Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. ஈரோட்டில் சுகாதாரத் துறை தேடிய பழங்குடி கர்ப்பிணி பெண் சொந்த ஊர் திரும்பினார் - என்ன நடந்தது? படக்குறிப்பு,பழங்குடி கர்ப்பிணி சேவந்தி கட்டுரை தகவல் எழுதியவர்,சாரதா வி பதவி,பிபிசி தமிழ் 17 ஜூலை 2025 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஈரோட்டில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தமிழ்நாடு சுகாதாரத்துறையும் காவல்துறையும் சேர்ந்து தேடி வந்த சேவந்தி என்ற பழங்குடி கர்ப்பிணி பெண் வெள்ளிக்கிழமை சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தார். அவருக்கு பிரசவ வலி இன்னும் வரவில்லை. மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மருத்துவர்களுக்கு‌ அவர் முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக குடும்பத்தார் கூறியுள்ளனர். அவரை சுகாதாரத்துறையினர் தேட வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்பதை விவரிக்கிறது இந்த கட்டுரை. இடம் : ஈரோடு மாவட்டம் தாளவாடி தாலுகா, சோளகர் தொட்டி கிராமம் தேதி : ஜூலை 05-ஆம் தேதி, மாலை 5மணி. அழகான மலைப்பகுதிகளுக்கு நடுவே அமைந்துள்ள சோளகர் தொட்டி கிராமத்தில் மாவட்ட சுகாதாரத்துறையினர், கர்ப்பிணி பெண்களை கண்காணிக்கும் வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். அந்த கிராமத்தில் இருந்த சேவந்தி என்ற 25 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு ஜூலை 7-ஆம் தேதி பிரசவ தேதி குறிக்கப்பட்டிருந்தது. அவருக்கு இது இரண்டாவது பிரசவம். ஒரு வாரம் முன்பே அவரை மருத்துவமனையில் அனுமதிக்க கிராம சுகாதார செவிலியர் ஜோதி வலியுறுத்தியிருந்தார். ஆனால் சேவந்தி மற்றும் அவர் குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். ஜூலை 5-ஆம் தேதி சேவந்தியை சந்திக்க சென்ற போது, ஜூலை 7-ஆம் தேதி மருத்துவமனைக்கு வருவதாக சேவந்தி கூறியிருந்தார். ஆனால் ஜூலை 7-ஆம் தேதி காலை ஜோதி அங்கு சென்ற போது, சேவந்தியின் வீடு பூட்டியிருந்தது. அவர் வீட்டிலிருந்த அவரது கணவர் சந்திரன், அவரது 3 வயது குழந்தை, அவரது மாமியார் நான்கு பேரும் காணவில்லை. அந்த கிராமத்தில் எங்கு தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. படக்குறிப்பு,சோளகர் தொட்டி கிராமத்தில் மாவட்ட சுகாதாரத்துறையினர், கர்ப்பிணி பெண்களை கண்காணிக்கும் வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். பத்து நாட்களுக்கும் மேலாக தேடப்பட்டு வரும் கர்ப்பிணி தமிழ்நாடு பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுவதை தீவிரமாக ஊக்குவிக்கும் மாநிலமாகும். தேசிய குடும்ப நல ஆய்வு (2020-2021) தரவுகள் படி 99.6% பிரசவங்கள் மருத்துவ நிலையங்களில் நிகழ்கின்றன. Pregnancy and Infant Cohort Monitoring and Evaluation (PICME) திட்டத்தின்படி, ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணின் பிரசவமும் கண்காணிக்கப்படுகிறது, குறிப்பாக கிராமங்களில் இந்த கண்காணிப்பு தீவிரமாக உள்ளது. செவிலியர் ஜோதி மட்டுமல்லாமல், பிளாக் மருத்துவ அலுவலர், விவசாய சங்கத் தலைவர் என பலர் முயற்சி எடுத்தும் சேவந்தி எங்கு இருக்கிறார் என்று கண்டறியமுடியவில்லை. அவரின் செல்போன் எண் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட சுகாதாரத்துறை, சேவந்தியை கண்டுபிடித்து தரக் கோரி மாவட்ட காவல்துறையின் உதவியை நாடியுள்ளது. காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. ஜூலை 16-ஆம் தேதி மாலை வரை சேவந்திக்கு பிரசவம் நடைபெற்றதா இல்லையா, அவர் எங்கு உள்ளார் என்ற தகவல் மாவட்ட நிர்வாகத்தினருக்கு கிடைக்கவில்லை. ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா பிபிசி தமிழிடம் பேசிய போது, "ஜூலை 14ம் தேதி கர்ப்பிணியை காணவில்லை என்று சுகாதாரத்துறை புகார் அளித்தனர். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது செல்போன் எண் அணைக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் உள்ள அவரது குடும்பத்தினரும் ஒத்துழைக்கவில்லை" என்றார். படக்குறிப்பு,சேவந்திக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் ஈரோடு மாவட்டம் தாளவாடி தாலுகாவில் அமைந்துள்ளது சோளகர் தொட்டி கிராமம். சோளகர் பழங்குடியினத்தை சேர்ந்த மக்களே அந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர். பொதுவாக பிரசவங்களை வீட்டிலேயே பார்த்துக் கொள்ளும் வழக்கம் கொண்டவர்கள். "அவர் முதல் பிரசவத்திலேயே மருத்துவமனைக்கு வருவதற்கு தயக்கம் காட்டினார். பிறகு அவரிடம் பேசி அவரை கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரவழைத்தோம். அவருக்கு சுகபிரசவம் ஆனது. எனவே இந்த முறை அவரை ஆரம்பத்திலிருந்தே தொடர்ந்து கண்காணித்து வந்தோம். மகப்பேறு பரிசோதனைகளுக்கு அவர் தவறவிடாமல் வந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரை காண இயலவில்லை. இவரை போன்ற பலர் பிரசவ நேரத்தில் மருத்துவமனைக்கு வர வேண்டிய அவசியத்தை புரிந்து கொள்வதில்லை. பல மணி நேரங்கள் உட்கார்ந்து பேசி பல பெண்களை பாதுகாப்பாக மருத்துவமனைக்கு கூட்டி வந்துள்ளோம். ஆனால் அவரை காணவேயில்லை என்பதுதான் இதில் எங்களுக்கு சவால்" என்கிறார் இதில் சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர் ஒருவர். சேவந்தியை தேடும் பணியில் பல தரப்பினர் உதவியையும் சுகாதாரத்துறை நாடியுள்ளது. முதல் பிரசவத்தின் போதும் சுகாதாரத்துறையினரின் மிகுந்த வற்புறுத்தல், காவல்துறையினர் தலையீட்டுக்கு பிறகே சேவந்தி மருத்துவமனைக்கு வந்துள்ளார். தாளவாடி விவசாய சங்கத் தலைவர் கண்ணையன், "முதல் பிரசவத்தின் போது சேவந்திக்கு ரத்த சோகை இருந்தது. வேறு சில உடல் நல பிரச்னைகளும் இருந்தது. எனவே மருத்துவ நிபுணர்களை நேரில் சென்று ஆலோசனைப் பெற வேண்டும் என்று சுகாதார ஊழியர் கூறியிருந்தார். அவரை அழைத்துச் செல்ல வாகனம் வந்திருந்தது, ஆனால் அவர் அதில் ஏற மறுத்துவிட்டார். உதவிக்காக நான் கொடுத்த காசையும் வாங்க அவரது மாமியார் மறுத்துவிட்டார். பிறகு இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அவரிடம் பேசி, மருத்துவரே காரை எடுத்துக் கொண்டு வந்த அவரை பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். நானும் உடன் சென்றிருந்தேன். அப்போது அவரது மாமியார், 'இவர்களுக்கு என்ன தெரியும்? நான் எத்தனை பிரசவங்கள் பார்த்திருக்கிறேன்' என்றார்" என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பழங்குடியினரின் உணவு பழக்கங்களில் நுண் ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருக்கும் என்கிறார் சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர். (கோப்புப்படம்) சோளகர் தொட்டி அருகில் இருக்கும் மருத்துவ நிலையம் 4 கி.மீ தொலைவில் இருக்கும் பைனாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம். அடுத்து கிராமத்திலிருந்து 20 நிமிடத்தில் செல்லக் கூடிய தாளவாடி மேம்படுத்தப்பட்ட 24 மணி நேர ஆரம்ப சுகாதார நிலையம். அங்கு பிரசவம் பார்ப்பதற்கான வசதி உண்டு என்றாலும், அவருக்கு ரத்த சோகை இருந்ததால் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். "பிரசவத்தின் போது கடைசி நேர சிக்கல்கள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவர் பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு எந்த பிரச்னையும் இல்லாமல் சுகப்பிரசவம் நடந்தது. ஆனால் அதையே காரணம் காட்டி அவரது மாமியார், எந்த பிரச்னையும் இல்லாத போதே பல கிலோ மீட்டர் தள்ளியுள்ள மருத்துவமனைக்கு தேவையில்லாமல் எங்களை அழைத்துச் சென்றீர்கள், எங்களுக்கு ரூ.7ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை செலவாகிவிட்டது என்று கூறுகிறார்" என்கிறார் கண்ணையன். "அவருக்கு முதல் பிரசவத்திலேயே ரத்த சோகை இருந்தது. இந்த முறையும் அவருக்கு ஹீமோகுளோபின் அளவு 8 மட்டுமே இருந்தது. இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்ததால், தேவையான இரும்புச் சத்து கொடுத்து அவரது ஹீமோகுளோபின் அளவு 11.2 ஆக உயர்ந்திருந்தது." என்கிறார் சேவந்தியை கண்காணித்து வந்த கிராம சுகாதார ஊழியர் ஒருவர். சேவந்திக்கு அரசு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இரண்டு ஊட்டச்சத்து பெட்டகங்கள் கிடைத்துள்ளன. மேலும் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.14 ஆயிரத்தின் முதல் தவணை கிடைத்துள்ளது என்கிறார் கிராம சுகாதார ஊழியர். ஏன் பழங்குடியினர் மருத்துவமனை வர தயங்குகின்றனர்? சோளகர் தொட்டி கிராமம் வீரப்பன் தேடுதல் வேட்டை தீவிரமாக நடத்தப்பட்ட கிராமம். "அவரது மாமியார் காவல்துறை துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டு, சமீபத்தில் தான் அரசின் இழப்பீட்டை பெற்றிருக்கிறார். இந்தப் பகுதியில் அவரைப் போன்று மேலும் சிலர் உள்ளனர். எனவே இப்பகுதியினருக்கு அரசு மீதான நம்பிக்கையும் குறைவாகவே உள்ளது. தாளவாடியில் தாலுகா மருத்துவமனை வேண்டும் என்பது இப்பகுதியினரின் நீண்ட நாள் கோரிக்கை," என்று கூறும் கண்ணையன் சோளகர் தொட்டி கிராமத்தைச் சேர்ந்த பிள்ளைகள் சிலர் கல்வி பயில உதவி வருகிறார். இதய நோய்கள் உள்ள கர்ப்பிணிகள் செய்யக் கூடாதவை என்னென்ன? மதுரை: அரசு செவிலியரின் மூன்றாவது கர்ப்பத்திற்கு மகப்பேறு விடுப்பு மறுப்பு - நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை என்ன? மாதவிடாய், மகப்பேறு காலங்களில் பெண்களை தனிமைப்படுத்தும் ஆந்திர கிராமம் கொல்லிமலை பழங்குடிகளின் உணவுமுறையையே மாற்றிய காலநிலை மாற்றம் - ஆய்வில் தெரிய வந்த உண்மை பழங்குடியின பெண்களின் எதிர்பார்ப்பை சரியாக புரிந்துக் கொள்ள வேண்டும் என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர். "பழங்குடி பெண்களிடம் பிரசவ தேதி வந்துவிட்டது, மருத்துவமனைக்கு வாருங்கள் என்று கூறுவதை அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். வலி வந்தால்தான் பிரசவத்துக்கு உடல் தயாராகிறது என்பது அவர்களின் புரிதலாக இருக்கும். ஏனென்றால் அவர்கள் குடும்பங்களில் அந்த வழக்கத்தையே அவர்கள் பார்த்திருப்பார்கள்." என்கிறார். பழங்குடியின பெண்கள் மத்தியில் ரத்த சோகை பரவலாக காணப்படுவதாகவும் அவர் கூறுகிறார். "பழங்குடியினரின் உணவு பழக்கங்களில் நுண் ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருக்கும். அவர்கள் வசிக்கும் பகுதியை பொறுத்து அதிக புரதம், அதிக கொழுப்பு இருக்கலாம். செருப்பு இல்லாமல் நடக்கும் பழக்கம் இருந்தால் கொக்கிப்புழு தொற்று ஏற்படலாம். அதுவும் ரத்த சோகைக்கு காரணமாகலாம்" என்றார். மேலும் அவர், "கர்ப்பிணி பெண்ணுக்கு அனைத்தும் இலவசம் என்றாலும், அவருடன் இருப்பவருக்கான தங்கும் செலவு, உணவு செலவு, போக்குவரத்து செலவு ஆகியவை அதிகரிக்கிறது. இந்த பெண்ணின் மாமியார் கூறியது போல, கையிலிருந்து செய்ய வேண்டிய செலவு அதிகரிக்கிறது. தேவைப்படும் இடங்களில், நோயாளியுடன் வருபவருக்கும் தனியார் மருத்துவமனைகளில் இருப்பது போல தனி படுக்கை, உணவு ஆகியவற்றை வழங்க ஆலோசிக்க வேண்டும்," என்று கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce37ewp130do
  2. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சபாநாயகர் Published By: VISHNU 19 JUL, 2025 | 12:54 AM யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சபாநாயகர் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்திற்கு வெள்ளிக்கிழமை (19) விஜயம் செய்த சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன யாழ் . பொதுசன நூலகம் மற்றும் கோட்டை பகுதிகளை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். அதன் போது யாழ் . மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபவானந்தராசாவும் உடனிருந்தார். https://www.virakesari.lk/article/220357
  3. டெட்டானஸ் அறிகுறிகள் தோன்றியவுடனே தீவிர சிகிச்சைப் பிரிவு இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் அட்மிஷன் செய்யப்பட வேண்டும். உடனடியாக டெட்டானஸ் தடுப்பூசி அதனுடன் டெட்டானஸ் இம்யூனோகுளோபுளின் எனும் உடனடி முறிவு மருந்து ஆகியவை வழங்கப்படும். செயற்கை சுவாசக்கருவியில் பொருத்துதல். நீண்ட நாட்கள் செயற்கை சுவாசம் தேவைப்படும் தன்மை. தசை இறுக்கத்தை சரிசெய்யும் தளர்வு மருந்துகள் என மூன்று முதல் நான்கு வாரங்கள் கடுமையான போராட்டம் நடக்கும். தற்போதைய சூழ்நிலையில் செயற்கை சுவாச கருவிகள், தசை தளர்த்தி மருந்துகள் டெட்டானஸ் இம்யூனோகுளோபுளின் இருப்பு ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளதால் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. எனினும், எளிதான தடுப்பூசியால் தடுக்க முடிந்த ஒரு நோய் குறித்து விழிப்புணர்வு பெறாமல் இருப்பது தவறு. தங்களது குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்த பின் ஆறாவது வாரம் பத்தாவது வாரம் பதினான்காம் வாரம் அதற்குப் பிறகு 16 முதல் 24 மாதங்கள் அதற்குப் பின் ஐந்து முதல் ஆறு வயதுக்குள் அதற்குப் பின் பத்து வயதிலும் பதினாறு வயதிலும் டெட்டானஸ் தடுப்பூசியை வழங்குவதை உறுதி செய்யவும். காயம் சிறிதோ பெரிதோ உடனடியாக டெட்டானஸ் தடுப்பூசி பெறுவதை வழக்கமாகக் கொள்ளவும். ஏற்கனவே டிடி ஊசியை ஐந்து வருடங்களுக்குள் போட்டிருந்தால் தேவையில்லை. எப்போது போட்டோம் என்று சந்தேகம் இருப்பின் காயத்துக்கு பின்பு டிடி தடுப்பூசி பெறுவது நல்லது. அதனால் எந்த பாதகமும் இல்லை. டெட்டானஸ் ஏற்பட்டு மரணமடைந்த சிலருக்கு காயமுற்ற பின் டிடி ஊசி போடப்பட்டும் டெட்டானஸ் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்குக் காரணம், ஏற்கனவே முறையான பூஸ்டர் தடுப்பூசிகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் பெறாமல் விட்டு, காயம் ஏற்பட்ட பின் தடுப்பூசி போட்டாலும் அதற்குரிய எதிர்ப்பு சக்தி போதுமான அளவு வெளிப்படாமல் போவதால் டெட்டானஸ் கிருமி வென்று விடுகிறது. சமீபத்தில் டெட்டானஸ் ஏற்பட்டு இறந்த அஞ்செட்டி கிராம சிறுவனுக்கும் அவனுக்கு காயம் ஏற்பட்ட பின் உடனடியாக டிடி ஊசி போடப்பட்டது. ஆயினும் அவனுக்கு டெட்டானஸ் நோய் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இது போன்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு தயவு கூர்ந்து நமது பிள்ளைகளுக்கு அவர்கள் பிறந்த முதல் வருட தடுப்பூசிகளை சிறப்பாக சரியாக வழங்கும் நாம்.. அவர்களின் ஐந்தாவது வயது (DT) , பத்தாவது வயது, பதினாறாம் வயது அதற்குப் பிறகு பத்து வருடம் ஒருமுறை டெட்டானஸ் தடுப்பூசிகளையும் சரியாக வழங்கிடுவோம் என்று உறுதி ஏற்போம் டெட்டானஸை முற்றிலுமாக ஒழிப்போம் நன்றி Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை https://www.facebook.com/100002195571900/posts/24463025596687286/?rdid=9R4LokMDKkQyVDfQ#
