Everything posted by ஏராளன்
-
யாழ். மாவட்டச் செயலரின் மகன் செலுத்திய வாகனம் விபத்து
Published By: VISHNU 23 FEB, 2025 | 09:06 PM யாழ்.மாவட்ட செயலரின் மகன் செலுத்திச் சென்ற சொகுசு வாகனம் விபத்துக்குள்ளான நிலையில் மாவட்ட செயலரின் மகனும் அவரது நண்பரும் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் - பலாலி வீதியில் கந்தர்மட சந்திக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை (23) மாலை வேக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியோரமாக இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. அதன் போது அருகில் உள்ள வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளது. விபத்தில் வாகனத்தை செலுத்திச் சென்ற மாவட்ட செயலரின் மகன் சிறுகாயங்களுக்கு உள்ளான நிலையில், சாரதி இருக்கைக்கு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த அவரின் நண்பர் கடும் காயங்களுக்கு உள்ளானதுடன் , அவரது கால்கள் வாகனத்தினுள் சிக்குண்டமையால், சுமார் ஒரு மணி நேர போராட்டத்தின் பின்னரே அவர் வாகனத்தில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த வாகனம் மாவட்ட செயலரின் உத்தியோகபூர்வ வாகனம் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/207475
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
DRINKS 5th Match, Group A (D/N), Dubai (DICS), February 23, 2025, ICC Champions Trophy Pakistan 241 India (35/50 ov, T:242) 189/2 India need 53 runs in 90 balls Current RR: 5.40 • Required RR: 3.53 • Last 5 ov (RR): 29/0 (5.80) Win Probability:IND 99.05% • PAK 0.95%
-
காசாவில் யுத்தத்தில் சிக்கிய சிறுவனின் வாழ்க்கையை சித்தரிக்கும் விவரணச்சித்திரம் - இஸ்ரேலின் அழுத்தத்தால் நீக்கியது பிபிசி?
Published By: RAJEEBAN 23 FEB, 2025 | 02:09 PM காசாவில் யுத்தத்தில் சிக்கிய ஒரு சிறுவனின் வாழ்க்கையை சித்தரிக்கும் விவரணச்சித்திரத்தை பிபிசி அகற்றியுள்ளதை தொடர்ந்து இஸ்ரேலின்அழுத்தங்கள்காரணமாகவே பிபிசி அதனை அகற்றியதுஎன குற்றச்சாட்டுகள்எழுந்துள்ளன. காசா - போர்க்களத்தில் எப்படி உயிர்தப்புவது என்ற வீடியோவை சில நாட்களிற்கு முன்னர் பிபிசி வெளியிட்டிருந்தது. காசாவின் மீதான இஸ்ரேலின் ஈவிரக்கமற்ற தாக்குதலின் மத்தியில் தப்பிபிழைத்து வாழும் 13 வயது சிறுவனின் வாழ்க்கை பற்றியது இந்த விவரணச்சித்திரம். காசாவில் இடம்பெற்ற பேரழிவு பற்றிய குழந்தைகளின் பார்வை குறித்த கருத்தே இந்த விவரணச்சித்திரம் என தெரிவித்திருந்த பிபிசி ,இது அவர்களின் அனுபவங்களிற்கான விலைமதிப்பற்ற சான்று என நாங்கள் கருதுகின்றோம்,வெளிப்படைத்தன்மை குறித்த எங்கள் அர்ப்பணிப்பை உறுதி செய்யவேண்டும் என குறிப்பிட்டிருந்தது. எனினும் அந்த விவரணச்சித்திரத்தில் தோன்றிய சிறுவனின்தந்தை கலாநிதி அல்மான் அல்யாசூரி ஹமாஸ் அரசாங்கத்தில் பிரதிவிவசாய அமைச்சராக பணியாற்றியவர் என தெரியவந்ததன் பின்னர் பிபிசி அந்த விவரணச்சித்திரத்தை நீக்கியுள்ளது.2007 இல் அவர் பிரதிஅமைச்சராக பணிபுரிந்திருந்தார். ஹமாஸ் அமைப்பை பிரிட்டன் பயங்கரவாத அமைப்பாக கருதுகின்றது. பிபிசி அந்த விவரணச்சித்திரத்தை விலக்கியதை கண்டித்துள்ளவர்கள் குறிப்பிட்ட நபர் தொழில்நுட்ப அதிகாரியாகவே ஹமாசின் அமைச்சரவையில் பணியாற்றினார் என சுட்டிக்காட்டியுள்ளனர். பாலஸ்தீன மக்களை மனிதாபிமான முகத்துடன் சித்தரிக்கும் இஸ்ரேலின் தாக்குதலினால் காசா மக்களின் நாளாந்த வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தும் அந்த வீடியோவை பிபிசி அகற்றியமை குறித்து பலர் கடும் கண்டனத்தினை வெளியிட்டுள்ளனர். வீடியோவில் தோன்றிய சிறுவனின் தந்தை ஹமாஸ் அமைப்பின் அமைச்சரவையில் பணியாற்றினார் என்பதற்காக அந்த வீடியோவை அகற்ற முடியாது என பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை அந்த சிறுவனின் தந்தையின் பின்னணி குறித்து தனக்கு முதலில் தெரிந்திருக்கவில்லை என தெரிவித்துள்ள பிபிசி இது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/207450
-
விண்வெளியில் இருந்து பூமியில் உள்ளோரின் முகங்களை அடையாளம் காணும் கமராவை அறிமுகப்படுத்தியது சீனா
Published By: DIGITAL DESK 3 23 FEB, 2025 | 11:34 AM விண்வெளியில் இருந்து பூமியில் உள்ளோரின் முகங்களை அடையாளம் காணும் அதி திறன் கொண்ட உலகின் மிக சக்திவாய்ந்த உளவு கமராவை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளாவிய கண்காணிப்பு திறன்களை மறுவரையறை செய்யக்கூடிய சக்திவாய்ந்த லேசர் அமைப்புடன் சீன விஞ்ஞானிகள் ஆப்டிகல் இமேஜிங் தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். மேம்பட்ட இந்த இமேஜிங் சாதனம் 100 கிலோமீட்டர் (62 மைல்) தொலைவில் இருந்து மில்லிமீட்டர் அளவிலான விவரங்களைப் பிடிக்கும் திறன் கொண்டது. இது உளவுத்துறையில் பாரிய புரட்சியை ஏற்படுத்தும். https://www.virakesari.lk/article/207434
-
பிரான்சில் கத்திகுத்து தாக்குதல் ஒருவர் பலி - இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல் என ஜனாதிபதி தெரிவிப்பு
23 FEB, 2025 | 09:39 AM பிரான்சின் முல்ஹவுஸ் நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர். மூன்று பொலிஸார் காயமடைந்துள்ளனர். சம்பவம் இடம்பெற்ற இடத்தில் அல்ஜீரியாவை சேர்ந்த 37 வயது நபர் ஒருவர் காணப்பட்டார் என தெரிவித்துள்ள அதிகாரிகள் அவர் அல்லாகு அக்பர் என சத்தமிட்டார் என்பதை அடிப்படையாக வைத்து பயங்கரவாத குற்றம் என்ற அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அந்த நபர் இரண்டு பொலிஸாருக்கு கடும் காயங்களை ஏற்படுத்தினார், தடுக்க முயன்ற 69 வயது போர்த்துக்கல் பிரஜையை குத்திக்கொன்றார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் பயங்கரவாத கண்காணிப்பிலிருந்தவர் இதன் காரணமாக அவரை நாடு கடத்துவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல் என்பதில் சந்தேகமில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/207417
-
உடல் நலப் பாதிப்பு - பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதி
பரிசுத்த பாப்பரசர் ஆபத்தான நிலையில் 23 FEB, 2025 | 09:25 AM சுவாசப்பாதிப்பு காரணமாக பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆபத்தான நிலையில் உள்ளார் என அவரது மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அஸ்;துமா போன்ற சுவாச பாதிப்பினால் பரிசுத்த பாப்பரசரின் நிலை தொடர்ந்தும் மோசமடைந்துவருகின்றதுஎன வத்திக்கான் தகவல்கள்தெரிவித்துள்ளன. பரிசுத்த பாப்பரசரிற்கு இரத்தம் ஏற்றப்பட்டது நேற்று காணப்பட்ட நிலையை விட அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது என வத்திக்கான் தகவல்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/207415
-
எமது சுற்றுச்சூழலை சுத்தமாகப் பேணுவோம் என ஒவ்வொரு தனிநபரும் முடிவெடுத்து செயற்பட்டால் மாத்திரமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் - வடக்கு மாகாண ஆளுநர்
எமது ஆட்சியின் கீழ் ஊழல்வாதிகள், மோசடியாளர்கள், கடத்தல்காரர்கள், கொலைகாரர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு நீதி தேவதை மூலம் சுத்தம் செய்யப்படுவார்கள் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் Published By: DIGITAL DESK 7 23 FEB, 2025 | 05:02 PM கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனை கடற்கரையை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) 'அழகான கடற்கரையின் பங்குதாரர்களாவோம்' எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டது. தூய்மையான இலங்கை எனும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாகவே இதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சு.முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு கடற்றொழில், நீரியல் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கிளிநொச்சி மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பூநகரி பிரதேச செயலாளர், பிரதேச சபைச் செயலாளர், இராணுவத்தினர், பொலிஸார், கடற்படையினர், மாணவர்கள், ஊர்மக்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர். பிரதேச அமைப்புகளும் ஆதரவு வழங்கியிருந்தது. க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் வெற்றியளிப்பதற்கு முழு அர்பணிப்புடன் செயற்படும் அரச அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர் இவ்விடத்தில் தனியார் பங்களிப்பும் இருந்தால் அது மேலும் சிறப்பாக அமையும் எனவும் தெரிவித்தார். அதைப்போல இந்த க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக வடக்கு, கிழக்கு, தெற்கு மலையகம் அனைத்து பகுதிகளிலும் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கபடவுள்ளன. நாடு முழுமையாக சுத்தம் செய்யப்பட வேண்டும் என்றால் குப்பைகளை அப்புறப்படுத்தல் மாத்திரம் அல்ல. இனவாதம், மதவாதம், ஊழல், மோசடிகளுக்கும் முடிவு கட்ட வேண்டும். எனவே, நாங்கள் சூழலை சுத்தப்படுத்துவது போல் எமது ஆட்சியின் கீழ் ஊழல்வாதிகள், மோசடியாளர்கள், கடத்தல்காரர்கள், கொலைகாரர்கள் ஆகியோரை சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு நீதி தேவதை மூலம் சுத்தம் செய்யப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/207456
-
விசேட தேவையுடைய மாணவர்களின் உயர் கல்வியில் சிறப்பு கவனம்!
கல்வி அமைச்சின் கண்காணிப்பின் கீழ், விசேட தேவையுடைய பிள்ளைகளின் உயர் கல்விக்கு விசேட கவனம் செலுத்தப்படும் - பிரதமர் தெரிவிப்பு Published By: DIGITAL DESK 7 23 FEB, 2025 | 03:52 PM மாற்றுத்திறனாளி சமூகத்தின் கல்வியை மேம்படுத்துவதற்காக மாற்றுத்திறனாளி சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்களுடன் தொடர்புடைய குழுவினருடனான சந்திப்பின் போது கல்வி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் விசேட தேவையுடைய பிள்ளைகளின் உயர்கல்வி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்ற வளாகத்தில் நேற்று சனிக்கிழமை (22) இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா, முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி டி.டி.டி.எல்.தனபால உள்ளிட்ட அங்கவீனமுற்ற சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழு இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். தேசிய மற்றும் சர்வதேச விதிமுறைகளை கவனத்திற்கொண்டு விசேட தேவைகள் உள்ளவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு முன்மொழிவை அவர்கள் முன்வைத்துடன் விசேட தேவையுடையவர்களின் உரிமைகளை வலுப்படுத்துதல், விசேட தேவையுடைய பிள்ளைகளின் கல்வித் தரத்தை உயர்த்துதல் மற்றும் அவர்களுக்கான உயர்கல்வி நிலைகளை அறிமுகம் செய்தல் போன்ற பல விடயங்கள் குறித்து இந்த முன்மொழிவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மதியிருக்கம் (ஒட்டிசம்) நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் கல்வியை உயர்த்தவும், அநாதை பிள்ளைகளுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தவும் தற்போதைய அரசு 2025 வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதை பாராட்டினர். இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர், விசேட தேவையுடையவர்கள் பொதுச் சமூகத்தில் இயல்பான வாழ்க்கையை முன்னெடுக்க தேவையான சமூக அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். Clean sri lanka திட்டத்தினூடாகவும் நாம் அதனை செய்ய எதிர்பார்க்கின்றோம். எமது நாட்டில் பல கொள்கைகள் இருந்தாலும் அவை நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதுதான் பிரச்சனை. நாம் பார்ப்பது போல், கொள்கைகளை செயற்படுத்துவதற்கு நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்பது இங்கு மிகவும் முக்கிய விடயம். அதுதான் 2025 வரவுசெலவுத்திட்டத்தில் பல்வேறு பணிகளுக்கு குறிப்பாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். கல்வி அமைச்சின் மேற்பார்வையின் கீழ், விசேட தேவையுடைய பிள்ளைகளின் உயர் கல்வியை ஒரு தலைப்பாக மாற்றுவதற்கு எதிர்பார்க்கிறோம். அதற்கு தேவையானவர்களை நியமித்துள்ளோம். கல்வியில் ஒரு பாரிய மாற்றத்திற்கு நாம் இப்போது தயாராகி வருகிறோம். 2025-ம் ஆண்டு இது தொடர்பான கொள்கைகள் தயாரிக்கப்பட்டு, 2026-ல் இதை நடைமுறைப்படுத்தத் தொடங்குவோம். இது முழு முறைமையையும் மாற்றும் நீண்ட காலத் திட்டம். நிச்சயமாக, விசேட தேவைகளைக் கொண்ட பிள்ளைகளின் கல்வி முறைக்கு விசேட கவனம் செலுத்தப்படும். அனைத்து பாடசாலைகளிலும் விசேட தேவையுடைய பிள்ளைகள் வழமை போன்று கல்வியில் ஈடுபடுவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க எதிர்பார்க்கின்றோம். ஆனால் இது ஒரு பெரிய செயல்முறை. ஒரேயடியாக அதைச் செய்ய முடியாது, படிப்படியாக அந்த இலக்குகளை அடைவோம் என்று நம்புகிறோம். முதற்கட்ட நடவடிக்கையாக, ஒரு கல்வி நிர்வாக வலயத்தில் குறைந்தபட்சம் ஒரு பாடசாலையிலாவது இந்த பிள்ளைகளை கல்வி கற்க தகுதியுடையவர்களாக மாற்ற நாங்கள் பணியாற்றி வருகிறோம்," என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/207443
