Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்கலாம் ; இந்திய மத்திய அரசு Published By: Digital Desk 3 04 Sep, 2025 | 03:46 PM போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை விட்டு வெளியேறிய இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள், இந்தியாவில் தாங்கள் சுதந்திரமாக வாழ வழிவகை செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், 2015 ஜன.9ம் தேதிக்கு முன்பு உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து, அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள், சட்டப் பூர்வமாக தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் உள்ள தண்டனை விதிகளில் இருந்தும் இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. இதன் மூலம், இலங்கைத் தமிழர்கள் இனி சட்டவிரோத குடியேறிகள் அல்ல. https://www.virakesari.lk/article/224203
  2. தென்னிந்திய அரசியல்வாதிகளுக்காக ஜனாதிபதி கச்சத்தீவு செல்லவில்லை - நளிந்த ஜயதிஸ்ஸ 04 Sep, 2025 | 05:13 PM (எம்.மனோசித்ரா) தென்னிந்நிய அரசியல்வாதிகளுக்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கச்சதீவு செல்லவில்லை. அது எமக்கு உரித்தான நிலப்பரப்பாகும். எனவே கச்சதீவு தொடர்பில் நாம் மீண்டும் பேச வேண்டிய தேவை இல்லை. அரச தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதியால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அங்கு செல்ல முடியும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் வியாழக்கிழமை (04) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் அபிவிருத்தி திட்டங்கள் சிலவற்றை ஆரம்பித்து வைப்பதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்தார். யாழ்ப்பாணத்தில் மாத்திரமின்றி கிழக்கு மற்றும் ஏனைய மாகாணங்களிலும் அபிவிருத்தி திட்டங்களை திறந்து வைக்கும் நிகழ்வுகளில் எதிர்வரும் மாதங்களில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார். ஜனாதிபதியின் கச்சதீவு விஜயம் அதிவிசேடமானதல்ல. தென்னிந்தியாவில் அவ்வப்போது அரசியல் தலைவர்கள் கச்சதீவு குறித்து பேசுவது வழமையானதொரு விடயமாகும். அவர்கள் தமக்காக வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு கச்சதீவு தொடர்பிலோ அல்லது வடக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலோ வாக்குறுதிகளை வழங்குவர். எனவே கச்சதீவு தொடர்பில் நாம் மீண்டும் பேச வேண்டிய தேவை இல்லை. கச்சதீவு எமக்கு உரித்தான நிலப்பரப்பாகும். அதில் சுற்றுலா அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து , அப்பகுதியை அபிவிருத்தி செய்வது குறித்தும் கூடுதல் அவதானம் செலுத்தியிருக்கின்றோம். அந்த வகையில் தென்னிந்தியாவில் கூறப்பட்ட கருத்துக்கும் ஜனாதிபதியின் கச்சதீவு விஜயத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அரச தலைவர் என்ற ரீதியில் நாட்டிலுள்ள சகல பிரதேசங்களுக்கும் ஜனாதிபதியால் செல்ல முடியும். அவ்வாறு செல்லும் போது மக்களுடன் கலந்துரையாடி, அப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பில் நேரடியாக அவதானம் செலுத்தினால் அது சிறந்ததாகும். நாம் அறிந்த வகையில் இதுவரையில் அரச தலைவரொருவர் கச்சதீவுக்குச் செல்லவில்லை. அந்த வகையில் ஜனாதிபதியின் இந்த விஜயம் மிக முக்கியத்துவமுடையதாகும் என்றார். https://www.virakesari.lk/article/224207
  3. Published By: Vishnu 04 Sep, 2025 | 06:49 PM (இராஜதுரை ஹஷான்) ஐக்கிய நாடுகள் சபையையோ அல்லது சர்வதேச சமூகத்தையோ திருப்திப்படுத்துவதற்காக காணாமல் போனோர் தொடர்பிலும்,மனித புதைகுழிகள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை. தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த வேண்டுமாயின் கடந்த கால சம்வங்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும். செம்மணி மனித புதைகுழி சர்வதே தரத்துடன் முறையாக ஆராயப்படுகிறது முழுமையான ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்குவோம் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். காணாமலாக்கப்பட்டோருக்கு எமது அரசாங்கத்தில் நீதி கிடைக்காவிடின், எந்த அரசாங்கத்தில் நீதி கிடைக்கும்? களுவாஞ்சிகுடி மற்றும் குருக்கள்மடம் மனித புதைகுழிகள் தொடர்பில் முறைப்பாடளிக்குமாறு பொதுக்களிடம் கேட்டுக்கொள்கிறேன். வழங்கப்படும் தகவல்கள் பாதுகாக்கப்படுவதுடன் தகவல் வழங்குபவரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார். மட்டக்களப்பு,களுவாஞ்சிக்குடி மற்றும் குருக்கள்மடம் ஆகிய பகுதிகளில் மனித புதைகுழிகள் இருப்பதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய அப்பகுதிகளை அண்மித்த பகுதிகளுக்கு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் கண்காணிப்பு விஜயத்தை வியாழக்கிழமை (4) மேற்கொண்டிருந்தார். கள கண்காணிப்பின் பின்னர் அமைச்சர் ஊடகங்களுக்கு வருமாறு குறிப்பிட்டார். கடந்த காலங்களில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் முறையாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் அரசாங்கத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.இதனால் கடந்த காலங்களை காட்டிலும் காணாமலாக்கபட்டோர் தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. செம்மணி மனிதப்புதைகுழியின் அகழ்வு பணிகள் சர்வதேச தரத்துடன் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தின் கண்காணிப்புடன் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகின்றன. ஏனைய மனித புதைகுழிகள் இடத்தை காட்டிலும் குருக்கல்மடத்தின் நிலைமை மாறுப்பட்டது.2014 ஆம் ஆண்டு இந்த இடம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.2019 ஆம் ஆண்டு இந்த இடத்தை பரிசோதனை செய்வதற்கு நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரிகளின் ஒத்துழைப்பு மற்றும் அகழ்வு பணிகளுக்கு தேவையான நிதியை வழங்குமாறு காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் குறித்த தரப்பினருக்கு வலியுறுத்தியுள்ளது.முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மற்றும் அந்த அரசாங்கம் அதற்குரிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவில்லை.கடந்த காலத்தை பற்றி பேசி இனி பயனில்லை.இருப்பினும் அந்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதை தெளிவாக குறிப்பிட முடியும். எமது அரசாங்கம்; ஆட்சிக்கு வந்ததன் பின்னர் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் கடந்த கால முறைப்பாடுகள் காணாமல் போனோர் அலுவலகத்தின் தலையீட்டுடன் முறையாக விசாரிக்கப்படுகிறது.காணாமல் போனோர் அலுவலகம் தமது பணிகளுக்குரிய கட்டளைகளை பெற்றுக்கொண்டு எதிர்வரும் இரண்டு வாரத்துக்குள் கொழும்பில் இருந்து நீதிமன்ற சட்டவைத்திய அதிகாரிகளை அழைத்து வந்து கண்காணிப்புக்களை மேற்கொள்ளவுள்ளது. இந்த அகழ்வு பணிகளுக்குரிய நிதி மற்றும் ஏனைய வசதிகளை வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்காகவே இன்று (நேற்று) இவ்விடயத்துக்கு வருகைத் தந்தேன்.முறையான கண்காணிப்புக்களை தொடர்ந்து முறையான வழிமுறைகள் ஊடாக நிதி வழங்க தயாராகவே உள்ளோம். நடுநிலையான மற்றும் வெளிப்படைத்தன்மையுடன், சர்வதேச தரத்துடன் பரிசோதனை மற்றும் விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நீதியமைச்சு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும்.நீதி மற்றும் உண்மையை கண்டறிவது அரசாங்கத்தின் பிரதான கடப்பாடாகும்.தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த வேண்டுமாயின் கடந்த கால சம்வங்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும்.குருக்கள்மடம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் பொதுமக்கள் அதனை எமக்கு வழங்க வேண்டும்.வழங்கப்படும் தகவல் பாதுகாக்கப்படுவதுடன், தகவல் வழங்குபவரின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும். காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்துக்கு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.அகழ்வு பணிகள் தொடர்பில் வைத்திய அதிகாரிகள் உட்பட துறைசார் நிபுணர்கள் வழங்கும் பரிந்துரைக்கு அமைய எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும் என்று நீதிமன்றமே தீர்மானிக்கும்.இங்கு நிதி பிரச்சினையில்லை.மனிதாபிமானம் தொடர்பில் பிரச்சினை காணப்படுகிறது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். சகல மனிதப்புதைகுழிகள் தொடர்பில் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுகிறோம்.ஐக்கிய நாடுகள் சபை, தென் ஆபிரிக்கா, சுவிஸ்லாந்து போன்ற நாடுகள் உட்பட சர்வதேச அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்கள் இந்நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளன. இம்மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் போது இவ்விடயங்கள் பேசப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.நாட்டு மக்களுக்காக விசாரணைகளை மேற்கொள்கின்றோமே தவிர,சர்வதேச சமூகத்தை மகிழ்விப்பதற்காகவல்ல என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறோம். நீதி மற்றும் நியாயத்தை நிலைநாட்டுவதற்கு இந்த ஒருவருட காலத்தில் பலவற்றை செய்துள்ளோம்.ஐக்கிய நாடுகள் சபையையோ அல்லது சர்வதே சமூகத்தையோ திருப்திப்படுத்துவதற்காக இந்த விசாரணைகளை நாங்கள் மேற்கொள்ளவில்லை.எமது அரசாங்கத்தின் பிரதான தரப்பான மக்கள் விடுதலை முன்னணியினர் 1988 மற்றும் 1989 ஆம் ஆண்டுகாலப்பகுதிகளில் இவ்வாறே பாதிக்கப்பட்டார்கள். காணாமலாக்கப்பட்டோருக்கு எமது அரசாங்கத்தில் நீதி கிடைக்காவிடின், எந்த அரசாங்கத்தில் நீதி கிடைக்கும்? சகலருக்கும் நீதி மற்றும் நியாயம் கிடைக்கும் வகையில் செயற்படுவோம்.களுவாஞ்சிகுடி மற்றும் குருக்கள்மடம் மனித புதைகுழிகள் தொடர்பில் முறைப்பாடளிக்குமாறு பொதுக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.நிச்சயம் நீதியை பெற்றுக்கொடுப்போம் என்றார். https://www.virakesari.lk/article/224228