  4. வத்திராயன் முருகன் கோயிலிற்கு அருகாமையில் மண்ணில் புதைந்திருந்த எறிகணை மீட்பு 19 JUL, 2025 | 09:31 AM யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு வத்திராயன் முருகன் கோயிலிற்கு அருகாமையில் வெள்ளிக்கிழமை (18) வெடிக்காத நிலையில் மண்ணில் புதைந்திருந்த எறிகணை ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, குறித்த பகுதியில் வீடு ஒன்றினை நிர்மாணிப்பதற்க்காக அத்திவாரம் வெட்டிக் கொண்டிருந்தபோது மண்ணில் புதைந்திருந்த நிலையில் எறிகணை ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உடனடியாக கட்டுமான வேலைகளை நிறுத்திவிட்டு சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்றிருந்த மருதங்கேணி பொலிஸார் குறித்த எறிகணையை கைப்பற்றியுள்ளனர். இது யுத்த காலத்தில் ஏவப்பட்ட எறிகணையாக இருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/220365
  5. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் ப்ரியங்கா ஜக்தப் பிபிசி மராத்திக்காக 37 நிமிடங்களுக்கு முன்னர் *எச்சரிக்கை: இதில் இடம் பெறும் தகவல்கள் உங்களுக்கு சங்கடம் தரலாம். மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இருந்து பர்பானி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் இருந்து பச்சிளம் குழந்தை ஒன்று தூக்கி வீசப்பட்டதாக காவல் துறை வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. ஜூலை 15-ஆம் தேதி பத்ரி - செலு தேசிய நெடுஞ்சாலையில், தேவேந்திர ஷிவாரா என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அக்குழந்தையை காவல்துறையினர் மீட்ட போது, அக்குழந்தையின் உடலில் உயிரில்லை. குழந்தையின் பெற்றோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகிறது காவல்துறை. இந்த விவகாரத்தில் நடந்தது என்ன? ஏன் பச்சிளம் குழந்தை பேருந்துக்கு வெளியே வீசப்பட்டது? நடந்தது என்ன? ஜூலை 15-ஆம் தேதி காலை வழக்கம் போல் பத்ரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார் காவல்துறை அதிகாரி அமோல் ஜெய்ஸ்வால். அப்போது அவருக்கு தன்வீர் ஷேக் என்ற நபரிடம் இருந்து அழைப்பு ஒன்று வந்தது. தன்வீர் மிகவும் பதற்றத்துடன், "பச்சிளம் குழந்தை ஒன்றை யாரோ பேருந்தில் இருந்து தூக்கி வீசிச் சென்றுள்ளனர். செலு சாலைக்கு அருகே இருக்கும் கால்வாய்க்கு அருகே வீசிச் சென்றுள்ளனர். காவல்துறையினரின் உதவி எங்களுக்கு அவசரமாக தேவை," என்று கூறியுள்ளார். இதைக் கேட்டவுடன் தன்வீர் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்தார் ஜெய்ஸ்வால். காவல்துறையினரிடம் மேற்கொண்டு பேசிய தன்வீர், "நாங்கள் வழக்கம் போல் சாலையின் இந்த பகுதியில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்தோம். அப்போது ஓடும் பேருந்தில் இருந்து ஏதோ ஒன்று தூக்கி வீசப்படுவதை பார்த்தோம். 100 அடிக்கு முன்னாள் அந்த பேருந்து சென்று கொண்டிருந்தது. ஒரு சில நிமிடம் அங்கே நின்ற பேருந்து, பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டது," என்று கூறினார். அந்த பொருள் தூக்கி வீசப்பட்ட இடத்திற்குச் சென்று பார்த்தேன். அங்கே கறுப்பு - நீல நிற துணியில் சுற்றப்பட்ட ஆண் குழந்தையை பார்த்தேன் என்று தன்வீர் கூறியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அமோல் ஜெய்ஸ்வாலிடம் தன்வீர், அந்த பேருந்தின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். அமோல் ஜெய்ஸ்வால் உடனடியாக காவல்துறை ஆய்வாளர் மகேஷ் லந்தேகேவிடம் தகவலை தெரிவித்து, ஆம்புலன்ஸை வரவழைத்தார். இந்த தகவல் கிடைத்தவுடன் மகேஷ், கான்ஸ்டபிள் விஷ்ணு வாக் மற்றும் அவருடைய குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்கப்பட்டது எப்படி? சம்பவ இடத்திற்கு சென்ற மகேஷின் குழுவினர் அந்த பேருந்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். பேருந்தின் உரிமையாளர் சுயோக் அம்பில்வாதேவுக்கு அழைப்பு விடுத்து நடந்த சம்பவத்தை அவர் எடுத்துரைத்தார். பேருந்து எங்கே இருந்தாலும் அதனை உடனடியாக நிறுத்தும்படியும் அவர் கேட்டுக் கொண்டார். பிபிசி மராத்தி அந்த பேருந்து உரிமையாளரிடம் பேசியது. "காலை 7.30 மணி அளவில் மகேஷிடம் இருந்து அழைப்பு வந்தது. பச்சிளம் குழந்தையை யாரோ ஒருவர் ஓடும் பேருந்தில் இருந்து வீசிச் சென்றதாக அவர் கூறினார். அந்த பேருந்து எங்கே சென்று கொண்டிருந்தாலும் அதனை உடனே நிறுத்தும்படியும், காவல்துறையினர் வரும் வரை அதில் இருந்து யாரும் இறங்கக் கூடாது என்றும் மகேஷ் கேட்டுக் கொண்டார்," என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் சுயோக் பேருந்தை அடைந்த அதேநேரத்தில் காவல்துறையினரும் அங்கே வந்துவிட்டனர். சுயோக் அளித்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் பேருந்தை சோதனை செய்து, பச்சிளம் குழந்தையை வீசிச்சென்ற நபர்களை அழைத்துச் சென்றனர். குழந்தையின் அம்மாவை பர்பானியில் அமைந்திருக்கும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டார். காவல்துறையினர் பேருந்தில் பயணித்த மற்ற நபர்களிடமும் விசாரணை நடத்தினர். பத்ரி காவல் நிலையத்திற்கு பேருந்து எடுத்துச் செல்லப்பட்டு முறையாக சோதனை மேற்கொள்ளப்பட்டு, பிறகு விடுவிக்கப்பட்டது. "நாங்கள் அங்கே சென்ற போது, அப்பெண் பேருந்திலேயே அக்குழந்தையை பிரசவித்திருக்கிறார் என்று தெரியவந்தது. ஒரு சிறு சத்தம் கூட எழவில்லை எனவே அங்குள்ள யாருக்கும் எதுவும் தெரியவில்லை என்று காவல்துறையினர் எங்களிடம் தெரிவித்தனர்," என்று சுயோக் பிபிசி மராத்தியிடம் தெரிவித்தார். பேருந்து பயணத்தின் போது அப்பெண் பிரசவித்ததற்கான அனைத்து தடயங்களையும் காவல்துறையினர் சேகரித்துவிட்டனர் என்றும் அவர் கூறினார். குழந்தை தூக்கி எறியப்பட்டது ஏன்? காவல்துறையினர் வழங்கிய தகவலின் படி, குழந்தையின் தாய்க்கு வயது 19. தந்தைக்கு 21. பர்பானி பகுதியில் வசித்து வரும் அவர்கள் சிகாராபூரில் இருந்து தங்களின் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது தான் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அமோல் ஜெய்ஸ்வால் பதிவு செய்துள்ள புகாரில், "எங்களுக்கு அக்குழந்தை வேண்டாம் என்பதால் நாங்கள் வீசிச்சென்றோம்," என்று அந்த தம்பதி கூறியதாக குறிப்பிட்டுள்ளார். "குழந்தையை பராமரிக்க இயலாது என்பதால் அவர்கள் குழந்தையை துணி ஒன்றில் சுற்றி ஓடும் பேருந்தில் இருந்து வீசிச் சென்றுள்ளனர்," என்று புகாரில் குறிப்பிடப்படுள்ளது. காவல் ஆய்வாளர் மகேஷ் இதுகுறித்து பேசும் போது, குழந்தையின் மருத்துவ ஆய்வு முடிவுகள் வந்த பிறகு தான், குழந்தை பிறக்கும் போதே இறந்து தான் பிறந்ததா அல்லது தூக்கி வீசப்பட்டதால் இறந்ததா என்பது தெரிய வரும் என்று குறிப்பிட்டார். இந்த தம்பதியினர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனை அறிக்கை முடிவுகள் வந்த பிறகு விசாரணைக்கு மறுபடியும் அழைக்கப்படுவார்கள் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது. அந்த தம்பதியினர் மீது ஐ.பி.சி. 94, 3(5) பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிறந்த குழந்தையின் உடலை கைவிட்டுச் செல்லும் குற்றத்திற்காக பதியப்படும் பிரிவு இது. குழந்தையின் தந்தையிடம் பிபிசி மராத்தி பேச முயற்சி செய்தது. ஆனால் அவரிடம் இருந்து எந்த கருத்தையும் பெற இயலவில்லை. அவர்கள் தரப்பு கருத்தை கேட்ட பிறகு இந்த செய்தி புதுப்பிக்கப்படும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cg4rd4kkxlxo
  6. Published By: VISHNU 18 JUL, 2025 | 09:25 PM இசைத்துறைக்கு தென்னிந்தியாவில் உள்ளது போன்ற வாய்ப்புக்கள் வசதிகள் இங்கே குறைவு. ஆனாலும் இங்குள்ள பிள்ளைகள் இசைத்துறையில் மிளிர இசை தொடர்பான வகுப்புக்கள், பயற்சிகளுக்கு என்னால் முடிந்த ஆதரவை நிச்சயமாக வழங்குவேன் என தென்னிந்திய பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை (19) நடைபெறவுள்ள இசை நிகழ்வில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள ஸ்ரீனிவாஸ், வெள்ளிக்கிழமை (18) மருத்துவ பீடத்தில் தனது மகள் சரண்ஜாவுடன் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்திற்கு வந்தது பெரும் சந்தோசம். உலகில் எந்த நாட்டுக்கு போனாலும் அங்கே ஈழ தமிழர்கள் எனக்கு தரும் அன்பும் ஆதரவும் அதிகம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த நேரம் முதல் இங்குள்ளவர்கள் அன்பை மட்டுமே வெளிப்படுத்திக்கொண்டு இருக்கின்றார்கள். நடைபெறவுள்ள இசை நிகழ்வு மருத்துவ பீட மாணவர்கள் தமது கற்றல் செயற்பாட்டுக்கு சென்று வருவதற்கு பேருந்து வாங்க நிதி திரட்டவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இசை நிகழ்வு மிக பிரமாண்டமான முறையில், நடைபெறும். நிகழ்வில் உங்களுக்கு பிடித்த பாடல்களை பாடி மகிழ்விப்போம். என்னுடன் பாடல்களை பாடி உங்களை மகிழ்விக்க, எனது மகள் சரண்ஜா, அக்சயா, ஜீவன் மற்றும் உங்கள் பாடகி கில்மிசா ஆகியோரும் சேர்ந்து பாடல்களை பாடி மகிழ்விக்க காத்திருக்கிறோம். மருத்துவ பீட மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்காக நிதி திரட்டும் இசை நிகழ்வு என்பதனால் நான் ஊதியம் பெறவில்லை. கற்றல் செயற்பாட்டுக்கு என்னால் முடிந்தது. அதே போன்று இசை நிகழ்வுக்கு உங்கள் ஆதரவுகளை வழங்க வேண்டும். தற்காலத்தில் திரையுலகில் பாடகர்களுக்கான வாய்ப்புக்கள் குறைந்துள்ளது. முன்னைய கால படங்களில் ஒவ்வொரு படங்களிலும் ஐந்தாறு பாடல்கள் இருக்கும். தற்கால படங்களில் அவ்வாறு இல்லை. ஆனாலும் தற்போது இசை மேடைகள் தாரளமாக பாடகர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கி வருகிறது. அதனால் பாடகர்களுக்கு வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. அதனூடாக பாடகர்கள் சம்பாதிக்கின்றார்கள் என்பதனை தாண்டி இசை மேடைகளில் நேரடியாக பாடி இரசிகர்களை மகிழ்விப்பது ஒரு மன திருப்தியை பாடகர்களுக்கு தருகிறது. யாழ்ப்பாணத்தில் திறமையான கலைஞர்கள் நிறையவே இருக்கின்றார்கள். தற்போது தென்னிந்திய தொலைக்காட்சிகள் ஊடாக அவர்களின் திறமைகள் வெளிப்படுகின்றன. இருந்தாலும் தென்னிந்தியாவில் உள்ள வாய்ப்புகள் வசதிகள் போன்று இங்கு இல்லை. அதனால் இசைத்துறை சார்ந்து கற்பவர்களுக்கு வகுப்புகள் பயற்சிகள் தொடர்பில் இங்குள்ளவர்கள் ஏற்பாடுகளை செய்தால் நிச்சயமாக எனது ஆதரவை வழங்குவேன் என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/220355
  7. விடுதலைப் புலிகள் சிங்களவர்களை படுகொலை செய்தது மனிதப் படுகொலை இல்லையா? அதற்கு யார் நீதியை பெற்றுக்கொடுப்பது? - அசேப எதிரிசிங்க 18 JUL, 2025 | 07:30 PM (இராஜதுரை ஹஷான்) விடுதலை புலிகள் சிங்களவர்களை படுகொலை செய்தது. இது மனித படுகொலை இல்லையா, இதற்கு யார் நீதியை பெற்றுக்கொடுப்பது. பழைய செம்மணி புதைகுழி தற்போது தோண்டப்படுகிறது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தவர்கள் மனித படுகொலையாளிகளாகவும், பயங்கரவாதிகள் வீரர்களாகவும் சித்தரிக்கும் நிலை தற்போது காணப்படுகிறது. ஐ.நா சபை நடுநிலையாக வகையில் செயற்பட வேண்டும் என்று நாட்டுக்கான தேசிய அமைப்பின் செயலாளர் அசேப எதிரிசிங்க தெரிவித்தார். கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தின் முன்பாக வியாழக்கிழமை (17) எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்த நாட்டில் இடம்பெற்ற 30 ஆண்டுகால யுத்தத்தால் நாட்டில் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். ஒட்டுமொத்த மக்களின் மனித உரிமைகளும் மீறப்பட்டன. இவ்வாறான நிலையில் ஒருபகுதியை மாத்திரம் இலக்காகக் கொண்டு அவதானம் செலுத்தப்படுகிறது. இலங்கை இராணுவத்தினர் மனித உரிமை மீறல் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. விடுதலை புலிகள் அமைப்பினர் நாடு முழுவதும் மேற்கொண்ட 100 தாக்குதல்களின் படங்களை ஐக்கிய நாடுகள் சபையின் காரியாலயத்தின் முன்பாக காட்சிப்படுத்தியுள்ளோம். விடுதலை புலிகளின் அமைப்பினால் இந்த நாட்டில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். விடுதலை புலிகளின் அமைப்பினால் சிவில் பிரஜைகளின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது. இவற்றை ஆராய்வதை விடுத்து இலங்கை இராணுவத்தினர் மீது தான் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது. யுத்தத்துக்கு தலைமை தாங்கியவர்களை மனித படுகொலைகாரர்களாக்கி, பயங்கரவாதிகளை வீரர்களாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது. இதற்கு இலங்கை அரசாங்கமும், ஐக்கிய நாடுகள் சபையும் இடமளிக்க கூடாது. இந்த நாட்டில் இன்றும் நாட்டு பற்றுள்ளவர்கள் உள்ளார்கள் போலியான மனித உரிமைகளுக்கு ஐ.நா. சபை அடிபணிய கூடாது. உண்மையை ஆராய வேண்டும். விடுதலை புலிகள் சிங்களர்களை படுகொலை செய்தது. இது மனித படுகொலை இல்லையா, இதற்கு யார் நீதியை பெற்றுக்கொடுப்பது. பழைய செம்மணி புதைகுழி தற்போது தோண்டப்படுகிறது. சிங்களவர்களின் படுகொலை புதைகுழிகளை யார் அகழ்வது. மக்களாணையை அரசாங்கம் மலினப்படுத்தக் கூடாது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை நடுநிலையான வகையில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/220339
  8. Published By: DIGITAL DESK 2 18 JUL, 2025 | 06:57 PM சுற்றுலா விசாக்களில் இலங்கைக்கு வந்து, அவை காலாவதியான பிறகும் கிருலப்பனை பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 21 இந்திய பிரஜைகள், இணையம் மூலமாக சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை (18) குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள விசாரணை பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இடர் மதிப்பீட்டுப் பிரிவு சார்ந்த அதிகாரிகள், தங்கள் வசமுள்ள தரவுகளை பகுப்பாய்வு செய்த பின்னர், இந்த இந்திய பிரஜைகள் சட்டவிரோத இணைய சூதாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை கண்டறியப்பட்டது. கைது செய்யப்பட்ட அனைத்து இந்திய பிரஜைகளும் 22 - 36 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர். அவர்களை உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்காக வெலிசரவில் உள்ள தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்க, குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/220348
  9. கிராமங்களில் அழுகை இருக்கிறது, தன்னை மீறி துயரம் கூடுகையில் வருவது தானே. இன்னொரு துயரம் பிள்ளைகள், சகோதரங்கள் வரும் வரை உடலை பதப்படுத்தி 4 - 5 நாட்கள் வைத்திருக்க வீட்டில் இருப்பவர்களும் அழுது களைத்துவிடுவார்கள். முன்னைய காலங்கள் போல் இறந்து 24 மணித்தியாலங்களில் இறுதிச்சடங்கை முடிக்கவேணும்.
