Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. விசா கட்டணம் அறவிடப்படாத நாடுகள் இதோ! இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில், அரசாங்கம் மேலும் 33 நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த தீர்மானித்துள்ளது. இதற்கு முன்னர், சீனா, இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, தாய்லாந்து, மலேசியா மற்றும் ஜப்பான் ஆகிய 7 நாடுகளுக்கு விசா கட்டணத்தை அறவிடாமல் இருக்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது. இந்தத் திட்டத்தால் அரசாங்கத்திற்கு ஆண்டுதோறும் 66 மில்லியன் அமெரிக்க டொலர் வருமான இழப்பு ஏற்படலாம். விசா கட்டணம் அறவிடப்படாத நாடுகளின் பட்டியல்: 1.United Kingdom of Great Britain and Northern Ireland 2.Federal Republic of Germany 3.Kingdom of the Netherlands 4.The Kingdom of Belgium 5.The Kingdom of Spain 6.The Commonwealth of Australia 7.Republic of Poland 8.The Republic of Kazakhstan 9.The Kingdom of Saudi Arabia 10.The United Arab Emirates 11.Federal Democratic Republic of Nepal 12.People's Republic of China 13.The Republic of India 14.The Republic of Indonesia 15.The Russian Federation 16.The Kingdom of Thailand 17.The Federation of Malaya 18.Japan * 19.Republic of France 20.United States of America 21.Canada 22.Czech Republic (Czechia) 23.Republic of Italy 24.Swiss Confederation (Switzerland) 25.Republic of Austria 26.State of Israel 27.Republic of Belarus 28.Islamic Republic of Iran 29.Kingdom of Sweden 30.Republic of Finland 31.Kingdom of Denmark 32.Republic of Korea 33.State of Qatar 34.Sultanate of Oman 35.Kingdom of Bahrain 36.New Zealand 37.State of Kuwait 38.Kingdom of Norway 39.Republic of Türkiye 40.Pakistan https://adaderanatamil.lk/news/cmdiu1leu01n9qp4k4gh5shwc
  2. திருகோணமலையில் நடைபெறவிருக்கும் மக்கள் போராட்டம் : சர்வதேச நீதியை வலியுறுத்தும் வடகிழக்கு சமூக இயக்கம் Published By: DIGITAL DESK 2 25 JUL, 2025 | 07:52 PM வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி சனிக்கிழமை (26) திருகோணமலை சிவன் கோவில் முன்பாக காலை 10.00 மணியளவில் பாரிய மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கையில் மனித குலத்திற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் எடுக்கப்படும் இலங்கை தொடர்பான தீர்மானம் வலுப்பெறும் வகையில் குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் காலை 10.00 மணியளவில் குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் செம்மணி மனித புதைகுழி பகுதியிலும், முல்லைத்தீவில் மாவட்ட செயலகத்திற்கு அருகாமையிலும், கிளிநொச்சியில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகாமையிலும், வவுனியாவில் புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகாமையிலும், மன்னாரில் நகர்ப்பகுதியிலும், அம்பாறையில் திருக்கோவில் பகுதியிலும், மட்டக்களப்பில் காந்திப் பூங்கா பகுதியிலும் நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறையைக் கோரும் வடக்கு கிழக்கு மாகாண தமிழ் மக்களின் குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக “மாண்புமிகு மலையக மக்கள் சிவில் சமூக கூட்டிணைவு” கொழும்பு ஐக்கிய நாடுகள் சபை வளாகத்தின் முன்பாக காலை 10.00 மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/220930
  3. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டாமர் கட்டுரை தகவல் பிரவீன் பிபிசி செய்தியாளர் 29 நிமிடங்களுக்கு முன்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோதியும், பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டாமரும் ஆறு பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் ஜூலை 24ஆம் தேதி கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின் கீழ், பிரிட்டிஷ் கார்கள் மற்றும் விஸ்கி இந்தியாவில் மலிவாகக் கிடைக்கும். இந்திய உடைகளும் ஆபரணங்களும் பிரிட்டனில் மலிவாகக் கிடைக்கும். இந்தியாவும் பிரிட்டனும் இந்த வர்த்தக ஒப்பந்தத்தால் பயனடையும் என நம்புகின்றன. ஆனால் இந்த ஒப்பந்தத்தால் யார் அதிக லாபம் அடைவார்கள் என்பதுதான் தற்போது எழுகின்ற கேள்வி. பிரிட்டன் உடனான வர்த்தக ஒப்பந்தத்தைப் பாராட்டிய பிரதமர் மோதி, இந்த ஒப்பந்தத்தின் உதவியுடன், இந்தியாவின் ஆடைகள், காலணிகள், நகைகள், கடல் உணவுகள் மற்றும் பொறியியல் தொடர்பான பொருட்களை பிரிட்டிஷ் சந்தையில் எளிதாகப் பெற முடியும் என்று கூறியுள்ளார். இந்த ஒப்பந்தம் காரணமாக, இந்தியர்கள் பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட பொருட்களை அதிக அளவில் பெறுவார்கள் என்றும், மருத்துவ சாதனங்கள் மற்றும் விண்வெளி பாகங்களை மலிவு விலையில் பெற முடியும் என்றும் பிரதமர் மோதி குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில், இந்த ஒப்பந்தத்தை பிரிட்டனுக்கு கிடைத்த வெற்றி என்று கூறிய பிரிட்டன் பிரதமர் ஸ்டாமர், இதனால் பிரிட்டனில் 2,200க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் கூறியுள்ளார். அதோடு, பாதுகாப்பு, கல்வி, காலநிலை, தொழில்நுட்பம் ஆகிய துறைகளிலும் ஒத்துழைப்பை அதிகரிக்க இரு நாட்டு பிரதமர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்தியாவுக்கு என்ன பயன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரிட்டன் உடனான வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியா பயனடையும் என்று பிரதமர் மோதி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த வாரத் தொடக்கத்தில், மோதி அமைச்சரவை இந்தியா-பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது. ஆனால் இந்த ஒப்பந்தம் இன்னும் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறவில்லை. அதே போல் இது நடைமுறைக்கு வருவதற்குக் குறைந்தது ஓர் ஆண்டு ஆகலாம். இந்தியா-பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய மூன்று ஆண்டுகள் ஆனது. டெல்லியை சேர்ந்த சிந்தனைக் குழுவான, வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்பின்(RIS) இயக்குநர் ஜெனரல் பிஸ்வஜித் தார், பிற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா பிரிட்டனுடன் இந்த ஒப்பந்தத்தில் மிக விரைவாக கையெழுத்திட்டுள்ளது என்று கருதுகிறார். ஒப்பந்தத்தை அங்கீகரிக்க மூன்று ஆண்டுகள் ஆனதற்கான காரணத்தை விளக்கிய பிஸ்வஜித் தார், "இந்தியாவில் ஏராளமான சிறு விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் உள்ளனர். அவர்கள் இந்த வகையான வர்த்தகத்தை சங்கடமானதாக, பாதுகாப்பற்றதாக உணர்கிறார்கள். இதை விளக்கி அவர்களைச் சமாதானப்படுத்த, அரசுக்கு நிறைய நேரம் எடுக்கும். அதனால்தான் பிற நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்ய இந்தியா அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்" என்றார். மேலும், "மற்ற பெரிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்ய இந்தியா எடுத்துக் கொண்ட நேரத்துடன் ஒப்பிடும்போது, இந்த வர்த்தக ஒப்பந்தம் மிகக் குறுகிய காலத்தில் செய்யப்பட்டுள்ளது. பதினெட்டு ஆண்டுகளாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய இந்தியா முயன்று வருகிறது. பெரிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்ய நமக்கு நிறைய நேரம் தேவைப்படுகிறது" என்று பிஸ்வஜித் தார் விளக்கினார். ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பல பொருட்களுக்கான வரிகள் குறைக்கப்படும், இவற்றில் துணிகள் மற்றும் காலணிகள் அடங்கும். அதேபோல், இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உணவு மற்றும் உறைந்த இறால்களுக்கான வரிகளையும் இந்த ஒப்பந்தம் குறைக்கும். இதுதவிர, கார்கள் ஏற்றுமதி மீதான வரிகளும் குறைக்கப்படும். இந்த வர்த்தக ஒப்பந்தம், இந்தியாவின் மின்சார வாகனங்கள் மற்றும் ஹைப்ரிட் வாகனங்களுக்கு பிரிட்டன் சந்தையை அணுகுவதற்கான வாய்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டன் இந்தியாவில் இருந்து சுமார் 11 பில்லியன் பவுண்டுகள் (சுமார் 1,285 பில்லியன் ரூபாய்) மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்கிறது. தற்போது வரி குறைப்பு காரணமாக, பிரிட்டனுக்கான இந்திய ஏற்றுமதி மலிவாகும். அதே போல, இந்த வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவில் இருந்து பிரிட்டன் இறக்குமதி செய்வது அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் கருதுகிறார்கள். இந்தியா, பிரிட்டன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) இரு நாடுகள் இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறுகிறார் ஐசிஆர்ஏ (ICRA) லிமிடெட் நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் அதிதி நாயர். "கடந்த பத்து ஆண்டுகளில் பிரிட்டன் உடனான இந்தியாவின் வர்த்தக உபரி ஓரளவு அதிகரித்துள்ளது. ஜவுளி, உலோகங்கள், விவசாயப் பொருட்கள், மின்சாரம் மற்றும் மின்னணு பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், தோல் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிக்கும்," என்கிறார் அதிதி நாயர். அதோடு, "கட்டணக் குறைப்பு காரணமாக இந்திய நுகர்வோர் பயனடைவார்கள். உலோகம், ஆட்டோமொபைல், மருந்துகள், மதுபானங்கள், அழகுசாதனப் பொருட்கள் ஆகிய துறைகளில் ஈடுபட்டுள்ள இந்தியர்களும் இதன் மூலம் பயனடைவார்கள்" என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரிக்குமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்க-வைர நகைகள், துணிகள் மற்றும் தோல் பொருட்களுக்கு பிரிட்டனில் வரி இருக்காது. "பாஸ்மதி அரிசி, இறால், மசாலாப் பொருட்கள் மற்றும் தேயிலை மீதான இறக்குமதி வரிகளையும் பிரிட்டன் குறைக்கும். இதனால் இந்திய ஏற்றுமதியாளர்களால் பிரிட்டிஷ் சந்தைகளை எளிதாக அணுக முடியும். இந்த வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியா நிறைய நன்மைகளை எதிர்பார்க்கிறது" என்று பிஸ்வஜித் தார் கூறுகிறார். "இந்தியாவுடனான ஏற்றுமதியை பிரிட்டன் கிட்டத்தட்ட முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. பொம்மைகள் மற்றும் ஆடைகள் தொடர்பான துறைகளில் இந்தியா பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது." "இந்தத் துறைகளில் ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வேலைவாய்ப்பை அதிகரிக்கும். இதுவே நமது மிகப்பெரிய தேவை. ஏனெனில் வேலைவாய்ப்பு அதிகரிக்காவிட்டால், வருமானம் அதிகரிக்காது" என்று பிஸ்வஜித் தார் விளக்குகிறார். இருப்பினும், இந்த ஒப்பந்தத்தால் இந்தியா எவ்வளவு பயனடையும் என்று கூறுவதற்கு சில காலம் தேவைப்படும் என்கிறார் பொருளாதார நிபுணர் ஷரத் கோஹ்லி. "ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது, ஆனால் அதற்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும். அங்கு இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. அங்குள்ள எதிர்க்கட்சி இதை எதிர்க்கிறது. பிரிட்டனின் பொருளாதார நிலை நன்றாக இல்லை. பொருட்களை வாங்க பணம் இல்லாததால் மக்கள் அங்கு பொருட்களை வாங்குவதில்லை" என்று ஷரத் குறிப்பிடுகிறார். சேவைத் துறையில் ஏற்படக்கூடிய மாற்றம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியா-பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தத்தால் ஐடி துறை பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தால் இரு நாடுகளின் சேவைத் துறையும் பயனடையும் என்று பிரதமர் மோதி நம்பிக்கை தெரிவித்துள்ளார். "இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் சேவைத் துறைக்கும், குறிப்பாக தொழில்நுட்பம் மற்றும் நிதித் துறைகளுக்கு பயனளிக்கும். இது வர்த்தகத்தை எளிதாக்குவதோடு, வணிகம் செய்வதற்கான செலவையும் குறைக்கும். இந்த ஒப்பந்தங்கள் இரு நாடுகளிலும் முதலீட்டை அதிகரிக்கும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்" என்று பிரதமர் மோதி