Everything posted by ஏராளன்
-
பூப்பெய்த மாணவியை தனியாக அமர வைத்த சம்பவம்
கோவை: பருவமெய்திய சிறுமி வகுப்பு வாசலில் அமர்ந்து தேர்வு எழுதிய விவகாரம் – என்ன நடந்தது? பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT / GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வக்குமார் பதவி, பிபிசி தமிழ் 10 ஏப்ரல் 2025 கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள தனியார் பள்ளியில் முதல் மாதவிடாயைத் தொடர்ந்து தேர்வு எழுத சென்ற எட்டாம் வகுப்பு மாணவியை வாசலில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ''தேர்வு எழுதிவிட்டு வந்த என் மகள் இரவில் மிகவும் கால் வலிப்பதாகக் கூறினாள். பருவமடைந்து 3 நாட்கள்தான் ஆன நிலையில், அது தொடர்பாக ஏற்பட்ட வலியாக இருக்குமென்று என் மனைவி அவரின் காலில் எண்ணெய் தேய்த்துவிட்டுள்ளார். அதன்பின் என் மனைவி விசாரித்த போதுதான், வகுப்பறை படிக்கட்டில் 3 மணி நேரம் நகராமல் உட்கார்ந்து தேர்வெழுதியதால் கால் வலி ஏற்பட்டது என்று அழுது கொண்டே கூறினார்," என்று கூறுகிறார் மாணவியின் தந்தை. பெற்றோர் விடுத்த வேண்டுகோளின்படியே, தனியாக உட்கார வைத்து தேர்வெழுத வைத்ததாகக் கூறிய பள்ளி நிர்வாகம், பள்ளி முதல்வரை பணியிடை நீக்கம் செய்துள்ளது. ஆனால், ''தனி வகுப்பறையில் உட்கார வைக்காமல், வகுப்பறைக்கு வெளியே உட்கார வைத்தது ஏன்'' என்று விளக்கம் கேட்கப்பட்டிருப்பதாக பொள்ளாச்சி உதவி காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள செங்குட்டைப் பாளையத்தில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் மகள், 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 5 ஆம் தேதியன்று அந்த மாணவிக்கு முதல் மாதவிடாய் ஏற்பட்டுள்ளது. அதற்குப் பின் தேர்வு எழுத வந்த அந்த மாணவியை வகுப்பறைக்கு வெளியே வைத்து தேர்வெழுத வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. கர்நாடகாவில் தேர்வு முடிவுகள் பற்றிப் பொய் சொன்ன மகளைக் கொன்ற தாய் - இன்றைய முக்கிய செய்திகள்10 ஏப்ரல் 2025 விண்வெளியில் இருக்கும்போது பெண்கள் மாதவிடாயை எப்படி சமாளிக்கிறார்கள்?21 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் நேரில் வந்து வீடியோ எடுத்த தாய்! தேர்வு நடந்த நேரத்தில் பள்ளிக்கு வந்த அந்த மாணவியின் தாயார், இதை வீடியோ எடுத்துள்ளார். அவர் எடுத்த காணொளி, காட்சி ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பரவி கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. அந்த காணொளியில், பள்ளியில் வகுப்பறைக்கு வெளியில் படிக்கட்டில் தனியாக அமர்ந்து அந்த மாணவி தேர்வெழுதுவதும், அவரிடம் அதற்கான காரணத்தை அவரின் தாய் கேட்டுக் கொண்டிருக்கும் போது, பள்ளி முதல்வர் மற்றும் உதவியாளர் வந்து, எப்படி பள்ளிக்குள் வந்து அனுமதியின்றி வீடியோ எடுத்தீர்கள் என மாணவியின் தாயாரிடம் வாக்குவாதம் செய்வதும் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் பற்றி பிபிசி தமிழிடம் பேசிய மாணவியின் தந்தை, ''என் இளைய மகள் கடந்த 5ஆம் தேதியன்று பருவமடைந்தாள். ஏழாம் தேதியன்று தேர்வு எழுதுவதற்குச் சென்றாள். அன்று அவளை வகுப்பறைக்கு வெளியே தனியாக படிக்கட்டில் உட்கார வைத்து தேர்வெழுத வைத்துள்ளனர். அன்று இரவுதான் எங்களுக்கு இந்த விஷயம் தெரியவந்தது. அதை உறுதிப்படுத்தவே என் மனைவி சென்று வீடியோ எடுத்தார்.'' என்றார். அதே பள்ளியில்தான் தானும் படித்ததாகக் கூறிய அவர், அங்கு பணியாற்றும் சில ஆசிரியர்களும், சில ஊழியர்களும்தான், சமுதாய நோக்கில் மாணவர்களைப் பிரித்துப் பார்ப்பதாகவும், அவர்களால்தான் இது நிகழ்ந்திருப்பதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஏப்ரல் 10 காலையில் கோவைக்கு வந்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், கோவையில் தனியார் பள்ளிகளில் ''இத்தகைய அத்துமீறல்கள் அடிக்கடி நடக்கிறதே'' என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், இதுபற்றி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் என்றார். மகாவீர் ஜெயந்தி காரணமாக, அரசு விடுமுறை என்பதால் இன்று பள்ளி இயங்கவில்லை. காலையில் பொள்ளாச்சி உதவி காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் தலைமையிலான காவல்துறையினர், பள்ளிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். பள்ளி நிர்வாகி கல்பனா தேவியை பிபிசி தமிழ் தொடர்பு கொள்ள முயற்சி செய்தது. அவரிடம் இருந்து கருத்துகள் பெறப்படும் போது இந்த செய்தியில் சேர்க்கப்படும். தீண்டாமை காரணமாக நடைபெற்றதா? இந்த சூழலில் மக்கள் விடுதலை முன்னணியின் கோவை மாவட்டத் தலைவர் தம்பு தலைமையில் சிலர், பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தனர். அதில், ''அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மாணவி என்பதால்தான், தீண்டாமை எண்ணத்துடன் வெளியே அமர வைத்து தேர்வெழுத வைத்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று கூறப்பட்டிருந்தது. பள்ளியில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், மாணவியின் பெற்றோர் கேட்டுக் கொண்டதால்தான், மாணவியை வகுப்பறைக்கு வெளியே தேர்வெழுத அனுமதித்ததாக பள்ளி நிர்வாகம் தரப்பில் விளக்கம் தரப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். வேறு எந்த மாணவியையும் இப்படி எழுத வைத்ததில்லை என்று பள்ளி ஆசிரியர்கள் கூறியுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய பொள்ளாச்சி உதவிக் காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங், ''மாணவியின் தாயார் முதலில் வகுப்பு ஆசிரியரைத் போனில் தொடர்பு கொண்டு, அவருடைய மகளுக்கு முதன்முறையாக மாதவிடாய் ஏற்பட்டுள்ளது. எனவே தனியாக தேர்வெழுத வைக்க முடியுமா என்று கேட்டுள்ளார். அவர் வடசித்துாரில் தேர்வுப்பணியில் இருப்பதால் பள்ளி முதல்வரைத் தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளார். அதன்பின் 7 ஆம் தேதியன்று மாணவியின் தாயார் நேரில் வந்து தன்னிடம் கேட்டுக் கொண்டதன் காரணமாகவே தனியாக தேர்வெழுத வைத்ததாக பள்ளி முதல்வர் கூறுகிறார்.'' என்றார். மேலும் தொடர்ந்த அவர், ''அன்று இரவு கால்வலி என்று மாணவி சொன்னபோதுதான், அவரை வெளியே உட்கார வைத்து தேர்வெழுத வைத்த விஷயம், அவரின் தாயாருக்குத் தெரியவந்துள்ளது. மறுநாள் எல்லோருக்கும் வகுப்பு இருந்தும் அந்த மாணவியை அனுப்பவில்லை. ஏப்ரல் 9 அன்று தேர்வு என்பதால் அனுப்பியுள்ளனர். அன்றும் அதே இடத்தில் உட்கார வைத்து தேர்வெழுத வைத்தபோதுதான், மாணவியின் தாயார் நேரடியாக வந்து அதை வீடியோ எடுத்துள்ளார்.'' என்றார். மாதவிடாய்: பெண்களுக்காக ஃபேஸ்புக்கில் போராடும் அதிகாரி27 பிப்ரவரி 2018 மாதவிடாய் நாட்களில் விடுமுறை: - பிகார் மாடலை தமிழ்நாட்டில் ஏன் பின்பற்ற முடியவில்லை?19 ஜனவரி 2023 பட மூலாதாரம்,GETTY IMAGES பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறிய கருத்துகளை மறுத்த மாணவியின் தந்தை, தங்கள் மகள் பருவமெய்திய காரணத்தைக் கூறி, கட்டாயம் தேர்வெழுத வேண்டுமா என்று தாங்கள் கேட்டதாகவும், கட்டாயம் எழுத வேண்டுமென்று கூறியதால்தான், தனியாக அமர வைத்து தேர்வெழுத அனுமதிக்க வேண்டுமென்று பள்ளி முதல்வரிடம் கேட்டுக் கொண்டதாகவும் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். ''நாங்கள் தனியாக அமர வைத்து தேர்வெழுத வைக்க வேண்டுமென்று கேட்டது உண்மைதான். ஆனால் தனி வகுப்பறையில் அல்லது ஏதாவது ஹாலில் தனியாக மேசை கொடுத்து அமர வைத்து எழுத வைப்பார்கள் என்றே அப்படிக் கேட்டோம். வகுப்பறைக்கு வெளியே படிக்கட்டில் உட்கார வைத்து 3 மணி நேரத் தேர்வை எழுத வைத்தது பள்ளி ஆசிரியர்கள்தான்.'' என்கிறார் மாணவியின் தந்தை. பள்ளி நிர்வாகத்திடம் இது தொடர்பாக விளக்கம் கேட்டிருப்பதாகத் தெரிவித்தார் உதவி காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங். இதற்கு முன்பு இதே பள்ளியில் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளதா என்று விசாரிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். ''முதல்வர் அறையில் நிறைய மேசைகள், நாற்காலிகள் இருக்கின்றன. அங்கே அவரை எழுத வைத்திருக்கலாம். வெளியே உட்கார வைத்து எழுத வைத்தது ஏன் என்பதே கேள்வி '' என்றார் சிருஷ்டி சிங். இந்த சம்பவம் தொடர்பாக, மாணவியின் தந்தை அளித்த புகாரை ஏற்று, நெகமம் காவல் நிலையத்தில், பள்ளியின் உதவி தாளாளரும் முதல்வருமான ஆனந்தி, அலுவலக உதவியாளர் சாந்தி, தாளாளர் தங்கவேல் பாண்டியன் ஆகிய 3 பேர் மீது, எஸ்சிஎஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் 3(1) (r) மற்றும் 3 (1) (za) (D) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது மாதவிடாய்: நாப்கினுக்கு பதில் மென்ஸ்ட்ருவல் கப் பயன்படுத்துவது எப்படி? மருத்துவர் பதில்கள்23 ஏப்ரல் 2022 மாதவிடாய் நாட்களில் பெண்களை காட்டுக்கு அனுப்பும் தமிழ்நாட்டு கிராமம்10 ஏப்ரல் 2023 பட மூலாதாரம்,@ANBIL_MAHESH/X படக்குறிப்பு,பள்ளிக் கல்வித்துறை அன்பில் மகேஷ் வெளியிட்ட ட்வீட் இந்த சம்பவத்தில் மாணவியின் பெற்றோர், அந்த மாணவி பருவமெய்திய காரணத்தைக் கூறி, தனியாக தேர்வெழுத அனுமதிக்க வேண்டுமென்று பள்ளி நிர்வாகத்திடம் கேட்டதும் தவறுதான் என பலர் சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ராதிகா, ''அந்த மாணவியை தனியாக தேர்வெழுத வைக்க வேண்டுமென்று பெற்றோர் கேட்டதை சரியென்று சொல்ல முடியாது. ஆனால், எல்லோருடனும் சேர்ந்து உங்கள் குழந்தையும் தேர்வெழுதட்டும் என்று சொல்லி, அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்க வேண்டியது ஆசிரியர்களின் கடமை. அதை செய்யாமல் வகுப்பறைக்கு வெளியே படிக்கட்டில் தனியாக உட்கார வைத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது.'' என்றார். பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம்! காவல்துறை அதிகாரிகள், பள்ளியில் விசாரணை நடத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில், தமிழக பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், ''இதுபோன்று மாணவிகளை தனியாக அமர வைத்து தேர்வெழுத வைக்கக்கூடாது என்று அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும்,'' என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், '' தனியார் பள்ளி மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பள்ளி முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குழந்தைகள் மீதான ஒடுக்குமுறை எவ்வகையாயினும் பொறுத்துக்கொள்ள முடியாது. அன்பு மாணவி தனியாக அமரவில்லை! நாங்கள் இருக்கிறோம். இருப்போம்,'' என்று பதிவிட்டுள்ளார். மாதவிடாய்: சிறுவர்களும் ஆண்களும் இதைப் பற்றி அறிவது ஏன் முக்கியமானது?22 மே 2023 நேபாளம்: மாதவிடாய் காலத்தில் பெண்களை தனிமைப்படுத்தினால் சிறை10 ஆகஸ்ட் 2017 கல்வித்துறை விசாரணை பள்ளியில் விசாரணை நடத்தியது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) கோமதி, ''பள்ளியில் விசாரணை நடத்தியுள்ளோம். பெற்றோரிடம் இன்னும் பேசவில்லை. முதற்கட்ட நடவடிக்கையாக பள்ளி முதல்வர் ஆனந்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அடுத்தகட்ட நடவடிக்கை கல்வித்துறை உயரதிகாரிகளால் மேற்கொள்ளப்படும்.'' என்றார். விசாரணை அறிக்கையை முதன்மை கல்வி அலுவலருக்கு வழங்கவுள்ளதாகவும், அதன்பின் இறுதிக்கட்ட நடவடிக்கை இருக்குமென்று மாவட்ட கல்வி அலுவலர் கூறினார். ''மாதவிடாய் காலங்களில் மாணவிகளின் ஆரோக்கியத்திற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று பள்ளிகளுக்கு சுற்றறிக்கை தரப்பட்டுள்ளது. முக்கியமாக நாப்கின் மிஷினும், அதை எரியூட்டும் இடமும் இருக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனி இதில் கூடுதல் கவனத்துடன் செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார் மாவட்ட கல்வி அலுவலர் கோமதி. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx255zkpenwo
-
இலங்கை மின்சார சபையின் புதிய திட்ட அறிவிப்பு இன்று வெளியாகும்
11 APR, 2025 | 09:21 AM இலங்கை மின்சார சபை (CEB) இன்று வெள்ளிக்கிழமை (11) நாட்டின் மின்சாரத் துறையை மாற்றும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த புதிய முயற்சியை அறிவிக்கவுள்ளது. இந்த முக்கிய அறிவிப்பு இன்றையதினம் மதியம் 12 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நாட்டின் மின்சாரம் விலை நிர்ணயம், வலுவான மின் கட்டமைப்பு மற்றும் நிலைத்துறையான பசுமை ஆற்றல் நோக்கில் இலங்கை மேற்கொள்கின்ற பயணத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நாட்டின் ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்யும் முறையை முற்றிலும் மாற்றக்கூடிய சக்தி இந்த திட்டத்துக்கு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/211766
-
ஆதிகால மனிதன் நடமாடிய அதிசய இடம்!
