Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. பிறந்தநாள் வாழ்த்துகள் ஈழப்பிரியன் அண்ணா.
  2. அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கான மேன்முறையீட்டு காலம் நீடிப்பு - அரசாங்கம் 26 JUN, 2023 | 12:37 PM அரசியல் தூண்டுதல்கள் அல்லது வெளி அழுத்தங்களுக்கு அடிபணியாமல் ஜுலை 10 ஆம் திகதி வரையான மேன்முறையீட்டு காலத்திற்குள் பிரதேச செயலாளர்களை தொடர்பு கொள்ளுமாறு அரசாங்கம் பயனாளர்களை அறிவுறுத்தியுள்ளது. அதற்கமைய விரைவில் மேன்முறையீட்டை சமர்ப்பிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பொருளாதார ஸ்தீரத்தன்மை தேவைப்படும் நபர்களுக்கு உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட அஸ்வெசும திட்டத்துக்கு அரசியல் சாயம் பூசி தமது அரசியல் தேவைகளை நிறைவேற்ற சில தரப்பினரின் முயற்சி மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. எவ்வாறாயினும், தகுதியானவர்களை தெரிவு செய்வதில் குறைபாடுகள் இருப்பின் அது உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் எனவும், இது தொடர்பில் மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் சகல தரப்பினருடனும் கலந்துரையாடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள், பாதிக்கப்படக்கூடியவர்கள், ஏழைகள் மற்றும் மிகவும் ஏழ்மையானவர்கள் ஆகிய 4 சமூகப் பிரிவுகளின் கீழ், அஸ்வெசும நலன்புரி நன்மைகள் வழங்கப்படுவதுடன், ஊனமுற்றோர், முதியோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு வழமை போன்று உரிய கொடுப்பனவுகள் வழங்கப்படும். நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கிய நலன்புரி கொடுப்பனவுகளுக்குத் தகுதியானவர்களைக் கண்டறியும் வேலைத்திட்டத்தின் தரவு சேகரிப்புப் பணியில் 6728 உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் 3190 அபிவிருத்தி உத்தியோகத்தர்களும், 494 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களும், 205 கிராம உத்தியோகத்தர்களும், 1127 இதர உத்தியோகத்தர்களும், 1712 தற்காலிக ஆட்களும் அடங்குவர். பிரதேச அலுவலக மட்டத்தில், மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தேர்வுக் குழுக்கள் தரவுகளைக் கண்காணித்து, மாவட்டச் செயலாளரின் அனுமதியைப் பெற்ற பிறகு, தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எவ்வாறாயினும், இந்த செயற்பாட்டில் குறைபாடுகள் காணப்படுவதாக சில தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் பயனாளிகளை தெரிவு செய்வதில் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு மேன்முறையீடுகள் மற்றும் முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஜூலை 10 ஆம் திகதி வரையில் நீடிப்பதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஸ் குணவர்தன அறிவித்துள்ளார். பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆகியோரும் இது தொடர்பில் தேவையான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி, பொருளாதார ஒத்துழைப்பு தேவைப்படும் நபர் அல்லது குடும்பம் இந்த நன்மையை இழந்திருந்தால், இந்தக் காலப்பகுதியில் பிரதேச செயலகங்கள் ஊடாக விசாரித்து அதனை சரிசெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. அஸ்வெசும திட்டத்தின் அடிப்படை நோக்கம் பொருளாதார ஸ்திரத்தன்மை தேவைப்படும் மக்களுக்குத் தேவையான பங்களிப்பை வழங்குவதே தவிர, வெறும் அரசியல் செயற்பாட்டின் அடிப்படையில் பல்வேறு தரப்பினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதல்ல என அரசாங்கம் வலியுறுத்துகிறது. பல்வேறு பிரசாரங்களாலும் தனிப்பட்ட அழுத்தங்களாலும் குழப்பமடையாமல், தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெறாவிட்டாலோ அல்லது தகுதியில்லாத நபரின் பெயர் அதில் இடம் பெற்றிருந்தாலோ, பிரதேச செயலக அலுவலகங்களின் ஊடாக அது தொடர்பில் ஆராயுமாறும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் எந்த பிரச்சினையையும் பிரதேச செயலாளரின் ஊடாக தீர்த்துக் கொள்ள முடியும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. (எம்.மனோசித்ரா) https://www.virakesari.lk/article/158603
  3. டைட்டானிக் அருகே கின்னஸ் சாதனை படைக்க விரும்பிய 19 வயது சுலேமான் தாவூத் பட மூலாதாரம்,DAWOOD FAMILY கட்டுரை தகவல் எழுதியவர்,நோமியா இக்பால் & செல்சி பெய்லி பதவி,பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த 19 வயதேயான சுலேமான் தாவூத், உலக சாதனையை முறியடிக்க விரும்பியதால், தனது ரூபிக்ஸ் கியூப்பை தன்னுடன் எடுத்துச் சென்றதாக அவரது தாய் கிறிஸ்டின் தாவூத் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். கடலில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலைப் பார்ப்பதற்காக நீர்மூழ்கியின் சென்ற சுலேமானும் அவரது தந்தையும் ஷாஜதாவும் நீர்மூழ்கி நசுங்கி நொறுங்கிய விபத்தில் இறந்தனர். ரூபிக் கியூப்பை கொண்டு உலக சாதனையை பதிவு செய்வதற்காக தந்தை ஷாஜதா தனது கேமராவைக் கொண்டு சென்றிருக்கிறார். கின்னஸ் உலக சாதனைக்காகவும் விண்ணப்பித்திருக்கிறார். டைட்டன் நீர்மூழ்கி விபத்துக்குள்ளான நேரத்தில் கிறிஸ்டின் தாவூதும் கடலின் மேற்பரப்பில் நீர்மூழ்கிக்கு உதவுவதற்காக நின்று கொண்டிருந்த போலார் பிரின்ஸ் கப்பலில் இருந்தனர். அப்போதுதான் நீர்மூழ்கியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட தகவல் தெரியவந்தது. "அதன் அர்த்தம் என்னவென்று எனக்கு அந்த நேரத்தில் புரியவில்லை. பின்னர் நீர்மூழ்கி அங்கிருந்து கீழ்நோக்கிச் சென்றது," என்று கிறிஸ்டின் கூறினார். டைட்டன் நீர்மூழ்கி விபத்துக்குப் பிறகு தாவூத் குடும்பத்தினர் அளித்த முதல் பேட்டி இதுவாகும். டைட்டானிக் கப்பலின் சிதைவைப் பார்க்க தனது கணவருடன் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் கோவிட் தொற்றுநோய் காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். "நான் பின்வாங்கிவிட்டு, [சுலேமானை] அழைத்துச் செல்ல இடம் கொடுத்தேன். ஏனென்றால் அவன் உண்மையில் செல்ல விரும்பினான்” என்றார் கிறிஸ்டின். சுலேமான், அவரது தந்தை ஷாஜதா தாவூத், மேலும் மூன்று பேர் நீர்மூழ்கியில் இறந்தனர். டைட்டனுக்குச் சொந்தமான ஓஷன்கேட்டின் 61 வயதான தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டாக்டன் ரஷ், பிரிட்டிஷ் தொழிலதிபர் ஹமிஷ் ஹார்டிங், பிரெஞ்சு கடற்படையின் முன்னாள் ஆழ்கடல் வீரர் பால்-ஹென்றி நர்ஜோலெட் ஆகியோர் அந்த மூவர். தனது மகன் சுலேமான் ரூபிக்ஸ் கியூப்பை மிகவும் நேசித்ததாகக் கூறுகிறார் கிறிஸ்டின் தாவூத். போகுமிடமெல்லாம் ரூபிக்ஸ் கியூபை எடுத்துச் செல்லும் வழக்கம் கொண்ட சுலேமான். 12 வினாடிகளில் கியூபை சரி செய்து பார்வையாளர்களை திகைக்க வைத்ததாகவும் கூறினார். படக்குறிப்பு, கிறிஸ்டின் தாவூத் டைட்டானிக் கப்பலில் 3,700 மீட்டர் கடலுக்கு அடியில் ரூபிக்ஸ் கியூபை நான் தீர்க்கப் போவதாக சுலேமான் கூறிச் சென்றதாகவும் கிறிஸ்டின் தெரிவித்தார். சுலேமான் பிரிட்டனின் கிளாஸ்கோவில் உள்ள ஸ்ட்ராத்க்லைட் பல்கலைக்கழகத்தின் மாணவர். பிரிட்டனில் வசித்த தொழிலதிபர் ஷாஜதா தாவூத், பாகிஸ்தானின் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தையர் தினத்தன்று 17 வயதான மகள் அலினா, உட்பட குடும்பத்தினர் டைட்டானை நோக்கிய பயணத்துக்காக போலார் பிரின்ஸ் கப்பலில் ஏறினர். கணவரும் மகனும் டைட்டன் நீர்மூழ்கியில் ஏறுவதற்கு முன் சில நிமிடங்களில் அவர்கள் கட்டிப்பிடித்து கேலி செய்து கொண்டிருந்ததாகக் கூறுகிறார் கிறிஸ்டின். "நான் அவர்களை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தேன். ஏனென்றால் அவர்கள் இருவரும் மிக நீண்ட காலமாக டைட்டானிக்கை பார்க்க விரும்பினர்" என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,ENGRO CORPORATION/DH GROUP படக்குறிப்பு, ஷாஜதா மற்றும் சுலேமான் தாவூத் தனது கணவர் தன்னைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றி அறிந்து கொள்ள அதீத ஆர்வம் கொண்டிருந்தார் என்று கூறுகிறார் கிறிஸ்டின். இரவு உணவிற்குப் பிறகு தங்களை இது தொடர்பான ஆவணப்படங்களைப் பார்க்க வைத்ததாகவும் அவர் கூறுகிறார். "குழந்தை போன்ற உற்சாகம் அவருக்குள் இருந்தது," என்று அவர் கூறினார். கணவரும் மகனும் திரும்பி வருவதற்காக கிறிஸ்டின் தாவூத்தும், மகள் அலினாவும் போலார் பிரின்ஸ் கப்பலில் காத்திருந்தார்கள். ஆனால் நேரம் செல்லச் செல்ல தேடல் மற்றும் மீட்பு பணியில் இருந்த நம்பிக்கை குறைந்து போனது. "96 மணிநேரத்தை கடந்தபோது நான் நம்பிக்கையை இழந்துவிட்டேன் என்று நினைக்கிறேன்," என்றார் கிறிஸ்டின். அப்போதுதான் தன் குடும்பத்தினருக்கு செய்தி அனுப்பியதாக கூறினார். "நான் மோசமான நிலைக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறேன் என்று சொன்னேன்” ஆனால் மகள் அலினாவுக்கு கூடுதலாகச் சற்று நேரம் நம்பிக்கை இருந்தது. "அமெரிக்காவின் கடலோரப் படையின் அழைப்பு வரும் வரை அவள் நம்பிக்கை இழக்கவில்லை. சிதைவுகளைக் கண்டுபிடித்ததாக அவர்கள் எங்களுக்குத் தெரிவித்தபோது அதுவும் முடிந்துவிட்டது." தாவூத் குடும்பம் சனிக்கிழமை செயின்ட் ஜான்ஸுக்குத் திரும்பியது. ஞாயிற்றுக்கிழமை ஷாஜதா மற்றும் சுலேமானுக்கு இறுதிச் சடங்கு நடத்தியது. பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY தானும் மகளும் சுலேமானின் நினைவாக ரூபிக்ஸ் கியூப்பை முடிக்க கற்றுக் கொள்ள முயற்சிப்போம் என்றும், தனது கணவரின் பணியைத் தொடர விரும்புவதாகவும் கூறினார் கிறிஸ்டின். "அவர் பல செயல்களில் ஈடுபட்டார். பலருக்கு உதவினார். அந்த மரபைத் தொடரவும் விரும்புகிறேன்.. இது என் மகளுக்கும் மிகவும் முக்கியமானது." விபத்து தொடர்பான விசாரணைகள் குறித்து பேச கிறிஸ்டின் மறுத்துவிட்டார். "அவர்களது பிரிவால் துன்புறுகிறேன்," அவர் ஆழமாக மூச்சு விட்டார். "நான் உண்மையில் அவர்கள் இல்லாததை உணர்கிறேன்" https://www.bbc.com/tamil/articles/cqvqpe3xe1xo
