Jump to content

nunavilan

கருத்துக்கள நிர்வாகம்
  • Posts

    52124
  • Joined

  • Days Won

    38

Everything posted by nunavilan

  1. CANADA TAMIL FEST கனடிய தமிழர் பேரவையின் திமிர்த்தனமான அறிக்கை.தமிழ் மக்களை இன்னும் தூரப்படுத்தும்.
  2. Ukraine army says U.S.-made F-16 fighter jet crashes, killing pilot Ukraine said Thursday that one of its F-16 fighter jets made by the United States crashed while repelling a Russian air strike, killing the pilot onboard. A U.S. official confirmed to CBS News the F-16 crashed on Monday. The announcement marks the first reported destruction of an F-16 in Ukraine, just weeks after Kyiv began taking delivery of the supersonic aircraft. Initial reports are the plane wasn't shot down by the Russians, CBS News has learned. "F-16 fighters of the Armed Forces of Ukraine were used to repel a missile attack on the territory of Ukraine by the Russian Federation, along with units of anti-aircraft missile troops," the Ukrainian army said. "During the approach to the next target, communication with one of the planes was lost. As it turned out later, the aircraft crashed, killing the pilot," it added. It did not identify the pilot, but a unit of Ukraine's air force said one of its pilots, Oleksiy Mes, had died in a crash on Monday while repelling a Russian air attack. "On 26 August, while repelling a Russian massive combined missile and air strike, Oleksiy destroyed three cruise missiles and one attack drone," Ukraine's Western air command unit said. "Oleksiy saved Ukrainians from deadly Russian missiles. Unfortunately, at the cost of his own life," it said. The announcements come as a blow to Ukraine, which had long relied on a fleet of ageing Soviet-era MIG-29 and Sukhoi jets and had asked for the F-16s to defend against intense Russian aerial bombardment. F-16 Fighting Falcons perform in the sky as President of Ukraine Volodymyr Zelensky delivers a speech congratulating the Ukrainian military on the stand in front of the first General Dynamics F-16 Fighting Falcon received by Ukraine on August 4, 2024 in, Ukraine. Ukrainian Presidency/Handout/Anadolu via Getty Images Moscow fired a wave of attack drones and missiles at Ukraine on Monday this week in what President Volodymyr Zelensky called one of the "largest" attacks of Russia's two-and-a-half year invasion. Earlier this month, Zelenskyy said the newly arrived F-16 fighter jets will boost the country's war effort against Russia. The American-made F-16 is an iconic fighter jet that's been the front-line combat plane of choice for the NATO alliance and numerous air forces around the world for 50 years. President Biden gave the go-ahead in August 2023 for used F-16s to be deployed to Ukraine, though the U.S. won't be providing any of its own planes. https://www.cbsnews.com/news/ukraine-us-f-16-fighter-jet-crashes-killing-pilot/
  3. ரனில் தமிழ் மக்களுக்கு உரிமைகள் தருவதாக சொல்வார். ஆனால் தரமாட்டார். —— விக்னேஸ்வரன்
  4. தெருவிழா போராட்டக்காரர்களால் திருவிழாவாக மாறிய சம்பவம்
  5. இனவாதம் இல்லாமல் உங்கள் அரசியல் நகராது என்பது தெரியும். உங்களின் ஜனாதிபதி தேர்தலில் தோல்வி உறுதி என்பதை தெரிவித்து கொள்கிறேன்.😆
  6. கேள்விகளால் திணறிய தமிழ் அரசியல்வாதிகள்,யாழில் சற்றுமுன் காரசார விவாதம்
  7. சுனாமி நேரம் வெளிநாடுகளால் கொடுக்கப்பட்ட உதவிப்பணத்தை தமிழ் மக்களுக்கு கிடைக்காமல் (புலிகளுக்கு கிடைத்து விடுமாம்) வழக்கு போட்டவர்களும் இவர்கள் தானே. அப்போ விமல் வீரவன்ச இவர்களுடன் இருந்தார். வடக்கு கிழக்கு பிரிப்புக்கு உடந்தையாக இருந்தவர்களும் இவர்களே.
  8. ரஸ்யா மாநாட்டுக்கு அழைக்கப்படவில்லை. தாங்கள் கைவிட்டதாக இருக்க கூடாது என்ற உயரிய எண்ணமாக இருக்கலாம்.🙂
  9. தமிழ் மக்களுடைய வாக்கு தமிழ் மக்களினுடைய வேட்பாளரின் வாக்காக மாறியுள்ளது!
