Everything posted by nunavilan
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்னண்ணை மெயில் கோச்சிலே ஏறிட்டீங்க போல. 😛 இவ்வளவு தாமதமாய் கிடக்கு. சட்டு புட்டுடென்று போடுங்கோ.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
உங்கள் இறுதி ஊர்வலத்திற்குப் பின் ஒருசில மணிநேரங்களில் அழுகுரல்கள் முழுமையாக அடங்கியிருக்கும், அடுத்த வேளை உணவை அயல் வீட்டுக்காரர் கொண்டுவந்திருப்பார், இல்லை என்றால் ஆர்டர்கள் ஹோட்டலுக்கு சென்றிருக்கும், பேரன் பேத்திகள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்க,.. வந்த கூட்டத்தில் ஓர் இளம்பெண்ணும் ஆணும் காதல் புன்னகையுடன் பரஸ்பரம் போன் நம்பர்கள் மாற்றிக்கொள்வர்... படுக்கப் போகும் முன் காலாற நடந்து வரலாமென சில ஆண்கள் தேநீர்க்கடை வரை சென்றிருப்பர்,.. சாப்பிட்ட இலைகளயும், குப்பைகளையும் இன்னும் கொஞ்சம் தள்ளிக் கொட்டியிருக்கலாம் என உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் மனதுக்குள் பொறுமிக்கொண்டிருப்பார்,.. ஒரு அவசர சூழ்நிலையால் நேரில் வர இயலவில்லையென உறவினர் ஒருவர் உங்கள் மகளிடம் போனில் பேசுவார். மறுநாள் விருந்தில், கறியில் காரம் போதவில்லையென ஓரிருவர் குறைபட்டுக்கொள்வார்கள், எலும்பை நீக்கி, கறியை மட்டும் குழந்தைக்கு ஒரு அம்மா ஊட்டிக்கொண்டிருப்பார்.. இத்தனை தூரம் வந்தாச்சு போற வழியில் அங்கேயும் பார்த்துவிட்டுப் போலாமா என வெளியூர் உறவுகள் சுற்றுலாத் திட்டங்கள் ரகசியாமாய் வகுத்திருப்பர், தன்னுடைய பங்குக்கு மேல் சிலநூறு ரூபாய்கள் அதிகமாக செலவாகிவிட்டதென ஒரு பங்காளி கணக்கிட்டு நொந்துகொண்டிருப்பார்.. கூட்டம் மெல்ல மெல்லமாய்க் கரையத் தொடங்கும்.. அடுத்து வரும் நாட்களில் நீங்கள் இறந்ததே தெரியாமல் உங்கள் தொலைபேசிக்கு சில அழைப்புகள் வரக்கூடும்,.. உங்கள் அலுவலகம் உங்கள் இடத்துக்கு வேறொருவரை அவசரமாகத் தேடத் துவங்கியிருக்கும், ஒரு வாரம் கழிந்து, உங்கள் இறப்புச் செய்தி கேள்விப்பட்டு, உங்கள் கடைசிப் பதிவு என்னவென ஆர்வம் கலந்த சோகத்தோடு சில பேஸ்புக் நண்பர்கள் தேடக்கூடும். இரண்டு வாரங்களில் உங்கள் மகன் மகளின் எமெர்ஜென்சி லீவு முடிந்து பணிக்கு திரும்பிடுவர், ஒரு மாதமுடிவில் உங்கள் வாழ்க்கைத்துணை டிவியில் வரும் ஏதோ ஒரு நகைச்சுவைக் காட்சிக்கு சிரிப்பார், அடுத்துவரும் மாதங்களில், உங்கள் நெருங்கிய உறவுகள் மீண்டும் சினிமாவுக்கும், பீச்சுக்கும் சகஜமாய்ச் செல்லத்துவங்கியிருப்பர், அத்தனை பேரின் உலகமும் எப்போதும்போல் மிக இயல்பாக இயங்கிக்கொண்டிருக்கும், ஒரு பெரிய ஆலமரத்தின் இலை ஒன்று வாடி உதிர்ந்ததற்கும், நீங்கள் வாழ்ந்து மறைந்ததற்கும் எள்ளளவும் வித்தியாசம் இல்லாதது போல, அத்தனையுமே சுலபமாய், வேகமாய், எந்தச் சலனமுமின்றி நடக்கும், மழை பெய்யும், தேர்தல் வரும், பேருந்துகளில் கூட்டம் வழக்கம்போலவே இருக்கும், ஒரு நடிகைக்குத் திருமணம் ஆகும், திருவிழா வரும், உலகக்கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடி நடக்கும், வண்ண வண்ணமாய் பூக்கள் பூக்கும், உங்கள் செல்லப்பூனை அடுத்த குட்டி ஈனும்.. நீங்களே வியக்கும் வேகத்தில் இந்த உலகத்தால் நீங்கள் மறக்கப்படுவீர்கள், இதற்கிடையில் உங்கள் முதல்வருடத் திதிகொடுத்தல் மட்டும் மிகச்சிரத்தையாக நடக்கும். கண்மூடித் திறக்கும் நொடியில் வருடங்கள் பல ஓடியிருக்கும், உங்களைப் பற்றிப் பேச யாருக்கும் எதுவுமே இருக்காது, என்றாவது ஒருநாள், பழைய புகைப்படங்களைப் பார்க்கையில் மட்டும், உங்கள் வாரிசுகளில் ஒருவர் உங்களை நினைவுகொள்ளக்கூடும், உங்கள் ஊரில், நீங்கள் நெருங்கிப் பழகிய ஆயிரம் ஆயிரம் பேர்களில், யாரோ ஒருவர் மட்டும், நீங்கள் இருந்ததாய், அபூர்வமாய் உங்களைப்பற்றிப் யாரிடமோ பேசக்கூடும்.. மறு பிறவி உண்மையென்றால் மட்டும் நீங்கள் வேறெங்கேயோ, வேறு எவராகவோ வாழ்ந்து கொண்டிருக்கக்கூடும்.. மற்றபடி, நீங்கள் எதுவுமே இல்லாமல் ஆகி, பேரிருளில் மூழ்கி பல பத்தாண்டுகள் ஆகியிருக்கும், இப்போது சொல்லுங்கள்.. உங்களை இத்தனை சீக்கிரம் மறக்கக் காத்திருக்கும் மனிதர்களில் யாரைத் திருப்திப்படுத்த இன்று, இப்போது, இவ்வளவு பதற்றமாய் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்..? உங்கள் வாழ்க்கை , யாரையும் நீங்கள் திருப்தி படுத்த தேவையில்லை, யாரும் உங்களை திருப்தி படுத்த போவதும் இல்லை. வாழுங்கள் உங்களுக்காகவும் வாழுங்கள்.......
