Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. Sivasubramaniam-jothilingam Jothilingam22h · Anusha Nadarajah1d · ஜேவிபி நிர்வாக கட்டமைப்புகளை மிக மிக தீவிரமாக சிங்கள மயப்படுத்தி வருகின்றது கிழக்கு பல்கலைக்கழகத்தின் மீயுயர் சபையான பேரவையின் (University Council) 15 வெளிவாரி உறுப்பினர்களில் 7 இடங்களுக்கு சிங்கள உறுப்பினர்களை நியமித்திருக்குகின்றார்கள் அதே போல வெறும் 5 இடங்களுக்கு தமிழ் உறுப்பினர்களும் 3 இடங்களுக்கு முஸ்லிம் உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள் அந்த வகையில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நியமனங்கள், துணைவேந்தர் தெரிவு, விரிவுரையாளர்களை அமர்த்தவும் நீக்கவும் அதிகாரமுள்ள பேரவையில் சிங்கள உறுப்பினர்கள் முதல் முறையாக ஆதிக்கம் செலுத்த இருக்கின்றார்கள் இதன் தொடர்ச்சியாக கிழக்கு பல்கலை கழகத்திற்கு மிக விரைவில் சிங்கள துணைவேந்தர் ஒருவரை நியமிக்க இருக்கின்றார்கள் என சொல்லப்படுகின்றது இது போதாதென்று வவுனியா பல்கலைக்கழக பேரவையின் 7 வெளிவாரி உறுப்பினர்களில் 3 சிங்கள உறுப்பினர்களும் 3 தமிழர்களும் 1 முஸ்லிம் பிரதிநிதியும் நியமிக்கப்பட்டுள்ளார்கள் சிங்கள மயமாகி வரும் யாழ்ப்பாண பல்கலை கழக பேரவையின் 15 வெளிவாரி உறுப்பினர்களில் 3 சிங்கள உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டுள்ளார்கள் இது தவிர கிழக்கு மாகாணத்தை குறி வைத்திருக்கும் ஜேவிபி சிங்கள ஆளுநருக்கு மேலதிகமாக அதன் பிரதம செயலாளராகவும் சிங்கள அதிகாரியை நியமித்துள்ளது கிழக்கு மாகாண பொதுசேவை ஆணைக்குழுவின் தலைவராகவும் சிங்கள அதிகாரியே நியமிக்கப்பட்டுள்ளார் எதிர் காலத்தில் மக்களால் தெரிவு செய்யப்படும் எந்தவொரு முதலமைச்சருக்கும் பொறுப்பு கூற வேண்டிய அவசியம் 13 ஆம் திருத்தத்தின் கீழ் இந்த அதிகாரிகளுக்கு இருக்க போவதில்லை அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முதலமைச்சருக்கே பொறுப்பு கூற வேண்டிய கட்டாயம் இல்லாத நிர்வாக அலகை ஜேவிபி உருவாக்கி வருகின்றது கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு வழமை போல சிங்கள அதிகாரிகளே அரச அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள் வடக்கு மாகாணத்தில் வவுனியா மாவட்டத்திற்கும் சிங்கள அதிகாரி அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார் சிங்கள ஆக்கிரமிப்புகளை எதிர்கொண்டுள்ள வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கும் கல்கமூவ சாந்தபோதி தேரர் உட்பட்டவர்களுடன் தொடர்புடைய சிங்கள பிரதேச செயலாளர் ஒருவரே நியமிக்க பட இருக்கின்றார் வவுனியா/வன்னி மாவட்டத்தில் ஜேவிபியில் போட்டியிட்டு இரு தமிழ் பாராளமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட நிலையிலும் தேசிய பட்டியல் மூலம் நியமிக்கப்பட்ட சிங்கள உறுப்பினரே ஒருங்கிணைப்பு குழு தலைவராக்கப்பட்டள்ளார் இவ் நியமனங்கள் ஊடக வவுனியா வடக்கு தமிழ் கிராமங்களின் எல்லைக்கோட்டின் வழி ஊடக நகர்ந்து மணலாறு சிங்கள குடியேற்றங்களை இணைத்து பரவும் பரந்த குடியேற்றத்தினை செறிவாக்க முயற்சிக்கின்றார்கள் போல் உள்ளது இது போததென்று 27 பேர் அங்கம் வகிக்கும் அமைச்சரவை அமைச்சுக்களின் செயலாளர் பட்டியலில் வெறும் இரண்டு