Everything posted by ஏராளன்
-
கருத்து படங்கள்
அததெரண கருத்துப் படங்கள்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இதனால @ரசோதரன் அண்ணை விரட்டப்படவோ மிரட்டப்படவோ மாட்டார் தானே?!
-
போதைப்பொருள் பற்றிய தகவல்களைத் தெரிவிக்க துரித தொலைபேசி இலக்கம்!
30 Oct, 2025 | 05:06 PM போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டுடன் இணைந்த வகையில் 24 மணித்தியாலமும் செயற்படும் வகையிலான துரித தொலைபேசி இலக்கம் ஒன்றை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு சபையின் வேண்டுகோளுக்கு இணங்க அறிமுகப்படுத்தியுள்ள ‘1818’ துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொதுமக்களுக்கு நாடு பூராகவும் இயங்கும் போதைப்பொருள் வர்த்தகம், விநியோகம் அல்லது அதனுடன் தொடர்புடைய சந்தேகத்திற்கு இடமான செயற்பாடுகள் குறித்து சரியான தகவல்களை வழங்க முடியும். https://www.virakesari.lk/article/229074
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
ஓகோ பையனோட ஜெக்கம்மா இவ தானா?!
-
ஆஸ்திரேலியாவில் பயிற்சியின் போது உயிரிழந்த 17 வயது கிரிக்கெட் வீரர் – என்ன நடந்தது?
பட மூலாதாரம், Supplied படக்குறிப்பு, பயிற்சியின் போது கிரிக்கெட் பந்து தாக்கியதில் 17 வயதான பென் ஆஸ்டின் இறந்தார் கட்டுரை தகவல் லானா லாம் பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மெல்போர்னில் கிரிக்கெட் பயிற்சியின் போது பந்து தாக்கியதில் ஆஸ்திரேலிய சிறார் ஒருவர் உயிரிழந்தார். செவ்வாயன்று கிரிக்கெட் வலை பயிற்சி செய்துகொண்டிருந்த 17 வயதான பென் ஆஸ்டின் கழுத்து பாதுகாப்பு இல்லாமல் ஹெல்மெட் மட்டும் அணிந்திருந்தார். அப்போது, கையடக்க பந்து லாஞ்சரைப் பயன்படுத்தி வீசப்பட்ட பந்து அவரது கழுத்தில் தாக்கியது. தகவல் தெரிவிக்கப்பட்டதும், உள்ளூர் நேரப்படி மாலை 5:00 மணியளவில் அவசரகால பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கிரிக்கெட்டர் பென், வியாழக்கிழமையன்று உயிரிழந்தார். மகனை இழந்த குடும்பம் "முற்றிலும் உடைந்துபோய்விட்டதாக" பென்னின் தந்தை ஜேஸ் ஆஸ்டின் கூறினார். நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் சமூகம் பென் ஆஸ்டினின் மரணத்துக்கு இரங்கல் தெரிவிப்பதாக கிரிக்கெட் விக்டோரியா தெரிவித்துள்ளது. மகனை இழந்து வாடும் தங்களது குடும்பத்தின் இழப்பு குறித்த விவரங்களை தந்தை ஜேஸ் ஆஸ்டின் அறிக்கை ஒன்றின் மூலம் பகிர்ந்து கொண்டார். "டிரேசிக்கும் எனக்கும் அன்பான மகன், கூப்பர் மற்றும் சாக்கிற்கு பிடித்தமான சகோதரர் மற்றும் எங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வாழ்க்கையில் ஒளிரும் விளக்காக இருந்தார் பென்," என்று அவர் கூறினார். "இந்த சோகமான சம்பவம் பென் ஆஸ்டினை எங்களிடமிருந்து பறித்துவிட்டது, அவர் பல கோடை காலங்களில் செய்து வந்தது போலவே, கிரிக்கெட் விளையாடுவதற்காக நண்பர்களுடன் சென்றார். அவர் கிரிக்கெட்டை நேசித்தார், அது அவரது வாழ்க்கையின் மகிழ்ச்சிகளில் ஒன்றாகும்." விபத்து நடந்தபோது வலைகளில் பந்துவீசிக் கொண்டிருந்த பென்னின் சக வீரருக்கு தாங்கள் ஆதரவாக இருப்பதாக ஆஸ்டின் கூறினார். "இந்த விபத்து இரண்டு இளைஞர்களைப் பாதித்துள்ளது, நாங்கள் அவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆதரவாக உள்ளோம்" என்று அவர் கூறினார். விபத்துக்குப் பிறகு உள்ளூர் கிரிக்கெட் சமூகத்தினர் வழங்கிய ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்தார், மேலும் தனது மகனுக்கு உதவிய மீட்புப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் , 2014-ஆம் ஆண்டு பேட்டிங் செய்யும் போது கழுத்தில் பந்து தாக்கியதில் இறந்தார் . கிரிக்கெட் விக்டோரியாவின் தலைமை நிர்வாக அதிகாரி நிக் கம்மின்ஸ், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இது "மிகவும் சவாலான நேரம்" என்றார். "10 ஆண்டுகளுக்கு முன்பு பில் ஹியூஸ் சந்தித்ததைப் போன்ற விபத்து இது. பந்து அவரது கழுத்தில் பட்டது," என் கம்மின்ஸ் கூறியதாக ஏபிசி செய்தி தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் , 2014-ஆம் ஆண்டு பேட்டிங் செய்யும் போது கழுத்தில் பந்து தாக்கியதில் இறந்தார் . அவரது மரணத்துக்கு யாரும் காரணம் அல்ல என்று பிரேத பரிசோதனை அதிகாரி கண்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விளையாட்டு வீரர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களை மேம்படுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. 'திறமையான வீரர், அணியில் பிரபலமானவர்' பென்னைத் தாக்கிய பந்து, பொதுவாகப் பயன்படுத்தப்படும் கையடக்க சாதனம் ஒன்றைப் பயன்படுத்தி வீசப்பட்டது என்பது தெளிவாகிறது. "விக்டோரியாவிலும் - தேசிய அளவிலும் - முழு கிரிக்கெட் சமூகத்துக்கும் இந்த இழப்பு துக்கமளிக்கிறது. எங்களால் எப்போதும் இதை மறக்க முடியாது" என கம்மின்ஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறினார். பென் திறமையான வீரர், அணியில் பிரபலமானவர் மற்றும் கேப்டன் என்றும், மெல்போர்னின் தென்கிழக்கில் 18 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர் என்றும் கம்மின்ஸ் தெரிவித்தார். "இளைஞர் ஒருவரின் வாழ்க்கை இவ்வளவு குறுகிய காலத்தில் முடிவடைந்தது மனவேதனை அளிக்கிறது" என்று கம்மின்ஸ் கூறினார். ஃபெர்ன்ட்ரீ கல்லி கிரிக்கெட் கிளப்பிற்காக பென் விளையாடிக் கொண்டிருந்தார். அந்த கிளப் வெளியிட்ட சமூக ஊடக பதிவில், பலருக்கு மகிழ்ச்சியைத் தந்த அந்த இளைஞருக்கு அஞ்சலி செலுத்தியது. ஹியூஸுக்கு செய்யப்பட்டதைப் போலவே, "put your bats out for Benny" என்ற முன்னெடுப்பை மேற்கொண்டு பென்னிக்கு அஞ்சலி செலுத்த நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களை கிளப் கேட்டுக் கொண்டது. வேவர்லி பார்க் ஹாக்ஸ் ஜூனியர் கால்பந்து கிளப்புக்காக நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டங்களில் விளையாடிய பென் பற்றி கூறிய கால்பந்து கிளப், அவர் "கனிவானவர்", "மரியாதைக்குரியவர்" மற்றும் "அருமையான கால்பந்து வீரர்" என்று கூறியது. "எங்கள் கிளப்பும் சமூகமும் உண்மையிலேயே மிகச் சிறந்த இளைஞர் ஒருவரை இழந்துவிட்டன, சிறப்பான இளைஞராக வளர்ந்து கொண்டிருந்த அவரது இழப்பை எங்கள் கிளப் பல ஆண்டுகளுக்கு மிகவும் ஆழமாக உணரும்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c77zd1ypyp3o
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
ஜெய் ஜெக்கம்மா......
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
RESULT 2nd Semi Final (D/N), DY Patil, October 30, 2025, ICC Women's World Cup Australia Women 338 India Women (48.3/50 ov, T:339) 341/5 IND Women won by 5 wickets (with 9 balls remaining) Player Of The Match Jemimah Rodrigues, IND-W 127* (134)
-
'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' தொனிப்பொருளின் கீழ் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு செயற்றிட்டம்
நானும் எனது அரசாங்கமும் போதைப்பொருளுக்கு எதிராக மோதுவதற்கு தயார் - ஜனாதிபதி 30 Oct, 2025 | 12:51 PM நானும் எனது அரசாங்கமும் போதைப்பொருளுக்கு எதிராக மோதுவதற்கு தயார் என தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சிறைத்தண்டனை விதிக்கப்படுவோரில் 64 வீதமானோர் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்றும் குறிப்பிட்டார். போதைப்பொருளுக்கு எதிரான 'முழு நாடும் ஒன்றாக' தேசிய செயற்பாடு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் கொழும்பில் உள்ள சுகததாஸ உள்ளக அரங்கில் வியாழக்கிழமை (30) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இங்கு உரையாற்றும்போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் உரையாற்றுகையில், போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க ஒரு வலுவான மக்கள் இயக்கம் உருவாக்கப்படும் என்றும், போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் தங்கள் சட்டவிரோத நடைமுறைகளை நிறுத்த அழைப்பு விடுக்கப்படும். அரசாங்கமும் பொலிஸ் திணைக்களமும் தனியாக போதைப்பொருளை தடுக்கும் செயற்பாட்டை முன்னெடுக்க முடியாது. அழிவுகரமான அச்சுறுத்தலை ஒழிப்பதில் அனைவரும் ஒன்றுபட வேண்டும். போதைப்பொருளுக்கு உதவும் பொலிஸார் விலகிக்கொள்ள வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அவர்களை நாங்கள் விலக்குவோம். போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்காக பொலிஸ், இராணுவம், சுங்கம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் மற்றும் புலனாய்வு சேவைகளை உள்ளடக்கிய ஒரு தேசிய செயற்பாட்டு மையம் நிறுவப்படும் என்றார். இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் உறுதிமொழியொன்றையும் எடுத்தனர். குறித்த உறுதிமொழியில், இலங்கையானது நீங்களும் நானும் அன்புகாட்டும் எமது மதிப்பிற்குரிய தாய்த்திரு நாடாகும். விச போதைப்பொருள் அச்சுறுத்தலானது, எமது தேசத்தின் வளமான எதிர்காலத்திற்கு இடையூறு விளைவிக்கும் தேசிய அனர்த்தம் ஒன்றை தற்போது உருவாக்கியுள்ளது. அதிலிருந்து எமது சமூகத்தை முற்றுமுழுதாக விடுவித்தலானது, தற்போது நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாகும். இந்த சவாலை வெற்றிகொள்வது சமூகம் என்ற வகையில், தவிர்க்கமுடியாத ஒரு பொறுப்பாகும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். இந்த விஷ போதைப்பொருள் அச்சுறுத்தலானது எமது சமூகத்தின் பொருளாதார உறுதிப்பாட்டினையும் ஆரோக்கியமான வாழ்க்கையையும் குடும்ப பாசம் மற்றும் பிணைப்பினையும் மகிழ்ச்சி மற்றும் களியாட்டத்தையும் இழக்கச்செய்துள்ளது. அதேபோன்று இது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களின் மூலமாகவும் மாறியுள்ளது. அதலால் நாம் விஷ போதைப்பொருள் உற்பத்தி, விநியோகம், விற்பனை, ஊக்குவிப்பு, மற்றும் அவற்றுக்கு உடந்தையாக இருத்தலை முற்றுமுழுதாக நிராகரிப்போம் என்றும் எதிர்ப்போம் என்றும் அதனுடன் தொடர்பான நபர்களை சட்டத்தின் முன் நிறுத்த உதவுவோம் என்றும், உறுதி செய்கின்றோம். அத்துடன் விஷ போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு அதிலிருந்து மீள்வதற்கு உதவுவோம் என்றும், அவர்களை மீண்டும் நிறந்ததொரு சமூக வாழ்க்கைக்குத் திசை திருப்புவதற்கு உதவுவோம் என்றும் உறுதிசெய்கின்றோம். 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்களில் “ரட்டம எகட்ட” தேசிய செயல்பாட்டு அங்குரார்ப்பண நிகழ்வில் எம்மால் அளிக்கப்படும் இந்த உறுதியுரையை எமது தாய்நாட்டிலிருந்து விஷ போதைப்பொருட்களின் அச்சுறுத்தல் முற்றுமுழுதாக ஒழிக்கப்படும் வரை கைவிடப்படாத தேசிய பொறுப்பொன்றாக கருதி, செயல்படுவோம் என்றும் உறுதி செய்கின்றோம். இந்தத் தேசியத் திட்டத்தில், மத குருமார்கள், பொதுப் பாதுகாப்புக் குழுக்கள், பொலிஸ் மற்றும் முப்படையினர் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிப்பதை நோக்கதாக கொண்ட தேசிய செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 'முழு நாடும் ஒன்றாக' தேசிய வழிநடத்தல் சபை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமைத்துவத்தில் கடந்த 17ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் முதன்முறையாக கூடியது. போதைப்பொருள் பாவனையை நாட்டில் இருந்து முழுமையாக இல்லாதொழிக்கும் பொருட்டு நாடும் ஒன்றாக என்ற தேசிய கண்காணிப்பு செயற்திட்டத்துக்காக ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. இந்த செயற்திட்டத்தை செயற்படுத்துவதற்காக தேசிய வழிநடத்தல் சபை ஒன்றை ஸ்தாபிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தேசிய வழிநடத்தல் சபையானது போதைப்பொருள் வலையமைப்பை இல்லாதொழித்தல், போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளவர்களுக்கு புனர்வாழ்வளித்தல், போதைப்பொருள் ஒழிப்புக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளல், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கல் பொதுசன நிறுவனங்களை ஒன்றிணைந்து ஊடக கண்காணிப்புக்களை மேற்கொள்ளவுள்ளது. https://www.virakesari.lk/article/229043
