Everything posted by ஏராளன்
-
தக்கோலப் போர்: சோழ இளவரசர் ராஜாதித்தனை வீழ்த்திய ராஷ்டிரகூட தளபதியின் வியூகம்
பட மூலாதாரம்,BBC/GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் க பதவி, பிபிசி தமிழுக்காக 31 டிசம்பர் 2023, 06:48 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சோழப் போர்களில் கடல் கடந்த கடாரப் போர், ஈழப் போர், கம்பளிப் போர், பூண்டூர்போர், முடக்காற்று போர், பொன்மாரி போர், காந்தளூர் சாலை போர், கலிங்கப் போர் என போர்க்களங்களை வரிசையாகச் சொல்லிக் கொண்டே போகலாம். வெற்றி பெற்ற சோழர்களுக்கு, மறக்க முடியாத தோல்விகளைத் தந்த போர்க்களங்களும் உண்டு. அதில் முக்கியமானதுதான் சோழர்களின் எல்லைப் பரப்பை குறுகச் செய்த தக்கோலப் போர். இளவரசன் ராஜாதித்தன் தலைமையில் நடைபெற்ற தக்கோலப் போரில் அவர் கொலை செய்யப்பட்டார். யானை மேல் துஞ்சினத்தேவர் என்று அழைக்கப்படும் இளவரசர் ராஜாதித்தன் எப்படிக் கொலை செய்யப்பட்டார். வெற்றி பெரும் நிலையில் இருந்த சோழப் படையை திடீரென நிலைகுலையச் செய்ய திட்டம் தீட்டியது யார்? அவர் அதற்காகப் பெற்ற வினோதமான பரிசு என்ன? இந்தக் கட்டுரையில் விரிவாக காண்போம்... சோழப் படைகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கி இருந்த திருநாவலூர் சோழ இளவரசன் ராஜாதித்தன் தலைமையிலான படை பத்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்கியிருந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் பகுதிக்கு விழுப்புரம் பேரறிஞர் அண்ணா கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் ரமேஷ் மற்றும் உளுந்தூர்பேட்டை வரலாற்று ஆர்வலர் லலித் குமார் ஆகியோருடன் சென்றோம். முதலில் திருநாவலூர் சிவன் கோவிலுக்குச் சென்றபோது, அந்தக் கட்டுமானங்கள் மற்றும் அதிலுள்ள கல்வெட்டுகள் குறித்து விரிவாகப் பேசினார் பேராசிரியர் ரமேஷ். தென்பெண்ணை ஆற்றின் அருகில் உள்ள திருநாவலூர் சிவன் கோவில் பாராந்தக சோழன் காலத்தில் புனரமைக்கப்பட்டது. இதில் சோழப் பேரரசர்களின் கல்வெட்டுக்கள் நிறைய உள்ளன. குறிப்பாக பராந்தக சோழனின் மகன் இளவரசன் ராஜாதித்தனின் கல்வெட்டுகள், அவருடன் இங்கு தங்கியிருந்த படைத் தளபதிகள் மற்றும் படை வீரர்கள் உள்ளிட்ட பலரின் செயல்கள், தானங்கள் குறித்த கல்வெட்டு இங்கு அதிகம் உள்ளதாக அவர் விளக்கினார். அதேபோல் அருகிலுள்ள திருமுண்டீஸ்வரம் கோவிலிலும் இத்தகைய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் தானங்கள் குறித்தும், ஏரி, குளங்களின் கட்டுமானங்கள் குறித்தும் விவரிக்கின்றன. "தக்கோலப் போருக்குத் தயாராகும் நிலையில் பராந்தக சோழனின் ஆணைக்கு இணங்க இளவரசர் ராஜாதித்தன் தலைமையில் படை வீரர்கள் தங்கியிருந்த இடம் இந்த பகுதி. மேலும் போர்களற்ற காலங்களில் வீரர்களைக் கொண்டு கோவில் கட்டுமானங்கள், ஏரி மற்றும் குளங்கள் புணரமைப்புப் பணிகளையும் இளவரசர் ராஜாதித்தன் செய்துள்ளதற்குச் சான்றாக இங்கு பல்வேறு கல்வெட்டுகள் காணப்படுகின்றன," என்றார் பேராசிரியர் ரமேஷ். பத்து ஆண்டுகளாக முகாமிட்டிருந்த ராஜராஜன் "ராஷ்டிரகூடர்கள் சோழ அரசுக்கு எதிராகப் படை திரட்டுவதை ஒற்றர்கள் மூலமாக அறிந்த பாராந்தக சோழன் கி.பி.936இல் வடதிசை காவல் பொறுப்பைத் தனது மூத்த மகனும், பட்டத்து இளவரசருமான ராஜாதித்தனிடம் ஒப்படைத்திருந்தார். இந்தக் காலகட்டத்தில் ராஜாதித்தன் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருநாவலூர் என்ற ஊரைத் தலைமையிடமாகக் கொண்டு தன் படையுடன் முகாமிட்டிருந்தார். இவருடன் இவரின் படைத்தலைவன் சேரநாட்டு நந்திக்கரைப்புத்தூரை சேர்ந்த வெள்ளன்குமரன் மற்றும் பராந்தகரின் மகன்களும், ராஜாதித்தனின் தம்பிகளுமான கண்டராதித்தரும், அரிஞ்சய சோழனும் உடன் இருந்தனர்," என்று விளக்கினார் பேராசிரியர் ரமேஷ். கிபி. 949இல் இராஷ்டிரகூட அரசன் தம் படைகளைப் பன்மடங்கு பெருக்கியதோடு அல்லாமல், தனது மைத்துனான கங்க அரசன் பூதுகனையும், முன்னாளில் பராந்தக சோழனால் நாட்டை இழந்த வைதும்ப மற்றும் பாணர் படைகளையும் ஒன்று சேர்த்ததாகக் கூறுகிறார் அவர். "அந்தப் பெரும்படையுடன் தொண்டை நாட்டின் வட எல்லையை அடைந்தான். இந்தப் போரை ஏற்கெனவே எதிர்பார்த்துக் காத்திருந்த ராஜாதித்தன் தனது பெரும்படையுடன் எதிரிப் படைகளை தக்கோலம் என்னும் ஊரில் சந்தித்தான். (தற்போது தக்கோலம் என்னும் ஊர், இப்போதுள்ள அரக்கோணத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ளது). இரு தரப்பினருக்கும் இடையே கடும் போர் நடந்தது. ஆயிரக்கணக்கான வீரர்கள் மாண்டனர். இந்தப் போரில் யாருக்கு வெற்றி என்று கணக்கிட முடியாத அளவுக்கு இரு தரப்பினரும் போர் புரிந்தனர்." அப்போது, இராஷ்டிரகூட படையில் வீரர்களின் எண்ணிக்கை அதிகமிருந்த போதிலும் சோழ வீரர்கள் ஒவ்வொருவரும் அஞ்சா நெஞ்சனாய் அவர்களை வெட்டி வீழ்த்தி முன்னேறியதாகவும் அவர் விளக்கினார். போரின் திசை மாறி சிதறிய சோழ படைகள் ராஜாதித்தன் இப்போரில் தனது அனைத்து படைக் கருவிகளையும் உபயோகித்துப் போரிட்டதாகவும், அவனை நெருங்க முடியாமல் எதிரிப் படைகள் திணறியதாகவும் விவரித்தார் பேராசிரியர் ரமேஷ். "அவனது தம்பிமார்களும், படைத் தலைவனும் நாலாபுறமும் சுழன்று எதிரிகளை வெட்டி வீழ்த்தி பிணக் குவியல்களாக்கினர். இந்த நேரத்தில் கங்க மன்னன் பூதுகன், போரின் நிலையை உணர்ந்து தனது படைகளுக்கு ராஜாதித்தனை மட்டும் குறிவைக்கும் படியும், தனது படைத் தலைவனில் ஒருவனான மணலேரா என்பவனை அழைத்து ராஜாதித்தனையும் சோழப் படையையும் பிரிக்குமாறும் கட்டளையிட்டான்." பேராசிரியர் ரமேஷின் கூற்றுப்படி, மணலேரா தனது மன்னர் கட்டளையை ஏற்று சோழப் படைகளைத் திசை திருப்பி, ராஜாதித்தனை தனிமைப்படுத்தினான். கங்க மன்னனும் அவரது படைகளும், ராஜாதித்தன் இருக்கும் இடத்திற்கு ஏதுவாகச் செல்ல வழிவகை செய்தான். பூதுகன் ராஜாதித்தனை நோக்கி முன்னேறி, தன்னிடம் இருந்த அம்புகளைச் சரமாரியாக ராஜாதித்தனை நோக்கித் தொடுத்தான். இதைச் சற்றும் எதிர்பாராத ராஜாதித்தன் அம்புகளைத் தடுக்க முயன்றார். அந்த அம்புகளில் ஒன்று ராஜாதித்தன் மார்பில் தைக்கவே அவர் அந்தக் கணத்திலேயே உயிரிழந்தார். இதன் விளைவாக தலைவன் இல்லாத படைகள் குழப்பத்திற்கு உள்ளானதாகவும் அந்தத் தருணத்தைப் பயன்படுத்தி ராஷ்டகூட அரசன் மூன்றாம் கிருஷ்ணன் வெற்றி வாகை சூடினார் என்றும் யானை மீது அமர்ந்து "வீரப் போரிட்டு இறந்த ராஜாதித்தன் யானை மேல் துஞ்சினத்தேவன்" என்று அழைக்கப்படுவதாகவும் பேராசிரியர் ரமேஷ் விளக்கினார். சோழர்களின் செப்பேடுகளும் ராஜாதித்தனை "யானை மேல் துஞ்சிய தேவர்" என்றே அழைக்கின்றன. இதன் மூலம் ராஜாதித்தனை பூதுகன் கொன்றது உறுதியாகிறது. இந்தப் போருக்குப் பிறகு தனது பட்டத்து இளவரசனை இழந்த சோழ நாட்டின் எல்லை குறுகியது. தொண்டை மண்டலம் முழுமையும் மூன்றாம் கிருஷ்ணன் வசமானது. இந்த வெற்றியின் பேரால் அவரை அவரது கல்வெட்டுகள் "கட்சியும் தஞ்சையும் கொண்ட கன்னட தேவன்" எனப் புகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார். தக்கோலப் போர் நடந்தது ஏன்? பேராசிரியர் ரமேஷ் விளக்கிய வரலாற்றின்படி, பராந்தக சோழனின் தந்தை ஆதித்தனின் பட்டத்தரசி இளங்கோபிச்சுவின் புதல்வன் முதலாம் கன்னர தேவனுக்கு ஆட்சி மறுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, பராந்தகன் தன்னுடைய மகளை நான்காம் கோவிந்தனுக்கு மணமுடித்தது, ராஷ்டிரகூட உள்நாட்டுப் பிரச்னையில் மூன்றாம் கிருஷ்ணனுக்கு எதிராக பராந்தகன் போர் புரிந்தது ஆகியவை இந்தப் போருக்கான காரணங்கள். "பராந்தகன் தனது ஆட்சியில் தன் அண்டை நாடான பாண்டியர், ஈழம், வாணர்கள், வைதும்பர்கள், கீழை சாளுக்கியம் ஆகிவற்றை வென்று அவர்கள் அனைவரையும் எதிரிகளாக்கினார். இதனால் தக்கோலப் பெரும்போரில் இவர்கள் பராந்தகன் படைகளுக்கு உதவ வரவில்லை." தக்கோலப் போர் நடக்க யார் காரணம்? தக்கோலப் போருக்கான காரணங்களை பேராசிரியர் ரமேஷ் விவரித்தார். ஆனால், இந்தப் பெரும்போர் நடப்பதற்குத் தொடக்க காரணமாக இருந்தது யார் என்ற கேள்வியும் இங்கே எழுகிறது. அதுகுறித்து விளக்கினார் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் லலித் குமார். ராஜாதித்தன் தக்கோலப் போரில் கங்க மன்னன் பூதுகனால் கொல்லப்பட்டான். வெற்றி பெறும் நிலையிலிருந்த சோழப் படைகள் சிதறின. வெற்றிக் கனியை ருசித்து வந்த சோழப்படை நீண்ட இடைவெளிக்குப் பிறகு தோல்வியைச் சந்தித்தது. "ராஜாதித்தனின் பாட்டனார் முதலாம் ஆதித்தன் காலத்தில் தனது ராஷ்டிரகூட நண்பன் இரண்டாம் கிருஷ்ணன் தனக்குப் பல போர்களில் உதவி செய்ததன் பொருட்டு, அவரது மகள் இளங்கோபிச்சுவை மணமுடித்து பட்டத்தரசி ஆக்கினார். இவர்கள் இருவருக்கும் பிறந்த குழந்தைக்கு தன் நண்பன் மற்றும் மாமனான இரண்டாம் கிருஷ்ணனின் மற்றொரு பெயரான கன்னர தேவன் என்று பெயரைச் சூட்டினார். ஆதித்த சோழனின் மற்றொரு மனைவியான திரிபுவனமாதேவிக்குப் பிறந்தவர் பராந்தக சோழன். சில அரசியல் காரணங்களால் ஆதித்த சோழனுக்குப் பிறகு பராந்தக சோழர் அரியணையில் அமர்த்தப்பட்டார்," என்று தககோலப் போரின் தொடக்கப் புள்ளியை