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பொலிஸ்காரன் மகளில் இருந்து கண்ணிரண்டும் மின்ன மின்ன P>B சிறினிவாஸ் &S> ஜானகி குரலில்
-
நடனங்கள்.
https://www.facebook.com/reel/2112617615923196 டி.இமான் ஆச்சரியப்பட வைத்து விட்டார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அகஸ்தியனும் கலந்து கொள்வதாக சொன்ன நினைவு.
-
தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்
கிழக்கில் சம்பந்தருக்கு ஆப்படித்தது போலவே மீண்டும் ஆப்பை செருக கக்கீம் தயார் நிலையில் உள்ளார்.
-
எங்கள் பாசமிகு தந்தையார் மறைவு.
ஆழ்ந்த அனுதாபங்கள் , நெடுக்ஸ்.
-
தமிழரசுக் கட்சியை இல்லாமல் செய்ய சதி!
கக்கீமுடன் தமிழரசு கட்சி இணைந்து கொழும்பு , கண்டி போன்ற பகுதிகளில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட உள்ளதாக கக்கீம் தெரிவித்துள்ளார்.
-
பட்டலந்த முகாம் அறிக்கையை, ஜேவிபி கேட்கத் தவறிய சந்தர்ப்பங்களும் இனஅழிப்பு விசாரணை மூடி மறைப்புகளும்
- பட்டலந்த முகாம் அறிக்கையை, ஜேவிபி கேட்கத் தவறிய சந்தர்ப்பங்களும் இனஅழிப்பு விசாரணை மூடி மறைப்புகளும்
பட்டலந்த விசாரணையும் தேவை! தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகளையும் விசாரணை செய்ய வேண்டும்! : பட்டலந்த விசாரணையும் தேவை!- பட்டலந்த முகாம் அறிக்கையை, ஜேவிபி கேட்கத் தவறிய சந்தர்ப்பங்களும் இனஅழிப்பு விசாரணை மூடி மறைப்புகளும்
15 வருடங்களின் பின்னர் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு எதிரான புதிய உத்தி பட்டலந்த முகாம் அறிக்கையை, ஜேவிபி கேட்கத் தவறிய சந்தர்ப்பங்களும் இனஅழிப்பு விசாரணை மூடி மறைப்புகளும்கொலைகளுக்கான நீதி் விசாரணையைவிடவும் புலிகளுக்கு எதிரான போருக்கு முக்கியத்துவம் வழங்கிய அநுர பதிப்பு: 2025 மார்ச் 17 18:29 புலம்: வவுனியா, ஈழம் புதுப்பிப்பு: மார்ச் 17 22:53 போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை என்றும், இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை அவசியம் எனவும் ஈழத்தமிழ் அமைப்புகள் பேசி வரும் நிலையில், 'பட்டலந்த' வதை முகாம் தொடர்பாக இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருப்பதன் பின்னணியில் பல காரண - காரியங்கள் உண்டு. இதனை மூன்று வகையாக நோக்கலாம். ஒன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பட்டலந்த வதை முகாமுடன் இருந்த தொடர்பு. இரண்டாவது, ரணில் விக்கிரமசிங்கவை ஜனநாயகவாதி எனவும் இனப் பிரச்சினைக்கு அவரால்தான் தீர்வை முன்வைக்க முடியும் என்றும் நம்புகின்ற மற்றும் அவருக்காக பிரச்சாரம் செய்கின்ற தமிழர்களின் மன நிலை பற்றியது. 2009 இற்குப் பின்னரான சூழலில் ரணில் - ராஜபக்ச தற்போது அநுரகுமார என்று மாறி மாறி ஆதரவு வழங்கி வரும், வழங்க முற்படும் தமிழரசுக் கட்சிக்கும் கட்சிகளாக இயங்கும் சில முன்னாள் ஈழ விடுதலை இயக்கங்களுக்கும், சில புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கும் இக் கட்டுரை சமர்ப்பணம் மூன்றாவது, 1994 இல் இருந்து 2004 ஆம் ஆண்டு வரை சந்திரிகாவுக்கும் 2005 இல் இருந்து 2009 வரை மகிந்தவுக்கும் ஆதரவு வழங்கி தேன்நிலவை அனுபவித்த காலத்தில் இந்த 'பட்டலந்த ' வதை முகாம் பற்றிய அறிக்கையை ஜேவிபி ஏன் கோரவில்லை என்ற சந்தேகங்கள். இதில் முதலாவது காரணத்தை நோக்கினால், 1988- 89 ஆண்டுகளில் பிரேமதாச ஜனாதிபதியாக இருந்தபோது ரணில் அமைச்சராக இருந்தவர். பாதுகாப்பு அமைச்சராக ரஞ்சன் விஜேரட்ன இருந்தார். 'பட்டலந்த' வதை முகாமில் ஆயுதக் களஞ்சியப் பொறுப்பதிகாரியாக இருந்த ஓய்வு பெற்ற பொலிஸ் பரிசோதகர் ஏ. பீ. கருணாரத்ன அப்போது முகாமில் நடந்த ஈவிரக்கமற்ற கொலைகள் பற்றி ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலில் பகிரங்கமாகக் கூறியிருக்கிறார். குறிப்பாக சட்டத்தரணி விஜயதாஸ லியனாரச்சி கொடூரமாக கொலை செய்யப்பட்டமை பற்றி அவர் அந்த நேர்காணலில் விபரித்துள்ளார். சட்டத்தரணி விஜயதாச குற்றுயிராக இருந்த நிலையில் முகாமுக்கு ஒரு வாகனத்தில் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவும், ரணில் விக்கிரமசிங்கவும் வந்து சென்றதாக அவர் கூறுகிறார். ஆகவே, இப் படுகொலைகளுக்கு அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி காரணம் என்பதும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்பு இருந்தது என்பதும் வெளிப்படையான ஒன்று. அதுவும் ரணிலின் இச் செயற்பாடுகள் பற்றி கடந்த 30 வருடங்களில் நாடாளுமன்றத்தில் சிங்கள உறுப்பினர்கள் பலரும் ஆதாரங்களுடன் சுட்டியிருக்கின்றனர். 1990 களில் நாடாளுமன்றத்தில் 'பட்டலந்த' என்ற பட்டப் பெயரும் ரணிலுக்கு இருந்தது. இப் பின்னணியில் இரண்டாவது காரணத்தை நோக்கினால், இந்த ரணில் விக்கிரமசிங்கவை 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறவிடாமல் விடுதலைப் புலிகள் தடுத்துவிட்டதாகவும், இனப்பிரச்சினைக்குரிய தீர்வை ரணில்தான் வழங்கக்கூடியவர் எனவும், முற்போக்குத் தமிழர்கள் பலரும், நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் மாற்றுக் கருத்தாளர்கள் எனப்படுவோரும் திட்டித் தீர்த்து ரணிலை புனிதராக்கினர். ரணில் 2002 ஆம் ஆண்டு பிரதமராக இருந்தபோது நோர்வேயின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சமாதானப் பேச்சில் புலிகளுக்கு எதிராக சர்வதேச அரங்கில் ரணில் மேற்கொண்ட இரகசிய காய்நகர்த்தல்களை அறிந்துகொண்ட பின்புலத்தில்தான் ரணிலை 2005 இல் புலிகள் ஜனாதிபதியாக்க விரும்பியிருக்கவில்லை என்பது நிதர்சனம். இதன் காரண காரியத்தோடு தான் ரணில் ஒரு 'நரி' என 2006 ஆம் ஆண்டு அன்ரன் பாலசிங்கம் லண்டனில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் பகிரங்கமாகச் சுட்டிக்காட்டியிருந்தார். 