-
'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' தொனிப்பொருளின் கீழ் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு செயற்றிட்டம்
போதைப்பொருட்களுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ளத் தயார் - 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டு அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி வலியுறுத்தல் 30 Oct, 2025 | 04:59 PM போதைப்பொருட்களுக்கு எதிரான பரந்த பொதுமக்கள் இயக்கத்தை கட்டியெழுப்புவதன் மூலம், நிச்சயமாக போதைப் பொருள் அச்சுறுத்தலை நாட்டிலிருந்து முற்றாக ஒழித்து, எதிர்கால சந்ததியினரையும் சமூகத்தையும் அதிலிருந்து மீட்டெடுப்போம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். இன்று வியாழக்கிழமை (30) முற்பகல் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டு அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் உயிரைப் பறித்து, நாட்டின் பொருளாதாரத்தையும் சமூகத்தையும் அழிக்கும் ஒரு தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் வர்த்தகத்திற்கு இனிமேலும் இடமளிக்க தமது அரசாங்கம் தயாராக இல்லை என்று வலியுறுத்திய ஜனாதிபதி, கைது செய்தல், புனர்வாழ்வு, தடுப்பு, பொதுமக்கள் அழுத்தம், மதம், விளையாட்டு மற்றும் கலாசாரம் ஆகிய அனைத்து துறைகளையும் ஒன்றிணைத்து, "முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயற்பாடு பன்முகத் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். போதைப்பொருள் அச்சுறுத்தல் இயற்கையாக உருவாகவில்லை என்றும், அது நீண்ட காலமாக அரசியல்வாதிகள் மற்றும் சில அரச அதிகாரிகளின் ஆசிர்வாதத்துடன் உருவாக்கப்பட்டது என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசியல் நிழலின் கீழ் போலியான ஒரு அதிகாரத்தை உருவாக்கிக்கொள்வதற்கு குற்றவாளிகளுக்கு இருந்த வாய்ப்பை தற்போதைய அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதால், அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்து அந்த வலையமைப்பில் இருந்து அகன்று செல்லுமாறு அதனை ஆதரிக்கும் அரச அதிகாரிகளுக்கு கூறுவதாகவும் தெரிவித்தார். இந்த வர்த்தகத்தில் ஈடுபட்ட எவருக்கும் இனி ஒளிந்து கொள்ள வாய்ப்பு இருக்காது என்று ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார். மேலும், கிராமங்களுக்கும் மதத் தலங்களுக்கும் இடையிலான கலாசார தொடர்பைப் பயன்படுத்தி இந்த அச்சுறுத்தலை ஒழிப்பதில் முன்னணியில் இருக்குமாறு மதத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்த ஜனாதிபதி, இந்தப் பணியை வெற்றிகரமாக்கும் வகையில், போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான செய்திகளை அறிக்கையிடும் போது ஒழுக்கத்தையும் நாகரிகத்தையும் பேணுமாறு அனைத்து ஊடக நிறுவனங்களையும் கேட்டுக்கொண்டார். போதைக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வுக்காக எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தில் இருந்து அதிக நிதி ஒதுக்கப்படும் என்றும், இதற்காக அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து தேசிய செயல்பாட்டு மையத்தை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். இந்த நாட்டில் போதைப்பொருள் பரவல் ஒரு தேசிய பேரழிவாக மாறியுள்ளதுடன், பல குற்றங்கள் போதைப்பொருள் வர்த்தகத்தை மையமாகக் கொண்டு நடப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. திறமையாக முடிவெடுக்கும் பொறிமுறை மற்றும் பரந்த பொதுமக்கள் பங்கேற்புடன் கூடிய தேசிய அளவிலான வேலைத்திட்டத்தின் மூலம் இந்த அச்சுறுத்தலை ஒழிக்க வேண்டும் என்பதை அரசாங்கம் தற்போது இனங்கண்டுள்ளதுடன், இந்த தேசிய இலக்கை அடைய 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய பணியை செயல்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், பரந்த விளம்பரச் செயல்முறை மூலம் இந்த அச்சுறுத்தல் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய வலையமைப்பை துண்டித்தல், புனர்வாழ்வு வாய்ப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் போதைப்பொருள் பாவனையை கைவிட விரும்புவோருக்கு வாய்ப்புகளை வழங்குதல் ஆகியவை எதிர்பார்க்கப்படுகின்றன. இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவிக்கையில், எமது நாட்டை ஆக்கிரமித்துள்ள பேரழிவை தோற்கடிப்பதற்காக இன்று அனைவரும் ஒன்று திரண்டிருக்கிறோம். இந்த பேரழிவு எந்தளவு ஆழமானது மற்றும் நாகசரமானது என நாம் அறிவோம். எமது பிள்ளைகள் எமது சமூகம் என்பன இந்த மாயப் பேரழிவிற்கு இறையாகி வருகிறது. இது தற்பொழுது உருவானதொன்றல்ல. பல தசாப்தங்களாக வளர்ந்து இந்த பேரழிவு முழு சமூகத்திற்குள்ளும் புறையோடிச் சென்று பீதியை உண்டாக்கும் நிலைக்கு மாறியுள்ளது. இந்தப் பயணத்தில் எமக்கு தெரிவு செய்யக் கூடிய இரு பாதைகள் தான் உள்ளன. முதலாவது முன்னரைப் போன்றே இதற்கு இடமளித்து கண்டு கொள்ளாமல் இருப்பது. இதற்கு எதிராக போராடுவது இரண்டாவது பாதையாகும். நானும் எனது அரசாங்கமும் இந்த பேரழிவை எதிர்த்து போராடுவதற்கு முடிவு செய்துள்ளோம். இந்தப் பேரழிவு எமது பிள்ளைகளை ஆட்கொண்டு வருகிறது. சிறை செல்லும் 64 வீதமானவர்கள் போதைப்பொருள் சார்ந்த தவறுகளுக்காக பிடிபடுபவர்களாகும். 18-26 வயதுக்கிடைப்பட்ட இளைஞர்கள் இதற்கு கூடுதலாக இறையாகின்றனர். அவர்களின் எதிர்காலம், எதிர்பார்பார்ப்புகள் வீதிகளில் அழிந்து போகின்றன. இதனை எம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஒவ்வொரு பிள்ளைகள் பிறக்கும் போது பெற்றோர் பெரும் எதிர்பார்ப்புகளை கொண்டிருப்பர். ஆனால் தமது கண்முன்னே தமது பிள்ளைகள் நாசமடைவதை கண்டு அவர்கள் வேதனை அடைகின்றனர். பெற்றோர் சமூகத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்டுகின்றனர். இந்த பேரழிவிற்கு முழு குடும்பமும் இறையாகின்றது. முழு குடும்ப அலகும் வீழ்ச்சியடையும் அச்சுறுலுக்கு முகங்கொடுத்துள்ளது. கிராமம் கிராமமாக இந்த மாயச் சூறாவளி பரவி வருகிறது. உடைகளை காயவைக்கவோ நெல்லை காயப் போடவோ முடியாது. மகளை தனியாக வீட்டில் நிறுத்தி விட்டுச்செல்ல முடியாது என கிராமங்களில் வாழும் தாய்மார்கள் கூறுகின்றனர்.கிராமங்கள் பீதியில் உள்ளன. குற்றச்செயல்கள் கிராமங்களில் உருவாகின்றன. இந்த பேரழிவு முழு சமூகத்தையும் ஆட்கொண்டுள்ளது. வீதி விபத்துக்களில் அநேகமானவை போதைப் பொருட்களுடன் தொடர்புபட்டவையாக உள்ளன. எமது நாட்டில் சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பான வன்முறைகளில் அதிகமானவை போதைப்பொருட்கள் சார்ந்தவை. பொது இடங்களில் விபரீதமான பாலியல் ஆசைகள் வெளிப்படுத்தப்படுகின்றன. இந்த பேரழிவு நாட்டில் பாரிய வீழ்ச்சியை உருவாக்குகிறது. கட்டுநாயக்கு- கொழும்பு நெடுஞ்சாலையின் பாதுகாப்பிற்கு அதிரடிப்படையை ஈடுபடுத்த நேரிட்டுள்ளது. கேபிள்கள் வெட்டி எடுத்துச் செல்லப்படுகின்றன. யானை வேலிக்கு இடப்பட்டுள்ள பெட்டரி திருடப்படுகிறது . பாலங்களில் உள்ள இரும்பை வெட்டி எடுத்துச் செல்கின்றனர். இதனால் நாட்டில் ஸ்தீரமற்ற நிலை உருவாகின்றது. பொது சமூகத்தினதும் பிரஜைகளினதும் பாதுகாப்பிற்காக இந்த பேரழிவைத் தோற்கடிக்க வேண்டும். நாம் எடுக்கும் முன்னெடுப்பை நிச்சயமாக வெற்றி பெறச் செய்வோம். இதனுடன் தொடர்புபட்டதாக பாரிய நிதி வலையமைப்பு காணப்படுகிறது. ஒரு கிலோ 2 கோடி ரூபாவை விட அதிக விலைக்கு விற்பனை செய்யும் போதைப் பொருள் உள்ளது. எமக்கு 800-900 கிலோ பிடிபடுகிறது. நாட்டிற்குள் வரும் அனைத்து போதைப் பொருட்களையும் நாம் கைப்பற்றவில்லை. அனைத்தையும் கைப்பற்றினால் அவை நாட்டிற்குள் வராது. அவர்கள் அனுப்பும் தொகையில் சிறு தொகையே கைது செய்யப்படுகிறது. எந்தளவு தொகை விநியோகிக்கப்படுகிறது என்பது கைப்பற்றும் தொகையின் மூலம் கணிக்கலாம். கருப்புப் பொருளாதாரத்தை கட்டெியெழுப்பும் வர்த்தகமாக இது மாறியுள்ளது. அதனால் அவர்களிடையே சந்தையை பங்கு போடுவதில் மோதல் காணப்படுகிறது. ஒவ்வொரு குழுக்களுக்கிடையில் துப்பாக்கிச் சூடு நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரதேச எல்லைகளுக்கு மற்றைய தரப்பு நுழைய முடியாது. போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டதாகவே இந்த கொலைகள் நடைபெறுகின்றன. பொதுச் சமூகத்தின் பாதுகாப்பிற்காவே அரச பொறிமுறையொன்று உள்ளது. ஆனால் அவர்களிடமுள்ள பண பலத்தினால் அரச பொறிமுறை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இனிமேலும் இதனை மறைத்து இந்தப் பிரச்சினைக்கு முகங்கொடுக்க முடியாது. அவர்களிடையே ஆயுதங்கள் உள்ளன. அனுமதிப் பத்திரத்துடன் ஆயுதங்களை பயன்படுத்தும் அதிகாரம் அரசாங்கத்திற்கே உள்ளது. அரசிடம் இருக்க வேண்டிய ஆயுதங்கள் எவ்வாறு அவர்கள் கைகளுக்குச் சென்றது? சில இராணுவ முகாங்களில் இருந்து 73 ரீ 56 ரக துப்பாக்கிகள் அவர்களின் கைகளுக்குச் சென்றுள்ளன. அதில் சுமார் 35 துப்பாக்கிகள் மீளப் பெறப்பட்டுள்ளன.அதற்குப் பயன்படுத்தும் ரவைகள் பிடிபட்டுள்ளன. இராணுவ கேர்னல் ஒருவர் தான் இவற்றை வழங்கியுள்ளார். அதற்காக அவரின் வங்கிக் கணக்கிற்கு பணம் கிடைத்துள்ளது. ஒரு பொலிஸ் அதிகாரி தனது ஆயுதத்தை விற்பனை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார். அந்த ஆயுதக் குழுக்களிடமுள்ள பண பலத்தினால் இவை நிகழ்ந்துள்ளன. இது தொடர்பான விசாரணைகளில் பொலிஸ் அதிகாரிகளின் தொடர்பு வெளிப்பட்டுள்ளது. இராணுவம்,கடற்படை,விமானப்படை மற்றும் பொலிஸ் என்பன இதனைத் தடுக்க பெரும் பங்காற்றுகின்றன. ஆனால் விரல்விட்டு எண்ணக் கூடியவர்கள் அந்த கும்பலின் பண பலத்தில் சிக்கியுள்ளனர். தேசிய பாதுகாப்பு, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனங்களுக்குள் கருப்பு ஆட்சி உருவாக்கப்பட்டுள்ளது. மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் வாகனங்கள் இன்றி வாகன இலக்கத்தகடுகள் வழங்கப்பட்டுள்ளன. மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திலுள்ள சிலர் சட்டவிரோத வாகனங்கள் பாவனைக்கு வர பங்களித்துள்ளனர். குடிவரவு குடியகல்வு திணைக்களம் தேசிய பாதுகாப்பிற்காக பங்களிக்கும் நிறுவனம். ஆனால் சில அதிகாரிகள் பாதாள தலைவர்களுக்கு கடவுச்சீட்டு தயாரித்து வழங்கியுள்ளனர். இவ்வாறு தான் அரச கட்டமைப்பிற்குள் இந்தப் பேரழிவு நுழைந்துள்ளது. சுங்கத்திணைக்களத்திலுள்ள சிலருக்கும் இந்தச் கும்பலுடன் தொடர்பு உள்ளது. அதனால் உத்தியோகபூர்வ அரசாங்கம் இருப்பதைப் போன்று அதே அளவு பலமாக இல்லாவிட்டாலும் அவர்களுக்குத் தேவையானவற்றை வழங்கும் அரச பொறிமுறையொன்றை தம்பிடியில் வைத்துள்ளனர். வெளிப்படையான அரசாங்கத்தைப் போன்றே மறைவான கருப்பு ஆட்சியொன்று உருவாகியுள்ளது. இந்த நாட்டில் இரண்டு ஆட்சிகள் இருக்க முடியாது. மக்களின் ஜனநாயக ஆணையினால் உருவான ஆட்சி மாத்திரமே இருக்க முடியும். கருப்பு ஆட்சி ஒழிக்கப்படும் என உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறோம். அரசியல் கட்சிகளுக்குள்ளேயும் அவை நுழைந்துள்ளன. சிலர் மக்கள் பிரதிநிதிகள் ஆகின்றனர். உள்ளுராட்சி தலைவர்களாக தெரிவாகின்றனர். தனியான பட்டியல் தயாரித்து தேர்தலில் போட்டியிட சிலர் தயாராகி இருந்தனர். ஆட்சி அதிகாரம் ,எம்.