Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. பட மூலாதாரம், Chilukuri Paramathama படக்குறிப்பு, கடந்த ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலத்தில் மருத்துவர் ஒருவர் எழுதிய படிக்க முடியாத மருந்துச் சீட்டு வைரலானது. கட்டுரை தகவல் கீதா பாண்டே பிபிசி 6 மணி நேரங்களுக்கு முன்னர் பெரும்பாலானவர்கள் கீபோர்டை பயன்படுத்தி எழுதி வரும் தற்கால சூழலில், கையெழுத்து தெளிவாக இருப்பது முக்கியமா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், மருத்துவர் ஒருவர் எழுதுகிறார் என்றால், அவரது கையெழுத்து தெளிவாக இருப்பது அவசியம் என்று இந்திய நீதிமன்றங்கள் கூறுகின்றன. மருத்துவர்களின் மோசமான கையெழுத்தை, மருந்தாளர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் போன்ற நகைச்சுவைகள் உலகமெங்கும் பகிரப்படுகின்றன. ஆனால், பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம் சமீபத்தில் ஓர் உத்தரவு வெளியிட்டது. அதில், "தெளிவான மருந்துச்சீட்டு என்பது ஒரு அடிப்படை உரிமை" என்றும் அது உயிரோடு இருப்பதற்கும், இறப்பதற்கும் காரணமாக அமையலாம் என்றும் நீதிமன்றம் கூறியது. இந்த உத்தரவு, கையெழுத்துடன் தொடர்பில்லாத ஒரு வழக்கில் வந்தது. அந்த வழக்கில், ஒருவர் தன்னிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகப் பணம் பறித்ததாகவும், போலி நேர்காணல் நடத்தியதாகவும், பாலியல் சுரண்டல் செய்ததாகவும் அவருக்கு எதிராக ஒரு பெண் குற்றம் சாட்டினார். நீதிபதி ஜஸ்குர்பிரீத் சிங் பூரி, அந்த நபரின் ஜாமீன் மனுவை விசாரித்தார். குற்றம்சாட்டப்பட்டவர் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து, தங்களுக்கு ஒருமித்த உறவு இருந்ததாகவும், பணத் தகராறு காரணமாக இந்த வழக்குத் தொடரப்பட்டது என்றும் கூறினார். ஆனால், அந்தப் பெண்ணைப் பரிசோதித்த அரசு மருத்துவரின் மருத்துவ அறிக்கையைப் பார்த்தபோது, நீதிபதி பூரியால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. "ஒரு எழுத்து கூட தெளிவாக இல்லை. இது நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியது," என்று அவர் உத்தரவில் குறிப்பிட்டார். பிபிசி, தீர்ப்பு நகலையும், அந்த அறிக்கையையும், மருத்துவரின் படிக்க முடியாத இரண்டு பக்க மருந்துச்சீட்டையும் பார்த்தது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மருந்தாளுநர்களால் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய மருத்துவர்களின் மோசமான கையெழுத்து பற்றிய நகைச்சுவைகள் உலகம் முழுவதும் காணப்படுகிறது. 'மருந்தாளுநர்கள் தவிர வேறு யாராலும் படிக்க முடியவில்லை' "இன்றைய காலத்தில் கணினிகளும் தொழில்நுட்பமும் எளிதாக அணுகக்கூடிய வகையில் இருக்கும்போது, அரசு மருத்துவர்கள் இன்னும் கையால் மருந்துச்சீட்டு எழுதுவது அதிர்ச்சியளிக்கிறது. இவற்றை மருந்தாளுநர்கள் தவிர வேறு யாராலும் படிக்க முடியவில்லை," என்று நீதிபதி பூரி தனது உத்தரவில் தெரிவித்திருந்தார். மருத்துவக் கல்லூரி பாடத்திட்டத்தில் கையெழுத்துப் பயிற்சியைச் சேர்க்கவும், இரண்டு ஆண்டுகளில் டிஜிட்டல் மருந்துச்சீட்டுகளை அறிமுகப்படுத்தவும் அரசை நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதுவரை, அனைத்து மருத்துவர்களும் பெரிய, தெளிவான எழுத்துகளில் மருந்துச்சீட்டு எழுத வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் மருத்துவர் திலீப் பானுஷாலி, 3,30,000 மருத்துவர்கள் உறுப்பினர்களாக உள்ள தங்கள் அமைப்பு இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண உதவத் தயாராக இருப்பதாக பிபிசியிடம் தெரிவித்தார். பெரிய நகரங்களில் மருத்துவர்கள் டிஜிட்டல் மருந்துச்சீட்டுக்கு மாறிவிட்டனர். ஆனால், கிராமங்களிலும் சிறு ஊர்களிலும் தெளிவான மருந்துச்சீட்டு பெறுவது கடினமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.. மேலும், "பல மருத்துவர்களின் கையெழுத்து மோசமாக இருப்பது உண்மைதான். காரணம், அவர்கள் பரபரப்பாக இருக்கிறார்கள். குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் அவர்கள் மிகவும் பிஸியாக இருக்கிறார்கள்," என்ற அவர், "அரசு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, நோயாளிகளும் மருந்தாளர்களும் எளிதில் படிக்கக்கூடிய வகையில் மருந்துச்சீட்டு எழுத வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைத்துள்ளோம். ஒரு நாளைக்கு 7 நோயாளிகளைப் பார்க்கும் மருத்துவரால் இது முடியும். ஆனால் 70 பேரைப் பார்க்க வேண்டியிருந்தால் அந்த மருத்துவருக்கு இது சாத்தியமில்லை," என்றும் கூறினார். பட மூலாதாரம், Chilukuri Paramathama படக்குறிப்பு, தெளிவின்மை அல்லது தவறான விளக்கத்திற்கு இடமளிக்கும் ஒரு மருந்துச் சீட்டு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 'பிழைகளை 50% வரை குறைக்கலாம்' இந்திய நீதிமன்றங்கள் மருத்துவர்களின் சீரற்ற கையெழுத்தைக் கண்டிப்பது இதுவே முதல் முறை அல்ல. முன்பு, ஒடிசா உயர் நீதிமன்றம் மருத்துவர்களின் "ஜிக்ஜாக் எழுத்து" பற்றி எச்சரித்தது. அலகாபாத் உயர் நீதிமன்றமும் "படிக்க முடியாத மோசமான கையெழுத்து அறிக்கைகள்" குறித்து வருத்தம் தெரிவித்தது. ஆனால், மருத்துவர்களின் கையெழுத்து மற்றவர்களை விட மோசமானது என்ற பொதுவான நம்பிக்கையை ஆய்வுகள் நிரூபிக்கவில்லை. அவர்களின் கையெழுத்து தெளிவாக இருக்க வேண்டும் என கூறுவது அழகுக்காகவோ அல்லது வசதிக்காகவோ அல்ல. மாறாக தெளிவில்லாத மருந்துச் சீட்டுகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டால், அது பெரிய ஆபத்தை, சில நேரம் உயிரிழப்பையே ஏற்படுத்தலாம் என்கிறார்கள் நிபுணர்கள். 1999-ல் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிசின் (IoM) ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், அமெரிக்காவில் ஆண்டுக்கு 44,000 தடுக்கக்கூடிய மரணங்கள் மருத்துவப் பிழைகளால் ஏற்படுவதாகவும் , அதில் 7,000 மரணங்கள் மோசமான கையெழுத்தால் நிகழ்வதாகவும் கூறப்பட்டது. சமீபத்தில், ஸ்காட்லாந்தில் ஒரு பெண்ணுக்கு கண்ணில் ஏற்பட்ட வறட்சிக்கு மருந்து கொடுக்க வேண்டிய இடத்தில், தவறாக விறைப்புத் தளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படும் கிரீம் கொடுக்கப்பட்டதால், பாதிப்பு ஏற்பட்டது. பிரிட்டன் சுகாதார அதிகாரிகள், "மருந்துப் பிழைகள் பெரிய தீங்கையும் மரணங்களையும் ஏற்படுத்துகின்றன" என்று ஒப்புக்கொண்டதுடன், மருத்துவமனைகளில் கணினி மருந்துச்சீட்டு முறையை அறிமுகப்படுத்தினால், பிழைகளை 50% வரை குறைக்கலாம் என்றும் தெரிவித்தனர். இந்தியாவில் மோசமான கையெழுத்தால் ஏற்பட்ட தீங்குகள் பற்றிய தெளிவான தரவுகள் இல்லை. ஆனால், உலகின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில், மருந்துச்சீட்டுகளை தவறாகப் படித்ததால் உயிருக்கு ஆபத்தான சூழல்களும் பல மரணங்களும் ஏற்பட்டுள்ளன. பட மூலாதாரம், Chilukuri Paramathama படக்குறிப்பு, மோசமாக எழுதப்பட்ட மருந்துச் சீட்டுகள் தங்கள் கடைகளுக்கு தொடர்ந்து வந்து சேர்வதாக மருந்தாளுநர்கள் கூறுகின்றனர். நீரிழிவு நோய்க்கான மருந்து எடுத்தபின் வலிப்பு ஏற்பட்ட ஒரு பெண்ணின் சம்பவம் பரவலாகப் பேசப்பட்டது. அந்த மருந்தின் பெயர், அவருக்கு முன்பு பரிந்துரைக்கப்பட்ட வலிநிவாரணி மருந்தின் பெயரைப் போலவே இருந்தது. தெலங்கானாவின் நல்கொண்டாவில் மருந்தகம் நடத்தி வரும் சிலுகுரி பரமாத்தமா, 2014-ல் நொய்டாவில் மூன்று வயது குழந்தை காய்ச்சலுக்கு தவறான ஊசி போடப்பட்டு இறந்த செய்தியைப் படித்த பிறகு, ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்ததாக பிபிசியிடம் குறிப்பிட்டார். கையால் எழுதப்பட்ட மருந்துச்சீட்டுகளை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்ற அவரது முயற்சி 2016-ல் பலனளித்தது. அப்போது, இந்திய மருத்துவக் கவுன்சில், "மருத்துவர்கள் மருந்துகளை பொதுவான பெயர்களில், தெளிவாகவும், முடிந்தால் பெரிய எழுத்துகளிலும் எழுத வேண்டும்" என்று உத்தரவிட்டது. 2020-ல், இந்திய சுகாதார இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே நாடாளுமன்றத்தில், "இந்த உத்தரவை மீறும் மருத்துவர்கள் மீது மாநில அதிகாரிகள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம்" என்று கூறினார். ஆனால், பத்து ஆண்டுகள் கடந்த பிறகும், மோசமாக எழுதப்பட்ட மருந்துச்சீட்டுகள் மருந்தகங்களுக்கு வருவதாக சிலுகுரியும் மற்ற மருந்தாளர்களும் சொல்கின்றனர். கடந்த சில ஆண்டுகளில் சிலுகுரி பெற்ற சில சீட்டுகளை அவரால் கூட படிக்க முடியவில்லை என்று பிபிசியிடம் காட்டினார். கொல்கத்தாவில் 28 கிளைகளுடன், தினமும் 4,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கையாளும் தன்வந்தரி மருந்தகத்தின் தலைமை நிர்வாகி ரவீந்திர கண்டேல்வால் இதுகுறித்துப் பேசினார். "சில மருந்துச்சீட்டுகள் படிக்க முடியாத அளவுக்கு மோசமாக இருக்கின்றன. நகரங்களில் அச்சிடப்பட்ட கணினி சீட்டுகள் அதிகமாகி விட்டன. ஆனால் புறநகர் மற்றும் கிராமங்களில் இன்னும் கையால் எழுதப்பட்ட மருந்துசீட்டுக்கள்தான் அதிகம் வருகின்றன," என்றார் ரவீந்திர கண்டேல்வால். மேலும், அவரது ஊழியர்கள் அனுபவமிக்கவர்கள் என்பதால், பெரும்பாலான சீட்டுகளைப் புரிந்து சரியான மருந்து கொடுக்க முடிகிறது என்றும், "ஆனாலும், சில நேரங்களில் மருத்துவர்களை அழைத்து உறுதி செய்ய வேண்டியிருக்கிறது, ஏனென்றால் சரியான மருந்தை கொடுப்பது மிக முக்கியம்" என்றும் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c9312wv2k9qo
  2. Published By: Vishnu 07 Oct, 2025 | 07:29 PM (நா.தனுஜா) மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேச சமூகம் உணரக்கூடியவகையிலும், அவர்கள் திருப்தியடையக்கூடிய அவசியமான நடவடிக்கைகள் சீராக முன்னெடுக்கப்பட்டால், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்படல் வெளியக அழுத்தங்கள் படிப்படியாகக் குறைவடையும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரின்போது நிறைவேற்றும் நோக்கில் பிரிட்டன் தலைமையில் கனடா, மாலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்ட புதிய பிரேரணை, திங்கட்கிழமை (6) பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே நிமல் புஞ்சிஹேவா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலவும் மனித உரிமைகள் சார்ந்த கரிசனைகளுக்குத் தீர்வுகாணுமாறு கடந்த காலங்களில் பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வந்ததாகவும், அதனை முன்னிறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், அத்தீர்மானங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம் மிகப்பாரதூரமானது அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று இப்புதிய தீர்மானத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்துக்குத் தீர்வுகாணல், காணி விடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் உள்வாங்கப்பட்டிருப்பதாக விளக்கமளித்துள்ள அவர், இவ்விவகாரங்கள் குறித்துத் தீர்வு காண்பதற்காக கடந்த காலங்களில் பல்வேறு ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டிருப்பினும், அவற்றின் ஊடாக வழங்கப்பட்ட பரிந்துரைகள் உரியவாறு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று கரிசனை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் சர்வதேச சமூகம் உணரக்கூடியவகையிலும், அவர்கள் திருப்தியடையக்கூடிய முறையிலும் அப்பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு, அவசியமான நடவடிக்கைகள் சீராக முன்னெடுக்கப்பட்டால், இந்த வெளியக அழுத்தங்கள் படிப்படியாகக் குறைவடையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://www.virakesari.lk/article/227160
