Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. அமெரிக்க ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான மிகச்சிறந்த நம்பிக்கை - கமலா ஹரிஸ் - ஜனநாயக கட்சியின் மாநாட்டில் பைடன் Published By: RAJEEBAN 20 AUG, 2024 | 12:28 PM அமெரிக்க ஜனநாயகத்தினை பாதுகாப்பதற்கான மிகச்சிறந்த நம்பிக்கை கமலா ஹாரிஸ் என ஜனாதிபதி ஜோபைடன் தெரிவித்துள்ளார் அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நன்றி ஜோ என்ற கோசங்களிற்கு இடையில் ஜோ பைடன் தனது மகள் ஜோ ஆஸ்லேயுடன் மேடையில் தோன்றினார். தனது மகள் தன்னை அறிமுகப்படுத்திய பின்னர் கண்ணீருடன் உரையாற்றிய பைடன் நீங்கள் சுதந்திரத்திற்காக வாக்களிக்க தயாரா?அமெரிக்காவிற்கும் ஜனநாயக கட்சிக்கும் வாக்களிக்க தயாரா? கமலா ஹரிசையும் டிம் வோல்சினையும் தெரிவு செய்ய தயாரா என கேள்வி எழுப்பினார். டொனால்ட் டிரம்பினை பலமுறை தாக்கிய பைடன் ஹரிசிற்கான மிகச்சிறந்த தொண்டனாக விளங்குவேன் என்றார். நான் ஜனாதிபதி பதவியை நேசிக்கின்றேன் ஆனால் அதனை விட அமெரிக்காவை நேசிக்கின்றேன் என அவர் தெரிவித்தவேளை மாநாட்டில் திரண்டிருந்தவர்கள் நாங்கள் ஜோவை நேசிக்கின்றோம் என கோசம் எழுப்பினர். அமெரிக்க பொருளாதாரத்தை வலுப்படுத்தியது,சர்வதேச ரீதியில் அதன் நட்புறவை வலுப்படுத்தியது போன்ற தனது அரசாங்கத்தின் சாதனைகளை பட்டியலிட்;ட பைடன் தனக்கு பின்னர் வெள்ளை மாளிகைக்கு கமலா ஹாரிசினை தெரிவு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார். அமெரிக்காவிற்கு தொடர்ந்தும் பாதிப்பு ஏற்படுத்தி வரும் நிறவெறி வெள்ளை மேலாதிக்கம் போன்றவற்றை சாடியுள்ள பைடன் அவற்றிற்கு அமெரிக்காவில் இடமில்லை என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/191515
  2. Published By: DIGITAL DESK 3 20 AUG, 2024 | 03:24 PM சமுத்திரம், சர்வதேச சூழலியல் விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்க பதில் உதவி செயலர் ஜெனிபர் ஆர். லிட்டில்ஜோன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜெனெிபர் ஆர். லிட்டில்ஜோனை அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் அவரை சந்தித்து வரவேற்றுள்ளார். லிட்டில் ஜோன் 17 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை இலங்கை, இந்தியா, மற்றும் மாலைதீவு ஆகிய இடங்களுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். நேற்று திங்கட்கிழமை (19) இலங்கைக்கு வருகை தந்த லிட்டில் ஜோன் இலங்கையில் உள்ள அரச அதிகாரிகள் மற்றும் ஏனைய தரப்பினர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இந்த விஜயத்தின் போது இயற்கை மற்றும் கடற்பாதுகாப்பு, பிளாஸ்டிக் மற்றும் வளி மாசடைவு, காலநிலை மாற்ற நெருக்கடி, காடழிப்பு, சிவில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள், விஞ்ஞான தொழில்நுட்ப நடவடிக்கைகளில் பெண்களை ஊக்குவித்தல், நிறைபேறான கடற்பிராந்தியப் பாதுகாப்புடன் கூடிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் மூன்று நாடுகளினதும் உயர்மட்டப்பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். அதேவேளை இலங்கை விஜயத்தைத் தொடர்ந்து 21 - 28 ஆம் திகதி வரை இந்தியாவுக்கும், 28 - 30 ஆம் திகதி வரை மாலைதீவுக்கும் ஜெனிஃபர் ஆர்.லிட்டில்ஜோன் விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/191532
  3. வட்டுவாகலில் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை எங்கே கொன்று புதைத்தீர்கள்? - கொக்குதொடுவாய் புதைகுழிக்கு முன்பாக போராட்டம்! 20 AUG, 2024 | 01:00 PM கொக்குதாெடுவாய் மனித புதைகுழி விவகாரம் தொடர்பாக பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று கொக்குதொடுவாய் மனித புதைகுழிக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்றது. முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வவு பணியானது மூன்று கட்டமாக இடம்பெற்று 52 மனித எச்சங்கள் அகழ்ந்தெடடுக்கப்பட்ட நிலையில் மூடப்பட்டுள்ளது. குறித்த அகழ்வு பணியின் போது கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான எவ்வித உண்மைகளும் இதுவரை வெளிக்கொண்டுவரப்படவில்லை. எனவே கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்தை மூடி மறைக்க வேண்டாம், எமக்கு உண்மையும் நீதியும் வேண்டும் என கூறி குறித்த போராட்டம் இடம்பெற்றிருந்தது. முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்,முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்,வடக்கு மாவட்டங்களை சேர்ந்த முல்லைதீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், யாழ்பாணம் காணாமல் போனவர்களின் உறவினர்கள் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்து தமக்கான நீதி கோரி போராடியிருந்தனர். குறித்த போராட்டத்தில் கொக்குதொடுவாய் மனிதபுதைகுழியை சுற்றி கண்ணீர் விட்டு கதறி அழுததோடு குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் உண்மையை மௌனமாக்காதே: கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் சாட்சிகளை அச்சுறுத்தாதே ! ,கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி: ஸ்ரீ லங்கா இராணுவமே பொறுப்புக்கூற வேண்டும்! ,OMP ஒரு ஏமாற்று வேலை: காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி இல்லை!, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இலங்கை இராணுவத்தின் பங்கை அம்பலப்படுத்துங்கள்!, வட்டுவாகலில் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட எமது அன்புக்குரியவர்களை எங்கே கொன்று புதைத்தீர்கள் ? உள்ளிட்ட பல்வேறு கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி கடந்த ஆண்டு 2023.06.29 ஆம் திகதி இனம்காணப்பட்ட நிலையில் மூன்று கட்டங்களாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு இதுவரை 52 மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இரண்டு கட்டங்களின் போது 40 மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு கடந்த 04.07.2024 அன்று ஆரம்பமாகி 15.07.2024 வரை இடம்பெற்று 12 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை குறித்த விடயம் தொடர்பாக எவ்வித உண்மைகளும் வெளிவராத நிலையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/191518
  4. படம் பிடித்தவர் அல்லது கமரா இப்ப எப்படி இருப்பினம்?!
  5. ரவிகரன் முல்லைத்தீவு மாவட்ட மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும்-சிதைக்கும் முகமாக கனிய மணல் அகழும் நோக்கத்தோடு கரையோரத்தில் ஈடுபடும் திணைக்களங்கள் தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டுவருவது அப்பிரதேச மக்களை கவலைகொள்ள வைத்திருக்கிறது. அண்மையில் முல்லைத்தீவு அளம்பில் குருசடி பகுதியில் பல வாகனங்களில் வந்திறங்கிய கனிய மணல் கூட்டுத்தாபன, கடலோர பாதுகாப்பு திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், சுற்றுச்சூழல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் நீர்வளங்கல் முகாமைத்துவத்தினர், புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரிகள் கரைத்துறைப்பற்று பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள், அப்பகுதி கிராம அலுவலர் ஆகியோர் குறித்த பிரதேசத்தில் கனிய மணல் அகழும் பணிகளை முன்னெடுப்பதற்கு வந்த வேளையில் அங்கு குழுமியிருந்த மக்கள் அவர்களுடைய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி திருப்பி அனுப்பியிருந்தனர். கனிய மணல் கூட்டுத்தாபனம் கொக்கிளாய் முகத்துவார பகுதியிலிருந்து சுமார் 44 ஏக்கர் கரையோரமாக உள்ள கரைவலைப்பாடுகள் மற்றும் காலபோக நெற்செய்கையை மேற்கொண்டுவந்த விளைநிலங்கள், மானாவரிக் காணிகளை மேற்சொன்ன 44 ஏக்கரை 32 குடும்பங்களுக்கு சொந்தமான நிலத்தை அபகரித்து முள்கம்பி வேலிகளை அமைத்து அடத்தாக, அதுவும் உறுதிக்காணிகள் (சொந்தக்காணிகள்) கனிய மணல் அகழ்வை செய்துவருகிறார்கள். மாகாண சபைக்காலத்தில் இந்த அடத்தான வேலைகளை செய்வதற்கு நாம் கொடுக்கவில்லை. இந்த காணி பறிப்பு நடவடிக்கை ஏற்கனவே இந்த பகுதியில் நிறையவே நடந்திருக்கிறது. இராணுவப் பாதுகாப்போடு ஏற்கனவே 20 ஏக்கர் வரையான பூர்வீக தமிழர்களுடைய உறுதிக்காணிகளில் தற்பொழுது சிங்கள குடியேற்றம் நடைபெற்றிருக்கிறது. அதேபோல், கொக்கிளாய் முகத்துவாரத்தில் இது தவிர, நான் குறிப்பிட்ட 44 ஏக்கர் கனிய மணல் அகழ்வுக்காக தமிழ் மக்களிடமிருந்து நிலங்கள் பறிக்கப்பட்டுவிட்டன. ‘மாற்றுக்காணிகளோ பணமோ எமக்கு வேண்டாம்; எமது முன்னோர்கள் எமக்கு தந்த பூர்வீக காணிகளே எமக்கு வேண்டும்’ என்று பல போராட்டங்களை இப்பிரதேச மக்கள் நடத்திவிட்டார்கள். அதேபோல் இப்பிரதேச மக்கள், தங்களுடைய பூர்வீக பரம்பரைக்காணிகளை பறிக்கின்றார்கள் என்றும் கனியமணல் அகழ்வினால் தமது கிராமங்களின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்றும் கரையோர வளங்களும் இப்பகுதி கடற்தொழிலும் அழிக்கப்படுகிறது என்றும் பெரும் கவலையுடன் தெரிவிக்கிறார்கள். அத்துடன் நன்னீர் ஊற்றுக்கள் உவர் நீராக மாறும் நிலை ஏற்படவுள்ளதுடன், எதிர்காலத்தில் கடல் நீர் கிராமத்துக்குள் வரலாம் எனவும் அம்மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளார்கள்.இந்த செயற்பாடுகள் காரணமாக காலப்போக்கில் கிராமம் வளமற்று வரட்சி இடமாக மாறலாம் எனவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அத்துடன் எங்கள் வாழ்வாதார நிலத்தையும் கடலையும் பறிக்காதீர்கள் என்றும் கோரிக்கை வைக்கிறார்கள். இந்த நிலையில் தான் கடந்த 31 ஆம் திகதியும் கனிய மணல் அகழும் நோக்கத்தோடு திணைக்கள அதிகாரிகள் வருகை தந்ததோடு,நாம் மேற்கொண்ட போராட்டத்தையடுத்து அவர்கள் திரும்பி சென்றார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரமானது கொக்கிளாய் தொடக்கம் சுண்டிக்குளம் வரையான சுமார் 75 கிலோ மீட்டர் நீளமானது.கனிய மணல் கூட்டுத்தாபனம் இந்த முயற்சியில் ஈடுபடுவதென்பது கரையோர மீனவ மக்களின் வாழ்வாதாரத்துக்கும் இருப்புக்கும் கேள்விக்குறியாகவே மக்களால் பார்க்கப்படுகிறது.இது தவிர,திணைக்களங்கள் மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர்,பிரதேச செயலாளர் ஆகியோர் இவ்வதிகாரிகளோடு கூட்டம் நடத்தி வருவது சரியா?என்ற கேள்வியையும் மக்கள் முன்வைக்கிறார்கள்.கடற்தொழில் பிரதிநிதிகள், காணிகளின் உரிமையாளர்கள் எவரையும் அழைத்து பேசாது தங்களுடைய என்னத்துக்கு ஏற்ப செயல்படுவது எந்த நியாயம் என்றும் மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். தயவு செய்து வாழவிடுங்கள்…நிலப்பறிப்புகளை செய்யாதீர்கள் என்பதே இப்பிரதேச மக்களின் ஒருமித்த கோரிக்கையாக இருக்கிறது. https://thinakkural.lk/article/307841
