ஏராளன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Everything posted by ஏராளன்
-
வடக்கு, கிழக்கு மாகாண அனர்த்த நிலைமைகள் தொடர்பான செய்திகள் - 2025
அம்பாறையில் அடைமழை; கிட்டங்கியில் வெள்ளப்பெருக்கு Published By: Digital Desk 3 27 Nov, 2025 | 04:37 PM அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் கிட்டங்கி தாம்போதி வீதியினை கடப்பவர்களுக்கு பாதுகாப்புடன் கூடிய பொறுமுறை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கமை நாவிதன்வெளி பிரதேச செயலகம் நாவிதன்வெளி பிரதேச சபை இலங்கை இராணுவம் கடற்படை கல்முனை பொலிஸார் சவளக்கடை பொலிஸார் தன்னார்வ ஆர்வலர்கள் இணைந்து இப்பொறிமுறையினை உருவாக்கியுள்ளதுடன் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பொதுப்போக்குவரத்துகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கமைய உழவு இயந்திரம் இயந்திர படகுகள் ஊடாக இரு கரையிலும் உள்ள பொதுமக்கள் அத்திய அவசிய தேவைகளுக்காக ஏற்றி இறக்கப்பட்டு வருகின்றனர் என எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் குறிப்பிட்டார். இடையே வீதி மூடப்பட்டு பொலிஸார் இராணுவம் பாதுகாப்பு கடமையில் இன்றும் ஈடுபட்டுள்ளதை காண முடிகின்றது.மேலும் அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன்,வீதிகள் பலவும் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றது. அத்தோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் அட்டாளைச்சேனை, தைக்கா நகர் , அக்கரைப்பற்று, நிந்தவூர்,காரைதீவு, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, கல்முனை , நாவிதன்வெளி, மருதமுனை, பெரியநீலாவணை போன்ற பிரதேசங்களும் தாழ்நிலப் பகுதிகளிலுள்ள சில வீட்டுத்திட்டங்களும் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன. மாவட்டத்தில் தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது. இதனால் தாழ்நிலப் பிரதேசங்கள், வீடுகள், வீதிகள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கக் கூடிய அபாயமும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/231674
-
மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் - தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள்
வரலாற்றில் முதன்முறையாக மாவீரர்களுடன் விடுதலை புலிகளின் தலைவருக்கும் அஞ்சலி..! தமிழர் தாயகப் பரப்பிலும், புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன. இதன் போது மாவீரர்களின் உருவப் படங்களுக்கு தீபமேற்றியதுடன் மலர் அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர். https://tamilwin.com/article/mulankavil-maaveerar-thinam-1764247643
-
விடுதலைப் புலி பயங்கரவாதிகளை 'வீரர்கள்' போல் கொண்டாட அனுமதித்தமை அரசாங்கத்தின் கோழைத்தனம் – சரத் வீரசேகர
27 Nov, 2025 | 04:19 PM இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்த தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதிகள் 'வீரர்கள்' போல கொண்டாடப்படுவதை அரசாங்கம் அனுமதிப்பது அதன் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சித் தலைமையகத்தில் இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயங்களைத் தெரிவித்தார். இதன்போது அவர் கூறுகையில், நேற்றும் இன்றும் மாவீரர் தினம் என்ற பெயரில் ஒரு நிகழ்வைக் கண்டோம். பிரதேசங்கள் முழுவதும் சிவப்பு மற்றும் மஞ்சள் கொடிகள், அதாவது விடுதலைப் புலிகளின் வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டு, விடுதலைப் புலிகளின் பாடல்களுடன் பாரிய கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன. பிரபாகரனின் பிறந்த நாளில், நாட்டின் பிரிவினைக்காக, தனிநாடு கோரி, பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்த பயங்கரவாதிகளை 'வீரர்கள்' போல கொண்டாடுவதற்கு இடமளிப்பது அரசாங்கத்தின் கோழைத்தனத்தை வெளிப்படுத்துகிறது. ஒரு போரில் வெற்றி பெற்ற அரசாங்கம், அந்த பயங்கரவாதிகள் மீண்டும் தலைதூக்க ஒருபோதும் வாய்ப்பு கொடுக்கக்கூடாது. ஆனால், இந்த அரசாங்கம் அந்தப் பொறுப்பிலிருந்து முழுமையாக விலகிவிட்டது. எந்தத் தாயும் தனது பிள்ளைப் பயங்கரவாதியாகவோ அல்லது குற்றவாளியாகவோ இருந்தாலும், வீட்டில் ஒரு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், குழுவாகவும், ஒழுங்கமைக்கப்பட்ட வகையிலும் இதுபோன்ற கொண்டாட்டங்களை நடத்துவது பிரிவினைவாதத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் உயிர் கொடுப்பதற்கும் சமமாகும். தினகரன் பத்திரிகை இந்த 'புலிகளின் அரசியல்' பற்றி விரிவான பிரச்சாரத்தை வழங்குகிறது. நான் அரசாங்கத்திடம் கேட்க விரும்புகிறேன், மீண்டும் ஒரு போரைத் தான் அவர்கள் விரும்புகிறார்களா? இத்தகைய செயல்பாடுகளால் நல்லிணக்கம் ஏற்படுமா? இது மேலும் பிரிவினையைத் தான் உருவாக்கும். இவற்றை நிறுத்துவது அரசாங்கத்தின் முழுப் பொறுப்பாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கனடாவுக்குச் சென்று, கனடா தமிழ் காங்கிரஸ் நடத்திய நிகழ்வொன்றில் பங்கேற்றுப் பேசும்போது, கனடாவில் வீதியை மூடி போராட்டங்கள் நடத்திய டயஸ்போரா தமிழர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். உலகின் ஒரே நாடற்ற இனம் தமிழர்கள் என்றும், அது தமக்கு ஒரு துரதிர்ஷ்டம் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே, இந்த நாட்டிலும் ஒரு தனி நாட்டை அல்லது தனி அரசை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை அவர் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார். தமிழர்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம் என்று அவர் கூறுகிறார். இது மீண்டும் விடுதலைப் புலிகளுக்குத் தலைதூக்க இராசமாணிக்கம் பகிரங்கமாக அழைப்பு விடுப்பது போல் தெரிகிறது. அவர் ஒருமித்த நாட்டிற்கு (Unitary State) சத்தியப்பிரமாணம் செய்தவர் என்பதால், அவர் ஒரு தனிநாடு பற்றிப் பேசினால், அவரால் பாராளுமன்றத்திற்கு வர முடியாது. எமது இராணுவம் 295,000 அப்பாவி தமிழ் மக்களை மீட்டே இந்தப் போரில் வெற்றி பெற்றது. அந்த மக்களை 6 மாதங்களுக்குள் மீண்டும் குடியேற்றினோம். தமிழ் மக்களுக்கு அன்பு காட்டுவதாகக் கூறும் இந்தத் தமிழ்க் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், அப்போது உதவி செய்ய வந்தார்களா? இன்று வடக்கிலும் வெளிநாடுகளிலும் அமர்ந்துகொண்டு இத்தகைய போராட்டங்களை நடத்த முயற்சிக்கும் இவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். இது தேசத்துரோகச் செயலாகும். மட்டக்களப்பு, வவுணதீவில் அண்மையில் தொல்லியல் பலகைகள் அகற்றப்பட்டதைக் கண்டோம். இது பொதுச் சொத்துக்களுக்கு எதிரான குற்றம் என்பதால், பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுத்தால் பிணை கிடைக்காது. ஆனால், அதைத் தவிர வேறு சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் மட்டும் 528 பௌத்த நினைவுச்சின்னங்கள் / தொல்லியல் தளங்கள் உள்ளன. வேறு எந்தப் பகுதியிலும் இத்தகைய எதிர்ப்பு இல்லை. இந்தப் பகுதிகளில் மட்டும் எதிர்ப்புத் தெரிவிப்பது, 'இவை எமது பூர்வீக நிலம்' என்று காட்டுவதற்கே. இதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். அரசாங்கம் உடனடியாக இந்த நபர்களுக்கு எதிராகச் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்று கூறியிருந்தார். https://www.virakesari.lk/article/231668
-
மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!
27 Nov, 2025 | 04:06 PM முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல் நிலை பரிசோதனைக்காகவே மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/231666
-
மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் - தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள்
நல்லூரடியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர்நாள் நினைவேந்தல்! மாவீரர் நாள் நினைவேந்தலானது இன்றையதினம் நல்லூரடியில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. சரியாக 06.05 மணிக்கு மணி ஒலிக்க, 06.06 மணிக்கு மௌன வணக்கம் செலுத்தப்பட்டு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கேப்டன் பண்டிதரின் தாயார் பொதுச் சுடர் ஏற்றி வைக்க, சம நேரத்தில் ஏனைய சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டு, "தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே" என்ற துயிலும் இல்ல கீதம் ஒலிக்கப்பட்டது. இதன்போது மண்ணின் விடுதலைக்காக வித்தாகியோரது பெற்றோரும், உரித்துடையோரும் கூறி அழுததை அவதானிக்க முடிந்தது. நல்லூர் வளாகத்தில் அமைக்கப்பட்ட மாவீரர்களின் கல்வெட்டுகளையும் மக்கள் பார்வையிட்டனர். https://tamilwin.com/article/maaveerar-naal-2025-nallur-1764248204
-
இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் தொடர்
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் வீழ்ச்சிக்கு கம்பீர் மட்டுமே காரணமா? பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் மே, 2018... ஆஸ்திரேலிய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பதவியேற்கிறார் ஜஸ்டின் லாங்கர். முதல் பத்திரிகையாளர் சந்திப்பில், "களத்தில் உங்களுக்கான பெரிய சவாலாக எதைக் கருதுகிறீர்கள்?" என்று கேட்கப்படுகிறது. அதற்கு லாங்கர் கொடுத்த பதில்: "ஒரு உலகக் கோப்பை, இரண்டு ஆஷஸ் என நிறைய பெரிய தொடர்கள் வரப்போகின்றன. ஆனால், அதையெல்லாம் விடப் பெரிய சவால் என்றால், இன்னும் 3-4 ஆண்டுகளில் இந்திய அணிக்கு எதிராக இந்தியாவில் ஆடும் டெஸ்ட் தொடர்தான். ஏனெனில், நாங்கள் ஒரு சிறந்த கிரிக்கெட் அணியா என்பதை இந்தியாவை இந்தியாவில் வீழ்த்துவதை வைத்துத்தான் மதிப்பிடுவோம். என் கரியரைத் (carrier) திரும்பிப் பார்த்தாலும், 2004ம் ஆண்டு நாங்கள் இந்தியாவை இந்தியாவில் வீழ்த்தியதுதான் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியதைப் போன்ற தருணம் என்று சொல்வேன்" உலகக் கோப்பை, ஆஷஸ் தொடர்களை விடவும் இந்தியாவை இந்திய மண்ணில் வீழ்த்துவதுதான் மிகப் பெரிய சவால் என்று கூறியிருந்தார் அன்றைய ஆஸ்திரேலிய பயிற்சியாளர். ஏனெனில், இந்தியா அப்படியொரு கோட்டையாக இருந்தது. எந்த அணியாலும் அவ்வளவு எளிதாக இந்தியாவில் தொடரை வென்றிட முடியவில்லை. அப்படி யாராலும் எளிதில் வென்றிட முடியாத இடமாக இருந்த சொந்த மண்ணில், தற்போது தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது இந்திய அணி. சமீபத்தில் இந்தியாவில் ஆடிய 4 டெஸ்ட் தொடர்களில் இரண்டை இழந்திருக்கிறது இந்திய அணி. கடந்த ஆண்டு நியூசிலாந்திடம் 'ஒயிட் வாஷ்' ஆன இந்திய அணி, தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும் 2-0 என தொடரை இழந்திருக்கிறது. ஒரு காலத்தில் இந்திய மண்ணில் கோலோச்சிக்கொண்டிருந்த அணி இப்படி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துக்கொண்டிருப்பது பெரும் விமர்சனம் ஆகியிருக்கிறது. இந்திய கிரிக்கெட் பற்றி இது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. கம்பீர் பயிற்சியாளர் ஆனதும் இந்தத் தோல்விகள் ஏற்பட்டிருப்பதால் அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. ஆனால், இந்தத் தோல்விகள் கம்பீருக்கு அப்பாற்பட்டது என்கிறார்கள் வல்லுநர்கள். 