1990 களில் நாடாளுமன்றத்தில் ரணிலுக்கு 'பட்டலந்த' என்று பட்டப் பெயர் வைத்திருந்த சிங்கள உறுப்பினர்கள் பலரும் 2009 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலத்தில் ரணிலை நரி என்றும் அவ்வப்போது உச்சரித்திருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறிய உறுப்பினர்கள்தான் ரணில் ஒரு நரி என்று பகிரங்கமாக குற்றம் சுமத்தினர். அதேநேரம், 2015 ஆம் ஆண்டு மைத்திரி - ரணில் அரசாங்கத்தை நல்லாட்சி என்றும் ரணில்தான் தமிழர்களின் அரசியல் உரிமைகளை வழங்கும் நாயகன் என்றும் சட்டத்தரணி சுமந்திரன் தம்பட்டம் அடித்த காலமும் உண்டு. இந்த வரலாற்றோடு மேற்படி மூன்றாவது காரணத்தைச் சற்றுப் பின்னோக்கி ஆராய்வோம். 17 வருடங்களின் பின்னர் 1994 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த சந்திரிகா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம், 'பட்டலந்த ' வதை முகாம் மாத்திரமல்ல, 'சூரியவெ' படுகொலை உள்ளிட்ட ஜேவிபிக்கு எதிரான பல கொலைகளை விசாரணை நடத்துவதாக உறுதியளித்திருந்தது. சந்திரிகாவின் அரசாங்கத்தில் நடைபெற்ற கொலைகள் பற்றியெல்லாம் ஜேவிபி அன்று வாய் திறக்கவில்லை. பட்டலந்த முகாம் பற்றி விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்க விரும்பாத சந்திரிகா பற்றி அன்று எதுவுமே பேசவில்லை. மாறாக புலிகளுக்கு எதிரான போரை தீவிரப்படுத்த வேண்டும் என்று அழுத்தங்களுடன் மாத்திரமே சந்திரிகாவின் அரசாங்கத்துக்கு ஜேவிபி ஆதரவு வழங்கியது போரை நிறுத்தி புலிகளுடன் சமாதானப் பேச்சு நடத்தப்படும் என்றும் அப்போது சந்திரிகா மார் தட்டியிருந்தார். 1993 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மேல் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்டிருந்த சந்திரிகா, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் நடந்த கொலைகள், அட்டூழியங்கள் அனைத்தையும் அக்குவேறு ஆணிவேறாகக் காண்பித்தார். தோ்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பதவியேற்ற சந்திரிகா பின்னர் பிரதமராகவும் சில மாதங்களில் ஜனாதிபதியாகவும் பதவியேற்றார். அதாவது, முதன் முறையாக அரசியலில் ஈடுபட்டு 18 மாதங்களில் மேல் மாகாண சபை முதலமைச்சர், பின்னர் பிரதமர் அதன் பின்னர் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாகவும் பதவியேற்றார். அதன்போது ஜேவிபி சந்திரிகாவுக்கு ஆதரவு கொடுத்தது. ஜேவிபியும் 1994 இல் முதன் முறையாக ஜனநாயக வழியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற நிஹால் கலப்பத்தி சந்திரிகா அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுத்திருந்தார். நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும் என்றும் சந்திரிகாவுக்கு அவர் நிபந்தனை விதித்திருந்தார். அதேநேரம், தேர்தல் பிரச்சாரங்களின் போது உறுதியளித்தபடி புலிகளுடன் சமாதானப் பேச்சையும் சந்திரிகா ஆரம்பித்தார். ஆனாலும், பேச்சுகள் முறிவடைந்து 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மீண்டும் மூன்றாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானது. இந்தப் போருக்கு ஜேவிபி முழு ஆதரவு வழங்கியது. ஆனால், நிஹால் கலப்பத்தி சந்திரிகாவிடம் முன்வைத்த நிபந்தனைகளுக்கு நடந்தது என்ன? பட்டலந்த வதை முகாம் பற்றி மாத்திரமே சந்திரிகா விசாரணை நடத்தினார். ஆனால் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்படவுமில்லை. அத்துடன், நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிக்கப்படவுமில்லை. நிஹால் கலப்பத்தி ஆதரவை விலக்கிக் கொண்டார். 1995 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யாழ்ப்பாணம் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டு அங்கு பல கொலைகள் நடந்தன. 1996 இல் கிரிசாந்தி குமாரசுவாமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார். 600 இற்கும் அதிகமான தமிழ் இளைஞர்கள் - பெண்கள் கொல்லப்பட்டு செம்மனியில் புதைக்கப்பட்டுள்ளதாக கிரிசாந்தியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இராணுவ சிப்பாய் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்கியிருந்தார். கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு எதிராகப் பல திட்டமிடப்பட்ட படுகொலைகள் சித்திரவதைகள் நடந்தன. குறிப்பாக மட்டக்களப்பில் குடும்பப் பெண் ஒருவரின் அந்தரங்க உறுப்பில் கிரனேட் வீசப்பட்டு நடந்த கோரக் கொலைகள் அன்று சர்வதேச ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டிருந்தன. ஆனால், சந்திரிகாவின் அரசாங்கத்தில் நடைபெற்ற இக் கொலைகள் பற்றியெல்லாம் ஜேவிபி அன்று வாய் திறக்கவில்லை. பட்டலந்த வதை முகாம் பற்றி விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்க விரும்பாத சந்திரிகா பற்றி அன்று ஜேவிபி எதுவுமே பேசவில்லை. மாறாக புலிகளுக்கு எதிரான போரை தீவிரப்படுத்த வேண்டும் என்று அழுத்தங்களுடன் மாத்திரமே சந்திரிகாவின் அரசாங்கத்துக்கு ஜேவிபி ஆதரவு வழங்கியது. 