Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்கள், மாகாண அரச உத்தியோகத்தர்கள் மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய வாகன இறக்குமதி உரிமம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கட்டாய ஓய்வு பெறும் வயதெல்லை 65 வரை நீட்டித்து, பின்னர் ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக குறைக்கப்பட்ட நிலையில், அதற்கிடையிலான காலத்தில் 60 வயது பூர்த்தியான பின்னர் ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்காக இந்த வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்னவினால் வௌியிடப்பட்ட சுற்றறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர தேவைகளை பூர்த்தி செய்யும் உத்தியோகத்தர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய வாகன இறக்குமதி உரிமம் வழங்க கடந்த மார்ச் 11ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/301006
  2. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 6 மே 2024, 14:01 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் வசித்துவரும் 5 வயது சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரால் வளர்க்கப்பட்ட ராட்வெய்லர் நாய்கள் கடித்துக் குதறியுள்ளன. அந்தச் சிறுமி தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். வளர்ப்பு நாய்கள் தொடர்பான கட்டுப்பாடுகள் என்ன சொல்கின்றன? பூங்காவில் என்ன நடந்தது? சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளிக்கூடச் சாலையில் இருக்கும் பூங்காவின் காவலாளியாக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரகு என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி சோனியா, குழந்தை சுதக்ஷா ஆகியோருடன், பூங்காவில் உள்ள ஒரு அறையிலேயே வசித்துவருகிறார். தனது உறவினர் ஒருவர் இறந்துவிட்டதால், அதற்காக விழப்புரம் சென்றிருக்கிறார் ரகு. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று (மே 5) இரவு 9 மணியளவில், அந்தப் பூங்காவுக்கு எதிரில் வசிக்கும் புகழேந்தி என்பவர் தனது இரண்டு ராட்வய்லர் ரக நாய்களுடன் அந்தப் பூங்காவிற்கு வந்திருக்கிறார். அப்போது அந்தப் பூங்காவில் விளையாடி கொண்டிருந்த சுதக்ஷாவை நாய்கள் தாக்க ஆரம்பித்துள்ளன. அந்த நாய்களை புகழேந்தியால் கட்டுப்படுத்த முடியவில்லை. குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கே வந்த குழந்தையின் தாய் சோனியாவையும் நாய்கள் தாக்கியுள்ளன. இந்தத் தாக்குதலில், நாய்கள் குழந்தையின் தலைப் பகுதியில் உள்ள தோலைக் கடித்து குதறின. இதனால் தலையில் 11 அங்குலம் அளவுக்கு தோல் பிய்ந்து வந்துவிட்டது. இதற்குப் பிறகு அக்கம்பக்கத்தினர் வந்து நாயை விரட்டி, குழந்தையை மீட்டனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த குழந்தை, சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டது. அதன்பிறகு காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. நாயை வளர்த்த புகழேந்தி, அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். புகழேந்தி மீது ஐ.பி.சி 289-வது பிரிவு (மிருகங்கள் தொடர்பாக அலட்சியமான நடத்தை) ஐ.பி.சி 336 (பிறரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் செயல்படுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. நாய்கள் இரண்டும் அவரது வீட்டிற்குள்ளேயே இன்னும் இருக்கின்றன. தற்போது குழந்தை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டிருக்கிறது. படக்குறிப்பு,சம்பவம் நடந்த பூங்கா சென்னை மாநகர ஆணையர் சொன்னது என்ன? இதற்கிடையில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், "ராட்வய்லர் வகை நாய்களை வளர்க்கத் தடை இல்லையென்றாலும், அதற்கு மாநகராட்சியிடம் உரிமம் பெற வேண்டும்," என்றார். இச்சம்பவத்தில் அந்த உரிமத்தை நாயை வளர்ப்பவர் பெறவில்லை என்று குறிப்பிட்டார். இதற்குப் பிறகு, இந்தச் சம்பவம் நடந்த பூங்காவைப் பார்வையிட்ட அவர், "கடித்த நாயின் உரிமையாளர்கள் இப்போது இங்கே இல்லை. ஆகவே ஏதாவது தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் மூலம் நாயை அப்புறப்படுத்த யோசித்து வருகிறோம். ஒன்றிரண்டு நாட்களில் இது குறித்து முடிவு செய்வோம். தவிர, இதுபோன்ற நாய்களை வளர்ப்பதற்கு `கென்னல் கிளப் ஆஃப் இந்தியா` அமைப்பிடம் உரிமம் பெற்றிருந்தாலும் கூட மாநகராட்சியின் உரிமத்தையும் பெற வேண்டும்," என்றார். மேலும், "இதுபோன்ற நாய்களை வெளிநாடுகளில் சண்டைக்காக வளர்ப்பார்கள். அப்படி ஒரு நாயை, அதனைக் கட்டுப்படுத்தும் கயிறுகூட இல்லாமல் இவ்வளவு வீடுகள் இருக்கும் இடத்தில் அவிழ்த்து விடுவதாக இப்பகுதியினர் கூறுகிறார்கள். ஏற்கனவே இங்கிருக்கக் கூடிய கோழி ஒன்றை இந்த நாய்கள் கடித்துக் குதறியிருக்கின்றன. குழந்தைக்கு தலையில் மட்டுமல்லாமல் உடலிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது குழந்தை மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளது. இன்னும் சில நாட்களுக்குப் பிறகு குழந்தைக்கு பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை செய்யப்படும்," என்று தெரிவித்தார். பட மூலாதாரம்,RADHAKRISHNAN இந்தியாவில் நாய் பிரச்னை இந்தியாவில் நாய்கள் தொடர்பாக இருவிதமான பிரச்னைகள் உள்ளன. ஒன்று தெரு நாய்கள் தொடர்பான பிரச்னை. இரண்டாவதாக, வளர்ப்பு நாய்கள் - அதாவது ஆக்ரோஷமான வளர்ப்பு நாய்கள் - தொடர்பான பிரச்னை. தெரு நாய்களைப் பொருத்தவரை, அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த, உள்ளூராட்சி அமைப்புகள் தெரு நாய்களைப் பிடித்து அவற்றுக்கு கருத்தடை செய்து மீண்டும் தெருவிலேயே விட்டுவிடுகின்றன. மற்றொரு பக்கம், தனிநபர்கள் ஆக்ரோஷமான குணமுடைய நாய்களை வளர்ப்பது இந்தியாவின் பல நகரங்களில் பிரச்சனையாகவே நீடித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மார்ச் 12-ஆம் தேதி ஆக்ரோஷமான குணமுடைய நாய்களை வளர்ப்பதற்குக் கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ராட்வய்லர் நாய் (கோப்புப் படம்) - ஆக்ரோஷமான நாய் ரகங்களில் ஒன்று மீன் வளம், மிருக நலன், பால்வளத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலரான ஓ.பி.சௌத்ரி ஒரு சுற்றறிக்கையை எல்லா மாநில தலைமைச் செயலர்களுக்கும் அனுப்பினார். அந்தச் சுற்றறிக்கையில், "மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நாய் இனங்களை வைத்திருக்கவோ, வளர்க்கவோ, இனப்பெருக்கம் செய்விக்கவோ அனுமதியோ, உரிமமோ அளிக்க வேண்டாம்" எனக் கூறியிருந்தார். பல மாநிலங்களிலும் நாய் கடித்ததால் ஏற்பட்ட மரணங்களை அடுத்து இந்த சுற்றறிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்தச் சுற்றறிக்கையில் பிட்புல் டெர்ரியர், டோஸா இனு, அமெரிக்கன் ஸ்டஃப்போர்ட்ஷயர் டெர்ரியர், டோகோ அர்ஜென்டைனோ, அமெரிக்கன் புல்டாக், ராட்வய்லர் உள்ளிட்ட நாய் ரகங்களின் பெயர்கள் இதில் இடம்பெற்றிருந்தன. இதுபோன்ற நாய்களை வைத்திருப்பவர்கள் அவற்றுக்குக் கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றும் சுற்றறிக்கை கூறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தெரு நாய்ககளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த, உள்ளூராட்சி அமைப்புகள் தெரு நாய்களைப் பிடித்து அவற்றுக்கு கருத்தடை செய்து மீண்டும் தெருவிலேயே விட்டுவிடுகின்றன ஆனால், இந்தச் சுற்றறிக்கையை எதிர்த்து சில நாய் உரிமையாளர்கள் வழக்குத் தொடர்ந்த நிலையில், இந்தியாவில் உள்ள இரண்டு உயர் நீதிமன்றங்கள் இதற்குத் தடை விதித்தன. மேற்கு வங்கத்தில் தன்மய் தத்தா என்பவர் உயர் நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். இந்தியாவில் எந்தச் சட்டம் நாய் வளர்ப்பைத் தடை செய்கிறது என தனது மனுவில் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சுற்றறிக்கையின் ஒரு பகுதிக்குத் தடை விதித்தது. இந்த நாய்களை இறக்குமதி செய்யவும் விற்கவுமான தடையை ஏற்றுக்கொண்டது. அதேபோல, மார்ச் 19-ஆம் தேதி ராட்வய்லர் நாயை வளர்க்கும் ஒருவர் இந்தச் சுற்றறிக்கையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். நாய்கள் தொடர்பான பல தரப்பினரையும் ஆலோசிக்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியிருந்தார். இதையடுத்து, இந்த முடிவுகள் எதன் அடிப்படையில் எடுக்கப்பட்டனவோ, அதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி, இந்த சுற்றறிக்கைக்குத் தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வளர்ப்புப் பிராணிகளுக்கான உரிமம், அவற்றின் கழிவுகளை அப்புறப்படுத்துதல், இனப்பெருக்கம் ஆகியவை தொடர்பாக சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது நாய் வளர்ப்பதற்கான உரிமம் சென்னையைப் பொருத்தவரை, வளர்ப்புப் பிராணிகளை வளர்க்க சென்னை மாநகராட்சியிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆன்லைனிலும் பதிவுசெய்து கொள்ளலாம். இதற்கு 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் இந்த உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும். இந்த உரிமம், வளர்ப்புப் பிராணிகளின் கழிவுகளை அப்புறப்படுத்துதல், இனப்பெருக்கம் ஆகியவை தொடர்பாக சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது. ஆனால், ஒருவர் தனது வளர்ப்புப் பிராணியை பதிவு செய்யாமல் இருந்தால், பிரச்னை ஏற்படாமல் இருக்கும் வரை அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. உயர் ரக நாய்களை வளர்ப்பவர்கள் கென்னல் கிளப் ஆஃப் இந்தியாவில் பதிவு செய்கின்றனர். "கென்னல் கிளப் ஆஃப் இந்தியாவைப் பொருத்தவரை, நாய்களின் இனத் தூய்மை குறித்து மட்டுமே பதிவுசெய்கிறோம். ஒரு உயர் ரக நாய் இருந்தால், அதன் தாய்-தந்தை யார் என்பதை ஆராய்ந்து சான்றிதழ் அளிக்கிறோம். நாய்களை வளர்ப்பதற்கான உரிமம் எதையும் நாங்கள் தருவதில்லை," என்கிறார் அந்த அமைப்பைச் சேர்ந்த சி.வி.சுதர்ஸன். தமிழ்நாட்டில் தெருநாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக, மாநில அரசு கொள்கை ஒன்றை உருவாக்கிவருகிறது. இந்தக் கொள்கை இன்னும் வெளியிடப்படவில்லை. https://www.bbc.com/tamil/articles/c4n1xg77228o
  3. இஸ்ரேலின் எச்சரிக்கையை தொடர்ந்து ரஃபாவிலிருந்து பெருமளவு மக்கள் வெளியேறுகின்றனர் - பெரும் குழப்பநிலை Published By: RAJEEBAN 06 MAY, 2024 | 04:52 PM ரஃபாவிலிருந்து பொதுமக்கள் உடனடியாக வெளியேறவேண்டும் என உத்தரவுபிறப்பித்துள்ளதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் அங்கிருந்து வெளியேறிக்கொண்டிருக்கின்றனர். ரஃபாவின் கிழக்கு பகுதியில் வசிக்கும் மக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. எதிர்காலத்தில் ரஃபாவில் இஸ்ரேல் தனது இராணுவநடவடிக்கைகளை தீவிரப்படுத்தலாம் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் அறிவித்த மறுநாள் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. உங்களின் பாதுகாப்பிற்காக சோதனைசாவடிகளிற்கு அருகில் உள்ள மனிதாபிமான பகுதிக்கு உடனடியாக செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என இஸ்ரேலிய இராணுவத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அல்ரபாவின் அல்சவ்கா மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மட்டுப்படுத்த அளவிலான நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக இஸ்ரேலிய இராணுவத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் இடம் பெயர்ந்த மில்லியன் கணக்காண மக்கள் எகிப்து எல்லையில் உள்ள ரபாவில் தஞ்சமடைந்துள்ளனர். அச்சமடைந்த மக்கள் கால்நடையாகவும் அல்லது கழுதைகளின் மீதும் அல்லது தங்களின் உடமைகளை வாகனங்களில் ஏற்றியபடி வாகனங்களிலும் ரபாவிலிருந்து வெளியேறுகின்றனர். நேற்றிரவு இஸ்ரேல் மேற்கொண்ட விமானக்குண்டுவீச்சுகள் மக்களின் அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளதாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரஃபாவிலிருந்து நகரத்தின் மேற்கு பகுதி உட்பட நகரத்தில் கடும் பதற்றநிலை காணப்படுகின்றது பலர் வெளியேறுவதற்கு தீர்மானித்துள்ளனர் பலர் ஏற்கனவே வெளியேற ஆரம்பித்துள்ளனர் என நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார் என கார்டியன் தெரிவித்துள்ளது. மேலும் ரஃபா மனிதாபிமான நடவடிக்கைகளிற்கான பிரதான தளமாகவும் காணப்படுகின்றது. அவர்கள்ரஃபாவின் கிழக்கில் உள்ளவர்களை வெளியேறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். ரஃபா எல்லையில் மேற்கில் உள்ளவர்களையும் வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளனர். எனக்கு என்ன செய்வது என தெரியவில்லை. நான் அறிவிக்கப்பட்ட இடத்தில் இல்லாவிட்டாலும் எனது குடும்பத்தை டெய்ர் எல் பலாவிற்கு கொண்டு செல்லப்போகின்றேன் என ரஃபாவின் வடக்கில் தனது குடும்பத்துடன் தஞ்சமடைந்துள்ள அபுமுகே தெரிவித்துள்ளார். தற்போது கடும் மழை பெய்கின்றது எங்கு போவது என எங்களிற்கு தெரியவில்லை. இந்த நாள் வரும் என நான் கவலையுடன் இருந்தேன் எனது குடும்பத்தவர்களை எங்கு கொண்டு செல்வது என சிந்திக்கவேண்டும் என ரஃபாவில் அகதியாக உள்ள அபுரயீட் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182821
  4. 36 – 37 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை! வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் இன்றைய தினம் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறித்த பகுதிகளில் 36 முதல் 37 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெப்பநிலையானது 2 வாரங்களுக்கு எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மேல், சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களிலும் வெப்பநிலையானது அதிகரிக்கக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/300968 இரவு 10மணிக்கும் 41 காட்டுது யாழ்ப்பாணம்!