-
எமது சுற்றுச்சூழலை சுத்தமாகப் பேணுவோம் என ஒவ்வொரு தனிநபரும் முடிவெடுத்து செயற்பட்டால் மாத்திரமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் - வடக்கு மாகாண ஆளுநர்
Published By: DIGITAL DESK 3 23 FEB, 2025 | 03:53 PM எமது சுற்றுச்சூழலை சுத்தமாகப் பேணுவோம் என ஒவ்வொரு தனிநபரும் முடிவெடுத்து செயற்பட்டால் மாத்திரமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தூய்மையான இலங்கை என்பதன் இலக்கை அப்போதே முழுமையாக அடையமுடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். தூய்மையான இலங்கை செயற்றிட்டத்தின் ஓர் அங்கமான, 'அழகான கடற்கரையின் பங்குதாரரர்களாவோம்' என்னும் தொனிப்பொருளில் கடற்கரையோரங்களை தூய்மைப்படுத்தும் கிளிநொச்சி மாவட்ட நிகழ்ச்சி பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கௌதாரிமுனை கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை (23) நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கிய கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன் தனது தலைமை உரையில், மாவட்டத்தில் 11 இடங்களில் இந்த நிகழ்ச்சித் திட்டம் இன்று நடைமுறைப்படுத்தப்படுகின்றது. சுற்றுலாத்துறை ஊடாகவே எமது நாடு அந்நியச் செலாவணியை அதிகம் ஈட்டிக்கொள்கின்றது. சுற்றுலாவிகளைக் கவரக் கூடிய கடற்கரை வளங்கள் அதிகமாக இருந்தாலும் அந்தச் சுற்றாடல்கள் சுற்றுலாவிகளை ஈர்க்கும் வகையில் இல்லை. அதை நாம் துப்புரவாக வைத்திருக்கவேண்டும். எமது முன்னோர்கள் எம்மிடம் கையளித்த வளங்களை நாம் பாதுகாத்து எதிர்கால சந்ததிக்கு கையளிக்க வேண்டும். மேற்கத்தைய நாடுகளில் எல்லா வசதிகளும் இருக்கின்றன என பலர் அங்கு செல்கின்றார்கள். அதைவிட அதிகமான வசதிகளும் வளங்களும் எங்கள் மண்ணில் இருக்கின்றன. மேற்கத்தைய நாடுகளில் உள்ளவர்கள் அங்குள் சட்டங்களை மதிப்பதைப்போன்று, சுற்றுச்சூழல்களைப் பாதுகாப்பதைப் போன்று நாம் செயற்பட்டாலே, அங்கு உள்ளதைப்போன்று இங்கும் நிலைமைகளை உருவாக்க முடியும், என்றார். வடக்கு மாகாண ஆளுநர் தனது உரையில், தற்போதைய கௌரவ ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கத்தின் தூரநோக்கில் ஒன்றுதான் தூய்மையான இலங்கை செயற்றிட்டம். எங்கள் இடங்களை நாங்கள் துப்புரவாக வைத்திருக்க பழகவேண்டும். ஏதாவது ஒன்றை நாங்கள் பழக்கப்படுத்திவிட்டால் அதிலிருந்து மாறமாட்டோம். துவறான விடயத்துக்கு பழகிவிட்டால், நாங்கள் முன்னர் அப்படித்தான் செய்தோம் எனச் சொல்லி அந்தத் தவறான விடயத்தை தொடர்வதற்கே விரும்புகின்றோம். மாறுகின்றோம் இல்லை. நாங்கள் மாறவேண்டும். எங்களின் மாற்றம்தான் சூழலை அழகாக்கும். எமது பிரதேசங்களில் உள்ள பெரும்பாலான பொதுமலசல கூடங்கள் பயன்படுத்த முடியாத நிலைமையில் இருக்கின்றன. இதற்கு நாம்தான் காரணம். ஜப்பானில் சிறு வயதிலேயே அவர்களது பாடசாலை மலசல கூடங்களை அந்தப் பிள்ளைகளைக்கொண்டே துப்புரவு செய்யப் பழக்குகின்றார்கள். அதனால்தான் அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகியதும் தமது சூழலை சுத்தமாக வைத்திருக்கின்றார்கள். மாணவர்கள் மத்தியிலிருந்து இதை நாம் வளர்த்தெடுக்க வேண்டும். குப்பைகளை கண்ட இடங்களில் வீசாமல் குப்பைத் தொட்டிக்குள் போடுவதிலிருந்து சகல விடயங்களையும் பழக்கவேண்டும். அவர்களுக்கு இத்தகைய பழக்கவழக்கங்களை பழக்குவதன் மூலம் எதிர்காலத்தில் எமது சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்கலாம், என்றார் ஆளுநர். இதனைத் தொடர்ந்து கடற்கரையோரத்தை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பூநகரி பிரதேச செயலர், பிரதேச சபைச் செயலர், இராணுவத்தினர், பொலிஸார், கடற்படையினர், மாணவர்கள், ஊர்மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/207453
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
சட்டவிரோதமாக மீன்பிடித்த 32 இந்திய மீனவர்கள் கைது Published By: DIGITAL DESK 7 23 FEB, 2025 | 03:07 PM (எம்.மனோசித்ரா) கடற்படையினர் நாட்டின் வடக்கே மன்னார் கடற்பரப்பில் நேற்று சனிக்கிழமை (22) மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலை மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இந்நாட்டு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஐந்து இந்திய மீன்பிடி படகுகளுடன் முப்பத்திரண்டு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் கடற்பரப்பை மீறி வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கவும், இந்நாட்டு மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பின் போது கைப்பற்றப்பட்ட குறித்த இந்திய மீனவர்கள் தலைமன்னார் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் கடற்றொழில் பரிசோதகர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். இந்த நடவடிக்கையின் மூலம், இந்நாட்டு கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட பதினெட்டு (18) இந்திய மீன்பிடி படகுகள் மற்றும் நூற்று முப்பத்தொரு (131) இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/207452
-
தேசிய பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை - ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க
நாட்டில் பொது மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை - ஜனாதிபதி Published By: DIGITAL DESK 3 23 FEB, 2025 | 02:11 PM நாட்டில் பொது மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை (23) கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போதே இதனை ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அவர் மேலும், குற்ற கும்பல்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல்களினாலேயே சமீபத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளன. அவற்றை தடுப்பதற்கு துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார். நாட்டில் ஸ்திரமற்ற தன்மையை உருவாக்கும் முயற்சி இடம்பெற்றுவருவது தொடர்பாகவும் பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/207448
-
காலநிலை மாற்றம்: ஆணுடன் ஒப்பிடுகையில் பெண்ணுக்கு இரட்டைச் சுமை என்று நிபுணர்கள் எச்சரிப்பது ஏன்?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த டிசம்பர் மாதம் நடந்த 29வது காலநிலை உச்சிமாநாட்டில் காலநிலை செயல்முறையில் பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கான ஐ.நா திட்டத்தை 10 ஆண்டுகளுக்கு நீடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த சில ஆண்டுகளில், காலநிலை மாற்றத்தின் தாக்கமும் அதன் விளைவுகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, தெற்காசியா முழுவதும் நிகழ்ந்து வரும் காலநிலை பேரிடர்கள், புறக்கணிக்க முடியாத ஒரு கேள்வியை முன்வைத்துள்ளன. இந்தியா, பாகிஸ்தான் போன்ற தெற்காசிய நாடுகள் அனைத்துமே காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சிறுசிறு மாற்றங்களுக்குக் கூட எளிதில் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் நடந்த 29வது காலநிலை உச்சிமாநாட்டில், காலநிலை செயல்முறையில் பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கான ஐ.நா திட்டத்தை (Lima work programme on gender) மேலும் 10 ஆண்டுகளுக்கு நீடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேவேளையில், காலநிலை மாற்றத் தணிப்பு நடவடிக்கைகளைப் பொருத்தவரை, இந்த நாடுகளில் பாலின சமத்துவமின்மை ஒரு முக்கிய சவாலாக இருப்பதாக கடந்த டிசம்பர் 20ஆம் தேதி பப்ளிக் லைப்ரரி ஆஃப் சயின்ஸ் இதழில் வெளியான ஓர் ஆய்வுக்கட்டுரை குறிப்பிடுகிறது. காட்டுப்பள்ளி துறைமுகம்: 6,100 ஏக்கர் நிலம் கேட்கும் அதானி - கொந்தளிக்கும் மீனவ மக்கள் சென்னை அடையாற்றில் செத்து மிதக்கும் மீன்கள் - நதியை மீட்க செலவழித்த ரூ.450 கோடி என்ன ஆனது? பிபிசி கள ஆய்வு சென்னை: சர்வதேச சமூகம் கண்டு அச்சப்படும் நிலையில் இருக்கிறதா? என்ன பிரச்னை? வெப்பநிலை உயர்வதால் சாண வண்டுகள் குறைந்து வருவது விவசாயம், உணவு உற்பத்தியை பாதிக்குமா? அந்த ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியரும் ஹைதராபாத்தில் இருக்கும் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் நிறுவனத்தைச் சேர்ந்த காலநிலை விஞ்ஞானியுமான முனைவர் அஞ்சல் பிரகாஷ் பிபிசி தமிழிடம் பேசிய போது, "இந்திய சமூகத்தில் இருக்கும் ஆணாதிக்க விதிமுறைகள், பெண்களிடமே பெரும்பாலும் வீட்டுப் பணிகளையும் பொறுப்புகளையும் ஒப்படைத்து விடுகின்றன. அதுவே, காலநிலை பேரிடர்களின் போதும் பெண்கள் மீது அதீத சுமையும் அழுத்தமும் விழுவதற்குக் காரணமாக அமைகிறது" என்று கூறுகிறார். காலநிலை மாற்றம் ஆணை விட பெண்ணுக்கு இரட்டைச் சுமையை ஏற்படுத்துவது ஏன்? காலநிலை நெருக்கடியை எதிர்கொள்ளும் போது, பாலின ஏற்றத் தாழ்வுகள் காரணமாக பெண்கள் அனுபவிக்கும் அழுத்தங்கள் என்ன? அவற்றை நிவர்த்தி செய்வது எப்படி? தற்போதைய சூழலில் இதன் மீது கவனம் செலுத்த வேண்டியது ஏன் அவசியம்? காலநிலை நெருக்கடியில் பாலின சமத்துவமின்மை கடந்த டிசம்பர் மாதம், அசர்பைஜானில் நடைபெற்ற காலநிலை உச்சிமாநாட்டிலும், இந்தத் தவிர்க்க முடியாத கேள்வி குறித்து விவாதிக்கப்பட்டது. அதைச் சமாளிக்கும் நோக்குடன் ஐ.நா.வின் காலநிலை செயல்முறையில், பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டத்தைக் கூடுதலாக 10 ஆண்டுகளுக்கு நீடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில், நேச்சர் ஆய்விதழில் வெளியான ஓர் ஆய்வு, 2010 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் ஏழை நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில், வெள்ள பாதிப்புகள் காரணமாக 107,888 பெண்கள் கருக்கலைப்புக்கு ஆளானதாகக் கூறுகிறது. இதில், 75% கருக்கலைப்புகள் சப்-சஹாரா பிராந்தியம் (சஹாராவுக்கு தெற்கே உள்ள ஆப்ரிக்க நாடுகள்) மற்றும் தெற்காசியாவில் பதிவாகியுள்ளன. கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான ஓர் ஆய்வு, காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் இந்தியாவில் 2015 முதல் 2021-க்குள் கருவிலேயே குழந்தை உயிரிழக்கும் விகிதம் 28.6% அதிகரித்ததாகக் கூறியது. தெலங்கானா: சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து - சிக்கிகொண்ட 8 தொழிலாளர்கள்22 பிப்ரவரி 2025 நாளந்தா பல்கலைக் கழகம் உலகையே மாற்றியது எப்படி? ஒரு வரலாற்றுப் பார்வை22 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காலநிலை நெருக்கடியால் பெண்களின் அங்கீகரிக்கப்படாத உழைப்பு 60% அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. யுனிசெஃப் அறிக்கைப்படி 2050ஆம் ஆண்டுக்குள் காலநிலை பேரிடர்களால் 15.8 கோடி பெண்கள் தீவிர வறுமையில் தள்ளப்படுவார்கள். 23.6 கோடி பெண்கள் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வார்கள். கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிசிசி அறிக்கைப்படி, வறட்சி, திடீர் வெள்ளம் போன்ற பாதிப்புகளால், அதிக உயிரிழப்புகளைச் சந்திப்பது, ஊட்டச்சத்துக் குறைபாடுகளை எதிர்கொள்வது, வாழ்வாதாரங்களை இழப்பது ஆகிய அபாயங்களை பெண்கள் அதிகம் எதிர்கொள்கின்றனர். சென்னை ஒவ்வொரு வெள்ளத்தை எதிர்கொள்ளும் போதும், கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவ உதவிகளைப் பெறுவதில் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். அத்தகைய சூழலில், இதுபோன்ற கருக்கலைப்பு அபாயங்கள் அதிகரிப்பதாகவும், அதன் விளைவாக ஏற்படும் உடல் மற்றும் மனநல பாதிப்புகளைப் பெண்கள் அனுபவிக்க வேண்டியிருப்பதாகவும் கூறுகிறார் 'டாக்டர்ஸ் ஃபார் ஏர் பொலியூஷன்' அமைப்பைச் சேர்ந்த விஷ்வஜா சம்பத். இதுமட்டுமின்றி, இந்தியா, வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்களின் அங்கீகரிக்கப்படாத உழைப்பு, துரிதமடையும் காலநிலை தாக்கங்களின் காரணமாக 60% அதிகரித்திருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது, உணவுப் பாதுகாப்பு, குழந்தைகள் பராமரிப்பு, குடும்பங்களை நிர்வகித்தல் போன்ற பல்வேறு பொறுப்புகள், கலாசார மற்றும் சமூகக் கட்டுப்பாடுகள் காரணமாகப் பெண்களின் மீதே சுமத்தப்படுவதாகக் கூறுகிறார் தி எனர்ஜி அண்ட் ரிசோர்சஸ் இனிஷியேட்டிவ் அமைப்பின் காலநிலை மாற்றம் மற்றும் காற்றுத் தரம் துறையின் இயக்குநர் சுருச்சி பத்வால். பட மூலாதாரம், SUBAGUNAM KANNAN/BBC படக்குறிப்பு, சூழலியல் ரீதியாக அதிக பாதிப்புக்கு உள்ளாகும் எண்ணூரில், குழந்தைகள் அதிகமான சுவாசக் கோளாறுகளை எதிர்கொள்கின்றனர். உதாரணமாக, சூழலியல் ரீதியாக அதிக பாதிப்புக்கு உள்ளாகும் எண்ணூரில், குழந்தைகள் அதிகமான சுவாசக் கோளாறுகளை எதிர்கொள்கின்றனர். இதன் விளைவாக, தங்கள் மன அழுத்தம் அதிகரிப்பதாகவும், பணியைப் புறக்கணிக்கும் சூழல் ஏற்படுவதாகவும் பிபிசி தமிழிடம் பேசிய தாய்மார்கள் தெரிவித்தனர். அதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய சுருச்சி பத்வால், "கல்வி, வேலை போன்ற வாய்ப்புகள் கிடைத்தாலும்கூட, அவற்றோடு