Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்கிரமசேகர பாதாளக் குழு குற்றவாளி - ஆனந்த விஜேபால 22 Oct, 2025 | 04:49 PM (எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்) வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்கிரமசேகர பாதாளக் குழு குற்றவாளி பல சமூக விரோத குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார். நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறைக்கும் சென்றுள்ளார். பாதாள குழுக்களுக்கிடையிலான மோதலின் பிரதிபலனாகவே இது காணப்படுகிறது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற அமர்வின்போது வெலிகம பிரதேச சபையின் தலைவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, வெலிகம பிரதேச சபையின் தலைவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் உட்பட எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் பல விடயங்களை குறிப்பிட்டார்கள்.இந்த கொலை மற்றும் இதற்கு முன்னரான படுகொலைகளினால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும், பொதுமக்களின் பாதுகாப்புக்கும் எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. இந்த நாட்டில் பல குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் உள்ளார்கள். அவர்கள் பல குழுக்களாக பிரிந்துள்ளார்கள்.அவர்களிடம் ஆயுதங்கள் உள்ளன. அவர்களுக்கிடையில் மோதல்கள் உள்ளன. இவ்விடயம் தொடர்பில் நான் கடந்த மே மாதம் 20 ஆம் திகதி சபைக்கு விடயங்களை வெளிப்படுத்தினேன். வெலிகம பிரதேச சபை உறுப்பினரான லசந்த விக்கிரமசேகர என்ற பெயருடைன இவர் வெலிகம லசந்த என்று அழைக்கப்படுவார்.இவர் மக்கள் பிரதிநிதியாக இருந்தாலும், அவர் பாதாளக்குழு குற்றவாளி.இவருக்கு எதிராக 6 வழக்குகள் உள்ளன. சிறைதண்டனை அனுபவித்துள்ளார்.தற்போதும் ஒத்திவைக்கப்பட்ட சிறைதண்டனை ஊடாகவே இருந்துள்ளார்.இவர் பல குற்றச்செயல்களுடன் தொடர்புப்பட்டுள்ளார். இந்த நபர் தொடர்பில் பல விடயங்கள் நீதிமன்றத்துக்கு அறிக்கையிடப்பட்டுள்ளன. அண்மையில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட பாதாளக் குழுக்களின் உறுப்பினர்கள் பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார்கள். பாதாள குழுக்களுக்கிடையில் மோதல்கள் உள்ளன. இந்த சம்பவமும் அவ்வாறானதே, ஐக்கிய மக்கள் சக்தி இவ்வாறானவர்களை தமது கட்சிக்கு எவ்வாறு தெரிவு செய்தது என்பதை அறிய முடியவில்லை. பாதாள குழுக்கள் மற்றும் ஏனையோர் இவ்வாறு மோதிக் கொண்டு, இறப்பதை ஒருபோதும் அனுமதிக்கபோவதில்லை. இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும். பாதாள குழுக்களுடன் ஒன்றிணைந்து செயற்பட்டு பின்னர் மக்கள் பிரதிநிதியான ஒருவர் பாதாளக் குழுக்களின் முரண்பாடுகளினால் கொலை செய்யப்பட்டவுடன் அதனை மக்கள் பிரதிநிதி கொலை என்று எவ்வாறு குறிப்பிடுவது. வெலிகம பிரதேச சபையின் தலைவர் பாதாள குழுக்களுடனும், சமூக விரோத செயற்பாடுகளுடன் தொடர்புப்பட்டுள்ளார். இவருக்கு நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பதை ஐக்கிய மக்கள் சக்தியினர் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/228395
  2. 22 Oct, 2025 | 05:22 PM (எம்.மனோசித்ரா) 2026 ஆம் ஆண்டுக்கான தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயில்கின்ற துறவு மாணவர்களுக்கான பாதணி வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய 2026 ஆம் ஆண்டுக்கான தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயில்கின்ற துறவு மாணவர்களுக்கான பாதணிகளைப் பெற்றுக்கொள்வதற்கான வவுச்சர் சிட்டைகளை 2025 பாடசாலை தவணை முடிவடையும் போது பயனாளிகளுக்கு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த வவுச்சர்சிட்டைகள் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சால் நலன்புரிக் கொடுப்பனவுகளை வழங்குவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள பரிசு வழங்கும் கைத்தொலைபேசி மென்பொருள் மூலம் ஸ்கான் செய்வதற்கு இயலுமாகும் வகையில் ஞசு குறியீட்டுடன் பாதுகாப்பாக அச்சிட்டு பயன்பெறுகின்ற மாணவர்களுக்கு வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் கீழ்வரும் வகையில் மாணவர்களைத் தெரிவு செய்வதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாடளாவிய ரீதியில் மாணவர்களின் எண்ணிக்கை 250 இனை விடவும் குறைவான பாடசாலைகளில் கல்வி கற்கின்ற மாணவர்கள் 644,000 பேர், 251-500 இடைப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையைக் கொண்ட தோட்டப் பாடசாலை மாணவர்கள் 53,093 பேர், விசேட தேவையுடைய மாணவர்கள் கல்வி கற்கின்ற 30 பாடசாலைகளில் மாணவர்கள் 2,300 பேர், பிரிவெனாக்களில் தெரிவு செய்யப்பட்ட துறவு மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்கள் 30,000 பேர் என இதற்காக மாணவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். https://www.virakesari.lk/article/228397
  3. இஷாரா செவ்வந்தி வழங்கிய தகவலுக்கமைய பிரதான ஆட்கடத்தல்காரர் கைது! 22 Oct, 2025 | 03:23 PM பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவர்களை நாடு கடத்துவதற்கு உதவி செய்த பிரதான ஆட்கடத்தல்காரர் ஒருவர் கிளிநொச்சி பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளுக்காக இஷாரா செவ்வந்தி தலைமறைவாக இருந்த கிளிநொச்சி பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போதே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். “கணேமுல்ல சஞ்சீவ” படுகொலைசெய்யப்பட்டதையடுத்து இஷாரா செவ்வந்தி சுமார் மூன்று நாட்களாக கிளிநொச்சியில் தலைமறைவாக இருந்துள்ள நிலையில் குறித்த ஆல்கடத்தல்காரரின் உதவியுடன் இந்தியாவிற்கு தப்பிச் சென்று பின்னர் அங்கிருந்து நேபாளத்திற்கு சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த ஆல்கடத்தல்காரர் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த பலரை இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது. கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். சட்டத்தரணிகள் போன்று வேடமணிந்து நீதிமன்றத்துக்குள் நுழைந்த இஷாரா செவ்வந்தி உட்பட இருவரே “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரை சுட்டுக்கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து ஒக்டோபர் 14 கைதுசெய்யப்பட்டார். நேபாள அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கை பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸார் இணைந்து மூன்று நாட்களாக நேபாளத்தில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இஷாரா செவ்வந்தி இவ்வாறு கைதுசெய்யப்பட்டார். இஷாரா செவ்வந்தியுடன் “கம்பஹா பபா” , “ஜேகே பாய்” உட்பட மேலும் பலர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட அனைவரும் நாட்டுக்கு அழைத்துவருவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் ஒக்டோபர் 15 நேபாளம் நோக்கி பயணித்து அவர்களை இரவு நேரத்தில் நாட்டுக்கு அழைத்துவந்தனர். நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட அனைவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/228387
  4. Published By: Digital Desk 1 22 Oct, 2025 | 03:53 PM தவிசாளர்களுக்கும் செயலாளர்களுக்கும் இடையேயான முரண்பாட்டை தீர்ப்பது பெரும் தலையிடியாக உள்ளதென தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் எல்லோரும் ஒன்றிணைந்தாலே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார். நகர அபிவிருத்தி அதிகாரசபையின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், செயலாளர்கள் ஆகியோருக்கான பயிற்சி வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (22) வடக்கு மாகாண ஆளுநரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கருத்து தெரிவிக்கும்போதே, அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை நாம் ஏற்படுத்தவேண்டும். எங்கள் சேவைகளை விரிவாக்குவதுடன் அவற்றையும் நாம் விரைவுபடுத்தவும் வேண்டும். தவிசாளர்கள் மற்றும் செயலாளர்கள் சிலர் துணிவுடன் நடவடிக்கைகள் எடுக்கின்றீர்கள். அதைப் பாராட்டுகின்றேன். ஏனையோரும் அவ்வாறு செயற்படவேண்டும். தவிசாளர்களும் செயலாளர்களும் இணைந்து செயற்படவேண்டும். இருவரும் முரண்பட்டால் அதைத் தீர்ப்பதே எங்களுக்குப் பெரும் தலையிடியாக மாறிவிடும். தவிசாளர்களுக்கும் செயலாளர்களுக்கும் இடையிலான முரண்பாட்டால் பாதிக்கப்படப்போவது அந்தப் பகுதி மக்களே. அந்த மக்களுக்கு சேவை செய்வதற்கே எல்லோருக்கும் இருக்கின்றார்கள். அதை மனதிலிருத்தினாலே போதும். மக்களை அவர்களது சேவைகளை நிறைவேற்றுவதற்கு அலைக்கழிக்காதீர்கள். இதேநேரம், யாழ். மாநகரசபை எல்லைக்குள் உள்ள பெரு வணிக நிறுவனங்கள் குடிபுகு சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளாமல் இயங்குகின்றன. இதனால் அவர்கள் மாநகர சபைக்குச் செலுத்தும் வரியானது, பிரதேச சபையொன்றிலுள்ள குடியிருப்பாளர் செலுத்தும் வரியைவிடக் குறைவானது. இதைத் தொடர்ந்து அனுமதிக்க முடியாது. அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கவேண்டியது உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்பு. அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் ஊடாக மாற்றங்களை ஏற்படுத்துவோம் என்றார் . இந்த நிகழ்வில் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன், பிரதிப் பிரதம செயலாளர் - ஆளணியும் பயிற்சியும் செ.பிரணவநாதன், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.சுதர்சன், நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/228385
  5. பட மூலாதாரம், Getty Images 21 அக்டோபர் 2025 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் (2021-ஆம் ஆண்டு உலக நாடுகள் மற்றும் தமிழர்களின் வரலாறு மற்றும் தொல்லியல் தொடர்பான சிறப்புக் கட்டுரைகளை 'வரலாற்றுப் பதிவுகள்' என்ற பெயரில் ஞாயிறுதோறும் பிபிசி தமிழ் வெளியிட்டது. அந்த வரிசையில் வெளியான மூன்றாம் கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது.) மனிதகுல வரலாற்றில் மிகச் சிறந்த ராணுவத் தலைவர்களில் ஒருவராக பிரெஞ்சு மன்னர் நெப்போலியன் போனபார்ட் (1769-1821) கருதப்படுகிறார். பிரெஞ்சுப் புரட்சி (1787-1799) நடந்த காலத்தில் முக்கியத்துவம் பெறும் நிலைக்கு உயர்ந்த நெப்போலியன், 1804 முதல் 1814 வரை பிரான்சின் பேரரசராக இருந்தார். 1814இல் ஆட்சியை இழந்த பின் மீண்டும் 1815இல் பிரான்சின் பேரரசராக அவர் இருந்தார். 1803 மற்றும் 1815 ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலகட்டங்களில் நடைபெற்ற நெப்போலியப் போர்கள் மூலம் அவர் நினைவுகூரப்படுகிறார். பிரிட்டன் உடனான வாட்டர்லூ போரில் ஜூன் 18, 1815 அன்று நெப்போலியன் போனபார்ட் தோல்வி அடைந்ததும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சரி.. நெப்போலியன் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்கு தெரியும்? நெப்போலியன் எங்கு எப்போது பிறந்தார் ? ஆகஸ்ட் 15, 1769 அன்று மத்திய தரைக்கடலில் உள்ள கோர்சிகா தீவில் பிறந்தார் நெப்போலியன். இந்தத் தீவு பிரான்சின் ஓர் அங்கம். நெப்போலியன் வரலாற்றில் எதற்காக நினைவுகூரப்படுகிறார்? அதற்குப் பல காரணங்கள் உண்டு. ஆனால், பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே நெப்போலியப் போர்கள் நடந்த காலகட்டத்தில் பிரான்சின் பேரரசராக இருந்ததற்கும், வாட்டர்லூ போரில் தோல்வி அடைந்ததற்கு அவர் நினைவுகூரப்படுகிறார். நெப்போலியனின் குடும்ப பின்புலம் என்ன? பட மூலாதாரம், Getty Images கார்சிகா தீவில் கார்லோ மரியா போனபார்ட் எனும் வழக்கறிஞருக்கும், அவரது மனைவி லெடிசியா ரமோலினா போனபார்ட்டுக்கும் பிறந்த குழந்தைகளில் எட்டு குழந்தைகள் உயிர் பிழைத்தனர். அவர்களில் இரண்டாவது குழந்தை நெப்போலியன் ஆவர். 