Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் மற்றும் படகுகள் சேதமடைந்தவர்களின்குடும்பத்தவர்களிற்கு இழப்பீடு - இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவேண்டும் என வைகோ வேண்டுகோள் 23 JUL, 2025 | 01:32 PM கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் மற்றும் படகுகள் சேதமடைந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்குவதற்கு இலங்கை அரசிற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். கச்சத் தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து கச்சத் தீவை திரும்பப் பெற வேண்டும் எனமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ இந்திய நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதும் கைது செய்யப்படுவதும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இது வரை கைது செய்யப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை 150 ஆகவும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளின் எண்ணிக்கை 20 ஆகவும் உயர்ந்துள்ளன. இதனால் மீனவ குடும்பத்தினர் பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் தங்கள் உறவினர்களை விடுவிப்பதற்காக பெரிய அபராதங்களை கட்ட வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. அண்மையில் 13.07.2025 அன்று ஆறு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களின் மோட்டார் பொருத்தப்பட்ட மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்ட கொடூரம் நடைபெற்றுள்ளது. பாக் விரிகுடாவில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளைப் பறிக்கும் வகையில்இ இலங்கை கடற்படை தொடர்ந்து அத்துமீறி வருகிறது. இது இந்திய ஒன்றிய அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது. அடிக்கடி தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதாலும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதாலும் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றன. எனவே கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன். எதிர்காலத்தில் மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும் மீனவ சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கவும் ஒன்றிய அரசு தீர்வுகாண வேண்டும். தொடர்ச்சியான கைதுகள் மீனவர்களுக்கு நெருக்கடியை உருவாக்குவது மட்டுமல்லாமல்இ பாக் விரிகுடா பகுதியில் மீன்பிடிப்புத் தொழிலையும் கேள்விக்குள்ளாக்குகிறது. மீன்பிடி தொழிலின் நீண்டகால நிலைத்தன்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்றது. கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் மற்றும் படகுகள் சேதமடைந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்குவதற்கு இலங்கை அரசிற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். கச்சத் தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்துஇ கச்சத் தீவை திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன். https://www.virakesari.lk/article/220722
  2. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் சிராஜ் பிபிசி தமிழ் 52 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழைந்த நபர், கருவியின் காந்த புலத்தால் இழுக்கப்பட்டு உயிரிழந்தார். உடற்பயிற்சிக்கான 9 கிலோ சங்கிலியுடன் இந்த அறைக்குள் அவர் நுழைந்ததால் எந்திரத்தின் காந்தப்புலம் அவரை இழுத்ததாக விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர். இது எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பது குறித்து பல சந்தேகங்களை உங்களுக்கு எழுப்பியிருக்கலாம். முதல்முறையாக மருத்துவமனைகளில் எம்ஆர்ஐ (MRI) ஸ்கேன் எடுத்துக்கொள்ள செல்லும் பலருக்கும், ஒருவித தயக்கம் இருக்கலாம். இதற்கு முதன்மையான காரணமாக இருப்பது, எம்ஆர்ஐ ஸ்கேன் கருவியின் வடிவமைப்பு. எம்ஆர்ஐ ஸ்கேனர் என்பது சக்திவாய்ந்த காந்தங்களைக் கொண்ட ஒரு பெரிய குழாய் போன்ற அமைப்பாகும். ஸ்கேன் செய்யும்போது, அந்த குழாய் அமைப்பின் உள்ளே ஒருவர் அனுப்பப்படுவார். அப்போது மின்காந்த எம்ஆர்ஐ ஸ்கேன் பாதுகாப்பானது மற்றும் மருத்துவ ரீதியாக மிகவும் உதவிகரமானது என்றே பெரும்பாலான மருத்துவ அமைப்புகளின் ஆய்வுக் கட்டுரைகள் தெரிவிக்கின்றன. எம்ஆர்ஐ ஸ்கேன் என்றால் என்ன? யாருக்கெல்லாம் இதனை பரிந்துரைப்பதில் கட்டுப்பாடுகள் உள்ளன? எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? இந்த கேள்விகளுக்கான பதில்களை கட்டுரையில் பார்க்கலாம். எம்ஆர்ஐ ஸ்கேன் என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எம்ஆர்ஐ ஸ்கேன் ஒரு வலியில்லா செயல்முறையாகும். எம்ஆர்ஐ (Magnetic Resonance Imaging) என்பது உடலின் உள்ளுறுப்புகள், மென்மையான திசுக்கள், எலும்புகள் மற்றும் பிற உள் கட்டமைப்புகளின் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை உருவாக்கப் பயன்படும் ஒரு மருத்துவ தொழில்நுட்பம் ஆகும். எக்ஸ்-கதிர்கள் அல்லது சிடி ஸ்கேன்களைப் போல, எம்ஆர்ஐ கதிர்வீச்சைப் பயன்படுத்துவதில்லை. மாறாக, வலுவான காந்தப்புலங்கள் மற்றும் ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. மூளை மற்றும் முதுகுத் தண்டு எலும்புகள் மற்றும் மூட்டுகள் மார்பகங்கள் இதயம் மற்றும் ரத்த நாளங்கள் கல்லீரல், கருப்பை அல்லது புரோஸ்டேட் சுரப்பி போன்ற உள்ளுறுப்புகள் என உடலின் பல்வேறு பகுதிகளை பரிசோதிக்க எம்ஆர்ஐ ஸ்கேன் பயன்படுகிறது. இந்த ஸ்கேனின் முடிவுகள் உடலின் நிலையைக் கண்டறியவும், சிகிச்சைகளைத் திட்டமிடவும், முந்தைய சிகிச்சை எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது என்பதை மதிப்பிடவும் உதவும் என பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை தெரிவிக்கிறது. எம்ஆர்ஐ ஸ்கேன் செயல்முறையின்போது என்ன நடக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எம்ஆர்ஐ ஸ்கேனர் ஒரு நிபுணத்துவம் பெற்ற ரேடியோகிராஃபரால் இயக்கப்படுகிறது. பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையின் கட்டுரையின்படி, எம்ஆர்ஐ ஸ்கேனர் கருவி என்பது சக்திவாய்ந்த காந்தங்களைக் கொண்ட, இரு முனைகளிலும் திறந்திருக்கும் ஒரு பெரிய குழாய் போன்ற அமைப்பாகும். எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யும்போது, ஸ்கேனர் கருவியுடன் பொருத்தப்பட்ட ஒரு தட்டையான படுக்கையில் நீங்கள் படுக்க வேண்டும். பின்னர் அந்த படுக்கை கருவிக்குள் நகர்த்தப்படும். உங்கள் உடலின் எந்தப் பகுதியை ஸ்கேன் செய்யப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்து, தலை அல்லது கால் முதலில் என ஸ்கேனருக்குள் நகர்த்தப்படுவீர்கள். எம்ஆர்ஐ ஸ்கேனர் ஒரு நிபுணத்துவம் பெற்ற ரேடியோகிராஃபரால் இயக்கப்படுகிறது. சில சமயங்களில், ஸ்கேன் செய்யப்படும் உடல் பகுதியின் மேல், அதாவது தலை அல்லது மார்பு போன்றவற்றின் மேல் ஒரு ஃபிரேம் வைக்கப்படலாம். இந்த ஃபிரேம்-இல் ஸ்கேன் செய்யும் போது உங்கள் உடலால் அனுப்பப்படும் சிக்னல்களைப் பெறுவதற்கான ரிசீவர்கள் இருக்கும். சிறந்த, தரமான எம்ஆர்ஐ படத்தை உருவாக்க இது உதவும். ஸ்கேன் செய்யப்படும் பகுதியின் அளவு மற்றும் எத்தனை படங்கள் எடுக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்து, ஸ்கேன் 15 முதல் 90 நிமிடங்கள் வரை நீடிக்கும். இதுவொரு வலியில்லா செயல்முறையாகும். எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கும்போது முடிந்தவரை அசையாமல் இருப்பது மிகவும் முக்கியம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எக்ஸ்-கதிர்கள் அல்லது சிடி ஸ்கேன்களைப் போல, எம்ஆர்ஐ அயனியாக்கும் கதிர்வீச்சைப் பயன்படுத்துவதில்லை. எம்ஆர்ஐ ஸ்கேனரை இயக்க ஒரு கணினி பயன்படுத்தப்படுகிறது. இது ஸ்கேனரால் உருவாக்கப்படும் காந்தப்புலத்திலிருந்து விலகி இருக்கும் வகையில் வேறு அறையில் வைக்கப்பட்டிருக்கும். அங்கிருந்து ரேடியோகிராஃபர் அந்தக் கணினியை இயக்குவார். "ரேடியோகிராஃபர் வழங்கக்கூடிய வழிகாட்டுதல்களையும், எம்ஆர்ஐ தொடர்பான விதிகளையும் முறையாக பின்பற்றினால் எம்ஆர்ஐ ஸ்கேன் ஒரு சிறந்த மருத்துவ தொழில்நுட்பமாகும்" என்கிறார் மருத்துவர் விஸ்வநாத். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் கதிரியக்கவியல் துறையில் மூத்த ஆலோசகராகப் பணிபுரிகிறார். "எம்ஆர்ஐ ஸ்கேன் செயல்முறையின்போது குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர் ஒருவர் உங்களுடன் இருக்க அனுமதிக்கப்படலாம். குழந்தைகள் என்றால், பெற்றோர்களில் ஒருவர் குழந்தையுடன் இருக்கலாம். ஆனால், அவர்களுக்கும் நோயாளிக்கான அனைத்து விதிகளும் பொருந்தும்" என்கிறார் அவர். எம்ஆர்ஐ அறைக்குள் நுழைவதற்கு முன், உங்களிடம் பல்வேறு கேள்விகள், ஒரு சிறப்பு ஸ்கிரீனிங் படிவத்தைப் பயன்படுத்தி கேட்கப்படும். உங்கள் உடலில் 'பேஸ்மேக்கர்' போன்ற கருவிகள் ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளனவா என்பதை அந்த படிவம் மூலம் தெரிவிக்க வேண்டும். எந்தெந்த பொருட்களை அகற்ற வேண்டும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எம்ஆர்ஐ ஸ்கேன் செயல்முறைக்கு முன் காது கேளாமைக்கான வெளிப்புற கருவிகள் போன்றவற்றை நிச்சயம் அகற்ற வேண்டும். அடுத்து, உங்களிடமுள்ள அனைத்து உலோகப் பொருட்களையும், உலோக நகைகளையும் அகற்றுமாறு அறிவுறுத்தப்படும். உங்களுடன் எம்ஆர்ஐ அறையில் இருக்கப்போகும் நபரும் அனைத்து விதமான உலோகப் பொருட்களையும் அகற்றிவிட வேண்டும், ஸ்கிரீனிங் படிவத்தையும் பூர்த்தி செய்யவேண்டும். "காரணம், எம்ஆர்ஐ கருவி சக்திவாய்ந்த காந்தங்களைப் பயன்படுத்துகிறது. உங்கள் உடலில் உலோகம் இருந்து, அது காந்தத்தால் ஈர்க்கப்பட்டால், பெரும் ஆபத்திற்கு வழிவகுக்கும். எனவே உடலில் ஏதேனும் உலோகம் அல்லது மின்னனுக் கருவிகள் இருந்தால் நிச்சயம் தெரியப்படுத்த வேண்டும்." என்கிறார் மருத்துவர் விஸ்வநாத். பர்ஸ், பணப்பை, கிரெடிட் கார்டுகள், காந்தப் பட்டைகள் கொண்ட அட்டைகள் செல்போன்கள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்கள் போன்ற மின்னணு சாதனங்கள் காது கேளாமைக்கான வெளிப்புற கருவிகள் உலோக நகைகள் மற்றும் கடிகாரங்கள் பேனாக்கள், சாவிகள், நாணயங்கள் ஹேர்பின்கள், ஹேர் கிளிப்புகள் மற்றும் சில ஹேர் ஆயின்மென்ட்கள் ஷூக்கள், பெல்ட் கொக்கிகள், பாதுகாப்பு பின்கள் உலோகப் பொருள் கொண்ட எந்தவொரு ஆடை போன்ற வெளிப்புற பொருட்களை எம்ஆர்ஐ அறைக்கு நிச்சயம் கொண்டு செல்லக்கூடாது என 'ரேடியாலஜிஇன்ஃபோ' இணையதளம் எச்சரிக்கிறது. "சுத்தத் தங்கம் காந்தத்தால் ஈர்க்கப்படாது, ஆனால் தங்க நகைகள் உலோகங்கள் கலந்திருக்க வாய்ப்பு உள்ளது என்பதால் அதை நாங்கள் அனுமதிப்பதில்லை. ஒருவரின் உடலுக்கு ஆபத்து என்பதோடு மட்டுமல்லாது உலோகப் பொருட்கள் எம்ஆர்ஐ படங்களை சிதைத்துவிடும்." எனக் கூறுகிறார். பொதுவாக எம்ஆர்ஐ பரிசோதனை செய்வதற்கு முன், மருத்துவமனை நிர்வாகத்தால் 'மெட்டல் டிடக்டர்' போன்ற சாதனம் கொண்டு ஒருவர் சோதிக்கப்படுவார் என்கிறார் விஸ்வநாத். உடலுக்குள் பொருத்தப்பட்ட கருவிகள் குறித்த எச்சரிக்கை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 'பேஸ்மேக்கர் போன்ற சாதனங்கள் இப்போது நவீன தொழில்நுட்பம் கொண்டு எம்ஆர்ஐ மூலம் பாதிக்கப்படாத வகையில் தயாரிக்கப்படுகின்றன' "ஒருவரின் உடலுக்குள் இருக்கும் உலோக அல்லது மின்னணு கருவி (இம்பிளான்ட்), எம்ஆர்ஐ மூலம் பாதிக்கப்படாது (MRI Compatible) என சான்று பெற்றது என்றால் அவர்கள் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பதில் பிரச்னையில்லை" என்கிறார் விஸ்வநாத். இத்தகைய இம்பிளான்ட் சாதனங்கள் அல்லது உடலுக்குள் இருக்கும் உலோகங்களுக்கு உதாரணமாக பின்வருபவற்றை குறிப்பிடுகிறது அமெரிக்காவின் 'மாயோ கிளினிக்' மருத்துவ அமைப்பு. பேஸ்மேக்கர்- ஒழுங்கற்ற இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு சிறிய மின் சாதனம். செயற்கை இதய வால்வுகள். இதய டிஃபிபிரிலேட்டர். மருந்து உட்செலுத்துதல் பம்புகள். நரம்பு தூண்டுதலுக்கான கருவிகள். உலோக கிளிப்புகள். அறுவை சிகிச்சையின்போது பொருத்தப்படும் உலோக பின், ஸ்க்ரூ, பிளேட், ஸ்டென்ட் அல்லது ஸ்டேபிள்ஸ். கோக்லியர் இம்பிளான்ட்ஸ் (காது கேளாமை போன்ற பிரச்னைக்கு) தோட்டா அல்லது வேறு எந்த வகையான உலோகத் துண்டு. கருப்பையக சாதனம். தொடர்ந்து பேசிய மருத்துவர் விஸ்வநாத். "கர்ப்பிணிப் பெண்களுக்கும் எம்ஆர்ஐ ஸ்கேன் பரிந்துரைக்கப்படுகிறது. இதில் காந்தப் புலன்கள் மற்றும் ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுவதால், சிடி ஸ்கேன் போல கதிர்வீச்சு அபாயம் இல்லை என்பதால் பாதுகாப்பானது தான்" என்கிறார். பிற சவால்கள் என்ன? படக்குறிப்பு, கிளாஸ்ட்ரோபோபியா உடையவர்களுக்கு எம்ஆர்ஐ செயல்முறை சற்று சிக்கலானதாக இருக்கும் என்கிறார் மருத்துவர் விஸ்வநாத். ஆனால், கிளாஸ்ட்ரோபோபியா எனப்படும் குறுகிய அல்லது மூடப்பட்ட இடங்களில் தனியாக இருப்பது தொடர்பான அச்சம் கொண்டவர்களுக்கு எம்ஆர்ஐ செயல்முறை சற்று சிக்கலானதாக இருக்கும் என்றும் விஸ்வநாத் குறிப்பிடுகிறார். "எம்ஆர்ஐ செயல்முறை பெரும்பாலும் 30 நிமிடங்களுக்கும் அதிகமாக இருக்கும் என்பதால், கிளாஸ்ட்ரோபோபியா கொண்டவர்களுக்கு அப்படியே அசையாமல் படுத்திருப்பது ஒரு பதற்றத்தை ஏற்படுத்தும். அதைத் தணிக்க அவர்களுடன் உறவினர் அல்லது நண்பர் இருக்கலாம்" என்கிறார் அவர். ஸ்கேனர் கருவிக்குள் கால்கள் முதலில் செல்வது பதற்றத்தைக் குறைக்க உதவலாம், ஆனால் அது எப்போதும் சாத்தியமில்லை என பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையின் கட்டுரை தெரிவிக்கிறது. சில எம்ஆர்ஐ ஸ்கேன்களில் கான்ட்ராஸ்ட் ஏஜென்ட் எனப்படும் பொருளும் ஒருவரது உடலுக்குள் செலுத்தப்படும். இது உடலின் சில திசுக்கள் மற்றும் ரத்த நாளங்களை இன்னும் தெளிவாகவும் விரிவாகவும் காண்பிக்கும். சில நேரங்களில் இந்த கான்ட்ராஸ்ட் ஏஜென்ட்கள், காய்ச்சல், சோர்வு தோல் வெடிப்பு தலைவலி தலைச்சுற்றல், போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும், ஆனால் இந்த பக்க விளைவுகள் பொதுவாக லேசானவை மற்றும் நீண்ட காலம் நீடிக்காது என்றும் தேசிய சுகாதார சேவையின் கட்டுரை தெரிவிக்கிறது. அதேநேரம், கடுமையான சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கான்ட்ராஸ்ட் ஏஜென்ட் திசு மற்றும் உறுப்பு சேதத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது என்பதால், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் 'கான்ட்ராஸ்ட் ஏஜென்ட்' குறித்து மருத்துவரிடம் முன்பே கலந்தாலோசிப்பது சிறந்தது என்றும் அந்தக் கட்டுரை பரிந்துரைக்கிறது. "எம்ஆர்ஐ ஸ்கேன்களின் போது பயன்படுத்தப்படும் காந்தப்புலங்கள் மற்றும் ரேடியோ அலைகள் மனித உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து விரிவான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆபத்து இருப்பதாகக் கூறுவதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை, எனவே எம்ஆர்ஐ ஸ்கேன்கள் பாதுகாப்பான மருத்துவ நடைமுறைகளில் ஒன்றாகும். அதைக் குறித்து அச்சம், பதற்றம் கொள்ள தேவையில்லை" என்கிறார் மருத்துவர் விஸ்வநாத். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz09kxzyl39o
  3. 4) சுழிபுரம் கிழக்கைச் சேர்ந்த அமரர் பூலோகதேவி ஆண்டியப்பன் ஞாபகார்த்தமாக உருவாக்கப்பட்டுள்ள "சுழிபுரம் பூலோகதேவி அறக்கட்டளை" ஊடாக பேரன் அபிஷேக் அசோக் (சென்னை, அமெரிக்கா) குடும்பத்தினர் வீட்டுத்திட்ட பணிகளை நிறைவு செய்ய உதவும் வகையில் திரு லக்சன் அவர்களுடைய வங்கிக் கணக்கில் 35000 ரூபாவை வைப்பிட்டுள்ளனர். 23/07/2025 இன்றுவரை மொத்தமாக 139970 ரூபா திரு லக்சனுடைய வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.