  4. Titanic Missing Sub Titan: விசாரணை எவ்வாறு நடைபெறுகிறது? அடுத்து என்ன நடக்கும்?
  5. வறுமை நிலையிலுள்ள 70 இலட்சம் மக்களும் அஸ்வெசும திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும் - சஜித் 24 JUN, 2023 | 07:09 PM (எம்.மனோசித்ரா) நாட்டில் 70 இலட்சம் மக்கள் வறுமை நிலையில் உள்ளனர். அவர்கள் அனைவரும் அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும். எந்த தரவுகளின் அடிப்படையில் வெறுமனே 12 இலட்சம் மக்களை மாத்திரம் இத்திட்டத்தில் உள்வாங்க அரசாங்கம் தீர்மானித்தது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார். தனது விசேட அறிக்கையொன்றின் ஊடாக இவ்வாறு கேள்வியை முன்வைத்துள்ள எதிர்க்கட்சி தலைவர், அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: நாட்டில் 14 சதவீதமாக இருந்த வறுமை நிலை 31 சதவீதமாக அதிகரித்துள்ளது. மருந்து பற்றாக்குறையால் இலங்கை தற்போது மிக மோசமான சுகாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. மருந்துக்கான பற்றாக்குறை, மருந்தின் விலை உயர்வின் ஊடான மோசடி, ஊழல் என எல்லாவற்றையும் கருத்தில் கொள்ளும்போது, ஒட்டுமொத்த அரசாங்கமும் இந்நாட்டின் நோய்வாய்ப்பட்ட மக்களின் வாழ்க்கையுடன் விளையாடிக்கொண்டிருக்கிறது. நாட்டில் நிலவும் உண்மை நிலைவரத்தை புரிந்துகொள்ள ஒரு வெளிப்படைத் தன்மையான கணிப்பீட்டை நடத்துவதுதான் அரசாங்கம் முதலில் செய்திருக்க வேண்டியதாகும். ஏழ்மையான மக்களுக்கு நிவாரணம் வழங்கவென அரசாங்கம் அஸ்வெசும எனும் கண்மூடித்தனமான நிவாரணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 12 இலட்சம் பேருக்கு 3 ஆண்டுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும். நாட்டில் 70 இலட்சம் ஏழ்மையான மக்கள் இருக்கும்போது 12 இலட்சம் பேருக்கு நிவாரணம் வழங்குவதன் நோக்கம் என்னவென அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புகின்றோம். எந்த கணக்கெடுப்பின், எந்தத் தரவுகளின் அடிப்படையில் இந்த 12 இலட்சம் பேர் தெரிவு செய்யப்பட்டனர் என்றும் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புகிறோம். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதேச்சதிகாரமாக உரங்களை தடைசெய்து, முழு நாட்டையும் பஞ்சத்தில் தள்ளினார். அவருக்குப் பின் இடைக்கால ஜனாதிபதியாக வந்த ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முழு நாட்டையும் ஏமாற்றி முழு நாட்டு மக்களையும் மரணப் படுக்கைக்குக் கொண்டு சென்றுகொண்டிருக்கிறது. கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் நாட்டுக்கு செய்யப்போகும் பாரதூரமான அவலங்கள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியாகி நாம் முன்னரே நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்தோம். தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் முன்னைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எந்த விதத்திலும் இரண்டாம் பட்சமில்லை என ஆரம்பத்திலிருந்தே எச்சரித்து வருகின்றோம். எவ்வாறாயினும், நாட்டையும் நாட்டு மக்களையும் ஆபத்தில் ஆழ்த்துவது மட்டுமே அரசாங்கத்தின் ஒரே விருப்பமாக அமைந்திருப்பதோடு, அவ்வாறான நோக்கம் இல்லாமல் இருப்பதாக இருந்தால் மக்கள் மீது இவ்வளவு அழுத்தத்தை பிரயோகிக்க அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது. தற்போது நாட்டுக்கு முக்கியமான சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் கூட ஒரு பொதுவான இலக்குடன் ஒன்றாக இணைந்து நாட்டுக்காக சிந்திக்கப்படுவதை விடுத்து, வெறுமனே தனது குறுகிய இலக்குகளை அடைவதற்காகவே அரசாங்கம் இதை செய்யும் நிலைக்கு வந்துள்ளது. இவை அனைத்தும் சந்தர்ப்பவாத அரசாங்கத்தின் குறுகிய நோக்கற்ற தன்னிச்சையான செயல்முறையை தவிர வேறொன்றையும் புலப்படுத்துவதாக இல்லை. இந்நிலையை மாற்றி மக்கள் சார் சிந்தனைவாயிலாக புதிய மக்கள் ஆணையின் மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம். இதற்காக அரசாங்கத்துக்கு அனைத்து அழுத்தங்களையும் பிரயோகிப்போம் என்பதையும் வலியுறுத்துகிறோம். அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் வறுமை நிலையில் உள்ள 70 இலட்சம் மக்களும் உள்வாங்கப்பட வேண்டும். குறுகிய நோக்கங்களை இலக்காகக் கொண்டு அறிவியலற்ற முறையில் முன்வைக்கும் நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்குப் பதிலாக, விஞ்ஞானபூர்வமான திட்டத்தின் மூலம் உண்மையான தேவைகளை அடையாளப்படுத்துபவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். நாட்டில் நிலவும் கடுமையான மருந்துப் பற்றாக்குறைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும். இதற்குத் தேவையான ஒத்துழைப்பை ஐக்கிய மக்கள் சக்தி வழங்கும் என்பதையும் ஞாபகப்படுத்திக்கொள்கிறோம். https://www.virakesari.lk/article/158502
  6. வவுனியா, தோணிக்கல் கிராமத்தில் உதவித் திட்ட முறைகேடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் 24 JUN, 2023 | 07:33 PM வவுனியா, தோணிக்கல் கிராம சேவையாளர் பிரிவில் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து கிராம மக்கள் இன்று (24) மதியம் 3 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசாங்கத்தினால் நலன்புரி உதவித் திட்ட கொடுப்பனவுகளை வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில், வவுனியா தோணிக்கல் கிராம சேவையாளர் பிரிவில் விசேட தேவைக்குட்பட்டவர்கள், முதியோர்கள், விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டுக்கு உட்பட்டவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமல் வெளிநாடுகளில் இருப்போர், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்து பாதிக்கப்பட்ட கிராம மக்கள் தோணிக்கல் ஜயா சன சமூக நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், எமது கிராமத்திலுள்ள பாதிக்கப்பட்டவர்களில் 70 சக வீதமானவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படவில்லை. மேலும் வெளிநாடுகளில் இருப்போர், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகளின் பெயர்ப்பட்டியல் வந்துள்ளன. இதை பற்றி கேட்கச் சென்றால், கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் அசண்டையினமாக பதிலளிப்பதுடன், எமது நியாயமான கோரிக்கைகளையும் செவிமடுப்பதில்லை. மேலும், அபிவிருத்தி உத்தியோகத்தர் மரியாதை இன்மையாகவும் கதைக்கின்றார். எமது கிராமத்தில் உண்மையில் கஷ்டப்படுபவர்களுக்கு எவ்வித உதவிகளும் கிடைப்பதில்லை என தெரிவித்து கண்ணீர் மல்கி தமக்கான தீர்வினை பெற்றுத்தருமாறு கூறுகின்றனர். https://www.virakesari.lk/article/158504
  7. தகுதி இருந்தும் நிவாரண திட்டத்தில் பெயர் இடம்பெறாதவர்கள் மேன் முறையீடு செய்யலாம் - பிரதமர் சபையில் தெரிவிப்பு Published By: VISHNU 23 JUN, 2023 | 09:39 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தில் முன்னொருபோதும் இல்லாத வகையில் இம்முறை பெருமளவானவர்களுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. அத்துடன் தகைமையானவர்கள் சிலரின் பெயர்கள் இந்த நிவாரணப் பட்டியலில் இடம் பெறவில்லை என்றால் அவர்கள் அதற்காக மேன்முறையீடு செய்ய முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் அரசாங்கத்தின் அஸ்வெசும நிவாரண வேலைத்திட்டம் தொடர்பில் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே. பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், குறைந்த வருமானத்தைக் கொண்ட குடும்பங்களுக்கான அரசாங்கத்தின் அஸ்வெசும நிவாரணத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான மதிப்பீடு தொடர்பில் சபையில் பலரும் கருத்துக்களை முன்வைத்தனர். அந்த வகையில் கடந்த மாதத்தில் இந்த மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அந்த சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட சில அதிகாரிகள் சமூகமளிக்காததன் காரணத்தினால் தகைமைகளைக் கொண்ட இளைஞர்கள் சிலரை சுயாதீனமாக சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கிணங்க நலன்புரி சபை அந்த சவாலை பொறுப்பேற்று முதலாவது சுற்றை எமது அரச உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தி நாடளாவிய ரீதியில் மேற்கொண்டுள்ளது. கடந்த வரவு செலவுத் திட்டத்திலும், பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையிலும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை பாதுகாப்பதற்கான இந்த திட்டம் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அதனை மேலும் விரிவு படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மதிப்பீடுகளில் குறைபாடுகள் காணப்படுமாயின் வசதி படைத்தவர்களுக்கும் இந்த நிவாரணத்தை கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் அது தொடர்பில் கவனம் செலுத்தப்படும். எவ்வாறாயினும் வசதி படைத்தவர்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்பட முடியாது. தகைமையானவர்கள் சிலரின் பெயர்கள் இந்த நிவாரணப் பட்டியலில் இடம் பெறவில்லை என கூறப்படும் போதும் அவர்கள் அதற்காக மேன்முறையீடு செய்ய முடியும். மேன் முறையீடுகளுக்கான காலம் இன்னும் நிறைவடையவில்லை. குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்குள், பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் ஆகியோரை எந்த விதத்திலும் இந்த திட்டத்திலிருந்து நீக்க முடியாது. அதனால், அதற்கான மேன்முறையீடுகளை சமர்ப்பிக்கும் காலம் இன்னும் நிறைவடையவில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன். பிரச்சினைகள் உள்ளவர்கள் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எவ்வாறெனினும் முன்னொருபோதும் இல்லாத வகையில் இம்முறை பெரும்பாலானவர்களுக்கு இந்த நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. அதற்காக சர்வதேச நாடுகளிலிருந்து கிடைக்கின்ற ஒத்துழைப்புக்களை மேலும் அதிகமாக எமக்கு பெற்றுக் கொள்ளவும் முடியுமாகும் என நாங்கள் நம்புகிறோம் என்றார். https://www.virakesari.lk/article/158425
  8. மேன்முறையீடுகளின் அடிப்படையில் அஸ்வெசும நலப் பயனாளிகள் பட்டியல் திருத்தம் செய்யப்படும் -ஷெஹான் சேமசிங்க மேன்முறையீடுகள் மற்றும் முறைப்பாடுகளின் அடிப்படையில் அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் பெறுபவர்களின் பட்டியல் திருத்தப்படும் என பதில் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று உறுதியளித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய சேமசிங்க, மேன்முறையீடுகள் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு வருவதாகவும், எந்தவொரு தனிநபரும் மேன்முறையீடு அல்லது முறைப்பாடு ஒன்றை தாக்கல் செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார். மேல்முறையீடுகள் மற்றும் புகார்களின் அடிப்படையில், பதிவேட்டில் திருத்தம் செய்யப்படும் என்றார். விண்ணப்பங்கள் மற்றும் சரிபார்ப்பின் அடிப்படையில் தற்போது பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் ஜூலை மாதம் முதல் கொடுப்பனவுகள் வழங்கப்படுவதற்கு முன்னர் திருத்தங்களுக்கு இன்னும் இடமுள்ளதாகவும் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டுக்கான பதிவேடுக்காக ஒகஸ்ட் மாதம் மீண்டும் ஒருமுறை பட்டியல் மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை 148 பில்லியன் ரூபாவிலிருந்து 187 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். நலத்திட்ட உதவிகள் பெறுபவர்களின் அங்கீகரிக்கப்பட்ட பட்டியல் குறித்து பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று கவலை எழுப்பியுள்ளனர். இதன்படி, இந்த விடயம் தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தனவும் சபையில் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/259697
