Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. திசை திருப்பப்படும் சிந்துஜாவின் மரண விசாரணைகள்: எழுந்துள்ள குற்றச்சாட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த வாரம் உயிரிழந்த இளம் பட்டதாரியான சிந்துஜாவின் மரண விசாரணைகள் திசை திருப்பப்படுவதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ். சிவகரன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் இன்று (9) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில், “சிந்துஜாவின் மரணம் நிகழ்ந்து ஏறக்குறைய 11 நாட்கள் நிறைவுற்றுள்ளது. இன்னும் பூர்வாங்கமான அறிக்கை வெளிவரவில்லை. ஆனால் அவர்கள் விசாரணைகளை வேறு கோணத்தில் திசை திருப்புவதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளது. நீதியான விசாரணை மன்னார் வைத்திய சாலையின் விசாரணை அறிக்கையும், பிராந்திய சுகாதார சேவைகள் பணி மனையின் அறிக்கையும், கள அறிக்கையும் ஒரு விடயத்தை சொல்ல மாகாண சுகாதார அமைச்சின் விசாரணை இன்னொரு விதமாக காணப்படுகின்றது. குறிப்பாக மாகாண சுகாதார அமைச்சின் அறிக்கையில் இந்த கொலையில் சம்மந்தப் பட்டவர்களை அல்லது சம்மந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்க கூடியவர்களை அதிகார மிக்கவர்களை காப்பாற்றுவதாக அமைந்துள்ளதாக நம்பதகுந்தவர்கள் கூறியுள்ளனர். இரண்டு குடும்ப நல உத்தியோகத்தர்கள், இரண்டு தாதிய உத்தியோகத்தர்கள் உட்பட ஒரு வைத்தியரையும் தண்டிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே விசாரணைகள் ஒரு குறுகிய அளவிலேயே முன்னெடுக்கப்படுகின்றது. தற்போது சம்பந்தப்பட்டவர்களை இடைநீக்கம் செய்யாது வெறுமனே இடமாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் வைத்தியசாலை தரப்பாலும் மாகாண சுகாதார அமைச்சாலும் இடம்பெறுவதாகவும் சம்பந்தப்பட்ட 5 நபர் களுக்கும் இன்றைய தினம் இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாகவும் அறியக்கூடியதாக உள்ளது. நீதியான விசாரணை செய்வதாக மக்களுக்கு கூறிவிட்டு சாதாரண இடமாற்றத்தையே செய்வதாகவும் நீதியான விசாரணை இடம் பெறவில்லை என்றும் எனவே நீதியான விசாரணை இடம் பெற வேண்டும் என்பதுடன் குற்றமிழைத்தவர்கள் வைத்திய துறையில் இருந்து நீக்கப்பட வேண்டும். நீதிக்கான காத்திருப்பு அதை விடுத்து சாதாரண இடமாற்றம் என்பதை பொது அமைப்புக்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள போவதில்லை என்பதுடன் இவ்வாறு செய்வதனால் இவர்களுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டம் ஒன்றை மேற்கொள்ள எங்களை வைத்திய தரப்பினர் நிர்பந்திக்கிறார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ச்சியாக நாங்கள் வைத்தியசாலை மற்றும் சுகாதார துறையினரிடம் பேசி வருகிறோம். இந்த மரணம் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி தொடர்பிலும் பேசியிருக்கிறோம். நீதி வழங்குவதில் இருந்து நீங்கள் பின் வாங்கினால் வைத்தியசாலைக்கும், மாகாண சுகாதார அமைச்சுக்கும் எதிராக எங்கள் செயற்பாடுகள் இருக்கும் என்பதை தெளிவாக உரியவர்களிடம் தெரிவித்துள்ளோம். எனவே, இந்த விடயத்தில் நாங்கள் தொடர்ந்து விழிப்போடு நீதிக்காகவும் காத்திருப்போம்” என சுட்டிக்காட்டியுள்ளார். https://tamilwin.com/article/investigation-on-sinthuja-dead-diverted-1723209552?itm_source=parsely-api
  2. எங்க போகலாம் என்பதை தெளிவுபடுத்துங்கோ அண்ணை?! மேலயா? கீழயா?
  3. Published By: DIGITAL DESK 3 10 AUG, 2024 | 01:30 PM ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை (10) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைச் சந்தித்தார். இந்த சந்திப்பில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ஷ வெற்றி பெற்றால் வடக்கு கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் மாவட்டங்களின் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன. இந்தச் சந்திப்பு கொழும்பு தயாவீதியில் உள்ள சுமந்திரனின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது. பொதுஜனபெரமுனவின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசமும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார். https://www.virakesari.lk/article/190738
  4. இமானே கெலிஃப்: பாரிஸ் ஒலிம்பிக்கின் பாலின தகுதிச் சோதனை - சர்ச்சை ஏன்? அறிவியல் சொல்வது என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இமானே வெற்றி பெற்றபோது ஆயிரக்கணக்கான அல்ஜீரிய ரசிகர்கள் அவரைச் சூழ்ந்திருந்தனர். கட்டுரை தகவல் எழுதியவர், சோஃபியா பெட்டிஸா பதவி, பிபிசி செய்திகள் 4 மணி நேரங்களுக்கு முன்னர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பாலின தகுதிச் சோதனையில் தோல்வியடைந்ததாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட இமானே கெலிஃப், ஓராண்டு கழித்து தற்போது பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை போட்டிகளில் அதிகம் பேசப்பட்ட இந்த சர்ச்சையை கடந்து, அல்ஜீரிய வீராங்கனையான இமானே கெலிஃப், சீனாவின் உலக சாம்பியனான யாங் லியூ-வை வெல்டர்வெயிட் பிரிவில் வீழ்த்தினார். “இது என் கனவு, நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இது அற்புதமாக இருக்கிறது” என இமானே பிபிசியிடம் தெரிவித்தார். “எட்டு ஆண்டுகளாக உறக்கமின்றி இதற்காக உழைத்தேன். அல்ஜீரியாவின் அனைத்து மக்களுக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்." "நான் விளையாடியது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். நான் வலுவான பெண்" என்று அவர் தெரிவித்தார். வெற்றி முடிவான பிறகு அவருடைய போட்டியாளரான யாங், இமானேவின் கைகளை மேலே உயர்த்தினார். இது தொடக்கப் போட்டியில் இத்தாலியின் ஏஞ்சலா காரினியின் நடவடிக்கைக்கு நேர் எதிராக இருந்தது. ஏஞ்சலா காரினி இமானேவுடனான போட்டியில் பாதியிலேயே வெளியேறினார். வெற்றி பெற்ற பிறகு அல்ஜீரியாவின் தேசிய கீதம் பாடப்பட்டபோது இமானே கண்ணீர் சிந்தினார். ஒலிம்பிக்கில் பாலின உறுதி சர்ச்சை படக்குறிப்பு, தைவானின் லின் யூ டிங் (இடது); அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் (வலது) அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் மற்றும் தைவானின் லின் யூ டிங் இருவரும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் நிகழ்வு பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் மறக்க முடியாத நிகழ்வாக அமையும். கடந்த ஆண்டு பெண்களுக்கான சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் இவர்கள் இருவரும் போட்டியிடுவதற்கான தகுதிகளைப் பெறவில்லை என்று தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். இருப்பினும், சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் பாரிஸ் ஒலிம்பிக்கில் இவர்களை அனுமதித்தது பல்வேறு விவாதங்களுக்குக் காரணமாக அமைந்திருக்கிறது. இந்த சூடான விவாதங்களுக்கு மத்தியில், நம்முடைய குரோம்சோம்களின் அமைப்பு மற்றும் அது வழங்கும் கூடுதல் நன்மைகள் குறித்த தகவல்கள் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. தற்போது ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருந்தாலும், தங்களின் வாழ்நாள் முழுவதும் இந்தத் துறையில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் நிபுணர்களும்கூட வெவ்வேறு விதமான கருத்துகளை நம் முன் வைக்கின்றனர். கருவில் குழந்தை உருவாகும்போதே, பாலினத்தை உறுதி செய்யும் செயல்முறைகள் ஆரம்பிக்கின்றன என்பதை நாம் அறிவோம். பெரும்பாலான பெண்கள் இரண்டு எக்ஸ் குரோமோசோம்களை கொண்டிருப்பார்கள். ஆண்களுக்கு எக்ஸ் & ஒய் குரோமோசோம்களை கொண்டிருப்பார்கள். ஒரு நபரின் பாலினத்தை இந்த குரோமோசோம்களே உறுதி செய்கின்றன. ஆனால் குழந்தை பிறப்புக்கு முன்பும், பருவமடையும் போதிலும், ஹார்மோன்களும் இதில் முக்கியப் பங்காற்றுகின்றன. கருவில் குழந்தை வளர்ந்து கொண்டிருக்கும்போதே ஹார்மோன்கள் இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. ஆனால் ஒரு சில நேரங்களில், குழந்தைகளின் பாலுறுப்புகள் வளர்ச்சி அடைவதில்லை. இது வேறுபட்ட பால் வளர்ச்சி (DSD - differences of sex development) என அறியப்படுகிறது. குழந்தைகள் கருவில் இருக்கும் போதே ஜீன்கள், ஹார்மோன்கள், பாலுறுப்புகள் தொடர்பான 40க்கும் மேற்பட்ட மருத்துவ நிலையைக் கொண்டிருப்பவர்களை வேறுபட்ட பால் வளர்ச்சி உடையவர்கள் என்று கூறுகிறோம். பெரும்பாலான மக்களிடம் இருந்து இவர்களின் பால் வளர்ச்சி வேறுபட்டதாக இருக்கும் என்பதே இதன் பொருள். குரோமோசோம்களில் ஏற்படும் அசாதாரண நிலை மிகவும் அரிதானது. ஆனால் பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் குத்துச் சண்டை போட்டியில் ஏற்பட்ட சர்ச்சை இதன் மீது தனி கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலின சர்ச்சையில் சிக்கியுள்ள இரண்டு வீராங்கனைகள் பற்றி நமக்குத் தெரிந்தது என்ன? சர்வதேச குத்துச்சண்டை கூட்டமைப்பின் தலைமை அதிகாரி க்றிஸ் ரோபர்ட்ஸ் பிபிசி ஸ்போர்ட்டிடம் பேசியபோது, இரண்டு வீராங்கனைகளும் மருத்துவப் பரிசோதனைக்கு ஒப்புக் கொண்ட பிறகு, அவர்கள் இருவரிடமும் எக்ஸ் மற்றும் ஒய் குரோமோசோம்கள் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் இந்த விவகாரம் அவ்வளவு எளிமையானது அல்ல. ஏனென்றால் மரபணு வேறுபாடுகள் அதிக அளவில் உள்ளன. சில நிபுணர்கள், "ஒய் குரோமோசோம்களை கொண்டிருக்கும் அனைத்து நபர்களும் ஆண்கள்தான் என்றும் ஒய் குரோமோசோம்கள் இல்லாத அனைவரும் பெண்கள்தான் என்று கூற முடியாது" என்கிறார்கள். ஒருவர் ஆணா அல்லது பெண்ணா என்பதற்கான பதிலை ஒருவரிடம் காணப்படும் ஒய் குரோமோசோமை வைத்து மட்டுமே தீர்மானிக்க