதல் 7 வரை சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படுள்ளன . குழந்தைகள் அருந்தும் பால் போத்தல் என சந்தேகிக்கப்படும் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.. இன்றைய கண்டுபிடிப்புகளுடன், இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது , இவற்றில் 65 எலும்புக்கூடுகள் ஏற்கனவே முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/220671
  18. Published By: VISHNU 22 JUL, 2025 | 05:51 PM (எம்.மனோசித்ரா) நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகள் மற்றும் சலுகைகளை இரத்து செய்வதற்கான புதிய சட்ட மூலத்தை தயாரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அனைத்து ஜனாதிபதிகளுக்கும் பொதுவாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எவருக்கும் சிறப்புரிமை வழங்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (22) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ள அனைத்து சிறப்புரிமைகளும் இதன் மூலம் இரத்து செய்யப்படும். இந்த சட்ட மூலம் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். பாராளுமன்றத்தில் அனுமதி கிடைத்த பின்னரே சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடிய கால அவகாசம் தொடர்பில் குறிப்பிட முடியும். மிகக்குறுகிய காலத்துக்குள் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு எந்தவொரு நபருக்கும் சிறப்புரிமை வழங்கப்பட மாட்டாது. முன்னாள் ஜனாதிபதிகள் அனைவரும் ஒரே மட்டத்திலேயே நடத்தப்படுவர். தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து ஜனாதிபதிகளுக்கும் பொதுவாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு எனும் போது முன்னாள் ஜனாதிபதிகள் மாத்திரமின்றி நாட்டு பிரஜைகளும் கவனத்தில் கொள்ளப்படுவர். அனைவரது பாதுகாப்பையும் கருத்திற் கொண்டு உரிய நடவடிக்கைககள் முன்னெடுக்கப்படும். 1986 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க ஜனாதிபதியின் உரித்துக்கள் (நீக்கல்) சட்டமூலத்தை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 'வளமான நாடு – அழகான வாழ்க்கை' எனும் அரசாங்க கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டதற்கமைய, முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தவர்களுக்கு வழங்கப்படுகின்ற விசேட சிறப்புரிமைகளை இரத்துச் செய்வதற்கு இயலுமாகும் வகையில் 1986 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க ஜனாதிபதியின் உரித்துக்கள் சட்டத்தை நீக்குவதற்காக சட்டமூலமொன்றை தயாரிப்பதற்காக கடந்த ஜூன் 16ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த பணிகளுக்காக சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள ஜனாதிபதியின் உரித்துக்கள் (நீக்கல்) சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/220665
  19. 22 JUL, 2025 | 05:27 PM செம்மணி புதைகுழி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட "தமிழ் மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்" - என்று அவுஸ்திரேலிய கிறீன்ஸ் கட்சியின் நியூ சவூத் வேல்ஸ் மாநில செனட்டர்டேவிட் சூபிரிட்ஜ் வலியுறுத்தியுள்ளார். "உண்மையை ஒருபோதும் புதைக்க முடியாது. இலங்கையில் தமிழ் மக்கள்மீது கட்டாயமாக நடத்தப்பட்ட காணாமல் ஆக்கப்படுதல் மற்றும் இனப்படுகொலையை நினைவூட்டும் வகையில் செம்மணி புதைகுழி அமைந்துள்ளது. 29 ஆண்டுகள் கடந்தும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. நீதி நிலைநாட்டப்படவில்லை. எனவே செம்மணி உட்பட இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மனித புதைகுழிகள் குறித்து சர்வதேச அளவில் கண்காணிக்கப்படும் தடயவியல் விசாரணை அவசியம்" - எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/220658