'போனபார்ட்' என்போர் கார்சிகா தீவில் வாழ்ந்த ஒரு சிறிய மேட்டுக்குடி சமூகத்தினர் ஆவர். நெப்போலியன் இருமுறை திருமணம் செய்து கொண்டவர். அவரது முதல் மனைவியின் பெயர் ஜோசஃபைன் டீ புஹார்னே (1796 - 1810). இரண்டாவது மனைவியின் பெயர் மேரி லூயி, பார்மாவின் கோமாட்டி (1810 - 1821). மேரி மூலமாகத்தான் இரண்டாம் நெப்போலியன் பிறந்தார். தனக்கு 1806ஆம் ஆண்டில் முறையின்றி பிறந்த, சார்லஸ் லியான் என வேறொரு மகன் இருப்பதாக முதலில் ஒப்புக் கொண்ட நெப்போலியன், காலப்போக்கில் அதை மறுத்தார். நெப்போலியனின் உயரம் என்ன? நெப்போலியன் தாம் உயரம் குறைவாக இருப்பது குறித்து அதிகம் வருத்தப்பட்டிருக்கிறார். அவர் ஐந்து அடி இரண்டு அங்குலம் உயரம் என அவர் மரணத்தின் போது எழுதப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டிருக்கிறது. ஆங்கில அளவீட்டு முறைப்படி பார்த்தால் ஐந்து அடி ஆறு அங்குல உயரமிருப்பார். நெப்போலியனின் இளமைக்காலம் எப்படி இருந்தது? நெப்போலியனின் தாய் தந்தையர் கார்சிகா தீவில் வாழ்ந்த ஒரு சிறிய மேட்டுக்குடியைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அவர்கள் குடும்பம் அத்தனை செல்வாக்கானது அல்ல. நெப்போலியன் பிரான்சின் ராணுவ அகாடமிகளில் ஊக்கத் தொகையில் படித்தார். தன் வகுப்பறை சகாக்களை ஒப்பிடும் போது நெப்போலியன் ஏழை. கார்சியா தீவில் வளர்ந்த போது அவரது முதல் மொழி பிரெஞ்சு அல்ல, இத்தாலி மொழி. அவர் பேசுவது பாமரத்தனமாக இருக்கிறது என அவரது வகுப்பறை சகாக்கள் விமர்சித்திருக்கிறார்கள். நெப்போலியன் எப்போது ராணுவத்தில் சேர்ந்தார்? பட மூலாதாரம், Getty Images தனது 15ஆவது வயதில் பிரான்சின் முக்கிய படைகளில் ஒன்றான 'இகோல் மிலிடைர்' பிரிவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஆனால், சேர்ந்த உடன் இரு ஆண்டுகளில் படித்து முடிக்க வேண்டிய படிப்பை ஓராண்டு காலத்தில் படித்து முடிக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டார். நெப்போலியனின் தந்தை வயிற்றுப் புற்றுநோய் காரணமாக மரணமடைந்ததால், நெப்போலியன் ஒருவரே மொத்த குடும்பத்தின் முக்கிய பொருள் ஈட்டுபவர் ஆனார். தன் 16ஆவது பிறந்தநாள் நிறைவடைந்து சில காலங்களுக்குள்ளேயே ராணுவத்தில் உயர் அதிகாரி ஆனார். ஐரோப்பாவில் போர் வெடிக்கும் சூழல் இருந்த போது நெப்போலியன் இரண்டாம் லெப்டினன்டாக கேரிசன் என்கிற நகரத்தில் இருந்தார். அந்த காலகட்டத்தில் விடுமுறை எடுத்துக் கொண்டு கார்சியாவில் வாழ்ந்து வந்த தன் குடும்பத்தைப் பார்க்கச் சென்றார். நெப்போலியனின் ஆரம்ப கால சாதனைகள் என்ன? 1792ஆம் ஆண்டு, நெப்போலியன் ராணுவத்தில் கேப்டனாக பதவி உயர்வு பெற்றார். 1796-ல் பாரிஸில் ஆட்சி புரிந்து வந்த புரட்சிகர படைக்கும் எதிராக எழுந்த கிளர்ச்சியைக் கட்டுப்படுத்தியதால், அவர் இத்தாலியில் இருந்த பிரெஞ்சு ராணுவத்தில் கமாண்டராக்கப்பட்டார். ஆஸ்திரியாவுக்கு எதிரான பல முக்கிய வெற்றிகள், ஜோசஃபைன் டீ புஹார்னேவை மணந்து கொண்டது நெப்போலியனின் பெயரையும் புகழையும் தேசிய அளவில் உயர்த்தியது. 1799 நவம்பரில் நெப்போலியன் முதல் கன்சுலானார். தன் ராணுவ சர்வாதிகாரத்தின் கீழ் ஓர் ஐரோப்பிய சாம்ராஜ்யத்தை நிறுவ வேலை செய்தார். நெப்போலியன் ஆட்சியை மத்திய அரசாக்கினார். மீண்டும் ரோமன் கத்தோலிக்கத்தை நாட்டின் மதமாக்கினார். பல கல்வி சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். பேங்க் ஆஃப் பிரான்ஸ் என்கிற பிரான்ஸின் மத்திய வங்கியை நிறுவினார். நெப்போலியன் பிரான்ஸின் பேரரசரானது எப்படி? 1800ஆம் ஆண்டில் மாரெங்கோவில் வைத்து ஆஸ்திரியர்களை வென்றார் நெப்போலியன். அதன் பிறகு ஒரு பொது ஐரோப்பிய அமைதி ஒப்பந்தத்தைக் குறித்துப் பேசினார். அது ஐரோப்பிய கண்டத்தில் பிரான்சின் ஆதிக்கத்தை நிறுவியது. 1802ஆம் ஆண்டு நெப்போலியன் தன்னைத் தானே நிரந்தர கன்சுலாக நியமித்துக் கொண்டார், இரண்டாண்டுகளுக்குப் பிறகு பிரான்சின் பேரரசரானார். ஐரோப்பாவின் மீது நெப்போலியன் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது எப்படி? பட மூலாதாரம், Getty Images நெப்போலியன் முன் வைத்த அமைதி ஒப்பந்தத்தை மீறி 1803ஆம் ஆண்டு பிரிட்டன், பிரான்சின் மீது போர் தொடுத்தது. பிறகு ரஷ்யாவும், ஆஸ்திரியாவும் பிரிட்டனோடு இணைந்து கொண்டன. பிரிட்டனின் கடற்படை 'ட்ராஃபல்கர் போரில்' வென்ற பிறகு, பிரிட்டன் மீது படையெடுக்கும் திட்டத்தை கைவிட்டு, ரஷ்யா மற்றும் ஆஸ்திரிய படைகள் மீது கவனத்தைச் செலுத்தினார். 'ஆஸ்டெர்லிட்ஸ் போரில்' அவ்விரு படைகளையும் வென்றார். அது அவர் வாழ்நாளில் கண்ட மிகப் பெரிய வெற்றிகளில் ஒன்று. அந்த ஆண்டில் அவர் மேலும் பல நிலப் பகுதிகளைக் கைப்பற்றினார். அது அவருக்கு ஐரோப்பிய கண்டத்தில் ஆதிக்கம் செலுத்த வழிவகுத்தது. ஹோலி ரோமன் சாம்ராஜ்யம் கலைக்கப்பட்டு, நெப்போலியனின் உறவினர்கள் மற்றும் விசுவாசிகள் இத்தாலி, நேபிள், ஸ்பெயின், ஸ்வீடன், ஹாலந்து, வெஸ்ட்ஃபெலியா போன்ற பகுதிகளுக்கு தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். நெப்போலியனின் முதல் திருமணம் எப்படி முறிந்தது? ஜோசஃபைன் டீ புஹார்னேவுக்கும் தனக்கும் குழந்தை பிறக்கவில்லை என்பதால், ஜோசஃபைனை 1810ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். பிறகு ஆஸ்திரிய பேரரசரின் 18 வயது இளவரசியான மேரி லூயியை திருமணம் செய்து கொண்டார். அடுத்த ஆண்டு மேரி இரண்டாம் நெப்போலியனைப் பெற்றெடுத்தார். நெப்போலியன் ஏன் நாடு கடத்தப்பட்டார்? 1810ஆம் ஆண்டிலிருந்து நெப்போலியனுக்கு எதிரான அலைகள் வீசத் தொடங்கின. பிரெஞ்சு ராணுவம் சில பெரிய தோல்விகளைச் சந்தித்தது. அது பிரான்ஸ் நாட்டின் வளத்தை காலி செய்தது. 1812ஆம் ஆண்டு ரஷ்யா மீது படையெடுத்து தோல்வியடைந்தது. நான்கு லட்சம் பேராக சென்ற படை வெறும் 40,000 பேராக சுருங்கி பிரான்ஸ் வந்து சேர்ந்தது. 1814-ல் பாரிஸ் வீழ்ந்தது. நெப்போலியன் எல்பா தீவுக்கு நாடுகடத்தப்பட்டார். அவரது மனைவி மேரி மற்றும் மகன் இரண்டாம் நெப்போலியன் ஆஸ்திரியா சென்றனர். மீண்டும் அதிகாரத்துக்கு வந்த நெப்போலியன் ஓராண்டுக்கும் குறைவான காலத்துக்குப் பிறகு, 1815 பிப்ரவரியில் நெப்போலியன் எல்பா தீவிலிருந்து தப்பித்து பிரான்ஸ் தலைநகரத்துக்குள் நுழைந்து வெற்றிகரமாக அதிகாரத்தைக் கைப்பற்றினார். பிரிட்டன், ப்ருஷ்யா, ரஷ்யா, ஆஸ்திரியா அனைவரும் ஒன்று திரண்டு நெப்போலியன் மீது போர் தொடுத்தனர். இத தான் வரலாற்று புகழ் பெற்ற வாட்டர்லூ யுத்தம் என்றழைக்கப்படுகிறது. இதில் நெப்போலியன் தோல்வியுற்று 100 நாட்களில் மீண்டும் தன் ஆட்சியை இழந்தார் மீண்டும் புனித ஹெலெனா தீவுக்கு நாடு கடத்தப்பட்டார். நெப்போலியன் மரணம் 1821ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள தீவான செயின்ட் ஹெலனாவில் நெப்போலியன் மரணமடைந்தார். அத்தீவில் தன் 51ஆவது வயதில், வயிற்றுப் புற்றுநோயால் இறந்ததாக கூறப்படுகிறது. நெப்போலியன் மரணத்துக்கான காரணம் நீண்ட காலமாக சர்ச்சைக்குறியதாக இருந்து வருகிறது. நெப்போலியன் எங்கு புதைக்கப்பட்டார்? நெப்போலியன் அதே தீவில்தான் புதைக்கப்பட்டார். 1840ஆம் ஆண்டு வரை அவரது எச்சங்கள் பிரான்ஸுக்கு கொண்டு செல்லப்படவில்லை. அதன் பிறகு பிரான்சின் ராணுவத் தலைவர்கள் அடக்கம் செய்யப்படும் பாரிஸில் இருக்கும் லெஸ் இன்வெலிட்ஸ் பகுதியில் நெப்போலியனின் எச்சம் புதைக்கப்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czr1l5xdn4no
  6. ட்ரம்ப் - புதின் சந்திப்பு இடைநிறுத்தம்! - வெள்ளை மாளிகை 22 Oct, 2025 | 02:40 PM ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புதினை ஹங்கேரியின் புடா பெஸ்ட் நகரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கும் நிகழ்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகிய இருவரும் தொலைப்பேசி ஊடாக உரையாடியதைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன் இருவரும் தொலைப்பேசியில் என்ன பேசிக்கொண்டார்கள் என்பதை பொதுவெளியில் தெரிவிக்க முடியாது என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை நிறுத்த ட்ரம்ப் கடும் முயற்சி எடுத்து வருவதாக சர்வதேச அளவில் தெரிவிக்கப்படுகிறது. இப்போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளின் ஜனாதிபதிகளுடனும் ட்ரம்ப பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ட்ரம்ப் - புதின் இடையிலான பேச்சுவார்த்தை அமெரிக்காவின் அலாஸ்காவில் நடைபெற்றது. எனினும், அந்த பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை. இதனால், மீண்டுமொரு சந்தித்துப் பேசுவோம் என இருவரும் தெரிவித்திருந்தனர். அதன்படி, ஹங்கேரியில் இரு தலைவர்களும் சந்தித்து பேசவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அந்த சந்திப்பும் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/228379
  7. 22 Oct, 2025 | 04:49 PM (எம்.ஆர்.எம் வசீம்,இராஜதுரை ஹஷான்) வரிச்செலுத்தும் மக்களுக்கும், பொதுத் திறைச்சேரிக்கும், அரச வங்கிகளுக்கும் பாரிய செலவினச் சுமையாக மாறியுள்ள இலங்கை மின்சார சபை மறுசீரமைக்கப்பட்டு, புதிதாக 6 நிறுவன கட்டமைப்புக்கள் உருவாக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற அமர்வின்போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் பதிலளித்ததாவது, வரிச்செலுத்தும் மக்களுக்கும், பொதுத் திறைச்சேரிக்கும், அரச வங்கிகளுக்கும் பாரிய செலவினச் சுமையாக மாறியுள்ள இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகிறது. 2025 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க (திருத்த) மின்சார சபைச் சட்டத்தின் பிரகாரம் , 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார சபை சட்டத்தின் முதலாவது உப பிரிவின் குறிப்பிடப்பட்டுள்ள மாதிரிக்கு அமைய, 17 ஆவது உறுப்புரைக்கமைய, இலங்கை மின்சார சபை மறுசீரமைக்கப்படும். புதிய மறுசீரமைப்பைத் தொடர்ந்து நேஷனல் சிஸ்டம் ஒபரேட் (பிரைவெட்) லிமிடெட், நேஷனல் ட்ரான்ஸ்மிஷன் நெட்வொர்க் சர்விஸ் (பிரைவெட்) லிமிடெட், எலெக்ட்ரிசிட்டி ஜெனரேசன் (பிரைவெட்) லிமிடெட், எலக்ட்ரிசிட்டி டிஸ்ட்ரிபூசன் (பிரைவெட்) லிமிடெட், எனெர்ஜி வென்டேர்ஸ் லங்கா (பிரைவெட்) லிமிடெட், சி.இ.பி எம்ப்லோயீஸ் (பிரைவெட்) லிமிடெட், என்ற அடிப்படையில் புதிதாக 6 நிறுவன கட்டமைப்புக்கள் உருவாக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/228394
  8. மழையினால் 3 தடவைகள் தடைப்பட்ட ஆட்டத்தில் DLS முறைமையின் பிரகாரம் 150 ஓட்டங்களால் தென் ஆபிரிக்கா வெற்றி Published By: Vishnu 21 Oct, 2025 | 11:58 PM (நெவில் அன்தனி) கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற தென் ஆபிரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி மழையினால் 3 தடவைகள் தடைப்பட்ட போதிலும் டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் தென் ஆபிரிக்கா 150 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் அணிகள் நிலையில் தென் ஆபிரிக்கா 10 புள்ளிகளுடன் முதலாம் இடத்திற்கு முன்னேறியது. அவுஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் தலா 9 புள்ளிகளுடன் நிகர ஓட்ட வேக அடிப்படையில் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களில் இருக்கின்றன. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அணித் தலைவி லோரா வுல்வார்ட், சுனே லூயி, மாரிஸ்ஆன் கெப், நாடின் டி க்ளார்க் ஆகியோரின் அதிரடி ஆட்டங்களின் உதவியுடன் தென் ஆபிரிக்கா கணிசமான ஓட்டங்களைக் குவித்து பலமான நிலையை அடைந்தது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென் அபிரிக்கா 40 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 312 ஓட்டங்களைக் குவித்தது. இரண்டாவது ஓவரில் தஸ்மின் ப்றிட்ஸ் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். அதனைத் தொடர்ந்து 2 ஓவர்கள் நிறைவில் தென் ஆபிரிக்கா ஒரு விக்கெட்டை இழந்து 6 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது பிற்பகல் 3.09 மணிக்கு மழை பெய்ய ஆரம்பித்தது. இதனால் ஆட்டம் சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் தடைப்பட்டது. மழை ஓய்ந்த பின்னர் பிற்பகல் 5.25 மணிக்கு ஆட்டம் தொடர்ந்தபோது அணிக்கு 40 ஓவர்கள் என போட்டி தீர்ப்பாளரால் நிர்ணயிக்கப்பட்டது. இதனை அடுத்து லோரா வுல்வார்ட், சுனே லூயி ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி 92 பந்துகளில் 118 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அவர்களில் முதலில் ஆட்டம் இழந்த சுனே லூயி 8 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தெடாந்து ஆன்எரி டேர்க்சன் 9 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் லோரா வுல்வார்ட், மாரிஸ்ஆன் கெப் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 52 பந்துகளில் 64 ஓட்டங்களை வேகமாக பகிர்ந்தனர். மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய லோரா வுல்வார்ட் 10 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 90 ஓட்டங்களைக் குவித்தார். அவரைத் தொடர்ந்து கராபோ மெசோ ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். எனினும் க்ளோ ட்ரையொன், நாடின் டி க்ளார்க் ஆகிய இவரும் 6ஆவது விக்கெட்டில் 6 ஓவர்களில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவின் ஓட்ட வேகத்தை அதிகரிக்கச் செய்தனர். க்ளோ ட்ரையொன் 21 ஓட்டங்களைப் பெற்றார். மறுபக்கத்தில் நாடின் டி க்ளார்க் 16 பந்துகளில் 3 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 41 ஓட்டங்களை விளாசினார். பந்துவீச்சில் நஷ்ரா சாந்து 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சாடியா இக்பால் 63 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். 