  9. சமூக கட்டமைப்பில் பாரிய முரண்பாடுகள் தோற்றம் பெறும் - ஆளும் தரப்பு உறுப்பினர் அரசாங்கத்திடம் கோரிக்கை Published By: VISHNU 23 JUN, 2023 | 11:42 AM (எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்) அஸ்வெசும நிவாரண செயற்திட்டம் சமூக கட்டடைப்பில் பாரிய முரண்பாடுகளை தோற்றுவிக்கும். ஏழ்மையில் நிலையில் உள்ளவர்கள் இந்த செயற்திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை. ஆகவே முறையான மதிப்பீட்டை மேற்கொள்ளும் வரை அஸ்வெசும செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்த வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகத் குமார் சுமித்ராராச்சி அரசாங்கத்திடம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து உரையாற்றியதாவது, சமூக கட்டமைப்பில் தீவிரமடைந்துள்ள ஏழ்மை நிலையை இல்லாதொழிக்க அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள அஸ்வெசும செயற்திட்டம் சமூக கட்டமைப்பில் பாரிய முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் உள்ளது. தகுதியானவர்களுக்கு மாத்திரம் நிவாரண தொகை வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டது. அஸ்வெசும நிவாரண செயற்திட்டத்தில் நிவாரணம் பெறுவதற்கு தகுதியானவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். தகுதியற்ற செல்வந்தர்கள் நிவாரண திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். ஆகவே இந்த திட்டத்தில் உண்மையான தரப்பினர் அடையாளப்படுத்தப்படவில்லை. நிவாரணத்தை பெற்றுக்கொள்ள விண்ணப்பித்து புறக்கணிக்கப்பட்டவர்கள் மேன்முறையீடு செய்யலாம் என நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.மேன்முறையீட்டுக்கான காலவகாசம் நீடிக்கப்பட வேண்டும். குளறுபடிகளுடன் இந்த செயற்திட்டத்தை அமுல்படுத்தினால் சமூக கட்டமைப்பில் பாரிய முரண்பாடுகள் தோற்றம் பெறும். ஆகவே பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வரை செயற்திட்டத்தை அமுல்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/158388
  10. நீர்மூழ்கியில் இருந்தவர்கள் உடனடியாக உயிரிழந்திருப்பார்கள் - அமெரிக்க கடற்படை மருத்துவர் 23 JUN, 2023 | 12:19 PM டைட்டானிக் சிதைவுகளை நோக்கி பயணித்த நீர்மூழ்கியில் இருந்தவர்கள் உடனடியாகவே உயிரிழந்திருப்பார்கள் என அமெரிக்ககடற்படையின் முன்னாள் மருத்துவர் டேல்மோல் தெரிவித்துள்ளார். நீர்மூழ்கிக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்பதை கூட அவர்கள் அறிந்திருக்கமாட்டார்கள் என அவர்தெரிவித்துள்ளார். உள்ளே சிக்குண்டிருப்பது இன்னமும் மோசமான நிலையாக இருந்திருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எப்படியிருந்திருக்கும் என நீங்கள் நினைத்து பார்க்கவேண்டும்,மிகுந்த குளிராக காணப்படும் ஒக்சிசன் முடிவடையும் நிலை என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/158400
  11. டைட்டன் நீர்மூழ்கி 'வெடித்து' 5 பேரும் இறந்தது எப்படி? பட மூலாதாரம்,DAWOOD FAMILY/LOTUS EYE PHOTOGRAPHY/REUTERS 23 ஜூன் 2023, 01:56 GMT புதுப்பிக்கப்பட்டது 53 நிமிடங்களுக்கு முன்னர் 111 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலைக் காண்பதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்ற டைட்டன் நீர்மூழ்கி உள்ளுக்குள்ளேயே வெடித்து சிதறியதில் அதில் இருந்த 5 பேரும் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க கடலோரப்படை அறிவித்துள்ளது. டைட்டானில் ஓர் அழிவுகரமான வெடிப்பு நடந்திருப்பதாக அமெரிக்க கடலோரப்படை கூறுகிறது இது அமெரிக்கா, கனடா, பிரெஞ்சு நாடுகளின் குழுக்கள் கடந்த ஐந்து நாள்களாக பெரிய அளவிலான தேடல், மீட்புப் பணிகளை மேற்கொண்டு வந்தன. வியாழக்கிழமை மாலை அமெரிக்கக் கடலோரப்படை, டைட்டானிக் தளத்தைச் சுற்றியுள்ள குப்பைகளுக்கு மத்தியில் டைட்டனின் ஐந்து பெரிய துண்டுகளை கண்டுபிடித்ததாகக் கூறியது. இது நீர்மூழ்கியின் அழுத்த அறை வெடித்திருப்பதைக் காட்டுவதாகக் கூறியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள கடலோரப்படை, அவர்களின் உடல்கள் எப்போதாவது மீட்கப்படுமா என்பதை உறுதிப்படுத்த முடியாது என்று கூறியது. ரிமோட் மூலம் இயக்கப்படும் வாகனங்கள் (ROVs) தளத்தில் இருக்கும் என்றாலும், அடுத்த 24 மணிநேரத்தில் தேடுதல் பணி படிப்படியாக நிறுத்தப்படுகிறது. பட மூலாதாரம்,REUTERS ஓஷன்கேட் நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டது என்ன? அமெரிக்கக் கடலோரப்படையின் செய்தியாளர் சந்திப்பிற்கு முன்னதாக, டைட்டானை இயக்கும் ஓஷன்கேட் நிறுவனம் ஓர் அறிக்கையை வெளியிட்டது. "எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டாக்டன் ரஷ், ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான் தாவூத், ஹமிஷ் ஹார்டிங் மற்றும் பால்-ஹென்றி நர்ஜோலெட் ஆகியோரை துரதிர்ஷ்டவசமாக இழந்துவிட்டோம் என்று நாங்கள் இப்போது நம்புகிறோம்." என்று நீர்மூழ்கியை இயக்கும் ஓஷன்கேட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. "இந்த மனிதர்கள் உண்மையான ஆய்வாளர்கள், அவர்கள் தனித்துவமான சாகச உணர்வையும், உலகின் கடல்களை ஆராய்வதற்கும் பாதுகாப்பதற்கும் ஆழ்ந்த ஆர்வத்தையும் கொண்டவர்கள்.. இந்த துயரமான நேரத்தில் எங்கள் இதயங்கள் இந்த ஐந்து ஆன்மாக்களுடனும் அவர்களது குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருடனும் உள்ளன. அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். மீட்புப் பணியில் மிகவும் கடினமாக உழைத்த சர்வதேச சமூகத்தின் பல அமைப்புகளைச் சேர்ந்த எண்ணற்ற ஆண்களுக்கும் பெண்களுக்கும் முழு OceanGate குடும்பமும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது." என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,IFREMER/REUTERS/ OLIVIER DUGORNAY நீர்மூழ்கியில் பயணித்தவர்கள் யார் யார்? காணாமல் போன நீர்மூழ்கியில் 3 சுற்றுலாப் பயணிகள், ஒரு பைலட், ஒரு சுற்றுலா வழிகாட்டி ஆகிய 5 பேர் இருந்தனர். ஹாமிஷ் ஹார்டிங் - 58 வயதான இவர் பிரிட்டனைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர். சாகசப் பிரியரான இவர் விண்வெளிப் பயணத்துடன், பல முறை புவியின் தென் முனைக்கும் சென்று திரும்பியுள்ளார். ஷாஸாதா தாவூத் - 48 வயதான இவர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் கோடீஸ்வரர். சுலேமான் தாவூத் - ஷாஸாதா தாவூத்தின் மகன், 19 வயதேயான இவர் ஒரு மாணவர் பவுல் ஹென்றி நர்கோலெட் - 77 வயதான இவர் பிரெஞ்சு கடற்படையில் 'டைவர்' பணியில் இருந்தவர். டைட்டானிக் சிதைவுகளில் அதிக நேரம் ஆய்வு மேற்கொண்டவர், முதல் பயணத்தில் இடம் பெற்றவர் ஆகிய பெருமைகளைக் கொண்ட இவருக்கு மிஸ்டர் டைட்டானிக் என்ற பட்டப்பெயரும் உண்டு. ஸ்டாக்டன் ரஷ் - 61 வயதான இவர்தான் இந்த டைட்டானிக் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த ஓஷன் கேட் நிறுவனத்தின் நிறுவர் மற்றும், தலைமை செயல் அதிகாரி. பட மூலாதாரம்,NOAA VIA SPL எப்படி விபத்து நடந்தது? அமெரிக்க கடலோரப்படையின் ரியர் அட்மிரல் ஜான் மௌகரின் கூற்றுப்படி, அவர்கள் கண்டறிந்தது ஒரு "பேரழிவு வெடிப்பு" நடந்திருப்பதைக் காட்டுகிறது. ஏனென்றால், இரண்டு பாகங்களை அவர்கள் கண்டுபிடித்தனர். ஒன்று டைட்டனின் வால் கூம்பு மற்றும் மற்றொன்று அதன் தரையிறங்கும் சட்டகம் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. இவற்றை வைத்துப் பார்க்கும்போது கப்பல் சிதறியதாகக் தெரிய வருகிறது. இது ஏன் நடந்தது என்பதைக் கண்டுபிடிப்பதற்கு இதுவரை கிடைத்திருக்கும் பாகங்களைக் கொண்டு ஆய்வு செய்யப்படும் என்று மீட்புக் குழு நிபுணர்கள் கூறுகிறார்கள். "கருப்புப் பெட்டி எதுவும் இல்லை, எனவே கப்பலின் கடைசி நகர்வுகளை உங்களால் கண்காணிக்க முடியாது," என்று அவர்கள் கூறுகிறார்கள். அதனால் விசாரணையின் செயல்முறை விமான விபத்து போன்றதாக இருக்காது. புலனாய்வாளர்கள் கிடைத்திருக்கும் துண்டுகளை மேற்பரப்பிற்கு கொண்டு வந்ததும், அந்த கடைசி தருணங்களில் என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ளும் வகையில் அதை ஆய்வு செய்வார்கள். நீர்மூழ்கியின் பாகங்கள் நுண்ணோக்கின் கீழ் கவனமாக ஆராயப்படும். எந்த இடத்தில் வெடிப்பு ஏற்பட்டது, பிளவு எங்கே தொடங்கியது என்பது அதன் மூலம் கண்டுபிடிப்பார்கள். தந்தைக்காக நீர்மூழ்கியில் சென்ற மகன் பட மூலாதாரம்,ENGRO CORPORATION/DH GROUP நீர்மூழ்கியில் சென்று உயிரிழந்தவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த தந்தையும் மகனும் அடங்குவார்கள். பிரிட்டிஷ் தொழிலதிபர் ஷாஜதா தாவூத் பாகிஸ்தானின் பணக்கார குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்தவர். இவர் தனது மகன் சுலைமானுடன் நீர்மூழ்கியில் பயணம் செய்தார். தாவூத் தனது மனைவி கிறிஸ்டின் மற்றும் மகள் அலினாவுடன் தென்மேற்கு லண்டனில் உள்ள சர்பிட்டனில் வசித்து வந்தார். நீர்மூழ்கியில் செல்வதற்கு முன்பு இவ்ரகள் குடும்பம் கனடாவில் ஒரு மாத காலம் தங்கியிருந்தது. ஷாஜதா ஒரு பெரிய உர நிறுவனமான என்க்ரோ கார்ப்பரேஷன் என்ற பாகிஸ்தானின் கூட்டு நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்தார். அவர் தனது குடும்பத்தின் தாவூத் அறக்கட்டளை மற்றும் கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட SETI இன்ஸ்டிடியூட் உடன் பணிபுரிந்தார். இது ஏலியன்கள் பற்றி ஆராய்ச்சி செய்யும் நிறுவனம். ஷாஜதா மூன்றாம் சார்லஸ் அரசால் நிறுவப்பட்ட இரண்டு தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்பவராகவும் இருந்தார். அரண்மனையில் இருந்து அவருக்கு மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஷாஜதாவின் குடும்பத்தினர், அவர் "வெவ்வேறு இயற்கை வாழ்விடங்களை" ஆராய்வதில் ஆர்வமாக இருந்ததாகவும், இதற்கு முன்பு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஆக்ஸ்போர்டு யூனியன் ஆகிய இரண்டிலும் பேசியதாகவும் கூறினார். அவர் அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியாவிலும், இங்கிலாந்தில் உள்ள பக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்திலும் படித்தார். அவரது மகன் சுலேமான் கிளாஸ்கோவில் உள்ள ஸ்ட்ராத்க்லைட் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தார், அங்கு அவர் பல்கலைக்கழகத்தின் வணிகப் பள்ளியில் தனது முதல் ஆண்டை முடித்திருந்தார். நீர்மூழ்கிப் பயணம் குறித்து பயங்கரமானதாக உணர்ந்ததாகவும், எனினும் தனது தந்தையின் மகிழ்ச்சிக்காக அவருடன் சென்றதாகவும் சுலேமானின் அத்தை தெரிவித்திருந்தார். நீர்மூழ்கி வெடித்திருக்கும் என்பதை முன்னரே உணர்ந்தேன்: டைட்டானிக் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் பட மூலாதாரம்,GETTY IMAGES நீர்மூழ்கியை இழந்துவிடுவோம் என்பதை முன்கூட்டியே உணர்ந்துவிட்டதாக டைட்டானிக் திரைப்பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் பிபிசியிடம் கூறியுள்ளார். டைட்டானிக் கப்பலைக் காண கேமரூன் இதுவரை 33 முறை சென்று வந்திருக்கிறார். நீர்மூழ்கியின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது, அதன் வழி ஆகியவற்றைக் கொண்டு பேரழிவு நடந்திருக்கும் என்று முன்கூட்டியே உணர்ந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். "என்ன நடந்தது என்பதை நான் என் ஆழமாக உணர்ந்தேன். நீர்மூழ்கியின் மின்னணு அமைப்பு செயலிழந்து அதன் தகவல் தொடர்பு அமைப்பு துண்டிக்கப்பட்டது, அதன் டிராக்கிங் டிரான்ஸ்பாண்டர் செயலிழந்தது ஆகியவற்றை தெரிந்து கொண்டபோதே அது போய்விட்டது என்று தெரிந்தது" "ஆழ்கடலில் மூழ்கக்கூடிய குழுக்களில் உள்ள எனது தொடர்புகள் சிலருக்கு நான் உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். சுமார் ஒரு மணி நேரத்திற்குள் எனக்கு பின்வரும் உண்மைகள் கிடைத்தன. அவர்கள் வழிதவறினர். அப்போது 3500 மீட்டர் ஆழத்தில் இருந்தனர். 3800 மீட்டர் தரையை நோக்கிச் சென்றனர்" "அவர்களின் தொடர்பு சாதனங்கள் தொலைந்துவிட்டன, வழிசெலுத்தும் அமைப்பு தொலைந்துவிட்டது. நான் உடனடியாக சொன்னேன், ஒரு தீவிர பேரழிவு இல்லாமல் இவை இரண்டும் ஒரே நேரத்தில் செயலிழக்காது. அப்போது எனது நினைவுக்கு வந்தது 'வெடிப்பு'" https://www.bbc.com/tamil/articles/c97nq3r1qvno