  20. விடுதலை நீர் தந்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை நோக்கிய பயணத்தில் இணையுங்கள் - வேலன் சுவாமி Published By: RAJEEBAN 22 JUL, 2025 | 03:59 PM விடுதலைநீர் தந்து தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலையை நோக்கிய பயணத்தில் இணையுங்கள் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி அமைப்பின் ஏற்பாட்டாளர் தவத்திரு வேலன் சுவாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை நோக்கிய பயணம் தொடர்ந்துகொண்டிருக்கின்றது. ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட விடுதலை விருட்சம் என்கின்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை நோக்கியும் தமிழ் இனத்தின் விடுதலையை நோக்கியதுமான அந்த பயணம் இன்று விடுதலை விருட்சத்திற்கு நீர்வழங்கி அனைவரும் பேராதரவு கொடுத்து, விடுதலை மரத்தை வளர்த்தெடுக்கவேண்டும். விடுதலைக்காக நாங்கள் அனைவரும் எங்களை அர்ப்பணிக்கும்போதுதான் அதுசாத்தியமாகும். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையாகயிருக்கட்டும் தமிழ் இனத்தின் விடுதலையாகயிருக்கட்டும், எங்கள் இனத்திற்காக எங்களை நாங்கள் அர்ப்பணிப்பதற்கான அடையாளமாக இந்த விடுதலை விருட்சம், தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் நாட்டப்படயிருக்கின்றது. அந்த விடுதலை விருட்சங்களிற்கு நீர் ஊற்றிவளர்க்கவேண்டிய அடிப்படை உணர்வை இந்த விடுதலை நீர் வழங்குதல் எடுத்துக்காட்ட இருக்கின்றது. கிட்டுபூங்காவில் 24, 25ம் திகதிகளில் நடைபெறவிருக்கின்ற இந்த விடுதலையை நோக்கிய போராட்டத்திலே அனைத்து உறவுகளும் கலந்துகொள்ளும் விதத்திலும், ஊர்தியொன்று ஒவ்வொரு பிரதேசமாக வலம்வரயிருக்கின்றது. அந்த ஊர்திக்கு அந்த பிரதேசங்களில் இருக்கின்ற மக்கள் பேராதரவை வழங்கி, விடுதலை நீரை வழங்கி அந்த விடுதலை நீர் சேகரிக்கப்பட்டு, தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் நாட்டப்படுகின்ற விடுதலை விருட்சங்களிற்கு வழங்கப்படவிருக்கின்றது. ஆகவே தமிழர்களாக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து எமது உறவுகளின் விடுதலைக்காகவும் இனத்தினது தேசத்தினது விடுதலைக்காகவும் ஒன்றுபடுவதற்கான முயற்சியை குரல்அற்றவர்களின் குரல் அமைப்பு ஏற்படுத்தியுள்ளது. ஆகவே எமது உறவுகள் பெருமளவிலே திரண்டு இதற்கு ஆதரவு வழங்கவேண்டும், விடுதலை நீரை வழங்கி ஆதரவு செய்யவேண்டும். 24, 25 ம்திகதிகளில் கிட்டு பூங்காவிற்கு வருவதன் ஊடாக அங்கு பெரிய மக்கள் எழுச்சியை ஏற்படுத்துவதன் ஊடாக எமது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை நாங்கள் சாத்தியமாக்கி தொடர்ந்து இனத்தின் விடுதலையை நோக்கி நாங்கள் பயணிக்க முடியும். https://www.virakesari.lk/article/220640