  4. மட்டு. வவுணதீவு பொலிஸார் இருவர் படுகொலை தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவலை வழங்கிய பொலிஸ் பரிசோதகர் கைது 23 JUL, 2025 | 10:17 AM மட்டக்களப்பு, வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு வெட்டி கொலை செய்த சம்பவம் தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவலை வழங்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸ் பரிசோதகர் ஒருவரை திங்கட்கிழமை (21) குற்றபுலனாய்வு பிரிவினர் கொழும்பில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கைதான பொலிஸ் பரிசோதகர் மட்டு. மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பின்னர் தற்போது கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருபவர் என பொலிஸ் உயர் அதிகாரி மேலும் ஒருவர் தெரிவித்தார். இது பற்றி தெரியவருவதாவது, கடந்த 2018 நவம்பர் 29 ஆம் திகதி வவுணதீவு வலையிறவு பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இருந்த பொலிஸ் சாஜன்ட் மற்றும் பொலிஸ் கொஸ்தாபர் ஆகியோரை இனந் தெரியாதோர் இருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கத்தியால் வெட்டியும் கொலை செய்துவிட்டு பொலிஸார் இருவரின் துப்பாக்கிகளையும் எடுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் விடுதலைப்புலிகளில் இருந்து புனர்வாழ்வு பெற்று வெளிவந்த வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பாவித்து வந்த ஜக்கட் பாலத்தின் கீழ் வீசி எறிந்து கிடப்பதாகவும் அவர் இந்த படுகொலையை செய்ததாக அரச மற்றும் புலனாய்வு பிரிவினர் அறிக்கையிட்டதையடுத்து அவரை கடந்த 2018 நவம்பர் 30 ம் திகதி பொலிஸார் கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கொழும்பிலுள்ள குற்ற புலனாய்வு திணைக்களத்தின் நான்காம் மாடியில் தடுத்துவைக்கப்பட்ட நிலையில் 2019 ஏப்பிரல் 21 உயித்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான ஜ.எஸ்.ஜ.எஸ் பயங்கரவாத அமைப்பின் சஹரானின் குழுவைச் சேர்ந்த கபூர் மாமா என அழைக்கப்படும் சஹரானின் சாரதி உட்பட நால்வரை கைது செய்ததன் பின்னர் அவர்கள் தான் இந்த படுகொலையை செய்துள்ளதாக தெரியவந்ததையடுத்து கைது செய்யப்பட்ட முன்னாள் பேராளியை விடுதலை செய்தனர். இதனையடுத்து தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைபற்றியதையடுத்து இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மீண்டும் முன்னெடுத்த நிலையில் இந்த பொலிஸார் படுகொலைச் சம்பவத்தின் உண்மை சம்பத்தை மூடிமறைத்து விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி மீது சுமத்தப்பட்டதை கண்டறிந்தனர். இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பாக அப்போது மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியாக கடமையாற்றிவரும் தற்போது கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் பரிசோதகர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு விசாரணைக்கு திங்கட்கிழமை (21) அழைக்கப்பட்டு விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பாக கடந்த ஏப்ரல் 8ம் திகதி மட்டக்களப்பு கரடியனாறு தேசிய புலனாய்வு சேவை பிரிவில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை குற்றபுலனாய்வு பிரிவினர் கைது செய்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது. https://www.virakesari.lk/article/220695
  5. இங்கிலாந்தின் பலவீனம் இந்தியாவின் பலமாக மாறுமா? 4-வது டெஸ்ட் இன்று தொடக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் கட்டுரை தகவல் தினேஷ்குமார் கிரிக்கெட் விமர்சகர் 23 ஜூலை 2025, 01:38 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஆண்டர்சன்–டெண்டுல்கர் தொடரின் நான்காவது டெஸ்ட், இன்று மான்செஸ்டரில் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த தொடரின் பெரும்பான்மை செசன்களில் ஆதிக்கம் செலுத்தியும், முக்கியமான தருணங்களை கோட்டைவிட்டதால் இந்திய அணி 2–1 என பின்தங்கியுள்ளது. சுமாரான அணியாக இருந்தபோதும், ஸ்டோக்ஸ், ரூட், ஆர்ச்சர் என மேட்ச் வின்னர்கள் தக்க சமயத்தில் தோள் கொடுப்பதால், இங்கிலாந்தின் கை தற்சமயம் ஓங்கியுள்ளது. வரலாற்று சிறப்பு வாய்ந்த ஓல்ட் டிராஃபோர்ட் மைதானம், இந்தியாவுக்கு என்றைக்கும் சாதகமான ஒன்றாக இருந்ததில்லை. 1936 முதல் இதுவரை 9 டெஸ்ட்களில் இந்திய அணி, மான்செஸ்டரில் விளையாடியுள்ளது. ஆனால், ஒருமுறை கூட வெற்றிக்கோட்டை தொடவில்லை. டெஸ்ட் மட்டுமல்ல வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலும், ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் இந்தியாவுக்கு நல்ல நினைவுகள் என்று எதுவுமில்லை. 2019 உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா மண்ணைக் கவ்வியது இங்குதான். பட மூலாதாரம்,GETTY IMAGES ஒருகாலத்தில் தாறுமாறாக சீறிய ஓல்ட் டிராஃபோர்ட் மைதானம், மறுகட்டுமானத்துக்கு பிறகு தட்டையாக மாறிவிட்டது. ஆகவே, லார்ட்ஸ் டெஸ்ட் போலவே இந்த டெஸ்ட்டும் 'லோ ஸ்கோரிங் திரில்லர்' ஆக (Low scoring thriller) மாறுவதற்கு வாய்ப்பதிகம் உள்ளது. சுழலுக்கு சாதகமான ஆடுகளம் என்பதால், 'சைனா மேன்' சுழலர் குல்தீப் யாதவ் லெவனில் இடம்பிடித்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால், யார் இடத்தில் குல்தீப் விளையாடப் போகிறார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. காயத்தால் தொடரில் இருந்து விலகிய ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக சேர்க்கலாம். ஒருவேளை, நிதிஷ் இடத்தில் மற்றொரு ஆல்ரவுண்டர் ஷார்துலை கொண்டுவர அணி நிர்வாகம் விரும்பினால், ஆஃப் ஸ்பின்னிங் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர்தான் குல்தீப்புக்கு வழிவிட்டாக வேண்டும். நீண்ட பேட்டிங் வரிசையை விரும்பும் இந்திய அணி நிர்வாகம், தற்காப்பு பேட்டிங்கில் வித்தரான சுந்தர் தலையில் கை வைக்குமா என்பது சந்தேகம். ஒன்று, இரண்டு, ஐந்தாம் நாள்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், பும்ரா–சிராஜ், மூன்று சுழலர்கள் என இந்தியா களமிறங்கவும் வாய்ப்புள்ளது. 1956 மான்செஸ்டர் டெஸ்டில் மழையால் பாதிக்கப்பட்ட இதே மைதானத்தில், இங்கிலாந்தின் ஜிம் லேக்கர் 19 விக்கெட்களை எடுத்து உலக சாதனை படைத்தார் என்பதை மறந்துவிட முடியாது. பட மூலாதாரம்,GETTY IMAGES ரிஸ்க் எடுப்பதற்கான சமயம் இதுவல்ல என்று குல்தீப்பை எடுக்காமல், 3 வேகப்பந்து வீச்சாளர், 2 ஸ்பின்னிங் ஆல்ரவுண்டர்கள் (சுந்தர், ஜடேஜ்) என இந்தியா களமிறங்கவும் தயங்காது. காயத்தால் அர்ஷ்தீப் சிங், ஆகாஷ் தீப் விலகியதாலும் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சு எடுபடாததாலும் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக கம்போஜ் களமிறங்கலாம். ஷான் பொல்லாக் பாணியில் 5–15 செமீ லெங்த்தில் தையலை (seam) பிடித்து பந்துவீசும் கம்போஜ், இங்கிலாந்து மண்ணுக்கு என்றே அளவெடுத்து செய்தது மாதிரியான ஒரு பவுலர். பேட்டிங் வரிசையில் மாற்றம் இருப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. நல்ல தொடக்கம் கிடைத்தும் பெரிய இன்னிங்ஸாக மாற்ற முடியாமல் திணறும் கருண் நாயருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்து பார்ப்பார்கள். ஸ்லிப் பிராந்தியத்தில் கருணுக்கு நிகரான ஒரு ஃபீல்டர் இப்போது அணியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பேட்டிங்கை பலப்படுத்துவதற்காக கூடுதல் பேட்ஸ்மேனாக சுதர்சனை அணியில் சேர்க்கவும் அணி நிர்வாகம் தயங்காது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவின் காம்பினேஷன் எப்படி இருக்கப் போகிறது என்பது தெளிவில்லாத நிலையில், வழக்கம் போல ஆட்டத்துக்கு முன்பே லெவனை அறிவித்துவிட்டு இங்கிலாந்து களம் காண்கிறது. காயத்தால் ஆஃப் ஸ்பின்னர் பஷீர் விலகிய நிலையில், இடக்கை சுழல் ஆல்ரவுண்டர் லியாம் டாசனை இங்கிலாந்து உள்ளே கொண்டுவந்துள்ளது. ஆஷ்லி கைல்ஸ், பனேசர் பாணியில் தற்காப்பு இடக்கை சுழற்பந்து வீச்சில் கை தேர்ந்தவர் இவர். பல் பிடுங்கப்பட்ட இங்கிலாந்து பந்துவீச்சுக்கு, கேப்டன் ஸ்டோக்ஸ் ஒருவர்தான் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறார். 4.5 ஆண்டுகளுக்கு பிறகு மறுவருகை நிகழ்த்திய ஆர்ச்சர், லார்ட்ஸில் தூள்பரத்தினாலும், பவுன்ஸ் அதிகமில்லாத ஓல்ட் டிராஃபோர்டில் அவருடைய பாட்சா பலிக்காது என்கிறார்கள் விமர்சகர்கள். அதுமட்டுமின்றி, ஆர்ச்சரின் பணிச்சுமையையும் கருத்தில் கொள்ள வேண்டிய நெருக்கடி இங்கிலாந்துக்கு உள்ளது. அனுபவ வீரர் வோக்ஸ் பந்துவீச்சு இந்த தொடரில் சுத்தமாக எடுபடவில்லை. கடந்த டெஸ்டில் கார்ஸ் நம்பிக்கை அளித்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, இங்கிலாந்தின் பந்துவீச்சு படை பலவீனமானவே தெரிகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES 'சமர்த்து பையன்கள்' என வலம்வரும் இங்கிலாந்து அணியினர், கடந்த டெஸ்டில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக சேசிங்கின் போது ஸ்லிப் பிராந்தியத்தில் நின்றுகொண்டு புரூக் உள்ளிட்ட வீரர்கள், இந்திய அணியின் டெயில் எண்டர்களை கடுமையாக வசைபாடினர். கில் தலைமையிலான இந்திய அணியும் தன் பங்குக்கு களத்தில் சீற்றத்தை வெளிப்படுத்தியதை பார்த்தோம். ஆனால், கில்லின் ஆக்ரோஷம் இந்திய அணிக்கு வெற்றியை தேடி கொடுக்காததோடு அவருடைய பேட்டிங் ஃபார்மையும் பாழ்படுத்தியது. இந்தமுறை, கோலியை அப்படியே போலச் செய்ய முயலாமல், கட்டுப்பாட்டுடன் கூடிய ஆக்ரோஷத்தை கில் கையில் எடுப்பார் என நம்புவோம். இங்கிலாந்து பேட்டிங் வரிசையை பொருத்தமட்டில், கிராலி, போப் ஆகியோரின் ஃபார்ம் கவலையளிக்கும் விதமாக உள்ளது. லீட்ஸ் டெஸ்டில் சதமடித்த போப், 3 டெஸ்டில் மொத்தமாக 186 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 21.33 சராசரியில் ஒரு அரைசதத்துடன் 128 ரன்கள் மட்டுமே தொடக்க வீரர் கிராலி அடித்துள்ளார். புரூக் நிறைய ரன்கள் குவித்தாலும், உள்ளே வரும் பந்துகளுக்கு (Nip backer) இந்த தொடர் முழுக்க அவர் திணறுவதை பார்க்கலாம். அதிர்ஷ்டமும் அவருக்கு சிலமுறை கைகொடுத்ததை சொல்லியாக வேண்டும். முக்கியமான சமயங்களில் கேப்டன் ஸ்டோக்ஸ் அணியை தாங்கிப் பிடித்தாலும், ஜேமி ஸ்மித், பென் டக்கெட்டையே இங்கிலாந்து அணி பேட்டிங்கில் பெரிதும் நம்பியுள்ளது. பாஸ்பால் பாணியில் இருந்து வெளியே வந்து விளையாட முடியும் என நிரூபித்த இங்கிலாந்து, ஃபார்முக்கு திரும்பியுள்ள ஜோ ரூட்டை பெரிதும் நம்பியுள்ளது. ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக மாறினால், ரூட்டின் விக்கெட் ஆட்டத்தை தீர்மானிக்கும் ஒன்றாக மாறும். ரூட்–பும்ரா இடையிலான ஆடுபுலி ஆட்டமும், குல்தீப் விளையாடும் பட்சத்தில் ரூட்–குல்தீப் இடையிலான உள்ளே வெளியே ஆட்டமும் ஒரு தனி நிகழ்வாக (Event) பரபரப்பை கூட்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES நிதிஷ் குமார் ரெட்டி விலகியது, அணியின் சமநிலையை பாதித்தாலும் இந்தியாவின் பேட்டிங் வரிசை வலிமையாகவே உள்ளது. கேஎல் ராகுல், தனது கிரிக்கெட் வாழ்வின் ஆகச்சிறந்த ஃபார்மில் உள்ளார். கடந்த டெஸ்டில் தவறான ஷாட் விளையாடி, விமர்சனத்துக்கு ஆளானாலும் ஜெய்ஸ்வாலும் முதலிரு டெஸ்ட்களில் ரன்கள் குவித்ததை மறுக்க முடியாது. டிரைவ், கட் ஷாட் ஆடும்போது கவனத்தை குவித்து, சூழலுக்கு ஏற்ப வேகத்தை கூட்டியும் குறைத்தும் விளையாடினால், அவர் ஆட்டம் மீண்டும் மிளிரும். பிராட்மேன் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கில், கவனம் தொலைத்ததால் அழுத்தத்துக்கு ஆட்பட்டு கடந்த டெஸ்டில் சறுக்கினார். 2 சதங்களுடன் 425 ரன்கள் குவித்துள்ள பந்த், முழு உடற்தகுதியுடன் விக்கெட் கீப்பர்– பேட்ஸ்மேனாக களமிறங்குவதில் பிரச்சினை இருக்காது என கூறப்படுகிறது. ஒரு ஸ்பெசலிஸ்ட் பேட்ஸ்மேனாக விளையாடுவதற்கு முழு தகுதி கொண்டவர் என்றாலும், விக்கெட் கீப்பிங் பொறுப்பை பந்த் ஏற்காவிட்டால், அணியின் காம்பினேஷன் அடிவாங்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த தொடரில் தனது கடைசி டெஸ்டில் விளையாடும் பும்ரா, ரூட், புரூக் உள்ளிட்ட முக்கிய விக்கெட்களை குறிவைத்து நிச்சயம் வியூகம் வகுத்திருப்பார். இந்த டெஸ்டை இந்தியா வென்றால், மூன்று டெஸ்ட் மட்டும்தான் அவர் விளையாட வேண்டும் என்ற விதியை தளர்த்தி, கடைசி டெஸ்டில் பும்ராவை கம்பீர் விளையாட வைப்பதற்கு வாய்ப்புள்ளது. அதிக விக்கெட் கைப்பற்றியவர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் சிராஜ், ஆகாஷ் தீப் இல்லாத நிலையில் பவுன்ஸ் குறைவான ஆடுகளத்தில் கட்டுக்கோப்பாக பந்துவீசி இங்கிலாந்துக்கு நெருக்கடி ஏற்படுத்துவது அவசியம். மணிக்கட்டு ஸ்பின்னரான குல்தீப்பை ரிஸ்க் எடுத்து இந்திய அணி நிர்வாகம் விளையாட வைத்தால், நிச்சயம் பலனுண்டு. 1993 இல், இதே ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில்தான் மறைந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் 20 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த பந்தை வீசினார் என்பது வரலாறு. பட மூலாதாரம்,GETTY IMAGES ஜடேஜா உள்பட கீழ் வரிசை பேட்ஸ்மேன்களும் நம்பிக்கையுடன் உள்ளதால், இந்தியாவின் பேட்டிங் படை வலுவாக உள்ளது. மிகச் சிறப்பான கிரிக்கெட் விளையாடியும், பின்தங்கியுள்ளதற்கு இந்திய அணியின் தைரிய குறைபாடும் ஒரு காரணம் என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள். லார்ட்ஸ் டெஸ்டில் 9 விக்கெட்கள் விழுந்தவுடன் ஜடேஜா, தாக்குதல் பாணி கிரிக்கெட்டை கையில் எடுத்திருக்க வேண்டும். ஆனால், விதியின் மீது பாரத்தை போட்டுவிட்டு சிராஜுக்கு ஸ்ட்ரைக் கொடுத்து குருவி போலச் சிறுக சிறுக ரன் சேர்த்தார். 2019 ஆஷஸ் தொடரில் ஹெடிங்லி டெஸ்டில் இதே போன்றதொரு சூழலில், ஸ்டோக்ஸ் ரிஸ்க் எடுத்து விளையாடி விதியை மாற்றி எழுதி ஆட்டத்தை வென்றார். இந்திய அணி தேவையற்ற வாய்ச் சவடாலை தூக்கி கடாசிவிட்டு, பயமறியாமல் ஆட்டத்தை அணுகினால் இந்த டெஸ்டை வென்று தொடரை சமன் செய்யலாம். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdx51vx59p9o