40 ஓவர்களில் 306 ஓட்டங்கள் என்ற திருத்தப்பட்ட டக்வேர்த் லூயிஸ் முறைமையின் கீழ் பாகிஸ்தான் பதிலுக்கு துடுப்பெடுத்தாடியது. 10 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்புக்கு 34 ஓட்டங்கள் என்ற இக்கட்டான நிலையில் பாகிஸ்தான் இருந்தபோது இரவு 9.23 மணிக்கு மழை பெய்ய ஆரம்பித்ததால் ஆட்டம் தடைப்பட்டது. 38 நிமிடங்களின் பின்னர் ஆட்டம் மீண்டும் தொடர்ந்தபோது பாகிஸ்தானின் வெற்றி இலக்கு 25 ஓவர்களில் 262 ஓட்டங்கள் என அறிவிக்கப்பட்டது. மறுபக்கத்தில் குறைந்த பட்சம் 15 ஓவர்களைப் பூர்த்தி செய்து போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற வாஞ்சையுடன் விளையாடிய தென் ஆபிரிக்கா ஓவர்களை விரைவாக வீசி முடிப்பதில் குறியாக இருந்தது. ஆனால், ஆட்டம் மீண்டும் ஆரம்பித்து தொடர்ந்தபோது தென் ஆபிரிக்கா 2 ஓவர்களை வீசிய நிலையில் மழை மீண்டும் குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் மூன்றாவது தடவையாக இரவு 10.26 மணிக்கு தடைப்பட்டது. ஆனால் சற்று நேரத்தில் மழை நின்றதால் இரவு 10.35 மணிக்கு போட்டி மீண்டும் தொடர்ந்ததுடன் மூன்றாவது முறையாக வெற்றி இலக்கு திருத்தி அமைக்கப்பட்டது. 20 ஓவர்களில் 234 ஓட்டங்கள் என்ற திருத்தப்பட்ட வெற்றி இலக்கை நோக்கி தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 83 ஓட்டங்ககளைப் பெற்று தோல்வி அடைந்தது. துடுப்பாட்டத்தில் சித்ரா நவாஸ் ஆட்டம் இழக்காமல் 22 ஓட்டங்களையும் நட்டாலியா பெர்வெய்ஸ் 20 ஓட்டங்களையும் சிட் ரா ஆமின் 13 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் நொண்டுமிசோ ஷங்கேஸ் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். பந்துவீச்சில் மாரிஸ்ஆன் கெப் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நொண்டுமிசோ ஷங்கேஸ் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகி: மாரிஸ்ஆன் கெப் https://www.virakesari.lk/article/228333
  9. 22 Oct, 2025 | 01:00 PM நெதர்லாந்து சர்வதேச நீதிமன்றம் கடந்த ஆண்டு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்வதற்கான பிடியானை பிறப்பித்திருந்த நிலையில், தனி பாலஸ்தீன நாடு உருவாக்கத்துக்கு நெதன்யாகு தடையாக இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி, நெதன்யாகு கனடாவில் நுழைந்தால், அவர் சர்வதேச நீதிமன்ற உத்தரவின் பேரில் கைது செய்யப்படுவார் என எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசா மீது இஸ்ரேல் தொடுத்த போரில் குழந்தைகள், பெண்கள் உட்பட 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இப்போர்க்குற்றம் இடம்பெற்றதற்காக நெதர்லாந்து சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சர்வதேச நீதிமன்றம் கடந்த ஆண்டு நெதன்யாகுவை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த பிடியாணை நிலுவையில் உள்ள நிலையில், தனி பாலஸ்தீன நாடு உருவாக்கத்துக்கு நெதன்யாகு தடையாக இருப்பதாக கனடா பிரதமர் குற்றஞ்சாட்டினார். அத்துடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கனடாவுக்குள் நுழைந்தால் நிச்சயமாக சர்வதேச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கைது செய்யப்படுவார் என கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். இதேபோன்று பிரான்ஸ், துருக்கி, பெல்ஜியம் உட்பட பல நாடுகள் சர்வதேச நீதிமன்றத்தின் பிடியாணை உத்தரவை நிறைவேற்றக் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/228368
  10. பிரதமரின் இந்திய விஜயம் வலுவான நன்மதிப்பைக் கட்டியெழுப்பியுள்ளது - அலி சப்ரி பாராட்டு 21 Oct, 2025 | 05:16 PM (நா.தனுஜா) அண்மையில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் இந்திய விஜயம் பரவலாக வலுவான நன்மதிப்பைத் தோற்றுவித்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சர்வதேச அரங்கில் எமது நாடு தெளிவுடனும் கௌரவத்துடனும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதைக் காண்பதற்கு மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். பிரதமர் ஹரிணி அமரசூரியவின் அண்மைய இந்திய விஜயம் வலுவான நன்மதிப்பைத் தோற்றுவித்திருக்கின்றது. தான் கல்வி பயின்ற புதுடில்லியின் தேசிய பல்கலைக்கழகத்திலும் என்.டி.ரி.வியின் உலகத்தலைவர் மாநாட்டிலும் பிரதமர் ஆற்றிய உரையானது ஆழமானதாகவும், அறிவுபூர்வமானதாகவும், இலங்கையின் மிகச்சிறந்த தலைமைத்துவத்தினை வெளிப்படுத்தும் வகையிலும் அமைந்திருந்தது. எமது நாடு அத்தகையதொரு தெளிவுடனும், கௌரவத்துடனும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதைக் காண்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது. அதேபோன்று தீவிர நெருக்கடியில் இருந்து இலங்கை மீள்வதற்கு உதவிய மிக்கடினமான முறையில் வென்றெடுக்கப்பட்ட பொருளாதார அடைவுகள் மற்றும் ஸ்திரமான வெளியுறவுக்கொள்கை என்பவற்றில் பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொள்வதில்லை என்ற அரசாங்கத்தின் தீர்மானமும் ஊக்கமளிக்கின்றது. எம்மால் பாரம்பரியமாகப் பின்பற்றப்பட்டுவரும் சுதந்திரமானதும், எந்தவொரு தரப்பினரையும் சாராத போதிலும் நடைமுறைக்குச் சாத்தியமானதுமான வெளியுறவுக்கொள்கை தொடர்ந்து எமக்குச் சாதகமானதாக அமையும். நிதியியல் ஒழுக்கம், வருமான ஒருங்கிணைப்பு, அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் மறுசீரமைப்பு, செலவினங்களை ஈடுசெய்யக்கூடிய விலையிடல் முறைமை, இலக்கிடப்பட்ட சமூகப்பாதுகாப்பு மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் என்பன சர்வதேச நாணய நிதியத்தினால் அனுசரணையளிக்கப்படும் மீட்சிக்கான செயற்திட்டத்தின் அடிப்படைகளாக அமைந்துள்ளன. இவை தூரநோக்கு சிந்தனை மற்றும் நடைமுறைக்குச் சாத்தியமான தன்மை என்பவற்றின் ஊடாக அணுகப்படவேண்டுமே தவிர, மறுப்புக்கொள்கையின் அடிப்படையில் கையாளப்படக்கூடாது. அத்தோடு சட்ட மற்றும் ஒழுங்கை மீளுறுதிப்படுத்தும் அதேவேளை, ஊழல் மோசடிகளை உரியவாறு கையாள்வது இன்றியமையாததாகும். மறுபுறம் மாற்று நோக்கங்களுக்காக சட்ட அமுலாக்கம் தவறான முறையில் பயன்படுத்தப்படக்கூடாது. பெரும்பாலான இலங்கையர்களைப் பொறுத்தமட்டில் யார் நாட்டை ஆள்கின்றார்கள் என்பதை விட, நேர்மை, இலக்கு, பொறுப்புக்கூறல், ஒழுக்கம் மற்றும் சகலரையும் உள்ளடக்கிய தன்மை என்பவற்றுடன் எவ்வாறு நாட்டை ஆள்கின்றார்கள் என்பதே முக்கியமானதாக இருக்கின்றது. எனவே அதற்கேற்றவாறு கௌரவம் மற்றும் ஒற்றுமையுடன் இலங்கை முன்நோக்கிப் பயணிக்கும் என எதிர்பார்க்கின்றோம் என அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/228310
  11. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஒரு பிட்காயின் மத்திப்பு 80,000 டாலருக்கு (சுமார் 67 லட்சம் ரூபாய்) மேல் உயர்ந்தது. 21 அக்டோபர் 2025 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரிப்டோகரன்சி உலகத்தைத் தழுவிட முடிவு செய்துள்ளார். அதற்காக கிரிப்டோகரன்சியை பொருளாதார அமைப்பின் ஒரு பகுதியாக மாற்றும் புதிய சட்டத்திற்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார். டிரம்ப் குடும்ப உறுப்பினர்கள் கிரிப்டோகரன்சி அடிப்படையிலான வணிகங்களைத் தொடங்கி, கணிசமான லாபத்தைப் பெற்றுள்ளனர். ஆனால், அமெரிக்காவை கிரிப்டோ உலகில் முன்னிலைப்படுத்துவதற்கும், டாலரின் செல்வாக்கை அதிகரிப்பதற்கும் எடுக்கப்படும் இந்த காரியங்களில் ஆபத்துகளும் குறைவாக இல்லை. பிட்காயின் எவ்வாறு பிறந்தது ? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கிரிப்டோகரன்சியான பிட்காயின் 2008 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, உலகம் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முயற்சித்துக் கொண்டிருந்தபோது இந்தக் கதை தொடங்கியது. ஒருபுறம், அரசாங்கங்கள் தங்கள் பொருளாதாரத்தை மீண்டும் நிலைநிறுத்த முயற்சித்துக் கொண்டிருந்தன. மறுபுறம், ஒரு புதிய சிந்தனை எழுந்தது. அரசாங்கத்தின் நிதி அமைப்புக்கு ஒரு மாற்று இருக்க வேண்டும் என்று சிலர் நம்பினர். 'சைட்டேஷன் நீடட்' என்ற செய்திமடலுக்காக எழுதுபவரும் கிரிப்டோகரன்சி குறித்துத் தொடர்ந்து எழுதி வருபவருமான மாலி ஒயிட் இது பற்றிக் கூறுகிறார். அவரது கூற்றுப்படி, பணத்தின் மீதான கட்டுப்பாடு ஏன் அரசு அமைப்பிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்று சிலர் நினைத்தனர். "2008 நிதி நெருக்கடிக்குப் பிறகு 2009-ல் பிட்காயின்கள் உருவாகத் தொடங்கின. இது ஒரு டிஜிட்டல் சொத்து. அந்தக் காலகட்டத்தில் அரசாங்கங்கள் நிதி நெருக்கடியைக் கையாண்ட விதம் பலருக்கு அதிருப்தியை அளித்தது. ஒரு மைய வங்கியால் வெளியிடப்படாத மற்றும் எந்த அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலும் இல்லாத ஒரு நாணயம் இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்ததால், அவர்கள் கிரிப்டோகரன்சியை உருவாக்கினர். இவ்வாறு முதல் கிரிப்டோகரன்சியான பிட்காயின் உருவானது. இப்போது ஆயிரக்கணக்கான வகையான கிரிப்டோகரன்சிகள் வந்துவிட்டன," என மாலி ஒயிட் கூறுகிறார். கிரிப்டோகரன்சியைப் பரிவர்த்தனைக்கு ஒரு பணமாக பயன்படுத்த, அதன் முழுப் பதிவையும் பாதுகாக்கும் ஒரு அமைப்பு தேவைப்பட்டது. அதாவது, அது எந்த மத்திய வங்கி அல்லது ஒற்றை நபரின் கட்டுப்பாட்டிலும் இருக்கக்கூடாது. இதற்கு பிளாக்செயின் எனப்படும் புதிய தொழில்நுட்பம் தேவைப்பட்டது. இது ஒரு வகையான டிஜிட்டல் பதிவேடு அல்லது பேரேடு ஆகும், இது கிரிப்டோகிராஃபி மூலம் பாதுகாக்கப்படுகிறது. மக்கள் கிரிப்டோகரன்சியை அனுப்பும் மற்றும் அதன் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனையின் பதிவும் இதில் வைக்கப்படுகிறது, இது பரவலாக்கப்பட்ட (Decentralized) அமைப்பில் உள்ளது, என மாலி ஒயிட் கூறுகிறார். இந்த பரவலாக்கல் ஏன் இவ்வளவு முக்கியமானது? இந்த பரவலாக்கமே கிரிப்டோகரன்சி மற்றும் டிஜிட்டல் பணம் ஆகியவற்றுக்கு இடையேயான முக்கிய வேறுபாடு என்று மாலி ஒயிட் கூறுகிறார். மக்கள் வங்கிகள் மூலம் ஒருவருக்கொருவர் அனுப்பும் டிஜிட்டல் பணத்தின் பதிவு வங்கிகளிடம் இருக்கும், ஆனால் கிரிப்டோகரன்சியின் பதிவு எந்த ஒற்றை இடத்திலும் வைக்கப்படுவதில்லை. இந்த தரவு எந்த ஒரு நிறுவனத்தின் அல்லது தனிநபரின் கட்டுப்பாட்டிலும் இல்லை. ஆரம்பத்தில் கிரிப்டோகரன்சியை வாங்குவது அல்லது விற்பது சிக்கலாக இருந்தது. எனவே, முதலீட்டாளர்கள் எளிதாகப் பணத்தைப் போடவும், பரிவர்த்தனை செய்யவும் கிரிப்டோகரன்சி சந்தைகள் (Exchange) உருவாக்கப்பட்டன. ஆனால், இந்த சந்தைகள் மீது எந்தக் கட்டுப்பாடும் இல்லை. ஜப்பானின் டோக்கியோவில் இருந்த எம்டி காக்ஸ்(MT Gox) அப்படிப்பட்ட ஒரு சந்தை ஆகும். இதன் மூலம் உலகின் பிட்காயின் பரிவர்த்தனையில் சுமார் 70 சதவீதம் நடந்தது. 