  6. விஜய் கட்சியின் கொடி அறிமுகம் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பறக்கவிடப்பட்டது. நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி 2ஆம் திகதி தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக அறிவித்தார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார். இந்நிலையில், வரும் 22ஆம் திகதி, தமிழக வெற்றி கழகத்தின் கொடியை விஜய் அறிமுகம் செய்வார் என தகவல் வெளியானது. தவெகவின் முதல் மாநாட்டை மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளில் நடத்த விஜய் தரப்பினர் திட்டமிட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டை நடத்தப்போவதாகவும் அதற்கு முன்னர் தவெகவின் கொடியை விஜய் அறிமுகம் செய்வார் எனவும் கூறப்பட்டது. https://thinakkural.lk/article/308091
  7. முதல்வர் மம்தா நடவடிக்கையில் திருப்தி இல்லை: கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் தந்தை கண்ணீர் 20 AUG, 2024 | 10:17 AM கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வரின் நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக இல்லை என்று கொல்கத்தாவில் கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் தந்தை கூறியுள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி பெண் மருத்துவர்ஒருவர் பாலியல் வன்கொடுமைசெய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் குற்றம் நடந்த 24 மணி நேரத்திற்குள் போக்குவரத்து காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். எனினும் இந்த விவகாரம் பெரிதானதால் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அப்பெண்ணின் பெற்றோர் நேற்று முன்தினம் கூறியதாவது: எனது மகளுக்கு நீதி வழங்குவது பற்றி முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகிறார், இது தொடர்பாக அவர்தெருவில் இறங்கி பேரணியும் சென்றார். ஆனால் நீதி கேட்டுபோராடும் சாமானிய மக்களை அவர் ஏன் சிறைக்கு அனுப்ப வேண்டும்? முதல்வரின் நடவடிக்கையில் எங்களுக்கு திருப்தி இல்லை. மாநில அரசு எங்களுக்கு வழங்கிய இழப்பீட்டை ஏற்க மறுத்துவிட்டோம். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு எங்கள் மகளின் உடல் உடனடியாக தகனம் செய்யப்பட்டதில் ஆதாரங்களை அழிக்கும் நோக்கம் உள்ளதா என்ற சந்தேகம் உள்ளது. தகனம் செய்வதில் அவசரம்: தகன நிலையத்தில் 3 உடல்கள் இறுதிச் சடங்குக்காக காத்திருந்தன. ஆனால் அந்த உடல்களுக்கு முன்னதாகவே எங்கள் மகளின் உடல் தகனம் செய்யப்பட்டது. அந்த நேரத்தில் எங்களால் சிந்திக்கவோ செயல்படவோ முடியாத நிலையில் இருந்தோம். ஒரே குழந்தையை இழந்ததால் மிகுந்த மனவேதனையிலும் அதிர்ச்சியிலும் இருந்தோம். சிபிஐ விசாரணையை தொடங்குவதற்கு மாநில போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் எதுவும் வெளிவரவில்லை. மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் சிகிச்சை துறையில் இருந்தோ அல்லது கல்லூரியில் இருந்தோ யாரும் எங்களுக்கு ஒத்துழைக்கவில்லை. எனது மகளின் கொலைக்கு ஒட்டுமொத்த துறையும் பொறுப்பு. குற்றத்தில் அந்த துறையைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். இந்த கடினமான காலத்தில் எங்கள் குடும்பத்துக்கு ஆதரவாக நிற்கும் அனைவரையும் எங்கள் மகன்கள் மற்றும் மகள்களாக கருதுகிறோம். இந்த வழக்கில் சிபிஐ நடத்தும் விசாரணையில் ஒரு திருப்புமுனை ஏற்படும் என நம்புகிறோம். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு கடுமையான தண்டனை உறுதி செய்யப்படும் என்று சிபிஐ எங்களிடம் உறுதி அளித்துள்ளது. இவ்வாறு அந்த மருத்துவரின் பெற்றோர் கூறினர். https://www.virakesari.lk/article/191499 கொல்கத்தா பெண் மருத்துவர் கழுத்தை நெரித்ததில் மூச்சு திணறி உயிரிழப்பு: பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. கையால் கழுத்தை நெரித்ததில் மூச்சு திணறி அவர் உயிரிழந்ததாகவும் உடலின் உள்ளே 9 இடங்கள், வெளியே 16 இடங்களில் காயம் இருந்ததாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 8-ம் தேதி இரவு பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் மறுநாள் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மருத்துவமனை வளாகத்தில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில், பெண் பயிற்சி மருத்துவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. அதன் விவரம்: கடந்த 9-ம் தேதி மாலை 6.10 முதல் 7.10 மணி வரை பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. கையால் கழுத்தை நெரித்ததால், மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு நேர்ந்துள்ளது. இது கொலைதான். பாலியல் வன்கொடுமையும் நடந்ததற்கு மருத்துவ ரீதியிலான ஆதாரம் உள்ளது. பிறப்பு உறுப்பில் இருந்த 151 கிராம் திரவம் மற்றும் ரத்த மாதிரி ஆகியவை பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை. நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. உடலில் ரத்தம் உறைந்துள்ளது. கன்னம், உதடு, மூக்கு, கழுத்து, கைகள் என உடலின் வெளி பகுதியில் 16 இடங்களிலும், கழுத்து தசை, உச்சந்தலை என உள் பகுதியில் 9 இடங்களிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தனக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை எதிர்த்து அவர் கடுமையாக போராடி உள்ளார் என தெரிகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில், ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் தடயவியல் மருத்துவ துறை பேராசிரியர் அபூர்வ பிஸ்வா, இணை பேராசிரியர் ரினா தாஸ், என்ஆர்எஸ் மருத்துவ கல்லூரியின் தடயவியல் மருத்துவ துறை துணை பேராசிரியர் மொல்லி பானர்ஜி ஆகியோர் கையெழுத்திட்டு உள்ளனர். கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் விரல் நகத்தில் இருந்த ரத்த மாதிரியும், கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராய் ரத்த மாதிரியும் ஒன்றுபோல இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனால், கொலையில் சஞ்சய் ராய்க்கு தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதற்கிடையே, சம்பவம் நடந்த 2 நாட்களில், ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் பதவி விலகினார். கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவின்படி, அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்றும் அவர் விசாரணைக்கு ஆஜரானார். ‘‘பெண் மருத்துவர் உயிரிழந்த தகவல்அறிந்து மருத்துவமனைக்கு வந்த அவரதுபெற்றோரை, மகளின் சடலத்தை பார்க்க 3 மணி நேரத்துக்கு மேல் காத்திருக்க வைத்தது ஏன்?’’ என்று அவரிடம் சிபிஐ அதிகாரிகள் கேட்டனர். கொலை குறித்து முதலில் உங்களுக்கு தகவல்கொடுத்தது யார், சடலம் இருந்தபகுதிக்கு அருகே உள்ள அறைகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள உத்தரவிட்டது யார் என்பன உள்ளிட்ட கேள்விகளும் கேட்கப்பட்டதாக தெரிகிறது. பத்ம விருது பெற்ற 70 மருத்துவர்கள் பிரதமருக்கு கடிதம்: புதுடெல்லி: கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பத்ம விருது பெற்ற 70 மருத்துவர்கள் இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். கதிரியக்க நிபுணர் ஹர்ஷ் மகாஜன், எய்ம்ஸ் முன்னாள் இயக்குநர் ரந்தீப் குலேரியா, ஐசிஎம்ஆர் முன்னாள் இயக்குநர் பல்ராம் பார்கவா, நரம்பியல் வல்லுநர் எம்.வி.பத்மா வஸ்தவா உள்ளிட்ட மருத்துவ நிபுணர்கள் கையெழுத்திட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பெண் மருத்துவர் கொடூரமாக கொல்லப்பட்ட விவகாரத்தில் நீதியை நிலைநாட்ட, நம் நாட்டின் தலைவர் என்ற வகையில் பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும். இதுபோன்ற கொடூரமான செயல், மருத்துவ சேவையின் அடித்தளத்தையே ஆட்டம்காண செய்துள்ளது. பெண்கள், சிறுமிகள், சுகாதார துறையினருக்கு எதிரான வன்முறைக்கு தீர்வு காண வேண்டிய அவசியத்தை இச்சம்பவம் உணர்த்துகிறது. சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மத்திய, மாநில அரசுகள் உடனே தனி சட்டம் இயற்ற வேண்டும். https://thinakkural.lk/article/308106
  8. ரஷ்யாவின் இரண்டாவது மூலோபாய பாலம் அழிக்கப்பட்டது ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரெய்ன் ஊடுருவி வரும் நிலையில், இரண்டாவது மூலோபாய பாலம் அழிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தாக்குதல் மேற்கொள்ளப்படட வான்வழி காட்சிகளை உக்ரெய்னிய இராணுவம் வெளியிட்டுள்ளது. ரஷ்ய விநியோக பாதைகளை சீர்குலைக்கும் வகையில் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டதாக உக்ரெய்னிய விமானப்படை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். துல்லியமான வான்வழித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://thinakkural.lk/article/308077
  9. சொகுசு படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு; 6 பேர் காணாவில்லை Published By: VISHNU 20 AUG, 2024 | 03:18 AM இத்தாலியில், சிசிலி தீவுகளுக்கு அருகே சொகுசு படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேரை காணவில்லை. பிரித்தானியக் கொடியுடன் பயணித்த 56 மீற்றர் நீளமான கப்பலில் 22 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அப்பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட சூறாவளியே இந்த விபத்திற்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கப்பலில் பயணித்தவர்களில் இலங்கையர் ஒருவரும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், பிரித்தானிய, அமெரிக்க மற்றும் கனேடிய பிரஜைகள் அடங்கிய குழுவொன்று சொகுசு படகில் பயணித்துள்ளதுடன், விபத்தில் உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. காணாமல் போன 06 பேரை தேடும் பணியை கரையோர பாதுகாப்பு அதிகாரிகள் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/191484
  10. சஜித்தின் விஞ்ஞாபனம் 22 ஆம் திகதி ஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கியுள்ள சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 22 ஆம் திகதி கொழும்பில் வெளியிடப்பட்டுள்ளது. தமது ஆட்சியின் கீழ் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள், பொருளாதார மீட்சித் திட்டங்கள், வெளிவிவகாரக் கொள்கை என்பன உள்ளிட்ட விடயங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பட்டியிலிடப்படவுள்ளன. அத்துடன், தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டம் பற்றிய உறுதிமொழியும் வழங்கப்படவுள்ளது. மலையகத் தமிழ் மக்களுக்கான அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வுத் திட்டங்களும் சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்படவுள்ளன. https://thinakkural.lk/article/308098
