Everything posted by nunavilan
-
மார்க் கார்ணி கனடாவின் 24 ஆவது பிரதமராகிறார்!
Politics மார்க் கார்ணி கனடாவின் 24 ஆவது பிரதமராகிறார்!March 15, 2025 Post Views: 68 தமிழர் கெரி ஆனந்தசங்கரிக்கு நீதியமைச்சர் பதவி!சிவதாசன்எதிர்பார்க்கப்பட்டதைப் போல கனடிய மத்திய லிபரல் கட்சியின் தலைவராக, சுமார் 85% வாக்குகளால், தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் மார்க் கார்ணி நேற்று (வெள்ளி) கனடாவின் 24 ன்காவது பிரதமராக நியமனம் பெற்றுள்ளார். தெற்கே ஜனாதிபதி டொனால்ட் ட்றம்பின் சீரற்ற ஆட்சியில் கனடா எதிர்பார்க்கும் சவால்களைச் சமாளிக்கும் வல்லமையுள்ள ஒருவராக மார்க் கார்ணி பார்க்கப்பட்டதும் அவரது தெரிகுக்கு ஒரு முக்கிய காரணம். நாடு தழுவிய கருத்துக்கணிப்பில் எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் லிபரல் கட்சிக்குமிடையேயிருந்த பாரிய வித்தியாசம் இப்போது தகர்ந்து இரு கட்சிகளும் சமநிலையில் (37%) இருப்பதற்கு மார்க் கார்ணியின் வரவு முக்கிய காரணம். “தோல்வியடைந்த ட்றூடோ அரசுக்கு பொருளாதார ஆலோசகராக இருந்தவர் மார்க் கார்ணி” என எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொய்லியேவ் மீண்டும் மீண்டும் உரத்துக் கதறிய பின்னரும் கணிசமான மக்கள் கார்ணிக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பது கூர்ந்து அவதானிக்கத் தக்கது. கார்ணியின் தற்போதைய அரசு, ஏறத்தாழ, ஒரு காபந்து அரசு தான். தெற்கே இருக்கும் erratic கோமாளி எப்படி நடந்துகொள்ளப் போகிறார் என்பதைப் பொறுத்தே கார்ணியின் திட்டமிடல் இருக்குமென எதிர்பார்க்கலாம். ட்றூடோவுக்கும் ட்றம்பிற்குமான பகைக்கான வேறு பின்புலங்கள் இருப்பினும் கார்ணி ட்றூடோவின் பாதையிலிருந்து சற்று விலகிச் செல்வதே சாணக்கியமாக இருக்கும். கரி வரிச் சுமையைப் பொதுமக்கள் தோள்களிலிருந்து இறக்கி வைப்பதாக கார்ணி அறிவித்தது நல்ல விடயம். இதன் மூலம் பொய்லியேவ் கைகளிலிருந்து முக்கியமான ஒரு ஆயுதத்தைப் பிடுங்கி விட்டார். இது போல இன்னும் பல ஆயுதக் களைவுகளை எதிர்பார்க்கலாம். என்ன இருந்தாலும் அரசியல் பட்டையில், கொள்கை ரீதியாக, ட்றூடோ இடது பக்கத்தில் இருந்தவர். பெரும்பாலான உலக நாடுகள் இப்போ வலது பக்கம் சரிந்துகொண்டிருக்கும் காலம். ஆனால் 1960 களுக்குப் பிறகு கனடா பெரும்பாலும் மத்தி அல்லது இடது என்ற இடக்களிலேதான் இருந்துவந்தது. மல்றோனி காலம் வரை இதுதான் நிலைமை. ஹார்ப்பர் கொஞ்சம் வலது பக்கம் இழுத்துச் சென்றிருந்தாலும் இடது எப்போதுமே அதைச் சரியான இடத்தில் தான் வைத்திருந்தது. ட்றூடோ அதை கொஞ்சம் அதிகமாகவே இடது பக்கம் தள்ளிச் சென்றுவிட்டார். கார்ணி அதைக் கொஞ்சம் வலது பக்கம் நகர்த்துவதன் மூலம் “நான் ட்றூடோவல்ல”என்ற செய்தியைத் தெற்குக்கு அனுப்புவார். இது அவசியமானதும் கூட. இதனால் ட்றூடோவை ஓடும் பஸ்ஸின் கீழ் கார்ணி தள்ளிவிட்டதாகக் குறைகாணத் தேவையில்லை. இது கோமாளிக்குக் குதூகலத்தைக் கொடுக்கும் எனபது மட்டுமல்லாது ‘விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை’ கணக்கில் அதுவும் தனது திருவிளையாடல்களைக் கொஞ்சம் தணிக்க முயற்சிக்கும். ட்றூடோ அமைச்சரவையில் இருந்த 37 அமைச்சர்களை 24 ஆகக் குறைத்திருப்பது நல்ல விடயம். இது ‘தற்காலிக அரசு’ என்பதற்காக இருக்கலாம். ஆனால் இந்த மாத முடிவிற்குள் பொதுத் தேர்தளுக்கான திகதியைக் கார்ணி அறிவிப்பார் என எதிர்பார்க்கலாம். இத் தேர்தலில் மீண்டும் லிபரல் கட்சி ஆட்சியமைத்தால் ஆச்சரியப்படத் தேவையில்லை. நான் ஏற்கெனவே பலதடவைகள் கூறியது போல பொய்லியேவ் தனக்குக் கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தை இழந்துவிட்டார். அவரது ஆலோசக சேனை முதலில் துரத்தப்படவேண்டும். இந்த புதிய அமைச்சரவையில் இரு தமிழர்களுக்கு முக்கியமான அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டிருப்பது அவதானத்திற்குரியது. இந்த அமைச்சரவையில் கிறீஸ்டியா ஃபிறீலாண்டைத் தவிர , ஆனந்த், ஆனந்தசங்கரி உடபடப் பெரும்பாலானோர் ட்றூடோ விசுவாசிகள். இதனால் இந்த அரசில் கொஞ்சமேனும் ட்றூடோவின் ஆளுமை இருக்கும். முன்னாள் பிரதமர் ஜான் கிரைத்தியேன் ஒரு மூத்த ட்றூடோ விசுவாசி. இளைய ட்றூடோ ஆட்சியிலும் அவரது ஆலோசனை தொடர்ந்தும் இருந்துவந்தது. வளைகுடாப் போரின்போது coalition of the willing குடைக்குள் போக மறுத்த துணிச்சலான அரசியல் ஜாம்பவான். ட்றம்ப் போன்றோரைக் கையாள்வதற்கு கிரைத்தியேனின் ஆலோசனை அவசியமானது. இந்த அமைச்சரவைத் தெரிவில் அவரது கை இருந்திருக்குமெனவே எதிர்பார்க்கலாம். ஃபிறீலாண்டிற்கு போக்குவரத்து அமைச்சைக் கொடுத்து அவமானப்படுத்தியிருக்கிறார் கார்ணி / ட்றூடோ. இது இலங்கையில் மீன்பிடி அமைச்சுக்கு இணையான ஒரு அவமான அமைச்சு. பாவம் ஃபிறீலாண்ட், அடுத்த தடவை தெரிவானால் இன்னும் நான்கு வருடங்கள் கார்ணிக்குப் பின்னால் நின்று தலையாட்டிக்கொள்ள வேண்டும். மார்ச் 24 ஐப் போல் புதிய தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படலாம். 37 முதல் 51 நாட்களுக்குள் தேர்தல்கள் நடத்தப்படவேண்டும். அதுவரை கோமாளியின் சேட்டைகள் தொடர்ந்தால் கார்ணியின் கட்சி கரையேறும். அல்லது பொய்லியேவ் தனது புதிய வியூகத்தை அறிவிக்க வேண்டும். கோமாளியின் சேட்டைகள் தளர்ந்து போனால் உள்ளூர்ப் பிரச்சினைகள் தலை தூக்கும். கார்ணி சாமர்த்தியசாலியானால் கோமாளியை உசுப்பேத்திக் காரியங்களைச் சாதிக்கலாம். அல்லது றைட் லெஃப்டினண்ட் டக் ஃபோர்ட்டை முன்னரங்கத்திற்குத் தள்ள வேண்டும். இது வரை அவதானித்ததில் பொய்லியேவ்-ஃபோர்ட் கூட்டணி உருவாகுவதற்கான எந்தவித அசுமாத்தமுமில்லை. இந்த அணி கை கோர்க்குமானால் கார்ணிக்கு கொஞ்சம் கஷ்டம். கெரி ஆனந்த சங்கரிக்கு முக்கியமான நீதி அமைச்சுப் பதவி வழங்கப்பட்டிருப்பது பாராட்டப்படவேண்டியது. அது அவரது கடும் உழைப்பிற்கான வெகுமதி. தமிழ் மக்களிடையே இருக்கும் ஒற்றுமையின்மை உலகறிந்த விடயம். ஆனந்தசங்கரியைப் பற்றிப் பல குற்றம் குறைகள் பலதரப்புகளாலும் முன்வைக்கப்படுவது உண்மை. ஆனால் ஒரு உலகப் பார்வையில் அவருக்கு கனடிய அரசினால் வழங்கப்பட்ட கெளரவம் தமிழருக்கு வழங்கப்பட்ட கெளரவம் எனவே நான் பார்க்கிறேன். அந்த வகையில் அவர் பாராட்டுக்குரியவர். அனித்தா ஆனந்தும், சம தட்டில் வைத்துப் பார்க்கப்பட வேண்டிய இன்னுமொரு தமிழர். 1993 இல் ஒரே ஒரு சீக்கியர் பாராளுமன்றத்திற்குச் சென்றிருந்தார். 2015 இல் ட்றூடோவின் அரசில் 18 சீக்கிய உறுப்பினர்கள் இருந்தார்கள். நமது சட்டியிலிருந்து ஒரு நண்டாவது வெற்றிகரமாக வெளியே போய்விட்டது அதிசயம் தான். பார்ப்போம். இலங்கை அரசியல் விடயத்தில் அமைச்சர் ஆனந்தசங்கரி கொஞ்சம் அமத்தி வாசிக்கவேண்டி ஏற்படும். எதிர்க் கட்சியில் தெரிவாகப் போகும் தமிழர் இத்தடியை எடுத்துக்கொண்டு ஓடவேண்டி ஏற்படும். எப்படியானாலும் ஓடினால் போதும் என்று மகாஜனங்கள் பொறுமை காப்பர். வரப்போகும் தேர்தலின் முடிவுகள் எப்படியாகவும் இருக்கட்டும். கோமாளியின் குருட்டடிகளுக்கு உச்சக்கூடிய தலைமை கனடாவில் இருக்க வேண்டும். புதிய பிரதமருக்கும், அமைச்சர்களுக்கும் வாழ்த்துக்கள்! (Images & Video Courtesy: Gary Anandasangarie) https://veedu.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-24-%e0%ae%86/?fbclid=IwY2xjawJDA2VleHRuA2FlbQIxMQABHZnO0A7X97X_tiYezuu5faIymY0aSYuRU6P6UR_0eFyu1EcWz5iV57FAjw_aem_B6gTIpjlWZI4KA8vqOLDeQ#google_vignette
-
சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது
இன்னுமிரு மாதத்தில் உங்கள் 60 ஆவது பிறந்தநாள்.😁
-
‘பரமசிவன் பாத்திமா’: டிரைலரை வெளியிட்ட சீமான், அண்ணாமலை
‘மாரியம்மன மேரியம்மனா கும்பிட்டுட்டு இருக்கோம்’ - சர்ச்சையை கிளப்பிய ‘பரமசிவன் பாத்திமா’ இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் விமல், சாயாதேவி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பரமசிவன் பாத்திமா'. இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தீபன் சக்ரவர்த்தி இசையமைத்துள்ள இப்படத்தின் டிரெய்லர் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் ஆகியோரால் அவர்களின் எக்ஸ் வலைதளப்பக்கங்களில் வெளியிடப்பட்டது. டிரெய்லரை பார்க்கையில், சுப்ரமணியபுரம் என்கிற இந்து கிராமத்தில் இருக்கும் விமலும் யோக்கோபுரம் என்கிற கிறிஸ்துவ கிராமத்தில் இருக்கும் சாயாதேவியும் காதலிக்கின்றனர். இவர்களின் காதலுக்கு இரண்டு கிராமமும் எதிர்ப்பு தெரிவிக்க இதனால் காதலர்கள் ஊரைவிட்டு ஓடிப்போகின்றனர். இருவரையும் காவல் துறையினர் தேடும் போது அவர்கள் ஊரைப் பற்றி விசாரிக்கையில் இரு கிராமத்திற்கும் இருக்கும் மோதல் போக்கு, மதம் மாற்றம் உள்ளிட்ட விஷயங்கள் தெரியவருகிறது. இறுதியில் காதலர்களைக் கண்டுபிடித்தார்களா, காதலர்கள் என்ன ஆனார்கள் என்பதை விரிவாகச் சொல்லியிருக்கும் படமாக இந்த படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. சர்ச்சைக்குறிய விஷயத்தை இந்தப் படம் பேசுவதால் டிரெய்லரில் வரும் காட்சிகளும் வசனங்களும் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஒரு காட்சியில் காவல்துறை அதிகாரி பாதிரியாராக வரும் எம்.எஸ்.பாஸ்கரிடம், சுப்ரமணியபுரம் ஆளுங்க எப்படி எனக் கேட்க, ‘முரட்டுத்தனமான ஆளுங்க, ஆனா ஊனா வெட்டுக்குத்துன்னு இறங்குறாங்க’ என்கிறார். பின்பு யோக்கோபுரம் ஆளுங்க எப்படி என்ற கேள்விக்கு, ‘படிச்ச பிள்ளைங்க. எதிராளியக்கூட மன்னிக்ககூடியவங்க’ என்கிறார். பின்பு மற்றொரு இடத்தில் இரண்டு கிராமத்திற்கும் கலவரம் நடந்த போது ஒரு முஸ்லீம் நபர் காரணம் என்ற ரீதியில் ஒரு காட்சி இடம் பெறுகிறது. மேலும் விமல் ஒரு காட்சியில், ‘பெளிக்ஸ் மாதிரி ஆளுங்க கிட்ட பணத்த கொடுத்து மதம் மாத்த சொல்றீங்க. மாறுனவனும் மாறாதவனும் சண்டை போட்டுக்கிட்டா அதுக்கு பேரு மதக்கலவரம்னு சொல்றீங்க’ என்கிறார். அதே போல் இன்னொரு இடத்தில் விமலிடம் எம்.எஸ்.பாஸ்கர், ‘வெள்ளைக்காரங்க இங்க வரலைன்னா நீங்க பிச்சதான் எடுத்துட்டு இருக்கனும்’ என சொல்ல அதற்கு விமல், ‘அந்த வெள்ளைக்காரனே இங்க பிச்ச எடுக்கத்தான் வந்தான். என்னையெல்லாம் மாத்த முயற்சி பண்ணாத’ என பதிலளிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. டிரெய்லரின் இறுதி காட்சியில், காவல் அதிகாரி எம்.எஸ்.பாஸ்கரிடம், ‘எல்லாத்தையும் மன்னிக்கிற யோக்கோபுரம் ஏன் சுப்புரமணியபுரத்த மன்னிக்கக்கூடாது’ எனக் கேட்க, அதற்கு எம்.எஸ்.பாஸ்கர், ‘அவனுங்க சரியாந்திர காட்டு மிராண்டிங்க சார். முன்னொரு காலத்துல வெள்ளக்காரவன் வந்து சர்ச் கட்டுனப்ப உள்ளுக்குள்ள வந்து மாரியம்மன் சிலையை வச்சிட்டு போய்ட்டாங்க. அதுக்கப்புறம் மாரியம்மன மேரியம்மனா கும்பிட்டுட்டு இருக்கோம்’ என பதிலளிக்கிறார். இந்த டிரெய்லர் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. மேலும் விவாதங்களும் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் இயக்குநர் இசக்கி கார்வண்ணன் முன்பு எடுத்த தமிழ்க்குடிமகன் படத்தில் குலத்தொழில், சாதி உள்ளிட்ட விஷயங்களை பேசியிருந்த நிலையில் அந்தபடமும் சர்ச்சையை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. https://www.nakkheeran.in/cinema/cinema-news/paramasivan-fathima-trailer-released
-
இராணுவத்தினர் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டனர் எனக்கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - நாமல் ராஜபக்ஷ
உங்களின் இராணுவம் தந்த சாட்சிகளை தானே chanel 4 வெளியிட்டது. அதற்கு என்ன சொல்ல போகிறீர்கள்??
