Everything posted by ஏராளன்
-
பொலிஸ் அதிகாரிகளுக்கு 7,000 ரூபா கொடுப்பனவு: அமைச்சரவை அனுமதி
Nov 18, 2025 - 10:49 AM பொலிஸ் அதிகாரிகளுக்காக 7,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்ற வரவு செலவுத் திட்டக் குழுநிலை விவாதத்தில் இன்று (18) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இந்தக் கொடுப்பனவு எதிர்வரும் மாதத்திலிருந்து வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்தக் கொடுப்பனவு பொலிஸ் அதிகாரிகளின் சீருடை மற்றும் பாதணிகளுக்காக வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்: "பொலிஸ் அதிகாரிகளின் சீருடை மற்றும் பாதணிகளுக்காக அந்தக் கொடுப்பனவை வழங்குவதற்கு நேற்று அமைச்சரவை தீர்மானம் எடுத்தது. அதன்படி, ஒவ்வொரு பொலிஸ் அதிகாரிக்கும் ரூபா 7,000/- கொடுப்பனவு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக 2025 ஆம் ஆண்டிற்காக 1,100 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்தக் கொடுப்பனவு எதிர்வரும் மாதமே அந்த அதிகாரிகளுக்கு வழங்கப்படும். அத்துடன், அதிகாரிகளின் விளையாட்டுப் பாதணிகள் மற்றும் உடைகளுக்காகவும் கொடுப்பன ஒன்றை அதிகாரிகளுக்கு வழங்க அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளது. அடுத்த வாரமே அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று நம்புகிறோம்." https://adaderanatamil.lk/news/cmi44izn601qfo29n7zmiyq9v
-
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 - செய்திகள்
வீரர்களை தக்க வைப்பதில் ஆச்சர்யம் தந்த சிஎஸ்கே அணி மினி ஏலத்தில் என்ன செய்யப் போகிறது? பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 17 நவம்பர் 2025 ஐபிஎல் 2026 தொடருக்கான ஏலம் வரும் டிசம்பர் 16-ஆம் தேதி அபு தாபியில் நடக்கிறது. இதற்கு முன்பாக ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை சனிக்கிழமை (நவம்பர் 15) வெளியிட்டன. 11 ஆண்டுகளாக தங்கள் அணியின் முக்கிய அங்கமாக இருந்த ஆண்ட்ரே ரஸலை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகம் வெளியே விட்டிருக்கிறது. வெங்கடேஷ் ஐயர், கிளென் மேக்ஸ்வெல், லியாம் லிவிங்ஸ்டன், ரவி பிஷ்னாய் போன்ற பல முன்னணி வீரர்கள் தங்கள் அணிகளிலிருந்து கழற்றி விடப்பட்டிருக்கிறார்கள். அதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மதீஷா பதிரானா, டெவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா என அவர்களின் அங்கமாக இருந்த பல வீரர்களை வெளியே விட்டிருக்கிறார்கள். டிரேட் செய்யப்பட்ட ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரண் தவிர்த்து 10 வீரர்களை ரிலீஸ் செய்திருக்கிறது சிஎஸ்கே. சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்தின் இந்த அதிரடி முடிவுக்குப் பின்னால் இருக்கும் காரணம் என்ன? என்ன திட்டத்தோடு அவர்கள் ஏலத்தில் களமிறங்குவார்கள்? தக்கவைத்த வீரர்கள் யார்? ரிலீஸ் செய்யப்பட்ட வீரர்கள் யார்? தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: எம்.எஸ்.தோனி, ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன் (டிரேட்), ஆயுஷ் மாத்ரே, டெவால் பிரெவிஸ், ஷிவம் தூபே, ஊர்வில் பட்டேல், நூர் அஹமது, நாதன் எல்லிஸ், ஷ்ரேயாஸ் கோபால், கலீல் அஹமது, ராமகிருஷ்ணா கோஷ், முகேஷ் சௌத்ரி, ஜேமி ஓவர்டன், குர்ஜப்னீத் சிங், அன்ஷுல் கம்போஜ். ரிலீஸ் செய்யப்பட்ட வீரர்கள்: ரவீந்திர ஜடேஜா (டிரேட்), ஆண்ட்ரே சித்தார்த், தீபக் ஹூடா, சாம் கரண் (டிரேட்), டெவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, மதீஷா பதிரானா, கமலேஷ் நாகர்கோட்டி, ராகுல் திரிபாதி, ஷேக் ரஷீத், வன்ஷ் பேடி, விஜய் சங்கர் இதுவரை பார்க்காத சிஎஸ்கே வழக்கமாக இப்படி மினி ஏலத்துக்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யாது. அதிகபட்சம் 4 அல்லது 5 வீரர்களை மட்டும் ரிலீஸ் செய்வார்கள். அவர்களும்கூட பெரும்பாலும் போட்டிகளில் விளையாடாத இளம் வீரர்களாகவோ, சோபிக்காத வெளிநாட்டு வீரர்களாகவோ தான் இருப்பார்கள். ஆனால், இம்முறை மெகா ஏலத்தில் ரீடெய்ன் செய்திருந்த வீரர் உள்பட பலரையும் சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் ரிலீஸ் செய்திருப்பது ஆச்சர்யமான ஒரு விஷயமாக கிரிக்கெட் வட்டத்தில் பார்க்கப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் உணர்வுகளைக் கடந்து யோசிக்கத் தொடங்கிவிட்டது என்கிறார் கிரிக்கெட் வல்லுநரும் வர்ணனையாளருமான நானீ. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஐபிஎல் அணிகள் தங்களின் பழைய சென்ட்டிமென்ட்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு இம்முறை முடிவுகளை எடுத்திருக்கிறார்கள். இது மிகவும் நல்ல விஷயம். இப்போது சென்டிமென்ட் எல்லாம் பார்க்காமல் எதிர்காலத்துக்கு என்ன முக்கியம், கோப்பை வெல்ல என்ன முக்கியம் என்று யோசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்" என்றார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சிஎஸ்கே-வின் அணுகுமுறைக்கு ஏற்ற வீரர்கள் என்று கருதப்பட்ட ராகுல் திரிபாதி, ரச்சின் ரவீந்திரா போன்றவர்களும் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறார்கள் "மற்ற அணிகள் நிறைய வீரர்களை ரிலீஸ் செய்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அப்படிச் செய்ததில்லை. அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று வீரர்களை ரிலீஸ் செய்வார்கள். எப்போதும் குடும்பம் என்ற அந்த உணர்வை அவர்கள் கடைபிடிப்பார்கள். ஆனால், கடந்த 2 சீசன்களில் அதன் செயல்பாடு அனைத்தையும் மாற்றியுள்ளது. அதேசமயம், நல்ல செயல்பாட்டைக் காட்டிய வீரர்களைத் தக்கவைத்துவிட்டு, மற்றவர்களை ரிலீஸ் செய்து மிகச் சரியான முடிவை எடுத்திருக்கிறார்கள்" என்றும் அவர் கூறினார். 2024 சீசனில் முதல் முறையாக ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் களமிறங்கிய சூப்பர் கிங்ஸ். அப்போது ஐந்தாவது இடமே பிடித்து பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. அடுத்த சீசனோ, இன்னும் மோசமாக அமைந்தது. 14 போட்டிகளில் நான்கில் மட்டுமே வென்ற சிஎஸ்கே, கடைசி இடமே பிடித்தது. காயத்தால் கேப்டன் ருதுராஜ் பாதியில் விலக, அதன்பின் தோனி அந்தப் பதவியை ஏற்று அணியை வழிநடத்தினார். ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து இரண்டு சீசன்கள் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாதது இதுவே முதல் முறை. இதனைத் தொடர்ந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை இல்லாத அதிரடி முடிவுகளை எடுத்திருக்கிறது என்று கருதப்படுகிறது. ஜடேஜா - சாம்சன் டிரேட் குறித்துப் பேசிய அந்த அணியின் நிர்வாக இயக்குநர் காசி விஸ்வநாதன் கூட, "எதிர்காலத்தை மனதில் வைத்து ஜடேஜாவை டிரேட் செய்யும் இந்த கடினமான முடிவை எடுக்க வேண்டியதாகிவிட்டது" என்று கூறியிருந்தார். பேட்டிங்: இளைஞர்கள் கொடுத்த நம்பிக்கை கடந்த ஆண்டு சூப்பர் கிங்ஸின் பேட்டிங் பெரும் விமர்சனங்களை சந்தித்தது. 180 ரன்களை சேஸ் செய்வது அவர்களால் இயலாத காரியமாக இருந்தது. பெரும்பாலான வீரர்கள் மற்ற அணிகளைப் போல் வேகமாக ரன் குவிக்கத் தடுமாறினார்கள். கான்வே, ரச்சின், திரிபாதி, ஹூடா, விஜய் சங்கர் என பெரும்பாலான பேட்டர்கள் வெளியே அனுப்பப்பட அது முக்கியக் காரணமாக இருக்கும். இவர்கள் எல்லோருமே 'சிஎஸ்கே பிராண்ட் ஆஃப் கிரிக்கெட்டர்ஸ்' என்று கருதப்பட்டவர்கள். தடாலடி அதிரடி பேட்டர்களை விட கொஞ்சம் நிதானம், கொஞ்சம் அதிரடி என்று ஆடும் இவ்வகை பேட்டர்களையே சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகம் நம்பியிருந்தது. ஆனால், இவர்கள் கடந்த சீசன் சொதப்பியதும், மற்ற அணிகள் அதிரடி வீரர்களை வைத்து அடுத்த தளத்தை நோக்கிப் பயணித்ததும் சிஎஸ்கேவின் மாறாத அணுகுமுறை மீது கேள்வியெழுப்பியது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கடந்த ஆண்டு மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்ட பிரெவிஸ் இப்போது முக்கிய வீரராக உருவெடுத்திருக்கிறார் அதுமட்டுமல்லாமல், சீசனின் இறுதி கட்டத்தில் சிஎஸ்கே அணியின் இளம் வீரர்களே பழைய அணுகுமுறையிலிருந்து மாறி புதிய பாதையை நோக்கிப் பயணிப்பதற்கான உத்வேகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறார்கள் என்கிறார் நானீ. "கடந்த சீசன் இறுதியில் மாற்று வீரர்களாக வந்த இளம் பேட்டர்களான மாத்ரே, ஊர்வில், பிரெவிஸ் ஆகியோர் தங்கள் அநாயச அதிரடி ஆட்டத்தால் போட்டிகளின் போக்கையே மாற்றினார்கள். அவர்கள் புதிய அணுகுமுறையின் தேவையை உணர்த்தியிருக்கிறார்கள். அதுதான் இந்த மாற்றத்துக்கான காரணம்" என்று கூறிய அவர், இந்த இளம் வீரர்களோடு சஞ்சு சாம்சன் இணைவது சூப்பர் கிங்ஸின் பேட்டிங்கை நன்கு பலப்படுத்தியிருக்கிறது என்கிறார். இப்போது தக்க வைத்திருக்கும் பேட்டர்களைப் பார்க்கும்போது, மாத்ரே, சாம்சன், ருதுராஜ், துபே, பிரெவிஸ் என சூப்பர் கிங்ஸின் டாப் 5 முழுமையாக இருக்கிறது. கேப்டன் ருதுராஜை சுற்றி, முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்டும் வீரர்கள் நிறைந்திருக்கிறார்கள். அதனால் புதியதொரு பேட்டிங் அணுகுமுறையை சிஎஸ்கேவிடம் இருந்து எதிர்பார்க்கலாம். பந்துவீச்சு: நிறைய கேள்விகள் இருக்கின்றன இங்குதான் சென்னை சூப்பர் கிங்ஸ் மீது நிறைய கேள்விகள் எழுகின்றன. முக்கியமாக ஜடேஜாவை டிரேட் செய்துவிட்டு இன்னொரு முன்னணி வேகப்பந்துவீச்சாளர் பதிரானாவையும் விடுவித்தது இரண்டு பெரிய ஓட்டைகளை ஏற்படுத்திவிட்டது. மெகா ஏலத்துக்கு முன்னதாக 13 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்டிருந்தார் பதிரானா. சூப்பர் கிங்ஸின் எதிர்காலமாகப் பார்க்கப்பட்ட அவர், அதற்குள் விடுவிக்கப்படுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அவரது பந்துவீச்சு முறை மாறியது, அவரது செயல்பாட்டில் தாக்கம் ஏற்படுத்தியது. அதனால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார் நானீ. "பதிரானாவின் பௌலிங் ஆக்ஷன் மாறிவிட்டது. இப்போது அவர் இலங்கை அணியில் கூட அதிகம் ஆடுவதில்லை. தென்னாப்பிரிக்கா, அமெரிக்காவில் நடந்த லீக்குகளிலும் அவர் சோபிக்கவில்லை. அதனால் இந்த முடிவை புரிந்துகொள்ள முடிகிறது. அதுமட்டுமல்லாமல் 13 கோடி ரூபாய் என்ற தொகையும் இந்த முடிவுக்கு ஒரு முக்கியக் காரணமாக இருந்திருக்கலாம். இப்போது வெளியே விட்டுவிட்டு, ஏலத்தில் குறைந்த தொகைக்கு எடுக்க நினைத்திருப்பார்கள். நிச்சயம் அவரை சென்னை அணி எடுக்கும் என்றே நான் நம்புகிறேன்" என்றும் அவர் கூறினார். இன்னொருபக்கம் எல்லிஸ் சமீபமாக சிறப்பாக செயல்படுவதால், அவர் பிரதான வேகப்பந்துவீச்சாளராக கருதப்படுவார் என்று கூறப்படுகிறது. ஆனாலும், பதிரானாவை சிஎஸ்கே மீண்டும் எடுக்கக் கூடும் என்று நானீ நம்புகிறார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஜடேஜா, அஷ்வின் இருவருமே இல்லாததால் சூப்பர் கிங்ஸின் சுழற்பந்துவீச்சு சற்று பலவீனமடைந்துள்ளது "கடந்த 2 ஆண்டுகளாக சேப்பாக்கம் முன்பு போல் சுழலுக்கு சாதகமான ஆடுகளமாக இருக்கவில்லை. அதனால் வேகப்பந்துவீச்சுக்கு உகந்த ஆடுகளங்களை அமைத்து, அதற்கு ஏற்ப அணியை கட்டமைப்பது சாதகமான விஷயமாக இருக்கும். அது சாம்சன் போன்ற சிஎஸ்கே பேட்டர்களுக்குமே கூட உகந்ததாக இருக்கும். அப்படி செய்தால் இரண்டாவது வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளரும் தேவை" என்கிறார் அவர். சேப்பாக்கத்தின் தன்மை குறித்தும், அதைச் சார்ந்த சூப்பர் கிங்ஸ் கட்டமைப்பு குறித்தும் கடந்த சீசனில் அதிகம் விவாதிக்கப்பட்டது. சிஎஸ்கே அணிக்கு சுழல் தான் வெகுகாலம் அடையாளமாக இருந்தது. அதற்கு ஏற்ப கடந்த மெகா ஏலத்தில் ஒரு பெரும் சுழல் கூட்டணியை அவர்கள் உருவாக்கினார்கள். ஏற்கெனவே ஜடேஜாவை ரீடெய்ன் செய்திருந்தவர்கள், நூர் அஹமது மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வினை வாங்கினார்கள். ஆனால், நூர் அஹமது தவிர்த்து மற்ற இருவராலும் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் தோனியைப் போல் ருதுராஜ் கெய்க்வாட் சுழலை பெருமளவு பயன்படுத்தவும் யோசிக்கிறார். 