  4. Published By: Vishnu 04 Sep, 2025 | 06:30 PM மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய உடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் கிணதுகளை அகழ்ந்து, குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் வெளிக் கொணரப்படுவதுடன் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நீதியும் பரிகாரமும் வழங்கப்பட வேண்டும் என்று கோரி ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று வியாழக்கிழமை (04.09.2025) பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் தனது மகனை பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா என்பவர் வேலணை பிரதேச சபையின் உறுப்பினரான சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோரால் வேலணை பிரதேச சபையின் ஈழ மக்கள் ஜன நாயகக் கட்சியின் உறுப்பினரான திருமதி அனுசியா ஜெயகாந்த், அகில இலங்கை தமிழ் கங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களான கருணாகரன் நாவலன் மற்றும் திருனாவுக்கரசு சிவகுமாரன், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான செந்தமிழ்ச்செல்வன் திருக்கேதீஸ்வரன், தமிழரசுக் கட்சியின் உறுப்பினரான மங்களேஸ்வரன் கார்த்தீபன் ஆகியோரது பிரசன்னத்துடன் இருவேறு முறைப்பாடுகள் இன்று ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் (04.09.2025) பதிவு செய்துள்ளனர். 35 வருடங்களுக்கு முன்னர் ஆகஸ்ட் மாதம் 25 மற்றும் 26 ஆகிய நாள்களில் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளில் பாரிய மனிதப் படுகொலை நிகழ்த்தப்பட்டதாகவும், இதன்போது 80 இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்ததுடன் மேலும் பலர் கொல்லப்படும் இருந்தனர். இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 45 இகும் அதிகமான உடலங்கள் மண்டைதீவு 2 ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருப்பதுடன் அதற்கான வாழும் சாட்சியங்கள் உறுதியாகவும் இருக்கின்றன. அதேபோன்று அதற்கு அயலில் உள்ள பாடசாலை கிணறு ஒன்றுக்குள்ளும் உடலங்கள் இருக்கின்றன. இந்தநிலையில் குறித்த படுகொலை சாட்சியமாக உறவுகளை பறிகொடுத்த குறித்த கிணற்றை அகழ்ந்து உடலங்களை வெளிக்கொணர்ந்து உண்மைகள் வெளி உலகுக்கு வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே குறித்த முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. முன்பதாக கடந்த மாதம் 20 ஆம் திகதி வேலணை பிரதேச சபையில் குறித்த புதைகுழியை அகழ்ந்து உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி முன்வைக்கப்பட்ட பிரேரணை சபையில் அனைத்து உறுப்பினர்களின் ஏக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/224226
  5. "மரணமில்லா வாழ்வு" - ரஷ்யா, சீனா அதிபர்கள் பேசியது என்ன? 7 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவில் நடைபெற்று வரும் ஷாங்காய் உச்சி மாநாடு மற்றும் ராணுவ அணிவகுப்பில் பங்கேற்க சென்றார் ரஷ்ய அதிபர் புதின். அப்போது ஒரு தருணத்தில் ரஷ்ய அதிபரும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் நடந்து செல்லும் போது அவர்கள் இருவருக்கு இடையில் பேசிக் கொண்டவை அருகில் இருந்த மைக்கில் பதிவாகியது. இருவரும் தங்கள் மொழிகளில் பேசிக் கொண்ட நிலையில், மொழிபெயர்ப்பாளர்களின் குரல் பதிவு வெளியாகியுள்ளது. அதில் அவர்கள் உறுப்பு மாற்று சிகிச்சை குறித்தும், சாகா நிலைக்கான சாத்தியங்கள் இருப்பது குறித்தும் பேசும் சுவாரஸ்யமான உரையாடலை கேட்க முடிகிறது. "கடந்த காலத்தில், மக்கள் அரிதாகவே 70 வயதுக்கு மேல் வாழ்ந்தனர், ஆனால் இன்று 70 வயதிலும் உங்களை ஒரு குழந்தை என அழைக்கின்றனர்." என்று ஷி ஜின்பிங் கூறினார். இதற்கு பதிலளித்த புதின்,"மனித உறுப்புகளை தொடர்ந்து மாற்றலாம். எவ்வளவு காலம் வாழ்கிறீர்களோ, அவ்வளவு இளமையாக மாறுவீர்கள். சாகாநிலைக்கும் கூட செல்லலாம்" என்றார். இந்த நூற்றாண்டில், மனிதர்கள் 150 வயது வரை வாழக்கூடும் என்று சிலர் கணிக்கிறார்கள் - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c7013lrryzpo
  6. 04 Sep, 2025 | 06:17 PM கடந்த ஆட்சிக் காலத்தில் தேர்தலுக்காக சிறு நிதி வழங்கப்பட்டு, பின்னர் நிறுத்தப்பட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வீடுகளுக்கான மிகுதி நிதி அடுத்த ஆண்டு முதல் எமது அரசாங்கத்தினால் வழங்கப்படும் என வீடமைப்பு பிரதி அமைச்சர் ரி.பி. சரத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சர் ரி.பி. சரத் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் வியாழக்கிழமை (4) மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் ரி.பி.சரத், யாழ்ப்பாண மாவட்டத்தின் மீள்குடியேற்ற செயற்பாடுகளுக்காக தமது அமைச்சின் ஊடாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இவ்வாண்டு 1259 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. அந்நிலையில் மீள்குடியேற்ற செயற்பாடுகளின் முன்னேற்றங்களை நேரில் ஆராய வந்துள்ளோம். கிளிநொச்சியில் உள்ள கிராமங்களுக்கு நேற்றைய தினம் புதன்கிழமை சென்றபோது அடிப்படைத் தேவைகள், போக்குவரத்து வசதிகள், அபிவிருத்திகள் வீழ்ச்சி நிலையிலேயே உள்ளதை அவதானித்தோம். அதேவேளை கடந்த ஆட்சிக் காலத்தில் தேர்தலுக்காக சிறு நிதி வழங்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 3847 வீடுகளுக்கான மிகுதி நிதி அமைச்சரை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் வழங்கப்படும். மேலும், வீட்டுத்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் ரூபா 1 மில்லியன் நிதி போதாமையினால் அதனை ரூபா 1.5 மில்லியனாக அதிகரித்துள்ளோம். கிராமங்கள் ரீதியாக பிரஜா சக்திக் குழுக்கள் அமைக்கப்பட்டு மக்களின் பிரச்சினைகள் ஒன்றிணைந்து தீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என பிரதி அமைச்சர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் கருத்து தெரிவித்த கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மீள்குடியேற்றம் அமைச்சானது யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக்கே அதிக நிதியினை ஒதுக்கியுள்ளது. அதனால் மக்களின் தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பான தரவுகள் மற்றும் தகவல்கள் பிரதேச செயலக ரீதியாக இருத்தல் வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதிகளை இவ்வாண்டுக்குள் நிறைவேற்றி முடிக்க முடியும் எனவே அவற்றை உடனடியாக செயற்படுத்துமாறு கூறினார். இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் பணிப்பாளர் (அபிவிருத்தி) டீபானி டொடங்கோட, பணிப்பாளர் (மீள்குடியேற்றம்) கே.ஜி.பி. பூர்ணிமா அபேசிறிகுணவர்த்தன, மேலதிக அரசாங்க அதிபர் கே.சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா.ஜெயகரன், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/224217
  7. மன்னாரில் 33 ஆவது வது நாளாக தொடரும் போராட்டம்; புனித செபஸ்தியார் பேராலய பங்கு சபை, பங்கு மக்கள் பங்கேற்பு 04 Sep, 2025 | 02:50 PM மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் வியாழன் (04) 33 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலய பங்கு சபை மற்றும் பங்கு மக்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர். மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை (4) 33 ஆவது நாளாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இளையோர் மற்றும் மக்கள் இணைந்து குறித்த போராட்டத்தை சுழற்சி முறையில் முன்னெடுத்து வருகின்றனர். குறித்த போராட்டத்திற்கு நாளாந்தம் பல்வேறு கிராம மக்கள்,வர்த்தகர்கள்,பொது அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்கி வருகின்றனர். இந்த நிலையிலே 33 ஆவது நாளாக முன்னெடுக்கப்படும் குறித்த போராட்டத்திற்கு புனித செபஸ்தியார் பேராலய பங்கு சபை, மற்றும் பங்கு மக்கள் பங்கேற்கேற்று தமது ஆதரவை வழங்கினர். இதன் போது மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார், புனித செபஸ்தியார் பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார் ,அருட்தந்தை விக்டர் சோசை அடிகளார்,அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள் என பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மன்னாரில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவை முழுமையாக நிறுத்தும் வரை தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். போராட்டத்தை தொடர்ந்து மன்னார் நகர சுற்று வட்டத்தில் இருந்து ஊர்வலமாக மன்னார் மாவட்டச் செயலகம் வரை சென்று மீண்டும் மன்னார் நகர சுற்று வட்ட பகுதியை சென்றடைந்தனர். https://www.virakesari.lk/article/224193
  8. Published By: Digital Desk 3 04 Sep, 2025 | 11:46 AM (இராஜதுரை ஹஷான்) நாட்டில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்திய குற்றங்கள் மற்றும் படுகொலைகள் காலவோட்டத்தில் மறக்கடிக்கப்பட்டுள்ளதால் தப்பித்து விட்டோம் என்று குற்றவாளிகள் நினைக்கிறார்கள். அவ்வாறு மறக்கடிக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பான விசாரணைகள் உயிர்ப்பிக்கப்படும். குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும். மறக்கடிக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் படுகொலைகளின் பின்னணியில் அரசியல் தலையீடு மற்றும் அரசியல் சக்தி இருந்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலை எமது அரசாங்கத்தில் ஒருபோதும் ஏற்படாது. உங்களின் கடமைகளை தாய்நாட்டுக்காகவும், பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் செயற்படுத்துங்கள். அதற்கு தைரியமாக செயற்படுங்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தினார். போதைப்பொருள் வியாபாரத்துக்கு எதிராக செயற்பட வேண்டிய பொலிஸார் அதற்கு உடந்தையாக செயற்படுவார்களாயின் அதுவே பாரிய அழிவாக அமையும். போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய ஒருசில பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது பழைய பழக்கத்தை கைவிட வேண்டும். பழக்கத்தை கைவிடாவிடின் பொலிஸ் சேவையை கைவிட தயாராக வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 159 ஆவது தேசிய பொலிஸ் தினத்தை முன்னிட்டு கொழும்பு பொலிஸ் மைதானத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற விசேட நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றியதாவது, பொலிஸ் திணைக்களம் 159 ஆண்டுகாலத்தில் பாரிய சவால்களுக்கு மத்தியில் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளது. அளப்பரிய சேவையாற்றியுள்ளது.