-
சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது
வேதனையுடன் எழுத வேண்டாம் அண்ணா. சந்தோசமாக எழுதுங்கள்.உங்களின் மன உறுதிக்கு ஒரு சபாஸ் சொல்லுங்கள். எனது யூத நண்பர் தொடர்ந்து சிகரட்டை குடித்து கொண்டே இருப்பார். 13 வயதில் புகைக்க தொடங்கி இப்போ 40 ஆகி விட்டது. சில தடவை புகைத்தலை விட்டு மீண்டும் பழைய இடத்துக்கே வந்து விடுவாராம். மனைவி, அம்மா எல்லோரும் சொல்லியும் தன்னால் விட முடியவில்லையாம். இப்போ தனது 8 வயது மகள் அப்பா புகை மணம் தாங்க முடியவில்லை. புகைத்தால் தனக்கு கிட்ட வர வேண்டாம் என கூறினாராம். இப்போ 3 மாதமாகிறது புகைத்தல் விட்டு. உடம்பின் நிறை கூடுகிறது என்றார். உடற்பயிற்சி செய். மீண்டும் புகைக்காதே என்று சொல்லி உள்ளேன். பார்க்கலாம்.
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
'கள்ளிப்பலகையும் கண்ணீர்த்துளிகளும்' மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தமிழ்ச் சங்க இதழான நுட்பம் (1980/1981) இதழில் வெளியான கவிதை. கள்ளிப் பலகையும் கண்ணீர்த் துளிகளும் - வ.ஐ.ச.ஜெயபாலன் - முரட்டு மேதை என்பர் மேலோர் 'இங்கிதம் அறியான் அறியான்' என்பர் கபடம் நிறைந்த இளம் சீமாட்டிகள் ஓயாது துரத்தும் சவக்குழி விழுங்குமுன் ஒரேஒரு முறையே வாழுமிவ் வாழ்வில் கையா லாகாத கோழையைப் போல கொடுமையும் சூதும் நிறைந்த உலகை சகித்தும் ரசித்தும் பாவனை செய்தும் சான்றோன் என்று மாலைகள் சூட நானும் எனது நண்பரும் விரும்போம். வீணையோடும் தூரிகையோடும் மூலைமட்டம் ஸ்டெதஸ்கோப் அரிவாள் சம்மட்டி போன்றவை பழகிப் போன கைகளை உயர்த்தி நெஞ்சுகள் நிமிர்த்தி எனது தோழர் புடை சூழ்வார்கள். பொன்னாய் அழகு பொழியினும் விலங்கை அப்பிய மலமாய் அருவறுத் தெறிவோம். வெடி மருந்துகள் தோய்ந்த எம்நாவு ஓய்ந்திருக்காது. தடைகள் சீனப் பெரு மதிலாயினும் தகர்க்கும் பணியினைப் பேனைக் குச்சியால் ஆர்வமாய்ச் செய்வேன் அங்குரார்ப்பணம். தடைகளைத் தகர்த்தும் விலக்கியும் தொடர்ந்து அதிமானிடனாய் முன்சென்றிடுவோம். விழுமிடத் தெமக்கோர் நடுகல் நிமிர்த்தி எமது பிள்ளைகள் பெண்டுகள் தொடர்வார். கடலின் மணலை எண்ணித் தீர்ப்பினும் மானிடர் எமது வம்சக் கொடியை சவக்குழி உனக்கு விழுங்கித் தீர்த்திடல் முடியுமோ? விலங்கும் சிறையும் வளைத்திடல் கூடுமோ? விடுதலை பெற்ற தோழியரோடு கட்டாந் தரையின் வாழ்வே உவப்பு. பெரிய இடத்துச் சீமை நாய்களாய் கார்ப்பவனி வரும் இல்லறக் கனவில் எமது தோழர் தோழியர் தேயார். கொடிய உலகம் சான்றோன் என்னவும் இளம் சீமாட்டிகள் இனியவன் என்னவும் குனிந்து நடக்கும் கூழங்கையர்கள் பெறுமதி கூடிய காலணி இலங்கும் கால்களைத் தேடி முத்தம் கொடுப்பர். பொன்முலா மிட்ட சவப்பெட்டிப் பரிசால் உலகம் அவர்களைக் கெளரவம் செய்யும். வெளிப் பூச்சற்ற கள்ளிப் பலகையும் வெம்மை நிறைந்த கண்ணீர்த் துளிகளும் எங்களுக்காக இருக்கவே செய்யும்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: கண்கள் ஏதோ படம்: சித்தா இசை: டிபி நீனன் தோமஸ் வரிகள்: யுகபாரதி பாடியவர்கள்: பிரதீப்குமார் , கார்த்திகா வைத்தியநாதன்
-
சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது
சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது. அடைப்புகள் ஏற்பட்டன. இரண்டாயிரத்தில் பைபாஸ் செய்துக்கொண்டேன். அப்போதும் சிகரெட் பிடிப்பவனாக இருந்திருந்தால் மரணம் அன்றே குறிக்கப்பட்டிருக்கும். சிகரெட் நிறுத்தி ஆரோக்கியத்தை அதிகப்படுத்தியதால் அந்த ஆபரேஷனை சமாளிக்க முடிந்தது. பிறகு பத்து வருடங்கள் எந்தவித இம்சையும் இல்லாமல் அழகாக வாழ்க்கை ஓடியது. 2011 இல் நீரிழிவு காரணமாக ரத்தக்கொதிப்பின் காரணமாக மறுபடியும் அடைப்பு ஏற்பட, இரண்டாம் முறை பைபாஸ் செய்து கொண்டேன். சுவாச பயிற்சி செய்திருந்ததால், மூச்சு பற்றிய ஞானம் இருந்ததால், தினந்தோறும் காலையும் மாலையும் வேகமாக நடந்ததால், மெல்லிய உடற்பயிற்சிகள் செய்ததால் இரெண்டாவது பைபாஸையும் தாண்டிவர முடிந்தது. ஆனால் இரண்டாயிரத்து பன்னிரெண்டில் அடுத்த சோதனை. பத்தொன்பது வயதில் பிடித்த சிகரெட்டுகள் அறுபத்தாறு வயதில் தன் விஷத்தன்மையை காட்டியது. தன் வக்கிரத்தை நிரூபித்தது. நுரையிரலின் அடிப்பக்கம் முழுவதும் நிகோடினால் ஏற்பட்ட சளி அடைப்புகள். நுரையீரல் முழு திறனோடு வேலை செய்யவில்லை. அதற்கான திறனை மெல்ல மெல்ல இழந்தது. அதோடு சளி அடைப்பும் சேர்ந்து பழிவாங்கியது. மூச்சு திணறல் ஏற்பட்டது. ஒரு பிடி சாதத்திற்கு அவஸ்தை படும் நிலைமை. முகம் முழுவதும் மூடி ஆக்சிஜனை செலுத்தினால் தான் உயிரோடு இருப்பேன் என்கிற நிலைமை. என்.ஐ.வி என்கிற அந்த விஷயத்தோடுதான் இரவு தூங்க முடியும் என்கிற நிலைமை. பிராங்கோஸ்கோபி என்று மூச்சுகுழலுக்குள் கருவியை விட்டு சோதனை செய்து அங்கே அடி நுரையீரலில் அடர்த்தியாக அசைக்க முடியாதபடிக்கு கெட்டியாக சளி இருப்பதை தெரிந்து கொண்டார்கள். இதை எப்படி சரிசெய்வது? வலியை பொறுத்துக் கொள்ளலாம். வேறு ஏதேனும் பத்தியமாக இருந்தால் அவ்விதமே நடந்து கொள்ளலாம். மூச்சு இழுத்து பிராணவாயு உள்ளே போய் வெளியே வருவதே கடினமானால் எப்படி சமாளிப்பது? தினசரி மரண போராட்டமாக மாறிவிட்டது. மூச்சு வேகமாக இழுத்து இழுத்து இன்னும் சில நிமிடங்களில் பாலகுமாரன் செத்து விடுவான் என்ற எண்ணத்தை மற்றவருக்கு ஏற்படுத்தியது. வீடு தவித்தது. வீட்டிற்குள் மூன்று நான்கு நாட்கள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைக்கும்படி நேரிட்டது. வேகமாக காற்றை செலுத்தக்கூடிய கருவி தனியாக இருந்தது. ஆஸ்பத்திரியிலிருந்து வீடு வந்தவுடன் வீடு ஆஸ்பத்திரியாக மாறியது. எப்போதும் மூக்கில் ஆக்சிஜன் இருக்கும் படி ஒரு அவஸ்தை. ஸ்கூட்டர் எடுத்துக் கொண்டு மயிலாப்பூர் முழுவதும் சுற்றித் திரிந்தவனுக்கு சிறைத்தண்டனை போல வீட்டில் அதே அறையில் இருக்கும் படி நேரிட்டது. மிகப்பெரிய வலியில்லை ஜீரம் இல்லை. ஆனால் ஆக்சிஜன் குழாயை எடுத்து விட்டால் மூச்சுத் திணற ஆரம்பிக்கும். அது இல்லாமல் நடக்க முடியாது, பேச முடியாது உண்ண முடியாது எதுவும் செய்ய முடியாது. காலில் சங்கிலி கட்டி கையில் இரும்பு குண்டை கொடுத்தது போன்ற மிகப்பெரிய தண்டனை. வேறு எந்த வழியும் இல்லாமல் அமைதியாக உட்கார்ந்து கொண்டேன். ஒரு நாளைக்கு நூற்றியிருபது சிகரெட் பிடிக்க வேண்டும் என்கிற நிலையில் இருந்ததை நினைத்து சிரித்துக் கொண்டேன். அப்படி புகைத்தால் தான் கதை எழுத வரும் என்று முட்டாள் தனமாக நம்பியதை நொந்து கொண்டேன். மரணம் எல்லோருக்கும் வரும். எப்பொழுது வேண்டுமானாலும் வரும். எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரும். ஆனால் மூச்சு திணறி இதோஸ.. இதோஸ என்று பயம் காட்டுகின்ற ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது. நெஞ்சு வலித்தது. ஐந்து நிமிடம் துடித்தார். உயிர் நீங்கியது என்பது பராவாயில்லை. மூச்சு விட முடியாமல் உள்ளுக்குள் போன மூச்சை வெளியே செலுத்த முடியாமல் வெளியே இருக்கின்ற பிராண வாயுவை உள்ளே இழுக்க முடியாமல் திணறி கதறுகின்ற வேதனை யாருக்கும் வரக்கூடாது. சிகரெட் பிடிக்கலாம் என்கிற ஆசையுள்ளவர்கள் தயவு செய்து அந்த எண்ணத்தை அழித்து விடுங்கள். - எழுத்தாளர் பாலகுமாரன் - Jeeva Murugesan ·
-
தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டில் CTC-யும், முன்னாள் தலைவரும் ஒரே கோட்டிலா?
தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டில் CTC-யும், முன்னாள் தலைவரும் ஒரே கோட்டிலா? கனடியத் தமிழரின் குரல் எனத் தம்மை நியாயப்படுத்துவதில், கனடியத் தமிழர் பேரவை (பேரவை / CTC) தனது இருப்பின் பெரும்பகுதியைச் செலவழித்து வருகிறது. ஆனால் அதன் நடவடிக்கைகள் அதற்கு முரணாக அமைந்துள்ளன என்ற குற்றச்சாட்டு மீண்டும் மீண்டும் எழுகிறது. பின்வரும் விடயங்களில் CTC குறித்த கேள்விகள் உள்ளன: 1) தமிழர் உரிமைகளுக்காகப் போராடுவதாகப் பொது வெளியில் கூறிக் கொண்டாலும், முக்கிய விடயங்களில் மௌனம் காக்கும் தனது நிலைப்பாட்டை CTC மாற்றவில்லை, 2) தமிழர்களின் துயரங்களுக்குக் காரணமான இலங்கை அரசாங்கத்துடன் பேரவை தொடர்ந்து நெருக்கமான தொடர்பைப் பேணி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது, 3) தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கு நீதி கோரும் பொறிமுறைகளில் இருந்து CTC பின் தங்கியுள்ளது. இந்த முரண்பாடுகள் கனடிய, தாயக, உலகத் தமிழர் சமூகத்தினால் கவனிக்கப்படாமல் இல்லை. ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கனடிய தமிழர்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிக்கத் தவறிய குற்றச்சாட்டுகளையும் CTC நீண்ட காலமாக தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது. புதிய நெருக்கடி நிலை CTC இதுவரை காலமும் இல்லாத கடுமையான நெருக்கடி நிலை ஒன்றை இப்போது எதிர்கொள்கிறது. பேரவையின் முன்னாள் தலைவரும் மூத்த ஆலோசகருமான ராஜ் தவரட்ணசிங்கம் அனுப்பிய மின்னஞ்சல் ஒன்றின் அடிப்படையில் இருந்து சமீபத்திய சர்ச்சை உருவாகிறது. பேரவையின் முன்னாள் தலைவரும் மூத்த ஆலோசகருமான ராஜ் தவரட்ணசிங்கம் கனடா முழுவதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த மின்னஞ்சல், தமிழ் இனப்படுகொலை, தமிழ் மரபுத் திங்கள் அங்கீகாரங்களையும், இவற்றுக்காக முன்னின்று செயற்பட்ட கனடியத் தமிழ் அரசியல்வாதிகளையும், தமிழ்ச் சமூகச் செயற்பாட்டாளர்களையும் கடுமையாகத் தாக்கியுள்ளது. இந்த மின்னஞ்சல் பிரதி ஒன்றை “தேசியம்” பெற்றுள்ளது. (இந்த மின்னஞ்சல் வாசகர்களின் பார்வைக்கு இங்கு இணைக்கப்பட்டுள்ளது) Strengthening Canada Through Unity and Understanding குறிப்பிட்ட மின்னஞ்சலின் உள்ளடக்கம் தனது தனிப்பட்ட கருத்துக்கள் என ராஜ் தவரட்ணசிங்கம் வலியுறுத்துகின்றார். ஆனால், தனது நீண்ட பதவிக் காலத்தில் பேரவைக்குள் ஒரு முக்கிய முடிவெடுக்கும் சக்தியாகச் செயற்பட்ட பின்னணியில், அவர் தனது கருத்தையும் பேரவையின் கருத்தையும் வேறுபடுத்த முனைவது ஓர் அப்பட்டமான முரணாகும். மின்னஞ்சல் உள்ளடக்கம் தனது தனிப்பட்ட கருத்துகள் என ராஜ் தவரட்ணசிங்கம் கூறுவது எவ்வாறு உண்மையாக இருக்க முடியும்? இந்தக் கருத்துகள் எப்போதாவது பேரவையின் சொந்த நிலைப்பாட்டிலிருந்து உண்மையிலேயே வேறுபட்டு இருந்தனவா? தமிழர்களின் முக்கிய அரசியல் விடயங்களில் தீர்க்கமாகச் செயற்படத் தவறியதற்காக பேரவை நீண்டகாலமாகக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறது. தமிழ் இனப்படுகொலை நிகழ்ந்தது என்பதை CTC பல ஆண்டுகளாக மறுத்துவந்தது . இறுதியாக May 2024 இல், ஒரு சுருக்கமான, அடையாள அறிக்கை மூலம் மாத்திரமே தமிழ் இனப்படுகொலை நிகழ்ந்ததை ஏற்றுக்கொள்வதாக முதல் தடவையாக CTC தெரிவித்தது. இது மிகவும் தாமதமானது எனப் பலராலும் பரவலாக விமர்சிக்கப்பட்டது. பேரவை, ஸ்ரீலங்கா அரச அதிகாரிகளுடன் கொண்டிருக்கும் தொடர்பு குறித்தும் கடுமையான கேள்விகளையும் விமர்சனங்களையும் எதிர்கொள்கிறது. கனடாவுக்கான இலங்கைத் தூதரக அதிகாரிகளுடன் நிகழ்வுகளில் பங்கேற்பது, தமது நிகழ்வுகளுக்கு இலங்கைத் தூதரக அதிகாரிகளை விருந்தினர்களாக அழைப்பது, தமிழ் இனப்படுகொலை விடயத்தில் அதன் மௌனம், கனடிய உள் விவகாரங்களில் இலங்கையின், வெளிநாடுகளின் தலையீடு (Foreign interference) குறித்து உறுதியான நிலைப்பாட்டை எடுக்கத் தவறியது உட்பட்ட விடயங்களில் பேரவையின் நகர்வுகள் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றன. இந்நிலையில் , பேரவையின் மூத்த பிரமுகர்களுள் ஒருவரான ராஜ் தவரட்ணசிங்கத்தின் தமிழர் விரோத நிலைப்பாட்டின் வெளிப்பாடு, தமிழர் மத்தியில் நீண்ட காலமாக இருந்த கவலைகளையும் விமர்சனங்களையும் முன்னெப்போதும் இல்லாத அளவில் அபாயகரமானதாக்கியுள்ளது. பல ஆண்டுகளாக, பேரவை தமிழ் கனடியருக்கான பெரும் சக்தியாக தன்னை சுயபிரகடனம் செய்துவந்துள்ளது. அதே நேரத்தில் முக்கிய விடயங்களில் தெளிவான நிலைப்பாடுகளை எடுக்க அது மறுத்து வருகிறது. தமிழர்களின் துயரங்களுக்குக் காரணமானவர்களைக் கேள்விக்குட்படுத்தவும், பொறுப்புக்கூறலை வலியுறுத்தவும் அது தவறியுள்ளது. இந்த நடவடிக்கைகள் தமிழ்ச் சமூகத்திடமிருந்து பேரவையை, தூர விலக்கியது மட்டுமல்லாமல், அதன் தலைமை மீது பரவலான அவ நம்பிக்கைக்கும் வழிவகுத்தது. இமாலயப் பிரகடம் – மகிந்த ராஜபக்ச சந்திப்பு – பதவி விலகல் இவற்றின் வெளிப்படையானதும் தெளிவானதுமான உதாரணங்களுள் ஒன்று April 27 2023 அன்று நிகழ்ந்தது. உலகத் தமிழர் பேரவையின் (GTF) தலைமையிலான இமாலயப் பிரகடனத்தில் ராஜ் தவரட்ணசிங்கம் GTF-இன் அங்கத்துவ அமைப்பாக விளங்கிய பேரவையின் சார்பாக ஒப்பமிட்டார். இந்தப் பிரகடனம் தமிழர்களின் அரசியல் ஈடுபாட்டை நோக்கிய ஒரு முதல் படியாக பேரவையினால் நியாயப்படுத்தப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது. Himalaya Declaration, with signatories ஆனால் அது கனடாவிலும் தாயகத்திலும் ஏனைய நாடுகளிலும் கடுமையான கண்டனங்களை எதிர்கொண்டது. இந்தப் பிரகடனம் குறித்து ஈழத் தமிழருடன் பேரவை கலந்தாலோசிக்கவில்லை. தவிரவும், தமிழருக்கு எதிராக இழைக்கப்படும் மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், தமிழ் இனப்படுகொலை போன்ற விடயங்களில் மௌனம் காத்துள்ளது. சில மாதங்களின் பின்னர், ராஜ் தவரட்ணசிங்கம் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் நிற்கும் ஒளிப்படம் ஒன்று வெளியானது. பேரவை இந்த ஒளிப்படத்தை, “பெருமையுடன்” தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது. மகிந்த ராஜபக்ச, தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக பரவலாகக் குற்றம் சாட்டப்பட்டவர். வெளியான ராஜ் தவரட்ணசிங்கம் – இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒளிப்படம் மகிந்த ராஜபக்ச, அவரது சகோதரர் கோத்தாபய ராஜபக்ச உட்பட நான்கு பேர் கனடாவினுள் நுழைய கனடிய அரசாங்கம் January 2023-இல் தடை விதித்தது. இலங்கைத்தீவின் இறுதி யுத்த காலத்தின் போது இவர்கள் இருவரும் முறையே ஜனாதிபதியாகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தனர். மேலும் கனடாவில் உள்ள இவர்களின் சொத்துகள், நிதிச் செயற்பாடுகள் முடக்கப்படும் எனவும் கனடிய அரசாங்கம் அறிவித்தது. இவர்கள் தமிழருக்கு எதிரான மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக இந்த முடிவு குறித்து கனடிய அரசாங்கம் அறிவித்தது. இந்தத் தடை உத்தரவு அறிவிக்கப்பட்ட சில மாதங்களில் மகிந்த ராஜபக்சவைச் சந்திக்கவும், அவரோடு புகைப்படம் எடுக்கவும் முடிவெடுக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. ஸ்ரீலங்காவின் அரச தலைமையுடன் தொடர்புகளைப் பேணுவதற்கு ஆதரவாக, நீதியை ஓரங்கட்டும் ஓர் இராஜதந்திரச் சூழ்ச்சியாகத் தோன்றிய பேரவையின் இந்த முயற்சியைக் கனடாவிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் உள்ள தமிழர் கண்டித்தனர். தனது தவற்றை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, CTC ஆரம்பத்தில் தன்னை நியாயப்படுத்தியது. எதிர்ப்புகள் தொடர்ந்தாலும் கூட, இராஜதந்திர ஈடுபாட்டின் அவசியம் இது என தனது தவற்றுக்கு பேரவை நியாயம் கற்பித்தது. தொடர்ச்சியான நீண்ட சமூக அழுத்தத்தின் பின்னர், உலகத் தமிழர் பேரவையில் இருந்து CTC தன்னை விலக்கிக் கொள்வதாக அறிவித்தது. இவற்றின் பின்னணியில் ராஜ் தவரட்ணசிங்கம் தனது ஆலோசகர் பதவியில் இருந்து விலகினார். ஆனால் அவரது பதவி விலகல் பொது வெளியில் இருந்த மையக் கேள்விக்கு எந்த வகையிலும் பதிலளிக்கவில்லை. இது பேரவையின் கடந்த காலத் தவறுகளை ஏற்றுக்கொண்டு திருந்த முயற்சிக்கும் ஓர் உண்மையான நகர்வா? அல்லது பேரவையை மேலும் விமர்சனங்களில் இருந்து பாதுகாப்பதற்கான ஒரு மூலோபாய நடவடிக்கையா? தமிழர் தெருவிழாவும் சமூகத்தின் எதிர்வினையும் தமிழ் அரசியல் விடயங்களை CTC கையாண்ட விதம் மற்றொரு சவாலை August 2024 இல் எதிர்கொண்டது. தமிழினப் படுகொலை நினைவுச்சின்னம் அமைப்பதைத் தடுக்குமாறு Brampton நகர முதல்வர் Patrick Brown-க்கு Toronto-வில் உள்ள இலங்கைத் துணைத் தூதுவர் Thushara Rodrigo, May 3, 2024-இல் கடிதம் ஒன்றை அனுப்பினார். கனடிய அரசாங்கம் இதற்கு உரிய முறையில் பதிலளித்தது. கனடாவின் உள் விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீட்டுக்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டை எடுத்த கனடியப் பிரதமர் Justin Trudeau இதன் தீவிரத்தை ஒப்புக்கொண்டார். கனடிய வெளிவிவகார அமைச்சர் Mélanie Joly தனது கண்டனத்தையும் பதிவு செய்தார். இந்த நடவடிக்கையை வெளிநாட்டுத் தலையீடு எனக் கண்டித்த Patrick Brown, கனடியத் தமிழர் பக்கம் உறுதியாக நின்றார். இலங்கை அரசாங்கத்துடன் சமாதான முன்னெடுப்புகளில் ஈடுபட்டு வருகின்றது என்ற குற்றச்சாட்டுகளை