  21. Published By: RAJEEBAN 22 JUL, 2025 | 02:57 PM இலங்கையின் உள்நாட்டு மோதலின் முடிவில் சரணடைந்தவர்களின் பெயர் விபரங்களை பெற்று வெளியிடுவதன் மூலம் காணாமல்போனோர் அலுவலகம் காணாமல்போனோரை தேடுவதற்கான அதன் ஆணையை நிறைவேற்றுவதில் குறிப்பிடதக்க முன்னேற்றத்தை காண்பிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஐக்கியநாடுகள் குழுவிற்கு சமர்ப்பித்துள்ள 22 பக்க அறிக்கையில் சர்வதேச மன்னிப்புச்சபை இதனை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் பலவந்தமாக காணாமல்போனோர் தொடர்பான குழுவின் 29 வது அமர்வு செப்டம்பர் 22 முதல் ஒக்டோபர் 3ம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையிலேயே சர்வதேச மன்னிப்புச்சபைதனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த அமர்வில் ஐநாவின் குழு பலவந்தமாக காணாமல்போதலில் இருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பது தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் இன் கீழ் இலங்கை தனது கடப்பாடுகளை எவ்வாறு நிறைவேற்றியுள்து என்பது குறித்து ஆராயவுள்ளது. இலங்கை இந்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பல பரிந்துரைகளையும் அவதானிப்புகளையும் சர்வதேச மன்னிப்புச்சபை22 பக்க அறிக்கை முன்வைக்கின்றது. சர்வதேச மன்னிப்புச்சபை மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கையின் உள்நாட்டு மோதலின் முடிவில் சரணடைந்தவர்களின் பெயர் விபரங்களை பெற்று வெளியிடுவதன் மூலம் - பலவந்தமாக காணாமலாக்கப்படுதலில் தொடர்புபட்ட படையினர் மற்றும் பிற குற்றவாளிகளிடம் இது வரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்த புதுப்பிக்கப்பட்ட தகவல்களை வழங்குவதன் மூலம் காணாமல்போனோர் அலுவலகம் காணாமல்போனோரை தேடுவதற்கான அதன் ஆணையை நிறைவேற்றுவதில் குறிப்பிடதக்க முன்னேற்றத்தை காண்பிப்பதை உறுதிப்படுத்தவேண்டும். தொடரும் மனித புதைகுழி அகழ்வுகள் தொடர்பில் மிகவும் அவசரமாக காணாமல்போனவர்கள் அலுவலகம் வெளிநாட்டு தொழில்நுட்ப நிபுணத்துவத்தை கேட்டுப்பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தவேண்டும். காணாமல்போனவர்களின் அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட ஆணையை நிறைவேற்றுவதில் காணாமல்போனவர்களின் அலுவலகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காண்பிக்காதமைக்கு அதன் தலைமைத்துவத்தை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துங்கள்.அதன் நடவடிக்கைகள் குறித்து ஒழுங்கமைக்கப்பட்ட மாற்றங்களை மேற்கொள்ளுங்கள்அந்த அலுவகத்திற்கு நியமிக்கப்படுபவர்கள் திறமைசாலிகள் அர்ப்பணிப்புள்ளவர்கள் சுயாதீனமானவர்களாக விளங்குவதை உறுதி செய்யுங்கள். பல தசாப்தங்களாக பதில்களைக் கோரும் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் கோரிக்கைகளை அவசரமாகவும் உண்மையாகவும் கவனத்தில் கொள்ள வேண்டும். காணாமல்போனவர்கள் எங்கிருக்கின்றாகள் தெளிவுபடுத்தாமல்,அவர்கள் உள்ள இடத்தை சுயாதீனமாக ஆராயாமல், காணாமல்போனமைக்கான சூழ்நிலைகளை தெரிவிக்காமல்,உயிருடன் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மனித எச்சங்களை அவர்களின் குடும்பத்தவர்களிடம் வழங்காமல் இது தொடர்பான விடயத்திற்கு அதிகாரிகள் முடிவை காணமுயலக்கூடாது. பாதிக்கப்பட்டவர்களின் உண்மை நீதி மற்றும் இழப்பீட்டிற்கான உரிமைகளிற்கு அதிகாரிகள் முன்னுரிமை வழங்கவேண்டும்,அவற்றை மதிக்கவேண்டும்,அதற்கு உதவவேண்டும். நிறுவனத்திற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையே நிலவும் நம்பிக்கை மற்றும் அறிவு இடைவெளியைக் குறைக்க இன்னும் பல தொலைநோக்குப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். https://www.virakesari.lk/article/220633
