Everything posted by விசுகு
-
கூட்டுத் தலைமையை உருவாக்குவதற்காகவே பொதுவேட்பாளர்
இது நேர்மை. நன்றிகள்.
-
2035-க்குள் நிலவில் அணுமின் நிலையம்; ரஷ்யாவுடன் திட்டத்தில் இணையும் இந்தியா, சீனா?
மின்சார தேவைக்கு தான் இன்னும் சில காலம் தேவை அண்ணா. காற்றாடிகளும் சூரிய ஒளியும் அவற்றை நிவர்த்தி செய்யும் வரை. பச்சைக்கட்சியினர் ஆட்சி அதிகாரத்தில் வரும் அளவுக்கு வளர்ந்து வருகிறார்கள்.
-
2035-க்குள் நிலவில் அணுமின் நிலையம்; ரஷ்யாவுடன் திட்டத்தில் இணையும் இந்தியா, சீனா?
அண்ணா அவர்கள் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து குறைத்துக் கொண்டு வருகிறார்கள்.
-
2035-க்குள் நிலவில் அணுமின் நிலையம்; ரஷ்யாவுடன் திட்டத்தில் இணையும் இந்தியா, சீனா?
இந்த 3 நாடுகளும் உலக அழிவைத் தவிர வேறு எதனையும் சிந்திக்க மாட்டார்கள். அது கழிவுகளாக இருந்தால் என்ன? அணுவாக இருந்தால் என்ன???
-
தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனின் பிரச்சார நடவடிக்கையில் அடிக்கடி இடையூறு
தமிழர்கள் ஆளப் போகிறார்கள் என்று ஒருபோதும் சிங்களம் அடித்ததில்லை அடக்கியதில்லை. அடிமையாக இரு என்றே அடித்தது. அடிக்கிறது.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
எதிர் பார்த்தது தான். (பொதுமக்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிரானவன் நான். ஆனால் எதிரி தரும் வலியை புரியவைக்க வேறு தெரிவுகளை அவர்கள் விட்டு வைப்பதில்லை)
-
தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனின் பிரச்சார நடவடிக்கையில் அடிக்கடி இடையூறு
சிங்கள அரசு காவல் துறையினரை ஏவி விடுகிறது என்றால் தமிழர்கள் சரியான பாதையில் பயணிக்கிறார்கள் என்று அர்த்தம்.
-
தமிழரசுக் கட்சியை பலவீனப்படுத்தும் தமிழ்ப் பொது வேட்பாளர்
நன்றி. இதுவே எனது நிலைப்பாடும்.
-
ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்கு ஆலோகனை வழங்க தயார் – ஜெய்சங்கர் கருத்து
1 - நீங்கள் ரசிய எல்லை மற்றும் இறையாண்மை பற்றி கவலைப்படும் அளவுக்கு உக்ரைன் எல்லைகள் மற்றும் இறையாண்மை பற்றி கவலை கொள்ளவதாக தெரியவில்லை. 2 - பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் எல்லைகள் மற்றும் இறையாண்மை பற்றி பல சகாப்தங்களாக ஒரு முடிவை எட்ட முடியாத இந்தியா பற்றிய உங்கள் கருத்து?????
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
உங்களுக்கு ஒற்றுமையின் அர்த்தமே புரியவில்லை. கூட்டமைப்பு சார்ந்து நீங்கள் 15 வருடங்களுக்கு முன்னர் நான் நின்ற இடத்தில் நிற்கிறீர்கள். பட்டு வாருங்கள் 2040 இல் பேசலாம். அதற்கிடையில் நீங்கள் பிச்சை எடுக்கும் நிலையிலும் கூட்டமைப்பினர் உலக பணக்காரர்கள் பட்டியலிலும் இருப்பார்கள்.
