Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. யாழ். வடமராட்சியில் இளைஞன் கொலை; இருவர் கைது 25 Nov, 2025 | 05:33 PM யாழ்ப்பாணம் - வடமராட்சியில் கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் - வடமராட்சி, கரவெட்டி, கரணவாய் பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்ட 29 வயதுடைய இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. விசாரணைகளின் பின்னர் இரண்டு சந்தேக நபர்களையும் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/231428
  2. நீர்நாயை காத்த புகைப்பட கலைஞர்கள். 40 வயதில் bicycle kick அடித்த ரொனால்டோ!
  3. Stumps 2nd Test, Guwahati, November 22 - 26, 2025, South Africa tour of India South Africa 489 & 260/5d India (15.5 ov, T:549) 201 & 27/2 Day 4 - India need 522 runs. Current RR: 1.70 • Last 10 ov (RR): 10/2 (1.00)
  4. கிளிநொச்சியில் மருமகனின் தாக்குதலில் மாமனார் உயிரிழப்பு Nov 25, 2025 - 04:52 PM கிளிநொச்சி, அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் பகுதியில், மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மகள் தனது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், அங்கு வந்த மருமகன் மகளைத் தாக்க முற்பட்டபோது, அதனைத் தடுக்கச் சென்ற மாமனாரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். தாக்குதலுக்கு இலக்கான அவர், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் கதிரவேலு சிவராசசிங்கம் (வயது 59) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் 25 வயதுடைய மருமகன் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இச்சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் அவரது சிறிய தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக அக்கராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. -கிளிநொச்சி நிருபர் சப்தன்- https://adaderanatamil.lk/news/cmiehlks101zeo29nacbd3yh0
  5. 25 Nov, 2025 | 01:38 PM அவோராகி அல்லது மவுண்ட் குக் என அழைக்கப்படும் நியூசிலாந்தின் மிக உயரமான மலையில் இருந்து விழுந்து இரண்டு மலையேற்ற வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 3,724 மீட்டர் உயரமுள்ள மலையில் ஏறிய நான்கு பேரில் இருவர் உயிரிழந்தனர். திங்கட்கிழமை இரவு அவசர சேவைகளைத் தொடர்பு கொண்ட பின்னர் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஹெலிகாப்டர் மூலம் மற்றைய இருவரும் காயங்கள் ஏற்படாமல் மீட்கப்பட்டனர். பல மணி நேர தேடுதலுக்குப் பிறகு, உயிரிழந்த மலை வீரர்களின் சடலங்கள் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டன. சடலங்கள் மீட்கும் பணி தற்போது “கடினமான ஆல்பைன் சூழலில்” நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நியூசிலாந்தின் தென் தீவு வரை நீண்டு இருக்கும் தெற்கு ஆல்ப்ஸின் மீது உயர்ந்து நிற்கும் மவுண்ட் குக்கி மலையின் சிகரத்தை அடைவது பெரிய பிளவுகள் மற்றும் கணிக்க முடியாத வானிலை காரணமாக அனுபவம் வாய்ந்த மசையேற்ற வீரர்களுக்கு கூட கடினமான விடயமாகும். உயிரிழந்தவர்களில் ஒருவர் நன்கு அறியப்பட்ட, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மலையேற்ற வழிகாட்டி என நியூசிலாந்து ஊடக நிறுவனமான ஸ்டஃப் செய்தி வெளியிட்டுள்ளது. சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த மூன்று மலையேற்ற வீரர்கள் மலையில் காணாமல் போனார்கள். பல நாள் தேடலுக்குப் பின்னரே அவர்கள் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. எனினும் அவர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கு சீரற்ற வானிலையே காரணம் என அதிகாரிகள் கூறுகின்றனர். மவுண்ட் குக் மலைச் சிகரத்திற்கு செல்ல முயன்ற பலர் உயிரிழந்துள்ளனர். ஒரு மலையேற்றப் பருவம் குறைந்தது ஒரு உயிரிழப்பு கூட நிகழாமல் கடந்து செல்வதில்லை என நியூசிலாந்து ஆல்பைன் கிளப் க்ளைம்ப்என்இசட் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/231390
  6. 25 Nov, 2025 | 03:52 PM கடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக கல்முனைப் பிராந்தியத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு இப்பகுதியிலுள்ள அனைத்து முகத்துவாரங்களையும் திறந்து, வெள்ள நீரை கடலுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை கல்முனை மாநகர சபை துரிதமாக முன்னெடுத்துள்ளது. கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபியின் அறிவுறுத்தலின் பேரில் கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, பாண்டிருப்பு மற்றும் பெரியநீலாவணை பிரதேசங்களின் கடல் வாய் முகத்துவாரங்கள் தோண்டித் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் கல்முனையின நடராசா வாய்க்கால் உள்ளிட்ட முக்கிய வாய்க்கால்கள் மற்றும் மதகுகள் யாவும் துப்பரவு செய்யப்பட்டுள்ளதுடன் ஏலவே துப்பரவு செய்யப்பட்டு, மீண்டும் குப்பைகளினாலும் மண் திட்டுகளினாலும் நிரம்பியுள்ள வடிகான்கள் துரிதமாக சீர்செய்யப்பட்டுள்ளன. அதேவேளை கல்முனையையும் நாவிதன்வெளி, சவளக்கடை மற்றும் கொலனிப் பகுதிகளையும் இணைக்கும் கிட்டங்கி தாம்போதியில் வெள்ள நீர் பாய்வதன் காரணமாக பரவியிருந்த ஆற்று வாழைகள் அகற்றப்பட்டு, அப்பாதை சீர் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/231401
  7. அததெரண கருத்துப்படம். அது குறி சுடுவது இல்லை அண்ணை! நலமடித்தல்!! கதறக்கதற கிட்டி நலமா?! இல்லை மருத்துவர் மூலமாக நோகாமல் விறைப்பூசியடித்து எடுக்கப்போறாங்களா தெரியல!
  8. உலகளவில் 736 மில்லியன் பெண்கள் மீது பாலியல் வன்முறை ; பிறப்புறுப்பு சிதைப்பினால் 230 மில்லியனுக்கும் அதிக பெண்கள், சிறுமிகள் பாதிப்பு - பால்நிலை சமத்துவ நிபுணர் வே. வீரசிங்கம் அதிர்ச்சித் தகவல் 25 Nov, 2025 | 11:23 AM உலகளவில் சுமார் மூன்று பெண்களில் ஒருவர், அல்லது 736 மில்லியன் பெண்கள், பாலியல் வன்முறையை அனுபவித்து வருகின்றனர். உலகில் 230 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் மற்றும் சிறுமிகள் பெண் பிறப்புறுப்பு சிதைப்புக்கு உட்பட்டுள்ளனர் என்று சமூக செயற்பாட்டாளர் மற்றும் பால்நிலை சமத்துவ நிபுணர் வே. வீரசிங்கம் தெரிவித்துள்ளார். அத்துடன் அவர், 2023ஆம் ஆண்டின் தரவுகளின்படி, உலகளவில் சுமார் 51,100 பெண்கள் நெருங்கிய துணைவர்களாலோ அல்லது பிற குடும்ப உறுப்பினர்களாலோ வேண்டுமென்றே கொல்லப்பட்டுள்ளனர் என்றும் தகவல் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு நவம்பர் 2ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 10ஆம் திகதி வரையான பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்களில் அர்த்தபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் சமூக செயற்பாட்டாளர் மற்றும் பால்நிலை சமத்துவ நிபுணர் வே. வீரசிங்கம் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறை தொடர்பில் மேலும் கூறுகையில், பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளினால் பொதுவாக மனிதர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் பாதிப்படைகின்றனர். பால்நிலை அடிப்படையிலான வன்முறை (GBV) தனிநபர்கள், குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கும், பேரழிவு தரும் மற்றும் நீண்ட கால பாதகமான விளைவுகளைக் கொண்டுள்ளது. இந்த விளைவுகள் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இருக்கலாம். மேலும், கடுமையான சந்தர்ப்பங்களில் மரணத்துக்கும் வழிவகுக்கும். பொதுவாக சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட விதிமுறைகள், கட்டுப்பாடுகள், சட்ட திட்டங்கள், அதிகார கட்டமைப்பாட்டுக்கள், சமய சம்பிரதாய நம்பிக்கைகள் மற்றும் பாரபட்சங்கள் இவ்வாறானவை வன்முறைகளுக்கு அடிப்படை காரணங்களாக இருக்கின்றன. சமூகத்தில் பாதிப்புறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள பெண்கள், சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் அதிகளவில் பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். உலகளவில் பால்நிலை அடிப்படையிலான வன்முறை தொடர்பான சில முக்கிய தரவுகள் குறிப்பிடவேண்டும். உலகளவில் அண்ணளவாக