Everything posted by ஏராளன்
-
இதய - குருதிக்குழாய் உட்செலுத்துகை ஆய்வுகூடத்தின் சேவைகள் வவுனியாவில் ஆரம்பம்!
Published By: Digital Desk 1 19 Sep, 2025 | 10:17 AM வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இதய மற்றும் குருதிக்குழாய் உட்செலுத்துகை ஆய்வு கூடம் (Cath Lab) இன்று முதல் செயற்பாட்டில் உள்ளது. வவுனியா பொது வைத்தியசாலையில் ஓராண்டுக்கு மேலாக மூடப்பட்டிருந்த இதய மற்றும் குருதிக்குழாய் ஆய்வுகூடம் இன்றைய தினம் தனது செயற்பாட்டை ஆரம்பித்துள்ளது. நெதர்லாந்து அரசின் நிதிப்பங்களிப்போடு இருதய மற்றும் குருதிக்குழாய் ஆய்வுகூடம் அதற்கான உபகரணங்களோடு அமைக்கப்பட்ட நிலையிலும் மனிதவளப் பற்றாக்குறை காரணமாக இயங்காநிலையில் காணப்பட்டது. இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த வருடம் திறந்து வைக்கப்பட்ட குறித்த ஆய்வுகூடம் வைத்திய நிபுணர்கள் வைத்தியர்கள் தாதியர்கள் மற்றும் பல்வேறுபட்ட வளப்பற்றாக்குறைகளினால் செயற்படாமல் இருந்தது. இதன் காரணமாக வவுனியா மற்றும் அதனை அண்டிய பகுதி மக்களும் கிழக்கு மாகாண மக்களும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நிலைமை காணப்பட்டிருந்தது. குறித்த நிலையை உணர்ந்துகொண்ட சுகாதார அமைச்சு அதனைத் தீர்ப்பதற்குரிய மூலோபாய நடவடிக்கையாக வெளிநாட்டில் பயிற்சி பெற்று நாடு திரும்பிய துடிப்பு மிக்க இருதய சிகிச்சை நிபுணர் தி.வைகுந்தன் அவர்களை வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு நியமித்த பின்னர் குறித்த இருதய மற்றும் குருதிக்குழாய் ஆய்வுகூடத்தினை ஆரம்பிப்பதற்கான முழுமையான பணியில் ஈடுபட்டிருந்தார். இதன் பிரகாரம் ஆளணி பற்றாக்குறை காணப்பட்ட போதிலும் கூட யாழ் மாவட்டத்தின் சிரேஸ்ட முன்னணி இருதய சிகிச்சை நிபுணர் பி.லக்ஸ்மன் உள்ளிட்ட அணியினரின் அர்ப்பணிப்பு மிக்க வழிகாட்டலுடனும் பங்களிப்புடனும் இந்த விடயம் சாத்தியமாகியுள்ளது. இதன்மூலம் எமது பிரதேச மாரடைப்பு நோயாளர்களுக்கு சர்வதேச தரத்திலான சிகிச்சை வழங்கப்பட ஏதுவாகியுள்ளதுடன் இலங்கையில் பல போதனா வைத்தியசாலைகளில் கூட இன்னமும் இல்லாத சேவையை வடமாகாணத்தில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அடுத்து இரண்டாவது இடமாக வழங்கும் பெருமையை வவுனியா பொது வைத்தியசாலை பெற்றுள்ளது. வவுனியா வைத்தியசாலையின் நிர்வாகம் மற்றைய இருதய சிகிச்சை நிலைய நிபுணர் தாதியர்கள் உத்தியோகத்தர்கள் மற்றும் பலரது ஒத்துழைப்புடன் இன்றைய தினம் குறித்த இருதய சிகிச்சை கூடத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதற்காக உழைத்த அனைவருக்கும் இத்திட்டத்தை செயற்படுத்த முன்னின்ற முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சு நெதர்லாந்து திட்டப்பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள். https://www.virakesari.lk/article/225474
-
திலீபனின் 38வது நினைவு தினம் அனுஷ்டிப்பு
தியாக தீபம் திலீபனின் 05ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் 19 Sep, 2025 | 10:56 AM தியாக தீபம் திலீபனின் 05ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை (19) முன்னெடுக்கப்பட்டன. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/225485
-
சர்வதேச சுயாதீன விசாரணையின் ஊடாக மாத்திரமே அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலை அடையமுடியும் - சர்வதேச குற்றவியல் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டு
Published By: Vishnu 19 Sep, 2025 | 05:36 AM (நா.தனுஜா) இலங்கையில் இடம்பெற்ற மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் உள்ளகப்பொறிமுறை ஊடாகவன்றி, சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையின் ஊடாக மாத்திரமே அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலை அடைந்துகொள்ளமுடியும் என சர்வதேச குற்றவியல் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தேசிய கனேடியத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் 'இலங்கையில் சர்வதேச பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல்' எனும் தலைப்பிலான கலந்துரையாடலொன்று கடந்த வாரம் ஜெனிவா ஊடக அமையத்தில் நடைபெற்றது. தேசிய கனேடியத் தமிழர் பேரவையின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ருக்ஷா சிவானந்தனால் தொகுத்தளிக்கப்பட்ட இக்கலந்துரையாடலில் சர்வதேச குற்றவியல் வழக்கறிஞரான அலைன் வேனர், சர்வதேச சட்டத்தரணி மரியம் பொஸ்டி, பாலியல் மற்றும் பாலின வன்முறைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையாளர் ஜுலி டுபே கக்னன், தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஸ்ரீ ஞானேஸ்வரன் (நிகழ்நிலை முறைமையில்) ஆகியோர் பங்கேற்றிருந்தனர். அவர்கள் உள்ளகப்பொறிமுறைகள் மூலமாகவன்றி, சுயாதீன சர்வதேச விசாரணைகளின் ஊடாக மாத்திரமே இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யமுடியும் என்ற விடயத்தைப் பொதுவாக வலியுறுத்தினர். அதன்படி இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து சுட்டிக்காட்டிய ருக்ஷா சிவானந்தன், உள்நாட்டில் தொடரும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு சர்வதேச பொறுப்புக்கூறல் செயன்முறையொன்று உடனடியாக நடைமுறைப்படுத்தப்படவேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்டார். அத்தோடு பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் தப்பிப்பிழைத்தோரின் நம்பிக்கையை வென்றெடுத்ததும், குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறவைக்கக்கூடியதும், தமிழ்மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கக்கூடியதுமான சர்வதேச சுயாதீன விசாரணை மற்றும் வழக்குத்தொடரல் பொறிமுறையை விரைவாக ஸ்தாபிக்கவேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் பிரஸ்தாபித்தார். அதேவேளை நிகழ்நிலை முறைமையில் உரையாற்றிய வடமாகாணத்தைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் தமிழ் சிவில் சமூக அமையத்தின் செயற்பாட்டாளர் ஸ்ரீ ஞானேஸ்வரன், 1948 ஆம் ஆண்டு முதல் தமிழ்மக்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இனவழிப்பு யுத்தம், இனவழிப்பு கலவரம், இனப்படுகொலை, அரச அனுசரணையுடனான கண்காணிப்பு, ஒடுக்குமுறை, அத்துமீறல், கைது, வன்முறை, சித்திரவதை, பௌத்தமயமாக்கல், இராணுவமயமாக்கல், சிங்களமயமாக்கல், வலிந்து காணாமலாக்கப்படல்கள், காணி சுவீகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் பற்றி விளக்கமளித்ததுடன் அவை இப்போதும் தொடர்வதாக விசனம் வெளியிட்டார். அதுமாத்திரமன்றி அண்மையில் கண்டறியப்பட்ட செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழியானது நம்பகத்தன்மை வாய்ந்ததும், சுயாதீனமானதுமான சர்வதேச விசாரணைப்பொறிமுறையொன்று உடனடியாக நிறுவப்படவேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அதேபோன்று இதுகுறித்து கருத்துரைத்த சர்வதேச குற்றவியல் வழக்கறிஞர் அலைன் வேனர், தமிழ்மக்களின் மீண்டெழும் தன்மையைப் பாராட்டியதுடன் நீதிக்கான தொடர் போராட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். அத்தோடு இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஊடாக ஆதாரங்களைத் திரட்டுவதற்கான ஐ.நாவின் முயற்சியை அங்கீகரித்த அவர், இருப்பினும் சர்வதேச சுயாதீன விசாரணையின் ஊடாக மாத்திரமே அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலை அடையமுடியும் என்றார். மேலும் ஆதாரங்கள் முறையாக ஆவணப்படுத்தப்பட்ட முழுமையான வழக்கு கோப்புகளை தயாரிக்கவேண்டிய முக்கிய வகிபாகத்தை தமிழ்ச்சமூகம் கொண்டிருப்பதாகச் சுட்டிக்காட்டிய அலைன் வேனர், பல்வேறு தேசிய நீதிமன்றங்கள் மற்றும் சட்ட ஏற்பாடுகள் ஊடாக தமிழர்களின் நீதியைக்கோரும் செயன்முறை தொடரவேண்டும் என வலியுறுத்தினார். அடுத்ததாக, 'பொறுப்புக்கூறல் சார்ந்த முயற்சிகளை சீராக வடிவமைப்பதில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும், தப்பிப்பிழைத்தோருக்கும் முக்கிய பங்குண்டு. குறிப்பாக சான்றுகளை ஆவணப்படுத்துவதிலும், நீதியை முன்னிறுத்திய பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதிலும் பாதிக்கப்பட்ட தமிழர்கள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் தனிப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் முன்னரங்கில் நின்று பணியாற்றுகின்றனர்' என சர்வதேச சட்டத்தரணி மரியம் பொஸ்டி தெரிவித்தார். https://www.virakesari.lk/article/225465
-
உரும்பிராயில் வைத்தியர் மீது தாக்குதல் நடாத்திய இருவர் விடுவித்த பின் மீண்டும் கைது!