பேரவை சந்தேகத்துக்கு இடமின்றி நிராகரித்தது. ஆனால் பேரவையுடன் இணைந்து இமாலயப் பிரகடன வேலைத் திட்டங்கள் உட்பட நல்லிணக்க முயற்சிகள் இடம்பெறுவதாக இலங்கைத் தூதரகம் தனது கடிதத்தில் உறுதிப்படுத்தியது. தூதரகத்தின் இந்தக் கூற்றை CTC கண்டிக்கவும் இல்லை – நிராகரிக்கவும் இல்லை. ‘தேசியம்’ பெற்றுக்கொண்ட இந்தக் கடிதத்தின் பிரதி இங்கு இணைக்கப்படுகிறது. LETTER TO PATRICK BROWN கனடியத் தமிழர் சமூகம், பேரவையின் இந்த கேள்விக்குறியான முடிவை அன்றும் அவதானித்தது – இன்றும் அவதானிக்கிறது. CTC முன்னெடுக்கும் வருடாந்தக் கலை நிகழ்வான, ‘தமிழர் தெருவிழா – 2024’ காலத்தில், சமூகத்தின் குமுறல்கள் பெரும் கொந்தளிப்பாக வெளிப்பட்டது. கனடாவின் உள் விவகாரங்களில் இலங்கையின் தலையீடு குறித்த பேரவையின் மௌனம், இமாலயப் பிரகடனத்தில் அதன் கடந்த கால ஈடுபாடு, தமிழ் இனப்படுகொலைக்கு நியாயம் கோரத் தவறியது உட்பட்ட விடயங்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் Markham வீதியில் தெருவிழாவின் இரு தினங்களும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இந்த எதிர்ப்பைக் கட்டுப்படுத்தும் வகையில், தெருவிழாவின் ஆரம்ப நிகழ்வில் CTC தலைவர் குமார் ரட்ணம் பகிரங்க மன்னிப்புக் கோரினார். ஆனால் அந்த அறிக்கை பேரவை மீது மக்கள் நம்பிக்கையை மீள் உறுதி செய்யத் தவறிவிட்டது. கலைஞர்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதைப் புறக்கணித்தனர். முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், மக்களில் ஒரு சிறு பகுதியினர் மாத்திரம் கலந்து கொண்டனர். ஒரு காலத்தில் பேரவையின் முதன்மையான கொண்டாட்டமாக இருந்த நிகழ்வு இம்முறை நிராகரிப்பின் பகிரங்க சாட்சியாக மாறியது. Video Player 00:00 01:13 தமது கடந்த காலத் தவறுகளுக்கு CTC-யின் தலைவர் குமார் ரட்ணம் பகிரங்க மன்னிப்புக் கோரிய போதிலும், மாற்றத்தைப் பிரதிபலிக்கும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை CTC இதுவரை முன்னெடுக்கவில்லை. நிர்வாக மறுசீரமைப்பு, தமிழ் இனப் படுகொலைக்கான நீதி கோரல், வெளிப்படைத் தன்மை, மக்கள் தொடர்பு, ஊடகத் தொடர்பு என அனைத்து விடயங்களிலும் CTC தனது முன்னைய நிலைப்பாட்டையே கடைபிடித்து வருகிறது. எனவே, CTC மக்களுக்கான, மக்கள்மயப்படுத்தப்பட்ட அமைப்பாக இயங்கத் தயாரில்லை என்பதையே தனது இறுமாப்பான நிலைப்பாடுகள் மூலம் மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது. கனடிய அரசியல்வாதிகளுக்கான ராஜ் தவரட்ணசிங்கத்தின் மின்னஞ்சல், தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டின் உச்சக்கட்டமாக வெளிப்பட்டுள்ளது. இது இனப்படுகொலைக்கான அங்கீகாரத்தை மறுக்கிறது, தமிழர் பாரம்பரியத்தை இழிவுபடுத்துகிறது, மேலும் கனடியத் தமிழ் அரசியல்வாதிகளை அவமதிக்கிறது. இந்நிலையில் ஒரு முக்கிய கேள்வி எழுகிறது: ராஜ் தவரட்ணசிங்கம் எவ்வாறு பேரவையின் தலைவராகவும், அதன் ஆலோசகராகவும் இத்தனை காலம் பதவி வகித்தார்? இவ்வாறான முக்கியமான விடயங்களில் பேரவை தொடந்தும் தோல்வியடைந்த நிலையில் ராஜ் தவரட்ணசிங்கத்தின் அழுத்தமும் செல்வாக்கும் பேரவைக்குள் எவ்வாறு தாக்கம் செலுத்தியது என்பதே பெரும் கேள்வி. வெளிவராத ஆலோசனை! தமிழர் தெரு விழாவைத் தொடர்ந்து, CTC உள்ளகச் சீர்திருத்தத்தை உறுதியளித்தது. ஒரு சமூக ஆலோசனை முயற்சியை அறிவித்தது. அதிக வெளிப்படைத்தன்மை, நிர்வாகச் சீர்திருத்தங்கள் பொறுப்புக்கூறலுக்கான புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பு ஆகியவற்றை உறுதியளித்தது. இந்த ஆலோசனையின் முடிவுகளை விவரிக்கும் அறிக்கை February 2025-இல் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த கட்டுரை March மாதம் வரையப்படுகிறது. இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. எந்தக் கண்டுபிடிப்புகளும் பகிரப்படவில்லை. இந்த ஆலோசனை ஓர் இணைய மூலக் கணக்கெடுப்புக்குச் சமமாக இருப்பதால், இதன் மூலம் வெளியாகும் எந்த ஒரு கண்டுபிடிப்பும் எந்த ஒரு நம்பகத் தன்மையையும் கொண்டிருக்காது. பலருக்கும் இவை ஒன்றும் ஆச்சரியமான விடயங்கள் இல்லை. இந்த ஆலோசனை ஒருபோதும் உண்மையான மாற்றத்தை உருவாக்கும் நோக்கம் கொண்டதல்ல என்பது இந்தக் கட்டுரையாளர் உள்ளிட்ட விமர்சகர்களின் வாதமாகும். மாறாக இது தமது இன்றைய நிலையைத் தக்க வைத்துக் கொண்டு பொதுமக்கள் கோபத்தைத் தணிப்பதற்கான ஒரு யுத்தியாகும். இந்த ஆலோசனைகள் முறையானதாக இருந்தால், அவற்றின் முடிவுகள் எங்கே? இந்த விடயம் குறித்து “தேசியம்” சார்பாக வினவிய பின்பே, முதல் தடவையாக March இறுதிப் பகுதியில் குறிப்பிட அறிக்கை வெளியாகும் என பேரவை பதில் அளித்தது. பரபரப்பை ஏற்படுத்திய சர்ச்சை இந்தப் பின்னணியில், ராஜ் தவரட்ணசிங்கத்தின் மின்னஞ்சல், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியுள்ளது. தமிழ் இனப்படுகொலை நிகழ்ந்தது என்பதை அவர் நிராகரிப்பதும், தமிழ் மரபுத் திங்கள் அங்கீகாரத்தைக் கண்டனம் செய்ததும், தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை கேள்விக்கு உட்படுத்தியதும் பேரவையை அதன் நீண்டகாலத் தலைவர்களுள் ஒருவரின் சர்ச்சையான தமிழர் விரோதப் போக்கான கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டிய சங்கடமான நிலைக்குத் தள்ளியுள்ளது. பேரவையின் நிகழ்வொன்றில் ராஜ் தவரட்ணசிங்கம் இந்தக் கட்டுரையாளர், ராஜ் தவரட்ணசிங்கத்தின் குறிப்பிட்ட மின்னஞ்சலில் உள்ளடக்கத்தை முழுமையாகக் கண்டிக்கிறார். பேரவையின் முழுமையான தலைமைத்துவ மாற்றங்களுக்கு அழைப்பு விடுக்கிறார். ராஜ் தவரட்ணசிங்கத்தின் கருத்துகள் ஒரு தனி மனிதனின் கருத்துகள் இல்லை. மாறாக கனடியத் தமிழரின் நலன்களில் இருந்து தூர விலகி நிற்கும் ஒரு தனியார் குழுமத்தின் நிலைப்பாடாகும். இதை பல உதாரணங்கள் உறுதிப்படுத்துகின்றன. மௌனம், மழுப்பல், நம்பிக்கை சிதைவு: நுண்ணாய்வுக்குள் பேரவையின் பதில்கள் சமூக நம்பிக்கையின் மீது கட்டமைக்கப்பட்ட ஓர் அமைப்பு, சமூகத்தின் கேள்விகளுக்கு மௌனத்தால் பதிலளிப்பது அதிகம் ஆபத்தானது என்பது நடைமுறை அடிப்படை. “கனடியத் தமிழர்களின் குரல்” என தம்மைப் பிரகடனப்படுத்தும் பேரவை, சமூகம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சினைகள் பலவற்றுக்கு தொடர்ந்து மௌனம் காத்து வருகிறது. ராஜ் தவரட்ணசிங்கத்தின் மின்னஞ்சலின் உள்ளடக்கம் உட்பட பேரவை குறித்த சமூகத்தின் பல கேள்விகளுக்கு “தேசியம்”, CTC இடம் முன்வைத்து. நேரடிச் செவ்விக்கான அழைப்புக்கு பேரவை சாதகமாகப் பதில் அளிக்காவிட்டாலும், தேசியத்துடன் இரண்டு மின்னஞ்சல் கேள்வி – பதில் பரிமாற்றத்தில் CTC பங்கெடுத்தது. இதில் தலைமை, முடிவெடுத்தல், பொறுப்புக் கூறல் குறித்த பல கேள்விகளை CTC மீண்டும் மீண்டும் திசை திருப்பியது, தவிர்த்தது அல்லது முற்றிலுமாகப் புறக்கணித்தது. இனப்படுகொலையை அங்கீகரிப்பதில் பேரவையின் நிலைப்பாடு விடயத்தில் நீண்டகாலமாக மௌனம் காப்பது ஏன்? என “தேசியம்” கேள்வி எழுப்பியபோது, முதலில் வெறுமனே சமீபத்திய அறிக்கை ஒன்றை CTC தனது பதிலாகச் சுட்டிக்காட்டியது. ஒரு சமூகத்துக்காகக் குரல் எழுப்பும் நேர்மையான பரப்புரைக்குத் தேவை தொடர்ச்சியே தவிர, தெருவிழா நிராகரிப்பின் முன்னதான அழுத்தத்தின் கீழ் எதிர்வினையாற்றும் அறிவிப்புகள் அல்ல. மேலும் அடையாள ஒப்புதலைத் தாண்டி எடுக்கப்பட்டுள்ள உறுதியான நடவடிக்கைகள் குறித்துக் கேள்வி எழுப்பிய போது, 15 ஆண்டுகளாக பேரவை, மனித உரிமைகள், இனப்படுகொலை அங்கீகாரத்துக்காக வாதிடுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என பதில் அளித்தது. இது உண்மைக்கு புறம்பானதாகும். தமிழ் இனப்படுகொலை என்ற பதத்தை எழுத்திலோ, பேச்சிலோ பயன்படுத்துவதில்லை என்ற நிலைப்பாட்டை CTC கொண்டுள்ளது என அதன் முன்னாள் தலைவர் சிவன் இளங்கோ February 2024 இல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தியிருந்தார். உண்மையோ, பொய்யோ பேரவை தனது நிலைபாட்டில் உறுதித்தன்மையைப் பேணமுடியவில்லை என்பது இந்த விடயத்தில் மீண்டும் உறுதியாகிறது. அதனைக் கண்டிக்க வேண்டிய பேரவை, ஏன் மௌனத்தைப் பரிசளிக்கிறது? முன்னர் குறிப்பிட்டதைப் போல, ஒரு கேள்விக்கு இரண்டு வெவ்வேறு விடயங்கள் உண்மையாக இருக்க முடியாது. கனடாவின் உள்நாட்டு விவகாரங்களில் இலங்கையின் வெளிநாட்டுத் தலையீடு குறித்துக் கேள்வி எழுப்பிய போது, அது குறித்த கரிசனையை பேரவை நிராகரித்தது. இதுபோன்ற விடயங்கள் மத்திய அரசாங்கத்தின் அதிகார வரம்பின் கீழ் வருவதாக பேரவை நியாயம் கற்பித்தது. அதனால் இந்த விடயங்களில் தலையிடமுடியாது என தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியது. ஆனால் CTC நீண்ட காலமாக மத்திய அரசின் மேற்பார்வையின் கீழ் வரும் விவகாரங்களில் உரிமை எடுத்துக் கொண்டமைக்கான சாற்றுகள் அதிகம் உள்ளன. அகதிகள் உரிமைகள் முதல் சர்வதேச விவகாரங்கள் வரை அதற்கான உதாரணங்கள் விரிவடைகின்றன. ஆனாலும், தமிழ் கனடியர்களை நேரடியாக பாதிக்கும் ஒரு விடயமான இலங்கை அரசின் வெளிநாட்டுத் தலையீடு குறித்து தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுக்க பேரவை தயக்கம் காட்டுவது ஏன்? என்ற கேள்வியை “தேசியம்” மீண்டும் முன்வைத்தது: மீண்டும், அதற்கு பேரவையிடம் பதில் இல்லை. CTC-யின் கனடியத் தமிழர் சமூகம் குறித்த ஈடுபாட்டை விரும்பாத நிலை, இலங்கை அரசாங்கத்துடனான அதன் உறவுகள் வரை