Everything posted by ஏராளன்
- t20pt 23-10.JPG
- t20pt 22-10.JPG
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நித்தியானந்தாவைக் கலாய்க்கும் இந்த வீடியோப் பாடல் பார்த்தனிங்களா?
- t20pt.JPG
- t20pt.JPG
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துகள் சசி அண்ணை, வாழ்க வளத்துடன்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அந்த வீடியோல ஒரு இந்து சாமியார் இருந்தவர் போல. குடை மின்கம்பியில் முட்டப்போகிறது என எச்சரிக்க, அதை தவிர்க்க முயற்சிக்கையில் குடையில் மின்சாரம் பாய்ந்து யானைக்கு அதிர்ச்சியாகி வேகநடை போடுது.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
யானை சவாரி இனிமே செஞ்சா கவனமா இருங்க https://www.facebook.com/BBCnewsTamil/videos/யானை-சவாரி-இனிமே-செஞ்சா-கவனமா-இருங்க/635723321346066/
- bb.JPG
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துகள் விசுகு அண்ணை, வாழ்க வளத்துடன்.
-
இரான் பெண்கள் ஹிஜாப் போராட்டம்: மாசா அமினி மரணத்தால் முடியை வெட்டி எதிர்ப்பு தெரிவிப்பு
ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் ; 83 பேர் பலி 30 SEP, 2022 | 04:43 PM ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம் என்று மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. ஈரானில் 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி கடந்த 13 ஆம் திகதி பொலிஸார் கடுமையாக தாக்கியதில் உயிரிழந்தார். இச்சம்பவத்தை கண்டித்து ஈரானில் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். மாஷா அமினியின் சொந்த ஊரான சஹிஸ் நகரில் தொடங்கிய போராட்டம் மெல்ல மெல்ல நாட்டின் பிற பகுதிகளிலும் பரவத்தொடங்கியது. ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்கைப், பேஸ்புக், டுவிட்டர், டிக் டொக் மற்றும் டெலிகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டு இணையதள சேவை தடை செய்யப்பட்டுள்ளது. ஈரானில் ஹிஜாப்பிற்கு எதிராக போராட்டம் நடத்திய நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், சீர்திருத்த ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு வாரமாக நீடிக்கும் போராட்டத்தில் குறைந்தது 83 பேர் இறந்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் போராட்டக்காரர்கள் என்றும், போராட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம் என்று மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. https://www.virakesari.lk/article/136754
-
இரான் பெண்கள் ஹிஜாப் போராட்டம்: மாசா அமினி மரணத்தால் முடியை வெட்டி எதிர்ப்பு தெரிவிப்பு
ஹிஜாப் அணிய மறுத்த பெண் செய்தியாளர் ; பேட்டி அளிக்க மறுத்த ஈரான் ஜனாதிபதி By T. SARANYA 23 SEP, 2022 | 08:39 PM ஹிஜாப் அணிய மறுத்த பெண் செய்தியாளருக்கு பேட்டி அளிக்க மறுத்த ஈரான் ஜனாதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார். ஈரானில் குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரை சேர்ந்த 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் தனது குடும்பத்துடன் கடந்த 13 ஆம் திகதி தலைநகர் தெஹ்ரானுக்கு சென்றுள்ளார். அப்போது, ஈரானில் உடை தொடர்பான நெறிமுறைகளை கடுமையாக அமல்படுத்தும் நெறிமுறை பொலிஸார் மாஷா அமினி மற்றும் அவது குடும்பத்தினரை இடைமறித்துள்ளனர். மாஷா அமினி ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி அவரை பொலிஸார் கைது செய்து கடுமையாக தாக்கியுள்ளனர். மாஷா அமினி தனது தலைபகுதியை ஹிஜாப்பால் முழுமையாக மறைக்கவில்லை என கூறி அவரை பொலிஸ் நிலையம் அழைத்து சென்று கடுமையாக தாக்கியுள்ளனர். பொலிஸார் தாக்கியதில் படுகாயமடைந்த மாஷா பொலிஸ் நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாஷா அமினியை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக அறிவித்தனர். கோமா நிலைக்கு சென்ற மாஷா அமினிக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில் அவர் கடந்த 17 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஹிஜாப் சரியாக அணியாததால் பொலிஸார் தாக்கியதில் கோமா நிலைக்கு சென்ற இளம்பெண் மாஷா அமினி உயிரிழந்த சம்பவம் பெரும் ஈரானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், மாஷா மாரடைப்பு காரணமாக தான் உயிரிழந்ததாக ஈரான் பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஹிஜாப் சரியாக அணியாததால் பொலிஸார் தாக்கியதில் இளம்பெண் மாஷா அமினி உயிரிழந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஈரானின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. பெண்கள் தங்கள் ஹிஜாப்பை கழற்றி எறிந்தும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும், தங்கள் தலைமுடியை வெட்டியும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை ஒடுக்க பொலிஸார் எடுத்த நடவடிக்கையில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. மேலும், பெண்களின் இந்த போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையாக ஈரானில் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐ.நா. பொதுக்குழு கூட்டத்திற்கு பங்கேற்பதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி அமெரிக்காவுக்கு வந்துள்ளார். அமெரிக்கா வந்துள்ள ஈரான் ஜனாதிபதி ரைசியிடம் பேட்டி எடுக்க அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனமான சிஎன்என் திட்டமிட்டிருந்தது. ஈரான் அதிபரிடம் சிஎன்என் செய்தி நிறுவனத்தின் மூத்த செய்தியாளர் கிறிஸ்டினா அமன்புர் பேட்டி எடுக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், பேட்டி எடுக்க வேண்டுமானால் செய்தியாளர் கிறிஸ்டினா ஹிஜாப் அணிய வேண்டும் என ஈரான் ஜனாதிபதி ரைசி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தான் அமெரிக்காவில் இருப்பதாகவும் இங்கு ஹிஜாப் சட்டமில்லை என்றும் கிறிஸ்டினா தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து கிறிஸ்டினாவுக்கு பேட்டி அளிக்க ஈரான் அதிபர் மறுத்துவிட்டார். மேலும், அந்த நிகழ்ச்சியும் இரத்து செய்யப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/136302
-
இரான் பெண்கள் ஹிஜாப் போராட்டம்: மாசா அமினி மரணத்தால் முடியை வெட்டி எதிர்ப்பு தெரிவிப்பு
இரான் ஹிஜாப் எரிப்பு போராட்டம்: "என் மகளை பார்க்க விரும்பினேன். ஆனால் அவர்கள் விடவில்லை" - மாசா அமினி தந்தை பேட்டி 7 மணி நேரங்களுக்கு முன்னர் காணொளிக் குறிப்பு, கூந்தலை வெட்டி, ஹிஜாபை கொளுத்தி போராடும் முஸ்லிம் பெண்கள் "என் மகள் மரணத்தில் அதிகாரிகள் சொல்வது பொய்". இரானில் நடைபெற்று வரும் ஹிஜாப் எரிப்பு போராட்டங்களுக்கு வித்திட்ட மாணவி மாசா அமினியின் மரணம் குறித்து அவரது தந்தை அம்ஜத் அமினி வைக்கும் குற்றச்சாட்டு இது. பிபிசி பாரசீக சேவையிடம் பேசிய அவர், தன் மகளது உடற்கூராய்வு அறிக்கையைக் கூட பார்க்க அனுமதிக்கவில்லை என்பதுடன் தன் மகளுக்கு உடல்நிலை மோசமாக இருந்தது என்பதையும் மறுக்கிறார். மேலும், காவலில் வைக்கப்பட்ட மாசா தாக்கப்பட்டார் என்று நேரில் பார்த்தவர்கள் தன் குடும்பத்திடம் தெரிவிப்பதாகவும் தந்தை கூறினார். ஆனால், இரான் அதிகாரிகள் இதை மறுக்கின்றனர். ஹிஜாப் அணிவதற்கான விதிகளை மீறியதற்காக, இரான் இஸ்லாமிய அடிப்படைவாத அமலாக்க காவல்துறையால் மாசா கைது செய்யப்பட்டார். பட மூலாதாரம்,MAHSA AMINI FAMILY படக்குறிப்பு, மாசா அமினி வடமேற்கு நகரமான சாகேஸ் பகுதியில் வசிக்கும் குர்து இனத்தைச் சேர்ந்த இளம்பெண்னான மாசா, வெள்ளிக்கிழமை டெஹ்ரானில் உள்ள மருத்துவமனையில் கோமா நிலையை எய்தி மூன்று நாட்களுக்குப் பின் இறந்தார். அடிப்படைவாத அமலாக்க காவல்துறை என்றால் என்ன? இரானில் இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக இயங்கி வரும் காவல் அமைப்பு அது. அதாவது அடிப்படைவாத நடைமுறைகளை அமல்படுத்தும் காவல் பிரிவு என்று புரிந்து கொள்ளலாம். இஸ்லாமிய மத நெறிமுறகளை மீறினால் இந்த காவல்துறை நடவடிக்கை எடுக்கும். அப்படித்தான், கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாசா அமினியும் கைது செய்யப்பட்டார். முன்னதாக இந்த அடிப்படைவாத அமலாக்க காவல்துறை குறித்து பேசிய, இரான் அதி உயர் தலைவர் அலி காமனெயியின் பழைய உரைகளின் பகுதிகள் சமூக வலைத்தளங்களில் மீண்டும் பரப்பப்படுகின்றன. அந்த வீடியோவில் "இஸ்லாமிய அரசின் கீழ் பெண்கள் அனைவரும் இஸ்லாமிய உடைக் கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும். அதை உறுதி செய்வதே இந்த காவல் குழுவின் வேலை" என்று அவர் பேசியுள்ளார். முறையற்ற உடை மாசா அமினி துன்புறுத்தப்படவில்லை. ஆனால், அவருக்கு திடீரென இதயக் கோளாறு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் அடிப்படைவாத அமலாக்க காவல்துறையால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்று இரானிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 22 வயது இளம்பெண் மரணம்: முடியை வெட்டிக்கொண்டு போராடும் இரான் பெண்கள் மாசா அமினி மரணம்: இரான் போலீஸோடு மோதும் போராட்டக்காரர்கள் ஆர்.எஸ்.