விவரித்தார் லலித் குமார். ஆனால், பட்டத்தரசி இளங்கோபிச்சுவுக்கு பிறந்த கன்னர தேவரையே அரசனாக்கி இருத்தல் வேண்டும் என்பதுதான் முறை. "இதனால் கன்னர தேவனின் உரிமையை ஆதரித்து ராஷ்டிரகூட அரசன் இரண்டாம் கிருஷ்ணன் சோழ நாட்டின் மீது படையெடுத்தான். இப்போரில் ராஷ்ட்டிரகூட அரசுக்கு ஆதரவாக வாணர்களும் வைதும்பர்களும், சோழப் பேரரசின் மன்னரான பராந்தகனுக்கு ஆதரவாக கங்க அரசன் பிரித்திவிபதி, கொடும்பாளூர் மற்றும் கீழபழுவேட்டரயர்கள் போரில் களமிறங்கினர். மிக முக்கியமான இந்தப் பெரும்போரில் சோழர்களே வென்றனர்." ராஷ்டிரகூடர்களுடன் மீண்டும் திருமண உறவு சிறிது காலம் கழித்து கிபி.913இல் இரண்டாம் கிருஷ்ணன் இறந்த பிறகு இவரது பேரன் மூன்றாம் இந்திரன் ராஷ்டிரகூடத்தின் மன்னரானார். இவர் தனது மகனான நான்காம் கோவிந்தனுக்கு கிபி.918இல் இளவரசுப் பட்டம் சூட்டியதாகத் தெரிவித்தார் லலித் குமார். "இந்த இளவரசனுக்கு, பராந்தகர் தனது மகளான வரீமாதேவியை மணமுடித்ததோடு அல்லாமல் ராஷ்டிரகூடரின் நட்பை மீண்டும் மலர வைக்க முயன்றார். ஆனால் விதி வேறொரு பகைமைக்கு வித்திட்டது. அதாவது அந்த நேரத்தில் கீழைச் சாளுக்கிய அரசு இரண்டு பிரிவாகி வடதிசை பகுதியை யுத்த மல்லனும், தென்திசைப் பகுதியை இரண்டாம் வமீனும் ஆண்டனர். அவர்கள் இருவருக்கும் பகைமை ஏற்பட்டு போர்க்களத்தில் இறங்கினர். இதில் நான்காம் கோவிந்தன் யுத்த மல்லனுக்கு ஆதரவளித்தான். ஆனால் அதில் தோல்வியைத் தழுவினான். இதன் காரணமாக, மூன்றாம் கிருஷ்ணன் இராஷ்ட்டிரகூடத்தில் கலகம் செய்து தனது தந்தை மூன்றாம் அமோஹவர்ஷணனை (நான்காம் கோவிந்தனின் சிறிய சித்தப்பா) ராஷ்டிரகூடத்தின் அரசராக்கினான். இதனால் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட நான்காம் கோவிந்தன் தன் மாமனான பராந்தக சோழனிடம் சரணடைந்தான்," என்றும் அவர் விளக்கினார். மேலும், "இதே நேரத்தில் மூன்றாம் கிருஷ்ணன் கங்க நாட்டில் ரசமல்லனை கொன்று இரண்டாம் பூதுகனை கங்க அரசின் மன்னராக்கி, தனது தமக்கையை பூதுகனுக்கு மனம் முடித்து உறவினரானான். இதனால் கங்க அரசன் பூதுகன், மூன்றாம் கிருஷ்ணனுக்கு மிகுந்த விசுவாசத்துடன் இருந்தான். தனது மருமகனை நாட்டை விட்டுத் துரத்தியதால் கடும் கோபத்தில் இருந்த பராந்தகன், மூன்றாம் கிருஷ்ணனுக்கு எதிராகவும், தன் மருமகன் நான்காம் கோவிந்தனுக்கு ஆதரவாகவும் போரிட முடிவு செய்தார். ராஷ்டிர கூடர்களுக்கும் சோழர்களுக்கும் இடையிலான பகை அதிகரித்தது. அந்தப் போர் தக்கோலத்தில் நடைபெற்ற போராகும். இதில்தான் இளவரசன் ராஜாதித்தன் கொலை செய்யப்பட்டு சோழப் பேரரசு இடைக்கால வீழ்ச்சியைச் சந்திக்க நேர்ந்தது என்று கூறினார். இந்தப் போரில் பெற்ற வெற்றி மூலம் ராஷ்டிரகூடர்கள் தங்கள் ஆட்சிப் பரப்பைப் பெருமளவில் விரிவுபடுத்தினர்," என்றும் தெரிவித்தார் லலித் குமார். ராஜாதத்தினை கொன்ற படைத்தளபதி பெற்ற பரிசு என்ன? போர்க்களங்களில் ரகசிய திட்டங்களைத் தீட்டி வெற்றி வாகை சூட உதவுவோர் அரசர்களிடம் இருந்து நாடுகள், பொன், பொருள் என ஏராளமான பரிசுகளைப் பெற்றுள்ளார்கள். ஆனால், தக்கோலப் போரில் ராஜாதித்தனைக் கொன்ற ராஷ்டிரகூட படைத் தளபதி பெற்ற பரிசு வினோதமானது என்கிறார் பெங்களூரைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் தாமஸ் அலெக்சாண்டர். ராஷ்ட்ரகூடர் கங்கர் வரலாற்றில் தக்கோல போர் பற்றிய குறிப்புகளை தாங்கிய ஆவணமாக அதக்கூர் நடுகல் திகழ்வதாகக் கூறுகிறார் அவர். "மைசூர் மாவட்டத்தில் மாண்டியா என்ற ஊருக்கு அருகே அதக்கூர் கிராமத்தில் இந்த நடுகல் கிடைத்தது. ஆங்கிலேயர் ஆட்சியில் கி.பி. 1898ஆம் ஆண்டில் அதக்கூர் நடுகல் ஹல்டிஷ் என்ற ஆங்கிலேய அதிகாரியின் முயற்சியில் நடுகல், முறையாக கல்வெட்டு நகல் எடுக்கப்பட்டு பெங்களூர் அருங்காட்சியத்திற்குக் கொண்டு வரப்பட்டது. தக்கோலம் போரில் ராஷ்ட்ரகூட அரசர் கன்னர தேவன் மற்றும் இரண்டாம் பூதுகன் தலைமையில் ராஷ்ட்ரகூட படை சோழ அரசர் ராஜாதித்தினை வெல்கிறது. இந்தப் போரில் ராஜாதித்தன் வீரமரணம் அடைகிறார்." இரண்டாம் பூதுகனின் சேவகனான படைத்தளபதி மணலேரா என்பவன் தக்கோலப் போரில் வீரத்துடன் போரிட்டு பூதுகனின் வெற்றிக்கு உதவிய காரணத்தால் இரண்டாம் பூதுகன் மணலேராவிற்கு பரிசளிக்க விரும்பியதாகக் கூறினார் தாமஸ் அலெக்சாண்டர். பரிசாக சில கிராமங்களை வழங்கியபோது, அதற்குப் பதிலாக பூதுகன் வளர்த்து வந்த காளி என்னும் பெயர் கொண்ட மணலேரா வேட்டை நாயைக் கேட்டுள்ளார். பூதுகனும் தனது நிழல் போல் வளர்த்து வந்த காளி என்ற நாயை அவருக்குப் பரிசாக வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார். எஜமானனுக்காக போரிட்டு மடிந்த வீர நாய் காளி வேட்டை நாயைப் பரிசாகப் பெற்ற மணலேரா காளி என்ற அந்த நாயை மிகவும் பாதுகாப்பாகவும் பாசத்துடன் வளர்த்து வந்ததாகவும் தாமஸ் அலெக்சாண்டர் கூறினார். இந்நிலையில், "கேலே நாட்டில் பெல்த்துர் என்ற மலைத்தொடரில் மணலேரா வேட்டைக்குச் சென்றபோது காளி ஒரு காட்டுப்பன்றியை எதிர்த்துச் சண்டையிட்டு, மணலேராவை காப்பாற்ற மரணமடைகிறது. "காளியின் வீரத்தின் நினைவாக மணலேரா அதக்கூர் சல்லேஸ்வரா கோவிலின் முன்பாக நடுகல் எழுப்பியுள்ளார். நடுகல்லுக்கு நில தானம், தினசரி பூஜை, நெல் நிவந்தம் ஆகியவற்றையும் வழங்கியதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் அங்கு காணப்படுகின்றன." மேலும், "இந்த நில நிவந்தங்களை அழிப்பவர்கள், நடுகல் வழிப்பாட்டைத் தடை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் காளியைக் கொன்ற பாவத்தைச் சுமப்பர்" என்றும் அந்தக் கல்வெட்டு கூறுகிறது. அந்தக் கல்வெட்டில், "சக வருடம் 872 எனக் குறிக்கப்படுகிறது, மூன்றாம் கிருஷ்ணன் என்ற கன்னரதேவன் அமோகவர்ஷன் எனக் குறிக்கப்படுகிறார். தக்கோலா என்ற பெயர் தக்கோலம் என்ற ஊரைக் குறிப்பிடுள்ளது. ராஜாதித்தன் முவடி சோழ என்ற பட்டப்பெயருடன் சிறப்பிக்கப்படுகிறார்." தக்கோலப் போரில் வெற்றிப் பெற்றதன் பரிசாக இரண்டாம் பூதுகனுக்கு கன்னர தேவன் பானாவாசி, பேலவோளா, புரிகிரி, கிசுகாடு, பாகிநாடு போன்ற நாடுகளை வழங்குகிறார். பூதுகன் மணலேராவுக்கு அதக்கூர் கடியூர் என்ற கிராமத்தை வழங்குகிறார். அதக்கூர் நடுகல் பற்றி விரிவாக எபிகிராபிக்கா இன்டிகா தொகுதி 6இல் உள்ளது. போர் வெற்றிக்காக அக்காலத்தில் கிராமங்களையும் ஊர்களையும் பொன் பொருளையும் பரிசாகப் பெற்றுக் கொண்டவர்களில் இருந்து மணலேரா முற்றிலும் மாறுபடுகின்றார். பூதுகனின் இந்த நாய் மிக பலம் பொருந்தியது எனவும் ஆக்ரோஷமானது, எஜமான விசுவாசம் உடையது எனவும் சில வரலாற்று அறிஞர்களும் உறுதிப்படுத்துகின்றனர். ராஜாதித்தன் கொலைக்குப் பின் துறவியாக மாறிய சோழ வீரன் தக்கோலப் போரில் சோழர்களை வீழ்த்தியதற்கு பரிசுகள் வழங்கப்பட்டதைப் போல் இளவரசர் ராஜாதித்தன் கொலை சம்பவத்திற்குப் பரிகாரமாக துறவியாக மாறிய சோழ வீரன் பற்றிய சுவாரசியமான தகவலை கல்வெட்டு ஆய்வாளரும் எழுத்தாளருமான குடவாயில் பாலசுப்பிரமணியன் பி பி சி தமிழுடன் தொலைபேசியில் கூறினார். ராஜாதித்தன் கொல்லப்பட்ட தக்கோலப் போரில் பங்கெடுக்காமல் போனதற்குப் பிராயச்சித்தமாக சோழ வீரன் வல்லபன் என்கிற வெள்ளங்குமரன் துறவியாக மாறியதாக அவர் தெரிவித்தார். இதற்கான கல்வெட்டு, திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோவிலில் உள்ள இருமொழிக் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேற்கொண்டு விளக்கியவர், "துறவியாக மாறிய போர் வீரன், கேரள இளவரசிக்கும் ராஜாதித்தனின் தந்தையான முதலாம் பராந்தக சோழனுக்கும் இடையிலான திருமணத்தைத் தொடர்ந்து சோழ நாட்டிற்குக் குடிபெயர்ந்த கேரளாவில் இருந்து வந்த படைத் தலைவன். இவர் ஏதோ சில காரணங்களுக்காக தக்கோலப் போரில் பங்கெடுக்க இயலவில்லை. ஆகையால், தான் உயிருடன் இருந்தும் அந்தப் போரில் ஈடுபட்டு இளவரசரைக் காப்பாற்ற முடியவில்லை என வேதனைப்பட்டு துறவியாக மாறியதாக கல்வெட்டு விவரிக்கின்றது," என்றார். https://www.bbc.com/tamil/articles/ced7y5ke2yjo
-
2024.01.01 பொருட்கள் மற்றும் சேவைகளுடைய விலைகள் அதிகரிப்பு!
பால் தேநீர், கொத்து உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு! Published By: NANTHINI 31 DEC, 2023 | 11:03 AM பால் தேநீர், கொத்து உள்ளிட்ட உணவுப்பொருட்களின் விலைகள் நாளை (ஜனவரி 1) முதல் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் நாளை முதல் அதிகரிக்கப்படும் என சங்கத்தின் தலைவர் ஹர்சன ருக்ஷான் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும், சாதாரண தேநீரின் விலை 5 ரூபாவினாலும், சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவினாலும், சோறு மற்றும் கொத்து ரொட்டியின் விலை 25 ரூபாவினாலும் அதிகரிக்கப்படுமென அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/172798
-
தேசிய வருமான வரி : வருடத்திற்கு 12 இலட்சத்துக்கும் அதிக வருமானம் பெறுபவர்கள் உட்பட 14 தொழிற்துறைகளை சார்ந்தவர்கள் பதிவு செய்தல் கட்டாயம்
உங்களுடைய பெயரில் சொத்துகள் இருந்தால் வரி கட்ட வேண்டி வரும் அண்ணை.