பிகள் உருவாக்குவது வரையான ஆரம்ப விதை நடப்பட்டுள்ளது. இதனை அடையாளங் கண்டுள்ளோம். இந்த நிலை தானாக உருவானதல்ல. நீண்ட காலமாக அரசியல் மற்றும் சில அரச அதிகாரிகளின் ஆசிர்வாதத்துடன் தான் இது உருவானது. பிரஜைகள் அச்சத்துடன் உள்ளனர். சில வர்த்தகர்கள் இதிலிருந்து ஒதுங்க அஞ்சுகின்றனர்.போதைப் பொருள் விற்பனை செய்வதில் இருந்து ஒதுங்கினால் சுடப்படுகின்றனர். இதன்பின்னணியில் தெளிவான அரசியல் ஆசிர்வாதம் உள்ளது.அதிகாரிகளின் ஆதரவு இருக்கிறது. சிலருடைய சொத்துக்களை பார்த்தால் உழைப்பின் ஊடாக இந்தளவு சொத்துக்களை ஈட்ட முடியாது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் தீர்க்கமான கட்டத்திற்கு வர வேண்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது. நாம் இதனைச் செய்யாவிட்டால் வேறு யாரும் செய்ய மாட்டார்கள் என எம்மிடம் பலரும் கூறியுள்ளனர். இதனை மாத்திரம் நிறைவேற்றுங்கள் புண்ணியம் கிடைக்கும் என சில தாய்மார் கூறுகின்றனர். பொலிஸ் மா அதிபர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் பலரும் இது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை தோற்கடிக்க பொலிஸை சுத்தம் செய்ய வேண்டும் என்பதை ஏற்கிறோம். தகவல்களை பொலிஸாருக்கு வழங்கினால் மறு நிமிடமே வீட்டுக்கு வருவர் என கிராமங்களில் சொல்வார்கள். இதனை முடிவுக்குக் கொண்டுவர பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் பொலிஸ்மா அதிபரும் பெரு முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அநேகமான பொலிஸார் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உடனடியாக அந்த வலையமைப்பில் இருந்து அகன்று செல்லுமாறு ஏனைய தரங்களில் உள்ளோரிடம் கோருகிறோம். உங்கள் தொழிலின் பாதுகாப்பு சீருடையின் கௌரவத்தை பாதுகாத்து அகன்று செல்லாவிட்டால் நாம் அவர்களை நீக்குவோம். பொதுமக்களின் வரிப்பணத்தில் இயங்கும் நிறுவனங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு முரணாக செயற்படுவது எந்தளவு பாரதூரமானது. எனவே இதற்கு அனைத்துவிதமான ஒத்துழைப்புகளையும் வழங்கும் அரச அதிகாரிகள் உடனடியாக அந்த செயற்பாட்டில் இருந்து அகன்று செல்லுமாறு கோருகிறோம். சட்டத்தின் மீதான பாரிய மரியாதைக்குரிய நிறுவனங்கள் வரை இந்த பேரழிவு பரவியுள்ளது. இனியும் அவர்கள் மறைவானவர்கள் அல்ல. அவர்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் எமக்குத் தெரியும். போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் உடனடியாக போதைப் பொருள் பாவனையில் இருந்து அகன்று செல்ல வேண்டும். உங்களை கவனித்துக் கொள்ள நாம் தயார். அவர்கள் எமது பிள்ளைகள். பொருளாதாரப் பிரச்சனை, விளையாட்டு,கலாச்சாரம்.இசை, பொழுதுபோக்கு என எதுவும் இன்றி ஒரே பொழுது போக்கு போதையாக இருப்பது என அடிமையானவர்கள் கருதுகிறார்கள். அது அவர்களுடைய தவறல்ல. சிறந்த விளையாட்டுக் கலாச்சாரம் உருவாக்கப்படவில்லை. பல தசாப்தங்களுக்கு முன்னர் விளையாட்டுக் கலாச்சாரம் காணப்பட்டது. இன்று அவ்வாறான கலாச்சாரம் இல்லை. எனவே அந்த இளைஞர்களுக்கு குறைசொல்லிப் பயனில்லை. எனவே பொழுதுபோக்கு சார்ந்த இடங்கள்,பாடல்,இசை,கலாச்சாரம், சமூகம் தொடர்பான பிணைப்பு தொடர்பான சமிக்ஜையை அவர்களுக்கு வழங்க வேண்டும். அதற்காக பாரிய திட்டமொன்றை ஆரம்பிக்க இருக்கிறோம். அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பது எமது பொறுப்பாகும். சுயமாக சென்று புனர்வாழ்வு பெறக் கூடிய சில இடங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தமது பிள்ளையை ஒப்படைக்குமாறு தாய்மாருக்கு அழைப்பு விடுக்கிறோம். உங்கள் பிள்ளையை மீட்டு உங்களிடம் கையளிப்போம். வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக இதற்காக அதிக நிதி ஒதுக்கப்படும். பல புனர்வாழ்வு மையங்களில் இருந்து இளைஞர்கள் தப்பிச் செல்கிறார்கள். இதனைத் தடுக்க விஞ்ஞான ரீதியான புனர்வாழ்வு திட்டமொன்றை தயாரித்துள்ளோம். போதைப் பொருள் விற்பனை செய்வோர் சரணடைய வேண்டும். தொடர்புள்ள சகல அரச நிறுவனங்களையும் இணைத்து தேசிய செயற்பாட்டு மையம் ஒன்றை உருவாக்க இருக்கிறோம். சுங்கம், குடிவரவு குடியகல்வு திணைக்களம், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம்,போலிஸ், இராணுவம்.புலனாய்வுப் பிரிவு என்பன உள்ளடங்கிய மையம் உருவாக்கப்படும். தப்பிச் சென்றவர்கள் மறைந்துள்ள நாடுகள் எமக்குத் தெரியும். இருக்கும் இடமும் தெரியும். எனவே அவர்கள் சரணடைய வேண்டும்.சுற்றிவளைப்புகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம். எமது நாட்டையும் சமூகத்தையும் பிள்ளைகளையும் ஒரு சிறு குழுவுக்கு இறையாக்க முடியாது. பிக்குமார் மற்றும் மதத்தலைவர்கள் உள்ளடக்கிய செயற்பாடு தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம். எமது மக்கள் மதத்தலங்களுடன் அதிகமான தொடர்பை வைத்துள்ளனர். இந்த பேரழிவுக்கு எதிரான பிரதான ஆயுதமாக அதனை பயன்படுத்தலாம். பலங்கொடை பகுதியில் போதைக்கு அடிமையானவர்களின் மரண வீடுகளுக்கு வர மாட்டோம் என பள்ளிவாசல் மௌலவிமார் சொல்வதை பார்த்தோம். அதே போன்று சகல மதத் தலைவர்களும் இந்த பேரழிவுக்கு எதிரான நிலைப்பாட்டை உருவாக்கினால் இதனை தோற்கடிக்கலாம். இதிலிருந்து மீள போராடுவோம். அதற்கு மதத் தலைவர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். ஊடகங்கள் விழுமியங்களுக்கு உட்பட்டு செயற்படாத துறையாக காணப்படுகிறது. போட்டிக்காக செயற்படுகின்றன. ஆனால் போதைப் பொருட்கள் தொடர்பான செய்திகளை வெளியிடுவதில் கட்டுக்கோப்புடன் ஊடகங்கள் செயற்படும் என எதிர்பார்க்கிறேன். இதனை ஊக்கப்படுத்தும் வகையிலான செய்தி வெளியிடப்படுவதை காண்கிறோம். சிலருடான தொலைபேசி உரையாடல்கள் ஊடாக அவர்களை வீரர்களாக காண்பிக்கப்படுகின்றனர். ஊடக நிறுவன உரிமையாளர்களை சந்தித்து பேசிய போது பெரும்பாலானவர்கள் இதற்கு ஒத்துழைக்க உடன்பாடு தெரிவித்தனர். புனர்வாழ்வு நடவடிக்கையில் பல அரச சார்பற்ற நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. சகல தரப்பினரையும் இணைத்து புனர்வாழ்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க இருக்கிறோம். போதைப் பொருள் ஒழிப்பில் அரசியல் அதிகாரத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. அரசியல்வாதிகளுடன் நெருங்கிப் பழகி அவர்களின் தேவைகளை நிறைவேற்றி மறைவான அதிகாரத்தை போதைபொருள் வர்த்தகர்கள் பெறுகிறார்கள். சில அரச பொறிமுறையில் நுழைந்து விசாரணைகளை தடுக்கவும் வீதியில் சுட்டுக் கொலை செய்வதற்கும் இந்த மறைவான அதிகாரத்தை அவர்கள் பயன்படுத்துகின்றனர். எமது பொலிஸார் திறமையானவர்கள். சர்ச்சைக்குரிய விடயங்களில் துரிதமாக குற்றவாளிகளை கைது செய்யும் திறமை அவர்களுக்கு உள்ளது. கண்டுபிடிக்கப்படாத அனைத்து குற்றங்களின் பின்னாலும் அரசியல்வாதியின் பாதுகாப்பு உள்ளது. லசந்த கொலை, தாஜுதீன் கொலை,ரோகன குமாரவின் கொலை, ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் ஏன் தீர்க்கப்படவில்லை. அரசியல் பாதுகாப்பினாலே அவை கண்டுபிடிக்கப்படவில்லை. பொலிஸாருக்கு உரிய அதிகாரம் வழங்காமையினால் இந்த நிலை ஏற்பட்டது. போதைப்பொருள் ,பாதாள உலகம் என்பன அவ்வாறு தான் வளர்ச்சியடைந்தன. அவர்களின் முதலாவது அதிகாரமான அரசியல் அதிகாரம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. சில குற்றச்செயல்கள் சிறைச்சாலைகளுக்குள் இருந்து முன்னெடுக்கப்படுகிறது. சில தவறுகளை சிறைச்சாலையில் இருந்து நேரலையில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வெலிகம சம்பவம் அவ்வாறான ஒன்று. சிலர் பயத்தினாலும் சிலர் பணத்தினாலும் இதற்கு உதவுகிறார்கள். இலங்கை பொலிஸ் இதிலுள்ள ஆபத்தை அறிந்த நிலையில் இதனை முறியடிக்க அர்ப்பணித்துள்ளது. எதிர்காலத்தில் மேலும் சில பொலிஸ் அதிகாரிகள் குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்படலாம். முறையாக செய்தால் விமர்சனம் வரும். உங்களுக்கு சுதந்திரமாக செயற்பட அதிகாரத்தை வழங்குகிறோம். இந்தப் பேரழிவை முடிவுக்குக் கொண்டு வருவோம். இந்தச் செயற்பாட்டில் மக்களை இணைத்துச் செயற்பட வேண்டும். கிராமம் வரையாக பரந்த மக்கள் இயக்கம் முன்னெடுக்கப்படும். முன்பு குற்றவாளிகளை ஊரில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் இணைத்துக் கொள்வதில்லை. ஆனால் இன்று அவர்கள் நிகழ்வுகளில் பிரதம அதிதியாக தேசிய கொடிஏற்றுகின்றனர். கிராம சேவகர் மட்டம் வரை பரந்த மக்கள் இயக்கம் உருவாக்கப்படும். அது தான் இந்த பேரழிவுக்கு எதிரான பிரதானமான பாதுகாவலராகும். பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.மக்களிடம் இருந்து இதற்கு அழுத்தம் பிரயோகிக்க வேண்டும். முழு நாடுமே ஒன்றாக இந்த முன்னெடுப்பில் இணைய வேண்டும். அரசாங்கத்தினாலோ பொலிஸாரினாலோ அரச பொறிமுறையினாலே இதனை தனியாக மேற்கொள்ள முடியாது. இதற்கு எதிராக பாரிய மக்கள் இயக்கத்தை உருவாக்கி வருகிறோம். எனவே போதைப்பொருட்களை விற்பனை செய்யும் மற்றும் அடிமையானவர்கள் அதிலிருந்து அகன்று செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த மக்கள் இயக்கம் இந்த மாயச் சூறாவளியை அழித்தொழிக்கும். இந்த மாயச் சூறாவளியில் இருந்து எமது பிள்ளைகளையும் சமூகத்தையும் நாட்டையும் மீட்போம்'' என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். மல்வத்து அஸ்கிரிய அனுநாயக்க தேரர்கள் தலைமையிலான மகா சங்கத்தினர், கத்தோலிக்க, இந்து மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்கள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அமைச்சர்கள், ஆளுநர்கள், வெளிநாட்டு தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் ஏனைய இராஜதந்திரிகள், ஜனாதிபதியின் செயலாளர் , அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள், பாதுகாப்புப் படைகளின் பிரதானிகள், அறிஞர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/229064
-
கடலில் கவிழ்ந்த கேஷான் புதா 1 மீன்பிடிக் கப்பல் - மீனவர்களை மீட்கப் புறப்பட்டது சிதுரல கப்பல்
@goshan_che அண்ணை என்னண்ணை நடந்தது?! தமிழர்களே தமிழர்களே .....
