Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியாயம்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by நியாயம்

  1. இலங்கையில் விளையாடிய போட்டியில் பந்துவீச்சு/ஓட்ட விபரங்கள்/காணொளி கிடைத்தால் பகிருங்கள், பார்ப்போம்.
  2. இந்த விடுமுறை கழிய வரும் மாதம் கா.பொ.த சாதாரணம் வரும்போது மீண்டும் விடுமுறை. மாணவர்களுக்கு ஜாலிதான். இலங்கையில் இந்த வியாழன், வெள்ளி விடுமுறை. சனி, ஞாயிறு வாரவிடுமுறை. இது போதாது என்று ஒரு குரூப் திங்கள் அரசாங்கவிடுமுறை தேவை என போராடுதாம். அவரவர்ட்கு அவரவர் பிரச்சனை.
  3. ஆனந்த சங்கரி, டக்லஸ் இப்படி ஒவ்வொருவராய் ஓய்வு பெற்றால் எங்கள் ஆட்களுக்கு போர் அடிக்கப்போகிறது. சுமந்திரன் அவர்களால் டக்லஸ் தேவானந்தா இடத்தை நிரப்ப முடியுமா. தூற்றுவதற்கு எவரும் இல்லை என்றால் தேசிய அரசியலை எப்படி நகர்த்தப்போகின்றார்கள்.
  4. உங்கள் மீது தனிப்பட்ட கோபத்தில் சிகப்பு புள்ளி இடவில்லை. நீங்கள் இணைத்த குறிப்பிட்ட காணொளியில் தூசண வார்த்தைகள் உள்ளன.
  5. முன்பு ஒரு காலத்தில் கப்பிட்டல் பனிஸ்மண்ட்/மரண தண்டனை சட்டங்கள் கூடாது என நினைத்தேன். இதேபோல் தனிநபர்கள் சட்டபூர்வமாக ஆயுதங்கள் வைத்திருக்க தேவை இல்லை எனவும் நினைத்தேன். ஆனால், தற்போதைய உலக நடப்புக்களை பார்க்கும்போது அவை அவசியமாக தெரிகின்றன. கனடாவில் சவூதி சட்டங்களை கொண்டு வரலாமோ?
  6. வாகனம் களவு போனால் காப்புறுதி காசு தரமாட்டார்களோ? அதில் இன்னோர் புதிய வாகனத்தை வாங்குங்கோ. வீட்டில் இரண்டு கடி நாயை வளர்க்கலாம். பாதுகாப்புக்கு ஆயுதம் வைத்து இருக்கலாமோ? வீட்டை உடைத்து உள்ளே வருபவர் நெற்றியில் ஒரு பொட்டு வைத்து விட்டால் சரி.
  7. இப்போது எமது காலம் மாதிரி இல்லை. தொலைக்காட்சியில் கற்கை ஊடக பிரிவுகள் உள்ளன. நன்றாக கற்பிக்கின்றார்கள். இணையம் மூலம் காணொளிகள் மூலம் கற்றக்கூடிய பல வசதிகள் உள்ளன. ஆகக்குறைந்தது வகுப்பு நேரங்களில் குறிப்பிட்ட பாடத்துக்கு ஆசிரியர்கள் இல்லாவிட்டாலும் இந்த காணொளிகளை வகுப்பு நேரங்களில் மாணவர்கள் பார்த்து கல்வி கற்ற ஏற்பாடு செய்யலாம்.
  8. ஆயுதத்துக்கு உள்ள மரியாதை வேறு எதற்கும் இல்லை போல. தொல் பொருள் திணைக்களம் எனும் பெயரில் சனங்கள் கண்களுக்குள் விரலை விட்டு இந்த ஆட்டு ஆட்டுறாங்கள்.
