Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    22997
  • Joined

  • Last visited

  • Days Won

    16

Everything posted by ஏராளன்

  1. மலேசிய பொதுத் தேர்தல்: வாக்காளர்களை கவர பணம், தமிழ் சினிமா பாடல்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,சதீஷ் பார்த்தீபன் பதவி,பிபிசி தமிழுக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த இரண்டு ஆண்டுகளாக, மலேசிய மக்கள் எதிர்பார்த்த நிகழ்வு எதிர்வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றுதான் மலேசியாவில் 15ஆவது பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மலேசியா சுதந்திரம் பெற்ற பின்னர், கடந்த 2018ஆம் ஆண்டு வரை 14 பொதுத்தேர்தல்களை மலேசியர்கள் சந்தித்துள்ளனர். கடந்த தேர்தலைத் தவிர, மற்ற தேர்தல்கள் அனைத்துமே பெரும்பாலும் அதிக பரபரப்புகளோ, எதிர்பார்ப்புகளோ இன்றிதான் நடந்துள்ளன. பாரிசான் நேசனல் எனப்படும் தேசிய முன்னணி கூட்டணியே தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சி நடத்தி வந்துள்ளது. எதிர்க்கட்சிகள் சொற்ப எண்ணிக்கையிலான தொகுதிகளில் மட்டுமே வென்று வந்துள்ளன. 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அன்றைய எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய பக்காத்தான் ஹராப்பான் எனப்படும் நம்பிக்கை கூட்டணி பெரும் வெற்றி பெற்று ஆட்சியமைத்து. மலேசியாவில் முதன் முறையாக நிகழ்ந்த ஆட்சி மாற்றம் என்பதால் உலக நாடுகளின் பார்வை அதன் மீது பதிந்தது. அதன் பிறகும் மலேசிய அரசியல் களத்தில் பரபரப்புக்குப் பஞ்சமில்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் மலேசிய குடிமக்கள் நான்கு பிரதமர்களைப் பார்த்துவிட்டனர். அரசியல் குழப்பத்தின் உச்சமும், பொருளாதார வீழ்ச்சியும் மலேசியர்களை அதிகம் யோசிக்க வைத்தது எனில், கொரோனா தொற்றுப் பரவலும் சுயநல அரசியலும் அம்மக்களிடம் அச்சத்தையும் ஒருவித கோபம் கலந்த சலிப்பையும் ஏற்படுத்தி உள்ளது எனலாம். வரலாறு காணாத போட்டி மலேசியாவில் இம்முறை தேர்தல் களம் தொடக்கம் முதலே களைகட்டி உள்ளது. சிறிதும் பெரிதுமாக நான்கு கூட்டணிகள் களமிறங்கி உள்ளன. மலேசியாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட தற்போது நான்கு பேர் களத்தில் உள்ளனர். நால்வருமே இன்று வெவ்வேறு அரசியல் கட்சிக் கூட்டணிக்கு தலைமையேற்றுள்ள போதிலும், கடந்த காலத்தில் ஒரே கட்சியில் இருந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்க அம்சம். மகாதீர் மொஹம்மத், அன்வார் இப்ராகிம், நடப்பு பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப், மொஹிதின் யாசின் ஆகிய நால்வரும் பிரதமராகும் கனவுகளோடு, வியூகங்களை வகுத்துள்ளனர். அதனால் போட்டி கடுமையாக இருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பட மூலாதாரம்,ISMAILSABRI60, FACEBOOK படக்குறிப்பு, நடப்பு பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப் மலேசிய வரலாற்றில் இதுபோன்ற கடும் போட்டி நிறைந்த தேர்தல் நடைபெற்றதில்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். பிரசாரக் கூட்டங்களின்போது மேடைக்கு எதிரே உள்ள இருக்கைகள் காலியாக காட்சியளிக்கின்றன. அதேசமயம் சமூக ஊடகங்கள் வழி அரசியல் கட்சிகள் மேற்கொள்ளும் பிரசார நடவடிக்கைகள் களைகட்டி உள்ளன. வாட்ஸ் அப், ஃபேஸ்புக், டுவிட்டர் என்று அனைத்துவிதமான வாய்ப்புகள் மூலமாக வாக்காளர்களிடம் 'பேசி' வருகிறார்கள் வேட்பாளர்கள். கடந்த 2018ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மலேசியா இத்தகைய காட்சிகளைக் காணவில்லை. மாறாக பிரசார கூட்டங்களில் அனல் பறந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். தலைவர்கள் எதிர்த்தரப்பின் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினர். குறிப்பாக அன்றைய ஆளும்தரப்பின் மீது எதிர்க்கட்சிகள் முன்வைத்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பொதுவெளியில் பரவலாக விவாதிக்கப்பட்டன. இதற்கு சமூக ஊடகங்களும் கைகொடுத்தன. மூலை முடுக்குகளில் எல்லாம் விவாதங்கள் நடைபெற்றன. ஊழலுக்கு எதிராக வாக்களிக்கப் போவதாகவும், மலேசியாவைக் காப்பாற்ற வேண்டும் என்றும் பலர் ஆவேசப்பட்டனர். இத்தனைக்கும் எதிர்க்கட்சிக் கூட்டணியின் தலைவரான அன்வார் இப்ராகிம் அச்சமயம் சிறையில் இருந்தார். எனினும் அன்வார் அலை வீசியது. அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதற்கேற்ப, மலேசிய அரசியல் களத்தில் திடீர்த் திருப்பங்கள் நிகழ்ந்தது. பரம எதிரிகள் என்று கருதப்பட்ட அன்வாரும் மகாதீரும் நேசக்கரங்களை நீட்டினர், இணைந்து செயல்பட முடிவெடுத்தனர். தமது 93ஆவது வயதில் மீண்டும் மலேசியாவின் பிரதமரானார். இதை யார்தான் எதிர்பார்த்திருக்க முடியும்? அதன் பின்னர் அன்வாருக்கு அரச மன்னிப்பு கிடைத்து அவர் சிறையில் இருந்து விடுதலையானதும், தேர்தலுக்கு முன்பு செய்துகொண்ட ஒப்பந்தப்படி, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவரிடம் மகாதீர் பிரதமர் பதவியை ஒப்படைக்கத் தவறியதும் மலேசிய அரசியல் வரலாற்றின் குழப்ப பக்கங்களுக்குச் சொந்தமானவை. இஸ்மாயில் சப்ரி: மலேசிய துணைப் பிரதமர் 40 நாள்களில் பிரதமர் ஆனது எப்படி?21 ஆகஸ்ட் 2021 மலேசியாவின் புதிய பிரதமர்: யார் இந்த இஸ்மாயில் சப்ரி யாகூப்?20 ஆகஸ்ட் 2021 மலேசிய அரசியல் நெருக்கடி: அறிய வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்16 ஆகஸ்ட் 2021 40 லட்சம் இளம் வாக்காளர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மலேசிய பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்கான வயது வரம்பு 18ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதுநாள்வரை 21 வயது பூர்த்தியானவர்களே வாக்களிக்க முடியும். எனவே நான்கு மில்லியன் இளம் வாக்காளர்கள் முதன்முறையாக வாக்களிக்க உள்ளனர். அனைத்து அரசியல் கட்சிகளிலும் இளைஞர் பிரிவு உள்ள போதிலும், இன்றைய இளம் வாக்காளர்களின் மனப்போக்கு எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதைக் கணிக்க முடியவில்லை என்றே பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர். எனவே நாட்டின் 15ஆவது பொதுத்தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக இளம் வாக்காளர்கள் உருவெடுக்கக்கூடும். "எதிர்வரும் நவம்­பர் 19ஆம் தேதி நடைபெற உள்ள பொதுத் தேர்­த­லில் 21 மில்­லி­யன் மலேசிய குடிமக்கள் வாக்களிக்க உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் கட்சி, வேட்பாளர்களை சார்ந்துதான் வாக்களிக்கக்கூடும். எனினும் நாட்டின் பொருளாதாரம், ஸ்திரமான அரசியல் சூழல், புதுத்திட்டங்கள் ஆகியவற்றை சீர்தூக்கிப் பார்த்து வாக்களிப்பதற்கும் கணிசமான எண்ணிக்கையிலானவர்கள் காத்திருக்கக்கூடும்," என்று மலேசிய ஊடகங்கள் கணிப்புகளை வெளியிட்டுள்ளன. பொருளாதாரச் சூழல் குறித்து அதிகம் கவலைப்படும் மலேசியர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES அண்மையில் மெர்டெக்கா சென்டர் என்ற தனியார் அமைப்பு மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில் பங்கேற்றவர்களில் சுமார் 75 விழுக்காட்டினர் நாட்டின் பொருளாதாரச் சூழல்தான் தங்களை அதிக கவலையில் ஆழ்த்துவதாகக் குறிப்பிட்டுள்ளனர். எனவே இந்த அம்சம் தேர்தலில் எதிரொலிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வெகுவாக சரிந்திருப்பது நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை மந்தப்படுத்தி உள்ளது என்பதுடன், ஏற்றுமதி-இறக்குமதியையும் பாதித்துள்ளது. அதேசமயம் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் அதிகரித்துள்ளதை மேற்கோள் காட்டி, நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டு வருவதாகச் சொல்கிறார் மலேசிய மத்திய வங்கி (பேங்க் நேகாரா) ஆளுநர் நோர் ஷம்சியா யூனுஸ் (Nor Shamsiah Yunus). கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 14.2% அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். சாமானிய மக்களோ, முட்டை தொடங்கி கோழிகள் வரை, சமையல் எண்ணெய் தொடங்கி காய்கறிகள் வரை அனைத்துப் பொருள்களின் விலையும் அதிகரித்துள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மனநிறைவை அளிக்கவில்லை என்றும் சமூக ஊடகங்களில் கொந்தளிக்கின்றனர். அணிவகுத்து நிற்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் நாட்டின் சமூக, பொருளாதாரச் சூழல் மோசமடைய முன்னாள் பிரதமர் நஜிப் தலைமையிலான அரசாங்கத்தின் செயல்பாடுகளும் ஊழல் முறைகேடுகளும் முக்கியக் காரணம் என பெரும்பாலானோர் கருதுவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னாள் பிரதமர் நஜிப்புடன் தொடர்புடைய 1எம்டிபி ஊழல், அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுகள், அம்னோ கட்சித் தலைவர் சாஹித் ஹமிடி மீதான ஊழல் புகார்கள், அம்னோவில் உள்ள மற்ற மூத்த தலைவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் இப்போது அம்னோ கட்சியை உள்ளடக்கிய, தேசிய முன்னணிக்கு எதிராக அணிவகுத்து நிற்கின்றன. ஊழல் வழக்கில் நஜிப்புக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டுகால சிறைத்தண்டனையை மேல் முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து அவர் சிறையில் தள்ளப்பட்டுள்ளார். அவரது மனைவி ரோஸ்மாவும் கடும் நெருக்கடியில் உள்ளார். கடந்த 2018ஆம் பொதுத்தேர்தலின்போது நஜிப்பையும் ரோஸ்மாவையும் எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடின. இருவரது ஊழல்களையும் அம்பலப்படுத்துவோம் என அன்வார் தலைமையிலான நம்பிக்கைக் கூட்டணி உரக்கக் குரல் கொடுத்தது. இதற்கு ஆதரவு கிடைத்ததால்தான் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. இந்நிலையில், மீண்டும் ஊழல் தலைவிரித்தாடக் கூடாது என நினைக்கும் மலேசியர்கள் அன்வாரை ஆதரிக்க வேண்டும் என்ற பழைய முழக்கத்தை அவரது தரப்பு இப்போது முன்வைக்கிறது. ஆனால் இதற்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்குமா? என்பது சந்தேகம்தான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். மலேசிய மாமன்னர், பிரதமர் இடையே மோதலா? - மொஹிதின் யாசின் மீது 'ராஜ துரோக' விமர்சனம்31 ஜூலை 2021 கலைக்கப்பட்ட மலேசிய நாடாளுமன்றம்; தேர்தல் வேண்டாம் எனப் பதறும் எதிர்க்கட்சிகள்10 அக்டோபர் 2022 போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மேலும் ஒரு மலேசியரை தூக்கிலிட்ட சிங்கப்பூர் - பின்னணி என்ன?8 ஜூலை 2022 அரசியல் விமர்சகர்கள் என்ன சொல்கிறார்கள்? மலேசியாவில் உள்ள எல்லா இனங்களும் எல்லா வேளைகளிலும் சரிசமமாக நடத்தப்படுவதில்லை என்பதை மறுக்க இயலாது என 'மலேசியா இன்று' இணையத்தள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் அரசியல் விமர்சகர் இராகவன் கருப்பையா. "ஒரு நாட்டின் வரவு செலவுத்திட்டம் இன ரீதியாக வரையப்படுவது மலேசியாவில் மட்டுமே நிகழும் ஓர் அதிசயம் என பொருளாதார வல்லுநர்கள் அண்மைய காலமாக கருத்துரைத்து வருவதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாகக் காண முடிகிறது. "ஒரே மலேசியா (சத்து மலேசியா), மலேசிய குடும்பம் (கெலுவார்கா மலேசியா), போன்ற பல்வேறு முழக்கங்களை தலைவர்கள் முன்வைக்கின்றனர். ஆனால் அவையெல்லாம் அந்தந்த சமயங்களில் பதவியில் இருங்கும் பிரதமர்களின் அரசியல் விளம்பரத்திற்கு மட்டும்தான் பயன்படுகின்றன," என்கிறார் இராகவன் கருப்பையா. இந்தியர்களின் உருமாற்றப் பிரிவு, இந்திய தொழில் முனைவோர் மேம்பாடு, தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாடு ஆகியவற்றுக்கு உரிய நிதி ஒதுக்கப்படவில்லை என்ற குறைபாடு குறித்து இந்தியர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது. இம்முறை வாக்களிக்க உள்ள 21 மில்லியன் (2.1 கோடி) வாக்காளர்களில் சுமார் 13 மில்லியன் (1.3 கோடி) பேர் மலாய்க்காரர்கள் என்பதை கவனிக்க வேண்டும் என்கிறார் மூத்த செய்தியாளர் தமிழ்மணி. மொத்தமுள்ள 222 நாடாளுமன்றத் தொகுதிகளில் மலாய்க்காரர்களின் வாக்குகள் 150 முதல் 160 தொகுதிகளின் முடிவுகளைத் தீர்மானிக்கக்கூடியதாக இருக்கும் என்பது இவரது கணிப்பு. எனவே தேர்தல் களத்தில் உள்ள கூட்டணிகள் மலாய்க்காரர்களை மையப்படுத்தியே எத்தகைய அறிவிப்பையும் வாக்குறுதியையும் வெளியிடுவார் என்பதை தமிழ்மணி கோடிகாட்டுகிறார். "நீண்ட நெடிய காலமாக தேசிய முன்னணி கூட்டணிக்கு தலைமையேற்றுள்ள அம்னோ கட்சிக்கு இன வாதமே முக்கியமான அரசியல் முதலீடாகியுள்ளது. இருப்பினும் அக்கூட்டணியில் மலேசிய சீனக் சங்கமும், மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியும் அடிமைகள் போல் உள்ளதால், அவ்வப்போது அக்கூட்டணி தேசியம் குறித்தும் பேசும். அது வெறும் நாடகம்தான். "அன்வார் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியிலுள்ள கட்சிகளுக்குள் இனவாதமும் மதவாதமும் அறவே இல்லையென்று சொல்லிவிட முடியாது. ஆட்சியில் அமர்ந்து அரசாங்க நிர்வாக இயந்திரத்தை இயக்கும் போதுதான் அதனுடைய முழுமையான சுயரூபமும் வெடிக்க வாய்பிருக்குமென்று," என்கிறார் தமிழ்மணி. