Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பிரபா சிதம்பரநாதன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  1,184
 • Joined

 • Last visited

 • Days Won

  2

Everything posted by பிரபா சிதம்பரநாதன்

 1. வடக்கிலிருந்து தெற்கே பறந்த ஒரு பறவையின் கதைதான் இது.. ஆனால் சுப்ரமணிய பிரபா போன்று எழுதுபவர்கள் பறவை ஏன் அப்படி பறந்து போகிறது என்பதையும் குறிப்பிட்டு இருந்தால் நடுநிலைமையானதாக இருந்திருக்கும்.. அதைவிடுத்து இந்த மாதிரி எழுதுவதால் எதிர்மறையான எண்ணங்கள்தான் ஏற்படும் தெரியவில்லையா!
 2. எனது பதின்ம வயதுகளில் திருகோணமலையில் இருந்த பொழுது என்னை யாழ்ப்பாணிகள், கர்வம் பிடித்தவர்கள் எனக்கூறிய பொழுதுகளில் கோபம் வந்தது, ஆனால் பின்நாளில் வெளியுலகத்தை பார்க்க தொடங்கிய பின்பும், தனிப்பட்ட அனுபவங்களின் பின்பும் எண்ணங்கள் மாறத்தொடங்கின.. இப்பொழுது இந்த கட்டுரையை வாசிக்கும் பொழுது, அவர் கூறியதில் பிழையில்லை என்றே நினைக்க தோன்றுகிறது..
 3. நீங்கள் ஊசி போடுவது உங்களுடைய தனிப்பட்ட விடயம், ஆனால் நீங்கள் இப்படியும் சொல்லிவிட்டு ஊசியும் போடப்போவதில்லை என்றால் எப்படி? இந்த Corona இலகுவில் போகப்போவதில்லைதான் ஆனால் அதிகளவு மக்கள் தடுப்பு ஊசி போட்டபின்புதான் lockdown நீக்கப்பட்டால்தான் வேலையின்மை பிரச்சனை குறையும், இந்த COVID lockdown காலத்தில் பாடசாலைகளும் இல்லாதமையால் சிறுவர் சிறுமியர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது( சில இடங்களில் மாணவர்கள் பாடசாலை நேரம் என்பது வன்முறை மிகுந்த பெற்றோரிடம் இருந்து தப்ப ஒரு தற்காலிக புகலிடம்.. ) அதுவும் ஓரளவிற்கு குறையும். இப்படி நிறைய விடயங்கள் இந்த தடுப்பு ஊசி போடுவதில் தங்கியுள்ளது. மீண்டும் இது உங்களது தனிப்பட்ட விடயம், ஆனாலும் சமூக கடமை என்ற ஒன்றும் எங்களுக்கு உள்ளது. உங்களது குடும்ப வைத்தியருடன் கலந்தாலோசித்து செய்யுங்கள்..
 4. நீங்கள் உங்களது பதில்களை அதன் இலக்க வரிசையில் எழுதாமையால் புள்ளிகள் வழங்குவதைப்பற்றி கொஞ்சம் சிந்திக்கவேண்டியுள்ளது.. மேலும் உங்களது 9வது படம் தவறான விடை.. ஆனாலும் பங்குபற்றியமைக்கு நன்றிகள்.
 5. இந்த emojiல் உள்ள படங்கள் பெரும்பாலும் சிறுவயதினருடன் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும், நாங்களும் சிறுவயதில் இவைபற்றி வாசித்தோ, படங்களிலோ பார்த்திருக்கிறோம்.. 🗡
 6. இங்கே மற்றைய மாநிலங்களில் முக்கியமாக விக்டோரியா, குயின்ஸ்லாந்து, தெற்கு அவுஸ்ரேலியா எல்லாம் lockdown இருந்த பொழுது NSWல் கட்டுப்பாடுகள் இருக்கவில்லை.. விக்டோரியா, குயின்ஸ்லாந்து மாநில Premier குறை கூறி வந்தார்கள்.. இப்பொழுது NSW lockdown.. இந்த மாதம் தொடக்கம் ஒரு நாள் அலுவலகம் வரலாம் என்றிருந்தார்கள்.. இப்போ எல்லாம் பழையபடி WFH ஆயிற்று.. உண்மையில் WFH மெடல் வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் என்றால் மிகவும் நன்று.. மின்சார கட்டனம் ஒரு பக்கம் அதிகரிக்கிறது என்பது மட்டுமல்ல மனச்சோர்வு, எடை அதிகரிப்பு என நிறைய. அதைவிட வீட்டு வன்முறைகள், சிறுவர் துஷ்பிரயோகங்கள், சமூகத்திடமிருந்து ஒரு ஒதுக்கம் என்பனவும் அதிகரித்துக்கொண்டே போகிறது.. இந்த கொரோனா எங்களை விட்டு போகுமா தெரியவில்லை, ஏதோவொரு வடிவில் இருந்து கொண்டுதான் இருக்கும்.. தடுப்பு ஊசியை போடுவது தனிப்பட்டவர் விருப்பம் என்றாலும் சமூக கடமை என்றும் ஒன்றுள்ளதால் தடுப்பு ஊசி போடுவதைப்பற்றி எல்லோரும் சிந்திக்கவேண்டும் என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.. இதற்காகத்தான் எங்களது அலுவலத்திலும் அப்படி ஏற்பாடு செய்திருந்தார்கள்.. திரும்பவும் lockdownற்குள் போனதால் அது காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ளது..