தமிழ் அதிகாரிகளுக்கு மட்டும் இடம் கிடைத்துள்ளது அரசாங்கத்திற்கு சொந்தமான 52 அரச நிறுவனங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ள தலைமை பதவி நியமனத்திலும் எந்தவொரு தமிழ் அதிகாரிகளுக்கும் இடம் வழங்கப்படவில்லை அதே போல அரசாங்கத்தின் திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் உட்பட அரச கட்டமைப்புகளிலும் தமிழ் அதிகாரிகளுக்கு போதிய பிரதிநித்துவம் கிடைக்கவில்லை 50 நாடுகளில் இயங்கும் இலங்கையின் வெளிநாட்டு தூதுவராலயங்களின் தலைமை பதவிகளுக்கும் வெளிநாட்டு சேவையியுள்ள எந்த தமிழ் அதிகாரிக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை வெளிநாட்டு சேவையுள்ள திறமையுள்ளோருக்கு மட்டுமே வாய்ப்புகள் வழங்கப்படும் என ஜேவிபி அறிவித்திருந்துள்ள நிலையில் அதற்கு மாறாக தங்கள் கூட்டாளிகளை நியமித்து வருகின்றது ஆனால் இதிலும் ஜேவிபி யில் அங்கம் வகிக்கும் தமிழ் உறுப்பினர்களுக்கு எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை விசேடமாக திரு அனுரா குமார திஸ்ஸநாயக்க நியமித்துள்ள ‘Clean Sri Lanka’ செயலணியிலும் தமிழ் அதிகாரிகளுக்கு இடம் வழங்கப்படவில்லை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுற்றுல்லா ஆலோசனை சபையிருக்கும் கூட தமிழ் பிரதிநித்துவம் முழுமையாக மறுக்கப்பட்டுள்ளது இலங்கையில் அரசியல் நியமனங்கள் ஒன்றும் புதிய விடயமல்ல . ஆனால் இலங்கையராக ஒன்றிணைவோம் என பேசும் ஜேவிபி காலத்தில் தான் இது மோசமான நிலையை எட்டியுள்ளது இன மத மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் திறமை அடிப்படையில் அரசியல் வேறுபாடு கடந்து Equality, Diversity, and Inclusion (EDI) தத்துவங்களை உள்வாங்கி வெளிப்படையான நிர்வாகத்தை உருவாக்கும் அடிப்படை விடயத்தில் தவறிழைத்து விட்டு அபிவிருத்தி மற்றும் ஊழல் பற்றி பேச முடியாது ஆனால் அபிவிருத்தி மற்றும் ஊழல் என வெறும் வாயால் பேசும் ஜேவிபி எல்லாவிதமான அசிஙகளையும் செய்கின்றது இங்கு வடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் உட்பட அரச நிர்வாக கட்டமைப்பில் சிங்கள அதிகாரிகள் பணியாற்ற முடியாது என வாதிட முடியாது போட்டி தேர்வு /நேர்முகம் மூலம் திறமை அடிப்படையில் தேர்வு செய்யப்படும் யாரும் எங்கும் பணியாற்ற முடியும் ஆனால் குறித்த இன /சமூக பிரிவை சேர்ந்தவர்கள் என்பதன் அடிப்படையில் வாய்ப்புகளை மறுப்பதும் திட்டமிட்ட ரீதியில் நிர்வாக கட்டமைப்புகளை சிங்கள மயப்படுத்துவதும் அருவருக்க தக்க செயல்களாகும் கடந்த 70 ஆண்டுகளாக தொடரும் இந்த அருவருக்க தக்க பாரம்பரியத்தை ஜேவிபியும் வெளிப்படையாக தொடருகின்றது ஆனால் வெறும் வாயில் இனவாதம் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக ஜேவிபி அலம்புகின்றது
  2. கொழும்பு வந்தார் இந்தியப் பிரதமர் மோடி! [Saturday 2025-04-05 06:00] இலங்கைக்கு மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இலங்கை வந்தடைந்த இந்தியப் பிரதமரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் வரவேற்றார். இந்த விஜயத்தின் போது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் மோடி நேற்று இந்திய சமூகத்தினரைச் சந்தித்ததுடன், பொம்பலாட்ட கலைஞர்களின் நிகழ்வையும் ரசித்துள்ளார். இன்று காலை சுதந்திர சதுக்கத்தில் வரவேற்பு அளிக்கப்படுவதுடன், அதிகாரபூர்வ சந்திப்புகள் ஆரம்பமாகும். https://seithy.com/breifNews.php?newsID=331604&category=TamilNews&language=tamil
