Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. கதவைத் திறந்துகொண்டு இண்டர்வியு ரூமின் உள்ளே தலையை நீட்டினான் ரமேஷ். ‘பிளீஸ் கம் இன்’ என்றார் ஒருவர். போனான்.... ‘சிட் டவுன்’.. உட்கார்ந்தான். அது ஒரு பெரிய ஹால். வலப்பக்கக் கோடியில் பெரிய திரை. சீலிங்கிலிருந்து டிஜிட்டல் புரஜக்டர் தொங்கியது. கீழே உயர்ந்த கார்ப்பெட். நாற்காலிகள் ஒவ்வொன்றும் அக்பர் சக்கரவர்த்தியின் அரியாசனம் போல் இருந்தன. ஸ்பிளிட் ஏஸிக்கள் ஓசையின்றி ஓடிக் கொண்டிருந்தன. இடப் பக்கச் சுவரின் ஓரம் கசக்கிப் போட்ட காகிதம் ஒன்று உறுத்தலாக இருந்தது. ஒரு நீள்வட்ட மேசையின் எதிர்ப் புறத்தில் நான்கு பேர் உட்கார்ந்திருந்தார்கள். ரமேஷ் வருவதைப் பார்த்ததும் இடது கோடியில் இருந்தவரைப் பார்த்து கொஞ்சம் பவ்யமாக மற்ற மூவரும் ‘ஐயா, நீங்க கேக்கறீங்களா?’ என்பது போல் வளைந்தார்கள். அதற்கு அவர் ‘இட்ஸ் ஓக்கே.. நீங்க ஆரம்பியுங்க’ என்பது போல் ஜாடை காட்டிவிட்டு கொஞ்சம் தளர்ந்து உட்கார்ந்து கொண்டார். வலக் கோடியில் இருப்பவர் ஆரம்பித்தார். ‘எப்படி இருக்கு இந்த அட்மாஸ்பியர்?’ என்றார். ‘இது ஒரு நல்ல கான்ஃபரன்ஸ் ஹால். புரஜக்டர், ஸ்க்ரீன், வொய்ட் போர்ட், மார்க்கர், சவுண்ட் புரூஃபிங், வசதியான நாற்காலி, உயர்ந்த கார்ப்பெட். மனசுக்கு இதமான அட்மாஸ்பியர்’ என்றான் ரமேஷ். ‘இவ்வளவு நல்ல அட்மாஸ்பியர்ல அந்த கசக்கிப் போட்ட காகிதம் உறுத்தலா இல்லையா? அதை ஏன் சொல்லல்லை?’ ‘கவனிச்சேன் சார் அதை. அந்தக் காகிதம் அதோ உட்கார்ந்திருக்காரே அவரோட ஸ்க்ரிப்ளிங் பேடோட முதல் பக்கம். கிழிக்கிறப்போ கொஞ்சம் கோணலா கிழிச்சிருக்காரு. பேடிலே முக்கோணமா கொஞ்சம் பாக்கி இருக்கு அந்தப் பக்கத்தில். நான் பாட்டுக்க சுத்தமா இருக்கிற இந்த ரூம்ல யாரோ ஒரு மடையன் குப்பை போட்டிருக்கான்னு சொன்னா அவர் மனசு புண்படும்ன்னுதான் சொல்லல்லை’ நாலு பேரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ‘சரி, வெளியில ஒரு அம்மா தரையை துடைச்சிக்கிட்டு இருக்கும், அதைக் கூப்பிட்டு குப்பையை எடுத்துப் போடச் சொல்லுங்க’ என்றார் வலது. ‘அந்தம்மா பேர் என்ன சார்?’ மறுபடியும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டார்கள். ‘இட்ஸ் ஓக்கே. உங்க யாருக்கும் அந்தம்மா பேரு தெரியாதுன்னு நினைக்கிறேன்’ என்றவன் எழுந்து நடந்து போய் கதவைத் திறந்து வெளியில் உட்கார்ந்திருந்த பியூனிடம் ‘அந்தம்மா பேர் என்ன?’ என்று கேட்டான். பியூன் சொன்னான். ‘பவானி, இங்கே வாம்மா’ என்று கூப்பிட்டான். சுத்தம் செய்யச் சொன்னான். மறுபடி வந்து நின்றான். ‘சிட் டவுன். ஏன் நிக்கறீங்க?’ உட்கார்ந்தான். ‘எல்லா விஷயத்தையும் நல்லா கவனிக்கிறீங்க. வேலைக்காரர்களைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவது எவ்வளவு முக்கியம்ன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கு. இன்னும் ஒரே ஒரு கேள்வி. அதுக்கும் சரியா பதில் சொல்லிட்டீங்கன்னா உங்களுக்கு நூறு மார்க்’ ‘கேளுங்க சார்’ ‘எங்க நாலு பேர்ல ஒருத்தர் தொழிற்சாலை முதன்மை அதிகாரி, ஒருத்தர் பர்ஸான்னல் டிப்பார்ட்மெண்ட் ஹெட், ஒருத்தர் ஃபைனான்ஸ் ஹெட், ஒருத்தர் உங்க பாஸ். யார் யார் என்னென்னன்னு சொல்லல்லைன்னா கூட பரவாயில்லை. தொழிற்சாலை ஹெட் யாருன்னு மட்டும் சொல்லுங்க பார்ப்போம்?’ ‘நான் வரும்போது நீங்க மூணு பேரும் இடது கோடியில் இருக்கிறவர் கிட்டே ரொம்ப பவ்யமா நடந்துகிட்டீங்க. அது என்னை கன்ஃப்யூஸ் பண்ணத்தானே ஒழிய அவர் ஃபேக்டரி ஹெட் இல்லை. நீங்களும் ஃபேக்டரி ஹெட் இல்லை. நீங்கதான் பாஸ். நான் சரியா பதில் சொல்லச் சொல்ல உங்க முகத்தில் பெருமை தாங்கல்லை. எப்படிப்பட்ட ஆளை செலக்ட் பண்ணியிருக்கேன் பார் என்கிற பெருமை தெரியுது. மீதம் ரெண்டு பேர் அமைதியா இருக்காங்க. அவங்கள்ள ஒருத்தர்தான் ஃபேக்டரி ஹெட். நீங்க எல்லாருமே ஒரு ஸ்க்ரிப்ளிங் பேட் வச்சி ஏதோ நோட் பண்ணிக்கிட்டே இருக்கீங்க. அந்த ரெண்டு பேர்ல ஒருத்தர் இதுவரை எதுவுமே எழுதிக்கல்லை. அவர் ஃபைனான்ஸ் ஹெட்டா இருப்பார். சம்பளம் பேசும்போதுதான் எழுதுவார். ஆகவே ரெண்டாவதா இருக்கிறவர்தான் ஃபேக்டரி ஹெட். இடது கோடியில் இருக்கிறவர் பர்ஸான்னல் மேனேஜர். அவர்தான் இந்த நாடகத்துக்கெல்லாம் டைரக்டர். ‘ஸ்ப்ளெண்டிட்.. உங்க ஆப்ஸர்வேஷன் பவர் பிரமாதம். ஒரு மெய்ண்ட்டனன்ஸ் ஆளுக்கு இருக்க வேண்டிய தகுதி அது. வெய்ட் பண்ணுங்க. வீ வில் லெட் யு நோ’ ‘சார், புது விதமான இண்ட்டர்வியூ சார். வழக்கமா வந்ததும் ஃபைலை வாங்கிப் பார்க்கிறது. டெல் அஸ் சம்திங் அபௌட் யூ மிஸ்டர் ரமேஷ்ங்கிறது. இதெல்லாம் எதுவுமே இல்லை. டக்குன்னு ஆரம்பிச்சிட்டீங்க. எனக்கும் ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது. சூப்பர் சார்’ ‘தேங்க் யூ. பட், பேரென்ன சொன்னீங்க, ரமேஷா? நீங்க சுந்தரேசன் இல்லையா?’ ‘அவர் வெளியில வெய்ட் பண்றார் சார்’ ‘பின்னே நீங்க?’ ‘நான் கேன்டீன்ல புதுசா வேலைக்குச் சேர்ந்திருக்கேன். கான்ஃபரன்ஸ் ஹாலுக்கு எத்தனை செட் டீ ஸ்னாக்ஸ் அனுப்பணும்ன்னு பார்த்துகிட்டு வரச் சொன்னாரு சூப்பரவைசர். எட்டிப் பாத்தேன், உள்ளே கூப்பிட்டீங்க, உக்காரச் சொன்னீங்க, கேள்வி எல்லாம் கேட்டீங்க. ஜாலியா இருந்திச்சு சார்’....
  2. Columnsஜெகன் அருளையா கடலட்டை ஏற்றுமதி: யாழ்ப்பாணத்தின் வசப்படுத்தப்படாத வாய்ப்பு வளரும் வடக்குஜெகன் அருளையா ஜெகன் அருளையா திரு.ஞானேந்திரன் யாழ்ப்பாணத்தின் மானிப்பாய்க்கு அருகேயுள்ள நவாலியைச் சேர்ந்தவர். ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் 1975 இல் பிறந்த அவர் மூன்றாம் வகுப்பு முதல் க.பொ.த. உயர்தரம் வரை செய்ண்ட் பட்றிக்ஸ் கல்லூரியில் படித்தார். யாழ்ப்பாணத்தின் முன்னணி பாடசாலைகளில் ஒன்றான இக்கல்லூரி யாழ் கோட்டையிலிருந்து சிறிது தூரத்தில் தான் இருக்கிறது. இனப்போர் உக்கிரமாக இருந்த காலத்தில் ஞானேந்திரன் பிலிப்பைன்ஸில் இருந்த அவரது தந்தையின் சகோதரருடன் வசிப்பதற்காகச் சென்றுவிட்டார். இங்கு தகவல் தொழில்நுட்பத்தில் ஒரு பட்டத்தைப் பெற்றுக்கொண்டு அவர் 2002 இல் தாயகம் திரும்பினார். போரிலிருந்து தப்பிக்கவும், புதிய சந்தர்ப்பங்களைத் தேடியும் பெரும்பாலான இளையோர் வெளிநாடுகளுக்குச் சென்றுகொண்டிருந்த காலமது. இப்போது போர் முடிந்து விட்டது ஆனாலும் புதிய சந்தர்ப்பங்களைத் தேடி மத்திய கிழக்கு பாலைவனங்களையும், உடல் விறைக்கும் ரொறோண்டோவையும், மாசடைந்த காற்றைச் சுவாசிக்கவென லண்டனை நோக்கியும் இளையோர் இன்னும் படையெடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஞானேந்திரனுக்கோ இலங்கை இன்னும் ஒரு சந்தர்ப்ப பூமியாகவே விளங்குகிறது. அவர் ஒரு வியாபாரிகள் குடும்பத்திலிருந்து வந்தவரல்ல; முதலீடு செய்வதற்கான பணமும் அவரிடம் இருந்திருக்கவில்லை. எனவே அவருக்கு இருந்த ஒரே வழி வேறு நிறுவனங்களில் பணியாற்ற இணைந்து கொள்வதே. முதலில் அவர் இணைந்தது வியாபார சாதனங்களைச் சந்தைப்படுத்தும் ‘சிலோன் பிஸினெஸ் அப்பிளையன்ஸெஸ்’ (Ceylon Business Appliances (CBA)) என்ற நிறுவனத்தில். அதைத் தொடர்ந்து ஒரு பயண நிறுவனத்தில் மூன்று வருடங்கள் பணியாற்றினார். முதல் வியாபார முயற்சிக்கான ஞானேந்திரனின் அதிரடிப் பிரவேசம் சொந்தமானதொரு பயண நிறுவனம். கொழும்பு, வத்தளையில் நிறுவப்பட்ட இந்நிறுவனத்திற்குப் பெயர் ‘ஸ்கைவே இண்டர்நாஷனல்’ (Skyway International). துரதிர்ஷஷ்டவசமாக இணையவழி மூலம் விமானப் பயணச்சீட்டுகளை வாங்கும் பழக்கம் இக்காலகட்டத்தில் தான் ஆரம்பமாகியிருந்தது. பயணச் சீட்டுகளை விற்று வருமானம் சம்பாதிக்கும் உலகின் பல பயண முகவர்களது வயிற்றிலடிக்கவென வந்த இத் தொழில்நுட்பம் ஞானேந்திரனையும் இத் தொழிலிலிருந்து துரத்தி விட்டது. 