Everything posted by விசுகு
-
அமெரிக்காவுடனான உக்ரேனின் கனிம ஒப்பந்தம்!
நன்றி சகோ விரிவான நேரத்திற்கு. இந்திய பூதத்தை திருப்தி படுத்தியபடி எமது தேசத்தை மீட்கும் போராட்டத்துக்கும் ரசிய பூதத்தை திருப்தி படுத்தியபடி உக்ரைனை காக்கும் போராட்டமும் கடைசி காலப்பகுதியில் நிகழ்ந்த நிலைப்பாடுகளில் ஒரே வரை கோட்டில் வந்து நிற்பதாக உணர்கிறேன். இந்த காலகட்டத்தில் தலைவர் மீது வைக்கப்பட்ட ஏற்கமுடியாத நிபந்தனைகள் தவிர்க்க முடியாத கட்டளைகள் விட்டு கொடுக்க முடியாத கொள்கைகள் நிலங்கள் நம்பிக்கை துரோகங்கள் முதுகு குத்தல்கள் வெறும் நாக்கு ஜாலங்கள் மிரட்டல்கள் பெரிய இடத்து அதிகார அத்துமீறல்கள் என்று எமக்கு தெரிந்த தெரியாத பல விடயங்கள் இருக்கும். ஆனால் தோல்வி எம்மில் சிலரை தலைவர் மீது இவை சார்ந்து விரல் நீட்ட வைக்கிறது. எனவே அதை நாம் முழுமையாக உணர உக்ரைன் எமக்கு உதவும் என்று நம்புகிறேன். நன்றி.
-
அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கு ‘தங்க அட்டை’; விலை 5 மில்லியன் அமெரிக்க டொலர் - ட்ரம்ப் அறிவிப்பு
இப்பொழுதும் இவ்வளவு பணம் கட்டி அமெரிக்கா சென்று குடியேற செல்வந்தர்கள் வருகிறார்களா???
-
அமெரிக்காவுடனான உக்ரேனின் கனிம ஒப்பந்தம்!
இப்ப இதில் வென்றது யார்? யார் புத்திசாலி??
-
காளியம்மாள் .... கழகத்துக்கு?
கமல் பற்றி ஒரு போதும் நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை. (இது ரஜினி ரசிகன் என்பதால் அல்ல)
-
காளியம்மாள் .... கழகத்துக்கு?
உங்கள் உண்மையான நாம் தமிழர் வளர்ச்சி பற்றிய கவலையில் 😅 நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்
-
காளியம்மாள் .... கழகத்துக்கு?
என் தம்பிமாரின் திறமைக்கு நாட்டையே எழுதிக் கொடுக்கலாம். (அதனால் தானோ என்னவோ நம்மிடம் நாடே இல்லை)
-
காளியம்மாள் .... கழகத்துக்கு?
அதெப்படி நாம் தமிழர் கட்சியில் இருந்து வருபவர்களுக்கு இவ்வளவு டிமாண்ட்?? வளர்ப்பு நல்லதாக இருக்கும் திறமை வெளிக்கொண்டு வரப்பட்டிருக்கும் நாம் தமிழர் கட்சி உடைக்க வேண்டிய அளவுக்கு வளர்ந்திருக்கிறது
-
ஜேர்மனியில் இருந்து யூதர்களைப்போல் துரத்தப்படுவார்களா தமிழர்கள்..?
இதனால் தான் பட்டறிவாளர்கள் எவரிடமும் ஆலோசனை பெறுவதில்லை. காசே தான் கடவுளடா. 😎
-
ஜெர்மனி தேர்தல்: எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு! வெளியான Exit Poll ரிசல்ட்!
என்ன சகோ நேற்று அமெரிக்கா குதிக்க சொன்னால் பிரித்தானிய குதித்திடும் என்பதிலிருந்து இன்று ??? 😂 இதுக்கு நேரே ட்ரம்புடனேயே கூட்டு வைக்கலாமே?😅
-
ஜெர்மனி தேர்தல்: எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு! வெளியான Exit Poll ரிசல்ட்!