  6. இலங்கையில் தமிழர்களும், முஸ்லிம்களும் பிட்டும் தேய்காய்ப்பூவும் போல வாழ்ந்துவருகின்ற பிரதேசம் என்று கூறப்படுகின்ற ஒரு பிரதேசம்தான் கிழக்கு மாகாணம். அங்கு தமிழர்களையும் முஸ்லிம்களையும் மோதவிட்டு- அவர்களை நிரந்தரமாகவே பிரித்துவைப்பதற்காகவென்று- சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட ஏராளமான சம்பவங்களில் ஒரு சில உதாரணங்களை மீட்டுப் பார்க்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி. தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடாத்திவிட்டு, அந்தத் தாக்குதல்களின் பழியினை முஸ்லிம்களின் மீது போடுவதையும், முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடாத்திவிட்டு- அந்தத் தாக்குதல்களின் பழியை தமிழர் தரப்பின் மீது போடுவதையும் ஒரு முழுநேரத் தந்திரோபாயமாச் செய்துகொண்டிருந்த சிறிலங்காப் புலலாய்வுப் பிரிவின் ஒழு முக்கிய சதியினை அம்பலப்படுத்துகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி: https://ibctamil.com/article/military-intelligence-units-conspiracyin-the-east-1753197859
  7. கறுப்பு ஜூலைக்கு பொறுப்புக்கூறலை மடைமாற்றும் ஜே.வி.பி.யின் செயற்பாடே சகோதரத்துவ தினம் - நிரோஷ் 23 JUL, 2025 | 10:51 AM தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட படுகொலைகள் நடைபெற்றன என்ற உண்மையையும் அநீதிகளுக்கு பொறுப்புக் கூறவேண்டும் என்ற கடப்பாட்டினையும் மூடி மறைக்கும் செயலாகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அடிப்படையான ஜே.வி.பியின் உத்தியோகபூர்வ இளைஞர் அமைப்பான சோசலிச இளைஞர் சங்கம் சகோதரத்துவ நாளாக கறுப்பு ஜூலை நிகழ்வுகளை மடைமாற்றம் செய்ய எத்தனிக்கின்றது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். இலங்கையில் தமிழ் மக்கள் அடையாளப்படுத்தப்பட்டு தேடியழிக்கப்பட்ட கறுப்பு ஜூலை நினைவுகளின் 42 ஆவது ஆண்டினை உணர்வுபூர்வமாக எமது இனம் அனுஷ்டிக்கின்றது. கடந்த 42 ஆண்டுகளுக்கு முன் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட 54 அரசியல் கைதிகள் வெலிக்கடை சிறையில் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். தமிழர்களை வாக்காளர் பட்டியலுடன் தேடிச் சென்று மூவாயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்களை உயிருடன் தீயில் இட்டும் இதர கொடூரங்களுக்குள்ளாகவும் கொன்றழித்தனர். ஒன்றரை இலட்சம் பேர் வீடற்றவர்கள் ஆயினர். 8 ஆயிரம் வீடுகளும் 5 ஆயிரம் வணிக நிறுவனங்களும் கொள்ளையிடப்பட்டன, அழிக்கப்பட்டன. இக்காலகட்டத்தில் 300 மில்லியன் டெலர்கள் அழிக்கப்பட்டன. இதனை பன்னாட்டு மனித உரிமைகள் ஆணையம் தமிழருக்கு எதிரான திட்டமிட்ட இனப் படுகொலை என விபரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இவ் இனப்படுகொலையை அரச இயந்திரமே தகவமைத்து வழிப்படுத்தியது என்பதற்கு சகல ஆதாரங்களும் உள்ளன. இவ்வாறாக நாட்டில் இனப்படுகொலை நடைபெற்றமைக்கு பொறுப்புக் கூறல் எதையும் முன்வைக்காமல் அத் தேவையினை போர்த்தி மூடிவிடும் உத்தியுடன் இன்றைய அரசாங்கம் நிதானமாகச் செயற்படுகின்றது. இப்படுகொலைகளுக்கு ஜே.வி.பியும் பொறுப்புடையது. ஆதலால் அரசாங்கத்தின் மாணவர் அமைப்பான ஜே.வி.பி தலைமைச் செயலகத்திற்குள்ளேயே இயங்கும் உத்தியோகபூர்வ இளைஞர் அமைப்பான சோசலிச இளைஞர் அமைப்பு ஊடாக அரச அனுசரணையுடன் இன்றைய நாளை சகோதரத்துவ நாள் பிரகடனப்படுத்தப்படுகின்றது. இதற்காக யாழில் அரச வளங்கள் ஈடுபடுத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையினையும் அதற்கான பொறுப்புக்கூறலையும் திட்டமிட்டு மறைக்கின்ற இல்லாமலாக்குகின்ற முயற்சியாகும். இதனை நாம் கண்டிக்கின்றோம். ராஜபக்சாக்களை ஒத்ததாக இன்றைய அரசாங்கம் மென்வலு அணுகுமுறையில் தமிழருக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது என்ற வழிப்புணர்வை ஏற்படுத்துகின்றோம் என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/220696
  8. எம் ஆர் ஐ ஸ்கேன் செய்யும் அறைக்குள் நுழைந்த நபர் ஒருவர் அந்த இயந்திரத்தால் அதிவேகமாக ஈர்க்கப்பட்டு, விபத்தின் தாக்கத்தால் மரணமடைந்திருக்கிறார்.. அன்னாரை இழந்து வாடும் அவருடைய மனைவிக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்து இந்த விழிப்புணர்வுக் கட்டுரையை ஆரம்பம் செய்கிறேன். சம்பவம் நிகழ்ந்திருப்பது அமெரிக்காவில் என்றாலும் நவீன மருத்துவ முறை சிகிச்சை வழங்கும் பெரிய மருத்துவமனைகள் அனைத்திலும் தற்போது எம் ஆர் ஐ ஸ்கேன் செய்யும் வசதி உள்ளது. நமக்கோ நமது உறவினர்களுக்கோ ஸ்கேன் செய்து பார்க்கும் தேவை என்பது எப்போதும் வரக்கூடும் என்பதால் நிச்சயம் எம் ஆர் ஐ குறித்த விழிப்புணர்வு நமக்கு அத்தியாவசியமாகிறது. முதலில் எம்.ஆர்.ஐ என்றால் என்ன? அது இயங்கும் தத்துவம் குறித்து அறிந்தால் நாம் அந்த ஸ்கேன் செய்யும் அறைக்குள் செல்லுமுன் எடுத்துக் கொள்ள வேண்டிய எச்சரிக்கை குறித்து புரிந்து கொள்ள முடியும். எம் ஆர் ஐ என்றால் மேக்னெட்டிக் ரெசோனன்ஸ் இமேஜிங் என்று பொருள். MRI - MAGNETIC RESONANCE IMAGING அதாவது காந்தப் புலத்தில் அதிர்வை உண்டாக்கி அதன் வழியாக படம் பிடித்தல் என்பதாகும். எம் ஆர் ஐ இயந்திரமே ஒரு அதிசக்தி வாய்ந்த காந்தமாகும். மின்சாரம் இந்த இயந்திரத்தில் பாய்ச்சப்படும் போது அதி கடத்தல் காந்தமாக உருமாற்றம் பெறுகிறது. மனித உடலில் உள்ள அனைத்து செல்களிலும் நீர் இருக்கிறது. நீர் என்பது இரண்டு ஹைட்ரஜனும் ஒரு ஆக்சிஜனும் இணைந்து உருவாக்கும் வெற்றிக் கூட்டணி என்பது நாம் அனைவரும் கற்ற பால பாடமாகும். எம்.ஆர்.ஐ இயந்திரத்தின் காந்தப் புலத்துக்குள் மனித உடல் படுத்த வாக்கில் காந்த புலத்துக்கு பக்கவாட்டில் நுழையும் போது, நமது உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லுக்குள் இருக்கும் நீர் மூலக்கூறில் உள்ள ஹைட்ரஜன் அணுவில் உள்ள ப்ரோடான்கள் அனைத்தும் எம் ஆர் ஐ இயந்திரத்தின் காந்தப் புலத்துடன் ஒன்றுபட்டும் வரிசைப்பட்டும் இருக்கும். இப்போது எம் ஆர் ஐ இயக்குநர், ரேடியோ அலைகளை குறிப்பிட்ட இடைவெளியில் உடல் மீது பாயச் செய்வார். இவ்வாறு மின்காந்த விசை பெற்ற ரேடியோ அலைகள் ஊடுறுவும் போது, ஹைட்ரஜன் அணுவில் உள்ள ப்ரோடான்கள் இந்த அலைகள் மூலம் சக்தியைப் பெற்று தனது முந்தைய சுழலும் நிலையில் இருந்து அடுத்த சுழலும் நிலைக்கு சற்று முன்னேறிச் செல்லும். ரேடியோ அலை பாய்ச்சுவது நிறுத்தப்படும் போது, தான் உள்வாங்கிய சக்தியை வெளியிட்டு விட்டு மீண்டும் பழைய மாதிரி எம்.ஆர்.ஐ காந்தத்தின் காந்தப் புலத்துடன் ஓர்மையில் ஓரணியில் நிற்க பழைய நிலைக்குத் திரும்பும். இவ்வாறு பழைய நிலைக்குத் திரும்ப அந்த ப்ரோடான்கள் வெளியிட்ட சக்தியைக் கொண்டும் ஏற்கனவே இருந்த பழைய நிலையில் அதற்கு இருந்து சக்தியையும் முன்வைத்து கணிணியானது நமது உடலின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை படமாக ஆக்கி நமது திரையில் கொண்டு வரும். இதன் வழியாக சிறுநீரகம், கல்லீரல், குடல் , நுரையீரல் உள்ளிட்ட உள்ளுறுப்புகள் தசை, ஜவ்வு, மூளை ஆகியவற்றில் உள்ள மாற்றங்களைத் துல்லியமாகக் காண முடிகிறது. இதுவே எம் ஆர் ஐ தத்துவம். எம்.ஆர்.ஐ இயந்திரம் என்பது ஒவ்வொரு ஸ்கேன் செய்யும் போதும் ஆஃப் செய்து ஆன் செய்யும் இயந்திர வகை அல்ல. காரணம் - எம் ஆர் ஐ இயந்திரம் மிகக் குறைவான வெப்பத்தில் இயங்கக் கூடிய அதி கடத்தல் மின் காந்தமாகும். இத்தனை அதி திறன் கொண்ட காந்தப் புலத்தை உருவாக்க குறைந்த வெப்ப நிலை அவசியமாகிறது. இதனால் எம் ஆர் ஐ இயந்திரத்தின் காந்தம் - திரவ ஹீலியத்தால் சூழப்பட்டிருக்கும். ஹீலியம் திரவ நிலையிலேயே இருப்பதற்கு எம் ஆர் ஐ இயந்திரம் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். அதை ஆஃப் செய்தாலோ அல்லது திடீரென அது ஆஃப் ஆனாலோ திரவ ஹீலியம் - வாயு நிலையை அடையும். அப்போது அந்த அறைக்குள் வாயு நிலை ஹீலியம் கசியலாம். இது அறைக்குள் இருப்பவர்களுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தக்கூடும். எம் ஆர் ஐ இயந்திரமானது குறைவான மின் உபயோகத்தில் இயங்கும் ஆற்றல் கொண்டது. ஆனால் அதை அடிக்கடி ஆஃப் செய்து ஆன் செய்யும் போது மின் தேவை அதிகரிக்கும். மேற்கூறிய காரணங்களால் நோயாளிகளுக்கு ஸ்கேன் செய்யப்படும் போதும் சரிநோயாளிகள் உள்ளே இல்லாத நிலையிலும் சரி எப்போதும் எம் ஆர் ஐ இயந்திரம் "ரெடி டு டேக்" நிலையில் தான் இருக்கும். எனவே எம் ஆர் ஐ அறைக்குள் இரும்பு, ஸ்டீல் உள்ளிட்ட காந்தத்தால் ஈர்க்கப்படக்கூடிய சாதனங்களுடன் நுழைவது பேராபத்தை வரவழைக்கும் செயலாகும். முதல் ரூல்ஸ் எம் ஆர் ஐ அறைக்குள் அந்த அறையின் இயக்குநரின் அனுமதியின்றி உள்ளே நுழைதல் கூடாது. இரண்டாவது ரூல்ஸ் அப்படி நோயாளியாக உள்ளே நுழைய வேண்டுமெனில் கட்டாயம் தங்கள் உடலில் ஆபரணங்கள், ஹேர் க்ளிப், ஹேர் பின் உள்ளிட்ட எந்த காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருளும் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்த பின் நுழைய வேண்டும். மூன்றாவது ரூல்ஸ் மருத்துவ ரீதியாக பேஸ் மேக்கர்/ இதய வால்வு உள்ளிட்ட இயந்திரங்கள் / உபகரணங்கள் உங்களுக்கு பொருத்தப்பட்டிருக்குமானால் தாங்கள் அது குறித்து முன்கூட்டியே தெரிவித்து ஸ்கேன் அறைக்குள் நுழையும் அனுமதி பெற்ற பிறகே உள்ளே நுழைய வேண்டும். உங்களது உடலில் உள்ள உபகரணம் எம் ஆர் ஐ பாதுகாப்பானதா என்பதை அறிய mrisafety.com சென்று உபகரணம் குறித்த தயாரிப்பு தகவல்களைக் கொடுத்து பயன்பெறலாம். இவையெல்லாம் எம் ஆர் ஐ ஸ்கேன் செய்யுமுன் நாம் கற்க வேண்டிய முக்கியமான பாலபாடங்கள். காந்தத்தின் புலத்தின் வலிமை குறித் கணக்கீடு "டெஸ்லா" கொண்டு கூறப்படுகிறது. பொதுவாக எம் ஆர் ஐ எடுக்க 0.5 (குறைவான காந்தப்புலம்) முதல் 3.0 (அதி காந்தப் புலம்) வரை கொண்ட இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன. இதில் பொதுவாக பெரும்பான்மையான இடங்களில் 1.5 டெஸ்லா இயந்திரங்கள் புழக்கத்தில் உள்ளன. இவை நமது பூமியின் காந்தப் புலத்தைக் காட்டிலும் 21,000 மடங்கு வலிமையானவை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய காந்தப் புலத்துக்குள் சாதாரண காகிதம் கோர்க்கும் க்ளிப்போ அல்லது ஹேர் பின் உள்ளே போனாலும் உடனடியாக அவை "ஏவுகணைகள்" போன்ற வேகத்தில் ஈர்க்கப்படும். சுமார் ஒரு மணிநேரத்திற்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் ஈர்க்கப்படும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். தற்காலத்தில் வடிவமைக்கப்படும் நோயாளிகளை கொண்டு செல்லும் ஸ்ட்ரெட்சர்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஆகியவை இரும்பு , ஸ்டீல் அல்லாத காந்தத்தால் ஈர்க்கப்படாத உலோகங்களால் செய்யப்படுகின்றன. தற்காலத்தில் செய்யப்படும் பேஸ் மேக்கர்கள்/ இதய வால்வுகள் அனைத்தும் எம் ஆர் ஐ இயந்திரத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. எனினும் கட்டாயம் தங்களது உடலுக்குள் மருத்துவ உபகரணங்கள்/ இயந்திரங்கள் இருப்பின் வெளிப்படுத்தி அதற்குரிய எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த பின்னரே எம் ஆர் ஐ அறைக்குள் நுழைய வேண்டும். 