'சுழற்பந்து வீச்சு மற்றும் அதற்கு எதிரான செயல்பாடு' அவர்கள் கைகாட்டும் முக்கிய காரணமாக இருக்கிறது. மேலும், இந்திய டெஸ்ட் அணி உள்ளூரில் இந்த சரிவை சந்தித்திருப்பது நீண்ட காலமாகவே மெல்ல மெல்ல நடந்த விஷயம்தான் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்திய மண்ணில் இந்தியா தொடர்ந்து தோற்பதற்கு, இந்திய பேட்டர்கள் சுழலுக்கு எதிராகத் தடுமாறுவது முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது சுழலுக்கு எதிராகத் தடுமாறும் இந்திய பேட்டர்கள் இந்திய அணியின் இந்த மிகப் பெரிய சரிவுக்கு மிக முக்கியக் காரணமாக பெரும்பாலானவர்கள் சொல்வது சுழற்பந்துவீச்சுக்கு எதிரான இந்திய பேட்டர்களின் செயல்பாட்டைத்தான். இந்திய அணி இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளை இழக்கும்போதெல்லாம் அங்கு எதிரணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் ஜொலித்திருப்பதைக் காண முடியும். இந்த தென்னாப்பிரிக்க தொடரில் 2 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை சைமன் ஹார்மரிடம் இழந்தது இந்தியா. முதல் டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற ஹார்மர், தொடர் நாயகன் விருதையும் கைப்பற்றினார். அதேபோல், 2024 புனே டெஸ்ட்டில் மிட்செல் சான்ட்னர் (13 விக்கெட்டுகள்), மும்பை டெஸ்ட்டில் அஜாஸ் பட்டேல் (11 விக்கெட்டுகள்), 2023 இந்தூர் டெஸ்ட்டில் நாதன் லயான் (11 விக்கெட்டுகள்), 2017 புனே டெஸ்ட்டில் ஸ்டீவ் ஓ'கீஃப் (12 விக்கெட்டுகள்) போன்ற ஸ்பின்னர்கள் இந்தியாவை வீழ்த்த தங்கள் அணியின் முக்கிய ஆயுதமாக விளங்கியிருக்கிறார்கள். கவுஹாத்தி டெஸ்ட் போட்டியின்போது, கடந்த 5 ஆண்டுகளில் இந்திய பேட்டர்கள் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக பெரிய அளவு தடுமாறியிருப்பது பற்றி தமிழ் வர்ணனையாளர்கள் விவாதித்தனர். அப்போது, இந்திய மண்ணில் சுழலுக்கு எதிரான இந்திய பேட்டர்களின் சராசரி வெகுவாகக் குறைந்திருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, தன்னுடைய யூ-டியூப் சேனலில் இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் கூட இதைப் பற்றிப் பேசியிருந்தார். "சுழலுக்கு எதிராக ஆடுவதில் தற்போது நாம் சிறந்த அணி இல்லை. பல மேற்கத்திய அணிகள் நம்மை விட சிறப்பாக சுழலை எதிர்கொள்கிறார்கள்" என்று கூறியிருந்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 2012ல் இந்திய மண்ணில் பனேசர் மற்றும் ஸ்வான் ஆகியோர் ஆதிக்கம் செலுத்தியபோதே இந்தியாவின் தடுமாற்றம் தொடங்கிவிட்டதாகக் கூறுகிறார் நானீ (கோப்புப் படம்) இது கடைசி 5 ஆண்டுகளில் ஏற்பட்ட பிரச்னையா? இந்த 5 ஆண்டுகளில் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக இந்தியா பெரும் தடுமாற்றத்தை சந்தித்திருந்தாலும், இது வெகுநாள் முன்பிருந்தே தொடங்கிவிட்டது என்கிறார் கிரிக்கெட் வல்லுநரும் வர்ணனையாளருமான நானீ. இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய அவர், "2012-ம் ஆண்டு இந்திய அணியில் சச்சின், டிராவிட், லக்ஷ்மண் போன்ற ஜாம்பவான் பேட்டர்கள் இருந்த காலத்திலேயே சுழலுக்கு எதிரான சரிவு தொடங்கிவிட்டது. இங்கிலாந்து அணி இங்கு (இந்தியா) வந்து ஆடியபோதும் பனேசரும், ஸ்வானும் அந்தத் தொடரில் இந்தியாவைப் பந்தாடினார்கள். ஏன், இங்கிலாந்து ஆடுகளங்களில் மொயின் அலி கூட ஒரு போட்டியில் 9 விக்கெட்டுகள் (சவுதாம்ப்டன் 2018) எடுத்தார். இப்படி வெளிநாட்டு ஸ்பின்னர்கள் சூழலுக்கு ஏற்ப சிறப்பாக செயல்படும்போதெல்லாம் இந்திய பேட்டர்கள் தடுமாறியிருக்கிறார்கள்" என்றார். மேலும், 2012ல் இங்கிலாந்து அணி இந்தியாவில் தொடரை வென்றபோது, அவர்கள் கைப்பற்றிய 58 விக்கெட்டுகளில் 37 விக்கெட்டுகளை கிரீம் ஸ்வான் (20 விக்கெட்டுகள்) மற்றும் மான்டி பனேசர் (17 விக்கெட்டுகள்) இருவருமே கைப்பற்றியிருந்தார்கள் என்றும் அப்போதிருந்தே சுழலுக்கு எதிரான செயல்பாடு சரியத் தொடங்கிவிட்டது என்றும் கூறுகிறார் நானீ. 2012ல் பெற்ற தோல்விகளால் ஏற்பட்ட மாற்றம் நானீ குறிப்பிட்ட அந்த காலகட்டத்தில் இங்கிலாந்து (2011) மற்றும் ஆஸ்திரேலிய (2011-2012) சுற்றுப்பயணங்களில் இரண்டு டெஸ்ட் தொடர்களிலுமே 4-0 என வைட்வாஷ் ஆனது இந்தியா. வெளிநாடுகளில் தொடர்ந்து 8 போட்டிகளைத் தோற்றதால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அந்தப் போக்கை மாற்ற விரும்பியதாகக் கூறுகிறார், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் வித்யுத் சிவராமகிருஷ்ணன். "வெளிநாடுகளில் வெற்றி பெறவேண்டும் என்பதால், அதற்கேற்ப நம் வீரர்களைத் தயார் செய்ய வேண்டும் என்று பிசிசிஐ முடிவு செய்தது. அதன் ஒரு பகுதியாக, ரஞ்சி கோப்பை விளையாடும் ஆடுகளங்களில் குறைந்தது 4-6 மில்லிமீட்டர் உயர புற்கள் வளர்க்க வேண்டும் என்று பிசிசிஐ ஆணையிட்டது. குளிர்காலங்களில் அப்படியான ஆடுகளங்களில் ஆடும்போது பந்து நன்கு நகரத் தொடங்கியது. அதனால் அணிகள் வேகப்பந்துவீச்சாளர்களை அதிகம் பயன்படுத்தத் தொடங்கின" என்று அவர் கூறினார். இது சுழற்பந்துவீச்சாளர்களின் பயன்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தியது என்றும் அவர் கூறினார். "வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதால் கிட்டத்தட்ட முதல் 45-50 ஓவர்கள் பந்துவீசினார்கள். அடுத்து 80வது ஓவர் முடிந்து புதிய பந்து பயன்பாட்டுக்கு வந்தவுடன் மீண்டும் அவர்களே பந்துவீசினார்கள். இடையே ஓவர்களை வேகமாக முடிக்கவே ஸ்பின்னர்கள் பயன்படுத்தப்பட்டார்கள். அதனால் அவர்களது செயல்பாட்டில் தேக்கம் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு போன்ற ஒருசில இடங்களைத் தவிர்த்து சுழலுக்கு சாதகமான ஆடுகளங்கள் எங்கும் அதிகமாகப் பயன்படுத்தப்படவில்லை" என்றும் வித்யுத் சிவராமகிருஷ்ணன் கூறினார். நானீயும் இந்த மாற்றம் பெரிய தாக்கம் ஏற்படுத்தியது என்பதை ஏற்றுக்கொள்கிறார். வெளிநாட்டில் வெற்றி பெறவேண்டும் என்ற தேடல் இந்தியாவில் பல வேகப்பந்துவீச்சாளர்களின் எழுச்சிக்கு வழிவகுத்தது என்றும், அதைவைத்து இந்தியா வெளிநாடுகளில் பல வெற்றிகளைப் பெற்றது என்றும் கூறிய அவர், அதுவே சுழலுக்கு எதிரான செயல்பாடு சறுக்கக் காரணமாக அமைந்துவிட்டது என்றும் கூறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இங்கிலாந்திலும், ஆஸ்திரேலியாவிலும் பெற்ற அடுத்தடுத்த ஒயிட்வாஷ் தோல்விகள் இந்தியாவின் அணுகுமுறையை மாற்றம் ஏற்படுத்தியதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள் 'ஸ்வீப் ஷாட்கள் எங்கே?' இந்தியாவின் இந்த சரிவுக்கு, தேர்வு செய சுழற்பந்துவீச்சுக்கு எதிராக நன்கு ஆடக்கூடிய வீரர்களைத் தேர்வு செய்யாததையும் ஒரு காரனமாக வித்யுத் கூறுகிறார். "சுழற்பந்துவீச்சை ஆடுவதற்கு கட், ஸ்வீப் போன்ற ஷாட்களை நீங்கள் நன்கு ஆடவேண்டும். பந்து அதிகம் திரும்பும் ஆடுகளங்களில் அதிகம் ஸ்வீப் ஆடவேண்டும். ஆனால், இந்த இந்திய அணியில் அதிகம் ஸ்வீப் ஆடக்கூடிய வீரர்களே இல்லை" என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் விளையாடும் எந்த அணியுமே ஸ்வீப் ஷாட்டை பெரிய ஆயுதமாகக் கையில் எடுப்பார்கள். 1987 உலகக் கோப்பையிலேயே இங்கிலாந்து அதைத்தான் செய்திருக்கும். இப்போது தென்னாப்பிரிக்கா கூட அதைத்தான் செய்தது. இந்த கவுஹாத்தி டெஸ்ட் போட்டியில் ஸ்டப்ஸ் - டி சார்ஸி இணை பெரும்பாலான ரன்களை ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் மூலம்தான் எடுத்தார்கள். ஆனால், இந்திய பேட்டர்களோ அப்படி ஸ்வீப் ஆடுவதில்லை. இதுகுறித்துப் பேசிய வித்யுத், இந்தியாவில் சிறப்பாக ஸ்வீப் ஆடிய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தியதை குறிப்பிட்டார். "இந்தியாவில் நன்கு செயல்பட்ட வீரர்களைப் பாருங்கள்... லாரா, ஹெய்டன், குக், ஆண்டி ஃப்ளார் போன்ற அனைவருமே நன்கு ஸ்வீப் ஆடக்கூடியவர்கள். அதிலும் ஆண்டி ஃப்ளார் அப்போதே ரிவர்ஸ் ஸ்வீப் கூட சிறப்பாக ஆடுவார். இந்தியா ஏ அணிக்காக நான் அவருக்கு எதிராக ஒருமுறை ஆடினேன். நான் அவருக்கு வீசிய ஒரு ஓவரின் ஆறு பந்துகளில், அவர் நான்கில் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடினார். இந்தியாவில் அப்படி ஸ்வீப் ஆடுவது அவசியம். அப்படியான வீரர்கள் அணிக்குள் இருக்க வேண்டும்" என்று கூறினார். "கருண் நாயர், சர்ஃபராஸ் கான் போன்ற வீரர்கள் சுழற்பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்ளக்கூடியவர்கள். ஆனால், அவர்களுக்கு இந்திய மண்ணில் போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை" என்றும் அவர் கூறினார். அதேசமயம், இப்போது டி20 போட்டிகளில் வீரர்கள் அதிகம் ஆடிப்பழகிவிட்டதால், அவர்கள் ஸ்வீப் ஆடுவதற்குப் பதிலாக வேறு வழிகளைப் பின்பற்றுவதாகக் கூறுகிறார் நானீ. "இப்போதெல்லாம் ஸ்வீப் ஆடவேண்டிய இடத்தில், கிரீஸுக்கு வெளியே வந்து மிட்விக்கெட் திசையில் பௌண்டரி அடிக்கப் பார்க்கிறார்கள்" என்கிறார் அவர். ஸ்வீப் ஆடுவது ஒரு கலை என்று குறிப்பிடும் நானீ, அதை தொடர்ச்சியாகச் செய்ய நன்கு பயிற்சி செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார். இங்குதான் அடுத்த கேள்வி எழுகிறது... ஏனெனில், நானீ வித்யுத் இருவருமே இப்போது வீரர்களிடம் அதற்கான நேரம் இல்லை என்றும் குறிப்பிடுகிறார்கள். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நன்கு ஸ்வீப் ஆடிய வீரர்கள் இந்தியாவில் சிறப்பாக செயல்பட்டதாகக் கூறுகிறார் வித்யுத் 'தொடர் போட்டிகள், டி20 மோகத்தால் பயிற்சி செய்ய நேரமில்லை' கடந்த சில ஆண்டுகளாகவே வீரர்கள் தொடர்ந்து போட்டிகளில் விளையாடுவதாலும், டி20 போட்டிகளின் மோகம் கூடிவிட்டதாலும், டெஸ்ட் போட்டிகள் மீதான முக்கியத்துவமும், அதற்குத் தயாராவதற்கு செலவு செய்யப்பட்ட நேரமும் குறைந்துவிட்டது என்கிறார்கள் நானீ, வித்யுத் இருவரும். "டி20 கிரிக்கெட்டின் வளர்ச்சிக்குப் பிறகு வீரர்களின் 'பேட் ஸ்பீட்' (பந்தை அடிக்கும் வேகம்) கூடிவிட்டது. அதனால் தடுப்பாட்டக் கலை போய்விட்டது. மிட் ஆன், மிட் ஆஃப் பகுதிகளில் சிங்கிள் எடுப்பதே ஒரு கலை. அதையெல்லாம் இப்போது பார்க்க முடியவில்லை" என்கிறார் நானீ. அதேசமயம், வீரர்களின் ஷாட் தேர்வுகளை மட்டும் அவர் காரணமாகச் சொல்லவில்லை. இந்த டி20 மோகத்தால் ஏற்பட்டிருக்கும் அதீத போட்டிகள் கொண்ட அட்டவணையையும் அவர் கைகாட்டுகிறார். இதுபற்றிப் பேசிய அவர், "இப்போதுதான் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடிவிட்டு வந்தது. இதுபோன்ற சிறிய இடைவெளியில் டெஸ்ட் போட்டிகளுக்குத் தகவமைத்துக்கொள்வது எளிதல்ல. இப்படியான குறுகிய இடைவெளிக்குப் பின் ஃப்ளாட்டான ஆடுகளங்களில் பேட்டர்களால் தாக்குப்பிடிக்க முடியும். ஆனால், சவாலான ஆடுகளங்களில் கடினம். அதுவும் குறிப்பாக இந்த எஸ்ஜி பந்து நல்ல சீம் கொண்டது, ஸ்பின்னர்களுக்கு நல்ல கிரிப் (grip) கொடுக்கும்" என்று குறிப்பிட்டார். இதே காரணத்தைச் சொல்லும் வித்யுத், இப்படி வீரர்கள் 'ஷார்ட் ஃபார்மட்' போட்டிகளில் அதிகம் விளையாடும்போது, அவர்கள் கடினமான டெஸ்ட் சூழலுக்கு தயாராவதற்கான அவகாசம் கிடைப்பதில்லை என்கிறார். அதேசமயம், இந்த கடின அட்டவணைக்கு நடுவே சிறப்பாக தயாராகும் வீரர்களால் தாக்கம் ஏற்படுத்த முடிகிறது என்றும் அவர் கூறுகிறார். இதற்கு வாஷிங்டன் சுந்தரை ஒரு உதாரணமாகச் சொல்கிறார் வித்யுத். "இந்த தென்னாப்பிரிக்க தொடரில் யார் சிறப்பாக பேட்டிங் செய்தது என்று பாருங்கள்... வாஷிங்டன் சுந்தர் தான் நன்கு சுழலை எதிர்கொண்டார். ஏனெனில் அவர் (தமிழ்நாடு) முதல் டிவிஷன் போட்டிகளில் தொடர்ச்சியாக சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் ஆடியிருக்கிறார். அவர் ஆடும் எம்ஆர்எஃப் அணி சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் ஆடும் அணி. அங்கு தொடர்ச்சியாக அவர் ஆடி தயாரானதன் விளைவை இந்த டெஸ்ட் தொடரில் பார்க்க முடிந்தது" என்று கூறினார் அவர். இந்தத் தொடரில் இந்தியாவுக்கு அதிக ரன்கள் (124) அடித்ததும், அதிக பந்துகள் (310) சந்தித்ததும் வாஷிங்டன் சுந்தர் தான். அவரையும் ராகுலையும் (217) தவிர வேறு எந்த இந்திய பேட்டரும் இந்தத் தொடரில் 200 பந்துகளுக்கு மேல் சந்திக்கவில்லை. வாஷிங்டனின் அணுகுமுறையைப் பாராட்டிய நானீ, வித்யுத் இருவருமே சொல்லும் முக்கிய விஷயம், பெரும்பாலான இந்திய பேட்ஸ்மேன்கள் 'தடுப்பாட்ட கலை'யை இழந்துவிட்டார்கள் என்பதுதான். அதில் சிறந்து விளங்கியதால் தான் வாஷிங்டனால் பெரிய இன்னிங்ஸ்கள் ஆடமுடிந்தது என்று இருவரும் ஒரேபோல் சொல்கிறார்கள். இந்த பிரச்னைக்குப் பின்னால் டி20 போட்டிகளின் தாக்கம் இருப்பதையும் மறுக்க முடியாது என்றும் கூறுகிறார்கள். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்தியாவுக்கு அதிக ரன்கள் எடுத்ததும், அதிக பந்துகள் சந்தித்ததும் வாஷிங்டன் சுந்தர் தான் இப்போது ஏன் இந்த விஷயம் பெரிதாகிறது? சுழலுக்கு எதிரான இந்தியாவின் பிரச்னை 2012ல் இருந்தே தொடங்கிவிட்டது என்றால், கடந்த சில ஆண்டுகளாக மட்டும் அது அதிகம் கவனம் பெறுவது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது. இதற்கு இந்திய சுழற்பந்துவீச்சாளர்களின் செயல்பாட்டில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதை ஒரு காரணமாகச் சொல்கிறார் நானீ. "முன்பெல்லாம் இந்திய ஸ்பின்னர்கள் இந்தியாவில் நன்கு ஆதிக்கம் செலுத்துவார்கள். அதனால் அது இந்திய பேட்டர்களின் தடுமாற்றத்தை ஓரளவு மறைத்துக்கொண்டிருந்தது. உதாரணமாக இந்தியா 265 ரன்கள் எடுத்தால், எதிரணியை 170 ரன்களுக்கு ஆல் அவுட் செய்துவிடுவார்கள். அஷ்வினும், ஜடேஜாவும் அவ்வளவு சிறப்பாக செயல்பட்டிருந்தார்கள். ஆனால், இப்போது அதே தாக்கம் இல்லை. அதனால் இப்போது முடிவுகள் இந்தியாவுக்கு சாதகமாக வருவதில்லை. அதனால் பேட்டிங் பிரச்னையும் பூதாகரமாகத் தெரிகிறது" என்று அவர் குறிப்பிட்டார். சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் எப்படி பந்துவீசவேண்டும் என்பதையே இந்திய பௌலர்கள் மறந்துவருவதாகக் குறிப்பிட்டார் அவர். "இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு ஸ்பின்னர்கள் நன்கு தயாராகி வருகிறார்கள். இந்திய சூழ்நிலையை நன்கு உணர்ந்துகொண்டு அதற்கு ஏற்ப பந்துவீசுகிறார்கள். சைமன் ஹார்மர் கவுஹாத்தியில் அதை மிகச் சிறப்பாகச் செய்தார். முதல் இன்னிங்ஸில் சற்று மெதுவாகப் பந்துவீசிய அவர், இரண்டாவது இன்னிங்ஸில் அதைவிட வேகமாகப் பந்துவீசினார். அதற்கேற்ப அவருக்கு விக்கெட்டுகளும் கிடைத்தன" என்றார் நானீ. முதல் டெஸ்ட்டுக்குப் பின் தன் யூ-டியூப் சேனலில் பேசியிருந்த அஷ்வின் கூட இந்த வேரியேஷன்களை பற்றிப் பேசியிருந்தார். "முதல் போட்டியில் ஜடேஜாவின் வேக அலைவரிசை (speed bandwidth) 90-95 kmph ஆக இருந்தது. ஆனால், ஹார்மரின் அலைவரிசையோ 80 முதல் 94-95 kmph வரை இருந்தது. அவர் அந்த அளவுக்கு தன் வேகத்தில் வேரியேஷன் காட்டினார்" எனக் கூறினார் அஷ்வின். இதைத்தான் இந்திய ஸ்பின்னர்கள் தற்போது தவறவிடுவதாக நானீ குறிப்பிட்டார். "அஷ்வினே இப்படி சூழ்நிலைக்கு ஏற்ப பந்துவீசித்தான் விக்கெட்டுகள் எடுத்தார். வெறுமனே திரும்பும் ஆடுகளங்களில் ஆடினால் விக்கெட்டுகள் கிடைக்காது. அஷ்வின் வெளிக்காட்டிய அந்தத் திறனை இப்போது இந்திய ஸ்பின்னர்களிடம் பார்க்க முடியவில்லை" என்றும் அவர் கூறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்திய ஸ்பின்னர்கள் சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் விக்கெட் எடுக்கும் கலையை மறந்துவிட்டனர் என்கிறார் நானீ வெற்றிப் பாதைக்குத் திரும்ப என்ன செய்ய வேண்டும்? சுழலுக்கு எதிரான இந்த தடுமாற்றத்திலிருந்து மீண்டு வர, இந்தியா மறுபடியும் சொந்த மண்ணில் வெற்றிப் பாதைக்குத் திரும்ப கீழ்க்கண்ட விஷயங்களைச் செய்யலாம் என்று நம் வல்லுநர்கள் பரிந்துரைக்கிறார்கள். வீரர்கள் ரஞ்சி போன்ற உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது முக்கியம் என்று சொல்கிறார் நானீ. அதேபோல்,"ஐபிஎல் தொடரிலிருந்து வீரர்களைக் கண்டறிவதை நான் வரவேற்கிறேன். ஆனால், அதை வீரர்களைக் கண்டறிய மட்டுமே பயன்படுத்த வேண்டும். நேரடியாக அங்கிருந்து அணிக்குள் கொண்டுவந்துவிடாமல், அவர்களை உள்ளூர் போட்டிகளில் நிறைய ஆடவைத்து, அங்கு நன்றாக செயல்படும்பட்சம் தேசிய அணிக்குள் வேகமாகக் கொண்டுவரலாம்" என்று அவர் கூறினார். இதற்கு வழிவகுக்கும் விதமாக, அட்டவணையும் அமைய வேண்டும் என்கிறார் வித்யுத். போட்டிகளில் விளையாடும் அளவுக்கு அதற்குத் தயாராவதும் முக்கியம் என்று அவர் கூறினார். சமீபத்தில் தமிழ்நாடு அணி ரஞ்சி போட்டிகளில் தடுமாறுவது பற்றிப் பேசியிருந்த அஷ்வின் கூட இதே கருத்தை முன்வைத்திருந்தார். இந்திய ஆடுகளங்களில் சுழற்பந்துவீச்சை சிறப்பாகக் கையாளும் வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். "ஹோம் மேட்சுகளுக்கென்று கூட குறிப்பிட்ட சில வீரர்களை தேர்வு செய்வது நல்லதாக இருக்கும். அவர்களை வெளிநாட்டு ஆடுகளங்களில் ஆடவைக்க வேண்டாம். இந்தியாவில் ஆடும் போட்டிகளில் மட்டும் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம்" என்று ஒரு யோசனை சொல்கிறார் அவர். அதேசமயம், எல்லா வீரர்களுமே ஸ்வீப் போன்ற விஷயங்களை மேம்படுத்த தனியாக உழைக்க வேண்டும் என்கிறார் நானீ. அதற்கு உதாரணமாக 1998ல் சச்சின் செய்த ஒரு விஷயத்தையும் அவர் நினைவுகூர்ந்தார். "1998ல் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்தது. அப்போது ஷேன் வார்னே உலக கிரிக்கெட்டில் கோலோச்சத் தொடங்கிய நேரம். ஆனால், சச்சினோ அப்போதே சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார். இருந்தாலும், வார்னேவுக்காக அவர் தனியாகப் பயிற்சி எடுத்தார். முதல் போட்டி அப்போது சென்னையில் நடக்கவிருந்தது. அதற்கு முன்பாக சென்னை வந்தார் சச்சின். முன்பே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணனை அழைத்து அவர் பயிற்சி செய்ததை நானே பார்த்திருக்கிறேன். லெக் ஸ்டம்புக்கு வெளியே ஒரு 'Rough' உருவாக்கி, பந்தை அங்கு பிட்ச் செய்யச்சொல்லி தினமும் 4 மணி நேரம் வரை இரண்டு மூன்று தினங்கள் அவர் பயிற்சியெடுத்தார். அந்தப் போட்டியில் அவர் 155 ரன்கள் எடுத்தார்" என்று சொன்ன நானீ, அதேபோல், இன்றைய இளம் வீரர்களும் மூத்த வீரர்களை அணுகி தங்களின் பிரச்னைகளுக்கு விடை காணவேண்டும் என்றார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சுழற்பந்துவீச்சை நன்கு ஆடும் வீரர்களை இந்தியாவில் நடக்கும் போட்டிகளில் மட்டுமாவது பயன்படுத்த வேண்டும் என்கிறார் வித்யுத் அதுமட்டுமல்லாமல் ஆடுகளத்தின் தன்மை குறித்து இந்திய அணி அறிந்திருப்பது முக்கியம் என்றும் அவர் கூறினார். "ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு ஆடுகளமும் எப்படியிருக்கும் என்று நமக்கு நன்கு தெரியும். பெர்த் என்றால் வேகமும், பவுன்ஸும் கூடுதலாக இருக்கும். சிட்னியில் பந்து திரும்பும், அடிலெய்டில் பேட்டிங் நன்றாக இருக்கும். இதுபோல், இந்திய ஆடுகளங்களுக்கும் இதுதான் தன்மை என்று நாம் அறிந்திருக்கந் வேண்டும். அப்போதுதான் சொந்த மண்ணில் ஆடும் போட்டிகளிலும் அது கொஞ்சம் சாதகமான அம்சமாக இருக்கும்" என்றும் நானீ கூறினார். அடுத்து டெஸ்ட் கிரிக்கெட் எப்போது? இந்தியா அடுத்து சொந்த மண்ணில் 2027ல் தான் டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2027 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடைபெறுகிறது. அதற்கு முன் 2026ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளிலும் (ஆகஸ்ட் மாதம்), நியூசிலாந்துக்கு எதிராக 2 போட்டிகளிலும் (அக்டோபர் - நவம்பர்) விளையாடவிருக்கிறது. இந்தப் போட்டிகள் முறையே இலங்கையிலும் நியூசிலாந்திலும் நடக்கும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cq602l3306go
-
வடக்கு, கிழக்கு மாகாண அனர்த்த நிலைமைகள் தொடர்பான செய்திகள் - 2025
தம்பலகாமம் பிரதேச வயல் நிலப்பகுதிகள் நீரில் மூழ்கின; போக்குவரத்து தடை Published By: Digital Desk 3 27 Nov, 2025 | 04:05 PM சீரற்ற கால நிலையால் தம்பலகாமம் கிண்ணியா பிரதான வீதியின் முள்ளியடி பகுதி உட்பட பிரதான வீதியிலும் வெள்ள நீர் ஊடறுத்துப் பாய்வதால் தரை வழிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை (27) கடும்மழை காரணமாக குறித்த பகுதியின் தாழ் நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் தம்பலகாமம் கோயிலடி பகுதி நெற் செய்கை விவசாய நிலங்களும் மூழ்கியுள்ளன. 200க்கும் மேற்பட்ட நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன். பாலம்போட்டாறு பத்தினிபுரம் முள்ளிப்பொத்தானை உள்ளிட்ட பகுதிகளின் தாழ் நிலப் பகுதிகளும் நீரால் மூழ்கியதுடன் வீடுகளுக்குல்லும் நீர் புகுந்ததால் பல்வேறு அசௌகரியங்களை பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்நோக்குகின்றனர். தாயிப் நகர் தம்பலகாமம் கோயிலடி வைத்தியசாலை வரையான வீதியின் ஒரு பகுதி தரை வழிப் போக்குவரத்தும் வெள்ள நீரால் குறித்த வீதி ஊடறுத்துப் பாய்வதால் தடைப்பட்டுள்ளதுடன் மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. இது போன்று குளக்டோட்டன் பாடசாலையின் முன்னால் உள்ள பாலம்போட்டாறு வரையான வீதியின் ஒரு பகுதியின் தரை வழிப்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த பாதிப்புக்குள்ளான பகுதிகளை தம்பலகாமம் பிரதேச செயலாளர் நேரில் சென்று பார்வையிட்டு நீரை வழிந்தோடச் செய்யவும் நடவடிக்கைகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தினார். https://www.virakesari.lk/article/231665
