Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 11 Nov, 2025 | 12:20 PM கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக மாணவர்களினால் சமத்துவமும் உரிமைகளும் நிறைந்த எதிர்காலத்தை நோக்கி என்ற தொனிப்பொருளில் வீதி நாடகம் ஒன்று செவ்வாய்க்கிழமை (11) காலை திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்கு முன்பாக நிகழ்த்தப்பட்டது. இதில் பெண்கள், சிறுவர்கள் மற்றும் மாற்றுப் பாலினம் ஆகியோரின் உரிமைகள் தொடர்பாக பேசப்பட்டது. தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் இடம்பெற்ற குறித்த விழிப்புணர்வு வீதி நாடகம் மத்திய பேரூந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நிகழ்த்தப்பட்டிருந்தது. https://www.virakesari.lk/article/230074
  2. 11 Nov, 2025 | 03:35 PM வடமாகாணத்தில் அதிகரித்துள்ள வெற்றிலை பாவனையால், அதற்கு பயன்படுத்தப்படும் ஆபத்தான சுண்ணாம்பினால் ஆறு சிறுவர்களின் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் நால்வர் முற்றாக பார்வையிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் கண் மருத்துவ நிபுணர் எம். மலரவன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கண்களில் கல் போன்ற பிறபொருட்கள் உட்புகும்போது அதற்கு முலைப்பாலையோ, சேவலின் குருதியையோ கண்களில் விடவேண்டாம். இதை செய்வதால் கிருமித் தொற்று காரணமாக நிரந்தரமாக பார்வை இல்லாமல் போகும் அபாயம் உள்ளது. அத்தோடு மயிர்க்கொட்டி தாக்கம் காரணமாக கண்கள் பாதிக்கப்படுகின்றன என்றார். https://www.virakesari.lk/article/230066
  3. 11 Nov, 2025 | 11:06 AM யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சொத்து குவிப்பு குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆனைப்பந்தி பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவரின் விற்பனை நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை (10) சோதனை நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் அனுமதிக்கமைய குறித்த சோதனை நடத்தப்பட்டது. சட்டவிரோதமாகச் சொத்துச் சேர்த்த சிலருக்கு எதிராக, யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் ஒருவரின் கையடக்க தொலைபேசிக்கு இன்னொருவரிடம் இருந்து கைத்துப்பாக்கியின் புகைப்படம் அனுப்பபட்டிருந்தமை பொலிஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனொரு கட்டமாக குறித்த நபரின் விற்பனை நிலையத்தில் சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/230063
  4. "முழு நாடுமே ஒன்றாக" போதைப்பொருள் சுற்றிவளைப்பில் பலர் கைது! Published By: Digital Desk 1 11 Nov, 2025 | 10:46 AM நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர்ச்சியான, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று திங்கட்கிழமை (10) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய, 732 கிராம் ஹெரோயின், 583 கிராம் ஐஸ், 2 கிலோகிராம் 160 கிராம் கஞ்சா, 18 கஞ்சா செடிகள், 28 கிராம் குஷ்ரக போதைப்பொருள், 53 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 5387 போதை மாத்திரைகள் மற்றும் 636 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. அதேநேரம், குறித்த போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 1,060 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம், 1,066 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், மறுவாழ்வு நிலையங்களுக்கு 24 பேர் அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/230057
  5. Published By: Digital Desk 1 11 Nov, 2025 | 11:43 AM டெல்லியில் செங்கோட்டை அருகே கார் வெடித்து விபத்து ஏற்பட்டதை அடுத்து இராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோர பகுதியில் மற்றும் முக்கிய சுற்றுலா தலங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் பக்தர்கள் அதிகம் கூடும் முக்கிய கோவில்களில் ஆயுதம் ஏந்திய பொலிஸார் மற்றும் வெடிகுண்டுகளை கண்டறியும் மோப்பநாய் உதவியுடன் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடி விபத்து ஏற்பட்டதை அடுத்து இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இராமநாதபுரம் இராமேஸ்வரம் மற்றும் ஏர்வாடி தர்கா ஆகிய இரண்டும் வெளிமாநிலங்களை சேர்ந்த அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் பகுதி என்பதால் ராமேஸ்வரம், ஏர்வாடி தர்கா, ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் உயர் அதிகாரியின் உத்தரவின் பேரில், இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இன்று மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர், மேலதிக பொலிஸ் கண்காணிப்பாளர், பிரதி பொலிஸ் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைவரும் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் 23 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது. இராமேஸ்வரம் மற்றும் ஏர்வாடி தர்கா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் விடுதிகள் மற்றும் அரச விடுதிகளில் 12 குழுக்கள் அமைத்து தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், விடுதிகளில் உள்ள நபர்களை விலாசம் மற்றும் அவர்களின் ஆதார் இலக்கம் உள்ளிட்டவற்றை ஒவ்வொரு அறையிலும் தங்கியுள்ள சுற்றுலா பயணிகளிடம் விசாரித்து வருகின்றனர். மேலும் இராமநாதபுரம், இராமேஸ்வரம், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் 25 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறது. கர்நாடகா, கேரளா, ஆந்திரா, டெல்லி, ஜார்கண்ட் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ராமேஸ்வரம் வரும் பதிவெண் கொண்ட வாகனங்கள் முழுமையான சோதனைக்கு பின்னர் ராமேஸ்வரத்திற்குள் அனுமதிக்கின்றனர். 15 ரோந்து வாகனங்கள் கண்காணிப்பு பணியில் தொடர்ந்தும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு மாநிலங்களில் இருந்து ரயில்கள் வந்து செல்வதால் “தேவசேனா” என்ற வெடிகுண்டு கண்டறியும் நாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்புபிரிவு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் இராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் மற்றும் உத்தரகோசமங்கை கோயிலில் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடற்கரைப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த உளவுத்துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தனுஷ்கோடி உள்ளிட்ட முக்கிய கடல் பகுதிகளில் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படை மற்றும் கடலோர பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதுடன் உச்சப்புளி ஐஏஎஸ் பருந்து கடற்படை தளத்தில் உள்ள ஹெலிகாப்டர்கள் மூலமாக வான்வழி கண்காணிக்கப்பட்டு வருகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி, ஏர்வாடி ராமேஸ்வரம் ஆகிய மூன்று கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஏர்வாடி தர்கா சுற்றுவட்டார பகுதியில் இன்ஸ்பெக்டர் தலைமையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் தெரிவித்ததாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/230067
  6. இலங்கையில் மலையகத் தமிழர் மக்கள் தொகை சரிவு - இலங்கைத் தமிழர், முஸ்லிம் நிலை என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம் கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழ் 10 நவம்பர் 2025 இலங்கை அரசால் அண்மையில் வெளியிடப்பட்ட குடிசன, வீட்டு வசதிகள் தொகைமதிப்பு அறிக்கை தரவுகளின்படி மலையக தமிழர்கள் (இந்திய வம்சாவளித் தமிழர்கள்) குறைவடைந்துள்ளனர். இலங்கையில் இறுதியாக 2012-ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு அறிக்கையின் பிரகாரம், 8,39,504 மலையக தமிழர்கள் (இந்திய வம்சாவளித் தமிழர்கள்) இருந்தனர். ஆனால், 2024-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு அறிக்கையின்படி, 6,00,360 மலையக தமிழர்களே (இந்திய வம்சாவளித் தமிழர்கள்) பதிவாகியுள்ளனர். சிங்களர், இலங்கைத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் சனத் தொகையில் அதிகரிப்பு காணப்படுகின்ற போதிலும், மலையக தமிழர்களின் சனத் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை நாட்டில் பேசுபொருளாகியுள்ளது. 2012-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024ம் ஆண்டு நடாத்தப்பட்ட குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பில் மலையக தமிழர்கள் ஏன் குறைவடைந்துள்ளனர் என்பது உள்ளிட்ட 2024-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு அறிக்கை குறித்து பிபிசி தமிழ் இந்த கட்டுரையில் ஆராய்கின்றது. பட மூலாதாரம், The Department of Census and Statistics, Sri Lanka படக்குறிப்பு, ஆதாரம்: இலங்கை குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு-2024 குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு - 2024 2024-ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு அறிக்கையை, தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், நிதித் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அண்மையில் வெளியிட்டிருந்தது. இலங்கையில் 15வது தடவையாக இந்த குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு நடாத்தப்பட்டுள்ளது. இலங்கையில் முதல் தடவையாக விஞ்ஞான ரீதியான தொகை மதிப்பு 1871-ஆம் ஆண்டு நடாத்தப்பட்டுள்ளது. 