Everything posted by P.S.பிரபா
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
எமது மக்கள் தொடர்பான எண்ணங்களிலும் இந்த ஆவணத் தயாரிப்பிலும் ஈடுபடும் நன்னியின் மீதான எனது அபிப்பிராயம் மாறவில்லை அண்ணா!. நாங்கள் எல்லோரும் வேறுபட்ட சூழலில் வளர்ந்தவர்கள்.. எல்லோரும் எல்லாவிடயங்களிலும் ஒரே மாதிரி சிந்திப்பார்கள் எனக் கூறமுடியாது தானே. அதே போன்ற ஒன்றுதான் இந்த திரியில் நன்னியின் கேள்விக்கு எனது கருத்து.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நான் இந்த தலைப்பில் செய்திகளையும் கருத்துக்களையும் வாசித்துக் கொண்டு வருகிறேன். கொல்லப்பட்ட பெண்னைப் பற்றிய செய்திகளை படித்துக்கொண்டு இருக்கும் பொழுது திடீரென நீங்கள் ஒரு பெண்ணின் படத்தைப் போட்டுவிட்டு அவர் ஒரு இரானுவ வீரர் etc etc என எழுதியதைப் பார்த்துவிட்டுதான் உங்களிடம் கேட்டேன். ஏனெனில் அந்தப் பெண் இராணுவ வீரர் என்பதால் அந்தப் பெண்ணிற்கு நடந்தது சரியாகுமா? இல்லைத்தானே? யாருக்குமே அப்படி நடக்ககூடாது என்றுதான் நாங்கள் நினைப்போம் இல்லையா!. அவ்வளவுதான். இந்த திரியில் நன்னியின் பதிவுகள், பலஸ்தீனியர்கள் இஸ்லாமியர்கள் என்பதால் அவர்களுக்கு நடப்பது சரியென்ற தோற்றத்தை எனக்குள் உருவாக்கியது. அது சரியான ஒன்றாக எனக்குப்படவில்லை. ஏனெனில் இரண்டு பக்கதாலும் கொல்லப்படுவது சாதாரண அப்பாவி மக்களே. ஆகையால்தான் இரண்டு கொடிகளையும் சேர்த்து எழுதட்டோ எனக் கேட்டதற்கு எனது கருத்தை எழுதினேன். இஸ்ரேலினை ஆதரிக்க கூடாது எனக் கூறவுமில்லை, நன்னியில் மதிப்பும் குறையவில்லை. ஆனால் யூதர்கள் இனவழிப்பு கொடுமையை எதிர்கொண்டவர்கள் ஆனால் இன்னொரு இனம் அவர்களைப் போன்ற இனவழிப்பை எதிர்கொண்ட பொழுது மற்றையவர்கள் போல அமைதி காத்தார்கள் எனும் பொழுது அவர்களின் மேல் நம்பிக்கை ஏற்படவில்லை. அதற்காக இந்த ஹமாஸ், தலீபான் போன்ற இஸ்லாமிய மதவெறிக்குழுக்களையும் ஆதரிக்கவில்லை. இவ்வளவுதான் இந்த விடயத்தில் எனது வட்டம். எல்லா விடயங்களிலும் வட்டத்தைவிட்டு சிந்திக்க முடியவில்லை என்பதையும் ஒத்துக்கொள்கிறேன்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான். போர் என்றாலே அழிவுதான் அதிலும் இந்த மாதிரி கிடைத்த சந்தர்ப்பத்தில் அப்பாவி மக்களை கொன்று குவிப்பது சாதாரனமான ஒன்றாகிவிட்டது. இவர்களால் எங்களுக்கு நன்மை கிடைக்கிறதோ இல்லேயோ ஆனால் எங்களது கொடியை இதற்குள் சேர்ப்பது தேவையற்ற ஒன்று
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நீங்கள் எதற்காக இதனை சுட்டிக்காட்டினீர்கள் என தெரிந்து கொள்ளலாமா? இராணுவ வீரர் என்பதற்காக அந்தப் பெண்ணை இப்படி இழுத்துச் செல்வதும்.. கொன்ற பின் துப்புவது. பலாத்காரத்தை ஒரு ஆயுதமாக பாவிப்பதை வீரமாக கருதும் யாருமே மனிததன்மையற்றவரகள். எங்களுக்கு நடந்த பொழுது யாருமே ஒன்று கூறவில்லை.. நியாயம் கிடைக்க இன்னமும் போராடிக் கொண்டு இருக்கிறோம் என்பதற்காக இந்த மாதிரி மனித தன்மையற்று மிருகங்களை விட கேவலமாக நடக்குமளவிற்கு மதவெறி.. மதங்கள் போதிப்பதை தமக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டு விடுதலைக்காக போராடுகிறார்கள் என்றெதல்லாம் கேலிக்கூத்து.