பொலிஸ் உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்புடனான சேவையினால் தான் பொலிஸ் சேவை 159 ஆண்டுகால கௌரவத்தை தனதாக்கியுள்ளது. பொலிஸ் சேவைக்கு பாராட்டுக்கள் மற்றும் கௌரவம் காணப்படுவதை போன்று விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுக்களும் காணப்படுகின்றன. ஆகவே பொலிஸ் சேவையின் கௌரவத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பொலிஸ் சேவையில் ஈடுபடும் சகலரினதும் பிரதான பொறுப்பாகும். பொதுமக்களினதும், நாட்டினதும் பாதுகாப்புக்காக பொலிஸார் செயற்பட வேண்டும். பொலிஸ் சேவைக்கான கௌரவத்தை உறுதியாக பாதுகாக்கும் வகையில் பொலிஸ்மா அதிபர் உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள் செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். பொலிஸ் சேவை தொடர்பில் வெளியாகும் ஒருசில செய்திகள் ஆரோக்கியமானதல்ல, 84 ஆயிரம் பேர் உள்ள பொலிஸ் சேவையில் ஒருசிலரது முறையற்ற செயற்பாடுகள் ஒட்டுமொத்த பொலிஸ் சேவைக்கும் இழுக்கை ஏற்படுத்தும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பொலிஸ் சேவை திறமையானது. சர்ச்சைக்குரிய சம்பவங்களை பொலிஸார் கண்டுப்பிடித்துள்ளனர். குற்றவாளிகளையும் கைது செய்துள்ளனர். மிகவும் திறமையான பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொலிஸ் சேவையில் உள்ளார்கள். திறமையுடன் மனிதாபிமானத்துடன் செயற்பட கூடியவர்களும் உள்ளார்கள். நாட்டில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்திய படுகொலைகள் மற்றும் குற்றங்கள் உள்ளன. இந்த படுகொலைகள் மற்றும் குற்றங்கள் தொடர்பான உண்மை ஏன் வெளிவரவில்லை. பொலிஸ் திணைக்களத்தின் பலவீனமா? நான் ஒருபோதும் அவ்வாறு எண்ணமாட்டேன். குற்றங்களை குறுகிய நேரத்தில் கண்டுப்பிடிக்கும் சிறந்த விசாரணையாளர்கள் பொலிஸ் சேவையில் உள்ளார்கள். வெளிக்கொண்டு வர முடியாத படுகொலைகள் மற்றும் குற்றங்களின் பின்னணியில் அரசியல் சக்தி மற்றும் அரசியல் அதிகாரம் இருந்துள்ளது. இதுவே உண்மை. பொலிஸ் அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் விசாரணைகளை மேற்கொள்ள முயற்சித்தாலும் அரசியல் தலையீடுகளினால் அவை பலவீனடைந்த வரலாறும் உண்டு. விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் பழிவாங்கப்பட்ட கலாசாரமும் இந்த நாட்டில் இருந்தது. எமது அரசாங்கத்தில் அவ்வாறான நிலை ஏற்படாது என்று உறுதியளிக்கிறேன். நீங்கள் உங்களின் கடமைகளை தாய்நாட்டுக்காகவும், பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் செயற்படுத்துங்கள். அதற்கு தைரியமாக செயற்படுங்கள். குற்றங்கள் மற்றும் படுகொலைகள் காலவோட்டத்தில் மறக்கப்படும் என்று ஒருதரப்பினர் குறிப்பிடுகிறார்கள். படுகொலைகள் மற்றும் குற்றங்களை காலங்கள் தீர்மானிக்காது. குற்றங்கள் எதனையும் காலவோட்டத்தில் மறக்கடிக்க முடியாது. குற்றவாளிகளை சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்தாத நிலையில் குற்றங்கள் தூய்மைப்படுத்தப்படமாட்டாது. ஆகவே குற்றங்களுக்குரிய தண்டனைகளை வழங்க அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். ஒருசில குற்றங்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பான விசாரணைகள் காலவோட்டத்தின் பின்னர் அவதானத்துக்குட்படுகிறது. தசாப்த காலங்களுக்கு முன்னரான குற்றங்களின் விசாரணைகள் மற்றும் சாட்சியங்கள் அழிக்கப்பட்டுள்ளன. காலவோட்டத்தின் பின்னர் தப்பித்துக் கொள்ளலாம் என்று குற்றவாளிகள் நினைக்கிறார்கள். இது ஒருபோதும் வெற்றிப்பெறாது என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறோம். காலம் தண்டனையை தீர்மானிக்காது என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன். போதைப்பொருள் வியாபாரம் நகரம் முதல் கிராமம் வரை வியாபித்துள்ளது. பாரிய எதிர்பார்ப்புடன் பெற்றோர் பிள்ளைகளை வளர்க்கிறார்கள். ஆனால் அந்த பிள்ளைகள் இன்று போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளார்கள். ஒருசிலர் தமது சுயநலனுக்காக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுகிறார்கள். போதைப்பொருள் வியாபாரத்துக்கு அரசியல் தலையீடு இருந்ததை அனைவரும் அறிவோம். அரச நிறுவனங்களின் பிரதானிகளும், பொலிஸ் சேவையில் ஒருசிலரும் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புப்பட்டுள்ளார்கள் என்பதையும் இதன்போது குறிப்பிட்டுக்கொள்கிறேன். போதைப்பொருள் வியாபாரத்துக்கு எதிராக செயற்பட வேண்டிய பொலிஸார் அதற்கு உடந்தையாக செயற்படுவார்களாயின் அதுவே பாரிய அழிவாக அமையும். போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய ஒருசில பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது பழைய பழக்கத்தை கைவிட வேண்டும். பழக்கத்தை கைவிடாவிடின் பொலிஸ் சேவையை கைவிட தயாராக வேண்டும். சகல துறைகளின் கௌரவத்தை அத்துறைகளின் உத்தியோகத்தர்கள் பாதுகாக்க வேண்டும். போதைப்பொருள் வியாபாரத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே போதைப்பொருள் ஒழிப்பின் வீரர்களாக பொலிஸார் மாற வேண்டும். துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் சமூக கட்டமைப்பில் அச்சநிலையை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோத ஆயுதங்கள் கைப்பற்றல் மற்றும் அவர்களை கைது செய்யும் பொறுப்பு பொலிஸாருக்கு உண்டு. நீங்கள் சாதாரண குடிமக்கள் அல்ல. ஒட்டுமொத்த சமூகத்தின் நலன் மற்றும் பாதுகாப்பை தோளில் பொறுப்பேற்றுள்ளீர்கள். ஆகவே மக்களுக்காக தைரியமாக செயற்படுங்கள். மக்கள் நம்பிக்கையுடனும், தைரியமாகவும் பொலிஸ் நிலையத்துக்கு வரும் வகையில் மக்களுக்காக செயற்படுங்கள் என்றார். https://www.virakesari.lk/article/224176
  9. Robo Wolves முதல் Under Water Drone வரை... China ஆயுதங்களின் பலம் என்ன? | China Weapons Display சீனாவின் ராணுவ வலிமையை உலகுக்கு காட்டும் வகையில், பெய்ஜிங்கில் மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இதில், புதிதாக உருவாக்கப்பட்ட ஏவுகணைகள், ட்ரோன்கள், லேசர் ஆயுதங்கள், கூடவே ரோபோ நாய்களும் களத்தில் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த ராணுவ அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்ட சில ஆயுதங்கள் பற்றி சர்வதேச அளவில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. அவை என்னென்ன? தனது ஆயுதங்களை காட்சிபடுத்தியதன் மூலம் சீனா சொல்ல வரும் செய்தி என்ன? இந்த காணொளியில் பார்க்கலாம். #China #VictoryParade #Weapons இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  10. இது இலவசம் அண்ணை. கள உறவு @Justin அண்ணை சொன்னவர் பாவித்த ஒரே ஊசியை பல நாய்களுக்கு பாவித்தால் டிஸ்ரெம்பர்(distemper) நோய் தொற்றி இறக்குமாம். அதனால பாவிக்காத புதிய வெற்று ஊசியை நாங்களே வாங்கிக் கொடுப்பது நல்லதாம். Symptoms of canine distemper include fever, lethargy, coughing, eye and nasal discharge, vomiting, diarrhea, loss of appetite, thickened foot pads and nose, and neurological signs like seizures, twitching, and paralysis. The specific symptoms vary depending on the dog's age, immune system, and the stage of the disease. If you suspect your dog has distemper, you should contact a veterinarian immediately, as the disease can be fatal.
  11. தமிழ்நாட்டை உலுக்கிய கிட்னி முறைகேட்டின் அதிர்ச்சி பின்னணி; BBC Ground Report-ல் தெரிய வந்த தகவல் நாமக்கல் மாவட்டத்தில் போலி ஆவணம் மூலம் சிறுநீரகம் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தமிழக அரசு சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. Reporter : Xavier Selvakumar Shoot & Edit: Vignesh சிறுநீரகம் கொடுத்தவர்கள் கூறுவது என்ன? Producer: Xavier Selvakumar Shoot & Edit: Vignesh இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  12. வழக்கு போட்டு நீதிமன்றம் மூலமாக தண்டனை விதிக்கப்படும் என மறைமுகமாக வெருட்டி ஊசி போட வைக்கத்தான் அண்ணை!
  13. Published By: Digital Desk 3 04 Sep, 2025 | 10:02 AM நாட்டில் ஆண்டுதோறும் 200 சிறுவர்கள் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர் என தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் சமூக விசேட வைத்திய நிபுணர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார். முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இந்த நிலைமையைக் குறைக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகம் நடத்திய ஊடக சந்திப்பில் பங்கேற்ற வைத்தியர் சுராஜ் பெரேரா இந்தக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, "2022 ஆம் ஆண்டில், அடையாளம் காணப்பட்ட புற்றுநோய் நோயாளிகளில், 904 பேர் சிறுவர்கள் ஆவர். கடந்த 15 ஆண்டுகளுக்கான தரவுகளைப் பார்க்கும்போது சிறுவர் பருவ புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படவில்லை என்பது தெளிவாகக் காட்டுகிறது. இந்த எண்ணிக்கை பொதுவாக 600 முதல் 800 வரம்பிற்குள் இருந்தது. தற்போது, ஆண்டுதோறும் சுமார் 900 சிறுவர் பருவ புற்றுநோயாளர்கள் பதிவாகின்றன. தலைமை பதிவாளர் திணைக்களத்தின் கூற்றுகளின் படி, 2019 ஆம் ஆண்டில் சுமார் 200 சிறுவர்கள் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர். 2020 ஆம் ஆண்டுக்கான தரவுகளும் சேகரிக்கப்பட்டாலும், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக சுமார் 200 சிறுவர்கள் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் குணமடையும் திறன் இருந்தபோதிலும் தாமதமாக கண்டறியப்பட்ட நோயாளிகளும் உள்ளனர். இந்த உயிரிழப்புகளை மேலும் குறைக்கலாம். அதேபோல், சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சையை நாடினால் சிக்கல்களையும் குறைக்கலாம். https://www.virakesari.lk/article/224160
  14. Published By: Vishnu 04 Sep, 2025 | 04:02 AM (நா.