Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. இவரின் மனைவி இந்திய பிரஜை அல்லவா? இவ்வளவு பணத்தை ஒருவர் முதலிடுவது இந்தியாவுக்கு நட்டமா?
  2. கண்ணிரண்டும் மின்ன மின்ன ஆண்டவன் கட்டளையிலிருந்து PB சிறினிவாஸ் &LR ஈஸ்வரி
  3. மார்க் கார்ணி வெற்றி: ட்றூடோவின் பாவ மன்னிப்பு சிவதாசன் நேற்று கனடிய தலைநகர் ஒட்டாவாவில் நடைபெற்ற லிபரல் கட்சித் தலைவர் தேர்தலில் 85.9% வாக்குகளைப் பெற்று மார்க் கார்ணி தெரிவாகியிருக்கிறார். அவரது வெற்றி எதிர்பார்க்கப்பட்டதாயினும் இப்படியொரு பாரிய வெற்றியாக அமையுமென்று வரும் எதிர்பார்த்திருக்கவில்லை. முன்னாள் உதவிப் பிரதமர் கிறிஸ்டியா ஃபிறீலாண்டுக்கு 8% வாக்குகளை அளித்து மானபங்கப்படுத்திவிட்டது கட்சி. ஃபிறீலாண்டினது வீழ்ச்சிக்கு அவரே தான் முழுப் பொறுப்பையும் ஏற்கவேண்டும். ஜஸ்டின் ட்றூடோவின் சரிந்துவந்த செல்வாக்கைப் பயன்படுத்தி தான் முன்னே வந்துவிடலாம் என அவர் போட்டிருந்த தப்புக்கணக்குக்கு கிடைத்த விடை அது. ட்றூடோவின் மகிமையைப் பாவித்து அள்ளுப்பட்டு வந்த, ட்றூடோவால் பலன் பெற்ற, பல லிபரல் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரது படகு கவிழப்போகிறது எனத் தெரிந்ததும் அவரைத் தனியே விட்டுப் பாய முயன்றார்கள். அதில் முன்னணியில் இருந்தவர் ஃபிறீலாண்ட். அவரோடு தொடர்ந்தும் துணை நின்றவர்கள் மெலனி ஜோலி மற்றும் டொமினிக் லெப்ளாங்க் போன்றவர்கள். பின்னணியிலிருந்து அவருக்கு ஆதரவு தந்தவர் ட்றூடோவின் நீண்டகால ஆலோசகரான மார்க் கார்ணி. ட்றூடோவுக்கு பழிவாங்கும் குணம் இருப்பதென்பது இதற்கு முன்னரும் பல சம்பவங்களால் நிரூபிக்கப்பட்ட ஒன்று. நிதியமைச்சராக இருந்த ஃபிறீலாண்ட் நிதி, பொருளாதார விடயங்களில் நிபுணத்துவம் பெற்றவரல்ல. அவர் ஒரு ஊடகவியலாளராக இருந்து அரசியலுக்குள் நுழைந்தவர். லிபரல் கட்சியின் பல பிரபலமற்ற கொள்கைகளில் ஒன்றான ‘கரி வரி’ யின் பாரம் முழுவதையும் அவரே தாங்கவேண்டி ஏற்பட்டது. இது தொடர்பாக ட்றூடோவுடன் உரசிக்கொண்டதன் விளைவு அதல பாதாளத்துக்கு விழுத்தியிருக்கிறது. கார்ணியை உச்சிக்குக் கொண்டு வருவதன் மூலம் தான் இழந்த பள பளப்பை மீளப்பெற்றுவிடமுடியும் என்ற ட்றூடோவின் கணிப்பு வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கு ட்றம்பிற்கே அவர் நன்றி சொல்ல வேண்டும். தலைமைப் பதவிக்குப் போட்டியிட்ட நால்வரில் ட்றம்ப் போன்ற ஒரு கொடுங்கோலரை எதிர்கொள்ளக்கூடிய வல்லமை மார்க் கார்ணிக்கே உண்டு என வாக்காளப் பெருமக்கள் உணர்ந்திருக்க வாய்ப்புண்டு, அத்தோடு establishment க்கும் அவரே தான் தெரிவு. ட்றம்பிற்கும் ஐரோப்பாவுக்குமிடையேயான முறுகல் நிலையில் பலமான கனடா ஐரோப்பாவுக்கு அவசியம். எனவே அவரது தேர்தல் செலவுகளுக்கென இந்த establishment அள்ளிக் கொடுத்திருந்தமையையும் கவனிக்க வேண்டும். கடந்த வாரங்களில் ஐரோப்பாவில் நடைபெற்ற பாதுகாப்பு உச்சி மாநாட்டில் ட்றூடோவுக்கு வழங்கப்பட்ட மரியாதை ட்றம்பிற்கு வழங்கப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கப்படவேண்டும். எனவே கார்ணியின் வெற்றி ட்றூடோவின் வெற்றியேதான். கார்ணியின் வருகையால் லிபரல் கட்சி இன்னுமொரு தவணை ஆட்சியமைத்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. ட்றூடோவின் படகிலிருந்து பாய்ந்து ஓடியவர்கள் மிதப்பார்களோ தெரியாது. இதில் அதிர்ஷ்டமில்லாதவர் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பிய்ர் பொய்லியேவ் தான். பாவம். எப்படித்தான் உருமாற்றங்களைச் செய்தாலென்ன இளம் வாக்காளரை அவரால் கவரமுடியாமலிருக்கிறது. ட்றூடோவின் கரி வரியை வைத்துக்கொண்டு கரை சேரலாம் என அவரும் அவரது ஆலோசக சேனையும் நினைத்திருக்கலாம். கரி வரியை விட மக்களுக்கு ட்றம்ப் என்ற கொடுங்கோலரே முக்கியம் என்பதை டக் ஃபோர்ட் போன்ற கன்சர்வேட்டிவ் காரர் சிக்கெனப் பிடித்த விவேகம் பொய்லியேவுக்கும் அவரது சேனைக்கும் புலப்படவில்லை. கார்ணியின் வெற்றிக்குப் பிறகு கரி வரியைத் தூக்கிப்பிடித்துக்கொண்டு ஓட முயற்சிக்கிறார் பொய்லியேவ். ஆனால் “நான் கரி வரியை இல்லாமற் செய்யப் போகிறேன்” என வந்ததும் வராததுமாக கார்ணி அறிவித்ததன் மூலம் முதலாவது பந்திலேயே அவுட்டாக்கி விட்டார். நிர்ணயிக்கப்பட்ட தேர்தல் திகதி நடைமுறையின்படி எதிர்வரும் அக்டோபர் 20 (2025) இல் 45 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால் ஏறிவரும் லிபரல் செல்வாக்கில் மிதக்கும் கார்ணி மிக விரைவில் தேர்தலை நடத்துமாறு ஆளுனருக்குப் பரிந்துரைக்கலாம். தெற்கில் அடித்துவரும் சூறாவளி எப்படியான விளைவுகளைக் கொண்டுவருமோ தெரியாது. ஆனால் கனடியர்களின் தேசிய உணர்வை உச்சத்துக்குக் கொண்டுபோயிருக்கிறது. ட்றூடோவின் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விட்டன. அடுத்த தேர்தலில் கார்ணி ஆட்சியமைப்பாராகில் அது ட்ற்டோவுக்கான வெற்றி. ட்றம்ப் ஒரு சுத்துமாத்து வண்டில் வியாபாரி. நேர்மை என்பதை அறியாதவர். ஏமாற்று வேலைகளால் தான் கட்டியெழுப்பிய வணிக சாம்ராஜ்யத்தைப்போல நாட்டையும் கட்டி எழுப்பலாம் எனக் கனவு காணும் ஒருவர். இறக்குமதித் தீர்வை மூலம் கனடிய பொருளாதாரத்தை முடக்கி அதை தனது 51 ஆவது மானிலமாக்கிவிடலாமெனக் கனவு காண்பவர். கார்ணியின் வெற்றிப் பேச்சின்போது “ஹொக்கியைப் போலவே வர்த்தகத்திலும் கனடா அமெரிக்காவை வென்று விடும்” என்பதை அமெரிக்கர்களுக்கு விடும் எச்சரிக்கை போல் ட்றம்பிற்கு விடுத்திருக்கிறார். ஆனால் பொய்லியேவோ இன்னும் கரி வரியைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார். எனவே அடுத்தடுத்த வாரங்களில் பொதுத் தேர்தலுக்கான அறிவித்தல் விடப்படும் என எதிர்பார்க்கலாம். லிபரல் கட்சித் தலைவர் தேர்வில் 150,000 பேர் வாக்களித்திருக்கிறார்கள். வெற்றி விழாவில் 1,600 பேர் பங்குபற்றி ட்றூடோவுக்கு பிரியாவிடை வழங்கியிருக்கிறார்கள். அவர் 2015 இல் அவர் வந்தபோது கர்ச்சித்த அதே மிடுக்கோடுதான் விடைபெற்றும் போகிறார். அவரது பல progressive கொள்கைகள் தோல்வி கண்டிருக்கின்றன. அதற்கு அவர் மட்டும் காரணமில்லை. பல மர்ம விசைகளின் நூற்பொம்மைகளாக இருக்காவிட்டால் ஆசனம் பறிபோய்விடும். கார்ணிக்கும் அதே நிலைமை தான். கார்ணி பிறப்பால் ஒரு பிரித்தானியர். பிரித்தானிய, கனடிய, ஐரிஷ் குடியுரிமைகளுக்குச் சொந்தக்காரர். அவரை முன்தள்ளியமைக்கு ஐரோப்பிய சக்திகளுக்கு ஒரு பங்குண்டு. ட்றம்பின் ரஷ்ய சார்பு நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படும் வரை கார்ணி போன்றோரே அவர்களுக்குத் தேவை, பொய்லியேவ் அல்ல. வருட ஆரம்பத்தில் 20 புள்ளிகள் பின்னால் இருந்த லிபரல் கட்சி இப்போது கன்சர்வேட்டிவ் கட்சியை விட மேலே போகும் நிலையில் இருக்கிறது. அதிர்ச்சி தரும் மாற்றம். https://veedu.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b1/?fbclid=IwY2xjawI8aBVleHRuA2FlbQIxMQABHbfd6FQ4hx622f3oeATieMDZGi6mWkEZxxzvzc4_KXNMyriMOpCL03z2dQ_aem_LoqgEIa0MDr-5owa877yaA
  4. மீண்டும் எமது நாட்டவரை தான் திருமணம் செய்துள்ளாரா? ( அதாவது ஜேர்மனில் பிறந்து வளர்ந்தவரா)
  5. போட்டியில்முதல் மூன்று இடங்களை பிடித்த புலவர், நீர்வேலியான், நியாயம் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். போட்டியை வழமை போல் இனிதுற நடாத்திய கிருபனுக்கு நன்றிகள் பல. பல போட்டிகளை தொடர்ந்து நடாத்தும் கிருபனுக்கு மீண்டும் நன்றிகள். உற்சாகத்துடன் பங்கு பற்றிய அனைவரும் ஐபிஎல் போட்டியில் சந்திக்கலாம்.