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரை நாட்டின் துணைப் பிரதமராக்க இன்றுள்ள அரசியல் கூட்டணிகள் முன்வருமா? என்ற கேள்வியையும் அவர் எழுப்பி உள்ளார். வாக்காளர்களைக் கவர பயன்படும் தமிழ்த் திரைப்பாடல்கள் இணையம் வழி மேற்கொள்ளப்படும் பிரசாரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதால், பெரும்பாலான வேட்பாளர்கள் அதில் கவனம் செலுத்துகிறார்கள். பிரசாரப் பாடல்களும், வாக்கு சேகரிக்கும் காணொளிகளால் சமூக ஊடகங்கள் நிரம்பி வழிகின்றன. தொகுதி மக்களுக்காக ஆற்றிய பணிகள், புதிய வாக்குறுதிகள், பல்லின மக்களுக்கான திட்டங்கள் குறித்த விவரங்களைப் பாடல் வரிகளாக மாற்றியுள்ளனர். இம்முறை தேர்தல் பிரசாரத்தில் 'டிக்டாக்' செயலியும் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. இளைய தலைமுறையினரைக் கவர இச்செயலிதான் வேட்பாளர்களுக்கு வெகுவாகக் கைகொடுக்கிறது. நன்கு அறிமுகமான சில வேட்பாளர்களை பல லட்சம் பேர் 'டிக்டாக்'கில் பின்தொடர்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், காலஞ்சென்ற தமிழக முதல்வர் எம்ஜிஆரின் ரசிகர். அதனால் இந்தியர்கள் மத்தியில் அவர் மேற்கொள்ளும் தேர்தல் பிரசாரத்தின்போது பல்வேறு எம்ஜிஆர் பாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக 'நான் ஆணையிட்டால்' பாடல் பின்னணியில் ஒலிக்க வாக்கு சேகரிக்கிறார் அன்வார். சில இடங்களில் அந்தப் பாடலின் சில வரிவகளை அவர் பாட முயற்சி செய்கிறார். இதேபோல் மற்ற தமிழ் வேட்பாளர்களும், தமிழ்த் திரைப்பாடல்களைப் பாடி வாக்கு சேகரிப்பதைக் காண முடிகிறது. வாக்களிக்க பணம் தரப்படுவது உண்மையா? பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழகத்தில் வாக்களிக்க பணம் பட்டுவாடா செய்யப்படுவதாகப் பரவலாகப் பேசப்படுவதுபோல், மலேசியாவிலும் தேர்தல் சமயங்களில் வெவ்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தி பணம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த பொதுத்தேர்தலின்போது கேமரன் மலை தொகுதியில் மலேசிய இந்திய காங்கிரஸ் (மஇகா) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் சிவராசா. எனினும் அத்தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர், தேர்தல் நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடுத்தார். விசாரணையின் முடிவில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்த புகார் நிரூபணமானதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனால் சிவராசா தமது எம்பி பதவியை இழந்தார். கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது, போட்டி கடுமையாக உள்ள தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களை, அன்றைய ஆளும் கட்சிகளில் ஒன்றான அம்னோ தலைமை சொந்த ஊர்களுக்கு விமானம் மூலம் அனுப்பி வைத்ததாகப் புகார் எழுந்தது. இந்நிலையில், நடப்புத் தேர்தலிலும், வாக்களிக்கப் பணப் பட்டுவாடா நடந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. அரசாங்கம் முன்பே அளித்த திட்டங்களின் அடிப்படையிலும் வேறு சில காரணங்களை முன்வைத்தும் ஆளும் தரப்பினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டுள்ளனர் என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. தபால் வாக்குகளை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள் முந்நூறு மலேசிய ரிங்கிட் விநியோகிப்பதாகப் புகார் எழுந்துள்ளது. தேர்தல் களத்தில் யார் அலை வீசுகிறது? தேர்தல் அறிக்கையில் பொருளாதாரப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் கவனம் செலுத்தும் விதமாக பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளது தேசிய முன்னணி (பாரிசான் நேசனல்). அன்வார் இப்ராகிம் தலைமையிலான நம்பிக்கை கூட்டணி (பக்காத்தான் ஹராப்பான்) சமூகப் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து அதன் அடிப்படையில் வாக்குறுதிகளை முன்வைத்துள்ளது. கடந்த 2018 பொதுத்தேர்தலில் அன்வாருக்கு ஆதரவான அலை வீசியது என்று ஒரு தரப்பினரும், மற்றொரு தரப்பு அன்றைய ஆளும் கட்சிக்கு எதிரான வீசியது என்றும் இன்றளவும் கூறி வருகின்றனர். அன்வாரின் முழக்கங்களை ஏற்றுக்கொண்டு அவரது தரப்பிடம் ஆட்சிப் பொறுப்பை மலேசியர்கள் ஒப்படைத்தனர். எனினும் அவர் அந்த வாய்ப்பை, ஆட்சியை பாதுகாக்கத் தவறிவிட்டார் என்ற விமர்சனம் அவரது ஆதரவாளர்கள் மத்தியிலேயே உள்ளது. தற்போதுள்ள ஆட்சியாளர்கள் இம்முறையும் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர். பிரசார கூட்டங்கள், நடவடிக்கைகளில் ஏராளமானோர் பங்கேற்காவிட்டாலும், தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை மலேசியர்கள் முன்பே தீர்மானித்துவிட்டனர். எனவே மலேசியாவில் எந்தத் தலைவர், அரசியல் கட்சி, கூட்டணிக்கு ஆதரவான அலை வீசியது என்பது தேர்தல் முடிவடைந்த பிறகே தெரிய வரும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். https://www.bbc.com/tamil/articles/c10d5r4r88qo
  2. மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் குடும்பத்தாருக்கு நன்கொடை By T. SARANYA 15 NOV, 2022 | 12:51 PM பாராளுமன்ற உறுப்பினர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட தொன்னூரு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தின்போது கொலை செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் மனைவியிடம் நேற்று (14) கையளித்தார். பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டத்தின் பின்னர் இந்த பணத்தை ஜனாதிபதி கையளித்தார். பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ அதற்கான காசோலையை ஜனாதிபதியிடம் கையளித்ததுடன், ஜனாதிபதி அதனை மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் மனைவி மற்றும் மகன்களிடம் வழங்கினார். பாராளுமன்ற உறுப்பினர்கள் 183 பேர் அதற்காக நிதியுதவி அளித்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்களின் மாதிவெல வீடமைப்புத் தொகுதியில் உள்ள ஆளுங்கட்சியைச் சேர்ந்த 20 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட "மாதிவெல மிதுரோ" கழகம் மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவுக்காக இந்நிதியை சேகரிக்க ஆரம்பித்ததாகவும் அதன் பின்னர் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தமை விசேட அம்சம் என்றும் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இங்கு தெரிவித்தார். கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவிற்கு ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்யுமாறு பிரதி சபாநாயகர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார். இதற்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட மாத்தறை மாவட்ட முன்னாள் அமைச்சர் கீர்த்தி அபேவிக்ரம எம்.பிக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதனால் அத்துகோரளவின் குடும்பத்திற்கும் அவரது ஓய்வூதியத்தை பெற்றுக் கொடுக்க முடியுமென்றும் அவர் கூறினார். இந்நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/140090
  3. சென்னையில் 17 வயது கால்பந்து வீராங்கனை தவறான சிகிச்சையால் மரணம்: 2 மருத்துவர்கள் இடைநீக்கம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 17 வயது கால்பந்து வீராங்கனை பிரியா அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் மரணமடைந்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ள நிலையில், தமது மகளின் மரணத்துக்கான மருத்துவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று அவரது தந்தை ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், மாணவிக்கு சிகிச்சையளித்த இரண்டு மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. உயிரிழந்த கால்பந்து வீராங்கனையின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணமும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 'இந்தி தெரியாதா?' - தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் பேச்சால் புதுச்சேரியில் சர்ச்சை14 நவம்பர் 2022 'பொதுப் பிரிவில் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சிக்கு இடம் கொடுப்பதாகச் சொல்வது அண்டப் புளுகு' - தொல். திருமாவளவன்13 நவம்பர் 2022 காந்தியை கொன்ற கோட்சே பற்றி விலகாத மர்மங்கள் - ஓர் அலசல்4 மணி நேரங்களுக்கு முன்னர் 'மகள் உயிரிழப்பார் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை' தமது மகளின் காலில் உள்ள ஜவ்வுதான் கிழிந்துள்ளது என்று மருத்துவர்கள் கூறியதாகவும், ஆனால் தம் மகள் உயிரிழப்பார் என்று தாம் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்றும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார். சென்னை ராணி மேரி கல்லூரியில் பி.எஸ்சி பிசிக்கல் எஜுகேஷன் முதலாம் ஆண்டு படித்து வந்தவர் பிரியா. இவர் மாநில அளவிலான கால்பந்து போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன்னர் அவரது வலது காலில் ஏற்பட்ட காயத்தால் ஜவ்வு பாதிப்பு ஏற்பட்டது. அதே பாதிப்பு மீண்டும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெற சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்றார். அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்த பின்னர் ஜவ்வு விலகி இருப்பதாகக் கூறிய மருத்துவர்கள், அவரை வீட்டுக்கு அருகிலேயே உள்ள பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சை பெறப் பரிந்துரை செய்துள்ளனர். பட மூலாதாரம்,MA SUBRAMANIAN FACEBOOK PAGE கடந்த 7ஆம் தேதி பெரியார் நகர் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னரும் வலி குறையாததால், பிரியா 8ஆம் தேதி மீண்டும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அகற்றப்பட்ட கால் அங்கு பிரியாவின் வலது கால் தசைகள் அழுகிய நிலையில் இருந்ததால் மருத்துவர்களால் கால் அகற்றப்பட்டது. பெரியார் நகர் மருத்துவமனையில் அவரது காலில் ஏற்பட்ட அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவருக்கு காலில் போடப்பட்ட கட்டு மிகவும் இறுக்கமாக இருந்ததால் காலில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, ரத்த நாளங்கள் பழுதாகி மிகவும் அவதிக்கு உள்ளனார் என்று இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். நேற்று முன் தினம் தாம் பிரியாவை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வந்து பார்த்த போது அவர் நலமுடன் இருந்ததாகவும், நேற்று நள்ளிரவுக்கு மேல் பிரியாவுக்கு சிறுநீரகம், ஈரல், இதயம் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டதால் இன்று காலை 7:15 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது என்று அமைச்சர் தெரிவித்தார். படக்குறிப்பு, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் பிணவறை தமிழ்நாடு அரசு அமைத்த மருத்துவ வல்லுநர் குழு பெரியார் நகர் மருத்துவமனை மருத்துவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அங்கிருந்த இரு மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் என்று கண்டறியப்பட்டதாகவும், அவர்கள் தொலைதூர இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். பிரியாவின் சகோதரர்களில் மூவரில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும், இடமாற்றம் செய்யப்பட்ட இரு மருத்துவர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். பிரியாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை சரியானது ஆனால் கவனக்குறைவாக அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். பிரியாவின் உடலைப் பெற மறுத்து ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் போராட்டம் நடத்தி வந்த அவரது உறவினர்கள், அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் உடலைப் பெற்றுக்கொண்டனர். மாணவி மரணம் - திமுக அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் Twitter பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 1 பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "அறுவை சிகிச்சையின்போது அரசு மருத்துவர்கள் தவறான சிகிச்சை வழங்கியதால் கல்லூரி மாணவி, கால்பந்து வீராங்கனை சகோதரி பிரியா ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. சகோதரி பிரியாவின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திறனற்ற திமுக ஆட்சியில் ஒவ்வோர் அரசு துறையும் அழிந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் மருத்துவத் துறையும் சேர்ந்திருப்பது வேதனை அளிக்கிறது. அறிவாலயம் அரசு, சகோதரி பிரியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நஷ்ட ஈடாக இரண்டு கோடி ரூபாய் அவரது குடும்பத்தாருக்கு உடனடியாக வழங்க வேண்டும்," என்று தெரிவித்துள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல, 2 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 2 தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்திற்குக் காரணமான இந்த திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். இழைக்கப்பட்ட அநீதிக்குப் பொறுப்பேற்று இந்த அரசு பிரியா குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். கால்பந்து வீராங்கனை பிரியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் சக விளையாட்டு வீரர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்," எனத் தெரிவித்துள்ளார். https://www.bbc.com/tamil/articles/cw86wqejxx4o
  4. யாழில் சரிந்து விழுந்த 200 வருட பழைமை வாய்ந்த மலைவேம்பு மரம் By DIGITAL DESK 2 15 NOV, 2022 | 01:05 PM யாழ்ப்பாணம் கச்சேரி வீதியில் சீரற்ற காலநிலையின் காரணமாக இருநூறு வருடங்கள் பழைமை வாய்ந்த மலைவேம்பு மரம் ஒன்று திங்கட்கிழமை (நவ. 14) இரவு 11 மணியளவில் சரிந்து விழுந்துள்ளது. குறித்த மரம் வீதியின் குறுக்காக சரிந்து விழுந்ததில் முன்னால் இருந்த வீட்டு மதில் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் வீதியில் பயணிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக யாழ்ப்பாண மாநகர சபையினரால் கச்சேரி நல்லூர் பிரதான வீதியானது போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதோடு விழுந்த மரத்தினை அகற்றும் நடவடிக்கைகளை உரிய சம்பந்தப்பட்ட தரப்பினர் மேற்கொண்டு வருகின்றார்கள். குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் கருத்து தெரிவிக்கையில், 200 வருடங்கள் பழைமை வாய்ந்த இந்த மரத்தினை சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் பாதுகாக்க தவறியமையினால் விழுந்துள்ளது. இரவு 11 மணியளவில் இடம்பெற்றமையினால் வீதியில் யாரும் பயணிக்காத நிலையில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் இதுவே பகல் வேளையிலோ அல்லது சன நடமாட்டம் நிறைந்த நேரத்தில் இடம் பெற்று இருந்தால் உயிர் சேதங்களும் ஏற்பட்டிருக்கும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/140092
  5. தரமுயரும் காங்கேசன்துறை துறைமுகம் : 35 ஏக்கர் தனியார் காணியை சுவீகரிக்க அங்கீகாரம் ! By DIGITAL DESK 2 15 NOV, 2022 | 10:41 AM பிராந்திய கடல் வலயத்தில், இலங்கையை ஒரு பிரதான மையமாக மாற்றுவதையும், இந்தியா மற்றும் இலங்கைக்குமிடையேயுள்ள சுற்றுலாவை மேம்படுத்துவதையும் மையமாகக்கொண்டு, காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக மேம்படுத்தவும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை இடையே. இந்த திட்டம் EXIM வங்கியின் 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியின் கீழ் செயல்படுத்தப்படுகிறது, இதற்காக இலங்கை துறைமுக அதிகார சபைக்கும் திறைசேரிக்கும் இடையில் கடனுதவி ஒப்பந்தம் 2018 ஒக்டோபர் மாதம் கைச்சாத்திடப்பட்டதுடன் டொலர் கடன் வரி ஒப்பந்தம் 2018 ஜனவரி 10 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு தரப்பினருக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள திட்ட முகாமைத்துவ ஆலோசனை ஒப்பந்தத்தின் படி, இத்திட்டத்திற்கான மொத்த திட்ட காலம் 39 மாதங்கள் ஆகும். அவற்றில், திட்டமிடல் காலம் ஒன்பது மாதங்கள், கட்டுமான காலம் 18 மாதங்கள், மற்றும் குறைபாடு உத்தரவாத காலம் 12 மாதங்களாகும் தற்போதுள்ள பிரேக்வாட்டரின் மறுசீரமைப்பு (1,400 மீ), தற்போதுள்ள பியர் எண். 1 (அளவு 96 மீ x 24 மீ) மறுசீரமைப்பு, பியர் எண். 2 (தற்போதுள்ள கம்பம் எண். 1 நீட்டிப்பு, அளவு 85 மீ x 24 மீ); மேலும் கடைசியாக, இந்த துறைமுகத்தின் முக்கிய அபிவிருத்திப் பணியானது பிரேக்வாட்டரில் கான்கிரீட் சாலை போன்ற உள்கட்டமைப்பை நிறைவு செய்தல் போன்ற 5 முக்கிய நடவடிக்கைளை ஆகும். மேலும், காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அண்மித்த 50 ஏக்கர் காணியை சுவீகரிக்க இலங்கை துறைமுக அதிகார சபைக்கு (SLPA) முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதற்காக 15 ஏக்கர் பொது காணி மற்றும் 35 ஏக்கர் தனியார் காணயை சுவீகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தனியாருக்குச் சொந்தமான நிலம், நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் விதிகளின்படி குறிப்பிட்ட இழப்பீடு செலுத்தி கையகப்படுத்தப்படும் என்பதையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/140052