உரும்பிராயில் வைத்தியர் மீது தாக்குதல் நடாத்திய இருவர் கைது! Published By: Vishnu 19 Sep, 2025 | 05:36 AM யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் வீதியில் பயணித்த வைத்தியர் மீது தாக்குதல் மேற்கொண்ட இருவரை பொலிஸார் விடுவித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் இருவர் வியாழக்கிழமை (18) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், புதன்கிழமை (17) கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் வீதியால் வைத்தியர் ஒருவர் சென்றுகொண்டிருந்தார். இதன்போது மதுபோதையில் இருந்த ஒரு குழுவினர் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீதியில் நின்றனர். இதன்போது குறித்த வைத்தியர் தான் செல்வதற்கு வழிவிடுமாறு கூறியவேளை அவர்மீது அங்கிருந்த கும்பல் தாக்குதல் நடாத்தியது. தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த வைத்தியர் இதுகுறித்து கோப்பாய் பொலிஸாருக்கு தெரியப்படுத்தினார். இதன்போது அங்கு வந்த கோப்பாய் பொலிஸார் இருவரை கைது செய்த நிலையில் ஏனையோர் தப்பிச் சென்றனர். பின்னர் குறித்த வைத்தியர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டார். இவ்வாறு கைது செய்த இருவரையும் விடுவிக்குமாறு கோப்பாய் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி கூறியமைக்கு அமைவாக பிணை எதுவுமின்றி அவர்கள் இருவரையும் விடுதலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து செய்திகள் வெளிவந்த நிலையிலேயே தாக்குதல் நடாத்திய சந்தேகநபர்கள் இருவரும் மீண்டும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/225464
-
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார்!
ரோபோ சங்கர் மறைவுக்கு பிரபலங்கள் உருக்கமான இரங்கல் - முதலமைச்சர் கூறியது என்ன? பட மூலாதாரம், @aishu_dil 19 செப்டெம்பர் 2025, 02:21 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் மதுரையைச் சேர்ந்தவரான ரோபோ சங்கர் முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர். உடற்கட்டு பயிற்சியிலும் ஆர்வம் கொண்ட இவர், இதற்கான போட்டிகளிலும் பங்கெடுத்ததாக அவரது நண்பர்கள் கூறுகின்றனர். உடலில் பெயிண்ட் பூசிக் கொண்டு ரோபோ போன்று நடனமாடியதால் சங்கர் என்ற பெயருடன் ரோபோ என்ற பட்டம் இணைந்து கொண்டது. பிரபல தனியார் தொலைக்காட்சியில் இடம் பெற்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். பிரபல நடிகர்கள் போன்று பேசி மிமிக்ரி செய்ததால் பிரபலமடைந்த இவர், இதனைத் தொடர்ந்து சினிமா படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். 2005ம் ஆண்டு கற்க கசடற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இதன் பின்னர் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்தாலும், விஜய் சேதுபதியின் 'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' திரைப்படம் இவருக்கு நல்ல அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தது. இதன் பின்னர் தனுஷூடன் இவர் நடித்த மாரி திரைப்படத்திலும், இவரது கதாபாத்திரம் பேசப்பட்டது. இதன் பின்னர் பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தார். ரோபோ சங்கர் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் "திரைக்கலைஞர் ரோபோ சங்கர் மறைவெய்திய செய்தியறிந்து வருத்தமுற்றேன். மேடைகளில் துவங்கி, சின்னத்திரை - வண்ணத்திரை என விரிந்து, தமிழ்நாட்டு மக்களை மகிழ்வித்தவர் ரோபோ சங்கர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் - கலையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். சென்னையில் படப்பிடிப்பின் போது திடீரென மயங்கி விழுந்த ரோபோ சங்கர் பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் வியாழக்கிழமை மாலை உயிரிழந்தார். வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம், Facebook தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நடிகர் தனுஷ் இரவு, அவரது வீட்டுக்கு நேரில் சென்று ரோபோ சங்கரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். நடிகர் தனுஷின் 'மாரி' திரைப்படத்தில் ரோபோ சங்கர் நடித்த காட்சிகள் கவனத்தை ஈர்த்தன. பட மூலாதாரம், Facebook நேரில் சென்ற பிரபலங்கள் ரோபோ சங்கருடன் தொலைக்காட்சி முதல் இணைந்து பயணித்தவரான நடிகர் சிவகார்த்திகேயன், நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆதரவு தெரிவித்தார். படக்குறிப்பு, நேரில் சென்று ரோபோ சங்கர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த சிவகார்த்திகேயன் நடிகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல் ஹாசனும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் ரோபோ சங்கருக்காக சிறு கவிதை ஒன்று எழுதி தனது அஞ்சலியை செலுத்தியிருந்தார். "ரோபோ புனைப்பெயர் தான் என் அகராதியில் நீ மனிதன் ஆதலால் என் தம்பி போதலால் மட்டும் எனை விட்டு நீங்கி விடுவாயா நீ?" என்று பதிவிட்டுள்ளார். ரோபோ சங்கரின் பேரக் குழந்தைக்கு அவர் பெயர் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம், X/@ikamalhaasan நடிகை ராதிகா சரத்குமார், "எப்போதும் அனைவரையும் சிரிக்க வைக்கும் நபர், கடுமையாக உழைப்பவர், அவர் மறைந்தது பெரும் இழப்பு" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். நடிகை சிம்ரன், "லட்சக்கணக்கான பேரிடம் சிரிப்பை வரவழைத்தவர். அவரது மறைவு மிகுந்த துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று தெரிவித்திருந்தார். பட மூலாதாரம், X/@realradikaa நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் அவரது மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுருந்தார். அவருடன் ஞாயிற்றுக்கிழமை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், ஆனால் இப்போது அவர் இல்லை என்பது சோகமாகவும் அதிர்ச்சியாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார். பட மூலாதாரம், X/@varusarath5 ரோபோ சங்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த நடிகர் கார்த்தி, "நாம் எடுக்கும் மோசமான முடிவுகள் காலப்போக்கில் நமது உடல்நலத்தை எப்படி பாதிக்கிறது என்று பார்க்கும் போது மனம் வலிக்கிறது. நல்ல திறமையை விரைவில் இழந்துவிட்டோம்" என்று பதிவிட்டுள்ளார். பட மூலாதாரம், X/@Karthi_Offl தனது 'வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்' என்ற திரைப்படத்தில் ரோபோ சங்கர் பேசிய பிரபலமான வசனத்தை குறிப்பிட்டு, அவர் நினைவில் கொள்வதாக நடிகர் விஷ்ணு விஷால் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம், X/@TheVishnuVishal நடிகர் சிம்பு, நடிகரும் இயக்குநருமான வெங்கட் பிரபு உள்ளிட்ட திரைத்துறையினர் பலரும், அவருடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உடன் பணியாற்றிய கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பலரும் அவருடன் இருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு சுந்தரும் தனது இரங்கலை பதிவு செய்துள்ளார். நடிகர்கள் ராகவா லாரன்ஸ், கவின், சாந்தனு, அருண் விஜய், மஹத் ராகவேந்திரா, விமல், ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர் பாலாஜி மோகன், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crkjz01645yo
-
ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு மக்களின் சொத்துகளை சூறையாடிய அரசியல்வாதிகளுக்கு மன்னிப்பே கிடையாது - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
19 Sep, 2025 | 06:19 PM ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு இந்நாட்டு மக்களின் சொத்துகளை சூறையாடிய அரசியல்வாதிகளுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது. சட்டத்தின் பிடிக்குள் இருந்து அவர்கள் தப்பவே முடியாது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ். கொழும்புத்துறை இறங்குதுறையின் புனரமைப்பு பணிகள் இன்று (18) ஆரம்பமாகியது. இதற்குரிய ஆரம்ப நிகழ்வில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பங்கேற்றிருந்தனர். அத்துடன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கோலித்த கமல் ஜினதாச, தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். கொழும்புத்துறை இறங்குதுறையை புனரமைக்குமாறு பல தரப்பினரும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பில் அமைச்சரவையில் எடுத்துரைக்கப்பட்டதோடு, இதற்கு அரசாங்கமும் உடனடியாக இணங்கியது. இதன் பணிக்காக 140 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல உதயபுரம் வீதி புனரமைப்பு பணியும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்காக 65 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு: "நாட்டை அபிவிருத்தி செய்யும் அதேவேளை யாழ். மாவட்டத்தையும் கட்டியெழுப்புவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இங்கு வாழும் மக்களுக்கு வருமானம் கிடைக்ககூடிய வழிமுறைகள் உருவாக்கப்படும். குறிப்பாக யாழ். மாவட்டத்தில் ஒதுக்கப்பட்டிருந்த பகுதிகளும் கட்டியெழுப்பட்டு வருகின்றன. கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலின் போது தமிழ் மக்கள் எமக்கு பேராதரவை வழங்கினர். உள்ளுராட்சி சபைத் தேர்தலின்போதும் உரிய அங்கீகாரம் கிடைக்கப்பெற்றது என்றே சொல்ல வேண்டும். இப்பிரதேசம் எமக்கு முக்கியம். அதனை மேம்படுத்த நடவடிக்கை எடுப்போம். நாம் இவ்வாறு அபிவிருத்தி நோக்கி பயணித்துக்கொண்டிருக்கையில் ஒரு சில அரசியல் பூச்சாண்டிகள், விசர் பிடித்து, விசமத்தனமான கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். இந்நாட்டில் இலஞ்ச, ஊழல், மோசடிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். இதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை. இதனால் ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட நபர்களுக்கு நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நாட்டு மக்களின் சொத்துகளை சூறையாடிய, வளங்களை கொள்ளையடித்த நபர்களுக்கு மன்னிப்பு கிடையாது. சட்டம் தனக்குரிய கடமையை சரிசர நிறைவேற்றும். அதற்குரிய முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. எவ்வித அரசியல் தலையீடுகளும் நீதித்துறையில் மேற்கொள்ளப்படுவதில்லை. யாழில். கடவுச்சீட்டு அலுவலகம் அமைந்துவிட்டது. சர்வதேச விமான நிலையம் உள்ளது. சர்வதேச விளையாட்டு மைதானமும் வரப்போகின்றது. இறங்குத்துறைகள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும்" என்றார். https://www.virakesari.lk/article/225545
-
மாகாணசபைத் தேர்தல் : கட்சிகள் ஒருமித்த முடிவு அவசியம் - இந்திய உயர்ஸ்தானிகர்
Published By: Vishnu 18 Sep, 2025 | 06:55 PM (எம்.மனோசித்ரா) மாகாணசபைத் தேர்தலை ஜனநாயக ரீதியில் விரைவாக நடத்துமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, தேர்தலை நடத்த சகல அரசியல் கட்சிகளும் ஒருமித்த தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா புதன்கிழமை (17) பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இந்த சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன, ஹர்ஷண ராஜகருணா, தயாசிறி ஜயசேகர மற்றும் நளின் பண்டார ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன் போதே உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இதனை வலியுறுத்தியுள்ளார். அத்தோடு இலங்கையின் சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் உள்நாட்டில் முன்னெடுக்கப்படும் இந்திய அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் உயர்ஸ்தானிகருக்குமிடையிலான இந்த சந்திப்பின் போது பரந்தளவிலானதும் பன்முக அடிப்படையிலானதுமான இலங்கை - இந்திய உறவுகள் மற்றும் நாட்டின் அபிவிருத்தி பணிகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/225457
-
புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்க முடியாது - ஏறாவூர் பற்று பிரதேச சபையில் தீர்மானம்!