  3. மோடி வருகை- இந்திய மீனவர்கள் விடுதலை! யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 11 இந்திய மீனவர்கள் விடுதலை செயயப்பட்டுள்ளனர். அண்மைக்காலமாக கைது செய்யப்பட்டு யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படிருந்தவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நீரியல் வளத்துறை திணைக்களத்தால் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு அரசாங்கத்தினால் நல்லெண்ண அடிப்படையில் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தினால் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலை செய்யப்பட்ட அனைவரும் யாழில் இருந்து மிரிகானைக்கு அனுப்பப்பட்டு அதன்பின்னர் இந்தியாவுக்கு அனுப்பப்படவுள்ளனர். இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வருகை தரும் நிலையில் குறித்த மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்கள் இந்தியா தமிழகத்தின் இராமநாதபுர மாவட்டத்தை சேர்ந்தவர்கள் https://seithy.com/breifNews.php?newsID=331588&category=TamilNews&language=tamil
  4. தையிட்டி தொடர்பில் அவசர கூட்டம்,600 சிங்கள குடும்பங்களை குடியேற்ற திட்டம்
  5. பெரிய திட்டத்துடன் தான் குழுவாக வந்துள்ளார்கள்.
  6. மடியில் கனம் இருந்த படியால் நொண்டி சாட்டை சொல்லி ஊடகவியலாளர்களை அமைச்சர்கள் தவிர்த்துள்ளனர்.
  7. நாமே சட்டவிரோதமாக எமது கடல்வளத்தை அழித்துக்கொண்டு இந்தியர்களை பிழை சொல்லலாமா?
  8. 2 பில்லியன் டொலர் ஒப்பந்தம்: அமெரிக்கா-போலந்தின் புதிய மூலோபாய கூட்டணி! தொழில்நுட்ப உதவிகளுக்காக அமெரிக்காவுடன் போலந்து 2 பில்லியன் டொலர் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. நாட்டிற்கான மூலோபாய உதவிகளைப் பெற போலந்து அரசாங்கம் அமெரிக்காவுடன் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒரு முக்கியமான ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. குறிப்பாக போலந்து நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்தவும், நேட்டோவின் கிழக்கு எல்லையில் முக்கிய பங்கு வகிக்கவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும். ஏவுகணை பாதுகாப்பு மற்றும் அமெரிக்காவுடனான நெருக்கமான ஒத்துழைப்பு ஆகியவை தேசிய பாதுகாப்பிற்கு மிக முக்கியமானவை என்று இந்த ஒப்பந்தம் தொடர்பில் போலந்து பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டினார். அத்துடன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அனுப்பிய தகவலில், ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு 2 பில்லியன் டொலர் என்று உறுதிப்படுத்தினார். 2022 ஆம் ஆண்டில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததால், போலந்து அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது பாதுகாப்பு செலவினங்களில் நேட்டோவின் முன்னணி நாடாக உருவெடுத்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.1% ஐ பாதுகாப்புக்காக ஒதுக்க நாடு உறுதியளித்துள்ளது. மேலும் 2025 ஆம் ஆண்டில் இதை 4.7% ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. https://seithy.com/breifNews.php?newsID=331474&category=WorldNews&language=tamil