  11. தேர்தல் வாக்குறுதிகள் மாத்திரம் போதாது - அவற்றை எப்படி எத்தனை நாட்களிற்குள் நடைமுறைப்படுத்துவீர்கள் என தெரிவியுங்கள் - வேட்பாளர்களிடம் வேண்டுகோள் விடுப்பதற்கு பவ்ரல் திட்டம் Published By: RAJEEBAN 20 AUG, 2024 | 11:05 AM ஜனாதிபதி வேட்பாளர்கள் பரந்த வார்த்தைகள் கவர்ச்சிகரமான திட்டங்களை முன்வைப்பதற்கு பதில் அவற்றை தாங்கள் நடைமுறைப்படுத்துவதற்கான குறிப்பிட்ட கால அவகாசத்தை முன்வைக்கவேண்டும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் வேண்டுகோள் விடுக்கவுள்ளன. தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்க 26ம் திகதி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடவுள்ளார், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுவார். சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்கவும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை விரைவில் வெளியிடவுள்ளார். கடந்த காலங்களிலும் ஜனாதிபதி வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டனர். ஆனால் அவர்களின் வாக்குறுதிகளிற்கும் அவை நடைமுறைப்படுத்தப்படுவதற்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்பட்டது. அவர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்த விடயங்கள் யதார்த்தசூழ்நிலையுடன் ஒத்துப்போகாததாக காணப்பட்டமையே இதற்கான காரணம். அவர்கள் சந்தேகமற்ற வாக்காளர்களை கவர்வதற்காக வாக்குறுதிகளை வழங்கினார்கள். அல்லது அவர்களின் பதவிக்காலத்தின் இடையில் சூழ்நிலைகள் மாறியதால் அவர்களால் தங்கள் கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடியாத நிலையேற்பட்டது. இலங்கை சுதந்திரத்தின் பின்னர் சந்தித்த மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முயற்சித்துக்கொண்டிருக்கும் நிலையில் உள்ளது. அரசியலை சுத்தம் செய்யும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் வேட்பாளர்கள் தங்கள் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான காலஎல்லையை முன்வைக்கும் திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. தேர்தல் விஞ்ஞாபனத்துடன் செயற்திட்டமொன்றையும் பவ்ரல் கோரவுள்ளது. ஒவ்வொரு வேட்பாளருக்கும் தங்கள் சொந்த கொள்கைகளை திட்டங்களை கொண்டிருப்பதற்கான உரிமையுள்ளது. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களை அவர்கள் மக்களிற்கு தெரிவிக்கவேண்டும் என பவ்ரல் எதிர்பார்க்கின்றது. தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான காலக்கெடுவை முன்வைக்குமாறு வேட்பாளர்களை கோரவுள்ளதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு கொள்கை விடயத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடுகளை முன்னெடுப்பார்கள் என்பதை வேட்பாளர்கள் கோடிட்டுக்காட்டவேண்டும், என தெரிவித்துள்ள பவ்ரல் அந்த கொள்கைகளின் பொருளாதார அரசியல் சமூக தாக்கங்கள் குறித்த விபரங்களை பொதுமக்களிற்கு முன்வைக்கவேண்டும் என தெரிவித்துள்ளார். ஒரு வேட்பாளர் 1000 பாடசாலைகளை உருவாக்குவேன் என தெரிவித்தால் அதற்கான நிதியை அவர் எங்கிருந்து பெற்றுக்கொள்வார் என்பதை தெரிவிக்கவேண்டும், சமூகத்திற்கு அந்த திட்டத்தினால் ஏற்படக்கூடிய பலாபலன்கள் குறித்து குறிப்பிட வேண்டும், என ரோகண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/191509
  12. கொக்குத் தொடுவாய் புதைகுழிக்கு முன்பாக போராட்டமொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத் தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனித புதைகுழிக்கு உரிய நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இன்று 20 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/308080
  13. Published By: DIGITAL DESK 3 20 AUG, 2024 | 09:29 AM கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் மற்றும் மாகும்புர பல்வகை போக்குவரத்து நிலையத்துக்கு இடையில் போக்குவரத்து சேவைக்காக ஆரம்பிக்கப்பட்ட புதிய சொகுசு பஸ் சேவை திங்கட்கிழமை (19) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 15 ஆம் திகதி AirPort Terminal Shuttle Service என்ற பெயரில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்கவால், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்த புதிய சொகுசு பஸ் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 16 ஆம் திகதி விமான நிலையம் - கோட்டை பஸ் ஊழியர் சங்கம் புதிய சொகுசு பஸ் சேவைக்கு எதிராக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது. அத்தோடு இது தொடர்பில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சு மற்றும் தேர்தல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு பதிவு செய்தது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு வாடகை வாகன சங்கமும் ஆதரவை வழங்கி இருந்தது. இந்நிலையில், முறைப்பாடுகளை பரிசீலித்து ஆரம்பிக்கப்பட்டு 4 நாட்கள் மாத்திரம் சேவையில் ஈடுப்பட்ட விமான நிலைய புதிய சொகுசு பஸ் போக்குவரத்து சேவையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இடைநிறுத்தப்பட்டுள்ள சொகுசு பஸ் போக்குவரத்து சேவைக்கு பதிலாக, விமான நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் மற்றும் மாகும்புர பல்வகை போக்குவரத்து நிலையத்துக்கு தொழிற்சங்கத்தின் பத்து பஸ்கள் சேவைக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக விமான நிலைய - கோட்டை பஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர் இந்திக்க குணசேகர தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/191491
  14. யாழில் பயணம் செய்ய எங்கே முற்பதிவு செய்யலாம் எனத் தெரியவில்லை! இந்தியாவில் தொடர்பு கொள்ள தொலைபேசி இலக்கங்கள் Speak To Us Call 24x7 Dial our number, and speak to us directly. Your journey with Sail IndSri matters to us. India / International+91 744 886 3535 (whatsapp) Write To Us Reply within 24hrs Drop us a line, and our dedicated team will get back to you in 24 hours. All Queries bookings@sailindsri.com https://sailindsri.com/home
  15. ரஷ்ய ராணுவ முகாமில் ஏவுகணை தாக்குதல் - கேரள இளைஞர் உயிரிழப்பு 20 AUG, 2024 | 10:10 AM ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த 2022 பிப்ரவரியில் தொடங்கிய போர் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்ய ராணுவ முகாம் ஒன்றில் பணியாற்றி வந்த கேரளாவை சேர்ந்த சந்தீப் (36) என்பவர் ஏவுகணை தாக்குதலில் இறந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இவர், கேரளாவின் திருச்சூர் மாவட்டம், திருக்கூர் அருகே உள்ள நாயரங்காடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். எலெக்ட்ரீஷியனான இவர், ரஷ்யாவில் ஓட்டல் ஒன்றில் வேலை பார்ப்பதற்காக கடந்த ஏப்ரல் மாதம் சென்றார். இந்நிலையில் சந்தீப்பின் உறவினரான சரண் என்பவர் நேற்று கூறியதாவது: ரஷ்ய மலையாளிகள் சங்கத்தில் இருந்து 2 நாட்களுக்கு முன் எங்களுக்கு தகவல் வந்தது. ரஷ்ய ராணுவ கேன்டீனில் பணியாற்றி வந்த திருச்சூரை சேர்ந்த ஒருவர் ஏவுகணை தாக்குதலில் இறந்துவிட்டதாக கூறினர். இறந்தவரை அவர்கள் அடையாளம் கண்டறிய விரும்பினர். அவர்கள் அளித்த தகவல்களை சரிபார்த்ததில் உயிரிழந்தது சந்தீப் எனத் தெரியவந்துள்ளது. தொடக்கத்தில் மாஸ்கோவில் பணியாற்றுவதாக சந்தீப் கூறினார். ஒரு மாத சம்பள பணத்தை அவர் வீட்டுக்கு அனுப்பினார். பிறகு அவர் மிக அரிதாகவே குடும்பத்தினருடன் தொடர்புகொண்டார். அவர் மாஸ்கோவுக்கு வெளியே ராணுவ கேன்டீன் ஒன்றில் பணியாற்றி வருவதாக பிறகு எங்களுக்கு தெரியவந்தது. இவ்வாறு உறவினர் சரண் கூறினார். https://www.virakesari.lk/article/191498
  16. பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, இதுவரை இரு தரப்புக்கும் இடையே ஒரே ஒரு உடன்படிக்கை மட்டும் எட்டப்பட்டுள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், டாம் பேட்மேன், ஜேம்ஸ் கிரிகோரி பதவி, பிபிசி நியூஸ் 19 ஆகஸ்ட் 2024 “காஸாவில், போர்நிறுத்தம் கொண்டுவருவதற்கும் பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பான ஒப்பந்தத்திற்கும் இதுவே சிறந்த, ஒருவேளை கடைசி வாய்ப்பாக கூட இருக்கலாம்" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார். அக்டோபர் மாதம் போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேல் பகுதிக்கு ஒன்பதாவது முறையாக பயணம் மேற்கொண்டுள்ளார் பிளிங்கன். திங்களன்று இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்சாக் உடனான சந்திப்பின் போது, பிளிங்கன் தனது கருத்துகளைத் தெரிவித்தார். கடந்த வாரம் தோஹாவில் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கியதில் இருந்து, போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது அமெரிக்கா. ஆனால் போல் இஸ்ரேலிய துருப்புக்கள் காஸாவில் இருந்து முழுமையாக வெளியேற வேண்டும் என ஹமாஸ் வலியுறுத்துகிறது. இதில் இருதரப்புக்கும் இடையே உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி, இந்த பேச்சுவார்த்தை குறித்த முன்னேற்றங்கள் எல்லாம் ஒரு ‘மாயை’ என்று ஹமாஸ் கூறுகிறது. பிளிங்கன் இந்த விவகாரத்தில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அழுத்தம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் திங்களன்று நெதன்யாகுவையும் சந்தித்தார். ‘இதுவே கடைசி வாய்ப்பாகவும் கூட இருக்கலாம்’ "மீண்டும் இருதரப்புக்கும் இடையே பதற்றம் அதிகரிக்காது, எந்த ஆத்திரமூட்டக்கூடிய செயல்களும் நிகழாது மற்றும் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதிலிருந்து எங்களைத் தடுக்கக்கூடிய செயல்கள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த நாங்கள் முயற்சி செய்கிறோம்" என பிளிங்கன், ஹெர்சாக் உடனான சந்திப்பின் போது கூறினார். "அக்டோபர் 7க்கு பிறகு, நான் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கிற்கு வருவது இது ஒன்பதாவது முறையாகும். இது முடிவெடுக்கவேண்டிய தருணம்.” என்று கூறினார். மேலும், “பணயக்கைதிகளை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கும், போர்நிறுத்தத்தைக் கொண்டுவருவதற்கும், அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான பாதையில் அனைவரையும் வழிநடத்துவதற்கும் இது சிறந்த