Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசுகு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விசுகு

  1. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  2. ஏன் ராசா ஏன்?? ஆனால் கேள்விக்கு பதில் சொல்லாமல் போவது நன்றன்று. இல்லை இல்லை இல்லை 🤣
  3. முடிவுரை: நாங்கள் நின்றது ஸ்பெயின் நாட்டின் ஒரு தீவு. Majorque (Mallorca) 3600 சதுர கிலோமீட்டர் பரப்பளவு தனித்தீவு என்பதால் எப்பொழுதும் மாறி மாறி (ரோமேனியர் போர்த்துகல் அராபியர்கள்....) ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்களின் பட்டியல் நீளமானது. கிட்லரால் தம்மை பிடிக்க முடியவில்லை காரணம் தங்கள் நாட்டில் பாதுகாப்பு உத்தரவாதம் தரும் மலைகள் என்கிறார்கள் அங்குள்ள மக்கள். இந்த Majorque என்பதே அராபியர்கள் வைத்த பெயர் தான். அருகே பக்கத்தில் உள்ள இன்னொரு சிறிய தீவுக்கு Minorque என்று பெயர் வைத்துள்ளனர். மலையும் கடலும் உள்ள தீவு என்பதால் ஆதி மனிதர்கள் கற்களை கொண்டே குடிசைகளை அமைத்து வாழ்ந்துள்ளனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்ந்த மக்கள் முதன் முதலாக கற்களால் அரணமைக்கு வாழ்ந்த இடத்தையும் பார்வையிட்டோம். அந்த இடத்தை ஒரு காட்சியகமாக வைத்து இருக்கிறார்கள். அந்த அரணின் நுளைவாயிலில் 8 தொன் கல் ஒன்றை இரண்டு மீற்றர் உயரத்தில் வைத்து இருப்பதை எங்களுக்கு வழிகாட்டியாக வந்தவர் பெருமையுடன் சொன்னார். நான் அவருக்கு தஞ்சாவூரை காட்டினேன். அதிசயித்தார். Majorque இன் சனத்தொகை கிட்டத்தட்ட 1 மில்லியன் ஆனால் அங்கு எப்பொழுதும் சனத்தொகையாக 3 மில்லியன் மக்கள் இருப்பார்கள். அதாவது 2 மில்லியன் மக்கள் சுற்றுலா வந்து போவார்கள். இதனுடைய விமான நிலையம் Palma. ஒரு நிமிடத்திற்கு ஒரு விமானம் ஏற ஒன்று இறங்கியபடி இருக்கும். இதன் வரலாற்றை பார்த்தால் மிகவும் வறண்ட பிரதேசம். குடிநீர் வசதி இல்லை. ஆனால் இன்று பச்சை பசேல் என்று இருக்கிறது. அநேகமாக அந்த மக்களுக்கு தேவையான மரக்கறி வகைகள் பழங்கள் இறைச்சி மீன் என்பன அங்கேயே கிடைக்கின்றன. கிடைக்கும் மழைத் தண்ணீரை நிலத்திற்குள் சேமித்து தங்கள் தண்ணீர் தேவையின் பெரும் பகுதியை பூர்த்தி செய்கிறார்கள். ஸ்பெயின் நாட்டின் அதி கூடிய வசதியும் வருவாயும் வேலை வாய்ப்பும் பணச்செழிப்பும் கொண்ட பிரதேசமாக இத்தீவு இன்றுள்ளது. இது எம் போன்ற பலருக்கும் ஒரு நல்ல உதாரணமாகும். எனக்கு எங்கே போனாலும் என் நாடு என் ஊர் என்று தான் மண்டைக்குள் ஓடும். இங்கும் அப்படி தான். நானும் இவ்வாறான ஒரு வரட்சியான காலநிலை மற்றும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவை பிறப்பிடமாகக் கொண்டவன் தான். ஆனால் என் தீவின் இன்றைய நிலைமை மற்றும் அங்குள்ள மக்களின் வாழ்வியலை பார்க்கும்போது இத்தீவு என்னை மிகவும் பாதித்தது. ஆனால் நாங்கள் முக்கியமாக நான் அதற்கான முயற்சிகளை எடுக்காமல் இல்லை. எனது இனத்தின் சாபமோ என்னவோ நான்கு பேர் மட்டும் தான் எல்லாவற்றையும் செய்யட்டும் என்று தூங்கி விடுகிறது. நாங்கள் நின்ற இடம்: camp de mar நின்ற கோட்டல்: alua camp de mar நன்றி.
