Everything posted by ஏராளன்
-
கருத்து படங்கள்
அத தெரண கருத்துப்படம்.
-
தரம் 6 இற்கு விண்ணப்பங்களை இன்று முதல் இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்கலாம்
தரம் 6 இற்கு விண்ணப்பங்களை இன்று முதல் இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்கலாம் Published By: Digital Desk 3 13 Jan, 2026 | 02:36 PM 05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், பாடசாலைகளில் 06 ஆம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, இன்று செவ்வாய்க்கிழமை 13 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் இணையத்தில் ஏற்றுக்கொள்ளப்படும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் கல்வி அமைச்சின் www.moe.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தை அணுகுவதன் மூலம் மூன்று பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். http://g6application.moe.gov.lk/#/ என்ற பிரத்யேக இணையத்தளம் மூலமாகவும் விண்ணப்பங்களை நேரடியாக சமர்ப்பிக்கலாம் என்று அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/235923
-
ஈரானில் தீவிரமடையும் போராட்டம்: இணைய சேவைகள் முடக்கம்
2,000 பேர் பலி! ஈரான் போராட்டம் குறித்து வெளியான பகீர் தகவல் Jan 13, 2026 - 05:07 PM ஈரான் அரசாங்கத்திற்கு எதிராக கடந்த இரண்டு வாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான மக்கள் போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 2,000 என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போராட்டங்களை ஒடுக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட கடுமையான நடவடிக்கைகளே இந்த அதிகளவான உயிரிழப்புகளுக்குக் காரணம் என்பதை அந்நாட்டு அதிகாரிகள் முதன்முறையாக ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது போராட்டங்கள் நடைபெறும் பகுதிகளில் உள்ள சில வைத்தியசாலைகள், உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களால் நிரம்பி வழிவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வைத்தியசாலைகளுக்குக் கொண்டு வரப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் 20 முதல் 25 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் என டெஹ்ரானில் உள்ள வைத்தியசாலை வட்டாரங்கள் வெளிநாட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளன. அவர்களில் அநேகமானோர் தலை அல்லது நெஞ்சுப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmkcioycp03vqo29n43yaf44x
-
தரம் 6 கல்வி சீர்திருத்தங்கள் 2027 வரை ஒத்திவைப்பு
தரம் 6 கல்வி சீர்திருத்தங்கள் 2027 வரை ஒத்திவைப்பு Jan 13, 2026 - 02:20 PM தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள 6 ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை மீண்டும் மீளாய்வு செய்து, 2027 ஆம் ஆண்டில் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. எவ்வாறாயினும், 1 ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்கள் இந்த ஆண்டு எவ்வித மாற்றமுமின்றி நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். சர்ச்சைக்குரிய 6 ஆம் தர ஆங்கிலக் கற்றல் தொகுதி (Module) தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் கல்வி அமைச்சு முன்னெடுத்த விசாரணை அறிக்கைகளின் முடிவுகளின் அடிப்படையில், அதற்குப் பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகளுக்கு எதிராக தேசிய கல்வி நிறுவனத்தின் நிருவாக சபை ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இங்கு குறிப்பிட்டார். அதற்கமைய, 01.மனிதவள மேம்பாடு 02.உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் 0.3மதிப்பீடு மற்றும் மதிப்பாய்வு நடவடிக்கைகள் 04.பாடத்திட்ட மேம்பாடு 05.பொதுமக்களுக்கான விழிப்புணர்வு மற்றும் ஊக்குவிப்பு ஆகிய 5 முக்கிய தூண்களின் அடிப்படையில் குறித்த கல்விச் சீர்திருத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmkccqg6t03v9o29nivx5lk3f
-
இந்தியாவின் PSLV விண்வெளி திட்டம் தோல்வி
பிஎஸ்எல்வி ராக்கெட்டின் இரு தோல்விகளும் இஸ்ரோவுக்கு எவ்வாறு ஒரு பின்னடைவாக மாறக்கூடும்? பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு,பிஎஸ்எல்வி-சி62 ராக்கெட் கவுன்ட்டவுண் முடிந்து புறப்படும் காட்சி கட்டுரை தகவல் சங்கரநாராயணன் சுடலை பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பிஎஸ்எல்வி-சி62 திட்டத்தின் மூலம் EOS-N1 செயற்கைக் கோள் உள்ளிட்ட 16 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் திட்டத்தை, ஜனவரி 12-ஆம் தேதி இஸ்ரோவின் வர்த்தக ரீதியான செயற்கைக் கோள்களை ஏவும் அமைப்பான NSIL (NewSpace India Limited) மேற்கொண்டது. ஆனால் இத்திட்டத்தின் போது ராக்கெட்டின் செயல்பாட்டில் ஒரு முரண் ஏற்பட்டதாக இஸ்ரோ கூறியுள்ளது. பயணப்பாதையில் 'ஒரு விலகல்' ஏற்பட்டதாக கூறியுள்ள இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் இது குறித்து விரைவில் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார். கடந்த மே மாதம் இஸ்ரோவின் பிஎஸ்எல்வி -சி61 திட்டம் முழுமையடையாத நிலையில், பிஎஸ்எல்வி ரக ராக்கெட்டுக்கு இது தொடர்ச்சியான இரண்டாவது தோல்வியாக நிபுணர்களால் பார்க்கப்படுகிறது. வர்த்தக ரீதியான செயற்கைக்கோள் ஏவும் பணிகளை முன்னெடுத்து வரும் நிலையில், இது இஸ்ரோவுக்கு என்ன மாதிரியான பின்னடைவுகளை ஏற்படுத்தலாம் என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு,EOS-N1 செயற்கைக்கோளின் புகைப்படம் பிஎஸ்எல்வி ராக்கெட் உலக சாதனை இஸ்ரோ பிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் மூலம் 63 திட்டங்களை நிறைவு செய்துள்ளது. இஸ்ரோவின் பெருமை மிகு திட்டங்களான சந்திரயான் 1, செவ்வாய் சுற்றுவட்டப்பாதை திட்டம், சூரியனை ஆராயும் ஆதித்யா எல்1 போன்ற திட்டங்களுக்கான செயற்கைக் கோள்கள் பிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் மூலமாகவே ஏவப்பட்டன. அத்தோடு 2017ம் ஆண்டில் ஒரே திட்டத்தில் 104 செயற்கைக் கோள்களை நிலை நிறுத்தி உலக சாதனை படைத்துள்ளது. இவ்வளவு மதிப்பு வாய்ந்ததாக இஸ்ரோ முன்னிறுத்தும் இந்த பிஎஸ்எல்வி ராக்கெட்தான் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துள்ளது. 2025ம் ஆண்டு மே மாதம் 18-ஆம் தேதி இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி61 திட்டம் முழுமையடையவில்லை. இது இஸ்ரோவின் மிகவும் அரிதான 'ராக்கெட் ஏவுதல்' தோல்வியாக குறிப்பிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சுமார் 8 மாத இடைவெளியில் ஜனவரி 12-ஆம் தேதி பிஎஸ்எல்வி ராக்கெட் மீண்டும் ஒரு பின்னடைவை சந்தித்திருக்கிறது. ஆனால் பிரச்னை இத்தோடு முடிந்துவிடவில்லை, சி61 திட்டத்தில் ராக்கெட்டின் தோல்விக்கான காரணம் என்ன என்பது பற்றி தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்று கூறுகிறார், மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியரான முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன். பிபிசி தமிழிடம் பேசிய அவர்,"எந்த ஒரு ராக்கெட் ஏவும் திட்டமாக இருந்தாலும், அது வெற்றியடைந்தாலும், தோல்வியடைந்தாலும் திட்டத்திற்குப் பின் அதன் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்படும்." என குறிப்பிடுகிறார். ஆனால் முந்தைய திட்டங்களின் தோல்வி மதிப்பீடு அறிக்கை (Failure Assessment Report) வெளிப்படையாக இருந்ததையும் வெங்கடேஸ்வரன் குறிப்பிடுகிறார். பிஎஸ்எல்வி-சி61 திட்டத்திற்கான தோல்வி மதிப்பீட்டு அறிக்கையும் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. ஆனால் இது பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்படவில்லை என்பதால், தோல்விக்கான காரணம் தெரியவில்லை என கூறுகிறார் த.வி.வெங்கடேஸ்வரன். உலக சந்தையை குறிவைக்கும் இஸ்ரோ இந்தியாவின் விண்வெளி ஒழுங்குமுறை நிறுவனமாக உருவாக்கப்பட்டுள்ள இன்-ஸ்பேஸ்(IN-SPACe), அதன் எதிர்வரும் தசாப்தம் மற்றும் கண்ணோட்டங்களுக்கான உத்தியில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது. "2033-ம் ஆண்டுக்குள் உலக விண்வெளி சந்தையில் 8 சதவிகிதத்தை இந்தியா கைப்பற்றும், இதன் மூலம் அதன் விண்வெளி பொருளாதாரம் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரும்" 2023ம் ஆண்டு நிலவரப்படி உலக சந்தையில் இந்தியாவின் பங்களிப்பு 2 சதவிகிதமாகவும், பொருளாதார மதிப்பு 8.4 பில்லியன் டாலராகவும் இருக்கிறது என இன்-ஸ்பேஸ் குறிப்பிட்டிருந்தது. இந்த லட்சியப் பார்வை வலுவான அரசு ஆதரவு, தொடர்ச்சியான தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தனியார் விண்வெளித்துறையின் வளர்ச்சி ஆகியவற்றையே சார்ந்திருப்பதாக உலக பொருளாதார மன்றம் கூறுகிறது. சர்வதேச சந்தையை குறி வைத்து இயங்கி வரும் நிலையில், இஸ்ரோவால் பெருமைக்குரியதாக முன்னிறுத்தப்படும் பிஎஸ்எல்வி ராக்கெட் "இருமுறை தோல்வியடைந்திருப்பது இஸ்ரோவுக்கு கவலை தரக்கூடிய ஒன்று. ஏனெனில், சர்வதேச சந்தையில் பிஎஸ்எல்வி ராக்கெட் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படும்." என முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் குறிப்பிடுகிறார். ஆனால் பிஎஸ்எல்வியின் இந்த பின்னடைவு முன்னேற்றத்திற்கான பாடமாகவே இருக்கும் என்பது ஒரு தரப்பினரின் கருத்தாக உள்ளது. ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய விஞ்ஞானி சுவேந்து பட்நாயக், இதிலிருந்து கற்றுக்கொண்டு அடுத்த முன்னேற்றங்கள் நிகழும் என தெரிவித்தார். பிஎஸ்எல்வி சி-62 திட்டத்தில் என்ன நடந்தது? பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு,இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் ஜனவரி 12-ஆம் தேதி காலை 10.18 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி - சி62 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இதிலிருந்து சுமார் அரை மணி நேரத்தில், ராக்கெட்டின் பயணப்பாதையில் 'விலகல்' இருந்ததை இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் உறுதி செய்தார். ராக்கெட்டின் நிலை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "4 நிலைகளைக் கொண்ட பிஎஸ்எல்வி ராக்கெட்டில், மூன்றாவது நிலையின் இறுதியில் இடையூறுகள் அதிகரித்தன. இதனைத் தொடர்ந்து ராக்கெட்டின் பாதை மாறியது உணரப்பட்டது." என்று கூறினார். தரவுகளை ஆராயந்து வருவதாகவும், விரைவில் முழுமையான விளக்கம் தரப்படும் எனவும் வி.நாராயணன் கூறினார். பிஎஸ்எல்வி ராக்கெட் எப்படி இயங்குகிறது? பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு,பிஎஸ்எல்வி ராக்கெட்டின் பயணத்தை விளக்கும் வரைபடம் பிஎஸ்எல்வி ராக்கெட் 4 நிலைகளைக் கொண்டது என்கிறார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன். அதாவது தொடர் வண்டியில் இருக்கும் ரயில் பெட்டிகள் போன்று "இது உண்மையில் 4 ராக்கெட்களின் இணைப்பு" என்று அவர் கூறினார். ராக்கெட் ஏவுதலுக்காக நிலைநிறுத்தப்படும் போது முதலில் கீழே இருப்பது பிஎஸ்1, இதற்கு அடுத்தபடியாக முறையே பிஎஸ்2, பிஎஸ்3 மற்றும் பிஎஸ்4 நிலைகள் உள்ளன. இவற்றில் பிஎஸ்1 மற்றும் பிஎஸ்3 திட எரிபொருளைக் கொண்டவை. பிஎஸ்2 மற்றும் பிஎஸ்4 திரவ எரிபொருளைக் கொண்டவை. பிஎஸ் 1 நிலையிலிருக்கும் திட எரிபொருள் ராக்கெட் பூமியிலிருந்து ஈர்ப்புவிசைக்கு எதிராக கிளம்புவதற்கான உந்துவிசையைக் கொடுக்கிறது. இயக்கமற்ற நிலையிலிருந்து, இயங்கும் நிலைக்கு மாறுவதற்கான விசையைத் தரும் முதல் நிலை, ராக்கெட்டை சில கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டுமே உயர்த்தும் என்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன். இதன் பின்னர் பிஎஸ் 2 திரவ எரிபொருளைக் கொண்டது, இது ராக்கெட்டின் திசை போன்ற விஷயங்களை தீர்மானிக்கிறது. எந்த சுற்றுப்பாதைக்கு ராக்கெட் செல்லவிருக்கிறது என்பதை இந்த நிலை முடிவு செய்யும். இதன் பின்னர், பிஎஸ்3 மீண்டும் திட எரிபொருளைக் கொண்டு ராக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு விண்வெளியில் உயர்த்தும். கடைசியாக, பிஎஸ்4 நிலையில் உள்ள ராக்கெட் திரவ எரிபொருளைக் கொண்டு, செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தும். மூன்றாவது நிலையில் ஏற்பட்ட சிக்கல் பிஎஸ்எல்வி-சி62 திட்டத்தில் இந்த மூன்றாவது நிலை வரைக்கும் எதிர்பார்த்தபடி ராக்கெட் சென்றது என்பதைக் குறிப்பிடும் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன், "மூன்றாவது நிலையின் செயல்பாட்டுக்கு இடையே பெரிய சிக்கல்" ஏற்பட்டது என்று குறிப்பிடுகிறார். Vapor Pressure போதிய அளவுக்கு இல்லாததே இதற்கு காரணம் என அறிவியலாளர்கள் கூறுவதாக குறிப்பிட்ட த.வி.வெங்கடேஸ்வரன், இதன் பின்னுள்ள அறிவியல் காரணத்தை எளிமையாக விளக்கினார். "காற்று ஊதப்பட்ட பலூனின் வாயைத் திறந்து விட்டால், அது எதிர்திசையில் வேகமாகச் செல்லும். இதுவே, பலூனின் வாயை பெரிதாக திறந்தால் காற்று வேகமாக வெளியேறி பலூனின் வேகத்தில் மாறுபாடு ஏற்படலாம். இதே போன்று தான் ராக்கெட் இயங்கும் போது, அதன் புகை வெளியேறக்கூடிய முனையில், (Nozzle) திட்டமிட்டிருந்த அழுத்தம் உருவாகவில்லை." என விளக்கினார். "இந்த அழுத்தம் சரியாக உருவாகாமல் இருந்ததற்கான காரணம் என்னவாக இருக்கலாம் என்பதில் தான் பிரச்னை உள்ளது. குறுகிய முனையின் (Nozzle) வாய்ப்பகுதி உடைந்திருக்கலாம். பிஎஸ்3 எரிபொருளில் பிரச்னை இருக்கலாம் அதாவது திட எரிபொருளை ராக்கெட்டில் நிரப்பும் போது சரியான விகிதத்தில் அது இல்லாமல் இருந்திருக்கலாம். இதில் சரியான காரணம் என்ன என்பதை இஸ்ரோ இன்னமும் அறிவிக்கவில்லை" என்பதை குறிப்பிடுகிறார் த.வி.வெங்கடேஸ்வரன். ஆனால், கடந்தமுறை 2025 , மே மாதம் செயல்படுத்தப்பட்டு முழுமையடையாத சி-61 திட்டத்திலும், இதே மூன்றாவது நிலையில், இதே போன்ற பிரச்னை தான் ஏற்பட்டது என்பது கவலைக்குரியது என குறிப்பிட்ட த.வி.வெங்கடேஸ்வரன், இது குறித்த அறிக்கை வெளிப்படையாக வெளியிடப்படவில்லை என்பதையும் கூறினார். எந்த ஒரு ராக்கெட் ஏவும் திட்டமாக இருந்தாலும், வெற்றிகரமாக நிறைவடைந்தாலும், தோல்வியடைந்தாலும் அது குறித்த அறிக்கை தயார் செய்யப்படும். இதிலிருந்து தான் இஸ்ரோவுக்கு உதிரிபாகங்கள் வழங்கியவர் தரமானதை வழங்கினாரா? இஸ்ரோவில் போதுமான பரிசோதனை செய்யாமல் அனுப்பினார்களா? யார் மீது தவறு? என்ன தவறு என்பதை தெரிந்துகொள்ள முடியும்." என த.வி.வெங்கடேஸ்வரன் கூறினார். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9dvqn6dv0po
-
'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' - 971 சந்தேக நபர்கள் கைது
"முழு நாடுமே ஒன்றாக": நாடு தழுவிய சுற்றிவளைப்பில் 871 பேர் கைது! Published By: Digital Desk 1 13 Jan, 2026 | 11:25 AM ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுடன், இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்ச்சியான, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன்படி, நேற்று திங்கட்கிழமை (12) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய, 339 கிராம் ஹெரோயின், 447 கிராம் ஐஸ், 05 கிலோகிராம் 515 கிராம் கஞ்சா, 4,636 கஞ்சா செடிகள், 06 கிராம் குஷ்ரக போதைப்பொருள், 92 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 610 போதை மாத்திரைகள், 347 கிராம் 200 மில்லிகிராம் மதனமோதகம் மற்றும் 24 கிலோகிராம் 542 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. அதேநேரம், குறித்த போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 871 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 08 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 888 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 09 பேர் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/235905
-
இரானுக்கான ராணுவ திட்டங்கள் பற்றி டிரம்புக்கு விளக்கம் – என்ன நடக்கிறது?
இரானுக்கான ராணுவ திட்டங்கள் பற்றி டிரம்புக்கு விளக்கம் – என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் டேனியல் கேய், பிபிசி கிளேர் கீனன், பிபிசி 42 நிமிடங்களுக்கு முன்னர் இரானில் பயன்படுத்துவதற்கான பரந்த அளவிலான உளவு மற்றும் ராணுவ முறைகள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்புத் துறையின் அதிகாரிகள் இருவர் பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸிடம் தெரிவித்தனர். நீண்ட தூர ஏவுகணை தாக்குதல்கள், அமெரிக்காவின் சாத்தியமான தலையீட்டிற்கான ஒரு வழியாகத் தொடர்கின்றன. அதே நேரத்தில், சைபர் நடவடிக்கைகள் மற்றும் உளவியல் ரீதியான பிரசார நடவடிக்கைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் முன்வைத்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இரானில் நடைபெற்று வரும் அரசுக்கு எதிரான போராட்டங்களில், கடந்த மூன்று வாரங்களில் மட்டும் 600-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. இதற்கிடையில், இரானுடன் வணிகத் தொடர்புகளைக் கொண்டுள்ள நாடுகளின் பொருட்கள் மீது 25% வரி விதிக்கப்படுவதாக டிரம்ப் திங்களன்று அறிவித்தார். அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த இரான் தயாராக இருப்பதாகவும், அதே சமயம் "போருக்கும் தயாராக" இருப்பதாகவும் இரானின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,Getty Images 'மிகவும் வலிமையான வழிகள்' இரான் குறித்து விவாதிக்க டிரம்ப்பின் தேசிய பாதுகாப்பு குழு செவ்வாய்க்கிழமையன்று வெள்ளை மாளிகையில் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த கூட்டத்தில் அதிபர் டிரம்ப் கொள்வாரா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. மேலும் இரானில் அதிகமான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டால் தலையீடு செய்ய "மிகவும் வலிமையான வழிகள்'' குறித்து தனது ராணுவம் பரிசீலித்து வருவதாக டிரம்ப் முன்னதாக தெரிவித்திருந்தார். இரான் தலைவர்கள் "பேச்சுவார்த்தை" நடத்த தன்னை அழைத்ததாகக் குறிப்பிட்ட டிரம்ப், ஆனால் "ஒரு சந்திப்பு நடைபெறும் முன்பே அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம்" என்றும் கூறினார். பட மூலாதாரம்,Getty Images திட்டம் என்ன? இரானிய நாணயத்தின் வீழ்ச்சி மற்றும் பொருளாதார நிர்வாக சீர்கேடு ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள விரக்தி, தற்போது இரானின் அதிஉயர் தலைவர் காமனெயியின் ஆட்சிக்கு எதிரான ஒரு நெருக்கடியாக உருவெடுத்துள்ளது. திங்களன்று, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட், இரானிய அதிகாரி ஒருவர் டிரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காப்பைத் தொடர்பு கொண்டதாகத் தெரிவித்தார். அதிபர் டிரம்ப் தேவை என்று கருதினால், "ராணுவ நடவடிக்கைகளை எடுக்கவும் தயங்க மாட்டார்" என்று அவர் எச்சரித்தார். சிபிஎஸ் நிறுவனத்துடன் தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத இரண்டு நபர்கள் பேசுகையில், இரானில் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை என்பது பெரும்பாலும் விமானப் படைத் தாக்குதல்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும், அதே சமயம் இரானின் கட்டளை அமைப்புகள் மற்றும் தகவல் தொடர்பு வசதிகளை சீர்குலைப்பதற்கான வழிகளையும் இத்தாக்குதல் குறித்து திட்டமிடுபவர்கள் ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தனர். இரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறும்படியோ அல்லது அமெரிக்க அரசாங்கத்தின் உதவி