Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nedukkalapoovan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nedukkalapoovan

  1. கடந்த 15 ஆண்டுகளாக ஒரு வன்முறையும் புலிகளால் பதிவாகாத நிலையில்.. ஐரோப்பிய ஒன்றிய சாணக்கியவான்கள் இன்னும் தடை போடினம் என்றால்.. ஐரோப்பிய ஒன்றியத்தின் கடைந்தெடுத்த காடைத்தனம் அப்பட்டமாகவே தெரிகிறது. இதில் புலிகளின் சொத்து முடக்கமே முக்கிய குறிக்கோள். அதையும் பறிச்சு உக்ரைனுக்கு படைப்பாங்கள் ஆக்கும். கவனிக்கவும் ரஷ்சியாவில் ரஷ்சிய பிராந்தியங்களில் புலிகளுக்கு தடை இல்லை. புலிகள் தப்பானவர்களை நண்பர்கள் என்று நம்பியதன் விளைவும் தான் 2009 மே பேரழிவு கூட்டு இன அழிப்புக்கு முக்கிய காரணம். ஏலவே தமிழர் புனர்வாழ்வுக்கழகம் என்ற சிவில் தொண்டு அமைப்பு மீதான தடையும் தொடருது. ஆக மொத்தத்தில் ஐரோப்பிய ஒன்றியம்.. ஒரு கொஞ்சம் கூட சனநாயகத்தன்மை அற்று.. தமிழ் மக்கள் மீதான எந்தக் கருசணையும் அன்று தொடர்ந்து செயற்பட்டு வருகிறது. இதில தமிழர்கள் சிலர் ஐரோப்பிய ஒன்றியத்தின் அடாவடித்தனமான உக்ரைன் போர் ஆதரவுக்கு ஒத்தூதுதிக்கொண்டு இருக்கிறார்கள். ஹிந்தியாவை அடுத்து ஐரோப்பிய ஒன்றியம்.. எனி அமெரிக்கா.. பிரிட்டனுன்னு தடை தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆனால் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் இவங்கள் எல்லாம் கள்ள மெளனம் காக்கிறாங்கள். இணைத்தலைமை என்று வந்து புலிகளை உளவு பார்த்தவை எல்லாம் இப்ப கப் சிப்.
  2. முயற்சி திருவினையாக வாழ்த்துக்கள் வை கோ ஐயா. 2009 மே க்குப் பின்னான கசப்பான அனுபவங்களை மறந்து.. தேசிய தலைவர் மீது கொண்டிருந்த தார்மீக ஆதரவுக்கு மதிப்பளித்து வை கோ ஐயா மட்டுமல்ல.. தமிழக நேச சக்திகள் எல்லோரும் ஈழத்தமிழர் விடயத்தில்.. ஒருங்கிணைந்து செயற்படுதல் அவசியம். உள்ளூர் அரசியலில் எப்படியான அணுகுமுறைகளை கொண்டிருந்தாலும்.
  3. இது பற்றி டக்கிளசின் வாலுகள் கப்சிப். கடற்புலிகள் இருந்தப்போ வராத சிக்கல்கள் எல்லாம் இப்ப வருகுது என்றால்.. தூண்டி விடுறவையை பற்றி சிந்தித்துப் பார்த்து அப்பாவி மீனவர்கள்... இந்த அதிகார வர்க்கத்தின் அரசியல் ஆதாயத்துக்குள் விலை போகாத வகையில் வளப்பயன்பாட்டை பகிர்ந்து மேன்மை பெறுவது குறித்து சிந்தித்து செயற்பட வேண்டும்.