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரஃப், 'நுவா' எனப்படும் தேசிய ஐக்கிய முன்னணி என்ற கட்சியை உருவாக்கி அதில் சிங்கள - தமிழ் முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரையும் போட்டியிட வைத்தார். ஒரு தேசியக் கட்சியாக அஷ்ரஃப் தனது கட்சியைக் காண்பித்திருந்தார். இது சந்திரிகாவுக்குப் பெரும் சவாலாக மாறியது. இதனால், 2000 ஆம் ஆண்டு தேர்தலில் ஜேவியின் முழு ஒத்துழைப்பை சந்திரிகா பெற்றார். அத்துடன் பிரித்தானியாவில் தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருந்த ஜேவிபி தலைவர் சோமவன்ச அமரசிங்கவுக்கு இலங்கை வருவதற்கு சந்திரிகா அனுமதியும் வழங்கினார். 1988 ஆம் ஆண்டு இலங்கையை விட்டுத் தப்பிச் சென்ற சோமவன்ச அமரசிங்க 2000 ஆம் ஆண்டு கொழும்புக்கு வந்து நடத்திய முதலாவது செய்தியாளர் மாநாடு கல்கிசை ஹோட்டேலில் நடைபெற்றது. அங்கு செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த சோமவன்ச ஐம்பதாயிரம் சிங்கள இளைஞர்களைத் திரட்டி புலிகளுக்கு எதிரான போருக்கு அனுப்புவேன் என்று உறுதியளித்திருந்தார். தேர்தல் பிரச்சார மேடைகளில் அவர் புலிகளுக்கு எதிரான போரை தீவிரப்படுத்த வேண்டும் என்று முழங்கியிருந்தார்.. இதனால் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜேவிபி பெற்றது. ஜேவிபியின் ஆதரவுடன் சந்திரிகா நற்சான்றிதழ் என்ற பெயரில் அரசாங்கத்தை அமைத்திருந்தார். ஆனால், இந்த ஆட்சியில் கூட பட்டலந்த வதை முகாம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜே.வி.பி சந்திரிகாவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. இருந்தாலும் இந்த அரசாங்கமும் கவிழ்ந்து 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அக் காலத்தில்தான் நோர்வேயின் சமாதான முயற்சியும் ஆரம்பிக்கப்பட்டது. தேர்தல் பிரச்சாரங்களில் நோர்வேயின் சமாதான முயற்சிக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்ட ஜேவிபி, பட்டலந்த வதை முகாம் உட்பட தங்களுக்கு எதிராக 1970 களிலும் 1988 -89 ஆம் ஆண்டுகளிலும் இலங்கை இராணுவம் புரிந்த படுகொலைகள் தொடர்பாக பேசாமல், விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாரங்களை மாத்திரமே முன்னெடுத்திருந்தது. 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரஃப், 'நுவா' எனப்படும் தேசிய ஐக்கிய முன்னணி என்ற கட்சியை உருவாக்கி அதில் சிங்கள - தமிழ் முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரையும் போட்டியிட வைத்தார். ஒரு தேசியக் கட்சியாக அஷ்ரஃப் தனது கட்சியைக் காண்பித்திருந்தார். இது சந்திரிகாவுக்குப் பெரும் சவாலாக மாறியது. இதனால், 2000 ஆம் ஆண்டு தேர்தலில் ஜேவியின் முழு ஒத்துழைப்பை சந்திரிகா பெற்றார் இதனால் ஜேவிபிக்கு 16 ஆசனங்கள் கிடைத்தன. ஆனாலும், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை அமைத்தது. சந்திரிகா ஜனாதிபதியாக இருக்க ரணில் பிரதமராக இருந்தார். அரசாங்கம் வேறு கட்சியாகவும் ஜனாதிபதி மற்றொரு கட்சியாகவும் முதன் முதலில் மாறுபட்ட ஆட்சி முறை ஒன்று இலங்கைத்தீவில் உருவானது. இச் சூழலில்தான் நோர்வேயின் ஏற்பாட்டுடன் சந்திரிகா ஆரம்பித்த சமாதான முயற்சியை ரணில் முழுமைப்படுத்தினார். 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கை அரசாங்கமும் புலிகளும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன. இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்ட ஜேவிபி பௌத்த பிக்குமாரின் ஒத்துழைப்புடன் கொழும்பில் தொடர் போராட்டங்களை நடத்தியிருந்தது. சந்திரிகா ஜனாதிபதியாக இருந்து கொண்டு ஜேவிபிக்கு மறைமுக ஆதரவு வழங்கினார். ஜேவிபியின் எதிர்ப்பை காண்பித்து நோர்வேயின் சமாதான முயற்சிகளில் பல இடர்பாடுகளை சந்திரிகா உருவாக்கினார். ரணில் விக்கிரமசிங்கவும் சந்திரிகாவின் எதிர்ப்புகளை மேற்கோள் காண்பித்து பேச்சுவார்த்தை மேசையில் புலிகளின் நியாயமான கோரிக்கைகள் பலவற்றை தட்டிக்கழித்தார். அதாவது, தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேற்றப்படுவதை தடுக்க சந்திரிகாவின் எதிர்ப்பை ஒரு உத்தியாகப் பயன்படுத்தினார் ரணில். இந்த இழுபறியில் தான் 2003 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சு உட்பட மூன்று முக்கிய அமைச்சுக்களை சந்திரிகா ரணிலின் அரசாங்கத்திடம் இருந்து கையகப்படுத்தினார். இதனால் கொழும்பில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. சமாதான பேச்சுக்கள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டன. சுந்திரிகாவின் இச் செயற்பாட்டுக்கு ஜேவிபி பின்னணியாக இருந்தது. இந்த இழுபறி நிலையினால் ரணிலின் அரசாங்கத்தை சந்திரிகா கலைத்தார். இதனால் 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது. நோர்வேயின் சமாதான முயற்சிக்கு எதிராகவே ஜேவிபியும் சந்திரிகா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தன. சந்திரிகாவின் வெற்றிலைச் சின்னத்தில் கூட்டுச் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டதால் ஜேவிபிக்கு 39 ஆசனங்கள் கிடைத்தன. சந்திரிகா அமைத்த அரசாங்கத்தில் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விவசாய அமைச்சராக பதவி வகித்திருந்தார். ஆனால், அந்த அரசாங்கத்தில் கூட 'பட்டலந்த' வதை முகாம் தொடர்பான அறிக்கை யை ஜேவிபி கோரவில்லை. மாறாக நோர்வேயை சமாதான முயற்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதே ஜேவிபியின் ஒரேயொரு இலக்காக இருந்தது. 