கூறியுள்ளார். பிரிட்டனின் சேவைத் துறையால், குறிப்பாக ஐடி மற்றும் கல்வித் துறைகளால் இந்தியா பயனடையும் என்கிறார் அதிதி நாயர். இந்தத் துறைகளில் பிரிட்டனின் பங்களிப்புகள், இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் என அவர் நம்புகிறார். "இந்திய தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்புக் கட்டணங்களில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு விலக்கு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பிரிட்டனில் உள்ள இந்திய நிறுவனங்களுக்கும் பெரிய நன்மைகள் ஏற்படக்கூடும்," என்று அவர் கூறினார். "மூன்று ஆண்டுகளுக்கு சமூகப் பாதுகாப்பு கட்டணங்களில் இருந்து இந்திய தொழிலாளர்களுக்கு விலக்கு அளிப்பது அவர்களின் செலவுகளைக் குறைக்கும். இது அங்கு செல்லும் அல்லது அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு பயனளிக்கும்" என்கிறார் பிஸ்வஜித் தார். "பிரிட்டனின் சேவைத் துறை மிகப் பெரியது. சேவைத் துறையில் பணியாற்ற அதிகமான இந்தியர்கள் அங்கு வருவதை பிரிட்டனும் விரும்புகிறது. வர்த்தக ஒப்பந்தம் அங்குள்ள இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும்" என்று அவர் நம்புகிறார். பிரிட்டன் பயனடையுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரிட்டன் பொருளாதாரம் போராடி வருகிறது பல ஆண்டுகளுக்குப் பிறகு எட்டப்பட்ட இந்த ஒப்பந்தம், பிரிட்டன் பொருளாதாரத்திற்கு 4.8 பில்லியன் பவுண்டுகள் அதாவது சுமார் ரூ.560 பில்லியன் நன்மை பயக்கும் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் நம்புகிறது. பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, இந்தியா சராசரியாக 15 சதவிதம் வரி விதித்திருந்தது. இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு இது 3 சதவீதமாகக் குறைக்கப்படும். வரிக் குறைப்பு காரணமாக, பிரிட்டிஷ் நிறுவனங்கள் இந்தியாவில் வணிகம் செய்ய அதிக வாய்ப்புகள் உருவாக்கப்படும். முன்னதாக, பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் விஸ்கி மீது 150 சதவிகிதம் வரி இருந்தது. அது இப்போது 75 சதவிகிதமாகக் குறைக்கப்படும். மற்ற வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் விஸ்கியை விற்பனை செய்வதில் பிரிட்டிஷ் நிறுவனங்களுக்கு அதிக பயன் கிடைக்கக்கூடும். இந்த வர்த்தக ஒப்பந்தம் மூலம் பிரிட்டன் என்ன நன்மையைப் பெறும் என்ற கேள்விக்குப் பதில் அளித்த பிஸ்வஜித் தார், "பொருளாதாரத்தில் இந்தியாவைவிட பிரிட்டன் பின்தங்கியுள்ளது. பிரிட்டன் பொருளாதாரம் முன்னேற வேண்டுமெனில், அது ஒரு பெரிய சந்தையைக் கண்டுபிடிக்க வேண்டும். சீனா தவிர, இந்தியா அளவுக்குப் பெரிய சந்தை எதுவும் இல்லை. இதன் மூலம் பிரிட்டன் பல துறைகளில் பயனடையப் போகிறது. அதில் ஒன்று ஆட்டோமொபைல் துறை. அதில் பிரிட்டன் மிகவும் பயனடையும்" எனக் குறிப்பிட்டார். வேறு நாடு ஏதேனும் பாதிக்கப்படுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஆண்டின் தொடக்கத்தில் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறை அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு, அவர் உலகளாவிய வர்த்தகப் போரைத் தொடங்கி வைத்தார். அதன் காரணமாக, இந்தியா, பிரிட்டன் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவாக மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக ஷரத் கோஹ்லி நம்புகிறார். "டிரம்ப் தொடங்கிய வர்த்தகப் போரின் விளைவாக, உலகப் பொருளாதாரம் குழப்பத்தில் உள்ளது. அதனால் மற்ற நாடுகள் தங்கள் வர்த்தக ஒப்பந்தங்களை விரைவாக முடிக்கத் தொடங்கியுள்ளன. அமெரிக்கா வழங்கும் அச்சுறுத்தல்களால், தங்களுக்கு ஏற்படக்கூடிய இழப்புகளை, மற்ற நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்வதன் மூலம் ஈடு செய்ய முடியும் என்று உலகின் பல நாடுகள் நம்புகின்றன" என்று அவர் கூறினார். இந்தியா, பிரிட்டன் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் சீனாவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். இந்த வர்த்தக ஒப்பந்தம் இந்தியா, சீனா இடையிலான வர்த்தக உறவுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும், ஆனால் பிரிட்டன் உடனான வர்த்தகத்தில் சீனா இழப்புகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ஷரத் கோஹ்லி கூறுகிறார். தொடர்ந்து பேசிய அவர், "சீனா, பிரிட்டன் இடையிலான இருதரப்பு வர்த்தகம் இந்தியா, பிரிட்டன் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தைவிட இரு மடங்கு அதிகம். சீனாவில் இருந்து ஏராளமான மலிவு விலைப் பொருட்கள் பிரிட்டனுக்கு செல்கின்றன, அதில் ஆடைகளும் அடங்கும். ஆனால் இந்தியாவில் இருந்து ஆடைகள் மற்றும் காலணி பொருட்கள் பிரிட்டனுக்கு சென்றால், அவற்றுக்கு எந்த வரியும் இருக்காது. எனவே, சீனா கடுமையான சவாலை எதிர்கொள்ளப் போகிறது" என்று விளக்கினார். ஆனால், "இது இந்தியா, சீனா இடையிலான வர்த்தகத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. இந்தியா, சீனா இடையிலான வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஒப்பந்தம் நடந்தாலும் நடக்காவிட்டாலும், சீனா உடனான இந்தியாவின் வர்த்தகம் அதிகரித்து வருகிறது" என்று குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3d1dm8e53zo
  4. பால் போத்தலுடன் காணப்பட்ட குழந்தையின் எலும்புக் கூடு அகழ்ந்தெடுப்பு : இதுவரை செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் 81 மனித எலும்புக்கூடுகள் மீட்பு! Published By: VISHNU 25 JUL, 2025 | 08:03 PM செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இதுவரை 81 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழி அகழ்வு தொடர்பாக வெள்ளிக்கிழமை (25) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி மனித புதைகுழியில் வெள்ளிக்கிழமை இரண்டு மனித எலும்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன. அத்துடன் ஏற்கனவே 76 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெக்கப்பட்டிருந்தன. வெள்ளிக்கிழமை (25) புதிதாக ஐந்து மனித எலும்பு கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டன. இதுவரை மொத்தமாக 81 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதே நேரம் இரண்டாவது அகழ்வு தளமாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் சட்டரீதியாக புதைக்கப்பட்ட சடலம் ஒன்று நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக பாதுகாப்பாக மூடப்பட்டது. குறித்த சடலம் தொடர்பான ஆய்வுகளின் பிற்பாடு அதன் காலத்தை சொல்ல முடியும். அதை அகழ்தெடுக்கவில்லை. குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்கு பின்னர் புதைக்கப்பட்டதாக சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு வந்ததற்கமைய சடலம் மூடப்பட்டது. பாலுட்டும் போத்தலுடன் அடையாளம் காணப்பட்ட சிறு குழந்தையின் எலும்புக்கூடு அகழ்ந்தெடுக்கப்பட்டது. பாலூட்டும் போத்தல் சான்றுப் பொருளாக மீட்கப்பட்டு நீதிமன்றக் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/220964
  5. கண்ணில பிரச்சனை இருக்காதண்ணை! எங்கட மூளை தான் தவறாக முன் அனுமானம் செய்கிறது, கொஞ்சம் பொறுமையாக வாசித்தால் எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா, எம்.ஆர்.ஐ எல்லாம் தெளிவாக புரிந்து கொள்வோம்.
  6. பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது என்றால் என்ன? Published By: RAJEEBAN 25 JUL, 2025 | 03:19 PM bbc பாலஸ்தீன அரசை பிரான்ஸ் அங்கீகரிப்பது பெரும்பாலும் குறியீட்டு ரீதியான ஆனால் ஆழமான அரசியல் நடவடிக்கையாக காணப்படுகின்றது. இது ஒரு வலுவான செய்தியை சொல்வதாக அமைந்துள்ளது - மத்திய கிழக்கில் நிலையான அமைதியை அடைவதற்கான ஒரே வழி இரு அரசு தீர்வு இஸ்ரேல் அரசுடன் ஒரு பாலஸ்தீன அரசு. பிரான்ஸ் போன்ற ஒரு பெரிய ஐரோப்பிய சக்தி இந்த நடவடிக்கையை எடுக்கும்போது அது பாலஸ்தீனியர்களுக்கு சுயநிர்ணய உரிமைக்கான உரிமை உள்ளதை வெளிப்படுத்துகின்றது. மேலும் சிலருக்கு அவர்களின் பல தசாப்த கால ஆசை ஒரு நாள் வெற்றிபெறும் என்ற மங்கிப்போகும் நம்பிக்கையை அதிகரிக்கிறது. ஆனால் தற்போதைய இஸ்ரேலிய அரசாங்கம் திட்டவட்டமானது - பாலஸ்தீன அரசு என்பது அதனிடம் இல்லை. மே 2024 இல் ஸ்பெயின் நோர்வே மற்றும் அயர்லாந்தைத் தொடர்ந்து பிரான்சின் நடவடிக்கை இஸ்ரேலின் எதிர்ப்பை கடினமாக்கியுள்ளது மற்றும் எதிர்கால பாலஸ்தீன அரசின் நிலமான ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையை இணைப்பதற்கான அச்சுறுத்தல்களை அதிகரித்துள்ளது. அதனால்தான் பிரிட்டனின் பிரதமர் ஸ்டார்மர் "மிகப் பெரிய தாக்கத்தை" ஏற்படுத்தும் போது மட்டுமே இங்கிலாந்து அதைச் செய்யும் என்று முன்னர் கூறியிருந்தார். ஆனால் பாலஸ்தீனிய துன்பம் தீவிரமடைந்து தீவிர வலதுசாரி இஸ்ரேலிய அமைச்சர்கள் காசாவில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்ற வேண்டும் என்று அழைப்பு விடுக்கும்போது பிரிட்டன் மற்றும் பிற உலக சக்திகள் மீது - அது மிகவும் தாமதமாகிவிடும் முன் - ஒரு நிலைப்பாட்டை எடுக்க அழுத்தம் அதிகரிக்கிறது. காலம்தான் எல்லாமே என்று அடிக்கடி கூறப்படுகிறது. பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக பிரான்ஸ் பல மாதங்களாக சூசகமாக கூறி வந்தது. காசாவில் நிலவும் அவநம்பிக்கையான சூழ்நிலை குறித்து அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் அதைத் தடுக்க முடியாததால் உலக வல்லரசுகளிடையே ஆழ்ந்த விரக்திக்கு மத்தியில் இறுதியாக தனது நடவடிக்கையை பிரான்ஸ் எடுத்துள்ளது. செப்டம்பரில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபையில் இந்த நடவடிக்கையை முறையாக எடுக்கும்போது மற்ற உலக வல்லரசுகள் அதன் வழியைப் பின்பற்றும் என்று பிரான்ஸ் நம்புகிறது. நிச்சயமாக பெரும்பாலான நாடுகள் நீண்ட காலத்திற்கு முன்பே பாலஸ்தீன அரசை அங்கீகரித்தன; மே 2024 இல் ஸ்பெயின் அயர்லாந்து மற்றும் நோர்வேயும் அங்கீகரித்தன. பிரான்ஸ் ஐநா பாதுகாப்பு சபை மற்றும் ஜி7 அமைப்பின் முதல் உறுப்பினர். பிபிசி ரேடியோ 4 இன் தி வேர்ல்ட் டுநைட் நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் பாலஸ்தீன தூதர் ரியாத் மன்சூர் இதை ஒரு "பெரிய அறிவிப்பு" என்று கூறினார். இஸ்ரேல் அதை எப்படிப் பார்க்கிறது அங்கீகாரத்தை "பயங்கரவாதத்திற்கான வெகுமதி" என்று கண்டிக்கிறது. அமெரிக்காவிற்கும் இந்த நேரம் தவறானது மற்றும் "பொறுப்பற்றது". ஆனால் காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களின் எதிர்காலம் நாளுக்கு நாள் இருண்டதாகத் தோன்றுவதால் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் தங்கள் சில இராஜதந்திர ஆயுதங்களில் ஒன்றைப் பயன்படுத்த வேண்டும் என்ற அழுத்தம் இப்போது அதிகரித்து வருகிறது. https://www.virakesari.lk/article/220918