நீண்டுள்ளது. கனடா – ரொறன்ரோவுக்கான இலங்கைத் துணைத் தூதர் Thusara Rodrigo போன்றவர்களுடன் அதன் உறவு குறித்து வினவிய போது, பேரவைக்கு அது போன்ற எந்த ஒரு தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக மறுத்தது. ஆயினும் SJV செல்வநாயகம் ஞாபகார்த்த நிகழ்வில் (SJV Chelvanayakam Memorial Lecture), Toronto-வில் உள்ள இலங்கைத் துணைத் தூதுவர் Thushara Rodrigo கலந்து கொண்டிருந்தார். CTC ஏற்பாடு செய்த SJV செல்வநாயகம் ஞாபகார்த்த நிகழ்வில் Toronto-வில் உள்ள இலங்கைத் துணைத் தூதுவர் Thushara Rodrigo CTC ஏற்பாடு செய்த இந்த நிகழ்விலும் ஏனைய சில நிகழ்வுகளிலும் பேரவையின் உறுப்பினர்களுடன் Thushara Rodrigo ஒளிப்படம் எடுத்துக் கொண்டார். பேரவை கூறுவதைப் போல் இரு தரப்பினருக்கும் இடையில் உண்மையில் எந்த உறவும் இல்லை என்றால், இலங்கைத் தூதரகம் அதன் நல்லிணக்க முயற்சிகளை நியாயப்படுத்த ஏன் CTC-யின் பெயரைப் பயன்படுத்துகிறது? இங்கு “தேசியம்” மீண்டும் முன்வைத்த கேள்வி: இந்த நிகழ்வுகளுக்கு Thushara Rodrigo-வை அழைத்தது யார்? முன்னைய பல கேள்விகள் போல் CTC இதற்கும் பதில் கூற மறுத்து விட்டது. ராஜ் தவரட்ணசிங்கத்தின் மின்னஞ்சல் சர்ச்சையைப் பேரவை கையாண்ட விதமும் இதே பாணியைப் பின்பற்றியது. அந்த மின்னஞ்சல் தமிழர்களுக்கு எதிரானதா? என “தேசியம்” மீண்டும், மீண்டும் கேள்வி எழுப்பியது. “அது, அவரது தனிப்பட்ட கருத்து” என CTC நிராகரித்தது. ஆனால் பேரவையின் அனைத்துப் படிமுறைகளையும் அறிந்த, முன்னாள் தலைவர், மூத்த ஆலோசகர் என பதவிகளை வகித்த ஒருவரிடமிருந்து வெளியாகும் கருத்துகள் தனிப்பட்ட ஒருவரின் கருத்தாக வகைப்படுத்தப்படுவதில்லை. மேலும், இந்த “மின்னஞ்சலை நீங்கள் கண்டிக்கிறீர்களா இல்லையா?” என மீண்டும் வற்புறுத்தியபோது, CTC மீண்டும் மௌனம் காத்தது. இந்த விடயங்களில் பேரவையின் நிலைப்பாடு ராஜ் தவரட்ணசிங்கத்தின் நிலைப்பாட்டிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது எனக் கேள்வி எழுப்பிய போது, மீண்டும் CTC எந்த விளக்கத்தையும் வழங்கவில்லை. இமாலயப் பிரகடன விடயத்தில்; யார் முடிவுகளை எடுத்தார்கள்?, யார் உரையாடல்களில் பங்கேற்றார்கள்?, யாருடன் கலந்தாலோசிக்கப்பட்டது? என்பதற்கு CTC பதிலளிக்க மறுத்து விட்டது . ராஜ் தவரட்ணசிங்கம் இந்தச் செயல்முறையில் ஈடுபட்டிருந்தார், பேரவைக்கு உடனுக்குடன் விபரங்களை வழங்கினார் என்பதை உறுதிப்படுத்தும் சான்றுகள் பல உள்ளன. அதற்குப் பதிலாக,”ஏற்கனவே எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி விட்டோம்” எனக் கூறியதுடன், “ஒரே கேள்வியை மீண்டும் மீண்டும் முன்வைப்பது உண்மைகளை மாற்றாது” என பேரவை தேசியத்திடம் வலியுறுத்தியது. இதில் மறைந்திருக்கும் உண்மை என்னவெனில், ஒரு போதும் இதில் உண்மை வெளியாகவில்லை என்பதாகும். தொடர்ந்து கேள்விகளைத் திசை திருப்புவதனால்; பதில்கள் உண்மையாகப் போவதில்லை. ஒரு விடயத்தில் இருந்து விலகி நிற்பது என்பது அதைத் தெளிவுபடுத்துவது அல்ல. இந்த செயற்பாடுகளை யார் அங்கீகரித்தார்கள், என்பதை CTC கூற மறுத்தால், இவற்றின் தவறுகளுக்கு யார் பொறுப்பேற்பார்கள்? அண்மைய காலத்தில் CTC தலைமைத்துவத்தின் மிக வெளிப்படையான தோல்வி தெருவிழா 2024-இல் வெளிச்சத்துக்கு வந்தது. முன்னைய ஆண்டுகளில் பரவலாகக் கொண்டாடப்பட்ட நிகழ்வு – இம்முறை பலராலும் நிராகரிக்கப்பட்டு – சமூக நிராகரிப்பின் உதாரணமாக மாறியது. இதனால் அங்கு சாவடி அமைத்த விற்பனையாளர்கள் பெரும் நிதி இழப்பை எதிர்கொண்டனர். அவர்கள் பணத்தைத் திரும்பத் தருமாறு கோரியபோது, Toronto காவல்துறையினர் மூலம் அவர்களுக்குப் பதிலளிக்க முடிவு செய்தது பேரவை. இதில் சமூகத்தின் அக்கறைகளை நிவர்த்தி செய்ய என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என “தேசியம்” கேள்வி எழுப்பிய போது, CTC “ஒப்பந்தக் கடமைகளை” (Contractual obligations) பூர்த்தி செய்ததாக மாத்திரம் கூறியது. அதிகாரத்துவப் பாணியிலான இந்தப் பதில், நம்பிக்கை, பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் அடிப்படையில் அமைய வேண்டிய தெருவிழாவின் கட்டமைப்பைக் கேள்விக்குள்ளாக்குகிறது. விற்பனையாளர்களுக்கு எந்தத் தீர்வையும் வழங்காமல் தவிர்ப்பதற்கான எண்ணம் முன்னரே பேரவையினால் திட்டமிடப்பட்டதா? என வினவியபோது, CTC மீண்டும் பதிலளிக்கவில்லை. ஏனைய கேள்விகள் போல், தெளிவாக ஆம் அல்லது இல்லை என்று விடை தரக்கூடிய பின்வரும் கேள்வியை “தேசியம்” முன்வைத்தது. “CTC எந்த விற்பனையாளர்களுக்கும் பணத்தை மீள வழங்கியுள்ளதா?”. பேரவை அதற்குப் பதிலளிக்கவில்லை. பேரவைக்கும் தேசியத்துக்கும் இடையிலான நீண்ட இரண்டு கேள்வி பதில் மின்னஞ்சல் பரிமாற்றம் நியாயத் தன்மையின் அடிப்படையிலும், நடுநிலை, நெறிமுறை இதழியல் கோட்பாட்டிலும், CTC-யின் பதில்கள் நியாயமாகவும், துல்லியமாகவும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் இங்கு முழுமையாக வழங்கப்படுகிறது. பேரவையின் நிலைப்பாடுகள் எந்த வகையிலும் தவறாகச் சித்தரிக்கப்படாமல் வெளியிடப்படுவதை இந்த நடைமுறை உறுதி செய்யும் என தேசியம் நம்புகிறது. மேலும் ஒரு தொகுப்புக் கேள்விகள் தேசியத்தால் பேரவையிடம் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கான பதில்களும் கிடைக்கப்பெறும் போது இங்கு இணைக்கப்படும். EMAIL EXCHANGE BETWEEN THESIYAM AND CANADIAN TAMIL CONGRESS பேரவையின் தமிழர் சமூகத்துடனான இந்த நெருக்கடியின் மையத்தில் இருப்பது வெறும் நிர்வாகத்தின் தோல்வி மட்டுமல்ல; மாறாக நம்பிக்கைத் துரோகமாகும் என்பதை உறுதியாகக் கூறலாம். CTC தன்னை தமிழ்க் கனடியர்களின் பிரதிநிதியாக நிலை நிறுத்துகிறது, இருப்பினும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அது பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் அதே சமூகத்தின் நியாயமான கவலைகளுக்குச் செவிசாய்க்கத் தொடர்ந்து மறுத்து வருகிறது முக்கிய விடயங்களில் அழுத்தம் கொடுக்கப்படும் போது, பேரவை உள்ளடக்கம் இல்லாத பதில்களால், அல்லது நிராகரிப்புகளால், அல்லது வெளிப்படையான மௌனத்துடன் கடந்து செல்கிறது. ஆனால் மௌனம் நடுநிலையானதல்ல என்ற கசப்பான உண்மையை இந்தச் சந்தர்ப்பத்தில் பேரவையின் நிர்வாகக் கட்டமைப்பின் கவனத்துக்குக் கொண்டு வர இந்தக் கட்டுரையாளர் விரும்புகிறார். மௌனம் பொறுப்புகளில் இருந்து தப்பிப்பதற்கான தேர்வாகும். ஒரு சமூக அமைப்பு தனது செயல்களுக்குப் பதிலளிக்க மறுக்கும்போது, சமூகத்தின் கரிசனையும், தொடர் கேள்விகளும் கொள்கை பற்றியதாக இல்லாமல் நேர்மைத்தன்மை குறித்ததாக மாறும் அபாயம் உள்ளது. பேரவையின் விடயத்திலும் இன்றைய நிலை இதுதான். பேரவையின் எதிர்காலம் என்ன? பல ஆண்டுகளாக, CTC கனடிய தமிழர்களின் முதன்மை அரசியல் குரலாகத் தன்னை நிலைநிறுத்த முயன்றுவருகிறது. ஆனால் வளர்ந்து வரும் அதிருப்தி, மறுசீரமைப்புக்கான வலியுறுத்தல்கள் அதிகரித்து வருவதால், அதன் தகுதி இப்போது கேள்விக்குறியாகியுள்ளது. 1) பேரவை தனது கடந்த காலத் தவறுகளை ஒப்புக்கொள்ளுமா? 2) வெளிப்படைத் தன்மையின் அடிப்படையில் அதன் நம்பகத்தன்மையை மீண்டும் கட்டியெழுப்ப முடியுமா? 3) சமூகத்தின், மாற்றத்துக்கான தொடர் கோரிக்கைகளை அது தொடர்ந்து புறக்கணிக்குமா? 4) பேரவையின் உறுப்புரிமையை யார் பெறவேண்டும் என்ற முடிவைத் தன்னிச்சையாகச் சில தனிநபர்கள் தொடர்ந்தும் மேற்கொள்வார்களா? 5) CTC குறித்த அண்மைக்காலத் தொடர் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் இவை நிகழ்ந்த காலப்பகுதியில் பேரவையைத் தனிமனித ஆளுமைக்குள் கட்டுபடுத்தி வைத்துள்ளதான குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் நிர்வாகப் பணிப்பாளர் டான்டன் துரைராஜா, அனைத்துத் தவறுகளுக்கும் பொறுப்பேற்றுப் பதவி விலகுவாரா? இந்தப் பின்னணியில், CTC அடையாளம் அற்று நீர்த்துப் போகுமா என்பதை வரும் வாரங்களும் மாதங்களும் தீர்மானிக்கும்! https://thesiyamnation.com/41151/ இலங்கதாஸ் பத்மநாதன்
-
தமிழரசுக் கட்சியை இல்லாமல் செய்ய சதி!
கட்சியை உடைக்க கட்சியில் உள்ளவர்களே போதுமானது. வெளியில் இருந்து யாரும் வரத்தேவை இல்லை.
-
மூதூர் தமிழர் பகுதியில் இரு பெண்கள் - வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் சடலங்களாக மீட்பு!
தமிழர் பகுதியில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சகோதரிகள் - அதிகாலையில் சம்பவம் திருகோணமலை - மூதூர் பகுதியில் பெண்கள் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர்தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (14) அதிகாலை 4.30 மணியளவில் மூதூர் காவல் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தாஹா நகர் பகுதியில் சிறிதரன் தர்ஷினி என்பவருடைய வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தீவிர விசாரணைசம்பவம் குறித்து தெரியவருவதாவது, உயிரிழந்தவரின் கணவர் வெளிநாட்டில் வசித்து வருபவர் எனவும் சிறிதரன் ராஜேஸ்வரி (68 வயது) மற்றும் அவரது பெரியம்மாவான சக்திவேல் ராஜகுமாரி (74 வயது) ஆகிய இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். https://ibctamil.com/article/two-women-death-in-muthur-1741926220#google_vignette
-
வடக்கு, கிழக்கில் உள்ளூராட்சி சபை தேர்தல் நிலைவரங்கள் என்ன?; அறிந்துகொள்வதில் அமெரிக்கா ஆர்வம்
என்ன ஒரு கரிசனை ??
-
சிம்பொனி என்றால் என்ன?
