Everything posted by பாலபத்ர ஓணாண்டி
-
சதி செய்யும் சுமந்திரனுக்கு எதிராக பொலிஸ் விசாரணை! அநுர அரசிடம் கோரிக்கை விடுத்த சிறீதரன் எம்.பி
முதல்ல இந்த வீணாப்போன நரியன் பார் சிறிய கலச்சுப்போட்டு மட்டல்களப்பை சேர்ந்த சாணக்கியன் வீட்டின் தலைமைப்பொறுப்பை எடுக்கோணும்.. இந்த வீணாப்போனவனால கிளிநொச்சி குடிகாரர் ஆனதுதான் மிச்சம்..
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
ஒவ்வொருவருக்கும் பதிலளிக்க நேரமின்மையால் பொதுவாக பதிலாக எழுதுகிறேன்.. இங்கு ஜஸ்ற்றின் மற்றும் வசி மற்றும் பலர் ELA குறித்து விரிவாக சொல்லியிருப்பது சரியானதே... எனது பதிவில் ELA பற்றிய விளக்கத்தினை தவிர்த்திருந்தேன்... பதிவின் நோக்கம் அதுகுறித்து அல்ல என்பதால் தேவையானவர்கள் அதை தேடி அறிந்துகொள்ளலாம் என விட்டிருந்தேன்... இந்த புகைப்படத்தை பொறுத்தவரை ELA செய்வதற்கான அவசியமே இல்லை என்பதால் அதை மேலதிக தகவலாக மாத்திரம் குறிப்பிட்டேன்... அது ஏன் ஒரிஜினல்தான் என்பதை பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்... அது ஒரு பக்கம் இருக்கட்டும்... இங்கு சிலர் ELA பற்றி அறிந்திருந்தாலும் அதன் Result இனை பகுப்பாய்வு செய்வதில் அனுபவமற்றிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்...(கவனிக்க சிலர்) புகைப்படத்தை நன்றாக அவதானியுங்கள்... அதில் தரப்பட்டுள்ள pixel தரவுகள் ஒரிஜினல் புகைப்படத்தின் highlights Area வினை அடிப்படையாக கொண்டவை... highlights என்பது புகைப்படத்தின் Bright Spots ஐ குறிப்பது... அடிப்படையில் ஒரு புகைப்படத்தின் தனி கறுப்பு மற்று வெள்ளை பகுதிகளை Burning Areas என்று குறிப்பிடுவோம்... அந்த பகுதிகள் எந்த Details ஐயும் கொண்டிருக்காது... ஆக, இந்த புரிதல் இன்றி ஒட்டுமொத்த புகைப்படமும் ஒரே போன்ற தரவுகளை கொண்டிருக்கும் என்று தவறாக சிலர் புரிந்துகொண்டிருக்கிறார்கள்... அதற்கு Logical ஆகவே வாய்ப்புகள் இல்லை... சீமான் அணிந்திருப்பது கறுப்பு நிற சேர்ட்... அந்த பகுதிகளில் highlight தரவுகள் இருக்காது... பிரபாகரனின் வரிப்புலி ஆடை அதிக Highlight தரவுகளை கொண்டது... இங்கே கவனிக்கவேண்டியது Highlighted Area வில் உள்ள தரவுகளின் அடர்த்தி மற்றும் ஒளிர்தன்மையினைத்தான்... இந்த ELA Result இனை கவனித்து பார்த்தால் இரண்டிலும் தரவுகள் பிசுறு தட்டாமல் சமமாக இருப்பதை கவனிக்கலாம்... அதைவிட எடிட் செய்யப்பட்டதற்கான Unnatural Boundaries எதுவும் இந்த ரிசல்டில் தெரியவில்லை… பிரபாகரனையோ சீமானையோ வெட்டி ஒட்டியிருந்தால் அவ்விடங்களில் உள்ள தரவுகளில் ஒரு inconsistencies இருக்கும்... sharp ஆன Details வெளிப்படும்... அப்படி எதுவும் இந்த தரவில் இல்லை… இது அடிப்படையான ஒரு ELA தான்... இதன் ஒறிஜினல் புகைப்படத்தை வைத்து fotoforensics இல் யாரும் செய்து பார்க்கலாம்.. ஜஸ்ற்றின் இன் கேள்வியினை அடிப்படையாக வைத்து ImageJ யிலும் இன்னொரு ஆய்வை செய்திருந்தேன்... அதன் ரிசல்ட் அடிப்படையிலும் புகைப்படம் ஒரிஜினல் என்றே சொல்கிறது... அதன் ரிசல்டினை கீழே இணைக்கிறேன்... (Note : அதிலும் புள்ளிகள் அச்சொட்டாக ஒன்றாக இருக்காது... காரணம் புகைப்படத்தில் இருப்பவர்களின் Skin Tone, Cloathing என்பவையும் செல்வாக்கு செலுத்தும்... வித்தியாசம் பெரிய அளவில் இருக்கும்போதே அது எடிட் செய்யப்பட்டிருக்கும்... குறைந்தளவிலான வித்தியாசம் எல்லா புகைப்பங்களிலும் இருப்பதுதான்... அதன் ரிசல்டை இங்கே இணைக்கிறேன்…) இந்த ரிசல்டை AI யின் துணையுடன் ஆய்வு செய்தபோது அது இப்படி சொல்கிறது… இன்னும் விளக்கம் தேவையானவர்கள், 1)Clone Detection 2)Noise Analysis 3) Color Mapping 4) Edge Detection இவற்றை செய்து பார்க்கலாம்.. இந்த சொப்ற்வேர் வசதிகள் இல்லாதவர்கள் இவற்றில் பலவற்றை ஒன்றாக கொண்ட இலவச பீற்றா வேர்சன் இணையமுகவரி கீழே.. https://29a.ch/photo-forensics/#forensic-magnifier Tutorial-
- IMG_2402.jpeg
- IMG_2403.jpeg
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
கொளத்தூர் மணி ஜயா மீது எனக்கு அளப்பரிய மரியாதை இருக்கிறது எமது போராட்டம் மீது நீங்கள் செய்தவைக்கு.. உங்களுக்கும் சீமானுக்குமான சண்டை இருக்கட்டும்.. அது உங்கள் பிரச்சினை.. ஆனால் புலிகள் பின்நாட்களில் பாதுகாப்பு கருதி தலைவர் தங்குமிடங்களில் பின்னுக்கு ஸ்ரூடியோவில் இருப்பதுபோல் திரைச்சீலை கட்டித்தான் எடுப்பார்கள் எதிரிகளுக்கு அடையாளம் தெரியக்கூடாது இருக்குமிடத்தினது என்று.. உதாரணத்துக்கு ஒன்று..👇
- IMG_2399.jpeg
- IMG_2398.jpeg
- IMG_2396.jpeg
-
கடனட்டை(Credit Card)
இப்படி வசதி உள்ள அட்டை ஏதும் ஜரோப்பாவில் உள்ளதில் நல்லது எது..? யாராவது பாவித்தவர்கள் சொன்னால் வாங்கலாம்.. அடிக்கடி விமானப்பயணம் செய்வதால் இந்த வகை வசதி இருந்தால் நன்று..
-
கடனட்டை(Credit Card)
இல்லையே.. நான் பாவிக்கவில்லை ஆனால் என் கண்ணுக்கு முன்னால் ஒரு வெள்ளை தட்டுத்தடுமாறி இலங்கை காசை எண்ணி எண்ணி குடுத்து டியுட்டிபிறியில் எனக்கு முன்னுக்கு நிண்டு சாமான் வாங்கினது போனகிழமை..