மூன்று பெண்களில் ஒருவர், அல்லது உலகளவில் 736 மில்லியன் பேர் நெருங்கிய துணைவர், துணைவர் அல்லாத நபரால் அல்லது இருவராலும் உடல் ரீதியான அல்லது பாலியல் வன்முறையை அனுபவித்துள்ளனர். இந்த புள்ளிவிபரம் இரண்டு தசாப்தங்களாக பெரும்பாலும் மாறாமல் உள்ளது. பெண் கொலை : 2023ஆம் ஆண்டின் தரவுகளின்படி, உலகளவில் சுமார் 51,100 பெண்கள் நெருங்கிய துணைவர்களாலோ அல்லது பிற குடும்ப உறுப்பினர்களாலோ வேண்டுமென்றே கொல்லப்பட்டுள்ளனர். இது சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு 5க்கும் மேற்பட்ட பெண்கள் அல்லது சிறுமிகள் தங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரால் கொல்லப்படுவதற்கு சமமான தரவாகிறது. குழந்தை திருமணம்: ஒவ்வோர் ஆண்டும் 18 வயதுக்கு முன்பே 12 மில்லியன் பெண்கள் அல்லது நிமிடத்துக்கு சுமார் 23 பெண்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள் அல்லது திருமணம் செய்து கொடுக்கப்படுகிறார்கள். மேலும், இந்த பெண்கள் வீட்டு வன்முறைக்கு அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர். பெண் பிறப்புறுப்பு சிதைப்பு (FGM) : இன்று உயிருடன் இருக்கும் 230 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் மற்றும் சிறுமிகள் பெண் பிறப்புறுப்பு சிதைப்புக்கு உட்பட்டுள்ளனர். இது 31 நாடுகளில் அதிகமாக செய்யப்படுகிறது. வன்முறையை அனுபவிக்கும் பெண்களில் 40% க்கும் குறைவானவர்களே ஏதாவது சில வகையான உதவிகளை நாடுகிறார்கள். மிகக் குறைவானவர்களே காவல்துறை அல்லது சுகாதார சேவைகள் போன்ற முறையான நிறுவனங்களை அணுகுகிறார்கள். பெரும்பாலும் பயம் மற்றும் களங்கம் காரணமாக இவர்கள் இதனை யாரிடமும் கூறுவதில்லை. மோதல், மனிதாபிமான நெருக்கடிகள், காலநிலை மாற்றம் மற்றும் COVID-19 தொற்றுநோய் ஆகியவை பால்நிலை அடிப்படையிலான வன்முறையின் அபாயத்தையும் பரவலையும் அதிகப்படுத்தியுள்ளன. இந்த சூழ்நிலைகளில் பெண்கள் அதிக விகிதாசாரத்தில் பாதிக்கப்படுகின்றனர். பால்நிலை அடிப்படையிலான வன்முறை தனிநபர்களுக்கும் சமூகத்திற்கும் குறிப்பிடத்தக்க செலவுகளை ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் பால்நிலை அடிப்படையிலான வன்முறையின் ஆண்டு செலவு EUR 366 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. விசேட தேவையுடைய பெண்கள், பழங்குடி பெண்கள் மற்றும் மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பெண்கள் அதிகமாக இத்தகைய வன்முறைக்கு முகங்கொடுக்கின்றனர். 60%க்கும் மேற்பட்ட நாடுகளில் இன்னும் சம்மதத்தின் அடிப்படையில் பாலியல் பலாத்கார சட்டங்கள் இல்லை. மேலும், உலகின் பெண் சனத்தொகையில் பாதிக்கும் குறைவானவர்கள் சைபர் துன்புறுத்தலுக்கு எதிரான சட்டங்களால் பாதுகாக்கப்படுகிறார்கள். சமூகத்தின் எல்லா பிரிவினரும் இந்த பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிர்வினை ஆற்றவேண்டியது கட்டாயமாக உள்ளது. விசேடமாக ஆண்களும் சிறுவர்களும் தீங்கு விளைவிக்கும் ஆணாதிக்க விதிமுறைகள் மற்றும் அமைப்புகளுக்கு சவால்விடுவதன் மூலம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதிலும் முடிவுக்குக் கொண்டுவருவதிலும் சுறுசுறுப்பான மற்றும் பொறுப்புணர்வுள்ள பங்காளிகளாக மாற வேண்டும் என்று நான் எல்லா அன்னைகளுக்கும் சிறுவர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றேன். வன்முறை என்பது மனித உரிமைகளை மீறுவதாகும்: பால்நிலை அடிப்படையிலான வன்முறை (GBV) என்பது ஒரு பரவலான மனித உரிமைகள் பிரச்சினை என்றும் அது வாழ்க்கையின் இயற்கையான, இயல்பான அல்லது தவிர்க்க முடியாத பகுதி அல்ல என்றும்; அதை நிறுத்த முடியும், நிறுத்தவேண்டும் என்றும் நாம் நமது நண்பர்கள், சமூக வட்டங்களில், நமது முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் நாம் பிரச்சாரம் செய்வோம் என அழைப்பு விடுக்கின்றேன். ஆண்கள் ஒரு அடி முன்வைக்க வேண்டும் : "எல்லா ஆண்களும்" வன்முறையில் ஈடுபடுவதில்லை என்பதை ஒப்புக்கொண்டாலும், பால்நிலை அடிப்படையிலான வன்முறையை இயல்பாக்கப்பட்ட நிலையிலேயே உலகில் அனைத்து ஆண்களும் வாழ்கிறார்கள் என்றும், இதனால் இந்த வன்முறையை முடிவுக்கு கொண்டு வரும் தீர்வின் ஒரு பகுதியாக இருக்க நம் அனைத்து ஆண்களுக்கும் பொறுப்பு உள்ளது. நாம் நமக்கும் சமூகத்துக்கும் தீங்கு விளைவிக்கும் ஆண்மைத்துவ சிந்தனைகள், எண்ணக்கருக்கள், நம்பிக்கைகளுக்கு சவால் செய்வோம் : ஆண்மைத்துவம் என்பதே வன்முறை, ஆதிக்கம் செலுத்தும் மற்றும் கட்டுப்படுத்தும் வரையறைகளை கொண்டிருப்பதுதான் என்ற விடயங்களை விமர்சன ரீதியாக ஆராய்ந்து நிராகரித்து, அதற்கு பதிலாக கவனிப்பு, இரக்கம் மற்றும் ஒத்துழைப்பு போன்ற மதிப்புகளைத் தழுவ (உள்வாங்க)வேண்டியதன் அவசியம் நமது செய்தியின் மையக்கூறு ஆகும். பெண்ணிய இயக்கங்களை, சிந்தனைகளை ஆதரிப்போம் : ஆண்களும் சிறுவர்களும் பாலியல் அடிப்படையிலான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான போராட்டத்தை வழிநடத்தும் பெண்ணிய அமைப்புகள் மற்றும் பெண்ணிய இயக்கங்களின் பொறுப்புள்ள பங்காளியாக இருக்க நாம் நமது ஆண் நண்பர்கள் மற்றும் பங்காளர்களுடனான உரையாடலை ஊக்குவிப்போம். அனைத்து மட்டங்களிலும் செயற்படுவோம் : நாம் எம்முடன் தொடர்புபட்ட தனிநபர், சமூகம் மற்றும் அமைப்பு ரீதியான எல்லா மட்டங்களிலும் நடவடிக்கை எடுக்க முன்வருவோம். இதில் பாலியல் ரீதியிலான வன்முறைகளில் இருந்து தப்பிப் பிழைத்தவர்களுக்கு நீதியை உறுதி செய்யும் மற்றும் வன்முறையின் மூல காரணங்களை நிவர்த்தி செய்யும் வலுவான சட்டங்கள், கொள்கைகள் மற்றும் நிறுவனங்களை ஆதரித்து வாதாடலும் அடங்கும். பார்த்தும் பாராதிருக்கும், கேட்டும் கேளாதிருக்கும் மௌனத்தைக் கலைப்போம் : துஷ்பிரயோகத்திற்கு எதிராகப் பேசவும், துஷ்பிரயோகம் செய்பவர்களை நிராகரிக்கவும், புகாரளிக்கவும், வன்முறையைத் தவிர்க்கவோ அல்லது சாக்குப்போக்கு சொல்லவோ கூடாது என்று நாம் நமது ஆண் சகாக்கள் மற்றும் நண்பர்களை ஊக்குவிப்போம். இதனூடாக நாம் ஒரு அடி எடுத்து வைத்து பால்நிலை அடிப்படையிலான வன்முறையை முடிவுறுத்துவோம் என்று தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/231371
  9. தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை? பட மூலாதாரம், Getty Images 25 நவம்பர் 2025, 01:56 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வங்கக் கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக கோவை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தென்காசி, தேனி, நீலகிரி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. இன்று (25/11/25) அதிகாலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இத்தகவல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒன்றோடொன்று செயல்படும் மூன்று சுழற்சிகள் சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா நேற்று (நவம்பர் 24) செய்தியாளர்களை சந்தித்து வானிலை குறித்த தகவல்களை அளித்தார். அப்போது, மூன்று வெவ்வேறு சுழற்சிகள் ஒன்றோடொன்று இணைந்து தொடர்புகொண்டிருப்பதால் வெவ்வேறு விஷயங்கள் நடைபெறுகின்றன என்று அவர் குறிப்பிட்டார். அந்தமான் கடல் பகுதி: நவம்பர் 23 அன்று மலாக்கா நீரிணை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி 24ம் தேதி (நேற்று) நிலவரப்படி மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா நீரிணை பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெறக்கூடும். மேலும், அதே திசையில் நகர்ந்து அதற்கு அடுத்த 48 மணிநேரத்தில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும். வங்கக்கடல் பகுதி: நவம்பர் 23 அன்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (நவ. 25) குமரிக்கடல் மற்றும் இலங்கை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் வாய்ப்பு உண்டு. அதன்பிறகு அது வலுவடையும் வாய்ப்பும் உள்ளது. அரபிக்கடல் பகுதி: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நேற்றைய (நவம்பர் 24-ஆம் தேதி) நிலவரப்படி அதே பகுதிகளில் நிலவுகிறது. இதுகுறித்துப் பேசிய அமுதா, "இந்த மூன்று சுழற்சிகளும் ஒன்றோடொன்று இணைந்து தொடர்புகொண்டிருப்பதால் வெவ்வேறு