  7. கறுப்பு ஜூலை தமிழர் தேசத்தின் மீதான தாக்குதல் : 13 இராணுவத்தினர் கொல்லப்படாவிட்டாலும் அது இடம்பெற்றிருக்கும் : கொல்லப்பட்ட தமிழர்களின் பல உடல்களை பார்த்தேன் என்கிறார் சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா Published By: RAJEEBAN 23 JUL, 2025 | 12:44 PM சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா தமிழ் மக்களிற்கான நீதி அவர்களின் அரசியல் அபிலாஷைகளிற்காக தென்பகுதியிலிருந்து தொடர்ச்சியாக குரல்கொடுத்து வரும் ஒருவர். வடக்குகிழக்கில் தமிழ் மக்கள் தங்களது உரிமைக்காக போராடும் இடங்களில் எல்லாம் பார்க்ககூடிய தென்பகுதி முகம் அவர். கறுப்புஜூலை குறித்த அவரின் மனப்பதிவுகள். அவ்வேளை நான் சட்டபீட மாணவனாகயிருந்தேன், 24ம் திகதி நாங்கள் சட்டபீடத்தில் இருந்தவேளை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பெரும் புகைமண்டலம் எழுந்ததை பார்த்தோம். என்ன நடக்கின்றது என்பது எங்களிற்கு தெரியாது,தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. சந்திரஹாசனின் துணைவியார் அவ்வேளை எங்களின் சிரேஸ்ட விரிவுரையாளர்களில் ஒருவர். அவர் அச்சத்தினால் நடுங்கியது எனக்கு இன்னமும் நினைவில் இருக்கின்றது. நான் அவரிடம் சென்று என்ன பிரச்சினை என கேட்டேன், அதற்கு அவர் தமிழர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்படுகின்றன என தெரிவித்தார். அந்த நாட்களில் எங்களின் ஊடகங்களாக செய்தித்தாள்களும் வானொலிகளும் மாத்திரம் காணப்பட்டன, தொலைக்காட்சியின் ஆரம்ப நாட்கள். அன்று காலை முதல் நாள்( 23) 13 படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்ற செய்தியை வாசித்திருந்தோம். அதன் பின்னர் பௌத்தர்கள் கனத்தையில் கூடியது குறித்தும் சிங்கள காடையர்கள் தமிழர்களின் வீடுகளிற்கு தீ வைத்தது குறித்தும் கேள்விப்பட்டோம். எங்களை பல்கலைகழகத்திலிருந்து செல்லுமாறு கேட்டார்கள், பேருந்துகள் இல்லை, நான் எனது நண்பியுடன் காரில் எனது ஊரான வாதுவை நோக்கி பயணித்தேன். காரில் செல்லும் வழியில் நான் வெள்ளவத்தை தெகிவளை பகுதிகளில் ஏழு எட்டு உடல்களை பார்த்தேன். கடைகள் வீடுகள் எரிவதையும் உடல்களையும் பார்த்தேன் - நாங்கள் பயணித்த காரை அவர்கள் நிறுத்தினார்கள், யாராவது தமிழர்கள் இருக்கின்றார்களா என கேட்டார்கள் எங்களுடன் தமிழர்கள் எவரும் பயணிக்கவில்லை. இராணுவத்தினர் டிரக்குகளில் காணப்பட்டனர், ஆனால் அவர்கள் காடையர்களை தடுப்பதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. கொழும்பு நான்கிலிருந்து தெகிவளை வரை 100க்கும் வீடுகள் கடைகள் எரிவதை பார்த்தேன். ஐக்கியதேசிய கட்சி அமைச்சர் சிறில்மத்தியு இதன் பின்னணியில் இருந்தார். எனது நகரான வாதுவையில் தமிழர்கள் அதிகம் வசிக்கவில்லை, ஆனால் தமிழர் ஒருவரின் சுருட்டுக்கடையிருந்தது. வயதான தமிழ் தம்பதியினர் அந்த கடையை நடத்தினார்கள். சிறுவயதிலிருந்தே அவர்களை எனக்கு தெரியும், அப்பாவிகள் அன்பாக நட்புடன் பழகுபவர்கள். அவர் எப்போதும் சாரம்தான் கட்டியிருப்பார். பகல் 12மணியளவில் அவரது கடை சிறிதளவு திறந்திருந்தது, ஆனால் பகல் மூன்று மணியளவில் அந்த சுருட்டுக்கடையை எரித்துவிட்டார்கள் என்ற தகவல் எனக்கு கிடைத்தது, அந்த வயதான தமிழ் தம்பதியினர் அங்கிருந்து தப்பியோடி அருகிலிருந்த பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இது இனவெறியில்லை இனவெறி கலந்த சூறையாடல். அவ்வாறுதான் சம்பவங்கள் நடந்தன. அன்று மாலை ஜேஆர் ஜெயவர்த்தன உரையாற்றினார், ஊரடங்கை அறிவித்தார், மூன்று அரசியல் கட்சிகளை தடை செய்தார். 25ம் திகதி கொழும்பு வெலிக்கடை சிறையில் குட்டிமணி உட்பட தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டனர் என்பதை அறிந்தோம், அவர்களின் கண்கள் தோண்டப்பட்டன. ஐக்கியதேசிய ஒரு கட்சியாக கறுப்பு ஜூலையுடன் தொடர்புபட்டிருக்கவில்லை, ஆனால் அந்த கட்சியின் இனவாத அணியின் சிறில்மத்தியு கறுப்பு ஜூலைக்கு தலைமை வகித்தார். மிகவும் திட்டமிடப்பட்ட முறையிலேயே இது இடம்பெற்றது. வாக்காளர் பட்டியலை வைத்தே தமிழர்களை அவர்களின் சொத்துக்களை தாக்கினார்கள், அது இல்லாமல் எப்படி அவர்களால் தமிழர்களை இலக்குவைத்திருக்க முடியும். ஆகவே இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட விடயம், 13 இராணுவத்தினர் கொல்லப்படாவிட்டாலும் அவர்கள் இவ்வாறான ஒரு கலவரத்தை வன்முறையை முன்னெடுத்திருப்பார்கள், நான் கொழும்பு அன்டர்சன் தொடர்மாடியில் வசித்து வந்த எனது நண்பியொருவரை கொழும்பு பம்பலப்பிட்டியில் இருந்த அகதிமுகாமிற்கு கொண்டுசென்று அங்கு விட்டுவிட்டு வந்தேன். அவர் மிகுந்த அச்சத்துடன் காணப்பட்டார். அன்டசன் தொடர்மாடியிலிருந்த சிங்களவர்கள் அவருக்கு உதவினார்கள். அவ்வேளை வடக்கிற்கு தப்பிச்சென்ற தமிழர்கள் ஆயிரக்கணக்கில் பின்னர் வெளிநாடுகளிற்கு புலம்பெயர்ந்தார்கள். தமிழ் புலம்பெயர் சமூகம் என்பது அப்படித்தான் ஆரம்பமானது, 1958 கலவரத்தின் பின்னர் வெளிநாடுகளிற்கு தப்பிச்சென்றவர்களும் உள்ளனர். ஆனால் 1983ம் ஆண்டின் பின்னரே பெருமளவானவர்கள் வெளிநாடுகளிற்கு சென்றார்கள். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் வளர்ச்சியடைவதற்கு கறுப்பு ஜூலையே காரணமாக இருந்தது, பிரிந்து செல்வதை தவிர வேறுவழியில்லை என்ற நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டனர். இலங்கையின் வரலாற்றில் இதுவே மிகவும் இருண்ட பக்கம். ஆகவே இந்த நாளை நாங்கள் நினைவு கூருகின்றோம், இனிமேலும் இரத்தக்களறியில்லை. இனிமேலும் கறுப்பு ஜூலையில்லை என்ற கருபொருளில் கொழும்பில் நாங்கள் கறுப்பு ஜூலையை நினைவு கூரவுள்ளோம். கறுப்பு ஜூலை என்பது தமிழர் தேசத்தின் மீதான தாக்குதல், தனித்தனியாக தமிழர்கள் தாக்கப்பட்டாலும் இது தமிழர் தேசத்தின் மீதான தாக்குதல். நான் சிங்களவன் நானும் எனது குழுவினரும் அந்த நாட்களிற்காக எங்கள் கவலையை வேதனையை தெரிவித்துக்கொள்கின்றோம். எங்களை சேர்ந்தவர்களின் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலிற்காக வெட்கப்படுகின்றோம். https://www.virakesari.lk/article/220703
  8. தாய்லாந்து, கம்போடியா மோதலின் பின்னணி என்ன? போர் மூளும் ஆபத்தா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கம்போடியாவின் ஒடார் மீஞ்சே மாகாணத்தின் ஒரு தெருவில் ரஷ்ய தயாரிப்பான பிஎம்-21 ராக்கெட் லாஞ்சரை ஏற்றிச் செல்லும் ராணுவ வாகனம் கட்டுரை தகவல் ஃப்ளோரா ட்ரூரி & கேவின் பட்லர் பிபிசி நியூஸ் 38 நிமிடங்களுக்கு முன்னர் தாய்லாந்து, கம்போடியா இடையே நிலவும் தொடர் பதற்றம் வியாழக்கிழமையன்று (ஜூலை 24) எல்லைப் பகுதியில் கடுமையான மோதலாக வெடித்தது. அதன் விளைவாகக் குறைந்தபட்சம் 12 தாய்லாந்து நாட்டவர் கொல்லப்பட்டு இருப்பதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் எனவும் தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கம்போடியா தரப்பில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா, எத்தனை பேர் பலியாகியுள்ளனர் என்பது தெரியவில்லை. இந்த மோதல் தொடங்கியதற்குக் காரணம் எல்லையில் நடந்த துப்பாக்கிச் சூடு என்றும் இருதரப்பும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொள்கின்றன. கம்போடியா ஏவுகணைகளை ஏவியதாக தாய்லாந்து குற்றம் சாட்டுகிறது. கம்போடியாவின் ராணுவ நிலைகள் மீது தாய்லாந்து விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த மோதல் எப்படி ஏற்பட்டது? அது போராக உருவெடுக்கும் ஆபத்து உள்ளதா? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, எல்லையை ஒட்டிய பகுதியில் ஜூலையில் சண்டை தொடங்கியது பதற்றத்திற்கு காரணம் என்ன? இது சமீபத்தில் தொடங்கிய சச்சரவு இல்லை. தாய்லாந்து, கம்போடியா இடையிலான சர்ச்சை ஒரு நூற்றாண்டுக்கும் முன்பே தொடங்கியது. அதாவது, கம்போடியா பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து விடுதலை அடைந்தபோது, இரு நாடுகள் இடையே எல்லை வகுக்கக்கப்பட்டபோது, இந்த சச்சரவு தொடங்கியது. ஆனால், 2008ஆம் ஆண்டில்தான் இரு நாடுகளுக்கும் இடையிலான இந்தப் பிரச்னை அதிகாரபூர்வமாக தீவிரமடைந்தது. இரு நாடுகளுக்கு இடையிலான சர்ச்சைக்குரிய பகுதியில் 11ஆம் நூற்றாண்டு கோவில் ஒன்று அமைந்துள்ளது. அதை, யுனெஸ்கோ பாரம்பரிய தலமாக பதிவு செய்வதற்கு கம்போடியா முயன்றதே அதற்குக் காரணம். அதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த ஆண்டுகளில் அவ்வப்போது நடந்த மோதல்களில் இருதரப்பிலும் ராணுவ வீரர்கள், பொது மக்கள் எனப் பலர் கொல்லப்பட்டனர். கடந்த மே மாதம், மோதலில் ஒரு கம்போடிய வீரர் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. இந்தப் பதற்றம், இரு நாடுகளுக்கும் இடையே கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான நிலையை எட்டியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில், இரு நாடுகளுமே பரஸ்பரம் எல்லைக் கட்டுப்பாடுகளை விதித்து வந்தன. தாய்லாந்தில் இருந்து காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்ய கம்போடியா தடை விதித்தது. அங்கிருந்து பெறப்பட்டு வந்த மின்சாரம் மற்றும் இணைய சேவைகளையும் நிறுத்தியது. அண்மை வாரங்களில் இரு தரப்பு எல்லைகளிலும் ராணுவ நடமாட்டம் அதிகரித்துள்ளன. அண்மைத் தாக்குதல் பற்றி தாய்லாந்து கூறுவது என்ன? பட மூலாதாரம்,BBC/LULU LUO படக்குறிப்பு, ஜோய் ஃபாசுவன் தனது இரு பேரக் குழந்தைகளுடன் தாய்லாந்தின் சுரின் மாகாண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார் ஜூலை 24ஆம் தேதி என்ன நடந்தது என்பது பற்றி தாய்லாந்தும் கம்போடியாவும் வேறு வேறு விளக்கங்களை அளித்துள்ளன. வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை சுமார் 07:30 மணிக்கு எல்லையில் உள்ள தாய்லாந்து ராணுவ நிலைகளை உளவு பார்க்க கம்போடிய ராணுவம் டிரோன்களை அனுப்பியதாக தாய்லாந்தின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூறுகிறது. அதன் பின்னர், "ஏவுகணைகளால் ஏவப்படும் எறிகுண்டுகளை ஏந்திய கம்போடிய வீரர்கள் எல்லையில் குவியத் தொடங்கினர். தாய்லாந்து தரப்பில் இருந்த வீரர்கள் கூக்குரலிட்டுப் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை" என தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அதோடு, கம்போடிய வீரர்கள் காலை சுமார் 08:20 மணிக்கு தாக்குதலைத் தொடங்கியதால் தாய்லாந்து தரப்பினர் பதில் தாக்குதல் நடத்த வேண்டியிருந்ததாகவும் அவர் கூறினார். பிஎம்-21 ராக்கெட் லாஞ்சர்கள், பீரங்கிகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாய்லாந்து எல்லைப் பகுதியில் அமைந்திருந்த வீடுகள், மருத்துவமனை, பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பொது இடங்களையும் சேதப்படுத்தியதாக கம்போடியா மீது தாய்லாந்து குற்றம் சுமத்தியுள்ளது. தாய்லாந்தை குற்றம் சாட்டும் கம்போடியா ஆனால், தாய்லாந்து வீரர்கள்தான் காலை 06:30 மணிக்கு மோதலைத் தொடங்கியதாக கம்போடியா கூறுகிறது. அதாவது, முந்தைய ஒப்பந்தத்தை மீறிய தாய்லாந்து வீரர்கள், எல்லை அருகே இருக்கும் கெமர்-இந்து கோவில் வரை முன்னேறி வந்து முள்வேலி அமைத்ததாகவும் கம்போடியா தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. அதன் பின்னர் "தாய்லாந்து வீரர்கள் காலை 7:00 மணிக்குப் பிறகு ஒரு டிரோனை செலுத்தியதாகவும், சுமார் 08:30 மணிக்கு வானத்தை நோக்கி சுட்டதாகவும்" கம்போடியா தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாலி சோசியாட்டா தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES காலை 08:46 மணிக்கு, தாய்லாந்து படையினர் முன்னறிவிப்பின்றி கம்போடிய படைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக மாலி சோசியாட்டாவை மேற்கோள் காட்டி ப்னோம் பென் போஸ்ட் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. மேலும், "அதனால், தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான உரிமையைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை" என அவர் கூறியதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இவற்றோடு, தாய்லாந்து அதிகப்படியான படைகளைக் குவித்து, கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி, கம்போடிய பகுதியில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக சோசியாட்டா குற்றம் சாட்டினார். தாய்லாந்து, கம்போடியா இடையே போர் வெடிக்குமா? கம்போடியாவுடனான பிரச்னை "நுட்பமானது" என்றும், அதைக் கவனமாக, சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டுத் தீர்க்க வேண்டும் என்றும் தாய்லாந்தின் இடைக்கால பிரதமர் பும்தம் வெச்சயாச்சை கூறினார். இந்தப் பிரச்னையை அமைதியாக தீர்க்கவே கம்போடியா விரும்புவதாகவும், "ஆயுதப் படை ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆயுதப் படை மூலம் பதிலடி கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை" என்றும் அந்நாட்டுப் பிரதமர் ஹுன் மனெட் கூறினார். கடந்த காலங்களில் தீவிரமான துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்று இருந்தாலும் பதற்றம் விரைவிலேயே தணிக்கப்பட்டது. அதே பாதை மீண்டும் தேர்வு செய்யப்படும் என பிபிசி செய்தியாளர் ஜோனதன ஹெட் கருதுகிறார். அதேவேளையில், தற்போது இந்த சண்டையில் இருந்து நம்பிக்கையுடன் பின்வாங்கத் துணியும் தலைவர்கள் இருதரப்பிலும் இல்லை என்றும் அவர் எச்சரிக்கிறார். தாய்லாந்து மற்றும் கம்போடியாவுக்கு செல்வது பாதுகாப்பானதா? தற்போது வரை இந்த மோதல் குறிப்பிட்ட ஒரு பகுயில் மட்டுமே நடைபெறுகிறது. இருப்பினும், சமீபத்திய வாரங்களில் எல்லைப் பகுதிகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து, பயணிகளை இந்தப் பகுதியில் "குறிப்பாக பிரேஹ் விஹேர் கோவில், தா இக்வை கோவில், தா முயென் தோம் கோவில் போன்ற சுற்றுலாத் தலங்களில் கூடுதல் கவனம்" செலுத்துமாறு ஏற்கெனவே வலியுறுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் தாய்லாந்து எல்லையைத் தவிர்க்கும்படி கம்போடியாவில் இருக்கும் தனது குடிமக்களை சீனா வலியுறுத்தியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj4e4z94129o
