Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 'முழு நிதியும் செலவிடப்படாத திட்டங்களுக்கு மீண்டும் அதிக நிதி ஏன்?' - மத்திய பட்ஜெட் பற்றி நிபுணர்கள் அலசல் பட மூலாதாரம்,SANSAD TV கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 2 பிப்ரவரி 2026, 03:13 GMT 2026 - 27ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் நிதிநிலை அறிக்கை ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தொடர்ச்சியாக அவர் தாக்கல் செய்யும் ஒன்பதாவது நிதி நிலை அறிக்கை இது. பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவில் தாக்கல் செய்யப்பட்ட இந்த நிலை அறிக்கையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் பெரிய அளவில் இடம்பெறவில்லை. ஆனால், கவனிக்கத்தக்க சில அம்சங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றிருந்தன. சுமார் 53.47 லட்சம் கோடி ரூபாய்க்கு இந்த நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. சரியாகச் சொன்னால், 53,47,315 கோடி ரூபாய். நிதிப் பற்றாக்குறை 16,95,768 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. வருவாய் பற்றாக்குறையைப் பொறுத்தவரை கடந்த நிதியாண்டைவிட அதிகரித்து 5,92,344 லட்சம் கோடி ரூபாயாக இருந்தாலும், அதே 1.5 சதவீதமாக நீடிக்கும் என இந்த நிதிநிலை அறிக்கை கூறுகிறது. கடந்த நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவீதமாக இருந்தது. அது இந்த நிதியாண்டில் 4.3 சதவீதமாகக் குறையும் எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. கடன்களைப் பொறுத்தவரை, ஜிடிபியில் 56.1 சதவீதத்தில் இருந்து 55.6 சதவீதமாகக் குறையும் எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டில்தான் ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் செய்யப்பட்டது என்பதால், கடந்த நிதியாண்டில் இருந்த அளவுக்குத்தான் வரி வருவாய் இருக்குமென மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், ஒட்டுமொத்த வரி வருவாய், 8 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செலவுகளைப் பொறுத்தவரை, இந்த நிதி நிலை அறிக்கையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது முதலீட்டுச் செலவுகள்தான். மொத்தச் செலவான 53.47 லட்சம் கோடி ரூபாயில் 12,21,821 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டுச் செலவுகள் செய்யப்படும் எனக் கூறப்பட்டிருக்கிறது. நிதிப் பற்றாக்குறை குறைப்பு, மூலதனச் செலவு அதிகரிப்பு போன்ற அம்சங்கள் இருந்தபோதும் பங்குச் சந்தை நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியது. நிதியமைச்சர் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து கொண்டிருந்தபோதே, பங்குச் சந்தை வீழ ஆரம்பித்தது. நிதி நிலை அறிக்கையில் இடம்பெற்றிருந்த மற்றொரு அம்சம், வீழ்ச்சியை இன்னும் துரிதப்படுத்தியது. அதாவது, ஃபியூச்சர்ஸ் (Futures) வர்த்தகம் மீதான பங்குப் பரிவர்த்தனை வரி (STT) தற்போதைய 0.02 சதவீதத்தில் இருந்து 0.05 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் ஆப்ஷன்ஸ் பிரீமியம் (options premium) மற்றும் ஆப்ஷன்ஸ் செயல்படுத்தல் (exercise of options) ஆகிய இரண்டிற்குமான பங்குப் பரிவர்த்தனை வரி முறையே தற்போதைய 0.1 சதவீதம் மற்றும் 0.125 சதவீதத்தில் இருந்து 0.15 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்தார். சிறு முதலீட்டாளர்கள் ப்யூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் வர்த்தகத்தில் ஈடுபட்டு தொடர்ந்து இழப்புகளைச் சந்தித்துவருவதாக 'செபி' சுட்டிக்காட்டிவந்த நிலையில் இந்தக் கட்டண அதிகரிப்பு, அந்தத் திசையில் ஒரு கவனிக்கத்தக்க நடவடிக்கையாக இருந்தது. ஆனால், பங்குச் சந்தை இதனை எதிர்மறையாக அணுகியதில், பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. பட மூலாதாரம்,Getty Images மோதி பாராட்டு மத்திய பட்ஜெட்டைப் பாராட்டிய பிரதமர் நரேந்திர மோதி, உள்கட்டமைப்பை வலுப்படுத்த பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். "இந்த பட்ஜெட் நிகழ்கால கனவுகளை நனவாக்குகிறது மற்றும் இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்தின் அடித்தளத்தை வலுப்படுத்துகிறது. உள்கட்டமைப்பை வலுப்படுத்த பட்ஜெட் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பிரத்யேக சரக்கு வழித்தடங்கள், நாடு முழுவதும் நீர்வழிகளை விரிவுபடுத்துதல், அதிவேக ரயில் வழித்தடங்கள், அடுக்கு 2 மற்றும் அடுக்கு 3 நகரங்களின் மேம்பாட்டில் சிறப்பு கவனம் செலுத்துதல் மற்றும் நகரங்களுக்கு வலுவான பொருளாதார அடித்தளத்தை வழங்க நகராட்சி பத்திரங்களை ஊக்குவித்தல், இந்த நடவடிக்கைகள் அனைத்தும் வளர்ந்த இந்தியாவை நோக்கிய பயணத்தை மேலும் துரிதப்படுத்தும்." என்று அவர் கூறியுள்ளார். எதிர்க்கட்சிகள் விமர்சனம் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இல்லாத இந்த நிதி நிலை அறிக்கை எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப. சிதம்பரம், நிதி நிலை அறிக்கை குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். "வேலை வாய்ப்பின்மை, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவது போன்ற நிஜமான பிரச்னைகளை நிதியமைச்சர் கவனத்தில் கொள்ளவில்லை" என்று குறிப்பிட்டார் ப. சிதம்பரம். பொருளாதார நிபுணர்களைப் பொறுத்தவரை நிதி நிலை அறிக்கையின் சில அம்சங்கள் கவனிக்கத்தக்கவை என்றாலும் வேறு சில எதிர்பார்ப்புகளை இந்த நிதி நிலை அறிக்கை பூர்த்தி செய்யவில்லை என்கிறார்கள். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப் படம் "2025 - 26ஆம் நிதியாண்டில் 4.4 சதவீதமாக இருந்த நிதிப் பற்றாக்குறை, வரும் நிதியாண்டில் 4.3 சதவீதமாக இருக்கும் என்கிறது நிதிநிலை அறிக்கை. இது பேரியல் பொருளாதாரத்தில் (Macro Economics) நல்ல குறியீடாகப் பார்க்கப்படும். ஆகவே, அது வரவேற்கத்தக்கது. ஆனால், இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு முதலீடுகள் குறைந்துவருகின்றன. கடந்த மூன்று மாதங்களில் நிறைய வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறியிருக்கின்றன. நேரடி அந்நிய முதலீடும் வருவதில்லை, பங்குச் சந்தையிலும் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதில்லை. இந்தியாவில் உள்ள தொழில் முனைவோரும் இங்கு முதலீடு செய்வதில்லை. காரணம், பொருளாதாரம் மீதான நம்பிக்கையின்மைதான். அதற்கு இந்த நிதி நிலை அறிக்கையில் தீர்வில்லை" என்கிறார் ஓய்வுபெற்ற பொருளாதாரப் பேராசிரியரான கே. பிரபாகர். ஆனால், இந்த நிதி நிலை அறிக்கை இந்தியப் பொருளாதாரம் குறித்து கவலை அளிக்கக்கூடிய தகவலைச் சொல்கிறது என்கிறார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் முன்னாள் பேராசிரியரான ஜோதி சிவஞானம். "கடந்த ஆண்டின் நிதி நிலை அறிக்கைக்கும் இந்த ஆண்டின் நிதி நிலை அறிக்கைக்கும் பெரிய வித்தியாசமில்லை. கடன்கள், நிதிப் பற்றாக்குறை ஆகியவை கிட்டத்தட்ட அப்படியேதான் இருக்கிறன. " என்கிறார் அவர். படக்குறிப்பு,ஓய்வுபெற்ற பொருளாதாரப் பேராசிரியரான கே. பிரபாகர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி குறைப்பால், பொருளாதாரத்திற்குப் பலன்கள் ஏதும் கிட்டவில்லை என்ற நிலையில் அந்தச் சலுகையைத் தொடர்வது ஏன் என்கிறார் கே. பிரபாகர். "இந்த நிதிநிலையை அறிக்கையைப் பார்க்கும்போது வருமான வரியும் ஜிஎஸ்டியும்தான் பெரும் அளவிலான வருவாயைத் தருகின்றன. கார்ப்பரேட்களுக்கு வரியைக் குறைத்தால், அவர்களுக்குக் கிடைக்கும் லாபத்தில் அவர்கள் கூடுதலாக முதலீடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது." "ஆனால், அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு முதலீடு செய்யவில்லை. காரணம், ஏற்கனவே இருக்கும் தொழிற்சாலைகளில் இருந்தே 75 சதவீதம்தான் உற்பத்தி செய்கிறோம் எனும்போது, புதிதாக முதலீடுசெய்து என்ன செய்வது என்கிறார்கள். அதற்குக் காரணம், நுகர்வு குறைந்திருப்பதுதான். கார்ப்பரேட் நிறுவனங்கள் புதிதாக முதலீடுசெய்வதில்லை என்பதால் அவர்களுடைய லாபம் அதிகரித்திருக்கிறது. இருந்தும் இந்தச் சலுகை தொடர்கிறது" என்கிறார் கே. பிரபாகர். இந்த இரு பொருளாதார பேராசிரியர்களும் சுட்டிக்காட்டும் இன்னொரு விஷயம், மாநிலங்களோடு பகிரப்படாத வருவாயை மத்திய அரசு அதிகரித்துக்கொண்டே செல்வது. கே. பிரபாகர் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக விதிக்கப்படும் சிறப்பு வரி (cess - செஸ்) அதிகரித்துக்கொண்டே போவதைச் சுட்டிக்காட்டுகிறார். "2014ல் 10 சதவீதமாக இருந்த செஸ் தற்போது 18 சதவீதமாகிவிட்டது. இந்த சிறப்பு வரிகளில் இருந்து கிடைக்கும் வருவாய் மாநிலங்களோடு பகிர்ந்துகொள்ளப்படுவதில்லை. இதற்கென தேசிய அளவில் திட்டங்களைத் தீட்டி, நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள். இதில் எந்த அளவுக்கு வெற்றி கிடைக்கிறது என்பது தெரியவில்லை" என்கிறார் கே. பிரபாகர். படக்குறிப்பு,சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் முன்னாள் பேராசிரியரான ஜோதி சிவஞானம் (கோப்புப் படம்) ஜோதி சிவஞானம் இதேபோன்ற மாநிலங்களோடு பகிரப்படாத மற்றொரு வருவாயைச் சுட்டிக்காட்டுகிறார். அதாவது, பொதுத் துறை நிறுவனங்களில் இருந்து கிடைக்கும் ஈவுத் தொகை, ரிசர்வ் வங்கியில் இருந்து கிடைக்கும் டிவிடென்ட் போன்ற வரி அல்லாத வருவாய் இந்த ஆண்டில் 6.6 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் என நிதிநிலை அறிக்கையில் மதிப்பிடப்பட்டிருக்கிறது. "இப்படி மாநிலங்களோடு பகிரப்படாத தொகை அதிகரித்துக்கொண்டே போவது நல்லதல்ல" என்கிறார் அவர். பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்திற்கு மேல் இருக்கும் எனக் கணிக்கப்பட்டாலும் அந்தப் புள்ளிவிவரங்கள் சரியானவையா என பல பொருளாதார நிபுணர்கள் கேள்வியெழுப்புவதைச் சுட்டிக்காட்டுகிறார் கே. பிரபாகர். "சராசரி பணவீக்கத்தை மிகக் குறைவாகக் கணக்கிட்டு வளர்ச்சி மதிப்பிடப்படுகிறது. இந்தியாவின் ஜிடிபி மதிப்பீடுகள் தற்போதைய பொருளாதாரத்தின் நிலையைப் பிரதிபலிக்கவில்லை என்பதால், இந்தப் புள்ளிவிவரங்களுக்கு சர்வதேச நிதியம் சி கிரேடு (C Grade) கொடுத்திருக்கிறது. அரவிந்த் சுப்ரமணியம் போன்ற பொருளாதார நிபுணர்கள் இந்தியாவின் வளர்ச்சி 2.5 சதவீதம் அதிகமாகக் கணக்கிடப்படுகிறது என்கிறார்கள். மத்திய அரசு சொல்வதைப் போல வளர்ச்சி இருந்தால் ரூபாயின் மதிப்பு ஏன் சரிந்துகொண்டே வருகிறது என்பதற்கு விளக்கமில்லை" என்கிறார் கே. பிரபாகர். மத்திய அரசே செயல்படுத்தக் கூடிய வகையில் பல திட்டங்களை அறிவித்தாலும், அவை சரியாக செயல்படுத்தப்படுவதில்லை என்கிறார் அவர். அவர் சொல்வதைப் போலவே கடந்த நிதியாண்டில் பல மத்திய அரசின் திட்டங்களுக்கு பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு குறிப்பிடப்பட்டாலும் மிகக் குறைந்த அளவில் செலவிடப்பட்டதை இந்த நிலை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. உதாரணமாக, கடந்த நிதி ஆண்டில் தேசிய ஆயுஷ் மிஷனுக்கு 1,275 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டு 781 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டிருக்கிறது. பிஎம் ஸ்ரீ திட்டத்திற்கு 7,500 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டது. ஆனால் உண்மையில் 4,500 கோடி ரூபாய் மட்டுமெ செலவிடப்பட்டது. பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா - நகர்ப்புறம் 2.0 திட்டத்திற்கு 3,500 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டு 300 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டிருக்கிறது. தேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்திற்கு 67,000 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டு 17,000 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டங்கள் அனைத்திற்கும் இந்த நிதி நிலை அறிக்கையில் கடந்த நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த அளவுக்கு அல்லது அதைவிட அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. "இப்போது நிறைய நகரங்களை மேம்படுத்த வேண்டும் எனச் சொல்லியிருக்கிறார்கள். ஏற்கனவே இதற்கென போடப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்ன ஆனதெனத் தெரியவில்லை. இப்போது, கிளஸ்டர் மேம்பாடு (Clusters Development) குறித்துச் சொல்கிறார்கள். 200 கிளஸ்டர்கள் மேம்படுத்தப்படும் என்கிறார்கள். இந்தியாவில் ஏற்கனவே தொழில் சார்ந்து 5,000 கிளஸ்டர்களாவது இருக்கும். உதாரணமாக, கோயம்புத்தூர் கிரைண்டர் உற்பத்தி தொழிலுக்கான ஒரு கிளஸ்டர். இப்போது உள்ள 5,000 கிளஸ்டர்களில் இருந்து 200ஐ எப்படி தேர்வுசெய்வார்கள் என தெரியவில்லை. இறுதியாகப் பார்க்கும்போது நம் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையோடு இருக்கலாம். ஆனால், நாம் போகும் பாதை சரியா என்ற கேள்வி இருக்கிறது" என்கிறார் கே. பிரபாகர். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c931v04e9elo
  2. கிராமி விருதை வென்றார் தலாய் லாமா Published By: Digital Desk 3 02 Feb, 2026 | 02:05 PM திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா தனது 90 ஆவது வயதில் உலகின் உயரிய இசை விருதாகக் கருதப்படும் கிராமி விருதை (Grammy Award) வென்று புதிய சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 68 ஆவது கிராமி விருது வழங்கும் விழாவில், "சிறந்த ஓடியோ புத்தகம், கதை சொல்லல் மற்றும் பதிவு" (Best Audio Book, Narration, and Storytelling Recording) என்ற பிரிவின் கீழ் இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. Meditations: The Reflections of His Holiness the Dalai Lama என்ற அல்பத்திற்காக தலாய் லாமாவுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதில் தலாய் லாமாவின் அமைதியான குரலில் ஒலிக்கும் தியானக் குறிப்புகளும், இந்துஸ்தானி இசைக்கலைஞர் அம்ஜத் அலி கான் மற்றும் அவரது மகன்களின் சாரோட் (Sarod) இசையும் இணைந்து ஒரு தனித்துவமான அனுபவத்தைத் தருகின்றன. கருணை, மன அமைதி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற உலகளாவிய கருத்துக்களை மையமாகக் கொண்டு இந்த அல்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் அமெரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி கேடான்ஜி பிரவுன் ஜாக்சன் மற்றும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ட்ரெவர் நோவா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். அவர்களைக் கடந்து தலாய் லாமா இந்த விருதைத் தட்டிச் சென்றுள்ளார். இந்த அங்கீகாரம் குறித்து தலாய் லாமா, "இந்த விருதை நான் ஒரு தனிப்பட்ட வெற்றியாகப் பார்க்கவில்லை. மாறாக, மனிதநேயம் மற்றும் உலகளாவிய பொறுப்புணர்வுக்கான அங்கீகாரமாகவே கருதுகிறேன். அமைதி, கருணை மற்றும் உலக மக்கள் அனைவரும் ஒன்றே என்ற எண்ணம் எட்டு பில்லியன் மக்களுக்கும் சென்றடைய இந்த விருது உதவும் என்று நம்புகிறேன்." எனக் கருத்து தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/237601