இயலாது, என்கிறார் பேராசிரியர் அலுன் வில்லியம்ஸ். மான்செஸ்டர் மெட்ரோபொலிட்டன் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் அவர் விளையாட்டு செயல்திறனுடன் தொடர்புடைய மரபணு காரணிகளை ஆய்வு செய்து வருகிறார். "ஒய் குரோமோசோம்களை கொண்டிருக்கும் நபர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் எனக் கருதுவது வெளிப்படையாக ஒரு நல்ல குறியீடு. ஆனால் அது சிறப்பான குறியீடு என்று கூற முடியாது," என்றார் அலூன். வேறுபட்ட பால் வளர்ச்சி (DSD) நிலையைக் கொண்டிருக்கும் சில நபர்களுக்கு ஒய் குரோமோசோம், ஆண்களிடம் காணப்படும் ஒய் குரோமோசோம் போன்று முழுமையாக வளர்ச்சி அடைவதில்லை. சில மரபணு அம்சங்கள் குறைந்திருக்கலாம். சேதம் அடைந்திருக்கலாம் அல்லது எக்ஸ் குரோமோசோம்களின் மரபணு அம்சங்களை அந்த ஒய் குரோமோசோம் பெற்றிருக்கலாம். இது அவர்களிடம் உள்ள மரபணு நிலையைப் பொறுத்து மாறுபடும். ஆண் அல்லது பெண் என்பதைத் தீர்மானிக்கும் முக்கியமான மரபணு, ஒய் குரோமோசோமின் பாலினத்தைத் தீர்மானிக்கும் பகுதி (SRY, sex-determining region of the Y chromosome). இதைத்தான் ஆண்களை உருவாக்கும் மரபணு என்கிறோம். பாலின மேம்பாட்டுக்கு இது முக்கியமான ஒன்றாகும் எனக் கூறுகிறார் டாக்டர் எம்மா ஹில்டன். மரபணு கோளாறுகள் தொடர்பாக ஆய்வு செய்து வரும் 'டெவலப்மென்ட் பயாலஜிஸ்ட்' இவர். `செக்ஸ் மேட்டர்ஸ்’ என்ற தொண்டு நிறுவனத்தின் அறங்காவலராக இருக்கும் இவர், இமானேவும், லின் யூ டிங்கும் மேற்கொண்டு சோதனைகளைச் செய்யும் வரை போட்டிகளில் பங்கேற்கக் கூடாது என்று தெரிவித்தார். ஆணா பெண்ணா என்பதை நிர்ணயிக்கிறதா SRY ஜீன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,46 நொடிகளில் போட்டியில் இருந்து இத்தாலியின் ஏஞ்சலா கரினி வெளியேறியது இந்த பாலின சர்ச்சையின் முதல் புள்ளியாக அமைந்தது ஆண்களை உருவாக்கும் ஜீன் என்று டாக்டர் ஹில்டன் கூறும் ஜீன் இல்லாமல் எக்ஸ் மற்றும் ஒய் குரோமோசோம்களுடன் பிறந்த மக்களும் உள்ளனர். இவர்களிடம் டெஸ்டோஸ்டிரோன் வளர்ச்சி இருக்காது. பெண்களின் உடல் அமைப்பை அவர்கள் கொண்டிருப்பார்கள் என்கிறார் ஹில்டன். எனவே XY குரோமோசோம்களை கண்டறியும் சோதனை ஒரு முழுமையான முடிவைத் தருவதில்லை. மேலும் இந்த இரண்டு வீராங்கனைகளுக்கும் எத்தகைய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பான தகவல்களை சர்வதேச குத்துச்சண்டை கூட்டமைப்பு அறிவிக்கவில்லை. ஆனால், XY குரோமோசோம்களை கொண்டிருக்கும் பெரும்பாலான மக்களிடம் SRY என்ற ஆண்களை உருவாக்கும் மரபணுக்கள் இடம் பெற்றுள்ளன என்றார் ஹில்டன். அவர்களுக்கு விதைப்பைகள் (Testicles) உடலுக்கு உள்ளே இருக்கும். "பருவம் எய்தியவுடன் அவர்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் சுரக்க ஆரம்பித்துவிடும். இதுதான் விளையாட்டில் ஆண்களுக்கான அதிக நன்மைகளைத் தரும் என்ற கூற்றை உறுதி செய்கிறது" என்றார் ஹில்டன். இதற்கு ஒரு சிறப்பான உதாரணம் காஸ்டர் செமென்யா. இரண்டு முறை ஒலிம்பிக்கில் தங்கமும் மூன்று முறை உலக சாம்பியன் பட்டத்தையும் பெற்ற தடகள வீரர். ஆனால் அலுன் வில்லியம்ஸ் இதுகுறித்துப் பேசும்போது, DSD மரபணு நிலையைப் பெற்றுள்ளவர்கள் ஆண்கள் பெற்றிருக்கும் அனைத்து அனுகூலத்தையும் பெற்றிருப்பார்கள் என்பதை உறுதி செய்ய நேரடி ஆதாரம் ஏதும் இல்லை என்று கூறுகிறார். ஆணுறுப்பு வளரத் தேவைப்படும் மரபணுவில் ஏற்படும் பிறழ்வுதான் இங்கு சவாலைக் கொண்டுள்ளது. காஸ்டர் செமென்யாவை போன்றே மரபணு நிலையைக் கொண்டுள்ள எவருக்கும் அவர்களின் மரபணுவில் ஒரு பிறழ்வு ஏற்பட்டு, அது சாதாரணமாகச் செயல்படுவதை நிறுத்துகிறது. கருவறையில் இருக்கும்போது ஆண்களாகவே அவர்களின் உடல் தோற்றம் வளர்ச்சி அடையும். அந்த வளர்ச்சியின் இறுதிக் கட்டமாக ஆணுறுப்பு வளர்ச்சி அடையும். அந்த வளர்ச்சி அவர்களிடம் ஏற்படாத பட்சத்தில் அவர்கள் பெண்ணுறுப்பு மற்றும் க்ளிட்டோரியஸை பெறுவார்கள். ஆனால் அவர்களிடம் பெண்களுக்கான இனப்பெருக்க உறுப்புகளான கருப்பை, கருப்பை வாய் போன்றவை இருக்காது. அவர்களுக்கு மாதாந்திர உதிரப்போக்கும் இருக்காது. அவர்களால் கர்ப்பம் தரிக்கவும் முடியாது. ஆண்களுடன் உடலுறவு கொள்வது கடினமாக இருக்கும். உங்கள் மரபணுவில் பிறழ்வு ஏற்பட்டுள்ளதை அறியும்போது அது உங்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இதர போட்டியாளர்களுடன் தென்னாப்பிரிக்க தடகள வீராங்கனை காஸ்டர் செமென்செமென்யா கடந்த 30 ஆண்டுகளாக DSD மக்கள் குறித்து ஆய்வு செய்து வரும் நாளமில்லா சுரப்பு சிறப்புப் பிரிவு பேராசிரியரான க்ளாஸ் ஹோஜ்ப்ஜெர்க் கிராவ்ஹோல்ட், சமீபத்தில் 33 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு XY குரோமோசோம்கள் இருப்பதைக் கண்டறிந்ததாகக் கூறுகிறார். ஆர்ஹுஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் அவரிடம் சிகிச்சைக்கு வந்த அந்தப் பெண், தான் ஏன் நீண்ட நாட்களாக கர்ப்பம் தரிக்கவில்லை என்ற கேள்வியோடு வந்தார். ஆய்வு முடிவுகளில் அவருக்கு கருப்பை இல்லை என்பது தெரிய வந்தது. அவரால் குழந்தை பெற்றுக்கொள்ள இயலாது என்று கூறியவுடன் அவர் மிகவும் மனம் உடைந்து போனார். ஒருவரின் பாலின அடையாளத்தை கேள்விக்குள்ளாக்குவதால் ஏற்படும் தாக்கங்கள் அவர்களைச் சீர்குலைக்கும். எனவேதான் அடிக்கடி தனது நோயாளிகளை உளவியலாளர்களிடம் ஆலோசனை பெறும்படி ஆலோசிப்பதாகக் கூறுகிறார் கிராவ்ஹோல்ட். “அவருடைய புகைப்படத்தை உங்களிடம் காட்டினால், அவரை ஒரு பெண் என்றுதான் கூறுவீர்கள். அவருக்கு ஒரு பெண்ணுக்கான உடல் உள்ளது. ஆணை திருமணம் செய்துகொண்டார். பெண்ணாக உணர்கிறார். எனது பெரும்பாலான நோயாளிகளின் நிலை இதுதான்," என்கிறார் கிராவ்ஹோல்ட். மாதவிடாய் வராதபோது ஏன் மருத்துவரை அணுகவில்லை என்று கிராவ்ஹோல்ட் அவரிடம் கேட்டபோது, ஏற்கெனவே அவருடைய குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்படவில்லை. எனவே இது சாதாரண நிகழ்வுதான் என்று அவர் நினைத்ததாகத் தெரிவிக்கிறார் கிராவ்ஹோல்ட். பேராசிரியர் கிராவ்ஹோல்டின் XX குரோமோசோம்கள் கொண்ட ஆண்களையும் அவர் கண்டறிந்துள்ளார். இது இவை பொதுவாக பெண்களில் காணப்படும் குரோமோசோம்கள் ஆகும். "இந்த ஆண்களுக்கு மலட்டுத் தன்மை இருக்கும். தோற்றத்தில் அவர்கள் ஆண்களைப் போலவே இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் விதைப்பைகளின் அளவு சராசரியைவிட சிறியதாக இருக்கும். அது விந்தணுக்களை உற்பத்தி செய்யாது. அவர்கள் வயதாகும்போது, பெரும்பாலான ஆண்களுக்கு நிகழ்வது போலவே டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி ஆவது நின்றுவிடுகிறது. உலகின் சில பகுதிகளில், மாதவிடாய் மற்றும் பெண் உடற்கூறியல் பற்றி வெளிப்படையாகப் பேசுவது கலாசாரரீதியாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. உலகின் சில பகுதிகளில், பெண்கள் தங்கள் உடலில் வித்தியாசமான ஏதோ ஒன்று நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கான கல்வி அறிவைப் பெற முடியாத நிலையில் உள்ளனர். இந்தக் காரணங்களால்தான் பல வேறுபட்ட பால் வளர்ச்சிக் குறைபாடுகள் இன்னும் கண்டறியப்படவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது இது தொடர்பான விரிவான தரவுகள் நம்மிடம் இல்லை என்கிறார். ஆனால் கிராவோல்ட் டென்மார்க்கின் புள்ளிவிவரங்கள் ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கும் என்று கூறுகிறார். "இந்தத் தரவுகளைச் சேகரிப்பதில் உலகின் மிகச் சிறந்த நாடாக டென்மார்க் திகழ்கிறது. எங்களிடம் குரோமோசோம் பரிசோதனை செய்த அனைத்து நபர்கள் குறித்த தரவுகளைக் கொண்ட ஒரு தேசிய பதிவேடு உள்ளது" என்றார் அவர். பெண்களில் XY குரோமோசோம்களை கொண்டவர்கள் மிக அரிதாகவே உள்ளனர் என்று அவர் கூறுகிறார். டென்மார்க்கில் 15,000இல் ஒரு பெண்ணுக்கு XY குரோமோசோம்கள் உள்ளன. ஆனால் பல மரபணு நிலைகளை ஒன்றாகச் சேர்க்கும்போது, 300 பேரில் ஒருவர் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கலாம் என்று அவர் நம்புகிறார். "இந்த மாறுபாடுகள் நாம் நினைத்ததைவிட மிகவும் பொதுவானவை என்பதைத்தான் ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. பல நோயாளிகள் தங்கள் வாழ்நாளின் பிற்காலத்தில்தான் இதுபோன்ற மரபணு நிலைகளைக் கண்டறிந்துள்ளனர். என்னிடம் வந்த மிகவும் வயதான நோயாளி 60 வயதானவர்" என்று பேராசிரியர் கிராவ்ஹோல்ட் கூறுகிறார். தமிழ்நாடு: குற்றம் செய்து சிறை செல்ல விரும்பும் இளைஞர்கள் - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்5 மணி நேரங்களுக்கு முன்னர் பாலின சர்ச்சை ஒலிம்பிக்கின் போக்கை மாற்றுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மனித டி.என்.