  6. Doechii - Anxiety (Lyrics) Doechii - Anxiety (Visualizer)
  7. செந்தூர் தமிழ் Thas Re 7h · இது 1987 - 90 காலப்பகுதியில் பியகமவில் செயல்பட்டிருந்த பட்டலந்த வதைக்கூடத்தின் புகைப்படமாகும். புகைப்படத்தின் நடுவில் இருப்பவர், பயங்கர காலத்தில் கைது செய்யப்பட்டு வதைக்கூடத்திற்கு கொண்டுவரப்பட்ட கைதியாவார். இரு பக்கங்களிலும் ஆயுதம் ஏந்தியிருப்பவர்கள், அரச பாதுகாப்பு படையினருக்கு உட்பட்டவர்கள் அல்ல என்பது உங்களுக்குத் தெளிவாக தெரியும். இவர்கள், அற்கால காபினட் அமைச்சராக இருந்த ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய நண்பரான போலீஸ் அதிகாரி டக்லஸ் பீரிஸின் இரு மகன்கள். கைது செய்யப்பட்டு முகாமிற்கு அழைத்துவரப்பட்ட கைதிகளின் கை, கால்களை உடைத்து சித்திரவதை செய்வது இவர்கள் மேற்கொண்ட ஒரு விளையாட்டு என எடுத்துக் கொள்ளலாம். பின்னாளில் ஆட்சி மாற்றத்துடன், டக்லஸ் பீரிஸ் இங்கிலாந்திற்குத் தப்பிச் சென்றார். பின்னர் நீதிமன்றத்தின் சிறப்பு நடவடிக்கையால், அவர் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு, பட்டலந்த ஆணைக்குழுவின் முன்னிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போதிலும், சந்திரிகா குமாரதுங்க அரசின் அலட்சியம் காரணமாக, அந்த நடவடிக்கைகள் தோல்வியடைந்தன. டக்லஸ் பீரிஸ் பின்னர் உயிரிழந்தார். அவர் மகன்கள் இருவரும் ரஷ்யாவிற்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அவர்களில் ஒருவன் அங்கே தீ விபத்தில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டக்லஸ் பீரிஸின் நெருங்கிய நண்பரான அந்த காபினட் அமைச்சர், இந்த நாட்டின் எட்டாவது ஜனாதிபதி ஆனார். அந்த காலத்தில் ரணிலின் குற்றங்களை அம்பலப்படுத்த வந்த சந்திரிகா குமாரதுங்க, தற்காலத்தில் ரணிலை ஜனாதிபதி கதிரையில் அமர்த்த மறைமுகமாக உதவி செய்தார் அந்த காலத்தில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அரசு, 1987ஆம் ஆண்டு முதல் மக்கள் விடுதலைப் முண்ணனியை (JVP) இரத்தமும் இரும்பும் கொண்டு அடக்க முயற்சிகள் மேற்கொண்டது. மாத்தறையில் H.R. பியசிறி, வட மத்திய மாகாணத்தில் நெல்சன், M.S. அதிகாரி, மஹிந்தசோம, களுத்துறையில் ரணவக்க, காலியில் M.S. அமரசிறி, குருநாகலில் காமினி ஜயவிக்ரம பெரேரா, ஹலாவத்த, புத்தளம் பகுதிகளில் பெப்டஸ் பெரேரா, ஜான் அமரதுங்க, ஜோசப் மைக்கேல் பெரேரா, கம்பஹாவில் போல் பெரேரா, இவர்கள் ஒவ்வொருவருக்கும் J.R. ஜெயவர்தன அரசு அதிகாரங்களை வழங்கியது. பின்னர், கொழும்பு மாவட்டத்தின் அடக்குமுறையை ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைத்தது. 1987 ஆம் ஆண்டில், பட்டலந்த வதைக்கூடத்தை நிறுவியது அவரே. அதற்காக, கொழும்பிற்கு அருகில் இருந்த சில அரசியல் ஆதரவாளர்களின் கட்டளைக்கிணங்கி, எந்தவொரு தீவிர செயலும் செய்யத் தயங்காத காவல்துறையினரை தேர்ந்தெடுத்தார். அந்த தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவராக கான்ஸ்டபிள் டக்லஸ் பீரிஸ் இருந்தார். அவர் ஒரு மனித உருவை உடைய மிருகம் எனக் கூறலாம். பட்டலந்த வதைக்கூடத்தின் தலைவராக, ரணில் விக்ரமசிங்கவினால் டக்ளஸ் பீரிஸ் உயர் காவல் துறை அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். இதற்காக காவல்துறை விதிகளையும் சட்டங்களையும் முற்றிலும் மீறப்பட்டது. இந்த பதவி உயர்வுக்கு R. பிரேமதாச, ஜோசப் மைக்கேல், ஜான் அமரதுங்க ஆகியோர் முக்கிய பங்கை வகித்தனர். பட்டலந்த வத்காகாரத்திற்குக் கொண்டுவரப்பட்ட 5000க்கும் மேற்பட்ட தேசப்பற்றுள்ள பொதுமக்களை கொலை செய்ய, ரணிலின் நேரடி கட்டளையால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த கொடூர கொலைகள் மேற்கொண்ட முக்கிய நபர், இந்த புகைப்படத்தில் உள்ள குழந்தைகளின் தந்தையான டக்லஸ் பீரிஸ்தான். 2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டார் என்ற ஒரே வாதத்தை வைத்து ரணிலை மாபெரும் புத்திசாலியாக சிலர் சித்தரிக்கிறார்கள். ஆனால் அவர் நாட்டை மீட்டார் என்பதை விட நாட்டின் பல விலைமதிப்பற்ற இடங்களையும், சொத்துக்களையும் விற்று நாட்டை மீட்டார் என்று கூறுவது சாளச் சிறந்தது என நினைக்கிறேன். எது எப்படியோ ரணிலின் ஆரம்ப கால அரசியல் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் பல அப்பாவிகளின் இரத்தக் கறைகள் அவர் ஆடையில் பதிந்து தான் இருக்கிறது. எவ்வளவு நல்லவனாக நீங்கள் அவரை சித்தரிக்க முயன்றாலும் அவர் ஓர் சிறிய ஹிட்லர் தான். நன்றி: சமூக வலைத்தளம்
  8. மலையகத்தில் முத்துமாரியம்மன் எனும் பெண்தெய்வ வழிபாடு: நாவலப்பிட்டி பிரதேசத்தை முன்வைத்து பெண் தெய்வ வழிபாட்டு மரபு பெண்தெய்வ வழிபாட்டு மரபு புதிய கற்காலம் தொட்டே உலகளாவிய ரீதியல் நிலைபெற்றிருந்தமையை அறியலாம். அகழ்வாராய்வுகளில் பெண் தெய்வங்களின் உருவச்சிலைகள் கிடைக்கப்பெற்றமை தக்க சான்றுகளாகும். எகிப்தில் ‘இசிஸ்’, ‘சிபிஸ்’ போன்ற பெண் தெய்வ வழிபாடுகள், சிரியாவில் ‘அஸ்தாத்’ எனும் பெண் தெய்வ வழிபாடு போன்ற பாரம்பரியங்களும் குறிப்பிடத்தக்கவைகளாகும். “நதிக்கரை நாகரிகங்களில் நிலவிய தாய்வழிச் சமூக அமைப்பின் காரணமாகவே பெண் தெய்வ வழிபாட்டு மரபு தோன்றியிருக்கிறது” என்பர் ஆய்வாளர்கள். திராவிடர்களின் முக்கிய தடமான சிந்துவெளி நாகரிகத்தை ஆய்வு செய்த ஆய்வாளரான சேர் ஜோன் மார்சலின் “சிந்துவெளிக் கால மக்கள் தாய்த் தெய்வ வழிபாட்டு மரபினையே கொண்டிருந்தார்கள்” என்ற கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கீழடி ஆய்வுகள் தொடர்பான முடிவுகளும் இதற்கு வலிமை சேர்க்குமாற்றை அவதானிக்கலாம். வேதங்களில் உசை, இராத்திரி, அதிதி போன்ற பெண் தெய்வங்களும், பிற்பட்ட காலங்களில் உமா, அம்பிகா, ஹிமாபதி, பார்வதி, துர்க்கா, காளி போன்ற பெண் தெய்வங்களும் செல்வாக்குப் பெற்று விளங்கின. ஆரியப் பண்பாட்டிலுள்ள பெண் தெய்வங்களுக்கும், திராவிடப் பண்பாட்டிலுள்ள பெண் தெய்வங்களுக்கும் இடையில் வேறுபாடுகள் காணப்பட்டன. ஆயினும், வேத காலத்தின் பின்னர் இவை இரண்டிற்கும் இடையில் ஒற்றுமைகள் ஏற்பட்டன என்ற கருத்தும் கவனிக்கத்தக்கதாகும். சைவசமயத்துடன் தொடர்புபட்ட தொண்ணூறுக்கும் மேற்பட்ட பெண் தெய்வங்கள் காணப்படுவதாக ஆய்வாளர்கள் வரையறுப்பர். இயற்கையின் ஆற்றல்களையும் சீற்றங்களையும் அனுபவித்த மனிதகுலம் அதன் ஊடாக படிப்பினைகளைத் தனதாக்கிக் கொண்டது. அவர்கள் பெற்ற அனுபவங்கள் அச்சத்தை ஏற்படுத்தலாயின. பெற்றுக்கொண்ட அச்ச அனுபவத்தின் காரணமாக புதிய தெய்வங்களை உருவாக்கிக்கொண்டார்கள். சங்ககாலம் குறிப்பிடும் சூர், அணங்கு ஆகியவற்றின் உருவாக்கமும் இத்தகைய அனுபவத்தின் வாயிலானதாகும். காலப்போக்கில் சூரும் அணங்கும் மனித வடிவில் கொற்றவையாக உருப்பெறுகிறது. கொற்றவையே தமிழர்களின் புராதன வழிபாட்டிற்குறிய மூல பெண் தெய்வமாகிறது. ‘கொற்றவை’ பழையோள், பெருங்காட்டுக் கொற்றி, காடுகிழாள், காடுகொழு செல்வி, கானமர் செல்வி, சூலி, துணங்கையஞ் செல்வி என்ற பெயர்களாலும் படிம வளர்ச்சி காண்கிறாள். இப்படிம வளர்ச்சி உமை, துர்க்கை என்ற பெண் தெய்வங்களுடனும் இணைத்து நோக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அம்மன் என்பதை ‘சீமாட்டி’, ‘உயர்வான பெண்’ எனும் பொருள்களோடும் நோக்குவர். இதற்குச் சமானமாக ‘செல்வி’ என்ற பெயரும் அமைகிறது. கொற்றவையின் படிம வளர்ச்சியில் இப்பெயர் பல இடங்களில் பிரயோகத்தில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. திராவிடப் பண்பாட்டு மரபுடன், ஆரியப் பண்பாட்டு மரபு கலந்த நிலையிலேயே தமிழும், தமிழர் சமயமும் கலப்புற்றமை கவனிக்கத்தக்கது. பெண் தெய்வங்களின் தோற்றத்திற்குப் பின்னணியாக அமைந்த காரணங்கள் சமூகம் ஏற்றத்தாழ்வுகளுடனேயே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அவ் ஏற்றத்தாழ்வுகள் நிகழ்வதற்கு பல காரணிகள் ஏதுவாக அமைகின்றன. ‘நாகரிக விளக்கின் ஒளியைப்பெறும் மேல்நிலை மக்களை மேற்கத்திய சமூகவியலாளர்கள் மேலோர் என்று குறிப்பிடுகின்றனர்.’ அவர்கள் கருத்துப்படி இம்மேலோர்கள் சமுதாய மேலடுக்கில் இருந்துகொண்டு, சமுதாயத்தினை ஆள்வோர்களாக அமைகின்றனர். ‘இவர்கள் பரம்பரை பரம்பரையாக மேலோர்களாக இருக்கலாம், அல்லது அடிமட்டத்திலுள்ள ஒரு மனிதன் காலப்போக்கில் மேலோனாக மாறலாம்’ என்ற ஆ. சிவசுப்ரமணியத்தின் கூற்று கவனிக்கத்தக்கது. அவ்வாறே இந்தியச்சூழலில் அடித்தள மக்கள் பற்றிய அவரது பின்வரும் கருத்துநிலையும் குறிப்பிடத்தக்கதாகும். ‘சாதி, செய்யும் தொழில், அரசியலாதிக்கம், பாலியல்நிலை, பொருளாதார நிலை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் அல்லது அனைத்து நிலைகளிலும் தாழ்ந்திருக்கும் மக்களே அடித்தள மக்கள்.’ தமிழ்நாட்டில் பெரும்பாலும் மக்களால் வணக்கத்திற்குரிய தெய்வங்களாகப் போற்றப்படுபவர்கள் கொலையுண்ட மானிடர்களாகவே காணப்படுகின்றனர். பொதுநலனில் வேறுபாடுகளைக் களைய முற்பட்டவர்கள் கொலையுண்டதன் பின்னரே இந்நிலைக்கு உயர்த்தப்பட்டனர். அதனடிப்படையில் பெண்தெய்வங்கள், பாலியல் தொல்லைகளில் இருந்து தன்னை மீட்டுக்கொண்ட நிலையிலேயே உருப்பெறுகின்றனர். மேலோர், அடித்தள மக்களாகிய பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை பிரயோகித்த வரலாற்றை தமிழ்ச் சமூகம் தொடர்ச்சியாகவே அனுபவித்து வந்துள்ளது. பெண் தெய்வங்களை தாய்த் தெய்வங்கள், கன்னித் தெய்வங்கள் என வரையறுப்பர். மேலாதிக்கத்தைச் செலுத்தும் தரப்பினர் அடித்தட்டு மக்களான பெண்களை பாலியல் இச்சைக்கான பொருளாகப் பிரயோகிக்கும் விடயத்தில் மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்டுள்ளனர். அவ்வாறான சந்தர்ப்பங்களில் மூன்று வழிகளில் ‘கற்புநிலை’ பாதுகாக்கப்பட்டிருக்கிறது. பாதிப்பு நடக்கும் ஊரில் இருந்து வேறு ஊருக்குத் தப்பிச்செல்லும் முயற்சி இடம்பெற்றுள்ளது. அம்முயற்சி, வெற்றியளிப்பதுமுண்டு; தப்பிச்செல்லும் பெண்கள் கொலையாவதும் உண்டு. சில சந்தர்ப்பங்களில் அவ்வாறான பாதிப்பு நிலையை அறிந்து, உறவினர்களே பெண்ணைகளைக் கொலை செய்வதுமுண்டு. இல்லாவிட்டால் அப்பெண்களைத் தற்கொலை செய்வதற்குத் தூண்டுவதுமுண்டு. இதனால் தங்கள் குலப்பெருமை பாதுகாக்கப்பட்டதாக எண்ணித் திருப்தியடைந்து, மறைந்த பெண்களுக்கு நடுகல் வைத்து அடையாளப்படுத்தி, தெய்வங்களாக மாற்றிய வரலாற்றைச் தமிழ்ச்சமூகம் கொண்டுள்ளது. இதனை பொன்னு மாரியம்மன், போத்தி அம்மன், புதுப்பட்டி அம்மன் ஆலய வரலாறுகள் புலப்படுத்துவதைக் காணலாம். இலங்கையில் மலையகம் எனும் சமூக உருவாக்கம் இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கைக்குப் புலம்பெயர்ந்து இருநூறு வருடங்கள் (1823-2023) நிறைவாகியுள்ளன. பிரித்தானியர்களதும், சுதந்திர இலங்கையினதும் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாய் இம்மக்களே திகழ்ந்துள்ளார்கள். 1823இற்கு முன்னரே புலப்பெயர்வுகள் இடம்பெற்றிருந்தாலும், இவ்வருடமே அவை முனைப்புப் பெறுவதாக அமைந்தன. நீண்ட காலமாக, இந்த மக்கள் வெறும் உழைப்பிற்காகவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளனர். டொனமூர் மற்றும் சோல்பரி அரசியலமைப்புகள் அளித்த சில நிவாரணங்கள் ஓரளவு திருப்தியை ஏற்படுத்தினாலும், பின்னர் நடந்த வாக்குரிமைப் பறிப்பு, பிரஜாவுரிமைப் பறிப்பு, 1964 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் போன்ற கடுமையான அனுபவங்கள், இவர்களின் வாழ்வியல் மீது தீவிரமான தாக்கங்களை ஏற்படுத்தின. ஐக்கிய நாடுகள் சபை தோன்றி, உலகளவில் மனித உரிமை குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்ட காலகட்டத்திலும், இந்த மக்களின் நிலைமை மோசமாகவே இருந்தது. பெரும்பான்மையினச் சமூகத்தின் ஆத்திரத்திற்கு இலக்காகி, பல்வேறு அநீதிகளுக்கும் உட்பட்ட சமூகமாக இவர்கள் இருந்து வந்துள்ளனர். அறுபதுகளுக்குப் பிறகு, எஞ்சியிருந்த மக்கள் கூட்டம் மீளெழுச்சிக்கான உந்துதலைப் பெற்றது. ஏக்கங்கள் ஒரு வகை உந்துதலாக மாறி, பாதிப்புகள் குறித்துப் பேசவும், எழுதவும் மக்கள் முனைந்தார்கள். அதன் தொடர்ச்சியாக, ‘மலையகம்’ எனும் சமூக உருவாக்கம் நிலைபெற்றது. தொழிலாளர்கள் என்ற நிலையைத் தாண்டி, வர்த்தகத் துறை, நகர வளர்ச்சி, நகரம் நோக்கிய புலப்பெயர்வு, அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் போன்ற தளங்களிலும் இவர்களின் சமூக அசைவியக்கம் விரிவடைந்தது. ‘இந்திய வம்சாவளித் தமிழர்கள்’ என்ற சட்டரீதியான பெயர் இருந்தபோதும், ‘மலையக மக்கள்’ என்ற அடையாளத்தை அவர்கள் தாமாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கினர். சட்டரீதியான அடையாளத்தை விட, சமூகம் சார்ந்த அடையாளப் பெயருக்கு அவர்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். ‘மலையகம்’ என்ற சொல்லின் அர்த்தம், புவியியல் வரையறையைத் தாண்டி, எண்ணக்கரு சார்ந்த அடையாளமாக மாறுகிறது. தோட்டங்களைத் தாண்டி, நகரங்களைத் தாண்டி, பிரதேசங்களைத் தாண்டி, தேசங்களைக் கடந்து, ‘மலையகம்’ ஒரு எண்ணரீதியான வலையமைப்பாக விரிவடைந்து வருகிறது. மலையக மக்களில் பெண் தெய்வ வழிபாடு தொடர்பான அவதானம் சங்ககாலம் தொடக்கம் பெண் தெய்வங்கள் வழிபாட்டிற்குரியதாக அமையப்பெற்றதை அறிகிறோம். அது போலவே மலையக மக்களின் நீண்ட காலப் பயில்நிலைக்குரிய கூத்துகளாக விளங்கும் காமன் கூத்து, அருச்சுனன் தபசு, பொன்னர் – சங்கர் ஆகிய கூத்துகளிலும் பெண் பாத்திரங்கள் அங்கம் வகிப்பதையும், அவற்றுள் வழிபாட்டிற்குரிய பெண் தெய்வங்களும் உள்ளடங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. சோழர் காலத்திற்குரிய ‘பொன்னர் – சங்கர்’ வரலாற்றோடு ‘செல்லாண்டி அம்மன்’ வழிபாட்டிற்கும் தொடர்பு உள்ளதைக் காணலாம். பின்னாளில் இக்கூத்தின் பிரதான பாத்திரமான தங்காள், ‘தங்காயி’ (அருக்காணி) என்ற வழிபாட்டிற்குரியவராக உயர்த்தப்படுகின்றமை கவனிக்கத்தக்கது. காமன் கூத்தில் மாரியம்மன், காளியம்மன், ரதி, சீதை, வள்ளி, தெய்வானை, உமை போன்ற பெண்கள் பாத்திரங்களாக்கப்படுவதுடன் அப் பாத்திரங்களும் வழிபாட்டிற்குரிய அந்தஸ்தைப் பெற்று நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறே அருச்சுனன் தபசில் திரௌபதி அம்மன், காளி, பார்வதி ஆகிய பெண் தெய்வங்கள் தொடர்புபடுகின்றமையும், ‘பாஞ்சாலி’ என்ற பாத்திரம் பின்னாளில் வழிபாட்டிற்குரிய பாத்திரமாக மாறுகின்ற நிலைமையும் குறிப்பிடத்தக்கது. இக்கூத்துகளோடு மோகினி, ஊர்வசி, ஏலக்கன்னி, குறத்தி, வேங்கை கன்னி, பேரண்டச்சி ஆகிய சிறு பெண் பாத்திரங்களும் தொடர்புபடுமாற்றைக் காணலாம். இவ்வாறான பாத்திரங்கள் கூத்துகளில் பிரதான பாத்திரங்களுக்கு உதவி செய்கின்ற அல்லது பாதிப்பை ஏற்படுத்துகின்ற வகையில் பங்கெடுக்கின்றமை கவனிக்கத்தக்கது. தொழிலாளர்களின் நகர்வும் வழிபாட்டு இடங்களின் அமைவும் இருநூறு வருடங்களுக்கு முன்னர் தென்னிந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த இந்நிய வம்சாவளித் தமிழர்கள், மன்னார் தொடக்கம் மாத்தளை ஊடாக கால்நடையாக மலையகப் பிரதேசங்களுக்கு வருகைத் தந்தார்கள். பல சிரமங்களுக்கு மத்தியில் தப்பிப் பிழைத்தவர்கள் மாத்திரம் இலங்கையில் பெருந்தோட்டப் பொறிமுறைக்கு இரையாகி பிரித்தானியர்களுக்கும் சுதந்திர இலங்கைக்கும் செல்வத்தைப் பெற்றுக்கொடுத்தார்கள். இப்பிரயாணத்தில் பெற்ற கசப்பான அனுபவங்களை கண்டிச்சீமையிலே, பஞ்சம் பிழைக்க வந்த சீமை ஆகிய நாவல்கள் உட்பட கண்டிச் சீமை எனும் ஆய்வு நூலும் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அடர்ந்த காடுகளுக்கு நடுவே கால்நடையாக வருகைதந்த மக்கள் அந்தியாகும் பொழுதுகளில் உறங்கிக் களைப்பைப் போக்கி வந்துள்ளார்கள். இவர்களது வரவில் நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் நிறைந்தே காணப்பட்டன; தெய்வ நம்பிக்கையும் அவற்றோடு தொடர்புபட்ட சம்பிரதாயங்களும் காணப்பட்டன. தமது தாயக பூமியில் இருந்து நம்பிக்கையோடு வழிபட்ட சிலைகளையும், சிலைகளுக்கு ஒப்பான கற்களையும் எடுத்து வந்துள்ளார்கள். ‘பிடிமண்’ என்பது மலையக மக்களோடு சமகாலத்திலும் மிக நெருங்கிய தொடர்பினையும் நம்பிக்கையினையும் கொண்டுள்ளது. இப் பிடி மண்ணை பொட்டலமாக்கிய நிலையில் அதனையும் எடுத்துக் கொண்டே அவர்கள் பயணம் செய்துள்ளனர். சிலநேரங்களில், காலை வேளையில் பயணத்தைத் தொடங்கும் போது மேற்குறித்த நம்பிக்கை வடிவங்களை வைத்த இடத்திலிருந்து எடுக்க முடியாதநிலை ஏற்பட்டிருக்கின்றது. அவ்வாறான இடங்களில், ‘அம்மன் இப்பிரதேசத்தில் தோட்டம் அமைப்பதற்கு ஆணை வழங்கிட்டாள்’ எனக் கருதி, தோட்டங்களை உருவாக்கியுள்ளனர். கல், சிலை அல்லது பிடிமண் இயல்பாகவே மண்ணோடு ஒட்டிக்கொண்ட இடங்களே அம்மன் ஆலயங்களாக உருப்பெற்றன. அவ்வாறு உருவான முதலாவது ஆலயமாக