  9. பட்டலந்த போன்று வெலிக்கடை படுகொலையையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்! அரசாங்கம் நியாயமாக செயற்படுமாக இருந்தால் பட்டலந்த போன்று வெலிக்கடை படுகொலையையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பட்டலந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது இவ்வளவு காலமும் தூசு தட்டாமல் இருந்து ஜேவிபி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. உண்மையில் அதனை நாம் வரவேற்கின்றோம். அதேநேரம் 1983 ஆம் கலவரம் ஏற்படுத்தப்பட்டது வெலிக்கடை சிறைச்சாலையில். அஙகு படுகொலை செய்யப்பட்டதன் பின்னனியில் கலவரம் ஏற்பட்டு இயக்கங்களுக்கு தமிழ் இளைஞர்கள் சாரை சாரையாக சென்றனர். ஆகவே, ஒரு கேள்வியை இந்த அரசாங்கத்திடம் கேட்ட விரும்புகின்றேன். இதை பாராளுன்றத்தில் கொண்டு வந்ததைப் போன்று ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆட்சிக் காலத்தில் வெலிக்கடை சிறையில் காடையர்கள் வெளியில் இருந்து உள்ளே அழைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களுடைய உடல்கள் எஙகே புதைக்கப்பட்டது என்பது கூட தெரியாமல் இருக்கிறது. ஆகவே இந்த அரசு நியாயமாக செயற்படுமாக இருந்தால் வெலிக்கடை படுகொலையையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். பட்டலந்த பிரச்சினை எல்லாவற்றையும் விட 1983 கலவரம் கூடுதலான இழப்புக்களை சந்தித்தது. இது வரலாற்றில் முதன்மையான இடத்தில் உள்ள படுகொலை. இதை அரசாங்கம் விசாரணைக்கு கொண்டு வந்து, அதற்கான நீதி நியாயத்தை வெளிப்படுத்த வேண்டும் என மக்கள் சார்பாகவும், வெலிக்கடையில் படுகொலை செய்யப்பட்ட போராளிகள் சார்பாகவும் கோரிக்கையை முன் வைக்கின்றேன் எனத் தெரிவித்தார். https://seithy.com/breifNews.php?newsID=331469&category=TamilNews&language=tamil
  10. செம்மணிப் புதைகுழிக்கு நிதியொதுக்கவில்லை! [Wednesday 2025-04-02 16:00] யாழ்ப்பாணம் - செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் மனித என்புச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியில் மேலதிக அகழ்வாய்பை மேற்கொள்வதற்கு நிதி விடுவிக்கப்படவில்லை என்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான நிதிமூலம் தொடர்பில் உறுதியான தகவல்கள் நீதிமன்றுக்குத் தெரிவிக்கப்படவில்லை. அத்துடன், அகழ்வுகளுக்காக துறைசார் நிபுணர் பேராசிரியர் ராஜ் சோமதேவாவை அழைப்பது தொடர்பில் சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் மன்றின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். இவற்றை ஆராய்ந்த மன்று, வழக்கை நாளைமறுதினம் வரை தவணையிட்டுள்ளது. மேற்படி விடயங்கள் தொடர்பான கட்டளைகள் நாளைமறுதினம் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. முறைப்பாட்டாளர் சார்பில் சட்டத்தரணி வி.எஸ்.நிறஞ்சனும், ரனித்தா ஞானராஜாவும் முன்னிலையாகினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. https://seithy.com/breifNews.php?newsID=331484&category=TamilNews&language=tamil