2014-ல் இந்த எக்ஸ்சேஞ்ச் வீழ்ச்சியடைந்தது, இதனால் முதலீட்டாளர்களுக்குக் கோடிக்கணக்கான டாலர் இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து, 2022-ல் FTX என்ற கிரிப்டோகரன்சி சந்தையும் வீழ்ச்சியடைந்தது, இதனால் பில்லியன்கணக்கான டாலர்கள் இழப்பு ஏற்பட்டது. இதில் சாம் பேங்க்மேன் ஃப்ரைட் என்பவர் முக்கியப் பங்கு வகித்தார். மாலி ஒயிட் கூறுகையில், FTX சந்தை முதலீட்டாளர்களின் பணத்தைத் தவறாகப் பயன்படுத்தியது, இதன் காரணமாக அந்த சந்தை வீழ்ச்சியடைந்தது என்றார். இந்த மோசடி குற்றத்திற்காக சாம் பேங்க்மேன் ஃப்ரைடுக்கு நீண்ட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிகழ்வுகள் மற்றும் நிச்சயமற்ற தன்மையால், கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வது ஆபத்தானது என்ற கருத்து உருவானது. "கிரிப்டோ உலகில் எப்போதும் எந்த விதிகளோ அல்லது கட்டுப்பாடுகளோ இருந்ததில்லை. கட்டுப்படுத்தும் நிதி நிறுவனங்கள் இதில் சிறப்பு கவனம் செலுத்தவில்லை. தற்போதுள்ள கொள்கைகள் மற்றும் விதிகளில் எது கிரிப்டோகரன்சிக்குப் பொருந்தும் என்பதையும் அவர்களால் தீர்மானிக்க முடியவில்லை. இது தவிர வேறு பல காரணங்களும் உள்ளன," என மாலி ஒயிட் கூறுகிறார். இந்த பல காரணங்களில் ஒன்று பிளாக்செயின் தொழில்நுட்பம். கிரிப்டோ உலகின் ஒரு குறைபாடு என்னவென்றால், அதில் செய்யப்பட்ட பரிவர்த்தனைகளை ரத்து செய்து பணத்தைத் திரும்பப் பெற முடியாது என்று மாலி ஒயிட் கூறுகிறார். யாராவது உங்கள் கிரெடிட் கார்டு எண்ணைத் தவறாகப் பயன்படுத்தினால், அந்தப் பணத்தைத் திரும்பப் பெற வழிகள் உள்ளன. ஆனால், யாராவது உங்கள் பிட்காயின்களைத் திருடினால், அதனைத் திரும்பப் பெறுவது கடினம். இந்த ஆண்டு வரை, அமெரிக்காவில் கிரிப்டோ துறைக்குச் சிறப்பான விதிகள் எதுவும் இல்லை. அமெரிக்காவின் நிதி கட்டுப்பாட்டு அமைப்பான செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் (SEC) மற்ற துறைகளுக்குப் பொருந்தும் விதிகளால் கிரிப்டோ துறையைக் கட்டுப்படுத்த முயன்றது, இதனால் நிச்சயமற்ற தன்மையும் குழப்பமும் நிலவியது. இந்தக் காரணத்தால், முதலீட்டாளர்கள் அமெரிக்க கிரிப்டோ துறையில் முதலீடு செய்யத் தயங்கினர். இந்த நிச்சயமற்ற தன்மை இருந்த போதிலும், இப்போது இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட கிரிப்டோகரன்சிகள் உள்ளன. கடந்த ஆண்டு அவற்றின் மொத்த மதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்து நான்கு டிரில்லியன் டாலர்களை எட்டியது. இதற்கு காரணம், பல தொழில் அதிபர்கள் ஆவர். இப்போது அமெரிக்க அதிபரே இதில் ஈடுபட்டுள்ளார். டிரம்பின் கிரிப்டோ சாம்ராஜ்யம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, லாஸ் வேகாஸில் நடைபெற்ற பிட்காயின் மாநாட்டின்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிட்காயினைப் பிடித்துக்கொண்டிருக்கும் உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது. பல அமெரிக்க வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களைப் போலவே, தனது முதல் பதவிக் காலத்தில் அதிபர் டிரம்பும் கிரிப்டோகரன்சிக்கு எதிராக இருந்தார் என பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் ஸ்கூல் விரிவுரையாளர் ஃபிரான்சின் மெக்கென்னா நினைவுபடுத்துகிறார். ஆனால் நவம்பர் 2024-ல் இரண்டாவது பதவிக் காலத்திற்கான தேர்தல் பிரச்சாரத்தின் போது, அவரது கருத்து முற்றிலும் மாறியது. கிரிப்டோ துறையின் பல செல்வாக்கு மிக்கவர்கள் டிரம்பின் தேர்தல் பிரசாரத்திற்குப் பெருமளவு நன்கொடை அளித்தனர். அதே சமயம், கிரிப்டோகரன்சியை ஆதரிக்கும் ஜனநாயகக் கட்சித் தலைவர்களுக்கும் அவர்கள் நன்கொடை அளித்தனர். "இந்தத் தேர்தல் பிரசாரங்களுக்காகப் பெரிய அளவில் பணம் செலவழிக்கப்பட்டது. டிரம்ப் மீண்டும் அதிபரானால், அவரது அரசு கிரிப்டோ துறை மீதான பைடன் அரசின் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் என்பதே இதன் பின்னணியில் உள்ள நோக்கமாக இருந்தது." அதிபர் டிரம்ப் இரண்டாவது முறையாகப் பதவியேற்பதற்கு முன்பே, கிரிப்டோ உலகின் செல்வாக்கு மிக்கவர்கள் அவரது தேர்தல் பிரசாரத்திற்கு மேலும் அதிக நிதியளித்தனர். அப்படியானால், இந்த நிதி அரசியல் ஆதரவைப் பெறுவதற்கும், கிரிப்டோ உலகிற்குச் சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்குவதற்கும் ஈடாக வழங்கப்பட்டதா? ஃபிரான்சின் மெக்கென்னா கூறுகிறார், "இது செல்வாக்கை அதிகரிப்பதற்கான ஒரு வழிமுறை. டிரம்ப் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், நெருங்கியவர்களுக்கு இந்தத் தொழிலில் லாபம் ஈட்டவும், அவர்களை இந்தத் துறையில் ஈடுபடுத்தவும் முடிந்தால், தங்களுக்கு அவர்களின் ஆதரவு கிடைக்கும் என கிரிப்டோ துறையைச் சேர்ந்தவர்கள் பார்த்தனர்." டிரம்ப் ஜனவரியில் பதவியேற்பதற்கு முன்பே அவரது குடும்ப உறுப்பினர்கள் இந்தத் துறையில் ஈடுபட்டிருந்தனர். பதவியேற்றவுடன், டிரம்ப் அரசு கிரிப்டோவை ஆதரிக்கும் கொள்கைகளைச் செயல்படுத்தத் தொடங்கியது. கிரிப்டோ மற்றும் டிஜிட்டல் சொத்துகள் அமெரிக்காவின் பொருளாதார எதிர்காலத்தின் ஒரு பகுதி என்று அறிவிக்கத் தொடங்கியது. டிரம்ப் கிரிப்டோ துறையிலிருந்து லாபம் ஈட்டியதை ஒப்புக்கொண்டார். ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் கூற்றுப்படி, டிரம்பின் கிரிப்டோ சொத்து மதிப்பு ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமாகும், இது அவருக்கு சொந்தமான மார்-அ-லாகோ ரிசார்ட் மற்றும் டிரம்ப் டவர் ஆகியவற்றின் மொத்த மதிப்பை விட அதிகமாகும். இப்போது அவர் இவை அனைத்தையும் பெரிய அளவில் செய்து வருகிறார் என ஃபிரான்சின் மெக்கென்னா கூறுகிறார். அரசாங்கம் அமைக்கப்பட்ட பிறகு, அவர் கிரிப்டோ தொடர்பான நடவடிக்கைகளில் விரைவாகப் பங்கேற்கத் தொடங்கினார். புதிய வணிகங்களையும் தொடங்கினார். ஸ்டேபிள்காயின் வணிகத்தில் ஈடுபட்டுள்ள அமெரிக்கன் பிட்காயின் மைனர் (American Bitcoin Miner), வேர்ல்ட் லிபர்ட்டி (World Liberty) உள்ளிட்ட புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. "டிரம்பின் மகன்கள் இந்த வணிகத்தில் முதலீடு செய்கிறார்கள். அவரது ஆலோசகர் ஒருவரும் இதில் ஈடுபட்டுள்ளார். இந்த அரசில் உள்ளவர்களுக்கு இப்போது இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ள ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தத் தொழில்களைக் கண்காணிக்க உருவாக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மிகவும் தளர்ந்துவிட்டன," என அவர் கூறுகிறார். டிரம்ப் கிரிப்டோவில் லாபம் ஈட்டும் முதல் அதிபராக இருக்கலாம், ஆனால் இந்தத் துறையால் ஈர்க்கப்பட்ட முதல் அதிபர் அவர் அல்ல. எல் சால்வடார் நாட்டின் கதை பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, எல் சால்வடோர் நாட்டின் அதிபர் நயிப் புகேலே. எல் சால்வடார் நாடு அதன் இயற்கை அழகு மற்றும் போதைப்பொருள் தொடர்பான வன்முறைகளுக்குப் பெயர் பெற்றது. ஆனால், 2019-ல் நயிப் புகேலே அதிபராகப் பதவியேற்ற பிறகு நிலைமை மாறத் தொடங்கியது. புகேலே தன்னை உலகின் "மிகவும் கூலான சர்வாதிகாரி" அல்லது "உலகின் மிகச் சரியான சர்வாதிகாரி" என்று கூறிக்கொள்கிறார். வன்முறையைக் கட்டுப்படுத்த அவர் பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார், அதன் பிறகு எல் சால்வடார் லத்தீன் அமெரிக்காவின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக மாறியது. 2021-ல் பிட்காயினைச் சட்டப்பூர்வ நாணயமாக அங்கீகரித்த முதல் நாடு இதுவாகும். கிரிப்டோகரன்சி நாட்டின் குடிமக்கள் வங்கிக் கணக்கு இல்லாமல் நிதிச் சேவைகளைப் பெறுவதற்கு வழிவகுக்கும் என்று அதிபர் புகேலே கூறினார். வெளிநாடுகளில் பணிபுரியும் எல் சால்வடார் நாட்டவர்கள் குறைந்த செலவில் பணத்தை சொந்த நாட்டிற்கு அனுப்ப முடியும் என்று அவர் நம்பினார். பிபிசி மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்க செய்தியாளர் வில் கிராண்ட் கூற்றுப்படி, "நாட்டின் மக்கள் அனைவரும் அன்றாட பரிவர்த்தனைகள் மற்றும் கொள்முதல்களுக்கு பிட்காயினைப் பயன்படுத்த வேண்டும். இந்த நாணயம் மத்திய அமெரிக்காவின் பொது நாணயமாக மாற வேண்டும் என்பதே புகேலேயின் திட்டமாக இருந்தது." "கிரிப்டோகரன்சி ஆதரவு முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனங்கள் எல் சால்வடாரை நோக்கி ஈர்க்கப்படும், இது நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும்" என்று அவர் நம்பினார். இந்த நேரத்தில், புகேலே "சிவோ வாலட்" என்ற டிஜிட்டல் செயலியை அறிமுகப்படுத்தினார். அதன் பயன்பாட்டை ஊக்குவிக்க, செயலியைப் பதிவிறக்கும் ஒவ்வொருவரின் வாலட்டிலும் 30 டாலர் டெபாசிட் செய்யப்படும் என்று அவர் அறிவித்தார், இதனால் மக்கள் பிட்காயினைப் பயன்படுத்தத் தூண்டப்படுவார்கள் என நம்பினார். பெரும்பாலான மக்கள் அந்தக் கணக்கிலிருந்து 30 டாலரை எடுத்துவிட்டுச் செயலியின் பயன்பாட்டை நிறுத்திவிட்டனர் - இதன் விளைவாகத் திட்டம் தோல்வியடைந்தது என்று வில் கிராண்ட் விளக்குகிறார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டில் பிட்காயின் பரிவர்த்தனைகள் மொத்தப் பரிவர்த்தனைகளில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தன. உண்மையில், அதிபர் புகேலே எல் சால்வடமாரைக் கிரிப்டோகரன்சி உலகின் மையமாக மாற்ற விரும்பினார். பிட்காயின் மூலம் அனைத்து பரிவர்த்தனைகளும் நடைபெறும் "கிரிப்டோ சிட்டி" என்ற நகரை உருவாக்குவது அவரது கனவாக இருந்தது. "இந்த நகரத்திற்காக கோன்சாகுவா எரிமலையின் வெப்ப ஆற்றலில் இருந்து மின்சாரம் உருவாக்கப்படும் என்று திட்டமிடப்பட்டது. அங்கு வரிகளில் பெரிய தள்ளுபடி வழங்கப்படும் மற்றும் கிரிப்டோகரன்சி உற்பத்தி வசதிகள் உருவாக்கப்படும். ஆனால், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த நகரத்தின் கட்டுமானப் பணிகள் முறையாகத் தொடங்கப்படவில்லை." என்கிறார் வில் கிராண்ட். எல் சால்வடார் ஒரு ஏழை நாடு, அதன் வருவாயில் கால் பகுதி வெளிநாடுகளில் பணிபுரியும் குடிமக்களிடமிருந்து வருகிறது. பொருளாதார நிலையை மேம்படுத்த, 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அது, சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) கடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், எல் சால்வடாருக்கு 1.4 பில்லியன் டாலர் கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புக்கொண்டது. ஆனால், பிட்காயினைச் சட்டப்பூர்வ நாணயமாக மாற்றும் கொள்கையை அதிபர் புகேலே முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று நிபந்தனை விதித்தது என்று வில் கிராண்ட் விளக்குகிறார். இதன் விளைவாக, இந்தக் கடனுக்கு ஈடாக எல் சால்வடார் தனது கிரிப்டோ கொள்கையிலிருந்து பின்வாங்க வேண்டியிருந்தது. வில் கிராண்டின் கூற்றுப்படி, நாட்டின் சாதாரண குடிமக்கள் ஒருபோதும் பிட்காயினை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. மக்கள் ரொக்கப் பணம் அல்லது வங்கிக் கணக்கை மிகவும் பாதுகாப்பானதாகக் கருதுகிறார்கள் - அவர்களுக்கு பிட்காயின் மீது அத்தகைய நம்பிக்கை இல்லை. கிரிப்டோவின் எதிர்காலம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தேர்தல் பிரச்சாரத்தின்போது, அமெரிக்காவை உலகின் 'கிரிப்டோ தலைநகரமாக' மாற்றுவதாக டிரம்ப் உறுதியளித்தார். கேம்பிரிட்ஜில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் தலைவராக ஜில்லியன் டெட் இருக்கிறார். "நிதி உலகில் ஒரு புதிய சிந்தனை அல்லது அமைப்பு வரும்போதெல்லாம், மக்கள் ஈர்க்கப்பட்டு அதை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், பல நேரங்களில் அது நடைமுறை ரீதியில் வெற்றியடையவில்லை" என அவர் கூறுகிறார். ஆனால், பின்னர் அதே யோசனையை மேம்படுத்தி மீண்டும் முன்வைத்தால், அது வெற்றியடையும் வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறுகிறார். கடந்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் கிரிப்டோகரன்சி துறையில் பல புதிய விஷயங்கள் நடந்துள்ளன, அவற்றில் பெரும்பாலானவை அமெரிக்காவிற்கு வெளியே நடந்தன என்று ஜில்லியன் டெட் கூறினார். இப்போது முதல் முறையாக அது அமெரிக்காவில் செயல்படுத்தப்படுகிறது, இதுவே ஒரு பெரிய மாற்றமாகும். "இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்க டாலர் உலக வர்த்தகத்தில் முக்கிய நாணயமாக இருந்து வருகிறது, இதன் பலனை அமெரிக்கா தொடர்ந்து அனுபவித்து வருகிறது" என்று அவர் கூறுகிறார். ஆனால், இப்போது கிரிப்டோகரன்சி தொடர்பான நிச்சயமற்ற தன்மையைத் தீர்க்க, அமெரிக்கா ஸ்டேபிள்காயின்களின் (Stablecoin) பயன்பாட்டை