பண்ணாகாமம் முத்துமாரியம்மன் ஆலயம் கருதப்படுகிறது. பண்ணாகாமம் எனும் தோட்டமே பின்னாளில் மாத்தளை என அழைக்கப்பட்டது. காலப்போக்கில் இவ் ஆலயத்தைச் சூழ தேயிலைத் தோட்டங்களும் ஆலயங்களும் உருவாக்கப்பட்டன. இவ்வாறே மலையக மாவட்டங்களில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் நிலைகொள்கிறார்கள். சமகாலத்திலேயே, மாத்தளை ஊடாக கண்டியைச் சூழவும், நாவலப்பிட்டி வழியாகவும் குடியேற்றங்கள் அமைக்கப்படுகின்றன. நாவலப்பிட்டிக்கு அண்மையிலுள்ள கம்பளை சிங்கப்பிட்டியில் கோப்பி பயிர்ச்செய்கை ஆரம்பம், லூல்கந்துரையைத் தொடர்ந்து தேயிலை பயிர்ச்செய்கையின் தீவீரம், இரயில் போக்குவரத்தின் கேந்திர நிலையமாக நாவலப்பிட்டி புகையிரத நிலையம் அமைந்தமை போன்றன இப்பிரதேசத்தில் மலையக மக்களது ஊடாட்டம் அதிகரிக்க முக்கிய காரணமாகின்றன. இப்பிரதேசங்களில் காணப்படும் அம்மன் ஆலயங்கள் பிரதான வீதிகளுக்கு அருகில் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறான ஆலயங்களில் நாவலப்பிட்டி ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயம், இம்புல்பிட்டி, கல்லாறு ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயம், கடியன்லென கருமாரியம்மன் ஆலயம், கட்டபுலா ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயம், கொலபத்தனை ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயம் போன்றவை குறிப்பிடத்தக்கவைகளாகும். கொலபத்தனை தோட்டத்தை அடுத்து அமைந்துள்ள குயின்ஸ்பெரி தோட்டம் மலையக மக்களின் வரலாற்றோடும் வாழ்வியலோடும், ஆன்மீக நம்பிக்கையோடும் மிக நெருக்கமான தொடர்பினைக் கொண்டமைந்துள்ளது. மலையகத்தோடு தொடர்பு கொண்ட ஆன்மீக அடையாளமாக ‘நவநாதர் சித்தர்’ எனும் பெயர் விளங்குகிறது. நவநாதர் சித்தரின் அற்புதங்கள் மலையக மக்களின் வரலாற்றோடு தனித்துவமாக நோக்கப்படுகிறது. மாரியம்மன் வழிபாட்டுடனும் நம்பிக்கையுடனும் தொடர்புபடுகின்ற தொன்மங்களோடும் இதற்கு நெருங்கிய தன்மையை உணடு. பெண் ஆளுமைகளை அடையாளப்படுத்தும் களம் குயின்ஸ்பெரி தோட்டம் மலையகத்தின் முதலாவது பெண் பெரியகங்காணியைக் கொண்டிருந்த தோட்டமாக அடையாளப்படுத்தப்படுகிறது. அம்மன் வழிபாட்டில் கொண்டிருந்த நம்பிக்கைகள் குறித்த தொன்மக் கதைகளோடு இப்பிரதேசச் செயற்பாடுகள் தொடர்புறுவதைக் காணலாம். “தொன்மங்கள் பொய்மையின் புகலிடம் அன்று, அவை வாழ்க்கை அனுபவங்களின் குறியீடுகளாகும்.” என்ற சூசன்லாங்கரின் கருத்து குறிப்பிடத்தக்கதாகும். நவநாதர் சித்தரின் அற்புதங்கள், மாரியம்மன் ஆலயத்தோடு தொடர்புபட்டதாகவும் அமைந்துள்ளன. ஆலய உற்சவங்களில் வருடாந்தம் வழங்கும் அன்னதானத்தில் மீதமாக உள்ளதைக் குழி தோண்டிப் புதைத்து, அடுத்த வருட உற்சவத்தில் புதைக்கப்பட்ட உணவை மீளவும் எடுக்கும் போது, புதைத்த நிலையிலேயே அவ் உணவு இருக்கும் என்ற நம்பிக்கை இங்கு காணப்படுகிறது. அது நவநாதர் சித்தரின் சமாதியோடு தொடர்புபட்ட நடவடிக்கையாகவே பிரதானப்படுத்தப்படுகிறது. அம்மன் ஆலயங்களிலும் இவ்வாறு நடப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. பிரதான பாதைகள் ஊடாக அமைந்த குடியேற்றங்கள் காரணமாகக் கட்டமைக்கப்பட்ட தோட்டங்களில் பல உப பிரிவுகள் உள்ளன. அப் பிரிவுகளிலும் அம்மன் ஆலயங்களைப் பிரதானப்படுத்தியே பெண் தெய்வ வழிபாடுகள் இடம்பெறுகின்றன. நாவலப்பிட்டி பார்க்கேப்பல் தோட்டத்தில் மரண இறுதிச் சடங்கை கல்யாணி என்ற பெண்மணியே தற்போதும் ஆற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பெண் தெய்வங்களில் பிரதானியாக முத்துமாரியம்மன் மலையக சமூக உருவாக்கத்தில் வழிபாட்டு மரபுகளும் பெரிதும் துணைநின்றமை கவனிக்கத்தக்கது. தொழிற்களங்களைவிட மக்கள் ஒன்று கூடும் தலமாகவும், கலந்துரையாடும் களமாகவும் வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ளன. சமூக வேற்றுமைகள் வெளிப்பட்ட இடங்களாக வழிபாட்டுத் தலங்கள் இருந்தபோதிலும், சமூக ரீதியிலான தீர்மானங்களை நிறைவேற்றும் முக்கியத் தலங்களாகவும் அவை அமைகின்றன. தென்னிந்தியப் பெண்தெய்வ வழிபாடுகளில் முத்துமாரியம்மன் வழிபாடு முதன்மையானதாகும். இலங்கைக்குப் புலம்பெயர்ந்த மக்களும் அதையே முதன்மையாக்கி வழிபட்டனர். மலையகத்தில் கொற்றவை, காளி போன்ற தெய்வங்களுடன் தொடர்புடைய ஏனைய தெய்வங்களும் வழிபடப்படுகின்றன. ஆயினும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முத்துமாரியம்மன் ஆலயங்கள் உள்ளன என்பதால், இவ்வழிபாடு இங்கு மேலோங்கிக் காணப்படுகிறது எனலாம். கிராமியத் தெய்வமாகவே வழிபடப்படும் மாரியம்மன், கருமாரியம்மன், கங்கையம்மன் எனும் பெயர்களிலும் அடையாளப்படுத்தப்படுகிறார். ‘மாரி’ என்பது மழை அல்லது அம்மை நோய் எனப் பொருள் பெறும். அம்மை நோயைப் போக்கும் அவதாரமாகவும், மழையைப் பெறும் சக்தியாகவும் மாரியம்மனை வழிபடுவது இவ்வழிபாட்டின் சிறப்பம்சமாகும். வெப்பு நோயை ஏற்படுத்தும் அம்மனின் கோபம் குறித்த இம்மக்களின் நம்பிக்கையும் கவனிக்கத்தக்கது. செல்வி, செல்லி, ஆத்தாள், செல்லியாத்தாள், செல்லாண்டியம்மன், ஆயிரம் கண்ணுடையாள், ஆயி, மகமாயி போன்ற பல பெயர்களாலும் அவர் அழைக்கப்படுகிறார். முத்துமாரியம்மன் பற்றிய தொன்மங்கள் அம்மன் வழிபாட்டுடன் தொடர்புடைய பல தொன்மக்கதைகள் கூறப்படுகின்றன. அவற்றில் மாத்தளை வடிவேலன் குறிப்பிட்ட இரேணுகாதேவி பற்றிய கதை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கொள்ளப்படுகிறது. அபிதான சிந்தாமணி நூலில், இரேணுகாதேவி ஜமதக்னி மாமுனிவரின் துணையாகச் சித்திரிக்கப்படுகிறாள். இரேணுகையின் கணவன் மறைந்தபோது, அவள் உடன்கட்டை ஏறினாள். அந்த நேரத்தில், இந்திரன் வருணனை ஏவிப் பெருமழை பெய்வித்தான். இதனால் உடலிலிருந்த ஆடைகள் எரிந்து போயின; உடலெங்கும் தீக்கொப்பளங்கள் தோன்றின. உடையின்றிய நிலையில், அவள் அருகிலிருந்த வேப்பிலைகளைப் பறித்து உடையாக அணிந்துகொண்டாள். பின்னர், அருகிலுள்ள ‘புலையச் சேரி’ எனப்படும் ஒடுக்கப்பட்டோர் வாழும் இடத்திற்குச் சென்று உணவு கேட்டாள். அங்கேயுள்ள மக்கள் சமைத்த உணவை வழங்காமல், பச்சரிசி, வெல்லம், மா, இளநீர் போன்றவற்றைக் கொடுத்தனர். அவற்றை உண்டவுடன், ‘வண்ணார்’ வீதிக்குச்சென்று உடை பெற்றுக்கொண்டு, காலை வேளையில் கணவனை எரித்த இடத்திற்கு சென்றாள். அப்போது, சிவனின் அசரீரிக் குரல் கேட்டது: “நீ நம் சிவசக்தியின் அம்சமாக பூமியில் பிறந்தவள். கிராம தேவதையாகத் திகழ்ந்து மக்களின் துயரை நீக்கி, அவர்களுக்கு அருள் புரிக. நீ இனி ‘மாரி’ என அறியப்படுவாய். உன் உடலில் தோன்றிய தீப்புண் கொப்பளங்களே ‘அம்மை’ நோயாகப் பரவும். நீ தரித்த வேப்பிலை, அந்த நோய்க்கு மருந்தாக அமையும். பச்சரிசி, மா, வெல்லம், இளநீர், கூழ் ஆகியவையே உனக்கான நைவேத்தியமாக இருக்கும். உன்னைப் போற்றி வழிபடுபவர்கள் துயரமின்றி வாழ்வார்கள்.” இவ்வாறு, சிவனின் ஆசியினால் இரேணுகை ‘மாரி’ என்ற தெய்வீக நிலையை அடைந்தாள். ஜமதக்னி முனிவரின் கட்டளையின்படி, இரேணுகையின் தலையை பரசுராமர் வெட்டி, அதை புலையர் குலப் பெண்ணின் உடலோடு இணைத்ததாகவும், புலையர் குலப் பெண்ணின் தலையை இரேணுகையின் உடலோடு பொருத்தியதாகவும் நம்பப்படுகிறது. இதன் விளைவாக, சில மாரியம்மன் கோயில்களின் கருவறையில், மாரியம்மனின் தலையை மட்டும் வைத்து வணங்கும் மரபு ஏற்பட்டுள்ளது. மாரியம்மன் பிராமணப் பெண்ணின் தலையையும், புலையர் குலப் பெண்ணின் உடலையும் கொண்டிருப்பதால், ‘உயர்’ சாதியினர் இரேணுகைதேவியாகிய மாரியம்மனை வழிபடலாம் என்பதோடு, புலையர் குலப் பெண்ணான மாதங்கி அல்லது கங்கம்மாவையும் வழிபடலாம் என முனிவர் அறிவித்ததாகத் கூறப்படுகிறது. மக்களிடையே நிலவும் சாதிய வேறுபாடுகளை நீக்கும் கைங்கரியமாகவும் இக்கதை விளங்குகிறது. மாரியம்மன் திருவிழாவில் எல்லா சாதியினரும் பங்கெடுக்கும் வகையில் கிரியைகள் கட்டமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இரேணுகைக்கு உடை வழங்கி உதவிய ‘வண்ணார்’ குலத்தை அடையாளப்படுத்தும் வகையில், ஆலயங்களிலும் திருவிழாக்களிலும் மாத்துக் கட்டும் பொறுப்பை ‘வண்ணார்’ சமூகத்தினர் வகிக்கின்றனர். அதேவேளை, மாரியம்மன் மற்றும் மாதங்கி வழிபாடுகளில் வேறுபாடுகள் காணப்படுவதும் அவதானிக்கத்தக்கது. நாவலப்பிட்டி குயின்ஸ்பெரி தோட்டத்தில் நிலவும் முத்துமாரியம்மன் தொடர்பிலான ஒரு தொன்மக்கதை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. குயின்ஸ்பெரி