Jump to content

nedukkalapoovan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    32991
  • Joined

  • Days Won

    268

nedukkalapoovan last won the day on February 25

nedukkalapoovan had the most liked content!

5 Followers

About nedukkalapoovan

  • Birthday February 23

Contact Methods

  • Website URL
    http://www.tamilnet.com/
  • ICQ
    0

Profile Information

  • Gender
    Male
  • Location
    எனக்கே தெரியாது எங்கே என்று.
  • Interests
    nothing

Recent Profile Visitors

29266 profile views

nedukkalapoovan's Achievements

Grand Master

Grand Master (14/14)

  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • Conversation Starter
  • One Year In

Recent Badges

7k

Reputation

  1. வடக்கு கிழக்கு தற்காலிக இணைப்பை பிரிச்சவைக்கு... வடக்கை கைக்குள் போடுவது அவ்வளவு கடினமல்ல. ஏனெனில்.. வடக்கில் சிங்கள பெளத்த பேரினவாத விசுவாசித் தமிழர்கள் இப்ப அதிகம் பெருகிவிட்டார்கள். ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பத்திலும் அதற்கு முன்னரும் இந்த நிலை இருந்தமை.. தெரிந்ததே. அப்பவும் சிங்களம் தமிழர்களைக் கொன்று கொண்டு தான் இருந்தது. ஆனாலும் சிங்கள பெளத்த பேரினவாத விசுவாசிகளை வடக்கு பிரசவிக்கத் தவறவில்லை.
  2. ஏலவே இந்த ஆயுதம் உக்ரெனில் அமெரிக்கப் படைகளின் நேரடி தொழில்நுட்ப உதவியுடன் பாவிக்கப்பட்டே வருகிறது. ரஷ்சியாவுக்கு எதிராகவும் பாவிக்கப்பட்டு.. ரஷ்சியா சுட்டு வீழ்த்தியும் உள்ளது. இது பைடன் கிளம்பும் முன் கிளப்பி விடும் புதுப்புரளி மட்டுமன்றி.. வேறு தொலைதூர ஏவுகணைகளை கொண்டு தாக்குவதற்கான ரகசித்திட்டத்தினை இது கொண்டிருக்கலாம். அதனால் தான் ரஷ்சியா கடந்த சில தினங்களாக உக்ரைன் மீது கடும் ஏவுகணை தாக்குதல்களை நடாத்தி வருவதோடு உக்ரைனிடம் இருந்த அமெரிக்க வான் காப்பு ஏவுகணைகளையும் பெருமளவு அழித்துள்ள்ளது.
  3. எல்லையற்ற அதிகாரம் சொறீலங்காவுக்குள்ள தான். அதுசரி... சனாதிபதிப் பதவி... அதிகூடிய அமைச்சர்களின் அதிகாரம் எல்லாம் நீக்கப் போறம் என்டவை.. இப்ப என்ன கவனமாப் பாவியுங்கோ என்றினம். அப்ப சந்திரிக்கா அம்மையார்... மகிந்த அக்கிள்.. ரணில் தாத்தா போல... இவையும் பிரபுத்துவ ஆட்சி தான் செய்யப் போகினம் போல. என்ன அவை நகரத்தில் இருந்து வந்த பிரபுக்கள். இவை கிராமத்தில் இருந்து வந்த புத்துப்பிரபுக்களா இருப்பினமாக்கும்.
  4. தன்னறம் ஆற்றையுங்கோ. முதுகு சொறிய நல்ல கூடாரம். அதுசரி எல்லாத்துக்கும் பகிடிப் படம் கீறும் அண்ணர்,. இதுக்கேன் கீறவில்லை..! பிரான்சில் கூட்டாளிகள் போல.
  5. ஆச்சரியமில்லையே. 1987 இல் மைசூர் பருப்பையும்.. பம்பாய் வெங்காயத்தையும் வெறுத்தவர்கள் ஆட்சிப் பீடம் ஏறி இருக்கும் நிலையில்... கிந்தியா எனி வாய் தான் பார்க்க முடியும். எனி ரகன் இன்னும் பூந்து விளையாடும். 2009 மே யின் விளைவுகளை விரைவில் கிந்தியா தீவிரமாக உணர்ந்து கொள்ளும். ஜே வி பி மறக்காது... சிறிமாவோ அம்மையார் கிந்தியப் படை உதவியோடு ஜே வி பியினரை கொன்று குவித்ததை.. 1970 களில். இது 1987 - 90 பிரேமதாச, உடுகம்பொல.. டக்கிளஸ் செய்த கூட்டு ஜே வி பி படுகொலையை விட மோசமானது.