-
மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் - தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள்
முதல் மாவீரர் சங்கர் சத்தியநாதனுக்கு யாழில் ஈகைச்சுடரேற்றி அஞ்சலி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் மாவீரர் சங்கர் என அழைக்கப்படும் சத்தியநாதனுக்கு ஈகைச்சுடரேற்றி இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. ஈகை சுடர் வல்வெட்டித்துறையிலுள்ள அவரது இல்லத்திற்கு முன்பாக ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது மாவீரர் பண்டிதரின் தாயார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை முன்னாள் நகரசபை உறுப்பினர் க.சதீஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/tribute-first-hero-shankar-satyanathan-in-jaffna-1764246419
-
திடீர் அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து தலா 10 இலட்சம் ரூபாய்
திடீர் அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து தலா 10 இலட்சம் ரூபாய் 27 Nov, 2025 | 03:58 PM அதிக மழையுடன் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களுக்கு தலா 10 இலட்சம் ரூபாய் வழங்குமாறு ஜனாதிபதி நிதியத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை வழங்கியுள்ளார். அதன்படி, உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு இந்த நிதியை உடனடியாக வழங்க ஜனாதிபதி நிதியம் திட்டமிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/231662
-
வடக்கு, கிழக்கு மாகாண அனர்த்த நிலைமைகள் தொடர்பான செய்திகள் - 2025
முல்லைத்தீவில் வெள்ளத்தில் சிக்கிய 16 விவசாயிகள் பாதுகாப்பாக மீட்பு! 27 Nov, 2025 | 03:56 PM முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி மற்றும் கொக்கிளாய் கிராமங்களைச் சேர்ந்த 16 விவசாயிகள், கல்நாட்டிவெளி வயல் பகுதிக்கு நேற்று புதன்கிழமை இரவு (26) காவல் பணிக்குச் சென்றிருந்தனர். ஆனால் திடீரென ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அவர்கள் வீடு திரும்ப முடியாத நிலையில் சிக்கிக்கொண்டனர். இந்நிலையில், இன்றைய தினம் வியாழக்கிழமை (27) பிற்பகல் 2.30 மணியளவில் கிராம மீனவர்கள் மற்றும் கொக்குத்தொடுவாய் கமநல சேவை நிலைய உத்தியோகத்தர்கள் சேர்ந்துகொண்டு ஒருங்கிணைந்த மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து, அந்த 16 விவசாயிகளையும் பத்திரமாக மீட்டுள்ளனர். மீட்புக்குப் பின்னர், அவர்கள் அனைவரும் பாதுகாப்பான நிலையில் உள்ளனரென முல்லைத்தீவு மாவட்டச் செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/231660
-
சீரற்ற வானிலை - எம்.பிக்களுக்கு ஜனாதிபதி அதிரடி பணிப்புரை
திட்வா புயல்: வெள்ளக் காடாக மாறிய இலங்கை, ஜனாதிபதி அவசர சந்திப்பு - என்ன நிலவரம்? பட மூலாதாரம், KRISHANTHAN கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 27 நவம்பர் 2025, 11:28 GMT புதுப்பிக்கப்பட்டது 42 நிமிடங்களுக்கு முன்னர் (இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது.) இலங்கையில் திட்வா புயல் மற்றும் கனமழை காரணமாக, நாட்டில் பெரும்பாலான பகுதிகளுக்கும் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது என இடர் முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பாதிப்புளுக்கு நடுவில் 20க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனவும் தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலையால் காயமடைந்தோரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதுடன், காணாமல் போனோரின் எண்ணிக்கை 14 ஆக பதிவாகியுள்ளது. வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள திட்வா புயல் காரணமாக இலங்கையின் 17 மாவட்டங்களுக்கு நேரடி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தங்களால் 1,158 குடும்பங்களைச் சேர்ந்த 4,008 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 381 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. ஐந்து பாதுகாப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு இருப்பதுடன், அவற்றில் 41 குடும்பங்களைச் சேர்ந்த 131 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உறவினர்களின் வீடுகளில் 136 குடும்பங்களைச் சேர்ந்த 472 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது. எந்தெந்த பகுதிகளில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன? ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் வெலிமடை, லுணுகல, பஸ்ஸர, கந்தேகெட்டிய, ஊவா பரணகம, சோரணாதொட்டை, எல்ல ஆகிய பகுதிகளில் 18 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. தென் மாகாணத்தின் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள கடுவன பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பட மூலாதாரம்,DINESH VADIVEL பட மூலாதாரம்,DINESH VADIVEL சப்ரகமுவ மாகாணத்தின் கேகாலை மாவட்டத்தில் மாவனெல்ல பகுதியில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். வடமேல் மாகாணத்தின் குருநாகல் மாவட்டத்திலுள்ள இப்பாகமுவ பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள வலபனை பகுதியில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது, இதேவேளையில், மத்திய மாகாணத்தின் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 14 பேர் காணாமல் போயுள்ளனர். பட மூலாதாரம்,KRISHANTHAN மாவட்ட ரீதியாக ஏற்பட்ட பாதிப்புகள் கொழும்பு - அவிசாவளை ரயில் மார்க்கத்தில் கற்கள் சரிந்து மண்சரிவொன்று ஏற்பட்டுள்ளதுடன், தற்போது ரயில் போக்குவரத்து வழமைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. மாத்தளை மாவட்டத்தின் தம்புள்ளை - கல்கெட்டியாவ வீதியிலுள்ள பாலமொன்று வெள்ளத்தால் உடைந்துள்ளது. அத்துடன், மாத்தளை மாவட்டத்தின் கலேவெல பகுதியிலுள்ள 40 வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகிறது. வவுனியா மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழையுடனான வானிலையால் நெடுங்கேணி மருத்துவமனை நீரில் மூழ்கியுள்ளது. வவுனியாவின் தென் பகுதியிலுள்ள ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 6 பேர் சிக்குண்டுள்ளதுடன், அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,DINESH VADIVEL பதுளை மாவட்டத்தின் வெலிமடை பகுதியில் மண்சரிவு காரணமாக மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், அந்தந்த வீடுகளில் இருந்த அனைவரும் போலீஸாரினால் காப்பற்றப்பட்டுள்ளனர். பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், அந்த வீதியூடான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பஸ்ஸரை பகுதியில் வீடொன்றின் மீது மண் மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் இருவர் காணாமல் போயுள்ளனர். பொலன்னறுவை மாவட்டத்தின் மனம்பிட்டிய பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக அந்த வீதியூடான போக்குவரத்து முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மண்சரிவுகள் பதிவாகியுள்ளதுடன், பல தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. அத்துடன், மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை, அநுராதபுரம் உள்ளிட்ட பல பகுதிகளின் பெரும்பாலான தாழ்நிலப் பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. மலையகத்தின் பல பகுதிகளிலுள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது. இதன்படி, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரிக்கும் பட்சத்தில், ஏனைய வான்கதவுகளும் திறக்கப்படும் என இடர் முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது, இதன்படி, நுகாவெல ஆற்றங்கரை, மாவத்துரை, மகாவலி கங்கை, உலப்பனே, கம்பளை, பெரலிய, வெலியியல், கட்டுகஸ்தோட்டை, பொல்கொல்ல உள்ளிட்ட தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பட மூலாதாரம்,DINESH VADIVEL அதிகளவான மழை வீழ்ச்சி எங்கு பதிவானது? பட மூலாதாரம்,DINESH VADIVEL கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள றூகம பகுதியிலேயே அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதன்படி, றூகம பகுதியில் 300.1 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. நேற்றைய தினம் காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரையான 24 மணித்தியாலங்களிலேயே இந்த மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. பட மூலாதாரம்,DMC SRI LANKA தேர்வுகள் ஒத்திவைப்பு இலங்கையின் பல்கலைக்கழக நுழைவு பரீட்சையான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக எதிர்வரும் மூன்று தினங்களுக்கு நடைபெறவுள்ள பரீட்சைகளை ஒத்திவைக்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி, நவம்பர் 27 முதல் 29 வரையிலான தினங்களில் நடைபெறவிருந்த பரீட்சைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஒத்தி வைக்கப்படும் பரீட்சைகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 7, 8, 9 ஆகிய தேதிகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், நவம்பர் 29ஆம் தேதிக்குப் பின்னர் நடைபெறும் பரீட்சைகள் வழமை போன்று நடத்தப்படும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம், PMD படக்குறிப்பு, மாவட்டங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உடனடியாகத் தலையிடுமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிவுறுத்தல் ஜனாதிபதி அவசர சந்திப்பு நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகளைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவசர கூட்டமொன்றை நடத்தினார். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சீரற்ற வானிலையால் ஏற்பட்டுள்ள அவசரக்கால நிலைமை மற்றும் நிவாரண சேவைகள் குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. அதோடு, மாவட்டங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளில் உடனடியாகத் தலையிடுமாறும், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpvdn814lg8o
-
ஹொங்கொங்கில் குடியிருப்பு கட்டிடங்கள் தீக்கரை; 44 பேர் உயிரிழப்பு, 279 பேர் மாயம்!
ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து: 55 பேர் பலி - சேதத்தைக் காட்டும் புகைப்படங்கள் பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,ஹாங்காங்கில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து வியாழக்கிழமைக்குள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டது. 26 நிமிடங்களுக்கு முன்னர் ஹாங்காங்கின் தாய் போ பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் புதன்கிழமையன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதுவரை குறைந்தது 55 பேர் உயிரிழந்ததாகவும், 270க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலிருந்து வெளிவந்த படங்கள் அதிக அளவு புகை, தீப்பிழம்புகள், அவற்றைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் அங்கு நிலவும் குழப்பமான சூழ்நிலையைக் காட்டுகின்றன. வியாழக்கிழமை காலைக்குள், எட்டு குடியிருப்பு வளாகங்களில் நான்கில் தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மீதமுள்ள வளாகங்களில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சில பகுதிகளில் காலையிலும் புகையைக் காண முடிந்தது. வியாழக்கிழமை மாலைக்குள் தீயை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்று தீயணைப்புத் துறை நம்புகிறது. ராய்ட்டர்ஸ் தகவலின் படி, ஹாங்காங்கில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் என்ற குடியிருப்பு வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த வளாகத்தில் உள்ள எட்டு தொகுதிகளில் மொத்தம் 2,000 குடியிருப்புகள் உள்ளன. ஹாங்காங் அரசாங்கத்தின் கூற்றுப்படி, புதன்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:51 மணியளவில் வாங் ஃபுக் கோர்ட்டில் தீ விபத்து ஏற்பட்டது, அதன் பிறகு தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 45 பேரின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி ஜான் லீ தெரிவித்தார். உயிரிழந்தவர்களில் தீயணைப்பு வீரர் வை-ஹோவும் ஒருவர். ஹாங்காங் அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில், "ஹோ வை-ஹோவின் மறைவுக்கு தீயணைப்புத் துறை இயக்குநர் ஆண்டி யங் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்" என்று கூறப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஹாங்காங் அரசாங்கத்தின் கூற்றுப்படி, புதன்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:51 மணியளவில் வாங் ஃபுக் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், மற்றொரு தீயணைப்பு வீரரும் தற்போது மருத்துவமனையில் இருப்பதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. சம்பவ இடத்தில் சுமார் 800 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திலிருந்து வெறும் 500 மீட்டர் தொலைவில் உள்ள தாய் போ ரயில் நிலையத்திலிருந்து வெளியேறும்போது, மூக்கைத் துளைக்கும் அளவுக்கு கடுமையான புகை நாற்றம் வீசுவதாக ஹாங்காங்கில் உள்ள பிபிசி செய்தியாளர் ஃபோப் காங் கூறுகிறார். "நாங்கள் சம்பவ இடத்திற்குச் செல்லும் வழியில், தீப்பிழம்புகளால் சூழப்பட்ட கட்டடங்களைப் பார்த்துக்கொண்டிருந்த ஏராளமான மக்களைக் கண்டோம். பல்வேறு தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன, மேலும் பல வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக விரைந்துகொண்டிருந்தன. தீயணைப்பு வீரர்கள் அதில் இருந்து ஆக்ஸிஜன் தொட்டிகளை எடுத்துக்கொண்டிருந்தனர்" என்றும் அந்த செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். தாய் போ மாவட்ட கவுன்சிலர் முய் சியு-ஃபங் பிபிசி சீன சேவையிடம் கூறுகையில், சுமார் 95 சதவிகித மக்கள் வெளியேற்றப்பட்டுவிட்டதாகவும், அருகிலுள்ள மூன்று குடியிருப்புத் தொகுதிகளில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் கூறினார். வெளியேற்றப்பட்டவர்கள் அருகிலுள்ள சமூக மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றும் தெரிய வந்தது. படக்குறிப்பு, சம்பவ இடத்தில் சுமார் 800 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் . அருகிலுள்ள கட்டடங்களில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர், காயமடைந்தவர்களுக்கு ஒரு உதவி எண் அமைக்கப்பட்டுள்ளது, மேலும் அரசாங்கம் தற்காலிக முகாம்களையும் திறந்துள்ளது என, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஹெர்மன் டியு குவான் ஹோ உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இதற்கிடையில், "பல்வேறு சாலைகள் மூடப்பட்டுள்ளன, 30க்கும் மேற்பட்ட பேருந்து வழித்தடங்கள் தீ விபத்து ஏற்பட்ட பகுதியிலிருந்து வேறு திசையில் திருப்பி விடப்பட்டுள்ளன" என ஹாங்காங்கின் போக்குவரத்துத் துறை குறிப்பிட்டுள்ளது. தீ தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கும் சூழலில், நேரடி போக்குவரத்து நிலையை மிக நெருக்கமாக கண்காணித்து வருவதாகவும் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, வாங் ஃபுக் வளாகத்தில் வசிப்பவர் ஹாரி சியோங். வாங் ஃபுக் வளாகத்தில் வசிக்கும் ஹாரி சியோங் என்பவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், பிற்பகல் 2:45 மணியளவில் பலத்த சத்தம் கேட்டதாகவும், அருகிலுள்ள கட்டடத்தில் தீப்பிழம்புகள் மிகப்பெரியதாக இருந்ததாகவும் கூறினார். "நான் உடனடியாக திரும்பிச் சென்று என் பொருட்களை பேக் செய்ய ஆரம்பித்தேன். நான் எப்படி உணர்கிறேன் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை" என்று அவர் பகிர்ந்து கொண்டார். கட்டடங்களுக்கு இடையிலான தூரம் மிகக் குறைவாக இருந்ததா ? பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, குடியிருப்பு வளாகத்தின் எட்டு கட்டடங்களுக்கு இடையே மிகக் குறைந்த தூரம் மட்டுமே இருந்தது. ஹாங்காங்கில் உள்ள குடியிருப்பு பகுதிகள் பொதுவாகச் சிறிய அளவிலான, ஒன்றுக்கொன்று நெருக்கமாக கட்டப்பட்ட வீடுகளுக்குப் பெயர் பெற்றவை. கட்டடங்களுக்கு இடையிலான இடைவெளியும் மிகவும் குறைவாக இருக்கும். நெரிசல் காரணமாக, இந்த தீ விபத்தில் அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. வாங் ஃபுக் வளாக குடியிருப்புகளில் ஒவ்வொரு வீடும் பொதுவாக 400 முதல் 500 சதுர அடிவரை பரப்பளவு கொண்டவை. இந்த வளாகம் கடற்கரைக்கு அருகில், ஒரு முக்கிய நெடுஞ்சாலையின் அருகில் அமைந்துள்ளது. மேலும் அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, இங்கு மொத்தம் சுமார் 4,600 பேர் வசித்து வருகின்றனர். தீ பரவத் தொடங்கியது எப்படி ? பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, கட்டடத்தில் பழுதுபார்க்கும் பணிகள் நடந்துகொண்டிருந்தன. தீ வேகமாக பரவியதற்குக் காரணமாக, அருகிலுள்ள கட்டடங்களில் நடைபெற்று வந்த பழுது பார்க்கும் பணிகள் குறிப்பிடப்படுகின்றன. கட்டுமானப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் மூங்கில் கட்டமைப்புகள் இந்த கட்டடங்களின் வெளியே அமைக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் கட்டுமான நிறுவனத்தின் இயக்குனர்கள், மற்றொருவர் பொறியியல் ஆலோசகர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் உறுதியாகத் தெரியாத நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனினும், கட்டடங்களில் பழுதுபார்க்கும் பணிகள் நடந்து வந்ததாகவும், ஜன்னல்களில் பொருத்தப்பட்டிருந்த பாலிஸ்டிரீன் பலகைகளின் காரணமாக தீ மிக வேகமாகப் பரவியதாகவும் முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. கட்டடத் தொகுதிகளுக்கு இடையில் மூங்கில் கட்டமைப்புகள் நிறுவப்பட்டதாகவும், இதனால் தீ மற்ற கட்டடங்களுக்கும் பரவியிருக்கலாம் என்றும் நிர்வாகம் கூறுகிறது. இந்த தீ விபத்து எவ்வளவு தீவிரமானது ? இந்த தீ விபத்து 5 ஆம் நிலை என வகைப்படுத்தப்பட்டுள்ளது, இது தீவிரத்தின் அடிப்படையில் வகை 1 முதல் 5 வரையிலான அளவில் இரண்டாவது மிக உயர்ந்த நிலையாகும். முன்னதாக, 17 ஆண்டுகளுக்கு முன்பு, ஹாங்காங்கில் கிரேடு 5 தீ விபத்து ஏற்பட்டது. அதில் நால்வர் உயிரிழந்தனர். "ஹாங்காங்கின் வாங் ஃபுக் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்" என்று சீனாவின் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. டிசம்பர் 7 ஆம் தேதி ஹாங்காங்கில் சட்டமன்றக் கவுன்சில் தேர்தல் நடைபெற உள்ளது. இருப்பினும், தீ விபத்து காரணமாக பல அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பரப்புரைகளை ஒத்திவைத்துள்ளன. இதற்கிடையில், வாங் ஃபுக் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, தாய் போ மாவட்டத்தில் உள்ள பல பள்ளிகள் வியாழக்கிழமை மூடப்படும் என்று ஹாங்காங்கின் கல்வித் துறை தெரிவித்துள்ளது. தீ விபத்தின் கோரத்தைக் காட்டும் புகைப்படங்கள் பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, ஹாங்காங்கின் தாய் போ பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் புதன்கிழமையன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, வியாழக்கிழமை வாங் ஃபுக் குடியிருப்பு வளாகத்தில் இருந்து தீப்பிழம்புகள் மற்றும் அடர்ந்த புகை எழுவதை காட்டும் ட்ரோன் படம். பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, ஹாங்காங் அரசாங்கத்தின் கூற்றுப்படி, புதன்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:51 மணியளவில் வாங் ஃபுக் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, தீயை அணைக்க சுமார் 800 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், அவர்கள் தீயைக் கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, தை போ மாவட்ட கவுன்சிலர் முய் சியு-ஃபங் பிபிசி சீன சேவையிடம் கூறுகையில், சுமார் 95 சதவிகித மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அதிகாரிகள் மக்களுக்காக தங்குமிடங்களை அமைத்துள்ளனர், அங்கு மருந்து மற்றும் உணவு வழங்கப்பட்டு வருகிறது என்றார். பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, ஆனால் கட்டடத்தில் புதுப்பித்தல் பணிகள் நடந்து வருவதாகவும், மூங்கில் கட்டுமான அமைப்புகள் மற்றும் பாலிஸ்டிரீன் பலகைகள் நிறுவப்பட்டுள்ளதாகவும், இதனால் தீ வேகமாக பரவியதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, வாங் ஃபுக் வளாகத்தில் வசிக்கும் ஜேசன் காங், தனது குடும்பத்தினரைப் பற்றி கவலைப்படுவதாக ராய்ட்டர்ஸிடம் கூறினார். "நான் அதிர்ச்சியில் இருக்கிறேன்," என்று அவர் பகிர்ந்துகொண்டார். பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு,சேதத்தின் அளவு இன்னும் தெரியவில்லை. உள்துறை அமைச்சகம் தற்காலிக தங்குமிடங்களுக்காக பல சமூக மையங்களையும், சில பள்ளிகளையும் திறந்துள்ளது. பட மூலாதாரம், Phoebe Kong/BBC படக்குறிப்பு, இப்பகுதி எட்டு கோபுர கட்டடங்களைக் கொண்டுள்ளது, ஒவ்வொன்றும் 31 மாடிகள் உயரம் கொண்டது. 2021 அரசாங்க மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அவை தோராயமாக 4,600 குடியிருப்பாளர்களுக்கு 1,984 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்டுள்ளன. பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, இந்த கோபுர வளாகங்கள் 1983 ஆம் ஆண்டு கட்டப்பட்டு, தற்போது புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. மூங்கில் கட்டமைப்புகளை புகைப்படத்தில் தெளிவாக காண முடியும். மேலும் அவை தீ வேகமாகப் பரவுவதற்கு பங்களித்ததாக நம்பப்படுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y2w02vz93o
-
சீரற்ற வானிலை ; மின்சாரத்தடை தொடர்பில் தகவல் வழங்க தொலைபேசி இலக்கம்!
சீரற்ற வானிலை ; மின்சாரத்தடை தொடர்பில் தகவல் வழங்க தொலைபேசி இலக்கம்! 27 Nov, 2025 | 11:54 AM நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பிரதேசங்களில் ஏற்படும் மின்சாரத்தடை தொடர்பில் தகவல் வழங்க 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாட்டில் பல பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளதால் சில இடங்களில் மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். எனவே, மின்சாரத்தடை ஏற்பட்டால் இலங்கை மின்சார சபையின் 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும். இந்த அவசர தொலைபேசி இலக்கமானது 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/231605
-
வடக்கு, கிழக்கு மாகாண அனர்த்த நிலைமைகள் தொடர்பான செய்திகள் - 2025
கால்வாயில் கார் வீழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு Nov 27, 2025 - 12:43 PM அம்பாறை - சாய்ந்தமருது பகுதியில் வெள்ள நீர் நிரம்பிய கால்வாயில் கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரைவாகுப்பற்று, பொலிவேரியன் குடியிருப்புப் பகுதியில் இன்று (27) முற்பகல் இடம்பெற்றுள்ளது. விபத்து குறித்து தகவலறிந்ததும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினர், சாய்ந்தமருது பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ செயற்படையணி மற்றும் பொலிஸார் இணைந்து உடனடியாக மீட்புப் பணிகளை முன்னெடுத்தனர். இதன்போது கால்வாயில் மூழ்கிய கார் மீட்கப்பட்டது. காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆண், பெண் மற்றும் சிறுமி ஆகிய மூவரும் மீட்கப்பட்டு உடனடியாக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி மூவரும் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். -அம்பாறை நிருபர் ஷிஹான்- https://adaderanatamil.lk/news/cmih3k34u021yo29nsvvqsl5l 'பேராறு' குளத்தின் வான் கதவு திறப்பு; மன்னார் மாந்தை மேற்கு பிரதேச மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் Published By: Digital Desk 3 27 Nov, 2025 | 02:09 PM https://www.virakesari.lk/article/231605 வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையினால் 'பேராறு' குளத்தின் வான் கதவு ஒன்று நேற்று புதன்கிழமை (26) திறக்கப்பட்டுள்ளது. எனவே குறித்த குளத்தின் நீரானது மன்னார் மாவட்டத்தின் பறங்கி ஆறு ஊடாக பெருக்கெடுக்க வாய்ப்புள்ளது என மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக மேலும் பேராறு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக எதிர் பார்க்கப்படுகின்றது. எனவே பறங்கி ஆற்றின் தாழ் நில பிரதேசங்களில் வாழும் மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் மேய்ச்சல் தரைக்காக கால் நடைகளை கொண்டு சென்ற பண்ணையாளர்கள் தங்களின் பாதுகாப்பு கருதி பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தங்களின் பாதுகாப்புக் கருதி திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தொடர்பில் இருக்குமாறும் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/231629