அதிகரிக்கும் திசையில் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ஸ்டேபிள்காயின்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்காது, ஆனால் அவை அமெரிக்க டாலருடன் இணைக்கப்படும். ஜில்லியன் டெட் கூற்றுப்படி, டாலரின் ஆதிக்கத்தைத் தக்கவைத்து அதை மேலும் வலுப்படுத்த டாலருடன் இணைக்கப்பட்ட ஸ்டேபிள்காயின்களைத் தொடங்க டிரம்ப் நினைக்கலாம். ஆனால், சீனா மற்றும் பிற நாடுகள் இதில் திருப்தி அடையாது. அவர்கள் தங்கள் நாணயத்தின் செல்வாக்கை அதிகரிக்க புதிய வழிகளைக் கண்டுபிடிப்பார்கள். இந்த இழுபறி நீண்ட காலத்திற்கு நீடிக்கும் மற்றும் வரவிருக்கும் ஆண்டுகளில் போட்டியின் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் என்று அவர் கூறுகிறார். அமெரிக்காவை கிரிப்டோகரன்சியின் மையமாக மாற்ற இந்த ஆண்டு ஜூலை மாதம் 'ஜீனியஸ் சட்டம்' (Genius Act) நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் குறிப்பாக ஸ்டேபிள்காயின்கள் மற்றும் டாலருடன் இணைக்கப்பட்ட கிரிப்டோகரன்சிகளைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டத்திற்குப் பிறகு, கிரிப்டோகரன்சி இப்போது அமெரிக்காவின் முக்கிய நீரோட்ட பொருளாதார அமைப்பின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யும் ஒரு பெரிய நிதி நிறுவனம் அல்லது முதலீட்டாளர் தோல்வியடைந்தால், அது உலகப் பொருளாதாரத்தில் பெருமளவு நிலையற்ற சூழலை ஏற்படுத்தலாம் என்று ஜில்லியன் டெட் எச்சரிக்கிறார். "எதிர்காலத்தில் உடனடியாக இது நடக்காமல் இருக்கலாம், ஆனால் ஆபத்து நிச்சயம் உள்ளது. ஸ்டேபிள்காயின்கள் அல்லது பிற கிரிப்டோகரன்சிகளை டாலருடன் இணைப்பது உலகளவில் பரிவர்த்தனைகளில் டாலரின் பயன்பாட்டை அதிகரிக்கக்கூடும். ஆனால், டாலருடன் இணைக்கப்பட்ட கிரிப்டோகரன்சி ஏதேனும் மோசடிக்கு பலியானால், அதனால் மோசமான விளைவும் ஏற்படலாம். இதனால் உலகம் ஒரே இரவில் மாறாது, எனவே அதன் பயன்பாடு குறித்து அதிக கவலைப்படுவதும் சரியல்ல" என்று அவர் கூறுகிறார். கிரிப்டோகரன்சி ஒரு புதிய விஷயம் அல்ல. பிட்காயின்கள் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டன. ஆனால், கட்டுப்பாடுகள் இல்லாததால் இந்தத் துறையில் பல பெரிய மோசடிகள் நடந்ததால், நிதி நிறுவனங்கள் அவற்றை இதுவரை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது டிஜிட்டல் சொத்துகள் உண்மையில் பயனுள்ளவையாக இருக்குமா என்று நாடுகள் புதிய வழிகளில் சிந்திக்க வேண்டிய நேரம் வந்திருக்கலாம். அப்படியானால், டிரம்ப் உண்மையில் கிரிப்டோ பொருளாதாரத்தை உருவாக்குகிறாரா என்பதுதான் கேள்வி? கடந்த ஆண்டு ஐரோப்பாவும் அமெரிக்காவும் கிரிப்டோகரன்சி தொடர்பான விதிகளைச் செயல்படுத்தின, அதன் பிறகு இந்தத் துறையில் முதலீடு அதிகரித்துள்ளது. டொனால்ட் டிரம்ப் இதைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார் என்று தெரிகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c04gn1lq9z9o
  12. வசாவிளானில் தனியார் காணியில் அமைக்கப்படும் இராணுவ வைத்தியசாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை - சுமந்திரன் Published By: Vishnu 21 Oct, 2025 | 10:15 PM வசாவிளானில் தனியார் காணியில் இராணுவ வைத்தியசாலை அமைக்கப்பட்டு வரும் நிலையில் காணி உரிமையாளரின் கோரிக்கையை அடுத்து ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவிகே சிவஞானம் மற்றும் வலி வடக்கு தவிசாளர் சுகிர்தன் ஆகியோர் களத்திற்குச் சென்று காணி உரிமையாளருடன் செவ்வாய்க்கிழமை (21) மாலை 6.00 மணியளவில் கலந்துரையாடினர். தனியார் காணி உரிமையாளருடன் கலந்துரையாடிய ஜனாதிபதி சட்டத்தரணி குறித்த இராணுவ வைத்தியசாலை கட்டடத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கையை மிக விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக உறுதியளித்தார். https://www.virakesari.lk/article/228330
  13. இளைஞர்களை வன்முறைக்குத் தூண்டியவரின் வீடு பொலிஸாரால் சுற்றிவளைப்பு Published By: Digital Desk 1 22 Oct, 2025 | 10:01 AM இளைஞர்களை வன்முறைக்குத் தூண்டும் வகையில் செயற்பட்ட நபர் ஒருவரின் வீடு இன்று (22) யாழ்ப்பாணத்தில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் அனுமதிக்கமைய யாழ்ப்பாணம் முளவை சந்தி அருகில் உள்ள வீடொன்றிலேயே இன்று அதிகாலை சோதனை நடத்தப்பட்டது. அண்மைக்காலத்தில் இளைஞர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் தனது பிறந்த நாள் கொண்டாட்ட காணொளியை பதிவேற்றம் செய்தமை, சட்டவிரோத சொத்துக் குவிப்பு போன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அந்நபரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. சோதனை நடவடிக்கையின்போது குறித்த நபர் வீட்டில் இல்லாத நிலையில், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன், இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/228345
  14. மூன்றாவது அணி இயக்குநர் ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒரு பிரச்சினை இருக்கும் - கடந்த பத்தாண்டுகளில் அது நரேட்டிவ் செட் பண்ணுவதாக இருக்கிறது. அரசியலில் இதைத் துவங்கி வைத்தது பாஜக. பகிங்கரமான குற்றச்சாட்டுகள், கதையாடல்கள், எதிரிடைகளை உருவாக்கி மக்களிடையே வெறுப்பை விதைத்து அந்தப் பரபரப்பையும் பதற்றத்தையும் கொண்டு தம்மைப் பெரியோராகக் காட்டுவது, அதே சமயம் தம்மைப் பாதிக்கப்பட்டோராகவும் முன்னிறுத்துவது. ஊடகங்களைத் தம் வசப்படுத்தி தம்மை விமர்சிப்பவர்களை துரோகிகள், குற்றவாளிகள் என்றோ ஒடுக்குபவர்கள், கொடுமைக்காரர்கள் என்றோ, இரண்டுமேதாம் எனவோ சித்தரிப்பது, இதைக் குறித்து அஞ்சி அவர்கள் வாயை மூடும் சூழலை ஏற்படுத்துவது. இதை ஜெர்மனியில் ஹிட்லரும் ரஷ்யாவில் ஸ்டாலினும் முன்பே பண்ணியிருக்கிறார்கள் என்றாலும் நம் நாட்டில் தேசியம், கட்சிக் கட்டுப்பாடு, சித்தாந்த விசுவாசம் ஆகியவற்றை மீறி மூளைச்சலவையாக மட்டுமே இது இருக்கிறது. அவ்வாறு மூளைச்சலவை செய்து சாதி, மதம் உள்ளிட்ட எதிரிடைகளைக் கொண்டு என்னதான் பாசிசத்தை வளர்த்தாலும் ஒட்டுமொத்தமாக அதே சமூக நீதி மக்களாட்சியைத்தான் இவர்களும் செய்ய வேண்டியிருக்கிறது என்பதொரு சுவாரஸ்யம். சினிமாவில் இத்தகைய நரேட்டிவ் செட்டிங் (அதாவது பிரித்தாளும் எதிர்மைக் கதையாடல்கள்) மூன்றாவது அணித் தோற்றத்திற்கான சூழல் வலுப்பெறும்போதே தோன்றுகிறது. தலித் சினிமாவின் துவக்கத்தில் அது நரேட்டிவ் செட்டிங்காக இல்லையென்றாலும் மெல்லமெல்ல அது அந்த இடத்திற்கே செல்கிறது. மூன்றாவது அணிக் கட்சியினரே தலித் சினிமாவின் இரண்டாவது கட்டத்தில் சில படங்களுக்கு நிதியாளர்களாகவும் இருந்திருக்கக் கூடுமோ எனும் ஐயம் பின்னர் நடந்த சில குற்றச் சம்பவங்களைப் பார்க்கையில் ஏற்படுகிறது. குறிப்பாக, திராவிடக் கட்சிகளுக்கு எதிரான நரேட்டிவ்வை செட் பண்ணுவது இங்கு எடுக்கப்பட்ட சில தலித் படங்களின் நோக்கமாக மாறுகிறது. நரேட்டிவ் செட் செய்வது அடிப்படையில் பண்பாட்டுப் பணி அல்ல, அது படைப்பாளர்களின் நோக்கம் அல்ல, அது நேரடி அரசியலின் பிரச்சார இலக்கு மட்டுமே. அது முழுக்கமுழுக்க தேர்தல் அரசியலில் மட்டுமே செல்லுபடியாகிற செயல்பாடு. அதனாலே தமிழிலோ பிற மொழிகளிலோ தலித் இலக்கியம் மத்திய சாதிகளின் மனசாட்சியை நோக்கிப் பேசுகிற, தமது நிலையை முன்வைக்கிற தன்கதைகளாக மலர்ந்தன. சாதியின் நுட்பங்களை, அது சமூகத்தில் செயல்படுகிற வினோதமான வடிவங்களைச் சித்தரித்தன. தலித் இலக்கியத்தின் நோக்கம் மையப் பண்பாட்டு பெருங்கதையாடல் எதிர்ப்பின் வழியிலான சமூக மாற்றமாகவும் இருந்தது. அதாவது மக்களின் மனத்தில் அன்பின் வழியில் மாற்றத்தை உண்டு பண்ணுவது. மக்களைத் திரட்டி தேர்தல் பிரச்சாரம் வழியாக அதிகாரம் பெறுவதாக இருந்ததில்லை - அது தலித் கட்சிகளின் இலக்கு மட்டுமே. தமிழில் தலித் சினிமா ஒரு கட்டத்தில் கட்சி அரசியல் நரேட்டிவ் செட்டிங் நோக்கிப் போனது ஆச்சரியமானது. ஒருவேளை அரசியல் அதிகாரம், முலதனத்தின் ஒரு பகுதியைக் கைப்பற்றுவது, நிதியாளர்களின் தேவைகள் இதைச் சாத்தியமாக்கி இருக்கலாம். திமுக ஆட்சிக்கு வந்ததும் ரஞ்சித்தை விட்டுவிட்டு மாரி செல்வராஜை எடுத்துக்கொண்டது மேலும் சுவாரஸ்யமானது - ஆனால் மாரி வரலாற்று நிகழ்வுகளின் காலவரிசையை மாற்றுவதை ஒழித்து வேறெதையும் திமுகவுக்கோ அதிமுகவுக்கோ சார்பாகச் செய்யத் தயாராக இல்லை. அவர் செட் செய்கிற நரேட்டிவ் தலித் சமூகத்தினர் தேர்தல் அரசியலில் தனித்திரளாக வேண்டும் என்பதை இதுவரையிலான படங்களைக் கவனித்தால் தெளிவாகப் புரியும். அவருக்குப் பின்னுள்ள சாதித் திரளை பாஜக கவரும் முயற்சியை ஆரம்பித்ததாலே அவர்களை ஆற்றுப்படுத்தும் முயற்சியை திமுக தொடர்ந்து எடுத்து வருகிறது என்பதை அப்பட்டமானது. மாரி இச்சூழலை ஒரு பக்கம் பயன்படுத்திக்கொண்டு தன் படத்துக்கு பரபரப்புகாகவும் தன் மூன்றாவது அணி வெறுப்பு அரசியல் நரேட்டிவ்களை செட் செய்வதற்காகவும் அங்கங்கே மற்றமையையும் சுய-மற்றமையையும் விதைக்கும்வண்ணம் தன் படங்களின் கதையமைப்பை வைக்கிறார். அதாவது கூட்டணியில் சேரும் மூன்றாவது அணியினரைப் போலவே ரெண்டு பக்கமும் நெருப்பு அணையாதபடி பார்த்துக்கொள்கிறார். அவரது 'கர்ணன்', 'மாமன்னன்' போன்ற படங்களில் திமுக அதிமுகவைச் சாடவும் அதிமுக தாம் பாராட்டப்பட்டிருப்பதாகச் சொல்லவும் போதுமான குழப்பத்தை இடைவெளியாக அவர் விட்டுவைத்திருப்பார். இரண்டு பக்கமும் கொந்தளிக்க மாரி "டேய் நீ போய் பருத்தி மூட்டையை குடோன்ல வை" என தன் ஆதரவாலர்கள், எதிர்ப்பாளர்களிடம் சொல்லிக் கொண்டிருப்பார். அது மட்டுமல்ல, அதிமுக-திமுக எனப் பந்தை அடித்துக்கொண்டே இருக்கும் அவர் (பா. ரஞ்சித்தைப் போல) பாஜகவின் இந்துத்துவ அரசியலுக்குள் வரவே மாட்டார். அந்தக் கதவைத் திறந்தே வைத்திருப்பது தன் மதிப்பை அதிகரிக்கும் என அவருக்கு ஒரு உள்ளுணர்வு இருக்கிறது. அயோத்திதாசர், அம்பேத்கர், இங்கு அதையொட்டித் தோன்றிய தமிழ்த் தேசியம், ஆதி-திராவிடம், பூர்வ பௌத்தம் எனப் போய் இந்துத்துவாவை வைதீக ஒடுக்குமுறையாளர்களின், திருடர்களின் சித்தாந்தம் என்று சொன்னால் பின்னர் தான் அதிமுக, திமுக முகாம்களுக்குள் மாட்டிக்கொள்ளக் கூடும் என்பதால் அவர் பாஜகவை ஒரு வெற்றிடமாகவே பாவிக்கிறார். அவரது திறமையான சினிமா மொழியும் உணர்ச்சிகரமான முன்வைப்பும், தன் கதைகள் தன்னனுபவக் கதையாடல்கள் என்று எளிமைப்படுத்தும் போக்கும் இந்த அரசியல் நோக்கத்தை சுலபத்தில் யாரும் கவனிக்க முடியாதபடி பண்ணுகிறது. சினிமா நடைமுறை அரசியலுக்கு நெருக்கமாக வந்தால் நடக்கிற ஒன்றுதான் இப்போது மாரி செல்வராஜ் விசயத்தில் நடக்கிறது. அவர் தேர்தலில் போட்டியிடுவாரா என ஊடகவியலாளர்களை செட் பண்ணி கேள்வி கேட்க வைப்பது, அதற்கு இப்போ நிறைய வேலை கிடக்கு எனப் பதில் சொல்வது, மூன்று பேர்களை அனுப்பி தன் படத்துக்கு எதிராக முழங்க வைத்து அதற்கு விளக்கமும் மறுப்பும் சொல்வதற்கும், ஒரு ஆர்வத்தைத் தூண்டுவதற்கு, மறைமுகச் சேதியைக் கட்சிக்காரர்களுக்கு அனுப்ப ஊடகச் சந்திப்பை நடத்துவது என அவர் செய்வதையெல்லாம் பார்க்க ஜாலியாக இருக்கிறது. இச்சந்திப்பில் நாக்கிப் பிரகி தான் ரொம்பக் கஷ்டப்பட்டு நரேட்டிவ்வை செட் பண்ண முயன்று வருவதாகவும், அதை முப்பது பேர் இணையத்தில் அமர்ந்து விமர்சிப்பதகாவும் சொல்லி சட்டென அதைத் திருத்தி கஷ்டப்பட்டு ஏற்கனவே இருந்த நரேட்டிவை உடைக்க முயற்சி பண்ணுவதாகச் சொல்வதைப் பார்க்க இன்னும் சுவாரஸ்யமாக இருந்தது. நாக்கு குழறும்போது உண்மை முந்திக்கொண்டு விடும் என பிராயிட் சொன்னார் (அடக்கப்பட்ட காமத்தின் பொருளில்). இதற்கு முன் அடிக்கடி நாக்கு குழறுபவராக நம் அண்ணாமலைதான் இருந்தார் என்பது நினைவுக்கு வருகிறது. எனக்கு மாரியின் படங்களை விட இந்த அரசியல் குசும்பு தான் பிடித்திருக்கிறது. இப்படி ஊரையே ஏமாற்றி ஓடவிட தனித்திறமை வேண்டும். Posted by ஆர். அபிலாஷ் https://thiruttusavi.blogspot.com/2025/10/blog-post_21.html