ஜுவாலாபுரம்: ஆதிகால மனிதன் நடமாடிய அதிசய இடம், சான்றாக விளங்கும் சாம்பல் ரூ.1000க்கு விற்கப்படும் அவலம் படக்குறிப்பு,74,000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் இந்தியாவில் சுற்றித் திரிந்ததாக ஜுவாலாபுரம் ஒரு கருதுகோளை முன்வைக்கிறது கட்டுரை தகவல் எழுதியவர், பல்லா சதீஷ் பதவி, பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஆந்திராவில் ஆதிகால மனிதன் நடமாடிய அதிசய இடம் உள்ளது. இந்தியாவில் மனித கால் தடம் எப்போது பதிந்தது என்பதற்கான ஆதாரம், கண்டங்களைத் தாண்டி மனித இனம் பயணித்ததற்கான உறுதியான சான்று, நந்தியால் மாவட்டத்தின் சாம்பல்களில் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வரலாற்றுத் தளங்கள் குறித்து அறியாதவர்கள், அந்த சாம்பலை ஒரு டன் ஆயிரம் ரூபாய் என விற்று வருகின்றனர். மனித வரலாற்றுக்கான ஆதாரங்கள், மூட்டைகளாகக் கட்டப்பட்டு டன் கணக்கில் விற்கப்படுவது குறித்து ஆச்சர்யமாக இருக்கிறதா? இது, ஆந்திராவின் நந்தியால் மாவட்டத்தில் நடந்துகொண்டிருக்கிறது. முன்பு கர்னூல் மாவட்டமாக இருந்து தற்போது நந்தியால் மாவட்டமாக மாறியுள்ள பெட்டன்சரா யாகன்டிக்கு அருகே ஜுவாலாபுரம் எனும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அரிதான சாம்பல் கிடைத்துள்ளது. வெற்றி நடை போடும் டெல்லி அணி - கே.எல்.ராகுலின் அதிரடிக்கு ஆர்சிபி பணிந்தது ஏன்?4 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரே ஒரு வீடியோவால் தர்பூசணி விலை கிலோ ரூ.2-க்கு வீழ்ந்து விட்டதாக விவசாயிகள் வேதனை9 ஏப்ரல் 2025 அரிய வகை சாம்பல் இங்கு வந்தது எப்படி? படக்குறிப்பு,ஒரு டன் சாம்பல் ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவதாக சில கிராமவாசிகள் பிபிசியிடம் தெரிவித்தனர் நிலவியலாளர்களின் கூற்றுப்படி, "சுமத்ரா தீவில் (தற்போதைய இந்தோனீசியா) 74,000 ஆண்டுகளுக்கு முன்பு தோபா எனும் எரிமலை வெடித்தது. அந்த எரிமலை வெடிப்பின் தாக்கம் சுமார் 10 ஆண்டுகளுக்கு நீடித்தது. அதனால் ஏற்பட்ட எரிமலைக் குழம்பு, பூமி முழுதும் பரவியது. இதனால் உருவான சாம்பல் அடுக்கு, சூரிய ஒளி பூமியை அடையாமல் தடுத்தது. இது, சூரிய ஒளி இல்லாமல் ஒரு வகையான பனி யுகத்தை உருவாக்கியது. அந்த எரிமலை வெடிப்பால் மனித இனம் கிட்டத்தட்ட அழிந்து போனது. அந்தப் பேரழிவிலிருந்து மிகக் குறைந்த சதவிகித மக்களே பிழைத்தனர்." அந்த எரிமலை வெடிப்பின் சாம்பல் இந்தியாவின் சில பகுதிகளிலும் விழுந்தது. அந்த சாம்பலின் பெரும்பகுதி ஜுவாலாபுரத்தில் உள்ளது. இந்த சாம்பலைக் கண்டறிவது அரிதானது. ஜுவாலாபுரத்தில் அந்த சாம்பலை கண்டறிந்த விஞ்ஞானி ரவி கோரிசெட்டர், அங்கு அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டார். அந்த சாம்பல் அடுக்குக்கு மேலேயும் கீழேயும், மக்கள் பயன்படுத்திய கற்கருவிகளின் தடங்கள் இருந்ததைக் கண்டு விஞ்ஞானிகள் ஆச்சர்யமடைந்தனர். ஏனெனில், 60,000 ஆண்டுகளுக்கு முன்புதான் ஆப்பிரிக்காவில் இருந்து மனித இனம் இந்தியாவுக்கு வந்தது என முன்பு விஞ்ஞானிகள் மதிப்பிட்டு இருந்தனர். ஆனால், அந்தக் கூற்றுக்கு ஜுவாலாபுரம் சவால் விடுத்தது. 'உலகமே அழிகிறது என நினைத்தேன்' - 1966இல் ஸ்பெயினில் விழுந்த 4 அமெரிக்க அணுகுண்டுகள் 'தயிர் சாதத்துடன் ஆரம்பம்' : சைவ உணவுகளையே விரும்பிய ஒளரங்கசீப் உள்ளிட்ட முகலாய பேரரசர்கள் காத்தவராயன் போன்ற நாட்டார் தெய்வங்கள் 'சாதி ஆணவக் கொலையால்' உதித்தவையா? ஓர் ஆய்வு சென்னை அருகே விநோதமான எலும்புக்கூடு சிலைகள் உள்ள இந்த கல்லறை யாருடையது தெரியுமா? இந்த எரிமலை சாம்பல், விஞ்ஞானிகள் கூறியது போன்று 60,000 ஆண்டுகளுக்கு முன்பாக அல்லாமல், 74,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் சுற்றித் திரிந்ததாகப் புதிய கருதுகோளை முன்வைத்தது. எளிதாகக் கூறுவதென்றால், இந்தியாவின் கற்கால வரலாற்றுக்கே இந்த அகழாய்வுத் தளம் சவால் விடுத்துள்ளது. கடந்த 2009இல் பிபிசி டூ-வில் (BBC Two) 'தி இன்கிரெடிபிள் ஹியூமன் ஜர்னி' எனும் ஆவணத் தொடரில் ஜுவாலாபுரம் குறித்துப் பதிவு செய்யப்பட்டது. ரவி கோரிசெட்டருடன் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் மைக்கேல் பெட்ராக்லியா உள்படப் பல விஞ்ஞானிகள் அந்தத் தளத்தில் ஆய்வுகளை மேற்கொண்டனர். ஜுவாலாபுரம் - ஏன் சிறப்பு வாய்ந்தது? படக்குறிப்பு,ஜுவாலாபுரத்தில் அகழ்வாராய்ச்சியின்போது கண்டுபிடிக்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் பெல்லாரியில் உள்ள ராபர்ட் புரூஸ் கோட்டை சங்கனகல்லு அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளன ஜுவாலாபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள், இந்திய வரலாற்றுக்கு இரண்டு முக்கியப் பலன்களை அளித்ததாகக் கூறுகிறார் ரவி கொரிசெட்டர். "ஒன்று, இந்தியாவில் பழைய கற்கால குடியிருப்புகள் (Paleolithic) குறித்த முறையான தகவல்கள் இல்லை. ஆனால், இந்த சாம்பல்கள் அந்த இடைவெளியை நிரப்புகின்றன. இது, 74,000 ஆண்டுகள் மற்றும் அதற்குப் பிறகான அடையாளங்களை வழங்குகின்றன. இரண்டாவதாக, மனிதர்கள் இந்தியாவுக்கு 60,000 ஆண்டுகளுக்கு முன்பாக அல்லாமல், 74,000 ஆண்டுகளுக்கு முன்பு வந்ததாக முடிவு செய்கிறது" என்றார். தோபா எரிமலை வெடிப்பு, மனித இனத்தை முற்றிலுமாக அழிக்கவில்லை. மத்திய பழைய கற்காலமானது, இந்த வெடிப்புக்கு முன்பும் பின்பும் தொடர்ந்தது. ஆப்பிரிக்கா மற்றும் ஜுவாலாபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட கருவிகளில் ஒற்றுமைகள் உள்ளன. அதனால், மனித இனம் இங்கு 90,000 ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்கலாம். "ஆப்பிரிக்காவில் இருந்து மனிதர்கள் நுண் கற்காலக் கருவிகளை பயன்படுத்தி வெளியே வந்தார்கள் என்ற கோட்பாடும் தவறானது," என ரவி கொரிசெட்டர் பிபிசியிடம் தெரிவித்தார். ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் கற்காலத்துக்கு முந்தைய வரலாற்றை மீண்டும் எழுதுவதிலும் நவீன மனிதனின் முன்னேற்றத்துக்கும் ஜுவாலாபுரம் குறிப்பிடத்தக்க உறுதியான சான்றாக உள்ளது. ஆனால், இவையனைத்தும் தற்போது மாறி வருகின்றன. ஏனெனில், அந்த சாம்பலுக்குப் பின்னுள்ள பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் மனித வரலாறு, தற்போது டன் கணக்கில் விற்கப்படுகின்றது. அங்கு 90 சதவிகிதத்துக்கும் அதிகமான சாம்பல் தோண்டி எடுக்கப்பட்டு விற்கப்பட்டுள்ளது. இன்னும் விற்கப்பட்டு வருகிறது. தற்போது, ஆதிகால மனிதனின் தடங்கள் கிட்டத்தட்ட அப்பகுதியில் அழிந்து போய்விட்டன. உலக பொருளாதாரத்தில் குழப்பம்: தங்கத்தின் விலை குறையுமா? அல்லது மேலும் உயருமா?58 நிமிடங்களுக்கு முன்னர் சிஎஸ்கே கேப்டனாக மீண்டும் தோனி - ருதுராஜுக்கு என்ன ஆனது?51 நிமிடங்களுக்கு முன்னர் டன் கணக்கில் விற்கப்படும் ஆதிகால சாம்பல் படக்குறிப்பு,பிபிசி நந்தியால் மாவட்ட ஆட்சியர் ராஜ குமாரியைத் தொடர்பு கொண்டபோது, அந்த இடத்தை விரைவில் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார் மனிதர்களின் கைகளால் பக்குவமாக, கவனமுடன் அகழாய்வு செய்யப்பட வேண்டிய அந்த இடம், புல்டோசர்களால் அகழாய்வு செய்யப்படுகிறது. அக்கால மனிதர்கள் பயன்படுத்திய கருவிகள் மற்றும் பழமையான மரங்களின் எச்சங்கள் சல்லடை மூலம் பிரிக்கப்படுகின்றன. மென்மையான சாம்பல் பைகளில் விற்கப்படுகின்றன. இந்த சாம்பல் சலவை மற்றும் பாத்திரம் துலக்கப் பயன்படுத்தப்படும் பவுடர்களில் பயன்படுத்தப்படுவதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். இந்த சாம்பல், மலிவான விலையில் ஒரு டன் ஆயிரம் ரூபாய் என விற்கப்படுவதாக கிராமத்தினர் சிலர் கூறினர். எனினும், இந்த சாம்பலை எந்த நிறுவனம் வாங்குகிறது, எதற்காகப் பயன்படுத்துகிறது என்பதை பிபிசியால் சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை. அகழாய்வுப் பணிகளில் வேலை செய்துகொண்டிருந்த சிலரிடம் பிபிசி பேசியபோது, தங்களுக்கு ஒன்றும் தெரியாது என்றும் வேலைக்காக மட்டுமே இங்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தனர். ஆனால், இந்த சாம்பல் விற்பனை பல ஆண்டுகளாக நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அங்குள்ள ஓர் இடத்தின் உரிமையாளரிடமும் பிபிசி பேசியது. அவர், "இங்குள்ள அனைவரும் தங்கள் நிலத்தில் உள்ள சாம்பலைத் தோண்டி எடுத்து விற்பனை செய்கின்றனர். அதனால்தான் நானும் விற்கிறேன். அதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது," என்றார். நில உரிமையாளர்கள் ஏற்கெனவே நிலத்தைத் தோண்டி, சாம்பலை விற்றுவிட்டனர். கில்லியின் 'காரப்பொரி' சீனையும்... அஜித்தின் 'குட் பேட் அக்லி' படம் எப்படி இருக்கிறது?56 நிமிடங்களுக்கு முன்னர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு இடைநிறுத்தியது ஏன்?10 ஏப்ரல் 2025 ஜுவாலாபுரம் குறித்து தெரிய வந்தது எப்படி? படக்குறிப்பு,ரவி கொரிசெட்டர் 2004-05 வரை இரண்டு ஆண்டுகள் ஜுவாலாபுரத்தில் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டார் கர்னூல் மாவட்டத்தில் உள்ள பில்லசர்கம் குகைகள், உயிரி பரிணாம கோட்பாட்டுக்கு மிக முக்கியமான தளமாக விளங்குகிறது. இந்திய தொல்லியல் துறையின் தந்தை எனக் கருதப்படும் ராபர்ட் புரூஸ் ஃபோர்ட், முதன்முதலாக இந்த குகைகள் குறித்து எழுதினார். இந்த குகைகளில் மனித எச்சங்கள் குறித்து தொல்லியலாளர் ரவி கொரிசெட்டரின் குழு தேடியபோது, அவர் ஜுவாலாபுரம் குறித்து உள்ளூர் மக்கள் வாயிலாக அறிந்தார். 2004 முதல் 2005 வரை இரண்டு ஆண்டுகள் ஜுவாலாபுரத்தில் ரவி கொரிசெட்டர் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டார். "வழக்கமாக, ஆய்வுக்காக பழமையான தளங்களுக்குச் செல்லும்போது, புதிய விஷயங்கள் வெளிச்சத்துக்கு வரும். முன்பு கண்டறியப்படாத விஷயங்களை நீங்கள் கண்டறிவீர்கள். நான் கர்னூல் சென்றபோது, புதிய விஷயங்களை தேடினேன். அப்போதுதான் இந்திய நிலப்பரப்பு வரைபடம் மூலமாக ஜுவாலாபுரம் எனும் பெயர் குறித்து அறிந்தேன்." "எனவே அந்த உள்ளூர் மக்களிடம் பேசினேன், அவர்கள் நிறைய புதிய விஷயங்கள் குறித்துக் கூறினார்கள். யாகன்டி பகுதியைச் சேர்ந்த செங்கல ரெட்டி எனும் விவசாயி ஒருவரிடம் ஜுவாலாபுரம் மற்றும் பட்டபடு (Patapadu) ஆகிய பகுதிகளில், வெள்ளை நிறத்தில், மென்மையான சாம்பல்கள் இப்பகுதியில் உள்ளதா எனக் கேட்டபோது, அவர் எங்களை ஜுவாலாபுரத்துக்கு அழைத்துச் சென்றார்." "நான் முதலில் ஜுவாலாபுரம் சென்றபோது, தொலைவிலேயே காற்றில் தூசு பறந்தது. எனவே இங்கு ஏதாவது இருக்க வேண்டும் என்று நினைத்தேன்." மேலும் பேசியவர், "அப்பகுதிக்கு நெருங்கிச் செல்லும்போது, அங்கு என்ன தோண்டப்படுகிறது என்பதை உணர்ந்தேன், அது எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட சாம்பல். ஆனால், அங்கு ஏற்கெனவே கிராமவாசிகள் தோண்டிக் கொண்டிருந்தனர்" என்று விவரித்தார் ரவி கொரிசெட்டர். இலங்கையில் மோதிக்கு வழங்கப்பட்ட 'ஒற்றைக்கண்' சிறுத்தை படம் – இந்த விலங்கு ஏன் தேடப்படுகிறது?10 ஏப்ரல் 2025 தமிழ்நாட்டுக்கு காங்கிரஸைவிட பாஜக அதிக நிதி கொடுத்துள்ளதா? பிரதமர் மோதி சொல்வது உண்மையா?10 ஏப்ரல் 2025 "இது எரிமலை வெடிப்பு சாம்பல் என்பது அவர்களுக்குத் தெரியாது. ஆனால், அதை அவர்கள் சலவைப் பொருள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அனுப்புகிறார்கள்" என ஜுவாலாபுரத்துக்கு முதன்முறையாகச் சென்ற அனுபவத்தை நினைவுகூர்கிறார் ரவி கொரிசெட்டர். இதையடுத்து, பில்லசர்கம் சென்ற தனது குழுவில் இருந்து சிலரை ஜுவாலாபுரத்துக்கு அகழாய்வுக்காக அனுப்பினார். அவை தனியாருக்குச் சொந்தமான நிலங்கள் என்பதால், விவசாயிகளுக்குச் சிறிது பணம் கொடுத்து அங்கே பணிகளை மேற்கொண்டனர். ஓராண்டு அங்கே விடாமுயற்சியுடன் தோண்டிய நிலையில் சுவாரஸ்யமான விஷயங்கள் பல வெளியே வந்தன. "ஜுவாலாபுரம் அகழாய்வில் பழைய கற்காலத்தின் மத்திய காலக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டன. அதன் அருகில் பழைய கற்காலத்தின் தொடக்க காலக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டன. ஜுரெரு நதிக்கரையில் நுண் கற்காலக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டன. யாகண்டி கற்பாறைகளுக்கு அருகே நிலத்தில் நுண் கற்காலக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டன. பழைய கற்காலத்தில் இருந்து பெருங்கற்காலம் வரை மனித வாழ்விடம் குறித்த பல ஆதாரங்கள் சுமார் 2,000 ஏக்கர் நிலத்தில் கண்டெடுக்கப்பட்டன. கிழக்கு ஆப்பிரிக்காவை ஒத்த ஆதாரங்கள் இங்கே கண்டெடுக்கப்பட்டன" என ஜுவாலாபுரத்தின் முக்கியத்துவம் குறித்து அவர் விளக்கினார். உள்ளூர் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி படக்குறிப்பு,தொல்பொருள் ஆய்வாளர் ரவி கொரிசெட்டர் தற்போது, ஜுவாலாபுரம் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் கர்நாடகாவில் பாதுகாக்கப்படுகின்றன. கர்நாடகாவின் பெல்லாரியில் உள்ள ராபர்ட் புரூஸ் கோட்டை சங்கனகல்லு அருங்காட்சியகத்தில் கற்கருவிகள் மற்றும் பிற முக்கிய நினைவுச் சின்னங்களை ரவி பாதுகாத்து வைத்துள்ளார். "நான் அங்கு சென்றபோது, அவர்கள் சாம்பலை விற்றுக் கொண்டிருந்தார்கள். அதன் முக்கியத்துவத்தை ஏற்கெனவே உணர்ந்து, அதைப் பாதுகாப்பதற்குப் பதிலாக ஒருவேளை யாராவது வணிக ரீதியாக விற்கத் தொடங்கியிருக்கலாம்." "அந்தப் பகுதியைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து உள்ளூர் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றோம். நாங்கள் அங்கு சென்றபோது, அதில் 50 சதவிகிதம் சேதமடைந்திருந்தது. கடந்த பத்து ஆண்டுகளாக நான் அங்கு சென்று வருகிறேன். வேறு ஏதாவது அங்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் நான் தொடர்ந்து அங்கு செல்கிறேன். ஆனால், நீங்கள் தோண்டியதை ஏற்கெனவே மறைக்கும்போது, வேறு எதையும் நீங்கள் கண்டுபிடிக்க முடியாது." "நாங்கள் இதுகுறித்து மக்களுக்கு விளக்கத் தொடங்கினோம். வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து கிராம மக்களுக்கு விளக்கினோம். பள்ளிகளில் இதுகுறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். ஆனால் இப்போது, அதைச் சேமித்தாலும், அதனால் எந்தப் பயனும் இல்லை. அதில் பெரும்பகுதி சேதமடைந்துவிட்டது," என்று ரவி கோரிசெட்டர் பெருமூச்சுவிட்டார். டிரம்ப் சீனாவுடன் தீவிரமாக மோதுவது ஏன்? உலகளாவிய வர்த்தகத்தில் இதன் தாக்கம் என்ன?10 ஏப்ரல் 2025 கர்நாடகாவில் தேர்வு முடிவுகள் பற்றிப் பொய் சொன்ன மகளைக் கொன்ற தாய் - இன்றைய முக்கிய செய்திகள்10 ஏப்ரல் 2025 முக்கியமான விஷயங்களை மறைத்து, அவற்றைக் கொண்டு வந்து பாதுகாப்பாக வைத்ததாகவும், இங்கு வந்து யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம் என்றும் அவர் கூறினார். ஜுவாலாபுரத்தில் கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை யார் செய்தார்கள் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். "ஏனென்றால் அங்கு கிடைக்கும் கருவிகள் ஒரு பகுதியளவு சான்றுகள் மட்டுமே. மனித எலும்புகள் கிடைத்தால், அவை உறுதியான ஆதாரமாக இருக்கும். அந்தக் கருவிகளை யார் உருவாக்கினார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காக இன்னும் அதிக ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும். ஆனால் அங்குள்ள சாம்பல் வணிகம் இந்த இடத்தை ஆராய்ச்சிக்குப் பொருத்தமற்றதாக மாற்றுகிறது. உள்ளூர் நிர்வாகத்தில் யாரும் அதைத் தடுக்க முயலவில்லை," என்று ரவி குறிப்பிட்டார். இது குறித்து பிபிசி நந்தியால் மாவட்ட ஆட்சியர் ராஜ குமாரியைத் தொடர்பு கொண்டபோது, அந்த இடத்தை விரைவில் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். 