2024 சீசனில் சேப்பாக்கத்தில் ஒருசில போட்டிகளில் 17-18 ஓவர்கள் வரை வேகப்பந்துவீச்சாளர்களையே அவர் பயன்படுத்தினார். இப்போது அவரே அணியின் கேப்டன் என்று சிஎஸ்கே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கும் நிலையில், நானீ சொல்வதைப் போல் மாற்றம் நடக்கக்கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அஷ்வின் ஓய்வு பெற்றுவிட, ஜடேஜாவும் டிரேட் செய்யப்பட்டுவிட நூர் அஹமது மட்டுமே அணியின் முன்னணி ஸ்பின்னராக இருக்கிறார். இவர்போக, ஷ்ரேயாஸ் கோபால் மட்டுமே இப்போது தக்கவைக்கப்பட்டிருக்கும் ஒரே ஸ்பின்னர். அவர் கடந்த ஆண்டு ஒரு போட்டியில் கூட பயன்படுத்தப்படவில்லை. இந்த மினி ஏலத்தில் ராகுல் சஹார், ரவி பிஷ்னாய் போன்ற வெகுசில அனுபவ ஸ்பின்னர்களே இருக்கிறார்கள். அவர்களுள் ஒருவரை வாங்கினாலும், அதிகபட்சம் 2 பிரதான ஸ்பின்னர்களோடு மட்டுமே சிஎஸ்கே களமிறங்கக்கூடும். இந்த மினி ஏலத்தில் சிஎஸ்கே கேமரூன் கிரீனை வாங்க முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது நடந்தால் அது ஹிட்டிங் மற்றும் வேகப்பந்துவீச்சை பலப்படுத்தும். பேட்டிங் அணுகுமுறையில் இன்னும் நேர்மறை எண்ணத்தை வலுப்படுத்தும். அதேசமயம் அவருக்குப்பதில் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களான மேக்ஸ்வெல், கூப்பர் கானொலி, லியாம் லிவிங்ஸ்டன் போன்ற யாரையேனும் வாங்கும் பட்சத்தில் அது சுழற்பந்துவீச்சை ஓரளவு பலப்படுத்தலாம். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை அறியப்பட்ட அணுகுமுறையில் இருந்து மாறி வேறு பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது என்பதை இந்த ரிடன்ஷன் பட்டியல் உணர்த்துகிறது. டிசம்பர் 16-ஆம் தேதி நடக்கும் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி அதிரடியாக சில வீரர்களை வாங்கக்கூடும். அதற்கான பெரும் தொகை அவர்களிடம் இருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgyqpk15pwo
-
கருத்து படங்கள்
அததெரண கருத்துப்படம்.
-
நவம்பர் 2025 - இன்றைய வானிலை
இன்றைய வானிலை 18 Nov, 2025 | 06:27 AM இலங்கைக்கு மேலாக நிலை கொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசம் மேலும் தொடர்கின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, தென் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எ நாட்டின் ஏனைய பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 mm வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும். காங்கேசன்துறை தொடக்கம் மன்னார், புத்தளம், கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். https://www.virakesari.lk/article/230639
-
முன்னாள் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை!
“இந்த தீர்ப்பு பாரபட்சமானது ; அரசியல் உள்நோக்கம் கொண்டது” - ஷேக் ஹசீனா 17 Nov, 2025 | 06:02 PM டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பு பாரபட்சமானது; அரசியல் உள்நோக்கம் கொண்டது என நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். பங்களாதேஷில் 2024ஆம் ஆண்டு தொடர்ச்சியாக நடந்த போராட்டங்களின்போது ஷேக் ஹசீனா தனது அரசியல் மற்றும் பதவி பலத்தை பிரயோகித்து பிறப்பித்த கடுமையான உத்தரவுகளால் பல வன்முறைகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டதாக இன்று (17) டாக்கா நீதிமன்றத்தில் உறுதிபடுத்தப்பட்டது. அத்துடன் அவர் பதவி நீக்கப்பட்டது முதல் இந்தியாவில் தலைமறைவாகியிருக்கிறார். அவருக்கு எதிரான வழக்கு விசாரணைகளின்போதும் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தால் தலைமறைவாக இருக்கின்ற இச்சந்தர்ப்பத்திலேயே இவ்வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டு, ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனக்கு எதிராக டாக்கா சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் விதித்த மரண தண்டனை குறித்து ஷேக் ஹசீனா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, “நான் எதைப் பற்றியும் கவலைப்படப் போவதில்லை. எனக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள இந்த தீரப்பு, ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஒரு மோசடி தீர்ப்பாயத்தால் வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு பாரபட்சமானது. அரசியல் உள்நோக்கம் கொண்டது. கடந்த ஆண்டு போராட்டம் நடந்தபோது நாங்கள் கட்டுப்பாட்டை இழந்தோம். எனவே, அதனை குடிமக்கள் மீதான முன்கூட்டிய திட்டமிட்ட தாக்குதல் என்று வகைப்படுத்த முடியாது” என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/230607
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை Nov 17, 2025 - 06:45 PM இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை கடற்பரப்பை அண்டிய பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மூன்று படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், மூன்று படகோட்டிகள் உள்ளிட்ட 31 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இவர்கள் நீரியல்வளத்துறை அதிகாரிகள் ஊடாக பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். குறித்த வழக்கு இன்று (17) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தமிழக மீனவர்கள் தம் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டனர். இலங்கை கடற்பரப்பினுள் படகினை செலுத்திய குற்றச்சாட்டு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக, படகோட்டிகள் மூவருக்கும் 19 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனை 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. படகில் இருந்த ஏனைய 28 மீனவர்களுக்கும் 18 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அதுவும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 10 வருட காலப்பகுதிக்குள் மீண்டும் எல்லை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டால், கைது செய்யப்படும் காலப்பகுதியில் விதிக்கப்படும் தண்டனையுடன், 18 மாத சிறைத் தண்டனையையும் அனுபவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. படகின் உரிமையாளர்களுக்கு படகு தொடர்பான வழக்கு விசாரணைக்காக எதிர்வரும் மே மாதம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்புக் கட்டளை அனுப்பப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட 31 மீனவர்களும் இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள் ஊடாக மீரிகம முகாமிற்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmi363s8201puo29nc77e8eh5
-
முன்னாள் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை!
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை - இந்தியாவுக்கு வங்கதேசம் விடுத்த கோரிக்கை பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ஷேக் ஹசீனா வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு வந்தார் 17 நவம்பர் 2025, 09:45 GMT வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம், (Bangladesh International Crimes Tribunal) முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் குற்றவாளி எனக் கண்டறிந்ததாகவும், அவருக்கு மரண தண்டனை விதிப்பதாகவும் தீர்ப்பளித்துள்ளது. டாக்கா நீதிமன்ற உத்தரவுக்கு வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார், அந்த உத்தரவு "ஒருதலைப்பட்சமானது மற்றும் அரசியல் ரீதியாக உந்தப்பட்டது" என தெரிவித்துள்ளார். இதனிடையே, ஷேக் ஹசீனாவை வங்கதேசத்திற்கு நாடு கடத்துமாறு இந்தியாவிடம் வங்கதேசம் கேட்டுக்கொண்டுள்ளது. அதற்கு இந்திய அரசும் பதிலளித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை-ஆகஸ்டில் வங்கதேசத்தில் நடந்த இளைஞர்கள் போராட்டத்தின் போது, ஷேக் ஹசீனா மீது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அவர் இந்தியாவில் தஞ்சமடைந்த நிலையில், அவர் மீதான வழக்கு அவர் இல்லாத நேரத்தில் (in absentia) நடத்தப்பட்டது. விசாரணைகள் முடிவடைந்த நிலையில் 453 பக்க தீர்ப்பை வாசித்த நீதிபதி முகமது குலாம் முர்தாசா மஜும்தார், இது ஆறு பகுதிகளாக வழங்கப்படும் என்று கூறினார். தீர்ப்பு அறிவிப்பு வங்கதேச தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. ஜூன் மாதம் வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் ஷேக் ஹசீனா உட்பட மூன்று பேர் மீது அரசு தரப்பு அதிகாரப்பூர்வமாக ஐந்து குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது. இதன் அடிப்படையில், ஷேக் ஹசீனா மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்ஸாமான் கான் கமல் ஆகியோருக்கு எதிராகவும் தீர்ப்பாயம் கைது வாரண்டுகளை பிறப்பித்தது. கடந்த ஆண்டு, வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான போராட்டங்களின் போது தொடர்ச்சியான வன்முறைகள் நடந்தன. அப்போது, பிரதமர் ஷேக் ஹசீனா மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால், ஷேக் ஹசீனா ஆட்சியை இழக்க வேண்டியிருந்தது, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நாட்டிலிருந்து தப்பிக்க நேர்ந்தது. அப்போதிலிருந்து அவர் இந்தியாவில் வசித்து வருகிறார். படக்குறிப்பு, திங்கள் கிழமை தீர்ப்பின் போது நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 'உடனடியாக ஷேக் ஹசீனாவை அனுப்புக' - இந்தியாவுக்கு கோரிக்கை தற்போது இந்தியாவில் வசித்து வரும் ஷேக் ஹசீனா மற்றும் அசாதுஸ்ஸாமான் கான் கமல் ஆகியோரை நாடு கடத்துமாறு வங்கதேசம் கோரியுள்ளது. வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்ஸாமான் கான் கமல் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்துள்ளது. இந்த முடிவைத் தொடர்ந்து, வங்கதேச வெளியுறவு அமைச்சகம் திங்களன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது . அதில், "சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தப்பியோடிய ஷேக் ஹசீனா மற்றும் அசாதுஸ்ஸாமான் கான் கமல் ஆகியோர் குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்டது" என்று எழுதப்பட்டுள்ளது. "மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட இந்த நபர்களுக்கு எந்த நாடு அடைக்கலம் வழங்கினலும் அது நட்பற்ற நடத்தையாகவும், நீதியை அவமதிக்கும் ஒரு செயலாகவும் இருக்கும்." "இந்திய அரசாங்கம் உடனடியாக இரு குற்றவாளிகளையும் வங்கதேச அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இரு