  15. 21 Oct, 2025 | 12:53 PM அமெரிக்காவுடன் ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தில் சீனா கையெழுத்திடாவிட்டால், அந்த நாடு மீது 155 சதவீதம் வரை வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க வெள்ளை மாளிகையில் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "சீனாவுடன் அமெரிக்கா மிகவும் மரியாதையுடன் நடந்து வருகிறது. அதேசமயம், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை எனது நிர்வாகம் பொறுத்துக்கொள்ளாது. சீனா ஏற்கனவே 55 சதவீத வரிகளைச் செலுத்துகிறது என்பது உங்களுக்குத் தெரியும்" என்று குறிப்பிட்டார். மேலும், "சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அமெரிக்காவுடன் ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால், நவம்பர் முதலாம் திகதி முதல் சீனா 155 சதவீதம் வரை வரிகளை எதிர்கொள்ள நேரிடும்" என்று திட்டவட்டமாக எச்சரித்தார். அத்துடன், அமெரிக்கா சீனப் பொருட்களுக்கு புதிய ஏற்றுமதித் தடைகளையும் விதிக்கும் என்றும் டிரம்ப் அறிவித்தார். மலேசியாவில் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ள நிலையில், சீனா பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். "கடந்த காலங்களில் பல நாடுகள் அமெரிக்காவைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன, ஆனால் அந்தச் சகாப்தம் முடிந்துவிட்டது. இனி அவர்களால் சாதகமாகப் பயன்படுத்த முடியாது," என்றும் டிரம்ப் கூறினார். முக்கியமான கனிமங்களை வாங்குவது தொடர்பாக அவுஸ்திரேலியாவுடன் அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், சீனாவுக்கு இந்த கடுமையான எச்சரிக்கையை டிரம்ப் விடுத்துள்ளார். அண்மையில், அமெரிக்காவிடம் இருந்து சோயாபீன்ஸ்களை சீனா வாங்கவில்லை என்று டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cj3zm6gm46eo
  16. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவேந்தல்! Published By: Vishnu 21 Oct, 2025 | 07:28 PM யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25ஆம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (21) அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அவர்களது கட்சியின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந் நினைவேந்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர். போர் சூழலில் இவர் யாழிலிருந்து, துணிவுள்ள ஊடகவியலாளராக பணியாற்றி இருந்தார். இதன்போது அவர் எழுதிக்கொண்டு இருந்த கட்டுரை மீது வீழ்ந்தே உயிர் துறந்தார். கொலையாளிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு நிமலராஜனை படுகொலை செய்த பின்னர், வீட்டின் மீது கைக் குண்டுத்தாக்குதலையும் மேற்கொண்டனர். இதன்போது வீட்டில் இருந்த நிலமராஜனின் தந்தை சங்கரப்பிள்ளை மயில்வாகனம், தாய் லில்லி மயில்வாகனம் மற்றும் மருமகன் ஜெகதாஸ் பிரசன்னா ஆகியோர் படுகாயமடைந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/228327
  17. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, உடற்பயிற்சி மூலம் மூளையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும் என ஆய்வுகள் கூறுகின்றன. கட்டுரை தகவல் பாமினி முருகன் பிபிசி தமிழ் 21 அக்டோபர் 2025, 08:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் உடற்பயிற்சி என்பது உடலுக்கு மட்டுமல்ல, மூளையின் ஆரோக்கியத்தையும், செயல்திறனையும் சீராக்குவதில் கூட முக்கிய பங்கு வகிப்பதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. தொடர்ந்து உடற்பயிற்சி செய்தால் நினைவாற்றல், கூர்ந்து கவனித்தல் மற்றும் சிந்தனை திறன் போன்ற மூளையின் செயல்கள் மேம்படும் என்கின்றன அந்த ஆய்வுகள். உடற்பயிற்சி மூலம் மூளையை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி? மூளை ஆரோக்கியம் என்றால் என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மூளை எவ்வாறு செயல்படுகிறது மற்றும் மன அழுத்தத்தை எவ்வாறு சமாளிக்கிறது என்பது பல காரணங்களை பொருத்தது. மூளை ஆரோக்கியம் என்பது அறிவாற்றல், யோசிக்கும் திறன், உணர்ச்சி, நடத்தை, அசைவு போன்றவற்றில் உங்களின் மூளை எந்தளவிற்கு நன்றாக செயல்படுகிறது என்பதை குறிப்பதாகும் என உலக சுகாதார நிறுவனம் (WHO) குறிப்பிட்டுள்ளது. இதுபற்றி வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில், "மூளை ஆரோக்கியம் என்பது உங்களுக்கு ஏதேனும் நோய் இருந்தாலும் இல்லாவிட்டாலும், வாழ்நாள் முழுவதும் உங்கள் முழு திறனையும் பயன்படுத்த இது உதவுகிறது." என தெரிவிக்கிறது. "நமது மூளை எவ்வாறு செயல்படுகிறது மற்றும் மன அழுத்தத்தை எவ்வாறு சமாளிக்கிறது என்பது பல காரணங்களை பொருத்தது. உடல் ஆரோக்கியம், பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சூழல், வாழ்நாள் முழுவதும் கற்றல், சமூக உறவுகள் போன்றவற்றை உள்ளடக்கியது" எனக் குறிப்பிட்டுள்ள உலக சுகாதார மையம், "இந்த விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் நமது வாழ்வின் ஒவ்வொரு கட்டங்களிலும் நமது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்" எனவும் தெரிவித்துள்ளது. உடற்பயிற்சிக்கும் மூளை ஆரோக்கியத்திற்கும் என்ன தொடர்பு? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, உடற்பயிற்சி, புதிய மூளை செல்கள் வளர உதவுகிறது. உடற்பயிற்சி நேரடியாகவோ மறைமுகமாகவோ நினைவாற்றல் மற்றும் சிந்தனை மேம்பாட்டுக்கு உதவுவதாக ஹார்வர்ட் ஆய்வு தெரிவிக்கிறது. அதில், "உடற்பயிற்சி மூளை செல்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் ரசாயனங்களை வெளியிடுவதன் மூலமாகவும், புதிய மூளை செல்கள் வளர உதவுவதன் மூலமாகவும், மூளையில் புதிய ரத்த நாளங்களை உருவாக்குவதன் மூலமாகவும் மூளையின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சி செய்யாதவர்களுடன் ஒப்பிடுகையில், உடற்பயிற்சி செய்பவர்களுக்கு சிந்தனை மற்றும் நினைவாற்றலுக்கு உதவும் மூளைப் பகுதிகள் பெரிதாக இருப்பதாக பல ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்த ஆய்வு குறிப்பிடுகிறது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, உடற்பயிற்சி நினைவாற்றலை மேம்படுத்த உதவும் என நரம்பியல் சிகிச்சை நிபுணர் பிரபாஷ் பிரபாகரன் கூறுகிறார். இதுபற்றி சென்னையில் தனியார் மருத்துவமனையில் நரம்பியல் சிகிச்சை நிபுணராக பணிபுரியும் பிரபாஷ் பிரபாகரனிடம் கேட்டபோது, "பொதுவாக உடற்பயிற்சி என்பது உடலுக்கு மட்டுமல்ல, மூளைக்கும் ஆரோக்கியமானது" என்றார். "நமது நினைவாற்றலை மேம்படுத்துவதற்கும், மனநிலையை சீராக வைத்துக்கொள்வதற்கும், அறிவாற்றலை அதிகரிப்பதற்கும் உடற்பயிற்சி உதவும்." என்றார். இதுகுறித்து விரிவாக விளக்கிய அவர், "நமது மூளையில் ஃப்ரென்டல் லோப் (Frontal lobe), பரியேட்டல் லோப் (Parietal lobe), டெம்போரல் லோப் (Temporal lobe), ஆக்ஸிபிடல் லோப் (Occipital lobe) என 4 பிரிவுகள் உள்ளன. இதில் இந்த Frontal lobeதான் ஒருவருக்கும் மற்றவருக்கும் இடையே வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. இதுதான் நமது பாணி, நாம் சிந்திக்கும் முறை போன்றவற்றை தீர்மானிக்கும். அதனால் இந்த இடத்தை பயிற்சிகளால் மேம்படுத்துவதன் மூலம் பலன் கிடைக்கும்" என்றார். மூளை ஆரோக்கியத்திற்கு 2 விதமான பயிற்சிகளை பரிந்துரைப்பதாக மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன் கூறினார். ஒன்று மனம் சார்ந்த பயிற்சி, மற்றொன்று ஏரோபிக்ஸ் பயிற்சி ஆகும். மனம் சார்ந்த பயிற்சி பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மூளை ஆரோக்கியத்திற்கு 2 விதமான பயிற்சிகள் உதவுகின்றன. இந்த பயிற்சிகள் நினைவாற்றல், ஒரு விஷயத்தில் கூர்மையாக கவனம் செலுத்துதல், ஒரு பிரச்னையை தீர்க்கும் திறன் போன்ற அறிவாற்றல் சார்ந்த செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகிறது. இதுபற்றி பேசிய மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன், "Fund of information அதாவது பொதுஅறிவு, தகவல்கள் என எந்தளவிற்கு அதிகமான தகவல்களை மூளைக்குள் செலுத்துகிறோமோ அந்தளவிற்கு அறிவாற்றல் தொடர்பான பிரச்னைகளில் இருந்து நம்மை நாம் பாதுகாக்க முடியும்" என்றார். இதுபற்றி அமெரிக்க சுகாதாரத்துறையின் ஒரு அங்கமான தேசிய சுகாதார நிறுவனத்திலும் (NIH) ஆய்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், "அதிகமாக தகவல்களை மூளைக்கு செலுத்துவதன் மூலம் வயதாவதால் ஏற்படும் பாதிப்பு மற்றும், டிமென்ஷியா போன்ற நோய்களை தடுக்க முடியும். வாழ்நாள் முழுவதும் அறிவைப் பெறுவதும், பல உணர்வுப்பூர்வமான செயல்களில் ஈடுபடுவதும் மூளையை பலப்படுத்துகிறது. இதனால் மூளையால் பிரச்னைகளை சிறப்பாக கையாள முடியும். மூளையின் செயல்பாடும் நீண்ட காலத்திற்கு சிறப்பாக இருக்கும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சுடோகு, வார்த்தை விளையாட்டு போன்றவை மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மனம் சார்ந்த பயிற்சிகளை மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன் பட்டியலிடுகிறார். வாசித்தல் - என்ன வாசிக்கிறோம் என்பதை விட தொடர்ந்து வாசிப்பதுதான் முக்கியம் திறன் மேம்பாடு - இசை, நடனம் என புதிதாக ஏதாவது ஒரு திறனை கற்றுக்கொள்ளுதல், புதிய மொழிகளை கற்பதும் இதில் அடங்கும் புதிர்கள் - சுடோகு, வார்த்தை விளையாட்டு, கணக்கிடுதல். இவை அனைத்தும் மூளை ஆரோக்கியத்திற்கு உதவும் என்று அறிவுறுத்துகிறார். ஏரோபிக்ஸ் பயிற்சி பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மூளையில் உள்ள ஹிப்போகேம்பஸ் பகுதி. உங்கள் இதயத் துடிப்பு மற்றும் சுவாசத்தை அதிகரிக்கும் வகையில் தொடர்ச்சியாக நீங்கள் செய்யும் எந்தவொரு உடல் அசைவு அல்லது செயல்பாடும் ஏரோபிக் உடற்பயிற்சி என்கிறார் மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன். அதன்படி, தீவிர நடைபயிற்சி ஓட்டம் சைக்கிள் ஓட்டுவது நீச்சல் என இவை அனைத்தும் ஏரோபிக் உடற்பயிற்சியின் கீழ் வரும். பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஏரோபிக் உடற்பயிற்சி செய்வதன் மூலம் மூளையில் உள்ள ஹிப்போகேம்பஸ் பகுதி விரிவடைகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஹிப்போகேம்பஸ் என்பது டெம்போரல் லோப்-ல் உள்ளது. இது மூளையின் நினைவாற்றல் மற்றும் கற்றலுக்கு உதவும் பகுதியாகும். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஏரோபிக் உடற்பயிற்சி மூளை வளர்ச்சிக்கும் உதவும் என மருத்துவர் பிரபாஷ். இதுபற்றி பேசுகையில், "BDNF அதாவது Brain-derived neurotrophic factor என்ற புரதம் உள்ளது. இது வெளியாவதால் நியூரல் இணைப்பு (மூளையின் நரம்பு செல்களான நியூரான்களுக்கு இடையேயான இணைப்புகள், இவை சமிக்ஞைகளை கடத்துவதற்கான பாதைகளை உருவாக்குகின்றன) மேம்படும். நியூரானின் வளர்ச்சியை இது அதிகரிக்கும். இதுவும் நினைவாற்றல் மற்றும் கற்றலை மேம்படுத்த உதவும்" என்கிறார் மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன். "நியூரோகெமிக்கல் (Neurochemical) சமநிலையால்தான் மூளையில் தகவல் பரிமாற்றம் ஏற்படுகிறது. மூளையில் உள்ள நியூரோ கெமிக்கல்களை ஊக்கப்படுத்துவதற்கும் இது உதவும்" என்றார். 'வாரத்திற்கு 150 நிமிட உடற்பயிற்சி அவசியம்' பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, வாரத்திற்கு 150 நிமிடங்கள் உடல் பயிற்சி செய்ய வேண்டும். "மூளை ஆரோக்கியத்திற்கு பெரும்பாலான ஆய்வுகள் நடைபயிற்சி மற்றும் ஓட்டத்தைதான் பரிந்துரைக்கின்றன. நடைபயிற்சி, ஓட்டம், நீச்சல் என எதை செய்தாலும் ஒரு வாரத்திற்கு 150 நிமிடங்கள் என்ற கணக்கில் செய்ய வேண்டும். அதாவது இந்த 150 நிமிடங்களை தினசரி பிரித்து மேற்கொள்ள வேண்டும். தினமும் உடலுக்கு அசைவுகளை கொடுப்பது அவசியம்" என்றார் மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன். ஹார்வர்ட் ஆய்வில் வாரத்திற்கு 120 நிமிடங்கள் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. வாரத்தின் பெரும்பாலான நாட்களில் அரை மணி நேரம் அல்லது வாரத்திற்கு 150 நிமிடங்கள் உடலில் செயல்பாடுகள் அவசியம் என பரிந்துரைக்கப்படுகிறது. மூளையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பிரச்னைகளை தீர்க்கும் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும் இதுபோன்ற பயிற்சிகள் முக்கியம். உடற்பயிற்சிகள் மூளைக்கு ஆரோக்கியத்தை அளித்து, அதன் செயல்பாடுகளை தூண்டுகிறது என்பது பல ஆய்வுகள் மூலமாகவும் நிரூபணமாகி உள்ளது. லாங்கிடூடினல் ஏஜிங் ஸ்டடி இன் இந்தியா (LASI) 2024ஆம் ஆண்டு 31,464 முதியவர்களை வைத்து ஆய்வு மேற்கொண்டது. இதில் அதிக உடல் அசைவுகளால் ஆண்கள் 0.98 புள்ளிகள் அதிக அறிவாற்றலும், பெண்கள் 1.32 புள்ளிகள் அதிக அறிவாற்றலும் பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு விஷயத்தின் மீது கவனம் செலுத்துவதற்கும், பிரச்னைகளை தீர்க்கும் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும் இதுபோன்ற பயிற்சிகள் முக்கியம் என்கிறார் மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன். "அறிவாற்றல் தொடர்பான பிரச்னை (cognitive dissonance) இருப்பவர்களுக்கு பிரச்னைகளை தீர்க்கும் திறன் குறைவாக இருக்கும். உதாரணமாக சாதாரணமானவர்களிடம் வீடு பற்றி எரிந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் எனக் கேட்டால், அவர்கள் நான் அங்கிருந்து ஓடுவேன், மற்றவர்களை காப்பாற்றுவேன் என பதில் சொல்லுவார்கள். ஆனால், இந்த பிரச்னை இருப்பவர்களால் இந்த பதிலை சொல்ல முடியாது. அதனால் இந்த உடல் பயிற்சிகள் அல்லது அசைவுகள் இவர்களின் இந்த பிரச்னையை குணப்படுத்த உதவும்" என்கிறார். அதுமட்டுமல்லாமல் உடற்பயிற்சிகள் கார்டிசால் எனப்படும் மன அழுத்த ஹார்மோனை குறைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjw9lnzz8n1o