  5. கெஹலியவின் விளக்கமறியலில் நீடிப்பு! தரமற்ற ஊசியை இறக்குமதி செய்தமை தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கில் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://thinakkural.lk/article/301022
  6. 06 MAY, 2024 | 06:19 PM கிளிநொச்சியில் அரசுக்கு சொந்தமான கல்மடு வனப் பிரதேசத்துக்குள் அனுமதியின்றி நுழைந்த குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி - இராமநாதபுரம் பிரிவுக்குட்பட்ட கல்மடு வனப் பிரதேசத்துக்குள் அனுமதியின்றி உள்நுழைந்து மரங்களை வெட்டி, மரக்குற்றிகளை இரண்டு உழவு இயந்திரங்களில் ஏற்ற முற்பட்ட ஐந்து இளைஞர்கள் இராமநாதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஐவரும் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் வெட்டிய மரக்குற்றிகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராமநாதபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182838
  7. கோவை: அணைகளின் நீர் இருப்பு குறைந்ததால், குடிநீருக்கு பற்றாக்குறை - கள நிலவரம் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 6 மே 2024, 05:08 GMT கோவை மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரங்களான, சிறுவாணி, பில்லூர் மற்றும் ஆழியாறு அணைகளின் நீர்மட்டம் குறைந்துள்ளது. இது கோவை மாவட்டத்தின் குடிநீர் விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநகராட்சிகளில் கோவையும் ஒன்று. மாநகராட்சியுடன் சேர்த்து கோவை மாவட்டத்தில் மொத்தம் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை, ஆனைகட்டி அருகே கேரள மாநிலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சிறுவாணி அணை, மேட்டுப்பாளையத்தை அடுத்த்துள்ள பில்லூர் அணை மற்றும் பொள்ளாச்சியில் உள்ள ஆழியாறு அணை ஆகியவை தான் கோவை மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரங்கள். மாநகராட்சிப் பகுதிகள் தவிர்த்து, கோவை மாவட்டத்தின் மற்ற பகுதிகளான பொள்ளாச்சி, கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிகளுக்கு ஆழியாறு அணை முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. கோவையின் குடிநீர் விநியோகம் எப்படி நடக்கிறது? கோவை மாநகராட்சிப் பகுதிகளுக்கு சிறுவாணி, பில்லூர் 1, 2, 3 ஆகிய திட்டங்கள், வடவள்ளி – கவுண்டம்பாளையம் மற்றும் ஆழியாறு கூட்டுக் குடிநீர் திட்டங்கள் ஆகியவற்றில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இப்படியான நிலையில், கடந்த ஆண்டு போதிய பருவமழை பெய்யாதது, மற்றும் இந்த ஆண்டு கோடை மழை பெய்யாதது போன்ற காரணங்களால், கோவையின் நீராதாரமாக உள்ள சிறுவாணி, பில்லூர் மற்றும் ஆழியாறு அணைகளின் நீர் மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால், அணைகளில் இருந்து பெறப்படும் நீரின் அளவு குறைந்து, மக்களுக்கு வாரம் ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. சிறுவாணி அணையைப் பொறுத்தவரை, மொத்தம் உள்ள 45 அடியில், ஏப்ரல் 30-ஆம் தேதி நிலவரப்படி, 12 அடி வரை மட்டுமே நீர் மட்டம் உள்ளது. பில்லூர் அணையின் மொத்த நீர்மட்டம் 100 அடி. இதில் 55.25 அடிக்கு மட்டுமே நீர்மட்டம் உள்ளது. அதேபோல், ஆழியாறு அணையின் மொத்த கொள்ளளவான 120 அடியில், 58.70 அடி உயரத்திற்கு மட்டுமே நீர் உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES 'இந்த ஆண்டு மழை பெய்யாததால் சிக்கல்' இந்த நிலையில், கோவை மாவட்டத்தின் குடிநீர் பற்றாக்குறை குறித்து, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கைப்படி, சிறுவாணி அணைப் பகுதியில் 2023 ஏப்ரல் மாதம் 95 மில்லிமீட்டர் மழை பதிவானது, பில்லூர் அணைப்பகுதியில் 2189.64 மி.மீ. மழையும், ஆழியாறு அணைப் பகுதியில் 41.80 மி.மீ. மழையும் பதிவானது. ஆனால், இந்த ஆண்டு சிறுவாணி, பில்லூர் மற்றும் ஆழியாறு அணைப் பகுதியில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் மழை பெய்யாததால், அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால், "சிறுவாணி அணையில் இருக்கின்ற நீரை ஜூன் வரை வழங்குவதற்காக, அணையில் இருந்து நாள் ஒன்றுக்கு 104.4 எம்.எல்.டி பெறப்படுவதற்குப் பதிலாக 35 எம்.எல்.டி நீர் பெறப்பட்டு விநியோகம் செய்யப்படும். இதேபோல், பில்லூர் அணையில் இருக்கும் நீரும் ஜூன் வரையில் வழங்க ஏற்பாடு செய்யப்படும். ஆழியாறு அணையில் தற்போது இருக்கும் நீர் கோடையைச் சமாளிக்கப் போதுமானதாக உள்ளது," என்று மாவட்ட ஆட்சியர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். ‘வீட்டின் மாதச் செலவு அதிகரித்துள்ளது’ இந்நிலையில், குடிநீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகக் கோவை நகரில் வசிக்கும் பொதுமக்களில் சிலர் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். பிபிசி தமிழிடம் பேசிய கோவை கணபதி பகுதியில் வசிக்கும் இல்லத்தரசியான ரம்ய பிரியா, ஆண்டுதோறும் கோடைக் காலத்தில், குறிப்பாக மே மாதம் வாரம் ஒருமுறை, தங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்குவார்கள் என்றும், இந்த ஆண்டு 12 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் கூறுகிறார். "தினமும் குடிநீர் அல்லாத பயன்பாட்டுக்கு போர்வெல் நீர் வழங்கி வந்தனர். இப்போது அதுவும் சரிவரக் கிடைக்காமல் உள்ளது," என்கிறார் ரம்ய பிரியா. கோடையில் குடிநீர் தேவை அதிகரித்துள்ளதால், சேமிக்கும் நீர் விரைவில் தீர்ந்துவிடுவதாகக் கூறும் அவர், "650 ரூபாய் செலுத்தி டிராக்டரில் 1,000 லிட்டர் நீர் விலைக்கு வாங்கிப் பயன்படுத்துவதுடன், குடிநீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்துகிறோம். இதனால், வீட்டின் மாதச் செலவு அதிகரித்துள்ளது," என்றார். ‘பயன்பாட்டைக் குறைத்துள்ளோம்’ தங்கள் பகுதிக்கு வாரம் ஒருமுறைதான் குடிநீர் வழங்கப்படுவதாகவும் கிடைக்கும் நீரை குடிக்க, சமைக்க மட்டுமே சிக்கனமாகப் பயன்படுத்துவதாகவும் கூறுகின்றனர் கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த ராஜேஷ் கோவிந்தராஜலு, சுஜாதா தம்பதி. பிபிசி தமிழிடம் பேசிய அவர்கள், "குடிநீர் தட்டுப்பாட்டால் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. குடிநீர் அல்லாத பயன்பாட்டுக்கான நீருக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், பாத்திரங்களின் பயன்பாட்டையும் வெகுவாகக் குறைத்துள்ளோம்," என்றனர். இந்த நிலையில், அரசு போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் விட்டதால் தான் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் விவசாயிகள் சங்கத்தினர். பிபிசி தமிழிடம் பேசிய கெளசிகா நீர்க்கரங்கள் என்ற சுற்றுச்சூழல் அமைப்பின் நிறுவனர் செல்வராஜ், "சிறுவாணி, பில்லூர் அணைகளில் கடந்த சில ஆண்டுகளாக வண்டல் மண் அதிகரித்து அணையின் நீர் சேமிப்புத் திறன் குறைந்துள்ளது. வண்டல் மண் எடுத்து அணைகளின் நீர்மட்டத்தை உயர்த்த அரசு தவறிவிட்டதால், இன்று நாம் நீரின்றி சிரமத்தைச் சந்திக்கிறோம்," என்றார். படக்குறிப்பு,குடிநீர் பற்றாக்குறையுடன் விவசாயமும் பாதிக்கப்படுவதாகக் கூறுகிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட துணைத் தலைவர் பெரியசாமி அணைகளைத் தூர்வார கோரிக்கை நீர்நிலைகளைத் தூர்வாரி ஆழப்படுத்தினால் மட்டுமே இனி வரும் காலங்களை எதிர்கொள்ள முடியும் என்கிறார் செல்வராஜ். இதை விளக்கிய செல்வராஜ், "பருவநிலை மாற்றத்தால் கடந்த சில ஆண்டுகள் முன்பு பெய்ததைப் போல பருவமழை கிடைப்பதில்லை. திடீரென சில நாட்களில் அதீத கனமழை தான் பொழிகிறது. இத்தகைய சூழலைச் சமாளிக்க தமிழ்நாடு அரசு சிறுவாணி, பில்லூர், ஆழியாறு அணைகளை முறையாகத் தூர்வாரி கரைகளைப் பலப்படுத்த வேண்டும். அணைகளைப் போல குளங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்," எனக் கூறுகிறார். வறட்சியால் குடிநீர் பற்றாக்குறை பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும், அதேபோல் விவசாயமும் பாதிப்புகளைச் சந்திப்பதாக தெரிவிக்கிறார், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட துணைத்தலைவர் பெரியசாமி. பிபிசி தமிழிடம் பேசிய பெரியசாமி, "அணைகளில் தொடர்ந்து நீர்மட்டம் குறைந்து வருவதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். குடிநீர் தட்டுப்பாடு ஒரு பக்கம் இருக்க, நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போதிய நீர் கிடைக்காமல் விவசாயமும் கடுமையாகப் பாதித்துள்ளது," என்றார். படக்குறிப்பு,கோவைக்கு முக்கிய குடிநீர் ஆதாரங்களாக பில்லூர் அணை, சிறுவாணி அணை, ஆழியாறு அணை இருக்கிறது. அதிகாரிகள் சொல்வது என்ன? விவசாயிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து, கோவை மண்டல பொதுப் பணித்துறை முதன்மைப் பொறியாளர் சிவலிங்கத்திடம் பிபிசி தமிழ் விளக்கம் கேட்டது. "அணைகள், குளங்களைப் பாதுகாப்பதற்காகச் சிறப்புத் திட்டங்கள் மூலம், வண்டல் மண் எடுத்து, கரைகளைப் பலப்படுத்தி தூர்வாரும் பணிகளைச் செய்து வருகிறோம். இந்த ஆண்டு மழைக்காலம் துவங்குவதற்கு முன்பு ஆழியாறு அணையில் வண்டல் மண் எடுத்து தூர்வாரத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், குளங்களிலும் வண்டல் மண் எடுக்கப்படும்," என்று சிவலிங்கம் கூறினார். மேலும், சிறுவாணி அணை கேரள மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால், கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி அணையைத் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு தெரிவித்துள்ளதாகவும், பில்லூர் அணையையும் தூர்வார அரசுக்கு கோரிக்கை அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார். "கடந்த காலங்களில் இல்லாததைவிட தற்போது வெப்ப அலை அதிகமாக இருப்பதால், அணைகளில் நாள் ஒன்றுக்கு 10-15 கன அடி நீர் ஆவியாகி வருகிறது. பருவமழை குறைவால் நீர் வரத்தும் இல்லை. ஆழியாறு அணையில் போதிய நீர் இருப்பதால் குடிநீருக்கு பிரச்னை இல்லை. ஆனால், பில்லூர், சிறுவாணியில் நீர் குறைந்து வருவதால் குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது," என்றார் சிவலிங்கம். கோவை மாவட்ட குடிநீர் வடிகால் வாரிய முதன்மைப் பொறியாளர் செல்லமுத்து பேசுகையில், "அணைகளில் நீர்மட்டம் பெருமளவு குறைந்துள்ளதால், வழக்கமாகப் பெறும் நீரின் அளவு குறைந்துள்ளது. கிடைக்கின்ற நீரை மக்களுக்குப் பகிர்ந்தளித்து வருகிறோம். குடிநீர் அல்லாத பயன்பாட்டிற்கு நிலத்தடி நீர் விநியோகம் செய்யப்படுகிறது. மக்கள் சிக்கனமாகப் பயன்படுத்தினால் மட்டுமே கோடையைச் சமாளிக்க முடியும்," என்றார். பிபிசி தமிழிடம் பேசிய கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், "சிறுவாணி, பில்லூர் அணைகளைத் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசிடம் மாநகராட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவைக்கு வந்த முதன்மைச் செயலாளர்களிடமும் அணைகளில் வண்டல் மண் தேங்கியுள்ளதால் நீர் பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் வறட்சி நிலவும் நிலையிலும், அணைகளில் இருக்கின்ற நீரை மாநகராட்சியின் மண்டலம் வாரியாக மக்களுக்கு விநியோகம் செய்து வருகிறோம்," என்றார். https://www.bbc.com/tamil/articles/c3g843vg0nyo
  8. அமெரிக்க தூதுவரை சந்தித்தனர் ரி-20 உலகக் கிண்ணத்திற்கு தயாராகும் இலங்கை வீரர்கள் 06 MAY, 2024 | 08:48 PM (நெவில் அன்தனி) ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றுவதற்காக ஐக்கிய அமெரிக்கா பயணிப்பதற்கு முன்னர் இலங்கை அணியினரை அமெரிக்க தூதரகம் உபசரித்துள்ளது. 'எக்ஸ்'இல் அமெரிக்க தூதுவர் ஜூலி சுங், 'ஐக்கிய அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி ரி20 உலகக் கிண்ணத்திற்கு தயாராகும் இலங்கையின் தேசிய ஆடவர் கிரிக்கெட் அணியினரை அமெரிக்க தூதரகத்தில் நாங்கள் வரவேற்றோம். ஐக்கிய அமெரிக்காவில் உள்ள கிரிக்கெட் மைதானங்களுக்கு இந்த அணி செல்வது விளையாட்டுத்துறை இராஜதந்திரத்திற்கு முக்கியமான சந்தர்ப்பமாக அமைகிறது. அவர்கள் தங்கள் ஆற்றல்கள் மற்றும் ஆர்வத்தின் மூலம் ஐக்கிய அமெரிக்கா முழுவதும் உள்ள இரசிகர்களை ஈர்ப்பார்கள் என்பது உறுதி' என குறிப்பிட்டுள்ளார். வனிந்து ஹசரங்க (தலைவர்), சரித் அசலன்க, குசல் மெண்டிஸ், தசுன் ஷானக, தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ், மஹீஷ் தீக்ஷன, குசல் பெரேரா, பினுர பெர்னாண்டோ, அசித்த பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷங்க, பெத்தும் நிஸ்ஸங்க, மதீஷ பத்திரண, சதீர சமரவிக்ரம, பிரமோத் மதுஷான், துனித் வெல்லாலகே, அகில தனஞ்சய, பானுக ராஜபக்ச, ஜெவ்ரி வெண்டர்சே, நுவன் துஷார, சாமிக்க கருணாரத்ன, து ன்மந்த சமீர, நிரோஷன் டிக்வெல்ல, விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோரை அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் சந்தித்து உரையாடினார். ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் ஜூன் 1ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதிவரை கூட்டாக நடைபெறவுள்ளது. அமெரிக்காவில் 3 மைதானங்களில் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன. ப்ளோரிடா, லவ்டர்ஹில் சென்ட்ரல் ப்ரோவார்ட் ரீஜினல் பார்க் விளையாட்டரங்கு, டெக்சாஸ் க்ராண்ட் ப்ரெய்ரி விளையாட்டரங்கு, நியூ யோர்க, ஈஸ்ட் மெடா நசவ் கன்ட்றி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கு ஆகிய 3 விளையாட்டரங்குகளே ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ள அமெரிக்க மைதானங்களாகும். ரி20 உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. பெரும்பாலும் இந்த வாரத்திற்குள் 15 வீரர்களைக் கொண்ட இறுதிக் குழாத்தை உப்புல் தரங்க தலைமையிலான இலங்கை அணித் தெரிவுக் குழுவினர் வெளியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/182844
  9. அக்கா கடைக்காறர் திருந்துவது சாத்தியமில்லை, அவர்கள் வியாபாரிகள் எல்லோ! சட்ட நடவடிக்கைகளிற்கு, தண்டப்பணத்திற்கு பயந்து கொஞ்சம் ஒழுங்காக இருப்பது போல் நடிப்பினம். எழுந்தமானமாக கடைகளை சென்று பார்வையிடும் பிஎச்ஐ களால் தான் ஓரளவு தப்பித்து வாழ்கிறோம். பிஸ்கற், சோடா போன்றவை கூட காலாவதி திகதியின் பின் கவனிக்காதது போல விற்கிறார்கள்.