  4. விட்டால் தமிழர்கள் தான் ஆக்கிரமிப்பாளர்கள் சிங்களவர்கள் நல்லவர்கள் என்று சொன்னாலும் சொல்லுவீங்க போல இருக்கே. உக்ரைன் ரஷ்சியாவின் ஒரு பகுதி 1990 வரை. சோவியத் உடைவின் போது தனிநாடானது. இப்போ சோவியத்தில் இருந்து உடைத்த அத்தனை நாடுகளையும் நேட்டோவில் இணைச்சாச்சு. உக்ரைன் தான் பாக்கி. நேட்டோ விரிவாக்கமே தான் ரஷ்சிய- உக்ரைன் போருக்கான முக்கிய மறைமுகக் காரணம். நேரடிக்காரனம்.. டான்பாஸ் பிராந்திய மக்களின் சுயநிர்ணய உரிமையை பறித்து உக்ரைனின் ஆக்கிரமிப்புக்குள் வைத்திருக்க முனைந்தது. இதில்.. ரஷ்சியாவினது உக்ரைன் மீதான போர் எப்படி ஆக்கிரமிப்பாகும். மேற்கு ஐரோப்பாவிற்கும் நேட்டோவுக்கும் நன்மையில்லாமலா இவ்வளவு கோடிகளை ஐரோப்பிய ஒன்றியமும்.. பிரிட்டனும்.. அமெரிக்காவும் கொட்டிக் கொடுக்கினம்..??! எதுஎப்படியோ.. நீங்கள் பிரஞ்சு எஜமானர்கள் வாய்வழி வருவதே சத்தியம் என்று நம்பும் மட்டும் நீதி எதுவென்று விளங்கிக் கொள்வதில் சிரமம் இருக்கும். மேற்குலகின் சொத்துக்களும் ரஷ்சியாவில் உள்ளன. ஆனால் ரஷ்சியா இவர்கள் அளவுக்கு மட்டமான காரியம் செய்யவில்லை. இன்றுவரை தமிழர் புனர்வாழ்வுக்கழகத்திடம் இருந்து சுருட்டிய காசையும் ஐரோப்பிய ஒன்றியம் விடுவிக்கவில்லை.. தமிழர்களின் பேரழிவின் போது கூட ஐரோப்பிய ஒன்றியமோ அமெரிக்காவோ உதவி அளிக்கவில்லை. ஆனால்.. சொறீலங்காவுக்கு வாரி வழங்கினதும் இல்லாமல்.. இப்போ வரிச்சலுகளையும் அளிக்கினம்.. சொறீலங்காவை பொருண்மிய நெருக்கடியில் இருந்து மீட்க. இப்படியாப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்திடம்.. நீதி நியாயத்தை எதிர்பார்க்கக் கூடாது. தமக்கான அடிமைக் கூலிகளை கூட அமர்த்தி வைக்க.. அகதி அந்தஸ்தை பாவிக்கினம்.
  5. லேபர் தான் முன்னரும் கிழக்கு ஐரோப்பாவை பிரிட்டனுக்குள் திறந்து விட்டு 14 ஆண்டுகள் காணாமல் போனவை. மீண்டும் பழைய குருடி கதவை திறவடி கதை தான். திருந்தாத ஜென்மங்கள். ஏலவே லண்டன் மும்பை.. கராச்சி ரேஜ்சுக்கு வந்திட்டுது. எனி லண்டனிலையே ருவாண்டாவை கொண்டு வந்திடுவாங்கள்.
  6. உழைப்பால் உயர்ந்த தமிழனுக்கு பெருமை சேர்த்த பிரான்ஸ் மக்களுக்கும் தர்சனுக்கும் ஒலிம்பிக் பிரான்ஸ் ஒழுங்கமைப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.
  7. ரம்பும் அவரின் உப சனாதிபதி வேட்பாளரும்.. உக்ரைன் போருக்கு தாம் ஆதரவில்லை என்பதான சமிக்ஞயை காட்டி விட்டார்கள். அதனால் மேற்குலக ஊடகங்கள் மாக்கு மாக்கென்று பைடனை தாங்கின. அவரோ தன் வாயாலேயே உளறிக் கொட்டிட்டு போயிட்டார். புட்டினிடம் மண்டியிட மாட்டன் என்ற பைடன்.. இப்ப மண்டியிட வாய்ப்பே இல்லாத வெத்து பைடனாகி விட்டார். இப்போ கமலா ஹரிஸ் என்ற இன்னொரு இப்புச் சப்பற்றதை தலையில் வைச்சுக் கொண்டாடினம். இதனால்.. ரம் ஆதரவுக்கு வீழ்ச்சி வருமாப் போல தெரியவில்லை. ரம் படுகொலை முயற்சியில்.. உக்ரைன் மறைமுக பங்களிச்சிருக்கலாம்.