வாய்ப்பு. இதுவே கடைசி வாய்ப்பாகவும் கூட இருக்கலாம்" என்றும் பிளிங்கன் தெரிவித்தார். தற்போதைய பேச்சுவார்த்தைகள், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையேயான நீண்ட கால முரண்பாடுகளைக் குறைக்கும் நோக்கில், அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட மாற்றியமைக்கப்பட்ட முன்மொழிவை அடிப்படையாகக் கொண்டவை. அடுத்த வாரத்திற்குள், எல்லையில் ஒரு போர்நிறுத்த ஒப்பந்தத்தைக் கொண்டுவர முடியும் என்று அமெரிக்கா நம்புகிறது. ஆனால் அத்தகைய நம்பிக்கையை இஸ்ரேலிய தலைமையோ அல்லது ஹமாஸ் அமைப்போ பகிர்ந்து கொள்ளவில்லை. இருத்தரப்பினரும், மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். இதனால் ஒரு ஒப்பந்தம் உருவாக்கப்படுவது தொடர்ந்து தடைபடுகிறது. பட மூலாதாரம்,PHOTO BY EPA-EFE/REX/SHUTTERSTOCK படக்குறிப்பு, பிளிங்கன் (இடது) இந்த விவகாரத்தில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு (வலது) அழுத்தம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது இருதரப்புக்கும் இடையிலான முரண்பாடுகள் ஹமாஸ் அமைப்பு, ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், ‘இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன்படிக்கையைத் தடுக்கும் நோக்கில் தடைகளை ஏற்படுத்துவதாகவும், போரை நீடிக்கும் நோக்கத்துடன் புதிய நிபந்தனைகள் மற்றும் கோரிக்கைகளை அமைப்பதாகவும்’ குற்றம் சாட்டியுள்ளது. மத்தியஸ்தர்களின் முயற்சிகளை முறியடிப்பதற்கும், ஒப்பந்தத்தைத் தடுப்பதற்கும் நெதன்யாகுதான் முழு காரணம் என்றும் ஹமாஸ் கூறியது. ஹமாஸ் அமைப்பின் விவகாரங்கள் குறித்து அறிந்த ஒருவர் முன்னதாக சௌதி ஊடகத்திடம் பேசிய போது, ‘எகிப்துடனான காஸாவின் தெற்கு எல்லையில் உள்ள ஒரு குறுகிய நிலப்பகுதியான பிலடெல்பி காரிடாரில், இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் குறைவான அளவில் நிலைநிறுத்தப்படும் என்ற திட்டமும் அந்த முன்மொழிவில் உள்ளது’ என்றார். ஆனால் இஸ்ரேலிய வட்டாரங்கள் டைம்ஸ் ஆஃப் இஸ்ரேலிடம் பேசிய போது, ‘ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தில், இஸ்ரேல் எடுக்கும் பிற நடவடிக்கைகள், எல்லையிலிருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறுவதற்கு ஈடாக இருக்கும்’ என்று கூறியுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காஸாவில் 40,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் மீதான எதிர்பாராத தாக்குதலுக்கு பதிலடியாக ஹமாஸை அழிக்க இஸ்ரேலிய ராணுவம் காஸாவில் ஒரு போர்த்தொடரைத் தொடங்கியது, ஹமாஸ் நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். அதன் பிறகு காஸாவில் 40,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நவம்பரில் ஒப்புக்கொள்ளப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையின்படி ஹமாஸ் பிணைக் கைதிகளில் 105 பேரை ஒரு வார கால போர்நிறுத்தத்திற்கு ஈடாக விடுவித்தது ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய சிறைகளில் இருந்த சுமார் 240 பாலத்தீனிய கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இன்னும் 111 பணயக்கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 39 பேர் இறந்துவிட்டதாகக் கருதப்படுவதாகவும் இஸ்ரேல் கூறுகிறது. அமெரிக்காவின் அதீத ஆர்வம் இந்த வார தொடக்கத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “இதற்கு முன்னால் இருந்ததை விட, ஒரு உடன்படிக்கையை வெற்றிகரமாக செயல்படுத்தும் நிலைக்கு மிக அருகில் நாங்கள் உள்ளோம்" என்று கூறினார். ஆனால் பல மாத கால பேச்சுவார்த்தைகளில் வெளிப்படுத்தப்பட்ட ‘ஒரு ஒப்பந்தத்திற்கான நம்பிக்கை’ ஆதாரமற்றது என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ‘பிணைக் கைதிகளை திரும்பப் பெறுவதற்கான சிக்கலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், ஆனால் அதில் இஸ்ரேலின் பாதுகாப்பிற்காக சில கொள்கைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்’ என்றும் நெதன்யாகு கூறினார். "நாங்கள் விட்டுக்கொடுக்கக்கூடிய சில விஷயங்கள் உள்ளன, ஆனால் உறுதியாக மறுக்க வேண்டிய சில விஷயங்களும் உள்ளன. அதைத் தான் நாங்கள் வலியுறுத்துகிறோம். இரண்டையும் எப்படி வேறுபடுத்துவது என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்," என்று அவர் கூறினார். ஹமாஸ் பேச்சுவார்த்தைகளில் ‘பிடிவாதமாக’ இருப்பதாகவும் குற்றம் சாட்டிய அவர், ஹமாஸ் மீது மேலும் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். ஒரு மூத்த ஹமாஸ் அதிகாரி சனிக்கிழமையன்று பிபிசியிடம் பேசிய போது, "மத்தியஸ்தர்களிடமிருந்து எங்களுக்கு கிடைத்தவை எல்லாம் மிகவும் ஏமாற்றமளிக்கிறது. எந்த முன்னேற்றமும் இல்லை." என்றார். இரு தரப்பிலிருந்தும் வரும் ‘கீழ்ப்படியாமை’ குறித்த பொது அறிக்கைகள், பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு முக்கிய தந்திரமாக கருதப்படலாம்தான், ஆனால் இங்கு குறிப்பிடத்தக்க பகை மற்றும் அவநம்பிக்கை நிலவுகிறது. அதனால் தான் ஒரே வாரத்தில் உடன்படிக்கை எட்டப்படும் என்பது அதீத நம்பிக்கையாகத் தெரிகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மேலும், இந்த விவகாரத்தில் அமெரிக்க அரசின் அழுத்தத்தின் பின்னணியில் நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தல் அரசியலும் உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இரு தரப்பினருக்கும் இருப்பதை விட, அமெரிக்காவுக்கு அதீத ஆர்வம் இருப்பது போலவும், நேரம் குறைவாக இருப்பது போலவும் ஒரு உணர்வு எழுகிறது. இஸ்ரேலின் மே 27 முன்மொழிவின் அடிப்படையில் அமெரிக்க அதிபர் பைடனால் கோடிட்டுக் காட்டப்பட்ட அசல் ஒப்பந்தம் மூன்று கட்டங்களில் இயங்குவதாக இருந்தது, முதல் கட்டத்தில், ஆறு வாரங்கள் நீடிக்கும் ‘முழுமையான போர்நிறுத்தம்’, காஸாவில் மக்கள் வாழும் அனைத்து பகுதிகளிலிருந்தும் இஸ்ரேலியப் படைகள் வெளியேறுதல் மற்றும் இஸ்ரேலில் உள்ள பாலத்தீனிய கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக, ஹமாஸ் தரப்பில் உள்ள சில பணயக்கைதிகள், குறிப்பாக பெண்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் அல்லது காயமடைந்தவர்களை விடுவிப்பது ஆகியவை அடங்கும். இரண்டாவது கட்டம், மற்ற அனைத்து (உயிருடன் இருக்கும்) பணயக்கைதிகளையும் விடுவிப்பது மற்றும் இருதரப்புக்கு இடையிலான "பகைமைகளுக்கு நிரந்தர முடிவு" ஆகியவை அடங்கும். மூன்றாவது கட்டத்தில், காஸாவிற்கான ஒரு பெரிய புனரமைப்புத் திட்டம் மற்றும் இறந்த பணயக்கைதிகளின் உடல்களைத் திரும்பப் பெறுவது. இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் ஆறு குழந்தைகள் உட்பட குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டதாக காஸாவில் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள், ‘ஞாயிற்றுக்கிழமை அன்று, தெற்கு காஸா நகரமான கான் யூனிஸில் இருந்து இஸ்ரேலைத் தாக்கப் பயன்படுத்திய ராக்கெட் ஏவுகணைகளை அழித்ததாகவும், இதில் 20 பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும்’ தெரிவித்தது. https://www.bbc.com/tamil/articles/c4gdkkvj72jo
  17. புருஜோத்தமன் தங்கமயில் ஜனாதிபதித் தேர்தல் கால குதிரை ஓட்டம் சூடு பிடித்திருக்கின்றது. தேர்தல் முடியும் வரையில் யார் எந்தப் பக்கம் தாவுவார்கள் என்பதை கண்காணிப்பதே கட்சிகளுக்கு பெரும் தலைவலியாகிவிட்டது. தற்போது அதிகாரத்திலுள்ள ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவை நோக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களின் திரட்சி எதிர்பார்க்கப்பட்ட அளவினைக் காட்டிலும் அதிகளவு நிகழ்ந்து வருகின்றது. ஏற்கனவே, ராஜபக்ஷக்களின் கட்சியான பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணிலோடு சங்கமித்துவிட்டார்கள். முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் சஜித் பிரேமதாசவோடு இருக்க, பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் ரணில் பக்கம் சென்றுவிட்டார்கள். இவ்வாறான அச்சுறுத்தலை தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர்களும் எதிர்கொள்கிறார்கள். ஏற்கனவே, மனோ கணேசனின் கட்சியைச் சேர்ந்த வேலுகுமார் ரணில் பக்கம் ஓடிவிட்டார். இந்தத் தாவல் படலம் தமிழ்த் தேசியக் கட்சிகள் என்று தங்களை முன்னிறுத்தும் கட்சிகளின் உறுப்பினர்கள் வரையில் பரவும் வாய்ப்புக்களைக் காண முடிகின்றது. அதிலும், ரணிலுடனான கட்சி ரீதியான உரையாடல்கள், தனிப்பட்ட உரையாடல்கள் என்று தமிழ்த் தேசியக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும் பரபரப்பாக இருக்கிறார்கள். ராஜபக்ஷக்கள் ஆட்சியை ரணிலிடம் கையளித்துவிட்டுச் சென்ற தருணத்தில், பாராளுமன்றத்துக்குள் இடம்பெற்ற ஜனாதிபதித் தெரிவின் போது, தனக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தாக ரணில் கூறியிருந்தார். அதுவும், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடான சந்திப்பின் போதே, அவர் அதனை வெளிப்படையாக தெரிவித்தார். இதனை, கூட்டமைப்பினர் அப்போது எதிர்பார்த்திருக்கவில்லை. அப்படியான நிலையில், ரணிலின் அணுகுமுறை எவ்வாறானது, எங்கு எவரோடு எதனைக் கொண்டு – கொடுத்து கையாளுவர் என்பது தெளிவானது. நாட்டில் வாகன இறக்குமதிக்கான தற்காலிகத் தடை நீடிக்கின்றது. இதனால், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வரியற்ற வாகன இறக்குமதியும் நிகழவில்லை. வாகன அனுமதிப்பத்திரத்தை வைத்து, சில கோடிகளையாவது தேற்றலாம் என்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பெரும் சங்கடம் ஏற்பட்டது. அதனை, தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ரணில், பல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபான சாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கியிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை, மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த சஜித், ‘சாராய அனுமதிப்பத்திரங்களை வழங்கி ஆள்பிடிக்கும் அரசியலை தோற்கடிப்பேன்.’ என்று கூறியிருக்கிறார். வழக்கமாக தேர்தல் காலங்களில் கோடிகளில் பேரங்கள் நடைபெறும். இப்போதும் அது நிகழ்கின்றது. அதனோடு சேர்த்து மதுபானசாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் உண்டு. ஏற்கனவே, மதுபானசாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்களைப் பெற்றவர்கள், ரணிலின் பக்கத்தில் இருக்கவே விரும்புகின்றனர். ஏனெனில், அவர்கள் சஜித்தோடு இணைந்தால், அவர்களின் விபரங்களை வெளியிடுவோம் என்று ரணில் அணியினர் மிரட்டுவதாக தென் இலங்கையில் பேசப்படுகின்றது. அடுத்த பொதுத் தேர்தலில் தங்களினால் வெற்றிபெற முடியும் என்று நம்பும் பாராளுமன்ற உறுப்பினர்கள்தான், இந்தப் பேரங்களில் அவ்வளவுக்கு அடிபடவில்லை. அடுத்த தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்புக்கள் குறித்து சந்தேகம் கொண்டவர்கள், காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்ற நிலையில், தாவல் படலத்துக்குள் சங்கமித்து கோடிகளை அள்ளுகிறார்கள். ஜனாதிபதித் தேர்தலுக்கான ஓட்டத்தில் இந்தக் கணம் வரையில் சஜித்தான் முன்னிலையில் இருக்கின்றார். அவரை நெருக்கும் அளவுக்கு பக்கத்தில் யாரும் இல்லை. அதனால், அவர் பின்னால் அடுத்த பொதுத் தேர்தலில் தங்களால் வெற்றிபெற முடியும் என்று நம்பும் கட்சிகளும், தலைவர்களும் அணி வகுத்திருக்கிறார்கள். ஆனாலும் சஜித்தின் வெற்றி வாய்ப்புக்களை குறைப்பதற்கான திட்டங்களின் போக்கில், வழக்கத்துக்கு மாறாக பல வேட்பாளர்களையும் களத்தில் இறக்கி விட்டிருக்கிறார்கள். அதிலும் சுயேட்சை வேட்பாளர்கள் என்று தங்களை முன்னிறுத்தும் பலரும் ரணிலின் பினாமிகள். அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள செயற்திட்டம், சஜித்தை நோக்கி திரளும் வாக்குகளில் ஒரு பகுதியையாவது குறைப்பதாகும். இந்தப் பினாமி வேட்பாளர்கள் தங்களை இனத்தின் காவலர்கள், அப்பழுக்கற்ற மனிதர்கள் என்றெல்லாம் அறிவிக்கும் கூத்துக்கள் எல்லாமும் நடைபெறுகின்றன. சுயேட்சை வேட்பாளர்கள், பிரதான வேட்பாளர்களின் பினாமிகள் என்று, முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவும் குற்றஞ்சாட்டியிருக்கிறார். சஜித்தின் வாக்குகளை பிரிப்பதற்காக ரணிலால் களமிறக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர்களாக விஜயதாச ராஜபக்ஷ, சரத் பொன்சேகா உள்ளிட்டோரையும் தென் இலங்கை பார்க்கிறது. ஏனெனில், தென் இலங்கையிலும் சாதி சார் அரசியல் பெரும் வகிபாகத்தைக் கொண்டிருக்கின்றது. அதன் போக்கில், சஜித்துக்கு எதிராக விஜயதாச களமிறக்கப்பட்டிருப்பதாக கருத்து உண்டு. அதுபோல, இராணுவம் உள்ளிட்ட முப்படை சார் வாக்குகள் இலட்சக்கணக்கில் உண்டு. அவற்றில் கணிசமானவை இம்முறை சஜித்துக்கும் அநுரகுமார திசாநாயக்கவின் பக்கத்திற்கும் செல்லும் சாத்தியமுண்டு. அதனைத் தடுத்து நிறுத்துவதற்காகவே இறுதி யுத்தத்தை வென்ற தளபதி என்ற அடையாளத்தோடு பொன்சேகாவை ரணில் களமிறக்கியிருக்கின்றார் என்பதும் குற்றச்சாட்டு. அதன்மூலம், பொன்சேகாவின் விசுவாசிகள் சஜித்தை புறந்தள்ளுவார்கள் என்பது கணிப்பு. வடக்கு கிழக்கில் ஏற்கனவே தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற பெயரில் அரியநேந்திரன் களமிறக்கப்பட்டிருக்கிறார். அதனை தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்புச் செய்தாலும், அதனால் ஆதாயம் அடையும் வாய்ப்பு ரணிலுக்கானது. இப்படியான இன்னொரு நடவடிக்கையாகவே, மலையக தமிழ் வாக்குகள் சஜித்தை நோக்கி திரள்வதைத் தடுப்பதற்காக திலகராஜ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கப்பட்டிருக்கிறார் என்பது, சஜித் அணியினரின் குற்றச்சாட்டு. இந்த விடயங்களைப் புறக்கணிக்க வேண்டியதில்லை. ஏனெனில், இந்தத் தேர்தலில் தமிழ் – முஸ்லிம் சமூகங்களின் வாக்குகளில் பெரும்பான்மையானவை சஜித்தை நோக்கியே திரளும். பொது வேட்பாளர், சுயேட்சை வேட்பாளர் அடையாளங்களைக் கொண்டு, அந்தத் திரட்சியில் ஒரு சில இலட்சம் வாக்குகளைப் பிரித்தாலே, அது ரணிலுக்கான சாதகமான விடயமாகும். ஆனால், ரணில் எதிர்பார்க்காத விடயம் ராஜபக்ஷக்களிடம் இருந்துதான் அவருக்கு பதிலடியாக கிடைத்திருக்கின்றது. பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் என்று அடையாளப்படுத்தப்பட்டு வந்த தம்மிக்க பெரேரா, இறுதி நேரத்தில் தன்னுடைய வர்த்தக நடவடிக்கைகளைக் காரணங்காட்டி போட்டியில் இருந்து விலகினார். ஆனால், அவரை விலகச் செய்ததில் ரணிலின் பங்கு இருப்பதாக ராஜபக்ஷக்கள் குற்றஞ்சாட்டினார்கள். இந்த நெருக்கடியான நிலையில், இளைய ராஜபக்ஷவான நாமல் முன்வந்து ரணிலுக்கு எதிரான போராட்டத்தை தலைமையேற்றிருக்கிறார். மற்றவர்களை வேட்பாளர்கள் நிறுத்தினால்தானே, அவர்களை மிரட்டி உருட்டி அடிபணிய வைக்க முடியும், தானே வேட்பாளராகிவிட்டால், வெருட்டல் உருட்டலுக்கு வழியில்லாமல் போகும் என்பது நாமலின் எண்ணம். அதனால்தான், படுதோல்வி காணும் வாய்ப்புள்ளது என்ற நிலையிலும் நாமல், ஜனாதிபதி வேட்பாளராக முன்வந்தார். தம்மிக்க பெரேராவை ஒதுங்க வைத்தால், ராஜபக்ஷக்கள் இந்த ஜனாதிபதித் தேர்தலில் இருந்தே ஒதுங்கி விடுவார்கள் என்பது ரணில் எதிர்பார்ப்பு. அதன்மூலம், ராஜபக்ஷ ஆதரவு வாக்குகள் தனக்கு முழுவதுமாக கிடைத்துவிடும். ஏனெனில், ஏற்கனவே பெரமுனவின் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் தன்னோடு இருக்கிறார்கள், தேர்தலில் இருந்து ராஜபக்ஷக்கள் ஒதுங்கிவிட்டால், ராஜபக்ஷ ஆதரவாளர்களுக்கு ரணிலைத் தவிர வேறு தெரிவுகள் இல்லை. இந்த கணிப்பைக் கொண்டு ரணில் காய்களை நகர்த்த, நாமல் தன்னையே களத்தில் நிறுத்தி ரணிலுக்கு செக் வைத்திருக்கிறார். இதன்மூலம், ரணில் பக்கம் திரள வேண்டிய வாக்குகளில் குறைந்தது ஐந்து இலட்சம் வாக்குகளாவது இழக்கப்படும் வாய்ப்புண்டு. ரணில், வடக்கு கிழக்கு, மலையகத்தில் சுயேட்சை வேட்பாளர்களைக் கொண்டு நடத்திய வாக்குப் பிரிப்பு வேட்டையும் தென் இலங்கையில் பொன்சேகா, விஜயதாசவைக் கொண்டு நடத்திய இராணுவ – சாதி ரீதியான அடையாள வாக்குப் பிரிப்பையும் நாமல் களமிறங்கி நாசமாக்கிவிட்டார். தேசிய மக்கள் சக்தியின் பின்னாலான திரட்சி தற்போது பெருமளவு அடிபடத் தொடங்கிவிட்டது. ஏற்கனவே தென் இலங்கையில் மக்கள் விடுதலை முன்னணி மீதான அதிருப்தி என்பது கணிசமாக உண்டு. அதனை மாற்றுவதற்காக அநுர கட்சியை, பொது அமைப்புக்களோடு இணைந்து தேசிய மக்கள் சக்தியாக பெயர் மாற்றம் செய்தார். ஆனாலும் அது அவ்வளவு சாத்தியமான வெற்றிகளை பெற்றுத்தருவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. அரகலய முடிந்த கையோடு தேர்தல் ஒன்றுக்கு நாடு சென்றிருந்தால், தேசிய மக்கள் சக்தி, இரண்டாமிடத்துக்கு வந்து, பிரதான எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கும். இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தேசிய மக்கள் சக்தி மீதான ஈர்ப்பு குறைந்துவிட்டது. அதனை, அந்தக் கட்சியின் பிரச்சாரக் கூட்டங்களிலேயே காண முடிகின்றது. முதலாவது இடத்துக்கு போட்டியிடும் ஆன்ம பலத்தோடு இருந்த தேசிய மக்கள் சக்தியினர், இப்போது மூன்றாமிடத்துக்கான போட்டியிலேயே இருக்கிறார்கள். சிலவேளை அதிலும் அவர்கள் நாமலிடம் தோற்கும் வாய்ப்புக்கள் உண்டு. ஏனெனில், தென் இலங்கையின் சமூக கட்டுமானம் சாதி – மத – அடிப்படைவாதம் சார்ந்தது. அது, பெரியளவில் மக்கள் விடுதலை முன்னணியை ஆதரித்தது இல்லை. தமிழரசுக் கட்சியின் ஆதரவு என்பது சஜித்தை நோக்கியதாகத்தான் இன்னமும் இருக்கின்றது. அதனை, இந்தியாவும் வலியுறுத்துவதாக தெரிகின்றது. ரணிலோடு, தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் தனித்துத் தனித்து பேச்சுவார்த்தைகள் நடத்தினாலும், இறுதியில் சஜித்தோடுதான் நிற்பார்கள் என்பதுதான் நிலை. அது, தமிழ் மக்களின் பெருந்திரட்சி எந்தப் பக்கம் என்ற அடிப்படையிலும் நிகழ்வதுமாகும். தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயத்தை பொதுக் கட்டமைப்பினர் முன்வைத்தாலும், அந்தக் கட்டமைப்புக்குள் இருக்கும் கட்சிகளே தங்களின் நிலைப்பாடுகளில் உறுதியாக இருப்பதாக தெரியவில்லை. அதனால், பொதுக் கட்டமைப்பின் அரசியல் பத்தியாளர்கள் மாத்திரம் பிரச்சாரம் நடத்தி, பொது வேட்பாளரை நோக்கி, வாக்கைச் சேர்த்துவிடுவார்கள் என்று நம்புவது பெரும் அபத்தமாகும். அதனால், அது சில ஆயிரம் வாக்குகளோடு இன்னொரு எம்.கே.சிவாஜிலிங்கமாக அரியநேந்திரனை கட்டமைப்பதோடு முடிந்து போகும். அப்படியான நிலையில், பெரும்பான்மையான தமிழ் வாக்குகள் தங்களோடு இருப்பதாக காண்பிப்பதற்காக தமிழரசுக் கட்சி செயற்படும். அது, சஜித்தை நோக்கிய திரட்சியாகவே இருக்கும். கடந்த காலங்களைப் போன்றே, வாக்கெடுப்புக்கு சில நாட்களுக்குப் முன்னால், சஜித்தை ஆதரிப்பதான அறிவிப்பை தமிழரசு விடுக்கும். இன்னொரு பக்கம், தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தில் கருத்து வெளியிட்டு வந்த தமிழரசின் முக்கியஸ்தர் ஒருவரை டில்லி அவசரமாக அழைத்திருக்கின்றது. அங்கு அவருக்கு சஜித்தை நோக்கிய நகர்வுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று அழுத்தம் வழங்கி அனுப்பியிருக்கிறார்கள். இனி வரும் காலங்களில், சம்பந்தப்பட்ட தலைவர், பொது வேட்பாளர் பற்றி பேசுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. ஏனெனில், தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் தலைவர்களுக்கு இந்தியாவே இன்னமும் எஜமான். தென் இலங்கையின் உணர்நிலை என்பது, சஜித்தை நோக்கிய திரட்சியாக இருக்கின்ற நிலையில், அந்த ஓட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொள்ள இந்தியா நினைக்கின்றது. அதனால்தான், சஜித்துக்கான ஆதரவு நிலையில் இந்தியா இருக்கின்றது. அதன்மூலம், எதிர்காலத்தில் சஜித்தோடு நெருக்கமாக இயங்கலாம் என்பது பிராந்திய வல்லரசின் எதிர்பார்ப்பு. ரணிலைப் போன்ற மூத்த தந்திரசாலியைக் கையாள்வது இந்தியாவுக்கு பெரும் தலையிடியானது. அப்படியான நிலையில், சஜித் அவர்களுக்கு விருப்பான தேர்வு. வாக்குத் திரட்சிக்கான நகர்வுகள், பிரித்தாளும் உத்திகள், கோடிகளில் பேரம் என்று எதிர்வரும் ஒரு மாத காலத்தில் அதிகமான பரபரப்புக்களை தேர்தல் களம் காட்டப் போகின்றது. இந்த அலைக்கழிப்புக்களில் அடங்காத பெரும்கூட்டமான மக்கள் தங்களின் நாளாந்த வாழ்வாதாரத்துக்கே போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசியல்வாதிகளும் முகவர்களும் தின்று கொழுத்து பெருச்சாளிகளாக திளைக்கிறார்கள். தேர்தல்கள் முடியும் வரையில் இதுதான் காட்சிகளாகப் போகின்றது. - காலைமுரசு பத்திரிகையில் ஆகஸ்ட் 18, 2024 வெளியான பத்தி. http://maruthamuraan.blogspot.com/2024/08/blog-post_18.html