2014 இல் ஞானேந்திரன் ஒரு முன்னணி கட்டுமான நிறுவனத்தில் இணைந்தார். விற்பனை நிர்வாகியாக இங்கு ஒரு வருடம் கடமையாற்றிய காலத்தில் இன்னுமொரு சந்தர்ப்பம் அவரைத் தேடி வந்தது. அதை அவர் இறுகப்பிடித்துக்கொண்டார். த் தோழன் ஒருவர் லண்டன் நகரின் அழகிய தேவாலயங்களில் ஒன்றான செயிண்ட் போல்ஸ் தேவாலயத்துக்கு அருகே ஒரு யப்பானிய உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். லண்டன் நகர மையத்தில் சட்ட, வியாபார, சுற்றுலாத் துறைகள் சங்கமிக்கும் சதுக்கத்தில் இருந்தது இந்த உணவகம். சிறந்த செலவாளிகள் எனப்படும் பணம் படைத்தோர் உலாவும் இடம் இது. யப்பானியரின் சிறந்த தெரிவாக இருப்பது கடலுணவு. ஞானேந்திரனும் அவரது சகாவும் லண்டன் வாழ் மேற்தட்டு வாசிகளின் சுவையறிந்து அவர்களுக்கு ‘யாழ்ப்பாணக் கடலுணவைத்’ தயாரித்து விருந்தோம்பினார்கள். விளைவு யாழ்ப்பாணத்து குருநகர் மீன்பிடித் துறமுகத்தை ஆரம்பமாகவும் லண்டன் உணவகத்தை முடிவாகவும் கொண்ட உணவுச் சங்கிலியைப் பாதையாகக்கொண்டு ஞானேந்திரனின் ஏற்றுமதி வர்த்தகம் கருக்கொண்டமை. இருப்பினும் அதற்குத் தேவையான ஆரம்ப முதலீடு அவரிடம் இருக்கவில்லை. இதை நிவர்த்திக்க வழமையாக யாழ்ப்பாணத்தார் எதைச் செய்வார்களோ அதையே தான் ஞானேந்திரனும் செய்தார். மனைவியின் தங்க நகைகள் அடைவுகடைகளில் முடங்கிக்கொண்டன. எனது சில வருட கால யாழ்ப்பாண வாழ்வில் நகை அடகு பற்றி நான் கற்றுக்கொண்டது அதிகம். பணவீக்கத்தால் பாதிக்கப்படாத, தனது பெறுமதியை எப்போதும் தக்கவைத்துக்கொள்ளக்கூடிய ஒரு பண்டம் தங்கம். அவ்வப்போது பணமுடை ஏற்படுவதிலிருந்து தப்புதல் முதல், முட்டை, அரிசித் தட்டுப்பாட்டைச் சமாளிப்பது வரை, சிதைந்துபோன கூரையைச் செப்பனிடுவது முதல் வியாபார முதலீடுகள் வரை யாழ்ப்பாணத்தாருக்குக் கைகொடுத்து வருவது இந்த நகை அடகு சமாச்சாரம். முதலீட்டுக்குப் பணம் கிடைத்தமை மட்டும் ஞானேந்திரனுக்குப் போதுமானதாக இருக்கவில்லை; இவ்வியாபாரம் பற்றிய அறிவும் அவருக்குத் தேவையாகவிருந்தது. உலகமெங்கணும் வணிகர்கள் தேடுவது ஏமாறக்கூடிய வாடிக்கையாளரையே. ஒருவரது அறியாமை இன்னொருவரின் சட்டரீதியாகப் பணம் பண்ணும் சந்தர்ப்பம். தமிழ் பேச முடியாமையினால் யாழ்ப்பாணத்து வணிகர்களால் நான் பலதடவைகள் ஏமாற்றப்பட்டிருக்கிறேன். கடந்த பத்து வருடங்களாக நான் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்தாலும் என்னிடமிருந்து கொஞ்சம் கூடுதலாகவே கறந்துகொள்ளும் சாதுரியத்தை வணிகர்கள் பழகிக்கொண்டுவிட்டார்கள். ஞானேந்திரன் சுமார் ஆறு மாதங்களாக, காலை வேளைகளில், 5 மணி முதல் 9 மணி வரை, குருநகர் மீன்பிடித் துறைமுகத்தில் உட்கார்ந்திருப்பார். படகுகள் கரையேறுவதையும் மீன் சந்தை பேரம் பேசுதல் கலகலப்படைவதையும் அவதானிப்பார். வலைஞர்களும் வணிகர்களும் சங்கமிக்கும் இம் மீனுலகத்தில் பணத்தைக் கைமாற்றும் அற்புத