  10. 18 JUL, 2025 | 04:26 PM (எம்.நியூட்டன்) யாழ். தெல்லிப்பழை வைத்தியசாலை தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில், விசாரணைகள் நடத்தப்படாமல் இருப்பதற்கு காரணம் என்ன? ஆட்சியில் உள்ள அரசாங்கம் ஊழலுக்கு துணைபோகிறதா? என மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அமைச்சர் சந்திரசேகர் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது அர்ச்சுனா கூறுகையில், யாழ். தெல்லிப்பழை வைத்தியசாலை தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் கூறப்பட்டு வரும் நிலையில், அவை தொடர்பான முறையான விசாரணைகளை நடத்த தாமதிப்பது எதற்காக? தெல்லிப்பழை வைத்தியசாலை தொடர்பாக நான் பல விடயங்களை முன்வைத்துள்ளேன். வைத்தியசாலையின் பெயரை வைத்து சொந்தப் பெயரில் வங்கிக் கணக்குகளை திறக்க முடியுமா? வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கம், இரு கணக்குப் புத்தகங்களை பாவித்து பணம் கையாடப்பட்டுள்ளது. இவை தொடர்பில் நிதிக் குற்றப் பிரிவில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு அந்த வங்கிப் புத்தகத்தின் முகப்புப் பக்கங்கள் தேவையாக உள்ளது. அதனை ஒருங்கிணைப்புக் குழு எனக்கு பெற்றுக்கொடுக்கவேண்டும். மக்களின் பணத்தை மோசடி செய்தவர்களை கைவிட முடியாது. இந்த அரசாங்கம் ஊழலற்ற ஆட்சி எனக் கூறி ஆட்சியை பிடித்தது, இந்த அரசாங்கத்தின் அமைச்சராக, இருக்கும் நீங்கள் ஊழலை ஊக்குவிக்கும் அமைச்சரா என கேள்வி எழுப்பினார். மேலும், நான் கணக்காய்வு அறிக்கை கேட்டு 6 மாதங்கள் ஆகிறது. இன்னும் தரவில்லை. நான் ஏதும் கேட்டால் என்னை அச்சுறுத்துகிறார்கள். வழக்கு தொடருவோம் என்கிறார்கள். என்ன நடந்தாலும் பரவாயில்லை. மக்களின் பணத்தை கொள்ளையடிக்க விடமுடியாது. இந்த ஒருங்கிணைப்புக் குழு வைத்தியசாலையின் கணக்கு விபரங்களை எனக்கு பெற்றுத்தரவேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/220329
  11. 18 JUL, 2025 | 04:04 PM மரபிழந்த பாரம்பரிய பண்பாட்டை வெளிப்படுத்தி வவுனியா பிரதேச செயலக பண்பாட்டு விழாவை முன்னிட்டு ஊர்திப் பவனி சிறப்பாக இடம்பெற்றது. வவுனியா பிரதேச செயலகம் மற்றும் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில் வவுனியா பிரதேச கலாசார பேரவையும், பிரதேச கலாசார அதிகார சபையும் இணைந்து நடத்திய பண்பாட்டு ஊர்திப் பவனி பிரதேச செயலாளர் இ.பிரதாபன் தலைமையில் பிரதேச செயலக முன்றில் வெள்ளிக்கிழமை (18) ஆரம்பமாகியது. வவுனியா பிரதேச செயலக முன்றில் இருந்து ஆரம்பமாகிய ஊர்திப் பவனி தமிழர் பாரம்பரியம், கலாசாரம், வரலாறு, தொல்லியல், கலைகள் என்பவற்றை பறைசாற்றி கிராம மக்களின் பங்களிப்புடன் வவுனியா, கண்டி வீதியை அடைந்து பசார் வீதி, மணிக்கூட்டு கோபுர சந்தி, புகையிரத நிலைய வீதி, குருமன்காடு, மன்னார் வீதி ஊடாக சென்று பிரதேச செயலகம் முன்பாக நிறைவடைந்தது. இதில் தமிழர் வாழ்வியலின் பாரம்பரியத்துடன் தொடர்புடைய விவசாய முறைகள், நீர்பாசன முறைகள், உணவு தயாரித்தல், கைவினை உற்பத்திகள், வழிபாட்டு முறைகள், சடங்கு முறைகள், கிராமிய கலை மரபுகள், கிராமிய உணவு பழக்கவழக்கம் உள்ளிட் பல்வேறு அம்சங்களை தாங்கிய 47 க்கும் மேற்பட்ட ஊர்திகள் இதன் போது பவனி வந்திருந்தன. இந்நிகழ்வில் வடமகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன், வவுனியா அரச அதிபர் பீ.ஏ.சரத் சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் நா.கமலதாசன், வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் த.முகுந்தன், வவுனியா தெற்கு வலய பிரதி கல்விப் பணப்பாளர் அமல்ராஜ், அரச அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள், மதகுருமார், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமயம் சார் அமைப்புக்கள், கிராமிய மக்கள் எனப் பலரும் இதில் கலந்துது கொண்டதுடன், வீதிகளில் மக்களும் குழுயிருந்து அதனை பார்த்து உற்சாகப்படுத்தினர். https://www.virakesari.lk/article/220322
  12. மனித புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு வேண்டுகோள் Published By: DIGITAL DESK 2 18 JUL, 2025 | 04:03 PM நல்லிணக்கம் ஏற்படவேண்டுமாயின் தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்டுள்ள குண்டுதாக்குதல்கள், புதைகுழிகள், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலாவது சர்வதேச விசாரணைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என யாழ் கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக "செம்மணி புதைகுழி கிளறிய சில சிந்தனைகள்" என குறிப்பிட்டு அவர்கள் வெளியீட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்கள். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : 1996ம் ஆண்டு சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசாமி பரீட்சை முடிந்து செம்மணியூடாக வீடு திரும்பும் போது செம்மணியில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினரால் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டமையும் அவரைத்தேடிச் சென்ற அவரது தாயும் உறவுகளும் படுகொலை செய்யப்பட்டு அங்கே புதைக்கப்பட்டதும் பின்னர் இந்நிகழ்வுகள் வெளிவந்து குற்றவாளிகள் கோர்ப்புரல் சோமரட்ண ராஜபக்ஷ ஆகியோர் குற்றவாளிகளாகக்காணப்பட்டு 1998 ஆண்டு ராஜபக்ஷவிற்கு மரண தண்டனைத்தீர்ப்பு வழங்கப்பட்டு பின்னர் 2015ம் ஆண்டுக்குப்பின் கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டவை என்பன வரலாறுகள். கிருஷாந்தி குமாரசாமி கொலை வழக்கின் பிரதான குற்றவாளியாகிய சோமரட்ண ராஜபக்ஷ கொடுத்த வாக்குமூலத்தில் மேலும் சில தமிழ் மக்கள் செம்மணியில் கொல்லப்பட்டு அங்கு புதைக்கப்பட்டிருந்தார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தும் அப்போது செம்மணிப்பகுதி ஒரு பாரிய மனிதப்புதைகுழியாக இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தாலும் அதன்பின் அதுபற்றி எவரும் பெரிதாக பேசவில்லை. ஆயினும் சில மாதங்களுக்குமுன் செம்மணிப்பகுதியில் ஒரு தகனமேடைக்கெனத் துப்புரவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, மனித உடற் பாகங்கள் கண்டு பிடிக்கப்பட்டு நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் உத்தியோகபூர்வமாக அப்பகுதியில் நீதிமன்ற அனுசரணையுடன் தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது மேலும் பல எலும்புத் தொகுதிகள் கண்டுபடிக்கப்பட்டன. இரண்டு கட்டங்களாக இடம் பெற்ற அகழ்வுப்பணிகள் தற்காலிகமாக 10.7.2025 நிறுத்திவைக்கப்பட்போது ஏறக்குறைய 65 மனித உடற்தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. இவை இன்னும் பகுப்பாய்வு செய்யப்படவில்லையாயினும் மேலெழுந்தவாரியாக பார்க்கும் போது அதிர்ச்சியூட்டுபவையாகவுள்ளன. அவற்றுள் சில சிறுவர்களுடையது. ஒரு இடத்தில் சிறுவர்களது விளையாட்டு பொம்மை, பாடசாலை புத்தகப்பை, சிறுமியின் உடை, சில வளையல்கள் போன்ற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 15.7.2025 அன்று இவ்வழக்குக்குப் பொறுப்பான நீதிவான் அ. ஆனந்தராஜா முன்னிலையில் அகழ்வின் போது பிரசன்னமாயிருந்த தொல்லியல் பேராசிரிய ராஜ்சோம தேவாவும், சட்டவைத்திய அதிகாரி வைத்தியர் செல்லையா பிரணவனும் பிரசன்னமாயிருந்தனர். அப்போது தொல்லியல் பேராசிரியரும் சட்ட வைத்திய நிபுணரும் தமது இடைக்கால அறிக்கைகளில் இப்புதைகுழியில் உள்ள எலும்புக்கூடுகள் உள்ள இடம் ஒரு குற்றப்பிரதேசமாகவும், மனித உரிமை மீறல்கள் இடம் பெற்ற இடமாகவும் கருதப்படச்சான்றுகள் உள்ளன என்றும் குறிப்பாக 4-5 வயதுச்சிறுமியின் பகுப்பாய்வுக்குட்படுத்தப்படவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது சடலம் மேலும் இக்காலகட்டத்தில் கிருஷாந்தி கொல்லப்பட்டதற்கு (1996க்கு) முந்திய பிந்திய காலப்பகுதியில் யாழ் குடாநாட்டில் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக இராணுவ முகாம்களும் வீதிக்குவீதி சென்ற்றி போயின்ற்றுகளும் இருந்தன. சர்வ சாதாரணமாக கைதுகளும், கைது செய்யப்பட்டவர்கள் காணாமல் போவதும் இடம்பெற்றுவந்தன. யாழ் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இது பற்றி பாராளுமன்றத்தில் 2025 ஆனி ஆடி இடம் பெற்ற பாராளுமன்ற அமர்வுகளில் குறிப்பிட்டிருந்தார். ஆங்கிலத்தில் 'tip of the iceberg' (நீரில் மிதக்கும் பனிப்பாறையின் வெளியே தெரியும் சிறிய பகுதிஎன்று ஒரு சொற்றொடர் உண்டு, பாரிய பனிப்பாறைகள் கடலில் மிதந்துவரும் போது வெளியே கண்ணுக்குத்தெரியும் சிறியதொரு பனிக்கட்டியை இது குறிக்கின்றது. ஆனால் அதைப்போல் ஏழு மடங்கு பெரிய பனிப்பாறை தண்ணிருக்குள் அமிழ்ந்திருப்பது வெளியே தெரியாது) இது போலத்தான் இதுவரை செம்மணி சிந்துபாத்திப்பகுதியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட 65 மனித எலும்புக்கூடுகள் (பாடசாலை சிறுமிகளது உட்பட) சோமரட்ண ராஜபக்சவின் சாட்சியத்தின் அடிப்படையில் பார்க்கும் போது இந்த எலும்புக்கூடுகள் இப்பகுதியில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட 600க்குக்குறையாத எலும்புக்கூடுகளாயிருக்கலாம் என்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்றாக இருக்க முடியாது என்ற முடிவுக்கு வரமுடியும். இதற்குமேலாக 2024ம் ஆண்டு குழாய்நீர் வசதி வழங்க சில அகழ்வு மேற்கொள்ளப்பட்ட கொக்கு தொடுவாயில் கண்டெடுக்கப்பட்ட சூட்டுக்காயங்களுடன் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட இறந்த இளைஞர், இளம் பெண்களுடைய எலும்புக்கூடுகள், மன்னார் பாலத்துக்கருகாமையில் 'சதோச' வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டு இதுவரை முடிவு வெளிவராத எலும்புகூட்டு விபரங்கள், திருக்கேதிஸ்வரத்தில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் எல்லாவற்றையும் செம்மணியில் கண்டெடுக்கப்பட்டதை பார்க்கும் போது எலும்பு கூடுகள் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டவர்களுள் வீதமானவர்களது எலும்புக்கூடுகள் என்ற முடிவுக்கு வரலாம். அண்மையில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழு கமிஷனர் வோக்கர் டக் இலங்கைக்கு வந்த போது யாழ்ப்பாணத்திற்கும் வந்திருந்தார். அப்போது அணையா விளக்கு' நிகழ்வும் சிவில் சமுகங்கள் செயற்பாட்டாளர்கள் சரியான நேரத்தில் செம்மணிப்பகுதியில் ஏற்பாடு செய்த 3 நாள் கவன ஈர்ப்பு நிகழ்விலும் கலந்து கொண்டது வரவேற்கத்தக்கது. ஆயினும் இவரது கருத்துக்கள் விசாரணையில் சர்வதேச பங்களிப்பை சுட்டிக்காட்டாதிருப்பது பெரும் ஏமாற்றமே. 3000 நாட்களைக் கடந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் போரின் பின் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் எங்கே என்று கவனயீர்ப்பை நடத்திக் கொண்டிருந்தார்கள். இந்த 3000 நாட்களில் கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்களுள் 200க்கு மேற்பட்டவர்கள் தமது உறவுகளைக் காணாது இறந்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பலவிதமான வாக்குறுதிகளுடன் பதவிக்கு வந்து தொடர்ந்தும் புதுப்பித்த வாக்குறுதிகளை வழங்கிக்கொண்டிருக்கும் தற்போதைய அரசின் செயற்பாடும் 'பேச்சு பல்லக்கு தம்பி கால் நடை' என்று தான் உள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் இந்த அரசின் செயற்பாடு ஒரு அங்குலம் தானும் முன்னேறவில்லை. நல்லிணக்கத்தைக்கொணர்வோம் என்று பதவிக்கு வந்த தற்போதைய அரசு தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினை சம்பந்தமாக அதன் செயற்பாடுகள் மந்த கதியிலேயே உள்ளன. வீதிகள் திறக்கப்பட்டாலும் மறுபுறத்தில் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள சில வீதிகள் காணிகள் இன்னும் முறைப்படி விடுவிக்கப்படவில்லை. பாரம்பரியக்காணிகள் கிழக்கில் தமிழரது பெரும்பான்மையினருக்குத் தாரைவார்க்கப்படுகின்றன. வெடுக்குநாறி, குருத்தூர், தையிட்டி ஆகிய இடங்களில் தமிழ் மக்களின் தொன்மை மிகு இடங்கள் பறிக்கப்பட்டமைக்கு தீர்வு காணப்படவில்லை. பயங்கரவாத தடைச்சட்டம் இன்னமும் நீக்கப்பட்டபாடில்லை. 2009 ம் ஆண்டு யுத்தம் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு முடிவுக்கு வந்த பின் போர்க்குற்றங்கள் (சரணடைந்தவர்களைக் கொல்வது உதாரணம் : இசைப்பிரியா, பாலச்சந்திரன் போன்றவர்கள்) பற்றிய பொறுப்புக்கூறல் இதுவரை இடம் பெறவில்லை. செம்மணி, கொக்குத்தொடுவாய், மன்னார் திருக்கேதிஸ்வரம் போன்ற இடங்களில் உள்ள புனித குழிகள் பற்றிய அகழ்வுக்கும் ஆய்வுக்கும் உள்நாட்டில் நிபுணத்துவம் இல்லையென்று தெரிந்தும் வெளிநாட்டு தலையீடுகளுக்கு அனுமதி மறுப்பு. போர்க்காலத்தில் இடம் பெற்ற படுகொலைகள் உதாரணம், நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் ஆலயக்குண்டு வீச்சு, நாகர்கோவில் குண்டுவீச்சு, புனித ஜேம்ஸ் ஆலய குண்டுவீச்சு, மடு தேவாலய செல் வீச்சு, மூதூர் வெளிநாட்டு தொண்டு நிறுவன ஊழியர் படுகொலை, திருகோணமலையில் பரீட்சை எழுதிமுடித்திருந்த 5 மாணவர் படுகொலை போன்றவை எவற்றிலும் உள்நாட்டுப் பொறிமுறையில் ஒரு அங்குலம் முதலாக முன்னேற்றம் இல்லை. இதனால் தான் தமிழ் மக்கள் நல்லிணக்கம் ஏற்படவேண்டுமாயின் மேற்குறிப்பிட்ட சில விடயங்களிலாவது வெளிநாட்டு தலையீடு ஏற்பட்டிருக்க வேண்டும். சாத்வீரசேகர, விமல்வீரவன்ச, விமல ரத்னதேரர் போன்றவர்களது இனவாத கருத்துக்களுக்கு இவ் அரசும் அடிபணிகிறது போலத் தென்படுகிறது. 2009ம் ஆண்டுக்குமுன் குறிப்பாக 30 ஆண்டுகாலம் நடந்த உக்கிரமான மோதல்களில் பல்லாயிரக்கணக்கில் பொதுமக்கள் விமானக்குண்டு வீச்சுக்கள் மூலமும் தரையில் கடத்தப்பட்டதும், கைது செய்யப்பட்டதும், சித்திரவதைக்குள்ளாகி, கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு, கடலில் சாதாரண பயணிகள் கொல்லப்பட்டதாலும் (குமுதினி படுகொலை) ஆசியாவை இனப்படுகொலை அல்லது இனச்சுத்திகரிப்புக்களின் வெளிப்பாடுகளே. அத்துடன் யாழ் நூலக எரிப்பு, பொதுமக்களின் காணிகள் ஆக்கிரமிப்பு, ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் பெளத்த விகாரைகள் நிர்மாணம் எல்லாம் இனஅழிப்பின் பல்வேறு பரிமாணங்களே. அத்துடன் ஒவ்வொரு வருடமும் 2009ம் ஆண்டுக்குப்பின் யுத்த வெற்றி நாள் கொண்டாடப்பட்டு கடற்படை, விமானப்படை, தரைப்படையினருக்கு யுத்தகால வீரதீரச்செயல்களுக்குப்பதவி உயர்வுகளும், பதக்கங்களும் வழங்கப்படுகின்றன. மேற்குறிப்பிட்டவற்றுள் எந்த வீரதீரச்செயல்களுக்காக இப்பதக்கங்களும் பதவி உயர்வுகளும் வழங்கப்படுகின்றன? இது போன்ற துன்பியல் நிகழ்வுகள் இனி நிகழாது, நல்லிணக்கமே எமது குறிக்கோள் என்று பதவிக்கு வந்த இவ்வரசு இவ்வருட வெற்றி விழாவில் மேற்படி வீர தீரச்செயல்களுக்காக பதவி உயர்வுகளும் பதக்கங்களும் வழங்கியிருந்தது என்பது சுட்டிக்காட்டத்தக்கது என்றுள்ளது. https://www.virakesari.lk/article/220320