பெரியங்கங்கானி, தென்னிந்தியாவிற்குச் சென்று பெண் தொழிலாளர்களை அழைத்து வந்தார். அந்தப் பெண்களில் ஒருத்தி மிகவும் அழகானவராக இருந்தாள். அவள் அழகில் மயங்கிய பெரியகங்காணி, அவள் மீது இச்சை கொண்டார். ஆனால், அவள் ஒத்துழைக்கவில்லை. ஒரு நாள், கம்பளி மற்றும் கூடையை வழங்காமல் அவளை மலைக்கு அனுப்பிவைத்தார். அந்த நாளில், ஏனைய பெண்கள் ஆறு இறாத்தல் மாத்திரம் கொழுந்து பறித்தனர். ஆனால் அந்தப் பெண் அறுபது இறாத்தல் கொழுந்து பறித்தாள். பின்னர், அவள் மலை உச்சியை நோக்கி வேகமாக நடந்துசென்றாள். அவளை கங்காணியோடு மற்றும் சிலரும் பின்தொடர்ந்தனர். மலையின் உச்சியில், வேப்பமரத்தடியில் அமர்ந்துகொண்டிருந்த அந்தப் பெண்ணைப் பார்த்ததும், அவர்கள் அவளை அணுகிப் பேச முயற்சித்தனர். ஆனால், அருகில் சென்று பார்த்தபோது, அந்தப் பெண் சிலையாக மாறிவிட்டாள். இதன் பின்னர், அவள் மாரியம்மன் என்று அடையாளப்படுத்தப்பட்டாள். தனது தீச்செயலுக்காக மனம் வருந்திய பெரிய கங்காணி, தன் தவறை உணர்ந்து, மனம் திருந்தி, அம்மனுக்கு ஆலயம் அமைத்து வழிபட்டதாக நம்பப்படுகிறது. மாரியம்மனின் சிறப்புகளை எடுத்துச்சொல்லும் பல தொன்மக்கதைகள் நிலவுகின்றன. சிவபெருமானுக்கே அம்மை நோயை ஏற்படுத்திய கதை, தலையில் ஆயிரம் கண்களையுடைய கதை, தன் பிள்ளைகளை சகோதரியான மாரியம்மனுக்குக் காட்டாமல் ஒழித்தமையால் சோதனைக்குள்ளான காளியின் கதை போன்றன சில உதாரணங்களாகும். காளியோடு கொண்ட சோதனையாலேயே முன்னடியான் என்ற வழிபாட்டு உருவம் கட்டமைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. நாவலப்பிட்டி முத்துமாரியம்மன் ஆலயத்துடன் தொடர்புபடும் மாரியம்மன் குறித்த செவிவழிக்கதைகள் 1823ஆம் வருடத்தின்பின் ஏற்பட்ட மலையக மக்களின் புலப்பெயர்வு காலத்திலேயே நாவலப்பிட்டியில் முத்துமாரியம்மன் ஆலயம் அமைக்கப்பட்டதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 1870 காலப்பகுதியில் கிழக்குப் பார்த்த நிலையில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கொரக்காவத்தை தோட்டத்தின் தொழிலாளர்களும் நகர வர்த்தகர்களும் இணைந்து அமைத்த அவ் ஆலயத்திற்கு முன்னால் ஒரு வைத்தியசாலையும் அமைக்கப்பட்டது. குஷ்டரோக நோயினால் அவதியுற்ற நோயாளி ஒருவரைக் கண்ட நவநாதர் சித்தர் ‘வைத்தியசாலைக்கு முன்பு இருக்கும் அம்மனின் அருளால் இது குணமாகும். என்னுடன் வாருங்கள்’ என்றுகூறி, அவரை குயின்ஸ்பெரிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவரது பேச்சைக் கேட்டுச்சென்ற குறிப்பிட்ட நோயாளிக்கு குயின்ஸ்பெரி செல்லும் முன்பே நோய் குணமாகியது. 90களின் முற்பகுதியில் சன்னியாசி ஒருவர் நாவலப்பிட்டிக்கு வருகை தந்துள்ளார். அவர் இவ் ஆலயத்தின் செயற்பாடுகளில் பொறுப்பாக இருந்த அப்பாவு ஆச்சாரி, வேலு ஆச்சாரி ஆகியோரைச் சந்தித்து தான் சமயபுரத்தில் இருந்து வருவதாகக் கூறியுள்ளார். மேலும் அவர், ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டதுடன் சமயபுரத்தில் இருந்து கொண்டுவந்த அம்மனின் திருமுகத்தை ஆலயத்தில் வைத்துவிட்டு, தான் சுகவீனமடைந்திருப்பதாகவும் வைத்தியசாலையில் சிகிச்சை பெறப்போவதாகவும் கூறிவிட்டுச் சென்றுள்ளார். அவர் கொடுத்த விக்கிரகத்திற்குரிய பூசைகளை உரியவாறுசெய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கமைய அதனை வேலு ஆச்சாரியினுடைய வீட்டின் பூசை அறையில் வைத்துப் பூசித்துள்ளார்கள். பின்னர், ஆச்சாரிகள் இருவரும் குறித்த சன்னியாசியைத் தேடி வைத்தியசாலைக்குச் சென்றபோது, அவ்வாறு ஒருவர் வரவில்லை என வைத்தியசாலைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். ஒரு நாளில் மீளவும் வருகைத்தந்த அச்சன்னியாசி வேலு ஆச்சாரியின் வீட்டில் அச்சிலை பூசிக்கப்பட்ட முறையை அவதானித்து மகிழ்ச்சியுற்று, அதனை ஆலயத்தில் வைத்துப் பூசை செய்யுமாறு ஆலோசனை வழங்கிச்சென்றதாகக் கூறப்படுகிறது. சமயபுர அம்பாளின் அனுக்கிரகத்தால் அம்மனே இயல்பாக இங்கு அருள்பாலிக்க வந்துள்ளாள் என்ற நம்பிக்கை இப்பிரதேசத்தில் நிலவுகிறது. குறித்த அம்மனின் தலை உருவம் இன்னமும் இவ் ஆலயத்தில் பூசிக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். அதன் பின்னர் ஆச்சாரிகள் இருவர் உட்பட, பிரமுகர்கள் சிலர் இணைந்து அவ் ஆலயத்தை நிரந்தரக் கட்டடமாக அமைக்க முற்பட்டுள்ளார்கள். கோப்பிப் பயிர்ச்செய்கையில் பாதிப்பை ஏற்படுத்திய நோய், பிளேக் நோய் போன்றவற்றால் நாவலப்பிட்டி மலையக மக்கள் பாதிக்கப்பட்டனர். நாவலப்பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ள கொத்மலை வீதியிலுள்ள கடைகள், வீடுகள் பிளேக் நோயினால் பாதிக்கப்பட்ட காரணத்தினால், அப்பகுதியில் வசித்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இவ்வாறு அப்புறப்படுத்தப்பட்டவர்கள் ஐ.டீ.எச் பிரதேசத்தில் வைத்தே பராமரிக்கப்பட்டார்கள் (இப்பகுதிக்கு அக்காலத்தில் வைக்கப்பட்ட பெயரே இன்றுவரை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது). கொத்மலை வீதியில் அப்புறப்படுத்தவேண்டிய பட்டியலில் கோயில் கட்டடமும் உள்வாங்கப்பட்டிருந்தது. கோயிலை இடிக்க வேண்டும் என ஆங்கிலேய பொதுசுகாதார உத்தியோகத்தர் பணித்திருந்தார். மக்கள், கோயிலை இடிக்க வேண்டாம் என மன்றாடினர். வேலையாட்கள் ஒதுங்கிய நிலையில், அப்பணியை பொதுசுகாதார உத்தியோகத்தரே செய்வதற்குத் துணிந்துள்ளார். கதவு உடைக்கப்பட்ட போது, அதிசயிக்கும் வகையில் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இரண்டு மாதமளவில் மூடிவைக்கப்பட்டிருந்த கருவறையில், காலையில்தான் வைக்கப்பட்டது போன்றிருந்த பூவும், இரண்டு மாதத்திற்கு முன்னர் ஏற்றிவைத்த எரிந்துக்கொண்டிருந்த விளக்கும் பார்த்தவர்களை வியப்பிலாழ்த்தியது. குறித்த பொது சுகாதார உத்தியோகத்தரும் கோயிலை உடைக்க வேண்டாம் எனக்கூறி வழிபட்டுள்ளார். வழிபாட்டு முறையும் நம்பிக்கை சார்ந்த விடயங்களும் இயற்கையுடன் கூடிய நெறிமுறையுடனேயே மாரியம்மன் வழிபாட்டு மரபுகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளன. தமிழகத்தில் ஏற்பட்ட கடுமையான வறட்சி மற்றும் பஞ்ச நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, அந்த நிலைமையைச் சமாளிக்கவும், புதிய வாழ்வியல் வழிகளை உருவாக்கவும், இலங்கைக்குப் புலம்பெயர்ந்த மக்கள் மாரியம்மனை வழிபட்டனர். இந்த வழிபாட்டின் மூலம் அவர்கள் இயற்கையின் அருளையும், மழையையும், அந்த நிலையை எதிர்கொள்வதற்கான ஆன்மிக வலிமையையும் பெற்றனர். ‘மாரி’ என்ற சொல், மழையை வழங்கும் அம்மனின் அடையாளமாக அமைந்துள்ளது. கடும் வெப்பநிலையை எதிர்கொள்ளுவதோடும், அதைச் சமாளிப்பதோடும் இவ்வழிபாட்டு மரபுகள் தொடர்புறுகின்றன. பஞ்சம் வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்திலும் மாரியம்மனை இவர்கள் வேண்டுவது குறிப்பிடத்தக்கது. வருடம் முழுவதும் வெள்ளி, செவ்வாய் தினங்களிலும் மற்றும் விசேட தினங்களிலும் பூசைகள் இடம்பெற்று வருகின்றன. வருடாந்தம் இடம்பெறும் திருவிழா உற்சவம் மார்கழி மாதம் தொடக்கம் ஏப்ரல் மாதம் வரை இடம்பெறுகின்றது. இக்காலப்பகுதியின் வறட்சிநிலை, பெருந்தோட்ட உற்பத்தியில் தாக்கத்தைச் செலுத்துகின்றது. மேலும் இக்காலப்பகுதியில் தொழில் நடவடிக்கைகளுக்கும் ஓய்வு வழங்கப்படுவதால் தோட்ட நிர்வாகத்திற்குப் பாதிப்பு ஏற்படாது என்ற காரணத்தினால் தோட்டங்களில் மூன்று நாட்கள், ஐந்து நாட்கள் என்றவாறு திருவிழாக்கள் இடம்பெறுவதுண்டு. நாவலப்பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் மாசி மாதம் பத்து நாட்கள் ஆகம முறைப்படி திருவிழா இடம்பெறுகின்றது. இங்கு மரபு ரீதியிலான அணுகுமுறைகள் தவிர்க்கப்படாமல் பின்பற்றப்படுகின்ற போக்கும் காணப்படுகின்றது. பொதுவாக தோட்டப்புறங்களில் திருவிழா தொடங்கும் தினத்தில் முகூர்த்தக்கால் ஊன்றுதல் கிரியையோடு ஊர் எல்லைகளுக்கு எல்லைக்காப்புக் கட்டப்படும் (காப்புக் கட்டியவுடன் ஊர் எல்லையைத் தாண்டுதல் கூடாது என்ற ஐதீகம் முக்கியமானது). பூசாரி அன்றிரவு குறி சொல்லுதல் (கிராமத்துக் கேள்வி), ஊரின் தொடக்க எல்லையிலுள்ள நீரூற்றில் கரகம் பாலித்தல், சக்தி கரகம் உட்பட காளி, மாரி தெய்வங்களை அடையாளப்படுத்தும் கரகங்களை அமைத்தல், கரகத்தைத் தூக்குபவர்களை மதிப்பெடுத்தல் அல்லது பூக்கள் கட்டிப்போட்டுத் தெரிவு செய்தல் அல்லது திருவுளச்சீட்டு