சேர்த்து குடும்பப் பொறுப்புகளையும் நிர்வகிக்க வேண்டிய சுமை பெண்கள் மீதே விழுகிறது. உணவு, தண்ணீர் போன்ற அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்வது முதல் குழந்தைகளோடு சேர்த்து கூட்டுக் குடும்பங்களில் இருக்கும் முதியவர்களையும் பராமரிக்கும் பணி பெண்களுடையதாகவே இந்திய சமூகத்தில் இன்னமும் கருதப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில், கனமழை, வெள்ளம், வெப்ப அலை அல்லது வறட்சிப் பேரிடர்களின் போது நோய்த்தொற்றுகள் பரவினால் பாதிக்கப்பட்டவர்களைப் பராமரிப்பது, அடிப்படைத் தேவைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் போது நிவர்த்தி செய்ய முயல்வது போன்ற சுமைகள் பெண்கள் மீதே பெரும்பாலும் விழுகிறது. இந்தப் பிரச்னைகளைக் கடந்து வேறு எதையும் சிந்திக்க முடியாத சுழலில் சிக்குவதால், பெண்கள் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்," என்கிறார் அவர். இத்தகைய சவால்களை பெண்கள் எதிர்கொள்ள முக்கியக் காரணம், பேரிடர் நிவாரணக் குழுகளில், ஆண்களே பெருமளவு இருப்பதுதான் என்கிறார் விஷ்வஜா சம்பத். அதன் விளைவாக, பேரிடர்களின்போது பெண்களின் தேவைகள் முழுதாகப் பூர்த்தி செய்யப்படுவதில்லை எனவும் அவர் கூறுகிறார். "பெண்களின் குரல்களை எதிரொலிக்கும் பிரதிநிதிகள் போதுமான அளவுக்கு ஒரு குழுவில் இல்லாமல் போவதன் விளைவு இது. இத்தகைய சாதாரண பிரிதிநிதித்துவம்கூட, பெண்களின் குரல்களை ஒலிக்கச் செய்வதில் பெரும் பங்கு வகிக்கின்றன." "இந்தப் பணிகள் அவர்களை நீர்ப் பற்றாக்குறை மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலை போன்ற காலநிலை தாக்கங்களுக்கு ஆளாக்குகின்றன. கல்வி மற்றும் நிதி ஆதாரங்களை அணுகுவது விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு சவாலாக இருப்பதால், காலநிலை சவால்களுக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டு திறம்படச் செயலாற்றும் திறனைப் பெறுவதிலும் தடைகள் நீடிக்கின்றன," என்கிறார் முனைவர் அஞ்சல் பிரகாஷ். இமயமலை: நூறாண்டுக்கு முன்பே ஆபத்துகளை கடந்து புகைப்படக் கலைஞர் எடுத்த அரிய படங்கள்18 பிப்ரவரி 2025 பாம்பு தனது தோலை உரிப்பது ஏன்? எத்தனை முறை தோல் உரிக்கும்? அப்போது பார்த்தால் பாம்பு கொத்துமா?13 பிப்ரவரி 2025 'பொருளாதார சுதந்திரம் கிடைத்தாலும் நிலைமை மாறவில்லை' பட மூலாதாரம்,SUBAGUNAM KANNAN/BBC படக்குறிப்பு, பேரிடர் காலங்களில் பெண்கள் மீது இரு மடங்கு அழுத்தத்தை ஏற்படுத்துவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். சமூக அறிவியல் ஆராய்ச்சி நெட்வொர்க் என்ற ஆய்விதழில் இந்த மாதத் தொடக்கத்தில் வெளியான ஆய்வுக் கட்டுரை, கல்வி, வேலை போன்ற பிரிவுகளில் பெண்கள் முன்னேறுவது உலகளாவிய நெருக்கடியாக கருதப்படும் காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதில் பெரும் பங்காற்றுவதாகக் கூறுகிறது. ஆனால், அந்த முன்னேற்றத்தை அடைந்த பிறகு, பெண்கள் அதோடு குடும்பத்தையும் சேர்த்து இரட்டை சுமையைச் சுமக்க வேண்டியிருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். "ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில், நிலத்தடி நீர் பெருமளவு குறைந்துவிட்டதால் பெண்கள் 5 முதல் 10 கிலோமீட்டர் வரை தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய பயணிக்க வேண்டியுள்ளது" என்கிறார் விஷ்வஜா சம்பத். "இதற்காக அந்தப் பெண்கள் செலுத்தும் உடல் உழைப்பும், நேரமும், அவர்களின் ஆரோக்கியத்தைப் பெரிதும் பாதிக்கிறது. அதோடு அவர்களின் வேலை நேரமும் இதனால் குறைகிறது. ஒவ்வொரு வறட்சிக் காலத்திலும், தண்ணீர்ப் பற்றாக்குறையை சமூகங்கள் எதிர்கொள்ளும்போது, அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் பணிகளில் பெண்களே மையப்படுத்தப்படுகின்றனர்," என்று விவரிக்கிறார் அவர். கடந்த 2023 டிசம்பர் மாதம் வடசென்னை, கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், எண்ணூரில் தொழிற்சாலைகளால் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு என மக்கள் இரண்டு பேரிடர்களை ஒருசேர எதிர்கொண்டனர். அந்தப் பேரிடரின்போது உடுத்த மாற்றுத்துணிகூட இல்லாமல் சிரமப்பட்ட வள்ளிப் பாட்டி, தனது கணவர், மகன் உள்பட குடும்பத்தாரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொறுப்போடு, தனது சிறிய தேநீர்க் கடையால் ஏற்பட்ட இழப்புகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. "என் இடுப்பளவுக்கு எண்ணெய் கலந்த வெள்ளநீர் வீட்டுக்குள் புகுந்துவிட்டது. ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்துமே வீணாகிவிட்டன. என் மகனுக்கும் உடல்நிலை குன்றிவிட்டது. இந்த நிலையில், என் கணவரின் லுங்கியை அணிந்துகொண்டு வீட்டுப் பொருட்களைப் பாதுகாப்பது, மகனைப் பார்த்துக்கொள்வது என்று அனைத்தையுமே கவனிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டேன். இதற்கிடையில், நான் நடத்தி வந்த சிறு தேநீர்க் கடையும் முற்றிலுமாக வீணாக அதற்கென ரூ.30,000 கடன்பட்டு சீரமைத்தேன்," என்று தான் எதிர்கொண்ட சவாலை விவரித்தார். அவரைப் பொருத்தவரை, பெண்கள் எவ்வளவுதான் பொருளாதார முன்னேற்றம் கண்டாலும், குடும்பத்திற்குள் செய்யப்படும் வேலைகளும் பெண்கள் மீதே விழுவது இயல்பாகிவிட்டது. இவையிரண்டையும் பல ஆண்டுகளாக ஒருசேரச் செய்து வருவதால், அவை பழகிவிட்டதாகவும் குறிப்பிட்டார். பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்று முன்னேறினாலும்கூட, வேலை, வீடு என இரண்டையுமே கவனித்தாக வேண்டுமென்ற கட்டாயத்தை இந்திய குடும்பக் கட்டமைப்பு வலியுறுத்துவதாகக் கூறுகிறார் முனைவர் அஞ்சல் பிரகாஷ். இதன் விளைவாக, காலநிலை நெருக்கடிகளின்போது அவர்கள் எதிர்கொள்ளும் அழுத்தமும் ஒப்பீட்டளவில் ஆண்களைவிட அதிகமாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார் அவர். கடல் நடுவே உள்ள சிறிய தீவை ஆயிரக்கணக்கான மக்கள் காலி செய்ய என்ன காரணம்?12 பிப்ரவரி 2025 கோலிவுட்: பல வருடங்களாக தொடரும் கதைத் திருட்டு சர்ச்சை, ஒரு கதையை முறையாக பதிவு செய்வது எப்படி?22 பிப்ரவரி 2025 அதிகரிக்கும் குழந்தைத் திருமணம், மனித கடத்தல் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மேற்கு வங்கத்தின் சுந்தரவனப் பகுதியில் காலநிலை நெருக்கடியின் அபாயங்களை பெண்களே அதிகம் எதிர்கொள்கின்றனர். இந்தியாவில் காலநிலை நெருக்கடி, பெண்களுக்கு குடும்பரீதியான சுமைகளை அதிகரிப்பதோடு, அவர்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்குகிறது என்கிறார் சுது சுந்தர்பான் சார்ச்சா இதழின் ஆசிரியர் ஜோதிந்த்ர நாராயண் லாஹிரி. இந்தியா, வங்கதேசம் இடையே அமைந்திருக்கும் சுந்தரவனப் பகுதியில், மேற்கு வங்கத்தில் வாழும் கடலோர சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் காலநிலை நெருக்கடியின் அதீத அபாயங்களை எதிர்கொள்வதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார் ஜோதிந்த்ர நாராயண் லாஹிரி. கடந்த 15 ஆண்டுகளாக, வங்காள மொழியில் சுது சுந்தர்பான் சார்ச்சா என்ற சிற்றிதழை நடத்தி வரும் அவர், தனது இதழில் சுந்தரவனப் பகுதி மக்களின் வாழ்வியல், சமூக-சூழலியல் சிக்கல்கள் ஆகியவற்றைப் பதிவு செய்து வருகிறார். காலநிலை நெருக்கடியால், சுந்தரவனப் பகுதியில் புயல் பாதிப்புகள் கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்து விட்டதாகக் கூறும் அவர், இதனால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். குறிப்பாக, கடல்மட்ட உயர்வு, வெப்பநிலை அதிகரிப்பு ஆகியவற்றின் விளைவுகள் சுந்தரவனத்தில் தெளிவாகத் தெரிவதாகக் கூறும் அவர், "இவற்றால், சுந்தரவனத் தீவுகளில், உவர்நீர் புகுந்துவிடுவதால், விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. குடிநீர் பற்றாக்குறை கடுமையாக உள்ளது. தீவுகளுக்குள் இருந்த நன்னீர் குளங்கள் உப்பாகிவிடுவதால், பாரம்பரிய மீன் வளர்ப்புத் தொழில் பாதிக்கப்படுகிறது," என்று தெரிவித்தார். பட மூலாதாரம்,ARCHISMAN NARAYAN LAHIRI படக்குறிப்பு,சுந்தரவனப் பகுதியில், நெருக்கடிக் காலங்களில் பெண்களே அனைத்தையும் கவனிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவதாகக் கூறுகிறார் ஜோதிந்த் நாராயண் லாஹிரி. மேலும், கடந்த 15 ஆண்டுகளில் சுந்தரவனப் பகுதியைச் சேர்ந்த 70% ஆண்கள் தொழில் தேடி வெளியூர்களுக்குச் சென்றுவிடுவதால், நெருக்கடிக் காலங்களில் பெண்களே அனைத்தையும் கவனிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த 2009ஆம் ஆண்டில் 'ஐலா' என்ற பேரழிவுகரமான புயல் சுந்தரவனத்தைத் தாக்கியதில் இருந்து இந்த இடப்பெயர்வு கணிசமாக அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார் ஜோதிந்த்ர நாராயண். "இதன் விளைவாகத் தங்கள் வீடுகளை நிர்வகிப்பது, குழந்தைகளைப் பராமரிப்பது, மீன் பிடிப்பது, விற்பது போன்ற பிற பணிகள் என அனைத்தும் பெண்களின் கைகளிலேயே விடப்படுகின்றன. இதனால், புயல்களின் போது, கால்நடைகள், குழந்தைகளை வெள்ள முகாம்களுக்குக் கொண்டு செல்வதில் இருந்து, விவசாயம், படகுகளில் சிற்றோடைகளில் மீன் பிடிப்பது என அனைத்து சவால்களையும் கையாள்வதில் பெண்களே முக்கியப் பங்கு வகிக்கின்றனர்." என்கிறார் அவர். இந்திய யூடியூப் கிராமம்: மொத்தமுள்ள 4,000 பேரில் 1,000 பேர் யூடியூபர்களானது எப்படி?7 மணி நேரங்களுக்கு முன்னர் வந்தவாசி பஞ்சமி நில சர்ச்சை: 'அரை மணிநேரத்துல மொத்தமா அழிச்சுட்டாங்க' - பிபிசி கள ஆய்வில் தெரிய வந்தது என்ன?21 பிப்ரவரி 2025 பெண்கள் காலநிலை நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்படுவது ஏன்? பட மூலாதாரம்,SUBAGUNAM KANNAN/BBC படக்குறிப்பு,காலநிலை பாதிப்புகள் இருபாலருக்கும் சமமாக இருப்பதில்லை என்கிறார் மூத்த ஆய்வாளர் முனைவர் மினி கோவிந்தன். காலநிலை பாதிப்புகள் இருபாலருக்கும் சமமாக இருப்பதில்லை எனவும் அதன் விளைவுகளை ஆண்களைவிட பெண்களே அதிகம் அனுபவிப்பதாகவும் கூறும் தி எனர்ஜி அண்ட் ரிசோர்சஸ் இனிஷியேட்டிவ் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் முனைவர் மினி கோவிந்தன், சமூகக் கட்டமைப்பில் இருக்கும் பாலின சமத்துவமின்மையே அதற்கு அடிப்படைக் காரணம் எனவும் குறிப்பிடுகிறார். "கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களின் விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த பெண்கள், காலநிலை மாற்ற தணிப்பு நடவடிக்கைகள் மற்றும் அதுதொடர்பான வளங்களை அணுகும் விகிதம் குறைவாகவே இருக்கிறது. அதோடு, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கத்தின் சுந்தரவனப் பகுதி போன்ற இயற்கைப் பேரிடர்கள் அதிகம் நிகழும் கடலோர மாநிலங்களில், ஆண்களே வேலை தேடி அதிகமாக இடம் பெயர்கின்றனர். இந்தச் சூழலில், குடும்பத்தின் முழு பொறுப்பும், குறிப்பாக பேரிடர்க் காலங்களில், பெண்கள் மீதே விழுகிறது. இது அவர்களுக்கு அதீத மன அழுத்தத்தையும், அவர்களின் ஆரோக்கியத்தைப் புறக்கணித்து குடும்பத்தினரை முன்னிலைப்படுத்தும் சூழலையும் ஏற்படுத்துகிறது," என்று கூறுகிறார் மினி கோவிந்தன். அதேவேளையில், காலநிலை மாற்ற விளைவுகளால், நகர்ப்புறங்களில் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் குடும்பங்களில் ஏற்படும் மனோவியல் தாக்கங்கள் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை என்கிறார் மினி கோவிந்தன். அவரது கூற்றுப்படி, சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில், ஒவ்வொரு முறை வெள்ளம் ஏற்படு ம்போதும் மேற்கூறிய அனைத்து சவால்களையும் பெண்கள் ஒருசேர எதிர்கொள்வதால் மனப் பதற்றம், அழுத்தம் ஆகிய பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. இருப்பினும், ஆரோக்கியக் குறைபாடுகள் பேசப்படும் அளவுக்கு இவை பேசப்படுவதில்லை என்கிறார். பட மூலாதாரம்,SUBAGUNAM KANNAN/BBC படக்குறிப்பு,காலநிலை நடவடிக்கைகளில் பாலினக் கண்ணோட்டங்களைப் புகுத்துவது மிகவும் அவசியம் என்கிறார் காலநிலை விஞ்ஞானி முனைவர் அஞ்சல் பிரகாஷ். இவை அனைத்துக்குமே காரணம், கலாசார, சமூக கட்டுப்பாடுகள் பெண்கள் மீது அதிகமாகச் சுமத்தப்படுவதே எனக் கூறும் மினி கோவிந்தன், "ஒரு பெண் காய்கறி அல்லது மீன் விற்பவராக, வீட்டு வேலை செய்பவராக, அலுவலகப் பணி செய்பவராக என எந்தப் பணியில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், தம் குடும்பத்தில் உள்ள குழந்தைக்கோ, முதியவருக்கோ உடல்நலம் குன்றிவிட்டால், அந்தப் பெண்தான் விடுப்பு எடுத்துக்கொண்டு அவர்களைக் கவனிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறார், சில நேரங்களில் நிர்பந்திக்கவும் படுகிறார். இத்தகைய சூழ்நிலையில், பேரிடர்க் காலங்களில் ஓர் ஆணின் சம்பளத்திற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் இயல்பாகவே பெண்களின் சம்பாத்தியத்திற்குக் கிடைப்பது இல்லை. ஆகையால், ஆண் வேலைக்குச் செல்ல வேண்டும் எனவும், பெண் வீட்டில் இருந்து வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரி செய்வது, குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வது ஆகியவற்றைக் கவனிக்க வேண்டுமென்றும் அழுத்தம் தரப்படுகிறது," என்று விவரித்தார். பெண்கள் எதிர்கொள்ளும் இத்தகைய சவால்களைச் சமாளிக்க, இந்தியாவுக்கு பன்முகத்தன்மை மிக்க அணுகுமுறை தேவை என்பதை வலியுறுத்துகிறார் காலநிலை விஞ்ஞானி முனைவர் அஞ்சல் பிரகாஷ். "உள்ளூர் அளவிலிருந்து, சமூக அடிப்படையிலான திட்டங்களை வகுக்க வேண்டும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும், அவர்களின் தகவமைப்புத் திறன்களை மேம்படுத்த வேண்டும். பாலினக் கண்ணோட்டங்களை காலநிலை உத்திகளில் புகுத்துவது, முடிவெடுக்கும் செயல்முறைகளில் பெண்களுக்கு சமமான பிரதிநிதித்துவம் இருப்பதை உறுதி செய்வது ஆகியவற்றில் கொள்கை அளவிலான தீர்வுகளைக் கொண்டு வருவதில் கவனம் செலுத்த வேண்டும்," என்கிறார் அவர். அதோடு, "வேலை, குடும்பம் என இரட்டைச் சுமையைச் சுமக்கும் பெண்கள், காலநிலை மாற்ற தணிப்பு முயற்சிகளில் ஈடுபடுவதற்கான திறன்களை மேம்படுத்துவது கட்டுப்படுத்தப்படுகிறது. இதை நிவர்த்தி செய்ய, பாலின சமத்துவம் மிக்க குடும்ப ஆதரவு அமைப்புகளை உருவாக்குவதும் ஊக்குவிப்பதும் அவசியம். பெண்களின் வேலை-வாழ்க்கை சமநிலையை ஊக்குவிக்கும் கொள்கைகளை வடிவமைப்பது, காலநிலை மாற்ற தணிப்பு நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபட வைப்பதற்கு உதவும்," என்றும் அஞ்சல் பிரகாஷ் குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2rlgyyk34o