  10. நான் இன்றிரவு ஜிகாத்தின் பாதையில் செல்கின்றேன் - பேர்த்தில் கத்திக்குத்தில் ஈடுபட முயன்றவேளை சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞன் நண்பர்களுக்கு அனுப்பிய செய்தி Published By: RAJEEBAN 06 MAY, 2024 | 12:31 PM அவுஸ்திரேலியாவின் பேர்த்தில் வாகனதரிப்பிடமொன்றில் இளைஞனை கத்தியால் குத்த முயன்றவேளை காவல்துறையினரால் சுட்க்கொல்லப்பட்ட இளைஞன் கத்திக்குத்து முயற்சிக்கு முன்னர் தான் வன்முறைகளில் ஈடுபடப்போவதாகவும் ஜிகாத்தின் பாதையில் பயணிக்கப்போவதாகவும் தனது நண்பர்களிடம் தெரிவித்தான் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பேர்த்தின் தென்பகுதியில் உள்ள விலெட்டனில் சனிக்கிழமை இரவு சுட்டுக்கொல்லப்பட்ட 16 வயது இளைஞன் நண்பர்களே நான் எவ்வேளையிலாவது தவறு செய்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் அல்லாவிற்காக நான் இன்றிரவு ஜிகாத்தின் பாதையில் செல்கின்றேன் என பல தடவை தனது நண்பர்களிற்கு செய்தியனுப்பியுள்ளான். நான் முஜாஹிதீன் அல்ஹைதாவின் போர்வீரன் இந்த நடவடிக்கைகளிற்காக நான் பொறுப்பேற்பேன் எனவும் அவன் நண்பர்களிற்கு செய்தி அனுப்பியுள்ளான். இந்த செய்தி கிடைத்த பலர் உடனடியாக காவல்துறையினரை தொடர்புகொண்டுள்ளனர். இந்த சிறுவனிற்கும் எந்த உள்ளுர் மசூதிக்கும் தொடர்பில்லை. இந்த சிறுவன் உளநல பாதிப்பிற்குள்ளாகியுள்ளான் 2022 முதல் அதாவது 12 வயது முதல் அவனை காவல்துறையினர் வன்முறை தீவிரவாதத்தை எதிர்க்கும் திட்டத்தின் கீழ் புனர்வாழ்விற்கு உட்படுத்தினர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தீவிரவாதத்தின் தாக்கத்திலிருந்து விடுவிக்கும் புனர்வாழ்வுதிட்டத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்த 18 வயதிற்கு உட்பட் நால்வரில் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவனும் ஒருவன் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/182794
  11. 06 MAY, 2024 | 11:35 AM ரஃபாவின் கிழக்கு பகுதியில் வசிக்கும் மக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. எதிர்காலத்தில் ரஃபாவில் இஸ்ரேல் தனது இராணுவநடவடிக்கைகளை தீவிரப்படுத்தலாம் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் அறிவித்த மறுநாள் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. உங்களின் பாதுகாப்பிற்காக சோதனைசாவடிகளிற்கு அருகில் உள்ள மனிதாபிமான பகுதிக்கு உடனடியாக செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என இஸ்ரேலிய இராணுவத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அல்ரபாவின் அல்சவ்கா மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மட்டுப்படுத்த அளவிலான நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக இஸ்ரேலிய இராணுவத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் இடம் பெயர்ந்த மில்லியன் கணக்காண மக்கள் எகிப்து எல்லையில் உள்ள ரபாவில் தஞ்சமடைந்துள்ளனர். https://www.virakesari.lk/article/182788
  12. பட மூலாதாரம்,CLIMEWORKS படக்குறிப்பு,குளிரூட்டிகள் போல தோற்றமளிக்கும் இந்த மாபெரும் மின்விசிறிகள் மூலம், க்ளைம்வொர்க் ஆண்டுக்கு 4,000 டன் கார்பனீராக்சைடை வளிமண்டலத்தில் இருந்து நீக்குகிறது. 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஐஸ்லாந்தின் தலைநகரான ரெய்க்யவிக்குக்கு வெளியே இந்த இடம் உள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு திடப்படுத்தப்பட்ட எரிமலைக் குழம்பின் மேல், கப்பல் கன்டெய்னர்கள் அளவிலான பல பெரிய குளிரூட்டிகள் வைக்கப்பட்டிருப்பதை ஒருவர் காணலாம். இந்த விசித்திரமான இடம், வேற்று கிரக வாசிகளின் இடம்போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. தோற்றத்தில் மட்டுமல்ல, அதன் செயல்பாட்டிற்கும் இந்த இடம் தனித்துவமானது. சுற்றுச்சூழலில் இருந்து கார்பனீராக்சைடை (கார்பன்-டைஆக்சைடு - CO2) எடுத்து அதை நிலத்தடியில் அடைத்து வைக்கும் உலகின் முதல் சாத்தியமான அமைப்பு இதுவாகும். "உலகளாவிய நிகர பூஜ்ஜிய உமிழ்வுகளின் இலக்கை உண்மையிலேயே அடைய, காற்றில் இருந்து கார்பனீராக்சைடை அகற்றுவதற்கான தீர்வுகள் தேவை" என்ற யோசனையுடன் ஸ்விஸ் நிறுவனமான க்ளைம்வொர்க்ஸ் நிறுவனத்தால் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. இது இன்று செயல்பாட்டில் உள்ளது. பிபிசி நிருபர் அட்ரியன் முர்ரே, ஐஸ்லாந்தின் ஹெலிஷெய்டியில் உள்ள ஓர்கா எனப்படும் ஆலையைப் பார்வையிட்டார். இந்த ஆலை தற்போது ஆண்டுக்கு 4,000 டன்கள் கார்பனீராக்சைடை நீக்குகிறது, அதாவது 900 பெட்ரோல் கார்களின் கார்பனீராக்சைடு உமிழ்வுக்கு சமமான அளவு. படக்குறிப்பு,பிபிசி நிருபர் அட்ரியன் முர்ரே, காற்றில் இருந்து கார்பனீராக்சைடை அகற்றும் முதல் ஆலைக்கு விஜயம் செய்தார். ஒரு பெரிய போராட்டத்திற்கான கருவி ராட்சத குளிரூட்டிகள் போல தோன்றும் இந்த இயந்திரங்கள் உண்மையில் ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கி, ஒழுங்கமைக்கப்பட்டுள்ள எண்ணற்ற மின்விசிறிகள் ஆகும். அவை சுற்றுச்சூழலில் இருந்து காற்றை எடுத்து, உள்ளே இருக்கும் வடிகட்டிகள் மூலம் காற்றில் உள்ள கார்பனீராக்சைடை பிரித்தெடுக்கின்றன. காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் இது ஒரு முக்கியமான கருவியாக இருக்கும். ஆனால் க்ளைம்வொர்க்ஸ் நிறுவன பிரதிநிதி பிரைண்டிஸ் நீல்சன் பிபிசியிடம் கூறியது போல், காற்றில் இருந்து கார்பனீராக்சைடை அகற்றும் இந்த முறை கார்பனீராக்சைடு உமிழ்வைக் குறைக்கும் நடவடிக்கைகளுக்கு மாற்றில்லை. "தொழில்துறை புரட்சி தொடங்கியதில் இருந்து மனிதர்கள் வளிமண்டலத்திற்கு செய்து வரும் தீங்குகளை சரிசெய்வதில் நாம் அதிகம் செலுத்த வேண்டும், அதே சமயத்தில் கார்பனீராக்சைடு உமிழ்வு குறைப்புகளுக்கு மாற்றாக இதை நாங்கள் கொண்டு வரவில்லை" என்று நீல்சன் விளக்குகிறார். காலநிலை மாற்றத்தின் அபாயங்களைத் தீர்க்க இந்தத் தொழில்நுட்பம் மட்டும் போதாததற்கு முக்கியக் காரணம் ஓர்கா போன்ற ஒரு ஆலையின் திறன். ஓர் ஆலை மட்டுமே ஆண்டுக்கு 4,000 டன் கார்பனீராக்சைடை உறிஞ்சும் திறன் கொண்டது என்பது கேட்க சுவாரஸ்யமாகத் தோன்றினாலும், உலகளாவிய கார்பனீராக்சைடு உமிழ்வு 2023இல் 37.4 ஜிகாடன்களை (37 பில்லியன் டன்) என்ற அளவை எட்டியுள்ளது. "நாங்கள் 2050 க்குள் ஜிகாடன் அளவிலான கார்பனீராக்சைடை கைப்பற்ற வேண்டும், அந்த இலக்கை அடைய, நாம் இப்போதே தொடங்க வேண்டும்," என்கிறார் நீல்சன். அதனால்தான் இந்த நிறுவனத்தின் மம்மத் என்ற அடுத்த திட்டம் ஓர்காவை விட கிட்டத்தட்ட பத்து மடங்கு பெரியதாக இருக்கப் போகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஐஸ்லாந்து தேர்வு செய்யப்பட்டது ஏன்? புகழ்பெற்ற அறிவியல் புனைகதை புத்தகமான ‘எ ஜர்னி டு தி சென்டர் ஆஃப் தி எர்த்’ (A Journey to the Center of the Earth) 1864இல் வெளியானது. இந்த புத்தகத்தை எழுதிய ஜூல்ஸ் வெர்னின் வாழ்க்கையை மாற்றிய புத்தகம் இது. இன்றும் அறிவியல் புனைகதைகளின் தந்தை என்று பலரால் போற்றப்படுகிறார் ஜூல்ஸ் வெர்ன். அந்தக் கதையில், ஐஸ்லாந்தின் ஆபத்தான எரிமலைகளில் டாக்டர் ஓட்டோ லிடன்ப்ராக் மற்றும் அவரது குழு மேற்கொள்ளும் ஒரு நம்பமுடியாத பயணம் குறித்து சொல்லப்படும். அமெரிக்க மற்றும் யூரேசிய கண்டத்தட்டுகளின் விளிம்பு பகுதியில் அமைந்துள்ள இந்தத் தீவில் கிளைம்வொர்க்ஸ் தனது ஆலைகளை அமைக்க இந்த தீவிர எரிமலைச் செயல்பாடுதான் முக்கிய காரணம். பசுங்குடில் வாயு உமிழ்வுகள் இல்லாமல் சுத்தமான புவிவெப்ப ஆற்றலை வழங்குவதோடு மட்டுமல்லாது, இந்த எரிமலை செயல்பாடு என்பதன் அர்த்தம் ஐஸ்லாந்தின் மண் பாசால்ட்கள், நுண்துளை எரிமலை பாறைகளால் ஆனது. அவை வளிமண்டலத்தில் இருந்து பிரித்தெடுக்கப்படும் கார்பனீராக்சைடுக்கான சரியான கொள்கலன் ஆகும். சுற்றுச்சூழலில் இருந்து விசிறிகள் சேகரிக்கும் கார்பனீராக்சைடு வாயுவை தண்ணீரில் கலந்து குழாய்கள் மூலம் மேற்பரப்பில் இருந்து நீண்டு செல்லும் ஒரு வகையான குவிமாடத்திற்கு அனுப்பப்படுகிறது. இது மற்றொரு நிறுவனமான கார்ப்ஃபிக்ஸ் (CarbFix) மூலம் இயக்கப்படுகிறது. இங்கே அது 2 கிமீ ஆழத்தில் நிலத்தடியில் அழுத்தத்தின் கீழ் செலுத்தப்படுகிறது, அங்கு பாசால்ட்களுடன் வினைபுரிந்து கார்பனீராக்சைடை திடமாக்குகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாசால்ட் என்பது நுண்துளை எரிமலை பாறைகள் ஆகும், அவை எரிமலைக்குழம்பு குளிர்ச்சியடையும் போது அதில் சிக்கியிருக்கும் வாயுக்களால் இவ்வாறு மாறுகின்றன. பட மூலாதாரம்,CARBFIX படக்குறிப்பு,‘மம்மத்’ தலைமையகத்தில் உள்ள கார்ப்ஃபிக்ஸ் குவிமாடங்களில் ஒன்று. வணிக ரீதியாக சாத்தியமான முறை கார்ப்ஃபிக்ஸ் பிரதிநிதி எடா அராடோட்டிர் பிபிசியிடம் கூறுகையில், “உலகின் மிகப்பெரிய கார்பனீராக்சைடு உமிழும் தொழிற்சாலைகள், ஐஸ்லாந்தில் அந்த உமிழ்வுகளை டெபாசிட் செய்ய இந்நிறுவனத்தின் சேவைகளை வாடகைக்கு எடுப்பார்கள் என்பது தான் எங்கள் திட்டம்” "இதன் மூலம் கிகா டன்கள் அளவிலான கார்பனீராக்சைடை நம்மால் வளிமண்டத்திலிருந்து அகற்ற முடியும். நாம் ஒரே வளிமண்டலத்தைப் பகிர்ந்து கொள்கிறோம் என்பதால், எல்லைகள் கடந்து உலகம் முழுவதுற்குமான ஒத்துழைப்பை அவசியமாக்குகிறது" என்று அராடோட்டிர் விளக்கினார். க்ளைம்வொர்க்ஸ் பிரதிநிதி பிரைண்டிஸ் நீல்சன் இதுகுறித்து பேசுகையில், "ஒரு கருத்தை நிரூபிக்க தான் ஓர்கா போன்ற ஒரு ஆலை இங்கே உள்ளது, மேலும் இது போன்ற ஒரு ஆலை வணிக ரீதியாகவும் சாத்தியமானது" என்று கூறினார். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தில் பல சிரமங்கள் உள்ளன. அதிக கார்பனீராக்சைடு உமிழும் நாடுகள், அந்த உமிழ்வைக் குறைக்க நடவடிக்கை எடுக்காமல், ஐஸ்லாந்தைத் தங்கள் உமிழ்வு டெபாசிட் இடமாக பயன்படுத்தத் தொடங்கிவிடுவார்கள் என்ற அபாயமும் உள்ளது. அராடோட்டிரைப் பொறுத்தவரை, ஓர்கா போன்ற திட்டங்களின் நோக்கம், ஆற்றல் நுகர்வு மூலம் கார்பனீராக்சைடை வெளியிடும் தொழில்துறைகள் அல்ல. உலோகம் மற்றும் சிமெண்ட் போன்ற தயாரிப்புகளின் தவிர்க்க முடியாத கழிவுகளாக கார்பனீராக்சைடை வெளியிடும் தொழில்துறைகள் தான். காலநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளை எதிர்த்துப் போராடுவதற்கு கார்பனீராக்சைடு உமிழ்வை நீக்குவது போதுமானதாக இருக்காது என ஐஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் அரோரா அர்னாடோட்டிர் பிபிசியிடம் கூறினார், "இந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவதோடு மட்டுமல்லாது, நம்மால் முடிந்தவரை கார்பனீராக்சைடு உமிழ்வை குறைக்க வேண்டும்” "ஆனால் நாம இன்னும் அந்த நிலையை அடையவில்லை," என அவர் ஒப்புக்கொள்கிறார். புதிய கிளைம்வொர்க்ஸ் ஆலையான ‘மம்மத்’ சுற்றுச்சூழலில் இருந்து ஆண்டுக்கு சுமார் 36,000 டன் கார்பனீராக்சைடை பிரித்தெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://www.bbc.com/tamil/articles/crgyl9074y2o
  13. 06 MAY, 2024 | 12:19 PM வவுனியா வவுனியாவில் கிராம சேவையாளர்கள் இன்று திங்கட்கிழமை (06) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் கிராம சேவையாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு நாள் சுகயீன விடுமுறை வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் கிராம சேவையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக பொதுமக்கள் தங்கள் சேவையினை பெற்றுக்கொள்வதில் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இந்த பணிப்பகிஷ்கரிப்பானது சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. தம்பலகாமம் நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்களின் சுகயீன விடுமுறையை வலியுறுத்தி தம்பலகாமம் பிரதேச செயலக கிராம உத்தியோத்தர்களும் இன்று (06) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பிரதேச செயலகத்தின் பொது மக்கள் தினமான இன்றைய தினம் சேவைகளை பெற செயலகத்தை நாடும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றனர். நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதன் அடிப்படையில், சேவைகள் இடம்பெறாமல் பூட்டப்பட்டுக் கிடக்கும் தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்கு கிராம உத்தியோகத்தர்களை சந்தித்து சேவைகளைப் பெற தூர பிரதேசங்களில் இருந்து வருகை தரும் மக்கள் பெரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்புவதை காணக்கூடியதாக உள்ளது. https://www.virakesari.lk/article/182790
  14. உங்களுக்கு ஊசி என்றால் பயமோ அண்ணை?!
  15. இன்று 3.23 அளவில் மேலுள்ளவாறு உணரப்படும் வெப்பநிலை!