  22. "மார்க்சிஸ்ட் தலைமையை மீறி கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவு" - அச்சுதானந்தன் கண்ட போராட்ட களங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் இருந்த வி.எஸ். அச்சுதானந்தன், மாநில எல்லைகளைத் தாண்டியும் சுற்றுச்சூழல் பிரச்னைகளில் ஆர்வம் காட்டியவர். கட்சியின் நிலைப்பாட்டைத் தாண்டியும் கூடங்குளம் அணு உலை போராட்டத்துக்கு ஆதரவு அளித்தவர். கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான வேலிக்ககத்து எஸ். அச்சுதானந்தன், முதுமையின் காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் ஜூலை 21ஆம் தேதி உயிரிழந்தார். கடைசி சில நாட்கள் வரை மிகுந்த ஆரோக்கியத்துடன் இருந்த அச்சுதானந்தன், மூச்சுத் திணறல் காரணமாக ஜூன் 23ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கேரளாவின் ஆலப்புழாவில் உள்ள கடற்கரையோர கிராமமான புன்னப்ராவில் 1923ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி சங்கரன் - அக்கம்மா தம்பதிக்குப் பிறந்தார். தாயை நான்கு வயதிலும் தந்தையை பதினொரு வயதிலும் இழந்த அச்சுதானந்தன் ஏழாம் வகுப்போடு கல்வியை நிறுத்திக்கொண்டு, 11 வயதிலேயே வேலைக்குச் செல்லும் நிலைமைக்குத் தள்ளப்பட்டார். அந்த தருணத்தில் தீவிரமாக இருந்த இந்திய விடுதலைப் போராட்டம், தொழிலாளர் இயக்கங்கள் அவரைத் தீவிரமாக ஈர்த்தன. 1940ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த அவர், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சில ஆண்டுகள் சிறையில் இருந்தார். பல தருணங்களில் தலைமறைவு வாழ்க்கையை வாழ வேண்டியிருந்தது. 1946ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த புன்னப்புரா - வயலார் இடதுசாரி இயக்கத்தினரின் போராட்டத்தில் பங்கேற்ற வி.எஸ். அச்சுதானந்தன் காவல் துறையின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானவர். பட மூலாதாரம்,GETTY IMAGES 1964ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக பிளவுபட்டபோது, தேசிய கவுன்சிலில் இருந்து வெளியேறிய 32 பேரில் அச்சுதானந்தனும் ஒருவர். புதிதாக உருவான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவர். மக்கள் ஆதரவை பெற்ற அச்சுதானந்தன் ஊழல், நில மாஃபியா உள்ளிட்ட பல விவகாரங்களில் தீவிரமான நிலைப்பாடுகளை எடுத்த வி.எஸ். அச்சுதானந்தனுக்கு எப்போதுமே மக்கள் ஆதரவு இருந்துவந்தது. கேரள மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக பல ஆண்டுகள் இருந்த வி.எஸ். அச்சுதானந்தனுக்கு 82வது வயதில்தான் கேரள மாநிலத்தின் முதலமைச்சராகும் வாய்ப்பு கிடைத்தது. 2006ஆம் ஆண்டில் முதலமைச்சரான வி.எஸ். அச்சுதானந்தன், தனது ஆட்சிக் காலத்தில் அதிரடியான சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். மூணாறில் இருந்த ஆக்கிரமிப்புகளை எதிர்ப்புகளை மீறி அகற்றினார். இது கட்சிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியது. கேரளாவில் ஐடி துறைக்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES "வி.எஸ். அச்சுதானந்தன் கட்சியின் தலைமைக் குழுவில் இருந்தபோது நான் மத்தியக் குழுவுக்கு தேர்வானேன். இதனால், பல ஆண்டுகள் அவரோடு இணைந்து செயல்படும் வாய்ப்புக் கிடைத்தது. அர்ப்பணிப்பு, தன்னடக்கம், தான் கொண்ட கொள்கையில் மன உறுதி, மக்கள் நலனே பிரதானமானது போன்ற விஷயங்களில் அவர் ஒரு முன்னுதாரணமாக இருந்தார்." என நினைவுகூர்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலரும் மூத்த தலைவருமான ஜி. ராமகிருஷ்ணன். 