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
அதிஉயர் தியாகம் இழக்க முடியாத கொடுக்கக்கூடிய விலையை விட அதிகமாக கொடுத்த தோல்விநிலை. இதற்கு மேல் என்ன செய்வது எதை இதற்கு மேல் ஈகை செய்வது என்ற பரிதாப நிலை. இந்த நிலையில் தோற்று போன ஒரு இனத்தின் கையேறு நிலை தான் இது. ஆனால் தமிழரின் வரலாறை இயக்குவது தமிழர்கள் இல்லை அது சிங்களவரால் இயக்கப்படுகிறது இயக்கப்படும். பார்க்கலாம். நன்றி நேரத்திற்கு.
-
கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த யாழ். மாணவியை நேரில் சந்தித்து பாராட்டிய ஜனாதிபதி
அவரது கவிதை தேர்தல் காலத்தில் வந்திருக்கிறதா?
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு இல்லையேல்......?
-
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முக்கிய கூட்டம் இன்று!
இவர்களுடன் பல கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டமைப்பு என்ற ஒன்றும் உண்டாம்?
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
ஆட்கள் இன்றி யாழ்ப்பாணத்தில் இரத்துச் செய்யப்பட்ட சஜித்தின் பிரசாரக்கூட்டம் யாழ்ப்பாணம், உடுப்பிட்டியில் இன்று முற்பகல் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரசாரக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் மக்களை அழைத்துவர முடியாது போன நிலையில் முற்பகல் 10 மணி முதல் இசைக் குழுவினர் பாடல் இசைத்தவண்ணம் இருந்துள்ளனர். நண்பகல் வரை மக்களை ஒன்றுதிரண்டுவதில் ஏற்பாட்டாளர்கள் தோல்விகண்ட நிலையில் இந்தக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக யாழ் செய்தியாளர் தெரிவித்தார். சஜித் பிரேமதாசவிற்கு யாழ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆதரவு வழங்கியிருந்த நிலையில் இரண்டாவது முறையாக யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாசவின் பொதுக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. https://www.facebook.com/share/v/prxb4BYdqQSjydXq/
-
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முக்கிய கூட்டம் இன்று!
அறிக்கை மரியாதைக்காக விடப்பட்டது என்று காவித் திரிந்தவர்கள் வரிசையில் வரவும்
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
இந்த நேர்மை வேண்டும் காண். சிறிதரன், ஆனந்தி ஏன் சுமந்திரனிடம் கூட அந்த நேர்மை இருக்கிறது. ஆனால் இங்கே.....???
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
அனைவரது கருத்துகளையும் உள்வாங்கிக் கொள்கிறேன். நன்றிகள். கருத்துக்கு கருத்து வைக்கவே இக் கருத்துக்களம். இனி இந்த திரி புலம்பெயர் தமிழர்கள் மேல் வசை பாடமட்டுமே தொடரப்போகிறது. எனது கருத்தை நான் இங்கே முழுமையாக சொல்லி விட்டேன். நன்றி வணக்கம்.
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
நடக்காது நடக்காது நடக்கவே முடியாது என்று சொல்கிறோமே தவிர அதற்கு காரணம் நாம் நமது ஒற்றுமை இன்மை என்பதை உணர மறுக்கிறோம். அது இனி இல்லை என்றால் இளம் தலைமுறையினர் அதை தீர்மானிக்கட்டுமே. எமது பலவீனங்களை உணராது அதை களையாது அதை ஒழித்து வைத்து விளையாடலாம் என்பது எவ்வகையில் நியாயம்??? எதிர்காலத்திற்கு உகந்தது???? இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய கிளிநொச்சி மாவட்டக்கிளை, நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை ஏகமனதாக எடுத்திருந்தது. மாவட்ட கிளையினுடைய தீர்மானத்தை அங்கீகரிக்கும் வகையில் கிளிநொச்சி மாவட்டத்தின் மூலக் கிளைகள் பிரதேசக் கிளைகள் மாவட்டக் கிளை உட்பட்ட தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பொதுச்சபையினர் கூடி நுணுகி ஆராய்ந்து மாவட்ட கிளையினால் மேற்கொள்ளப்பட்ட தமிழ்பொது வேட்பாளரை ஆதரிக்கும் தீர்மானத்தை ஏகமனதாக அங்கீகரித்ததுடன் தொடர்ந்து அதை நோக்கிய பணிகளை மாவட்டக்கிளை தீர்க்கமாக மேற்கொள்ள வேண்டும் என்று ஏகமனதாக தீர்மானித்தனர் சிறீதரன் சிவஞானம் https://www.facebook.com/share/p/7hLfFwWsHpAMCRCa/
-
மனைவி ஆர்த்தியை பிரிவதாக நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு
அது ஏன் தனுஷின் பெயர் அடிவாங்குது???