-
'தென்கடலில் விழுந்த யாரும் பிழைத்ததில்லை'- கடலில் 26 மணி நேரம் மிதந்து உயிர்பிழைத்த சிவமுருகன்
படக்குறிப்பு, திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் எனும் கடலோர கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயதான சிவமுருகன். கட்டுரை தகவல் சிராஜ் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் நாள்: செப்டம்பர் 20- 21, 2025 (சனிக்கிழமை- ஞாயிற்றுக்கிழமை) நேரம்- நள்ளிரவு 1.15. கன்னியாகுமரியிலிருந்து 16 கடல் மைல்கள் (சுமார் 29 கிமீ) தூரத்தில் தென்கடலில், கடும் அலைகளுக்கு நடுவே மிதந்துகொண்டிருந்தார் சிவமுருகன். கடலுக்கு மீன்பிடிக்க நண்பர்கள் மற்றும் சகோதரருடன் வந்த அவர், படகிலிருந்து தவறி கடலில் விழுந்து 5 மணிநேரம் கடந்திருந்தது. "என் கண் முன்னே, ஒரு கடல் மைல் தொலைவில் (1.8 கிமீ) சில படகுகள் என்னைத் தேடிக்கொண்டிருந்தன. தொண்டைக்குள் கடல் நீர் சென்று, புண்ணாகி இருந்தது, உதவிகேட்டு கத்த முடியவில்லை. அமாவாசை இரவில், கடல் நீரிலிருந்து தலையை மட்டும் வெளியே நீட்டிக்கொண்டு நான் தவிப்பதை அவர்களால் பார்க்க முடியவில்லை. சில மணிநேரங்களில் அந்த படகுகள் கரைக்கு திரும்பிச் சென்றன. நான் அங்கேயே மிதந்து கொண்டிருந்தேன்" என பிபிசி தமிழிடம் அன்று நடந்ததை விவரித்தார் சிவமுருகன். திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் எனும் கடலோர கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயதான சிவமுருகன். கடந்த மாதம் 20ஆம் தேதி, கன்னியாகுமரி, சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து, நண்பர்கள் மற்றும் சகோதரர் என 16 பேருடன் ஒரு விசைப் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற சிவமுருகன், கடலில் தவறி விழுந்து, தத்தளித்து, 26 மணிநேரங்களுக்குப் பிறகே மீட்கப்பட்டார். நடந்தது என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம் இந்தச் சம்பவத்திற்கு 2 வாரங்கள் முன் தான் முதல்முறையாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லத் தொடங்கியிருந்தார் சிவமுருகன். "வழக்கமாக அதிகாலை 2 மணிக்கு செட்டிகுளத்தில் இருந்து கிளம்பி, 4.30 மணிக்கு சின்னமுட்டத்திலிருந்து மீன்பிடிக்க படகில் புறப்படுவோம். சனிக்கிழமையும் (செப்டம்பர் 20) அப்படிச் சென்று, வலை விரித்து, மீன் பிடித்துவிட்டு, மாலை 6 மணிக்கு கரைக்குத் திரும்பத் தொடங்கினோம்." "இரவு 8 மணிக்கு, சிறுநீர் கழிக்கலாம் என படகின் ஒரு ஓரத்திற்கு வந்தேன். ஜிபிஎஸ் கருவி மூலம் கடைசியாகப் பார்த்தபோது, நாங்கள் கன்னியாகுமரி கரையிலிருந்து 15 கடல் மைல்கள் தொலைவில் இருந்தோம். அப்போது திடீரென ஒரு பெரிய அலை படகைத் தாக்கியது. படகு குலுங்கியதும், நான் நிலைதடுமாறி கடலில் விழுந்துவிட்டேன். விழுந்ததும், நீச்சல் அடித்து, தண்ணீருக்கு மேலே வந்து கத்தினேன். ஆனால், படகின் எஞ்சின் சத்தத்தில் யாருக்கும் எதுவும் கேட்கவில்லை." என்கிறார் சிவமுருகன். தொடர்ந்து பேசிய அவர், "10-15 நிமிடத்திற்கு மேல் ஆகியும் நான் திரும்பி வராததால், என் தம்பி வெளியே வந்து என்னைத் தேடியுள்ளான். நடந்ததைப் புரிந்துகொண்டு, சத்தம் போட்டு அனைவரையும் அழைத்து, ஜிபிஎஸ் கருவி மூலம் வந்த பாதையை கணக்கிட்டு, படகை திருப்பிக் கொண்டுவந்து என்னைத் தேடினார்கள். ஆனால், அதற்குள் அலைகள் என்னை 1 கடல் மைல் தூரம் வரை இழுத்துச் சென்றிருந்தன" "அவ்வளவு பெரிய கடலில், அதுவும் அமாவாசை இரவில், தலையை நீட்டிக்கொண்டு, கைகளை உயர்த்தி கத்திக்கொண்டிருந்த என்னை அவர்களால் பார்க்க முடியவில்லை. டீசல் பிரச்னை காரணமாக அவர்கள் திரும்பிவிட்டார்கள். மீண்டும் சில படகுகளுடன் வந்து என்னை தேடினார்கள். படகுகளின் விளக்குகளைப் பார்த்து கத்தினேன், கைகளை அசைத்தேன், சில மணிநேரங்களில் அவர்கள் திரும்பிச் செல்லும்வரை அதையே செய்துகொண்டிருந்தேன்." என்கிறார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் அதிகமாக கடல் நீர் வாய்க்குள் சென்றதால், தொண்டையில் புண்கள் ஏற்பட்டும், முகத்தில் தொடர்ந்து அலைகள் அடித்ததால் தோல் உரிந்தும், கண்களில் உப்பு நீர் பட்டு அதிக எரிச்சல் ஏற்பட்டும் அவதிப்பட்டதாகக் கூறுகிறார் சிவமுருகன். "அந்த இரவில் சுற்றி எந்த வெளிச்சமும் இல்லாத அந்த நடுக்கடலில் மிதந்துக் கொண்டிருந்தபோது, என் மனதில் இருந்த ஒரே எண்ணம், எப்படியாவது கரைக்கு சென்றுவிட வேண்டும், உயிர் இங்கேயே போய்விட்டால், குடும்பம் என்னவாகுமென்று கவலை. நீரில் எளிதாக மிதக்கும் வகையில், எடையைக் குறைக்க அணிந்திருந்த டி-ஷர்டை கழற்றி எறிந்தேன். அப்போது தான் உடலெங்கும் ஏதோ ஒன்று கடிக்கத் தொடங்கியது" என்று கூறிய அவர் தொடர்ந்து பேசினார். "புழுக்களைப் போன்ற ஜெல்லி மீன்கள் அவை. உடலில் ஒட்டிக்கொள்ளும், கொஞ்சம் விட்டால் தோலில் துளை போட்டு விடும் என ஊரில் சிலர் சொல்லி கேட்டிருக்கிறேன். அவற்றை ஒவ்வொன்றாக எடுத்தேன். தொடர்ந்து கை, கால்களை அசைத்து மிதந்து கொண்டே இருந்ததால், உடல் சோர்வடையத் தொடங்கியது. சில சமயங்களில் நீரில் மூழ்கினாலும், தன்னிச்சையாக நீச்சல் அடித்து மேலே வந்துவிடுவேன். மறுநாள் காலை (செப்டம்பர் 21) சூரியனைக் கண்டதும், எப்படியும் நீந்தி கரையை அடைந்து விடலாம் என்ற நம்பிக்கை வந்தது." என்கிறார். 'தென்கடல் மிகவும் ஆபத்தானது' பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தென்கடலில் ஒப்பீட்டளவில் ஆழம் குறைவு, ஆனால் காற்று அதிகமாக வீசும், ஆக்ரோஷமான சூழல் நிலவும் என்கிறார் பவுலின். கரையைத் தேடி நீந்தத் தொடங்கிய அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. எந்தத் திசையில் நீந்தினாலும் கடல் அலைகள் மற்றும் காற்று அவரை வேறு திசையில் தள்ளியது. பிடிப்பதற்கு ஒரு கட்டை கூட கண்ணில் தென்படாத நிலையில், அலைகளால் அங்குமிங்கும் வீசப்பட்ட அவர், நீந்தும் முயற்சியைக் கைவிட்டார். "எப்படி நீந்தினாலும் ஒரே இடத்தில் தான் இருக்கிறேன் என்று தோன்றியது. பைத்தியம் பிடிப்பது போல இருந்தது. குளிரில் கால்கள் மரத்துப் போயிருந்தன. சூரிய அஸ்தமனம் முடிந்து, இருள் சூழத் தொடங்கியதுபோது, உடலில் இருந்த தெம்பும், மன தைரியமும் மொத்தமாக போயிருந்தது. தென்கடலில் காணாமல் போன யாரும் பிழைக்க மாட்டார்கள் என ஏன் சொல்கிறார்கள் எனப் புரிந்தது. இதற்கு மேலும் அவதிப்படமுடியாது என தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தேன். அப்போது எனக்கு தெரியாத ஒன்று, ஊருக்குள் நான் இறந்துவிட்டேன் என அறிவித்திருந்தார்கள். என் உடலாவது கிடைக்காதா என குடும்பத்தினர் அழுது கொண்டிருந்தார்கள் என்பது" என்றார். "ஆனால், மூழ்க முயற்சி செய்தாலும், என்னால் மூச்சை அடக்க முடியாமல், மேலே வந்துகொண்டே இருந்தேன். எனவே அதிக கடல் நீரை குடித்தேன். இந்த முறை நிச்சயம் மூழ்கி விடலாம் என நினைக்கும்போது, தூரத்தில் ஒரு ஒளி தெரிந்தது." என்கிறார் சிவமுருகன். சிவமுருகன் பிழைத்து வந்தது ஒரு அதிசயம் தான் எனக் கூறுகிறார் கன்னியாகுமரியைச் சேர்ந்த மீனவர் மற்றும் எழுத்தாளர் பவுலின். 50 வருடங்கள் மீன்பிடி தொழிலில் அனுபவம் கொண்ட இவர், பிற கடல் பகுதிகளுடன் ஒப்பிடும்போது தென்கடல் மிகவும் ஆபத்தானது எனக் கூறுகிறார். "ராமநாதபுரத்தின் சேதுக்கரை, கீழக்கரை தொடங்கி குமரிக்கரை வரை விரிந்திருக்கிறது தமிழகத்தின் தென்கடல். அதில் ஒப்பீட்டளவில் ஆழம் குறைவு, ஆனால் காற்று அதிகமாக வீசும், ஆக்ரோஷமான சூழல் நிலவும். எனவே அலைகளின் உயரம் அதிகமாக இருக்கும். அத்தகைய கடற்பகுதியில் தவறி விழுந்த ஒருவர், 24 மணிநேரம் கடந்து உயிர்பிழைப்பது என்பது மிகவும் அரிது. காரணம், கடலின் அதீத குளிர் உடலை உருக்கிவிடும். கால்கள் மரத்துப் போய் மேற்கொண்டு மிதக்க முடியாமல், மூழ்கத் தொடங்கிவிடுவோம். உடல் சோர்வடைந்து கடல் நீரைக் குடிக்கத் தொடங்குவார்கள், அது உடலில் நீர் வற்றலை ஏற்படுத்தும்." என்று கூறுகிறார். ஆழ்கடலின் நீரோட்டத்தால் எவ்வளவு நீந்தினாலும் கரையைக் கண்டறிவது கடினம் எனக்கூறும் பவுலின், "ஒரு கட்டை போன்று ஏதேனும் கிடைத்தால் அதைப் பிடித்துக்கொண்டே மிதப்பது நீண்ட நேரம் மிதக்க உதவும். ஆனால், 24 மணிநேரத்துக்கும் மேல் வெறுமனே கை, கால்களை அசைத்துக்கொண்டே மிதப்பது மிகவும் கஷ்டம். உடல் ஒரு கட்டத்தில் தளர்ந்து, மூழ்கி விடும்" என்கிறார். கடல் நீரில் தவறி விழுந்தால் ஏற்படும் பிரச்னைகள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இனி மீன்பிடி தொழிலில் ஈடுபட வேண்டாமென குடும்பத்தினர் கூறிவிட்டதாகக் சிவமுருகன் தெரிவிக்கிறார். கடல் நீரில் அதிக உப்பு உள்ளது. மனிதர்கள் கடல் நீரைக் குடிக்கும்போது, மனித உடலின் செல்கள் தண்ணீரையும் உப்பையும் உறிஞ்சிக் கொள்கின்றன. மனித சிறுநீரகங்கள் உப்பு நீரை விட குறைவான உப்புத்தன்மை கொண்ட சிறுநீரை மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். எனவே, கடல் நீரைக் குடிப்பதன் மூலம் உறிஞ்சப்படும் அதிகப்படியான உப்பை அகற்ற, நீங்கள் குடித்ததை விட அதிக தண்ணீரை சிறுநீராக கழிக்க வேண்டும். இறுதியில், நீங்கள் நீரிழப்பால் உயிரிழக்க நேரிடும். எனவே எக்காரணத்தைக் கொண்டும் கடல் நீரைப் பருகக் கூடாது. அதேபோல, குளிர்ந்த நீரில் (15°C க்கும் குறைவான எந்த வெப்பநிலையிலும்) இருக்கும்போது, உங்கள் உடல் ஒருவித அதிர்ச்சிக்கு ஆளாக நேரிடும். இது நடந்தால், சுவாசம் மற்றும் இயக்கத்தின் மீதான உங்கள் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும். குளிர்ந்த நீரால் ஏற்படும் அதிர்ச்சி உங்கள் இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை விரைவாக அதிகரிக்கச் செய்து, மாரடைப்பை ஏற்படுத்தும். 'எந்த மாதிரியான நீர்நிலையில் தவறி விழுந்தாலும் முதலில் பதற்றப்படாமல் மிதப்பது மிகவும் முக்கியம், அதோடு நிதானமாக சுவாசிக்க முயற்சி செய்யுங்கள். தேவைப்பட்டால் மிதப்பதற்கு உதவ உங்கள் கைகளையும் கால்களையும் மெதுவாக நகர்த்தலாம். நிலைத்தன்மையை மேம்படுத்த உங்கள் கைகளையும் கால்களையும் விரிக்கவும், உங்கள் கால்கள் மூழ்கினாலும் பரவாயில்லை. முழு உடலும் மிதக்கவில்லை என்றாலும், நீருக்கு மேலே தலை பின்னோக்கி சாய்ந்து, முகம் மேலே பார்த்தவாறு இருக்க வேண்டும்' என பிரிட்டனின், ராயல் நேஷனல் லைஃப் போட் இன்ஸ்டிடியூஷன் (RNLI) அறிவுறுத்துகிறது. படக்குறிப்பு, தனது மகன் சிவராதேஷுடன் சிவமுருகன். தான் பார்த்த அந்த ஒளி ஒரு படகின் முகப்பு விளக்கு என்பதைப் புரிந்துகொண்ட சிவமுருகன், அதன் பிறகு நடந்தவற்றை விவரித்தார். "முழு பலத்தையும் திரட்டி கைகளை அசைத்தேன். எப்படியோ அவர்களும் என்னைப் பார்த்துவிட்டார்கள். என்னை நோக்கி படகைத் திருப்பினார்கள். நானும் அவர்களை நோக்கி நீந்தினேன். கடலில் இருந்து யார் என்னை தூக்கினார்கள், என்ன பேசினார்கள் என ஒரு 30 நிமிடத்திற்கு ஒன்றும் புரியவில்லை. டீ, பிஸ்கட்டுகளை சாப்பிட்ட பின் தான் கண்களைத் திறக்க முடிந்தது. கூத்தன்குழி கிராமத்தைச் சேர்ந்த அருளப்பன் என்பவரின் படகு அது. அவரும் அவரது மீனவக் குழுவும், கடலில் விரித்திருந்த வலையை எடுக்க வந்திருந்தார்கள்." என்கிறார். கடலிலிருந்து மீட்கப்பட்ட சிவமுருகனுக்கு, கரைக்கு வந்தபிறகு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. சிவமுருகனுக்கு திருமணமாகி ஐந்து வயதில் சிவராதேஷ் என்ற மகன் இருக்கிறார். "கடந்த ஒரு மாதத்தில், ஒருமுறை கூட கடலில் கால் வைக்கவில்லை. இனி கடலுக்கு செல்லக்கூடாது என மகன் தொடங்கி குடும்பத்தினர் அனைவரும் கூறிவிட்டார்கள். இன்னும் என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. எனக்கு இப்படி ஆன பின்பு எனது சகோதரன் வெளிநாட்டு வேலைக்கு சென்றுவிட்டான்." "அவ்வப்போது கரையில் நின்று கடலைப் பார்ப்பேன். உடலில் ஜெல்லி மீன்கள், தலையைச் சுற்றி மின்மினிப் பூச்சிகள் என அந்த இரவில் மிதந்தவாறு நான் பார்த்த கடல் தான் இப்போதும் எனக்குத் தெரிகிறது. அந்தக் காட்சியை மறக்கும் வரை என்னால் கடல் நீரில் கால்களை நனைக்க முடியாது." என்கிறார் சிவமுருகன். (தற்கொலை எண்ணங்கள், மன சோர்வு உள்ளிட்டவை இருந்தால் தமிழக அரசின் 104 என்ற இலவச உதவி எண்ணை அழைத்து ஆலோசனைகளும், உதவியும் பெறலாம்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn09rvgrxygo
-
இந்திய விசா தொடர்பான விசேட அறிவிப்பு
அனைத்து விசாக்களையும் நவம்பர் 3 முதல் நேரடியாக கையாள்கிறது இந்திய உயர்ஸ்தானிகராலயம் 30 Oct, 2025 | 10:13 AM அனைத்து விசா, கடவுச்சீட்டு மற்றும் தூதரக சேவைகளுக்கான வெளிப்பணிகளை மேற்கொள்ளும் அவுட்சோர்ஸிங் சேவை வழங்குநரான IVS லங்கா நிறுவனம் நாளை ஒக்டோபர் 31ஆம் திகதி வரை மட்டுமே செயற்படும் என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. அனைத்து விசா, கடவுச்சீட்டு மற்றும் அனைத்து தூதரக சேவைகளும் நவம்பர் 3ஆம் திகதி முதல் இந்திய உயர்ஸ்தானிகராலயம் (கொழும்பு), உதவி உயர்ஸ்தானிகராலயம் (கண்டி) மற்றும் இந்திய துணைத் தூதரகம் (யாழ்ப்பாணம்) என்பவற்றினால் நேரடியாகக் கையாளப்படும் என உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது. சேவையினை பெறும் அனைத்து விண்ணப்பதாரர்களும் மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள http://hcicolombo.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/229018
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அதெல்லாம் ஏமாற்று அண்ணை. அதனால பயம் வேண்டாம்! பையன் சொன்னதற்கு நகைச்சுவைக்காக பகிர்ந்தேன்.