நாடுகளுக்கும் இடையிலான நாடுகடத்தல் ஒப்பந்தத்தின்படி இது இந்தியாவின் பொறுப்பாகும்" என்று வங்கதேச வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஷேக் ஹசீனாவை நாடு கடத்தக் கோரி வங்கதேசம் அதிகாரப்பூர்வமாக பல கடிதங்களை அனுப்பியுள்ளது. இருப்பினும், இந்த கோரிக்கைகளுக்கு இந்தியா பதிலளிக்கவில்லை. பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த வங்கதேச வெளியுறவு ஆலோசகர், அவர்களை திருப்பி அனுப்பக் கோரி வங்கதேசம் பலமுறை கடிதங்களை அனுப்பியதாகவும், ஆனால் இந்தியாவிடமிருந்து எந்த நேர்மறையான பதிலும் கிடைக்கவில்லை என்றும் கூறினார். இந்திய அரசின் பதில் என்ன? இதுதொடர்பாக, இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குறித்து அந்நாட்டின் "சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்" வழங்கிய தீர்ப்பை நாங்கள் கவனித்தோம். நெருங்கிய அண்டை நாடாக, இந்தியா அமைதி, ஜனநாயகம், நிலைத்தன்மை உள்ளிட்ட வங்கதேச மக்களின் நலன்களுக்கு உறுதிபூண்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக, இந்தியா எப்போதும் அனைத்து தரப்பினருடனும் ஆக்கப்பூர்வமாக ஈடுபடும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் நிலவிய சூழல் டாக்காவில் உள்ள பிபிசி செய்தியாளர் அருணோதய் முகர்ஜி நீதிமன்றத்தில் நிலவிய சூழல் குறித்து விவரித்துள்ளார். அதன்படி, ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்பு, நீதிமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்த பலர் கொண்டாடியுள்ளன. சிலர் அவரை "தூக்கில் போட வேண்டும்" என முழக்கமிட்டதை பிபிசி செய்தியாளர் பார்த்துள்ளார். இது சில நொடிகள் நீடித்த நிலையில், பின்னர் அவர்களை கண்ணியம் காக்குமாறு நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. ஷேக் ஹசீனா மீதான குற்றச்சாட்டுகள் கடந்த ஜூன் மாதத்தில் ஷேக் ஹசீனா மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இதில் அரசின் தலைமை வழக்கறிஞர் தாஜுல் இஸ்லாம், "கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 1,400 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 25,000 பேர் காயமடைந்தனர்" என வாதிட்டார். இறந்தவர்களின் பட்டியலையும் அரசு தரப்பு தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்தது. ஷேக் ஹசீனா உட்பட குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக 747 பக்க ஆவணமும் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மூன்று பேரின் மீதும் கொலை, கொலை முயற்சி, சதி, உதவி செய்தல், உடந்தையாக இருத்தல் என ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. "ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியில் இருந்தபோது, கடந்த ஆண்டு ஜூலை 14 அன்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், மாணவர்களை 'ரசாக்கர்களின் மகன்கள் மற்றும் பேரன்கள்' என்று கூறி ஆத்திரமூட்டும் கருத்துக்களை வெளியிட்டார்" என்று அரசு வழக்கறிஞர் கூறினார். வங்கதேசத்தில், ரசாக்கர் என்பது தேசதுரோகி அல்லது துரோகி என்று பொருள்படும் ஒரு இழிவான வார்த்தையாகப் பயன்படுத்தப்படுகிறது, மேலும் 1971 ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரின் போது பாகிஸ்தான் ராணுவத்துடன் ஒத்துழைத்து கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டவர்களை குறிப்பிட பயன்படுகிறது. படக்குறிப்பு, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்காக 1971 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அதே தீர்ப்பாயத்தில் இந்த விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கின் குற்றப் பத்திரிகையில், "குற்றம் சாட்டப்பட்ட அசாதுஸ்ஸாமான் கான் கமல் மற்றும் சவுத்ரி அப்துல்லா அல் மாமூல் உள்ளிட்ட உயர் அரசு அதிகாரிகளின் தூண்டுதலின் பேரிலும், உதவியுடனும், சட்ட அமலாக்க முகமைகளும் அவாமி லீக்கின் ஆயுதமேந்திய ஆட்களும் கொலைகள், கொலை முயற்சிகள் மற்றும் அப்பாவி மற்றும் நிராயுதபாணியான மாணவர்கள் மற்றும் பொதுமக்களை பெரியளவில் மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட முறையில் துன்புறுத்த உதவினர்." என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் சதி நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது, மேலும் இந்தக் குற்றங்கள் அனைத்தும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தெரிந்தே செய்யப்பட்டவை என்று கூறுகிறது. ஷேக் ஹசீனா உட்பட மூன்று பேர் மீது, ரங்பூரில் உள்ள பேகம் ரோகையா பல்கலைக்கழக மாணவர் அபு சயீத்தை தூண்டுதலின்றி கொலை செய்ததாகவும், தலைநகரில் உள்ள சங்கர் புல்லில் ஆறு பேரைக் கொலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது தவிர, அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேற வேண்டிய நாளில் அஷுலியாவில் ஐந்து பேரை சுட்டுக் கொன்றதாகவும், அவர்களின் உடல்களை எரித்ததாகவும், ஒருவரை உயிருடன் எரித்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஷேக் ஹசீனா கூறியது என்ன? நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு ஷேக் ஹசீனா ஐந்து பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார். "அவாமி லீக்கை ஒரு அரசியல் சக்தியாக அங்கீகரிக்காமல் இருப்பதற்கு இடைக்கால அரசாங்கம் பயன்படுத்தும் வழிமுறையே மரண தண்டனை" என அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்த வழக்கு ஓர் 'கேலிக்கூத்து' என்று கூறி, தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். மேலும், "சாட்சியங்களை உண்மையின் அடிப்படையில் மதிப்பீடு செய்து சோதிக்கக்கூடிய ஒரு முறையான நீதிமன்றத்தில் என் மீது குற்றம் சாட்டுபவர்களை எதிர்கொள்வதில் எனக்கு எந்த பயமும் இல்லை." என அவர் குறிப்பிட்டுள்ளார். நெதர்லாந்தின் ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court) இந்த குற்றச்சாட்டுகளை முன்வைக்குமாறும் அவர் இடைக்கால அரசுக்கு சவால் விடுத்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gw1yn0037o
-
மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் நவம்பர் 21 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படும் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
17 Nov, 2025 | 01:57 PM (ஸ்டெப்னி கொட்பிறி) மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் நவம்பர் 21 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கொழும்பு தாமரை கோபுரத்தில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு நவம்பர் 21 ஆம் திகதி மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மீன்பிடித்துறையையும் நீரியல் வளத்தையும் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும். மீன்பிடித் தொழிலை மேம்படுத்தும் நோக்கத்தில் மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அத்துடன், நவம்பர் 21 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை கொழும்பில் உள்ள தாமரை கோபுர வளாகத்தில் காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 'அக்வா பிளானட் ஸ்ரீ லங்கா 2025 சர்வதேசக் கண்காட்சி' ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எமது நாட்டில் உள்ள மீன் வளத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துக்காட்டும் நோக்கத்தில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை பார்வையிட அனுமதி இலவசமாகும். சர்வதேச ரீதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சியில் மிகவும் விலையுயர்ந்த மற்றும் அரிய வகை மீன்களை மக்கள் பார்வையிட முடியும். நாட்டின் நீரியல் துறையை அபிவிருத்தி செய்வதற்கும் மீன்பிடித்துறையை மேம்படுத்துவதற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எடுக்கும் முயற்சியின் ஒரு பங்காக இந்த கண்காட்சி உள்ளது என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/230563
-
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 - செய்திகள்
ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் சங்கக்கார! Nov 17, 2025 - 01:19 PM இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார மீண்டும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் ரோயல்ஸ் உடன் தனது பயணத்தை தொடங்கிய குமார் சங்கக்கார வழிநடத்தலில் சஞ்சு செம்சுன் தலைமையிலான அணி கடந்த நான்கு சீசன்களில் இரண்டு முறை பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. இருப்பினும் 2024 உலகக் கிண்ண வெற்றிக்கு இந்திய அணியை வழிநடத்திய பயிற்சயாளர் ராகுல் டிராவிட் கடந்த ஆண்டு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் பயிற்சியாளரானார். ஆனால் சஞ்சு செம்சனுடன் ஏற்பட்ட பகைமை வதந்திகளை தொடர்ந்து அண்மையில் ராகுல் டிராவிட் தனது பயிற்சியாளர் பதவியை துறந்தார். இதனால் 2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை வழிநடத்துவதற்காக மீண்டும் குமார் சங்கக்கார தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை பயிற்சியாளராக சங்கக்கார நியமிக்கப்பட்டதற்கு சிறப்பு AI வீடியோவை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெளியிட்டுள்ளது. ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் காரில் இருந்து இறங்கி மாஸாக நடந்து காட்சியை AI மூலமாக சங்ககாரா நடந்து வருவது போல எடிட் செய்துள்ளனர். ஹுகும் பாடலின் இந்தி வெர்சனை இந்த எடிட் வீடியோவிற்கு பயன்படுத்தியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmi2uflpf01p5o29n77iwr40o
-
நாட்டில் சில இனவாத, மதவாத பிசாசுகள் உள்ளன - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
17 Nov, 2025 | 12:51 PM (ஸ்டெப்னி கொட்பிறி) நாட்டில் சில இனவாத,மதவாத பிசாசுகள் உள்ளன. மக்கள் மத்தியில் இனவாத மற்றும் மதவாத பிரச்சினைகளை கொண்டுவர முயற்சிப்பவர்களுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கொழும்பு தாமரை கோபுரத்தில் இன்று திங்கட்கிழமை (17) நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேற்கண்டவாறு தெரிவித்தார். திருகோணமலையில் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட புத்தர் சிலை குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் தெரிவிக்கையில், திருகோணமலை கடற்கரை பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட பெளத்த வணக்கஸ்தலத்தில் வைக்கப்பட்ட புத்தர் சிலை நீண்ட நேர போராட்டத்தின் பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) இரவு அங்கிருந்து அகற்றப்பட்டது. நாட்டில் சில இனவாத,மதவாத பிசாசுகள் உள்ளன. அவர்கள் தான் இதனை செய்கின்றனர். மக்கள் மத்தியில் இனவாத மற்றும் மதவாத பிரச்சினைகளை கொண்டுவர முயற்சிப்பவர்களுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/230553
-
குச்சவெளி புனிதபூமி - நூற்றுக்கணக்கான விகாரைகளை கட்டிய மகிந்த - பெளத்த அதிகாரத்தின் அதியுச்ச ஆக்கிரமிப்பு!
