Everything posted by ஏராளன்
-
விண்ணைத் தொடும் தேங்காய் விலை: உணவு விலைகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்
தேங்காயின் விலை உயர்வானது எதிர்காலத்தில் பொதி செய்யப்பட்ட உணவுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என உணவுத் தொழில்துறை தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான கறிகள் தேங்காய் பாலினை கொண்டு தயாரிக்கப்படுவதால் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளனர். 60 ரூபா முதல் 80 ரூபா வரையில் இருந்த தேங்காயின் வழமையான விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ருக்ஷான் ஹர்ஷன ஊடகங்களுக்கு தெரிவித்தார். தேங்காய் தற்போது ரூ.120 முதல் 150 ரூ .வரை விற்பனை செய்யப்படுகிறது. அதிகரித்துள்ள தேங்காய் விலையினால் உணவு பொதிகளை தயார் செய்ய முடியாமல் சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும், இதனால் உணவுப் பொதிகளை அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார் . அரிசி, கோழியிறைச்சி, முட்டை, எரிவாயு உள்ளிட்ட அனைத்தும் கணிசமாக உயர்ந்துள்ள நிலையில் தேங்காய்களின் எதிர்பாராத விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. தேங்காய்களின் திடீர் அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் நாட்களில் தேங்காய் எண்ணெயின் விலையும் உயரும் என அவர் மேலும் எச்சரித்துள்ளார். https://thinakkural.lk/article/294220
-
இன்று முதல் டிஜிட்டல் முறையில் மோட்டார் வாகன பதிவு சேவைகள்!
இன்று முதல் டிஜிட்டல் முறைமைக்கமைய மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் ஊடாக வழங்கப்படும் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சகல கிளைகள் ஊடாக வழங்கப்படும் சேவைகளுக்காக டிஜிட்டல் முறைமையின் கீழ் பதிவு செய்து நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். https://thinakkural.lk/article/294214
-
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எரிபொருட்களின் விலைத் திருத்தம்!
04 MAR, 2024 | 09:43 PM இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் திருத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதன்படி, 92 ரக பெற்றோல், மற்றும் டீசலின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை. இதேவேளை, 95 ரக பெற்றோல் 9 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக 447 ரூபா குறிப்பிடப்பட்டுள்ளது. சூப்பர் டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 458 ரூபாவாகும். மண்ணெண்ணெயின் விலை லீற்றருக்கு 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 257 ரூபாவாகும். https://www.virakesari.lk/article/177912
-
வல்வை மண்ணில் பிரித்
AB21 வீதி யாழில் இருந்து வட்டுக்கோட்டைச் சந்தியூடாக பொன்னாலைச் சந்தியூடாக மாதகல் ➡️ சேந்தாங்குளம் ➡️ கீரிமலை ➡️ மாவிட்டபுரம் ➡️ காங்கேசன்துறை ➡️ மயிலிட்டி ➡️ பலாலி ➡️ செல்வச்சந்நிதி ➡️ வல்வெட்டித்துறை ➡️ பருத்தித்துறை வரை செல்கிறது. AB21 வீதி பகுதி பகுதியாக புனரமைக்கப்படுகிறது. யாழில் இருந்து வட்டுக்கோட்டைச் சந்தியூடாக பொன்னாலைச் சந்திவரை தரமாக வீதி புனரமைக்கப்பட்டுள்ளது. வழுக்கியாற்றுப் பாலம் புனரமைக்கப்படவில்லை.
-
கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானால் சுற்றுலாப் பயணிகளுக்காக புறா மலை திறந்து வைப்பு!
04 MAR, 2024 | 04:10 PM இவ்வருடத்திற்கான பருவ கால ஆரம்பத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகைக்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) புறா மலை (Pigeon Island) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக உலக வன ஜீவராசிகள் தினமான நேற்று ஆளுநரால் உத்தியோகபூர்வமாக புறா மலை (Pigeon Island) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வுக் கிழக்கு மாகாண சுற்றுலா பணியகம், நிலாவெளி சுற்றுலா அபிவிருத்தி குழு,திருகோணமலை ஹோட்டல் சங்கம் மற்றும் குச்சவெளி பிரதேச சபை ஆகியவற்றின் அனுசரணையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சுற்றுலா பணியக தவிசாளர் மதன்,வனவிலங்கு ஜீவராசி திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர். https://www.virakesari.lk/article/177868
-
சாந்தனின் இறுதி நிகழ்வு இன்று
சாந்தனின் உடல் எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்ல மயானத்தில் நல்லடக்கம்! 04 MAR, 2024 | 09:19 PM சாந்தனின் உடல் வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்ல மயான வளாகத்தில் பெருமளவிலான மக்களின் கண்ணீர் கதறலுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு முப்பது வருடங்களுக்கு மேலாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட போதும் தொடர்ந்து சிறப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு தாயகம் திரும்ப இருந்த நிலையில் சாந்தன் திடீரென உயிரிழந்திருந்தார். சாந்தன் உயிரோடு இலங்கைக்கு வருவாரென எதிர்பார்த்திருந்த நிலையில் திடீரென உயிரிழந்த நிலையில் அவரது உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. மக்கள் பல்வேறு இடங்களிலும் அலைகடலெனத் திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியிருந்தனர். இதனைத் தொடர்ந்து பெருமளவிலான மக்கள் புடைசூழ நல்லடக்கத்திற்காக உடல் தூயிலுமில்லத்திற்கு எடுத்துவரப்பட்ட போது வீதிகளில் திரண்டு மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர். இறுதியாக எள்ளங்குளம் மாவீர்ர் துயிலுமில்லத்தில் உற்றார் உறவினர் நண்பர்கள் போராளிகள் எனப் பெருமளவிலானோரின் கண்ணீர் கதறலுடன் விபூதி போடப்பட்டு சாந்தனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. https://www.virakesari.lk/article/177911
-
மின் கட்டணம் 33 சதவீதத்தால் குறைப்பு - முழுமையான விபரம் இதோ!
வீட்டு மின்பாவனையின் ஆரம்ப கட்டணம் 33 சதவீதத்தால் குறைப்பு - முழுமையான விபரம் இதோ! 04 MAR, 2024 | 07:53 PM (இராஜதுரை ஹஷான்) மின்கட்டணத்தை இன்று திங்கட்கிழமை (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 21.9 சதவீதத்தால் குறைக்க இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த யோசனை மற்றும் செலவுகளுக்கு அமைய 2009 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க மின்சாரத்துறை சட்டத்தின் 30 ஆவது பிரிவு மற்றும் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் மானியங்களுக்கு அமைவாக கண்காணிப்பு மற்றும் மீள்பரிசீலனைகளுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை கடந்த ஜனவரி மாதம் நூற்றுக்கு 3.34 சதவீதத்தாலும் பின்னர் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி சமர்ப்பித்த மின்கட்டண திருத்த யோசனையின் பிரகாரம் நூற்றுக்கு 14 சதவீதத்தால் மின்கட்டணத்தை குறைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட செலவினங்கள் தொடர்பான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட மீளாய்வு மற்றும் பொதுமக்களின் கருத்துக்கோரலின் போது கிடைக்கப்பெற்ற யோசனைகளை கருத்திற் கொண்டு மொத்த மின்கட்டணத்தை 21.9 சதவீதத்தினால் குறைப்பதற்கு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதற்கமைய இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டிருக்கும் இத்திருத்தம் சகல மின்நுகர்வு கட்டங்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. வீட்டு பாவனையில் 30 அலகுக்கு குறைவான மின்னலகை பாவிக்கும் மின்பாவனையாளர்களின் மின்னலகுக்கான கட்டணம் நூற்றுக்கு 33 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. 31 முதல் 60 அலகுகளுக்கான மின்கட்டணம் 28 சதவீதத்தால் முழுமையாக குறைக்கப்பட்டுள்ளது.61-90 வரையான அலகுக்கான கட்டணம் 30 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 90 அலகுக்கு மேற்பட்டதும் 180 இற்கும் குறைந்ததுமான மின்னலகுக்கான கட்டணம் 24 சதவீதத்தாலும் 180 அலகுகளுக்கு மேற்பட்ட பாவனைகளுக்கான கட்டணம் 18 சதவீதத்தாலும் குறைக்கப்பட்டுள்ளது. மத தலங்களுக்கான மின்கட்டணம் 33 சதவீதத்தாலும் பொது பாவனைகளுக்கான மின்கட்டணம் 23 சதவீதத்தாலும், அரச நிறுவனங்களுக்கான கட்டணம் 22 சதவீதத்தாலும் குறைக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஹோட்டல் மற்றும் கைத்தொழில் துறைகளுக்கான கட்டணம் 18 சதவீதத்தாலும், வீதி மின்விளக்குகளுக்கான கட்டணம் 20 சதவீததத்தாலும் குறைக்கப்பட்டுள்ளது. புதிய கட்டண திருத்தத்துக்கு அமைய 30 அலகுகளுக்கு குறைவான மின்னலகை பாவிக்கும் நுகர்வோருக்கான மாதாந்த மின்கட்டணம் 180 ரூபாவில் இருந்து 150 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு அலகுக்கு அவர்கள் செலுத்தும் கட்டணம் 12 ரூபாவில் இருந்து 08 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. 31 - 60 அலகுகளுக்காக அறவிடப்பட்ட 360 ரூபா மின்கட்டணம் 300 ரூபாவாகவும் ஒரு அலகுக்கான கட்டணம் 30 ரூபாவில் இருந்து 20 ரூபாவாகவும் குறைக்கப்பட்டதுள்ளது. https://www.virakesari.lk/article/177909
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் மறுப்பு - பின்னணி என்ன? தேர்தல் ஆணைய நடைமுறை என்ன? பட மூலாதாரம்,X/நாம் தமிழர் கட்சி 3 மணி நேரங்களுக்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு கடந்த தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னம் இந்த முறை கிடைக்கவில்லை. இதுதொடர்பாக அக்கட்சியின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் சீமான் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார். கடந்த தேர்தல்களைப் போலவே கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தனர். வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தலைமை நீதிபதி மன்மோகன், நாம் தமிழர் கட்சி சார்பில் தாக்கல் செய்திருந்த மனுவைத் தள்ளுபடி செய்து இன்று(திங்கள்கிழமை) வழக்கை முடித்து வைத்தனர். வழக்கின் இன்றைய நிலையில், நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட முடியாது. கடந்த ஆண்டு இறுதியில், கரும்பு விவசாயி சின்னத்தை கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதே காரணம். அதனால்தான், இந்த முறை நாம் தமிழர் கட்சிக்கு அச்சின்னம் கிடைக்கவில்லை. என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் தமிழர் கட்சி 2010-இல் தொடங்கப்பட்டது. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் அக்கட்சி தேர்தலில் போட்டியிடத் தொடங்கியது. கடந்த 2019 ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி ஆண், பெண் இரு பாலருக்கும் சரிபாதி தொகுதிகளை ஒதுக்கியது. அதாவது, அக்கட்சி சார்பில் 20 தொகுதிகளில், ஆண்களையும், 20 தொகுதிகளில் பெண்களையும் களமிறங்கினர். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, பதிவுபெற்ற கட்சிகளுக்கான சின்னங்களை ஒதுக்கும் பணியை, இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஆணடு அக்டோர் மாதம் தொடங்கியது. இந்த நிலையில், டிசம்பர் 17 ஆம் தேதி, கர்நாடகாவைத் சேர்ந்த ஒரு பதிவுபெற்ற கட்சி, கரும்பு விவசாயி சின்னத்தை கேட்டதால், அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் அந்தச் சின்னத்தை ஒதுக்கியது. அந்தச் சின்னத்திற்காக நாம் தமிழர் கட்சியினர் தாமதமாகவே அணுகியிருக்கிறார்கள். இது பாஜகவின் சதி எனச் சாடினார் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். ஊடகங்களிடம் பேசிய அவர்,”நாங்கள் முதன் முதலில் தேர்தலில் போட்டியிடுவதற்காக சின்னத்தை கோரிய போது, நாங்கள் மயில் சின்னத்தைக் கேட்டோம். அது தேசியப் பறவை என்பதால், அந்தச் சின்னத்தை ஒதுக்க மறுத்தனர். ஆனால், தேசிய மலரான தாமரையை பாஜக,விற்கு ஒதுக்கியுள்ளார். இருவருக்கும் ஒரே நியாயம் என்றால், அவர்களுக்கும் தாமரையை ஒதுக்கியிருக்கக் கூடாது,” என்றார். இதுதொடர்பாக, கடந்த பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி, கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கே மீண்டும் ஒதுக்கக் கோரி, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிற்கு கடிதம் எழுதினார். அதற்கு எந்த பதிலும் வராத நிலையில், அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினார். என்ன சொன்னது உயர் நீதிமன்றம்? பட மூலாதாரம்,TWITTER நாம் தமிழர் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு மார்ச் 1 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, பல தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டிருப்பதை கருத்தில் கொண்டு இந்த முறையும் அந்தச் சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என அக்கட்சி சார்பில் வாதிடப்பட்டது. வாதத்தின் போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி மோகன், “பொது சின்னம் பட்டியலில் உள்ள அந்த சின்னத்தை முதலில் கோருபவர்களுக்கு முன்னுரிமை அளித்து தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. அதன்படி, அந்த சின்னம் தற்போது வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது,”எனக் கேட்டார். தொடர்ந்து பேசிய நீதிபதி, “எந்த ஒரு குறுப்பிட்ட கட்சிக்காகவும் ஆணையத்தின் நடைமுறையை மாற்ற முடியாது. நாம் தமிழர் கட்சி இன்னும் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சி. அப்படியிருக்கும் போது எப்படி ஒரு குறிப்பிட்ட சின்னத்தை உரிமை கோர முடியும்,”எனக் கேட்டார். வழக்கு விசாரணை முடிந்த பிறகு வழக்கு மீதான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என வழக்கை ஒத்தி வைத்தார். இந்நிலையில், வழக்கு தொடர்பாக தீர்ப்பு இன்று வெளிவந்தது. அப்போது, தேர்தல் ஆணையத்திற்கு எந்த உத்தரவும் இடாமல், நாம் தமிழர் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். நாம் தமிழர் கட்சி கூறுவது என்ன? அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கே சின்னங்கள் ஒதுக்கப்படும் என்பது உண்மைதான் என்று கூறும் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி,“பதிவு செய்யப்பட்ட கட்சி தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு, அதே சின்னத்தில் ஒரு விழுக்காடு வாக்குகளுக்கு மேல் பெற்றால், அவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும். நாங்கள் எட்டு விழுக்காடு வரை வாக்குகள் பெற்றுள்ளோம். இந்த முறை எங்களுக்கு இந்தச் சின்னத்தைக் கொடுத்தால், நிச்சயம் அதை விட அதிக சதவீத வாக்குகள் பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் பட்டியலில் இடம்பெறுவோம். அதைத் தடுக்கவே, இப்படி சதி செய்துள்ளார்கள்,”என்று கார்த்தி சாடினார். உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளதாகவும் கார்த்தி கூறினார். கட்சிகள் அங்கீகாரம் - தேர்தல் ஆணைய நடைமுறை என்ன? தேர்தல் ஆணையம் தேர்தல் சின்னங்கள்(ஒதுக்கீடு) 1968 ஆணையின் மூலம் அரசியல் கட்சிகளை அங்கீகரிக்கன்றது. அதன்படி, தேர்தல் ஆணையம், இரண்டு வகையாக கட்சிகளை அங்கீகரிக்கிறது. ஒன்று- அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சி; இரண்டு- அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி. அரசியல் கட்சிகள் இந்த அங்கீகாரத்தை பெறவேண்டும் என்றால் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யவேன்டும். ஒரு கட்சி மாநில கட்சி அங்கீகாரத்தை பெற கீழுள்ள நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றில் தகுதி பெற்றிருக்க வேண்டும். மாநிலத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் அல்லது சட்டப் பேரவை தேர்தலில் 8 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும். மாநில சட்டப் பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளில் 6 சதவிகிதம் வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் அந்தத் தேர்தலில் 2 இடங்களில் வெற்றிப் பெற்றிருக்க வேண்டும். மாநில சட்டப்பேரவை தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும். தமிழகத்தைப் பொருத்தவரை 234 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் 3 சதவீதம், அதாவது 8 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அதேபோல அம்மாநிலத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பதிவாகிய வாக்குகளில் 6 சதவிகிதம் வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் அந்தத் தேர்தலில் 1 நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிப் பெற்றிருக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில், மாநிலத்தில் உள்ள எம்.பி. தொகுதிகளில் 25 இடங்களுக்கு ஒன்று வீதம் வெல்ல வேண்டும். அதன்படி, தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதியில் 2 தொகுதிகளில் வெல்ல வெண்டும். ஒரு கட்சி தேசிய கட்சி அங்கீகாரத்தை பெற கீழுள்ள நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றில் தகுதி பெற்றிருக்கவேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் அல்லது சட்டப்பேரவை தேர்தலில் 4 வெவ்வேறு மாநிலங்களில் பதிவாகும் வாக்குகளில் 6 சதவீத வாக்குகள் பெறுவதோடு, 4 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள தொகுதிகளில் 2 சதவீத இடங்களை(11 இடங்கள்) 3 வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வெற்றி பெற வேண்டும். ஒரு அரசியல் கட்சி 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அங்கீகரிப்பட்ட மாநில கட்சியாக இருக்க வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c51ex253z28o
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசாவில் உடனடி யுத்த நிறுத்தம் - அவுஸ்திரேலிய மலேசிய தலைவர்கள் கூட்டாக வேண்டுகோள் Published By: RAJEEBAN 04 MAR, 2024 | 01:22 PM இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்கள் காரணமாக உருவாகியுள்ள பிராந்திய பதற்றங்களைத் தணிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய மலேசிய தலைவர்கள் உடனடியுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். காசாவில் உள்ள அனைத்து பணயக்கைதிகளும் விடுதலை செய்யப்படவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அன்டனி அல்பெனிசும் அன்வர் இப்ராஹிமும் இணைந்து இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். இஸ்ரேலிற்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்து பேசவிரும்பவில்லை, மாறாக பொது உடன்பாடு காணப்படும் உடனடி யுத்த நிறுத்தம் குறித்து பேசவிரும்புகின்றேன் என மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். மெல்பேர்னில் இடம்பெறும் விசேட ஆசியான் மாநாட்டின்போது இருவரும் சந்தித்துக் கொண்டவேளை இந்த கருத்தினை வெளியிட்டுள்ளனர். இந்த மாநாட்டின் இறுதியில் காசா குறித்த அறிக்கையொன்றை வெளியிடுவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன எனினும் மலேசியாவும் ஹமாசும் கடுமையான நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளன. எனினும் பிலிப்பைன்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா ஆகியநாடுகள் வேறுபட்ட நிலைப்பாட்டை கொண்டுள்ளன. இதேவேளை ஒக்டோர்பர் ஏழாம் திகதிக்கு பின்னர் காசாவில் காணப்படும் மோசமான மனிதாபிமான நிலை குறித்து அவுஸ்திரேலிய மலேசிய தலைவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இஸ்ரேல் மீதான தாக்குதலை கண்டிக்காத அவர்கள் உடனடி யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். காசாவிற்கான பாதுகாப்பான தடையற்ற தொடர்ச்சியான மனிதாபிமான உதவிகளுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/177865
-
குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல்: தெற்கு கரோலினாவில் டிரம்ப் வெற்றி
முதல் தடவையாக ட்ரம்பை வென்றார் நிக்கி ஹாலே Published By: SETHU 04 MAR, 2024 | 01:02 PM அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரைத் தெரிவுசெய்வதற்காக வொஷிங்டன் டிசி நகரில் நடந்த உட்கட்சித் தேர்தலில் நிக்கி ஹாலே வெற்றியீட்டியுள்ளார். குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளருக்கான உட்கட்சித் தேர்தல் வரலாற்றில் பெண்ணொருவர், பிராந்திய தேர்தலொன்றில் வெற்றியீட்டியமை இதுவே முதல் தடவையாகும். நேற்று ஞாயிற்றுக்கிழமை வொஷிங்டன் டி.சி. நகரில் நடைபெற்ற தேர்தலில் நிக்கி ஹாலே 63 சதவீத வாக்குகளைப் பெற்றார். இதன் மூலம் நகரில் நிக்கி ஹாலே 19 பிரதிநிதிகளின் ஆதரவைப் பெறுவார். முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 33.3 சதவீத வாக்குகளைப் பெற்றார். அவருக்கு வொஷிங்டன் டிசியிலிருந்து பிரதிநிதிகள் எவரும் கிடைக்கவில்லை. டொனால்ட் ட்ரம்ப், நிக்கி ஹாலே ஆகிய இருவர் மாத்திரமே தற்போது குடியரசுக் கட்சி வேட்பாளருக்கான போட்டியில் நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. குடியரசுக் கட்சியில் அமெரிக்கா முழுவதும் 2429 பிரதிநிதிகள் உள்ளனர். ஜனாதிபதி வேட்பாளராகுவதற்கு குறைந்தபட்சம் 1215 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை. டொனால்ட் ட்ரம்ப் இதுவரை 247 பிரதிநிதிகளையும் நிக்கி ஹாலே பிரதிநிதிகளையும் பெற்றுள்ளனர். நாளை செவ்வாய்க்கிழமை 15 மாநிலங்களில் குடியரசுக் கட்சி வேட்பாளருக்கான உட்கட்சித் தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/177863
-
சாந்தனின் இறுதி நிகழ்வு இன்று
சாந்தனின் உடலுக்கு இறுதிக்கிரியை நடைபெற்று இறுதி ஊர்வலம் ஆரம்பம் Published By: DIGITAL DESK 3 04 MAR, 2024 | 03:33 PM உடுப்பிட்டி - இலக்கணாவத்தையில் உள்ள சாந்தனின் சகோதரியின் இல்லத்தில் சமய சடங்குகளுடன் இறுதிக்கிரியை நடைபெற்றது. சாந்தனின் தாய் மற்றும் சகோதரி உள்ளிட்ட நெருங்கிய உறவுகளால் புகழுடலுக்கு வாய்க்கரிசி போடப்பட்டு ஊர்மக்களால் அருகில் உள்ள சனசமூக நிலையமொன்றுக்கு புகழுடல் தாங்கிச் செல்லப்பட்டது. அங்கு பொதுமக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவஞ்சலி உரைகள் இடம்பெற்று வருகிறது. இறுதி ஊர்வலம் அறிவகம் சனசமுக நிலையம், தர்மகுலசிங்கம் சனசமுக நிலையம், வீரகத்தி விநாயகர் சனசமூக நிலையம் ஊடாக நாவலடி, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை, பொலிகண்டி ஊடாக பயணித்து எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நிறைவு பெற்று மாலை புகழுடல் தகனம் செய்யப்படும். இறுதி அஞ்சலியில் சமயத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்திய முன்னாள் பிரதமா் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்ட சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 28ம் திகதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். https://www.virakesari.lk/article/177884
-
"இந்திய மீனவர்களால் எங்கள் வாழ்வாதாரம் பறிபோகிறது" - இலங்கை மீனவர்கள் கொந்தளிப்பது ஏன்?
கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் மற்றும் பிரபுராவ் ஆனந்தன் பதவி, பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு மீனவர்களுக்கு எதிராக இலங்கை மீனவர்களும், இலங்கை அரசைக் கண்டித்து தமிழ்நாடு மீனவர்களும் நடுக்கடலில் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். மீனவர்களுக்கு இடையே என்ன பிரச்னை? தமிழக மீனவர்கள் தங்கள் கடற்பரப்பினுள் வருவதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று கூறி, அதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இலங்கை மீனவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நேற்று (ஞாயிறு, மார்ச் 3) நடத்தினர். யாழ்ப்பாணம் மற்றும் அதனை அண்மித்துள்ள கடற்கரைப் பகுதிகளிலுள்ள மீனவர்கள் இந்த போராட்டத்தை நடத்தினர். படகுகளில் கறுப்பு நிறக்கொடிகளை பறக்கவிட்டு, நடுக்கடலுக்கு சென்று இலங்கை மீனவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர். இதனால், இதை அறிந்த ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஞாயிறன்று மண்டபம் மற்றும் பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் விசைப்படகுகளுக்கு மீன்பிடி அனுமதிச்சீட்டு வழங்கவில்லை. கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களை உடனடியாக கரை திரும்ப அறிவுறுத்தினர். முன்னர், கடந்த மாதம் 16-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதிவரை தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி படகுகளில் கருப்பு கொடி கட்டி, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியிருந்தனர். இரண்டு நாட்டு மீனவர்களும் கடலில் போராட்டம் நடத்தும் அளவுக்கு என்ன நடக்கிறது இவ்விஷயத்தில்? அதை அறிந்துகொள்ள பிபிசி தமிழ், யாழ்ப்பாணம் மற்றும் ராமேஸ்வரத்தில் போராட்டம் நடத்திய மீனவர்களிடம் பேசியது. படக்குறிப்பு, படகுகளில் கறுப்பு நிறக்கொடிகளை பறக்கவிட்டு, நடுக்கடலுக்கு சென்று இலங்கை மீனவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர் போராட்டம் எப்படி நடத்தப்பட்டது? மார்ச் 3-ஆம் தேதி இலங்கை யாழ்ப்பாணம் கடலில் சுமார் மூன்று மணிநேரம் நடத்தப்பட்ட போராட்டத்தில் நூற்றுக்கணக்கான படகுகளில் மீனவர்கள் போராட்டம் நடத்தினர். இந்திய மீனவர்களின் வருகையை தடுத்து நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். தடை செய்யப்பட்டுள்ள இழுவை முறையிலான மீன்பிடி நடவடிக்கைகளில் இந்திய மீனவர்கள் ஈடுபடுவதனால் இலங்கையின் கடல் வளங்கள் முற்றாக அழிக்கப்பட்டுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். தமது கடல் வளத்தையும் அழித்து, தமது வாழ்வாதாரத்தையும் இந்திய மீனவர்கள் அழித்து வருவதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்திய மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி, இலங்கை கடற்படைக்கு மகஜரொன்றை கையளிக்க இலங்கை மீனவர்கள் முயற்சித்தனர். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படைக்கு சொந்தமான படகை மறித்து, மகஜரை கையளிக்க முயற்சித்த போதிலும், இலங்கை கடற்படை படகு நிறுத்தாது அங்கிருந்து பயணித்தது. இதையடுத்து, யாழ்ப்பாணம் மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு, மீண்டும் கரைக்குத் திரும்பினார்கள். படக்குறிப்பு, அருள்தாஸ் இலங்கை மீனவர்கள் சொல்வது என்ன? போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மீனவர் அருள்தாஸ், "இந்திய மீனவர்களின் வருகையால் எங்கள் மக்கள் படகை இழந்திருக்கிறார்கள். தொழில் செய்ய முடியவில்லை," என்கிறார். இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை காரணமாக, தமது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்படுவதாக யாழ்ப்பாணத்து மீனவர்கள் கூறுகின்றனர். ''நேற்று 8 வலைகள் இல்லாமல் போயின. மூன்று பேரின் வலைகளை அறுத்து விட்டார்கள். எப்படித் தொழில் செய்வது. இன்றைக்கு தொழிலுக்கு போகாத காரணம் இது தான். இப்படி தொழில் செய்து என்ன பிரயோசனம்? ஒன்றரை லட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் இல்லாமல் போயின. அப்படியே எடுத்துக்கொண்டு போய் விட்டார்கள்," என ஒரு மீனவர் குறிப்பிட்டார். “ஒருமுறை வல்வெட்டித்துறை கடலுக்கு வந்து இந்திய மீனவர்கள் எங்கள் வலைகளை இழுத்துக்கொண்டு போய்விட்டார்கள். எங்கள் அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. டிராலர் வலைகளை நிறுத்தினால்தான், இலங்கை மீனவர்கள் வாழ முடியும்," என மற்றுமொரு மீனவர் கூறினார். படக்குறிப்பு, டக்ளஸ் தேவானந்தா இந்திய மீனவர்கள் தங்கள் கடற்பரப்பில் புகுந்து டிராலர் வலைகளைப் பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் ஆவன செய்யவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கூறினர். இலங்கை அமைச்சரின் பதில் என்ன? இலங்கை மீனவர்கள், இலங்கை அரசாங்கம் மீது சுமத்துகின்ற குற்றச்சாட்டு குறித்து, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் பிபிசி தமிழ் வினவியது. “அரசாங்கத்தை பொருத்தவரையில் கடற்றொழில் அமைச்சர் என்ற வகையில் நாங்கள் எங்களால் முடிந்த நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு தான் இருக்கின்றோம்," என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பதிலளித்தார். படக்குறிப்பு, கடந்த மாதம் 16-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதிவரை தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி படகுகளில் கருப்பு கொடி கட்டி, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியிருந்தனர் தமிழக மீனவர்கள் கூறுவது என்ன? இலங்கை மீனவர்கள் நடத்திய இந்தப் போராட்டம் குறித்து ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கப் பிரதிநிதி எமரிட் பிபிசி தமிழிடம் பேசுகையில், கடந்த வாரம் இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி படகுகளில் கருப்பு கொடி கட்டி, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதாகக் கூறினார். “ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை, இந்திய அரசை கண்டித்து மட்டும் போராட்டம் நடத்தினரே தவிர இலங்கை மீனவர்களுக்கு எதிராக இதுவரை தமிழக மீனவர்கள் போராட்டம் நடத்தியதில்லை. ஆனால் இன்று தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை மீனவர்கள் கருப்பு கொடியுடன் கடலில் போராட்டம் நடத்தியது தமிழக மீனவர்களுக்கு வருத்தம் அளிக்கிறது,” என்றார். மேலும் பேசிய அவர், இரு நாட்டு அரசுகளும் உடனடியாக மீனவர் பிரச்சனையில் கவனம் செலுத்தி மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே தமிழக மீனவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளதாகக் கூறினார். “இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்னையை தீர்வு கிடைப்பதற்கு பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள இந்திய இலங்கை மீனவர் பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்த வேண்டும். இரு நாட்டு மீனவர் பேச்சுவார்த்தையில் மட்டுமே நிரந்தர தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது." “இரு நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே இரு நாட்டு அரசும் மீனவர் பிரச்னைக்கு கவனம் செலுத்தி மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க தமிழக மீனவர்கள் எதையும் விட்டுக் கொடுத்து போவதற்கு தயாராக உள்ளோம்,” என்றார். இலங்கை மீனவர்களுடன் மோதல் போக்கு தொடர்வதை தமிழக மீனவர்கள் விரும்பவில்லை. வரையறுக்கப்பட்ட மீன்பிடி தொழில் செய்வதற்கு இரு நாட்டு அரசும் உதவி செய்ய வேண்டும் என்பது தமிழக மீனவர்கள் கோரிக்கை என்றார் மீனவ சங்க பிரதிநிதி