18 Sep, 2025 | 03:14 PM மட்டக்களப்பு ஏறாவூர் பற்று புல்லு மலையில் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் தண்ணீர் தொழிற்சாலைக்கு பிரதேச சபையின் கட்டிட அனுமதியோ வியாபார அனுமதியோ வழங்கப்படாது எனவும் குறித்த தண்ணீர் தொழிற்சாலைக்கு மாவட்ட அபிவிருத்திக் குழு அனுமதி வழங்கக் கூடாது என ஏறாவூர் பற்று பிரதேச சபையின் இன்றைய அமர்வில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏறாவூர் பற்று பிரதேச சபையின் அமர்வு இன்றைய தினம் நடைபெற்றபோது பெரிய புல்லுமலை வட்டார உறுப்பினர் சிவானந்தன் பெரிய புல்லு மலையில் அமைக்கப்படவுள்ள தண்ணீர் தொழிற்சாலையை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற பிரேரணையை சபைக்கு கொண்டுவந்ததன் பிரகாரம் அது குறித்த விவாதம் சபையில் நடைபெற்றது. இதன்போது சிரேஸ்ட ஊடகவியலாளரும் பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தன் கூறுகையில், ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவில் உள்ள புல்லு மலை கிராமத்தில் அமைக்கப்படவுள்ள நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் மாகாண தொழிற்சாலைக்கு கடந்த 2018ஆம் ஆண்டே அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இது குறித்து ஏறாவூர் பற்று பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் உள்ளது. இந்நிலையில் இன்று மீண்டும் இந்த தொழிற்சாலைக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. உண்மையில் புல்லுமலை கிராம மக்கள் தண்ணீர் இன்றி தவிக்கின்றனர். பிரதேச சபையில் இருந்து அந்த மக்களுக்கு தண்ணீர் வழங்கிய பவுசரை அரசாங்கம் கொண்டு சென்றுள்ளது. இதுவரை அந்த மக்களுக்கு தண்ணீர் கொடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசாங்கம் அந்த பகுதியில் உள்ள நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் தொழிற்சாலைக்கு எப்படி அனுமதி வழங்க முடியும். எனவே, குறித்த தண்ணீர் தொழிற்சாலைக்கான அனு ஆவணங்கள் எதுவும் இல்லை. தண்ணீர் தொழிற்சாலைக்கான கட்டட அனுமதி மற்றும் வியாபார அனுமதிக்கான ஆவணங்கள் பிரதேச சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டால் அனுமதி வழங்கக் கூடாது என சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என தெரிவித்தார். இது குறித்து அனைத்து உறுப்பினர்களும் கருத்து தெரிவித்தனர். ஏறாவூர் பற்று புல்லு மலையில் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் தண்ணீர் தொழிற்சாலைக்கு பிரதேச சபையின் கட்டிட அனுமதி, வியாபார அனுமதி வழங்கப்படாது எனவும் குறித்த தண்ணீர் தொழிற்சாலைக்கு மாவட்ட அபிவிருத்திக் குழு அனுமதி வழங்கக் கூடாது எனவும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. https://www.virakesari.lk/article/225419
-
மாமனிதர் துரைராஜாவிற்கு உருவச் சிலை
யாழ். பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் மாமனிதர் துரைராஜாவிற்கு உருவச் சிலை - நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் 18 Sep, 2025 | 12:23 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மாமனிதர் துரைராஜாவின் உருவச் சிலையினை திருநெல்வேலிச் சந்தியில் நிறுவுவதற்கு நல்லூர் பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மாமனிதர் பேராசிரியர் துரைராஜாவிற்கு சிலை ஒன்றினை அமைப்பதற்கு இடமொன்றினை ஒதுக்குவது தொடர்பில் இன்றைய தினம் வியாழக்கிழமை (18) நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தில் தவிசாளர் ப. மயூரனால் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தவிசாளர் சபையில் தெரிவிக்கையில், போலிகள் மலிந்துவிட்ட இன்றைய தேசத்தில் போலியின்றி வாழ்ந்து தேசப்பற்றோடும் மக்கள் மனித நேயத்தோடும் தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் அவர் ஆற்றிய மகத்தான தன்னலமற்று பணியாற்றியவர். அவரது அறிவியல், பண்பியல், வாழ்வியல் என்பன இந்த மண்ணின் ஒரு வரலாற்று அடையாளம். அவ்வாறானவர்கள் இந்த மண்ணில் வாழ்ந்தார்கள் என்பதனை எமது அடுத்த தலைமுறைக்கு சொல்லவேண்டியதும் இப்படியானவர்களை எமது இளைய தலைமுறையினர் தங்களது வாழ்வியலுக்கான வழிகாட்டியாக பின்பற்றவேண்டும் என்பதன் அடிப்படையில் நல்லூர் பிரதேச சபை இந்த உயரிய பணியினை மேற்கொள்கிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த காரணத்தினால் யாழ். பல்கலைக்கழக சூழலில் அவருடைய சிலையினை நிறுவுவதற்கான இடத்தினை ஒதுக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் ஒரு பொருத்தமான இடத்தினை தெரிவு செய்யவேண்டும். அந்த வகையில் திருநெல்வேலிச் சந்தியில் நல்லூர் பிரதேச சபையினால் அமைக்கப்பட்ட மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் அல்லது யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு முன்னால் உள்ள நடைபாதைக்கு அருகில் இச்சிலையினை நிறுவுவதற்கான இடமாக தெரிவு செய்யலாம் என தெரிவித்தார். இதன்போது, திருநெல்வேலிச் சந்தியில் நல்லூர் பிரதேச சபையினால் அமைக்கப்பட்ட மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் மாமனிதர் துரைராஜாவின் சிலையினை நிறுவுவதற்கான பொருத்தமான இடம் என சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. https://www.virakesari.lk/article/225401
-
மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு விசாரணை யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரிடம்!