பெளத்த அதிகாரத்தின் அதியுச்ச ஆக்கிரமிப்பு! நூற்றுக்கணக்கான விகாரைகளை கட்டிய மகிந்த மகிந்த ராஜபக்ச நீண்டகாலமாக புத்தசாசன அமைச்சராக செயற்பட்ட நிலையில் குச்சவெளியை புனிதபூமியாக மாற்றி நூற்றுக்கணக்கான விகாரைகளை கட்டியதாக மனித உரிமை செயற்பாட்டாளர் ரஜீவன் தெரிவித்துள்ளார். புனித பூமி என்கின்ற ஆக்கிரப்பு உறுதிகளை ஆதாரமாக காட்டி பெளத்த அதிகாரத்தின் அதி உச்ச ஆக்கிரமிப்பின் வடிவத்தினை வெளிப்படுத்துவதாகவும் கண்டனம் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், குச்சவெளி புனிதபூமி மகிந்த ராஜபக்ச நீண்டகாலமாக புத்தசாசன அமைச்சராக செயற்பட்ட நிலையில் குச்சவெளியை புனிதபூமியாக மாற்றி நூற்றுக்கணக்கான விகாரைகளை கட்டினார்கள்.விரும்பிய பிக்குகள் விரும்பிய இடத்தை கேட்டு வாங்கக்கூடிய நடைமுறை இருந்தது. இந்த ஊழல் விசாரனை செய்யப்படாதது.பெளத்தம் என்று வந்துவிட்டால் நீங்கள் அனைவரும் ஒரே ஊழல்வாதிகள் தான். மக்களின் தலைகளை தவிர மிகுதி அனைத்து இடங்களிலும் புத்தர் சிலைகளை வைத்துவிட்டு சோத்துக்கு பிச்சை எடுங்கள்.இது பெளத்த அதிகாரத்தின் அதியுச்ச ஆக்கிரமிப்பு என்றும் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/mahinda-built-hundreds-of-temples-1763365143
-
நயினாதீவு படகு சேவையில் நேர மாற்றம்
17 Nov, 2025 | 12:27 PM யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு - குறிகாட்டுவான் படகு சேவையின் இறுதி படகின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தனியார் படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். நயினாதீவில் இருந்து இறுதி படகு சேவை மாலை 05 மணிக்கும், குறிகாட்டுவானில் இருந்து இறுதி படகு சேவை மாலை 5.30 மணிக்கும் இடம்பெறவுள்ளது. அதேநேரம் வழமையான ஏனைய சேவை நேரங்களில் மாற்றம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/230551
-
தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும்
இந்தியாவுக்கு பாக்கு நீரிணை நிரந்தர எதிரி. சிங்கள பௌத்த அரசுக்கு பாக்கு நீரிணை நிரந்தர நண்பன், அது வரமும் சாபமும் கலந்த நண்பன் அல்லது அமிர்தமும் நஞ்சும் நிறைந்த நண்பன் அல்லது அமுதமும் நஞ்சும் கலந்த நண்பன். ஈழத் தமிழருக்கு பாக்கு நீரிணை அரை நண்பன். அமிர்தம் என்பது தேவர்கள் அருந்துவதாக கூறப்படும் ஒரு புராண உணவு. அமுதம் என்பது ஈயத்தை தங்கமாக மாற்றும் அழியாமையைக் தரும் ஒரு கற்பனைத் திரவம். இங்கு நஞ்சை கழைந்து அமிர்தத்தை கடைந்தெடுக்கும் அரசியல் வித்தை சிங்கள தலைவர்களுக்கு தெரியும். இந்திய அரசுக்கு பாக்கு நீரிணை எப்போதும் அதன் முழு எதிரியாய் உள்ளது. ஆதலாற்தான் தனுஷ்கோடி -- தலைமன்னார் தரைப்பாலத்தை அமைப்பதன் வாயிலாக அந்தப் பாக்கு நீரிணையை தனது நண்பனாக்க இந்தியா முயல்கிறது. சிங்களவிற்கு வெள்ளிடை மலையென ஒன்று தெரியும். பாக்கு நீரிணை அதாவது அந்தப் பாக்கு நீரிணைதான் இந்தியாவின் தொடர் நிலப்பரப்பிலிருந்து இலங்கையை பிரித்து ஒரு தீவாக்கியது. இதன் மூலம் பாக்கு நீரிணைதான் இலங்கையை ஒரு நாடாக்கியது. அதுதான் இலங்கையை ஒரு தனி அரசாக்கியது. இந்த வகையில் பாக்கு நீரிணை சிங்கள பௌத்தத்துக்கு ஒரு வரம். பௌத்தம் பிறந்த இந்தியாவிலேயே இந்து மதப் பிரிவுகளினால் பௌத்தம் அழிக்கப்பட்ட போதிலும் பௌத்தம் புகுந்த இலங்கைத் தீவில் அந்தப் பாக்கு நீரிணையால் அந்த பௌத்தமும் பௌத்த அரசும் பாதுகாக்கப்படுகிறது. ஒருவேளை கிமு 3 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து இந்திய பேரரச ஆதிக்க விருத்தியின் ஒரு வடிவமாக பௌத்தம் இலங்கைக்கு சமாதானபூர்வமாக கொண்டுவரப்பட்ட போதிலும் அனுராதாபுரம் மன்னன் தீசன் மௌரியப் பேரரசர் அசோகத் சக்கரவர்த்தியின் கட்டளைப்படி மீள் முடி தரிக்கப்பட்டார் என்று மகாவம்சம் கூறுகிறது. மேலும் சக்கரவர்த்தி அசோகரின் பட்டப்பெயரான "தேவநம்பிய" என்பது தீசனுக்கான முடிக்குரிய பேராக்கப்பட்டு தீசன் தேவநம்பிய தீசன் என அரச பட்டப் பெயர் சூட்டப்பட்டார். இது இந்திய பேரரச ஆதிக்கப் படர்ச்சியின் தெளிவான அரசியல் வடிவம். ஆயினும் சிங்கள அரச பௌத்த சமூக உருவாக்கமானது இலங்கை அனுராதபுரத்தில் தோன்றி வளர்ந்து வந்த ஒரு அரச சமூக வளர்ச்சியின் கழுத்தில் ஒரு கூரிய இந்திய ஆதிக்க வாளாக பௌத்தம் இலங்கையை அணுகிய போது அனுராதபுரத்தில் முகிழ்ந்து எழுந்து வந்த உயர அரச குழாம் கழுத்துக்கு ஓங்கப்பட்ட அந்த வாளை தமது தலைக்கும் நெஞ்சுக்குமான கவசமாக மாற்றிக் கொண்டனர். இது ஒரு பொழுதில் நிகழ்ந்தது அல்ல. பௌத்த அரச பண்பாடு தொடர் வரலாற்று வளர்ச்சிப் போக்கில் இவ்வாறு முகிழ்ந்தெழுந்து. இந்நிலையில் சிங்கள அரசு, பௌத்த மகா சங்க நிறுவனம், பொதுமக்கள் என அனைவரையும் ஒன்று திரட்டிய ஒரு வடிவமாய் சிங்கள பௌத்த அரச பண்பாட்டு வாழ்வு முதிர்ச்சி அடைந்தது. அரசை பௌத்த நிறுவனத்தினாலும் மக்களாலும் என ஒன்றுடன் ஒன்றாய் மூன்றையும் திரட்டி எடுத்தனர். சிங்கள பௌத்த இலங்கை அரசு என்பதன் தெளிவான திரட்சி பெற்ற வடிவம். மேற்படி மூன்றுக்கும் அச்சாணியாயும் அரணாயும் விளங்குவது பாக்கு நீரிணையாகும். இந்தியாவிலிருந்து இலங்கையை பிரித்து பாதுகாப்பு அளிக்கும் இந்த பாக்கு நீரிணை என்ற அரணை எப்படி ஒரு பாலத்தின் மூலம் இந்தியாவோடு இணைக்கத் தயாராகுவார்கள். ஆனால் அப்பக் கோப்பைத் தமிழ் அரசியல் தலைவர்களுக்கு பாக்கு நீரிணை என்ற மந்திர வித்தை இன்னும் தெரிந்து கொள்ளப்பட்டதாய் இல்லை. ஒருவேளை அவர்கள் அதைத் தெரிந்து கொள்ள விரும்புவதும் இல்லை, அப்படி ஒரு பொருள் இருப்பதாக திரும்பி பார்ப்பதும் இல்லை. வானத்து வெள்ளியை அண்ணாந்து பார்த்துக் கொண்டு, பாம்பு புதருக்குள் காலூன்றி நடக்கும் நிலையிற்தான் தமிழ் அரசியல் தலைவர்களின் அரசியல் போக்கு உண்டு. பாலம் கட்டுவது தொடர்பாக புத்திசாலித்தனமான சிங்கள தலைவனை கேட்டால் அதற்கு "ஆம்" என்று பதில் சொல்வான், ஆனால் பாலம் கட்டமாட்டான். ஆம் என்று சொல்வதற்கு காரணம் தூணேறிய சிங்கமாக ஒருபுறமும் காராம் பசுவாக மறுபுறமும் உள்ள இந்தியாவின் முன் அதன் கவனத்தை ஈர்ந்து ஆடிப் பாடிப் பால் கறப்பதற்கு. அதேவேளை பாலம் கட்டுவது பற்றி ஒரு அடிமட்ட சாதாரண சிக்கள மகனிடம் கேட்டால் கட்டவேண்டாம் என்று சொல்லுவான் கட்டவிடவும் விட மாட்டான். சிங்கள புத்திசாலியின் "ஆம்" என்ற தந்திரம் துணேறிய சிங்கத்தை திசை திருப்பவும் உதவும் காராம் பசுவில் பால் கறக்கவும் உதவும். வைஷ்ணவ கடவுளாகக் கொள்ளப்படும் இராமபிரானின் ஆணைப்படி இலங்கை மீது படையெடுப்பதற்காக தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே ஹனுமானால் கட்டப்பட்டது இராமர் பாலம் என்கிறது இதிகாசம். "சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம்" என்றார் இந்திய தேசிய கவிஞர் பாரதியார். எனவே மத நம்பிக்கையின் படியும் இலங்கைக்கு ஒரு பாலம் அமைக்க வேண்டும் என்று இந்தியா எதிர் பார்க்கிறது. இலங்கைக்கு ஒரு பாலம் இந்திய தேசிய சிந்தனையின்படியும் இலங்கைக்கு ஒரு பாலம் அமைக்க வேண்டும் என்று இந்திய தேசியம் எதிர்பார்க்கிறது. முழு இந்தியாவையும் கூடவே அத்துடன் இலங்கைத்தீவையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே "சிந்து நதியின் மிசை நிலவினிலே ..." என்று தொடங்கும் பாரதியாரின் கவிதை ஆகும். சிங்கள பௌத்த அரசையும் சிங்கள பௌத்த மதத்தையும் பொறுத்தவரை பாக்குநீரிணை சிங்கள பௌத்த அரசுக்கு ஓர் அரணாகும். பாக்கு நீரிணைதான் புவியியல் ரீதியாக இந்தியாவுடன் இருந்துவந்த நிலத் தொடரைத் துண்டித்து இலங்கையை ஒரு தீவாயும், ஒரு நாடாயும், ஒரு தனியரசாயும் ஆக்கியது. பௌத்தம் பிறந்த இந்தியாவில் அது இந்து மதப் பிரிவுகளால் இந்தியாவை விட்டு துரத்தப்பட்ட போது இலங்கை என்ற தீவிற்தான் அது தரித்துப் பாதுகாக்கப்பட கூடியதாக இருந்தது. அந்த வகையில் பாக்கு நீரிணை சிங்கள பௌத்தர்களுக்கு ஒரு வரமும் கொடையுமாகும். அதேவேளை பாக்கு நீரிணையின் ஒரு புறத்தில் ஈழத் தமிழரும் அதன் மறுபுறத்தில் தமிழகத் தமிழரும் வாழ்ந்து வரும் நிலையில் ஈழத் தமிழருக்கும் தமிழக தமிழருக்கும் இடையேயான உறவை சிங்கள பௌத்த அரசு கசப்புடன் பார்த்து வருவதுடன் அத்தகய கசப்பினதும் பயத்தினதும் பின்னணியில் சிங்கள பௌத்த அரசு ஈழத் தமிழரை இனப்படுகொலை செய்து வருகின்றது என்பதும் கண்கூடு. மேலும் ஈழத் தமிழரை இந்திய ஆதிக்க படர்ச்சியின் கருவிகளாகவும் இந்திய அரசின் ஆதிக்க படர்ச்சிக்கான ஓர் ஏதுவாகவும் ஈழத் தமிழரை சிங்கள அறிஞர்களும், வரலாற்றாளர்களும், தலைவர்களும், பௌத்த மத நிறுவனமும் ஆழமாக நம்பியும், கருதியும் வருகின்றனர். கூடவே கி.மு 3 ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த பௌத்தமும் இந்திய பேரரச ஆதிக்கப் படர்ச்சியின் ஒரு பகுதியாகவே நிகழ்ந்ததை சிங்கள பௌத்த தரப்பினர் உணரத் தவறவில்லை. இந்த வகையில் ஒட்டுமொத்த இந்திய ஆதிக்க பரவலை பெரிதும் தடுப்பதற்கு இயற்கையாக காணப்படும் பாக்கு நிரிணையை ஒரு வரமாகவே கருதும் சிங்கள பௌத்த தரப்பினர் செயற்கையாக 23 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரு தரைவழிப் பாலம் அமைக்கப்படுவதை ஒரு போதும் விரும்ப மாட்டார்கள். ஜேவிபி தலைமையிலான அரசாங்கம் சிங்களவரின் கண்ணில் இராமர் கட்டிய பாலம் இலங்கை மீதான இந்தியாவின் படையெடுப்புகானது. இந்துமா கடலின் மையத்தில் இந்தியாவுக்கு மிக அருகில் அமைந்துள்ள இலங்கைதீவு வெளி வல்லரசுகளின் ஆதிக்கத்துக்கோ அன்றி செல்வாக்குக்கோ உள்ளாகும் போது இந்தியாவை பெரிதும் பாதிக்கும் என்ற நிலையில் ஒரு பாலம் அமைப்பதன் மூலம் வெளி வல்லரசுகளுக்கான வாய்ப்பை துண்டித்து விடலாம் என இந்திய அரசு நம்புகிறது. இத்தகைய பின்னணியில் மேற்படி பாலம் அமைப்பது பற்றிய அவாவும் கற்பனையும் இந்திய தரப்பில் எழுவது இயல்பு. அதன்படி இந்தியா அதற்கான முயற்சிகளை கற்பனை கலந்த ரசனையுடன் மேற்கொள்கிறது. 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்படி பாலம் கட்டுவதற்கான வாக்குறுதிகளை வானளாவ நட்சத்திரங்கள் என பறக்க விட்டார். நிச்சயம் அவருக்குத் தெரியும் தான் புளுகுப் பெட்டிகளை அவிழ்த்து விடுகிறேன் என்பது. அவருக்கு இருந்த அரசியல் நெருக்கடியில் இந்தியாவின் வாயில் அல்வாவை வைத்து காராம் பசுவிடமிருந்து கறக்க வேண்டியவற்றை கறப்பதற்காக அப்படி அவர் இந்திய மண்ணில் நின்று செயல்பட்டார். தொடர்ந்து இலங்கை இந்திய அமைச்சர்கள் மட்டத்திலான கலந்து உரையாடல்களும் கருத்து பரிமாற்றங்களும் திட்டமிடல் பணிகளும் இடம்பெற்றன. ஆசிய வங்கியில் இதற்காக இந்திய அரசு 22 ஆயிரம் கோடி ரூபாக்களைக் கடன் கோரியும் இருந்தது. அந்தளவுக்கு திட்டம் நடைமுறை சார்ந்து இந்திய தரப்பில் நம்பிக்கை உடன் மேற்கொள்ளப்பட்டது. சிங்கள தரப்பை பொறுத்தவரையில் அதிகாரத்தில் உள்ளஒரு புத்திசாலியிடம் கேட்டால் அவன் பாலம் அமைக்க "ஓம்" என்று சொல்வான், ஆனால் கட்டமாட்டான். ஓர் அப்பாவின் சிங்களமகனை கேட்டால் அவன் பாலம் கட்ட வேண்டாம் என்று சொல்லுவான். இங்கு புத்திசாலியோ அப்பாவியோ இருவரும் பாலம் கட்ட மாட்டார்கள் என்பது உறுதி. இதில் ரணில் முதலாவது தரத்தைச் சேர்ந்தவர். இதுதான் சிங்கள பௌத்த யதார்த்த நிலை. சிங்கள தரப்பை பொறுத்தவரையில் அரசனோ ஆண்டியோ, ஞானியோ பாமரனோ எவரும் பாலம் கட்டுவதில்லை என்பதில் உறுதியானவர்கள். இந்நிலையில் இப்போது பதவி இருக்கும் ஜேவிபி தலைமையிலான அரசாங்கம் ஒருபோதும் இந்தப் பாலத்தை கட்ட மாட்டாது. கட்டப்பட உள்ளதாக இருப்பது கற்பனை; கட்டப்படாமல் இருக்கப் போவதே யதார்த்தம். https://tamilwin.com/article/is-the-thalaimannar-dhanushkodi-flyover-feasible-1763327912
-
கழிவிலிருந்து மின்சார உற்பத்தி திட்டத்தை முன்வைத்த வடக்கு ஆளுநர்!