  12. கதவு இல்லாத கழிவறை, 17 போல்ட் போட்டு வெளிப்புறத்தில் சீல் - டைட்டன் நீர்மூழ்கி பாதுகாப்பானதா? பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர்,மேட் மர்ஃபி பதவி,பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தற்போது கடலில் மாயமாகியிருக்கும் ’டைட்டன் நீர்மூழ்கி’ அதன் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னால், கப்பலின் துணைக் குழுவினரால் பயணத்திற்கான ஏற்பாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டன. ஆழ்கடலுக்குள் நீர்மூழ்கி இறங்குவதற்கு முன்னால், துணைக்குழுவினர் அதை வெளியிலிருந்து பூட்டி, பின் போல்ட் மூலம் மூடினர். பின் ஆழ்கடலுக்குள் இறங்கிய நீர்மூழ்கி, டைட்டானிக் கப்பல் சிதைந்து கிடக்கும் பகுதிக்குள் சென்றுகொண்டிருந்தபோது, அது தன்னுடைய தகவல் தொடர்பை இழந்தது. இந்த நீர்மூழ்கி ஓஷன்கேட் என்னும் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமானது. தற்போது காணாமால் போயிருக்கும் இந்த நீர்மூழ்கியைத் தேடும் பணி தீவிரமடைந்து வருகிறது. ’டைட்டன் நீர்மூழ்கி’ - ஒரு பார்வை கடல் மட்டத்திற்குக் கீழே 4000 மீட்டர் ஆழத்தை அடையும் திறன் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களில் ‘டைட்டன் நீர்மூழ்கியும்’ ஒன்று. இத்தகைய திறன்கொண்ட நீர்மூழ்கியை, ஓஷன்கேட் என்ற தனியார் நிறுவனம் சொந்தமாக வைத்திருக்கிறது. ‘டைட்டன் நீர்மூழ்கியை’ போலவே ‘சைக்ளாப்ஸ்’ என்ற நீர்மூழ்கியையும் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஓஷன்கேட் நிறுவனம் இயக்கி வருகிறது. ஆனால் ’டைட்டானிக் சேதத்தை’ பயணிகள் பார்வையிடுவதற்காகவே அந்த நிறுவனத்தால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டதுதான் இந்த ‘டைட்டன் நீர்மூழ்கி’. ’டைட்டன் நீர்மூழ்கி சுமார் 10,432 கிலோ எடையளவைக் கொண்டது. மேலும் இரண்டு குவிமாடம் கொண்ட கார்பன் ஃபைபர் மற்றும் டைட்டானிய மூடிகளோடு,13 செ.மீ அளவிற்கு ஏரோஸ்பேஸையும் இது கொண்டுள்ளது. இதனால் கடலுக்கு அடியில் சுமார் 4000 மீட்டர் (13,123 அடி) ஆழத்திற்கு டைட்டன் நீர்மூழ்கியால் செல்ல முடியும். 'டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்கள்' கடலின் மேற்பரப்பில் இருந்து 3,800 மீட்டர் ஆழத்தில் கிடக்கின்றன. டைட்டன் நீர்மூழ்கியால் அதைச் சென்றடைய முடியும். பட மூலாதாரம்,REUTERS டைட்டன் நீர்மூழ்கி எப்படி இயங்குகிறது? ’மற்ற நீர்மூழ்கி கப்பல்களைப் போல் அல்லாமல், டைட்டன் நீர்மூழ்கி குறைந்த அளவு சக்தியைக் கொண்டே இயங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதேநேரம், அது தன்னுடைய இயக்கத்தைத் தொடங்குவதற்கும், நிறுத்துவதற்கும் மற்றொரு தனி கப்பலின் துணையும், ஆதரவும் அதற்குத் தேவைப்படும்’ என அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு, டைட்டன் நீர்மூழ்கி முதன்முதலாக அதன் சோதனை ஓட்டத்தைத் தொடங்கியது. அதன் பின் 2021ஆம் ஆண்டு முதல் அதன் அதிகாரப்பூர்வ பயணம் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு மட்டும் டைட்டன் நீர்மூழ்கி 10 ஆழ்கடல் பயணங்களை மேற்கொண்டுள்ளது. ஆனால் இந்தப் பயணங்கள் அனைத்துமே டைட்டானிக் கப்பல் சிதைந்து கிடக்கும் பகுதிக்குச் சென்றவை அல்ல. கப்பல் ஏவுதளத்திலிருந்து புறப்படுவது முதல் மீண்டும் மேற்பரப்புக்குத் திரும்புவது வரை மணிக்கு சுமார் 4 கிமீ வேகத்தில் ‘டைட்டன் நீர்மூழ்கி’ பயணிக்கிறது. கப்பலுக்குள் வடிவமைப்பு எப்படியிருக்கும்? பட மூலாதாரம்,OCEANGATE இந்த நீர்மூழ்கியின் உட்பரப்பு மிகவும் குறுகலாகக் காணப்படுகிறது. வெறும் 670 செ.மீ x 280 செ.மீ x 250 செ.மீ (22 அடி x 9.2 அடி x 8.3 அடி) என்ற கணக்கில் மட்டுமே இதன் கொள்ளளவு இருக்கிறது. ஒரே நேரத்தில் விமானி உட்பட மொத்தம் 5 பேர் மட்டுமே இதில் பயணிக்க முடியும். ஆனால் இந்த அளவு மற்ற நீர்மூழ்கி கப்பல்களைவிட பெரியது எனக் கூறப்படுகிறது. கப்பலின் முன்புறத்தில் உள்ள குவிமாடத்தில் ஒரு பெரிய துவாரம் (porthole) இருக்கிறது. அதன் மூலம் நாம் கடலுக்குள் செல்லும் வழியைப் பார்க்க முடியும். இந்தத் துவாரத்தின் அளவு மற்ற எந்த நீர்மூழ்கிகளிலும் இருப்பதைவிட மிகப் பெரியது என அதன் நிறுவனமான ஓஷன்கேட் தெரிவிக்கிறது. அதேபோல் அத்தகைய ஆழத்தில், நிலைமைகள் மிகவும் குளிராக மாறும் என்பதால், இந்த நீர்மூழ்கியின் சுவர்கள் தொடர்ந்து தன்னைச் சூடாக்கிக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சுவர்களில் பொருத்தப்பட்டுள்ள விளக்குகள் மட்டுமே இந்த பயணத்தின்போது கிடைக்கும் ஒளியின் ஒரே ஆதாரமாக இருக்கின்றன. நீர்மூழ்கியின் முன்பக்கத்தில் பயணிகளுக்காக சிறியளவில் கழிவறையும் இருக்கிறது. பயணத்தின்போது ஒருவர் கழிவறையை உபயோகிக்க வேண்டுமென்றால், உள்ளே சென்று அங்கிருக்கும் திரைச்சீலைகளை இழுத்துவிட்டுக்கொள்ள வேண்டும். அப்போது மற்றவர்களுக்குத் தொந்தரவு இல்லாமல் இருப்பதற்காக கப்பலின் பைலட் மெல்லிய இசையை ஒலிக்க விடுவார். ஆனாலும் இத்தகைய அசாதாரண ஆழ்கடல் பயணத்திற்குத் தயாராகும்போது, பயணிகள் தங்களது உணவுப் பழக்கங்களில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என ஓஷன்கேட் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதேபோல் டைட்டானிக் கப்பல் சிதலமடைந்து கிடக்கும் பகுதியை அடைந்த பிறகு, அதன் காட்சிகளை ஒளிரச் செய்யும் வகையில் நீர்மூழ்கியின் வெளிப்புறத்தில் சக்தி வாய்ந்த விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,AMERICAN PHOTO ARCHIVE அதோடு அந்தக் காட்சிகளைப் பதிவு செய்வதற்காக 4K கேமராக்களும் அதில் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் கப்பலின் பாதையை நிர்ணயிக்க வெளிப்புற லேசர் ஸ்கேனரும், சோனாரும் பயன்படுத்தப்படுகின்றன. இந்தத் தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்படுவதை, நீர்மூழ்கிக்குள் இருக்கும் பெரிய டிஜிட்டல் திரையில், பயணிகளால் காண முடியும். டைட்டன் நீர்மூழ்கியில், 96 மணிநேரத்திற்குத் தேவையான ஆக்ஸிஜன் இருப்பு வைக்கப்பட்டிருக்கும். ஆனாலும் இந்தப் பயணத்தின்போது பயணிகளின் சுவாச வீதத்தில் மாறுபாடு ஏற்படலாம். நீர்மூழ்கியின் பெரும்பாலான உட்பகுதி "off-the-shelf technology"இல் வடிவமைக்கப்பட்டிருப்பதாக அதன் நிறுவனம் ஒப்புக்கொள்கிறது. இது இந்த கப்பலின் கட்டுமானத்தை சீரமைக்கவும், இதை எளிதான முறையில் இயக்கவும் பயன்படுகிறது எனவும் அந்நிறுவனம் குறிப்பிடுகிறது. டைட்டன் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறது? கடலின் ஆழத்திற்குச் செல்லும் இத்தகைய நீர்மூழ்கி கப்பல்களில் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை நம்மால் பயன்படுத்த முடியாது. அதற்குப் பதிலாக, ஒரு பிரத்யேக வகையில் செய்தி பரிமாரப்படும் அமைப்பு செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலமாக கடலின் மேற்பரப்பில் இருக்கும் குழுவுடன், நீர்மூழ்கிக்குள் இருப்பவர்கள் அறிவுறுத்தல்களைப் பெற முடியும். இந்த அறிவுறுத்தல்களின் அடிப்படையில், நீர்மூழ்கியின் பைலட் கப்பலைச் செலுத்துகிறார். வீடியோ கேம் கண்ட்ரோலர் போல இருக்கும் ஒரு சாதனத்தின் மூலம் அவர் நீர்மூழ்கியைத் தனது கட்டுப்பாட்டில் கடலுக்குள் செலுத்துகிறார். தற்போது தொலைந்து போயிருக்கும் டைட்டன் நீர்மூழ்கியின் விமானி ரஷ், கடந்த ஆண்டு சிபிஎஸ் செய்தி நிறுவனத்திடம் பேசும்போது, நீர்மூழ்கியை இயக்குவது அவ்வளவு சிரமமான காரியமல்ல என்று தெரிவித்திருந்தார். பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன? கடலின் ஆழத்தில் செல்லும்போது, அங்கு நிலவும் கடுமையான அழுத்தங்களை நீர்மூழ்கி கையாள வேண்டும். இதற்காக ’கப்பலின் ஒவ்வொரு நகர்வையும், உடனுக்குடன் கணிக்கும் கண்காணிக்கும் அமைப்பை’ ஏற்பாடு செய்துள்ளதாக ஓஷன்கேட் நிறுவனம் அதன் இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதேபோல் கடலுக்குள் நிலவும் மாறுபட்ட அழுத்த நிலைகளைக் கண்காணிப்பு செய்ய அதில் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. நீர்மூழ்கி கடலுக்குள் இறங்குவதற்கு முன்னால், கப்பலின் துணைக்குழு அதை வெளிப்புறத்திலிருந்து பூட்டுகிறது. மேலும் 17 போல்ட்களை கொண்டு வெளிப்புறத்தில் சீல் செய்கிறது. இத்தனை பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும், இந்தப் பயணத்தில் பல சவால்களும், ஆபத்துகளும் இருப்பதாக ஓஷன்கேட் நிறுவனம், அதன் விளம்பர வீடியோக்களிலேயே குறிப்பிட்டிருந்தது. பட மூலாதாரம்,DIRTY DOZEN PRODUCTIONS ஓஷன்கேட் நிறுவனத்தால் ‘டைட்டன்’ வடிவமைக்கப்பட்டபோது, நீர்மூழ்கி கப்பல்களைச் சோதனை செய்யும் வல்லுநர்கள் தங்களது ஒருமித்த கவலைகளைத் தெரிவித்திருந்தனர். அதன் வடிவமைப்பில் இருக்கும் ‘பேரழிவுக்கான சிக்கல்கள்’ குறித்து அவர்கள் அப்போதே எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதேபோல் ‘டைட்டன் நீர்மூழ்கியின்’ வடிவமைப்பு குறித்து பல தவறான கூற்றுகளை ஓஷன்கேட் நிறுவனம் கூறி வருவதாக ஏற்கெனவே சர்ச்சைகள் எழுந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. பயணத்திற்கு முன் பயிற்சிகள் அளிக்கப்பட்டதா? இந்தப் பயணங்களில் கலந்துகொள்ள ஆர்வமுடையவர்களுக்கு, ஆழ்கடல் பயணம் மேற்கொள்வதில் கடந்த கால அனுபவம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என ஓஷன்கேட் நிறுவனம் அதன் இணையதளத்தில் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் வேறு ஏதேனும் பயிற்சிகள் தேவைப்பட்டால், அது ஆன்லைனில் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் பயணிகள் நிச்சயம் 18 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும் எனவும், தங்களுக்கு வரையறுக்கப்பட்ட இடத்தில் நீண்டநேரம் அமர்ந்துகொள்ளவும், ஏணியில் ஏறுவதற்கும் திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டுமெனவும் ஓஷன்கேட் நிறுவனம் கூறுகிறது. மேலும் பயணத்தின்போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பயணிகளுக்குத் தெரியப்படுத்தப்படும் எனவும் ஓஷன்கேட் கூறுகிறது. அதேநேரம் "பயணத்தின்போது பயணிகள் எவ்வாறு ஈடுபட விரும்புகிறார்கள் என்பதை அவர்களே தேர்வு செய்யலாம்" எனவும் ஓஷன்கேட் கூறுகிறது. தகவல்தொடர்பு குழுக்களுடன் பணிபுரியவோ அல்லது கப்பலின் பைலட்டுக்கு வழிசெலுத்துவதில் உதவும் வாய்ப்பையோ பயணிகள் பெறலாம் எனவும் ஓஷன்கேட் குறிப்பிடுகிறது. https://www.bbc.com/tamil/articles/c721vgrzdn8o
  13. 'டைட்டன்' நீர்மூழ்கியில் ஆக்சிஜன் காலியான பிறகு உள்ளே இருப்பவர்களுக்கு என்ன ஆகும்? முழு விவரம் பட மூலாதாரம்,DAWOOD FAMILY படக்குறிப்பு, பாக். வம்சாவளி பிரிட்டிஷ் கோடீஸ்வரர் ஷாஸாதா தாவூத், அவரது மகன் சுலேமான் தாவூத் 21 ஜூன் 2023 புதுப்பிக்கப்பட்டது 45 நிமிடங்களுக்கு முன்னர் ஆழ்கடலில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலில் சிதைவுகளை நேரில் பார்க்கும் சுற்றுலா விபரீதத்தில் முடிந்திருப்பதே இன்று உலகம் முழுவதும் பேசப்படும் ஒன்றாக மாறியுள்ளது. நீர்மூழ்கி காணாமல் போய் 4 நாட்கள் கடந்துவிட்ட பிறகும் அதற்கு என்னவாயிற்று என்பது இன்னும் தெரியவரவில்லை. நீருக்கடியில் சத்தம் எழுந்ததைக் கண்டுபிடித்துள்ள தேடுதல் குழுவினர், அந்த பகுதியில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். வியாழக்கிழமை காலை நிலவரப்படி மீட்புப் பணி நடக்கும் இடத்தில் இருந்து கூடுதலாக சப்தம் கேட்பதாக அமெரிக்க கடலோரப்படை தெரிவித்துள்ளது. இந்த ஒலி காணாமல் போன நீர்மூழ்கியில் இருந்து வந்திருக்கலாம் என்று கருதப்பட்டாலும் இது உறுதி செய்யப்படவில்லை. தற்போது சுமார் 4 கி.மீ. ஆழத்தில் தேடும்பணி நடந்து வருகிறது. இன்னும் சில மணி நேரங்களுக்கே ஆக்சிஜன் இருக்கும் என்று மதிப்பிடப்படும் நிலையில், அதன் பிறகு நீர்மூழ்கியில் இருப்பவர்களுக்கு என்ன ஆகும் என்ற அச்சமும் எழுந்திருக்கிறது. பட மூலாதாரம்,REUTERS ஆக்சிஜன் காலியான பிறகு என்ன நடக்கும்? நீர்மூழ்கியில் ஆக்ஸிஜன் காலியான பிறகு உயிர்வாழ்வது ஒரு நபரின் வளர்சிதை மாற்றத்தைப் பொறுத்தது என்றும் சிலர் மற்றவர்களை விட நீண்ட காலம் வாழலாம் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள். நியூஃபவுண்ட்லாந்தில் உள்ள செயின்ட் ஜான்ஸில் உள்ள மெமோரியல் பல்கலைக்கழகத்தின் மருத்துவ நிபுணரான டாக்டர் கென் லெடெஸுடன் பிபிசி நிருபர் பேசியுள்ளார். டாக்டர் லெடெஸ், காணாமல் போன டைட்டன் நீர்மூழ்கியில் இருந்தவர்களுக்கான சில காரணிகளை விளக்கினார். "இது விளக்கை அணைப்பது போல் இல்லை, அது மலையில் ஏறுவது போன்றது," என்று அவர் கூறினார். "அவர்கள் ஆக்ஸிஜன் நுகர்வைக் குறைக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள். ஓய்வெடுப்பார்கள்.அவர்கள் முடிந்தவரை நிதானமாகவும் அமைதியாகவும் இருக்க முயற்சிப்பார்கள்." அதிகப்படியான செயல்பாடு, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும், அதிக கார்பன் டை ஆக்சைடை உருவாக்கும் என்று அவர் விளக்கினார். "தாழ்வுநிலையில் இருப்பது அவர்களுக்கு சாதகமாக இருக்கலாம்". என்கிறார் அவர். "அதிகமாகக் குளிர்ச்சியடைந்து சுயநினைவை இழந்தால், அதன் மூலம் அவர்கள் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பு உள்ளது. குளிர்ச்சியாக இருக்கும்போது இதயத் துடிப்பு மிகவும் மெதுவாக இருக்கும்," என்று அவர் கூறினார். டைட்டானிக் சுற்றுலா நீர்மூழ்கி எங்கே மூழ்கியது? காணாமல் போன டைட்டானிக் சுற்றுலா நீர்மூழ்கி 5 பேருடன் நியூபவுண்ட்லாந்து கடற்கரையில் செயின்ட் ஜான்ஸ் நகரில் தொடங்கியுள்ளது. பயணத்தை தொடங்கிய ஒரு மணி நேரம் 45 நிமிடங்களில் அந்த நீர்மூழ்கியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. அது செயின்ட் ஜான்ஸ் நகரில் இருந்து கிழக்கே 1,450 கி.மீ., தெற்கே 643 கி.