  11. அசல் பிறப்பு சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை ஏற்க உத்தரவு! உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களில் இருந்து பிறப்புச் சான்றிதழ்களின் அசல் நகல்களைக் கொண்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று (02) மீண்டும் பரிசீலிக்கப்பட்டபோது, மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் மொஹமட் லாஃபர் தாஹிர் மற்றும் கே.பி. பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்களால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிறப்புச் சான்றிதழ்களின் அசல் நகல்களுடன் வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்வது தொடர்பாக நீதிமன்றத்தில் இணக்கம் எட்டப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதேவேளை,அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மனுக்கள் தாக்கல் செய்துள்ள உள்ளூராட்சி மன்றங்களில் வியாழக்கிழமை (03) வரை தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம், புதன்கிழமை (02) உத்தரவிட்டது. வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை நீதிமன்றத்தில் சவால் செய்த உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும். மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் நீதியரசர் எம்.டி. முகமது லாஃபர் மற்றும் நீதியரசர் கே.பி. பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. https://seithy.com/breifNews.php?newsID=331485&category=TamilNews&language=tamil
  12. கஜேந்திரன் பொன்னம்பலம் சொன்னது போல் போதை பொருள் விற்பவர்களை காவல்துறை பிடிக்க செல்லும் போது அவர்கள் இராணுவமுகாமுக்குள் ஓடி ஒழிகிறார்கள் என்று கூறி இருந்தார்.
  13. ஒவ்பொரு நாளும் அநுர ஒரு செய்தியுடன் வருகிறார். எந்தளவு தூரம் இவர் சொல்வது உண்மை என சில காலத்தில் தெரிந்து விடும். உள்ளூராட்சி தேர்தலுக்காக இப்படி அறிக்கைகளை விடுகிறார் போல உள்ளது.
  14. மகிந்த, சந்திரிக்கா. ரனில். மைத்திரி போன்ற இனப்படுகொலையாளிகள் எப்படி சுதந்திரமாக வெளியில் நடமாடுகிறார்கள் , பிமல். பிமல், விமல் எல்லாம் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள். எப்படி மிருசுவில் கொலையாளி நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டும் இனவாத அரசால் விடுதலை செய்யப்பட்டார், பிமல்.?
  15. 'இதெண்டு' என்னும் சொல் பற்றிய உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்! “மக்களாகிய நீங்கள் உள்ளூராட்சி தேர்தலில் எங்களுக்கு இதெண்டு விட்டீங்க எண்டா, நாங்கள் உங்கள் பிரச்சனைகளை இதெண்டு விடுவம். நாங்கள் இதெண்டோணும் எண்டா, நீங்களும் எங்களுக்கு இதெண்டோணும். வாருங்கள் எல்லோரும் சேர்ந்து நாட்டை இதெண்டுவம்” என்று அண்மையில் தேசிய மக்கள் சக்திப் பாராளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன் பேசியதாக ஒரு தகவலினை வடமராட்சி நியூஸ் என்னும் முகநூற் பக்கத்தில் வாசித்தேன். அதனையொட்டி மேலும் சிலர் முகநூலில் இதெண்டு என்ற சொல்லை வைத்துச் சொற் சிலம்பம் ஆடி வருவதைக் காண முடிகின்றது. நான் இளங்குமரனின் உரையினைக் கேட்கவில்லை. மேலுள்ளதில் உள்ளது போன்றா அவர் உரையாற்றியிருந்தார்? அறிந்தவர்கள் அறியத்தரவும். பொதுவாக பேச்சு வழக்கில் நாம் அதெண்டு இதெண்டு என்று பாவிப்பதுண்டு. அது , இது என்பதற்காக அவ்விதம் பாவிப்போம். உதாரணத்துக்கு எழுத்தாளர் க.