  18. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஓரோபோச் வைரஸ் இயற்கையாகவே வன்மக்கரடி, குரங்குகள் போன்ற விலங்குகளிலும் காணப்படுகிறது கட்டுரை தகவல் எழுதியவர், ஆண்ட்ரே பீயர்நத் பதவி, பிபிசி நியூஸ், பிரேசில் 3 மணி நேரங்களுக்கு முன்னர் சமீபகாலமாக, தொடர்ந்து அதிகரிக்கும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உறுதிப்படுத்தப்பட்ட மரணங்கள், இதைத் தடுக்க தடுப்பூசிகள் அல்லது மருந்துகள் இல்லாத நிலை, வைரஸ் குறித்த போதிய தரவுகள் இல்லாதது என ஓரோபோச் காய்ச்சல் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். ஜூலை மாத இறுதியில் பிரேசில் நாட்டின் வடகிழக்கு மாநிலமான பஹியாவைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் ஓரோபோச் காரணமாக இறந்ததை அங்குள்ள அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். கியூபாவிலும் முதல்முறையாக இந்த வைரஸ் பரவியுள்ளது. மிட்ஜ்கள் (Midge- சிறிய பூச்சிகள்) மற்றும் கொசுக்கள் கடித்தால் இந்த வைரஸ் பரவுகிறது. இந்த நோயினால் மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் என்ன? அதை எவ்வாறு கண்டறிவது, தடுப்பது மற்றும் சிகிச்சை அளிப்பது? ஓரோபோச் வைரஸ் என்றால் என்ன? ஓரோபோச் என்பது பூச்சிக் கடி மூலம் பரவும் ஒரு வைரஸ் ஆகும். பெரும்பாலும் மிகச்சிறிய அளவிலான, மிட்ஜ் இனத்தைச் சேர்ந்த ‘குலிகோயிட்ஸ் பரேன்சிஸ்’ பூச்சிகள் மூலம் பரவுகிறது. இந்தப் பூச்சி அமெரிக்காவின் பரந்த நிலப்பகுதிகளில் அதிகளவில் காணப்படுகின்றன. கரீபியன் தீவுகளான டிரினிடாட் மற்றும் டொபாகோவில் உள்ள ‘வேகா டி ஓரோபோச்’ கிராமத்தில், 1955ஆம் ஆண்டில் இந்த நோய் பாதிப்புகள் முதன்முதலில் பதிவு செய்யப்பட்டது. கடந்த அறுபது ஆண்டுகளில், பிரேசிலில் இந்த வைரஸால் 5,00,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர். இருப்பினும் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்பதையும் அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். இந்த ஆண்டு இதுவரை பிரேசில் நாட்டில் கிட்டத்தட்ட 10,000 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஆனால் 2023இல் 800க்கும் அதிகமான பாதிப்புகள் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான பாதிப்புகள் பிரேசிலின் அமேசான் பிராந்தியத்தில் நிகழ்ந்துள்ளன, அங்கு ஓரோபோச் உட்பரவு நோயாகக் (Endemic) கருதப்படுகிறது. பிரேசிலைத் தவிர, சமீப காலங்களில் பெரு, கொலம்பியா, ஈக்வடார், அர்ஜென்டினா, பிரஞ்சு கியானா, பனாமா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, பொலிவியா மற்றும் கியூபா ஆகிய நாடுகளில் ஓரோபோச் ஒரு பொது சுகாதாரப் பிரச்னையாக மாறியுள்ளது. ஐரோப்பாவில், ஸ்பெயின், இத்தாலி மற்றும் ஜெர்மனியில் ஜூன் மாதம் முதல் ஒரு சில பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஆனால் இவை பிரேசில் மற்றும் கியூபாவிலிருந்து திரும்பும் பயணிகளிடையே காணப்பட்டது. ஓரோபோச் வைரஸ் எப்படி பரவுகிறது? இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து மற்றவர்களுக்கு பூச்சிக் கடிகள் மூலம் பரவுகிறது. பாதிக்கப்பட்டவர் உடனான நேரடி தொடர்பு அல்லது காற்று வழியாக போன்ற வேறு ஏதேனும் வகையில் இது பரவுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கொசுக்கள் மூலமாகவும் இந்த வைரஸ் பரவுகிறது பிரேசிலின் சுகாதார அமைச்சகத்தின் அறிக்கை ஒன்று, ‘கர்ப்பிணிப் பெண்களிடமிருந்து அவர்களின் கருவுக்கு இந்த வைரஸ் பரவக்கூடும் என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளது’ என்று கூறுகிறது. கர்ப்பம் மற்றும் கருவில் உள்ள குழந்தைகளின் மீது ஓரோபோச்சின் விளைவுகள் குறித்து இதுவரை நிரூபிக்கப்படவில்லை, ஆனால் ஆராயப்பட்டு வருகிறது. நகரமயமாக்கல், காடழிப்பு மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட காரணிகளால் உந்தப்பட்டு மனிதர்களிடையே இந்த நோய் அதிகமாக பரவி வருகிறது என்பது உறுதியாகத் தெரிகிறது. ஓரோபோச் வைரஸ், இயற்கையாகவே குரங்குகள், வன்மக்கரடி போன்ற விலங்குகளிலும் காணப்படுகிறது. இது சில பறவைகளையும் பாதிக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர். இந்திரா காந்தியுடன் மோதிய நேருவின் தங்கை - பிரதமர் தேர்வின் போது காமராஜர் என்ன செய்தார்?19 ஆகஸ்ட் 2024 ஓரோபோச் வைரஸின் அறிகுறிகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஓரோபோச், டெங்குவைப் போன்ற காய்ச்சலை ஏற்படுத்துகிறது ஓரோபோச், டெங்குவைப் போன்ற காய்ச்சலை ஏற்படுத்துகிறது. உலக சுகாதார நிறுவனம் இந்த நோயின் அறிகுறிகளை பின்வருமாறு பட்டியலிடுகிறது: திடீரென அதிக காய்ச்சல் தலைவலி கண்களுக்குப் பின்னால் வலி மூட்டு விறைப்பு அல்லது வலி அதீத குளிர் குமட்டல்/ஒவ்வாமை வாந்தி பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்த அறிகுறிகள் ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை நீடிக்கும். இருப்பினும், 60% நோயாளிகளில், சில நாட்கள் அல்லது வாரங்களுக்குப் பிறகு அறிகுறிகள் மீண்டும் தோன்றுகின்றன என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) கூறுகிறது. காய்ச்சல் மீண்டும் ஏற்படும்போது அவை தோன்றுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீண்டும் மீண்டும் ஒருவர் பாதிக்கப்பட என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அதேபோன்ற நோய் தொற்று மீண்டும் உருவாகியிருக்கலாம் அல்லது வைரஸைச் சுமக்கும் பூச்சிகள் அதிக அளவில் உள்ள பகுதிகளில் வாழும் மக்கள் மீண்டும் பாதிக்கப்படலாம். ஓரோபோச் எந்தளவு ஆபத்தானது? ஜூலை 25 அன்று, பிரேசிலில், ஓரோபோச் காய்ச்சலால் ஏற்பட்ட முதல் இறப்புகளை அதிகாரிகள் பதிவு செய்தனர். இறந்த இருவரும் சுமார் 20 வயதுடைய பெண்கள். அவர்களுக்கு அதற்கு முன்பாக எந்த உடல்நலக் குறைபாடுகளும் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். கருவில் இருக்கும் குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்படும்போது, அவர்களுக்கு ஏற்படும் மூளை குறைபாடுகளுக்கு இந்த வைரஸ் காரணமாக இருக்கலாம் என்று பிரேசிலின் சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது. பாதிக்கப்பட்ட நான்கு பெண்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு மைக்ரோசெபலி எனும் மூளை வளர்ச்சி குறைதல் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் ஜிக்கா வைரஸுடன் தொடர்புடைய ஒரு பிரச்னையாகும். ஓரோபோச் வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கருவில் இருந்த குழந்தை ஒன்று இறந்தே பிறந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் கர்ப்ப காலத்தில் வைரஸின் அபாயங்களை உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்பு, கூடுதல் ஆராய்ச்சி தேவை என்று விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கிறார்கள். ஓரோபோச்சிலிருந்து ஏற்படக்கூடிய பிற கடுமையான சிக்கல்களில் மூளையழற்சி மற்றும் மூளைக்காய்ச்சல் ஆகியவையும் அடங்கும். அவை மூளை மற்றும் முதுகெலும்பைச் சுற்றியுள்ள சவ்வுகளின் அழற்சி நோய்கள். இருப்பினும், பிரேசிலிய சுகாதார அமைச்சகம் அறிவித்த இரண்டு இறப்புகள் இதற்கு முன் நிகழ்ந்திராதவை. பல ஆண்டுகளாக 500,000க்கும் மேற்பட்ட ஓரோபோச் பாதிப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்பதைப் பார்க்கும்போது, இதற்கு முன்னும் ஏதேனும் இறப்புகள் நிகழ்ந்து அவை தவறவிடப்பட்டதா அல்லது டெங்குவால் ஏற்பட்டதாக தவறாக கண்டறியப்பட்டதா? என்ற கேள்வி எழுவது சாத்தியமே. ஓரோபோச்சை குணப்படுத்த முடியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES ஓரோபோச் சிகிச்சைக்கு என குறிப்பிட்ட மருந்துகள் எதுவும் இல்லை. ‘தி லான்செட் மைக்ரோப்’ என்ற கல்வியியல் இதழில் உள்ள ஒரு கட்டுரை, ஓரோபோச் காய்ச்சலின் பரவல்களை "உலகளாவிய சுகாதாரத்திற்கு வளர்ந்து வரும் ஒரு அச்சுறுத்தல்" என்று வகைப்படுத்துகிறது மற்றும் புதிய சிகிச்சைகளுக்கான ஆய்வுகளின் பற்றாக்குறை குறித்தும் எச்சரிக்கிறது. "அறிகுறிகள் உள்ள நோயாளிகள் முறையான சிகிச்சை மற்றும் மருத்துவ கண்காணிப்புடன் ஓய்வெடுக்க வேண்டும்" என்று பிரேசிலின் சுகாதார அமைச்சகம் கூறுகிறது. காய்ச்சல், வலி மற்றும் குமட்டல் போன்ற அறிகுறிகளைப் போக்க மருத்துவர்கள் குறிப்பிட்ட மருந்துகளை பரிந்துரைக்கலாம். பாதிக்கப்பட்ட எவரும் தொடர்ந்து பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்த வேண்டும். அவர்கள் பூச்சிகளால் கடிக்கப்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்க வேண்டும், ஏனெனில் அந்த பூச்சிகள் மற்றவர்களுக்கு வைரஸைப் பரப்பக்கூடும். ஓரோபோச் வைரஸை தடுக்க முடியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கொசு வலைகள் பயனுள்ளதாக இருக்கும்தான், ஆனால் மலேரியா போன்ற நோய்களைக் காட்டிலும் ஓரோபோச்சைத் தடுப்பதில் அவை குறைவான செயல்திறன் மிக்கதாக இருக்கலாம் இந்த தொற்றுநோயைத் தடுக்க தடுப்பூசிகள் எதுவும் இல்லை. ஓரோபோச்சுக்கு எதிராக மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வதற்கான சிறந்த வழி, மிட்ஜ்கள் மற்றும் கொசுக்களால் கடிக்கப்படுவதைத் தவிர்ப்பதாகும். சுகாதார அதிகாரிகள் அடிப்படை தடுப்பு நடவடிக்கைகளை பரிந்துரைக்கின்றனர். அவை பின்வருமாறு, கொசுக்கள் அதிகம் உள்ள இடங்களைத் தவிர்த்தல், குறிப்பாக மிட்ஜ்கள் கதவுகள் மற்றும் ஜன்னல்களில் கொசு வலைகளை நிறுவுதல் கடிபடுவதைத் தடுக்க, உடலின் பெரும்பகுதியை மறைக்கும் ஆடைகளை அணிதல். ஆடை மறைக்காத தோல் பகுதிகளில் பூச்சி விரட்டி களிம்புகளைப் பயன்படுத்துதல் உங்கள் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளை சுத்தமாக வைத்திருத்தல், குறிப்பாக தாவரங்கள் அல்லது விலங்குகள் உள்ள வெளிப்புற பகுதிகள் நீர் தேங்கும் பகுதிகள் மற்றும் அழுகிய தாவரங்களை அப்புறப்படுத்துதல், ஏனெனில் அங்கு பூச்சிகள் இனப்பெருக்கம் செய்யலாம். கொசு வலைகள் பயனுள்ளதாக இருக்கும்தான். ஆனால் மலேரியா போன்ற நோய்களைக் காட்டிலும் ஓரோபோச்சைத் தடுப்பதில் அவை குறைவான செயல்திறன் மிக்கதாக இருக்கலாம். ஏனென்றால் ஓரோபோச்சைப் பரப்பும் மிட்ஜ்கள் மிகவும் சிறியதாக இருப்பதால் அவற்றால் பெரும்பாலும் கொசு வலைகளைக் கடந்து செல்ல முடியும். டெல்டாமெத்ரின் மற்றும் என்,என்-டைஎத்தில்-மெட்டா-டோலுஅமைடு (DEET) போன்ற சில பூச்சிக்கொல்லிகள், நோயைக் பரப்பும் பூச்சி இனங்களைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளன. சர்வதேசக் கண்ணோட்டத்தில், நோயறிதலை விரைவுபடுத்துவதற்கும், பரவுவதற்கு முன்பு தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கும் ஆய்வுகள் இன்னும் பரவலாகக் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் உள்ளன. அதிகளவிலான காடழிப்பு மற்றும் காலநிலை மாற்றங்கள், ஓரோபோச் வைரஸ் ஒரு பரந்த வாழ்விடத்திற்கு பரவும் அபாயத்தை அதிகரிக்கிறது. இதனால் இந்த வைரஸ் நகர்ப்புற பரவலுக்கு ஏற்றார் போல புதிய சுழற்சிகளை உருவாக்குகிறது. இதுபோன்ற மாற்றம் ஏற்கனவே டெங்கு, ஜிகா மற்றும் சிக்குன்குனியா வைரஸ் தொடர்பான விஷயத்திலும் நடந்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/c0qe8n4kj1jo
  19. ஊடறுப்பில் இலங்கையை இந்தியா கையாளும் விதமும் ஏனைய நாடுகள் கையாளும் விதத்தை பற்றி தெளிவாக பேசுகிறார்.