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
கீழே இணைக்கப்பட்டிருக்கும் படம், குறித்த புகைப்படத்தை Forensic Analyze மூலம் ELA முறையில் Analyze செய்த ரிசல்ட்... சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் இப்புகைப்படத்தின் Pattern மற்றும் Brightness இல் ஒத்த தன்மை இருக்கும்... எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தில் அது இருக்காது... Brightness ஏ முழுமையாக வேறாக இருந்து காட்டிக்கொடுத்துவிடும்… இது மொபைலில் சில Photo Forensic tools மற்றும் AI மூலமாக வெறும் ஐந்து நிமிடங்களுக்குள் பெற்றுக்கொள்ளப்பட்ட ரிசல்ட்...
- IMG_2395.jpeg
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
இந்த படம் போலி எண்டதை காவித்திரியிறது யாரெண்டு பாத்தா எங்கட அறிவுஜீவி கும்பல்கள்தான்.. யார்டாப்பா நீங்கல்லாம்... கொஞ்சமாவது பகுத்தறிவ பயன்படுத்துங்க.. சீமான எதிர்த்து யார் எத சொன்னாலும் சில்லறைய சிதறவிடுறீங்கள்.. எந்த காலத்திலயும் சுயமா யோசிக்கவோ தேடவோ மாட்டிங்களா? எல்லா காலத்திலயும் எவனோ ஒருத்தன் தண்ட அரசியலுக்கு பயன்படுத்திட்டு போற மழுமட்டைகளா இருக்காதிங்க... ஒரே ஒரு போட்டோ எடிட் பண்ணி கொடுத்தேன்னு அந்த இயக்குனர் சொல்லுறார்... கூகிள்ள சீமான் பிரபாகரன் சந்திப்பு குறித்து தேடினிங்க எண்டாலே ரெண்டு மூண்டு போட்டோ வரும்… அப்பிடில்லாம் எடிட் பண்ணனும் எண்டா சீமானையும் பிரபாகரனையும் அதேபோல போஸ் கொடுக்கவச்சு போட்டோ எடுத்துத்தான் எடிட் பண்ணனும்... அப்பிடில்லாம வேற எங்கயோ ஒவ்வொண்டா எடுத்து எடிட் பண்ணியிருந்தா இவ்வளவு காலத்துக்க அதோட ஒரிஜினல் Source வெளிய வந்திருக்கும்... இதுவரைக்கும் அப்பிடி ஏதாச்சும் கிடைச்சிருக்கா? தலைவர் அல்லது சீமான் எங்கயாவது இப்படி வெட்டி ஒட்ட உதவிய மூலப்போட்டோக்கள் தனிய நிற்க வந்திருக்கா..? சரி.. எடிட் பண்ணின அந்த இயக்குனரிட்டயே Source images ஐ கேட்டு பாருங்களன்... இதுவே அது ஒரிஜினல் என்பதற்கு போதுமானது… பெரியார் வழியில் அல்லாமல் தன்வழியில் திமுக பொய் புரட்டை முன்வைத்து அரசியல் செய்கிறது... என்ன, திமுக தன்னை முற்போக்கு கட்சியாக பெரியதொரு பொய்யையும் முன்வைப்பதால் இந்த அறிவுஜீவிகள்., முற்போக்காளர்களாக தங்களை அடையாளப்படுத்தும் போலிகளும் இலகுவாக எடுபட்டுவிடுகிறார்கள்… அத்துடன் சீமான் எதிர்ப்பாளர்கள்.. அவர்களுக்கு சீமான் விடயத்தில் மட்டும் உண்மையெல்லாம் தேவைப்படாது... வதந்திகளிலயே வாழும் நபர்கள்... இப்பிடியான தகவல்களை கண்டால் குண்டிதட்டின புழுகில் ஓடித்திரிவார்கள்.. 😂
-
இளங்குமரன் MPக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடு!