தனுஜா) உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டுவதற்கும், நிலையான சமாதானத்துக்கான அடித்தளத்தை இடுவதற்குமான வரலாற்று ரீதியான வாய்ப்பும், சகல சமூகங்களையும் சேர்ந்த மக்களின் ஆணையும் புதிய அரசாங்கத்துக்கு இருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் அதேவேளை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் பிரகடனத்துக்கு இணங்குவதன் ஊடாக நிலைமாறுகால நீதிக்கு ஏதுவான சூழலை அரசாங்கம் உருவாக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவிருக்கும் நிலையில், இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் பற்றிய ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முற்கூட்டிய வரைவு அறிக்கை கடந்த மாத நடுப்பகுதியில் வெளியிடப்பட்டது. அவ்வறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதில் வழங்கியதன் பின்னரா இறுதி அறிக்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 'பயங்கரவாதத்தடைச்சட்டம் உள்ளடங்கலாக சகல ஒடுக்குமுறைச்சட்டங்களையும் இல்லாதொழிப்பதாகப் புதிய அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது. அச்சட்டத்தை முற்றாக நீக்குவது குறித்து ஆராய்வதற்கும், புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்குமென கடந்த பெப்ரவரி மாதம் அரசாங்கத்தினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது. அத்தோடு புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட வரைவைத் தயாரிப்பதற்கான பரிந்துரைகள் மற்றும் யோசனைகளை அனுப்பிவைப்பதற்கு பொதுமக்களுக்கு வெறுமனே இரண்டு வார காலஅவகாசத்தை வழங்கும் அறிவிப்பு கடந்த மேமாதம் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டது. அப்புதிய சட்டமூலத்தை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வர்த்தமானியில் வெளியிடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது இவ்வாறிருக்க அரசாங்கமானது நபர்களைக் கைதுசெய்வதற்கும், தடுத்துவைப்பதற்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைத் தொடர்ந்து பயன்படுத்திவருகிறது. இவ்வறிக்கை தொடர்பான ஆணை வழங்கப்பட்டிருக்கும் காலப்பகுதியில் நினைவுகூரல்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றவர்கள் மற்றும் அவற்றை ஒழுங்குசெய்தவர்கள் உள்ளடங்கலாகப் பிரதானமாக தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தைச்சேர்ந்த நபர்கள் இச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கைப் பேணுவதில் படையினரை ஈடுபடுத்துவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரமளிக்கும் வகையில் பொதுப்பாதுகாப்புக் கட்டளைச்சட்டத்தின் 12 ஆவது பிரிவின்கீழ் வெளியிடப்பட்டுவரும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் தற்போதைய அரசாங்கத்தினால் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டுவருகிறது' என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேபோன்று 'யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், ஆக்கபூர்வமானதும் செயற்திறன்மிக்கதுமான பாதுகாப்புத்துறை மறுசீரமைப்புக்கள் முன்னெடுக்கப்படவேண்டியுள்ளன. குறிப்பாக வட, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர், சமூகத்தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொறுப்புக்கூறல் மற்றும் வலிந்து காணாமலாக்கப்படல்கள் உள்ளிட்ட சமூகப்பிரச்சினைகள் சார்ந்து இயங்கிவருவோர் மீதான கண்காணிப்புக்கள் மற்றும் ஒடுக்குமுறைகள் தொடர்கின்றன' எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 'யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 16 வருடங்கள் கடந்துள்ள நிலையில், யுத்தகாலத்தில் சர்வதேச குற்றங்கள் உள்ளடங்கலாக மிகமோசமான மீறல்கள் நிகழ்ந்தன என்பதை ஏற்றுக்கொள்வதும், அதுகுறித்து உரியவாறான தீர்வை வழங்குவதும், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான உண்மை மற்றும் நீதியை உறுதிசெய்வதும் அவசியமாகும். மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து உண்மையையும், நீதியையும் உறுதிசெய்வதற்குத் தமது அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அவரது கொள்கைப்பிரகடன உரையில் குறிப்பிட்டிருந்தார். அவரது இக்கருத்தானது செயல் வடிவம் பெறுமாயின், அதனூடாக பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான புதுப்பிக்கப்பட்டதொரு வாய்ப்பு கிட்டும். இருப்பினும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு இன்னமும் தொடர்வதுடன், கடந்தகால மீறல்களுக்கு வழிகோலிய கட்டமைப்பு ரீதியான நிலைமைகள் மாற்றமின்றிக் காணப்படுகின்றன' என்றும் அவ்வறிக்கையில் கரிசனை வெளியிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/224149
  15. 03 Sep, 2025 | 03:03 PM (எம்.மனோசித்ரா) மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் உள்நாட்டு பொறிமுறையொன்றை உருவாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும். ஆனால் அது இலகுவான விடயமல்ல. இதற்கு ஐரோப்பிய மற்றும் கரேபியன் நாடுகளின் நம்பிக்கையை நாம் பெற வேண்டுமெனில் இலங்கை தொடர்பில் இந்தியா அதன் நிலைப்பாட்டை தெளிவாக அறிவிக்க வேண்டும் என பேராசிரியர் பிரதீபா மஹநாமா தெரிவித்தார். கொழும்பில் புதன்கிழமை (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வு கூட்டத் தொடர் இவ்வாரம் ஆரம்பமாகிறது. புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் பதிலளிப்பு தொடர்பில் 47 அங்கத்துவ நாடுகளும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றன. மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் உள்நாட்டு பொறிமுறையொன்றை உருவாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும். சர்வதேச ஒத்துழைப்புடன் இலங்கையில் உள்நாட்டு பொறிமுறையை உருவாக்குவது இலகுவான விடயமல்ல. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள கால கட்டத்திலேயே இது தொடர்பில் பேசப்படுகிறது. ஆனால் இந்த பொறிமுறை பல ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டிருக்க வேண்டியவையாகும். ஒவ்வொரு கூட்டத் தொடரின் போதும் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்படும் பிரேரணைக்கு அமெரிக்கா இணை அனுசரனை வழங்குகிறது. எனினும் தற்போது ட்ரம்ப் அதிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதால் இங்கு இடைவெளி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இம்முறை பிரித்தானியா, கனடா, மலாவி, மொன்டிரிகோ உள்ளிட்ட 5 நாடு;கள் இலங்கைக்கு எதிரான யோசனையை தயாரித்து அதனை ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தரினகராலயத்திடம் கையளித்துள்ளன. இந்த யோசனைக்கு இலங்கையிடம் இணை அனுசரணை கோரப்பட்டுள்ளது. எனினும் இலங்கை அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. இது சிறந்த தீர்மானமாகும். எந்தவொரு நாட்டுக்கும் சுயாதீனமும், இறையான்மைiயும் காணப்படுகிறது. இதனை எந்த வகையிலும் யாராலும் கேள்விக்குட்படுத்த முடியாது. இதற்கு முன்னர் ஒரேயொரு சந்தர்ப்பத்தில் மாத்திரம் எமக்கெதிரான யோசனைக்கு நாமே இணை அனுசரணை வழங்கியிருக்கின்றோம். இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானங்களில் பரிந்துரைகள் சில குறிப்பிடப்பட்டுள்ளன. சுயாதீன இராச்சியம் என்ற ரீதியில் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை முன்னிலையாக வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. அவற்றில் பிரதானமானது ரோம் பிரகடனத்தில் கையெழுத்திட வேண்டும் என்பதாகும். அவ்வாறு அதில் கையெழுத்திட்டால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துடன் நாம் நேரடியாக தொடர்புபடுவோம். எனவே இது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும். அடுத்து நாம் அவதானம் செலுத்த வேண்டிய விடயம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமாகும். இந்த புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது சிறந்த விடயமாகும். ஆனால் அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதில் அவதானம் செலுத்த வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறையில் இருப்பதால் தான் இந்தோனேசியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுவினரை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த முடிந்துள்ளது. இந்த சட்டம் நடைமுறையில்லாவிட்டால் இவர்கள் சாதாரண சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பர். இது பொலிஸாரின் விசாரணைகளுக்கு பாரிய பாதிப்பாகவே அமையும். காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் என்பவற்றை ஏற்றுக் கொள்கின்றோம். இதேபோன்று உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவும் காணப்படுகிறது. இவ்வாறு மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை தேசிய ரீதியில் முன்னெடுக்க வேண்டும். அவற்றுக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொள்ள முடியும். செப்டெம்பர் ஒக்டோபரில் மாத்திரமன்றி தொடர்ந்தும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். பாராளுமன்றத்திலும் இதற்காக விசேட குழு நியமிக்கப்பட வேண்டும். சீனா, வியட்நாம், கியூபா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் எமக்கு ஆதரவாகவுள்ளன. ஆனால் ஐரோப்பிய நாடுகள் மற்றும் கரேபியன் நாடுகளின் நம்பிக்கையை நாம் பெற வேண்டும். அதற்கு இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவாக அறிவிக்க வேண்டும். இந்தியா எமக்காக பேசும் பட்சத்தில் எம்மால் இந்த நாடுகளின் ஆதரவை இயல்பாகப் பெற முடியும். இந்தியா தவிர தென் ஆபிரிகா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் நம்பிக்கையும் பெற வேண்டும். இந்த நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்பதில்லை. மாறாக இவை இலங்கைக்கு ஆதரவாக தமது வாக்குகளைப் பயன்படுத்தும் பட்சத்தில் எமக்கு அது பெரும் உதவியாக அமையும் என்றார். https://www.virakesari.lk/article/224099
  16. பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் டெஸ்ஸா வாங் பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பிரம்மாண்ட அணிவகுப்பில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள புதிய ஆயுதங்கள் சீனாவின் ராணுவ வலிமையைப் பற்றி என்ன சொல்கின்றன? சீனா ஒரு பெரிய அணிவகுப்பில் பல புதிய ஆயுதங்கள், ட்ரோன்கள் மற்றும் பிற ராணுவ தளவாடங்களை காட்சிப்படுத்தியது. இதை அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் தெரிவிக்கப்படும் ஒரு தெளிவான செய்தியாக பலர் பார்க்கின்றனர். இந்த நிகழ்வில் ரஷ்யாவின் விளாடிமிர் புதின் மற்றும் வட கொரியாவின் கிம் ஜாங் உன் உட்பட 20 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு அரசுத் தலைவர்களுக்கு ஷி ஜின்பிங் வரவேற்பு அளித்தார். ரஷ்யாவும் வட கொரியாவும் பொருளாதார ஆதரவு மற்றும் பலவற்றிற்காக சீனாவை நம்பியுள்ளனர். இது உலக அரங்கில் அதிபர் ஷி-யின் வளர்ந்து வரும் சக்தியையும், சீனாவின் ராணுவ வலிமையையும் வெளிப்படுத்தியது - இந்த நிகழ்ச்சியில் "குவாம் கொலையாளி" (Guam Killer) ஏவுகணை, "விசுவாசமான விங்மேன்" (Loyal Wingman) ட்ரோன் மற்றும் ரோபோ ஓநாய்களும் இடம்பெற்றன. ஆர்வத்தை தூண்டும் பளபளப்பான புதிய ஆயுதங்களுக்கு அப்பால், இந்த அணிவகுப்பின் மூலம் நாம் என்ன தெரிந்துக் கொள்ளக் கூடும் ஐந்து விசயங்கள் என்ன? 1. சீனாவிடம் நிறைய ஆயுதங்கள் உள்ளன. அவற்றை எவ்வளவு நன்றாகப் பயன்படுத்த முடியும்? சீனா பலதரப்பட்ட ஆயுதங்களை விரைவாக உற்பத்தி செய்ய முடிந்துள்ளது என்பது புதன்கிழமை நடைபெற்ற அணிவகுப்பின் மூலம் தெளிவாகத் தெரிகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, அவர்கள் காட்சிக்கு வைத்த ராணுவ தொழில்நுட்பம் அமெரிக்கா கண்டுபிடித்த மிகவும் மேம்பட்ட உபகரணங்களின் "அடிப்படை நகல்களாக" இருந்தன என்று சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ராணுவ உருமாற்றங்கள் திட்டத்தின் உதவிப் பேராசிரியர் மைக்கேல் ரஸ்கா குறிப்பிடுகிறார். ஆனால் இந்த அணிவகுப்பு மிகவும் புதுமையான மற்றும் மாறுபட்ட ஆயுதங்களை, குறிப்பாக ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை காட்சிப்படுத்தியது - இது அவர்களின் பாதுகாப்பு-தொழில்துறை வளாகம் எவ்வளவு மேம்பட்டதாக மாறியுள்ளது என்பதை பிரதிபலிக்கிறது. சீனாவின் மேலிருந்து-கீழ் கட்டமைப்பு மற்றும் குறிப்பிடத்தக்க வளங்கள் பல நாடுகளை விட வேகமாக புதிய ஆயுதங்களை உருவாக்க உதவுகின்றன என்று பசிபிக் மன்றத்தின் துணை உறுப்பினர் அலெக்சாண்டர் நீல் சுட்டிக்காட்டுகிறார். சீனாவால் அவற்றை பெரிய அளவில் உற்பத்தி செய்ய முடியும், இது அவர்களுக்கு போர்க்களத்தில் எதிரியை திக்குமுக்காடச் செய்யும் அளவிலான சாதகத்தை தரக்கூடும். "வெடிமருந்துகள், கப்பல்கள், இந்த தளங்கள் அனைத்தையும் உருவாக்கும் திறன் சீனாவுக்கு உள்ளது... அரசு இந்த உத்தரவுகளை பிறப்பித்தால் போதும்," என்கிறார் நீல். ஆனால் சீனாவின் ராணுவம் இந்த ஆயுத அமைப்புகளை எவ்வளவு நன்றாக ஒருங்கிணைக்க முடியும்? "அவர்கள் இந்த பளபளப்பான மேம்பட்ட ஆயுதங்களை காட்ட முடியும், ஆனால் அவர்கள் விரும்பும் வழியில் அவற்றைப் பயன்படுத்த அவர்கள் அமைப்பு ரீதியாக திறன் கொண்டிருக்கிறார்களா? " என டாக்டர் ரஸ்கா கேட்கிறார். சீன ராணுவம் மிகப்பெரியது, ஆனால் சோதிக்கப்படாதது என்பதால் இது எளிதானது அல்ல என்று அவர் கூறுகிறார். ஏனெனில் அவர்கள் பல தசாப்தங்களாக குறிப்பிடத்தக்க போர் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. 