  18. Published By: Digital Desk 1 21 Oct, 2025 | 04:01 PM பாடசாலைகளுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடும் பணிகள் நிறுத்தப்படவில்லை எனவும், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களின் கீழ் சில தரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2 முதல் 5 மற்றும் 7 முதல் 11ஆம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் ஜனவரியில் நடைமுறைக்கு வரும் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் வராததால், அவை வழங்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவ தெரிவித்துள்ளார். இருப்பினும், கல்வி சீர்திருத்தங்களின்படி, 1 மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது என்றும், அதற்கு பதிலாக, அவை எளிமைப்படுத்தப்பட்ட வகையில் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர் கையேடுகளை அச்சிடும் பணிகளும் நிறுத்தப்படவில்லை எனவும், புதிய கல்வி சீர்திருத்தங்களின் தேவைகளுக்கு ஏற்ப, அவை அச்சிடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 2 முதல் 5 மற்றும் 7 முதல் 11ஆம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களையும் 1 மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கான தொகுதிப் பொருட்களை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், 2025 நவம்பர் 15ஆம் திகதிக்குள் பணிகள் நிறைவடையவுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவ தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு, அவற்றை விநியோகிக்கும் பணிகளை டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் நிறைவுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/228283
  19. ‘சரணடைந்தவர்கள் துரோகிகள்.. ஆயுதங்கள் மவுனிப்பு இல்லை..’ மாவோயிஸ்டுகள் திடீர் அறிவிப்பு பாதுகாப்பு படைகளிடம் சரணடைந்தவர்கள் துரோகிகள் என்றும் தங்களது ஆயுதங்கள் எப்போதும் மவுனிக்கப்படமாட்டாது என்றும் மாவோயிஸ்டுகள் அறிவித்துள்ளனர். நாட்டின் 150-க்கு மேற்பட்ட மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் இருந்தது. இந்தியாவில் ஆயுதப் போராட்டம் நடத்துவதன் மூலம் கம்யூனிச அரசாங்கத்தை அமைப்பதுதான் மாவோயிஸ்டுகளின் இலக்கு. கடந்த சில ஆண்டுகளாக மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மாவோயிஸ்டுகள் இயக்கத்தின் நடவடிக்கைகள் முடக்கப்பட்டன. மாவோயிஸ்டுகள் இயக்கம் தொடர்ந்து செயல்பட முடியாத அளவு, பாதுகாப்பு படையினரின் நடவடிக்கை இருந்ததால் கடந்த 2 ஆண்டுகளாக சுமார் 2,000க்கும் அதிகமான மாவோயிஸ்டுகள் சரணடைந்து வருகின்றனர். அண்மையில் மகாராஷ்டிரா மாநிலம் கட்ச்ரோலி பகுதியில் மாவோயிஸ்டுகளின் தளபதி உட்பட 60க்கும் மேற்பட்டோர் சரணடைந்தனர்; சத்தீஸ்கரிலும் ஆயுதங்களை மவுனிக்கச் செய்கிறோம் என அறிவித்துவிட்டு மாவோயிஸ்டுகள் சரணடைந்து வருகின்றனர். இந்த பின்னணியில் மாவோயிஸ்டுகள் இயக்கம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “எங்களது ஆயுதங்கள் மவுனிக்கப்படவில்லை; தற்காலிகமாக பின்னடைவுதான் ஏற்பட்டுள்ளது. ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு சரணடைந்த துரோகிகளுக்கு மக்கள் நிச்சயம் தண்டனை வழங்குவர்; அரசுக்கு எதிராக மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (படம்: A1 மூலம் உருவாக்கப்பட்டது) https://minnambalam.com/surrendered-are-traitors-no-weapon-surrender-happened-maoists-issue-sudden-statement/
  20. ரெட் அலர்ட் : பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! ரெட் அலர்ட் எச்சரிக்கையை அடுத்து புதுச்சேரி, காரைக்காலில் நாளை (அக்டோபர் 22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கும் சூழலில், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரத்தில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளைக்கு வானிலை எப்படி? அதே போன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் நாளை அதி கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. வடகிழக்கு பருவமழை எதிரொலியாக மழையின் தீவிரத்தை பொறுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது வழக்கம். அந்த வகையில் கனமழை ரெட் அலர்ட் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளை (அக்டோபர் 22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழக மாவட்டங்களுக்கும் பள்ளி, கல்லூரிக்கான விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. https://minnambalam.com/puducherry-school-college-leave-due-to-red-alert/
  21. Published By: Vishnu 21 Oct, 2025 | 07:48 PM யாழில் பொழிந்த மழையுடன் மீன்களும் சேர்ந்து விழுந்த சம்பவம் பதிவாகியுள்ளது. 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடக்கம் தொடர்ச்சியாக யாழில் மழை பொழிந்தது. இந்த மழையுடன் சேர்ந்து மீன்களும் விழுந்தன. அந்த மீன்களை மக்கள் பிடிப்பதை அவதானிக்க முடிந்தது. கடந்த காலங்களிலும் இவ்வாறு மழையுடன் மீன்கள் விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/228328
  22. பங்களாதேஷை பரபரப்பான முறையில் வீழ்த்தி மகளிர் உலகக் கிண்ணத்தில் முதல் வெற்றியை சுவைத்தது இலங்கை Published By: Vishnu 20 Oct, 2025 | 11:04 PM (நெவில் அன்தனி) இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நவி மும்பை டி வை பட்டில் விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை (20) நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை 7 ஓட்டங்களால் பரபரப்பான வெற்றியை ஈட்டியது. இந்த மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும். கடைசி இரண்டு ஓவர்களில் பங்களாதேஷ் 5 விக்கெட்களை ஒரு ஓட்டத்திற்கு இழந்ததால் அதன் வெற்றிக்கான முயற்சி கைகூடாமல் போனது. சமரி அத்தபத்துவின் கடைசி ஓவரின் முதல் நான்கு பந்துகளில் ஒரு ரன் அவுட் உட்பட 4 விக்கெட்கள் வீழ்ந்தன. இந்தத் தோல்வியை அடுத்து அரை இறுதி வாய்ப்பை பங்களாதேஷ் இழந்தது. அதேவேளை, இலங்கையின் நிகர ஓட்ட வேகம் எதிர்மறையாக இருப்பதால் அதற்கு அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பு இல்லை. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 48.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றது. விஷ்மி குணரட்ன முதலாவது பந்திலேயே ஆட்டம் இழந்து வெளியேறினார். இதனை அடுத்து அணித் தலைவி சமரி அத்தபத்துவும் ஹர்ஷித்தா சமரவிக்ரமவும் 2ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர். சமரி அத்தபத்து 46 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். இதில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் அடங்கி இருந்தன. அதற்கு அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பு இல்லை. அவரைத் தொடர்ந்து மேலும் 2 விக்கெட்கள் குறைந்த எண்ணிக்கைக்கு வீழந்தன. (100 - 4 விக்.) எனினும் ஹசினி பெரேராவும் நிலக்ஷிக்கா சில்வாவும் 5ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை கௌரவமான நிலையில் இட்டனர். நிலக்ஷிக்கா சில்வா 37 ஓட்டங்களைப் பெற்றதுடன் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 8ஆவதாக ஆட்டம் இழந்த ஹசினி பெரேரா 13 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 85 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ஷொர்னா அக்தர் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரபேயா கான் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 203 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 195 ஓட்டங்களைப் பெற்று 7 ஓட்டங்களால் தோல்வி அடைந்து. முதல் 3 விக்கெட்களை 44 ஓட்டங்களுக்கு இழந்ததால் பங்களாதேஷ் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. எனினும் ஷர்மின் அக்தர், அணித் தலைவி நிகார் சுல்தானா ஆகிய இருவரும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 82 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது துரதிர்ஷ்டவசமாக ஷர்மின் அக்தர் உபாதைக்குள்ளாகி தற்காலிக ஓய்வுபெற்றார். அவர் அப்போது 64 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். தொடர்ந்து நிகார் சுல்தானாவும் ஷொர்னா அக்தரும் அதே விக்கெட்டுக்காக மேலும் 50 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது அக்தர் 19 ஓட்டங்களுடன் வெளியேறினார். சற்று நேரத்தில் ரிட்டு மோனியும் 7 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (193 - 5 விக்) கடைசி ஓவரில் பங்களாதேஷின் வெற்றிக்கு 9 ஓட்டங்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை வீசிய சமரி அத்தபத்து முதல் பந்தில் விக்கெட் ஒன்றைக் கைப்பற்றியதுடன் அடுத்த பந்தில் மேலும் ஒரு வீராங்கனை ரன் அவுட் ஆனார். கடைசி 4 பந்துகளில் பங்களாதேஷின் வெற்றிக்கு மேலும் 9 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அதுவரை மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த நிகார் சுல்தானா 77 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அத்தபத்துவின் அடுத்த பந்தில் ஆட்டம் இழந்தார். அத்துடன் பங்களாதேஷின் வெற்றிக் கனவு கலைந்துபோனது. நான்காவது பந்திலும் அத்தப்பத்து விக்கெட் ஒன்றை வீழ்த்தி இலங்கையின் வெற்றியை உறுதி செய்தார். உபாதையிலிருந்து மீண்டுவந்து துடுப்பெடுத்தாடிய ஷர்மின் அக்தர் 64 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். ஆட்டநாயகி: ஹசினி பெரேரா. https://www.virakesari.lk/article/228241