'உலகமே அழிகிறது என நினைத்தேன்' - 1966இல் ஸ்பெயினில் விழுந்த 4 அமெரிக்க அணுகுண்டுகள்10 ஏப்ரல் 2025 தமிழ்நாட்டுக்கு காங்கிரஸைவிட பாஜக அதிக நிதி கொடுத்துள்ளதா? பிரதமர் மோதி சொல்வது உண்மையா?10 ஏப்ரல் 2025 ஜுவாலாபுரத்துக்கு இந்த பெயர் எப்படி வந்தது? படக்குறிப்பு, உள்ளூர்வாசிகள் தங்கள் விருப்பப்படி சாம்பலைத் தோண்டி எடுத்து விற்கிறார்கள் சமஸ்கிருதத்தில் ஜுவாலா என்றால் நெருப்பு என்று பொருள். அக்னி மலையில் இருந்து விழும் சாம்பலில் இருந்து இந்த கிராமம் அதன் பெயரைப் பெற்றதாகப் பலர் நம்புகிறார்கள். இருப்பினும், கிராமத்தின் பெயர் முதலில் ஜோலா, அதாவது "சோளம்" என்றும், படிப்படியாக அது ஜாவா என்று மாறியதாகவும் சிலர் கூறுகிறார்கள். இந்த கிராமத்துக்கு அருகிலுள்ள மலைகளில் உள்ள பாறை குகைகளில் ஆதிகால மனிதர்களால் வரையப்பட்ட ஓவியங்களும் உள்ளன. இவை வர்ணம் பூசப்பட்ட பாறை முகாம்கள் (Painted Rock Shelters) என்று அழைக்கப்படுகின்றன. இந்த கிராமத்துக்கு அருகில் மட்டுமல்ல, யாகண்டியின் அருகிலும், பில்லசர்கம் குகைகள் மற்றும் விலங்குகளின் எச்சங்கள் உள்ளன. இவை அனைத்தும் சேர்ந்து மனிதகுல வரலாற்றில் முக்கிய நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள பயனுள்ளதாக இருக்கும். "யாகண்டி, பெட்டாஞ்சரா மற்றும் பில்லசர்கம் சுற்றி நூற்றுக்கணக்கான வர்ணம் பூசப்பட்ட பாறை முகாம்கள் கண்டுபிடிக்கப்பட்டன. யாகண்டியை சுற்றி இதுபோன்ற பல குகைகள் உள்ளன," என்று ரவி கூறினார். ஒருங்கிணைந்த கர்னூல் மாவட்டத்தின் சுற்றுப்புறங்களில் மனித குலத்தின் வரலாற்றுக்கு முந்தைய வரலாறு மற்றும் இந்தியாவின் கற்கால வரலாற்றின் வளமான சான்றுகள் உள்ளன. ஆனால் அந்த இடங்களின் அழிவு தொடர்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cq677np07e2o
-
பட்டலந்த வதை முகாமின் பின்னணியில் இருந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
பட்டலந்த வதை முகாமுக்கும் ரணிலுக்கும் நெருங்கிய தொடர்பு; சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கை - அமைச்சர் சமந்த வித்யாரத்ன Published By: DIGITAL DESK 2 10 APR, 2025 | 09:08 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) ஜே. ஆர். ஜயவர்த்தன அதிகாரத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியதை போன்று தான் அவரது மருமகனான ரணில் விக்கிரமசிங்கவும் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தினார். அதன் பெறுபேறு தான் பட்டலந்த சித்திரவதை முகாமாகும். அவ்வாறிருக்கையில், 1988 மற்றும் 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களை எமது கணக்கில் வைப்பிலிடுவதற்கு ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கிறார். எவரையும் பழிவாங்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது . உண்மை நிச்சயம் வெளிவரும். சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுக்கப்படு மென பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) நடைபெற்ற பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, பட்டலந்த சித்திரவதை முகாமில் பல்கலைக்கழக மாணவர்கள், சட்டத்தரணிகள், தொழிற்சங்கவாதிகள் உட்பட பலர் படுகொலை செய்யப்பட்டனர். இது வெறும் அறிக்கையல்ல, இலங்கையின் ஹிட்லர் பற்றி இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்காலப்பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாதத்தை அரச பயங்கரவாதம் என்றே அழைக்க வேண்டும். பட்டலந்த வீட்டுத்தொகுதிக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இளைஞர்களின் இரத்தம் மற்றும் உடலை ரணில் விக்கிரமசிங்க நிலத்துக்கு உரமாக்கினார். இந்த சித்திரவதை முகாமை போன்று நாடு முழுவதும் அரச ஆதரவுடன் பல சித்திரவதை முகாம்கள் காணப்பட்டன. ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் சித்திரவதை முகாம்களுக்கு தலைமை தாங்கினார்கள். உண்மைக்காக போராடியே பலர் உயிர் தியாகம் செய்தார்கள். அநீதியாக கொல்லப்பட்டவர்களுக்கு நிச்சயம் நீதியை நாங்கள் பெற்றுக்கொடுப்போம். பட்டலந்த விசாரணை அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முறையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். பட்டலந்த விவகாரத்தை மக்கள் விடுதலை முன்னணி மீது ரணில் மேற்கொண்ட முயற்சிகள் அவருக்கே எதிராக திரும்பியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன அதிகாரத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியதை போன்று தான் அவரது மருமகளான ரணில் விக்கிரமசிங்க அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தினார். அதன் பெறுபேறு பட்டலந்த சித்திரவதை முகாம். 1988 மற்றும் 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களை எமது வைப்பிலிடுவதற்கு ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கிறார். உண்மை நிச்சயம் வெளிவரும். எவரையும் பழிவாங்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/211726
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
வெற்றி நடை போடும் டெல்லி அணி - கே.எல்.ராகுலின் அதிரடிக்கு ஆர்சிபி பணிந்தது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் பெங்களூருவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 24வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்தது. 164 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்னும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 13 பந்துகள் மீதமிருக்கையில் 169 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. டெல்லி கேபிடல்ஸ் அணி தொடர்ந்து 4 போட்டிகளிலும் வென்று தோல்வியே இல்லாமல் 8 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது. ஆர்சிபி அணி 5 போட்டிகளில் தொடர்ந்து 2வது தோல்வியை சொந்த மண்ணில் சந்தித்து 6 புள்ளிகளுடன் 3வது இடத்துக்குச் சரிந்துள்ளது. இந்தியா வழியாக சரக்குகளை ஏற்றுமதி செய்ய வங்கதேசத்துக்கு மறுப்பு – இந்த முடிவால் இந்தியாவுக்கு நஷ்டமா?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ராமதாஸ் - அன்புமணி மோதல்: கட்சிக்குள் பிளவு ஏன்? கூட்டணி கணக்குகள் காரணமா?3 மணி நேரங்களுக்கு முன்னர் ஆட்டத்தை மாற்றிய ஒற்றை மனிதர் பட மூலாதாரம்,GETTY IMAGES மிகச்சிறிய பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இதுபோன்ற குறைந்த ஸ்கோரை அடித்துவிட்டு ஆர்சிபி அணி டிபெண்ட் செய்வது மிகவும் கடினம். இரு அணிகளிலும் பிக்ஹிட்டர்கள் அதிகமாக இருக்கிறார்கள். இதில் ஆர்சிபி ஹிட்டர்களை டெல்லி பந்துவீச்சாளர்கள் ஒடுக்கி வெற்றி கண்டனர். டெல்லி அணி தொடக்கத்தில் தடுமாறினாலும் கே.எல்.ராகுல் என்ற ஒற்றை விக்கெட்டை எடுத்திருந்தால் ஆட்டம் தலைகீழாக மாறியிருக்கும். ஆனால், கடைசி வரை ராகுல் விக்கெட்டை ஆர்சிபி பந்துவீச்சாளர்களால் எடுக்க முடியாமல் தோல்வி அடைந்தனர். தொடர்ந்து 2வது போட்டியாக டெல்லி அணியின் வெற்றிக்கு காரணமாக கே.எல்.ராகுல் அமைந்துள்ளார். சிஎஸ்கே அணிக்கு எதிராக ராகுல் அடித்த ஸ்கோர் அந்த அணிக்கு சம்மட்டி அடியாக இறங்கியது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக ராகுல் 53 பந்தகளில் 93 ரன்கள்(6 சிக்ஸர், 7 பவுண்டரி) சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து டெல்லி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றதோடு, ஆட்டநாயகன் விருதையும் வென்றார். ஆர்சிபி அணியைப் பற்றி சுருக்கமாகச் சொல்லவதென்றால், முதல் 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் சேர்த்தது. கடைசி இரு ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் சேர்த்தது. நடுப்பகுதி 15 ஓவர்களில் வெறும் 74 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. இதுதான் ஆர்சிபி அணியின் நேற்றைய பேட்டிங்கின் சுருக்கம். கோவை: பருவமெய்திய சிறுமி வகுப்பு வாசலில் அமர்ந்து தேர்வு எழுதிய விவகாரம் – என்ன நடந்தது?10 ஏப்ரல் 2025 உலக பொருளாதாரத்தில் குழப்பம்: தங்கம் விலை குறையுமா அல்லது மேலும் உயருமா?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தொடக்கத்தில் தடுமாறிய டெல்லி பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியை 163 ரன்களில் சுருட்டிவிட்டோம் என்று டெல்லி அணி மகிழ்ச்சியாக இருந்தாலும் அது களத்துக்கு வரும்போது நிலைக்கவில்லை. தொடக்கத்திலேயே ஆர்சிபி அணி 30 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை எடுத்து டெல்லி அணியைத் தடுமாற வைத்தது. 11 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள்தான் டெல்லி எடுத்திருந்தது. ஆனால், டிரிஸ்டன் ஸ்டெப்ஸ், ராகுல் கூட்டணி 5வது விக்கெட்டுக்கு 6.5 ஓவர்களில் 102 ரன்கள் சேர்த்து, 13 பந்துகள் மீதமிருக்கும்போது வெற்றி பெற வைத்தனர். அதாவது 7 ஓவர்களில் 102 ரன்களை இருவரும் சேர்த்துள்ளனர். முதல் 11 ஓவர்களில் டெல்லி அணி 68 ரன்களே சேர்த்தநிலையில் அடுத்த 7 ஓவர்களில் 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைந்துள்ளது. ஆர்சிபி அணி தங்களுக்குக் கிடைத்த தருணத்தைப் பயன்படுத்தத் தவறிவிட்டது. 4 விக்கெட்டுகளை விரைவாக எடுத்த ஆர்சிபியால் அடுத்ததாக ஒரு விக்கெட்டைக்கூட எடுக்க முடியவில்லை. இந்த ஒரு விக்கெட்டில்தான் ஆர்சிபி அணி தோற்றுள்ளது. வியக்க வைத்த ராகுலின் அற்புதமான ஆட்டம் கே.எல்.ராகுல் இந்திய அணியில் மட்டுமல்ல ஐபிஎல் தொடரில் எந்த அணியிலும் எந்த இடத்திலும் சிறப்பாக ஆடக்கூடியவர் என்பதை ஒவ்வொரு போட்டியிலும் நிரூபித்துள்ளார். தொடக்க வீரராக வந்து அதிரடியாக ஆடக் கூடியவர், நடுப்பகுதியில் வந்து ஆங்கர் ரோல் எடுத்தும் விளையாட முடியும் என்பதை நேற்றைய ஆட்டத்தில் நிரூபித்துவிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லி அணயின் டாப் ஆர்டர் பேட்டர்கள் 3 பேரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். கடந்த சீசனில் சிறப்பாக ஆடியதை நம்பி ப்ரேசர் மெக்ருக்கை ஏலத்தில் தக்கவைத்து டெல்லி அணி எடுத்தது. இதுவரை ஒரு போட்டியில்கூட அவர் சிறப்பாக பேட் செய்யவில்லை. அபிஷேக் போரெலும் அதே நிலைதான். டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, ராகுல் தனது ரன் வேகத்தைக் குறைத்து 29 பந்துகளில் 29 ரன்கள்தான் சேர்த்திருந்தார். 7 ரன்களுடன் இருந்தபோது ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் கேட்சை நழுவவிட்டு ராகுலுக்கு வாய்ப்பளித்தார். 11வது ஓவரின்போது டெல்லி அணியின் வெற்றி சதவிகிதம் 67 சதவிகிதத்தில் இருந்து 14.31 சதவிகிதமாகக் குறைந்தது. அதன்பின் ராகுலின் அதிரடியால் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் எங்காவது ஒளிந்து கொள்ளலாமா என்று கேட்கும் அளவுக்கு பந்துவீச பயந்தனர். ராகுல் 29 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் தொடங்கிய அதிரடி ஆட்டத்தால் அடுத்த 8 பந்துகளில் தனது அரைசத்ததை நிறைவு செய்தார். குர்னல் பாண்டியா, லிவிங்ஸ்டோன் ஓவர்களில் சிக்ஸர், பவுண்டரி எனப் பறக்கவிட்டார். டெல்லி அணி கடைசி 6 ஓவர்களில் வெற்றிக்கு 65 ரன்கள் தேவைப்பட்டது. யஷ் தயால் பந்துவீச்சில் பவுண்டரி, சிக்ஸர் விளாசிய ராகுல் 22 ரன்கள் சேர்த்து பதற்றத்தைக் குறைத்தார். சூயஷ் ஷர்மா பந்துவீச்சில் ஸ்டெப்ஸ் சிக்ஸர், பவுண்டரி என விளாச வெற்றிக்கு அருகே டெல்லி சென்றது. யஷ் தயால் வீசிய ஓவரில் ராகுல் 2 சிக்ஸர்கள், பவுண்டரி விளாசி வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ராகுல் முதல் 29 பந்துகளில் 100 ஸ்ட்ரைக் ரேட்டிலும், அடுத்த 24 பந்துகளில் 64 ரன்கள் என 266 ஸ்ட்ரைக் ரேட்டிலும் ஆடினார். கே.எல்.ராகுலால் இப்படியும் ஆட முடியுமா என அனைவரையும் வியக்க வைத்தார். சிஎஸ்கே கேப்டனாக மீண்டும் தோனி; ருதுராஜுக்கு என்ன ஆனது?56 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் மோதிக்கு வழங்கப்பட்ட 'ஒற்றைக்கண்' சிறுத்தை படம் – இந்த விலங்கு ஏன் தேடப்படுகிறது?10 ஏப்ரல் 2025 ஆர்சிபியின் நிலையற்ற ஆட்டம் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபி அணியின் பில் சால்ட், கோலி ஆட்டத்தைத் தொடங்கிய வேகத்தைப் பார்த்தபோது, 250 ரன்களை எட்டிவிடும் எனக் கருதப்பட்டது. ஸ்டார்க் பந்துவீச்சில் சால்ட் சிக்ஸர், பவுண்டரி என 30 ரன்கள் சேர்த்தார். ஏனென்றால் 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி ஆர்சிபி 53 ரன்களை தொட்டது, அதில் 3 சிக்ஸர்களும் அடக்கம். ஆனால் அடுத்த 3 ஓவர்களில் ஆர்சிபி அணி 11 ரன்கள் சேர்த்து 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. விப்ராஜ் நிகம் பவர்ப்ளேவில் பந்துவீச வந்தவுடனே ஆர்சிபியின் ரன்ரேட் படுத்துக் கொண்டது. தடுமாறிய தேவ்தத் படிக்கல் ஒரு ரன்னில் முகேஷ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ஆர்சிபி பவர்ப்ளேவில் 64 ரன்கள் சேர்த்தது. அதன் பிறகு, விராட் கோலி 22 ரன்னில் விப்ராஜ் பந்துவீச்சில் விக்கெட்டை இழக்கவே அடுத்தடுத்து சீரான இடைவெளியில் ஆர்சிபி விக்கெட்டுகள் சரிந்தன. லிவிங்ஸ்டன் மீது பெரிய எதிர்பார்ப்புடன் ஏலத்தில் எடுத்து இதுவரை ஏமாற்றத்தையே அளித்துள்ளார். ஜிதேஷ் சர்மா(3), க்ருனால் பாண்ட்யா(18), கேப்டன் பட்டிதார்(25) என சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. ஆர்சிபி 74 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், அடுத்த 50 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நடுப்பகுதியில் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகம் சேர்ந்து ஆர்சிபி பேட்டர்களை திணறவிட்டனர். கடைசியில் களமிறங்கிய டிம் டேவிட் அதிரடியால்தான் ஆர்சிபி அணி மூச்சுவிட்டு கௌரமான ஸ்கோரை பெற்றது. அதிரடியாக ஆடிய டேவிட் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 37 ரன்கள் சேர்த்து, ஆர்சிபியின் ஸ்கோர் 150 ரன்களை கடக்க வைத்தார். டேவிட் 37 ரன்களுடனும், புவனேஷ்வர் ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆர்சிபியின் டாப் ஆர்டர் பேட்டிங் மற்றும் டிம் டேவிட் பேட்டிங்தான் ஆட்டத்தின் ஹைலைட்டாக இருந்தது. மற்றவகையில் நடுவரிசை பேட்டிங்கும், ஆட்டமும் ஏகச் சொதப்பலாக இருந்தது. காதல், வேலை என உடல் பருமனால் ஏற்படும் மனரீதியான சவால்களை எப்படி எதிர்கொள்வது?10 ஏப்ரல் 2025 84 வயதில் ஜப்பானிய தற்காப்புக் கலையில் அசத்தும் மூதாட்டி10 ஏப்ரல் 2025 களமாடிய ரிஸ்ட் ஸ்பின்னர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES சின்னசாமி மைதானத்தில் நேற்று ஹீரோக்களாக இருந்தவர்கள் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகம் இருவர்தான். 