-
சீனாவின் அடுத்த 5 வருடகால வளர்ச்சி இலங்கையின் சுபீட்சத்துக்கான கதவுகளைத் திறக்கும் - இலங்கைக்கான சீனத் தூதுவர்
29 Oct, 2025 | 06:48 PM (நா.தனுஜா) சீனாவின் நீண்டகால ஒத்துழைப்புப் பங்காளி என்ற ரீதியில், அடுத்த 5 வருடகாலத்தில் சீனா அடையவிருக்கும் வளர்ச்சியானது இலங்கையின் அபிவிருத்திக்கும், சுபீட்சத்துக்கும் அவசியமான வாய்ப்புக்களை வழங்கும் என இலங்கைக்கான சீனத்தூதுவர் சி சென்ஹொங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 15ஆவது தடவையாக நடைமுறைப்படுத்தப்படும் ஐந்தாட்டுத் திட்ட அமுலாக்கத்தை அடுத்து 'புத்தாக்கம் பகிரப்பட்ட அபிவிருத்திக்கு வாய்ப்பளிக்கிறது' எனும் தலைப்பில் செவ்வாய்க்கிழமை (28) கொழும்பிலுள்ள மரினோ ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகையிலேயே சீனத்தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: 1949ஆம் ஆண்டு மக்கள் சீனக்குடியரசு ஸ்தாபிக்கப்பட்ட வேளையில், தனியொரு கார், விமானம், கனரக வாகனத்தைக் கூட சீனாவினால் உற்பத்தி செய்யமுடியவில்லை. அதனைத்தொடர்ந்து 1953 ஆம் ஆண்டு முதன்முதலாக ஐந்தாண்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது சீனாவினால் வடிவமைக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்ட 14 திட்டங்கள் இப்போதும் அமுலில் உள்ளன. அதன்மூலம் விவசாய நாடாகத் திகழ்ந்த சீனா உலகளாவிய ரீதியில் பாரிய கைத்தொழில் உற்பத்தியாளராகவும், பாரிய வர்த்தக நாடாகவும், மிக உயர்ந்தளவு வெளிநாட்டுக்கையிருப்பை வைத்திருக்கும் நாடாகவும், உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாகும் நிலைமாற்றமடைந்தது. அதுமாத்திரமன்றி உலகளாவிய ரீதியில் மிக அரிதாகவே எட்டப்பட்டிருக்கும் அடைவுகளான தொடர் பொருளாதார வளர்ச்சி மற்றும் நீண்டகால சமூக ஸ்திரத்தன்மை ஆகிய இரண்டையும் சீனா அடைந்துள்ளது. சீனப் பொருளாதாரமானது வலுவான அடித்தளம், பல்வகை வாய்ப்புக்கள், மீண்டெழும் தன்மை மற்றும் ஆழமான இயலுமை என்பவற்றைக் கொண்டமைந்திருக்கின்றது. அத்தோடு பல்வேறு உள்ளக மற்றும் வெளியக அச்சுறுத்தல்களையும், சவால்களையும் கையாள்வதற்கான தகைமையும், தன்னம்பிக்கையும் சீனாவிடம் உள்ளன. சீனாவின் நீண்டகால ஒத்துழைப்புப் பங்காளி என்ற ரீதியில், அடுத்த 5 வருடகாலத்தில் சீன அடையவிருக்கும் வளர்ச்சியானது இலங்கையின் அபிவிருத்திக்கும், சுபீட்சத்துக்கும் அவசியமான வாய்ப்புக்களை வழங்கும். இவ்வருடத்தின் தொடக்கத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சீனாவுக்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது இருநாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் பரஸ்பர அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்புசார் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன. அதேபோன்று இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிரதமர் ஹரினி அமரசூரிய சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் எமது பரஸ்பர அபிவிருத்தித்திட்டங்கள்சார் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதை முன்னிறுத்தி இலங்கையுடன் நெருக்கமாகப் பணியாற்றத் தயாராக இருக்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/229006
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
ஜெய் ஜக்கம்மா
-
இந்திய விசா தொடர்பான விசேட அறிவிப்பு
Oct 29, 2025 - 05:20 PM - எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி முதல் இந்தியாவுக்கான விசா, கடவுச்சீட்டு மற்றும் அனைத்து தூதரக சேவைகளும் நேரடியாக கையாளப்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இதன்படி இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், கண்டி உதவி உயர்ஸ்தானிகராலயம் மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள துணைத் தூதரகம் ஆகியவற்றினால் குறித்த சேவைகள் நேரடியாக கையாளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், விசா தொடர்பான விடயங்களை தற்போது கையாளும் சேவை வழங்குநர் எதிர்வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை மட்டுமே இயங்கும் எனக் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, அடுத்த திங்கட்கிழமை முதல் அனைத்து விசா, கடவுச்சீட்டு மற்றும் தூதரக தொடர்பான சேவைகளும் உயர்ஸ்தானிகராலயத்தால் நேரடியாகக் கையாளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmhbxpguf01aeqplprg899ifh
-
கூட்டாட்சி முறைமை தொடர்பில் தமிழ்த்தரப்புக்களுடன் பேசத்தயார் - ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் கூறியதாக சுவிஸ் தூதுவர் சுமந்திரனிடம் தெரிவிப்பு
29 Oct, 2025 | 05:25 PM (நா.தனுஜா) இலங்கையில் கூட்டாட்சி முறைமையை (பெடரல்) அறிமுகப்படுத்துவது குறித்து தமிழ்க்கட்சிகளுடன் பேசுவதற்குத் தயாராக இருப்பதாக அண்மையில் சுவிற்ஸர்லாந்தில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த செயலமர்வில் கலந்துகொண்ட ஆளும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் கூறியதாக இலங்கைக்கான சுவிற்ஸர்லாந்து தூதுவர் சிறி வோல்ற் சுமந்திரனிடம் தெரிவித்துள்ளார். இலங்கை - சுவிற்ஸர்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்துடன் கூட்டிணைந்து சுவிற்ஸர்லாந்து அரசாங்கத்தின் ஏற்பாட்டில் அந்நாட்டின் கூட்டாட்சி அரசியல் முறைமை மற்றும் தேசிய ஒருமைப்பாடு வலுவாக்கம் என்பன பற்றி இலங்கையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்குத் தெளிவூட்டும் வகையிலான செயலமர்வொன்று கடந்த செப்டெம்பர் மாதம் 14 - 21 ஆம் திகதி வரை சுவிற்ஸர்லாந்தில் நடைபெற்றது. அச்செயலமர்வில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, பிரதியமைச்சர் முனீர் முளப்பர், பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளருமான நிஹால் அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம ஹெட்டியராச்சி, நிலாந்தி கொட்டஹச்சி, சமன்மலி குணசிங்க ஆகியோரும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவலவும், இல்ஙகைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கமும், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தலதா அத்துகோரளவும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரனும், மக்கள் விடுதலை முன்னிணியின் உறுப்பினர் டபிள்யூ.ரி.பத்மா மஞ்சுளவும், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் யாழ் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருக்கான ஒருங்கிணைப்பு செயலாளருமான கபிலன் சுந்தரமூர்த்தியும் கலந்துகொண்டனர். இச்செயலமர்வின்போது சுவிற்ஸர்லாந்தின் அரசியல் முறைமை மற்றும் இருதரப்பு உறவுகள், சுவிற்ஸர்லாந்தின் கூட்டாட்சி (பெடரல்) முறைமையை ஆழமாகப் புரிந்துகொள்ளல் ஆகிய தலைப்புக்களில் இலங்கை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விரிவான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டதுடன் இதனுடன் தொடர்புடைய முக்கிய கட்டமைப்புக்களுக்கான கள விஜயங்கள் மற்றும் உயர்மட்ட சந்திப்புக்கள் என்பனவும் இடம்பெற்றன. அதேவேளை இச்செயலமர்வின் ஓரங்கமாக நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துரைத்த தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் நிஹால் அபேசிங்க, 2015 - 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவு மீளக்கொண்டுவரப்படும் எனவும், அதில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் என அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளை வாசித்து ஆராயும் பணிகள் முடிவுறும் தருவாயில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இவ்வாறானதொரு பின்னணியில் இச்செயலமர்வு தொடர்பில் விளக்கமளிக்கும் நோக்கில் இலங்கைக்கான சுவிற்ஸர்லாந்து தூதுவர் சிறி வோல்ற்றின் அழைப்பின்பேரில் புதன்கிழமை (29) கொழும்பிலுள்ள சுவிற்ஸர்லாந்து தூதரகத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுடன் நடைபெற்ற சந்திப்பின்போது மேற்படி செயலமர்வு குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அதன்படி இலங்கையில் கூட்டாட்சி முறைமையை (பெடரல்) அறிமுகப்படுத்துவது குறித்து தமிழ்க்கட்சிகளுடன் பேசுவதற்குத் தயாராக இருப்பதாக செயலமர்வில் கலந்துகொண்ட ஆளும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் கூறியதாக தூதுவர் சிறி வோல்ற் சுமந்திரனிடம் தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த சுமந்திரன், அரசியல் தீர்வு குறித்துப் பேசுவதற்கு நேரம் ஒதுக்கித்தருமாறு தாம் ஜனாதிபதியிடம் கோரியுள்ள போதிலும், அதற்கு இன்னமும் பதில் கிட்டவில்லை எனச் சுட்டிக்காட்டினார். இருப்பினும் இதுகுறித்து சுவிற்ஸலர்லாந்தில் நடாத்தப்பட்ட செயலமர்வில் கலந்துகொண்ட தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுடன் பேசுவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/228993
-
மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட விரும்புகிறேன் - டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்காவில் டிரம்ப் 3வது முறையாக அதிபராக முடியுமா? சட்டத்தில் ஓட்டை இருப்பதாக கூறும் ஆதரவாளர்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 2028 தேர்தலுக்காக தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள டிரம்ப் தொப்பிகளை விற்கத் தொடங்கியுள்ளார். கட்டுரை தகவல் கிரேம் பேக்கர் 28 அக்டோபர் 2025 புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் டொனால்ட் டிரம்ப், மூன்றாவது முறையாக அதிபராக பதவி வகிப்பதற்கான வாய்ப்பை மறுக்கவில்லை. "அதை நான் மிகவும் விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே, டிரம்ப் அமைப்பு "டிரம்ப் 2028" என்று எழுதப்பட்ட சிவப்பு நிற தொப்பிகளை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடப்போவற்கான ஒரு சைகையாக இது பார்க்கப்படுகிறது. ஆனால், அந்த நேரத்திற்குள் டிரம்ப் அமெரிக்கா அதிபராக இரண்டு முறை பதவி வகித்து முடித்திருப்பார். இது அமெரிக்க அரசியலமைப்பில் அனுமதிக்கப்பட்ட உச்ச வரம்பாகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில், 50 டாலர் விலையுள்ள அந்த தொப்பிகள் வெளியிடப்பட்டன. அப்போது டிரம்ப், மூன்றாவது முறை பதவி வகிக்க விரும்புவது பற்றி 'நகைச்சுவையாகச் சொல்லவில்லை' என்று கூறியிருந்தார். அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம், "யாரும் இரண்டு முறைக்கு மேல் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படக்கூடாது" என்று தெளிவாகக் கூறுகிறது. ஆனால், டிரம்ப் ஆதரவாளர்கள் சிலரும், டிரம்பும் அதற்கு வேறு சில வழிகள் இருக்கலாம் எனக் கூறி வருகின்றனர். பட மூலாதாரம், Getty Images டிரம்ப் ஏன் மூன்றாவது முறை பற்றிப் பேசுகிறார்? அக்டோபர் 27 அன்று ஆசிய பயணத்தின் போது, மூன்றாவது முறையாக அதிபராகப் பதவி வகிப்பதற்கான வாய்ப்பு பற்றி செய்தியாளர்கள் டொனால்ட் டிரம்பிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "அதைப்பற்றி நான் உண்மையில் யோசிக்கவில்லை. ஆனால் எனக்கு இதுவரை கிடைத்ததிலேயே மிகச்சிறந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் இப்போது உள்ளன," என்று பதிலளித்தார். 