விஷயங்கள் நடைபெறுகின்றன. இதனால் குமரிக்கடல் பகுதியில் நிலவும் சுழற்சியும் மலாக்கா, மலேசியாவில் நிலவும் சுழற்சியும் இணைந்து ஒன்றாக நகர்வதற்கும் வாய்ப்புண்டு. வரும் நாட்களில் தான் அதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்" என்றார். பட மூலாதாரம், Getty Images அடுத்த சில நாள்களில் எங்கெல்லாம் கனமழை பெய்யக்கூடும்? நவம்பர் 26: தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 27: தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 28: ஏற்கெனவே உள்ள சுழற்சிகளின் நகர்வை கண்காணித்து இந்த எச்சரிக்கை தரப்பட்டுள்ளது. எனவே, இது மாறலாம். ஏற்கெனவே உள்ள சுழற்சிகளின்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 29: மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது நவம்பர் 30: திருவள்ளூர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை "ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனே கரைக்குத் திரும்ப வேண்டும்" என்று கூறிய அமுதா, தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகள், கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகள், தென் வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் நவம்பர் 29-ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்" என்றும் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgl6403wz6ko
  10. 25 Nov, 2025 | 10:51 AM திருகோணமலையில் நபரொருவர் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவ சிப்பாய்கள் இருவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். ஹப்புத்தளை மற்றும் சிலாபம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 41 மற்றும் 44 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய்கள் இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர். 2010 ஆம் ஆண்டில் நபரொருவர் கடத்திச் செல்லப்பட்டு திருகோணமலை இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/231365
  11. 25 Nov, 2025 | 09:56 AM யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, மூளாய் பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரைமாய்த்துக்கொண்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (24) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வட்டுக்கோட்டை, மூளாய் பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த பாடசாலை மாணவி அதே பிரதேசத்தில் வசிக்கும் இளைஞனுடன் 2 வருடங்களாக காதல் உறவில் ஈடுபட்டிருந்துள்ள நிலையில், திடீரென ஏற்பட்ட காதல் முறிவு காரணமாக தவறான முடிவெடுத்து உயிரைமாய்த்துக்கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/231358
  12. சாதனை படைக்க விண்வெளி சென்ற சீனர்கள் - கிரிக்கெட் பந்து அளவு குப்பையால் அடுத்தடுத்த சிக்கல் பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் த. வி.வெங்கடேசுவரன் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவுக்குச் சொந்தமான தியான்கொங் விண்வெளி நிலையத்தில் உள்ள மூன்று விண்வெளி வீரர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவர்களை மீட்பதற்கான விண்கலம் இன்று (நவம்பர் 25) விண்ணில் ஏவப்பட உள்ளது. ஏப்ரல் 24, 2025-ஆம் தேதி, சீனாவின் சென்சோ-20 விண்கலத்தில், சென் தோங் தலைமையில், வாங் ஜீ மற்றும் சென் ஜோங்ருய் ஆகியோர் அடங்கிய மூவர் குழு, சீனாவின் தியான்கொங் விண்வெளி நிலையத்தை அடைந்தது. சுமார் 200 நாட்களுக்கு மேல் விண்வெளியில் தங்கி ஆய்வு செய்து சாதனை படைப்பது இவர்களின் நோக்கமாக இருந்தது. சீன தாய்கோனாட்டுகள் (சீனா தனது விண்வெளி வீரர்களை 'தாய்கோனாட்' என அழைக்கிறது) நீண்டகாலம் விண்வெளியில் தங்கிய சாதனையைப் படைப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், தனது மூன்று விண்வெளிப் பயணங்களில் மொத்தமாக 400 நாட்கள் விண்வெளியில் கழிக்கும் சாதனையை குழுத் தலைவர் சென் தோங் படைப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. இந்தச் சாதனைகளை நிறைவேற்றிய பின், நவம்பர் 5-ஆம் தேதி புகழுடன் வீடு திரும்புவதே இவர்கள் திட்டம். ஆனால், ஒரு சிறிய விண்வெளிக் குப்பை திடீர் என்று வந்து, தலைவிதியையே மாற்றி விட்டது. விண்வெளிக் குப்பை மோதலால், மூவரும் பூமி திரும்பப் பயணிக்க வேண்டியிருந்த சென்சோ-20 விண்கலம் பழுதடைந்தது. எனவே, அதில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அவர்கள் எப்படி பூமிக்குத் திரும்புவார்கள் என்பதே கேள்விக்குள்ளானது. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது கனடா சென்ற பிறகு பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் ஏன் 'காணாமல் போகிறார்கள்'? சாதனை படைக்க விண்வெளி சென்ற சீனர்கள் - கிரிக்கெட் பந்து அளவு குப்பையால் அடுத்தடுத்த சிக்கல் 'தமிழ்நாட்டு மருமகன்' தர்மேந்திரா: கிராமத்து இளைஞர் பாலிவுட்டில் கோலோச்சிய கதை சியா, ஆளி உள்ளிட்ட விதைகளை எப்படி சாப்பிட வேண்டும்? யாரெல்லாம் சாப்பிட கூடாது? End of அதிகம் படிக்கப்பட்டது பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சென்சோ-21 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டபோது விண்ணில் சிக்கிய குழு பூமி திரும்பும் பயணத்திற்காக விண்கலத்தைத் தயார்படுத்தும் பரிசோதனையின் போது, விண்கலத்தின் கண்ணாடி ஜன்னல்களில் விரிசல்கள் இருப்பதை இவர்கள் கண்டறிந்தனர். சுமார் கிரிக்கெட் பந்து அளவுக்கு, 10 சென்டிமீட்டர் விட்டம் உள்ள ஒரு விண்வெளிக் குப்பை, வேகமாகப் பாய்ந்து வந்து சென்சோ-20-ஐ மோதி சேதப்படுத்தியது எனக் கருதப்படுகிறது. விண்கலத்தின் கண்ணாடி ஜன்னல்களில் விரிசல் ஏற்படுத்தும் அளவுக்கு பலமான மோதல் ஏற்பட்டிருந்தால், அதன் தொடர்ச்சியாக விண்கலத்தின் வெப்பப் பாதுகாப்பு அமைப்பை சேதப்படுத்தியிருக்கலாம் என்ற அச்சமும் எழுந்தது. எனவே, அந்த விண்கலத்தில் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்புவது சாத்தியமற்றதாகிவிட்டது. கடந்த ஆண்டு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் ஆகியோர் தொழில்நுட்பக் கோளாறுகளால் பல மாதங்கள் சிக்கிக்கொண்ட சம்பவத்தைப் போன்றே, இப்போது சென்சோ-20 குழுவினரும் விண்ணில் சிக்கிக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். சீன விண்வெளி நிலையம் சுமார் 390 கிலோமீட்டர் தூரத்தில் பூமியைச் சுற்றி வரும் தியான்கொங் எனும் இந்த சீன விண்வெளி நிலையம், சர்வதேச விண்வெளி நிலையத்துடன் ஒப்பிடும்போது அதன் ஆறில் ஒரு பங்கு அளவே உள்ளது. அடுத்தடுத்த கட்டுமானத்தில் விரிவாக்கம் செய்ய சீனா உத்தேசித்துள்ளது. மூன்று பேர் 180 நாட்கள் வரை வசதியாக தங்கிச் செயல்படும்படி வடிவமைக்கப்பட்டாலும், பணிக்குழு மாறும் நாட்களில் ஆறு பேரையும் தற்காலிகமாக தங்க வைக்க முடியும். பொதுவாக, விண்வெளி நிலையத்தில் மூவர் தங்கி ஆய்வு செய்வார்கள். எந்த விண்கலத்தில் விண்வெளி நிலையத்தை அடைந்தார்களோ, அதே விண்கலம் தயார் நிலையில் இருக்கும். அவசரகால சூழ்நிலையில் பூமிக்குத் திரும்புவதற்கான மீட்பு ஊர்தியாகவும் அதே விண்கலம் செயல்பட தயாராக இருக்கும். தங்கி செயல்படும் குழுவின் பணி முடியும் தருவாயில், புதிய பணிக்குழுவினர் வேறொரு விண்கலத்தில் விண்வெளி நிலையத்தை வந்தடைவார்கள். புதிய குழுவிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, பழைய குழு தங்களைக் கொண்டு வந்த அதே விண்கலத்தில் பூமிக்குத் திரும்புவது வழக்கம். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளம் ஆனால், சென்சோ-20 பயன்பாட்டிற்கு உபயோகமற்றதாக ஆகிவிட்டதால், வழக்க நடைமுறையை கைக்கொள்வது சாத்தியமற்றதாக ஆகிவிட்டது. இந்தச் சிக்கலின் விளைவாக, தியான்கொங் விண்வெளி நிலையத்தில் மூன்று பேருக்குப் பதிலாக ஆறு பேர் தங்கும் நிலைமை ஏற்பட்டது. எனினும், விண்வெளி நிலையத்தின் தியான்ஹே மைய தொகுதி மற்றும் வென்டியன் ஆய்வகத் தொகுதி ஆகியவற்றில் தலா மூன்று பயணிகள் தூங்கும் வசதிகள் உள்ளன. எனவே, ஆறு பேரும் தங்கி உறங்குவதற்கு இடவசதி சிக்கல் எதுவுமில்லை. உணவு, தண்ணீர், உபகரணங்கள், ஏவுகல எரிபொருள் போன்றவற்றைச் சுமந்து, தியான்சோ எனும் ஆளில்லா ரோபோட் விண்வெளிக் கலம், சுமார் எட்டு மாதங்களுக்கு ஒருமுறை விண்வெளி நிலையத்தை அடையும். இதுபோல, கடந்த ஜூலையில், தியான்சோ-9 ரோபோட் விண்கலம் சரக்குகளை ஏற்றி வந்து பொருள்களை வழங்கியது. எனவே, விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வு செய்பவர்களுக்குத் தேவையான பொருள்களில் குறைவேதுமில்லை. தேவை ஏற்பட்டால், அடுத்த தியான்சோ விண்கலம் மூலம் பொருள்களை பூமியிலிருந்து அனுப்பி வைக்க முடியும். விண்வெளி 'இசை நாற்காலிகள்' விளையாட்டு முக்கிய சிக்கல், விண்வெளி நிலையத்தின் மறுசுழற்சி அமைப்பில் ஏற்படும் தாக்கம்தான். மூன்று பேர் கூடுதலாகக் கூடுதல் நாட்கள் தங்குவதால், நீர், ஆக்சிஜன், உணவு போன்றவற்றின் நுகர்வு வீதம் அதிகரிக்கும். வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேறும் நீரை மறுசுழற்சி செய்து சுத்தம் செய்துதான் பயன்படுத்துவார்கள். அதேபோல, சுவாசித்த காற்றிலிருந்து கார்பன் டை ஆக்சைடை நீக்கி, ஆக்சிஜனைப் பிரித்து மீண்டும் மறுசுழற்சி செய்வார்கள். இதுபோன்ற மறுசுழற்சி அமைப்புகள் கொண்டுதான் விண்வெளி நிலையம் மனிதர்கள் வாழத்தகுந்த நிலையைப் பேணுகிறது. கூடுதல் நபர்கள் தங்கி வாழும்போது, இந்த மறுசுழற்சி அமைப்புகள் மேலும் தீவிரமாகச் செயல்பட வேண்டியிருக்கும். இதுதான் முக்கிய சாவல். எனவேதான், சீன விண்வெளி நிறுவனம் எப்போதும் ஒரு லாங் மார்ச்-2எஃப் ஏவுகலத்தையும், ஒரு மாற்று சென்சோ விண்கலத்தையும் தயார் நிலையில் வைத்திருக்கிறது. தேவை ஏற்பட்டால், எட்டரை நாட்களுக்குள் விரைவாக ஏவி விண்வெளி நிலையத்தை அடைந்து விட முடியும். சில நாட்கள், பாதுகாப்பாகத் தங்கியிருக்க விண்வெளி நிலையத்தில் அவசரகால ஏற்பாடுகள் உண்டு. அவசரநிலை ஏற்பட்டால், மாற்று விண்கலத்தை ஏவி விண்வெளி நிலையத்தில் உள்ள பயணிகளைக் காப்பாற்றி பூமிக்குக் கொண்டு வர முடியும். ரயில் பெட்டிகளை முன்னும் பின்னும் மற்ற பெட்டிகளில் இணைக்க முடியும். அதுபோல, சீன விண்வெளி நிலையத்தில், ஒரே சமயத்தில் அதிகபட்சமாக மூன்று விண்கலங்களை மட்டுமே இணைத்து வைக்க முடியும். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சென் தோங் தலைமையிலான சென்சோ-20 குழு நவம்பர் 14-ஆம் தேதி பாதுகாப்பாகப் பூமிக்குத் திரும்பியது. அண்மையில் ஏற்பட்ட இந்த சம்பவத்தின் போது, ஏற்கனவே சென்சோ-20, சென்சோ-21 (அடுத்த பணிக்குழு) என்ற இரண்டு குழுக்களின் விண்கலங்களும், சரக்குகளைக் கொண்டு சென்ற தியான்சோ-9 விண்கலமும் இணைக்கப்பட்டிருந்தன. எனவே, புதிய மீட்புக் கலத்தை இணைக்க இடமில்லாமல் போனது. எனவேதான், 'இசை நாற்காலிகள்' விளையாட்டைப் போன்ற ஒரு தீர்வைச் சீன விண்வெளிப் பொறியாளர்கள் வகுத்தனர். சமீபத்தில் விண்வெளி நிலையத்தை அடைந்த சென்சோ-21-ஐ பயன்படுத்தி, சென்சோ-20 குழுவைப் பூமிக்குக் கொண்டு வருவது. இதன் மூலம் ஒரு விண்கல இணைப்பு மையம் (Docking Port) காலியாகும். மேலும், விண்வெளி நிலையத்தில் மூவர் மட்டுமே இருப்பார்கள். அடுத்ததாக, ஆளில்லாத நிலையில் சென்சோ-22 விண்கலத்தை ஏவுவது. இந்தச் சென்சோ-22 விண்வெளி நிலையத்தில் மீதமுள்ள மூவருக்கு மீட்பு விண்கலமாகச் செயல்படும். இதுவே திட்டம். இதன் விளைவாக, சென் தோங் தலைமையிலான சென்சோ-20 குழு, சென்சோ-21 குழு வந்த விண்கலத்தைப் பயன்படுத்தி, நவம்பர் 14-ஆம் தேதி பாதுகாப்பாகப் பூமிக்குத் திரும்பியது. சென்சோ-21 இல் சென்ற விண்வெளி வீரர்களான குழுத் தலைவர் சாங் லூ தலைமையில், சாங் ஹோங்க்ஜாங் மற்றும் சீனாவின் இளைய தாய்கோனாட்டான வூ ஃபெய் ஆகிய மூவர் குழு தற்போது தியான்கொங்க் விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது, இவர்கள் பூமி திரும்ப எந்த விண்கலமும் அவர்களுடன் இணைக்கப்பட்ட நிலையில் இல்லை. மீட்புக் கலத்தை ஏவுதல் நாளின் எந்த நேரத்திலும் சென்னையிலிருந்து திருச்சிக்குப் பேருந்து இயக்க முடியும். ஆனால், நினைத்த சமயத்தில் எப்போது வேண்டுமென்றாலும் விண்வெளி நிலையத்தை நோக்கி விண்கலத்தை இயக்க முடியாது. பறந்து செல்லும் பறவையைத் தாக்க, திசையிலும் நேரத்திலும் முன்னே குறி வைப்பது போல, தன்னைத்தானே சுற்றிக்கொண்டிருக்கும் பூமியில் இருந்து விண்கலத்தை ஏவி, பூமியைச் சுற்றி வரும் விண்வெளி நிலையத்தை அடைவது சிக்கலானது. பூமியின் ஏவுதளத்துக்குச் சரியான நிலையில் விண்வெளி நிலையம் வரும் நேரத்தில் ஏவினால்தான், விண்கலத்தை விண்வெளி நிலையத்தைச் சந்திக்கச் செய்ய முடியும். அடுத்த ஏவல் உகந்த காலம் நவம்பர் 25-ஆம் தேதி கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டது. அதாவது, பத்து நாட்கள் மட்டுமே எந்த மீட்புக் கலமும் இல்லாமல் மூவர் குழு விண்வெளியில் ஆபத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். மேலும், ஆளில்லாத நிலையில் ஏவப்படுவதால், கூடுதல் உணவு, எரிபொருள் போன்ற சரக்குகளை அனுப்ப முடியும். அமெரிக்காவில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் ஆகியோரை மீட்பது ஒன்பது மாதங்கள் எடுத்துக்கொண்டதை ஒப்பிடுகையில், சீன நிறுவனம் வெறும் மூன்று வாரங்களில் முழு செயல்பாட்டையும் நிறைவேற்ற உள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, விண்வெளி வீரர்கள் குழுத் தலைவர் சென் தோங் ஆபத்தை உணர்த்துகிறது வெற்றிகரமான மீட்பு முயற்சி, சீன விண்வெளி பயணிகளுக்கு பெரும் ஆறுதலாக இருந்தாலும், அது ஒரு பெரும் எச்சரிக்கை மணி. தாழ் விண்வெளிப் பாதையில் (Low Earth Orbit) தினமும் அதிகரித்து வரும் விண்வெளிக் குப்பைகளின் ஆபத்தை இது உணர்த்துகிறது. 1957-ல் சோவியத் ஒன்றியம் ஸ்புட்னிக்கை (Sputnik) ஏவியதிலிருந்து, உலகின் பல நாடுகளும் நிறுவனங்களும் தங்களின் விண்வெளிப் பயணங்களின் போது, செயலிழந்த செயற்கைக்கோள்கள், ஏவுகலப் பகுதிகள், குப்பைகள் போன்றவற்றை விண்வெளியில் விட்டுவிட்டு வந்துள்ளன. இதன் விளைவாக, 10 சென்டிமீட்டருக்கு அதிகமான 34,000-க்கும் மேற்பட்ட பொருள்கள், பூமியை மணிக்கு 28,000 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றி வருகின்றன என ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. மிளகு அளவுள்ள நுண்குப்பைகளின் எண்ணிக்கை பல லட்சம் எனவும் கூறப்படுகிறது. துப்பாக்கி தோட்டாவின் வேகத்தை விட பல மடங்கு கூடுதலான வேகத்தில் பயணிக்கும் இந்த நுண்பொருள்களும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். பட மூலாதாரம், Getty Images விண்குப்பை மோதும் அபாயம் ஏற்பட்டதால், விண்வெளி வீரர்கள் தங்களின் திரும்பும் விண்கலங்களில் புகுந்து, அவசரமாகப் பிரிந்து செல்லத் தயாராக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்ட சம்பவங்கள் ஆண்டுதோறும் நடந்து வருகின்றன. 1967-இல் ஏற்படுத்தப்பட்ட விண்வெளி ஒப்பந்தம் (Outer Space Treaty) மற்றும் 1972-ல் வெளிவந்த பொறுப்பு ஒப்பந்தம் (Liability Convention) போன்ற ஐ.நா. சட்டங்கள், விண்வெளி முயற்சிகள் குறித்த தனித்தனி நாடுகளின் பொறுப்புகளை வரையறுக்கின்றன. ஆனால், விண்வெளிக் குப்பைக்கென தனியான சர்வதேச சட்டம் இல்லை. 'யார் குப்பை செய்கிறார்களோ, அவர்களே அதற்குப் பொறுப்பேற்பது தான் சரி' அல்லவா? எனினும், விண்வெளிக் குப்பை குறித்து யார் பொறுப்பு என்பது குறித்த சர்வதேசச் சட்டங்கள் தெளிவாக இல்லை. விண்வெளி வணிகம் பெருகி வரும் நிலையில், விண்வெளிக் குப்பை குறித்த வலுவான சர்வதேச சட்ட ஏற்பாட்டை உருவாக்குவது, இக்காலத்தின் மிக முக்கியத் தேவையாக உருவெடுத்துள்ளது. (கட்டுரையாளர் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3w7pgnze5qo