17 Nov, 2025 | 04:19 PM வடக்கு மாகாணத்தில் நீடித்து வரும் திண்மக் கழிவகற்றல் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் 'கழிவிலிருந்து மின்சார உற்பத்தி' (Waste-to-Energy) திட்டத்தை நிறுவுவதற்கான உதவியை இலங்கைக்கான கொரியக் குடியரசுத் தூதுவர் லீ மியோனிடம் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் முன்வைத்துள்ளார். இன்றைய தினம் திங்கட்கிழமை (17) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், கொரியத் தூதுவர் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர். திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவத்துக்கான திட்டம் ஒன்றை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதற்காக நிதி அமைச்சு, சுற்றாடல் அமைச்சு மற்றும் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு ஆகியவற்றுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளதாகவும் கொரியத் தூதுவர் தெரிவித்தார். வடக்கு மாகாணத்திலும் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்பதை ஆளுநர் வரவேற்றதோடு, மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் திண்மக் கழிவகற்றலில் எதிர்கொள்ளும் சவால்களை அவர் சுட்டிக்காட்டினார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுற்றுச்சூழல் சமநிலை மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட மங்குரோவ் நடுகை ஊக்குவிப்பு திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தும் யோசனையையும் தூதுவர் முன்வைத்தார். மேலும், கொரியாவின் சர்வதேச சுகாதார அறக்கட்டளை (Korea Foundation for International Healthcare) ஊடாக இலங்கையில் 11 சுகாதாரத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அதனுள் வடக்கு மாகாணமும் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரிக்காக கொய்கா (KOICA) திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட கட்டட வசதிகளுக்காக ஆளுநர் நன்றியைத் தெரிவித்தார். தற்போதைய தேவைகளுக்கேற்ப தொழில்நுட்ப உபகரணங்களின் பற்றாக்குறை மற்றும் கட்டட மேம்பாட்டு தேவைகளைவும் அவர் சுட்டிக்காட்டினார். கொய்கா திட்டம் தற்போது நிறைவடைந்துள்ள நிலையிலும் இவற்றை கவனத்தில் கொள்ளுவதாக தூதுவர் உறுதியளித்தார். கொரியா தொழிற்துறை மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் உலகளவில் முன்னேற்றத்தைப் பதிவுசெய்துள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டதோடு, வடக்கு மாகாண இளையோருக்கான தொழில்துறை வேலை வாய்ப்புகள் மற்றும் பயிற்சிகளை அறிமுகப்படுத்துவதற்கான முதலீடுகளை ஊக்குவிக்குமாறு அவர் கோரினார். மேலும், கொரிய மொழிப் பயிற்சி மையம் அல்லது மொழிப் பயிற்சி வகுப்புகளைத் தொடங்குவதற்கான உதவியையும் அவர் கேட்டுக்கொண்டார். கொரியாவில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பச்சை வீட்டு (Greenhouse) விவசாயம் மற்றும் நுண்ணறிவு பாசன முறைகள் (Smart Irrigation) பற்றியும் ஆளுநர் கூறி, வடக்கு மாகாணத்தில் ஒரு கிராமத்தைத் தெரிவு செய்து இத்திட்டங்களைப் பரீட்சார்த்தமாக அறிமுகப்படுத்துவதற்கான ஒத்துழைப்பைத் தூதுவரிடம் கோரினார். வடக்கு மாகாண விவசாயிகள் கடின உழைப்பாளர்களாக இருந்தாலும், பாரம்பரிய முறைகளால் உற்பத்தி செலவு அதிகரித்து விளைச்சல் குறைந்து வருவதாக அவர் எடுத்துக்காட்டினார். இத்திட்டங்கள் அறிமுகமானால் குறைந்த செலவில் அதிக உற்பத்தி பெற முடியும் என ஆளுநர் வலியுறுத்தினார். இதனைத் தூதுவர் சாதகமாக ஆராய்வதாகத் தெரிவித்தார். இந்தச் சந்திப்பில் ஆளுநரின் செயலாளர் மற்றும் இணைப்புச் செயலாளர்கள் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/230585
-
முதலாவது பார்வையற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடர்
இந்தியா, பாகிஸ்தான் பார்வையற்ற பெண்கள் கைகுலுக்கி கிரிக்கெட் உணர்வை வெளிப்படுத்தினர் Published By: Digital Desk 3 17 Nov, 2025 | 02:04 PM (நெவில் அன்தனி) உலகின் முதலாவது பார்வையற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய - பாகிஸ்தான் வீராங்கனைகள் கைகுலுக்கி கிரிக்கெட் ஆர்வத்தின் பண்பாட்டை வெளிப்படுத்தினர். அவர்கள் குறைபார்வை உடையவர்களாக இருந்தபோதிலும் விளையாட்டில் ஆழமான பற்றுடன்கூடிய பண்பான பார்வை இருப்பதை எடுத்துக் காட்டினர். பார்வையற்ற இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப் போட்டி நடுநிலையான கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக நிலைய மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா, நேபாளம், வரவேற்பு நாடான இலங்கை ஆறு நாடுகள் முதலாவது பார்வையற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றுகின்றன. போட்டிகள் யாவும் இலங்கையில் நடைபெற்றுவருகின்றன. இந்திய - பாகிஸ்தான் போட்டி முடிவில் இரண்டு அணிகளினதும் வீராங்கனைகள் அரசியல் பதட்டங்களை புறந்தள்ளி வைத்துவிட்டு கைலாகு கொடுத்து தங்களது அதிசிறந்த விளையாட்டுப் பண்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டனர். கடந்த மே மாதம் இரண்டு நாடுகளுக்கு இடையில் கொடிய இராணுவ மோதல் இடம்பெற்ற பின்னர் கிரிக்கெட் மைதானத்திற்கு வேளியேயும் களத்திலும் பதற்றம் அதிகமாக இருந்துவருகிறது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஆடவர் ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் இறுதிப் போட்டி உட்பட மூன்று தடவைகள் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றையொன்று எதிர்த்தாடிய போதிலும் அந்த மூன்று சந்தர்ப்பங்களிலும் இரண்டு அணியினரும் கைகுலுக்கல்களைத் தவிர்த்திருந்தனர். அதனைத் தொடர்ந்து அண்மையில் நடைபெற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியின்போதும் தோஹாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆசிய கிண்ண உதய தாரகைகள் போட்டியின்போதும் இரண்டு அணியினரும் வாழ்த்துக்களைப் பரிமாறாததுடன் கைகுலுக்கவும் இல்லை. இந் நிலையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பார்வையற்ற மகளிர் ரி20 கிரிக்கெட் போட்டிக்கான நாணய சுழற்சி நடைபெற்றபோது கைகுலுக்கல் இடம் பெறாததால் இரண்டு அணிகளினதும் வீராங்கனைகள் போட்டி முடிவில் பார்வை உடைய தங்களது வீர, வீராங்கனைகளின் நடத்தையைப் பிரதிபலிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போட்டி முடிவில் பார்வையற்ற இரண்டு அணிகளினதும் வீராங்கனைகள் அன்பை பரிமாறிக்கொண்டதுடன் கைகளை குலுக்கி பாராட்டுதல்களையும் பகிர்ந்து சிறந்த குணாம்சங்களை வெளிப்படுத்தினர். கட்டுநாயக்க, சுதந்திர வர்த்தக வலய மைதானத்தில் நடைபெற்ற பார்வையற்ற மகளிர் ரி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு இந்தியா 10.2 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து பார்வையற்ற பாகிஸ்தான் மகளிர் அணித் தலைவி நிம்ரா ரஃபீக் இந்தியாவின் பெரிய வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார், அதே நேரத்தில் பார்வையற்ற இந்திய மகளிர் அணித் தலைவி ரி.சி. தீபிகா, பாகிஸ்தான் சிறப்பாக விளையாடியதாகக் கூறினார். பார்வையற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றும் அணிகள் களம் இறங்கும்போது ஒவ்வொரு அணியிலும் முழுமையான பார்வையற்ற நான்கு வீராங்கனைகள் இடம்பெறுவர். மற்றைய ஏழு வீராங்கனைகள் குறைபார்வை உடையவர்களாவர். https://www.virakesari.lk/article/230567
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
அவர் நல்லவர், வல்லவர், நாலுந்தெரிஞ்சவர், அப்பிடியெல்லாம் செய்யமாட்டார் அண்ணை.
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..! Published By: Digital Desk 3 17 Nov, 2025 | 04:55 PM திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் புதிதாக புத்தர்சிலை வைக்கும் வைபவம் இன்று திங்கட்கிழமை (17) பிற்பகல் 1.35 மணிக்கு பௌத்த சம்பிரதாய அடிப்படையில் இடம்பெற்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) இரவு அவசர அவசரமாக தற்காலிக கட்டடம் அமைத்து புத்தர்சிலை கொண்டு வந்து வைக்கமுற்பட்ட போது ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக மீண்டும் புத்தர்சிலை கொண்டு செல்லப்பட்டு இன்றையதினம் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இது தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் #ஆனந்த_விஜயபால அவர்கள் புத்தர்சிலைக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தினால்தான் திரும்ப கொண்டு சென்றதாகவும் இன்றைய தினம் அதே இடத்தில் வைக்கப்படும் என்ற கருத்தினை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இதன்போது பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததோடு பொதுமக்கள் மற்றும் பௌத்தபிக்குகள் கலந்து கொண்டு இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். https://www.virakesari.lk/article/230599
-
பாகிஸ்தான் இலங்கை கிரிக்கெட் தொடர்
கடைசி ஒருநாள் போட்டியிலும் இலங்கையை வெற்றிகொண்ட பாகிஸ்தான் தொடரை முழுமையாக (3 - 0) கைப்பற்றியது Published By: Vishnu 17 Nov, 2025 | 12:23 AM (நெவில் அன்தனி) இலங்கைக்கு எதிராக ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற மூன்றாவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்களால் வெற்றியீட்டிய பாகிஸ்தான், மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 3 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முழுமையாக கைப்பற்றியது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் ஈட்டிய மூன்றாவது முழுமையான வெற்றி இதுவாகும். இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட சுமாரான 211 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 44.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 215 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. தனது இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய ஹசீபுல்லா கான் 4ஆவது ஓவரில் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். (8 - 1 விக்.) எனினும், பக்கார் ஸமான், பாபர் அஸாம் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆரம்ப வீழ்ச்சியை சீர்செய்தனர். பக்கார் ஸமான் 55 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததுடன் மேலும் இரண்டு விக்கெட்கள் சிரான இடைவெளியில் சரிந்தன. பாபர் அஸாம் 34 ஒட்டங்களையும் சல்மான் அகா 6 ஓட்டங்களையும் பெற்று ஆட்டம் இழந்தனர். அதன் பின்னர் மொஹம்மத் ரிஸ்வான், ஹுசெய்ன் தலாத் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் சரியாக 100 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை இலகுவாக வெற்றியீட்ட உதவினர். மொஹமத் ரிஸ்வான் 61 ஓட்டங்களுடனும் ஹுசெய்ன் தலாத் 42 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்தவீச்சில் ஜெவ்றி வெண்டசே 42 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார். முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 45.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 211 ஓட்டங்களைப் பெற்றது. பெத்தும் நிஸ்ஸன்க, காமில் மிஷார ஆகிய இருவரும் இந்தப் போட்டியிலும் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். தொடர்ந்து குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். எனினும், அதன் பின்னர் இலங்கை அணியினால் சிறந்த இணைப்பாட்டங்களை ஏற்படுத்த முடியாமல் போனது. துடுப்பாட்டத்தில் சதீர சமரவிக்ரம 48 ஓட்டங்களையும் அணித் தலைவர் குசல் மெண்டிஸ் 34 ஓட்டங்களையும் அறிமுக வீரர் பவன் ரத்நாயக்க 32 ஓட்டங்களையும் காமில் மிஷார 29 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸன்க 24 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மொஹம்மத் வசிம் (கனிஷ்ட) 47 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஹரிஸ் ரவூப் 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பைசால் அக்ரம் 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: மொஹம்மத் வசிம் (கனிஷ்ட) தொடர்நாயகன்: ஹரிஸ் ரவூப் https://www.virakesari.lk/article/230524
-
சவூதி அரேபியாவில் பேருந்தும் டேங்கர் லொறியும் மோதி விபத்து; 42 இந்திய யாத்ரீகர்கள் உயிரிழப்பு!
சவுதியில் கோர விபத்து - 42 இந்தியர்கள் உயிரிழப்பு? Nov 17, 2025 - 11:02 AM சவுதி அரேபியா மதீனா அருகே மக்காவுக்கு புனிதப்பயணம் சென்ற பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று டீசல் தாங்கியுடன் மோதியதில் குறைந்தது 42 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இறந்தவர்களில் பலர் இந்தியர்கள் என்று சவுதி அரேபியா ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முஃப்ரிஹாத் அருகே அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து நடந்தபோது, பேருந்து மக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. பேருந்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் தெலுங்கானாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்று அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. விபத்தின் போது பல பயணிகள் தூங்கிக் கொண்டிருந்ததாகவும், மோதலுக்குப் பிறகு பேருந்து தீப்பிடித்து எரிந்தபோது அவர்கள் தப்பிக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. பலியானவர்களில் குறைந்தது 11 பெண்களும் 10 குழந்தைகளும் அடங்குவதாக கூறப்பட்ட போதும், அந்த தகவல்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. https://adaderanatamil.lk/news/cmi2pjooo01oto29ntmqftv21
-
தைராய்டு புற்றுநோய் விகிதம் மற்ற புற்றுநோய்களை விட வேகமாக அதிகரிப்பது ஏன்?