  13. பட மூலாதாரம்,SURAH NIYAZI படக்குறிப்பு, தீபக் மஹவார், ராகோகரில் உள்ள ஜேபி கல்லூரியில் பல ஆண்டுகளாக பாம்புகளின் நண்பராக (பாம்புகளை மீட்கும்) பணியாற்றினார் கட்டுரை தகவல் ஷுரைஹ் நியாஸி பிபிசி ஹிந்திக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் மத்திய பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் உள்ள ராகோகரில், 'பாம்புகளின் நண்பர்' தீபக் மஹவார் அலட்சியத்தால் உயிரிழந்துள்ளார். மீட்கப்பட்ட பாம்பை காட்டில் விடுவிப்பதற்குப் பதிலாக, தனது கழுத்தில் போட்டுக் கொண்டார். கழுத்தை சுற்றியிருந்த பாம்பு கடித்ததில் அவர் உயிரிழந்தார். முதலில், பாம்புகடியை சாதாரணமாக எடுத்துக் கொண்டு, முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார். ஆனால் நஞ்சு படிப்படியாக பாதிக்கவே, அவரது நிலை இரவில் மோசமடைந்தது. மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் இறந்தார். பாம்புகளை மீட்பதில் அந்த வட்டாரத்தில் பிரபலமாக இருந்த தீபக், இதற்காகவே அவர் ஜேபி கல்லூரியில் பணியமர்த்தப்பட்டிருந்தார். ராகோகரில் ஒரு வீட்டில் பாம்பு புகுந்துவிட்டதாக திங்கட்கிழமை நண்பகல் சுமார் 12 மணிக்கு அவருக்கு ஓர் அழைப்பு வந்தது. தீபக் அந்தப் பகுதியை அடைந்து பாம்பை பாதுகாப்பாக மீட்டார். இதற்கிடையில், அவரது 12 வயது மகனின் பள்ளியிலிருந்து அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது, பள்ளி மூடப்பட்டுள்ளதாகவும், வந்து மகனை அழைத்துச் செல்லலாம் என்றும் கூறப்பட்டது. அவசரத்தில் பாம்பை பெட்டியில் அடைப்பதற்குப் பதிலாக, தனது கழுத்தைச் சுற்றி போட்டுக்கொண்டு பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். தனது மகனை வண்டியின் பின்புறம் அமர வைத்துக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, கழுத்தைச் சுற்றியிருந்த பாம்பு அவரது வலது கையில் கடித்தது. பாம்பு கடித்தவுடன் மருத்துவமனையை அடைந்த தீபக் மஹவார் பட மூலாதாரம்,SURAH NIYAZI படக்குறிப்பு, மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்திருந்தால் தீபக் காப்பற்றப்பட்டிருக்கலாம் என மருத்துவர் கூறுகிறார் பாம்பு கடித்தவுடனே, தீபக் தனது நண்பர் ஒருவரை அழைத்தார், அவர் வந்து ராகோகரில் மிக அருகே இருந்த மருத்துவமனைக்கு தீபக்கை அழைத்துச் சென்றார். அங்கு முதல்கட்ட சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர்கள் அவரை குணாவில் உள்ள மருத்துவமனைக்குச் செல்ல அறிவுறுத்தினர். தனது உடல்நிலையில் ஏற்பட்ட முன்னேற்றத்தைப் பார்த்த தீபக், மாலையில் தனது வீட்டுக்குச் சென்று இரவு உணவை முடித்துக்கொண்டு தூங்கச் சென்றுவிட்டார். ஆனால் இரவில் அவரது நிலை மோசமடைந்த நிலையில் அவர் காலையில் உயிரிழந்தார். "அவர் எங்களிடம் வந்தபோது அவரது நிலை சாதரணமாக இருந்தது. அவரது முக்கிய உறுப்புகள் நலமாக இருந்தன, அவர் பேச்சு சாதாரணமாக இருந்ததுடன் முழு நினைவுடன் இருந்தார்," என ராகோகர் ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சேர்ந்த மருத்துவர் தேவேந்திர சோனி பிபிசியிடம் தெரிவித்தார். "நாங்கள் நிலையான நடைமுறைகளின்படி உடனடியாக அவருக்கு சிகிச்சையைத் தொடங்கினோம். அவருக்கு ஐவி செலுத்தப்பட்டது, நஞ்சு முறிவு மருந்து மற்றும் இதர மருந்துகளைக் கொடுத்த பின்னர் இங்கு அனைத்து வசதிகளும் இல்லாததால் குணாவில் உள்ள மருத்துவமனைக்குச் செல்ல அறிவுறுத்தினோம்." குணாவில் உள்ள மருத்துவமனையில் சில மணிநேரம் இருந்த தீபக், நன்றாக இருப்பதாக உணர்ந்ததால் வீடு திரும்பிவிட்டதாக மருத்துவர் சோனி தெரிவித்தார். "மிக மெதுவாகவே வேலை செய்யக்கூடிய நஞ்சைக் கொண்ட நாகம் போன்று அந்தப் பாம்பு தெரிந்தது. இதைப் போன்ற சூழ்நிலைகளில், நோயாளிகள் குறைந்தது 24 மணிநேரத்திற்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பது அவசியம். அவர் வீடு திரும்பாமல் மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பில் இருந்திருந்தால் உயிர் பிழைத்திருக்கக்கூடும்," என மருத்துவர் சோனி தெரிவித்தார். பாம்பு மீட்கும் திறன் பெற்றுத் தந்த வேலை பட மூலாதாரம்,SURAH NIYAZI I படக்குறிப்பு, அவரது இளைய சகோதரர் நரேஷ் மஹவாரின் கூற்றுப்படி இதற்கு முன் பலமுறை தீபக்கை பாம்பு கடித்துள்ளது தீபக் மஹவார் ராகோகரில் இருக்கும் ஜேபி கல்லூரியில் பாம்புகளின் நண்பராக (பாம்பு பிடிப்பவர்) பணியாற்றி வந்தார். அருகில் உள்ள கிராமங்களில் பாம்பு இருப்பதாகவும், அதனை மீட்க வேண்டும் என கோரிக்கை வந்தால், அவர் அங்கே சென்று பாம்புகளை மீட்பார். சம்பவம் நடந்தபோது, தீபக் தனது இளைய மகனை பள்ளியில் இருந்து அழைத்து வரச் சென்றிருந்தார். தீபக்கிற்கு இரண்டு மகன்கள் உள்ளனர், அவர்களில் ஒருவருக்கு 14 வயது, மற்றொருவருக்கு 12 வயது. அவரது மனைவி சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தீபக்கின் இளைய சகோதரர் நரேஷ் மஹவார், "தீபக் இந்தப் பணியை பல ஆண்டுகளாகச் செய்துகொண்டிருந்தார், பாம்பு பிடிக்கும் கலையை அவர் வேறு யாரிடம் இருந்தோ கற்றுக்கொண்டார். கடந்த சில ஆண்டுகளில் அவர் தனது கலையில் நிபுணத்துவம் பெற்றிருந்ததால் அவருக்கு ஜேபி கல்லூரியில் வேலை கிடைத்தது. இந்த கல்லூரி பாம்புகள் அதிகம் காணப்படும் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது" என பிபிசியிடம் தெரிவித்தார். "இதற்கு முன்பும் தீபக்கை பல முறை பாம்புகள் கடித்துள்ளன. பெரும்பாலும் மூலிகைகளைக் கொண்டு தனக்குத் தானே சிகிச்சை செய்து கொள்வார். ஆனால் ஒருமுறை அவர் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிருந்தது. இந்த முறையும் இது சாதாரண வீக்கம்தான் எனவும், தான் விரைவில் குணமடைந்து விடுவோம் எனவும் நினைத்தார். அதனால் அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை," என நரேஷ் கூறுகிறார். "இந்தச் சம்பவத்தைப் பற்றி எழுதும்போது மனிதாபிமான உணர்வுடன் எழுத வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள். என் சகோதரர் இறந்துவிட்டார், இப்போது அவரது இரு சிறிய குழந்தைகள் மட்டுமே உள்ளனர். அரசு இந்த விவகாரத்தை மனிதாபிமான கண்ணோட்டத்தில் பார்த்தால், ஒருவேளை ஏதாவது உதவி கிடைக்கலாம். இதனால் இந்தக் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாக்கப்படலாம்," என அவர் கூறினார். "தவறான புரிதல்களைத் தாண்டி, தீபக் பலமுறை தனது உயிரைப் பணயம் வைத்து மற்றவர்களுக்கு உதவிய நல்ல மனிதராக இருந்தார்" என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் பாம்புக்கடி மரணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் பாம்புக் கடியால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு இந்தியா பெயர் பெற்றது. உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகள்படி இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 50 லட்சம் பாம்புக் கடி சம்பவங்கள் பதிவாகின்றன. இவற்றில் சுமார் 25 லட்சம் சம்பவங்களில், மக்களின் உடலை பாம்பின் நஞ்சு பாதிக்கிறது. பதிவான பாம்புக்கடி சம்பவங்களின் அடிப்படையில் இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் ஒரு லட்சம் பேர் பாம்புக் கடியால் உயிரிழக்கின்றனர். சுமார் நான்கு லட்சம் பேர் உடலின் ஏதோ ஓர் உறுப்பை இழக்கின்றனர் அல்லது அவை நிரந்தரமாகச் செயல்படாமல் போகின்றன. கடந்த 2020ஆம் ஆண்டு பிபிசியின் செய்தி ஒன்றிலும் இந்தியாவில் ஆண்டுதோறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாம்புக் கடியால் உயிரிழக்கின்றனர் எனக் கூறப்பட்டுள்ளது. பாம்புக் கடி அதிகமுள்ள பகுதிகளில் ஒன்றாக மத்திய பிரதேசம் கருதப்படுகிறது. இங்கு மருத்துவமனை மற்றும் உடற்கூறாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் ஒருவரின் மரணம் பாம்புக் கடியால் ஏற்பட்டது என நிரூபிக்கும் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு வழங்குகிறது. 'தி ராயல் சொசைட்டி ஆஃப் ட்ராபிகல் மெடிசின் அண்ட் ஹைஜீன்' இதழில் 2024ஆம் ஆண்டு வெளியான ஓர் ஆய்வு, இழப்பீடுகள் குறித்து பகுப்பாய்வு செய்திருந்தது. இதில், 2020-21 மற்றும் 2021-22ஆம் ஆண்டுகளில் மத்திய பிரதேச சுகாதாரத் துறையால் வழங்கப்பட்ட புள்ளிவிவரங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வில், இந்த இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 5,728 குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டதாகக் கண்டறியப்பட்டது. மாநில அரசு, பாம்புக் கடியால் ஏற்பட்ட மரணங்களுக்கு மொத்தம் ரூ. 229 கோடி நிவாரணத் தொகையை விநியோகித்து இருந்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y76ljgkr8o
  14. 18 JUL, 2025 | 03:31 PM (எம்.நியூட்டன்) சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்குடன் வேலணை - சாட்டி கடற்கரையோரத்தில் காணப்படும் சாதாளை தாவரங்களை அகற்றி, கடற்கரையை தூய்மையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வேலணை பிரதேச சபையின் தவிசாளர் அசோக்குமார் தெரிவித்தார். அத்துடன் இந்த நடவடிக்கையின்போது அகற்றப்படும் சாதாளைகள், தாவரங்களுக்கான சிறந்த பசளையாக பயன்படுத்தக்கூடியதாக இருப்பதால் இந்த சாதாளையை மிகக் குறைந்த விலைக்கு பொதுமக்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆடி அமாவாசை தினத்திற்கு முன்னராக இந்த செயற்பாட்டை பிரதேச சபை மேற்கொள்ளவுள்ளதால் கடற்சாதாளைகளைப் பெற விரும்புவோர் வேலணை பிரதேச சபையின் தலைமை அலுவலகத்துடன் தொடர்புகொண்டு உரிய கட்டணங்களைச் செலுத்தி தேவையான கடற்சாதாளைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றார். https://www.virakesari.lk/article/220316
  15. யாழை வந்தடைந்தனர் பாடகர் ஸ்ரீனிவாஸ் தலைமையிலான குழுவினர் 18 JUL, 2025 | 04:40 PM தென்னிந்திய பிரபல பாடகர் ஶ்ரீநிவாஸ் பங்குபெறும் இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் சனிக்கிழமை (19) மாலை ஆறு மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில், ஸ்ரீநிவாஸ் தலைமையில் தென்னிந்திய பாடகர்கள், இசை கலைஞர்கள் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஊடாக வெள்ளிக்கிழமை (18) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். அதன் போது, யாழ்ப்பாணத்தில் அவர்களுக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் போக்குவரத்து வசதிகளுக்காக பேருந்து ஒன்றை கொள்வனவு செய்வதற்கான நிதியை திரட்டும் முகமாக குறித்த இசைநிகழ்ச்சி யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு ஒரு களியாட்ட நிகழ்வாக அல்லாமல் மருத்துவ பீட மாணவர்களையும் மருத்துவ சமூகத்தையும் மேம்படுத்தும் ஒரு நிகழ்வாக இது காணப்படும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/220318
  16. சட்டவிரோத பிரமிட் திட்டங்கள் தொடர்பில் விசேட வௌிப்படுத்தல் Jul 18, 2025 - 17:11 நாட்டில் 50க்கும் மேற்பட்ட அடையாளம் காணப்படாத சட்டவிரோத பிரமிட் திட்டங்கள் செயல்பட்டு வருவதாக இலங்கை மத்திய வங்கியின் நிதி மற்றும் நுகர்வோர் உறவுகள் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் சட்டத்தரணி யானக ரணவீர தெரிவித்துள்ளார். டி.வி தெரணவில் ஒளிபரப்பான "ரீ பில்ட் சிறிலங்கா" நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், இதுவரை 22 பிரமிட் திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறினார். இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், "இருபத்தி இரண்டு பிரமிட் திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை குறித்த மேலதிக விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் அடையாளம் கண்டிருப்பது அவ்வளவுதான். இந்த நேரத்தில் கூட இந்த பிரதேசத்திற்குள் மிகப் பெரிய எண்ணிக்கையிலானவர்கள் செயல்படுகிறார்கள். ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் இருப்பதாகச் சொல்வது சரியாக இருக்கும். முதற்கட்ட விசாரணைகளை நடத்துவதற்காக 50க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் எங்களுக்கு வந்துள்ளன.'' என்றார். மேலும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கை மத்திய வங்கியின் மாத்தளை பிராந்திய அலுவலகத்தின் முகாமையாளர் யாசினி ராஜபக்ஷ, பிரமிட் திட்டத்தில், இறுதி வாடிக்கையாளரை அடையாளம் காண முடியாது என்றும், இந்தத் திட்டத்தில் விற்பனைக்குப் பிந்தைய சேவை இல்லை என்றும் கூறினார். மேலும் கருத்து தெரிவித்த அவர், ''பிரமிட் திட்டங்களால் வாக்குறுதியளிக்கப்பட்ட நன்மைகள் உண்மையில் நடைமுறைக்கு சாத்தியமற்றது. அதை நம்புவது கடினம். உதாரணமாக, இந்த பிரமிட் திட்டத்தில், நாங்கள் முதலீடு செய்யும் பணம் மிகக் குறுகிய காலத்தில் இரட்டிப்பாக்கப்படும் அல்லது மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஒரு தயாரிப்பு விற்பனை அமைப்பில் ஒரு பொருளை வாங்குவதன் மூலமும் நீங்கள் இதில் சேரலாம். மேலும், பிரமிட் திட்டத்தில் இறுதி வாடிக்கையாளரை நாங்கள் அடையாளம் காணவில்லை. "ஒரு பிரமிட் திட்டத்தில் உங்களுக்கு உண்மையில் விற்பனைக்குப் பிந்தைய சேவை கிடைக்காது." என்றார். https://adaderanatamil.lk/news/cmd8r0pp101c2qp4kjm9crrth
  17. தமிழ்நாட்டில் ஒரு கூட்டணித் தகராறு Published By: VISHNU 18 JUL, 2025 | 07:13 PM தி. இராமகிருஷ்ணன் பாரதிய ஜனதா கட்சிக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையிலான உறவுகள் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஏப்ரில் மாதம் அறிவித்த போதிலும், இரு கட்சிகளும் அவற்றுக்கிடையிலான முரண்பாடுகளை மறைப்பதற்கு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. "எடப்பாடிஜியின் தலைமையில் நாம் தேர்தலில் போட்டியிடுவோம்" என்று அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமியுடன் கூட்டாக நடத்திய செய்தியாளர்கள் மகாநாட்டில் அமித் ஷா கூறினார். வெற்றி கிடைக்கும் பட்சத்தில் "கூட்டரசாங்கம்" ஒன்று அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். அந்த அறிவிப்புக்கு சாதகமான முறையில் அண்ணா தி.மு.க. பதிலளித்திருக்கவில்லை. அண்ணா தி.மு.க. மாத்திரமல்ல, ஆளும் திராவிட முன்னேற்றக் கழகமும் கூட தமிழ்நாட்டில் கூட்டரசாங்கம் என்ற யோசனைக்கு எப்போதுமே எதிராகவே இருந்து வந்திருக்கினாறன. 1980 சட்டசபை தேர்தலில் தி.மு.க. -- காங்கிரஸ் கூட்டணி அதிகாரத்தைக் கைப்பற்றத் தவறியது. அந்த கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் சம எண்ணிக்கையிலான ஆசனங்களிலேயே போட்டியிட்டன. தி.மு.க.வுடன் ஒரு சுற்று இழுபறிக்கு பிறகு அதன் தலைவர் மு. கருணாநிதியை் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிலைப்படுத்துவதற்கு காங்கிரஸ் இறுதியாக இணங்கியது. ஆனால், அந்த கூட்டணி தேர்தலில் மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றியடையவில்லை. பதிலாக, அந்த வருடம் ஏற்கெனவே நடைபெற்ற லோக்சபா தேர்தலில் இரு ஆசனங்களில் மாத்திரமே வெற்றி பெற்று பிறகு தமிழ் நாட்டில் ஆட்சியதிகாரத்தையும் இழந்த அண்ணா தி.மு.க.வே சட்டசபை தேர்தலில் பெருவெற்றி பெற்றது. 2001 சட்டசபை தேர்தலில் அண்ணா தி.மு.க. 141 ஆசனங்களில் போட்டியிட்டபோது ( முன்னென்றும் இல்லாத வகையில் அந்த கட்சி குறைந்தளவு ஆசனங்களில் போட்டியிட்ட சந்தர்ப்பம் அதுவே ) கூட்டணி நிர்ப்பந்தங்களின் பின்புலத்தில் அந்த கட்சியினால் தனியாக சாதாரண பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றக் கூடியதாக இருக்குமா என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. ஆனால், 234 ஆசனங்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டசபையில் அண்ணா தி.மு.க. 118 ஆசனங்களை கைப்பற்ற வேண்டியிருந்தது. அண்ணா தி.மு.க.வின் தாபகர் எம்.