18 Sep, 2025 | 11:47 AM மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் கிணறுகள் தொடர்பில் விசாரணை நடத்தி, அது தொடர்பான அறிக்கைகளை எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சடலங்கள் புதைக்கப்பட்ட கிணறுகளை அகழ்ந்து, அது தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் வழக்கினை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கு நேற்றைய தினம் புதன்கிழமை (17) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது, அதன்போது, ஊர்காவற்றுறை பொலிஸாரினால் இவ்வழக்கு விசாரணைகளை முன்னெடுப்பதற்கான ஆளணி வசதிகள் உள்ளிட்ட வசதிகள் இல்லை என மன்றில் தெரிவித்தமையை அடுத்து, வழக்கு விசாரணைகளை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் பாரப்படுத்தி விசாரணைகளை முன்னெடுத்து, நவம்பர் 12ஆம் திகதி விசாரணை அறிக்கைகளை மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினத்திற்கு வழக்கினை திகதியிட்டார். பின்னணி 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25, 26ஆம் திகதிகளில் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின்போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளில் பாரிய மனிதப் படுகொலை நடத்தப்பட்டது. இதன்போது 80க்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களில் 45க்கும் அதிகமானவர்களின் உடலங்கள் மண்டைதீவு 2ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருப்பதுடன் அதற்கான வாழும் சாட்சியங்கள் உறுதியாகவும் இருக்கின்றன. அதேபோன்று அதற்கு அயலில் உள்ள பாடசாலை கிணறு ஒன்றுக்குள்ளும் உடலங்கள் இருக்கின்றன. எனவே குறித்த கிணற்றை அகழ்ந்து உடலங்களை வெளிக்கொணர்ந்து உண்மைகள் வெளி உலகுக்கு வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/225393
-
புலர் அறக்கட்டளையின் செயற்பாடுகள் தொடர்பான காணொளிகள்
புலர் அறக்கட்டளையின் வருடாந்த மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு 18/09/2025 எமது புலர் அறக்கட்டளையின் நன்கொடையாளர்களை கௌரவிக்கும் முகமாக கடந்த வருடத்தில்(2024) இருந்து தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வை நடத்துகின்றோம். 10/10/2025 எமது புலர் அறக்கட்டளையின் 4ஆவது ஆண்டு நிறைவுநாளில் செய்ய இருந்த நிகழ்வை மழைக்கு முன்பே வழங்கினால் மரக்கன்றுகள் வேரூன்றி வளர உதவியாக இருக்கும் என்ற மரக்கன்று உற்பத்தியாளரான நியூ லங்கா பாம் உரிமையாளர் திரு செல்வராஜா ஐயாவினுடைய ஆலோசனைக்கு அமைய இன்றைய தினம் வழங்கி இருந்தோம். இன்று வரை எமக்கு தொடர்ச்சியாக உதவி வரும் 134 நன்கொடையாளர்கள் மற்றும் தனியாக(மலசல கூடம் கட்டியது 2024, வீட்டுத்திட்டம் பூரணப்படுத்தல் 2025) பல உதவிகளைச் செய்த நன்கொடையாளர்கள் அத்துடன் CHULIPURAM GREENLAND FOUNDATION, சைவ அறப்பணி நிதியம், I3 SOFTWARE SOLUTIONS (pvt) ltd Colombo, பேர்மிங்காம் 2016 உதவும் கரங்கள், வட்டுக்கோட்டை அரிமாக்கழகம், CHULIPURAM BOOLOGADEVI TRUST தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் இவர்களின் தொடரும் ஆதரவினால் எமது புலர் அறக்கட்டளையானது சிறப்பாக இயங்கி வருகிறது. இவர்கள் சிரம் தாழ்த்தி எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம். இயற்கைப் பண்ணையாளர் திரு சிவசுப்ரமணியம் ரவிசங்கர் அண்ணாவும் அவருடைய பாரியார் திருமதி ரவிசங்கர் இருவரும் எமக்கு மிகப்பெரிய ஊக்குவிப்பாளர்களாக இருக்கிறார்கள். 24000 ரூபா பெறுமதியான 60 தேசிக்கன்றுகளை வழங்கி உதவியுள்ளார்கள். இருவருக்கும் எமது உளப்பூர்வமான நன்றிகள். இலவசமாக கடந்த வருடமும்(50 தென்னங்கன்றுகள்) இந்த வருடமும் தென்னங்கன்றுகளை(60 கன்றுகள்) பெற்று தந்த எமது நிர்வாகியும் யாழ்ப்பாண சிறைச்சாலை அத்தியட்சகருமான திரு இந்திரகுமார் அவர்களுக்கு எமது நன்றிகள். அத்துடன் இன்றைய நிகழ்வில் கலந்துகொண்ட இயலாமையுடைய பிள்ளைகளின் குடும்பத்தினர் மற்றும் செயலாளர் திரு மோகனறூபன், திரு இராமலிங்கம், திரு சிறீதரன் ஆகியோருக்கு எமது நன்றிகள். ஒளிப்பதிவு திரு இ.சிறிதரன்.
-
திலீபனின் 38வது நினைவு தினம் அனுஷ்டிப்பு
'தியாக தீபம்' திலீபனின் 4ஆம் நாள் நினைவேந்தல் 18 Sep, 2025 | 11:25 AM "தியாக தீபம்" திலீபனின் 4ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை (18)அனுஷ்டிக்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/225388
-
அருவருக்கத்தக்க அரசியலுக்காக தியாகி திலீபனைப் பயன்படுத்தும் முன்னணி - இளங்குமரன் எம்.பி குற்றச்சாட்டு!
Published By: Vishnu 18 Sep, 2025 | 02:56 AM நினைவேந்தல்களை வைத்து தேர்தல் கணக்கு அரசியல் செய்யும் முன்னணியின் செயல் எப்போது நிறுத்தம் காணும் என நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவிக்கையில், தியாக தீபம் திலீபன் அண்ணனின் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்க வந்த அமைச்சர் சந்திரசேகருக்கு அஞ்சலி செலுத்தும் உரிமையைத் தடுப்பது, தமிழ்க் காங்கிரஸ் முன்னணியின் செயல் எனில் – அது அயோக்கியத்தனத்தின் உச்சமே ஆகும். யாரும் யாரையும் அஞ்சலிக்கலாம்; அதுதான் மனித மாண்பு. திலீபன் அண்ணன் போராடிய காலத்தில் அவருக்கு எதிராக நின்ற பலர் இன்று நினைவேந்தல்களில் பங்கேற்கின்றனர். அவர்களை முன்னணியே தேர்தல் அரசியலுக்காக அருகில் நிறுத்திக் கொள்கிறது. ஆனால், மற்றவர்களை அனுமதிக்க மறுப்பது எத்தகைய முரண்பாடு? ஒரு மாவீரனின் – தியாகியின் நினைவேந்தலை வாக்குக் கணக்குப் பொருட்டு அரசியல் ஆக்கிரமிப்பு செய்வது ஒருபோதும் மன்னிக்க முடியாத குற்றமாகும். இது மனித மாண்புகளை மீறிய காட்டுமிராண்டித்தனமே தவிர வேறில்லை என குறிப்பிடப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/225369
-
கெரவலபிட்டிய சொபாதனவி மின் உற்பத்தி நிலையம்; தேசிய கட்டமைப்பில் இணைப்பு
Published By: Vishnu 18 Sep, 2025 | 02:52 AM மின்சக்தி சுயாதீனத்துவம் நாட்டின் வளர்ச்சிக்காக அத்தியாவசியமானது. மின்கட்டணத்தை குறைப்பதற்கு முன்னர் அதற்குரிய நிலையான மற்றும் சாத்தியமான திட்டங்களை செயற்படுத்த வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். மெகாவோட் 350 கொள்ளவுடன் கூடிய கெரவலபிட்டிய சொபாதனவி மின் உற்பத்தி நிலையமானது பிரதமர் தலைமையில் தேசிய கட்டமைப்பில் இணைக்கப்பட்டது. தற்போதைய மின்சாரத் தேவையின் 12 சதவீதத்தை பூர்த்தி செய்ய முடிந்துள்ளது. இலங்கைப் பொறியியல் அறிவு, கட்டமைப்பு மற்றும் திறன்கள் சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 2030 ஆம் ஆண்டிற்குள் தேசிய தேவையின் 70 சதவீதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் பூர்த்தி செய்வதற்கான இலக்கிற்கு நேரடி பங்களிப்பு செய்யும். நாட்டின் ஆற்றல் துறையின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கான நோக்கில் கட்டியெழுப்பப்பட்ட 350 மெகாவாட் திறன் கொண்ட கெரவலப்பிட்டிய திரவமயமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மின் நிலையத்தின் இரண்டாம் கட்டம் இன்று (17) திறந்து வைக்கப்பட்டது. இலங்கை மின்சார சபையின் நீண்டகால மின் உற்பத்தி திட்டத்தில் பிரதானமானதாக விளங்கும் சோபாதனவி மின்நிலையம், தற்போதைய மின்சாரத் தேவையின் 12 சதவீத பங்கைக் பூர்த்தி செய்யக் கூடியதாகும். இதேபோன்று, இது இலங்கையின் மிகப்பெரியதும் மிகச் செயல்திறனும் கொண்ட கூட்டு சுழற்சி மின் நிலையமாகும். இந்த மின் நிலையம் அடுத்த 20 ஆண்டுகளுக்கான நாட்டின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யக்கூடியதாகும். இந்தத் திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டது. முதல் கட்டமானது, 220 மெகாவாட் திறன் கொண்ட திறந்த சுழற்சி செயல்பாடு. இரண்டாம் கட்டமானது, நீராவி டர்பைன் ஒன்றை நிறுவுவதன் மூலம் மேலும் 130 மெகாவாட் திறனைச் சேர்த்து. மொத்த திறன் 350 மெகாவாட்டாக காணப்படுகிறது. இங்கு உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சோபாதனவி மின்நிலையம் மூலம் தேசிய மின் அமைப்பிற்கு மேலும் 350 மெகாவாட் இணைக்கப்படுகிறது. மின்சக்தித் துறையில் இடையறாத முறையில் மாறிக்கொண்டிருக்கும் நுகர்வோர் தேவைகள் மற்றும் கட்டுப்பாட்டு வடிவமைப்புகளுடன் ஒத்திசைவாக, நிலைத்தன்மை மற்றும் புதுமையை முன்னிறுத்திய மாற்றத்திற்குரிய ஒரு யுகத்தை உலகம் தற்போது கடந்து வருகிறது. அதன்படி, உலகளாவிய போக்குகள் இவ்வாறு அமையும்போது, எங்கள் பிராந்தியத்தின் மின் கட்டணம் அதிகரித்த நாடுகளுக்குள் இலங்கை உயர் இடத்தில் இருப்பதைச் சொல்ல வேண்டும். நமது நாட்டில் பல தசாப்தங்களாக செயல்பட்ட தவறான பொருளாதார கொள்கையின் காரணமாக இப்போது நாடு பின்தங்கிய பொருளாதார பள்ளத்தாக்கிலிருந்து மீண்டு உற்பத்தி அடிப்படையிலான பொருளாதாரத்துக்குள் செல்வதற்கான முக்கிய தடையாக தாங்க முடியாத மின்சாரச் செலவினை குறிப்பிடலாம்.இதனை கருத்தில் கொண்டு, நாங்கள் மீள்சுழற்சி ஆற்றலுக்கு எங்கள் கவனத்தை திருப்பியுள்ளோம். இலங்கையை பிராந்தியத்தில் குறைந்த மின் விலை கொண்ட நாடாக மாற்றுவதற்காக, விலைமனு மற்றும் விலை அழைப்புச் செயல்முறைகளை செயற்படுத்தி, பாரம்பரிய எரிபொருள் அடிப்படையிலான மின்சாரத்தை மீள்சுழற்சி ஆற்றல் கொண்ட மூலங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதே எங்கள் இலக்காகும்.அதற்காக எங்கள் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/225368