  13. Published By: Digital Desk 3 24 Nov, 2025 | 03:41 PM ( இணையத்தள செய்திப் பிரிவு ) இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் சர்வதேச இணையவழி மோசடி கும்பலின் வலையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரும் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தபால் திணைக்களத்தை சேர்த்தவர்களை போன்று நடித்து பொதி ஒன்றுக்கு இணையம் வழியாக பணத்தை செலுத்துமாறு கோரி நீதிபதியின் வங்கி கணக்கிற்குள் ஊடுருவி சுமார் 400,000 ரூபாவை மோசடி செய்துள்ளனர். அதாவது, இந்த இணையவழி மோசடி கும்பல் தபால் திணைக்களத்திற்கு ஒரு பொதி வந்துள்ளதாகவும், அதனை பெற்றுக் கொள்ள சிறிய கட்டணத்தை (பொதுவாக ரூ. 100 க்கும் குறைவானது) செலுத்துமாறு இணைய கட்டண இணைப்பு ஒன்றின் மூலம் குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். அதனை நம்பி மக்கள் தங்கள் வங்கி விவரங்களை பதிவிட்டதும், மோசடி கும்பல் கணக்கிற்கு அங்கீகரிக்கப்படாத அணுகலைப் பெற்று, திருடப்பட்ட பணத்தை வெளிநாட்டு நாணயமாக மாற்றுகின்றனர். இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி ஒருவர் மருதானை தபால் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். இந்த மோசடிக்குப் பின்னால் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருவதாகவும், ஆனால் அவர்களின் அடையாளம் தெரியவில்லை எனவும் விழிப்புடன் இருக்குமாறும் தபால் மா அதிபர் ருவன் சத்குமார எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் தபால் திணைக்களத்தின் தொழில்நுட்பப் பிரிவின் துணை பணிப்பாளர், இந்த மோசடி வேகமாக விரிவடைந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றுவதற்கு பெரும்பாலும் நன்கு அறியப்பட்ட உள்ளூர் நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்துகின்றனர். அமெரிக்க டொலர்கள், அவுஸ்திரேலிய டொலர்கள், சிங்கப்பூர் டொலர்கள், சுவிஸ் பிராங்குகள் மற்றும் பிரிட்டிஷ் பவுண்டுகள் போன்ற அதிக மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்களில் இழப்புகள் ஏற்பட்டதாக பல முறைப்பாடுகள் வந்துள்ளன. மோசடி கும்பல் உத்தியோகபூர்வ தபால் திணைக்களத்தின் பக்கத்தைப் போன்ற போலி வலைத்தளங்களையும் உருவாக்கி, அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ஓடிபி (OTP) குறியீடுகளைப் பயன்படுத்துகின்றனர். மத்திய வங்கியின் புலனாய்வுப் பிரிவு, இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றத் தடுப்பு பிரிவு ஆகிய அனைத்திற்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கிரெடிட் அல்லது டெபிட் வங்கி அட்டை மூலம் எந்தவொரு ஒன்லைன் கொடுப்பனவுகளையும் தபால் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படவில்லை எனவும், தபால் சேவைகளுடன் இணைக்கப்பட்டதாகக் கூறி இதுபோன்ற எந்தவொரு பரிவர்த்தனையையும் செய்ய வேண்டாம். இந்த மோசடி ஒரு தனி நபரால் நடத்தப்படுகிறதா அல்லது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சர்வதேச குழுவால் நடத்தப்படுகிறதா என்பதை அதிகாரிகளால் இன்னும் தீர்மானிக்க முடியவில்லை என மீண்டும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/231291
  14. தென் ஆபிரிக்காவிடம் சொந்த மண்ணில் பரிதவிக்கிறது இந்தியா Published By: Vishnu 24 Nov, 2025 | 06:56 PM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவினால் முதலாவது டெஸ்ட் போட்டியில் துவம்சம் செய்யப்பட்ட இந்தியா இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் பரிதாப நிலையில் இருக்கிறது. கடந்த சனிக்கிழமை ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் தென் ஆபிரிக்கா அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 26 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதற்கு அமைய போட்டியில் மேலும் இரண்டு நாட்கள் மீதம் இருக்க தென் ஆபிரிக்கா 10 விக்கெட்களையும் வைத்துக்கொண்டு 314 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கிறது. குவாஹாட்டி பரஸ்பரா கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இப் போட்டியில் மார்க்கோ ஜென்சன் சகலதுறைகளிலும் பிரகாசித்து தென் ஆபிரிக்காவை பலமான நிலையில் இட்டுள்ளார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த தென் ஆபிரிக்கா முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 489 ஓட்டங்களைக் குவித்தது. தென் ஆபிரிக்க அணியில் ஒருவரைத் தவிர ஏனைய 10 வீரர்களும் 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். அவர்களில் இந்திய வம்சாவழியான சேனுரன் முத்துசாமி 109 ஓட்டங்களையும் 9ஆம் இலக்க வீரர் மார்க்கோ ஜென்சென் 93 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்கள் இருவரும் 8ஆவது விக்கெட்டில் 97 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 115 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினர். பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 201 ஓட்டங்களுக்கு சுருண்டது. இந்திய துடுப்பாட்டத்தில் மூவர் மாத்திரமே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். மார்ககோ ஜென்சன் 5 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 19.5 ஓவர்களில் 48 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றினார். எண்ணிக்கை சுருக்கம் தென் ஆபிரிக்கா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 489 (செனுரன் முத்துசாமி 109, மார்க்கோ ஜென்சன் 6 பவுண்டறிகள், 7 சிக்ஸ்கள் உட்பட 93, ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 49, கய்ல் வெரின் 45, டெம்பா பவுமா 41, ஏய்டன் மார்க்ராம் 38, ரெயால் ரிக்ல்டன் 35, குல்தீப் 115 - 4 விக்., ஜஸ்ப்ரிட் பும்ரா 75 - 2 விக்., ரவிந்த்ர ஜடேஜா 94 - 2 விக்., மொஹம்மத் சிராஜ் 106 - 2 விக்.) இந்தியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 201 (யஷஸ்வி ஜய்ஸ்வால் 58, வொஷிங்டன் சுந்தர் 48, கே. எல். ராகுல் 22, மார்க்கோ ஜென்சன் 48 - 6 விக், சைமன் ஹாமர் 64 - 3 விக்.) தென் ஆபிரிக்கா 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 2ஆவது இன்: 26 - 0 https://www.virakesari.lk/article/231327
  15. பங்களாதேஷை சுப்பர் ஓவரில் வீழ்த்தி ஆசிய கிண்ண உதயத் தாரகைகள் சம்பியன் பட்டத்தை பாகிஸ்தான் சூடியது Published By: Vishnu 24 Nov, 2025 | 06:09 PM (நெவில் அன்தனி) கத்தார் தேசத்தின் தோஹாவில் அமைந்துள்ள வெஸ்ட் எண்ட் பார்க் சர்வதேச விளையாட்டரங்கில் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆசிய கிண்ண உதய தாரகைகைள் (Rising Stars) இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் ஏ அணியை சுப்பர் ஓவரில் வெற்றி கொண்ட பாகிஸ்தான் ஷஹீன்ஸ் அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. இப் போட்டியில் இரண்டு அணிகளும் ஒரே மொத்த எண்ணிக்கையைப் பெற்றதால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட சுப்பர் ஓவரில் பங்களாதேஷ் 3 பந்துகளில் 2 விக்கெட்களை இழந்து 6 ஓட்டங்களைப் பெற்றது. சுப்பர் ஓவரில் 2 விக்கெட்களையும் போட்டியின்போது 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றிய அஹமத் தானியல் ஆட்டநாயகனானார். பதிலளித்து பாகிஸ்தான் ஷஹீன்ஸ் அணி 4 பந்துகளில் விக்கெட் இழப்பின்றி 7 ஓட்டங்களைப் பெற்று சம்பியன் பட்டத்தை தனதாக்கிக்கொண்டது. இந்தியா ஏ அணியுடனான அரை இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் ஏ அணி சுப்பர் ஓவரில் வெற்றிபெற்றிருந்தது. இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் ஷஹீன்ஸ் அணி 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 125 ஓட்டங்களைப் பெற்றது. இதில் சாத் மசூத் 38 ஓட்டங்களையும் அரபாத் மின்ஹாஸ் 25 ஓட்டங்களையும் மாஸ் சதாகத் 23 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரிப்பொன் மொண்டல் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரக்கிபுல் ஹசன் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் ஏ அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 125 ஓட்டங்களைப் பெற்றதால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது. துடுப்பாட்டத்தில் ஹபிபுர் ரஹ்மான் சொஹான் 26 ஓட்டங்களையும் ரக்கிபுல் ஹசன் 24 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சுபியான் முக்கீம் 11 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அராபத் மின்ஹாஸ் 5 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அஹமத் தானியல் 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/231321
  16. Stumps 2nd Test, Guwahati, November 22 - 26, 2025, South Africa tour of India South Africa (8 ov) 489 & 26/0 India 201 Day 3 - South Africa lead by 314 runs. Current RR: 3.25