ஏ-வின் மாதிரி 'வேறுபட்ட பாலின வளர்ச்சி உள்ளவர்களுக்கு விளையாட்டில் கூடுதல் நன்மை உண்டா?' என்ற கேள்விக்கான குறுகிய பதில், ஓர் உறுதியான முடிவை அடையப் போதுமான தரவு இல்லை என்பதுதான். "குறிப்பிட்ட DSD நிலையைக் கொண்ட நபர்கள் பெண்களைவிட சில நலன்களைக் கூடுதலாகப் பெற்றிருந்தால் அது எனக்கு ஆச்சரியமாக இருக்காது" என்கிறார் பேராசிரியர் அலூன். பெரிய தசைகள், பெரிய மற்றும் நீண்ட எலும்புகள், நுரையீரல், இதயம் போன்ற பெரிய உறுப்புகள் போன்றவை அந்த நன்மைகளில் சில. அவர்கள் அதிக ஹீமோகுளோபின் அளவைக் கொண்டிருக்கலாம். இது வேலை செய்யும் தசைகளுக்குத் தேவையான ஆக்ஸிஜனை சிறப்பாக விநியோகிக்க வழிவகுக்கும் என்று மேற்கோள்காட்டுகிறார் அவர். "சில வகையான DSD நிலையைக் கொண்டவர்கள் துல்லியமான மரபணு காரணத்தைப் பொறுத்து, 0-100% வரையிலான சில அல்லது அனைத்து வகையிலும் மற்றவர்களைக் காட்டிலும் கூடுதல் நன்மைகளைக் கொண்டிருக்கலாம்" என்கிறார் அலூன். அவரது கருத்து அவரது துறையிலுள்ள நிபுணர்களின் கருத்தை ஒத்தது என்று அவர் நம்புகிறார், ஆனால் அதற்கு மேலும் சான்றுகள் தேவை. இமானே கெலிஃப் மற்றும் லின் யூ-டிங்கை பொறுத்தவரை, அவர்களுக்கு DSD உள்ளதா, அதை ஒழுங்குப்படுத்த வேண்டுமா என்பதை அறிய நம்மிடம் போதுமான தகவல்கள் இல்லை. பாலினத்தின் உயிரியலே சிக்கலானது என்பதால், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் மட்டுமே நடைபெறும் இந்தப் போட்டிகளை ஒழுங்குப்படுத்துவதும் சிக்கலானது தான். டாக்டர் ஷேன் ஹெஃபர்னன் 'எலைட்' விளையாட்டுகளில் மூலக்கூறு மரபியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். மேலும் DSD உடைய போட்டியாளர்களைப் பற்றி தடகள வீரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்த ஆய்வில் தற்போது பணியாற்றி வருகிறார். இவை அனைத்தும் தனிநபரின் மரபணு நிலையின் நுணுக்கத்தைப் பற்றியது என்று அவர் கூறுகிறார். எடுத்துக்காட்டாக, ஆண்ட்ரோஜன் இன்சென்ஸிடிவிடி சின்ட்ரோம் எனப்படும் DSD நிலையை உடைய பெண்களுக்கு XY குரோமோசோம்கள் உள்ளன. அவர்களின் உடல்கள் டெஸ்டோஸ்டிரோனை உற்பத்தி செய்கின்றன. ஆனால் அவர்களின் உடல்கள் அது செயல்படுவதை அனுமதிப்பதில்லை. எனவே அவர்கள் ஆண்களைப் போல டெஸ்டோஸ்டிரோன் மூலம் எந்த நன்மையையும் பெறுவதில்லை என்கிறார் ஷேன். DSD நிலை கொண்டவர்கள் கூடுதல் அனுகூலங்களைக் கொண்டுள்ளார்களா இல்லையா அல்லது அவர்கள் பெண்களுடன் சேர்ந்து போட்டியிடத் தகுதியுள்ளவர்களா இல்லையா என்பதை உறுதியாகச் சொல்ல அறிவியல் ரீதியில் ஆதாரங்கள் இல்லை என்கிறார் ஷேன். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதன் தகுதி அளவுகோல்களை அறிவியலின் அடிப்படையில் கொண்டிருக்கவில்லை என்கிறார் அவர். ஒலிம்பிக் கமிட்டி, இவர்களுக்குக் கூடுதல் நன்மைகள் ஏதும் இல்லை என்ற அனுமானத்தைக் கொண்டிருப்பது கவலை அளிக்கிறது. இதற்கும் ஆதாரம் இல்லை. அதேபோன்று அவர்கள் இந்த மரபணு மாறுபாடுகளால் மட்டுமே கூடுதல் அனுகூலங்களைக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறவும் போதுமான ஆதாரங்கள் இல்லை, என்றார் ஷேன். “நம்மிடம் போதுமான தரவு இல்லை. பெண் பிரிவில் சேர்க்கப்படும் போது பலர் உணர்ச்சிவசப்பட்ட நிலைப்பாட்டை வைத்திருக்கிறார்கள். ஆனால் ஒலிம்பிக் கமிட்டி எந்தத் தரவுகளும் இல்லாமல் இந்த நிலையை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்?" என்ற கேள்வியை எழுப்பினார். ஒலிம்பிக் கமிட்டி, சர்வதேச கூட்டமைப்புகள் மற்றும் நிதியுதவி கவுன்சில்களை DSD நிலைகளைக் கொண்ட விளையாட்டு வீரர்கள் பற்றிய ஆராய்ச்சியில் முதலீடு செய்ய வலியுறுத்தும் பலரில் ஷேனும் ஒருவர். ஆனால் இது கடினமானது என்கிறார். ஏனென்றால் இந்த நிலைகளைக் கொண்ட விளையாட்டு வீரர்கள் பற்றிய பார்வை இதனால் மாறும். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் ரீம் அல்சலேம் உட்படப் பலரும் அடுத்த ஒலிம்பிக்கின் போது கட்டாய பாலின பரிசோதனை பெண்களுக்கு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். விளையாட்டு வீரர்கள் தங்களின் முதல் போட்டியின் போதே இத்தகைய பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். அவர்கள் பதக்கங்களை வெல்வதற்கு முன் மற்றும் கவனத்தை ஈர்க்கும் முன் இது நடத்தப்பட வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே, இமானே கெலிஃபுக்கு நடந்தது போன்ற நிகழ்வுகள் தவிர்க்கப்படும் என்றார் ஹில்டன். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,செய்தியாளர்கள் சந்திப்பில் அழுத இத்தாலி குத்துசண்டை வீரர் ஏஞ்சலா கரினி ஆனால் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் இது குறித்து மாறுபட்ட கருத்துகள் உள்ளன. "ஒருவரின் பாலினம் மற்றும் விளையாட்டில் சாத்தியமான நன்மைகள் குறித்து உறுதியான முடிவை அடைய ஒரு சோதனை மட்டுமே போதுமானதாக இருக்காது" என்கிறார் பேராசிரியர் வில்லியம்ஸ். ஒரு விரிவான பாலின சோதனை மூன்று வகைகளை உள்ளடக்கியிருக்க வேண்டும் என்று அவர் வாதிடுகிறார்: மரபியல் (Y குரோமோசோம் மற்றும் ஆண் பாலினத்தைத் தீர்மானிக்கும் மரபணுவை கண்டறிவது). ஹார்மோன்கள் (டெஸ்டோஸ்டிரோன் உட்பட பல ஹார்மோன்களின் அளவை பரிசோதனை செய்வது) டெஸ்டோஸ்டிரோன் போன்ற ஹார்மோன்களுக்கு உடல் ஆற்றும் எதிர்வினை. சிலருக்கு Y குரோமோசோம் இருக்கலாம், ஆனால் டெஸ்டோஸ்டிரோனால் அவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை. இந்தப் பரிசோதனைகள் தற்போது செய்யப்படவில்லை என்று அவர் நம்புகிறார். ஏனெனில் இது விலை உயர்ந்தது. இதற்கு அதிக நிபுணத்துவம் கொண்டவர்கள் தேவை மற்றும் சோதனை நடைமுறை பற்றி நெறிமுறை தொடர்பான கவலைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். "இந்த மதிப்பீடு அவமானகரமானதாக இருக்கலாம். உங்கள் மார்பகத்தின் அளவு மற்றும் க்ளிடோரியஸ், குரலின் ஆழம், உங்கள் உடல் முடியின் நீளம் போன்றவை சோதிக்கப்படும்," என்றார். ஒன்று மட்டும் நிச்சயம் : இந்த சர்ச்சை தற்போது ஓயாது. தற்போதைக்கு, வேறுபட்ட குரோமோசோம் அமைப்புகளைக் கொண்டவர்களை விளையாட்டுத் துறையில் எவ்வாறு வகைப்படுத்த வேண்டும் என்பதை உறுதியாகக் கூற அறிவியலால் இயலவில்லை. அறிவியலைப் புரிந்துகொள்வதற்காகத் தங்கள் வாழ்க்கையைச் செலவிடுபவர்களுக்கு, இந்த சமீபத்திய சர்ச்சை மிகவும் தேவையான ஆராய்ச்சியைத் தூண்டும் என்று அவர்கள் நம்புகிறார்கள். https://www.bbc.com/tamil/articles/cd73n8w9yw8o
  5. அடையாளம் இடப்பட்ட இடத்தில் தானோ ஓடவேணும் அண்ணை?!
  6. திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கோடி ரூபாய் மதிப்புள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தாலி திருட்டு திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் பல நூறு வருட காலமாக சோழர் கால தாலி திருட்டுபோயுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போர்த்துக்கேயர் காலத்தில் கோயில் உடைக்கப்பட்ட போது சைவ சமயத்தினாரால் பல உயிர் தியாகங்கள் செய்யப்பட்டு காப்பாற்றப்பட்டு பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டிருந்த குறித்த தாலி நிலையில் கடந்த வாரம் தாலி திருட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பொது மக்கள் குரலெழுப்ப தொடங்கியுள்ளனர். கோயில் நிர்வாகத்தினர் இவ்விடயத்தை அமைதிப்படுத்தி பொதுமக்களை சமாதானம் செய்ய முயன்றுள்ளனர். பல நூறு கோடி பெறுமதி பல நூறு கோடி பெறுமதியான ரத்தினங்கள், வைடூரியங்கள் பொதிக்கப்பட்ட 5 பவுண் தாலி பல பூஜைகள் செய்யப்பட்டு சக்திவாய்ந்ததாக இருந்தது எனவும் இதை எவராலும் ஈடு செய்ய முடியாது எனவும் பொது மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு அம்மன் கழுத்தில் இருந்த தாலி திருட்டு போய் சிவனின் சக்தியை செயலிழக்க செய்யப்பட்ட சதியா ? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இது குறித்து பொறுப்பு கூறவேண்டிய தரப்பினரின் இதுவரை பொலிஸ் முறைப்பாடு கூட செய்யவில்லை என தெரியவந்துள்ளது. அதேபோல் சோழர் காலத்தில் செய்யப்பட்ட பல நூறு கோடி மதிப்புடைய 16 பவுன் வைரம், வைடூரியம் பொதிக்கப்பட்ட தங்க நகைகளும் கடந்த காலத்தில் திருட்டு போயுள்ளது. பொலிஸில் முறைப்பாடு இந்நிலையில் இவ்விடயம் குறித்து மாவட்ட செயலாளர், அரசங்க அதிபர் என சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்கு பொதுமக்களால் கொண்டு செல்லப்பட்டுள்ள்ளது. பொலிஸாருக்கும் பொதுமக்களால் முறைப்பாடு அளிக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணை தீவிரமாக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விடயம் குறித்து ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து இவ்விடயம் தொடர்பாக கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில், ஆளுநர் இந்த தாலியை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மேலும், தாலி திருட்டு போயவுள்ள சம்பவம் குறித்து ஆன்மீக வாதிகளார் அச்சம் தெரிவித்தனர். இந்நிலையில், போர்த்துக்கேயரிடம் இருந்து பாதுகாக்கப்பட்ட தாலி தமிழர்களால் திருடப்படுவதற்கா ? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். https://tamilwin.com/article/thali-theft-of-thirukoneswara-temple-1723276490
  7. உக்ரைனின் ஊடுருவலுக்கு பிரித்தானியாவே காரணம்: திசை மாறும் ரஷ்யாவின் நகர்வு உக்ரைன் (UKraine) இராணுவம் ரஷ்யாவுக்குள் (Russia) புகுந்து அதிரடி தாக்குதலை நடத்த காரணம் பிரித்தானியா (UK)தான் என மூத்த அரசியல்வாதியும் விளாடிமிர் புடினுக்கு நெருக்கமானவருமான அடல்பி ஷ்காகோஷேவ் (Adalbi Shkhagoshev) தெரிவித்துள்ளார். அண்மையில் ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் இராணுவம் புகுந்து எல்லை தாண்டிய தாக்குதல்களை தீவரப்படுத்தியதுடன், தற்போது ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களும் முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) அவசர நிலை பிரகடனம் அறிவித்து, உக்ரைன் படைகள் ஊடுருவியுள்ள பகுதியில் இருந்து 17 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள குர்ஸ்க் அணு உலையை பாதுகாக்க வாக்னர் படையை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பிரித்தானியாவின் பங்கு இந்த நிலையில், உக்ரைனின் இதுபோன்ற நடவடிக்கைகளின் பின்னால் கட்டாயம் பிரித்தானியாவின் பங்கு இருக்கும் என அடல்பி ஷ்காகோஷேவ் குற்றஞ்சாட்டியுள்ளார். இதேவேளை, உக்ரைனின் இந்த நடவடிக்கை ரஷ்யாவை தூண்டிவிடும் செயல் என்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் எச்சரித்துள்ளார். https://ibctamil.com/article/reason-for-ukraine-s-military-to-enter-russia-1723235673
  8. கொக்கி போடுகிறாரோ?! கறுப்பு வெள்ளையில் ஒன்றுமில்லை அண்ணை, உங்களோட பழகினவை சொல்வதைப் பார்த்தால் கறுப்புத் தோலிற்குள் ஒரு வெள்ளை மனசு இருக்கிறது.