இல்லாமல் வெளியேறும் திட்டத்தை வைத்திருக்கும்படியோ அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இரானில் நடைபெற்ற அரசு ஆதரவுப் பேரணிகளைப் பாராட்டிய காமனெயி, அமெரிக்கா "ஏமாற்று வேலை" செய்வதாகவும், "துரோகமிழைக்கும் கூலிப்படையினரை" நம்பியிருப்பதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், "இரானிய தேசம் ஒரு வலிமையான தேசம், அது விழிப்புணர்வுடன் உள்ளது, தனது எதிரிகளை அறியும், மேலும் ஒவ்வொரு களத்திலும் அது இருக்கும்" என்றார். அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கான அழைப்புகளைத் தொடர்ந்து, பல நகரங்களில் பெருந்திரளான மக்கள் திரண்டதாக அரசு ஊடகங்கள் தெரிவித்தன. நாட்டிற்குள் இருப்பவர்களை இத்தகைய ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தும், அதே சமயம் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என எச்சரித்தும் அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகளை பிபிசி பாரசீக சேவை கண்டது. பட மூலாதாரம்,Getty Images 25% வரி திங்கள்கிழமை அன்று, டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில், இரானுடன் "வணிகம் செய்யும்" நாடுகளின் பொருட்கள் மீது 25% வரி விதிக்கப்படும் என்று பதிவிட்டார். இது குறித்து கூடுதல் விளக்கம் அளிக்காத அவர், "இந்த உத்தரவு இறுதியானது மற்றும் முடிவானது" என்று கூறினார். ஏற்கனவே அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகளின் கீழ் இருக்கும் இரான், தற்போது நாணய வீழ்ச்சியையும் கடுமையான பணவீக்கத்தையும் எதிர்கொள்கிறது. இதனால் உணவுப் பொருட்களின் விலை 70% வரை உயர்ந்துள்ளது. இரானின் இறக்குமதியில் மூன்றில் ஒரு பங்கு உணவுப் பொருட்கள் ஆகும். டிரம்ப் அறிவித்துள்ள புதிய வரிக் கட்டுப்பாடுகள், உணவுத் தட்டுப்பாட்டையும் செலவுகளையும் மேலும் மோசமாக்கக்கூடும். புதிய வரிகள் குறித்து வெள்ளை மாளிகை கூடுதல் தகவல்களைப் பகிரவில்லை. சீனா இரானின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து இராக், ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உள்ளன. அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்க இரான் அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், அமெரிக்காவின் இந்த புதிய நகர்வு இரான் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். இதற்கிடையில், அமெரிக்காவில் வாழும் இரானின் கடைசி மன்னரின் மகனான ரெஸா பஹ்லவி, போராட்டக்காரர்களின் உயிரிழப்புகளைக் குறைக்க அதிபர் டிரம்ப் "விரைவாக" தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். சிபிஎஸ் நியூஸிற்கு அளித்த பேட்டியில், தற்போதைய இரானிய அரசு "மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று கூறி உலகை ஏமாற்ற முயல்கிறது" என்று பஹ்லவி கூறினார். அதிபர் டிரம்ப்பை "தான் சொல்வதைச் செய்பவர், செய்வதைச் சொல்பவர்" என்றும், "தற்போதைய சூழலின் விபரீதத்தை நன்கு அறிந்தவர்" என்றும் அவர் விவரித்தார். மேலும், "அதிபர் மிக விரைவில் ஒரு முடிவை எடுக்க வேண்டியிருக்கும் என்று நான் நினைக்கிறேன்," என்றும் பஹ்லவி கூறினார். நார்வேயைத் தளமாகக் கொண்ட 'இரான் மனித உரிமைகள்' (IHRNGO) அமைப்பின் தகவல்படி, இரானில் 18 வயதிற்குட்பட்ட 9 பேர் உட்பட குறைந்தது 648 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதைவிட மிக அதிகமாக இருக்கலாம் என்று இரானுக்குள் உள்ள வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளன. பிபிசி மற்றும் பிற சர்வதேச செய்தி நிறுவனங்களால் இரானுக்குள் இருந்து செய்தி சேகரிக்க முடியாத நிலை உள்ளது. அங்கு இணைய சேவை முடக்கப்பட்டிருப்பதால், தகவல்களைப் பெறுவதும் அவற்றை உறுதிப்படுத்துவதும் கடினமாகியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cedwg0z67d4o
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
2) முன்னோடிக்கான இரண்டாவது நன்கொடை ரூபா 10,493.65 சதம் 13/01/2026 கிடைக்கப்பெற்றது. இன்றைய 13/01/2026 வங்கி மீதி ரூபா 111,573.67 சதம் ஆகும். இரண்டாவது நன்கொடையை அனுப்பி வைத்த உறவிற்கு மிக்க நன்றி. உங்கள் ஒவ்வொருவரின் கூட்டு முயற்சியால் முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026 வெற்றி பெறட்டும்.
-
சமஷ்டி தீர்வு என்பது நாட்டைப் பிளவுபடுத்துவது அல்ல எனும் நிலைப்பாட்டை வெளிப்படுத்துங்கள் - நோர்வே உயர்மட்டப் பிரதிநிதியிடம் கஜேந்திரகுமார் தரப்பு வலியுறுத்தல்
சமஷ்டி தீர்வு என்பது நாட்டைப் பிளவுபடுத்துவது அல்ல எனும் நிலைப்பாட்டை வெளிப்படுத்துங்கள் - நோர்வே உயர்மட்டப் பிரதிநிதியிடம் கஜேந்திரகுமார் தரப்பு வலியுறுத்தல் 13 Jan, 2026 | 08:58 AM (நா.தனுஜா) தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையுடன்கூடிய சமஷ்டி தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்குரிய அழுத்தங்களை நோர்வே பிரயோகிக்கவேண்டும் எனவும், குறைந்தபட்சம் சமஷ்டி தீர்வு என்பது நாட்டைப் பிளவுபடுத்துவது அல்ல என்ற நிலைப்பாட்டையேனும் நோர்வே வெளிப்படுத்தவேண்டும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் உயர்மட்டப் பிரதிநிதியிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் வலியுறுத்தியுள்ளனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் இம்மாதத் தொடக்கம் முதல் ஐரோப்பிய நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்டு, அங்கு பலதரப்பட்ட சந்திப்புக்களை நடாத்தி வருகின்றனர். அதன்படி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் தலைமையில் அதன் செயலாளர் செ.கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், உத்தியோகபூர்வப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ், கொள்கைபரப்புச் செயலாளர் ந.காண்டீபன் உள்ளிட்ட குழுவினர் அண்மையில் நோர்வே வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட அதிகாரியை சந்தித்து, உள்நாட்டில் தமிழர்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் மற்றும் தீர்வு எதிர்பார்க்கை குறித்து விரிவாக விளக்கமளித்தனர். இதன்போது தமிழர்களுக்கான அரசியல் தீர்வை ஒற்றையாட்சிக்குள் முடக்கும் வகையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சி மற்றும் தமது சமஷ்டி தீர்வுக்கான கோரிக்கை என்பன தொடர்பில் நோர்வே வெளிவிவகார அமைச்சின் அதிகாரியிடம் விரிவாக விளக்கமளித்தனர். அதனை செவிமடுத்த அதிகாரி, தீர்வு விடயத்தில் தாம் நடுநிலையான போக்கையே கடைப்பிடிப்பதாகப் பதிலளித்தார். அதனை நிராகரித்த கஜேந்திரகுமார் தரப்பு, இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் நோர்வே உள்ளிட்ட உலகநாடுகள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் சமஷ்டி தீர்வுக்கு இணங்காமல், தனிநாட்டையே கோருகின்றனர் என்ற அடிப்படையில் அல்லவா பின்னர் யுத்தத்தை ஆதரித்தீர்கள் எனக் கேள்வி எழுப்பியதுடன், குறைந்தபட்சம் சமஷ்டி தீர்வு என்பது நாட்டைப் பிளவுபடுத்துவது அல்ல என்ற நிலைப்பாட்டையேனும் நோர்வே வெளிப்படுத்தவேண்டும் என வலியுறுத்தினர். அதுமாத்திரமன்றி பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்வதற்கான புதிய சட்ட வரைவு, வட, கிழக்கு மாகாணங்களில் தொடரும் பௌத்த மற்றும் இராணுவமயமாக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் இன்னமும் உறுதிப்படுத்தப்படாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் நோர்வே அதிகாரிக்கு அவர்கள் விளக்கமளித்தனர். அதனையடுத்து டென்மார்க் வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட அதிகாரியுடன் நடைபெற்ற சந்திப்பிலும் இவ்விடயங்கள் வலியுறுத்தப்பட்டன. இது இவ்வாறிருக்க, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீண்டும் நாடு திரும்பியுள்ள போதிலும், கட்சியின் ஏனைய பிரதிநிதிகள் எதிர்வரும் தினங்களில் பெல்ஜியம், நெதர்லாந்து, சுவிட்ஸர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் இவ்வாறான உயர்மட்ட மற்றும் மக்கள் சந்திப்புக்களை நடாத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/235883
-
சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார்
சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார் ! 13 Jan, 2026 | 08:47 AM இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் இன்று செவ்வாய்க்கிழமை (13) அதிகாலை காலமானார். சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் தனது 81 ஆவது வயதில் காலமாகியுள்ளார். இவர் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, வெளியிட்ட அறிக்கைகளுக்காக சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்டவர் ஆவார். ஊடகத்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட இவர், பல முக்கிய செய்திகளை உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளார். இக்பால் அத்தாஸின் இறுதிச் சடங்கு இன்று பிற்பகல் தெஹிவளை பெரிய பள்ளிவாசல் மயானத்தில் நடைபெறவுள்ளது. அன்னாரது பூதவுடல் இலக்கம் 11 C/1, சிறிவர்தன வீதி, ஹில் வீதி, தெஹிவளை என்ற முகவரியில் அமைந்துள்ள இல்லத்தில் இன்று காலை 9.00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/235881
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
எல்லை தாண்டி மீன்பிடித்த 10 இந்திய மீனவர்கள் கைது Jan 13, 2026 - 07:28 AM ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற ஒரு விசைப்படகையும் (TN 10 MM 513), அதிலிருந்த பத்து மீனவர்களையும் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் இன்று (13) அதிகாலை கைது செய்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இவர்கள், படகுடன் காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கைதான மீனவர்கள் மற்றும் படகு ஆகியன நீரியல் வளத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmkbxzxho03u0o29npg42tay5