மீ. தொலைவில் மூழ்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. நீருக்கடியில் சத்தம் - நீர்மூழ்கி விபத்தில் சிக்கியதா? நீர்மூழ்கி காணாமல் போன பகுதியில், நீருக்கடியில் இருந்து சத்தம் எழுந்ததை கனடிய கடற்படைக்குச் சொந்தமான பி-3 விமானம் கேட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. அமெரிக்க அரசின் உள்ளுடு தகவல் பரிமாற்றத்தை சுட்டிக்காட்டி, அது மோதும சத்தமாக இருக்கலாம் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த சத்தம் எப்போது, எவ்வளவு நேரத்திற்கு கேட்டது என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று சி.என்.என். தொலைக்காட்சி செய்தி கூறுகிறது. வியாழக்கிழமையன்று கூடுதலாக சப்தம் கேட்டதாகவும் மீட்புக்குழு தெரிவித்துள்ளது. படக்குறிப்பு, நீர்மூழ்கி காணாமல் போன பகுதி (வரைபடம்) தேடுதல் பணியில் யார், யார் ஈடுபட்டுள்ளனர்? அட்லாண்டிக் பெருங்கடலில் 19,650 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் கடற்படைகளுடன், ஆழ்கடல் ஆய்வு நிறுவனங்கள் பலவும் இந்த மீட்புப் பணியில் கைகோர்த்துள்ளன. காணாமல் போன நீர்மூழ்கியை கப்பல்கள், விமானங்கள் மூலம் கண்டுபிடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீர்மூழ்கி காணாமல் போன இடம் தொலைதூர பகுதி என்பதால் தேடுதல் பணி கடினமாக இருப்பதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. 30 மணி நேரத்திற்கான ஆக்சிஜன் மட்டுமே இருப்பு காணாமல் போன நீர்மூழ்கியில் உள்ள 5 பேரும் இன்னும் 30 மணி நேரத்திற்கு சுவாசிப்பதற்கான ஆக்சிஜன் மட்டுமே எஞ்சியிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தாமதமாகும் ஒவ்வொரு நிமிடமும் அவர்கள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகளை குறைத்துவிடும் என்பதால் விரைந்து அவர்களைக் கண்டுபிடிக்க தேடுதல் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த ஆழ்கடல் ஆய்வு நிறுவனமான மெகல்லனின் உதவியையும் ஓஷன்கேட் நிறுவனம் கேட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நீர் மூழ்கியில் யார்யார் பயணித்தனர்? காணாமல் போன நீர்மூழ்கியில் 3 சுற்றுலாப் பயணிகள், ஒரு பைலட், ஒரு சுற்றுலா வழிகாட்டி ஆகிய 5 பேர் இருந்தனர். ஹாமிஷ் ஹார்டிங் - 58 வயதான இவர் பிரிட்டனைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர். சாகசப் பிரியரான இவர் விண்வெளிப் பயணத்துடன், பல முறை புவியின் தென் முனைக்கும் சென்று திரும்பியுள்ளார். ஷாஸாதா தாவூத் - 48 வயதான இவர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் கோடீஸ்வரர். சுலேமான் தாவூத் - ஷாஸாதா தாவூத்தின் மகன், 19 வயதேயான இவர் ஒரு மாணவர் பவுல் ஹென்றி நர்கோலெட் - 77 வயதான இவர் பிரெஞ்சு கடற்படையில் 'டைவர்' பணியில் இருந்தவர். டைட்டானிக் சிதைவுகளில் அதிக நேரம் ஆய்வு மேற்கொண்டவர், முதல் பயணத்தில் இடம் பெற்றவர் ஆகிய பெருமைகளைக் கொண்ட இவருக்கு மிஸ்டர் டைட்டானிக் என்ற பட்டப்பெயரும் உண்டு. ஸ்டாக்டன் ரஷ் - 61 வயதான இவர்தான் இந்த டைட்டானிக் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த ஓஷன் கேட் நிறுவனத்தின் நிறுவர் மற்றும், தலைமை செயல் அதிகாரி. பயணத்திற்கு முன்பு பிரிட்டிஷ் கோடீஸ்வரர் கூறியது என்ன? பட மூலாதாரம்,SUPPLIED படக்குறிப்பு, நீர்மூழ்கியில் பயணம் செய்த பாக். வம்சாவளி பிரிட்டிஷ் கோடீஸ்வரர் ஷாஸாதா தாவூத்(மேலே), பிரிட்டிஷ் தொழிலதிபர் ஹாமிஷ் ஹார்டிங் கடந்த வார இறுதியில் ஹார்டிங் தனது சமூக வலைதளப் பக்கத்தில். டைட்டானிக் சிதைவுகளை நேரில் பார்க்கப் போவதாக பெருமையுடன் குறிப்பிட்டிருந்தார். ஆனாலும், நியூபவுண்ட்லாந்தில் 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் குளிர்காலம் மிக மோசமாக இருப்பதால் 2023-ம் ஆண்டில் அவரது பயணமே மனிதர்கள் அங்கே செல்லும் ஒரே பயணமாக இருக்கக் கூடும் என்றும் அவர் கூறியிருந்தார். பின்னர் அவரே, "வானிலை சற்று மேம்பட்டிருக்கிறது. ஆழ்கடல் பயணத்தை நாளை மேற்கொள்ளவிருக்கிறோம்" என்றும் குறிப்பிட்டுள்ளார். ஓஷன்கேட் நிறுவனம் எப்போது, யாரால் தொடங்கப்பட்டது? டைட்டானிக் சுற்றுலா நீர்மூழ்கி விபத்தால் உலகம் முழுவதும் உச்சரிக்கப்படும் பெயராக மாறியுள்ள ஓஷன்கேட் நிறுவனத்தை 2009ஆம் ஆண்டு, ஸ்டாக்டன் ரஷ் (Stockton Rush) என்பவர் தொடங்கினார். அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. 'பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் மெக்சிகோ வளைகுடா பகுதிகளில் இதுவரை 200க்கும் மேற்பட்ட ஆழ்கடல் பயணங்களை மேற்கொண்டுள்ளதாக' ஓஷன்கேட் நிறுவனத்தின் இணையதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டிய நிபுணர் பணிநீக்கம் காணாமல் போன நீர்மூழ்கியில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதை சுட்டிக்காட்டிய டேவிட் லாக்ரிட்ஜ் என்ற நிபுணரை 2018-ம் ஆண்டில் ஓஷன்கேட் நிறுவனம் பணிநீக்கம் செய்திருப்பது தெரியவந்துள்ளது. வாய்மொழியாக அவர் கூறிய விஷயங்களை உயர் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் முறைப்படி அறிக்கையாக தயார் செய்து ஆய்வுக்கு முன்வைத்துவிட்டார். இதற்குப் பரிசாக, அவரை பணிநீக்கம் செய்ததுடன், கம்பெனி ரகசியங்களை கசியவிட்டதாக வழக்கும் தொடர்ந்தது. அந்த வழக்கில் இரு தரப்பும் பின்னர் சமரசம் செய்து கொண்டன. பட மூலாதாரம்,DAVID LOCHRIDGE படக்குறிப்பு, பாதுகாப்புக் குறைபாடுகளை சுட்டிக்காட்டியதால் பணி நீக்கம் செய்யப்பட்ட நிபுணர் டேவிட் லாக்ரிட்ஜ் 'டைட்டன்' நீர்மூழ்கி பற்றி நீதிமன்ற ஆவணங்கள் என்ன சொல்கின்றன? ஓஷன்கேட் நிறுவனம் - நிபுணர் டேவிட் லாக்ரிட்ஜ் இடையிலான வழக்கில் நீதிமன்ற ஆவணங்களில் டேவிட் லாக்ரிட்ஜ் கண்டுபிடித்த பாதுகாப்புக் குறைபாடுகளாக சில விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் முக்கியமானது, தற்போது காணாமல் போயுள்ள டைட்டன் நீர்மூழ்கியின் முன்பக்க காட்சிப் பகுதி 4,265 அடி ஆழம் வரையே செல்ல சான்றளிக்கப்பட்டது. ஆனால், 12,500 அடி ஆழத்தில் கிடக்கும் டைட்டானிக் சிதைவுகளை நேரில் பார்க்க இந்த நீர்மூழ்கியில் தான் சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். அது தற்போது காணாமல் போயிருப்பது குறித்து டேவிட்டின் கருத்தை அறிய பிபிசி முயன்றது. ஆனால், அவர் பதிலளிக்க விரும்பவில்லை. அவர் பாதுகாப்புக் குறைபாடுகளை சுட்டிக்காட்டி அதே நீர்மூழ்கிதான், அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்டாக்டன் ரஷ்ஷூடன் காணாமல் போயுள்ளது. 'டைட்டன்' நீர்மூழ்கி பற்றி ஓஷன் கேட் நிறுவனம் கூறுவது என்ன? ஓஷன்கேட் நிறுவனம் ஆழ்கடலில் சுற்றுலாவுக்கென மூன்று நீர்மூழ்கிக் கப்பல்களை சொந்தமாக வைத்துள்ளது. அவற்றில் ‘டைட்டன்’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் மட்டுமே, கடலில் 13 ஆயிரம் அடி ஆழம் வரை செல்லக்கூடியது. இந்த நீர்மூழ்கிக் கப்பல் மிகவும் அதிநவீன முறையில், பாதுகாப்பானதாகத் தயாரிக்கப்பட்டுள்ளது என்று ஓஷன்கேட் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. 'டைட்டன்' நீர்மூழ்கியின் முதலிரு பயணங்கள் வெற்றி 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் ‘டைட்டானிக் கப்பல்’ மூழ்கியுள்ள பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்ள ‘டைட்டன்’ நீர்மூழ்கிக் கப்பல் மூலம் ஏற்கனவே இரண்டுமுறை பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த பயணங்கள் வெற்றியடைந்ததை தொடர்ந்து, தற்போது 2023ஆம் ஆண்டு ‘டைட்டானிக் கப்பலை’ பார்வையிடுவதற்கான அடுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.” என ஓஷன்கேட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. 'டைட்டன்' நீர்மூழ்கியின் செயல்திறன் என்ன? 10,432 கிலோகிராம் எடையும், 22 அடி நீளமும் கொண்ட டைட்டன் நீர்மூழ்கியால் 13,100 அடியாழம் வரை செல்ல முடியும், அதில் 5 பேருக்கு 96 மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் என்று ஓஷன்கேட் இணையதளம் கூறுகிறது. ஆழ்கடலில் டைட்டானிக் மூழ்கியுள்ள இடத்திற்குச் சென்று திரும்பி வர 8 மணி நேரம் ஆகும் என்று கூறப்படுகிறது. பட மூலாதாரம்,CBS NEWS டைட்டானிக் சுற்றுலா - 8 நாள் பயணத் திட்டம் ஆழ்கடலில் 12,500 அடி ஆழத்தில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலை நேரில் பார்க்கும் இந்த சுற்றுலா 8 நாட்கள் கொண்டது. அதற்கு கட்டணமாக ஒருவருக்கு இந்திய மதிப்பில் 2 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. ஆழ்கடலில் டைட்டானிக் கப்பல் மூழ்கிக் கிடக்கும் இடத்திற்கு போலார் பிரின்ஸ் என்ற கப்பலில் இந்த நீர்மூழ்கிகள் கொண்டுவரப்படும். ஓஷன்கேட் நிறுவனம் சுவாரஸ்ய விளம்பரம் "உங்களது வழக்கமான அன்றாட வாழ்க்கையில் இருந்து விடுபட்டு வெளியே வந்து உண்மையிலேயே அசாதாரணமான ஒன்றை கண்டடையும் வாய்ப்பு" என்று அந்நிறுவனம் கார்பன்-பைபர் நீர்மூழ்கியில் மேற்கொள்ளும் இந்த 8 நாள் சுற்றுலாவை விளம்பரப்படுத்துகிறது. இந்த பயணத்திற்குப் பிறகு, அடுத்த ஆண்டில் இதுபோன்ற மேலும் 2 சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ள அந்நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக அதன் இணையதளம் கூறுகிறது. டைட்டானிக் கப்பல் எப்போது, எப்படி விபத்தில் சிக்கியது? 1912-ம் ஆண்டு பிரிட்டனின் சவுதாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு மேற்கொண்ட கன்னிப் பயணத்தின் போதே, அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறையில் மோதி மூழ்கியது. பயணிகள், பணியாளர்கள் என அதில் இருந்த 2,200 பேரில் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துவிட்டனர். 1997-ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான டைட்டானிக் திரைப்படத்தின் மூலம் இந்த விபத்து உலகம் முழுவதும் அனைவரும் அறிந்த, ஆர்வத்தை தூண்டும் ஒன்றாகிவிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES டைட்டானிக் சிதைவுகள் எங்கே மூழ்கிக் கிடக்கின்றன? 'டைட்டானிக்' கப்பல் நியூ ஃபவுண்ட்லாந்தின் செயின்ட் ஜான்ஸ் நகருக்குத் தெற்கே சுமார் 700 கி.மீ. தொலைவில் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிக் கிடக்கிறது. ஆழ்கடலில் டைட்டானிக் கப்பலின் சிதைவுகள் இரு பாகங்களாக 2,600 அடி இடைவெளியில் கிடக்கின்றன. கடந்த மாதத்தில் ஆழ்கடல் வரைபடக் கலை மூலம் டைட்டானிக் சிதைவுகளின் முழுமையான டிஜிட்டல் வடிவம் உருவாக்கப்பட்டது. கப்பலின் பிரமாண்டம், அதன் ஒரு புரொபல்லரில் குறிப்பிடப்பட்டிருந்த வரிசை எண் போன்றவை அதன் மூலம் தெரியவந்தன. https://www.bbc.com/tamil/articles/c8095k86erko
  14. Video Game Controller மூலம் இயக்கப்படும் கப்பலில் குறைந்த அளவு ஆக்ஸிஜன் மீதம் இருப்பதாக நம்பப்படுகிறது. அதில் ஏற்கெனவே பயணம் செய்தவர் பிபிசியிடம் பேசுகையில், "நாங்கள் அனைவரும் ஆபத்துக்களை அறிந்திருந்தோம்" என்றார்.
  15. நீர்மூழ்கி மாயமான கடலடியிலிருந்து 'தட்டும் சத்தம்' உணரப்பட்டது Published By: SETHU 21 JUN, 2023 | 11:16 AM அத்திலாந்திக் சமுத்திரத்தில் சிறிய நீர்மூழ்கி காணாமல் போன கடலின் அடிப்பகுதியிலிருந்து 'தட்டும் சத்தம்' உணரப்பட்டுள்ளதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சோனார் தொழில்நுட்பம் மூலம் இந்த சத்தம் உணரப்பட்டுள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது. கனடாவின் P3 ரக விமானமொன்றின் மூலம் இச்சத்தம் உணரப்பட்டுள்ளது. 30 நிமிடங்களுக்கு ஒரு தடவை இச்சத்தம் கேட்டது அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட உள்ளக மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி சத்தம் உணரப்பட்டதை அமெரிக்க கரையோரகக் காவல்படையும் உறுதிப்படுத்தியுள்ளது. 6.5 மீற்றர் (21 அடி) நீளமானஇ டைட்டன் எனப் பெயரிடப்பட்ட கடந்த ஞாயிற்றுக்கிழ‍மை அதிகாலை அத்திலாந்திக் சமுத்திரத்துக்குள் இறங்க ஆரம்பித்து 2 மணத்தியாலங்களில் அதன் தாய்க்கப்பலுடனான ‍ தொடர்பை இழந்தது. டைட்­டானிக் கப்பல் சிதை­வு­களை பார்ப்­ப­தற்­காக சென்று கொண்‍டிருந்த நிலையில் இந்நீர்மூழ்கி காணாமல் போனது, இந்நீர்மூழ்கியில் பாகிஸ்தானின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவர், ‍அவரின் மகன், பிரித்தானிய கோடீஸ்வரர் ஒருவர் ஆகியோரும் உள்ளனர் அறிவிக்கக்கப்பட்டுள்ளது, 6.5 மீற்றர் (21 அடி) நீளமான, டைட்டன் எனப் பெயரிடப்பட்ட கடந்த ஞாயிற்றுக்கிழ‍மை அதிகாலை அத்திலாந்திக் சமுத்திரத்துக்குள் இறங்க ஆரம்பித்து 2 மணத்தியாலங்களில் அதன் தாய்க்கப்பலுடனான ‍ தொடர்பை இழந்தது. அத்திலாந்திக் சமுத்திரத்தில் 7600 சதுரமைல் பரப்பளவுள்ள பகுதியில் அமெரிக்க. கனேடிய கரையோர காவல்படை கப்பல்கள் தேடுதல் மேற்கொண்டுவந்தன. இத்தேடுதல் நடவடிக்கைகளில் தற்போது அமெரிக்க கடற்படை நிபுணர்களும் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். https://www.virakesari.lk/article/158210
  16. பகிர்வுக்கு நன்றி சுவி அண்ணா.