  17. தேசிய ரீதியிலான ஒற்றுமையை ஏற்படுத்த விளையாட்டு முக்கியமானது - பிமல் ரத்நாயக்க 24 Nov, 2025 | 10:51 AM கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் இந்த வாரத்தில் ஐக்கியத்தை ஏற்படுத்த உள்ளக விளையாட்டரங்கு போன்ற விடயங்கள் அவசியம் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பழைய பூங்கா வளாகத்தில் உள்ளக விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல் ஞாயிற்றுக்கிழமை (23) நாட்டப்பட்ட பின்னர் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு விளையாட்டு துறையை விருத்தி செய்வது அவசியம். விளையாட்டு துறையில் ஈடுபாடு கொண்டவர்கள் போதைப்பொருளில் நாட்டம் கொள்வது மிக குறைவு என்பது ஆய்வுகளில் இனங்காணப்பட்ட விடயம். யாழ்ப்பாணத்தில் உள்ளக விளையாட்டுக்கான மைதான வசதிகள் பெரியளவில் இல்லை. மழை காலத்தில் அது பெரிய சிரமத்தை ஏற்படுத்துவதாக விளையாட்டு வீரர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவித்தனர். தேசிய ரீதியிலான ஒற்றுமையை ஏற்படுத்த விளையாட்டு முக்கியமானது. யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற வீரர் வியாஸ்காந் இலங்கை தேசிய அணியில் விளையாடுகிறார். இதுவொரு நல்ல தருணம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உள்ள உள்ளக விளையாட்டு மைதானத்தில் ஒரு நாள் பயிற்சி பெற ஒரு இலட்சம் ரூபாய் கட்ட வேண்டும். போதிய வசதிகள், உதவிகள் விளையாட்டு வீரர்களுக்கு கிடைப்பதில்லை. இதற்கு முடிவு கட்ட பெருமளவு விளையாட்டுகளை விளையாடக் கூடிய வசதி கொண்ட உள்ளக விளையாட்டு மைதானத்திற்கு விளையாட்டு துறை அமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டது. 2026 ஓகஸ்ட் 31, மழை காலம் ஆரம்பிக்க முன் உள்ளக விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். இங்கு நடைபெறும் முதல் போட்டிக்கு நான் வருவேன் - என்றார். https://www.virakesari.lk/article/231266
  18. Published By: Digital Desk 1 24 Nov, 2025 | 02:25 PM இந்தியா, தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை (24) இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 28 பேர் காயமடைந்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மதுரையிலிருந்து செங்கோட்டைக்குச் சென்ற தனியார் பஸ் ஒன்றும், தென்காசியிலிருந்து கோவில்பட்டிக்குச் சென்ற மற்றொரு பஸ்ஸூம் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் இரண்டு பஸ்களும் முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் காயமடைந்த 28 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/231279
  19. நைஜீரியாவில் பயங்கரவாத கும்பலின் பிடியில் சிக்கியுள்ள மாணவர்களை விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ வேண்டுகோள் 24 Nov, 2025 | 01:56 PM நைஜீரியாவில் பயங்கரவாத கும்பலால் கடத்திச் செல்லப்பட்ட 300க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களை விடுவிக்குமாறு புனித பாப்பரசர் லியோ நேற்று (23) கோரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் பள்ளி மாணவர்களை இலக்குவைத்து, ஆயுததாரிகள் கடத்திச் செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. அந்நாட்டின் நைஜர் மாகாணத்தில், 300க்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் கத்தோலிக்க கிறிஸ்தவ பாடசாலையொன்றினுள் துப்பாக்கிகளுடன் பயங்கரவாத கும்பலொன்று நுழைந்துள்ளது. அந்த கும்பல் துப்பாக்கிமுனையில் 100க்கு மேற்பட்டோரை கடத்திச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், பின்னர், தொடர்ந்த விசாரணையில் 303 சிறுவர்கள் மற்றும் 12 ஆசிரியர்கள் என 315 பேர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், வத்திக்கானில் உள்ள புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடந்த திருப்பலி ஆராதனையின் நிறைவுவேளையில், புனித பாப்பரசர் லியோ, ஆயுததாரிகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் பிள்ளைகளை விடுவிக்குமாறு சபை முன்னிலையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். “கடத்தப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள துயரம் குறித்து நான் மிகுந்த வேதனையடைகிறேன். பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று நான் மனதார வேண்டுகோள் விடுக்கிறேன். மேலும் அவர்களை உடனடியாக மீட்பதற்கு அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை விரைவில் எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை 18ஆம் திகதி எர்கு நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த 40 பேரை இந்த பயங்கரவாத கும்பல் துப்பாக்கிமுனையில் கடத்திச் சென்றதாகவும் அவர்களில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் பின்னர், எஞ்சிய 38 பேரும் விடுவிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) வடகிழக்கு நைஜீரியாவில் பயங்கரவாத கும்பலுடன் ஏற்பட்ட மோதலில் 5 பாதுகாப்பு படைவீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், தற்போது கடத்தப்பட்டிருக்கும் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை உயிருடன் மீட்க பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதனையடுத்து, கடத்தப்பட்டவர்களில் சுமார் 50 மாணவர்கள் துப்பாக்கிதாரிகளிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் அந்நாட்டு கிறிஸ்தவ சங்கம் நேற்று (23) தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (21) மற்றும் சனிக்கிழமை (22) ஆகிய இரு தினங்களிலும் 10 - 18 வயதுக்குட்பட்ட மாணவர்கள் ஆயுததாரிகளின் பிடியிலிருந்து தனித்தனியாக தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்கள் தமது பெற்றோர்களை சென்றடைந்துள்ளதாகவும் நைஜீரிய கிறிஸ்தவ சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் வெளியாகியுள்ள நிலையில், தற்போது இன்னும் 253 பாடசாலை மாணவர்கள் மற்றும் 12 ஆசிரியர்கள் துப்பாக்கிதாரிகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக குறித்த பாடசாலையின் நிர்வாகம் அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/231278
  20. 24 Nov, 2025 | 02:39 PM லெபனான் தலைநகர் பெய்ரூட் புறநகர்ப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் ஒரு முக்கிய இராணுவ தளபதி ஹெய்தம் அலி தபதாபாய் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பெய்ரூட்டின் தெற்கு புறநகரான ஹாரெட் ஹ்ரெய்க் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த ஐந்து பேரில் ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுதப் பிரிவின் தலைமை அதிகாரியாக செயற்பட்ட ஹெய்தம் அலி தபதாபாயும் ஒருவராவார். மேலும் குடியிருப்பு கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தாக்குதலில் 28 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது 2024 நவம்பர் மாதம் இடைநிறுத்த ஒப்பந்தத்திற்குப் பின்னர் இஸ்ரேல் கொன்ற மிகப்பெரிய ஹிஸ்புல்லா தளபதி எனக் குறிப்பிடப்படுகிறது. தெற்கு லெபனானிலும், பாலஸ்தீன அகதி முகாம்களிலும் இஸ்ரேல் தினசரி தாக்குதல்கள் நடத்தி வருகிறது. https://www.virakesari.lk/article/231262