மூலம் தெரிவு செய்தல் ஆகிய நடவடிக்கைகள் இதன்போது முக்கியத்துவம் பெறுகின்றன. கூழ் ஊற்றுதல், அன்னதானம் வழங்குதல், சப்பரத்தில் அம்மனின் ஊர்ப்பவனி, அம்மன் ஊர்வலத்துடன் மலையக மக்களுக்கே உரித்தான கலைகளின் அரங்கேற்றம், அம்மன் குரவை இசைத்தல், அம்மன் தாலாட்டுப்பாடுதல், கும்மி அடித்தல், நாடகங்களின் அரங்கேற்றம், மாவிளக்குப் பூசை, தீ மிதித்தல், பரவைக் காவடி, மஞ்சள் நீர் உற்சவம், ஊர் எல்லையில் கரகம் குடி விடுதல், கட்டுச்சோறு (கருவாடு கலந்த புளிச்சோறு) கட்டுதல், கரகம் குடி விட்டதும் எட்டு நாட்கள் கோயிலை அடைத்தல், எட்டாம் நாள் பலிப் பூசை, தப்பிசை – உடுக்கை – பம்பை ஆகியவற்றை இசைத்தல் போன்ற செயற்பாடுகள் திருவிழாக்காலத்தில் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் பின்னணியில் இயற்கை நேசிப்பும் இயற்கைக்கு நன்றி செலுத்துவதும் கவனிக்கத்தக்கன. சமகாலத்தில் ஆகம முறையினால் இவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கொடியேற்றம், சப்பரத்தில் அம்மன் பவனி, தேரோட்டம், உயிர்ப் பலிக்குப் பதிலாக பூசணிக்காய் பலியிடல் போன்ற மாற்றங்கள் அவதானிக்கத்தக்கன. அம்மன் வழிபாட்டில் நம்பிக்கைக்குரிய அம்சங்களாக பின்வரும் அம்சங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன: அம்மை நோய் பல வகைகளில் அடையாளப்படுத்தப்படுகின்றது. பெரியம்மா, சடையம்மா, கொத்தமல்லி அம்மா, மணல் அம்மா, தொட்டியம்மா, கஞ்சியம்மா, சொரக்கா அம்மா, அரச இலை அம்மா, தவிட்டம்மா, மண்ணாங்கட்டி அம்மா என்றவாறு வகைப்படுத்தப்படும் அம்மை நோய்க்கு வேப்பிலையும் குளிர்ச்சியான உணவு வகைகளுமே மருந்தாகின்றன. நீர் ஊற்றுதல், எண்ணையும் நீரும் ஊற்றுதல், மாரியம்மன் தாலாட்டுப் படித்தல் போன்ற அணுகுமுறைகள் இந்நோயை குணப்படுத்துவதாக நம்பப்படுகின்றன. மாரி என்றால் மழை எனப் பொருள்படும். கடுமையான வெயிலின் காரணமாக தேயிலைத் தொழிற்துறை பாதிக்கப்படும் சந்தர்ப்பங்களில் ஊர்ப் பெண்கள் ஒன்று சேர்ந்து ஈரச்சேலையுடன் நிறைகுடமாக தண்ணீர் எடுத்து வந்து அம்மன் சிலையில் அல்லது கோயில் கூரையில் ஊற்றுவார்கள். இவ்வாறு செய்தால் மழை வரும் என்பது நம்பிக்கையாகும். பிள்ளைவரம் (மகப்பேற்று), பால் கட்டியாதலுடன் தொடர்புபட்ட பிரச்சினைகள் குறித்த நேர்த்திக்கடன்களும் அம்மனில் சுமத்தப்படும். அம்மனை நினைத்துப் பூசாரிகள் நூல் மந்திரித்துக் கட்டினால் கெட்ட ஆவிகள் நெருங்காது என்பது நம்பிக்கையாகிறது. ஒரு முடிவினை எடுப்பதற்கு அம்மனின் சிலை முன்னால் அல்லது ஆலய வளாகத்தில் பூக்கட்டிப் போடும் வழக்கம் காணப்படுகிறது. தொழில் விருத்தி, பொருளாதார முன்னேற்றம், கல்வி முன்னேற்றம் குறித்த நேர்த்திக்கடன்களும் அம்மனில் சுமத்தப்படுகின்றன. மாரியம்மனோடு ஊரிலுள்ள ஏனைய சிறுதெய்வங்களும் சகோதரி, சகோதரன் என்ற உறவுமுறைகளுடன் தொடர்புபடுகின்றன. உதாரணமாக காளி, மாடசாமி, மதுரை வீரன் ஆகிய சிறுதெய்வங்களைக் குறிப்பிடலாம். மலையகப் பகுதிகளில் நிலவும் இராமர் வழிபாடு, ஆரியவாதத்தின் ஊடுருவலாக உற்றுநோக்கப்பட வேண்டியுள்ளது. அதன் கட்டாயத்தன்மையில், அம்மனின் அண்ணனாக இராமர் சித்திரிக்கப்படுகின்றமை தொடர்பில் ஆராயவேண்டியது அவசியமாகிறது. தாழ்த்தப்பட்டவர்களே மாரியம்மன் கோயில்களில் பூசகர்களாக இருந்துள்ளனர். காலப்போக்கில் பிராமணர்கள் பூசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அம்மை நோயுடன் தொடர்புறும் சீதளாதேவி, மகாமாரி, கருமாரி ஆகியனவும் மாரியம்மனின் வேறு பரிமாணங்களாகவே நோக்கப்படுகின்றன. ஆகம அடிப்படையில் அமைந்த கோயில்கள், சிறுதெய்வ வழிபாட்டு மரபின் அம்சங்களுக்கு முரணான அணுகுமுறைகளைக் கொண்டதாக அமைகின்றன. பிராமணர் அல்லது பிராமணத்தை தழுவிய பூசகர் இல்லாத நிலை, உயிர்ப்பலி நடைமுறை, கோயிலுக்குரிய அமைப்பின்மை, கொடூரமான உருவம், அருள்வாக்குக் கூறல் போன்ற சிறுதெய்வ வழிபாட்டு அம்சங்கள் மாரியம்மன் வழிபாட்டில் குறிப்பிடத்தக்கவையாகும். மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயம், நாவலப்பிட்டி முத்துமாரியம்மன் ஆலயம் ஆகிய ஆலயங்கள் உட்பட எல்லா மாரியம்மன் ஆலயங்களிலும் சிறுதெய்வ மரபிற்கு அமைவான அணுகுமுறைகளே பின்பற்றப்பட்டன. அண்மைக்காலத்தில், மேற்குறித்த கோயில்கள் உட்பட நகர்ப்புறங்களில் அமைந்துள்ள அம்மன் ஆலயங்களில், முழுமையான ஆகம விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. பெருந்தோட்டங்கள் மற்றும் கிராமங்களில் (பெருந்தோட்டப் பொறிமுறை கைவிடப்பட்ட இடங்கள்) அமைந்துள்ள அம்மன் ஆலயங்களில் ஆகமமுறைகள் பின்பற்றப்பட்டாலும், அவை சிறுதெய்வ வழிபாட்டு மரபில் இருந்து முழுமையாக விலகமுடியாத நிலைக்கு உட்பட்டுள்ளன எனலாம். குடிப்பரம்பல் சிதைவும் வழிபாட்டிடங்கள் அழிக்கப்பட்டமையும் 1987ஆம் ஆண்டு அமுல்படுத்தப்பட்ட துரித மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், தோட்டப்பகுதித் தொழிலாளர்கள் சிறு குழுக்களாக வேறு தோட்டங்களுக்கு மாற்றப்பட்டனர். கொத்மலை நீர்த்தேக்கம் அமைப்பதற்காக, மல்லாந்தை, திஸ்பனை, மொச்சக்கொட்டை, கிளசக்லை, அலுகல்லை ஆகிய தோட்டங்கள் மறுசீரமைக்கப்பட்டன. தோட்டங்கள் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டதால் பாடசாலைகள் கைவிடப்பட்டன; வழிபாட்டிடங்கள் முற்றிலும் சிதைக்கப்பட்டன. இந்தப் பகுதியில் காணப்பட்ட மாரியம்மன் ஆலயங்களில் ஒன்று பாடசாலை ஒன்றின் சிற்றுண்டிச்சாலையாக மாற்றப்பட்டது. இதேபோல், நாவலப்பிட்டியிலும் கனபதி, மாவிலை, மாவத்துரை, தெம்பிலிலை போன்ற தோட்டங்கள் பாதிக்கப்பட்டன. பெரும்பாலான தோட்டப் பிரிவுகளில் அம்மன், காளியம்மன், கங்கை அம்மன் ஆலயங்கள் இருந்தன. ஊசியிலைக் காடுகள் வளர்ப்பும், சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கான ஊக்குவிப்பும் மாறிமாறி ஆட்சிபுரிந்த அரசாங்கங்களின் பெருந்தோட்டங்களைச் சிதைக்கும் திட்டமிட்ட செயற்பாடுகளாக முன்னெடுக்கப்பட்டன. 1964ஆம் ஆண்டு ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின்படி கணிசமானோர் தாயகம் திரும்பியதால், இந்தப் பகுதிகளில் மலையகத் தமிழர்களின் மக்கள் தொகை குறைந்தது. பெரும்பான்மை இனத்தவரின் குடியேற்றத்திற்குப் பிறகு, முத்துமாரியம்மன் உள்ளிட்ட பெண் தெய்வ ஆலயங்கள் ‘பத்தினியம்மன்’ ஆலயங்களாக மாற்றப்பட்டன. இப்பிரதேசத்தில் முனைப்புப்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோகண விஜேவீர தலைமையிலான கிளர்ச்சி நடவடிக்கைகள் மற்றும் அதற்கு எதிரான பாதுகாப்புத் தரப்பினரின் செயற்பாடுகள் என்பன தமிழ் மக்களின் சிதைவிற்கு முக்கிய காரணங்களாக அமைந்தன. பின்னாளில், கட்சி அரசியலைப் பலப்படுத்தும் நோக்கில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைச் சம்பவங்களும் அதில் முக்கிய பங்கை வகித்தன. மலையகத்தின் பாதுகாப்புக் கவசமாக அம்மன் வழிபாடு அதிகாரச் சாதியினரான கங்காணிகள், கங்காணித்தனத்திற்கு ஆதரவானவர்கள் போன்றோரின் பாலியல் இச்சைகளால் மலையகப் பெண்கள் பாதிக்கப்பட்டனர். பிரித்தானியக் காலனித்துவ நிர்வாகிகளும் மலையகப் பெண்களை இக்கண்ணோட்டத்துடன் அணுகினர். துரைமார்களின் ஆதிக்கநிலை அதற்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கியது. இந்நிலையில் பெண்கள் பாதுகாப்பற்றவர்களாயினர். இதனால் இவ் அம்மன் வழிபாடு, பாதுகாப்புப் பொறிமுறையாகவும் கவசமாகவும் பிரயோகிக்கப்பட்டுள்ளமை தெளிவாகிறது. அம்மன் எந்தப் பெண் உருவத்திலும் இருப்பாள் என்ற பயம் ஆண்களிடத்தில் நிலைகெண்டது. இம்மக்களால் நேசிக்கப்படுகின்ற காமன் கூத்து, எல்லாக் கூத்துகளிலும் தலைசிறந்ததாக விளங்குகிறது. அக்காலத்தில் நிகழ்ந்த பலதார மணம், பாலியல் ஒழுக்கமின்மை போன்றவை காரணமாக, காமன் கூத்து ஓர் ஒழுக்கக் கோவையாக, காமத்தை முறையாகக் கைக்கொள்ள வேண்டிய பாடத்திட்டமாக அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பெண்கள் மதிப்பிற்குரியவர்கள் என்பதை ஆண்கள் உணர்வதற்கும், ஆண்களுக்கு உணர்த்துவதற்கும், அம்மன் வழிபாடு பயன்பட்டது. மலையகத்தில் அவ்வப்போது நிகழ்ந்த இனக்கலவரங்களின் போதும், இவ் நம்பிக்கை மலையக மக்களுக்கு உளரீதியான பலத்தைக்கொடுத்தது. இவை மட்டுமல்லாது, சமூக – பொருளாதார – கல்வி – கலாசார அம்சங்களிலும் அம்மன் குறித்த நம்பிக்கைகள் பரவி நிலைபெற்றுள்ளன எனலாம். உசாத்துணைப் பட்டியல் வடிவேலன், பெ. (2007). மலையக