  17. டைட்டானிக் கப்பலை பார்க்க நீர்மூழ்கியில் கடலுக்குள் போன 5 பேரின் கதி என்ன? பட மூலாதாரம்,OCEANGATE கட்டுரை தகவல் எழுதியவர்,காரேத் ஈவான்ஸ் & லாரா கோஸி பதவி,பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஆழ்கடலில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலை நேரில் பார்க்கும் ஆவல் விபரீதத்தில் முடிந்திருக்கிறது. 5 பேருடன் ஆழ்கடலுக்குள் சென்ற சிறிய சுற்றுலா நீர்மூழ்கி திடீரென காணாமல் போயிருக்கிறது. அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் கடற்படையும், தனியார் நிறுவனங்களும் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளன. நீர்மூழ்கியில் 3 நாட்களுக்குத் தேவையான ஆக்சிஜன் மட்டுமே இருப்பில் உள்ளதாக மதிப்பிடப்பட்டிருப்பதால், 5 பேரையும் விரைந்து மீட்க வேண்டி மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காணாமல் போன நீர்மூழ்கியை கப்பல்கள், விமானங்கள் மூலம் கண்டுபிடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டைட்டானிக்கை நேரில் பார்க்க 8 நாள் சுற்றுலா பட மூலாதாரம்,GETTY IMAGES ஹாலிவுட் சினிமா வடிவில் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகிவிட்ட 'டைட்டானிக்' கப்பல் நியூ ஃபவுண்ட்லாந்தின் செயின்ட் ஜான்ஸ் நகருக்குத் தெற்கே சுமார் 700 கி.மீ. தொலைவில் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிக் கிடக்கிறது. நூறாண்டுகளுக்கும் மேலாக ஆழ்கடலில் ஆழ்ந்த துயில் கொண்டிருக்கும் டைட்டானிக் கப்பலை நேரில் பார்ப்பதற்கென தனியாக சுற்றுலாவே நடத்தப்படுகிறது. அத்தகைய நிறுவனங்களில் ஒன்று ஓஷன்கேட் (Oceangate). தற்போது, ஆழ்கடலில் காணாமல் போன சிறிய சுற்றுலா நீர்மூழ்கி அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான டைட்டன் என்ற நீர்மூழ்கி என்று கூறப்படுகிறது. ஒரு லாரி அளவிலான இந்த நீர்மூழ்கியில் 5 பேர் வரை பயணிக்க முடியும். அதில், வழக்கமாக 4 நாட்களுக்குத் தேவையான ஆக்சிஜன் இருப்பு வைக்கப்பட்டிருக்கும். ஆழ்கடலில் 12,500 அடி ஆழத்தில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலை நேரில் பார்க்கும் இந்த சுற்றுலா 8 நாட்கள் கொண்டது. அதற்கு கட்டணமாக ஒருவருக்கு இந்திய மதிப்பில் 2 கோடி ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அந்த நீர்மூழ்கியில் வழக்கமாக ஒரு பைலட், 3 சுற்றுலாப் பயணிகள், சுற்றுலா வழிகாட்டி ஆகிய 5 பேர் பயணிப்பார்கள். விபரீதத்தில் முடிந்த இந்த பயணம், நியூபவுண்ட்லாந்து கடற்கரையில் செயின்ட் ஜான்ஸ் நகரில் தொடங்கியுள்ளது. பயணத்தை தொடங்கிய ஒரு மணி நேரம் 45 நிமிடங்களில் அந்த நீர்மூழ்கியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. நீர்மூழ்கியில் உள்ள 5 பேரையும் பத்திரமாக மீட்க அனைத்து வாய்ப்புகளை பயன்படுத்தி வருவதாக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த ஓஷன்கேட் நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் கடற்படைகளுடன், ஆழ்கடல் ஆய்வு நிறுவனங்கள் பலவும் இந்த மீட்புப் பணியில் கைகோர்த்துள்ளன. காணாமல் போன நீர்மூழ்கி தனது பயணத்தை நியூபவுண்ட்லாந்தில் செயின்ட் ஜான்ஸ் நகரில் தொடங்கியிருந்த நிலையில், மீட்புப் பணிகள் மசாசூசெட்ஸ் மாகாணம் பாஸ்டன் நகரில் இருநது ஒருங்கிணைக்கப்படுகின்றன. நீர்மூழ்கியில் 96 மணி நேரத்திற்கு ஆக்சிஜன் இருக்க வாய்ப்பு "நீர்மூழ்கியில் 70 முதல் 96 மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் இருப்பில் இருக்கலாம்" என்று அமெரிக்க கடலோர காவல்படையின் ரியர் அட்மிரல் ஜான் மாவ்கர் தெரிவித்தார். 2 விமானங்கள், ஒரு நீர்மூழ்கி மற்றும் சோனார் மிதவைகளைக் கொண்டு, நீர்மூழ்கியை தேடும் பணிகள் நடைபெறுவதாகவும், நீர்மூழ்கி காணாமல் போன இடம் தொலைதூர பகுதி என்பதால் தேடுதல் பணி கடினமாக இருப்பதாகவும் அவர் கூறினார். மீட்புக் குழுவினர் இந்த பணியை தனிப்பட்ட சவாலாக எடுத்துக் கொண்டு, நீர்மூழ்கியில் உள்ள 5 பேரையும் உயிருடன் மீட்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,CBS NEWS நீர்மூழ்கியில் இருந்த பிரிட்டிஷ் கோடீஸ்வரர் கதி என்ன? ஆழ்கடலில் காணாமல் போன நீர்மூழ்கியில் பிரிட்டனைச் சேர்ந்த 58 வயது கோடீஸ்வரரான ஹாமிஷ் ஹார்டிங் என்பவரும் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்த வார இறுதியில் ஹார்டிங் தனது சமூக வலைதளப் பக்கத்தில். டைட்டானிக் சிதைவுகளை நேரில் பார்க்கப் போவதாக பெருமையுடன் குறிப்பிட்டிருந்தார். ஆனாலும், நியூபவுண்ட்லாந்தில் 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் குளிர்காலம் மிக மோசமாக இருப்பதால் 2023-ம் ஆண்டில் அவரது பயணமே மனிதர்கள் அங்கே செல்லும் ஒரே பயணமாக இருக்கக் கூடும் என்றும் அவர் கூறியிருந்தார். பின்னர் அவரே, "வானிலை சற்று மேம்பட்டிருக்கிறது. ஆழ்கடல் பயணத்தை நாளை மேற்கொள்ளவிருக்கிறோம்" என்றும் குறிப்பிட்டுள்ளார். நீர்மூழ்கிக்குள் இருந்த 5 பேர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது மட்டுமே தங்களது முழு கவனமும் இருப்பதாக ஓஷன்கேட் நிறுவனம் கூறியுள்ளது. "காணாமல் போன நீர்மூழ்கியுடன் தொடர்பை மீண்டும் ஏற்படுத்த தாங்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளில் பல அரசு அமைப்புகளும், தனியார் நிறுவனங்களும் செய்து வரும் உதவிகளுக்கு பெரிய அளவில் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்" என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. Twitter பதிவை கடந்து செல்ல காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு "உங்களது வழக்கமான அன்றாட வாழ்க்கையில் இருந்து விடுபட்டு வெளியே வந்து உண்மையிலேயே அசாதாரணமான ஒன்றை கண்டடையு ம் வாய்ப்பு" என்று அந்நிறுவனம் கார்பன்-பைபர் நீர்மூழ்கியில் மேற்கொள்ளும் இந்த 8 நாள் சுற்றுலாவை விளம்பரப்படுத்துகிறது. இந்த பயணத்திற்குப் பிறகு, அடுத்த ஆண்டில் இதுபோன்ற மேலும் 2 சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ள அந்நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக அதன் இணையதளம் கூறுகிறது. டைட்டானிக் நீர்மூழ்கி ஓஷன்கேட் நிறுவனம் தங்களிடம் 3 நீர்மூழ்கிகள் இருப்பதாக இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. அவற்றில் டைட்டன் நீர்மூழ்கி மட்டுமே டைட்டானிக் மூழ்கியுள்ள ஆழத்திற்குச் செல்லக் கூடியது. 10,432 கிலோகிராம் எடை கொண்ட அந்த நீர்மூழ்கியால் 13,100 அடியாழம் வரை செல்ல முடியும், அதில் 5 பேருக்கு 96 மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் இஇருப்பு வைக்கப்பட்டிருக்கும் என்று அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. போலார் பிரின்ஸ் என்ற போக்குவரத்து நீர்மூழ்கியே இந்த பயணத்தில் ஈடுபட்டதாக அதன் உரிமையாளர் பிபிசியிடம் தெரிவித்தார். ஆழ்கடலில் டைட்டானிக் மூழ்கியுள்ள இடத்திற்குச் சென்று திரும்பி வர 8 மணி நேரம் ஆகும் என்று கூறப்படுகிறது. டைட்டானிக் கப்பல் விபத்து டைட்டானிக் கப்பல் அது கட்டப்பட்ட காலத்தில் இருந்த உலகின் மிகப்பெரிய கப்பல் என்ற பெருமையைப் பெற்றது. 1912-ம் ஆண்டு பிரிட்டனின் சவுதாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு மேற்கொண்ட கன்னிப் பயணத்தின் போதே, அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறையில் மோதி மூழ்கியது. பயணிகள், பணியாளர்கள் என அதில் இருந்த 2,200 பேரில் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துவிட்டனர். 1985-ம் ஆண்டு அதன் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு டைட்டானிக் மீதான ஆர்வம் உலகெங்கும் அதிகரித்தது. ஆழ்கடலில் டைட்டானிக் கப்பலின் சிதைவுகள் இரு பாகங்களாக 2,600 அடி இடைவெளியில் கிடக்கின்றன. கடந்த மாதத்தில் ஆழ்கடல் வரைபடக் கலை மூலம் டைட்டானிக் சிதைவுகளின் முழுமையான டிஜிட்டல் வடிவம் உருவாக்கப்பட்டது. கப்பலின் பிரமாண்டம், அதன் ஒரு புரொபல்லரில் குறிப்பிடப்பட்டிருந்த வரிசை எண் போன்றவை அதன் மூலம் தெரியவந்தன. https://www.bbc.com/tamil/articles/cml11w828mmo
  18. Published By: DIGITAL DESK 3 20 JUN, 2023 | 11:24 AM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணம் கந்தர்மடம் பழம் வீதியில் உள்ள வைத்தியர்கள் இருவர் வீடு மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் திங்கட்கிழமை (20) இரவு 10.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர் சம்பவத்தில் நபர் எவருக்கும் பாதிப்பு இல்லை எனத் தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதுடன் தாக்குதல் நடத்தப்பட்ட வீட்டில் இருவர் வைத்தியர் என்று குறிப்பிட்ட பொலிஸார், காணி பிணக்கு ஒன்றை வைத்து இந்த தாக்குதலை மேற்கொண்டதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிய வருவதாகவும் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/158133
  19. 5 பேருடன் காணாமல் போன நீர்மூழ்கியில் 70 மணித்தியாலங்களுக்கே ஒக்சிஜன் Published By: SETHU 20 JUN, 2023 | 10:40 AM டைட்டானிக் கப்பல் சிதைவுகளை பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகள் பயணித் நீர்மூழ்கி காணாமல் போன நிலையில் அதனை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளில் அமெரிக்க மற்றும் கனேடிய கரையோர காவல்படையினர் ஆரம்பித்துள்ளனர். இந்நீர்மூழ்கியில் உள்ள ஒக்சிஜன் சுமார் 70 மணித்தியாலங்களுக்கே போதுமானதாக இருக்கும் என போதுமானதாக இருக்கும் கருதப்படுவதாக என அமெரிக்க அதிகாரிகள் ஒருவர் தெரிவித்துள்ளார். 6.5 மீற்றர் (21 அடி) நீளமான, டைட்டன் எனப் பெயரிடப்பட்ட இச்சிறிய நீர்மூழ்கியில் 5 பேர் பயணித்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாயைத் தளமாகக் கொண்ட அக் ஷன் ஏவியேஷன் நிறுவனத்தின் தலைவரான பிரித்தானிய கோடீஸ்வரர் ஹமீஷ் ஹார்டிங்கும் இந்நீர்மூழ்கியில் பயணித்தார் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஓஷன்கேட் எக்ஸ்பெடிசன்ஸ் எனும் நிறுவனத்தினால் இயக்கப்படும் இந்நீர்மூழ்கி கனடாவின் சென் ஜோன்ஸ் நகரிலிருந்து கடந்த 16 ஆம் திகதி பயணத்தை ஆரம்பித்தது, நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை சமுத்திரத்தின் அடிப்பகுதியை நோக்கி இந்நீர்மூழ்கி இறங்கத் தொடங்கியது. எனினும் 2 மணித்தியாலங்களின் பின்னர் இந்நீர்மூழ்கியுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மசாசூசெட்ஸ் மாநில கரையோரத்திலிருந்து சுமார் 900 மைல்கள் (1450 கிலோமீற்றர் தூரத்தில்) தேடுதல்களை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க கரையோர காவல்படை தெரிவித்துள்ளது, அதேவேளை. கனேடிய கரையோர காவல்படையும் விமானமொன்று சகிதம் மீட்புக்குழுவை அனுப்பியுள்ளது. அமெரிக்க, கனேடிய கடற்படையினர் மற்றும் வணிக ஆழ்கடல் பயண நிறுவனங்களும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவுகின்றன. டைட்டான் எனப் பெயரிடப்பட்ட இந்த நீர்மூழ்கி 4,000 மீற்றர் ஆழம்வரை செல்லக்ககூடியது என ஓஷன்கேட் எக்ஸ்பெடிசன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. டைட்டானிக் சிதைவுகளை பார்வையிடுவதற்கான 8 நாள் பயணத்துக்கு 250,000 டொலர்கள் அறவிடப்படடுகிறது. டைட்டடானிக் கப்பல் சிதைவுகளை நோக்கி சுழியோடுவத்றகான வாய்ப்பும் இதன்போது வழங்கப்படுகிறது. இந்நீர்மூழ்கியில் ‍6பொதுவாக மணித்தியாலங்களுக்குப் போதுமானது ஒக்சிஜனே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் அதில் சுமார் 70 மணித்தியாலங்களுக்குப் போதுமானது ஒக்சிஜனே எஞ்சி இருக்கும் தாம் கருதுவதாக அமெரிக்க கரையோர காவல்படை அதிகாரி றியர் அட்மிரல் ஜோன் மோகர் கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/158113
  20. பிபிசி மற்றும் மீடியாசோனா இணைந்து நடத்திய புலனாய்வில், உயிரிழந்த 25,000 ராணுவ வீரர்களின் விபரம் கண்டறியப்பட்டது. ஆனால் ரஷ்யா உறுதி செய்த எண்ணிக்கையை விட இது 4 மடங்கு அதிகம்.