2 டெஸ்லா அளவுள்ள எம் ஆர் ஐ இயந்திரங்கள் வரை செய்யப்பட்ட ஆய்வுகளில் அவற்றால் மனிதர்களின் செல்களுக்கு எந்த பாதகமும் விளைவிக்க இயலவில்லை. இவற்றால் புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கவில்லை. தற்காலத்தில் குறைவான டெஸ்லா அளவுகள் எம் ஆர் ஐ இயந்திரங்கள் பரவலாக்கம் அடையத் தொடங்கியுள்ளன. எம் ஆர் ஐ என்பது நவீன மருத்துவத் துறையில் முக்கியமான அங்கமாக விளங்கி வருகிறது. அதன் வழியாக பல நோய்களை அதன் ஆரம்ப நிலையில் கண்டு சிகிச்சை அளிக்க முடிகிறது. பல அறுவை சிகிச்சைகளை துல்லியமாகவும் கனகச்சிதமாகவும் செய்து முடிக்க முடிகிறது. தற்போது அமெரிக்காவில் நடந்த நிகழ்வுக்கு வருவோம்.. மத்திய வயது மனைவி கால் மூட்டு பகுதிக்கு எம் ஆர் ஐ எடுக்க உள்ளே சென்று ஸ்கேன் செய்யப்பட்டு இருக்கிறார். . பிறகு ஸ்கேன் படுக்கையில் இருந்து கீழிறங்க தனது 61 வயது கணவரை உள்ளே அழைக்கக் கூறியிருக்கிறார். ஸ்கேன் எடுத்த நபர் வெளியே சென்று அன்னாரது கணவரை உள்ளே செல்லக் கூறியிருக்கிறார். ஆனால் ஸ்கேன் எடுத்த நபரும் கணவரும் ஒன்றைக் கருத்தில் கொள்ளவில்லை. ஸ்கேன் எடுத்த நபர் - உள்ளே செல்லும் நபரிடம் இரும்புப் பொருட்கள் இல்லை என்பதை உறுதி செய்திருக்க வேண்டும். உள்ளே சென்ற நபர் - தன்னிடம் இரும்பு உள்ளிட்ட பொருட்கள் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு உள்ளே சென்றிருக்க வேண்டும். நிச்சியம் ஸ்கேன் அறைக்கு வெளியே பல பெரிய எச்சரிக்கை ஸ்டிக்கர்கள் ஒட்டியிருக்கும். ஆனால் வயது 60+ என்பதால் கவனிக்காமல் விட்டிருக்கலாம். தனது கழுத்து வலிக்காகவோ அல்லது எடை பயிற்சிக்காவோ தனது கழுத்தில் 9 கிலோ எடை கொண்ட இரும்புச் சங்கிலியை அவர் அணிந்திருந்திருக்கிறார். அந்த சங்கிலியோடு உள்ளே சென்றதால் சங்கிலி வேகமாக எம் ஆர் ஐ இயந்திரத்தால் ஈர்க்கப்பட வேகமாக இயந்திரத்தில் மோதியதால் அவர் இறந்திருக்கலாம். இந்த சம்பவத்தில் நமக்கும் படிப்பினை உண்டு சொந்தங்களே... எம் ஆர் ஐ இயந்திரங்கள் மீதோ எம் ஆர் ஐ தொழில்நுட்பம் மீதோ பிழையில்லை. எம் ஆர் ஐ இயந்திரங்கள் நமக்கு நன்மை செய்பவை. நாள்தோறும் நன்மை செய்து வருபவை. எனினும் அவற்றிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை நாம் அறிந்து நடந்து கொண்டால் எல்லாம் சுகமே... நன்றி Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை https://web.facebook.com/story.php?story_fbid=24502030766120102&id=100002195571900&rdid=6q8I3kLMv1557NMI#
  9. தற்போதைய வன்னி பா.உ துரைராசா இரவிகரன் அவருடைய மகன் என நினைக்கிறேன் அண்ணை. வேட்டி கட்டி படம் போட்டிருந்ததாகவும் நினைவுள்ளது.
  10. செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று 8 எலும்புக்கூடுகள் அடையாளம் : இதுவரை 80 மனித எலும்புக்கூடுகள்! Published By: VISHNU 22 JUL, 2025 | 07:12 PM யாழ். அரியாலை செம்மணி சிந்துப்பாத்தி பகுதியில் அடையாளங்காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழியிலிருந்து செவ்வாய்க்கிழமை (22) 8 எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கையின் 2 ஆம் கட்டத்தின் 17ஆவது நாள் அகழ்வு இன்று இடம்பெற்றது. அந்தவகையில், இன்று மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன. எச்சங்களில், 6 முதல் 7 வரை சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படுள்ளன . குழந்தைகள் அருந்தும் பால் போத்தல் என சந்தேகிக்கப்படும் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.. இன்றைய கண்டுபிடிப்புகளுடன், இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது , இவற்றில் 65 எலும்புக்கூடுகள் ஏற்கனவே முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/220671
  11. Published By: VISHNU 22 JUL, 2025 | 05:51 PM (எம்.மனோசித்ரா) நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகள் மற்றும் சலுகைகளை இரத்து செய்வதற்கான புதிய சட்ட மூலத்தை தயாரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அனைத்து ஜனாதிபதிகளுக்கும் பொதுவாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எவருக்கும் சிறப்புரிமை வழங்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (22) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ள அனைத்து சிறப்புரிமைகளும் இதன் மூலம் இரத்து செய்யப்படும். இந்த சட்ட மூலம் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். பாராளுமன்றத்தில் அனுமதி கிடைத்த பின்னரே சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடிய கால அவகாசம் தொடர்பில் குறிப்பிட முடியும். மிகக்குறுகிய காலத்துக்குள் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு எந்தவொரு நபருக்கும் சிறப்புரிமை வழங்கப்பட மாட்டாது. முன்னாள் ஜனாதிபதிகள் அனைவரும் ஒரே மட்டத்திலேயே நடத்தப்படுவர். தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து ஜனாதிபதிகளுக்கும் பொதுவாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு எனும் போது முன்னாள் ஜனாதிபதிகள் மாத்திரமின்றி நாட்டு பிரஜைகளும் கவனத்தில் கொள்ளப்படுவர். அனைவரது பாதுகாப்பையும் கருத்திற் கொண்டு உரிய நடவடிக்கைககள் முன்னெடுக்கப்படும். 1986 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க ஜனாதிபதியின் உரித்துக்கள் (நீக்கல்) சட்டமூலத்தை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 'வளமான நாடு – அழகான வாழ்க்கை' எனும் அரசாங்க கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டதற்கமைய, முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தவர்களுக்கு வழங்கப்படுகின்ற விசேட சிறப்புரிமைகளை இரத்துச் செய்வதற்கு இயலுமாகும் வகையில் 1986 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க ஜனாதிபதியின் உரித்துக்கள் சட்டத்தை நீக்குவதற்காக சட்டமூலமொன்றை தயாரிப்பதற்காக கடந்த ஜூன் 16ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த பணிகளுக்காக சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள ஜனாதிபதியின் உரித்துக்கள் (நீக்கல்) சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/220665
  12. 22 JUL, 2025 | 05:27 PM செம்மணி புதைகுழி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட "தமிழ் மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்" - என்று அவுஸ்திரேலிய கிறீன்ஸ் கட்சியின் நியூ சவூத் வேல்ஸ் மாநில செனட்டர்டேவிட் சூபிரிட்ஜ் வலியுறுத்தியுள்ளார். "உண்மையை ஒருபோதும் புதைக்க முடியாது. இலங்கையில் தமிழ் மக்கள்மீது கட்டாயமாக நடத்தப்பட்ட காணாமல் ஆக்கப்படுதல் மற்றும் இனப்படுகொலையை நினைவூட்டும் வகையில் செம்மணி புதைகுழி அமைந்துள்ளது. 29 ஆண்டுகள் கடந்தும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. நீதி நிலைநாட்டப்படவில்லை. எனவே செம்மணி உட்பட இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மனித புதைகுழிகள் குறித்து சர்வதேச அளவில் கண்காணிக்கப்படும் தடயவியல் விசாரணை அவசியம்" - எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/220658
  13. விடுதலை நீர் தந்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை நோக்கிய பயணத்தில் இணையுங்கள் - வேலன் சுவாமி Published By: RAJEEBAN 22 JUL, 2025 | 03:59 PM விடுதலைநீர் தந்து தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலையை நோக்கிய பயணத்தில் இணையுங்கள் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி அமைப்பின் ஏற்பாட்டாளர் தவத்திரு வேலன் சுவாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை நோக்கிய பயணம் தொடர்ந்துகொண்டிருக்கின்றது. ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட விடுதலை விருட்சம் என்கின்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை நோக்கியும் தமிழ் இனத்தின் விடுதலையை நோக்கியதுமான அந்த பயணம் இன்று விடுதலை விருட்சத்திற்கு நீர்வழங்கி அனைவரும் பேராதரவு கொடுத்து, விடுதலை மரத்தை வளர்த்தெடுக்கவேண்டும். விடுதலைக்காக நாங்கள் அனைவரும் எங்களை அர்ப்பணிக்கும்போதுதான் அதுசாத்தியமாகும். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையாகயிருக்கட்டும் தமிழ் இனத்தின் விடுதலையாகயிருக்கட்டும், எங்கள் இனத்திற்காக எங்களை நாங்கள் அர்ப்பணிப்பதற்கான அடையாளமாக இந்த விடுதலை விருட்சம், தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் நாட்டப்படயிருக்கின்றது. அந்த விடுதலை விருட்சங்களிற்கு நீர் ஊற்றிவளர்க்கவேண்டிய அடிப்படை உணர்வை இந்த விடுதலை நீர் வழங்குதல் எடுத்துக்காட்ட இருக்கின்றது. கிட்டுபூங்காவில் 24, 25ம் திகதிகளில் நடைபெறவிருக்கின்ற இந்த விடுதலையை நோக்கிய போராட்டத்திலே அனைத்து உறவுகளும் கலந்துகொள்ளும் விதத்திலும், ஊர்தியொன்று ஒவ்வொரு பிரதேசமாக வலம்வரயிருக்கின்றது. அந்த ஊர்திக்கு அந்த பிரதேசங்களில் இருக்கின்ற மக்கள் பேராதரவை வழங்கி, விடுதலை நீரை வழங்கி அந்த விடுதலை நீர் சேகரிக்கப்பட்டு, தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் நாட்டப்படுகின்ற விடுதலை விருட்சங்களிற்கு வழங்கப்படவிருக்கின்றது. ஆகவே தமிழர்களாக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து எமது உறவுகளின் விடுதலைக்காகவும் இனத்தினது தேசத்தினது விடுதலைக்காகவும் ஒன்றுபடுவதற்கான முயற்சியை குரல்அற்றவர்களின் குரல் அமைப்பு ஏற்படுத்தியுள்ளது. ஆகவே எமது உறவுகள் பெருமளவிலே திரண்டு இதற்கு ஆதரவு வழங்கவேண்டும், விடுதலை நீரை வழங்கி ஆதரவு செய்யவேண்டும். 24, 25 ம்திகதிகளில் கிட்டு பூங்காவிற்கு வருவதன் ஊடாக அங்கு பெரிய மக்கள் எழுச்சியை ஏற்படுத்துவதன் ஊடாக எமது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை நாங்கள் சாத்தியமாக்கி தொடர்ந்து இனத்தின் விடுதலையை நோக்கி நாங்கள் பயணிக்க முடியும். https://www.virakesari.lk/article/220640
  14. Published By: RAJEEBAN 22 JUL, 2025 | 02:57 PM இலங்கையின் உள்நாட்டு மோதலின் முடிவில் சரணடைந்தவர்களின் பெயர் விபரங்களை பெற்று வெளியிடுவதன் மூலம் காணாமல்போனோர் அலுவலகம் காணாமல்போனோரை தேடுவதற்கான அதன் ஆணையை நிறைவேற்றுவதில் குறிப்பிடதக்க முன்னேற்றத்தை காண்பிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஐக்கியநாடுகள் குழுவிற்கு சமர்ப்பித்துள்ள 22 பக்க அறிக்கையில் சர்வதேச மன்னிப்புச்சபை இதனை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் பலவந்தமாக காணாமல்போனோர் தொடர்பான குழுவின் 29 வது அமர்வு செப்டம்பர் 22 முதல் ஒக்டோபர் 3ம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையிலேயே சர்வதேச மன்னிப்புச்சபைதனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த அமர்வில் ஐநாவின் குழு பலவந்தமாக காணாமல்போதலில் இருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பது தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் இன் கீழ் இலங்கை தனது கடப்பாடுகளை எவ்வாறு நிறைவேற்றியுள்து என்பது குறித்து ஆராயவுள்ளது. இலங்கை இந்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பல பரிந்துரைகளையும் அவதானிப்புகளையும் சர்வதேச மன்னிப்புச்சபை22 பக்க அறிக்கை முன்வைக்கின்றது. சர்வதேச மன்னிப்புச்சபை மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கையின் உள்நாட்டு மோதலின் முடிவில் சரணடைந்தவர்களின் பெயர் விபரங்களை பெற்று வெளியிடுவதன் மூலம் - பலவந்தமாக காணாமலாக்கப்படுதலில் தொடர்புபட்ட படையினர் மற்றும் பிற குற்றவாளிகளிடம் இது வரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்த புதுப்பிக்கப்பட்ட தகவல்களை வழங்குவதன் மூலம் காணாமல்போனோர் அலுவலகம் காணாமல்போனோரை தேடுவதற்கான அதன் ஆணையை நிறைவேற்றுவதில் குறிப்பிடதக்க முன்னேற்றத்தை காண்பிப்பதை உறுதிப்படுத்தவேண்டும். தொடரும் மனித புதைகுழி அகழ்வுகள் தொடர்பில் மிகவும் அவசரமாக காணாமல்போனவர்கள் அலுவலகம் வெளிநாட்டு தொழில்நுட்ப நிபுணத்துவத்தை கேட்டுப்பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தவேண்டும். காணாமல்போனவர்களின் அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட ஆணையை நிறைவேற்றுவதில் காணாமல்போனவர்களின் அலுவலகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காண்பிக்காதமைக்கு அதன் தலைமைத்துவத்தை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துங்கள்.அதன் நடவடிக்கைகள் குறித்து ஒழுங்கமைக்கப்பட்ட மாற்றங்களை மேற்கொள்ளுங்கள்அந்த அலுவகத்திற்கு நியமிக்கப்படுபவர்கள் திறமைசாலிகள் அர்ப்பணிப்புள்ளவர்கள் சுயாதீனமானவர்களாக விளங்குவதை உறுதி செய்யுங்கள். பல தசாப்தங்களாக பதில்களைக் கோரும் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் கோரிக்கைகளை அவசரமாகவும் உண்மையாகவும் கவனத்தில் கொள்ள வேண்டும். காணாமல்போனவர்கள் எங்கிருக்கின்றாகள் தெளிவுபடுத்தாமல்,அவர்கள் உள்ள இடத்தை சுயாதீனமாக ஆராயாமல், காணாமல்போனமைக்கான சூழ்நிலைகளை தெரிவிக்காமல்,உயிருடன் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மனித எச்சங்களை அவர்களின் குடும்பத்தவர்களிடம் வழங்காமல் இது தொடர்பான விடயத்திற்கு அதிகாரிகள் முடிவை காணமுயலக்கூடாது. பாதிக்கப்பட்டவர்களின் உண்மை நீதி மற்றும் இழப்பீட்டிற்கான உரிமைகளிற்கு அதிகாரிகள் முன்னுரிமை வழங்கவேண்டும்,அவற்றை மதிக்கவேண்டும்,அதற்கு உதவவேண்டும். நிறுவனத்திற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையே நிலவும் நம்பிக்கை மற்றும் அறிவு இடைவெளியைக் குறைக்க இன்னும் பல தொலைநோக்குப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். https://www.virakesari.lk/article/220633