  21. ரி20 உலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு கடினமான குழு, இந்தியாவுக்கு இலகுவான குழு; ஒரே குழுவில் மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் Published By: Digital Desk 3 24 Nov, 2025 | 04:44 PM (நெவில் அன்தனி) இலங்கையிலும் இந்தியாவிலும் கூட்டாக நடத்தப்படவுள்ள 10ஆவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இணை வரவேற்பு நாடுகளான இலங்கை கடினமான குழுவிலும் இந்தியா இலகுவான குழுவிலும் இடம்பெறுவதனை உத்தியோகப்பற்ற தகவல்கள் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது. அதேவேளை, பரம வைரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் ஒரே குழுவில் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும். உலகம் முழுவதும் கிரிக்கெட்டை வியாபிக்கச் செய்யும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் குறிக்கோளுக்கு அமைய 9ஆவது ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் பங்குபற்றும் அணிகளின் எண்ணிக்கை 20ஆக அதிகரிக்கப்பட்டிருந்தது. 2022இல் ரி20 உலகக் கிண்ணப் போட்டி நடத்தப்பட்ட முறைப்படியே இந்த வருட உலகக் கிண்ணப் போட்டி நடத்தப்படும். இந்த 20 அணிகளும் நான்கு குழுக்களாக வகுக்கப்பட்டு முதல் சுற்று லீக் போட்டிகள் நடத்தப்படும். அணிகளுக்கான சர்வதேச கிரிக்கெட் பேரவை தரவரிசையில் 8ஆம் இடத்தில் உள்ள இணை வரவேற்பு நாடும் முன்னாள் சம்பியனுமான இலங்கை, ஐசிசியில் பூரண அந்தஸ்துபெற்ற அவுஸ்திரேலியா (2), ஸிம்பாப்வே (11), அயர்லாந்து (12) ஆகிய அணிகளுடன் சற்று கடினமான குழுவில் இடம்பெறுகின்றது. இந்தக் குழுவில் ஓமான் (20) அணியும் இடம்பெறுகின்றது. பிரதான வரவேற்பு நாடும் நடப்பு ரி20 உலக சம்பியனுமான இந்தியாவுடன் பூரண அந்தஸ்துபெற்ற பாகிஸ்தான் (7) ஒரே குழுவில் இடம்பெறுகின்றது. இந்த இரண்டு அணிகளுடன் நெதர்லாந்து (13), நமிபியா (15), ஐக்கிய அமெரிக்கா (18) ஆகிய அணிகளும் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு குழுவிலிருந்தும் இரண்டு அணிகள் சுப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும் என்பதால் இந்தியாவும் பாகிஸ்தானும் எவ்வித சிரமும் இன்றி சுப்பர் 8 சுற்றில் கால்பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு குழுவில் தலா இரண்டு தடவைகள் சம்பியனான இங்கிலாந்து (3), மேற்கிந்தியத் தீவுகள் (6) ஆகியவற்றுடன் பங்களாதேஷ் (9), நேபாளம் (17), இத்தாலி (28) ஆகிய அணிகளும் இடம்பெறுகின்றன. ஐக்கிய அமெரிக்காவில் 2024இல் நடைபெற்ற மிகவும் பரபரப்பான ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வி அடைந்து உப சம்பியனான தென் ஆபிரிக்காவுடன் நியூஸிலாந்து (4), ஆப்கானிஸ்தான் (10), ஐக்கிய அரபு இராச்சியம் (16), கனடா (18) ஆகிய அணிகள் இடம்பெறுகின்றன. ஐசிசிக்கும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் கிரிக்கெட் சபைகளுக்கும் இடையில் ஏற்கனவே காணப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான லீக் போட்டி கொழும்பில் நடைபெறும். கிரிக்பஸ் இணையத்தளத்திற்கு அமைய மும்பை, கொல்கத்தா, சென்னை, டெல்லி, அஹமதாபாத் ஆகிய இந்திய மைதானங்களிலும் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கு, எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கு, கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கு ஆகிய இலங்கை மைதானங்களிலும் உலகக் கிண்ணப் போட்டிகள் நடத்தப்படும். ஒருவேளை பாகிஸ்தான் இறுதிவரை முன்னேறினால் பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட அரை இறுதியும் இறுதி ஆட்டமும் கொழும்பில் நடைபெறும். பாகிஸ்தான் இறுதிச் சுற்றுக்கு முன்னேறத் தவறினால் அரை இறுதிகள் மும்பையிலும் கொல்கத்தாவிலும் இறுதிப் போட்டி அஹமதாபாத்திலும் நடைபெறும். இதில் மாற்றங்கள் ஏற்படாது என நம்பப்படுகிறது. ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான உத்தியோகபூர்வ போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் பேரவை நாளை 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/231307
  22. கனேடிய உயர்ஸ்தானிகரை சந்தித்த இலங்கை வௌிவிவகார அமைச்சர் Nov 24, 2025 - 04:51 PM இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் கத்ரீன் மார்ட்டினை இன்று (24) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது, இலங்கையில் பிரிவினைவாத கொள்கைகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்களை அங்கீகரித்தல் மற்றும் இலங்கையில் உள்ள இன சமூகங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்த முற்படும் செயற்பாடுகள் ஆகியவற்றைத் தடுப்பதற்கான அவசியத்தை கனடிய அரசாங்கத்திற்கு எடுத்துரைக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் வலியுறுத்தியுள்ளார். கனடாவில் உள்ள சில உள்ளூர் குழுக்களின் இத்தகைய செயற்பாடுகள், தேசிய ஒற்றுமையை உறுதிப்படுத்துவதற்காக எமது அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு முரணாக அமைந்துள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். இதற்குப் பதிலளித்த கனேடிய உயர்ஸ்தானிகர், கனடாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்ந்தும் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பாகவே இருப்பதாக தெரிவித்தார். அந்த அமைப்புடனோ அல்லது பிரிவினைவாத கொள்கைகளுடனோ தொடர்புடைய சின்னங்களை கனேடிய கூட்டாட்சி அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், இலங்கையின் இறையாண்மைக்கும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கும் கனடா தொடர்ந்தும் மதிப்பளித்து அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://adaderanatamil.lk/news/cmid23hsu01yao29nv7ewnbc5
  23. பட மூலாதாரம், Getty Images 24 நவம்பர் 2025, 01:51 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் அடுத்த 48 மணிநேரத்தில் தெற்கு வங்கக்கடல் பகுதியில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா இன்று (நவ. 24) செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அவர் கூறிய தகவல்கள்: அந்தமான் கடல் பகுதி நவ.23 அன்று மலாக்கா நீரிணை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று, 24ம் தேதி மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா நீரிணை பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெறக்கூடும். மேலும், அதே திசையில் நகர்ந்து அதற்கு அடுத்த 48 மணிநேரத்தில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும். வங்கக்கடல் பகுதிகள் நவ.23 அன்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (நவ. 25) குமரிக்கடல் மற்றும் இலங்கை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் வாய்ப்பு உண்டு. அதன்பிறகு அது வலுவடையும் வாய்ப்பும் உள்ளது. அரபிக்கடல் பகுதிகள் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்றும் அதே பகுதிகளில் நிலவுகிறது. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது சியா, ஆளி உள்ளிட்ட விதைகளை எப்படி சாப்பிட வேண்டும்? யாரெல்லாம் சாப்பிட கூடாது? கனடா சென்ற பிறகு பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் ஏன் 'காணாமல் போகிறார்கள்'? 'டிச. 31க்குள் இதை செய்ய வேண்டும்'; உங்கள் பான் - ஆதார் எண்ணை இணைப்பதற்கான 2 எளிய வழிகள் உங்கள் வீட்டுக்கு அருகே இந்தச் செடிகள் இருந்தால் உண்மையில் பாம்புகள் வராதா? End of அதிகம் படிக்கப்பட்டது "இந்த மூன்று சுழற்சிகளும் ஒன்றோடொன்று இணைந்து தொடர்புகொண்டிருப்பதால் வெவ்வேறு விஷயங்கள் நடைபெறுகின்றன. இதனால் குமரிக்கடல் பகுதியில் நிலவும் சுழற்சியும் மலாக்கா, மலேசியாவில் நிலவும் சுழற்சியும் இணைந்து ஒன்றாக நகர்வதற்கும் வாய்ப்புண்டு. வரும் நாட்களில் தான் அதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்." என்றார் அமுதா. மேலும், அவர் "கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக இருந்தது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. 4 இடங்களில் அதி கனமழையும், 15 இடங்களில் கனமழையும் 76 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது." என்றார். மேலும் அடுத்துவரும் நாட்களுக்கான வானிலை முன்னெச்சரிக்கையையும் அவர் வெளியிட்டார். அதன்படி, நாளை 8 மணி வரை: தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது, இரு மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஏனைய தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 25: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை தரப்பட்டுள்ளது. நவம்பர் 26: தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 27 : தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 28: ஏற்கெனவே உள்ள சுழற்சிகளின் நகர்வை கண்காணித்து இந்த எச்சரிக்கை தரப்பட்டுள்ளது. எனவே, இது மாறலாம். ஏற்கெனவே உள்ள சுழற்சிகளின்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 29: மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது நவ. 30 திருவள்ளூர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், "ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனே கரைக்குத் திரும்ப வேண்டும். தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகள், கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகள், தென் வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் இன்றிலிருந்து நவ. 29ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்." என்றார் அமுதா. தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று (24.11.2025) காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. ''இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதனால் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக் கூடும். இது தொடர்ந்து அதே திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரங்களில் புயலாக வலுப்பெறக்கூடும்'' என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கனமழை எச்சரிக்கை இன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் நாளையும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக கடலோரப் பகுதிகள் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கி.