  9. அப்பிள் (Apple) நிறுவனத்தின் அடுத்த படைப்பான ஐபோன் 16 ப்ரோ (iPhone 16) மற்றும் ப்ரோ மேக்ஸ் (Pro max) கையடக்க தொலைபேசிகள் குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்களை கொண்டிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய வகை ஐபோன் கைப்பேசிகளை அப்பிள் நிறுவனம் வழக்கத்தின்படி செப்டம்பர் மாத தொடக்கத்தில் வெளியிடவுள்ளன. இந்த வருடம் வெளியாகவுள்ள ஐபோன் 16 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் தொலைபேசிகளில் செயற்றிறன் மற்றும் கமாராக்களில் குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்கள் காணப்படும். பிரகாசமான திரை அந்தவகையில், ஐபோன் 16 ப்ரோ அளவில் பெரிய மற்றும் பிரகாசமான திரை, சமீபத்திய A18 ப்ரோ சிப், மேம்படுத்தப்பட்ட கமரா சென்சார்கள், பெரிய பேட்டரி மற்றும் மேம்படுத்தப்பட்ட இணைப்புத் தேர்வுகளைக் (Connectivity Options) கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது. ஐபோன் 16 ப்ரோவின் தனித்துவமான அம்சங்களில் ஒன்றாக பெரிய OLED திரைகள் (டிஸ்ப்லே) இருக்கும் என்று தெரியவந்துள்ளது. குறிப்பாக, ஐபோன் 15 ப்ரோவில் காணப்படும் 6.1 இன்ச் திரை அமைப்பை விட, ஐபோன் 16 ப்ரோ 6.3 இன்ச் ஸ்க்ரீனை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏஐ திறன் இதற்கிடையில், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 6.9 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வரும் என்று கூறப்படுகின்றது. கூடுதலாக, ஐபோன் 16 ப்ரோவின் பெசல்கள் (திரையின் எல்லை) வெறும் 1.2 மிமீ அளவிலும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 1.15 மிமீ அளவிலும் இருக்கும். 16 ப்ரோ வகைகளில் அப்பிளின் சமீபத்திய A18 ப்ரோ சிப் இடம்பெறுவதால் கனிசமாக செயல்திறனை உறுதிப்படுத்தும். குறிப்பாக, அப்பிள் பயனர்களுக்கு ஏஐ திறன்களை மேலும் வழங்குவதற்கும் சாதனங்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் அப்பிள் இன்டெலிஜென்ஸ் (Apple Intelligence) உடன் தனிப்பட்ட ஏஐ சேவைகளையும் இந்த பிராசஸர் கொண்டு வரும். கமரா சென்சார்கள் ஐபோன் 16 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் இன் கமரா சென்சார்கள் பெரிய மேம்படுத்தல்களைப் பெறுமெனவும் இரண்டும் 48 மெகாபிக்சல் (Mega Pixel) அல்ட்ரா-வைட் (Ultra Wide) கமராவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலையைப் பொறுத்தவரை குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்கள் இருந்தபோதிலும், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ்-க்கான ஆரம்ப விலைகள் அவற்றின் முந்தைகைகளைப் போலவே இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், ஆப்பிளின் அடுத்த பெரிய வெளியீட்டை நெருங்க நெருங்க, தொழில்நுட்ப ஆர்வலர்கள் மற்றும் ஆப்பிள் ரசிகர்களிடையே புதிய ஐபோன் 16 வகைகளின் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகின்றது. https://ibctamil.com/article/iphone-16-pro-and-pro-max-features-1723238349
  10. இலங்கைக்கு கிடைக்கவுள்ள பல மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி இலங்கையில் நீண்ட கால முதலீட்டினை மேம்படுத்தும் வகையில் மேலும் 24.5 மில்லியன் டொலர் நிதி உதவியினை வழங்குவதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளது. நிதி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய யு.எஸ்.எய்ட் (USAID) அமைப்பின் ஆசியப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதி நிர்வாகி மைக்கல் ஷிபர் (Michael Schiffer) இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இந்த நிதியினூடாக இலங்கையின் சந்தை சார்ந்த வளர்ச்சியை வலுப்படுத்தும், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் மீள்தன்மையை வளர்ப்பது மற்றும் நல்ல நிர்வாக நடைமுறைகளை ஊக்குவிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மனிதாபிமான உதவி அரசாங்கம், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூகம் ஆகியவற்றில் எங்களுடைய பங்காளித்துவத்தின் விளைவாக, இலங்கையர்களின் வாழ்வில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தும் கூட்டு முயற்சிகளுக்கு இந்த நிதி ஆதரவளிக்கும் என யு.எஸ்.எய்ட் அமைப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை இலங்கையின் விவசாயம், கல்வி, சுகாதாரம், சுற்றாடல், நீர், சுகாதாரம், உட்கட்டமைப்பு, நிர்வாகம் மற்றும் வர்த்தக அபிவிருத்தி மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக அமெரிக்கா 1956 ஆம் ஆண்டு முதல் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை (ரூ. 598 பில்லியன்) இலங்கைக்கு உதவியாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வின் போது யு.எஸ்.எய்ட் அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான திட்டத்தின் பணிப்பாளர் மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க உள்ளிட்டோரும் பங்கேற்றதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. https://ibctamil.com/article/us-will-provide-24-5-million-usd-to-sri-lanka-1723260299
  11. காசாவில் பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் தாக்குதல் ; 100க்கும் மேற்பட்டவர்கள் பலி 10 AUG, 2024 | 09:36 AM காசாவின் டராஜில் உள்ள அல் டபின் பாடசாலைமீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 100க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த பாடசாலையை இலக்குவைத்தே இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. அதிகாலை தொழுகையில் மக்கள் ஈடுபட்டிருந்தவேளையே இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட கட்டிடத்தில் தீப்பிடித்துள்ளது – பொதுமக்கள் தப்பமுடியாமல் அலறுகின்றனர் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/190715
  12. அரச ஓய்வூதியர்களுக்கான மூவாயிரம் ரூபா இடைக்கால கொடுப்பனவை தேர்தலின் பின்னர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் செப்டெம்பர் மாத கொடுப்பனவுடன் சேர்த்து வழங்குமாறு அரசாங்க பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்றைய தினம் (09) வெளியிட்டுள்ளது. இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தரவை மீறி அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் சுற்றறிக்கை வெளியிட்டமைக்கு, எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் உண்மைகளை தெளிவுபடுத்துமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. சட்ட நடவடிக்கை மேலும், அரச சொத்துக்களை தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியமை தொடர்பான வழக்குகளை விசாரணை செய்வதற்கும் அவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறும் நிறுவனங்களின் தலைவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் தனியான குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க (R. M. A. L. Rathnayake) குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, தேர்தல் நோக்கங்களுக்காக அரச சொத்துக்களை பயன்படுத்தியமை தொடர்பில் ஆணைக்குழுவுக்கு ஏற்கனவே நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அவ்வாறான செயல்கள் இடம்பெற்றால், அது தொடர்பில் முறைப்பாடுகளை தாக்கல் செய்யுமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின தவிசாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தேர்தல் நோக்கங்களுக்காக அரச சொத்துக்களை பயன்படுத்திய சம்பவங்கள் சுதந்திரமானதும் நியாயமானதுமான வாக்கெடுப்புக்கு இடையூறாக இருப்பதால் திடீரென நிறுவனங்களை சோதனையிட தனி குழுக்கள் நியமிக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், அரச சொத்துக்களை தேர்தல் நோக்கங்களுக்காக பயன்படுத்த வேண்டாம் என மீண்டும் அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். https://ibctamil.com/article/pension-payments-of-govt-employees-in-the-october-1723248975
  13. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சிங்கம், தமிழ்ச் சமூகத்தில் மட்டுமின்றி உலகம் முழுக்கவே வீரம், கம்பீரம் ஆகியவற்றுக்கு உவமையாகக் கூறப்படும் ஓர் உயிரினம். ‘சிங்கம் சிங்கிளாதான் வரும்’ என்ற ரஜினியின் வசனம்கூட அத்தகைய கம்பீரத் தொனிக்காக வர்ணிக்கப்பட்டதுதான். ஆனால், உண்மையில் சிங்கம் சிங்கிளாக வராது, பெரும்பாலும் கூட்டமாகத்தான் வரும் என்கிறார் குஜராத்தின் கிர் காட்டில் உள்ள சிங்கங்களை ஆய்வு செய்துள்ள காட்டுயிர் ஆய்வாளர் முனைவர்.ரவி செல்லம். அதிலும் ஒரு கூட்டத்தில் இருக்கும் ஆண் சிங்கத்தைவிட பெண் சிங்கங்களே அதிகமாக வேட்டைக்குச் செல்லும் என்றும் கூறுகிறார் அவர். இப்படி சிங்கம் குறித்து இன்னும் பல சுவாரஸ்ய விஷயங்கள் இருக்கின்றன. அவை குறித்துத் தெரிந்துகொள்ள அவரிடம் விரிவாகப் பேசினோம். இந்தியாவில் சிங்கங்களை எங்கே பார்க்கலாம்? சிங்கங்களைப் பொறுத்தவரை இந்தியாவில் மட்டுமல்ல, ஆசிய கண்டத்திலேயே எங்கெல்லாம் வாழ்கின்றன தெரியுமா? இல்லை, இல்லை. ஆசியாவில் எங்கே வாழ்கிறது தெரியுமா? ஆம், எங்கெல்லாம் எனப் பண்மையில் கேட்பதைவிட எங்கே என ஒருமையில் கேட்பதே சரியாக இருக்கும். ஏனெனில், சிங்கங்கள் ஆசியாவிலேயே ஒரேயொரு பகுதியில் மட்டும்தான் காட்டில் வாழ்கின்றன. பல்வேறு நாடுகளில் பூங்கா போன்ற அடைப்பிடங்களில் அவை காணப்பட்டாலும், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள கிர் காடுகளைத் தவிர, ஆசியாவில் வேறு எங்குமே சிங்கம் காட்டில் இல்லை. சிவிங்கிப் புலிகள் இந்தியாவுக்கு வருவதால் சிங்கங்கள் பாதுகாப்பிற்குப் பிரச்னையா?5 ஆகஸ்ட் 2022 சிங்கங்களுக்காக காலி செய்த 1600 குடும்பங்களுக்கு என்ன பதில்? விஞ்ஞானி ரவி செல்லம் கேள்வி21 ஆகஸ்ட் 2022 சிங்கம் தனித்து வாழுமா? சமூகமாக வாழுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES சிங்கம் யானைகளைப் போல் கூட்டமாக வாழும் சமூக உயிரினம்தான் என்கிறார் முனைவர்.ரவி செல்லம். ஆனால் அவரது கூற்றுப்படி, சிங்கத்தின் சமூகக் கட்டமைப்புக்கும் யானைகளின் சமூகக் கட்டமைப்புக்கும் இடையே சில வேறுபாடுகள் உள்ளன. யானை மந்தையைப் பொறுத்தவரை, ஒரு மந்தையில் இருப்பவை அனைத்துமே பெண் யானைகள்தான். ஆண் யானைகள் இனப்பெருக்க காலத்தில் மட்டுமே மந்தையோடு இணைகின்றன. பிற காலகட்டங்களில் ஆண் யானைகள் தனித்தோ அல்லது 'சிங்கிள்’ யானைகள் ஒரு சில இணைந்து கூட்டமாகவோ சுற்றித் திரியும், இருப்பினும் அந்தக் கூட்டம் ஒரு மந்தையாகக் கருதப்படாது. சிங்கக் கூட்டத்திலும் பெரும்பான்மையாக பெண் சிங்கங்களே இருக்கும். ஆனால், அவற்றின் கூட்டத்திலேயே சில ஆண் சிங்கங்களும் இருக்கும் என்கிறார் முனைவர்.