15வது குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு 2021-ஆம் ஆண்டு நடாத்தப்படவிருந்த நிலையில், கோவிட் - 19 பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகிய காரணங்களால் இந்த நடவடிக்கை 2024-ஆம் ஆண்டு நடாத்தப்பட்டுள்ளது. இவ்வாறு நடாத்தப்பட்ட குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பின் பிரகாரம், இலங்கையில் இரண்டு கோடியே பதினேழு லட்சத்து அறுபத்து மூவாயிரத்து நூற்று எழுபது (2,17,63,170) பேர் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 2012-ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பில் அறிக்கையிடப்பட்ட மொத்த சனத் தொகையை விட, 2024-ஆம் ஆண்டு சனத் தொகை பதினான்கு லட்சத்து மூவாயிரத்து எழுநூற்று முப்பத்தொன்று (1,403,731) பேர் அதிகமாக உள்ளனர். 2001 முதல் 2012-ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் சனத் தொகை சராசரியாக வருடத்திற்கு 0.7 வீதத்தினால் காணப்பட்டதுடன், அந்த வளர்ச்சியானது 2012 முதல் 2024ம் ஆண்டு வரை 0.5 வீதமாக பதிவாகியுள்ளது. இதன்படி, இலங்கையின் சனத் தொகை குறைந்த வேகத்திலேயே வளர்ச்சியடைந்துள்ளதாக குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது, இலங்கையில் மாகாண ரீதியாக சனத் தொகையை கருத்திற் கொள்ளும் பட்சத்தில், முழு சனத் தொகையில் 28.1 வீதமானோர் மேல் மாகாணத்தில் வசிக்கின்றனர். 5.3 வீதத்தையும் விட குறைவானோர் தமிழர்கள் அதிகளவில் செறிந்து வாழும் வட மாகாணத்தில் வாழ்ந்து வருகின்றனர். அதிகளவான சனத் தொகையை கொண்ட மாவட்டமாக கம்பஹா மாவட்டம் (2,433,685) பதிவாகியுள்ளது. இரண்டாவது அதிக சனத் தொகையை கொண்ட மாவட்டமாக கொழும்பு மாவட்டம் ( 2,374,461) உள்ளது. இதேவேளை, சனத் தொகை குறைந்த மாவட்டங்கள் பட்டியலில் தமிழர்கள் அதிகளவில் செறிந்து வாழும் முல்லைத்தீவு (122,542), மன்னார் (123,674), கிளிநொச்சி (136,434) மற்றும் வவுனியா (172,257) ஆகிய மாவட்டங்கள் உள்ளன. எனினும், குறைவான சனத் தொகையை கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் 2.23 என்ற வீதத்திலான அதியுயர் வளர்ச்சி வீதத்தினை காண முடிகின்றது என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 0.01 எனும் குறைந்த வளர்ச்சி வீதத்தினை கொண்ட மாவட்டமாக வவுனியா மாவட்டம் பதிவாகியுள்ளது. பட மூலாதாரம், The Department of Census and Statistics, Sri Lanka படக்குறிப்பு, ஆதாரம்: இலங்கை குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு-2024 1871 முதல் 2024 வரையான சனத் தொகை வளர்ச்சி இலங்கையில் முதல் தடவையாக விஞ்ஞான ரீதியான சனத்தொகை மதிப்பு 1871-ஆம் ஆண்டு நடாத்தப்பட்டுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிடுகின்றது. இதன்படி, 1871-ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட சனத் தொகை மதிப்பின் பிரகாரம், இலங்கையில் 24,00,380 மக்கள் வசித்துள்ளனர். ஒவ்வொரு 10 வருடங்களுக்கு ஒரு முறை சனத்தொகை மதிப்பு செய்ய தீர்மானிக்கப்பட்டு வந்த பின்னணியில், அந்த செயற்பாடு 1931-ஆம் ஆண்டு வரை முறையாக நடாத்தப்பட்டுள்ளது. அதன்பின்னர் 1946ம் ஆண்டு சனத் தொகை மதிப்பு நடாத்தப்பட்டதுடன், அதன்பின்னர் 1953ம் ஆண்டு நடாத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, 1963, 1971, 1981ம் ஆண்டுகளில் முறையாக நடாத்தப்பட்ட நிலையில், 1981-ஆம் ஆண்டுக்கு பின்னர் அடுத்த கணக்கெடுப்பு 20 வருடங்கள் கழித்து 2001-ஆம் ஆண்டு நடாத்தப்பட்டது. உள்நாட்டு போர், கலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் சனத் தொகை மதிப்பு 20 வருடங்களுக்கு பிற்போட காரணமாக அமைந்திருந்ததாக கூறப்படுகின்றது. 2001-ஆம் ஆண்டுக்கு பின்னர் 2012ம் ஆண்டு மற்றும் 2024ம் ஆண்டுகளில் இந்த சனத் தொகை மதிப்பு நடாத்தப்பட்டது. 2021-ஆம் ஆண்டு நடாத்தப்பட வேண்டிய சனத் தொகை மதிப்பானது, கோவிட் - 19 பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களினால் 2024ம் ஆண்டுக்கு பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம், The Department of Census and Statistics, Sri Lanka படக்குறிப்பு, ஆதாரம்: இலங்கை குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு-2024 சனத் தொகை வளர்ச்சி வீதம் படிப்படியாக குறைய காரணம் என்ன? இலங்கையில் 153 வருட சனத் தொகை மதிப்பீட்டு வரலாற்றில் வருடாந்த வளர்ச்சி வீதம் பெரும்பாலும் படிப்படியாக குறைவடைந்து செல்வதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவிக்கின்றது. நாட்டில் இதுவரை நடாத்தப்பட்டுள்ள 15 முறையான சனத் தொகை மதிப்பீடுகளில் 1953-ஆம் ஆண்டு வருடாந்த சனத் தொகை வளர்ச்சி அதி உயர்ந்த வீதமாகிய 2.8 வீதமாக பதிவாகியுள்ளது. அதன்பின்னராக சனத் தொகை மதிப்பு அறிக்கைகளின் பிரகாரம், சனத் தொகையின் வருடாந்த வளர்ச்சி வீதம் படிப்படியாக குறைவடைந்து செல்கின்றது. 2012-ஆம் ஆண்டு சனத் தொகை மதிப்பில் 0.7 வீதமாக காணப்பட்ட சனத்தொகை வளர்ச்சி வீதம், 2024ம் ஆண்டு 0.5 வீதமாக குறைந்துள்ளது. இலங்கையில் சனத் தொகை வளர்ச்சி வீதம் குறைவடைவதற்காக பல்வேறு விடயங்களை தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் பட்டியலிட்டுள்ளது. நீண்ட காலமாக காணப்படும் குறைந்த பிறப்பு வீதம், அதிகமான இறப்பு வீதம் மற்றும் நாட்டில் வெளிநோக்கிய இடப் பெயர்வு அதிகரித்தல் போன்ற காரணங்கள் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் பட்டியலிடப்பட்டுள்ளன. அத்துடன், உரிய காலத்தில் பரவும் நோய்கள் மற்றும் தொற்று நோய் நிலைமைகள், போர் நிலைமைகள் போன்றவற்றை அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. எவ்வாறாயினும், சராசரி வருடாந்த சனத் தொகை வளர்ச்சி வீதத்தில் நேர்மறையான மதிப்பினை காட்டுவதன் மூலம் இலங்கையின் சனத்தொகை குறைந்த வீதத்திலேனும் படிப்படியாக வளர்ச்சியடைந்து நிலைமையை காண முடிகின்றது என சன தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிடுகின்றது. பட மூலாதாரம், The Department of Census and Statistics, Sri Lanka படக்குறிப்பு, ஆதாரம்: இலங்கை குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு-2024 சிங்களவர்களே நாட்டில் அதிகம் இலங்கையில் 2024ம் ஆண்டு குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பு அறிக்கையின் பிரகாரம், சிங்கள மக்களே அதிகளவில் காணப்படுகின்றனர். இலங்கையில் சிங்கள மக்களின் தொகை 1,61,44,037ஆக இம்முறை பதிவாகியுள்ளது. 2012ம் ஆண்டு அறிக்கையின் பிரகாரம், நாட்டிலிருந்த சிங்கள மக்களின் எண்ணிக்கை 1,52,50,081 ஆகும். 2012ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வளர்ச்சி வீதமானது, 0.4ஆக பதிவாகியுள்ளது. சிங்களவர்களுக்கு அடுத்தபடியாக இலங்கைத் தமிழர்கள் அதிகளவில் நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். 2012ம் ஆண்டு 22,69,266 ஆக காணப்பட்ட இலங்கைத் தமிழர்கள், 2024ம் ஆண்டு மதிப்பீட்டின் பிரகாரம், 26,81,627ஆக பதிவாகியுள்ளனர். 2012ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வளர்ச்சி வீதமானது, 1.3ஆக பதிவாகியுள்ளது. இலங்கை முஸ்லிம் மக்களின் தொகையானது, 2012ம் ஆண்டு 18,92,638ஆக காணப்பட்டது. அது 2024ம் ஆண்டு 22,83,246ஆக அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சியானது, 2012ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.5ஆக காணப்படுகின்றது. எனினும், மலையக தமிழர்களின் (இந்திய வம்சாவளித் தமிழர்கள்) சனத் தொகை வளர்ச்சியானது, 2012ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் -2.6 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. மலையக தமிழர்களின் (இந்திய வம்சாவளித் தமிழர்கள்) தொகையானது, 2012ம் ஆண்டு 8,39,504ஆக காணப்பட்டது. அது 2024ம் ஆண்டு 6,00,360ஆக பதிவாகியுள்ளது. நாட்டில் காணாமல் போன 2,39,144 மலையக தமிழர்கள் (இந்திய வம்வாவளித் தமிழர்கள்) 2012-ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பு தரவுகளுடன் ஒப்பிடுகையில், 2024ம் ஆண்டு 239,144 மலையக தமிழர்கள் (இந்திய வம்வாவளித் தமிழர்கள்) குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. மலையக பகுதிகளில் இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிப்பை காட்டி நிற்கின்ற நிலையில், அங்கு மலையக மக்களின் எண்ணிக்கை வீழ்ச்சியை காட்டுகின்றது. மலையக தமிழர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளமைக்கான காரணம் குறித்து பிபிசி தமிழ் ஆராய்வதற்காக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவரை தொடர்புக் கொண்டு வினவியது. ''நாம் சனத் தொகை மதிப்பீட்டில் முக்கியமாக இனம், மதம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலேயே தரவுகளை சேகரிப்போம். ஆவணங்களை பரிசோதனை செய்து, இனம், மதம் குறித்த தகவல்களை நாங்கள் பெற்றுக்கொள்வதில்லை. பிரஜைகள் சொல்கின்ற விடயங்களையே தரவுகளாக பதிவு செய்யுமாறு நாங்கள் எங்களது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தோம். அவர்கள் சொல்கின்ற விதத்திலேயே தரவுகளை பதிவு செய்யுமாறு கூறியிருந்தோம். கடந்த காலங்களில் பதிவு