  9. இவர் முன்னர் இருவர் மீது வாள்வெட்டு நடாத்தியதாக போலீசார் கூறுகின்றார்கள் என வீரகேசரி சொல்கின்றது. மேற்படி தகவல்கள் உண்மை எனில், வாள்வெட்டு நடாத்திய இவரை முன்னமே இனம் கண்டு சட்ட நடவடிக்கை எடுத்தார்களோ தெரியாது. அப்படி சட்ட நடவடிக்கை எடுத்து இருந்தால் இந்த கொலை நடைபெறாமல் போயிருக்க வாய்ப்பு உள்ளது.
  10. இனி கோயில் பக்கம் எவரும் வருவதையோ, பூசை செய்வதையோ கனவிலும் நினைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தவே இந்த காட்சிகள் எல்லாம் அரங்கேறுகின்றதோ என்னவோ. தொல்பொருள் திணைக்களம் தான் நினைப்பதை சாதிக்கின்றது. வேறு என்னதான் கூறுவது.. 😟
  11. மோதி நல்லவரா கெட்டவரா? நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவனா? 😁
  12. பாவம் அந்த மாணவன். ஆழ்ந்த அனுதாபங்கள். மாணவனின் வகுப்பினர், நட்பு வட்டம், பெற்றோர், பாடசாலை சமூகம், ஊரவர்கள் என அனைவருக்கும் அதிர்ச்சியை ஊட்டும் சம்பவம் இது. இப்போது பல்வேறு பாடசாலைகளில் தட, கள/மெய்வல்லுனர் போட்டி நடைபெறும் காலம். அதேசமயம் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக வெப்பநிலை/காலநிலை எச்சரிக்கை கொடுக்கப்பட்டு வருகின்றது. வெளியில் செல்லும்போது தற்போதைய காலநிலைக்குரிய எடுக்கவேண்டிய பாதுகாப்பு முன் எச்சரிக்கைகள்/நடைமுறைகள் பற்றி சுகாதார/மருத்துவ பிரிவினால் விழிப்புணர்வு கொடுக்கப்படுகின்றது. பொதுவாக காலை எட்டு மணிக்கு முன்னதாக மரதன் ஓட்ட போட்டி நிறைவடையும் வகையில் பாடசாலைகள் நிகழ்ச்சியை ஒழுங்கமைக்கின்றன. அத்துடன் மாணவர் ஒருவர் மரதன் ஓட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன் மருத்துவ பரிசோதனைக்கும் உள்ளாக்கப்படுகின்றார்கள். முதலில் குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்ற பாடசாலை மரதன் ஓட்டப்போட்டியை எப்படி ஒழுங்கமைத்தது என அறியப்பட வேண்டும். பாவம் ஓரிடம் பழி ஓரிடம் என்றும் வரக்கூடாது தானே.
  13. சிறப்பாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி @ஏராளன்
  14. தொல்பொருள் திணைக்களம் மண்ணை தோண்டுகின்றோம் என்று பிரச்சனைகளை தோண்டுகின்றது. இலங்கை தொல்பொருள் திணைக்களத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் இனங்களுக்கு இடையில் உள்ள நல்லிணக்கத்தை ஓரளவுக்காவது பேணலாமோ? போலிசார் வெளிவிட்ட அறிக்கையின் பிரகாரம் தொல்பொருள் திணைக்கள அதிகாரி ஒருவரே கிடுங்குப்பிடியாக நின்று சிவராத்திரி நிகழ்வு குழப்பம் அடைவதற்கு காரணகர்த்தா என தோன்றுகின்றது.
  15. இந்த இடத்தில் ஏற்கனவே விகாரை உள்ளதோ அல்லது விகாரை கட்டப்படுவதற்கான முஸ்தீபு நடக்கின்றதோ. அயோத்தியில் ராமர் கோயில் கட்டியது போலத்தான் இதுவும் செல்லுமோ? இப்போது தாயகம் பற்றி கருத்துக்கள் கூறவே தயக்கமாக உள்ளது. ஒவ்வொரு செய்திகள், நடவடிக்கைகள் பின்னாலும் பின்னினாற் போல பல சூக்குமங்கள். வேடன் விரித்த வலையில் அகப்படுவது போன்றதுதான் சமூக ஊடகங்களில் எமது அபிப்பிராயங்களை தெரிவிப்பது என்பதுபோலாகிவிட்டது.