  3. யாழ். மயிலிட்டியில் இராணுவ வாகனம் மோதி நபரொருவர் பலி! 02 Feb, 2026 | 04:55 PM பலாலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலிட்டி பகுதியில் இன்று திங்கட்கிழமை (02) மதியம் இராணுவ வாகனம் மோதியதில் நபர் ஒருவர் பலியாகியுள்ளார். துவிச்சக்கர வண்டியில் பயணித்த குறித்த நபர் வீதியை கடக்க முயன்றபோது அவர்மீது இராணுவ வாகனம் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாகனத்தை செலுத்திய பெண் சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து பலாலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/237632
  4. இந்தியக் கடலோரக் காவல்படையின் தாக்குதல்: அமைச்சர் சந்திரசேகர் கடும் கண்டனம் Feb 2, 2026 - 07:17 PM பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்து இலங்கை மீனவர்கள் குழுவொன்றின் மீது இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் நடத்திய தாக்குதலுக்குத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதாகக் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர், இச்சம்பவம் குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். வென்னப்புவ, வெல்லமன்கரை துறைமுகத்திலிருந்து கடற்தொழிலுக்காகப் புறப்பட்டுச் சென்ற இரண்டு படகுகளில் இருந்த 12 மீனவர்கள் மீது, கடந்த 29ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் வைத்து இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடித்துவிட்டு நாடு திரும்பிக்கொண்டிருந்த போதே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான மீனவர்களில் நால்வர் கடற்படையினரின் படகு மூலம் கரைக்கு அழைத்து வரப்பட்டு காலி, கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6 மீனவர்களை அழைத்து வருவதற்காகக் கடற்படைக் கப்பல் ஒன்று புறப்பட்டுச் சென்றுள்ளதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமான்டர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார். இதேவேளை, இச்சம்பவம் குறித்து அரசாங்கம் வெளிப்படையான விசாரணையை நடத்த வேண்டும் என அகில இலங்கைநெடுநாள் மீன்பிடி படகு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டிரோன் மென்டிஸ் வலியுறுத்தியுள்ளார். "மூன்று படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் இரண்டு படகுகள் இலங்கை கடற்பரப்பிலேயே தாக்கப்பட்டுள்ளன. எல்லையில் இருந்து எமது கடற்பரப்பிற்குள் நுழைந்தே அவர்கள் தாக்கியுள்ளனர். அவ்வாறு தாக்கும் வரை எமது அதிகாரிகள் என்ன செய்தார்கள் என நாம் முதலில் கேட்க வேண்டும். இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஆராயுமாறு நாம் எமது இரு அமைச்சர்களிடமும் கோருகிறோம். கடற்படையினரிடமும் முறையான விசாரணையைக் கோருகிறோம். எமது மீனவர்களைத் தாக்கிவிட்டுச் செல்லும் வரை என்ன செய்தீர்கள் எனக் கடற்படையினரிடமும் கேட்கிறோம்." என அவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், இலங்கை கடற்பரப்பிற்குள் மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக் காவல்படை நடத்திய இத்தாக்குதலின் போது, மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து 'அத தெரண' கடற்படையினரிடம் வினவியது. இதற்குப் பதிலளித்த கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமான்டர் புத்திக சம்பத், இலங்கை கடற்பரப்பை முழுமையாக ஒரே நேரத்தில் கண்காணிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது எனக் குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cml584kzb04r6o29nuwy6a6x6
  5. உலகளவில் பாதி: இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் பாம்பு கடித்து பல ஆயிரம் பேர் பலியாக என்ன காரணம்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஒவ்வோர் ஆண்டும் சுமார் 50,000 இந்தியர்கள் பாம்புக்கடியால் இறக்கின்றனர். இது உலகளவில் ஏற்படும் இறப்புகளில் பாதி. கட்டுரை தகவல் செரிலன் மொல்லன் 2 பிப்ரவரி 2026, 08:08 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தேவேந்திரா என்பவர் ஒரு இந்திய விவசாயி. மல்பெரி இலைகளைப் பறித்துக் கொண்டிருந்தபோது, ஒரு பாம்பு தன் காலில் பற்களைப் பதித்த அந்தத் தருணத்தை அவர் இப்போதும் நினைவில் வைத்திருக்கிறார். "பாம்பு கடித்த நான்கு நாட்களுக்குப் பிறகு, வலி தாங்க முடியாததாக மாறியபோது தான் நான் மருத்துவமனைக்குச் சென்றேன். தாமதமாகச் சென்றதால் எனது காலை இழக்க நேரிட்டது," என்று உலகளாவிய பாம்புக்கடி பணிக்குழு (Global Snakebite Taskforce - GST) வெளியிட்டுள்ள ஒரு குறும்படத்தில் அவர் கூறுகிறார். ஆனால் உயிர் பிழைத்த சில அதிர்ஷ்டசாலிகளில் தேவேந்திராவும் ஒருவர். மத்திய அரசின் கூற்றுப்படி, இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 50,000 பேர் பாம்புக்கடியால் உயிர் இழக்கின்றனர். இது உலகெங்கிலும் ஏற்படும் இறப்புகளில் பாதியாகும். சில மதிப்பீடுகள் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று கூறுகின்றன. 2000 முதல் 2019 வரை, இந்தியாவில் 12 லட்சம் பேர் பாம்புக்கடியால் உயிர் இழந்திருக்கலாம், அதாவது ஆண்டுக்கு சராசரியாக 58,000 இறப்புகள் நேர்ந்திருக்கலாம் என்று 2020 ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. தற்போது, உலகளாவிய பாம்புக்கடி பணிக்குழு வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்றில், இந்தியாவில் 99% சுகாதாரப் பணியாளர்கள் விஷமுறிவு மருந்தை வழங்குவதில் சவால்களை எதிர்கொள்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது விஷத்தின் நச்சுத்தன்மையை நீக்கும் உயிர் காக்கும் ஆன்டிபாடிகள் ஆகும். பாம்புக்கடியால் அதிக பாதிப்புகளை சந்திக்கும் இந்தியா, பிரேசில், இந்தோனீசியா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 904 மருத்துவ நிபுணர்களிடம் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் மோசமான உள்கட்டமைப்பு, மருந்து கிடைப்பதில் சிக்கல் மற்றும் போதிய பயிற்சி இல்லாமை போன்ற தடைகள் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். சிகிச்சையில் ஏற்படும் தாமதத்தால் நோயாளிகளின் உடல் உறுப்புகள் துண்டிக்கப்படுதல் , அறுவை சிகிச்சைகள் அல்லது வாழ்நாள் முழுவதுமான உடல்நலப் பாதிப்புகள் போன்ற கடுமையான சிக்கல்கள் ஏற்படுவதாகப் பாதிக்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பாம்புக்கடியால் ஏற்படும் அதிகப்படியான உயிரிழப்புகள் காரணமாக, 2017ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு (WHO) இதை "மிக உயர்ந்த முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய, புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்" என்று அதிகாரப்பூர்வமாகப் பட்டியலிட்டது. உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ள தகவல்படி, உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 54 லட்சம் பேர் பாம்புக்கடிக்கு ஆளாகிறார்கள்; 1,00,000-க்கும் அதிகமானோர் இதனால் உயிரிழக்கின்றனர். குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உள்ள ஏழை கிராமப்புற மக்களே பாம்புக்கடியால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது. பட மூலாதாரம்,Strike Out Snakebite படக்குறிப்பு,மல்பெரி இலைகளைப் பறித்துக் கொண்டிருந்தபோது பாம்பு கடித்ததால் தேவேந்திராவின் காலை துண்டிக்க வேண்டியிருந்தது. மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவில் பாம்புக்கடியால் அதிகப்படியான உயிர் இழப்புகளும் காயங்களும் பதிவாகின்றன என்று மத்திய சத்தீஸ்கர் மாநில ஜிஎஸ்டி உறுப்பினரும் பயிற்சியாளருமான மருத்துவர் யோகேஷ் ஜெயின் கூறுகிறார். குறிப்பாகப் பண்ணைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் ஏழை பழங்குடி மக்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிடுகிறார். 2030-ஆம் ஆண்டிற்குள் பாம்புக்கடி இறப்புகளைப் பாதியாகக் குறைக்கும் நோக்கத்தில், 2024-ஆம் ஆண்டில் இந்தியா பாம்புக்கடி தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கான தேசிய செயல் திட்டத்தை (NAPSE) அறிமுகப்படுத்தியது. இது கண்காணிப்பு, விஷமுறிவு மருந்து கையிருப்பு, ஆராய்ச்சி, மேம்பட்ட மருத்துவத் திறன் மற்றும் பொது விழிப்புணர்வு பிரசாரங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. நிபுணர்கள் இது ஒரு சரியான முயற்சி என்று ஒப்புக்கொண்டாலும், அது சரியாக செயல்படுத்தப்படுவது இல்லை. "இந்தியாவில் பாம்புக்கடி என்பது ஏழைகளின் பிரச்னையாகவே பார்க்கப்படுகிறது. அதனால் தான் இந்த முற்றிலும் தவிர்க்கக்கூடிய மரணங்களுக்கு எதிராகப் போதிய எதிர்ப்போ அல்லது நடவடிக்கையோ இல்லை. பாம்புக்கடிக்கு சிகிச்சை அளிப்பதைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நொடியும் முக்கியமானது"என்கிறார் ஜெயின். பாம்பு விஷம் சில நிமிடங்களில் ரத்த ஓட்டத்தில் கலந்து, பாம்பு வகையை பொறுத்து நரம்புகள், செல்கள் அல்லது சுற்றோட்ட மண்டலத்தைத் தாக்குகிறது. மருந்து செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் சுவாசக் கோளாறு, பக்கவாதம், திசு பாதிப்பு அல்லது உறுப்பு செயலிழப்பு ஏற்படலாம் என்று அவர் விளக்குகிறார். கிராமப்புற இந்தியாவில் மோசமான சாலைகள், மருத்துவமனைகள் செல்வதற்கான தூரம் மற்றும் ஆம்புலன்ஸ் வசதி இல்லாமை போன்றவற்றால் மருத்துவமனையில் சேர்ப்பதில் தாமதம் ஏற்படுவது பொதுவான ஒன்றாக இருக்கிறது. கடந்த செப்டம்பரில், குஜராத்தில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் ஒரு கர்ப்பிணி இறந்ததாகக் கூறப்படுகிறது. அவரது கிராமத்துக்குப் போதுமான வாகன வசதி இல்லாததால் குடும்பத்தினர் அவரை 5 கி.மீ (3 மைல்) தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது. சில மாநிலங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் விஷமுறிவு மருந்துகளை கையிருப்பு வைத்து நிலைமையை மேம்படுத்த முயற்சிப்பதாக ஜெயின் கூறுகிறார். இருப்பினும், அதை சரியாக நிர்வகிப்பது ஒரு பெரிய சவாலாகவே உள்ளது. பல சுகாதாரப் பணியாளர்களுக்குப் போதிய பயிற்சி இல்லை மற்றும் நோயாளிகளுக்குச் செலுத்தப்படும் மருந்து எதிர்வினைகளை உண்டாக்குமோ என்ற பயம் அவர்களுக்கு இருக்கிறது. "விஷமுறிவு மருந்து சலைன் திரவத்துடன் கலந்து ஒரு மணி நேரம் நரம்பு வழியாகச் செலுத்தப்பட வேண்டும். ஆனால் பல மையங்களில் பக்கவிளைவுகளைக் கையாளும் வசதிகள் இல்லை" என்று ஜெயின் கூறுகிறார். மற்றொரு பிரச்னை என்னவென்றால், கிராமப்புறங்களில் உள்ள பலர் இன்னும் நாட்டு வைத்தியம் அல்லது உள்ளூர் மருத்துவ முறைகளை நம்பியிருக்கிறார்கள். நிலைமை மோசமான பிறகு மட்டுமே அவர்கள் மருத்துவமனைக்குச் செல்வதால் , அது ஆபத்தில் முடிகிறது என்பதையும் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,The Liana Trust படக்குறிப்பு,ஜெர்ரி மார்ட்டினின் தி லியானா டிரஸ்ட், பிராந்திய பாம்பு இனங்களின் கடிக்கு மாற்று மருந்துகளை ஆராய்ச்சி செய்து வருகிறது. கர்நாடகாவில் மனித-பாம்பு மோதல்களைக் குறைக்கப் பணியாற்றும் 'தி லியானா டிரஸ்ட்'அமைப்பின் இணை நிறுவனர் ஜெர்ரி மார்ட்டின், உயர்தர விஷமுறிவு மருந்து கிடைப்பதில் உள்ள சிக்கலே மற்றொரு பெரிய தடையாக இருப்பதாகக் கூறுகிறார். தற்போது இந்தியாவில் உள்ள விஷமுறிவு மருந்து, இந்தியாவில் பாம்புக்கடியால் ஏற்படும் அதிக உயிரிழப்புகளுக்குக் காரணமான "பிக் ஃபோர்" என்று அழைக்கப்படும் நான்கு நச்சுப் பாம்புகளுக்கு எதிராக மட்டுமே செயல்படுகிறது. அவை, நாகம், கட்டுவிரியன், கண்ணாடி விரியன் மற்றும் சுருட்டை விரியன் ஆகும். இந்தியாவில் பெரும்பாலான பாம்புக்கடிகளுக்கு இவை காரணமாக இருப்பதாக நம்பப்படுகிறது. இந்தப் பாம்புகளின் விஷத்தை குதிரைகளுக்கு செலுத்தி, அவற்றின் உடலில் உருவாகும் ஆன்டிபாடிகளைப் பிரித்தெடுத்து மனிதர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுவதாக இந்த விஷமுறிவு மருந்து தயாரிக்கும் முறை பற்றி மார்ட்டின் விளக்குகிறார். "ஆனால், இந்தியாவில் இன்னும் பல்வேறு வகையான விஷப் பாம்புகள் உள்ளன, அவற்றுக்கான பிரத்யேக விஷமுறிவு மருந்துகள் நம்மிடம் இல்லை." இமாச்சல பிரதேசத்தில் காணப்படும் க்ரீன் பிட் வைப்பர் (Green pit viper), தென்னிந்தியாவில் உள்ள மலபார் பிட் வைப்பர் (Malabar pit viper), ஹம்ப் நோஸ்ட் பிட் வைப்பர் (hump-nosed pit viper) மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பல்வேறு இனங்கள் இதில் அடங்கும். கடந்த ஆண்டு ஜோத்பூர் எய்ம்ஸ் (AIIMS) நடத்திய ஆய்வு இந்த சிக்கலை உறுதிப்படுத்தியது. சுருட்டை விரியன் பாம்புக்கடிக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் விஷ முறிவு மருந்து 105 பாம்புக்கடி நோயாளிகளுக்கு (கடித்த பாம்புகளின் இனங்கள் தெரியவில்லை) வழங்கப்பட்ட போது, மூன்றில் இரண்டு பங்கு பேருக்குச் சிகிச்சைக்கு எதிர்பார்த்த பலனை தரவில்லை என்று கண்டறியப்பட்டது. "மேற்கு இந்தியாவில் அந்தந்தப் பகுதிகளுக்கேற்ற பிரத்யேக விஷமுறிவு மருந்துகள் உடனடியாகத் தேவைப்படுவதாக" அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக, 'தி லியானா டிரஸ்ட்' இந்த நான்கு நச்சுப் பாம்புகள் தவிர பிற பாம்புகளின் விஷம் குறித்து ஆய்வு செய்து, அவற்றுக்கான மாற்று மருந்துகளை உருவாக்கி வருகிறது. ஆனால், இது அதிக உழைப்பும் காலமும் தேவைப்படும் செயல் என்பதால் முன்னேற்றம் மெதுவாகவே உள்ளது என மார்ட்டின் கூறுகிறார். கர்நாடக அரசால் 2024ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உத்தரவை பிற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். அந்த உத்தரவில் பாம்புக்கடியை "தெரியப்படுத்தப்பட வேண்டிய நோய்" என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பாம்புக்கடி சம்பவங்களை மருத்துவ பணியாளர்கள் கட்டாயமாக அரசு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதையும், இதனால் பாம்புக்கடி சம்பவங்கள் குறைவாகப் பதிவு செய்யப்படுவதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. "அரசியல் விருப்பம் எங்கு முடிகிறதோ, அங்குதான் பாம்புக்கடி மரணங்கள் தொடங்குகின்றன" என்று மருத்துவர் ஜெயின் கூறுகிறார். "ஏழை மக்கள் மோசமான சுகாதார கட்டமைப்பைப் பெறக்கூடாது என்பதில் அரசாங்கங்கள் உறுதியாக இருக்க வேண்டும். அவர்கள் சிறந்ததைப் பெற தகுதியானவர்கள்" என்றும் அவர் வலியுறுத்துகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgqede7wwxlo
  6. 49 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு Feb 2, 2026 - 06:50 PM 78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 49 கைதிகளுக்கு விசேட ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 34வது உறுப்புரையின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு, அவர்கள் பூர்த்தி செய்த ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு வாரம் என்ற அடிப்படையில் மன்னிப்பு வழங்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், 75,000 ரூபாவுக்கும் குறைந்த அபராதத் தொகையை செலுத்தத் தவறியமைக்காக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் எஞ்சிய தண்டனை காலமும் ரத்து செய்யப்படவுள்ளது. https://adaderanatamil.lk/news/cml57706i04r5o29nh8nh67xg