  8. சம்பந்தன் எந்த ஒரு முள்ளிவாய்க்கால் நிகழ்விலும் கலந்து கொண்டதில்லை. சொந்த இனப்படுகொலையை.. பயங்கரவாத அழிப்பாக நியாயப்படுத்தி இனப்படுகொலையாளர்களைக் காப்பாற்றிய ஒரு கயவர். தெந்தமிழீழத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு ஆற்றக் கிடைத்த சேவையையும் இஸ்லாமிய தமிழர்களுக்கு தாரை வார்த்தது தான் செய்த துரோகம். அவர்கள் தங்களை இஸ்லாமிய தமிழர்களாக இப்போ கருதுவதில்லை. அரபு முஸ்லிம்களாகவே கருதி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்தளவுக்கு அவர்களுக்கு நாட்டுக்கு வெளியில் இருந்து கடும்போக்கு இஸ்லாமியர்களிடம் இருந்தும் இஸ்லாமிய நாடுகளில் இருந்தும் உதவி வருகிறது. மேலும் சிங்கக் கொடியை எரித்த பூமியில் இருந்து தெரிவான சம்பந்தன்.. சிங்கக் கொடியை தூக்கிப் பிடிச்சு.. சொந்த மக்களின் பூமியையும் அந்நிய ஆக்கிரமிப்புக்குள்ளாகி செய்தது தான் தீபாவளி அரசியல். இப்படியாப்பட்ட தோற்றுப் போன ஒரு அரசியல்வாதியான சம்பந்தனுக்கு மக்களின் ஆழ் மனதில் அடைந்து கிடக்கும் அரசியல் ஆசைகளை புரிந்து கொள்ளவோ.. அதனை தாமும்... தாங்கி நின்று முன்னெடுத்துச் செல்லும் சாணக்கியமோ கிடையாது. அவரின் தற்போதைய வாரிசுகளுக்கும் அது கிடையாது.
  9. 1997 இல் உருவாக்கப்பட்ட ரஷ்சியாவின் Kaspersky சைபர் செக்குரிட்டி மென்பொருளுக்கு அமெரிக்காவில் தடை. நேற்று அது அமெரிக்காவில் இருந்து வெளியேறிவிட்டது. இன்று.. உலகமே பெரிதும் அறியப்படாதிருந்த அமெரிக்க.. crowdstrike க்கு பயங்கர விளம்பரம். ஒரே நாளில் உலக அறிமுகம். இணையத்தை 1990 களில் அமெரிக்க இராணுவப் பாவனையில் இருந்து வியாபார மற்றும் உளவு நோக்கத்திற்காக திறந்துவிட்ட போதே.. ஒரு நாள் இது நிகழும் என்று அப்பவே எதிர்வு கூறியோர் பலர். மக்களை மந்தைகளாக்கி மேற்குலகின் வழியில் கொண்டு சென்றவர்களுக்கு கிடைத்த வெற்றி இது. இந்த இடத்தில் புலிகளை நினைவு கூறுவது சிறப்பு.. புலிகள் தந்தி இல்லாத தொலைபேசிகளை பாவிப்பினும்.. தந்தி உள்ளதையும் மீளமைத்து பாவித்தார்கள். அப்போதெல்லாம் அவர்கள் பல ஆபத்துக்களில் இருந்து தப்ப முடிந்தது. எப்போது அவர்கள் மேற்குலக சற்றலைட்டுக்கள் சார்ந்த தொழில்நுட்பத்துக்குள் நுழைந்தார்களோ.. அப்பவே அவர்கள் இலகுவாக இலக்கு வைக்கப்பட்டுவிட்டார்கள்.