  10. பாடல்: ஆண்டவனின் தோட்டத்தில் படம்: அரங்கேற்றம் இசை: வி. குமார் பாடியவர் : பி. சுசீலா வரிகள்: கண்ணதாசன் ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது வேண்டும் மட்டும் குலுங்கி குலுங்கி நானும் சிரிப்பேன் ஹா... வேண்டும் மட்டும் குலுங்கி குலுங்கி நானும் சிரிப்பேன் அந்த விதியைக்கூட சிரிப்பினாலே விரட்டி அடிப்பேன் ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது
  11. தேவைக்கு ஏற்றால் போல் நாக்கை பிரட்டும் பக்கா திருடர்கள்.🙂
  12. யார் சிறிலங்காவில் காலூன்றுவது என்பதில் பலத்த போட்டி நிகழ்கிறது என்பதை மேற்படி சம்பவங்கள் காட்டி நிற்கின்றது. இதில் சிறிலங்கா பெருமைப்பட எதுவுமில்லை.ஏனைய நாடுகளிடம் கூனி குறுகி நிற்பதாகவே தென்படுகிறது. யாரும் வாய் திறக்காதது தான் ஆச்சரியம் அளிக்கிறது. தேர்தலுக்கு பம்முவதாக இருக்கலாம்.
  13. ஜே வி பி வந்தால் நிறைய பேரை உள்ளே தள்ளுவார்கள். சஜித் பற்றி தெரியவில்லை. ரனில் மென் போக்காக விட்டு விடுவார்.
  14. விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் திடீர் மயக்கம்.. மருத்துவமனையில் அனுமதி..! சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில், விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் திடீர் மயக்கம் ஏற்பட்டதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கூட்ட நெரிசல் காரணமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி, தேமுதிக தலைமை அலுவலகத்தில் சிலை திறப்பு விழா நடைபெற்ற நிலையில் இந்த சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற சண்முக பாண்டியன் கலந்து கொண்டார். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்ட நிலையில் கூட்ட நெரிசல் காரணமாக சண்முக பாண்டியன் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. https://tamil.webdunia.com/article/regional-tamil-news/shunmuga-pandian-admitted-in-hospital-124082500018_1.html
  15. Telegram app founder Pavel Durov arrested at airport in France The Franco-Russian billionaire is wanted on charges of allowing drug dealers and sex criminals to operate on the app, according to French media. Pavel Durov, the founder and CEO of messaging app Telegram, was arrested after he flew into Le Bourget airport outside Paris on his private jet on Saturday night. Russian-born Durov has been the subject of an arrest warrant in France. According to French media reports, the investigation focuses on the lack of moderators on Telegram, which police allege allows criminal activity, such as drug dealing and pedophilia networking, to take place unhindered on the messaging app. https://www.euronews.com/next/2024/08/25/telegram-app-founder-pavel-durov-arrested-at-airport-in-france
  16. வன்னியில் 306,081 பேர் வாக்களிக்க தகுதி! எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் 306,081 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட அரச அதிபர் சரத்சந்திர தெரிவித்தார். தேர்தல் தொடர்பாக வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் 306,081 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் 128,585 வாக்காளர்களும், முல்லைத்தீவில் 86,889 வாக்காளர்களும் மன்னார் 90,607 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அத்துடன் 13,389 தபால்மூல வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் 228 தபால் வாக்களர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தேர்தலில் வாக்களிப்பதற்காக 3 மாவட்டங்களிலும் 387 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சாதாரண வாக்கு எண்ணும் பணிகளுக்காக வவுனியாவில்12, முல்லைத்தீவில் 8, மன்னாரில் 7 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், தபால் வாக்குகள் எண்ணுவதற்காக 10 நிலையங்களும் என மொத்தமாக 37 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான ஏற்ப்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். -வவுனியா தீபன்- https://tamil.adaderana.lk/news.php?nid=191979