  9. Published By: VISHNU 20 JUL, 2025 | 06:08 PM ஆர்.சேது­ராமன் இலங்­கையில் முத­லீடு செய்­வதில், ஜப்­பா­னிய நிறு­வ­னங்கள் உட்­பட அரச மற்றும் தனியார் நிறு­வ­னங்­களுக்கு மீள நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு, ஊழலை ஒழிப்­பதும் நல்­லாட்­சியும் அவ­சி­ய­மான முன்­நி­பந்­த­னை­களாக உள்­ளன என இலங்­கைக்­கான ஜப்­பா­னிய தூதுவர் அகியோ இசோ­மாட்டா அண்மையில் கூறி­யுள்ளார். வெளி­நாட்டு முத­லீ­டு­களை ஈர்ப்­ப­தற்கு இலங்கை தீவி­ர­மாக முயன்­று­வரும் நிலையில், ஜப்­பா­னிய தூதுவர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார். கொழும்பில் கடந்த 4 ஆம் திகதி நடை­பெற்ற 4 ஆவது ஜப்­பா­னிய –இலங்கை பொரு­ளா­தார ஒத்­து­ழைப்பு கொள்கை உரை­யா­ட­லின்­போது அவர் இதனை கூறினார். ஜப்பான் வெளி­யு­றவு பிரதி உதவி அமைச்­சரும், ஜப்­பா­னிய சர்­வ­தேச ஒத்­து­ழைப்பு பணி­ய­கத்தின் இஷி­சுகி ஹிடியோ, இலங்கை நிதி­ய­மைச்சின் புதிய செய­லாளர் கலா­நிதி ஹர்­ஷன சூரி­யப்­பெ­ரும ஆகியோர் தலை­மையில் இக்­க­லந்­து­ரை­யாடல் நடை­பெற்­றி­ருந்­தது. இலங்­கையில் ஊழலால் பாதிக்­கப்­பட்ட ஜப்பான் இலங்­கையின் அபி­வி­ருத்­திக்கு நீண்­ட ­கா­ல­மாக கைகொ­டுத்­து­வரும் ஜப்பான், இலங்­கையில் ஊழல்­களை ஒழிக்க வேண்­டி­யதை தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­து­கி­றது. ஊழல் ஒழிப்­புக்­காக பல்­வேறு உத­வி­க­ளையும் இலங்­கைக்கு ஜப்பான் வழங்­கி­வ­ரு­கி­றது. கடந்த மே மாதம் கொழும்பில் பாத்ஃ­பைண்டர் அறக்­கட்­டளை ஏற்­பாடு செய்த கலந்­து­ரை­யாடல் நிகழ்­வொன்றில் பங்­கு­பற்­றிய ஜப்­பா­னிய தூதுவர் அகியோ இசோ­மாட்டா, இலங்­கையில் நில­விய ஊழல்­களால் பாதிக்­கப்­பட்ட ஒரு நாடாக ஜப்பான் உள்­ள­தாக குமு­றி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. இலங்­கையில் முத­லீ­டு­களைச் செய்­வதில் ஜப்­பா­னிய நிறு­வ­னங்கள் சிர­மங்­களை எதிர்­நோக்­கு­வ­தா­கவும் கடந்த காலங்­களில் செய்­திகள் வெளி­யா­கி­யி­ருந்­தன. அகியோ இசோ­மாட்­டா­வுக்கு முன்னர், இலங்­கைக்­கான ஜப்­பா­னிய தூது­வ­ராக பதவி வகித்த மிஸு­கோஷி ஹிடேக்­கியும் இலங்­கையில் ஊழல்­களால் ஏற்­படும் பாதிப்­புகள் குறித்து பல தட­வைகள் பகி­ரங்­க­மாக கருத்து தெரி­வித்­தி­ருந்தார். கோட்­டா­பய ராஜ­பக் ஷ காலத்தில், ஜப்­பா­னிய நிறு­வ­ன­மொன்­றிடம் அமைச்சர் ஒருவர் இலஞ்சம் கோரினார் என்ற குற்­றச்­சாட்டு பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. அதே­வேளை, சர்­வ­தேச அபி­வி­ருத்­திக்­கான ஜப்­பா­னிய முக­வ­ரத்தின் (ஜெய்க்கா) உத­வி­யுடன் மேற்­கொள்ளத் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்த 1.5 பில்­லியன் டொலர் பெறு­ம­தி­யான, இலகு ரயில் திட்­டத்தை கோட்­டா­பய ராஜ­பக் ஷ அர­சாங்கம் 2021 ஆம் ஆண்டில் ஒரு ­த­லை­பட்­ச­மாக இரத்து செய்­தமை பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. இது குறித்து ஜப்பான் கடும் அதி­ருப்தி கொண்­டி­ருந்­தது. அதன்பின் இலங்­கையின் பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தியில் ஜப்­பா­னிய உத­வி­யு­ட­னான அபி­வி­ருத்தித் திட்­டங்கள் முடங்­கி­யி­ருந்­தன. 2023 மே மாதம் அப்­போ­தைய ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க டோக்­கி­யோ­வுக்கு விஜயம் செய்து ஜப்­பா­னிய பிர­தமர் பூமியோ கிஷி­டாவை சந்­தித்­த­போது, மேற்­படி திட்டம் இரத்துச் செய்­யப்­பட்­ட­மைக்­காக இலங்கை சார்பில் மன்­னிப்பு கோரினார். கடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு 2 மாதங்­க­ளுக்கு முன்னர், இலங்­கையில் 11 அபி­வி­ருத்தித் திட்­டப்­ப­ணி­களை மீண்டும் ஆரம்­பிக்­கப்­போ­வ­தாக ஜப்பான் அறி­வித்­தது. அநு­ர­கு­மார திசா­நா­யக்க ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­ற­வுடன், இந்த அபி­வி­ருத்தித் திட்­டங்­கள் மீள ஆரம்­பிக்­கப்­படும் என்­பதை அப்­போ­தைய ஜப்­பா­னிய தூதுவர் மிஸு­கோஷி ஹிடேக்கி மீள உறு­திப்­ப­டுத்­தினார். கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர் ஒக்­டோபர் முற்­ப­கு­தியில் 'ஜப்­பா­னிய அபி­வி­ருத்தி வர­லாறும் இலங்­கைக்­கான செய்­தி­களும்' என்ற தலைப்பில் சொற்­பொ­ழி­வு­வொன்றை நிகழ்த்­திய அப்­போ­தைய தூதுவர் மிஸு­கோஷி ஹிடேக்கி, இலங்­கையின் ஊழல்­களை பற்­றிய தனது அவ­தா­னிப்பை வெளி­யிட்டார். 'இலங்­கைக்கு நான் வந்­தது முதல் அவ­தா­னித்­ததில் இருந்து, இலங்­கையில் ஊழல் தொடர்பில் இரு விட­யங்­களை சுட்­டிக்­காட்ட விரும்­பு­கிறேன். முத­லா­வ­தாக, ஊழ­லா­னது தலை­வர்கள் மீது நாட்டு மக்களுக்கு அவ­நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு ஒரு கார­ண­மா­கி­றது. தலை­வர்கள் ஊழலில் ஈடு­ப­டும்­போது மக்கள் நாட்டின் பொறுப்­புள்ள குடி­மக்­க­ளாக இருப்­பதை ஊக்­கப்­ப­டுத்­து­வதை அது தடுக்­கி­றது. இது வரி செலுத்­து­வோ­ருக்கு வரி ஏய்ப்பு செய்ய வச­தி­யான சாக்­குப்­போக்­கு­களை வழங்­கு­கி­றது. இரண்­டா­வ­தாக, இலங்கை வெளி­நாட்டு முத­லீ­டு­களை ஈர்க்க விரும்­பும்­போது இது மிகவும் தீங்கு விளை­விக்­கி­றது' என அவர் குறிப்­பிட்­டி­ருந்தார். 'ஜப்­பா­னிய நிறு­வ­னங்கள் அவற்றின் கடப்­பா­டு­களை இறுக்­க­மாக பின்­பற்றி வரு­கின்­றன அதனால் அவை இலஞ்சம் வழங்­க­மாட்டா. இலங்­கையில் ஊழல் கலா­சாரம் தொடர்ந்தால், இங்கு ஜப்­பா­னிய முத­லீ­டுகள் வரு­வ­தற்­கான சாத்­தியம் இல்லை' எனவும் அவர் எச்­ச­ரித்­தி­ருந்தார். ஊழலை ஒழிப்­ப­தற்கு உறு­தி ­பூண்­டுள்ள ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்­கவை நாட்டின் புதிய தலை­வ­ராக இலங்கை மக்கள் தெரி­வு­செய்­துள்ள நிலையில், நீண்­ட­ கா­ல­மாக நாட்டை சீர்­கு­லைத்துள்ள ஊழலை ஒழிப்­ப­தற்கு அரிய வாய்ப்பு உரு­வா­கி­யுள்­ளது எனவும் முன்னாள் தூதுவர் ஹிட்­டேக்கி அப்­போது கூறி­யி­ருந்தார். இந்­நி­லையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்­கைக்­கான ஜப்­பா­னிய தூது­வ­ராக பத­வி­யேற்ற அக்­கியோ இசோ­மாட்­டாவும், இலங்­கையில் ஊழல்­களின் பாதிப்­புகள் குறித்து கார­சா­ர­மான கருத்­து­களை வெளிப்­ப­டுத்தி வரு­கிறார். ஊழல் ஒழிப்­புக்­காக 2.5 மில்­லியன் டொலர் உதவி ஊழலை ஒழிப்­ப­தற்கு உதவும் ஜப்­பானின் திட்­டங்­களின் வரி­சையில், இலங்­கையில் ஊழல் எதிர்ப்பு பொறி­மு­றை­களை வலுப்­ப­டுத்­தவும், பொது நிர்­வா­கத்தில் வெளிப்­படைத் தன்மை மற்றும் பொறுப்­புக்­கூ­றலை ஊக்­கு­விக்­கவும் மூன்றாண்டுத் திட்­டத்­துக்கு 2.5 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் மானி­யத்தை வழங்கும் ஒப்­பந்­த­மொன்று கொழும்பில் கடந்த முதலாம் திகதி கையெ­ழுத்­தி­டப்­பட்­டது. ஐக்­கிய நாடுகள் அபி­விருத்தித் திட்­டத்தின் (யூ.என்.டி.பி) உத­வி­யுடன் செயல்­ப­டுத்­தப்­படும் இத்­திட்­டத்­துக்கு ஜப்பான் நிதி அளிக்­கி­றது. இலங்­கைக்­கான ஜப்­பா­னிய தூதுவர் அகியோ இசோ­மாட்டா மற்றும் யூ.என்.டி.பி.யின் இலங்­கைக்­கான வதி­விட பிர­தி­நிதி அசுசா குபோடா ஆகியோர் இந்த ஒப்­பந்­தத்தில் கையெ­ழுத்­திட்­டனர். நீதி அமைச்சர் ஹர்ஷா நாண­யக்­கார, சட்ட மா அதிபர் பாரிந்த ரண­சிங்க, இலஞ்ச ஊழல்கள் விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் ஆணை­யா­ளர்களான கே.பி. ராஜ­பக் ஷ, சேதிய குண­சே­கர, ஜனா­தி­பதி செய­லாளர் கலா­நிதி நந்­திக்க கும­நா­யக்க ஆகி­யோரும் இந்­நி­கழ்வில் கலந்­து­கொண்­டி­ருந்­தனர். இத் திட்டமானது ஊழலை எதிர்த்துப் போரா­டு­வ­தற்கு நிறு­வன திறனை மேம்­ப­டுத்­துதல், பொது நிர்­வாகம், முத­லீ­டு­களில் வெளிப்­படைத் தன்­மையை மேம்­ப­டுத்­துதல், திற­மை­யான வழக்கு விசா­ரணை மற்றும் பொது பொறுப்­புக்­கூ­றலை உறு­திப்­ப­டுத்­துதல் ஆகி­ய­வற்றை நோக்­க­மாகக் கொண்­டுள்­ளது என இலங்­கைக்­கான ஜப்­பா­னிய தூத­ரகம் தெரி­வித்­துள்­ளது. அத்­துடன், இத்­திட்­ட­ம், நிறு­வ­னங்­களில் ஊழலைத் தடுப்­ப­தற்கு ஆளுகை பொறி­மு­றை­களை வலுப்­ப­டுத்­துதல், விசா­ரணை நடை­மு­றை­களை மேம்­ப­டுத்­துதல், பங்­கு­தா­ரர்­க­ளி­டையே ஒருங்­கி­ணைப்பை மேம்­ப­டுத்­துதல், குடி­மக்­களை மேம்­ப­டுத்­துதல், மற்றும் ஊழல் வழக்­குகள் தொடர்­பான சட்ட நட­வ­டிக்­கை­களின் தரத்தை வலுப்­ப­டுத்­துதல் ஆகி­ய­வற்றில் கவனம் செலுத்தும். இது குறிப்­பாக இளை­ஞர்கள், ஊடக வல்­லு­நர்கள் மற்றும் குழந்­தைகள் மத்­தியில் ஊழல் எதிர்ப்பு முயற்­சி­களில் குடி­மக்­களின் ஈடு­பாட்டை ஊக்­கு­விக்­கவும் முயல்­கி­றது எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­கழ்வில் உரை­யாற்­றிய ஐ.நா. அபி­வி­ருத்தித் திட்­டத்தின் (யூ.என்.டி.பி.) வதி­விடப் பிர­தி­நிதி அசுசா குபோடா, ‘‘இலங்கை ஊழலை எதிர்­கொள்ள தீர்க்­க­மான நட­வ­டிக்­கை­களை எடுத்து வரும் ­நி­லையில், ஜப்பனிய அரசு, மக்­களின் தாரா­ள­மான நிதி­யு­த­வி­யுடன் இலஞ்சம் மற்றும் ஊழல்கள் தொடர்­பான விசா­ரணை ஆணைக்­கு­ழு­வு­ட­னான இந்த கூட்­டாண்மை, நல்­லாட்­சியை நோக்­கிய எமது கூட்டு பய­ணத்தில் ஒரு முக்­கிய தரு­ணத்தை குறிக்­கி­றது. இந்தத் திட்­டத்தின் தொடக்கம், நிறு­வ­னங்­களை வலுப்­ப­டுத்­து­வது மட்­டு­மல்ல, இது பொது நம்­பிக்­கையை மீட்­டெ­டுப்­பது, குடி­மக்­களை மேம்­ப­டுத்­து­வது, அனை­வ­ருக்கும் சம­மான வாய்ப்பை உரு­வாக்­கு­வது தொடர்­பா­னது. 2025 – 2029 காலத்­துக்­கான இலங்­கையின் தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்­டத்தை செயல்­ப­டுத்­து­வதன் மூலம், நிலை­யான வளர்ச்­சிக்கு அமைப்பு ரீதி­யான தடை­களை அகற்றி, வெளிப்­படைத் தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் கலாசாரத்தை வளர்க்கும் ஒரு சமூக அளவிலான அணுகுமுறையை ஆதரிப்பதை நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம். ஊழல் எதிர்ப்பு முயற்சிகள் தொடர்ந்து நீடிப்பது மட்டுமல்லாமல், மாற்றத்தை ஏற்படுத்துவதையும் உறுதி செய்ய, தேசிய பங்காளிகளுடன் இணைந்து யூ.என்.டி.பி. தொடர்ந்து பணியாற்ற உறுதிபூண்டுள்ளது’’ எனவும் குறிப்பிட்டிருந்தார். கடந்த காலங்களிலும், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு ஊழல் ஒழிப்பு தொடர்பான பயிற்சிகள், செயலமர்வுகளை நடத்துவதற்கும் ஜப்பான் உதவியிருந்தது. பாலியல் இலஞ்சம் தொடர்பாகவும் இலங்கையின் மருத்துவ, சட்டத்துறையினருக்கு விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்தவும் ஜப்பானின் ஜெய்க்கா நிறுவனம் உதவியளித்திருந்தது. பல நாடுகள், அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இலங்கைக்கு உதவ முன்வந்த நிலையில், இலங்கையில் ஊழல்களை வேரறுக்க உதவுதற்கும் ஜப்பான் ஆர்வம் செலுத்துகின்றது. https://www.virakesari.lk/article/220488