  7. இந்தியப் பெருங்கடலில் பாகிஸ்தான் கடற்படையின் அதிரடி மீட்பு நடவடிக்கை: இலங்கை பிரஜை மீட்பு 02 Feb, 2026 | 04:34 PM மனிதாபிமான அடிப்படையிலும், கடலில் ஆபத்தில் இருப்பவர்களைக் காக்கும் கடமையுணர்வோடும் பாகிஸ்தான் கடற்படை இந்தியப் பெருங்கடலில் ஒரு மிகப்பெரிய மீட்புப் பணியைச் செய்து முடித்துள்ளது. பாகிஸ்தான் கரையில் இருந்து சுமார் 1,500 கி.மீ (800 கடல் மைல்) தொலைவில், நடுக் கடலில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இலங்கை பிரஜை ஒருவரை பாகிஸ்தான் கடற்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். சர்வதேச அளவில் விடுக்கப்பட்ட அவசர அழைப்பை ஏற்று, மிக விரைவாகச் செயல்பட்டு இந்த நீண்ட தூர மருத்துவ மீட்புப் பணியை அவர்கள் வெற்றிகரமாக முடித்துள்ளனர். இந்தச் செயல் பாகிஸ்தான் கடற்படையின் திறமையை உலகிற்குக் காட்டுவதுடன், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே உள்ள ஆழமான சகோதரத்துவ உறவையும், ஒருவருக்கொருவர் உதவும் மனப்பான்மையையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த மீட்புப் பணிக்குப் பிறகு, மீட்கப்பட்ட இலங்கை பிரஜையின் குடும்பத்தினர் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்குச் சென்று பாகிஸ்தான் அரசுக்கும், கடற்படைக்கும் நேரில் நன்றி தெரிவித்தனர். சரியான நேரத்தில் கடற்படையினர் எடுத்த முடிவால்தான் தங்கள் உறவினரின் உயிர் பிழைத்தது என்று அவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர். அவர்களை வரவேற்ற இலங்கைக்கான பாகிஸ்தான் தூதர், "பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையிலான நட்பு வெறும் அரசியல் சார்ந்தது அல்ல; இது மனிதாபிமானத்தின் அடிப்படையில் உருவானது. கடல் பாதுகாப்பு முதல் மற்ற அனைத்து உதவிகள் வரை, இலங்கை சகோதரர்களுக்குத் தோள் கொடுக்க பாகிஸ்தான் எப்போதும் தயாராக இருக்கும்," என்று உறுதியளித்தார். இந்தச் சம்பவம், இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆபத்து காலங்களில் பாகிஸ்தான் கடற்படை ஒரு நம்பகமான நண்பனாக இருப்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. https://www.virakesari.lk/article/237620
  8. ராணுவத்திற்கு ரூ.7.8 லட்சம் கோடி ஒதுக்கீடு: சீனா, பாகிஸ்தானுடன் ஒப்பிடுகையில் இது போதுமானதா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வரும் நிதியாண்டில் பாதுகாப்பு பட்ஜெட் ரூ. 7.84 லட்சம் கோடியாக உள்ளது. கட்டுரை தகவல் முகமது ஷாஹித் பிபிசி செய்தியாளர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை மக்களவையில் 2026-27 நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அதன்படி, பாதுகாப்பு அமைச்சகத்தின் பட்ஜெட் சுமார் 15 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பாதுகாப்பு பட்ஜெட் ரூ.6,81,210 கோடியாக இருந்தது, அதே சமயம் வரும் பட்ஜெட்டில் இது ரூ.7,84,678 கோடியாக உள்ளது. பாதுகாப்பு அமைச்சகம் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்ட தகவல்படி, வரவிருக்கும் பட்ஜெட் உயர்வின் நோக்கம் நவீனமயமாக்கல், புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிப்பு மற்றும் சிறந்த வளப் பயன்பாட்டிற்காக கொள்முதல் முறையை எளிதாக்குவதில் சிறப்பு கவனம் செலுத்துவதாகும். பாதுகாப்பு பட்ஜெட்டில் எந்தப் பிரிவில் எவ்வளவு தொகை? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மூலதனச் செலவினத்திற்கான ஒதுக்கீடு கணிசமான உயர்த்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பட்ஜெட்டின் கீழ் வரும் 'மூலதனச் செலவினம்' (Capital Outlay) அதிகபட்சமாக 21.84 சதவீத உயர்வு கண்டுள்ளது. முன்னதாக இது ரூ.1.80 லட்சம் கோடியாக இருந்தது, தற்போது அது ரூ.2.19 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களின் கொள்முதல் இந்த மூலதனச் செலவின ஒதுக்கீட்டிலிருந்தே செய்யப்படுகிறது. இது தவிர, பாதுகாப்பு சேவைகள் (வருவாய்) பிரிவில் 17.24 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக இது ரூ.3.11 லட்சம் கோடியாக இருந்தது, தற்போது ரூ.3.65 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு சேவைகள் (வருவாய்) பிரிவில்தான் அன்றாட செயல்பாட்டுச் செலவுகள் பதிவு செய்யப்படுகின்றன. இதன் கீழ் பராமரிப்பு, எரிபொருள், பழுதுபார்ப்பு மற்றும் ஊதியம் போன்ற செலவுகள் அடங்கும். ஓய்வூதியம் 6.53 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது, இது தற்போது 1.71 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பாதுகாப்பு பட்ஜெட்டில் இந்த 15 சதவீத உயர்வு, கடந்த ஆண்டு மே மாதம் அண்டை நாடான பாகிஸ்தானுடன் இந்தியாவிற்கு ராணுவ மோதல் ஏற்பட்ட ஒரு கால கட்டத்தில் வந்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் இருந்த பயங்கரவாத முகாம்களை தாக்கியதாக இந்தியா கூறியது. இந்த நடவடிக்கைக்கு இந்தியா 'ஆபரேஷன் சிந்துார்' என்று பெயரிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ராணுவ மோதல் தொடங்கியது. பாகிஸ்தான் ராணுவத்தின் டிஜிஎம்ஓ விடுத்த போர் நிறுத்தக் கோரிக்கையைத் தொடர்ந்து ராணுவ மோதல்கள் நின்றதாக இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது. அதன் பிறகு இந்தியா தனது பாதுகாப்பு பட்ஜெட்டை உயர்த்தக்கூடும் என்று ஊகிக்கப்பட்டது. இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருப்பதை வரவேற்றுள்ளார். "பட்ஜெட் இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களை அதிகரிக்கும். பாதுகாப்புத் துறைக்கு 7.85 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ததற்காகப் பிரதமர் மோதிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார். பட்ஜெட்டில் 15 சதவீத உயர்வு அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்கிறதா? என்கிற கேள்விக்குப் பாதுகாப்பு ஆய்வாளர் ராகுல் பேடி, புதிய பாதுகாப்பு பட்ஜெட்டை 'போதுமானதாக இல்லை' என்று கூறுகிறார். "பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. இந்த வகையில் பார்த்தால், 15 சதவீத உயர்வு என்பது பூஜ்யமாகிவிடும். இதன் காரணமாக இதை ஒரு 'மாற்றமில்லாத பட்ஜெட்' என்றே அழைக்க வேண்டும்" என்கிறார். ராணுவத்தை நவீனப்படுத்த இது போதுமா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ராணுவத்தின் நவீனமயமாக்கல் குறித்து ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் ஏற்கனவே கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்தியா - பாகிஸ்தான் ராணுவ மோதலின் போது, டிரோன்கள் மற்றும் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட ஒரு மாறுபட்ட போர் முறை காணப்பட்டது. சிடிஎஸ் ஜெனரல் அனில் சவுகான் கடந்த மாதம் ஒரு நிகழ்ச்சியில் கூறுகையில், இந்திய ஆயுதப் படைகள் 'நெட்-சென்ட்ரிக்' (Net-centric) போரிலிருந்து 'டேட்டா-சென்ட்ரிக்' (Data-centric) போரை நோக்கி நகர்ந்து வருவதாகவும். இதில் எதிர்கால பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள செயற்கை நுண்ணறிவு (AI) ஒரு முக்கிய விஷயமாக உருவெடுத்து வருவதாகவும் தெரிவித்தார். மேம்பட்ட சென்சார் மற்றும் ஏஐ தொழில்நுட்பம் போர்க்களத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதால், எதிரிகளுக்கு அதிர்ச்சி கொடுப்பது கடினமாகி வருவதாகவும், வெற்றிக்குத் தொழில்நுட்ப மேன்மை அவசியம் என்றும் அவர் கூறினார். நவீன தொழில்நுட்பம் இருப்பது மட்டும் போதாது, ராணுவத் தலைமை அறிவுப்பூர்வமாக தயாராகவும் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அவர் இதேபோன்ற கருத்தை முன்பும் கூறியிருக்கிறார். இந்த பாதுகாப்பு பட்ஜெட் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறதா? இந்தக் கேள்விக்கு ராகுல் பேடி பதிலளிக்கையில், இந்தியா 114 புதிய போர் விமானங்களையும் ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களையும் வாங்குவதற்கான ஒப்பந்தத்தைச் செய்ய வேண்டியுள்ளது என்றார். "ஜெர்மனியுடன் ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான 10 பில்லியன் டாலர் ஒப்பந்தம் உள்ளது. மேலும் 114 புதிய போர் விமானங்கள் வாங்கப்படும், இந்த 30-35 பில்லியன் டாலர் ஒப்பந்தம் யாருடன் செய்யப்படும் என்பது இன்னும் முடிவாகவில்லை. இதற்கான பணம் ஒரே நேரத்தில் வழங்கப்படாது, ஆனால் அதற்கான பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் பேரங்கள் நடத்தப்பட வேண்டும்." என்கிறார். "ஆபரேஷன் சிந்துாருக்குப் பிறகு, ராணுவத் தளபதி, சிடிஎஸ், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பிரதமர் ஆகியோர் ராணுவம் தொழில்நுட்ப ரீதியாக நவீனப்படுத்தப்படும் என்று கூறி வருகின்றனர். இதற்குப் பணம் தேவைப்படுகிறது, பட்ஜெட்டில் 15 சதவீத உயர்வைக் கொண்டு இதைச் சாதிப்பது கடினமாகத் தெரிகிறது." ஆங்கில இதழான 'தி வீக்' இதழின் மூத்த உதவி ஆசிரியர் சஞ்சீவ் குமார் பருவா அந்த இதழின் யூடியூப் சானலில் கூறுகையில், மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு அமைச்சகமே மிகப்பெரிய நிதி ஒதுக்கீட்டை பெறும் அமைச்சகமாகும். மொத்த பட்ஜெட்டில் இதன் பங்கு 14.68 சதவீதமாகும், இது கடந்த ஆண்டு 13.45 சதவீதமாக இருந்தது என்று கூறினார். "பாதுகாப்பு பட்ஜெட் குறித்த ஆலோசனைகள் ஒருபோதும் எளிதானவை அல்ல. பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட வேண்டிய நிதியைப் பற்றி விவாதிக்கவும் கணக்கிடவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமர்ந்தபோது, பல காரணிகள் அவரை ஆழமாகச் சிந்திக்கத் தூண்டியிருக்க வேண்டும். உதாரணமாக, 'ஆபரேஷன் சிந்தூர்' மற்றும் அதற்குப் பிந்தைய நிலைமை, சீனாவின் வேகமான தொழில்நுட்ப மற்றும் ராணுவ முன்னேற்றம், இந்தியாவின் தற்சார்பு முன்னெடுப்புகள் மற்றும் அதிநவீன ராணுவ உபகரணங்களின் உடனடித் தேவை போன்றவை." "2026-27-க்கான இந்த ஒதுக்கீடு கடந்த ஆண்டின் பாதுகாப்பு பட்ஜெட்டான ரூ. 6.81 லட்சம் கோடியை விட 15.27% அதிகமாகும். பாதுகாப்புச் செலவினங்கள் தொடர்ந்து அதிகரிக்கும் என்பதையும், ராணுவ நவீனமயமாக்கலின் வேகம் நீடிப்பது மட்டுமல்லாமல், மேலும் துரிதப்படுத்தப்படும் என்பதையும் இது குறிக்கிறது." நவீனமயமாக்கலுக்குப் போர் விமானங்கள் அல்லது நீர்மூழ்கிக் கப்பல்கள் மட்டும் போதுமா? இதற்கு ராகுல் பேடி கூறுகையில், "இன்றைய காலத்தில் ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களுடன் டிரோன்கள் மற்றும் சைபர் போரின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. தற்போது நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களுக்குத் தட்டுப்பாடு உள்ளது" என்கிறார். "இந்திய விமானப்படையில் 42 படையணிகளுக்கு (Squadron) அனுமதி உள்ளது, ஆனால் இன்று 29-30 படையணிகள் மட்டுமே உள்ளன. ஒரு படையணியில் சுமார் 20 விமானங்கள் இருக்கும், இதன் மூலம் 250-300 விமானங்கள் தேவை என்பதைப் புரிந்துகொள்ளலாம். நீர்மூழ்கிக் கப்பல்கள் பழையதாகிவிட்டன, அவற்றை மாற்ற வேண்டும். ஹெலிகாப்டர்கள் மற்றும் பயிற்சி விமானங்கள் பழையதாகிவிட்டன, அவற்றின் இடத்திற்குப் புதியவை வரவேண்டும்." "நாம் இந்த வழியில் பார்த்தால், பல தேவைகள் உள்ளன மற்றும் இந்த அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய, பட்ஜெட்டில் பணம் தேவைப்படுகிறது." சீனா, பாகிஸ்தானுடன் ஒப்பிடுகையில் இந்திய பாதுகாப்பு பட்ஜெட் எங்கே உள்ளது? பட மூலாதாரம்,AFP கடந்த ஆண்டு மே மாதம் இந்தியாவுடனான மோதலுக்குப் பிறகு, ஜூன் மாதம் பாகிஸ்தான் தனது 2025-26 நிதியாண்டுக்கான பாதுகாப்பு பட்ஜெட்டை 20.2 சதவீதம் உயர்த்தியது. பாகிஸ்தானின் பாதுகாப்பு பட்ஜெட் 2122 பில்லியன் பாகிஸ்தான் ரூபாயிலிருந்து 2550 பில்லியனாக உயர்த்தப்பட்டது. இது பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 1.97 சதவீதமாகும். சீனாவைப் பொறுத்தவரை, 2024-இல் பாதுகாப்பு பட்ஜெட் அதன் 18.74 டிரில்லியன் டாலர் ஜிடிபியில் 1.7 சதவீதமாக இருந்தது. வங்கதேசத்தின் பாதுகாப்பு பட்ஜெட் 2024-ல் அதன் 450 பில்லியன் டாலர் ஜிடிபியில் வெறும் 0.9 சதவீதமாக இருந்தது. மறுபுறம், இந்தியாவின் மொத்த பாதுகாப்பு பட்ஜெட் அதன் மொத்த ஜிடிபியான 4 டிரில்லியன் டாலரில் 1.9 சதவீதமாகும். இந்தத் தரவுகளின்படி பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தின் பாதுகாப்பு பட்ஜெட் இந்தியாவை விட மிகச் சிறியது. ஆனால் இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட் சீனாவை விட மிகச் சிறியது. மூன்று நாடுகளின் பட்ஜெட் ஒப்பீடு குறித்து ராகுல் பேடி கூறுகையில், "சீனாவின் பட்ஜெட் நம்மை விடப் பல மடங்கு அதிகமாக உள்ளது. பாகிஸ்தானின் பட்ஜெட்டைக் குறைத்து மதிப்பிடக் கூடாது, ஏனெனில் பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட இந்தியாவின் பல அண்டை நாடுகளுக்கும் சீனா உதவுகிறது. எனவே ஒப்பீடு செய்ய முடியாது" என்கிறார். இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட் அதன் தேவைகளுக்கு ஏற்ப எவ்வளவு இருக்க வேண்டும்? ராகுல் பேடி கூறுகையில், பாதுகாப்பு பட்ஜெட் மொத்த ஜிடிபியில் 3 சதவீதமாக இல்லாதவரை தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சிக்கல்கள் இருக்கும் என்கிறார். "1962-இல் சீனாவுடன் போர் ஏற்பட்டதிலிருந்து இன்று வரை மொத்த பாதுகாப்பு பட்ஜெட் ஜிடிபியின் இதே புள்ளிவிவரத்தைச் சுற்றியே உள்ளது. நமது நாட்டின் ஜிடிபி பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் பாதுகாப்பு பட்ஜெட் 2 சதவீதத்தை ஒட்டியே உள்ளது. ராணுவத்தின் தேவை எப்போதும் மொத்த ஜிடிபியில் 3 சதவீதமாகவே இருந்து வருகிறது." "நாம் ராணுவத்தை விரைவில் நவீனப்படுத்த வேண்டுமானால், பாதுகாப்பு பட்ஜெட்டை மொத்த ஜிடிபியில் 3 சதவீதமாக தொடர்ந்து வைத்திருக்க வேண்டும்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crml9knp80ro
  9. வெனிசுவேலாவுக்குச் சென்றார் அமெரிக்க தூதுவர் லாரா டோகு Published By: Digital Desk 3 02 Feb, 2026 | 08:46 AM வெனிசுவேலாவில் 07 ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க தூதரகம் திறக்கப்படுவதாக் அறிவிக்கப்பட்டுள்து. இதனை அடுத்து அமெரிக்க தூதுவர் லாரா டோகு வெனிசுவேலாவுக்கு சென்றார். அவர் வெனிசுவேலாவில் அமெரிக்க தூதரகத்தை திறப்பதற்காக அங்கு சென்றடைந்தார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில், நானும் எனது குழுவும் பணியாற்றத் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார். கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்காவும் வெனிசுலாவும் தூதரக உறவுகளைத் துண்டித்து, தங்கள் தூதரகங்களை மூடின என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/237593