79 வயதான அதிபரான டிரம்ப் மீண்டும் ஒரு அதிபராக வருவதற்கான ஒரு "திட்டம்" தயாராகி வருகிறது என டிரம்பின் முன்னாள் ஆலோசகர் ஸ்டீவ் பானன் கூறிய சில நாட்களுக்குப் பிறகு இந்தக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. முந்தைய என்பிசி நேர்காணலில், "அதைச் செய்யக்கூடிய சில வழிகள் இருக்கின்றன" என்று டிரம்ப் கூறியிருந்தார். மேலும் அவர், "நான் நகைச்சுவையாகச் சொல்லவில்லை... பலரும் நான் அதைச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், நான் அவர்களிடம் இது இன்னும் தொடக்க நிலையில்தான் இருக்கிறது, நிறைய தூரம் செல்ல வேண்டியுள்ளது என்று சொல்கிறேன்" என்றார். இரண்டாவது பதவிக்காலத்தின் முடிவில் டிரம்ப் 82வது வயதை எட்டியிருப்பார். அவரிடம், "நாட்டின் மிகவும் கடினமான வேலையில்" தொடர்ந்து இருக்க விரும்புகிறீர்களா என்று கேட்கப்பட்ட போது, "எனக்கு வேலை செய்வது பிடிக்கும்," என்று சிரித்தபடி பதிலளித்தார். இது குறித்து டிரம்ப் கருத்து தெரிவிப்பது முதல் முறையல்ல. ஜனவரி மாதத்தில் அவர் ஆதரவாளர்களிடம், "ஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்லது மூன்று முறை அல்லது நான்கு முறை அதிபராக பணியாற்றுவது என் வாழ்க்கையின் மிகப்பெரிய மரியாதையாக இருக்கும்," என்று கூறினார். ஆனால் பின்னர், அது "போலி செய்தி ஊடகங்களுக்காக" சொல்லப்பட்ட நகைச்சுவை என விளக்கம் அளித்தார். ஏப்ரல் மாதத்தில், டிரம்பின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் வணிகக் கடை "டிரம்ப் 2028" என்ற வாசகத்துடன் தொப்பியை 50 டாலருக்கு விற்பனை செய்யத் தொடங்கியது. அதற்கான விளம்பரப் படத்தில் அவரது மகன் எரிக் டிரம்ப் அந்தத் தொப்பியை அணிந்திருந்தார். அந்தப் பக்கத்தில் "எதிர்காலம் பிரகாசமாகத் தெரிகிறது'' என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது. அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது? அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் யாரும் மூன்றாவது முறையாக அதிபராகப் பதவி வகிக்க முடியாது என்று தெளிவாகக் கூறுகிறது. "யாரும் இரண்டு முறைக்கு மேல் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படக்கூடாது. வேறு ஒருவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிக்காலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அதிபராக இருந்தவரும் அடுத்த ஒரு முறைக்கு மேல் தேர்ந்தெடுக்கப்படக்கூடாது" என அதன் 22வது திருத்தம் கூறுகிறது. அரசியலமைப்பை மாற்ற வேண்டும் என்றால், செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஒப்புதலும், மாகாண அரசுகளில் முக்கால்வாசி அரசுகளின் ஒப்புதலும் தேவைப்படும். டொனால்ட் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கட்டுப்படுத்தி வந்தாலும், அரசியலமைப்பை மாற்றத் தேவையான அளவுக்கு அதனிடம் பெரும்பான்மை இல்லை. மேலும் , 50 மாகாணங்களில் 18 மாகாண சட்டமன்றங்கள் ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளன. பட மூலாதாரம், Getty Images டிரம்ப் எப்படி மூன்றாவது முறையாக அதிபராக முடியும்? அரசியலமைப்பில் ஒரு ஓட்டை இருப்பதாகவும், அது இதுவரை நீதிமன்றத்தில் சோதிக்கப்படவில்லை என்றும் டிரம்பின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். 22வது திருத்தம் ஒருவரை இரண்டு முறைக்கு மேல் அதிபர் பதவிக்கு "தேர்ந்தெடுக்கப்படுவதை" மட்டுமே வெளிப்படையாகத் தடை செய்கிறது. ஆனால், "அதிபர் பதவி விலகிய பின் மற்றொருவர் பதவி ஏற்பது" பற்றி எதுவும் கூறவில்லை என்று அவர்கள் வாதிடுகின்றனர். அந்தக் கோட்பாட்டின்படி, 2028 தேர்தலில் டொனால்ட் டிரம்ப் மற்றொரு வேட்பாளரின், ஒருவேளை தற்போதைய துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் துணை அதிபர் வேட்பாளராக தேர்தலில் நிற்கலாம். அவர்கள் வெற்றி பெற்றால், புதிய அதிபர் பதவியேற்று உடனடியாக ராஜினாமா செய்யலாம். அதனால், டிரம்ப் மீண்டும் அதிபராக பொறுப்பேற்கலாம். டிரம்பின் முன்னாள் ஆலோசகரும் பாட்காஸ்டருமான ஸ்டீவ் பானன் 'தி எகானாமிஸ்ட்' இதழுக்கு அளித்த பேட்டியில், "டிரம்ப் 2028-இல் மீண்டும் அதிபராக இருப்பார். மக்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்றார். மேலும், "சரியான நேரத்தில் அந்தத் திட்டம் என்ன என்பதை நாங்கள் வெளிப்படுத்துவோம்," என்றும் கூறினார். ஆனால், டிரம்ப் தான் அந்த யோசனையை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. "மக்கள் அதை விரும்புவார்கள் என நினைக்கவில்லை. அது சரியாக இருக்காது" என்று டிரம்ப் கூறினார். மூன்றாவது முறையாக அதிபர் பதவி வகிப்பதற்கான வாய்ப்பை டிரம்ப் திறந்து வைத்திருந்தாலும், அதை எப்படிச் செய்வார் என்பதற்கு டிரம்ப் இதுவரை தெளிவான விளக்கம் தரவில்லை. பட மூலாதாரம், Getty Images டிரம்ப் மூன்றாவது முறையாக பதவியேற்பதை யார் எதிர்க்கிறார்கள்? ஜனநாயகக் கட்சியினர் இதனை கடுமையாக எதிர்த்துள்ளனர். "அரசாங்கத்தைக் கைப்பற்றி நமது ஜனநாயக அமைப்பை அழிப்பதற்கான அவரது தெளிவான முயற்சியில் இது மற்றொரு ஆபத்தான படி" என்று நியூயார்க் நாடாளுமன்ற உறுப்பினர் டேனியல் கோல்ட்மேன் கூறினார். அவர், டிரம்பின் முதல் பதவி நீக்க விசாரணையில் தலைமை வழக்கறிஞராக பணியாற்றியவர். "அமெரிக்க நாடாளுமன்றத்தில் உள்ள குடியரசுக் கட்சியினர் உண்மையாக அரசியலமைப்பை மதிப்பவர்களாக இருந்தால், மூன்றாவது முறையாக பதவி வகிக்க வேண்டும் என்ற டிரம்பின் ஆசையை வெளிப்படையாக எதிர்க்க வேண்டும்," என்றும் அவர் வலியுறுத்தினார். டிரம்பின் சொந்தக் கட்சிக்குள்ளும் இதைப் பற்றிய எதிர்மறையான கருத்துகள் உள்ளன. குடியரசுக் கட்சி செனட்டர் மார்க்வேன் முல்லின், பிப்ரவரி மாதத்தில், டிரம்பை மீண்டும் வெள்ளை மாளிகைக்கு கொண்டுவரும் முயற்சியை ஆதரிக்க மாட்டேன் என்றார். "அமெரிக்க மக்கள் முடிவு செய்யாவிட்டால், நான் அரசியலமைப்பை மாற்றப் போவதில்லை" என்று அவர் என்பிசியிடம் தெரிவித்தார். அதேபோல், குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாம் கோல், இந்த யோசனை "தீவிரமாக பேசக்கூடிய அளவுக்கு யதார்த்தமானதல்ல, மிகவும் கற்பனையானது" என்று குறிப்பிட்டார். சட்ட வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்? நோட்ரே டேம் பல்கலைக்கழகத்தின் தேர்தல் சட்டப் பேராசிரியரான டெரெக் முல்லர், அரசியலமைப்பின் 12வது திருத்தம் "அரசியலமைப்புச் சட்ட ரீதியாக அதிபர் பதவிக்கு தகுதியற்ற எந்தவொரு நபரும் அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கு தகுதி பெற முடியாது" எனக் கூறுகிறது என்றார். அதாவது, ஒரு நபர் இரண்டு முறை அதிபராகப் பதவி வகித்திருந்தால், அவர் துணை அதிபர் வேட்பாளராகப் போட்டியிட முடியாது என்று அவர் விளக்கினார். "அதிபர் பதவிக்கால வரம்புகளை மீறுவதற்கு 'ஒரு வித்தியாசமான வழி' எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை" என்றும் முல்லர் கூறினார். அதேபோல், பாஸ்டனில் உள்ள நார்த்ஈஸ்டன் பல்கலைக்கழகத்தின் அரசியலமைப்புச் சட்ட பேராசிரியர் ஜெரமி பால், சிபிஎஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், "மூன்றாவது முறையாக அதிபர் பதவியேற்க எந்த நம்பகமான சட்ட வாதங்களும் இல்லை" என்று குறிப்பிட்டார். யாராவது இரண்டு முறைக்கு மேல் பதவி வகித்திருக்கிறார்களா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இரண்டு முறைக்கு மேல் பதவி வகித்த ஒரே அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட். அமெரிக்காவில் நான்கு முறை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே நபர், பிராங்க்ளின் டெலானோ ரூஸ்வெல்ட். ஆனால், தனது நான்காவது பதவிக்காலம் தொடங்கிய மூன்று மாதங்களுக்குப் பிறகு, 1945 ஏப்ரல் மாதத்தில் அவர் மரணமடைந்தார். ரூஸ்வெல்ட் தலைமையிலான காலம், பெரும் பொருளாதார மந்தநிலை மற்றும் இரண்டாம் உலகப் போர் ஆகிய இரு முக்கியமான நிகழ்வுகள் நடந்தன. இவைதான் அவர் நீண்டகாலம் பதவியில் இருந்ததற்கான முக்கியக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. அந்த நேரத்தில், அமெரிக்க அதிபர்கள் இரண்டு முறை மட்டுமே பதவி வகிக்க வேண்டும் என்ற சட்ட வரம்பு இல்லை. அது ஜார்ஜ் வாஷிங்டன் 1796-ல் மூன்றாவது முறை போட்டியிட மறுத்ததிலிருந்து தொடங்கிய பாரம்பரியம் மட்டுமே. ரூஸ்வெல்ட்டின் நீண்டகால ஆட்சியால், இந்தப் பாரம்பரியம் சட்டமாக்கப்பட்டது. 1951-ல் 22வது திருத்தம் இயற்றப்பட்டு, இரண்டு முறைக்கு மேல் அதிபராக முடியாது என்று சட்டமானது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpwvyrl4y5yo
-
வைட்டமின் பி12 குறைபாடு - எந்தெந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்?
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் சுர்பி குப்தா பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் மே 2025-இல், ஐரோப்பிய ஜர்னல் ஆஃப் கார்டியோவாஸ்குலர் மெடிசின் இந்தியாவில் வைட்டமின் பி -12 குறைபாடு குறித்து ஒரு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டது. வைட்டமின் பி -12 குறைபாடு குறித்த பல ஆய்வு தரவுகள் இதில் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த பகுப்பாய்வில் சேர்க்கப்பட்ட 20 ஆய்வுகளில் மொத்தம் 18,750 பங்கேற்பாளர்கள் இருந்தனர். பங்கேற்பாளர்களில் 51 சதவீதம் பேருக்கு வைட்டமின் பி -12 குறைபாடு கண்டறியப்பட்டது. ஆய்வுக் கட்டுரையின்படி, ஆய்வில் பங்கேற்ற சைவ உணவு உண்பவர்களில் 65 சதவீதம் பேர் குறைபாடு கொண்டவர்களாக இருந்தனர். வைட்டமின் பி -12 என்றால் என்ன? அதன் குறைபாடு என்ன பிரச்னைகளை ஏற்படுத்தும்? அதை சரிசெய்ய என்ன செய்ய முடியும்? இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க, ஊட்டச்சத்து நிபுணர் தீப்தி கதுஜா மற்றும் டெல்லி டயட்ஸின் நிறுவனர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் அம்ரிதா மிஸ்ரா ஆகியோருடன் பேசினோம். வைட்டமின் பி 12 நமக்கு ஏன் தேவை? பல உடல் செயல்முறைகளுக்கு வைட்டமின்கள் தேவைப்படுகின்றன. இரண்டு வகையான வைட்டமின்கள் உள்ளன. அவை வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே போன்ற கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள். நீரில் கரையக்கூடிய வைட்டமின்களில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி -12 உள்ளிட்ட பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் அடங்கும். "வைட்டமின் பி -12 ஒரு நுண்ணூட்டச்சத்து ஆகும். இது சிறிய அளவில் தேவைப்பட்டாலும், இது நம் உடலில் முக்கியப் பங்கு வகிக்கிறது" என்றார் ஊட்டச்சத்து நிபுணர் தீப்தி கதுஜா. வைட்டமின் பி -12 உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவுக்கும் அவசியம். தீப்தி கதுஜாவின் கூற்றுப்படி, உணவை ஆற்றலாக மாற்றுவது, புதிய மூலக்கூறுகள் உருவாக்குதல் உள்ளிட்ட உயிரணுக்களில் ஏற்படும் அத்தியாவசிய வேதியியல் எதிர்வினைகளில் வைட்டமின் பி -12 முக்கியப் பங்கு வகிக்கிறது. நமது நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கும் இது முக்கியமானது என்று அவர் கூறுகிறார். இது நமது ரத்த அணுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இது நமது நோயெதிர்ப்பு மண்டலத்திலும் தாக்கம் செலுத்துகிறது. சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்க வைட்டமின் பி-12 அவசியம் என்று ஊட்டச்சத்து நிபுணர் அம்ரிதா மிஸ்ரா கூறுகிறார். இது உடல் முழுவதும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்ல