செய்யப்பட்ட இனங்கள், இம்முறை தரவு சேகரிப்பின் போதும் சேர்த்துக்கொள்வோம். இலங்கை தமிழர்கள் மற்றும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்ற விடயத்தில் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு இன்னுமொரு பெயரை உள்வாங்குமாறு அமைச்சு மட்டம் உள்ளிட்ட உயர் மட்டங்களில் எங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. அந்த இடத்தில் நாங்கள் ''மலையக தமிழர்கள்'' என்ற பெயரை உள்வாங்கினோம். உடனடியாகவே இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்பதை புறக்கணிக்க முடியாது என்பதனால், இந்திய தமிழர்கள், மலையக தமிழர்கள் என்ற இரண்டு பெயரையும் பயன்படுத்தினோம். இனங்களை தீர்மானிப்பதற்கும், இனங்களை வேறுபடுத்துவதற்கும் எங்களுக்கு அதிகாரம் கிடையாது. இதன்படி, நபர்கள் சொல்கின்ற விடயங்களை நாங்கள் அவ்வாறே பதிவு செய்துக்கொண்டுள்ளோம்.'' என தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் உயர் அதிகாரி குறிப்பிட்டார். மலையக பகுதிகளில் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளமைக்கான காரணம் என்னவென்பது குறித்தும் பிபிசி தமிழ், குறித்த அதிகாரியிடம் வினவியது. ''மலையக பகுதிகளில் இலங்கை தமிழர்கள் அதிகரித்துள்ளமைக்கான காரணம் தெரியாது. அது அவ்வாறே பதிவாகியுள்ளது.'' என அவர் குறிப்பிட்டார். இதேவேளை, 2023 ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட சுற்று நிரூபமொன்று குறித்தும் இதன்போது, குறித்த அதிகாரியினால், எமக்கு தெளிவூட்டப்பட்டது. ''இனங்களை குறிப்பிடும் போது இந்திய தமிழர்கள் அல்லது இலங்கை தமிழர்கள் என குறிப்பிடப்படுவதற்கான நியதிகள் என குறிப்பிடப்பட்டு சுற்று நிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளது. தரவுகளின் இனங்களை பதிவிடும் போது பதிவாளர் நாயகத்தினால் இந்த சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. பிரஜாவுரிமையை பெற்றுக்கொள்வதானது, ஒருவருடைய உரிமையாகும். அவர்களில் இந்திய தமிழர்களை இந்திய தமிழர்கள் என குறிப்பிடுவதுடன், அதற்கு முன்னரான இரண்டு பரம்பரையிலுள்ள பாட்டன், தந்தை ஆகியோர் இலங்கையில் பிறந்திருப்பார்களாயின், அவர்களை இலங்கை தமிழர்கள் என அடையாளப்படுத்த முடியும். இரண்டு பரம்பரையினர் இலங்கையில் பிறந்திருப்பார்களாயினும், அவர்கள் தமது விருப்பத்திற்கு அமைய, இலங்கை தமிழர்களாக தம்மை பதிவு செய்துக்கொள்ள முடியும். அத்துடன், நபரொருவர் தனது இனம் மற்றும் மதம் குறித்து அவர் சொல்கின்ற விடயங்களையே நாங்கள் பதிவு செய்துக்கொள்வோம்.'' எனவும் அவர் குறிப்பிட்டார். தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்கள அதிகாரிகளின் கருத்தின் படி, "மலையகத்தில் வாழ்கின்ற மலையக தமிழர்கள் தம்மை அடையாளப்படுத்தியுள்ள விதமே தரவுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மலையகத்தில் வாழ்கின்ற தமிழர்களில் ஒரு தொகுதியினர் தம்மை இலங்கை தமிழர்கள் என அடையாளப்படுத்தியுள்ளனர். ஏனையோர் தம்மை மலையக தமிழர்கள் என அடையாளப்படுத்தியுள்ளனர். அதனாலேயே, மலையக தமிழர்களின் எண்ணிக்கை 2012ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2024ம் ஆண்டு குறைவடைந்துள்ளது." என்று தெரியவந்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp97p7v583mo
  7. 11 Nov, 2025 | 09:52 AM மன்னாரில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் நேற்று திங்கட்கிழமை (10) நூறாவது நாளை எட்டியுள்ள நிலையில் இரவு 7.30 மணியளவில் தீப்பந்த எழுச்சி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டக் குழுவின் ஏற்பாட்டில்,அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தலைமையில் குறித்த தீப்பந்த எழுச்சி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் ஆண்கள்,பெண்கள்,போராட்டக் குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைதியான முறையில் கையில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு காற்றாலைக்கு தமது எதிர்ப்பை தெரிவித்தனர். மக்களையும், மக்களின் வாழ் விடங்களையும், நாட்டின் வளத்தையும், பாதுகாத்து வருங்கால சந்ததியினரிடம் கையளிக்கும் மாபெரும் வாழ்வுரிமைச் சாத்வீகப் போராட்டம் 100வது நாளை ஈட்டிய நிலையில், இன்னும் தொடரும் என தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் 100வது நாளை நினைவுகூரும் இந்நாளில், மூன்று காத்திரமான கோரிக்கைகளை மக்கள் சார்பில் முன் வைத்துள்ளனர். மன்னார் தீவில் முன்னெடுக்கப்படும் 14 காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை உடன் நிறுத்தி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்,மன்னார் தீவில் எந்த ஒரு இடத்திலும் கனிய மணல் அகழ்வுக்கு எந்த அனுமதியும் வழங்கக்கூடாது. அமைக்கப்பட்ட (தம்ப்பவனி நறுவிலிக்குளம்) 2 காற்றாலை உயர் மின் உற்பத்தி திட்டங்களினால் ஏற்பட்ட பாதிப்புக்களை உடன் நிவர்த்தி செய்தல் ஆகிய காத்திரமான 3 கோரிக்கைகளையும் அரசு தம் மக்களின் கோரிக்கை யாக ஏற்றுக்கொண்டு, மக்களின் விருப்பத்தை நிறை வேற்றுவதாக எழுத்து மூலம் அறிவிக்கும் பட்சத்தில், எங்களுடைய மக்களின் இந்த புனிதமான அறவழிப் போராட்டம் நிறைவுக்கு வரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். மேலும் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்ட தீப்பந்த எழுச்சி போராட்டம் நாளை முதல் கிராமங்கள் தோறும் இடம்பெறும் என போராட்டக்குழு சார்பாக அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/230044
  8. கொட்டாஞ்சேனை தூப்பாக்கிச் சூடு - மேலும் மூவர் கைது Nov 11, 2025 - 07:09 AM கொட்டாஞ்சேனை - 16 ஆம் ஒழுங்கை பகுதியில் கடந்த 17ஆம் திகதி துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உள்ளிட்ட மேலும் 3 பேர் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினால் வெல்லம்பிட்டி மற்றும் கிரான்ட்பாஸ் பகுதிகளில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. துப்பாக்கித்தாரிக்கு தங்குமிட வசதி மற்றும் வாகன உதவிகளை வழங்கிய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடம் இருந்து ஒரு முச்சக்கரவண்டியும், 2 கையடக்க தொலைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதானவர்கள் கொழும்பு 13 மற்றும் கிரான்ட்பாஸ் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு முன்னெடுத்து வருகின்றது. முன்னதாக குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்தில் கடந்த 9 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmhtwli6401igo29nwapdxb7u
  9. டெல்லி கார் வெடிப்பு: கார் எங்கிருந்து வந்தது? புலனாய்வு தீவிரம் பட மூலாதாரம், Getty Images 2 மணி நேரங்களுக்கு முன்னர் (இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது) டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே திங்கட்கிழமை மாலை காரில் வெடிப்பு ஏற்பட்டதில் குறைந்தது 8 பேர் உயிரிழந்ததாக டெல்லி காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வெடிப்பால் சுமார் 6 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. அருகே நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்களும் சேதமடைந்தன. வெடிப்பு ஏற்பட்ட காரிலும் பயணிகள் இருந்ததாக டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்ச்சா தெரிவித்தார். வெடிப்புக்கு என்ன காரணம் என்பது இன்னும் தெரியவில்லை, ஆனால் கார் எங்கிருந்து வந்தது? அதன் உரிமையாளர் யார் என்பன போன்ற விவரங்களை கண்டறியும் முயற்சியில் புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வெடிப்பைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இதுதொடர்பாக அனைத்து சாத்தியக்கூறுகளையும் மனதில் கொண்டு முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளார். படக்குறிப்பு, கார் வெடிப்பு நடந்த இடத்தைக் காட்டும் வரைபடமும், சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நேரில் கண்டது என்ன? பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் நேற்றிரவு பேசிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முகமது ஆசாத், சம்பவ இடத்திற்கு வந்தபோது குறைந்தது நான்கு உடல்கள் தரையில் இருப்பபதைக் கண்டதாக கூறினார். "உடல்களுக்கு அருகில் இருந்த வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. நானும் வேறு சில ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும் உடல்களை சேகரித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்." என்று அவர் கூறினார். பட மூலாதாரம், PTI டெல்லி காவல் ஆணையர் கூறியது என்ன? டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்ச்சா ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ''செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே மாலை 6.52 மணிக்கு கார் ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் அதில் பயணிகள் இருந்தனர்'' என கூறியுள்ளனர். Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது ஹெச்-1பி விசா: அமெரிக்காவின் புதிய முடிவு இந்தியர்களை அதிகம் பாதிக்கும் என்ற அச்சம் ஏன்? தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா இடையே ஆம்னி பேருந்துகள் நிறுத்தம் ஏன்? டெல்லி கார் வெடிப்பு: கார் எங்கிருந்து வந்தது? புலனாய்வு தீவிரம் டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பில் 8 பேர் பலி - அமித் ஷா கூறியது என்ன? End of அதிகம் படிக்கப்பட்டது "வெடிப்பு அருகிலுள்ள வாகனங்களையும் சேதப்படுத்தியது. எங்களுக்குத் தகவல் கிடைத்தவுடன், டெல்லி போலீஸ், என்ஐஏ மற்றும் என்எஸ்ஜி குழுக்கள் உள்ளிட்ட அனைத்து புலனாய்வு அமைப்புகளும் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை மதிப்பிட்டு வருகின்றன. வெடிப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றார். டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு கார் வெடிப்பைத் தொடர்ந்து, டெல்லியில் அரசு கட்டடங்கள், விமான நிலையங்கள் மற்றும் பல இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையான சிஐஎஸ்எஃப், சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவில், "செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஒரு வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து, டெல்லி மெட்ரோ, செங்கோட்டை, அரசு கட்டடங்கள் மற்றும் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் உள்பட தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) தங்களது பாதுகாப்பின் கீழ் உள்ள அனைத்து இடங்களிலும் அதிகபட்ச உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது." என்று தெரிவித்துள்ளது. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பாதுகாப்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. அமித் ஷா கூறியது என்ன? பட மூலாதாரம், Getty Images வெடிப்பைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சென்று பார்வையிட்டார். லோக்நாயக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் அவர் நேரில் சந்தித்தார். தொடர்ந்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், "என்எஸ்ஜி மற்றும் என்ஐஏ குழுக்கள், உள்துறை அமைச்சகத்தின் தடயவியல் குழுவினருடன்(FSL) உடன் இணைந்து, தற்போது முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளன. அருகில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்கள் மற்றும் பிற உபகரணங்களையும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார். "நான் டெல்லி காவல் ஆணையர் மற்றும் சிறப்புப் பிரிவு பொறுப்பாளரிடம் பேசினேன்; அவர்கள் சம்பவ இடத்தில் உள்ளனர். அனைத்து சாத்தியக் கூறுகளையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம், மேலும் அனைத்து சாத்தியக்கூறுகளையும் மனதில் கொண்டு முழுமையான விசாரணை நடத்தப்படும்" என்றும் அவர் கூறினார். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgk8vvd9n7o
  10. Nov 11, 2025 - 08:00 AM மாலைத்தீவு கடற்பரப்பிற்குள் அந்தநாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்ட இலங்கை மீனவப் படகில் போதைப்பொருள் இருந்தமையை மாலைத்தீவு பொலிஸார் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர். சட்டவிரோதமாக மாலைத்தீவு கடற்பரப்பிற்குள் நுழைந்த இந்த மீனவப் படகை, கடந்த 7ஆம் திகதி அந்நாட்டின் தேசிய பாதுகாப்புப் படையின் கடலோரக் காவல்படை அதிகாரிகள் கைப்பற்றினர். 'அவிஷ்க புத்தா' எனப்படும் குறித்த மீனவப் படகில் 355 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருள் இருந்ததாக மாலைத்தீவு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். அந்த படகில் இருந்த 5 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக மாலைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட மீனவர்கள் மற்றும் படகு தொடர்பில் மாலைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அந்நாட்டு நீதிமன்ற அனுமதியுடன் படகு நேற்று (10) விஷேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது படகிலிருந்த 24 பொதிகளில் இருந்து 58 கிலோ 600 கிராம் ஹெரோயினும், 297 கிலோ 300 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை, பொலிஸ் மற்றும் மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படை மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் அடிப்படையிலேயே இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக மாலைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 5 மீனவர்களும் 39, 42, 28, 34 மற்றும் 63 வயதுடைய இலங்கையர்கள் எனத் தெரியவந்துள்ளது. மாலைத்தீவு பாதுகாப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட இந்தப் போதைப்பொருள் தொகை, மாலைத்தீவு கடற்பரப்பிற்குள் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் சுற்றிவளைப்பாக பதிவாகியுள்ளது. அதேவேளை, மாலைத்தீவு பாதுகாப்புப் பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் போதைப்பொருள் தொகையை அந்நாட்டு சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்காக, போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் மற்றும் கடற்படையின் விஷேட குழுவொன்று மாலைத்தீவுக்கு சென்றுள்ளதுடன், அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவின் ஆலோசனையின் பேரில் விசாரணைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmhtyena801ihqplpyw437h3m
  11. அபிநய்: தனுசுடன் ஒரே படத்தில் அறிமுகமானவர் அதன் பிறகு என்ன ஆனார்? பட மூலாதாரம், @abikinger/Instagram 10 நவம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் அபிநய், சென்னையில் இன்று காலமானார். கல்லீரல் நோயால் அவதிப்பட்டுவந்த அவர், திங்கட்கிழமையன்று அதிகாலை காலமானார். செல்வராகவன் திரைக்கதையில் கஸ்தூரிராஜா இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடித்து வெளியான திரைப்படம் 'துள்ளுவதோ இளமை'. 2002-ஆம் ஆண்டில் வெளியான இந்தப் படம்தான் அவருக்கு முதல் படம். அந்தத் திரைப்படம் சில விமர்சனங்களைச் சந்தித்தாலும், மிகவும் கவனிக்கப்பட்ட படமாக அமைந்தது. தனுஷ் உட்பட அதில் நடித்திருந்த பலரும் வெகுவாக கவனிக்கப்பட்டார்கள். நாயகி ஷெரினுக்கு அதுதான் முதல் தமிழ் படம். தனுஷைப்போல, அபிநய்-க்கும் அதுதான் முதல் படம். விஷ்ணு என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார் அவர். துள்ளுவதோ இளமை படத்திற்குக் கிடைத்த வெற்றி, செல்வராகவன், தனுஷ், ஷெரின், அபிநய் ஆகியோருக்கு தமிழ்த் திரையுலகின் வாசலைத் திறந்துவிட்டது. பல மலையாளத் திரைப்படங்களில் நடித்திருந்த டி.பி. ராதாமணியின் மகன்தான் அபிநய். 'துள்ளுவதோ இளமை' இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது என்றாலும் இவர் நடித்து அடுத்தடுத்து வெளியான 'ஜங்க்ஷன்', 'சிங்காரச் சென்னை', 'பொன்மேகலை' ஆகிய திரைப்படங்கள் சரியாக ஓடவில்லை. இதற்குப் பிறகு 'சொல்லச் சொல்ல இனிக்கும்', 'பாலைவனச் சோலை' போன்ற படங்களில் சிறிய சிறிய பாத்திரங்களில் நடிக்கத் துவங்கினார் அபிநய். 'கையெட்டும் தூரத்', 'சித்ரகூடம்', 'வைரஸ்' போன்ற மலையாளத் திரைப்படங்களிலும் நடித்தார். ஆனால், தொடர்ந்து குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்கவில்லை. இதற்கிடையில் துபையில் சில ஆண்டுகள் பணியாற்றினார். இதற்குப் பின் சில விளம்பரப் படங்களில் நடித்தார் அபிநய். குறிப்பாக, ஒரு தேநீர் விளம்பரத்தில் அவருக்கு நல்ல கவனம் கிடைத்தது. பட மூலாதாரம், @abikinger/Instagram இதற்கிடையில் பின்னணிக் குரல் கொடுக்கும் கலைஞராக, பையா, துப்பாக்கி, காக்கா முட்டை போன்ற படங்களிலும் பணியாற்றினார். 'துப்பாக்கி'யில் வில்லனாக நடித்த 'வித்யூத் ஜம்வாலுக்கு குரல் கொடுத்திருந்தார். அதில் "I dont know who you are, where you are, Once I get to you, I will kill you" வசனமும் அதற்கு விஜய் சொல்லும் பதிலான, 'I'm waiting' என்ற வசனமும் திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில், அவரது தாயாருக்கு ஏற்பட்ட புற்றுநோய், அதற்கான சிகிச்சைகள் ஆகியவை தன்னை கடுமையாக பாதித்ததாக பேட்டிகளில் தெரிவித்தார் அபிநய். கோவிட் பரவலுக்கு சில நாட்களுக்கு முன்பாக அவரது தாயார் மறைந்தார். அதற்குப் பிறகு தீவிர மன அழுத்தத்திற்கு உள்ளானார் அபிநய். இதற்குப் பிறகு வாய்ப்புகளில் கவனம் செலுத்தாதது போன்ற காரணங்களால் பொருளாதார ரீதியாக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டார் அவர். அடுத்த சில ஆண்டுகளில் அவரது கல்லீரல் செயலிழந்தது. இதனால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் கூறிய நிலையில், கல்லீரலுக்காகக் காத்திருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில், நடிகர் கேபிஒய் பாலா உள்ளிட்டோர் அவருக்கு நிதி உதவி செய்தனர். ஆனால், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்துவந்த நிலையில், திங்கட்கிழமையன்று அவர் உயிரிழந்தார். இதற்குப் பிறகு அவரது உறவினர்கள் யாரும் வரவில்லையென அவரது வீட்டிற்கு வந்த திரையுலகினர் கூறினர். ஆனால், விரைவிலேயே அவரது தந்தை வழி உறவினர் ஒருவரும் தாய் வழி உறவினர் ஒருவரும் வந்திருந்து அவரது இறுதிச் சடங்குகளைச் செய்தனர். அபிநய் சமீபத்தில் 'கேம் ஆஃப் லோன்ஸ்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் வெளியான பிறகு தனக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்திருந்தார் அவர். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckg4p7y0dkqo
  12. அததெரண கருத்துப்படம்.