-
கனடாவிலுள்ள இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் அமைப்பின் முற்றுகை மிரட்டல்
Published By: Digital Desk 1 18 Sep, 2025 | 08:01 AM கனடாவில் செயல்பட்டு வரும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பான "Sikhs for Justice" (SFJ)இ வான்கூவரில் உள்ள இந்திய தூதரகத்தை வியாழக்கிழமை (செப்டம்பர் 18) முற்றுகையிடப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. SFJ அமைப்பின் அறிவிப்பின்படி இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரைஇ 12 மணி நேரத்திற்கு இந்தியத் தூதரகத்தை முற்றுகையிடப் போவதாகத் தெரிவித்துள்ளது. மேலும் இந்திய-கனடா வம்சாவளியினர் தூதரகத்திலிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. கனடாவில் உள்ள இந்திய தூதரகங்கள்இ காலிஸ்தான் ஆதரவாளர்களைக் குறிவைத்து ஒரு உளவு வலையமைப்பை நடத்தி வருவதாக SJF குற்றம் சாட்டியுள்ளது. 2023-ல் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய உளவு அமைப்பின் பங்கு குறித்து அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் தெரிவித்ததை SFJ அமைப்பு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு கனடா அரசு வெளியிட்ட ஒரு அறிக்கையில் தங்கள் நாட்டில் காலிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருவதாகவும் அவற்றுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி கிடைப்பதாகவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. காலிஸ்தான் ஆதரவு அமைப்பின் இந்த மிரட்டல், கனடா மற்றும் இந்தியா இடையிலான இராஜதந்திர உறவுகளில் ஏற்கனவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. https://www.virakesari.lk/article/225378
-
ஒரு பயணமும் சில கதைகளும்
ஆம்பிளையள் என்ன லேசுப்பட்டவையே அண்ணை?!
-
திருகோணமலைக்கு வடகிழக்கே கடற்பகுதியில் நிலநடுக்கம்!
திருகோணமலை கடற்பரப்பில் நிலநடுக்கம் திருகோணமலை கடற்பரப்பில் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. திருகோணமலையில் இருந்து வடகிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (18) மாலை 4:06 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிறுவப்பட்ட நான்கு நிலநடுக்க வரைபடங்களாலும் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்த பணியகம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் வரைபடங்கள் மஹகனதராவ, ஹக்மான, பல்லேகல மற்றும் புத்தங்கல ஆகிய பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளன. https://adaderanatamil.lk/news/cmfpcvz9300iho29nqldpwvnq
-
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் - 2025
பாகிஸ்தான் அணிக்கு 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி Published By: Vishnu 18 Sep, 2025 | 02:42 AM பாகிஸ்தான் அணி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையிலான நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 41 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி தனது 17.4 ஓவரில் சகலவிட்கெட்டுக்களையும் இழந்து 105 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. ஆகவே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியினர் 41 ஓட்டங்களால் தோல்வியடைந்தனர். https://www.virakesari.lk/article/225366
-
காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளமை உறுதி
இனப்படுகொலை கடுமையான குற்றமாக இருந்தாலும் தண்டனை கிடைப்பதில் என்ன சிக்கல்? பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் லூயிஸ் பார்ரூசோ பிபிசி 17 செப்டெம்பர் 2025 காஸா போரில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறதா என்ற உலகளாவிய விவாதம் எழுந்துள்ளது. சர்வதேச சட்டத்தின் கீழ் இது மிகக் கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. செப்டம்பர் நடுப்பகுதி வரை, இஸ்ரேலின் ராணுவ தாக்குதல் காஸாவில் சுமார் 65,000 பேரைக் கொன்றுள்ளது. கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் என்று ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸின் தாக்குதலுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது. இதில் கொல்லப்பட்ட 1,200 பேரில் பெரும்பாலானோரும் காஸாவுக்கு கடத்தப்பட்ட 251 பேரும் பொதுமக்கள் ஆவர். காஸாவில் நடந்த தாக்குதல் மற்றும் அழிவுகள் பரவலான கண்டனங்களுக்கு வழிவகுத்துள்ளன. துருக்கி மற்றும் பிரேசில் உள்ளிட்ட பல நாடுகள், மனித உரிமை குழுக்கள் மற்றும் ஐ.நா.வால் நியமிக்கப்பட்ட சில வல்லுநர்கள், காஸாவில் இஸ்ரேலின் நடத்தை 'இனப்படுகொலை' எனக் கூறியுள்ளனர். 1948 இனப்படுகொலை தீர்மானத்தை மீறியதாக இஸ்ரேலுக்கு எதிராக 2023 டிசம்பரில் தென்னாப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) வழக்கு தொடர்ந்தது. ஒரு மாதத்திற்குப் பிறகு ஒரு இடைக்கால தீர்ப்பு, பாலத்தீனர்களுக்கு இனப்படுகொலையில் இருந்து பாதுகாப்பு பெறும் உரிமை இருக்கிறது என்று கூறியது. தென்னாப்பிரிக்கா கூறிய குற்றச்சாட்டுகளில் சில உண்மையென நிரூபிக்கப்பட்டால், அவை சர்வதேச சட்டத்தின் கீழ் இனப்படுகொலையாக கருதப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இஸ்ரேல் காஸாவில் இனப்படுகொலை செய்வதாக ஐநா ஆணையமும் தனது அறிக்கையில் கூறியுள்ளது. இந்த அறிக்கை, ஐநா மனித உரிமைகள் கவுன்சிலால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவிடமிருந்து தொகுக்கப்பட்ட தகவல்களாகும். பிரிட்டன் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய அரசுகள், இஸ்ரேலின் செயல்களை இனப்படுகொலை என்று விவரிப்பதை பெரும்பாலும் தவிர்த்துள்ளன. பிரான்ஸ் அதிபர் மக்ரோங் இந்தச் சொல்லைப் பயன்படுத்துவது அரசியல் தலைவரின் கையில் இல்லை என்றும் "வரலாற்றாசிரியர்கள்" பொருத்தமான நேரத்தில் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறினார். இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் "அப்பட்டமான பொய்கள்" என்று கடுமையாக நிராகரித்து, தனது பாதுகாப்பு மற்றும் தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தி வருவதாக வலியுறுத்துகிறது. இந்த வாதத்தை இஸ்ரேலின் மிகவும் சக்திவாய்ந்த நட்பு நாடான அமெரிக்காவும் ஆதரிக்கிறது. இனப்படுகொலை என்றால் என்ன, இது பொருந்துமா என்பதை யார் முடிவு செய்யலாம்? இனப்படுகொலை என்பதன் வரையறை என்ன? பட மூலாதாரம், Bettmann Archive/Getty Images படக்குறிப்பு, யூத-போலிஷ் வழக்கறிஞர் ரஃபேல் லெம்கின் இனப்படுகொலை மாநாட்டை உருவாக்குவதற்கு உதவினார். இந்தச் சொல் 1943இல் யூத-போலிஷ் வழக்கறிஞர் ரஃபேல் லெம்கினால் உருவாக்கப்பட்டது. அவர் கிரேக்க வார்த்தையான "ஜெனோஸ்" (இனம் அல்லது பழங்குடி) மற்றும் லத்தீன் வார்த்தையான "சைடு" (கொல்லுதல்) ஆகியவற்றை இணைத்தார். அவரது சகோதரரைத் தவிர அவரது குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் கொல்லப்பட்ட யூத இனப்படுகொலை பயங்கரங்களைக் கண்ட பிறகு சர்வதேச சட்டத்தின் கீழ் இனப்படுகொலை ஒரு குற்றமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று லெம்கின் வலியுறுத்தினார். அவரது முயற்சிகள் 1948 டிசம்பரில் ஐ.நா. இனப்படுகொலை தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள வழிவகுத்தது, இது 1951 ஜனவரியில் நடைமுறைக்கு வந்தது. 