  16. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நாம்தேவ் கட்கர் பதவி, பிபிசி மராத்தி 5 மே 2024 ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை வழக்கில் தெலங்கானா காவல்துறை தாக்கல் செய்த இறுதி விசாரணை அறிக்கை வெளிவந்துள்ளது. இந்த விசாரணை அறிக்கையின்படி, "ரோஹித் வெமுலாவின் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை” என்றும் ”ரோஹித் வெமுலா ஒரு தலித் அல்ல” என்றும் கூறப்பட்டுள்ளது. தெலங்கானா காவல்துறை தாக்கல் செய்த இந்த விசாரணை அறிக்கையால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையில் உள்ள 'ரோஹித் வெமுலா தலித் அல்ல', 'ரோஹித் தற்கொலை வழக்கில் யாரும் குற்றவாளிகள் அல்ல' என்ற முடிவுகள் அரசியல் களம் மற்றும் சமூகத் தளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன. இந்த விசாரணை அறிக்கையின் விவரங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளைப் பார்ப்பதற்கு முன், அறிக்கையில் உள்ள தகவல்கள் குறித்து விரிவாக பார்க்கலாம். விசாரணை அறிக்கை சொல்வது என்ன? ரோஹித் வெமுலாவின் தற்கொலைக்குப் பிறகு, ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவர் தோந்தா பிரசாந்த் என்பவர் காவல்துறையிடம் புகார் அளித்தார். தோந்தா பிரசாந்த் கொடுத்த புகாரின் பேரில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 306 மற்றும் பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்தப் புகாரைத் தொடர்ந்து தெலங்கானா காவல்துறை விசாரணைக் குழுவை நியமித்தது. அதில், சைபராபாத் காவல் ஆணைய எல்லைக்கு உட்பட்ட மாதப்பூர் பிரிவின் அப்போதைய ஏசிபி எம்.ராமண்ண குமார், ஏசிபி என். ஷியாம் பிரசாத் ராவ், ஏசிபி ஸ்ரீகாந்த் ஆகியோர் இடம் பெற்றனர். இந்தக் குழுவின் விசாரணைக்குப் பிறகு 21 மார்ச் 2024 அன்று 60 பக்க விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில், விசாரணையில் கண்டறியப்பட்டது என்ன என்பதையும் அதன் முடிவுகள் என்ன என்பதையும் சைபராபாத் மாதாபூர் பிரிவு காவல் உதவி ஆணையர் விரிவாக விளக்கியுள்ளார். இந்த விசாரணை அறிக்கையின் படி, மொத்தம் 59 பேரின் வாக்குமூலம் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரோஹித் வெமுலா தற்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எந்த 'ஆதாரமும் இல்லை' என்பதே விசாரணை அறிக்கையின் சாராம்சம். எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை’ என்றார். மார்ச் 21, 2024 அன்று சமர்ப்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கை, மே 3, 2024 அன்று வெளிவந்தது, அதன் முடிவுகள் சர்ச்சையைத் தூண்டின. விசாரணை அறிக்கையில் இரண்டு விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்று, ரோஹித் வெமுலா பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் அல்ல, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பது. மற்றொன்று, ரோஹித் வெமுலாவை யாரும் தற்கொலைக்கு தூண்டவில்லை என்பது. இந்த இரண்டு முடிவுகளும் தான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இவ்விரு விவகாரங்கள் தொடர்பாகவும் காவல்துறை விசாரணை அறிக்கையில் கூறியிருப்பதை பற்றி சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம். படக்குறிப்பு,ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகம் ரோஹித் ஒரு 'தலித்' அல்ல - விசாரணை அறிக்கை காவல்துறையினர் இந்த விசாரணை அறிக்கையில் 11 கேள்விகளுக்கு விரிவாக பதில் அளித்துள்ளனர். முதல் கேள்வி ரோஹித் வெமுலாவின் சாதி பற்றியது. "ரோஹித் வெமுலா பட்டியல் சாதி வகுப்பை சேர்ந்தவரா? இந்த வழக்கில் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் பொருந்துமா?' என்ற கேள்விக்கு பதில் அளித்த காவல்துறை, 'ரோஹித் வெமுலா வத்தேரா சாதியை சேர்ந்தவர். தெலங்கானாவில் வத்தேரா சாதி (Vaddera) பிற்படுத்தப்பட்ட வகுப்பாகக் கருதப்படுகிறது. எனவே, ரோஹித் வெமுலா பட்டியலிடப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் அல்ல, அவரது தற்கொலை வழக்கில் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தைப் பயன்படுத்த முடியாது. ரோஹித் வெமுலா பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் அல்ல, வத்தேரா சாதியைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடும் காவல்துறை, "ரோஹித்தின் சாதி அவரது முந்தைய கல்லூரியில் 'மாலா (எஸ்சி)' என்று பதிவு செய்யப்பட்டுள்ளது, இதுகுறித்து ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தின் சாதி சரிபார்ப்புத் துறையிடம் விசாரணை மேற்கொண்டோம், அப்போது ரோஹித் வெமுலா 'வத்தேரா' சாதியைச் சேர்ந்தவர் என்பது உறுதிபடுத்தப்பட்டது. எஸ்சி சாதி சான்றிதழை வருவாய் துறையிடம் இருந்து மோசடியான முறையில் பெற்றுள்ளனர்" என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ரோஹித்தை யாரும் தற்கொலைக்குத் தூண்டவில்லை - விசாரணை அறிக்கை இந்த விசாரணை அறிக்கையின்படி, தடய அறிவியல் ஆய்வகம் (FSL) ரோஹித் வெமுலாவின் தற்கொலை கடிதத்தில் உள்ள கையெழுத்து அவரின் கையெழுத்துடன் ஒத்திருப்பதைக் கண்டறிந்துள்ளது. மேலும், ரோஹித் மற்றும் பிற மாணவர்களுக்கு எதிராக முறையான விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விசாரணை அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரோஹித் வெமுலா மற்றும் அவருடன் இருந்த மாணவர்களுக்கு எதிராக எந்தவித சட்டவிரோத நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், ரோஹித் வெமுலாவுக்கு உதவித்தொகை மறுக்கப்படவில்லை என்றும் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையில், "ரோஹித் வெமுலா பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அவரை ஹைதராபாத் பல்கலைக்கழக பேராசிரியர் அப்பா ராவ் கொடுமைப்படுத்தினார்’’ என்ற கூற்றையும் காவல்துறை நிராகரித்துள்ளது. படக்குறிப்பு,விசாரணை அறிக்கையின் ஒரு பகுதி ரோஹித் வெமுலா விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டாரா என்று காவல்துறை விசாரணை நடத்தி, அவரின் தற்கொலை கடிதத்தை விசாரணை அறிக்கையில் இணைத்துள்ளது. பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது ரோஹித் எந்தவித வருத்தமும் தெரிவிக்கவில்லை என்றும் உண்மையில், ரோஹித் வெமுலா உறுப்பினராக இருந்த அமைப்புகளின் (ASA மற்றும் SFI) மீது அதிருப்தியில் இருந்திருக்கிறார் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். ரோஹித் தனது தற்கொலை கடிதத்தால் கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உண்மையில் ரோஹித் வெமுலாவின் சாதி என்ன? காவல்துறையின் அறிக்கையின்படி, சாதி சரிபார்ப்பு விசாரணையின்போது, ரோஹித், வத்தேரா (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) சாதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதனை, அவரது தந்தையும் உறுதிப்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர். கடந்த சில மாதங்களாக ரோஹித்தின் சாதி குறித்த சர்ச்சையான கருத்துக்கள் பரவியது. அந்த சமயத்தில், ரோஹித்தின் தாயார் வி.ராதிகா, “நான் பட்டியல் சாதிப்பிரிவான `மாலா’ என்ற சமூகத்தில் பிறந்தேன். பின்னர் வத்தேரா சாதியைச் சேர்ந்த மணிகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டேன். சில காரணங்களால் மணி குமாரை விட்டுப் பிரிந்தேன்” என்றார். தெலங்கானாவில் `மாலா’ என்ற சாதி, பட்டியல் சாதி பிரிவின் கீழ் வருகிறது. இது குறித்து வி.ராதிகா மேலும் கூறியிருப்பதாவது, “மணிகுமாரை பிரிந்த பிறகு மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு எஸ்.சி காலனியில் குடிபெயர்ந்தேன். மேலும் பட்டியல் சாதியினரின் அனைத்து மரபுகளையும் நாங்கள் பின்பற்றி வருகிறோம்” என்றார். ரோஹித் வெமுலாவின் பட்டியல் சாதிச் சான்றிதழ் ‘மோசடி’ செய்து பெறப்பட்டது என்று அறிக்கையில் காவல்துறை கூறியுள்ளது. 2012ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், தந்தை அல்லது தாயார் தலித் என்றால் அவர்களது மகனும் தலித்துகளாகவே கருதப்படுவார்கள் என்று கூறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரோஹித் வெமுலாவின் தாய் வி. ராதிகா மற்றும் சகோதரர் ராஜா விசாரணை அறிக்கை அடிப்படையற்றது, பிழையானது - வழக்கறிஞர் ஜெய் பீம் ராவ் ரோஹித் வெமுலா வழக்கில் வாதிட்டு வரும் வழக்கறிஞர் ஜெய் பீம் ராவ் பிபிசியிடம் கூறுகையில், "ரோஹித் வெமுலா வழக்கில் காவல்துறை நடத்திய விசாரணையில் குறைகள் உள்ளன. மிக அலட்சியமாக இந்த வழக்கு கையாளப்பட்டுள்ளது. ரோஹித் இறப்பதற்கு முன் எழுதிய இரண்டு கடிதங்களில், பல்கலைக்கழகத்தில் பாரபட்சம் காட்டப்படுவதாக தெளிவாக குறிப்பிட்டுருந்தார். மன உளைச்சல் ஏற்படும்படி தன்னிடம் நடந்து கொண்டதாகவும் எழுதியுள்ளார். ஆனால், காவல்துறை விசாரணை அறிக்கையில் சாதி உறுதி செய்யப்பட்டதால், வருங்காலத்தில் ஏதாவது பிரச்னை வரலாம் என கருதி அவர் தற்கொலை செய்துகொண்டதாக எழுதப்பட்டுள்ளது. ஆதாரமின்றி இப்படி குறிப்பிடலாமா? மேலும், குண்டூர் ஆட்சியர் அலுவலகத்தில் சாதி சான்றிதழ் தொடர்பான விசாரணை இன்னும் முடிவுக்கு வரவில்லை. சாதி சான்றிதழ் குறித்துக் கேள்வி எழுப்பிய ஆசிரியர் இன்னமும் குண்டூர் ஆட்சியர் முன்பு ஆஜராகவில்லை. மறுபுறம், ரோஹித் ஒரு தலித் என்பதை நிரூபிக்கும் 18 ஆதாரங்கள் காவல்துறையின் முன் சமர்பிக்கப்பட்டுள்ளன” என்றார். படக்குறிப்பு,ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகம் ஜெய் பீம் ராவ் மேலும் பேசுகையில், “இவ்வாறான சூழ்நிலையில், வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி, குண்டூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் விசாரணையை புறக்கணித்துவிட்டு, மிகவும் அலட்சியமாக நீதிமன்றத்தில் அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். ஆட்சியரின் விசாரணை முடிவு வெளியாகாமல் சாதி பற்றி கேள்வி எழுப்பக்கூடாது. மேலும், 2018 முதல் 2024 வரை முடங்கியிருந்த இந்த வழக்கில் காவல்துறை திடீரென ஒரு விசாரணை அறிக்கையை சமர்ப்பித்துள்ளது, குற்றம் சாட்டப்பட்டவர்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கும் நோக்கத்தில் செய்யப்பட்டிருப்பது தெளிவாகிறது. விசாரணை அதிகாரிகளாக இருக்கும் போலீசார், தங்கள் கடமையை முற்றிலும் புறக்கணித்து, அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி, மிகவும் கேவலமான முறையில் அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்” என்றார். “ரோஹித் வெமுலா அவமதிக்கப்பட்டுள்ளார். விசாரணை அறிக்கை முற்றிலும் ஆதாரமற்றது, தவறானது. மீண்டும் விசாரணை நடத்துவோம் என்று அரசு கூறுகிறது. எனவே, அவர்கள் மீண்டும் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பார்ப்போம். இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்" என்று வழக்கறிஞர் ஜெய் பீம் ராவ் பிபிசியிடம் தெரிவித்தார். காவல்துறையின் விசாரணை அறிக்கையில் மீதான கேள்விகள் இந்தியாவின் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) முன்னாள் தலைவர் டாக்டர் சுக்தேவ் தோரட்டை, பிபிசி மராத்தி நேர்காணல் செய்தது. டாக்டர் சுக்தேவ் தோரட், “ரோஹித் வெமுலா பட்டியல் சாதியா அல்லது ஓபிசியா என்பதை கண்டுபிடிப்பதில் அமைப்பின் நேரத்தை செலவிடுவது சுத்த முட்டாள்தனம். ரோஹித் வெமுலா ஒரு தலித் என்ற பாகுபாட்டை எதிர்கொண்டதால், மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை தேவைப்படுகிறது. ரோஹித் வெமுலா வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் என்று தெலங்கானா மாநில காவல்துறை தலைமை இயக்குநர் அவரின் குடும்பத்தினருக்கு உறுதியளித்துள்ளது திருப்தி அளிக்கிறது. இந்த விவகாரம் மீண்டும் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்” என்றார். டாக்டர் சுக்தேவ் தோரட் மேலும் கூறுகையில், "பல்கலைக்கழகத்தில் ரோஹித் வெமுலா பட்டியல் சாதி சான்றிதழின் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை பெற்றார், அதன் அடிப்படையில் அவர் அனைத்து சலுகைகளையும் பெற்றார். அதாவது, பல்கலைக்கழக நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் அனைவருக்கும் ரோஹித் தலித் என்பது தெரியும். அவர் மீது காட்டப்பட்ட பாகுபாடு, இப்போது அவர் தலித் இல்லை என்று நிரூபிக்கப்பட்டதால் அழிந்து போகுமா என்ன?” “பல்கலைக்கழகத்தில் இயங்கி வந்த உள்ள அம்பேத்கரிய அமைப்புகளில் இணைந்து ரோஹித் வெமுலா செயல்பட்டு வந்தார். அவர் தெளிவான பாதையில் தான் சென்றிருக்கிறார். கருத்தியல் ரீதியாகவும் அவர் பட்டியல் சாதி எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு எதிராக தான் இயங்கி இருக்கிறார். அப்படியிருக்க, அவர் ஒரு தலித் அல்லாதவர் என்பது அம்பலமாகிவிடும் என்ற பயத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்வது மிகவும் தவறு” என்றார். மேலும் பேசிய அவர், "ரோஹித் வெமுலா வழக்கில் சிலரை விடுவிக்க இவ்வாறு அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது. ஆனால், தற்போது தெலங்கானா அரசு மீண்டும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதால் உண்மை வெளிவரும் என நம்புகிறோம்," என்றார் டாக்டர் சுக்தேவ் தோரட். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் முன்னாள் அமைச்சரும், தலித் இயக்க தலைவருமான டாக்டர் சஞ்சய் பாஸ்வானும் பிபிசி மராத்தியிடம் பேசினார். அவர் கூறுகையில், “ரோஹித் வெமுலா வழக்கின் போக்கை நான் ஆரம்பத்திலிருந்தே பின்பற்றி வருகிறேன். எனக்குத் தெரிந்தவரை, ரோஹித் மிகவும் தெளிவான மாணவர். சாதி அடையாளத்தை வெளிக்கொணர அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று சொன்னால் சரியாக இருக்கும். இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்’’ என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES “இந்த வழக்கில் காவல்துறை சரியாக விசாரணை நடத்தவில்லை என்பதை என்னால் பார்க்க முடிகிறது. விசாரணையின் திசை சரியாக இருக்க வேண்டும். இப்போது மீண்டும் விசாரிக்கத் தயாராகி விட்டீர் எனில் முந்தைய விசாரணையில் உள்ள குறைபாட்டை நீங்கள் ஏற்றுக் கொண்டீர்கள் என்று அர்த்தம். எனவே, விசாரணை அறிக்கை பிழையானது என்பது நிரூபணமாகிவிட்டது. இந்த விவகாரத்தை அரசியல் பிரச்னைகளுக்கு அப்பால் பார்க்க வேண்டும். இம்முறை வெளியாகும் விசாரணை சமூகத்திற்கு சரியான தகவலை வழங்க வேண்டும், இதன் மூலம், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க முடியும்" என்று டாக்டர் சஞ்சய் பாஸ்வான் கூறினார். ”காவல்துறை அறிக்கையைப் பார்க்கும்போது, ரோஹித் வெமுலா இரண்டாவது முறையாக கொல்லப்பட்டிருக்கிறார்” என்று மூத்த சட்ட நிபுணர் சங்கராஜ் ருப்வதே கூறுகிறார். சங்கராஜ் ருப்வதே பேசுகையில், “ரோஹித் வெமுலாவின் சமூக அந்தஸ்து தலித்தா அல்லது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பா என்பதை விட்டு விடுவோம். ஆனால், அவர் தற்கொலை சம்பவம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நடந்தது, அந்த வழக்கு முந்தைய சம்பவங்களின் பின்னணியைக் கொண்டிருந்தால், அது முறையாக விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும், இந்த அறிக்கையில் தற்கொலை சம்பவத்துக்கு முன்னர் நடந்தவற்றை பற்றி எந்த தகவலும் இல்லை”. "ரோஹித் தனது சாதி குறித்து அம்பலமாகிவிடும் என்று பயந்து தற்கொலை செய்துகொண்டார் என்று கூறுவது ஒரு கற்பனைக் கதையாகத் தெரிகிறது. பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் மாணவர்களுக்கானது. அவர்களின் குற்றச்சாட்டுகளை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் , இவ்வழக்கில் நிர்வாகத்தைக் காப்பாற்றுவதே முன்னுரிமையாக தெரிகிறது. இத்தகைய அறிக்கைகள் சட்டத்தின் மீதான பயத்தைப் போக்கி விடும், எந்த மாணவரும் துணிந்து அநீதிக்கு எதிராக குரல் எழுப்ப மாட்டார்கள். இது கல்வி நிறுவனங்களில் ஜனநாயக சூழலுக்கு உகந்ததல்ல" என்றார் சங்கராஜ் . ஹைதராபாத் பல்கலைக்கழக பேராசிரியர்களும் கேள்வி எழுப்பினர் "பேராசிரியர் அப்பா ராவ் துணைவேந்தராக வராமல் இருந்திருந்தால் ரோஹித் உயிருடன் இருந்திருப்பார்” என்று ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் சமூக பங்கேற்பு மற்றும் உள்ளடக்கக் கொள்கை துறைத் தலைவர் பேராசிரியர் ஸ்ரீபதி ராமுடு கூறுகிறார். அவர் மேலும் பேசுகையில், “அப்பா ராவ் எளிதில் தீர்க்கக்கூடிய பிரச்னையை பெரிதுபடுத்தினார். இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று தலித்துகள் மீதான அவரின் வெறுப்பு, பாகுபாடு மற்றொன்று சில அதிகார பிரமுகர்களிடம் இருந்து பாராட்டு பெறுவது.” இந்த வழக்கின் போக்கை கூறும் பேராசிரியர் ராமுடு, “உண்மையில், அப்பா ராவ் துணைவேந்தராக வருவதற்கு முன்பே இந்த விவகாரம் விசாரணைக்கு வந்தது. அப்போதைய வி.சி.சர்மா, இரு தரப்பு மாணவர்களும் தவறு செய்ததாகக் கூறியதுடன், தவறை மீண்டும் செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கடுமையாக எச்சரித்தார். இந்த விவகாரம் அத்துடன் முடிந்திருக்கும், ஆனால் சர்மா சென்ற பிறகு துணைவேந்தராக வந்த அப்பா ராவ், விஷயத்தை மீண்டும் கிளறினார். தனக்கு விசுவாசமானவர்களைக் கொண்ட குழுவை அமைத்து ஐந்து மாணவர்களையும் இடைநீக்கம் செய்தார். ஐந்து பேரும் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள்” என்றார். பட மூலாதாரம்,ROHITH VEMULA'S FACEBOOK PAGE படக்குறிப்பு,ரோஹித் வெமுலா அவர் மேலும் கூறுகையில், “எங்களை தூக்கிலிடுங்கள் அல்லது சயனைடு கொடுங்கள் என்று ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அப்பா ராவுக்கு ரோஹித் வெமுலா கடிதம் எழுதியிருந்தார், ஆனால் அப்பா ராவ் பதிலளிக்கவில்லை. இவ்வளவு உணர்வுபூர்வமான தீவிரமான கடிதத்திற்கு பல்கலைக்கழகத் தலைவர்கள் பதிலளிக்கவில்லை என்றால், நடந்த சம்பவத்துக்கு அவர்கள் தான் பொறுப்பு? போலீஸ் தரப்பு இந்த கோணத்தில் ஏன் விசாரிக்கவில்லை. இது சாதிச் சான்றிதழுக்கு சம்பந்தமே இல்லாத ஒன்று. ஒரு மாணவர் அப்படி ஒரு கடிதம் எழுதியிருக்கிறார், அதற்கு துணைவேந்தர் பதிலளிக்கவில்லை என்றால், மாணவரின் மரணத்திற்கு துணைவேந்தர் பொறுப்பேற்க வேண்டும். மாணவர்களையோ, அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் பேராசிரியர்களை விசாரிக்காமல் போலீஸார் விசாரணையை முடித்தால் அதனை சதியாகவே கருத வேண்டும்” என்றார். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பிபிசியிடம் பேசிய அப்பா ராவ், "யார் என்ன சொன்னாலும் அதற்கு நான் எதிர்வினையாற்ற விரும்பவில்லை. நான் நீதித்துறையை நம்புகிறேன்” என்றார். வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் - தெலங்கானா போலீசார் பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,தெலங்கானா காவல்துறை இயக்குநர் ரவி குப்தா இதற்கிடையில், தெலங்கானா காவல்துறையின் விசாரணை அறிக்கை வெளியானதும், ரோஹித்தின் தாயும் சகோதரரும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். அதன்பின், தெலங்கானா காவல்துறை தலைமை இயக்குநர் ரவி குப்தா கடிதம் ஒன்றை வெளியிட்டு, இந்த வழக்கில் மேலும் விசாரணைக்கு மனு தாக்கல் செய்வோம் என்று கூறினார். விசாரணை அறிக்கை நவம்பர் 2023-க்கு முன் எழுதப்பட்டு, மார்ச் 2024ந்இல் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது என்று காவல்துறை இயக்குநர் ரவி குப்தா கூறினார். மேலும் அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, “ரோஹித் வெமுலாவின் தாயார் மற்றும் பிற உறவினர்கள் விசாரணை குறித்து கேள்வி எழுப்பியதால் இந்த வழக்கில் மேலும் விசாரணை நடத்தப்படும். இதுகுறித்த மனு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்” என்றார். விசாரணை அறிக்கைக்குப் பிறகு ரோஹித் வெமுலாவின் தாயார் வி.ராதிகா மற்றும் சகோதரர் ராஜா வெமுலா ஆகியோர் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்தனர். இந்த சந்திப்புக்குப் பிறகு, ரோஹித் வெமுலாவின் தாயார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ”இந்த விவகாரம் மீண்டும் விசாரிக்கப்படும் என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி எங்களிடம் உறுதியளித்துள்ளார். ரோஹித்துடன் இடைநீக்கம் செய்யப்பட்ட மற்ற மாணவர்களைப் பற்றியும் முதலமைச்சரிடம் தெரிவித்தோம். வழக்கு காரணமாக இந்த மாணவர்களுக்கு வேலை கிடைக்காமல் பிஹெச்டி படித்தவர்களாக இருந்தும் விவசாயம் செய்ய வேண்டியுள்ளது என்றோம். இதுகுறித்து பரிசீலிப்பதாக முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். இந்த அரசாங்கம் எமக்கு நீதி வழங்கும் என நம்புகின்றோம்” என வி.ராதிகா தெரிவித்தார். உண்மையில் 2016-ல் நடந்தது என்ன? ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில், ஜனவரி 17, 2016 அன்று, ஆய்வு மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை செய்து கொண்டார். அவர் அம்பேத்கர் மாணவர் சங்கத்தில் உறுப்பினராக இருந்தார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன், ரோஹித் வெமுலா மற்றும் அவரது நான்கு நண்பர்கள் பல்கலைக்கழகத்தால் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்துடன் இணைந்த அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) உறுப்பினர், மாணவர்கள் தாக்கப்பட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். இருப்பினும், பல்கலைக்கழகத்தின் முதல் விசாரணையில் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று கண்டறியப்பட்டது, அதன் பிறகு ரோஹித் மற்றும் அவரது மற்ற மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் வந்தார், அவரது பதவிக் காலத்தில் எந்த ஒரு உறுதியான காரணமும் கூறாமல் பழைய முடிவு திரும்பப் பெறப்பட்டது. மீண்டும் ரோஹித் மற்றும் அவரது நண்பர்கள் பல்கலைக்கழக விடுதி மற்றும் பிற பொது இடங்களில் தடை செய்யப்பட்டனர். அதே நேரத்தில், செகந்திராபாத் பாஜக எம்.பி. பண்டாரு தத்தாத்ரேயா (தற்போது ஹரியானா ஆளுநர்) அப்போதைய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கடிதம் எழுதினார். அவர் பல்கலைக்கழகத்தை 'நம்பிக்கை துரோகி' என்று அழைத்தார் மற்றும் அங்கு நடந்த சம்பவங்களில் தலையீடு கோரினார். தத்தாத்ரேயாவின் கடிதத்தைத் தொடர்ந்து, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒரு குழுவை அமைக்க பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டது, இது ரோஹித் வெமுலா மற்றும் பிற மாணவர்களை இடைநீக்கம் செய்ய முடிவு செய்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த கடிதத்தை மேற்கோள் காட்டி, அம்பேத்கர் மாணவர் சங்கம், தத்தாத்ரேயாவின் கடிதத்திற்கு பிறகு, பல்கலைக்கழகத்தில் பிரச்னைகள் தொடங்கியதாகவும், அதன் பிறகு மேலும் சில தலித் மாணவர்கள் சமூக பாகுபாடு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகவும் குற்றம் சாட்டினர். இந்த வழக்கில் பண்டாரு தத்தாத்ரேயா மீது தற்கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர் மீது எஸ்சி-எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தத்தாத்ரேயா, குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு, ரோஹித் வெமுலாவின் தற்கொலைக்கும் அவர் எழுதிய கடிதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார். https://www.bbc.com/tamil/articles/c51nv2j0ng2o
  17. 06 MAY, 2024 | 01:40 PM இந்திய கடற்பரப்பில் நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ள 5 மீனவர்களையும் நாட்டுக்கு அழைத்துவர கடற்றொழில் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை எவ்வித முனைப்பும் காட்டவில்லை என வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் குற்றம் சுமத்தியுள்ளார். இன்று திங்கட்கிழமை (6) காலை மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இந்திய கடற்பரப்பில் நுழைந்த நிலையில் கைது செய்யப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ள 5 மீனவர்களின் நிலை தொடர்பாக இந்த ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி தலைமன்னாரில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற 05 மீனவர்கள் தமிழக கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். எவ்வித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாத நிலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மீன்பிடியில் ஈடுபட்டபோது கடலில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக அவர்களின் படகு அங்கு ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மீனவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்ட காலம் முதல் அவர்கள் விடுவிக்கப்பட்ட காலம் வரை சுமார் 6 மாதங்கள் அவர்கள் தொடர்பான எவ்வித நடவடிக்கைகளையும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சர் எவரும் எடுக்கவில்லை. தமிழக மீனவர் ஒருவர் இலங்கையில் கைது செய்யப்பட்டிருந்தால் அல்லது பாதிக்கப்பட்டிருந்தால் தமிழகத்தில் இடம்பெறுகின்ற போராட்டங்களும், தமிழக அரசு மற்றும் அங்குள்ள இந்திய துணை தூதரகங்கள் முனைப்புடன் செயற்படுகின்றன. ஆனால், எமது மீனவர்களுக்கு இவ்வாறான நிலை ஏற்படுகின்றபோது இங்குள்ள அரசியல் பிரதிநிதிகளால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இந்த 5 மீனவர்களும் விடுவிக்கப்பட்டு இன்று இந்தியாவில் உள்ள எம்மோர் என அழைக்கப்படும் புத்த கோவில் பகுதியில் இலங்கை துணைத் தூதரகத்தினால் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை இதுவரை முன்னெடுக்கப்படவில்லை. இவர்களில் மூவர் திருமணம் செய்தவர்கள்; இருவர் திருமணம் செய்யாதவர்கள். அவர்களின் குடும்பங்கள் இங்கு பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றன. அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களின் தற்போதைய நிலையை எவரும் கேட்டறிந்ததாக தெரியவில்லை. வட பகுதியில் உள்ள ஒவ்வொரு மீனவரின் நிலையும் இவ்வாறே அமைந்துள்ளது. யாருமே அவர்கள் மீது அக்கறை செலுத்துவதில்லை. எனவே தற்போது அங்குள்ள மீனவர்களின் நிலையை கருத்தில் கொண்டு, கடற்றொழில் அமைச்சர் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் துரித நடவடிக்கையை எடுத்து, 5 பேரையும் உடனடியாக நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/182802
  18. நாட்டின் காலநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை "கடும் அவதானம்" செலுத்தப்பட வேண்டிய நிலைக்கு அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்தின் சில இடங்களிலும் இன்று(06.05.2024) வெப்பமானது மேலும் உயர்ந்து அதிக அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிகுறிகள் இதேவேளை வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களில் இவ்வாறு வெப்பநிலை உயர் மட்டத்தில் இருக்கும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. போதுமான அளவு நீர் அருந்துதல், நிழலான பகுதிகளில் முடிந்த அளவு ஓய்வெடுத்தல், கடுமையான வெளிப்புறச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துதல் போன்ற சுகாதார ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் என்று திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர் மெரில் மெண்டீஸ் தெரிவித்தார். இதற்கிடையில், அதிக சூரிய ஒளி காரணமாக தலைவலி, வாந்தி, உடல்வலி, தூக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றக்கூடும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். https://tamilwin.com/article/cilmate-change-weather-alert-1714953906?itm_source=parsely-detail