  6. உக்ரைன் கோமாளி அண்மையில் ரஷ்சியாவை சிதைப்பது குறித்த ரீ சேட் அணிந்திருந்தார். உக்ரைன் யூதக் கோமாளி... ஐரோப்பாவின் அமெரிக்காவின் நெத்தானியாகு. உக்ரைன் அழிவது பற்றி அதுக்கு அக்கறை இல்லை. நேட்டோவுக்காக அமெரிக்காவின் மேற்குலகின் தேவைக்காக ரஷ்சியாவை சிதைப்பதே நோக்கம். அந்த வகையில் புட்டின் உக்ரைன் மீது எடுத்த விசேட நடவடிக்கை சரி என்பதாகவே பைடன் லூசின் செயற்பாடு அமைகிறது. பதவியின் கடைசிக் காலத்தில்.. மொத்த உலகிற்கும் கேடிழைக்கக் கூடிய தீர்மானத்தை பைடன் என்ற பைத்தியம் எடுக்கிறது. அதற்கு சில ஐரோப்பிய ரஷ்சிய எதிர்ப்பு பைத்தியங்கள் ஆமாப் போடுதுகள். பிரிட்டன்.. பிரான்ஸ்.. போலந்து போன்றவை.. உட்பட.
  7. இது ஜே ஆர் சாவகச்சேரியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு 1981 இல் சொன்னது தான். இப்ப இவர். அதன் பின்னர் நடத்தவை நாடறியும். தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டை.. சுயநிர்ணய உரிமையை.. பிரிவினைவாதம் என்ற வகைக்குள் வைத்து சில பத்தாயிரம் வாக்குகளால் மதிப்பிடக் கூடாது. ஏனெனில்.. இதே சனாதிபதியை வடக்குக் கிழக்கு மக்கள் நிராகரித்து வாக்களித்ததையும் கவனத்தில் கொள்வது சிறப்பு. இப்படி வாக்குச் சீட்டு அரசியல் பேசுவதாக இருந்தால். அடிப்படையில் அனுர ஒரு சிங்கள பெளத்த பேரினவாத சனாதிபதி என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். எனி ஜே வி பி சார்ப்பில் நின்று தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை வாங்கிய தமிழர்கள் தான் இவருக்கு கள நிலவரத்தைச் சொல்லிக் கொடுக்கனும். இன்றேல்.. கடந்த காலத்தில் சிங்கள பெளத்த பெருந்தேசிய பேரினவாதக் கட்சிகளுக்கு அளித்த பதிலையே தமிழ் மக்கள் இவைக்கும் அளிப்பார்கள். எதுக்கும் சொறீலங்கா சனாதிபதி சந்திரசேகரத்திடம் ஆலோசனை பெறுவது நல்லது.
  8. மாவைக்கு இன்னும் பதவி ஆசை போகவில்லையோ அல்லது மகனுக்காக உழைக்கிறாரோ..?! சுமந்திரனுக்கு தன் திறமையில் நம்பிக்கை இல்லை அதனால் தான் தமிழ் தேசியக் கட்சிகளை சார்ந்து கிடக்கிறார். இல்லை எனில் சுயாட்சையாக நிற்கலாமே மதிப்பில்லாத இடத்தில் எதுக்கு டாரா போட்டுக்கிட்டிருக்கனும், அதே தான் மாவைக்கும்.
  9. முதலில் உங்கள் கட்சிக்கு யார் தலைவர்... செயலாளர் என்று சொல்லுங்கள். ஒரு திடமான முடிவை எடுக்கத்தக்க கட்சியாக உங்களை முதலில் வகுத்துக் கொள்ளுங்கள். எல்லாத்துக்கும் சிங்கள நீதித்துறையை வாய் பாய்க்கும் நிலையில் கட்சியை வைச்சுக் கொண்டு... அடுத்தவனை எப்படி ஒன்றிணைய அழைக்க முடியும்..???!
  10. என்ன அமைச்சரவை நீளுது. இவையும் சக்கடத்தார் ஏறின குதிரையிலதான் சவாரி போல.
  11. பிரபாகரன் இல்லை என்றால் நான் ஒட்டுக்குழு ஆயுத அரசியலில் இருக்கமாட்டன் என்றார். அப்புறம் தமிழ் மக்கள் என்னை நிராகரித்தால் ஒட்டுக்குழு ஆயுத அரசியலில் இருக்கமாட்டன் என்றார். இறுதியாக இந்த தேர்தலோடு ஒட்டுக்குழு ஆயுத அரசியலில் இருந்து ஓய்வு என்றார். இப்படி காலத்துக்கு காலம் இவரும் பேசிக்கிட்டுதான் இருக்கார். பேசிறது என்னவோ சன நாயம் செய்யுறது பாசிச அரசியல். தானே தான் இத்தனை ஆண்டுகளும் செயலாளர் நாயகம். அடுத்தவைக்கு அதை கொடுக்க மனசில்லை. காரணம் வருமானம்.. வசதி வாய்ப்பு... அந்தஸ்து.