-
திருத்தப்பட்ட பயங்கரவாத பெயர் பட்டியல் வெளியானது
பாதுகாப்பு அமைச்சின் தடை பட்டியலில் 16 அமைப்புக்கள், 206 தனிநபர்கள் - பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டிருப்பதே காரணமாம் 12 Jan, 2026 | 07:22 PM (நா.தனுஜா) தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு உள்ளடங்கலாக தடைசெய்யப்பட்ட 16 அமைப்புக்கள் மற்றும் 206 தனிநபர்களின் பெயர் விபரங்களைக் குறிப்பிட்டு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்தாவினால் புதுப்பிக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 1968 ஆம் ஆண்டின் 45ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சபைச் சட்டத்தின் பிரகாரம் பயங்கரவாத செயற்பாடுகளுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புகளைப் பேணிவரும் மற்றும் அவற்றைத் தூண்டும் வகையில் இயங்கிவரும் அமைப்புக்களைத் தடைசெய்து இலங்கை அரசாங்கங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டுவருகின்றன. அவ்வாறு தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலில் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புக்களின் பெயர்கள் தொடர்ந்து உள்ளடக்கப்பட்டு வருகின்றன. அதன்படி அரசாங்கத்தினால் கடந்த 6 ஆம் திகதி வெளியிடப்பட்டிருக்கும் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தலில் தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழர் புனர்வாழ்வு அமைப்பு, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, உலகத் தமிழர் இயக்கம், நாடு கடந்த தமிழீழ அரசு, உலகத் தமிழர் நிவாரண நிதியம், தலைமையகக் குழு, கனேடிய தமிழர் Nதுசிய அவை, தமிழ் இளைஞர் அமைப்பு மற்றும் சேவ் த பேர்ள்ஸ் ஆகிய தமிழ் இயக்கங்கள் மற்றும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பெயர்களும் தேசிய தௌஹித் ஜமாத், ஜமாதே மிலாதே இப்ராஹிம், விலயாத் அஸ் செயிலானி, டருள் ஆதர் அத்தபவியா, இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம் மற்றும் சுப்பர் முஸ்லிம் ஆகிய இஸ்லாமிய அமைப்புக்களின் பெயர்களும் உள்ளடங்கியுள்ளன. அதேபோன்று ஜேசுராசா அமலதாஸ், விஸ்வநாதன் ருத்ரகுமரன், அப்பாத்துரை செந்தில் விநாயகம், சந்திரா வரதகுமார், வீரசிங்கம் நாகேஸ்வரன், நடராஜா சத்தியசீலன், அமிர்தலிங்கம் திலீபன், விநாயகமூர்த்தி மோகனசுந்தரம், மொஹமது இப்திகார் மொஹமது இன்சாப், அப்துல் காதர் மொஹமட் ஷாஸ்னி, மொஹமது பாருக் முஹம்மது ஹிலாம், முகமது இப்ராகிம் சாதிக் அப்துல்லா, மொஹம்மது சரிபு ஆதம் லெப்பே, அப்துல் லதீப் மொஹமட் சாபி ஆகியோர் உள்ளடங்கலாக 206 தனிநபர்களின் பெயர்களும் அவ்வர்த்தமானி அறிவித்தலில் உள்வாங்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் தடைப்பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதன் மூலம் இவ்வமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் சார்ந்த செயற்பாடுகள், நிதியங்கள் மற்றும் சொத்துக்கள் என்பன நாட்டுக்குள் முடக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/235867
-
சீன ஆய்வுக் கப்பல்களுக்கான தடை நீங்குமா? - முக்கிய இராஜதந்திர நகர்வுடன் கொழும்பு வருகிறார் வோங் யீ
இலங்கைக்காக சீன வெளிவிவகார அமைச்சர் வழங்கிய உறுதி Jan 12, 2026 - 11:55 PM நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள வீதிகள், புகையிரத பாதைகள் மற்றும் பாலங்களைப் புனரமைத்தல் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தினால் சீன அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட விசேட கோரிக்கை தொடர்பில் தான் தனிப்பட்ட ரீதியில் தலையிடுவதாக சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ (Wang Yi) உறுதியளித்துள்ளார். இலங்கை விரைவில் வழமைக்குத் திரும்புவதற்குச் சரியான பாதையில் பயணிப்பதாகத் தான் நம்புவதாகவும், அதற்காக சீன அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் வாங் யீ மீண்டும் உறுதிப்படுத்தினார். இன்று காலை (12) சீன மக்கள் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இலங்கைக்கு மேற்கொண்ட குறுகிய கால விஜயத்தின் போது அமைச்சர் விஜித ஹேரத்தைச் சந்தித்தார். டித்வா புயலுக்குப் பின்னர் சீனா இலங்கைக்கு வழங்கிய அவசர அனர்த்த நிவாரணங்களுக்காக, சீன அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் அமைச்சர் விஜித ஹேரத் இதன்போது தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இரு அமைச்சர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலில் வர்த்தகம் மற்றும் முதலீடு, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் சுற்றுலாத் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் முன்னெடுத்துச் செல்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, டித்வா புயலுக்குப் பின்னர் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் செயல்முறை குறித்தும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmkbhudif03txo29ntqq22m1o
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 தொடர்
தென் ஆபிரிக்காவுடனான 19 இன் கீழ் உலகக் கிண்ண பயிற்சிப் போட்டியில் 12 ஓட்டங்களால் இலங்கை வெற்றி 12 Jan, 2026 | 09:34 PM (நெவில் அன்தனி) நமிபியாவிலும் ஸிம்பாப்வேயிலும் தைப் பொங்கல் தினத்தன்று ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்னோடியாக நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் தென் ஆபிரிக்காவை டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 12 ஓட்டங்களால் இலங்கை வெற்றிகொண்டது. நமிபியாவின் விண்ட்ஹோக், யுனைட்டட் கிரிக்கெட் கழக மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தப் பயிற்சிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 48.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 225 ஓட்டங்களைக் குவித்தது. ஆரம்ப வீரர்களான திமன்த மஹாவித்தான, விரான் சமுதித்த ஆகிய இருவரும் 121 பந்துகளில் 100 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். அதன் பின்னர் சீரான இடைவெளியில் இலங்கை இளையோர் அணி 4 விக்கெட்களை இழந்தது. (49 - 4 விக்.) இந் நிலையில் கவிஜ கமகே, சாமிக்க ஹீனட்டிகல ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கையை 200 ஓட்டங்களாக உயர்த்தினர். திமன்த மஹாவித்தான 87 ஓட்டங்களையும் விரான் சமுதித்த 45 ஓட்டங்களையும் உப அணித் தலைவர் கவிஜ கமகே 48 ஓட்டங்களையும் சாமிக்க ஹீனட்டிகல 14 ஓட்டங்களையும் பெற்றனர். வேறு எவரும் 10 ஓட்டங்களை எட்டவில்லை. 226 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட தென் ஆபிரிக்காவின் வெற்றி இலக்கு மழை காரணமாக டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 34 ஓவர்களில் 176 ஓட்டங்கள் என திருத்தி அமைக்கப்பட்டது. தென் ஆபிரிக்கா 33.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 163 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது. பந்துவீச்சில் குகதாஸ் மாதுளன் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சாமிக்க ஹீனட்டிகல 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் விரான் சமுதித்த 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மலின்த சில்வா 19 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கொழும்பு வெஸ்லி கல்லூரி வீரர் ஸ்ரீராம் ஜீவகன் 21 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். துடுப்பாட்டத்தில் 11 வீரர்களும் பந்துவீச்சில் 11 வீரர்களும் பயன்படுத்தப்பட்ட இந்தப் போட்டியில் விக்னேஸ்வரன் ஆகாஷ் விளையாடவில்லை. இலங்கைக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான பயிற்சிப் போட்டி இதே மைதானத்தில் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது. அப் போட்டியில் ஆகாஷுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவுஸ்திரேலியா, அயர்லாந்து, ஜப்பான் ஆகிய அணிகளுடன் ஏ குழுவில் இடம்பெறும் இலங்கை அணி தனது முதல் சுற்று போட்டிளை நமிபியாவில் விiளாடவுள்ளது. ஜப்பனை 17ஆம் திகதியும் அயர்லாந்தை 19ஆம் திகதியும் அவுஸ்திரேலியாவை 23ஆம் திகதியும் எதிர்த்தாடவுள்ள இலங்கை சுப்ப 6 சுற்றில் விளையாட தகுதிபெறும் என நம்பப்படுகிறது. இலங்கை இளையோர் அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக திரித்துவ கல்லூரியின் வேகப்பந்துவீச்சாளர் செத்மிக்க செனவிரட்ன கருதப்படுகின்றார். ஐசிசியினால் பெயரிடப்பட்டுள்ள கவனிக்கத்த வீரர்களில் செத்மிக்க செனவிரட்னவும் ஒருவராவார். பத்து இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள செத்மிக்க 16 விக்கெட்களைக் கைபற்றியுள்ளார். 19 வயதின்கீழ் இலங்கை குழாம் விமத் தின்சார (அணித் தலைவர் - றோயல் கல்லூரி), கவிஜ கமகே (உதவித் தலைவர் - கிங்ஸ்வூட் கல்லூரி), திமன்த மஹாவித்தான, ஆதம் ஹில்மி, செத்மிக்க செனவிரட்ன (மூவரும் திரித்துவ கல்லூரி), விரான் சமுதித்த, சமரிந்து நெத்சார (இருவரும் மாத்தறை சென். செர்வேஷியஸ் கல்லூரி), துல்னித் சிகேரா, சாமிக்க ஹீனட்டிகல (இருவரும் மஹாநாம கல்லூரி), குகதாஸ் மாதுளன் (யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி), ரசித் நிம்சார (வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை), விக்னேஸ்வரன் ஆகாஷ், சேனுஜ வேக்குனாகொட (இருவரும் மருதானை புனித சூசையப்பர் கல்லூரி), ஸ்ரீராம் ஜீவகன் (வெஸ்லி கல்லூரி), மலின்த சில்வா (மொறட்டுவை புனித செபஸ்தியார் கல்லூரி) https://www.virakesari.lk/article/235873
-
'டித்வா' புயலின் தாக்கத்தால் 4,800 மண்சரிவுகள்!