அப்படியானால் எந்த நாட்டில் அப்படி இல்லை என்றும் சொல்லணும் இல்லையா? எனக்கு தெரிந்து நான் வந்த காலத்திலேயே பிரான்ஸ் இதை பார்த்து தடுத்து வருகிறது. அந்த மக்களில் பெரும்பான்மையினர் எமக்காக போராடும்போது பேசும்போது ஆதரவு தரும் போது நாம் மட்டும் அதையெல்லாம் மீறி நாம் தப்பினால் போதும் என்று சிந்திப்பது எவ்வளவு சுயநலம். இன்னொன்றையும் சொல்கிறேன் அந்த மக்கள் எமக்கு செய்த உதவிகளுக்கு பரிகாரமாக நம்மவர் செய்வது (வேறு நாட்டவரை விடுங்கள்). எமது தாயகத்தில் ஒன்று நடந்து விட்டால் புலிகள் பிஸ்டல் குழுவையாவது விட்டு சென்றிருக்கவேண்டும் என்று நாம் சொல்லலாம் தனது மக்களுக்கு தான் உள்ளே விட்டதால் கொடுமைகள் நடக்கும்போது அவர்கள் சொல்லக்கூடாதா??? எந்தவகையான நியாயம் இது?
-
ஜேர்மனியில் இருந்து யூதர்களைப்போல் துரத்தப்படுவார்களா தமிழர்கள்..?
உங்கள் கருத்தை ஏற்றுக் கொண்டால் அல்லது புரிந்து கொண்டால் அப்படியாயின் மனிதர்கள் வாழ சரியான இடம் அல்லது நாடு எது என்பதை நீங்கள் குறிப்பிடாமல் விடுவது வரலாறு தெரியாதவர்களுக்கு செய்யும் துரோகம் அல்லவா?
-
ஜெர்மனி தேர்தல்: எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு! வெளியான Exit Poll ரிசல்ட்!
அந்தந்த நாட்டு மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். நாம் தான் எப்ப எங்கே ஓடலாம் என்று கணக்கு பண்ணியபடி???
-
ஜேர்மனியில் இருந்து யூதர்களைப்போல் துரத்தப்படுவார்களா தமிழர்கள்..?
நன்றி சகோ இணைப்புக்கு .. பேசப்பட வேண்டிய விடயம் தான். என்னை பொறுத்தவரை நாம் எங்கும் வாழ தகுதியற்ற இனம். நான் யாழில் இணைந்த போதே கீழே பதிந்தது இது தான். ஓடத்தொடங்கியவனுக்கு ஏது நிரந்தர இடம் என்று.
-
BBC தமிழோசை ஆனந்தி சூரியபிரகாசம் அவர்கள் காலமானார்!!!
ஆழ்ந்த இரங்கல்கள்
-
காளியம்மாள் .... கழகத்துக்கு?
காளியம்மாள் வெளியேறுவது அதுவும் சீமானின் வாயால் வெளியேறுவது சீமானுக்கு ஒரு கறை படிந்த வரலாறாக வரலாம். ஆனால் இதனால் நாம் தமிழர்களுக்கு எந்த பாதிப்பும் வராது. அது விதைக்கப்பட்டு விட்டது.
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
நீங்கள் சொல்வது எல்லாம் சரி தான் ராசாக்கள். ஆனால் அமெரிக்க சந்தை இங்கே தான் இருக்கிறது. அது இருக்கும் வரை.....???