-
தேசிய வருமான வரி : வருடத்திற்கு 12 இலட்சத்துக்கும் அதிக வருமானம் பெறுபவர்கள் உட்பட 14 தொழிற்துறைகளை சார்ந்தவர்கள் பதிவு செய்தல் கட்டாயம்
18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் இதை வைத்திருக்க வேண்டும்! புதிய சட்டம்! | VK Karikalan TIN நேரடி இணைப்பு https://eservices.ird.gov.lk/Registration/TINRegistration/ShowRequestHeader
-
அரச இயந்திரம் மீதான எதிர்ப்பை ஜனாதிபதித் தேர்தல் பகிஷ்கரிப்பின் மூலமே காண்பிக்கலாம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
30 DEC, 2023 | 06:45 PM (நா.தனுஜா) எமது அரசியல் முற்றிலும் மாறுபட்டதாகும். இன்றளவிலே ஒட்டுமொத்த அரச இயந்திரமும் தமிழர்களுக்கு எதிரானதாகவே இருக்கின்றது. அவ்வாறிருக்கையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதானது, அந்த அரச இயந்திரத்தை ஏற்றுக்கொண்டதாகவே அமையும். மாறாக இந்த ஒட்டுமொத்த அரச கட்டமைப்பையும் எதிர்க்கின்றோம் என்பதை ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிப்பதன் மூலமே காண்பிக்கமுடியும் என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்மக்கள் சார்பில் மும்மொழிகளிலும் தேர்ச்சியுடைய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் களமிறங்கினால், தான் அவரை ஆதரிப்பதற்குத் தயாராக இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். அதுமாத்திரமன்றி ஜனாதிபதித் தேர்தலை தமிழ்மக்கள் பகிஷ்கரிக்கவேண்டும் என வலியுறுத்துவதனால் ஏற்படக்கூடிய பாதகமான தாக்கங்கள் குறித்தும் அவர் விளக்கமளித்துள்ளார். இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை தமிழ்மக்கள் பகிஷ்கரிக்கவேண்டும் என வலியுறுத்துவதால் சி.வி.விக்கினேஸ்வரன் கூறியதைப்போன்ற எதிர்மறையான விளைவுகள் ஏற்படக்கூடுமல்லவா எனவும், 2005 ஆம் ஆண்டு தமிழர்கள் ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரித்தமை அவர்களுக்குப் பாதிப்பாக அமைந்ததாகக் கூறப்படும் கருத்துக்கள் பற்றியும் வினவியபோதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு பதிலளித்தார். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், 2005 ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் மாத்திரமன்றி, கூட்டமைப்பினரும் ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிக்குமாறு தமிழ்மக்களை வலியுறுத்தினார்கள். இருப்பினும் அப்போது அதற்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்தவர்கள் ரணில் விக்ரமசிங்க மிகவும் நல்லவர் எனவும், தமிழர்கள் தேர்தலைப் பகிஷ்கரித்தமையினாலேயே மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டினார் எனவும் கருத்தக்களை வெளியிட்டனர். ஆனால் உண்மையில் யுத்தம் முழுமையாக முடிவுக்குக்கொண்டுவரப்பட்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எவ்வளவு மோசமாக செயற்படுகின்றார் என்று பாருங்கள். ஏற்கனவே ஜே.வி.பி (ஜனதா விமுக்தி பெரமுன) எழுச்சியின்போது ரணில் விக்ரமசிங்க எவ்வாறு நடந்துகொண்டார் என்பதும், அதற்கு சிறந்த உதாரணமான 'பட்டலந்த முகாம்' பற்றிய கதைகளும் அனைவருக்கும் தெரியும். எனினும் இப்போது அவர் எவ்வாவு மோசமானவர் என்பது மிகத்தெளிவாக வெளிப்பட்டுள்ளது. ஆகவே 2005 இல் தமிழர்கள் தேர்தலை பகிஷ்கரித்திருக்காவிடின் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றிருந்தாலும், அதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின்கீழ் இடம்பெற்றதைப்போன்ற மனித உரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும் நிச்சயமாக இடம்பெற்றிருக்கும். ஆனால் அது இப்போது சர்வதேச ரீதியிலும், மேற்குலகநாடுகள் மத்தியிலும் பரவலாகப் பேசப்படுவதைப்போன்று பேசப்பட்டிருக்காது. மேற்குலகம் ரணிலுக்கு ஆதரவாகவே செயற்பட்டிருக்கும். எனவே சமகால கள நிலைவரங்களை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் 2005 இல் தமிழர்கள் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணித்ததில் எந்தவொரு பிழையும் இல்லை. இன்றளவிலே தமிழ்மக்கள் சார்ந்த விவகாரங்கள் கணக்கிலெடுக்கப்படாத நிலையே காணப்படுகின்றது. அதற்கு தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளும் காரணமாக அமைந்திருக்கின்றன. எனவே நாம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை தனியொரு தேர்தலாகவன்றி, எதிர்காலத்தேர்தல்களை எவ்வாறு அணுகவேண்டும் என்ற ரீதியிலேயே பார்க்கின்றோம். இந்தத் தேர்தலில் பொதுவேட்பாளரொருவரைக் களமிறக்கிப் போட்டியிடுவதால், அவர் வெல்லப்போவதோ அல்லது தமிழ்மக்களுக்கு ஏதேனும் நன்மைகள் கிட்டப்போவதோ இல்லை. எனவே தமிழர் தரப்பில் எவ்வித இழப்புக்களுமின்றி, அதேவேளை மிகவும் வலுவான செய்தியை பெரும்பான்மையின மக்களுக்கும், சிங்கள அரசியல்வாதிகளுக்கும் கூறுவதற்கான மிகச்சிறந்த சந்தர்ப்பமாகவே இந்த ஜனாதிபதித் தேர்தலைக் கருதுகின்றோம். அவ்வாறிருக்கையில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரொருவரைக் களமிறக்கவேண்டும் என்று கூறுவதெல்லாம், அவர்களுக்கு விருப்பமான ஏதோவோரு தரப்பை (சிங்கள வேட்பாளரை) ஆதரிப்பதற்காக மாத்திரமேயாகும் என்றார். அவ்வாறெனில் 'சி.வி.விக்கினேஸ்வரன் கூறுவதுபோல் நீங்கள் பொதுவேட்பாளராகக் களமிறங்குவதற்கு முன்வரலாமல்லவா? அதனூடாக நீங்கள் கூறவதைப்போன்ற சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதையும் உறுதிப்படுத்தலாம் அல்லவா?' என எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், 'எமது அரசியல் முற்றிலும் மாறுபட்டதாகும். இன்றளவிலே ஒட்டுமொத்த அரச இயந்திரமும் தமிழர்களுக்கு எதிரானதாகவே இருக்கின்றது. அவ்வாறிருக்கையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதானது, அந்த அரச இயந்திரத்தை ஏற்றுக்கொண்டதாகவே அமையும். மாறாக இந்த ஒட்டுமொத்த அரச கட்டமைப்பையும் எதிர்க்கின்றோம் என்பதை ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிப்பதன் மூலமே காண்பிக்கமுடியும். ஆகவே தமிழ்மக்கள் பழைய கதைகளை நம்பி மீண்டும் மீண்டும் ஏமாறாமல், இவ்விடயத்தில் நன்கு சிந்தித்து தீர்மானமொன்றை மேற்கொள்ளவேண்டும்' என்று வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/172772
-
மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வடக்கிற்கு செல்கிறார் ரணில்
3 நாள் விஜயம் மேற்கொண்டு வடக்கிற்கு செல்கிறார் ரணில் 30 DEC, 2023 | 06:44 PM ஆர்.ராம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூன்று நாள் விஜயமாக எதிர்வரும் நான்காம் திகதி வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். இதன்போது காணிவிடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் சம்பந்தமான அறிவிப்பினை வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து 250மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் பாலியாற்று பாரிய குடிநீர் வழங்கல் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதனையடுத்து, அவர் கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் யாழ்.மத்திய கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது பிரசன்னமாகவுள்ளார். https://www.virakesari.lk/article/172774
-
இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுகின்றது – சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாபிரிக்கா வழக்கு
Published By: RAJEEBAN 30 DEC, 2023 | 12:31 PM இஸ்ரேலிற்கு எதிராக தென்னாபிரிக்க சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. இனப்படுகொலை தொடர்பான சாசனத்தின் கீழ் தென்னாபிரிக்கா வழக்கு தாக்கல் செய்துள்ளதை ஐசிஜே உறுதி செய்துள்ளது. இனப்படுகொலை இடம்பெறுவதை தடுக்கவேண்டிய கடப்பாடுள்ளதாக தென்னாபிரிக்கா தெரிவித்துள்ளது. காசாமீதான இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக சிக்குப்பட்டுள்ள மக்களின் நிலைமை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள தென்னாபிரிக்கா கண்மூடித்தனமான படைபல பிரயோகமும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களை பலவந்தமாக வெளியேற்றுதலும் இடம்பெறுவதாக குறிப்பிட்டுள்ளது. மனித குலத்திற்கு எதிரான குற்றம் யுத்த குற்றங்கள் போன்றவை இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகின்றன இனப்படுகொலை அல்லது அதனுடன் தொடர்புபட்ட குற்றங்கள் என தெரிவிக்ககூடிய சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் அறிக்கைகள் வெளியாகின்றன என தென்னாபிரிக்கா தெரிவித்துள்ளது. இஸ்ரேல் இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என நிராகரித்துள்ளது. https://www.virakesari.lk/article/172754
-
இஸ்ரோ: கருந்துளையை ஆய்வு செய்யக் கிளம்பும் எக்ஸ்போசாட் குறித்த முக்கியத் தகவல்கள்
பட மூலாதாரம்,NASA/ISRO கட்டுரை தகவல் எழுதியவர், ஜான்வி மூலே பதவி, பிபிசி மராத்தி 20 நிமிடங்களுக்கு முன்னர் சந்திரன் மற்றும் சூரியன் குறித்து ஆய்வு செய்யும் திட்டங்களில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்திய இந்தியா தற்போது, சூப்பர்நோவா (விண்மீன் வெடிப்பு) உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும் திட்டங்களைத் தொடங்கியுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ 2024ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே எக்ஸ்போசேட் (XPoSat) என்னும் செயற்கைக் கோளை விண்ணுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. ஆரம்பத்தில் XPoSat செயற்கைக்கோள் டிசம்பர் மாத இறுதியில் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது ஜனவரி 1ஆம் தேதி வாக்கில் அந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படலாம் என இந்திய ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. எக்ஸ்போசேட் என்பது என்ன? இது ஏன் முக்கியம்? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் இந்தக் கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளன. XPoSat என்றால் என்ன? பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, எக்ஸ்-ரே இருமை விண்மீன் குறித்த சித்தரிப்புப் படம் எக்ஸ்-ரே போலாரிமீட்டர் சேட்டிலைட் என்பதன் சுருக்கமே எக்ஸ்போசேட் (XPoSat). இந்த செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் விண்ணுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பூமியின் கீழ் சுற்றுப்பாதைக்கு சுமார் 650 கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தும். சுமார் ஐந்து ஆண்டுகள் வரை செயலில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள், கருந்துளைகளில் இருந்து வெளிப்படும் எக்ஸ் கதிர்கள் குறித்த தரவுகளைச் சேகரித்து, இந்தப் பிரபஞ்சத்தை இன்னும் சிறப்பாகப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். இப்படிப்பட்ட செயற்கைக்கோள் விண்ணுக்குச் செலுத்தப்படுவது இது உலகிலேயே இரண்டாவது முறை. டிசம்பர் 2021ஆம் ஆண்டில் நாசா மற்றும் இத்தாலிய விண்வெளி முகமை இணைந்து எக்ஸ்-ரே போலாரிமீட்ரி எக்ஸ்ப்ளோரர் அல்லது IXPE என்றழகக்கப்படும் இத்தகைய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. எக்ஸ் கதிர்கள் குறித்து ஏன் ஆய்வு செய்ய வேண்டும்? பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, எக்ஸ்போசேட் விண்ணில் உள்ள பல அம்சங்கள் குறித்து வழக்கமான ஒளியியல் தொலைநோக்கிகள் மூலம் அதிகமாக அறிய முடியாது. அவற்றின் மூலம் கருந்துளைகள் போன்றவை எதனால் ஆனது, அவை என்ன செய்யும் என்பது குறித்துப் புரிந்துகொள்ள முடியாது. அதனால்தான் விண்ணிலிருந்து உமிழப்படும் எக்ஸ், காமா, காஸ்மிக் ஆகிய கதிர்கள், ரேடியோ அலைகள் உள்ளிட்டவற்றில் இருந்து விஞ்ஞானிகள் தரவுகளைச் சேகரித்து அவற்றின் மூலம் ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். இந்த எக்ஸ் கதிர்கள், ஆக்ரோஷமான மோதல்கள், பெரும் வெடிப்புகள், அதிவேக சுழற்சிகள் மற்றும் வலுவான காந்தப்புலங்கள் போன்ற அதீத சூழல்களில் வெளிப்படும். இந்த அதீத நிகழ்வுகளில் கருந்துளைகளும் அடக்கம். ஆயுட்காலம் முடிவடைந்த விண்மீன் ஒன்று, தன் எடையின் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் வெடிக்கும்போது உருவாகும் துளைதான் கருந்துளை எனப்படுகிறது. கருந்துளையில் உள்ள ஈர்ப்பு விசை மிகவும் அளப்பரியது. அதனால் அதிலிருந்து ஒளிகூட வெளியேற முடியாது என்பதால், நாம் அவற்றைப் பார்க்க முடியாது. இதனால் அவை குறித்து ஆய்வு மேற்கொள்ள சிறப்புக் கருவிகள் நமக்குத் தேவைப்படுகின்றன. அதனால், எக்ஸ் கதிர்களை வெளிப்படுத்தும் குவாசர் (விண்வெளியில் அமைந்திருக்கும் ஒளி உட்பட மின்காந்தக் கதிர்வீச்சு ஆற்றலை உமிழும் பெரிய விண்மீன் போன்றவை), சூப்பர்நோவா (பெரும் வீண்மீன் வெடிப்பு), நியூட்ரான் விண்மீன்கள் (விண்மீன் வெடிப்பின் எச்சம்), எக்ஸ்-ரே இருமை விண்மீன் (ஒரு நியூட்ரான் விண்மீன் அல்லது கருந்துளை துணை விண்மீனில் இருந்து வாயுவை உள்ளிழுப்பது) உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய எக்ஸ்-ரே தொலைநோக்கிகள் உதவி செய்கின்றன. நமது பிரபஞ்சம் எப்படிச் செயல்படுகிறது என்பதை அறியவும் அதுகுறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்க்கவும் இவை குறித்து ஆய்வு செய்வது அவசியமாகிறது. விண்வெளி ஆய்வகம் ஏன்? பட மூலாதாரம்,ISRO இத்தகைய கதிர்கள் பூமியில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத வண்ணம் அவை பூமியில் நுழைவதை புவி வளிமண்டலம் தடுக்கிறது. இதன் காரணமாக, இவற்றைப் பூமியிலிருந்து கண்காணிக்கப் பல தடைகள் உள்ளன. எனவே, எக்ஸ்-ரே கண்காணிப்பு ஆய்வகம் விண்ணுக்கு அனுப்பப்படுகின்றது. அப்படி அனுப்பப்பட்டதில் மிகவும் பிரபலமான விண்வெளி ஆய்வகம், நாசா அனுப்பிய சந்திரா எக்ஸ்-ரே ஆய்வகம். இதற்கு இந்திய-அமெரிக்க விஞ்ஞானியான சுப்பிரமணியன் சந்திரசேகரின் பெயர் சூட்டப்பட்டது. ஒளிக்கதிர்கள், புற ஊதாக்கதிர்கள், குறைந்த மற்றும் அதிக ஆற்றல் கொண்ட எக்ஸ்-கதிர்கள் வாயிலாக பிரபஞ்சம் குறித்து ஆய்வுசெய்ய 2015ஆம் ஆண்டில் ஆஸ்ட்ரோசேட் (ASTROSAT) என்னும் ஆய்வகத்தை இந்தியா விண்ணுக்கு அனுப்பியது. ஆனால், இந்த எக்ஸ்போசேட் எக்ஸ் கதிர்களின் மூலங்களை மட்டுமே ஆராயாமல் அதன் நீண்டகால செயல்பாடுகளைப் புரிந்துகொள்ள அவற்றின் துருவமுனைப்பில் கவனம் செலுத்தும். துருவமுனைப்பு மற்றும் போலாரிமீட்டர் என்பது என்ன? பட மூலாதாரம்,ISRO கண்ணைக் கூசும் ஒளியிலிருந்து தடுக்கும் வகையிலான துருவப்படுத்தப்பட்ட கூலிங் கிளாஸ் மூலமாகப் பார்க்கும் ஒளிக்கும் சாதாரண சூரிய ஒளிக்கும் இடையிலான வித்தியாசத்தை நாம் கவனித்திருப்போம். இது ஏன் நடக்கிறது? ஏனெனில் ஒளி அலைகள் ஒரு கயிற்றைப் போல, அவற்றின் பயணத்தின் திசையைச் சுற்றிச் செயல்படுகின்றன. ஆனால் அவை சிறப்பு வடிப்பான்களைக் (filter) கடந்து செல்லும்போது, அல்லது வளிமண்டலத்தில் வாயுக்களால் சிதறடிக்கப்படும்போது அவை துருவப்படுத்தப்படலாம் மற்றும் அவற்றின் அலைவுகள் அனைத்தும் வரிசையாக இருக்கும். எக்ஸ் கதிர்களும் இதுபோன்றுதான் செயல்படும் மற்றும் துருவமுனைப்பு என்பது அவை அசையும் திசையாகும். இந்தத் திசையைக் கண்காணிக்க போலாரிமீட்டர் உதவுகிறது. மேலும், எக்ஸ் கதிர்களை உமிழும் விண்வெளிப் பொருட்கள் குறித்து முக்கியமான தகவல்களையும் வழங்குகிறது. இந்த XPoSat செயற்கைக்கோளிலும் இத்தகைய ஒரு போலாரிமீட்டர் பொருத்தப்பட்டிருக்கும். எக்ஸ்போசேட்டில் என்னென்ன இருக்கும்? பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, சந்திரா எக்ஸ்-ரே ஆய்வகம் எக்ஸ்போசேட்டில் இருவிதமான அறிவியல் உபகரணங்கள் பொருத்தப்பட்டிருக்கும். POLIX: பெங்களூருவில் உள்ள ராமன் ஆய்வு மையம், யூ.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்துடன் இணைந்து உருவாக்கிய முதன்மை உபகரணமான POLIX பொருத்தப்பட்டிருக்கும். இது வானியல் மூலங்களில் இருந்து உருவாகும் துருவமுனைப்பின் அளவு மற்றும் கோணத்தை அளவிடும். மற்றொன்று XSPECT உபகரணம்.இஸ்ரோவின் கூற்றுப்படி, இது பிரகாசமான எக்ஸ்ரே மூலங்களின் நிறமாலை மற்றும் துருவப்படுத்தல் அம்சங்களை ஒரே நேரத்தில் ஆய்வு செய்யும் திறன் கொண்டது. https://www.bbc.com/tamil/articles/c51zk9z4kjko