1964ல் அப்போதைய கல்கத்தாவில் நடந்த 7வது மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. அந்த மாநாடு புதிய மத்தியக் குழுவை தேர்வுசெய்தது. சுந்தரைய்யா பொதுச் செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டார். அந்த மாநாட்டில் என். சங்கரய்யாவும் வி.எஸ். அச்சுதானந்தனும் மத்தியக் குழுவுக்கு தேர்வுசெய்யப்பட்டார்கள் என கூறுகிறார் ஜி.ராமகிருஷ்ணன். பட மூலாதாரம்,GETTY IMAGES "சமீபத்தில் என். சங்கரய்யா காலமான நிலையில், வி.எஸ். அச்சுதானந்தன் தற்போது காலமாகியிருக்கிறார். இதன் மூலம், முதல் முதலில் உருவான மத்தியக் குழுவில் இடம்பெற்று, நீண்ட காலம் அதில் பணியாற்றிய ஒரு உறுப்பினராக அச்சுதானந்தனைச் சொல்ல முடியும். ஒரு சாதாரண விவசாய தொழிலாளர் குடும்பத்தில் பிறந்து, சுதந்திரப் போராட்ட காலத்தில் புன்னப்புரா - வயலார் போராட்டம் என்ற நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான போராட்டத்தில் கிருஷ்ணப்பிள்ளையின் வழிகாட்டுதலில் கலந்துகொண்டார். இடதுசாரி இயக்கத்தில் ஒரு பெருமிதமிக்க வரலாற்றைக் கொண்டவர் அச்சுதானந்தன்" என தெரிவித்தார் ஜி. ராமகிருஷ்ணன். தமிழ்நாட்டின் சூழல் போராட்டங்களில் ஆர்வம் காட்டியவர் வி.எஸ். அச்சுதானந்தனுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெரிய அளவிலான தொடர்புகள் இருந்ததில்லை. இருந்தாலும், தமிழ்நாட்டில் நடந்த சூழல் போராட்டங்களில் அவர் ஆர்வம் காட்டினார். தமிழ்நாட்டில் 2012ஆம் ஆண்டில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடந்துகொண்டிருந்தபோது, அந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். 2011- 2012ஆம் ஆண்டுகளில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் தமிழ்நாட்டில் தீவிரமடைந்தபோது, கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார் வி.எஸ். அச்சுதானந்தன். அவர் கூடங்குளம் அணு மின் நிலையத் திட்டத்துக்கு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தார். இத்தனைக்கும் அவர் சார்ந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அணு உலைத் திட்டத்துக்கு எதிராக இல்லாத நிலையிலும் வி.எஸ். அச்சுதானந்தன் அத்தகைய நிலைப்பாட்டை எடுத்தார். இந்த நிலையில், 2012ஆம் ஆண்டு கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் தீவிரமாக இருந்த நிலையில், அந்தப் போராட்டத்துக்கு நேரில் ஆதரவு தெரிவிப்பதற்காக செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி கூடங்குளத்துக்கு வர முடிவுசெய்தார் அச்சுதானந்தன். அதேபோல, தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கும் எதிர்ப்புத் தெரிவித்தார். நியூட்ரினோ ஆய்வுக்கூடம் பற்றியும், அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த வேண்டும். ஆய்வுக்கூடத்துக்காக பூமிக்கு அடியில் சுரங்கம் அமைக்கும் பணியை மத்திய அரசும், தமிழக அரசும் உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் குரல் கொடுத்தார். "பக்கத்து மாநிலத்தில் எதிர்க்கட்சித் தலைவராகத்தான் இருந்தாலும்கூட, தமிழ்நாட்டில் மக்கள் போராடும் ஒரு பிரச்சனைக்காக வி.எஸ். அச்சுதானந்தன் குரல் கொடுத்தார். கட்சியின் மாநில அமைப்பும் சரி, தேசிய அளவிலும் சரி அணு உலைக்கு ஆதரவாக இருந்தும்கூட, அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார் வி.