வேலை செய்கிறது. பட மூலாதாரம், Getty Images எந்த உணவுகளில் வைட்டமின் பி -12 உள்ளது? வைட்டமின் பி -12 பிரதானமாக இறைச்சியில் காணப்படுகிறது. தாவர உணவுகள் செறிவூட்டப்படாவிட்டால் வைட்டமின் பி 12 கொண்டிருக்காது. இறைச்சி, மீன், முட்டை, பால் மற்றும் பிற பால் பொருட்களில் வைட்டமின் பி -12 உள்ளது. இது முட்டை, கோழி, சிவப்பு இறைச்சி, மீன், கடல் உணவு மற்றும் பால் மற்றும் பால் பொருட்களில் காணப்படுகிறது. சப்ளிமெண்ட்ஸும் கிடைக்கின்றன. வைட்டமின் பி -12 மாத்திரைகள் மற்றும் ஊசி மருந்துகளும் கிடைக்கின்றன என்று அம்ரிதா மிஸ்ரா விளக்குகிறார். இருப்பினும், எந்தவொரு சப்ளிமெண்ட்ஸையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு மருத்துவரை அணுகுவது முக்கியம். "வைட்டமின் பி -12 சப்ளிமெண்ட்ஸ் ஒரு மருத்துவரின் வழிகாட்டுதலின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட காலத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்." என்று தீப்தி கதுஜா கூறுகிறார். வைட்டமின் பி -12 குறைபாடு மோசமான உணவுப் பழக்கம், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பால் பொருட்களை போதுமான அளவு உட்கொள்ளாதது ஆகியவை வைட்டமின் பி 12 குறைபாட்டிற்கு காரணம் என்று அம்ரிதா மிஸ்ரா கூறுகிறார். வைட்டமின் பி 12 கொண்ட உணவுகளை உட்கொள்பவர்களுக்கும் குறைபாடு ஏற்படலாம். காரணம் அவர்களின் உடலால் அதை கிரகித்துக் கொள்ள முடியாமல் இருக்கும். அதாவது, நீங்கள் பி12 கொண்ட உணவை உட்கொள்கிறீர்கள், ஆனால் அந்த உணவின் விளைவுகள் உங்கள் உடலில் தெரியவில்லை. இதன் பொருள் உங்கள் உடல் அதை சரியாக உள்வாங்கிக் கொள்ளவில்லை என்பதே. பட மூலாதாரம், Getty Images உடலுக்கு வைட்டமின் பி -12 எவ்வாறு கிடைக்கிறது? வைட்டமின் பி -12 நம் உடலில் எடுத்துக் கொள்ளப்படுவது ஒரு சிக்கலான செயல்முறையாகும். உணவில், வைட்டமின் பி -12 புரதங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின்படி (என்ஐஎச்), வைட்டமின் பி -12 உடலால் இரண்டு கட்டங்களில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. முதல் கட்டத்தில், வயிற்றில் உள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலம் வைட்டமின் பி -12 ஐ உணவில் உள்ள புரதங்களிலிருந்து பிரிக்கிறது. இரண்டாவது கட்டத்தில், புரதத்திலிருந்து பிரிக்கப்பட்ட வைட்டமின் பி -12 வயிற்றில் உற்பத்தி செய்யப்படும் ஒரு புரதத்துடன் பிணைக்கப்படுகிறது. இது உள்ளார்ந்த காரணி எனப்படுகிறது, பின்னர் உடலில் உறிஞ்சப்படுகிறது. சப்ளிமெண்ட்ஸில் உள்ள வைட்டமின் பி -12 எந்த புரதத்திற்கும் பிணைக்கப்படவில்லை. எனவே அதனை உடல் உள்ளே எடுத்துக் கொள்ள முதல் கட்டம் தேவையில்லை. இருப்பினும், சப்ளிமெண்ட்ஸில் உள்ள வைட்டமின் பி -12 உடலில் உறிஞ்சப்படுவதற்கான உள்ளார்ந்த காரணியுடன் பிணைக்கப்பட வேண்டும். வைட்டமின் பி -12 உடலுக்குள் எடுத்துக் கொள்ளப்படும் செயல்முறையின் எந்தக் கட்டத்திலும் அது சரியாக நடக்கவில்லை என்றால், குறைபாடு ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. என்ஐஎச்-ன் படி, வைட்டமின் பி -12 குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளவர்கள் போதுமான வைட்டமின் பி -12 பெறாதவர்கள் அல்லது உடல்கள் அதை சரியாக உறிஞ்சாதவர்களாக இருக்கலாம். உதாரணமாக வயதானவர்கள்: வயதாகும்போது, பலரின் வயிற்றில் போதுமான ஹைட்ரோகுளோரிக் அமிலம் இருக்காது. இதனால் வைட்டமின் பி -12 ஐ உணவில் இருந்து உடல் எடுத்துக் கொள்வது கடினம். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வைட்டமின் பி -12 செறிவூட்டப்பட்ட உணவுகள் அல்லது சப்ளிமெண்ட்ஸ் தேவைப்படலாம். இரைப்பை அழற்சி உள்ளவர்கள்: இந்த தன்னுடல் தாக்க நோய் ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் வயிற்றில் உள்ளார்ந்த காரணியின் உற்பத்தியில் குறைவை ஏற்படுத்துகிறது. இது வைட்டமின் பி -12 ஐ போதுமான அளவு உறிஞ்சுவதைத் தடுக்கிறது. பெர்னிசியஸ் ரத்த சோகை உள்ளவர்கள்: இந்த நிலையில், உடல் உள்ளார்ந்த காரணியை உருவாக்காது. இது வைட்டமின் பி -12 ஐ உறிஞ்சுவதற்கு அவசியமானது. அத்தகையவர்களின் உடல் உணவு மற்றும் சப்ளிமெண்ட்ஸ் இரண்டிலிருந்தும் வைட்டமின் பி -12 ஐ எடுத்துக் கொள்ள முடியாது. அவர்களுக்கு மருத்துவர்கள் பொதுவாக வைட்டமின் பி -12 ஊசி மூலம் சிகிச்சையளிக்கிறார்கள். வயிறு அல்லது குடல் அறுவை சிகிச்சை செய்தவர்கள்: வயிற்றின் ஒரு பகுதியை அகற்றுவது போன்ற அறுவை சிகிச்சை உடலின் ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் உள்ளார்ந்த காரணியின் உற்பத்தியைக் குறைக்கும். இதனால் வைட்டமின் பி -12 ஐ உறிஞ்சுவது கடினமாகும். சைவ உணவு உண்பவர்கள் மற்றும் பால் பொருட்களை தவிர்ப்பவர்கள், அசைவ உணவுகளை குறைவாக அல்லது சாப்பிடாதவர்கள் தங்கள் உணவில் இருந்து போதுமான வைட்டமின் பி -12 பெறாமல் போகலாம். பட மூலாதாரம், Getty Images உடலில் வைட்டமின் பி -12 குறைபாட்டின் அறிகுறிகள் மற்றும் விளைவுகள் வைட்டமின் பி -12 குறைபாட்டின் அறிகுறிகள் தோன்ற பல ஆண்டுகள் ஆகலாம். "வைட்டமின் பி -12 குறைபாடு உருவாக காலம் எடுக்கும். எனவே அதன் அறிகுறிகளும் படிப்படியாக தோன்றி காலப்போக்கில் மிகவும் கடுமையானதாகிவிடும்." என்று தீப்தி கதுஜா விளக்குகிறார். வைட்டமின் பி 12 குறைபாட்டின் அறிகுறிகள்- உங்கள் கைகள் அல்லது கால்களில் விசித்திரமான, உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு நடப்பதில் சிரமம் (சமநிலை பிரச்னைகள்) பெர்னிசியஸ் ரத்த சோகை நாக்கு வீக்கம் சிந்திப்பதிலும் புரிந்துகொள்வதிலும் சிரமம் அல்லது ஞாபக மறதி தளர்வு சோர்வு தோல் மஞ்சள் நிறமாதல் மனநிலை மாற்றங்கள் அல்லது எரிச்சல் செறிவு குறைதல் ஒருவருக்கு வைட்டமின் பி -12 குறைபாடு இருக்கிறதா என்பதை வைட்டமின் பி -12 சோதனை மூலம் தீர்மானிக்க முடியும், இது ரத்த பரிசோதனையாகும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9v1dymwnkpo
-
தெற்காசிய தடகள செம்பியன்ஷிப் - இலங்கைக்கு இரண்டாம் இடம்
இலங்கை மெய்வல்லுநர் அணியினர் நாடு திரும்பினர் Published By: Vishnu 28 Oct, 2025 | 07:24 PM (நெவில் அன்தனி) இந்தியாவில் நடைபெற்ற 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் 16 தங்கம், 14 வெள்ளி, 10 வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்து இரண்டாம் இடத்தைப் பெற்ற இலங்கை மெய்வல்லுநர் இன்று நாடு திரும்பினர். அவர்களை விமான நிலையத்தில் வைத்து விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே உட்பட அமைச்சு அதிகாரிகள் வரவேற்றனர். தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் இலங்கையின் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க பத்திரகே அதிசிறந்த மெய்வல்லுநருக்கான விருதை வென்றெடுத்தார். அத்துடன் பாத்திமா ஷபியா யாமிக் 100 மீற்றர், 200 மீற்றர், 4 x 100 மீற்றர் ஆகிய 3 போட்டிகளில் புதிய போட்டி சாதனைகளுடன் தங்கப் பதக்கங்களை சுவீகரித்திருந்தார். ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் மலையக வீரர் விக்னராஜ் வக்ஷன் வெள்ளிப் பதக்கத்தையும் குண்டு எறிதல் போட்டியில் யாழ். பருத்தித்துறை வீரர் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ் வெண்கலப் பதக்கமும் வென்றனர். https://www.virakesari.lk/article/228925
-
கருத்து படங்கள்
அததெரண கருத்துப் படம்.
-
அரச சேவையில் மேலும் 8000 ஆட்சேர்ப்புக்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்
Published By: Vishnu 29 Oct, 2025 | 12:43 AM (எம்.மனோசித்ரா) அரச சேவையில் ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணிக்குழாம் முகாமைத்துவத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளை அமுல்படுத்தும் வகையில் 22 துறைகளில் சுமார் 8000 ஆட்சேர்ப்புக்களும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச சேவையில் ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்து தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் நேரச் சட்டகத்தை அடையாளங் கண்டு, அதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதமரின் செயலாளரின் தலைமையில் உத்தியோகத்தர் குழுவொன்றை நியமிப்பதற்காக கடந்த ஆண்டு டிசம்பர3 30ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த குழுவுக்கு அந்தந்த அமைச்சுக்களில் குறித்த அமைச்சின் கீழ் இயங்குகின்ற திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் நிலவுகின்ற பதவி வெற்றிடங்களைப் நிரப்புவதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, கடந்த 2ஆம் திகதி இடம்பெற்ற குழுக் கூட்டத்தில் விதந்துரைகள் முன்வைக்கப்பட்டன. அந்த விதந்துரைகளுக்கமைய அந்தந்த அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு 79 ஆட்சேர்ப்புக்களுக்கும், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் 120 ஆட்சேர்ப்புக்களுக்கும், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சில் 44 ஆட்சேர்ப்புக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சில் 17 ஆட்சேர்ப்புக்களுக்கும், விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சில் 123 ஆட்சேர்ப்புக்களுக்கும், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சில் ஒரு ஆட்சேர்ப்புக்கும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் 310 ஆட்சேர்ப்புக்களுக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மீன்பிடி, நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சிர் ஒரு ஆட்சேர்ப்புக்கும், டிஜிட்டல் பொருளாதார அமைச்சில் ஒரு ஆட்சேர்ப்புக்கும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சில் 48 ஆட்சேர்ப்புக்களுக்கும், வெளி விவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சில் 54 ஆட்சேர்ப்புக்களுக்கும், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மறும் சமுதாய உட்கட்டமைப்பு அமைச்சில் 6 ஆட்சேர்ப்புக்களுக்கும், இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சில் 355 ஆட்சேர்ப்புக்களுக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சில் 5,198 ஆட்சேர்ப்புக்களுக்கும், பெருந்தோட்ட மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சில் 213 ஆட்சேர்ப்புக்களுக்கும், புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சு 1,261 ஆட்சேர்ப்புக்களுக்கும், தேசிய பொலிஸ் ஆணைக்குழு இரு ஆட்சேர்ப்புக்களுக்கும், வடக்கு மாகாண சபையில் 115 ஆட்சேர்ப்புக்களுக்கும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. சப்பிரகமுவ மாகாண சபையில் 11 ஆட்சேர்ப்புக்களுக்கும், வடமேல் மாகாண சபையில் 85 ஆட்சேர்ப்புக்களுக்கும், வடமத்திய மாகாண சபையில் 89 ஆட்சேர்ப்புக்களுக்கும், மேல் மாகாண சபை 414 ஆட்சேர்ப்புக்களுக்கும் என ஒட்டுமொத்தமாக 8,547 ஆட்சேர்ப்புக்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கு முன்னர் கடந்த பெப்ரவரியில் 2003 ஆட்சேர்ப்புக்களுக்கும், மார்ச்சில் 5882 ஆட்சேர்ப்புக்களுக்கும், மே மாதம் 15 073 ஆட்சேர்ப்புக்களுக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/228932
-
வங்கக் கடலில் புயல் உருவாகிறதா? - எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை?