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் ஜாஸ்மின் ஃபாக்ஸ்-ஸ்கெல்லி 17 நவம்பர் 2025, 02:14 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் உலகின் சில பகுதிகளில் தைராய்டு புற்றுநோய் பாதிப்பு விகிதங்கள் அதிகரித்து வருகின்றன - மற்ற வகை புற்றுநோய்களை விட இது வேகமாக அதிகரிக்கிறதே, ஏன்? தைராய்டு புற்றுநோயின் விகிதங்கள் அமெரிக்காவில் வேறு எந்தப் புற்றுநோயை விடவும் வேகமாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த மர்மமான உயர்வுக்குப் பின்னால் என்ன இருக்கிறது? தைராய்டு சுரப்பி கழுத்தின் அடிப்பகுதியில், ஆடம்ஸ் ஆப்பிளுக்கு சற்று கீழே அமைந்துள்ளது. இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை மற்றும் எடை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை வெளியிடுவது இதன் வேலை. தைராய்டு சுரப்பியின் உள்ளே உள்ள செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளரவும் பிரியவும் தொடங்கி, ஒரு கட்டியை உருவாக்கும்போது தைராய்டு புற்றுநோய் ஏற்படுகிறது. இந்தச் சிதைந்த செல்கள் சுற்றியுள்ள திசுக்களை ஆக்கிரமித்து, உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும். பெரும்பாலான தைராய்டு புற்றுநோய்கள் குணப்படுத்தக் கூடியவை என்றாலும், இந்த நோயின் விகிதங்கள் வேகமாக அதிகரித்து வருவது குறித்துச் சுகாதார நிபுணர்கள் கவலைப்படுகிறார்கள். அமெரிக்காவின் புற்றுநோய் பற்றி தெரிவிக்கும் அமைப்பான 'கண்காணிப்பு, தொற்றுநோயியல் மற்றும் இறுதி முடிவுகள்' (Surveillance, Epidemiology, and End Results - Seer) தரவுத்தளத்தின்படி, அமெரிக்காவில் தைராய்டு புற்றுநோயின் நிகழ்வு விகிதம் 1980 மற்றும் 2016 க்கு இடையில் மூன்று மடங்குக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இது ஆண்களில் 1 லட்சம் பேரில் 2.39 லிருந்து 7.54 பேருக்கும், பெண்களில் 1 லட்சம் பேரில் 6.15 லிருந்து 21.28 பேருக்கும் உயர்ந்துள்ளது. "மருத்துவத் துறையில் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், காலப்போக்கில் அதிகரித்து வரும் சில புற்றுநோய்களில் தைராய்டு புற்றுநோயும் ஒன்றாகும்," என்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் (UCSF) உட்சுரப்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் சான்சியானா ரோமன் கூறுகிறார். அப்படியானால், இந்த பாதிப்பு அதிகரிப்பதன் பின்னணியில் என்ன இருக்கிறது? குழந்தைப் பருவத்தில் அதிக அளவில் கதிர்வீச்சுக்கு (ionising radiation) ஆளாவது தைராய்டு புற்றுநோயை ஏற்படுத்தும் என்று நீண்ட காலமாக அறியப்பட்டது. 1986 ஆம் ஆண்டில் செர்னோபில் அணு விபத்துக்குப் பிந்தைய ஆண்டுகளில், பெலாரஸ், யுக்ரேன் மற்றும் ரஷ்யாவில் குழந்தைகளிடையே இந்த நோயின் விகிதங்கள் வேகமாக உயர்ந்தன. ஜப்பானிய அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பியவர்களில், 1958 முதல் தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 36% பேருக்கு குழந்தைப் பருவத்தில் கதிர்வீச்சுக்கு உள்ளானதால் ஏற்பட்டிருக்கலாம் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மருத்துவ முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், தைராய்டு புற்றுநோய் எண்கள் அதிகரித்து வருகின்றன. இருப்பினும் இத்தகைய உயர்வை விளக்கக்கூடிய வகையில் 80கள் அல்லது 90களில் அமெரிக்காவிலோ அல்லது வேறு இடங்களிலோ அணுசக்திப் பேரழிவுகள் எதுவும் இல்லை. ஆரம்பத்தில் நிபுணர்கள் குழப்பமடைந்தனர், இருப்பினும் இறுதியில் ஒரு விளக்கம் முன்வைக்கப்பட்டது - நோயறிதல் மேம்பட்டதுதான் இதற்குக் காரணமா? 1980களில், மருத்துவர்கள் முதன்முறையாக தைராய்டு அல்ட்ராசோனோகிராபியைப் (thyroid ultrasonography) பயன்படுத்தத் தொடங்கினர். இது ஒலி அலைகளைப் பயன்படுத்தி தைராய்டு சுரப்பியின் படங்களை உருவாக்கும் ஒரு இமேஜிங் நுட்பமாகும். முன்பு கண்டறிய முடியாத மிகச் சிறிய தைராய்டு புற்றுநோய்களை மருத்துவர்கள் கண்டறிய இந்த முறை உதவியது. பின்னர் 1990களில், சந்தேகத்திற்கிடமான கட்டிகள் புற்றுநோயா என கண்டறிய மருத்துவர்கள் அந்த கட்டியிலிருந்து செல்களைச் சேகரிக்க தொடங்கினர். இது நுண் ஊசி ஆஸ்பிரேஷன் பயாப்ஸி (fine needle aspiration biopsy) என்று அழைக்கப்படும் நுட்பமாகும். "முன்பு, மருத்துவர்கள் கட்டிகளைத் கண்டறிய தைராய்டு சுரப்பியைத் தொட்டுப் பார்ப்பார்கள்," என்று அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் தொற்றுநோயியல் நிபுணர் காரி கிடாஹாரா கூறுகிறார். "ஆனால் அல்ட்ராசோனோகிராபி போன்ற நுட்பங்கள் மூலம், மருத்துவர்களால் சிறிய அளவிலான முடிச்சுகளைக் கண்டறிந்து, பின்னர் அவற்றிலிருந்து பயாப்ஸி எடுக்க முடிந்தது. இது சிறிய அளவிலான பாப்பிலரி தைராய்டு புற்றுநோய்களை அதிகமாகக் கண்டறிய வழிவகுத்தது, அவை முன்பு (உடலைத் தொட்டுச் சோதிக்கும் முறையால்) உணரப்படாது." மற்ற ஆதாரங்களும் இந்த அதிகப்படியான நோயறிதல் (over-diagnosis) கோட்பாட்டிற்கு ஆதரவாக உள்ளன. உதாரணமாக, தைராய்டு புற்றுநோயின் விகிதங்கள் அதிகமானாலும், தைராய்டு புற்றுநோயால் ஏற்படும் இறப்புகள் நிலையாக இருப்பது போல் தோன்றியது. இதற்கிடையில், தென் கொரியாவில் தேசிய தைராய்டு புற்றுநோய் பரிசோதனைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது பாதிப்பு அதிகமாக இருந்தது. திட்டம் குறைக்கப்பட்டபோது விகிதங்களும் மீண்டும் சரிந்தன. கிடாஹாரா, "ஒட்டுமொத்தமாக இந்த மாதிரிகள் அதிகப்படியான நோயறிதலுடன் ஒத்துப்போகின்றன. அதாவது, கண்டறியப்படாமல் விடப்பட்டிருந்தால், அந்த நபர்களுக்கு அறிகுறிகளையோ அல்லது மரணத்தையோ ஒருபோதும் ஏற்படுத்தாத நோயை அதிகமாகக் கண்டறிதல் ஆகும்," என்று கூறுகிறார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 1986 ஆம் ஆண்டு செர்னோபில் அணுசக்திப் பேரழிவுக்குப் பிறகு யுக்ரேன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் குழந்தைகளிடையே தைராய்டு புற்றுநோயின் விகிதங்கள் கடுமையாக அதிகரித்தன. சிறிய பாப்பிலரி தைராய்டு புற்றுநோய்கள் பொதுவாக வளரும் மற்றும் சிகிச்சைக்கு நன்றாக குணமாகும் என்று இப்போது நமக்குத் தெரியும். இவை அரிதாகவே அபாயகரமானவையாக இருக்கின்றன. மேலும், இதை முன்பே கணிக்கவும் முடியும். ஆனால் அந்தக் காலத்தில், இந்தப் புற்றுநோய்களை அதிகமாகக் கண்டறிவது பலருக்குத் தேவையற்ற மருத்துவச் சிகிச்சைகளுக்கு வழிவகுத்தது. இதில் தைராய்டு சுரப்பியை முழுவதுமாக அகற்றுவது, அதைத் தொடர்ந்து எஞ்சிய செல்களை அகற்ற கதிரியக்க அயோடின் சிகிச்சை ஆகியவை அடங்கும். அறுவைசிகிச்சை சில சமயங்களில் குரல் நாண் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும், அதே நேரத்தில் கதிரியக்க அயோடின் சிகிச்சையும் இரண்டாம் நிலை புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கலாம். இதன் விளைவாக, அமெரிக்காவில் இப்போது வெகு தீவிர புற்றுநோய்களுக்கு மட்டுமே கதிரியக்க அயோடின் பயன்படுத்தப்படுவதுடன், பக்க விளைவுகளின் அபாயத்தைக் குறைக்க மருந்தின் அளவுகள் குறைக்கப்படுகின்றன. தைராய்டு சுரப்பியை முழுவதுமாக அகற்றுவதற்குப் பதிலாக, மருத்துவர்கள் பெரும்பாலும் அதை பகுதியளவு அகற்றுகிறார்கள் அல்லது 'கண்காணிப்பு' அணுகுமுறையைப் பின்பற்றுகிறார்கள். இதன் விளைவாக, கண்காணிப்பு, தொற்றுநோயியல் மற்றும் இறுதி முடிவுகளின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் அமெரிக்காவில் தைராய்டு புற்றுநோய் பாதிப்புகள் இப்போது நிலையானதாகிவிட்டன என்று கூறுகின்றன. உதாரணமாக, 2010 இல் 1 லட்சம் பேருக்குச் சராசரியாக 13.9 புதிய பாதிப்புகள் இருந்தன, அதே நேரத்தில் புள்ளிவிவரங்கள் கிடைத்த கடைசி ஆண்டான 2022 இல் 1 லட்சம் பேரில் 14.1 பாதிப்புகள் இருந்தன. இருப்பினும், அதிகப்படியான நோயறிதல் மட்டுமே பாதிப்பு விகிதம் அதிகரிப்புக்கு முழுமையாக விளக்கமாக இருக்கமுடியாது என்று சில விஞ்ஞானிகள் கடந்த சில ஆண்டுகளாக வாதிடுகின்றனர். இத்தாலியில் உள்ள கட்டானியா பல்கலைக்கழகத்தின் உட்சுரப்பியல் துறைப் பேராசிரியரான ரிக்கார்டோ விக்னேரி ஒரு ஆய்வில், அதிகப்படியான நோயறிதல் மட்டுமே இந்த உயர்வுக்குக் காரணமாக இருந்தால், சிறந்த நோயறிதல் நடைமுறைகளைக் கொண்ட உயர் வருமான நாடுகளில் மட்டுமே தைராய்டு புற்றுநோய் பாதிப்புகள் அதிகமாக கண்டறியப்படும் என்று எதிர்பார்க்கலாம் என்று வாதிடுகிறார். இருப்பினும், நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலும் தைராய்டு புற்றுநோய் பாதிப்பு விகிதம் அதிகரித்துள்ளதால், அது உண்மையல்ல என்கிறார் அவர். "வலுவான பரிசோதனை இல்லாத இடங்களிலும் கூட தைராய்டு புற்றுநோய் விகிதங்கள் அதிகரித்து வருகின்றன," என்று ரோமன் கூறுகிறார். "பெரிய மற்றும் மிகவும் முற்றிய கட்டிகளும் அடிக்கடி கண்டறியப்படுகின்றன. இது நோயறிதல் சார்பு மற்றும் நோய் பாதிப்பின் உண்மையான அதிகரிப்பு இரண்டின் கலவையையும் நாம் பார்க்கிறோம் என்பதைக் குறிக்கிறது." தைராய்டு புற்றுநோய்கள் ஆரம்ப கட்டங்களில் அதிகமாகக் கண்டறியப்படுவதாலும் சிகிச்சையின் விளைவுகள் மேம்பட்டுள்ளதாலும், தைராய்டு புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கலாம் என்று விக்னேரி கூறுகிறார். இருப்பினும், இறப்பு விகிதம் 1 லட்சம் பேருக்கு சுமார் 0.5 ஆக நிலையானதாகவே உள்ளது, சில நாடுகளில் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதற்கான அறிகுறிகள் உள்ளன. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சி.டி. ஸ்கேன்கள் போன்ற அதிக அளவிலான அயனியாக்கும் கதிர்வீச்சுடன் கூடிய நடைமுறைகளின் அதிகரிப்பு, பதிப்பு விகித உயர்வுக்குப் பங்களிக்கக்கூடும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். உதாரணமாக, ஒரு ஆய்வு கலிபோர்னியாவில் 2000 முதல் 2017 வரை கண்டறியப்பட்ட 69,000 க்கும் மேற்பட்ட தைராய்டு புற்றுநோயாளிகளை ஆய்வு செய்தது. ஆராய்ச்சியாளர்கள், கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்பு விகிதம் இரண்டும் காலப்போக்கில் அதிகரித்துள்ளதைக் கண்டறிந்தனர். அந்த அதிகரிப்பு கட்டியின் அளவு மற்றும் புற்றுநோயின் நிலையோடு தொடர்பில்லாமல் இருந்தது, இது மிகச் சிறிய கட்டிகளின் மேம்பட்ட நோயறிதலைத் தவிர வேறு ஏதோ ஒன்று நடந்திருக்க வேண்டும் என்று காட்டுகிறது. 