  3. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்காவில் பகுதியில், ஒரு பொலிஸ் அதிகாரி ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 592வது இராணுவ படைப்பிரிவின் கீழ் உள்ள இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக, ஏ-9 வீதியின் கொக்காவில் பகுதியில் இன்று காலை, குறித்த பொலிஸ் அதிகாரி ஐஸ் போதைப்பொருளுடன் இருந்த வேளை, விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் அதிகாரி, தனது உடமையில் 92 கிராம் 400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்தோடு, அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரியாக இருந்த குறித்த நபருக்கு, பொய் வழக்கு பதிவு செய்தல், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு உடந்தையாக செயற்படுதல், இலஞ்சம் பெறுதல் போன்ற பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவர் வெலிஓயா பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், குறித்த விடயங்களை ஆதாரப்படுத்தும் வகையில் அவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனவே, குறித்த பொலிஸ் அதிகாரி மீது உயரதிகாரிகள் உடனடியாக உரிய சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். -முல்லைத்தீவு நிருபர் தவசீலன்- https://adaderanatamil.lk/news/cmggmqg2t00vwo29n8t9h7775
  4. Published By: Vishnu 07 Oct, 2025 | 04:49 AM ஆர்.ராம் 'காற்றாலைத்திட்டத்தினாலும், கனிய மணலுக்கான கேள்வியும் மன்னாரை சுற்றுச்சூழல் பாதிக்கவல்ல போராபத்துக்குள் தள்ளிவிடும் நிலையை தோற்றுவித்துள்ளது' மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித்திட்டம், இலங்கையின் வலுசக்தித்தேவையை நோக்கிய முக்கியமான படியாகக் கருதப்பட்டாலும், அது மன்னார் தீவுப் பகுதியின் பூகோள முக்கியத்துவம், அதியுயர் உணர்திறன்கொண்ட உயிர்ப்பல்வகைமைச் சுற்றுச்சூழல், மன்னார் மக்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றுடன் தொடர்புடைய சிக்கலான சர்ச்சைகளின் மையமாக உருவெடுத்துள்ளது. இலங்கை மின்சார சபையின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் ஏற்கனவே 30 காற்றாலை கோபுரங்கள் நிறுவப்பட்ட நிலையில், இத்திட்டத்தை மேலும் விரிவாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பையும், சுற்றுச்சூழல் மற்றும் புவியியல் அபாயங்கள் குறித்த நிபுணர்களின் எச்சரிக்கைகளையும் வலுவாகவே பெற்றிருக்கின்றன. முன்னதாக, இந்தியாவின் அதானி நிறுவனம் இப்பகுதியில் முன்னெடுக்கத் திட்டமிட்டிருந்த காற்றாலைத் திட்டத்திலிருந்து விலகிய போதும், உள்ளுர் மக்களின் கவலைகளைப் புறக்கணித்துவிட்டு, தனியார் முதலீட்டாளர்களின் துணையுடன் இலங்கை மின்சார சபை அத்திட்டத்தை இடைநிறுத்தாமல் நகர்த்துவது, மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான நம்பிக்கையில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. மன்னார் மக்களின் எதிர்ப்பானது, வெறும் மின் உற்பத்திக்கு எதிரானது அல்ல. அந்தப்போராட்டம் அந்த மக்கள் தங்கள் பூர்வீக நிலம், வாழ்வாதாரம் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கானவொரு பரந்துபட்ட போராட்டமாகும். மன்னார் பிராந்தியம் புவியியல் ரீதியாகவும், கனிம வளங்கள் ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இங்கு இல்மனைட் உட்படப் பல்வேறு வகையான கனிம வளங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்தக் கனிமங்கள் சுமார் 6000 முதல் 8000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவானவை என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா போன்ற நிபுணர்கள், மன்னாரில் இல்மனைட்டை மிகக் குறைந்த செலவில் அகழ்ந்தெடுக்க முடியும் என்ற நிலை, இங்கு கனிம மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்கான அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது எனக் குறிப்பிடுகிறார். மன்னார் நிலப்பரப்பு கடல் மட்டத்திலிருந்து மிகக் குறைந்த அளவில் இருப்பதால், காற்றாலை கோபுரங்களை அமைப்பதற்காகவோ அல்லது கனிமங்களை அகழ்வதற்காகவோ நிலத்தை ஆழமாகத் தோண்டுவது, நில மட்டத்தை மேலும் தாழ்த்தி, இப்பிராந்தியம் சில வருடங்களிலேயே கடல் நீருக்குள் மூழ்கும் பாரிய அபாயம் உள்ளதாகப் புவியியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். உதாரணமாக, ஒரு காற்றாலை அமைப்பதற்கு 3000 பைகள் மண் அகழ்ந்து அகற்றப்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டுவது, இந்த அபாயத்தின் தீவிரத்தை உணர்த்துகிறது. குhற்றாலைக் கோபுரங்களை நாட்டுவதற்காக 25அடி வரை தோண்டி, கொங்கிரீட் மற்றும் மண்ணைக் கொட்டி மூடுவது, கரையோரங்களில் கொங்கிரீட் போடுவதனால் மழை நீர் வெளியேறுவது தடுக்கப்படுவது போன்ற கட்டுமானச் செயற்பாடுகள், மன்னாரின் பூகோள சமநிலையைச் சீர்குலைத்து, எதிர்காலத்தில் பாரிய இயற்கை அனர்த்தங்களை ஏற்படுத்தும் வாய்ப்பை அதிகரிக்கின்றன. சுற்றுச்சூழல் ரீதியாக பார்க்கின்றபோது, மன்னார் வகிபாகம் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தது. மிகப் பெறுமதியானது. யுனெஸ்கோவே அங்கீகாரத்தினையும் அளித்துள்ளது. இங்குள்ள சூழலியல் வளங்கள், இலங்கைக்கு வருகை தரும் இலட்சக்கணக்கான வெளிநாட்டு வலசைப் பறவைகளின் முக்கிய நுழைவாயிலாகவும், இனப்பெருக்க மையமாகவும் உள்ளன. வலசைப் பறவைகள் இலங்கையில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து, மீண்டும் குஞ்சுகளுடன் தமது நாட்டிற்குத் திரும்பிச் செல்லும் இந்த அரிய பறவைகளுக்கு, உயரமான காற்றாலை கோபுரங்களும் அவற்றின் சுழலும் இறக்கைகளும் நேரடியான அச்சுறுத்தலாக அமைகின்றன என்று சூழலியலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அத்துடன், காற்றாலைத் திட்டங்களுக்காக ஆயிரக்கணக்கான பனை மரங்கள் போன்ற இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது, உள்ளுர் இயற்கைக்குப் பேரிழப்பாக உள்ளது. இச்சூழலியல் பாதிப்புகளை முழுமையாக ஆராயும் ஒரு விரிவான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வெளிப்படையாக வெளியிடப்பட வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் தரப்பிலிருந்து வலுப்பெற்றுள்ளது. காற்றாலைகள் அமைக்கப்பட்டதன் சமூகப் பொருளாதார விளைவுகள் மன்னார் மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாகப் பாதித்துள்ளன. இப்பகுதி மக்கள் பிரதானமாக மீன்பிடித் தொழிலை நம்பி வாழ்கின்றனர். காற்றாலைகள் அமைக்கப்பட்ட பின்னர், முன்னர் இருந்ததைக் காட்டிலும் மீன்களின் வரத்து மிகக் குறைவாகி, தங்கள் வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டதாகக் கடற்தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், தாழ்வுபாடு போன்ற கிராமங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்கு மிக அருகில் காற்றாலைகள் அமைக்கப்பட்டிருப்பது, மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதித்துள்ளது. மேலும், நிலத்தில் நீர் தேங்கி நிற்கும் காலம் நீடித்துள்ளதால், மழைக்காலத்திற்குப் பிறகு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு கிராமப்புறங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதனால், சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மக்களின் எதிர்ப்பானது, திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முறைமை குறித்த தீவிரமான விமர்சனமாகவும் வெளிப்படுகிறது. மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசியப் பேரவை போன்ற அமைப்புகள், இத்தகைய பாரிய திட்டங்களால் ஏற்படும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, அது பகிரங்கப்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் முறையான கலந்துரையாடல் நடத்தப்படும் வரை அத்திட்டத்தை உடனடியாக இடைநிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன. மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியம், மக்களின் உணர்வுகளையும் பாதிப்புகளையும் புறக்கணித்து, அரசாங்கம் ஒருதலைப்பட்சமாகத் தீர்மானங்களை எடுப்பது 'ஜனநாயக முறைமைக்கு உகந்ததல்ல' என்றும், இது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது. இறுதி முடிவு எடுப்பதற்கு முன் தம்முடன் கலந்துரையாடியிருக்க வேண்டியது மக்களாட்சித் தத்துவத்தின் இலக்கணம் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். மக்களின் பங்கேற்பின்றித் திட்டங்களை முன்னெடுப்பது என்பது, கடந்தகால நிர்வாகங்களின் விலக்களிக்கப்பட்ட ஆட்சி வடிவத்தின் நீட்சியே என்றும், இது பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஏமாற்றத்தையும், ஆத்திரத்தையும் அதிகரித்துள்ளது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, மன்னார் மக்களின் கோரிக்கை, வெறும் காற்றாலைத் திட்டத்தை நிறுத்துவதல்ல. மாறாக, தங்கள் வாழ்வாதார உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஜனநாயக நடைமுறைகளுக்கு மதிப்பளித்து, ஒரு சமநிலையான தீர்மானத்தை எட்டுவதே ஆகும். கனிம மண் அகழ்வுத் திட்டத்தை நிறுத்துவது தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், மக்களின் கோபமும் வலியும் நியாயமானது என்பதைப் புரிந்து கொள்ள அரசு தவறுவதாகவே இந்தப் போராட்டங்கள் உணர்த்துகின்றன. எனவே, மன்னார் மக்களின் கோரிக்கை காற்றாலைத் திட்டத்தை முழுவதுமாக நிறுத்துவதல்ல் மாறாக தங்கள் வாழ்வையும், நிலத்தையும், இயற்கையையும் பாதுகாக்கும் வகையில் சமூக சமநீதி மற்றும் மக்கள் பங்கேற்புடன் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே ஆகும். ஆனால் இந்தநிலைப்பாட்டுக்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றதா என்று கேட்டால் இல்லை. அவர்களைப் பொறுத்தவரையில் தனியார் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு அமைவாக காற்றாலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது தான். இந்த செயற்றிட்டத்தினை இடைநிறுத்துவதென்ற எண்ணமே இல்லை. ஆனால் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய திட்டங்களை மீளப்பரிசீலிக்கலாம் என்றே தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாக இருந்தாலும், அரசாங்கம் ஆட்சிப்பீடம் ஏறுவதற்கு முன்னதாக தாங்கள் பதவிக்கு வந்தவுடன் மன்னார் காற்றாலைத்திட்டத்தினை நிறுத்துவோம் என்ற வாக்குறுதியை முழுமையாக மறந்துவிட்டது. அப்படியென்றால் ஒரேவழி வெகுஜனப் போராட்டம் தீவிரமயப்படுத்துவது தான். https://www.virakesari.lk/article/227070
  5. அபிஷேக் ஷர்மாவுக்கு பரிசாக வந்த 30 லட்ச ரூபாய் காரை இந்தியாவில் ஓட்ட முடியாது ஏன்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அபிஷேக் ஷர்மா ஆசிய கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரின் சிறந்த வீரர் விருதை வென்றார் கட்டுரை தகவல் பரத் ஷர்மா பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் போட்டிகள்: 7 ரன்கள்: 314 சராசரி: 44.85 ஸ்ட்ரைக் ரேட்: 200 அதிகபட்ச ஸ்கோர்: 75 பவுண்டரிகள்: 32 சிக்ஸர்கள்: 19 இது ஆசிய கோப்பை 2025-இல் அபிஷேக் ஷர்மாவின் சாதனையாகும். இறுதிப் போட்டியைத் தவிர, மற்ற அனைத்து போட்டிகளிலும் அவர் இந்திய அணிக்குச் சிறந்த தொடக்கத்தை அளித்தார். இதன் காரணமாக, அவருக்கு 'தொடரின் சிறந்த வீரர்' விருது கிடைத்தது. ஆனால், இன்று நாம் அவரைப் பற்றிப் பேசாமல், அவரது காரைப் பற்றிப் பேசுவோம். பரிசாக அவருக்கு ஒரு விலையுயர்ந்த கார் கிடைத்தது. துபையில் அந்தக் காருடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். ஆனால், அவரால் அந்தக் காரை இந்தியாவில் ஓட்ட முடியாது. ஆனால் ஏன் ஓட்டமுடியாது? ஏன் என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் முன், அது என்ன எஸ்.யு.வி (SUV) கார் என்று தெரிந்து கொள்வோம். ஆசிய கோப்பையின் தொடர் நாயகனுக்குக் கிடைத்த கார், ஹவால் ஹெச்9 (Haval H9) ஆகும். இதைச் சீனாவின் கிரேட் வால் மோட்டார் கம்பெனி தயாரித்துள்ளது. சீனச் சந்தையில் இதன் விலை சுமார் 29,000 முதல் 33,000 டாலர்கள் ஆகும். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய். ஆனால், அபிஷேக் ஷர்மாவால் இதை இந்தியாவுக்குக் கொண்டு வர முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்குக் காரணம், இந்தக் கார் இடது கை டிரைவ் (Left Hand Drive) ஆக இருப்பதுதான். அதாவது, இந்தக் காரில் ஸ்டீயரிங் இடது பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இது இந்தியச் சாலைகளில் ஓடும் வாகனங்களுக்கான விதிமுறைகளுக்கு இணங்கவில்லை. சில விதிவிலக்குகளைத் தவிர்த்து, இந்தியாவில் ஓடும் அனைத்து வாகனங்களிலும் ஸ்டீயரிங் வலது பக்கத்தில் இருக்கும். இது வலது கை ஸ்டீயரிங் கட்டுப்பாடு (Right Hand Steering Control - RHD) என்று அழைக்கப்படுகிறது. பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, ஆசிய கோப்பை 2025-இல் அபிஷேக் ஷர்மா சிறப்பாக பேட்டிங் செய்தார் அபிஷேக் நாடு திரும்பியுள்ளார், ஆனால் பரிசு கார் இன்னும் வரவில்லை என்ற செய்தி வந்தபோது ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர் என்கிறது நியூஸ் 24 செய்தி. இப்போது கேள்வி என்னவென்றால், ஏன் சில நாடுகளில் வாகனங்கள் வலது பக்கம் செல்கின்றன, சில நாடுகளில் இடது பக்கம் செல்கின்றன? மேலும், வாகனங்களில் ஸ்டீயரிங் வலது பக்கத்தில் இருக்குமா அல்லது இடது பக்கத்தில் இருக்குமா என்பது எப்படித் தீர்மானிக்கப்படுகிறது? எல்ஹெச்டி(LHT) மற்றும் ஆர்ஹெச்டி(RHT) என்றால் என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சாலையில் வாகனம் ஓட்ட நீங்கள் பல விதிகள் மற்றும் சட்டங்களைப் பின்பற்ற வேண்டும் (சித்தரிப்புப் படம்) முதலில், இந்தச் சொற்கள் என்னவென்று புரிந்து கொள்வோம். இடது கை போக்குவரத்து (Left Hand Traffic - LHT) மற்றும் வலது கை போக்குவரத்து (Right Hand Traffic - RHT) ஆகியவை இரு திசை போக்குவரத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகள். அதாவது, இரண்டு திசைகளிலும் போக்குவரத்து ஓடும் சாலையில், இந்த இரண்டு விதிகளில் ஒன்று நிச்சயம் இருக்கும். இதில், வாகனங்கள் சாலையின் இடது அல்லது வலது பக்கத்தில் ஓடுகின்றன. இது போக்குவரத்து ஓட்டத்திற்கு மிகவும் அவசியம். இது 'சாலையின் விதி' (Rule of the Road) என்றும் அழைக்கப்படுகிறது. வலது மற்றும் இடது கை டிரைவ் என்பது வாகனத்தில் ஓட்டுநர் மற்றும் ஸ்டீயரிங் சக்கரம் இருக்கும் நிலையை (Position) குறிக்கிறது. உதாரணமாக, இந்தியாவைப் போல் இடது கை போக்குவரத்து (LHT) உள்ள நாடுகளில், வாகனங்கள் வலது பக்கத்தில் முந்திச் செல்கின்றன. மறுபுறம், சீனா, ரஷ்யா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் ஓடும் கார்கள் வலது கை டிரைவ் (RHD) ஆகும். அதாவது, அங்குள்ள கார்களில் ஸ்டீயரிங் இடது பக்கத்தில் இருக்கும். இது இந்தியாவிற்கு நேர் எதிரானது. உலகில் ஒரே நேரத்தில் இடது கை டிரைவ் மற்றும் வலது கை டிரைவ் கார்களை அனுமதிக்கக்கூடிய நாடு எதுவும் நிச்சயமாக இல்லை. ஒரு நாட்டில் அனைத்துக் கார்களும் வலது கை டிரைவில் ஓடும்போது, ஒரு இடது கை டிரைவ் கார் குழப்பத்தை ஏற்படுத்தும், மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். இந்த விதி எங்கிருந்து வந்தது, எப்போது வந்தது? முதலில், இடது கை டிரைவ் மற்றும் வலது கை டிரைவ் எப்போது தொடங்கியது என்று தெரிந்து கொள்வோம். இதற்காக நாம் ரிவர்ஸ் கியரை போட்டு வரலாற்றிற்குச் செல்ல வேண்டும். வெவ்வேறு நாடுகளில் ஓட்டுநர் விதிகள் தீர்மானிக்கப்பட்ட தேதிகள் வேறுபட்டாலும், இந்த வரலாற்றில் பிரிட்டன் மற்றும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளன. ஆஸ்க்கார்குருவின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் அமித் காரே, "பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியபோது, அவர்களுடன் அவர்களது கார்கள் மட்டுமல்ல, கார் ஓட்டும் விதிகளும் பல்வேறு நாடுகளை அடைந்தன" என பிபிசி இந்தியிடம் தெரிவித்தார். "இதன் காரணமாக, பிரிட்டன் ஆட்சி செய்த பெரும்பாலான நாடுகளில் இன்றும் இடது கை போக்குவரத்து (LHT) உள்ளது. அதாவது, அங்கு வலது கை டிரைவ் (RHD) உள்ளது. இதன் பொருள், காரின் ஸ்டீயரிங் வலது பக்கத்தில் இருக்கும். இடதுபுறத்தில் இல்லை. ஹாங்காங், இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தாய்லாந்து, இந்தோனீசியா அல்லது பிரிட்டனில்கூட இதுதான் நிலை," என காரே தெரிவித்தார். "பிரிட்டிஷார் இருந்திராத உலகின் பல நாடுகளில் வலது கை போக்குவரத்து (RHT) உள்ளது. அதாவது, காரின் ஸ்டீயரிங் இடது பக்கத்தில் இருக்கும். அதாவது, இந்தியாவில் ஓடும் கார்களுடன் ஒப்பிடும்போது, சரியாக நேர் எதிர்ப்புறத்தில்," என்று அவர் மேலும் கூறுகிறார். ஸ்டீயரிங் கட்டுப்பாடு குறித்து விதிகள் என்ன சொல்கின்றன? மோட்டார் வாகனச் சட்டம் 1988-இன் அத்தியாயம் ஏழு, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மோட்டார் வாகனமும் வலது கை ஸ்டீயரிங் கட்டுப்பாட்டுடன் தயாரிக்கப்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறுகிறது. இதன் பிரிவு 120-இல், 'குறிப்பிட்ட தன்மை கொண்ட' இயந்திர அல்லது மின் சமிக்ஞை சாதனம் (Mechanical or Electrical Signalling Device) வேலை செய்யும் நிலையில் இருந்தால் தவிர, இடது கை ஸ்டீயரிங் கட்டுப்பாட்டுடன் கூடிய வாகனத்தை பொது இடங்களில் இயக்க யாருக்கும் அனுமதி இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இடது கை ஸ்டீயரிங் கட்டுப்பாட்டுடன் கூடிய வாகனங்கள் ஓடவில்லையா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பல நாடுகளில் வாகனங்கள் இடது கை ஸ்டீயரிங் கட்டுப்பாட்டுடன் ஓடுகின்றன. இடது கை ஸ்டீயரிங் கட்டுப்பாட்டுடன் கூடிய வாகனம் தற்போது இந்தியச் சாலையில் ஓடவில்லை என்று கூறுவது தவறாக இருக்கலாம். ஏனெனில், இந்திய அரசு சில விதிவிலக்குகளுக்கு அனுமதி அளிக்கிறது. ஒரு வெளிநாட்டு அல்லது உள்நாட்டு நிறுவனம் ஆய்வு மற்றும் மேம்பாட்டுக்காக (R&D) இடது கை டிரைவ் யூனிட்டை இந்தியாவிற்குக் கொண்டு வர விரும்பினால், அதுகுறித்து அரசிடம் அனுமதி கேட்கலாம், அதற்கு அனுமதியும் வழங்கப்படுகிறது என்றுஇந்துஸ்தான் டைம்ஸ் ஆட்டோவின் செய்தி தெரிவிக்கிறது. மேலும், அமெரிக்கா போன்ற பல நாடுகளில் இடது கை ஸ்டீயரிங் கட்டுப்பாடுள்ள கார்கள் ஓடுகின்றன. அமெரிக்க அதிபர் அல்லது வேறு எந்த உயர்நிலை தலைவரும் இந்தியாவிற்கு வரும்போது, அவர்களுடன் அவர்களது கார் பாதுகாப்பு வாகனங்களும் வருகின்றன. இந்தக் கார்கள் இடது கை டிரைவ் ஆகும். அத்தகைய சூழ்நிலையில், இந்தக் கார்கள் சாலைகளில் செல்லும் போது சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இது தவிர, சில பழங்காலக் (Vintage) கார்களும் உள்ளன, அவை சிறப்புச் சந்தர்ப்பங்களில் காட்சிப்படுத்தப்படுகின்றன. அவற்றில் சில இடது கை டிரைவ் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளன. கடந்த காலத்தில், இத்தகைய பல கார்கள் இந்தியாவில் உள்ள பழைய அரச குடும்பத்தினரிடம் இருந்தன. "இந்தியாவில் நீங்கள் இடது கை ஸ்டீயரிங் கட்டுப்பாட்டு வாகனத்தை ஓட்ட முடியாது என்று அர்த்தமல்ல. நீங்கள் ஓட்டலாம், ஆனால் அதற்காக நீங்கள் சிறப்பு அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதி வரையறுக்கப்பட்ட நேரத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது, நிரந்தரமாக அல்ல," என்று காரே பிபிசி-யிடம் தெரிவித்தார். "இடது கை டிரைவ் கொண்ட சில பழைய கார்கள் இன்றும் இந்தியாவில் உள்ளன, ஆனால் அவை சிறப்புச் சந்தர்ப்பங்களில் மட்டுமே வெளியே எடுக்கப்படுகின்றன அல்லது ஓட்டப்படுகின்றன," என்று அவர் கூறினார். காரேயின் கூற்றுப்படி, சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு வந்த ஆஸ்டன் மார்ட்டின் (Aston Martin) அல்லது மோரிஸ் (Morris) போன்ற கார்கள் அனைத்தும் வலது கை டிரைவ் ஆகும், இன்றும் இந்தியாவில் உள்ள பெரும்பாலான கார்கள் அப்படித்தான் இருக்கின்றன. மறுபுறம், அமெரிக்கா அல்லது ஜெர்மனியிலிருந்து வந்த கார்களின் ஸ்டீயரிங் கட்டுப்பாடு இடதுபுறத்தில் இருந்தது. நிறுவனங்கள் ஒரே மாதிரியான கார்களைத் தயாரிக்கின்றனவா, இரண்டு வகைகளையும் தயாரிக்கின்றனவா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பல பயணிகள் இடது பக்கத்தில் ஸ்டீயரிங் கட்டுப்பாடுள்ள கார்களில் வருகிறார்கள் சர்வதேசச் சந்தையில் தங்கள் தயாரிப்புகளை கொண்டு சேர்க்க, உலகின் அனைத்துப் பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இடது கை டிரைவ் (LHD) மற்றும் வலது கை டிரைவ் (RHD) ஆகிய இரண்டு வகைக் கட்டமைப்புகளுடன் கார்களைத் தயாரிக்கின்றன. போக்ஸ்வேகன் குழுமம், பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற ஐரோப்பிய நிறுவனங்களும், ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற வட அமெரிக்க நிறுவனங்களும் இதில் அடங்கும். இப்போது ஹோண்டா, ஹூண்டாய், மாஸ்டா, டொயோட்டா, நிஸ்ஸான் போன்ற ஆசிய கார் நிறுவனங்களும் இரண்டு வகைகளில் கார்களைத் தயாரிக்கின்றன. இந்திய நிறுவனங்களும் இதைச் செய்கின்றன. "கார் நிறுவனங்கள் உலகளாவிய சந்தைக்காக ஒரு காரை வடிவமைக்கும்போது, இரண்டு வகையான சந்தைகளிலும் கவனம் செலுத்துகின்றன. இதனால், அவர்கள் தங்கள் கார்களை வலது கை டிரைவ் மற்றும் இடது கை டிரைவ் என இரண்டு வகையான சந்தைகளுக்கும் வழங்க முடியும்" என்று அவர் கூறினார். அடுத்த முறை கார் ஓட்ட அமரும்போது, ஸ்டீயரிங் இருக்கும் இடத்தில் இல்லாமல், அருகில் உள்ள இருக்கைக்கு முன்னால் இருந்தால் எப்படி உணருவீர்கள் என்று சற்று யோசித்துப் பாருங்கள்! இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdxq08x58nyo
  6. Published By: Vishnu 07 Oct, 2025 | 09:35 PM இஸ்ரேலின் வரலாற்றில் மிகவும் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலாகக் கருதப்படும் 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் நடத்திய தாக்குதலின் இரண்டாவது ஆண்டு நிறைவு செவ்வாய்க்கிழமை (ஒக்டோபர் 7, 2025) அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. இந்தத் தாக்குதலில் 46 அமெரிக்கர்கள் உட்பட 1,200 க்கும் மேற்பட்ட அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அன்றைய தினம் ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்ட 254 பேரில், 12 அமெரிக்கர்களும் அடங்குவர். இன்றுவரை, அமெரிக்க குடிமக்களான இத்தாய் சென் மற்றும் ஓமர் நியூட்ரா ஆகியோரின் உடல்கள் உட்பட மொத்தம் 48 பணயக் கைதிகள் ஹமாஸின் பிடியில் உள்ளனர். இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் அசைக்க முடியாத ஆதரவு இந்தத் துயரமான ஆண்டு நிறைவைக் குறிக்கும் வேளையில், இஸ்ரேலின் இருப்புக்கும், தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கும், அதன் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் உள்ள உரிமையை அமெரிக்கா மீண்டும் உறுதிப்படுத்துகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இதுபோன்ற தீய சக்திகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான தமது உறுதியை அமெரிக்கா புதுப்பித்துள்ளது. டிரம்ப்பின் 20 அம்சத் திட்டம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களின் தலைமையில், அனைத்துப் பணயக் கைதிகளையும் விடுவிப்பதற்கும், காசாவில் ஹமாஸின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், இஸ்ரேலின் பாதுகாப்புக்கு மட்டுமல்லாமல், பிராந்தியத்தின் தலைமுறை அமைதி மற்றும் செழுமையை உறுதிப்படுத்தும் நீடித்த அமைதியை முன்னெடுத்துச் செல்வதற்கும் அமெரிக்கா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பயங்கரவாதம் இல்லாத எதிர்காலம், ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு என்ற தொலைநோக்குப் பார்வை, அதிபரின் 20 அம்சத் திட்டத்தின் மையமாக உள்ளது. (இந்தத் திட்டத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆதரவளித்துள்ள நிலையில், ஹமாஸ் அமைப்பு இதனைப் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.) யூத - எதிர்ப்புவாதத்திற்கு எதிரான கண்டனம் 2023 அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு, உலகளவில் யூத சமூகங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் யூத-எதிர்ப்புவாதம் (Antisemitism) troublingly அதிகரித்துள்ளது என்பதையும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. யூத-எதிர்ப்புவாதத்துடன் எந்த சமரசத்திற்கும் இடமில்லை என்று டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேலுக்கு எதிரான அனைத்து பயங்கரவாத மற்றும் யூத-எதிர்ப்புவாத நடவடிக்கைகளையும் அமெரிக்கா தொடர்ந்து கண்டிக்கிறது. இந்த வேதனையான ஆண்டு நிறைவின்போது இஸ்ரேலுடன் துணை நிற்க உலக சமூகம் முன்வர வேண்டும் என்றும் அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/227164