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
2026 ரி20 உலகக் கிண்ணத்தில் சுப்பர் சுற்றுக்கான முன்கூட்டிய நிரல்படுத்தலில் இலங்கை, இந்தியாவுடன் 8 நாடுகள் 26 Nov, 2025 | 02:08 PM (நெவில் அன்தனி) பத்தாவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தை முன்னின்று நடத்தவுள்ள வரவேற்பு நாடுகளான இலங்கை, இந்தியாவுடன் 8 நாடுகள் சுப்பர் சுற்றுக்கான முன்கூட்டிய நிரல்படுத்தலில் பெயரிடப்பட்டுள்ளன. உலகக் கிண்ணத்தில் விளையாட தகுதிபெற்றுள்ள 20 அணிகளுக்கான தரிவரசையை ஐசிசி வெயிட்டுள்ளதுடன் ரி20 உலகக் கிண்ணத்துக்கான குழு நிலைகள் மற்றும் போட்டி அட்டவணை ஆகியன ஐசிசி தலைவர் ஜெய் ஷாவின் பிரசன்னத்துடன் மும்பையில் நேற்று உத்தியோகபூர்மாக வெளியிடப்பட்டது. சர்வதேச ரி20 கிரிக்கெட்டுக்கான அணிகள் தரவரிசையில் நடப்பு சம்பியன் இந்தியா (272 புள்ளிகள்), முன்னாள் சம்பியன்களான அவுஸ்திரேலியா (267) மற்றும் இங்கிலாந்து (258), நியூஸிலாந்து (251), தென் ஆபிரிக்கா (240), முன்னாள் சம்பியன்களான மேற்கிந்தியத் தீவுகள் (236), பாகிஸ்தான் (235), மற்றும் இலங்கை (228) ஆகியன முதல் 8 இடங்களில் இருக்கின்றன. இதற்கு அமைய இந்த அணிகள் சுப்பர் சுற்றுக்கு தெரிவானால் X குழுவில் இந்தியா (X 1), அவுஸ்திரேலியா (X 2), மேற்கிந்தியத் தீவுகள் (X 3), தென் ஆபிரிக்கா (X 4) ஆகியனவும் Y குழுவில் இங்கிலாந்து (Y 1), நியூஸிலாந்து (Y 2), பாகிஸ்தான் (Y 3), இலங்கை (Y 4) ஆகியனவும் நிரல்படுத்தப்பட்டுள்ளன. இந்த அணிகளை விட வேறு அணிகள் சுப்பர் சுற்றுக்கு தெரிவானால் வெளியேறும் அணிகளின் இடங்களை அவை நிரப்பும். ரி20 உலகக் கிண்ணத்தில் பங்குபற்றும் மற்றைய 12 அணிகளின் தரவரிசை நிலைகள் வருமாறு: பங்களாதேஷ் (223 புள்ளிகள் 9ஆம் இடம்), ஆப்கானிஸ்தான் (220 புள்ளிகள் 10ஆம் இடம்), அயர்லாந்து (201 புள்ளிகள் 11ஆம் இடம்), ஸிம்பாப்வே (200 புள்ளிகள் 12ஆம் இடம்), நெதர்லாந்து (182 புள்ளிகள் 13ஆம் இடம்), நமிபியா 181 புள்ளிகள் 15ஆம் இடம்), ஐக்கிய அரபு இராச்சியம் (176 புள்ளிகள் 16ஆம் இடம்), நேபாளம் (176 புள்ளிகள் 17ஆம் இடம்), ஐக்கிய அமெரிக்கா (175 புள்ளிகள் 18ஆம் இடம்), கனடா (154 புள்ளிகள் 19ஆம் இடம்), ஓமான் (154 புள்ளிகள் 20ஆம் இடம்), இத்தாலி (115 புள்ளிகள் 28ஆம் இடம்) பத்தாவது ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் இலங்கை, பாகிஸ்தான் ஆகியவற்றின் சகல போட்டிகளும் கொழும்பிலும் கண்டியிலும் நடைபெறும். ஒருவேளை, இந்த இரண்டு அணிகளும் இரண்டு அரை இறுதிகளுக்கு தெரிவானால் பாகிஸ்தானின் அரை இறுதிப் போட்டி இலங்கையிலும் வேறு ஒரு நாட்டுடனான இலங்கையின் அரை இறுதிப் போட்டி இந்தியாவிலும் நடைபெறும். பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு தெரிவானால் அது இந்தியாவுடனான போட்டியாக இருந்தாலும் அப் போட்டி கொழும்பில் நடைபெறும். இலங்கையும் வேறு ஒரு நாடும் இறுதிப் போட்டிக்கு தெரிவானல் அப் போட்டியும் பெரும்பாலும் கொழும்பில் நடைபெறும். இந்தியாவும் வேறு ஒரு நாடும் அரை இறுதிக்கும் இறுதிப் போட்டிக்கும் தெரிவானால் அந்த இரண்டு போட்டிகளும் இந்தியாவில் நடைபெறும். https://www.virakesari.lk/article/231491
-
இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் தொடர்
சொந்த மண்ணில் சோடைபோனது இந்தியா உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசையில் 5ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டது Published By: Vishnu 26 Nov, 2025 | 07:37 PM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முழுமையாக தோல்வி அடைந்து சொந்த மண்ணில் சோடை போன இந்தியா, ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசையில் 5ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டது. துடுப்பாட்ட வீரர்களுக்கு சிரமத்தைக் கொடுத்த கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் 30 ஓட்டங்களால் தென் ஆபிரிக்காவிடம் தோல்வி அடைந்த இந்தியா, குவாஹாட்டியில் இன்று நிறைவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 408 ஓட்டங்களால் படுதோல்வி அடைந்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஓட்டங்கள் ரீதியில் இந்தியா அடைந்த மிகப் பெரிய தோல்வி இதுவாகும். போட்டியின் கடைசி நாளான இன்றைய தினம் புதிய விளையாட்டரங்கில் விரல் விட்டு எண்ணக்கூடிய பார்வையாளர்கள் மத்தியில் சைமன் ஹாமரின் சுழற்பந்துவீச்சில் இந்திய அணி 140 ஓட்டங்களுக்கு சுருண்டு தோல்வி அடைந்தது. கடந்த 25 வருடங்களில் இந்திய மண்ணில் தென் ஆபிரிக்கா ஈட்டிய முதலாவது டெஸ்ட் தொடர் வெற்றி இதுவாகும். அத்துடன் கடந்த 12 மாதங்களில் இந்தியா அடைந்த இரண்டாவது டெஸ்ட் தொடர் தோல்வி இதுவாகும். 2024 நவம்பர் மாதம் ஆரம்பமாகி 2025 ஜனவரி மாதம் நிறைவடைந்த 5 போட்டிகள் கொண்ட போடர் - காவஸ்கர் கிண்ண டெஸ்ட் கிண்ண தொடரில் அவுஸ்திரேலிய மண்ணில் இந்தியா 1 - 3 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது. இந்தத் தோல்வி பெரும் ஏமாற்றம் அளிப்பதாக இந்திய அணியின் பதில் அணித் தலைவர் ரிஷாப் பான்ட் தெரிவித்தார். 'ஓர் அணியாக நாங்கள் இன்னும் சிறப்பாக செயற்பட்டிருக்வேண்டும். தென் ஆபிரிக்க வீரர்கள் சிறப்பாக விளையாடி பெருமை அடைந்தார்கள். அவர்கள் முழுத் தொடரிலும் ஆதிக்கம் செலுத்தினர். இந்தத் தொடரில் இழைத்த தவறுகளைத் திருத்திக்கொண்டு அதனைப் ஒரு படிப்பினையாகக் கொண்டு அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவோம்' என ரிஷாப் பான்ட் மேலும் தெரிவித்தார். இந்தத் தொடரில் துடுப்பெடுத்தாடிய நான்கு இன்னிங்ஸிலும் முதலாவது டெஸ்டில் உபாதைக்குள்ளாகி ஓய்வு பெற்ற ஷுப்மான் கில் நீங்கலாக சகல விக்கெட்களையும் இழந்த இந்தியாவின் அதிகபட்ச மொத்த எண்ணிக்கை இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பெறப்பட்ட 201 ஓட்டங்களாகும். தோல்விக்கு தனிப்பட்ட யார் மீதும் பழி சுமத்த முடியாதென்கிறார் கம்பீர் இந்திய அணியின் தோல்விக்கு தனிப்பட்ட யார் மீதும் பழி சுமத்த முடியாது என தலைமைப் பயிற்றுநர் கௌதம் கம்பீர் தெரிவித்தார். கௌதம் கம்பீர் தலைமைப் பயிற்றுநரான பின்னர் இந்தியா 18 டெஸ்ட் போட்டிகளில் 10இல் தோல்வி அடைந்துள்ளது. இந்த தோல்விகளுக்கான பழி தன்னிடமிருந்து தொடங்குவதாக கம்பீர் தெரிவித்தார். செயதியாளர்களுடனான சந்திப்பில் பேசிய அவர், 'தென் ஆபிரிக்காவுக்கு எதிரான 0 - 2 என்ற தொடர் தோல்விக்கு அணியில் உள்ள ஒவ்வொருவரும் பொறுப்பேற்கவேண்டும். அனைவர் மீதும் பழி சுமத்தப்படலாம். ஆனால், அது என்னிடம் இருந்துதான் தொடங்கும்' என்றார். 'தனிப்பட்ட வீரர்களையோ வீரர்களின் அடி தெரிவுகளையோ குறை கூற முடியாது. ஒருபோதும் தனிநபரை குறை கூற மாட்டேன். நாம் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும். சுருக்கமாக சொல்லின் எமது அணி எப்போதும் கற்றுக்கொள்ளும் அணி. இந்திய டெஸ்ட் அணியைப் பொறுத்தமட்டில் இந்த அணி உயரிய இடத்துக்கு செல்வதற்கான நிலைமாற்றக் காலத்தில் இருப்பதை அனைவரும் ஒப்புக்கொள்ளவேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/231543
-
இம்ரான் கான் எங்கே? வதந்திகளால் பாகிஸ்தானில் சர்ச்சை!
இம்ரான் கான் கொல்லப்பட்டாரா? - அடியாலா சிறை நிர்வாகம் விளக்கம் 27 Nov, 2025 | 01:13 PM கடந்த 2 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், சிறையில் பாகிஸ்தான் இராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக நேற்று (26) சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்றும் அவை ஆதாரமற்ற வதந்திகள் என்றும் அடியாலா சிறைச்சாலை அறிக்கை வெளியிட்டது. இம்ரான் கான் கொல்லப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவிய வதந்திகளை நிராகரித்து, நேற்றை தினம் சிறைச்சாலை வெளியிட்ட அறிக்கையின் ஊடாக, இம்ரான் கான் சிறைக்குள்தான் இருக்கிறார், அவர் வேறு எங்கும் மாற்றப்படவில்லை, அவர் தொடர்ந்து முழுமையான மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார் என்று சிறை நிர்வாகம் அறிவித்துள்ளதாக ஜியோ நியூஸ், பாகிஸ்தான் டுடே முதலிய செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட இம்ரான் கான் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் அந்நாட்டின் ராவல்பிண்டி அடியாலா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில், சில நாட்களாக இம்ரான் கானை சந்திக்கச் சென்ற அவரது மூன்று சகோதரிகள் மற்றும் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் (PTI) கட்சித் தொண்டர்களை சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இம்ரான் கானை சந்திக்க சிறைக்குள் அனுமதி மறுக்கப்பட்டு வந்த காரணத்தினால் அவர் சிறைக்குள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அந்நாட்டில் பரவத் தொடங்கியது. இம்ரான் கானை சந்திக்க விடாமல் சிறை நிர்வாகம் தடுப்பதில் சந்தேகம் கொண்டு சகோதரிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் சிறைச்சாலை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இம்ரான் கானின் உயிருக்கு ஏதும் ஆபத்து நேர்ந்திருக்கலாம் என்று சகோதரிகள் கூறத் தொடங்கினர். அதன் தொடர்ச்சியாக, இம்ரான் கான் சிறைச்சாலையில் வைத்து பாகிஸ்தான் இராணுவத்தால் கொலை செய்யப்பட்டுவிட்டதாகவும் அவர் பொலிஸாரால் கடுமையாக தாக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் நேற்று சமூக ஊடகங்களில் பல்வேறு பதிவுகள் பரவத் தொடங்கின. இந்த சமூக ஊடகப் பதிவுகள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து வெளிவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, சிறைச்சாலை வளாகத்தில் இம்ரான் கான் ஆதரவாளர்கள் பெருமளவினர் திரண்டு கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக சிறைச்சாலைக்கு வெளியே அதிக எண்ணிக்கையிலான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இம்ரான் கானின் நிலை குறித்து அரசாங்கம் விசாரணை நடத்தவேண்டும் என கட்சித் தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாத காலமாக இம்ரான் கானை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டு வருவதால் பல்வேறு சந்தேகங்கள் கிளம்பியுள்ள இதேவேளை, இம்ரான் கான் ஸ்ட்ரெச்சரில் படுத்திருப்பது போன்ற ஒரு புகைப்படமும் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மேலும் அவர் கொல்லப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்து, பல வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. எனினும், பாகிஸ்தான் அரசும் சிறை நிர்வாகமும், தற்போது பரவும் செய்திகளை மறுத்து வருகின்றன. இச்சூழ்நிலையில் இம்ரான் கானின் தங்கை நோரின் நிாயஸி கூறுகையில், “அண்ணன் இம்ரான் கானை பார்க்கவேண்டும் என்றுதான் சிறைக்கு சென்றோம். நாங்கள் அமைதியான முறையில்தான் சிறைக்கு வெளியில் போராடினோம். எங்கள் அண்ணன் உடல்நிலை பற்றி கவலையாக உள்ளது. திடீரென அங்கு மின்விளக்குகள் அணைக்கப்பட்டு பஞ்சாப் மாகாண பொலிஸார் எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். எனக்கு 71 வயதாகிறது. எனது தலைமுடியை பிடித்து இழுத்துச் சென்று என்னை வீதியில் தள்ளிவிட்டனர். இதனால் எனது உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார். இம்ரான் கானை யாரும் சந்திக்காதவாறு அதிகாரபூர்வமற்ற தடையை பாகிஸ்தான் அரசு விதித்திருக்கக்கூடும் என்றும் அதனால்தான் கடந்த சில வாரங்களாக இம்ரான் கானை சந்திக்க எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/231620
-
ஹொங்கொங்கில் குடியிருப்பு கட்டிடங்கள் தீக்கரை; 44 பேர் உயிரிழப்பு, 279 பேர் மாயம்!
ஹொங்கொங்கில் பாரிய தீ : உயிரிழந்தோர் எண்ணிக்கை 44ஆக அதிகரிப்பு ; 26 பேர் கவலைக்கிடம் ; 279 பேரை காணவில்லை! 27 Nov, 2025 | 11:48 AM சீனாவின் ஹொங்கொங்கின் தை போ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் நேற்று (26) பகல் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இத்தீ விபத்தில் சிக்கி 26 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் 279 பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத் தொகுதியில் கடந்த சில மாதங்களாக கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று பகல் திடீரென தீ பரவியது. கட்டடத் தொகுதியில் படுவேகமாக தீ பரவியதில் 5 கட்டடங்கள் முழுவதுமாக எரிந்ததில் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்திருந்தது. தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பல மணிநேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். தீ விபத்து காரணமாக அங்கிருந்த சுமார் 700 பிரதேசவாசிகள் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பப்பட்ட நிலையில், 14 பேர் தீயில் உடல் கருகி இறந்துவிட்டதாக நேற்றை தினம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை 44ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதென சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கட்டடத் தொகுதியில் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவோர் மூங்கில் சாரம் அமைத்து வேலைகளில் ஈடுபட்டிருந்த நிலையில் தீ பரவியிருந்தது. தீ பரவியதற்கான காரணம் இதுவரை உறுதியாக தெரியவில்லை. இருப்பினும், தீ பரவலை அதிகப்படுத்த மூங்கில சாரமே காரணம் என்ற அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/231603
-
'அடுத்த 48 மணிநேரத்தில் தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு' - எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்?