  15. "மார்க்சிஸ்ட் தலைமையை மீறி கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவு" - அச்சுதானந்தன் கண்ட போராட்ட களங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் இருந்த வி.எஸ். அச்சுதானந்தன், மாநில எல்லைகளைத் தாண்டியும் சுற்றுச்சூழல் பிரச்னைகளில் ஆர்வம் காட்டியவர். கட்சியின் நிலைப்பாட்டைத் தாண்டியும் கூடங்குளம் அணு உலை போராட்டத்துக்கு ஆதரவு அளித்தவர். கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான வேலிக்ககத்து எஸ். அச்சுதானந்தன், முதுமையின் காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் ஜூலை 21ஆம் தேதி உயிரிழந்தார். கடைசி சில நாட்கள் வரை மிகுந்த ஆரோக்கியத்துடன் இருந்த அச்சுதானந்தன், மூச்சுத் திணறல் காரணமாக ஜூன் 23ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கேரளாவின் ஆலப்புழாவில் உள்ள கடற்கரையோர கிராமமான புன்னப்ராவில் 1923ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி சங்கரன் - அக்கம்மா தம்பதிக்குப் பிறந்தார். தாயை நான்கு வயதிலும் தந்தையை பதினொரு வயதிலும் இழந்த அச்சுதானந்தன் ஏழாம் வகுப்போடு கல்வியை நிறுத்திக்கொண்டு, 11 வயதிலேயே வேலைக்குச் செல்லும் நிலைமைக்குத் தள்ளப்பட்டார். அந்த தருணத்தில் தீவிரமாக இருந்த இந்திய விடுதலைப் போராட்டம், தொழிலாளர் இயக்கங்கள் அவரைத் தீவிரமாக ஈர்த்தன. 1940ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த அவர், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சில ஆண்டுகள் சிறையில் இருந்தார். பல தருணங்களில் தலைமறைவு வாழ்க்கையை வாழ வேண்டியிருந்தது. 1946ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த புன்னப்புரா - வயலார் இடதுசாரி இயக்கத்தினரின் போராட்டத்தில் பங்கேற்ற வி.எஸ். அச்சுதானந்தன் காவல் துறையின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானவர். பட மூலாதாரம்,GETTY IMAGES 1964ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக பிளவுபட்டபோது, தேசிய கவுன்சிலில் இருந்து வெளியேறிய 32 பேரில் அச்சுதானந்தனும் ஒருவர். புதிதாக உருவான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவர். மக்கள் ஆதரவை பெற்ற அச்சுதானந்தன் ஊழல், நில மாஃபியா உள்ளிட்ட பல விவகாரங்களில் தீவிரமான நிலைப்பாடுகளை எடுத்த வி.எஸ். அச்சுதானந்தனுக்கு எப்போதுமே மக்கள் ஆதரவு இருந்துவந்தது. கேரள மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக பல ஆண்டுகள் இருந்த வி.எஸ். அச்சுதானந்தனுக்கு 82வது வயதில்தான் கேரள மாநிலத்தின் முதலமைச்சராகும் வாய்ப்பு கிடைத்தது. 2006ஆம் ஆண்டில் முதலமைச்சரான வி.எஸ். அச்சுதானந்தன், தனது ஆட்சிக் காலத்தில் அதிரடியான சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். மூணாறில் இருந்த ஆக்கிரமிப்புகளை எதிர்ப்புகளை மீறி அகற்றினார். இது கட்சிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியது. கேரளாவில் ஐடி துறைக்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES "வி.எஸ். அச்சுதானந்தன் கட்சியின் தலைமைக் குழுவில் இருந்தபோது நான் மத்தியக் குழுவுக்கு தேர்வானேன். இதனால், பல ஆண்டுகள் அவரோடு இணைந்து செயல்படும் வாய்ப்புக் கிடைத்தது. அர்ப்பணிப்பு, தன்னடக்கம், தான் கொண்ட கொள்கையில் மன உறுதி, மக்கள் நலனே பிரதானமானது போன்ற விஷயங்களில் அவர் ஒரு முன்னுதாரணமாக இருந்தார்." என நினைவுகூர்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலரும் மூத்த தலைவருமான ஜி. ராமகிருஷ்ணன். 1964ல் அப்போதைய கல்கத்தாவில் நடந்த 7வது மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. அந்த மாநாடு புதிய மத்தியக் குழுவை தேர்வுசெய்தது. சுந்தரைய்யா பொதுச் செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டார். அந்த மாநாட்டில் என். சங்கரய்யாவும் வி.எஸ். அச்சுதானந்தனும் மத்தியக் குழுவுக்கு தேர்வுசெய்யப்பட்டார்கள் என கூறுகிறார் ஜி.ராமகிருஷ்ணன். பட மூலாதாரம்,GETTY IMAGES "சமீபத்தில் என். சங்கரய்யா காலமான நிலையில், வி.எஸ். அச்சுதானந்தன் தற்போது காலமாகியிருக்கிறார். இதன் மூலம், முதல் முதலில் உருவான மத்தியக் குழுவில் இடம்பெற்று, நீண்ட காலம் அதில் பணியாற்றிய ஒரு உறுப்பினராக அச்சுதானந்தனைச் சொல்ல முடியும். ஒரு சாதாரண விவசாய தொழிலாளர் குடும்பத்தில் பிறந்து, சுதந்திரப் போராட்ட காலத்தில் புன்னப்புரா - வயலார் போராட்டம் என்ற நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான போராட்டத்தில் கிருஷ்ணப்பிள்ளையின் வழிகாட்டுதலில் கலந்துகொண்டார். இடதுசாரி இயக்கத்தில் ஒரு பெருமிதமிக்க வரலாற்றைக் கொண்டவர் அச்சுதானந்தன்" என தெரிவித்தார் ஜி. ராமகிருஷ்ணன். தமிழ்நாட்டின் சூழல் போராட்டங்களில் ஆர்வம் காட்டியவர் வி.எஸ். அச்சுதானந்தனுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெரிய அளவிலான தொடர்புகள் இருந்ததில்லை. இருந்தாலும், தமிழ்நாட்டில் நடந்த சூழல் போராட்டங்களில் அவர் ஆர்வம் காட்டினார். தமிழ்நாட்டில் 2012ஆம் ஆண்டில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடந்துகொண்டிருந்தபோது, அந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். 2011- 2012ஆம் ஆண்டுகளில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் தமிழ்நாட்டில் தீவிரமடைந்தபோது, கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார் வி.எஸ். அச்சுதானந்தன். அவர் கூடங்குளம் அணு மின் நிலையத் திட்டத்துக்கு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தார். இத்தனைக்கும் அவர் சார்ந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அணு உலைத் திட்டத்துக்கு எதிராக இல்லாத நிலையிலும் வி.எஸ். அச்சுதானந்தன் அத்தகைய நிலைப்பாட்டை எடுத்தார். இந்த நிலையில், 2012ஆம் ஆண்டு கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் தீவிரமாக இருந்த நிலையில், அந்தப் போராட்டத்துக்கு நேரில் ஆதரவு தெரிவிப்பதற்காக செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி கூடங்குளத்துக்கு வர முடிவுசெய்தார் அச்சுதானந்தன். அதேபோல, தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கும் எதிர்ப்புத் தெரிவித்தார். நியூட்ரினோ ஆய்வுக்கூடம் பற்றியும், அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த வேண்டும். ஆய்வுக்கூடத்துக்காக பூமிக்கு அடியில் சுரங்கம் அமைக்கும் பணியை மத்திய அரசும், தமிழக அரசும் உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் குரல் கொடுத்தார். "பக்கத்து மாநிலத்தில் எதிர்க்கட்சித் தலைவராகத்தான் இருந்தாலும்கூட, தமிழ்நாட்டில் மக்கள் போராடும் ஒரு பிரச்சனைக்காக வி.எஸ். அச்சுதானந்தன் குரல் கொடுத்தார். கட்சியின் மாநில அமைப்பும் சரி, தேசிய அளவிலும் சரி அணு உலைக்கு ஆதரவாக இருந்தும்கூட, அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார் வி.எஸ். அச்சுதானந்தன். போராடும் மக்கள், தமிழர்களா மலையாளியா என்று பார்க்காமல் அவர்களுக்காக நின்றார். நெருக்கடியான அந்த காலகட்டத்தில் போராடிவந்த மக்களுக்கு இது மிக முக்கியமானதாக இருந்தது. பல முறை அவரை அவருடைய வீட்டில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். எளிதில் அணுகக்கூடியவராகவும் மனம்விட்டுப் பேசக்கூடியவராகவும் இருந்தார்" என்கிறார் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக் குழுவைச் சேர்ந்த சுப. உதயகுமார். குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகியது ஏன்? ஜெகதீப் தன்கரை சூழும் ஊகங்கள் பிரிக்ஸை மிரட்டும் டிரம்ப்: இந்தியா, சீனா, ரஷ்யா ஓரணியில் திரளுமா? இந்தியாவில் ஐரோப்பிய வல்லரசுகளின் விதியை தீர்மானித்த 'வந்தவாசிப் போர்' பிரம்மபுத்திரா ஆற்றில் சீனா அணை கட்டுவதால் இந்தியா, வங்கதேசத்திற்கு என்ன பாதிப்பு? ஆனால், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் எல்லா கேரள அரசியல்வாதிகளைப் போலவேதான் அவருடைய நிலைப்பாடும் இருந்தது. முல்லைப் பெரியாறு அணை மிகுந்த அபாயத்தில் உள்ளது என்றும் புதிய அணையைக் கட்ட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்திவந்தார். பல தருணங்களில் அவர் எடுத்த நிலைப்பாடுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இருந்தபோதும், கேரள மாநிலத்தின் கடந்த 80 ஆண்டு கால அரசியலை வி.எஸ். அச்சுதானந்தனைத் தவிர்த்துவிட்டு விவாதிக்க முடியாது என்ற பாரம்பரியத்தை விட்டுச் சென்றிருக்கிறார் வி.எஸ். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czey475denlo
  16. 22 JUL, 2025 | 02:51 PM (எம்.நியூட்டன்) தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் வழிபாட்டுக் காலத்தை பேணுமாறும் புனிதமான திருவீதியில் எவரும் மறந்தும் பாதணிகளை அணிந்து செல்லாமல், புனிதத்தைப் பேணுமாறும் ஆறுதிருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நல்லூர் திருவிழாக் காலம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : நல்லூரானின் பெருந்திருவிழாவை முன்னிட்டு நாம் ஆயத்தமாவோம். ஈழத்திருநாட்டின் ஈடு இணையற்ற பெருங்கோவிலாக விளங்குவது நல்லூர்க் கந்தசுவாமி கோவில். இத்திருக்கோவிலின் வருடாந்த பெருந்திருவிழா இம்மாதம் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமையன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெறவுள்ளது. பல இலட்சம் மக்கள் நல்லூர் வீதியில் முருகனைக் காண ஒன்றுகூடப் போகிறார்கள். வடக்கில் உள்ள மக்கள் இந்த வாரமே தங்கள் வீடுகளைப் புனிதப்படுத்தி நல்லூரான் திருவிழாவிற்காக தங்கள் வசிப்பிடத்தையும் புனிதப்படுத்தத் தொடங்கியிருப்பார்கள். நல்லூர் சுற்றாடல் தெய்வீகக் களைகட்டத் தொடங்கிவிடும். தண்ணீர்ப்பந்தல்கள் அமைக்கும் வேலைகள் ஆரவாரமாக தொடங்கிவிடும். அழகன் முருகன் திருவீதியில் அரோகரா சத்தம் இருபத்தைந்து நாட்களும் ஓங்கி ஒலிக்கும். வீதியெல்லாம் புதிய மணல் பரப்பி அங்கப் பிரதிஷ்டை மற்றும் அடியடித்துக் கும்பிடும் அடியவர்க்கு வசதிகள் செய்வார்கள். தெய்வீகச் சூழலாக மாறும் நல்லூர்ச் சுற்றாடலின் சிறப்பு எழுத்தில் வடித்துவிடமுடியாது. நல்லூர்க் கந்தன் ஆலயத்தை உருவாக்கி பரம்பரை பரம்பரையாக காத்துவரும் மாப்பாணர் பரம்பரைக்கு சைவ உலகம் என்றும் நன்றிக்கடன் பட்டது. போரில் அழிந்த சைவத் தமிழர்களின் திருக்கோவிலை தமது சொந்த நிலத்தில் தமது குடும்பத்தின் முயற்சியால் உருவாக்கி கடந்த மூன்று நூற்றாண்டுகள் உன்னதமாக கட்டிக்காத்து வரும் மாப்பாணர் குடும்பத்தின் மகத்துவத்தை எல்லோரும் நன்கு அறிவர். திசைகள் தோறும் கோபுரங்கள் உள்வீதி முழுவதும் உவமை இல்லா அழகுக் காட்சிகள் உருவாக்கி உலகம் வியக்க வைக்கும் நல்லூரான் தனித்துவத்தை எவரும் குறைத்து மதித்து விடமுடியாது. சர்வதேசமே நல்லூர்ச் சிறப்பை வியந்து போற்றுகிறது. அமெரிக்க ஹவாய் சைவ ஆதீனம் வெளியிட்டு வரும் நூலில் உலகம் முழுவதும் வாழும் சைவ மக்கள் சீரிய ஒழுங்கைப் பின்பற்றுவதற்கு நல்லூரை தரிசியுங்கள் என கூறியுள்ளார்கள். இந்திய மத்திய அரசின் நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் “அப்பப்பா என்ன அதிசயம்? நல்லூர்க் கந்தசுவாமி கோயிலுக்குள் கால் எடுத்து வைத்தவுடன் எம்மை மறந்து விடுகிறோம். ரம்மியமான இத்திருக்கோவில் சிறப்புப் பற்றி உலகமே வியக்கிறது” என உரைத்தமை அனைவரும் அறிவர். அன்பர்களே நல்லூர்ப் பெருந்திருவிழாக் காலங்களில் குடும்பம் குடும்பமாக சென்று வழிபாடு செய்வதற்கு ஆயத்தமாகுங்கள். தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் வழிபாட்டுக் காலத்தை பேணுங்கள். புனிதமான திருவீதியில் எவரும் மறந்தும் பாதணிகளை அணியாதீர்கள். விசேட தேவையுடையவர்கள் வழிபாடு செய்ய வரும்போது தொண்டர்கள் உதவுங்கள். சுற்றுச்சூழலில் வசிப்பவர்கள் ஆன்மிக அலங்காரங்களை தாம் வசிக்கும் இடங்களில் ஏற்படுத்துங்கள். படம்பிடித்து முருகனை தேடுவதை விட பக்தியோடு அவனை அகத்தால் உள்வாங்குங்கள். வீதியில் சுவாமி புறப்பட்டால் வேடிக்கைக்கு இடமில்லை. வேலனிடம் விடிவு கேட்டுப் பிரார்த்திப்பதே எமக்கு வேலை என உணருங்கள். சஞ்சலமின்றி இறைவன் எமக்குத் தந்த இந்த இனிய நாட்களை ஆனந்தமாகக் கழிப்பதற்கு ஆயத்தமாகுங்கள். அலங்காரக் கந்தனை தரிசிக்க வரும் அடியவர்களாகிய நாம் எளிமையாக நின்று வணங்குவோம். எமது அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக வழிபாட்டு மரபை முன்னெடுத்துச் செல்வோம். எல்லோரும் நல்லூரான் பெருவிழாவைக் கண்ணாரக் காண்போம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/220631