எஸ். தலைவர் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு: இங்கிலாந்தில் வலுக்கும் இந்து - முஸ்லிம் சர்ச்சை ஆனால், கைது செய்யப்படும்போது மாசா தாக்கப்பட்டார் என்று, சம்பவத்தின்போது உடனிருந்த மாசாவின் தம்பி கியாராஷ் தெரிவிக்கிறார். என் மகன் அவளோடுதான் இருந்தான். சில சாட்சியங்கள் அவள் கைது செய்யப்படும்போதும், வேனிலும் பின் காவலில் இருந்தபோதும் தாக்கப்பட்டாதாக தெரிவிக்கின்றன " என்கிறார் தந்தை அம்ஜத் அமினி. "என் மகளை கைது செய்யவேண்டாம் என்று என் மகன் கெஞ்சியுள்ளான். ஆனால், அவனும் தாக்கப்பட்டான். அவனது உடைகள் கிழிக்கப்பட்டன". அவர்களது உடையில் இருக்கும் கேமரா பதிவுகளைக் காட்டும்படி நான் கேட்டேன். ஆனால், கேமராக்களில் பேட்டரி தீர்ந்துவிட்டது என்று அவர்கள் சொன்னார்கள்." கைது செய்யப்படும் வேளையில், மாசா 'முறையற்ற உடை' அணிந்திருந்ததாக இரானிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், எப்படியானலும் ஒரு நீளமான மேலங்கியை எப்போதும் அணிவார் என்று தந்தை கூறுகிறார். "நான் என்ன வேண்டுமானாலும் எழுதுவேன்" இறந்த பிறகும் தன் மகளைப் பார்க்கவிடாமல் தான் மீண்டும் மீண்டும் தடுக்கப்பட்டதாக தந்தை கூறுகிறார். "நான் என் மகளைப் பார்க்க விரும்பினேன். ஆனால், என்னை உள்ளே விடவில்லை. நான் என் மகளின் உடற்கூராய்வு அறிக்கையை பார்க்க வேண்டும் என்று கேட்டேன், ஆனால், நான் என்ன வேண்டுமானலும் எழுதுவேன். அதில், நீங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை" என்று மருத்துவர் சொன்னதாகவும் அம்ஜத் தெரிவிக்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டெஹ்ரானில் போராட்டம் குடும்பத்தினருக்கு உடற்கூராய்வு அறிக்கை குறித்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இறுதிச் சடங்குக்காக பொட்டலம் கட்டி தரப்பட்ட தன் மகளின் உடலை மட்டுமே அவர் பார்த்தார். வெறும் பாதமும் முகமும் மட்டுமே அதில் தெரிந்தன. "அவளது காலில் கன்றிப்போன தடயங்கள் இருந்தன. பாதங்களை சோதனை செய்யுங்கள் என்று நான் கேட்டேன்." சோதனை செய்வதாக அதிகாரிகள் எனக்குத் தெரிவித்தனர். ஆனால், எந்த பதிலும் வரவில்லை. "அப்போது என்னை தவிர்த்தனர். இப்போது பொய் சொல்கின்றனர்" முன்னதாக, டெஹ்ரான் காவல்துறையின் தடயவியல் மருத்துவப்பிரிவின் தலைமை இயக்குநர் மேடி ஃபரூசேஷ் வெளியிட்ட அறிக்கையில், "தலை, முகத்தில் எந்த அறிகுறிகளும் இல்லை. கண்ணைச்சுற்றி கன்றிப்போன தடயங்களும் இல்லை. மண்டை ஓட்டில் முறிவுகளும் ஏதுமில்லை என்பது ஆய்வில் அறியப்பட்டது" என்று தெரிவித்திருந்தார். வேறெந்த உள்காயங்களும் கூட இல்லை என்று அதிகாரிகளும் தெரிவித்தனர். உடல்நலக் குறைவா? மாசாவின் மரணத்துக்கு அவரது உடல்நலக்கோளாறுகள் காரணம் என்ற குற்றச்சாட்டின் மீது தந்தை அம்ஜத்துக்கு முரண்பாடு உண்டு. அவர் அதை விமர்சிக்கிறார். 8 வயதில் மாசாவுக்கு மூளையில் ஒரு அறுவை சிகிச்சை நடந்துள்ளது என்று டெஹ்ரான் காவல்துறையின் தடயவியல் மருத்துவப்பிரிவின் தலைமை இயக்குநர் தெரிவித்திருந்தார். ஆனா, "அது பொய்" என்கிறார் தந்தை அம்ஜத். "சளி தொடர்பாக மருத்துவமனை சென்றதைத் தவிர, கடந்த 22 ஆண்டுகளாக அவள் எந்த கோளாறுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை. அவளுக்கு எந்த மருத்துவக் கோளாறும் இல்லை. எந்த அறுவை சிகிச்சையும் நடைபெறவில்லை" என்கிறார் அம்ஜத். பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, மாசாவுக்கு நியாயம் வேண்டி ஜெர்மனியில் போராட்டம் மாசாவின் வகுப்பு நண்பர்கள் இருவரிடம் பிபிசி பேசியது. அப்போது "அவள் உடல்நலக் கோளாறு காரணமாக இதுவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தங்களுக்கு தெரியவில்லை" என்றனர். அதேபோல, மாசாவின் உடல்நிலை குறித்த ஒன்னொரு கூற்றையும் அம்ஜத் மறுக்கிறார். அண்மையில் ஒரு கடையில் வேலை செய்து வந்தபோது மாசா அடிக்கடி மயங்கி விழுவார் என்ற அந்தக் கூற்றை 'பொய்யானது' என்று மறுக்கிறார் அவர். குடும்பம் என்ன செய்கிறது? பல்கலைக்கழகத்தில் தன் படிப்பை அடுத்த வாரம் தொடங்கவிருந்தார் மாசா என்கிறது மாசாவின் குடும்பம். அதற்கு முன்பாக விடுமுறை நாளைக் கழிக்கவே டெஹ்ரானுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். "அவள் நுண்ணுயிரியல் படிக்க விரும்பினாள். மருத்துவராக வர வேண்டும் என்பது அவள் கனவு. அவளது தாய் இப்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். எங்களுக்கு அவள் நினைவாகவே இருக்கிறது." எல்லாவற்றுக்கும் மேலாக, "அவள் இருந்திருந்தால் நேற்று (செப்டம்பர் 22) அவளது 23 ஆவது பிறந்தநாளாக இருந்திருக்கும்" என்று தெரிவித்தது மாசாவின் குடும்பம். https://www.bbc.com/tamil/global-63004213
-
இரான் பெண்கள் ஹிஜாப் போராட்டம்: மாசா அமினி மரணத்தால் முடியை வெட்டி எதிர்ப்பு தெரிவிப்பு