  17. ஜனாதிபதி தேர்தலில் முதல் மலையத் தமிழன்! 38 பேர் போட்டியிடுகின்ற ஜனாதிபதி தேர்தலில் முதல் மலையகத் தமிழனாக நானும் நிற்பேன் எங்கள் மக்களுக்கும் அந்த தகுதி உள்ளது என சொல்லவருவதே எனது முதலாவது வெற்றி என ஜனாதிபதி வேட்பாளரும் நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார். நேற்று (24) சனிக்கிழமை பொகவந்தலாவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உறையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த மயில்வாகனம் திலகராஜா, மலையகத்தில் இந்து வந்தால் ஆயிரம் ரூபாய் அல்லது 1,700 ரூபாவை கோருவார்கள் அல்லது 1,350 ரூபாய்க்கு கீழ் இறங்கி அதற்கு பேச்சுவார்த்தையினை மேற்கொள்வார்கள். வர்த்தமானி வெளியிடப்படும் மேடைகளில் பேசப்படும் ஆனால் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இறுதியில் சம்பளம் மாத்திரம் கிடையாது. எமது மக்களின் பிரச்சினை 1,700 ரூபாய் சம்பள பிரச்சினை மாத்திரம் அல்ல 1,700 ரூபாய் சம்பளத்தோடு தொடர்புடையவர்கள் ஒரு இலட்சம் அளவானவர்கள். அதற்கு அப்பால் 15 இலட்ச்சம் சனத்தொகை வாழுகின்றோம். இவர்களுக்கான பிரச்சினை பல்வேறு பிரச்சினைகள் இருக்கிறது. இதனை எப்படி எந்த மொழியில் சொல்ல வேண்டும் என்பதை மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை வேட்பாளராக உங்களுக்காக இலங்கையில் நடைபெற கூடிய ஜனாதிபதி தேர்தலில் எந்த ஒரு வேட்பாளரோடும் விவாதத்திற்கு தயாராக உள்ளேன். மலையகத்தில் அறிவார்ந்த அரசியல் உரையாடலை மலையகத்தில் ஏற்படுத்த வேண்டும். மலையகத்தில் என்ன நடக்கிறது கடந்த வாரம் ஒரு தனியார் தொலைகாட்சியில் இடம்பெற்றது. அறிவார்ந்த அரசியல் கலந்துரையாடல் அல்ல எமது தலைவர்கள் பேசிகொண்ட சொற்பிரயோகம். நாம் இதற்கா வாக்களித்தோம். யார் என்னத்தை வைத்துள்ளார்கள். இது தான் இவர்களுடைய பிரச்சினை மக்களுக்கு எதனை பெற்றுக்கொடுக்க போகின்றோம் என்பது அவர்களின் உரையாடலில் இல்லை. பாரா அல்லது குடுவா என சாதாரண மக்கள் சண்டையிட்டு கொள்ளவில்லை எமது முன்னாள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர்கள் சண்டையிட்டு கொள்கிறார்கள். இவர்கள் எதற்கு உரிமையாளர்கள் என்று சண்டையிட்டு கொள்பவர்கள் எமது மக்களுக்கு எந்த உரிமையை பெற்றுகொடுப்பது தொடர்பாக சண்டையிட்டு கொள்ளுவதில்லை. இவர்களின் சண்டைகள் அனைத்தும் அவர்களின் உரிமைகள் தொடர்புபட்டது என குறிப்பிட்டார். https://tamil.adaderana.lk/news.php?nid=191974
  18. 48 மணி நேர அவசர நிலையை இஸ்ரேல் அறிவிப்பு! ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதியை, இஸ்ரேல் சமீபத்தில் கொன்றதை தொடர்ந்து, இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போர் தீவிரம் அடைந்திருக்கிறது. இதனை அடுத்து தன் நாட்டு மக்களுக்கு 48 மணி நேர அவசர நிலையை இஸ்ரேல் அறிவித்திருக்கிறது. கடந்த 2007ம் ஆண்டு முதல் பலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் திகதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் 1500 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதுதான் தற்போது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கான தொடக்கப்புள்ளி. ஹமாஸை அழிப்பதே முதன்மையான நோக்கம் என்று முழக்கமிட்டு இஸ்ரேல் இந்த போரை தொடங்கியது. போரில் இதுவரை 40,000 க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதமாகும். அதேபோல 3.7% மக்கள் அதாவது 86,000 பேர் போரால் படுகாயமடைந்துள்ளனர். 23 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர். பசி, பட்டினியும், தொற்று நோயும் அவர்களை துரத்திக்கொண்டே இருக்கிறது. காசா பகுதி ஏறத்தாழ தரைமட்டமாகி விட்டது. இந்த போரில் ஹிஸ்புல்லா அமைப்பு, பலஸ்தீனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது. அதாவது பலஸ்தீனத்திற்காக எப்படி அந்நாட்டின் ஹமாஸ் போராடி வருகிறதோ, அதுபோல லெபனானிலிருந்து இயங்கி வரும் அமைப்புதான் ஹிஸ்புல்லா. இது சுதந்திர பாலஸ்தீன கொள்கையை ஆதரித்து வருகிறது. எனவே ஹமாஸுடன் சேர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட்டு வந்தது. இதற்கு