  10. உலக சதுப்பு நில தினம் இன்று! Feb 2, 2026 - 07:17 AM உலக சதுப்பு நில தினம் இன்று ( 02) இன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி 'உலக சதுப்பு நில தினமாக' ராம்சார் சதுப்பு நில உடன்படிக்கையின் பொதுச் செயலகம் அறிவித்தது. பின்னர், இது ஐக்கிய நாடுகள் சபையினாலும் அங்கீகரிக்கப்பட்டது. 1971 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி ஈரானின் ரம்சார் (Ramsar) நகரில் சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை எட்டப்பட்டது. இலங்கை இந்த உடன்படிக்கையில் 1991 ஆம் ஆண்டில் கையெழுத்திட்டது. அரிய வகை தாவரங்கள் மற்றும் விலங்குகளின் புகலிடமாக இது விளங்குகின்றது. அத்துடன் காலநிலை மாற்றங்களுக்கு முகங்கொடுக்கும் ஆற்றலை வழங்குவதுடன், நீரைச் சேமித்து வைத்து வெள்ள அபாயத்தைக் குறைப்பதுடன், சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் தடுக்கின்றது. மேலும் மனிதர்களின் நல்வாழ்விற்கு சதுப்பு நிலங்களின் பாதுகாப்பு அத்தியாவசியமானதாக கருதப்படுகின்றது. இந்நிலையில் 2026 ஆம் ஆண்டு உலக சதுப்பு நில தினத்தின் கருப்பொருளாக "சதுப்பு நிலங்களுக்காகச் செயற்படுங்கள், இயற்கைச் சூழலுக்காகச் செயற்படுங்கள்" என அறிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cml4ifvgz04puo29ndvszflta
  11. “கரிநாள்” : வடக்கு, கிழக்கில் பேரணி ஏற்பாடு ; யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு 02 Feb, 2026 | 03:56 PM சுதந்திர தினத்தை “கரிநாள்” என பிரகடனப்படுத்தி வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணியில் அனைத்து தரப்புக்களும் பங்கேற்று வலுச்சேர்க்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் ஞாயிற்றுக்கிழமை (1) நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர், முகாமைத்துவ மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியத்தினர் இவ்விதமாக அழைப்பு விடுத்தனர். மேலும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகளும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு போராட்டத்திற்கு ஆதரவளிக்க அழைப்பு விடுத்தனர். https://www.virakesari.lk/article/237614
  12. ‘கிவுல் ஓயா’ நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் உறுதிமொழிகளுக்கு முரண் – வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு Published By: Vishnu 02 Feb, 2026 | 04:41 AM கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் தொடர்ச்சியாக 'கிவுல் ஓயா' நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் அமைகிறது. நாட்டின் அபிவிருத்தி' என்ற பெயரில் வட மாகாணத்தில் குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் 'கிவுல் ஓயா' நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் உறுதிமொழி களுக்கு முரணானதாக அமைந்துள்ளது என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது. கிவுல் ஓயா நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (01) முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கருத்தரங்கில் கிழக்கு மாகாண ஓய்வு பெற்ற முன்னாள் காணி ஆணையாளர் கதிர்காமத்தம்பி குருநாதன் வளவாளராக கலந்துகொண்டதுடன், வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் ஜாட்சன் பிகிராடோ ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இருந்து மக்கள் கலந்து கொண்டதோடு, வவுனியா வடக்கு பிரதேச சபை உப தவிசாளர், வவுனியா வடக்கு, கரைதுறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள் கிவுல் ஓயா திட்டத்தால் பாதிக்கப்படும் மக்கள், சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். குறித்த விழிப்புணர்வு கருத்தமர்வு முடிவடைந்த நிலையில்,வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு வின் ஊடக அறிக்கை வெளியிடப்பட்டது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,, கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் தொடர்ச்சியாக 'கிவுல் ஓயா' நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் இலங்கையின் தற்போதைய அரசாங்கம், சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பு, இயற்கை வளங்களின் பாதுகாப்பு மற்றும் சமத்துவமான அபிவிருத்தி என்பவற்றை தனது கொள்கை உறுதி மொழிகளாக முன்வைத்து ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. இருப்பினும், 'நாட்டின் அபிவிருத்தி' என்ற பெயரில் வட மாகாணத்தில், குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் 'கிவுல் ஓயா' நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம்,மேற்கூறிய உறுதிமொழி களுக்கு முரணானதாக அமைந்துள்ளமை குறித்து ஆழ்ந்த கவலையையும் கண்டனத்தையும் தெரிவிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். நாங்கள் இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் எந்தவொரு அபிவிருத்தி திட்டங்களுக்கும் எதிரானவர்கள் அல்ல. அபிவிருத்தி என்பது நாட்டின் அனைத்து மக்களுக்கும் சமமாகப் பயனளிக்க வேண்டிய ஒரு அடிப்படை அரசுப் பொறுப்பாகும். இருப்பினும், அபிவிருத்தி என்ற போர்வையில் அரசின் காலனித்துவ நோக்கங்களை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில், காணி இல்லாத தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய சூழலில், இம்மக்களை அபிவிருத்தி திட்டங்களில் முன்னுரிமையுடன் இணைத்து, அவர்களின் வாழ்வாதார நிலைகளை உயர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய அரசாங்கம், அதனை விடுத்து வெளி பிரதேசங்களில் இருந்து மக்களை கொண்டு வந்து இப்பிரதேசங்களில் குடியேற்றும் செயற்பாடுகளை முன்னெடுப்பது கவலைக்குரியதாக உள்ளது. இவ்வாறான குடியேற்றங்கள் தேவையற்ற அரசியல், கலாச்சார மற்றும் சமூக தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். மகாவலி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள திட்ட அறிக்கையின் படி, 'கிவுல் ஓயா' நீர்த்தேக்கம் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில், தமிழர்களின் பூர்வீக கிராமமான வெடிவைத்த கல்லு கிராமத்திற்கு அண்மையாக, வடகிழக்கு திசையில் அமைக்கப்படவுள்ளது. சுமார் 37 மீற்றர் (121.37 அடிகள்) உயரமுடைய அணையின் மூலம் உருவாக்கப் படவுள்ள இந்த நீர்த்தேக்கம், பரந்த நிலப்பரப்பை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த நீர் தேக்கத்திற்கான எல்லைகள் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் வெடிவைத்த மகாவலி அதிகார சபையினால் எல்லைக்கல்லிடப்பட்டு காட்டப்பட்டுள்ளன. இதன்விளைவாக, கல்லு,ஈச்சங்குளம்,கூழாங்குளம்,காட்டு பூவரசங்குளம்,காஞ்சூர மோட்டை உள்ளிட்ட பாரம்பரிய கிராமங்களின் 400 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய மற்றும்குடியிருப்பு நிலங்கள் முழுமையாக நீரில் மூழ்கும் அபாய நிலை உருவாகியுள்ளது. பெரியமேலும், 1921 ஆம் ஆண்டு வர்த்தமான அறிவித்தலின் மூலம் 'ஒதுக்குக் காடாக' அறிவிக்கப்பட்ட கட்டிக்குளம் ஒதுக்குக்காடு, சுமார் 4,000 ஏக்கர் பரப்பளவைக் கொண்டதாகும். இந்தப் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியும், கிவுல் ஓயா நீர்த்தேக்கத்தின் கீழ் முழுமையாக அமிழ்ந்து போகும் நிலை உருவாகியுள்ளமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில் தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது. அதேபோல், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அடையாளப்படுத்தப்பட்ட 47 தொல்லியல் பிரதேசங்கள், கிவுல் ஓயா நீர்த்தேக்கத்தின் நீரில் மூழ்க போவதாக மகாவலி அதிகார சபையின் சொந்த திட்ட ஆவணங்களின் மூலம் தெரிய வருகிறது. இது, நாட்டின் மரபுரிமை மற்றும் தொல்லியல் பாதுகாப்பு கொள்கைகள் ஒரே மாதிரியான முறையில் நடைமுறைப் படுத்தப்படுகிறதா? என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது. இத்தகைய பின்னணியில்,இந்த நீர்த்தேக்கத்திற்கு அண்மையில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலை பிரதேசத்தில் வழிபாடுகள் மேற்கொள்ளப் படுவதை 'தொல்லியல் பாதுகாப்பு' என்ற பெயரில் கட்டுப்படுத்தும் நிலையில், அதே சமயம் பல தொல்லியல் பிரதேசங்கள் முழுமையாக அழிவடைய அனுமதிக்கப்படுவது தொடர்பில் தெளிவான, வெளிப்படையான விளக்கங்கள் அரச நிறுவனங்களால் வழங்கப்பட வேண்டும். மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள கொக்குத்தொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் தெற்கு மற்றும் கருநாட்டுக்கேணி ஆகிய கிராம அலுவலர் பிரிவு களுக்குரிய ஆமையன் குளம், உந்தராயன் குளம், அடையகர்த்தான், படுகாட்டுக் குளம், சாம்பான் குளம் போன்ற பகுதிகளில் உள்ள சுமார் 2,000 ஏக்கர் வளமான விவசாய நிலங்கள் ஏற்கனவே அபகரிக்கப்பட்டுள்ளமை பதிவுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனுடன், கொக்குத்தொடுவாய் சூரிய நாற்றுப் பகுதியில், தமிழ் மக்களுக்கு மத்திய வகுப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 1,990 ஏக்கர் காணிகள், தற்போது கிவுல் ஓயா திட்டத்தில் உள்வாங்கப்பட்டு திட்ட வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. இது, இப்பிரதேசங்களில் இனப்பரம்பல் அமைப்பையும், சமூகச் சமநிலையையும் மாற்றக்கூடிய ஒரு நவீன காலனித்துவ செயல்முறையாக பார்க்கப்படுகிறது. எனவே, அரசு உடனடியாக இத்திட்டத்தின் சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பண்பாட்டு தாக்கங்களை மீளாய்வு செய்யவும், உள்ளூர், காணி இல்லாத தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை அபிவிருத்தி திட்டங்களில் முன்னுரிமை உடன் இணைக்கவும், வெளிப்பிரதேச குடியேற்றங்களை தவிர்க்கவும், உள்ளூர் சமூகங்களின் காணி, வாழ்வாதாரம் மற்றும் அடையாளங்களை பாதுகாக்கவும் தெளிவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இலங்கையில் நிலையான அபிவிருத்தி, சமாதானம் மற்றும் நல்லிணக்கம் உருவாக வேண்டுமானால், அது உள்ளூர் மக்களின் உரிமைகள், மரியாதை மற்றும் வரலாற்றுப் பிணைப்புகளை மதிக்கும் அணுகுமுறையின் மூலம் சாத்தியமாகும் என்பதை அரசிற்கு தெளிவாக சுட்டிக்காட்டுகிறோம் .என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/237583
  13. சர்வதேச கடற்பரப்பில் இலங்கை மீனவர்கள் மீது இந்திய கடற்படை தாக்குதல்; 4 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி Published By: Vishnu 02 Feb, 2026 | 04:46 AM ( செ.சுபதர்ஷனி) சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் நிறைவு செய்ததன் பின்னர் மீண்டும் கரைக்கு திரும்பிக்கொண்டிருந்த வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் காயமடைந்த 12 மீனவர்களில் நால்வர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், இலங்கை கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டு காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வென்னப்புவ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து தினிதி துவ உள்ளிட்ட இரு ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் 12 மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றுள்ளனர். கடந்த 28 ஆம் திகதி அவர்கள் மீன்பிடிப் பணிகளை முடித்துக்கொண்டு மீண்டும் வென்னப்புவ நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போது, சர்வதேச கடற்பரப்பில் வைத்து இந்திய கடற்படையினரின் கப்பலொன்று இவர்களை வழிமறித்துள்ளது. அதனைத் தொடர்ந்து மீன்பிடி படகிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய அதிகாரிகள், மீனவர்களிடம் போதைப்பொருள் மற்றும் செய்மதித் தொலைபேசிகள் உள்ளனவா எனக் கேட்டு சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதல் குறித்து பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கையில், இந்திய கடற்படையினர் மீனவர்களை விலங்குகளைப் போலக் கீழே தள்ளி மிதித்தும், ஐஸ் கட்டிகள் மீது படுக்க வைத்தும் முதுகுப் பகுதியில் கடுமையாகத் தாக்கியதாகக் குறிப்பிட்டனர். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாகச் சந்தேகம் எழுப்பி, படகிலிருந்த உபகரணங்கள் மற்றும் உடமைகளைச் சேதப்படுத்தியதோடு, மீனவர்களுக்குக் கடும் உடல் ரீதியான சித்திரவதைகளை இந்திய அதிகாரிகள் வழங்கியுள்ளனர். இலங்கை எல்லைக்கு மிக அண்மித்த பகுதியில் வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர். காயமடைந்த மீனவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், அவர்கள் நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டு இன்று அதிகாலை கரைக்கு அழைத்து வரப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் இருவரது நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனைய மீனவர்கள் படகுகளுடன் கரைக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, இந்த விவகாரத்தை அரசாங்கம் மிகவும் தீவிரமாகக் கையாள்வதாகக் குறிப்பிட்டார். இது தொடர்பாக முறையான மற்றும் விரிவான விசாரணைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு இலங்கை கடற்படைக்கும் வெளிவிவகார அமைச்சுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் உறவினர்களால் வைத்தியசாலைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/237584
