-
Posts
34287 -
Joined
-
Last visited
-
Days Won
113
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by விசுகு
-
சில விடயங்களை செய்ய சிலரால் மட்டுமே முடியும். அதை அவர் செய்தால் போதும். போற்றுதலுக்குரியவரே. 💯 வீத தூய்மை என்பது எங்கும் இல்லை. இல்லாத ஒன்றை எதற்காக தேடி இருக்கும் நண்பரையும் இழப்பான்???? நமக்கு ஒத்துவராத அவரது செயல்களுக்கு நாம் ஆதரவளிக்காதிருந்தாலே போதும் அது அவரே பாதை மாற்ற உதவக்கூடும்?
-
எமது இனத்தின் குறைபாடு இது தான். ஒவ்வொரு மனிதனிலுமுள்ள குறைகளை கண்டு பிடிப்பதே முழுநேர வியாதியாகும். ஆனால் அவர்கள் செய்யும் செய்த செயல் சார்ந்து சிந்தித்தால் கை விரல் நீட்டுபவர்கள் வெறும் பூச்சியமே. 😭
-
பாகிஸ்தானில் தொடரும் மோதல் – 76 பேர் உயிரிழப்பு
விசுகு replied to தமிழ் சிறி's topic in அயலகச் செய்திகள்
என்னவோ தெரியவில்லை இன்று காலையில் ஒரு நல்ல செய்தி போல் இருக்கிறது...- 1 reply
-
- 1
-
இராஜன் (சோழியன்) அண்ணாவின் மனைவி சிவபுஸ்பா காலமானார்
விசுகு replied to தனிக்காட்டு ராஜா's topic in துயர் பகிர்வோம்
ஆழ்ந்த இரங்கல்கள் அனைவருக்கும் நன்றிகள் பலமுறை நான் அவரை அவரது வீட்டிலும் (Bremen) அவர் என்னை எனது வீட்டிலும் சந்திக்க நாள் குறித்தும் கடைசிவரை முடியாமலேயே போன உறவு. இறுதியாக அவர் எம்மை விட்டு பிரிந்த பின்னர் எனது அக்காவின் மகன் அந்த இடத்து பெண்ணை திருமணம் செய்த போது அங்கே நின்று இவரைத் தான் நினைத்தேன். குடும்பத்தை விசாரித்தேன். என் மருமகனுடைய மனைவி உட்பட அனைவருக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் தெரிந்திருந்தது. தமிழ்க்கல்வி, இசை மற்றும் ஆலய வழிபாடுகளில் சிறந்து விளங்கியது மட்டுமல்லாமல் அங்குள்ள மக்கள் அனைவருக்கும் இவற்றை பயிற்றுவிப்பதிலும் அவரும் அவரது துணைவியாரும் பெரும் பங்காற்றி இருப்பதை அறிந்து பெருமை கொண்டேன். அன்றே அவரது யாழ் களத்தின் எழுத்துக்கள் மற்றும் உறவுகள் பற்றி அவரது மனைவியாரை சந்தித்து சொல்ல வேண்டும் என்று முயற்சித்தேன். அதுவும் முடியாமல் போய்விட்டது. 😭 ஓம் சாந்தி. -
வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
விசுகு replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
இந்த முன்னால் பின்னால் உள்ள வசனங்களை புரிந்து கொள்தல் தான் எமது பலமும் பலவீனமும் ..👍 -
வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
விசுகு replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
ரொம்ப குள்ளநரி சார் நீங்க 😂 எழுதி மூன்று பக்கங்கள் தள்ளி விட்டு....?🥲 அழித்தேன் நினைவுகளை??? -
விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு
விசுகு replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
தமிழ் வாழும் வரை உன் பெயர் வாழும். தேசிய தலைவருக்கு 70 ஆவது பிறந்தநாள் வாழ்த்துக்கள். -
அவர்கள் என்னை கள்ளன் என்றும் இயக்கப்பணத்தை ஆட்டையப் போட்ட கூட்டம் என்றும் வியாபாரி அதிலும் குண்டூசி வியாபாரி என்றெல்லாம் எழுதும் வரை சிநேகிதன் மட்டுமே. அதை நீங்கள் கேட்டிருக்க வேண்டும். ஆனால் தமிழை நேசிப்பதால் நான் தான் உங்கள் எதிரியாச்சே. எப்படி உங்களிடமிருந்து நியாயம் எனக்கு கிடைக்கும்?????