கள்ளமண் ஏத்துறவங்களுக்கு ஒரு முடிவுகட்டவேணும்.. அதவிட்டிட்டு அனுமதிபெற்று ஏத்துற சுண்ணக்கல் காறங்களோட மல்லுக்கட்டிக்கொண்டிக்கொண்டு.. கள்ளமண் ஏத்துறவங்களாலை அக்சிடெண்ட் பட்டு கால்முறிஞ்சு 2 மாதமா அப்பா படுத்தபடுக்கை.. எத்தினை சின்னப்பிள்ளைகளை குடும்பஸ்த்தர்களை கொண்டு குவிக்கிறாங்கள் அக்சிடெண்ட்பண்ணி கள்ளமண் ஏத்துறவங்கள்.. முதல்ல அதை தடுக்க நடவடிக்கை எடுக்கட்டும்.. முதல்ல உள்ளூர் கள்ளனை புடிக்கட்டும்..
-
டாக்ரரால் கள அரசியலான புல அரசியல்..
இவ்வளா காலமும் தமிழ்நாட்டு அரசியல் செய்திகளைதான் பார்ப்பம்.. இப்பதான் இலங்கை அரசியலை பார்க்க பிடிக்கிறது.. இவ்வளவுகாலமும் தமிழ் அரசியல்வாதிகள் அதே பழையகதை தீர்வுத்திட்டம் பற்றித்தான் கதைப்பாங்கள்.. மக்கள் பிரச்சினையை எவனும் கதைப்பதில்லை.. அதை பாக்கிறத விட பேசாம கண்ணமூடி நித்திரை கொள்ளலாம்.. டொக்ரர் ராமநாதன் அர்ச்சுனாவின் வருகையின் பின் இலங்கை தமிழ் அரசியலில் பொறிபறக்குது.. எங்களுக்கும் எம்பி இருக்கெண்டு ஞாபகம் வருது..👏👏
-
தேங்காய் விலை உயர்வுக்கான காரணம் இதுதான்
நேற்று உரிக்காமல் பொச்சோட 280 தேங்காய் 105 ரூபாய்ப்படி முப்பதாயிர சொச்சத்துக்கு குடுத்தன்.. உரிக்காத தேங்காயே இந்த விலைபோகுது.. அதுவும் வீட்ட வந்து எடுத்துக்கொண்டு போகிறார்கள்.. அவ்வளவு தேங்காய்க்கு டிமாண்ட் இருக்கு இப்ப.. நிற்க.. இவ்வளவும் தானாய் பழுத்து விழுந்த தேங்காய்தான்.. இப்ப தேங்காய் புடுங்க உரிக்க எல்லாம் வேலைக்கு ஆள்கள் இல்லை.. இப்ப மரம் ஏறும் தொழிலாளர்கள் அருகி வருகின்றனர்.. அவர்கள் தலைமுறை எல்லாம் படித்தும், வெளிநாடு போயும், வேறு மெக்கானிக் மேசன் நகைவேலை போன்ற தொழில்களில் ஈடுபடுகின்றனர்.. இந்த தொழில்களை வைத்துதானே சாதிகளை பிரித்தார்கள்.. இப்பொழுது இந்த பரம்பரை தொழிலை நாங்கள் செய்யமாட்டம் என்பதும் சாதி ஒழிப்பில் முக்கிமான பங்காற்றுகிறது.. அப்புறம் பொருளாதரம்.. பொருளாதாரம் மேம்படும் போது நீ என்னடா மயிர்சாதி என்ன சொல்லுறது உன்னட்ட நான் என்ன மயித்துக்கு வேலைக்கு வரப்போறன் என்ற நிலை வரும்போது சாதி தேவையில்லாத ஆணியாகப்போய்விடும்.. இப்ப வெளிநாட்டுக்கு போய் எல்லா சாதியினரும் நல்ல வசதியாக இருக்கிறார்கள்.. மேல்மாடி வீடுகள் என்ன கார் என்ன.. எங்கட ஊரிலையே தாழ்த்தப்பட்ட மக்கள் இருக்கும் பகுதிகள் ஓலைக்குடிசைகளுடன் புறிம்பாக தெரியும்.. இண்டைக்கு ஊரே வெளிநாடு போய் எல்லாரும் வசதியான்வர்கள்.. யாரும் யாரையும் கணக்கில் எடுப்பதில்லை.. நீ ஜயரா இரு இல்லா ஆட்டுக்குடீயா இரு .. எனக்கென்ன.. எண்ட மனநிலை.. மிகச்சிறந்த மாற்றம்.. இது தொடரவேண்டும்.. இப்படி பரம்பரையாக மீன்பிடிப்பவர்கள், தச்சுவேலை செய்பவர்கள் செய்பவர்கள், நகை வேலை