  19. புள்ளிப் பட்டியலையே புரட்டிய பிரமாண்ட வெற்றி; நிச்சயமற்ற நிலையில் பிளேஆப் இடங்கள் பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஐபிஎல் தொடரில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்த ஆட்டங்கள் புள்ளிப் பட்டியலையே புரட்டிப் போட்டிருக்கின்றன. கடைசி இடத்தில் இருந்த ஆர்சிபி 7-ஆவது இடத்துக்குச் சென்றிருக்கிறது. 5-ஆவது இடத்திலிருந்த சிஎஸ்கே 3-ஆவது இடத்துக்குச் சென்றிருக்கிறது. முதலிடத்தில் நீடித்து வந்த ராஜஸ்தான் சரிந்துள்ளது, 2ஆவது இடத்திலிருந்த லக்னோ அணி டாப்-4 இடத்திலேயே இல்லை. லக்னோவில் ஞாயிறன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 54-ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 98 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் சேர்த்தது. 236 ரன்கள் எனும் பிரமாண்ட இலக்கை விரட்டிய லக்னோ அணி 16.1 ஓவர்களில் 137 ரன்களில் சுருண்டு 98 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES முதலிடத்துக்கு வலுக்கும் மோதல் இந்த வெற்றியால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 11 போட்டிகளில் 8 வெற்றி, 3 தோல்வி என 16 புள்ளிகள் பெற்று, நிகர ரன்ரேட்டில் 1.453 என வலுவாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. ராஜஸ்தான் அணி 16 புள்ளிகள் பெற்றிருந்தாலும், நிகர ரன்ரேட்டில் சிஎஸ்கே அணியை விடக் குறைவாக 0.622 என்று இருப்பதால் 2-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ராஜஸ்தான் அணிக்கு இன்னும் 4 ஆட்டங்கள் மீதம் உள்ளன. இதில் அனைத்தையும் வென்றால் தான் முதல் இரு இடங்களுக்குள் வர முடியும். கொல்கத்தா அணிக்கு இன்னும் 3 ஆட்டங்கள் மட்டுமே இருப்பதால் அதில் அனைத்திலும் வென்றாலும் 22 புள்ளிகள் மட்டுமே பெற முடியும். ராஜஸ்தான் அணி 4 ஆட்டங்களிலும் வென்றால், 24 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடிக்க முடியும். ஒரு ஆட்டத்தில் தோற்றாலும், நிகர ரன்ரேட்டில் கொல்கத்தா முதலிடத்துக்கு முன்னேற வாய்ப்புள்ளது. தற்போது கொல்கத்தா அணி வலுவான நிகர ரன்ரேட்டை பெற்றுள்ளதால், முதலிடத்தை பிடிக்க ராஜஸ்தானுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES 4-ஆவது இடத்துக்கு கடும் போட்டி லக்னோ அணி 2-ஆவது இடத்தில் இருந்த நிலையில் இந்தத் தோல்வியால் டாப்-4 இடத்திலிருந்து வெளியே அனுப்பப்பட்டுள்ளது.11 ஆட்டங்களில் 6 வெற்றி, 5 தோல்வி என 12 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது லக்னோ அணி. சிஎஸ்கே, சன்ரைசர்ஸ், லக்னோ அணிகள் தலா 12 புள்ளிகள் பெற்றிருந்தாலும், நிகர ரன்ரேட்டில் லக்னோ அணி மைனஸ் 0.371 என மோசமாக இருப்பதால் 5-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சன்ரைசர்ஸ் 0.072 நிகர ரன்ரேட்டையும், சிஎஸ்கே 0.700 பெற்று வலுவாக இருக்கின்றன. ப்ளே ஆஃப்பில் 4-ஆவது இடத்தைப் பிடிக்க லக்னோ, சன்ரைசர்ஸ், டெல்லி அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து வரும் ஆட்டங்களின் முடிவுகள் புள்ளிப்பட்டியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். பட மூலாதாரம்,GETTY IMAGES கொல்கத்தா அணி வென்றது எப்படி? கொல்கத்தா அணியின் வெற்றிக்கு பேட்டர்கள் அமைத்துக் கொடுத்த மிகப்பெரிய ஸ்கோர் தான் காரணம். பெரிய ஸ்கோர் இருந்ததால் தான், பந்துவீச்சாளர்களால் சுதந்திரமாக, அழுத்தமின்றி அதை டிஃபெண்ட் செய்ய முடிந்தது. குறிப்பாக சுனில் நரைன் தொடக்க வீரராக களமிறங்கி 39 பந்துகளில் 81 ரன்கள் (7 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள்) சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் வலுவான அடித்தளம், பெரிய ஸ்கோரை எட்ட கொல்கத்தா அணிக்கு உதவியது. பந்துவீச்சிலும் 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்திய சுனில் நரைனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. கொல்கத்தா அணி பவர்ப்ளேயில் சேர்த்த பெரிய ஸ்கோரை அடித்தளமாக வைத்துக் கொண்டு அடுத்தடுத்து வந்த பேட்டர்கள் கேமியோ ஆடி ரன்ரேட்டை உயர்த்தி, 200 ரன்களுக்கு மேல் கொண்டு சென்றனர். சுனில் நரைனைத் தவிர கொல்கத்தா அணியில் வேறு எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. 30 ரன்களுக்குள் ஆட்டமிழந்தனர். குறிப்பாக ராமன்தீப் சிங் 6 பந்துகளில் 3 சிக்ஸர்கள் உள்பட 25 ரன்கள் சேர்த்தது, பில்சால்ட்(32), ஸ்ரேயாஸ்(23), ரகுவன்ஷி(32) ஆகியோரின் ஆக்ரோஷமான கேமியோ ஆகியவை கொல்கத்தா ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணம். பந்துவீச்சில் ஹர்சித் ராணா, ஆந்த்ரே ரஸல், வருண் ஆகியோர் லக்னோ அணி சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES லக்னோ தோல்விக்கு காரணம் என்ன? லக்னோ அணிக்கு தொடக்கமும் சரியாக அமையவில்லை, அதன்பின் எந்த பார்ட்னர்ஷிப்பும் வலுவாக அமையவில்லை. கேப்டன் ராகுல்(25), ஸ்டாய்னிஸ்(36) ஆட்டமிழந்தபின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. 70 ரன்கள் வரை ஒரு விக்கெட்டை மட்டும் இழந்திருந்த லக்னோ அணி, அடுத்த 67 ரன்களுக்குள் மீதமிருந்த 9 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தோல்வியை ஒப்புக்கொண்டது. ராகுல், ஸ்டாய்னிஸை தவிர்த்து மற்ற அனைத்து பேட்டர்களும் 10 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது தோல்விக்கான முக்கியக் காரணம். தீபக் ஹூடா முதல் கடைசி வரிசை பேட்டர் பிஸ்னோய் வரை அதிகபட்சமாக 12 பந்துகளைத் தான் சந்தித்துள்ளனர். 200 ரன்களுக்கு மேல் செல்லும் பெரிய ஸ்கோரை சேஸிங் செய்யும்போது பவர்ப்ளே ஓவருக்குள் பெரிய அடித்தளம் அமைக்க வேண்டியிருக்கிறது. ஆனால், பவர்ப்ளே ஓவரில் லக்னோ அணி 55 ரன்களை மட்டுமே சேர்த்தது. அதன்பின் தேவைப்படும் ரன்ரேட் லக்னோவுக்கு 13 ஆக இருந்தது பெரிய அழுத்தத்தைக் கொடுத்தது. கொல்கத்தா பந்துவீச்சாளர்களின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் பவர்ப்ளே முடிந்தபின், லக்னோ பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தது. குறிப்பாக கேப்டன் ராகுல், ஸ்டாய்னிஸ் ஆட்டமிழந்தபின் லக்னோ பேட்டர்கள் நம்பிக்கையிழந்து விட்டது போல் பேட் செய்தனர். குறிப்பாக நிகோலஸ் பூரன்(10), தீபக் ஹூடா(5), பதோனி(15), டர்னர்(16) குர்னல் பாண்டியா(5), யுத்விர் சிங்(5) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES பலவீனமாகக் காணப்பட்ட பந்துவீச்சு பந்துவீச்சில் படுமோசமாகவும் லக்னோ வீரர்கள் செயல்பட்டனர். ரவி பிஸ்னோய் தவிர மற்ற 6 பந்துவீச்சாளர்ளும் ஓவருக்கு சராசரியாக 12 ரன்களை விட்டுக் கொடுத்தனர். அதேபோல கடைசி டெத் ஓவர்களிலும் கட்டுக்கோப்பாக பந்துவீசாதது கொல்கத்தா அணியை 200 ரன்களுக்கு மேல் செல்ல உதவியாக இருந்தது. தோல்விக்குப்பின் லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் கூறுகையில் “ஏராளமான ரன்களை பந்துவீச்சில் தவறவிட்டு பெரிய இலக்கை அமைக்க உதவினோம். பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படவில்லை. ஒட்டுமொத்தத்தில் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் மோசமான செயல்பட்டுள்ளோம். சுனில் நரைன் எங்களுக்கு பவர்ப்ளேயில் பெரிய அழுத்தத்தை உருவாக்கினார். அந்த அழுத்தத்தை எங்கள் பந்துவீச்சாளர்களால் கையாள முடியவில்லை. தரமான வீரர்களுக்கு எதிராக போராட வேண்டும், உங்கள் திறமை பரிசோதிக்கப்படும். இதுதான் ஐபிஎல், இப்படித்தான் இருக்கும். நல்ல லென்த்தில் பந்தை பிட்ச் செய்தால் பவுன்ஸ் ஆகியது. நாங்கள் நினைத்ததை விட 30 ரன்கள் அதிகமாக கொல்கத்தாவை சேர்க்கவிட்டோம்.” என்றார். மேலும், “எங்கள் பேட்டிங் மோசமாக இருந்தது. நாங்கள் முன்கூட்டியே தயாராகினோம், எதிரணி பேட்டர்கள் குறித்து ஆலோசித்தோம். எந்த வகையான திட்டத்தோடு வந்தோம் என்பதை நினைக்கவில்லை, அதை செயல்படுத்தவும் இல்லை. சுனில் நரைனை ஆட்டமிழக்கச் செய்ய கிடைத்த 2 வாய்ப்புகளைத் தவறவிட்டோம். அடுத்தடுத்துவரும் ஆட்டங்கள் முக்கியமானவை. பதற்றமில்லாமல், பயமில்லாமல் எதிர்வரும் ஆட்டங்களை அணுக வேண்டும்” என்று கூறினார் ராகுல். பட மூலாதாரம்,GETTY IMAGES சுனில் நரைனின் ஆட்டம் எப்படி இருந்தது? கொல்கத்தாவுக்கு பில் சால்ட், சுனில் நரைன் வலுவான அடித்தளம் அமைத்தனர். சால்ட் தனது முதல் 9 பந்துகளில் 24 ரன்களைச் சேர்த்து 14 பந்துகளில் 32 ரன்கள் என சிறிய கேமியோ ஆடி வெளியேறினார். அதன்பின், ரகுவன்ஷி, நரைனுக்கு ஒத்துழைப்பு அளிக்க, லக்னோ பந்துவீச்சை நரைன் கிழித்து எறிந்தார். மோசின் கான், குர்னல் பாண்டியா, ஸ்டாய்னிஸ், யாஷ் தாக்கூர் என யார் பந்துவீசினாலும் டீப் ஸ்குயர் லெக், டீப் மிட்விக்கெட் திசையில் பவுண்டரி, சிக்ஸர் என நரைன் அதிரடியாக இறங்கினார். 27 பந்துகளில் அவர் அரைசதம் அடித்தார். இந்த அரைசதத்தில் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும். 2-ஆவது விக்கெட்டுக்கு ரகுவன்ஷி, நரைன் 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். லக்னோ அணி 14 ஓவர்கள் முதல் 18 ஓவர்கள் வரை தான் ஓரளவுக்கு கட்டுக்கோப்பாக பந்துவீசி 45 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரகுவன்ஷி(32), ரஸல்(12),ரிங்கு சிங்(16), ஸ்ரேயாஸ்(23) என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். கடைசியில் ராமன்தீப் சிங் மிரட்டலான கேமியோ ஆடி 6 பந்துகளில் 3 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 25 ரன்கள் சேர்த்தார். சுனில் நரைன் அமைத்துக் கொடுத்த தளத்தைப் பயன்படுத்தி பின்வரிசையில் வந்த பேட்டர்கள் கேமியோ ஆடி பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES நெருக்கடி தந்த கொல்கத்தாவின் பந்துவீச்சு பந்துவீச்சிலும் கொல்கத்தா அணி தரமாக தாக்குதலைத் தொடுத்தது. தொடக்கத்திலிருந்தே ராகுல், குல்கர்னிக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் ஸ்டார்க், வைபவ் அரோரா பந்துவீசினர். குல்கர்னி(9) ஸ்டார்க்கின் முதல் ஓவரிலேயே வீழ்ந்தார். அதன்பின் ஸ்டாய்னிஸ், ராகுல் கூட்டணியைப் பிரிக்கத்தான் 6 ஓவர்களுக்கு கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் சிரமப்பட்டனர். 8-ஆவது ஓவரில் ராகுல் ஆட்டமிழந்தபின் கொல்கத்தா பந்துவீச்சாளர்களின் பணி எளிதாகியது. ஒவ்வொரு ஓவரிலும் விக்கெட்டுகள், லக்னோ பேட்டர்கள் வருவதும் போவதும் என இருந்து, கொல்கத்தா பந்துவீச்சாளர்களின் பணியை எளிதாக்கினர். குறிப்பாக நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஸ் விக்கெட்டுகளை ரஸல் வீழ்த்தி ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தினார். கேப்டன் ராகுல் விக்கெட்டை ஹர்சித் ராணா எடுத்து லக்னோ ரன்ரேட்டுக்கு பெரிய திருப்பத்தை உருவாக்கினார். இந்த 3 விக்கெட்டுகள் தான் ஆட்டத்தின் போக்கையே திருப்பிவிட்டன. https://www.bbc.com/tamil/articles/cd185jwygego
  20. பூமி மொத்தமாக அழியப்போவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி அளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளனர். இதேவேளை பூமியில் மனிதன், விலங்குகள் உள்ளிட்ட எந்த உயிரினமும் வாழ முடியாத நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை டெல்லி மெயில் அறிக்கையின்படி, இன்னும் 250 மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு பூமியில் பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் கணினி உருவகப்படுத்துதல் தொழில்நுட்பத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு குழுவின் தலைவர் அலெக்சாண்டர் ஃபார்ன்ஸ்வொர்த் கூறுகையில், பூமி முதலில் சூடாகவும், பின்னர் வறண்டதாகவும், இறுதியாக வாழத் தகுதியற்றதாகவும் மாறும். அதுமட்டுமன்றி வெப்பம் தாங்காமல் எரிமலைகள் வெடித்து சிதறி, பூமியின் பெரும்பகுதி எரிமலையால் மூடப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. மனிதர்கள் இறந்துப்போகும் சூழல் அவ்வாறு நிகழும்போது அது அதிக அளவு கார்பன் டை ஆக்சைடை வெளியிடும். அதனால் மக்கள் சுவாசிக்க சிரமப்படுவார்கள். அதன்பிறகு படிப்படியாக பூமியில் ஒரு உயிரினம் கூட மிச்சமில்லாமல் மொத்தமாக அழிந்துவிடும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அந்த நேரத்தில் உலகில் கார்பன்டை ஆக்சைட்டின் அளவு இப்போது இருப்பதை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கலாம். இதன் காரணமாக உடல் வெப்பமடைந்து மனிதர்கள் இறந்துப்போகும் சூழல் உருவாகும். பின்னர் பூமியின் அனைத்து கண்டங்களும் ஒன்றிணைந்து ஒரு சூப்பர் கண்டத்தை உருவாக்கும், அது பாங்கேயா அல்டிமா என்று அழைக்கப்படுகிறது என கூறியுள்ளார். விரைவில் அழிவு விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பூமியில் மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் மறைந்துவிடும். அந்த நேரத்தில் பூமியின் வெப்பநிலை 70 டிகிரி செல்ஸியஸை எட்டும். அத்தகைய சூழலில் பூமியில் எந்த உயிரினமும் வாழ இயலாது. அனைத்தும் வெப்பத்தின் காரணமாக அழிந்துவிடும். பூமியில் நாம் கார்பனை வெளியேற்றும் வேகத்தின் காரணமாக இந்த அழிவு விரைவில் நிகழ வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல நிகழ்ந்திருக்கலாம் என்றும், அதன் காரணமாக டைனோசர்கள் அழிந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. https://tamilwin.com/article/earth-will-be-totally-destroyed-1714959998
  21. க.பொ.த. சாதாரண தர பரீட்சை ஆரம்பமாகியது Published By: DIGITAL DESK 3 06 MAY, 2024 | 10:41 AM நாடளாவிய ரீதியில் 2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியது. இந்த பரீட்சை 3,527 நிலையங்களில் ஆரம்பமாகியுள்ளதுடன், 452,979 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். கிளிநொச்சி கிளிநொச்சி தெற்கு மற்றும் வடக்கு கல்வி வலயங்களில் இவ்வாண்டு 33 பரீட்சை நிலையங்களில் 4026 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர். பரீட்சை நிலையங்கள் இணைப்பு செய்யும் வகையில் 10 இணைப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன பாடசாலை ரீதியாக 3,519 பரீட்சார்த்திகளும் 507 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக 4,026 மாணவர்கள் பரீட்சை தோற்றியுள்ளனர். யாழ்ப்பாணம் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 111 பரீட்சை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் 13,902 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர். வவுனியா வவுனியாவில் 4,309 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதுடன் அவர்களுக்காக 40 பரீட்சைநிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/182773
  22. 05 MAY, 2024 | 06:19 PM தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை பாக்ஜலசந்தி கடலினை 10 மணிநேரம் 10 நிமிடங்களில் 12 நீச்சல் வீரர்கள், வீராங்கணைகள் தொடர் ஓட்ட முறையில் (RELAY RACE) நீந்தி சாதனை படைத்தனர். இந்தியாவின் மகாராஸ்ட்ரா மாநிலம், தானே பகுதியில் செயற்பட்டுவரும் ராம் சேது திறந்த நீர் நீச்சல் அறக்கட்டளையை சேர்ந்த மகராஸ்ட்ரா மாநிலத்தின் 12 நீச்சல் வீராங்கனைகள் இரண்டு குழுக்களாக பிரிந்து தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை உள்ள சுமார் 30 கி.மீ தொலைவிலான பாக்ஜலசந்தி கடற்பரப்பினை நீந்தி கடப்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கு அனுமதி கோரியிருந்தனர். இந்தியா / இலங்கை இரு நாட்டு அனுமதியும் கிடைத்த நிலையில் வெள்ளிக்கிழமை (03) பிற்பகல் ராமேஸ்வரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து இரண்டு படகுகளில் தங்கள் நீச்சல் பயிற்சியாளர் தலைமையில் மீனவர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினர் தலைமன்னாரை வந்தடைந்தனர். தலைமன்னாரிலிருந்து சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு கடலில் குதித்து தொடர் ஓட்ட முறையில் (RELAY RACE) நீந்தத் தொடங்கி 12 பேரும் மாலை 4.40 மணியளவில் (10 மணி நேரம் 20 நிமிடங்களில் நீந்தி) தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியை சென்றடைந்தனர். கடலில் நீந்தி சாதனை படைத்தவர்களை சுங்கத்துறை, மரைன் பொலிஸார், சுற்றுலாப்பயணிகள் அரிச்சல்முனையில் வரவேற்றனர். https://www.virakesari.lk/article/182766