  10. அருணாச்சலம் பெயர் சர்ச்சை: திருவண்ணாமலை கோவில் கல்வெட்டுகள் கூறும் வரலாற்று உண்மை கட்டுரை தகவல் மாயகிருஷ்ணன் கண்ணன் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் திருவண்ணாமலையை அருணாச்சலம் என்ற பெயரில் குறிப்பிட்டது அண்மையில் சலசலப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக ஆந்திராவுக்கு இயக்கப்பட்ட அரசுப்பேருந்துகளில் அருணாச்சலம் என்று பெயர்ப்பலகை வைக்கப்பட்டிருந்தது சமூக ஊடகங்களில் விவாதங்களை எழுப்பியது. இதற்கான எதிர்வினையைத் தொடர்ந்து அரசு உத்தரவுப்படி, பேருந்துகளில் மீண்டும் திருவண்ணாமலை என்ற பெயரே பயன்படுத்தப்படுகிறது. அரசுப் பேருந்துகளில் திருவண்ணாமலையை அருணாச்சலம் என்ற பெயரில் குறிப்பிட்டது ஏன்? அதன் வரலாற்றுப் பின்னணி என்ன? சர்ச்சையின் பின்னணி என்ன? தமிழ்நாட்டில் அதிக பக்தர்கள் வருகை தரும் ஆன்மீகத் தலங்களில் திருவண்ணாமலையும் ஒன்று. ஆண்டுதோறும் நடக்கும் கார்த்திகை தீபத் திருவிழா, மாதந்தோறும் நடக்கும் பௌர்ணமி கிரிவலம் ஆகிய நிகழ்வுகளுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக, தெலுங்கு பேசும் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் திருவண்ணாமலை வருகின்றனர். கடைகள் உள்ளிட்ட வணிக வளாகங்களில் கடந்த சில மாதங்களாக தெலுங்கு மொழியில் அறிவிப்புகள் எழுதப்படும் அளவுக்கு அந்த மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, சில அரசுப் பேருந்துகளின் பெயர்ப் பலகையிலும் திருவண்ணாமலை என்பதற்குப் பதிலாக அருணாச்சலம் எனக் குறிப்பிடப்பட்டது. விழுப்புரம் பணிமனையில் இருந்து திருவண்ணாமலை வழியாக ஆந்திர மாநிலத்திற்கு இயக்கப்பட்ட சில பேருந்துகளில் அருணாச்சலம் என்று பெயர்ப் பலகைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையானது. சமூக ஊடகங்களிலும் பேசு பொருளாக இது மாறவே, பலரும் தங்களது விமர்சனங்களை பதிவு செய்தனர். 'ஊர் பெயரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை' பல நூறு ஆண்டுகளாக வழக்கத்தில் இருக்கும் திருவண்ணாமலையை வேறு பெயரில் குறிப்பிட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஆதங்கத்துடன் பேசத் தொடங்கினார் திருவண்ணாமலையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராமதாஸ். "கடந்த ஒரு வருட காலமாகவே கோயில் உள்ளேயும் வெளியேயும் மிகப்பெரிய மாற்றம் தெரிகிறது. அதைத் தாண்டி பேருந்துகளிலும் பெயரை மாற்றி அருணாச்சலம் என்று எழுதினார்கள். இதற்கு எதிராக அப்போதிருந்தே நாங்கள் கண்டன குரல் எழுப்பி வருகின்றோம்," என்றார் அவர். கடந்த ஒரு வருடமாக தான் அருணாச்சலம் என்ற வார்த்தை அதிகமாக பயன்பாட்டில் உள்ளது என்று கூறும் ராமதாஸ், தனக்கு நினைவு தெரிந்து இதற்கு முன்பெல்லாம் திருவண்ணாமலை அவ்வாறாக அழைக்கப்பட்டது இல்லை என்றார். "கோவிலில் உள்ள பிரதான கடவுளான அருணாச்சலேஸ்வரர் பெயரால் அருணாச்சலம் என்று எங்கள் ஊர் அழைக்கப்படுகிறது என்றாலும், வணிக ரீதியாக திட்டமிட்டு தமிழ்நாட்டுக்குள் இயக்கப்படும் பேருந்துகளில் அருணாச்சலம் என்று எழுதியது தவறு," என்றார் திருவண்ணாமலை பகுதியில் வசிக்கும் ஆனந்தன் அதே வேளையில், வெளிமாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகளில் அந்த ஊர் மக்களுக்கு புரியும் வகையில் அருணாச்சலம் என்று எழுதுவதில் தவறேதும் இல்லை என்று தன்னுடைய கருத்தை முன்வைத்தார் ஆனந்தன். கோவில் கல்வெட்டுகள் கூறும் வரலாற்று உண்மை திருவண்ணாமலை சர்ச்சை குறித்து தொல்பொருள் ஆய்வாளரான குடவாயில் பாலசுப்பிரமணியனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். அவர் கூறுகையில், "திருவண்ணாமலை கோவிலுக்கு உள்ளே கி.பி. 9-ஆம் நூற்றாண்டு ஆதித்த சோழன் கால கல்வெட்டில், அண்ணாமலை உடைய நாயனார் என பொறிக்கப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளுக்குப் பிந்தைய கல்வெல்ட்டில் அதாவது 18-ஆம் நூற்றாண்டில் நாயக்கர் காலகட்டத்தில் அருணாச்சலம் என்ற பெயர் தெலுங்கு, வடமொழி கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது" என்றார். முகமது பின் துக்ளக்: மக்களை கொடூரமாக மிரட்டி டெல்லியை மொத்தமாக காலி செய்ய வைத்தது ஏன்? கன்வார் யாத்திரை: உ.பி.யில் முஸ்லிம் உணவகங்கள், ஊழியர்களின் நிலை என்ன? பிபிசி கள ஆய்வு ஔரங்கசீப் பற்றி எட்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் என்சிஇஆர்டி செய்த மாற்றங்களால் சர்ச்சை அரியலூர் அருகே கோவிலில் பட்டியல் சாதியினருக்கு முட்டுக்கட்டை போடும் 'ஏழு வகையறா' யார்? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ்நாடு அரசு இதையடுத்து, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அரசுப் பேருந்துகளின் பெயர்ப் பலகையில் திருவண்ணாமலை என்றே குறிப்பிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி பகுதி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கண்காணிப்பாளர் சிவசக்தி பிபிசி தமிழிடம் தொலைபேசியில் பேசியபோது, "இப்பொழுது எந்த பிரச்னையும் இல்லை. திருவண்ணாமலை என பேருந்துகளில் மாற்றி எழுதப்பட்டு விட்டது" என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwyg8l17333o
  11. Published By: DIGITAL DESK 3 25 JUL, 2025 | 01:36 PM இந்தியாவின், ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டம் பொப்லொடி பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (25) காலைபாடசாலை ஒன்றில் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் பாடசாலை வகுப்பறைகளில் இருந்த மாணவ-மாணவியர், ஆசிரியர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்த கட்டிட விபத்தில் 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 28 மாணவ, மாணவியர் அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவியரில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாடசாலை கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். https://www.virakesari.lk/article/220911
  12. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 400 மில்லியன் ரூபா மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் 52 வயது கனடா பிரஜை ஒருவர் இன்று (25) காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேகநபர், கனடாவின் ஒன்ராறியோவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர் கனடாவிலிருந்து கட்டாரின் தோஹா வழியாக கட்டுநாயக்கவிற்கு வந்திருந்தார். சந்தேகநபரின் பயணப் பொதிகளை சோதனையிட்டபோது, அதில் 12 கிலோ 196 கிராம் ஹஷீஷ் மற்றும் 5 கிலோ 298 கிராம் கொக்கேய்ன் ஆகிய போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மேற்கொண்டு வருகிறது. https://adaderanatamil.lk/news/cmdi5df1o01m2qp4kmm93cckb
  13. வவுனியா வடக்கு, கரப்புக்குத்தி பகுதியில் இரண்டு யானைகள் கிணற்றில் வீழ்ந்த நிலையில் ஒரு யானை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன் மற்றைய யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற விவசாய கிணறு ஒன்றில் யானைகள் தவறி வீழ்ந்துள்ளதாக அந்த பகுதியை சேர்ந்த கிராம அலுவலருக்கு இன்று (25) காலை தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கிராம அலுவலர், வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும், பொலிசாருக்கும் உடனடியாக தெரியப்படுத்தியிருந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற வனஜீவராசிகள் திணைக்களத்தினர் பெரும் சிரமத்திற்கு மத்தியில் ஒரு யானையினை மீட்டுள்ளனர். மற்றைய யானை நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அதன் சடலம் மீட்கப்பட்டது. குறித்த இரு யானைகளும் ஒன்றன் பின் ஒன்றாக கிணற்றுக்கள் வீழ்ந்தமையால் ஒரு யானை சேற்றில் புதையுண்டு உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக கனகராயன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். -வவுனியா தீபன்- https://adaderanatamil.lk/news/cmdim8yrk01muqp4kpwp2wnbv
  14. வடகிழக்கில் நாளை இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி போராட்டம் - கொழும்பில் ஐநா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் 25 JUL, 2025 | 01:23 PM நீண்டகாலமாக தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்டவகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேசநீதி கோரிய போராட்டமானது வடக்குகிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்குகிழக்கின் 8 மாவட்டங்களிலும் எதிர்வரும் 26ம் திகதி சனிக்கிழமை காலை பத்து மணிக்கு நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மட்டக்களப்பு காந்தி பூங்கா, அம்பாறை திருக்கோயில், திருகோணமலை சிவன் கோயிலடி , முல்லைத்தீவில் மாவட்ட செயலகம், கிளிநொச்சி கந்தசாமி கோயில், மன்னார் நகரப்பகுதி வவுனியா புதிய பேருந்து நிலையம் யாழ்ப்பாணம் செம்மணியிலும் நடைபெறவுள்ளது. உண்மைக்கும் நீதிக்குமான இந்த போராட்டத்தில் தமிழ்தேசிய பரப்பில் பயணிக்கும் அனைவரும் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவிக்கவேண்டும் என வடக்குகிழக்கு சமூக இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதேவேளை சர்வதேச விசாரணை பொறிமுறையை " கோரி நாளை இலங்கையின் வடக்கு - கிழக்கு எங்கும் இடம்பெறவிருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவாக 'மான்புமிகு மலையக மக்கள் சிவில் கூட்டிணைவு' கொழும்பு ஐ.நா. அலுவலகம் முன்னால் நாளை காலை 10 மணிக்கு போாராட்டம். https://www.virakesari.lk/article/220909
  15. தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி உள்ளிட்டோர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வெலிக்கடை படுகொலை சம்பவம் தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் என்று ரெலோவின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். ”வெலிக்கடை சிறைச்சாலையில் கண்கள் பிடுங்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டே தோழர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அவர்கள் எங்கே புதைக்கப்பட்டார்கள் என்பதை அறியமுடியாமல் உள்ளது. எனவே, கடந்தகால கொலைகள் பற்றி விசாரிக்கும் இந்த அரசாங்கம், வெலிக்கடை படுகொலை பற்றியும் விசாரிக்க வேண்டும். ஜே.ஆர். ஜயவர்தன ஆட்சிக்காலத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றது.” – எனவும் செல்வம் எம்.பி. குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/319329
  16. யாழ் இணையமே ஒரு எம்.ஆர்.ஐ தானே ஐயா! உள்ள இழுத்தால் லேசில விடாதே! உயிராபத்தில்லை என்பது தான் ஒரே ஆறுதல்!!
  17. கள் போதைப் பொருளா அல்லது உணவுப்பொருளா? குழந்தைகளும் அதை குடிக்கலாமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழகத்தில் கள்ளுக்கடைகளைத் திறக்க வேண்டுமென்ற கோரிக்கை அவ்வப்போது எழுப்பப்பட்டு வரும் நிலையில், தெலங்கானா மாநிலத்தில் கள் குடித்து 12 பேர் வரை அண்மையில் உயிரிழந்துள்ளனர். கள்ளில் கலப்படம் செய்ததே இதற்குக் காரணமென்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதி வழங்க நாம் தமிழர் கட்சியின் சீமான் வலியுறுத்தியது பேசுபொருளானது. சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பனை மரமேறி போராட்டம் நடத்தினார். மறுபுறம் கள் இறக்க புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் கள்ளுக்கடைகளைத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 'தமிழ்நாடு கள் இயக்கம்' நீண்ட காலமாக குரல் எழுப்பி வருகிறது. அரசியல்ரீதியாக இந்த கோரிக்கைக்கு ஆதரவும் எதிர்ப்பும் வலுத்து வரும் நிலையில், கள் மீண்டும் கவனம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் கள்ளை அனுமதிக்கக்கோரி போராடுபவர்கள் கூறுவதைப் போல, கள் போதையற்ற உணவுப் பொருளா? கள் உணவுப்பொருள் என்ற வாதம் சரியா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிந்தெடிக் ஆல்கஹால் ஏற்படுத்தும் எல்லாவித தீமைகளையும் கள்ளும் ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். கள்ளை போதைப்பொருள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும், உணவுப்பட்டியலில் சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கைகள் குறித்து சமூக ஊடகங்களிலும் விவாதங்கள் வலுத்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில், கள் குடித்ததில் 12 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இன்னும் சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் கடைகளில் விற்கப்பட்ட கள்ளில் அல்பிரஸோலம் மற்றும் டயஸெபம் (alprazolam and diazepam) கலந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெலங்கானா மாநில கலால் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தெலுங்கு மற்றும் ஆங்கில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கள்ளில் கலப்படம் செய்யப்பட்டதால் தான் உயிருக்கு ஆபத்தாக மாறியதாக கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் வாதிடுகின்றனர். ஆனால் கள் உண்பதில் சில