எஸ். அச்சுதானந்தன். போராடும் மக்கள், தமிழர்களா மலையாளியா என்று பார்க்காமல் அவர்களுக்காக நின்றார். நெருக்கடியான அந்த காலகட்டத்தில் போராடிவந்த மக்களுக்கு இது மிக முக்கியமானதாக இருந்தது. பல முறை அவரை அவருடைய வீட்டில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். எளிதில் அணுகக்கூடியவராகவும் மனம்விட்டுப் பேசக்கூடியவராகவும் இருந்தார்" என்கிறார் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக் குழுவைச் சேர்ந்த சுப. உதயகுமார். குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகியது ஏன்? ஜெகதீப் தன்கரை சூழும் ஊகங்கள் பிரிக்ஸை மிரட்டும் டிரம்ப்: இந்தியா, சீனா, ரஷ்யா ஓரணியில் திரளுமா? இந்தியாவில் ஐரோப்பிய வல்லரசுகளின் விதியை தீர்மானித்த 'வந்தவாசிப் போர்' பிரம்மபுத்திரா ஆற்றில் சீனா அணை கட்டுவதால் இந்தியா, வங்கதேசத்திற்கு என்ன பாதிப்பு? ஆனால், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் எல்லா கேரள அரசியல்வாதிகளைப் போலவேதான் அவருடைய நிலைப்பாடும் இருந்தது. முல்லைப் பெரியாறு அணை மிகுந்த அபாயத்தில் உள்ளது என்றும் புதிய அணையைக் கட்ட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்திவந்தார். பல தருணங்களில் அவர் எடுத்த நிலைப்பாடுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இருந்தபோதும், கேரள மாநிலத்தின் கடந்த 80 ஆண்டு கால அரசியலை வி.எஸ். அச்சுதானந்தனைத் தவிர்த்துவிட்டு விவாதிக்க முடியாது என்ற பாரம்பரியத்தை விட்டுச் சென்றிருக்கிறார் வி.எஸ். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czey475denlo
  23. 22 JUL, 2025 | 02:51 PM (எம்.நியூட்டன்) தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் வழிபாட்டுக் காலத்தை பேணுமாறும் புனிதமான திருவீதியில் எவரும் மறந்தும் பாதணிகளை அணிந்து செல்லாமல், புனிதத்தைப் பேணுமாறும் ஆறுதிருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நல்லூர் திருவிழாக் காலம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : நல்லூரானின் பெருந்திருவிழாவை முன்னிட்டு நாம் ஆயத்தமாவோம். ஈழத்திருநாட்டின் ஈடு இணையற்ற பெருங்கோவிலாக விளங்குவது நல்லூர்க் கந்தசுவாமி கோவில். இத்திருக்கோவிலின் வருடாந்த பெருந்திருவிழா இம்மாதம் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமையன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெறவுள்ளது. பல இலட்சம் மக்கள் நல்லூர் வீதியில் முருகனைக் காண ஒன்றுகூடப் போகிறார்கள். வடக்கில் உள்ள மக்கள் இந்த வாரமே தங்கள் வீடுகளைப் புனிதப்படுத்தி நல்லூரான் திருவிழாவிற்காக தங்கள் வசிப்பிடத்தையும் புனிதப்படுத்தத் தொடங்கியிருப்பார்கள். நல்லூர் சுற்றாடல் தெய்வீகக் களைகட்டத் தொடங்கிவிடும். தண்ணீர்ப்பந்தல்கள் அமைக்கும் வேலைகள் ஆரவாரமாக தொடங்கிவிடும். அழகன் முருகன் திருவீதியில் அரோகரா சத்தம் இருபத்தைந்து நாட்களும் ஓங்கி ஒலிக்கும். வீதியெல்லாம் புதிய மணல் பரப்பி அங்கப் பிரதிஷ்டை மற்றும் அடியடித்துக் கும்பிடும் அடியவர்க்கு வசதிகள் செய்வார்கள். தெய்வீகச் சூழலாக மாறும் நல்லூர்ச் சுற்றாடலின் சிறப்பு எழுத்தில் வடித்துவிடமுடியாது. நல்லூர்க் கந்தன் ஆலயத்தை உருவாக்கி பரம்பரை பரம்பரையாக காத்துவரும் மாப்பாணர் பரம்பரைக்கு சைவ உலகம் என்றும் நன்றிக்கடன் பட்டது. போரில் அழிந்த சைவத் தமிழர்களின் திருக்கோவிலை தமது சொந்த நிலத்தில் தமது குடும்பத்தின் முயற்சியால் உருவாக்கி கடந்த மூன்று நூற்றாண்டுகள் உன்னதமாக கட்டிக்காத்து வரும் மாப்பாணர் குடும்பத்தின் மகத்துவத்தை எல்லோரும் நன்கு அறிவர். திசைகள் தோறும் கோபுரங்கள் உள்வீதி முழுவதும் உவமை இல்லா அழகுக் காட்சிகள் உருவாக்கி உலகம் வியக்க வைக்கும் நல்லூரான் தனித்துவத்தை