  16. என்ன கொடுமை ஐயா. தமிழ்வின்னில் காணொளி பார்த்தேன். இலங்கையின் போலிஸ் மட்டமான வேலைகள் செய்வதை பதிவு செய்து உள்ளார்கள். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய என குரல்கள் ஒலிக்கும்போது சமய வழிபாட்டில் ஈடுபடுவர்களை அடாவடியாக வெளியேற்றுகின்றார்கள். இப்படியான செயல்கள் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துமா? பார்ப்பவர்களுக்கு போலிசாரின் செயல் ஆத்திரத்தையே ஏற்படுத்தும். புத்தபிக்குகள் சமய அனுட்டானங்களில் ஈடுபடும்போது இப்படி யாராவது செய்தால் பார்த்துக்கொண்டு இருப்பார்களா?
  17. டிரம்ப் நமது நண்பனும் அல்ல. பைடின் நமது எதிரியும் அல்ல. ஆனால், சிங்கத்தின் சிளிர்ப்பை பார்த்துமெய்சிலிர்க்காமல் இருக்க முடியவில்லை. 😁
  18. நிலமைகளை உன்னிப்பாக அவதானிக்கின்றோம். சிங்கன் மீண்டும் வந்தால்தான் உள்ளது மிச்சம் கதை எல்லாருக்கும். 😁
  19. மஞ்சள் சிவப்பு வர்ணத்தில் துவிச்சக்கர வண்டிகளில் கொடி கட்டவில்லை. இல்லாவிட்டால் கருத்துக்கள் கூறும் சிலருக்கு புகையாது. சிலவேளைளில் தம்மைவிட கற்றவர்கள், முன்னேறியவர்கள் ஏதும் நல்லது செய்து பெயர் எடுக்கின்றார்கள் என்று புகையிதோ தெரியாது. இளனி குடித்து பார்க்கலாமே. மானிப்பாய் வைத்தியசாலை மீது ஒரு காலத்தில் விமான குண்டு வீசப்பட்டது. குண்டு வீசப்பட்ட சில தினங்களில் அழிவை பார்த்தேன். மீண்டும் நல்ல நிலைக்கு வர எடுக்கப்படும் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்!
  20. இந்திய ஊடகங்களின் கருத்துப்படி சாந்தன் விடுதலை புலிகள் புலனாய்வு பிரிவை சேர்ந்தவர். விடுதலை புலிகளால் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு நின்று விடுதலை புலிகளுக்காக வேலை பார்த்தார். வெவ்வேறு புலனாய்வு போராளிகள் வெவ்வேறு திட்டங்களில் செயற்பட்டார்கள் என வைத்தால் சாந்தனும் அவ்வாறு செயற்பட்டு உள்ளார். அவர் ராஜீவ் கொலை திட்டத்தில் பங்குபற்றாமல் போய் இருக்கலாம். ஆனால் விடுதலை புலிகள் அமைப்பிற்காக இந்தியாவில் செயற்பட்டு உள்ளார் தானே? அப்படி பார்த்தால் வீரவணக்கம் சொல்வது தவறாக தெரியவில்லை. நாங்கள் நீங்கள் சமூக ஊடகத்தில் எழுதுவதை வைத்து உலகம் விடயங்களை அறியும் என எண்ணுவது நகைப்பானது. ஆளாளுக்கு தமது மன அழுத்தங்களை போக்கவும், உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், பொழுது போகவும், பெருமைக்கும், மற்றும் இன்னோரன்ன காரணங்களுக்கு கருத்துக்கள் கூறுகின்றார்கள். இப்போது சாந்தன் பேசுபொருள் ஆகி உள்ளார். சிறிது நாட்களில் தலைப்பு இன்னோரிடம் சென்றுவிடும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.