8 ஓவர்கள் வீசிய இருவரும் 35 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தனர். இதில் 23 டாட் பந்துகளும் அடக்கம். நடுப்பகுதி ஓவர்களில் ஆர்சிபி பேட்டிங் வரிசையை ஆட்டம் காண வைத்தனர். பவர்ப்ளே ஓவரில் பந்துவீசிய நிகம் ஓவரை ஆர்சிபி பேட்டர்களால் அடிக்க முடியவில்லை. டெல்லி அணியிடம் இருக்கும் அளவுக்கு வலுவான சுழற்பந்துவீச்சு ஆர்சிபி அணியிடம் இல்லை. சூயஷ் சர்மா மட்டுமே ஓரளவுக்கு சிறப்பாகப் பந்துவீசுகிறார், லிவிங்ஸ்டோன் வழக்கமான ஆஃப் ஸ்பின்னை வீசினாலே போதுமானது. ஆனால், தேவையில்லாமல் லெக் ஸ்பின்னுக்கு நேற்று முயன்று வாங்கிக் கட்டிக்கொண்டார். டெல்லியின் வெற்றிக்கு கேஎல் ராகுல் ஒரு முக்கியக் காரணமெனில், ரிஸ்ட் ஸ்பின்னர்கள் மற்றொரு ஹீரோவாக ஜொலித்தனர். 'என் பணியை எளிதாக்கிய ராகுல்' வெற்றிக்குப் பின் டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் அக்ஸர் படேல் பேசுகையில், "4வது போட்டியையும் வென்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ஒவ்வொருவரும் நம்பிக்கையுடன் விளையாடினோம். இந்த ஆடுகளத்தில் சுழற்பந்துவீச்சு நன்றாக எடுபட்டது, நன்றாக பவுன்ஸ் ஆனது. குல்தீப் எங்கள் அணியில் பல ஆண்டுகளாக விளையாடுகிறார், நிலைத்த பந்துவீச்சை வெளிப்படுத்துகிறார். விப்ராஜ் முதல் இரு போட்டிகளில் பதற்றமாக இருந்தார், ஆனால் கடந்த ஆட்டத்தில் அவரின் பந்துவீச்சு நம்பிக்கையளித்தது. ஒவ்வொரு போட்டியிலும் விப்ராஜ் பந்துவீச்சு மெருகேறுகிறது," என்று தெரிவித்தார். மேலும், "கேப்டனின் ஆதரவும், நம்பிக்கையுமே அவருக்குப் போதும். கே.எல்.ராகுல் என் பணியை எளிதாக்கிவிட்டார். அழுத்தமான தருணங்களில் சூழலை ராகுல் மாற்றிவிட்டார். நிதானமான ஆட்டத்தில் இருந்து திடீரென ஆக்ரோஷமாக பேட் செய்வது கடினம். ராகுல் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதைச் செய்துள்ளார்" எனத் தெரிவித்தார். குடிநீர் பாட்டிலை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை கழுவ வேண்டும்?7 ஏப்ரல் 2025 டிஎன்ஏ பரிசோதனையால் பெற்றோர் குறித்து பெண்ணுக்கு தெரியவந்த அதிர்ச்சி தரும் உண்மை6 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES ஐபிஎல் தொடரின் எதிர்வரும் முக்கிய ஆட்டங்கள் இன்றைய ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடம்: சென்னை நேரம்: இரவு 7.30 சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் நாள் - ஏப்ரல் 14 இடம் – லக்னெள நேரம் - இரவு 7.30 மும்பையின் அடுத்த ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் நாள் - ஏப்ரல் 13 இடம் – டெல்லி நேரம் - இரவு 7.30 மணி ஆர்சிபியின் அடுத்த ஆட்டம் ஆர்சிபி vs ராஜஸ்தான் ராயல்ஸ் நாள் - ஏப்ரல் 13 இடம் – ஜெய்பூர் நேரம் - மாலை 3.30 மணி ஆரஞ்சு தொப்பி யாருக்கு? நிகோலஸ் பூரன்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) - 288 ரன்கள் (5போட்டிகள்) சாய் சுதர்சன் (குஜராத் டைட்டன்ஸ்) - 273 ரன்கள் (5 போட்டிகள்) மிட்ஷெல் மார்ஷ் (லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) - 265 ரன்கள் (5 போட்டிகள்) பர்ப்பிள் தொப்பி யாருக்கு? நூர் அகமது (சிஎஸ்கே) - 11 விக்கெட்டுகள் (5 போட்டிகள்) சாய் கிஷோர் (குஜராத் டைட்டன்ஸ்) - 10 விக்கெட்டுகள் (5 போட்டிகள்) முகமது சிராஜ் (குஜராத் டைட்டன்ஸ்) - 10 விக்கெட்டுகள் (5 போட்டிகள்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce8205nj4kno
-
பாமக பொதுக்குழுவை கூட்டும் அன்புமணி? புதிய 'தலைவர்' பதவியில் இருந்து டாக்டர் ராமதாஸ் அதிரடி நீக்கம்?
ராமதாஸ் - அன்புமணி மோதல்: கட்சிக்குள் பிளவு ஏன்? கூட்டணி கணக்குகள் காரணமா? பட மூலாதாரம்,@DRARAMADOSS/X கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ், சென்னை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பா.ம.க-வின் தலைவர் பொறுப்பை தானே எடுத்துக் கொள்வதாகவும் செயல் தலைவராக அன்புமணியை நியமிப்பதாகவும் அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு உள்கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்துள்ளது. "இந்த முடிவு தவறானது," என விமர்சித்துள்ளார், அக்கட்சியின் பொருளாளர் திலகபாமா. கட்சியின் கட்டுப்பாட்டை யார் எடுத்துக் கொள்வது என்பது தொடர்பாகவே இந்த மோதல் வெடித்துள்ளதாக கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள். முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ராமதாஸ் திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 10) பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இதுவரை சட்டப்பேரவைக்கோ, நாடாளுமன்றத்துக்கோ செல்வதற்கு நான் ஆசைப்பட்டதில்லை. இனியும் செல்லப் போவதில்லை என உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறினார். "என் வழிகாட்டுதலின்படி செயல்பட வேண்டும் என இளைஞர்களும் கட்சி நிர்வாகிகளும் கட்டளையிட்டதாலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் வெற்றியைக் கருத்தில் கொண்டு சில செயல் திட்டங்களை வகுத்துள்ளேன்," என செய்தியாளர் சந்திப்பில் ராமதாஸ் குறிப்பிட்டார். அதன்படி கட்சி அமைப்பில் சில மாற்றங்களை செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறிய அவர், "பா.ம.க-வை தொடங்கிய நிறுவனர் என்பதோடு இனி கட்சியின் தலைவராகவும் செயல்படுவதற்கு முடிவு செய்துள்ளேன்," எனக் கூறினார். இப்படியொரு முடிவை எடுப்பதற்கான காரணம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "அதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அதையெல்லாம் கூற முடியாது. 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களை வழிநடத்துவதற்கு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று மட்டும் பதில் அளித்தார். 2026-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் உழைக்க வேண்டும் என்பதற்காக அன்புமணி ராமதாஸை செயல் தலைவராக நியமித்துள்ளதாகவும் கட்சியின் இதர பொறுப்புகளில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். கோவை: பருவமெய்திய சிறுமி வகுப்பு வாசலில் அமர்ந்து தேர்வு எழுதிய விவகாரம் – என்ன நடந்தது?2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் மோதிக்கு வழங்கப்பட்ட 'ஒற்றைக்கண்' சிறுத்தை படம் – இந்த விலங்கு ஏன் தேடப்படுகிறது?6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,THILAGABAMA MAHENDRASEKAR/FACEBOOK படக்குறிப்பு,''இதுவரை மருத்துவர் ராமதாஸ் எடுத்த அனைத்து முடிவுகளும் சரியானது. ஆனால், இந்த முடிவு தவறு'' என திலகபாமா கருத்து 'முடிவு தவறானது' - பா.ம.க பொருளாளர் திலகபாமா ராமதாஸின் இந்த அறிவிப்பு அக்கட்சியின் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தைலாபுரம் தோட்டத்தின் முன்பு அன்புமணியின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அங்கிருந்த பா.ம.க நிர்வாகிகள் சிலர், "இது மருத்துவர் எடுத்த முடிவு. இதற்கு எதிராக ஊடகங்களில் கருத்து தெரிவிக்கக் கூடாது" எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ''பாட்டாளி மக்கள் கட்சியில் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மருத்துவர் ராமதாஸ் எடுத்த அனைத்து முடிவுகளும் சரியானது. ஆனால், இந்த முடிவு தவறு''' என தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார் பா.ம.க மாநில பொருளாளர் திலகபாமா. ''சமூகத்தின் நலன் காக்கப்பட வேண்டும் என்றால் தற்போதைய சூழலில் அன்புமணியின் தலைமையில் மட்டுமே முடியும்'' எனக் கட்சியின் தொண்டர் பதிவிட்ட கருத்தையும் தனது முகநூல் பக்கத்தில் திலகபாமா பகிர்ந்திருந்தார். ராமதாஸின் முடிவு தொடர்பாக அன்புமணியிடம் இருந்தும் விளக்கம் எதுவும் வெளிவரவில்லை. தமிழ்நாட்டுக்கு காங்கிரஸைவிட பாஜக அதிக நிதி கொடுத்துள்ளதா? பிரதமர் மோதி சொல்வது உண்மையா?9 மணி நேரங்களுக்கு முன்னர் நீட் விலக்கு சட்டப் போராட்டம் மூலம் சாத்தியமா? மு.க.ஸ்டாலின் முயற்சிக்கு பலன் கிடைக்குமா?10 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,THILAGABAMA MAHENDRASEKAR/FACEBOOK படக்குறிப்பு,முகநூலில் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்த திலகபாமா டிசம்பரில் தொடங்கிய நேரடி மோதல் அதே நேரம், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்தே மருத்துவர் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே மோதல் உருவாகிவிட்டதை அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி பா.ம.க-வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பா.ம.க-வின் இளைஞர் அணித்தலைவராக முகுந்தன் பரசுராமன் நியமிக்கப்படுவதாகவும் அன்புமணிக்கு உதவியாக அவர் செயல்பட உள்ளதாகவும் ராமதாஸ் அறிவித்தார். முகுந்தனின் நியமனத்துக்கு மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி, "கட்சியில் சேர்ந்து நான்கு மாதங்களே ஆன ஒருவருக்கு இளைஞர் அணித்தலைவர் பதவியை கொடுப்பதா? கட்சியில் அனுபவம் வாய்ந்தவர்களுக்குக் கொடுங்கள்" எனக் கூறினார். ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் மகனான முகுந்தனுக்குப் பதவி கொடுப்பதைத்தான் இவ்வாறாக அன்புமணி விமர்சித்தார். இதனை ஏற்க மறுத்த ராமதாஸ், "கட்சியில் யாராக இருந்தாலும் நான் சொல்வதைக் கேட்க வேண்டும். அவ்வாறு கேட்கவில்லையென்றால் கட்சியிலேயே நீடிக்க முடியாது" என்றார். மேலும், இது நான் உருவாக்கிய கட்சி எனக் கூறிவிட்டு முகுந்தன் பரசுராமனை இளைஞர் அணித் தலைவராக நியமிக்கப்படுவதாக ராமதாஸ் அறிவித்தார். இதனை ஏற்க மறுத்த அன்புமணி, "பனையூரில் அலுவலகம் ஒன்றைத் திறந்துள்ளேன். அங்கு வந்து தொண்டர்கள் என்னைச் சந்திக்கலாம்" எனக் கூறிவிட்டுக் கிளம்பிவிட்டார். இதன்பிறகு ராமதாஸ் - அன்புமணி இடையே சமரசத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் பா.ம.க கௌரவ தலைவர் ஜி.கே.மணி, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும் வழக்கறிருமான கே.பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் ஈடுபட்டனர். மறுநாள் (டிசம்பர் 29) தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, "கட்சியின் பொதுக்குழுவில் இதுபோன்ற காரசாரமான விவாதங்கள் நடப்பது இயல்புதான்," எனக் கூறினார். பா.ம.க ஜனநாயகக் கட்சி எனவும் அவர் குறிப்பிட்டார். அதேநேரம் முகுந்தன் பரசுராமனின் நியமனம் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டபோது, "உள்கட்சிப் பிரச்னைகளை நாங்களே பேசித் தீர்த்துக் கொள்வோம். வேறு யாரும் பேச வேண்டியதில்லை" எனவும் பதில் அளித்தார். கர்நாடகாவில் தேர்வு முடிவுகள் பற்றிப் பொய் சொன்ன மகளைக் கொன்ற தாய் - இன்றைய முக்கிய செய்திகள்10 ஏப்ரல் 2025 மோதலில் தயாரிப்பாளர் சங்கங்கள்: தனுஷ் காரணமா? தமிழ் சினிமாவில் என்ன நடக்கிறது?10 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,@DRARAMADOSS/X படக்குறிப்பு,பா.ம.க-வின் இளைஞர் அணித்தலைவராக முகுந்தன் பரசுராமன் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த பின் தந்தை மகனுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவியது கட்சிக்கு பலவீனத்தை ஏற்படுத்துமா? "கட்சியின் முக்கிய பொறுப்பில் தனது பேரன் முகுந்தன் பரசுராமனும் இருக்க வேண்டும் என ராமதாஸ் நினைக்கிறார். ஆனால், தன்னுடைய எண்ணத்தின்படி கட்சி செயல்பட வேண்டும் என அன்புமணி நினைக்கிறார். இதுவே பிரச்னைக்கு காரணமாக உள்ளது," எனக் கூறுகிறார், அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கட்சியில் வாரிசுகளை நியமிக்க மாட்டேன் எனக் கூறிய ராமதாஸ், அன்புமணியை முக்கிய பொறுப்புக்கு கொண்டு வந்தார். ராமதாஸுடன் அன்புமணி இணைந்து போவது தான் அக்கட்சிக்குப் பலனைக் கொடுக்கும். இருவரும் மோதல் போக்கைத் தொடர்ந்தால் அக்கட்சிக்கு பலவீனத்தை ஏற்படுத்தும்" எனவும் குறிப்பிட்டார். கூட்டணி காரணமா? மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "ராமதாஸின் முடிவில் அரசியல் நோக்கம் உள்ளதா எனப் பார்க்க வேண்டும். பா.ஜ.க கூட்டணியின் மீது ராமதாஸுக்கு உடன்பாடு இல்லை. ஆனால், அ.தி.மு.க கூட்டணியுடன் மனதளவில் அவருக்கு நெருக்கம் உண்டு" எனக் கூறினார். "அமித் ஷாவின் தமிழ்நாடு வருகையை ஒட்டி, அ.தி.மு.க உடன் பா.ஜ.க கூட்டணி இறுதி செய்யப்படலாம் என்ற பேச்சு நிலவுகிறது. ராமதாஸின் இந்த முடிவு, தமிழ்நாடு அரசியலில் ஏதேனும் விளைவுகளை ஏற்படுத்தலாம்" எனவும் ஷ்யாம் குறிப்பிட்டார். ஒரே ஒரு வீடியோவால் தர்பூசணி விலை கிலோ ரூ.2-க்கு வீழ்ந்து விட்டதாக விவசாயிகள் வேதனை9 ஏப்ரல் 2025 இந்தியா என்ன செய்தது? பிரபாகரனை விட்டு பிரிந்தது ஏன்? புலிகள் இயக்க முன்னாள் தளபதி கருணா பேட்டி9 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,DR S RAMADOSS/X ராமதாஸின் முடிவு தொடர்பாக பா.ம.க கௌரவ தலைவர் ஜி.கே.மணியிடம் விளக்கம் கேட்கும் முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை. பாமக சேலம் மாநகர் மாவட்ட செயலாளரும், சேலம் மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான அருளிடம் பிபிசி தமிழ் பேசியது. " இதை ஒரு பெரிய விஷயமாக பார்க்க வேண்டிய அவசியமில்லை. இது ஜனநாயகப்பூர்வமான கட்சி. அதில் எல்லாம் நடக்கத் ன் செய்யும். இதுதொடர்பாக பேசிக் கொண்டிருக்கிறோம். விரைவில் சரிசெய்யப்பட்டுவிடும்" என்று மட்டும் பதில் அளித்தார். பா.ம.க மாநில பொருளாளர் திலகபாமாவின் முகநூல் பதிவு குறித்துக் கேட்டபோது, "அதற்குள் போக விரும்பவில்லை" என்றார் - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj3xxk08kk2o