சிம்பொனி அரங்கில் நடந்தது என்ன? அணுஅணுவாக விளக்கிய இளையராஜாவின் தீவிர ரசிகர்! இளையராஜாவின் சிம்பொனி நிகழ்வை நேரில் காண ரவி பழனிவேலு என்பவர் அமெரிக்காவில் இருந்து லண்டனுக்கு சென்றிருந்தார். இளையராஜாவின் தீவிர ரசிகரான இவர் அரங்கத்தில் தனக்கு கிடைத்த அனுபவத்தை, தனது நண்பரான மகேந்திரன் என்பவருக்கு குரல் பதிவு வழியாக சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதனை அப்படியே தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் மகேந்திரன். அதில் கூறியுள்ளதாவது, “கண்டேன் ராஜாவை. கேட்டேன் சிம்பொனியை. பரவச அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்தும் கொள்வதில் மகிழ்ச்சி. நிகழ்வு ஆரம்பமானவுடன் ரஷ்யன் சிம்பொனி இசை துணுக்கு ஒன்றை வாசித்து காண்பித்தார்கள். அதன் பிறகு ராஜா சார் மேடைக்கு வந்தார். வாத்திய கலைஞர்களை தலைமையேற்று நடத்தும் கண்டக்டர் மைக்கேல், ராஜாவிடம் அனுமதி பெற்று நிகழ்ச்சியை ஆர்மபித்தார். ராஜாவின் சிம்பொனி 4 பாகங்களாக வாசிக்கப்பட்டது. fan experience in ilayaraja symphony ஒவ்வொரு பாகமும் 15 நிமிடம் நேரம் வரை வாசிக்கப்பட்டது. ஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவுக்கு நிசப்தமாக இருந்த அரங்கத்தில் ராஜாவின் இசை அங்கிருந்த அனைவரையும் ஊடுருவியது எனலாம். வாத்திய கலைஞர்கள் வாசிக்க வாசிக்க என்னில் எழுந்த உணர்வுகள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை.ஒவ்வொரு பாகம் வாசித்து முடித்தவுடன் எழுந்த கைதட்டல் அடங்க வெகு நேரமானது. அந்த கைதட்டலை கேட்கும் போதெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் மேலிட ராஜாவை பார்த்துக் கொண்டிருந்தேன். மூன்றாவது பாகம் ராஜாவின் உச்சம். மேடையில் இருந்த 77 இசைக் கலைஞர்களுக்கும் வேலை கொடுத்திருக்கிறார். இதை எப்படி ஒரு மனிதர் எழுதியிருக்க முடியும் என்று ஆச்சரியப்படாதவர்கள் இருக்க முடியாது. அந்த பாகத்தை கேட்கும் போது தான் ராஜாவை நாம் சினிமா இசை எனும் கூண்டுக்குள் வைத்திருக்கிறோம் என்று தோன்றியது. ராஜா உலகம் எங்கும் பறக்க வேண்டிய ஒரு இசைப்பறவை. சினிமா பாடல்களை கொடுத்து 5 நிமிடத்திற்குள் ஒரு பாடல், அதில் 2 பி ஜி எம் என கூண்டுக்குள் இருந்த ஒரு பறவை, இன்று இந்த பிரபஞ்சத்தை ஆள கிளம்பி விட்டது என்றே தோன்றியது. மூன்றாவது பாகம் வாசிக்கும் போதும் திகைத்திருந்த ரசிகர் கூட்டம், அது முடிந்தவுடன் உச்சபட்ச ஆச்சரியத்தில் கைதட்டியது. பலத்த கைதட்டல் முடிய நேரம் ஆனது. அப்போதும் நான் உணர்வுகளின் பிடியில் இருந்தேன். நான்காவது பாகமும் அற்புதம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீடித்த இசை நிகழ்ச்சியில் எப்போதும் போல் அந்த மேடையிலேயே அமர்ந்து அவர் எழுதிய நோட்ஸ்களை கையில் வைத்து கொண்டு, அனைத்தும் சரியாக வாசிக்கப்படுகிறதா என்று சோதித்துக் கொண்டே இருந்தார் ராஜா. லைவ் கான்சர்டுகளில் 3 மணி நேரம் அசராமல் நின்று ஒவ்வொரு வாத்திய கலைஞர்களையும் தன் கண்ணசைவில் ஆட்டுவிக்கும் ராஜாவை நமக்கு தெரியாதா என்ன? நிகழ்வு முடிந்தவுடன் அரங்கமே எழுந்து கைதட்டியது. கண்டக்டரும் ராஜாவும் தலைகுனிந்து அந்த பாராட்டுகளை ஏற்றுக் கொண்டனர். ராஜாவை சில வார்த்தைகள் பேசுமாறு அழைத்தார் மைக்கேல். சிம்பொனியை நான் விளக்க செய்ய முடியாது, நீங்கள் எக்ஸ்பீரியன்ஸ் செய்வது தான் சரியாக இருக்கும்” என்று தனக்கே உரிய பாணியில் சொன்னார். அதன் பிறகு சிறிய இடைவேளை விடப்பட்டது. சிம்பொனி நிகழ்வில் ஒரு சர்ப்ரைஸ் இருப்பதாக ஏற்கனவே ராஜா சொல்லியிருந்தார். இடைவேளைக்கு பிறகு ராஜாவின் அதி அற்புத சினிமா பாடல்களை ராயல் ஆர்கெஸ்டரா குழுவினர் வாசிக்க கேட்கும் பாக்கியம் கிடைத்தது. எத்தனையோ ஆயிரம் முறை கேட்ட பாடல்கள் நேற்று புதியதாக கேட்டன.fan experience in ilayaraja symphony மடை திறந்து, ராஜா ராஜாதி ராஜனிந்த ராஜா, தும்பி வா, கண்ணே கலைமானே, பூவே செம்பூவே பாடல்கள் தொடர்ச்சியாக வாசிக்கப்பட்டது. இதை கேட்கும் போது தான் தெரிந்தது, இந்த சிம்பொனியை நமக்கு ராஜா எப்போதோ கொடுத்து விட்டார் என்று. அதன் பிறகு முடிவடையாத சிம்பொனி என்ற தலைப்பில் மீண்டும் ஒரு இசை விருந்து ஆரம்பித்தது. அது என்ன பாடல் தெரியுமா? புதிய வார்ப்புகள் படத்தில் இடம் பெற்ற “இதயம் போகுதே” பாடல். ” டேய் உங்களுக்கெல்லாம் 45 வருஷத்துக்கு முன்னாடியே நான் சிம்பொனியை கொடுத்திருக்கேண்டா” என்று சொல்லாமல் சொல்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். ஜெயா டிவி நிகழ்ச்சி ஒன்றில் “சிம்போனினா என்ன சார்” என்று பிரகாஷ் ராஜ் கேட்கும் போது, இந்தப் பாடலைத்தான் வாசித்து காண்பித்தது நினைவு வந்தது. அப்படியானால் என் எண்ணம் சரிதான். அவர் சிம்பொனி செய்து 45 வருடங்கள் ஆகிவிட்டது. நமக்கு தான் புரியவில்லை. இதயம் போகுதே பாடல் வாசிக்கும் போதே மெய் சிலிர்த்து போனேன். கூடுதல் போனஸாக அவர்கள் வாசிக்க ராஜா பாட ஆரம்பித்தார். அதுவும் ஆர்கெஸ்டரா வாசிப்பதற்கு ஏற்ப பாடியது ராஜாவின் திறமையை பறைசாற்றியது. நிகழ்ச்சி டிஜிட்டலில் வரும் போது மறக்காமல் பார்த்து விடுங்கள். அதன் பிறகு ராஜாவின் ஐகானிக் பிஜிஎம்கள் வாசிக்கப்பட்டது. ஏற்கனவே கேட்டது தான் என்றாலும், 77 இசை விற்பன்னர்கள் சேர்ந்து வாசிக்க கேட்கும் போது, பிரம்மாண்டமாக இருந்தது. “இன்று என் வாழ்வில் மிக முக்கியமான நாள்” என்று ராஜா சொன்ன போது, ராஜா சாருடைய எதிர்பார்ப்பு தெரிந்தது. அவரது பேச்சில் மிகுந்த மனநிறைவு தெரிந்தது.fan experience in ilayaraja symphony நமது கலாச்சாரப்படி இசை நிகழ்ச்சியை கண்டக்ட் செய்த மைக்கேல் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார். அதன் பிறகு வாசித்த 77 கலைஞர்களையும் பொன்னாடை போர்த்தி கவுரவிக்க இருப்பதாக தெரிவித்தார். இசை நிகழ்ச்சி முடிந்து அறைக்கு வந்த பின்னும் பிரமிப்பு அடங்கவில்லை. ராஜா சார் வாழும் காலத்தில் நாமும் வாழ்வதே நமக்கு கொடுப்பினை தான். கோடிக்கணக்கான ராஜாவின் ரசிகர்களின் பிரதிநிதியாக இந்த நிகழ்ச்சியை பார்த்த அனுபவத்தை உங்கள் முன் பகிர்ந்து கொள்கிறேன்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. https://minnambalam.com/cinema/fan-experience-in-ilayaraja-symphony/
-
2025ஆம் ஆண்டுக்கான உலகின் மிகவும் குடும்ப நட்பு நாடாக பெயரிடப்பட்ட இலங்கை
Sri Lanka ranked as ‘most family-friendly country’ for 2025 by Conde Nast Traveller13 Mar 2025 - 502 Sri Lanka has been recognised as the ‘most family-friendly country’ for 2025, securing the top spot in a prestigious ranking by Conde Nast Traveller. The island nation received high marks for its education system and affordable childcare, solidifying its reputation as a prime destination for families. Sri Lanka achieved an impressive score of 0.7 out of 1.0 for its education system, reflecting the country’s dedication to providing quality learning opportunities for children. Furthermore, the annual childcare cost in Sri Lanka was noted to be just US $ 354.60, a stark contrast to the exorbitant US $ 16,439.40 annual childcare cost in the United States, which ranked 10th on the list. The recognition is no surprise to Conde Nast Traveller, which also named Sri Lanka as one of its “favourite places to go for multi-gen megatrips in 2025”. The publication highlighted the nation’s welcoming nature, an emphasis on outdoor activities and its family-friendly hotels as key factors contributing to the ranking. Beyond its affordability and educational advantages, it highlighted that the island nation boasts an array of attractions that make it ideal for family vacations. “The country is home to some incredible wildlife, from vast national parks and sprawling beaches, plus there is fascinating history, creative coastlines, delicious food and an excellent shopping scene,” it said. https://www.dailymirror.lk/print/business-news/Sri-Lanka-ranked-as-most-family-friendly-country-for-2025-by-Conde-Nast-Traveller/273-304262#google_vignette
-
யாழில் 17 உள்ளூராட்சி சபைகளையும் கைப்பற்றுவோம் - அமைச்சர் சந்திரசேகர்
பிரச்சனைகள் எதனையும் சுமூகமாக தீர்க்காமல் உள்ளூராட்சிகள் அனைத்தையும் எப்படி கைப்பற்றுவீர்கள்? உதாரணத்துக்கு : மீனவர் பிரச்சனை
-
இந்திய ஆசிரியர் யோசனை இன அழிப்பின் மற்றுமொரு அங்கம் – அருட்தந்தை மா.சத்திவேல்
வழமை போல!!!
-
ரஷ்யாவுடனான 30 நாள் போர் நிறுத்தத்திற்கு தயார் – உக்ரேன் இணக்கம்!
கனிமங்களுக்கான கையெழுத்து அமெரிக்கா மற்றும் யூக்ரேனால் சவூதியில் வைக்கப்பட்டதா?
-
இந்திய ஆசிரியர் யோசனை இன அழிப்பின் மற்றுமொரு அங்கம் – அருட்தந்தை மா.சத்திவேல்
ஏனைய மலையக பா. உக்கள் என்ன நிலைப்பாட்டை கொண்டுள்ளார்கள்?
-
"அமெரிக்க விருந்தாளி" நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை 15/3.
வாழ்த்துக்கள் தியா.
-
சிம்பொனி என்றால் என்ன?
நதிமூலம் ரிசி மூலம் பார்க்க எம்மரை தட்டி தான். இப்படி ஒவ்வொருவராக கிழற வெளிகிட்டால் நாறும். வந்தமா இசையை ரசிச்சமா என்று போய் கொண்டு இருக்க வேண்டும்.