  23. 05 MAY, 2024 | 06:14 PM தென்னிந்திய நடிகரும் இயக்குநருமான ஆர். பாண்டியராஜன் இன்று (05) யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார். அவர் யாழ்ப்பாணம் கொழும்புத்துறை இல. 199 சுண்டுக்குழியில் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு பட்டிமன்றத்தில் கலந்துகொண்டார். "மக்களுக்கு சினிமாவும் சீரியலும் வழிகாட்டுகிறதா? வழிமாறுகின்றதா?" என்றொரு தலைப்பிலும் "இன்றைய சூழ்நிலையில் பிறருக்கு உதவி செய்வது ஆபத்தே? ஆனந்தமே?" என்ற தலைப்பிலும் இரு பட்டிமன்றங்கள் நடைபெற்றன. இந்த பட்டிமன்றத்தினை காண பல இடங்களிலும் இருந்து மக்கள் வருகை தந்தனர். இதில் கிருபா சாரதி பயிற்சிசாலை அதிபர் அ.கிருபாகரன், பட்டிமன்ற நடுவர் முனைவர் நெல்லை பி.சுப்பையா, கவிஞர் பிரிய நிலா உள்ளிட்ட பட்டிமன்ற பிரவாத அணிசேர் கலைஞர்கள் பலரும் பங்கெடுத்தனர். https://www.virakesari.lk/article/182765
  24. பஞ்சாபை வென்றாலும் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் வருத்தம் ஏன்? களத்தில் என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரவீந்திர ஜடேஜா கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 34 நிமிடங்களுக்கு முன்னர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக தொடர்ந்து 5 தோல்விகள், இந்த சீசனில் சொந்த மைதானத்திலேயே தோல்வி என துவண்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அது மட்டுமல்லாமல் தனது மிகப்பெரிய வெற்றியால், பஞ்சாப் அணியையும் ஐபிஎல் ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்லவிடாமல் தொடரிலிருந்தே சென்னை அணி வெளியேற்றியது. தரம்சாலாவில் ஞாயிற்றுக்கிழமை (மே 5) நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 53-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது சிஎஸ்கே அணி. முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்தது. 168 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 139 ரன்களுக்கு ஆட்டமிழந்து 28 ரன்களில் தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக கடந்த 3 ஐபிஎல் சீசன்களில் தொடர்ந்து 5 தோல்விகளைச் சந்தித்த சிஎஸ்கே அணி அந்தத் தோல்விகளுக்கு இந்த வெற்றியால் முற்றுப்புள்ளி வைத்தது. ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம் இந்த வெற்றியால் சிஎஸ்கே அணி 11 போட்டிகளில் 6 வெற்றி, 5 தோல்வி என 12 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நிகர ரன்ரேட்டில் கொல்கத்தாவுக்கு பின் அதிகமாக 0.700 வைத்துள்ளதால் 3-வது இடத்துக்கு முன்னேறியது. முதலிடத்தில் இருக்கும் ராஜஸ்தான்அணிகூட நிகர ரன்ரேட் 0.622 மட்டுமே வைத்துள்ளது. இதன் மூலம் சிஎஸ்கே அணி தனது ப்ளே ஆஃப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளது. அடுத்துவரும் 3 ஆட்டங்களிலும் சிஎஸ்கே கட்டாய வெற்றி பெறுவது ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சிக்கலின்றி செல்ல உதவும். வெளியேறும் பஞ்சாப் கிங்ஸ் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டோனி மற்றும் ரபாடா அதேநேரம், பஞ்சாப் கிங்ஸ் அணி இந்தத் தோல்வியால் ஐபிஎல் தொடரிலிருந்து ஏறக்குறைய வெளியேறிவிட்டது. 11 போட்டிகளில் 4 வெற்றி, 7 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் இருக்கும் பஞ்சாப் அணிக்கு இன்னும் 3 ஆட்டங்கள் உள்ளன. இந்த 3 ஆட்டங்களில் வென்றாலும் 6 புள்ளிகள் என அதிகபட்சமாக 14 புள்ளிகள்தான் பெற முடியும். இந்த புள்ளிகள் ப்ளேஆஃப் சுற்றின் கடைசி இடத்துக்குப் போதாது என்பதால், தொடரிலிருந்து ஏறக்குறைய வெளியேறிவிட்டது பஞ்சாப் அணி. இனிவரும் ஆட்டங்களில் பஞ்சாப் அணி வென்றால், பிற அணிகளின் ப்ளே ஆஃப் வாய்ப்பைத்தான் கெடுத்துவிடும். ஆபத்பாந்தவன் ஜடேஜா சிஎஸ்கே அணி சிக்கலான கட்டத்தில் இருக்கும் போதெல்லாம் பெரும்பாலான நேரத்தில் ஆங்கர் ரோல் எடுத்து ஜடேஜா விளையாடியுள்ளார். இந்த ஆட்டத்திலும் சிஎஸ்கே தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்த நேரத்தில் ஆங்கர் ரோல் செய்து 43 ரன்களும் பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்திய ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பஞ்சாப் தோல்விக்குக் காரணம் என்ன? பஞ்சாப் அணி கிடைத்த வாய்ப்பை தவறவிட்டதுதான் தோல்விக்கு முக்கியக் காரணம். சிஎஸ்கே அணி 122 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த நேரத்தில் தொடர்ந்து நெருக்கடி கொடுத்திருந்தால், 140 ரன்களுக்குள் சுருட்டியிருக்கலாம். ஷர்துல் தாக்கூர்(17), ஜடேஜா(43) இருவரையும் களத்தில் ஷாட்களை ஆட அனுமதித்ததுதான் பஞ்சாப் அணி செய்த பெரிய தவறாகும். நடுவரிசையில் இருவரின் விக்கெட்டுகளையும் விரைவாக வீழ்த்தி இருந்தால் ஆட்டம் பஞ்சாப் கரங்களில் இருந்திருக்கும். பேட்டிங்கிலும் பஞ்சாப் அணி 2-வது ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்தது அந்த அணியின் “இன்டென்ட்டை” கடுமையாகப் பாதித்தது. இதனால் அடுத்தடுத்து வந்த பேட்டர்களும் களத்தில் நின்று செட்டில் ஆவதற்குள் பெரிய ஷாட்களுக்கு முயன்றது பெரிய தவறு. டெய்லெண்டர்கள் பேட்டர்கள் கடைசி நேரத்தில் சிறப்பாக ஆடும்போது தொடக்கவரிசை, நடுவரிசை பேட்டர்கள் நிதானமாக ஆடி இருக்கலாம். 8-வது ஓவரிலிருந்து 10-வது ஓவர் வரை பஞ்சாப் அணி தொடர்ந்து விக்கெட்டுகளை சீராக இழந்து வந்தது. 62 ரன்களுக்கு 2 விக்கெட் என இருந்த பஞ்சாப் அணி அடுத்த 16 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது தோல்விக்கு முக்கியக் காரணம். பல போட்டிகளில் பஞ்சாப் அணியை காப்பாற்றிய சஷாங் சிங், அசுதோஷ் சர்மா இருவருமே ஏமாற்றம் அளித்தனர். "வெற்றி பெற்றாலும் வருத்தம்தான்" பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே கேப்டன் கெய்க்வாட் கூறுகையில், “டாஸில் தோற்றாலும் போட்டியில் வென்றுவிட்டாயே என பலர் கூறினாலும் டாஸ் தோற்றது எனக்குக் கவலையாக இருக்கிறது. இந்த விக்கெட்டில் பந்து மெதுவாக பேட்டரை நோக்கி வரும் என்று கூறினர், பந்து தாழ்வாக பேட்டரை நோக்கி வரும் என்றனர். நாங்கள் 200 ரன்களை எடுக்கவே தொடக்கத்தில் நினைத்தோம். ஆனால், தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்ததால், 180 ரன்களை எட்டிவிடுவோம் என்று நம்பினேன். ஆனால் 10 ரன்கள் குறைவுதான். 2-வது இன்னிங்ஸில் நாங்கள் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. சிமர்ஜித் சிங் 150 கி.மீ. வேகத்தில் பந்துவீசுவார் என எனக்கு இதற்குமுன் தெரியாது. தீபக், ஷர்துல், துஷார், பதிரணா, முஸ்தாபிசுர் மட்டுமே வைத்திருந்தோம். சிமர்ஜித்துக்கு போதுமான வாய்ப்புகளை வழங்கவில்லை. பரவாயில்லை இன்று அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது, அதை சிறப்பாக பயன்படுத்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நாங்கள் அடைந்த காயத்துக்கு நிவாரணம் இந்த வெற்றியால் கிடைத்துள்ளது. யாரெல்லாம் விளையாடப் போகிறார்கள் என்பது காலை வரை தெரியவில்லை. இந்த வெற்றி எங்களுக்கு உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறது” எனத் தெரிவித்தார். ரஹானே ஏமாற்றம் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. சிஎஸ்கே கேப்டன் கெய்க்வாட், ரஹானே ஆட்டத்தைத் தொடங்கினர். ரபாடா வீசிய முதல் ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் ஏதும் சிஎஸ்கே பேட்டர்கள் அடிக்கவில்லை. அர்ஷ்தீப் வீசிய 2-வது ஓவரில் ரஹானே பவுண்டரி அடித்தநிலையில் அதே ஓவரின் 5-வது பந்தில் ரபாடாவிடம் கேட்ச் கொடுத்து 9 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த முறையும் ரஹானே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். ரஹானே இந்த சீசனில் 200 ரன்களைக் கூட தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மிட்ஷெல், கெய்க்வாட் அதிரடி அடுத்து டேரல் மிட்ஷெல் களமிறங்கி, கெய்க்வாட்டுடன் சேர்ந்தார். அர்ஷ்தீப் வீசிய 4-வது ஓவரில் மிட்ஷெல் ஒரு பவுண்டரி, சிக்ஸர் உள்பட 12 ரன்கள் சேர்த்தார். ஹர்பிரித் பிரார் வீசிய 6-வது ஓவரில் மிட்ஷெல் ஒரு பவுண்டரியும், கெய்க்வாட் ஒரு சிக்ஸர், இரு பவுண்டரி என 19 ரன்கள் சேர்த்தனர். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் சேர்த்தது. கடந்த போட்டியில் ஹர்பிரித் பிரார் 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள்தான் கொடுத்திருந்தார். இன்று ஒரே போட்டியில் 19 ரன்கள் வாரி வழங்கினார். இதுதான் டி20 கிரிக்கெட்! சிஎஸ்கே தடுமாற்றம் பட மூலாதாரம்,GETTY IMAGES 8-வது ஓவரை ராகுல் சஹர் வீச வந்தபோதுதான் திருப்பம் ஏற்பட்டது. சஹர் வீசிய முதல் ஓவர் முதல் பந்திலேயே விக்கெட் கீப்பர் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து கெய்க்வாட் 32 ரன்னில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு கெய்க்வாட்-மிட்ஷெல் கூட்டணி 52 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்தவந்த சிஎஸ்கே முதுகெலும்பு பேட்ஸ்மேன் ஷிவம் துபே டக்அவுட்டில் விக்கெட் கீப்பர் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. ஷிவம் துபே சுழற்பந்துவீச்சை எளிதாகக் கையாண்டு ரன் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் ஷிவம் துபே களத்தில் இருக்கும்போது சுழற்பந்துவீச்சாளர்களை பெரும்பாலும் அணியினர் பயன்படுத்தமாட்டார்கள். ஆனால், இன்று சுழற்பந்துவீச்சை கணிக்கத் தவறி துபே டக்அவுட்டில் வெளியேறினார். 4-வது விக்கெட்டுக்கு மொயின் அலி களமிறங்கி, மிட்ஷெலுடன் சேர்ந்தார். இருவரும் ஒரு ஓவர்கூட சேர்ந்து விளையாடவில்லை, அதற்குள் பிரி்ந்தனர். ஹர்ஷல் படேல் வீசிய 9-வது ஓவரில் மிட்ஷெல் கால்காப்பில் வாங்கி 30 ரன்னில் ஆட்டமிழந்தார். 69 ரன்கள் வரை ஒரு விக்கெட் இழந்திருந்த சிஎஸ்கே அணி அடுத்த 6 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 5-வது விக்கெட்டுக்கு ஜடேஜா களமிறங்கி, மொயின் அலியுடன் இணைந்தார். ராகுல் சஹர் வீசிய 10-வது ஓவரை சமாளிக்கத் திணறிய சிஎஸ்கே பேட்டர்கள் 3 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். 10 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 4 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்கள் சேர்த்தது. ஆங்கர் ரோலில் ஜடேஜா பட மூலாதாரம்,GETTY IMAGES ஹர்ஷல் படேல் வீசிய 11-வது ஓவரில் ஜடேஜா 2 பவுண்டரிகள் உள்பட11 ரன்கள் சேர்த்தார். ரபாடா வீசிய 12-வது ஓவரில் மொயின் அலி 2 பவுண்டரிகள் அடிக்கவே சிஎஸ்கே அணி 100 ரன்களை எட்டியது. இருவருக்கும் இடையே பார்ட்னர்ஷிப் உருவாகியது. ஆனால், சாம் கரண் 13-வது ஓவரை வீச வந்தபோது இந்த பார்ட்னர்ஷிப்பை உடைத்தார். சாம்கரன் வீசிய ஸ்லோ பவுன்சரை தூக்கி அடித்த மொயின் அலி, 17 ரன்னில் பேர்ஸ்டோவால் கேட்ச் பிடிக்கப்பட்டு வெளியேறினார். அடுத்து மிட்ஷெல் சான்ட்னர் களமிறங்கி, ஜடேஜாவுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக பேட் செய்து ரன்களைச் சேர்த்தனர். 15 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 5 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் சேர்த்தது. 16-வது ஓவரை ராகுல் சஹர் வீசியபோது மீண்டும் விக்கெட் விழுந்தது. அந்த ஓவரின் கடைசிப்பந்தில் சாம் கரனிடம் கேட்ச் கொடுத்து சான்ட்னர் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ஷர்துல் தாக்கூர் களமிறங்கி, ஜடேஜாவுடன் சேர்ந்தார். சாம்கரன் வீசிய 17-வது ஓவரில் 2-வது பந்தில் பவுண்டரி அடித்த தாக்கூர், 3-வது பந்தை சிக்ஸருக்கு தூக்கி அடித்தபோது எளிதாகப் பிடிக்க வேண்டிய கேட்ச்சை சஷாங்க் சிங் தவறவிட்டதால் 14 ரன்களை சிஎஸ்கே சேர்த்தது. தோனி முதல் பந்திலேயே க்ளீன் போல்ட் ராகுல் சஹர் வீசிய 18-வது ஓவரில் தாக்கூர் ஒரு பவுண்டரியும், ஜடேஜா ஒரு சிக்ஸரும் விளாசி 13 ரன்கள் சேர்த்தனர். 19-வது ஓவரை ஹர்சல் படேல் வீசினார், முதல் 3 பந்துகளில் தாக்கூருக்கு படம் காட்டிய ஹர்சல் படேல், 4-வது பந்தில் கிளீன் போல்டாக்கி தாக்கூரை(17) வெளியேற்றினார். அடுத்ததாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தோனி ரசிகர்களின் உற்சாக வரவேற்புக்கு மத்தியில் களமிறங்கினார். தோனி சந்தித்த முதல் பந்திலேயே ஹர்சல் படேல் யார்கர் வீசி க்ளீன் போல்டாக்கி டக்அவுட்டில் வெளியேற்றினார். தோனி முதல் பந்திலேயே ஆட்டமிழந்தவுடன் அரங்கில் இருந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து, மௌனமாகினர். அடுத்து தேஷ்பாண்டே களமிறங்கி, ஜடேஜாவுடன் சேர்ந்தார். கடைசி ஓவரை அர்ஷ்தீப் வீசினார். ஸ்ட்ரைக்கில் இருந்த ஜடேஜா ஒரு பவுண்டரி, சிக்ஸர் விளாசிய நிலையில் சாம்கரனிடம் கேட்ச் கொடுத்து 43 ரன்களில் ஜடேஜா ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 9 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் அணித் தரப்பில் ராகுல் சஹல், ஹர்சல் படேல் தலா 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஷாக் அளித்த சிஎஸ்கே பட மூலாதாரம்,GETTY IMAGES 168 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன் சிங் ஆட்டத்தைத் தொடங்கினர். தேஷ்பாண்டே வீசிய அவரின் முதல் ஓவரில் பவுண்டரி அடித்த பேர்ஸ்டோ அடுத்த இரு பந்துகளில் க்ளீ்ன் போல்டாகி 7 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்துவந்த ரிலே ரூஸோவும் வந்த வேகத்தில் தேஷ்பாண்டே பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். 