-
மாவீரர்களது தியாத்தை நெஞ்சில் நிறுத்தி சங்குக்கு வாக்களிப்போம் – அனந்தி சசிதரன் வேண்டுகோள்
மாவீரர்கள் தமது நற்பெயருக்கோ தமது சொந்த அரசியலுக்காகவோ போராடவில்லை மரணிக்கவில்லை அவர்களின் கனவுகளை எந்த வேட்பாளர் ஒரளவாவது கனம் செய்கிறார் என்பது இங்கே பார்க்கப்படவேண்டும் அப்படி பார்க்கும்போது தமிழரின் அபிலாசைகளை ஒரு அளவுக்கேனும் தெளிவாக அறிக்கைப்படுத்தி இருக்கும் ஒருவருக்கு வாக்களிக்கும்படி கூறும் ஆனந்தியின் கூற்று உண்மையே... எல்லாவற்றையும் கலைந்து விட்டு சிங்களத்துடன் இரண்டறக்கலந்து விடலாம் என்பதைக்கூட அங்கே போராடியவர்கள் போராட்டத்துக்கு முகம் கொடுப்பவர்கள் அந்த மண்ணில் மீதியிருந்து மாவீரர்களின் கனவுகளை இன்னும் மறவாதிருப்பவர்கள் தான் சொல்லணும். அதில் ஆனந்தியின் பங்கும் உண்டு.
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
1 - முயன்று பார்க்கிறார்கள் 2 - இல்லாத ஒற்றுமையை இருக்கு இருக்கு என்று நம்பத் தலைப்படுவதும் நம்மை நாமே ஏமாற்றுவதாகும். அதே நன்றி சகோ...
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
இவர்கள் எடுக்கும் முடிவை நாளை இவர்களால் நியமிக்கப்பட்ட மிக மிக சிறப்பு குழு கூடி ஆராய்ந்து அறிக்கை தரும். தமிழன் தலையில் எப்படி அமைத்தாலும் கேட்க நாதியில்லை தானே?
-
தமிழ்தேசிய பொதுக்கட்டமைப்பின் தேர்தல் அறிக்கை – நிலாந்தன்.
தலைவர் எவ்வழியோ மக்கள் அவ்வழி.??? இதைத் தான் தவறு என்கிறேன். இப்போ ரணில் (நரி) எதுக்காக தமிழரசுக் கட்சி தனது முடிவை அறிவித்து சிக்கலில் கட்சி இருக்கும் போது இவரது வீட்டுக்கு வரணும்?? இவரை கௌரவ படுத்தவா?? கட்சியை பலவீனப் படுத்த அல்லவா.? அப்படியானால் வென்றது யார்?? அப்படியானால் தோற்றது தமிழரசுக் கட்சி அல்லவா,???அதன் தலைவரின் அறிக்கை தான் தவறு என்கிறேன். சந்தித்தது கூட தவறு இல்லை.
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
எதுவுமே ஒருவரால் தான் தொடங்கப்படுகிறது. இந்த மக்கள் கூட்டம் நிச்சயமாக நம்பிக்கை தரும்.