சென்யார் புயல்: புயல்களுக்கு பெயர் வைக்கப்படுவது எப்படி? முடிவு செய்வது யார்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சர்வதேச வானிலை ஆய்வு அமைப்பும் வேறு சில வானிலை அமைப்புகளும் இணைந்து வகுத்த வழிமுறைகளின்படி இந்தப் பெயர்கள் வைக்கப்படுகின்றன. (கோப்புப்படம்) 26 நவம்பர் 2025 (கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான இந்தக் கட்டுரை தற்போது மறுபகிர்வு செய்யப்படுகிறது) மலேசியா மற்றும் இந்தோனீசியா அருகே உருவான 'சென்யார்' புயல் இன்று காலை இந்தோனீசியாவில் கரையைக் கடந்தது. அடுத்த 24 மணிநேரத்தில் இந்தப் புயல் வலுவிழந்து மேற்கு நோக்கி நகரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதோடு, வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகத் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மேலும் தீவிரமானால் புயலாகவும் மாறலாம் என வானிலை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதேபோலக் கடந்த அக்டோபர் மாதம் வங்கக் கடலில் உருவான மோன்தா புயல் ஆந்திராவில் கரையைக் கடந்தது. ஒவ்வொரு புயல் உருவாகின்ற போதும் அதன் பெயர் பற்றிய விவாதங்கள் சமூக ஊடகங்களில் எழுப்பப்படுகின்றன. ஆனால் இதன் பின்னுள்ள வழிமுறை மிகவும் சுவாரஸ்யமானது. புயல்களுக்கு இப்படிப் பெயரிடும் வழக்கம் 2004ஆம் ஆண்டில் தொடங்கியது. பல்வேறு நாடுகள் இணைந்து தயாரிக்கும் ஒரு பொதுப் பட்டியலின் அடிப்படையில் இந்தப் பெயர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. புயலுக்குப் பெயரிடும் நாடுகள் எவை? உலக அளவில் வெப்பமண்டல சூறாவளிகள் குறித்த அறிவுரைகளை வழங்குவது, அவற்றுக்குப் பெயர் சூட்டுவது ஆகிய அதிகாரம், பகுதியளவில் தனித்தன்மை வாய்ந்த ஆறு வானிலை மையங்களுக்கும் பகுதியளவிலான வெப்பமண்டல சூறாவளி எச்சரிக்கை மையங்கள் ஐந்துக்கும் வழங்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பிராந்திய அளவில் தனித்தன்மை வாய்ந்த ஆறு வானிலை மையங்களில் ஒன்றாக இந்திய வானிலை ஆய்வு மையம் திகழ்கிறது. (கோப்புப் படம்) பிராந்திய அளவில் ஆறு வானிலை மையங்களில் ஒன்றாக இந்திய வானிலை ஆய்வு மையம் திகழ்கிறது. உலக அளவிலான வானிலை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆசிய - பசிஃபிக் பகுதிகளுக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் கீழ் அதன் உறுப்பு நாடுகளான வங்கதேசம், இந்தியா, இரான், மாலத்தீவு, மியன்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், செளதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏமன் ஆகிய 13 நாடுகளுக்கான வெப்பமண்டல சூறாவளி மற்றும் புயல் உருவாக்கம் குறித்த அறிவுரைகளை வழங்கும் மையமாக இந்திய வானிலை ஆய்வு மையம் விளங்குகிறது. டெல்லியில் இருந்து செயல்படும் தனித்தன்மை வாய்ந்த இந்திய வானிலை மையம், வங்காள விரிகுடா, அரபிக் கடல் ஆகிய இந்திய பெருங்கடலின் வடக்குப் பகுதியில் உருவாகும் வெப்பமண்டல புயல்களுக்குப் பெயர் சூட்டும் அதிகாரம் பெற்றதாக விளங்குகிறது. பட மூலாதாரம், IMD படக்குறிப்பு, புயல்களுக்குப் பெயரிடும் இந்த வழக்கம் 2004ஆம் ஆண்டில் தொடங்கியது. எதற்காக புயல்களுக்கு பெயர் வைக்கப்படுகிறது? வெப்பமண்டல புயல்களுக்கு பெயர் சூட்டுவதென்பது பல்வேறு காரணங்களுக்காக மேற்கொள்ளப்படுகிறது. அவை, அறிவியல் துறையைச் சார்ந்தவர்கள், பேரழிவுக் கால நிர்வாகத்தை மேற்கொள்வோர், ஊடகத் துறையினர், பொதுமக்கள் ஆகியோர் ஒவ்வொரு சூறாவளியையும் தனித்து அடையாளம் காண்பது அத்தகைய சூறாவளி எவ்வாறு உருப்பெற்று வருகிறது என்பதைப் பற்றிய புரிதலை உருவாக்குவது ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட புயல்கள் உருவாகக் கூடுமானால் அவை குறித்த குழப்பத்தை அகற்றுவது ஒவ்வொரு வெப்பமண்டல சூறாவளியையும் எளிதாக நினைவில் கொள்வது மக்களுக்கு விரிவான எச்சரிக்கைகளைத் துரிதமாக வழங்குவது பொதுவாக, அரபிக் கடல், வங்காள விரிகுடா, இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கான பெயர்களை 13 உறுப்பு நாடுகள் இணைந்துதான் வைக்கின்றன. சர்வதேச வானிலை ஆய்வு அமைப்பும் வேறு சில வானிலை அமைப்புகளும் இணைந்து வகுத்த வழிமுறைகளின்படி இந்தப் பெயர்கள் வைக்கப்படுகின்றன. புயலுக்கு பெயர் வைக்க உள்ள நிபந்தனைகள் இந்த நாடுகள் பரிந்துரைக்கும் பெயர்களுக்கு சில நிபந்தனைகள் உள்ளன. புயலின் பெயரில் எவ்வித அரசியல், அரசியல் பிரபலங்களின் பெயர்கள், கலாசாரம், மத நம்பிக்கை, இனம் போன்றவை பிரதிபலிக்கக் கூடாது. உலக அளவில் வாழும் மக்களில் எவருடைய உணர்வையும் காயப்படுத்தும்படி பெயர் இருக்கக்கூடாது மிகவும் கொடூரமானதாக பெயர் இருக்கக்கூடாது சிறியதாகவும், உச்சரிக்க எளிதாகவும் யாரையும் காயப்படுத்தாத வகையிலும் பெயர் இருக்க வேண்டும் பெயரின் அளவு அதிகபட்சமாக 8 எழுத்துகளில் இருக்க வேண்டும் பரிந்துரைக்கப்படும் பெயரை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட நாடுகள் குறிப்பிட்டிருக்க வேண்டும் பரிந்துரைக்கப்படும் பெயரை நிராகரிக்க 13 நாடுகளின் வானிலை ஆய்வு நிபுணர் குழுவுக்கு உரிமை உண்டு பெயர் சூட்டல் அமல்படுத்தப்படும் முன்பாகக்கூட அதை மறு ஆய்வுக்கு உள்படுத்த அந்தக் குழுவுக்கு அதிகாரம் உண்டு ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பெயர்கள், மீண்டும் வைக்கப்படக்கூடாது. பட மூலாதாரம், RSMC இந்த நிபந்தனைகள் அடிப்படையில் ஒரு நாடு தலா 13 பெயர்களைப் பரிந்துரைக்கலாம். இந்தப் பெயர்கள் சுழற்சி முறையில் ஆங்கில அகர வரிசைப்படி பயன்படுத்தப்படும். அந்த வரிசையில் சென்யாரை தொடர்ந்து இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகும் அடுத்த புயலுக்கு திட்வா (Ditwah) எனப் பெயர் வைக்கப்பட உள்ளது. இந்தப் பெயரை ஏமன் பரிந்துரைத்துள்ளது. பொதுவாக, தென் பசிஃபிக், இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்படும் கடல் சீற்றத்தின் தீவிரம் "புயல்" (Cyclone) எனவும், வடக்கு அட்லான்டிக், மத்திய வடக்கு பசிஃபிக், கிழக்கு வடக்கு பசிஃபிக் பெருங்கடல் பகுதியில் ஏற்படும் கடல் சீற்றத்தின் தீவிரம் "சூறாவளி" (Hurricane) என்றும் அழைக்கப்படுகிறது. வடமேற்கு பசிஃபிக் பெருங்கடலில் ஏற்படும் சீற்றத்தின் தீவிரம் "கடும் புயல்" (Typhoone) என்று வானிலை ஆய்வக நிபுணர்களால் அழைக்கப்படுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c865wq24ld5o
-
வடக்கு, கிழக்கு மாகாண அனர்த்த நிலைமைகள் தொடர்பான செய்திகள் - 2025
முல்லைத்தீவு நகரின் வீதியின் குறுக்கே வீழ்ந்த புளியமரம் : போக்குவரத்து பாதிப்பு 27 Nov, 2025 | 10:41 AM (இணையத்தள செய்திப் பிரிவு ) முல்லைத்தீவு நகரில், இன்று வியாழக்கிழமை (27) காலை புளியமரம் ஒன்று சரிந்து விழுந்துள்ளதாகவும் அனை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் முலைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் வீதிப்போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மின் கம்பங்களின் இணைப்புக்கள் மிகவும் தாழ்நிலையில் காணப்படுவதனால் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு வாகனங்களை குறித்த பகுதியில் செலுத்திச் செல்ல வேண்டாமென மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/231582
-
நவம்பர் 2025 - இன்றைய வானிலை
சில பகுதிகளில் 200 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும்; வளிமண்டலவியல் திணைக்களம் Published By: Digital Desk 3 27 Nov, 2025 | 09:02 AM நாடு முழுவதிலும் வானம் முகில் செறிந்து காணப்படுவதுடன் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியலல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் விடுத்துள்ள அறிக்கையில், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களிலும் 200 மில்லிமீற்றரிலும் கூடிய மிகப் பலத்த மழை பெய்யக்கூடும். வடக்கு, மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் 150 மில்லிமீற்றரிலும் கூடிய மிகப் பலத்த மழை செய்வதுடன் நாட்டின் ஏனைய பிராந்தியங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மணித்தியாலத்திற்கு சுமார் 60 - 70 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் விழிப்புடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற அறிவுறுத்தல்களை கவனத்திற் கொண்டு செயற்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் மிகப் பலத்த மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/231566
-
பல வெளிநாட்டு போர்க்கப்பல்கள் இலங்கையில் நங்கூரமிட்டுள்ளன!
பல வெளிநாட்டு போர்க்கப்பல்கள் இலங்கையில் நங்கூரமிட்டுள்ளன! Published By: Digital Desk 1 27 Nov, 2025 | 08:31 AM (இணையத்தள செய்திப் பிரிவு) இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவைக் முன்னிட்டு, பிராந்திய மற்றும் உலகளாவிய நாடுகளைச் சேர்ந்த ஏழு போர்க்கப்பல்களின் பங்கேற்புடன், எதிர்வரும் 30 ஆம் திகதி காலி முகத்திடலில் நடைபெறவுள்ள, 2025ஆம் ஆண்டுக்கான சர்வதேச போர் கப்பல்கள் கண்காணிப்பில் பங்கேற்க, பங்களாதேஷ் மற்றும் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று (03) போர்க்கப்பல்கள் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நாட்டை வந்தடைந்துள்ளன. கொழும்பு துறைமுகத்தில் கடற்படை மரபுகளின்படி போர்க்கப்பல்களை இலங்கை கடற்படை வரவேற்றுள்ளது. நாட்டை வந்தடைந்துள்ள பங்களாதேஷ் கடற்படையின் போர்க்கப்பலான ‘PROTTOY’ 90.1 மீற்றர் நீளம் கொண்டதுடன், அதன் கட்டளை அதிகாரியாக CAPTAIN MD TOUHIDUL HAQUE BHUIYAN கடமையாற்றுகின்றார். 2025ஆம் ஆண்டுக்கான சர்வதேச போர்க்கப்பல்கள் கண்காணிப்பில் இரண்டு இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் பங்கேற்கின்றது. அதன்படி, நாட்டை வந்தடைந்துள்ள இந்திய கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான ஐNளு ஏஐமுசுயுNவு 262.5 மீற்றர் நீளம் கொண்டது அதன் கட்டளை அதிகாரியாக உயிவயin யுளாழம சுயழ கடமையாற்றுகின்றார். அதேநேரம், மற்றுமொரு இந்திய போர்க்கப்பலான INS VIKRANT 149.2 மீற்றர் நீளம் கொண்டதுடன், அதன் கட்டளை அதிகாரியாக captain Ashok Rao கடமையாற்றுகின்றார். மேலும், 2025ஆம் ஆண்டுக்கான சர்வதேச போர்க்கப்பல்கள் கண்காணிப்புடன் இணைந்து, கடற்படைகளுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கை கடற்படை பல திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, இந்த போர்க்கப்பல்களின் குழுவினர்களில் பங்கேற்புடன் எதிர்வரும் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டம், விளையாட்டு திட்டம், சர்வதேச உணவு கண்காட்சி, சர்வதேச இசைக்குழு நிகழ்ச்சி மற்றும் நகர அணிவகுப்பு ஆகியவை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/231562
-
தவெகவில் இணைந்த செங்கோட்டையன்; சால்வை அணிவித்து வரவேற்ற விஜய் - என்ன நடக்கிறது?