-
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் 2025 - செய்திகள்
சேவாக் சாதனை சமன்: இங்கிலாந்துக்கு எதிராக 352 இலக்கை எட்டிப் பிடித்து வரலாறு படைத்த ஆஸ்திரேலியா கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES லாகூரில் பிப்ரவரி 22 அன்று நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான பி பிரிவில் நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஆஸ்திரேலிய அணி. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் குவித்தது. 352 ரன்கள் எனும் இமாலய இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலிய அணி 15 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 5 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் சேர்த்து வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. ஆஸ்திரேலிய அணி தொடக்கத்திலேயே 27 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தவுடன் லாகூர் கடாபி அரங்கில் கூட்டம் கலையத் தொடங்கியது. சிலர் நின்று கொண்டு ஆட்டத்தைப் பார்க்கத் தொடங்கினர். ஆனால், நேரம் செல்லச் செல்ல வீட்டுக்கு புறப்படலாம் என நினைத்த ரசிகர்களை ஆஸ்திரேலிய பேட்டர்கள் தங்கள் ஆட்டத்தின் மூலம் கட்டிப்போட்டனர். வெளியே செல்லலாம் என நினைத்த ரசிகர்களும் ஆட்டத்தின் போக்கை கேள்விப்பட்டு மீண்டும் இருக்கைக்கு வந்து ஆட்டத்தை ரசித்தனர். பாகிஸ்தானின் பலவீனம் இந்தியாவின் பலமாக மாறுமா? கோலி, ரோகித் சரியாக பயன்படுத்துவார்களா? இந்தியாவை அச்சுறுத்தும் பாகிஸ்தானின் 5 வீரர்கள் - இந்தியாவின் துருப்புச் சீட்டு எது? சாம்பியன்ஸ் டிராபியில் ஆதிக்கம் செலுத்தும் பாகிஸ்தான் - இந்திய அணிக்கு கவலை தரும் 8 விஷயங்கள் இந்திய அணி வென்றபோதும் ரோஹித் மன்னிப்புக் கேட்டது ஏன்? உண்மையில் நேற்றைய ஆட்டத்தை, சாத்தியமில்லாத வெற்றியை ஆஸ்திரேலிய இளம் பேட்டர்கள் சாதித்துக் காட்டினர் என்று தான் அழைக்க வேண்டும். இங்கிலாந்து அணியினர் மனம் நொந்திருக்க வேண்டும். இவ்வளவு பெரிய ஸ்கோர் அடித்தும் வெற்றி பெற முடியவில்லையே என்ற ஏக்கம் அவர்களின் முகத்தில் தெரிந்தது. ஆஸ்திரேலியாவின் வெற்றி சாத்தியமானது எப்படி? சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் கம்மின்ஸ், ஹேசல்வுட், மிட்ஷெல் ஸ்ட்ராக் ஆகிய 3 பிரதான வேகப்பந்து வீச்சாளர்களும் இல்லை. ஸ்டாய்னிஷ் ஓய்வு பெற்றுவிட்டார். கேமரூன் கிரீன், மிட்ஷெல் மார்ஷ் இல்லை. இத்தகைய இக்கட்டான சூழலில் பிக்பாஷ் லீக்கில் விளையாடிய வீரர்களையும், ஷெப்பீல்ட் ஷீல்ட் தொடரில் விளையாடிய வீரர்களையும் அணியில் சேர்த்து, சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு அனுப்பியது ஆஸ்திரேலியா. சமையலில் அவசரத் தேவைக்கு உப்புமா செய்வதைப் போல், அவசர கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்தை நியமித்து சாம்பியன்ஸ் டிராபிக்கு ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு நிர்வாகம் அனுப்பிவைத்தது. ஆனால், சர்வதேச போட்டிகளில் 20 ஆட்டங்களுக்கும் குறைவாக ஆடிய வீரர்களை வைத்து அற்புதமான வெற்றியை ஆஸ்திரேலியா பெற்றுள்ளது. இதில் ஸ்பென்ஸர் ஜான்சன், இங்கிலிஸ், வாரிஷிஸ் ஆகியோர் 10 போட்டிகளுக்கும் குறைவாக விளையாடியவர்கள். ஆனால், இவர்களின் ஆட்டம் அற்புதமாக இருந்தது. 1996ஆம் ஆண்டு லாகூரில் கடைசியாக பேட்டர்கள் ஆதிக்கம் செய்த போட்டியைப் பார்த்த ரசிகர்கள் அதன்பின் ஏறக்குறைய 29 ஆண்டுகளுக்குப்பின் இப்படிப்பட்ட ஆட்டத்தை ரசித்துள்ளனர். ஆஸ்திரலேிய அணி தொடக்கத்திலேயே டிராவிஸ் ஹெட், ஸ்மித் விக்கெட்டை இழந்து 27 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் எனத் தடுமாறியது. இவ்வளவு பெரிய ஸ்கோரை எவ்வாறு சேஸ் செய்யப் போகிறார்கள், அனுபவமான பேட்டர்களும் இல்லை, வெற்றி சாத்தியமாகுமா என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். ஆனால், மேத்யூ ஷார்ட், லாபுஷேன் அமைத்த 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் லேசான நம்பிக்கையை அளித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES அதன்பின் அலெக்ஸ் கேரே, இங்கிலிஸ் இருவரும் 5-வது விக்கெட்டுக்கு அமைத்த144 ரன்கள் பார்ட்னர்ஷிப் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி சாத்தியம் என்பதை நிரூபித்தது. லாபுஷேன்-மேத்யூ ஷார்ட், அலெக்ஸ் கேரே-இங்கிலிஸ், இங்கிலிஸ்-மேக்ஸ் இந்த 3 கூட்டணிதான் ஆட்டத்தின் போக்கை மாற்றி வெற்றி தேடித்தந்தது. இதில் சதம் அடித்த இங்கிலிஸ் பூர்வீகத்தில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆனதால் ஆஸ்திரேலிய அணிக்காக ஆடி வருகிறார். இப்போதும் அவரின் உறவினர்கள் இங்கிலாந்தில் வசிக்கிறார்கள். இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் பூர்வீகம் நியூசிலாந்து. ஆனால், பிறந்து வளர்ந்தது இங்கிலாந்தில் என்பதால் இங்கிலாந்து அணிக்காக ஆடிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டோம் என ஆஸ்திரேலிய பேட்டர்கள் மனம் தளரவில்லை. லாபுஷேன், மேத்யூ ஷார்ட் இருவரும் நிதானமாக ஆடத் தொடங்கினர். ஆடுகளம் பேட்டர்களுக்கு சொர்க்கபுரியாக இருந்ததால், இங்கிலாந்து வேகப் பந்துவீச்சை இருவரும் வெளுத்து வாங்கினர். மேத்யூ ஷார்ட் 47 பந்துகளில் அரைசதம் அடித்தார். லாபுஷேன் 47 ரன்கள் சேர்த்து அரைசதத்தை நெருங்கிய நிலையில் ஆதில் ரஷித் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் சிறிது நேரம் மட்டுமே களத்தில் நீடித்த ஷார்ட் 63 ரன்கள் சேர்த்திருந்த போது லிவிங்ஸ்டன் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் அலெக்ஸ் கேரே, ஜோஸ் இங்கிலிஸ் கூட்டணி சேர்ந்தனர். இருவரும் நிதானமாகத் தொடங்கி பின்னர் இங்கிலாந்து பந்துவீச்சை வெளுக்கத் தொடங்கினர். மெல்லமெல்ல ஆட்டம் தங்கள் கரங்களை விட்டு நகர்வதை இங்கிலாந்து வீரர்கள் உணரத் தொடங்கினர். கேரே, இங்கிலிஸ் ஆட்டத்தில் நேரம் செல்லச்செல்ல ஆக்ரோஷமும் காணப்பட்டது. இங்கிலிஸ் 41 பந்துகளிலும், கேரே 49 பந்துகளிலும் அரைசதத்தை எட்டினர். ஆஸ்திரேலிய அணியும் வெற்றியை மெல்ல நெருங்கியது. ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து 50 பந்துகளில் வெற்றிக்கு 70 ரன்கள் தேவை என்ற நிலைக்கு வந்தது. பிபிசி வாழ்நாள் சாதனையாளர் விருது வென்ற மிதாலி ராஜின் நம்பிக்கை பயணம்20 பிப்ரவரி 2025 சாம்பியன்ஸ் டிராஃபி 2025: பாகிஸ்தான் சொந்த மண்ணிலேயே தோல்வியை தழுவ என்ன காரணம்?20 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES 42-வது ஓவரில் அலெக்ஸ் கேரே 69 ரன்களில் கார்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதன்பின் இங்கிலாந்து வீரர்கள் நிம்மதி அடைந்து ஆட்டத்தை தங்கள் பக்கம் இழுக்க முயன்றனர். ஆனால், மேக்ஸ்வெல் களத்துக்கு வந்து, இங்கிலிஸூடன் சேர்ந்தார். இதன்பின் இருவரின் ஆட்டமும் இன்னும் வேகமெடுத்தது, ஆர்ச்சர் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் விளாசி இங்கிலிஸ் 77 பந்துகளில் முதல் சதத்தை நிறைவு செய்தார். 41 பந்துகளில் 50 ரன்களை எட்டிய இங்கிலிஸ், 46 பந்துகளில் சதத்தை எட்டினார். மேக்ஸ்வெல் தனக்கே உரிய ஸ்டைலில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் என 15 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலிஸ் 86 பந்துகளில் 120 ரன்கள் சேர்த்து(6சிக்ஸர், 8 பவுண்டரி)அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியப் பந்துவீச்சிலும் பெரிதாக எந்த நெருக்கடியும் இங்கிலாந்து வீரர்களுக்கு வழங்கவில்லை. ஸ்பென்சர் ஜான்சன், நேதன் எல்லீஸ், வாரிஷ், மேக்ஸவெல், ஜம்பா என அனைவருமே ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல்தான் வாரி வழங்கினர். ஆஸ்திரேலிய அணியில் வலுவான பேட்டிங் இருந்ததால் தோல்வியிலிருந்து தப்பித்தது. இங்கிலாந்து தோல்விக்கு காரணம் என்ன? இங்கிலாந்து அணி 351 ரன்கள் சேர்த்து அதை டிபெண்ட் செய்ய முடியவில்லை என்பது வேதனைக்குரியது. அந்த அணியின் வேகப்பந்துவீச்சு உயிரற்ற நிலைக்கு சென்றுவிட்டது என்றுதான் கூற முடியும். இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டும் நேற்றைய ஆட்டத்தில் 26.3 ஓவர்கள் வீசி 226 ரன்களை வாரி வழங்கினர். 8.52 எகானமி ரேட் வைத்திருந்தனர். அதாவது ஓவருக்கு 8.50 ரன்களை இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர்கள் வாரி வழங்கினர். ஆர்ச்சர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த இங்கிலாந்து அணி அதை நேற்றோடு மறந்திருக்கலாம். ஆர்ச்சர் 10 ஓவர்கள் வீசி 82 ரன்களைக் கொட்டிக் கொடுத்தார், மார்க்வுட் நானும் சளைத்தவர் இல்லை என்ற ரீதியில் 75 ரன்களும், கார்ஸ் 7 ஓவர்கள் வீசி 69 ரன்களை வாரிக்கொடுத்தனர். அதில் ரஷித் ஒருவர் மட்டுமே 4.7 ரன்ரேட்டில் பந்துவீசியிருந்தார். லிவிங்ஸ்டன், ஜோ ரூட் இருவருமே 6 ரன்களுக்கு மேல் வழங்கினர். மார்க்வுட், ஆர்ச்சர் பந்துவீச்சில் வேகம் இருந்ததே தவிர ஸ்விங், கட்டர்கள், லைன் அன்ட் லென்த் ஏதுமில்லை. இங்கிலாந்து அணியின் ஒட்டுமொத்த தோல்விக்கு அந்த அணியின் பந்துவீச்சாளர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றுதான் கூற முடியும். அது மட்டுமல்லாமல் ஜோஸ் இங்கிலிஸ் அளித்த கேட்சை ஆர்ச்சர் பிடிக்காமல் கோட்டை விட்ட போதே ஆட்டம் அவர்களை விட்டு நகர்ந்துவிட்டது. இங்கிலாந்து அணி மிகப்பெரிய ஸ்கோர் அடிப்பதற்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் முக்கியக் காரணம். ஆஸ்திரேலியப் பந்துவீச்சை துவைத்து எடுத்து பென் டக்கெட் 165 ரன்கள் சேர்த்தார். இதில் 17 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் அடங்கும். சாம்பியன்ஸ் டிராபியில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரையும் பென் டக்கெட்(165) பதிவு செய்தார். இதற்கு முன் நியூசிலாந்து வீரர் நாதன் ஆஸ்லே 145 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாக இருந்தது. அவருக்கு துணையாக ஜோ ரூட் இருந்து 68 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரும் அடித்த ஸ்கோர்தான் இங்கிலாந்து அணிக்கு உயிரூட்டியது. மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்குள் ஆட்டமிழந்தனர். சாம்பியன்ஸ் டிராஃபி 2025: வெற்றிநடை போடுமா இந்திய அணி? துபை ஆடுகளம் எப்படி?20 பிப்ரவரி 2025 மகளிர் கால்பந்து போட்டிகள் ரத்து, நடிகைகளுக்கு மிரட்டல் - வங்கதேசத்தில் மதவாதம் தலைதூக்குகிறதா?19 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் ஒட்டுமொத்த தோல்விக்கும் அந்த அணியின் பந்துவீச்சாளர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சாம்பியன்ஸ் டிராபியில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரையும் பென் டக்கெட்(165) பதிவு செய்தார் சேவாக் சாதனையை சமன் செய்த ஜோஸ் இங்கிலிஸ் 86 பந்துகளில் 120 ரன்கள் சேர்த்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற ஜோஸ் இங்கிலிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த போட்டிக்கு முன்புவரை சாதாரண பேட்டராக மட்டுமே அறியப்பட்ட இங்கிலிஸ் ஒரே ஆட்டத்தில் உச்சத்துக்கு சென்றுவிட்டார். சர்வதேச அரங்கில் தனது முதல் சதத்தையும் பதிவு செய்தார். ஆஸ்திரேலிய பேட்டர் ஜோஸ் இங்கிலிஸ் 77 பந்துகளில் சதத்தை எட்டி, சாம்பியன்ஸ் டிராபியில் அதிவேகமாக சதம் அடித்த வீரர் வரிசையில் இந்தியாவின் வீரேந்திர சேவாக் சாதனையை சமன் செய்தார். 2002ல் கொழும்புவில் இங்கிலாந்துக்கு எதிராக 77 பந்துகளில் சேவாக் சதம் அடித்திருந்தார். இங்கிலாந்து செல்ல மாட்டார் ஜோஸ் இங்கிலிஸ் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில் " எங்கள் வீரர்கள் சிறப்பாக பேட் செய்தனர். ஷார்ட் ஆட்டம் அற்புதம். ஆடுகளத்தின் தன்மையை நாங்கள் பந்துவீச்சிலேயே கண்டுபிடித்தோம், இதில் 350 ரன்களை எளிதாக அடையலாம் எனத் தெரி்ந்துவிட்டது. 400 ரன்களை எட்டுவார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால், எங்கள் வீரர்கள் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். கேரே, இங்கிலிஸ் இருவரின் ஆட்டம் அழகாக இருந்தது, இங்கிலிஸ் அடித்த ஷாட்கள் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பறந்தன. ஜோஸ் இங்கிலிஸிடம் பிரிட்டன் பாஸ்போர்ட் இருந்தாலும் அவர் இனிமேல் அங்கு செல்ல மாட்டார்" எனத் தெரிவித்தார். சாம்பியன்ஸ் டிராபி நாளை தொடக்கம்: இந்தியா - பாகிஸ்தான் போட்டி எப்போது?18 பிப்ரவரி 2025 பிபிசி பாராவிளையாட்டு வீராங்கனை விருது வென்ற அவ்னி லேகரா வாழ்க்கையின் திருப்புமுனை என்ன?18 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES புதிய வரலாறு படைத்த ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் இங்கிலாந்து அணி 351 ரன்கள் குவித்து வரலாறு படைத்திருந்தது. ஆனால், அந்த சாதனையை வெறும் 3 மணிநேரம் மட்டுமை நிலைக்க வைத்திருந்த ஆஸ்திரேலியா 356 ரன்கள் குவித்து புதிய வரலாறு படைத்தனர். இதற்கு முன் 2004ல் அமெரிக்காவுக்கு எதிராக 347 ரன்கள் சேர்த்து நியூசிலாந்து சாதனை படைத்திருந்தது. 352 ரன்களை ஆஸ்திரேலியா சேஸ் செய்தது என்பது, ஐசிசி ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் அதிகபட்ச சேஸிங்காக மாறியது. இதற்கு முன் 2023 உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிராக 345 ரன்களை பாகிஸ்தான் சேஸிங் செய்ததே அதிகபட்சமாக இருந்தது, அதை ஆஸ்திரேலியா நேற்று முறியடித்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwye4j1l3v8o