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் வெற்றிக் கடுமையாக உழைத்த ஜேவிபி புலிகளுக்கு எதிரான போரை தீவிரப்படுத்த கடும் அழுத்தங்களைக் கொடுத்தது. ஆக புலிகளை இல்லாதொழிக்க வேண்டும் என்ற இலக்கு மாத்திரமே ஜேவிபிக்கு 1994 இல் இருந்து 2009 மே மாதம் வரை இருந்தது என்பது இங்கே கண்கூடு. எனவே, இந்த வரலாற்றுப் பின்னணியில் இனவாதத்தை மூலதனமாக்கி 2024 ஆண்டு செப்டம்பர் மாதம் 159 என்ற அறுதிப் பெரும்பான்மை ஆசனங்களுடன் ஆட்சியமைத்துள்ள ஜேவிபியின் முகத் தோற்றமான தேசிய மக்கள் சக்தி, பட்டலந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமா்ப்பித்திருக்கிறது. உண்மையில் பாதிக்கப்பட்ட ஜேவிபி உறுப்பினர்கள் - ஆதரவாளர்கள் மற்றும் சாதாரண சிங்களப் பொதுமக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காவே என்று சிங்கள மக்கள் நம்பலாம். ஆனால் நோக்கம் அதுவல்ல. இதை மூன்று வகைப்படுத்தலாம் ஒன்று, இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்ற தமிழர்களின் கோரிக்கைகளை மடைமாற்றி எண்பது வருட அரசியல் போராட்டத்தை இலங்கைத்தீவின் உள்ளக விவகாரமாக மாற்றுவது. 2003 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சு உட்பட மூன்று முக்கிய அமைச்சுக்களை சந்திரிகா ரணிலின் அரசாங்கத்திடம் இருந்து கையகப்படுத்தினார். இதனால் கொழும்பில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. சமாதான பேச்சுக்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. சுந்திரிகாவின் இச் செயற்பாட்டுக்கு ஜேவிபி பின்னணியாக இருந்தது இரண்டாவது, இலங்கையின் மூத்த சிங்கள அரசியல்வாதிகள் சிலரையும் இலங்கை இராணுவ உயர் அதிகாரிகள் சிலரையும் தண்டித்தால் போதும் என்ற மனப்பாங்குடன் செயற்பட்டு இலங்கை ஒற்றை அரசு என்ற கட்டமைப்பு நியாயமானது நீதியானது என்ற எண்ணப்பாட்டை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்துவது. மூன்றாவது, ரணில் - சஜித் பிரேமதாச ஆகியோர் எதிர்காலத்தில் கூட்டுச் சேர்ந்து மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியாக அல்லது புதிய அரசியல் அணியாகச் செயற்படுவதை தடுப்பது. ஆகவே "மாற்றம்" "சோசலிசம்" என்று மார் தட்டிக் கொண்டு ஆட்சிக்கு வந்த ஜேவிபி, இரண்டு விடயங்களை புரிந்து கொள்ள வேண்டும் ஒன்று - ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தையும் அதற்காக நடந்த 30 வருட போரில் தமிழர்கள் கொல்லப்பட்டமை, சித்தரவதை செய்யப்பட்டமை என்பது இன அழிப்பின் வெளிப்பாடு. தமிழர்களின் மரபு அடையாளங்கள், கலாசாரங்கள் கூட 2009 ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னரான சூழலிலும் அழிக்கப்பட்டு வருகின்றன. இரண்டாவது - பட்டலந்த வதை முகாம் உட்பட பல வதை முகாம்களில் ஜேவிபி உறுப்பினா்கள்- ஆதரவாளர்கள் கொல்லப்பட்டமை சித்திரவதை செய்யப்பட்டமை என்பது ஒரு இனத்துக்குள் நடந்த கொலைகள். அது இன அழிப்பு அல்ல. இக் கொலைகள் சர்வதேசக் குற்றங்கள் என்று இதுவரையும் எந்தவொரு சர்வதேச நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் கூறவேயில்லை. ஆனால் ஈழத்தமிழர்கள் மீது இலங்கை இராணுவம் நடத்திய படு கொலைகள் சர்வதேசக் குற்றங்கள் என்றே ஜெனிவா மனித உரிமைச் சபையின் அறிக்கைகள் கூறியிருக்கின்றன. போர்க்குற்ற விசாரணை அவசியம் என்று ஐ.நா அறிக்கைகளிலும், சர்வதேச நீதி விசாரணை அவசியம் என்றும் பல சர்வதேச நாடுகளும் கூட சுட்டிக்காட்டியுமிருக்கின்றன. இன அழிப்பு என தமிழர்கள் கோரினாலும் இன்னமும் அதனை சர்வதேச நாடுகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்தாலும் கனடா போன்ற சில சா்வதேச நாடுகள் இன அழிப்பு என்பது பற்றி பரிசீலிக்கிக்கின்றன. எனவே பட்டலந்த படுகொலைகள் சர்வதேசக் குற்றமா என்பதை ஜேபிவிதான் கூற வேண்டும். ஆகவே, மேலும் இரண்டு விடயங்களை ஜேவிபி புரிந்துகொள்ள வேண்டும். ஒன்று - பட்டலந்த வதை முகாம் அறிக்கையை மாத்திரம் நாடாளுமன்றத்தில் சமா்ப்பித்து அதனை வெறும் பேசுபொருளாக சித்தரிக்க முயற்சிக்கும் நகர்வு என்பது ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் மிகப் பெரும் அரசியல் அநீதி. இரண்டாவது - பட்டலந்த முகாம் அறிக்கையை உள்ளூராட்சி சபை தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தினால், பெரும்பான்மையாக வாக்களித்த சிங்கள மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும். ஆகவே, கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக பட்டலந்த முகாம் அறிக்கை மாறலாம். இந்த இடத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பலவீனங்களும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் தேர்தல் வியூகங்களுக்குள் மாத்திரம் மூழ்கியிருப்பது மிக மிக ஆபத்தானது. புதிய இளம் தலைமுறை இந்த வரலாறுகளை நன்கு கற்றுக்கொள்ள வேண்டும். 2009 இற்குப் பின்னரான சூழலில் ரணில் - ராஜபக்ச தற்போது அநுரகுமார என்று மாறி மாறி ஆதரவு வழங்கி வரும், வழங்க முற்படும் தமிழரசுக் கட்சிக்கும் கட்சிகளாக இயங்கும் சில முன்னாள் ஈழ விடுதலை இயக்கங்களுக்கும், சில புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கும் இக் கட்டுரை சமர்ப்பணம். கூர்மை - koormai.comபட்டலந்த முகாம் அறிக்கையை, ஜேவிபி கேட்கத் தவறிய சந்தர்ப்ப...போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை என்றும், இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை அவசியம் எனவும் ஈழத்தமிழ் அமைப்புகள் பேசி வரும் நிலையில், 'பட்டலந்த' வதை முகாம் தொடர்பாக இலங்கை ஒற்றையாட்சி நாடாள...- இலங்கையில் தனிநபரொருவருக்கு தேவைப்படும் குறைந்தபட்ச பணம் குறித்து வெளியான புதிய தகவல்