 7. நான் இவரது துறை சார்ந்த கலைப்பீடத்தில் கல்விகற்கவில்லை, ஆனாலும் எனது மிகுந்த மதிப்பிற்குரிய பேராசியர்களில் இவரும் ஒருவர்… இவரது பேட்டியை இன்னமும் கொஞ்சம் விரிவாக அமைத்திருக்கலாம்.. பேராசிரியர் கூறும் 19 - 20ம் நூற்றாண்டுகளின் தொடர்புகள் பற்றிய உதாரணங்கள் சில எனது அம்மாவின் வழி உறவிலும் உள்ளது. 20ம் நூற்றாண்டின் இடைக்காலப்பகுதியில் இருந்து என நினைக்கிறேன் .. இதைப்பற்றி அடுத்த முறை ஊரிற்கு போகும்பொழுது கட்டாயம் கேட்கவேண்டும்
 8. இன்னொன்றையும் மறந்துவிட்டீர்கள். வேலைக்கென வாங்கும் புதிய ஆடைகள், மேக்கப், இத்யாதிகளின் செலவும் குறைந்திருக்குமே
 9. 50 வருட கால வரட்சியை போக்கி NBA வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றிய Milwaukee Bucks.. போட்டியின் சில highlights…
 10. சில சமயங்களில் உங்களுடைய logic விளங்கமுடிவதில்லை.. நீங்கள் நிலக்கீழ் இரயில் 55 நிமிடங்கள் பரிதவித்து இருந்தீர்கள் ஏனென்றால் உங்களை நம்பி வீட்டில் இருப்பவர்களுக்காக - it’s pure and genuine concern ஆனால் ரிசாட் போன்றவர்களுக்கு வரும் இந்த heart attack.. ஜயோ குற்றம் செய்த குடும்ப உறுப்பினர் காப்பாற்றமுடியவில்லை என்பதாகவே இருக்கும்.. it’s not pure concern.. நீங்கள் இந்த இடத்தில் உங்களது பரிதவிப்பையும் ரிசாட் போன்றவர்களின் பரிதவிப்பையும் ஒன்றாக கருத்தினால் அது உங்கள் மீதான அபிப்பிராயத்தைத்தான் குறைக்கும்.. மனிதாபிமானம் இருப்பதில் தவறில்லை, ஆனால் இந்த இடத்தில் உங்களது மனிதாபிமான உணர்வு சரியா தெரியவில்லை please don’t point out the quote “Put yourself into other’s shoes”.. in this situation.. it’s not right
 11. வெளிநாடுகளில் உள்ளவர்கள் வாழ்த்தலாம், வழிகாட்டலாம்(mentoring)..
 12. Wow.. வாழ்த்துக்கள்!!!!.. முனிபா மசாரி ஒரு ஓவியர்.. motivational speaker.. .. இதில் வரும் 3 வகையான மனிதர்கள், இவர்களை அதிகம் பார்த்திருக்கிறோம்
 13. இவரைப்பற்றி அதிகம் தெரிய வாய்ப்பில்லை என்பதால் இன்னொரு விடயம் இவர் ஒரு ஓவியர்
 14. அன்னை தெரேசா.. இன்னமும் உயிருடன் வாழ்கிறார்
 15. பெனசீர் பூட்டோ இல்லை.. இவர் அரசியலில் இல்லை. ஆனால் இவரும் பாகிஸ்தான் பெண்மணிதான். இரும்பு பெண்மணி என கூறியதற்கு வேறு காரணம் உண்டு..
 16. இவரை தெரிகிறதா.. இவரும் ஒரு இரும்புப்பெண்மணி..
 17. BBC தமிழ் இந்த மாதிரியும் செய்தி போடுகிறதா.. பரவாயில்லையே!! அதிலும் கடைசியாக உள்ள 10 குறிப்புகளையும் தகுந்த வயதில் இருந்து கூற வேண்டும்.. இல்லாவிடில் சரியான தொடுகை எது பிழையான தொடுகை எது என்பதும்.. sexual consent என்றால் என்பதும் விளங்காமல் நடந்துவிட்டு பின் வருந்தவேண்டிய அவசியமும் வரமாட்டாது.. நாங்கள் எங்களது பிள்ளைகளுக்கு அந்தந்த வயதிற்கேற்ப எப்படி ஆண் பெண் உறவு, திருநங்கைகள், ஓரின சேர்க்கை உறவுகள், விவாகரத்து என்பதை பற்றி கூறிவளர்க்கிறோம் என்பது மிக அவசியம் என நம்புகிறேன்..
 18. நிராகரிப்பு வலி நிறைந்தது.. வலி அதிகமானால் மனம் மெளனமாகிவிடும்..
 19. இன்னும் இரண்டு வருடங்களில் எந்தவித தடங்கல்களும் இன்றி பயிற்சி முடித்து வர வாழ்த்துக்கள்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.