  13. 11 Nov, 2025 | 09:15 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) சபையில் தொடர்ந்தும் இடையூறு ஏற்படுத்திக்கொண்டிருந்தால் சபையில் இருந்து வெளியேற்ற நேரிடும் என்று சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன எதிர்க்கட்சி உறுப்பினர்களான சுஜீவ சேனசிங்க மற்றும் சுயேச்சைக்குழு உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் ஆகியோரை கடுமையாக எச்சரித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (10) வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் நாள் விவாதத்தின் போது, அமைச்சர் வசந்த சமரசிங்க உரையாற்றுகையில், சுஜீவ சேனசிங்க மற்றும் அர்ச்சுனா இராமநாதன் ஆகியோர் தொடர்ச்சியாக ஒழுங்குப் பிரச்சினைகளை எழுப்பிக்கொண்டிருந்த போதே சபாநாயகர் இவ்வாறு எச்சரித்தார். அமைச்சர் வசந்த சமரசிங்க வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் சுஜீவ சேனசிங்க ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பி எழுந்த போது, உங்களின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இதனால் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்ப முடியாது என்று சுஜீவ சேனசிங்கவுக்கு சபாநாயகர் கூறினார். எனினும் சுஜீவ சேனசிங்க தொடர்ந்தும் எழுந்து ஒழுங்கு பிரச்சினையை எழுப்பிக்கொண்டிருந்தார். இவ்வேளையில் தயவு செய்து நீங்கள் அமர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் இங்கே இடையூறுகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தால் உங்களை வெளியேற்ற நேரிடும் என்று எச்சரித்தார். இதேவேளை அர்ச்சுனா இராமநாதன் எம்.பியும் தொடர்ந்தும் ஒழுங்கு பிரச்சினையை எழுப்பிக்கொண்டிருந்தார். அது ஒழுங்குப் பிரச்சினை அல்ல. இதனால் அமைச்சரை தொடர்ந்தும் பேசுமாறு சபாநாயகர் கூறிக்கொண்டிருந்தார். இந்நிலையில் தொடர்ந்தும் அர்ச்சுனா எம்.பி ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிக்கொண்டிருந்த போது, நீங்களும் இடையூறு ஏற்படுத்திக்கொண்டிருந்தால் இங்கிருந்து வெளியேற்ற நேரிடும் என்று சபாநாயகர் கூறினார். https://www.virakesari.lk/article/230046
  14. ஒரே நபர் செய்திகளை வழங்குபவராக இருக்கலாம் அண்ணை. கற்கை மையம் என்பதை மையன் என்றும் எழுதி இருக்கிறார்கள்! "சட்டத்திற்கும் கொள்ளைகளுக்குமான" எழுத்துப்பிழை தான், கருத்து பொருத்தமாக இருக்கே!! சட்டத்துணையோடு நிலக்கொள்ளை, வளக்கொள்ளை தானே நடந்தது/நடக்குது!
  15. டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு: 10 பேர் பலி - பயங்கரவாதிகளின் சதிச்செயலா ? சிக்கிய 2 பேர் மீது தீவிர விசாரணை! 10 Nov, 2025 | 10:09 PM இந்தியாவின் தலைநகர் டெல்லியின் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் (Red Fort Metro Station) அருகே இன்று திங்கட்கிழமை (நவம்பர் 10, 2025) மாலை நிகழ்ந்த பயங்கர கார் வெடிப்புச் சம்பவத்தால் தலைநகர் முழுவதும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நிகழ்ந்த இந்த கோரச் சம்பவத்தில் 10 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பயங்கரவாதிகளின் சதிச்செயலாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் வாயில் எண் 1 அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று, இன்று மாலை 6:30 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த வெடி விபத்தில், அருகிலிருந்த வேன், ஆட்டோ மற்றும் கார் உட்பட 8 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் சிக்கி சேதமடைந்தன. லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் (LNJP) மருத்துவமனை நிர்வாகம், 8 பேர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், 24 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், சிகிச்சை தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த 7 தீயணைப்பு வாகனங்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தன. டெல்லி காவல்துறையின் உயர் அதிகாரிகள், தேசிய புலனாய்வு முகமை (NIA) மற்றும் தேசிய பாதுகாப்புப் படையினர் (NSG)உடனடியாக சம்பவ இடத்தை ஆய்வு செய்ய விரைந்துள்ளனர். வெடிப்புச் சம்பவம் நடந்த நேரமும், இடமும் சதிச்செயலுக்கான சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதனால், வெடிவிபத்துக்கான சரியான காரணம் குறித்த விசாரணையை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த ஆறு மாதங்களாக, ஜம்மு-காஷ்மீர் பகுதியில் இருந்து பயங்கரவாதிகளின் சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டு வரும் பின்னணியில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. குறிப்பாக, அண்மையில் ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புகளின் கூட்டுத் தாக்குதல் குறித்த உளவுத் தகவல்கள் வெளியாகியிருந்தன. கடந்த வாரத்தில், ஜம்மு-காஷ்மீர் மற்றும் அரியானாவில் மருத்துவர்கள் உட்பட சிலர், 360 கிலோவுக்கும் அதிகமான வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதேபோல், குஜராத்தின் அகமதாபாத்தில் ஆயுத விநியோகம் செய்ய முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த வெடிவிபத்து தொடர்பாகச் சம்பவ இடத்தில் இருந்து சிக்கிய 2 பேரிடம் டெல்லி காவல்துறை மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கார் யாருடையது, வெடிப்புக்கான காரணம் என்ன, இதன் பின்னணியில் பயங்கரவாத அமைப்புகளின் சதி ஏதும் உள்ளதா? என்ற கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது. சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் விவரங்களைக் கேட்டறிந்துள்ளார். டெல்லியின் முக்கியப் பகுதிகளான விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி மட்டுமின்றி, மும்பை, உத்தர பிரதேசம், காஷ்மீர் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் உஷார் நிலை தீவிரப்படுத்தப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/230038
  16. ஓர் எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வு! Nov 9, 2025 - 04:54 PM சட்டத்துக்கும் கொள்ளைகளுக்குமான யாழ்ப்பாணக் கற்கை மையத்தின் ஒழுங்கமைப்பில் 'அரசியற் தீர்வும் - பொறுப்புக் கூறலும் - ஓர் எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வு' மற்றும் நாட்டின் தற்போதைய முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் தீர்வு மற்றும் பொறுப்புக் கூறல் தொடர்பான அவசியமான கலந்துரையாடலையும் ஏற்பாடு செய்துள்ளது. இன்று (09) மாலை 4.00 மணிக்கு யாழ். தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகியது. குறித்த நிகழ்வில் மூத்த சட்டத்தரணி திரு. K.S இரத்தினவேல் சிறப்புரையாற்றவுள்ளதோடு இதனை தொடர்ந்து "தற்போதைய சூழலில் அரசியலமைப்புக்கேட்டின் அரசியல் தீர்வு பற்றித் தமிழரின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும்?" என்ற தலைப்பில், தமிழ் அரசியல் பரப்பில் உள்ள முக்கியத் தலைவர்கள் பங்கேற்கும் ஒரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான தருமலிங்கம் சித்தார்த்தன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன், கலாநிதி. குமாரவடிவேல் குருபரன் பங்கேற்கவுள்ளனர். குறித்த நிகழ்வில், சுவிசர்லாந்து தூதரக முதன்மைச் செயலாளர் ஐஸ்ரின், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத் தலைவர். பொ.ஐங்கரநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், செ.கஜேந்திரன், தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகளின் உறுப்பினர்கள், சிவில் சமூக உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmhrmloq601hho29nlp0u8ssc