எமரிட். ‘தமிழக மீனவர்கள் எதையும் விட்டுக்கொடுக்கத் தயார்’ இலங்கை மீனவர்களின் கருப்புக்கொடி போராட்டம் குறித்து இலங்கை இந்திய பேச்சுவார்த்தை குழு தலைவர் ஜேசுராஜா பிபிசி தமிழிடம் பேசுகையில், கடந்த சில மாதங்களாக இருநாட்டு மீனவர்கள் இடையே பிரச்னை பெரிதாகி வருகிறது, என்றார். "இது தொடர்பாகவும், இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் ஐந்து பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி இந்திய மீன்வளத்துறை அமைச்சர் ரூபாலா மற்றும் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இருவரையும் ராமேஸ்வரம் மீனவர்கள் டெல்லியில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம். இருவரும் விரைவில் இரு நாட்டு மீனவ பேச்சுவார்த்தை நடைபெற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ள நிலையில் இன்று தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை மீனவர்கள் கடலில் கருப்பு கொடி கட்டி முற்றுகை போராட்டம் நடத்தியுள்ளனர், இது வேதனையளிக்கிறது," என்றார். “மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக இலங்கையில் மீனவர்கள் போராடுகிறார்கள். அதை தமிழக மீனவர்கள் ஏற்று கொள்ள கூடிய ஒன்று தான். அதே நேரத்தில் வயிற்றுப் பிழைப்புக்காக மீன்பிடிக்க சென்று இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை அடைக்கபட்ட மீனவர்களுக்காக இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் நடத்தினோம். “ராமேஸ்வரம் மீனவர்கள் படகுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தியதால் இன்று இலங்கை மீனவர்கள் கருப்பு கொடி கட்டி இந்திய மீனவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவது எந்த வகையிலும் நியாயம் இல்லை,” என்றார். மேலும் பேசிய அவர், இரு நாட்டு மீனவர்களும் ஒருவருக்கொருவர் ஆர்ப்பாட்டம் செய்வதால் எந்த பயனும் இல்லை. மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுமே தவிர பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாது, என்றார். “இலங்கை மீனவர்களின் கோரிக்கைகளை ஏற்று தமிழக மீனவர்கள் மீன்பிடி முறையில் மாற்று திட்டம் கொண்டு வர பல்வேறு யோசனைகளை செய்து வருகிறோம். தமிழக மீனவர்கள் இழுவை மடி படகை மாற்றி மீன்பிடிக்க அரசுடன் ஆலோசனை செய்து மாற்றுத் திட்டத்திற்கு காத்திருக்கின்றோம்." "போராட்டம் தொடர்ந்தால் கடலில் இரு நாட்டு மீனவர்கள் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்படும். இரு நாட்டு மீனவர் பேச்சு வார்த்தையை மீண்டும் நடத்தி மீனவப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க அரசாங்கங்கள் முயற்சி செய்ய வேண்டும்," என இலங்கை இந்திய மீனவர் பேச்சுவார்த்தை குழு தலைவர் ஜேசுராஜா தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c4nd509z0wwo
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணியை மீள ஆரம்பிக்க இதுவரை நிதி கிடைக்கவில்லை; வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு Published By: DIGITAL DESK 3 04 MAR, 2024 | 12:09 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் 29.06.2023 அன்று கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கானது இன்று திங்கட்கிழமை (04) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது. முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம் பெற்ற வழக்கு விசாரணைகளில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா, முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதம கணக்காளர் மயில்வாகனம் செல்வரட்ணம், கொக்கிளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,கொக்கிளாய் பகுதி கிராம அலுவலர், சட்டத்தரணிகளான வீ.எஸ். நிரஞ்சன், கணேஸ்வரன், தனஞ்சயன், ருஜிக்கா ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர். குறித்த வழக்கின் அகழ்வு பணியினை திட்டமிட்டபடி நடாத்த நிதி கிடைக்கபெறவில்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில், குறித்த வழக்கு ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் முதல் கட்ட அகழ்வானது 06.09.2023 அன்று ஆரம்பமாகி பதினொரு நாட்கள் நடைபெற்று 17 உடற்பாகங்கள் மீட்கப்பட்ட நிலையில் இடைநிறுத்தப்பட்டிருந்தது. மீண்டும் அகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் கடந்த 20.11.2023 அன்று ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் நடைபெற்று 40 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டாம் கட்ட அகழ்வுபணி இடைநிறுத்தப்பட்டிருந்தது. அத்தோடு, அகழ்வு ஆய்வு நடவடிக்கையின் இறுதி நாட்களில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கான் பரிசோதனை மூலம் மனித புதை குழிக்கு மேற்கு பக்கமாக இரண்டு மீற்றர் நீளத்திற்கு உடலங்கள் காணப்படுவதாக பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டிருந்தது. அதனையடுத்து குறித்த அகழ்வுப்பணியின் மூன்றாவது கட்டம் இவ்வருடம் மார்ச் மாதம் நடைபெற திட்டமிடப்பட்டிருப்பதையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/177857
-
இலங்கை மீண்டும் பழைய தவறுகளை செய்கின்றது - மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்
இலங்கை மீண்டும் பழைய தவறுகளை செய்கின்றது - மானியங்கள் தேவையில்லை - மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் 04 MAR, 2024 | 11:59 AM இலங்கை மீண்டும் பழைய தவறுகளை செய்கின்றது என மத்தியவங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித்குமாரசுவாமி கவலை வெளியிட்டுள்ளார். இலங்கை மானியங்களை வழங்கும் பழைய நிலைக்கு திரும்பக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார். எரிபொருள், மின்சாரம், உரம் போன்றவைகளை மீண்டும் மானிய அடிப்படையில் வழங்குவது இலங்கையை பின்னோக்கி இழுக்கும் ஒரு நடவடிக்கை என தெரிவித்துள்ள அவர் இது ஒரு நீடித்து நிலைக்க முடியாத செயற்பாடு எனவும் தெரிவித்துள்ளார். மானியங்களை வழங்குவது தொடர்ந்து முன்னெடுக்க முடியாத நடவடிக்கை என குறிப்பிட்டுள்ள அவர் அதற்கான நிதி எங்களிடம் இல்லை என தெரிவித்துள்ளதுடன் வெளிநாட்டிலிருந்து பணத்தை பெற்று மானியங்களை வழங்குவது மீண்டும் கடன்நெருக்கடிக்குள் சிக்கவைக்கும் எனவும் தெரிவித்துள்ளார். ஏனென்றால் கடனை திருப்பி செலுத்துவதற்கான அந்திய செலாவணியை பெற்றுக்கொள்வதற்கான திறமை எங்களிடம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அஸ்வசுமா போன்றவற்றை குறுகிய கால நன்மைக்காக பயன்படுத்தலாம். அரசாங்கம் சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள நிலையில் இவ்வாறான திட்டங்கள் உதவக்கூடும், சீர்திருத்தங்களிற்கான ஆதரவை பெற உதவக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/177856
-
கழிவுநீர் கால்வாய்க்குள் பாய்ந்த குடு ராணி கைது!
கழிவுநீர் கால்வாய்க்குள் பாய்ந்த மட்டக்குளி கதிரானவத்தை குடு ராணி கைது! 04 MAR, 2024 | 11:58 AM மட்டக்குளியில் கதிரானவத்தை குடு ராணி என அழைக்கப்படும் 45 வயதுடைய பெண் ஒருவரை பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) கைது செய்துள்ளனர். யுக்திய நடவடிக்கையின்போது முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 5 லட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் . மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொலிஸார் குறித்த பெண்னை கைது செய்ய முற்பட்டபோது அவர் அருகில் இருந்த கழிவு நீர் கால்வாயில் குதித்துள்ளார். பின்னர் மேலதிக பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/177854
-
நமக்கு வால் இல்லாததால் ஏற்படும் நோய்கள் என்னென்ன தெரியுமா?
பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நீங்கள் கூகுளில் ‘பரிணாமம்’ என்ற வார்த்தையைத் தேடினால் முதலில் வருவது ரால்ப் ஜாலிங்கர் என்பவரின் புகழ்பெற்ற ஓவியம்தான். ‘முன்னேற்றத்தின் அணிவகுப்பு’ என்று பெயரிடப்பட்ட அந்த ஓவியத்தில் இடமிருந்து வலமாக, ஒரு சிம்பன்சி குரங்கு படிப்படியாக மனிதனைப் போல நிமிர்ந்து நடப்பதைக் காணலாம். பரிணாமத்தை இவ்வாறு விளக்கும் படங்களில் பரிணாம வளர்ச்சியைப் பற்றிப் பொதுவாக நாம் கொண்டிருக்கும் தவறான பார்வைகள் பொதிந்திருக்கின்றன. அதாவது ‘நாம் பரிணாமச் சங்கிலியின் உச்சத்தில் உள்ள ஓர் இனம், பரிணாமத்தின் முழுமை’. நாம் பிழைத்திருக்க மிகவும் தகுதியான உயிரினம், என்று கற்பனை செய்கிறோம். ஆனால் இதில் ஒரு முரண்பாடு இருக்கிறது. நாம் மிகவும் தகுதியான உயிரினமாக இருந்தால், நம்மில் பலர் மரபணு அல்லது வளர்ச்சி நோய்களால் பாதிக்கப்படுவது ஏன்? நேச்சர் என்ற மதிப்புமிக்க அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு, நமது பரிணாமத்தின் ஆரம்பக்கட்டத்தில் நிகழ்ந்த சில தவறான மாற்றங்களால் நமது முன்னோர்கள் எப்படித் தங்கள் வால்களை இழந்தனர் என்று பகுப்பாய்வு செய்வதன் முலம் இதற்கான விளக்கத்தை வழங்குகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நாம் சுமார் 2.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நமது வாலை இழந்தோம் வழக்கத்திற்கு மாறான மரபணுப் பிறழ்வுகள் தற்போதைய மதிப்பீடுகளின்படி, மனிதர்களின் இனப்பெருக்கத்தில் கருவுற்ற முட்டைகளில் பாதி கருவாக உருவாவதில்லை. மெலும் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும், இரண்டு கருக்கள் பிரசவப் பருவத்தை எட்டுவதில்லை என்றும் தரவுகள் கூறுகின்றன. மீன்கள் மற்றும் தவளைகள் போன்ற உயிரினங்களில், இத்தகைய ஒன்று கேள்விப்படாதது. மனிதர்களில் 10%-க்கும் குறைவானவர்கள் ஹீமோபிலியா (ரத்தம் உறையாமலிருப்பது) போன்ற ஆயிரக்கணக்கான ‘அரிதான’ மரபணு நோய்களில் ஒன்றால் பாதிக்கப்படுவார்கள். அரிவாள் ரத்தசோகை மற்றும் சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் போன்ற நோய்கள் நம்மில் அதிகமானவர்களை பாதிக்கின்றன. நாம் பரிணாமத்தின் உச்சத்தில் இருக்கும் இனம் என்றால், இத்தகைய மரபணு நோய்கள் வருவது ஏன்? இந்த பிரச்னைக்கு பல விளக்கங்கள் உள்ளன. ஒன்று, மற்ற உயிரினங்களுடன் ஒப்பிடும்போது, மனிதர்களிடம் வழக்கத்திற்கு மாறாக அதிக மரபணுப் பிறழ்வு விகிதம் உள்ளது. எனவே நமது டி.என்.ஏ-வில் உள்ள மாற்றங்கள் அனைத்தும் நமது பெற்றோரிடமிருந்து பெறப்பட்டவை அல்ல. உங்கள் டி.என்.ஏ-வில் பத்து முதல் நூறு புதிய மாற்றங்களுடன் நீங்கள் பிறந்திருக்கலாம். மற்ற பெரும்பாலான இனங்களில், அந்த எண்ணிக்கை ஒன்றுக்கும் குறைவாக இருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மீன்கள் மற்றும் தவளைகள் போன்ற உயிரினங்களில் கருக்கள் இறப்பது கேள்விப்படாதது வால்களின் மரபணுவியல் நமக்கும் குரங்கினத்திலுள்ள நமது பல உறவினர்களுக்கும் இடையே உள்ள மிகத் தெளிவான வேறுபாடுகளில் ஒன்று, நமக்கு வால் இல்லை. நாம் சுமார் 2.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நமது வாலை இழந்தோம். அதன் பரிணாம எச்சமாக நாம் இன்னும் கோசிக்ஸ் (coccyx) என்று அழைக்கப்படும், நமது முதுகுத்தண்டின் கீழ்முனையில் இருக்கும் ஒரு சிறு முக்கோண வடிவிலான எலும்பினைச் சுமக்கிறோம். நமது மூதாதையர்கள் நிமிர்ந்து நடக்கத்துவங்கிய அதே சமயத்தில் தங்கள் வாலை இழந்தனர். அதையொட்டியே நான்கு கால்களுக்கு பதிலாக இரண்டை மட்டுமே பயன்படுத்தும் போக்கும் துவங்கியது. இந்தப் பரிணாம மாற்றங்கள் ஏன் ஒரே நேரத்தில் நிகழ்ந்தன என்பதைப் பற்றி நாம் ஊகிக்க முடியும். ஆனால் நாம் ஏன் வாலை இழந்தோம்? அதன் அடிப்படை மரபணு மாற்றங்கள் என்ன? சமீபத்திய ஆய்வு இந்தக் கேள்விக்கு துல்லியமாக பதிலளிக்கிறது. இதற்கான பதிலாக ஒரு புதிரான மரபணு பொறிமுறையை அடையாளம் கண்டுள்ளது: பாலூட்டிகளுக்கு வால் வளர பல மரபணுக்கள் ஒன்றிணைந்து வேலை செய்ய வேண்டும். வால் இல்லாத குரங்கினங்களுக்கு ஒரு கூடுதலான ‘குதிக்கும் மரபணு’ இருப்பதைக் ஆராய்ச்சிக் குழு கண்டுபிடித்தது. இவை ஒரு மரபணுவின் புதிய பகுதிகளுக்கு மாற்றப்படக்கூடிய டி.என்.ஏ வரிசைகள். இது இருந்தது வால் வளர்வதைத் தீர்மானிக்கும் மரபணுக்களில் ஒன்றான டி.பி.எக்ஸ்.டி-யில் (TBXT). நமது டி.என்.ஏ-வில் பெரும்பகுதி இந்த இடம்பெயரும் மரபணுக்கள் தான். அதனால் அதில் ஒன்று கூடுதலாக ஒருப்பது ஆச்சரியமல்ல. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஸ்பைனா பிஃபிடா - முதுகெலும்பு மற்றும் முதுகுத் தண்டு கருப்பையில் சரியாக வளர்ச்சியடையாமல், முதுகெலும்பில் ஒரு இடைவெளி இருக்கும் நிலை பரிணாமத்தின் பின்விளைவுகள் ஆனால், இதில் அசாதாரணமானது என்னவென்றால், இந்தப் புதிய மரபணு ஏற்படுத்தக்கூடிய விளைவு. அவர்கள் ஆய்வு செய்த அதே குரங்கினங்களில் டி.பி.எக்ஸ்.டி மரபணுவுக்குள் பொதிக்கப்பட்ட டி.என்.ஏ-வுக்கு மிக நெருக்கமாக மற்றொரு பழைய, ஆனால் ஒரே மாதிரியான ஒரு இடம்பெயரும் மரபணுவைக் கொண்டிருப்பதையும் அக்குழு அடையாளம் கண்டுள்ளது. இந்த இரண்டு மரபணுக்கள் மிக அருகருகே உள்ளதால், டி.என்.ஏ-வில் இருக்கும் தகவல்களின்படி நமது புரதங்களைத் தயாரிக்கும் ‘மெசெஞ்சர் ஆர்.என்.ஏ’ எனும் மரபணு மூலக்கூற்றின் செயலாக்கத்தை மாற்றியது. இந்த இரண்டு இடம்பெயரும் மரபணுக்கள் ஆர்.என்.ஏ-வில் ஒன்றாக ஒட்டிக்கொள்ளலாம். இதனால் அது விலக்கப்பட்டு, அந்த ஆர்.என்.ஏ குறுகலான புரதத்தை உருவாக்குகிறது. இந்த விளைவை ஆராய இக்குழு இந்த மரபணுச் சூழ்நிலையை எலிகளில் உருவாக்கிப் பார்த்தது. இதனால் எலிகள் வால் இல்லாமல் பிறக்கும் வாய்ப்புகள் அதிகரித்தன. இது பரிணாம வளர்ச்சியில் நாம் வால் இழந்ததற்கான வலுவான கோட்பாட்டை வழங்குகிறது. ஆனால் அக்குழு வேறு விசித்திரமான ஒன்றையும் கண்டறிந்தது. TBXT மரபணுவின் வடிவத்தை மட்டும் பிரித்து விலக்கி ஒரு எலி உருவாக்கப்பட்டால், அது மனித ஸ்பைனா பிஃபிடாவைப் (spina bifida) போன்ற ஒரு நோயுடன் பிறக்கிறது. இது முதுகெலும்பு மற்றும் முதுகுத் தண்டு கருப்பையில் சரியாக வளர்ச்சியடையாமல், முதுகெலும்பில் ஒரு இடைவெளி இருக்கும் நிலை. மனித TBXT-இல் உள்ள பிறழ்வுகள் முன்னர் இதே நோய்க்கான காரணமாகக் கண்டுபிடிக்கப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த விளைவை ஆராய இக்குழு இந்த மரபணுச் சூழ்நிலையை எலிகளில் உருவக்கிப் பார்த்தது. இதனால் எலிகள் வால் இல்லாமல் பிறக்கும் சந்தர்ப்பங்கள் அதிகரித்தன நமக்கு வால் இல்லாதது நன்மையா? இந்த ஆய்வில் மற்ற எலிகளும் முதுகெலும்பு மற்றும் முதுகுத்தண்டு ஆகியவற்றில் வெவ்வேறு குறைபாடுகளுடன் இருந்தன. நமக்கு வால் எலும்பு ஒரு பரிணாம எச்சமாக இருப்பதைப் போலவே, வால் இல்லாததை உறுதிப்படுத்தும் மரபணுவின் மாற்றத்திற்கு ஸ்பைனா பிஃபிடாவை நோய் ஒரு அரிய தொடர்ச்சியாக இருக்கலாம் என்று இந்த ஆராய்ச்சிக் குழு கருதுகிறது. வால் இல்லாதது நமக்கு ஒரு பெரிய நன்மையாக இருந்தது என்று அவர்கள் கருதுகின்றனர். எனவே ஸ்பைனா பிஃபிடா ஏற்படும் ஆபத்தையும் பரிணாமம் பொருட்படுத்தவில்லை. நமக்கு வேறு பல மரபியல் மற்றும் வளர்ச்சி சார்ந்த நோய்கள் ஏற்படவும் இதுவே காரணமாக இருக்கலாம். அவை நமக்கு உதவிய மரபணுப் பிறழ்வின் விளைபொருளாக இருக்கலாம். உதாரணமாக, நிமோனியாவை எதிர்த்துப் போராட உதவும் மரபணு மாறுபாடுகள் நமக்கு கிரோன் நோய் (Crohn's disease) எனப்படும் குடல்வீக்கம் ஏற்படக் காரணமாக இருக்கக்கூடும் என ஒரு சமீபத்திய ஆய்வு கண்டறிந்துள்ளது. பரிணாம வளர்ச்சி முற்றிலும் கச்சிதமானதல்ல என்பதையே இது காட்டுகிறது. இந்த ஆய்வு காட்டுவது போல், பல மாற்றங்கள் நமகு பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன. இது பரிணாம அணிவகுப்பு அல்ல, ஒரு குழந்தையின் தள்ளாடும் முதல் அடிகள் மட்டுமே. https://www.bbc.com/tamil/articles/cz4zj2gddndo
-
சாந்தனின் இறுதி நிகழ்வு இன்று
சாந்தனின் இறுதி நிகழ்வு இன்று! Published By: DIGITAL DESK 3 04 MAR, 2024 | 10:44 AM ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 33 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து அதிலிருந்து விடுதலையாகி ஒன்றரை ஆண்டுகள் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த சாந்தன் அவர்களுடைய உடலைச் சுமந்த ஊர்தி நேற்று ஞாயிற்றுக்கிழமை (03)வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று பிற்பகல் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்ட நிலையில் மக்கள் அஞ்சலிக்காக குமரப்பா நினைவு சதுக்கத்தில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அரசியல் தலைவர்கள், பொது அமைப்பு பிரதிநிதிகள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி நிகழ்வுகளில் அவருடன் கூட இருந்து அவரது வழக்குகள் உட்பட பல்வேறு உதவிகளை புரிந்த தமிழக சட்டத்தரணி புகழேந்தி, மக்கள் அஞ்சலி நிகழ்வுகளை ஒருங்கிணைத்து குரலற்றோர் குரல் அமைப்பு தலைவர் கோமகன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க பிரதிநிதி, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரியக்க ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள், உட்பட பலரும் அஞ்சலி உரைகளை நிகழ்த்தினர். இதில் நூற்றுக்கணக்கான மக்கள் சாந்தனின் புகழுடலுக்கு மலரஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து சாந்தனின் இல்லத்தில் சடலம் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று திங்கட்கிழமை (04) காலை 10 மணியளவில் இறுதி கிரிகைகள் மேற்கொள்ளப்பட்டு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இதேவேளை சாந்தனின் புகழுடல் நீர்கொழும்பிலிருந்து எடுத்துவரும் போது வவுனியாவிலிருந்து மக்கள் வீதி எங்கும் அவரது உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். யாழ்ப்பாணத்தில் மாலிசந்தி, நெல்லியடி, உடுப்பிட்டி ஊடாக தீருவில் வரை சென்ற புகழுடலுக்கு மக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தியதுடன் வீதி எங்கும் அவரது நினைவு பதாதைகளை கட்டியுள்ளனர். மேலும் வல்வெட்டியில் இடம் பெற்ற அஞ்சலி நிகழ்வில் ஜேவீபி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் சாந்தனின் புகளுடலிற்கு அஞ்சலி செலுத்தியதோடு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் சாந்தனின் புகழுடலிற்க்கு சிவப்பு மஞ்சள் கொடி போர்த்தி மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். உண்மையில் வடமராட்சி ஒரு சோகமான நிலையிலேயே சாந்தன் அவர்களது மறைவிற்கு பின்னர் காட்சியளிக்கிறது. https://www.virakesari.lk/article/177841
-
பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப்!