-
பிபிசி புலனாய்வு - மேற்கு ஆப்பிரிக்காவில் அதிகரிக்கும் போதைப் பழக்கத்தின் பின்னணியில் இந்திய மருந்து நிறுவனம்
போதைப் பொருட்களாகப் பயன்படுத்தப்பட்ட மாத்திரைகளைத் தடை செய்த இந்தியா ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்திய மருந்து உற்பத்தி நிறுவனம் ஒன்று குறித்து பிபிசி ஐ நடத்திய புலனாய்வுக்குப் பிறகு, இந்திய அரசு டேபெண்டடால் மற்றும் காரிஸோப்ரோடால் ஆகிய மருந்துகளை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏவியோ ஃபார்மசூட்டிகல் என்று அழைக்கப்படும் மும்பையை தலைமையகமாக கொண்டு செயல்படும் நிறுவனம் முறையான உரிமம் இன்றி போதைக்கு அடிமையாக்கும் மருந்துகளை தயாரித்து வருகிறது என்று பிபிசி புலனாய்வில் தெரிய வந்தது. இந்த நிறுவனம் தயாரித்த மருந்துகள் சட்டத்திற்கு புறம்பாக மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு பெரிய அளவில் சுகாதாரப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. மருத்துவ ரீதியாக குறிப்பிட வேண்டும் என்றால் இந்த மருந்துகள் ஓபியாடுகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஓபியத்தில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகளான இவை போதைக்கு அடிமையாக்கும் தன்மைகளை கொண்டவை. மேற்கு ஆப்பிரிக்காவில் அதிகரிக்கும் போதைப் பழக்கம், பின்னணியில் இந்திய மருந்து நிறுவனம் - பிபிசி புலனாய்வு உலகின் ஏழ்மையான பகுதி எட்டே ஆண்டுகளில் வானுயர்ந்த கட்டடங்களுடன் பளபளப்பான நகரானது எப்படி? பிபிசி கள ஆய்வு தஹாவூர் ஹுசைன் ராணா: இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ள இவர் யார்? மும்பை தாக்குதலில் இவரின் பங்கு என்ன? துளசி கப்பார்ட்: டிரம்ப் அமெரிக்க உளவுத்துறை தலைவராக்கிய இவரது பின்னணி என்ன? இந்திய அரசு கூறியது என்ன? பிபிசி இந்தச் செய்தியை வெளியிட்ட பிறகு, மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாடு அமைப்பின் இயக்குநரகம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படும் மருந்து கட்டுப்பாடு அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், "சமீபத்தில் டேபெண்டடால் மற்றும் காரிஸோப்ரோடால் சேர்மங்களை உள்ளடக்கிய மருந்துகள் போதைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது என்றும், அதை மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றும் பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. போதைப் பொருட்களின் சாத்தியப் பயன்பாடு மற்றும் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, டேபெண்டடால் மற்றும் காரிஸோப்ரோடால் சேர்மங்களைச் சேர்த்த மருந்துகளைத் தயாரிக்கவும், ஏற்றுமதி செய்யவும் வழங்கப்பட்ட தடையில்லா சான்று அனைத்தும் திரும்பப் பெறப்படுகிறது. இந்த உத்தரவு உடனே அமலுக்கு வருகிறது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மத்திய மற்றும் மகாராஷ்டிரா அரசின் மருந்து கண்காணிப்பாளர்கள் ஏவியோ நிறுவனத்தின் உற்பத்தி மையம் மற்றும் மருந்து கிடங்கு ஆகியவற்றில் ஆய்வு நடத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அங்கே உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து மருந்துகளும் கைப்பற்றப்பட்டன. மருந்து உற்பத்தி உடனடியாக நிறுத்தப்பட்டது. Play video, "ஆபத்தான போதை மருந்துகளை மேற்கு ஆப்பிரிக்காவுக்கு அதிகளவில் அனுப்புவது யார்?", கால அளவு 14,47 14:47 காணொளிக் குறிப்பு, ஆபத்தான போதை மருந்துகளை மேற்கு ஆப்பிரிக்காவுக்கு அதிகளவில் அனுப்புவது யார்? மகாராஷ்டிராவில் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது? மகாராஷ்டிரா அரசின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம், "ட்ரமடோல், டேபெண்டடால், காரிஸோப்ரோடால் போன்ற மருந்துகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு நைஜீரியா, கானா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்கே அந்த மருந்துகள் போதைப் பொருட்களாகப் பயன்படுத்தப்படுகிறது," என்று பிபிசி பிப்ரவரி 21ஆம் தேதியன்று வெளியிட்ட செய்தியை மேற்கோள்காட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. "அந்த செய்திக்காக மகாராஷ்டிரா மாநிலத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஏவியோ நிறுவனத்திற்குள் சென்று பிபிசி புலனாய்வு மேற்கொண்டது. அந்த நிறுவனம் டேபெண்டடால் மருந்துகளை ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது என்பது அப்போது தெரிய வந்துள்ளது." "பிபிசி செய்தி வெளியானதைத் தொடர்ந்து, மத்திய மற்றும் மாநில மருந்து கட்டுப்பாடு அதிகாரிகள் கூட்டாகச் சேர்ந்து அந்த நிறுவனத்தின் உற்பத்தி மையம் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் சோதனை மேற்கொண்டு உடனடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். அங்கே உற்பத்தி செய்யப்பட்டு, வைக்கப்பட்டிருந்த மருந்துகள் அனைத்தும் கைப்பற்றப்பட்டன. மேலும், உற்பத்தி உடனடியாக முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டது." ஒரே வாரத்தில் உலகிலும், உள்நாட்டிலும் அதிர்வலைகளை ஏற்படுத்திய டிரம்பின் 19 நடவடிக்கைகள்4 மணி நேரங்களுக்கு முன்னர் காலநிலை மாற்றம்: ஆணுடன் ஒப்பிடுகையில் பெண்ணுக்கு இரட்டைச் சுமை என்று நிபுணர்கள் எச்சரிப்பது ஏன்?4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GOVERNMENT OF INDIA படக்குறிப்பு,மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாடு அமைப்பின் இயக்குநரகம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படும் மருந்து கட்டுப்பாடு அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. ''மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம் 1950இன் கீழ் விளக்கம் கேட்டு அந்த நிறுவனத்திற்கு குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. எந்த பாரபட்சமும் இன்றி நேர்மையாக இந்த விவகாரத்தில் மகாராஷ்டிரா அரசு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்'' என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், "2025ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதியன்று மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகளுக்கும் டேபெண்டடால், காரிஸோப்ரோடால் மற்றும் அதுபோன்ற மருந்துகளை உற்பத்தி செய்யவும் ஏற்றுமதி செய்யவும் வழங்கப்பட்ட தடையில்லா சான்றுகளை ரத்து செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. மகாராஷ்டிர அரசின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு நிர்வாகம், நெறிமுறைகளின் கீழ் ஏற்கெனவே நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது'' என்கிறது அந்த அறிக்கை. "இதுபோன்ற சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு நாட்டின் புகழுக்குத் தீங்கு விளைவிப்பது யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மகாராஷ்டிரா அரசு தயார் நிலையில் உள்ளது. மத்திய அரசுக்குத் தேவையான முழு ஒத்துழைப்பை மாநில அரசு வழங்கியுள்ளது," என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்த 67 படகுகளை ஏலம்விட இலங்கை முடிவு - இன்றைய முக்கிய செய்திகள்23 பிப்ரவரி 2025 சேவாக் சாதனை சமன்: இங்கிலாந்துக்கு எதிராக 352 இலக்கை எட்டிப் பிடித்து வரலாறு படைத்த ஆஸ்திரேலியா9 மணி நேரங்களுக்கு முன்னர் பிபிசி புலன் விசாரணையில் குறிப்பிடப்பட்டிருந்தது என்ன? படக்குறிப்பு, மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம் 1950இன் கீழ் விளக்கம் கேட்டு ஏவியோ நிறுவனத்திற்கு குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மருந்து உற்பத்தி நிறுவனமான ஏவியோ பார்மசூட்டிக்கல்ஸ் பல்வேறு பெயர்களில் பலதரப்பட்ட மருந்துகளை உற்பத்தி செய்து வருகிறது. அது மட்டுமின்றி அந்த நிறுவனம் அந்த மாத்திரைகளை, சட்டத்திற்கு உட்பட்டு தயாரிக்கப்படும் மாத்திரைகளைப் போன்றே 'ஃபேக்' செய்கிறது. ஆனால் அவை அனைத்திலும் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவுக்கும் சக்தி வாய்ந்த ஓபியாடுகளான டேபெண்டடால் மற்றும் தசை தளர்த்தியான காரிஸோப்ரோடால் இடம் பெற்றுள்ளன. காரிஸோப்ரோடால் மருந்து மிகவும் ஆபத்தானது என்பதால் அவை ஐரோப்பாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்துகளின் கலவையைப் பயன்படுத்த உலகில் எங்கும் உரிமம் இல்லை. இதைப் பயன்படுத்துவது சுவாசக் கோளாறு, வலிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும். அதிகமாக பயன்படுத்தும்போது உயிரிழப்புகள் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு. இத்தனை அபாயங்கள் இருந்தாலும்கூட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஓபியாடுகள் போதைப் பொருட்களாக பிரபலம் அடைந்துள்ளன. அவை மிகவும் எளிதில், மலிவு விலையில் கிடைப்பதுதான் அதற்குக் காரணம். கானா, கோட் டிவோயர் மற்றும் நைஜீரியாவின் தெருக்களில் ஏவியோ முத்திரை அடங்கிய பாக்கெட்டுகளில் இந்த மருந்துகள் விற்பனை செய்யப்படுவதை பிபிசி உலக சேவை கண்டுபிடித்தது. இந்த போதைப் பொருட்களைப் பற்றி அறிந்துகொள்ள பிபிசி ரகசியமாக ஒருவரை உளவு பார்க்க ஏவியோவின் தொழிற்சாலைக்குள் அனுப்பியது. உள்ளே சென்ற அவர், தன்னை ஒரு ஆப்பிரிக்க தொழிலதிபராக அடையாளப்படுத்திக் கொண்டார். மேலும் நைஜீரியாவுக்கு ஓபியாடுகளை அனுப்ப விரும்புவதாகவும் தெரிவித்தார். டிரம்பின் திடீர் அணுகுமுறையால் அதிர்ந்து போன யுக்ரேன் - போர் முனையில் நடப்பது என்ன?20 பிப்ரவரி 2025 பிரமாண்ட விண்வெளி கண்ணாடி மூலம் இரவை பகலாக்க முடியுமா? ரஷ்யாவின் இந்த திட்டத்தின் நோக்கம் என்ன?20 பிப்ரவரி 2025 படக்குறிப்பு, நைஜீரிய அதிகாரிகள் தாங்கள் கைப்பற்றிய சட்டவிரோத மருந்துகளை, பெரும்பாலும் வலி நிவாரண மருந்துகளை, லாகோஸில் உள்ள ஒரு கிடங்கில் சேமித்து வைத்துள்ளனர் ரகசிய கேமராவில், அந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான வினோத் ஷர்மா, பிபிசி மேற்கு ஆப்பிரிக்காவில் பார்த்த அதே தீங்கு விளைவிக்கும் மருந்துகள் குறித்து விளக்கம் அளிப்பதை பிபிசி பதிவு செய்தது. மறைமுகமாகப் பதிவு செய்யப்பட்ட காட்சிகளில், அந்த உளவாளி வினோத் ஷர்மாவிடம், நைஜீரியாவில் "இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்திருக்கும் இந்த மாத்திரைகளை" விற்கத் திட்டமிட்டு இருக்கிறேன் என்று கூறுகிறார். அதற்கு ஷர்மா வெறுமனே "சரி" என்று மட்டும் தெரிவிக்கிறார். மேலும் இந்த மாத்திரைகளில் இரண்டு அல்லது மூன்றை எடுத்துக் கொண்டால் எவ்வாறு "ஓய்வாகவும்", (போதையின்) உச்சநிலையையும் உணரலாம் என்பதையும் விளக்கினார். அந்தச் சந்திப்பின் முடிவில் ஷர்மா, "இந்த மருந்துகள் அவர்களின் ஆரோக்கியத்திற்குக் கேடானது. ஆனால் இதுவொரு தொழில்," என்று கூறினார். இதே தொழில்தான் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்களின் ஆரோக்கியத்தைப் பாதிப்புக்கு உள்ளாக்கி, அவர்களின் திறனை அழிக்கிறது. பிபிசி ஐ இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து வினோத் ஷர்மா மற்றும் ஏவியோ பார்மசூட்டிக்கல்ஸ் நிறுவனத்திடம் கேட்டபோது அவர்கள் அதற்குப் பதில் ஏதும் அளிக்கவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce98glxnvego
-
BBC தமிழோசை ஆனந்தி சூரியபிரகாசம் அவர்கள் காலமானார்!!!
ஆனந்தி சூரியப்பிரகாசம் அம்மையாருக்கு அஞ்சலிகள், ஓம் சாந்தி.