மாசா அமினி மரணம்: இரான் போலீஸோடு மோதும் போராட்டக்காரர்கள் 21 செப்டெம்பர் 2022 புதுப்பிக்கப்பட்டது 57 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA இரானின் தலைநகர் டெஹ்ரானில் அரசு எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகளில் காணாத மிக மோசமாக அமைதியின்மையாக இது பார்க்கப்படுகிறது. தன்னுடைய பக்கத்து வளாகம் போர்க்களம் போல கட்சியளித்ததாக ஒருவர் பிபிசி பாரசீக மொழி பிரிவிடம் தெரிவித்தார். ஏழாவது நாளாக தொடரும் இந்த போராட்டங்கள் 80 பெருநகரங்கள் மற்றும் நகரங்களுக்கு பரவியுள்ளன. 31 பொது மக்கள் உயிரிழந்திருப்பதாக மனித உரிமை குழு ஒன்று தெரிவிக்கும் நிலையில், இந்த எண்ணிக்கையை 17 என கூறுகிறது அரசு தொலைக்காட்சி. ஹிஜாப் ஆடை ஒழுங்குமுறையை அமலாக்கும் காவல்துறையால் கைதுசெய்யப்பட்ட மாசா அமினி என்ற பெண் போலீஸ் காவலில் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த அமைதியின்மை தோன்றியது. வட மேற்கிலுள்ள சாகேஸ் நகரை சேர்ந்த 22 வயதான குர்து இன பெண்ணான மாசா அமினி, 3 நாட்கள் கோமா நிலையில் துன்பப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தார். ஹிஜாப் சட்டத்துக்கு எதிராக போராட்டம் பட மூலாதாரம்,MAHSA AMINI FAMILY படக்குறிப்பு, உயிரிழந்த மாசா அமினி இரானில் ஹிஜாப் சட்டத்தை மீறியதற்காகக் கைது செய்யப்பட்ட இளம்பெண் மாசா அமினி, காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது உயிரிழந்ததன் விளைவாக அங்கு நடந்துவரும் போராட்டத்தைப் பெண்கள் முன்னின்று நடத்தி வருகின்றனர். டெஹ்ரானில் அவருடைய சகோதரரோடு இருந்தபோது, தலைமுடியை ஹிஜாப்பால் மறைப்பது மற்றும் தளர்வான ஆடையால் முழு உடலையும் மறைக்க உத்தரவிடும் ஹிஜாப் சட்டத்தை மீறியதாக மாசா அமினி, ஹிஜாப் ஒழுங்குமுறையை அமலாக்கும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்த அவர், மயங்கி விழுந்த சில நிமிடங்களிலேயே கோமா நிலைக்குச் சென்றார். அமினியின் தலையில் காவல்துறையினர் பிரம்பால் அடித்ததாகவும், காவல்துறையினரின் வாகனத்தில் அவரது தலையைக் மோதச் செய்ததாகவும் தகவல்கள் உள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் தற்காலிக உயர் ஆணையர் நடா அல்-நஷிப் தெரிவித்தார். இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் காவல்துறையினர், அவருக்கு திடீர் இதய செயலிழப்பு ஏற்பட்டதாகக் கூறுகின்றனர். ஆனால், அமினி நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். பட மூலாதாரம்,TWITTER மாசா அமினியின் இந்தத் துயர மரணமும், அவர் சித்ரவதை படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டும் சுயாதீன மற்றும் உகந்த அதிகாரம் கொண்ட நிறுவனத்தால் பாரபட்சமின்றி துரிதமாக விசாரணை செய்யப்பட வேண்டும் எனக் கூறும் நஷிப், அவரது குடும்பத்தினருக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்கிறார். பூமியை சூரியன் விழுங்கி விட்டால் என்னவாகும்? மத்தியதரைக்கடலை ஆக்கிரமிக்கும் 'அபாயகர' நண்டின் கதை முத்தலாக் தீர்ப்பு இந்திய முஸ்லிம் பெண்களுக்கு உதவியிருக்கிறதா? ஹிஜாப் சட்டங்களை மீறுபவர்களைக் கண்காணிப்பதற்காக கடந்த சில மாதங்களாக ஹிஜாப் ஆடை ஒழுங்குமுறையை அமலாக்கும் காவல்துறையினர் தங்களது ரோந்துப் பணிகளை அதிகப்படுத்தியிருத்த நிலையில், பெண்களுக்கு எதிரான தாக்குதல் தொடர்பான உறுதிசெய்யப்பட்ட பல காணொளிகள் தங்களுக்கு கிடைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசு நடவடிக்கை - விமர்சிக்கும் செயல்பாட்டாளர்கள் பட மூலாதாரம்,AFP ஹிஜாப் சட்டங்களை மீறும் பெண்களுக்கு எதிரான தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கையை நிறுத்த வேண்டும் எனக் கூறும் நடா அல்-நஷிப், இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்கிறார். முன்னதாக, இரானின் அதிஉயர் தலைவரான அயதுல்லா அலி கமேனியின் உதவியாளர், அமினியின் குடும்பத்தை திங்கட்கிழமை சந்தித்து, மீறப்பட்ட உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததாக உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஹிஜாப் ஆடை ஒழுங்குமுறையை அமலாக்கும் காவல்படை இரானுக்கு இழப்பையும் பாதிப்பையும் ஏற்படுத்துவதாக மூத்த எம்.பி ஜலால் ரஷிதி கூச்சி வெளிப்படையாக விமர்சித்துள்ளார். இந்தப் போராட்டத்தில் தேவையற்ற மற்றும் அளவுக்கதிகமான காவல்துறையினர் பயன்படுத்தப்பட்டு வருவதாக நடா அல்-நஷிப் எச்சரிக்கிறார். மேற்கு அஜர்பைஜான் மாகாணத்தின் பிரன்ஷாஹர் மற்றும் உர்மியா பகுதியில் செவ்வாய் இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுவனும் 23 வயது இளைஞரும் கொல்லப்பட்டதாக ஹெங்காவ் அமைப்பு தெரிவிக்கிறது. நார்வேயை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் இந்த அமைப்பு, இரானின் குர்து இன பகுதியில் மனித உரிமைகளை கண்காணித்து வருகிறது. மேலும், அண்டை மாகாணமான கெர்மன்ஷாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண்ணை சுட்டு கொன்றுள்ளதாக அந்த அமைப்பு தெரிவிக்கிறது. இந்தப் போராட்டமானது 15 நகரங்களில் நடந்து வருவதாக இரான் தெரிவிக்கிறது. வீதிகளை முடக்கியுள்ளவர்கள், கல்லெறியில் ஈடுபடுவர்கள், காவல்துறையினரின் வாகனங்களுக்குத் தீ வைப்பவர்களுக்கு எதிராக கண்ணீர் புகைக்குண்டுகளைப் பயன்படுத்துவதாகவும், கைது நடவடிக்கை மேற்கொள்வதாகவும் இரான் அரசு தெரிவித்துள்ளது. ஹிஜாபை எதிர்க்கும் பெண்கள் பட மூலாதாரம்,WANA NEWS AGENCY தலைநகரில் நடந்த போராட்ட காணொளியில் பெண் ஒருவர் தன்னுடைய ஹிஜாப்பை கழட்டிவிட்டு 'சர்வாதிகாரி ஒழியட்டும்' எனக் கூச்சலிடுகிறார். இது