பாகிஸ்தானின் புதிய பிரதமர் தெரிவானார் பாகிஸ்தானின் பிரதமர் ஆக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ்(பிஎம்எல் – என்) கட்சியின் ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். பாகிஸ்தான் பாராளுமன்றத் தேர்தல் கடந்த பெப்ரவரி மாதம் 8 ம் திகதி இடம்பெற்றது. அதில், முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் 93 இடங்களைக் கைப்பற்றினர். நவாஸ் ஷெரீப் தலைமையிலான பிஎம்எல் – என் கட்சிக்கு 75 இடங்களும், பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றன. எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து பிற கட்சிகளின் ஆதரவுடன் பிஎம்எல் -என் கட்சி புதிய அரசை அமைக்க தீர்மானித்தது. அக்கட்சியின் ஷெபாஸ் ஷெரீப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். இம்ரான் கான் கட்சி சார்பில் ஒமர் அயூப் கான் முன்னிறுத்தப்பட்டார். அந்நாட்டின் பாராளுமன்றில் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று நடந்தது. அதில் ஷெபாஸ் ஷெரீப் 201 வாக்குகள் பெற்று பிரதமராக தேர்வானார். ஒமர் அயூப் கான் 92 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். வெற்றி பெற்ற ஷெபாஸ் ஷெரீப் தனது சகோதரர் நவாசை கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். பிரதமராக தேர்வு செய்யப்பட்ட பிறகு அவர் பேசுகையில், பயங்கரவாதம் நாட்டில் இருந்து அடியோடு அகற்றப்படும். புதிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டு பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்தப்படும், என்றார். https://thinakkural.lk/article/294155
-
நியூஸிலாந்து - அவுஸ்திரேலியா கிரிக்கெட் போட்டிச் செய்திகள்
நெதன் லயனில் சுழற்சியில் நியூஸிலாந்து சரிந்தது, ஆஸி. 172 ஓட்டங்களால் வெற்றி Published By: VISHNU 04 MAR, 2024 | 12:24 AM (நெவில் அன்தனி) வெலிங்டன் பேசின் ரிசேர்வ் விளையாட்டரங்கில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட் குவியலை நெதன் லயன் பூர்த்தி செய்ததன் பலனாக 172 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா அமோக வெற்றிபெற்றது. போட்டியின் நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை (03)காலை வெற்றிக்கு மேலும் 258 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 111 ஓட்டங்கள் என்ற நிலையில் இருந்து தொடர்ந்த நியூஸிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 196 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. இப் போட்டியில் நியூஸிலாந்து சாதிப்பதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால், நெதன் லயன் காலையிலேயே விக்கெட்களை வீழ்த்தி 10 விக்கெட் குவியலைப் பதிவு செய்ததால் நியூஸிலாந்தின் வாய்ப்பு நழுவிப்போனது. நியூஸிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரங்களான ரச்சின் ரவிந்த்ரா, டொம் ப்ளண்டல், க்லென் பிலிப்ஸ் ஆகியோரின் விக்கெட்களை நெதன் லயன் வீழ்த்தி அவுஸ்திரேலியாவை வெற்றிப்பாதையில் இட்டார். நியூஸிலாந்து சார்பாக ரச்சின் ரவிந்த்ரா 59 ஓட்டங்களையும் டெரில் மிச்செல் 38 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றனர். அவர்கள் இருவரும் 2ஆவது இன்னிங்ஸில் 4ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 67 ஓட்டங்களே நியூஸிலாந்தின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அதிசிறந்த இணைப்பாட்டமாக இருந்தது. இது இவ்வாறிருக்க இந்தப் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்ததன் மூலம் சாதனை ஒன்றை நெதன் லெதன் சமப்படுத்தினார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 9 அணிகளுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 5 விக்கெட் குவியல்களைப் பதிவுசெய்த முரளிதரன், ஷேன் வோன் ஆகிய இருவரது சாதனைகளை நெதன் லயன் சமப்படுத்தினார். இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா, அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, பங்களாதேஷ், இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூஸிலாந்து ஆகியவற்றுக்கு எதிராகவே அந்த நாடுகளின் சொந்த மண்ணில் நெதன் லயன் 5 விக்கெட் குவியல்களைப் பதிவுசெய்துள்ளார். நெதன் லயன் முதலாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்களையும் கைப்பற்றினார். இந்தப் போட்டியின் 1ஆவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா பெற்ற 383 ஓட்டங்களே நான்கு இன்னிங்ஸ்களிலும் அதிகூடிய மொத்த எண்ணிக்கையாக அமைந்தது. மற்றைய 3 இன்னிங்ஸ்களிலும் 200 ஓட்டங்களுக்கு குறைவாகவே பெறப்பட்டது. எண்ணிக்கை சுருக்கம் அவுஸ்திரேலியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 383 (கெமரன் க்றீன் 174 ஆ.இ., மிச்செல் மார்ஷ் 40, உஸ்மான் கவாஜா 33, ஸ்டீவன் ஸ்மித் 31, மெட் ஹென்றி 70 - 5 விக்.) நியூஸிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 179 (க்ளென் பிலிப்ஸ் 71, மெட் ஹென்றி 42, டொம் ப்ளண்டல் 33, நெதன் லயன் 43 - 4 விக்.) அவுஸ்திரேலியா 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 164 (நெதன் லயன் 41, கெமரன் க்றீன் 34, க்ளென் பிலிப்ஸ் 45 - 5 விக்., மெட் ஹென்றி 36 - 3 விக்.) நியூஸிலாந்து 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 196 (ரச்சின் ரவிந்த்ரா 59, டெரில் மிச்செல் 38, நெதன் லயன் 65 - 6 விக்., ஜொஷ் ஹேஸ்ல்வூட் 20 - 2 விக்.) ஆட்டநாயகன்: கெமரன் க்றீன். https://www.virakesari.lk/article/177831
-
குழந்தைகளின் வயிற்றுக்குள் குடற்புழுக்கள் வருவது எப்படி? அவற்றை எவ்வாறு நீக்க வேண்டும்?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஓம்கார் கர்ம்பேல்கர் பதவி, பிபிசி செய்தியாளர் 3 மார்ச் 2024 குடற்புழுக்கள் ஒரு பெரிய பிரச்னை. அசுத்தமான உணவு மற்றும் தண்ணீர் மற்றும் பிற காரணங்களால் புழுக்கள் உடலில் நுழையலாம். மலத்தில் நீண்ட புழுக்கள் இருப்பது, வயிற்று வலி மற்றும் ஆசன வாயில் அரிப்பு ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகளை ஆய்வு செய்த பிறகு நோய் கண்டறிதல் செய்யப்படுகிறது. வயிற்றில் காணப்படும் இந்த புழுக்கள் இரைப்பை புழுக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. வட்டப்புழுக்கள், தட்டைப்புழுக்கள் மற்றும் நாடாப்புழுக்கள் ஆகியவை இதில் அடங்கும். இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டுள்ளன. நமது ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைச் சுழற்சிகளில் அவற்றின் விளைவுகள் மாறுபடும். சாட்டைப்புழுக்கள் மற்றும் கொக்கிப்புழுக்கள் மண்ணின் வழியாக வயிற்றுக்குள் நுழைகின்றன. புழுக்கள் எவ்வாறு பரவுகின்றன? பட மூலாதாரம்,GETTY IMAGES புழு நோய்த்தொற்றுகள் பெரும்பாலும் கைகளை சரியாகக் கழுவாததால் ஏற்படுகின்றன. புழுக்களின் முட்டைகள் மண்ணுடன் தொடர்பு கொள்வது, அசுத்தமான உணவு மற்றும் பானங்களை உட்கொள்வது புழுக்கள் வயிற்றுக்குள் நுழைவதற்கு வழிவகுக்கும். மோசமான கழிவுநீர் மேலாண்மை மற்றும் சுகாதாரமற்ற கழிப்பறைகள் உள்ள பகுதிகளிலும் இந்த தொற்று பரவுகிறது. வேக வைக்கப்படாத இறைச்சி மற்றும் புழுக்கள் உள்ள மீன்களை சாப்பிடுவதும் இந்த பிரச்னையை ஏற்படுத்தும். சில சமயங்களில் செல்லப் பிராணிகளுக்கு கூட தொற்று ஏற்படலாம். நூற்புழு தொற்று பல குழந்தைகளில் காணப்படுகிறது. நீளமான கயிறு போல் தோற்றமளிக்கும் இந்தப் புழுக்களின் முட்டைகள் வயிற்றில் நுழையும்போது பிரச்னை ஆரம்பமாகிறது. பின்னர் அவை ஆசன வாயில் முட்டைகளை இடுகின்றன. இந்த முட்டைகளை ஆடை, பொம்மைகள், பல் துலக்குதல், சமையலறை, குளியலறை தரை, படுக்கையறை, உணவு ஆகியவற்றில் பரப்பலாம். இந்த பொருள்கள் மற்றும் மேற்பரப்புகளைத் தொட்ட பிறகு, அதே கையை வாயில் வைப்பது உடலுக்குள் நுழையலாம். வட்டப்புழுக்களின் முட்டைகள் சுமார் இரண்டு வாரங்கள் உயிர் வாழும். வயிற்றை அடைந்த பிறகு, முட்டைகள் லார்வாக்களாக உருவாகின்றன. ஓரிரு மாதங்களில் அவை நீண்ட கிருமிகளாக மாறிவிடும். புழுக்களை அழிக்க என்ன செய்ய வேண்டும்? பட மூலாதாரம்,GETTY IMAGES இவற்றிற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, குழந்தைகள் மீண்டும் அத்தகைய மேற்பரப்பைத் தொட்டால் மீண்டும் தொற்று ஏற்படலாம். எனவே, குழந்தைகள் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். கைகளை கழுவுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். புழுக்களை அழிக்க இதை செய்ய வேண்டும் அனைவரும் கைகளை கழுவ வேண்டும், நகங்களை வெட்ட வேண்டும். சாப்பிடுவதற்கு முன், கழிப்பறைக்குச் சென்ற பிறகு, குழந்தைகளின் நாப்கின்களை மாற்றிய பின் கைகளைக் கழுவ வேண்டும். குழந்தைகள் அடிக்கடி கைகளை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். தினமும் குளிக்க வேண்டும். துலக்குவதற்கு முன்னும் பின்னும் டூத் பிரஷ்களைக் கழுவவும். துண்டுகள் மற்றும் படுக்கை விரிப்புகளை சூடான நீரில் கழுவவும். பொம்மைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சமையலறை மற்றும் குளியலறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போது இந்தப் புழுக்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்று பார்ப்போம். பிரிட்டனின் தேசிய சுகாதார சேவைகள் அமைப்பு (என்.