  17. Published By: DIGITAL DESK 2 22 JUL, 2025 | 05:04 PM அன்று ரயிலேறி யாழ்ப்பாணத்துக்கு வைராக்கியம், குரோதம், பிரிவினையை கொண்டு வந்தனர். அதன் மூலம் யாழ். நூலகத்தை எரித்து நாசமாக்கினார்கள். இன்று நாம் ரயிலேறி சகோதரரத்துவத்தை கொண்டு வருகின்றோம். வடக்கையும், தெற்கையும் இணைக்கும் உறவு பாலத்தை ஏற்படுத்த வருகின்றோம் என சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசியக் குழு உறுப்பினர் மகேஷ் அம்பேபிட்டிய தெரிவித்தார். சகோதரத்துவ தினம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை (22) யாழ். தேசிய மக்கள் சக்தி மக்கள் தொடர்பாடல் காரியாலயத்தில் நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே இவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சோசலிச இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் 2008 ஆம் ஆண்டு முதல் சகோதரத்துவ தின நிகழ்வுகளை நடத்தி வருகின்றோம். சகோதரத்துவத்தை கட்டியெழுப்புவதற்காக 17 ஆண்டுகளாக செயற்படுகின்றோம். இம்முறை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு சகோதரத்துவ ரயில் பயணம் இடம்பெறவுள்ளது. 1981 மே 31 ஆம் திகதி யாழ்.வந்த ரயில் நிலையத்தில் குருணாகல் ரயில் நிலையத்தில் இருந்து அரசியல் குழுவொன்று ஏறியது. காமினி லொக்குகே, காமினி திஸாநாயக்க, காமினி ஜயவிக்கிரம, சிறில் மெத்திவ், கிறிஸ்டன் பெரேரா, ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் வைராக்கியம், குரோதம், பிரிவினையை எடுத்து வந்தனர். அவற்றை எடுத்து வந்துதான் ஆசியாவின் மிக்பெரிய பொக்கிஷமான நூலகத்தை எரிந்தனர். எனவேதான் அந்த ரயிலில் சகோதரத்துவத்தை நாம் நாளை புதன்கிழமை (23) எடுத்துவருகின்றோம். 1981 இல் ஆரம்பமான குரோதம் 1983 இல் கறுப்பு ஜுலையாக மாறியது. இறுதியில் பிரச்சினை போர்வரை வந்தது. இந்த கறுப்பு புள்ளி இன்னும் நீங்கவில்லை. ஆட்சியாளர்களும் அரசியலுக்காக மக்களை பிரித்தாளும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். வடக்கையும், தெற்கையும் தமது அரசியலுக்காக அரசியல்வாதிகள் பிரித்தார்கள். தமது சுகபோக வாழ்வுக்காக மக்களை பிரித்தார்கள். அந்த யுகம் தற்போது முடிந்துவிட்டது. புதிய நாடு உருவாகி வருகின்றது. புதிய யுகத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றோம். தேசிய சமத்துவமே அரசாங்கத்தின் நோக்கம். அதற்காக ஜனாதிபதியும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார் என்றார். https://www.virakesari.lk/article/220629
  18. 22 JUL, 2025 | 01:26 PM இஸ்ரேலிய படையினர் தனது பணியாளர்களை ஆடைகளை களைந்து சோதனையிட்டதுடன் கைதுசெய்துள்ளனர் என உலக சுகாதார ஸ்தாபனம் குற்றம்சாட்டியுள்ளது. இஸ்ரேல் தனது பண்டகசாலை மீது விமானதாக்குதலை மேற்கொண்டது என தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் தனது பணியாளர்களின் வீடுகளையும் இலக்குவைத்தது, இதனால் பெரும் சேதமேற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது. பெண்களும் குழந்தைகளும் மோதல் இடம்பெறும் பகுதியை நோக்கி கால்நடையாக வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். டெய்ர் அல்பலாவில் இஸ்ரேல் மேற்கொண்ட உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆண்பணியாளர்கள் அவர்களது குடும்பத்தவர்களை கைதுசெய்து அவர்களிற்கு கைவிலங்கிட்ட இஸ்ரேலிய படையினர் அந்த இடத்தில் வைத்தே அவர்களது ஆடைகளைந்து விசாரணை செய்தனர் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை இது குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளதாவது காசாவின் நடுப்பகுதியில் உள்ள டெய்ர் அல் பலாவில்உலக சுகாதார ஸ்தாபன ஊழியர்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் மீதான தாக்குதல்கள்இ அங்கு தங்கியிருந்தவர்களை தவறாக நடத்துதல் மற்றும் அதன் முக்கிய பண்டகசாலை அழிக்கப்பட்டதை WHO வன்மையாகக் கண்டிக்கிறது இஸ்ரேலிய இராணுவத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய வெளியேற்ற உத்தரவுக்குப் பிறகு டெய்ர் அல் பலாவில் அதிகரித்த மோதலை தொடர்ந்து உலக சுகாதார ஸ்தாபன ஊழியர்களின் வீடு மூன்று முறை தாக்கப்பட்டது. வான்வழித் தாக்குதல்கள் தீ மற்றும் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியதால் குழந்தைகள் உட்பட ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் கடுமையான ஆபத்தில் இருந்தனர் மற்றும் அதிர்ச்சியடைந்தனர். இஸ்ரேலிய இராணுவம் வளாகத்திற்குள் நுழைந்து தீவிர மோதல்களுக்கு மத்தியில் பெண்களையும் குழந்தைகளையும் அல்-மவாசி நோக்கி கால்நடையாக வெளியேற கட்டாயப்படுத்தியது. ஆண் ஊழியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கைவிலங்கு போடப்பட்டு ஆடைகளை அவிழ்த்து சம்பவ இடத்திலேயே விசாரித்து துப்பாக்கி முனையில் சோதனை செய்யப்பட்டனர். இரண்டு ஊழியர்கள் மற்றும் இரண்டு குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். மூன்று பேர் பின்னர் விடுவிக்கப்பட்டனர் அதே நேரத்தில் ஒரு ஊழியர் இன்னும் காவலில் வைக்கப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/220613
  19. கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் தன்னுடைய 102 ஆவது வயதில் காலமானார். 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டுவரை இவர் கேரளாவின் முதலமைச்சராக பதவி வகித்திருந்தார். https://thinakkural.lk/article/319195
  20. நஜீப் பின் கபூர் நெப்போலியன் ஒரு முறை தனது அதிகாரிகளிடத்தில் பேசும் போது “அரசியல் தலைவர்களாக இருந்தாலும் சரி தேசங்களாக இருந்தாலும் சரி பத்து வருடங்களுக்கு ஒரு முறையாவது நாம் கடந்து வந்த பாதை தொடர்பாக மதிப்பீடு செய்து அதற்கான சீர்திருத்தங்களை செய்து கொள்ள வேண்டும்” என்று சுட்டிக்காட்டி இருந்தார். இந்தக் கட்டுரையைத் தயாரிக்கின்ற போது அதனை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாக அமையும் என்று நாம் கருதுகின்றோம். ஐரோப்பா வரலாற்றில் நெப்போலியன் மறக்கமுடியாத ஒரு நாமம். நெப்போலியன் பொனபார்ட் 1769 – 1821 களில் வாழ்ந்து தனது 52 வது வயதில் இறந்தும் போனார். இந்த நெப்போலியன் கதை நமக்கு சில நூறு வருடங்களுக்கு முந்தியது ஒன்று. அந்தக் காலகட்டத்தில் – அப்போதைய உலக செயல்பாடுகளில் இன்றைய அளவு வளர்ச்சி வேகம் அன்று இருந்திருக்காது என்பது நாம் அனைவரும் அறிந்த தகவல்கள்தான். எனவே மின்னல் வேகத்தில் அல்லது ஒளிவேகத்தில் மாற்றங்கள் நடந்து வருகின்ற இந்தக் காலத்தில் தனிமனிதர்களும் சமூகங்களும் இந்த உலகில் வாழும் போது அதற்கேற்றவாறு தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்குத் தயாரில்லாத சமூகமும் தனிமனிதர்களும் கூட அனைத்துத் துறைகளிலும் பின்னுக்குத் தள்ளப்படுவது தவிர்க்கமுடியாத ஒன்று என்று நாம் நம்புகின்றோம். நாம் தலைப்புக்கு ஏற்று கருத்துக்களை பேசுவதாக இருந்தால் சிறுபான்மை சமூகங்களுக்கு சமகால அரசியலில் புதிய அணுகுமுறைகள் தேவை – காலத்தின் கட்டாயமாகும். அரசியல் பற்றி நேரடியாக விமர்சனங்கள் பண்ணும் போது அரசியல் கட்சிகள் அதன் தலைவர்களை சுட்டிக்காட்டாது கருத்துக்களை முன்வைப்பது என்பது முழுப்பூசணியை சோற்றில் மறைக்கின்ற ஒரு வேலை. நமது பதிவுகளில் இப்படியான கருத்துக்களை மறைத்து கதைகள் சொல்வதில்லை என்பது நமது வாசகர்களுக்குத் தெரியும். எனவே எமது சாதக – பாதக விமர்சனங்களையும் வாசகர்கள் ஜீரணித்துக் கொள்வார்கள் என்றும் நாம் நம்புகின்றோம். இந்த நாட்டில் வாழ்கின்ற சமூகங்கள் பற்றி அனைவருக்கும் தெரியும் என்றாலும் இன ரீதியில் சிங்களவர்கள், தமிழர், முஸ்லிம்கள், மலையகத்தார், ஏனையோர் என்று அது அமைகின்றது. மத ரீதியில் என்று வருகின்ற போது பௌத்தர்கள், இந்துக்கள், இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள், இதர என்று ஒரு மிகச்சிறிய குழுவும் இங்கு வாழ்ந்து வருகின்றனர். இதனால் இன ரீதியிலும் மத ரீதியிலும் இவர்களிடையே இணக்கப்பாடுகளும் முரண்பாடுகளும் இயல்பானவை. என்னதான் நாம் அனைவரும் இலங்கையர் என்று சொல்லிக் கொண்டாலும் இந்த வேறுபாடுகளை ஒவ்வொரு தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும். இங்கு மட்டுமல்ல உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் இதே நிலைதான். எனவே புரிந்துணர்வுகளும் விட்டுக் கொடுப்புகளும் சமூக ஒற்றுமைக்கு தேவை. வரலாறு தொட்டு மன்னராட்சி காலம், தென்னிந்தியப் படையெடுப்புக்கள், ஐரோப்பிய ஆக்கிரமிப்பு, அதற்குப் பின்னர் நாடு விடுதலை பெற்ற பின்னர் ஏறக்குறைய முப்பது வருடங்கள் நாட்டில் நடைபெற்ற ஆயுதப் போராட்டங்கள் இந்த நாட்டில் இன ரீதியான முரண்பாடுகளை உச்சத்துக்கு கொண்டு சென்றிருந்தன. அத்துடன் இன – மத ரீதியான செல்வாக்கும் சிறிதும் பெரிதுமாக நமது அரசியலில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தன. சுதந்திரத்துக்கு பின்னர் நாட்டில் அதிகாரத்துக்கு வந்த சில ஆட்சியாளர்கள் சிறுபான்மை சமூகங்கள் மீது தமது மேலாண்மையை செலுத்தி வந்தனர். இது ராஜபக்ஸ -கோட்டா அதிகாரத்தில் இருந்த போது உச்சம் தொட்டிருந்தது. அதே ஆணவம் அவர்களது வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்தது. ஜே.ஆர். காலத்தில் கொண்டுவரப்பட்ட விகிதாசார தேர்தல் முறை இன ரீதியான அரசியல் இயக்கங்களை, கட்சிகளை வலுப்படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக தெற்கில் இனவாதம் மேலோங்க இதுவும் ஒரு காரணமாக இருந்து வந்திருகின்றது. சிறுபான்மையினர் அரசியல் பற்றிப் பார்க்கும் முன்னர் பெரும்பான்மை சமூகத்தின் எதிர்பார்ப்புக்கள், விருப்பு வெறுப்புக்கள், அரசியல் செயல்பாடுகள் பற்றி முதலில் பார்ப்போம். இன்று இந்த நாட்டில் வாழ்கின்ற இயக்கர், நாகர்களைத் தவிர அனைவரும் வந்தேறு குடிகள். அதில் எல்லோருக்கும் ஒரு பொது உடன்பாடு இருக்கின்றது. ஆனால் இந்த நாட்டில் விஜயன் வருகை, அதற்குப் பின்னர் மஹிந்த தேரர் வரவு, மன்னன் தேவநம்பிய தீசன் பௌத்த மதத்தை பின்பற்றியது என்பன இந்த நாட்டில் புதியதோர் அரசியல் கலாசாரத்துக்கு பிரதான காரணங்களாக அமைந்தன என்பது எமது கருத்து. அதன் பின்னர் மன்னராட்சி, நாம் முன்சொன்ன இந்தியப் படையெடுப்புக்கள், ஐரோப்பியர் ஆக்கிரமிப்பு, நாடு சுதந்திரம் என்ற அனைத்துக் காலப்பகுதிகளிலும் நாட்டில் சுதேச அரசியல் இயக்கங்களின் செல்வாக்கு மேலோங்கி வந்தது. இதில் இன – மத உணர்வுகளும் கலந்திருந்தன. இதன் பின்னணியில்தான் நாட்டில் இனக்கலவரங்களும் முறுகல் நிலைகளும் அந்தக் காலப்பகுதிகளிலும் அவ்வப்போது இருந்து வந்திருந்தன என்பதை நாம் அவதானிக்க முடிகின்றது. நமது பண்டைய வரலாற்றுச் சுருக்கம் அப்படி இருக்க, சுதந்திரத்துக்குப் பின்னரான காலப்பகுதியை ஆராய்கின்ற போது நாட்டில் அதிகாரத்தில் இருந்த அரசியல் கட்சிகளைப் பார்க்கின்ற போது ஐக்கிய தேசியக் கட்சியும் (1946) சுதந்திரக் கட்சியுமே (1951) மாறிமாறி ஏறக்குறைய 2020 வரையிலும் அதிகாரத்தில் இருந்து வந்திருக்கின்றன. சமசமாஜ கட்சி (1935), இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (1943) என்பன துவக்கத்தில் செல்வாக்குடன் இருந்தாலும் பின்னர் பலயீனமடைந்தன. இன்று அவை கட்சிப் பொருட்கள் போல ஆகிவிட்டன. ஒருமுறை சமசமாஜக் கட்சியின் என்.