  6. குஜராத் கலவர வழக்கில் தண்டனை பெற்றவர் மகள் பாஜக வேட்பாளராக போட்டி கட்டுரை தகவல் எழுதியவர்,ரஜ்னீஷ் குமார் பதவி,பிபிசி செய்தியாளர் 36 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, பாயல் குக்ரானி 2002ஆம் ஆண்டு நிகழ்ந்த குஜராத் கலவரத்தின் போது பாயல் குக்ரானிக்கு எட்டு வயது. 2002 கலவரத்தில் பங்கு வகித்ததற்காக பாயலின் தந்தை மனோஜ் குக்ரானிக்கு நீதிமன்றம் 2012இல் ஆயுள் தண்டனை விதித்தது. 2002 பிப்ரவரி 28 ஆம் தேதி, அகமதாபாத்தில் உள்ள நரோதா பாட்டியா என்ற முஸ்லிம் குடியிருப்பு பகுதியில் 97 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் படுகொலையின் குற்றவாளிகளில் மனோஜ் குக்ரானியும் அடங்குவார். ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே நரோதா பாட்டியா சட்டப்பேரவைத் தொகுதியில் மனோஜ் குக்ரானியின் மகள் பாயலை தனது வேட்பாளராக பாஜக நிறுத்தியுள்ளது. மனோஜ் குக்ரானி உடல்நல காரணங்களுக்காக தற்போது ஜாமீனில் உள்ளார். தனது மகளுக்காக பிரசாரம் செய்து வருகிறார். 2002 பிப்ரவரி 28 ஆம் தேதி, முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நரோதா பாட்டியா பகுதியில் வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தியதில் 97 பேர் கொல்லப்பட்டனர். இதில் சில பாலியல் வன்கொடுமை மற்றும் தீ வைப்பு விவகாரங்களும் பதிவு செய்யப்பட்டன. 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தில் ஒரே இடத்தில் இவ்வளவு உயிர்கள் பலியான சம்பவம் இங்குதான் நடந்தது. பாதிக்கப்பட்ட முஸ்லிம் குடும்பங்களின் கோபம் பாயல் குக்ரானி பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பதால் நரோதா பாட்டியாவைச் சேர்ந்த சில பாதிக்கப்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் கடும் கோபத்தில் உள்ளன. சலீம் ஷேக்கின் சகோதரியின் ஒரு பெண் மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகளை கலவரக்காரர்கள் கொன்றனர். பாயல் குக்ரானி பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவர் என்ன நினைக்கிறார் என்று சலீம் ஷேக்கிடம் கேட்டோம். “நான் மனோஜுக்கு எதிராக சாட்சியம் கூட அளித்தேன். அவர் தண்டனையும் பெற்றார். தற்போது தனது மகளுக்காக பிரசாரம் செய்து வருகிறார். மனோஜ் குக்ரானி ஒரு குற்றவாளி. எனவே பாஜக அவருக்கு வாய்ப்பு கொடுக்க முடியாது. ஆகவே பாஜக குடும்ப உறுப்பினருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. மனோஜ் குக்ரானி 2002இல் ஏழை முஸ்லிம்களைக் கொல்வதற்காக உழைத்தார். பாரதிய ஜனதா கட்சி அவரை ஒரு புரட்சியாளராக பார்க்கிறது. அதனால்தான் ஊக்கமளிக்கும் விதமாக பாஜக அவருடைய மகளை தேர்தலில் நிறுத்தியுள்ளது,” என்று அவர் கூறினார். "இங்கே ஒரு கட்சி தாவூத் இப்ராகிமின் மகளுக்கு வாய்ப்பு கொடுத்தால் எப்படி இருக்கும் என்று நீங்கள் பாஜகவினருடன் பேசினால் கேளுங்கள்,” என்றார் அவர். பாஜகவின் குஜராத் செய்தித் தொடர்பாளர் யமல் வியாஸிடம் சலீம் ஷேக் கேட்ட இதே கேள்வியை கேட்டோம். “பாயல் எம்.டி படித்த ஒரு மருத்துவர். அவர் ஓர் இளம்பெண். கட்சிக்காக கடுமையாக உழைக்கிறார். கட்சிக்காரரான இவருக்கு சீட்டு கொடுக்கப்பட்டுள்ளது. கலவர விஷயம் மிகவும் பழையது. குஜராத் அதை மறந்து விட்டது,” என்று அவர் பதில் அளித்தார். ”குஜராத் மக்கள் அனைவரும் மறந்துவிட்டனர். 20 வருடங்கள் ஆகிவிட்டது. பாயலை வேட்பாளராக நிறுத்தியிருப்பதால் எந்தப் பிரச்னையும் இல்லை என்று நான் கருதுகிறேன். நீதிமன்றம் என்ன செய்யவேண்டுமோ அதை செய்துவிட்டது. குற்றவாளிகளும் தண்டிக்கப்பட்டனர். இப்போது குஜராத் மக்கள் இதைத் தாண்டிச் சென்றுவிட்டனர். குஜராத் நிறைய வளர்ச்சி அடைந்துள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார். ”குஜராத்தில் ஒவ்வொரு சமூகமும் நிறைய வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பகுதியான நரோதா பாட்டியாவுக்குச் சென்றால், அங்கு எங்குமே வளர்ச்சி தென்படவில்லை,” என்று யமல் வியாஸ் கூறினார். இன்றும் இந்தப்பகுதி அழுக்கான குடிசைப்பகுதி போல உள்ளது. நரோதா பாட்டியா முஸ்லிம் குடியிருப்பு பகுதிக்கு எப்போதாவது சென்று எவ்வளவு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று பார்த்தீர்களா என்று யமலிடம் கேட்டோம். இந்தக் கேள்விக்கு பதிலளித்த அவர், “பாருங்கள், இது உங்கள் எண்ணமாக இருக்கலாம். ஆனால் குஜராத்தில் மக்கள் வளர்ச்சியின் அடிப்படையில் மட்டுமே எங்களுக்கு துணை நிற்கிறார்கள். ஒட்டுமொத்த குஜராத் மாநிலமும் வளர்ச்சி அடைந்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி தனது வேட்பாளரை ஒரு செயல்முறையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறது,” என்றார். குஜராத்தில் ஆளும் பாஜகவை வீழ்த்தி ஆம் ஆத்மி கட்சி பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா?8 நவம்பர் 2022 குஜராத் தேர்தலில் முஸ்லிம்களுக்கு ஆதரவாகப் பேசுவது தோல்விக்கு வழிவகுக்குமா?4 நவம்பர் 2022 குஜராத் மோர்பி பாலம்: கள விசாரணையில் வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள் - முழு விவரம்2 நவம்பர் 2022 'இது நீதியல்ல' “எனது உறவினர்கள் 19 பேர் உயிரிழந்தனர். குற்றவாளிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுகிறது. இது என்ன நியாயம்? குற்றம் செய்தவருக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறது,” என்று அதே பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஃபாத்திமா பீபி குறிப்பிட்டார். ”குற்றம் செய்தவரின் மகள்தான் கட்சிக்கு கிடைத்ததா? யாருக்கு எதிராக அநீதி இழைக்கப்பட்டதோ அந்த குடும்பத்தார்களை அவர்கள் பொருட்படுத்தவில்லை. இது என்ன குருட்டு சட்டம்? எங்கள் காயங்களில் உப்பைத் தூவி இருக்கிறார்கள்.” இதையெல்லாம் சொல்லியவாறே ஃபாத்திமா அழ ஆரம்பித்தார். "மக்கள் விலங்குகளை கொல்லும்போது கூட யோசிக்கிறார்கள். ஆனால் அவர்கள் மனிதர்களைக் கொன்றனர். குழந்தைகளை உயிரோடு எரித்தனர். எனக்கு இப்போதும்கூட பலமுறை இரவில் தூக்கம் வருவதில்லை. கோத்ரா எங்கே, பாட்டியா எங்கே? இன்று வரை கோத்ராவுக்கு நான் சென்றதுகூட இல்லை. எந்த பகுதியில் அது உள்ளது என்று கூட தெரியாது,”என்று அவர் அழுதுகொண்டே கூறினார். ”நான் பாட்டியாவில் 50 வருடங்களாக இருக்கிறேன். நாங்கள் உதவிக்காக கெஞ்சினோம். இப்போது தேர்தலில் நிற்கவைக்கப்பட்டுள்ளவரின் தந்தை கலவரத்தில் ஈடுபட்டதை எங்கள் கண்களால் பார்த்திருக்கிறோம். பாகிஸ்தானுக்கு ஓடுங்கள், இங்கு வாழ உங்களுக்கு உரிமை இல்லை என்று இவர்கள் சொன்னார்கள். நாங்கள் இந்தியப் பெண்கள் இல்லையா? இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க நாங்கள் தியாகம் செய்யவில்லையா? இன்றும் எங்களை துயரப்பட வைக்கும் காட்சிகளை நாங்கள் பார்த்திருக்கிறோம்,” என்று இந்தப் பகுதியைச் சேர்ந்த ஜூலேகா பானோ தெரிவித்தார். “பாஜக வந்தாலும் சரி, காங்கிரஸ் வந்தாலும் சரி, எங்களுக்கு யாரிடமும் எதிர்பார்ப்பு இல்லை. எங்கள் ஆட்களை வேட்பாளராக நிறுத்தக்கூடாதா என்ன? பாதிக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காதா? குற்றம் செய்பவர்கள்தான் இங்கு வாழ முடியுமா?”என்று அவர் கேள்வி எழுப்பினார். “குஜராத் கலவரம் நடந்தபோது எனக்கு 20 வயது. என் தம்பி அப்போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான், அவன் மாற்றுத்திறனாளி. கலவரக்காரர்கள் அவன் மீதும் இரக்கம் காட்டவில்லை. மனோஜ் குக்ரானி போன்றவர்கள் பாஜகவின் வீரர்கள். அவர்கள் மற்றவர்களுக்கு கெட்டவர்களாக இருந்தாலும், பாஜகவுக்கு நல்ல வேலையை செய்திருக்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், அவர்களுக்கு வெகுமதி கிடைக்கத்தானே செய்யும்,” என்று பாட்டியாவைச் சேர்ந்த பாபு சையத் கூறினார். 2002 கலவரத்தில் நரோதா பாட்டியா முஸ்லிம்களின் வாழ்வாதாரமும் குறிவைக்கப்பட்டது. அப்போது பாபு சையத் ஓட்டல் நடத்தி வந்தார், அவரது ஓட்டலுக்கும் தீ வைக்கப்பட்டது. கடந்த பத்து வருடங்களாக அவர் ஒரு சிறிய கடையை நடத்தி வருகிறார். நரோதா பாட்டியா படுகொலை வழக்கில் மொத்தம் 32 பேரை குற்றவாளிகள் என அகமதாபாத்தின் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நரேந்திர மோதி அரசில் அமைச்சராக இருந்த மாயா கோட்னானி மற்றும் பஜ்ரங்தள தலைவர் பாபு பஜ்ரங்கி ஆகியோரும் இதில் அடங்குவர். குஜராத் பாலம்: மோதியின் எழுச்சிக்கு உரமிட்ட மோர்பி, மச்சு ஆறு - அறியப்படாத தகவல்கள்31 அக்டோபர் 2022 பாஜக ஆட்சிக்கு வந்தபின் ஆர்.எஸ்.எஸ் எப்படி தன்னை மாற்றிக்கொண்டுள்ளது?15 அக்டோபர் 2022 நரேந்திர மோதி அரசு முஸ்லிம், கிறிஸ்தவ தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு தர உண்மையாகவே விரும்புகிறதா?10 அக்டோபர் 2022 முஸ்லிம்களுக்கு என்ன செய்தி சொல்ல பாஜக விரும்புகிறது? 1984ல் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஜெகதீஷ் டைட்லரை, தில்லி மாநகராட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் குறித்து முடிவெடுக்கும் குழுவில் காங்கிரஸ் கட்சி சென்ற வாரம் சேர்த்தது. அது சீக்கியர்களின் காயத்தில் உப்பு தூவியது போன்றது என்று பாஜக கூறியது. ஆனால் இப்போது மனோஜ் குக்ரானியின் மகளை வேட்பாளர் ஆக்கியிருப்பதை பாஜக நியாயப்படுத்துகிறது. மனோஜ் குக்ரானியின் மகளுக்கு சீட்டு கொடுத்ததன் மூலம் பாஜக என்ன செய்தியை சொல்கிறது? “சர்தார் படேல் இந்து தேசம் என்பது பைத்தியக்காரர்களின் கருத்து என்று கூறுவார். பாயல் குக்ரானிக்கு சீட்டு கொடுத்ததன் மூலம் தான் எந்த எல்லைக்கும் செல்ல முடியும் என்ற தெளிவான செய்தியை பாஜக தருகிறது. பில்கிஸ் பானோவை பாலியல் வல்லுறவு செய்தவர்களை விடுவிப்பதையும் அக்கட்சி ஆதரித்தது. இந்த நாட்டில் உள்ள அமைப்பு தங்களின் விசுவாசிகளுக்கு மட்டுமே என்ற தெளிவான செய்தியை அவர்கள் கொடுக்கிறார்கள். விசுவாசமாக இல்லாதவர்கள் தனிமைப்பட்டு இருக்க வேண்டும்,” என்று சிமன்பாய் படேல் இன்ஸ்டிடியூட் இயக்குநர் டாக்டர் ஹரி தேசாய் குறிப்பிட்டார். குஜராத்தில் கடந்த பல சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக முஸ்லிம்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை. 1980 முதல் இப்போதுவரை, 1998ஆம் ஆண்டு மட்டுமே ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளருக்கு பாஜக சீட்டு வழங்கியது. குஜராத்தில் முஸ்லிம் மக்கள் தொகை 9.97 சதவிதம். மக்கள் தொகை விகிதாச்சாரத்தைப் பார்த்தால், 18 முஸ்லிம் எம்எல்ஏக்கள் இருக்க வேண்டும். ஆனால் அது எப்போதுமே நடக்கவில்லை. 1980ல் குஜராத்தில் அதிகபட்சமாக 12 முஸ்லிம் எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவையில் முஸ்லிம் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள 25 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. நரேந்திரமோதி முதல்வராக பதவியேற்ற பிறகு குஜராத்தில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக பார்க்கப்படவில்லை. மாநிலத்தில் சிறுபான்மையினர் நலத்துறையைக் கூட நரேந்திர மோதி உருவாக்கவில்லை. இந்தமுறையும் பாஜகவின் வேட்பாளர் பட்டியலில் இதுவரை எந்த முஸ்லிமும் இடம்பெறவில்லை. https://www.bbc.com/tamil/articles/crg8neg2ez6o
  7. உலகின் 800 ஆவது கோடி குழந்தை பிறந்தது; 900 கோடியாக அதிகரிப்பது எப்போது? By DIGITAL DESK 3 15 NOV, 2022 | 09:29 AM உலகின் 800 ஆவது கோடி குழந்தை பிறந்துள்ளது. உலக சனத்தொகை 800 கோடியை அடைந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. உலக சனத்தொகை 800 கோடியாக அதிகரிக்கிறது 2011 ஒக்டோபர் 31 ஆம் திகதி உலக சனத் தொகை 700 கோடியாக அதிகரித்தது. ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் அறிவித்திருந்தது. ஆதன்பின் 11 ஆண்டுகளில் உலக சனத்தொகை மேலும் 100 கோடியினால் அதிகரித்துள்ளது. இதேவேளை அடுத்த வரும் உலகில் ஆகக்கூடுதலான சனத்தொகையைக் கொண்ட நாடாக சீனாவைக் கடந்து இந்தியா முன்னேறும் எனவும் ஐ.நா மதிப்பிட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டு உலக சனத்தொகை 850 கோடியாக அதிகரிக்கக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. உலக சனத்தொகை 900 கோடியாகுவதற்கு 15 வருடங்கள் தேவைப்படும் என ஐநா மதிப்பிட்டுள்ளது. அதாவது, 2037 ஆம் ஆண்டில் உலக சனத்தொகை 900 கோடியாகலாம். https://www.virakesari.lk/article/140044
  8. உடப்பில் மின்னல் தாக்கி 15 மீனவர்கள் பாதிப்பு: ஒருவர் பலி; மூவர் கவலைக்கிடம்! By DIGITAL DESK 2 15 NOV, 2022 | 10:53 AM வலைகளை இழுத்துக்கொண்டிருந்த 15 மீனவர்களை மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உடப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை ( நவ.14) இடம்பெற்றுள்ளது. உடப்பு புனப்பிட்டிய, பரிபாடு பகுதியில் வலைகளை இழுத்துக்கொண்டிருந்தபோதே 15 க்கும் மேற்பட்டோர் மின்னல் தாக்கத்துக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவத்தில் 28 வயதுடைய இளைஞரே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாரிபாடு கடற்கரையில் உழவு இயந்திரத்தின் மூலம் வலையை இழுத்துக் கொண்டிருந்தபோதே தம்மை மின்னல் தாக்கியதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மின்னல் தாக்கியதில் 15க்கும் மேற்பட்டோர் பலத்த அதிர்ச்சியடைந்து உடப்பு கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் மூவர் கவலைக்கிடமான நிலையில் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/140061