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
போலந்திற்குள் நுழைந்து உக்ரைனை நோக்கி சென்ற ரஸ்ய ஏவுகணை Published By: RAJEEBAN 30 DEC, 2023 | 09:00 AM ரஸ்யாவின் ஏவுகணைகள் போலந்திற்குள் நுழைந்து அங்கிருந்து உக்ரைனை நோக்கி சென்றதாக போலந்தின் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை காலை மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் ஏவுகணைகள் போலந்தின் வான் பரப்பிற்குள் நுழைந்தன என ஜெனரல் வைஸ்லோ குக்குலா தெரிவித்துள்ளார். ரஸ்யாவின் ஏவுகணைகள் ராடரில் பதிவாகியுள்ளதை தொடர்ந்து போலந்து ஜனாதிபதி அவசர கூட்டமொன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார். மூன்று நிமிடங்கள் ரஸ்ய ஏவுகணை போலந்தின் வான்பரப்பில் காணப்பட்டுள்ளது - இதேவேளை ஏவுகணை தென்பட்ட பகுதியில் அது விழுந்து வெடித்ததா என்பது குறித்த சோதனைகள் இடம்பெறுகின்றன. உக்ரைனின் பல நகரங்களை இலக்குவைத்து ரஸ்யா மேற்கொண்ட பாரிய வான்தாக்குதல்களின் போதே ரஸ்ய ஏவுகணை போலந்து ஊடாக உக்ரைன் சென்றுள்ளது. ரஸ்யா உக்ரைன் மீது மிகப்பெரியவான் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. உக்ரைனிற்கு எதிரான போர் ஆரம்பமான பின்னர் ரஸ்யா மேற்கொண்டுள்ள மிகப்பெரிய வான் தாக்குதல் இது என உக்ரைனின் இராணுவ வட்டாரங்கள் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளன. உக்ரைன் மீது முன்னொரு போதும் இல்லாத அளவிற்கு ரஸ்யா மேற்கொண்டுள்ள ஆளில்லா விமான மற்றும் ஏவுகணை தாக்குதல்களில் 12 பேர் பலியாகியுள்ளனர். வெள்ளிக்கிழமை இரவு முதல் தாக்குதல்கள் இடம்பெறுவதாகவும் உக்ரைன் தலைநகரும் ஏனைய முக்கிய நகரங்களும் தாக்குதலிற்கு உள்ளாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட காலத்தின் பின்னர் எங்கள் கண்காணிப்புகளில் அனைத்து பிரதேசங்களிலும் அனைத்து பகுதிகளிலும் ரஸ்யாவின் தாக்குதலை காண்கின்றோம் என உக்ரைனின் இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். உக்ரைனின் தலைநகரையும் கிழக்கு மேற்கு தெற்கு பகுதிகளை இலக்கு வைப்பதற்காக ரஸ்யா 158 ஆளில்லா விமானங்களையும் ஏவுகணைகளையும் பயன்படுத்தியுள்ளது என உக்ரைன் தெரிவித்துள்ளது. எதிரி மிகவும் வலுவாக தாக்கியுள்ளான் சிலவற்றை வீழ்த்தியுள்ளோம் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன என உக்ரைன் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் தலைநகரில் புகையிரத நிலையமொன்றை ரஸ்யா இலக்கு வைத்ததில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் 20 பேர் காயமடைந்துள்ளனர். https://www.virakesari.lk/article/172735
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நினைவிலும் வைத்திருப்பதில்லை என நினைக்கிறேன்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உக்ரைன் மீது ரஸ்யா மிகக்கடுமையான வான் தாக்குதல் - 150க்கும் அதிகமான ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகளை பயன்படுத்தியது. Published By: RAJEEBAN 29 DEC, 2023 | 04:56 PM ரஸ்யா உக்ரைன் மீது மிகப்பெரிய வான் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. உக்ரைனிற்கு எதிரான போர் ஆரம்பமான பின்னர் ரஸ்யா மேற்கொண்டுள்ள மிகப்பெரிய வான் தாக்குதல் இது என உக்ரைனின் இராணுவ வட்டாரங்கள் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளன. உக்ரைன் மீது முன்னொரு போதும் இல்லாத அளவிற்கு ரஸ்யா மேற்கொண்டுள்ள ஆளில்லா விமான மற்றும் ஏவுகணை தாக்குதல்களில் 12 பேர் பலியாகியுள்ளனர். வெள்ளிக்கிழமை இரவு முதல் தாக்குதல்கள் இடம்பெறுவதாகவும் உக்ரைன் தலைநகரும் ஏனைய முக்கிய நகரங்களும் தாக்குதலிற்குள்ளாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட காலத்தின் பின்னர் எங்கள் கண்காணிப்புகளில் அனைத்து பிரதேசங்களிலும் அனைத்து பகுதிகளிலும் ரஸ்யாவின் தாக்குதலை காண்கின்றோம் என உக்ரைனின் இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். உக்ரைனின் தலைநகரையும் கிழக்கு மேற்கு தெற்கு பகுதிகளை இலக்கு வைப்பதற்காக ரஸ்யா 158 ஆளில்லா விமானங்களையும் ஏவுகணைகளையும் பயன்படுத்தியுள்ளது என உக்ரைன் தெரிவித்துள்ளது. எதிரி மிகவும் வலுவாக தாக்கியுள்ளான் சிலவற்றை வீழ்த்தியுள்ளோம் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன என உக்ரைன் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் தலைநகரில் புகையிரத நிலையமொன்றை ரஸ்யா இலக்கு வைத்ததில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் 20 பேர் காயமடைந்துள்ளனர். https://www.virakesari.lk/article/172721
-
பொலிஸ் விசேட சுற்றிவளைப்புகளில் 4 நாட்களில் 8 ஆயிரம் பேர் கைது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
பொலிஸ் விசேட சுற்றிவளைப்புகளில் 17 ஆயிரம் பேர் கைது : 450 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் பறிமுதல்! 29 DEC, 2023 | 05:55 PM (எம்.வை.எம்.சியாம்) போதைப்பொருள் மற்றும் பாதாளாக்குழுக்களை ஒடுக்கும் யுக்திய பொலிஸ் விசேட சுற்றிவளைப்புகளில் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் நாடளாவிய ரீதியில் 17 ஆயிரத்து 837 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே ஹெரோயின், ஐஸ் உட்பட 450 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களை ஒடுக்கும் யுக்திய பொலிஸ் விசேட வேலைத்திட்டம் பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் பணிப்புரைக்கு அமைய, முப்படைகளின் ஒத்துழைப்புகளுடன் நாடளாவிய ரீதியில் கடந்த 17ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டிருந்தது. கடந்த 17ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரையான ஒரு வார காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 17,666 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இருப்பினும், நத்தார் பண்டிகையை முன்னிட்டு பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டமையால் இரண்டு நாட்களுக்கு யுக்திய சுற்றிவளைப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், யுக்திய பொலிஸ் சுற்றிவளைப்புகள் கடந்த புதன்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்பட்டதுடன் இதன்போது 2,889 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். அதற்கமைவாக நாடளாவிய ரீதியில் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய சுற்றிவளைப்புகளில் 17,837 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்ட 850 பேர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், 186 பேருக்கு எதிராக சட்டவிரோத சொத்து குவிப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், 1,187 சந்தேக நபர்கள் புனர்வாழ்வு மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஏற்கனவே சந்தேக நபர்களாக பட்டியலிடப்பட்டு தேடப்பட்டு வந்த 4,665 சந்தேக நபர்களில் 1,375 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே 10 கிலோ 510 கிராம் ஹெரோயின், 6 கிலோ 740 கிராம் ஐஸ் போதைப்பொருள், 288 கிலோ 500 கிராம் கஞ்சா, ஒரு கிலோ 70 கிராம் ஹஷீஷ் போதைப்பொருள், 35 கிலோ 800 கிராம் ஹுஸ் போதைப்பொருள், 3 கிலோ 350 கிராம் தூள் போதைப்பொருள், 18 கிலோ 50 கிராம் மாவா, 71, 271 போதைப்பொருள் மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் 2,110,500 கஞ்சா செடிகளும் அழிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/172730
-
Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்
விஜயகாந்த் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் பட மூலாதாரம்,VIJAYAKATNTH FACEBOOK 28 டிசம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் சென்னை தீவுத் திடலில் இருந்து கட்சி அலுவலகத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் குன்றியிருந்த விஜயகாந்த் பல தருணங்களில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமையன்று மீண்டும் மருத்துவமனையில் நிம்மோனியா காய்ச்சலுக்காக விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். முதலில் அவரது வீடு மற்றும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரின் உடல் பின்னர் சென்னை தீவுத்திடலில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள், அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அவரது உடல் பூந்தமல்லி நெடுஞ்சாலை ஈவேரா சாலை வழியாக தேமுதிக தலைமை அலுவலகம் வரை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்நிலையில் 6 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், விஜயகாந்த் குடும்பத்தினர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் முன்னிலையில் விஜயகாந்த் அவர்களின் உடல் முழு அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. படக்குறிப்பு, விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி மு.க.ஸ்டாலின் இறுதி மரியாதை விஜயகாந்த் மறைவையொட்டி அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு அஞ்சலி செலுத்தியிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மீண்டும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் அவர்களுக்கு தனது இறுதி மரியாதையை செலுத்தியுள்ளார். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்ரமணியம், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரோடு இறுதி மரியாதை நிகழ்வில் பங்கேற்ற அவர் விஜயகாந்த் அவர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து தனது இறுதி மரியாதையை செலுத்தி விட்டு சென்றுள்ளார். மேலும், முதல்வர் ஸ்டாலினின் சமூக வலைத்தள பக்கங்களில் ‘எங்கள் இதயங்களில் நிரந்தரமாக வாழ்வீர்கள் நண்பரே…’ என்ற வாசகங்களோடு விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் இறுதி மரியாதை செலுத்தும் படங்கள் பகிரப்பட்டுள்ளன. படக்குறிப்பு, மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த் பிரேமலதா விஜயகாந்த் உரை விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்த பிறகு தொண்டர்கள் மத்தியில் பிரேமலதா விஜயகாந்த் உரையாற்றியுள்ளார். இதில் முன்வந்து நின்று அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் அனைத்து அமைச்சர்கள் மற்றும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும், பிரபலங்களுக்கும், மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அரசு மரியாதை செய்ய ஏற்பாடு செய்ததற்கும், தீவுத்திடலில் அஞ்சலிக்கு இடம் ஒதுக்கி கொடுத்ததற்கும் தமிழ்நாடு அரசுக்கு நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் இதுவரைக்கும் தமிழக அரசியல் வரலாற்றில் இது போல் எந்த தலைவருக்கும் கூட்டம் கூடியதில்லை. இரண்டு நாட்களில் 15 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த். “இந்த சோகமான நாளில் தலைவரின் கனவை வெற்றிபெற செய்ய வேண்டும் என நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும். அந்த நாள்தான் தேமுதிகவின் வெற்றி நாள். தேமுதிக அலுவலகத்தில் தலைவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டு, 24 மணிநேரமும் விளக்கு ஏற்றப்படும்” என்றும் அவர் கூறியுள்ளார். '54 புதிய இயக்குநர்களை அறிமுகம் செய்த ஒரே நடிகர்' "தனது சினிமா வாழ்க்கையில் 54 புதிய இயக்குநர்களை அறிமுகம் செய்தவர் நடிகர் விஜயகாந்த். உலக சினிமாவில் இதை வேறு யாரும் செய்திருக்க மாட்டார்கள். அதிகமான புதிய தயாரிப்பாளர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் வாய்ப்பு அளித்தவர்" என்று தயாரிப்பாளர் சிவா ஒருமுறை கூறியிருக்கிறார். "சொல்வதெல்லாம் உண்மை திரைப்படம் மூலம் என்னை தயாரிப்பாளராக அறிமுகப்படுத்தியது அவர் தான். இந்த காட்சி எதற்கு, வசனம் எதற்கு, கதையை இப்படி மாற்றலாமா என்றெல்லாம் அவர் பேசமாட்டார். கதையை ஒத்துக்கொண்டு, சம்பளம் வாங்கிவிட்டால் எதையும் பேசாமல், விரைவாக நடித்துக் கொடுத்து விடுவார். மிகச்சிறந்த மனிதர் என்பதைத் தாண்டி ஒரு நல்ல தொழில்முறைக் கலைஞர் விஜயகாந்த்" என்று கூறியிருக்கிறார் தயாரிப்பாளர் டி. சிவா. https://www.bbc.com/tamil/articles/ce5j35dgpv1o
-
வடக்கிற்கான புகையிரத சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!