'டித்வா' புயலின் தாக்கத்தால் 4,800 மண்சரிவுகள்! Jan 12, 2026 - 11:05 PM 'டித்வா' புயலுக்குப் பின்னர் செயற்கைக்கோள் தரவுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் சுமார் 4,800 மண்சரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஆத்தர் சி. கிளார்க் நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் குமாரி மிகஹகொடுவ தெரிவித்துள்ளார். இன்று (12) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார். 'டித்வா புயல் ஏற்பட்டதன் பின்னர் பெறப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் தரவுகளைப் பயன்படுத்தி மண்சரிவு வரைபடமாக்கல் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். அந்த வரைபடங்களை பகுப்பாய்வு செய்தபோது, ஊடகங்கள் வாயிலாக இதுவரை அறிவிக்கப்பட்டதை விடவும் மிக அதிக எண்ணிக்கையிலான மண்சரிவுகள் பதிவாகியுள்ளமை கண்டறியப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். "செயற்கைக்கோள் புகைப்படப் பகுப்பாய்வு மூலம் நாடு தழுவிய ரீதியில் மண்சரிவுகள் முழுமையாக வரைபடமாக்கப்பட்டதுடன், இதன் மூலம் மொத்த மண்சரிவு சம்பவங்களின் எண்ணிக்கை 4,800 இற்கு அருகில் இருப்பது தெரியவந்துள்ளது. 'டித்வா' புயல் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் செயற்கைக்கோள் புகைப்படங்கள் ஊடாகப் பெறப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி நாம் மண்சரிவுகளை வரைபடமாக்கினோம். அந்த வரைபடங்களின்படி, ஊடகங்கள் வாயிலாகப் பிரசாரப்படுத்தப்பட்ட மண்சரிவுகளின் எண்ணிக்கையை விடவும் பாரிய அளவிலான மண்சரிவுகள் இடம்பெற்றுள்ளதை நாம் கண்டறிந்தோம். அந்தச் செயற்கைக்கோள் புகைப்படங்கள் ஊடாகச் சுமார் 4,800 மண்சரிவுகள் பதிவாகியுள்ளன." என்றார். கேள்வி: தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) செயற்கைக்கோள் புகைப்படங்களின் அடிப்படையில் 1,241 இடங்களில் பாரிய மண்சரிவுகள் காணப்பட்டதாகக் கூறியிருந்தது. அதைத் தவிர சிறிய மற்றும் நடுத்தர அளவிலான மண்சரிவுகள் குறித்து அவர்கள் இன்னும் ஆராய்ந்து வருகின்றனர். ஆனால் நீங்கள் 4,800 மண்சரிவுகள் பதிவாகியுள்ளதாகக் கூறுகிறீர்கள். இது நான்கு மடங்கு அதிகமாகும். அப்படியென்றால் இந்த 4,800 மண்சரிவுகளும் கொஸ்லந்த மண்சரிவைப் போன்ற பாரிய அளவிலானவையா? பணிப்பாளர் நாயகம் குமாரி மிகஹகொடுவ: "இல்லை, இதில் சிறிய அளவிலான மண் சரிவுகளையும் நாம் செயற்கைக்கோள் புகைப்படங்கள் ஊடாகப் பெற்றுள்ளோம். அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்கள் வாழும் பகுதிகள் மற்றும் அவர்கள் தலையிட வேண்டிய இடங்களை மாத்திரம் அடையாளம் கண்டிருக்கலாம். ஆனால் எமது செயற்கைக்கோள் புகைப்படங்களில் காடுகளுக்குள் இடம்பெற்ற மண்சரிவுகள் கூடக் கணக்கிடப்படுகின்றன. அதனால்தான் எமது தரவுகளில் எண்ணிக்கை அதிகமாக உள்ளது." என்றார். கேள்வி: அப்படியென்றால் இது 'டித்வா' புயலின் பின்னர் ஏற்பட்ட மொத்த மண்சரிவுகளின் எண்ணிக்கையா? இது நாடு முழுவதிலுமானதா அல்லது மத்திய மலைநாடு தொடர்பானதா? பணிப்பாளர் நாயகம் குமாரி மிகஹகொடுவ: "ஆம், இவை 'டித்வா' புயலுக்குப் பின்னர் ஏற்பட்டவை. அதிகமான மண்சரிவுகள் மத்திய மலைநாட்டிலேயே பதிவாகியுள்ளன. எனினும், இந்த எண்ணிக்கை நாடு முழுவதையும் உள்ளடக்கிய ஒரு கணக்கெடுப்பாகும். சிறிய அளவிலான மண் சரிவுகளையும் நாம் இதில் கவனத்தில் கொண்டுள்ளோம்." என்றார். https://adaderanatamil.lk/news/cmkbg1gq503two29ng0lfmdfl
-
அமெரிக்கா முந்தாவிட்டால் கிரீன்லாந்து ரஷ்யாவுடன் இணையும்: டிமிட்ரி மெத்வதேவ் அதிரடி எச்சரிக்கை!
அமெரிக்கா முந்தாவிட்டால் கிரீன்லாந்து ரஷ்யாவுடன் இணையும்: டிமிட்ரி மெத்வதேவ் அதிரடி எச்சரிக்கை! Published By: Digital Desk 3 13 Jan, 2026 | 09:15 AM ஆர்க்டிக் பிராந்தியத்தில் உள்ள கிரீன்லாந்து தீவைக் கைப்பற்றுவதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தாமதம் காட்டினால், அந்தத் தீவு மக்கள் ரஷ்யாவுடன் இணைய வாக்களிக்கும் சூழல் உருவாகும் என ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் டிமிட்ரி மெத்வதேவ் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை (12) இன்டர்ஃபாக்ஸ் (Interfax) செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, மெத்வதேவ் தெரிவித்துள்ளதாவது, "ட்ரம்ப் விரைந்து செயல்பட வேண்டும். எங்களுக்குக் கிடைத்துள்ள உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி, இன்னும் சில நாட்களில் அங்கு திடீர் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படலாம். இதில் சுமார் 55,000 பேர் வாழ்கின்ற கிரீன்லாந்து ஒட்டுமொத்தமாக ரஷ்யாவுடன் இணைய வாக்களிக்க வாய்ப்புள்ளது." "இது நடந்துவிட்டால் அவ்வளவுதான். அமெரிக்கக் கொடியில் புதிய நட்சத்திரங்கள் (புதிய மாகாணங்கள்) சேர்வதற்கு இடமிருக்காது," என அவர் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார். டென்மார்க் நாட்டின் தன்னாட்சி அதிகாரத்திற்குட்பட்ட கிரீன்லாந்தை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி ட்ரம்ப் தீவிரமாக உள்ளார். ஆர்க்டிக் பகுதியில் ரஷ்யாவின் ஆதிக்கத்தைத் தடுக்க இது அவசியம் என்பது அவர் வாதம். கிரீன்லாந்து மீது தங்களுக்கு உரிமை கோரும் எண்ணம் இல்லை என ரஷ்யா கூறினாலும், அங்குள்ள அமெரிக்க இராணுவத் தளம் மற்றும் விண்வெளி கண்காணிப்பு மையங்களை ரஷ்யா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. ட்ரம்ப்பின் இந்த முயற்சிக்கு டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். 'கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல' என அவர்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளனர். காலநிலை மாற்றத்தால் ஆர்க்டிக் பகுதியில் பனி உருகி வருவதால், புதிய கடல் வழித்தடங்கள் மற்றும் அங்குள்ள இயற்கை வளங்களைக் கைப்பற்ற வல்லரசு நாடுகளிடையே போட்டி அதிகரித்துள்ளது. குறிப்பாக, 2022-ல் உக்ரேன் மீது ரஷ்யா தொடுத்த போருக்குப் பின்னர் ஆர்க்டிக் ஒத்துழைப்பு பாதிக்கப்பட்டு, அப்பகுதி பதற்றம் நிறைந்த ஒன்றாக மாறியுள்ளது. https://www.virakesari.lk/article/235884
-
அமைச்சர் லால்காந்தவின் கருத்தை உடனடியாக மீளப் பெறப்பட வேண்டும்
அமைச்சர் லால்காந்தவின் கருத்தை உடனடியாக மீளப் பெறப்பட வேண்டும் Jan 12, 2026 - 10:02 PM மகா சங்கத்தினரை இழிவாகவும் கேவலமாகவும் விமர்சித்த அமைச்சர் லால் காந்தவுக்கு எதிராக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காவிடில், அதன் மோசமான விளைவுகளை விரைவில் சந்திக்க நேரிடும் என தேசிய சங்க சம்மேளனத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய லியன்வல சாஸனரதன தேரர் தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகளுக்கும் மகா சங்கத்தினருக்கும் இடையில் பல்வேறு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தாலும், நாட்டின் வரலாற்றில் எந்தவொரு அரசியல்வாதியும் மகா சங்கத்தினரை இவ்வாறு தரம் தாழ்ந்த முறையில் அவமதித்ததில்லை என அவர் குறிப்பிட்டார். கண்டி, மடவல ஜனமங்கலாராம சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தேசிய சங்க சம்மேளனத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய லியன்வல சாஸனரதன தேரர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். "நாட்டைச் சீரழிக்கும் வஞ்சகமான தந்திரோபாய நிகழ்ச்சி நிரல்கள் முன்னெடுக்கப்படுமானால், அவற்றுக்குச் சவால் விடும் உரிமை எமக்கு நிச்சயமாக உண்டு. அதற்காகவே வரலாற்றிலிருந்தே மகா சங்கத்தினர் குரல் கொடுத்து வருகின்றனர். அமைச்சர் லால் காந்த காட்டில் இருக்கும் ஒரு மிருகத்தைப் போன்று வெளியே வந்து, காட்டுமிராண்டித்தனமான, தரம் தாழ்ந்த மற்றும் இழிவானதொரு கூற்றை முன்வைத்துள்ளதை நாம் பார்த்தோம். தயவுசெய்து உங்களது கூற்றை மீளப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அந்த அமைச்சருக்குக் கூறிக்கொள்ள விரும்புகிறோம். ஏனெனில், அவ்வாறு செய்யாவிடில் இந்த நாடு எத்திசையை நோக்கிச் செல்லும் என்பதை எம்மால் ஊகிக்க முடியாது. ஜனாதிபதி அவர்களே, இவரை உடனடியாகக் கட்டுப்படுத்தாவிட்டால், இந்த நாடு இதைவிடப் பாரிய ஆபத்தை எதிர்கொள்ளும், அதை யாராலும் தடுக்க முடியாது என நாம் கூறுகிறோம். தயவுசெய்து நீங்கள் இந்த கலாசாரத்திற்குள் உங்களை மாற்றிக்கொள்ளாவிட்டால், இந்நாட்டு மக்கள் மிக விரைவில் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்." என்றார். https://adaderanatamil.lk/news/cmkbdsdwu03tvo29n4a349m2v
-
அச்சுறுத்தலாக மாறியுள்ளது 'க்ரோக்' ஏஐ தொழில்நுட்பம் ; பெண்களே விழிப்புடன் இருங்கள்
இந்தோனேசியாவில் க்ரொக் செயற்கை நுண்ணறிவுக்குத் தடை 12 Jan, 2026 | 04:11 PM இந்தோனேசியாவில் க்ரொக் (Grok) செயற்கை நுண்ணறிவு தளத்தைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, க்ரொக் செயற்கை நுண்ணறிவு தளத்தை தடை செய்த முதல் நாடாக இந்தோனேசியா விளங்குகிறது. உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்கின் எக்ஸ் சமூக ஊடக தளத்துடன் இணைந்து க்ரொக் செயற்கை நுண்ணறிவு சேவை இயங்கி வருகிறது. செயற்கை நுண்ணறிவு உரையாடல் தளமான க்ரொக், பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றுவது போன்ற செயல்களுக்காக அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் இது சட்டம், கலாசார உணர்வுகளை புண்படுத்துவதாகவும் அந்நாட்டின் தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சு தெரிவித்துள்ளது. க்ரொக் பலர் தவறாக பயன்படுத்துவதால் பெண்கள், சிறுவர்கள் மன ரீதியாக பெரிதும் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டி, இந்தோனேசிய அரசு க்ரொக் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளது. https://www.virakesari.lk/article/235847