  7. உத்தர பிரதேசத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த ஒருவர், தன்னுடைய மனைவி இரவில் பாம்பாக மாறுவதாகவும், தன்னை கடித்துக் கொல்ல பல முறை முயற்சித்ததாகவும் முறைப்பாடு அளித்த சம்பவம் அதிர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, அவரது முறைப்பாடு குறித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர். உத்தர பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தில், சமதான் திவாஸ், அதாவது பொதுமக்கள் குறை தீர்க்கும் நாளின் போது, வழக்கமாக மின்சாரம், சாலைகள், ரேஷன் கார்டுகள் உள்ளிட்டவைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்த முறைப்பாடுகளை மக்கள் மாவட்ட நீதிபதியிடம் கொண்டு வருவார்கள். அந்த வகையில், சமீபத்தில் நடந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த மஹ்மூதாபாத் பகுதியில் உள்ள லோத்சா கிராமத்தில் வசிக்கும் மீராஜ் என்பவர், "ஐயா, என் மனைவி நசீமுன் இரவில் பாம்பாக மாறி என்னைக் கடிக்க என் பின்னால் ஓடுகிறாள்" என்று கூறி முறைப்பாடு அளித்தார். தனது மனைவி பலமுறை தன்னைக் கொல்ல முயன்றதாகவும், ஆனால், ஒவ்வொரு முறையும் தாக்குதலைத் தடுக்க சரியான நேரத்தில் தான் விழித்தெழுந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். "என் மனைவி என்னை மனரீதியாக சித்திரவதை செய்கிறாள், நான் தூங்கும்போது எந்த இரவில் வேண்டுமானாலும் என்னைக் கொல்லக்கூடும்" என்றும் அவர் புலம்பியுள்ளார். இந்நிலையில், அந்த முறைப்பாடு குறித்த விசாரணைக்கு மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார். துணைப்பிரிவு நீதிபதி மற்றும் பொலிஸார் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க அவர் அறிவுறுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து, ஒரு வேளை இது மனரீதியான துன்புறுத்தலாக இருக்கலாம் என்று கருதி, பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmggkdufl00vuo29n76dlza0z
  8. 07 Oct, 2025 | 01:59 PM உதவித் தொகை வழங்கும் அமைப்பாக அன்றி நாட்டின் அபிவிருத்திக்கு உதவும் ஒரு அமைப்பாக சமுர்த்தி அதிகார சபையை உருவாக்க வேண்டும் என்று சமுர்த்தியுடன் தொடர்புடைய தொழிற் சங்கங்கள் தெரிவிக்கின்றன. கண்டியில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது சமுர்த்தி தொழிற் சங்க சேவையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கீர்த்தி பண்டார கிவுல்தெனிய இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னைய ஆட்சியாளர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் சமுர்த்தி அதிகார சபையை வங்குரோத்து நிலைக்கு தள்ளினர். கடந்த ஆட்சி காலத்திலும் ஐ.எம்.எப் இன் நலனில் நாட்டம் காட்டிய அவர்கள் சமுர்த்தி அதிகார சபையை கலைக்கும் நிலைக்கு வழிகாட்டினர் என்றார். அகில இலங்கை முற்போக்கு சமுர்த்தி முகாமையாளர் சங்கத்தின் பிரதான செயலாளர் டப்ளியூ ஜோதிரத்ன தெரிவித்ததாவது, 1995ம் ஆண்டு பொது பெரமுன டே்சியின் பொது சமுர்த்தி அதிகார சபை உருவாக்கப்பட்டது. உண்மையான சமுர்த்தி என்பது உதவித் தொகை அல்லது சகாய நிதி வழங்கும் ஒரு அறக்கட்டளை அல்ல. அது வருமையை ஒழிக்கும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களில் ஒன்றாகவே அறிமுகப்படுத்தப்பட்டது. காலத்திற்குக் காலம் அது மாற்றங்களுக்கு உற்பட்டு பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வந்துள்ளன. இது வறுமையை ஒழிக்கும் அபிவிருத்திப் பணிகளுக்கு வழி நடத்தும் ஒரு அமைப்பாக அதனை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், இன்று சமுர்த்தி துறையானது பல துறைகளாக பிரிந்து கொண்டு போகிறது. குறிப்பாக ‘அஸ்வெஸும’ என்ற முறையற்ற ஒரு திட்டம் காரணமாக அது பல்வேறு நிர்பந்தங்களுக்கு ஆளாகி வந்தது என்றார். எனவே சமுர்த்தி அமைப்பை பாதுகாத்து நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிக்கும் ஒரு அமைப்பாக அதனை புனரமைக்க அதிகாரிகளும் அரசும் முன்வர யவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். https://www.virakesari.lk/article/227114
  9. இலங்கையின் சமீபத்திய பொருளாதார செயல்திறன் வலுவாக இருந்த போதிலும், மீட்சி இன்னும் முழுமையடையாமல் இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது இன்னும் நெருக்கடிக்கு முந்தைய நிலையை அடையவில்லை என்பதுடன் கணிசமாக வறுமையும் உயர்ந்துள்ளதாக உலக வங்கி விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மீட்சியை வலுப்படுத்துவதற்கு தொடர்ச்சியான பாரிய பொருளாதார ஸ்திரத்தன்மை, அவசர கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் பொது செலவினம் தொடர்பான சிறந்த இலக்கு என்பன தேவைப்படும் என உலக வங்கி கூறியுள்ளது. இலங்கை பொருளாதாரமானது 2025 ஆம் ஆண்டில் தொழில்துறையின் வளர்ச்சியினால் 4.6 சதவீதமாக வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மை காரணமாக 2026 ஆம் ஆண்டு இலங்கை பொருளாதாரமானது 3.5 சதவீதமாக குறைவடையும் எனவும் உலக வங்கி கணித்துள்ளது. இலங்கையின் பொருளாதாரம் இன்னும் 2018 அளவை விடக் குறைவாகவே உள்ளது. வறுமை குறைந்து வந்தாலும், 2019 ஐ விட இரு மடங்கு அதிகமாகவே உள்ளது. தொழிலாளர் சந்தை மீள்வது மெதுவாக உள்ளது மேலும் பல குடும்பங்கள் நெருக்கடியின் போது இழந்த வாழ்வாதாரங்களை இன்னும் மீட்டெடுக்கவில்லை. சனத்தொகையில் 10 சதவீதம் பேர் வறுமைக் கோட்டிற்கு சற்று மேலே வாழ்கின்றனர். மேலும் ஊட்டச்சத்து குறைபாடு ஒரு தீவிரமான பிரச்சினையாகவே உள்ளது. நீண்டகால வளர்ச்சியை ஆதரிப்பதற்கும், நிதிக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் வறுமையைக் குறைப்பதற்கும், தனியார் துறை தலைமையிலான வளர்ச்சியை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பரந்த சீர்திருத்தத்தை வலியுறுத்தியுள்ளது. முக்கிய முன்னுரிமைகளில் வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான தடைகளைத் தளர்த்துவது, வணிகச் சூழலை மேம்படுத்துவது மற்றும் நிலம் மற்றும் தொழிலாளர் சந்தைகளை நிர்வகிக்கும் வரி நிர்வாகம் மற்றும் ஒழுங்குமுறைகளை நவீனமயமாக்குவது என்பன அவற்றில் முக்கியமானதாகும் என உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmggabvq600vgo29naafgfem0
  10. வடமாகாண சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பில் உரிய வகையில் தேடுதல் ஆணை இல்லாது பொலிஸாரால் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வட மாகாண சட்டத்தரணிகள் இன்று (7) ஒருநாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா உள்ளிட்ட மாவட்டங்களை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணிகள் இணைந்து போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்துள்ளனர். இந்தப் போராட்டமானது யாழ்ப்பணத்தில் உள்ள நீதிமன்ற வளாகம் முன்னிலையில் இன்று காலை (07) ஆரம்பமானது. இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmgg8e8rn00uwqplp60eq8khr
  11. எவரெஸ்ட் பனிப்புயலில் சிக்கி ஒருவர் பலி ; 137 பேர் பத்திரமாக மீட்பு Published By: Digital Desk 3 07 Oct, 2025 | 02:40 PM உலகின் மிக உயரமான மலைப்பகுதியான எவரெஸ்ட் மலை சரிவுகளில் பனிப்புயல் நிலவி வருகிறது. இந்த மலைச்சரிவுகளில் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் முகாம்களை அமைத்து தங்கியிருந்த நிலையில் இந்த பனிப்புயல் ஏற்பட்டுள்ளது. இந்த பனிப்புயலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கினர். இந்நிலையில் பனிப்புயலில் சிக்கி சீனாவை சேர்ந்த 41 வயது மலையேற்ற வீரர் உயிரிழந்தார். இதுவரை 137 பேர் மீட்கப்பட்டனர். எவரெஸ்ட் பனிப்புயலில் சிக்கி தவித்து வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. https://www.virakesari.lk/article/227120
  12. முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாத உரிமைச் சட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், அவர்களது பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகள் கருத்திற்கொள்ளப்படமாட்டாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று (7) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். சில முன்னாள் ஜனாதிபதிகள் தங்கள் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்திய வாகனங்களை தற்போது ஒப்படைத்துள்ளனர். எனினும் அது அந்த சட்டத்தில் உள்வாங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதால், வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிற விடயங்கள் தொடர்பாக ஏதேனும் கோரிக்கை விடுக்கப்பட்டால், அது குறித்து நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் கூறினார். https://adaderanatamil.lk/news/cmgg7ozar00utqplpzcgwqiha
  13. ஜெனிவா தீர்மானத்தை நிராகரித்த இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான 60/L.1/Rev.1 தீர்மானம் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நேற்று (6) ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் வாக்கெடுப்பு இல்லாமல் இந்தத் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. இலங்கையில் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் (OHCHR) அலுவலகத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் திருத்தப்பட்ட ஐ.நா. தீர்மானத்திற்கு 22 நாடுகள் இணை அனுசரணை வழங்கி கையெழுத்திட்டுள்ளன. குறித்த புதுப்பிக்கப்பட்ட வரைவு கடந்த ஒக்டோபர் 1 ஆம் திகதியன்று ஜெனீவாவில் முன்வைக்கப்பட்டது. தீர்மானத்தின் முக்கிய அனுசரணையாளர்களாக பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியா உள்ளிட்ட நாடுகள் காணப்படுகின்றன. இந்நிலையில் குறித்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அதனை நிராகரிப்பதாகவும் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் காரணமாக நாட்டில் மனித உரிமைகள் உறுதி செய்யப்பட்டு வருவதுடன், இனங்களுக்கு இடையேயான நல்லிணக்கமும் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது. மிகக் குறுகிய காலத்திற்குள், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் குறித்து அரசாங்கம் தொடர்ச்சியான உறுதியான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எனவே, உள்நாட்டு செயல்முறைகள் மூலம் தனது சொந்த மக்களின் உரிமைகளை முன்னேற்ற இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது. அத்துடன் இலங்கையில் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் (OHCHR) அலுவலகத்திற்கு கடந்த 4 வருடங்களில் அதிகாரம் வழங்கப்பட்டிருந்த போதிலும் அதனால் இலங்கை மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை என்பதை உயர் ஸ்தானிகரின் அறிக்கையிலும் தௌிவாகின்றது. இதன் அதிகாரத்தை நீடிப்பதால் இலங்கையில் உள்ள சமூகங்கள் பிளவுபடுவதற்கும் சுயநலன்களுக்குமான வாய்ப்பை உருவாக்கும். அதேபோன்று ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இலங்கை அரசாங்கம் குறித்த தீர்மானத்தை நிராகரிப்பதாக அறிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmgg5ycm300uqqplp5ic43eti
  14. 2025ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு Published By: Digital Desk 3 07 Oct, 2025 | 10:40 AM 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுவோர் விவரங்கள் திங்கட்கிழமை முதல் அறிவிக்கப்படுகின்றன. உலக அளவில் மருத்துவம், பௌதிகவியல், இரசாயனவியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் பணப்பரிசு அடங்கியது. இந்த ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புற நோயெதிர்ப்பு சகிப்புத்தன்மை தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக மேரி இ. பிரன்கோவ், பிரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஷிமோன் சகாகுச்சி ஆகியோருக்கு 2025-ம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/227086
  15. A Message From Dr. Jane Goodall | Famous Last Words Jane Goodall: An Inside Look (Full Documentary) | National Geographic
  16. அததெரண கருத்துப் படம்.