கொழும்பு – காங்கேசன்துறை புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் - புகையிரத திணைக்களம் 29 DEC, 2023 | 08:16 PM (இராஜதுரை ஹஷான்) வடக்கு புகையிரத பாதை அபிவிருத்தி செய்யப்படவுள்ளதால் எதிர்வரும் ஜனவரி மாதம் 07 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு கொழும்பு கோட்டை முதல் காங்கேசன்துறை, யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவை தற்காலிகமாக இடை நிறுத்தப்படும். கொழும்பில் இருந்து செல்லும் யாழ் நிலா புகையிரதம் திருகோணமலைக்கு செல்லும் என புகையிரத திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொல தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, மஹவ முதல் அனுராதபுரம் வரையிலான புகையிரத பாதை அபிவிருத்தி செய்யப்படவுள்ளதால் எதிர்வரும் ஜனவரி மாதம் 07 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து காங்கேசன்துறை மற்றும் யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படும். அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும் குறித்த காலப்பகுதியில் அநுராதபுரம் முதல் யாழ்ப்பாணம் வரை இரண்டு விசேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படும் அத்துடன் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி செல்லும் யாழ் நிலா புகையிரதம் அனுராதபுரத்தில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து திருகோணமலை நோக்கிச் சென்று,திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் நோக்கி புறப்படும் என்றார். https://www.virakesari.lk/article/172724
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எழுதுபவர்களுக்கு சரி அண்ணை. செய்தியை இணைப்பது பற்றி கூறினேன்.
-
இலங்கையின் அனைத்து துறைமுகங்களையும் இந்தியாவுடன் இணைக்கும் திட்டம்!
அது அவையின்ர எல்லோ அண்ணை.
-
Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்
விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி: தீவுத்திடலில் குவியும் பிரபலங்கள்; கண்ணீர் மல்க பொதுமக்கள் பிரியாவிடை 29 DEC, 2023 | 12:44 PM சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்திச் செல்கின்றனர். அரசியல் பிரமுகர்களும், திரைப் பிரபலங்களும் மேடையில் உள்ள விஜயகாந்த் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிச் செல்கின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று (டிச.28) காலை காலமானார். அவரது மறைவையடுத்து சில மணி நேரம் சாலிகிராமம் வீட்டில் வைக்கப்பட்ட அவரது உடல் அங்கிருந்து ஊர்வலமாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கு கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் குவிந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர். இரவு வரை அங்கே பல்வேறு பிரபலங்களும் வந்து அஞ்சலி செலுத்தினர். நடிகர் விஜய், இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திச் சென்றனர். தென் மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகாவில் இருந்தும்கூட ரசிகர்கள் வந்திருந்தனர். வரிசையில் நின்றிருந்த சிலர் விஜயகாந்த் தமிழக முதல்வராக வந்திருக்கலாம். மக்கள் அந்த வாய்ப்பை இழந்துவிட்டனர் என்று கூறினர். விஜயகாந்த் உடலுக்கு மக்கள் இறுதி அஞ்சலி செலுத்த போதிய முன்னேற்பாடுகள் செய்யப்படாததால் நெரிசலில் மக்கள் சிக்கி அவதிக்குள்ளாயினர். இதன் காரணமாக தற்போது விஜயகாந்தின் உடல் தீவுத்திடல் மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தீவுத்திடலில் சென்னை மாநகராட்சி சார்பில் குடிநீர் வசதி, கழிவறை வசதி என பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மக்கள் அஞ்சலி செலுத்தி சென்று திரும்ப ஏதுவாக பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்திச் செல்கின்றனர். பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இன்று மதியம் 1 மணியளவில் தீவுத் திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்துவரப்படும் விஜயகாந்த் உடல் இன்று மாலை 4.30 மணியளவில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. அவருக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி: விஜயகாந்த் உடலுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மகன்கள் சண்முகபாண்டியன், பிரபாகரன், மைத்துனர் சுதீஷுக்கு ஆறுதல் தெரிவித்தார். அவருடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜக பிரமுகர்கள் வந்திருந்தனர். பின்னர் பேசிய அண்ணாமலை, “பிரதமர் மோடியின் முழுமையான அன்பைப் பெற்ற விஜயகாந்த் ஏழைகளின் பங்காளன். அவரின் புகழ் என்றும் ஓங்கியிருக்கும்” என்றார். தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “கேப்டன் இளகிய மனம் கொண்டவர். அவர் மறைவு வருத்தமளிக்கிறது. அரசியலில் மனிதநேயத்துடன் உள்ள தலைவரை நாம் பார்க்கமுடியாது. அப்படிப்பட்டவரை இழந்துவிட்டோம். கடைசி முறையாக அவருடைய முகத்தை ஒருமுறை பார்த்துவிட மாட்டோமா என்று வந்துள்ள தொண்டர்களுடன் துக்கத்தைப் பகிர்ந்து கொள்கிறோம். தன் பணத்தால் மக்களுக்கு உதவிய தலைவரை இழந்துவிட்டோம். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு, தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். பிரதமர் மோடி உடனடியாக இரங்கல் குறிப்பு பதிவிட்டதோடு, நம்மை நேரடியாக இங்கே அனுப்பிவைத்தார். ஆளுநர் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளேன்” என்றார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இரங்கல்: விஜயகாந்த் மறைவுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் இரங்கல் தெரிவித்துள்ளார். ”விஜயகாந்தின் புன்சிரிப்பை மறக்க முடியாது. அவர் தனது மகனுக்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டி தமிழீழ விடுதலை வேட்கைக்கு வடிவம் கொடுத்தவர்” என்று அவர் கூறியுள்ளார். தேவா முதல் பார்த்திபன் வரை.. இசையமைப்பாளர் தேவா மகன் ஸ்ரீகாந்த் தேவாவுடன் வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேசிய அவர், “நான் பார்த்த வள்ளல் விஜயகாந்த் தான். அற்புதமான மனிதர்” என்றார். இயக்குநர், நடிகர் பாக்யராஜ் மகன் சாந்தனுவுடன் வந்து அஞ்சலி செலுத்தினார். இயக்குநர், நடிகர் சுந்தர்.சி, அவரது மனைவி நடிகை குஷ்பு ஆகியோரும் அஞ்சலி செலுத்தி விஜயகாந்த் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துச் சென்றனர். மாமனிதர் என்றால் அது கேப்டன்தான் என்று சுந்தர்.சி-யும், சொக்கத்தக்கம் என்றால் அது விஜயகாந்துக்கே செல்லும் என்று குஷ்புவும் புகழஞ்சலி செலுத்தினர். இயக்குநர், நடிகர் பார்த்திபன் பேசுகையில், “நான் விஜயகாந்த் என்ற நடிகரைவிட அவருடைய மனிதநேயத்துக்கு மிக்கப்பெரிய ரசிகன்” என்றார். நடிகர்கள் ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோரும் அஞ்சலி செலுத்தி விஜயகாந்த் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். இயக்குநர், நடிகர் ரமேஷ் கண்ணா அஞ்சலி செலுத்தினார். முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அஞ்சலி: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மகன்களுடன் பேசி ஆறுதல் கூறினர். ஓ.பன்னீர்செல்வத்துடன் புகழேந்தி வந்திருந்தார். அஞ்சலிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், “2011-ல் ஜெயலலிதா முதல்வராக உறுதுணையாக இருந்தவர் விஜயகாந்த். ஈகை குணம் கொண்டவர். நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவர்” என்று நினைவுகூர்ந்தார். ரஜினிகாந்த் இரங்கல்: தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், “அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்கள் மறைந்து மிகப் பெரிய துரதிர்ஷ்டம். விஜயகாந்த் அசாத்தியமான மன உறுதி உள்ள மனிதர் எப்படியும் அவர் உடல்நிலை தேறிவிடும் என்று அனைவரும் நினைத்தோம். ஆனால் தேமுதிக பொதுக்குழுவில் அவரைப் பார்க்கும் போது எனக்கு உறுதி கொஞ்சம் குறைந்து விட்டது. விஜயகாந்த் இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார்” என்றார். தொடர்ந்து ரஜினிகாந்த் சென்னையில் நேரில் வந்து அஞ்சலி செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர்கள் விஜய் ஆண்டனி, அருள்நிதி, லிவிங்ஸ்டன் அஞ்சலி: இன்று காலை தீவுத்திடலுக்கு குடும்பத்துடன் வந்த நடிகர் அருள்நிதி இறுதி அஞ்சலி செலுத்தினார். நடிகர் லிவிங்ஸ்டன் கதறி அழுதபடி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சாதாரணமாக சுற்றித் திரிந்த என்னை சொந்தச் செலவில் நடிகராக்கியவர். என்னை ஒரு நடிகராக அங்கீகரித்து வளர்த்தெடுத்து, சம்பாதிக்க வைத்து வாழவைத்தவர்” என்றார். ராம்கி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்: நடிகர் ராம்கி செந்தூரப்பூவே படத்தில் விஜயகாந்துடன் நடித்த அனுபவங்களைப் பகிர்ந்தார். அந்தப் படத்தில் விஜயகாந்தின் கதாபாத்திரத்துக்கு பெயர் கேப்டன். அதனால் சூட்டிங் ஸ்பாட்டில் அனவருமே கேப்டன் ஷாட்டுக்கு ரெடியா, கேப்டன் வந்துட்டாரா? என்றுதான் பேசுவோம். கொஞ்ச நாளில் அது அவரது ஆஃபீஸ் வரை நீண்டது. அங்கே போன் செய்து கேப்டன் கிளம்பிட்டாரா எனக் கேட்பார்கள். அந்தப் படம் முடிந்தும் கேப்டன் என்றே அவரை எல்லோரும் வாஞ்சையோடு அழைத்தோம். கேப்டன் பிரபாகரன் படத்துக்குப் பின்னர் அந்தப் பெயர் அவரின் அடையாளமாகிவிட்டது என்றார். கண்கலங்கிய ரஜினிகாந்த்: சென்னை தீவுத் திடலில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு நேரில் அஞ்சலிக்கு செலுத்திய ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “கன்னியாகுமரி படப்பிடிப்பில் இருந்து இங்கே வருகிறேன். மனம் மிகவும் கனக்கிறது. விஜயகாந்த் பற்றி பேச எவ்வளவோ இருக்கிறது. நட்புக்கு இலக்கணம் விஜயகாந்த். ஒருமுறை பழகிவிட்டால், வாழ்க்கை முழுக்க அதனை மறக்கவே முடியாது. அவரது அன்புக்கு அனைவரும் அடிமையாகி விடுவார்கள். அதனால் தான் அவருக்கு அத்தனை நண்பர்கள். அவருக்காக உயிரை கொடுக்கக் கூட தயாராக இருந்தனர். நண்பர்கள் மீது கோபப்படுவார். அரசியல்வாதிகள் மீது கோபப்படுவார். ஊடகங்கள் மீது கூட கோபப்படுவார். ஆனால் அவர் மீது யாருக்கும் கோபம் வராது. காரணம் அவரது கோபத்தில் சுயநலம் இருக்காது. தைரியத்துக்கும் வீரத்துக்கு இலக்கணமானவர். கேப்டன் அவருக்கு பொறுத்தமான பெயர். 71 பால்களில், நூற்றுக்கணக்கான சிக்சர்களை குவித்து, மக்களை மகிழ்வித்து விக்கெட்டை இழந்து இந்த உலகம் என்னும் ஃபீல்டை விட்டு போய்விட்டார். வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி. மக்கள் மனதில் யார்? விஜயகாந்த் போன்றோர். வாழ்க விஜயகாந்த் நாமம்” இவ்வாறு ரஜினி நா தழுதழுக்க உருக்கமாக பேசினார். https://www.virakesari.lk/article/172691
-
இலங்கையின் அனைத்து துறைமுகங்களையும் இந்தியாவுடன் இணைக்கும் திட்டம்!
இலங்கையின் அனைத்து துறைமுகங்களையும் இந்தியாவுடன் இணைக்கும் பயணிகள் படகு சேவைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். இலங்கையின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை, தலைமன்னார் மற்றும் திருகோணமலை துறைமுகங்கள் உட்பட பல்வேறு மூலோபாய திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது விரிவாக ஆராயப்பட்டடது. இதன்போது கடல்சார் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகளை முன்னேற்றுவதற்கும், இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்வதற்கும் இந்திய அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை புதிய இந்திய உயர்ஸ்தானிகர் வலியுறுத்தியுள்ளார். இதன்போது கடல்சார் மற்றும் விமான சேவைத் துறைகளில் ஈடுபட ஆர்வமுள்ள இந்திய முதலீட்டாளர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சர் டி சில்வா குறிப்பிட்டுள்ளார். மேலும் கப்பல் மற்றும் சிறிய கைவினைக் கட்டுமானத் தொழில்களுக்கான சாத்தியக்கூறுகளை வலியுறுத்தி, திருகோணமலை துறைமுகப் பகுதியில் முதலீட்டு வாய்ப்புகளை அவர் முன்னிலைப்படுத்தியுள்ளார். https://thinakkural.lk/article/286279
-
நாகபட்டினம் - காங்கேசன்துறை சரக்குக் கப்பற்சேவை விரைவில்!
அண்ணை அது தீபாவளி எல்லோ?!