நாட்டுப்புறவியலில் மாரியம்மன். மாத்தளை தமிழ் இலக்கிய வட்டம். ஆனந்தகுமார், பா. (2017). இலங்கை மலையக தமிழ் இலக்கியம். காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகம். முரளிதரன், சு. (2002). வரவும் வாழ்வும் – மலையக நாட்டாரியல் சிந்தனைகள். சாரல் வெளியீட்டகம். சிவதம்பி, கா. (1993). இலங்கை மலையகத் தமிழரின் பண்பாடும் கருத்து நிலையும். உதயம் நிறுவனம். சந்தரா, சு. (2013). தொண்மவியல் கட்டுரைகள். அறிவுப்பதிப்பகம். சண்முகலிங்கம், க. (1995). தமிழ் நாட்டார் வழக்காற்றியல். இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம். ராஜப்பா, எம். (1985). மாரியம்மன் உற்பத்தி. நாவலப்பிட்டி, ராஜா அச்சகம். பொன்னுத்துரை, கே. (1996). சக்தி தத்துவ மலர். நாவலப்பிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம். சாரல் நாடன் (2003). மலையகத் தமிழர் வரலாறு. இந்து கலாசார அமைச்சு, மத்திய மாகாணம். சிவலிங்கம், மு. (2010). ஒப்பாரிக் கோச்சி. நாவலப்பிட்டி தமிழ்ச் சங்கம். சடகோபன், இரா. (2014). கண்டிச் சீமையிலே. எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர் பிரைவட் லிமிடெட். புதிய தேர் வெள்ளோட்ட சிறப்பு மலர் (2016). நாவலப்பிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம். மலையகத் தமிழாராய்ச்சி மாநாடு ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு (1997). இந்து கலாசார அமைச்சு, மத்திய மாகாணம். About the Author அருணாசலம் லெட்சுமணன் ‘ம.மா - கொத் - உனுக்கொட்டுவ தமிழ் வித்தியாலயத்தின்’ அதிபரான அருணாசலம் லெட்சுமணன், 'நிகர்' சமூக - கலை - இலக்கிய அரங்கத்தின் பிரதம அமைப்பாளருமாவார். தேசிய, பன்னாட்டு ஆய்வரங்குகளில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரைகளை முன்வைத்து வருகிறார். 2023இல் மலேசியாவில் இடம்பெற்ற பதினோராவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஓர் ஆய்வுக்கட்டுரையை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தேசிய, பன்னாட்டு இதழ்களில் தொடர்ந்து எழுதிவருகிறார். பயண இலக்கியங்கள், சமூக, கலை, இலக்கிய, கல்வித்துறைச் செயற்பாடுகளில் ஆர்வம் மிக்கவர். இவர் ஒரு கவிஞருமாவார். சிறுவர் பாடல்கள், சிறுவர் இலக்கியம் தொடர்பான விமர்சனங்கள், ஆய்வுகளை தொடர்ந்து எழுதி வருகிறார். சிறுவர் கதைகள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். https://www.ezhunaonline.com/article/worship-of-the-goddess-muthumariamman-in-malaiyagam-focusing-on-the-nawalapitiya-region/?fbclid=IwY2xjawI65PlleHRuA2FlbQIxMAABHXKvNwb5Pjy-jfh6ap7speXgLPVSzTsFYoecJhXS08Ek6G98MNtT6844Hg_aem_BYWMfZ4iqGWhKASUSDz0rw
  9. யாழ்ப்பாணமே உனது பசி எது? தாகம் எது? அண்மையில் பலாலி வீதியில் பல்கலைக்கழகத்தில் இருந்து நடந்து போகக்கூடிய தூரத்தில் ஓர் உயர்தர உணவகம் திறக்கப்பட்டதுஅதன் பெயர் “டெலிஸ்” .அதற்குச் சில கிழமைகளுக்கு முன்பு அதே பலாலி வீதியில் மற்றொரு உயர்தர உணவகம்-காலித் பிரியாணி-திறக்கப்பட்டது.முன்சொன்ன உணவகத்தில் இருந்து நடந்து போகக்கூடிய தூரத்தில் இந்த உணவகம் உண்டு. இந்த இரண்டு உணவகங்களும் திறக்கப்படுவதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் யாழ்ப்பாணம் நகரத்தின் மையத்தில் முன்பு வெலிங்டன் தியேட்டர் அமைந்திருந்த வளவிற்குள் ‘கீல்ஸ்’ பேரங்காடி திறக்கப்பட்டது.திறக்கப்பட்ட நாளிலிருந்து இரவும்பகலும் நூற்றுக்கணக்கானவர்கள் அங்கு குவிகிறார்கள். ஏற்கனவே யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் இருந்து நடந்து போகக்கூடிய தூரத்தில் ஆஸ்பத்திரி வீதியில்,வேம்படிச் சந்திக்கு அருகாக உள்ள சூழலில் உயர்தர உணவகங்கள் பல திறக்கப்பட்டுள்ளன.பீட்சா கடைகளில் இருந்து பிரியாணி கடைகள்வரை பல்வேறு வகைப்பட்ட உணவகங்கள் மிகக்குறுகிய தூர இடைவெளிக்குள் உண்டு. இந்த உணவகங்கள் தவிர இவற்றிற்கு முன்னரே திறக்கப்பட்ட உயர்தர விருந்தினர் விடுதிகள் உண்டு.அங்கேயும் இரவில் நூற்றுக்கணக்கானவர்களைக் காணமுடியும்.அவரவர் அவரவர் நுகர்வுக் கொள்ளளவுக்கு ஏற்ப உணவகங்களை நாடிச் செல்கிறார்கள். ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான தமிழ்ச் சமூகத்தில் நுகர்வுத் தாகம் அதிகரித்து வருவதை;ஒரு நுகர்வு அலை எழுந்திருப்பதை பல ஆண்டுகளுக்கு முன்னரே அவதானிக்கக் கூடியதாக இருந்தது.கடந்த 15 ஆண்டுகளிலும் அந்த நுகர்வுப் பசியும் தாகமும் அதிகரித்துச் செல்கின்றன. போரினால் மூடப்பட்டிருந்த ஒரு சமூகம் வெளியுலகத்துக்குத் திறந்து விடப்படுகையில் நுகர்வுத்தாகமும் பசியும் அதிகமாக இருக்கும்.புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதியுதவிகள் மட்டும் இதற்குக் காரணமல்ல.ஆயுத மோதலுக்கு பின்னர் தமிழ்மக்கள் தமது வாழ்க்கையைப் படிப்படியாகக் கட்டியெழுப்பி வருகிறார்கள் என்பதன் குறிகாட்டிகளில் ஒன்றாக மேற்படி உயர்தர உணவகங்களின் பெருக்கத்தைக் கூறலாம். ஒரு மாற்றத்திற்காக வெளியில் போய்ச் சாப்பிட விரும்புகிறவர்கள்;அல்லது வித்தியாசமாகச் சாப்பிட விரும்புகிறவர்கள்;அல்லது கூடியிருந்து சாப்பிடுவதைக் கொண்டாட விரும்புகிறவர்கள் அவ்வாறு உயர்தர விருந்தகங்களை நோக்கிப் போகிறார்கள். வசதிபடைத்த மேல்நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமல்லஅன்றாடம் உழைப்பவர்கள் அதிகமுடைய கிராமங்களிலும்கூட இரவு உணவுக்காக பேக்கரிகளில் தங்கியிருக்கும் ஒரு நிலையைக் காணலாம்.உதாரணமாக,சில ஆண்டுகளுக்கு முன்பு உரும்பிராயில் கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் ஸ்தாபகருடைய நினைவு தினத்தைக் கொண்டாடுவதற்காக போயிருந்தோம்.பெருமாளவிற்கு அன்றாடம் உழைப்பவர்களைக் கொண்ட ஒரு கிராமம் அது.நாங்கள் அங்கேயிருந்த சுமார் 5 மணித்தியால காலப்பகுதிக்குள் 8 பேக்கரி வாகனங்கள் அப்பகுதிக்குள் வந்துபோயின.அவற்றுள் சில ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் வந்தன.அந்த கிராமத்தவர் ஒருவரிடம் கேட்டேன்,”இவ்வளவு அதிக தொகையாக பேக்கரி வாகனங்கள் வருகின்றனவே அந்த அளவுக்கு நுகர்வு உண்டா? என்று. அவர் சொன்னார்,”ஓம் பெருமளவுக்கு உடல் உழைப்பாளிகளாகிய எமது கிராமத்தவர்கள் இரவுகளில் ஆறுதலாக இருக்க விரும்புகிறார்கள்.இரவில் சமைப்பதைவிடவும் இந்த பேக்கரி உணவுகளை வாங்கினால் பெண்கள் ஆறுதலாக இருந்து திரைத்தொடர்களைப் பார்க்கலாம்” என்று சொன்னார். சமையல்,பெண்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்ட ஒரு கடமை என்று கருதும் ஒரு சமூகத்தில் இவ்வாறு விருந்தகங்களுக்குப் போவதன் மூலம் பெண்களுக்கு ஆறுதல் கிடைக்கும்.பொதுவாக கிழமைக்கு ஒரு நாளிலாவது அல்லது ஒரு நாளில் ஒரு வேளையாவது சமையாமல் இருப்பதை பெண்கள் பெருமளவுக்கு ஆறுதலாகக் கருதுகிறார்கள். எனினும் இவ்வாறு உணவை கூடியிருந்து சாப்பிடுவதை ஒரு கொண்டாட்டமாகக் கருதும் பலரும்,உயர்தர உணவகங்களில் உணவுக்கு ஓர்டர் கொடுத்துவிட்டு,மேசையைச் சுற்றியிருந்த அவரவர் அவரவருடைய கைபேசியை நோண்டிக் கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன்.ஒன்றாக உட்கார்ந்து உணவைச் சுவைப்பது ஒரு கொண்டாட்டம்.அந்த கொண்டாட்டத்துக்குள்ளும் கைபேசி ? மேற்சொன்ன உயர்தர உணவகங்களில் ஒரு தொகுதி கோர்ப்பரேட் வலப்பின்னலுக்குள் வருபவை.உதாரணமாக ஆஸ்பத்திரி வீதியில் அமைந்திருக்கும் ஆர்ஆர் பிரியாணி இந்தியாவை மையமாகக் கொண்டது. அதற்கு நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் கிளைகள் உண்டு.அடுத்ததாக காலித் பிரியாணியும் சென்னையை மையமாகக் கொண்டது.பெருந்தொற்று நோய்க்காலத்தில் மூவர் இணைந்து உருவாக்கிய உணவகங்களின் சங்கிலி வலையமைப்பு அது. கோப்பரேட் உணவகங்கள் உலகப் பொதுவான கோப்பரேட் சுவையைப் பரப்புகின்றன. யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளரான சனாதனன் கூறுவார் எல்லா பேரங்காடிகளுக்கும் ஒரே மொழிதான் என்று. அங்குள்ள தட்பவெட்பம், அங்கு மென்மையாகத் தவழும் இசை, உணவு வேகும் வாசம் போன்ற எல்லாமும் உலகின் எல்லாப் பேரங்காடிகளுக்கும் ஒரே மாதிரியானவைதான்.அப்படித்தான் கோப்பரேட் உணவகங்களும் உலகப் பொதுச் சுவையை பரப்புகின்றன. ஆனால் இதனால் உள்ளூர் சாப்பாட்டுக் கடைகள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றன என்று கூறமுடியாது. ஏனென்றால் உள்ளூர் சாப்பாட்டுக் கடைகளில் வழமையாக உணவு அருந்துபவர்கள் எப்பொழுதும் அங்கே போவார்கள்.