-
சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார்
சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார் Jan 13, 2026 - 10:02 AM சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளரும் பாதுகாப்பு விவகார பத்தி எழுத்தாளருமான இக்பால் அத்தாஸ் காலமானார். உயிரிழக்கும் போது அவருக்கு 81 வயது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmkc3irs103u9o29nhf08zjby
-
சற்று முன்னர் கிளிநொச்சியில் பரபரப்பு.. பேருந்துடன் கார் மோதியதில் இருவர் பலி
பரந்தன் - முல்லைத்தீவு வீதியில் கோர விபத்து: நால்வர் பலி Jan 12, 2026 - 06:43 PM கிளிநொச்சி - முரசுமோட்டை பகுதியில் பேருந்துடன் கார் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த நால்வர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரந்தன் - முல்லைத்தீவு வீதியில், முரசுமோட்டை சங்கரநாராயணர் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இன்று (12) பிற்பகல் பரந்தனில் இருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த தனியார் பயணிகள் பேருந்துடன், முல்லைத்தீவு விசுவமடுவில் இருந்து பரந்தன் நோக்கிப் பயணித்த கார் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தின் போது காருக்குள் சிக்கி நசுங்கிய நிலையில் இருந்த இருவரது உடல்கள் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டு, கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரில், சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் விசுவமடு பகுதியை சேர்ந்த 32, 34, 46 வயதானவர்களே உயிரிழந்தனர். மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். கிளிநொச்சி பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். -முல்லைத்தீவு நிருபர் தவசீலன்- பரந்தன் - முல்லைத்தீவு வீதியில் கோர விபத்து: நால்வர் பலி
-
சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்பு ஒப்பந்தம் 2026 முதல் காலாண்டில் நிறைவு
சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்பு ஒப்பந்தம் 2026 முதல் காலாண்டில் நிறைவு Jan 12, 2026 - 06:34 PM ஹம்பாந்தோட்டை சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்புத் திட்டத்துடன் தொடர்புடைய ஒப்பந்தம் 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இறுதி செய்யப்படும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு குறுகிய கால உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ (Wang Yi) மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையில் இன்று (12) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 2027 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்ட 70 வது ஆண்டு நிறைவை கூட்டாகக் கொண்டாடுவதற்கு இரு தரப்பினரும் உடன்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதும் இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய ஒத்துழைப்பு பங்காளித்துவத்தை முன்னெடுத்துச் செல்வதுமே இந்தச் சந்திப்பின் நோக்கமாக அமைந்திருந்தது. இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் நல்லுறவு மற்றும் ஏழு தசாப்தங்களுக்கு முன்னர் இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் உறுதிப்படுத்தப்பட்ட நீண்டகால நட்பு மற்றும் காலத்திற்கேற்ற ஒத்துழைப்பு ஆகியவற்றை இரு அமைச்சர்களும் இதன்போது மீண்டும் உறுதிப்படுத்தினர். வர்த்தகம், முதலீடு, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் பங்காளித்துவத்தை மேம்படுத்துவது குறித்தும் இக்கலந்துரையாடலில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. இதேவேளை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையின் கீழ் இலங்கை விரைவாக மீட்சியடையும் எனத் தான் நம்புவதாக சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார். சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்பு ஒப்பந்தம் 2026 முதல் காலாண்டில் நிறைவு
-
“நாங்கள் என்ன செய்யவேண்டும் என யாரும் எங்களுக்கு ஆணையிட முடியாது” - ட்ரம்புக்கு கியூபா ஜனாதிபதி பதிலடி
“நாங்கள் என்ன செய்யவேண்டும் என யாரும் எங்களுக்கு ஆணையிட முடியாது” - ட்ரம்புக்கு கியூபா ஜனாதிபதி பதிலடி 12 Jan, 2026 | 03:50 PM “காலம் கடப்பதற்குள் அமெரிக்க அரசுடன் கியூபா ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் “நாங்கள் என்ன செய்யவேண்டும் என யாரும் எங்களுக்கு ஆணையிட முடியாது” என கியூபா நாட்டு ஜனாதிபதி மிகுவெல் டயாஸ் கெனல் பெர்முடெஸ் (Miguel Díaz-Canel Bermúdez) தெரிவித்துள்ளார். “இனி, வெனிசுவெலாவில் இருந்து கியூபாவுக்கு எரிபொருள் வர்த்தகம் நடைபெறாது” என்றும் “காலம் கடப்பதற்குள் அமெரிக்காவுடன் கியூபா ஒப்பந்தம் மேற்கொள்ளவேண்டும்” என்றும் ட்ரம்ப் சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ளார். அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே கியூபா ஜனாதிபதி மேற்கண்டவாறு தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மனித உயிர்கள் உட்பட அனைத்தையும் வியாபாரமாக மாற்றுபவர்களுக்கு கியூபாவை நோக்கி விரல் நீட்ட எந்த தார்மீக அதிகாரமும் இல்லை. கியூபாவின் மக்கள் இறையாண்மையுடன் தங்களுக்கான அரசியல் மாதிரியை தேர்வு செய்வதை பொறுக்க முடியாமல் நமது நாட்டின் மீது வெறுப்பை கொட்டுகிறார்கள். கியூபாவின் பொருளாதார நெருக்கடிக்கு புரட்சியை குறை கூறுபவர்கள் நாக்கை அடக்கிக்கொள்ளவேண்டும். ஏனென்றால், அமெரிக்கா கடந்த 60 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த கழுத்தை நெரிக்கும் நடவடிக்கைகளின் பலனை இப்போது அனுபவித்து வருகிறது. கியூபா ஒரு சுதந்திரமான, இறையாண்மை கொண்ட நாடு. நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று யாரும் எங்களுக்கு ஆணையிட முடியாது. கியூபா ஆக்கிரமிப்பு செய்யவில்லை. அது 66 ஆண்டுகளாக அமெரிக்காவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும், கியூபா யாரையும் அச்சுறுத்துவதில்லை. கடைசி சொட்டு இரத்தம் உள்ள வரை தாயகத்தைப் பாதுகாக்க கியூபா தயாராக உள்ளது” என்று கூறியுள்ளார். “நாங்கள் என்ன செய்யவேண்டும் என யாரும் எங்களுக்கு ஆணையிட முடியாது” - ட்ரம்புக்கு கியூபா ஜனாதிபதி பதிலடி
-
அதீத செயற்கைவழி விவசாயமும் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயும்
அதீத செயற்கைவழி விவசாயமும் நாட்பட்டசிறுநீரக செயலிழப்பு நோயும் நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் December 28, 2025 1 Minute வடமாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் இந்நோய் காரணமாக கணிசமானோர் பாதிக்கப்ட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் குறிப்பாக மல்லாவி, ஒட்டிசுட்டான் மற்றும் மணலாறு (வெலிஓயா ) பிரதேசங்களில் அதிகளவான நாட்பட்ட சிறுநீரக நோயாளிகள் உள்ளனர். இவ்வாறே இலங்கையின் வடமத்திய, வடமேல், கிழக்கு மாகாணங்களிலும், அம்பாந்தோட்டைகளின் ஒரு சில பகுதிகளிலும் இந்நோயானது கடந்த சில வருடங்களில் வேகமாக பரவி அங்கு வாழும் மக்களை குறிப்பாக விவசாயமும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் பாமர மக்களை பாதித்து வருகின்றது. இந்நோய் காரணமாக 15% வடமத்திய மாகாண மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாண மக்களாகிய எம்மையும் இக்கொடிய சிறுநீரக செயலிழப்பு நோய் வெகுவாக பாதிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதே யதார்த்தமாகும். 1. சிறுநீரக செயலிழப்பின் இருவேறு வடிவங்களும் எவை? சடுதியான சிறுநீரக செயலிழப்பு (Acute Kidney Injury) – குருதி இழப்பு, நஞ்சினை உட்கொள்ளல், அதிக வயிற்றோட்டம்… போன்ற பல்வேறு காரணங்களினால் ஒருசில மணித்தியாலங்களில் தொடங்கி ஒரு சிலநாட்கள் வரையான காலப்பகுதியில் சிறுநீரகத்தின் தொழில்பாடானது முற்றாக நிறுத்தப்படல் சடுதியான சிறுநீரக செயலிழப்பு எனப்படும். நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு (Chronic Kidney Disease) – நீரிழிவு, உயர் குருதி அழுத்தம்… போன்ற காரணிகளினால் எமது சிறுநீரகத்தின் செயற்பாடானது வருடக்கணக்கில் சிறிது சிறிதாக குறைந்து முற்றாக அற்றுப்போதல் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு எனப்படும். 2. அறியப்படாத காரணவியல் கொண்ட நாட்பட்ட சிறுநீரக நோய் என்றால் என்ன? அறியப்படாத காரணவியல் கொண்ட நாட்பட்ட சிறுநீரக நோய் (CKDu – Chronic kidney disease of unknown etiology ) என்பது நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் அல்லது பிற தெளிவான காரணங்கள் இன்றி ஏற்படும் நாட்பட்ட சிறுநீரக நோயின் ஒரு வடிவமாகும். இந்த நோய் மெதுவாக முன்னேறி, பின்னர் சிறுநீரகத்தில் மீள முடியாத சேதத்தை ஏற்படுத்தும். இந்த நோய் அதிகமாக விவசாயிகளில் ஏற்படுவதன் காரணமாக chronic interstitial nephritis in agricultural communities (CINAC) என்றும் இந்த நோய் அழைக்கப்படும். 3. இந்நோயின் தாக்கம் பற்றிய சில புள்ளி விபரங்கள் இந்நோயானது முதன்முதலாக 1990 ஆம் ஆண்டுகளின் ஆரம்ப காலப்பகுதிகளில் மதவாச்சி பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டது. இன்றுவரைக்கும் மூன்று லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் இந்நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். வடமத்திய மாகாணத்தில் 15% மக்கள் தொகையினர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ 10,000 வரையான மக்கள் இந்நோயிற்கான சிகிச்சையை தற்போழது பெற்ற வண்ணம் உள்ளனர். 