-
19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பயிற்சி குழாத்தில் தமிழ் யுவதி அமுருதா
19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பயிற்சி குழாத்தில் யாழை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் யுவதி அமு 29 DEC, 2023 | 12:35 AM (நெவில் அன்தனி) இலங்கையின் வட பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட அமுருதா சுரேன்குமார் என்ற 17 வயது யுவதி 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பெண்கள் பயிற்சி குழாத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். வட லண்டனைச் சேர்ந்த சகலதுறை வீராங்கனையான அமுருதா, பயிற்சிக் குழாத்தில் இணைக்கப்பட்ட செய்தியை கிறிஸ்மஸ் பண்டிகை காலத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அமு என கிரிக்கெட் அரங்கில் செல்லமாக அழைக்கப்படும் இந்த யுவதி கடந்த ஜூலை மாதம் தனது 16ஆவது வயதில் சன்ரைசர்ஸ் சிரேஷ்ட அணியில் முதல் தடவையாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். துடுப்பாட்டம், பந்துவீச்சு ஆகிய சகலதுறைகளிலும் பிரகாசித்துவரும் அமு, கவுன்டி கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பிரபல மிட்ல்செக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 7 வயது சிறுமியாக இருந்தபோது அமுவின் ஆற்றலை நோர்த் லண்டன் கிரிக்கெட் கழகம் முதன் முதலில் இனங்கண்டது. யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ் குடும்பத்தில் பிரித்தானியாவில் பிறந்த அமு, ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து குழாத்தில் இணைந்து உயர் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளார். உள்ளூர் மகிளிர் கிரிக்கெட் போட்டிகளில் சகலதுறைகளிலும் பிரகாசித்துவரும் அமு, அடுத்த வருடம் இலங்கை வருகை தரவுள்ள 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பெண்கள் அணியில் இடம்பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளின் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகள் மும்முனை சர்வதேச கிரிக்கெட் தொடரில் அடுத்த வருடம் விளையாடும்போது அமுவும் அத் தொடரில் இடம்பெறுவார் என இலங்கை தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அமு இளம் வயதிலிருந்தே கிரிக்கெட் மீது பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். ஏனெனில் அவரது தந்தை சிவா சுரேன்குமார், யாழ். சென். ஜோன்ஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரராவார். 1990இல் நடைபெற்ற 87ஆவது வடக்கின் மாபெரும் கிரிக்கெட் சமரில் அவர் குவித்த 145 ஓட்டங்கள் இன்னிங்ஸ் ஒன்றில் ஒருவர் பெற்ற சாதனைக்குரிய அதிகூடிய எண்ணிக்கையாக இருக்கிறது. பாடசாலை கல்வியை நிறைவு செய்த பின்னர் இங்கிலாந்துக்கு புலம்பெயர்ந்த சிவா சுரேன்குமார் அங்கு லோகினி என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களின் சிரேஷ்ட புதல்வியாக அமுருதா 2006ஆம் ஆண்டு பிறந்தார். அமுருதாவின் ஆற்றல் குறித்து கருத்து வெளியிட்ட நோர்த் லண்டன் கிரிக்கெட் கழக அதிபர் மாட்டின் இஸிட், 'அவரிடம் குடிகொண்டுள்ள இயல்பான கிரிக்கெட் ஆற்றல்கள், கிரிக்கெட்டில் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதில் அவர் கொண்டுள்ள அர்ப்பணிப்புத்தன்மை என்பன அவரை கண்ட முதல் சந்தர்ப்பத்திலேயே எங்களைப் பிரமிக்கவைத்தன. அடுத்த தலைமுறையில் அதி உயிரிய ஆற்றல் மிக்க வீரராங்கனைகளை இனங்காணத் துடிக்கும் தேர்வாளர்களை அமுருதா வெகுவாக கவர்ந்துள்ளார்' என்றார். தனது முன்னேற்றத்தைப் பயன்படுத்தி விளையாட்டில் பெண்களின் பங்கேற்பை மேம்படுத்த விரும்புவதாக அமு தெரிவித்துள்ளார். 'கிரிக்கெட் விளையாட்டில் பாலின சமத்துவத்தை வளர்க்க நான் விரும்புகிறேன். உதாரணமாக பெண்கள் கிரிக்கெட் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் அதிமாக வெளியிடவேண்டும். அத்துடன் கிரிக்கெட்டில் அதிகளவிலான பெண்களை ஈடுபடச் செய்யவேண்டும். நான் எனது பெற்றோரினால் உந்தப்பட்டேன். ஜொ ரூட் (இங்கிலாந்து வீரர்), அவுஸ்திரேலியாவின் சகலதுறை வீராங்கனை எலிஸ் பெரி ஆகியோரே எனது முன்மாதிரி' என அமு தெரிவித்தார். https://www.virakesari.lk/article/172664
-
பொலிஸ் விசேட சுற்றிவளைப்புகளில் 4 நாட்களில் 8 ஆயிரம் பேர் கைது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
யுக்திய நடவடிக்கையில் கைது செய்யப்படுவோரை தடுத்துவைக்கும் இடம் குறித்து நீதி அமைச்சர் விஜேதாச வெளியிட்ட தகவல் ! Published By: VISHNU 28 DEC, 2023 | 07:24 PM (எம்.ஆர்.எம்.வசீம்) நாடளாவிய ரீதியில் முற்படைகளால் மேற்கொண்டுவரும் யுக்திய நடவடிக்கையின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறைப்படுத்தப்படும் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சிறைச்சாலைகளில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் அரசுக்கு சொந்தமான பயன்படுத்தாமல் இருக்கும் கட்டிடங்களில் கைதிகளை தடுத்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க இருக்கிறோம் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார். பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்பின் பேரில் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிராேத நடவடிக்கைகளை கைதுசெய்யும் யுக்திய வேலைத்திட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களை தடுத்துவைக்க எடுத்திருக்கும் நடவடிக்கை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாடளாவிய ரீதியில் முப்படைகள் மேற்கொண்டு வரும் யுக்திய நடவடிக்கையின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறைப்படுத்தப்படும் கைதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சிறைச்சாலைகளில் தற்போது இட நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கிறது. யுக்திய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் நாடு பூராகவும் உள்ள 28 சிறைச்சாலைகளிலும் இரண்டாயிரத்து 255க்கும் அதிகமான புதிய கைதிகள் சிறைப்படுத்தப்பட்டிருக்கின்றளர். அத்துடன் யுக்திய நடவடிக்கை ஆரம்பிக்க முன்பதாக சிறைச்சாலைகளில் 28ஆயிரம் கைதிகளே தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். பொதுவாக இந்த நாட்டில் சிறைச்சாலைகளில் 11ஆயிரம் பேரே தடுத்து வைக்க முடியும். அதேநேரம் பெண் கைதிகளின் எண்ணிக்கையும் 800இல் இருந்து ஆயிரத்தி 124 வரை அதிகரித்திருக்கிறது. அத்துடன் சிறைச்சாலைகளின் நெருக்கடிக்கு நீண்ட கால தீர்வாக மில்லனிய பிரதேசத்தில் 50ஏக்கர் காணி தெரிவுசெய்து அங்கு கட்டிடங்களை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. என்றாலும் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு அரசுக்கு சொந்தமான பயன்படுத்தாமல் இருக்கும் பாதுகாப்பான கட்டிடங்களை தெரிவுசெய்து, சிறைச்சாலைகளில் இருக்கும் மேலதிக கைதிகளை குறித்த கட்டிடங்களுக்கு அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார். https://www.virakesari.lk/article/172659
-
இந்தியா தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் தொடர்
தென்னாப்பிரிக்க பந்துவீச்சில் சரணடைந்த இந்திய வீரர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரபாடா கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 டிசம்பர் 2023, 03:39 GMT புதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர் ஃபார்ஸ்ட் ஃபார்வேர்டு டெஸ்ட் போட்டி போன்று, தென் ஆப்பிரிக்காவும் ஃபார்ஸ்ட் ஃபார்வேர்டில் இந்திய அணியைச் சுருட்டி 3 நாட்களில் முதல் டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்களில் வெற்றியைப் பெற்றுள்ளது. செஞ்சூரியனில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வென்றது. இன்னும் ஆட்டம் முடிய 2 நாட்கள் முழுமையாக இருக்கும் நிலையில் இந்திய அணி சரண்டராகிவிட்டது. இந்திய அணி ஒட்டுமொத்தமாக 2வது இன்னிங்ஸில் 34.1 ஓவர்களில் 131 ரன்களுக்கு ஆட்டமிழந்து இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 245 ரன்கள் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி, 108.4 ஓவர்களில் 408 ரன்களுக்கு ஆட்டமிழந்து 163 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து, 2வது இன்னிங்ஸை இன்று தேநீர் இடைவேளைக்குப்பின் ஆடத் தொடங்கிய இந்திய அணி, தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சின் முன் தாக்குப்பிடிக்க முடியாமல், 131 ரன்களில் சுருண்டு இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES 13 ஆண்டுகளுக்குப்பின்… கடந்த 2010ம் ஆண்டு இதே செஞ்சூரியன் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை இன்னிங்ஸ் 25-ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி தோற்கடித்தது. ஏறக்குறைய 13 ஆண்டுகளுக்குப்பின அதேபோன்ற இன்னிங்ஸ் வெற்றியை தென் ஆப்பிரிக்கா மீண்டும் ருசித்துள்ளது. இதன் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா அணி முன்னிலை பெற்றுள்ளது. ஆட்டநாயகன் விருது 185 ரன்கள் குவித்த டீன் எல்கருக்கு வழங்கப்பட்டது. இந்திய அணியில் 2வது இன்னிங்ஸில் விராட் கோலி(76), சுப்மான் கில்(26) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற அனைத்து பேட்டர்களும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து இந்தியாவின் தோல்வியை உறுதி செய்தனர். கேப்டன் ரோஹித் சர்மா டக்அவுட்டில் விக்கெட்டை இழந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ரோஹித் சர்மாவுக்கு தண்ணிகாட்டிய ரபாடா தென் ஆப்பிரிக்காவில் ரோஹித் சர்மாவின் பேட்டிங் சராசரி என்பது வெறும் 12 ரன்கள்தான். 6 பெரிய அணிகளுக்கு இடையே மிகக்குறைவான சராசரி வைத்துள்ள 2வது பேட்டர் ரோஹித் சர்மாதான். அதிலும் ரபாடா பந்துவீச்சு என்றாலே ரோஹித் சர்மா ஆட்டமிழக்கும் வாய்ப்பு அதிகமாகிவிடுகிறது. அவரின் பந்துவீச்சுக்கு எதிராக ரோஹித் சர்மாவின் சராசரி வெறும் 6 ரன்கள்தான், 6 இன்னிங்ஸில் ரபாடாவின் பந்துவீச்சில் ரோஹித் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். இரு இன்னிங்ஸ்களிலும் ரபாடா பந்துவீச்சில்தான் ரோஹித் சர்மா விக்கெட்டைப் பறிகொடுத்துள்ளார். அதிலும் 2வது இன்னிங்ஸில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தவிதம், கண்இமைக்கும் நேரத்தில் நடந்துவிட்டது. ரபாடா சரியான லென்த்தில் “வாப்லிங் சீம்” என்று சொல்லக்கூடிய வகையில் காற்றிலேயே பந்து திசைமாறக்கூடிய வகையில் வீசினார். ரோஹித் சர்மா டிபென்ஸ் ப்ளே ஆட பிரன்ட்ஃபுட் ஆட முற்பட்டபோது, பந்து அவரை ஏமாற்றி க்ளீன் போல்டாகியது. இதுபோன்ற பந்துவீச்சை நிச்சயமாக ரோஹித் சர்மா தென் ஆப்பிரிக்காவில் மட்டும்தான் பார்த்திரக்கக்கூடும். இந்திய அணிக்கு எதிராக ரபாடா 50 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்து புதிய மைல்கல்லை எட்டினார். இதன் மூலம் இந்திய அணிக்கு எதிராக 50 விக்கெட்டுகளுக்கு மேல் குவித்த தென்ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் வரிசையில் 5-வது வீரராக இணைந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கே.எல்.