எச்.எஸ்.) இதற்கென சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. எதையும் சாப்பிடும் முன் கைகளை சுத்தம் செய்ய வேண்டும். மலம் கழித்த பின் கைகளை சோப்பினால் கழுவ வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட அல்லது பாட்டில் தண்ணீரைக் குடிக்க முயற்சி செய்யுங்கள். காய்கறிகள் மற்றும் பழங்களை நன்கு கழுவிய பின்னரே சாப்பிட வேண்டும். செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசிகள் போட வேண்டும். அவற்றின் கழிவுகளை விரைவில் அகற்ற வேண்டும். நாய், பூனை கழிவுகளுக்கு அருகில் குழந்தைகளை விளையாட அனுமதிக்கக் கூடாது. தொற்றுநோய்க்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள சுகாதாரமற்ற இடங்களில் இருந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்குவதைத் தவிர்க்கவும். அசுத்தமான இடங்களில் வெறுங்காலுடன் நடக்கக் கூடாது. வயிற்றுப் புழுக்களை எவ்வாறு கண்டறிவது? வயிற்றில் புழுக்கள் நுழைந்த பிறகு சில அறிகுறிகள் தோன்றும். வயிற்று வலி, குமட்டல், வாந்தி. பெரும்பாலானவர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. சிலர் மலச்சிக்கலால் அவதிப்படுவார்கள். பசியின்மை மற்றும் எடை இழப்பு போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. பலவீனமாகி கடுமையான சோர்வை அனுபவிக்கிறார்கள். ஆசன வாயில் அரிப்பு மற்றும் தூக்கமின்மை. பெரியவர்களுக்கு வயிற்று வாயு. சில நோயாளிகள் இரத்த சோகைக்கு ஆளாகிறார்கள். பட மூலாதாரம்,RK வயிற்றுக் கிருமிகளை ஏன் அகற்ற வேண்டும்? நம் உடலில் உள்ள பல்வேறு வகையான கிருமிகள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளைக் காட்டுகின்றன. பல வகையான பிரச்னைகள் சிரமத்திற்கு வழிவகுக்கும். இரத்த சோகை குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கிறது. ஊட்டச்சத்து குறைபாட்டின் அபாயத்துடன் கூடுதலாக, அவை உறுப்பு சேதத்தை ஏற்படுத்தும். இவற்றை தவிர்க்க உலக சுகாதார நிறுவனம் அடிக்கடி குடற்புழு நீக்கம் செய்ய பரிந்துரைக்கிறது. டோம்பிவிலியில் உள்ள மதுசூதன் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் சுகாதார இயக்குநர் டாக்டர் ரோஹித் காகு, இந்த கிருமிகளை எப்படி அகற்றுவது என்று பிபிசியிடம் விளக்கினார். வயிற்றில் உள்ள கிருமிகளை அகற்ற, 12-23 மாத குழந்தைகளுக்கும், ஒன்று முதல் நான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கும், 5-12 வயதுடைய ஆண் மற்றும் பெண்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை தடுப்பு கீமோதெரபி கொடுக்க வேண்டும். கிருமிகளை எவ்வாறு அகற்றுவது? கிருமிகள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பல நோய்களை உண்டாக்குவதாக டாக்டர் ரோஹித் கூறினார். “ஆகவே ஆண்டுக்கு இருமுறை மருத்துவரின் ஆலோசனைப்படி பூச்சி விரட்டி மருந்துகளை உட்கொள்ள வேண்டும். இந்த செயல்முறை இரண்டு வயது முதல் தொடங்கலாம். இந்த செயல்பாட்டில், உடலில் உள்ள ஒட்டுண்ணி வெளியேறுகிறது" என்று ரோஹித் கூறினார். https://www.bbc.com/tamil/articles/c0jxz44p0jpo
-
ஹெய்ட்டியில் சிறை மீது ஆயுதகும்பல் தாக்குதல் - 3000க்கும் அதிகமானகைதிகள் தப்பியோட்டம்
Published By: RAJEEBAN 04 MAR, 2024 | 10:35 AM ஹெய்ட்டி தலைநகரில் உள்ள பிரதான சிறைச்சாலையொன்றின் மீது தாக்குதலை மேற்கொண்ட கும்பலொன்று அங்கிருந்த 4000க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவித்துச்சென்றுள்ளது. தலைநகரின் பிரதான சிறைச்சாலை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக 4000க்கும் அதிகமான கைதிகள் தப்பியோடிவிட்டனர் என செய்திகள் வெளியாகின்றன. 2021 இல் ஜனாதிபதி ஜொவெனல் மொஸ்சேயை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களும் சிறையுடைப்பு காரணமாக தப்பிச்சென்றுள்ளனர். ஹெய்ட்டியின் வழமையான நெரிசல் மிகுந்த சிறைச்சாலை வெறுமையாக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இன்றி காணப்படுகின்றது காலணிகளும் ஆடைகளும் கதிரைமேசைகளும் சிதறுண்டு காணப்படுகின்றன என ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சிறைச்சாலை வாயிலில் மூன்று உடல்கள் காணப்படுகின்றன. இதேவேளை 1400 கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருந்த இரண்டாவது சிறைச்சாலையிலும் சிறை உடைப்பு இடம்பெற்றுள்ளது. எத்தனை கைதிகள் தப்பிச்சென்றுள்ளனர் என்பது தெரியாது என குறிப்பிட்டுள்ள மனித உரிமை சட்டத்தரணி 4000 சிறைக்iதிகளில் 100க்கும் குறைவானவர்களே எஞ்சியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது. நான் ஒருவன் மாத்திரம் எஞ்சியுள்ளேன் என ஒருவர் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார். இதேவேளை வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்காக அவசரகால நிலையை அறிவித்துள்ள ஹெய்ட்டி அரசாங்கம் இரவு நேர ஊரடங்கு சட்டத்தையும் பிரகடனம் செய்துள்ளது. https://www.virakesari.lk/article/177839
-
பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப்!
Published By: VISHNU 03 MAR, 2024 | 05:29 PM பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் தேர்தலும் அதன் பின்னரான அந்நாட்டின் நிலைவரங்களும் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. https://www.virakesari.lk/article/177818
-
வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் இடையே முறுகல்; பொலிசாருடனும் முரண்பாடு
Published By: VISHNU 04 MAR, 2024 | 01:25 AM வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் இடையே ஞாயிற்றுக்கிழமை (02) முறுகல் நிலை ஏற்பட்டது. வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர் சங்கத்திற்குட்பட்ட கடல் பகுதியில் உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதற்கு குறித்த சங்கத்தால் தடை விதிக்கப்பட்டது. உடனடியாக உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதை நிறுத்துமாறு வெற்றிலைக்கேணி மீனவர்களின் கையொப்பத்துடன் வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர் சங்கத்தினரால் கரைவலை தொழில் சம்மாட்டியிடம் கடிதம் கையளிக்கப்பட்டது. எனினும் தமது அறிவுறுத்தலைப் பொருட்படுத்தாது தொடர்ச்சியாக உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்துவருவதால் நேற்று காலை குறித்த கரைவலை வாடி மீனவர்களால் முற்றுகையிடப்பட்டு உழவு இயந்திரம் மூலம் கரைவலை இழுப்பது நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்தில் அதிகளவான மீனவர்கள் ஒன்று கூடியதால் சிறிது நேரம் பதட்டம் நிலவியதுடன் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருதங்கேணி பொலிசாருடனும் மீனவர்கள் முறுகலில் ஈடுபட்டனர். உடனடியாக உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதை நிறுத்தாவிடில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடப்போவதாகவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/177833
-
சிரிக்கலாம் வாங்க
கடும் கோவக்காறனா இருப்பானோ?!