  17. புதிய பிரேரணையை ஆதரித்தும், எதிர்த்தும் கருத்துக்களை வெளியிட்ட உறுப்புநாடுகள் 07 Oct, 2025 | 09:12 AM (நா.தனுஜா) இணையனுசரணை நாடுகளினால் சமர்ப்பிக்கப்பட்ட புதிய பிரேரணையின் ஊடாக இலங்கை தொடர்பில் பேரவையும், உயர்ஸ்தானிகர் அலுவலகமும் கொண்டிருக்கும் ஆணை காலநீடிப்பு செய்யப்படுவது பற்றி உறுப்புநாடுகள் சில வரவேற்பு வெளியிட்ட அதேவேளை, மேலும் சில நாடுகள் இலங்கையின் இறையாண்மைக்கு மதிப்பளித்து அந்நாட்டின் உள்ளக விவகாரங்களில் பேரவை தலையிடக்கூடாது என வலியுறுத்தின. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரின்போது நிறைவேற்றும் நோக்கில் பிரிட்டன் தலைமையில் கனடா, மாலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்ட 60/L1/Rev.1 எனும் புதிய பிரேரணை, நேற்று திங்கட்கிழமை (6) பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. இதன்போது புதிய பிரேரணை தொடர்பில் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளால் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் வருமாறு: சீனா மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதற்கு இலங்கையினால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருக்கின்றோம். அதேவேளை சம்பந்தப்பட்ட நாட்டின் ஒப்புதலுக்கு விரோதமாக நிறைவேற்றப்படும் பிரேரணைகளை நாம் நிராகரிக்கின்றோம். இப்பிரேரணையின் பிரகாரம் இலங்கை தொடர்பான ஆணையை மேலும் காலநீடிப்பு செய்வதன் ஊடாக எந்தவொரு பெறுபேறும் கிட்டாது. எனவே இலங்கையின் முன்னுரிமைக்குரிய விடயங்களின் அடிப்படையில் மனித உரிமைகள் பேரவை செயற்படவேண்டும். கொரியா இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றத்தை வரவேற்கின்றோம். இம்முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும் அதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை என்பவற்றுடனான ஒத்துழைப்பைத் தொடர்ந்து பேணுமாறு வலியுறுத்துகின்றோம். ஜப்பான் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதற்கும், தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும் அரசாங்கத்தின் முயற்சிகள் இன்றியமையாதனவாகும். அதன்பிரகாரம் உயர்ஸ்தானிகரின் விஜயத்துக்கு அனுமதி அளித்தமையைப் பாராட்டுகின்றோம். எதியோப்பியா இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்தல் என்ற இலக்கினை அடைந்துகொள்வதற்கான முயற்சிகளின்போது அந்நாட்டின் இறையாண்மைக்கு மதிப்பளித்தல் மற்றும் அதன் உள்ளக விவகாரங்களில் தலையிடாதிருத்தல் ஆகிய கொள்கைகள் உரியவாறு பேணப்படவேண்டும். அதன்படி இலங்கையின் விருப்பத்துக்கு முரணான வகையில் வெளியகப்பொறிமுறை மேலும் காலநீடிப்பு செய்யப்படுவது குறித்து எமது கரிசனையை வெளிப்படுத்துகின்றோம். https://www.virakesari.lk/article/227077
  18. சாலையில் சென்ற வாகனங்களை துரத்திய யானைகள்
  19. கர்ப்பிணிக் கரடியை காப்பாற்றிய வனத்துறை தொல்லியல் கண்டுபிடிப்புகளுக்கு உதவிய கண்டுபிடிப்பு - கார்பன் டேட்டிங் இராவணனிடம் அடிவாங்கும் குஜராத் மக்கள்
  20. 'தமிழ்நாடு ஒரே நாளில் கண்டுபிடிக்கையில் இங்கு ஏன் தாமதம்?' - ம.பி.யை உலுக்கும் இருமல் மருந்து சர்ச்சை படக்குறிப்பு, கடந்த ஒரு மாதத்தில் மத்திய பிரதேசம் சிந்த்வாரா பகுதியில் 11 குழந்தைகள் இறந்துள்ளனர், இறந்த அட்னன் எனும் குழந்தையின் பெற்றோர் கட்டுரை தகவல் விஷ்னுகாந்த் திவாரி பிபிசி செய்தியாளர், போபால் 6 அக்டோபர் 2025, 07:59 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த ஒரு மாதத்தில் மத்திய பிரதேசம் சிந்த்வாரா பகுதியில் 11 குழந்தைகளும் ராஜஸ்தானில் மூன்று குழந்தைகளும் இறந்தநிலையில், குழந்தைகளின் நலன் குறித்து இரு மாநிலங்களிலும் கேள்விகள் எழுந்துள்ளன. இருமல் மருந்தை குடித்த பிறகே குழந்தைகளின் உடல்நிலை மோசமடைந்ததாகவும் அதனால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை என்றும் இக்குழந்தைகளின் பெற்றோர் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கோல்ட்ரிஃப் (Coldrif) எனும் இருமல் மருந்தை மத்திய பிரதேச மருந்து கட்டுப்பாட்டு துறை சனிக்கிழமை தடை செய்தது. சனிக்கிழமை இரவு, அரசு மருத்துவர் பிரவீன் சோனி, இந்த இருமல் மருந்தை தயாரித்த ஸ்ரீசன் மருந்து நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் இதற்கு பொறுப்பானவர்கள் மீது காவல் துறை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. பாரசியா (Parasia) பகுதி மருத்துவ அதிகாரி அங்கில் சஹ்லம் அளித்த புகார் தொடர்பாக அக்டோபர் 5-ஆம் தேதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின்படி, இறந்த 11 குழந்தைகளில் 10 குழந்தைகள் பாரசியா பகுதியை சேர்ந்தவர்களாவர், இங்குதான் மருத்துவர் பிரவீன் சோனி அரசு குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்த இறப்புகளை தொடர்ந்து, மத்திய பிரதேச அரசு இதுகுறித்து அக்டோபர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியது, அதில் இந்த மருந்தை தயாரித்த நிறுவனத்திற்கு எதிராக விசாரணை நடத்துமாறு கேட்டுக்கொண்டது. இதையடுத்து, தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறை மேற்கொண்ட நடவடிக்கையில் ஸ்ரீசன் மருந்து நிறுவனம் தயாரித்த கோல்ட்ரிஃப் இருமல் மருந்தில் "கலப்படம்" செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறை அக்டோபர் 2-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையின்படி, கோல்ட்ரிஃப் மருந்தின் SR-13 எனும் தொகுதியில் (batch) 'கலப்படம்' இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, இந்த மருந்தில் 48.6% டைஎத்திலீன் கிளைக்கால் (diethylene glyco) உள்ளது, இது உடல்நலனுக்கு ஆபத்தை ஏற்படுத்தவல்ல நச்சு ரசாயனமாகும். மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் தன் எக்ஸ் பக்கத்தில், "சிந்த்வாரா பகுதியில் கோல்ட்ரிஃப் மருந்தால் குழந்தைகள் இறந்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. மத்திய பிரதேசம் முழுவதும் இந்த மருந்தின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் மற்ற மருந்துகளும் தடை செய்யப்பட்டுள்ளன" என பதிவிட்டுள்ளார். சிந்த்வாரா மாவட்ட மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் பவன் நந்தர்கர். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பெரும்பாலான குழந்தைகள் சிறுநீரக பாதிப்பால் இறந்துள்ளனர். சிறுநீரக பயாப்ஸி (சிறுநீரகத்திலிருந்து சிறு திசுவை எடுத்து பரிசோதிப்பது) செய்து பரிசோதித்தபோது, ஒருவித நச்சு ரசாயனத்தால், சிறுநீரகம் பாதிப்படைந்து, செயலிழந்ததால் குழந்தைகள் இறந்துள்ளனர். இந்த குழந்தைகளுக்கு இருமல் மருந்து வழங்கப்பட்டுள்ளதும் அவர்களின் முந்தைய மருத்துவப் பதிவுகளிலிருந்து தெரியவந்தது." என்றார். சிந்த்வாரா மாவட்டத்தை சேர்ந்த யாசின் கானின் நான்கு வயது மகன் உசைத் இப்போது இந்த உலகத்தில் இல்லை. தொலைபேசி வாயிலாக அவர் பிபிசியிடம் பேசுகையில், "என்னால் எதையும் யோசிக்க முடியவில்லை. ஆக. 25 அன்று என் மகனுக்கு முதலில் லேசான இருமல், சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது. செப். 13 அன்று என் மகன் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்தான். எனக்கு எல்லாமுமாக இருந்த என் மகன் போய்விட்டான்." என்றார். மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் சிறுநீரக செயலிழப்பால் செப்டம்பர் 7 முதல் அக்டோபர் 2 வரை 11 குழந்தைகள் உயிரிழந்தன. குறைந்தது 5 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களுள் சிலரின் உடல்நிலை மோசமாக உள்ளது. படக்குறிப்பு, மருத்துவர் ஹர்ஷிதா ஷர்மா ராஜஸ்தானிலும் குழந்தைகள் இறப்பு மத்திய பிரதேசத்திற்கு அருகில் உள்ள ராஜஸ்தானின் பாரத்பூர் மற்றும் ஜுஞ்சுனூ மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனையில் இருமல் மருந்து குடித்ததால் இரு குழந்தைகள் உயிரிழந்தனர் என தகவல் வெளியானது. சனிக்கிழமை சுரு மாவட்டத்திலும் மற்றொரு குழந்தை ஒன்று இறந்துள்ளது. இருமல் மருந்து குடித்ததாலேயே தங்கள் குழந்தைகள் இறந்ததாக பெற்றோர்கள் கூறுகின்றனர். சுரு மாவட்டத்தை சேர்ந்த ஆறு வயது சிறுவன், ஜெய்ப்பூரில் உள்ள ஜேகே லான் மருத்துவமனையில் உயிரிழந்தார். அச்சிறுவனுக்கு நான்கு தினங்களுக்கு முன்பாக இருமல் மருந்து கொடுத்ததாகவும், அதையடுத்து உடல்நிலை மோசமானதால் ஜெய்ப்பூர் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டதாகவும் குடும்பத்தினர் கூறுகின்றனர். அதேபோன்று, பாரத்பூரை சேர்ந்த இரண்டு வயது குழந்தையும் ஜெய்ப்பூர் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், மூன்று தினங்கள் கழித்து உயிரிழந்தது. ஜுஞ்சுனூ மாவட்டத்தை சேர்ந்த ஐந்து வயது குழந்தை, சிகாரில் உள்ள மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. மத்திய பிரதேச மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி தினேஷ் குமார் மௌரியா பிபிசி இந்தியிடம் கூறுகையில், "மத்திய மருந்து பரிசோதனை முகமையுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். 