ராகுல் விக்கெட்டை வீழ்த்திய பர்கர் 9 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன் இது தவிர இளம் வீரர்கள் ஜெய்ஸ்வால்(5), ஸ்ரேயாஸ் அய்யர்(6), ராகுல்(4), அஸ்வின்(0), ஷர்துல் தாக்கூர்(2) ஆகியோர் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்களின் துல்லியமான லைன் லென்த்துக்கு முன் தாக்குப் பிடிக்கமுடியாமல் வரிசையாக பெவிலியன் திரும்பினர். இந்திய அணியில் 9 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி கடைசி 35 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. அதாவது 96 ரன்கள் வரை 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்திருந்த இந்திய அணி, 131 ரன்களில் ஆட்டமிழந்துவிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆறுதல் இது மட்டும்தான் இந்திய அணிக்கு ஆறுதல் தரக்கூடிய அம்சம் என்னவென்றால் கேஎல். ராகுல் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்ததும், 2-ஆவது இன்னிங்ஸில் கோலி 76 ரன்கள் சேர்த்து ஃபார்முக்கு வந்திருப்பதுதான். மற்ற வகையில் இந்திய பந்துவீச்சில் பும்ரா தவிர மற்றவர்கள் பந்துவீச்சு படுமோசமாக அமைந்தது. செஞ்சூரியன் மைதானம் என்றாலே பந்துவீச்சாளர்களுக்கு சொர்க்கபுரிதான். இந்த மைதானத்தின் தன்மையையும், சூழலையும், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஒருவரும் பயன்படுத்தவில்லை. சரியான லைன் லென்த்தில் வீசப்பட்ட பந்துகள் அனைத்துமே இந்திய பேட்டர்களுக்கு சிரமத்தைக் கொடுத்தன, விக்கெட்டையும் இழக்க வைத்தன. ஆடுகளத்தின் தன்மையை பயன்படுத்திவில்லை செஞ்சூரியனில் கடந்த 2 நாட்களுக்குப் பின் நேற்று நன்றாக வெயில் அடித்ததால், ஆடுகளத்தில் இருந்த பிளவுகள், கோடுகள் நன்றாக தெரிந்தன. இதைத் தெரிந்து கொண்ட தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் ஆடுகளத்தின் தன்மையை சரியாகப் பயன்படுத்தி பவுன்ஸரை வீசி எகிறச் செய்தனர். இதே முறையை இந்தியப் பந்துவீச்சாளர்களும் பயன்படுத்தி இருந்தால், தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 408 ரன்கள் சேர்த்திருக்க முடியாது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஹோம் ஓர்க் செய்யவில்லை தோல்விக்குப்பின் ரோஹித் சர்மா அளித்த பேட்டியில் “ முதல் இன்னிங்ஸில் நல்ல ஸ்கோர் செய்திருந்தும் வெல்ல முடியவில்லை. இந்த செயல்பாடு நிச்சயமாகப் போதாது. பந்துவீச்சு, பேட்டிங்கில் 2வது இன்னிங்ஸில் மோசமாகச் செயல்பட்டோம். இந்த சூழலைப் பற்றி நன்கு புரிந்து கொள்ளாமல், ஆடுகளத்தின் தன்மையை அறிந்து கொள்ளாமல் வந்துவிட்டோம். 4 வேகப்பந்துவீச்சாளர்களும் சிறப்பாகவே பந்துவீசினர், கடினமாகவே உழைத்தனர், ஆனால், ஹோம்ஒர்க் செய்யாமல் வந்துவிட்டனர். எங்கு தவறு நடந்தது என்பதைத் தெரிந்து கொண்டோம். தவறுகளைத் திருத்தி இன்னும் வலிமையாக வருவோம். பிரசித் கிருஷ்ணா அனுபவம் குறைந்தவர்தான். இந்த ஆட்டத்தின் மூலம் தனது பந்துவீச்சு முறையை இனிவரும் நாட்களில் மாற்றிக்கொள்வார். இந்திய அணியின் பந்துவீச்சாளர்களில் சிலர் இல்லை, சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அப்படியிருக்கும் போது, இருக்கின்ற பந்துவீச்சாளர்களைத் தேர்ந்தெடுத்துதான் வர முடியும். நாங்கள் தேர்ந்தெடுத்து வந்த பந்துவீச்சாளர்கள், இங்குள்ள சூழலுக்கு எதிராக பந்துவீசக்கூடியவர்களாக இருக்கிறார்கள். பந்துவீச்சாளர்கள் குறித்து அதிகம் விமர்சிக்க விரும்பவில்லை” எனத் தெரிவித்தார் இந்தியத் தரப்பில் சிராஜ், ஷர்துல், பிரசித் கிருஷ்ணா ஆகிய 3 வேகப்பந்துவீச்சாளர்களும் ரிதத்தை இழந்து பந்துவீசினர். இதில் பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர், சிராஜ் ஆகிய 3 பந்துவீச்சாளர்களும் சேர்ந்து 285 ரன்களை வாரி வழங்கி, 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். செஞ்சூரியனில் நடந்த டெஸ்ட் போட்டியில் இதுபோன்று ரன்களை கொட்டிக் கொடுத்த பந்துவீச்சாளர்கள் இவர்களாகத்தான் இருக்க முடியும். டெஸ்ட் போட்டிகளில் வேகப்பந்துவீச்சாளர்கள் எக்னாமி ரேட் 5 ரன்களை வைத்தனர். இதில் விதிவிலக்காக, பும்ரா 26 ஓவர்கள் வீசி 69 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆடுகளத்தை கணிக்காமல், அதற்கு ஏற்றார்போல் பந்துவீச்சாளர்கள் பந்துவீசாதது, பேட்டர்கள் விரைவாக விக்கெட்டுகளை இழந்தது ஆகியவை தோல்விக்கு முக்கியக் காரணமாகும். இன்னும் முழுமையாக 2 நாட்கள் மீதம் இருக்கும்நிலையில் விரைவாகவே தோல்வியை இந்திய அணி ஒப்புக்கொண்டுவிட்டது. இந்திய அணியில் அறிமுகமாகிய பிரசித் கிருஷ்ணா இதுவரை முதல் தரப்போட்டிகளில் 12க்கு மேல் ஆடியதே இல்லை, பந்துவீசியதே இல்லை. செஞ்சூரியன் ‘கிங்’ தென் ஆப்பிரிக்கா தென் ஆப்பிரிக்க அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சொந்த மைதானத்தில் கிங் என்பதை நிரூபித்துவிட்டனர். செஞ்சூரியன் மைதானத்தில் மட்டும் தென் ஆப்பிரிக்காவின் வெற்றி சதவீதம்79.31 சதவீதமாகும். அதாவது29 போட்டிகளில் 23 ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்கா வென்றுள்ளது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி செஞ்சூரியன் மைதானத்தையும், ஆடுகளத்தையும் எவ்வாறு புரிந்து, தெரிந்து வைத்துள்ளது என்பதை அறியலாம். தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு பேட்டிங்கில் பெரிய பங்களிப்பு செய்தது டீன் எல்கர்தான். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆட்டநாயகன் விருது வென்ற எல்கர் பவுண்டரிகளால் சதம் கண்ட எல்கர் இந்த டெஸ்ட் தொடரோடு எல்கர் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற இருக்கும் நிலையில் இந்த வெற்றியும், அவர் சேர்த்த சதமும் மறக்க முடியாத நினைவுகளாக மாறின. தொடக்க வீரராகக் களமிறங்கிய எல்கர் 185 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் டீன் எல்கர் தனது 14-வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்து 287 பந்துகளில் 185 ரன்கள் சேர்த்தார். எல்கர் பவுண்டரி மூலமே 112 ரன்கள் சேர்த்தார், அதாவது 28 பவுண்டரிகளை எல்கர் அடித்துள்ளார். அதிலும் எல்கர் சேர்த்த பெரும்பாலான பவுண்டர்கள் கவர்டிரைவ் மூலமும், ஆஃப் சைடிலும் அடிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. வலுவான பார்ட்னர்ஷிப் எல்கருக்கு ஒத்துழைத்து ஜோர்சியும்(28), அறிமுக வீரர் பெடிங்காமும்(56) பேட் செய்ததால் 2வது நாளில் முன்னிலை பெற முடிந்தது. ஜோர்சியுடன் சேர்ந்து எல்கர் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், 4-வது விக்கெட்டுக்கு பெடிங்காமுடன் சேர்ந்து 131 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஸ்கோரை உயர்த்தினார். 3-வது நாளான நேற்று, டீன் எல்கர்(185), மார்கோ யான்சென்(85) ரன்களும் சேர்த்து ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக அமைந்தனர். யான்சென்-எல்கர் ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 111 ரன்கள் சேர்த்து ஸ்கோரை உயர்த்தினர். எல்கரின் உணர்ச்சி பொங்கிய ஆட்டம் தென் ஆப்பிரிக்கா அணிக்கு கடினமான நேரத்தில் பலமுறை இதுபோன்று ஆடி சதம் அடித்து அணியை தூக்கி நிறுத்தியுள்ளார் எல்கர். கொரோனா காலத்தில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் எல்கர் 95 ரன்கள் சேர்த்தது, பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அணியை மீட்டது என பல தருணங்களில் தனது பேட்டிங் திறமையை எல்கர் வெளிப்படுத்தியுள்ளார். எல்கர் அளித்த பேட்டியில் கூறுகையில் “ எனது பேட்டிங்கை நிரூபிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை அணிக்கு பங்களிப்பு செய்கிறேன். நான் கடைசியாக விடைபெறும் போது டெஸ்ட் போட்டி அல்லது டெஸ்ட் தொடரை வென்று தர வேண்டும். எதையும் இழக்கவிரும்பவில்லை. இந்தப் போட்டி எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. இதுவரை செஞ்சூரியனில் சதம் அடித்தது இல்லை. இதுவே என் கிரிக்கெட் வாழ்க்கையில் மைல்கல்லாக இருக்கும். என்னுடைய குடும்பத்தார் என்னுடைய பேட்டிங்கைப் பார்க்க வந்துள்ளனர்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வேகப்பந்துவீச்சாளர் பர்கர் பர்கரின் அசத்தல் அறிமுகம் தென் ஆப்பிரிக்கத் தரப்பில் அறிமுக வீரராக களமிறங்கிய இடதுகை வேகப்பந்துவீச்சாளர் பர்கர் மொத்தம் இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்திய வேப்பந்துவீச்சாளர்கள் லைன் லென்த் கிடைக்காமல் தடுமாறியபோது, அனாசயமாகப் பந்துவீசி 7 விக்கெட்டுகளை பர்கர் அள்ளிச்சென்றார். தென் ஆப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரில் கண்டறிந்த முக்கிய வீரராக பர்கர் மாறியுள்ளார். வெற்றிக்கு முக்கியக் காரணம் என்ன? தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தவை சரியான லைன், லெங்த் என்பதைக் கண்டறிந்து வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீசியது, இந்திய அணியின் மோசமான பந்துவீச்சும், பேட்டிங் ஆகியவைதான். ஆடுகளத்தின் தன்மையை, ஆடுகளத்தையும் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் நன்கு பயன்படுத்தினர். எந்த இடத்தில் பந்தை பிட்ச் செய்தால் பேட்டர்கள் திணறுவார்கள், தடுமாறுவார்கள் என்பதை சரியாக கணித்து பந்துவீசினர். https://www.bbc.com/tamil/articles/c9029dwz8j1o
-
Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்
விஜயகாந்த் உடல் நல்லடக்கம் குறித்து குடும்பத்தினர் அறிவிப்பு! பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் இன்று(28) காலமானார். சுகயீனமுற்றிருந்த அவர் கொரோனா தொற்றுக்குள்ளானதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை மியாட் மருத்துவமனையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதியானது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டபோதிலும், இன்று(28) காலை 6:10 மணியளவில் மருத்துவ சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டிற்கு விஜயகாந்தின் உடல் கொண்டு செல்லப்பட்ட நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார். அத்துடன் விஜயகாந்த் உடலுக்கு முழு அரச மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் விஜயகாந்தின் உடல் அவரது வீட்டில் இருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களின் அஞ்சலிக்காக இன்றும், நாளையும் அவரது உடல் தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட உள்ளது. நாளை 29ஆம் திகதி மாலை 4.45 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். https://thinakkural.lk/article/286210
-
இலங்கை நாயகி கில்மிஷா வந்தடைந்தார்!
யாழில் கில்மிசாவிற்கு வரவேற்பு Published By: DIGITAL DESK 3 28 DEC, 2023 | 04:38 PM சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பிய கில்மிஷாவிற்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. கில்மிஷா, தனது பெற்றோருடன் இன்று வியாழக்கிழமை (28) சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் திரும்பினார். விமான நிலையத்தில் இருந்து வரவேற்று வாகன தொடரணி மூலம் அரியாலை பகுதிக்கு அழைத்து சென்று , அங்கு கௌரவிப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. https://www.virakesari.lk/article/172648
-
கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படையினர் 8 பேருக்கு மரண தண்டனை: மத்திய அரசு என்ன சொல்கிறது?