  14. "சென்னை குடிநீருக்காக வாழ்வாதாரத்தை பறிப்பதா?" - மாமல்லன் நீர்த்தேக்கத்தை எதிர்க்கும் மீனவர்கள் படக்குறிப்பு, சென்னைக்கு அருகே அமையுள்ள புதிய மாமல்லன் நீர்த்தேக்கத்தால் தங்களுக்கு பாதிப்பு என மீனவர்கள் கூறுகின்றனர். கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் "டேமை எங்க வேணும்னாலும் கட்டலாம். 5,000 குடும்பங்கள் பாதிக்கற மாதிரி இங்க தான் கட்டணுமா?" "கடல் தொழில் எனக்குத் தெரியும், போனாலும் அதுல அதிகமாக வருமானம் கிடைக்காது. 10 ஆயிரம் கிடைத்தாலும் அதை வைச்சு குடும்பத்தை நடத்த முடியுமா?" சென்னைக்கு அருகே அமையுள்ள புதிய மாமல்லன் நீர்த்தேக்கத்தால் தங்களுக்கு பாதிப்பு வரும் என்று அஞ்சும் மீனவர்கள் எழுப்பும் கேள்விகள் இவை. சென்னை மாநகரின் அதிகரித்து வரும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்த நீர்த்தேக்கம் கட்டப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவிக்கிறது. ஆனால், இந்த நீர்த்தேக்கம் அமைந்தால் மீனவர்களின் பாரம்பரியமான மீன்பிடி இடங்கள் அழிந்து மீன்வளமும், 5000-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என பிபிசி தமிழிடம் பேசிய மீனவர்கள் தெரிவிக்கின்றனர். நகரமயமாக்கலின் விளைவாக அனைத்து திசைகளிலும் வளர்ந்து வரும் சென்னை பெருநகரத்தின் குடிநீர் தேவை ஒருபக்கம் இருக்க சூழலியல் பார்வையில் இயற்கையான நீர்நிலைகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்புவது ஏன்? சென்னை அருகே புதிய நீர்த்தேக்கத்திற்கான தேவை என்ன? மீனவர்கள் எழுப்பும் கவலைகள் என்ன என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை காண பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது. மாமல்லன் நீர்த்தேக்கம் எங்கு அமைகிறது? படக்குறிப்பு,கடந்த ஜனவரி 19-ஆம் தேதி மாமல்லன் நீர்த்தேக்கத்துக்கான அடிக்கல்நாட்டு விழா நடத்தப்பட்டது. சென்னையில் கிழக்கு கடற்கரைச் சாலை (ஈசிஆர்) மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை (ஓஎம்ஆர்) இடையே 'மாமல்லன் நீர்த்தேக்கம்' அமைகிறது. 5,161 ஏக்கர் பரப்பளவில் இந்த நீர்த்தேக்கம் அமைய உள்ளது. முதல் கட்டமாக சுமார் 342 கோடி ரூபாய் மதிப்பில் 4,375 ஏக்கரில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி 19-ஆம் தேதி இதற்கான அடிக்கல்நாட்டு விழா நடத்தப்பட்டது. சில அரசியல் கட்சிகளும் சூழலியல் அமைப்புகளும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. படக்குறிப்பு,முதல்கட்டமாக சுமார் 342 கோடி ரூபாய் மதிப்பில் 4,375 ஏக்கரில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. "சென்னையின் குடிநீர் தேவை அதிகரிப்பு" சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் துறையின் தரவுகளின்படி, 2020-ஆம் ஆண்டில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளின் தினசரி குடிநீர் தேவை நாள் ஒன்றுக்கு 1,720 மில்லியன் லிட்டராக உள்ளது. இது 2035-இல் 2,523 மில்லியன் லிட்டராகவும், 2050-இல் 3,746 மில்லியன் லிட்டராகவும் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள மாமல்லன் நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 1.66 டிஎம்சி ஆகும். இதன் மூலம் தினமும் 170 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படும் என்றும், அதன் மூலம் சென்னையின் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களில் 13 லட்சம் பேரும் மற்றும் கோவளத்தைச் சுற்றியுள்ள மீனவ கிராமங்களைச் சேர்ந்தவர்களும் பயனடைவார்கள் என, தமிழ்நாடு அரசின் திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "பயனடையும் பகுதிகள்": சோழிங்கநல்லூர் மேடவாக்கம் பள்ளிக்கரணை சிறுசேரி கேளம்பாக்கம் மாமல்லபுரம் இந்த நீர்த்தேக்கம் அமைய உள்ள இடம் தனித்துவமான சூழலியல் அமைப்பு கொண்டதாக உள்ளது. வடக்கே முட்டுக்காடு முகத்துவாரம் வழியாகவும் தெற்கே கொக்கிலமேடு முகத்துவாரம் வழியாகவும் கடல்நீர் உள்ளே வந்து செல்கிறது. பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து வரும் உபரிநீரும் இங்கு வந்து கலக்கிறது. படக்குறிப்பு,இந்த நீர்த்தேக்கம் அமைய உள்ள இடம் தனித்துவமான சூழலியல் அமைப்பு கொண்டதாக உள்ளது. நன்னீரும் கடல்நீரும் கலக்கும் இடம் இந்த கழுவெளி பகுதிக்கென பிரத்யேகமான உயிரினங்கள் உள்ளதாகக் குறிப்பிடுகிறார், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன். "அங்கு வரும் வலசைப் பறவைகளும் உள்ளன. நன்னீரும் உப்புநீரும் கலக்கும் இடம் என்பதால் அங்கு மட்டுமே சில உயிரினங்கள் வாழும். அதனை வாழ்வாதாரமாக கொண்ட ஒரு மீனவ சமூகம் உள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் சில அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்தது. ஆனால், இந்த அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளாமல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் இந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்," என்றும் தெரிவித்தார். பட மூலாதாரம்,TNWRB படக்குறிப்பு,இந்த நீர்த்தேக்கத்தைச் சுற்றி 34 கிலோமீட்டர் தூரத்திற்கு கரை அமைக்கப்பட உள்ளது. புதிய நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் எங்கிருந்து வரும்? இந்த நீர்த்தேக்கத்தைச் சுற்றி 34 கிலோமீட்டர் தூரத்திற்கு கரை அமைக்கப்பட உள்ளது. கோவளம் வடிநிலப் பகுதிகளில் உள்ள 69 ஏரிகளில் இருந்து வரும் உபரிநீர் புதிய கால்வாய்கள் மூலம் இதில் தேக்கி வைக்கப்பட உள்ளன. இந்த நீர்த்தேக்கம் அமைய உள்ள இடத்தில் பக்கிங்காம் கால்வாய் செல்வதால் அது சீரமைக்கப்பட்டு, நீரோட்டத்திற்காக அணையின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் புதிய கால்வாய் அமைக்கப்பட உள்ளது. தெற்குப் பகுதியில் தண்ணீர் திறந்துவிடுவதற்கான மதகுகள் அமைக்கப்பட உள்ளன. "பாதிக்கப்படும் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம்" படக்குறிப்பு,மீனவ கிராமங்களின் மீன்பிடி பகுதிகளை காண்பிக்கும் புகைப்படம் கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் தொடங்கி கடற்கரையை ஒட்டி பல்வேறு மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் கடலுக்கு சென்றாலும் அவர்களின் பெரும்பாலான வாழ்வாதாரம் இந்த நீர்நிலையை நம்பியே உள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல, பழைய மகாபலிபுரம் சாலையிலும் பல்வேறு மீனவ கிராமங்கள் உள்ளன. இவர்களின் வாழ்வாதாரம் இதை நம்பி மட்டுமே இருப்பதாகவும் கூறுகின்றனர். பிபிசி தமிழ் குழு இவர்கள் மீன்பிடிக்கும் பகுதிக்குச் சென்றபோது மீனவர்கள் வலை பின்னும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். கோவளம் தொடங்கி கொக்கிலமேடு வரை இதேபோல் பல்வேறு மீன்பிடி நிலைகள் உள்ளன. ஒவ்வொரு ஊர்களைச் சேர்ந்தவர்களும் அவர்களுக்கான பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் வழக்கம் இங்கு இருந்து வருகிறது. பல தலைமுறைகளாக இந்தத் தொழிலில் மீனவர்கள் ஈடுபட்டு வருவதாகக் கூறும் கோவளம் குப்பத்தைச் சேர்ந்த மகேந்திரன், கடந்த 25 வருடங்களாக மீன்பிடித் தொழிலில் இருந்து வருகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இங்கு இறால், நண்டு மற்றும் சிலவகை மீன்களை இங்கு பிடிக்கிறோம். இது தான் எங்களின் வாழ்வாதாரம். தண்ணீர் கொண்டு வருவதற்கு நீர்த்தேக்கம் அமைப்பது என்றால் வேறு எங்கு வேண்டுமானாலும் அமைத்துக்கொள்ளலாமே, 5,000 பேரை பாதித்து இந்த இடத்தில் நீர்த்தேக்கம் வர வேண்டுமா? இங்கு சேறும் உப்பும் தான் இருக்கிறது." எனத் தெரிவித்தார். படக்குறிப்பு,கோவளம் குப்பத்தைச் சேர்ந்த மகேந்திரன் ஆனால், இந்தப் பகுதியில் நீர்த்தேக்கம் அமைய வேறு மாற்று இடம் இல்லை என திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு இந்தத் தொழிலில் தான் நிலையான வருமானம் கிடைப்பதாகக் கூறுகிறார் கோவளம் குப்பத்தைச் சேர்ந்த சுரேஷ். "எனக்கு ஃபைபர் தொழில் தெரியும், ஆனால் வாழ்வாதாரம் குறைவு தான், அதில் கிடைக்கும் 300, 400 ரூபாயை வைத்து குடும்பத்தை நடத்த முடியாது. என் இரண்டு குழந்தைகள் படிக்கிறார்கள். இதை வைத்து தான் நான் குடும்பத்தை நடத்த முடியும்." என்றார். படக்குறிப்பு,கோவளம் குப்பத்தைச் சேர்ந்த சுரேஷ் அரசு கூறும் 3 முதன்மை தேவைகள், முதலமைச்சரின் உத்தரவாதம் இந்தத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் எனத் தெரிவித்திருந்தார். அந்த நிகழ்வில் பேசிய அவர், "இந்தப் பகுதியில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயை 15 கிலோமீட்டர் நீளம், 311 ஏக்கர் பரப்பளவில் சீரமைப்பதால் உவர்நீர் மீன்வளத்தை நம்பி இருக்கக்கூடிய மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படும். மேலும் அந்தப் பகுதியில் வசிக்கக்கூடிய மீனவர்களுக்கு மீன்பிடி உரிமம் வழங்கப்படும்," எனத் தெரிவித்தார். குடிநீர் தேவை, வெள்ள தடுப்பு, கடல் நீர் உட்புகுவதைத் தடுத்து நிலத்தடி நீர்வளத்தைப் பெருக்குவது ஆகிய மூன்றும் தான் இந்தத் திட்டத்துக்கான முதன்மையான தேவைகள் என அரசு கூறுகிறது. கடல் மீன்வளத்திற்கு பாதிப்பு உள்ளதா? இந்தத் திட்டத்திற்காக வழங்கப்பட கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் சி.ஆர்.இசட் (CRZ) அனுமதியில் 36 நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கிறது. அதில் இந்தப் பகுதியின் பாரம்பரிய மீன்பிடி முறைகளில் எந்த தாக்கமும் இருக்காது என்பதை உறுதி செய்யும் விதத்தில் மீன்வளத் துறையிடம் ஆட்சேபனை இல்லா சான்று பெற வேண்டும் என்பதும் அந்த நிபந்தனைகளின் முக்கியமான ஒன்று. கழுவெளி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்க மதிப்பீட்டு ஆய்வின்படி அந்தப் பகுதியில் இயற்கை நீரியல் முறை மீட்டெடுக்கப்படும் வரை இறால் மற்றும் மீன்வளம் மற்றும் வலசைப் பறவைகளின் வாழ்விடம் பாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. படக்குறிப்பு,இந்தத் திட்டத்தால் கடல் மீன்வளமும் பாதிக்கப்படும் என்கிறார், சூழலியல் செயற்பாட்டாளரான நித்யானந்த் ஜெயராமன். ஆனால், இந்த நீர்த்தேக்கம் அமைந்தால் கழிமுக மீன் வளம் மட்டுமல்லாமல் கடல் மீன் வளமும் பாதிக்கப்படும் என்கிறார் சூழலியல் செயற்பாட்டாளரான நித்யானந்த் ஜெயராமன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "உப்பங்கழியும், முகத்துவாரமும், இந்தப் பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்களும் தான் கடலில் உள்ள மீன்களுக்கு தாய். இங்கு குஞ்சு பொறித்து பெரிதாகி கடலுக்குச் செல்லும் மீன்கள் தான் கடல் மீனவர்களின் வலைகளில் சிக்குகின்றன. இறால், நண்டு போன்ற பல உயிரினங்கள் அப்படித்தான் உள்ளன. இந்தச் சூழலில் இதனால் ஏற்படும் பின் விளைவுகள் கடலிலும் தெரியும்," எனத் தெரிவித்தார். அரசு கூறுவது என்ன? இந்தச் சூழலில் மீன்வளத்தைப் பாதுகாக்கவும் வலசைப் பறவைகளின் வாழ்விடத்தைப் பாதுகாக்கவும் அரசு சில திட்டங்களை முன்வைத்துள்ளது. இதற்கு ஈடாக ஏற்கெனவே கொக்கிலமேடு பகுதியில் உள்ள ஈர நிலங்கள் மேம்படுத்தப்பட்டு கைவிடப்பட்ட உப்பங்கழி அமைந்துள்ள இடங்கள் புதிய ஈர நிலங்களாக மாற்றப்படும் என்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 6 செயற்கை தீவுகளும் உருவாக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என அரசாங்கத்திடம் பலமுறை தெரிவித்ததாக மீனவர்கள் கூறுகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12-ஆம் தேதி மீன்வளத் துறையிடம் இந்தத் திட்டத்திற்கு ஆட்சேபனை இல்லா சான்று வழங்கக்கூடாது என மீனவர்களின் சார்பில் கோரிக்கை கடிதம் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் முன்மொழிந்திருப்பதாகவும் சட்ட வழிகளைப் பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கிறார் கோவளம் குப்பத்தைச் சேர்ந்த சௌந்தர பாண்டியன். படக்குறிப்பு,கோவளம் குப்பத்தைச் சேர்ந்த சௌந்தர பாண்டியன் பிபிசி தமிழிடம் பேசிய அவர், "நாங்கள் சந்தித்தபோது எங்களுக்கு திட்டத்தை வரைபடம் போட்டுக் காண்பித்தார்கள். பக்கிங்ஹாம் கால்வாயை நாங்கள் விட்டுவிடுகிறோம். ஆனால், மற்ற இடங்கள் எங்களுக்குத் தேவை என்றார்கள். உங்களுக்கு தண்ணீர் போக்குவரத்துக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது என்றார்கள்." "ஆனால், அவர்கள் அமைக்கின்ற கால்வாயால் எங்களுக்கு எந்தப் பிரயோஜனமும் கிடையாது. கிளைக் கால்வாய்களில் தண்ணீர் பரவுவதால் தான் இரால், நண்டு, மீன் போன்றவை குஞ்சு பொரிக்கின்றன. அதை அவர்கள் ஆக்கிரமித்துவிட்டு எங்களுக்கு கால்வாய் கொடுத்தால் நாங்கள் அதில் படகு ஓட்டச் செல்வதா? படகு சவாரி வேண்டுமானால் செய்யலாம், அது மீன்பிடிப்பதற்கான இடம் கிடையாது." என்றார். இந்தத் திட்டம் வருவதால் தங்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படுவதாகக் கூறும் சௌந்தர பாண்டியன், "காட்டுக் குப்பத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் வந்தது. அதிலிருந்து கோவளத்திற்கு குடிநீர் கிடைக்கவில்லை. நெம்மேலி குப்பத்தில் இரண்டாவது திட்டம் உருவாகி வருகிறது. அதிலிருந்தும் எங்களுக்கு குடிநீர் வரப்போவதில்லை. இந்த மூன்றாவது திட்டமும் சென்னைக்குத் தான் போகப் போகிறது. எங்கள் இடத்தில் தண்ணீர் எடுத்து, வாழ்வாதாரத்தை கெடுத்து அதனால் எங்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை." என்று தெரிவித்தார். நீர்வளத் துறை கூறுவது என்ன? இந்த நிலையில் நீர்த்தேக்கத் திட்டம் மற்றும் மீனவர்கள் எழுப்பும் கவலைகள் தொடர்பாக விளக்கம் பெற தமிழ்நாடு நீர்வளத் துறையை பிபிசி தமிழ் பலமுறை தொடர்புகொண்டது. ஆனால் அவர்களின் விளக்கத்தைப் பெற முடியவில்லை. இந்தத் திட்டம் தொடர்பான கேள்விகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவின்போதே பதிலளிக்கப்பட்டு விட்டதாக நீர்வளத் துறையின் சார்பில் பிபிசி தமிழிடம் தெரிவிக்கப்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy05j19l040o
  15. வட்டு தெற்கு பரராஜசிங்கம் ஐயா வீட்டு மலசலகூடம், குழி கட்டும் பணி நடைபெறுகிறது. வங்கிப் பரிவர்த்தனை விபரம். தற்போதைய வங்கி மீதி சேமிப்பு வட்டியுடன் ரூபா 168,123.35 சதம்.
  16. ரி20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் பங்கேற்கும், ஆனால் இந்தியாவுக்கு எதிராக விளையாடாது Published By: Vishnu 01 Feb, 2026 | 09:29 PM (நெவில் அன்தனி) இந்த வருட ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்கும் எனவும் ஆனால் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடாது எனவும் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. சுமார் ஒரு வாரம் நீடித்த நிச்சயமற்றத் தன்மைக்கு பின்னர் பாகிஸ்தான் அரசாங்கம் தனது அணியை ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணத்தில் பங்குபற்ற அனுமதிக்க இன்று முடிவுசெய்தது. ஆனால், பெப்வரி 15ஆம் திகதி இந்தியாவை எதிர்த்தாடாமல் இருக்க பாகிஸ்தான் அரசு தீர்மானித்துள்ளது. தனது பரம வைரியான இந்தியாவை பி குழுவுக்கான முதலாவது சுற்றில் பாகிஸ்தான் எதிர்த்தாடும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது. 'ஐசிசி ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் பங்குபற்றுவதற்கு பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், இந்தியாவுக்கு எதிராக பெப்ரவரி 15ஆம் திகதி அட்டவணை படுத்தப்பட்டுள்ள போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி களம் இறங்காது' என பாகிஸ்தான் அரசாங்கத்தின் டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ரி20 உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து பங்களாதேஷ் விலகியதை அடுத்து ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை புறக்கணிக்கும் நிலை தோன்றியதை அடுத்து பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரிபை கடந்த திங்களன்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவரும் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வி சந்தித்தார். சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விடயம் குறித்து பிரதமரிடம் விளக்கியதாக இந்த சந்திப்பின் பின்னர் குறிப்பிட்ட நக்வி, இது தொடர்காக வெள்ளிக்கிழமை அல்லது திங்களன்று இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் கூறியிருந்தார். பங்களாதேஷுக்கு பதிலாக ஸ்கொட்லாந்தை இணைத்ததை அடுத்து பாகிஸ்தான் உலகக் கிண்ணத்தில் பங்குபற்றுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டதை அடுத்தே இந்த சந்திப்பு இடம்பெற்றது. அயல் நாடுகளான இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் அரசியல் உறவுகளில் கசப்புணர்வு ஏற்பட்டதை அடுத்து பாதுகாப்பு காரணத்தைக் காட்டி இந்தியாவுக்கு செல்ல முடியாது என பங்களாதேஷ் அறிவித்தது. அதன் பின்னர் பங்களாதேஷுக்கு பதிலாக உலகக் கிண்ணத்தில் ஸ்கொட்லாந்து இணைத்துக்கொள்ளப்பட்டதாக ஜனவரி 24ஆம் திகதி ஐசிசி அறிவித்தது. தனது போட்டிகளை இலங்கைக்கு மாற்றுமாறு ஐசிசியிடம் பங்களாதேஷ் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அதனை நிராகரித்த ஐசிசி, உலகக் கிண்ணப் போட்டி நெருங்கிவரும் நிலையில் இடத்தை மாற்றுவதற்கு சாத்தியம் இல்லை என தெரிவித்திருந்தது. https://www.virakesari.lk/article/237579
  17. @வீரப் பையன்26 ஓடி வாங்கோ, போட்டி தொடங்கப்போகிறது.