12 மாதிரிகளை நாங்கள் சேகரித்துள்ளோம், அதேபோன்று, மத்திய மருந்து பரிசோதனை முகமையும் ஆறு மாதிரிகளை பரிசோதித்துள்ளது. எங்களின் மூன்று மாதிரிகளிலும் மத்திய மருந்து பரிசோதனை ஆய்வகத்தின் ஆறு மாதிரிகளிலும் இதுவரை டைஎத்திலீன் கிளைக்கால் மற்றும் எத்திலீன் கிளைக்கால் ஆகியவை கண்டறியப்படவில்லை. மீதமுள்ள மாதிரிகளை பரிசோதித்து வருகிறோம்." என்றார். குழந்தைகள் இறப்பை தொடர்ந்து கேள்விகள் எழுந்த நிலையில், மத்திய பிரதேச சுகாதார துறை அமைச்சர் ராஜேந்திர சுக்லா வெள்ளிக்கிழமை மதியம் கூறுகையில், "இதுவரை 12 மாதிரிகள் மாநில மருந்து பரிசோதனை ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. இதில், மூன்று பரிசோதனை முடிவுகள் கிடைத்துள்ளன, அதன்படி எவ்வித ரசாயனமும் கண்டறியப்படவில்லை." என்றார். இருமல் மருந்தால் குழந்தைகள் இறந்தது குறித்து பேசிய ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் கஜேந்திர சிங் கின்வ்சர், " நாங்கள் மருந்தை பரிசோதித்தோம், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் எதுவும் அதில் கண்டறியப்படவில்லை. இந்த மருந்தால் எந்த இறப்பும் நிகழவில்லை. இதுகுறித்து விசாரிக்க குழு அமைத்துள்ளோம்" என்றார். இதனிடையே, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் குழந்தைகளின் இறப்புகளை தொடர்ந்து மத்திய சுகாதார சேவைகள் பொது இயக்குநரகம் (DGHS) "ஆலோசனைப்படியே" இருமல் மருந்துகள் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட வேண்டும் என, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. படக்குறிப்பு, குழந்தை விகாஸின் தந்தை பிரபுதயாள் யாதவ் தன் குழந்தையின் இறப்புக்கு நீதி கோருகிறார் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது எப்படி? சிந்த்வாரா மாவட்ட நிர்வாகத்தின்படி, இதுதொடர்பான முதல் பாதிப்பு ஆகஸ்ட் 24 அன்று பதிவாகியுள்ளது, செப்டம்பர் 7 அன்று முதல் மரணம் நிகழ்ந்துள்ளது. யாசின் கூறுகையில், தன்னுடைய நான்கு வயது மகன் உசைத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக தெரிவித்தார். அவர் கூறுகையில் "ஆகஸ்ட் 25ஆம் தேதி என் மகனின் உடல்நிலை மோசமானதால், அவனை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆக.31 வரை அவனுடைய உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் இருந்தது, ஆனால் பின்னர் அவனுக்கு சிறுநீர் வெளியேறுவது நின்றுவிட்டது. இது இரு நாட்கள் தொடர்ந்தது, இதையடுத்து அவனை சிந்த்வாரா மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். சிந்த்வாராவிலிருந்து நாக்பூருக்கு சென்றோம், அங்கு 10 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த நிலையில் என் மகன் இறந்துவிட்டான்." என்றார். ஆட்டோ ஓட்டுநரான யாசினுக்கு இரு மகன்கள். மூத்த மகன் உசைத்தின் சிகிச்சைக்காக 4 லட்ச ரூபாய் செலவு செய்துள்ளார். இச்சமயத்தில், அவர் தன் வாழ்வாதாரமாக இருந்த ஆட்டோவை விற்க நேர்ந்துள்ளது. யாசின் கூறுகையில், "பணத்தினால் என்ன நடக்கும்? என் குழந்தை பிழைத்திருந்தால் எல்லாம் நன்றாக நடந்திருக்கும். மீண்டும் என் ஆட்டோவை வாங்கியிருப்பேன். இப்போது என் வலியை இன்னொரு தந்தை அனுபவிக்கக் கூடாது என நினைக்கிறேன்." என்றார். படக்குறிப்பு, சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் ஷுபம் குமார் யாதவ் 'தமிழ்நாடு ஒரே நாளில் கண்டுபிடிக்கையில் இங்கு ஏன் தாமதம்?' மத்திய பிரதேசத்தில் இறந்த 11 குழந்தைகளும் சிந்த்வாராவின் பராசியா பகுதியை சேர்ந்தவர்கள். இப்பகுதியில் 2.8 லட்சம் பேர் வாழ்கிறார்கள் என்றும், அவர்களுள் சுமார் 25,000 பேர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்றும் பாரசியா சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் ஷுபம் குமார் யாதவ் (Sub Divisional Magistrate) தெரிவித்தார். அவர் கூறுகையில், "பலவித சாத்தியமான காரணங்கள் குறித்து விசாரித்துள்ளோம். அப்பகுதியிலிருந்து தண்ணீர் மாதிரிகளை எடுத்துள்ளோம், கொசுக்கள் மற்றும் எலிகளிலிருந்து நோய் பரவியதா என்பதையும் பரிசோதித்தோம். அவற்றில் எந்த பிரச்னையும் இல்லை என்று முடிவுகள் வந்துள்ளன" என்றார். அவர் மேலும் கூறுகையில், "சுகாதார துறை அதிகாரிகள் மற்றும் சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனையுடன் இறந்த குழந்தைகளின் முந்தைய மருத்துவப் பதிவுகள் ஆராயப்பட்டன, இதில்தான் அந்த குழந்தைகளுக்கு இருமல் மருந்து பரிந்துரைக்கப்பட்டிருந்தது வெளிச்சத்திற்கு வந்தது" என்றார். அவர் கூறுகையில், பல்வேறு பகுதிகளிலிருந்து மருந்து மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன என்றும், அனைத்து பரிசோதனை முடிவுகளும் வந்துள்ளதாகவும் கூறினார். அதன் அடிப்படையில், குழந்தைகளுக்கு சிறுநீரகம் செயலிழந்தது எப்படி என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் காரணத்தைக் கண்டறியும் என்றார் அவர். பரிசோதனை முடியவில்லை என்று மத்திய பிரதேச அரசு 10 தினங்களாக கூறிவந்த நிலையில், கோல்ட்ரிஃப் மருந்தில், விதிமுறைகளை மீறி நச்சு ரசாயனமான டைஎத்திலீன் கிளைக்கால் இருப்பதாக தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறை ஒரு நாளைக்குள்ளேயே உறுதிப்படுத்தியுள்ளது. சிந்த்வாராவை சேர்ந்த மற்றொரு குழந்தையின் உறவினர் கூறுகையில், "விஷத்தன்மை வாய்ந்த, ஆபத்தான மருந்து எப்படி சந்தையில் விற்கப்படுகிறது? இதை மத்திய பிரதேச அரசால் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை? ஒரு நாளைக்குள் தமிழ்நாடு அரசு இதைக் கண்டுபிடித்துள்ளது. குழந்தைகளை கொல்லும் மருந்துகளை விற்பனை செய்வது யார் என்பது மத்திய பிரதேச அரசு விசாரிக்கவில்லையா?" என்றார். படக்குறிப்பு, சிந்த்வாரா அரசு மருத்துவமனை முந்தைய எச்சரிக்கைகள் புறக்கணிப்பா? கடந்த 2023-ஆம் ஆண்டு இந்தியாவின் சுகாதார சேவைகள் பொது இயக்குநர், நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பிரபலமான இருமல் மருந்தை தயாரிப்பதற்கு தடை செய்தது. இந்த மருந்தின் தயாரிப்பில் உள்ள குளோர்ஃபெனிரமைன் மாலேட் (chlorpheniramine maleate) மற்றும் ஃபெனைல்ஃபெரின் (phenylephrine) ஆகியவற்றுக்கு 2015-ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவை இருமல் மற்றும் சளி மருந்துகளில் முக்கியமான மூலப்பொருட்களாக பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. இதையடுத்து, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தால் 2022-ஆம் ஆண்டில் காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தானில் குழந்தைகள் இறந்ததைத் தொடர்ந்து சர்வதேச அளவில் கவலைகள் எழுந்ததால் அதற்கு தடை விதிக்கப்பட்டது. எனினும், இந்த மருந்துகளை தயாரிப்பவர்கள் தாங்கள் தவறிழைக்கவில்லை என மறுத்துள்ளனர், பரிந்துரைக்கப்பட்ட அளவில் வழங்கும் போது தங்களின் மருந்துகள் பாதுகாப்பானவை என்று கூறுகின்றனர். சிந்த்வாராவை சேர்ந்த சுகாதார துறை அதிகாரி, பெயர் தெரிவிக்க விரும்பாமல் பிபிசியிடம் கூறுகையில், "இறந்த குழந்தைகளுள் 6-7 பேர் 4 வயதுக்குட்பட்டவர்கள்." என்றார். இது முதல் முறையல்ல... மத்திய பிரதேசத்தில் மருந்துகளின் தரம் குறித்து முன்பு கடுமையான கேள்விகள் எழுந்துள்ளன. 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 9க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகள் மற்றும் ஊசிகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்ததால், மாநிலம் முழுவதும் அவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது. மத்திய பிரதேச பொது சுகாதார சேவைகள் கழகம், இந்த மருந்துகளை தரமற்றவை என வகைப்படுத்தியுள்ளது, நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் மாநிலத்தின் சுகாதார கட்டமைப்பு குறித்து பல்வேறு தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது. பொது சுகாதார நிபுணர் அமுல்யா நிதி இதுகுறித்து கூறுகையில், "மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும், ஆனால் மரணத்தை ஏற்படுத்தாது. எனவே, சிந்த்வாராவில் குழந்தைகள் இறந்ததைத் தொடர்ந்து, அந்த மருந்தின் தரம் குறித்து அல்ல, அதில் என்ன கலக்கப்பட்டது என்பது குறித்து கேள்விகள் எழுப்பப்பட வேண்டும். விசாரித்து வருவதாக அரசு கூறுகிறது. விசாரணை இன்னும் எவ்வளவு காலம் எடுக்கும்?" என்றார். மாநிலத்தின் சுகாதார கட்டமைப்பு குறித்து பேசிய அவர், "குழந்தைகளின் நலனில் அரசு தீவிரமாக இருப்பதாக தெரியவில்லை. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், தாமதம் செய்யப்படுகின்றது. நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பச்சிளம் குழந்தைகள் இறப்பு, பிரசவத்தின் போது பெண்கள் இறப்பது ஆகியவை மோசமான விகிதத்தில் உள்ளன. இந்தூரில் குழந்தைகளை எலி கடித்ததும் பதிவாகியுள்ளது. இப்போது சிந்த்வாராவில் இருமல் மருந்தால் குழந்தைகள் இறந்துள்ளனர். நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவர்கள் கடைபிடிக்க வேண்டும். மருந்து கொள்முதல் கொள்கை மற்றும் மருந்து தரம் குறித்து சுயாதீனமாக ஆய்வு செய்ய வேண்டும்" என்றார். நாட்டிலேயே பச்சிளம் குழந்தைகள் இறப்பு மத்திய பிரதேசத்தில் அதிகமாக உள்ளது, அங்கு பிறக்கும் 1,000 குழந்தைகளில் 40 குழந்தைகள் இறக்கின்றன. 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம் சுகாதார அமைச்சர் ராஜேந்திர ஷுக்லா சட்டமன்றத்தில் இந்த தகவலை எழுத்துபூர்வ பதிலாக வழங்கினார். சமீபத்திய மாதிரி பதிவு அமைப்பு தரவுகளின்படி (Sample Registration System (2022), தேசிய சராசரியைவிட மாநிலத்தில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு அதிகம் என்று அவர் தெரிவித்தார். படக்குறிப்பு, மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் நீதி கேட்கும் குடும்பங்கள் இருமல் மருந்தை குடித்து அதனால் ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பால் ஐந்து வயதான அட்னன் கான் செப்டம்பர் 7 அன்று உயிரிழந்ததாக குடும்பத்தினர் கூறுகின்றனர். அட்னனின் தந்தை ஆமின் செல்போனில் பேசுவதற்கு தயாராக இல்லை. ஆமினின் மூத்த சகோதரர் சஜித் கான் பிபிசியிடம் கூறுகையில், "குழந்தைக்கு எவ்வித தீவிரமான உடல்நல பிரச்னையும் இல்லை. லேசான காய்ச்சல் ஏற்பட்டது, பின்னர் நிலைமை மோசமானது. எங்களால் அவனை காப்பாற்ற முடியவில்லை" என்றார். அட்னனின் தந்தை அங்கு சேவை மையம் ஒன்றை நடத்திவருகிறார், அதன்மூலம் மாதம் சுமார் ரூ. 10,000 வருமானம் ஈட்டிவருகிறார். சஜித் கூறுகையில், 15 நாட்களாக ரூ. 