2. ஏவுகணைகளில் கவனம் செலுத்த காரணம் என்ன? சில புதிய வகைகள் உட்பட ஏராளமான ஏவுகணைகளை சீனா காட்சிப்படுத்தியது. இவற்றில் டோங்ஃபெங் -61 அடங்கும், இந்த ஏவுகணை பல ஆயுதங்களை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது, அடுத்து வடக்கு சீனாவில் இருந்து ஏவப்பட்டு அமெரிக்காவைத் தாக்கக்கூடிய டோங்ஃபெங் -5 சி கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை. இது தவிர , "குவாம் கில்லர்" டோங்ஃபெங்-26டி இடைநிலை தூர ஏவுகணை, இது குவாமில் உள்ள முக்கிய அமெரிக்க ராணுவ தளங்களைத் தாக்கக் கூடியது. YJ-17 மற்றும் YJ-19 போன்ற பல ஹைப்பர்சோனிக் கப்பல் தாக்கும் ஏவுகணைகளும் இருந்தன. அவை மிக வேகமாக பறக்கக்கூடியவை, ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளைத் தவிர்க்க கணிக்க முடியாத வகையில் பயணிக்கக் கூடியவை. ஏவுகணைகள் மீது இவ்வளவு கவனம் செலுத்துவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. சீனா தனது தடுப்பு மூலோபாயத்தின் முக்கிய பகுதியாக ஏவுகணைகள் மற்றும் ராக்கெட் படைகளை உருவாக்கி வருகிறது, அமெரிக்காவின் கடற்படை மேலாதிக்கத்தை எதிர்கொள்ளவும் சீனா இதை செய்கிறது என்று நீல் கூறுகிறார். விமானந்தாங்கி கப்பல்கள், விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல் தாக்குதல் குழுக்களின் மிகப்பெரிய கடற்படையுடன் அமெரிக்க கடற்படை உலகில் நிகரற்றதாக உள்ளது - சீனா இன்னும் அந்த விஷயத்தில் பின்தங்கியுள்ளது. ஆனால், மேற்கத்திய பாதுகாப்பு நிபுணர்கள் சிலர் இந்த தாக்குதல் குழுக்கள் பாதிப்புக்கு உள்ளாகக் கூடியவை என்று வாதிடுகின்றனர். ஏனெனில் இவை எந்தவொரு ஏவுகணை தாக்குதல்களிலும் எளிதில் தாக்கப்படலாம் என்று நீல் சுட்டிக்காட்டுகிறார். பெய்ஜிங் தடுப்புமுறையை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், "இரண்டாவது தாக்குதல் திறன்" – அதாவது தாக்கப்பட்டால் பதிலடி தாக்குதலைத் தொடங்கும் ஒரு நாட்டின் திறனை உருவாக்கி வருகிறது என்றும் அவர் கூறுகிறார். மற்ற குறிப்பிடத்தக்க ஆயுதங்களில் அதிகம் பேசப்பட்டது LY-1 லேசர் ஆயுதமாகும். இது அடிப்படையில் எலக்ட்ரானிக்ஸ் கருவிகளை முடக்கவோ எரிக்கவோ, அல்லது விமானிகளின் பார்வையை பறிக்கவோ கூடிய ஒரு மாபெரும் லேசர் ஆகும். இது தவிர ஜே -20 மற்றும் ஜே -35 விமானங்கள் உட்பட ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் (ரேடாரால் சிக்குவதற்கு கடினமான ) விமானங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. 3. செயற்கை நுண்ணறிவில் துணிச்சலுக்கு என்ன காரணம்? நிறைய வகையிலான ட்ரோன்கள் இருந்தன, அவற்றில் சில செயற்கை நுண்ணறிவால் இயங்கக் கூடியவை. ஆனால் கண்களைக் கவர்ந்தது AJX-002 எனும் மாபெரும் நீர்மூழ்கிக் கப்பல் ட்ரோன் ஆகும். 20 மீ (65 அடி) நீளம் கொண்ட இது, மிகப் பெரிய ஆளில்லா நீர்மூழ்கி வாகனம் (Extra-Large Uncrewed Underwater Vehicle) என்றும் அழைக்கப்படுகிறது. இது கண்காணிப்பு மற்றும் உளவு பணிகளைச் செய்ய முடியும். சீனா தனது ஜி.ஜே -11 (GJ-11) ஸ்டெல்த் தாக்குதல் ட்ரோனையும் காட்டியது. இது "விசுவாசமான விங்மேன்" என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு போர் விமானத்துடன் பறந்து அதன் தாக்குதல்களுக்கு உதவக்கூடியது. வழக்கமான வான்வழி ட்ரோன்களை தவிர, "ரோபோ ஓநாய்களும்" இருந்தன. வேவு பார்த்தல், கண்ணிவெடிகளை அகற்றுதல் முதல் எதிரி வீரர்களை வேட்டையாடுவது வரை பல்வேறு பணிகளுக்கு இவை பயன்படுத்தப்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ட்ரோன் காட்சிப்படுத்தலை பார்க்கும் போது, சீனா தனது ராணுவ மூலோபாயத்தை எந்த திசையில் நகர்த்த விரும்புகிறது என்று தெளிவாக தெரிகிறது. சீனா "அதிகரிக்க விரும்புவது மட்டுமல்லாமல், பாரம்பரிய கட்டமைப்புகளை மாற்றவும் விரும்புகிறது". சீனா யுக்ரேன் போரில் இருந்து தெளிவாக பாடங்களை கற்றுக் கொண்டுள்ளது. அதாவது ஒருவர் "எதிரிகள் மீது ட்ரோன்களை வீசி" எதிரியின் பாதுகாப்புகளை தகர்க்க முடியும் என்று டாக்டர் ரஸ்கா குறிப்பிடுகிறார். "கொலைச் சங்கிலியில் (ராணுவத்தில் ஒரு இலக்கை கண்டறிந்து, அதை நோக்கிச் சென்று, தாக்குவது என்ற படிப்படியான நகர்வுகளை குறிக்கும்) சுறுசுறுப்பு முக்கியமானது," என்று நீல் கூறுகிறார். அதி வேகமாக நடைபெறும் போரில், எதிரியைத் தோற்கடித்து மேலாதிக்கத்தைப் பெறுவதற்கு "நானோ விநாடிகளில்" முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் – இதைத்தான் செயற்கை நுண்ணறிவு செய்ய முடியும். பல நாடுகள் தங்கள் ராணுவ அமைப்புகளில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது குறித்து இன்னும் கவலை கொண்டுள்ளன. மேலும் "செயற்கை நுண்ணறிவை இலக்கை தகர்க்கும் நகர்வுச் சங்கிலியில் பயன்படுத்துவதில் நாம் எவ்வளவு தயாராக இருக்கிறோம்" என்று பல நாடுகளும் யோசிக்கின்றன என்று அவர் மேலும் கூறுகிறார். ஆனால் சீனா அதை மிகவும் வசதியாக உணர்கிறது என்று டாக்டர் ரஸ்கா கூறுகிறார். "அவர்கள் செயற்கை நுண்ணறிவை கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகிறார்கள். அவர்கள் அதை தங்கள் அமைப்புகளுடன் ஒருங்கிணைக்க எல்லா வழிகளிலும் முயல்கிறார்கள்." 4. சீனாவின் ராணுவ கட்டமைப்பு சிக்கலானதா? சீனா அதன் ராணுவ தொழில்நுட்பத்தில் அமெரிக்காவை விரைவாக எட்டிப் பிடித்து வருகிறது என்பதையும், ஒரு பெரிய ஆயுதக் கிடங்கைக் கட்டியெழுப்புவதற்கான வளங்களைக் கொண்டுள்ளது என்பதையும் இந்த அணிவகுப்பு தெளிவாகக் காட்டுகிறது. ஆனால், ராணுவ செயல்பாடுகளில் அமெரிக்கா இன்னும் முன்னிலை வகிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்க ராணுவம் "சிறந்து விளங்குகிறது", ஏனென்றால் களத்தில் உள்ளவர்கள் சூழ்நிலை பொருத்து முடிவுகளை எடுக்க முடியும், தேவைப்பட்டால் அவர்களின் சண்டை உத்திகளை மாற்ற முடியும். அது "கீழிருந்து மேல்" என்ற அணுகுமுறையாகும் என்று டாக்டர் ரஸ்கா குறிப்பிடுகிறார். இது ஒரு போரில் திறம்பட செயலாற்ற அவர்களுக்கு உதவுகிறது. மறுபுறம், சீனா "மேல்-கீழ்" அணுகுமுறை கொண்டுள்ளது. அங்கு "அவர்கள் பளபளப்பான ஆயுதங்களைக் கொண்டிருக்கலாம், ஆனால் மேலிருந்து ஒரு உத்தரவைப் பெறும் வரை அவர்கள் ஒரு விரலைக் கூட அசைக்க மாட்டார்கள்" என்று அவர் மேலும் கூறுகிறார். "சீனர்கள் அதன் தொழில்நுட்பம் தடுப்பை உருவாக்குவதாக நினைக்கிறார்கள். அது அமெரிக்காவை தடுக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்... ஆனால் செயல்பாட்டு மட்டத்தில், அவர்கள் சொல்வது போல் அவை சிறந்தவை அல்ல என்பதைக் காட்டும் நிகழ்வுகள் உள்ளன" என்று டாக்டர் ரஸ்கா கூறுகிறார். கடந்த மாதம் ஒரு சீன போர்க்கப்பல் பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படையை எதிர்கொண்டபோது அதன் சொந்த சிறிய கப்பல்களில் ஒன்றை மோதியது போன்ற சமீபத்திய சந்திப்புகளை சுட்டிக்காட்டுகிறார். 5. சீனாவின் அணிவகுப்பு ஆயுத விற்பனை விளம்பரமா? இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் இந்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், ஆயுதங்கள் மற்றும் டாங்கிகளின் அணிவகுப்பு அடிப்படையில் சீன ஆயுதங்களை வாங்கக்கூடியவர்களுக்கு விற்பனை செய்வதற்கான ஒரு மாபெரும் களமாக இருந்தது என்று நீல் சுட்டிக்காட்டுகிறார். மியான்மர் போன்ற சில நாடுகள் ஏற்கனவே சீன ஆயுதங்களை அதிக அளவில் வாங்கி வருவதாக அறியப்படுகிறது. ஆனால் புதிய வாடிக்கையாளர்களுக்கு விற்பது அல்லது ஆர்டர்களை அதிகரிப்பது மூலமே சீன அரசாங்கம் தனது செல்வாக்கை உலகளவில் விரிவுபடுத்த முடியும் என்று டாக்டர் ரஸ்கா குறிப்பிடுகிறார். ஜின்பிங்குடன் எல்லா புறத்திலும் நின்ற முக்கியமான வாடிக்கையாளர்கள் - விளாடிமிர் புதின் மற்றும் கிம் ஜாங் உன். மூவரும் ஒன்றாக அணிவகுப்புக்கு நடந்து சென்று மேடையில் நின்றபோது ஒரு ஐக்கிய முன்னணியாக தோன்றினர். இது அமெரிக்காவுக்கு ஒரு செய்தி என்று நீல் கூறுகிறார்: அமெரிக்கா உண்மையிலேயே அவர்களுக்கு சவால் விட விரும்பினால், "கொரிய தீபகற்பம், தைவான் ஜலசந்தி மற்றும் யுக்ரேன் என ஒரே நேரத்தில் பல சாத்தியமான களங்களில் அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும்" என்று அர்த்தம். "நீங்கள் அதை கருத்தில் கொண்டால், மூன்று களங்களிலும் அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுத்தால், அது ஒன்றில் தோல்வியடையக்கூடும்." என்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly78rdp9dlo
  17. எங்களுடைய வீட்டிலும் பெண் நாய் குட்டியாக பிறந்து வளர்ந்து நிற்கிறது. தெருவில் இருந்த தாய் நாய் எங்கள் வீட்டு குப்பையை பாதுப்பென எண்ணி குட்டிகளை போட்டுவிட்டது. பின்பு ஆண்நாய்க் குட்டிகளை விரும்பி எல்லோரும் பிடிக்க இந்த பெண்நாய்க்குட்டியை யாரும் விரும்பாததால் எனது விருப்பின்படி அம்மாவே உணவிட்டு வளர்த்தார். அந்த பெண்நாய்க்குட்டி வளர்ந்து 3 - 4 தடவைகள் குட்டிகள் போட அம்மா என்னைப் பேச நான் என்ன செய்ய என விழிபிதுங்க, யாரோ ஒரு புண்ணியவான் வீதியில் வைத்து மயக்க ஊசி போட்டு கர்ப்பத்தடை செய்து உதவினார்கள். இன்று அறிவித்தல் செய்கிறார்கள், வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி போட அழைத்துவரச் சொல்லி, ஊசி போடாத நாய்களின் உரிமையாளர்களுக்கு 25000 ரூபா தண்டப்பணம் அறவிடப்படுமாம். வீடுவீடாக சென்று ஒரு நாய்க்கு 500ரூபா வாங்கி ஊசி போட்டால் அரசுக்கும் வருமானம், எல்லா நாய்களுக்கும் தடுப்பூசி போட்டதை உறுதி செய்யவும் முடியும்.