  18. பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமனின் ஒரு அறிவிப்பால் ஆட்டம் கண்ட பங்குச்சந்தை பட மூலாதாரம்,Getty Images 1 பிப்ரவரி 2026, 08:30 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) நாடாளுமன்றத்தில் 2026-27 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரை பங்குச் சந்தையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. நிதி அமைச்சரின் உரை முடிவடைவதற்குள், பங்குச் சந்தை குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைப் பதிவு செய்திருந்தது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் (Sensex) 2,000 புள்ளிகள் வரை சரிந்தது. நிஃப்டி 500 புள்ளிகள் வரை சரிந்தது. பங்குச் சந்தையில் ஃபியூச்சர்ஸ் (Futures) வர்த்தகத்தின் மீதான பங்குப் பரிவர்த்தனை வரியை (STT) அதிகரிப்பதாக அறிவிக்கப்பட்டதே இந்த எதிர்வினைக்குக் காரணம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குச் சந்தை இயங்குவது மிகவும் அரிதான ஒன்றாகும். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதன் காரணமாக பங்குச்சந்தை இன்று இயங்கியது குறிப்பிடத்தக்கது. ஆரோக்கியம் மற்றும் மருத்துவம் முதல் கல்வி மற்றும் பெண்கள் தொடர்பான பிரச்னைகள் வரை சில முக்கியமான அறிவிப்புகளை பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். ஆனால் அவர் வெளியிட்ட ஓர் அறிவிப்பு பங்குச் சந்தைகளை ஆட்டம் காணச் செய்தது. மத்திய பட்ஜெட்டில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பின்படி, ஃபியூச்சர்ஸ் ((Futures) மீதான பங்குப் பரிவர்த்தனை வரி (STT) தற்போதைய 0.02 சதவீதத்தில் இருந்து 0.05 சதவீதமாக உயர்கிறது. ஆப்ஷன்ஸ் பிரீமியம் (options premium) மற்றும் ஆப்ஷன்ஸ் செயல்படுத்தல் (exercise of options) ஆகிய இரண்டிற்குமான பங்குப் பரிவர்த்தனை வரி முறையே தற்போதைய 0.1 சதவீதம் மற்றும் 0.125 சதவீதத்தில் இருந்து 0.15 சதவீதமாக அதிகரிக்கப்படும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த அறிவிப்புக்குப் பிறகு பங்குச் சந்தைகளில் கடுமையான சரிவு காணப்பட்டது. எஸ்டிடி என்றால் என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப் படம் எஸ்டிடி என்பது 'பங்குப் பரிவர்த்தனை வரி' (Securities Transaction Tax) என்பதைக் குறிக்கும். இது பங்குகளை வாங்கும்போதும் விற்கும்போதும் விதிக்கப்படுகிறது. ஃபியூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் மீதான பங்குப் பரிவர்த்தனை வரியை இரண்டு மடங்குக்கும் மேலாக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்தார். எஃப் அண்ட் ஓ மீதான எஸ்டிடி 0.02% ஆக இருந்தது. இப்போது அதனை 0.05% ஆக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது. எஸ்டிடி என்பது அடிப்படையில் மற்ற வரிகளிலிருந்து தனித்துவமானது. வருவாய் ஈட்டவும், நிதிச் சந்தைகளில் நிலைத்தன்மையை அதிகரிக்கவும் பங்குப் பரிவர்த்தனைகள் மீது இந்த வரி விதிக்கப்படுகிறது. இது முற்றிலும் மதிப்பீட்டின் அடிப்படையிலானது, அதாவது சம்பந்தப்பட்ட தனிநபர் பங்குப் பரிவர்த்தனையில் லாபம் ஈட்டினாரா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், வர்த்தகம் செய்யப்படும் பங்குகளின் மதிப்பு எவ்வளவு இருக்கிறதோ, அவ்வளவு எஸ்டிடி வரி விதிக்கப்படும். வருமான வரி தொடர்பான அறிவிப்பு பட மூலாதாரம்,SANSAD TV படக்குறிப்பு,மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்தார். வருமான வரித் தாக்கல் (ITR) தொடர்பான காலக்கெடு மற்றும் விதிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஐடிஆர்-1 (ITR-1) மற்றும் ஐடிஆர்-2 (ITR-2) படிவங்களைத் தாக்கல் செய்பவர்கள் இனி ஜூலை 31 வரை வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய முடியும். இந்த முறை வருமான வரி வரம்புகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வரி விதிப்பின் கீழ், ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி கிடையாது. சம்பளதாரருக்கான நிலையான கழிவு ₹75,000 ஆகும். எனவே ரூ.12.75 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இருக்காது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c14rdlv87npo
  19. கிளிநொச்சியில் லொறி மீது துப்பாக்கிச் சூடு Feb 1, 2026 - 05:11 PM கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் கட்டளையை மீறிச் சென்ற லொறி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இன்று (01) அதிகாலை தருமபுரம் பகுதியில் லொறி ஒன்று, வேகமாக பயணித்த நிலையில், அதனை வீதித் தடையில் நிறுத்தி பொலிஸார் சோதனையிட முற்பட்டுள்ளனர். எனினும் பொலிஸாரின் சமிக்ஞையையும் மீறி அந்த லொறி பயணித்த நிலையில், அதன் சில்லுகளை இலக்கு வைத்து பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர் சந்தேகநபரான சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அந்த லொறியில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தப்பியோடிய சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://adaderanatamil.lk/news/cml3o6s1i04pdo29nqn1t4u9g -கிளிநொச்சி நிருபர் சப்தன்-
  20. நியூட்டனின் மூன்றாம் விதியை அன்றே சொன்னவர் வள்ளுவர்: வவுனியாவில் ஆளுநர் நா.வேதநாயகன் உரை 01 Feb, 2026 | 05:09 PM நவீன அறிவியல் விஞ்ஞானி ஐசக் நியூட்டன் கண்டுபிடித்த மூன்றாம் விதியை, பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தனது திருக்குறளின் ஊடாக உலகுக்குச் சொன்னவர் தெய்வப்புலவர் திருவள்ளுவர். மனித குலத்திற்கு முற்றிலும் பொருந்தக்கூடிய வாழ்வியல் நெறிகளைத் தன்னகத்தே கொண்ட ஒரு பொக்கிஷமாகத் திருக்குறள் விளங்குகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். மொறிசியஸ் சர்வதேச திருக்குறள் மன்றம், வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச தமிழ்ப் பண்பாட்டு மையம் ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில், 'மனித மாண்பு' எனும் தொனிப்பொருளிலான 7ஆவது சர்வதேச திருக்குறள் மாநாட்டின் முதலாம் நாள் நிகழ்வு வவுனியா பல்கலைக்கழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (01.02.2026) காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "திருக்குறளில் கூறப்பட்டுள்ள அறிவியல் சார்ந்த கருத்துகளைத் தற்காலக் கண்டுபிடிப்புகளுடன் ஒப்பிடும்போது, வள்ளுவரின் தீர்க்கதரிசனம் எம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. உதாரணமாக, 'ஒவ்வொரு வினைக்கும் அதற்கு இணையான எதிர்வினை உண்டு' என்ற நியூட்டனின் மூன்றாம் விதியை, வள்ளுவர் அன்றே, 'பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்' என்ற குறளின் மூலம் மிக எளிமையாக விளக்கியுள்ளார். நாம் ஒருவருக்குத் துன்பம் இழைத்தால், அது நிச்சயம் நமக்கே திரும்பி வரும் என்ற வாழ்வியல் உண்மையை அறிவியல் பூர்வமாக அவர் அன்றே எடுத்துரைத்துள்ளார். மனிதன் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது, அவ்வாறு செய்தால் கிடைக்கும் பயன்கள் என்ன என்பதைத் தெள்ளத் தெளிவாகக் கூறும் நூல் திருக்குறள். மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு வள்ளுவர் வகுத்த பாதை மிக அழகானது. 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்' என்று அவர் கூறியது போல, அறநெறியில் நின்று வாழும் மனிதன், வானுலகில் உள்ள தெய்வத்திற்கு இணையாகப் போற்றப்படுவான். இத்தகைய உயரிய மனித மாண்புகளைப் போற்றும் திருக்குறளைப் படித்து, அதன்படி நடப்பவர்கள் வாழ்வில் சகல நலங்களையும் பெறுவார்கள். இத்தகைய பெருமைமிகுந்த திருக்குறள் மாநாடு வடக்கு மாகாணத்தின் வவுனியாவில் நடைபெறுவது எமக்கு மிகுந்த பெருமையளிக்கிறது. இம்மாநாடு இங்கு நடைபெறுவதற்குக் காரணமான வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் அ.அற்புதராஜா அவர்கள் பாராட்டுக்குரியவர். அவர் பல்கலைக்கழகத்தைச் சமூகத்துடன் ஒன்றிணைத்துப் பயணிக்கும் பல ஆக்கபூர்வமான பணிகளைச் செய்து வருகின்றார். அவர் தனது பெயரைப் போலவே ஒரு 'அற்புதமான' மனிதராகச் செயற்படுகின்றார்" என ஆளுநர் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய் முரளி, வவுனியா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் அ.அற்புதராஜா, மொறிசியஸ் சர்வதேச திருக்குறள் மன்றத்தின் பொதுச் செயலாளரும் பேராசிரியருமான பாஞ்.இராமலிங்கம், சர்வதேச தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் நிறுவுனரும் தலைவருமான திரு. மாவை.சோ.தங்கராசா, முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், தமிழறிஞர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் 40-இற்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளதோடு, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் இதில் பங்கேற்றுள்ளமை சிறப்பம்சமாகும். https://www.virakesari.lk/article/237567
  21. புதினுக்கு எதிராக பேசிய ரஷ்ய செல்வந்தர்கள் என்ன ஆனார்கள்? - போரின் நடுவே நிலையற்ற சூழல் பட மூலாதாரம்,ALEXEY NIKOLSKY/SPUTNIK/AFP படக்குறிப்பு,யுக்ரேன் மீதான முழு அளவிலான படையெடுப்புக்கு உத்தரவிட்ட நாளன்று, தொழில் தலைவர்களை கிரெம்ளினுக்கு புதின் வரவழைத்தார். கட்டுரை தகவல் விட்டலி ஷெவ்சென்கோ பிபிசி மானிட்டரிங் ரஷ்யா ஆசிரியர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேனுடனான போரின் நடுவே, ரஷ்யாவில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டியுள்ளது. ஆனால், விளாடிமிர் புதின் அதிகாரத்தில் இருக்கும் 25 ஆண்டுகளில், ரஷ்யாவின் செல்வந்தர்களும் சக்திவாய்ந்தவர்களும் - அதாவது 'ஒலிகார்ச்சுகள்' (oligarchs) தங்கள் அரசியல் செல்வாக்கை கிட்டத்தட்ட முழுமையாக இழந்துவிட்டனர். இவை அனைத்தும் ரஷ்ய அதிபருக்குச் சாதகமான செய்திகள். மேற்கத்திய நாடுகளின் தடைகள் பெரும் பணக்காரர்களை புதினுக்கு எதிரிகளாக மாற்றத் தவறிவிட்டன, மேலும் அவரது ' சலுகைகள் மற்றும் தண்டனைகள்' கொள்கைகள் அவர்களை மௌன ஆதரவாளர்களாக மாற்றியுள்ளன. முன்னாள் வங்கி கோடீஸ்வரரான ஓலெக் டின்கோவ், புதின் எவ்வாறு தண்டனைகளை வழங்குகிறார் என்பதைத் தெளிவாக அறிவார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் போரை "பைத்தியக்காரத்தனமானது" என்று விமர்சித்த மறுநாளே, அவரது நிறுவன நிர்வாகிகளை கிரெம்ளின் தொடர்புகொண்டது. அந்த நேரத்தில் ரஷ்யாவின் இரண்டாவது பெரிய வங்கியான அவரது 'டின்கோஃப் வங்கி' அதன் நிறுவனருடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிக்காவிட்டால் தேசியமயமாக்கப்படும் என்று அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. "என்னால் விலை குறித்துப் பேச முடியவில்லை" என்று டின்கோவ் நியூயார்க் டைம்ஸிடம் கூறினார். "இது ஒரு பிணைக் கைதியைப் போன்றது - உங்களுக்கு என்ன வழங்கப்படுகிறதோ அதை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். என்னால் பேரம் பேச முடியவில்லை." ஒரு வாரத்திற்குள், தற்போது ரஷ்யாவின் ஐந்தாவது பணக்கார தொழிலதிபரும், போர் விமான இயந்திரங்களுக்கு நிக்கல் வழங்குபவருமான விளாடிமிர் பொட்டானின் என்பவருடன் தொடர்புடைய ஒரு நிறுவனம் வங்கியினை வாங்குவதாக அறிவித்தது. அது அதன் உண்மையான மதிப்பில் 3% விலைக்கு மட்டுமே விற்கப்பட்டது என்கிறார் டின்கோவ். இறுதியில், டின்கோவ் தான் ஒரு காலத்தில் வைத்திருந்த சுமார் 9 பில்லியன் டாலர் (சுமார் ரூ.82 ஆயிரம் கோடி ) மதிப்புள்ள சொத்தை இழந்து, ரஷ்யாவை விட்டு வெளியேறினார். பட மூலாதாரம்,Chris Graythen/Getty Images படக்குறிப்பு,யுக்ரேனுக்கு எதிரான போரை விமர்சித்த பிறகு ஓலெக் டின்கோவ் பில்லியன் கணக்கான டாலர்களை இழந்து ரஷ்யாவை விட்டு வெளியேறினார். புதின் அதிபராவதற்கு முன்பு இருந்த நிலைமைக்கு இது முற்றிலும் மாறானது. சோவியத் யூனியன் உடைந்ததைத் தொடர்ந்த ஆண்டுகளில், சில ரஷ்யர்கள் முன்னர் அரசுக்குச் சொந்தமாக இருந்த பிரமாண்ட நிறுவனங்களின் உரிமையைப் பெற்றதன் மூலமும், நாட்டின் ஆரம்பகால முதலாளித்துவ வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டதன் மூலமும் மிகப்பெரிய பணக்காரர்களானார்கள். அவர்கள் புதிதாகப் பெற்ற செல்வம், அரசியல் கொந்தளிப்பான காலக்கட்டத்தில் அவர்களுக்குச் செல்வாக்கையும் அதிகாரத்தையும் தந்தது; அவர்கள் 'ஒலிகார்ச்சுகள்' என்று அழைக்கப்பட்டனர். ரஷ்யாவின் மிகவும் சக்திவாய்ந்த ஒலிகார்ச்சான போரிஸ் பெரெசோவ்ஸ்கி, 2000-ஆம் ஆண்டில் புதின் அதிபராக உயர்வதற்குத் தான் தான் பின்னணியில் இருந்ததாகக் கூறினார், மேலும் பல ஆண்டுகளுக்குப் பிறகு அவ்வாறு செய்ததற்காக மன்னிப்பும் கோரினார்: "சுதந்திரத்தை மிதித்து ரஷ்யாவின் வளர்ச்சியைத் தடுக்கும் ஒரு பேராசை கொண்ட எதிர்கால கொடுங்கோலனையும் ஆக்கிரமிப்பாளனையும் அவரிடம் நான் பார்க்கவில்லை," என்று அவர் 2012-இல் எழுதினார். பெரெசோவ்ஸ்கி தனது பங்கை மிகைப்படுத்தியிருக்கலாம், ஆனால் ரஷ்யாவின் ஒலிகார்ச்சுகள் அதிகாரத்தின் மிக உயர்ந்த மட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவரும் திறன் கொண்டவர்களாக இருந்தனர் என்பது நிச்சயம். அவர் மன்னிப்பு கேட்ட ஒரு ஆண்டுக்குப் பிறகு, பிரிட்டனில் புகலிடம் பெற்றிருந்த பெரெசோவ்ஸ்கி அங்கு மர்மமான சூழ்நிலையில் இறந்து கிடந்தார். அந்த