நன்மைகள் இருந்தாலும், சிந்தெடிக் ஆல்கஹால் ஏற்படுத்தும் எல்லாவித தீமைகளையும் கள்ளும் ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். கள்ளைக் குடிப்பதால் உடலுக்கு எந்தவிதமான விளைவு ஏற்படும், குழந்தைகளுக்குக் கொடுக்கும் அளவுக்கு அது ஆரோக்கியமான பானமா என்பது குறித்து கோவையைச் சேர்ந்த மூத்த உணவியல் நிபுணர் வந்தனாவிடம் பிபிசி தமிழ் பேசியது. படக்குறிப்பு, கள்ளில் இயற்கையாக உருவாகும் ஆல்கஹால், ஒரு குறிப்பிட்ட நேரம் வரை 4 – 5 சதவீதமாக இருக்கும், அந்த நேரத்தைத் தாண்டினால் அதன் தன்மை அதிகமாகும் என்கிறார் உணவியலாளர் வந்தனா. கள் உண்மையிலேயே உணவுப் பொருள் என்ற கூற்றை மருத்துவ உலகம் எப்படிப் பார்க்கிறது? இந்த கேள்விக்கு பதிலளித்த மருத்துவர் வந்தனா, பனை மற்றும் தென்னை மரங்களின் குருத்துகளிலிருந்து இயற்கையாகச் சுரக்கும் திரவம் நொதித்தல் (fermentation) நிலையை அடைவதற்கு முன் பதநீர் மற்றும் நீரா போன்ற பானங்களாக எடுக்கப்படுகிறது. அந்த நிலையில் ஃப்ரெஷ் ஆக எடுக்கப்படும் இந்த இயற்கை பானங்களில் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், வைட்டமின் சி, பொட்டாஷியம், கால்சியம், மக்னீசியம் போன்ற தாதுக்கள் (Minerals) இருக்கின்றன, என்றார். ''இவற்றைக் குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து நன்றாயிருக்கும். நிறைய ஆன்டிஆக்சிடென்ட்ஸ் கிடைக்கும். இயற்கையாகவே உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் தன்மையும் இந்த பானங்களுக்கு உண்டு. அதே நேரத்தில் இந்த பானங்களில் அதிகளவு கார்போஹைட்ரேட் இருப்பதால் சர்க்கரை அளவை (Glucose and fructose) அதிகரித்து விடும். நீரிழிவு பாதிப்புள்ளவர்கள் குடித்தால் சட்டென்று சர்க்கரை அளவு எகிறிவிடும்.'' என்கிறார் அவர். பதநீர், நீரா போன்றவை விரைவில் கெட்டுப்போகும் உணவுப்பொருட்கள் என்பதால், உடனே பதப்படுத்தாவிடில் சீக்கிரமே பாக்டீரியா கலப்புள்ள உணவாகிவிடும் என்று கூறும் உணவியலாளர் வந்தனா, "அதனால் வயிறு உப்புசம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்," என்கிறார். தொடர்ந்து இந்த இயற்கை பானத்தை நொதிக்கச் செய்வதன் மூலம் கிடைக்கும் பொருள்தான் கள் எனக்கூறும் அவர், "அதில் உடலுக்கு பயனளிக்கும் நல்ல நுண்ணுயிரிகளும் (Microbiota) கொஞ்சம் கிடைக்கும்," என்கிறார். "கள்ளில் இயற்கையாக உருவாகும் ஆல்கஹால், ஒரு குறிப்பிட்ட நேரம் வரை 4 – 5 சதவீதமாக இருக்கும். அந்த நேரத்தைத் தாண்டினால் அதன் தன்மை அதிகமாகும். இயற்கையாக உருவானாலும், ஆல்கஹாலை எந்த விதத்தில் எடுத்துக்கொண்டாலும், கல்லீரல் பாதிப்பு, மூளையில் மந்தத்தன்மை, ஒவ்வாமை இருப்பின் வாந்தி, பேதி போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும்,'' என்கிறார் வந்தனா. இயற்கை ஆல்கஹால் vs செயற்கை ஆல்கஹால் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆல்கஹாலை எந்த விதத்தில் எடுத்துக்கொண்டாலும் கல்லீரல் பாதிப்பு, மூளையில் மந்தத்தன்மை போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் இயற்கையாக உருவாகும் இத்தகைய ஆல்கஹாலும், செயற்கையாக உருவாக்கப்படும் ஆல்கஹாலும் உடல்ரீதியாக ஏற்படுத்தும் பாதிப்புகளில் ஏதாவது வித்தியாசங்கள் இருக்கிறதா? இந்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ''ஏறத்தாழ ஒரு பீரில் இருக்கும் ஆல்கஹால் அளவுதான் கள்ளிலும் இருக்கிறது. இயற்கையான நொதியால் உருவான ஆல்கஹால் என்ற வகையில் கள்ளில் ஒரு சில நல்ல நுண்ணுயிரிகளால் ப்ரோபயாடிக் உருவாகும் என்பதைத் தவிர, சிந்தெடிக் ஆல்கஹால் ஏற்படுத்தும் எல்லாவித உடல்ரீதியான பாதிப்பையும் இந்த ஆல்கஹாலும் ஏற்படுத்தும். இதில் இரண்டுக்கும் இடையே பெரிய வித்தியாசங்கள் இல்லை,'' என்கிறார் வந்தனா. கள்ளை குழந்தைகளுக்கும் கொடுக்கலாமா? கள் இயற்கையானது என்ற கூற்றை முன்வைக்கும் ஒரு தரப்பு அதை பறைசாற்ற குழந்தைகளுக்கும் கள்ளை சிறிய அளவில் கொடுக்கிறது. இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் உணவியலாளர் வந்தனா, ''எக்காரணத்தை முன்னிட்டும் குழந்தைக்கு கள் கொடுப்பது நல்லதல்ல. உலக சுகாதார நிறுவனம் (WHO), உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (Food and Drug Administration–FDA) போன்றவை, குழந்தைகளுக்கான மருந்துகளில் எவ்வளவு சதவீதம் ஆல்கஹாலை அனுமதிக்கலாம் என்பதை வரையறுத்துக் கூறியுள்ளன.'' என்கிறார். பச்சிளங்குழந்தையிலிருந்து 6 வயதுக்குட்பட்ட குழந்தை வரையிலும் அதிகபட்சம் 0.5 சதவீதம் ஆல்கஹால்தான் மட்டும்தான் அனுமதிக்கப்பட்டுள்ளது எனக்கூறும் வந்தனா, அதற்கு மேல் மருந்தாகக் கூட அதை அனுமதிப்பதில்லை என்கிறார். கள் குடித்தால் பசி, செரிமானம் அதிகரிக்குமா? கள் குடித்தால் நன்றாகப் பசிக்கும், செரிமான சக்தி நன்றாயிருக்கும் என்பது உண்மைதானா? கள்ளில் இருக்கும் ப்ரோபயாடிக்ஸ் எடுத்துக்கொள்ளும்போது, குடலில் இருக்கும் நுண்ணியிரிகளை நன்றாக வளர்த்துக் கொடுத்து பசியைத் துாண்டும் என்பதும், அதனால் நன்றாகச் சாப்பிடலாம் என்பதும் உண்மை. ஆனால் அது ஆல்கஹால் உதவியால் துாண்டப்படும் பசி என்பதால் உணவியல் நிபுணர்கள் யாரும் அதைப் பரிந்துரைப்பதில்லை, என்கிறார் வந்தனா. இதை மேலும் விளக்கிய அவர், "அதைவிட வடித்த சாதத்தில் தண்ணீரை ஊற்றுவதால் நமக்கு இயற்கையாகக் கிடைக்கும் நீராகாரம்தான் மிகச்சிறந்த பானம். அதில் ஏராளமான ப்ரோபயாடிக்ஸ் இருக்கிறது. அதில் தயிர் அல்லது மோர் சேர்த்தால் உடலுக்குக் குளிர்ச்சியும் கூடுதலாகக் கிடைக்கும். வயதானவர்களாக இருந்தால் தயிரைத் தவிர்த்து மோர் சேர்த்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு தயிர் சேர்த்துக் கொடுப்பதால் கொழுப்புச்சத்தும் சேரும் என்பதால் பெரிதும் பயனளிக்கும்," என்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 'எக்காரணத்தை முன்னிட்டும் குழந்தைக்கு கள் கொடுப்பது நல்லதல்ல.' உடல் வெப்பத்தை கள் குறைக்குமா? உடலின் வெப்பத்தைக் குறைக்க கள் உதவும் என்கிறார்கள். அதில் எந்தளவு உண்மை இருக்கிறது? "கள் குளிர்ச்சியை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால் அதிலிருக்கும் ஆல்கஹால் தன்மை, மீண்டும் மீண்டும் அதைத்தேட வைக்கும் ஓர் உணர்வை உருவாக்கிவிடும் என்பதால் தேவையற்ற விதமாக போதைக்குள் விழச்செய்து, வேறு விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்," என்கிறார் வந்தனா. கள் எப்படி இயற்கையாக போதைப் பொருளாகிறது? கள் இயற்கையாகவே எப்படி போதைப்பொருளாக மாறுகிறது, அதிலுள்ள ஆல்கஹால் அளவு எவ்வளவு என்பது குறித்து, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் (Microbiologist) கார்த்திகேயனிடம் பிபிசி தமிழ் பேசியது. நொதித்தல் (Fermentation) குறித்த ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றுள்ள கார்த்திகேயன் பிபிசி தமிழிடம் இதுபற்றி விளக்கிய போது, "ஊறுகாய், தயிர், இட்லி போன்ற உணவுப் பொருட்கள் அனைத்துமே இயற்கையாக நொதிக்கப்பட்ட பொருட்கள்தான். இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் ஒயினும் இந்த முறையில்தான் புளிப்புச் சுவை பெறுகிறது. ஆனால் பாலில் நாம் சேர்க்கும் உறை மோரின் தன்மையைப் பொறுத்து, தயிரின் தன்மை மாறும்" என்கிறார். இதை மேலும் விவரித்த அவர், ''ஒயினில் மேலும் சில நுண்ணுயிரிகளை உட்செலுத்தி ஆல்கஹால் அளவை அதிகப்படுத்துவார்கள். ஆனால் கள் முழுக்க முழுக்க இயற்கையாக நொதித்தலில் உருவாகும் பானம்தான். கள்ளில் அதிகபட்சமாக 4 லிருந்து 5 சதவீதம் மட்டுமே ஆல்கஹால் அளவு இருக்கும். வேறு ஏதாவது பொருள் செயற்கையாகச் சேர்க்கப்படும் பட்சத்தில் அதன் ஆல்கஹால் அளவு அதிகரிக்கலாம். பிரெட் சாப்பிடும்போதும் நமக்கு ஒருவிதமான மந்தநிலை ஏற்படவும் நொதித்தலே காரணம்,'' என்றார். சில பிரெட்களில் துளைதுளையாக இருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டும் கார்த்திகேயன், நொதித்தலால் பிரெட்களில் கார்பன் டை ஆக்சைடும், ஆல்கஹாலும் உருவாகும் என்பதே அதைச் சாப்பிடும்போது ஏற்படும் மந்தநிலைக்குக் காரணம் என்கிறார். ஆனால் எவ்வளவு நல்ல சக்தியுள்ள மரத்திலிருந்து உருவாகும் கள்ளிலும் 5 அல்லது 6 சதவீதத்துக்கு மேல் ஆல்கஹால் அளவு அதிகரிக்க வாய்ப்பில்லை என்பதையும் பேராசிரியர் கார்த்திகேயன் விளக்கினார். தென்னை, பனை என எந்த வகைக் கள்ளுக்கும் இது பொருந்தும் என்கிறார். படக்குறிப்பு, கள் முழுக்க முழுக்க இயற்கையாக நொதித்தலில் உருவாகும் பானம் தான் என்கிறார் பேராசிரியர் கார்த்திகேயன். ''கள்ளில் குறைவான அளவு ஆல்கஹால் இருப்பதால்தான், லிட்டர் கணக்கில் உட்கொள்ளப்படுகிறது. மது பானங்களை மில்லி கணக்கில் எடுத்தாலே போதை அதிகமாவதற்கு அதில் சிந்தெடிக் ஆல்கஹால் அதிகளவு இருப்பதே காரணம். ஆனால் நொதித்தல் தன்மையால் உருவாகும் கள்ளில் ஆன்டிஆக்சிடன்ட்ஸ் உள்ளிட்ட சில சாதக அம்சங்கள் இருக்கிறது என்பது உண்மைதான். இருந்தாலும் இந்த கூற்றை நிரூபிப்பதற்கான ஆராய்ச்சிகள் இன்னும் முழுமை பெறாத நிலையில்தான் உள்ளன,'' என்றார் கார்த்திகேயன். கள் இறக்கப்பட்டு நாளாக ஆக அதிலுள்ள ஆல்கஹால் அளவு அதிகரிக்குமென்ற கருத்தை நிராகரிக்கும் பேராசிரியர் கார்த்திகேயன், கள்ளில் இருக்கும் சர்க்கரை அளவு உருமாறியே கார்பன் டை ஆக்சைடு, ஆல்கஹால் போன்ற கூறுகளாக மாறுகிறது. கள் குடிக்கும்போது, நாவில் பட்டதும் சுறுசுறுவென்ற உணர்வு ஏற்பட கார்பன் டை ஆக்சைடுதான் காரணம் என்கிறார். ஒரு முறை நொதித்தலில் வேறு நிலைக்கு மாறியபின் மீண்டும் ஆல்கஹால் அளவு அதிகரிக்க வாய்ப்பில்லை என்கிறார் அவர். ''உதாரணமாக இயற்கையாக தயாரிக்கப்பட்ட ஒயினை ஆண்டுக்கணக்கில் புதைத்து வைப்பார்கள். அதன் ஆண்டின் அளவுக்கேற்ப அதன் மதிப்பும் உயரும். ஆனால் ஆண்டுக்கணக்கில் ஆவதால் அதிலுள்ள ஆல்கஹால் அளவு அதிகரிக்காது. அதேநேரத்தில் ஆண்டுக்கணக்கில் நொதித்தால் பல நன்மைகளை உருவாக்கும் நுண்ணுயிரிகள் உருவாகும். அது உடலுக்கு பல விதங்களில் நன்மை தரும். அதற்கான மதிப்புதான் அந்த அதிகவிலை.'' என்றும் விளக்கினார் பேராசிரியர் கார்த்திகேயன். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c78n8wgpey8o
  18. மான்செஸ்டர் டெஸ்ட்: இந்தியாவை சரித்த ஸ்டோக்ஸ் வியூகம் – நல்ல வாய்ப்பை இந்தியா கைவிட்டதா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எஸ்.தினேஷ் குமார் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஓல்ட் டிராஃபோர்ட் டெஸ்டில், இரண்டாம் நாளில் இங்கிலாந்து அணி பாஸ்பால் விளையாடி, மீண்டு வந்துள்ளது. இந்தத் தொடரில் இங்கிலாந்தின் மிகச் சிறந்த நாள் என்று நேற்றைய நாளை சொல்லலாம். இந்தியாவின் திட்டங்கள் எல்லாம் பலனளிக்காமல் போக, இங்கிலாந்து அணி தொட்டதெல்லாம் பொன்னாக மாறியது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சீதோஷனை நிலையில், இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு நாளின் இரண்டாவது ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த டெஸ்டின் நாயகனான ஜடேஜா, ஓவர் த விக்கெட்டில் இருந்து வீசிய பந்தை, தவிர்க்க முடியாமல் தொட்டு, ஹாரி புரூக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஷார்துல் – வாஷிங்டன் சுந்தர் இணை, இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சை சமாளித்து விளையாடியது. இதே இணைதான், 2021 பிரிஸ்பன் டெஸ்டில் ஒரு அபாரமான பார்ட்னர்ஷிப் அமைத்தது, இந்தியாவின் வெற்றி கைகொடுத்தது. ஷார்துல் 41 ரன்கள் எடுத்து, இந்தியா ஒரு வலுவான ஸ்கோரை எட்டுவதற்கு உதவினார். கடினமான ஒரு களத்தில் சாமர்த்தியமாக விளையாடி, தன் தேர்வு மீதான விமர்சனங்களுக்கு ஷார்துல் தனது பேட்டின் மூலம் பதிலடி கொடுத்தார் என்றுதான் சொல்ல வேண்டும். பிரதான பேட்ஸ்மேன்கள் எல்லாரும் தடுமாறும் போது, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதுதான் ஷார்துலின் தனிச்சிறப்பு. இந்த ஒரு திறமைக்காகவே, ஆயிரம் விமர்சனங்கள் எழுந்தபோதும், அணி நிர்வாகம் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக நிற்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த டெஸ்டின் நாயகனான ஜடேஜா, ஓவர் த விக்கெட்டில் இருந்து