-
காட்டி இருக்கின்றேன். அது ஆனிக்கொருக்கால் ஆவணிக்கொருக்கால் சுடு தண்ணீர் தடவ இங்கே வரும் உங்களை போன்றவர்களின் கண்களில் பட்டாலும் வாசிக்க வராது. வேண்டும் என்றால் உக்ரைன் மற்றும் இஸ்ரேல் திரிகளிலும் தடை செய்யப்பட்ட நண்பர்கள் சம்பந்தமான நிர்வாக நடவடிக்கை திரிகளிலும் இன்றும் பார்க்கலாம். இங்கேயும் தவறு நடக்கவில்லை என்று எழுதவில்லை. எல்லோரும் குறை உடையோரே என்றே எழுதினேன். அதை ஊதிப்பெருப்பித்து தூற்றுபவர் இங்கே வருவதே இவ்வாறு குண்டு போட மட்டுமே.
-
யாழ் களத்தில் 15 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவம். இத்தனை வருடங்களாக ஒருவர் எப்படியானவர் எவ்வாறு எழுதுவார் எதற்காக தனது பொன்னான நேரத்தை இங்கே செலவு செய்கின்றார் என்ற புரிதல் உண்டு. நானும் அதே நோக்கம் மற்றும் நிலைப்பாடு தான். அவ்வாறானவர்களுடன் சேர்ந்து சிநேகபூர்வமாக சிந்தித்து எதையாவது முயலலாம் என்று தான் இங்கே வருகிறோம் அவ்வாறான ஒரு இடத்தில் எங்கே ஒருவர் சிறு தடம்புரள்வார் அவரை வைச்சு செய்ய வேண்டும் என்கிற மனநிலை எனக்கு சரிவராதது. இங்கே பலரும் அப்படி தான். ஒரு கருத்துக்களத்தில் கூட நடப்பவனுடன் ஒற்றுமை பேண முடியாதவர்கள் எவ்வாறு தாயக கட்சிகளின் இன்றைய பிரிவு நிலை சார்ந்து பேசமுடியும்?
-
கூட்டை முறிக்க யோசிக்கிறதா?; ரெலோவும் தனி வழியில்?
விசுகு replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
தனிக்குடித்தனம் பொது நோக்கம் காலி.... -
அது ஒரு சிங்கள தேசிய புத்த.... அதுக்கு எல்லோரும் எதிரி தான் சுமந்திரன் உட்பட.
-
நூறு வீதம் தூய்மை என்பது எங்கும் இல்லை. ஏதாவது புரியுதா? ****
-
தேசியத்தை நேசிப்பவர்கள் மேல் ஏதாவது ஒரு இடத்தில் சறுக்க மாட்டார்களா என்று அலையும் கூட்டம் ஒன்று யாழ் களத்தில் மாத்திரமல்ல எல்லா இடங்களிலும் உண்டு. அதனால் பலரும் தம்மை 💯 தூய்மைவாதிகளாக அணல் மிதித்து நிரூபிக்க வேண்டியுள்ளது. ஆனால் 💯 தூய்மை என்பது எங்கும் எவரிடமும் இல்லாதது..