-
பாதாள உலகக் குழுவினரின் மரண அச்சுறுத்தலால் வெளிநாடு சென்ற குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி துமிந்த ஜயதிலக்க!
இலங்கையில் மனைவி, குழந்தைகளை மறைத்து வைத்துவிட்டு, பிரான்ஸ் தப்பிச் சென்ற போலீஸ் அதிகாரி - என்ன பிரச்னை? பட மூலாதாரம்,DUMINTHA JAYATHILAKA FB ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் பல்வேறு முக்கிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களை கைது செய்ததாக கூறப்படும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் போலீஸ் உயர் அதிகாரியான போலீஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக்க நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார். தனக்கும், தனது குடும்பத்திற்கும் விடுக்கப்படுகின்ற உயிர் அச்சுறுத்தலை அடுத்தே, தான் நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக போலீஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக்க தெரிவித்துள்ளார். நிழலுலக உறுப்பினர்களினால் தனக்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறுகின்றார். கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் திட்டமிட்ட குற்றச் செயல்களுக்கான பிரிவின் போலீஸ் பரிசோதகராக துமிந்த ஜயதிலக்க கடமையாற்றியிருந்தார்;. இந்த நிலையில், துமிந்த ஜயதிலக்க பிரான்ஸ் நாட்டை நோக்கி கடந்த 14ம் தேதி சென்றுள்ளதாக தெரிய வருகின்றது. மனைவி மற்றும் குழந்தை ஆகியோரை இலங்கையில் மறைத்து வைத்த நிலையிலேயே, துமிந்த ஜயதிலக்க நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார். என்ன நடந்தது? பட மூலாதாரம்,DUMINTHA JAYATHILAKA FB தனக்கு உயிர் அச்சுறுத்தலை விடுத்ததாக, சில நிழலுலக உறுப்பினர்களின் தொலைபேசி உரையாடல் குரல் பதிவுகளையும் அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார். குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபர்களை கைது செய்ததன் பின்னர், நிழலுலக உறுப்பினர் என கூறப்படும் ஹினடியன மஹேஷ் என்ற நபரினால் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் தொலைபேசி உரையாடல் குரல் பதிவொன்று வெளியாகியுள்ளது. ''நீ சிறு குழந்தையுடன் இருக்கின்றாய் அல்லவா? மிகவும் கவனமாக இருந்து கொள். துமிந்த சேர் எதற்கும் கவனமாக இருந்துக்கொள்ளுங்கள். உனக்கு தகவலை வழங்கிய நபரை மூன்று நாட்களில் கொலை செய்வோம். முடியுமானால், அவரை காப்பாற்றிக் கொள். தேவையில்லாமல் கொலை செய்ய வைக்க வேண்டாம். உனது மனைவியை உன் கண் முன்னே துஷ்பிரயோகம் செய்து கொலை செய்வோம்." என அந்த தொலைபேசி உரையாடல் குரல் பதிவில் பதிவாகியுள்ளது. கொழும்பு - ஆட்டுப்பட்டிதெரு போலீஸ் நிலையத்திற்குள், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்களுக்கு நஞ்சு வழங்கியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்த பிரதான போலீஸ் உத்தியோகத்தராக துமிந்த ஜயதிலக்க விளங்குகின்றார். இந்த சம்பவத்தை அடுத்து, இலங்கையின் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும் கஞ்சிபானி இம்ரானும், தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் குரல் பதிவை துமிந்த ஜயதிலக்க வெளியிட்டுள்ளார். பட மூலாதாரம்,DUMINTHA JAYATHILAKA FB ''நீங்கள் அதிகமாக துள்ள வேண்டாம் சேர். அமைதியாக இருந்து கொள்ளுங்கள். நான் உங்களை அச்சுறுத்தவில்லை. ஜயதிலக்க சேர் என மிகுந்த மரியாதைவுடன் கதைத்தேன். உங்களுடன் பிரச்னை ஏற்படுத்திக் கொள்வதற்கு எனக்கு பிரச்னை கிடையாது. எம்மை எமது வேலைகளை செய்து கொண்டிருப்பதற்கு இடமளியுங்கள். உங்களை போன்ற பலர் இருந்தார்கள். இறுதியில் மண்டியிட்டார்கள். புரிந்து கொள்ளுங்கள். மண்டியிட வைக்க எமக்கு தெரியும்." என போதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும் கஞ்சிபானி இம்ரானினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் குரல் பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. துமிந்த ஜயதிலக்கவின் பாதுகாப்பிற்காக போலீஸ் திணைக்களத்தினால் துப்பாக்கியொன்றும் வழங்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. இவ்வாறான பின்னணியிலேயே, துமிந்த ஜயதிலக்க நாட்டை விட்டு கடந்த 14ம் தேதி பிரான்ஸ் நோக்கி தப்பிச் சென்றுள்ளார். இந்த நிலையில், பிரான்ஸில் தற்போது தங்கியுள்ள துமிந்த ஜயதிலக்க, சமூக வலைத்தளம் ஊடாக வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார். ''கொழும்பில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பல மனித படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து சந்தேக நபர்களையும் கைது செய்ய என்னால் முடிந்தது. இவ்வாறு நிழலுலக உறுப்பினர்களை தொடர்ச்சியாக கைது செய்யும் போது, எனக்கும் எனது மனைவி மற்றும் குழந்தையின் உயிருக்கு தொடர்ச்சியாக உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. அதனை பொருட்படுத்தாத நான் தொடர்ச்சியாக வேலை செய்தேன். இறுதியாக நான் கடந்த 14ம் தேதி இலங்கையிலிருந்து இங்கு வந்தேன். இங்கு வரும் போதும், ஆட்டுப்பட்டித்தெரு போலீஸ் நிலையத்திற்குள் சந்தேக நபர்களுக்கு நஞ்சு வழங்கியமை தொடர்பாக சம்பவத்தின் விசாரணைகளை முடிந்துக்கொண்டே பிரான்ஸிற்கு வந்தேன். தொடர்ச்சியாக விடுக்கப்படுகின்ற அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே நான் இங்கு வந்தேன். நான் இங்கு வந்தாலும், எனது மனைவி மற்றும் குழந்தை ஆகியோரை எனது வீட்டில் இருந்து வெளியேற்றி மறைத்து வைத்துள்ளேன். அவர்களின் உயிருக்கு பாரிய பிரச்னை காணப்படுகின்றது. அவர்களின் உயிருக்கு பிரச்னை ஏற்படாத வகையில் அவர்களை பாதுகாத்து தருமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்." என போலீஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக்க தெரிவித்துள்ளார். பிரான்ஸ் ராணுவத்தில் இணைந்துக்கொள்ளும் வகையிலேயே தான் பிரான்ஸை நோக்கி சென்றுள்ளதாகவும், அதற்கான நேர்முக பரீட்சைகளில் தோற்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தனது மனைவி மற்றும் குழந்தை ஆகியோரின் உயிருக்கு ஆபத்து காணப்படுகின்றமையினால், புதிய வேலையில் சேரவும் முடியாமல் நிம்மதி இழந்து தவிப்பதாக அவர் குறிப்பிடுகின்றார். போலீஸ் திணைக்களத்தின் பதில் பட மூலாதாரம்,DUMINTHA JAYATHILAKA FB போலீஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக்க போலியான நாடகமொன்றை உருவாக்கி பிரான்ஸ் நோக்கி சென்றுள்ளாரா என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுகின்றது என போலீஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி போலீஸ் மாஅதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். எனினும், இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிடுகின்றார். ''குறித்த போலீஸ் அதிகாரி பெப்ரவரி மாதம் 14ம் தேதி முதல் மார்ச் மாதம் 6ம் தேதி வரை வெளிநாடு செல்வதற்கான விடுமுறையை பெற்று சென்றுள்ளார். விடுமுறையின் அடிப்படையிலேயே அவர் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். வெளிநாட்டிற்கு சென்றதன் பின்னரே சமூக வலைத்தளங்களின் ஊடாக அவர் இவ்வாறான கருத்துகளை வெளியிட்டுள்ளார். கடிதம் மற்றும் குரல் பதிவுகளை அவர் வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,DUMINTHA JAYATHILAKA FB இந்த அதிகாரி கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவில் கடமையாற்றும் காலப் பகுதியில் அவருக்கு அச்சுறுத்தல் காணப்படுகின்றமை குறித்து போலீஸ் திணைக்களத்திற்கு அறிவிக்கவில்லை. இந்த குரல் பதிவுகளில் கதைக்கும் நபர்கள் தொடர்பிலும் சந்தேகம் எழுந்துள்ளது. குறித்த நபர்களா பேசுகின்றார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த அனைத்து விடயங்களும் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சில நன்மைகளை பெற்றுக்கொள்வதற்காக இவ்வாறான அச்சுறுத்தல் காணப்படுகின்றது என்பதை போன்ற விடயத்தை உருவாக்கியிருக்கக்கூடும். அப்படியான ஒரு சந்தேகம் எமக்கு உள்ளது. தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஒரு சந்தர்ப்பத்தில் மாத்திரம் சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். அவரின் பாதுகாப்புக்கு கைத்துப்பாக்கி ஒன்றை வழங்கியிருந்தோம். இது தொடர்பில் சந்தேகம் காணப்படுகின்றது. இது திட்டமிடப்பட்ட ஒன்றா என்ற சந்தேகம் எழுகின்றது." என போலீஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி போலீஸ் மாஅதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். https://www.bbc.com/tamil/articles/c2q7rgy7n6lo