  10. முள்ளிவாய்க்காலில் பயிற்சி எடுத்த இஸ்ரேல் காசாவில் கச்சிதமாகப் பயன்படுத்துது போல. பாதுகாப்பு வலயங்களை அறிவித்துவிட்டு அங்கு மக்களைக் கூட வைச்சுக் கொல்கிறது. இது கமாஸூக்கு எதிரான போராகத் தெரியவில்லை. பலஸ்தீன இன அழிப்பு தான் என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது. என்ன பலஸ்தீனர்கள்.. ஈழத்தமிழர் மீதான சிங்கள... இன அழிப்புப் பற்றி.. எந்த அக்கறறையும் கருசணையும் இன்றி.. கொழும்பு வந்து மகிந்தவுக்கு மாலை போட்டுச் சென்றதையும் தாண்டி....
  11. பிபிசி தமிழ் வழமை போல்.. நாம் தமிழரை இட்டு குறைத்து மதிப்பிட்டு தான் செய்தி வெளியிட்டு வருகிறது.
  12. ஐயா ராமதாஸ் சொல்வது பாதி தான் நியாயம். ஏனெனில் தி மு க இவ்வளவும் கொடுத்தது என்றால்.. பா ம க.. கூட்டணி வைக்காமலே.. மற்றைய கட்சிக்கொடிகளையும் தூக்கி வைச்சுக் கொண்டும்.. பகுதியாக என்றாலும் காசு கொடுத்து வாங்கினது 56,000 வாக்குகள். வெறும் மைக் சின்னத்தை மட்டும் வைச்சுக் கொண்டு காட்டுக்கத்துக் கத்தி மட்டும் 9000 வாக்குகள் பெற்ற நாம் தமிழர் தான் உண்மையான சனநாயகவாதிகள். அவர்களுக்கு வாக்குப் போட்டவர்கள் தான் சாதாரண மக்கள். இங்கு பாமக கொடி மட்டுமா பறக்கிறது..?! ராமதாஸ் ஐயாவுக்கே வெளிச்சம்.
  13. கருணாநிதி திட்டாத திட்டுக்களா..?! ஜெயலிலதா.. வை கோ போன்றவர்களை திடாத திட்டா. ஏதோ கருணாநிதி யோக்கியவான் போலவும்.... அண்மையில் ஸ்ராலின் கூட எரிதடி மாலா.. பா(f)னைப் போடு என்று ஒட்டுமொத்த தமிழகப் பெண்களையும் எள்ளி நகையாடியது கூட கைதுக்குரிய அம்சம் தானே. இது குறித்து தி மு க மகளிர் அணி மூச்சும் விடவில்லை. அண்மைய நாடாளுமன்ற.. மற்றும்.. இடைத்தேர்தல் பணநாயக வெற்றிக்கு பின்.. தி மு க கும்பல் கொஞ்சம் ஓவராத்தான் ஆடுது.
  14. யார் சரி.. யார் பிழை என்பதற்கு அப்பால்.. இதை ஒரு எச்சரிக்கை செய்தியாக எடுத்து பெருகி வரும் கண்காணிப்பு கமராக் கலாச்சாரத்துக்கு தகுந்த விதிகள் அமுல்படுத்தப்படுவது அவசியம். எங்கு கமரா வைக்கலாம் எங்கு வைக்கப்படாது.. அப்படி வைக்கப்படக் கூடாத இடத்தில் கமரா பொருத்துவது அல்லது வைப்பது சட்டவிரோதம் என்று குற்றச் செயலாக அமுலாக்கப்பட வேண்டும். ஆனால் குற்றங்களைக் குறைப்பதில்.. கண்காணிப்புக் கமராக்களின் பங்களிப்பு முக்கியம் என்பதைக் கவனத்தில் கொள்வது சிறப்பு.