வீசிய பந்தை, தவிர்க்க முடியாமல் தொட்டு, ஹாரி புரூக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் காயத்தோடு களமிறங்கிய பந்த் முதல் நாளை போலவே, நேற்றும் ஆர்ச்சர், கேப்டன் ஸ்டோக்ஸ் இருவரும் பெரும்பாலான ஓவர்களையும் விக்கெட்டுகளையும் பங்கிட்டுக் கொண்டனர். வோக்ஸ் ஒருமுனையில் கட்டுக்கோப்பாக வீசினாலும், விக்கெட் எதுவும் கிடைக்கவில்லை. ஷார்துல் ஆட்டமிழந்ததும், காலில் ஏற்பட்ட எலும்பு முறிவின் வலியையும் பொறுத்துக்கொண்டு, பந்த் களமிறங்கினார். அவருடைய அர்ப்பணிப்புக்கும் தைரியத்துக்கும் மதிப்பளிக்கும் விதமாக, ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி தங்கள் பாராட்டுகளை வெளிப்படுத்தினர். பந்த்தின் விடாமுயற்சி பாராட்டப்பட வேண்டியது என்றாலும், அது ஒருவிதத்தில் சுந்தரின் பேட்டிங் ரிதத்தை பாதித்துவிட்டது. பந்த்தை எதிர்முனையில் வைத்துக்கொண்டு ஒற்றை ரன் ஓடமுடியுமா என்ற சிந்தனையிலேயே, தனது இயல்பான ஆட்டத்தை மறந்து ஸ்டோக்ஸ் பந்தில் சுந்தர் விக்கெட்டை பறிகொடுத்தார். பந்த்தை பத்திரப்படுத்தி வைத்து, கம்போஜ், சிராஜ் போன்றவர்களை முன்னால் களமிறக்கி இருந்தால், சுந்தர் ஒரு இன்னிங்ஸை கட்டமைக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். சுந்தர் ஆட்டமிழந்ததும், வேறு வழியின்று பந்த் தாக்குதல் ஆட்டத்தை கையில் எடுத்தார். ஆர்ச்சரின் பந்தில் அவர் அடித்த சிக்ஸர், மைதானத்தில் ரசிகர்களை குஷிப்படுத்தியது. கடந்த டெஸ்டை நினைவூட்டும் படியான ஒரு பந்தின் மூலம், பந்த் ஸ்டம்புகளை தகர்ந்தார் ஆர்ச்சர். பந்த் களத்தில் இருக்கும்போது, ஸ்டோக்ஸ் அவருடைய காலை குறிவைத்து யார்க்கர் பந்துகளாக வீசினார். இதுகுறித்து சமூக வலைதங்களில் விமர்சனங்கள் எழுவதை பார்க்க முடிகிறது. உணர்வை எல்லாம் பார்த்தால், டெஸ்ட் கிரிக்கெட் விளையாட முடியாது. ஸ்டோக்ஸ் தன் அணி வெற்றிபெற என்ன செய்ய வேண்டும் என்றுதான் திட்டமிடுவார். பந்த்துக்கு இந்திய அணியின் நலன் முக்கியம்; அவருக்கு இங்கிலாந்து அணியின் நலன் முக்கியம். அவ்வளவுதான். இந்த தொடரில் பந்த் தனது கடைசி இன்னிங்ஸை விளையாடிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். இரண்டாவது இன்னிங்ஸிலும் அவர் பேட்டிங் செய்ய வாய்ப்பு மிகவும் குறைவு. கடைசிக்கட்ட விக்கெட்டுகளை ஆர்ச்சர் துடைத்து எடுக்க, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஸ்டோக்ஸ் ஐந்து விக்கெட்களும் ஆர்ச்சர் 3 விக்கெட்களும் கைப்பற்றினர். ஸ்டோக்ஸ், அதிக பந்துகள் வீசிய டெஸ்ட் தொடர் இதுதான். இதன்மூலம் இந்த தொடருக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கம்போஜ் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் மூலம் சதத்தை நெருங்கி கொண்டிருந்த டக்கெட் விக்கெட்டை வீழ்த்தினார். டாப் ஆர்டர் விக்கெட்டுகளை வீழ்த்துமா இந்தியா? அத்தி பூத்தாற் போல, நேற்று பும்ராவும் தவறான லைனில் எந்தவொரு திட்டமும் இன்றி பந்துவீசினார். கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் களமிறங்கிய கிராலி, தன் முதல் ரன்னை எடுக்க நீண்ட நேரம் எடுத்துக்கொண்டார். இதை சாதகமாக பயன்படுத்தி அவருடைய விக்கெட்டை எடுக்க இந்திய அணி முயற்சி செய்தது போலவே தெரியவில்லை. மேலும் பும்ரா உடனடியா எதையாவது செய்தாக வேண்டும் என்ற நெருக்கடியிலேயே பந்துவீசியது போல இருந்தது. சில ஓவர்கள் கட்டுப்பாடாக பந்துவீசி ரன் ரேட்டை முதலில் குறைத்து பிறகு விக்கெட்டுக்கு முயற்சிக்கலாம் என்ற திட்டமே இந்திய அணியிடம் இல்லை. இந்திய அணி, ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் பந்துவீசிய லைன் அண்ட் லெங்த்தில் (The corridor of uncertainty) பந்துவீசியிருக்க வேண்டும். அதாவது பேட்ஸ்மேனால் முன்னுக்கு வந்தும் ஆடமுடியாது; பின்னுக்கு நகர்ந்தும் ஆடமுடியாது. அதுபோன்றதொரு இரண்டும் கெட்டான் லைன் அண்ட் லெங்த். ஆனால், இந்தியா ஒன்று கால்பக்கமாக வீசியது. இல்லை, எந்த இலக்குமற்று முழு நீளத்தில் ஹாஃப் வாலியாக வீசியது. கால்பக்கத்தில் கிடைத்த பந்துகளை டக்கெட், மிட் விக்கெட், ஸ்கொயர் லெக் திசையில் ஃபிளிக் செய்து ரன் குவித்தார். மறுபுறம் கிராலி, நின்ற இடத்தில் இருந்து, ஆபத்தற்ற முழு நீள பந்துகளை கவர் திசையிலும் மிட் ஆன்–மிட் ஆஃப் திசையிலும் டிரைவ் செய்து பவுண்டரி விளாசினார். இந்திய அணியின் பல் பிடுங்கிய பாம்பாக மாறிய பந்துவீச்சை பார்க்கும் போது, குல்தீப் யாதவை எடுத்திருக்கலாம் என தோன்றியது. கடைசி கட்டத்தில் உபரியாக கிடைக்கும் 10–20 ரன்கள் முக்கியம்தான். ஆனால், விக்கெட் எடுக்கும் திறமையுள்ள ஒரு சுழற்பந்து வீச்சாளரை, தொடர்ச்சியாக பெஞ்ச்சில் உட்கார வைப்பது அநியாயம். 'சைனா மேன்' என்றழைக்கப்படும் இடக்கை லெக் ஸ்பின் என்பது மிகவும் அரிதான ஒரு பந்துவீச்சு வகைமை. அரிது என்பதால், இந்த வகைமை பந்துவீச்சை பெரும்பாலும் பேட்ஸ்மேன்கள் எதிர்கொண்டு விளையாடி இருக்க மாட்டார்கள். இந்த அனுகூலத்தை இந்தியா பயன்படுத்திக்கொள்ள ஏன் தயங்குகிறது என்று புரியவில்லை. இரண்டாம் நாள் ஆட்டம் முழுவதுமாக இங்கிலாந்து கையில் சென்றுகொண்டிருந்த நேரத்தில், ஜடேஜா கிராலியை ஓர் அழகான பந்தின் மூலம் பெவிலியனுக்கு அனுப்பினார். அதைத் தொடர்ந்து, அபாரமாக ஆடிக்கொண்டிருந்த டக்கெட்டும் 94 ரன்களில் நடையை கட்டினார். போப், ரூட் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கும் நிலையில், ஆட்டத்தில் இங்கிலாந்தின் கை ஓய்கியுள்ளது. இங்கிலாந்து அணி 133 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ள நிலையில், நாளை விரைவில் டாப் ஆர்டர் விக்கெட்களை எடுக்க இந்திய வியூகம் வகுத்தாக வேண்டும். மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்தியா மீண்டு வருமா என்று பார்ப்போம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cq8z8ewpv83o
  19. பிரான்ஸ் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது ஒக்டோபர் ஏழாம் திகதி கொல்லப்பட்டவர்களின் முகத்தில் ஒங்கி அறையும் செயல் - அமெரிக்கா கடும் சீற்றம் 25 JUL, 2025 | 10:46 AM பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிப்பதற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தீர்மானித்துள்ளதை கடுமையாக விமர்சித்துள்ள அமெரிக்கா இது 2023 ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாசினால் கொல்லப்பட்டவர்களின் முகத்தில் அறையும் செயல் என குறிப்பிட்டுள்ளது. இமானுவேல் மக்ரோனின் அறிவிப்பிற்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. கண்மூடித்தனமான செயல் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்க்ரூபியோ தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடரில் பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கும் பிரான்ஸ் ஜனாதிபதியின் யோசனையை அமெரிக்கா நிராகரிக்கின்றது என மார்க்ரூபியோ தெரிவித்துள்ளார். சமாதானத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும் ஹமாசின் பிரச்சாரத்திற்கு இது உதவும், ஒக்டோபர் ஏழாம் திகதி பலியானவர்களின் முகத்தில் அறையும் செயல் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/220901
  20. விந்தைமிகு தருணத்தில் உத்தியோகபூர்வ க்ளாஸ்கோ 2026 சின்னம் ஃபின்னி அறிமுகப்படுத்தப்பட்டது 24 JUL, 2025 | 05:00 PM (நெவில் அன்தனி) ஐக்கிய இராச்சியத்தின் க்ளோஸ்கோவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள 23ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான உத்தியோகபூர்வ ஃபின்னி சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2026 ஜூலை 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவின் 23ஆவது அத்தியாயம் க்ளாஸ்கோ 2026 பொதுநலவாய விளையாட்டு விழா என அழைக்கப்படுகிறது. இந்த விழா ஆரம்பமாவதற்கு சரியாக ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது விசேட அம்சமாகும். தூய்மை, அப்பாவித்தனம், ஆண்மை மற்றும் சக்தியைப் பிரதிபலிக்கும் பெருமைமிகு க்ளாஸ்வேஜியன் யுனிகோன் ஃபின்னி என அழைக்கப்படும் இந்த சின்னம், ஜூலை 23ஆம் திகதி விடியற்காலை வேளையில் க்ளைட்சைட் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஃபின்னிஸ்டன் பாரத்தூக்கியின் அருகில் வைத்து அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விந்தையான சின்னம், கிளாஸ்கோ முழுவதும் உள்ள பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த 24 பாடசாலைகள் கல்வி பயிலும் 76 பிள்ளைகளின் கற்பனையால் உருவாக்கப்பட்டது. அவர்கள் சின்னம் தயாரிப்பாளர்கள் என அழைக்கப்படுகிறார்கள். மிக உயரமான பாரத்தூக்கியில் சின்னம் தொங்கவிடப்பட்டதன் மூலம் க்ளாஸ்கோ பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான இறங்குமுக கணிப்பை கொண்டாடும் நாளாக ஜூலை 23ஆம் திகதி அமைந்தது. இதன் போது பொதுநலவாய விழா 10,000 மீற்றர் ஓட்ட சம்பியன் ஈலிஷ் மெக்கோல்கன், ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும் கிளாஸ்கோ 2014 பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஸ்கொட்லாந்து அணியின் கொடியை ஏந்தியவருமான ஈலித் டொய்ல், ஸ்காட்லாந்து கூடைப்பந்தாட்ட வீரர் கீரன் அச்சாரா, ஜூடோ பதக்கம் வென்ற சாரா அட்லிங்டன் மற்றும் காமன்வெல்த் பாரா பௌல்ஸில் தங்கப் பதக்கம் வென்ற போலின் வில்சன் உள்ளிட்ட ஸ்காட்லாந்து விளையாட்டு வீர, வீராங்கனைகள் ஃபின்னியாக காட்சிக்கொடுத்த நபரை சந்தித்தனர். ஸ்காட்லாந்தின் பிரதி முதலாவது அமைச்சர் ஜோன் ஸ்வின்னி, கிளாஸ்கோவின் பிரபு புரோவோஸ்ட் ஜெக்குலின் மெக்லெரன் ஆகியோருக்கும் சின்னத்தை தயாரித்தவர்களுக்கும் ஃபின்னி அறிமுகப்படுத்தப்பட்டார். அறிமுக விழாவுடன் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், 'அடுத்த கொடை காலத்தில் கிளாஸ்கோ 2026 பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஒரு சிரிப்பு, ஒரு அலை, ஒருவேளை ஒரு சிறு நடனம் கூட இருக்கும். உணர்ச்சிகளை உற்சாகமாக மாற்றவும், ஆரவாரங்களைத் தூண்டவும், கிளாஸ்கோ 2026 பொதுநலவாய விளையாட்டு ஆரம்பமானவுடன் ஒவ்வொரு தருணத்தையும் ஏதோ ஒரு விந்தையாக மாற்ற உதவவும் நான் இங்கே இருக்கிறேன்' ஃபின்னி சார்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. 2026 ஜூலை மாதம் தொடக்க விழாவிற்கு முன்னதாக, நாடு முழுவதும் உள்ள பாடசாலைகள், விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் சமூக கொண்டாட்டங்களில் பங்கேற்கும் ஒரு பரபரப்பான அட்டவணையை ஃபின்னியாக காட்சி கொடுக்கும் நபர் ஆரம்பித்துள்ளார். https://www.virakesari.lk/article/220847