- ஓயாத நிழல் யுத்தங்கள் – 1
-
ஓயாத நிழல் யுத்தங்கள் – 1
@Justinஅண்ணா, யாழிணையத்தில் தலைவரைப் பற்றிய தொடர், நன்னியின் வரலாற்று ஆவணப்படுத்தல் மற்றும் உங்களது இந்த தொடர் எல்லாமே மிகவும் பயனுள்ள தொடர்கள். உண்மையில் இப்படியான தொடர்களை இங்கே அல்லது புலம்பெயர் தேசத்தில் உள்ள தமிழ்ப் பாடசாலைகள் இலகுவான மொழி நடையில் உயர் வகுப்புகளிற்குப் பயன்படுத்தலாம். ஒரே சிலப்பதிகாரத்தையும் இராமயாணத்தையும் சொல்லிக் கொடுக்காமல்.
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
யாழ்ப்பாணப் பொது நூலகமும் முதலியார் வாசிகசாலையும் நான் இந்த வருட ஆரம்பத்தில் ஊருக்குச் சென்றிருந்தேன். ஒரு நாள் யாழ்ப்பாணப் பொது நூலகத்திற்குச் சென்றிருந்த வேளை ஒரு சிறிய நாகபாம்புக்குட்டி ஒன்றை நூலகத்தின் வரையறுக்கப்பட்ட அனுமதி பகுதிக்குள் இருந்து பிடித்துக் கொண்டுவந்தார்கள். நான் நினைத்தேன் முதலியாரின் இந்த வாசிகசாலைக்குள் சுதந்திரமாகத் திரியாமல் அநியாயமாக அங்கே போய் மாட்டிக்கொண்டதே என்று. இன்றுடன் இந்தப் பயண அனுபவம் நிறைவடைகிறது. இவ்வளவு நாட்களும் கருத்துகள் எழுதி என்னை ஊக்குவித்த அனைத்து கள உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நன்றி வணக்கம். - பிரபா.
-
ஈழத்தமிழர் அரசியல்
எனக்கென்னவோ முதலில் நாங்கள் தமிழர்கள் என்ற அடையாளத்தை, தமிழ் மொழியை, கலாச்சாரத்தை பேண வேண்டுமா இல்லையா என்பதை முடிவெடுக்கட்டும்.. அதன் பிறகே அவர்களால் உணர்ந்து கொள்ளமுடியும். ஏனெனில் போதைவஸ்து ஒரு புறம். போட்டி பொறாமையால் சமூக சீர்கேடுகளைக் கூட தட்டிக் கேட்க முடியாமல் தடுமாறும் சமூகத்தில், எமது தொன்மையை எப்படி பாதுகாக்க முடியும்? . மக்களின் எண்ணங்கள் இப்பொழுது வேறு. அதற்காக அவர்களை பிழையெனவும் கூற இயலாது. எனக்கு உங்களைப் போல அரசியல் கதைக்க முடியாது ஆனால் என் மனதில் பட்டதை எழுதினேன்
- 147 replies
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
- ஓயாத நிழல் யுத்தங்கள் – 1
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
உண்மைதான்.. குமுதம் அல்லது ஆனந்தவிகடனில் வந்த நினைவு உள்ளது(சரியாகத் தெரியவில்லை). இந்தப் புத்தகத்தைப் பார்த்ததும் சரி திரும்ப ஒருமுறை வாசிப்போம் என நினைத்தேன்.. அப்படித்தான் நானும் கேள்விப்பட்டனான், ஆனால் வருத்தம் இல்லாவிட்டாலும் சாப்பிடலாம் ரின்னில் வர்ற ஆட்டிறைச்சியை விட இது சுவையாக இருக்கும்😁 அப்புசாமி 80😎
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
நன்றி ஏராளன்.. எழுதும் பொழுதும் கொஞ்சம் சந்தேகமாகத்தான் இருந்தது.