-
தினக்குரல் ஸ்தாபகர் எஸ்.பி.சாமி காலமானார்
பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான எஸ்.பி. சாமியின் பூதவுடல் தீயுடன் சங்கமம் Published By: DIGITAL DESK 7 23 FEB, 2025 | 06:15 PM பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான எஸ்.பி. சாமியின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்று , சாட்டி இந்து மயானத்தில் அவரது பூதவுடல் தகனம் செய்யப்பட்டது. தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகரான எஸ்.பி. சாமி என அழைக்கப்படும் செல்லையா பொன்னுச்சாமி தனது 89 ஆவது வயதில் கடந்த வியாழக்கிழமை காலமானார். அன்னாரது பூதவுடல் வெள்ளிக்கிழமை முதல், யாழ்ப்பாணம் , நல்லூர் செட்டித்தெருவில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் , அரசியல் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் , ஆலய தர்ம கார்த்த சபையினர் , ஊடகவியலாளர்கள் , வைத்தியர்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இறுதி கிரியைகள் இன்றைய தினம் இடம்பெற்று , அஞ்சலி உரைகள் நிகழ்வுகள் இடம்பெற்று , தகன கிரியைக்காக வேலணை சாட்டி இந்து மயானத்திற்கு பூதவுடல் எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. https://www.virakesari.lk/article/207467
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
LIVE 5th Match, Group A (D/N), Dubai (DICS), February 23, 2025, ICC Champions Trophy Pakistan 241 India (4.6/50 ov, T:242) 31/1 India need 211 runs from 45 overs.Stats view Current RR: 6.20 • Required RR: 4.68 Win Probability:IND 73.76% • PAK 26.24%
-
பூஜாபூமி என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விவசாய காணிகளை விடுவிக்குமாறு விவசாயிகள் கோரிக்கை
Published By: DIGITAL DESK 7 23 FEB, 2025 | 04:09 PM (துரைநாயகம் சஞ்சீவன்) புல்மோட்டை – சாத்தனமடு பகுதியில் பௌத்த பிக்குவால் கையகப்படுத்தப்பட்டுள்ள விவசாய காணிகளை விடுவிக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர். புல்மோட்டை கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட புல்மோட்டை சாத்தனமடு குளப்பகுதியின்கீழ் விவசாயத்தில் ஈடுபட்டுவந்த விவசாயிகளின் காணியில் பௌத்த மதகுரு ஒருவர் புத்தர் சிலையை வைத்து அதனைச் சுற்றியுள்ள விவசாய காணிகளில் பல வருட காலமாக விவசாயம் மேற்கொண்டுவந்த விவசாயிகளின் விவசாய நடவடிக்கைகளுக்கு தடைவிதித்து வருவதால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதித்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் அதனை சுற்றியுள்ள 10 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளில் விவசாயம் மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும், கிட்டத்தட்ட அதனை சுற்றியுள்ள 100 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை அவர் கையகப்படுத்தியுள்ளதாகவும் விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று பரவிய மக்கள் நடமாட்டம் இல்லாத 2019ஆண்டு காலப்பகுதியில் குறித்த பகுதியில் புத்தர்சிலை வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 2021ஆம் ஆண்டு காலப்பகுதியில் தற்போது இருக்கின்ற பாரிய புத்தர்சிலை வைக்கப்பட்டது. பௌத்த மக்கள் இல்லாத இடத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை பராமரிக்க எவரும் இல்லை. இதை நாங்கள்தான் பராமரித்து வருகின்றோம். முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் புல்மோட்டையில் பௌத்த மக்களே இல்லாத பகுதிகளில் பூஜா பூமி என்ற பெயரில் காணிகளை கையகப்படுத்தி புத்த சிலைகளை வைத்து நிலங்களை ஆக்கிரமிப்பதோடு இனங்களுக்கிடையிலான முறுகல் நிலையினையும் குறித்த பௌத்த மதகுரு மேற்கொண்டு வருகின்றார். இதனால் காலாகாலமாக அப்பகுதியில் விவசாயம் மேற்கொண்டு வந்த விவசாயி ஏ.எல்.எம்.மீராசாகிபு என்பவர் மீது தொல்லியல் பொருட்களை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டி கைது செய்து வழக்கும் தொடரப்பட்டிருந்தது. இதனால் அவர் மன உளைச்சலுக்கு உள்ளாகி 2021.12.12 அன்று இறந்தும்போனார். எனவே ஆட்சிக்கு வந்திருக்கின்ற புதிய அரசாங்கம் இவ்வாறான விடயங்களை கவனத்திற் கொண்டு பூஜாபூமி என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களுடைய காணிகளை விடுவித்து மக்கள் விவசாயத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர். குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புல்மோட்டை 01 கிராம சேவகர் பிரிவில், புல்மோட்டை கிராமத்தில் ஸ்ரீ சத்தர்ம யுக்திக்க வன செனசுன என்ற விகாரைக்காக நில அளவையாளர் தலைமையதிபதியின் 2019.09.09 ஆந் திகதியைக் கொண்ட இறுதிக் கிராம வரைபட இல. 30 என்பதில் குறித்துக் காட்டப்பட்டுள்ளவாறாக காணித்துண்டு இல. 1145 ஆலடிப்புலவு காணி மற்றும் தோண்டாமுறிப்பு காணி (7.1466 ஹெக்டேயர்), காணித்துண்டு இல.1146 ஆலடிப்புலவு காணி மற்றும் தோண்டாமுறிப்பு காணி (4.3715 ஹெக்டயார்), காணித்துண்டு இல. 1147 (11.7193 ஹெக்டேயர்), காணித்துண்டு இல. 1148 ஆலடிப்புலவு காணி (7.4712 ஹெக்டேயர்), காணித்துண்டு இல. 1153 நாவலடி மோட்டை காணி (1.0438 ஹெக்டேயர்) எனக் குறித்துக் காட்டப்பட்டுள்ளவாறான பரப்பளவில் மொத்தமாக 31.7524 ஹெக்டேயர் காணி 2023.08.15 அன்று வெளியிடப்பட்ட 2345/38 இலக்க அதிவிசேஷ வர்த்தமானி அறிவித்தல் மூலம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த விகாரையானது குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 2018.05.30 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/207446
-
'யாருக்கு மரணதண்டனை வழங்கவேண்டும் என்ற முடிவை பொலிஸார் எடுப்பதாகயிருந்தால் நாளை நாட்டில் எவரின் உயிருக்கும் உத்தரவாதமற்ற நிலைதான் உருவாகும்" - மக்கள் போரட்ட முன்னணியின் ரஜீவ்காந்
Published By: RAJEEBAN 23 FEB, 2025 | 01:09 PM இவற்றை பயன்படுத்தி அரசியல் கொலைகளும் படிப்படியாக இடம்பெறலாம் யாருக்கு மரணதண்டனை வழங்கவேண்டும் என்ற முடிவை பொலிஸார் எடுப்பதாகயிருந்தால் நாளை நாட்டில் எவரின் உயிருக்கும் உத்தரவாதமற்ற நிலைதான் உருவாகும் என மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார் செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது கொழும்பில் இடம்பெற்ற இரட்டை கொலை தொடர்பான சில விடயங்களை நாங்கள் பேசவேண்டியுள்ளது. இந்த நாட்டில் முன்னரும் பொலிஸார் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுகின்றவர்கள் அல்லது உண்மையாக குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்ட நபர்களை தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப கொண்டு சென்று கொலை செய்யக்கூடிய சில செயற்பாடுகளை செய்துள்ளார்கள்.கொலைசெய்துள்ளார். இப்படி பல தடவைகளில் பல தடவைகளில் இப்படியான விடயங்கள் இடம்பெற்றுள்ளன. இதனை நாங்கள் கூறவில்லை ஏற்கனவே அனுரகுமாரதிசநாயக்க நாடாளுமன்றத்தில் ' ஒருவர் ஆயுதம் இருக்கென்று கூறுவார் அவரை அழைத்து செல்வார்கள்,அவர் அந்தஆயுதத்தை எடுத்து பொலிஸாரை சுடுவதற்காக முயற்சி செய்வார் பின்னர் பொலிஸார் தங்களை காப்பாற்றிக்கொள்வதற்காக சுட்டார்கள் என்று இந்த கதையை கூறுவார்கள்,என தெரிவித்திருந்தார். இந்த கதை வந்து பல தடவைகள் தொடர்ச்சியாக பல சந்தர்ப்பங்களில் தெரிவிக்கப்பட்ட ஒன்று, இது பொய்யான கதை என்பது அனைவரும் அறிந்தது,பலரும் பல தடவைகளில் இதனை தெரிவித்துள்ளனர். கொழும்பில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தின் பின்னர் கைதுசெய்யப்பட்ட இருவரும் எப்படி ஆயுதம் இருக்கின்ற இடத்திற்கு அவசரமாக அழைத்து செல்லப்பட்டார்கள்?அழைத்து சென்றார்கள் என்பது தொடர்பில் பூரண விளக்கமில்லை. 2023ம் ஆண்டு தொடுக்கப்பட்ட வழக்கிலே குற்றவாளிகள் யாரையாவது எந்த இடத்திற்காக கொண்டு செல்லவேண்டும் என்றால் அதனை வீடியோ வடிவிலே பொலிஸார் பதிவு செய்யவேண்டும் என தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோ ஆதாரம் இருக்கவேண்டும், எங்கே கூட்டிச்சென்றார்கள் என்ன நடந்தது. எனினும் இந்த சந்தர்ப்பத்தில் இது எதுவுமே,செயற்படுத்தப்படவில்லை இவர்கள் குற்றவாளிகள் தான? இல்லையா? எதற்காக கொலை செய்தார்கள் யாரின் தூண்டுதலின் பேரில் கொலை செய்தார்கள் என்ற விடயங்கள் என்பது எல்லாம் தெரியவராமலே இருவரும் உயிரிழந்துவிட்டனர். பொலிஸாரை பொறுத்தவரையில் அவர்கள் யாருக்கு மரணதண்டனை கொடுக்கவேண்டும் என்ற முடிவை எடுப்பதாகயிருந்தால்,நாளை எங்களில் எவரின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லாத நிலை உருவாகும் என்பதை நாங்கள் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு நீதிமன்றம் செல்லவும் நீதிமன்றம் செல்லவும் குற்றவாளியென்றால், அவருக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதற்குமான அனைத்து சட்டதிட்;டங்களும் இலங்கையில் இருக்கின்றது. இவ்வளவு அவசரஅவசரமாக பொலிஸார் இவர்களை கொலை செய்வதற்கான காரணம் என்ற கேள்வியை அரசை நோக்கி நாங்கள் எழுப்புகின்றோம். இன்று நேற்றல்ல தொடர்ச்சியாக பல சந்தர்ப்பங்களிலே இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளன. எங்களை போன்ற செயற்பாட்டாளர்கள் பல தடவை கைதுசெய்யப்பட்டிருக்கின்றோம், எந்த வித பாரிய வன்முறையிலும் ஈடுபடாத எங்களையே கைவிலங்குகளை போட்டுத்தான் அழைத்துச்செல்வார்கள். ஆனால் இரண்டுபேர் கொலைகளை செய்த இரண்டுபேரை எந்த கைவிலங்கும் இல்லாமலா அழைத்து சென்றார்கள் என்ற கேள்வி எங்களிற்குள்ளது. அதுமட்டுமல்லாது தொடர்ச்சியாக எத்தனை காலம்தான் ஆயுதத்தை காட்டஎடுத்துச்சென்றார்கள் ஆயுதத்தை எடுத்து தங்களை சுட முயன்றார்கள் அவர்களை நாங்கள் கொலை செய்தோம் என தெரிவிப்பார்கள். அவர்களிற்கு சரியான பாதுகாப்பை ஏற்படுத்தி கொள்ள முடியவில்லையா அல்லது இந்த ஒரு பொய்கதைதான்அவர்களிடம் இருக்கின்றாதா என்ற கேள்வியெல்லாம் எங்களிடம் உள்ளது. உண்மையிலேயே இந்த நாட்டில் உள்ள குடிமக்களின் பாதுகாப்பு தொடர்பில் அதிக அக்கறை காண்பிக்கவேண்டிய காலமாக உள்ளது, சுமார் இரண்டு நாட்களில் ஆறுகொலைகள் இடம்பெற்றுள்ளன, ஜனவரியிலிருந்து இன்றுவரை 17 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன,. இன்று நேற்றல்ல இலங்கையில் பலகாலமாக பாதாளஉலகம் போதைப்பொருள் கடத்தல்காரர்கள்; என இந்தசூட்டு சம்பவம் இடம்பெறுவதை நாங்கள் அவதானித்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால் இவற்றை பயன்படுத்தி அரசியல் கொலைகளும் படிப்படியாக இடம்பெறலாம் கொலைகள் மலிந்துபோகின்றநாடாக இலங்கை மாறிக்கொண்டிருக்கின்றது. இந்த கொலைகளை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும்,அதற்கான சரியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் , பொலிஸார் கொலைகாரர்களாக மாறுவதை எந்த சந்தர்ப்பத்திலும் நாங்கள் அனுமதிக்க முடியாது. இந்த அரசாங்கம் ஏற்கனவே எதிர்கட்சியாகயிருந்தபோது தீவிரமாக எதிர்ப்பை தெரிவித்தஒரு அரசு. https://www.virakesari.lk/article/207442
-
சீமானுக்கு சிக்கலா..?
12 வாரம், 15 சாட்சிகள்: சீமான் கைது செய்யப்படுவாரா? நடிகை வழக்கின் அடுத்தக் கட்டம் என்ன? பட மூலாதாரம்,NAAM TAMILAR KATCHI கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 23 பிப்ரவரி 2025, 03:20 GMT நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான நடிகையின் புகார் தீவிரமானது என்பதால் அதை ரத்து செய்ய முடியாது என்று திங்கள் கிழமையன்று (பிப்ரவரி 17) சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு, 12 வாரங்களில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். "சீமான் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையை விசாரணை அதிகாரியே முடிவு செய்வார்," என்று கூறுகிறார் அரசு வழக்கறிஞர். ஆனால், சீமானுக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்தும் திட்டத்துடன் மாநில அரசு செயல்படுவதாக நாம் தமிழர் கட்சி குற்றம் சுமத்துகிறது. சீமானுக்கு எதிரான நடிகையின் புகார் என்ன ஆகும்? உத்தரவில் நீதிபதி சொன்னது என்ன? நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து விலகுவது ஏன்? கட்சிக்குள் என்ன நடக்கிறது? பெரியார் சொன்னதாக சீமான் சர்ச்சை கருத்து - பெரியார் உண்மையில் அப்படி குறிப்பிட்டாரா? பிரபாகரனை சீமான் சந்தித்தது உண்மையா? சமூக வலைதளங்களில் மீண்டும் சர்ச்சை சீமான் மீதான வழக்கின் பின்னணி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 2011ஆம் ஆண்டு நடிகை ஒருவர் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் ரீதியாக உறவு வைத்துக் கொண்டு சீமான் ஏமாற்றி விட்டதாக அவர் கூறியிருந்தார். இந்தப் புகாரின் பேரில் சீமான் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 417, 420, 354, 376, 506(i) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அடுத்து வந்த நாட்களில் புகாரை வாபஸ் பெறுவதாக வீடியோ பதிவு ஒன்றில் அவர் கூறியிருந்தார். இதையடுத்து, வழக்கின் மீது காவல்துறையும் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதன் பிறகு கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சீமான் மீது அதே நடிகை மீண்டும் ஒரு புகார் மனு அளித்தார். அதில், கணவன்-மனைவியாக தானும் சீமானும் வாழ்ந்ததாகவும் இதனால் தான் ஏழு முறை கர்ப்பமானதாகவும் அதை மாத்திரை மூலம் சீமான் கலைக்கச் செய்ததாகவும் அவர் கூறியிருந்தார். திரைத்துறை மூலம் சம்பாதித்துச் சேமித்து வைத்திருந்த சுமார் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை சீமான் எடுத்துக் கொண்டதாகவும் புகார் மனுவில் நடிகை கூறியிருந்தார். இந்தப் புகார் குறித்து செய்தியாளர்களுக்கு பதிலளித்த சீமான், அரசியல் காரணங்களுக்காகவும் தேர்தல் பணியில் இருந்து தன்னை திசை திருப்புவதற்காகவும் இந்தப் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தார். கோலிவுட்: பல வருடங்களாக தொடரும் கதைத் திருட்டு சர்ச்சை, ஒரு கதையை முறையாக பதிவு செய்வது எப்படி?22 பிப்ரவரி 2025 உலகெங்கும் அமெரிக்கா தங்கத்தை வாங்கிக் குவிப்பது ஏன்? தட்டுப்பாடு ஏற்படுமா? இந்தியாவில் என்ன பாதிப்பு?23 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த புகார் மீது அண்ணா நகர் காவல் துணை ஆணையர் உமையாள் விசாரணை நடத்தினார். புகார் அளித்த நடிகையின் வாக்குமூலம் திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. தனக்கு கருக்கலைப்பு நடந்ததாக அவர் குற்றம்சாட்டியிருந்ததால் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடிகைக்கு மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், 2011ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் தன் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் கடந்த ஆண்டு மனுத் தாக்கல் செய்திருந்தார். நீதிமன்றத்தில் என்ன நடந்தது? கடந்த திங்கள்கிழமையன்று (பிப்ரவரி 17) வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், சீமான் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்வதற்கு மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தார். இந்த வழக்கில் சீமான் தரப்பு மற்றும் அரசுத் தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி இளந்திரையன் விரிவான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அதில், "தங்கையின் குடும்ப விவகாரம் மற்றும் திரைத்துறை பிரச்னைகள் தொடர்பாக சீமானை நடிகை சந்தித்துள்ளார். அப்போது தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக சீமான் கூறியதால் இருவருக்கும் இடையில் உறவு ஏற்பட்டுள்ளது. ஆனால், திருமணம் செய்து கொள்ளுமாறு கோரிய போது பல்வேறு மிரட்டல்களை அவர் எதிர்கொண்டுள்ளார்" என்று தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார். கும்பமேளா: கங்கை நீர் குளிக்கவும் குடிக்கவும் உகந்ததா? மத்திய அரசுடன் உ.