2025 ஜனவரியில் ஒரு நபர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு மாதத்திற்கு தேவைப்படும் குறைந்தபட்ச தொகை 16,334 ரூபாய் என தெரிவிக்கப்பட்டிருப்பது, அந்த நபரின் அடிப்படை வாழ்க்கைச் செலவுகளை (Basic Living Expenses) குறிக்கிறது. இந்த தொகை ஒரு நபர் ஒரு மாதத்தில் உணவு, உடை, வீட்டு வாடகை, மருத்துவம், போக்குவரத்து மற்றும் பிற அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய தேவைப்படும் குறைந்தபட்ச பணத்தைக் குறிக்கும். இதன் அர்த்தம்:அடிப்படைத் தேவைகள்: இந்த தொகை ஒரு நபர் வாழ்வதற்கு அடிப்படையாகத் தேவைப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையை பிரதிபலிக்கிறது. இதில் உணவு, குடிநீர், மின்சாரம், வீட்டு வாடகை, போக்குவரத்து, மருத்துவம், கல்வி மற்றும் பிற தேவைகள் அடங்கும். குறைந்தபட்ச வாழ்க்கைத் தரம்: இந்த தொகை ஒரு நபர் ஒரு குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தை பராமரிக்க தேவைப்படும் பணத்தை குறிக்கிறது. இது வறுமைக் கோட்டை விட அதிகமாக இருக்கலாம், ஆனால் இது ஒரு ஆரோக்கியமான மற்றும் மரியாதைக்குரிய வாழ்க்கைக்கு தேவையான தொகையாக கருதப்படுகிறது. பொருளாதார மதிப்பீடு: இந்த தொகை பொருளாதார நிபுணர்கள் அல்லது அரசாங்கங்களால் மதிப்பிடப்பட்டிருக்கலாம். இது பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம் மற்றும் சமூகப் பாதுகாப்பு திட்டங்களை வடிவமைக்க உதவும். வறுமைக் கோடு மற்றும் வாழ்க்கைச் செலவு: இந்த தொகை வறுமைக் கோட்டை விட அதிகமாக இருக்கலாம், ஏனெனில் வறுமைக் கோடு ஒரு நபர் உயிர்வாழ்வதற்கு தேவையான குறைந்தபட்ச உணவுச் செலவை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளும். ஆனால், இந்த தொகை அனைத்து அடிப்படைத் தேவைகளையும் உள்ளடக்கியது. முக்கியம்:இந்த தொகை பிராந்தியம், நகரம் அல்லது கிராமம், மற்றும் பொருளாதார நிலைமைகளைப் பொறுத்து மாறுபடும். 2025 ஜனவரிக்கான இந்த மதிப்பீடு, தற்போதைய பொருளாதார நிலைமைகள், பணவீக்கம் மற்றும் செலவு முறைகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்பட்டிருக்கலாம். இது ஒரு நபரின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய தேவைப்படும் குறைந்தபட்ச தொகையை குறிக்கிறது, மேலும் இது பொருளாதார மற்றும் சமூக கொள்கைகளை வடிவமைக்க உதவும் ஒரு முக்கியமான குறிகாட்டியாகும்.- சிங்கப்பூரில் 13 ஆண்டு காணாத உச்சத்தை எட்டிய தனியார் வீடுகளின் விற்பனை
சிங்கப்பூரில் 13 ஆண்டு காணாத உச்சத்தை எட்டிய தனியார் வீடுகளின் விற்பனைவாசிப்புநேரம் - 1 நிமிடம் (படம்: envato.com) வெளியீடு : 17 Mar 2025 07:39PM சிங்கப்பூரில் தனியார் வீடுகளின் விற்பனை, சென்ற மாதம், 13 ஆண்டு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. எக்சிக்கியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளைத் தவிர்த்து சென்ற மாதம் கிட்டத்தட்ட 1,600 புதிய தனியார் வீடுகள் விற்பனை ஆகின. நகரச் சீரமைப்பு ஆணையம் அந்தத் தகவலை வெளியிட்டது. சென்ற மாதம் விற்பனையான புதிய வீடுகளின் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டு பிப்ரவரியைப் போல் சுமார் 10 மடங்கு. மாத அடிப்படையில் சென்ற மாதம் 45.4 விழுக்காடு வளர்ச்சி காணப்பட்டது. ஜனவரியில் சுமார் 1,100 வீடுகள் விற்கப்பட்டன. ஆதாரம் : CNA- அமெரிக்க புயலில் பலர் பலி.
உலகம் மீண்டும் சுழல்காற்று வீசலாம் - விழிப்பு நிலையில் அமெரிக்கர்கள்வாசிப்புநேரம் - 1 நிமிடம் (படம்: DAVID CRANE / AP) அமெரிக்காவில் மில்லியன் கணக்கான மக்கள் மேலும் சுழல்காற்று, ஆலங்கட்டி மழை, காட்டுத்தீ ஆகியவற்றை எதிர்கொள்ள விழிப்புநிலையில் வைக்கப்பட்டுள்ளனர். வார இறுதியில் தெற்கு, மத்திய மேற்குப் பகுதிகளில் குறைந்தது 36 பேர் உயிரிழந்தனர். 39 முறை வீசிய சுழல்காற்றால் பெருமளவு உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளன. தற்போது வெஸ்ட் வெர்ஜீனியா, ஒஹாயோ, பென்சில்வேனியா (West Virginia, Ohio, Pennsylvania) ஆகிய பகுதிகளில் மேலும் சுழல்காற்று வீசும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் மணிக்குச் சுமார் 130 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசலாம். புயல் வடக்கில் உள்ள நியூயார்க் (New York) மாநிலத்திலிருந்து தெற்கில் உள்ள புளோரிடா (Florida) மாநிலம் வரை புரட்டிப்போட்டது. இதனால் 300,000க்கும் அதிகமானோர் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகளில் போக்குவரத்து தடைபட்டது. இதற்கிடையில், ஆக்லஹோமாவில் (Oklahoma) பலத்த காற்று வீசுவதால் காட்டுத்தீ மேலும் தீவிரமடைந்துள்ளது. காட்டுத்தீயால் கிட்டத்தட்ட 300 கட்டுமானங்கள் தீக்கிரையாகியுள்ளன. பலர் தங்கள் வீடுகளை இழந்தும் மின்சாரமின்றியும் தவிக்கின்றனர். ஆதாரம் : CNA- நாஜி பிரசாரத்தை முறியடிக்க தொடங்கப்பட்ட 'வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா' நிறுவனத்தை மூட டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்
அடுத்து சி என் என். ஆக இருக்குமோ???- பட்டலந்த போல வடகிழக்கில் இயங்கிய பல சித்திரவதை முகாம்கள் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி வெளிக்கொண்டு வரவேண்டும் - ஞா.சிறிநேசன் கோரிக்கை
எல்லா சிங்கள ஆட்சியாளர்களும் ஒரே பொய்யை ஜெனிவாவில் சொல்கிறார்கள். இவர்களிடம் உண்மையை. வரவழைக்க முடியாது. நாமாக ஆதாரங்களை தேடி உலகின் கண் முன் வைக்கலாம்.- மாசிடோனிய இரவு விடுதியில் தீ விபத்து; 51 பேர் மரணம்!