  9. அதிகரிக்கும் அமெரிக்க ஈடுபாடு By DIGITAL DESK 2 13 NOV, 2022 | 03:48 PM (ஹரிகரன்) “ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவின் வருகையினால் அமெரிக்கா முழுத் திருப்தியடைந்திருக்கிறதா என்ற கேள்வி உள்ளது. எனினும் அவர் போன்ற ஆட்சியாளர் ஒருவர் இருப்பது அமெரிக்காவுக்குப் பாதுகாப்பானது தான்” தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் அமெரிக்கா, இந்தியா, மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தூதரகங்களும், அந்த நாட்டின் இராஜதந்திரிகளும் கொழும்பில் இரவுபகலாக பணியாற்றிக் கொண்டிருந்தது போலவே, பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், பல நாடுகளின் தூதரக மற்றும் இராஜதந்திரச் செயற்பாடுகள் தீவிரமடைந்திருக்கின்றன. முக்கியமாக அமெரிக்காவின் இராஜதந்திரச் செயற்பாடுகள், மிகத் தீவிரமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அமெரிக்க தூதுவராக ஜூலி சங் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், இராஜதந்திர ரீதியாக அமெரிக்கத் தூதரகத்தின் பணிகள் மும்முரமடைந்திருக்கின்றன. அண்மையில் அமெரிக்க தூதரகத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவில், உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாடு நெருக்கடியை எதிர்கொண்ட போதெல்லாம் இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவை ஒருபோதும் மறக்க முடியாது என்று தெரிவித்திருந்தார். 2001ஆம் ஆண்டு பிரதமராக இருந்தபோது ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு புஷ் சமாதானப் பேச்சுக்களை நடத்துவதற்கும், விடுதலைப் புலிகள் அமைப்பைக் கட்டுப்படுத்தவும், சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட போதும், ஆற்றிய விசேட பங்களிப்புகளையும் ஆதரவையும் கண்டிப்பாக இங்கு குறிப்பிட வேண்டும் என்று கூறியிருந்தார். இலங்கையில் சொந்தமாக கடற்கரையைக் கொண்டிருக்கும் ஒரே தூதரகம் அமெரிக்க தூதரகம் தான் என்று குறிப்பிட்டிருந்த ரணில் விக்கிரமசிங்க, எங்களுக்கிடையிலான உறவு வர்த்தகம், கல்வி, மதம் சார்ந்ததாக மட்டுமல்ல, அது இராணுவ விவகாரங்களுடன் தொடர்புடையதாகவும் இருந்தது. குறிப்பிடத்தக்க நேரங்களில் நாங்கள் உங்களுக்காக பங்காற்றியிருக்கிறோம் என்பதையும் நினைவுபடுத்தியிருந்தார். ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் இருந்த காலகட்டத்தில், அல்கெய்டாவுக்கு எதிரான போர் நடவடிக்கைகளில், உலகெங்கும் உள்ள அந்த அமைப்பின் பயங்கரவாதிகளை கைப்பற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்த போது, கட்டுநாயக்க விமான நிலையத்தை அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ. பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அனுமதி அளித்திருந்தது. அதேவேளை, அமெரிக்காவுடன், நல்லாட்சி அரசாங்கம், செய்து கொண்டிருந்த பாதுகாப்பு உடன்பாடுகள் இலங்கையை விநியோக வசதிகளுக்குப் பயன்படுத்தும் வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுத்தது. கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் அந்த வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. விடுதலைப் புலிகளை அடக்குவதற்கு அமெரிக்கா உதவியது, நாங்களும் அமெரிக்காவுக்கு பாதுகாப்பு ரீதியாக உதவினோம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தடி சாக்கில் நினைவுபடுத்தியிருக்கிறார். ரணில் விக்கிரமசிங்கவை அமெரிக்காவின் நண்பனாகவே பெரும்பாலானோர் பார்க்கின்றனர். அவ்வாறு நம்புவதற்கு நியாயமான பல காரணங்களும் இருக்கின்றன. ஆனால், ரணில் விக்கிரமசிங்கவின் வருகையினால் அமெரிக்கா முழுத் திருப்தியடைந்திருக்கிறதா என்ற கேள்வி உள்ளது. அவர் ஆட்சிக்கு வந்த பின்னர்- பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த பின்னர், இலங்கைக்காக அமெரிக்காவின் இராஜதந்திரத் தொடர்புகள், நடவடிக்கைகள் தீவிரமடைந்திருப்பது, அவரை பலப்படுத்துவதற்காகவோ, அவருடனான தொடர்புகளை வலுப்படுத்துவதற்காகவா அல்லது அமெரிக்காவின் நிலையை இங்கு வலுப்படுத்துவதற்காகவா என்ற கேள்வி பலருக்கு உள்ளது. ஒக் டோபர் மாத தொடக்கத்தில் கொழும்பில் உள்ள அமெரிக்க துதரகத்தில், அமெரிக்க ஏற்றுமதிக் கட்டுப்பாடு மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரிவின் அதிகாரி ஒருவர் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கிறார். “இந்த சவாலான காலகட்டத்தில் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதிகளை வலுப்படுத்துவதை உறுதி செய்து, பாதுகாப்பான, உற்பத்தித் துறைமுகங்களுக்கான அமைப்புகளை மேம்படுத்தி பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் இலக்குடன் அவர் இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்றுவார்.” என்று அமெரிக்கத் தூதுவர் ருவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இலங்கையில் 'ஏற்றுமதி கட்டுப்பாடு மற்றும் எல்லைப் பாதுகாப்பு' திட்டத்தில் முதன்மையான காரணி, அமெரிக்க தேசிய பாதுகாப்பே என்றும், அதற்காகவே இந்த அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரியான தயா கமகே குறிப்பிட்டிருக்கிறார். கடந்த செப் டெம்பர் மாதம், ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்துக்குச் சென்றிருந்த போது, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் விக்டோரியா நுலன்டை சந்தித்துப் பேசியிருந்தார். இதற்குப் பின்னர், இலங்கைக்கு அமெரிக்க அதிகாரிகள், பிரதிநிதிகள் பலர் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கிறார்கள். ரோமில் உள்ள ஐ.நா. முகவர் அமைப்புகளுக்கான அமெரிக்க தூதுவர், சின்டி மக்கெய்ன், தெற்கு மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச் செயலர் டொனால்ட் லூ, அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவிச் செயலர் ரொபேர்ட் கப்ரூத், இராஜாங்கத் திணைக்களத்தின் முகாமைத்துவப் பிரிவு உதவிச் செயலாளர் ஜோன் பாஸ், தெற்கு மத்திய ஆசியாவுக்கான பிரதி உதவி இராஜாங்கச் செயலர் அப்ரீன் அக்தர், அமெரிக்க காங்கிரஸ் குழு எனப் பலர அமெரிக்காவில் இருந்து கடந்த சில வாரங்களுக்குள் இங்கு வந்திருக்கின்றனர். இவர்களில் பலர் கொழும்புடன் தங்களின் பயணங்களை நிறுத்தியிருந்தனர். இன்னும் பலர் வடக்கு, கிழக்கில் கவனம் செலுத்தியிருந்தனர். அமெரிக்க துணைத் தூதுவர் வடக்கில் அண்மையில் ஆய்வுகளை மேற்கொண்ட நிலையில், அமெரிக்க காங்கிரஸ் குழு யாழ்ப்பதாணத்துக்குச் சென்று வலி. வடக்கு மீள்குடியமர்வு பிரச்சினை உள்ளிட்ட விடயங்களில் நேரடியாக கவனம் செலுத்தியிருக்கிறது. அதேவேளை, அமெரிக்க தூதுவர் ஜூலி சங் கிழக்கு மாகாணத்துக்கான தனது முதல் பயணத்தை சில நாட்களுக்கு முன்னர் மேற்கொண்டிருந்தார். இலங்கையிலும், இந்தியப் பெருங்கடலிலும் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், அமெரிக்கா தனது இராஜதந்திர தொடர்புகளையும், செயற்பாடுகளையும் விரிவுபடுத்த ஆரம்பித்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு உதவுவது மட்டும் அமெரிக்காவின் முழு நோக்காக தெரியவில்லை. அதற்குள் அதன் பாதுகாப்பு நோக்கமும் ஒளிந்திருக்கிறது என்பது இரகசியமான விடயம் அல்ல. அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை இலங்கை பெற்றுக் கொள்வதில் அமெரிக்கா முக்கிய பங்கை வகிக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, ரணில் விக்கிரமசிங்கவைப் பலப்படுத்திக் கொள்வதில் மட்டும், அமெரிக்கா கவனம் செலுத்தவில்லை. ரணில் விக்கிரமசிங்க போன்ற ஆட்சியாளர் ஒருவர் இருப்பது அமெரிக்காவுக்குப் பாதுகாப்பானது தான். அதற்காக, அவரைக் கண்மூடித்தனமாக பலப்படுத்துவதற்கு அமெரிக்கா தயாராக இல்லை. ஏனென்றால், ரணில் விக்ரமசிங்க ராஜபக்ஷவினரின் பொம்மையாகத் தான் இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கிறார். அமெரிக்க நலன்களுக்கும், இலங்கையில் அமெரிக்காவின் நீண்டகால இருப்புக்கும் இந்த நிலை பாதுகாப்பானதாக இருக்க முடியாது என அமெரிக்கா கருதக் கூடும். கொழும்பில் மாத்திரமன்றி அதற்கு அப்பாலும் அமெரிக்கா தனக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்க விரும்புகிறது. நீண்டகாலமாகவே யு.எஸ்.எய்ட். ஊடாக அமெரிக்கா சாதாரண மக்கள் மத்தியில் இறங்கிப் பணியாற்றி வந்திருக்கிறது. அதனை உடைப்பதற்கு சீனா இப்போது, கடுமையாக முயற்சிக்கிறது. அரிசி, மருந்துப் பொருட்கள், உதவிப் பொதிகள் என்று கிராமம் கிராமமாக சீனா தனது உதவியைக் கொண்டு செல்ல முயற்சிக்கிறது. இப்போது, விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு 10 மில்லியன் லீற்றர் டீசலை வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறது சீனா. இது, இந்த துறையினரை தன் பக்கம் இழுப்பதற்காக சீனா மேற்கொள்ளும் தந்திரமும் கூட. அரசுகளை மட்டும் கைக்குள் வைத்திருப்பது முக்கியமல்ல. அரசாங்கத்தை உருவாக்கும் மக்களையும் கைக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதை சீனா உணர்ந்திருக்கிறது. இதற்கு எதிர்நிலை நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் அமெரிக்கா கவனம் செலுத்துகிறது. வடக்கிலுள்ள மீள்குடியமர்வு, காணி அபகரிப்பு உள்ளிட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகளின் மீதும், மனித உரிமைகள் சார் விவகாரங்களின் மீதும் அமெரிக்கா செலுத்துகின்ற அக்கறை, அவ்வாறானதொன்று தான். இது நீதியை, பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் அளவுக்கு காத்திரமானதாக இருக்குமா என்பது ஒரு புறத்தில் இருக்க, அவ்வாறானதொன்றாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழர்களுக்கு இருப்பதில் ஆச்சரியமில்லை. https://www.virakesari.lk/article/139906
  10. ராஜபக்ஷவினரது அரசியலின் விளைவு By DIGITAL DESK 2 13 NOV, 2022 | 03:15 PM (சத்ரியன்) “வெளிநாட்டில் பணியாற்றுவதற்காக செல்லும் மருத்துவர்கள் மீளத்திரும்பமாட்டார்கள். அவர்கள் சிறிது காலத்துக்கு, டொலரை அனுப்பினாலும், குடும்பத்துடன் புலம்பெயர்ந்து விடுவார்கள். அவர்களால் அரசாங்கத்துக்கு எந்த வருமானமும் கிடைக்காது” மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு வரவேண்டாம் அல்லது குறைந்தபட்சம் அவர் அவ்வாறு வரப்போகிறேன் என்று கூறாமல் இருந்தால் கூடப் போதும் என, அண்மையில் கொழும்பில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போது கூறியிருந்தார் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க. அதற்கு அவர் குறிப்பிட்டிருக்கின்ற காரணம் அரசியல் நோக்கிலானது அல்ல. பொருளாதார மற்றும் சமூக நோக்கிலானது. “ஏற்கனவே பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். பல வருட கடின உழைப்பால் உருவாக்கப்பட்ட ஒரு சமூக மூலதனம் எங்களிடம் உள்ளது. எங்களிடம் எஞ்சியிருக்கும் சொத்துக்களில் அதுவும் ஒன்று. இப்போது அந்த சமூக மூலதனம் வடிகட்டப்படுகிறது. ஒவ்வொரு முறையும் ராஜபக்ஷக்கள் மீண்டு வர முயற்சிப்பதை பார்க்கும் போது, மக்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். ராஜபக்ஷக்கள் அரசியலில் இருந்து விலகி இருக்கும் வரை மக்களுக்கும் இந்த நாட்டுக்கும் நல்லது. ஒரு ராஜபக்ஷ பொதுவெளியில் தோன்றி மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று கூறுகின்ற போதெல்லாம் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். இளைய தலைமுறையினர், மீண்டும் ராஜபக்ஷவின் கீழ் வாழ வேண்டும் என்ற எண்ணத்தை இனியும் சகித்துக் கொள்ளமாட்டார்கள். அவர்கள் நிச்சயமாக நாட்டை விட்டு வெளியேறுவார்கள்.” என்று அவர் கூறியிருக்கிறார். டொலர் வருமானத்துக்காக அரசாங்கம் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதில் குறியாக இருந்தாலும், நாட்டை விட்டு இளம் சமூகம், கடும் உழைப்பாளிகள், அறிவார்ந்த சமூகம் என்பன வெளியேறிச் செல்வது பெரும் இழப்பாகும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்பது, சாதாரண தொழிலாளர்கள் மட்டத்தில், டொலர் சம்பாத்தியத்துக்கான வழியாக இருந்தாலும், இளம் சமூகமும், அறிவார்ந்த சமூகமும் வெளியேறுவது அவ்வாறானதல்ல. அண்மையில், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆங்கில ஊடகம் ஒன்றின் ஊடகவியலளர், எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்திருந்த, இலங்கை மருத்துவச் சங்கத்தின் (Sri Lanka Medical Council) பதிவாளர் மருத்துவர் ஆனந்த ஹபுகொட, இந்த ஆண்டில் ஜனவரி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் வரை மாத்திரம், 2206 மருத்துவர்கள், வெளிநாட்டில் உயர் கல்வி பெறுவதற்கு அல்லது, பணியாற்றுவதற்காக வழங்கப்படும், நற்சான்றுப் பத்திரத்தைப் பெற்றிருப்பதாக கூறியிருந்தார். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும், 433 மருத்துவர்கள் இந்தச் சான்றைப் பெற்றிருந்தனர். கடந்த 2019, 2020, 2021ஆம் ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறு நன்சான்று பத்திரம் பெற்றுக் கொண்ட மருத்துவர்களின் எண்ணிக்கையை விட, இந்த ஆண்டில் ஆகஸ்ட் மாதம் இந்த சான்றை பெற்ற மருத்துவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்காகும். 2019 முதல் 2022 ஆகஸ்ட் வரை 4,143 மருத்துவர்கள் இலங்கை மருத்துவச் சங்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில், 5,855 மருத்துவர்கள் வெளிநாடு செல்வதற்கான ‘நற்சான்று பத்திரங்களை’ பெற்றுள்ளனர். இது, இலங்கையில் புதிதாக கல்வி கற்று உருவாகும் மருத்துவர்களின் எண்ணிக்கையை விட, வெளியேறும் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதைக் காட்டுகிறது. வெளிநாட்டில் பணியாற்றுவதற்காக செல்லும் மருத்துவர்கள் மீளத்திரும்பமாட்டார்கள். அவர்கள் சிறிது காலத்துக்கு, டொலரை அனுப்பினாலும், குடும்பத்துடன் புலம்பெயர்ந்து விடுவார்கள். அவர்களால் அரசாங்கத்துக்கு எந்த வருமானமும் கிடைக்காது. அதேவேளை கல்விக்காகச் செல்லுகின்றவர்களும் முழுமையாக அல்லாவிட்டாலும், கணிசமானோர் அங்கேயே தங்கி விடுகிறார்கள். கடந்த சில வருடங்களில் சட்டரீதியாக சென்று, வெளிநாடுகளில் தங்கி விட்ட சிறப்பு மருத்துவர்களின் எண்ணிக்கை 150 என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த மருத்துவர்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்கவுள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரியான மருத்துவர் பிரியந்த அத்தபத்து கூறியுள்ளார். இந்த ஆண்டு மாத்திரம், 30 சிறப்பு மருத்துவர்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர் என்றும் அவர் கூறியிருக்கிறார். இதன் மூலம், கல்விக்காக வெளிநாடு செல்லும் மருத்துவர்களில் குறிப்பிட்டளவானோர் சட்டவிரோதமாக அங்கேயே தங்கி விடுகின்றனர் என்பது உறுதியாகிறது. இதுபோன்ற நிலை எல்லா துறைகளிலும் காணப்படுகிறது. இலவசக் கல்வி, இலவச மருத்துவம் போன்றவற்றின் ஊடாகவே, இலங்கையின் சமூக மூலதனம் கட்டியெழுப்பப்பட்டது என்கிறார் சம்பிக்க ரணவக்க. அவ்வாறு கட்டியெழுப்பப்பட்ட சமூக மூலதனத்தின் வெளியேற்றம், ஒட்டுமொத்த நாட்டுக்கும் பேரிழப்பாக அமைகிறது. ஏனைய நாடுகளில் கல்விக்காகவோ, சுகாதாரத்துக்காகவோ, ஏதோ ஒரு வகையில் கொடுப்பனவைச் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. ஆனால், இலங்கையில் அவ்வாறான நிலை இல்லை. முற்றிலும் இலவச சுகாதார மற்றும் கல்வி வசதிகளைப் பெற்றுக் கொண்டு, மூளைசாலிகள், திறமைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். இதன் மூலம் இவர்களைக் கட்டியெழுப்ப செலவிடப்பட்ட நிதி, உழைப்பு எல்லாமே வீணாகிறது. போர்க்காலத்தில் இந்த நிலை காணப்பட்டது. போருக்குப் பின்னர், நாட்டை விட்டு புலம்பெயரும் நிலை குறைந்து போயிருந்தது. ஆனால் 2019இல் ராஜபக்ஷவினர் நாட்டை மீண்டும் தங்களின் பிடிக்குள் கொண்டு வந்த பின்னர், இந்த வெளியேற்றம் அதிகரித்திருக்கிறது. நாட்டில் வாழ முடியாதளவுக்கு பொருளாதார நெருக்கடி வெளிநாடுகளை நோக்கி இளம் சமூகத்தை படையெடுக்கச் செய்திருக்கிறது. கடவுச்சீட்டுக்காக குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் வாயிலில் காத்திருக்கும் வரிசையே, எந்தளவுக்கு நம்பிக்கையீனம் அவர்களை பீடித்திருக்கிறது என்பதற்கு சாட்சியாகிறது. உள்நாட்டில் பொருளாதார ரீதியாக தலையெடுக்க முடியாது என்ற நம்பிக்கையீனம் தான், அவர்களை வெளிநாடு நோக்கிச் செல்லத் தூண்டுகிறது. திறமையற்றவர்களோ, அனுபவம் அற்றவர்களோ இவ்வாறு வெளியில் செல்லவில்லை. அவர்களுக்காக, வெளிநாடுகள் காத்திருக்கவும் இல்லை. பயிற்சிபெற்ற,திறமையும், அனுபவமும் கொண்டவர்களுக்குத் தான் வெளிநாட்டு தொழிற்சந்தை திறந்து கிடக்கிறது. அவ்வாறானவர்கள் வெளியேறுகின்ற போது, நாட்டின் பொருளாதாரம் பலவீனமடையும். தற்போதே நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியுற்றிருக்கும் நிலையில், பொருளாதாரத்துக்கு வலுச்சேர்க்க முடியாத - பலவீனமான சமூகத்தை பராமரிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. இந்தநிலையை மாற்ற வேண்டும் என்றால், ராஜபக்ஷவினர் மீண்டும் அதிகாரத்துக்கு வரக் கூடாது என்பது மட்டுமல்ல அவர்கள் அதிகாரத்துக்கு வரப் போவதாக கூறுவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான், சம்பிக்க ரணவக்கவின் கருத்து. ஆனால் ராஜபக்ஷவினர் எவரும் நாட்டுக்காக தங்களின் அரசியலை தியாகம் செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. நாட்டைச் சீரழித்ததில் அவர்களின் பங்கு மிகப் பெரியளவிலானது. சிங்கள மக்கள் ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி போரை முன்னெடுத்ததில் இருந்து, பொருளாதாரத்தை சாய்த்து வீழ்த்தியது வரை அவர்களின் அரசியலின் விளைவு தான் என்பதில் சந்தேகமில்லை. https://www.virakesari.lk/article/139894