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
கனடாவை ஏன் அவமானப் படுத்துகிறீர்கள் ராசா. குதி என்றால் நான் செல்லப் பிராணி முதலில் குதிப்பேன் என்று அடம் பிடிப்பார்கள். 🤣
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
அண்ணா மீண்டும் உக்ரைன் போர் தொடங்கிய ஆரம்பத்தில் உங்களுக்கும் சிறிக்கும் நான் எழுதிய பதிலை மீண்டும் வாசியுங்கள். அண்ணன் தம்பிடா...🤩
-
சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
பொதுவாக புலம்பெயர் தேசங்களில் இருந்து தொடர்ந்து வருகை தந்து பல மாதங்கள் தங்கி இவ்வாறு செலவு செய்கின்றனர் என்றால் நிச்சயமாக இவர்கள் உழைப்பவர்களாக இருக்கவோ குடும்பம் பிள்ளைகள் என்று வாழ்பவர்களாகவோ இருக்கவோ வாய்ப்பில்லை. எனவே மிகவும் ஆபத்தான பேர்வழிகள். கவனம். ஊருக்கு ஒவ்வொரு விழிப்புணர்வு அமைப்புக்களை உருவாக்கி இவர்களை கவனித்து அனுப்பாமல் விட்டால் வித்யாவுக்கு நடந்தவை தொடரும். நாம் கண்ட கனவு தேசம் சின்னாபின்னமாகி போவதை எம் கண்முன்னே காணவேண்டிவரும்.
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
குளிக்கும் போது உடல் முழுவதும் நனைய வேண்டும். ஒரு இடத்தில் நனைக்க தவறினால் அதனூடாக சனி பிடித்து வாட்டும் (இது கர்ணன் கதை படித்ததிலிருந்து தொடங்கியது)
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
அவர் நாட்டை விட்டு ஓடினாலும் ட்ரம்மும் புட்டினும் ஓன்றாகி குடும்பம் நடாத்தினாலும் ஐரோப்பா நிம்மதியாக நித்திரை கொள்ள போவதில்லை....
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
தொடர்ந்து எழுதுங்கள் தம்பி. நன்றி.
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
1- இஸ்ரேல் தான் உலகை ஆள்கிறது. இதில் பைடன் என்ன ட்ரம் என்ன வெறும் பூச்சியமே. 2- உலகில் எவருமே தனிமனிதர்களே பிரதிபலனை பாராது எவருக்கும் உதவுவதில்லை. ஆனாலும் உலக போர்களின் போது அமெரிக்கா பல தடவைகள் ஐரோப்பாவை காத்திருக்கிறது. அந்த வகையில் இன்றும் அந்த நன்றிக் கடனும் ஆபத்தான நேரங்களில் இன்றும் உதவலாம் என்ற எதிர்பார்ப்பும் உண்டல்லவா? 3- எனக்கு அவர் அப்படி தான் அறிமுகமானார். இன்றும் எனதளவில் அப்படியே தான் பேசுகிறார் இருக்கிறார். 4- ட்ரம்ஆ புட்டினா மருதங்கேணியா என்றால் என் தம்பி மருதங்கேணி தான் என்பது தான் எனது முடிவாக இருக்கும். நன்றி தம்பி.
-
எம்.பி ஆகிறார் ரணில் ?
ஒட்டகத்துக்கு தலை வைக்க இடம் கொடுத்தாச்சு.
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
உண்மை தான் அண்ணா ஜனநாயகத்தின் ஓட்டைகளை சில நரிகள் மிகத் திட்டமிட்டு புகுந்து ஆட்கொண்டு விடுகிறார்கள். இதில் கட்சியின் செல்வாக்கு, முதல் இருந்த கட்சிக்கான மாற்றீடு, முதல் இருந்த ஜனாதிபதியின் தவறுகள் மற்றும் ட்ரம்க்கு எதிராக நின்றவரின் பலவீனம் என்ற காரணிகளோடு முக்கியமாக ட்ரம் போன்ற அடாவடித்தன மனநிலை கொண்டவர்கள் அமெரிக்காவில் மட்டுமல்ல உலகெங்கிலும் அதிகரித்து விட்டார்கள். இதனை நாம் தற்போது கண்டிக்காமல் விட்டு விட்டால் எம் அடுத்த தலைமுறையின் கதவுகள் இவர்களால் தட்டி உடைக்கப்படும்.