  18. அப்பாடா கச்சதீவு பிரச்சனையால தமிழருக்கு ஒரு நாடு கிடைத்தால் மகிழ்ச்சி!!! தமிழ்நாட்டின் கடல் வளத்தை சூறையாடி முடித்த பெருமுதலாளிகள் வடக்கு மீன்வளத்தை சூறையாட முயன்றுகொண்டு, ஏதோ கச்சதீவுக்குள் தான் தமிழ்நாட்டு மீன்கள் ஒழித்திருப்பது போலவும் அதனையே பிடிக்க முயல்வது போலவும் ஏமாற்றலாமா?! எந்த ஒரு அரசியல்வாதியாவது தடைசெய்யப்பட்ட கடல் வளத்தை அழிக்கும் மீன்பிடி முறைகளை கைவிடச் சொல்லி பெருமுதலாளிகளுக்கும் மீனவர்களுக்கும் அழுத்திக் கூறுவார்களா?!
  19. அண்ணை, சோழியன் அண்ணாவின் பெயர் இராஜன் முருகவேல். இந்ந எழுத்தாளர் விபரம் கீழே இரா. முருகவேள் ஒரு தேர்ந்த தமிழ் எழுத்தாளர், இடதுசாரி அரசியல் மற்றும் சமூக செயல்பாட்டாளர் ஆவார். அவர் கோவையில் வழக்கறிஞராகப் பணியாற்றுகிறார், மேலும் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரம் குறித்து எழுதுகிறார். 'மிளிர்கல்', 'முகிலினி', 'செம்புலம்', 'எரியும் பனிக்காடு', 'நீலத்தங்கம்' போன்ற அவரது படைப்புகள் பல கவனத்தைப் பெற்றுள்ளன. பணிகள் வழக்கறிஞர்: கோவையில் வழக்கறிஞராக பணியாற்றுகிறார். எழுத்தாளர்: நாவல்கள் மற்றும் கட்டுரைகள் எழுதுகிறார். சமூக செயல்பாட்டாளர்: இடதுசாரி அரசியல் மற்றும் சமூக செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளார். சுற்றுச்சூழல் குறித்த எழுத்தாளர்: சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார். இணையத்தில் அவரது படைப்புகளைப் பெறுதல் Panuval.com மற்றும் CommonFolks.in போன்ற இணையதளங்களில் அவரது நூல்களை வாங்கலாம். Amazon.in போன்ற தளங்களிலும் அவரது நூல்கள் கிடைக்கின்றன. Goodreads தளத்தில் அவரது நூல்களின் வாசகர் விமர்சனங்களையும் காணலாம்.
  20. 03 Sep, 2025 | 05:07 PM (நெவில் அன்தனி) சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற உலக சாதனையை ஆப்கானிஸ்தானின் நட்சத்திர சுழல்பந்துவீச்சாளர் ராஷித் கான் படைத்துள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் சர்வதேச ரி20 மும்முனை கிரிக்கெட் தொடரில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிராக திங்கட்கிழமை நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் தனது மொத்த விக்கெட் எண்ணிக்கையை 165ஆக உயர்த்திக்கொண்டார். இதன் மூலம் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற உலக சாதனையை ராஷித் கான் நிலைநாட்டினார். ஒட்டுமொத்த ரி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற உலக சாதனையை கடந்த சில மாதங்களாக தன்னகத்தே கொண்டிருந்த ராஷித் கான், இப்போது சர்வதேச ரி20 போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற மற்றொரு உலக சாதனையை தனதாக்கிக்கொண்டுள்ளார். சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் 164 விக்கெட்களை வீழ்த்தி முதலிடத்தில் இருந்த நியூஸிலாந்தின் ஓய்வுநிலை வீரர் டிம் சௌதியை சில மாதங்களுக்கு முன்னர் சமப்படுத்திய ராஷித் கான் தனது 98ஆவது போட்டியில் 165ஆவது விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் புதிய உலக சாதனை நாயகனானார். நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுடனான போட்டி வரை 99 சர்வதேச ரி20 போட்டிகளில் விளையாடியுள்ள ராஷித் கான் இதுவரை மொத்தமாக 167 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். இதேவேளை, சகலவிதமான ரி20 கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற உலக சாதனையை கடந்த பெப்ரவரி மாதம் ராஷித் கான் நிலைநாட்டியிருந்தார். 490 ரி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள ராஷித் கான் 666 விக்கெட்களை மொத்தமாக கைப்பற்றி முதலிடத்தில் இருக்கிறார். மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் சகலதுறை வீரர் ட்வேன் ப்ராவோ 631 விக்கெட்களைக் கைப்பற்றி இரண்டாம் இடத்திலுள்ளார். https://www.virakesari.lk/article/224130
  21. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தமிழ்நாட்டில் வளர்ப்பு நாய்கள் கடிப்பதாலும் ரேபிஸ் மரணங்கள் பதிவாகியுள்ளன (கோப்புப் படம்) கட்டுரை தகவல் க. சுபகுணம் பிபிசி தமிழ் 3 செப்டெம்பர் 2025, 02:54 GMT உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவைத் தொடர்ந்து தெருநாய் பிரச்னை பற்றி விவாதம் இந்தியா முழுவதும் சூடுபிடித்துள்ளது. ஆனால், பிரச்னைக்குக் காரணம் தெருநாய்கள் மட்டுமல்ல, வளர்ப்பு நாய்களும்தான் என்கிறார் பொது சுகாதாரத் துறையின் முன்னாள் இயக்குநர் மருத்துவர் குழந்தைசாமி. ஒருமுறை அதிகாலை வேளையில் மருந்தகம் ஒன்றுக்குச் சென்றிருந்த போது, தனது வளர்ப்பு நாயுடன் வந்திருந்த நபர் ஒருவர், அதனுடனேயே மருந்து வாங்கச் சென்றார். குழந்தையை அழைத்து வந்திருந்த வாடிக்கையாளர் ஒருவர், சற்று எரிச்சலடைந்து, அதைத் தனியாக வேறு இடத்தில் கட்டி வைத்துவிட்டு வருமாறு சற்று கடினமான குரலில் வலியுறுத்தினார். இதேபோல, கிழக்கு கடற்கரை சாலையில் மற்றுமொரு சம்பவத்தைக் கண்டேன். பிரபல உணவகம் ஒன்றுக்கு பார்சல் உணவு வாங்க வந்திருந்த ஒருவர், வாகனங்கள் நிறுத்துமிடத்தில் மக்கள் கூட்டமும் வாகன நெரிசலும் நிறைந்திருந்த இடத்தில், தான் உடன் அழைத்து வந்திருந்த வளர்ப்பு நாயைக் கட்டி வைத்துவிட்டு, உணவகத்தின் உள்ளே சென்றார். வாசலில் இருந்த மக்கள் கூட்டத்தில் ஒரு தரப்பினர் அதைக் கொண்டு கொள்ளவில்லை. ஆனால், சிலர் அந்த நாய் அங்கிருப்பதை ஓர் அபாயமாகக் கருதி, முன்னெச்சரிக்கையாக விலகி நிற்பதையும், இன்னும் சிலர் அருகில் இருந்த தனது வாகனத்தைக் கூட எடுக்க முடியாமல் சிரமப்பட்டதையும் கண்டேன். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அதிகம் பாயும் பண்புகளைக் கொண்ட நாய்களுக்கு முகக்கவசம் அணிந்து அழைத்து வர வேண்டுமென்று சென்னை மாநகராட்சி விதிமுறை கூறுகிறது இந்த இரு சம்பவங்களில் மட்டுமின்றி, சென்னை நகரில் வெளியே அழைத்து வரப்படும் பெரும்பாலான வளர்ப்பு நாய்களுக்கு வாயில் மஸ்ஸில் என்று அழைக்கப்படும் முகக்கவசம் போடப்படுவது இல்லை என்பதைக் காண முடிந்தது. அதேவேளையில், இப்படியாக நாய்களை வீட்டிலிருந்து வெளியில் அழைத்து வருவோரில் பலரும் சுற்றத்தில் இருக்கும் பிறரின் அசௌகரியம் குறித்துச் சிந்திப்பதில்லை என்கிறார் நாய் நடத்தையியல் நிபுணர் ஸ்ரீதேவி. 'தடுப்பூசி பற்றிய அக்கறையற்ற நிலைமை' "தெருநாய்கள் மட்டுமின்றி நல்ல பராமரிப்பில் வளர்க்கப்படும் நாய்கள் கடிப்பதாலும் ரேபிஸ் நோய் பரவி வருவதைக் காணும் போதே, இந்தப் பிரச்னையின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளலாம்" என்கிறார் மருத்துவர் குழந்தைசாமி. கடந்த 2024 ஜனவரி முதல் 2025 ஆகஸ்ட் மாதம் வரையிலான பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகத்தின் தரவுகள்படி, தமிழ்நாட்டில் 64 ரேபிஸ் மரணங்கள் பதிவாகி இருப்பதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் செய்தி கூறுகிறது. அதில், வளர்ப்பு நாய்கள் கடித்ததால் சுமார் 15 மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. அந்தத் தரவுகளின்படி, இருவர் தடுப்பூசி போடப்பட்ட நாய்கள் கடித்து மரணித்து இருந்தாலும், பிற மரணங்களுக்குக் காரணமாக இருந்த நாய்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இத்தகைய நிலைமை, "தடுப்பூசிகளைச் சரியாகப் போட வேண்டும் என்பது குறித்து பொறுப்புகூட இல்லாமல் பல நாய் உரிமையாளர்கள் இருப்பதைக் காட்டுவதாக" கூறுகிறார் குழந்தைசாமி. அவரது கூற்றுப்படி, வளர்ப்பு நாய்களுக்கு முதல் தவணை ரேபிஸ் தடுப்பூசியை மூன்று மாதத்திலும், இரண்டாவது தவணையை 4 மாதம் முடிந்தவுடனும் போட வேண்டும். "இவற்றோடு, ஒவ்வோர் ஆண்டும் தொடர்ச்சியாக அதற்கான பூஸ்டர் தடுப்பூசியைப் போட வேண்டும். இதுதான் வளர்ப்புப் பிராணிகளை வைத்திருப்பதற்கான சட்டம் கூறும் விதிமுறை. ஆனால், அதை அனைவரும் முறையாகப் பின்பற்றுவதில்லை. இதனால், அபாயம் மேலும் அதிகரிக்கிறது," என்கிறார் அவர். படக்குறிப்பு, பொது சுகாதாரத் துறையின் முன்னாள் இயக்குநர் மருத்துவர் குழந்தைசாமி வளர்ப்பு நாய்கள் குறித்த சட்ட விதிகள் யாவை? வளர்ப்புப் பிராணிகளின் உரிமையாளர்கள் கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்று விதிகள் கூறுகின்றன. குறிப்பாக, கடந்த ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, சென்னை மாநகராட்சியில் வளர்க்கப்படும் நாய்களுக்கு உரிமம் வாங்கியிருக்க வேண்டியது அவசியம். ஆனால், அது நடைமுறையில் சரிவர கடைபிடிக்கப்படுவது இல்லை என்கிறார் குழந்தைசாமி. "முன்பெல்லாம் வளர்ப்பு நாய்களின் கழுத்தில் வட்ட வடிவிலான இரும்பு டாலர் ஒன்று தொங்குவதைப் பார்த்திருப்போம். அந்த டாலரில் ஒரு குறியீட்டு