  11. இந்திய வெளியுறவின் ஆழ, அகல, நீளம் ! By DIGITAL DESK 2 13 NOV, 2022 | 04:16 PM (லோகன் பரமசாமி) இந்திய வெளிவிவகாரத்துறையின் கொள்கை நிலைப்பாட்டில் இலங்கையின் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் இருப்புடன் இணைந்து பயணிக்கும் பொறிமுறையொன்று இல்லாத நிலை குறித்து தமிழர் சிந்தனைத்தரப்பு அதிருப்தி கொண்டுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேற்பட்ட காலமாக இடம்பெற்றுள்ள உலக ஒழுங்கு மாற்றங்களோடு அதன் பின்னால் இருக்கக்கூடிய சர்வதேச அரசியல் வளர்ச்சிகளையும் உள்ளடக்கி தமிழ்பேசும் மக்கள் தமது இருப்புக் குறித்த தீவை நோக்கி நகர விரும்புகின்றனர். ஆனால் இந்திய வெளிவிவகார கொள்கையில் இத்தனை வருடங்களாக எந்த விதமான மாற்றங்களும் ஏற்படாத சூழலில் இந்தியா தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வை வழங்குவதில் ஒத்துளைக்குமா என்பதில் தமிழ் சிந்தனை தரப்பு பெரும் சந்தேக கண்கொண்டே பார்க்கிறது. அடிப்படையில் இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையில் பாரம்பரிய பாதுகாப்பு முதன்மை வகிக்கிறது. இவற்றில் பாகிஸ்தானில் அண்மையில் இடம்பெற்றுள்ள ஆட்சிமாற்றம் முக்கிய இடத்தைக் கொண்டுள்ளது. இருந்தாலும் பாகிஸ்தான் விவகாரம் எப்பொழுதும் இந்தியாவின் பாதுகாப்புக்குச் சவாலாகவே இருந்து வருகிறது. அவ்வப்போது குறுகிய இராணுவ மோதல்களாகவும் இந்திய, பாகிஸ்தானிய உறவு நீடிக்கிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறியதிலிருந்து இந்தியா தனது பாதுகாப்புத் திட்ட வரைபடத்தை வடக்கு நோக்கியதாக மாற்றவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தாலிபான்கள் சட்டபூர்வமான அரசாங்கத்தை அமைத்துக் கொள்ளும் வரையில் பயங்கரவாத நடவடிக்கைகள் மீதான நிச்சயமற்ற தன்மைக்கு இந்தியா இட்டுச்செல்லப்பட்டுள்ளது இந்தியாவானது, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் குறித்து அதிக எச்சரிக்கை கொண்டுள்ள அதேவேளை சீன,இந்திய உறவும்கூட 1962ஆம் ஆண்டிலிருந்து சர்ச்சையானதாகவே காணப்படுகின்றது. அது,2021இல் மிக உக்கிரமடைந்து மோதல்கள் இடம்பெற்றுமுள்ளன. சீன நகர்வுகள் குறித்த எச்சரிக்கைகள் இந்திய தரப்பில் தொடர்ந்தும் இருந்த வண்ணமே உள்ளது. அதேபோல உள்ளகரீதியில் ஜம்மு, காஷ்மீர் பிரச்சினை, அருனாச்சலப்பிரதேச பிரச்சினை வட,கிழக்கு மாநிலங்களில் எழுந்துள்ள தாக்குதல் சம்பவங்கள், பயங்கரவாதிகளின் ஊடுருவல்கள் என்று பலதரப்பு சவால்களுக்கு இந்தியா முகங்கொடுகின்றது. இவ்வாறானதொரு நிலையில் தான், இந்தியா தனது அயல்நாடுகளான இலங்கை, நேபாளம், பங்களாதேஷம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுகின்றது. அந்த நெருக்கடிகள் இந்திய அரசியலில் தாக்கம் விளைவிக்கின்றன. இந்தியா, தெற்காசியாவில் முதன்மை நாடாக தன்னை நிலைநாட்டுவதற்கு திட்டமிட்டுக்கொண்டு வருகின்றது. அதனாலேயே அதனைச்சூழவுள்ள அயல்நாடுகளின் அரசியல் பிரச்சினைகளின் தாக்கத்திற்கு உள்ளாகி வருகின்றது. அத்துடன், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் உள்ளக மாநிலங்களின் மேம்பாடும் கூட இந்திய வெளியுறவுக் கொள்கையில் முக்கிய இடம் வகிக்கிறது. கடந்த தசாப்தத்தில் இந்தியாவின் வளர்ச்சி மிகவும் விரைவு படுத்தப்பட்டுள்ளது. 1990களுக்கு முதலிருந்த வளர்ச்சி வீதத்திலும் பார்க்க பொருளாதாரக் கொள்கை அடிப்படை மாற்றத்தின் காரணமாக இந்திய வளர்ச்சி பன்மடங்கு அதிகரித்துள்ளது. மேலைநாடுகள் சிலவற்றின் கணிப்பீடுகளின்படி இந்திய சனத்தொகையில் குறைந்தது அறுபது சதவீத பொருளாதார மேம்பாட்டை கிராமப்புற மக்கள் மத்தியில் இட்டுச்செல்லும் அதேவேளை போக்குவரத்து கட்டமைப்புக்களையும் சீர்செய்து கொள்ளுமிடத்து இந்தியா சர்வதேச அளவில் வெளிநாடுகளில் முதலீடு செய்யும் நிலைக்கு வந்துவிடும். இந்தியாவின் வெளியுறவுத்துறை பிராந்திய ஒற்றுமையை வளர்ப்பதற்காக அயல்நாடுகளின் பொருளாதாரத்திலும் அதிகரித்த ஈடுபாட்டைக் கொண்டுவரும் என்பதில் ஐயமில்லை. குறிப்பாக தெற்காசிய நாடுகள் இந்திய பொருளாதாரத்தில் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றன. மேலும் பிராந்திய அமைப்புகளான ஆசியான், வங்காள விரிகுடாவை மையமாக கொண்ட ‘பிம்ஸ்டெக்’ போன்றன தற்காலத்தில் இந்திய பொருளாதாரத்தில் அதிகரித்த இருதரப்பு, பல்தரப்பு நடவடிக்கைகளில் உள்ளன. அதேவேளை இந்திய சீன பொருளாதார வர்த்தகப்போட்டி நிலையானது நிரந்தரமானதொரு விவகாரமாகியுள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சியுடன் போட்டியிட வேண்டிய நிலையில் உலகளாவிய அளவில் இந்தியாவின் நிலையை நிர்ணயிக்கும் பிரதான காரணியாக சீனா உள்ளது. ஏனெனில் சனத்தொகை அளவில் இருநாடுகளும் உலகளவில் தொழிலாளர் படையைக் கொண்டுள்ளது. உற்பத்திச் சக்தி, மூலவளத்தேடல் என்பவற்றில் இருநாடுகளும் என்றும் போட்டியிலேயே உள்ளன. சக்திவள பாதுகாப்பு மிகவும் முக்கியமானதாகவும் இந்திய வெளிவிவகாரத்துறையின் கரிசனையிலும் உள்ளது. இந்தியா தனது உள்நாட்டுத் தேவைகளுக்கென எழுபது சதவீத எண்ணெய்யையும் ஐம்பது சதவீதமான எரிவாயுவையும் இறக்குமதி செய்கிறது. இதன்தேவை மேலும் அதிகரித்து வருவதை அந்நாட்டின் நுகர்வோர் புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இதனை நிவர்த்திசெய்யும் வகையில் அணுசக்தி, சூரியசக்தி எனப் பல்வேறு சக்தி மூலங்களையும் அணுகக்கூடிய வசதிகளை பெற்றுக்கொடுப்பதில் இந்திய வெளிவிவகாரத்துறை செயலாற்றி வருகிறது. இவை அனைத்துக்கும் மத்தியில் சர்வதேச வல்லரசகளுடனான உறவை வளர்த்துக்கொள்வது இந்திய இராஜதந்திரத்தின் உச்சபட்சமாகும். ஏனெனில் மேற்குறிப்பிட்ட தொழில்நுட்ப அறிவைக் கையகப்படுத்தி ஆய்வுகளுக்கும் அபிவிருத்திக்கும் உட்படுத்தக் கூடிய நிலையை வழங்கும் அதேவேளை இத்தகைய தொழில்நுட்பப் பரிமாற்றத்தையே தமது பேரம்பேசும் பலமாக வல்லரசுகள் உபயோகிக்க முடியாத வகையில் அமைத்துக்கொள்வது வெளியுறவுத்துறையின் திறமையாகும். இந்தியா, நாற்கர நாடுகளின் கூட்டணியிலும் உள்ளது, அதேவேளை ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் அங்கத்தவராகவும் உள்ளது, ‘பிறிக்ஸ்’ போன்ற வளரும் வல்லரசுகளின் பங்காளியாகவும் உள்ளது. இவை அனைத்துக்கும் மத்தியில் தனது கொள்கையை வழிநடாத்தி செல்வது மிகக்கடினமானதாகும். உக்ரேன் விவகாரத்தில் இந்தியா நடுநிலையை கடைப்பிடித்து வருகிறது. பாகிஸ்தான் போன்ற நாடுகள் ரஷ்ய சார்பாக செயற்படுகின்றன. ஆனால் இந்தியாவில் அதன் சனத்தொகை பரம்பலும் சந்தைப்படுத்தலுக்கான கொள்ளளவும் இந்திய நகர்வுகளை இதர வல்லரசுகள் ஏக்கத்துடன் எதிர்கொண்டு நகர்ந்து செல்லும் தன்மையை கொண்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறையின் வெற்றிகளில் ஒன்றாக சர்வதேச அணுசக்தி கூட்டில் இணைந்து கொண்டமையைக் கூறலாம். இதேபோல அடுத்த இந்திய இலக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தன்னையொரு நிரந்தர அங்கத்தவராக தகவமைத்து கொள்வதாகும் இந்நிலையை அடைய வேண்டுமாயின் இந்தியா தனது பிராந்திய வல்லரசு நிலையை உறுதிப்படுத்துவது அவசியமாகும். சர்வதேச அரங்கில் இந்தியாவின் முக்கித்துவம் மேலும் வளர வேண்டுமாயின் பல்வேறு விவகாரங்களையும் கையாள வேண்டியுள்ளது. இந்திய வெளிவிவகாரத்துறையைப் பொறுத்தவரையில் இலங்கைத் தமிழர் விவகாரம் அந்நாடு கையாளும் சிறிய விவகாரங்களின் ஒன்றாகும். இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பிற்கு ஏற்றதாக அமையாக எந்த சக்தியையும் புதுடில்லி ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. அதுவேளை உள்நாட்டில் அரசியல் பலம் சேர்க்கக் கூடிய எந்த நிகழ்ச்சி நிரலையும் புதுடில்லி கவனத்தில் கொள்வதற்கும் தயங்கியதில்லை. இத்தகைய நகர்வுகள் எவையும் இதுவரை காலமும் இலங்கையில் வாழும் தமிழ்பேசும் மக்களின் இருப்போடு இணைந்த பயணிக்கும் பொறிமுறையைக் கொண்டதாக இல்லை. அண்மையில் இந்தியா ஈழத்தமிழர்கள் மீத கடைக்கண் பார்வை வைத்துள்ளதோடு, சீனாவுடனான போட்டியில் தமிழ் மக்களுக்கான தனித்தேசத்தை அங்கீகரிக்கும் நோக்கம் இந்தியாவிடம் உள்ளதைப்போன்ற மாயதோற்றம் தமிழகத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கைவாழ் தமிழ் மக்கள் மீது தார்மீக ரீதியா தமிழக மக்கள் கொண்டுள்ள ஆர்வத்தை தமக்கு சாதகமாக்குவதே மேற்படி மாயத்தோற்றத்தின் பின்னணியாகும். இலங்கைத் தமிழர் விவகாரம் இந்திய வெளியுறவுதுறை அரசுப்பணி அதிகாரிகளின் தலையீடகளால் பல தடவைகள் பல்வேறு திருப்பங்களை கண்டுள்ளது. ஆனால் அந்தத் திருப்பங்கள் எவையும் தமிழ்பேசும் மக்கள் சார்பாக நன்மை பயப்பதாக இருக்கவில்லை. ஆனால் தமிழ் மக்கள் தமது இருப்பை உணர்த்தும் வகையில் சர்வதேச அளவில் தமது விடயங்களை நகர்த்தவதன் ஊடாகவே இந்தியாவுக்கு அதன் பொறுப்பை உணர்த்த முடியும். அதேவேளை இந்தியாவின் பாதுகாப்பிற்கு எந்தவித குந்தகமும் ஏற்படாத வகையில் செயற்படுவதும் முக்கியமானதாகும். https://www.virakesari.lk/article/139913
  12. பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - மு.கா. தலைவர் ஹக்கீம் By VISHNU 14 NOV, 2022 | 08:38 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்) மக்கள் அன்றாடம் வாழமுடியாத நிலையில் வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்புக்கு மொத்த வரவு செலவு திட்டத்தில் 10வீதம் ஒதுக்கி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (14) அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டம் முன்வைக்கப்பட்ட பின்னர், அதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், பாரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கும் நிலையில் கொள்கை அடிப்படையில் புதிய சீர்திருத்தங்களை மேற்காெள்ள ஜனாதிபதி எடுத்து வரும் முயற்சியை பாராட்டுகின்றோம். ஆனால் மக்கள் பாரிய வறுமை கோட்டின் கீழ் இருக்கும் நிலையில் மக்களுக்கு மானியங்கள் எதுவும் இல்லாத நிலையில் பாதுகாப்பு பாரியளவில் நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக வரவு செலவு திட்டத்தின் மொத்த தொகையில் 10வீதத்தை பாதுகாக்குக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றது. இந்தளவு நிதியை பாதுகாப்புக்கு ஒதுக்குவதற்கு பாரிய அச்சறுத்தல்கள் எதுவும் இல்லை. அத்துடன் இந்தியாகூட பாதுகாப்புக்கு வரவு செலவு திட்டத்தில் 9வீதமே ஒதுக்கப்பட்டிருக்கின்றது. எனவே மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும் சிந்தித்திருக்கலாம் என்றார். https://www.virakesari.lk/article/140036
  13. நாட்டின் சனத் தொகை கணக்கெடுப்பை அடுத்தாண்டு ஆரம்பத்தில் முன்னெடுக்க திட்டம் By DIGITAL DESK 2 14 NOV, 2022 | 04:13 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் குடியிருப்பு கணக்கெடுப்பு அடுத்தாண்டு ஆரம்பத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிடுகிறது. இதன் முதல் கட்ட வரைபட வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் பி.எம். பிரசாத் அநுர குமார குறிப்பிட்டார். அதன் இரண்டாம் கட்ட, பட்டியல் எடுப்பதற்காக அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கும் திட்டம், இம்மாதம் மற்றும் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது என்றும் இதற்காக ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் ஆதரவு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பட்டியல் எடுக்கும் நடைமுறையின் பின்னர், அடுத்த ஆண்டின் முதல் மாதங்களில் நாட்டின் மக்கள் தொகை மற்றும் குடியிருப்புக் கணக்கெடுப்பை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு அனைத்து தனியார் நிறுவனங்களினதும், மக்களினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாக திணைக்கள பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னர், 2012 ஆம் ஆண்டு மக்கள் தொகை மற்றும் குடியிருப்பு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இருந்தபோதிலும், கடந்த காலங்களில் கொவிட் தொற்று நோய் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ள முடியவில்லை என்று மக்கள் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிபிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/139992