2017 இல், கிடாஹாராவும் அவரது குழுவும் 1974-2013 க்கும் இடையில் கண்டறியப்பட்ட 77,000 க்கும் மேற்பட்ட தைராய்டு புற்றுநோயாளிகளின் மருத்துவப் பதிவுகளையும் ஆய்வு செய்தனர். பெரும்பாலான பாதிப்புகள் தைராய்டு சுரப்பியில் சிறிய பாப்பிலரி கட்டிகளால் ஏற்பட்டாலும், உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவியிருந்த பரவும் (metastatic) பாப்பிலரி புற்றுநோய்களும் அதிகரித்திருப்பதைக் கண்டறிந்தனர். தைராய்டு புற்றுநோயால் ஏற்படும் இறப்புகள் அரிதானவை என்றாலும், இவை ஆண்டுக்கு 1.1% என்ற விகிதத்தில் அதிகரித்து வருவதையும் ஆய்வு காட்டியது. கிடாஹாரா, "இந்த மிகவும் தீவிரமான கட்டிகளின் அதிகரிப்பைத் தூண்டக்கூடிய வேறு ஏதாவது ஒன்று இருக்கலாம் என்று காட்டுகிறது," என்கிறார். முக்கிய காரணம் என சந்தேகிக்கப்படுபவனவற்றில் உடல் பருமனும் ஒன்று, இது 1980 களில் இருந்து, குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிற வளர்ந்த நாடுகளில் அதிகரித்து வருகிறது. அதிக எடைக்கும் தைராய்டு புற்றுநோய் அபாயத்திற்கும் இடையே ஒரு இணைப்பு இருப்பதாக ஆரோக்கியமான மக்களுடன் தொடங்கி ஒரு நீண்ட கால அடிப்படையில் நடத்தப்படும் குழு ஆய்வுகள் காட்டுகின்றன. அதிக பிஎம்ஐ (BMI) கொண்ட நபர்கள் ஆரோக்கியமான பிஎம்ஐ கொண்ட நபர்களுடன் ஒப்பிடும்போது, அவர்களின் வாழ்நாளில் தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கு 50% க்கும் அதிகமாக வாய்ப்புள்ளது. அதிக பிஎம்ஐ தீவிரமான புற்றுநோய் கட்டி அம்சங்களுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. உதாரணமாக, பாதிப்பு கண்டறியப்படும்போது பெரிய அளவில் இருப்பது அல்லது புற்றுநோய் எளிதில் பரவக்கூடிய ஒரு பிறழ்வைக் கொண்டிருப்பது. "எங்கள் ஆராய்ச்சியில், அதிக பிஎம்ஐ, தைராய்டு புற்றுநோய் தொடர்பான மரணத்தின் அதிக அபாயத்துடன் தொடர்பு இருப்பதையும் கண்டோம்," என்று கிடாஹாரா கூறுகிறார். "எனவே இது வெறும் பாதிப்பு கண்டறிதல் சார்பு அல்ல என்பதற்கு இது ஒரு வலுவான ஆதாரமாக இருந்தது. அதிக பிஎம்ஐ கொண்டவர்கள் மருத்துவரிடம் சென்று தைராய்டைச் சோதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் அதிக தைராய்டு புற்றுநோய் அவர்களுக்கு இருக்கிறது என்று சொல்ல முடியாது. அதிக பிஎம்ஐ இருப்பது தைராய்டு புற்றுநோய் உருவாவது மற்றும் வளர்ச்சியுடன் அதிக தொடர்பு கொண்டிருப்பதற்கான ஆதாரம் இது." இருப்பினும், உடல் பருமன் எப்படித் தைராய்டு புற்றுநோயை ஏற்படுத்துகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. உடல் பருமன் கொண்டவர்களுக்குத் தைராய்டு செயலிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அறியப்படுகிறது. உதாரணமாக, தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் தைராய்டு தூண்டுதல் ஹார்மோனின் (TSH) அதிக அளவு கொண்ட நபர்கள் அதிக பிஎம்ஐயையும் கொண்டிருக்கிறார்கள். "சாத்தியமான அடிப்படை வழிமுறைகளைப் பற்றி நாங்கள் இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை, ஏனெனில் இது இன்னும் குறைவாக ஆய்வு செய்யப்பட்ட ஒரு பகுதி, ஆனால் இது பல காரணிகளால் இருக்கலாம்," என்று கிடாஹாரா கூறுகிறார். "உடல் பருமன் பல உடலியல் விளைவுகளைக் கொண்டுள்ளது, எனவே வீக்கம், இன்சுலின் எதிர்ப்பு மற்றும் தைராய்டு செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் தைராய்டு புற்றுநோயின் வளர்ச்சியைத் தூண்டுவதில் ஒரு பங்கைக் கொண்டிருக்கலாம்." பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தீயணைப்பு நுரை போன்ற பொதுவான பொருட்களில் காணப்படும் உட்சுரப்பிச் சீர்குலைக்கும் ரசாயனங்களும் (Endocrine-disrupting chemicals) தைராய்டு புற்றுநோய் அபாயத்தில் ஒரு விளைவைக் கொண்டிருக்கலாம் பிற விஞ்ஞானிகள், சாதாரண வீட்டுப் பொருட்கள் மற்றும் கரிமப் பூச்சிக்கொல்லிகளில் காணப்படும் "உட்சுரப்பிச் சீர்குலைக்கும் ரசாயனங்கள்" (endocrine disrupting chemicals - EDCs) காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள். இந்த ரசாயனங்கள் உடலின் ஹார்மோன்களைப் பிரதிபலிக்கவோ, தடுக்கவோ அல்லது அவற்றில் குறுக்கிடும் தன்மையுடையவையாகவோ இருக்கும். உதாரணமாக, பெர்ஃப்ளூரோஆக்டனோயிக் அமிலம் (PFOA) மற்றும் பெர்ஃப்ளூரோஆக்டேன்சல்பானிக் அமிலம் (PFOS) ஆகியவை இதில் அடங்கும். இவை சமையல் பாத்திரங்கள் மற்றும் காகித உணவுப் பொதிவு முதல் தனிநபர் பராமரிப்புப் பொருட்கள், தரைவிரிப்புகள் மற்றும் தீயணைக்கும் நுரை வரை பல பொருட்களில் காணப்படுகின்றன. இருப்பினும், இத்தகைய ரசாயனங்களைத் தைராய்டு புற்றுநோயுடன் இணைக்கும் சான்றுகள் கலவையாகவே உள்ளன. பிற ஆய்வுகள், சுவடு கூறுகள் (trace elements) ஒரு பங்கைக் கொண்டிருக்கலாம் என்று கூறுகின்றன. சுவடு கூறுகள் என்பவை உயிரினங்களுக்கு மிகச் சிறிய அளவில் மட்டுமே தேவைப்படும் ரசாயனத் தனிமங்கள் ஆகும். இருப்பினும், அவை தைராய்டு செயல்பாட்டிற்கு முக்கியமானவை. "தீவு நாடுகளில் தைராய்டு புற்றுநோயின் விகிதங்கள் மிக அதிகமாக இருப்பதைக் காண்கிறோம்," என்று கிடாஹாரா கூறுகிறார். "எரிமலை வெடிப்புகள் தொடர்பான சுவடு கூறுகளைப் பற்றிய கருதுகோள்கள் உள்ளன. அதனால் துத்தநாகம் (zinc), காட்மியம் (cadmium), வனேடியம் (vanadium) போன்ற வேறு சில ரசாயனங்கள் இந்தச் சூழல்களில் அதிக தைராய்டு புற்றுநோய் விகிதங்களுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, ஆனால் நேரடித் தொடர்பை காட்டுவதற்கு நன்கு வடிவமைக்கப்பட்ட அதிக தொற்றுநோயியல் ஆய்வுகள் எதுவும் இல்லை." இருப்பினும், நோயறிதலுக்கான மருத்துவ ஸ்கேன்களிலிருந்து வரும் கதிர்வீச்சும் மற்றொரு காரணமாக இருக்கலாம் என்று கிடாஹாரா நம்புகிறார். குறிப்பாக அமெரிக்காவில் 80களிலிருந்து சி.டி. (CT) மற்றும் எக்ஸ்ரே ஸ்கேன்கள் பயன்படுத்தப்படும் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது, இதில் குழந்தைகளுக்கு எடுக்கப்படும் சி.டி. ஸ்கேன்களும் அடங்கும். இந்த சி.டி. ஸ்கேன்கள் தைராய்டு சுரப்பிக்கு ஒப்பீட்டளவில் அதிக அளவிலான கதிர்வீச்சை அளிக்கின்றன. ஜப்பானிய அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பியவர்கள் மீதான ஆய்வுகள் போன்ற பிற ஆய்வுகளிலிருந்து கதிர்வீச்சுக்கும் தைராய்டு புற்றுநோய்க்கும் இடையிலான உறவைப் பற்றி நாம் அறிந்திருப்பதன் மூலம், அத்தகைய கதிர்வீச்சின் விளைவுகளை நாம் மாதிரிப்படுத்தலாம். உதாரணமாக, ஒரு சமீபத்திய ஆய்வு, இனிவரும் காலங்களில், ஆண்டுக்கு அமெரிக்காவில் சுமார் 3,500 தைராய்டு புற்றுநோய்கள் சி.டி. ஸ்கேன் விகிதங்களால் நேரடியாக ஏற்படக்கூடும் என்று மதிப்பிட்டுள்ளது. "இளம் தைராய்டு சுரப்பி, வயதானவர்களின் தைராய்டு சுரப்பியை விடக் கதிர்வீச்சு வெளிப்பாட்டின் விளைவுகளுக்கு அதிகம் பாதிக்கும் தன்மை கொண்டது," என்று கிடாஹாரா கூறுகிறார். "எனவே சி.டி. ஸ்கேன்களின் அதிகரித்து வரும் பயன்பாடு அமெரிக்காவிலும் பிற இடங்களிலும் தைராய்டு புற்றுநோயின் விகிதங்கள் உயர்வுக்குப் பகுதி பங்களிக்கக்கூடும் என்பது சாத்தியமே." இந்த அனைத்துக் காரணிகளும் ஒன்றிணைந்த பங்கைக் கொண்டிருக்கவும் வாய்ப்புள்ளது. "நாம் சுற்றுச்சூழல், வளர்சிதை மாற்றம், உணவு மற்றும் ஹார்மோன் தாக்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய, அத்துடன் அடிப்படை மரபணு ஏற்புத்திறனுடன் தொடர்பு கொள்ளக்கூடிய பல காரணி நிகழ்வைப் பார்க்கிறோம்," என்று ரோமன் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgzjx316dyo
-
திருகோணமலை கடற்கரையில் நிறுவப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டது
புத்தர் சிலை பாதுகாப்புக் காரணங்களுக்காகவே அகற்றப்பட்டது - பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் Published By: Digital Desk 1 17 Nov, 2025 | 11:25 AM திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் வைக்கப்பட்ட புத்தர்சிலை பாதுகாப்பு காரணங்களுக்காகவே, அகற்றப்பட்டதாகவும், இன்றையதினம் மீண்டும் அதே இடத்தில் மீண்டும் வைக்கப்படும் எனவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (17) விளக்கமளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், இன்று அந்த புத்தர் சிலையை குறித்த விகாரையில் வைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளோம். அத்தோடு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கரையோர பாதுகாப்பு திணைக்களத்தால், அங்கு சட்டவிரோதமாக நடத்தப்படும் கடை ஒன்று தொடர்பிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பில் பொலிஸார் நீதிமன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்ற தீர்ப்பின்படியே செயற்பட வேண்டியுள்ளது. இந்த காணி தொடர்பிலான பிரச்சினையை நீதிமன்றத்திலேயே தீர்த்துக்கொள்ள வேண்டும். இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் நீதிமன்றத்திற்கு காரணங்களை சமர்ப்பிக்கவுள்ளோம். இதற்கு பின்னர் திருகோணமலையில் எந்த பிரச்சினையும் நடப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/230548
-
கருத்து படங்கள்
அததெரண கருத்துப்படம்.
-
நவம்பர் 2025 - இன்றைய வானிலை
இன்றைய வானிலை 17 Nov, 2025 | 06:07 AM இலங்கைக்கு மேலாக நிலை கொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசம் மேலும் தொடர்கின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய பிராந்தியங்களின் சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். பொத்துவில் தொடக்கம் திருகோணமலை, காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும். திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை, மன்னார், புத்தளம், கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். https://www.virakesari.lk/article/230533
-
வெளி நாட்டு சுற்றுலாப் பயணிக்கு, தனது அந்தரங்க உறுப்பை காட்டிய... ஸ்ரீலங்கா இளைஞன். (காணொளி)
வெளிநாட்டு சுற்றுலாப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் கைது Published By: Vishnu 17 Nov, 2025 | 02:45 AM திருக்கோவில் பகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பெண் ஒருவரிடம் பாலியல் தொல்லை செய்ததாகக் கூறப்படும் சம்பவத்துக்கு தொடர்புடைய 23 வயதான திருமணமான இளைஞர் ஒருவரை பொலிஸார் களவாஞ்சிக்குடி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர். இலங்கைக்கு வந்திருந்த நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், அக்டோபர் 25 ஆம் திகதி சுற்றுலா மேற்கொண்டபோது ஒருவன் தகாத முறையில் நடந்து கொண்டதாக இலங்கை சுற்றுலா பொலிஸிடம் முறைப்பாடு செய்திருந்தார். மேலும், சம்பவத்தின் காட்சியையும் அவர் சமூக ஊடகங்களில் பதிவேற்றியதையடுத்து இது பெரும் கவனம் பெற்றது. சுற்றுலா பிரிவு பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், சம்பந்தப்பட்ட பெண் அறுகம்பையிலிருந்து பாசிக்குடாவுக்குச் சென்றபோது திருக்கோவில் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/230531
-
மாறும் காட்சிகள்: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் சிறிய கட்சிகளின் நிலைப்பாடு என்ன?