ரவி செல்லம். பட மூலாதாரம்,DR.RAVI CHELLAM “ஆண் சிங்கங்கள் ஒரு கூட்டத்தில் இருக்கும். ஆனால், அவற்றின் எண்ணிக்கை இரண்டு அல்லது மூன்று என மிகச் சிறிய அளவிலேயே இருக்கும். ஒரு கூட்டத்தில் இருக்கும் அனைத்து பெண் சிங்கங்களும் ஒன்றோடு ஒன்று ரத்த உறவு கொண்டவையாகவே இருக்கும். ஆனால், ஆண் சிங்கங்கள் அவை இருக்கும் கூட்டத்தின் பெண்களுடன் ரத்த உறவு கொண்டவையாக இருக்காது. இருப்பினும், அந்த ஆண் சிங்கங்கள் சகோதரர்களாக இருக்க வாய்ப்புள்ளது,” என்கிறார் அவர். அதாவது, ஒரு கூட்டத்தில் பிறக்கும் பெண் சிங்கம், அதே கூட்டத்தில், தாய், பாட்டி, சகோதரி ஆகியோருடன் இணைந்து தொடர்ந்து வாழும். ஆனால் ஆண் சிங்கமாக இருந்தால், “அது இனப்பெருக்க வயதை அடையும்போது கூட்டத்தில் இருந்து விரட்டப்படும். அதற்குப் பிறகு அது வேறொரு கூட்டத்தில் இருக்கும் ஆண் சிங்கத்துடன் சண்டையிட்டுத் தனது இருப்பைச் சம்பாதிக்க வேண்டும்.” “பிறகு அந்தக் கூட்டத்தில் 4-5 ஆண்டுகள் இருந்த பிறகு, வேறு இளம் ஆண் சிங்கம் அதன் இடத்தை நிரப்ப வரும்போது, வயதான சிங்கத்துடன் நடக்கும் மோதலில் வீழ்த்தப்பட்டு, கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்படும். சில நேரங்களில் அந்தச் சண்டையில் அவை கொல்லவும் படலாம். ஒருவேளை பிழைத்தால், அதற்குப் பிறகு அந்த ஆண் சிங்கம் இறுதி வரை வேறு கூட்டத்தில் இணைய முடியாது,” என்று கூறுகிறார். ஆண் சிங்கம் உண்மையில் என்ன செய்யும்? அதன் வேலை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES ஆண் சிங்கங்கள் சில நேரங்களில் ஒன்று சேர்ந்து சுற்றித் திரிந்தாலும்கூட, அந்தக் கூட்டம் ஓர் ஒருங்கிணைந்த சமூகக் குழுவாக இருப்பதில்லை. ஒழுங்கமைக்கப்பட்ட சமூகக் குழுவாக இருக்கும் சிங்கக் கூட்டத்தில் பெண் சிங்கங்களே அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட “சிங்கக் கூட்டத்தில் இருக்கும் ஆண் சிங்கத்தின் முக்கியமான வேலை, அந்தக் கூட்டத்தின் எல்லையைப் பாதுகாப்பதும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதும்தான்” என்கிறார் முனைவர். ரவி செல்லம். வேட்டையைப் பொறுத்தவரை, சிங்கம் தனியாக வாழும்போது அவை கட்டாயம் வேட்டையாடித்தான் சாப்பிட்டாக வேண்டும். ஆனால், சிங்கக் கூட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும்போது, அவை பெரும்பாலும் பெண் சிங்கம் வேட்டையாடும் இரையைத்தான் சார்ந்திருக்கும் என்கிறார் அவர். ஆசியாவைவிட ஆப்பிரிக்காவில் சிங்கங்கள் வேட்டையாட, ஒட்டகச் சிவிங்கி, காட்டெறுமை, அளவில் சிறிய யானைகள் போன்ற பெரிய இரை உயிரினங்கள் நிறைய உள்ளன. அத்தகைய வேட்டைகளின்போது ஆண் சிங்கங்கள் உதவுகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES “பெண் சிங்கத்தைவிட ஆண் சிங்கத்தின் வாய் பெரிதாக இருக்கும், எடையும் கூடுதலாக இருக்கும். ஆகவே இரையை நீண்டநேரம் இறுகப் பற்றித் தொங்கியபடி கீழே சாய்ப்பதற்கு அவற்றால் முடியும். இருப்பினும், அந்த இரையைக் கண்காணித்து, சுற்றி வளைத்து சிக்க வைப்பது என்னவோ பெண் சிங்கமாகத்தான் இருக்கும்,” என்கிறார் ரவி செல்லம். இருப்பினும் இந்தியாவிலுள்ள சிங்கங்களைப் பொறுத்தவரை இந்தப் பழக்கம் சற்று மாறுபடுவதாகவும் அவர் கூறுகிறார். ஆப்பிரிக்க காடுகளில் புல்வெளிப் பரப்பு அதிகமாக இருக்கும். அங்கு அளவில் பெரிதாக இருக்கும் ஆண் சிங்கம் மறைந்திருந்து வேட்டையாடுவது கடினம். ஆனால், “இந்தியக் காடுகளின் தன்மை வேறுபட்டது. இங்கு மரங்களும் புதர்களும் உள்ளன. அவற்றில் அவை மறைந்திருந்து தாக்குவதற்கான சூழல் உள்ளது. அதோடு, இங்கு மனிதர்களுக்கு மிக நெருக்கமாக வாழ்வதால், கால்நடைகளும் எளிதாகக் கிடைக்கின்றன. கால்நடைகளைப் பொறுத்தவரை, மனிதத் தலையீடுகளின் காரணமாகப் பெண் சிங்கங்கள் அவற்றை வேட்டையாடத் தயங்கும். ஏனெனில், ஒருவேளை அவை ஆபத்தில் சிக்கிவிட்டால் அவற்றின் குட்டிகள் அநாதையாக்கப்படும்,” என்கிறார் ரவி செல்லம். உலகிலேயே இந்த மக்களுக்கு மட்டும் மிக மெதுவாக வயதாவது ஏன்? - காணொளி9 ஆகஸ்ட் 2024 இந்தியாவில் எத்தனை சிங்கங்கள் உள்ளன? பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சிங்கங்கள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, நாட்டில் 674 சிங்கங்கள் வாழ்கின்றன. இது 2015ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையைவிட 27% சதவீதம் அதிகம். இருப்பினும், இவற்றில் சுமார் 300க்கும் மேற்பட்ட சிங்கங்கள் கிர் காட்டுக்கு வெளியேதான் வாழ்கின்றன. குஜராத்தில் சிங்கங்கள் 2015ஆம் ஆண்டில் சுமார் 22,000 சதுர கி.மீ பரப்பளவில் பரவி வாழ்ந்தன. அந்தப் பரப்பளவு 2020இல் அவை 30,000 சதுர கிலோமீட்டராக அதிகரித்துள்ளது. இவற்றில், 51.04% சிங்கங்கள் காடுகளுக்கு உள்ளேயும், 47.96% சிங்கங்கள் காட்டுப் பகுதிகளுக்கு வெளியேயும் பதிவு செய்யப்பட்டதாக சிங்கங்கள் கணக்கெடுப்பு தொடர்பான குஜராத் மாநில அரசின் அறிக்கை தெரிவிக்கிறது. அதிலும், காடுகளுக்கு வெளியேயுள்ள பகுதிகளில், 13.27% விவசாய நிலப் பகுதிகளிலும் 2.04% மனித குடியிருப்புப் பகுதிகளிலும், 0.68% குவாரி, தொழிற்சாலை பகுதிகளிலும் காணப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜப்பான், இத்தாலி போல இந்தியாவில் நிலச்சரிவுகளை முன்கூட்டியே கணிப்பதில் என்ன சிக்கல்?4 ஆகஸ்ட் 2024 சிங்கம் இந்தியாவில் சந்திக்கும் பிரச்னைகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவில் சிங்கங்கள் சந்திக்கும் இரண்டு முக்கியப் பிரச்னைகளாக வாழிடக் குறைபாடு மற்றும் தொற்றுநோய்ப் பரவலைக் குறிப்பிடுகிறார் முனைவர்.ரவி செல்லம். கடந்த ஐந்து ஆண்டுகளில் 555 சிங்கங்கள் இறந்துள்ளதாக மக்களவையில் கடந்த பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் மத்திய அரசு கூறியது. கடந்த 2019 ஆண்டில் 113 சிங்கங்களும், 2020, 2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் முறையே, 124, 105, 110, 103 சிங்கங்களும் உயிரிழந்ததாக மத்திய சுற்றுச்சூழல், காடு, காநிலை மாற்ற அமைச்சகத்தின் அப்போதைய இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே கூறினார். இவற்றில் பாதியளவு சிங்கங்கள் கெனைன் டிஸ்டம்பர், பேபியோசிஸ் போன்ற தொற்றுநோய் பாதிப்புகளால் உயிரிழந்ததாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இதுபோக, மனித – காட்டுயிர் எதிர்கொள்ளல் காரணமாகவும் சிங்கங்கள் பாதிக்கப்படுகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு புகைப்படம் அதற்கான சான்றாக இருக்கிறது. பட மூலாதாரம்,SOCIAL MEDIA படக்குறிப்பு,சௌராஷ்டிரா பகுதியிலுள்ள மஹுவா என்ற நகரத்தில் இருந்த ஓர் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வெளியே வேலியைத் தாண்ட முயலும் சிங்கங்கள். குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியிலுள்ள மஹுவா என்ற நகரத்தில் இருந்த ஓர் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வெளியே மூன்று சிங்கங்கள் இருப்பதை அந்தப் புகைப்படம் காட்டுகிறது. அவை, அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் வேலியைத் தாண்ட முயன்று கொண்டிருப்பதை அந்தப் புகைப்படத்தின் மூலம் அறிய முடிகிறது. இப்படியாக வாழ்விடப் பற்றாக்குறை, தொற்றுநோய் அபாயம், மனித-காட்டுயிர் எதிர்கொள்ளல் போன்ற பிரச்னைகள் சிங்கங்களின் இருப்புக்குத் தொடர்ந்து சவாலாக இருந்து வருவதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இதற்குத் தீர்வாக கிர் காட்டில் வாழும் சிங்கங்களில் ஒரு பகுதியை மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவிற்கு இடம் மாற்ற வேண்டுமெனக் கடந்த 2013ஆம் ஆண்டிலேயே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அது இன்னும் மேற்கொள்ளப்படாதது சிங்கங்கள் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிப்பதில் தடையாக இருப்பதாக வல்லுநர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். https://www.bbc.com/tamil/articles/czxlrpn7z01o
  14. 10 AUG, 2024 | 09:20 AM சென்னை: தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழக மீனவர்கள் கைது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: வங்கக்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 32 பேர்,4 நாட்டுப் படகுகளை இலங்கைகடற்படையினர் சிறைபிடித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து அராஜக முறையில் சிறைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கு நிரந்த தீர்வு காண மத்திய அரசு போதிய முயற்சிகள் எடுக்கவில்லை. தமிழக மீனவர்களும் இந்தியர்கள் தான் என்பதை மனதில்கொண்டு, இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் பிரச்சினைக்கு மத்திய அரசு நிரந்த தீர்வு காண வேண்டும். பாமக தலைவர் அன்புமணி: ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்து வங்கக்கடலுக்கு செல்லும் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது நடப்பாண்டில் அதிகரித்துள்ளது. தொடர் அத்துமீறலில் ஈடுபட்டு வரும் இலங்கை கடற்படைக்கு இந்தியா கடுமையான பாடம் புகட்ட வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் மாநிலசெயலாளர் இரா.முத்தரசன்: தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 32 பேரை மறுபடியும் இலங்கைக் கடற்படை கைதுசெய்திருக்கிறது. இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில், இந்திய கப்பற்படை, கடலோர காவல் படை ஆகியவையும் இருக்கின்றன. ஆனால் அவை ஏன் இந்திய மீனவர்களை பாதுகாக்க தவறுகின்றன? இந்தப் பிரச்சினைக்கு மத்திய அரசு நிரந்த தீர்வு காண வேண்டும். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: தமிழகத்தில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க செல்வது பின்பு இலங்கை கடற்படையினரால் கைது செய்வது என்பது வாடிக்கையாகிவிட்டது. எல்லையை தாண்டுவது என்பது மீனவர்களால் திட்டமிட்டு நடப்பதல்ல. எனவே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிக்க மத்திய அரசுக்கு, தமிழக முதல்வர் கடிதம் எழுத வேண்டும். தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தது கண்டிக்கத்தக்கது. இலங்கை கடற்படையினர் கைது நடவடிக்கையை நிறுத்த மத்திய அரசு, இலங்கையுடன் உடனடிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 30-க்கும் மேற்பட்டோரை இலங்கை கடற்படை கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தொடர்கதையாகி வரும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நிரந்தர தீர்வை மத்திய அரசு காண வேண்டும். https://www.virakesari.lk/article/190714