இரானின் அதிவுயர் தலைவருக்கு எதிராக அடிக்கடி பயன்படுத்தப்படும் முழக்கமாகும். அந்தக் காணொளியில் மற்றவர்கள் நீதி, சுதந்திரம், கட்டாய ஹிஜாப் வேண்டாம் என கத்தினர். ராஷ்ட் பகுதியில் கடந்த திங்கட்கிழமையன்று நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட பெண் ஒருவர், தன்னை காவல்துறையினர் தடிகள் மற்றும் குழாய்களைக் கொண்டு தாக்கியதாக குற்றம்சாட்டி, காயமுற்ற புகைப்படங்களை பிபிசி பாரசீக மொழி சேவையிடம் பகிர்ந்து கொண்டார். காவல்துறையினர் தொடர்ந்து கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதால், கண்ணெரிச்சல் ஏற்பட்டதாக அவர் தெரிவிக்கிறார். "நாங்கள் அங்கிருந்து ஓடினோம். ஆனாலும், அவர்களை என்னைக் குறிவைத்து தாக்கினர். என்னுடய உடலை விற்பதற்காக பொதுவெளியில் நிற்பதாகவும், என்னை விபச்சாரி என்றும் காவல்துறையினர் கூறினர்" என்கிறார் அவர். இஸ்பஹானில் நடந்த போராட்டத்தில் பங்கெடுத்த பெண் ஒருவர் பிபிசியிடம் பேசும்போது, "ஹிஜாப்பை கழற்றி அசைத்த தருணத்தில், ஆண்களால் சூழப்பட்டு தான் பாதுகாக்கப்பட்டதைக் கண்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாகக் கூறினார். இந்த ஒற்றுமையைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்த அவர், உலக மக்கள் தங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புவதாகவும் தெரிவித்தார். இந்தப் போராட்டம் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த தெளிவான திட்டமிடலுடன் நடந்துவருவதாக டெஹ்ரான் ஆளுநர் மொஹ்சென் மன்சூரி கடந்த செவ்வாயன்று ட்வீட் செய்திருந்தார். அதேபோல, குர்து இன பிரிவினைவாதிகளாலும் அரசை விமர்சிப்பவர்களாலும் அமினியின் மரணம் சாக்குப்போக்காக பயன்படுத்தப்படுவதாக அரசு தொலைக்காட்சி குற்றம்சாட்டியுள்ளது. என்ன சொல்கிறது இரானின் ஹிஜாப் சட்டம்? 1979 இஸ்லாமியப் புரட்சிக்கு பிறகு, இரானில் ஹிஜாப் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, பெண்கள் தலையை முழுமையாக மறைக்கும் வகையிலான ஹிஜாப்பையும், முழு உடலை மறைக்கும் வகையிலான தளர்வான ஆடையையும் கட்டாயம் அணிய வேண்டும். இதனை உறுதிசெய்வதற்காக காஷ்ட்-இ எர்ஷாத் என்றழைக்கப்படும் ஹிஜாப் ஆடை ஒழுங்குமுறையை அமலாக்கும் காவல்படை உருவாக்கப்பட்டது. பெண்களை பொதுவெளியில் நிறுத்தி தலைமுடி தெரியும்படி ஹிஜாப் அணிந்திருக்கிறாரா? அணிந்திருக்கும் உடை குட்டையாக உள்ளதா? இறுக்கமான உடை அணிந்திருக்கிறாரா? எனச் சோதனையிட அனைத்து அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல், விதிகளை மீறுபவர்களுக்கு எதிரான நடவடிக்கையாக அபராதம், கைது, கசையடி உள்ளிட்டவற்றை வழங்கவும் அதிகாரம் உண்டு. 2014ஆம் ஆண்டு இரானியப் பெண்கள் ஹிஜாப் சட்டத்தை மீறி "என் திருட்டுத்தனமான சுதந்திரம்" என்ற பெயரில் தங்களுடைய புகைப்படங்களையும் காணொளிகளையும் பகிர்ந்து இணையதள பிரசாரத்தை மேற்கொண்டனர். இது 'வெள்ளை புதன்கிழமைகள்', 'புரட்சித் தெரு பெண்கள்' போன்ற இயக்கங்களுக்கும் உத்வேகம் அளித்தது. https://www.bbc.com/tamil/global-62983959
-
இரான் பெண்கள் ஹிஜாப் போராட்டம்: மாசா அமினி மரணத்தால் முடியை வெட்டி எதிர்ப்பு தெரிவிப்பு
இரானில் ஹிஜாப்பை தீயிட்டுக் கொளுத்தும் பெண்கள் - என்ன நடக்கிறது? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER இரானில் ஹிஜாப் சட்டத்தை மீறியதற்காகக் கைதுசெய்யப்பட்ட இளம்பெண் மாசா அமினி, காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது உயிரிழந்ததன் விளைவாக அங்கு நடந்துவரும் போராட்டத்தைப் பெண்கள் முன்னின்று நடத்தி வருகின்றனர். ஐந்தாவது நாளாக தொடரும் இந்த போராட்டம் பல்வேறு பகுதிகளுக்குப் பரவிவரும் நிலையில், சரி நகரில் நடந்த போரட்டத்தில் பெண்கள் தங்களுடைய ஹிஜாப்பைத் தீயிட்டுக் கொழுத்தினர். அப்போது அங்கிருந்த போராட்டக்காரர்கள் அதனை கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். வட மேற்குப்பகுதியான உர்மியா, பிரன்ஷாஹர் மற்றும் கெர்மன்ஷாவில் நடந்த போராட்டத்தில் கொல்லப்பட்ட போராட்டக்காரர்களில் ஒரு பெண்ணும் கொல்லப்பட்டதாக செயற்பாட்டாளாகள் தெரிவிக்கின்றனர். கெர்மன்ஷாவில் இரண்டு குடிமக்களையும், ஷிராஸில் நடைபெற்ற போராட்டத்தில் காவல் உதவியாளர் ஒருவரையும் போராட்டக்காரர்கள் கொன்றுவிட்டதாக அதிகாரிகள் குற்ற்ம்சாட்டுகின்றனர். மாசா அமினியின் மரணத்தைத் தொடர்ந்து ஹிஜாப் சட்டம் மற்றும் ஹிஜாப் ஆடை ஒழுங்குமுறை காவல்துறையினருக்கு எதிராக நடந்துவரும் இந்தப் போராட்டத்தில் இதுவரை 7 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடமேற்கு நகரமான சாகேஸ் பகுதியைச் சேர்ந்த 22 வயதான குர்து இன பெண், மாசா அமினி, மூன்று நாள் கோமா நிலையில் அவதியுற்ற பின்பு, கடந்த வெள்ளியன்று உயிரிழந்தார். ஹிஜாப் சட்டத்துக்கு எதிராக போராட்டம் பட மூலாதாரம்,MAHSA AMINI FAMILY