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
அப்புசாமியும் ஆட்டுக்காலும்.
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
நீங்கள் சொல்வது சரி.. ஏனெனில் தாளையடி வழியாகத்தான் போனேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி..
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
மருதங்கேணியில் ஒரு தேவாலயம் கண்ணில்பட்டது.. கோட்டை தெரியவில்லை🙂 நீலநிறக் கடலுக்கு அருகில் நிமிர்ந்து நிற்கும் ஒரு ஆலயம்..
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
தேராவில்லும் தேக்கு மரங்களும் சொல்லும் ஒரு கதை!!
- IMG_5276.jpeg
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
மிக்க நன்றி. இது வெற்றிலைக்கேணியில் உள்ளது. பாழடைந்த நிலையில் உள்ளது. அந்த இடத்தில் நிற்கும் பொழுது எல்லாவற்றையும் நினைத்து பெருமூச்சு ஒன்று எழுவதை தடுக்க முடியவில்லை.
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
நானும் ஒரு தகவலை தருகிறேன். வன்னிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் நுழைவு வாயிலாக இருக்கும் 4 ஊர்களில் இதைப் போல காவல் அரண்களை கட்டியுள்ளார்கள். பூநகரி அதில் ஒன்று. மிகுதி 3 ஊர்களில் ஒன்றில் இந்தக் காவல் அரண் உள்ளது. எங்களது வரலாற்றில் முக்கியமான இடம்😁
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
காணாமல் போகவில்லை. இடையிடை வருகிறனான். ஆனால் எங்களது அலுவலகத்தில் எனது பகுதி offshore போகிறது அதனால் கொஞ்சம் வேலைப்பளு, அத்துடன் தந்தையின் உடல்நிலை மற்றும் எனது தனிப்பட்ட project ஒன்றும் நிறைவடையாமல் இழுத்தடித்துக் கொண்டு போனதால் ஒரு சலிப்பு 😒 இந்தக் கோபுரம் வடமராச்சியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ளது🤔 அப்படியா?? ஆனால் நான் கூகிளில் எடுக்கவில்லை😀. புகைப்படம் எடுப்பது எனது பொழுதுபோக்கு.. கோவளம் கடற்கரையில் வெளிச்சக்கூடு இல்லை
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
யாழ் மாவட்டத்தில் இந்தப் பழைய காவல் அரன் போன்ற கோபுரம் எங்கே உள்ளது எனக் கூறுங்கள் பார்ப்போம்.. இந்த முறை போன பொழுது இந்த இடத்திற்குப் போக முடிந்தது. இங்கே நின்றிருந்த நேரம் முழுவதும் இனம்புரியாத கவலை மனதில் எழுந்ததை மறுக்க முடியாது. மிகவும் பின்தங்கிய இடமாக மாறிவிட்டது ஆனாலும் எங்களது வரலாற்றில் முக்கியமான கடற்கரைகளில் இதுவும் ஒன்று.
- IMG_5267.jpeg
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
“ நினைவிருக்கா.. “இந்தப் பாடலும் இனிமையான ஒரு பாடல்
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
நானும் இந்த முறை இந்தப் பட்டத்திருவிழாவிற்கு முதன்முதலாகப் போயிருந்தேன். ஆனால் போனபின் இதுதான் கடைசி முறை என்பதையும் மனதில் நினைத்துவிட்டேன். வேறு சில விடயங்கள் சம்பந்தமாக எனக்குத் தெரிந்த பிரசித்த நொத்தரிசு ஒருவருடன் கதைத்த பொழுது இப்படிக் கூறினார். காணி மோசடிகள் அதிகம் நடைபெற்றதாலும் அதனை தடுக்கும் ஒரு வழியாக காணி வாங்கும் பொழுது/விற்கும் பொழுது இரு பகுதியினரும் நேரில் வரவேண்டும் என்பதுடன் கையொப்பம் மற்றும் கைரேகையும் இடவேண்டும் என்றார். அத்துடன் இருபகுதியனரது புகைப்படமும் பத்திரத்தில் ஒட்டப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டார். இதனால் காசு கட்டி காணி உறுதியை எடுத்தாலும் மாற்றும் பொழுது பிடிபடலாம் என நினைக்கிறேன்.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மிக்க நன்றி.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
திரும்பவும் ஊர் போகும் ஆசையை உங்களது கட்டுரை ஏற்படுத்துகிறது..