7 லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்தும் அட்னனை காப்பாற்ற முடியவில்லை என்றார். நான்கு வயதான விகாஸ் யாதவன்ஷியின் வீட்டிலும் அமைதி நிலவுகிறது. குழந்தையின் தந்தை பிரபுதயாள் யாதவ் கூறுகையில், "இருமல், சளி, காய்ச்சலால் 10 நாட்களில் சிறுநீரகம் செயலிழக்குமா? எதையும் எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. என்ன நடந்தது என எங்களுக்கு தெரியவில்லை" என்றார். விகாஸின் பெற்றோர் விவசாயிகள். தங்கள் மகனின் இறப்புக்கு நீதி வேண்டும் என அவர்கள் கோருகின்றனர். வீட்டின் மூலையில் அமர்ந்திருக்கும் பிரபுதயாள் கூறுகையில், "எங்கள் குழந்தை இறப்புக்கு நீதி வேண்டும். குழந்தை ஆரோக்கியமாக இருந்தது. இருமல் மற்றும் காய்ச்சலால் எப்படி சிறுநீரகம் செயலிழக்கும்? இதற்கு யார், எப்போது பதிலளிப்பார்கள் என்பதை அரசு சொல்ல வேண்டும்" என்றார். இதனிடையே, சஜித் பிபிசியிடம் கூறுகையில், "மருந்தை தயாரித்தவர்கள் அல்லது விற்றவர்கள் என யார் தவறிழைத்தார்களோ அவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும். என் மகன் போய்விட்டான், குறைந்தபட்சம் வேறு யாரும் இந்த மோசமான மருந்துகளுக்கு தங்கள் குழந்தைகளை இழக்கக் கூடாது," என்றார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்கப்படக் கூடாது என, மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்துகிறது நிபுணர்கள் கூறுவது என்ன? சாமானியர் ஒருவர் எப்படி இந்த மருந்துகள் நல்லதா அல்லது போலியானவையா என்பதை கண்டறிய முடியும் என்பதை குழந்தைகள் நல மருத்துவர் ஆவேஷ் சயினி கூறினார். அவர் கூறுகையில், "அந்த மருந்து எப்படி இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். அது நுரையாகவோ அல்லது நிறம் மாறியோ அல்லது அதில் வேறு ஏதேனும் துகள்கள் இருக்கின்றதா என்பதை பார்க்க வேண்டும். மருந்தின் அடியில் ஏதேனும் துகள்கள் இருந்தாலோ அல்லது மருந்தின் பேட்ச் எண் குறிப்பிடாமல் அல்லது அழிக்கப்பட்டிருந்தாலோ அந்த மருந்தும் நல்லதல்ல. அந்த மருந்தின் உரிம எண்ணும் அதில் இருப்பதும் அவசியம். அது எழுதப்படவில்லையென்றாலும் அந்த மருந்தை எடுத்துக் கொள்ளக்கூடாது." என்றார். மருத்துவர் சயினி கூறுகையில், "இவையெல்லாம் ஏற்கெனவே உள்ள வழிகாட்டு நெறிமுறைகள் தான். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இதுகுறித்து ஆய்வு கிடையாது, எனவே இவற்றை இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குதான் கொடுக்க வேண்டும்." என்றார். மருந்தை எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது குறித்து பேசிய அவர், "மருத்துவர் பரிந்துரைக்கும் அளவே கொடுக்க வேண்டும். குழந்தையின் எடைக்கு ஏற்பவே மருந்து கொடுக்கப்பட வேண்டும்" என்றார். போலி மருந்துகளால் வேறு என்னென்ன பிரச்னைகள் வரும் என கேட்டதற்கு, "மூச்சு விடுவதில் சிரமம், வயிற்று வலி ஏற்படும். சிறுநீரகத்தை அது பாதிக்கும். பின்னர் மூளையை பாதிக்கும். இதனால் பின்னர் வலிப்பு ஏற்பட்டு, இதயத்துடிப்பு நின்றுவிடும்." என்றார். இதனிடையே, முன்பு போபாலில் பணியாற்றிய மருத்துவர் ஹர்ஷிதா ஷர்மா கூறுகையில், "டைஎத்திலீன் கிளைக்கால் மற்றும் எத்திலீன் கிளைக்கால் ஆகியவை இருமல் மருந்துகளில் குளிர்விப்பானாக (coolants) பயன்படுத்தப்பட்டன. இதனால் மருந்து இனிப்பு சுவையுடையதாகவும் குளிர்ச்சியானதாகவும் இருக்கும். இது சார்பிடாலை (sorbitol) ஒத்ததாக இருக்கும். எனினும், சார்பிடால் செலவு அதிகம் என்பதால், சில மருந்து நிறுவனங்கள் டைஎத்திலீன் கிளைகாலை மலிவான மாற்றாக பயன்படுத்துகின்றன. நாட்டு மதுபானங்களில் காணப்படும் மெத்தில் ஆல்கஹாலுடன் இவையும் ஒரே வகையின்கீழ் வருகின்றன. இரண்டும் உடல் நலனுக்கு தீங்கானவை" என்றார். மேலும் அவர் கூறுகையில், "இந்த ரசாயனங்களிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் குழந்தைகளுக்கு நெஃப்ரோடாக்ஸிக், அதாவது சிறுநீரகத்தை நேரடியாக பாதிக்கும் அளவுக்கு நச்சுத்தன்மை வாய்ந்தவை. இந்த ரசாயனங்கள் சிறுநீரகத்தால் கட்டுப்படுத்தப்படும் அமிலத்தின் அளவை அதிகரிக்கின்றன. சிறுநீரகம் பாதிக்கப்படும் போது இந்த நச்சு பிற பாகங்களுக்கும் பரவி மரணம் நிகழ்கிறது" என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5ye4z7vpnvo
  21. 06 Oct, 2025 | 04:50 PM அகில இலங்கை அமரபுர மகா சங்க சபையின் உச்ச மகாநாயக்கரான மதீஹே பன்னசீஹ மகாநாயக்க சுவாமிந்திரசாவின் தலைமையில் நிறுவப்பட்ட விபாசி பௌத்த மையம், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது. கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு சுமார் இரண்டு கோடி ரூபாய் பெறுமதி கொண்ட மருத்துவ உபகரணங்களும் நன்கொடையாக வழங்கப்பட்டன. தேசிய வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள விபாசி பௌத்த மையத்தை புதுப்பிப்பதற்காக மதிப்பிடப்பட்ட செலவு 68 இலட்சம் ரூபாய். இதற்காக சுகாதார அமைச்சகம் 45 இலட்சம் ரூபாய் நிதியை வழங்கியுள்ளது. மீதமுள்ள தொகையை மருத்துவமனை சேவைகள் சபை செலவிடப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையின் கட்டுமானத்திற்கு கடற்படை தனது பங்களிப்பையும் வழங்கியுள்ளது. இந்நிகழ்வில் பேசிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் மக்களிடமிருந்து உதவி கோரி, இந்த நாட்டு மக்களுக்கு நன்மைகளை வழங்குவதில் வணக்கத்திற்குரிய ராஜவெல்ல சுபூதி தேரர் மற்றும் அவரது குழுவினரின் வழிகாட்டுதலுக்கு சுகாதார அமைச்சர் என்ற முறையில் தனது மரியாதையை தெரிவித்துக்கொள்கிறேன் என்று இதன்போது தெரிவித்தார். அரசாங்கப் பணிகளை மேற்கொள்ளும்போது, நூறு மீட்டர் ஓடுவது போல மிக விரைவாகச் செய்ய முடியாது என்றும், மருந்துப் பற்றாக்குறைக்குத் தீர்வு காண்பதில் தற்போதுள்ள சில சட்டங்கள் தடையாக இருப்பதாகவும், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அந்தச் சட்டங்களை மாற்றுவது ஒரு சிக்கலாக இருக்கலாம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். எழுந்துள்ள சில சிக்கல்கள் இன்று நேற்று எழுந்தவையல்ல. ஆனால் பிரிட்டிஷ் காலத்திலிருந்து இவை காணப்படுகின்றன என்று அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார். அவற்றை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், அவை மிகவும் கவனமாக செய்யப்பட வேண்டும் என்று அவர் கூறினார். சுகாதார அமைச்சகத்தின் சேவையின் மீது நம்பிக்கையை வளர்ப்பது தனக்கு ஒதுக்கப்பட்ட முதல் பணி என்று அமைச்சர் கூறினார். மேலும் அத்தகைய நன்கொடைகளை முறைப்படுத்துவதிலும் கவனம் செலுத்துவேன் என்றும் கூறினார். நாட்டில் தற்போதுள்ள சில சட்டங்களைப் பின்பற்றுவதன் மூலம் சில அவசர பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என்று குறிப்பிட்ட அமைச்சர், நன்கொடையாளர்கள் அரசு இராஜதந்திரம் மூலம் உதவியைப் பெறவேண்டியதன் அவசியத்தையும் இங்கு குறிப்பிட்டார். வைத்தியசாலை செயற்பாடு மற்றும் அதற்குரிய அத்தியாவசிய உபகரணங்கள் வரை நன்கொடையாளர்கள் அளிக்கும் நன்கொடைகள் மிகவும் முக்கியமானவை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அடுத்த 10 ஆண்டுகளுக்கு வைத்தியசாலைக்கு தேவைப்படும் அத்தியாவசியமான உபகரணங்கள் சம்பந்தமான தரவுகளை பெற்றுக்கொள்ள சுகாதார அமைச்சகம் ஒரு சிறப்புத் திட்டத்தை தயாரித்து வருவதாக அமைச்சர் வலியுறுத்தினார். மஹரகம சிறி வஜிரநான தர்மயநாதிபதி தேரர் மற்றும் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட அறங்காவலர் குழு உள்ளிட்ட ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட அறங்காவலர் குழுவைக் கொண்ட மருத்துவமனை சேவைகள் சபையின் நிர்வாக விவகாரங்கள், வணக்கத்துக்குரிய ராஜவெல்லே சுபூதி தேரரால் நடத்தப்படுகின்றன. இந்த நிகழ்வை மருத்துவமனை சேவைகள் சபையின் நிர்வாக இயக்குநர் வணக்கத்துக்குரிய ராஜவெல்லே சுபூதி தேரர் ஏற்பாடு செய்தார். இந்நிகழ்வில் நுவரெலியாவின் பிரதம பீடாதிபதி வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரதன நாயக்க தேரர், அமரபுர ஸ்ரீக தம்மரக்ஷித மகா நிகாயவின் மகாநாயக்க தேரர், ருஹுணு பல்கலைக்கழகத்தின் வேந்தர் வணக்கத்திற்குரிய ஆனந்த மகாநாயக்க தேரர், வணக்கத்திற்குரிய அக்குரட்டிய நந்த தேரர் மற்றும் மகா சங்கத்தினர், சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் நிபுணர் டாக்டர் அனில் ஜாசிங்க, இலங்கை தேசிய மருத்துவமனையின் துணை இயக்குநர் ஜெனரல் டாக்டர் பிரஹதீப் விஜேசிங்க மற்றும் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/227042
  22. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்திய ராணுவ தளபதி உபேந்திர துவிவேதி 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஆபரேஷன் சிந்தூர் பற்றி இந்திய ராணுவ தளபதி உபேந்திர துவிவேதி சமீபத்தில் பேசியிருந்த நிலையில் பாகிஸ்தான் அதற்கு எதிர்வினையாற்றியுள்ளது, "நமது அண்டை நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பு ஆக்கிரமிப்பு மேற்கொள்ள காரணங்களைத் தேடிவருகிறது" என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்பு பிரிவு இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர், ராணுவ தளபதி மற்றும் விமானப் படை தளபதியின் கருத்துக்களை தனது அறிக்கையில் மேற்கோள்காட்டியுள்ளது என பிபிசி உருது சேவை தெரிவிக்கிறது. அதில், "பாகிஸ்தானை வரைபடத்திலிருந்து துடைத்தெறியும்" நோக்கம் இருந்தால் இந்தியா ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். அத்தகைய சூழல் எழுந்தால் இரண்டு பக்கங்களிலும் இழப்புகள் இருக்கும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ராஜஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்திய ராணுவ தளபதி உபேந்திர துவிவேதி, பாகிஸ்தான் வரலாற்றிலும் வரைபடத்திலும் நிலைத்திருக்க வேண்டுமென்றால் அந்நாடு 'அரசு ஊக்குவிக்கும் பயங்கரவாதத்தை' நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். முன்னதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சர் க்ரீக் விவகாரம் பற்றியும் விமானப் படை தளபதி அமர் ப்ரீத் சிங் இந்தியா - பாகிஸ்தான் ராணுவ மோதல் பற்றியும் பேசியிருந்தனர். பிபிசி உருது செய்தியின் படி, பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் இந்திய பாதுகாப்பு அமைப்புகளின் தலைவர்கள் தெரிவிக்கும், "யதார்த்தமற்ற, ஆத்திரமூட்டுகிற