4. இந்நோயின் தாக்கத்திற்கு உள்ளாகும் ஆபத்திற்கு கூடியவர்கள் யார்? இந்நோயானது ஏற்படுவதற்கு அச்சூழலில் காணப்படும் பல்வேறுபட்ட காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. முக்கியமாக நீர், நிலம், ஆகியன மாசடைதல் ஆகும். இந்நோயின் தாக்கத்திற்கு உள்ளாகும் ஆபத்திற்கு கூடியவர்கள் • இலங்கையின் உலர்வலயத்தில் காணப்படும் மக்கள். • விவசாயமும் அதன் சார்ந்த தொழில்களிலும் ஈடுபடும் கூலித்தொழிலாளர்கள் • சமூக பொருளாதர நிலைகளில் பின்தங்கி உள்ளோர்கள். • குடிப்பதற்காக நிலத்தடி நீரினை கிணறு மூலம் பெற்றுக் கொள்ளும் மக்கள் • கடினத்தன்மையான (Hardness of water) நீரினை அருந்தும் மக்கள். • கசிப்பு போன்ற சட்ட விரோத மதுபானங்களை அருந்தும் ஆண்கள். • இந்நோயானது பொதுவாக 55-60 வயதுகளில் வெளிக்காட்ட ஆரம்பிக்கும். • பெண்களை காட்டிலும் ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். • ஆண்: பெண் விகிதசமம் 3:1 ஆகும். • இந்நோய் பரவிய இடங்களில் பயிரிடப்படும் புகையிலை, மற்றும் மரக்கறிவகைகளை பயன்படுத்தும் மக்கள். 5. விவசாயிகளுக்கும் அவர்கள் சார்ந்தவர்களுக்கும் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்? 1. ஆசனிக்கு, கட்மியம், ஈயம் போன்ற பார உலோகங்கள் மனித உடலை அடைதல் மனித உடலிற்கு தீங்கு பயற்கும் மேற்கூறப்பட்ட உலோகங்கள் பின்வரும் வழிமுறைகளின் ஊடாக மனித உடலை அடைகின்றன. அ) பயிர்களிற்குப் பாவிக்கப்படும் அசேதன வளமாக்கிகள் மூலம் குறிப்பாக பொசுபேற்று வகை வளமாக்கிகள் பார உலோகங்களான கட்மியம், ஆசனிக்கு, ஈயம் என்பவற்றை சிறிதளவில் கொண்டுள்ளன. எல்லா வகையான பொசுபரேற்று வளமாக்கிகளும் (Single Super Phosphate –SSP, Triple Super Phosphate – TSP, Epawella phosphate) ஆசனிக்கு என்ற உலோகத்தை சிறிதளவு கொண்டுள்ளது. இவ்வகை வளமாக்கிகளை அளவிற்கு அதிகமாக பாவிக்கும் போது மண்ணை அடையும் அவ்வுலோகம் நீரினால் கழுவப்பட்டு நீர்நிலைகளை அடையும். அங்கு நீரின் கடினத்தன்மைக்கு பொறுப்பான கல்சியம் மற்றும் மக்னீசியம் என்பவற்றுடன் தாக்கமடைந்து நீரில் கரையும் தன்மைக்கு மாற்றமடையும் பின்பு குடிக்கும் நீரின் ஊடாக உடலை அடையும். ஆசனிக்கு உலோகமானது உடலில் செறிவடையும் போது சிறுநீரகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆ) உணவுச்சங்கிலி மூலம் நீர் நிலைகளை அடைந்த ஆசனிக்கு கல்சியம் போன்ற பார உலோகங்கள் தண்ணீர் மீன்கள் மற்றும் தாமரைக்கிழங்கு போன்றவற்றினால் செறிவடையும் அவற்றை மனிதர்கள் உண்ணும் போது அவை மனித உடலை அடையும். 2. அளவிற்கு அதிகமான பூச்சிகொல்லிகளைப் பாவித்தல் சிலவகைகளான பூச்சி கொல்லிகளை விசுறும் போது (neonicotinoid) அவை நேரடியாக பழங்கள் மரக்கறிவகைகள் தானியங்களுடன் இணைந்து கொள்கின்றது. இவ்வுணவுகளை உண்ணும் மனிதர்களின் உடலில் செறிவடைந்து அவர்களின் சிறுநீரகத்தின் தொழிற்பாட்டைப் பாதிக்கும். குளோரோபிரிவோஸ் (Chloropyrifos) என்ற பூச்சிகொல்லியானது நேரடியாகவே சிறுநீரகத்தைப் பாதித்து இறப்பை ஏற்படுத்தும். உலக சுகாதாரநிறுவனம் நடத்திய ஆய்வுகளின் போது சிறுநீரக செயலிழப்பிற்கு உள்ளானவர்களின் 31 வீதமானவர்களின் சிறுநீர் மாதிரியில் பூச்சிகொல்லி மருந்துகள் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் காணப்பட்டது. 3. களை கொல்லிகள் (Herbicide) இனை மிதமிஞ்சி பாவிப்பதால் புரோப்பனில் (Propanil) போன்ற களை கொல்லிகளை விசுறும்போது அவை தோலின் ஊடாகவோ சுவாசத்தின் ஊடாகவோ அல்லது உணவுச்சங்கில் ஊடாகவோ மனிதஉடலை அடைந்து நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்துகின்றது. முக்கியமாக பயிர்ச்செய்கைக்கு முன்பாக மண்ணை பதப்படுத்தும் போது விசிறப்படும் கிளைபொசேற் (Glyphosate) எனும் களை கொல்லியானது ஏனைய வளமாக்கிகள் மூலம் மண்ணை அடையும் ஆசனிக்கு கட்மியம் போன்ற பார உலோகங்களை மண்ணுடன் நிலையாகப் பிணைத்து வைத்திருந்து நீர்நிலைகளை சென்றடைய உதவுகின்றது. 4. நீரின் கடினத் தன்மை (Hardness of Water) உலகசுகாதார நிறுவனத்தின் ஆராச்சிகளின்படி அதிகளவு கடினத்தன்மை உள்ள நிலத்தடி நீரினை (>500mg/L) பாவிக்கும் பிரதேச மக்கள் அதிகளவில் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதற்கான காரணம் என்னவெனில் நீரிலுள்ள சிறுநீரகத்தைப் பாதிக்கும் நச்சுத்தன்மைப் பதார்த்தங்களின் அளவு நீரின் கடினத் தன்மைக்கு நேர்விகித சமனாகக் காணப்படுகிறது மேற்கூறிய காரணிகளைத் தவிர பின்வரும் காரணிகளும் விவசாயிகளில் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயை ஏற்படுத்துகின்றன. • கசிப்புப் போன்ற சட்டவிரோத மதுபாவனை • உள்நாட்டில் அதாவது நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் பாதித்த பிரதேசங்களில் பயிரிடப்பட்ட புகையிலையின் பாவனை • அளவுக்கதிகமான வலிநோய் நிவாரணிப் பாவனை முக்கியமாக புரூவன் (Brufen) போன்ற (NSAIDs) மருந்துகளின் பாவனை. 7. வடமாகாணமக்களாகிய நாம் இந்நோயினையிட்டு ஏன் கவலைப்பட வேண்டும்? 1. வடமாகாணத்தின் பெருமளவு நீர்வளம் பாதிக்கப்பட்ட ஏனைய பிரதேசங்களைப் போன்று நிலத்தடி நீர்வளமாக காணப்படுகின்றமையும், நீரானது கடினத்தன்மையுள்ளதாக காணப்படுகின்றமையாகும். மற்றும் ஏறக்குறைய பெரும்பாலான மக்கள் நிலத்தடி நீரினை தமது அன்றாடத் தேவைக்காகப் பாவிக்கின்றனர். மற்றும் நீரின் கடினத்தன்மை பிரதேசத்திற்குப் பிரதேசம் வேறுபடுவதோடு நீரின் கடினத்தன்மையானது விவசாயிகளில் ஏற்படும் நாடப்பட்ட சிறுநீரக செயலிழப்பிற்கு நேர்விகித சமனாகவுள்ளது. 2. வடமாகாணத்தின் பெருமளவு நிலம் பாதிக்கப்பட்ட ஏனைய பிரதேசங்களைப் போன்று உலர்வலயத்தில் காணப்படுகின்றமையும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான மக்கள் விவசாயம் மற்றும் அதனோடு சார்ந்த தொழில்களை மேற்கொள்பவர்கள். 3. அண்மைக்காலமாக யுத்தம் நிறைவடைந்த பின்னர் குறிப்பாக பொருளாதாரத்தடை நீக்கப்பட்ட பின்னர் வடக்கிலுள்ள விவசாயப் பெருமக்கள் அளவுக்கதிகமான அசேதனப் பசளைகள், பீடைகொல்லி மற்றும் களைகொல்லிகளை பாவித்து வருகின்றனர் யுத்த காலத்தில் 30வருட காலமாக இப்பாவனை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அல்லது முற்றாக இல்லாமல் இருந்தது. 1977ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கை காரணமாவும் மகாவலித் திட்டம் காரணமாகவும் வடமத்திய மாகாணத்தில் உரப்பாவனை அளவுக்கதிகமாக அதிகரித்ததன் விளைவே 1990ம் ஆண்டு மதவாச்சிப் பகுதியில் முதலாவதாக விவசாயி ஒருவருக்கு நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் கண்டுபிடிக்கப்பட்டது. யுத்த காலத்தில் இருந்த மட்டுப்படுத்தப்பட்ட உரப்பாவனை காரணமாகவே வடமாகாண மக்கள் இன்னமும் இந்நோயின் தாக்கத்திற்கு உள்ளாகவில்லை, ஆனால் வவுனியாவின் தென்பகுதியில் உள்ள சில பிரதேசங்களில் இந்நோய் பரவியுள்ளது இனங்காணப்பட்டுள்ளது. இதன் மூலம் தெளிவாக விளங்குவது எனில் கடந்த 30 வருடங்களாக நாம் யுத்தம் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விவசாய இரசாயனப் பொருட்களை பாவித்த காரணத்தினாலேயே நாம் இன்னமும் பாதிப்படையவில்லை, மற்றும் இந்நோயானது 12 தொடக்கம் 15 வருடங்களின் பின்பே வெளித்தெரியவரும். ஏன் எனில் பார உலோகங்களான ஆசனிக்கு, கட்சியம் போன்றன மெதுவான வீதத்திலேயே உடலில் சேர்கின்றமையும் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் இறுதிக்கட்டத்திலேயே கண்டுபிடிக்கப்படுகின்றமையும் ஆகும். 4. இன்றைய வடமாகாண சனத்தொகையில் பெரும்பான்மையினர் பெண்கள் ஆனால் விவசாயிகளில் ஏற்படும் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பானது பெரும்பாலும் பெண்களைவிட ஆண்களையே பாதிக்கும். குறிப்பாக 50 தொடக்கம் 60 வயதில் உள்ளவர்களை பாதிக்கும். ஏற்கனவே போரினால் ஆண்களை அதிகளவில் இளந்துள்ள வடமாகாணம் இன்று நடைபெறும் அதிகரித்த விவசாய இரசாயனப் பொருட்களின் பாவனை காரணமாக எதிர்வரும் 12 தொடக்கம் 15 வருடங்களின் பின்பு குறிப்பாக உழைக்கும் குடும்பத் தலைவர்களின் உயிரிழப்பை அல்லது நோய்வாய்ப்பட்ட இயலாத நிலமையை எதிர்கொள்ள நேரிடும். இதன் காரணமாக குடும்பங்களின் பொருளாதாரநிலை மேலும் சரிவடையும். 5. வடமாகாணத்தில் தற்பொழுது கசிப்புப் போன்ற சட்டவிரோத மதுபாவனை அதிகரித்துள்ளது. அத்தோடு வடமாகாணத்தில் பலபிரதேசங்களில் புகையிலை பயிரிடப்பட்டு நுகரப்படுகின்றது. இதன்போது பூச்சி கொல்லிகள் புகையிலையின் மீது நேரடியாக விசிறப்பட்டு கழுவப்படாமல் உடலை அடைகின்றது. இவ்விரு காரணிகளும் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பை விவசாயிகளில் ஏற்படுத்தும் சாத்தியக் கூறு அதிகம். 6. கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய போரினால் மோசமாக பாதிக்கப்பட்ட மாவடடங்களில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் உளச் சோர்வு (Depression) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் உடல் உபாதைகளிற்காக புரூவன் (Brufen) போன்ற வலி நிவாரணிகளை (NSAIDs) வைத்திய ஆலோசனை இன்றி பாவிக்கின்றனர். இம்மாத்திரைகள் காலப்போக்கில் சிறுநீரக செயலிழப்பிற்கு வித்திடும். 