-
இலங்கையில் மோதிக்கு வழங்கப்பட்ட 'ஒற்றைக்கண்' சிறுத்தை படம் – இந்த விலங்கு ஏன் தேடப்படுகிறது?
பட மூலாதாரம்,SAJITH PREMADASA'S MEDIA UNIT கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை 6 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் ஒற்றை கண் பார்வை இழந்த பெண் சிறுத்தை தொடர்பில் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகின்றது. இலங்கைக்கான அதிகாரப்பூர்வ விஜயமொன்றை இந்திய பிரதமர் நரேந்திர மோதி அண்மையில் மேற்கொண்டிருந்தார். இதன்போது இந்திய பிரதமர் நரேந்திர மோதியை, இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்ததுடன், நரேந்திர மோதிக்கு நினைவு பரிசொன்றையும் அவர் வழங்கியிருந்தார். முன்னோக்கி செல்லும் பெண் சிறுத்தையொன்று பின்னோக்கி திரும்பி பார்க்கும் வகையிலான புகைப்படமொன்றையே சஜித் பிரேமதாஸ, நரேந்திர மோதிக்கு வழங்கியிருந்தார். இவ்வாறு இந்த புகைப்படத்திலுள்ள சிறுத்தையின் வலது கண் நீல நிறத்தில் அமைந்திருந்ததுடன், அந்த கண்ணில் பார்வையில்லை என அறிய முடிகின்றது. தமிழ்நாட்டுக்கு காங்கிரஸைவிட பாஜக அதிக நிதி கொடுத்துள்ளதா? பிரதமர் மோதி சொல்வது உண்மையா?9 மணி நேரங்களுக்கு முன்னர் டிரம்ப் சீனாவுடன் தீவிரமாக மோதுவது ஏன்? உலகளாவிய வர்த்தகத்தில் இதன் தாக்கம் என்ன?10 ஏப்ரல் 2025 ஒரு கண் பார்வை இழந்திருந்தாலும், காட்டின் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு வாழும் இந்த விலங்கு, ''இலங்கையின் இயற்கை பாரம்பரியம் மற்றும் அழகின் உண்மையாக சின்னம்'' என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார். ஒருவேளை கிளௌகோமா (பார்வை நரம்பில் சேதம்) , கண்புரை காரணமாக சிறுத்தைக்கு பார்வை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் சவால்களுக்கு மத்தியில் உயிர் வாழ்வதற்கான அடையாளமாக இது இருப்பதாகவும் சஜித் பிரேமதாஸ தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இலங்கைக்கான அதிகாரப்பூர்வ விஜயமொன்றை இந்திய பிரதமர் நரேந்திர மோதி அண்மையில் மேற்கொண்டிருந்தார். சிறுத்தை எங்கே? வில்பத்து தேசிய சரணாலயத்தில் வாழ்ந்து வரும் இந்த சிறுத்தை தொடர்பில் பிபிசி தமிழ், வில்பத்து தேசிய பூங்காவின் அதிகாரியான புபுது சுரங்க ரத்நாயக்கவிடம் வினவியது. இந்த பெண் சிறுத்தை தொடர்பில் இதுவரை எவரும் முழுமையாக ஆராய்ச்சி செய்யவில்லை என அவர் குறிப்பிடுகின்றார். ''சிறுத்தை ஒன்றுக்கு இரண்டு கண்களும் சரியாக தெரிய வேண்டும். உணவுகளை பெற்றுக்கொள்வதற்கு கண்கள் சரியாக தெரிய வேண்டும். ஆனாலும், ஒரு கண் பார்வையின்றி இந்த சிறுத்தை இருந்துள்ளது. ஒரு வருட காலமாக அந்த சிறுத்தை தொடர்பில் எமக்கு பதிவாகவில்லை.'' என அவர் குறிப்பிடுகின்றார். இந்த சிறுத்தையின் கண்கள் இயற்கையாகவே அவ்வாறு காணப்பட்டதொன்றா என பிபிசி தமிழ், குறித்த அதிகாரியிடம் வினவியது. ''அது விபத்தினால் ஏற்பட்ட ஒன்று கிடையாது. எந்தவொரு விலங்கிற்கும் அவ்வாறு ஏற்பட வாய்ப்புள்ளது. மனிதர்களை போன்று மிருகங்களுக்கும் அவ்வாறு ஏற்படலாம். இந்த சிறுத்தை பல வருட காலமாக வாழ்ந்துள்ளது. இந்த கண் பார்வை விபத்தினால் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.'' என அவர் குறிப்பிட்டார். வில்பத்து தேசிய சரணாலயத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் ஊடாக சுமார் 350 சிறுத்தைகள் வாழ்வதாக நம்பப்படுகின்றது. இலங்கை சிறுத்தை அல்லது பென்தெரா பர்டஸ் கோடியா என இந்த சிறுத்தை வகை இலங்கையில் அழைக்கப்படுகின்றது. குறிப்பாக இந்த வகையான சிறுத்தை தற்போது இலங்கையில் அருகிய இனமாக அடையாளப்படுத்தப்பட்டு, பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது முதல் முறையாக 1956 ஆம் ஆண்டு காலப் பகுதியிலேயே நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 'உலகமே அழிகிறது என நினைத்தேன்' - 1966இல் ஸ்பெயினில் விழுந்த 4 அமெரிக்க அணுகுண்டுகள்10 ஏப்ரல் 2025 84 வயதில் ஜப்பானிய தற்காப்புக் கலையில் அசத்தும் மூதாட்டி10 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,SAJITH PREMADASA'S MEDIA UNIT ''ஒன் ஐ சிறுத்தையை தேடுகிறோம்'' புத்தளம் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்கள் வரை வில்பத்து வனப் பகுதி பரவியுள்ளது, மேலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களின் எல்லையாகவும் இந்த வனப் பகுதி அமையப் பெற்றுள்ளது. கணக்கெடுப்பு பணி மற்றும் உடல் நலன் பற்றி அறிந்துக்கொள்வதற்காக ''ஒன் ஐ'' என அழைக்கப்படும் இந்த சிறுத்தையை தேடும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக வில்பத்து தேசிய பூங்காவின் அதிகாரியான புபுது சுரங்க ரத்நாயக்க தெரிவிக்கின்றார். ''நாளொன்றிற்கு சரணாலயத்திற்குள் 70 முதல் 80 வரையான சஃபாரி வாகனங்கள் செல்கின்றன. இந்த சிறுத்தை தொடர்பில் ஏதேனும் தகவல்கள் அறியும் பட்சத்தில் எமக்கு அறிவிக்குமாறு அவர்களை நாங்கள் தெளிவூட்டியுள்ளோம். அதேபோன்று, எமது வாகனங்களும் சரணாலயத்திற்குள் நாளாந்தம் செல்கின்றன. இதனூடாக அந்த மிருகத்தை கண்டுக்கொள்ள முடியுமா என ஆராய்கின்றோம்.'' என அவர் கூறினார். ''இந்த சிறுத்தையானது பெண் என்பதனால் நீண்ட தூரத்திற்கு நடந்து செல்லக்கூடிய திறனை அது கொண்டுள்ளது. ஆண் மிருகத்தை விட, பெண் மிருகம் அதிக தூரம் நடந்து செல்லும் ஆற்றலை கொண்டுள்ளது.'' என வில்பத்து தேசிய பூங்காவின் அதிகாரியான புபுது சுரங்க ரத்நாயக்க தெரிவிக்கின்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c7055vpz7eno
-
உக்ரைனிற்கு எதிராக 155 சீனர்கள் ரஸ்யாவுடன் இணைந்து போரிடுகின்றனர் - உக்ரைன் ஜனாதிபதி
10 APR, 2025 | 01:39 PM உக்ரைனிற்கு எதிராக 155 சீனர்கள் ரஸ்யாவுடன் இணைந்து போரிடுகின்றனர் என உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஸ்யாவுடன் இணைந்து போரிடும் சீனர்களின் கடவுச்சீட்டு விபரங்கள் பெயர்கள் என்னிடம் உள்ளன என தெரிவித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி சீனாவிற்கு இவர்கள் போரிடுவது நன்கு தெரியும் என குறிப்பிட்டுள்ளார். சீனா விடயம் பாரதூரமானது என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சீனா இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் ஆதாரமற்றவை என நிராகரித்துள்ளதுடன், இருவது கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுவது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது. சீனா அரசாங்கம் தனது பிரஜைகள் போர்க்களங்களை தவிர்க்கவேண்டும், எந்த வித ஆயுதமோதலிலும் இணைந்துகொள்ளக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளது என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை கைதுசெய்யப்பட்ட இரண்டு சீன இராணுவத்தினரும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதை காண்பிக்கும் வீடியோவை உக்ரைன் ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சீனப்பிரஜையொருவர் தான் சரணடைந்தவேளை ரஸ்ய படையினர் எரிவாயு குண்டுகளை தன்மீது வீசியதாகவும் தான் உயிரிழக்கப்போகின்றேன் என அச்சமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்ட ஒருவர் ரஸ்ய பிரஜாவுரிமை ரஸ்ய படையில் இணைவதற்காக தரகர் ஒருவருக்கு 2700 அமெரிக்க டொலர்களை வழங்கினார் என தகவல் வெளியாகியுள்ளது. https://www.virakesari.lk/article/211704
-
ஈரான் தனது அணுவாயுத திட்டத்தை முற்றாக கைவிடவேண்டும் அல்லது விளைவுகளை எதிர்கொள்ளவேண்டும் - வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
பி-2 போர் விமானங்களை டியாகோகார்சியாவிற்கு அனுப்பியது அமெரிக்கா? ஈரானிற்கான செய்தியா? 10 APR, 2025 | 12:48 PM அமெரிக்கா டியாகோகார்சியாவில் உள்ள தனது தளத்திற்கு பி-2 அதிநவீன போர்விமானங்களை அனுப்பியுள்ளமை தனக்கான செய்தியா என்பதை ஈரானே தீர்மானிக்கவேண்டும் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட்டர் ஹெக்செத் தெரிவித்துள்ளார். அமெரிக்கா டியாகோகார்சியாவில் உள்ள தனது தளத்திற்கு ஆறு பி-2 போர்விமானங்களை மார்ச்மாதம் அனுப்பியுள்ளது என அமெரிக்க அதிகாரிகள் ரொய்ட்டருக்கு அனுப்பியுள்ளனர். யேமன் மீதான அமெரிக்காவின் தாக்குதல் ஈரானிற்கு எதிரான அமெரிக்காவின் அழுத்தங்களிற்கு மத்தியில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. அமெரிக்க விமானப்படையிடம் 20 பி-2 போர்விமானங்களே உள்ளன அவற்றை அமெரிக்கா மிகவும் முக்கியமான தாக்குதல்களிற்கு மாத்திரம் பயன்படுத்துகின்றது. அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டுள்ள இந்த விமானங்கள் அதிசக்தி வாய்ந்த குண்டுகளையும் அணுவாயுதங்களையும் கொண்டுசெல்லும் திறன்வாய்ந்தவை, மத்திய கிழக்கில் செயற்படுவதற்கு உகந்தவை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஈரானிற்கு செய்தியை தெரிவிப்பதற்காகவா இந்த விமானங்கள் டியாகோகார்சியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளன என்ற கேள்விக்கு ஈரானே அதனை தீர்மானிக்கட்டும் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். இது மிகப்பெரிய சொத்து, இது அனைவருக்கும் ஒரு செய்தியை தெரிவிக்கின்றது என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட்டர் ஹெக்செத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி டிரம்ப் தெளிவாக உள்ளார், ஈரானிடம் அணுக்குண்டு இருக்ககூடாது, அதனை அமைதிவழிமுறை மூலம் தீர்ப்பதற்கு ஜனாதிபதி முயல்கின்றார் என நம்புகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/211698
-
பூமிக்கு அடியில் ஏவுகணை நகரம் அமைத்த ஈரான்; வீடியோ வெளியீடு
Missile City-ஐ பகிரங்கமாக வெளிப்படுத்திய இரான்; US - Israel-க்கு பாதிப்பா? இரானின் "ஏவுகணை நகரங்கள்" என்பவை என்ன? இரான், தற்போது இதுகுறித்த தகவலை பகிர்ந்து கொள்வதற்கான காரணம் என்ன? இது மத்திய கிழக்கில் மோதல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளில் எத்தகைய பங்கு வகிக்கும்? "Missile cities" is a term used by Iran's military force - the Islamic Revolutionary Guard Corps (IRGC) - to describe large underground missile bases. These bases are a series of vast, deep and interwoven tunnels across the country, often located in mountainous, strategic areas. They are used to store, prepare and launch ballistic and cruise missiles and other strategic weapons such as drones and air defence systems. According to IRGC commanders, these missile cities are not just missile storage sites, but some of them are also factories "for the production and preparation of missiles before they become operational". The exact location of these missile bases is unknown and has never been officially revealed. why is Iran choosing to reveal new capabilities now and what does it mean for potential conflict in the Middle East? இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
-
யாழ். அச்சுவேலி கூட்டுறவுச் சங்க காணியும் விடுவிப்பு
10 APR, 2025 | 09:08 PM யாழ்ப்பாணம் அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைமை காரியாலய கட்டடம் மற்றும் அதனை சூழவிருந்த சுமார் 08 பரப்பு காணி இன்று வியாழக்கிழமை (10) இராணுவத்தினரால் விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 30 வருட காலத்திற்கு மேலாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த காணி மற்றும் அதனுள் இருந்த கட்டடம் என்பவற்றை வலி கிழக்கு பிரதேச செயலரிடம் இராணுவத்தினர் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக கையளித்த நிலையில், பிரதேச செயலரினால் அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்க பொது முகாமையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது . இதுவரை காலமும் மாற்றிடம் ஒன்றில் தலைமை காரியாலயம் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/211736
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
LIVE 24th Match (N), Bengaluru, April 10, 2025, Indian Premier League Royal Challengers Bengaluru 163/7 Delhi Capitals (5/20 ov, T:164) 31/3 DC need 133 runs in 90 balls. Current RR: 6.20 • Required RR: 8.86 Win Probability: DC 41.26% • RCB 58.74%
-
தமிழகத்தில் இரண்டாம் இடத்தில் இருந்து முதலிடத்திற்கு நகரும் தமிழ்த் தேசியம்
சீமான் ஏன் பெரியாரை தொடர்ந்து குறிவைக்கிறார்? சமஸ் உடன் பளிச் உரையாடல் | Seeman | Periyar
-
பட்டலந்த வதை முகாமின் பின்னணியில் இருந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
10 APR, 2025 | 04:31 PM 1977 முதல் 1994 ஆம் ஆண்டுவரை இந்நாட்டை கொலை களமாக்கிய ஐக்கிய தேசியக் கட்சி பாவிகளே, பட்டலந்த வதை முகாமின் சூத்திரதாரிகளும் கூட. எனவே, பட்டலந்த வதை முகாமின் பின்னணியில் இருந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்தினார். பட்டலந்த வதை முகாம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு, ”நல்ல வழியில் நாம் அரசியலை முன்னெடுத்து வந்த வேளை 1983ஆம் ஆண்டு எமது கட்சி தடைசெய்யப்பட்டது. ஜுலை கலவரத்தை அடிப்படையாகக்கொண்டே எமது கட்சி மீது தடை விதிக்கப்பட்டது. அன்று ஏற்பட்ட கறுப்பு ஜுலையென்பது இன்றளவிலும் கறுப்பு புள்ளியாகவே இருந்துவருகின்றது. தடையை நீக்குமாறு ஜனாதிபதி முதல் பலரிடம் கோரிக்கை விடுத்தோம். பலன் கிட்டவில்லை. இதற்கிடையில் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு எமது உறுப்பினர்களை கொன்றொழித்தனர். நாட்டை நாசமாக்குகின்ற ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டவேளை, நாடு காட்டிக்கொடுக்கப்பட்ட வேளையில்தான் அதற்கு எதிராகவே 1987 மற்றும் 1989களில் எமது வீரமறவர்கள் வீறுகொண்டெழுந்தனர். அவர்கள் கொன்று புதைக்கப்பட்டனர். இவ்வாறு புதைக்கப்பட்டவர்கள் விதைக்கப்பட்டவர்களாக மீண்டெழுந்திருக்கின்றார்கள். உண்மையை ஒருபோதும் மூடிமறைக்க முடியாது. உண்மைகள் தற்போது வெளிவர ஆரம்பித்துள்ளன. பட்டலந்த வதை முகாம் கொலையாளிகள், சித்திரைவதை செய்தவர்கள், இதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். வடக்கு மற்றும் மலையக மக்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கெல்லாம் நீதி கிடைக்கப்பட வேண்டும்" என்றார். https://www.virakesari.lk/article/211724