மீ முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இன்றும் நாளையும் இந்தப் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பட மூலாதாரம், Getty Images எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை? கனமழை எச்சரிக்கை காரணமாக பல்வேறு தென் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று ராமநாதபுரம் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம். மேலும், மழை எச்சரிக்கை காரணமாக கள்ளக்குறிச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, விருதுநகர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி இதற்கிடையில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் 25ம் தேதி வாக்கில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை - தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்லையில் கனமழை நெல்லை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் தாமிரபரணி நதியில் வெள்ளம் அதிகரித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை நீடித்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. மீட்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை மையத்தில் இருந்து 25 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் நெல்லை வந்தடைந்தனர். குற்றாலம் அருவி தென்காசி மாவட்டத்தில் கனமழையின் காரணமாக குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குற்றால அருவிகளில் 4-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் பேருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அனைத்து அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjrj39j49wlo
  24. 24 Nov, 2025 | 10:02 AM (நமது நிருபர்) சீனா புதிய நீண்டகால வளர்ச்சிக்கான பாதை வரைபடத்தை முன்வைத்துள்ள நிலையில் அதில் குறிப்பிடப்படும் 15ஆவது சீனாவின் ஐந்தாண்டுத் திட்டத்துடன் இலங்கையின் தேசிய முயற்சிகள் ஒத்துப்போகின்றன என்று இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய குழுவினுடைய நான்காவது முழு அமரவு கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி பீஜிங்கில் நடைபெற்றிருந்தது. அந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட 'சீனாவின் புதிய வளர்ச்சி உலகிற்கு புதிய வாய்ப்பு' எனும் தலைப்பிலான முடிவுகள் குறித்த விளக்கக்காட்சிகளை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வ கொழும்பு ஷங்கிரில்லா ஹொட்டலில் நடைபெற்றது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றிருந்த நிகழ்வில் உரையாற்றும்போதே சீனத்தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்தியக் குழுவின் நான்காவது முழுமையான அமர்வு, வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த அமர்வில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான 15ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தை உருவாக்குவதற்கான பரிந்துரைகள் ஆய்வு செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. சீனா, 1953ஆம் ஆண்டில் முதல் ஐந்தாண்டு திட்டத்தைத் ஆரம்பித்ததிலிருந்து ஐந்தாண்டுத் திட்டங்களை விஞ்ஞானரீதியாக ஆராய்ந்து செயற்படுத்துகிறது. குறிப்பாக சோசலிசத்தின் முக்கிய அரசியல் பலமாக விளங்குவதை நோக்கமாக கொண்டு ஜனாதிபதி ஷி ஜின்பிங் இந்த ஐந்தாண்டு திட்டத்தினை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றார். இதனால் சீனா ஏழ்மை நிலையிலிருந்து அனைத்து வகையிலும் மிதமான செழிப்பு கொண்ட சமூகமாக உருவெடுத்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் பல நாடுகள் ஐந்தாண்டுத் திட்டங்களைக் கைவிட்ட நிலையில், சீனா மட்டும் தனது கட்டமைப்பைச் செம்மைப்படுத்தி, உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட வளர்ச்சியை அடைந்து முன்மாதிரியாகத் திகழ்கிறது. 14ஆவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில், சீனா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது. உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும், சீனா சராசரியாக 5.5சதவீதமான ஆண்டு வளர்ச்சியைத் தக்கவைத்ததுடன், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2025க்குள் 19 டிரில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சீனா தனது உயர்தர வளர்ச்சியை மேம்படுத்துவதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புதுமைகளை முக்கிய உந்து சக்தியாக கருதுவதோடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடுகளில் சீனா உலகிலேயே இரண்டாவது இடத்தில் காணப்படுகின்றது. நாட்டின் வனப்பரப்பு 25சதவீதத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளதோடு புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்திறன் சுமார் 60சதவீதமாக உயர்ந்துள்ளது. மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில், தனிநபர் வருமானம் 2024இல் 41,000 யுவானாக உயர்ந்துள்ளதுடன், வறுமை ஒழிப்பும் , வாழ்க்கைத் தர மேம்பாடு ஆகியன முன்னேற்றத்தை கண்டுள்ளன. எதிர்வரும் 15ஆவது ஐந்தாண்டுத் திட்டம் ஏழு முக்கிய பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டு இலக்குகளைக் கொண்டுள்ளது. உயர்தர வளர்ச்சி, விஞ்ஞான, தொழில்நுட்பத் தற்சார்பு, புதிய திருப்புமுனை சீர்திருத்தங்கள், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், 'அழகிய சீனாவை' உருவாக்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த இலக்குகளின் மூலம், 2035ஆம் ஆண்டுக்குள் சீனாவின் தனிநபர் மொத்த உற்பத்தியானது ஒரு நடுத்தர-நிலை நாட்டினுடைய சூழலை எட்ட வேண்டும் என்ற நிர்ணயிக்கப்பட்ட இலக்கைக் கொண்டுள்ளது. உலகளாவிய ரீதியில் சீனா தனது புதிய வளர்ச்சியைப் அனைத்து நாடுகளுக்கும் புதிய வாய்ப்பாக வழங்குவதற்கு உறுதிபூண்டுள்ளது. அந்தவகையில் பரஸ்பர இருதரப்பு முதலீட்டிற்கு அதிக வாய்ப்புக்களை உருவாக்குவதும், ஒN பாதை மற்றும் மண்டலம் ஒத்துழைப்பை முன்னெடுக்கவும் தீர்மானித்துள்ளது. இலங்கையின் கிளீன் சிறிலங்கா, டிஜிட்டல் மாற்றம், கிராமப்புற மேம்பாடு போன்ற முன்முயற்சிகள் சீனாவின் 15ஆவது ஐந்தாண்டுத் திட்டத்துடன் இணைந்து செல்கின்றன.. துறைமுகப் பொருளாதாரம், நவீன விவசாயம், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் சுற்றுலா போன்ற முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதன் மூலம், இரு நாடுகளின் மக்களுக்கும் அதிக நன்மைகளைக் கொண்டுவரவும், ஒரு பகிரப்பட்ட எதிர்காலத்துடன் கூடிய சமூகத்தைக் கூட்டாகக் கட்டியெழுப்பவும் சீனா தயாராக உள்ளது என்றார். https://www.virakesari.lk/article/231259
  25. இன்றும் 100 மி.மீ க்கும் அதிகளவான பலத்த மழை! Nov 24, 2025 - 06:15 AM நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் நிலவும் தளம்பல் நிலை நாளை (25) ஒரு தாழ் அமுக்கப் பிரதேசமாக விருத்தியடையும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல பிரதேசங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmicfe86c01x2o29n0b9urn8c

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.