2-வது ஓவரிலேயே பஞ்சாப் அணி 9 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்துவந்த சஷாங் சிங், பிரப்சிம்ரனுடன் சேர்ந்தார். இருவரும் அவ்வப்போது பவுண்டரி, சிக்ஸர் அடித்து ரன்ரேட்டை மெதுவாக உயர்த்தினர். தேஷ்பாண்டே வீசிய 6-வது ஓவரில் பிரப்சிம்ரன் சிங் 2 பவுண்டரி ஒரு சிக்ஸர் என 16 ரன்களை விளாசினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் சேர்த்தது. சரிவிலிருந்து மீளாத பஞ்சாப் சான்ட்னர் வீசிய 8-வது ஓவரில் மீண்டும் சிஎஸ்கே அணி பஞ்சாப்புக்கு அதிர்ச்சியளித்து. சான்ட்னர் வீசிய அந்த ஓவரின் 5-வது பந்தில் பவுண்டரி அடித்த சஷாங்சிங் 27 ரன்களில் சிமர்சித் சிங்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பாக பேட் செய்து வந்த பிரப்சிம்ரன் சிங் 30 ரன்னில் ஜடேஜா ஓவரில் விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய ஜிதேஷ் சர்மா ரன் ஏதும் சேர்க்காமல் சிமர்ஜீத் ஓவரில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 10 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் சேர்த்தது பஞ்சாப் அணி. அஷுதோஷ் சர்மா, சாம்கரன் 6-வது விக்கெட்டுக்கு இணைந்து ஓரளவு ரன்கள் சேர்த்தனர். ஆனால் சாம்கரனும் நிலைக்கவில்லை. ஜடேஜா வீசிய 13-வது ஓவரில் சான்ட்னரிடம் கேட்ச் கொடுத்து சாம்கரன் 7 ரன்னில் வெளியேறினார். அதே ஓவரின் 4-வது பந்தில் அசுதோஷ் சர்மா 3 ரன்னில் சிமர்ஜித்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். 62 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த பஞ்சாப் அணி 78 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. 16 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை பஞ்சாப் பறிகொடுத்தது. 8-வது ஓவரிலிருந்து 10-வது ஓவர் வரை ஒவருக்கு ஒரு விக்கெட்டை பஞ்சாப் அணி இழந்தது. பேட்டர்கள் ஏமாற்றம் பட மூலாதாரம்,GETTY IMAGES 8-வது விக்கெட்டுக்கு ஹர்பிரித் பிரார், ஹர்சல் படேல் ஜோடி சேர்ந்தனர். சிமர்ஜித் வீசிய 15-வது ஓவரில் ஹர்ஷல் படேல் ஒரு பவுண்டரி, சிக்ஸர் அடித்து நம்பிக்கை ஏற்படுத்தினார். ஆனால், அதே ஓவரின் 4-வது பந்தில் சமீர் ரிஸ்வியிடம் கேட்ச் கொடுத்து ஹர்ஷல் படேல் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். பஞ்சாப் அணி முதல் 6 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 47 ரன்களும், 7 முதல் 15 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 44 ரன்கள் சேர்த்தது. ஹர்பிரித் பிரார், ராகுல் சஹர் களத்தில் இருந்தனர். பஞ்சாப் அணி எளிய இலக்கை சேஸிங் செய்ய முடியாமல் தோல்வியில் பிடியில் இருந்தது. ஆனால் கிளீசன் வீசிய 16-வது ஓவரில் ராகுல் சஹர் அதிரடியாக ஆடி 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 14 ரன்களை விளாசி நம்பிக்கை அளித்தார். பஞ்சாப் அணி 16 ஓவர்கள் முடிவில் 100 ரன்களைக் கடந்தது. 18-வது ஓவரை ஷர்துல் தாக்கூர் வீசினார். முதல் பந்தில் பவுண்டரி அடித்த ஹர்பிரித் பிரார், அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்தார். அந்த ஓவரில் ராகுல் சஹர்(12) க்ளீன் போல்டாகவே, பஞ்சாப் அணி ஆல்அவுட் நோக்கி நகர்ந்தது. 9-வது விக்கெட்டுக்கு ஹர்பிரித் பிரார், ரபாடா இணைந்து ஓரளவு ரன்களைச் சேர்த்து ஸ்கோரை உயர்த்தினர். க்ளீசன் வீசிய 19 ஓவரில் ரபாடா சிக்ஸர் அடித்து 11 ரன்களைச் சேர்த்தார். கடைசி ஓவரில் பஞ்சாப் அணி 7 ரன்கள் சேர்க்கவே 20 ஓவர்களில் 139 ரன்கள் சேர்த்து 28 ரன்களில் தோல்வி அடைந்தது. ரபாடா 11, ஹர்பிரித் பிரார் 17 ரன்களில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். சிஎஸ்கே தரப்பில் சிமர்ஜித், தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். https://www.bbc.com/tamil/articles/c2x38pzmlpdo
  25. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்பு படம் கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 5 மே 2024, 14:01 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த மே 3, 2024 வெள்ளிக்கிழமை அன்று, தமிழ்நாடு காவல்துறையின் முக அடையாள மென்பொருள் செயலி (Face recognition software- எப்ஆர்எஸ்) ஹேக் செய்யப்பட்டு, அதிலிருந்த தகவல்கள் டார்க் வெப் தளத்தில் விற்பனைக்காக பதிவேற்றப்பட்டுள்ளன என்று பால்கன்ஃபீட்ஸ் (Falconfeeds) எனும் நிறுவனம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. சைபர் பாதுகாப்பு மீறல் நடந்துள்ளது உண்மைதான் என சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலும் கூறப்பட்டுள்ளது. உடனடியாக தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது, இந்த சம்பவம் குறித்து சென்னை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம், தமிழ்நாடு காவல்துறையின் கிரைம் அண்ட் கிரிமினல் டிராக்கிங் நெட்வொர்க்ஸ் அண்ட் சிஸ்டம்ஸ் (CCTNS- சிசிடிஎன்எஸ்) இணையதளம் ஹேக் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் மீண்டும் தமிழ்நாடு காவல்துறையை குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முக அடையாள மென்பொருள் செயலி என்றால் என்ன? அதிலிருந்து எந்தெந்த தகவல்கள் திருடப்பட்டுள்ளன? இத்தகைய சைபர் தாக்குதல்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்ன? முக அடையாள மென்பொருள் செயலி (எப்ஆர்எஸ்) பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாடு காவல்துறையின் சிசிடிஎன்எஸ் தரவுத் தளத்திலிருந்து தேடப்படும் நபர்கள், காணாமல் போனவர்கள் மற்றும் அடையாளம் தெரியாத இறந்த உடல்களை முக அடையாளம் மூலம் கண்டுபிடிக்க எப்ஆர்எஸ் மென்பொருள் செயலி பயன்படுகிறது. இந்த எப்ஆர்எஸ் மென்பொருள் கொல்கத்தாவின் மத்திய உயர்கணிணி மேம்பாட்டு மையத்தால் உருவாக்கப்பட்டது என தமிழ்நாடு காவல்துறை கூறுகிறது. தமிழ்நாடு முழுவதும் 46,112 காவலர்களால் இந்த எப்ஆர்எஸ் மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இந்த செயலியில் ஏற்பட்ட சைபர் பாதுகாப்பு மீறலால் 62 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 54,828 காவலர்களின் அதிகாரப்பூர்வ விவரங்கள் டார்க் வெப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என்கிறார் பால்கன்ஃபீட்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி நந்தகிஷோர் ஹரிகுமார். பால்கன்ஃபீட்ஸ் என்பது தொழில்நுட்ப ரீதியிலான அச்சுறுத்தல்கள் குறித்த நுண்ணறிவு வழிகாட்டுதல்களை வழங்கும் ஒரு நிறுவனம். அமெரிக்கா மற்றும் இந்தியாவில் இயங்கும் இந்நிறுவனம் டார்க் வெப் தளங்களில் வெளியிடப்படும் தகவல்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. “12 லட்சம் வரிகள் கொண்ட தரவுகள் திருடப்பட்டுள்ளன. வலேரி என்ற குழு, இந்த சைபர் பாதுகாப்பு மீறலுக்கு பொறுப்பேற்றுள்ளது. மொத்தம் 54,828 தமிழக காவலர்களின் பயனர் ஐடி, பயனர் பெயர், முழு பெயர், அவர்கள் பணியாற்றும் காவல் நிலையம் குறித்த விவரங்கள், முகவரி, தொலைபேசி எண்கள் என அனைத்து விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. 2,738 காவல்நிலையங்கள் குறித்த விவரங்களும் இதில் இருக்கின்றன. குறிப்பாக 8,98,352 முதல் தகவல் அறிக்கைகளின் (எப்ஐஆர்) விவரங்கள் திருடப்பட்டுள்ளன. இதில் புகார் கொடுத்தவர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர், வழக்கை விசாரிக்கும் அதிகாரி என அனைவரின் விவரங்களும் உள்ளன. இவை தவறானவர்களின் கைகளுக்கு சென்றால் கண்டிப்பாக மிகப்பெரிய பிரச்னை ஏற்படும்” என்கிறார் ஹரிகுமார். தரவுகள் திருட்டால் ஏற்படும் பாதிப்புகள் படக்குறிப்பு,பால்கன்ஃபீட்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி நந்தகிஷோர் ஹரிகுமார். வலேரி ஹேக்கிங் குழுவால் திருடப்பட்ட தகவல்களில் அதிகாரிகள், காவலர்கள் குறித்த விவரங்கள் மட்டுமல்லாது, பொதுமக்களின் விவரங்களும் இருப்பதால் இதுவொரு தீவிரமான பிரச்னை தான் என்கிறார் ஹரிகுமார். தொடர்ந்து பேசுகையில், “எப்ஆர்எஸ் செயலியில் ஒருவரது படத்தைப் பதிவேற்றி, தேடினால் அவரைக் குறித்த எச்சரிக்கை மற்றும் தகவல்கள் காவலர்களுக்கு கிடைக்கும். அவ்வாறு 2,35,753 தேடல்கள் குறித்த அனைத்து விவரங்களும், அதன் முடிவுகளும் திருடப்பட்டு டார்க் வெப் தளத்தில் விற்பனைக்கு உள்ளன. எப்ஐஆர்களில் இருக்கும் தனிப்பட்ட அடையாள விவரங்கள் (குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது சந்தேகத்திற்குரிய நபர்களின்) மூலம் சம்மந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் வாய்ப்பும் உள்ளது. உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட காவல் நிலையத்திலிருந்து அழைக்கிறோம் என்று கூறி, தனிப்பட்ட அடையாள விவரங்களுடன், வழக்கின் விவரங்களையும் கூறும்போது, அதை நம்பி மக்கள் பணம் செலுத்தலாம். இது மிகப்பெரிய மோசடிக்கு வழிவகுக்கும்” என்று கூறினார் நந்தகிஷோர் ஹரிகுமார். குற்றவாளிகளின் தரவுகள் கசிந்தால் என்னவாகும்? படக்குறிப்பு,சைபர் சட்ட வல்லுநரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான வி.பாலு. புலனாய்வு நுட்பங்களின் போக்கில் டிஜிட்டல் தடயங்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இத்தகைய சைபர் பாதுகாப்பு மீறல்கள் குறித்த விழிப்புணர்வு பலருக்கும் இல்லை என கவலை தெரிவிக்கிறார் சைபர் சட்ட வல்லுநரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான வி.பாலு. “இன்று பல புலனாய்வு அமைப்புகளின் விசாரணையில் முக்கிய பங்கு வகிப்பது டிஜிட்டல் தடயங்கள் தான். ஒரு குற்றவாளியின் கைரேகை, கால் பாத ரேகை, கண் விழித்திரைப் பதிவு, டிஎன்ஏ என எல்லாவற்றையும் டிஜிட்டல் வடிவில் தொகுத்து, 75 ஆண்டுகள் வரை அதை சேமித்து வைக்க அனுமதி அளிக்கும் Criminal procedures identification act என்ற சட்டத்தை 2022ஆம் கொண்டு வந்தார்கள். இவ்வாறு டிஜிட்டல் வடிவில் சேகரிக்கப்படும் குற்றவாளிகள் குறித்த தகவல்கள் அந்நிய நாட்டு சக்திகளிடம் அல்லது கிரிமினல் கும்பல்களிடம் சிக்கினால், போதை மருந்து கடத்தல் முதல் பயங்கரவாதம் வரை அவர்கள் இந்தத் தரவுகளை வைத்து தங்களது நாசகர வேலைகளுக்கு தேவையான நபர்களை எளிதாக அடையாளம் கண்டு, அவர்களைத் தொடர்பு கொள்ள முடியும்” என்கிறார் வி.பாலு. தொடர்ந்து பேசிய அவர், “இந்த டிஜிட்டல் தடயங்கள் மற்றும் தரவுகள் என்பது இன்றைய நிலையில் மனிதர்களின் மிகப்பெரிய சொத்து. அதிலும் அரசிடமிருந்து ஒரு தனி மனிதனின் அடையாளத்தைத் திருடுவது மிகப்பெரிய குற்றம். எனவே அரசும் அதிகாரிகளும் இதை தீவிரமான பிரச்னையாக எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும். இந்தத் துறைகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு சைபர் கிரைம் சார்ந்த பயிற்சிகள், படிப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு குறித்த விழிப்புணர்வுவையும் ஏற்படுத்த வேண்டும்” என்று கூறினார் வி.பாலு. அரசுத்துறை தளங்கள் குறிவைக்கப்படுவது ஏன்? படக்குறிப்பு,இணையக் குற்றத் தடுப்பு வல்லுநர் முரளிகிருஷ்ணன் சின்னதுரை. "தொலைபேசி எண்கள், முகவரி என்பதைத் தாண்டி ஒருவரின் அங்க அடையாளங்கள் முதற்கொண்டு அனைத்து அடிப்படை தகவல்களும் டார்க் வெப்பில் விற்பனைக்கு கிடைப்பது என்பது மிகவும் தீவிரமாக அணுகப்பட வேண்டிய ஒரு இணைய அச்சுறுத்தல்" என்று கூறுகிறார் இணையக் குற்றத் தடுப்பு வல்லுநர் முரளிகிருஷ்ணன் சின்னதுரை. "கடந்த சில மாதங்களாக ஒரு புது வகையான மோசடி நடைபெறுகிறது, ஒருவருக்கு தொலைபேசியில் அழைத்து, 'உங்கள் பெயரில் போதைப் பொருள் பார்சல் ஒன்று விமான நிலையத்தில் வந்துள்ளது' என்று கூறி மிரட்டுவது. இவ்வாறு ஒருவரிடம் பேசுவதற்கு முன் அவரைப் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் சேகரிப்பார்கள். ஒருவரது கடந்த கால தகவல்களுக்கு ஏற்றவாறு தான் இந்த மோசடிகள் செயல்படுத்தப்படுகின்றன. அத்தகைய தனிப்பட்ட தகவல்களை டார்க் வெப்பில் விலை கொடுத்து வாங்க ஒரு பெரும் சமூக விரோதக் கூட்டமே தயாராக இருக்கிறது" என்கிறார் முரளிகிருஷ்ணன். பொதுவாக சைபர் தாக்குதல்களில் அதிகமாக குறிவைக்கப்படுவது அரசின் தரவு தளங்களே. இதற்கு காரணம் என்னவென அவரிடம் கேட்டபோது, "அரசு அலுவலகங்களின் டிஜிட்டல் சாதனங்களுக்கு என போதிய முதலீடுகள் இருப்பதில்லை. பல வருடங்களுக்கு ஒரே சாதனங்களையே பயன்படுத்துகிறார்கள். உதாரணமாக ஒரு இணைய திசைவியை (router) அவ்வப்போது மாற்ற வேண்டும், அதேபோல இணைய சர்வர்களையும் மாற்ற வேண்டும். ஆனால் அதைச் செய்வதில்லை. தொழில்நுட்பம் ஒருபக்கம் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்க, இந்த பழைய சாதனங்களை வைத்துக்கொண்டு அரசுத் துறைகள் திணறுகின்றன. டிஜிட்டல் யுகத்தில் பொது மக்களின் தரவுகள் சார்ந்த விஷயத்தில் சுணக்கம் காட்டாமல், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அரசுத் துறைகளில் இதற்கென நிதி ஒதுக்க வேண்டும்” என்று கூறினார். “வேடிக்கையான விஷயம் என்னவென்றால் கடவுச்சொல்லை கூட அவ்வப்போது மாற்றாமல், குழுவாக ஒரே கடவுச்சொல்லை பயன்படுத்துவார்கள். இப்படி இருந்தால் சைபர் தாக்குதல்கள் எளிதாக நடைபெற தான் செய்யும். அரசு அலுவலகங்களில் சைபர் பாதுகாப்பு விதிகள் ஒழுங்காக பின்பற்றப்படுகின்றனவா என்பதை உறுதி செய்ய குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒருமுறை தொழில்நுட்ப வல்லுநர் குழு மூலம் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்” என்று வலியுறுத்துகிறார் முரளிகிருஷ்ணன். தமிழ்நாடு காவல்துறை கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாடு காவல்துறையின் முக அடையாள மென்பொருள் செயலி ஹேக் செய்யப்பட்டு, விவரங்கள் திருடப்பட்டுள்ளது தொடர்பாக சென்னை காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பால்கன்ஃபீட்ஸ் எனும் தளத்தில் தமிழ்நாடு காவல்துறையின் முக அடையாள மென்பொருள் செயலியில் சைபர் பாதுகாப்பு மீறல் நடந்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டது. எப்ஆர்எஸ் செயலி TNSDC-எல்காட் மூலம் ஹோஸ்ட் செய்யப்பட்டுள்ளது. சமீபத்திய தணிக்கை தமிழ்நாடு மின்-ஆளுமை முகமை மூலம் 13.03.2024 அன்று மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் அட்மின் கணக்கின் கடவுச்சொல் திருடப்பட்டதால் இது நடந்தது என தெரியவந்துள்ளது. அதன் மூலம் பயனர்களுக்கான ஐடியை உருவாக்குதல், எவ்வளவு தேடுதல் எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்டது மற்றும் முன் முனை (Front end) விவரங்களை மட்டுமே பார்க்க முடியும். இது தொடர்பாக எல்காட், தமிழ்நாடு மின்-ஆளுமை முகமை மற்றும் கொல்கத்தாவின் மத்திய உயர்கணிணி மேம்பாட்டு மையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பு நடவடிக்கையாக அட்மின் கணக்கு தற்காலிகமாக நீக்கப்பட்டது. இது குறித்து சென்னை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலும் தகவல்களை பெற சென்னை சைபர் கிரைம் அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது, அவர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். பட மூலாதாரம்,ADGP படக்குறிப்பு,சென்னை காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை https://www.bbc.com/tamil/articles/cxr3vn6gdd5o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.