  17. 10 Nov, 2025 | 04:24 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வவுனியாவில் இருந்து புளியங்குளம் வரையிலான 14 புகையிரத கடவைகளில் 12 கடவைகள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான சட்டவிரோத கடவைகளால் மஹவ முதல் ஓமந்தை வரையில் மணித்தியாலத்திற்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கவேண்டிய புகையிரதத்தால் குறிப்பிட்ட வேகத்தில் பயணிக்க முடியாத நிலைமை காணப்படுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, இலங்கை தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம், வடக்கு புகையிரத வீதியின் புகையிரதக் கடவைகள் தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். வடக்கு புகையிரத வீதியின் வவுனியாவில் இருந்து கிளிநொச்சி வரையான பகுதியில் உள்ள புகையிரதக் கடவைகள் பயன்படுத்தப்பட முடியாத வகையில் இருப்பது தொடர்பிலும், வவுனியா புளியங்குளம் பிரதேசங்களில் புகையிரத கடவைகள் கடுமையாக சேதமடைந்துள்ளமை தொடர்பிலும் மற்றும் அவற்றினூடாக பயணிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புகையிரத கடவைகளே சேதமடைந்த நிலையில் இருக்கின்றன. அந்த கடவைகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. பாதுகாப்பான புகையிரத பாதைகள் பொருத்தமான நிலைமையில் இருக்கின்றன. வவுனியாவில் இருந்து புளியங்குளம் வரையிலான 14 புகையிரத கடவைகளில் 12 கடவைகள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு கடவைகள் மட்டுமே பொலிஸாரால் பராமரிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் உள்ள சட்டவிரோத புகையிரதக் கடவைகளை அகற்ற வேண்டியுள்ளதால் அவை புகையிரத திணைக்களத்தால் பராமரிக்கப்படுவதில்லை. அவை பிரதேச மக்களால் கற்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. அவை தொடர்பில் புகையிரத திணைக்களத்தால் பொறுப்பேற்க முடியாது. இதேவேளை மஹவ – ஓமந்தை புகையிரத பாதை வேலைத்திட்டத்தின் கீழ் புகையிரத பாதைகள் புனரமைக்கப்பட்டுள்ளமையினால் புகையிரதங்கள் மணித்தியாலத்திற்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்தாலும் பாதுகாப்பற்ற வகையிலான கடவைகளால் அந்த வேகத்தில் பயணிக்க முடியாமையினால் அந்த கடவைகளை அகற்ற வேண்டியுள்ளது. ஆனால், மக்களின் போக்குவரத்துக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படுவது அவசியமாகும். இதன்படி புகையிரதப் பாதையில் இருந்து அருகிலுள்ள பாதுகாப்பான கடவை வரையில் சமாந்திரமான வீதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கலாம். அதேபோன்று கடவைகளில் மேம்பாலத்தை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கலாம் என்றார். https://www.virakesari.lk/article/229999
  18. செங்கோட்டைக்கு அருகில் ஏற்பட்ட வெடிப்பில் 8 பேர் பலி Nov 10, 2025 - 08:30 PM டெல்லி செங்கோட்டைக்கு அருகே இன்று மாலை கார் ஒன்று தீப்பற்றி வெடித்ததில் 8 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் 24 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டெல்லி செங்கோட்டை அருகே இன்று மாலை 6.30 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. அதன்பின்னர் அந்த கார் வெடித்து சிதறியது. இந்த பகுதி, மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாகவும் உள்ளது. சாந்தினி சவுக் சந்தை உள்பட பல முக்கிய பகுதிகள் இதனருகே அமைந்துள்ளன. இந்த சூழலில் கார் வெடித்து சிதறிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக தீயணைப்பு துறையினருக்கும், பொலிஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. எதற்காக கார் தீப்பிடித்தது. கார் வெடிக்கும் அளவுக்கு என்ன நடந்தது? யாருடைய கார் என்றும், எதற்காக இந்த பகுதிக்கு கார் கொண்டு வரப்பட்டது என்பது பற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் மாலை வேளையில் அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்களில் வேலை முடிந்து பலர் செல்ல கூடிய நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால், சதி வேலையாக இருக்க கூடும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ பகுதிக்கு சென்றன. வேன், ஆட்டோ மற்றும் கார் என 8-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் சிக்கி சேதமடைந்து உள்ளன. தீயை கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது. https://adaderanatamil.lk/news/cmht9rd7j01ifqplp3b0o3b17
  19. கோபமடைந்த பாகுபலி யானை! நாயைத் துரத்திய சிறுத்தை!
  20. பட மூலாதாரம், VEERU SINDHI 10 நவம்பர் 2025, 14:21 GMT புதுப்பிக்கப்பட்டது 3 நிமிடங்களுக்கு முன்னர் (இந்த செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகிறது) டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே திங்கட்கிழமை மாலை காரில் வெடிப்பு ஏற்பட்டதில் பலர் காயமடைந்தனர். இந்த வெடிப்பில் சிலர் உயிரிழந்ததை டெல்லி காவல் ஆணையர் உறுதி செய்துள்ளார். இருப்பினும் அவர் குறிப்பிட்ட இறப்பு எண்ணிக்கையை வழங்கவில்லை. மாலை 6:55 மணிக்கு இந்த வெடிப்பு தொடர்பாக தங்களுக்கு ஒரு அழைப்பு வந்ததாக தீயணைப்பு சேவை பிபிசியிடம் உறுதிப்படுத்தியது. செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே ஒரு காரில் வெடிப்பு ஏற்பட்டதாக தகவல் வந்தது என அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,SAJJAD HUSSAIN/AFP via Getty Images பட மூலாதாரம், ANI வெடிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து சுமார் 6 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. அருகே நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்களும் சேதமடைந்தன. 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டதாக தீயணைப்புத் துறை கூறுகிறது. படக்குறிப்பு, வெடிப்பில் காயமடைந்தவர்கள் எல்என்ஜேபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் டெல்லி காவல் ஆணையர் கூறியது என்ன? டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்ச்சா ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ''செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே சிவப்பு சிக்னல் காரணமாக மெதுவாகச் சென்ற வாகனம் மாலை 6.52 மணிக்கு நிறுத்தப்பட்டது. அப்போது வெடிப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் குறிப்பிட்ட வாகனத்தில் பயணிகள் இருந்தனர்'' என கூறியுள்ளனர். "வெடிப்பு அருகிலுள்ள வாகனங்களையும் சேதப்படுத்தியது. எங்களுக்குத் தகவல் கிடைத்தவுடன், டெல்லி போலீஸ், ன்ஐஏ மற்றும் என்எஸ்ஜி குழுக்கள் உள்ளிட்ட அனைத்து புலனாய்வு அமைப்புகளும் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை மதிப்பிட்டு வருகின்றன. வெடிப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றார். படக்குறிப்பு, வெடிப்பு ஏற்பட்டதில் சேதமடைந்த வாகனத்தின் ஒரு பகுதி இந்த சம்பவத்தில் சிலர் காயமடைந்ததாகவும், சிலர் இறந்ததாகவும் டெல்லி காவல் ஆணையர் உறுதிப்படுத்தியுள்ளார். "சிலர் காயமடைந்துள்ளனர், சிலர் இறந்துள்ளனர். சரியான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். இது குறித்து உள்துறை அமைச்சருக்கும் தொடர்ந்து தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. நிலைமை என்னவாக இருந்தாலும், விரைவில் உங்களுக்குத் தெரிவிப்போம்" என்றார். 'கட்டடத்தின் ஜன்னல் குலுங்கியது' பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, ராஜ்தர் பாண்டே அந்தப் பகுதி காவல் துறையால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனமான பிடிஐ தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் சிலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனமான ஏஎன்ஐ தெரிவித்துள்ளது. "நாங்கள் தீப்பற்றி எரிவதை பார்த்தோம்... நான் அதை என் மொட்டை மாடியில் இருந்து பார்த்தேன். அதன் பிறகு என்ன நடக்கிறது என்று பார்க்க கீழே வந்தேன். வெடிப்பு ஏற்பட்டபோது மிகவும் பலத்த சத்தம் கேட்டது. கட்டடத்தின் ஜன்னல் அதிர்ந்தது'' என அருகில் வசிக்கும் ராஜ்தர் பாண்டே ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். ''வெடிப்பு நடந்தபோது நான் கடையில் அமர்ந்திருந்தேன். திடீரென்று நான் இதற்கு முன்பு கேட்காத அளவுக்கு பலத்த வெடிப்பு சத்தம் கேட்டது. நான் மூன்று முறை விழுந்தேன். இதற்குப் பிறகு, அருகில் இருந்த அனைவரும் ஓடத் தொடங்கினர்" என்று செங்கோட்டை பகுதியில் கடை வைத்திருக்கும் ரெஹ்மான் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார் ஷார்ட் வீடியோ காணொளிக் குறிப்பு, செங்கோட்டை டெல்லியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி, இந்திய பிரதமர் இக்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3dn23y182lo