செய்பவர்கள் எல்லாம் தம் தம் குலத்தொழிலை விட்டு மாறி வேறு வேலைகள் படிப்பு என்று பொருளாதாரத்தில் மேம்படவேண்டும்.. இது சாதி அமைப்பின் தலையில் ஓங்கி அடிக்கும் சம்மட்டி அடிகளில் பலமான ஒரு அடியாக இருக்கும்.. மீன் தேவை எண்டால் மீனவர்கள் அல்லாத வெள்ளாளரும் மற்றைய சமூகத்தவரும் மீன்பிடிக்க போகனும்.. தேங்காய் வேணும் என்றால் கோயிலுக்கு புக்கை பொங்கவேணும் எண்டால் ஜயர் ஏறிபுடுங்கட்டும்.. வெளிநாடுகளில் தொழில்கள் சாதிமுறை இல்லாமல் லாபம் பார்த்து விரும்பியவர்கள் எல்லோரும் செய்கிறார்கள்.. முடிதிருத்த யாரும் படிக்கலாம்.. அதுபோல ஊரில் இன்னும் இன்னும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிள்ளைகள் படிப்பு, வெளிநாடு என்று போய் பொருளாதரத்தில் மேம்படட்டும்.. எங்கள் தலைமுறையில் இல்லை எண்டாலும் இன்னும் ஒரு மூன்று நாலு தலைமுறையில் கிழடுகள் ஆரும் வாங்கில இருந்து கொண்டு ரைம்பாசுக்கு பழையகதை பேசுற விடயமாகட்டும் சாதி.. புதுத்தலைமுறை உதுக்கு நேரமில்லாமல் இருக்கட்டும்..
-
திடீரென தீப்பற்றி தரையிறங்கிய ஏர் கனடா விமானம்
இந்தா அடுத்தது.. நோர்வே (Norway) ஒஸ்லோவில் இருந்து ஆம்ஸ்டர்டாம் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம் நோர்வேயில் உள்ள டார்ப் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமானத்தில் 180க்கும் மேற்பட்டோர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது . ஓஸ்லோவில் இருந்து ஆம்ஸ்டர்டாம் நோக்கி பயணித்த பயணிகள் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக டார்ப் விமான நிலையத்தில் (Torp Airport) அவசரமாக தரையிறக்கப்பட்டது என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மூன்றாவது சம்பவம் இந்நிலையில், விமானத்தில் இருந்த 176 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, அதே நேரத்தில் சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. முன்னதாக, தென் கொரியாவின் விமான விபத்தில் 179 பேர் இறந்துள்ளதைத் தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் இதுபோன்ற மூன்றாவது சம்பவம் நடந்துள்ளது. மேலும், ஏர் கனடா விமானம் ஒன்று அதன் தரையிறங்கும் கருவியில் கோளாறு ஏற்பட்டதையடுத்து, ஹாலிஃபாக்ஸ் ஸ்டான்ஃபீல்ட் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. https://tamilwin.com/article/norway-flight-makes-emergency-landing-1735479851#google_vignette
-
ராமதாஸ் - அன்புமணி மோதலுக்கு என்ன காரணம்? பாமக பொதுக்குழுவில் என்ன நடந்தது?
நடிப்பு.. மகா நடிப்பு.. அப்பாவும் மகனும் பேசிவச்சு நடிப்பு.. இப்ப நடிகர் எல்லாம் அரசியலுக்கு வாறங்கள்.. அரசியல்வாதிகள் எல்லாம் நடிக்க ஆரம்பிச்சிட்டாங்கள்..