-
நாட்டில் அதிகரித்து வரும் சிக்கன்குன்யா; மக்களே எச்சரிக்கை
Published By: DIGITAL DESK 3 10 APR, 2025 | 04:31 PM நாட்டில் நுளம்புகளால் பரவும் சிக்கன்குன்யா நோய் அதிகரித்து வருவதால் பொது சுகாதாரத்துக்கு கடும் அச்சுறுத்தலாக உள்ளதாக என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தொற்றுநோயியல் பிரிவின் வைத்தியர் குமுது வீரகோன் தெவித்துள்ளதாவது, சிக்குன்குன்யா வைரஸ் முதன்முதலில் 1956 ஆம் ஆண்டு தன்சானியாவில் கண்டறியப்பட்டது. இந்நோய் 1960 ஆம் ஆண்டு இலங்கைக்கும் பரவியது. உலகளாவிய ரீதியில் 115 நாடுகளுக்கு சிக்கன்குன்யா நோய் பரவியுள்ளது. 2 முதல் 3 நாட்கள் வரை நீடித்த காய்ச்சல், மூக்கு மற்றும் கைகளில் நிறமாற்றம், தோல் வெடிப்புகள், பல ஆண்டுகளாக நீடிக்கும் மூட்டு வலி மற்றும் அன்றாட நடவடிக்கைகளைச் செய்வதில் சிரமம் ஆகியவை இந்நோய்க்கான அறிகுறிகளாகும். நுளம்புகள் பெருகும் இடங்களை கட்டுப்படுத்துவதால் டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்கள் ஏற்படுவதை குறைத்துக் கொள்ள முடியும். நுளம்புகளில் 75 சதவீதமானவை வெளிப்புறங்களிலும், 53 சதவீதமானவை பாடசாலைகளிலும், 33 சதவீதமானவை பிராந்தியப் பகுதிகளிலும் உற்பத்தி ஆகின்றன. சிக்கன்குன்யா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால், ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/211723
-
குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திலிருந்து விசேட அறிவிப்பு
Published By: VISHNU 10 APR, 2025 | 08:06 PM ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் பொதுமக்களுக்கு வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான ஒரே நாள் மற்றும் பொது சேவைகளை வழங்குவது குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் வியாழக்கிழமை (10) அறிவித்துள்ளது. மேலும் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது, குறித்த நாட்களில் மதியம் 12 மணி வரை மட்டுமே டோக்கன் அட்டைகள் வழங்கப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு நாள் சேவைக்காக சேவை, 24 மணி நேர சேவை மேற்கூறிய நாட்களில் இயங்காது என்று அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/211755
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
சிஎஸ்கே கேப்டனாக மீண்டும் தோனி; ருதுராஜுக்கு என்ன ஆனது? பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் நடப்பு ஐபிஎல் தொடரில், இனி வரும் ஆட்டங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, அந்த அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனி மீண்டும் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் கேப்டனாக பொறுப்பு வகித்த ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாகவும், மீதமுள்ள போட்டிகளில் தோனி தலைமை ஏற்பார் என்றும் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார். ருதுராஜுக்கு இடது முழங்கையில் பந்து தாக்கியதில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. காயம் குணமாக காலம் எடுக்கும் என்பதால், அவர் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் விலகியதையடுத்து, ஓர் ஆண்டுக்குப்பின் கேப்டன் பொறுப்பை தோனி மீண்டும் ஏற்கிறார். சிஎஸ்கே அணிக்கு தோனி கேப்டனாகியுள்ள நிலையில் நாளை (ஏப்ரல்11) சென்னை அணி சேப்பாக்கத்தில் நடக்கும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது. 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கியதிலிருந்து சிஎஸ்கே அணியின் கேப்டனாக பதவி வகித்த தோனி 2023-ஆம் ஆண்டு வரை அப்பதவியில் நீடித்தார். இந்த 15 ஆண்டுகளில் சிஎஸ்கே அணிக்கு 5 முறை சாம்பியன்ஷிப் பட்டத்தை தோனி பெற்றுக் கொடுத்துள்ளார். தமிழக வீரர்களால் குஜராத் அணி முதலிடம், சாய் சுதர்சன் அதிரடியில் வீழ்ந்த ராஜஸ்தான்10 ஏப்ரல் 2025 ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு எப்போது? மௌனம் கலைத்தார் தோனி8 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES ஐபிஎல் தொடரில் இடம் பெற்றுள்ள 10 அணிகளும் தலைமுறை மாற்றத்துக்கு ஏற்ப புதிய கேப்டன்களை நியமித்த நிலையில் சிஎஸ்கே மட்டும் நியமிக்காமல் இருந்தது. அதுமட்டுமின்றி, தோனிக்கு முழங்காலில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை காரணமாக கேப்டனாக செயல்படுவதும் சிரமம் என்று கூறப்பட்டது. தோனிக்கு அடுத்தாற்போல் கேப்டன் பதவிக்கு யாரை கொண்டு வரலாம் என்று யோசித்து, கெய்க்வாட்டை தேர்வு செய்தனர். ஆனால், கடந்த சீசனில் கெய்க்வாட் தலைமையில் சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் கூட செல்லமுடியாமல் கடைசி ஆட்டத்தில் ஆர்சிபியிடம் தோற்று வெளியேறியது. சிஎஸ்கே அணி தோனி தலைமையில் செயல்பட்டபோது, நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஐபிஎல் வரலாற்றில்யே "கன்சிஸ்டென்ட் டீம்" அதாவது நிலைத்தன்மையான அணியாக சிஎஸ்கே வலம் வந்தது. தோனி தலைமையில் சிஎஸ்கே அணி 235 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 142 போட்டிகளில், தோனி வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளார். அதிக போட்டிகளில் கேப்டனாக இருந்தும், ஓர் அணிக்கு அதிக வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த கேப்டனாகவும் தோனி வரலாற்று சாதனை படைத்துள்ளார். 2023-ஆம் ஆண்டு கடைசியாக சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக தோனி செயல்பட்டு, 5வது சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றுக்கொடுத்தார். அதன்பின் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலக, ருதுராஜ் கெய்வாட்டிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. சிஎஸ்கே-வில் தோனி நீடிப்பது அணிக்கு பலமா? பலவீனமா?1 ஏப்ரல் 2025 ஐபிஎல் வந்தாலே அதிகம் பேசப்படும் காவ்யா மாறன் யார்? இவரது பின்னணி என்ன?26 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES இந்நிலையில் 2024ம் ஆண்டு அவர் கேப்டனாகப் பொறுப்பேற்று செயல்பட்டார். அந்த சீசனில் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குகூட செல்லவில்லை. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற 5 போட்டிகளில் 4 ஆட்டங்களில் தோற்று படுமோசமான நிலையில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் கெய்க்வாட்டின் இடது முழங்கையில் பந்து தாக்கி, லேசான எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவரால் தொடர்ந்து விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து, கேப்டன் பொறுப்பை மீண்டும் தோனி ஏற்பதாக சிஎஸ்கே நிர்வாகம் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது. சிஎஸ்கே நிர்வாகம் சார்பில் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட செய்தியில் " ருதுராஜ் கெய்க்வாட்டின் முழங்கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறார். அவருக்குப் பதிலாக மகேந்திர சிங் தோனி கேப்டனாக அணியை வழி நடத்துவார். ருதுராஜ் விரைவில் குணமடைய வாழ்த்துகள்," எனத் தெரிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly11l08w1po
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
INNINGS BREAK 24th Match (N), Bengaluru, April 10, 2025, Indian Premier League DC chose to field. Royal Challengers Bengaluru (20 ov) 163/7 Current RR: 8.15 • Last 5 ov (RR): 46/1 (9.20) Delhi Capitals Win Probability: RCB 33.03% • DC 66.97%
-
யாழில். 35 ஆண்டுகளின் பின் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்ட வீதி!
பலாலி வீதியில் பொங்கல் பொங்கி மகிழ்ச்சியை கொண்டாடிய மக்கள்! Published By: DIGITAL DESK 2 10 APR, 2025 | 11:18 AM யாழ்.வசாவிளான் சந்தி முதல் பொன்னாலை - பருத்தித்துறை வீதி வரையிலான பலாலி வீதி கடுமையான கட்டுப்பாடுகளுடன் 35 ஆண்டுகளுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்துக்காக வியாழக்கிழமை (10) திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில் , அப்பகுதி மக்கள் வீதியில் தேங்காய் உடைத்து பொங்கல் பொங்கி தமது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து பலாலி வடக்கு பிரதேசத்திற்கு செல்லும் மக்கள் காங்கேசன்துறை சென்று அங்கிருந்தே பலாலி வடக்கிற்கு செல்லும் நிலைமை காணப்பட்டு வந்த நிலையில், குறித்த வீதியின் ஊடாக போக்குவரத்திற்கு அனுமதிக்குமாறு யுத்தம் நிறைவடைந்த காலம் முதல் சுமார் 15 வருட காலமாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் இன்று (10) வீதி கட்டுப்பாடுகளுடன் திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியை சேர்ந்த சிலர் வீதியில் தேங்காய் உடைத்து , பொங்கல் பொங்கி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/211674
-
வடக்கு மாகாணத்தின் எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றுவது குறித்து வட மாகாண ஆளுநர், ஆசிய அபிவிருத்தி வங்கியினரிடையே கலந்துரையாடல்
10 APR, 2025 | 10:51 AM வடக்கில் சுற்றுலாத்துறைக்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ள நிலையில் அதனை கூடுதல் அபிவிருத்தி செய்யவேண்டும் எனவும், உலக வங்கியும் அது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதையும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் கவனத்துக்கு கொண்டு சென்றதோடு விவசாயம், மீன்பிடி துறைகளின் பெறுமதி சேர் ஏற்றுமதிக்கான வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும் என்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உறுப்பினர்களிடம் கோரிக்கையொன்றை முன்வைத்தார். வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் குழுவினருக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்றது. இதன்போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு கௌரவ ஜனாதிபதி கேட்டுக்கொண்டதற்கு அமைவாக தொடர்ச்சியாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுடனான சந்திப்பின்போது ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் குழு தெரிவித்தது. இந்தச் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், மாவட்டச் செயலராக வடக்கின் 4 மாவட்டங்களிலும் பணியாற்றிய காலத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பல திட்டங்களுடன் இணைந்து பணியாற்றியமையை நினைவுகூர்ந்ததுடன் வடக்கு மாகாண மக்களுக்கான உதவிகளுக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார். வடக்கு மாகாணத்தின் குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட ஆளுநர் அதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் முன்னெடுக்கப்படுவதையும் குறிப்பிட்டார். வடக்கு மாகாணத்தின் எதிர்காலத் தேவைகளையும் கருத்தில்கொள்ளும்போது குறிப்பாக முதலீட்டு வலயங்களை வடக்கில் ஆரம்பிக்க உள்ள நிலையில் அவற்றுக்கும் குடிநீர் தேவை என்பதால், அதையும் கருத்திலெடுக்க வேண்டும் என ஆளுநர் சுட்டிக்காட்டினார். அத்துடன் தீவகப் பிரதேசங்கள் சுற்றுலா ரீதியாக அபிவிருத்தி செய்யும்போது அங்கும் குடிநீருக்கான கேள்வி அதிகரித்துச் செல்லும் எனவும் அதனை நிவர்த்திக்கும் வகையில் கடல்நீரை நன்னீராக்கும் செயற்பாடுகளை அங்கு அதிகரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான பயண நேரம் அதிகம் என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், இதனால் சுற்றுலாத்துறைக்கு பின்னடைவு இருக்கின்றது என்று தெரிவித்தார். வடக்கில் சுற்றுலாத்துறைக்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ள நிலையில் அதனை கூடுதல் அபிவிருத்தி செய்யவேண்டும் எனவும், உலக வங்கியும் அது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதையும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் கவனத்துக்கு கொண்டு சென்றார். அதேபோன்று விவசாயம், மீன்பிடி துறைகளின் பெறுமதி சேர் ஏற்றுமதிக்கான வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும் என்றும் ஆளுநர் கோரிக்கை விடுத்தார். இலங்கைக்கும், ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையிலான தொடர்பு ஏற்பட்டு 60 ஆண்டுகள் அடுத்த ஆண்டுடன் நிறைவு செய்யப்படவுள்ளதைக் குறிப்பிட்ட ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் இலங்கையுடனான தமது உறவுகள் - திட்டங்கள் தொடரும் எனவும் தெரிவித்தனர். அத்துடன் தமது எதிர்கால திட்டங்கள் தொடர்பிலும், குறிப்பாக யாழ்ப்பாணத்துக்கான குடிநீர்த் திட்டம் தொடர்பிலும் ஆளுநருடன் கலந்துரையாடினர். யாழ்ப்பாணத்துக்கான குடிநீர்த் திட்டம் எவ்வளவு விரைவாக மக்களைச் சென்றடைய முடியுமோ அவ்வளவு விரைவாகச் சென்றடைவதற்கு ஏதுவான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் ஆசிய அபிவிருத்தி வங்கியினர் குறிப்பிட்டனர். இதேவேளை பாலியாறுத் திட்டத்துக்கான முற்கூட்டிய சாத்தியக்கூற்றாய்வுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உதவி வழங்கி வருவதையும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். அதேநேரம், இரணைமடுவிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் கடலுடன் கலக்கும் நீரை, யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வருவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பிலும் ஆளுநர் இதன்போது தெரியப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. இந்தச் சந்திப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள், கடலைநீரை நன்னீராக்கும் திட்டத்தின் பொறியியலாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர். https://www.virakesari.lk/article/211671
-
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்!