  21. Published By: RAJEEBAN 19 JUN, 2023 | 07:51 PM டைட்டானிக்கின் சிதைவுகளை பார்வையிடுவதற்கு சுற்றுலாப்பயணிகளை அழைத்து செல்லும் நீர்மூழ்கியொன்று அட்லாண்டிக்கில் காணாமல்போயுள்ளது நீர்மூழ்கி காணாமல்போயுள்ள நிலையில் தேடுதல் மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன நீர்மூழ்கியில் எவராவது இருந்தார்களா எத்தனைபேர் பயணம் செய்தார்கள் போன்ற விபரங்கள் வெளியாகவில்லை. சிறியநீர்மூழ்கிகள் சுற்றுலாப்பயணிகளை கப்பலின் சிதைவை பார்ப்பதற்கு அழைத்துச்செல்வது வழமை. https://www.virakesari.lk/article/158103
  22. பெலாரசுக்கு அணு ஆயுதங்கள் அனுப்பி வைப்பு ; புடின் அறிவிப்பு Published By: DIGITAL DESK 3 17 JUN, 2023 | 11:32 AM பெலாரசுக்கு அணு ஆயுதங்களை அனுப்பி வைத்துள்ளதாக என ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார். உக்ரேனுக்கு எதிராக ரஷ்யா மேற்கொண்டு வரும் படையெடுப்பு ஓராண்டை கடந்தும் தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த ஆண்டு பெப்ரவரி இறுதியில் உக்ரேன் மீது இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா போர் தொடுத்தது. இந்நிலையில், செயின்ட்பீட்டர்ஸ்பர்க் நகரில் நடந்த சர்வதேச பொருளாதார கூட்டமைப்பின் கூட்டத்தில் ரஷ்ய ஜனாதிபதி புடின் பேசியதாவது, முதல் கட்டமாக அணு ஆயுதங்கள் நட்பு நாடான பெலாரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இப்போதைக்கு அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான அவசியம் இல்லை என்று கருதுகிறேன். ரஷ்யாவின் பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வரும்போது மட்டுமே இது பயன்படுத்தப்படும். இருப்பினும் பெலாரஸ் நாட்டிற்கு முதல்கட்டமாக அணு ஆயுதங்களை அனுப்பி வைத்துள்ளோம். முழுமையாக இந்த கோடை முடிவதற்குள் அனுப்பி வைப்போம். பெலாரசுக்கு அணு ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, மேற்குலகிற்கு ஒரு எச்சரிக்கை. இவ்வாறு புடின் பேசினார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர், ரஷ்யாவில் இருந்து அணு ஆயுதங்கள் வந்துள்ளதாக பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகஷென்கோ கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/157900
  23. இலங்கை தமிழர்களுக்கு 'நரகத்தை காட்டிய' தீவு: 20 மாதங்களாக தப்பிக்க முடியாமல் தவிப்பது ஏன்? பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, கப்பலின் மேல்தளத்தில் நாட்களை கடத்தும் புலம்பெயர் இலங்கை தமிழர்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,ஆலிஸ் கட்டி & சுவாமிநாதன் நடராஜன் பதவி,பிபிசி செய்திகள் 15 ஜூன் 2023, 06:33 GMT புதுப்பிக்கப்பட்டது 59 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு, புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு நரகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. இந்திய பெருங்கடல் பகுதியில் சிக்கிய மீன்பிடிப் படகிலிருந்து மீட்கப்பட்ட டஜன் கணக்கான புலம்பெயர்ந்தோர், அந்தப் பகுதியில் அமைந்துள்ள பிரிட்டனின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு தீவில் மாதக்கணக்கில் சிக்கித் தவித்து வருகின்றனர். இந்த வெப்பமண்டல தீவிலிருந்து அவர்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல விரும்பினாலும், அங்குள்ள அசாதாரண சட்ட நடைமுறைகள் அவர்களை தீவை விட்டு வெளியேற முடியாதபடி செய்துள்ளன. இந்த நிலை, அவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் உதவியற்றவர்களாக உணர்கின்றனர். இலங்கை தமிழர்களுக்கு நரகத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் அந்தத் தீவின் பெயர், டியாகோ கார்சியா. அங்கு சிக்கித் தவிக்கும் இலங்கை தமிழர்கள் (புலம்பெயர்ந்தோர்) அனைவரின் பெயர்களும் இந்தக் கட்டுரையில் மாற்றப்பட்டுள்ளன. திசைமாறிய பயணம் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ஒரு நாள் அதிகாலை வேளையில் மீன்பிடிப் படகு ஒன்று டியாகோ கார்சியா தீவுக்கு அருகில் சிக்கியது. பிரிட்டன்- அமெரிக்க ராணுவத்தின் ரகசிய தளம் அமைந்துள்ள அந்த தீவு, மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இருந்து பல நூறு மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது என்பதுடன், முன் அனுமதி பெறாத நபர்கள் அந்த பகுதிக்குள் பிரவேசிக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்த எல்லைக்குள் நுழைந்த மீன்பிடி படகு குறித்த விசாரணையில், அந்த தீவின் நிர்வாகம் உடனடியாக இறங்கியது. அந்த படகில் மொத்தம் 89 இலங்கை தமிழர்கள் இருந்ததும், அவர்கள் உள்நாட்டில் அனுபவித்த பல்வேறு இன்னல்களில் இருந்து தப்பிப் பிழைத்து அடைக்கலம் தேடி வேறு நாட்டிற்கு செல்வதும் தெரிய வந்தது. அத்துடன் அவர்கள் டியாகோ கார்சியா தீவில் தரையிறங்க விரும்பவில்லை என்பதும் தெரிந்தது. தஞ்சம் புகுவதற்காக கனடாவை நோக்கி அவர்கள் பயணித்து கொண்டிருந்த போது, மோசமாக மாறிய வானிலையும், படகின் இன்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறும் அவர்களின் பயணத்தை திசைத் திருப்பின. படகு ஆபத்தில் சிக்கியதால், நாங்கள் கரை ஒதுங்க அருகில் ஏதேனும் பாதுகாப்பான இடம் கிடைக்குமா என்று தேட ஆரம்பித்தோம். “அப்போது சிறிது தொலைவில் மெல்லிய வெளிச்சம் தென்படவே, டியாகோ கார்சியா தீவை நோக்கி பயணித்தோம்” என்று படகில் இருந்த ஒரு நபர் பிபிசியிடம் கூறினார். பிரிட்டன் கடற்படை கப்பல், படகை பத்திரமாக கரை ஒதுங்க செய்தது. மேலும் அதில் இருந்த அனைவரும் ஓர் தற்காலிக இடத்தில் தங்கவைக்கப்பட்டனர். 20 மாதங்களுக்கு முன் இந்த சம்பவம் நிகழ்ந்தது. “ஆரம்பத்தில் படகின் இயந்திரத்தை பழுது பார்க்கும் வாய்ப்பு குறித்து மட்டும் ஆராய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், புலம் பெயர்ந்த குழுவினர், டியாகோ கார்சியாவில் இருந்து வேறொரு நாட்டிற்கு தஞ்சம் புகுவதற்கு தேவையான முயற்சிகளை எடுக்க தங்களை வலியுறுத்தலாம் என்ற அனுமானத்தையும் நிராகரிக்க முடியாது” என்றும் தீவின் அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகளின் அனுமானம் அடுத்த நாளே நிஜமானது. தீவில் தஞ்சம் அடைந்திருந்த இலங்கை தமிழர்கள், அங்கிருந்த பிரிட்டிஷ் கடற்படை தளபதியிடம் ஓர் கடிதத்தை தந்தனர். அதில், “உள்நாட்டில் கடும் கொடுமைகளுக்கு ஆளாகி வந்ததால், 18 நாட்களுக்கு முன் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இருந்து இந்தப் பயணத்தை தொடங்கினோம்; நாங்கள் பாதுகாப்பான ஒரு நாட்டிற்கு செல்ல விரும்புகிறோம்” என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2009 இல் இலங்கை ராணுவத்தினருடன் நடைபெற்ற உள்நாட்டு போரில் வீழ்த்தப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக கூறியதன் விளைவாக தாங்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டதாக அவர்களில் பலர் கூறினர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் சிலர் குற்றம்சாட்டினர். பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, மாராயன் என்று பெயரிடப்பட்ட விசைப் படகில் கனடா நோக்கி பயணிக்கும் இலங்கை தமிழர்கள் முதல்முறையாக நிகழ்ந்த சம்பவம் இதனிடையே, வெளிநாட்டு பிராந்தியங்களுக்கான பிரிட்டன் இயக்குநரான பால் கேண்ட்லர் வெளியிட்டிருந்த குறிப்பில், “ பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் பகுதியில் (BIOT) இதுபோன்றதொரு தஞ்சம் கோரும் சம்பவம் முதன்முறையாக நிகழ்ந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் இலங்கை தமிழர்கள் குழுவின் வருகையை “எதிர்பாராத வருகை” எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சம்பவம் குறித்து பிரிட்டன் அரசாங்கம் நன்கு அறிந்துள்ளது என்றும், நிலைமைக்கு விரைந்து தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றும் பால் கேண்ட்லர் தமது குறிப்பில் தெரிவித்திருந்தார். “டியாகோ கார்சியா தீவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை தமிழர்கள் குழு தற்போதைக்கு வெளி உலகுடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருக்கின்றனர். ஆனால் நாளடைவில் இந்தச் செய்தி பரவ வாய்ப்புள்ளது” என்றும் கேண்டலரின் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. நரகமாக மாறிய தீவு இதற்கிடையே, புகலிடம் கோரி எதிர்பாராத விதமாக தீவிற்கு வந்தவர்களுக்கு, தங்களின் யதார்த்த சூழ்நிலை போகப்போக புரிய ஆரம்பித்தது. “ஆரம்பத்தில் இங்கு நான் மகிழ்ச்சியாகவும். உயிர் தப்பியதாகவும் உணர்ந்தேன். முகாமில் உணவு அளிக்கப்பட்டது. அதுநாள் வரை அனுபவித்து வந்த கொடுமைகளில் இருந்து விடுபட்டதாகவும் உணர்ந்தேன்” என்று முகாமில் இருந்த லெக்ஷனி என்ற இலங்கை தமிழரான பெண் ஒருவர் கடந்த மாதம் பிபிசியிடம் கூறி இருந்தார். ஆனால் தங்களுக்கு அடைக்கலம் அளித்த இந்த வெப்ப மண்டல தீவு விரைவில் நரகமாக மாறியது என்றும் அவர் கூறினார். தன்னுடன் படகில் பயணித்து, தீவு முகாமில் தங்கியிருந்த ஒரு நபரால் தான் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் என்று அந்த பெண் கண்ணீர் மல்க தெரிவித்தார். “அப்போது நான் கதறி அழுதேன். ஆனால் யாரும் உதவிக்கு வரவில்லை” என்று லெக்ஷனி கூறினார். தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து, அதிகாரப்பூர்வமாக புகார் அளிக்க விரும்பியதாக கூறிய அவர், ’ஆனால், பாலியல் வன்கொடுமையின் போது தான் உடுத்தியிருந்த துணியை துவைத்து விட்டதன் விளைவாக ஆதாரத்தை சேகரிப்பது கடினம் என்று தான் அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். தம்மை பாலியல் வன்புணர்வு செய்த நபரை வேறு கூடாரத்திற்கு மாற்ற வேண்டும் என்ற தனது கோரிக்கையை அதிகாரிகள் ஏற்கும் வரை, கிட்டத்தட்ட ஒரு வாரம் அந்த நபருடனே ஒரே கூடாரத்தில் தாமும் தங்கியிருக்க வேண்டியிருந்தது என்று பரிதாபமாகக் கூறினார் லெக்ஷனி. ஆனால் பிரிட்டன் அரசு மற்றும் பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் பிராந்திய நிர்வாகங்கள் (பிஐஓடி), இந்த குற்றச்சாட்டு தொடர்பான கோரிக்கைகளுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. பட மூலாதாரம்,GOOGLE EARTH தற்கொலை முயற்சி “முகாமில் நிலவிய சூழல் காரணமாக, தாங்கள் அல்லது தங்களுக்கு தெரிந்தவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகினர். அதன் விளைவாக அவர்கள் தற்கொலைக்கு முயன்றனர் அல்லது தங்களை தாங்களே காயப்படுத்தி கொண்டனர். கூர்மையான ஆயுதங்களை விழுங்கியதன் விளைவாக சிலர் மூச்சுத் திணறலுக்கும் ஆளாகினர்” என்று முகாமில் இருந்த லெக்ஷனி மற்றும் சிலர் பிபிசியிடம் தெரிவித்தனர். முகாமிற்குள் குறைந்தது 12 தற்கொலை முயற்சிகள் நடந்திருப்பது குறித்தும், குறைந்தபட்சம் இரண்டு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் எழுந்தது தொடர்பாகவும் நிர்வாகிகள் நன்கு அறிவார்கள் என்று புலம்பெயர்ந்தோர் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டுகின்றனர். “நாங்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சோர்வாக உணர்கிறோம். இங்கு நாங்கள் உயிர்பற்ற ஓர் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம். என்னை நான் நடைப்பிணமாக உணர்கிறேன். இதன் விளைவாக இரண்டு முறை என்னை நானே காயப்படுத்திக் கொண்டேன்” என்று பிபிசியிடம் கூறினார் டியாகோ கார்சியா தீவு முகாமில் இருக்கும் மற்றொரு புலம்பெயர்ந்த நபரான விதுஷன். பாதுகாப்பு குறித்த தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து, தான் அனைத்து நம்பிக்கையையும் இழந்து விட்டதாகவும், இத்துடன் வாழ்க்கையை முடித்து கொள்ள முடிவு செய்ததாகவும் கூறினார் முகாமில் இருந்த மற்றொரு நபரான ஆதவன். தமது கணவரும் தற்கொலைக்கு முயற்சித்ததாக, சாந்தி என்ற மற்றொரு பெண் கூறினார். கூண்டில் அடைக்கப்பட்ட ஒரு விலங்கை போல நான் இங்கு வாழ விரும்பவில்லை என்றும் அவர் மனம் நொந்து கூறினார். அதிகாரிகள் மிரட்டல் 2021 இல் இலங்கை ராணுவ வீரர்களால் பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தலுக்கு தான் ஆளாகி இருந்ததாக குற்றம்சாட்டி, மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவேன் என்று முகாமில் இருந்த ஓர் அதிகாரி மிரட்டினார். அதன் விளைவாக தான் தற்கொலைக்குத் தூண்டப்பட்டேன் என்று லக்ஷனி குற்றம்சாட்டினார். அவரது இந்த குற்றச்சாட்டு குறித்து, தீவில் உள்ள இலங்கை தமிழர்களின் முகாமிற்கு பாதுகாப்பு அளித்துவரும் பிரிட்டன் அரசு மற்றும் ‘G4S’ தனியார் நிறுவன நிர்வாகங்கள் பதிலளிக்க மறுத்து விட்டன. தீவு முகாமில் உள்ள புலம்பெயர்ந்தவர்களை தங்களது அதிகாரிகள் எல்லா நேரங்களிலும் கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடத்தி வருகின்றனர் என்று G4S நிறுவன நி்ர்வாகம் தெரிவித்திருந்தது. பிஐஓடி முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோரின் நலன் மற்றும் பாதுகாப்பு மிகவும் முக்கியம். தாங்கள் தரக்குறைவாக நடத்தப்படுவதாக அவர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் தீவிரமாக கருத்தில் கொள்ளப்பட்டு, அவை குறித்து முழுமையாக விசாரிக்கப்படும் என்று பிரிட்டன் அரசின் செய்தித் தொடர்பாளர் உறுதியளித்திருந்தார். பிஐஓடி நிர்வாகம் அங்கு முகாமில் உள்ளவர்களுக்கு சிறந்த மருத்துவ உதவிகளை வழங்கி