ஜி. இராமச்சந்திரனும் அவருக்கு பிறகு கட்சியின் தலைவராக இருந்த ஜெயலலிதாவும் மாநிலத்தில் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் யோசனைக்கு ஒருபோதும் ஆதரவாக இருந்ததில்லை. ஆனால், கட்சி அந்த தேர்தலில் 132 ஆசனங்களை கைப்பற்றியதால் கவலைப்படுவதற்கு காரணம் இருக்கவில்லை 2006 சட்டசபை தேர்தலில் சாதாரண பெரும்பான்மைக்கு குறைவான ஆசனங்களில் (96) தி.மு.க. வெற்றிபெற்றது. அவ்வாறிருந்தாலும், தி.மு.க. அதன் கூட்டணிக் கட்சிகளுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள மறுத்தது. காங்கிரஸுடன் அதிகாரத்ணைப் பகிர்ந்துகொள்ளாமல், மாநிலத்தில் அரசாங்கத்தை அமைக்கக்கூடிய அளவுக்கு தி.மு.க. தலைவருக்கும் காங்கிரஸின் அன்றைய தலைவி சோனியா காந்திக்கும் இடையில் நல்லதொரு நட்புறவு இருந்தது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டரசாங்கம் அமையும் என்று ஏப்ரிலில் அறிவித்த பிறகுைஅமித் ஷா அந்த நிலைப்பாட்டை பல நேர்காணல்களில் ஊடகங்களுக்கு மீண்டும் வலியுறுத்தி தெரிவித்தார். ஆனால், அது விடயத்தில் அண்ணா தி.மு.க.வுக்கு தெளிவு இருக்கவில்லை. மத்திய அமைச்சரின் நிலைப்பாடு தொடர்பாக கருத்து தெரிவித்த அண்ணா தி மு.க. பேச்சாளர் வைகைச்செல்வன் தமிழ்நாடு மாநிலத்தில் கூட்டரசாங்கம் என்ற கோட்பாட்டை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை என்று குறிப்பிட்டார். அதேபோன்றே 2026 சட்டசபை தேர்தல்களுக்கு முன்னதாக மாநிலம் தழுவிய சுற்றுப் பயணத்தை ஜூலை 7 ஆம் திகதி தொடக்கிய பழனிச்சாமியும் தனியாக பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றிய பிறகு அண்ணா தி.மு.க அரசாங்கத்தை அமைக்கும் என்று குறிப்பிட்டதை காணக்கூடியதாக இருந்தது. அமித் ஷாவின் நிலைப்பாடு தொடர்பாக பழனிச்சாமியிடம் கேட்கப்பட்டபோது மாநிலத்தில் தனிக்கட்சி ஆட்சியை ஷா ஏற்றறுக் கொண்டதாகவே அவரின் கருத்தை தான் அர்த்தப்படுத்துவதாக கூறினார். இரு கட்சிகளுமே முரண்பாடான கருத்துக்களைை வெளிப்படுத்தியிருப்பதற்கு மத்தியிலும் பாரதிய ஜனதாவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் மத்திய இணையமைச்சர் எல். முருகனும் பழனிச்சாமியின் பிரசாரத் தொடங்க நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். ஒரு நேர்காணலில் அமித் ஷா முதலமைச்சர் பதிவிக்கு அண்ணா தி.மு.க.வில் இருந்தே நியமனம் செய்யப்படும் என்று கூறினாலும் பழனிச்சாமியின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. இதை தி.மு.க. வட்டாரங்கள் கவனிக்கத் தவறவில்லை. அண்ணா தி.மு.க.வின் பொதுச் செயலாளரை அசௌகரியப்படுத்துவதில் நாட்டம் காட்டிய தி.மு க . மத்திய அமைச்சர் ஷாவின் கருத்து பழனிச்சாமியின் தலைமைத்துவ தகைமைகளில் அவருக்கு நம்பிக்கையில்லை என்பதையே வெளிக்காட்டுகிறது என்று கூறியது. இறுதியில், பழனிச்சாமியே அரசாங்கத்துக்கு தலைமை தாங்குவார் என்று தெளிவுபடுத்த வேண்டிய நிலை நாகேந்திரனுக்கு ஏற்பட்டது. அவ்வாறிருந்தாலும், கோயம்புத்தூரைச் சேர்ந்த முன்னாள் மாநகராட்சி நிருவாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணியையே அமித் ஷா மனதில் கொண்டிருக்கக்கூடும் என்ற ஊகங்கள் பரவலாக அடிபட்டன. முன்னர் அண்ணா தி.மு.க.வில் பலம்பொருந்தியவராக விளங்கும் வேலுமணி சுமார் மூன்று வாரக்களுக்கு முன்னர் பேரூர் ஆதீனத்தின் தலைவர் சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ராஷ்டிரிய சுயம்சேவக் .(ஆர்.எஸ்.எஸ். ) தலைவர் மோகன் பகவாத்துடனும் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்களுடனும் ஒரே மேடையில் கலந்து கொண்டார். அது தொடர்பாக பிறகு விளக்கமளித்த வேலுமணி அந்த நிகழ்வை ' அரசியல் சார்பற்றது " என்று வர்ணித்ததுடன் உள்ளூர் ட்டசபை உறுப்பினர் என்ற வகையில் மாத்திரமே அதில் பங்கேற்றதாகவும் குறிப்பிட்டார். இரு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டு குறித்து அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக வேலுமணி உட்பட மூத்த சகாகக்களுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையில் அபிப்பிராய பேதங்கள் நிலவியதாக செய்திகள் வெளியாகின. அரசாங்கத்தின் தன்மை குறித்து மூண்டிருக்கும் விவாதம் எதிர்க்கட்சிகளுக்கு பாதகமாக அமையும் என்பதால், அந்த பிரச்சினையை நேரகாலத்தோடு தீர்த்துக்கொள்வது கூட்டணியின் நலன்களுக்கு உகந்ததாக அமையும். பல்வேறு கூட்டணிகளில் அங்கம் பெறவிருக்கும் அரசியல் கட்சிகள் குறித்து இன்னமும் இறுதி செய்யப்படாமல் ஒரு சூழ்நிலையில் அண்ணா தி.மு.க. -- பாரதிய கூட்டணியில் இந்த விவாதம் மூண்டிருப்பதை விளக்கிக்கொள்ள முடியவில்லை. (தி இந்து ) https://www.virakesari.lk/article/220351
  18. கனகராசா சரவணன் மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஞாயிறு மற்றும் போயா தினங்களில் தனியார் வகுப்புக்கள் நடத்த தடை விதிப்பு மற்றும் விளம்பர பலகைகளில் தமிழ் மொழி கட்டாயம் பொறிக்கப்படல், கட்டாக்காலி மாடுகள், நாய்கள் கட்டுப்படுத்தல் உட்பட 9 பிரேரணைகள் மாநகர சபை அமர்வில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநகர சபையின் 8 வது சபையின் இரண்டாவது சபை அமர்வு நேற்று வியாழக்கிழமை மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் சபை சபா மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போது மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள தனியார் கல்வி நிலையங்களில் இடம்பெற்று வரும் பிரத்தியேக வகுப்புக்களை ஞாயிறு மற்றும் போயா தினங்களில் சட்டரீதியாக தடை செய்ய வேண்டும் என சபை உறுப்பினர் தயாளராசா தரணிராஜ் பிரேரணையை கொண்டு வந்தார். அதனை தொடர்ந்து உறுப்பினர் துரைசிங்கம் மதன் செம்மணி புதைகுழி படுகொலையை கண்டித்து அதனை சர்வதேச கண்காணிப்புடன் அரசு விசாரணை செய்யவேண்டும் எனவும் மாநகரசபையின் சரியான எல்லையை உறுதிப்படுத்தி எல்லையில் வரவேற்பு கோபுரங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற பிரேரணைகளை முன்வைத்தார். மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் இதர காட்சிப்படுத்தப்படும் விளம்பர பலகையில் முதலில் தமிழ் மொழி கட்டாயம் இருக்கவேண்டும் என்ற பிரேரணையை உறுப்பினர் வைரமுத்து தினேஸ்குமார் கொண்டுவந்தார். அதனை தொடர்ந்து உறுப்பினர் திருமதி தயாளகுமார் கௌரி வீதிகளில் உலாவும் கட்டாக்காலி நாய்கள் மற்றும் மாடுகளால் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளது. எனவே இந்த கட்டாக்கலி மாடுகள், நாய்களை கட்டப்படுத்துமாறும் திராய்மடு, நாவற்கேணி புகையிரத கடவையில் நிரந்தரமாக கடவைய் காப்பாளர்களை நியமிக்குமாறு புகையிரத திணைக்களத்தை வலியுறுத்துமாறு பிரேரணையை கொண்டு வந்தார். இதனையடுத்து உறுப்பினர் கருணாநிதி ஜனகன் மாநகரசபைக்கு உட்பட்ட அனைத்து பூங்காக்களுக்கும் பாதுகாப்பு உத்தியோகத்தரை நியமிக்குமாறும் கொண்டுவரப்பட்ட பிரேரணையையடுத்து வீதி விபத்துக்களை தடுப்பதற்கான பிரேரணையை உறுப்பினர் செல்வராசா குமார் கொண்டு வந்ததையடுத்து திருப்பெரும்துறை சேத்துக்குடா பகுதிகளில் உள்ள விபுலானந்தா வீதி மற்றும் விநாயகர் வீதி ஆகிய இரு வீதிகளையும் ஒருவழி பாதையாக மாற்றுமாறு மாசிலாமணி சண்முகலிங்கம் பிரேரணையை சபையில் முன்வைத்தார் அதேவேளை மாநகர சபை முதல்வர் கள்ளியங்காடு மயானத்துக்கு அருகில் கொழும்பு பொரளையில் உள்ள மலர்சாலைகள் போன்று ஒரு மலர்சாலையை மரக்கூட்டுத்தாபன பகுதியில் அமைக்க அரசகாணியை பெறுவதற்கான ஒரு பிரேரணையை கொண்டுவந்ததுடன் மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் இடம்பெற்றுவரும் வீதி வியாபாரத்தில் தடை செய்து அதற்கு ஒரு தீர்வு காண்பதற்காக பெண் உறுப்பினர் ஒருவர் உட்பட 5 பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டு உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்ட அனைத்து பிரேரணைகளும் சபை குழுநிலைவிவாதத்துக்கு விடப்பட்டு அவைகள் முன்மொழிந்து வழிமொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது. https://thinakkural.lk/article/319111
  19. பட மூலாதாரம்,@BEEMJI/X படக்குறிப்பு, உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் கட்டுரை தகவல் கார்த்திக் கிருஷ்ணா பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் நாகப்பட்டினத்தில் ஜூலை 13, 2025 அன்று, அனுபவமிக்க ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் (எஸ்.எம். ராஜு) ஒரு ஆபத்தான கார் சாகசக் காட்சியின் போது உயிரிழந்தார். திரை மறைவு நாயகர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகள், சமீபத்தில் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் படப்பிடிப்பில் நடந்த துயரச் சம்பவத்தால் மீண்டும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளன. பாதுகாப்பு அம்சங்கள் சரியாக இல்லை என இந்தச் சம்பவம் குறித்து அகில இந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் சுரேஷ் குப்தா கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால், சண்டைக்காட்சி படப்பிடிப்பின்போது போதிய பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்படுவதாக சண்டைப் பயிற்சி இயக்குநர் ஸ்டண்ட் சில்வா கூறுகிறார். திரைப்படங்கள் என்கிற மாயாஜால உலகின் முகவரியாக இருப்பவர்கள் நடிகர்கள். குறிப்பாக ரசிகர்கள் எப்போதும் புகழ் வெளிச்சத்தில் நிறுத்தி மகிழ்வது, கதாநாயகர்களையும் கதாநாயகிகளையும்தான். ஆனால், திரைக்குப் பின்னால் ஆயிரக்கணக்கான கலைஞர்களின், பணியாளர்களின் உழைப்பும் சேர்ந்தே ஒரு திரைப்படம் உருவாகிறது. இதில், வியக்கவைக்கும் சாகசங்களை திரையில் உருவாக்கும் ஸ்டண்ட் கலைஞர்கள், ஒவ்வொரு திரைப்படத்துக்கும் ஈடற்ற மதிப்பை சேர்க்கின்றனர். ஆனால் மற்றவர்களைப் போலவே இவர்களின் பங்களிப்பும் பெரும்பாலும் அங்கீகரிக்கப்படுவதில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, திரைப்படக் குழுவினர் (சித்தரிப்புக் காட்சி) இயக்குநர் ரஞ்சித் இரங்கல் ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் இறந்த சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் இயக்குநர் ரஞ்சித் இரங்கல் தெரிவித்துள்ளார். "மோகன் ராஜ் அவர்களை நாங்கள் எதிர்பாரா விதத்தில் இழந்தோம். அவரின் மனைவி, குழந்தைகள்,குடும்பம் மற்றும் அவரை சக பணியாளராக, நண்பராக அறிந்த அனைவரையும் தேற்றும் வழியறியாது எங்கள் உள்ளம் கலங்குகிறது. செழுமையான அனுபவமும், சாதனைகளும் கொண்டு தன் நேர்த்தியான வேலையால் தன் குடும்பத்தை, சக ஸ்டண்ட் வீரர்களை, இயக்குனர்களை பெருமைப்படுத்திய கலைஞர் அவர். எங்கள் ஒவ்வொருவரின் மரியாதையும், அன்பும், வந்தனங்களும் என்றென்றென்றும் அவருக்கு சமர்ப்பணம்" என்று ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார். மேலும் குறிப்பிட்ட கார் சாகசக் காட்சியை எடுக்கும் முன்பு, எப்போதும் செய்யும் தெளிவான திட்டமிடல், பாதுகாப்பு ஏற்பாடுகள் என எல்லாம் இருந்தன என்று குறிப்பிட்டுள்ள ரஞ்சித், அந்த நாள் மோகன் ராஜ் உயிரழப்பில் முடிந்தது என்பது தாங்கொணா அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது என்றும் கூறியுள்ளார். மோகன்ராஜ் இறப்புக்கு நடிகர்கள் பாபி சிம்ஹா, ப்ரித்விராஜ், விஷால், நடிகை துஷாரா, இயக்குநர்கள் மாரி செல்வராஜ், வெங்கட்பிரபு உள்ளிட்டோர் அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்துள்ளனர். நடிகர்கள் ஆர்யா, கலையரசன் உட்பட வேட்டுவம் திரைப்படக் குழுவினர் பலரும், மோகன்ராஜின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். "எக்ஸ் தளத்தில் பதிவு போடுவதோடு மட்டுமல்ல, மோகன்ராஜின் குடும்பத்துக்காக நான் ஆதரவாக இருப்பேன். அவர் திரைத்துறைக்கு ஆற்றிய பங்கை மனதில் வைத்து, நானும் திரைத்துறையைச் சேர்ந்தவன் என்கிற முறையில், அவர்களுக்கு ஆதரவளிப்பது எனது கடமை" என்று பகிர்ந்துள்ளார் நடிகர் விஷால். 52 வயதான மோகன்ராஜ், மங்காத்தா, சிங்கம், வேலாயுதம், பிரியாணி, லூசிஃபர், துணிவு எனப் பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில், மிகப்பெரிய சூப்பர்ஹிட் திரைப்படங்களில் ஸ்டண்ட் கலைஞராக பணியாற்றியவர். கிட்டத்தட்ட தனது அத்தனை படங்களிலும் மோகன்ராஜின் பங்கு இருந்திருக்கிறது என இயக்குநர் வெங்கட் பிரபு தனது இரங்கலில் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் கார் சாகசக் காட்சி என்றாலே அதற்கு சண்டைப்பயிற்சி இயக்குநர்களின் முதல் விருப்பம் மோகன்ராஜாகத்தான் இருந்திருக்கிறார். பல நூறு முறை, பல ஆபத்தான சண்டைக் காட்சிகளில் பங்கேற்று பாதுகாப்பான கலைஞர் என்று பெயரெடுத்துள்ளார் மோகன்ராஜ். பட மூலாதாரம்,@BEEMJI/X ஸ்டண்ட் கலைஞர்கள் கூறுவது என்ன? மோகன்ராஜ் பற்றியும், படப்பிடிப்புகளில் சண்டைக் காட்சிகளுக்கான பாதுகாப்பு பற்றியும் தென்னிந்திய சினிமாவில் முன்னணி சண்டைப் பயிற்சி இயக்குநர்களில் ஒருவராக இருக்கும் ஸ்டண்ட் சில்வா பிபிசி தமிழிடம் பேசியபோது, "எனது பல வெற்றிப் படங்களின் சண்டைக் காட்சிகளில் முக்கியப் பங்கு வகித்தவர் மோகன்ராஜ். அவரது இறப்பு மிகவும் துரதிஷ்டவசமானது.''என்றார் ''அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தில் அவர் செய்த சாகசக் காட்சிகள் எல்லாம் இப்போது நினைத்தாலும் பயத்தைத் தரும். ஒருவர் இப்படியான கார் சாகசக் காட்சியை செய்யப் போகிறார் எனும்போது, அதிக பதற்றம், பயம், எங்களைப் போன்ற சண்டைப் பயிற்சி இயக்குநர்களுக்குத்தான் இருக்கும். ஏனென்றால் எங்களுக்காக, எங்கள் சார்பாகத்தான் அவர் இதைச் செய்யப் போகிறார். வினோதய சித்தம் என்கிற திரைப்படத்தில் உயரத்திலிருந்து மோகன்ராஜ் கீழே விழும்போது அவரது ஹெல்மெட் விலகிவிட்டது. நானும் நடிகர் சமுத்திரகனியும் பதறியடித்து அவரிடம் சென்றோம். அவர் எதுவும் ஆகவில்லை என்று பதற்றமின்றி எழுந்து வந்தார்.'' என்கிறார் ஸ்டண்ட் சில்வா. ''வேட்டுவம் திரைப்படத்தில் விபத்து ஏற்பட்டது ஒரு மணல் வெளியில், அவர் எளிதாக செய்து முடிக்கும் ஒரு சாகச் காட்சி இது. உடற்கூறாய்வு அறிக்கையில் அவருக்கு அடிபடவில்லை, எங்கும் ரத்தக் கசிவு இல்லை என்று தெரியவந்துள்ளது. அப்படி இருக்கையில் அவர் உயிர் பிரிந்திருக்கிறது என்பது மிகப்பெரிய துரதிர்ஷ்டமே. சென்ற வாரம் என்னுடன் அமர்ந்து சாப்பிட்டவர், இப்போது உயிரோடு இல்லை என்பதை நம்ப முடியவில்லை" என்கிறார் சில்வா. பட மூலாதாரம்,STUNT SILVA/FACEBOOK படக்குறிப்பு, படப்பிடிப்புத் தளத்தில் ஸ்டண்ட் சில்வா பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி உள்ளன? தற்போது சண்டைக் காட்சிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எழுப்பப்பட்டு வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், "சமூக ஊடகங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விமர்சிப்பவர்கள் திரைத் துறையின் உண்மையான நிலவரம் என்னவென்று தெரியாமல் பொதுவாகப் பேசுகிறார்கள். எல்லா விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டே சண்டைக் காட்சிகள் படம்பிடிக்கப்படுகின்றன. 25 வருடங்களுக்கு முன் வேண்டுமானால் அப்படி இருந்திருக்கலாம். ஆனால் இப்போது அப்படி இல்லை.'' என்கிறார் ஸ்டண்ட் சில்வா ''ஹாலிவுட்டுக்கு நிகரான பாதுகாப்பு ஏற்பாடுகள் நமது ஊரிலும் உள்ளன. ஹாலிவுட்டைச் சேர்ந்த பல சண்டைப் பயிற்சி இயக்குநர்கள் நம் திரைப்படங்களில் பணியாற்றுக்கின்றனர். ஹாலிவுட்டில் கூட இது போல மிக அரிதாக விபத்துகள் நடந்துள்ளன. எனவே ஒரு சண்டைக் காட்சிக்கான படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் அத்தனையும் செய்யப்படும். எங்கள் சங்கத்தில் 750 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை என்பது மிக மிகக் குறைவு. எனவே ஒரு சம்பவத்தை வைத்து பொதுவாக குற்றம்சாட்டக் கூடாது" என்று கூறுகிறார் சில்வா. சண்டைப் பயிற்சி கலைஞர்களுக்கான மருத்துவ உதவி, மருத்துவ காப்பீடு குறித்தும் சரியான புரிதல் இல்லை என்கிறார் சில்வா. "ஒரு காலத்தில் சண்டைப் பயிற்சி கலைஞர்களுக்கு மருத்துவ காப்பீடு உள்ளிட்ட விஷயங்களும் கிடையாது. ஆனால் நடிகர் சூர்யாவின் முன்னெடுப்பினால் எங்களுக்கு தற்போது காப்பீடும் உள்ளது. பல வருடங்கள் சூர்யாவே எங்களுக்கான காப்பீடு செலவை பார்த்துக் கொண்டார். அவருக்கு மிகப்பெரிய நன்றியைக் கூற வேண்டும். இந்தப் பாதையைப் போட்டுக் கொடுத்தவர் அவர்தான். தற்போது எங்கள் சங்கமே காப்பீடுக்கான செலவை செய்து வருகிறது. மற்றவர்களுக்கான ப்ரீமியம் தொகையை விட எங்களுக்கான தொகை சற்று அதிகமாக இருக்கும். அவ்வளவே. பாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்களுக்கு தொடர்ந்து நடிகர் அக்‌ஷய் குமார் காப்பீடு உள்ளிட்ட உதவிகளைச் செய்து வருகிறார்.'' என்கிறார் அவர். ''மோகன்ராஜ் குடும்பத்துக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் எங்கள் சங்கம் செய்யும். சங்கத்தில் உறுப்பினராவதே அதற்காகத்தானே''. பட மூலாதாரம்,PTI படக்குறிப்பு, இந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் சுரேஷ் குப்தா எழும் கண்டனக் குரல்கள் சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்புக்கு தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து எப்படியான ஆதரவு கிடைக்கிறது என்பது பற்றி ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பிரபுவிடம் பேசியபோது, "பொதுவாக பெரிய சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்புக்குத்தான் செலவு அதிகம். ஆனால் தயாரிப்பாளர்கள் யாரும் அதற்கு ஆட்சேபனை தெரிவிப்பதில்லை. தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்துக்கும் செலவு செய்கிறோம். இப்போதெல்லாம் ஒரு சண்டைக் காட்சியின் படப்பிடிப்பில் ஆம்புலன்ஸ், மருத்துவர்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஒருவகையில் கட்டாயமாக்கப்பட்டுவிட்டன. மேலும் பெரிய பொருட்செலவில் தயாராகும் திரைப்படங்களுக்கு காப்பீடும் செய்யப்படுகின்றன" என்று கூறினார். மோகன்ராஜ் இறப்பு தொடர்பாக இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் தரப்பு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அகில இந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் சுரேஷ் குப்தா, இந்தச் சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "உலக சினிமா அனுபவத்தை தர வேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர். ஆனால் பாதுகாப்பு அம்சங்களைக் கூட அவர்களால் சிறப்பாக கொண்டு வர இயலவில்லை," என்று குற்றம் சாட்டினார். ஏஐ போன்ற வசதிகள் வந்து, ஸ்டண்ட் கலைஞர்களுக்கான தேவையும், ஆபத்தும் குறையும் வரை நாங்கள் இப்படிக் களத்தில் இறங்கி பணியாற்றித் தானே ஆகவேண்டும் என்கிறார் சண்டைப் பயிற்சி இயக்குநர் ஸ்டண்ட் சில்வா. விரைவில் அதுவும் சாத்தியப்பட வேண்டும் என்றே திரைப்பட ஆர்வலர்கள் விரும்புகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3vdyzy0e3do
  20. பௌத்தமதகுருமார் மோசமான விதத்தில் நடந்துகொள்கின்றார்கள் - தாய்லாந்தை உலுக்கியுள்ள பாலியல் மோசடி Published By: RAJEEBAN 18 JUL, 2025 | 11:16 AM guardian தாய்லாந்தின் தலைநகரின் மத்தியில் உள்ள பௌத்த ஆலயத்தின் மிகவும் மதிக்கத்தக்க பௌத்தமதகுரு காணாமல்போயுள்ளதை தொடர்ந்து பெரும் பாலியல் மோசடி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளியாகியுள்ள அதிர்ச்சி தரும் விடயங்கள் தாய்லாந்தை உலுக்கியுள்ளன. தாய்லாந்தின் பௌத்த குருமார்கள் மத்தியில் காணப்படும் மிரட்டல் விடுக்கும் அச்சுறுத்தும் கலாச்சாரம் அவர்களிற்கு கிடைக்கும் ஆடம்பர பொருட்கள் போன்ற விபரங்களும் வெளியாகியுள்ளன. வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்களை தொடர்ந்து தாய்லாந்தின் பௌத்த மதகுருமார் அனுபவிக்கும் பணம் மற்றும் அதிகாரம் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. காணாமல்போன மூத்தமதகுரு தொடர்பான விசாரணைகளின் போது பல பௌத்தமதகுருமாருடன் பாலியல் உறவில் ஈடுபட்ட பின்னர் அவர்களை மிரட்டி அச்சுறுத்தி அது குறித்த விபரங்களை மௌனமாக வைத்திருந்த பெண் ஒருவர் குறித்த விபரங்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன. தாய்லாந்து பொலிஸார் குறித்த பெண்ணின் வீட்டை சோதனையிட்டபோது காணாமல்போன பௌத்தமதகுரு உட்பட பல பௌத்தமதகுருமாரின் படங்கள் வீடியோக்கள் அடங்கிய கையடக்க தொலைபேசிகளை அந்த வீட்டில் கண்டுபிடித்துள்ளனர். இதனை தொடர்ந்து அந்த பெண்ணின் வங்கி கணக்குகளை நிதிபரிமாற்றங்களை பொலிஸார் ஆராய்ந்த போது பௌத்த ஆலயங்களுடன் இருந்த தொடர்புகள் தெரியவந்துள்ளன. நாங்கள் அந்த பெண்ணின் நிதிபரிமாற்றங்களை ஆராய்ந்தவேளை அவற்றிற்கும் பௌத்த ஆலயங்களிற்கும் தொடர்பிருப்பதை கண்டுபிடித்தோம் என தெரிவித்துள்ள தாய்லாந்தின் காவல்துறை அதிகாரி அந்த பெண் பயன்படுத்திய கையடக்க தொலைபேசி நாங்கள் ஆராய்ந்த வேளை பல பௌத்தமதகுருமார் தொடர்புபட்ட பல வீடியோக்கள் படங்களை உரையாடல்களை பார்த்தோம் என தெரிவித்துள்ளார். காணாமல்போன மதகுரு தொடர்பில் இதுவரை எந்த விபரங்களும் தெரியவரலில்லை. அவர் காணாமல்போனமை குறித்த குற்றச்சாட்டுகளும் இதுவரை சுமத்தப்படவில்லை. ஆனால் குறிப்பிட்ட பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக மிரட்டி பணம் பறித்தல் சட்டவிரோத பணப்பரிமாற்றம் உட்பட பல குற்றச்சாட்டுகளை பொலிஸார் சுமத்தியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விலாவன் எம்சாவட் என்ற அந்த பெண் முழுமையாகக் கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் புதன்கிழமை ஒளிபரப்பான தாய் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இரண்டு துறவிகள் மற்றும் ஒரு மதப் பேராசிரியருடன் உறவு வைத்திருப்பதை அவர் ஒப்புக்கொண்டார். மெர்சிடிஸ் பென்ஸ் ளுடுமு200 மற்றும் "மில்லியன் கணக்கான" பாட் உள்ளிட்ட ஆடம்பரமான பரிசுகளை வங்கிப் பரிமாற்றங்கள் மற்றும் தனிப்பட்ட வங்கி அட்டை வடிவில் பெற்றதாகவும் விலாவன் கூறினார். தான் காதலில் விழுந்ததாகக் கூறி உறவுகள் குறித்து குற்ற உணர்ச்சியை வெளிப்படுத்தினார். கடந்த மூன்று ஆண்டுகளில் விலாவனின் வங்கிக் கணக்குகளில் சுமார் 385 மில்லியன் பாட் (கூ11.9 மில்லியன்) வைப்பு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். ஒரு தனி நேர்காணலில் தான் டேட்டிங் செய்து கொண்டிருந்த மற்றொரு துறவிக்கு பணம் கொடுத்ததாக விலாவன் கூறினார். தாய்லாந்தில் துறவிகள் தவறாக நடந்துகொள்வது பற்றிய கதைகள் அசாதாரணமானது அல்ல ஆனால் இந்த வழக்கின் அளவு பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தேரவாத பௌத்தத்தின் பிரம்மச்சாரி மரபுகளைப் பேணி பூமிக்குரிய ஆசைகளைத் தவிர்ப்பதாக எதிர்பார்க்கப்படும் துறவிகள் எவ்வாறு தங்கள் நம்பிக்கைகளிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறார்கள் என்பது குறித்த கேள்விகளைத் தூண்டியுள்ளது. https://www.virakesari.lk/article/220288
  21. நான்கு ஆண்டுகளுக்கு முன்பே பெண்ணாக மாறிய அரை நிர்வாணமாக நடமாடிய தாய்லாந்து சுற்றுலா பயணி Published By: DIGITAL DESK 3 18 JUL, 2025 | 01:09 PM அருகம் குடாவில் ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் மேலாடையின்றி அரை நிர்வாணமாக நடமாடி சர்ச்சையை ஏற்படுத்திய தாய்லாந்து சுற்றுலா பயணி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பே பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து ஆணிலிருந்து பெண்ணாக மாறியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. சுற்றுலா பயணி ஆணாக பிறந்து முழு பெண்ணாக மாறுவதற்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். சுற்றுலாப் பயணி மேலாடையின்றி இருக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்தபோது இந்த சம்பவம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. கடந்த 14 ஆம் திகதி சுற்றுலாப் பயணி அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததற்காகவும் தெரிவித்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்நிலையில், அவருக்கு ஐந்து ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வாரங்களும் ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி, அவருக்கு அநாகரீகமாக நடந்து கொண்டமைக்கு இரண்டு வார சிறைத்தண்டனையும், பொது மக்களுக்கு இடையூறு விளைவித்தமைக்காக ஒரு மாத சிறைத்தண்டனையும் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. வழக்கு விசாரணைகளின் போது அவரது பாலினத்தை பெண் என நீதிமன்றம் ஏற்றுக்கொண்டாலும், அவரின் கடவுச்சீட்டு புகைப்படம் ஒன்லைனில் பகிரப்பட்டது. அதில் 'M' (ஆண்) எனவும், பாலினம் மற்றும் 'Mr.' எனவும் குறிப்பிடப்பட்டிருந்தமை திருப்பத்தை ஏற்படுத்தியது. இலங்கையில், குறிப்பாக பொது ஒழுக்கச் சட்டங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில், பாலினம் எவ்வாறு சட்டப்பூர்வமாக விளக்கப்படுகிறது என்பது குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டது. அவரது அங்க அடையாளத்திற்கும் உத்தியோகபூர்வ ஆவணங்களுக்கும் இடையில் வேறுபாடு காணப்படுவது, பாலின பன்முகத்தன்மையை முழுமையாகப் பூர்த்தி செய்யாத சட்ட அமைப்புகளில் திருநர்களின் உரிமைகள் மற்றும் அங்கீகாரம் குறித்து பல கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணி அமெரிக்க நாட்டவர் ஒருவருடன் இலங்கைக்கு வந்து 11 முதல் 20 ஆம் திகதி வரை அருகம் குடாவில் உள்ள சுற்றுலா ஹோட்டலில் தங்குமிடத்தை முன்பதிவு செய்துள்ளமை தெரியவந்ததுள்ளது. https://www.virakesari.lk/article/220298
  22. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் ஜேம்ஸ் கல்லாகர் சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் மூன்று பேரின் மரபணு கூறுகளை பயன்படுத்தி பிரிட்டனில் எட்டு குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், இந்த முறை மிகவும் மோசமான மற்றும் ஆபத்தான உடல்நல பாதிப்புகளை தவிர்க்க உதவும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். பிரிட்டன் விஞ்ஞானிகளால் முன்னோடியாகக் கொண்டுவரப்பட்ட இந்த முறையில், ஒரு தாய் மற்றும் தந்தையிடமிருந்து பெறப்பட்ட கருமுட்டை மற்றும் விந்தணுவுடன், மற்றொரு பெண்ணிடம் இருந்து தானமாக பெறப்பட்ட இரண்டாவது கருமுட்டையை இணைக்கின்றனர். இந்த நுட்பம் ஒரு தசாப்த காலமாக பிரிட்டனில் சட்டப்பூர்வமாக இருந்தபோதிலும், குணப்படுத்த முடியாத மைட்டோகாண்ட்ரியல் நோய் பாதிப்பு இல்லாமல் குழந்தைகள் பிறக்க இந்த முறை உதவும் என்பதற்கான முதல் ஆதாரம் தற்போது கிடைத்துள்ளது. மைட்டோகாண்ட்ரியல் நோய் நிலைமைகள் பொதுவாக தாயிடமிருந்து குழந்தைக்குப் பரவுகின்றன. இதனால் உடலில் சக்தி இல்லாமல் போகும். இந்த நோய் கடுமையான இயலாமைக்கு வழிவகுக்கும். சில குழந்தைகள் பிறந்த சில நாட்களுக்குள் இறந்துவிடும். தம்பதிகளுக்கு முதலில் பிறந்த குழந்தைகள், குடும்ப உறுப்பினர்கள் அல்லது தாய் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்குப் பிறக்கும் அடுத்தக் குழந்தைக்கு ஆபத்து இருக்கும் என்பதை தம்பதிகள் அறிவார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES மூன்று-நபர் நுட்பத்தின் (three-person technique) மூலம் பிறக்கும் குழந்தைகள் தங்களுடைய அசல் பெற்றோரிடமிருந்து தங்கள் டிஎன்ஏவின் பெரும்பகுதியையும் அவர்களின் மரபணு வரைபடத்தையும் (genetic blueprint) பெற்றாலும், இரண்டாவது பெண்ணிடமிருந்து ஒரு சிறிய அளவிலான (சுமார் 0.1% மட்டுமே) மரபணுவைப் பெறுகிறார்கள்.இந்த மாற்றம் பல தலைமுறைகளை கடந்து செல்லும். இந்த செயல்முறையின் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட குடும்பங்கள், தங்கள் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக இந்த விஷயத்தை பகிரங்கமாகப் பேசவில்லை. ஆனால் மூன்று நபர் நுட்பத்தின் மூலம் குழந்தைகள் பிறக்கச் செய்த நடைமுறைகளை மேற்கொண்ட நியூகேஸில் கருவுறுதல் மையம் மூலம் தங்களின் அடையாளங்களை வெளிப்படுத்தாமல் இந்த நுட்பத்தின் மூலம் குழந்தைகள் பிறந்ததை மட்டும் அறிவித்தனர். 'நன்றியுணர்வால் நெகிழ்கிறோம்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியான இரண்டு அறிக்கைகள், நியூகேஸில் கருவுறுதல் மையத்தில் 22 குடும்பங்கள் இந்த கருவுறுதல் செயல்முறையை மேற்கொண்டதாக கூறுகின்றன. "பல வருட நிச்சயமற்ற தன்மைக்குப் பிறகு இந்த சிகிச்சை எங்களுக்கு நம்பிக்கையைத் தந்தது. புதிய நுட்பம் எங்களுக்கு குழந்தையைக் கொடுத்தது," என்று ஒரு பெண் குழந்தையின் தாய் கூறினார். "வாழ்க்கையில் அனைத்து சாத்தியக்கூறுக்களும் இருக்கின்றன என்பதை இப்போது உணர்கிறோம், நன்றியுணர்வால் நெகிழ்ந்து போய் இருக்கிறோம்" என்று அந்தத் தாய் கூறினார். இந்த நுட்பம் மூலம் ஆண் குழந்தையை பெற்றெடுத்த ஒரு தாய், "இந்த நம்பமுடியாத முன்னேற்றத்திற்கும் எங்களுக்குக் கிடைத்த ஆதரவிற்கும் நன்றி. எங்கள் சிறிய குடும்பம் தற்போது முழுமையடைந்துள்ளது" என்று கூறினார் "மைட்டோகாண்ட்ரியல் நோயினால் ஏற்பட்ட மனச்சுமை நீங்கிவிட்டது. தற்போது, நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் ஆழ்ந்த நன்றியுணர்வால் மனம் நிரம்பியுள்ளது." மைட்டோகாண்ட்ரியா என்பது நமது ஒவ்வொரு செல்லிலும் உள்ள சிறிய கட்டமைப்புகள் ஆகும். நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை பயன்படுத்தி நாம் சாப்பிடும் உணவை எரிசக்தியாக மாற்றுவதற்கு இவை உதவுகின்றன. மைட்டோகாண்ட்ரியா குறைபாடு ஏற்பட்டால், இதயத்தைத் துடிக்க வைக்க உடலுக்குப் போதுமான சக்தி கிடைக்காது. மேலும், மூளை பாதிப்பு, வலிப்பு, பார்வை இழப்பு, தசை பலவீனம், உறுப்பு செயலிழப்பு என பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம். பிறக்கும் குழந்தைகளில் ஐந்தாயிரத்தில் சுமார் ஒரு குழந்தை மைட்டோகாண்ட்ரியல் நோயுடன் பிறக்கிறது. நியூகேஸிலில் உள்ள நிபுணர் குழு, ஆண்டுதோறும் மூன்று நபர் முறை மூலம் 20 முதல் 30 குழந்தைகள் பிறக்க வேண்டிய தேவை இருக்கும் என எதிர்பார்க்கிறது. தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளில் பல இந்த நோயால் பாதிக்கப்பட்டு இறக்கும் வேதனையை பெற்றோர்களில் பலர் எதிர்கொண்டுள்ளனர். மைட்டோகாண்ட்ரியா என்பது, தாயிடமிருந்து குழந்தைக்கு மட்டுமே பரவுகிறது. எனவே இந்த நவீன கருவுறுதல் நுட்பம், பெற்றோர் மற்றும் ஆரோக்கியமான மைட்டோகாண்ட்ரியாவை தானம் செய்யும் ஒரு பெண் என மொத்தம் மூன்று பேரை பயன்படுத்துகிறது. இந்த முறை, ஒரு தசாப்தத்திற்கும் முன்னர் நியூகேஸில் பல்கலைக்கழகம் மற்றும் நியூகேஸில் அபான் டைன் ஹாஸ்பிடல்ஸ் என்.எச்.