மற்றும் போரைத் தூண்டும் கருத்துக்கள்" ஆழ்ந்த கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 2025-ல் காஷ்மீரில் நடைபெற்ற பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய ராணுவம் மே 6-ஆம் தேதி இரவு பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் உள்ள ராணுவ முகாம்களைத் தாக்கியது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் எனப் பெயரிடப்பட்டிருந்தது. இதனால் இரு நாடுகளுக்குமிடையே ராணுவ மோதல் நடைபெற்றது. இந்த மோதல் மே 10-ஆம் தேதி போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட உடன் முடிவுக்கு வந்தது. இந்திய ராணுவ தளபதி என்ன கூறினார்? பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, குஜராத்தில் நடைபெற்ற ராணுவ நிகழ்ச்சி ராணுவ தளபதி உபேந்திர துவிவேதி கடந்த வெள்ளிக்கிழமை ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீகங்காநகர் பகுதியின் அனுப்கருக்குச் சென்று ராணுவ ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அங்கு ராணுவத்தின் நடவடிக்கைகளை ஆய்வு செய்த பிறகு வீரர்கள் எந்நேரமும் தயார்நிலையில் இருக்கும்படி கூறினார். "ஆபரேஷன் சிந்தூர் 1.0-ன் போது இந்தியா கட்டுப்பாட்டுடன் இருந்தது. ஆனால் அதே போன்றதொரு சூழ்நிலை மீண்டு எழுந்தால் நாம் முழுவதும் தயாராக இருக்கிறோம். இந்த முறை இந்தியா முன்பு கடைப்பிடித்த கட்டுப்பாட்டுடன் இருக்காது." என்றும் தெரிவித்தார். மேலும் அவர், "இந்த முறை நாம் மேலும் நடவடிக்கை எடுப்போம். பாகிஸ்தான் தான் வரலாற்றிலும் வரைபடத்திலும் நிலைத்திருக்க வேண்டுமா என்று யோசிக்க வேண்டிய அளவிற்கு அந்த நடவடிக்கைகள் இருக்கும்." என்றார். வீரர்கள் தங்களின் ஏற்பாடுகளை முழுமையாக வைத்திருக்குமாறும் அவர் கூறினார். ஆபரேஷன் சிந்தூரில் ராணுவ இலக்குகளைத் தாக்குவதற்கு எந்த நோக்கமும் இல்லை எனக் கூறிய அவர், "ராணுவம் ஒன்பது 'தீவிரவாத இலக்குகளை' அடையாளம் கண்டிருந்தது. எங்களுக்கு தீவிரவாத இலக்குகளை மட்டுமே அழிக்க வேண்டும். குறிப்பாக தீவிரவாதிகளுக்குப் பயிற்சியளிக்கும் இடங்களையும் அவர்களைக் கையாள்பவர்களையும் தான்." எனத் தெரிவித்தார். இந்த முறை ஒவ்வொரு இலக்கிலும் ஏற்பட்ட அழிவுக்கான ஆதாரத்தை ஒட்டுமொத்த உலகிற்கும் காண்பித்ததாகக் கூறும் உபேந்திர துவிவேதி, முன்னர் பாகிஸ்தான் இதனை மறைத்து வந்ததாகவும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கை அதிகம் என்றும் தெரிவித்தார். 'வரலாறும் வரைபடமும் மாறும்' பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். பாகிஸ்தான் சர் க்ரீக் அருகே ராணுவ உள்கட்டமைப்புகளை உருவாக்கி வருவதாக ராஜ்நாத் சிங் கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி தெரிவித்திருந்தார். குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள ராணுவ நிலையில் நடைபெற்ற ஆயுத பயிற்சி முகாமில் கலந்து கொள்ள வந்திருந்த ராஜ்நாத் சிங், சுதந்திரத்திற்கு 78 ஆண்டுகள் கழித்தும் சர் க்ரீக் பகுதியில் எல்லை தகராறு தூண்டப்படுகிறது எனத் தெரிவித்தார். "சர் கீர்க் பகுதியை ஒட்டிய இடங்களில் தனது ராணுவ உள்கட்டமைப்புகளை பாகிஸ்தான் ராணுவம் விரிவுபடுத்திய விதமே அதன் நோக்கங்களைப் பிரதிபலிக்கிறது. இந்தப் பிராந்தியத்தில் தவறான செயல்கள் செய்ய பாகிஸ்தான் ஏதாவது முயற்சி செய்தால் 'அதன் வரலாறும் வரைபடமும் மாறக்கூடிய அளவிலான எதிர்வினையை எதிர்கொள்ள நேரிடும்." என்றார். பாகிஸ்தானின் சிந்த் மாகாணம் மற்றும் இந்தியாவின் குஜராத் இடையே 96 கிலோமீட்டர் இடைவெளியில் அமைந்துள்ள சதுப்பு நிலப்பரப்பு தான் சர் க்ரீக். இதனைப் பகிர்ந்து கொள்வதில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நீண்டகாலமாக தகராறு இருந்து வருகிறது. இந்த இடம் முன்னர் பான் கங்கா என அழைக்கப்பட்டது. பின்னர் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சர் க்ரீக் எனப் பெயரிடப்பட்டது. அப்போது இருந்தே இந்தப் பகுதி சர்ச்சைக்குள் சிக்கித் தவிக்கிறது. இந்த கடல்சார் எல்லையை இந்தியாவும் பாகிஸ்தானும் வேறு வேறாக பார்க்கின்றன. வளைகுடாவின் நடுப்பகுதியில் இருந்து எல்லை வகுக்கப்பட வேண்டும் என இந்தியா கூறுகிறது. ஆனால் பாகிஸ்தான் தனது கரையிலிருந்து எல்லை வகுக்கப்பட வேண்டும் எனக் கோருகிறது. ஏனென்றால் பிரிட்டிஷ் அரசு 1914-ல் இந்தப் பகுதி கடல் போக்குவரத்துக்கு உகந்தது அல்ல எனக் கூறி அவ்வாறு தீர்மானித்தது. பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகக் கூறும் இந்திய விமானப்படை பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்திய விமானப் படை தளபதி அமர் ப்ரீத் சிங் இந்திய விமானப்படையின் 93வது ஆண்டு நிகழ்வின்போது டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய விமானப்படைத் தளபதிஅமர் ப்ரீத் சிங், ஆபரேஷன் சிந்தூரில் 4, 5 பாகிஸ்தான் போர் விமானங்கள், பெரும்பாலும் எஃப்-16 சுட்டு வீழ்த்தப்பட்டது." எனத் தெரிவித்தார். பாகிஸ்தானின் பல்வேறு விமான நிலைகளை இந்திய விமானப்படை தாக்கியதாக அவர் குறிப்பிட்டார். அதில் ரேடார்கள், கட்டளை மையங்கள், ஓடுதளங்கள், ஹேங்கர்கள் மற்றும் நிலத்திலிருந்து ஏவுகணைகளைச் செலுத்தும் அமைப்புகள் பாதிப்படைந்தன என்றும் குறிப்பிட்டார். ஆபரேஷன் சிந்தூரில் எந்த வகை பாகிஸ்தான் போர் விமானம் அழிக்கப்பட்டது என்பது முதல் முறையாக உறுதி செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமர் ப்ரீத் சிங், ஐந்து பாகிஸ்தான் போர் விமானங்களும் ஒரு பெரிய விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தெரிவித்தார். ஆனாலும் அவை எந்த மாடல் என்பதை தெரிவிக்கவில்லை. "பாகிஸ்தான் இழப்புகளைப் பொருத்தவரை, நாங்கள் பல்வேறு இலக்குகளைக் குறிவைத்தோம். இந்தத் தாக்குதல்களில் நான்கு இடங்களில் ரேடார்களும், இரண்டு இடங்களில் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்களும், இரண்டு ஓடுதளங்களும், மூன்று வெவ்வேறு நிலையங்களில் மூன்று ஹேங்கர்களும் சேதமடைந்தன. ஒரு சி-130 ரக விமானம் மற்றும் 4-5 போர் விமானங்கள், பெரும்பாலும் எஃப்-16 போன்றவற்றுக்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. அப்போது அங்கு எஃப்-16 இருந்தன மற்றும் அவை பழுதுபார்க்கப்பட்டு வந்தன." எனத் தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய விமானப்படையின் நவீனமான நீண்ட தூர இலக்கு கொண்ட நிலத்திலிருந்து வான் நோக்கி ஏவுகணைகளைச் செலுத்தும் அமைப்பு பாகிஸ்தானை அதன் சொந்த எல்லைக்கு உள்ளே சிறிது தூரம் வரை செயல்பட விடாமல் தடுத்தது என இந்திய விமானப்படைத் தளபதி கூறுகிறார். இந்தியா உடனான ராணுவ மோதலின்போது இந்திய போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தொடர்ந்து தெரிவித்துவந்தது. ஆனால் அதற்கான எந்த ஆதாரமும் பாகிஸ்தான் வழங்கவில்லை. பாகிஸ்தான் ராணுவம் கூறியது என்ன? பட மூலாதாரம், Getty Images சர் க்ரீக் பற்றி ராஜ்நாத் சிங் தெரிவித்த கருத்துக்கு தனியாக எதுவும் பதில் தெரிவிக்காத பாகிஸ்தான், அதன் ராணுவத்தைக் குறிவைத்து பாதுகாப்பு அமைச்சர், ராணுவ தளபதி மற்றும் விமானப்படை தளபதி கூறிய விஷயங்களுக்கு, "இத்தகைய கருத்துகள் தெற்கு ஆசியாவின் அமைதி மற்றும் நிலைத்தன்மை மீது தீவிரமான தாக்கம் ஏற்படுத்தும்." எனத் தெரிவித்ததாக பிபிசி உருது வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிபிசி உருதுவின்படி, ராணுவத்தின் அறிக்கையில், "மே மாதம் இந்தியாவின் ஆக்கிரமிப்பு இரு அணு ஆயுத நாடுகளையும் போரின் விளிம்பிற்கு கொண்டு வந்தது. ஒருவேளை இந்தியா அதன் போர் விமானங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை மறந்திருக்கும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தரப்பிலிருந்து வெளிப்படுத்தப்படும் ஆத்திரமூட்டும் கருத்துகள் எதிர்காலத்தில் பெரிய அளவிலான அழிவிற்கு இட்டுச் செல்லும் என பாகிஸ்தான் ராணுவம் எச்சரித்துள்ளது. மேலும் பாகிஸ்தான் பின்வாங்காது என்றும் தயக்கமின்றி பதிலடி கொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளது. "எதிரிநாட்டின் அனைத்து மூலை வரை சண்டையிட பாகிஸ்தான் பாதுகாப்பு படைகளிடம் திறனும் உறுதிப்பாடும் உள்ளது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg9ypjjp9jo
  23. யாழில் கைதான சட்டத்தரணிக்கு பிணை Published By: Digital Desk 3 06 Oct, 2025 | 03:46 PM யாழ்ப்பாணத்தில் காணி உறுதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான சட்டத்தரணி 10 இலட்ச ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பொம்மை வெளி பகுதியில் காணி ஒன்றின் உறுதி எழுதியதில் மோசடி இடம்பெற்றமை தொடர்பிலான விசாரணைகளின் அடிப்படையில் குறித்த காணியின் உறுதி முடிப்பை நிறைவேற்றிய சட்டத்தரணி இன்று திங்கட்கிழமை (06) கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சட்டத்தரணியை விசாரணைகளின் பின்னர், பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவானின் முன்னிலையில் முற்படுத்திய வேளை, கைதான சட்டத்தரணியை 10 இலட்ச ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல அனுமதித்த மன்று, வெளிநாட்டு பயண தடையை விதித்துள்ளது. அதேவேளை குறித்த சட்டத்தரணியின் வீட்டிற்கு நேற்று ஞாயிற்றுகிழமை பொலிஸார் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து எவ்விதமான நீதிமன்ற கட்டளையும் இன்றி தேடுதல் நடத்தி அடாத்தாக நடந்து கொண்டதாகவும், பொலிஸாரின் குறித்த செயல்களை கண்டித்து நாளைய தினம் செவ்வாய்க்கிழமை சட்டத்தரணிகள் போராட்டம் ஒன்றிணை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற காணி மோசடி வழக்குகளில் சில சட்டத்தரணிகள் நேரடியாக தொடர்பு பட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு தாம் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/227037
  24. விமானத்தில் சிறுவர் தினக் கொண்டாட்டம் | ஆகாயத்தில் இருந்து என் நாடு | வானில் கொண்டாடிய 250 சிறுவர்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.