  4. மகிந்த படுத்த கட்டிலில் தம்பி படுத்து எழுந்து வந்திட்டார். மற்றவர்களுக்கும் அந்த ஆசை வரும் தானே? (நான் ஜனாதிபதிக்கட்டிலை சொன்னேன் ராசா😜)
  5. எனக்கு தெரிந்த சில சிறிய பென்சன்காரர்கள் (மாதம் 500 இலிருந்து 600 யூரோக்கள் வரை) அங்கே 6 முதல் 9 மாதங்கள் தங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இது இனி கடினம் தானே? விமான ரிக்கற் மற்றும் விசா செலவு என்று பார்த்தால் வாழ்க்கை இனி இறுகலாம் அல்லவா?
  6. நான் படத்தை பார்த்து 🤪மாறி விளங்கிக் கொண்டேன். அண்ணன் பயன்படுத்தியதை தம்பி பயன்படுத்தி இருக்கிறார் என்று.
  7. இங்கிருந்து செல்லும் சிறிய பென்சன்காரர்கள் இதனால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதா??
  8. நான் அறிந்த வரையில் சைவ உணவகம் தமிழர்களால் நடாத்தப்படுபவை தான். ஈழ மற்றும் இந்திய தமிழர்கள்.
  9. கொழும்பில் முன்னர் வெள்ளைகள் வீதிகளில் நடமாட முடியாது. இரண்டு மூன்று ஓட்டோக்கள் அவர்களது பக்கத்தில் ஊர்ந்தபடி சிரமம் கொடுக்கும். தற்போதைய நிலை தெரியவில்லை.
  10. நான் முழுமையாக பார்த்தேன். 9 மற்றும் 12ம் உள்ளது.
  11. இந்த கருத்து கணிப்பில் இருந்தே நாம் தமிழர் கட்சிக்கு 4 இலிருந்து 12 வரை என்று இருக்கிறது. அப்படியானால் சராசரியாக 7 இலிருந்து 9 வரை வர வாய்ப்புள்ளதே.
  12. இங்கே இரவு பாடல் ஆடல் மற்றும் கேள்வி பதில் போட்டிகள் நடக்கும். அவற்றில் என் மக்கள் மற்றும் மருமக்கள் பங்கு பெற்று பரிசுகளையும் பெற்றார்கள். அதனால் பலருக்கும் கோட்டலில் அறிமுகமாகி விட்டனர். இங்கே வந்திருப்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்களுக்கு என் குடும்பம் முழுமையாக வந்து நின்று தாயின் பிறந்த நாள் பரிசாக தாமே முழுவதுமாக பொறுப்பெடுத்து செய்வது ஆச்சரியமாக முன்னுதாரணமாக இருக்கிறது. என்னிடம் பலரும் கை கொடுத்து நல்ல வளர்ப்பு படிப்பு பண்புகள் என்று பாராட்டி செல்கின்றனர். அதை நானும் உணர்கிறேன். என் பிள்ளைகள் மட்டும் அல்ல அவர்களுக்கு வாய்த்தவர்களும் அவ்வாறே அமைந்திருப்பது பாராட்டப்பட்டது. நேற்று கரோக்கோ இசையில் எனது இரண்டு மருமக்களும் பாடி அனைவரதும் பாராட்டைப்பெற்றார்கள். (எனது மூன்று பிள்ளைகள் மணம் முடித்து விட்டனர். மூன்றும் காதல் திருமணம். என்னுடைய சம்மதத்துக்காக காத்திருந்து திருமணம் செய்தார்கள். அதுவும் ஒரு பெரிய கதை. நேரம் இருந்தால் பார்க்கலாம்) இன்று சிறிய கப்பலில் கடலில் சென்று குளித்து சாப்பிட்டு கோட்டல் திரும்பினோம். நாளை நாடு திரும்புகிறோம்... இந்த தீவு மற்றும் விபரங்களை முடிவுரையில் நாடு திரும்பியதும் எழுதுகிறேன். நன்றி.
  13. அக்கறை இருந்தால் தானே கண்டனங்கள் வரும்... 😆
  14. அங்கிள் என்பதற்கு என் கண்டனங்கள் 🤪
  15. எனக்கு மட்டும் அல்ல துணைக்கும் தயார் படுத்தல் செய்வதால் தான் தொடர்ந்து ஏகபத்தினி விரதனாக இருக்க முடிகிறது.😜
  16. இலங்கையில் இருந்து தப்பித்து புலம்பெயரும் பலரும் இனி ரசிய இராணுவ முன்னரக்குகளில். எப்படி இருந்த ரசியா ....