எம் பெரேரா கொழும்பு மேயராக பதவியில் இருந்திருக்கின்றார். கூட்டணிகள் அமைத்து மேற்படி இடதுசாரிகள் செல்வாக்கான அமைச்சுகளை வகித்திருக்கின்றார்கள். அதேநேரம் வடக்கில் சில தமிழ் அரசியல் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. அவை இன்று முன்பு போல செல்வாக்குடன் இன்று இல்லை. 1981 கள் வரைக்கும் இந்த நாட்டில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் தோற்றம் பெற்றிருக்கவில்லை. என்றாலும் அவர்களின் பல சிவில் இயக்கங்கள் பெரும்பாலும் கொழும்பை மையப்படுத்தி செயல்பட்டு வந்திருக்கின்றன. உதாரணமாக பதியுதீன் மஹ்மூத் அவர்களின் இஸ்லாமிய சோஸலிச முன்னணி டாக்டர் கலீல் போன்றவர்களின் முஸ்லிம் லீக்கை கூறலாம். ஆனால் அவை நாட்டில் அதிகாரத்தில் இருக்கின்ற பிரதான கட்சிகளுக்கு துணைபோகின்ற இயக்கங்களாக செயல்பட்டு வந்திருக்கின்றன. ஜே.ஆர். ஜெயவர்தன செயல்பாடுகள் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவு ஏற்படுத்திக் கொண்டமை, முஸ்லிம்களை மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒட்டுண்ணிகள் என்று செடிகொடி என்று பேசி அவர்களைப் பண்படுத்தி வந்தமை. இதனால், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் (1981) அந்த சமூகத்தில் செல்வாக்குடன் மக்கள் மத்தியில் அங்கீகாரம் பெற ஜே.ஆர். துணைபுரிந்திருக்கின்றார். மு.கா. தலைவர் அஸ்ரபுக்குப் பின்னர் இன்று வடக்கிலும் கிழக்கிலும் பிரதேசவாத உணர்வுடைய கட்சிகள் பிறந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது தனிப்பட்ட நபர்களின் அரசியல் இருப்பை மையமாகக் கொண்ட இயக்கங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். எனவே அவற்றை தேசிய அளவில் முஸ்லிம்களின் நலன்களை மையமாக வைத்து செயல்படுகின்ற அரசியல் இயக்கங்கள் என்று சொல்ல முடியாது. பிரதான அரசியல் கட்சிகளுக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள், வெட்டுக் கொத்துக்கள் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த பண்டாரநாயக்க புதுக் கட்சி துவங்கி பெரும்பான்மை மக்களின் அங்கீகாரத்தைப் பெற்று அண்மைக்காலம் வரை நமது அரசியலில் செல்வாக்குடன் செயல்பட்டு வந்தது. சந்திரிக்காவுக்குப் பின்னர் குறிப்பாக மைத்திரி காலத்தில் சுதந்திரக் கட்சி பல கூறுகளாக பிளந்து நிற்கின்றது. அதிலிருந்து மஹிந்த தலைமையிலன மொட்டுக் கட்சி உருவாகியது. சஜித் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியும் பிற்பட்ட காலப்பகுதிகளில் செல்வாக்கான அரசியல் கட்சிகளாக வளர்ந்திருக்கின்றன. ஆனால் குறுகிய காலத்திற்குள்ளேயே மஹிந்த தலைமையிலான மொட்டு வாடிப்போயிருப்பதை நமது அரசியல் களத்தில் பார்க்க முடிகின்றது. அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களை சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தன்பக்கம் இழுத்துக் கொண்டது. இதற்கு ரணிலுக்கும் சஜித்துக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுதான் காரணமாக அமைந்தது. இதுவரை நாட்டில் மிகப் பெரும் அரசியல் கட்சியாக இருந்த ஐ.தே.க. தலைமையிலான ரணிலின் கட்சி ஆதரவாளர்களினால் நிராகரிக்கப்பட்டது. இன்று ரணில் அரசியலில் மிகவும் பலயீனமான மனிதராக இருந்தாலும் களத்தில் தனது ஆட்டத்தை அவர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மலையக அரசியலை எடுத்துக் கொண்டால் சுதந்திரத்துக்குப் பின்னர் மிகவும் செல்வாக்கான அரசியல் கட்சிகளை வைத்திருந்தவர்கள் என்று பார்க்கும் போது, சௌமியமூர்த்தி தொண்டமான், (1939) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஏ.அசிஸ் (இலங்கை இந்திய காங்கிரஸ் 1939) போன்றவர்களின் அரசியல் கட்சிகளைக் குறிப்பிட முடியும். இன்று மலையகத்தில் மலைக்கு மலை தோட்டத்துக்குத் தோட்டம் கட்சிகள் என்று அரசியல் இயக்கங்கள் முளைத்திருப்பதைப் பார்க்க முடியும். இப்போது சர்வதேசத்தையும் இந்தியாவையும் தொடர்ந்தும் நம்பி இருப்பதில் எந்தப் பயன்களும் இல்லை என்ற நமது வாதத்துக்குள் நுழைவோம். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1944ல் ஆரம்பிக்கப்பட்டது. அதன் மூலம் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை ஜீ.ஜீ. பென்னம்பலம் முன்வைத்தார். பின்னர் 1949 ல் தந்தை செல்வா தலைமையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆரம்பமானது. இவை இரண்டும் ஏதோ வகையில் வடக்கு, கிழக்கில் இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் வரையிலான காலப்பகுதி தமிழரசுக் கட்சி வீரியத்துடன் செயல்பட்டு வந்திருக்கின்றன. அதேபோல ஜீ.ஜீ. பொன்னம்பலம் துவங்கிய தமிழ் காங்கிரஸ் இன்று ஒரு பிராந்தியக் கட்சி என்ற அளவுக்கு போய் நிற்கின்றது. அத்துடன் விக்னேஸ்வரன் ஒரு கட்சி வைத்திருக்கின்றார். பார் அனுமதிப்பத்திரத்துடன் அவர் மீது இருந்த இமேஜ் கெட்டுப்போய் நிற்கின்றது. டக்ளஸ் மற்றும் முன்னாள் போராளிகள் குழுக்களின் பேரில் பல அரசியல் கட்சிகள் வடக்கு கிழக்கில் செயல்பட்டு வருகின்றன. கிழக்கிலும் அம்மான் மற்றும் பிள்ளையானின் அரசியல் செய்பாடுகளும் காணப்படுகின்றன. அதேநேரம் அனுரவுடன் சேர்ந்து அனைவருக்கும் விமோசனம் என்ற கருத்தும் இப்போது அங்கு பலமாக இருந்து வருகின்றது. இதுபோல தமது இருப்புக்கான ஒரு அரசியல் செயல்பாடுகள்தான் பொதுவாக இப்போது வடக்கு, கிழக்கில் காணப்படுகின்றன. எனவே, வடக்கு, கிழக்கில் செயல்படுகின்ற அரசியல் இயக்கங்கள் இன்று அவற்றின் தனிப்பட்ட இருப்புக்காகத்தான் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். எனவே இவர்கள் ஒருபோதும் தமிழர்களுக்கு விமோசனங்களைப் பெற்றுத் தரப்போவதில்லை என்பதனை வடக்கு, கிழக்கு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்கள் நலன்களைவிட இவர்கள் தமது அரசியல் இருப்புக்குத்தான் முன்னுரிமை கொடுத்து போராடி வருகின்றார்கள். அத்துடன் இன்று தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற இலங்கை தமிழரசுக் கட்சி சம்பந்தன் காலத்தில் பதவியில் இருக்கின்ற அரசுக்கு விசுவாசமான ஒரு முகவர் அணியாகத்தான் இயங்கி வந்திருக்கின்றது. அதனால்தான் ஆட்சியாளர்களை நம்பி இவர்கள் தமிழர்களின் அரசியல் விமோசனம் பற்றி அவ்வப்போது இன்று – நாளை எனக் காலகெடுக்களை கொடுத்து தமிழ் மக்களை ஏமாற்றி வந்திருக்கின்றனர். இதில் சுமந்திரன் பங்கு அளப்பரியது என்பதுதான் நமது கணிப்பு. இன்று உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்குப் பின்னர் தமது கட்சி மீண்டும் மக்கள் மனதை வென்றுவிட்டதாக இவர்கள் கதை விட்டாலும் மாகாண சபைத் தேர்தல் வருமாக இருந்தால் யதார்த்தத்தை நமக்கு புரிந்து கொள்ள முடியும். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வரும் ஒரு இயல்புநிலை தான் இது என்பதும் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். விடுதலைப் போராட்ட காலத்தில் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, முழு நாட்டுக்கும் கடும் சேதாரங்கள் நிகழ்ந்தாலும் விடுதலைப் புலிகள் மற்றும் அதன் அரசியல் தலைமையை தமிழ் மக்கள் வரலாற்றில் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். பல தசாப்தங்கள் பிரபாகரன் தலைமையில் அங்கு ஒரு அரசு இயங்கி வந்திருப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். தெற்கில் பிரபாகரன் பயங்கரவாதி என்றாலும் வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல, தமிழ் உலகத்தில் அப்படி ஒரு நிலை இல்லை. என்னதான் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இந்த என்.பி.பி. அரசு அதிகாரத்தில் இருந்தாலும் அதற்கு எதிரான விமர்சனங்கள் இருப்பது போலதான் பிரபாகரன் பற்றிய மதிப்பீடும். ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், மாகாணசபைத் தேர்தல் என்று வந்து அதில் தமிழர் பிரதிநிதித்துவம் என்பதனை விட தமிழ் மக்களுக்கு அடிப்படைத் தேவை ஒரு அரசியல் தீர்வு. இது விடயத்தில் மேற்சொன்ன தேர்தல்களோ அதில் தமிழர்களுக்கு வரும் பிரதிநிதித்துவமோ சமூகத்தின் விமோசனத்துக்கு காரணிகளாக அமையப்போவதில்லை. அதேநேரம், சர்வதேசமும் இந்தியாவும் ஈழத்தமிழர்களை இன்று கைவிட்டு விட்டது. இதற்குக் காரணம் வடக்கு, கிழக்கில் அரசியல் செயல்பாடுகள் – போராட்டங்கள் பலயீனப்பட்டதே காரணம். இப்போது செம்மணி விவகாரம் பேசு பொருளாக இருந்தாலும் அது பற்றி ஒட்டுமொத்த தமிழர்கள் மத்தியில் ஒன்றுபட்ட கருத்து இல்லை. இப்போது இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் தேர்தல் பற்றி பெரிதாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எங்காவது ஒரு இடத்தில் ஈழத்தமிழர் விவகாரம் ஒரு பேசுபொருளாக அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கின்றார்களா என்பதை சிந்தித்துப் பாருங்கள். சர்வதேசமும் இப்போது ஈழத்தமிழர் விவகாரத்தை ஒரு தலைப்பாக எடுத்துக் கொள்வதே கிடையாது. அது கிடப்பில் போடப்பட்ட கோவைகளாகத்தான் இருந்து வருகின்றன. எனவே நாம் முகவுரையில் சொல்லி இருப்பது போல நெப்போலியன் உபதேசத்தை கட்டாயமாக இன்று ஈழத் தமிழர்கள் பரிசீலித்துப் பார்க்க வேண்டும். எனவே, வடக்கு, கிழக்கில் இன்று இயங்கி வருகின்ற அரசியல் கட்சிகளும் அவற்றின் மக்கள் பிரதிநிதிகளும் தமிழர் விமோசனங்களைப் பெற்றுத்தர முடியாது நிலையிலேயே இருக்கிறார்கள். அவர்கள் செல்லாக் காசுகள் என்பதனைப் புரிந்து புதிய வியூகங்களுடன் ஒரு பலமான அரசியல் இயக்கம் தமிழர்களுக்கு தேவை. முஸ்லிம் மற்றும் மலையக தனித்துவ அரசியல் இயக்கங்களின் நிலையும் இதுதான். இவர்கள் சமூகத்தை விற்று தன்னல அரசியல் செய்கின்றார்கள் என்ற ஒரு வலுவான குற்றச்சாட்டும் அந்த சமூகங்களின் மத்தியில் நிலவி வருகின்றன. https://thinakkural.lk/article/319267
  21. இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கியுள்ள டெய்ர் அல் பலா - தரை வழிதாக்குதலை ஆரம்பித்தது இஸ்ரேல் Published By: RAJEEBAN 21 JUL, 2025 | 04:12 PM தென்காசாவிலிருந்து இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கியுள்ள மத்திய காசாவில் உள்ள டெய்ர் அல் பலா நகரத்தின் மீது இஸ்ரேலிய இராணுவம் தரை மற்றும் வான்தாக்குதலை ஆரம்பித்துள்ளது. ஹமாசினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்கள் இந்த நகரத்திலேயே உள்ளனர் என ஊகம் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. கடும் ஆட்டிலறி மற்றும் வான்தாக்குதலின் மத்தியில் இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் இராணுவ வாகனங்கள் இந்த நகரத்தை நோக்கி செல்வதாக உள்ளுர் ஊடகவியலாளர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். டெய்ர் அல் பலா நகரின் மீது இஸ்ரேலிய படையினர் மேற்கொண்டுள்ள முதலாவது தரை நடவடிக்கை இது. கடந்த 21 மாதங்களாக இந்த நகரத்தை இலக்குவைத்து இஸ்ரேல் தரைநடவடிக்கை எதனையும் மேற்கொள்ளாதமை குறிப்பிடத்தக்கது. இந்த நகரத்தில் ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ளனர். மேலும் காசாவின் ஏனைய பகுதிகளை விட இந்த நகரத்தில் கட்டிடங்களிற்கு குறைவான சேதங்களே ஏற்பட்டுள்ளன.. இந்த நகரில் மருத்துவமனைகள் இயங்குகின்றன. ஒருவருடத்திற்கு முன்னர் காசா பள்ளத்தாக்கின் தென்பகுதிக்குள் இஸ்ரேலிய படையினர் நுழைந்த பின்னர் ஐநாவினது அலுவலங்களும் ஏனைய மனிதாபிமான அமைப்புகளின் அலுவலகங்களும் டெய்ர் அல் பலா நகரத்திலேயே இயங்குகின்றன. https://www.virakesari.lk/article/220550