நவம். செ.குணரத்தினம் அவர்களின் சிறுகதைகளில் வரும் கூற்றுக்களைப் பார்ப்போம். "இந்த நாடாவுக்கு மனிசி மக்கள் மருமக்கள் பெறாமக்களெண்டு கனடாவிலை பெரிய குடும்பம். அவ மனிசிக்கு ஒரு நல்ல ஒஃபீசிலை கனகாலம் வேலை. ஓவரைம் அது இதெண்டு இராப்பகலாக உழைச்சுழைச்சு, பாவம், மனிசி ஓடாப் போச்சுது" ( க.நவம் எழுதிய சிறுகதை - தினவு. அதில் வரும் வரிகள் இவை.) "ஆது இதெண்டு எல்லாத்தையும் சம்பளத்தாலை எப்பிடிச் சமாளிக்கிறது? " ( க.நவம் எழுதிய சிறுகதை - தினவு. அதில் வரும் வரிகள் இவை.) “இதென்னப்பா நீங்க மீன வாங்கித்து வரச் சொன்னா நீங்க சுனாமி அது இதெண்டு பூச்சாண்டி காட்டுறயள்?” (செ.குணரத்தினத்தின் 'மீன்' சிறுகதையில்) இங்கு இதெண்டு என்பது இது என்பதைக் குறிக்கப் பாவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வடமராட்சி நியூஸ் தகவலின்படி 'எங்களுக்கு இதெண்டு விட்டீங்க என்றால் நாங்கள் உங்கள் பிரச்சனைகளை இதெண்டு விடுவம்.' என்னும் கூற்றின்படி இதெண்டு என்பது இது என்னும் அர்த்தத்தில் பாவிக்கப்படவில்லை.எங்களுக்கு உதவினால், அல்லது ஆதரவளித்தால் என்னும் அர்த்தத்தில் பாவிக்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே இளங்குமரன் இப்படித்தான் கூறினாரா? அல்லது வடமராட்சி நியூ௶ மேற்படி கூற்றை உள்ளடக்கிய உரையினை நான் கேட்கவில்லை. இவ்விதம் இதெண்டு என்னும் சொல்லைத் தாராளமாக இளங்குமரன் பாவித்திருந்தால் , இச்சொல் அவர் பிறந்த பிரதேசத்தில் அதிகமாகப் பாவிக்கப்படும் ஒரு சொல்லாகத் தெரிகின்றது. இது பற்றிக் கருத்தினை முகநூலில் தெரிவித்த எழுத்தாளர் எஸ்.கே.விக்கினேஸ்வரன் "வடமராட்சி தென்மராட்சியின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த முதியவர்களிடம் இச்சொல் அறுபது முதல் எழுபவது வரையான காலத்தில் பேச்சுவழக்கில் பாவனையில் இருந்ததா என்று கேட்டுப்பாருங்கள். கிண்டல் அடிக்கும் எத்தனை பேருக்கு, இயத்து, ஏதனம், கோர்க்காலி,சும்மாடு போன்ற இன்று வழக்கிலில்லாத சொற்கள் தெரியும்? " என்று கூறியிருந்தார். எஸ்.கே.விக்கினேஸ்வரன் வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர். அவரது கருத்தின் மூலம் இச்சொல் அப்பகுதியில் பாவிக்கப்படும் சொல்லாக இருப்பதை உணர முடிகின்றது. இச்சொல் தெரியாததால் அதனை வைத்து நையாண்டி செய்வது நாகரிகமான செயல் அல்ல. அது ஒரு பிரதேசத்து மக்கள் பாவிக்கும் பிரதேச மொழியினை அவமானப்படுத்துவ்தாகும். ஒருவர் இவ்விதமொரு சொல்லினைப் பாவித்தால் ,இவ்விதமானதொரு சொல் ஒரு பிரதேசத்து மக்களால் பாவிக்கப்படுகின்றது என்பதை உனர்ந்து அதனை மேலும் அறிய ஆவல் கொள்வேன். இதெண்டு என்பதை இளங்குமரன் பாவிக்கும் தன்மையிலிருந்து அதன் அர்த்தம் உதவினால் அல்லது ஆதரவளித்தால் என்னும் பொருள் படும்போல் தெரிகின்றது. இச்சொல்லின் பாவனையை அறிந்தவர்கள் இது பற்றி எனக்கும் இதெண்டு விட்டீங்கள் என்றால், நானும் இது பற்றி இன்னும் விரிவாக அறிந்து கொள்வேன். அதற்கு நன்றியுடையவனாகவும் இருப்பேன். இச்சொல்லை எமக்கு அறியத்தந்ததறகாகப் பாராளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரனுக்கு நன்றி. இது பற்றிச் சாட்ஜிபிடியிடன் கேட்டேன்.