  23. பட மூலாதாரம், VCG via Getty Images 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஒவ்வோர் ஆண்டும் ஏற்படும் ஓரியானிட் விண்கல் பொழிவு இந்த ஆண்டும் விரைவில் வருகிறது. அப்போது இரவு வானம் ஒளிரும், இதனை உலகம் முழுவதும் காணலாம் என்று நாசா தெரிவித்துள்ளது. "ஆண்டின் மிக அழகான விண்கல் மழைகளில் ஒன்று" என்று நாசா இந்த விண்கல் பொழிவை வர்ணிக்கிறது. இந்த விண்கல் பொழிவு இந்த ஆண்டு அக்டோபர் 2 முதல் நவம்பர் 12 வரை ஏற்படும். நாசாவின் கூற்றுப்படி, அக்டோபர் 22 இரவு முதல் அடுத்த நாள் அதிகாலை வரையிலான நேரத்தில் இது உச்சத்தை எட்டும். பட மூலாதாரம், Anadolu Agency via Getty Images ஓரியானிட் விண்கல் பொழிவு என்றால் என்ன? ஓரியானிடுகள் விநாடிக்கு சுமார் 41 மைல் வேகத்தில் பயணிக்கும் விண்கற்கள் ஆகும். ஓரியன் விண்மீன் குழுமத்திலிருந்து விழுவதைப் போல தெரிவதால், அதன் பெயரிலேயே இவை அழைக்கப்படுகின்றன. ஹாலி வால் நட்சத்திரம் விட்டுச் சென்ற தூசி மற்றும் சிறு கற்கள் நிறைந்த பாதையை பூமி கடக்கும் போது ஓரியானிட் விண்கல் மழை ஏற்படுகிறது . இந்த தூசி மற்றும் சிறு கற்கள் வினாடிக்கு சுமார் 41 மைல்கள் (66 கிலோமீட்டர்) வேகத்தில் பூமியின் வளிமண்டலத்தில் நுழைகின்றன. இந்த ஹாலி வால் நட்சத்திரம் பூமிக்கு அருகே 75 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வருகிறது. பூமிக்கு அருகே வரும் நிகழ்வு 2061-ம் ஆண்டு கோடைகாலத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. வால் நட்சத்திரம் விட்டுச் சென்ற தூசி மற்றும் சிறு கற்கள் காற்றுடன் உராயும்போது இவை ஆவியாகி, நமது கண்களுக்கு தென்படுகிற ஒளிக்கீற்றுகளைஉருவாக்குகின்றன. இவை வானில் சில வினாடிகள் முதல் நிமிடங்கள் வரை நீடிக்கலாம். அவை மங்கலாகத் தோன்றலாம், ஆனால் தனித்துவமான ஒளிப் பாதையை விட்டுச் செல்கின்றன. பெரிய விண்கற்கள் பிரகாசமான பாதைகளை உருவாக்கும். சில நேரங்களில் விண்கற்கள் வீனஸ் கோளை விட பிரகாசமாக தோன்றலாம் - இவை ஃபயர்பால்கள் (fireball) என்று அழைக்கப்படுகின்றன. ஹாலியின் தூசி மற்றும் சிறு கற்களால் உருவாக்கப்படும் இரண்டு விண்கல் மழைகளில் ஓரியானிட்ஸ் ஒன்றாகும். மற்றொன்று ஈட்டா அகுவாரிட்ஸ் விண்கல் மழை ஆகும். இது ஆண்டின் முற்பகுதியில், மே மாதத்தில் தோன்றும். ஓரியானிட்ஸ் எங்கே, எவ்வளவு தெரியும்? ரேடியன்ட் என்பது வானில் விண்கற்கள் தோன்றுவதாகத் தெரியும் புள்ளி. ஓரியானிட்ஸுக்கு இது ஓரியன் விண்மீன் குழுமமாகும். ஓரியன் நள்ளிரவுக்குப் பிறகு கிழக்கில் உதிக்கிறது, இது சிவப்பு நிற பீட்டல்ஜியூஸ் நட்சத்திரத்திற்கு அருகே தோன்றும். ஓரியனைக் கண்டுபிடிக்க, ஓரியன்ஸ் பெல்ட் என்று அழைக்கப்படும், நெருக்கமாக அமைந்த மூன்று பிரகாசமான நட்சத்திரங்களின் வரிசையைத் தேடுங்கள். காட்சியின் தரம் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் எத்தனை விண்கற்கள் தெரியும் என்பதன் மூலம் அளவிடப்படுகிறது - இது ஜெனித்தல் மணிநேர விகிதம் (zenithal hourly rate) என்று அழைக்கப்படுகிறது. அக்டோபர் 22 அன்று ஓரியானிட்ஸின் உச்சத்தின்போது மணிக்கு சுமார் 15 விண்கற்கள் 148,000 மைல் (238,000 கிமீ/மணி) வேகத்தில் பயணிக்கலாம். பட மூலாதாரம், VCG via Getty Images ஓரியானிட் விண்கல் மழையை எப்போது காண முடியும்? ஓரியானிட்ஸ் விண்கல் மழை அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் ஏற்படக்கூடும். நாசாவின் கூற்றுப்படி, விண்கற்களைக் காண சிறந்த வாய்ப்பு அக்டோபர் 22 இரவு, அக்டோபர் 23 அதிகாலை வரை ஆகும். இரவு வானில் பிரகாசமான நட்சத்திரங்களின் பின்னணியில் இதைப் பார்க்க முடியும். பட மூலாதாரம், CFOTO ஓரியானிட் விண்கல் மழையை எப்படிப் பார்ப்பது? நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம், முடிந்தவரை குறைந்த ஒளி கொண்ட இருண்ட இடத்தைக் கண்டுபிடிப்பது. நகரங்கள் மற்றும் தெரு விளக்குகளிலிருந்து விலகிய பகுதியைக் கண்டுபிடிக்கும்படி நாசா அறிவுறுத்துகிறது - மேலும் வானிலைக்கு ஏற்பவும் சரியான இடம் வேண்டும். "இருளில் 30 நிமிடங்களுக்குள், உங்கள் கண்கள் பழகிவிடும், நீங்கள் விண்கற்களைப் பார்க்கத் தொடங்குவீர்கள்" என்று நாசா கூறுகிறது. பின்னர், நீங்கள் வடக்கு அரைக்கோளத்தில் இருந்தால் தென்கிழக்கு வானத்தையும், தெற்கு அரைக்கோளத்தில் இருந்தால் வடகிழக்கு வானத்தையும் பாருங்கள். இந்தியா தெற்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ளது. இந்த விண்கல் பொழிவை பார்க்க தொலைநோக்கி தேவையில்லை - சூழ்நிலைகள் சரியாக இருந்தால், வெறும் கண்களால் பார்க்க முடியும். தீபாவளிப் பட்டாசுகள் அலங்கரித்த வானத்தை, விரைவில் ஓரியானிட்ஸ் ஆண்டு காட்சியின் உச்சம் அலங்கரிக்க உள்ளது. வானம் தெளிவாக இருக்குமா? வானில் அதிகமாக மேகங்கள் இருக்கும் போதும், மழைப்பொழி காலத்திலும் விண்கல் பொழிவை பார்ப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கலாம். மூடுபனி, பிரகாசமான கால நிலைகளுடன் இந்த விண்கல் பார்ப்பது சிரமமாகும். வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/clyz56zmp40o
  24. யாழ். போதனா வைத்தியசாலைப் படுகொலை - வைத்தியசாலைக்கு முன் நினைவேந்தல் அனுஷ்டிப்பு 21 Oct, 2025 | 03:31 PM இந்திய இராணுவத்தினரால் யாழ். போதனா வைத்தியசாலையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களது 38வது நினைவுதினம் இன்று செவ்வாய்க்கிழமை (21) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது. 1987ஆம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து, வைத்தியசாலையில் கடமையாற்றிய 21 பணியாளர்கள் உட்பட 68 பேரை சுட்டுப் படுகொலை செய்ததோடு, இந்த தாக்குதலில் பலரும் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 38ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக நடைபெற்றது. இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்களது உறவினர்கள் கலந்துகொண்டனர். இந்த நினைவேந்தலின்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந்தோருக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு, உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி, நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/228274
  25. பட மூலாதாரம், IMD website படக்குறிப்பு, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதை காட்டும் வரைபடம் (இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இணையதளத்தில் இருந்து) 21 அக்டோபர் 2025, 03:56 GMT புதுப்பிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர் வங்கக் கடலில் இன்று (அக்டோபர் 21) காலை 5.30 மணிக்கு உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறும். நாளை (அக்டோபர் 22) மதியம் வேளைக்குள் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தென்மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின், மேற்கு-வடமேற்கு திசையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திராவை நோக்கி நகர்ந்து, அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும். இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை மைய தென்மண்டல தலைவர் அமுதா, "வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக உருவாகுமா என்பது நாளை (அக்டோபர் 22) தெரியும்" என கூறியுள்ளார். தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை படக்குறிப்பு, வானிலை மைய தென்மண்டல தலைவர் அமுதா "கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதிகபட்சமாக ராமேஸ்வரம் தங்கச்சி மடம் பகுதியில் 17 செ.மீ கனமழை பெய்துள்ளது. தமிழ்நாட்டின் 22 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது" என்று வானிலை மைய தென்மண்டல தலைவர் அமுதா கூறியுள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட 59 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்துப் பேசிய அமுதா, "அக்டோபர் 21 மற்றும் 22, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல 23ஆம் தேதி, தமிழகத்தின் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. 24 முதல் 27 வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் ஒருசில இடங்களில் மழை பெய்யும்." என்று கூறினார். இன்று காலை முதல் நாளை காலை வரை, தமிழ்நாட்டின் 8 கடலோர மாவட்டங்கள் (விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம்) மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதி கனமழை பெய்யும் என்றும் அவர் கூறினார். மேலும், 10 மாவட்டங்களில் மிக கனமழை, 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அமுதா கூறினார். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா அறிவுறுத்தினார். எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்? வங்கக் கடலில் ஆழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, 20 செ.மீக்கு அதிகமான அதிகனமழை பெய்யலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 21 ரெட் அலெர்ட் : கடலூர் மாவட்டத்துக்கு மட்டும் அதிகனமழை பெய்யலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆரஞ்ச் அலெர்ட் : சென்னை, செங்கல்பட்டு, அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை ( 11.5 செ.மீ முதல் 20.4 செ.மீ அளவிலான மழை) பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 22 ரெட் அலெர்ட் : செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்ச் அலெர்ட் : சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. இவை தவிர பிற மாவட்டங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. அக்டோபர் 23 ரெட் அலெர்ட் : எந்த மாவட்டத்துக்கும் ரெட் அலெர்ட் விடுக்கப்படவில்லை. ஆரஞ்ச் : சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர பிற மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. (கனமழை என்பது 6.4 செ.மீ முதல் 11.5 செ.மீ அளவிலான மழை அளவை குறிக்கும். மிக கனமழை என்பது 11.5 செ.மீ முதல் 20 செ.மீ வரையிலான மழை அளவை குறிக்கும். அதிகனமழை என்பது 20 செ.மீக்கு அதிகமான மழைப்பொழிவைக் குறிக்கும்.) சென்னைக்கு மாலை 4 மணி வரை ரெட் அலெர்ட் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் ஒரு மணி நேரத்தில் 15 மி.மீக்கு அதிகமான மழை இடி மின்னலுடன் பெய்யக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் தரைக் காற்று மணிக்கு 62கி.மீ முதல் 87 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணி வரை 5 மி.மீ முதல் 15 மி.மீ அளவிலான மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் தரைக்காற்று மணிக்கு 41 கி.மீ முதல் 61 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். அரியலூர், கோவை, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, குமரி, கரூர், மதுரை, நாமக்கல், பெரம்பலூர், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, திருப்பத்தூர், திருப்பூர், வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணிக்குள் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம், IMD website படக்குறிப்பு, மாவட்ட வாரியாக மழை எச்சரிக்கையை குறிக்கும் இந்திய வானிலை ஆய்வு மைய வரைபடம். (மஞ்சள் - மிதமான மழை, ஆரஞ்சு - மிக கனமழை) ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை - வீடுகளை சூழ்ந்த மழைநீர் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், உச்சிப்புளி, ராமநாதபுரம், அச்சுந்தன்வயல், பரமக்குடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் மண்டபத்தை அடுத்துள்ள கலைஞர் நகர் பகுதியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். தங்கச்சிமடத்தில் ஒரே நாளில் 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. படக்குறிப்பு, மண்டபத்தை அடுத்துள்ள கலைஞர் நகர் பகுதியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. பாலாற்றில் வெள்ளம் - மக்களுக்கு எச்சரிக்கை ஆந்திரா மாநிலம் பெரும்பள்ளம் என்ற இடத்தில் 22 அடி உயர தடுப்பணை நிரம்பி அதன் உபரி நீர் பாலாற்றில் வெளியேறி வருகிறது. தமிழகத்தில் புல்லூர், திம்மம்ப்பேட்டை, ஆவாரங்குப்பம், இராமநாயக்கன்பேட்டை, அம்பலூர், கொடையாஞ்சி, வாணியம்பாடி வழியாக பாலாறு சுமார் 222 கிலோமீட்டர் பயணம் செய்து இறுதியாக வங்கக் கடலில் கலக்கின்றது. வெள்ளப்பெருக்கு காரணமாக பாலாற்றில் யாரும் இறங்குவோ, குளிக்கவோ கூடாது என்று திருப்பத்தூமாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் மேலும் அதிக மழை பெய்தால் பாலாற்றில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தினர் ஒலிபெருக்கி மூலமாக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். வெள்ள அபாய எச்சரிக்கை பவானி சாகர் அணையின் நீர்மட்டம் நேற்று 101.36 அடியை எட்டியது. வடகிழக்கு பருவமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. எனவே அணையின் நீர் மட்டம் விரைவில் 102 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அணையிலிருந்து உபரி நீர் பவானி ஆற்றில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கன அடி வரை திறந்துவிடப்படலாம் என்றும் அப்படி திறந்துவிடப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் தமிழக அரசின் நீர்வளத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பவானி ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்புக்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை இன்று தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கி.மீ முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் இந்தப் பகுதிகளில் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgkmyz0897o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.