  21. ஒரே நாளில் 1,000 இற்கும் அதிகமான சுற்றிவளைப்புக்கள்; 1,284 பேர் கைது Nov 10, 2025 - 12:47 PM விஷப் போதைப்பொருட்களை நாட்டிலிருந்து அகற்றும் 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய நடவடிக்கையின் கீழ், நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில், கடந்த தினத்தில் மாத்திரம் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (09) ஆயிரம் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் 1,284 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 7 கிலோ 21 கிராம் ஹெரோயினும், 4 கிலோ 715 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தவிர, ஹஷிஷ், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் உள்ளிட்ட மேலும் பல போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட 16 சந்தேகநபர்களுக்குத் தடுப்பு காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 15 பேர் புனர்வாழ்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 12,000 இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். https://adaderanatamil.lk/news/cmhst7y8z01i0o29nohx71ze2
  22. சிறுநீரக நோய் பாதிப்பு அதிகரிப்பு - யாருக்கெல்லாம் வரும்? அறிகுறிகளும் தடுக்கும் வழிகளும் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் 10 நவம்பர் 2025, 02:22 GMT இந்தியாவில் 13.8 கோடி பேருக்கு சிறுநீரக நோய் பாதிப்பு இருப்பதாக சமீபத்திய லான்செட் இதழில் வெளியான ஆய்வறிக்கை கூறுகிறது. உலகளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான் சிறுநீரக நோய் பாதிப்புகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகம் பதிவாகியுள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1990-ஆம் முதல் 2023 வரையிலான தரவுகள் அடிப்படையில் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2023-ஆம் ஆண்டு உலகளவில் 20 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 78.8 கோடி பேருக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் பாதிப்பு இருந்தது. 20 வயதுக்கு மேலானவர்களில் 14% பேர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் மூன்று தசாப்தங்களில் உலகளவில் இந்த எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது. (1990-இல் 37.8 கோடி பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்) 2023-ஆம் ஆண்டு 14.8 லட்சம் பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் உயிரிழந்துள்ளனர். உலகளவில் அதிக மரணங்களை ஏற்படுத்திய நோய்களில் சிறுநீரக நோய் 9வது இடத்தில் உள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது. சீனாவில் 1,53,000 பேரும் இந்தியாவில் 1,24,000 பேரும் சிறுநீரக நோயால் உயிரிழந்துள்ளதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. உலகில் அதிகபட்சமாக சீனாவில் 15.2 கோடி பேரும், அதற்கு அடுத்த இடத்தில் உள்ள இந்தியாவில் 13.8 கோடி பேரும் நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதாரத்தில் முன்னேறிய, வளர்ந்த நாடுகளில் சிறுநீரக நோய் பாதிப்பு விகிதம் குறைவாக உள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் சிறுநீரக நோயால் இறப்பவர்களின் விகிதம் அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகவியல் துறை முன்னாள் தலைவரும், தற்போதைய தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலருமான மருத்துவர் கோபாலகிருஷ்ணனிடம் பிபிசி தமிழ் பேசியது. "சிறுநீரக செயலிழப்பு என்பது இரண்டு வழிகளில் நடைபெறுகிறது. ஒன்று திடீரென உடனே சிறுநீரகம் செயலிழப்பது, இரண்டாவது படிப்படியாக சிறுநீரகம் செயலிழப்பது. இதை தான் நாள்பட்ட சிறுநீரக நோய் என சொல்கிறோம். பெரும்பாலானவர்களுக்கு இந்த இரண்டாவது வகை பாதிப்பு தான் ஏற்படுகிறது." என்றார் அவர். படக்குறிப்பு, மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் கோபாலகிருஷ்ணன் மாறி வருகின்ற வாழ்வியல் முறைகளால் சிறுநீரக நோய் வருவதாக அவர் குறிப்பிட்டார். "நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன், அதிக அளவில் கலோரிகளை உட்கொள்வது மற்றும் குறைந்த அளவிலான உடல் சார்ந்த வேலைகள் ஆகியன சிறுநீரக கோளாறு ஏற்பட காரணமாக அமைகின்றன." எனத் தெரிவித்தார். சிறுநீரக நோயின் அறிகுறிகளை பட்டியலிட்ட அவர், ஆட்களைப் பொருத்து அறிகுறிகள் வேறுபடலாம் என்றும் தெரிவித்தார். அறிகுறிகள் என்ன? கால் மற்றும் தலை வீக்கம் சிறுநீர் வெளியேற்றம் குறைவது சோர்வு பசி வாந்தி ரத்த சோகை தூங்கும் முறை மாறுவது தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக எடுத்துக் கொண்டாலும் சிறுநீரக கோளாறு ஏற்படும் என்று அவர் கூறினார். யாரை அதிகம் பாதிக்கும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கட்டுமான பணியாளர்கள் (கோப்புப்படம்) விவசாயம், கட்டுமானம் போன்ற திறந்தவெளியில் பணிபுரியும் முறைசாரா தொழிலாளர்கள் தான் இதனால் அதிகமாக பாதிக்கப்படுவதாக கோபாலகிருஷ்ணன் கூறினார். "வெப்ப அழுத்தம், நாள்பட்ட நீரிழப்பு, காற்று மாசுபாடு மற்றும் ரசாயனங்களை நுகர்வது போன்ற காரணங்களால் சிறுநீரக நோய் ஏற்படுகிறது. நீண்ட நேரம் திறந்தவெளியில் வேலை செய்பவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் அவ்வப்போது நிழலில் இளைப்பாறுவதையும் சுத்தமான குடிநீர் எடுத்துக் கொள்வதையும் தவறாமல் செய்ய வேண்டும்," என்றார். இதய நோய்க்கும் சிறுநீரக நோய்க்கும் உள்ள தொடர்பு இதய நோயால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு சிறுநீரகம் செயலிழந்து போவதும் முக்கிய காரணமாக உள்ளதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. நீரிழிவு நோயும் உடல் பருமனும் நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு முக்கிய காரணிகளாக உள்ளன. சிறுநீரக பாதிப்பில் ஐந்து கட்டங்கள் இருக்கின்றன. பெரும்பாலானவர்கள் 1-3 கட்ட பாதிப்பிலே உள்ளனர். நாள்பட்ட சிறுநீரக நோயும் இதய நோயும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்கிறார் கோபாலகிருஷ்ணன். சிறுநீரக பாதிப்பு அதிகரிக்கையில் இதய நோய் ஆபத்தும் அதிகரிப்பதாக அவர் தெரிவித்தார். ஆய்வறிக்கையின் படி, வயது அதிகரிக்க அதிகரிக்க நோய் பாதிப்பும் கூடுகிறது. முதியவர்களிடம் மிகத் தீவிரமான கட்டம் காணப்படுகிறது. ஆனால் அதற்கு மாறாக வயது கூடக்கூட டயாலிசிஸ் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சை என்பது குறைகிறது. பரிசோதனை அவசியம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ரத்த பரிசோதனை (கோப்புப்படம்) சிறுநீரக நோய் பாதிப்பு உள்ளவர்களில் 30% பேருக்கு அது இருப்பதே தெரிவதில்லை என ஆய்வறிக்கை கூறுகிறது. "காலநிலை மாற்றத்தால் சராசரி வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகளால் சிறுநீரக நோய் ஏற்படும். உகந்த வெப்பநிலை இல்லாததால் சிறுநீரகத்தின் செயல் திறனும் நாளடைவில் குறையும்" என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஒவ்வொரு ஆண்டும் பரிசோதனை மேற்கொள்வது அவசியம். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, சிறுநீர் மற்றும் ரத்த பரிசோதனை மூலம் சிறுநீரக நோய் பாதிப்பை கண்டறிய முடியும். இதனை குறிப்பிட்ட இடைவெளிகளில் தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்." என்றார் கோபாலகிருஷ்ணன். சிகிச்சைகள் என்ன? சிறுநீரக நோய்க்கு டயாலசிஸ் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என இரண்டு வாய்ப்புகள் உள்ளன. டயாலிசிஸ் முறை செலவு அதிகம் என்றாலும் தற்போது பெரும்பாலான காப்பீடுகளின் கீழ் டயாலிசிஸ் சிகிச்சை கொண்டு வரப்பட்டுள்ளது, அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை வழங்கப்படுகிறது. யாரெல்லாம் சிறுநீரக தானம் செய்ய முடியும்? சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையைப் பொருத்தவரை, இரண்டு சூழல்களில் மட்டுமே ஒருவர் உறுப்பு தானம் செய்ய முடியும் என்கிறார் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலரான மருத்துவர் கோபாலகிருஷ்ணன். அவரது கூற்றுப்படி, ஒன்று சிறுநீரக தானம் செய்யும் நபர் நோயாளியின் குடும்ப உறுப்பினராக இருக்க வேண்டும் அல்லது நோயாளிக்கு மிகவும் நெருக்கமானவராக இருப்பதோடு மட்டுமல்லாது அதனை நிரூபிக்கவும் வேண்டும். அப்போது தான் அவரது சிறுநீரக தானம் ஏற்றுக்கொள்ளப்படும். இவை போக யாரேனு மூளைச் சாவு அடைகின்ற சமயங்களில் அவர்களின் குடும்பத்தினரின் சம்மதத்துடன் உடல் உறுப்புகள் மாற்றுக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்தப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டில் ட்ரான்ஸ்டான் என்கிற உறுப்பு மாற்று ஆணையம் உள்ளது. தடுக்கும் வழிகள் என்ன? பட மூலாதாரம், Getty Images ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சரியான உணவு பழக்கம் போன்ற, சிறுநீரக நோய் வராமல் தடுப்பதற்கான வழிகளையும் அவர் குறிப்பிட்டார். தினசரி 45 நிமிட நடை பயிற்சி உடல் பருமனை தவிர்ப்பது குறைவான அளவில் உப்பு மற்றும் சோடியம் எடுத்துக் கொள்வது பொட்டாசியம் அதிக அளவில் எடுத்துக் கொள்வது தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது அதிக அளவில் காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்துக் கொள்வது புகையிலை நுகர்வை தவிர்ப்பது - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn7epvpzd8lo