படக்குறிப்பு, உயிரிழந்த மாசா அமினி டெஹ்ரானில் அவருடைய சகோதரரோடு இருந்தபோது, தலைமுடியை ஹிஜாப்பால் மறைப்பது மற்றும் தளர்வான ஆடையால் முழு உடலையும் மறைக்க உத்தரவிடும் ஹிஜாப் சட்டத்தை மீறியதாக மாசா அமினி, ஹிஜாப் ஒழுங்குமுறையை அமலாக்கும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்த அவர், மயங்கி விழுந்த சில நிமிடங்களிலேயே கோமா நிலைக்குச் சென்றார். அமினியின் தலையில் காவல்துறையினர் பிரம்பால் அடித்ததாகவும், காவல்துறையினரின் வாகனத்தில் அவரது தலையைக் மோதச் செய்ததாகவும் தகவல்கள் உள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் தற்காலிக உயர் ஆணையர் நடா அல்-நஷிப் தெரிவித்தார். இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் காவல்துறையினர், அவருக்கு திடீர் இதய செயலிழப்பு ஏற்பட்டதாகக் கூறுகின்றனர். ஆனால், அமினி நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். மாசா அமினியின் இந்தத் துயர மரணமும், அவர் சித்ரவதை படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டும் சுயாதீன மற்றும் உகந்த அதிகாரம் கொண்ட நிறுவனத்தால் பாரபட்சமின்றி துரிதமாக விசாரணை செய்யப்பட வேண்டும் எனக் கூறும் நஷிப், அவரது குடும்பத்தினருக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்கிறார். ஹிஜாப் சட்டங்களை மீறுபவர்களைக் கண்காணிப்பதற்காக கடந்த சில மாதங்களாக ஹிஜாப் ஆடை ஒழுங்குமுறையை அமலாக்கும் காவல்துறையினர் தங்களது ரோந்துப் பணிகளை அதிகப்படுத்தியிருத்த நிலையில், பெண்களுக்கு எதிரான தாக்குதல் தொடர்பான உறுதிசெய்யப்பட்ட பல காணொளிகள் தங்களுக்கு கிடைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசு நடவடிக்கை - விமர்சிக்கும் செயல்பாட்டாளர்கள் பட மூலாதாரம்,AFP ஹிஜாப் சட்டங்களை மீறும் பெண்களுக்கு எதிரான தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கையை நிறுத்த வேண்டும் எனக் கூறும் நடா அல்-நஷிப், இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்கிறார். இரானின் அதிஉயர் தலைவரான அயதுல்லா அலி கமேனியின் உதவியாளர் அமினியின் குடும்பத்தை திங்கட்கிழமை சந்தித்து, மீறப்பட்ட உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததாக உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஹிஜாப் ஆடை ஒழுங்குமுறையை அமலாக்கும் காவல்படை இரானுக்கு இழப்பையும் பாதிப்பையும் ஏற்படுத்துவதாக மூத்த எம்.பி ஜலால் ரஷிதி கூச்சி வெளிப்படையாக விமர்சித்துள்ளார். இந்தப் போராட்டத்தில் தேவையற்ற மற்றும் அளவுக்கதிகமான காவல்துறையினர் பயன்படுத்தப்பட்டு வருவதாக நடா அல்-நஷிப் எச்சரிக்கிறார். மேற்கு அஜர்பைஜான் மாகாணத்தின் பிரன்ஷாஹர் மற்றும் உர்மியா பகுதியில் செவ்வாய் இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுவனும் 23 வயது இளைஞரும் கொல்லப்பட்டதாக ஹெங்காவ் அமைப்பு தெரிவிக்கிறது. நார்வேயை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் இந்த அமைப்பு, இரானின் குர்து இன பகுதியில் மனித உரிமைகளை கண்காணித்து வருகிறது. மேலும், அண்டை மாகாணமான கெர்மன்ஷாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண்ணை சுட்டு கொன்றுள்ளதாக அந்த அமைப்பு தெரிவிக்கிறது. இந்தப் போராட்டமானது 15 நகரங்களில் நடந்து வருவதாக இரான் தெரிவிக்கிறது. வீதிகளை முடக்கியுள்ளவர்கள், கல்லெறியில் ஈடுபடுவர்கள், காவல்துறையினரின் வாகனங்களுக்குத் தீ வைப்பவர்களுக்கு எதிராக கண்ணீர் புகைக்குண்டுகளைப் பயன்படுத்துவதாகவும், கைது நடவடிக்கை மேற்கொள்வதாகவும் இரான் அரசு தெரிவித்துள்ளது. ஹிஜாபை எதிர்க்கும் பெண்கள் பட மூலாதாரம்,WANA NEWS AGENCY தலைநகரில் நடந்த போராட்ட காணொளியில் பெண் ஒருவர் தன்னுடைய ஹிஜாப்பை கழட்டிவிட்டு 'சர்வாதிகாரி ஒழியட்டும்' எனக் கூச்சலிடுகிறார். இது இரானின் அதிவுயர் தலைவருக்கு எதிராக அடிக்கடி பயன்படுத்தப்படும் முழக்கமாகும். அந்தக் காணொளியில் மற்றவர்கள் நீதி, சுதந்திரம், கட்டாய ஹிஜாப் வேண்டாம் என கத்தினர். ராஷ்ட் பகுதியில் கடந்த திங்கட்கிழமையன்று நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட பெண் ஒருவர், தன்னை காவல்துறையினர் தடிகள் மற்றும் குழாய்களைக் கொண்டு தாக்கியதாக குற்றம்சாட்டி, காயமுற்ற புகைப்படங்களை பிபிசி பாரசீக மொழி சேவையிடம் பகிர்ந்து கொண்டார். காவல்துறையினர் தொடர்ந்து கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதால், கண்ணெரிச்சல் ஏற்பட்டதாக அவர் தெரிவிக்கிறார். "நாங்கள் அங்கிருந்து ஓடினோம். ஆனாலும், அவர்களை என்னைக் குறிவைத்து தாக்கினர். என்னுடய உடலை விற்பதற்காக பொதுவெளியில் நிற்பதாகவும், என்னை விபச்சாரி என்றும் காவல்துறையினர் கூறினர்" என்கிறார் அவர். இஸ்பஹானில் நடந்த போராட்டத்தில் பங்கெடுத்த பெண் ஒருவர் பிபிசியிடம் பேசும்போது, "ஹிஜாப்பை கழற்றி அசைத்த தருணத்தில், ஆண்களால் சூழப்பட்டு