  21. பட மூலாதாரம்,BABYDOLL ARCHI படக்குறிப்பு, பேபிடால் ஆர்ச்சியின் இன்ஸ்டாகிராம் கணக்கில் 1.4 மில்லியன் பின்தொடர்பவர்கள் இருந்தனர். கட்டுரை தகவல் கீதா பாண்டே பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இன்ஸ்டாகிராமில் 'பேபிடால் ஆர்ச்சி' என்ற இந்திய பிரபலத்தின் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை சில நாட்களிலேயே 1.4 மில்லியனாக உயர்ந்தது. காரணம், பேபிடால் ஆர்ச்சியின் சில பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாகின. அதில் ஒன்று, அவர் சிவப்பு நிற புடவையில், 'டேம் அன் கிர்ர்' என்ற ரோமானிய பாடலுக்கு கவர்ச்சிகரமான நடனமாடுவதைக் காட்டும் ஒரு வீடியோ. மேலும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு புகைப்படம், அமெரிக்க ஆபாச திரைப்பட நட்சத்திரமான கென்ட்ரா லஸ்டுடன் அவர் போஸ் கொடுப்பதைக் காட்டியது. திடீரென்று எல்லோரும் பேபிடால் ஆர்ச்சி பற்றி தெரிந்து கொள்ள விரும்பினர். பேபிடால் ஆர்ச்சி என்ற பெயர் கூகிள் தேடலில் பிரபலமடைந்து எண்ணற்ற மீம்ஸ்கள் மற்றும் ரசிகர் பக்கங்களை உருவாக்கியது. ஆனால் ஒரு புதிய பிரச்னை வெளிவரவிருந்தது - ஆன்லைனில் பரபரப்பை ஏற்படுத்திய அந்தப் பெயருக்கு பின்னால் உண்மையான பெண் யாரும் இல்லை. அந்த இன்ஸ்டாகிராம் கணக்கு போலியானது, இருப்பினும் அது பயன்படுத்திய முகம் ஒரு உண்மையான பெண்ணின் முகம் போல இருந்தது. அசாமின் திப்ருகார் நகரத்தைச் சேர்ந்த அவரை நாம் 'சாஞ்சி' என்று இந்தக் கட்டுரையில் அழைப்போம். சாஞ்சியின் சகோதரர் போலீசில் புகார் அளித்த பிறகு இந்த உண்மை வெளிப்பட்டது. அதைத் தொடர்ந்து, சாஞ்சியின் முன்னாள் காதலன் பிரதிம் போரா கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு தலைமை தாங்கும் மூத்த காவல்துறை அதிகாரி சிசல் அகர்வால் பிபிசியிடம் பேசுகையில், சாஞ்சிக்கும் போராவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், சாஞ்சியைப் போலவே தோற்றமளிக்கும் வகையில் அவர் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு பிம்பம், சாஞ்சியை பழிவாங்கும் நோக்கில் பயன்படுத்தப்பட்டது என்றும் கூறினார். இயந்திரப் பொறியாளரும், செயற்கை நுண்ணறிவு (AI) பற்றி தானாக படித்து அறிந்தவருமான போரா, சாஞ்சியின் தனிப்பட்ட புகைப்படங்களைப் பயன்படுத்தி ஒரு போலி சமூக ஊடக கணக்கை உருவாக்கினார் என்று அகர்வால் கூறினார். இப்போது காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள போரா, இதுகுறித்து இன்னும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. பிபிசி அவரது குடும்பத்தினரிடம் பேச முயற்சித்துள்ளது, அவர்கள் பேசும்போது கட்டுரையைப் புதுப்பிப்போம். மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, 'ஒரு ஏஐ பதிப்பை உருவாக்க சாட்ஜிபிடி போன்ற தொழில்நுட்ப கருவிகளை போரா பயன்படுத்தினார்' 'பேபிடால் ஆர்ச்சி' கணக்கு 2020இல் உருவாக்கப்பட்டது மற்றும் முதல் பதிவேற்றங்கள் மே 2021இல் செய்யப்பட்டன. ஆரம்பகட்ட புகைப்படங்கள், மார்பிங் செய்யப்பட்ட சாஞ்சியின் உண்மையான படங்கள் என்று அகர்வால் கூறினார். "காலப்போக்கில், ஒரு ஏஐ பதிப்பை உருவாக்க சாட்ஜிபிடி மற்றும் 'Dzine' போன்ற தொழில்நுட்ப கருவிகளை போரா பயன்படுத்தினார். பின்னர் அந்த சமூக ஊடக கணக்கில் டீப்ஃபேக் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றினார்." இந்தக் கணக்கு கடந்த ஆண்டு முதல் லைக்குகளைப் பெறத் தொடங்கியது, ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் அது பலரின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியது என்று அவர் கூறினார். சாஞ்சி சமூக ஊடகங்களில் இல்லை, மேலும் பிரதான ஊடகங்கள் பேபிடால் ஆர்ச்சியை 'செல்வாக்கு மிக்க ஒரு நபர்' என்று வர்ணிக்கத் தொடங்கியபோதுதான் அந்தக் கணக்கு பற்றி அவருக்கு தெரியவந்தது. பேபிடால் ஆர்ச்சி, அமெரிக்க ஆபாச திரைப்படத் துறையில் சேரக்கூடும் என்று தகவல்கள் ஊகித்தன. ஜூலை 11ஆம் தேதி இரவு சாஞ்சியின் குடும்பத்தினர் காவல்துறைக்கு அளித்த இரண்டு பத்திகள் கொண்ட குறுகிய புகார், சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஆதாரமாக கொண்டிருந்தது. இதற்குப் பின்னால் யார் இருக்கக்கூடும் என்று அவர்களுக்குத் அப்போது தெரியாததால், புகாரில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என்று அகர்வால் கூறுகிறார். கைது செய்யப்பட்டது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பெண்களின் புகைப்படங்களும் வீடியோக்களும் பெரும்பாலும் பழிவாங்கும் நோக்கில் பரப்பப்படுகின்றன. 'பேபிடால் ஆர்ச்சி' என்பது காவல்துறையினருக்குப் பரிச்சயமில்லாத பெயர் அல்ல. இந்தப் புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என ஊகிக்கும் செய்திகள் மற்றும் கருத்துகளையும் தாங்கள் பார்த்ததாகவும், ஆனால் அவை ஒரு உண்மையான நபரை அடிப்படையாகக் கொண்டது என்பதற்கான எந்தக் கருத்தையும் பார்க்கவில்லை என்றும் அகர்வால் கூறுகிறார். புகாரைப் பெற்றவுடன், கணக்கை உருவாக்கியவரின் விவரங்களைக் கேட்டு போலீசார் இன்ஸ்டாகிராமிற்கு மின்னஞ்சல் அனுப்பினர். "இன்ஸ்டாகிராமில் இருந்து எங்களுக்கு தகவல் கிடைத்ததும், சாஞ்சியிடம், பிரதிம் போரா என யாரையாவது தெரியுமா என்று கேட்டோம். அவர் உறுதிப்படுத்தியதும், பக்கத்து மாவட்டமான டின்சுகியாவில் அவர் தங்கியிருந்த முகவரியைக் கண்டுபிடித்தோம். ஜூலை 12 ஆம் தேதி மாலை நாங்கள் அவரைக் கைது செய்தோம்." "போராவின் மடிக்கணினி, மொபைல் போன்கள், ஹார்டு டிரைவ்கள் மற்றும் அந்த சமூக ஊடக கணக்கை 'மானிடைஸ்' (பணம் ஈட்டும் முறை) செய்தது தொடர்பான வங்கி ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்" என்று அகர்வால் கூறுகிறார். "அந்தக் கணக்கிற்கு லிங்க்ட்ரீ-இல் 3,000 உறுப்பினர் பதிவுகள் இருந்தன. அந்தக் கணக்கின் மூலம் அவர் 10 லட்சம் ரூபாய் சம்பாதித்ததாக நாங்கள் நம்புகிறோம். கைது செய்யப்படுவதற்கு முந்தைய ஐந்து நாட்களில் அவர் 3,00,000 ரூபாய் சம்பாதித்ததாக நாங்கள் கருதுகிறோம்," என்று அவர் கூறினார். "இந்த விஷயத்தில் சாஞ்சி மிகவும் கலக்கமடைந்துள்ளார், ஆனால் இப்போது அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கவுன்சிலிங் வழங்கப்படுகிறது, அவர்கள் நன்றாக இருக்கிறார்கள்" என்று அகர்வால் கூறுகிறார். இதுபோன்ற ஒன்று நடப்பதைத் தடுக்க உண்மையில் எந்த வழியும் இல்லை, "ஆனால் முன்பே செயல்பட்டிருந்தால், இந்த விஷயம் பலரின் கவனத்தை பெறுவதைத் தடுத்திருக்க முடியும்" என்று அகர்வால் கூறினார். "ஆனால் சாஞ்சிக்கு சமூக ஊடக கணக்குகள் ஏதும் இல்லாததால் அவருக்கு எதுவும் தெரியாது. அவரது குடும்பத்தினரும், இந்தக் கணக்கைப் பார்வையிடுவதிலிருந்து போராவால் தடுக்கப்பட்டிருந்தனர். இது வைரலான பிறகுதான் அவர்களுக்குத் தெரியவந்தது," என்று அகர்வால் கூறினார். மெட்டா நிர்வாகத்தின் நடவடிக்கை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நிர்வாணம் அல்லது பாலியல் உள்ளடக்கத்தை பதிவிட மெட்டா அனுமதிப்பதில்லை. இந்த வழக்கு தொடர்பான பிபிசி கேள்விகளுக்கு மெட்டா நிர்வாகம் பதிலளிக்கவில்லை. ஆனால் பொதுவாக, நிர்வாணம் அல்லது பாலியல் உள்ளடக்கத்தை பதிவிட மெட்டா அனுமதிப்பதில்லை. கூடுதலாக, பாலியல் ரீதியாக வெளிப்படையான டீப்ஃபேக் புகைப்படங்களை உருவாக்க நிஜ மனிதர்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தும் ஏஐ தொழில்நுட்பங்களுக்கான சில விளம்பரங்களை மெட்டா நீக்கியுள்ளதாக கடந்த மாதம் சிபிஎஸ் செய்தி முகமை கூறியது. 282 பதிவுகளைக் கொண்ட 'பேபிடால் ஆர்ச்சி'-இன் இன்ஸ்டாகிராம் கணக்கை இனி பொதுமக்கள் அணுக முடியாது. இருப்பினும் சமூக ஊடகங்களில் பேபிடால் ஆர்ச்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பரவிக் கிடக்கின்றன, குறிப்பாக ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கில் அவை அனைத்தும் இருப்பதாகத் தெரிகிறது. இது குறித்து என்ன செய்யத் திட்டமிட்டுள்ளீர்கள் என்று மெட்டாவிடம் பிபிசி கேட்டுள்ளது. "சாஞ்சிக்கு நடந்தது மோசமான ஒரு விஷயம், ஆனால் அதைத் தடுப்பதும் கிட்டத்தட்ட சாத்தியமற்றது" என்று ஏஐ நிபுணரும் வழக்கறிஞருமான மேக்னா பால் கூறுகிறார். அவர் நீதிமன்றத்தில் முறையிட்டு தன்னைக் குறித்து பரவிய விஷயங்கள் 'மறக்கப்படுவதற்கான' உரிமையைப் பெறலாம், நீதிமன்றமும் அவரது பெயர் குறிப்பிடப்பட்ட பத்திரிகைச் செய்திகளை நீக்க உத்தரவிடலாம். ஆனால் இணையத்திலிருந்து அனைத்துத் தடயங்களையும் அழிப்பது கடினம். சாஞ்சிக்கு நடந்ததுதான் பல பெண்களுக்கு தொடர்ந்து நடந்து வருகிறது என்றும், அவர்களின் புகைப்படங்களும் காணொளிகளும் பழிவாங்கும் விதமாக பரப்பப்படுகின்றன என்றும் அவர் கூறுகிறார். "இப்போது செயற்கை நுண்ணறிவு காரணமாக இதைச் செய்வது மிகவும் எளிதாகிவிட்டது, ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் நாம் எதிர்பார்ப்பது போல் இன்னும் பொதுவான பிரச்னையாக மாறவில்லை அல்லது சமூகம் குறித்த அச்சம் காரணமாக அதைப் பற்றிய புகார்கள் பதிவாகவில்லை என்று கூறலாம். அல்லது சாஞ்சி விஷயத்தில் நடந்தது போல, பாதிக்கப்பட்டவர்கள் இந்த விஷயத்தைக் குறித்து அறியாமல் இருக்கலாம்." என்று பால் கூறுகிறார். மேலும் இதைப் பார்க்கும் மக்களுக்கு, அந்த சமூக ஊடக தளத்திலோ அல்லது சைபர் கிரைம் போர்ட்டலில் புகாரளிக்கவோ எந்த அவசியமும் ஊக்கமும் இல்லை என்று அவர் கூறுகிறார். புதிய சட்டங்கள் போராவுக்கு எதிரான புகாரில், பாலியல் துன்புறுத்தல், ஆபாச உள்ளடக்கத்தை விநியோகித்தல், அவதூறு பரப்புதல், நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் மோசடி செய்தல், ஆள்மாறாட்டம் மூலம் ஏமாற்றுதல் மற்றும் சைபர் கிரைம் ஆகிய சட்டப் பிரிவுகளை போலீசார் பயன்படுத்தியுள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால், போராவுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். சமீப நாட்களில் சமூக ஊடகங்களில் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த வழக்கு. இதுபோன்ற வழக்குகளைக் கையாள்வதற்கு கடுமையான சட்டங்களை உருவாக்க வேண்டுமென சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். இதுபோன்ற வழக்குகளைக் கையாள போதுமான சட்டங்கள் இருப்பதாக பால் நம்புகிறார், ஆனால் புதிய ஏஐ நிறுவனங்களைக் கையாளும் வகையில் புதிய சட்டங்களை உருவாக்க வாய்ப்பு உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். "இருப்பினும், டீப்ஃபேக்குகள் எப்போதும் தீங்கு விளைவிப்பதில்லை என்பதையும், பேச்சு சுதந்திரத்தை நசுக்க ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படலாம் என்பதால், சட்டங்கள் கவனமாக உருவாக்கப்பட வேண்டும் என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்." என்கிறார் பால். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9w1wr0rjwxo
  22. 25 JUL, 2025 | 10:18 AM பாலஸ்தீன தேசத்தை பிரான்ஸ் அங்கீகரிக்கவுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். சமூக ஊடக பதிவொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் நியுயோர்க்கில் அடுத்தமாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தில் இந்த விடயம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/220895
  23. தாய்லாந்து கம்போடிய படையினர் எல்லையில் மோதல் - விமான தாக்குதல்கள் 24 JUL, 2025 | 12:03 PM தாய்லாந்திற்கும் கம்போடியாவிற்கும் இடையில் சர்ச்சைக்குரிய எல்லை தொடர்பில் மோதல் வெடித்துள்ளது. தாய்லாந்து கம்போடிய படையினருக்கு இடையில் வெடித்துள்ள மோதல்கள் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்,பலர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பலர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ள தாய்லாந்து அதிகாரிகள் எல்லையில் உள்ள 86 கிராமங்களில் வசிக்கும் 40,000க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர். இரண்டு தென்கிழக்காசிய நாடுகளிற்கும் இடையில் முறுகல்நிலை தீவிரமடைந்து வந்த நிலையிலேயே நேற்று மோதல்கள் இடம்பெற்றுள்ளன. எல்லையின் ஆறு பகுதிகளில் தாய்லாந்து கம்போடிய படையினருக்கு இடையில் மோதல்கள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகின்றன. இருதரப்பும் பரஸ்பரம் மற்றைய தரப்பே மோதலை ஆரம்பித்தாக குற்றம்சாட்டியுள்ளன. தாய்லாந்தின் தலைநகரிலிருந்து 250 மைல் தொலைவில் உள்ள புராதான நகரமான பிரசாத் டா மோன் தொம் என்ற இடத்தில் மோதல்கள் முதலில் ஆரம்பித்துள்ளன. இதேவேளை கம்போடிய இராணுவத்தின் மீது தாய்லாந்து எவ் 16 தாக்குதலை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/220795
  24. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நல்லூர் கிட்டு பூங்காவில் போராட்டம் 24 JUL, 2025 | 05:41 PM நீண்டகாலமாக சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினால் முன்னெடுக்கப்படும் "விடுதலை" எனும் தொனிப்பொருளிலான போராட்டம் இன்று வியாழக்கிழமை (24) நல்லூர் கிட்டு பூங்காவில் முன்னெடுக்கப்பட்டது. இதில் சிறைவாழ்க்கை கண்காட்சி, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாட்டப்படவுள்ள "விடுதலை விருட்சத்துக்கான " விடுதலை நீர் சேகரிப்பும் இடம்பெற்றது. இதில் தமிழ் அரசியல் கைதியாக 15 ஆண்டுகள் சிறையில் இருந்த அரசியல் கைதி விவேகாநந்தனூர் சதீஸ் எழுதிய "துருவேறும் கைவிலங்கு" நூல் அறிமுகமும் இடம்பெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு சிறைச்சாலையில் வழங்கப்படும் உணவும் தயாரித்து வழங்கப்பட்டது. இன்றைய தினம் ஆரம்பமான குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நாளையும் தொடரவுள்ளது. https://www.virakesari.lk/article/220848

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.