வட மாசிடோனியா இரவு விடுதியில் தீ - 51 பேர் மரணம்வாசிப்புநேரம் - 1 நிமிடம் (படம்: Reuters/Ognen Teofilovski வட மாசிடோனியாவில் (North Macedonia) ஓர் இரவு விடுதியில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் 51 பேர் மாண்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கிழக்கில் உள்ள கோச்சனி (Kocani) நகரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளம் ரசிகர்கள் ஹிப் ஹாப் (hip-hop) கலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தனர். அப்போது Pulse என்று அழைக்கப்படும் இரவு விடுதி தீப்பற்றிக் கொண்டதாக உள்துறை அமைச்சர் பென்சே தோசொவ்ஸ்கி (Pance Toskovski) தெரிவித்தார். கலை நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட விளக்குகளால் தீ ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பபடுகிறது. கூரையில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள் தீயை மோசமாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. இரவு விடுதியில் வாணவேடிக்கைகள் போன்ற சாகசக் காட்சிகள் இடம்பெற்றிருந்தது சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட காணொளிகளில் தெரிகிறது. ஆதாரம் : AFP- அமெரிக்க புயலில் பலர் பலி.
https://www.arcgis.com/apps/dashboards/3ca8efb6f5684fc88e9761f6a26e2b5d- வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் முறுகல்
எல்லாவற்றுக்கும் பாய்ந்து வரும் காவல் துறை இச்சம்பவத்தை கண்டும் காணாமல் இருக்கின்றது.- இலங்கையில் தனிநபரொருவருக்கு தேவைப்படும் குறைந்தபட்ச பணம் குறித்து வெளியான புதிய தகவல்
வீட்டு வாடகை உள்ளடக்கப்படவில்லை என நினைக்கிறேன்.- இனித்திடும் இனிய தமிழே....!
காமத்தை வென்றவர் உண்டோ! | இடைவிடாத நகைச்சுவை காணொளி | புலவர் சண்முக வடிவேல் அவர்களின் நகைச்சுவை உரை- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதிர் RCB 2) ஞாயிறு 23 மார்ச் 10:00 am GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் SRH எதிர் RR 3) ஞாயிறு 23 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் CSK எதிர் MI 4) திங்கள் 24 மார்ச் 2:00 pm GMT விசாகபட்னம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் DC எதிர் LSG 5) செவ்வாய் 25 மார்ச் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் GT எதிர் PBKS 6) புதன் 26 மார்ச் 2:00 pm GMT குவஹாத்தி - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் RR எதிர் KKR 7) வியாழன் 27 மார்ச் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் SRH எதிர் LSG 8) வெள்ளி 28 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் CSK எதிர் RCB 9) சனி 29 மார்ச் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் GT எதிர் MI 10) ஞாயிறு 30 மார்ச் 10:00 am GMT விசாகபட்னம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் DC எதிர் SRH 11) ஞாயிறு 30 மார்ச் 2:00 pm GMT குவஹாத்தி - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் RR எதிர் CSK 12) திங்கள் 31 மார்ச் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் MI எதிர் KKR 13) செவ்வாய் 01 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் LSG எதிர் PBKS 14) புதன் 02 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் குஜராத் டைட்டன்ஸ் RCB எதிர் GT 15) வியாழன் 03 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் KKR எதிர் SRH 16) வெள்ளி 04 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் LSG எதிர் MI 17) சனி 05 ஏப்ரல் 10:00 am GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் CSK எதிர் DC 18) சனி 05 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் PBKS எதிர் RR 19) ஞாயிறு 06 ஏப்ரல் 10:00 am GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் KKR எதிர் LSG 20) ஞாயிறு 06 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் குஜராத் டைட்டன்ஸ் SRH எதிர் GT 21) திங்கள் 07 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் MI எதிர் RCB 22) செவ்வாய் 08 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் PBKS எதிர் CSK 23) புதன் 09 ஏப்ரல் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் GT எதிர் RR 24) வியாழன் 10 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் RCB எதிர் DC 25) வெள்ளி 11 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் CSK எதிர் KKR 26) சனி 12 ஏப்ரல் 10:00 am GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் LSG எதிர் GT 27) சனி 12 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் பஞ்சாப் கிங்ஸ் SRH எதிர் PBKS 28) ஞாயிறு 13 ஏப்ரல் 10:00 am GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் RR எதிர் RCB 29) ஞாயிறு 13 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் மும்பை இந்தியன்ஸ் DC எதிர் MI 30) திங்கள் 14 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் LSG எதிர் CSK 31) செவ்வாய் 15 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் PBKS எதிர் KKR 32) புதன் 16 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் DC எதிர் RR 33) வியாழன் 17 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் MI எதிர் SRH 34) வெள்ளி 18 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் பஞ்சாப் கிங்ஸ் RCB எதிர் PBKS 35) சனி 19 ஏப்ரல் 10:00 am GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் GT எதிர் DC 36) சனி 19 ஏப்ரல் 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் RR எதிர் LSG 37) ஞாயிறு 20 ஏப்ரல் 10:00 am GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் PBKS எதிர் RCB 38) ஞாயிறு 20 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் MI எதிர் CSK 39) திங்கள் 21 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் KKR எதிர் GT 40) செவ்வாய் 22 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் LSG எதிர் DC 41) புதன் 23 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் மும்பை இந்தியன்ஸ் SRH எதிர் MI 42) வியாழன் 24 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் RCB எதிர் RR 43) வெள்ளி 25 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் CSK எதிர் SRH 44) சனி 26 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் KKR எதிர் PBKS 45) ஞாயிறு 27 ஏப்ரல் 10:00 am GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் MI எதிர் LSG 46) ஞாயிறு 27 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் DC எதிர் RCB 47) திங்கள் 28 ஏப்ரல் 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் RR எதிர் GT 48) செவ்வாய் 29 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் DC எதிர் KKR 49) புதன் 30 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் CSK எதிர் PBKS 50) வியாழன் 01 மே 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் RR எதிர் MI 51) வெள்ளி 02 மே 