2022-ஆம் ஆண்டு வரை, இது 153 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தீர்மானத்தின் இரண்டாம் பிரிவு, இனப்படுகொலை என்பதை "தேசிய, இன, இனவியல், அல்லது மதக் குழுவை, முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடன் செய்யப்படும் பின்வரும் செயல்களில் ஏதேனும் ஒன்று" என்று வரையறுக்கிறது: குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது குழுவின் உறுப்பினர்களுக்கு கடுமையான உடல் அல்லது மன ரீதியான தீங்கு விளைவிப்பது குழுவின் அழிவை, முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஏற்படுத்துவதற்காக வேண்டுமென்றே மோசமான வாழ்க்கை சூழலை உருவாக்குவது குழுவிற்குள் பிறப்புகளைத் தடுக்கும் நடவடிக்கைகளை எடுப்பது குழுவின் குழந்தைகளை வலுக்கட்டாயமாக மற்றொரு குழுவிற்கு மாற்றுவது கையெழுத்திட்ட நாடுகளுக்கு இனப்படுகொலையை "தடுக்கவும் தண்டிக்கவும்" ஒரு பொதுவான கடமையை தீர்மானம் விதிக்கிறது. இனப்படுகொலை என்பதை யார் தீர்மானிக்கிறார்கள்? பட மூலாதாரம், Abdalhkem Abu Riash/Anadolu via Getty Images படக்குறிப்பு, காஸா மக்கள் பட்டினியால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதை இஸ்ரேல் மறுக்கிறது ஒரு சூழ்நிலை இனப்படுகொலையாக உள்ளதா என்பதை தன்னால் தீர்மானிக்க முடியாது என்றும் சர்வதேச நீதிமன்றங்கள் போன்ற அங்கீகரிக்கப்பட்ட நீதித்துறை அமைப்புகளுக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது என்றும் ஐ.நா. கூறுகிறது. சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு சில வழக்குகளில் மட்டுமே இனப்படுகொலை என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளன. 1994இல் ருவாண்டாவில் நடைபெற்ற இனப் படுகொலை, 1995இல் போஸ்னியாவில் ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலை மற்றும் 1975 முதல் 1979 வரை கம்போடியாவில் கமர் ரூஜின் சிறுபான்மை குழுக்களுக்கு எதிரான நடவடிக்கை. சர்வதேச நீதிமன்றம் (ICJ) மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) ஆகியவை இனப்படுகொலை குறித்து தீர்ப்பு வழங்குவதற்கு அதிகாரம் பெற்ற முக்கிய சர்வதேச நீதிமன்றங்களாகும். ருவாண்டா மற்றும் முன்னாள் யூகோஸ்லாவியாவில் இனப்படுகொலைகள் குறித்து விசாரிக்க ஐ.நா. தற்காலிக தீர்ப்பாயங்களையும் அமைத்தது. சர்வதேச நீதிமன்றம், நாடுகளுக்கு இடையேயான பிரச்னைகளைத் தீர்க்கும் ஐ.நாவின் உயர்ந்த நீதித்துறை அமைப்பாகும். தற்போது நடந்து வரும் இனப்படுகொலை வழக்குகளில், 2022இல் யுக்ரேன் ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ந்த வழக்கு ஒன்றாகும். யுக்ரேனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் யுக்ரேன் இனப்படுகொலை செய்ததாக ரஷ்யா தவறாக குற்றம் சாட்டியதாகவும், அதை படையெடுப்புக்கு ஒரு காரணமாக பயன்படுத்தியதாகவும் யுக்ரேன் குற்றம் சாட்டியுள்ளது. பட மூலாதாரம், Mahmoud Abu Hamda/Anadolu via Getty Images படக்குறிப்பு, உதவிகள் மீது விதிக்கப்பட்டிருந்த முழுமையான தடையை இஸ்ரேல் மே மாதத்தில் பகுதியாக தளர்த்திக்கொண்டது மற்றொரு உதாரணம், 2017இல் காம்பியா மியான்மருக்கு எதிராக தொடர்ந்த வழக்கு. பௌத்த மக்கள் பெரும்பான்மையாக உள்ள நாடு, முஸ்லிம் ரோஹிஞ்சா சிறுபான்மையினருக்கு எதிராக "பரவலான மற்றும் திட்டமிட்ட அழிக்கும் நடவடிக்கைகளை" அவர்களின் கிராமங்களில் நடத்தியதாக குற்றம் சாட்டியது. 2002இல் ரோம் சாசனத்தின் கீழ் அமைக்கப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC), தனிநபர்களை விசாரணைக்கு உட்படுத்துகிறது. இந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்த 125 நாடுகள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளன. அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகியவை குறிப்பிடத்தக்க விதிவிலக்குகளாக உள்ளன. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இனப்படுகொலை என்று குற்றம் சாட்டப்பட்ட வழக்குகளை விசாரித்து வருகிறது. ஆனால் 2019இல் கிட்டத்தட்ட முப்பது ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகு பதவி நீக்கப்பட்ட சூடானின் முன்னாள் அதிபர் ஓமர் ஹசன் அஹ்மத் அல் பஷீர் மீது மட்டுமே இதுவரை குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது. அவர் இன்னும் தலைமறைவாக உள்ளார். தேசிய நாடாளுமன்றங்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் இனப்படுகொலை என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்றாலும், இவை அவர்களின் எல்லைகளுக்கு அப்பால் சட்டபூர்வமான அங்கீகாரத்தைக் கொண்டிருக்கவில்லை என்று ஐ.நா. கூறுகிறது. உதாரணமாக, 1932-33இல் யுக்ரேனில் ஜோசப் ஸ்டாலினின் கூட்டுமயமாக்கல் கொள்கைகளால் மில்லியன் கணக்கான மக்கள் பட்டினியால் இறந்த 'ஹோலோடோமரை' பல அரசாங்கங்களும் நாடாளுமன்றங்களும் சமீபத்திய ஆண்டுகளில் இனப்படுகொலை என்று அங்கீகரித்துள்ளன. தகுதியான நீதிமன்றங்களின் முடிவுகளைத் தொடர்ந்து மட்டுமே இனப்படுகொலை தீர்மானிக்கப்பட வேண்டும் என்ற நீண்ட கால கொள்கை காரணமாக பிரிட்டன் இவ்வாறு அங்கீகரிக்கவில்லை. பட மூலாதாரம், Khames Alrefi/Anadolu via Getty Images படக்குறிப்பு, காஸாவில் பஞ்சம் மற்றும் பரவலான பட்டினி இருப்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருவதாக ஐநா சொல்கிறது விமர்சனங்கள் உள்ளனவா? இனப்படுகொலை தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதிலிருந்து, பல்வேறு தரப்பினரால் அதிலும் குறிப்பாக, குறிப்பிட்ட வழக்குகளுக்கு இதை பயன்படுத்துவதில் உள்ள சிரமத்தால் விரக்தியடைந்தவர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளது. சிலர் வரையறை மிகவும் குறுகியது என்று வாதிடுகின்றனர். மற்றவர்கள் இது அதிகப்படியான பயன்பாட்டால் மதிப்பிழந்துவிட்டது என்று கூறுகின்றனர். "இனப்படுகொலைக்கான அளவுகோலை எட்டுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது," என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பணியாற்றிய இனப்படுகொலை தொடர்பான நிபுணர் திஜ்ஸ் பவுக்னெக்ட் ஏஎஃப்பிக்கு அளித்த பேட்டியில் கூறினார். "நோக்கம் இருந்தது என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும் என்பதுடன் நடந்தவற்றுக்கு அந்த நோக்கமே ஒரே சாத்தியமான விளக்கம் என்றும் நிரூபிக்கவேண்டும்," என அவர் மேலும் கூறினார். மற்ற சில பொதுவான விமர்சனங்களில், சில அரசியல் மற்றும் சமூகக் குழுக்களை பாதிக்கப்பட்டவர்களாக சேர்க்காதது மற்றும் எத்தனை இறப்புகள் இனப்படுகொலைக்கு சமமாகும் என்பதை நிறுவுவது ஆகியவை அடங்கும். இனப்படுகொலை நடந்ததா என ஒரு நீதிமன்றம் தீர்மானிக்க பல ஆண்டுகள் ஆகலாம் என்று பவுக்னெக்ட் குறிப்பிட்டார். ருவாண்டாவின் வழக்கில், ஐ.நா. அமைத்த தீர்ப்பாயம் இனப்படுகொலை நடந்ததாக முறையாக முடிவு செய்ய கிட்டத்தட்ட பத்தாண்டுகள் எடுத்தது. மேலும் 1995இல் ஸ்ரெப்ரெனிகா படுகொலையில் கிட்டத்தட்ட 8,000 முஸ்லிம் ஆண்கள் மற்றும் சிறுவர்கள் கொல்லப்பட்டதை 2017-ஆம் ஆண்டு வரை சர்வதேச நீதிமன்றம் இனப்படுகொலை என்று அங்கீகரிக்கவில்லை. யார்க் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் நிபுணர் ரேச்சல் பர்ன்ஸ், மிகக் குறைவான குற்றவாளிகளே தங்கள் குற்றங்களுக்கு தண்டிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார். "ருவாண்டா, முன்னாள் யூகோஸ்லாவியா மற்றும் கம்போடியாவில் உண்மையான குற்றவாளிகளின் எண்ணிக்கை தெரியவில்லை, ஆனால் ஒருசிலரே தண்டிக்கப்பட்டுள்ளனர்." ஒரு சூழல் சட்டரீதியாக இனப்படுகொலை என்று வரையறுக்கப்பட்டவுடன், தீர்மானத்தில் கையெழுத்திட்ட நாடுகள் அதைத் தடுக்க அல்லது நிறுத்துவதற்கு ராஜீய, தடைகள் அல்லது ராணுவ தலையீடு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். உதாரணமாக, ருவாண்டா இனப்படுகொலைகள் நடந்து கொண்டிருந்தபோது, தீர்மானத்தின் கீழ் சட்ட மற்றும் அரசியல் கடமைகளைத் தவிர்க்க, அமெரிக்க அதிகாரிகள் "இனப்படுகொலை" என்ற வார்த்தையை வேண்டுமென்றே பயன்படுத்தாமல் இருந்ததாக அமெரிக்காவின் வெளியிடப்பட்ட ஆவணங்கள் வெளிப்படுத்தின. "ஐ.நா. வரையறையுடன் கூட, வரையறை செய்யத் தவறுதல், செயல்படத் தவறுதல் மற்றும் விசாரணை செய்யத் தவறுதல் ஆகியவை இன்னும் உள்ளன," என்று பர்ன்ஸ் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cddmz0vv2eyo
-
கருத்து படங்கள்
அததெரண கருத்துப் படம்.