  14. இந்தியாவிலிருந்து வந்த பெண் உள்ளிட்ட மூவரிடம் கொள்ளை : உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட நால்வர் பொலிஸில் சரண் By VISHNU 14 NOV, 2022 | 08:09 PM (எம்.எப்.எம்.பஸீர்) இந்தியாவுக்கு சென்று துணி மணிகளை கொள்வனவு செய்து எடுத்து வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் போது, ஜா எல பகுதியில் வைத்து பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் பயணித்த வாகனத்தை மறித்து அவர்களைக் கைது செய்து, அவர்கள் உடமையிலிருந்த 40 இலட்சம் ரூபா வரை பெறுமதி மிக்க வெளிநாட்டு நாணயம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், களனி வலய குற்ற விசாரணைப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட நால்வர் கொண்ட குழு நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை (14) சரணடைந்தது. குறித்த நலவருக்கும் எதிராக சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று குறித்த நால்வரும் சட்டத்தரணிகள் ஊடாக மன்றில் சரணடைந்தனர். இந் நிலையில் அவர்களை சந்தேக நபர்களாக ஏற்றுக்கொண்ட கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெக்குனவல, சந்தேக நபர்கள் நால்வரையும் எதிர்வரும் 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். 25 ஆம் திகதி குறித்த சந்தேக நபர்களை அடையாள அனிவகுப்புக்கு உட்படுத்துமாறு கட்டளையிட்ட நீதிவான் ஹர்ஷன கெக்குணவல, அதற்காக அவர்களின் அடையாளங்களை மறைத்து மன்றில் ஆஜர் செய்யுமாறு சிறைச்சாலைகள் அத்தியட்சருக்கு உத்தரவிட்டார். மேல் மாகாணத்தின் வடக்கு பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவுக்கு சம்பவத்துக்கு முகம் கொடுத்ததாக கூறப்படும் மூவரும் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஏ.ஜே.வை.டி. கிரிஷாந்தவின் நேரடி கட்டுப்பாட்டில் சிறப்புக் குழுவொன்று இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், சார்ஜன் ஒருவர், இரு கான்ஸ்டபிள்கள் அடங்கிய நால்வர் கொண்ட குழுவை கைது செய்யவே இவ்விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தற்காலிகமாக கடமையிலிருந்தும் இடை நிறுத்தப்பட்டனர். அவர்கள் விசாரணை ஆரம்பித்தது முதல் தலைமறைவான நிலையில் இவ்வாறு இடை நிறுத்தப்பட்டனர். இந் நிலையில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆரம்பகட்ட விசாரணையிகளில், கடந்த 9 ஆம் திகதி இரவு குறித்த பொலிஸ் குழு, தனியார் ஒருவரின் வேனில் சென்று இந்த கொள்ளையை அரங்கேற்றியுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் அதிகாரி ஒருவர் கூறினார். இது தொடர்பில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆரம்பகட்ட விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், சட்ட விரோதமாக நடடுக்குள் தங்க நகைகள், வெளிநாட்டு நாணயங்களை கடத்துவது தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய குறித்த சுற்றிவளைப்புக்காக தாங்கள் சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அவர்கள் அந்த சுற்றிவளைப்பு தொடர்பில் உயரதிகாரிகள் எவருக்கும் அறிவித்திருக்கவில்லை என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர், இந்தியாவிலிருந்து கட்டுநாயக்கவுக்கு வந்து அங்கிருந்து கொழும்பு நோக்கி வேன் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்துள்ளனர். அந்த வேனை பின் தொடர்ந்து தனியார் வேன் ஒன்றில் வந்துள்ள இந்த பொலிஸ் குழு, அவர்களை ஜா எல பகுதியில் வைத்து மறித்து கைது செய்துள்ளனர். கொழும்பு 13 கதிரேசன் வீதிஅயைச் சேர்ந்த ஒருவர், தெஹிவளையைச் சேர்ந்த ஒருவர் மற்றும் வாரியப்பொல பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் குறித்த உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குழுவினரால் பின்னர் பேலியகொடை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். விசாரணைகளின் போது அடிக்கடி இந்தியாவுக்கு சென்று துணிமணிகளை எடுத்துவரும் குழுவினரே அவர்கள் என தெரியவந்துள்ளது. எனினும் பொலிஸ் நிலையம் அழைத்து வரப்பட்ட அவர்கள், உயர் பொலிஸ் அதிகாரிகளின் ஆலோசனைகள் எதனையும் பெற்றுக்கொள்ளாமல், பொலிஸ் புத்தகங்களிலும் எந்த பதிவினையும் இடமால், கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். இரவோடிரவாக விடுவிக்கப்பட்ட அவர்கள், மறு நாள் 10 ஆம் திகதி, பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரதனவை சந்தித்து, முறைப்பாடளித்துள்ளனர். தம்மை கைது செய்து விடுவித்த பொலிஸ் குழுவினர், கைது செய்யும் போது அவர்களின் பொறுப்பிலெடுத்த 6 மோதிரங்கள், 4 தங்க வளையல்களையும் 38000 அமரிக்க டொலர்களையும் திருப்பித் தரவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந் நிலையிலேயே தற்போது குறித்த நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும் நீதிமன்றில் சரணடைந்துள்ளனர். https://www.virakesari.lk/article/140030
  15. நோய்வாய்பட்ட தந்தையை மூன்று கிலோ மீட்டர் தோளில் சுமந்து சென்ற மகன்: காரணம் என்ன? 42 நிமிடங்களுக்கு முன்னர் கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பழங்குடிகளான காணி இன மக்கள் வசிக்கும் கிராமத்திற்கு செல்ல முறையான சாலை வசதி செய்யப்படாததால் மலை வாழ் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் சாலை வசதி இல்லாததால் நோய்வாய்பட்ட தந்தையை காப்பாற்ற அவரது மகன் மூன்று கிலோமீட்டர் தூரம் தோளில் மருத்துவமனைக்கு சுமந்து சென்ற நிலையில் உரிய நேரத்திற்கு சென்று சேராததால் தந்தை உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பேச்சிப்பாறை அணைக்கு அருகே பழங்குடியின மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதிக்கு செல்ல முறையான சாலை வசதி இல்லை. இதனால் அங்கு வசிக்கும் மக்களுக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இயலாத நிலை உள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்ட நபரை சில கிலோ மீட்டர் தூரம் தூக்கிச் சென்று அங்கிருந்து வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு செல்லும் நிலை தான் உள்ளது. தந்தையை மருத்துவமனைக்கு தோளில் சுமந்து சென்ற மகன் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த பேசிப்பாறையை அடுத்த கோலஞ்சிமடம் பழங்குடியின குடியிருப்பைச் சேர்ந்த வேலு என்பவருக்கு திடீரென சர்க்கரை நோயால் உடல் நிலை மோசமானது. அவரை ஆம்புலன்ஸ் அல்லது வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முறையான சாலை வசதி இல்லாததால் அவருடைய மகன் விக்னேஷ் தந்தையை காப்பாற்ற 3 கிலோமீட்டர் தூரம் தோளில் சுமந்து ஆற்றை நடந்தே கடந்து சென்று பின்னர் ஒரு காரில் ஏற்றி பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். வேலுவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சாலையில் வசதி இல்லாததால் நோய் வாய்ப்பட்ட தந்தையை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் உயிரிழந்துவிட்டார். எனவே கோலஞ்சிமடம் பழங்குடியின காணி குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உடனடியாக மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் என உயிரிழந்த வேலு மகன் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் பருவ மழை பாதிப்பு: டெல்டா மாவட்டங்களில் விளைநிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் நீர் சூழ்ந்தது2 மணி நேரங்களுக்கு முன்னர் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறைக்கு இந்தியாவால் மாற முடியுமா?12 நவம்பர் 2022 'பொதுப் பிரிவில் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சிக்கு இடம் கொடுப்பதாகச் சொல்வது அண்டப் புளுகு' - தொல். திருமாவளவன்13 நவம்பர் 2022 ‘அப்பாவை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆற்றை கடந்தேன்’ தந்தையை தோளில் சுமந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற வேலுவின் மகன் விக்னேஷ் பிபிசி தமிழிடம் பேசுகையில், “என் அப்பா சர்க்கரை நோயால் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அவதிப்பட்டு வந்தார். ஆனால் திடீரென உடல் நிலை மிகவும் மோசமானது. அப்பாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு போதிய சாலை வசதி இல்லாததால் தனி ஆளாக தோளில் சுமந்து எப்படியாது என் அப்பாவை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு ஆற்றை கடந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சுமந்து சிகிச்சைக்காக பேச்சிப்பாறை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் என் அப்பா உயிரிழந்தது பரிசோதித்த மருத்துவர்கள் சொல்லி தெரியவந்தது. இவ்வளவு சிரமப்பட்டு உரிய நேரத்தில் கொண்டு வந்து சேர்க்க முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு உள்ளது. என் அப்பாவை போன்று பல முதியவர்கள் பழங்குடியின காணி குடியிருப்பில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். எனவே நாங்கள் வசிக்கும் பகுதியில் அவசர காலத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனம் சென்று வரும் அளவு மட்டுமாவது முறையான சாலை அமைத்து தர வேண்டும்,” என விக்னேஷ் கோரிக்கை வைத்தார். படக்குறிப்பு, விக்னேஷ் கடையல் பேரூராட்சியின் சரியான திட்டமிடாததால் கைவிட்டு போன பாலம் இது குறித்து உயிரிழந்த வேலுவின் சகோதரர் சௌந்தரராஜன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “மோதிரம் மலையில் இருந்து ஆற்றை கடந்து செல்ல அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக பாலம் மழையால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த பகுதியில் நிரந்தர பாலம் அமைப்பதற்கு கடந்த 2013 ஆம் ஆண்டு 60 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. ஆனால் கடையல் பேரூராட்சியின் அப்போதைய நிர்வாகம் பாலம் கட்டும் இடத்தை சரியாக திட்டமிடாமல் மாற்று இடத்தில் பாலம் அமைக்க முடிவு செய்திருந்தனர். புதிய பாலம் கட்டுவதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். பாலம் கட்ட பேரூராட்சி நிர்வாகம் தேர்வு செய்திருந்த இடம் சரியானதாக இல்லாததால் அப்போதைய மாவட்ட ஆட்சியர் பாலம் கட்டும்திட்டத்தை ரத்து செய்தார். அன்றில் இருந்து இதுவரை புதிய பாலம் அமைக்கப்படவில்லை. மேலும் கோலஞ்சி மடம் குடியிருப்புக்கு செல்லும் சாலை வசதியும் ஏற்படுத்தப்படவில்லை இதனால் நோயால் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் உள்ளது.” என்றார் நடுவழியில் அடர்ந்த காட்டு பகுதியில் பிரசவிக்கும் கர்ப்பிணி பெண்கள் பழங்குடியின மக்கள் சந்திக்கும் அடிப்படை பிரச்னைகள் குறித்து மோதிரமலை கிராம சபை தலைவர் ரகு பிபிசி தமிழிடம் பேசுகையில், “குமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மோதிர மலையை சுற்றி சுமார் 14 மலை கிராமங்கள் உள்ளன. இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின காணி இன மக்கள் குடும்பங்கள் வசித்து வருகிறோம். இங்கு வசிக்கும் எங்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை. மோதிரமலை மற்றும் சுற்றியுள்ள மலைவாழ் கிராம மக்கள் மருத்துவமனைக்கு 25 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டியுள்ளது. எனவே மோதிரமலை மையமாகக் கொண்டு 108 ஆம்புலன்ஸ் வசதியுடன் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும் என்பது எங்களது நீண்ட நாள் கோரிக்கை ஆனால் இதனை அரசு பலமுறை பரிசீலனை செய்து தற்போது வரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தரவில்லை. மலை கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் பராமரிக்கப்படாமல் சேதமடைந்துள்ளதால் 108 ஆம்புலன்ஸில் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும் கர்ப்பிணி பெண்களுக்கு நடு வழியில் அடர்ந்த காட்டு பகுதியில் பிரசவமாகி குழந்தை பிறந்து விடுகிறது. இந்த ஆண்டில் மட்டும் இரண்டு குழந்தைகள் நடுவழியில் ஆம்புலன்ஸில் பிறந்துள்ளன. பேச்சிப்பாறை மோதிர மலையை இணைக்கும் சாலையில் சேதமடைந்துள்ளதால் வெளி வாகன ஓட்டிகள் தங்கள் கிராமத்திற்கு வர விரும்புவதில்லை என்கிறார்,” ரகு. "பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்களை அரசு தத்தெடுக்க வேண்டும்" பழங்குடியின மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்ய எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி பிபிசி தமிழிடம் பேசுகையில், “மோதிர மலை மற்றும் சுற்றுவட்டார மலை கிராமங்களுக்கு செல்லும் சாலை மிக நீண்ட குறுகிய சாலை. எனவே அந்த சாலையை விரிவாக்கம் செய்து குறைந்தபட்சம் ஆம்புலன்ஸ் சென்று வர அகலபடுத்த முயற்சி செய்து வருகிறேன். வனத்துறை, மின்வாரியம் உள்ளிட்ட துறைகளில் சாலையை சீரமைக்க ஒத்துழைப்பு அளித்தால் நிச்சயம் விரைவில் அந்த பகுதிகளில் ஆம்புலன்ஸ் செல்லும் அளவாவது சாலை விரிவாக்கம் செய்ய முடியும். இதற்காக கடந்த பத்து ஆண்டுகளாக சட்டமன்றத்தில் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறேன். உங்கள் முதலமைச்சர் திட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் என்கிற அடிப்படையில் மூன்று திட்டங்களுக்கு கோரிக்கை வைத்துள்ளேன். அதில் முதலாவதாக மோதிரமலை சாலை விரிவாக்கம் மற்றும் சாலை சீரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து துரிதமாக பழங்குடியின காணி இன மக்களுக்கு சாலை வசதி அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான கடையல் பேரூராட்சிக்குட்பட்ட மலைவாழ் கிராமங்களை தமிழக அரசு தத்தெடுக்க வேண்டும் என சட்டசபையில் கேட்டுள்ளேன். அப்படி தத்தெடுக்கும் பட்சத்தில் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் தமிழக அரசு நேரடியாக செய்து கொடுக்கும் என நம்புகிறோம்,”என்கிறார் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி. அரசு பரிசீலனை பழங்குடியின மக்களின் கோரிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தை எந்த அளவு சென்று சேர்ந்துள்ளது என்பது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் பிபிசி தமிழ் கேட்டதற்கு, குமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மிகப் பெரிய வனப்பகுதி. இது முழுமையாக வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மலைப்பகுதியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின காணி இன மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு வசிக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தொடர்ந்து செய்து வருகிறோம். கடந்த சில மாதங்களில் அங்கு வசிக்கும் மக்களுக்கு தேவையான குடிநீர், இருப்பிடம், மின்சாரம், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. உடல்நிலை குறைவு காரணமாக மகன் சுமந்து சென்று தந்தை உயிரிழந்தது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் விசாரணை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த வாரம் வேலு உடல் நிலை சரியில்லாமல் பேச்சிப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வேலு உடல் நிலை மிகவும் மோசமடைந்தால் அவர்களது உறவினர்கள் வேலுவை வீட்டில் வைத்து பார்த்து கொள்வதாக அழைத்து சென்று விட்டனர்.வெள்ளிக்கிழமை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார். முறையான சாலை வசதி இல்லாததால் வேலுவை உரிய நேரத்தில் சிகிச்சைக்கு அழைத்து வர இயலவில்லை என அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கடையல் பேரூராட்சிக்கு உட்பட்ட மலைவாழ் கிராம பகுதிகளுக்கு செல்ல சாலை வசதி மற்றும் ஆற்றைக் கடப்பதற்கு பாலங்கள் உள்ளிட்டவைகள் அமைப்பதற்கு அரசிடம் திட்டம் வரைவு அளிக்கப்பட்ட நிதி கோரப்பட்டுள்ளது. குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் கோரப்பட்டுள்ள திட்ட வரைவு களை அரசு பரிசீலனை செய்து வருகிறது. மேலும் மின்சாரத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 14 கிலோமீட்டர் கோதையாறு சாலை விரைவில் நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்கப்படும். நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டிற்கு வரும்போது சாலைகள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்பட்டு போதுமான சாலை வசதிகள் செய்து தரப்படும். அதேபோல் அப்பகுதி காணி இன மக்களின் தொடர் கோரிக்கையான ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தருவது குறித்து மாவட்ட சுகாதாரத்துறையிடம் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த். https://www.bbc.com/tamil/articles/clmgn9m2ledo