எண் இருக்கும். அந்த எண்ணை வைத்து, எந்தப் பஞ்சாயத்தின் கீழ், எந்த உரிமையாளரின் பேரில் அந்த நாய் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதைக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், அத்தகைய முறையான பதிவுகளை நாய் வளர்ப்பவர்கள் இப்போது கடைபிடிப்பதில்லை." கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட விதிமுறைகளின்படி, வெளிநபர்களிடம் அச்சமூட்டும் வகையில், திடீரென பாயும் பண்புகளைக் கொண்ட நாயாக இருந்தால், அவற்றைக் கட்டுப்படுத்த உதவும் கயிறு அல்லது செயின் இல்லாமலோ, மஸ்ஸில் எனப்படும் முகக்கவசம் இல்லாமலோ அழைத்து வரக்கூடாது. ஆனால், பெரும்பாலும் முகக்கவசம் இல்லாமல்தான் வளர்ப்பு நாய்கள் வெளியில் அழைத்து வரப்படுகின்றன என்று கூறும் நாய் நடத்தையியல் நிபுணர் ஸ்ரீதேவி, அதற்கு முற்றிலுமாக உரிமையாளர்களையே குற்றஞ்சாட்டிவிட முடியாது என்றும் கூறுகிறார். பட மூலாதாரம், A.R.Praveen Kumar படக்குறிப்பு, நாய் நடத்தையியல் நிபுணர் ஸ்ரீதேவி "நாய் மூலமாகப் பிரச்னை ஏற்பட்ட பிறகுதான் இத்தகைய விதிமுறைகளே கொண்டு வரப்பட்டன. அவற்றை முன்னமே கொண்டு வந்திருந்தால் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டு இருக்கும். அதுமட்டுமின்றி, இந்த விதிமுறைகள் உரிய வகையில் பின்பற்றப்படுகின்றனவா என்பது கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை," என்று அவர் விமர்சிக்கிறார். அரசாங்கம் விதிமுறைகளை வகுப்பதோடு நிற்காமல், அவற்றை அனைவருக்கும் கொண்டு சேர்க்கத் தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், அதைப் பின்பற்றத் தவறினால் உரிய நடவடிக்கை எடுக்கவும் வேண்டுமென வலியுறுத்துகிறார் நாய் நடத்தையியல் நிபுணர் ஸ்ரீதேவி. 'பிரச்னை நாய்களிடம் அல்ல; உரிமையாளர்களிடமே' நாய்களை குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசும் ஸ்ரீதேவி, "குழந்தைகள் குதூகலிக்கும் போது எப்படி தன்னிலை மறந்து ஓடி விளையாடுகிறார்களோ, அப்படித்தான் நாய்களும் செய்கின்றன. ஆனால், அவை அப்படி முன்பின் தெரியாத நபர் மீது தாவுவதால் எதுவும் ஆகாது என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருக்க முடியாது" என்றார். எனவே, அப்படியான நடத்தைகளைக் கொண்ட நாய்களைக் கட்டுப்படுத்தி வைக்க வேண்டியது உரிமையாளரின் பொறுப்பு என்று அவர் வலியுறுத்துகிறார். "இந்தப் பொறுப்புணர்வு இல்லாமல் செயல்படுவோர்தான் அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் பொறுப்பாக வேண்டும், நாய்கள் அல்ல. ஏனெனில், பிற உயிரினங்களைப் போலவே அவையும் கோபம், மகிழ்ச்சி என அனைத்தையும் சிந்திக்காமல் காட்டக்கூடிய விலங்குதான். அவற்றைக் கட்டுப்படுத்தும் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டிருக்க வேண்டியது உரிமையாளரின் கடமை" என்று விளக்கினார். பட மூலாதாரம், Getty Images சுமார் 8 ஆண்டுகளுக்கும் மேலாக நாய் வளர்த்து வரும் கவிதா, ஸ்ரீதேவியின் கருத்துடன் உடன்படுகிறார். "எனது செல்லப்பிராணி ஆபத்தற்றது என்று நான் நம்பலாம். அதனுடன் பழகிய அனுபவமற்ற, முன்பின் தெரியாத நபர் ஒருவரும் அப்படியே நம்ப வேண்டுமென்று நான் எதிர்பார்க்க முடியாது," என்பதை வலியுறுத்துகிறார். அதே நேரம், "அரசாங்கமும் விதிமுறைகளை அறிவிப்பதோடு நிற்காமல் அவற்றை அனைவருக்கும் தெரியப்படுத்தவும், பின்பற்றத் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கவும் வழி செய்ய வேண்டும்" என்று கோருகிறார் கவிதா. வளர்ப்பு நாயை வெளியே அழைத்து வரும்போது, அவை பிறருக்கு ஆபத்து விளைவிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென்ற கருத்துடன் உடன்படும் நாய் உரிமையாளரான கவிதா, நாய்களை செயின் போட்டு, வாயை முகமூடியால் மறைத்து அழைத்து வர வேண்டும் என்பதோடு மற்றுமொரு கூற்றை வலியுறுத்துகிறார். நாய்களைப் பொறுத்தவரை, பெரும்பாலும் சிறுநீர் மற்றும் மலம் கழிக்கவே வெளியே அழைத்து வரப்படுகின்றன. அப்படியிருக்கும் சூழலில், அவற்றை அப்புறப்படுத்தத் தேவையான உபகரணங்களையும் கொண்டு வர வேண்டுமென்று விதிமுறை உள்ளதாகக் குறிப்பிட்டார் மருத்துவர் குழந்தைசாமி. அதை வலியுறுத்திப் பேசிய கவிதா, "தனது நாயாகவே இருந்தாலும், அதன் கழிவை மிதிப்பதற்கு ஒருவர் தயாராக இருப்பாரா? அதேபோலத்தான் அனைவருக்கும் இருக்கும் என்பதைப் புரிந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும்" என்கிறார் அவர். இதுமட்டுமின்றி, நாய்களின் மலத்தில் உள்ள டேப்வோர்ம் கிருமிகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்துள்ளதை விவரிக்கும் மருத்துவர் குழந்தைசாமி, "ரேபிஸ் மட்டுமின்றி இதுவும் ஆபத்தானது. ஆகவே, நாய்களை வெளியே அழைத்து வரும் உரிமையாளர்கள் அவற்றின் மலத்தை அப்புறப்படுத்தவும் தயாராக வர வேண்டும்," என்று அறிவுறுத்தினார். உரிமையாளர்கள் விதிகளைப் பின்பற்றுவது முறையாகக் கண்காணிக்கப்படுகிறதா என்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த தமிழ்நாடு விலங்குநல வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி மருத்துவர் சொக்கலிங்கம், "வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகள் வகுக்கப்பட்ட பிறகு, அவை கடைபிடிக்கப்படுவதை நகராட்சி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்" என்றார். அதோடு, "இந்த விஷயத்தில், வளர்ப்பு நாய்கள் விற்பனை, அவற்றை நடத்தும் முறை உள்பட பலவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள விதிகள் பின்பற்றப்படவில்லை என்றால் என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பவை உள்பட பல வழிகாட்டுதல்கள் அடங்கிய விரிவான அறிக்கை உருவாக்கப்பட்டு வருகிறது" என்று அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c86067q0q81o
  22. 80 ஆயிரம் புறாக்களை பறக்கவிட்டு சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 80 ஆவது ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டம் Published By: Priyatharshan 03 Sep, 2025 | 04:20 PM 80 ஆயிரம் புறாக்களை பறக்கவிட்டு, சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 80 ஆவது ஆண்டு வெற்றி விழா, சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், இதன் நேரடி ஒளிபரப்பு கொழும்பில் உள்ள சீன தூதரகத்தின் ஏற்பாட்டில் சீனத் தூதுவரின் தலைமையில் இன்று புதன்கிழமை (3) காலை சினமன் லைப் ஹோட்டலில் இடம்பெற்றது. சீனாவில் இடம்பெற்ற வெற்றிக் கொண்டாட்டம் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் மற்றும் ஈரான், கியூபா உள்ளிட்ட 26 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இரண்டாம் உலகப் போரில் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிராக சீனா பெற்ற வெற்றியின் 80 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. சீனாவின் முக்கிய இராணுவ அணிவகுப்பில் பங்கேற்பதற்காக வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 2) குண்டு துளைக்காத ரயில் மூலம் பெய்ஜிங் சென்றடைந்தார். "வரலாற்றை நினைவில் கொள்வோம், தியாகிகளை நினைவு கூர்வோம், பிரகாசமான எதிர்காலத்திற்காக அமைதியைப் போற்றுவோம்" என்ற முக்கிய கருப்பொருளில் சுமார் 70 நிமிடங்கள் இடம்பெற்ற இந்த வெற்றிக்கொண்டாட்டத்தின் போது, சீன இராணுவம் தனது அணு ஆயுத பலத்தை தரை, கடல் மற்றும் வான்வழி என மூன்று தளங்களிலும் ஒரே நேரத்தில் காட்சிப்படுத்தியது. தியான்மென் சதுக்கத்தில் நடைபெற்ற இந்த அணிவகுப்பு மரியாதையை சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் பார்வையிட்டார். "நீதி வெல்லும்" , "அமைதி வெல்லும்" மற்றும் "மக்கள் வெல்லும்" என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளைச் சுமந்துகொண்டு ஹெலிக்கொப்டர்கள் தியான்மென் சதுக்கத்திற்கு மேல் பறந்தன. 5 ஆவது தலைமுறையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், சீனாவின் அதிநவீன இராணுவ தளவாடங்கள், புதிய ரக டாங்கிகள், பீரங்கிகள் மற்றும் விமானங்கள் அணு ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. வான்வழி நீண்ட தூர அணு ஏவுகணை, நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஏவுகணை, தரைவழி சார்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஏவுகணை மற்றும் புதிய DF-31BJ தரைவழி சார்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன. அத்துடன் DF-5C திரவ கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஏவுகணை காட்சிப்படுத்தப்பட்டது. இந்த ஏவுகணை, உலகின் எந்த இலக்கையும் தாக்கும் திறன் கொண்டது என சீனா இராணுவம் தெரிவித்துள்ளது. இதன்போது ஒய்ஜே-21 (YJ-21), டிஎஃப்-17 (DF-17) மற்றும் டிஎஃப்-26டி (DF-26D) போன்ற புதிய தலைமுறை ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்த ஏவுகணைகள் மிக அதிக வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டவை. மேலும், இவை எதிரிகளின் பாதுகாப்பு அரண்களை ஊடுருவி, இலக்குகளை மிகத் துல்லியமாகத் தாக்கும் சக்தி வாய்ந்தவை ஆகும். ஆளில்லா தரைப்படை, ஆளில்லா கடல்சார் போர்ப் படை மற்றும் ஆளில்லா விமானப் படை ஆகியவற்றின் அணிவகுப்புக்கள் இடம்பெற்றன. சமாதானத்தை வெளிப்படுத்தும் முகமாக 80 ஆயிரம் புறாக்கள் பறக்கவிடப்பட்டன. இந்நிகழ்வில் உரையாற்றிய சீன ஜனாதிபதி சீ ஜின் பிங், 80 ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற வெற்றி, நவீன காலத்தில் சீனா வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராகப் பெற்ற முதல் முழுமையான வெற்றி. போர் மீண்டும் நிகழாமல் இருக்க, போருக்கான அடிப்படைக் காரணத்தை ஒழிக்க வேண்டும் என்று அவர் உலக நாடுகளை வலியுறுத்தினார். மிகப் பிரம்மாண்டமான முறையில் இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பு, அமைதியான வளர்ச்சியின் பாதையைத் தொடர அதன் உறுதியையும், தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கான அதன் வலுவான ஆர்வத்தையும், உலக அமைதியைப் பாதுகாப்பதற்கான அதன் சிறந்த திறனையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தது. இந்த ராணுவ அணிவகுப்பில் 10,000க்கும் மேற்பட்ட சீன இராணுவ வீரர்கள், 100 க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான போர் வாகனங்கள் பங்கேற்றன. ஆளில்லா உளவு மற்றும் எதிர்ப்பு- ஆளில்லா கருவிகள், அதிவேக ஏவுகணைகள், இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஆற்றல் கொண்ட ஆயுதங்கள், மின்னணு அமைப்புகள் மற்றும் உலகளாவிய தாக்குதல் திறன் கொண்ட மூலோபாய ஆயுதங்கள் போன்ற அதிநவீன ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிகளில் பங்கேற்ற சீன வீரர்கள் முதன்முறையாக இந்த வெற்றி தின அணிவகுப்பில் அணிவகுத்துச் சென்றனர். ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போரில் பங்களித்த சர்வதேச நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கும் சிறப்பு அழைப்புகள் விடுக்கப்பட்டிருந்தன. சீனாவில் வெற்றி தினத்தைக் கொண்டாடும் வகையில் பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மண்டபத்தில் இன்று இரவு (செப்டம்பர் 3) சிறப்பு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/224109
  23. Published By: Digital Desk 1 03 Sep, 2025 | 09:18 AM பாகிஸ்தானில் செவ்வாய்க்கிழமை (நேற்று) வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட மூன்று தாக்குதல்களில் குறைந்தது சுமார் 22 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில், தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் ஒரு அரசியல் பேரணியை குறிவைத்து தற்கொலை குண்டுதாரி நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த தாக்குதலில் மேலும் சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர். ஈரான் எல்லைக்கு அருகிலுள்ள பலுசிஸ்தானில் செவ்வாய்க்கிழமை நடந்த மற்றொரு தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். அதேநேரம், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள அவர்களின் தளத்தின் மீது நடந்த தற்கொலைத் தாக்குதலுக்குப் பின்னர் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/224064
  24. கச்சத்தீவு சுற்றுலாத்தலமாக மாற்றப்படுவதை நாங்கள் விரும்பவில்லை - யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஜோ.ஜெபரட்ணம் அடிகளார் 03 Sep, 2025 | 03:57 PM (எம்.நியூட்டன்) கச்சத்தீவு சுற்றுலாத்தலமாக மாற்றப்படுவதை நாங்கள் விரும்பவில்லை என யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஜோ.ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார். யாழ். மாவட்ட சர்வமத பேரவையின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று புதன்கிழமை (3) யாழ். ஆயர் இல்லத்தில் நடைபெற்றபோது ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கச்சத்தீவு சுற்றுலாத்தலம் ஆக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்த வேளை கச்சத்தீவிற்கும் சென்றுள்ளார் என்பதை நாங்களும் அறிந்திருந்தோம். மேலும் கச்சத்தீவை சுற்றுலாத்தலமாக மாற்றமுடியும் என்றொரு கருத்தை கூறியதாக அறிகின்றோம். ஆனால், உண்மையாகவே கச்சத்தீவு புனிதமான தீவு. அங்கு புனித அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது. அங்கு ஒவ்வொரு வருடமும் இலங்கையிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் பக்தர்கள் ஒன்றுகூடி புனித அந்தோனியாரின் திருவிழாவை தவக்கால யாத்திரையாக வழிபட்டு வருகிறார்கள். ஆகவே அது சுற்றுலாத்தலமாக மாற்றப்படுவதை நாங்கள் எந்தவிதத்திலும் விரும்பவில்லை. காரணம், புனித தலத்தின் புனிதத்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே, ஜனாதிபதி இந்த விடயமாக யாழ். மறைமாவட்டத்தோடு கலந்துரையாடுவார் என்பது எமது நம்பிக்கை. ஏனென்றால், கச்சத்தீவு யாழ். மறைமாவட்டத்தின் கீழ் வருகின்ற பணித்தலமாக இருக்கின்றது. அங்கு நடைபெறும் திருநாட்கள் எல்லாவற்றையும் நாங்கள் தான் ஏற்பாடு செய்கின்றோம். ஆகவே இவை பற்றிய இறுதி முடிவுகளை எடுப்பதற்கு முன்பாக ஜனாதிபதி யாழ். மறைமாவட்டத்தின் கருத்துகளை பெற்றுக்கொள்வார் என்பது எமது நம்பிக்கை. ஜனாதிபதி கச்சத்தீவுக்கு சென்றதன் முக்கிய காரணம் என்னவாக இருக்கலாம் என்று சிந்தித்தபோது அண்மைக்காலமாக, இந்தியா தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் “கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமானது, அதனை மீளப் பெறவேண்டும்” என பிரச்சாரம் செய்துவருகின்றார்கள். எனவேதான் ஜனாதிபதியின் முக்கியமான நோக்கம் “இது இலங்கைக்கு சொந்தமான தீவு, இதை யாருமே உரிமை கோர முடியாது” என்பதை வலியுறுத்துவதற்காகவே அங்கு சென்றுள்ளார். அதனை சுற்றுலாத்தலமாக மாற்றுவது என்பது இரண்டாம் தரமான எண்ணமாக இருந்தாலும், கச்சத்தீவு இலங்கைக்குரியது, அதனை எந்த நாடும் உரிமை கோர முடியாது என்பதை தன்னுடைய கால்தளத்தை பதித்து அவர் உறுதிப்படுத்தியிருக்கிறார் என்பதுதான் எங்களுடைய கருத்து என்றார். https://www.virakesari.lk/article/224117
  25. எச்.ஐ.வி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு Published By: Digital Desk 3 03 Sep, 2025 | 02:45 PM நாட்டில் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பீடும் போது எச்.ஐ.வி தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதாக அண்மைய புள்ளிவிபர தரவுகள் தெரிவிக்கின்றன. பாலியல் ரீதியாக பரவும் தொற்றுநோய்கள்/எச்.ஐ.வி.யை தடுப்பதற்கான விழிப்புணர்வு திட்டம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் (ஜனவரி முதல் மார்ச் வரை) மொத்தம் 230 நோயாளர்கள் பதிவாகியுள்ளன. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் காலாண்டு ஒன்றில் அதிகளவான நோயாளர்கள் பதிவான முதல் காலாண்டு இதுவாகும். 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பதிவான நோயாளர்களில், 30 ஆண்களும் இரண்டு பெண்களும் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள், மீதமுள்ள நோயாளர்கள் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள். 2025 ஆம் ஆண்டில் பதிவான எச்.ஐ.வி நோயாளர்களின் ஆண் மற்றும் பெண் விகிதம் 6.6:1 ஆக உள்ளது. மேலும், 2025 ஆம் ஆண்டில் இதுவரை எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயினால் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 2024 ஆம் ஆண்டில், மொத்தம் 47 நபர்கள் எச்.ஐ.வி/எய்ட்ஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் நாட்டில் கடந்த ஆண்டில் மட்டும் 10 இலட்சத்துக்கும் அதிகமான எச்.ஐ.வி பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிகரித்து வரும் எச்.ஐ.வி நோயாளிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் ரீதியாக பரவும் தொற்றுநோய்கள்/எச்.ஐ.வி.யை தடுப்பதற்கான விழிப்புணர்வு திட்டம் அண்மையில் இலங்கையின் பாடசாலை பாடத்திட்டத்தில் ஆணுறை பயன்பாடு, முன்-வெளிப்பாடு தடுப்பு (PrEP), மற்றும் பிந்தைய-வெளிப்பாடு தடுப்பு (PEP) உள்ளிட்ட HIV/STI தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க பரிந்துரைத்துள்ளது. இருப்பினும், இந்த திட்டம் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது. https://www.virakesari.lk/article/224097

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.