தவெகவில் இணைந்த செங்கோட்டையன்; சால்வை அணிவித்து வரவேற்ற விஜய் - என்ன நடக்கிறது? பட மூலாதாரம், TVK 27 நவம்பர் 2025, 05:07 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் (இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.) அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் விஜயின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பதவியை நேற்று (நவ. 26) அவர் ராஜினாமா செய்த நிலையில், இன்று தவெகவில் இணைந்துள்ளார். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று குரல் எழுப்பிய செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து கடந்த அக்டோபர் மாதம் நீக்கப்பட்டார். இன்று தவெக கட்சி அலுவலகத்துக்கு சென்றார். அவர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். அப்போது, செங்கோட்டையனுக்கு தவெகவின் சால்வை அணிவித்து வரவேற்றார். அப்போது, செங்கோட்டையனின் ஆதரவாளர்களும் உடனிருந்தனர். பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, தவெக அலுவலகத்தில் செங்கோட்டையன் தவெக உறுப்பினர் அட்டையை சட்டைப் பையில் வைத்துக் கொண்ட செங்கோட்டையன் கட்சியில் இணையும் நிகழ்வில் "வேற்றுமைகளை களைந்து மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சமவாய்ப்பு, சம உரிமை கிடைக்க பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்" என்று செங்கோட்டையனும் அவரது ஆதரவாளர்களும் விஜய் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேடையில் விஜய்க்கு அருகில் நின்றிருந்த செங்கோட்டையனுக்கு உறுதிமொழி ஏற்ற பிறகு, பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் விஜய். அதன் பின் அவருக்கு பச்சை நிற சால்வை அணிவித்தார் விஜய். பிறகு, விஜய் தவெகவின் கட்சித் துண்டை செங்கோட்டையனின் கழுத்தில் அணிவித்தார். பிறகு விஜய் தவெகவின் உறுப்பினர் அட்டையை செங்கோட்டையனிடம் வழங்க, அதைப் பெற்றுக் கொண்டு தனது சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். அதன் பின் செங்கோட்டையன் விஜய்க்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்தார். மேடையில் விஜயிடம் சில நூல்களையும் விஜய்க்கு பரிசாக அளித்தார். அப்போது புகைப்படத்துக்கு போஸ் கொடுக்க இருவரும் அருகருகே நின்ற போது, செங்கோட்டையனின் கழுத்தில் இருந்த தவெக கட்சித் துண்டை சரி செய்தார் விஜய். கட்சியில் இணைந்த செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் ஒருவர் பின் ஒருவராக மேடை ஏறி விஜயிடம் வாழ்த்துப் பெற்றனர். அவர்களுக்கு சால்வை மற்றும் தவெக கட்சித் துண்டை அணிவித்து, கட்சியில் வரவேற்றார் விஜய். விஜய் பேசியது என்ன? தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், செங்கோட்டையன் தனது கட்சியில் இணைந்த பிறகு அது குறித்து எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் விஜய், "20 வயது இளைஞராக இருக்கும் போதே எம்ஜிஆர்-ஐ நம்பி அவரது மன்றத்தில் சேர்ந்தவர். அந்த சிறுவயதில் சட்டமன்ற உறுப்பினர் என்ற பெரிய பொறுப்பை ஏற்றவர். அதன் பின் அவருடைய பயணத்தில், அந்த இயக்கத்தின் இரு பெரும் தலைவர்களுக்கு (எம்ஜிஆர், ஜெயலலிதா) பெரிய நம்பிக்கைக்குரியவராக அரசியல் களத்தில் இருந்தவர். 50 ஆண்டுகளாக ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையன், இன்று அவரது அரசியல் அனுபவமும், அவருடைய அரசியல் களப்பணியும் நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்துக்கு பெரிய உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன், அவருடன் இணைந்து பணியாற்ற நம்முடன் கைகோர்க்கும் அனைவரையும் மக்கள் பணியாற்ற வரவேற்கிறேன்" என்று பேசினார். பாஜக கூறுவது என்ன? செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, "பாஜக யாருக்கும் எந்த வாக்குறுதியும் தரவில்லை. அதிமுகவில் இருந்துகொண்டு பாஜகவை நம்பி இருந்தோம் என்று கூறுவது எப்படி சரியாக இருக்கும், எப்படி பொருத்தமாக இருக்கும்? செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது அதிமுக-பாஜக கூட்டணியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அவர்களின் உட்கட்சி பிரச்னை குறித்து பேசுவது நியாயமாக இருக்காது." என்று தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி கூறியது என்ன? தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் இணைந்தது குறித்து மதுரையில் இருந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, "அவர் (செங்கோட்டையன்) அதிமுகவில் இல்லை. எனவே அதைப் பற்றி பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "செங்கோட்டையனுக்கு எனது வாழ்த்துகள். செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்தது விஜய்க்கும் அந்த கட்சிக்கும் பலம் சேர்க்கும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை பாராட்டி பேசுகிறார் விஜய். செங்கோட்டையனுக்கு உரிய மரியாதையை தவெக கொடுக்க வேண்டும். அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் ஒன்றாக சேரப்போவதில்லை." என தெரிவித்தார். மேலும், "செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்தது குறித்து, எடப்பாடி பழனிசாமியிடம் கேட்ட போது, "என்னை ஏன் கேட்கிறீர்கள்" என்கிறார். இவர் தானே செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கினார், இவர் தானே அந்த தொகுதியில் குழப்பத்தை ஏற்படுத்தினார், பிறகு வேறு யாரை கேட்பது? இப்படி இருந்தால் அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது." என்றார். பின்னணி அதிமுகவை எம்.ஜி.ஆர் நிறுவிய காலம் தொட்டு அக்கட்சியில் பணியாற்றிவரும் மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன், அவரது கோபிச்செட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் கட்சி அலுவலகத்தில் செப்டம்பர் 3 ஆம் தேதி ஊடகங்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நான் மனம் திறந்து பேசப் போகிறேன். எனது கருத்துக்கள் கட்சி தொண்டர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும்" என்று கூறியிருந்தார். மனம் திறந்து பேசப்போவதாக கூறிய அவர், "அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அரவணைக்க வேண்டும். அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும்" என்று செப்டம்பர் 5ம் தேதி பொதுவெளியில் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்தார். அது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு மேற்கொள்வதற்கு 10 நாட்கள் கெடுவும் விதித்தார். அடுத்த நாளே அவரை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. கடந்த மூன்று வாரங்களுக்கு முன் ஊடகங்களில் பேசிய செங்கோட்டையன், அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தன்னை அழைத்து பேசியது பாஜகதான் என்றதுடன் "பாஜகவை விட்டால் நமக்கு வேறு வழியில்லை, நம்மை விட்டால் பாஜகவுக்கும் வேறு வழியில்லை என்று கூறினேன். என்னை வைத்து அதிமுகவை உடைக்க பாஜக ஒருபோதும் முயற்சிக்கவில்லை" என்று தெரிவித்தார். 2026-ல் அதிமுக மாநிலத்தில் ஆட்சி அமைக்க உதவ வேண்டும் என்றும் 2029-ல் பாஜகவின் எண்ணங்கள் நிறைவேற கட்சித் தலைமையிடம் பேசி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தான் கூறியதாக அப்போது செங்கோட்டையன் பேசியிருந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgqpvkxvqvo
-
யாழ். மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
27 Nov, 2025 | 11:48 AM அனர்த்தத்தின் போது பொதுமக்கள் அவசர உதவிகளைப் பெற்றுக்கொள்ள மாவட்டச் செயலகத்தின் 0212117117 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள முடியும் என அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். அனர்த்த அபாய குறைப்பு நடவடிக்கைக்கு முன்னேற்பாடாக பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர்களுடன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் நேற்று புதன்கிழமை (26) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் கலந்துரையாடினார். இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் , அனர்த்த அபாய குறைப்பு நடவடிக்கைகளுக்கு உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளை கேட்டறிந்துகொண்டதுடன், அனர்த்தம் ஏற்படும் போது உத்தியோகத்தர்கள் தமது கடமையிலிருந்து விலகமுடியாது எனவும், அடுத்த ஆண்டு தை மாதம் தொடக்கம் பங்குனி மாதம் வரை கிராம மட்ட ரீதியாக எடுக்க வேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகளுக்கான திட்டங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும், தற்போது உடனடியாக வெள்ள நீர் வழிந்தோடாமைக்கான தடைகளை ஜேசிபி மூலம் அகற்றுவதற்கான இடங்களை உத்தியோகத்தர்களிடம் கேட்டறிந்து, உடனடியாக அனர்த்த முகாமைத்துவ சேவைகள் பணிப்பாளர் நாயகத்துடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முதற்கட்டமாக 0.75 மில்லியன் ரூபா நிதியினை வழங்குமாறு அரசாங்க அதிபரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பாதுகாப்பு நிலையம் அமைக்கப்பட்டால் அவ் நிலையத்திற்கு சுழற்சி முறையில் உத்தியோகத்தர்களை கடமைகளில் ஈடுபடுத்தும் செயற்பாட்டை பிரதேச செயலாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், உணவுப் பொதிகள், தறப்பாள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கும் போது பிரதேச செயலாளர்களின் ஒருங்கிணைப்பில் வழங்கப்பட வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும், அனர்த்தத்தின் போது பொதுமக்கள் அவசர உதவிகளைப் பெற்றுக்கொள்ள மாவட்டச் செயலக 0212117117 இலக்க தொலைபேசிக்கு 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள முடியும் எனவும் அவ் இலக்கத்திற்கு அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் பதிலளிப்பார் எனவும் அவர் பதிலளிக்காது தவறுதலாக தவறும்பட்சத்தில் தமது தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்திற்கு அத் தொலைபேசி இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும், யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினருமான எஸ். கபிலன், பொதுமக்களிடமிருந்து வடிகால்கள் சீர் செய்ய வேண்டிய கோரிக்கைகள் அதிகம் கிடைக்கப்பெறுவதாகவும், வெள்ள அனர்த்தம் ஏற்பட்டால் முப்படையினர் உதவி செய்வதற்கு தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்து அனைவரின் பூரண ஒத்துழைப்பினையும் வழங்குமாறும் கேட்டுக் கொண்டார். இக் கூட்டத்தில் வைத்து அரசாங்க அதிபரினால் அனர்த்த முகாமைத்துவ சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு 0.75 மில்லியன் ரூபா நிதியினை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு உடனடியாகவே நிதி விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், திட்டமிடல் பணிப்பாளர் இ சுரேந்திரநாதன், உதவி மாவட்டச் செயலாளர் உ.தா்சினி, அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் ரி. என். சூரியராஜா, அனர்த்த நிவாரண சேவைகள் மாவட்ட அலுவலர் ஆ. நளாயினி, உதவிப் பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/231585
-
சீரற்ற வானிலை - எம்.பிக்களுக்கு ஜனாதிபதி அதிரடி பணிப்புரை
சீரற்ற வானிலை - எம்.பிக்களுக்கு ஜனாதிபதி அதிரடி பணிப்புரை Nov 27, 2025 - 01:04 PM அடுத்த இரண்டு நாட்களில் அதிகரிக்கவுள்ள கடும் மழையுடன் கூடிய ஆபத்தான வானிலை காரணமாக, உயிரிழப்புகளைத் தடுக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் உடனடியாகத் தலையிடுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அனர்த்தம் மற்றும் அபாயத்திற்கு உள்ளான மாவட்டங்களின் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால அனர்த்த நிலைமை மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து ஆராய்வதற்காக இன்று (27) காலை பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இந்த ஆலோசனைகளை வழங்கினார். தமது மாவட்டங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து ஆராயுமாறு அறிவுறுத்திய ஜனாதிபதி, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக்களைக் கூட்டி, அந்தந்தப் பகுதிகளில் நிலவும் அபாய நிலைமை மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை இனங்கண்டு, மக்களுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் நிவாரணங்களை வழங்க துரித நடவடிக்கை எடுக்குமாறு ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது மாவட்டங்களுக்குச் சென்று மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளில் ஈடுபடுவதற்கு வரவு-செலவுத் திட்ட விவாதங்கள் மற்றும் பாராளுமன்ற நடவடிக்கைகள் தடையாக உள்ளதால், இது குறித்து இன்று பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மேலும் கலந்துரையாடத் தீர்மானிக்கப்பட்டது. இங்கு முக்கியமாக மக்களின் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான சுகாதார வசதிகள் உள்ளிட்ட நிவாரண சேவைகளைத் தொடர்ச்சியாக வழங்குவது குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. மேலும், உயர்தரப் பரீட்சையை நடத்துதல் மற்றும் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்கள், வீடுகளில் சிக்கியுள்ள மக்கள் மற்றும் அனர்த்தம் காரணமாக உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ள மக்களுக்கும் சமைத்த உணவு மற்றும் உலர் உணவுப் பொருட்களைத் தொடர்ச்சியாக வழங்க ஜனாதிபதி ஆலோசனை வழங்கியதுடன், சேதமடைந்த வீடுகள் மற்றும் பயிர் நிலங்களுக்கு நட்டஈடு வழங்கும் முறைமை குறித்தும் கவனம் செலுத்தினார். அத்துடன், நீர்ப்பாசனக் கட்டமைப்பு மற்றும் அதன் பாதுகாப்பு குறித்தும், மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் பெருந்தெருக்கள் கட்டமைப்பின் பாதுகாப்பு குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. https://adaderanatamil.lk/news/cmih4bowl021zo29nr65krudr