-
இரவில் தூங்குவதற்கு முன் வைஃபை, மொபைல் இன்டர்நெட்டை அணைத்துவிட வேண்டுமா?
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, வைஃபை ரூட்டர்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு (radiation) குறித்து விவாதங்கள் தொடங்கியுள்ளன. கட்டுரை தகவல் பரத் ஷர்மா பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் "படுடா செல்லமே, மணி இரவு 12 ஆகிறது, இன்னும் எவ்வளவு நேரம் மொபைல் ஃபோன் பார்ப்பாய்?" "ஒரு படம் மட்டும் முடிச்சிடறேன், பகலில் வைஃபை கிடைக்காதே!" "இந்த வைஃபை-க்கு ஏதாவது செய்யணும்!" டெல்லி நொய்டாவைச் சேர்ந்த சரிதாவுக்கும், எட்டாம் வகுப்பு படிக்கும் அவரது மகன் அக்ஷருக்கும் இடையே நடக்கும் இந்த உரையாடல் ஒரு வழக்கமான நிகழ்வு. வாரத்தில் மூன்று, நான்கு இரவுகள் இது நடக்கும். சிலர் வைஃபை (Wi-Fi) என்பதன் முழு வடிவம் 'வயர்லெஸ் ஃபிடலிட்டி' (Wireless Fidelity) என்பார்கள். அதேபோல, ஹை-ஃபை (Hi-Fi) என்பதன் முழு வடிவம் 'ஹை ஃபிடலிட்டி' (High Fidelity) என்பதாகும். ஆனால், வைஃபை அலையன்ஸ் என்ற தொழில் கூட்டமைப்பு வைஃபைக்கு என்று எந்த விரிவாக்கமும் இல்லை என்று கூறுகிறது. எளிமையாகக் கூறுவதானால் வைஃபை என்பது கேபிள்கள் மற்றும் இணைப்புகளின் சிக்கலில் சிக்காமல், நம்மை இணையத்துடன் இணைக்கும் ஒரு தொழில்நுட்பம். இதன் மூலம் நாம் இணையத்திலிருந்து தகவல்களைப் பெறவும், ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளவும் முடியும். இரவில் வைஃபையை இயக்கத்தில் வைப்பதால் ஆரோக்கியத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இரவு நேரங்களில் பொழுதுபோக்கு அல்லது வேலைக்காக இணையத்தைப் பயன்படுத்தும்போது வைஃபை ரூட்டர்கள் இரவிலும் அணைக்கப்படாமல் அப்படியே இருந்து விடுகின்றன. வைஃபை என்பது கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் போன்ற சாதனங்களை கேபிள்கள் இல்லாமல் ஒரு நெட்வொர்க்குடன் இணைக்கும் ஒரு தொழில்நுட்பம் ஆகும். இது வயர்லெஸ் ரூட்டரைப் பயன்படுத்தி ஒரு வயர்லெஸ் லோக்கல் ஏரியா நெட்வொர்க்கை (WLAN) உருவாக்குகிறது. மொபைல் ஃபோன் பழக்கம் நமக்கு எல்லோருக்கும் தெரியும். இப்போது வைஃபை ஒரு புதிய பழக்கமாக வளர்ந்து வருகிறது. ஆனால், இதைப்பற்றி அதிகம் விவாதிக்கப்படாத ஒரு அம்சம் இப்போது விவாதத்திற்கு வந்துள்ளது. யாராவது இரவு தாமதமாக மொபைல் ஃபோன், டேப்லெட், கணினி அல்லது லேப்டாப்பில் பொழுதுபோக்கு அல்லது வேலைக்காகச் செயல்படும்போது, வைஃபை ரூட்டரும் இரவு முழுவதும் அப்படியே இயக்கத்தில் இருக்க வாய்ப்பு அதிகம். அப்படியானால், வைஃபை ரூட்டரை அணைக்காமல் வைத்திருப்பதால் நம் ஆரோக்கியத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? அல்லது அதை அணைப்பதால் ஆரோக்கியத்திற்கு ஏதேனும் நன்மைகள் உண்டா? இந்தக் கேள்வியை இன்னும் கூர்மையாகக் கேட்டால், இரவில் வைஃபை ஆன் செய்து வைப்பதால் மனித உடலின் நரம்பியல் அம்சங்களுக்கு அல்லது மூளைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? டெல்லி-என்சிஆர் பகுதியில் உள்ள யசோதா மெடிசிட்டியில் ஆலோசகராகப் (குறைந்தபட்ச ஊடுருவல் கொண்ட நரம்பியல் அறுவை சிகிச்சை) பணிபுரியும் மருத்துவர் திவ்ய ஜோதியிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டபோது, அறிவியல் ரீதியாக இதுவரை அப்படி எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்பதால், நேரடியாக அப்படிச் சொல்ல முடியாது என்று கூறினார். "தர்க்கரீதியாகப் பார்த்தால், மூளையின் தூண்டல்கள் மின் தூண்டல்கள் என்பதால், அப்படி நினைக்கலாம். வைஃபை அல்லது பிற சாதனங்கள் மின்காந்த அலைகளை (electromagnetic fields -EMF) சார்ந்துள்ளன," என மருத்துவர் மேலும் தெரிவித்தார். "எனவே, இது மூளையின் தூண்டல்களுடன் குறுக்கிட வாய்ப்புள்ளது. ஆனால், அப்படி யோசிப்பதற்கு எந்தவொரு அறிவியல் காரணமோ, விளக்கமோ அல்லது முடிவோ இதுவரை இல்லை. ஆனால், முடிந்தவரை அதிலிருந்து நாம் விலகி இருக்க வேண்டும் என்றுதான் தர்க்கம் கூறுகிறது." மூளைத் தூண்டுதல்கள் என்றால் என்ன? மூளைத் தூண்டுதல்கள் (Brain impulses) என்பவை, நியூரான்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளவும், தகவல்களைப் பறிமாறவும் உதவும் மின்னணு - வேதியியல் சமிக்ஞைகள் (electrochemical signals) ஆகும். இந்த நரம்புத் தூண்டுதல்கள், செயல் ஆற்றல் (action potential) என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தத் தூண்டுதல்களை மூளைக்கு எடுத்துச் செல்லும் நரம்புக்கு உணர்ச்சி நரம்பு (sensory nerve) என்று பெயர். இந்த நரம்புகள் மூளைக்கு செய்திகளைக் கொண்டு செல்வதால்தான், நம்மால் தொடு உணர்ச்சி, சுவை, வாசனை ஆகியவற்றை உணர முடிகிறது. இரவு மற்றும் பகல் நேரங்களில் வைஃபை ரூட்டரின் விளைவு பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இரவு மற்றும் பகலில் கதிர்வீச்சால் ஏற்படும் விளைவுகளில் என்ன வித்தியாசம் உள்ளது என்ற கேள்வி அடிக்கடி மனதில் எழுகிறது இரவில் வைஃபை ரூட்டரை அணைத்து வைப்பது அவசியம் என கூறினால் பகலில் ஏன் அணைத்து வைக்க தேவையில்லை? இந்தக் கேள்விக்கு பிபிசியிடம் பதிலளித்த மருத்துவர் திவ்ய ஜோதி, "பகல் மற்றும் இரவில் உடலின் செயல்பாடுகள் வேறுபடுகின்றன. இரவில் உடலின் அலைகள் வேறுபட்டவை, அவை தூக்க அலைகள். இரவில் நல்ல தூக்கம் பெறுவது மிகவும் முக்கியமானது. அது தூக்க சுழற்சியால் தீர்மானிக்கப்படுகிறது." "அதனால்தான், இரவில் அதை அணைத்து வைக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இதனால், மூளைக்கு முழுமையாக ஓய்வு கிடைத்து, நல்ல தூக்கம் கிடைக்கும். ஆனால், பகல் நேரத்தில் நாம் வேலை செய்ய வேண்டும் என்பதால், தூக்கத்தில் குறுக்கீடு இல்லை. ஆனால், இந்த வெளிப்பாடு எவ்வளவு குறைவாக இருக்கிறதோ, அவ்வளவு நல்லது என்பதுதான் தர்க்கம்." ஆனால், இரவில் வைஃபையை மட்டும் தவிர்ப்பது போதுமா? நாம் அடிக்கடி தலையணைக்கு அருகில் வைத்துத் தூங்கும் மொபைல் ஃபோன்கள் பாதிப்பை ஏற்படுத்தாதா? இதற்கு மருத்துவர், மொபைல் ஃபோன்களும் மைக்ரோவேவ்களை அடிப்படையாகக் கொண்டவை என்று கூறுகிறார். அவையும் ஒரு வகையான கதிர்வீச்சை உருவாக்குகின்றன. ஆனால், அவற்றின் அதிர்வெண் (frequency) வேறுபட்டது. தர்க்கரீதியாகப் பார்த்தால், இவை கூட தூக்கத்தில் குறுக்கிடலாம். நீங்கள் மொபைல் ஃபோனைப் பயன்படுத்தாமல் இருந்தாலும் கூட, மின்காந்த அலைகள் இருந்துகொண்டே இருக்கும். "பின்னணிக் கதிர்வீச்சோடு ஒப்பிடும்போது, மொபைல் ஃபோன் மற்றும் வைஃபை ஆகியவற்றிலிருந்து வரும் கதிர்வீச்சு மிகக் குறைவு. இவை இரண்டிலிருந்தும் வெளிப்படும் கதிர்வீச்சு அதிகமாகுமா என்றால், இல்லை. இதற்கு மாறாக, நம் மீதான பின்னணிக் கதிர்வீச்சின் தாக்கம் மிகவும் அதிகம்," என்று மருத்துவர் திவ்ய ஜோதி தெரிவித்தார். நிபுணர்களின் கூற்றுப்படி, நம் வீடு மற்றும் அலுவலகங்களில் உள்ள அனைத்து வகையான சாதனங்களிலிருந்தும் கதிர்வீச்சு வெளிப்படுகிறது. டிவி, பிரிட்ஜ் முதல் ஏசி வரை. எந்த மின் சாதனமாக இருந்தாலும், மின்காந்த அலைகள் அதனுடன் தொடர்புடையவை. சில நிபுணர்கள், மின்காந்த அலைகள் அளவுக்கு அதிகமாக வெளிப்படுமோ என்று