- தென்கொரியாவில் 181 பேருடன் பயணித்த விமானம் விபத்து : 179 பேர் பலி !
-
இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!
அண்ணை இதில் யாழ்ப்பாணத்தை பொறுத்தமட்டில் பலகாரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன.. 1) சுத்தமான நீர் குடிக்கவேணும் எண்ட அதிகளவான விளிப்புணர்வு.. முன்னர் அதைப்பற்றி மக்களுக்கு விளக்கமில்லை.. மாற்றுவழிகளும் இல்லை.. இப்பொழுது போத்தல் தண்ணீர் வருகை, வெள்நாட்டு உறவுகளின் அறிவுரை, அதிக சிறுநீரகப்பிரச்சினைகளால் அறிந்தவர்,தெரிந்தவர், உறவினர் ஊரார்களின் அதிக அண்மைக்கால மரணங்கள் மக்களிடம் ஏற்படுத்திய விளிப்புணர்வு.. 2) கிணற்று நீர் கல்பிரதேசம் அல்லாத யாழின் மணல் பிரதேசங்களில் சவர்(மணல் கலந்த சிவப்பு நீர்) ஆக மாறிவருகின்றன.. இந்த பிரச்சினையால் அதிகம பாதிக்கப்படுவது தென்மராட்சி மற்றும் யாழ்நகரின் கடலை அண்டிய பிரதேசங்கள்.. 3) கல் பிரதேசங்களில் நிலத்தடி நீர் வற்றி வருவது, போதுமான தண்ணிர் கோடைகாலங்களில் கிடைக்காமல் போகிறது.. கிணறுகள் வற்றி சேறு சுரி மட்டத்தில் தண்ணி போய் நிற்கிறது குடிக்க முடியாமல் 4) இன்னும் ஆழமாக அடிக்கப்படும் குழாய்க்கிணறுகளில் உப்பு நீர்தான் அண்மைக்காலமாக அடிக்கப்பட்ட பெரும்பாலான குழாய்க்கிணறுகளில் உப்புத்தண்ணி வருகிறது..எங்கள் வீட்டில் கூட அண்மையில் அடித்த குழாய்க்கிணற்றில் இருந்து உப்பு நீர்தான் வந்தது.. பிறகு அதுக்குள் கல் மண் எல்லாம் கொட்டி ஆக ஆழத்தில் இருந்த ஊற்றை அடைத்த பொழுது உப்பில்லா தண்ணி மேல் ஊற்றில் இருந்து வருகுது.. அதுக்கு கிணத்து தண்ணியே வழமைபோல பாவிச்சிருக்கலாம்.. கிணத்து தண்ணியும் மேல் ஊற்றில் இருந்துதான் வருகிறது.. ஆனா அந்த தண்ணி(கிணறு, குழாய்க்கிணறு) தடிப்பு அதிகமாகவும் ஒருவித கடினசுவையுடனும் இருக்கு.. அநேகமாக எனக்கு தெரிந்த பலர் அடித்த குழாய்க்கிணருகளில் இதுதான் நிலமை.. உப்புத் தண்ணி.. இதன் அர்த்தம் நிலத்தடி நீர் உப்பாகிக்கொண்டு வருக்கின்றது யாழில் என்பதுதான்.. இன்னும் மிகக்குறுகிய காலத்தில் இது யாழ்முழுவதும் வந்துவிடும்.. ஏனெனில் நிலத்தடி நீர் ஓட்டம் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளது.. முந்திய காலத்தில் குழாய்க்கிணற்றில் உப்பு நீர் வருவது அரிதிலும் அரிது.. எங்கயாலும் ஒண்டுக்குதான் வரும்.. ஆனால் இப்ப 4 குழாய்க்கிணறு தோண்டினா 2 உப்புத்தண்ணி..
-
இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!