ஈரான் பெருமளவில் உதவி வருகிறது. ஹமாஸ் ஒரு பக்கம் தலைவலியை கொடுத்துவர, ஹிஸ்புல்லா அவ்வப்போது குறுக்கே சில தாக்குதல்களை இஸ்ரேலுக்கு எதிராக நடத்தி வந்தது. இதற்கு பதிலடி கொடுக்க லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் திடீர் வான்வழித் தாக்குதலை நடத்த, இதில் ஹில்புல்லா அமைப்பின் கமாண்டர் ஃபுவாட் ஷுக்ர் சில நாட்களுக்கு முன்னர் பலியானார். அடுத்த நாள் ஈரான் நாட்டில் வைத்து, ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் போட்டு தள்ளியது. இந்த இரண்டு கொலைகளும் மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது. குறிப்பாக ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF) மீது கடும் கோபத்தில் இருக்கிறது. எனவே எப்போது வேண்டுமானாலும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்கா எச்சரித்திருந்தது. அதற்கேற்றார் போல, ஹிஸ்புல்லாவும் அதிக எண்ணிக்கையில் ராக்கெட்டுகளை வீசியும், ட்ரோன்களை வீசியும் தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ளது. பெய்ரூட் மீது தனது போர் விமானங்களை கொண்டு கடுமையான தாக்குதலை மேற்கொண்டிருக்கிறது. அதேபோல் எப்போது வேண்டுமானாலும் பதில் தாக்குதல் தொடுக்கப்படலாம் என்பதால், தனது நாட்டு மக்களுக்கு 48 மணி நேர அவசர நிலையை அறிவித்திருக்கிறது. https://tamil.adaderana.lk/news.php?nid=191978
  19. ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவது ஏன்? இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் களை கட்டியுள்ளது. இதில், சுயேச்சை வேட்பாளர்கள் அல்லது பல கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பொது வேட்பாளர்கள் பலர் களம் காண்கின்றனர். தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க கடந்த 40 ஆண்டுளாக தாம் பிரதிநிதித்துவப்படுத்திய யானை சின்னத்தை கைவிட்டு சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இலங்கையின் பழமையான, பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிடாமல் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவது ஏன்? அது அவருக்கு பலன் தருமா? ரணில் விக்ரமசிங்க சுயேச்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள போதிலும் உண்மையில் அவர் சுயேச்சை வேட்பாளர் அல்ல என அரசியல் ஆய்வாளர் கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். "ரணில் உண்மையில் சுயேச்சை வேட்பாளர் அல்ல. அவரைச் சுற்றி பல அரசியல் கட்சிகள் உள்ளன. ஆனால் அந்த கட்சிகள் அனைத்தும் மக்களால் நிராகரிக்கப்பட்ட பலவீனமான கட்சிகள்." என்கிறார் அவர். ரணில் விக்ரமசிங்க சுயேச்சை வேட்பாளராக நிற்பது அவருக்கு சாதகமாக இருப்பதாகத் தோன்றினாலும் அதில் உண்மையில்லை என கலாநிதி தயான் ஜயதிலக்க கூறினார். ரணில் விக்ரமசிங்க சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவது தொடர்பாக பேராசிரியர் ஜயதேவ உயங்கொடவுக்கு மாறுபட்ட கருத்து உள்ளது. ரணில் விக்ரமசிங்க அதிபர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுவது, அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சி எங்கு வீழ்ச்சியடைந்துள்ளது என்பதைக் காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். "அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதால் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்ததிலிருந்து, இதை அவரே ஒப்புக்கொண்டதாக நான் பார்க்கிறேன். சுயேச்சையாகப் போட்டியிடுவதன் மூலம் அவர் குறிப்பிடத்தக்க பலன்களைப் பெறுவார் என்று எதிர்பார்க்க முடியாது" என்றார். ஆனால், ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பதிலாக சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவது மிகவும் சாதகமானது என அக்கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டதன் காரணமாக ரணில் விக்ரமசிங்க பல கட்சிகளின் ஆதரவைப் பெற்றுள்ளதாக பிபிசி சிங்களத்திடம் அவர் தெரிவித்துள்ளார். "கடந்த இரண்டு ஆண்டுகளில் ரணில் விக்ரமசிங்க நாட்டுக்காக என்ன செய்தார் என்பது மக்களுக்கு தெரியும். அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் சார்பாக போட்டியிடாமல் அனைத்து