காலகட்டத்திற்குள், ரஷ்ய ஒலிகார்ச்சி முறையும் முழுமையாக இறந்துவிட்டது. பட மூலாதாரம்,Hulton Archive/Getty Images படக்குறிப்பு,போரிஸ் பெரெசோவ்ஸ்கி பிரிட்டனில் தஞ்சம் புகுந்தார், அங்கு அவர் பின்னர் 2013-இல் மர்மமான சூழ்நிலையில் இறந்தார். எனவே, பிப்ரவரி 24, 2022 அன்று யுக்ரேன் மீதான முழு அளவிலான படையெடுப்புக்கு உத்தரவிட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, கிரெம்ளினில் ரஷ்யாவின் பெரும் பணக்காரர்களை புதின் கூட்டியபோது, அவர்களின் சொத்துக்கள் பெரும் பாதிப்பைச் சந்திக்கப் போகின்றன என்பதை அறிந்திருந்தும் எதிர்ப்பு தெரிவிக்க அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. "இந்த புதிய சூழ்நிலையிலும் நாம் அதே அளவு சிறப்பாகவும் திறம்படவும் இணைந்து செயல்படுவோம் என்று நம்புகிறேன்," என்று அவர் அவர்களிடம் கூறினார். அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு நிருபர், அங்கு குழுமியிருந்த கோடீஸ்வரர்கள் "வெளிறிப்போய் தூக்கமில்லாதவர்களாக" இருந்தார்கள் என விவரித்தார். படையெடுப்புக்கு முந்தைய காலமும், அதன் உடனடிப் பின்விளைவுகளும் ரஷ்ய கோடீஸ்வரர்களுக்கு மிகவும் மோசமாக இருந்தன. ஃபோர்ப்ஸ் இதழின் படி, ஏப்ரல் 2022 வரையிலான ஓராண்டில், போர், தடைகள் மற்றும் பலவீனமான ரூபிள் மதிப்பு காரணமாக அவர்களின் எண்ணிக்கை 117-லிருந்து 83 ஆகக் குறைந்தது. ஒட்டுமொத்தமாக, அவர்கள் 263 பில்லியன் டாலர்களை இழந்தனர் - அதாவது சராசரியாக தலா 27% சொத்துக்களை இழந்தனர். ஆனால் அதற்குப் பிந்தைய ஆண்டுகள், புதினின் போர் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக இருப்பதன் மூலம் பெரும் நன்மைகளை அறுவடை செய்ய முடியும் என்பதைக் காட்டின. போருக்கான தாராளமான செலவினங்கள் 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் ரஷ்யாவில் ஆண்டுக்கு 4% க்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியைத் தூண்டின. பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்கள் மூலம் நேரடியாக பில்லியன் கணக்கில் சம்பாதிக்காத ரஷ்யாவின் அதி-பணக்காரர்களுக்குக் கூட இது சாதகமாக அமைந்தது. 2024-ஆம் ஆண்டில், ரஷ்யாவின் பாதிக்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்கள் ராணுவத்திற்குப் பொருட்களை வழங்குவதில் ஏதோ ஒரு பங்கைக் கொண்டிருந்தனர் அல்லது படையெடுப்பால் பயனடைந்தனர் என்று ஃபோர்ப்ஸின் ஜியாகோமோ டோக்னினி கூறுகிறார். "நேரடியாக ஈடுபடாதவர்கள் ஆனால் கிரெம்ளினுடன் ஒரு வகையான உறவை வைத்திருக்க வேண்டிய அவசியமுள்ளவர்களை கணக்கில் எடுத்துக்கொள்ளாமலேயே இந்த நிலை. ரஷ்யாவில் தொழில் நடத்தும் எவரும் அரசாங்கத்துடன் உறவு வைத்திருக்க வேண்டும் என்று சொல்வது நியாயமானது," என்று அவர் பிபிசியிடம் கூறினார். 2025ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஷ்யாவில் முன்னெப்போதும் இல்லாத அளவு மிக அதிகமான எண்ணிக்கையில் 140 கோடீஸ்வரர்கள் இடம்பெற்றனர். அவர்களின் கூட்டு மதிப்பு (580 பில்லியன் டாலர்) படையெடுப்புக்கு முந்தைய ஆண்டை விட வெறும் 3 பில்லியன் டாலர் மட்டுமே குறைவாக இருந்தது. விசுவாசமாக இருப்பவர்களை லாபம் ஈட்ட அனுமதிக்கும் அதே வேளையில், தனது சொல்லுக்குக் கட்டுப்படாதவர்களை புதின் தொடர்ந்து தண்டித்து வருகிறார். எண்ணெய் அதிபர் மிகைல் கோடர்கோவ்ஸ்கிக்கு என்ன நடந்தது என்பதை ரஷ்யர்கள் நன்கு அறிவார்கள். ஒரு காலத்தில் ரஷ்யாவின் மிகப்பெரிய பணக்காரராக இருந்த அவர், 2001-இல் ஒரு ஜனநாயக ஆதரவு அமைப்பைத் தொடங்கிய பிறகு 10 ஆண்டுகளைச் சிறையில் கழித்தார். பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,மிகைல் கோடர்கோவ்ஸ்கி ரஷ்யாவின் மிகப்பெரிய பணக்காரராக இருந்தார், ஆனால் அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார், அவரது யுகோஸ் எண்ணெய் நிறுவனம் தேசியமயமாக்கப்பட்டது. படையெடுப்புக்குப் பிறகு, ரஷ்யாவின் பெரும் பணக்காரர்கள் கிட்டத்தட்ட அனைவரும் மௌனமாகவே உள்ளனர், மேலும் பகிரங்கமாக எதிர்த்த ஒரு சிலரும் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி பெரும் சொத்துக்களை இழக்க நேரிட்டது. ரஷ்யாவின் பெரும் செல்வந்தர்கள் புதினின் போர் முயற்சிக்கு முக்கியப் பங்களிக்கின்றனர், மேலும் பிப்ரவரி 24, 2022 அன்று கிரெம்ளினுக்கு அழைக்கப்பட்ட 37 வணிகர்கள் உட்பட அவர்களில் பலர் மேற்கத்திய நாடுகளின் தடைகளுக்கு உள்ளாகியுள்ளனர். ஆனால் மேற்கத்திய நாடுகள் அவர்களை ஏழைகளாக்கி அதன்மூலம் அவர்களை கிரெம்ளினுக்கு எதிராகத் திருப்ப விரும்பியிருந்தால், ரஷ்ய கோடீஸ்வரர்களிடையே நீடிக்கும் செல்வம் மற்றும் எதிர்ப்பு இல்லாத நிலையை பார்க்கும்போது அந்த முயற்சி தோல்வியடைந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். அவர்களில் யாராவது தங்கள் பில்லியன் கணக்கான டாலர்களுடன் மேற்கத்திய நாடுகளுக்குத் தப்பிச் செல்ல நினைத்திருந்தால், இந்தத் தடைகள் அதைச் சாத்தியமற்றதாக்கிவிட்டன. "ரஷ்ய கோடீஸ்வரர்கள் தங்கள் நாட்டு தேசியக் கொடியின் கீழ் அணிதிரள்வதை உறுதி செய்ய மேற்கத்திய நாடுகள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்தன," என்கிறார் ஐரோப்பிய கொள்கை ஆய்வு மையத்தின் (சிஇபிஏ) அலெக்சாண்டர் கோல்யாண்ட்ர். "அவர்களில் யாருக்கும் வெளியேற எந்தத் திட்டமோ, யோசனையோ அல்லது தெளிவான பாதையோ இல்லை. சொத்துக்கள் முடக்கப்பட்டன, கணக்குகள் முடக்கப்பட்டன. இவை அனைத்தும் புதின் கோடீஸ்வரர்களையும் அவர்களின் சொத்துக்களையும், அவர்களது பணத்தையும் திரட்டி அவற்றை ரஷ்ய போர் பொருளாதாரத்திற்கு ஆதரவாகப் பயன்படுத்த உதவியது," என்று அவர் பிபிசியிடம் கூறுகிறார். யுக்ரேன் படையெடுப்பைத் தொடர்ந்து வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறியதால் ஏற்பட்ட வெற்றிடத்தை, கிரெம்ளின் ஆதரவு பெற்ற தொழிலதிபர்கள் விரைவாக நிரப்பினர்; அவர்களுக்கு மிகவும் லாபகரமான சொத்துக்களைக் குறைந்த விலைக்கு வாங்க அனுமதி வழங்கப்பட்டது. இது ஒரு புதிய "செல்வாக்குமிக்க மற்றும் தீவிர விசுவாச ராணுவத்தை" உருவாக்கியுள்ளது என்று கார்னகி ரஷ்யா யூரேசியா மையத்தின் அலெக்ஸாண்ட்ரா ப்ரோகோபென்கோ வாதிடுகிறார். "அவர்களின் எதிர்கால நலன் ரஷ்யாவுக்கும் மேற்குக்கும் இடையிலான தொடர்ச்சியான மோதலைச் சார்ந்தே இருக்கிறது," அதே நேரத்தில் முந்தைய உரிமையாளர்கள் மீண்டும் வந்துவிடுவார்கள் என்பதே அவர்களின் மிகப்பெரிய அச்சமாக இருக்கிறது என்று அவர் கூறுகிறார். ஜியாகோமோ டோக்னினியின் கூற்றுப்படி, 2024-ஆம் ஆண்டில் மட்டும் 11 புதிய கோடீஸ்வரர்கள் இந்த வழியில் ரஷ்யாவில் உருவாகியுள்ளனர். போர் மற்றும் மேற்கத்திய தடைகள் இருந்தபோதிலும், அவற்றின் காரணமாகவே ரஷ்யத் தலைவர் நாட்டின் முக்கியப் புள்ளிகள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களைத் தனது உறுதியான பிடியில் வைத்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.virakesari.lk/article/237567
  22. இந்திய பட்ஜெட் 2026 - இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு Feb 1, 2026 - 01:35 PM இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01) இந்திய பாராளுமன்றத்தில் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட் ஆகும். "வளர்ச்சியடைந்த பாரதம்" என்ற இலக்கை மையமாகக் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட்டில், உள்கட்டமைப்பு, விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் அண்டை நாடுகளுடனான உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் "அண்டை நாடுகளுக்கே முன்னுரிமை" கொள்கையின் அடிப்படையில், இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவியில் இம்முறை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்கு நிதியுதவியாக 400 கோடி இந்திய ரூபாயை (INR 400 Crore / 4 Billion INR) இந்தியா ஒதுக்கியுள்ளது. இது கடந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட 300 கோடி ரூபாயை விட அதிகமாகும். இந்த நிதியானது இலங்கையில் முன்னெடுக்கப்படும் வளர்ச்சித் திட்டங்கள், மனிதாபிமான உதவிகள் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்புத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cml3gh6my04p5o29nkk65km2n
  23. பட்ஜெட் 2026: எவையெல்லாம் விலை அதிகரிக்கும்? பட மூலாதாரம்,Arvind Yadav/Hindustan Times via Getty Images படக்குறிப்பு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்." ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இந்த 2026 மத்திய பட்ஜெட்டில், ஒருபுறம் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் பசுமை ஆற்றலுக்கு அரசு சலுகைகளை வழங்கியுள்ளது; மறுபுறம், பங்குச் சந்தை தொடர்பான முதலீடுகள் மற்றும் சில செயல்பாடுகளின் விலையை உயர்த்தியுள்ளது. புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் 17 மருந்துகளுக்கான அடிப்படை சுங்க வரியை அரசு நீக்கியுள்ளது, இதன் மூலம் இந்திய சந்தையில் இந்த மருந்துகள் மலிவாகும். இது தவிர, 7 அரிய வகை நோய்களுக்கான சிகிச்சைக்காக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் மீதான வரியையும் அரசு நீக்கியுள்ளது. அதுமட்டுமின்றி, மின்சார வாகனங்கள், சோலார் பேனல்கள் மற்றும் பசுமை ஆற்றல் உற்பத்தியுடன் தொடர்புடைய சில உபகரணங்கள் மீதான வரியையும் அரசு குறைத்துள்ளது. இது சாதாரண நுகர்வோர், நோயாளிகள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினரிடையே நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும், பட்ஜெட்டில் வருமான வரி தொடர்பாக எந்த சலுகைகளும் வழங்கப்படவில்லை அல்லது பெரிய அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை. 'வளர்ச்சியடைந்த இந்தியா 2047' (Vikasit Bharat 2047) என்ற இலக்கை நோக்கி நகர்வதில் இந்த பட்ஜெட் மிகவும் முக்கியமானது என்று அரசு கூறியுள்ளது. அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரி விதிப்பை இந்தியா எதிர்கொண்டு வருவதும், உலகளாவிய நிச்சயமற்ற நிலையும் நிலவி வரும் வேளையில், இந்த பட்ஜெட் மீது மக்களின் உன்னிப்பான பார்வை இருந்தது. மலிவான சிகிச்சை மற்றும் மருந்துகள் பட மூலாதாரம்,Getty Images புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுடன் போராடும் நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சிகிச்சைச் செலவைக் குறைக்க மத்திய அரசு இந்த பட்ஜெட் மூலம் முயற்சி செய்துள்ளது. பட்ஜெட்டில் புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் 17 உயிர் காக்கும் மருந்துகள் மீதான அடிப்படை சுங்க வரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. இது தவிர, 7 அரிய நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் மற்றும் சிறப்பு உணவுகளுக்கும் வரி விதிக்கப்படாது. உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்குச் சலுகை பட மூலாதாரம்,Getty Images மைக்ரோவேவ் அவன்களின் சில முக்கியமான பாகங்கள் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது. கடல் உணவு ஏற்றுமதிக்கான வரி இல்லாத உள்ளீட்டு வரம்பு 1 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. தோல், செயற்கை காலணிகள் மற்றும் ஜவுளி ஏற்றுமதியிலும் வரி இல்லாத உள்ளீடுகள் மற்றும் கால வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இவை மலிவாக வாய்ப்புள்ளது. அணுமின் திட்டங்களுக்காக இறக்குமதி செய்யப்படும் உபகரணங்களுக்கு 2035 வரை சுங்க வரி விதிக்கப்படாது. மின்சார வாகனங்கள், சோலார் மற்றும் பசுமை ஆற்றல் விலை குறைய வாய்ப்பு பட மூலாதாரம்,Getty Images மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள், சோலார் பேனல்கள் மற்றும் பசுமை ஆற்றல் உற்பத்தி மீதான வரியைக் குறைக்க அரசு முயற்சி செய்துள்ளது. லித்தியம்-அயன் பேட்டரி சேமிப்பு அமைப்புகளுடன் தொடர்புடைய பல உள்ளீடுகளுக்குச் சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சோலார் பேனல்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சோலார் கிளாஸிற்கான மூலப்பொருளான 'சோடியம் ஆன்டிமோனேட்' மீதான வரியும் நீக்கப்பட்டுள்ளது. இதனால் மின்சார வாகனங்கள், சோலார் ஆற்றல் மற்றும் பேட்டரி துறையில் உற்பத்தி செலவு குறையக்கூடும். எனினும், இந்த பலன் வாடிக்கையாளர்களைச் சென்றடையுமா என்பதை நிறுவனங்களின் கொள்கைகளே தீர்மானிக்கும். உண்மையில், இந்த மாற்றங்கள் உற்பத்திச் செலவைக் குறைக்கும்; ஆனால் வாடிக்கையாளர்களுக்கான விற்பனை விலை குறையுமா இல்லையா என்பதை நிறுவனங்களே தீர்மானிக்கும். தனிநபர் இறக்குமதி மற்றும் வெளிநாட்டுச் செலவுகளிலும் சலுகை தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான சுங்க வரி 20 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மின்னணு பொருட்கள் அல்லது பரிசுப் பொருட்கள் முன்பை விட மலிவாகக் கிடைக்கலாம். வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணங்களுக்கான மூலத்தில் வசூலிக்கப்படும் வரி 5% அல்லது 20% என்பதில் இருந்து மாற்றப்பட்டு, வரம்பு ஏதுமின்றி நிலையான 2% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், வெளிநாட்டுப் படிப்பு மற்றும் சிகிச்சைக்காக அனுப்பப்படும் 10 லட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகைக்கான மூலத்தில் வசூலிக்கப்படும் வரி, இப்போது 5 சதவீதத்திற்குப் பதிலாக 2 சதவீதமாக இருக்கும். இது சுற்றுலா அல்லது படிப்பிற்காக வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்குச் சற்று நிம்மதியைத் தரும். விலை அதிகரித்த பொருட்கள்/சேவைகள் எவை? பட மூலாதாரம்,Getty Images பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்வது முன்பை விடச் சற்று விலை உயர்ந்ததாக மாறும். ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் செக்யூரிட்டி டிரான்சாக்ஷன் வரி (STT) 0.02 சதவீதத்திலிருந்து 0.05 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆப்ஷன்ஸ் பிரீமியம் மீதான STT 0.1 சதவீதத்திலிருந்து 0.15 சதவீதமாகவும், ஆப்ஷன் எக்சர்சைஸ் மீதான வரி 0.125 சதவீதத்திலிருந்து 0.15 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 'வருங்கால வர்த்தகம் மற்றும் விருப்ப வர்த்தகம் ' (ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ்' ) பிரிவில் வர்த்தகம் செய்வது செலவு பிடிக்கும் ஒன்றாக இருக்கும். நிறுவனங்களின் பங்குகளைத் திரும்பப் பெறுவதில் (Share Buyback) நிறுவன நிறுவனர்கள் (Promoters) வரி விதிப்பு முறை கடுமையாக்கப்பட்டுள்ளது. இனிமேல் நிறுவனர்கள்(Promoters) மூலதன ஆதாய வரியுடன் (Capital Gains Tax) கூடுதல் வரியையும் செலுத்த வேண்டியிருக்கும்; இது பங்குகளைத் திரும்பப் பெறுவதன் (Buyback) மூலம் லாபம் ஈட்டுவதைக் குறைவான ஈர்ப்புமிக்க ஒன்றாக மாற்றக்கூடும்." பொட்டாசியம் ஹைட்ராக்சைடு போன்ற சில வேதிப்பொருட்கள் மற்றும் சில நுகர்வோர் பொருட்கள் மீது முன்பு வழங்கப்பட்ட சுங்க வரி விலக்கு நீக்கப்பட்டுள்ளது. இவற்றின் மீது இப்போது 7.5 சதவீதம் வரை அடிப்படை சுங்க வரி விதிக்கப்படும், இது அவற்றின் இறக்குமதி செலவை அதிகரிக்கும். வேதிப்பொருட்களின் விலை உயர்வு, அவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களின் விலையிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். மொத்தத்தில், 2026 பட்ஜெட்டில் தாதுக்கள், ஸ்கிராப், மதுபானம் ஆகியவை விலை உயர்ந்துள்ளன. தோல், துணி, செயற்கை காலணிகள், வெளிநாட்டுப் பயணம், 17 புற்றுநோய் மருந்துகள், மைக்ரோவேவ் அவன், விமானத் தயாரிப்பு தொடர்பான பொருட்கள், மின்சார வாகன பேட்டரி, சர்க்கரை நோய் மருந்துகள் போன்றவை மலிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் பகுப்பாய்வின்படி, உற்பத்தி மற்றும் நுகர்வை மலிவாக்கும் அதே வேளையில், நிதிப் பரிவர்த்தனைகளை விலை உயர்த்தும் பாதையை அரசு தேர்ந்தெடுத்துள்ளது என்பது தெளிவாகிறது. "செக்யூரிட்டிஸ் டிரான்சாக்ஷன் வரி உயர்த்தப்பட்டுள்ளதால் பட்ஜெட்டுக்குப் பிறகு விலை உயரக்கூடிய பொருட்கள்/நடவடிக்கைகளில் பங்குச் சந்தையின் ஃபியூச்சர்ஸ்-ஆப்ஷன்ஸ் வர்த்தகமும் அடங்கும். அதேசமயம் மதுபானம், ஸ்கிராப், தாதுக்கள் மற்றும் டெண்டு இலைகளின் விற்பனை மீது மூலத்தில் வசூலிக்கப்படும் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால், இந்தத் துறைகளில் செலவுகள் உயரக்கூடும். பட்ஜெட்டுக்குப் பிறகு, மருத்துவச் செலவுகள் குறைவதற்கும், வெளிநாட்டுப் பயணம் மற்றும் கல்வி மீதான வரிகள் குறைவதற்கும், அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் பல மின்னணு மற்றும் எரிசக்தி தொடர்பான பொருட்கள் மலிவாவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyg56y4m7do
  24. பொலிஸாரின் சமிக்ஞையை மீறிச் சென்ற டிப்பர் மீது துப்பாக்கிச் சூடு! 01 Feb, 2026 | 04:30 PM தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் இருந்து, இன்று அதிகாலை 3.00 மணியளவில் சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தைத் தருமபுரம் பொலிஸார் சோதனையிட முற்பட்டனர். இதன்போது பொலிஸாரின் சமிக்ஞையை மீறிச் சென்ற டிப்பர் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் டிப்பர் வாகனத்தின் எரிபொருள் தாங்கி மற்றும் டயர்கள் சேதமடைந்துள்ளன. சம்பவத்துடன் தொடர்புடைய டிப்பர் சாரதி தப்பியோடியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாகத் தருமபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/237564
  25. சீனாவின் உயர்மட்ட ராணுவ தளபதி நீக்கம்: போர் தயார்நிலை கேள்விக்குள்ளாகிறதா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,75 வயதான ஜாங் யூக்ஸியா, மத்திய ராணுவ ஆணையத்தின் (Central Military Commission) துணைத் தலைவராக இருந்தார் கட்டுரை தகவல் ஸ்டீபன் மெக்டொனெல் சீனா செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் (PLA) உயர்மட்டத் தலைமை நிலைகுலைந்துள்ளது. சீனாவின் உயர்மட்டத் தளபதி ஜாங் யூக்ஸியா மற்றும் மற்றொரு மூத்த ராணுவ அதிகாரி ஜெனரல் லியு ஜென்லி ஆகியோர் வார இறுதியில் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். சீனாவில் அரங்கேறி வரும் இதுபோன்ற உயர்மட்ட அதிகாரப் போராட்டங்களைத் தூண்டியது எது என்பது குறித்தும், இது சீனாவின் போரிடும் திறனுக்கு என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்தும் – குறிப்பாக தைவானை பலவந்தமாகக் கைப்பற்றும் லட்சியம் அல்லது மற்றொரு பெரிய பிராந்திய மோதலில் ஈடுபடுவது போன்ற விஷயங்களில் – கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. 75 வயதான ஜாங், மத்திய ராணுவ ஆணையம் அல்லது சிஎம்சியின் (Central Military Commission) துணைத் தலைவராக இருந்தார். நாட்டின் அதிபர் ஷி ஜின்பிங் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சிக் குழு, ஆயுதப் படைகளை கட்டுப்படுத்துகிறது. பொதுவாக ஏழு நபர்களைக் கொண்ட சிஎம்சி, இப்போது வெறும் இரண்டு உறுப்பினர்களாக (ஷி மற்றும் ஜெனரல் ஜாங் ஷெங்மின்) குறைக்கப்பட்டுள்ளது. மற்ற அனைவரும் முந்தைய தடுப்புக் காலங்களைத் தொடர்ந்து "ஊழல் எதிர்ப்பு" ஒடுக்குமுறையில் வீழ்த்தப்பட்டுள்ளனர். மில்லியன் கணக்கான ராணுவ பணியாளர்களை கட்டுப்படுத்தும் பொறுப்பு சிஎம்சி-க்கு உள்ளது. இந்த அமைப்பு (மத்திய ராணுவ ஆணையம்) எவ்வளவு சக்தி வாய்ந்தது என்றால், டெங் சியோ பிங் சீனாவின் முழுமையான ஆட்சியாளராக இருந்தபோது அவர் வகித்த ஒரே பதவி இதனுடைய தலைவர் பதவிதான். ஷி மற்றும் ஒரு சிஎம்சி ஜெனரல் மட்டுமே எஞ்சியிருப்பது முன்னெப்போதும் இல்லாத நிகழ்வு என்று ஆசிய சமூக கொள்கை நிறுவனத்தைச் சேர்ந்த லில் மோரிஸ் கூறுகிறார். "மக்கள் விடுதலை ராணுவம் குழப்பத்தில் உள்ளது," என்று அவர் பிபிசியிடம் கூறினார், சீனாவின் ராணுவம் இப்போது "பெரிய தலைமை வெற்றிடத்தை" கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார். இவ்வளவு மூத்த ஜெனரல்களை அகற்றுவதற்கு உண்மையில் என்ன காரணம் என்று கேட்டபோது, "நிறைய வதந்திகள் சுற்றி வருகின்றன. இந்த நேரத்தில், எது உண்மை மற்றும் எது பொய் என்பது எங்களுக்குத் தெரியவில்லை... ஆனால் இது நிச்சயமாக ஷி ஜின்பிங்குக்கும், பிஎல்ஏ மீதான அவரது தலைமை மற்றும் கட்டுப்பாட்டுக்கும் மோசமானது", என்று அவர் கூறினார். சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இணை பேராசிரியர் சோங் ஜா இயான், ஜெனரல் ஜாங்கின் வீழ்ச்சிக்கான உண்மையான காரணம் தனக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றும், ஆனால் அதைப் பற்றி நிறைய ஊகங்கள் இருப்பதாகவும் கூறினார். "அமெரிக்காவுக்கு அணு ரகசியங்களை கசியவிடுவது முதல் சதி திட்டமிடுவது மற்றும் பிரிவு சண்டைகள் வரை . பெய்ஜிங்கில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக கூட வதந்திகள் உள்ளன," என்றார். "ஆனால், ஜாங் மற்றும் லியூவின் வீழ்ச்சியும், இந்தத் தீவிர ஊகங்களும் இரண்டு விஷயங்களை எடுத்துக்காட்டுகின்றன: ஒன்று, ஷி இன்னமும் அசைக்க முடியாதவராக இருக்கிறார்; மற்றொன்று, பெய்ஜிங்கில் தகவல்களுக்கு குறிப்பிடத்தக்க வரம்புகள் உள்ளன, இது நிச்சயமற்ற தன்மையைத் தூண்டி, இந்த ஊகங்களுக்கு வழிவகுக்கிறது." ஜெனரல்கள் ஜாங் மற்றும் லியு ஆகியோர் 'விசாரணையில்' இருப்பதாக வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பில், அவர்கள் 'ஒழுக்கம் மற்றும் சட்டத்தை கடுமையாக மீறியதாக' குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது; இது ஊழலைக் குறிப்பதற்கான ஒரு நயமான சொல்லாடலாகும். பின்னர் மக்கள் விடுதலை ராணுவத்தின் (PLA Daily) அதிகாரப்பூர்வ நாளிதழ் இதனை ஒரு தலையங்கத்தில் மிகத் தெளிவாக உறுதிப்படுத்தியது. அதில், இந்த நடவடிக்கை ஊழலைத் தண்டிப்பதில் கம்யூனிஸ்ட் கட்சியின் 'சற்றும் சகிப்புத்தன்மையற்ற' அணுகுமுறையைக் காட்டுகிறது என்றும், 'யாராக இருந்தாலும் அல்லது எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும்' அவர்களுக்குத் தண்டனை உறுதி என்றும் எழுதப்பட்டிருந்தது." இந்தத் தளபதிகள் அனைவருக்கும் எதிராகக் கூறப்படும் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை, ஒருவேளை ஒருபோதும் வெளியிடப்படாமலும் போகலாம். இருப்பினும், அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகப் பெயரிடப்பட்டிருப்பது, குறைந்தபட்சம் அவர்களுக்குச் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்பதையே ஏறக்குறைய உறுதியாகக் குறிக்கிறது. பிஎல்ஏ டெய்லி பத்திரிகையின் தலையங்கம் ஏற்கெனவே ஜாங் யூக்ஸியா மற்றும் லியு ஜென்லி ஆகியோரை குற்றவாளிகளைப் போலவே சித்தரித்துப் பேசியது. அவர்கள் "கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் நம்பிக்கையையும் எதிர்பார்ப்புகளையும் கடுமையாகத் துரோகம் செய்துவிட்டனர்" என்றும், "மத்திய ராணுவ ஆணையத்தை மிதித்து அதன் அதிகாரத்தைக் குறைமதிப்புக்கு உட்படுத்திவிட்டனர்" என்றும் அது குறிப்பிட்டிருந்தது. ஜெனரல்களை குறிவைக்கப்படுவது ஊழல் பற்றியதாக இருக்கலாம், ஆனால் கடந்த காலங்களில் இதுபோன்ற சுத்திகரிப்புகள் நடந்த விதத்தைப் பார்க்கும்போது, இது அதிகார அரசியல் பற்றியதாகவும் இருக்கலாம். ஷி ஜின்பிங் ஆட்சிக்கு வந்தபோது சீனாவில் நிச்சயமாக ஊழல் பிரச்னை இருந்தது, ஆனால் அந்த நாட்டின் அதிபர், தனது ஊழல் ஒழிப்பு நடவடிக்கையைப் பயன்படுத்தி, கட்சியின் அஞ்சப்படும் ஒழுங்கு ஆய்வுக் குழுக்களைப் பயன்படுத்தி, தனக்கு அரசியல் போட்டியாளர்களாக வரக்கூடியவர்களையும், அல்லது அரசாங்கப் பதவிகளில் இருந்துகொண்டு தன்னிடம் முழு விசுவாசத்தைக் காட்டாதவர்களையும் ஒழித்துக்கட்டுகிறார் என்றும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது பொதுச் செயலாளர் ஷி-க்கு, தலைவர் மாவோ காலத்திலிருந்து காணப்படாத ஒரு நிகரற்ற கட்டுப்பாட்டு அதிகாரத்தை வழங்கியுள்ளது. இருப்பினும் இந்த வகை தலைமை எதிர்விளைவாகவும் இருக்கலாம். உதாரணமாக, ராணுவத்தில், சந்தேகத்தின் சூழல் எச்சரிக்கையான, பலவீனமான முடிவெடுப்பதற்கு வழிவகுக்கும். ஜாங் யூசியாவின் தந்தை, ஷி ஜின்பிங்கின் தந்தையின் ஒரு புரட்சிகரத் தோழராக இருந்தார். அந்தத் தளபதிக்கு ஷியுடன் நீண்டகாலப் பழக்கம் உண்டு. சமீபத்திய குழப்பங்களுக்கு முன்பு அவர்கள் நெருங்கிய கூட்டாளிகளாகக் கருதப்பட்டனர். யாரும் பாதுகாப்பாக இல்லை என்ற நம்பிக்கை, இந்தச் சூழ்நிலையை மேலும் மோசமாக்கியிருக்கலாம். சீன மக்கள் விடுதலை ராணுவத்தில் போர்க்கள அனுபவம் கொண்ட ஒரு சில மூத்த அதிகாரிகளில் அவரும் ஒருவர் என்பதால், அவரது இழப்பு ராணுவத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க இழப்பு அவரது நீக்கம் ஷி ஜின்பிங்குக்கு நீண்ட காலப் பிரச்னைகளையும் ஏற்படுத்துகிறது என்று மோரிஸ் கூறுகிறார். ஷி ஜின்பிங் மீண்டும் தனது அதிகாரத்தை நிலைநாட்டியிருக்கலாம், ஆனால் இந்த குழப்பம் தொடர்ச்சியான உராய்வுகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார். "இது நிச்சயமாக ஷி ஜின்பிங்குக்கு ஒரு மோசமான தோற்றத்தை அளிக்கிறது. மேலும், வரும் ஆண்டுகளில் ஷி ஜின்பிங்குக்கும் அவரது தலைவர்களுக்கும் – குறிப்பாக மக்கள் விடுதலை ராணுவத்தில் – குறிப்பிடத்தக்க கொந்தளிப்பு ஏற்படப் போகிறது என்று நான் நினைக்கிறேன்." மிக மூத்த தளபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பது, அடுத்த நிலையில் உள்ள அதிகாரிகளின் மீதும் கவனத்தை திருப்புகிறது. அடுத்தது யார் என்ற கேள்வி அவர்களுக்குள் எழுந்திருக்கலாம். தங்களுக்கு மேலிருந்தவர்களின் கதியைக் கருத்தில் கொண்டு, ஷி ஜின்பிங்கின் ஊழல் எதிர்ப்புப் பார்வை எந்த நேரத்திலும் தங்கள் மீது பாயக்கூடிய அந்த அபாயகரமான பகுதிக்கு பதவி உயர்வு பெறுவதையும் அவர்கள் விரும்பாமல் இருக்கலாம். மேலும், இந்தச் சம்பவங்கள் அனைத்தும், தைவான் மீது பெய்ஜிங் அழுத்தம் அதிகரித்து வரும் ஒரு நேரத்தில் நிகழ்ந்துள்ளன. ஒரு முழுமையான தாக்குதல் மூலம் அந்த தன்னாட்சித் தீவை கைப்பற்றுவோம் என்று சீனா அச்சுறுத்தி வருகிறது. இந்த நீக்கங்கள் அத்தகைய சாத்தியத்தை எவ்வளவு தடுத்தன என்பதை ஆய்வாளர்கள் எடைபோடுவார்கள். "இந்த சுத்திகரிப்பு, தைவானை கட்டுப்படுத்தும் சீனாவின் லட்சியங்களைப் பாதிக்காது. அது ஒட்டுமொத்த சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும், குறிப்பாக ஷி-க்கும் பொருந்தும்," என்கிறார் பேராசிரியர் சோங். கூடுதல் தகவல் சேகரிப்பு பிபிசி-யின் இவெட் டான் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdex0kn6nwgo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.