5 லீற்றர் தண்ணீத்க்கான் 400 ரூபாய்.. நேற்று 5 போத்தில் வாங்கின்னான் 2000 ரூபாய்.. 15 நாளைக்குத்தான் காணும்.. 30000 ஆயிரம் சம்பளம் எடுக்கும் ஒரு தொழிலாளி தண்ணிவாங்கி குடிக்க முடியுமா..?
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
பதினோராவதை கிழட்டு வயசிலயும் நம்புதுகள்..😂
-
கிளிநொச்சியில் இராணுவ நினைவுச் சின்னம் அகற்றப்பட்டு கலாச்சார மண்டபம் அமைக்கப்பட வேண்டும்; சிறிதரன் எம்.பி கோரிக்கை
அதேபோல் உங்கள் சிபார்சில் புதிதாக திறந்த 16 பார்களையும் மூடிவிட்டு கல்விக்கூடங்கள் அமைக்க நடவடிக்கை எடுங்கள்..
-
புள்ளி விபரங்களுடன் கேள்விகளால் தாக்கிய அர்ச்சுனா : திணறிய சிறீதரன்
நான் ஊரில் இருக்கிறன்.. கீரக்கடைக்கும் எதிர்க்கடை வேணும்.. பூனைக்கு யார் மணிகட்டுவாங்கள் எண்டு இவ்வளவு நாளும் சனம் இருந்திச்சு.. நாங்கள் மட்டும் இல்லை எங்கட ஊரே இப்போதைக்கு அர்ச்சுனாவுக்குத்தான் வோட் போடுவம் வேறு இன்னும் புதிதாக யாரும் வரும் வரைக்கும்.. ஒருபோதும் பழைய தமிழ்கட்சிகளுக்கு இனி வோட் போட போவதில்லை.. வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இதை விளங்கிக் கொள்ளமுடியாது.. நாங்கள் ஒவ்வொரு திணைக்களத்துக்கும் ஆஸ்பத்திரிக்கும் போகும்பொழுது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் சொல்லி மாளாது..அரச உத்தியோகத்துக்கு எடுபட்டாலே நிரந்தரம், இனி நான் நினைச்சதுதான், என்னை யார் கேள்வி கேட்டாலும் எனக்கு வேலை போகாது எண்ட திமிர் இருந்தது.. அதால நாங்கள் எவ்வளவு கோபப்பட்டாலும் கேள்வி கேட்டாலும் எடுபடாது.. செவிடன் காதில் ஊதின சங்குதான்.. ஆனா இப்ப ஒருத்தன் நாங்கள் கேட்க நினைத்த கேள்விகளை எல்லாம் அதிகாரத்தில் இருந்து கொண்டு கேக்கும்பொழுது வரும் சந்தோசம் இருக்கே.. அர்ச்சனா என்ன விசர்க்கூத்து ஆடினாலும் பார்சிறி போன்ற நரியன்களை எதிர்த்து கேள்வி கேட்டு அவங்களின் முகத்திரையை கிளிப்பதும் அலுவலகங்களில் வேலை செய்யாமல் சம்பளம் வாங்கும் திருடர்களை கேள்வி கேட்பதும் அந்த கேள்விகள் ஊடகங்களில் பேசுபொருள் ஆகி வருவதும் மக்களை சென்றடைவதும் மிகப்பெரிய ஒரு மாற்றம்.. தமிழ் தேசிய தமிழ் எம்பிக்களும் தங்களைவிட்டால் தமிழ் மக்கள் ஓட் போட வேறு கட்சிகள் இல்லை என்ற நிலைமையும் இல்லாமல் போவதும் வரவேற்கப்படவேண்டிய விடயம்.. இவற்றுக்கு அர்ச்சுனா ஒரு முதல்க்கல்லாக இருக்கட்டும்..
-
மலையான் கபே கறிச்சட்டி…
நேத்து யாழ்ப்பாணம் நகருக்கு போன இடத்தில் மலையான் கபேயில் சாப்பிட்டன்.மிக சுத்தமான சுகாதாரமான மலையான் கபே கறிச்சட்டி படம் இது.. வீடியோ இருக்கு இணைக்க முடியேல்ல..