  17. Palma விமானநிலையத்தில் ஒரு மினிபஸ் எங்களுக்காக காத்திருந்தது. அதில் ஏறியதும் கிட்டத்தட்ட 40 நிமிட பயணத்தின் பின்னர் ஒரு நட்சத்திர ஹோட்டல் முன்னால் நின்றது. நாங்கள் 4 குடும்பம் மற்றும் எனது கடைசி மகள். அதற்கு ஏற்ப 5 ரூம்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அத்தனையையும் கடலில் இருந்து 50 மீற்றர். ஜன்னலை திறந்தால் முன்னால் கடல். கீழே நீச்சல் குளம் sauna hammam jacuzzi மற்றும் மூன்று நேர சாப்பாடு வொலாந்தேர் (நூற்றுக்கும் மேற்பட்ட சாப்பாடுகள் கேக் ஐஸ்கிரீம் மற்றும் பழ வகைகள்) அத்துடன் 24 மணிநேர ஓபன் பார். மேலும் இரவு ஏழு மணிக்கு தொடங்கி பன்னிரண்டு மணிவரை ஆடல் பாடல் விளையாட்டுக்கள். அத்துடன் காலையில் 2 வான்கள் வந்து எம்மை ஏற்றி சென்று ஒவ்வொரு நகரமாக இந்த இடத்தின் விசேடமாக பார்க்க வேண்டிய இடங்களை காட்டி மீண்டும் கொண்டு வந்து கோட்டலில் விட்டு செல்கின்றன. நேற்று பலநூறு பேர் முன்னால் கோட்டல் நிர்வாகத்தினால் என் மனைவியின் பிறந்த நாள் கேக் வெட்டி சம்பைன் உடைத்து கொண்டாடப்பட்டது. உண்மையில் மறக்க முடியாத அனுபவம். நான் எனது வாழ்க்கையில் 11 மாதங்கள் பல மணிநேர வேலை மற்றும் வேலை வீடு என்று வாழ்பவன். ஆனால் ஆவணி மாதம் மட்டும் கோடீஸ்வர வாழ்க்கை. மக்களுக்கும் அதையே பழக்கி இருந்தேன். இன்னொரு விடயம்: வீட்டில் நாங்கள் மேசையில் இருந்து சாப்பிடும் போது என் பிள்ளைகள் மற்றும் மனைவியின் கண்கள் என் கோப்பை மற்றும் கிளாசிலேயே இருப்பது வழக்கம். ஆனால் இங்கே அதிலிருந்தும் விதிவிலக்கு. நான் 4 அடி பாய்ந்தால் என் பிள்ளைகள் 16 அடி பாய்ந்ததை உணர்ந்தேன். அனுபவித்தேன். இதுவரை எனது பொக்கற்றில் இருந்து ஒரு சதம் கூட வெளியே எடுக்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. நான் இந்த தீவில் பார்த்தவை மற்றும் இந்த தீவு பற்றி நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன். நன்றி.
  18. என் குடும்ப பாடல் இது. எனது தகப்பனார் அடிக்கடி இப்பாடசாலை பாடுவார். அண்ணர் மற்றும் என் குறும்புத்தம்பி இன்று உயிருடன் இல்லை. தானாக படித்து வந்த தம்பி நான் மட்டும்.....???
  19. அது வழக்கமான நிலை ஆனால் ஈரான் இழுத்து உள்ளே விட்டு விட்டது. இதை இஸ்ரேல் நிச்சயமாக பாவிக்கும். தனது பல நிலுவை களை பூர்த்தி செய்து பாதுகாப்பு உத்தரவாதம் எடுத்து கொள்ளும். அது தான் புத்திசாலித்தனமும் கூட.
  20. கல்வி வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரம் சார்ந்த நகர்வுகளுக்கும் அரசால் திட்டமிட்டு நடத்தப்படும் ஆக்கிரமிப்பு நகர்வுகளுக்கும் இடையில் வித்தியாசம் தெரியாமல் இருக்கும் மக்கள் எம்மத்தியில் அதிகம். ஆனால் இவர்கள் உண்மையில் ஒன்றுமே தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள முயலாதவர்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.