Published By: DIGITAL DESK 3 10 APR, 2025 | 09:43 AM தென்மேற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தாழமுக்கம் அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்காள விரிகுடாவில் படிப்படியாக பலவீனமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கூறிய கடல் பகுதிகளில் தற்காலிகமாக மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும், அதனுடன் பலத்த மழை மற்றும் கடல் கொந்தளிப்புடன் இருக்கும். இது தொடர்பாக திணைக்களத்தால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகளை கவனமாகக் கவனிக்குமாறு மீன்பிடி மற்றும் கடற்படை சமூகங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. https://www.virakesari.lk/article/211666
-
'உலகமே அழிகிறது என நினைத்தேன்' - 1966இல் ஸ்பெயினில் விழுந்த 4 அமெரிக்க அணுகுண்டுகள்
பட மூலாதாரம்,ALAMY கட்டுரை தகவல் எழுதியவர், மைல்ஸ் பர்க் பதவி, 3 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த 1966ஆம் ஆண்டில், தொலைதூர ஸ்பானிய கிராமமான பலோமரேஸ், "தெளிவான நீல வானத்தில் இருந்து, அணுகுண்டுகள் அதன் மீது விழுவதை" கண்டது. இந்தப் பயங்கரமான விபத்து நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கா ஒரு ஹைட்ரஜன் குண்டை இழந்தபோது என்ன நடந்தது என்பதைக் கண்டறிய பிபிசி நிருபர் கிறிஸ் ப்ராஷர் அங்கு சென்றார். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு, இதே வாரத்தில், 1966ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதியன்று அமெரிக்க ராணுவம் 80 நாட்களாக தீவிரமாகத் தேடிக் கொண்டிருந்த, காணாமல் போன அணு ஆயுதம் இறுதியாகக் கண்டுபிடிக்கப்பட்டது. ஹிரோஷிமாவில் வீசப்பட்ட குண்டின் சக்தியைவிட 100 மடங்கு அதிக சக்தி கொண்டது அந்த அணுகுண்டு. அதை மத்திய தரைக் கடலின் 2,850 அடி (869 மீ) ஆழத்தில் இருந்து கவனமாக அகற்றி, USS பெட்ரெல் கப்பலில் கவனமாக இறக்கினர். அதைக் கப்பலில் ஏற்றியதும், அதிகாரிகள் அதன் வெப்ப அணுசக்தி சாதனத்தின் உறைக்குள் கடும் சிரமத்தோடு வெட்டி செயலிழக்கச் செய்தனர். அதன் பிறகுதான் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். அமெரிக்கா எதிர்பாராமல் ஸ்பெயின் மீது தவறவிட்ட நான்கு ஹைட்ரஜன் குண்டுகளில் கடைசி அணுகுண்டு மீட்கப்பட்டது. கடந்த 1968ஆம் ஆண்டு சம்பவ இடத்திலிருந்து செய்திகளை வெளியிட்ட பிபிசி நிருபர் கிறிஸ் பிராஷர் இதை, "அணு ஆயுதங்கள் தொடர்புடைய முதல் விபத்து இது அல்ல," என்று கூறினார். "ஹைட்ரஜன் குண்டுகளை சுமந்து செல்லும் விமானங்கள் தொடர்புடைய குறைந்தது ஒன்பது விபத்துகளையாவது அமெரிக்க ராணுவ தலைமையகம் பட்டியலிட்டுள்ளது. ஆனால் இதுதான் வெளிநாட்டு மண்ணில் நடந்த முதல் விபத்து. அதுவும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட முதல் விபத்து மற்றும் உலகின் கவனத்தை ஈர்த்த முதல் விபத்து." அமெரிக்காவுக்கு பதிலடியாக 84% வரி விதித்த சீனா - எங்கு போய் முடியும் வர்த்தகப் போர்?9 ஏப்ரல் 2025 பதுங்கியிருந்த சிறுத்தை, சிறுவனைக் காப்பாற்றிய நாய் - காணொளி9 ஏப்ரல் 2025 இந்த பயங்கரமான சூழ்நிலை, குரோம் டோம் என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட அமெரிக்க நடவடிக்கையால் ஏற்பட்டது. 1960களின் தொடக்கத்தில், தன்னுடன் பனிப்போர் செய்து கொண்டிருந்த சோவியத் யூனியன், தாக்குதல் தொடங்குவதைத் தடுக்க, அமெரிக்கா ஒரு திட்டத்தை உருவாக்கியது. ஒரே கனநேர எச்சரிக்கையில் மாஸ்கோவை தாக்கும் வகையில், அணு ஆயுதம் ஏந்திய B-52 விமானங்களை வானத்தில் தொடர்ந்து ரோந்து செல்ல வைத்தது அமெரிக்கா. ஆனால் இப்படி தொடர்ந்து நீண்ட வட்டம் அடித்துக் கொண்டிருந்த விமானங்கள் பறப்பதற்கு எரிபொருள் நிரப்ப வேண்டிய தேவை இருந்தது. இப்படி ஒரு குண்டுவீசும் விமானம், 1966 ஜனவரி 17 அன்று, தெற்கு ஸ்பெயினின் அல்மேரியா பகுதியில், 31,000 அடி (9.5 கி.மீ) உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. அதோடு, KC-135 டேங்கர் விமானம் மூலம், வழக்கம் போல வானிலேயே எரிபொருள் நிரப்பிக் கொள்ள முயன்றது. "அணுகுண்டுகளை ஏந்தியிருந்த விமானம் மிக அதிக அளவிலான வேகத்தில் டேங்கர் விமானத்தை நெருங்கி வந்ததோடு, தன்னையும் நிலைப்படுத்திக் கொள்ளவில்லை என்று நான் நம்புகிறேன்," என்று இந்தப் படுமோசமான விபத்தைக் கையாளும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்த அமெரிக்க மேஜர் ஜெனரல் டெல்மர் வில்சன் பிராஷரிடம் கூறினார். தொடர்ந்து, "இதன் விளைவாக அந்த இரண்டு விமானங்களும் மிக அருகில் மோதிக்கொண்டன," என்றார். B-52 விமானம், எரிபொருள் விமானத்தைக் மோதிக் கிழித்துக் கொண்டு சென்றதில், KC-135 சுமந்து சென்ற ஜெட் எரிபொருள் தீப்பற்றி, அதிலிருந்த குழுவினர்கள் நால்வரும் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெடிப்பில் B-52 விமானத்தின் வால் பகுதியில் இருந்த இருவர் கொல்லப்பட்டனர். மூன்றாவது நபர் விமானத்தில் இருந்து வெளியேறினார். ஆனால் அவரது பாராசூட் சரியான நேரத்தில் திறக்காததால் இறந்துவிட்டார். குண்டுவீச்சு விமானம் உடைந்து நொறுங்கி கீழே விழும் முன், அதன் மற்ற நான்கு உறுப்பினர்கள் வெற்றிகரமாக வெளியேறினர். அதன்பின் எரியும் விமானத் துண்டுகளும், அந்த விமானத்தில் இருந்த கொடிய தெர்மோநியூக்ளியர் குண்டுகளும் ஒதுக்குப்புற ஸ்பானிய கிராமமான பாலோமேர்ஸ் மீது பொழிந்தன. "உடல் பருமனால் காதல் கைகூடவில்லை" - மனரீதியான சவால்களை எதிர்கொள்வது எப்படி?9 ஏப்ரல் 2025 நாடாளுமன்றத்தில் முதன் முதலாக தமிழில் ஒலித்த குரல்- குமரி அனந்தன் வாழ்வின் முக்கிய தருணங்கள்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒரு மைல் தூரத்தில் இருந்தும்கூட அந்தப் பெரிய தீப்பிழம்பைக் காண முடிந்தது. அதிர்ஷ்டவசமாக, அது அணு வெடிப்பைத் தூண்டவில்லை. குண்டுவீச்சு விமானத்தின் ஏவுகணைகள் ஆயுதமாக மாற்றப்படவில்லை. மேலும் எதிர்பாராத அணு சங்கிலி எதிர்வினைகளைத் தடுக்கத் தேவையான பாதுகாப்பு அமைப்புகளையும் அவை உள்ளே கொண்டிருந்தன. ஆனால் இந்த அணுக்கரு சாதனங்களைத் தூண்டத் தேவையான முறையின் ஒரு பகுதியாக அவற்றின் புளூட்டோனியம் மையங்களைச் சுற்றி வெடிபொருட்கள் இருந்தன. விபத்து ஏற்பட்டால், தரையிறங்கும்போது ஏற்படும் தாக்கத்தைத் தணிக்கவும், கதிரியக்க மாசுபாட்டைத் தடுக்கவும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட பாராசூட்கள் குண்டுகளில் இணைக்கப்பட்டிருந்தன. வெடிக்காத ஒரு குண்டு ஆற்றுப் படுகைகளில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. மறுநாளே அது முழுமையாக மீட்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, இரண்டு அணுகுண்டுகளின் பாராசூட்கள் திறக்கத் தவறிவிட்டன. அன்று காலை, ஸ்பானிஷ் விவசாயி பெட்ரோ அலார்கான், பேரக் குழந்தைகளுடன் தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவரது தக்காளித் தோட்டத்தில் அணுகுண்டு ஒன்று விழுந்து வெடித்துச் சிதறியது. "நாங்கள் அடித்துச் செல்லப்பட்டோம். குழந்தைகள் அழத் தொடங்கினர். நான் பயத்தில் முடங்கிப் போனேன். வயிற்றில் ஒரு கல் தாக்கியது. நான் இறந்துவிட்டதாக நினைத்தேன். குழந்தைகள் அழும்போது, நான் மரணித்துவிட்டதைப் போல் உணர்ந்தேன்," என்று அவர் 1968இல் பிபிசியிடம் கூறினார். வேந்தராக ஆளுநர் நீடிப்பாரா? உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க வாய்ப்பு9 ஏப்ரல் 2025 'தயிர் சாதத்துடன் ஆரம்பம்' : சைவ உணவுகளையே விரும்பிய ஒளரங்கசீப் உள்ளிட்ட முகலாய பேரரசர்கள்8 ஏப்ரல் 2025 பேரழிவும் குழப்பமும் இன்னொரு ஹைட்ரஜன் குண்டு ஒரு கல்லறைக்கு அருகில் தரையில் மோதியபோது வெடித்தது. இந்த இரட்டை வெடிப்புகள் பெரிய பள்ளங்களை உருவாக்கி, அதிக நச்சுத்தன்மை வாய்ந்த, கதிரியக்க புளூட்டோனியம் தூசியை பல நூறு ஏக்கர்களுக்குச் சிதறடித்தன. அந்த ஸ்பானிய கிராமத்தின் மீது எரியும் விமானத்தின் மிச்சங்களும் மழையாகப் பொழிந்தன. "நான் அழுதுகொண்டே ஓடிக்கொண்டிருந்தேன்," என்று 1968இல் பிபிசியிடம் கூறினார் செனோரா புளோரஸ் என்ற கிராமவாசி. "என் மகள், 'அம்மா, அம்மா, நம்ம வீட்டைப் பாருங்க, அது எரிகிறது' என்று அழுதாள். எல்லாப் பக்கமும் புகையாக இருந்ததால் அவள் சொன்னதை உண்மை என்றே நினைத்தேன். எங்களைச் சுற்றி நிறைய கற்களும் குப்பைகளும் விழுந்து கொண்டிருந்தன. அவை எங்களைத் தாக்கும் என்று நினைத்தேன். அதுவொரு பயங்கர வெடிப்பு. உலகமே அழிந்து கொண்டிருக்கிறது என்று நாங்கள் நினைத்தோம்." குண்டுவீசும் விமானம் அணு ஆயுதங்களுடன் கீழே விழுந்தது என்ற செய்தி அமெரிக்க ராணுவத் தலைமைக்கு எட்டியதும், ஒரு பெரும் செயல்திட்டம் தொடங்கப்பட்டது. பேரழிவு நடந்த நேரத்தில், கேப்டன் ஜோ ராமிரெஸ், மேட்ரிட்டில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க விமானப் படையின் வழக்கறிஞராக இருந்தார். "நிறைய பேர் இதுகுறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள், மாநாட்டு அறை பரபரப்பாக இருந்தது. எல்லோரும் திரும்பத் திரும்ப 'உடைந்த அம்பு' பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போதுதான் 'உடைந்த அம்பு' என்பது அணு விபத்துக்கான குறியீட்டு வார்த்தை என்பதை நான் அறிந்தேன்," என்று அவர் 2011இல் பிபிசியின் விட்னெஸ் ஹிஸ்டரி நிகழ்ச்சியில் தெரிவித்தார். ஆண் ஈக்கள் இணையை கவர இதையும் செய்யுமா? ஆய்வில் ஆச்சரிய தகவல்6 ஏப்ரல் 2025 மின்சாரம், கார் எதுவுமே வேண்டாம் என இந்த தீவு மக்கள் தவிர்ப்பது ஏன்?6 ஏப்ரல் 2025 அமெரிக்க ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்றனர். கேப்டன் ராமிரெஸ், பாலோமேர்ஸை வந்தடைந்தபோது, விபத்தால் ஏற்பட்ட பேரழிவையும் குழப்பத்தையும் உடனடியாகக் கண்டார். புகைந்து கொண்டிருந்த பெரிய துண்டுகள் அந்தப் பகுதி முழுவதும் சிதறிக் கிடந்தன. எரியும் B-52 விமானத்தின் பெரும்பகுதி கிராமப் பள்ளியின் முற்றத்தில் விழுந்திருந்தது. "அதுவொரு சிறிய கிராமம். ஆனால் மக்கள் வெவ்வேறு திசைகளில் ஓடிக் கொண்டிருந்தனர். புகைந்து கொண்டிருந்த இடிபாடுகளை என்னால் பார்க்க முடிந்தது. சில தீப்பிழம்புகளையும் என்னால் பார்க்க முடிந்தது." பெரும் சேதம் நடந்திருந்த போதிலும், அதிசயமாக கிராமத்தினர் யாரும் பலியாகவில்லை. "கிட்டத்தட்ட 100 டன் எரியும் குப்பைகள் கிராமத்தின் மீது விழுந்திருந்தன, ஆனால் ஒரு கோழிகூட சாகவில்லை," என்று பிராஷர் கூறினார். உள்ளூர் பள்ளி ஆசிரியர் ஒருவரும், மருத்துவர் ஒருவரும் தீப்பிடித்துக் கருகிய மலைப் பகுதியில் ஏறி, கொல்லப்பட்ட அமெரிக்க விமானப் படை வீரர்களின் எச்சங்களை மீட்டெடுத்தனர். "பின்னர், கிடைத்த உடல் பாகங்களை ஐந்து சவப்பெட்டிகளில் வரிசைப்படுத்தி வைத்தனர். ஆனால் அமெரிக்கர்கள் அந்த மலைப்பகுதியில் இருந்து மீட்கப்பட்ட நான்கு உடல்களை மட்டுமே உரிமை கோர, அது ஒரு பெரும் அதிகாரபூர்வ குழப்பத்தையும், சிரமத்தையும் ஏற்படுத்தியது" என்று பிரேஷர் கூறினார். B-52 குழுவினரில் மூன்று பேர் கடற்கரையில் இருந்து பல மைல்கள் தொலைவில் மத்திய