  23. மட்டக்களப்பில் செவ்வந்தி பாணியில் செயற்பட்டுவந்த போலி ஆண் சட்டத்தரணி ஒருவர் கைது Published By: Vishnu 10 Nov, 2025 | 12:39 PM மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் செவ்வந்தி பாணியில் ஆண் சட்டத்தரணிகள் அணியும் ஆடை போல அணிந்து உள்நுழைந்து வழக்காடி தருவதாக பொதுமக்கள் பலரிடம் பல இலட்சம் ரூபாவை மோசடி செய்ததுடன் சில சட்டத்தரணிகளையும் ஏமாற்றிய நடமாடி வந்துள்ள போலி சட்டத்தரணி ஒருவரை சனிக்கிழமை (08) ஒந்தாச்சி மடத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்ததுடன் சட்டத்தரணிகள், பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி தெரியவருவதாவது மாவட்டத்தில் உள்ள பிரதேசம் ஒன்றைச் சேர்ந்த பெண் ஒருவர் வீட்டில் தங்க ஆபரணங்கள் திருட்டு போன சம்பவம் தொடர்பாக மீட்கப்பட்ட தங்க ஆபரணங்களை நீதிமன்றில் இருந்து மீளப் பெறுவது தொடர்பாக மட்டக்களப்பு நீதிமன்றில் இடம்பெற்றுவரும் வழக்கு விசாரணைக்கு வழக்காடுவதற்கு நல்ல சட்டத்தரணி ஒருவரை தேடிய நிலையில் அவருக்கு அறிமுகமான ஒருவர் தனது வழக்காடிய நல்ல சட்டத்தரணி இருப்பதாக போலி சட்டதரணியின் தொலைபேசி இலக்கத்தை வழங்கியுள்ளார். இதனையடுத்து குறித்த பெண் அந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்ட நிலையில் போலி சட்டத்தரணி தான் அந்த தங்க ஆபரணங்களை மீட்டு தருவதாகவும் இதனை மிக விரைவாக மீட்பதற்கு நீதிமன்றத்தில் சிலருக்கு பணம் வழங்க வேண்டும் வழக்கு தொகையாக என 2 இலட்சம் ரூபாய் கோரியுள்ளார். அதற்கு குறித்த பெண் சம்மதித்து அவருக்கு முற்பணமாக ஒரு இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளது அடுத்து சில தினங்களின் பின்னர் கடந்த அக்டோபர் மாதம் வழக்கிற்கு நீதிமன்றத்துக்கு வருமாறு கடிதம் வந்துள்ளது இந்த நிலையில் போலி சட்டத்தரணி தான் முன்நகர்வு பத்திரம் தாக்கல் செய்ததை அடுத்து வழக்கிற்கு வருமாறு அழைப்பு கடிதம் வந்துள்ளதாக குறித்த பெண்ணிடம் தெரிவித்துள்ளார். அப்போது குறித்த பெண் நவம்பர் மாதம் திகதியிடப்பட்ட வழக்கை முன்கூட்டியே பணம் வழங்கி 3 தினங்களில் நீதிமன்றத்துக்கு வருமாறு அழைப்பு கிடைத்துள்ளது அவர் நல்ல சட்டத்தரணி என எண்ணிக் கொண்டார். இதனையடுத்து அங்குள்ள சட்டத்தரணி ஒருவருடன் தொடர்பு கொண்டு தான் கொழும்பு உயர் நீதிமன்ற சட்டத்தரணி என அறிமுகப்படுத்தி கொண்டு எனக்கு கல்முனை திருகோணமலை போன்ற உயர் நீதிமன்றங்களில் வழக்கு இருப்பதாகவும் தனது வாடிக்கையாளர் ஒருவரின் குறித்த வழக்கை எடுத்து நடாத்துமாறு கோரியதை அடுத்து அந்த சட்டத்தரணி அந்த வாடிக்கையாளரை என்னை சந்திக்க அனுப்புமாறு தெரிவித்துள்ளார். இதனையடுத்து குறித்த வழக்கு தொடர்பாக மட்டக்களப்பு நீதிமன்றத்தில் உள்ள குறித்த சட்டத்தரணியை பெண் சந்தித்து வழக்கு தொடர்பாக தெரிவித்ததையடுத்து 3 வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ தினமான வெள்ளிக்கிழமை (6) வழக்கு விசாரணைக்காக குறித்த பெண் மற்றும் போலி சட்டத்தரணி சென்றுள்ள நிலையில் ஏற்கனவே வழக்கிற்கு ஆஜராகிய சட்டத்தரணி இந்த போலி சட்டத்தரணி தொடர்பாக சந்தேகம் எழுந்ததையடுத்து அவரை அங்கிருந்து பதிவாளர் காரியாலயத்துக்கு அழைத்துச் சென்று இவர் சட்டத்தரணியா? என உறுதிப்படுத்துமாறு கோரியுள்ளார். அதனையடுத்து நீதிமன்ற பதிவாளர் போலி சட்டத்தரணியிடம் அடையாள அட்டையை கோரியபோது அவர் தனது வாகனத்தில் இருக்கிறது எடுத்து கொண்டு வருவதாக தெரிவித்து அங்கிருந்து சட்டத்தரணிகள் வாகனம் நிறுத்தும் பகுதிக்கு சென்று தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனை தொடர்ந்து இந்த போலி சட்டத்தரணி தொடர்பாக நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து பொலிசாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த போலி சட்டத்தரணி நேற்று சனிக்கிழமை இரவு ஓந்தாச்சி மடத்திலுள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். இதில் கைது செய்த போலி சட்டத்தரணி நீதிமன்றத்துக்கு வெளியில் சில சட்டத்தரணிகளை சந்தித்தும் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டும் தான் கொழும்பு உயர் நீதிமன்ற சட்டத்தரணி என (விசிட்டிங் காட்) அடையாளப்படுத்தும் அட்டையை காட்டி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு எனக்கு திருகோணமலை கல்முனை, வாழைச்சேனை போன்ற நீதிமன்றங்களில் வழக்கு இருப்பதாகவும் அங்கு ஆஜராக வேண்டியுள்ளதாக தான் ஒரு பிரபல சட்டத்தரணி போல வழக்குகள் அதிகமாக இருப்பது போல காட்டிக் கொண்டு தனது வாடிக்கையாளர்களின் வழக்கு விசாரணைகளுக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு கோரியுள்ளார் இவ்வாறு போலி சட்டத்தரணி தனது பல வாடிக்கையாளர்களை பல சட்டத்தரணிகளுக்கு வழங்கியுள்ளது டன் வாடிக்கையாளர்களிடம் தனது சிரேஷ்ட, கனிஷ்ட சட்டத்தரணிகள் என அறிமுகப்படுத்தி கொண்டு வழக்கு தொகையாக பல இலட்சம் ரூபாவை பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளார் என்றும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக சட்டத்தரணி போல நீதிமன்றத்திற்குள் தனது வாகனத்துடன் உள்நுழைந்து சட்டத்தரணிகள் வாகனம் நிறுத்தும் பகுதியில் தனது வாகனத்தை நிறுத்தி நீதிமன்ற வளாகத்திற்குள் நடமாடி வந்துள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது இதனை தொடர்ந்து சட்டத்தரணி என அடையாளப்படுத்தும் போலி வருகை அட்டை மற்றும் இறப்பர் முத்திரை, சட்டத்தரணி என வாகனத்துக்கு அடையாளப்படுத்தி ஒட்டப்படும் ஸ்டிக்கர், கறுப்பு கழுத்துப்பட்டி, கோட் சூட், வழக்குகளை கொண்ட 16 பையில்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதுடன் அவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டு பெரும் குற்ற தடுப்பு பிரிவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/229950
  24. பனோரமா ஆவணப்பட சர்ச்சை: பிபிசி பணிப்பாளர் நாயகம், செய்தி பொறுப்பாசிரியர் இருவரும் இராஜினாமா! 10 Nov, 2025 | 11:20 AM பனோரமா ஆவணப்படம் டொனால்ட் டிரம்பின் உரையைத் தவறாகத் திருத்தியதாக எழுந்த கடும் விமர்சனத்தையடுத்து, பிபிசியின் பணிப்பாளர் நாயகம் டிம் டேவி மற்றும் செய்தி பொறுப்பாசிரியர் டெபோரா டர்னஸ் ஆகியோர் இராஜினாமா செய்துள்ளனர். ஐந்து ஆண்டுகளாக பதவி வகித்த டேவி, பொது ஒளிபரப்பாளரைச் சூழ்ந்த தொடர்ச்சியான சர்ச்சைகள் மற்றும் சார்பு குற்றச்சாட்டுகளால் அதிக அழுத்தத்துக்கு உட்பட்டிருந்தார். தி டெலிகிராப் திங்களன்று வெளிவந்த பிபிசி உள்குறிப்பின் விபரங்களை வெளியிட்டது. அதில் பனோரமா நிகழ்ச்சி டொனால்ட் டிரம்பின் உரையின் இரண்டு தனித்தனி பகுதிகளை ஒன்றாக சேர்த்து திருத்தியதாக கூறப்பட்டுள்ளது. இதனால் ஜனவரி 2021இல் நடந்த கெப்பிடல் ஹில் கலவரத்தை ஊக்குவிப்பதைப் போல காணொளி தோன்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த இராஜினாமாக்கள் பிபிசியில் தேவையான மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என இங்கிலாந்து அரசியல் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்ததோடு, மேலும், டொனால்ட் டிரம்ப் இந்த முடிவை வரவேற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/229969

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.