ஒரு குறிப்பிட்ட பிரிவினர்தான் உயர்தர உணவகங்களை நோக்கியும் குறிப்பிட்ட சில பேரங்காடிகளை நோக்கியும் போகிறார்கள். “உயர்தர உணவகங்களில் பிரியாணி வகை உணவைச் சாப்பிடுவது என்பது ஒரு அந்தஸ்தை,சமூகத் தராதரத்தை காட்டும் விடயம்” என்று கனடாவில் வசிக்கும் கீதா சுகுமாரன் கூறுகிறார்.அவர் உணவுப் பண்பாட்டை தனது கலாநிதிப் பட்ட ஆய்வுப் பொருளாக எடுத்துக்கொண்டவர்.பிரியாணி என்பது எல்லாவிதமான பொருட்களும் கலந்து சமைக்கப்படும் ஓர் உணவு.விருந்துகளில் அது அந்தஸ்தைக் குறிப்பது.பிரியாணிக் கடைகளில் சாப்பிடுவதை ஒரு சமூக அந்தஸ்தாக கருதும் ஒரு பிரிவினர் அங்கே போகிறார்கள்.என்றும் அவர் கூறுகிறார். ஆனால்,அதனால் உள்நாட்டுச் சுவையும் உள்நாட்டு உணவும் கைவிடப்படுகின்றதா?இல்லை.அவ்வாறெல்லாம் ஏங்கத் தேவையில்லை. வீடுகளில் இப்பொழுதும் உள்நாட்டு சமையல்தான்.உள்ளூர் சுவைதான்.ஒரு வித்தியாசத்துக்காக,ஒரு மாற்றத்திற்காக அல்லது தமது அந்தஸ்தைக் காட்டுவதற்காக பிரியாணிக் கடைக்கு போகின்றவர்கள் வாழ்க்கை முழுவதும் பிரியாணிக் கடைகளிலேயே சாப்பிடுவதில்லை.அவ்வாறு தினசரி பிரியாணிக் சாப்பிடுகிறவர்கள் யாழ்ப்பாணத்தில் அந்தக் கடைகளில் இருந்து குறுகிய தொலைவில் காணப்படும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தங்களுடைய கொலஸ்ட்ரோலைக் கரைப்பதற்கான சிகிச்சைகளையும் பெறுகிறார்கள். அதாவது ஒரு கோப்பரேட் கொலஸ்ட்ரோலை விற்கிறார்.ஒரு கோப்பரேட் கொலஸ்ட்ரோலைக் கரைக்கிறார்.ஆக மொத்தம் கோப்பரேட்களின் ஆய்வு கூடமாக மாற்றப்பட்ட உள்ளூர் உடல் ? கோப்பரேட் சுவை என்பது உலகப் பொதுவானது.உள்ளூர்ச் சுவை என்பது அதிகம் தேசியத் தன்மை மிக்கது.ஒரு மக்கள் கூட்டத்தை ஒரு தேசமாக வனையும் அம்சங்களில் ஒன்று பொதுப் பண்பாடு.பொதுப் பண்பாட்டுக்குள் உணவுப் பண்பாடும் அடங்கும்.எனவே உணவுப் பண்பாடானது ஒரு மக்கள் கூட்டத்தின் தேசியத் தனித்துவங்களில் ஒன்றாகக் கருதத்தக்கது.1966இல் மேதினத்தன்று இடதுசாரிகள் தமிழ்மக்களுக்கு எதிராக எழுப்பிய கோசத்தை இங்கு சுட்டிக்காட்டலாம்.“தோசே மசால வடே அப்பிட்ட எப்பா”.இது தமிழர்களை அவர்களுடைய உணவுக்கூடாக விழித்த ஒரு கோஷம்.தோசையும் மசாலா வடையும் வேண்டாம் என்று பொருள்.அதாவது தோசையும் வடையும் அங்கே தமிழ் மக்களின் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டன. ஈழத் தமிழர்கள் மத்தியில் வடக்கிலும் கிழக்கிலும் வித்தியாசமான உணவுப் பண்பாடுகள் உண்டு.வடக்கில் யாழ்ப்பாணத்திற்கும் வன்னிக்கும் இடையே வித்தியாசங்கள் உண்டு.யாழ்ப்பாணத்திலேயே வடமாராட்சி,தீவுப் பகுதிக் கிடையே வித்தியாசமான உள்ளூர் உணவுப் பண்பாடுகள் உண்டு.ஒரு தேசிய இனத்தின் உள்ளூர் உணவு பண்பாட்டுக்குள்ளேயே பல வகைகள் உண்டு.அவை எக பரிமாணத்தைக் கொண்டவை அல்ல. இந்தப் பல்வகைமையின் திரட்சிதான் ஈழத் தமிழர்களுடைய பொதுவான உணவு பண்பாடாகும். உலகில் தூய உணவுப் பண்பாடு என்று ஒன்று கிடையாது என்று கீதா சுகுமாரன் கூறுகிறார்.எல்லா உள்ளூர் உணவுப் பண்பாடுகளும் கொண்டும் கொடுத்தும் வளர்ந்தவைதான். இந்த விளக்கத்தின் பின்னணியில் வைத்தே கோப்பரேட் உணவுப் பண்பாட்டையும்,உள்ளூர்,தேசியத் தனித்துவம்மிக்க உணவுப் பண்பாடுகளையும் பார்க்க வேண்டும். ஆயுத மோதல்களுக்கு பின்னரான நுகர்வுப் பசி,தாகம் என்பவற்றின் பின்னணியில் ஒரு தேசமாக திரள்வதன் மூலம் மட்டுமே தனது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க வேண்டிய தமிழ்ச் சமூகமானது,தனித்துவம் மிக்க தனது சொந்தச் சுவையைக் குறைத்து மதிப்பிட்டு, அதை “லோக்கலானது” என்று இகழ்ந்துவிட்டு, கோப்பரேட் சுவை மீது பசி தாகமுடையதாக மாறிவிடுமா ? கோப்பரேட் உணவகங்களின் பெருக்கத்தின் மத்தியில் உள்ளூர்த் தனித்துவங்களைப் பாதுகாப்பதை ஒரு வாழ்க்கை முறையாக, பெருமைக்குரிய வாழ்க்கை முறையாகக் கட்டமைப்பது என்பது ஒரு சமூகத்தின் அரசியல் சமூக பண்பாட்டுத் தலைமைத்துவங்களின் வேலை.அது தொடர்பாக அந்த சமூகத்தின் தேசியவாத அரசியலை முன்னெடுக்கும் தரப்புக்கள் மத்தியில் பொருத்தமான விழிப்பும் தூரநோக்கிலான அரசியல் தரிசனங்களும் இருக்க வேண்டும்.துறைசார் அறிஞர்கள் இதுதொடர்பான கற்கைகளை காஸ்ரோ நஷனலிஸம் (Gastro nationalism)என்று அழைக்கிறார்கள். ஈழத்தமிழர்கள் புலப்பெயர்ச்சி காரணமாக ஏற்கனவே உலகமயப்பட்டு விட்டார்கள்.தாங்கள் உலகமயப்பட்டு விட்டதாகக் காட்டிக்கொள்வதை ஒரு பகுதியினர் பெருமையாகவும் கருதுகிறார்கள். தமிழ்மக்கள் பண்பாட்டுச் செழிப்புமிக்க ஒரு நடுத்தர வர்க்கத்தை கொண்டவர்கள். பண்பாட்டுச் செழிப்புமிக்க ஒரு சமூகம் தன்வசமிழந்து தனது தனித்துவங்களை ‘லோக்கல்’ ஆனவை என்று இகழ்ந்து எதிர்ப்பின்றி உலகப் பொதுப் பண்பாட்டுக்குள் கரைந்துவிடாது.ஆனால் ஒரு சமூகத்தை தோற்கடிக்க விரும்பும் சக்திகள் அந்தச் சமூகத்தின் பண்பாட்டுத் தனித்துவத்தையும் செழிப்பையும் அதைவிட பலமான ஒரு பண்பாட்டிற்குள் கரைத்து விட முயற்சிக்கும்.எனவே அதை எதிர்கொள்வதற்கான சமூக,அரசியல், பொருளாதார,பண்பாட்டு விழிப்பு என்பது கலெக்டிவ் ஆனது.அரசியல் தலைமைகளால் முன்னெடுக்கப்பட வேண்டியது.கோப்பரேட் சுவையைப் பரப்பும் உயர்தர உணவகங்களுக்கு நிகராக உள்ளூர்ச் சுவையை,உள்ளூரில் தனித்துவமான உணவுப் பண்டங்களை உலகத் தரத்துக்கு உற்பத்தி செய்வதற்கு தமிழ் மக்களிடம் வளம் இல்லையா? உள்ளூர் நண்டுக் கறி,உள்ளூர் றால்கறி,உள்ளூர் பிரட்டல்,உள்ளூர் பொரியல்,உள்ளூர் சுண்டல்,உள்ளூர் கீரை,உள்ளூர் ஒடியல் கூழ்,உள்ளூர் பலகாரம்… என்று தமிழ் மக்களின் தேசிய தனித்துவங்களை வெளிப்படுத்தும் உணவுச் சாலைகளை கட்டியெழுப்ப உள்ளூரிலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் உள்ள முதலீட்டாளர்கள் முன் வரவேண்டும். சூழலியலாளர்கள் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டுவார்கள்.உள்ளூர் மரங்களில்தான் பறவைகள் கூடுகட்டும்.பூச்சி புழுக்களும் அந்த மரங்களைத்தான் மொய்க்கும்.அவற்றுக்குத் தெரிகிறது உள்ளூர் மரம் எது? “ஹைபிரிட்” மரம் எது? என்று.பண்பாட்டுச் செழிப்பு மிக்க தமிழ் மக்களுக்கும் அது தெரியும்.தமது சுவை எது? கோப்பரேட் சுவை எது என்பது.பண்பாட்டு விழிப்பில்லாமல் தேசிய விழிப்பு இல்லை. https://www.nillanthan.com/7204/?fbclid=IwY2xjawI6xzJleHRuA2FlbQIxMQABHU9bV8WeZ6y9-ofwXcsKiaVwJMeLXey4zcwzs3EkkH3YOm1A2iYmhcowhQ_aem_M8jBIXhneVE-VhcQYyfL6A
  10. 36 பந்துகளில் 40 ஓட்டங்களை இந்தியா எடுத்தால் வெல்லாம் .
  11. இந்தியா 122 /3 27 ஓவர்கள் முடிவில். ரோகிற், கில், கோலி வெளியே. தற்போது களத்தில் செரியாஸ் ஐயருடன் அக்சர் பட்டேல் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.
  12. சுகாதார அமைச்சு வடக்கு கிழக்குக்கு எந்த உதவியும் வழங்கவில்லை என் கிறார் அர்ச்சுனா. ஒளவையின் மூதுரையை திருக்குறள் என சொல்கிறார். புள்ளி விபரங்களுடன் தகவல்களை பகிர்ந்துள்ளார். சுகாதார அமைச்சர் இதற்கு பதில் வழங்க வேண்டும்.
  13. நாய் என்ற அமைச்சர் || அர்ச்சுனா பதிலடி!
  14. இருக்கின்ற பொருளாதார நிலைக்கு இராணுவத்துக்கு சும்மா வைத்து சோறு போடும் படி இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் பரிந்துரைக்கிறார் மக்களே.
  15. சிங்கள சிங்கங்கள் வெகுண்டு எழும்புவார்கள். ஒருத்தரின் கருத்தையும் காணவில்லை. கசான் புலி என்று கூறுவார்கள் என நினைக்கிறேன்.
  16. காணொளி (யூரியூப்) எனில் காணொளி முகவரியை பிரதி செய்து ஒட்டினால் சரி.
  17. சின்ராசுவுக்கு அம்னெஸ்ரி , ஐரோப்பிய ஒன்றியம் பிடிக்கவில்லையாம் செவ்வி எடுத்தவருக்கு பாராட்டுக்கள். ரனில் குடும்பியை மறைக்க முயன்றதை பார்க்க முடிந்தது. திக்குமுக்காடி போனார் ரனில்.
  18. தூக்கமின்மையால் அதிக தூக்க மாத்திரைகளை எடுத்ததாக அவரே சொல்லியுள்ளாராம்.
  19. திட்டமிட்டு தான் அனைத்தும் நடந்தன. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, தற்போதைய ஜே வி பி எல்லோரும் உடந்தையாக இருந்தார்கள் . அது நேரடியாகவும் மறைமுகமாகவும் நடைபெற்றன. 15 வருடங்கள் கழித்து அல்ஜசீரா. கோமாவில் இருந்து திரும்பியுள்ளது.
  20. 2 ம் கட்ட பேச்சுவார்த்தையின் மூலம் ஒரு நிரந்தர அமைதியை கொண்டு வரலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.