வருவதாகவும் அவர் கூறினார். தீவு முகாமில் உண்ணாவிரத போராட்டங்களும் நடந்துள்ளன என்றும், இதில் குழந்தைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் அரசு வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, டியாகோ கார்சியா தீவில் அமைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தவர்கள் அடைக்கப்பட்டுள்ள முகாம் பகுதி செல்ஃபோன்கள் பறிமுதல் முகாமில் இருந்த புலம்பெயர்ந்தோரின் செல்ஃபோன்கள் மற்றும் தொலைபேசி வசதிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்களுக்கு மருத்துவ வசதி வேண்டாம் என்று தனிநபர்கள் எழுத்துபூர்வமாக விருப்பத்தை தெரிவிக்காத பட்சத்தில், அவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மருத்துவ சிகிச்சைகளும் திரும்பப் பெறப்பட்டன என்று முகாமில் வசிக்கும் புலம்பெயர்ந்தோர் தரப்பு வழக்கறிஞர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் குற்றம்சாட்டி இருந்தார். இந்த குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் திட்டவட்டமாக மறுத்தது பிஐஓடி நிர்வாகம். ஓர் உண்ணாவிரத போராட்டத்தின் போது பாதுகாப்பு காரணங்களுக்காக முகாமில் இருந்து கூர்மையான ஆயுதங்கள் அகற்றப்பட்டன. இதேபோன்று, முகாமில் இருப்பவர்கள் தங்களை தாங்களே காயப்படுத்தி கொள்வதை தடுக்கும் விதத்தில்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்று பிஐஓடி நிர்வாகம் விளக்கம் அளித்தது. பட மூலாதாரம்,GOOGLE மொரிஷியஸ் இடமிருந்து கைமாறிய தீவு ராணுவ தளமாக திகழும் டியாகோ கார்சியா தீவு, புகலிடம் கோரி வருவோரை தங்க வைக்கும் இடம் இல்லை என்பதை அனைவரும் ஒப்புக் கொள்ளலாம். இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள டியாகோ கார்சியா உள்ளிட்ட தீவுகளை உள்ளடக்கிய சாக்கோஸ் தீவை தனது காலனி ஆதிக்கத்தில் இருந்த மொரிஷியஸ் வசமிருந்து 1965 இல் பிரிட்டன் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக, டியாகோ கார்சியா தீவில் ராணுவ தளம் அமைப்பதற்காக அங்கிருந்து 1000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஆனால் ,1968 இல் மொரிஷியஸ் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றது. அதன்பின் இந்த தீவுகளை பராமரித்து வரும் மொரிஷியஸ் அரசு, இந்த தீவுகள் தங்களுக்கு சொந்தமானவை என்றும் உரிமை கொண்டாடி வருகிறது. ஐ.நா. நீதிமன்றமும் இந்த பிராந்தியத்தில் பிரிட்டன் ஆளுகை செலுத்தி வருவது சட்டவிரோதம் என்றும், இந்த நடவடிக்கை விரைவில் முடிவுக்கு வர வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. ஆனால், சாக்கோஸ் தீவுகள் விவகாரத்தில் சர்வதேச அழுத்தத்தை விரும்பாத பிரிட்டன், வெளிப்படையான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கடந்த ஆண்டு இறுதிவரை கூறி வந்தது. அமெரிக்காவின் ஆளுகை சில தசாப்தங்களாக ஆப்கானிஸ்தான் மற்றும் இராக்கின் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்த, அமெரிக்க போர் விமானங்கள் டியாகோ கார்சியா தீவில் உள்ள ராணுவ தளத்தை பயன்படுத்தி வருகின்றன. அத்துடன் பயங்கரவாதிகளாக சந்தேகிக்கப்படுபவர்களை அமெரிக்க ராணுவம் விசாரிக்கும் இடமாகவும் இத்தீவு திகழ்கிறது. டியாகோ கார்சியா தீவு முகாம் முன்பு, கொரோனாவால் பாதிக்கப்பட்ட தங்கள் நாட்டு ராணுவ வீரர்களை தனிமைப்படுத்தும் முகாமாக பயன்படுத்தப்பட்டு வந்தது என்று லண்டன் நீதிமன்றத்தில் பிரிட்டன் அரசு தெரிவித்திருந்தது. தற்போது இந்த முகாம், புலம்பெயர்ந்தவர்களுக்கான முகாமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. முகாம் பகுதியைச் சுற்றி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. முகாமிற்குள் அடிப்படை மருத்துவ வசதிகள் மற்றும் சிற்றுண்டி சாலை (கேன்டீன்) வசதியும் உள்ளது. கூண்டு கிளிகள் ஆனால், “ நாங்கள் கூண்டில் அடைபட்ட கிளிகளாய், எவ்வித சுதந்திரமும் இன்றி இங்கு வாழ்ந்து வருகிறோம்”என்கிறார் முகாமில் உள்ள சாந்தி. ஓராண்டுக்கு முன்பு வரை முகாமில் இருப்போருக்கு அடிப்படை கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வந்தது. ஆனால் அந்த நேரத்தில் எலிகளின் தொல்லை காரணமாக வகுப்புகள் பெரும்பாலும் முகாமிற்கு வெளியே திறந்த வெளியில் தான் நடைபெறும் என்று முகாமில் வசிப்போர் தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். முகாமில் இருந்த புலம்பெயர்ந்தோர்களில் சிலர் தங்களது கோரிக்கையை கைவிட்டு அல்லது நிராகரிக்கப்பட்ட பின்னர் வீடு திரும்பியுள்ளனர். இன்னும் பலர் தஞ்சம் கோரி, பிரான்ஸ் நாட்டின் ஆளுகைக்கு உட்பட்ட இந்தியப் பெருங்கடல் தீவான ரீயூனியனுக்கு சென்றுள்ளனர் என்று தீவு முகாமில் இருக்கும் இலங்கை தமிழர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர். தற்போது மீதமுள்ள 60 இலங்கை தமிழர்கள் தங்களின் தலைவிதியை தீர்மானிக்கும் முடிவுக்காக டியாகோ கார்சியா தீவு முகாமில் இன்னமும் காத்திருக்கின்றனர். சர்வதேச சட்டங்கள் மீறப்படுகிறதா? அகதிகளை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பான சர்வதேச சட்டங்களில் பிரிட்டன் கையெழுத்து இட்டுள்ளது. ஆனாலும், இந்த சட்டங்கள் பிஐஓடி பிராந்தியத்திற்கு பொருந்தாதது. ஏனெனில் இந்த பிராந்தியம் அரசியலமைப்பு ரீதியாக வேறுபட்டது மற்றும் பிரிட்டனில் இருந்து தனியானது என்று பிரிட்டன் அரசு கூறி வருகிறது. பல்வேறு இன்னல்களை அனுபவித்து, மனிதாபிமானமற்ற முறையிலும் நடத்தப்படும் நாட்டில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் அதே நாட்டிற்கு திருப்பி அனுப்பக் கூடாது என்ற கருத்தின் அடிப்படையில், டியாகோ கார்சியா தீவு முகாமில் உள்ள இலங்கை தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்புவதா அல்லது பாதுகாப்பான மூன்றாவது நாட்டிற்கு அனுப்புவதா என்பதை தீர்மானிக்க தனி செயல் திட்டம் நிறுவப்பட்டுள்ளது. ஆனால் இந்த செயல் திட்டம், அகதிகளுக்கான சட்டத்திற்கு சவால் விடுவதாக இருப்பதாக கூறும் வழக்கறிஞர் டிசா கிரிகோரி, இது அடிப்படையில் நியாயமற்ற செயல் என்றும் விமர்சித்துள்ளார். லண்டனில் அவர் பணிபுரியும் லீ டே நிறுவனம், புகலிடம் கோரி, டியாகோ கார்சியா தீவில் தவித்து வருபவர்கள் சார்பாக நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது. பாதுகாப்பான மூன்றாவது நாட்டை பிரிட்டன் அரசாங்கம் இன்னும் அடையாளம் காணாததால் முகாமில் இருப்பவர்களின் வாழ்க்கை நகரமாக்கப்பட்டுள்ளது என்று டிசா கிரிகோரி குற்றம்சாட்டியுள்ளார். இதற்கிடையே, பிஐஓடி நிர்வாகம், அதன் சட்டத்திற்கு உட்பட்டும், சர்வதேச சட்ட விதிகளுக்கு ஏற்பவும் தீவு முகாமில் உள்ள புலம்பெயர்ந்தோரின் பாதுகாப்பு கோரிக்கைகள் பரிசீலித்து வருகிறது என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. ஐநா கவலை டியாகோ கார்சியாவில் உள்ள முகாமில் நிலவும் மோசமான சுகாதார நிலைமை தொடர்பான அறிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகளின் அகதிகள் அமைப்பின் (UKHCR) பிரிட்டன் அலுவலகம் பிபிசியிடம் கவலை தெரிவித்துள்ளது. “பிரிட்டனின் கட்டுப்பாட்டில் உள்ள தீவில் தஞ்சம் அடைந்துள்ளவர்களின் நலன்களை உறுதி செய்வதற்கான அனைத்து அம்சங்களும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். அத்துடன் இவர்களின் பாதுகாப்பை பிரிட்டன் அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரிட்டன் வழக்கறிஞரும், தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளருமான இமைய்லி மெக்டோனல் அண்மையில் வலியுறுத்தி இருந்தார். பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவுக்கு அனுப்பப்பட்ட 5 புலம்பெயர்ந்தோர். இவர்களில் இருவர் டியாகோ கார்சியா தீவிற்கே மீண்டும் திரும்பினர் பிரிட்டன் அரசின் அதிரடி முடிவு டியாகோ கார்சியாவில் தஞ்சம் புகுந்துள்ளவர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொள்ள போவதில்லை என்று பிரிட்டன் முடிவு செய்துள்ளதாக வழக்கறிஞர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். இந்த தீவில் தஞ்சம் புகுந்த தமிழர்களில் மூன்று பேர் தற்போது மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தற்கொலை முயற்சி மற்றும் தங்களை தாங்களே காயப்படுத்தி கொண்ட குற்றச்சாட்டுகளின் காரணமாக, அவர்கள் டியாகோ கார்சியாவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். என்று பிரிட்டன் விளக்கம் அளித்துள்ளது. ருவாண்டாவுக்கு மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ள மூன்று பேரில் ஒருவருக்கு கடந்த மாதம் பிஐஓடி நிர்வாகம் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது. பிபிசியின் பார்வைக்கு கிடைத்துள்ள அந்த கடிதத்தில், “ ருவாண்டாவில் மருத்துவத்துக்கான செலவுடன், அங்கு தனியார் விடுதிகளில் தங்குவதற்கான செலவையும் பிஐஓடி நிர்வாகம் ஏற்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “இந்த யோசனை உங்களுக்கு திருப்தி அளிக்காதபட்சத்தில், நீங்கள் மீண்டும் டியாகோ கார்சியாவுக்கு திரும்புவதற்கு ஏற்பாடு செய்யப்படும். தற்போதைய சூழலில் உங்களை வேறு நாட்டிற்கு அனுப்ப வழிகள் எதுவும் இல்லை” என்று அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, பாதுகாப்பான மூன்றாவது நாட்டிற்கு தங்களை அனுப்பும்படி கோரியிருந்த இத்தீவில் தஞ்சம் அடைந்துள்ள நான்கு பேரின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இதுதொடர்பாக கோரிக்கையாளர்களில் ஒருவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன் பிஐஓடி நிர்வாகம் அனுப்பியிருந்த கடிதம் பிபிசியின் கைக்கு கிடைத்துள்ளது. அதில், “உங்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீடிக்கும் இழுபறி இந்த விவகாரம் தொடர்பாக பிபிசிக்கு அண்மையில் கிடைத்துள்ள அறிக்கையில், “டியாகோ கார்சியாவில் தஞ்சம் அடைந்துள்ள புலம்பெயர்ந்தோரின் தற்போதைய நிலைமையை மாற்ற, நீண்ட கால தீர்வு காணும் நோக்கில், பிஐஓடி நிர்வாக்கத்துடன் பிரிட்டன் அரசு அயராது உழைத்து வருகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால்,டியாகோ கார்சியா தீவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை தமிழர்களை, பாதுகாப்பான மூன்றாவது நாட்டிற்கு அனுப்புவதற்கான தெளிவான காலக்கெடு வரையறுக்கப்படாமல் உள்ளதும், இந்த விவகாரத்தில் உள்ள சட்ட சிக்கலும் இவர்களின் நிலையை தொடர்ந்து இழுபறியாகவே வைத்திருக்கக்கூடும். “20 மாதங்கள் நீண்ட காத்திருப்புக்கு பிறகு நாங்கள் அனைவரும் நம்பிக்கை இழந்துவிட்டோம்” என்று விரக்தியுடன் கூறுகிறார் டியாகோ கார்சியா தீவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை தமிழர் ஒருவர். https://www.bbc.com/tamil/articles/cy97ng3k8nwo
  24. மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் சிம் அட்டையை வழங்க முடியாது – நீதிமன்றம் அறிவிப்பு தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், அவர் பயன்படுத்திய தொலைபேசி இலக்கம் அடங்கிய சிம் அட்டையை அவரது மனைவியிடம் வழங்குவதற்கு உத்தரவிட முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தினேஷ் ஷாப்டர் பயன்படுத்திய தொலைபேசி இலக்கம் அடங்கிய சிம் அட்டையை தமக்கு வழங்க உத்தரவிடுமாறு அவரது மனைவி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். குறித்தக் கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய இந்த உத்தரவை பிறப்பித்தார். அத்துடன், தினேஷ் ஷாப்டர் பயன்படுத்திய கையடக்க தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புடைய சிம் அட்டையை அவரது மனைவியிடம் வழங்க முடியுமா என்பது தொடர்பில் அடுத்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்திற்கு அறியப்படுத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை நாளை மறுதினம் வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 8 ஆம் திகதி தினேஷ் ஷாப்டரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டதுடன் இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக சடலம் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/258221
  25. வலுக்கும் உக்ரைன் ரஷ்யப்போர் - ரஷ்யா இழந்த மிக முக்கிய தளபதி! நாளுக்கு நாள் வலுக்கும் உக்ரைன் ரஷ்யப் போரின் தொடர்ச்சியாக ரஷ்யாவின் மூத்த தளபதி ஜெனரல் செர்ஜி கோரியாச்சேவ் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைனின் தெற்கு டொனெட்ஸ்க் பகுதியில் நேற்று (13) இடம்பெற்ற ஏவுகணைத் தாக்குதலிலேயே கோரியாச்சேவ் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 52 வயதான இவர், போரில் பலியானதாக ரஷ்யா அதிகாரபூர்வமாக வகைப்படுத்திய 11 ஜெனரல்களில் ஒருவர் ஆவார். மேலும் இவர், படையெடுப்பின் தொடக்கத்தில் 5 ஆவது இராணுவ படைப்பிரிவின் தளபதியாக இருந்ததாகவும் போரின் போது அவர் இராணுவத் தலைவர் பதவிக்கு உயர்த்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் இன்றைய தாக்குதல் இந்த நிலையில், இன்றையதினம் உக்ரைன் அதிபர் வெலோடிமீர் ஜெலென்ஸ்கியின் சொந்த நகரத்தின் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் 6 பேர் பலியாகியுள்ளதுடன், 25 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். https://ibctamil.com/article/ukraine-russia-war-latest-news-1686666567

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.