  15. சிந்துவெளி நாகரிகம் தொடர்பில் சைவநெறி பாடப்பரப்பில் பாடசாலையில் படிக்கும் (ஆண்டு 9 இல்) போதே... இது தொடர்பில் ஆசிரியரிடம் கேட்டிருக்கிறேன். சிந்துவெளி அடையாளங்கள் தமிழர் மரபை ஒட்டி காணப்படுகிறதே என்று.. குறிப்பாக பசு பதி பாசம் வடிவங்களில் இறையை காண்பது உட்பட. அதற்கு ஆசிரியரால் அன்று விளக்கம் தர முடியவில்லை. எதையோ சொல்லி சமாளிச்சிட்டார். இன்று சமூக வலையிலும் அன்றைய என் கேள்விக்கு விடை தேடுகிறார்கள். கீழடியில் காணப்பட்ட அடையாளச் சின்னங்களோடு சிந்து வெளி சின்னங்கள் பொருந்தி வருவதும் ஆராயப்பட்டு வருகிறது. இந்த கட்டுரைக்குள்.. தமிழர் மரபுக்கு அப்பால்.. உருவகிக்கப்பட்ட போலித் திராவிடத்தை புகுத்தாமல்.. தமிழர் மரபுகளோடு சம்பந்தப்படுத்திச் சென்றிருந்தால் சிறப்பு என்று தோன்றுகிறது. அதுதான் நியாயமும் கூட. திராவிடம் என்பது கட்டியமைப்பட்ட மாயை.
  16. மீண்டும் பழைய முறையில்.. ஆனால் புதுப்பிக்கப்பட்ட வகையில் இதனை இலங்கை குடியகழ்வு குடிவரவு திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதே சிறப்பு.
  17. கறுப்புப் பட்டியலில் இடுவதால் மட்டும் பிரச்சனை தீராது. ஆபத்தான புகை வெளியிடுவதை குறைக்கக் கூடிய ஊக்கி மாற்றிகள் பொருத்தப்படுவது.. மின்சார வாகனங்களின் பாவனையை அதிகரிப்பது.. மின்சார வாகனக் கொள்வனவுக்கு மானியம்.. என்று பல வகைகளில் இது அமுலாகப்பட வேண்டும்.
  18. வேகக்கட்டுப்பாட்டு விதிகள் மட்டும் போதாது வீதி மீறுபவர்கள் மீது உடனடி நடவடிக்கை அவசியம். இதற்கு சொறீலங்கா பொலிஸ் சரிப்பட்டு வராது. ஏ ஐ உதவியுடன் கூடிய தானியங்கி கமராக்கள் மூலம்.. போக்குவரத்து அமைச்சுக்குள் உட்பட்ட போக்குவரத்து விதி அமுலாக்க துறை சுயாதீனமாக இயங்கும் நிலை அவசியம். சொறீலங்கா பொலிஸ் உதவி தேவை என்றால் மட்டும் பெறப்படலாம்.
  19. அமிர்தலிங்கத்தின் கொள்கைக்கு திரண்ட பெரும் திரளானவர்களைக் காண கண்கள் ஆயிரம் தேவை. கூடின கூட்டமே சாட்சி.. இவர்களின் இனக்கொலைக் கொள்கைகள் பற்றிய உண்மைகளைச் சொல்ல.
  20. கிழக்கு லண்டன்... நியுகாம் தொழிற்கட்சி கவுன்சிலராக பல ஆண்டுகள் மக்களால் தெரிவு செய்யப்பட்டு வந்த போல் சத்தியநேசன் உடல்நலன் குறைவு காரணமாக கடந்த 5ம் திகதி காலமானார். இவர் அடிப்படையில் புளொட் அமைப்புச் சார்ந்தவராக இருந்தாலும்.. புலம்பெயர் மண்ணில்.. தமிழீழத்துக்கு சார்பான நிகழ்வுகளை முன்னின்று நடத்துவதிலும் பிரித்தானியர்களிடம் தமிழ் மக்களின் பிரச்சனைகளைக் கொண்டு செல்வதிலும் முக்கிய பங்காற்றியவர் ஆவார். 1980 களில் இருந்து அகதிகளாக வந்த தமிழர்களுக்கு அரசியல் தஞ்சம் கிடைக்க பல வழிகளிலும் இவர் தன் உதவிகளை வழங்கி வந்திருப்பது தெரிந்ததே. கடந்த சில காலங்களாக தாயகத்தில் சில வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து வந்திருக்கிறார். இறுதிச் சடங்குகள் பற்றிய விபரங்கள் இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.