எஸ் ஃபவுண்டேசன் டிரஸ்ட்டால் உருவாக்கப்பட்டது. கருவுறுதல் செயல்முறையை மேற்கொண்ட 22 குடும்பங்கள் பட மூலாதாரம்,BBC/JOSH ELGIN படக்குறிப்பு, கேட் கிட்டோ (வலது) தனது மகள் லில்லி மற்றும் செல்லப்பிராணி மோன்டியுடன் தாய் மற்றும் தானம் செய்பவரின் கருமுட்டைகள், தந்தையின் விந்தணுக்களுடன் ஆய்வகத்தில் கருத்தரிக்கப்படுகின்றன. விந்து மற்றும் முட்டையிலிருந்து வரும் டிஎன்ஏ, புரோ-நியூக்ளியஸ் எனப்படும் ஒரு ஜோடி அமைப்புகளை உருவாக்கும் வரை கருக்கள் உருவாகின்றன. இவை, முடி நிறம் மற்றும் உயரம் என மனித உடலை உருவாக்குவதற்கான வரைபடங்களைக் கொண்டுள்ளன. இரண்டு கருக்களிலிருந்தும் சார்பு கருக்கள் அகற்றப்பட்டு, ஆரோக்கியமான மைட்டோகாண்ட்ரியாவால் நிரம்பிய கருவுக்குள் பெற்றோரின் டிஎன்ஏ வைக்கப்படுகிறது. இதன் விளைவாக, பிறக்கும் குழந்தை பெற்றோருடன் மரபணு ரீதியாக தொடர்புடையதாகவும் இருக்கும், அதே நேரத்தில் மைட்டோகாண்ட்ரியல் நோயிலிருந்து விடுபடவும் முடியும். நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியான இரண்டு அறிக்கைகள், நியூகேஸில் கருவுறுதல் மையத்தில் 22 குடும்பங்கள் இந்த கருவுறுதல் செயல்முறையை மேற்கொண்டதாக கூறுகின்றன. இந்த செயல்முறையில் நான்கு ஆண் குழந்தைகளும் நான்கு பெண் குழந்தைகளும் பிறந்தன, அதில் ஒரு இரட்டைக் குழந்தையும் அடங்கும், மேலும் ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறார். "நீண்ட காத்திருப்பு மற்றும் பின்விளைவுகள் குறித்த பயத்திற்குப் பிறகு இந்தக் குழந்தைகளின் பெற்றோரின் முகங்களில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் காண முடிகிறது. இந்தக் குழந்தைகள் ஆரோக்கியமாக சாதாரணமான குழந்தைகளாக வளர்வதைப் பார்ப்பது நன்றாக இருக்கிறது" என்று அரிய மைட்டோகாண்ட்ரியல் கோளாறுகளுக்கான NHS (தேசிய சுகாதார சேவை) உயர் சிறப்பு சேவையின் இயக்குனர், பேராசிரியர் பாபி மெக்ஃபார்லேண்ட் பிபிசியிடம் தெரிவித்தார். அனைத்து குழந்தைகளும் மைட்டோகாண்ட்ரியல் நோயின்றி பிறந்து, எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி மைல்கற்களை எட்டின. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நுண்ணோக்கி மூலம் எடுக்கப்பட்ட மைட்டோகாண்ட்ரியனின் படம் - ஒரு கருவுற்ற முட்டையில் அரை மில்லியன் வரை இருக்கும். ஒரு குழந்தைக்கு வலிப்பு நோய் இருந்தது, அது தானாகவே சரியாகிவிட்டது, ஒரு குழந்தைக்கு அசாதாரண இதயத் துடிப்பு உள்ளது. அதற்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த குழந்தைகளின் உடல்நலக் குறைவுகள், குறைபாடுள்ள மைட்டோகாண்ட்ரியாவுடன் தொடர்புடையதாக கருதப்படவில்லை. இது செயற்கை கருத்தரிப்பின் அறியப்பட்ட அபாயங்களின் ஒரு பகுதியா, மூன்று நபர் முறை கருவுறுதல் நுட்பத்தினால் ஏற்பட்ட குறிப்பிட்ட பிரச்னையா அல்லது இந்த நுட்பத்தின் மூலம் பிறக்கும் அனைத்து குழந்தைகளின் ஆரோக்கியமும் தீவிரமாக கண்காணிக்கப்படுவதால் மட்டுமே கண்டறியப்பட்ட ஒன்றா என்பது தெரியவில்லை. குறைபாடுள்ள மைட்டோகாண்ட்ரியா ஆரோக்கியமான கருவிற்குள் மாற்றப்படுமா, அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது இந்த அணுகுமுறை தொடர்பான மற்றொரு முக்கிய கேள்வியாக இருக்கிறது. ஐந்து நிகழ்வுகளில் நோயுற்ற மைட்டோகாண்ட்ரியா கண்டறிய முடியாததாக இருந்ததாக முடிவுகள் காட்டுகின்றன. மற்ற மூன்றில், ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளில் 5% முதல் 20% வரை மைட்டோகாண்ட்ரியா குறைபாடு காணப்பட்டது. இந்த அளவானது, நோயை உண்டாக்கும் என்று கருதப்படும் 80% அளவை விட மிகக் குறைவு. இது ஏன் ஏற்பட்டது, அதைத் தடுக்க முடியுமா என்பதைப் புரிந்துகொள்ள மேலும் ஆராய்ச்சிகள் தேவைப்படும். நியூகேஸில் பல்கலைக்கழகம் மற்றும் மோனாஷ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மேரி ஹெர்பர்ட் "கண்டுபிடிப்புகள் நம்பிக்கைக்கு அடித்தளம் அமைக்கின்றன. இருப்பினும், மைட்டோகாண்ட்ரியல் நன்கொடை தொழில்நுட்பங்களின் வரம்புகளை நன்கு புரிந்துகொள்ள ஆராய்ச்சிகள் மேலும் தேவை. இது, சிகிச்சை விளைவுகளை மேலும் மேம்படுத்த அவசியமாக இருக்கும்." என்கிறார். இந்த முன்னேற்றம் கேட் என்ற பெண்ணின் குடும்பத்திற்கு நம்பிக்கையைத் தருகிறது. கேட்டின் இளைய மகள் பாப்பிக்கு (14) இந்த நோய் உள்ளது. அவளுடைய மூத்த மகள் லில்லி (16) அதை தன் குழந்தைகளுக்கும் கடத்தக்கூடும். சக்கர நாற்காலியில் இருக்கும் பாப்பியால் பேசமுடியாது, குழாய் வழியாகவே உணவு வழங்கப்படுகிறது. "இந்த நோய் பாப்பியின் வாழ்க்கையை பெருமளவில் பாதித்துள்ளது," என்று கேட் கூறுகிறார். பல தசாப்தங்களாக முயற்சி செய்தும், மைட்டோகாண்ட்ரியல் நோய்க்கு இன்னும் சிகிச்சை இல்லை, ஆனால் அது பரவுவதைத் தடுக்கும் வாய்ப்பு இருப்பதால் லில்லியின் கவலை குறைகிறது. "என்னைப் போன்ற எதிர்கால சந்ததியினர், அல்லது என் குழந்தைகள், அல்லது உறவினர்கள் போன்றவர்கள் சாதாரண வாழ்க்கையைப் பற்றி நினைத்துப் பார்க்கமுடியும்," என்று லில்லி கூறுகிறார். 'இதை பிரிட்டன் மட்டுமே செய்ய முடியும்' மூன்று நபர் மூலம் குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் அறிவியலை உருவாக்கிய பிரிட்டன், 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்குப் பிறகு, அவற்றை உருவாக்க அனுமதிக்கும் சட்டங்களை அறிமுகப்படுத்திய உலகின் முதல் நாடாக மாறியது. மைட்டோகாண்ட்ரியாக்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் கட்டுப்படுத்தும் அவற்றின் சொந்த டிஎன்ஏவும் அவற்றிடம் இருப்பதால் சர்ச்சை எழுந்தது. இதன் பொருள், குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து டி.என்.ஏவைப் பெறுகின்றனர். அதேபோல கருமுட்டை தானம் செய்த பெண்ணிடமிருந்து சுமார் 0.1% டி.என்.ஏவைப் பெறுகின்றனர். இந்த நுட்பத்தின் மூலம் பிறக்கும் பெண்கள், இதை தங்களுக்குப் பிறக்கும் சொந்தக் குழந்தைகளுக்குக் கடத்துவார்கள், எனவே இது மனித மரபணு மரபின் நிரந்தர மாற்றமாகும். இந்த தொழில்நுட்பம் விவாதிக்கப்பட்டபோது, இது சிலருக்கு அதீதமான படியாக தோன்றியது, இது மரபணு மாற்றப்பட்ட "வடிவமைப்பாளர்" குழந்தைகளை பிறக்கச் செய்வதற்கு கதவுகளைத் திறக்கும் என்ற அச்சத்தையும் எழுப்பியது. நியூகேஸில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சர் டக் டர்ன்புல் "உலகில் இங்கு மட்டும்தான் இப்படி நடந்திருக்கும் என நினைக்கிறேன், நாம் இருக்கும் இடத்திற்கு நம்மை அழைத்துச் செல்ல முதல்-தர அறிவியல் இருந்தது, மருத்துவ சிகிச்சைக்கு அதை நகர்த்தவும் அனுமதிக்கவும் சட்டம் இருந்தது. இப்போது மைட்டோகாண்ட்ரியல் நோயிலிருந்து விடுபட்ட எட்டு குழந்தைகளைப் பெற்றுள்ளோம், என்ன ஒரு அற்புதமான முடிவு!"என்றார் லில்லி அறக்கட்டளை தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் லிஸ் கர்டிஸ் கூறுகையில், "பல வருட காத்திருப்புக்குப் பிறகு, இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி எட்டு குழந்தைகள் பிறந்துள்ளன என்பது நமக்குத் தெரியும். இந்தக் குழந்தைகள் அனைவருக்கும் மிட்டோவின் அறிகுறிகள் எதுவும் இல்லை." "பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு, இந்த மரபுவழி நிலையின் சுழற்சியை உடைப்பதற்கான முதல் உண்மையான நம்பிக்கைக்கீற்று இதுவாகும்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c77vgjl0p4ro
  23. ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச பொறுப்புக்கூறலை வலியுறுத்தி 21ம் திகதி அவுஸ்திரேலியாவில் போராட்டம் - 'உலகம் இனிமேலும் பார்க்காமல் இருக்க முடியாது, இவை நிலத்தில் காணப்படும் எலும்புகள் இல்லை எங்கள் மக்களின் உயிர்கள்" 18 JUL, 2025 | 10:23 AM அவுஸ்திரேலியாவில் உள்ள அனைத்து ஈழதமிழர் அமைப்புககள் தமிழ் ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச பொறுப்புக்கூறலை வலியுறுத்தி 21ம் திகதி பேரணியொன்றை முன்னெடுக்கவுள்ளன என தமிழ் ஏதிலிகள் பேரவை தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, செம்மணி மனித புதைகுழியில் ஆதாரங்கள் மீண்டும் கிடைக்கத்தொடங்கியுள்ளதை தொடர்ந்தே அவுஸ்திரேலியாவில் உள்ள ஈழதமிழர் அமைப்புகள் இந்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளன. அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை தூதரகத்திற்கு வெளியே ஆரம்பமாகவுள்ள இந்த பேரணி ஐநா அலுவலகத்தை நோக்கியும் பல நாடுகளின் தூதரகத்தை நோக்கியும் செல்லவுள்ளது. 1996 இல் முதலில் தெரியவந்த செம்மணிமனித புதைகுழிகளில் 1990களின் பிற்பகுதியில் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் பொதுமக்களின் மனித எச்சங்கள் காணப்படுகின்றன. 2025 இல் இடம்பெறும் சமீபத்தைய விசாரணைகளும் பொது அறிக்கைகளும் சர்வதேச தடையவியல் தலையீட்டிற்கானவேண்டுகோள்களை மீண்டும் புதுப்பித்துள்ளன. புதிய அகழ்வுகளும் கண்ணால் கண்டவர்களின் சாட்சியங்களும் நூற்றுக்கணக்கான உடல்கள் இன்னமும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் புதைகுழிக்குள் இருக்கலாம், என்பதை வெளிப்படுத்தியுள்ள நிலையிலேயே சர்வதேச தடையவியல் தலையீட்டிற்கான வேண்டுகோள்கள் மீண்டும் ஒலிக்கத்தொடங்கியுள்ளன. இந்த புதைகுழிகள் கடந்த காலத்தின் நினைவுச்சின்னங்கள் இல்லை, இலங்கையில் தொடரும் திட்டமிட்ட முறையில் நிராகரிக்கப்பட்டு வரும் இனப்படுகொலைக்கான நிராகரிக்க முடியாத மறுக்க முடியாத ஆதாரங்கள் . தற்போது கிடைத்துள்ள ஆதாரங்களை சர்வதேச சமூகத்தின் கதவுகளிற்கு கொண்டு செல்வதே அவுஸ்திரேலிய பேரணியின் நோக்கம். இந்த பேரணியின் போது தமிழ் இளைஞர்கள், உயிர்பிழைத்தவர்கள், மனித உரிமை பரப்புரையாளர்கள் விசேடமாக தயாரிக்கப்பட் அறிக்கைகள் ஆவணங்களை ஐக்கிய நாடுகளிடமும் வெளிநாட்டு தூதரகங்களிடமும் கையளிப்பார்கள். நிகழ்த்தப்பட்டுள்ள அட்டுழியங்களின் அளவையும், உலகளாவிய பொறுப்புக்கூறலிற்கான அவசர தேவையையும் இந்த ஆவணங்கள் கோடிட்டுக்காட்டும். இந்த ஆவணங்கள்: தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும், செம்மணி மனித புதைகுழி ஏனைய அட்டுழியங்கள் இடம்பெற்ற இடங்களிற்கு சர்வதேச சுயாதீன விசாரணையாளர்கள் செல்வதற்கு இலங்கை அனுமதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கவேண்டும். யுத்தகுற்றவாளிகளை நீதியிலிருந்து பாதுகாத்துள்ள இலங்கையின் உள்ளக பொறிமுறைகளிற்கான ஆதரவை நிறுத்தவேண்டும். தமிழர்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் அவர்களின் தாயகத்தை பாதுகாத்தல் ஆகிய வேண்டுகோளிற்கு ஆதரவளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தவையாக காணப்படும். தமிழ் ஏதிலிகள் பேரவையின் உறுப்பினர்கள் இந்த பேரணியில் கலந்துகொள்வார்கள், அதற்கு ஆதரவளிப்பார்கள். தமிழ் அகதிகள் மற்றும் இனப்படுகொலையிலிருந்து தப்பியவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பு என்ற வகையில் அவுஸ்திரேலியாவின் மௌனம் மற்றும் உடந்தை குறித்த எங்களின் ஆழ்ந்த கரிசனையை வெளியிடுகின்றோம். இந்த குற்றங்களிற்கு காரணமான ஆட்சியாளர்களிடம் அவுஸ்திரேலியா தொடர்ந்தும் தமிழ் மக்களை நாடு கடத்துகின்றது. ஒடுக்குமுறைகள் தொடர்வதற்கான ஆதாரங்கள் தொடர்ந்து வெளியாகின்ற போதிலும் இது இடம்பெறுகின்றது. அதனை சூழவுள்ள மௌனமும் குற்றத்தின் ஒரு பகுதியே என தமிழ் ஏதிலிகள் பேரவையின் பேச்சாளர் ரேணுகா இன்பகுமார் தெரிவித்துள்ளார். நாங்கள் நீதியை கோருகின்றோம் நாங்கள் நினைவுகூறலை கோரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/220280
  24. 'கீழடியில் என்னுடைய காலக் கணிப்பு சரியானது, அதை மாற்ற மாட்டேன்' - பிபிசி தமிழுக்கு அமர்நாத் ராமகிருஷ்ணா பேட்டி படக்குறிப்பு, இந்தியத் தொல்லியல் துறை நடத்திய முதல் இரண்டு அகழாய்வுகளின் ஆய்வறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணா 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏஎஸ்ஐயிடம் சமர்ப்பித்தார். கட்டுரை தகவல் முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் தான் அளித்த கீழடி அகழாய்வின் ஆய்வறிக்கையை மாற்றப்போவதில்லை என அங்கே முதல் இரண்டு கட்ட அகழாய்வுகளை மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்திருக்கிறார். பிபிசியிடம் விரிவாகப் பேசிய அமர்நாத் ராமகிருஷ்ணன், கீழடி கி.மு. 800 முதல் கி.மு. 500வரையிலான காலத்தைச் சேர்ந்தது என்பது எப்படி முடிவு செய்யப்பட்டது என்பதையும் விளக்குகிறார். மதுரை நகரிலிருந்து 13 கி.மீ. தூரத்தில் உள்ள கீழடி என்ற கிராமத்தில் 2014ஆம் ஆண்டில் இந்தியத் தொல்லியல் துறையால் அகழாய்வு துவங்கப்பட்டது. தொல்லியல்துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் 2014 - 15, 2015- 2016 என இரு கட்டங்களாக இந்த அகழாய்வு நடைபெற்றது. இந்த அகழாய்வில் பரந்த அளவில் கட்டடத் தொகுதிகள் கண்டறியப்பட்டன. தமிழ்நாட்டில் நடந்த அகழாய்வுகள் எதிலும் இவ்வளவு பெரிய அளவில் கட்டடத் தொகுதிகள் கண்டறியப்படாத நிலையில், கீழடியில் வெளிவந்த கட்டடத் தொகுதிகள் பரபரப்பை ஏற்படுத்தின. இதற்குப் பிறகு, அந்த அகழாய்வுப் பணியிலிருந்து அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டு, வேறொரு கண்காணிப்பாளரின் கீழ் அடுத்த கட்ட அகழாய்வு நடந்தது. இதற்குப் பிறகு கீழடியில் இந்தியத் தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) அகழாய்வுப் பணிகளை நிறுத்திக்கொண்டது. தமிழ்நாடு அரசு, பல கட்டங்களாக கீழடியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தொடர்ந்து அகழாய்வுகளை மேற்கொண்டு வருகிறது. கீழடியில் மூன்று பண்பாட்டு காலகட்டங்கள் பட மூலாதாரம்,ARCHAEOLOGICAL SURVEY OF INDIA இந்தியத் தொல்லியல் துறை நடத்திய முதல் இரண்டு அகழாய்வுகளின் ஆய்வறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணா 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏஎஸ்ஐயிடம் சமர்ப்பித்தார். இந்த அறிக்கை 982 பக்கங்களுக்கு எழுதப்பட்டிருந்தது. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இரண்டாண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், அறிக்கை தொடர்பாக சில கேள்விகளை எழுப்பி, அறிக்கை அமர்நாத் ராமகிருஷ்ணாவிடமே திருப்பி அனுப்பப்பட்டது. கீழடியில் நடந்த அகழாய்வின் அடிப்படையில் பார்க்கும்போது, அங்கே மூன்று பண்பாட்டு காலகட்டங்கள் நிலவியிருக்க வேண்டும் எனக் கருதுவதாக அமர்நாத் ராமகிருஷ்ணன் தனது அறிக்கையில் கூறியிருந்தார். இதில் முதலாவது காலகட்டம் கி.மு. எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு வரை நிலவியிருக்க வேண்டும் என்றும் இரண்டாவது காலகட்டம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. முதலாம் நூற்றாண்டின் முடிவுவரை இருந்திருக்கலாம் என்றும் மூன்றாவது காலகட்டம் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டின் முடிவிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டையும் தாண்டிச் செல்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில் சில கேள்விகளை இந்தியத் தொல்லியல் துறை எழுப்பியிருந்தது. குறிப்பாக, "முதலாவது காலகட்டம், கி.