அதன் பதில் இப்படியிருந்தது: "மன்னிக்கவும், முன்னதாக 'இதெண்டு' என்ற சொல்லுக்கு தமிழ் மொழியில் ஒரு குறிப்பிட்ட பொருள் இல்லை என்று தெரிவித்தேன். ஆனால், உங்கள் கேள்வியை மேலும் ஆராய்ந்தபோது, 'இதண்டு' என்ற சொல் இலங்கைத் தமிழிலும், குறிப்பாக யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிலும் பயன்பாட்டில் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. இச்சொல் பற்றிய கூடுதல் விளக்கங்கள் அல்லது பயன்பாட்டு உதாரணங்கள் உங்களிடம் இருந்தால், தயவுசெய்து பகிர்ந்து கொள்ளுங்கள்." இது எப்படி இருக்கு? சாட் ஜிபிடிக்கும் யாராவது இது பற்றி விளக்கம் கொடுத்தால் ,அதன் அறிவாற்றலும் மேலும் அதிகரிக்கும். இதைச் செய்வீர்களா? Navaratnam Giritharan
  16. யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து.
  17. மாத்தளை வதைமுகாம்களுக்கு கோட்டா பொறுப்புக்கூற வேண்டும்! நாட்டில் 1988, 1989 ஆம் ஆண்டு கலவர காலப்பகுதியில் மாத்தளை மாவட்டத்தில் இடம்பெற்ற நபர்களை காணமலாக்கிய பல்வேறு சம்பவங்களில், அப்போது இராணுவத்தின் மாவட்டத்துக்கு பொறுப்பான இராணுவ ஒருங்கிணைப்பாளராக கடமையாற்றிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்புக் கூற வேண்டும் என்று காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் ஒன்றியம் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்ப ஒன்றியத்தின் செயலாளர் மரீன் நிலாஷானி கருத்து தெரிவிக்கையில், “2012 ஆம் ஆண்டு மாத்தளை மாவட்ட வைத்தியசாலையில் மனித புதைகுழியொன்று தோற்றம் பெற்றது. அதுதொடர்பில் முன்னெடுக்கப்பட்ட வைத்திய பரிசோதனைகளில், 1986 – 1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெளியேற்றப்பட்ட சடலங்கள் என்பது அதில் உறுதிபடுத்தப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலேயே இதுதொடர்பான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இதுதொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து இதனை மூடிமறைத்து விட்டார்கள். 1988, 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மாத்தளை மாவட்டத்துக்கு பொறுப்பான இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரியாக கோட்டபாய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரராக இருந்தமையினாலேயே இந்த விடயம் மூடி மறைக்கப்பட்டது. கோட்டாபய ராஜபக்ஷ கடமையாற்றி காலப்பகுதியில் மாத்திரம் மாத்தளை மாவட்டத்தில் 720 வரையிலானவர்கள் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலப்பகுதியில் மாத்தளை மாவட்டத்திலிருந்த சகல பொலிஸ் நிலையங்களுக்கும், ஐந்து வருடங்களுக்கு மேல் பழைமையான சகலரது ஆவணங்களையும் நீக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, பட்டலந்த வதைகூடத்தை ரணில் முன்னெடுத்துச் சென்ற காலத்தில், மாத்தளை முன்னெடுக்கப்பட்டு வந்த சகல வதைகூடங்களையும் செயற்படுத்தியது, வழிநடத்தியது கோட்டாபய ராஜபக்ஷ ஆவார்” -ன்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார் https://seithy.com/breifNews.php?newsID=331299&category=TamilNews&language=tamil

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.