-
பூகோள அரசியல் நகர்வில்
பூகோள அரசியல் நகர்வில்“நேற்றோ” விஸ்திரிப்பு வாதத்தை ரசிய எல்லைவரை வழிநடத்தி உக்ரைனை இந்த நிலைக்குக் கொண்டுவந்த அமெரிக்கா இன்று உக்ரைனை கைவிட்டிருக்கிறது. அதற்கான காரணங்கள் ஒரு வல்லரசின் நலனிலிருந்து எழுபவை. அதை “அமெரிக்கா துரோகம் இழைத்துவிட்டது, யூ ரேர்ண் அடித்துவிட்டது” என்பதெல்லாம் அரசியல் விளக்கமல்ல. உக்ரைன் அதற்கு பலியாகிப் போனதுதான் பெருந் துயரம். இன்று பொருளாதார மற்றும் தொழில்நுட்பப் போட்டியில் வல்லரசுகள் களமிறங்கியிருக்கின்றன. அதன் வெளிப்பாடுகள் பொருளாதாரப் போரை முதன்மை நிலைக்கு கொணர்ந்து விட்டிருக்கிறது. இது இறுதியில் (சீனாவுடனான) இராணுவநிலைப் போராக மாற்றமடைவதற்கான சாத்தியம் இருக்கிறபோதும், தற்போதைய நிலை பொருளாதாரப் போர்தான். அதனடிப்படையிலும், இறுதியில் சீனாவுடனான போரில் போய் நிற்கவேண்டி வரலாம் என்ற தூர நோக்குடனும் அமெரிக்கா காய்களை நகர்த்துகிறது. சீனாவுடனான போரில் குறைந்தபட்சம் சீனாவோடு சேராமல் ரசியாவை நடுநிலையாக்க அல்லது அமைதியாக்க வேண்டிய உத்தியை அமெரிக்கா கவனத்தில் எடுத்திருக்கிறது எனப் படுகிறது. ஐரோப்பாவையும் கனடாவையும் பொருளாதார ரீதியிலும் பாதுகாப்பு ரீதியிலும் தன்னில் தங்கியிருக்க வைத்து தனது நலனை முதன்மையில் காத்த அமெரிக்கா, இன்றைய பொருளாதாரப் போரை அடிப்படையாக வைத்து அந்த தங்குநிலை நாடுகளை (தற்காலிகமாக) கைவிட தீர்மானித்திருக்கிறது. இந்த கூட்டணி சிதைவுகள் மற்றும் உருவாக்கங்கள் எல்லாம் இதன் வழியே நிகழ்கிறது. ரசியாவுடன் அமெரிக்கா நிற்பதுபோல் தெரியும் விம்பங்களும் இதனடிப்படையில்தான் நிகழ்கிறது. எந்த நேரத்திலும் இது மாற்றமடையலாம். எதுவும் நிரந்தரமாக இருக்காது. அது எந்தக் கட்டத்திலும் அமெரிக்க நலன் சார்ந்து மாற்றமடையக் கூடியது. Kishore Mahbubani பூகோள அரசியல் வல்லுனரும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் முன்னாள் தலைவருமான Kishore Mahbubani அவர்கள் Cyrus Janssen அவர்களின் Real Talk நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணல் இது. எமது உடன்பாடு முரண்பாடுகளுக்கு அப்பால், அவர் வித்தியாசமான கோணத்தில் வைக்கும் கருத்துகள் இவை என்பதால் மொழிபெயர்த்திருக்கிறேன். * ரசியா உக்ரைனுக்குள் ஆக்கிரமிப்புச் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அதில் கருத்து வேறுபாடில்லை. உண்மையில் இந்தப் போர் தவிர்த்திருக்கக் கூடியது. இதை தடுக்க முடியாமல் போனதற்கான ஒரு காரணம் பூகோள அரசியலின் மீதான ஐரோப்பாவின் திறனற்ற தன்மை ஆகும். தனது அயல் நாடான ரசியாவோடு இன்னும் ஆயிரக் கணக்கான வருடங்கள் வாழப்போவது ஐரோப்பா. அதனால் ரசியாவின் பாதுகாப்பு கரிசனையையும் அவர்கள் கவனம் கொண்டிருக்க வேண்டும். நேற்றோ அமைப்பின் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்தை ஆரம்பத்திலிருந்தே ரசியா எச்சரித்து வந்தது. அரசியல் விஞ்ஞானிகளான மியர்ஸைமர், ஜெப்ரி ஸக்ஸ் ஆகியோர் தொடர்ச்சியாக மிக விபரமாக இதை விளங்கப்படுத்தி இருக்கிறார்கள். ஐரோப்பிய தலைவர்கள் இதை தொடர்ச்சியாக அசட்டை செய்தே வந்திருக்கிறார்கள். இந்த பூகோள அரசியல் குறித்த திறனற்ற தன்மையின்மையால் மிக உயர்ந்த விலைகளை இப்போ ஐரோப்பா கொடுக்க வேண்டி வந்திருக்கிறது. எல்லா பூகோள அரசியல் முட்டைகளையும் அமெரிக்கா என்ற ஒரு கூடைக்குள் போடக் கூடாது. எல்லா வல்லரசுகளும் தனது நலனைத்தான் முதன்மையில் வைக்கும். இங்கும் அமெரிக்கா தனது நலனைத்தான் முதன்மையில் வைக்கிறதேயொழிய ஐரோப்பாவினது நலனையல்ல. அது ஒருபோதும் தனது நலனை தாரைவார்த்து ஐரோப்பாவை காப்பாற்றாது. இதன் அப்படையிலேயே அதாவது ஒரு மேல்நிலை வல்லரசுத் தலைவர் என்ற அடிப்படையிலேயே ட்றம் இப்போ நடந்துகொள்கிறார். புத்திசாதுரியமற்ற ஐரோப்பிய தலைவர்கள் அமெரிக்காவின் நேற்றோ விரிவாக்கத்துக்கு மிக ஆர்வத்துடன் ஆதரவளித்தார்கள். பூகோள அரசியல் என்பது மிகவும் குரூரமான ஒன்றாக இருக்கிறது. பூகோள அரசியலில் சில விடயங்கள் தெளிவானவையாக உள்ளன. அதுதான் அமெரிக்கா உட்பட்ட எல்லா வல்லரசுகளும் தமது நலனை முதன்மையில் வைப்பார்கள் என்பது முக்கியமான விடயம். அவர்கள் தமது நண்பர்களுக்காக தமது நலனை தாரைவார்க்கவே மாட்டார்கள். ஐரோப்பாவானது தனது நலனை அமெரிக்கா முதன்மையில் கொள்ளும் என நம்புவது அப்பாவித்தனமானதும் பிழையான மதிப்பீடு கொண்டதுமாகும். ஐரோப்பிய தலைவர்கள் ஆற அமர இருந்து தாம் ஏன் இவளவு அப்பாவித்தமாக இருக்கிறோம் என்பதை தமக்குள் தாமே கேட்டுக் கொள்ள வேண்டும். என்னால் மூன்று பரிந்துரைகளை வைக்க முடியும். 1. நேற்றோ அமைப்பிலிருந்து வெளியேறுவது குறித்து ஆலோசனை நடத்துதல். இதன் மூலம் உலகுக்கு ஒரு சமிக்ஞையை அனுப்ப முடியும். ஐரோப்பா தனது மூலோபாயமான அணுகுமுறையாக சுயாதீனமாக இயங்குவதான சமிக்ஞை அது. 2. ரசியாவோடு மூலோபாய அணுகுமுறையில் பேரம் பேசுவது. 3. சீனாவோடு மூலோபாய அணுகுமுறையில் பேரம் பேசுவது அதாவது ஐரோப்பா தனது காலில் நின்று செயற்படுவதுதான் தேவையே ஒழிய அமெரிக்காவின் காலில் அல்ல. ஐரோப்பா நேற்றோவை விட்டு விலகுவதன் மூலம் அமெரிக்காவுக்கும் ஒரு செய்தியை சொல்ல முடியும். “நீ எனது நலனை கவனத்தில் எடுக்காதபோது, நான் அப்படியொரு அமைப்பில் (நேற்றோவில்) இருக்க வேண்டும் என நினைப்பது விவேகமானதல்ல” என்ற செய்தியே அது. பூகோள அரசியல் நகர்வில் எல்லா வகையான சாத்தியப்பாடுகளையும் மேசையில் முன்வைக்க வேண்டும், அது நினைத்துப் பார்க்க முடியாததாயினும்கூட!. ஐரோப்பிய தலைவர்கள் ரசியாவின் கரிசனை குறித்த எதையுமே கவனமெடுத்ததில்லை. ஒரு நம்பிக்கையை கட்டியெழுப்பக்கூட முனைந்ததில்லை. இன்று அமெரிக்கா அதிகார நிலையில் முதலாவது இடத்தில் உள்ளது. வரலாற்றில் யாரும் எப்போதும் முதலாமிடத்தில் நின்றுபிடித்ததில்லை. பூகோள அரசியல் என்பது எப்போதும் மாற்றமடைந்து கொண்டிருக்கும். எப்போதுமே மாறாத ஒன்று இருக்கிறது. அதுதான் உங்கள் அயல்நாடு. அதாவது ரசியா. ரசியா ஒரு பலம் பொருந்திய நாடு. தன்னை மீள மீள கட்டமைக்கக் கூடிய வலுவான நாடு. அது ஒருபோதும் மறைந்து போய்விடாது. ஐரோப்பியர்கள் அந்த நாட்டுடன் இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் அயலவராக இருப்பர். அமெரிக்கா அதிவல்லரசு நிலையில் இல்லாமல் போனாலும்கூட ரசியா அயல்நாடு என்பது மாறாது. எனவே அவர்கள் அமெரிக்காவை பின்தொடராமல் சுயாதீனமாக இருப்பதே மிக புத்திசாதுரியமானதாக இருக்கும். ஐரோப்பாவுக்கு அடுத்த அச்சுறுத்தலாக இருக்கப் போவது ரசியா அல்ல. அது ஆபிரிக்காவின் சனத்தொகை பெருக்கத்தால் நிகழப்போவதாக இருக்கும். 1950 இல் ஆபிரிக்க சனத்தொகையைவிட ஐரோப்பிய சனத்தொகை இரண்டு மடங்காக இருந்தது. அது தலைகீழாக மாறி இப்போ ஐரோப்பாவைவிட ஆபிரிக்கா இரண்டரை மடங்கு அதிக சனத்தொகையை எட்டிவிட்டது. 2100 இல் அது பத்து மடங்காக அதிகரிக்கும் என கணக்கிடப்படுகிறது. ஆபிரிக்காவின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவாவிட்டால் மத்தியதரைக் கடல்வழியாக பெருமளவு ஆபிரிக்க அகதிகள் ஐரோப்பாவுக்குள் வரும் நிலை ஏற்படும். இந்த அகதிப் பேரலையை எப்படி தவிர்க்கலாம்?. எல்லையில் வைத்து கொல்வதாலல்ல. ஆபிரிக்காவின் அபிவிருத்திக்கு உதவுவதே அதற்கான வழிமுறையாக இருக்கும். அத்தோடு ஆபிரிக்காவில் முதலீடு செய்யும் எந்த நாட்டையும் ஆதரிக்க முன்வர வேண்டும். முதலீட்டின் ஒவ்வொரு துளியும் ஆபிரிக்காவுக்கான கொடையாக இருக்கும். அதேபோல் ஐரோப்பாவுக்கான கொடையாகவும் இருக்கும். எனவே ஐரோப்பா புத்திக்கூர்மையுடன் செயற்பட வேண்டும். அவர்கள் ஆபிரிக்காவில் சீன முதலீடுகளை வரவேற்க வேண்டும். அதிர்ச்சிதரக் கூடியது என்னவெனில், ஐரோப்பிய ஒன்றிய தலைவர் ஊர்சுலா வொண்டர்லைன் அவர்களும் ஜேர்மன் வெளிநாட்டமைச்சர் அனலீனா பர்பொக் அவர்களும் நடந்து கொள்கிற விதம்தான். அவர்கள் ஆபிரிக்காவில் சீனாவின் முதலீட்டை கடுமையாக விமர்சிப்பதன் மூலம் ஐரோப்பாவின் நலனுக்கு எதிராக செயற்படுவதை தாமே அறியாமலிருக்கிறார்கள். உண்மையில் இந்த சீன முதலீடு ஐரோப்பிய நலனுக்கு சாதகமான விளைவையே கொண்டுவருகிறது. எனவே ஐரோப்பாவானது ஆபிரிககாவில் சீனா செய்யும் முதலீட்டை ஆதரித்து செயற்பட வேண்டும். அமெரிக்காவும் ஆபிரிக்காவலில் சீன முதலீட்டை எதிர்க்கிறது. அமெரிக்காவுடன் சேர்ந்து ஐரோப்பியர்களும் எதிர்க்கிறார்கள். ஐரோப்பாவின் அப்பாவித்தனமான அல்லது புத்திசாதுரியமற்ற வெளிநாட்டுக் கொள்கைக்கு இது இன்னொரு உதாரணம் ஆகும். அண்மையில் ஸ்பெயின் அரசானது சீனா பற்றிய சுயாதீனமான வெளிநாட்டுக் கொள்கையை ஐரோப்பா வகுக்க வேண்டும்; அதற்கான நேரம் வந்துவிட்டது என சொல்லியிருந்தது. அடுத்து, சீனாவின் BRI (Belt and Road Initiative) உலக வீதி பற்றியது. கடந்த பத்து வருடங்களாக ட்ரில்லியன் கணக்கான முதலீட்டுடனும் 150 க்கு மேற்பட்ட நாடுகளின் ஒப்புதலுடனும் தொடங்கப்பட்ட மிகப் பிரமாண்டமான திட்டம் இதுவாகும். அமெரிக்க அரசு ஒவ்வொரு நாட்டினதும் கதவுகளைத் தட்டி “இந்த BRI திட்டத்தில் இணைய வேண்டாம்” என சொல்லி வருகிறது. பெரும்பாலான உலக நாடுகளும் தமது வர்த்தகத் தொடர்புகளுக்கான கட்டுமானங்களை விருத்தி செய்ய இத் திட்டம் தமக்கு உதவும் என்கின்றனர். எனவே இணைய வேண்டாம் என அமெரிக்கா சொல்வது விவேகமான செயல் அல்ல. யப்பான், இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற சில நாடுகளும் இதில் இணையாமல் இருக்கின்றன. அது அவர்களின் உரிமை. அவர்கள் தாமாக அதைச் செய்ய முடியும். இந்தோனேசியாவை எடுத்துப் பாருங்கள். அது விரைவாக அபிவிருத்தி அடைந்துவரும் நாடு. சீனாவின் உதவியோடு உருவாக்கப்பட்டுள்ள அதிவிரைவு புகைவண்டியானது ஜகார்த்தாவை புத்துயிர்ப்பாக ஆக்கியிருக்கிறது. அமெரிக்காவை விட இந்தோனேசியா குறைந்த வருமானம் கொண்ட நாடு. ஆனால் அந்த நாடு இப்போது அமெரிக்காவினதை விட வேகமான புகைவண்டி பாவனையை சாத்தியமாக்கியுள்ளது. இது