மு. எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுவரை நிலவியிருக்க வேண்டும் என அறிக்கை கூறும் நிலையில், அதற்கு உறுதியான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். மற்ற இரண்டு காலகட்டங்களையும் ஏஎம்எஸ் காலக் கணிப்பு முறையின்படி (Accelerator Mass Spectrometry) உறுதிசெய்ய வேண்டும். முதல் காலகட்டத்திற்கு தற்போது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காலக் கணிப்பு மிகக் கூடுதலாகத் தெரிகிறது. அதிகபட்சமாக இந்தக் காலகட்டம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்" என்று இந்தியத் தொல்லியல் துறை கூறியிருந்தது. அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த மேலும் சில விஷயங்கள் குறித்தும் தொல்லியல் துறை சில திருத்தங்களைச் செய்யும்படி கோரியிருந்தது. கீழடியின் பழமையைக் கண்டுபிடிக்க செய்தது என்ன? பட மூலாதாரம்,KEELADIMUSEUM.TN.GOV.IN படக்குறிப்பு, கீழடி அகழாய்வுத் தளம் - வான்வழிப் பார்வை அமர்நாத் ராமகிருஷ்ணாவைப் பொறுத்தவரை, ஒரு தொல்லியல் தளத்தில் காலத்தை முடிவுசெய்ய ஏஎம்எஸ் முறை மட்டுமே இறுதியானதோ, போதுமானதோ அல்ல. "அகழாய்வு அறிக்கை என்பது அடிப்படையில், நாம் என்னெவெல்லாம் அகழாய்வு செய்திருக்கிறோமோ அதனைத் தொகுத்துத் தரும் அறிக்கைதான். எவ்வாறு கீழடி கண்டுபிடிக்கப்பட்டது, அதன் முக்கியத்துவம் என்ன, ஏன் அதனைத் தேர்ந்தெடுத்தோம், அகழாய்வை எந்த முறையில் மேற்கொண்டோம் என்ற விவரங்கள் இருக்கும். இரண்டாண்டுகளில் மொத்தம் 102 குழிகள் அகழாய்வு செய்யப்பட்டன. அதில் என்னென்ன கிடைத்தன என்பதைத்தான் விரிவான அறிக்கையாகக் கொடுத்திருக்கிறேன். காலக் கணிப்பைப் பொறுத்தவரை, அங்கு கிடைத்த மண்ணடுக்குகளின் (stratigraphy) அடிப்படையில் காலங்கள் கணிக்கப்பட்டுள்ளன. கீழடி தொல்லியல் மேட்டைப் பொறுத்தவரை ஆறு மீட்டருக்கு பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த மண்ணடுக்குகளைக் கொண்ட ஒரு தொல்லியல் மேடு. அந்த ஆறு மீட்டரில் கீழ் பகுதி எப்போது உருவானது, மேல் பகுதி எப்போது முடிவடைந்தது என்பதை காலக் கணிப்பு செய்ய வேண்டும். இதற்கு தொல்லியல் துறையில் மண் அடுக்குகளின் அடிப்படையில் காலத்தை முடிவுசெய்ய வழிமுறைகள் உள்ளன. இந்த முடிவுக்கு, அங்கு கிடைத்த கரிமப் பொருளின் மீது மேற்கொள்ளப்படும் ஏஎம்எஸ் காலக் கணிப்பு துணை நிற்கும். ஒரு இடத்தின் காலத்தைக் கணிக்க ஏஎம்எஸ்சும் ஒரு காரணியாக இருக்கலாம். ஆனால், அது மட்டுமே போதாது. மண் அடுக்குகள்தான் முக்கியமானவை" என்கிறார் அமர்நாத் ராமகிருஷ்ணா. அமர்நாத் ராமகிருஷ்ணா தனது அறிக்கையில் கீழடியின் துவக்க காலகட்டம் (Early Phase) கி.மு. எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுவரை இருக்கலாம் எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், கீழடி அவ்வளவு பழமையான இடமாக இருக்க முடியாது எனவும் அதிகபட்சம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என இந்தியத் தொல்லியல் துறை கூறியிருந்தது. "அகழாய்வில் கிடைத்த தரவுகள்தான் அந்த இடம் எந்த காலகட்டத்தைச் சேர்ந்தது என்ற முடிவைச் சொல்கின்றன. நான் என் விருப்பப்படி அதைச் சொல்ல முடியாது. அகழாய்வு செய்யும்போது ஒவ்வொரு அங்குலமாக எங்களுடைய களக் குறிப்பேட்டில் (Site Notebook) எல்லாவற்றையும் ஆவணப் படுத்துவோம். அதைத் தவிர, அங்கே வரைபடம் வரைபவர் ஒருவரை வைத்து வரைபடங்கள் வரையப்படும். அங்கே எத்தனை அடுக்குகள் இருக்கின்றன, அந்த அடுக்குகள் எப்படி இருக்கின்றன என்பதெல்லாம் பதிவுசெய்யப்படும். இவை எல்லாவற்றையும் ஆவணப் படுத்தி அந்த ஆவணங்களின் அடிப்படையில்தான் காலக்கணிப்பு செய்யப்படுகிறது. அங்கு கிடைத்த மண் அடுக்குகள், தொல் பொருட்கள்தான் காலக் கணிப்பைச் சொல்கின்றன" என்கிறார் அமர்நாத். கீழடியின் முதல் காலகட்டம் 2,800 - 2,500 ஆண்டுகள் பழமையானது என சொல்வது ஏன்? படக்குறிப்பு, அகழாய்வு செய்து ஒரு காலம் கணிக்கப்பட்டிருக்கிறது. அதனை நம் விருப்பத்திற்கு மாற்ற முடியாது என்கிறார் அமர்நாத் ராமகிருஷ்ணன். ஆனால், இந்தியத் தொல்லியல் துறையைப் பொறுத்தவரை, அமர்நாத் ராமகிருஷ்ணா தன் முடிவுகளை ஏஎம்எஸ் காலக் கணிப்பின்படி உறுதிசெய்திருக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறது. "எல்லா அடுக்குகளிலும் கரிமப் பொருள் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அதேபோல கரிமப் பொருட்களை எடுத்த உடனே ஆய்வுக்கு அனுப்பினால்தான் அதன் காலம் சரியாக இருக்கும். அதனை ஐந்தாறு வருடம் வைத்து அனுப்பினால் மாசுபட்டுவிடும். அதில் கிடைக்கும் காலமும், பண்பாட்டு அடுக்கில் கிடைக்கும் காலமும் ஒத்துப்போகாது. இதையெல்லாம் ஆராய்ந்துதான் கடைசியில் ஒரு முடிவுக்கு வருவோம். நாங்கள் தோண்டிய 102 குழிகளில் 88 கரிம மாதிரிகள் கிடைத்தன. இவற்றில் 23 மாதிரிகளைத்தான் என்னால் காலத்தை கணிக்கும் ஆய்வுக்கு அனுப்ப முடிந்தது. 2017ல் 2 மாதிரிகளுக்கு அனுமதி கிடைத்தது. 2020 6 மாதிரிகளுக்கு அனுமதி கிடைத்தது. தமிழகத் தொல்லியத் துறை 10 மாதிரிகளுக்கு நிதி உதவி அளித்தது. அவற்றை 2023ல் ஆய்வுக்கு அனுப்பினோம். ஆகவே பல்வேறு காலகட்டங்களில் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. இப்படி பல்வேறு காலகட்டங்களில் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பும்போது, அதில் மாசுபாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எடுத்த உடனேயே ஆய்வுக்கு அனுப்பும்போதுதான் நம்மால் காலத்தை துல்லியமாகக் கணிக்க முடியும். ஆனால், இந்த விவகாரத்தில் அப்படி நடக்கவில்லை. அப்படி கிடைக்கும் காலக் கணிப்பையும் மண் அடுக்குகளோடு ஒப்பிட்டுத்தான் காலத்தை கணிப்போம். இறுதியில் மண் அடுக்குகள்தான் பேசும். உதாரணமாக, கீழடியில் ஆறு மீட்டருக்கு மண் அடுக்குகள் இருந்தன. இதில் 3 மீட்டரில் கிடைத்த கரிமத்தை சோதித்தபோது, கி.மு. 300 என காலம் வந்தது. எனக்குப் பின்பாக தமிழக தொல்லியல் துறை கீழடியில் மேற்கொண்ட அகழாய்வில் 3.53 மீட்டரில் கிடைத்த கரிம மாதிரி கி.மு. 580 எனக் கிடைக்கிறது. 6 மீட்டர் அளவுக்கு மண் அடுக்குகள் உள்ள பகுதியில், மூன்றரை மீட்டரில் கிடைத்த கரிமம், கி.மு. 580 எனக் காட்டினால், அதற்குக் கீழுள்ள பகுதி இன்னும் பழமையானதாகத்தானே இருக்கும்? ஆகவே, தொல்லியலில் எப்போதுமே மண் அடுக்குகளும் அதில் கிடைக்கக்கூடிய பண்பாட்டு தொல் எச்சங்களும்தான் முக்கியம். கீழடியின் முதல் காலகட்டத்திற்கு கி.மு. 800 முதல் கி.மு. 500 ஏன் கொடுக்கப்பட்டது என்று ஒருவர் கேட்கலாம். அந்த காலகட்டம்தான் ஒரு நகரம் உருவாவவதற்கு முந்தைய ஒரு காலம் இருந்திருக்கிறது. கறுப்பு - சிவப்பு வண்ணப் பானைகள் கிடைத்தன. பெருங்கற்காலத்தில் கிடைத்த பானைகளோடு ஒத்துச் செல்லக்கூடிய பானைகள் அவை. மேலும் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகள் கிடைத்தன. ஆனால், அதற்காக அது பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பகுதி எனச் சொல்லிவிட முடியாது. தங்கள் முன்னோர்களின் நினைவாக அந்தக் கருவிகளை வைத்திருந்தார்கள் என்றுதான் சொல்ல முடியும். அதேபோல, கட்டடங்கள் வருவதற்கு முன்பாக கூரை வீடுகள் இருந்ததற்கான ஆதாரம் கிடைத்தது. இதைவைத்துத்தான் கீழுள்ள பகுதி கி.மு. 800 முதல் கி.மு. 500 வரையிலான காலமாக இருந்திருக்கலாம் என முடிவுசெய்யப்பட்டது. கி.மு. ஒன்றாம் நூற்றாண்டிலிருந்து அந்தப் பகுதி வீழ்ச்சியடைத் துவங்கியது. அதற்குப் பிந்தைய தரவுகள் கிடைக்கவில்லை" என்கிறார் அமர்நாத் ராமகிருஷ்ணன். கரிமப் பொருள் கிடைக்காமல், காலத்தை நிர்ணயித்தது எப்படி? பட மூலாதாரம்,KEELADIMUSEUM.TN.GOV.IN படக்குறிப்பு, இரண்டு அகழாய்வுகளிலும் கிடைத்த பொருட்களின் அடிப்படையில் மூன்று பண்பாட்டு காலகட்டம் அங்கே நிலவியிருக்க வேண்டும் அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையில் கூறியிருந்தார். தவிர, கீழடியில் ஆறு மீட்டர் ஆழத்தில் ஏஎம்எஸ் ஆய்வு செய்யத்தக்க கரிமப் பொருட்கள் கிடைக்கவில்லை என்கிறார் அமர்நாத். "நாங்கள் தோண்டிய குழிகளில் ஆறு மீட்டர் ஆழத்தில் கரிமப் பொருட்கள் கிடைக்கவில்லை. ஆனால், கரிமப் பொருளின் மீது செய்யப்படும் ஏஎம்எஸ் சோதனையின் முடிவுதான் இறுதியானதெனச் சொல்ல முடியாது. அப்படியே ஏஎம்எஸ்ஸை ஏற்றுக்கொள்வோம் என்றால், தமிழக தொல்லியல் துறை கீழடியில் மேற்கொண்ட அகழாய்வில் 3.53 மீட்டரில் கிடைத்த கரிம மாதிரி கி.மு. 580 எனக் கிடைத்ததே? அப்படியானால் ஆறு மீட்டர் ஆழத்திற்கு எந்தக் காலத்தைக் கொடுப்பது? கண்டிப்பாக, இதைவிட பின்னோக்கித்தானே இருக்க முடியும்? கி.மு. 800 முதல் கி.மு. 500 வரையிலான காலகட்டத்தில் ஒரு நகரம் உருவாவதற்கான தன்மை அங்கே இருந்திருக்கிறது என எங்கள் முடிவுகள் சொல்கின்றன. பல்வேறு விஷயங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து எங்கள் கால கணிப்பை அளித்திருக்கிறோம். அதுதான் முக்கியமானது. இந்த காலக் கணிப்போடு, தனித்த கரிமப் பொருளின் காலக் கணிப்பையும் இணைப்போம். தனித்த கரிமப் பொருளின் ஏஎம்எஸ் காலக் கணிப்பை மட்டும் துல்லியமானது எனச் சொல்ல முடியாது" என்கிறார் அவர். இந்த அறிக்கை குறித்து இந்தியத் தொல்லியல் துறை எழுப்பிய பிற கோரிக்கைகளை எளிதில் செய்துவிட முடியும் என்று கூறும் அமர்நாத், கீழடியின் காலம் குறித்த கணிப்பை மாற்ற முடியாது என்கிறார். "இலக்கணப் பிழைகள், படங்களில் உள்ள தவறுகளை பதிப்பிற்குப் போவதற்கு முன்பாக செய்ய தயாராக இருக்கிறோம். அதைச் சரிசெய்திருக்கிறோம். பெயர்களை (nomenclature) மாற்ற வேண்டும் என்கிறார்கள். pre என்பதை early எனக் குறிப்பிட வேண்டும் என்கிறார்கள். அதையெல்லாம் செய்யலாம். ஆனால், காலத்தை மாற்றியமைக்கச் சொன்னால் அது முடியாது. அகழாய்வு செய்து ஒரு காலம் கணிக்கப்பட்டிருக்கிறது. அதனை நம் விருப்பத்திற்கு மாற்ற முடியாது. அப்படி மாற்றியமைக்க வேண்டுமானால் மீண்டும் அகழாய்வு செய்ய வேண்டும். அதில் என்ன கிடைக்கிறது எனப் பார்க்க வேண்டும். அதில் வேறு ஒரு காலக் கணிப்பு கிடைக்கலாம். தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மேற்கொண்டிருக்கும் அகழாய்வின் முழுமையான முடிவுகள் வரும்போது அவர்கள் என்ன காலத்தை நிர்ணயம் செய்திருக்கிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டும்" என்கிறார். சிந்துச் சமவெளி அகழாய்வில் கரிமப் பொருள் ஆய்வு செய்யப்பட்டதா? பட மூலாதாரம்,KEELADIMUSEUM.TN.GOV.IN படக்குறிப்பு, கீழடி அகழ்வாய்வு தளம் (கோப்புப்படம்) மேலும் சிந்துச் சமவெளியின் காலம் எந்த ஏஎம்எஸ் முறையின் கீழ் இறுதிசெய்யப்பட்டது எனக் கேள்வியெழுப்புகிறார் அமர்நாத். "சிந்துச் சமவெளி அகழாய்வை ஜான் மார்ஷல் மேற்கொள்ளும்போது ஏஎம்எஸ் முறையே கிடையாது. அப்புறம் எப்படி சிந்துச் சமவெளி கி.மு. 2,500 ஆண்டைச் சேர்ந்தது என எப்படிச் சொல்லப்பட்டது? சிந்துச் சமவெளி நாகரீகத்தைப் பொறுத்தவரை அது ஹரப்பா, மொஹஞ்சதாரோவோடு நிற்கவில்லை. பல இடங்களிலும் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு எல்லா இடங்களிலும் மண் அடுக்குகள் ஆய்வு செய்யப்பட்டு, அங்கு கிடைத்த கலாசார, தொல் பொருட்கள் எப்படி பிற இடங்களோடு ஒத்துப்போகின்றன என்று ஆராயப்பட்டது. தமிழ்நாட்டில் காவிரி பூம்பட்டினம், புதுச்சேரி அரிக்கமேடு போன்ற வாழ்விடப் பகுதிகளில் நடந்த அகழாய்வில் இதுபோல விரிவான ஆய்வுகள் செய்யப்படவில்லை. இதைத் தவிர்த்து அகழாய்வு செய்யப்பட்ட இடங்கள் எல்லாமே இறந்தவர்களைப் புதைத்த இடங்கள்தான். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முதன் முதலில் கொற்கை அகழாய்வில்தான் ஏஎம்எஸ் முறையில் காலக் கணிப்பு செய்யப்பட்டது. அதில் கி.மு. 785ஆம் ஆண்டு எனக் கிடைத்தது. ஆனால், அந்தக் காலக் கணிப்பு ஏற்கப்படவில்லை. அந்த இடம் கி.மு. 300ஐச் சேர்ந்தது என்றுதான் குறிப்பிட்டார்கள். வைகை நதிக் கரையில் நூற்றுக்கும் மேற்பட்ட வாழ்விடப் பகுதிகளைக் கண்டுபிடித்தோம். தேனி மாவட்டத்தில் டொம்பிச்சேரி பகுதியை அகழாய்வு செய்ய கேட்டிருந்தோம். எனக்கு அனுமதி கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால் ஒப்பிட்டுப் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும். இப்போது தமிழ்நாடு அரசு பல இடங்களில் செய்கிறார்கள். அகரம், கொந்தகை, வெம்பக்கோட்டை போன்ற இடங்களில் அகழாய்வு செய்கிறார்கள். இங்கு கிடைக்கும் விவரங்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்" என்கிறார் அமர்நாத் ராமகிருஷ்ணா. "கீழடி அறிக்கையில் குறிப்பிடும் காலத்தை மாற்ற முடியாது": அமர்நாத் கீழடியின் காலத்தை மேலும் மேலும் கீழே கொண்டுசெல்வது ஒரு குறுங்குழுவாத மனப்பான்மை என்று சொல்வதை புறக்கணிக்கிறார் அமர்நாத். "நாங்கள் எல்லாவற்றையுமே அகழாய்வுக் கோட்பாடுகளின் அடிப்படையில் தான் கணித்திருக்கிறோம். ராக்கிடி உட்பட இதற்கு முந்தைய எல்லா காலக் கணிப்புகளும் ஏஎம்எஸ் முறைப்படி செய்யப்பட்டவை அல்ல. எல்லாமே இந்தியத் தொல்லியல் துறையின் நெறிமுறைப்படுத்தப்பட்ட காலக் கணிப்பு முறைகளின் அடிப்படையில்தான் கணிக்கப்பட்டிருக்கின்றன. அதே முறையில்தான் இங்கேயும் கணித்திருக்கிறோம். இங்கே கூடுதலாக ஏஎம்எஸ் கணிப்பும் செய்யப்பட்டுள்ளது. வட இந்தியாவில் நடந்த ஆய்வுகளில் எப்படி காலக் கணிப்பு செய்யப்பட்டதோ, அப்படித்தான் இங்கேயும் செய்யப்பட்டிருக்கிறது. வேறெந்த புதிய முறையிலும் இதனைச் செய்யவில்லை" என்கிறார் அமர்நாத் ராமகிருஷ்ணன். மேலும், ஒரு அகழாய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டால் அந்த அகழாய்வாளருடன் நடக்கும் விவாதத்தில்தான் சந்தேகங்கள் கேட்பது, விளக்கங்கள் கேட்பது போன்றவை நடைபெறும் எனக் குறிப்பிடும் அமர்நாத் ராமகிருஷ்ணன், இதுபோல கடிதம் அனுப்பப்பட்டதில்லை என்கிறார். மேலும், அறிக்கையில் உள்ள காலக் கணிப்பை மாற்றப்போவதில்லை என்கிறார் உறுதியாக. "நான் கேட்ட கேள்விகளுக்கான விளக்கத்தை அளித்துவிட்டேன். எப்போதுமே விளக்கம் கேட்பது என்பது, ஒரு விவாதத்தில்தான் கேட்கப்படும். இதுபோல எழுத்துப் பூர்வமாக கேட்க மாட்டார்கள். என் அறிக்கையை கொடுத்து, அதில் பிரச்னை இருக்கும் இடங்களைச் சுட்டிக்காட்டினால், அதனை விளக்குவதற்கான வாய்ப்பை அளிக்க வேண்டும். பொதுவாக அப்படித்தான் நடக்கும். அதற்கு விளக்கம் அளிப்போம். அந்தத் திருத்தங்களைச் செய்து அச்சுக்கு அனுப்புவோம். இனி என் அறிக்கை மாற்ற வேண்டுமென்றால், மீண்டும் அகழாய்வு செய்ய வேண்டும். ஏனென்றால், இப்போது சொல்லப்பட்ட முடிவு ஒரு அகழாய்வின் முடிவு. அது சரியில்லை என்றால் மீண்டும் அகழாய்வு செய்து ஒரு அறிக்கையை அளியுங்கள். இதைத் தவிர வேறு ஏதும் நான் சொல்ல முடியாது" என்கிறார் அவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1wp1e70l0ro
  25. கொக்ரெல்லையைச் சேர்ந்த வெற்றியாளருக்கு ரூ.47 கோடி லொட்டரி பரிசு தொகை வழங்கி வைப்பு Published By: DIGITAL DESK 3 18 JUL, 2025 | 10:47 AM இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய லொட்டரி பரிசு தொகையை வென்றவருக்கு 47 கோடி ரூபாய் மதிப்புள்ள காசோலையை தேசிய லொத்தர் சபை வழங்கியுள்ளது. மெகா பவர் 2210 ஆவது சீட்டிழுப்பில், 47 கோடியே 45 லட்சத்து 99 ஆயிரத்து 422 ரூபா சூப்பர் பரிசுடன் கூடிய வெற்றி பெற்ற லொட்டரி சீட்டை, கொக்கரெல்ல பகுதியைச் சேர்ந்த விற்பனை முகவரான எச்.ஏ. ஜானகி ஹேமமாலா விற்பனை செய்துள்ளார். தேசிய லொத்தர் சபை ஏற்பாடு செய்த விடேச நிகழ்வு ஒன்றில் கொழும்பு மேயர் வ்ராய் கெலி பல்தசாரினால் லொட்டரி பரிசை வென்ற நபருக்குரிய காசோலை உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது. துணை மேயர் ஹேமந்த வீரகோன், தேசிய லொத்தர் சபை தலைவர் M.D.C.A. பெரேரா மற்றும் பொது முகாமையாளர் ஏ.எம். ஆரிஃப் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். https://www.virakesari.lk/article/220275

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.