7. வடமத்திய மாகாணத்தில் உள்ள மக்கள் தான் இந்த நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயினால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு உற்பத்தி செய்யப்படும் மரக்கறிவகைகள், நெல், சோளம், நன்னீர் மீன்கள் போன்றவற்றில் இந்நோயினை ஏற்படுத்தும் ஆசனிக்கு மற்றும் கட்மியம் போன்ற பார உலோகங்கள் நேரடியாகவோ அல்லது உணவுச் சங்கிலி மூலமாகவோ நிச்சயம் செறிந்து இருக்கும். உலக சுகாதமார நிறுவனத்தின் ஆராய்ச்சி முடிவுகளின்படி வட மத்திய மாகாணத்தில் உள்ள நன்னீர் மீன்கள் (திலாப்பியா) தாமரைக்கிழங்கு, சிலவகை அரிசி என்பவற்றில் இப்பார உலோகங்கள் காணப்பட்டுள்ளது. எனவே வடமத்திய, வடமேல் மாகாணங்களில் உற்பத்தி செய்யப்படும் ஏனைய மரக்கறிவகைகள் என்பவற்றில் இப்பார உலோகங்கள் அல்லது பூச்சி கொல்லிகள் காணப்படாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை. 8. இந்நோயின் பாதிப்பு, வராமல் தடுப்பதற்குரிய வழிமுறைகள் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் ஏற்பட்டு விட்டால் மருத்துவ சிகிச்சைகளின் மூலம் இந்நோயினை முற்றாக குணமாக்க முடியாது. சிறுநீரகத்தின் செயற்பாடு செயலிழக்கும் வீதத்தினை குறைக்கலாம். செலவுமிக்க சிறுநீரக மாற்றீட்டு அறுவைச் சிகிச்சையையே இந்நோயினை முற்றுமுழுதாக குணமாக்கவல்லது. இக்காரணங்களினால் இந்நோயினை வருமுன் காப்பதே சிறந்தது ஆகும். இந்நோயில் இருந்து எம்மை பாதுகாக்க நாம் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் அவையாவன. 1) தேவையான அளவில் அசேதன பசளைகள், பீடைகொல்லிகள், மற்றும் பூச்சி கொல்லிகள் என்பவற்றை பாவித்தல் அல்லது முற்றாக பாவித்தலை தடைசெய்தல். 2) அசேதனப் பசளைகளிற்கு பதிலாக இயற்கயான பசளைகளை பாவித்தல். 3) இரசாயன பீடைகொல்லிகள் மற்றும் பூச்சி கொல்லிகள் என்பவற்றை பாவிப்பதற்க பதிலாக இயற்கையான முறைகள் மூலம் அல்லது உயரியல் கட்டுப்பாட்டு முறை மூலம் அவற்றை கட்டுப்படுத்தல். 4) விவசாயிகளுக்கு போதிய அறிவுட்டற் செயற்பாடுகளை செய்தல். குறிப்பாக அசேதன பசளைகளை அளவோடு பாவித்தல், பூச்சி நாசினிகளை விசிறும்போது கையுறை, காலணி, முகமூடி என்பவற்றை அணிதல். 5) புகையிலை மற்றும் கசிப்பு பாவனையை கட்டுப்படுத்தல். 6) உள்ளுரில் இயற்கை பசளைகளை கொண்டு உற்பத்தி செய்யப்படும் மரக்கறிவகைகள் மற்றும் பழவகைகளின் உற்பத்தி மற்றும் விற்பனையை ஊக்குவித்தல். 9. முக்கிய கேள்வி ஏன் ஒருசிலர் மட்டும் பாதிக்கப்படுகின்றனர்? உதாரணமாக ஒரு குடும்பத்தினர் ஆண்டாண்டு காலம் ஒரு இடத்தில் வசித்து தமது கிணற்று நீரினை பருகும் பொழுது ஏன் அக்குடும்பத்தில் ஒருவர் மட்டும் இந்த நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நாட்பட்ட சிறுநீரக செயலிப்பிற்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. இந்த ஒரு காரணி மட்டும் தான் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயினை உருவாக்கியது என்று திட்ட வட்டமாக கூறமுடியாது. உதாரணமாக அதிக நேரம் வெயிலில் இருக்கின்ற தன்மை, பிறப்பு நிறை குறைவாக இருக்கின்றமை, பாரம்பரியம், சிறுநீரக பாதிப்பினை ஏற்படுத்தும் மருந்துகளின் பாவனை, சிறுவயதில் அடிக்கடி ஏற்படும் கிருமி தொற்றுக்கள் … என பல்வேறு தனிநபருக்குரிய காரணிகள் ஒருவருக்கு நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு செயலிழப்பு நோய் ஏற்படுவதினை தீர்மானிக்கும். 10. ஆறுதல் தரும் விடயம் 2017ம் ஆண்டு மேற்படி நோய் நிலவும் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட நீர் வழங்கும் வசதிகள் மற்றும் எடுக்கப்பட்ட தடுப்பு வசதிகள் காரணமாக 2024ம் ஆண்டு வட மத்திய மாகாணத்தில் குறித்த நோயாளர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படத்தொடங்கியுள்ளது. மேலும் வழங்கப்படும் மருத்துவ வசதிகள் காரணமாக நோயாளர்களின் ஆயுட் காலமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் குறித்த நோயின் காரணமாக சிறுநீரகங்களின் செயற்பாடு குறித்த அளவு குறைந்த குறைந்த பின்னரே நாட்பட்ட சீறுநீரக செயலிழப்புக்கான அறிகுறிகள் எம்மில் வெளித்தெரிய வரும் எனவே அவதானத்துடன் இருப்போம். வரும் முன் காப்போம். நன்றி அதீத செயற்கைவழி விவசாயமும் நாட்பட்டசிறுநீரக செயலிழப்பு நோயும்
-
இயற்கையைப் போற்றுகின்ற தைத்திருநாளில் மண்பானைகளில் பொங்கல் இடுவோம் - பொங்கல் பொதிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஐங்கரநேசன் அழைப்பு
இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு பெருவிழாவில் அலுமினியப் பானைகள் பொருத்தம் இல்லாதவை. உடல் நலத்துக்குக் கேடானதாகவும் உள்ளன. எனவே இயற்கையைப் போற்றுகின்ற இத்தைத்திருநாளில் மண்பானைகளில் பொங்கல் இடுவோம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் அழைப்பு விடுத்துள்ளார். அலுமினியப் பாத்திரங்களைச் சுத்தம் செய்யும்போது பாதுகாப்புப்படலம் தேய்வடைந்து உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. சமைக்கப்படும் உணவுப் பொருளின் அமில, கார இயல்பு, சேர்க்கப்படும் உப்பு, சமைக்கும் வெப்பநிலை ஆகியனவற்றைப் பொறுத்து அலுமினியம் உணவுடன் கலப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. உடலில் சிறுகச் சிறுகச் சேரும் அலுமினியம் மூளை நரம்புகளைப் பாதிக்கிறது. இதனால் நினைவாற்றலும் பேச்சுத் திறனும் தடைப்படுகிறது. ஏற்கனவே சிறுநீரக நோயுடையவர்களின் சிறுநீரகங்கள் மேலும் பாதிப்படைவதோடு எலும்புகளும் பலம் இழப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளன. மண்பானைகள் அவற்றின் மேற்பரப்பில் இயற்கையாகவே உள்ள நுண்ணிய துவாரங்கள் வழியாக வெப்பத்தைப் பரப்பி உணவைச் சீராக வேகவைக்கிறது. மெதுவாகவே சூடுபடுத்துவதால் உணவில் போசணைப்பொருட்களின் அழிவு மட்டுப்படுத்தப்படுகிறது. மண் கார இயல்பு கொண்டதால் உணவில் அமிலத் தன்மையைச் சமன் செய்கிறது. சமைக்கும்போது மண்ணிலிருந்து கனியுப்புகள் உணவுடன் சேர்வதால் உணவின் போசணைப்பெறுமானம் அதிகரிக்கிறது. இவற்றோடு உணவின் வாசனையுடன் மண்ணின் வாசனையும் சேர்ந்து கொள்ள உணவுக்குத் தனியானதொரு சுவையும் கிடைக்கிறது. இவ்வளவும் எமது அவசர/வேகமாக சமையல் செய்யவேண்டும் என்பதால் ஏற்படுகிறது.
-
இந்தியா - நியூசிலாந்து ஒருநாள், டி20 கிரிக்கெட் போட்டித் தொடர்
மூவகை சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் வரிசையில் விராத் கோஹ்லி இரண்டாம் இடம் 12 Jan, 2026 | 07:24 PM (நெவில் அன்தனி) மூவகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிகூடிய மொத்த ஓட்டங்களைப் பெற்றவர்கள் வரிசையில் இலங்கையின் குமார் சங்கக்காரவை முந்திச்சென்ற விராத் கோஹ்லி, அந்த பட்டியலில் டெண்டுகல்கருக்கு அடுத்ததாக இரண்டாம் இடத்தில் இருக்கிறார். நியூஸிலாந்துக்கு எதிராக வரோதரா, கோட்டம்பி விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமையன்று (11) மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியல் அரைச் சதம் குவித்து இந்தியாவை வெற்றிபெறச் செய்து சாதனை ஏடுகளில் தனது பெயரை பதித்துக்கொண்டார். டெஸ்ட், சர்வதேச ஒருநாள், சர்வதேச ரி20 ஆகிய மூன்றுவகை கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் வரிசையில் சச்சின் டெண்டுல்கர் 664 போட்டிகளில் 782 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடி 100 சதங்கள், 164 அரைச் சதங்களுடன் 34357 ஓட்டங்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார். அவரைவிட 127 போட்டிகள் குறைவாக விளையாடியுள்ள விராத் கோஹ்லி இரண்டாம் இடத்தில் உள்ளார். 557 போட்டிகளில் 624 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடியுள்ள விராத் கோஹ்லி 84 சதங்கள், 146 அரைச் சதங்களுடன் 28068 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். குமார் சங்கக்கார 594 போட்டிகளில் 666 தடவைகள் துடுப்பெடுத்தாடி 63 சதங்கள், 153 அரைச் சதங்களுடன் 28016 ஓட்டங்களைப் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் விராத் கோஹ்லி 93 ஓட்டங்களைப் பெற்று இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். இந்தப் போட்டியின்போது சிரேஷ்ட வீரர்களான விராத் கோஹ்லியும் ரோஹித் ஷர்மாவும் கௌரவிக்கப்பட்டனர். இந்தியா சார்பாக விராத் கோஹ்லி 18 வருடங்களாகவும் ரோஹித் ஷர்மா 19 வருடங்களாகவும் விளையாடி வருகின்றனர். மூவகை சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் ஷர்மா 20074 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக அமைந்த ஆடுகளத்தில் நியூஸிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 301 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 49 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 306 ஓட்டங்களைப் பெற்று 4 விக்கெட்களால் வெற்றியீட்டியது. மிகவும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடிய விராத் கோஹ்லி 2ஆவது விக்கெட்டில் ஷுப்மான் கில்லுடன் 118 ஓட்டங்களையும் 3ஆவது விக்கெட்டில் ஷ்ரேயஸ் ஐயருடன் 77 ஓட்டங்களையும் பகிர்ந்தார். ஷுப்மான் கில் 56 ஓட்டங்களையும் ஷ்ரேயஸ் ஐயர் 49 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்களை விட கே.எல் ராகுல் ஆட்டம் இழக்காமல் 29 ஓட்டங்களையும் ஹர்ஷித் ரானா 29 ஓட்டங்களையும் ரோஹித் ஷர்மா 26 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் கைல் ஜெமிசன் 41 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 300 ஓட்டங்களைப் பெற்றது. டெரில் மிச்செல் 84 ஓட்டங்களையும் ஹென்றி நிக்கல்ஸ் 62 ஓட்டங்களையும் டெவன் கொன்வே 56 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மொஹம்மத் சிராஜ் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்ராசித் கிரிஷ்ணா 60 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹர்சித் ராணா 65 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: விராத் கோஹ்லி மூவகை சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் வரிசையில் விராத் கோஹ்லி இரண்டாம் இடம்