பயந்தால், நீங்கள் தூங்கும் அறையில் ரூட்டரை வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். அல்லது அது சாத்தியமில்லை என்றால், படுக்கையிலிருந்து ரூட்டரை சற்றுத் தள்ளி வைக்கலாம். நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்தியாவில் மொபைல் ஃபோனின் வரலாறு சுமார் 30 ஆண்டுகள் பழமையானது மருத்துவத் துறை நிபுணர்களைத் தவிர, தொழில்நுட்பத் துறை நிபுணர்களுடனும் நாங்கள் பேசினோம். இந்த விஷயம் குறித்து துல்லியமான தகவல்கள் எதுவும் இல்லை. இதனால், குழப்பம் அதிகமாக உள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர். தொழில்நுட்ப நிபுணர் முகமது ஃபைசல் அலி, "நல்ல தூக்கத்தைப் பெற இரவில் வைஃபையை அணைக்க வேண்டும் என்பதை நிரூபிக்க எந்த ஆய்வும் இல்லை" என்றார். "அல்லது வைஃபையை ஆன் செய்து வைத்திருப்பது நமது நரம்பியல் அல்லது வேறு எந்த அமைப்பையும் பாதிக்கிறது என்பதை நிரூபிக்கவும் ஆய்வு இல்லை. ஆனால், எந்தவொரு அலைகளின் தாக்கமும் நீண்ட காலத்திற்கு ஏற்படும் போது விளைவை ஏற்படுத்தலாம் என்று கூறலாம். இது ஒரு பொதுவான விஷயம்." "கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் மொபைல் மற்றும் வைஃபையின் வளர்ச்சி மிக அதிகமாக உள்ளது," என அலி பிபிசியிடம், கூறினார். "எனவே, எதிர்காலத்தில் ஒரு ஆய்வு நடத்தப்படலாம். அதில், இந்த விஷயங்களால் இந்தந்த பாதிப்புகள் ஏற்படலாம் ஆகவே, அவற்றைக் குறைவாகவே பயன்படுத்த வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வரலாம். ஆனால், இதுவரை அப்படி எதுவும் இல்லை." மொபைல் ஃபோன்களில் சொந்த இணைய வசதியும் உள்ளது. இந்தத் தர்க்கம் அவற்றுக்கும் பொருந்துமா? "மின்காந்த அலைகளோ அல்லது ரேடியோ அலைகளோ, எதுவாக இருந்தாலும் அதிகமாக அவற்றின் தாக்கத்திற்கு உள்ளாவது நல்லதல்ல என்று ஒரு உணர்வு உள்ளது. இப்போது நம்மிடம் சிறந்த தரவுகள் இருப்பதால் இப்போது இது குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். எனக்கு தெரிந்தது மற்றும் புரிதலின்படி, பல நேரங்களில் அதைப் பார்த்து பயப்படும் அளவு இவற்றால் அவ்வளவு பாதிப்பு ஏற்படாது" என்று கூறினார் அலி. கதிர்வீச்சு, அலைகள் அல்லது மின்காந்த அலைகளால் உடலில் என்னென்ன மோசமான விளைவுகள் ஏற்படலாம் என்று நிபுணர்களிடம் கேட்கப்பட்டது "கோட்பாட்டு ரீதியாகப் பார்த்தால், இது நல்ல தூக்கத்திற்கு இடையூறாக இருக்கலாம். அப்படி நடந்தால், பகல் நேரத்தில் நமது செயல்திறன் பாதிக்கப்படும். கவனம் குறையும். மேலும், உடலில் கட்டிகள் உருவாகுவதற்கும், வளர்வதற்கும் கதிர்வீச்சுக்கும் தொடர்புள்ளது," என மருத்துவ திவ்ய ஜோதி தெரிவித்தார். வைஃபை உடன், மொபைல் ஃபோன்களிலிருந்து வரும் கதிர்வீச்சு குறித்தும் விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தியாவில் பல மொபைல் ஃபோன்கள் இப்போது 5G நெட்வொர்க்கில் இயங்குகின்றன. சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இது ஐரோப்பாவில் வந்தபோது, புதிய தொழில்நுட்பம் தொடர்பான உடல்நல அபாயங்கள் குறித்த கேள்விகள் எழுந்தன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz7r0ge2nn0o
-
கருத்து படங்கள்
அததெரண கருத்துப் படம்.
-
ஜனாதிபதி முறைமையில் பாரிய மாற்றம்! அநுரவுக்கு பின்னர் எவருக்கும் இடமில்லை
அரசியலமைப்பு மாற்றத்தில் சர்வாதிகார ஜனாதிபதி முறைமை(நிறைவேற்று அதிகாரம் கொண்ட) ஒழிக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறும் புதிய முறைமை உருவாக்கப்படும் என பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க கூறியுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ஐந்து வருடகால திட்டத்தில் குறித்த அரசியலமைப்பு மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் உரையாற்றிய அவர், தேர்தல் விஞ்ஞாபனம் "எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்து விடயங்களையும் ஐந்து வருடங்களுக்குள் நிறைவேற்ற உள்ளோம். அதில் அரசியலமைப்பு மாற்றமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு மாற்றத்தில் சர்வாதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறும் புதிய முறைமை உருவாக்கப்படும். 2029ஆம் ஆண்டுக்கு முன் புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும். ஜனாதிபதி அநுரவுக்கு பின்னர் ஜனாதிபதி யாரும் இருக்க மாட்டார்கள். நாங்கள் சமர்ப்பித்துள்ள சொத்து விபரங்கள் தொடர்பில் பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதற்கு முன்னர் இவ்வாறு நடந்துள்ளதா என நினைத்து பாருங்கள். இதை நேர்மறையாக நோக்குங்கள். ஒரு நாடு என்ற வகையில் சாதகமான விடயமாகும். நாங்கள் அரசியலுக்கு வரும் போது எவ்வளவு சொத்து இருந்தது. விட்டுச் செல்லும்போது எவ்வாறு என்று மக்கள் தெரிந்து கொள்ளலாம். இதற்கு முன்னர் இருந்த அரசியல்வாதிகள் வரும் போது இருந்த சொத்தின் மதிப்பும் பின்னரும் எவ்வாறு அதிகரித்தது என்பதில் எமக்கிடையில் ஒரு உரையாடல் மட்டுமே இருந்தது. நாங்கள் வெளிப்படை தன்மையுடன் செயற்படுகிறோம்” என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/225321
-
ஐஸ் போதைப்பொருளுடன் தேரர்கள் இருவர் கைது!
17 Sep, 2025 | 03:53 PM கண்டி, கெலிஓயா, பிட்டவலவத்த பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் தேரர்கள் இருவர் கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் திங்கட்கிழமை (15) கைதுசெய்யப்பட்டுள்ளனர். கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தேரர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 25 வயதுடைய தேரர்கள் இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட தேரர்கள் இருவரும் கண்டி பிரதான நீதவான் நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை (16) ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்களை பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/225321
-
வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத மணல் அகழ்வு - நடவடிக்கை எடுக்காத பொலிஸார்!
17 Sep, 2025 | 06:14 PM யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு தாளையடியில் அமைந்துள்ள கடல் நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலைய வளாகத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, சட்டவிரோத மணல் அகழ்வினை மேற்கொண்டு வரும் கும்பலொன்று தினமும் பல டிப்பர்களில் மண்ணை செம்பியன் பற்று தாளையடி கடற்கரை வீதி வழியாக ஏற்றிச்சென்று விற்பனையில் ஈடுபடுகிறது. இது தொடர்பாக பல ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த மணல் அகழப்படும் பிரதேசத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மருதங்கேணி பொலிஸ் நிலையம் அமைந்துள்ளது. ஆனாலும் மணல் அகழ்வு விடயத்தில் இதுவரை எந்த சந்தேக நபரும் கைது செய்யப்படவில்லை. தொடர்ச்சியாக இடம்பெறும் மணல் அகழ்வால் வடமராட்சி கிழக்கின் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது மட்டுமன்றி, மக்கள் குடியிருக்க முடியாதளவுக்கு கடல் நீர் உட்புகக்கூடிய நிலைமையும் தோன்றியுள்ளது. https://www.virakesari.lk/article/225316