  15. பட மூலாதாரம்,POOVALUGIN NANBARGAL கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தென் அமெரிக்க சிப்பி இனத்தால், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமே பறிபோவதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கப்பல்களில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரால் இந்த உயிரினம் பரவியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. என்ன நடக்கிறது? சென்னை மாவட்டம், எண்ணூரில் முகத்துவாரக் குப்பம், தாழங்குப்பம், எண்ணூர் குப்பம், சிவன்படை குப்பம், சின்ன குப்பம், பெரிய குப்பம் உள்ளிட்ட 8 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் பத்தாயிரம் மீனவர்கள் வசிக்கின்றனர். இங்குள்ள சுற்று வட்டாரப் பகுதி மக்களுக்கு கொசஸ்தலை ஆறு மிக முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. "கடந்த 2021ஆம் ஆண்டில் கொசஸ்தலை ஆற்றின் ஓரத்தில் கட்டடக் கழிவுகளைக் கொண்டு வந்து குவித்தனர். அப்போது, காக்கா ஆழிகள் என்படும் இந்தச் சிப்பி இனங்கள் தென்பட்டன. தண்ணீரில் இறங்கி வலை கட்டும்போது, இவை காலில் தட்டுப்பட்டது. இதை பச்சாழி ரகத்தைச் சேர்ந்த சிப்பி இனம் என்று நினைத்தோம். கேரளாவில் தோடு என்பார்கள். தொடக்கத்தில் சிறிய அளவில் தென்பட்டபோது, இதன் அபாயம் தெரியவில்லை. இப்போது சமநிலைப் பகுதி முழுவதும் பரவிவிட்டது" என்கிறார், காட்டுப்பாக்கம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் சூலூரான். இவர், காக்கா ஆழிகளை அப்புறப்படுத்துவது தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை கடல் பகுதியில் காக்கா ஆழிகள் பரவியது எப்படி? "பத்து ஆண்டுகளுக்கு முன்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த காக்கா ஆழிகள், 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு தீவிரமாகப் பரவிவிட்டது. எண்ணூர் ஆற்றில் இறால்கள் அதிகமாக வளர்கின்றன. ஆற்றின் சேற்றுப் பகுதிகளில் புதைந்து வளரும் இறால்களின் அழிவுக்கு, இந்தச் சிப்பி இனம் காரணமாக உள்ளது. இது கருப்பாக இருப்பதால் 'காக்கா ஆழி' என்கின்றனர். ஆங்கிலத்தில் Mytella strigata என்கின்றனர். இவை தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை. கப்பல் போக்குவரத்தின் மூலம் மட்டுமே இவை வந்திருக்க முடியும்,” என்கிறார் எண்ணூர் கழிமுகப் பாதுகாப்பு பிரசாரத் தன்னார்வலர் துர்கா. இவை கம்பளம் போலப் படர்ந்து, ஆற்று நீரின் அளவையும் தாண்டி வளர்வதாகவும், சில இடங்களில் படகுகளை நகர்த்தவே முடிவதில்லை எனவும் அவர் கூறுகிறார். “எண்ணூர் மீனவர்களின் மீன்பிடித் தளங்கள், காக்கா ஆழிகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இவை பழவேற்காடு ஏரி வரையிலான 16 கி.மீ அளவுக்குப் பரவிவிட்டது." “மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் இருந்து எண்ணூர் துறைமுகத்துக்கு வரும் கப்பல்களில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் வாயிலாக இந்தச் சிப்பி இனம் பரவியிருக்கலாம்” என்றொரு காரணத்தையும் துர்கா முன்வைக்கிறார். இந்த காக்கா ஆழிகள், ஆற்றின் மணல் மற்றும் சேற்றில் மேல்பகுதியில் தென்பட்டாலும் ஆற்றில் 3 அடி ஆழம் வரையில் காணப்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இவற்றால் இறால், நத்தை மற்றும் சில மீன் இனங்கள் அழிந்து வருவதாகவும் மீனவர் குமரேசன் சூலூரான் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவில் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் என்ன? எதிர்ப்பு எழுவது ஏன்?8 ஆகஸ்ட் 2024 அச்சத்தில் இருக்கும் மீனவர்கள் பட மூலாதாரம்,POOVALUGIN NANBARGAL இவை பரவும் வேகத்தைக் கண்டு அச்சமடைந்த மீனவர்கள், கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசின் தமிழ்நாடு ஈரநிலம் இயக்கத்தில் புகார் மனு கொடுத்தனர். இதன் அடிப்படையில் மீன்வளத்துறை அதிகாரிகளும் ஆய்வு நடத்தினர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மீன்வளத்துறை ஆணையரிடம் கடந்த ஆண்டு புகார் மனு கொடுத்துள்ளனர். இதற்கிடையில், ‘காக்கா ஆழிகளைச் சேகரித்து மீன் உரம் தயாரிக்கலாம் அல்லது ஆழிகளின் சிப்பிகளை சுண்ணாம்பு தயாரிக்கும் ஆலைகளுக்கு வழங்கலாமா?’ என்பது குறித்து ஆராயவும் மீன்வளத்துறை இணை இயக்குநர், மீன்வளத்துறை ஆணையருக்குக் கடந்த ஆண்டு மார்ச் 17ஆம் தேதி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். படக்குறிப்பு,குமரேசன் சூலூரான், மீனவர் படகுகளை முடக்கிய சிப்பிகள் "ஆனால், அதன் பிறகும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை" எனக் குறிப்பிடும் குமரேசன் சூலூரான், "அரசுத் துறையின் ஒத்துழைப்பு கிடைக்காததால், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மீனவர்களே 2 நாள்களாகக் களமிறங்கி காக்கா ஆழிகளைக் கைகளால் அள்ளியெடுத்து அழித்தனர். அதன் பிறகும் இவை பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாததால் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தேன்" என்கிறார். "கழிமுகப் பகுதியில் ஒரு நாளில் 6 மணிநேரம் கடல் நீர் கொசஸ்தலை ஆற்றுக்கும் அடுத்த 6 மணிநேரம் ஆற்று நீர் கடலுக்கும் செல்வது இயல்பானது. பௌர்ணமி, அமாவாசை நாட்களில் அதிகப்படியான தண்ணீர் பாயும். இந்தக் காலங்களில் கப்பல் வாயிலாகப் பரவும் காக்கா ஆழிகளின் குட்டிகள், ஆறுகளில் கலந்துவிடுகின்றன. தற்போது சுமார் 4 இடங்களில் படகுகளையே நகர்த்த முடியாத அளவுக்கு இவை பல்கிப் பெருகிவிட்டன” என்கிறார் குமரேசன். குமரேசன் தொடர்ந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், “காக்கா ஆழிகளை அழிப்பதற்கான செயல்திட்டத்தை தமிழக அரசின் நீர்வள ஆதாரத்துறை உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும்” என கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி உத்தரவிட்டது. இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறையின் ஆரணியாறு செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணா, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், “வெளிநாட்டு உயிரினமான இந்த சிப்பிகள், பழவேற்காடு ஏரி வரை பரவியுள்ளன. கொசஸ்தலை ஆறு, உப்பங்கழி, பக்கிங்ஹாம் கால்வாய், பழவேற்காடு முகத்துவாரம் வரையில் தூர்வாருவதன் மூலம் காக்கா ஆழிகளை அழிக்க முடியும்” எனத் தெரிவித்திருந்தார். மேலும், இதை அழிப்பதற்குத் தேவைப்படும் தொகையில், எண்ணூர் காமராஜர் துறைமுகம் தனது பங்களிப்பைச் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்திய காகங்களை கொடிய பறவையாக கருதும் கென்யா - 10 லட்சம் காகங்களை கொல்லும் முடிவு ஏன்?7 ஆகஸ்ட் 2024 காக்கா ஆழிகள் பரவ அமெரிக்க கப்பல்கள் காரணமா? பட மூலாதாரம்,POOVALUGIN NANBARGAL இதுகுறித்து, தமிழக அரசின் நீர்வள ஆதாரத்துறையின் செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணா பிபிசி தமிழிடம் பேசியபோது, “மத்திய மற்றும் தென் அமெரிக்க கப்பல்களில் இருந்து வெளியேறும் உபரி நீரில் இருந்து இவை பரவியிருக்கலாம் என்பதை நிபுணர் குழுதான் ஆய்வு செய்து தெரிவிக்க வேண்டும். இவ்வாறு நடந்திருக்கலாம் என்ற யூகம் மட்டுமே முன்வைக்கப்படுகிறது” என்கிறார். “துறைமுகங்கள் மூலமாக காக்கா ஆழிகள் பரவியிருக்க வாய்ப்புள்ளதா?” என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், “தமிழ்நாட்டில் எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளி அதானி துறைமுகம், தூத்துக்குடி வ.ஊ.சி துறைமுகம் ஆகியவை உள்ளன. கப்பலில் ஏற்றுமதிக்காக சரக்குகளை ஏற்றும்போது கன்டெய்னர்களில் உள்ள பொருள்களின் எடை காரணமாக, கப்பல் நிலையாக இருக்காது. அதன் நிலைப்புத் தன்மைக்காக உபரி நீரை உள்ளே எடுத்துக் கொள்வார்கள். அந்த நீரை, இன்னொரு இடத்தில் சரக்குகளை இறக்கும்போது வெளியேற்றுவார்கள். காமராஜர் துறைமுகத்தின் முக்கிய வேலையே ஏற்றுமதிதான். அங்கு உபரி நீரை வெளியேற்ற வாய்ப்புகள் இல்லை. அதுவே காட்டுப்பள்ளி துறைமுகத்தில் சரக்குகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. எனவே, காக்கா ஆழிகள் எவ்வாறு பரவின என்பதை நிபுணர் குழு ஆராய வேண்டும்” என்றார். படக்குறிப்பு,முனைவர்.நவீன் நம்பூதிரி, கடல்வாழ் உயிரின ஆய்வாளர் “கப்பல்கள் குறிப்பிட்ட தூரத்திற்கு முன்பாகவே, உபரி நீரை வெளியேற்ற வேண்டும் என்பதற்கான கட்டுப்பாடுகள் சமீபத்தில் விதிக்கப்பட்டுள்ளன.” இதற்கான வழிகாட்டுதல்களை கோவாவில் உள்ள தேசிய கடல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளதாகக் கூறுகிறார், ‘காக்கா ஆழிகள்’ குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் கடல்வாழ் உயிரின ஆய்வாளர் முனைவர்.நவீன் நம்பூதிரி. பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கப்பலின் அடிப்பகுதியில் உன்னி போல அவை ஒட்டிப் பரவியிருக்கலாம். வெவ்வேறு விதமான காலநிலைகளில் பயணித்து இந்தியா வந்து முட்டைகளைப் போட்டிருக்கலாம். காக்கா ஆழிகள் எப்படிப் பரவுகிறது என்பது குறித்த ஆராய்ச்சிகள் பெரிய அளவில் நடக்கவில்லை. அவை நீரை அரித்து உள்ளே உள்ள வண்டலைச் சாப்பிடும்போது நீர் சுத்தமாகிவிடும். இதனால், இதர உயிரினங்களுக்கான உணவுகள் கிடைப்பதில்லை. இப்படியாக சூழலியல் சமநிலையை காக்கா ஆழிகள் குலைக்கின்றன” என்கிறார் நவீன் நம்பூதிரி. பசுமைத் தீர்ப்பாயத்தின் எச்சரிக்கை இந்நிலையில், கடந்த வியாழன் அன்று (ஆகஸ்ட் 😎 இந்த வழக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, “காக்கா ஆழி பாதிப்பில் இருந்து மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க சிறிய ஓடைகளையும் உப்பங்கழி ஏரிகளையும் பாதுகாப்பது அவசியம். காக்கா ஆழிகளால் இறால், நண்டு, மீன் இனங்கள் வாழவே முடியாத நிலை ஏற்படுகிறது.” உலகிலேயே இந்த மக்களுக்கு மட்டும் மிக மெதுவாக வயதாவது ஏன்? - காணொளி9 ஆகஸ்ட் 2024 இந்த தவளை மட்டும் தலைகீழாக நின்று முட்டையிடுவது ஏன் தெரியுமா?31 ஜூலை 2024 பட மூலாதாரம்,POOVALUGIN NANBARGAL “இதை அழிக்கும் வகையில் தமிழ்நாடு சதுப்பு நில ஆணையத்துடன் இணைந்து 8.50 கோடி செலவில் திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டு வருவதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார். அதைத்தொடர்ந்து நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, “காக்கா ஆழிகள் பரவுவதை முதலில் கட்டுப்படுத்த வேண்டும். இதனால் ஏற்படும் தாமதம், பெரும் இழப்பை ஏற்படுத்தும். இதற்குத் தீர்வை ஏற்படுத்திவிட்டு, தவறு செய்தவர்களிடம் செலவுத் தொகையை வசூலிக்கலாம்.” “எனவே, தமிழக அரசு முதலில் இப்பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். அதற்குப் பிறகு தவறு செய்தவர்களிடம் இருந்து செலவுத் தொகையை வசூலிக்கலாம்” எனக் குறிப்பிட்டார். அதோடு, “தமிழக சுற்றுச்சூழல், மீன்வளத்துறை, நீர்வளம் ஆகிய துறைகளின் செயலர்கள், சதுப்பு நில ஆணைய உறுப்பினர் செயலர், துறைமுகங்களின் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி காக்கா ஆழிகளை அழிப்பது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலருடன் கூடி முடிவெடுக்க வேண்டும்” எனவும் உத்தரவிட்டார். இதுகுறித்து, தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் போக்கும் வகையில் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். காக்கா ஆழிகளை அழிப்பது தொடர்பாக, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அடுத்த விசாரணை வரும் 27ஆம் தேதி நடக்கவுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cvgd0qwxdplo