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் GT எதிர் SRH 52) சனி 03 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் RCB எதிர் CSK 53) ஞாயிறு 04 மே 10:00 am GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் KKR எதிர் RR 54) ஞாயிறு 04 மே 2:00 pm GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் PBKS எதிர் LSG 55) திங்கள் 05 மே 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் SRH எதிர் DC 56) செவ்வாய் 06 மே 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் MI எதிர் GT 57) புதன் 07 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் KKR எதிர் CSK 58) வியாழன் 08 மே 2:00 pm GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் PBKS எதிர் DC 59) வெள்ளி 09 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் LSG எதிர் RCB 60) சனி 10 மே 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் SRH எதிர் KKR 61) ஞாயிறு 11 மே 10:00 am GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் PBKS எதிர் MI 62) ஞாயிறு 11 மே 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் DC எதிர் GT 63) திங்கள் 12 மே 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் CSK எதிர் RR 64) செவ்வாய் 13 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் RCB எதிர் SRH 65) புதன் 14 மே 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் GT எதிர் LSG 66) வியாழன் 15 மே 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் MI எதிர் DC 67) வெள்ளி 16 மே 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் RR எதிர் PBKS 68) சனி 17 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் RCB எதிர் KKR 69) ஞாயிறு 18 மே 10:00 am GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் GT எதிர் CSK 70) ஞாயிறு 18 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் LSG எதிர் SRH கேள்விகள் 71) முதல் 90) வரை: 71) குழுநிலைப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்) CSK, SRH , KKR , RCB 72) குழுநிலைப் போட்டிகளில் முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்) CSK SRH KKR RCB #1 - ? (4 புள்ளிகள்) #2 - ? (3 புள்ளிகள்) #3 - ? (2 புள்ளிகள்) #4 - ? (1 புள்ளி) 73) குழுநிலைப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்! PBKS 74) செவ்வாய் 20 மே 2:00 pm GMT ஐதராபாத் - Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK VS SRH 75) புதன் 21 மே 2:00 pm GMT ஐதராபாத் - Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team KKR VS RCB 76) வெள்ளி 23 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator SRH VS KKR 77) ஞாயிறு 25 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 CSK VS SRH 78) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? SRH 79) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? PBKS 80) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? VIRAT KOHLI 81) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 80 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? CSK 82) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? HARSHAL PATEL 83) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 82 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? SRH 84) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) வீரர்? RUTURAJ GAIKWAD 85) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 84 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? CSK 86) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Ravichandran Ashwin 87) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 86 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? CSK 88) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Rachin Ravindra 89) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 88 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? CSK 90) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? PBKS- அதிசயக்குதிரை
- “உங்கள் இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள் என்று நாங்கள் சொல்வதுஇது மொழி வெறுப்பல்ல, தாய்மொழி பாதுகாப்பு...” - பவன் கல்யாணுக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி
- திடீர் மின் தடையால் கியூபா இருளில் மூழ்கியது
திடீர் மின் தடையால் கியூபா இருளில் மூழ்கியது ஹவானா, கியூபாவில் திடீரென ஏற்பட்ட மிகப்பெரிய அளவிலான மின்வெட்டு காரணமாக அந்நாட்டின் பல மாகாணங்கள் இருளில் மூழ்கின. கியூபா தலைநகரான ஹவானா அருகிலுள்ள தீஸ்மெரோ துணை மின் நிலையத்தில் நேற்றுமுன்தினம் இரவு மின் தடை ஏற்பட்டது. இதன் காரணமாக தெற்கு கியூபா உள்பட நாட்டின் பல மாகாணங்களில் லட்சக்கணக்கான மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர். இது தேசிய மின்சாரத் துறையின் தோல்வி. இதனை சரிசெய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது’ என கியூபா எரிசக்தி மற்றும் சுரங்கத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மின் தடையைத் தொடர்ந்து ஹவானா உள்பட பல மாகாணங்களில் ஜெனரேட்டர்கள் உள்ள இடங்கள் அன்றி மற்ற இடங்கள் இருளாக உள்ளன. இணைய சேவையும் நாடு முழுக்க பாதிப்படைந்துள்ளது. அதிக தேவை ஏற்படும் நேரங்களில் பொதுவாக 3,250 மெகாவாட் மின் தேவை இருக்கும். ஆனால், தற்போது மின் தடையால் 1,380 மெகா வாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன்படி, நாட்டின் மொத்த மின் தேவையில் 42 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. சமீபமாக ஏற்பட்ட மின் தடை சம்பவங்களில் இது பெரியது இல்லை என்று கூறப்படுகிறது. கியூபா கடந்தாண்டு இறுதியில் மட்டும் 3 பெரிய மின்சார செயலிழப்புகளைக் கண்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருந்த இந்நாடு, முழுவதுமாக இருளில் மூழ்கியது. இங்குள்ள மின்சாரக் கட்டுமானங்கள் அடிக்கடி செயலிழக்கின்றன. முக்கிய வேலை நேரங்களில் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்குகின்றன. எரிபொருள் பற்றாக்குறை, உழமையான உள்கட்டமைப்பு காரணமாக இவை நிகழ்வதாகக் கூறப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் சமைப்பதற்கும், நீர் எடுப்பதற்கும் மின்சாரத் தேவை உள்ளது. இதனைத் தொடர்ந்து, நாடு முழுக்க 12-க்கும் மேற்பட்ட சூரிய மின் உற்பத்தி பூங்காக்களை நிறுவ அரசு முடிவெடுத்த நிலையில், இந்தாண்டு அவை செயல்பாட்டுக்கு வரவுள்ளன. இதனால், மின் தடை பிரச்சனைகள் குறையுமென்று கூறப்படுகிறது. தின பூமிதிடீர் மின் தடையால் கியூபா இருளில் மூழ்கியதுஹவானா, கியூபாவில் திடீரென ஏற்பட்ட மிகப்பெரிய அளவிலான மின்வெட்டு காரணமாக அந்நாட்டின் பல மாகாணங்கள் இருளில் மூழ்கின. கியூபா தலைநகரான ஹவானா அருகிலுள்ள தீஸ்மெரோ துணை மின் நிலையத்தில் நேற்றுமுன... - பட்டலந்த முகாம் அறிக்கையை, ஜேவிபி கேட்கத் தவறிய சந்தர்ப்பங்களும் இனஅழிப்பு விசாரணை மூடி மறைப்புகளும்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.