தான் பாதுகாக்கப்பட்டதைக் கண்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாகக் கூறினார். இந்த ஒற்றுமையைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்த அவர், உலக மக்கள் தங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புவதாகவும் தெரிவித்தார். இந்தப் போராட்டம் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த தெளிவான திட்டமிடலுடன் நடந்துவருவதாக டெஹ்ரான் ஆளுநர் மொஹ்சென் மன்சூரி கடந்த செவ்வாயன்று ட்வீட் செய்திருந்தார். அதேபோல, குர்து இன பிரிவினைவாதிகளாலும் அரசை விமர்சிப்பவர்களாலும் அமினியின் மரணம் சாக்குப்போக்காக பயன்படுத்தப்படுவதாக அரசு தொலைக்காட்சி குற்றம்சாட்டியுள்ளது. என்ன சொல்கிறது இரானின் ஹிஜாப் சட்டம்? 1979 இஸ்லாமியப் புரட்சிக்கு பிறகு, இரானில் ஹிஜாப் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, பெண்கள் தலையை முழுமையாக மறைக்கும் வகையிலான ஹிஜாப்பையும், முழு உடலை மறைக்கும் வகையிலான தளர்வான ஆடையையும் கட்டாயம் அணிய வேண்டும். இதனை உறுதிசெய்வதற்காக காஷ்ட்-இ எர்ஷாத் என்றழைக்கப்படும் ஹிஜாப் ஆடை ஒழுங்குமுறையை அமலாக்கும் காவல்படை உருவாக்கப்பட்டது. பெண்களை பொதுவெளியில் நிறுத்தி தலைமுடி தெரியும்படி ஹிஜாப் அணிந்திருக்கிறாரா? அணிந்திருக்கும் உடை குட்டையாக உள்ளதா? இறுக்கமான உடை அணிந்திருக்கிறாரா? எனச் சோதனையிட அனைத்து அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல், விதிகளை மீறுபவர்களுக்கு எதிரான நடவடிக்கையாக அபராதம், கைது, கசையடி உள்ளிட்டவற்றை வழங்கவும் அதிகாரம் உண்டு. 2014ஆம் ஆண்டு இரானியப் பெண்கள் ஹிஜாப் சட்டத்தை மீறி "என் திருட்டுத்தனமான சுதந்திரம்" என்ற பெயரில் தங்களுடைய புகைப்படங்களையும் காணொளிகளையும் பகிர்ந்து இணையதள பிரசாரத்தை மேற்கொண்டனர். இது 'வெள்ளை புதன்கிழமைகள்', 'புரட்சித் தெரு பெண்கள்' போன்ற இயக்கங்களுக்கும் உத்வேகம் அளித்தது. https://www.bbc.com/tamil/global-62983959
-
இரான் பெண்கள் ஹிஜாப் போராட்டம்: மாசா அமினி மரணத்தால் முடியை வெட்டி எதிர்ப்பு தெரிவிப்பு
இரான் பெண்கள் ஹிஜாப் போராட்டம்: மாசா அமினி மரணத்தால் முடியை வெட்டி எதிர்ப்பு தெரிவிப்பு 34 நிமிடங்களுக்கு முன்னர் காணொளிக் குறிப்பு, கூந்தலை வெட்டி, ஹிஜாபை கொளுத்தி போராடும் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிதல் உள்ளிட்ட ஆடைக் கட்டுப்பாடுகளை பின்பற்றாததால் இரான் கலாசார காவல்துறையால் கைது செய்யப்பட்ட ஓர் 22 வயது இளம் பெண்ணின் மரணம் அந்நாட்டில் கடுமையான போராட்டங்களைத் தூண்டியுள்ளது. மாசா அமினி என்ற 22 வயது இரானிய பெண், இஸ்லாமிய அடிப்படைவாத காவல் குழுவால் கைது செய்யப்பட்டார். இரானில் இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக இயங்கி வரும் காவல் அமைப்பு அது. அதாவது அடிப்படைவாத அமலாக்கக் காவல்துறை என்று புரிந்து கொள்ளலாம். இஸ்லாமிய மத நெறிமுறகளை மீறினால் இந்த காவல்துறை நடவடிக்கை எடுக்கும். அப்படித்தான், கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாசா அமினியும் கைது செய்யப்பட்டார். ஹிஜாப் குறித்து அவர் அளித்த விளக்கங்களுக்காகவும் கருத்துகளுக்காகவும் அவர் கைது செய்யபட்டதாக காவல் அதிகாரிகள் தெரிவித்தனர். கர்நாடக ஹிஜாப் சர்ச்சை: இந்திய அரசியலமைப்பு என்ன சொல்கிறது? இஸ்லாமிய புரட்சி, பெண்கள், ஆடைகள் - இரான் அன்றும் இன்றும் இரான்: நடனமாட விரும்பும் பெண்கள் கொடுக்கும் விலை என்ன? இந்த நிலையில், 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாசா இறந்தார். அவருக்கு திடீரென இதய கோளாறு ஏற்பட்டு இறந்ததாகக் டெஹ்ரான் காவல்துறை தெரிவித்தது. ஆனால், மாசாவின் பெற்றோர் இதை மறுக்கின்றனர். தங்கள் மகள் ஆரோக்கியமாக இருந்ததாகவும் இதுவரை அப்படி எந்த கோளாறும் அவருக்கு ஏற்பட்டதில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பேசிய மாசாவின் தந்தை "என் மகளின் உடநிலை குறித்து காவல்துறை சொல்லும் கருத்துகளை நான் தனிப்பட்ட முறையில் மறுக்கிறேன்" என்று சீர்திருத்தங்களுக்கு ஆதரவான எம்தெதாத் எனும் ஊடகத்திடம் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது. பட மூலாதாரம்,MAHSA AMINI FAMILY படக்குறிப்பு, மாசா அமினி அதேபோல, மாசா கைது செய்யப்பட்டு வாகனத்தில் ஏற்றப்படும்போதே அவரை காவல்துறையினர் அடித்ததாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறியுள்ளார். கூந்தல் முழுமையாக மறையும்படி ஹிஜாப் அணியாததாக் கூறி கைது செய்யப்பட்ட அவர், வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் இறக்கும் முன்பு கோமா நிலையில் இருந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது. இந்த நிலையில்தான், இந்த சம்பவத்தைக் கண்டிக்கும் விதமாக தங்கள் கூந்தலை கத்தரித்துக் கொண்டும், ஹிஜாபை எரித்தும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் இரானிய பெண்கள். பட மூலாதாரம்,WANA NEWS AGENCY ட்விட்டரில் மாசா அமினி என்ற ஹேஷ்டேகின் கீழ் தங்கள் கண்டனத்தை கருத்துகளாகவும், வீடியோவாகவும் அவர்கள் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக, "லாக்கப் மரணம்" என்று இதைக் குற்றம்சாட்டும் சிலர், "காவல்துறையே கொலை செய்தால் யாரை அழைப்பீர்கள்" என்று புகைப்படங்களை பகிர்ந்து ட்வீட் செய்துள்ளனர். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 கட்டாய ஹிஜாப் முறைதான் இதற்குக் காரணம் என்று குறிப்பிடும் சிலர், 'இந்த பாலினப் பாகுபாடு காட்டும் ஆட்சியாளர்களால்' தாங்கள் சலிப்படைந்து விட்டதாகவும் பதிவிட்டு வருகின்றனர். Twitter பதிவை கடந்து செல்ல, 2 தகவல் இல்லை மேலதிக விவரங்களைக் காண Twitterவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. Twitter பதிவின் முடிவு, 2 அதுமட்டுமன்றி இந்த விவாகரத்தில் இரானிய அதி உயர் தலைவர் அலி காமனெயி மீதும் சிலர் நேரடியாகக் குற்றம் சாட்டுகின்றனர். குர்து இனத்தைச் சேர்ந்தவரான மாசா அமினியின் இறுதிச்சடங்கில் கூடிய இரானிய குர்திஸ்தான் பகுதிகளைச் சேர்ந்த மக்கள், அங்கு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்திலும் இரானிய காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதையடுத்து, "இதுதான் உண்மையான இரான்" என்றும், "கட்டாய ஹிஜாப் மற்றும் இந்த அடிப்படைவாத காவல் குழுவை ஏற்றுக்கொள்ளாதீர்கள்" என்றும் இரானிய ஊடகவியலாளர் மாசி அலிககாட் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இறுதிச் சடங்கில் நடந்த போராட்டத்தின்போது, 'சர்வாதிகாரிக்கு சாவு' என்று பொருள்படும் விதமாக 'டெத் டூ டிக்டேட்டர்' என்று அதி உயர் தலைவர் அலி காமனெயியைக் குறிப்பிட்டு முழக்கங்களை எழுப்பியதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது. அப்போதும் ஒரு சிலர் தங்கள் ஹிஜாபைக் கழற்றினர். பட மூலாதாரம்,REUTERS மேலும் இந்த அடிப்படைவாத அமலாக்க காவல்துறை குறித்து பேசிய, காமனெயியின் பழைய உரைகளின் பகுதிகள் சமூக வலைத்தளங்களில் மீண்டும் பரப்பப்படுகின்றன. அந்த வீடியோவில் "இஸ்லாமிய அரசின் கீழ் பெண்கள் அனைவரும் இஸ்லாமிய உடைக் கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும். அதை உறுதி செய்வதே இந்த காவல் குழுவின் வேலை" என்று அவர் பேசியுள்ளார். ஹிஜாப் உள்ளிட்ட மத விவகாரங்களுக்காக நடைபெறும் கைது சம்பவங்கள் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மாசா அமினியின் மரணம் இந்த விவாகரத்தை போராட்டமாக மாற்றியுள்ளது. முன்னதாக, இந்த மரணம் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும், மாசா அமினி தாக்கபட்டதாக எந்த அறிக்கைகளும் இல்லை என்றும் இரான் உள்துறை அமைச்சர் அப்டொல்ரா ரஹ்மானி ஃபஸ்லி அரசு தொலைக்காட்சிக்கு தெரிவித்திருந்தார். இரானில் சுமார் 8 முதல் 10 லட்சம் குர்து இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் மீது நீண்டகாலமாகவே தாக்குதல் நடைபெற்று வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அடிப்படைவாத ஆட்சியாளர்களுக்கும் நாட்டின் பெரும்பகுதி இளம் கூட்டத்துக்கும் இடையிலான போராட்டமாக இது மாறியுள்ளது. இதுதொடர்பாக இரானிய ஊடகவியலாளர் மாசி அலிககாட், ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. https://www.bbc.com/tamil/global-62964959
-
கொஞ்சம் ரசிக்க
எச்சரிக்கை செய்ய சிவப்பு துணி கட்டாதபடியால் உங்களிடம் தண்டப்(லஞ்சப்)பணம் அறவிடலாம்!👮♂️
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நிர்வாகத்திற்கு ஒரு வேண்டுகோள் முகப்பில் மூன்று மூன்றாக பிரித்து முக்கியமான பிரிவுகளை காட்சிப்படுத்தி உள்ளீர்கள். தமிழும் நயமும், எங்கள் மண் இரண்டுக்குப் பிறகு ஒரு வெற்றிடம் தெரிகிறது. அங்கே அறிவியல் தொழில்நுட்பம் பகுதியின் திரிகள் தெரியுமாறு செய்ய முடியுமா? பார்வைகள் குறைவாக உள்ள திரிகளின் தொகுப்பு முகப்பில் தெரியுமாறு செய்தால் வாசிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துகள் நந்தன் அண்ணை, வாழ்க வளத்துடன்.
-
PTR நேர்காணல் - வடக்கிற்கு அதிருப்தியா..?
PTR Speech: Freebies முதல் வானதியை Block செய்தது வரை; பிடிஆர் எதிர்கொண்ட சர்ச்சையும் பதில்களும்
-
ஆதித்த கரிகாலன் உண்மையில் கொன்றது யார்?
ஆதித்த கரிகாலன் உண்மையில் கொன்றது யார்? Aditya Karikalan Death Mystery Revealed | Deep Talks Deepan
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துகள் குமாரசாமி அண்ணை, புத்தன் அண்ணை. வாழ்க வளத்துடன்.
-
சிரிக்க மட்டும் வாங்க
எங்கே? அமெரிக்கா என்றால் 50*368=18400ரூபா!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துகள் கிருபன் அண்ணை, வாழ்க வளத்துடன்.
-
சிரிக்கலாம் வாங்க
ஒரே இடத்தில் வைத்துப் பழகினால் எடுப்பது இலகு.