  16. Published By: VISHNU 09 AUG, 2024 | 11:43 PM திருகோணமலை – திரியாய் பகுதியில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டு 39ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (09) திரியாய் வரத விக்னேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூசை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்துடன் படுகொலை செய்யப்பட்ட மக்களின் ஆத்ம சாந்தி வேண்டி பிரார்த்தனை நிகழ்வுகளும் இடம்பெற்றன. 1985ஆம் ஆண்டு ஆவணி மாதம் 10 ஆம் திகதி திரியாய் அகதி முகாமில் தஞ்சமடைந்திருந்த அப்பாவி பொதுமக்கள் 12 பேரை மக்களின் போக்குவரத்திற்காக ஈடுபட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தில் ஏற்றிச் சென்று கஜுவத்த என்னும் இடத்தில் வைத்து அவர்கள் அணிந்திருந்த மேற்சட்டையை கழட்டி அவர்களது கைகளை கட்டி ஓடவிட்டு சுட்டு படுகொலை செய்திருந்தார்கள் எனவும், 1985 ஆம் ஆண்டு இன அழிப்பு வன்முறை உச்ச கட்டம் அடைந்திருந்த நிலையில் ஆடி மாதம் 5ஆம் திகதி திரியாய் கிராமத்திற்குள் புகுந்த ஆயுததாரிகளும், சிவில் உடை தரித்த காடையர்களும் திரியாய் கிராமத்தில் உள்ள வீடுகள் அனைத்தையும் தீக்கிரையாக்கியதுடன் சொத்துக்களையும் தீக்கிரையாக்கி அழித்தார்கள். இந்நிலையில் திரியாய் கிராம மக்கள் பலர் கிராமத்தை விட்டு வெளியேறியதுடன் ஏனையோர் திரியாய் தமிழ் மகா வித்தியாலயத்தில்; அகதிகளாக தஞ்சம் அடைந்திருந்தார்கள். இவர்கள் மீதே இவ் வன்முறை சம்பவம் இடம்பெற்றிருந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர். https://www.virakesari.lk/article/190708
  17. பிரேசிலில் 62 பேருடன் பயணித்த விமானம் சாவோ பாலோ மாநிலத்தில் விழுந்து நொறுங்கியது Published By: VISHNU 10 AUG, 2024 | 12:43 AM பிரேசிலின் சாவ் பாலோ மாநிலத்தில் 62 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. நடுவானில் சென்று கொண்டிருந்த விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து வெடித்து சிதறியுள்ளது. பிரேசிலின் சாவ் பாலோ மாநிலத்தில் வியோபாஸ் விமானமான 2283 என்ற விமானம் 62 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. வின்ஹெடோ நகரில் சென்று கொண்டிருந்த போது விமானம் நிலை தடுமாறு கீழே விழுந்து வெடித்ததை உள்ளூர் தீயணைப்புப் படை உறுதிசெய்துள்ளனர். தீப்பிளம்பாக அந்த இடமே மாறி உள்ளது. யாருடன் உயிருடன் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. ஏனெனில் விமானம் வந்து விழுந்த வேகத்தில் வெடித்து சிதறியது. அதில் ஏற்பட்ட தீப்பிளம்பு காண்போரை கண்ணீரில் ஆழ்த்தி உள்ளது. 58 பயணிகள் மற்றும் விமானிகள் உள்பட 4 பணியாளர்களுடன் சாவ் பாலோவின் சர்வதேச விமான நிலையமான குருல்ஹாஸ் (Guarulhos) நோக்கிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை, விபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்பு படை வீரர்கள் விரைந்துள்ளனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறித்த விபத்தை அறிந்த பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். தெற்கு பிரேசிலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம் விபத்து குறித்து தகவல் தெரிவித்த நிலையில், அங்கிருந்தவர்களிடம் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு கோரிக்கை வைத்தார். இந்த விபத்து குறித்து விசாரணையும் நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/190709
  18. Russia-Ukraine War: What's behind Ukraine's surprise incursion into Russia's Kursk? | WION Fineprint
  19. படக்குறிப்பு,மாற்றுத்திறனாளி சங்க நிர்வாகிகளிடம் காவல்துறையினர் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பெண் மாற்றுத்திறனாளி ஒருவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் நுழையும்போது பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்கள் செயற்கை காலை கழற்றிவிட்டு வரும்படி கூறியதாகவும் கோயிலுக்குள் சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்ல 500 ரூபாய் லஞ்சமாக தரவேண்டும் என்று ஊழியர் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பெண் ஒருவர் காணொளியை பகிருந்திருந்தார். இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தைச் சேர்ந்த பலர், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முன்பாக போராட்டம் நடத்தியிருந்தனர். இந்த விவகாரத்தில் காவல்துறை சார்பாக விளக்கம் அளிக்கும் வகையில் ஒரு காணொளி ஒன்றும் வெளியிடப்பட்டது. மேலும் லஞ்சம் கேட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோயில் சார்பாக இணை ஆணையர் விளக்க அளித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு என்ன நடந்தது? அவர் வெளியிட்ட காணொளியில் முன்வைத்த குற்றச்சாட்டுகளின் பின்னணி என்ன? என்ன நடந்தது? தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்செல்வி என்பவர் இடது கால் முழுமையாக செயல்படாததால் செயற்கை கால் உதவியுடன் நடக்கக்கூடிய மாற்றுத்திறனாளி அவார். இவர் கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி காலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் மேற்கு கோபுரம் வழியாக சுவாமி தரிசனம் செய்வதற்காகச் சென்று இருக்கிறார். செயற்கைகாலுடன் கோயிலுக்குள் செல்ல தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், தன்னை சக்கர நாற்காலியில் அமர வைத்து தள்ளிச் செல்ல கோயில் ஊழியர்கள் லஞ்சம் கேட்டதாகவும், பணியிலிருந்த அர்ச்சகர்கள் அவமரியாதையாக நடந்து கொண்டதாக கூறி இவர் ஒரு வீடியோ ஒன்றை சமூக ஊடகங்களில் பதிவிட்டு இருந்தார். மாற்றுத்திறனாளியான தன்னை கோயில் நிர்வாகம் மோசமாக நடத்தியதாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து தமிழ்செல்வி வெளியிட்ட காணொளி பரவலாகப் பகிரப்பட்டது. ஆகஸ்ட் 6-ஆம் தேதி என்ன நடந்தது என்று அவர் வெளியிட்ட வீடியோவில் விளக்கமாகக் கூறியிருந்தார். கோயிலுக்குள் சென்ற பொழுது நுழைவு வாயிலி பகுதியில் பாதுகாப்புப் பணியிலிருந்த மூன்று காவலர்கள் செயற்கை கால் உபகரணத்தை கழற்றி விட்டு தான் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்று தன்னிடம் கூறியதாக தமிழ்செல்வி அந்த வீடியோவில் கூறினார். செயற்கை கால் உதவி இல்லாமல் கோயிலுக்குள் சக்கர நாற்காலியில் அழைத்துச் சென்று வர அங்கிருந்த கோயில் ஊழியர்கள் 500 ரூபாய் பணம் கேட்டதாகவும், இதை எதிர்த்த போது அர்ச்சகர்கள் தன்னிடம் மோசமாக நடந்து கொண்டதாகவும் அந்த வீடியோவில் அவர் பேசியிருந்தார். காவல்துறை விளக்கம் படக்குறிப்பு,சக்கர நாற்காலியை தள்ளிச்செல்ல 500 ரூபாய் லஞ்சம் கேட்டதாக மதுரை மீனாட்சியம்மன் கோவில் பணியாளர்கள் மீது குற்றம் சுமத்தி தமிழ்செல்வி(படத்தில் இருப்பவர்) வீடியோ ஒன்றை வெளியிட்டார் இந்தக் காணொளி தொடர்பாக மதுரை மாநகரக் காவல் துறையிடமிருந்து ஆகஸ்ட் 7-ஆம் தேதி 'உண்மை விளக்கம்' என்ற பெயரில் அறிக்கை ஒன்று வெளியிட்டது. அதில், "தருமபுரியைச் சேர்ந்த தமிழ்செல்வி என்ற மாற்றுத்திறனாளி மீனாட்சி அம்மன் கோயிலுக்கு காலை 9:30 மணிக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தார். மீனாட்சி அம்மன் கோயில் மேற்கு கோபுர வாசலில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அவரது கைப்பையை சோதனையிட்ட போது அதில் சிறிய அளவிலான கத்தி ஒன்று இருந்தது. அதை வெளியில் வைத்து விட்டு கோயிலுக்குள் செல்ல அவரிடம் கூறப்பட்டது," என்று காவல்துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. செயற்கைக்காலைக் கழற்றச் சொன்னது தொடர்பாக விளக்கமளித்துள்ள காவல்துறை, “தமிழ்செல்வி அணிந்திருந்த செயற்கைகாலுடன் காலணியும் இருந்தது. அதனால் அதைக் கழற்றிவிட்டுக் கோயிலுக்குச் சக்கர நாற்காலியில் செல்லவே காவலர்கள் கூறினர். அவரும் கோயிலுக்குச் சக்கர நாற்காலி பயன்படுத்தி சென்று வந்தார். ஆனால், காவல்துறையினரும், கோயில் பணியாளர்களும் சுவாமி தரிசனம் செய்ய விடாமல் தடுத்ததாக காணொளியில் உண்மைக்கு புறம்பான தகவலை பதிவு செய்து பதிவிட்டு உள்ளார்,” என்று தெரிவித்துள்ளது. காவல்துறை அளித்த விளக்கம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்செல்வி, காலணியுடன் சேர்த்து செயற்கைக்காலை முழுமையாகக் கழற்றச் சொல்லிக் காவலர்கள் தன்னிடம் வற்புறுத்தியதாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “செயற்கைக்கால் உபகரணத்தைக் கழற்றினால் என்னால் நடக்க முடியாது என்று கூறியபோது காவலர்கள் வற்புறுத்திக் கழற்றினர். அதைத் தொடர்ந்து சக்கர நாற்காலியில் அமர்ந்து கோவிலுக்குள் அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அழைத்து செல்ல அங்கிருந்த ஊழியர் 500 ரூபாய் லஞ்சம் கேட்டார். அதை தரமறுத்த போது பாதியிலேயே என்னை விட்டுச் சென்றார்,” என்கிறார் தமிழ்செல்வி. மேலும் கத்தி வைத்திருந்தது தொடர்பாக, “எனக்கு நீரிழிவு பிரச்சனை இருப்பதால் கைப்பையில் இரண்டு பழங்களும் ஒரு பழம் வெட்டும் கத்தியும் வைத்திருந்தேன். அதனை வைக்க வேண்டும் என கூறியவுடன் பாதுகாப்பு அறையில் வைத்துவிட்டு உள்ளே சென்றேன்,” என்றார். ஏடிஹெச்டி குறைபாடு என்றால் என்ன? அதை குணப்படுத்த முடியுமா? மருத்துவர்கள் விளக்கம்29 மே 2024 படக்குறிப்பு,செயற்கைக்காலை கழற்றி விட்டு மாற்றுத்திறனாளியை கோயிலுக்குள் வரச்சொன்னத்தால் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் மீனாட்சி அம்மன் கோயில் முன்பு போராட்டம் நடத்தினர் மாற்றுத்திறனாளிகள் போராட்டம் இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கை தவறானது என்றும், மாற்றுத்திறனாளிகளுக்கு கோயிலுக்குள் எளிதாக சென்று வர உரிய ஏற்பாடு வழங்கப்பட வேண்டும் என கூறி கோயிலில் நுழையும் போராட்டத்தை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்புப்போர் உரிமைகள் சங்கம் அறிவித்தது. மீனாட்சி அம்மன் கோயிலின் கிழக்கு கோபுரம் அம்மன் சன்னதி முன்பாக ஆகஸ்ட் 8-ஆம் தேதி 30-க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களுடன் காவல்துறையினர் மற்றும் கோயில் இணை ஆணையர் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பிறகு போலீசார் மற்றும் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்த பின்னர் செயற்கைக் கால் உபகரணத்துடன் கோயிலுக்குள் சென்று அந்த மாற்றுத்திறனாளிகள் தரிசனம் செய்தனர். இது குறித்து பிபிசி தமிழிடம் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாலமுருகன், மாற்றுத்திறனாளிகள் கோயிலுக்குள் செல்லும் பொழுது இது போன்ற சில நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. அனைத்து கோயில்களிலும் மாற்றுத்திறனாளிகள் உள்ளே சென்று வர உரிய வசதிகள் செய்து தரவேண்டும் என்றார். படக்குறிப்பு,”தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் மாற்றுத்திறனாளிகள் சென்று வரும் வகையில் அனைத்து வசதியும் செய்துதர வேண்டும்” - மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மதுரை மாவட்ட தலைவர் பாலமுருகன் 3 காவலர்கள் பணியிட மாற்றம் மாற்றுத்திறனாளிகள் விவகாரம் என்ன நடந்தது என்று பிபிசி தமிழிடம் பேசிய மதுரை மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன், மாற்றுத்திறனாளியின் செயற்கைக்கால் நீக்க வலியுறுத்திய சம்பவத்தில் சார்பு ஆய்வாளர் ஒருவர் உள்பட மூன்று காவலர்கள் வேறு இடத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இது போல நடக்காமல் இருக்க பணியிலிருக்கும் காவலர்களுக்கு ஆலோசனைகள் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். பிபிசியிடம் பேசிய மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் இணை ஆணையர் கிருஷ்ணன், மாற்றுத்திறனாளிகள் வசதியாக சென்று வர அனைத்து ஏற்பாடுகளும் கோயிலில் உள்ளதாகவும், இது அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டும் என்று தெரிவித்தார். "மீனாட்சியம்மன் கோயிலில் மாற்றுத்திறனாளிகளின் உபகரணங்களைக் கழற்றி விட்டு வரச் சொல்வது இல்லை. மாற்றுத்திறனாளி உபகரணத்துடன் காலணிகள் இருந்தால் மட்டும் அவற்றை கழற்றிவிட்டு வரும்படி கூறுகின்றனர்,” என்கிறார். சக்கர நாற்காலியை தள்ள ஊழியர் லஞ்சம் கேட்டது தொடர்பாகவும், அர்ச்சகர்கள் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cwy79w2jww7o