-
நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
விசுகு replied to goshan_che's topic in ஊர்ப் புதினம்
அது எங்கள் வேலை அல்ல .... இவர்கள் தான் சிங்கள தேசியர்களுக்கு ஆபத்தானவர்கள். -
ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
விசுகு replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
என்ன சகோ பம்பாய்க்கு போனேன் விவாகரத்து கேட்கிறேன் என்றால் யாருக்கு காது குத்துதல்?? யார் கேட்டார்கள் இவர்களிடம் இந்த அறிக்கையை.? இங்கே இவர்கள் மிக மிக சுயநலமாக சிந்திக்கிறார்கள். பணம் பிரபலம் புகழ் கௌரவம் குடும்பம் பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்கள் எல்லாம் முன்னர் போல வேண்டும். ஆனால் நாங்கள் ஒன்றாக இல்லை இருக்கவும் மாட்டோம். அப்படியானால் அவையும் பழையது போல் இருக்க வாய்ப்பில்லை. தனியே இருக்கும் ஒரு பிரபலம் பழைய மரியாதையை பெறமுடியாது. பம்பாய்க்கு போய் 15 நாளில் எடுத்த முடிவில் ரகுமானின் அந்த அப்பாவி முகம் கண்ணுக்குள் வரவில்லை என்பது தான் மிகவும் கொடுமையானது. இனி எல்லா புகழும் கேள்விகளுக்குறியே? 1500 கோடி சொத்து என்பது இதற்கு மேலும் செய்யவைக்கும். -
ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
விசுகு replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
இது எனக்குத்தான்🤣 -
ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
விசுகு replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
இவர்கள் சொல்லும் காரணத்தை எவராலும் புரிந்து கொள்ள முடியாது. உண்மையை பேசுங்கள். அல்லது அறிக்கை விட்டு மக்களை முட்டாள் ஆக்குவதை நிறுத்துங்கள். உள் ஒன்று வைத்து புறம் ஒன்றை பேசுவதால் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. -
நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
விசுகு replied to goshan_che's topic in ஊர்ப் புதினம்
ஆமாம் அண்ணா மாற்றத்தை நானே தொடக்குகிறேன். சம்பிரதாய பழக்க வழக்கங்களில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் அதை நாமே செய்யவேண்டும் என்பது தான் எனது விருப்பம். இதன் மூலம் தமிழ் மற்றும் இனம் சார்ந்த சிலவற்றை நாம் தொடர்ந்து காப்பாற்றலாம் என்று நான் நினைக்கிறேன். மாற்றங்களை உள் வாங்காத மொழியும் இனமும் அழிந்து போகும். ஏன் ஐயர் என்றால் இப்போதைக்கு தாலி கட்ட அவர் தேவைப்படுகிறார். ஆனால் என் பூட்டன் கலியாணமே செய்யப்போவதில்லை. எனவே ஐயரும்......? -
நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
விசுகு replied to goshan_che's topic in ஊர்ப் புதினம்
நன்றி சகோ மாற்றத்தை தன் வீட்டில் இருந்து செய்யத் தொடங்கவேண்டும். -
நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
விசுகு replied to goshan_che's topic in ஊர்ப் புதினம்
எனது மகனின் திருமணத்தில் எனது மருமகளை (மணப்பெண்ணை) ஜயர் (நன்கு தெரிந்த ஊரவர் தான்) எனது மகனின் காலில் விழுந்து கும்பிட சொன்னார். அப்படி செய்ய தேவையில்லை என்று சொன்னேன். இது எமது சம்பிரதாய முறைப்படி வழமை என்றார் அப்படியானால் உங்கள் சம்பிரதாய வழக்கத்தை மாற்றுங்கள். எனது பிள்ளை எவரது காலிலும் விழக்கூடாது என்று எப்படி வளர்க்கின்றேனோ என் மருமகளுக்கும் அஃது தான் என்று மறுத்து விட்டேன். இது ஒரு அடிமை மனப்பான்மையையும் மறுபுறம் ஆதிக்க மனோபாவத்தையும் அன்றிலிருந்தே இருவர் மனதிலும் புகுத்தி விடும்.