படக்குறிப்பு,(இடமிருந்து) தமிமுன் அன்சாரி, தனியரசு, கிருஷ்ணசாமி, வேல்முருகன் கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 21 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சுமார் ஆறு மாதங்களே இருக்கின்றன. அ.இ.அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டு பிரதான கூட்டணிகளிலும் இடம்பெற்றுள்ள முக்கியக் கட்சிகள் தங்களுக்கான கூட்டணி வாய்ப்புகளை எடை போடத் துவங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக, சிறிய கட்சிகள் தங்களுக்கான சிறந்த வாய்ப்புகளை நோக்கி காய்களை நகர்த்தத் துவங்கியுள்ளன. எந்தக் கட்சி என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது? 2021-ல் யார் எந்தப் பக்கம் இருந்தனர்? கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில், தி.மு.க., காங்கிரஸ், வி.சி.க., இடதுசாரிகள் தவிர, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, ஆல் இந்தியா ஃபார்வர்ட் பிளாக், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மக்கள் விடுதலைக் கட்சி, ஆர். அதியமான் தலைமையிலான ஆதித் தமிழர் பேரவை, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இவை தவிர, மனிதநேய ஜனநாயகக் கட்சி, இந்திய தவ்ஹீத் ஜமாத், தமிழக மக்கள் முன்னணி போன்றவையும் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தன. அ.தி.மு.க. கூட்டணியில், பா.ஜ.க., பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ் தவிர, பெருந்தலைவர் மக்கள் கட்சி, ஜான் பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இது தவிர, புதிய நீதிக் கட்சி, தமிழ் மாநில முஸ்லீம் லீக், இந்திய தேசிய குடியரசுக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இந்தக் கூட்டணிக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தன. மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை இடம்பெற்றிருந்தன. கலப்பை மக்கள் கட்சி, ஜனநாயக மக்கள் இயக்கம் போன்ற சிறிய அமைப்புகளும் இந்தக் கூட்டணிக்கு ஆதரவளித்தன. டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில் எஸ்டிபிஐ இடம்பெற்றிருந்தது. நாம் தமிழர், பகுஜன் சமாஜ் கட்சி, புதிய தமிழகம் ஆகியவை தனித்துப் போட்டியிட்டன. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வந்தபோது தமிழகத்தில் அரசியல் காட்சிகள் சற்று மாறியிருந்தன. தி.மு.க. கூட்டணி மக்கள் நீதி மய்யத்தை இணைத்துக் கொண்டு அதே போலத் தொடர, தேசிய ஜனநாயகக் கூட்டணயில் இருந்து அ.தி.மு.க. வெளியேறியிருந்தது. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது 'ஒரு லிட்டர் பால் கூட இல்லாமல் லட்சக்கணக்கான கிலோ நெய் தயாரிப்பு' - திருப்பதி லட்டு கலப்பட நெய் வழக்கு ஒருவர் கூறுவது உண்மையா பொய்யா என்று கண்டுபிடிக்க அறிவியல் கூறும் வழி இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதி விசாரித்த முக்கிய வழக்குகளும் சர்ச்சைகளும் வாங்காத ரூ.100 லஞ்சத்திற்காக 39 ஆண்டு 'தண்டனை' அனுபவித்த ஒருவரின் துயரக் கதை End of அதிகம் படிக்கப்பட்டது அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. தவிர, புதிய தமிழகம் கட்சியும் எஸ்டிபிஐ கட்சியும் இடம்பெற்றிருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ம.க., ஓ. பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் தவிர, இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை இடம்பெற்றிருந்தன. இப்போது சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், மீண்டும் காட்சிகள் மாறியிருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பிரிந்த அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் தற்போது ஒன்றாக இணைந்திருக்கின்றன. அதே நேரத்தில் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறியிருக்கின்றன. இந்தப் பின்னணியில்தான் சிறிய கட்சிகள் தங்களுக்கான வாய்ப்புகளை எடைபோடத் துவங்கியுள்ளன. தமிழக வாழ்வுரிமைக் கட்சி பட மூலாதாரம், Facebook/Velmurugan T படக்குறிப்பு, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தி.மு.க. கூட்டணியில் அவ்வப்போது அதிருப்திக் குரலை எழுப்பிவரும் கட்சி தி. வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சி. 2019ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக தி.மு.க. கூட்டணியில் இருந்து வருகிறார் தி. வேல்முருகன். 2021ஆம் ஆண்டில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று, பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார் தி. வேல்முருகன். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல சட்டமன்றத்தில் பல தருணங்களில் தி.மு.க. அமைச்சர்களுக்கும் வேல்முருகனுக்கும் இடையில் உரசல்கள் ஏற்பட்டன. அதேபோல, சபாநாயகருக்கும் தி. வேல்முருகனுக்கும் இடையிலும் மோதல்கள் ஏற்பட்டன. அந்தத் தருணங்களில் எல்லாம் தி.மு.க. மீது அதிருப்தியை வெளிப்படுத்தினார் வேல்முருகன். இந்தத் தேர்தலில் என்ன திட்டத்தில் இருக்கிறார் அவர்? "நான் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில்தான் இருக்கிறேன். வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் கூடுதல் இடங்களை எதிர்பார்ப்போம். எங்கள் தகுதிக்குரிய இடங்களை எதிர்பார்ப்போம். அந்த அளவுக்குரிய இடங்கள் கிடைக்காவிட்டால் பொதுக் குழுவைக் கூட்டி முடிவெடுப்போம். ஆனால், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இருப்பதால் அங்கே செல்ல முடியாது. த.வெ.க. ஒரு நடிகரின் கட்சி. அங்கேயும் செல்ல முடியாது. ஆனால், வரும் தேர்தலில் எங்கள் கட்சிக்குரிய இடங்களை நாங்கள் நிச்சயம் எதிர்பார்ப்போம்" என பிபிசியிடம் தெரிவித்தார் வேல்முருகன். தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை பட மூலாதாரம், Facebook/Thaniyarasu படக்குறிப்பு, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் உ. தனியரசு நீண்ட காலமாக அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளில் ஒன்று உ. தனியரசு தலைமையிலான தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை. கோவை செழியனுடன் சில காலம் இணைந்து செயல்பட்டுவந்த உ. தனியரசு, 2001ஆம் ஆண்டில் கோவையில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையை துவக்கினார். 2011ஆம் ஆண்டில் அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்து நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றிபெற்றார். அதற்குப் பிறகு, 2016ஆம் ஆண்டில் மீண்டும் அ.தி.மு.க. கூட்டணியில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். முதலமைச்சராக இருந்த ஜெ. ஜெயலலலிதா மறைந்த பிறகும் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.கவுக்கு ஆதரவளித்துவந்தார். ஆனால், 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் உ. தனியரசுவுக்கு இடம் ஏதும் தரப்படவில்லை. "2021ல் தி.மு.கவிடமிருந்து அழைப்பு வந்தது. ஆனால், அ.தி.மு.கவிலேயே இருக்கத் தீர்மானித்தேன். இறுதி நேரத்தில் இடம் வழங்கப்படவில்லை" என்கிறார் தனியரசு. இதற்குப் பிறகு அவரது கட்சி கொஞ்சம் கொஞ்சமாக தி.மு.க.பக்கம் திரும்பியது. "கடந்த வியாழக்கிழமையன்று முதல்வரைச் சந்தித்துவிட்டு வந்திருக்கிறேன். இந்த முறை தி.மு.க. கூட்டணியில்தான் இடம்பெற விரும்புகிறேன்." என பிபிசியிடம் தெரிவித்தார் தனியரசு. தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே கொங்குப் பகுதியை மையமாகக் கொண்ட கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி இருக்கும் நிலையில், மேலும் ஒரு கொங்குப் பகுதிக்கான கட்சியும் அதே கூட்டணயில் இடம்பெற முடியுமா என கேட்ட போது, "அவர்களோடு எங்களுக்கு எந்த முரண்பாடும் கிடையாது. ஆகவே, கூட்டணியில் இடம்பெற முடியுமென்றுதான் உறுதியாக நம்புகிறேன்" என்கிறார் உ. தனியரசு. மனிதநேய ஜனநாயகக் கட்சி பட மூலாதாரம், Facebook/Thaminum Ansari படக்குறிப்பு, மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் மு. தமிமுன் அன்சாரி மனிதநேய மக்கள் கட்சியிலிருந்து பிரிந்து 2016ஆம் ஆண்டில் மு. தமிமுன் அன்சாரி தலைமையில் மனிதநேய ஜனநாயகக் கட்சி உருவானது. 2016ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இந்தக் கட்சி இடம்பெற்றது. அக்கட்சிக்கு இரு இடங்கள் வழங்கப்பட்டன. நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட மு. தமிமுன் அன்சாரி வெற்றிபெற்றார். ஜெ. ஜெயலலிதா மறைந்த பிறகும் தொடர்ந்து அக்கட்சி அ.தி.மு.கவுக்கு ஆதரவளித்துவந்தது. ஆனால், 2019ஆம் ஆண்டில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உருவான பிறகு அந்தக் கூட்டணியிலிருந்து விலகினார் தமிமுன் அன்சாரி. இந்த சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க. கூட்டணியில் இடம்பெற விரும்புவதாக பிபிசியிடம் தெரிவித்தார் மு. தமிமுன் அன்சாரி. "2019ஆம் ஆண்டிற்குப் பிறகு தொடர்ந்து பா.ஜ.க. இடம்பெறும் கூட்டணியை எதிர்த்துவருகிறோம். இந்த முறை தி.மு.க. கூட்டணியில் நிச்சயம் இடம்பெறுவோம்" என்கிறார் அவர். புதிய தமிழகம் கட்சி பட மூலாதாரம், Facebook/Dr K Krishnasamy படக்குறிப்பு, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கே. கிருஷ்ணசாமி 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று 4 இடங்களில் போட்டியிட்டது. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று ஒரு தொகுதியில் போட்டியிட்டது அக்கட்சி. 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டது அக்கட்சி. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று தென்காசி தொகுதியில் அக்கட்சியின் தலைவர் கே. கிருஷ்ணசாமி போட்டியிட்டார். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் மீண்டும் கூட்டணி அமைத்தன. இந்தத் தருணத்தில் கே. கிருஷ்ணசாமி அதிருப்தி அடைந்தார். ஆகவே வரும் சட்டமன்றத் தேர்தலில் என்ன நிலைப்பாட்டை எடுப்பார் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. இது குறித்து பிபிசியிடம் பேசிய அவர், "வரும் ஜனவரி 7ஆம் தேதி எங்கள் கட்சியின் மாநில மாநாடு நடக்கவிருக்கிறது. அதற்குப் பிறகுதான் கூட்டணி தொடர்பான எங்கள் நிலைப்பாட்டைச் சொல்வோம். இப்போது எந்தக் கூட்டணியிலும் நாங்கள் இல்லை. கடந்த பத்தாண்டுகளில் மக்களின் நிலை மோசமடைந்திருக்கிறது. குறிப்பாக கடந்த ஐந்தாண்டுகளில் எல்லாவிதங்களிலும் மோசமான நிலையை எட்டியிருக்கிறோம். அதையெல்லாம் மனதில் வைத்துத்தான் முடிவெடுப்போம். ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதுதான் எங்களுடைய முக்கியமான செயல்திட்டம். அதனை மனதில்வைத்து கூட்டணி முடிவுகளை எடுப்போம்" என்றார் கே. கிருஷ்ணசாமி. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட நிலையில் அதிலிருந்து வெளியேறியது ஏன் என கேட்டதற்கு "அ.தி.மு.க. திடீரென பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தது. அதைப் பற்றி எங்களிடம் ஏதும் சொல்லவில்லை. நாங்களும் சுதந்திரமாக இயங்குகிறோம். அவ்வளவுதான்" என்கிறார் கிருஷ்ணசாமி. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் பட மூலாதாரம், Facebook/John Pandian படக்குறிப்பு, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் ஆரம்பத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் பிரிவில் இருந்த ஜான் பாண்டியன், 2000வது ஆண்டில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார். 2001ஆம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியிலும் 2011ஆம் ஆண்டு மற்றும் 2016ஆம் ஆண்டு தேர்தல்களில் சுயேச்சையாக போட்டியிட்டார் ஜான் பாண்டியன். பிறகு, 2017ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார். 2021ல் எழும்பூர் தொகுதியில் போட்டியிடவும் செய்தார். பிறகு அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறினார். 2024ல் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்று தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இப்போதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் தொடர்கிறார் ஜான் பாண்டியன். வரும் சட்டமன்றத் தேர்தலில் இதே கூட்டணி தொடருமா என கேட்டதற்கு, "நாங்கள் இப்போதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்கிறோம் என்பது உண்மைதான். ஆனால், சட்டமன்றத் தேர்தலிலும் இதே கூட்டணி தொடருமா என்பதை இப்போது சொல்ல முடியாது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும்போது எங்கள் கட்சியினரைக் கலந்தாலோசித்துத்தான் முடிவுசெய்வோம். அந்தத் தருணத்தில்தான் அதைச் சொல்ல முடியும்" என பிபிசியிடம் தெரிவித்தார் ஜான் பாண்டியன். சோஷலிஸ்ட் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ) பட மூலாதாரம், Facebook/Nellai Mubarak படக்குறிப்பு, எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவவர் முபாரக் சோஷலிஸ்ட் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா எனப்படும் இந்திய சமூக ஜனநாயகக் கட்சி 2009ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்திலும் புதுச்சேரியிலும் சேர்த்து இக்கட்சி 8 இடங்களில் போட்டியிட்டது. 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் தனியாகவே மூன்று இடங்களில் இக்கட்சி போட்டியிட்டது. 2016ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோது, தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிடப் போவதாக அறிவிப்புகள் வெளியாயின. ஆனால், உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை. இதையடுத்து தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் சேர்த்து மொத்தமாக 32 இடங்களில் அக்கட்சி தனித்துப் போட்டியிட்டது. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இக்கட்சி டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து போட்டியிட்டது. 2021லும் அதே கூட்டணியில் இடம்பெற்று ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் இக்கட்சி போட்டியிட்டது. படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இக்கட்சி அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று ஒரு தொகுதியில் (திண்டுக்கல்) போட்டியிட்டது. ஆனால், அ.தி.மு.க. பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்ததும் 'கூடா நட்பு கேடாய் முடியும்' என்று கூறிவிட்டு அந்தக் கூட்டணியிலிருந்து எஸ்டிபிஐ வெளியேறியது. இந்த சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்கிறார் அக்கட்சியின் மாநிலத் தலைவரான முபாரக். "எங்கள் கட்சியின் பொதுக் குழுதான் தேர்தல் நிலைப்பாடுகளை எடுக்கும். வரும் ஜனவரி மாதத்தில் இது தொடர்பாக முடிவெடுக்கவிருக்கிறோம். இந்த முறை எப்படியும் சட்டமன்றத்தில் எங்கள் கணக்கைத் துவங்க வேண்டும் என்பதை மனதில் வைத்து முடிவெடுப்போம்" என்கிறார் முபாரக். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y9r2gxjv7o