பி. அரசு முரண்படுவது ஏன்?22 பிப்ரவரி 2025 நாளந்தா பல்கலைக் கழகம் உலகையே மாற்றியது எப்படி? ஒரு வரலாற்றுப் பார்வை22 பிப்ரவரி 2025 'ஒருமித்த உறவு தவறல்ல' பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த வழக்கில் சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசியல் கட்சித் தலைவராகவும் நடிகராகவும் இயக்குநராகவும் உள்ள சீமான் மீது பொய்யான புகார் தரப்பட்டுள்ளதாக வாதிட்டார். கடந்த 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தான் கொடுத்த புகாரை வாபஸ் பெறுவதாக கூறிய நடிகை, 2023ஆம் ஆண்டில் மீண்டும் தவறான குற்றச்சாட்டுகளுடன் புகார் ஒன்றை கொடுத்ததாக குறிப்பிட்டார். கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரணைக்கு வருமாறு சீமானுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியது. அவரும் விசாரணைக்கு ஆஜராகி புகார் மனு வாபஸ் பெறப்பட்டதை சுட்டிக்காட்டியதாக சீமானின் வழக்கறிஞர் குறிப்பிட்டார். இந்த எஃப்.ஐ.ஆர், 2011 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிட்ட சீமானின் வழக்கறிஞர், "இருவருக்கும் இடையே பரஸ்பர சம்மதத்தின் பேரில்தான் உறவு (consensual sex) இருந்துள்ளது. இது தவறல்ல என இந்திய தண்டனைச் சட்டம் கூறுகிறது" என்றார். 15 சாட்சிகள் வாக்குமூலம் அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகிலன், சீமானுக்கு எதிரான புகாரை வாபஸ் பெறுவதாக நடிகை அளித்த கடிதம் விசாரணை அதிகாரிக்குச் சென்று சேரவில்லை எனக் கூறினார். வழக்கு முடிக்கப்படாமல் நிலுவையில் இருந்து வந்துள்ளதாகவும் இந்த வழக்கில் 15 சாட்சிகளிடம் போலீஸ் தரப்பில் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதேநேரம், 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சீமான் மீதான புகாரை வாபஸ் பெற விரும்பவில்லை என விசாரணை அதிகாரிக்கு வாட்ஸ் ஆப் மூலமாக நடிகை தகவல் அனுப்பியுள்ளதாகவும் முகிலன் தெரிவித்தார். இந்திய யூடியூப் கிராமம்: மொத்தமுள்ள 4,000 பேரில் 1,000 பேர் யூடியூபர்களானது எப்படி?5 மணி நேரங்களுக்கு முன்னர் பாம்பும் கீரியும் இயற்கையாகவே பகையாளிகளாக இருக்க என்ன காரணம்? பாம்பு விஷம் கீரியை ஒன்றும் செய்யாதா?20 பிப்ரவரி 2025 நீதிபதி உத்தரவில் என்ன உள்ளது? இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "ஆதாரங்களை வைத்துப் பார்க்கும் போது சீமான் மீது நடிகைக்கு எந்தக் காதலும் இல்லை. குடும்பப் பிரச்னை மற்றும் திரைத்துறை பிரச்னை தொடர்பாகவே அணுகியதாகக் குறிப்பிட்டார். தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறிவிட்டு அதன்படி நடந்து கொள்ளாததால் அவர் காவல்துறையில் புகார் அளித்தார். இந்த விவகாரத்தில் ஆறு முதல் ஏழு முறை வரை கருக்கலைப்பு செய்துள்ளார். அவரிடம் இருந்து அதிக தொகையை சீமான் வாங்கியுள்ளதாக கூறுகிறார்," என்று தெரிவித்தார். "அரசியல் அழுத்தம் காரணமாக இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை" எனக் கூறிய நீதிபதி, "மன ரீதியாக கடும் பிரச்னைகளை நடிகை எதிர்கொண்டுள்ளார். புகார் மனுவை அவர் வாபஸ் பெற்றாலும் சமரசம் செய்துகொள்ள முடியாது. இது தீவிரமான குற்றம்" என்றார். அந்த வகையில், "சீமான் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை" எனக் கூறிய நீதிபதி, " 12 வாரங்களுக்குள் விசாரணையை நிறைவு செய்து இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்" என்று காவல்துறைக்கு உத்தரவிட்டார். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் விமர்சனம்: தனுஷ் இயக்கிய 3வது படம் எப்படி இருக்கிறது?21 பிப்ரவரி 2025 டிராகன்: அரியர் வைப்பது கெத்தா? திரைப்படங்கள் கல்லூரி மாணவர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?20 பிப்ரவரி 2025 வழக்கின் அடுத்த கட்டம் என்ன? "வழக்கின் அடுத்தகட்டம் என்ன?" என குற்றவியல் வழக்குகளுக்கான தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் முகிலனிடம் பிபிசி தமிழ் கேட்டது. "நீதிமன்றம் 12 வாரம் அவகாசம் கொடுத்துள்ளது. இந்த வழக்கில் சாட்சிகளை விசாரணை செய்து இறுதி அறிக்கையை விசாரணை அதிகாரி தாக்கல் செய்ய வேண்டும்" எனக் கூறினார். தொடர்ந்து பேசிய முகிலன், "அவர் வழக்கை வாபஸ் வாங்கினாலும் வாங்காவிட்டாலும் இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்தலாம். அதை நீதிபதியே பதிவு செய்திருக்கிறார்" என்றார். "வழக்கின் முடிவில் சீமான் மீது தீவிர நடவடிக்கை எடுக்க முடியும்" எனக் கூறும் முகிலன், "என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதைப் புலனாய்வு அதிகாரியே முடிவு செய்வார்" எனக் கூறினார். 'கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கு பேசப்பட்டு வருகிறதே?' என்ற போது, "இதுவே தாமதம்தான். அதை நீதிபதியும் தனது உத்தரவில் பதிவு செய்துள்ளார்" என்றார் முகிலன். "சீமான் மீது என்ன நடவடிக்கை என்பது விசாரணை அதிகாரியின் எல்லைக்கு உட்பட்டது" எனக் கூறுகிறார், ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "வழக்கின் புலனாய்வை குறித்த நேரத்தில் முடிக்க முடியாவிட்டால் நீதிமன்றத்துக்கு காரணங்களைச் சொல்ல வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் சீமானைக் கைது செய்யலாம்" என்றார். "ஒருவர் புகாரை வாபஸ் வாங்கிவிட்டாலும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவல்துறையினர் புலனாய்வை தொடர்ந்து நடத்தலாம்" எனவும் அவர் குறிப்பிட்டார். வந்தவாசி பஞ்சமி நில சர்ச்சை: 'அரை மணிநேரத்துல மொத்தமா அழிச்சுட்டாங்க' - பிபிசி கள ஆய்வில் தெரிய வந்தது என்ன?21 பிப்ரவரி 2025 மேற்கு ஆப்பிரிக்காவில் அதிகரிக்கும் போதைப் பழக்கம், பின்னணியில் இந்திய மருந்து நிறுவனம் - பிபிசி புலனாய்வு21 பிப்ரவரி 2025 நாம் தமிழர் கட்சி சொல்வது என்ன? பட மூலாதாரம்,EDUMBAVANAM KARTHIK/FB ஆனால், இந்த விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் பார்வை வேறாக இருக்கிறது. சீமானை நேரடியாக எதிர்கொள்ள முடியாமல் அவரது நற்பெயரைக் கெடுக்கும் வகையில் இந்த விவகாரத்தை ஊதிப் பெரிதாக்கும் வேலையில் தி.மு.க ஈடுபட்டு வருவதாகக் கூறுகிறார், அக்கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக். "தன் மீதான வழக்கை திரும்பப் பெறுமாறு கூறி நீதிமன்றத்தில் சீமான் வழக்கு தொடர்ந்தார். ஆனால், வழக்கை திரும்பப் பெற முடியாது எனவும் முகாந்திரம் உள்ளதாகவும் நீதிபதி கூறியுள்ளார். இது இறுதி முடிவு அல்ல" எனக் கூறுகிறார் இடும்பாவனம் கார்த்திக். தொடர்ந்து பேசிய அவர், "வழக்கை வாபஸ் பெறுவதாக நடிகை பேசிய காணொளி தற்போதும் உள்ளது. ஆனால், அதற்கு மாறாக மக்கள் மத்தியில் சீமானுக்கு உள்ள நற்பெயரைக் கெடுக்கும் வேலைகளை தி.மு.க செய்கிறது" எனக் கூறினார். இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் வரை சென்று நாம் தமிழர் கட்சி, சட்ட ரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் இடும்பாவனம் கார்த்திக் குறிப்பிட்டார். தி.மு.க-வுக்கு தொடர்பு உள்ளதா? ஆனால், "இது இரண்டு தனிநபர்களுக்கு இடையிலான வழக்கு. இதற்கும் தி.மு.க-வுக்கும் எந்த தொடர்பும் இல்லை" எனக் கூறுகிறார் அக்கட்சியின் செய்தித்தொடர்பு இணைச் செயலர் தமிழன் பிரசன்னா. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் சீமான் மீது புகார் கொடுக்கப்பட்டது. வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அதற்காக அந்த நடிகை மிரட்டப்பட்டார் என்பதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. சீமான் மீதான புகாரை எளிதாகக் கடந்து சென்றுவிட முடியாது என நீதிபதி கூறுகிறார். இதில் தி.மு.க எங்கே வந்தது?" எனக் கேள்வி எழுப்பினார். "வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு நீதிமன்றத்துக்கு சீமான்தான் சென்றார். தி.மு.க ஆட்சிக்கும் இந்த வழக்குக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை" எனவும் அவர் குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c93k7xgd2kyo
-
மலசல கூடத்தில் குழந்தையை பெற்று யன்னலால் வீசிய மாணவி - மட்டக்களப்பில் சம்பவம்
Published By: DIGITAL DESK 3 23 FEB, 2025 | 12:21 PM மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயதுடைய மாணவி ஒருவர் மலசலகூடத்தில் குழந்தையை பெற்று யன்னல் வழியாக வீசிய சம்பவம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது. இது பற்றி தெரியவருவதாவது, 18 வயதுடைய மாணவி ஒருவர் நிறைமாத கர்ப்பிணி என்பதை மறைத்து வயிற்று வலி என தெரிவித்து சம்பவதினமான இன்று அதிகாலை 3.30 மணியளவில் மட்டு. போதன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியர் சரியான முறையில் சோதனையிடாத நிலையில் மாணவிக்கு ஊசி மூலமாக வயிற்று வலிக்கான வலிநிவாரண மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அதிகாலை 5 மணியளில் மாணவி மலசல கூடத்திற்கு சென்று குழந்தையை பெற்று யன்னல் வழியாக வீசியுள்ளார். குழந்தை யன்னலில் கீழ் உள்ள பிளேற்றில் வீழ்ந்து அழுகுரல் கேட்டதையடுத்து தாதியர்கள் அங்கு சென்று நிலையில் மாணவி குழந்தையை பெற்றுள்ளார் என அவர்களுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, குழந்தை மீட்கப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதுடன், தாய்க்கும் சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த குழந்தையும் தாயும் பாதுகாப்பாக உள்ளதாக மட்டு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கலாறஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/207439
-
சமத்துவ சமூகமின்மையே ஊழல், மோசடி நிறைந்த கலாசாரம் உருவாகக் காரணம் - பிரதமர் ஹரிணி
Published By: DIGITAL DESK 2 22 FEB, 2025 | 05:17 PM (எம்.வை.எம்.சியாம்) நாட்டில் கடந்த பல தசாப்தங்களாக சமத்துவத்தை அடிப்படையாக்கொண்ட சமூகத்தை எம்மால் உருவாக்க முடியாமல் போயுள்ளது. இதன் ஊடாக நாட்டில் ஊழல், மோசடி நிறைந்த கலாசாரம் உருவாகியுள்ளது. இந்த முறைமையை முடிவுக்கு கொண்டு வர தற்போது எமக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக நாட்டை ஜனநாயக ரீதியாக முன்னோக்கி நகர்த்த வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கொழும்பில் உள்ள ஐடிசி ரத்னதீப ஹோட்டலில் நடைபெற்ற இலங்கை புத்தாக்க மாநாட்டில் உரையாற்றும் போதே பிரதமர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், கடந்த காலங்களை சிந்தித்தே நாம் எதிர்காலம் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். எமது பழைய தலைவர்கள் தொடர்பில் நன்கு தெரியும். எமது நாட்டின் கடந்த காலம் தொடர்பில் நாம் பெருமையுடன் பேசுகிறோம். நாம் எதிர்காலம் தொடர்பிலும் சிந்திக்க வேண்டும். அது தொடர்பான கருத்தாடல்களில் புத்தாக்கங்கள் அவசியமாகும். குறிப்பாக புத்தாக்கம் தொடர்பில் சிந்திக்கும் போது அதில் ஆபத்துக்களும் இருக்கலாம். அனைவரும் புத்தாக்கங்களை மேற்கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளலாம். அது இலகுவான விடயமல்ல. புத்தாக்கங்கள் மூலம் எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டும். அதனை நாம் கட்டயாமாக செய்ய வேண்டும். விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பத்தை மாத்திரம் சிந்தித்து புத்தாக்கங்களை மேற்கொள்ள முடியாது. அதில் புதிய சிந்தனைகள் தாக்கம் செலுத்துகின்றன. நிச்சயமாக நாம் அதனை செய்ய வேண்டும். காலம் கடந்த சட்டங்களும் அதில் இருக்கின்றன. இந்த காலப்பகுதியில் புத்தாக்கம், அபிவிருத்தி என்ற கொள்கையுடன் முட்டி மோத வேண்டும். அந்த மோதலின் ஒருபகுதியே சமூக சமத்துவமாகும். அந்த சமத்துவத்தை அடிப்படையாகக்கொண்டு சமூகத்தை உருவாக்க முடியாமல் போயுள்ளமை எமக்கு கிடைத்த சுதந்திரத்தை ஜனநாயக முறையில் சரியாக பயன்படுத்தவில்லை என்பதை உணர்த்துகிறது. இதன் ஊடாக சலுகைகளை பெற்றுக் கொண்ட பிரப்புக்கள் அரசில் பாகுபாடுகளை உருவாக்கினார்கள். இதன் காரணமாக நாட்டில் ஊழல், மோசடி நிறைந்த அரசியல் கலாசாரம் உருவாகியது. இந்த முறைமையை முடிவுக்கு கொண்டு வர தற்போது எமக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அரசியல் பொருளாதார ரீதியாக நாட்டை ஜனநாயக ரீதியாக முன்னோக்கி நகர்த்த வேண்டும். அது நாம் எதிர்பார்த்த மாற்றமாக நாம் நினைக்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/207393
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
DRINKS 4th Match, Group B (D/N), Lahore, February 22, 2025, ICC Champions Trophy England 351/8 Australia (15/50 ov, T:352) 103/2 Australia need 249 runs from 35 overs. Current RR: 6.86 • Required RR: 7.11 • Last 5 ov (RR): 27/0 (5.40) Win Probability:AUS 28.46% • ENG 71.54%
-
இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி அசையா சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை
கோலிவுட்: பல வருடங்களாக தொடரும் கதைத் திருட்டு சர்ச்சை, ஒரு கதையை முறையாக பதிவு செய்வது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 'கதைத் திருட்டு' சர்ச்சை தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. கடந்த காலங்களில், கத்தி, சர்கார், மெட்ராஸ், லிங்கா, மெர்சல், காப்பான் போன்ற பல படங்கள் இதுதொடர்பான சிக்கல்களை சந்தித்துள்ளன. அதில் சில நீதிமன்ற வழக்குகளாகவும் மாறின. அப்படிப்பட்ட ஒரு வழக்குதான், ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், 2010இல் வெளியான எந்திரன் திரைப்படம் தொடர்பான வழக்கு. எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர், 'தான் எழுதி, 1997 மற்றும் 2007இல் வெளியான ஜூகிபா என்ற கதைதான் எந்திரன் திரைப்படத்தின் கதை' எனக் கூறி எந்திரன் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இயக்குநர் ஷங்கர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதைத் தொடர்ந்து, எழும்பூர் கீழமை நீதிமன்றத்தில் ஆரூர் தமிழ்நாடன் சார்பாக ஒரு வழக்கும் தொடரப்பட்டது. அந்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்நிலையில், 'எந்திரன்' திரைப்பட கதை விவகாரத்தில் இயக்குநர் ஷங்கருக்குச் சொந்தமான சுமார் 10.11 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று அசையாச் சொத்துகள் முடக்கப்பட்டதாக, கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி அன்று அமலாக்கத்துறை தெரிவித்தது. டிராகன்: அரியர் வைப்பது கெத்தா? திரைப்படங்கள் கல்லூரி மாணவர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் என்ன? விடாமுயற்சி: நவீன கால ராமாயணமா? பெரிதாக விளம்பரம் செய்யாதது ஏன்? மகிழ் திருமேனி பேட்டி பேட் கேர்ள் டீசர்: கலாசாரம், சாதி சர்ச்சைகள் கிளம்புவது ஏன்? படத்தின் இயக்குநர் கூறியது என்ன? கதை திருட்டு தொடர்பான சர்ச்சைகள் கடந்த ஆண்டு, தனுஷ் நடிப்பில் வெளியான 'கேப்டன் மில்லர்' திரைப்படம் தன்னுடைய 'பட்டத்து யானை' என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது என எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி தெரிவித்திருந்தார். "என் நாவலின் ஹீரோ, பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து பின்னர் அதிலிருந்து வெளியேறி, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்பார். அதைத் தழுவி 'கேப்டன் மில்லர்' படத்தை எடுத்துள்ளனர் எனத் தெரிகிறது. இந்தக் கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவுசெய்து வைத்திருக்கிறேன். என்னிடம் அனுமதி கேட்டு அதை எடுத்திருக்கலாம்." என அப்போது அவர் கூறியிருந்தார். ஒரு திரைப்படத்திற்கான கதை அல்லது திரைக்கதையை ஒரு தயாரிப்பாளரிடமோ, கதாநாயகர்களிடமோ அல்லது வேறு யாரிடமோ சொல்வதற்கு முன்பாக, அதை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்வது அவசியம் என்கிறார் எழுத்தாளரும், திரைக்கதை ஆசிரியருமான அஜயன் பாலா. சென்னையில் ஒரு நாள், மனிதன், லக்ஷ்மி, தலைவி, உயிர் தமிழுக்கு போன்ற தமிழ் படங்களில் இவர் பங்காற்றியுள்ளார். "அப்படி நீங்கள் பதிவு செய்த கதை/திரைக்கதையை வேறு ஒருவர் திருடி படமாக எடுத்துவிட்டால், அது குறித்து நீங்கள் சங்கத்திடம் புகார் அளிக்கலாம். நீதிமன்ற வழக்கு தொடரும்போதும் அந்தப் பதிவு முக்கிய ஆதாரமாக கருதப்படும்" என்று கூறுகிறார் அஜயன் பாலா. டிராகன் விமர்சனம்: படம் எப்படி இருக்கிறது? கல்லூரி நாயகனாக பிரதீப் ரங்கநாதன் கவர்ந்தாரா?21 பிப்ரவரி 2025 நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் விமர்சனம்: தனுஷ் இயக்கிய 3வது படம் எப்படி இருக்கிறது?21 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,DISCOVERY BOOK PALACE படக்குறிப்பு,'கேப்டன் மில்லர்' திரைப்படம் தன்னுடைய 'பட்டத்து யானை' என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது என எழுத்தாளர் வேல ராமமூர்த்தி தெரிவித்திருந்தார் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்வது எப்படி? சென்னை, கேகே நகர் பகுதியில் அமைந்துள்ள, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்ய வேண்டும் என்று கூறிய அஜயன் பாலா, அதன் நடைமுறைகள் குறித்து விளக்கினார். "முதலில் நீங்கள் வைத்திருப்பது ஒரு திரைப்படத்திற்கான கதைச் சுருக்கம் (Synopsis) என்றால் அது 10 பக்கங்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும். 50 பக்கங்கள் வரை அந்த கதைச் சுருக்கம் இருக்கலாம். மற்றொன்று முழுமையான திரைக்கதை (Bounded Script). அதாவது வசனம், காட்சிகள் என அனைத்தும் கொண்டது. இரண்டில் எதை வேண்டுமானாலும் பதிவு செய்யலாம்." என்கிறார். பதிவு செய்வதற்கு முன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில், ஒரு குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி உறுப்பினராக சேர வேண்டும். அதற்கான வழிமுறைகளை விவரித்தார் அஜயன் பாலா. "உங்களுடைய அனுபவத்தை முதலில் சங்கத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். 1) நீங்கள் ஒரு திரைப்பட எழுத்தாளரின் உதவியாளராக இருந்திருந்தால், 2) ஒரு இயக்குநரிடம், திரைப்படத்தில் துணை, இணை அல்லது உதவி இயக்குநராக பணியாற்றி, உங்களுடைய பெயர் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தால் (Credits) 3) நேரடியாக ஒரு படத்தில் எழுத்தாளராக பணியாற்றி, பெயர் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தால், 4) டிப்ளோமா இன் ஃபிலிம் டெக்னாலஜி (DFT) முடித்திருந்தால், 5) ஒரு குறும்படம் எடுத்து, அதில் உங்களுடைய பெயர் இடம்பெற்றிருந்தால், இதில் ஏதேனும் ஒன்று இருந்தாலே போதும் விண்ணப்பிக்கலாம்" என்று அவர் கூறினார். சங்கத்தில் மூன்று வகையான உறுப்பினர் சேர்க்கைகள் உள்ளன என்று கூறிய அஜயன் பாலா, அது குறித்தும் விளக்கினார். "ஆயுட்கால உறுப்பினர், உறுப்பினர், இணை உறுப்பினர் என மூன்று பிரிவுகள் உள்ளன. இதற்கான கட்டணம் 30,000 முதல் 5,000 வரை. அதை செலுத்தி உறுப்பினரான பிறகு உங்கள் கதை/திரைக்கதையை பதிவு செய்யலாம்" என்று அவர் கூறினார். எட் ஷீரன்: திக்குவாய் பிரச்னையை கடந்து, 600 கோடி பார்வைகளை பெற்று இசையில் சாதித்த இவர் யார்?5 பிப்ரவரி 2025 சொல்லிசை சிஸ்டாஸ்: ஒடுக்குமுறைக்கு எதிராகப் பாடும் தமிழ்நாட்டின் முதல் பெண்கள் ராப் இசைக் குழு17 ஜனவரி 2025 பட மூலாதாரம்,AJAYAN BALA BASKARAN/FB படக்குறிப்பு,ஒரு திரைப்படத்திற்கான கதை/திரைக்கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்வது அவசியம் என்கிறார் அஜயன் பாலா பதிவின் போது, கதை/திரைக்கதையின் இரண்டு பிரதிகளை கைவசம் வைத்திருக்க வேண்டும் என்றும், அதில் ஒன்று சீலிடப்பட்டு உறுப்பினர் வசம் ஒப்படைக்கப்படும் என்றும், மற்றொன்று சங்கத்தில் வைக்கப்படும் என்றும் அஜயன் பாலா கூறினார். "உங்கள் கதையை வேறொருவர் படமாக எடுக்கிறார் என தெரிந்தால் அல்லது படம் வெளியான பிறகு தெரிந்தால், நீங்கள் சங்கத்திடம் முறையிடலாம். உங்களையும் குற்றம் சுமத்தப்பட்ட நபரையும் அழைத்து, இருவரும் எப்போது கதையைப் பதிவு செய்துள்ளீர்கள் என பார்ப்பார்கள். நீங்கள் முதலில் பதிவு செய்திருந்தால், உங்களின் வாதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்" என்கிறார். ''ஆனால், பதிவு செய்யப்படாத கதை அல்லது திரைக்கதை திருடப்பட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாலும் அல்லது சங்கத்தில் முறையிட்டாலும், நீதி அல்லது இழப்பீடு கிடைப்பது மிகவும் கடினம்'' என்கிறார் அஜயன் பாலா. சர்கார் படத்தின் கதை தொடர்பான சர்ச்சை பட மூலாதாரம்,SUNPICTURES/X ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் வெளியீட்டிற்கு முன்பே கதைத் திருட்டு சர்ச்சையில் சிக்கியது. படத்தின் கதை, தனது 'செங்கோல்' படத்தின் கதையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என்று கூறி துணை இயக்குநர் வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 2007ஆம் ஆண்டு, அந்த கதையை தான் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்ததாகவும் அவர் தெரிவித்தார். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ், "'செங்கோல்' மற்றும் 'சர்கார்' ஆகிய இரண்டு கதைகளுமே ஒன்றுதான்" என்று அப்போது கூறியிருந்தார். பிறகு இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது வருண் ராஜேந்திரனுடன் சமரசம் செய்துகொள்வதாக முருகதாஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பட டைட்டிலில் வருண் ராஜேந்திரனுக்கு நன்றி தெரிவிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. இருதரப்பினர் இடையே சமரசம் ஏற்பட்டதை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது. டீப்சீக் ஏஐ: செயற்கை நுண்ணறிவு துறையில் சீனாவுக்கு நிகராக இந்தியா வளர முடியுமா?21 பிப்ரவரி 2025 தவளைக் குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் அரிய வகை ஆண் தவளை21 பிப்ரவரி 2025 'நியாயம் கிடைத்தாலும், வாய்ப்புகள் கிடைப்பதில்லை' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கதைத் திருட்டு குறித்து தான் எழுப்பிய புகாரால், 3 முதல் 4 ஆண்டுகளுக்கு இயக்குநர் வாய்ப்பு பலமுறை கைநழுவிப் போனதாக கூறுகிறார் வினோத் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) "ஆனால், சங்கம் அல்லது நீதிமன்றத்தில் முறையிட்டு நியாயம் கிடைத்தால் கூட, அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது" என்று கூறும் வினோத் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது முதல் திரைப்படத்தை விரைவில் இயக்கவுள்ளார். (தனது அடையாளம் வெளியானால், நீண்ட போராட்டத்திற்கு பிறகு, ஒரு படம் இயக்க தற்போது கிடைத்துள்ள வாய்ப்பில் ஏதேனும் சிக்கல் ஏற்படலாம் என அவர் கருதுவதால், அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளது) வினோத்தின் கூற்றுப்படி, அவர் துணை இயக்குநராக இருக்கும்போது, ஒரு முழுமையான கதை மற்றும் திரைக்கதையை எழுதி, சங்கத்தில் பதிவு செய்துள்ளார். பிறகு தயாரிப்பாளர்கள், கதாநாயகர்களின் மேனேஜர்களை சந்தித்து தனது கதையைக் கூறியுள்ளார். "அப்படி ஒரு பிரபலமான நடிகரின் மேனேஜரை சந்தித்து கதை சொன்னபோது, அவருக்கு பிடித்துப்போக, நிச்சயம் திரைப்படமாக எடுக்கலாம் என்று கூறினார். அவர்களது தயாரிப்பு நிறுவனமே அதை தயாரிக்கும் என்றும் கூறினார். முழு ஸ்கிரிப்ட் (Bounded script) கேட்டார், நானும் கொடுத்தேன். சினிமாவில் ஒரு திரைப்படம் தொடங்க சில மாதங்கள் ஆகும் என்பதால், நான் காத்திருந்தேன்." என்கிறார் வினோத். அந்த பிரபல நடிகர் வேறொரு படத்தை முடித்துவிட்டு, வினோத்தின் படத்திற்கு தேதிகள் ஒதுக்குவார் எனக் கூறப்பட்டதால், ஒரு புதிய கதையை எழுதுவதில் கவனம் செலுத்த தொடங்கியதாக கூறுகிறார். "எப்படியும் சில மாதங்களில் நமது திரைப்படம் தொடங்கும் என்ற நம்பிக்கையில், அதுவரை இருக்கும் நேரத்தை ஒரு புதிய கதை எழுத செலவிட்டேன். ஒரு வருடத்திருக்கும் மேல் கடந்தது. திடீரென ஒருநாள் நாளிதழ்களில், அந்த நடிகரின் புதிய படத்தின் பூஜை குறித்த விளம்பரங்கள் வந்தன." என்கிறார் வினோத். ''அந்த விளம்பரங்களை பார்த்தபோது தனக்கு எந்த சந்தேகமும் வரவில்லை. ஆனால் அந்தப் படத்திற்கு ஒப்பந்தமான பிரபல இயக்குநர் ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில் திரைப்படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்தார். அதைப் படித்ததும் எனது கதையைதான், சற்று மாற்றி எடுக்கிறார்கள் என்று எனக்கு புரிந்துவிட்டது. உடனே சங்கத்திடம் முறையிட்டேன். இருதரப்பு கதைகளையும் கேட்ட பிறகு, சங்கம் எனது பக்க நியாயத்தைப் புரிந்துகொண்டது. ஆனால், எதிர்தரப்பு குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. ஒருவழியாகப் பேசி, படத்தின் தொடக்கத்தில் எனது பெயரை (Credits) போட ஒப்புக்கொண்டார்கள்." என்கிறார் வினோத். இந்த சம்பவத்தின் தாக்கத்தால், 3 முதல் 4 ஆண்டுகளுக்கு இயக்குநர் வாய்ப்பு பலமுறை கைநழுவிப் போனதாக கூறுகிறார் வினோத். "இவனுக்கு வாய்ப்பு கொடுத்தால் பிரச்னை வருமோ என சிலர் நினைத்திருக்கலாம். அந்த பிரபல நடிகரின் நட்பு வட்டம் பெரிது என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஒருவழியாக, இப்போது தான் ஒரு திரைப்படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்துள்ளது." என்கிறார் வினோத். சாவர்க்கர் மன்னிப்பு கேட்டு ஆங்கிலேயருக்கு கடிதம் எழுதியது ஏன்? அருண் ஷோரி புது தகவல்19 பிப்ரவரி 2025 தாந்தியா தோபே: சப்பாத்தி மூலம் புரட்சி செய்தியைப் பரப்பிய கிளர்ச்சியாளர் - ஆங்கிலேயர்களை திணற வைத்தது எப்படி?19 பிப்ரவரி 2025 தயாரிப்பாளர் தரப்பு கூறுவது என்ன? பட மூலாதாரம்,@DHANANJAYANG படக்குறிப்பு,கதைத் திருட்டு என்றால், இரு யோசனைகள் மட்டுமே ஒத்துப்போவதல்ல, திரைக்கதை காட்சிகள் ஒத்துப்போக வேண்டும் என்கிறார் தயாரிப்பாளர் தனஞ்செயன். தமிழ் சினிமாவில் நிலவும் 'கதைத் திருட்டு' பிரச்னைகள் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயன், "எங்களிடம் யாராவது கதை சொல்ல வந்தால், முதலில் கேட்பது உங்கள் கதையை பதிவு செய்து விட்டீர்களா என்றுதான். செய்துவிட்டோம் எனக் கூறினால், பதிவு எண்ணை சரிபார்ப்போம்." "பதிவு செய்வது குறித்து அவர்களுக்கு தெரியவில்லை, என்றால் வழிகாட்டுவோம். பதிவு செய்யாத திரைக்கதையை நாங்கள் வாங்கிக் கொள்வதில்லை" என்கிறார். "நான் தயாரித்து, விக்ரம் நடிப்பில் வந்த 'தாண்டவம்' திரைப்படம் வெளியீட்டிற்கு முன்பே கதைத் திருட்டு பிரச்னை வந்தது. ஒரு எழுத்தாளர் 'தாண்டவம்' என்னுடைய கதை என வழக்கு தொடர்ந்தார். ஆனால், படத்தின் கதைக் கரு அல்லது யோசனை (Idea) பல ஹாலிவுட் படங்களின் தாக்கத்தால் உருவானது என்றும், அதற்கு யாரும் பதிப்புரிமை கோரவில்லை என்பதும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது." என்கிறார். கடந்த 2023ஆம் ஆண்டு, 'ஷம்ஷேரா' எனும் பாலிவுட் திரைப்படத்தின் 'கதைத் திருட்டு' தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், "யோசனைகளுக்கு (Idea) பதிப்புரிமை இல்லை, அதை எவ்வாறு வெளிப்படுத்துகிறோம் (திரைக்கதையில் காட்சிகளாக அமைப்பது) என்பதில் மட்டுமே பதிப்புரிமை கோர முடியும். வாதி பதிப்புரிமை மீறலைக் கோருவதற்கு, இரண்டு போட்டி படைப்புகளுக்கும் இடையே கணிசமான ஒற்றுமை இருக்க வேண்டும்." என்று கூறியது. இதைச் சுட்டிக்காட்டிய தயாரிப்பாளர் தனஞ்செயன், "கதைத் திருட்டு என்றால், இரு யோசனைகள் மட்டுமே ஒத்துப்போவதல்ல, திரைக்கதை காட்சிகள் ஒத்துப்போக வேண்டும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இது புரியாமல் எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளால் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்" என்கிறார். "ஒரு கதை- திரைக்கதையை உருவாக்குவது சாதாரணமான விஷயமல்ல. எனவே பாதிக்கப்பட்ட படைப்பாளிகள் பக்கம் தயாரிப்பாளர்கள் நிச்சயம் நிற்பார்கள். மற்றபடி, நல்ல கதை/திரைக்கதை எழுதுபவர்களுக்கு எப்போதுமே தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் உள்ளன." என்கிறார் தயாரிப்பாளர் தனஞ்செயன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwydl9dlegqo
-
தரம் 6 இற்கு தமது பிள்ளைகளை சேர்ப்பதில் சிரமத்தை எதிர்நோக்கியுள்ள பெற்றோர்கள்
22 FEB, 2025 | 05:57 PM (அட்டன் கிளை) அட்டன் கப்ரியல் மகளிர் கல்லூரியின் தமிழ்ப் பிரிவுக்கு தமது பிள்ளைகளை தரம் 6 இற்கு உள்வாங்குவதில் கல்லூரி நிர்வாகம் அசமந்தமாக செயற்படுவதாக பெற்றோர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் வலயக்கல்வி பணிமனையின் உத்தரவுகளையும் மேற்படி கல்லூரி நிர்வாகம் அசட்டை செய்வதாகவும் காரணமின்றி தமது பிள்ளைகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர். தரம் 6 இற்கு தமது பிள்ளைகளை சேர்ப்பதற்கு விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் பிள்ளைகளை நேர்காணலுக்கு அழைக்காமல் எந்த காரணங்களும் கூறப்படாமல் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு பெற்றோருக்கு அனுப்பப்பட்டுள்ளன. கல்லூரி அதிபரின் கையொப்பம் இல்லாது இலட்சிணை மாத்திரம் இடப்பட்டு தமக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதையடுத்து பல பெற்றோர்கள் அட்டன் வலயக்கல்வி பணிமனைக்குச் சென்று பணிப்பாளரிடம் இது குறித்து முறைப்பாடு செய்ததையடுத்து அவர் அதிபரிடம் இது குறித்து விளக்கமளித்து சுற்றுநிருபங்கள் மற்றும் மாணவர் சேர்க்கை விதிகளின் படி மாணவிகளை உள்வாங்கும்படி அறிவுறுத்தியுள்ளார். மேலும் நிராகரிக்கப்படுவதாக கடிதங்கள் அனுப்புவது முறையல்ல என்றும் பாடசாலை அதிபரின் கையொப்பங்கள் இல்லாது அனுப்பியதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என உதவிக் கல்வி பணிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும் வெள்ளிக்கிழமையன்று மீண்டும் பாடசாலைக்குச் சென்ற பெற்றோர்கள் மற்றும் மாணவிகளை ஒரு மணித்தியாலயத்துக்கு மேல் காக்க வைத்துள்ள கல்லூரி நிர்வாகம், பெற்றோரை அழைத்து, உங்களுக்கு கடிதம் அனுப்புகிறோம் எனக் கூறி திருப்பியனுப்பியுள்ளது. அட்டன் கப்ரியல் கல்லூரியின் தரம் ஒன்று தமிழ்ப்பிரிவுக்கும் தரம் ஆறுக்கும் மாணவிகளை உள்வாங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவது குறித்து பல வருடங்களாக சுட்டிக்காட்டப்பட்டும் அது குறித்து கல்வி அதிகாரிகளோ அல்லது அரசியல் பிரமுகர்களோ அக்கறை கொள்வது கிடையாது என விசனம் தெரிவிக்கின்றனர். https://www.virakesari.lk/article/207405