தரைக் கடலில் தரையிறங்கினர், விபத்து நடந்த ஒரு மணிநேரத்திற்குள் உள்ளூர் மீன்பிடிப் படகுகளால் மீட்கப்பட்டனர். நான்காவது நபரான, B-52 விமானத்தின் ரேடார்-நேவிகேட்டர், விமானம் வெடித்த பகுதி மூலமாக வெளியேறினார். இதனால் அவருக்கு கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தன. அதோடு இருக்கையில் இருந்தும் தன்னைப் பிரித்துக்கொள்ள அவரால் முடியவில்லை. இருந்த போதிலும் அவர் பாராசூட்டை திறக்க முடிந்தது. அதோடு கிராமத்திற்கு அருகில் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், விமானத்தின் கொடிய அணுகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் சிக்கல் இன்னும் இருந்தது. "அந்த குண்டுகளை மீட்டெடுப்பதே எனது முக்கியக் கவலையாக இருந்தது, அதுதான் முதன்மையான பிரச்னை" என்று ஜெனரல் வில்சன் 1968இல் பிபிசியிடம் கூறினார். சென்னை அருகே விநோதமான எலும்புக்கூடு சிலைகள் உள்ள இந்த கல்லறை யாருடையது தெரியுமா?5 ஏப்ரல் 2025 இன்டர்மீடியா: உணவுக் கழிவுகளை சுவைமிக்க உணவாக மாற்றும் பூஞ்சை - விரும்பி உண்ணும் மக்கள்4 ஏப்ரல் 2025 'அணுகுண்டுகளில் ஒன்றைக் காணவில்லை' "முதல் நாள் இரவு, கார்டியா சிவில் [ஸ்பானிஷ் தேசிய காவல் படை] பாலோமேர்ஸில் உள்ள சிறிய பாருக்கு வந்தனர். மின்சாரம் இருந்த ஒரே இடம் அதுதான். அவர்கள் வெடிகுண்டு என்று கருதியதைப் பற்றி எங்களிடம் தெரிவித்தனர். எனவே நாங்கள் உடனடியாக எங்கள் ஆட்களில் சிலரை நகர மையத்தில் இருந்து, அருகே இருந்த அந்த ஆற்றுப் படுகைக்கு அனுப்பினோம். உண்மையாகவே அதுவொரு வெடிகுண்டுதான். எனவே நாங்கள் அங்கே ஒரு காவலரை நிறுத்தி வைத்தோம். பின்னர் மறுநாள் காலை, வெளிச்சம் வந்தவுடனேயே, நாங்கள் எங்கள் தேடலைத் தொடங்கினோம். மறுநாள் காலை 10, 11 மணியளவில் இருக்கும் என்று நினைக்கிறேன். மேலும் இரண்டு குண்டுகளைக் கண்டுபிடித்தோம்." மூன்று அணுகுண்டுகள் கிடைத்துவிட்டன. ஆனால் இன்னும் ஒன்று கிடைக்கவில்லை. அடுத்த நாளுக்குள், அருகிலுள்ள தளங்களில் இருந்து அமெரிக்க துருப்புகள் நிரப்பப்பட்ட லாரிகள் அனுப்பப்பட்டன. கதிரியக்க மாசுபாடு ஏற்பட்டிருந்தால் அதைக் கட்டுப்படுத்தவும், நான்காவது அணுகுண்டைத் தேடவும் வந்திருந்த, சுமார் 700 அமெரிக்க விமானப் படை வீரர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு பாலோமேர்ஸ் கடற்கரை ஒரு தளமாக மாறியது. "தேடல் தீவிரமாகத் தொடங்கியது. விமானப் படை வீரர்கள் 40, 50 பேர் கைகோர்த்து வரிசையாக இணைந்திருப்பதுதான் முதலில் கண்ணுக்குத் தெரியும். அவர்களுக்கென பகுதிகளைப் பிரித்துத் தேடச் சொன்னார்கள். கெய்கர் கவுன்டர்களுடன் சிலர் வரத் தொடங்கினர். அவர்கள் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் குறிக்கத் தொடங்கினர்," என்று கேப்டன் ராமிரெஸ் 2011இல் கூறினார். அமெரிக்க வீரர்கள் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியைக் கண்டுபிடித்ததும், அந்தப் பகுதியில் இருக்கும் மேல் மண்ணில் மூன்று அங்குல அளவுக்குத் தோண்டி அதை பீப்பாய்களில் அடைத்து அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்புவார்கள். இப்படி சுமார் 1,400 டன் கதிரியக்கத்தால் பாதித்த மண், தெற்கு கரோலினாவில் உள்ள ஒரு சேமிப்புக் கிடங்குக்கு அனுப்பப்பட்டது. பொதுத்தேர்வுக்கு படிக்கும் மாணவர்களின் விரல்களை முடக்கும் 'ரைட்டர்ஸ் கிராம்ப்' - தீர்வு தரும் நிபுணர்கள்4 ஏப்ரல் 2025 அழகுசாதனப் பொருட்களால் தோல் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் - தவிர்க்கும் வழிகள்4 ஏப்ரல் 2025 அந்த நேரத்தில் அமெரிக்காவும், ஃபிரான்சிஸ்கோ ஃபிராங்கோவின் கொடூரமான ராணுவ சர்வாதிகார ஆட்சியின் கீழ் இருந்த ஸ்பெயினும் இந்தப் படுமோசமான விபத்தின் வீச்சைக் குறைத்துக் காட்டுவதில் ஆர்வமாக இருந்தன. குறிப்பாக, கதிர்வீச்சு பற்றிய அச்சங்கள் ஸ்பெயினின் சுற்றுலாத் துறையைப் பாதிக்கும் என்று ஃபிராங்கோ கவலைப்பட்டார். அது அவரது ஆட்சிக்கு முக்கிய வருவாய் ஆதாரமாக இருந்தது. உள்ளூர் மக்களுக்கும் வெளி உலகுக்கும் எந்த ஆபத்தும் இல்லை என்று உறுதியளிக்கும் முயற்சியில், ஸ்பெயினுக்கான அமெரிக்க தூதர் ஆஞ்சியர் பிடில் டியூக், விபத்து நடந்த சில வாரங்களுக்குப் பிறகு, சர்வதேச பத்திரிகைகள் முன்னிலையில் பாலோமேர்ஸ் கடற்கரையில் கடலில் நீந்த வேண்டியிருந்தது. ஆனால் நூற்றுக்கணக்கான அமெரிக்க வீரர்கள் ஒரு வாரமாக சுற்றியுள்ள பகுதியில் தீவிரமாகவும் உன்னிப்பாகவும் தேடுதல் நடத்திய போதிலும், அவர்களால் நான்காவது குண்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் கேப்டன் ராமிரெஸ் ஓர் உள்ளூர் மீனவரிடம் பேசினார். அவர் கடலில் விழுந்த சில விமான வீரர்களை உயிருடன் காப்பாற்ற உதவியிருந்தார். அமெரிக்க விமானிகளில் ஒருவரைக் காப்பாற்ற முடியாமல் போனதற்காக மீனவர் கேப்டன் ராமிரெஸிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருந்தார். அவர் ஆழத்துக்கு மூழ்கிச் சென்றதாக மீனவர் நினைத்தார். காணாமல் போன அணுகுண்டைத்தான், மீனவர் உண்மையில் பார்த்திருக்க வேண்டும் என்பதை கேப்டன் ராமிரெஸ் உணர்ந்தார். "அனைத்து உடல்களும் கணக்கில் வந்துவிட்டன, அது எனக்குத் தெரியும்," என்று அவர் கூறினார். பின்னர் தேடல் விரைவாக மத்திய தரைக் கடலுக்கு மாற்றப்பட்டது, அமெரிக்க கடற்படை 30 க்கும் மேற்பட்ட கப்பல்களைக் கொண்ட ஒரு கடற்படையை கடல் அடிவாரத்தில் தேடத் திரட்டியது. இதில் கடலடி கன்னிவெடியைக் கண்டுபிடிக்கும் கப்பல்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும் அடங்கும். மைல்கணக்கில் நீண்டு கிடக்கும் கடல் தளத்தை ஆய்வு செய்வது தொழில்நுட்ப ரீதியாகச் சிக்கலானது மற்றும் மிகவும் பொறுமையாகச் செய்ய வேண்டிய செயல்முறை. ஆனால் பல வாரங்கள் முழுமையான தேடலுக்குப் பிறகு, புதிதாக உருவாக்கப்பட்ட பெரும் ஆழத்துக்குச் செல்லக்கூடிய டைவிங் கப்பல், ஆல்வின், ஒருவழியாக காணாமல் போன குண்டை, நீருக்கடியில் இருந்த அகழி ஒன்றில் இருந்து கண்டுபிடித்தது. தொலைந்து போனதில் இருந்து சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு, அந்த ஏவுகணை இறுதியாக மீண்டும் அமெரிக்காவிடம் பாதுகாப்பாக வந்தடைந்தது. இத்தனை நாள் அந்த அணுகுண்டைப் பற்றிய செய்திகளை அமெரிக்க ராணுவம் ரகசியமாக வைத்திருந்த போதிலும், அடுத்த நாளே உலக ஊடகங்கள் முன்பாக அந்த குண்டைக் காட்டும் எதிர்பாராத செயலைச் செய்தது. மக்கள் தாங்களே அந்தக் குண்டைப் பார்க்காவிட்டால், அது உண்மையில் மீட்கப்பட்டதா இல்லையா என்பதைப் பற்றி அவர்கள் ஒருபோதும் உறுதியாக நம்ப மாட்டார்கள் என்று கூறி இந்தச் செயலை தூதர் டியூக் நியாயப்படுத்தினார். கிட்டத்தட்ட இந்தச் சம்பவம் நடந்து அறுபது ஆண்டுகளுக்குப் பிறகும், இன்னும் அல்மேரியா பகுதியில் அதன் நிழலைப் பார்க்க முடிகிறது. அமெரிக்க சுத்திகரிப்பு நடவடிக்கையில், சில கதிரியக்க மாசுபட்ட இடங்கள் விட்டுப் போயிருந்தன. அதனால், அமெரிக்காவும் ஸ்பெயினும் பாலோமேர்ஸ் குடியிருப்பாளர்களுக்கான வருடாந்திர சுகாதார சோதனைகளுக்கு நிதியளிக்க ஒப்புக்கொண்டன. அதோடு, மண், நீர், காற்று மற்றும் உள்ளூர் பயிர்களைக் கண்காணிப்பதாகவும் அவர்கள் உறுதியளித்தனர். ஆனால் பாலோமேர்ஸில் இன்னமும் சுமார் 100 ஏக்கர் நிலம் (40 ஹெக்டேர்), கதிரியக்க மாசுபாட்டால், வேலி அமைக்கப்பட்டு பயனற்று இருக்கிறது. மேலும், 2015ஆம் ஆண்டில் ஸ்பெயினும் அமெரிக்காவும் அந்தப் பகுதியைச் சுத்தம் செய்ய ஒரு பரஸ்பர ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போதிலும், இரண்டு நாடுகளும் ஒன்றும் செய்யவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cx2ww3n59zgo
-
யானை குட்டி உயிருடன் மீட்பு
10 APR, 2025 | 12:49 PM புத்தளம், கொட்டுக்கச்சி பகுதியில் உள்ள வயல்வெளியில் ஆதரவற்ற நிலையில் காணப்பட்ட யானை குட்டி ஒன்று பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மூன்று மாதம் மதிக்கத்தக்க யானை குட்டி ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இந்த யானை குட்டி தற்போது புத்தளம் கால்நடை வைத்தியர்களின் பராமரிப்பில் இருப்பதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/211693
-
தமிழரசுக் கட்சி தோற்கடிக்கப்பட வேண்டும்; கஜேந்திகுமார்
தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியானது எம்.ஏ.சுமந்திரன் பொதுச்செயலாளராக வந்த பின்புதான் நிராகரிக்கப்பட்டதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சுமத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் 19 தமிழ் உறுப்பினர்கள் உள்ள போதும் 10 உறுப்பினர்களைக்கொண்ட அறுதிப்பெரும்பாண்மை ஒருவருக்கும் இல்லை. தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளை முன்னெடுத்த போதும் அது சாத்தியப்படவில்லை. தமிழரசு பதில் தலைவர் சீ.வி.கே. சிவஞானத்துடன் பேசிய போது தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிக்கு குழு அமைப்பதாக சொல்லியிருந்தார். அதன் பின்பு எம்.ஏ.சுமந்திரன் பொதுச்செயலாளராக வந்த பின்பு குழு அமைக்கும் விடயம் தேவையில்லை என்று சொல்லப்பட்டுள்ளது. தற்போது தமிழரசுக்கட்சி ஆட்சி செய்பவர்கள் தமிழ்த்தேசிய நீக்க அரசியலை கொண்டு செல்பவர்கள். சுதந்திரதினம் கொண்டாட எத்தனிப்பவர்களும் சிங்கள கட்சிகளுக்கு இங்கு வைத்து ஆதரவு வழங்குபவர்களும் தான் உள்ளனர். இந்தியப் பிரதமரை சந்திக்கும் போது நாங்கள் சமஸ்டியை வலியுறுத்தினோம், மற்றவர்கள் ஒற்றையாட்சி 13ஐ தான் வலியுறுத்தினார்கள். மக்களிடம் வாக்கு கேட்க வரும் போது சமஸ்டியை சொல்கிறார்கள், மக்கள் வழங்கும் ஆணையை தவறான வழியில் பயன்படுத்துகின்றனர். இந்தத் தேர்தலில் தமிழரசுக் கட்சி வடக்கு கிழக்கில் தோற்கடிக்கப்பட வேண்டும்” எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/316942
-
தேர்தல்கள் நெருங்கும்போதுதான் வீதிகளை திறப்பீர்களா? பலாலி வீதி திறப்பு குறித்து சுமந்திரன் கேள்வி
10 APR, 2025 | 11:04 AM தேர்தல்கள் நெருங்கும்போதுதான் வீதிகளை திறப்பீர்களா? என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்? யாழ் பலாலி வீதி திறந்துவிடப்பட்டுள்ளமை குறித்த தனது சமூக ஊடக பதிவில் இந்த கேள்வியை அவர் எழுப்பியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கட்டுப்பாடுகளுடன் பலாலி வீதி திறக்கப்பட்டதை வரவேற்கின்றோம். ஆனால் சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்துவதாக வாக்குறுதியளித்தவர்கள் கட்டுப்பாடுகளை விதிக்க முடியுமா? இந்த பகுதி உயர்பாதுகாப்பு வலயமாக சட்டபூர்வமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட பகுதியில்லை. மாலை ஆறு மணியிலிருந்து காலை 5 மணிவரை போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்கு எந்த சட்டம் உங்களிற்கு அனுமதிவழங்கியது. ஏன் பாதசாரிகள் இந்த வீதியை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கவில்லை. அதனை விட முக்கியமான கேள்வி? தேர்தல்கள் நெருங்கும்போதுதான் வீதிகளை திறப்பீர்களா? https://www.virakesari.lk/article/211683