கரையைக் கடந்த பிறகும் புயலாகவே நீடிக்கும் 'மோன்தா' - 8 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை பட மூலாதாரம்,IMD படக்குறிப்பு,ஆந்திராவில் கரையைக் கடந்த பின்னரும் புயலாகவே நீடிக்கும் 'மோன்தா' (இந்திய வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் இருந்து) 29 அக்டோபர் 2025, 01:53 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆந்திராவில் கரையைக் கடந்த பிறகும் புயலாகவே நீடிக்கும் 'மோன்தா' அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மோன்தா புயல் வடக்கு, வட மேற்கு திசையில் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் கடந்த ஆறு மணி நேரங்களில் நகர்ந்துள்ளது. ஆந்திராவில் நர்சாபூரிலிருந்து வடமேற்கு திசையில் 80 கி.மீ தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து மேற்கில் 100 கி.மீ தொலைவிலும் புயல் நிலைக் கொண்டுள்ளது. இது அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதற்கு அடுத்த ஆறு மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக, மோன்தா புயல் ஆந்திராவில் மச்சிலிப்பட்டினம் மற்றும் காக்கிநாடா இடையே நர்சபூர் என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 11:30 மணி முதல் அதிகாலை 12:30 மணி வரை கரையைக் கடந்ததாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. எட்டு மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பிஹார் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும் புதுவையின் ஏனாம் பகுதியிலும், தெற்கு ஒடிசாவிலும் இன்று அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும், ஆங்காங்கே அதி கனமழை பெய்யக்கூடும். அதே போன்று வடக்கு ஒடிசாவிலும் ஆங்காங்கே கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவிலும், சத்தீஸ்கரிலும் இன்று அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், ஆங்காங்கே கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படும் - மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை ஆந்திரா மற்றும் ஏனாம் கடற்கரையோரம் காற்று மணிக்கு 75 முதல் 85 கி.மீ வேகத்திலும் இடையிடையே 95 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். காற்றின் வேகம் இன்று முற்பகல் நேரத்தில் மணிக்கு 55 முதல் 65 கி.மீ வேகமாக குறையும். தமிழக, புதுவை கரையோரங்களில் காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இன்று மாலையில் காற்றின் வேகம் மணிக்கு 35 கி.மீ முதல் 45 கி.மீ ஆக குறையும். இதனால் இந்தப் பகுதிகளில் கடல் மிகுந்த சீற்றத்துடன் இருக்க அதிக வாய்ப்புள்ளது என்றும் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடலில் ஆந்திர, தமிழக, புதுவை கரையோர பகுதிகளில் மீனவர்கள் இன்று கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமான சேவை பாதிப்பு மோன்தா புயல் காரணமாக, விஜயவாடாவில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. விஜயவாடா, விசாகப்பட்டினம் மற்றும் ராஜமுந்திரிக்கு செல்லும் பயணிகள் விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் விமான சேவைக்கான வலைத்தளத்தைப் பார்க்க வேண்டும் என்றும் இண்டிகோ அறிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cddr3rm9gn1o
-
கரூர் சம்பவம் – கண்ணீர்மல்க மன்னிப்பு கோரினார் விஜய்
கரூர் நெரிசலில் இறந்தவர்கள் குடும்பத்திடம் விஜய் பேசியது என்ன? பட மூலாதாரம், TVK கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை அக்டோபர் 27 அன்று மாமல்லபுரத்தில் நேரில் சந்தித்து அக்கட்சியின் தலைவர் விஜய் ஆறுதல் கூறியுள்ளார். "குடும்பத்தில் ஒருவனாக இருந்து உதவி செய்வேன்" என, விஜய் உறுதியளித்ததாக நிகழ்வில் பங்கேற்றவர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். ஆனால், இந்நிகழ்வில் நான்கு குடும்பங்கள் பங்கேற்கவில்லை. நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு 30 நாட்களுக்குப் பிறகு விஜய் சந்தித்ததை பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எப்படிப் பார்க்கின்றன? அவர்களிடம் விஜய் பேசியது என்ன? கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டெம்பர் 27 அன்று நடைபெற்ற தவெக பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரில் ஆறுதல் கூறுவதற்கு தவெக தலைவர் விஜய் உள்பட அக்கட்சியின் நிர்வாகிகள் செல்லாதது விமர்சனத்தை ஏற்படுத்தியது. அதேநேரம், கரூர் சம்பவம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை விஜய் வெளியிட்டார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணத் தொகையை தமிழ்நாடு அரசு அறிவித்தது. தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்ச ரூபாய் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை இரண்டு வாரங்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஒத்திவைப்பதாக, அக்டோபர் 1 அன்று அக்கட்சியின் சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில் கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் வீடியோ கால் அழைப்பின் மூலம் விஜய் பேசினார். படக்குறிப்பு, கரூரில் கடந்த செப்டெம்பர் 27 அன்று நடைபெற்ற தவெக பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர் (கோப்புப் படம்) 2 குடும்பங்களுக்கு வரவு வைக்கப்படாத நிதி தவெக சார்பில் அறிவிக்கப்பட்ட 20 லட்ச ரூபாய் நிவாரண நிதி தீபாவளிக்கு ஓரிரு நாட்கள் முன்னதாக 39 குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டதாக நாளேடுகளில் செய்தி வெளியானது. இரண்டு குடும்பங்களுக்கு நிவாரண நிதி செல்லவில்லை என கூறப்படுவது குறித்து தவெக திருச்சி மண்டல வழக்கறிஞர் அணியின் இணை ஒருங்கிணைப்பாளர் அரசுவிடம் பிபிசி தமிழ் கேட்டது. "வங்கிக் கணக்குகளைக் கொடுப்பதில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் குழப்பம் நீடித்ததால் வரவு வைக்கப்படவில்லை. தீபாவளியை ஒட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டதால் தாமதம் ஏற்பட்டது. வங்கிக் கணக்கு விவரங்கள் கிடைத்த பிறகு வரவு வைக்கப்படும்" எனக் கூறினார். கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கில் முதல் தகவல் அறிக்கையை மத்திய புலனாய்வுத்துறை தாக்கல் செய்துள்ள நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை அக்டோபர் 27 அன்று மாமல்லபுரத்துக்கு அழைத்து தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார். பட மூலாதாரம், TVK படக்குறிப்பு, கோப்புப் படம் விஜய் பேசியது என்ன? மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. , உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை கரூரில் இருந்து ஆம்னி பேருந்துகள் மூலம் தவெக நிர்வாகிகள் அழைத்து வந்தனர். திங்கள்கிழமையன்று காலை சுமார் 8.30 மணியளவில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து விஜய் ஆறுதல் கூறியுள்ளார். உயிரிழந்தவர்களின் படங்களுக்கு தனித்தனியாக மலர் அஞ்சலி செலுத்திய விஜய், பின்னர் தங்களுக்கு ஆறுதல் கூறியதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். ஆனால், சந்திப்பின்போது பேசப்பட்ட விவரங்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல்களை தமிழக வெற்றிக் கழகம் வெளியிடவில்லை. "எங்களுக்கு இருந்த ஒரே மகனும் உயிரிழந்துவிட்ட வேதனையோடுதான் சென்றோம்" எனக் கூறுகிறார் முருகேசன். கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இவரது மகன் தாமரைக்கண்ணன் உயிரிழந்துவிட்டார். எம்.ஏ ஆங்கில இலக்கியம் முடித்துவிட்டு தரைவிரிப்பு ஒட்டும் வேலையைச் செய்து வந்ததாக முருகேசன் குறிப்பிட்டார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கரூருக்கு விஜய் வருவதைக் கேள்விப்பட்டு சென்றுள்ளான். இந்த விவரம் எதுவும் எனக்குத் தெரியாது. கூட்டத்தில் மயக்கம் போட்டு அவன் கீழே விழுந்துவிட்டதாக கூறினார்கள். அதிகாலை 2 மணியளவில் ஆஸ்பத்திரிக்கு போனபோது இறந்துவிட்டதாக சொன்னார்கள்" என்கிறார். "தாமரைக்கண்ணனுக்கு திருமணம் நடந்து ஓராண்டு கூட முடியவில்லை" எனக் கூறும் முருகேசன், "வாழ்க்கையைத் தொடங்கும்போதே என் மகன் இறந்துவிட்டான். மருமகளுக்கு மருத்துவர்கள் இந்த மாதம் பிரசவத்துக்குத் தேதி குறித்துள்ளனர். அதுதான் வேதனையை அதிகரிக்கிறது" எனவும் தெரிவித்தார். விஜய் ஆறுதல் கூறியது குறித்து விவரித்த முருகேசன், "மகன் இறந்துபோனதை நினைத்து அழுது கொண்டிருந்தோம். அப்போது எங்களிடம் பேசிய விஜய், 'வருத்தப்பட வேண்டாம். உங்களுக்கு என்ன தேவையோ அதை மகனாக செய்து தருகிறேன்' எனக் கூறினார்" என்கிறார். "விஜய் பேசும்போது கட்சி நிர்வாகிகள் யாரும் உடன் இல்லை" எனக் கூறிய முருகேசன், " ஒவ்வொருவருடனும் தனித்தனியாக வந்து அவர் பேசினார். கல்வி உதவித் தொகை, மருத்துவ உதவிகளைச் செய்து தருவதாகக் கூறினார். மருமகளுக்கு பிரசவ தேதி நெருங்குவதால் அதற்கான உதவிகளைச் செய்து தருகிறேன் என உறுதியளித்தார்" எனவும் தெரிவித்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கரூர் நிகழ்வில் உயிரிழந்த 41 பேரில் 11 பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள். கரூர் சம்பவம் குறித்த கேள்விக்கு விஜய் அளித்த பதில் கரூர் மாவட்டம் வடக்கு காந்தி கிராமம், அன்பு நகரை சேர்ந்த கிஷோர் என்பவர் நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பொறியியல் படித்து வந்தார். வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி கிஷோர் உயிரிழந்துவிட்டார். இவரின் தந்தை கணேஷ், கரூரில் உள்ள கூட்டுறவு சங்கம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். கணேஷிடம் பிபிசி தமிழ் பேசியது. "எனக்கு ஒரே ஒரு மகன்தான். மனைவியும் என்னை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். விஜய் வருவதால் கூட்டத்துக்குப் போய்விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றான். ஆனால், அவன் இறந்துபோய்விட்டதாக இரவு 2.30 மணிக்குத்தான் தெரியும்" என்கிறார். தொடர்ந்து பேசிய அவர், "மாமல்லபுரம் சென்றிருந்தோம். என்னிடம் விஜய் பேசும்போது, 'குடும்பத்தில் ஒருவனாக என்னை நினைத்துக் கொள்ளுங்கள். மகன் இல்லை எனக் கவலைப்பட வேண்டாம்' எனக் கூறினார். சுமார் ஐந்து நிமிடங்கள் என்னுடன் பேசினார்" என்கிறார். குடும்பத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக விஜய் உறுதியளித்ததாகக் கூறிய கணேஷ், " ஐந்து லட்ச ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு போடப்பட்டுள்ளதாக விஜய் கூறினார். அதில் தேவைப்படும் சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம் என்றார். தேவையான உதவிகளைச் செய்து தருவதாக உறுதியளித்தார்" எனக் குறிப்பிட்டார். "கரூர் சம்பவம் குறித்து ஏதேனும் தெரிவித்தாரா?" எனக் கேட்டபோது, " அதைப் பற்றி கேட்டபோது, 'என்ன நடந்தது என்றே தெரியவில்லை' எனக் கூறி தலைகுனிந்து கொண்டார். கரூர் சம்பவம் குறித்து வேறு எதையும் அவர் பேசவில்லை" எனக் கூறினார். மாமல்லபுரம் செல்லாத 4 குடும்பங்கள் மாமல்லபுரத்தில் நடந்த ஆறுதல் கூறும் நிகழ்வுக்கு உயிரிழந்த நான்கு பேரின் குடும்பத்தினர் செல்லவில்லை. அதில் வடிவேல் என்பவரின் குடும்பமும் ஒன்று. தேநீர் கடை ஒன்றை வடிவேல் நடத்தி வந்துள்ளார். 53 வயதான இவருக்கு மனைவியும் மகளும் உள்ளனர். இவரின் மகள் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். மாமல்லபுரத்தில் நடந்த ஆறுதல் கூறும் நிகழ்வுக்கு வடிவேலின் குடும்பத்தினர் வராதது குறித்து அவரது உறவினர் சரவணனிடம் பிபிசி தமிழ் பேசியது. "கூட்டத்துக்குச் சென்ற வடிவேல் இறந்துவிட்டார். அவர் இறந்து முப்பது நாள்கள் ஆகிவிட்டது. அதற்கான சடங்குகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதனால், 'எங்களால் வர முடியாது' எனக் கூறிவிட்டோம்" என்கிறார். "விஜயை இன்னொரு நாள் வந்து பார்ப்பதாக கூறிவிட்டோம்" எனக் கூறுகிறார் சரவணன். 20 லட்சத்தை திருப்பி அனுப்பிய குடும்பம் மாமல்லபுரத்தில் ஆறுதல் கூறும் சந்திப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தவெக தரப்பில் இருந்து வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட 20 லட்ச ரூபாயை திருப்பி அனுப்பிவிட்டதாக சங்கவி என்பவர் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். கரூர் மாவட்டம் கோடங்கிப்பட்டி கொங்கு நகரைச் சேர்ந்த இவரின் கணவர் ரமேஷ், கடந்த செப்டெம்பர் 27 அன்று தவெக பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டார். "நேரில் வந்து விஜய் ஆறுதல் சொல்வார் என்று தான் எதிர்பார்த்தோம். பணத்தை எதிர்பார்க்கவில்லை. பணத்தை வைத்து இறந்த உயிரை யாராலும் திருப்பித் தர முடியாது" என, செய்தியாளர்களிடம் ரமேஷின் மனைவி சங்கவி கூறியுள்ளார். "நாங்களாக தேடிச் சென்று விஜயைப் பார்ப்பதற்கு விருப்பம் இல்லை" எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், பாதிக்கப்பட்ட தங்களைத் தவிர்த்துவிட்டு தங்களின் வேறு சில உறவினர்களை சென்னைக்கு அழைத்துச் சென்று ஆறுதல் கூறும் நிகழ்வில் இடம்பெற வைத்ததாகவும் அவர் விமர்சித்துள்ளார். இதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தரப்பில் இருந்து விளக்கம் எதுவும் தரப்படவில்லை. கரூரில் இறந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரத்துக்கு அழைத்து வந்து விஜய் ஆறுதல் கூறியது சமூக ஊடகங்களில் விவாதப்பொருளாக மாறியது. இது புதிய அணுகுமுறையாக உள்ளதாகக் கூறியுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், "இந்த விவகாரத்தில் அக்கட்சியினரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் கருத்து கூற வேண்டும். நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை" எனக் கூறியுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp85zn1p58po
-
இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு தொடர்பில் சர்வதேச விசாரணையை முன்னெடுக்க ஒத்துழையுங்கள் - சுவிற்ஸர்லாந்து சமூக ஜனநாயகக் கட்சி
இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு தொடர்பில் சர்வதேச விசாரணையை முன்னெடுக்க ஒத்துழையுங்கள் - சுவிற்ஸர்லாந்து சமூக ஜனநாயகக் கட்சி ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றம் Published By: Vishnu 28 Oct, 2025 | 08:17 PM (நா.தனுஜா) இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்வதற்கு சுவிற்ஸர்லாந்து அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவேண்டும் எனவும் சுவிற்ஸர்லாந்து சமூக ஜனநாயகக் கட்சி அதன் மாநாட்டில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சர்வதேச மட்டத்தில் இயங்கிவரும் அரச சார்பற்ற அமைப்பான 'இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள்' எனும் அமைப்பினால் தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பு தொடர்பில் கடந்த வருடம் வெளியிடப்பட்ட சட்ட அறிக்கையில் உள்ள விடயங்களை அடிப்படையாகக்கொண்டு வரையப்பட்டிருக்கும் மேற்படி தீர்மானத்தில் 'ஈழத்தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் கட்டமைக்கப்பட்ட வன்முறைகள், படுகொலைகள், மிகமோசமான மனித உரிமை மீறல்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை அத்தீர்மானத்தில் இலங்கையில் இடம்பெற்ற மீறல்களை ஐக்கிய நாடுகள் இனவழிப்புப் பிரகடனத்தின்படி இனவழிப்பாகக் கருதமுடியுமா என்பது பற்றி சர்வதேச கட்டமைப்புக்களின் ஒத்துழைப்புடன் ஆராயுமாறு சுவிற்ஸர்லாந்து அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களின் பாதுகாப்பு, சுவிற்ஸர்லாந்தில் வாழும் புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பு, மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படுவதை முன்னிறுத்தி பல தசாப்தகாலமாக அவர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் என்பவற்றை உள்வாங்கக்கூடியவகையில் மிகத்தெளிவான மனித உரிமைகள்சார் சுவிற்ஸர்லாந்து வெளிநாட்டுக்கொள்கை இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்றும் அத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கும் சுவிற்ஸர்லாந்து அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் எனவும் அதில் கோரப்பட்டுள்ளது. மேலும் வருடாந்தம் மேமாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று நடைபெறும் நிகழ்வு உள்ளிட்ட நினைவுகூரல் நிகழ்வுகள் எவ்வித இடையூறுமின்றி முன்னெடுக்கப்படுவதற்கு இடமளிக்கப்படவேண்டும் எனவும், சுவிற்ஸர்லாந்தில் உள்ள தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களின் பாதுகாப்பும், நீதியும் உறுதிப்படுத்தப்படும் வரை அவர்களை மீண்டும் இலங்கைக்குத் திருப்பியனுப்புவது தவிர்க்கப்படவேண்டும் எனவும் அத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/228926