  20. பட மூலாதாரம்,MONALI RAHALKAR/ARI படக்குறிப்பு, மெத்திலோகோக்குமிஸ் ஓரைசே பாக்டீரியாவின் நுண்ணோக்கிப் புகைப்படம் கட்டுரை தகவல் எழுதியவர், ஜானவி மூலே பதவி, பிபிசி மராத்தி 6 மணி நேரங்களுக்கு முன்னர் வெப்ப அலைகள், திடீர் வெள்ளம், சூறாவளிகள் – காலநிலை மாற்றத்தின் இத்தகைய விளைவுகள் இப்போது அடிக்கடி நடக்கும் நிகழ்வுகள் ஆகிவிட்டன. ஆனால் இவற்றுக்கு இப்போது சில பாக்டீரியாக்கள் தீர்வாக இருக்கலாம். இது வெறும் யோசனை அல்ல. மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள அகர்கர் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஏ.ஆர்.ஐ) விஞ்ஞானிகள் இதுபோன்ற ஒரு பாக்டீரியாவைப் பற்றி ஆராய்ச்சி செய்துள்ளனர். முனைவர் மோனாலி ரஹல்கர் வழிகாட்டுதலின் கீழ் ஒரு ஆராய்ச்சிக் குழு, இந்த பாக்டீரியா, மகாராஷ்டிராவின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் காணப்படும் புதிய வகை பாக்டீரியா என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த பாக்டீரியாக்கள் ‘மீத்தனோட்ரோஃப்கள்’ அல்லது ‘மீத்தேன்-ஆக்சிடைசிங் பாக்டீரியாக்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. அதாவது இவை மீத்தேன் வாயுவை உட்கொண்டு வாழ்கின்றன. புவி வெப்பமடைதலை ஏற்படுத்தும் முக்கிய பசுமை இல்ல வாயுக்களில் மீத்தேன் ஒன்றாகும். புனேவில் உள்ள ஒரு ஆராய்ச்சிக் குழு, பத்து வருடங்களாக இந்த பாக்டீரியாவை ஆராய்ச்சி செய்து, தாங்கள் கண்டுபிடித்த பாக்டீரியா இனங்கள் எப்படிச் சிறப்பு வாய்ந்தவை என்று ஓர் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய இனங்கள் இப்பகுதியைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்பதால், இந்த ஆராய்ச்சி உத்வேகம் பெற்றுள்ளது. இந்த பாக்டீரியாக்கள் பருவநிலை மாற்றத்தை எதிர்ப்பதற்கு மட்டுமின்றி விவசாயத்திற்கும் உதவும். மீத்தேன் மற்றும் காலநிலை மாற்றம் கார்பன் டை ஆக்சைடுக்குப் பிறகு புவி வெப்பமடைதலுக்குக் காரணமான இரண்டாவது மிக முக்கியமான வாயு மீத்தேன் ஆகும். மீத்தேனின் அளவு கார்பன் டை ஆக்சைடு அளவை விட ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், இருபது ஆண்டுகளில் வெப்பநிலையில் மீத்தேன் தாக்கம் கார்பன் டை ஆக்சைடை விட 80 மடங்கு அதிகமாகும். ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் அமைப்பின் (UNEP) அறிக்கையின்படி, தற்போதைய வெப்பநிலை அதிகரிப்பின் மூன்றில் ஒரு பங்குக்கு மீத்தேன் காரணமாகும். அதனால்தான் மீத்தேன் வெளியேற்றத்தைக் குறைத்து அதை உறிஞ்சுவதற்கு நடவடிக்கை எடுப்பது முக்கியம். இயற்கைச் சதுப்பு நிலங்கள், பெரிய குப்பைக் கிடங்குகள், அழுகும் பொருட்கள் மற்றும் அசை போடும் விலங்குகளின் ஏப்பம் ஆகியவற்றிலிருந்து மீத்தேன் வெளியேற்றப்படுகிறது. ஆனால், எண்ணெய்க் கிணறுகளில் இருந்து புதைபடிவ எரிபொருட்களை பிரித்தெடுத்தல், நெல் சாகுபடி மற்றும் பெரிய அளவிலான கால்நடை வளர்ப்பு போன்ற மனித நடவடிக்கைகள் இந்த வாயுவை அதிக அளவில் உற்பத்தி செய்கின்றன. ஆர்டிக் மற்றும் அண்டார்டிக் பகுதிகளில் உள்ள பல நூற்றாண்டுகள் பழமையான பனி உருகும்போது, அது மீத்தேன் வாயுவையும் வெளியிடுகிறது. மெத்தனோட்ரோப் பாக்டீரியாக்கள் சமீபத்தில் உலகம் முழுவதும் சில இடங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இந்த வாயுவின் அளவு அதிகரித்து வருவதை எப்படிக் கட்டுப்படுத்துவது, மீத்தேனை உட்கொண்டு வாழும் பாக்டீரியாவை இதற்கு பயன்படுத்த முடியுமா என்பது குறித்து ஆராய்ச்சி நடந்து வருகிறது. இந்தியாவில் தற்போது இந்தப் புதிய வகை பாக்டீரியாவை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆய்வுக் குழுவின் வழிகாட்டி மோனாலி ரஹல்கர் இதுகுறித்து கூறும் போது, “நாம் உயிர் வாழ ஆக்ஸிஜனையும் உணவையும் உட்கொள்கிறோம். ஆனால் மெத்தனோட்ரோப்கள் உணவு மற்றும் ஆற்றலுக்கு மீத்தேனை பயன்படுத்துகின்றன,” என்றார். “இந்த பாக்டீரியாக்கள் மீத்தேன் வாயுவை முதலில் மெத்தனாலாகவும் பின்னர் ஃபார்மால்டிஹைடாகவும், ஃபார்மிக் அமிலமாகவும் இறுதியாக கார்பன் டை ஆக்சைடாகவும் மாற்றுகின்றன. ஆனால் இந்தக் கார்பன் டை ஆக்சைடு முதலில் இருந்த மீத்தேன் வாயுவின் அளவை விடக் குறைவாக உள்ளது,” என்றார். மேலும், “இந்தச் செயல்பாட்டில் தண்ணீரும் உற்பத்தி செய்யப்படுகிறது. இது பயோமாஸ்-ஐ (உயிரியல் நிறை) உருவாக்குகிறது, நைட்ரஜன் நிலைப்படுத்தலுக்கு உதவுகிறது. இது விவசாய நிலத்திற்கும் நன்மை பயக்கும்,” என்கிறார். உடல்நலம்: நீண்டநேரம் உட்கார்ந்து வேலை செய்வதால் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்யும் வழிகள்17 ஆகஸ்ட் 2024 பட மூலாதாரம்,MONALI RAHALKAR/ARI படக்குறிப்பு, புனேவின் வெட்டல் ஹில் பகுதியில் உள்ள சுரங்கத்திலும் இந்த பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து என்ன? ஏ.ஆர்.ஐ-இன் விஞ்ஞானியான மோனாலி ரஹல்கர் கடந்த பத்தாண்டுகளாக மெத்தனோட்ரோப்களை ஆராய்ச்சி செய்து வருகிறார். மத்திய அரசின் அறிவியல் துறை மற்றும் பயோடெக்னாலஜி துறையின் உதவியுடன் அவரது குழு இந்த ஆராய்ச்சியை செய்தது. ரஹல்கரின் குழுவினர் 2013-ஆம் ஆண்டு இந்த ஆராய்ச்சியைத் தொடங்கினர். முல்ஷி, போர், மாவல், நாராயண்காவ் ஆகிய பகுதிகளில் உள்ள நெல் வயல்களில் இருந்து பாக்டீரியா மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அவர், 2015-இல் மெத்தனோட்ரோப் பாக்டீரியாவின் வெவ்வேறு இனங்களைக் கண்டுபிடித்தார். அவரது ஆராய்ச்சி முடிவுகள் 2018-இல் முதல் முறையாக வெளியிடப்பட்டது. இந்த புதிய பாக்டீரியாவுக்கு 'மெத்திலோகோக்குமிஸ் ஓரைசே' என்று பெயரிடப்பட்டது. அதற்கான காரணத்தை ரஹல்கர் விளக்குகிறார். “ ‘குக்குமஸ்’, ஏனெனில் இந்த பாக்டீரியா வெள்ளரிக்காய் போல் உள்ளது. ‘ஓரைசே’ என்பது முதலில் அதை நெல் வயல்களில் கண்டுபிடித்ததால்,” என்கிறார். "இந்த பாக்டீரியம் மற்றும் மீத்தேன் மீது வாழும் பிற பாக்டீரியாக்கள் 94% மட்டுமே பொதுவானவை என்பதை மரபணு வரிசைமுறை காட்டுகிறது. எனவே அது வேறு இனம் என்பதை நிரூபித்தது. மற்ற பாக்டீரியாக்களுடன் ஒப்பிடுகையில், இந்த பாக்டீரியா ஒப்பீட்டளவில் பெரியது. இதன் அளவு சுமார் 3-6 மைக்ரான். மைக்ரான் என்பது ஒரு மில்லிமீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு. இந்த பாக்டீரியா மிதமான வெப்பநிலையில் வாழ்கிறது. இதனால் 37 டிகிரி செல்சியஸுக்கு அதிகமான வெப்பநிலையில் உயிர் வாழ முடியாது. பின்னர், கோவிட் பொது முடக்கத்தின் போது, புனேவில் உள்ள வெட்டல் ஹில் பகுதியிலும் இந்த பாக்டீரியாவை அவர்கள் கண்டுபிடித்தனர். “பின்னர் நாங்கள் வெட்டல் மலையில் ஹில் சுரங்கப் பகுதியைச் சுற்றி நடந்து சென்று அங்கிருந்து சில மாதிரிகளைச் சேகரித்தோம். அதில் இந்த புதிய பாக்டீரியாவும் கண்டறியப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில், நாங்கள் இங்குள்ள பாக்டீரியாக்களை ஆய்வு செய்து, அவற்றை இனப்பெருக்கம் செய்ய வைத்தோம்," என்கிறார் ரஹல்கர். நாட்டிலேயே இவரது ஆய்வகம் மட்டுமே இந்த பாக்டீரியாக்கள் வெற்றிகரமாக 'பெருக்கம் செய்தது'. பிரிட்டிஷ் ஆட்சியை உலுக்கிய மிகப்பெரிய ரயில் கொள்ளை - சந்திரசேகர் ஆசாத் தப்பியது எப்படி?15 ஆகஸ்ட் 2024 பாகிஸ்தான் சுதந்திரம் பெற்ற நாளில் என்ன நடந்தது- டெல்லியில் இருந்து கிளம்பும்போது முகமது அலி ஜின்னா என்ன செய்தார்?15 ஆகஸ்ட் 2024 டிமான்டி காலனி படத்தில் வரும் 'ஜான் டி மான்டே' உண்மையில் யார்? என்ன ஆனார் தெரியுமா?14 ஆகஸ்ட் 2024 பட மூலாதாரம்,MONALI RAHALKAR/ARI படக்குறிப்பு,மீத்தேன் நுகர்வு பாக்டீரியாவின் மாதிரி அகர்கர் ஆய்வு நிறுவனம் இப்போது இந்த பாக்டீரியாக்களின் 80-க்கும் மேற்பட்ட மாதிரிகளைக் கொண்டுள்ளது. "இந்த மாதிரிகளைப் பராமரிப்பது மிகப்பெரிய விஷயம். ஏனெனில் இந்த மாதிரிகள் வெறுமனே ஃப்ரீசரில் மட்டும் வைக்கப்படுவதில்லை. அவை பற்றி மிகவும் கவனமாக இருக்க வேண்டும்,” என்கிறார் ரஹல்கர். இந்த பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்ட 10 ஆண்டுகளில், மெத்திலோகோக்குமிஸ் ஓரைசே பாக்டீரியாவின் வேறு எந்த இனமும் உலகின் வேறு எந்த நாட்டிலும் அல்லது பகுதியிலும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது முக்கியமானது. ஏனெனில் இது இந்த பாக்டீரியம் உள்ளூரைச் சேர்ந்தது என்பதை நிரூபிக்கிறது. அதாவது இது இந்தியாவில் மட்டுமே காணப்படுகிறது. இதுவரை இந்த ஆராய்ச்சியின் முடிவுகள், ‘மைக்ரோபியல் எகாலஜி’, ‘ஃப்ராண்டியர்ஸ் ஆஃப் மைரோபயாலஜி’ போன்ற அறிவியல் சஞ்சிகைகளில் வெளியிடப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,MONALI RAHALKAR/ARI படக்குறிப்பு,மீத்தேன் உண்ணும் பாக்டீரியாக்களை ஆய்வு செய்யும் அகர்கர் ஆராய்ச்சி நிறுவனத்தின் குழு இந்த பாக்டீரியா ஏன் முக்கியமானது? மெத்தனோட்ரோபிக் பாக்டீரியாக்கள் காற்றில் உள்ள மீத்தேன் வாயுவை உடைப்பதன் மூலம் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட உதவுகின்றன. மேலும் அவை விவசாயத்திற்கும் பயனளிக்கின்றன. தற்போது, ஏ.ஆர்.ஐ. ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவில் காணப்படும் மெத்தனோட்ரோப்களை எவ்வாறு பயன்படுத்துவது என்று ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் பாதி பேருக்கு அரிசி பிரதான உணவாகும். நெல் வயல்களில் இருந்து அதிக அளவு மீத்தேன் வெளியேற்றப்படுகிறது. (உலகளவில் மொத்த மீத்தேன் வெளியேற்றத்தில் நெல் விவசாயத்தின் பங்கு 8% முதல் 10% ஆகும்.) ஏ.ஆர்.ஐ. ஆராய்ச்சி குழு, நெல் நடவில் இருக்கும் மெத்திலோகோக்குமிஸ் ஓரைசே மற்றும் பிற மெத்தனோட்ரோப்களின் விளைவுகளை ஆய்வு செய்துள்ளது. இந்த பாக்டீரியாக்களின் மாதிரிகளைப் பயன்படுத்துவது நெல் வளர்ச்சிக்கு உதவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த பாக்டீரியாவை விவசாயத்திற்கு அதிக அளவில் உற்பத்தி செய்ய, சில தடைகள் உள்ளன. ஏனெனில், இந்த பாக்டீரியாவின் வளர்ச்சி விகிதம் மிகவும் குறைவு. இந்த பாக்டீரியாவை விவசாயத்திற்குப் பெரிய அளவில் பயன்படுத்த முடியுமா, அதற்காக அவற்றை இனப்பெருக்கம் செய்யவைக்க முடியுமா, அதில் இருந்து உரம் போன்ற பொருளை உற்பத்தி செய்தால், விவசாயிகளுக்கு கட்டுப்படியாகுமா என்பனவும் பரிசீலிக்கப்படுகிறன. பெரும் குப்பைக்கிடங்குகளில் உள்ள கழிவுகளில் இருந்து வெளியேறும் மீத்தேன் வாயுவைத் தடுக்க இந்த பாக்டீரியாவைப் பயன்படுத்த முடியுமா என்பது குறித்தும் ஆய்வு நடந்து வருகிறது. https://www.bbc.com/tamil/articles/cn874q3d970o