எவரும் குறைத்து மதித்து விடமுடியாது. சர்வதேசமே நல்லூர்ச் சிறப்பை வியந்து போற்றுகிறது. அமெரிக்க ஹவாய் சைவ ஆதீனம் வெளியிட்டு வரும் நூலில் உலகம் முழுவதும் வாழும் சைவ மக்கள் சீரிய ஒழுங்கைப் பின்பற்றுவதற்கு நல்லூரை தரிசியுங்கள் என கூறியுள்ளார்கள். இந்திய மத்திய அரசின் நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் “அப்பப்பா என்ன அதிசயம்? நல்லூர்க் கந்தசுவாமி கோயிலுக்குள் கால் எடுத்து வைத்தவுடன் எம்மை மறந்து விடுகிறோம். ரம்மியமான இத்திருக்கோவில் சிறப்புப் பற்றி உலகமே வியக்கிறது” என உரைத்தமை அனைவரும் அறிவர். அன்பர்களே நல்லூர்ப் பெருந்திருவிழாக் காலங்களில் குடும்பம் குடும்பமாக சென்று வழிபாடு செய்வதற்கு ஆயத்தமாகுங்கள். தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் வழிபாட்டுக் காலத்தை பேணுங்கள். புனிதமான திருவீதியில் எவரும் மறந்தும் பாதணிகளை அணியாதீர்கள். விசேட தேவையுடையவர்கள் வழிபாடு செய்ய வரும்போது தொண்டர்கள் உதவுங்கள். சுற்றுச்சூழலில் வசிப்பவர்கள் ஆன்மிக அலங்காரங்களை தாம் வசிக்கும் இடங்களில் ஏற்படுத்துங்கள். படம்பிடித்து முருகனை தேடுவதை விட பக்தியோடு அவனை அகத்தால் உள்வாங்குங்கள். வீதியில் சுவாமி புறப்பட்டால் வேடிக்கைக்கு இடமில்லை. வேலனிடம் விடிவு கேட்டுப் பிரார்த்திப்பதே எமக்கு வேலை என உணருங்கள். சஞ்சலமின்றி இறைவன் எமக்குத் தந்த இந்த இனிய நாட்களை ஆனந்தமாகக் கழிப்பதற்கு ஆயத்தமாகுங்கள். அலங்காரக் கந்தனை தரிசிக்க வரும் அடியவர்களாகிய நாம் எளிமையாக நின்று வணங்குவோம். எமது அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக வழிபாட்டு மரபை முன்னெடுத்துச் செல்வோம். எல்லோரும் நல்லூரான் பெருவிழாவைக் கண்ணாரக் காண்போம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/220631
  24. Published By: DIGITAL DESK 2 22 JUL, 2025 | 05:04 PM அன்று ரயிலேறி யாழ்ப்பாணத்துக்கு வைராக்கியம், குரோதம், பிரிவினையை கொண்டு வந்தனர். அதன் மூலம் யாழ். நூலகத்தை எரித்து நாசமாக்கினார்கள். இன்று நாம் ரயிலேறி சகோதரரத்துவத்தை கொண்டு வருகின்றோம். வடக்கையும், தெற்கையும் இணைக்கும் உறவு பாலத்தை ஏற்படுத்த வருகின்றோம் என சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசியக் குழு உறுப்பினர் மகேஷ் அம்பேபிட்டிய தெரிவித்தார். சகோதரத்துவ தினம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை (22) யாழ். தேசிய மக்கள் சக்தி மக்கள் தொடர்பாடல் காரியாலயத்தில் நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே இவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சோசலிச இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் 2008 ஆம் ஆண்டு முதல் சகோதரத்துவ தின நிகழ்வுகளை நடத்தி வருகின்றோம். சகோதரத்துவத்தை கட்டியெழுப்புவதற்காக 17 ஆண்டுகளாக செயற்படுகின்றோம். இம்முறை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு சகோதரத்துவ ரயில் பயணம் இடம்பெறவுள்ளது. 1981 மே 31 ஆம் திகதி யாழ்.வந்த ரயில் நிலையத்தில் குருணாகல் ரயில் நிலையத்தில் இருந்து அரசியல் குழுவொன்று ஏறியது. காமினி லொக்குகே, காமினி திஸாநாயக்க, காமினி ஜயவிக்கிரம, சிறில் மெத்திவ், கிறிஸ்டன் பெரேரா, ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் வைராக்கியம், குரோதம், பிரிவினையை எடுத்து வந்தனர். அவற்றை எடுத்து வந்துதான் ஆசியாவின் மிக்பெரிய பொக்கிஷமான நூலகத்தை எரிந்தனர். எனவேதான் அந்த ரயிலில் சகோதரத்துவத்தை நாம் நாளை புதன்கிழமை (23) எடுத்துவருகின்றோம். 