  22. '15 ஆண்டுகள்; 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கொலை...' - கர்நாடகா தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் வழக்கு 22 JUL, 2025 | 10:24 AM கர்நாடகா தர்மஸ்தலா கோயிலில் சிறுமிகள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக, முன்னாள் ஊழியர் கொடுத்த வாக்குமூலமும், புதைக்கப்பட்ட உடல்கள் குறித்த புகாரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. "2003-ம் ஆண்டு, எனது மகள் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலில் காணாமல் போனார். அக்கம் பக்கத்தில் விசாரித்ததில், என்னுடைய மகள் அடையாளம் கொண்ட பெண்ணை கோயில் ஊழியர்கள் தூக்கி சென்றதாக கூறினார்கள்.இதை கோயில் நிர்வாகத்திடம் கேட்டப்போது, என்னை மிரட்டி, அடித்தனர். அதனால், நான் கோமாவிற்கு சென்றேன்.இந்தப் பயத்தில் தான், இவ்வளவு காலம் இது குறித்து வெளியே சொல்லவில்லை'. இப்படி கடந்த 15-ம் தேதி, தட்சின கன்னடாவின் காவல் கண்காணிப்பாளரிடம் பெண் ஒருவர் புகார் அளித்தார். என்ன நடந்தது? கர்நாடகா மாநிலம் தட்சின கன்னடாவில் உள்ளது தர்மஸ்தலா. இங்கே மஞ்சுநாதர் கோயில் உள்ளது. இது மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். அரசியல்வாதிகள், பிரபலங்கள் என பலரும் வந்து செல்லும் கோயில் இது. கடந்த ஜூலை 11-ம் தேதி, இந்தக் கோயிலின் முன்னாள் தூய்மை பணியாளர் ஒருவர், "1995-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரை, பல பெண்கள் மற்றும் மாணவிகளின் உடல்களை அடக்கம் செய்ய சொல்லி என்னை கோயில் நிர்வாகத்தினர் கட்டாயப்படுத்தினார்கள். இதை நான் செய்யவில்லை என்றால் என்னை கொன்றுவிடுவதாக மிரட்டினார்கள். பல பெண்களை பள்ளி சீருடையிலேயே புதைத்து இருக்கிறேன். பெண்களின் உடலில் பாலியல் வன்முறைக்கான காயங்களும், சில நேரம் ஆசிட் தழும்புகளும் காணப்படும்" என்று பெல்தங்கடி நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இவர் ஜூன் மாதமே இது குறித்து புகார் அளித்துள்ளார். கோரிக்கைஅந்த இடத்தை தோண்டி பார்க்க வேண்டும் என்கிற கோரிக்கையும் நீதிமன்றத்தின் முன் வைத்துள்ளார். மேலும், இவர் எலும்புகூடுகளின் புகைப்படங்களையும் சமர்பித்துள்ளார். இவர் நீதிமன்றத்தில் ஆஜராகும் போதும் கூட, சில எலும்புகளை கொண்டு வந்திருக்கிறார். ஆரம்பத்தில் இவர், அந்த உடல்கள் தற்கொலை செய்துகொண்டவர்களுடையது என்று நினைத்துள்ளார். அதன் பின் தான், தர்மஸ்தலாவை சுற்றி நடக்கும் குற்றங்களை மறைக்க கொலை செய்யப்பட்ட உடல்கள் என்று அறிந்திருக்கிறார். இதே நிலை, அவர் சொந்தகாரர்களுக்கே நடந்த நிலையில், 2014-ம் ஆண்டு அந்தப் பணியில் இருந்து நின்றிருக்கிறார். இவர் இந்த வாக்குமூலத்தைக் கொடுக்கவே, மேலே கூறிய பெண்மணி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். சிறப்பு புலனாய்வு குழு இதனையடுத்து, கர்நாடகா பெண்கள் அமைப்பு, கர்நாடக அமைச்சர் சித்தராமையா இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. கர்நாடகாவின் சுகாதார துறை அமைச்சர், 'இந்த சம்பவம் குறித்து அரசு விசாரணை நடத்தும்' என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து தட்சின கன்னடா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண், "புகார் அளித்த மஞ்சுநாதர் கோயிலின் முன்னாள் ஊழியர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. அவர் சொல்லும் இடத்தில் குழி தோண்டி உடல்களை எடுப்பதற்கான பணிகள் நடைபெற உள்ளது. இது சாதாரண விஷயம் இல்லை. அதற்கு சில சட்ட நடைமுறைகள் தேவை. அதற்காக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/220598
  23. 22 JUL, 2025 | 12:32 PM கறுப்பு ஜூலை வன்செயல்களுக்குப் பிறகு 42 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், ஆயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்வைச் சிதறடித்த அந்த வன்செயல்களின் நிழலிலேயே தொடர்ந்தும் இலங்கை வாழ்ந்துகொண்டிருக்கிறது. வீடுகள் எரிக்கப்பட்டன, வாழ்வாதாரங்கள் நிர்மூலம் செய்யப்பட்டன, அப்பாவி உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. தலைநகர் கொழும்பில் தொடங்கி நாடுபூராவும் அந்த கலவரங்களும் வன்செயல்களும் பரவின. நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்தார்கள். ஆனால், அந்தக் கொடிய வன்செயல்களுக்காக இன்னமும் பொறுப்புக் கூறப்படவில்லை. உத்தியோகபூர்வ நீதி கிடைக்கவில்லை. மீண்டும் அத்தகைய வன்செயல்கள் மூளாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தேசிய சமாதானப் பேரவை கறுப்பு ஜூலையில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தவும் மாத்திரமல்ல, முதலில் கடந்த காலத்துக்கு முகங்கொடுத்து பிரச்சினைக்கான காரணிகளை கையாளக்கூடிய அரசியல் தீர்வொன்றைக் காணாவிட்டால், நிலைபேறான நல்லிணக்கத்தை ஒருபோதும் காணமுடியாது என்பதை வலியுறுத்திக் கூறுவதற்காகவும் கறுப்பு ஜூலையின் வருடாந்தத்தை நினைவுகூருகிறது. 1983 ஜூலை நிகழ்வுகள் ஒன்றும் தன்னியல்பானவை அல்ல. வன்முறையாக மாறிய நீண்டகாலமாக புரையோடிப்போன இனநெருக்கடியின் விளைவானதே அது. வடக்கில் வளர்ந்துகொண்டிருந்த தமிழ்த் தீவிரவாதத்தின் பின்னணியில், 13 படைவீரர்களை பலியெடுத்த விடுதலைப் புலிகளின் தாக்குதல் ஒன்றைத் தொடர்ந்தே தெற்கில் கலவரங்கள் மூண்டன. அரசியல் சூழ்ச்சி, அரசின் செயலின்மை மற்றும் தண்டனையின்மைக் கலாசாரம் (Culture of impunity) ஆகியவற்றின் விளைவானதே தெற்கின் வன்முறை எதிர்வினை. இந்த உண்மையை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளும் வரை, குணப்படுத்தலை தொடங்க முடியாது. 1983 கறுப்பு ஜூலை வன்செயல்களுக்கு யார் பொறுப்பு, எத்தனை பேர் இறந்தார்கள், ஏன் அரசு தவறியது என்ற பதிலளிக்கப்படாத கேள்விகள் நாட்டை தொடர்ந்தும் தொந்தரவு செய்து கொண்டிருக்கின்றன. 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள், 1995ஆம் ஆண்டில் இருந்து செம்மணியில் கண்டுபிடிக்கப்படும் மனிதப் பதைகுழிகள் மற்றும் நீதி தாமதிக்கப்பட்ட, மறுக்கப்பட்ட அல்லது புதைக்கப்பட்ட ஏனைய பல சம்பவங்கள் உட்பட அண்மைய தேசிய அனர்த்தங்கள் பலவற்றில் இந்த தீர்வு காணப்படாத உண்மைகள் எதிரொலிக்கின்றன. காலம் கடந்து சென்றுகொண்டிருக்கும் நிலையில், 1983 ஜூலையில் நடந்தவற்றை தெரிந்து வைத்திருப்போர் மிகச் சிலராகவே இருப்பர். ஆனால், கடந்த காலத்தை நாம் தெரிந்துகொள்ளாவிட்டால், பிரச்சினையின் மூலவேர்க் காரணிகளை கையாளக்கூடிய சமாதான எதிர்காலம் ஒன்றுக்கான பயனுறுதியுடைய அத்திவாரத்தை போடமுடியாது. இத்தகைய பின்புலத்தில், அரசாங்கத்தின் உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு 1983 ஜூலை நிகழ்வுகளை முழுமையாக ஆராயவேண்டிய தேவையையும் அதன் ஆணையில் உள்ளடக்கவேண்டியது அவசியமாகும். நீதி மற்றும் பரஸ்பர மதிப்பின் மீது கட்டியெழுப்பப்பட்ட ஒரு நாட்டை எதிர்காலச் சந்ததி பொறுப்பேற்க வேண்டுமானால், நடந்தவை பற்றிய உண்மையையும் அதற்கான காரணங்களையும் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். தீர்வு காணப்படாமல் இருக்கும் இனநெருக்கடியின் விளைவாக உயிரிழந்த சகலரையும் முழு நாடும் நினைவுகூருவதற்கும் அத்தகைய வன்முறைகள் மீண்டும் ஒருபோதும் நிகழாதிருப்பதற்கு உறுதிபூணுவதற்குமான ஒரு தினமாக ஜூலை 23 பிரகடனம் செய்யப்பட வேண்டும் என்று தேசிய சமாதானப் பேரவை யோசனை முன்வைக்கிறது. இனம், மதம், சாதி மற்றும் வர்க்க வேறுபாடுகளுக்கு அப்பால் சகல சமூகங்களையும் அரவணைத்துப் பாதுகாக்கக்கூடிய அதிகாரப் பரவலாக்கம், அதிகாரப்பகிர்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட நீதியான அரசியல் முறைமை ஒன்றின் ஊடாக சுபீட்சமும் அபிவிருத்தியும் நிறைந்த நாடொன்றை கட்டியெழுப்புவதில் இன்றைய தலைமுறையினரிடமும் அரசாங்கத் தலைமைத்துவத்திடமும் இருக்க பற்றுறுதிக்கான ஒரு குறிகாட்டியாக அந்த யோசனை அமையும். https://www.virakesari.lk/article/220610
  24. நான்கு இந்திய மீனவர்கள் கைது Published By: DIGITAL DESK 3 22 JUL, 2025 | 11:41 AM இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களே மீன்பிடிப்படகு ஒன்றுடன் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில், குறித்த படகையும் அதிலிருந்த நான்கு மீனவர்களையும் கைது செய்து மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். இந்நிலையில், ஆரம்பகட்ட விசாரணையை முடித்துக் கொண்டு மீனவர்கள் நான்கு பேரையும் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை கடற்படையின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். இதேவேளை, இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை இராமேஸ்வரத்தை சேர்ந்த 25 மீன்பிடிப்படகுகளும் 185 மீனவர்களும் இலங்கை கடற்படையால் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/220605
  25. திருவனந்தபுரத்தில் 5 வாரமாக சிக்கியிருந்த பிரிட்டனின் அதிநவீன போர் விமானம் புறப்பட்டது - என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோப்புப் படம் கட்டுரை தகவல் கீதா பாண்டே, அஷ்ரஃப் படன்னா பிபிசி செய்திகள் திருவனந்தபுரம், கேரளா 21 ஜூலை 2025 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஐந்து வாரங்களுக்கும் மேலாக நிற்கும் பிரிட்டனின் அதிநவீன போர் விமானம் இன்று புறப்பட்டுச் சென்றது. கடந்த ஜூன் 14-ஆம் தேதி, இந்தியப் பெருங்கடலின் மீது பறந்து கொண்டிருந்த போது மோசமான வானிலை காரணமாக, கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் F-35பி விமானம் தரையிறக்கப்பட்டது. பின்னர், அதில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இந்தியாவில் இவ்வளவு நீண்ட காலம் இந்த விமானம் தங்கியிருந்தது மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியது. இவ்வளவு நவீன விமானம் எப்படி ஒரு வெளிநாட்டில் இவ்வளவு நாட்கள் சிக்கியிருக்க முடியும் என்ற கேள்விகளையும் எழுப்பியது. பட மூலாதாரம்,PTI படக்குறிப்பு, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் உள்ள பராமரிப்பு மற்றும் பழுது சரிசெய்யும் மையத்திற்கு, ஜெட் விமானம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. எச்.எம்.எஸ். (HMS) பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் போர்க்கப்பலைச் சேர்ந்த F-35பி விமானம் திரும்ப முடியாமல் போனதால், ராயல் கடற்படையின் பொறியாளர்கள் அதைச் சரிசெய்ய வந்தனர். ஆனால், அவர்களால் விமானத்தைப் பழுதுபார்க்க முடியவில்லை. இரண்டு வாரங்களுக்கு முன், பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் 14 பொறியாளர்கள் கொண்ட குழுவை, "திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு F-35பி விமானத்தை ஆய்வு செய்து பழுதுபார்க்க" அனுப்பியதாகத் தெரிவித்தது. அந்தக் குழு, விமானத்தின் இயக்கம் மற்றும் பழுது பார்க்கும் செயல்முறைக்குத் தேவையான சிறப்பு உபகரணங்களுடன் வந்ததாக ஓர் அறிக்கை தெரிவிக்கிறது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்களில், F-35பி விமானம் இழுத்துச் செல்லப்படுவது தெரிந்தது. தொழில்நுட்ப வல்லுநர்களால் விமானத்தை சரிசெய்ய முடியாவிட்டால், அதைப் பிரித்து சி-17 குளோப்மாஸ்டர் போன்ற பெரிய சரக்கு விமானத்தில் எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும் என்பது போன்ற ஊகங்கள் இருந்தன. கடந்த இரண்டு வாரங்களாக, இந்தியாவில் உள்ள பிரிட்டன் தூதரகமும் பாதுகாப்பு அதிகாரிகளும் பழுதுபார்ப்பு விவரங்களைப் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என்று பிபிசியிடம் தெரிவித்தனர். ஆனால் திங்களன்று, "விமானம் பறக்கத் தகுதியாகி விட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது" என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறினார். செவ்வாய்க் கிழமை புறப்பட்டுச் சென்றுள்ள அந்த விமானத்திற்கு, லண்டனுக்கு செல்லும் வழியில் எந்த விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பப்படும்" என்பது இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவைச் சேர்ந்த லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் எஃப்-35பி போர் விமானங்கள் மிகவும் நவீன ஸ்டெல்த் (எதிரி ரேடார்களுக்கு எளிதில் புலப்படாத) போர் விமானங்களாகும். குறுகிய தூரத்தில் மேலெழும்பிப் பறக்கும் திறன் மற்றும் செங்குத்தாகத் தரையிறங்கும் இவற்றின் ஆற்றல் மிகவும் பாராட்டப்படுகிறது. திருவனந்தபுரம் விமான நிலைய ஓடுதளத்தில் தனியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த "எஃப் -35பி" விமானம் கேரளாவின் பருவமழையில் நனையும் காட்சிகள் சமூக வலைதளங்களில் நகைச்சுவைகளும், மீம்ஸ்களும் உருவாகக் காரணமாக அமைந்தன. "கடவுளின் சொந்த நாடு" என்று வர்ணிக்கப்படும் கேரளாவின் இயற்கை அழகை விட்டு இந்த விமானம் வெளியேற விரும்பவில்லை என்று பலரும் கூறத் தொடங்கினர். மேலும், 110 மில்லியன் டாலர் (80 மில்லியன் யூரோ) மதிப்புள்ள இந்த போர் விமானம் சிக்கியிருந்த விவகாரம், பிரிட்டன் நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd6gdjq1vx9o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.