கத்தார்: மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களுக்கு தண்டனை குறைப்பு - முழு விவரம் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், தீபக் மண்டல் பதவி, பிபிசி செய்தியாளர் 28 அக்டோபர் 2023 புதுப்பிக்கப்பட்டது 20 நிமிடங்களுக்கு முன்னர் கத்தாரில் இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர்களுடைய தண்டனை தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தத் தீர்ப்பின் முழு விவரங்கள் கிடைப்பதற்காகக் காத்திருப்பதாகவும் செய்திறிவிப்பில் வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. “கத்தாருக்கான இந்திய தூதர், ஏனைய அதிகாரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இருந்தனர். இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதல் இந்திய அரசு அவர்களுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. மேலும் அனைத்து தூதரக, சட்ட உதவிகளைத் தொடர்ந்து வழங்குவோம். இந்த வழக்கு குறித்த விவரங்கள் ரகசியமானது மற்றும் உணர்திறன் மிக்கது என்பதால், இந்த நேரத்தில் மேற்கொண்டு எந்தக் கருத்தையும் கூற இயலாது,” என்றும் அந்தச் செய்தியறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பேர் யார்? முன்னதாக, கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது இந்திய அரசுக்குப் பெரும் சவாலாக மாறியது. இவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியது. இந்த முடிவால் அதிர்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவித்த இந்திய அரசு, ஆனால் இந்த பிரச்னையைத் தீர்ப்பதற்கான அனைத்து சட்ட வழிகளையும் ஆராய்வதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. கத்தார் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, முன்னாள் இந்திய கடற்படை ஊழியர்களை மரண தண்டனையில் இருந்து காப்பாற்றுவது இந்தியாவுக்கு பெரிய ராஜ்ஜீய சவாலாகக் கருதப்படுகிறது. மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தவர்களில் கமாண்டர் பூர்ணேந்து திவாரி, கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் சௌரப் வசிஷ்டா, கேப்டன் வீரேந்திர குமார் வர்மா, கமாண்டர் சுக்னகர் பகாலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா, கமாண்டர் அமித் நாக்பால் மற்றும் மாலுமி ராகேஷ் ஆகியோர் அடங்குவர். இவர்கள் பாதுகாப்பு சேவை நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தனர். இந்நிறுவனத்தில் பணிபுரியும் அனைவரும் இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜெய்சங்கர் - இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இவர்கள் கடந்த ஆண்டு(2022) ஆகஸ்ட் 30ஆம் தேதி கத்தாரில் கைது செய்யப்பட்டனர். அன்றிலிருந்து அவர்கள் தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை இந்த ஆண்டு மார்ச் 29ஆம் தேதி தொடங்கியது. அவர்கள் நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டதற்கும் அவர்களுக்கு மரண தண்டனை விதித்ததற்கும் எந்தக் காரணமும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படவில்லை. 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தியின்படி, முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளின் குடும்பத்தினருக்கும் அவர்கள் மீது எந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து எந்தத் தகவலும் வழங்கப்படவில்லை. மோதி அரசு மீது அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த விவகாரத்தில் மோதி அரசு தலையிட வேண்டும் என்று இந்தியாவில் அழுத்தம் எழுந்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது சமூக ஊடக பக்கத்தில், “கத்தாரில் 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் தொடர்பான விவகாரத்தில் மிகவும் மோசமான முன்னேற்றங்கள் இருப்பதை இந்திய தேசிய காங்கிரஸ் மிகுந்த வருத்தத்துடனும், வேதனையுடனும், உணர்ந்துள்ளது. மேல்முறையீடு செய்வதில் அதிகாரிகளுக்குப் போதுமான ஆதரவு கிடைப்பதை உறுதி செய்ய இந்திய அரசாங்கம் கத்தார் அரசுடனான தனது ராஜஜீய மற்றும் அரசியல் செல்வாக்கை முடிந்தவரை பயன்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம், எதிர்பார்க்கிறோம். மேலும், அவர்களை விரைவில் விடுவிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்,” என்று பதிவிட்டிருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES இதேபோல், ஏஐஎம்ஐஎம் தலைவரும் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி தனது X சமூக ஊடக பக்கத்தில், “பிரதமர் நரேந்திர மோதி முன்னாள் பணியாளர்கள் அனைவரையும் திரும்ப அழைத்து வர வேண்டும். கத்தாரில் சிக்கித் தவிக்கும் முன்னாள் கடற்படை அதிகாரிகளின் பிரச்னையை ஆகஸ்ட் மாதம், நான் எழுப்பினேன். இன்று அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய நாடுகள் தன்னை எவ்வளவு நேசிக்கின்றன என்பதைப் பற்றி பிரதமர் மோதி பெரிதாகப் பேசுகிறார். அவர் முன்னாள் அதிகாரிகளைத் திரும்ப அழைத்து வர வேண்டும். அவர்கள் மரண தண்டனையை எதிர்கொள்வது மிகவும் துரதிர்ஷ்டவசமானது,” என்று கூறியுள்ளார். மூத்த பத்திரிகையாளர் ஷீலா பட், “தனியார் நிறுவனங்களால் பணியமர்த்தப்பட்ட முன்னாள் கடற்படை அதிகாரிகளுக்கு இந்திய அரசாங்கம் உதவ முயன்றபோது, கத்தார் ஒத்திசைய விரும்பவில்லை. ஏனெனில் அவர்கள் இந்த வழக்கு மூலம் பேரம் பேச விரும்பினர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சௌதி அரேபியாவுடனான இந்தியாவின் நிலையான இருதரப்பு உறவுகளை அது விரும்பவில்லை. ஆகவே, இந்தப் பிராந்தியத்தில் துருக்கி மற்றும் இரானுடன் இணைந்து கத்தார் ஒரு பெரிய அரசியல் ஆட்டத்தை விளையாடுகிறது,” என்று தனது சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ளார். மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்கள் அல் டஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் அண்ட் கன்சல்டன்சி சர்வீசஸ் என்ற பாதுகாப்பு சேவைகளை வழங்கும் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் இந்த நிறுவனம் ஓமன் குடிமகன் காமிஸ் அல்-அஜ்மிக்கு சொந்தமானது. அஜ்மி ராயல் ஓமன் விமானப்படையின் படைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர். இந்த எட்டு இந்தியர்களுடன் அவரும் கைது செய்யப்பட்டார். இருப்பினும், அவர் நவம்பர் 2022இல் விடுவிக்கப்பட்டார். நிறுவனத்தின் செயல்பாடுகள் என்ன? நிறுவனத்தின் பழைய இணையதளம் இன்னும் புதுப்பிக்கப்படாமல் உள்ளது. கத்தார் அமிரி தேசியப் படைக்கு (QENF) பயிற்சி, தளவாடங்கள் மற்றும் பராமரிப்பு சேவைகளை வழங்கியுள்ளது என்று நிறுவனத்தின் இணையதளப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய இணையதளத்தில் நிறுவனத்தின் பெயர் டஹ்ரா குளோபல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கத்தார் அமிரி தேசிய படைக்கு வழங்கப்பட்ட அதன் சேவைகள் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதன் தலைமைப் பொறுப்புகளில் இருந்த கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படை அதிகாரிகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ராணுவ நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கு கத்தார் அரசுக்கு இந்நிறுவனம் உதவுவதாக பல ஊடக அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளன. இருப்பினும், இதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்கள் கைது செய்யப்படுவதற்கு முன் நான்கு முதல் ஆறு ஆண்டுகள் டஹ்ராவில் பணிபுரிந்துள்ளனர். முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு நிறுவனத்துடனான தொடர்பு என்ன? மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்களில் ஒருவரான கமாண்டர் பூர்ணேந்து திவாரி இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார். இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 2019இல் அவருக்கு பிரவாசி பாரதிய சம்மான் விருது வழங்கப்பட்டது. அப்போது கத்தாருக்கான அப்போதைய இந்தியத் தூதரும், கத்தார் பாதுகாப்புப் படைகளின் சர்வதேச ராணுவக் கூட்டுறவின் முன்னாள் தலைவருமான பி.குமரன் மூலம் கௌரவிக்கப்பட்டார். இந்திய கலாசார மையத்தில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி கேப்டன் கவுசிக் விழாவில் கலந்துகொண்டார். தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்கள் கைது செய்யப்படுவதற்கு முன் நான்கு முதல் ஆறு ஆண்டுகள் டஹ்ராவில் பணிபுரிந்துள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. இதை இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சியும் உறுதி செய்துள்ளார். எதற்காக, எப்படி இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டன? மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகளை கத்தாரின் உளவுத்துறை நிறுவனமான ஸ்டேட் செக்யூரிட்டி பீரோ கைது செய்துள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து கடந்த ஆண்டு (2022) செப்டம்பர் நடுப்பகுதியில் இந்திய தூதரகத்துக்கு தெரிய வந்தது. செப்டம்பர் 30 அன்று, இவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் தொலைபேசியில் சிறிது நேரம் பேச அனுமதிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக அவர்களுக்கு தூதரக அனுமதி வழங்கப்பட்டது. அப்போது, இந்திய தூதரக அதிகாரி ஒருவர் இவர்களைச் சந்தித்தார். இந்த சந்திப்பிற்குப் பிறகு, அடுத்த சில மாதங்களுக்கு கைது செய்யப்பட்ட இந்தியர்கள் ஒவ்வொரு வாரமும் தங்கள் குடும்பத்தினருடன் பேச அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. இதை இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சியும் உறுதி செய்துள்ளார். விசாரணையின் போதே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாக அவர் கூறினார். முன்னாள் கடற்படை அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகளை இந்திய அரசோ அல்லது கத்தார் அரசோ பொதுவெளியில் தெரியப்படுத்தவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தனது சகோதரர் ஓய்வு பெறும் வரை இந்திய கடற்படையில் பணியாற்றியதாகவும் தனது அண்ணனை இந்தியாவுக்கு கொண்டு வருவது அரசின் பொறுப்பு என்றும் நவ்தீப் கூறினார். குடும்பத்தினர் என்ன கூறுகின்றனர்? எட்டு பேரும் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட பிறகு, ஒரு இந்திய இணைய ஊடகம் கமாண்டர் பூர்ணேந்து திவாரியின் சகோதரி மருத்துவர் மிது பார்கவா மற்றும் கேப்டன் நவ்தேஜ் சிங் கில்லின் சகோதரர் நவ்தீப் கில் ஆகியோரிடம் பேசியது. அப்போது, கத்தாரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மோதி அரசுக்கு மிது கார்கவா வேண்டுகோள் விடுத்திருந்தார். தனது சகோதரர் வயது முதிர்ந்தவர் என்றும் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருவதாகவும் அவர் கூறியிருந்தார். அவர் 63 வயதில் தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் என்ன கஷ்டங்களை அனுபவிக்கிறார் என்பதைth தன்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை என்று மிது தெரிவித்திருந்தார். பூர்ணேந்து திவாரி சிறையில் இருந்து தங்களின் 83 வயதான தாயுடன் பேசியதாகவும், மகனின் பாதுகாப்பு குறித்து தாயார் கவலைப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார். கேப்டன் நவ்தேஜ் சிங் கில்லின் பிறந்த நாளான செப்டம்பர் 6ஆம் தேதி அவருக்கு வாட்ஸ் ஆப்பில் வாழ்த்து செய்தி அனுப்பியதாகவும் அதற்கு அவர் பதிலளிக்காததால் சந்தேகம் அடைந்ததாகவும் அவரது சகோதரர் நவ்தீப் கில் கூறினார். பின்னர் அவருடனான தொலைபேசி தொடர்பு நின்றுபோனது. நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, கத்தாரின் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. நவ்தீப் கில், தனது சகோதரருக்கு உடல்நலப் பிரச்னைகள் இருப்பதாகக் கூறினார். தனது சகோதரர் ஓய்வு பெறும் வரை இந்திய கடற்படையில் பணியாற்றியதாகவும் தனது அண்ணனை இந்தியாவுக்கு கொண்டு வருவது அரசின் பொறுப்பு என்றும் நவ்தீப் கூறினார். கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கைது செய்யப்பட்ட இந்தியர்களை அழைத்து வருவதற்கு அரசு முன்னுரிமை அளிப்பதாகக் கூறியிருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய பிரதமர் நரேந்திர மோதி இந்தியாவுக்கு இது எத்தகைய சவாலாக இருக்கிறது? இந்த விவகாரம் இந்தியாவுக்கு எவ்வளவு பெரிய அரசியல் சவாலாக இருக்கிறது? இந்தப் பிரச்னையைத் தீர்க்கவும் தனது முன்னாள் கடற்படை அதிகாரிகளை விடுவிக்கவும் இந்தியாவால் என்ன செய்ய முடியும்? இதைப் புரிந்துகொள்ள, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மேற்கு ஆசிய ஆய்வு மையத்தின் இணைப் பேராசிரியர் முடாசர் கமரிடம் பிபிசி ஹிந்தி பேசியது. ராஜஜீய மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படாவிட்டால், இந்த விவகாரம் எந்தத் திசையில் செல்லும் என்று கூறுவது கடினம் என்று அவர் கூறினார். மேலும், நிச்சயமாக இது இந்திய பொதுமக்களின் கருத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். ஆம், ஆனால் இது கண்டிப்பாக இந்தியாவில் பொதுமக்களின் கருத்தை பாதிக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, முன்னாள் கடற்படை அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகளை இந்தியாவோ அல்லது கத்தாரோ வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. இதற்கு என்ன காரணம்? “இதுவோர் உணர்வுப்பூர்வமான விஷயம். இத்தகைய உணர்வுப்பூர்வமான விஷயம் தொடர்பாக பிரச்னை எழும்போது, நட்புறவு கொண்ட நாடுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகின்றன. இரு நாடுகளும் எந்த உடனடி எதிர்வினையும் தெரிவிக்காத விதத்தை வைத்தே இது மிகவும் முக்கியமான விஷயம் என்று தெரிகிறது. அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறப்படாததால், இதுவொரு முக்கியமான விஷயமாக இருக்காது என்று கூறிவிட முடியாது. மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதால், தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கலாம் அல்லது அவர்கள் ஏதேனும் கடுமையான குற்றம் செய்திருக்கலாம்,” என்று கமர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த விவகாரத்தில் இரு நாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியுமா என்பதையும் பார்க்க வேண்டும் என்கிறார் கமர். இந்தியாவுக்கு இது பெரிய ராஜதந்திர சவாலா? “இதை ராஜதந்திர சவால் என்று அழைப்பது சரியாக இருக்காது. ஏனெனில் அங்கு சென்றவர்கள் இந்திய கடற்படையின் முன்னாள் வீரர்கள். ஆனால் அவர்கள் அரசு பணி நிமித்தமாகச் செல்லவில்லை. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்கள். எனவே இதை ராஜதந்திர சவால் என்று கூறுவது கடினம். இது அரசியல் ரீதியாகவும் ராஜதந்திர ரீதியாகவும் சில தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அதை இப்போதே சொல்வது கடினம்,” என்கிறார் கமர். மேலும் பேசிய அவர், “இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருந்ததால், இது குறித்து பொதுவெளியில் எந்தத் தகவலும் பகிரப்படவில்லை. எனவே, வெளிவிவகாரக் கொள்கையின்படி நிதானமான முறையில் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய அரசுக்கு முடிவு குறித்த விவரங்களை முதலில் தெரிவிக்க வேண்டும். இதில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளதா இல்லையா என்பதை இந்திய அரசு ஆராயும். கத்தாரில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருந்தால், அதிலிருந்து எவ்வளவு அதிகபட்ச பலன் கிடைக்கும் என்பதைப் பார்க்க வேண்டும்,” என்றும் கூறினார். “இந்த விவகாரம் சர்வதேச நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்படுமா இல்லையா என்பதையும் பார்க்க வேண்டும். இந்த விவகாரத்தில் பல அம்சங்களைப் பார்க்க வேண்டும். இதை இரு நாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியுமா என்பதையும் பார்க்க வேண்டும்,” என்கிறார் கமர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கத்தாரில் சுமார் 8-9 லட்சம் இந்தியர்கள் பணிபுரிவதால், அங்குள்ள இந்தியர்களின் நலன்களுக்குப் பங்கம் விளைவிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க இந்திய அரசு முயற்சிக்கும். இந்தியா- கத்தார் இடையிலான உறவு எப்படிப்பட்டது? இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையே நட்புறவு உள்ளது. ஆனால் இந்த உறவில் முதல் சவால் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வந்தது. பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முகமது நபியைப் பற்றி இழிவான கருத்துகளை வெளியிட்டார். அந்த நேரத்தில், இந்தியா 'பொது மன்னிப்பு' கோர வேண்டும் என்று கூறிய முதல் நாடு கத்தார். கத்தார் இந்திய தூதரை அழைத்து தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது. இஸ்லாமிய நாடுகளில் கோபம் பரவாமல் இருக்க, பாஜக உடனடியாக நூபுர் ஷர்மாவை நீக்கியது. இப்போது எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை, இந்தியா-கத்தார் உறவுகளுக்கு இடையிலான இரண்டாவது பெரிய சவாலாகக் கருதப்படுகிறது. கத்தாரில் சுமார் 8-9 லட்சம் இந்தியர்கள் பணிபுரிவதால், அங்குள்ள இந்தியர்களின் நலன்களுக்குப் பங்கம் விளைவிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க இந்திய அரசு முயலும். இந்தியா கத்தாரில் இருந்து இயற்கை எரிவாயுவையும் இறக்குமதி செய்கிறது. கத்தார் மிகப்பெரிய அளவில் இயற்கை எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடு. காஸாவில் இஸ்ரேலின் தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் வேளையில், அதிக அமெரிக்க பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்று கத்தார் இஸ்ரேலுடனும் பாலத்தீனத்துடனும் மத்தியஸ்தம் செய்ய முயலும் நேரத்தில் இந்த விவகாரம் வெளிச்சம் பெற்றுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cn48ldyvjr8o