1981 இல் ஆரம்பமான குரோதம் 1983 இல் கறுப்பு ஜுலையாக மாறியது. இறுதியில் பிரச்சினை போர்வரை வந்தது. இந்த கறுப்பு புள்ளி இன்னும் நீங்கவில்லை. ஆட்சியாளர்களும் அரசியலுக்காக மக்களை பிரித்தாளும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். வடக்கையும், தெற்கையும் தமது அரசியலுக்காக அரசியல்வாதிகள் பிரித்தார்கள். தமது சுகபோக வாழ்வுக்காக மக்களை பிரித்தார்கள். அந்த யுகம் தற்போது முடிந்துவிட்டது. புதிய நாடு உருவாகி வருகின்றது. புதிய யுகத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றோம். தேசிய சமத்துவமே அரசாங்கத்தின் நோக்கம். அதற்காக ஜனாதிபதியும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார் என்றார். https://www.virakesari.lk/article/220629
  25. 22 JUL, 2025 | 01:26 PM இஸ்ரேலிய படையினர் தனது பணியாளர்களை ஆடைகளை களைந்து சோதனையிட்டதுடன் கைதுசெய்துள்ளனர் என உலக சுகாதார ஸ்தாபனம் குற்றம்சாட்டியுள்ளது. இஸ்ரேல் தனது பண்டகசாலை மீது விமானதாக்குதலை மேற்கொண்டது என தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் தனது பணியாளர்களின் வீடுகளையும் இலக்குவைத்தது, இதனால் பெரும் சேதமேற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது. பெண்களும் குழந்தைகளும் மோதல் இடம்பெறும் பகுதியை நோக்கி கால்நடையாக வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். டெய்ர் அல்பலாவில் இஸ்ரேல் மேற்கொண்ட உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆண்பணியாளர்கள் அவர்களது குடும்பத்தவர்களை கைதுசெய்து அவர்களிற்கு கைவிலங்கிட்ட இஸ்ரேலிய படையினர் அந்த இடத்தில் வைத்தே அவர்களது ஆடைகளைந்து விசாரணை செய்தனர் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை இது குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளதாவது காசாவின் நடுப்பகுதியில் உள்ள டெய்ர் அல் பலாவில்உலக சுகாதார ஸ்தாபன ஊழியர்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் மீதான தாக்குதல்கள்இ அங்கு தங்கியிருந்தவர்களை தவறாக நடத்துதல் மற்றும் அதன் முக்கிய பண்டகசாலை அழிக்கப்பட்டதை WHO வன்மையாகக் கண்டிக்கிறது இஸ்ரேலிய இராணுவத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய வெளியேற்ற உத்தரவுக்குப் பிறகு டெய்ர் அல் பலாவில் அதிகரித்த மோதலை தொடர்ந்து உலக சுகாதார ஸ்தாபன ஊழியர்களின் வீடு மூன்று முறை தாக்கப்பட்டது. வான்வழித் தாக்குதல்கள் தீ மற்றும் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியதால் குழந்தைகள் உட்பட ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் கடுமையான ஆபத்தில் இருந்தனர் மற்றும் அதிர்ச்சியடைந்தனர். இஸ்ரேலிய இராணுவம் வளாகத்திற்குள் நுழைந்து தீவிர மோதல்களுக்கு மத்தியில் பெண்களையும் குழந்தைகளையும் அல்-மவாசி நோக்கி கால்நடையாக வெளியேற கட்டாயப்படுத்தியது. ஆண் ஊழியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கைவிலங்கு போடப்பட்டு ஆடைகளை அவிழ்த்து சம்பவ இடத்திலேயே விசாரித்து துப்பாக்கி முனையில் சோதனை செய்யப்பட்டனர். இரண்டு ஊழியர்கள் மற்றும் இரண்டு குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். மூன்று பேர் பின்னர் விடுவிக்கப்பட்டனர் அதே நேரத்தில் ஒரு ஊழியர் இன்னும் காவலில் வைக்கப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/220613

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.