  21. ஒரு நாள் உண்ணாவிரதி கருணாநிதி.. ஈழத்தமிழர் துரோகி கருணாநிதி.. சிங்களன் மகிந்தவின் பொன்னாடைத் தோழன் கருணாநிதி.. ஈழ இரத்தம் குடி பிசாசு.. சோனியாவின் சொக்கத்தங்கம் கருணாநிதி.. இப்படி.. இன்னும் பல வகையில் நீளக் கூடியது இப்பாடல். எழுதியவருக்கும் பாடியவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
  22. தொழிற்கட்சி ஈழத்தமிழருக்கு ஆற்றிய கைங்கரியங்கள்.. 1. விடுதலைப்புலிகள் மீதான தடை - ரொனி பிளேயர். 2. தமிழர் புனர்வாழ்வுக்கழகம் மீதான தடையும் சொத்துப் பறிப்பும் 3. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தொடர்பில் பாராமுகத்துடனாக ஊக்குவிப்பு - ஹோடன் பிரவுன். சர்வதேசத்தில்.. 1. ஈராக் மீதான பேரழிவு ஆயுத போலிக் கூச்ச போர் - ரொனி பிளேயர். உள்ளூரில்.. 1. பல அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தியது. 2. கிழக்கு ஐரோப்பியர்களுக்கு பிரித்தானியாவை திறந்து விட்டது. 3. சலுகை அளிப்பு என்ற பெயரில் வரி உயர்வுக்கு வழி சமைத்தது. 4. வீட்டு கடன் சுமையை அதிகரித்தது. 5. மாணவர் கடன் சுமையை அதிகரித்தது. 7. தேசிய சுகாதார சேவைக்குள் தனியார் மயப்படுத்தலை புகுத்தியதும் இன்றி காத்திருப்பு காலம் இவர்கள் காலத்தில் தான் நீடிக்க முடிந்தது. 8. மாலை 5 மணிக்கு பின்னரான வேலை நேர கூடிய ஊதியத்தை மாலை 8 மணி ஆக்கி இல்லாமல் செய்தமை. 9. தொழிலாளர்கள் நலனில் அக்கறையின்மை போக்கை கடைப்பித்ததோடு தேசிய விடுமுறை நாட்களையும் வேலை நாட்கள் ஆக்கியது. இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். என்ன மக்களுக்கு மறதி அதிகம்.. தேர்வுக்கு ஒரு மாற்றும் இல்லை. பேயை விரட்ட மீண்டும் பிசாசை இழுத்து வந்து கதிரையில் இருத்தி இருக்கினம். விளைவை இன்னும் சில வாரங்களிலேயே காணலாம்.
  23. சுமந்திரன் சம்பந்தனை மட்டுமல்ல... வாக்களித்த மக்களையும் நிர்கதியாய் விட்டவர் தானே. சிங்களத்தோடு வாழ்வது பெருமை என்று அடித்துவிட்ட விண்ணர் அல்லவா.
  24. சம்பந்தன் ரகசியமாகச் செய்து வந்த ஹிந்திய - சிங்கள விசுவாசத்தொழிலை இவரிடம் இன்னும் விரிவாகக் கையளிக்க கூப்பிட்டிருப்பினம். அதில் இவருக்கு மிக அனுபவம் உண்டல்லவா.
  25. பிரான்ஸ் முதற்கட்ட பாராளுமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்.. அதிபர் மக்ரோனின் கட்சி மரண அடி வாங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டபடியுள்ளன. அதேவேளை பிரான்ஸ் தேசியவாத வலது சாரிகள் அமோக வெற்றிகளை பெற்று வருகின்றனர். ஏலவே அமெரிக்காவில் பைடனின் உளறல் தேர்தல் பேச்சு அவரின் வெற்றியை கேள்விக்குறியாக்கிவிட்டுள்ள நிலையில்.. மேற்குலக புட்டின் எதிர்பாளர்கள் நடப்பு தேர்தல்களில் மக்களால் நிராகரிக்கப்பட்டு வரும் நிலையே காணப்படுவதோடு.. தேசியவாதம் எழுச்சி பெற்று வருகிறது. https://www.bbc.co.uk/news/live/cn087x77g1dt

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.