கட்சிகளின் ஆதரவையும் பெறும் நோக்கில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்." என்றார் அவர். அதன்படி, அதிபர் தேர்தலுக்கு பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராக இருக்கலாமா அல்லது கூட்டணியுடன் இருக்கலாமா என்பது குறித்து பரிசீலிப்பதாக பிரதித் தலைவர் தெரிவித்தார். பேராசிரியர் ஜயதேவ உயங்கொட குறிப்பிட்டது போல், அண்மைக்காலத்தில் மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்த பிரதான அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியாகும். அதன் முன்னாள் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் பெரும்பான்மையானவர்கள் அக்கட்சியை விட்டு வெளியேறி சமகி ஜன பலவேகய என்ற புதிய கட்சியை உருவாக்கினர். அதன் பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஒரேயொரு இடத்தை மட்டுமே வென்றது. ரணில் விக்ரமசிங்க அந்த தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினரானார். கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து எழுந்த எதிர்ப்பையடுத்து, கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி பதவியை விட்டுக்கொடுக்க நேரிட்டது. அவருக்குப் பதிலாக ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்தில் ஒரு இடத்தைப் பெற்ற ரணில் விக்ரமசிங்க 2022 ஆம் ஆண்டில் இலங்கையின் 8 வது ஜனாதிபதியாக பதவியேற்றார். எதிர்பாராத விதமாக ரனில் விக்கிரமசிங்க முதல் முறையாக இலங்கையின் ஜனாதிபதியானார். சந்திரிகா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப் பகுதியில் 2001ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 109 ஆசனங்களை பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதன்மூலம், ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றார். இலங்கையில் அப்போது பிரதமருக்கு அதிக அதிகாரம் இருந்தது. அந்த காலப் பகுதியில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை ரணில் கைப்பற்றியிருந்தார். இந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் நார்வே தலையீட்டில் சமாதான பேச்சுவார்த்தை 2002ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு, பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இந்த போர் நிறுத்தம் காணப்பட்ட காலப் பகுதியிலேயே 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ வெற்றியீட்டிய நிலையில், 2006ம் ஆண்டு போர் நிறுத்த உடன்படிக்கை முடிவுக்கு வந்து, போர் மீண்டும் ஆரம்பமானது. 2005ம் ஆண்டு தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என வடக்கு, கிழக்கு மாகாண மக்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு கோரிக்கை முன்வைத்தது. இதனால், அந்த மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் வாக்களிப்பதை பெருமளவு புறக்கணித்திருந்தனர். அந்த தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் வாக்களிக்காமையே, ரணில் விக்ரமசிங்கவின் தோல்விக்கு காரணம் என கருதப்பட்டது. இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் இன்றும் இருக்கின்ற நிலையில், 2005ம் ஆண்டு விடுதலைப் புலிகள் வெளியிட்ட அறிவிப்பு 2024ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தாக்கம் செலுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கு பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான பாரதி ராஜநாயகம், ''இந்த காலக் கட்டத்திலும் அவ்வாறான கருத்து சிலரால் முன்வைக்கப்பட்டு வருகின்றது. தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூட முன்வைக்கின்றது. எனினும், ஜனாதிபதி தெரிவில் தமது பங்களிப்பும் இருக்க வேண்டும் என தமிழர்கள் எண்ணுகின்றார்கள். இந்த நிலையில், தேர்தல் புறக்கணிப்பு என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டாலும், அது எந்தளவு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதை நிச்சயமாக சொல்லமுடியாது" என தெரிவித்தார். (பிபிசி தமிழ்) https://tamil.adaderana.lk/news.php?nid=191967
  20. ரணில் தண்டிக்கப்படலாம் - எம்.ஏ சுமந்திரன் | Sooriyan FM |
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.