  21. பெண் மருத்துவர் பாலியல் படுகொலை விவகாரம்: கொல்கத்தாவில் பேரணி, கூட்டங்களுக்கு தடை - மேற்கு வங்க காவல் துறை உத்தரவு 19 AUG, 2024 | 12:31 PM கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் பேரணிகள், ஆர்ப்பாட்டம், கூட்டங்கள் நடத்த தடைவிதித்து அம்மாநில காவல் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து காவல் துறை ஆணையர் வினீத் குமார் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது: பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 சட்டப்பிரிவு 163-ன் கீழ் மருத்துவமனை வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போராட்டம், ஆர்ப்பாட்டம்,பேரணிகள் நடத்த தடைவிதிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை (ஆக.18) முதல் அமலுக்கு வந்துள்ள இந்த தடை உத்தரவு வரும் சனிக்கிழமை (ஆக. 24) வரைஅமலில் இருக்கும். மருத்துவமனையை சுற்றி 5 அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் கூடுவது இந்த உத்தரவின் மூலம் தடை செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தாவின் குறிப்பிட்ட பகுதிகளில் லத்திகள் மற்றும் பிற ஆபத்தான ஆயுதங்களை எடுத்துச் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பேரணி, ஆர்ப்பாட்டம், கண்டன கூட்டங்கள் மூலம் பொது அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல்ஏற்படுவதை தடுக்கவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 9 அன்று கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரியில் பணியில் இருந்தபோது முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்குஆளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்தும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கொல்கத்தா, தெற்கு 24 பர்கானாஸ் உள்ளிட்டபகுதிகளில் அசம்பாவிதங்களைதடுக்கும் நோக்கில் மக்கள் கூடுவதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. பாஜக தலைவருக்கு சம்மன்: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையில் வதந்திகளை பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி பாஜகதலைவர் லாக்கெட் சாட்டர்ஜிக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். சாட்டர்ஜியுடன் சேர்த்து, பிரபல இருதயநோய் நிபுணரான டாக்டர் குணால் சர்க்கார், பூர்பா பர்தமான் மாவட்டத்தின் துணை தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் சுபர்ணா கோஸ்வாமி உட்பட 59 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கொலையான மருத்துவரின் அடையாளத்தை வெளிப்படுத்தியது, தவறான தகவல்களை சமூகவெளியில் பரப்பியது தொடர்பாக லால் பஜாரில் உள்ள கொல்கத்தாகாவல் துறை தலைமையகத்தில் அதிகாரிகள் முன்பாக ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர்களுக்கு அனுப்பிய சம்மனில் காவல் துறை தெரிவி்த்துள்ளது. https://www.virakesari.lk/article/191423
  22. முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீடு Published By: DIGITAL DESK 7 19 AUG, 2024 | 05:55 PM தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உருவம் பொறித்த நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட, தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். இதற்காக சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற பிரத்யேக விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.‌ இந்த நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுகவின் மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் என பலரும் பங்கு பற்றினர். இந் நிகழ்வில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது, ''1960களில் பெரும் அரசியல் தலைவராக உருவெடுத்தவர் கலைஞர் கருணாநிதி. 1960 முதல் தற்போது வரை ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக திமுகவை வளர்த்தெடுத்தவர் கருணாநிதி. அவரின் அரசியல் போராட்டங்கள் தீவிரமானவை. துணிச்சலானவை. அதே தருணத்தில் பல்வேறு தேசிய கட்சிகளுடன் நல்லுறவையும் பேணி காத்தவர். ஏழை எளிய நிலையில் வாழும் மக்கள் தரமான கல்வியை பெறுவதற்காக நல திட்டங்களை வகுத்தவர் கருணாநிதி. மக்களின் குறைகளை கேட்டு அறிவதற்காகவே மனுநீதி எனும் திட்டத்தை செயல்படுத்தியவர். 1989 ஆம் ஆண்டிலேயே மகளிர்களுக்கான சுய உதவிக் குழுக்களை அறிமுகப்படுத்தியவர் கருணாநிதி. நாட்டின் தலைசிறந்த நிர்வாகிகளில் ஒருவராக விளங்கினார். மத்தியில் வெற்றிகரமான கூட்டணி அரசு அமையவும் காரணமாக இருந்தார். தமது ஆட்சி காலத்தில் மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்து போராடியவர் கலைஞர் கருணாநிதி. கூட்டாட்சி தத்துவத்திற்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தவர் கருணாநிதி. நாட்டின் நலன்களுக்காக மாநில எல்லைகளைக் கடந்து வேற்றுமையில் ஒற்றுமை பாராட்டியவர் கருணாநிதி. தமிழ் இலக்கியத்தில் மட்டுமல்லாமல் சினிமா துறையிலும் தனக்கென தனி முத்திரையை பதித்தவர் கருணாநிதி'' என கருணாநிதியின் பெருமையை பேசினார். இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பேசியதாவது, 'சொல்ல முடியாத மகிழ்ச்சியில் உள்ளேன். 'நா' நயம் மிக்க தலைவருக்கு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை நாம் கொண்டாடினோம். இன்று இந்தியாவே கருணாநிதி கொண்டாடுகிறது. கருணாநிதியின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், கிண்டி பன்னோக்கு மருத்துவமனை, மதுரை நூலகம் ஆகியவற்றை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்தோம்.‌ கருணாநிதியின் நினைவு நாணயத்தை வெளியிட, எம்முடைய முதல் தெரிவாக இருந்தது பாதுகாப்புத்துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் தான். பல அரசியல் மாறுபாடுகள் இருந்தாலும் அனைத்துக் கட்சியினருடனும் இணக்கமாக உள்ள உள்ளவர் ராஜ்நாத் சிங் தான். இந்த விழாவிற்கு இவரை அனுப்பிய பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் '' என்றார். https://www.virakesari.lk/article/191468
  23. 19 AUG, 2024 | 08:12 PM அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான 'USS Spruance' என்ற கப்பல் இன்று திங்கட்கிழமை (19) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இந்த கப்பலானது விநியோகம் மற்றும் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 160 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலில் சுமார் 338 பணியாளர்கள் கடமை புரிகின்றனர். Commander Thomas Adams இந்த கப்பலின் கட்டளை அதிகாரியாவார். இந்த கப்பலானது நாளை செவ்வாய்க்கிழமை (20) கொழும்பு துறைமுகத்தை விட்டு மீண்டும் புறப்படவுள்ளதாக இலங்கை கடற்படை மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/191454
  24. 19 AUG, 2024 | 12:45 PM கொழும்பு - புத்தளம் வீதியில் மஹவெவ நகருக்கு அருகில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இன்று திங்கட்கிழமை (19) தெரிவித்துள்ளது. மஹாவெவ தனிவெல்ல தேவாலயத்திலிருந்து மஹாவெவ நகரம் வரையிலான பகுதிகளில் நீர் நிரம்பிக் காணப்படுகின்றது. சில பகுதிகளில் மூன்று அடிக்கு மேல் நீர் தேங்கியிருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குளியாபிட்டிய பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக மஹாவெவ லுனு ஓயா மற்றும் ஹெமில்டன் கால்வாயில் நீர் நிரம்பி வழிவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பயணங்களை மேற்கொள்வது மிகவும் ஆபத்தானது என மாதம்பே மற்றும் மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனவே, பொது மக்கள் அனைவரும் அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்வதைத் தடுக்குமாறு புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/191422

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.