  12. செல்லாக் காசாக் கிடந்த ரில்வின் எல்லாம் இப்ப தமிழருக்கு வகுப்பெடுக்க... அவருக்கு விளக்கம் கொடுக்கும் நிலையில் தமிழர்கள். ஏன் இதெல்லாம் ரில்வினுக்கு தெரியாதோ..?! தெரியும் அவரிடம் உறைந்துள்ள பேரினவாதச் சிந்தனை எல்லாத்தையும் இனவாதமாகப் பார்க்கத் தூண்டுகிறது அவ்வளவும் தான். சிங்களவர்களைப் பொறுத்தவரை சொறீலங்கா தங்கள் நாடு. தமிழர்கள்.. வந்தேறிகள். இந்த அடிப்படை சிந்தனையில் மாற்றம் வராமல்.. தமிழர்களுக்கு சிங்களவர்களால்... உரிமை வழங்கப்படப் போவதில்லை. அந்த வகையில் தான் தமிழர்கள் உரிமையை போராடிப் பெற முனைந்தார்கள். அதனை பயங்கரவாதமாக்கிய மேற்குலகும்.. கிந்தியாவும் தான் எனி இதற்குப் பதில் சொல்லனும்.
  13. எங்கட மண்ணில எங்கட அடிப்படை உரிமயை கூட சிங்களவன் அனுமதித்தால் தான் அனுபவிக்கலாமாம். இது தான் எந்த சிங்களவன் ஆட்சிக்கு வந்தாலும் நிலை. அதுசரி.. யாழ்ப்பாணம் தெரிவு செய்த அனுர விசுவாசத் தமிழர்களின் நிலை நிலைப்பாடு என்னவோ..?! தேர்தலில் வென்றதும் கதையக் காணம். வாக்குப் போட்டவைக்கு உறைச்சால் சரி.
  14. அம்மையார் சந்திரிக்கா 1994 இல் பதவிக்கு வந்த போது வடக்குக் கிழக்கில் பொங்கல் பொங்கினவை.. சமாதான தேவதையாகக் காட்டிக் கொண்டிச்சினம். புலிகளும் மறைமுகமாக ஆதரவளிச்சவை. கடையிசில்.. அதே சந்திரிக்கா தான் போர்ப் பிசாசானது. கடைசியில் குண்டு வைச்சு காலி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளியது. எந்த சிங்களத் தலைமையும் தமிழர்களுக்கு அவசியமானதை கண்டறிந்து தாமாக தரப் போவதில்லை. நாமாகப் போராடிப் பெற்றால் அன்றி. அதுவும் சிங்களத்தோடு சமரசம் செய்து... தாஜா பண்ணி பெறலாம் என்பது.. வெறும் பகற்கனவே ஆகும். அனுர ஆட்சி... தமிழர்களுக்கு அரசியல் உரிமை ரீதியில் பெரிய மாற்றத்தை கொண்டு வராது.. நாம் தருவார்கள் என்று காத்திருப்பின். சர்வதேச நேச சக்திகளோடு.. அனுர ஆட்சிக்கு எதிரான சக்திகளோடும் இணைந்து கொடுக்கக் கூடிய அழுத்தங்ளின் தாக்கம் ஒன்றே ஏதாவது நன்மையை தமிழர்களுக்கு தேடித்தரும். அதற்காக... இன அழிப்பு போர்க்குற்ற விசாரணைகயை கைவிடுவதோ... சொறீலங்காவை நீதிக்கு முன் நிறுத்துவதையோ வடக்குகிழக்கு இணைந்த தமிழர் தாயக நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்துவதையோ.. இன அழிப்புக்குள்ளான இனம் என்ற ரீதியில் சர்வதேச பாதுகாப்பை வேண்டிய நிலையில் சுதந்திர தமிழீழத்துக்கான ஐநா மத்தியஸ்த சர்வசன வாக்கெடுப்பை வடக்குக் கிழக்கில் நிகழ்த்துவதையோ.. கிழக்கு திமோர்... தென் சூடான்.. கொசாவோ... போன்று,,,, தடுக்கவோ... கைவிடவே முனையக் கூடாது,
  15. கட்சிகளை ஒற்றுமைப்படுத்துவது மட்டும் போதாது, தமிழ் தேசிய உணர்வூட்டத்தக்க நிகழ்வுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும்.. எல்லாரும் ஒற்றுமையாக. பொங்கு தமிழ் போன்று, அதன் மூலம் மக்களுக்கு ஏதாவது நன்மைகளுடம் கிடைக்க வேண்டும்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.