வெறும் (வர்த்தக ரீதியிலான) கட்டுமான சாதனை மட்டுமல்ல. அது பொதுமக்களை உளவியல் ரீதிலும் உந்தித் தள்ளக்கூடியது. “எனது நாடு அதிவேக புகைவண்டியை உருவாக்க முடியும் எனின், ஏன் எம்மால் மற்ற விடயங்களிலும் முன்னேற முடியாது” என்ற நம்பிக்கையை உருவாக்குவதுமாகும். இந்த BRI இனை அமெரிக்கா எதிர்ப்பது விவேகமான செயல் அல்ல. மாறாக அமெரிக்கா இத் திட்டத்தை வரவேற்பது அமெரிக்காவுக்கு நல்லது. அமெரிக்காவில் கட்டுமானங்கள் பலவும் மூன்றாம் உலக நாடுகளில் உள்ளது போல் அமைந்திருக்கிறது. விமான நிலையங்கள், புகையிரத நிலையங்கள் பலவும் இதில் அடக்கம். சில பாலங்கள் தகர்ந்து வீழ்ந்து விடுகின்றன. எனவே BRI திட்டத்தை எதிர்ப்பதை விடவும் அமெரிக்கா அதை பயன்படுத்த முனைவதே நல்லது. இது நினைத்துப்பார்க்கக்கூட முடியாத ஒன்றுதான் என்றபோதும், இந்த சாத்தியப்பாட்டை அல்லது வழிமுறையை அந்நாடு தனது எதிர்காலத்தை முன்னிட்டு ஏற்றுக்கொள்வது அவர்களுக்கு நல்லதாக அமையும். அமெரிக்கா சீனாவுடனான பூகோள அரசியல் போட்டியில் இறங்கியிருக்கிற நாடு. அமெரிக்கத் தலைவர்கள் வருவர்… போவர். ஆனால் வெளிநாட்டுக் கொள்ளை ஒன்றாகவே இருக்கும். அரசுக் கட்டமைப்பு அதையே பேணுகிறது. பைடனும் ட்றம்ப் உம் இரு வேறு வித்தியாசமான கொள்கையுடையவர்களாக இருக்கிற போதும், BRI திட்டத்துக்கு இருவரும் எதிராக இருக்கிறார்கள். சீனாவின் எழுச்சியை தடுத்து நிறுத்தும் நோக்கமே இருவருக்கும் இருக்கிறது/ இருந்தது. சீனாவை அமெரிக்கா குறைத்து மதிப்பிடக் கூடாது. சீனாவானது 4000 வருடங்களுக்கு மேற்பட்ட மிக பழமையானதும் தொடர்ச்சி கொண்டதுமான நாகரிகத்தை கொண்ட நாடு அது. இன்று தொழில்நுட்ப ரீதியிலும் உற்பத்திமுறைமைகளிலும் முன்னணிக்கு வந்திருக்கிறது. பல அமெரிக்கர்களும் சீனாவை குறைத்து மதிப்பிடுகிற பெரும் தவறை செய்துகொண்டிருக்கிறார்கள். அமெரிக்க சீன பூகோள அரசியல் போட்டியை முன்வைத்து சீனாவும் அமெரிக்காவை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக் கூடாது. அமெரிக்க சமூகம் குறிப்பிடத்தக்க வெற்றிகரமான நிலையில் இருக்கிறது. 2000 ஆவது ஆண்டில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் பொருளாதார நிலையில் சமமாக இருந்தவை. இன்று ஐரோப்பாவானது அமெரிக்கப் பொருளாதாரத்தின் மூன்றில் இரண்டு என்ற நிலைக்கு பின்தங்கியிருக்கிறது. அமெரிக்காவானது தவிர்க்க முடியாத வல்லரசாக நீடிக்கிறது. அமெரிக்கா வலுவான தொழில்நுட்ப புதுமைக் கலாச்சாரத்தை (Innovative Culture) கொண்ட நாடு. அந்த கலாச்சாரம் அமெரிக்காவுக்கு பொருளாதார பலத்தை அளிக்கிறது. இன்று மிக பயங்கரமான விவகாரமாக இருப்பது தாய்வான் பிரச்சினை ஆகும். அரசியல் ரீதியில் சூடான நிலையில் உள்ளது. காரணம் சீனாவுக்கு தன் மீதான நூற்றாண்டு அவமதிப்பின் (Centuary of Humilation) வாழும் சின்னமாக தாய்வான் இருப்பதுதான். 1842 இலிருந்து 1949 வரை சீனா உலக அதிகார சக்திகளால் பிய்த்துப் பிடுங்கப்பட்ட அவமானப்படுத்தப்பட்ட வரலாறைக் கொண்டது. சீன மக்களின் நினைவுகளில் இந்த நூற்றாண்டு அவமதிப்புத் தாக்கம் ஒவ்வொரு சீனரின் மனதில் எவளவு ஆழமாகப் பதிந்துள்ளது என்பதை அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கை வகுப்பாளாகள் கற்றுத் தெரிந்துகொள்ள வேண்டும். 1895 இல் சீனா யப்பானிடம் அவமானகரமாக தோற்றதுடன் தாய்வான் தனியான தீவாக ஆக்கப்படுகிறது. சீனாவின் பார்வையில் தாய்வானை தன்னுடன் மறு இணைப்பு செய்யாமல் விட்டால், தன் மீதான ‘நூற்றாண்டுகால அவமதிப்பு’ இன்னமும் முடித்துவைக்கப்பட வில்லை என்று அர்த்தமாகும். இதன் அர்த்தம் ஓரிரவில் தாய்வானை சீன பெருநிலப் பரப்புடன் இணைத்துவிடுவது என்பது அல்ல. உண்மையில் சமாதானத்தை உருவாக்க சிறந்த வழி இப்போதுள்ள ‘அரசியல் அந்தஸ்தை’ மாற்றம் செய்யாமலே, தாய்வான் சீனா இருவருமே தாம் சீன மக்கள் குடியரசை (People’s Republic of China) பிரதிநிதித்துவப் படுத்துபவர்களாக இருப்பதுதான். அது தாய்வானும் சீனாவும் ஒரு நாடு என்பதை உறுதிப்படுத்துவதாகும். தாய்வான் சுதந்திரம் பெற்ற தனிநாடாக தன்னை அறிவிக்குமாயின், அது தாய்வான் மேல் சீனா போர் தொடுக்கக்கூடிய நிர்ப்பந்தத்தை உருவாக்கிவிடும். இது மிக ஆபத்தானது. அதேநேரம் அப்படி உருவாகும் தாய்வான் என்ற சுதந்திர நாடு உலகிலிருந்து தனிமைப்படுத்தப் பட்டுவிடும். சீன கடவுச்சீட்டு உலகின் 150 நாடுகளுக்கு மேல் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறது. ‘தாய்வான் குடியரசு’ என்ற நாட்டினால் உருவாக்கப்படக்கூடிய கடவுச்சீட்டு மிக சொற்ப நாடுகளாலேயே ஏற்றுக்கொள்ளப்படும் நிலைஉருவாகலாம். அது தாய்வான் இன்று பெற்றிருக்கும் தனது அரசியல் அந்தஸ்து நிலையிலிருந்து விலகி தன்னை தானே தனிமைப்படுத்தியதாகிவிடும். தாய்வானின் புத்திசாதுரியமான அணுகுமுறை என்னவெனில் தனது இன்றைய அரசியல் அந்தஸ்தை முடிந்தளவு தக்கவைப்பதாகும். பைடன் தாய்வானுக்கு பாதுகாப்பு உத்தரவாதத்தை தருவதாக சொன்னது மிக ஆபத்தானது. “தாய்வான் தனது சுதந்திரத்தை அறிவிக்க தாம் ஆதரவாக இருப்போம்” என அமெரிக்க அதிபர் எவராயினும் சொன்னால், அது விவேகமற்ற செயலாகும். இறுதியாக ஒன்றை சுருக்கமாகச் சொல்லலாம். சீனா மிக பழமைவாய்ந்ததும் தொடர்ச்சி கொண்டதுமான நாகரிகத்தைக் கொண்ட நாடு என்பதை அமெரிக்கா முதலில் உணர வேண்டும். சீனா இவ்வளவு காலமும் எப்படி தப்பிப் பிழைத்தது? எப்படி இவளவு நெகிழ்தன்மையுள்ள நாகரிக வளர்ச்சியை கொண்டிருக்கிறது?. சீன அரசிடம் அதிக மதிநுட்பம் இருந்ததுதான் அதற்குக் காரணம். உள்நாட்டிலும், அயல்நாட்டுடனும் வெற்றிகரமாக தன்னை சமாளித்துக் கொண்டிருக்கிறது. எனவே இவற்றை கவனத்தில் எடுத்து சீனாவை மதிப்புடன் கையாள்வதுதான் சரியாக இருக்கும். அமெரிக்கா தனது கொம்பை நுழைப்பதையோ மதிப்பின்றி நடப்பதையோ, அவமானப்படுத்தும் விதத்தில் நடந்துகொள்வதையோ விட்டுவிட வேண்டும். அமெரிக்கர்கள் மற்றைய நாடுகளுக்குப் போய் அந்த நாடுகளிலுள்ள மக்கள் சீனா பற்றி என்ற பேசுகிறார்கள் என்பதை கேட்டறிய வேண்டும். பெருமளவான நாடுகளும் சீனாவிடம் பெருமதிப்பு வைத்திருக்கிறார்கள். எனவே சீனாவுடன் தான் உடன்படாவிட்டாலும், அமெரிக்கா சீனாவை மதிப்புடன் கையாள வேண்டும். சீனா 4000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாறு கொண்டது. இன்னும் பல ஆயிரம் வருடங்கள் அது நீடிக்கும். ஒரு 250 வருட வரலாற்றைக் கொண்டது அமெரிக்கா என்ற சுதந்திர நாடு. உலக வரலாற்றிற்கு அது ஒரு குழந்தை. மிக நீண்ட வரலாறு கொண்ட சீனாவை அது மதித்தாக வேண்டும்!. * எனது குறிப்பு: “நூற்றாண்டு அவமதிப்பு” Centuary of Humiliation 1842-1949 சீனா 19 நாடுகளால் பிய்த்துப் பிடுங்கி சுரண்டப்பட்ட நாடு. அந்த நாடுகள் 21 உடன்படிக்கைகளை சீனா மீது திணித்து அந்த நாட்டை உருக்குலைத்தன. அவை பிரித்தானியா, அமெரிக்கா, ரசியா, பிரான்ஸ் யப்பான், போத்துக்கல், ஒல்லாந்து, ஸ்பெயின்.. என ஒரு பட்டியலாய் நீளும். ஓப்பியம் போதைப்பொருளை வலுக்கட்டாயமாக சீனாவுக்கு வியாபாரம் செய்த பிரித்தானியாவுடன் பின்னர் அமெரிக்காவும் இணைந்துகொண்டது. அதை எதிர்த்து பலவீனப்பட்ட சீனா மேற்கொண்ட போர் “ஓப்பிய யுத்தம்” (Opium War) எனப்படுகிறது. இதன்போது ஹொங்ஹாங்கை பிரித்தானியாவிடம் தாரைவார்க்க நேர்ந்தது. சீனா முழுவதும் 72 துறைமுகங்களை பறித்து இந்த நாடுகள் தமக்கிடையில் பகிர்ந்து வியாபாரத்தில் ஈடுபட்டன. உள்நாட்டுப் போர்கள் தமது பங்குக்கு நாட்டை பலவீனமாக்கின ஒற்றுமையற்ற பலவீனமான நாடாக வீழ்ந்து கிடந்தது. அதனால் எல்லோரும் ஏறி மிதித்தார்கள். இக் காரணிகளால் தனது நிலத்தின் மீதான இறைமையை சீனா இழந்தது. ஓப்பிய போதைப்பொருள் பாவனையில் சீரழிக்கப்பட்ட சமுதாயம் உருவாகியது. தேசியப் பெருமிதத்தை இழந்து அவமானப்பட்ட நாடாக வீழ்ந்து கிடந்தது. எல்லாவகையான இழிவுபடுத்தல்களையும், அவமானங்களையும், தோல்விகளையும் தாங்கிய பலவீனமான நாடாக சீனா மாறியது. சீனாவின் Qing dynasty அரசாட்சிக் காலத்தில் (1683) தாய்வான் சீனாவுடன் இணைக்கப்பட்டது. பின்னர் 1895 இல் யப்பான் தாய்வானை தன்வசமாக்கியது. இரண்டாம் உலகப் போரில் யப்பானின் தோல்வியுடன் தாய்வான் திரும்பவும் சீனாவிடம் வந்தது. சீனாவில் மிகப் பெரும் தீவாக இருந்த தாய்வான் “தாய்நிலத்தின் புதையல் தீவு” என வர்ணிக்கப்பட்டது. இவ்வாறாக மேற்குலக காலனியவாதிகளின் தலையீடு, உள்நாட்டு யுத்தம், யப்பானின் ஆக்கிரமிப்பு யுத்தம் என சீனா ஒரு நூற்றாண்டுக்கு மேலாக அவமானப்படுத்தப்பட்ட, இழிவுபடுத்தப்பட்ட வரலாறு கொண்டது. இதுவே “நூற்றாண்டு அவமானம்” (Centuary of Humilation) என அழைக்கப்படுகிறது. அந்தவகை அவமானப்படுத்தல் அல்லது இழிவுபடுத்தல் இன்றுவரை ஓயவில்லை. அமெரிக்காவின் ‘வோல் ஸ்றீற் ஜேர்ணல்’ 2020 பெப்ரவரி 3ம் தேதி தனது இதழில் “சீனா ஆசியாவின் நோயாளி” என அவமதித்து எழுதியது இதற்கு ஓர் உதாரணமாகும். சுடுமணல்பூகோள அரசியல் நகர்வில்“நேற்றோ” விஸ்திரிப்பு வாதத்தை ரசிய எல்லைவரை வழிநடத்தி உக்ரைனை இந்த நிலைக்குக் கொண்டுவந்த அமெரிக்கா இன்று உக்ரைனை கைவிட்டிருக்கிறது. அதற்கான காரணங்கள் ஒரு வல்லரசின் நலனிலிருந்து எழுபவை. …
-
பாகிஸ்தான் ரயிலில் பயங்கரவாத தாக்குதல்: 104 பணயக்கைதிகள் மீட்பு!
50 பயணிகள் கொல்லப்பட்டதாக செய்திகள் சொல்கின்றன.
-
பட்லந்த வதை முகாம் குறித்த குற்றச்சாட்டுகள் - அல்ஜசீரா பேட்டியில் மறுத்தார் ரணில்
- நாய் என்ற அமைச்சர் || அர்ச்சுனா பதிலடி!
நாடாளுமன்றத்தை அதிர வைத்த அர்ச்சுனா எம்.பி- தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு
தேசபந்து தென்னக்கோனின் இரகசிய கலந்துரையாடலில் தமிழர் ஒருவரும் சாணக்கியன் பாரளுமன்றத்தில் பிரதி அமைச்சர் ஒருவரை சந்திக்க இருந்தார் என்பவர் பிள்ளையான் என நினைக்கிறேன். - நாய் என்ற அமைச்சர் || அர்ச்சுனா பதிலடி!
Important Information
By using this site, you agree to our Terms of Use.