  16. ராஜீவ் கொலை வழக்கு: 32 ஆண்டு சிறை வாழ்க்கை எப்படி இருந்தது ? - நளினி பேட்டி 30 நிமிடங்களுக்கு முன்னர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட ஆறு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் சிறப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தனது சிறை வாழ்க்கை, சட்டப் போராட்டம், ராஜீவ் காந்தி உள்பட 17 பேர் கொல்லப்பட்டது போன்றவை குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார் நளினி ஸ்ரீகரன். பேட்டியிலிருந்து. கே. 30 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருந்திருக்கிறீர்கள். அந்த அனுபவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்.. ப. அதற்கு முன்பு நான் சிறையைப் பார்த்ததே கிடையாது. சிறை என்றால் என்னவென்றே தெரியாது. முதன் முதலில் ரிமாண்ட் செய்து தனி செல்லில் அடைத்தபோது மிகவும் பயந்து போய்விட்டேன். கத்தி, அமர்க்களம் செய்து வெளியில் ஓடிவந்துவிட்டேன். எனக்கு அடுத்த அறையில் அடைக்கப்பட்டிருந்த ஆதிரை, அதற்கு அடுத்த அறையில் அடைக்கப்பட்டிருந்த எனது அம்மா ஆகியோரும் கத்திக்கொண்டு வெளியில் ஓடிவந்தார்கள். ஆனால், நீங்கள் உள்ளேதான் போகவேண்டும் என்று சொன்னார்கள். அதற்கு பதிலாக அங்கிருக்கும் சிஆர்பிஎஃப் வீரர்களிடம் ரைஃபிளை வாங்கி எங்களைச் சுடுங்கள் என்று சொன்னேன். கத்திக் கத்தி தொண்டையில் இருந்து ரத்தம் வர ஆரம்பித்துவிட்டது. அந்த அளவுக்கு அது ஒரு கஷ்டமான காலகட்டம். கைதானதற்குப் பிறகு ஐந்து நாட்கள் காய்ச்சல் ஏற்பட்டது. படுத்த படுக்கையாகக் கடந்தேன். இரண்டு மூன்று நாட்கள் அவர்கள் தூங்கவிடாமல் செய்தார்கள். அதைச் சமாளிக்கும் தன்மை அப்போது எனக்கு இல்லை. தலைவாராமல், பல் தேய்க்காமல் கிடந்தேன். அதிலிருந்து தேறி வருவதற்குள் நெஞ்சு வலி வந்துவிட்டது. நான் நடிப்பதாக பலரும் நினைத்தார்கள். அப்போது அங்கிருந்த மருத்துவர் என்னைப் பரிசோதித்துவிட்டு, எனக்கு உண்மையிலேயே நெஞ்சுவலி இருப்பதை உறுதிசெய்தார். அதற்குப் பிறகு நிலைமை கொஞ்சம் மேம்பட்டது. அதற்குப் பிறகு கோடியக்கரை சண்முகம் இறந்துவிடவே, கையில் விலங்கெல்லாம் போட ஆரம்பித்தார்கள். எனக்கு வளைகாப்பு நடத்துகிறீர்களா என வேடிக்கையாகக் கேட்பேன். அதற்குப் பிறகு அந்த ஒப்புதல் வாக்குமூலம் விவகாரம். நான் அந்த ஒப்புதல் வாக்குமூலத்தைத் தரவேயில்லை. அதை என்னால் நிரூபிக்க முடியவில்லை. ஆனால், கடவுளுக்கும் எனக்கும் நிஜம் தெரியும். அதற்குப் பிறகு வேறொரு சிறைக்கு மாற்றப்பட்டேன். அங்கே மரண தண்டனைக் கைதிகளைப் போல 24 மணி நேரமும் பூட்டியே வைப்பார்கள். இதற்குப் பிறகு எனக்கு குழந்தை பிறந்தது. அதற்குப் பிறகு நிலைமை சற்று மேம்பட்டது. விசாரணை நடக்கும்போது விடிய விடிய சிகரெட் ஊதிக்கொண்டே இருப்பார்கள். அதற்குப் பிறகு தொடர்ந்து கஷ்டம்தான். ராஜீவ் கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு11 நவம்பர் 2022 பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு18 மே 2022 பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் கூறியிருப்பது என்ன?18 மே 2022 கே. உங்களுடைய குடும்பம், ஒரு எளிய செவிலியர் குடும்பம். இந்த விவகாரத்தில் நீங்கள் சம்பந்தப்பட்டு, பெரிய பிரச்சனையான நிலையில் அதனை எப்படி எதிர்கொண்டீர்கள்? ப. ரொம்பவும் சிரமப்பட்டோம். குடும்பமே சிதைந்து போனது. அம்மாவின் வாழ்க்கை போனது. என் தங்கை வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அவருடைய வாழ்க்கை நாசமானது. நான், எனது கணவர், அம்மா, தம்பி ஆகிய அனைவரும் கைதுசெய்யப்பட்டுவிட்ட நிலையில், ஒரு குடும்பம் என்ன ஆகும். பொருளாதாரமும் கிடையாது. யாரும் உதவிசெய்ய வரவில்லை. பணபலம் இல்லை. ஆள்பலம் கிடையாது. எவ்வித ஆதரவும் கிடையாது. குடும்பம் சிதைந்துவிட்டது. இன்றுவரை சரிசெய்ய முடியவில்லை. கே. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டது தெரிந்தபோது உங்கள் தாயார் அதை எப்படி எதிர்கொண்டார்? ப. எல்லோருக்கும் பெரிய அச்சம் இருந்தது. அம்மாவுக்கு இதைப் பற்றி ஒன்றுமே தெரியாது. அவர், தன் வேலை உண்டு, தான் உண்டு என இருப்பார். இந்த மாதிரி பெரிய சிக்கல் வரப்போவது அவருக்குத் தெரியாது. நாங்கள் எல்லோருமே வயதில் சிறியவர்கள். பெரிய அனுபவம் கிடையாது. இதையெல்லாம் எதிர்கொள்ள முடியாமல்தான் நாங்கள் தவித்தோம். கே. எந்த காலகட்டத்தில் இதில் சட்டப் போராட்டம் நடத்தலாம் என்ற முடிவுக்கு வந்தீர்கள்.. ப. சிறைக்குள் வழக்கறிஞர் துரைசாமி வந்துபார்த்தார். ஆனால், என்னுடைய வழக்கை எடுக்க அவர் மிகவும் பயந்தார். அவருக்கு பயங்கரமாக எதிர்ப்பு வந்தது. கொலைமிரட்டல் வந்தது. வீட்டை அடித்து நொறுக்கினார்கள். பாட்டில்களை வீசினார்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் இந்த வழக்கை எடுத்து நடத்தக்கூடாது என்றார்கள். அவ்வளவு பரபரப்பான வழக்காக இது இருந்தது. ஆனால், விசாரணை காலகட்டத்திலேயே இந்த வழக்கை நாங்கள் எதிர்கொண்டாக வேண்டும். இருந்தபோதும் துரைசாமியை அமர்த்தவோ, பணம் கொடுக்கவோ எங்களுக்கு வழியில்லை. குழந்தை வேறு இருந்தது. சம்பாதிக்கக்கூடிய வயதில் இருந்த, படித்திருந்த நான்கு பேரும் சிறையில் இருந்தோம். தங்கைக்கு மட்டும் திருமணமாகி, அவர் ஒரு கூட்டுக் குடும்பத்தில் இருந்தார். வழக்கறிஞரே வைக்க முடியாத நிலையில், இலவச சட்ட உதவி மையத்தில் முயற்சி செய்தோம். பெரிய, பெரிய வழக்கறிஞர்களைக் கேட்டுப்பார்த்தோம். பிறகு துரைசாமியையே இலவச சட்ட உதவி மையம் மூலமாகக் கேட்டு வாங்கினோம். விசாரணை ஆறு வருடம் நடந்தது. 300 சாட்சிகள். கே. விசாரணை நீதிமன்றத்தில் உங்கள் 26 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டபோது என்ன நினைத்தீர்கள்.. அடுத்தகட்டமாக என்ன செய்வதென யோசித்தீர்களா? ப. எல்லோருக்கும் மிகப் பெரிய அதிர்ச்சி. என் கணவர் அழ ஆரம்பித்தார். ஏ1 (நளினி) என்று சொல்லி, சட்டப் பிரிவுகளைக் குறிப்பிட்டு மரண தண்டனை என அறிவித்தார்கள். அதற்கடுத்தபடி ஏ2வுக்கு தூக்கு என்றார்கள். அதற்குப் பிறகு ஏ 3க்கும் தூக்கு என்றவுடன் அவர் சந்தோஷமடைந்தார். இரண்டு பேருமே ஒன்றாகத்தான் சாவோம் என்றார். ஆனால், அந்தத் தீர்ப்பு வந்தவுடன் எல்லோருமே அதிர்ச்சியடைந்துவிட்டார்கள். வழக்கறிஞர் துரைசாமியும் சோர்ந்துவிட்டார். ஆனால், அதற்குப் பிறகு மேல் முறையீடு செய்யலாம் என்று சொன்னார்கள். தீர்ப்பு வரும் முன்பாக எல்லோருமே நம்பிக்கையுடன் இருந்தோம். அபராதம் மட்டும் விதிப்பார்கள். அதைக் கட்டிவிடலாம் என எல்லோருமே பணமெல்லாம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கே. ஒரு மிகப் பெரிய கொலை வழக்கில் எப்படி அபராதம் மட்டும் விதிப்பார்கள் எனக் கருதினீர்கள்? ப. அப்படியில்லை. நாங்கள் ஏழு ஆண்டுகள் சிறையில் இருந்திருந்தோம். அதைத் தண்டனைக் காலமாக கருதுவார்கள் என நினைத்தோம். மேலும், சிறையில் இருக்கும்போது தண்டனைக் குறைப்புப் பற்றி ஆராய்வதற்கான அதிகாரிகள் எல்லோருமேகூட வந்துவிட்டார்கள். ஏழு வருடம் தண்டனை அளித்தால், அதை ஏற்கனவே அனுபவித்துவிட்ட நிலையில், அபராதம் ஏதாவது விதித்தால், அதை கட்டிவிட்டுச் செல்லலாம் எனக் கருதினோம். யாரோ ஒரு வழக்கறிஞர் சொன்னார், நளினிக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கும் அளவுக்குக்கூட வாய்ப்புகள் இல்லை என்றார். ஏ1ஆன எனக்கே அந்த வாய்ப்பு இல்லை எனும்போது மற்றவர்களுக்கும் வாய்ப்பு இல்லை எனக் கருதியிருந்தார்கள். ஆகவே, எல்லோருக்கும் தூக்கு என அறிவித்தது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அப்போது உச்ச நீதிமன்றம் எந்தத் திசையில் இருக்கிறது என்றுகூடத் தெரியாது. பேரறிவாளன் விடுதலை விவகாரம்: ஆளுநரின் செயல் கூட்டாட்சி அமைப்பை அழித்துவிடும் - உச்ச நீதிமன்றம்27 ஏப்ரல் 2022 'இந்தி தெரியாதா?' - தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் பேச்சால் புதுச்சேரியில் சர்ச்சை6 மணி நேரங்களுக்கு முன்னர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட கதையும், வழக்கு கடந்து வந்த பாதையும்11 நவம்பர் 2022 கே. இந்த வழக்கில் தொடர்ந்து போராடி, விடுதலையாகலாம் என்ற நம்பிக்கை எப்போது வந்தது? ப. தண்டனை விதிக்கப்பட்ட பிறகு ஐந்து நாட்கள் அழுதுகொண்டே இருந்தேன். தண்டனை விதிக்கப்பட்ட பிறகு எல்லோரும் பிரிந்துவிட்டோம். வழக்கு நடந்தபோதாவது ஒருவரை ஒருவர் பார்க்க முடிந்தது. தண்டனை விதிக்கப்பட்ட பிறகு யாரையும் பார்க்க முடியவில்லை. அப்போது எந்தவிதமான நம்பிக்கையும் எங்களுக்கு இல்லை. அப்போது நெடுமாறன் பலரை ஒருங்கிணைத்து, பொருளாதாரத்திற்கு ஏற்பாடு செய்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய ஏற்பாடு செய்தார். வெளியில் இதெல்லாம் நடக்கிறது என்பதுகூட எங்களுக்குத் தெரியாது. சந்திரசேகர், இளங்கோ போன்றவர்கள் தொடர்ந்து எங்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்கள். சில சமயம் தேவைப்படும் பொருட்களை அவர்கள்தான் வாங்கித்தருவார்கள். கே. உங்களுக்கான தூக்குத் தண்டனை ரத்தான பிறகு, உங்கள் கணவருக்கான போராட்டத்தை எப்படி ஆரம்பித்தீர்கள்? ப. எனக்கான தூக்குத் தண்டனை ரத்தான பிறகு, மற்றவர்களுக்கும் அந்த வாய்ப்பிருக்கிறது என்ற நம்பிக்கை வந்தது. ஏனென்றால் நான்தான் ஏ1. எனக்கு மட்டும் ஏழு முறை மரண அறிவிப்பு வந்தது. மூன்று - நான்கு முறை தேதியெல்லாம் குறித்திருக்கிறார்கள். பாதிரியார் வந்து ஆசீர்வதித்து, கடைசி ஆசை என்ன என்றெல்லாம் கேட்டார்கள். பிறகு சிறையில் எல்லோரையும் எங்கே தொங்க விடுவது என்பதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டன. கயிறுகள் வாங்கப்பட்டன. மரண தண்டனைக் கைதிகளுக்கான அறை தயார் செய்யப்பட்டது. என்னுடைய எடையைப் போட்டு, அதே எடைக்கு மணல் மூட்டையைத் தொங்கவிட்டுப் பார்த்தார்கள். என் கண் முன்பே இதெல்லாம் நடந்தது. இன்னும் இரண்டும் நாட்கள்தான் இருக்கிறது என்ற நிலை வந்தது. ஆனால், நான் நம்பிக்கையோடு இருந்தேன். எந்தத் தவறும் செய்யவில்லை. இதுபோன்ற அசம்பாவிதமான முடிவு வராது எனக் கருதினேன். பட மூலாதாரம்,GETTY IMAGES கே. 2011ஆம் ஆண்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. உங்கள் கணவருக்கான தூக்கு தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. அந்தத் தருணத்தை எப்படி எதிர்கொண்டீர்கள்? ப. மிகக் கடினமாக இருந்தது. அவர்கள் மூவருக்கும் மரண வாரண்ட் அனுப்பப்பட்டது. அந்த சமயத்தில் அவர்கள் இருந்த சிறையில் இருந்து, உங்கள் கணவரை இந்தத் தேதியில் தூக்கிலிடப் போகிறோம் என மெமோ வந்துகொண்டே இருக்கும். முழுமையாக நான் நிலைகுலைந்துவிட்டேன். அவரைப் பார்க்க முடியாது, பேச முடியாது என்பதைத் தாங்கவே முடியவில்லை. எந்த நேரமும் அழுதுகொண்டே இருப்பேன். தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைக்க வேண்டிய நிலை இருந்தது. அப்போது வைகோ பலத்த முயற்சி செய்து, ராம் ஜெத்மலானியை அழைத்துவந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை வாங்கினார். அப்போதுதான் எல்லோருக்கும் உயிர் வந்தது. செங்கொடியின் உயிர்த் தியாகம், மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தியது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி நாகப்பன் தீர்ப்பளித்தார். அது ஒரு உன்னதமான நாள். வைகோதான் இதை முன்னின்று செய்தார். பல அரசியல் கட்சிகளும் பெரும் பங்களிப்பைச் செய்தார்கள். கே. உங்கள் குழந்தையை ஒரு காலகட்டம் வரை சிறையில் வளர்த்திருக்கிறீர்கள்.. அந்த காலகட்டம் எப்படி இருந்தது? ப. சிறை என்பது குழந்தைகள் வளர்வதற்கான இடமில்லை. குழந்தைக்கு எதையுமே காட்ட முடியாது. அதற்கு வெறும் கம்பிதான் தெரியும். மண்ணில்கூட மிதிக்க முடியாது. எல்லாவற்றையும் புத்தகத்தில்தான் காட்டுவேன். நான் சிறைக்கு வரும்போது 53 நாள் கர்ப்பம். போலீஸ் காவலில் 56 நாட்கள் இருந்தேன். அப்போது ஆறு நாட்களுக்கு ஒரு முறைகூட சாப்பிட்டிருக்கிறேன். மிக மோசமான நாட்கள் அவை. அதனால், குழந்தைக்கு அடிக்கடி உடல் நலம் சீர்கெட்டுவிடும். மஞ்சள் காமாலை, பிரைமரி காம்ப்ளக்ஸ் வந்தது. ஆறு நாட்கள் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் வைத்து, காப்பாற்றிக் கொடுத்தார்கள். அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அதற்கு உதவினார். அந்த காலகட்டத்தில் என் உடல்நிலை மிக மோசமாக இருந்தது. உடலே வளைந்துவிட்டது. எழுந்துகூட நடக்க முடியவில்லை. என் அம்மாதான் மருத்துவமனைக்குப் போவார். அந்தக் குழந்தைக்கு தாய்ப்பாலைக் குடிக்கக்கூட முடியாது. பத்து மாதங்களுக்குப் பிறகு நிலைமை மேம்பட்டது. சிறை உணவு குழந்தைக்கு பிடிக்காது. பார்த்தவுடன் வாந்தி எடுத்துவிடும். குழந்தைக்கு எவ்வளவு நாட்களுக்கு டின் உணவுகளைக் கொடுக்க முடியும்? அந்தத் தருணத்தில் விசாரணையும் துவங்கிவிட்டது. காலையும் மாலையும் நீதிமன்றத்திற்குப் போக வேண்டும். அதனால்தான் குழந்தையை இரண்டு வயதிலேயே வெளியில் கொடுக்க வேண்டிவந்தது. கே. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் உங்கள் கணவர் மூலமாகத்தான் அறிமுகமானார். எந்தத் தருணத்திலாவது அவர் மீது இதற்காக ஆத்திரப்பட்டதுண்டா? ப. "சாதாரணமாக சாராயம் விற்பவள்கூட, என் புருஷனால்தான் இது நடந்து என்று சொல்கிறாள். ஆனால், நளினி அவரால்தான் இந்த நிலை என்று தன் கணவரைச் சொன்னதே இல்லை" என்றுதான் சிறையில் பேசுவார்கள். என் கணவரைப் பற்றி அப்படி நினைத்ததே இல்லை. கே. அப்படி அவர் மீது அன்புசெலுத்தக்கூடிய நம்பிக்கை எப்படி ஏற்பட்டது? நீங்கள் பழகிய காலம் மிகக் குறுகிய காலம்தான்.. ப. பழகிய காலம் குறைவுதான். அவருடைய மொழியும் எனக்குப் புரியாது. அவர் பேசுவது விளங்குவதுபோல தலையாட்டுவேன். இப்படியெல்லாம் இருந்தாலும்கூட, மனம் என்ற ஒன்று இருக்கிறதே.. வாழ்வோ, துக்கமோ, நல்லதோ, கெட்டதோ - ஒருவரை நம்பி வந்துவிட்டோம். அதுதான் நம் வாழ்க்கை என்பது என்னுடைய எண்ணம். பட மூலாதாரம்,GETTY IMAGES கே. உங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன? ப. என் குடும்பமே சிதைந்துவிட்டது. பூஜ்யத்திலிருந்து எல்லாவற்றையும் துவங்க வேண்டும். என் கணவரோடும், குழந்தையோடும் சேர வேண்டும். எல்லாவற்றையும்விட என் குழந்தைக்குத்தான் மிகுந்த பாதிப்பு. எந்தத் தவறும் செய்யாமல் சிறையில் இருந்தது. சிறையிலிருந்து போன பிறகும் கஷ்டம்தான். தாய் - தந்தை இருந்தும் அவர்கள் அன்பு கிடைக்கவில்லை. நான் அவளுக்கு மிக நெருக்கமாக இருந்தேன். யாரும் அவளைத் தூக்க முடியாது. திடீரென அவள் பிரிந்துசென்றாள். ஆறு மாதத்திற்குப் பிறகு மீண்டும் கூட்டிவந்தபோது, அவளுக்கு என்னை மறந்துவிட்டது. (அழுகிறார்) என்னுடன் வர மறுத்துவிட்டாள். மிகக் கொடூரமான நிலை அது. அவளுக்கு கிடைக்காத தாயின் அன்பைத் தர வேண்டுமென நினைக்கிறேன். ஆனால், இனி அவளுக்கு அந்த அன்பு கிடைத்து என்ன பலன்? அவளுக்காக எதையுமே செய்யவில்லை. அவள் எங்களுக்குப் பணம் அனுப்புவதாகச் சொன்னாள், அவளுக்காக எதையுமே செய்யாமல், அவளிடமிருந்து பணம் வாங்க எங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? அவளோடு சேர்ந்து இருக்க வேண்டுமென நினைக்கிறேன். எங்கள் உறவை மேம்படுத்த நினைக்கிறேன். கே. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உங்கள் விடுதலையை கடுமையாக எதிர்க்கிறார்கள். அது குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? ப. நான் அவர்கள் குடும்பத்தை நினைத்து அனுதாபப்படுகிறேன். வருத்தப்படுகிறேன். இதில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு நிவாரணம் கிடைத்ததா, உதவி கிடைத்ததா என்பது எனக்குத் தெரியாது. அவர்களுக்கு மிகப் பெரிய இழப்புதான். குடும்பத் தலைவரை இழப்பது மிகவும் கஷ்டமான விஷயம். அதை என்னால் உணர முடிகிறது. அவர்கள் எங்களை புரிந்துகொள்ள வேண்டுமென நினைக்கிறேன். கே. இது குறித்து வருத்தப்படுகிறீர்களா, அல்லது குற்ற உணர்வடைகிறீர்களா? ப. நான் இது குறித்து வருத்தப்படுகிறேன். 17 பேரைக் கொல்வதற்கு எனக்கு என்ன நோக்கம் இருக்கிறது? கொல்ல வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? நான் படிக்கவில்லையா, வேலைக்குப் போய் சம்பாதிக்க மாட்டேனா? அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களைக் கொலைசெய்துதான் வாழ வேண்டுமா? அப்படியெல்லாம் ஏதும் இல்லை. அவர்கள் பெயர்கள்கூட எனக்குத் தெரியாது. ஆனால், அவர்களைக் கொலைசெய்த குற்றம் என் தலைமேல் விழுந்துவிட்டது. இதை விதி என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களை நான் பார்த்ததுகூட இல்லை. அவர்களைத் துன்புறுத்த வேண்டுமென்ற நினைப்பே இல்லையே. அதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென நினைக்கிறேன். கே. இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களைச் சந்தித்தபோது, அவர்கள் இந்தச் செயலைச் செய்யக்கூடியவர்கள், தீங்கு செய்யக்கூடியவர்கள் என்று தோன்றவில்லையா? ப. அப்படியெல்லாம் எனக்குத் தோன்றவில்லை. அவர்களைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. அந்த அளவுக்கு எனக்கு முதிர்ச்சி இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த காலகட்டத்தில் பரபரப்பாக இருந்தேன். படித்துக் கொண்டிருந்தேன். வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். கல்வி, புள்ளியியல் வகுப்புகளுக்குப் போய்க் கொண்டிருந்தேன். டியூஷனுக்குப் போய்விட்டுவந்து தூங்குவதற்கே மணி 11 ஆகிவிடும். என் வழக்கமான வாழ்க்கைக்குள் இப்படியெல்லாம் யோசிக்கத் தோன்றவில்லை. கே. அடுத்து உடனடியாக என்ன செய்யப் போகிறீர்கள்? ப. உடனடியாக என் கணவரையும் மகளையும் சேர்த்து வைக்க வேண்டும். அவருடைய குடும்பத்தினரோடு சேர்த்து வைக்கவேண்டும். அதுதான் என் ஆசை. https://www.bbc.com/tamil/articles/cw0w49vj0jeo
  17. தேசிய நிதி கட்டமைப்பின் 13 விடயங்களை இலக்கு வைக்கும் சர்வதேச நாணய நிதியம் By NANTHINI 12 NOV, 2022 | 12:25 PM (லியோ நிரோஷ தர்ஷன்) சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வரும் அரசாங்கம், மறுபுறம் கடன் மறுசீரமைப்பு குறித்து இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் கலந்துரையாடி வருகின்றது. அந்த வகையில் அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்து கண்காணிக்கவும், தேவையான ஒத்துழைப்புகளை வழங்கவும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகள் கொழும்பில் அரச தரப்புடன் தொடர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதனடிப்படையில் இலங்கையின் நிதி கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் தேசிய நிதி கட்டமைப்பின் பிரதான 13 விடயங்களுக்கு ஒத்துழைப்பை வழங்க சர்வதேச நாணய நிதியம் முன்வந்துள்ளதுடன், அவற்றை நிறைவேற்றுவதற்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்க தலைமையிலான அரச தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த 13 விடயங்களுக்கான ஒத்துழைப்புகள் குறித்து பேசப்பட்டுள்ளது. கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு ஒத்துழைப்புகளை வழங்கும் வகையிலேயே கொழும்புக்கான விஜயம் அமைந்துள்ளதுடன், இலங்கையின் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையிலான பரிந்துரைகளையே முன்வைத்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி பிரதிதிநிகள் அரச தரப்பினருக்கு குறிப்பிட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வந்துள்ள சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி பிரதிதிநிகள் அரச நிதி கட்டமைப்பின் பல்வேறு தரப்பினர்களுடன் தொடர் பேச்சுவார்த்தைகளை கடந்த இரு வாரங்களாக முன்னெடுத்து வருகின்றனர். அந்த பேச்சுவார்த்தைகளின் இணக்கப்பாடுகளின் வெளிப்பாடுகளாக 13 விடயங்களும் அதற்கான பரிந்துரைகளையும் முன்வைக்க சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர். அதன் பிரகாரம், கடன் மறுசீரமைப்புக்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பு, வரவு – செலவு திட்டத்துக்கான முன்மொழிவுகள், நாட்டின் நிதி நிர்வாக கட்டமைப்புக்கான ஒத்துழைப்புகள், இதனூடாக நிதி கட்டமைப்பின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தல், சிறந்த நிதி நிர்வாகத்துக்கான ஒத்துழைப்புகள், வரி நிர்வாக கொள்கையை உருவாக்குதல், அரச – பொது கொள்முதல் செயற்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உருவாக்குதல், அரச செலவீனங்களை நிர்வகித்தல், ஊழல் மற்றும் மோசடிகளை ஒழித்தல், மத்திய வங்கியின் நிதியை சார்ந்துள்ள பொது நிறுவனங்களை குறைத்தல், அரச நிறுவன அமைப்புகளின் ஆபத்தை குறைத்தல், நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்தல், இறக்குமதி – ஏற்றுமதி வரிகளுக்கு முறையான திட்டத்தை அமைத்தல், சர்வதேச முதலீடுகளுக்குள்ள தடைகளை நீக்குதல், போக்குவரத்து மற்றும் எரிசக்தி துறையை புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாற்றுதல் மற்றும் உண்மையாகவே அரச உதவிகள் தேவைப்படும் மக்களை கண்டறிதல் ஆகிய 13 விடயங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வைத்துள்ளனர். https://www.virakesari.lk/article/139793
  18. கொரியாவுக்கு சென்ற இலங்கை மகளிர் றக்பி அணித்தலைவியை காணவில்லை By DIGITAL DESK 3 14 NOV, 2022 | 01:31 PM சர்வதேச றக்பி சுற்றுப்போட்டியில் பங்குபற்றுவதற்காக தென் கொரியாவுக்குச் சென்றிருந்த இலங்கை மகளிர் றக்பி அணியின் தலைவி துலானி பல்லேன்கொந்தகே காணாமல் போயுள்ளார். 7 பேர் கொண்ட அணிகளுக்கிடையிலான ஏசியன் றக்பி செவன்ஸ் தொடரின் 2 ஆவது கட்டப் போட்டியில் பங்குபற்றுவற்காக இலங்கையின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் தென் கொரியாவுக்குச் சென்றிருந்தன. இப்போட்டிகளின் பின்னர் இலங்கை அணி தென்கொரியாவின் இன்சின் நகரிலிருந்து இன்று முற்பகல் இலங்கைக்குப் புறப்படவிருந்தது. இந்நிலையில் இலங்கை மகளிர் அணியின் தலைவி துலானி பல்லேகொந்தகே காணாமல் போயுள்ளார். இது தொடர்பில் கொரிய றக்பி சங்கத்தின் ஊடாக கொரிய பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. https://www.virakesari.lk/article/139981
  19. ஜப்பானில் பூகம்பம் By DIGITAL DESK 2 14 NOV, 2022 | 04:18 PM ஜப்பானில் இன்று திங்கட்கிழமை (நவ.14) நண்பகல் 6.1 ரிக்டர் அளவில் திடீர் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி மாலை 5.09 மணியளவில் ஏற்பட்ட இந்த பூகம்பம் மத்திய மீ மாகாணத்தில் சுமார் 350 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பூகம்பகத்தின் தாக்கம் டோக்கியோ உள்ளிட்ட பிறநகரங்களிலும் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், டோக்கியோவுக்கு வடக்கே உள்ள புகுஷிமா மற்றும் இபராக்கி மாகாணங்கள், பூகம்பம் ஏற்பட்ட இடத்திலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள போதிலும், கடுமையான நில அதிர்வை உணர்ந்தன. பூகம்பம் ஏற்பட்டதையடுத்து ஷிங்கன்சென் புல்லட் ரயில்கள் மற்றும் டோக்கியோ மெட்ரோ சேவைகள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டன. பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டன. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/140010
  20. சர்வதேச பொருளாதார நிலை இருள்மயமானதாக காணப்படுகின்றது - சர்வதேச நாணய நிதியம் By RAJEEBAN 14 NOV, 2022 | 02:22 PM கடந்த மாதம் எதிர்வுகூறப்பட்டதை விடவும் சர்வதேச பொருளாதார நிலை இருள்மயமானதாக காணப்படுகின்றது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியான பரந்துபட்ட அதிக பணவீக்கம் காரணமாக நிதிக்கொள்கைகள் இறுக்கமாக்கப்பட்டமை ,சீனாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைவடைந்துள்ளமை,உக்ரைன் மீதான ரஸ்யாவின் போரினால் ஏற்பட்டுள்ள உணவு பாதுகாப்பின்மை மற்றும் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளமையே இதற்கான காரணம் என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் சர்வதேச நாணய நிதியம் 2023 இல் உலக பொருளாதார வளர்ச்சி 2.7 வீதமாக காணப்படும் என தெரிவித்திருந்தது. இந்தோனோசியாவில் இடம்பெறவுள்ள ஜி20 உச்சிமாநாட்டின் தலைவர்களிற்காக தயாரித்துள்ள ஆவணத்தில் சர்வதேச பொருளாதார நிலை இருள்மயமானதாக காணப்படுகின்றது என்பதை சர்வதேச நாணயநிதியம் உறுதி செய்துள்ளது. குறிப்பாக ஐரோப்பாவின் பொருளாதார நிலை மிகவும் நம்பிக்கையற்றதாக காணப்படுகின்றதுஎன சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/139993
  21. காதலியின் உடலை 35 துண்டுகளாக வெட்டி நகர் முழுவதும் எறிந்த நபர் கைது By DIGITAL DESK 3 14 NOV, 2022 | 12:06 PM தனது காதலியின் கொலை செய்து, உடலை 35 துண்டுகளாக வெட்டி டெல்லியின் பல பகுதிகளிலும் எறிந்த குற்றச்சாட்டில் ஒரு நபரை டெல்லி பொலிஸார் கைது செய்துள்ளனர். அப்தாப் அமீன் பூனாவாலா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 26 வயதான ஷ்ராதா எனும் யுவதியே கொல்லப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான செய்திகளின்படி, மும்பையிலுள்ள பல்தேசிய நிறுவனமொன்றில் பணியாற்றிய ஷ்ராதா அங்கு, அப்தாப் அமீன் பூனாவாலாவை சந்தித்துள்ளார். இவர்கள் காதலித்துவந்த நிலைலயில், அவர்களின் திருமணம் செய்துகொள்ள பெற்றோர் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, இவர்கள் இருவரும், டெல்லிக்குச் சென்று இணைந்து வாழ்ந்துள்ளனர். கடந்த மே 18 ஆம் திகதி இவர்கள் இருவருக்கும ஏற்பட்ட மோதலையடுத்து, ஷ்ராதாவை மூச்சுத்திணறச் செய்து அப்தாப் அமீன் கொலை செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது. அதன்பின் அவரின் உடலை 35 துண்டுகளாக வெட்டிய அப்தாப் அமீன், 18 நாட்களாக தினமும் அதிகாலை 2 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறி உடற்பாங்களை டெல்லியின் பல பாகங்களிலும் வீசி வந்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. குடும்பத்தினரின் தொலைபேசி அழைப்புகளுக்கு ஷ்ராதா பதிலளிக்காத நிலையில், கடந்த 8 ஆம் திகதி ஷ்ராதாவைத் தேடி அவரின் தந்தை டெல்லிக்குச் சென்றார். குறித்த வீடு பூட்டியிருந்ததையடுத்து, அவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தார். இம்முறைப்பாட்டின் அடிப்படையில் அப்தாப் அமீன் பூனாவாலாவை நேற்றுமுன்தினம் சனிக்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர். திருமணம் செய்துகொள்ளுமாறு ஷ்ராதா வற்புறுத்திய நிலையில் அவர்கள் இருவருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டதாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. https://www.virakesari.lk/article/139967
  22. வளரும் நாடுகளுக்கு குரல் கொடுப்பதை நோக்கமாகக் கொண்ட ஜி-20 உச்சிமாநாடு By DIGITAL DESK 5 14 NOV, 2022 | 12:05 PM ஜி 20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் செய்தி ஆற்றல் பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு, உலகளாவிய சுகாதார பாதுகாப்பு சூழல் மற்றும் பருவநிலை சவால்கள் ஆகியவற்றை மையப்படுத்தியதாகும். எனவே தான் இந்த உச்சிமாநாடனது வளரும் நாடுகளுக்கு குரல் கொடுக்கும் நோக்கத்துடனானது என வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்தார். இந்தோனேசியா – பாலி நகரில் ஆரம்பமாக உள்ள 17வது ஜி-20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். ஜி20 அமைப்பின் தலைவராக இந்தியா டிசம்பர் 1ம் திகதி தொடங்கி ஓராண்டுக்கு பதவி வகிக்கும் என்று வெளியுறவுத்துறை செயலாளர் கூறினார். கொவிட் தொற்றுநோய்க்கு பிந்தைய காலம் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போரின் சவால்களுடன் போராடும் ஜி20 தலைவர்களுக்கு பிரதமர் மோடியின் செய்தி என்னவாக இருக்கும் என்பது குறித்து குவாத்ரா விளக்கமளித்தார். ஜி 20 நாடுகள் பல சவால்களை எதிர்கொள்கின்றன. இதில் தொடர்ச்சியான நிச்சயமற்ற தன்மை மற்றும் ஆற்றல் பாதுகாப்பு தொடர்பான சவால்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை சவால்கள், உணவுப் பாதுகாப்பு தொடர்பான சவால்கள் மற்றும் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பின் சிக்கல் ஆகியவை பிரதமர் மோடியின் இலக்குகளாக இருக்கும் என அவர் கூறினார். இந்த உச்சிமாநாட்டின் போது மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெறும் என வெளிவிவகார செயலாளர் மேலும் தெரிவித்தார். பிரதமரின் தலையீடு என்னவாக இருக்கும் என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், இந்தக் கூறுகள் மற்றும் இந்த உறுப்புகளின் குறிப்பிட்ட துணைப்பிரிவுகள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் தொகுப்பாக இது இருக்கும் என்று நான் கருதுகிறேன் என்றார். உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, தொழில்நுட்ப மாற்றம் மற்றும் ஆரோக்கியம் ஆகிய மூன்று அமர்வுகளில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என்றும் குவாத்ரா கூறினார். பாலி உச்சி மாநாடு பிரதமர் மோடி பங்கேற்கும் தலைவர்கள் மட்ட அமர்வுகளை உள்ளடக்கியது. இதில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் பரிமாற்றம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய அமர்வுகள் அடங்கும். தற்போதைய உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் சூழலில் ஜி20 விவாதங்கள் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. ஜி20 என்பது சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான முதன்மை மன்றம் மற்றும் அனைத்து முக்கிய சர்வதேச பொருளாதார மற்றும் வளர்ச்சி சிக்கல்களிலும் உலகளாவிய கட்டிடக்கலை மற்றும் நிர்வாகத்தை வடிவமைப்பதில் பங்கு வகிக்கிறது. https://www.virakesari.lk/article/139963
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.