  20. 09 AUG, 2024 | 04:20 PM (இராஜதுரை ஹஷான்) பொருளாதார பாதிப்புக்கு ராஜபக்ஷர்கள் பொறுப்புக் கூற வேண்டும் என உயர்நீதிமன்றம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. ஆகவே மீண்டும் மக்களாணை கோருவதற்கு ராஜபக்ஷர்களுக்கு தார்மீக உரிமை கிடையாது. ரமேஷ் பத்திரன, காஞ்சன, செஹான், தென்னகோன் ஆகியோர் ராஜபக்ஷர்களை விட்டு விலகியது சிறந்தது மகிழ்ச்சியடைகிறேன் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் உள்ள ஐக்கிய குடியரசு முன்னணியின் காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஷர்கள் பொறுப்புக்கு கூற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆகவே மீண்டும் மக்களாணை கோருவதற்கு ராஜபக்ஷர்களுக்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது. ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ உட்பட ராஜபக்ஷர்களின் குடும்ப உறுப்பினர்களின் அரசியலுக்காகவே பொதுஜன பெரமுன என்ற கட்சி உருவாக்கப்பட்டது. அங்கு திறமையானவர்களுக்கு ஒருபோதும் முன்னுரிமை கிடையாது. இளம் பாராளுமன்ற உறுப்பினர்களான ரமேஷ் பத்திரன, காஞ்சன விஜேசேகர, செஹான் சேமசிங்க, பிரமித்த பண்டார தென்னகோன் ஆகியோர் உட்பட சிறந்தவர்கள் ராஜபக்ஷர்களை விட்டு விலகியுள்ளமை வரவேற்கத்தக்கது. 2022 ஆம் ஆண்டு எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சினையின் போது ராஜபக்ஷர்களின் குடும்ப உறுப்பினர் ஒருவர் என்னை சந்தித்து எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு தீர்வுகாண ஒத்துழைப்பு வழங்குமாறு கோரினார். அப்போது வலையில் சிக்கிய புலியை பரிதாபப்பட்டு காப்பாற்றிய குரங்கை அடித்து கொன்று இரையாக்கிய புலியின் கதையை குறிப்பிட்டேன். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இன்று இதே கதிதான் நேர்ந்துள்ளது. தம்மை பாதுகாத்த ஜனாதிபதி மீதே ராஜபக்ஷர்கள் பாய்ந்துள்ளார்கள். தமது தேவை நிறைவடைந்தவுடன் எவராக இருந்தாலும் ராஜபக்ஷர்கள் அவர்களை தூக்கி எறிவார்கள். 2014 ஆம் ஆண்டு நான் அதை ஒரு படிப்பினையாக கற்றுக்கொண்டேன். பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா பல பில்லியன் ரூபாவை செலவு செய்து இந்த படிப்பினையை 2024 ஆம் ஆண்டு கற்றுக் கொண்டுள்ளார். ராஜபக்ஷர்கள் தமது குடும்ப நலனை மாத்திரம் கருத்திற்கொண்டு செயற்படுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/190675
  21. தொடர்ச்சியாக 5 முறை தங்கம் வென்ற கியூபா வீரர்; வரலாற்று சாதனையுடன் ஓய்வையும் அறிவித்தார்! ஒலிம்பிக் வரலாற்றில் தொடர்ச்சியாக 5 முறை தங்கம் வென்று கியூபா வீரர் மிஜைன் லோபஸ் உலக சாதனை படைத்துள்ளார். 33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 26 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் ஒலிம்பிக் வரலாற்றில் அதிகப்படியாக 4 தனிநபர் தங்கங்களை வென்றிருந்த அமெரிக்காவின் மைக்கேல் ஃபெல்ப்ஸ் (நீச்சல்), கார்ல் லூயிஸ் (நீளம் தாண்டுதல்), ஆல்ஃபிரட் ஓர்டர் (வட்டு எறிதல்) மற்றும் டென்மார்க்கின் பால் எல்வ்ஸ்ட்ரோம் (படகோட்டம்) முதலிய சொற்ப வீரர்களின் சாதனை பட்டியலில் கியூபாவின் மல்யுத்த வீரர் மிஜைன் லோபஸ் என்ற வீரரும் இணைந்திருக்கிறார். 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு முன்னதாக பேசிய மிஜைன் லோபஸ், “நான் மீண்டும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்தம் செய்ய வருகிறேன். 5 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்ற முதல் மல்யுத்த வீரராக என் விளையாட்டு வாழ்க்கையை முடிக்க விரும்புகிறேன்” என்று கூறியதாக யுனைடெட் வேர்ல்ட் மல்யுத்தம் மேற்கோள் காட்டியது. 2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸில் 130 கிலோ எடைப்பிரிவு கிரேக்க-ரோமன் மல்யுத்ததில் இறுதிப்போட்டிவரை முன்னேறிய கியூபா ஜாம்பவான் மிஜைன் லோபஸ், இறுதிப்போட்டியில் சிலி வீரர் யாஸ்மானி அகோஸ்டாவை 6-0 என தோற்கடித்து தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் 5 முறை தங்கம் வெல்லும் முதல்வீரர் மற்றும் தொடர்ச்சியாக தனிநபர் பிரிவில் 5முறை தங்கம் வெல்லும் முதல் வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்தார். போட்டிக்கு பிறகு தன்னுடைய ஷூவை கழற்றி மேடையில் வைத்த மிஜைன் லோபஸ், தங்கம் வென்ற மேடையிலேயே தன்னுடைய அதிகாரப்பூர்வ ஓய்வை அறிவித்தார். https://thinakkural.lk/article/307572
  22. அமெரிக்க, இலங்கை, மாலைதீவு கூட்டு இராணுவப் பயிற்சி நிறைவு Published By: DIGITAL DESK 3 09 AUG, 2024 | 05:55 PM அமெரிக்க பசிபிக் விமானப்படை இலங்கை விமானப் படை மற்றும் மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படை ஆகியவற்றுடன் இணைந்து நடத்திய 'Atlas Angel' எனும் ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியானது இன்று வெள்ளிக்கிழமை (09) நிறைவடைந்துள்ளது. இது குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் எக்ஸ் தளத்தில், மொன்டானா தேசிய காவலர் படையும் (Montana National Guard), அமெரிக்க பசிபிக் விமானப்படைகளும், இலங்கை விமானப் படை மற்றும் மாலைதீவு தேசிய பாதுகாப்புப்படை ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்ட 'Atlas Angel' எனும் ஒரு கூட்டு இராணுவப் பயிற்சி நிறைவு இன்று பெற்றுள்ளது. இந்த பயிற்சி நடவடிக்கை இயற்கை அனர்த்தங்கள் மற்றும் மனிதா்களால் உருவாக்கப்படும் பேரழிவுகரமான நிகழ்வுகளை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்கள் மற்றும் அவற்றுக்கான பதிலளிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை தரமுயர்த்தும். இதன் மூலம் ஒன்றாக கூடி பாதுகாப்பான மற்றும் நிலையான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை பேணிப் பாதுகாப்பதில் அமெரிக்கா உறுதியானகொண்டுள்ளது என பதிவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/190694
  23. அமைச்சர்களாக செயற்படும் ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் செல்லுபடியாகும் என உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்து கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளைப் பெற்றமையே அதற்கு காரணம். ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கட்சி உறுப்பினர் பதவியை ரத்து செய்ததை எதிர்த்து ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். https://thinakkural.lk/article/307584
  24. Published By: DIGITAL DESK 7 09 AUG, 2024 | 01:17 PM (எம் ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கு கப்பல் நிறுவனம் முதல் கட்டமாக 10.2 மில்லியன் டொலரை முதற்கட்ட நட்டஈடாக வழங்கியுள்ளது. சட்டமா அதிபரின் அனுமதி இல்லாமல் நியூ டய்மன் கப்பலை இலங்கையின் கடல் எல்லையில் இருந்து வெளியேற்றிய நபர் எதிர்க்கட்சித் தலைவரின் கரங்களை பலப்படுத்த எதிர்க்கட்சியுடன் ஒன்றிணைந்துள்ளமை கவலைக்குரியது என நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (09) இடம்பெற்ற அமர்வின் போது இருபத்தேழு இரண்டின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளாகி மூழ்கிய எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் மற்றும் ஏற்பட்ட இழப்புக்களுக்கு நட்டஈடு பெற்றுக்கொள்வதற்காக சட்டமா அதிபர் ஊடாக சிங்கப்பூர் நாட்டில் சர்வதேச வணிக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த கப்பல் நிறுவனத்தின் உரிமையாளர் பதில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.இலங்கை சார்பில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 06 ஆம் திகதி பதில் வாக்குமூலம் வழங்குவதாக சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.அதற்கான நடவடிக்கைகளை குறித்த ஆலோசனை நிறுவனமும்,சட்டமா அதிபர் திணைக்களமும் முன்னெடுத்துள்ளது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள சிங்கப்பூர் நாட்டில் சர்வதேச வணிக நீதிமன்றில் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது. டென்டன் ரொடிக்ஸ் மற்றும் டோவிக்ஸன் ஆகிய நிறுவனங்கள் இவ்விடயத்தில் இலங்கைக்கு சட்ட ஆலோசனை ஒத்துழைப்புக்களை வழங்குகின்றன. சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மாத்திரம் இவ்விவகாரத்தில் தனித்து செயற்பட முடியாது என்பதால் சர்வதேச மட்டத்தில் சட்ட ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை சபைக்கு சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியிருந்தார். மதிப்பீடு தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்ட துறைசார் நிபுணர் குழுவினர் இடைக்கால மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்கள்.இந்த கப்பல் விபத்து தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் 4 அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆகவே நீதிமன்ற விசாரணைக்கு இந்த இடைக்கால மதிப்பீட்டு அறிக்கை பயன்படுத்தப்படுவதால் அறிக்கையை பகிரங்கப்படுத்துவது சாத்தியமற்றது. இந்த விபத்தினால் இலங்கை கடற்பரப்புக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்காக எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நிறுவனம் 10.2 மில்லியன் டொலரை முதல் கட்ட நட்டஈடாக வழங்கியுள்ளது.கடற்றொழில் வளங்கள் அமைச்சின் ஊடாக இந்த 10.2 மில்லியன் டொலர் செலவழிக்கப்பட்டுள்ளது.இதற்கான ஆவணங்களை பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் விபத்தினால் கரையொதுங்கிய கழிவுகளை அகற்றும் பணிகளை நிறைவு செய்துள்ளதாக கப்பல் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலை போன்று நியூ டய்மன் கப்பல் இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளானது.சட்டமா அதிபரின் அனுமதி இல்லாமல் இந்த கப்பலை இலங்கையின் கடல் எல்லைக்குள் இருந்து வெளியேற்றுவதற்கு எமது அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சு பதவி வகித்தவர் செயற்பட்டார் என்பதை அரசாங்கத்துக்குள் இருந்துக் கொண்டு குறிப்பிட்டோம். நியூ டய்மன் கப்பலால் கடல் வளத்துக்கு ஏற்பட்ட பாதிப்பை முறையாக மதிப்பீடு செய்யாமல் கப்பலை வெளியேற்றியதால் நட்டஈட்டை மதிப்பீடு செய்ய முடியவில்லை.இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் எதிர்க்கட்சித் தலைவரின் கரங்களை பலப்படுத்த அவர்களுடன் ஒன்றிணைந்துள்ளமை கவலைக்குரியது என்றார். https://www.virakesari.lk/article/190646

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.