வித்தையை அவர் அங்குதான் கற்றுக்கொண்டார். புதிதாகச் சிக்கிய மீனுக்கும் இதர கடலுயிரினங்களுக்குமிடையேயான வித்தியாசங்களை அவர் புரிந்து கொண்டார். வெறுமையான படகுகளும் நிரம்பிய படகுகளும் கரைசேரும் நாட்களில் கால நிலை, பருவக்காற்று விலை என ஏற்ற இறக்கத்தைத் தீர்மானிக்கும் வித்தைகள் இப்போது அவருக்கு அத்துபடியாகியது. கடலுயிரினங்களின் கண்களைப் பிதுக்கிப்பார்த்து அவற்றின் நிறங்கள், உடல் மென்மையைக் கொண்டு அவற்றின் தராதரத்தைப் பிரித்துப்பார்க்க அவர் கற்றுக்கொண்டுவிட்டார். லண்டன் செயிண்ட் போல்ஸ் உணவக விருந்தினரது நாவுக்குச் சுவையளிக்கவல்ல சிறந்த கடலுணவைத் தரம்பிரித்தறிய அவரால் இப்போது முடிந்தது. மீன் இப்போது வான் வழியாக ஏற்றுமதி செய்யப்படவேண்டும். ஒரு தொன் எடைக்குக் குறையாமல் ஏற்றுமதி செய்தால் மட்டுமே கட்டுப்படியாகும் என்ற நிலை. ஆனால் லண்டனின் பிரத்தியேக உணவகத்திற்க்கு இது தேவைக்கதிகமானது. இதனால் லண்டனில் வாழும் தரகர் ஒருவருடன் ஞானேந்திரன் அறிமுகப்படுத்தப்பட்டார். இத்தரகர் பெரும் தொகையான கடலுணவை இறக்குமதி செய்து லண்டனிலுள்ள சிறிய கடைகளுக்கு விநியோகம் செய்பவர். சிறிது காலத்தில் இந்த வியாபார உறவு கசப்பாகி முறிவில் முடிந்தது. ஆனால் இவ்வுறவின் போது ஞானேந்திரன் இன்னுமொரு வாடிக்கையாளரைச் சந்தித்தார். பிரித்தானியாவில் 4 கடைகளுக்குச் சொந்தக்காரரான ஒரு இந்தியரே அவர். 2017 இல் ஆரம்பித்த இந்த வணிக உறவு இப்போதுவரை தொடர்கிறது. வளர்ச்சியடைந்த ஞானேந்திரனின் வணிகம் மேலும் பல ஏற்றுமதி வணிகர்களுடன் உறவை ஏற்படுத்திக் கொடுத்தது. காசாகும் கடலட்டை கடலுணவு வியாபாரம் காத்திரமான இலாபத்தை ஈட்டிக்கொடுக்கவும் ஞானேந்திரனது பார்வை கடலட்டைப் பண்ணை மீது தாவியது. இது ஞானேந்திரனுக்கு முற்றிலும் புதிய சமாச்சாரமல்ல. 1970 களில் அவரது தாத்தா உள்ளூர் மீனவர்கள் மற்றும் சுழியோடிகளிடமிருந்து கடலட்டைகளை வாங்கி உலரவைத்து சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்தவர். சிறு வயதுகளில் ஞானேந்திரனும் அவரது நண்பர்களும் உலர்ந்த கடலட்டைகளால் ஒருவருக்கொருவர் எறிந்து விளையாடுவது வழக்கம். இக்கடலட்டைகள் பண்ணைகளில் வளர்க்கப்பட்டவையல்ல. யாழ்ப்பாணத்தைச் சுற்றியுள்ள ஏறிகளிலும் குளங்களிலும் இவை சாதாரணமாகக் கிடைக்கின்றன. யாழ்ப்பாணத்தின் கடற்கரையோரமாக இருக்கும் தீவுகளில் ஒன்றான லைடன் தீவிலிருக்கும் அல்லைப்பிட்டி கிராமத்தில் ஒரு கடலட்டை பண்ணை இருக்கிறது. தனது கடலட்டை வியாபாரத்தைப் பரீட்சித்துப் பார்க்க ஞானேந்திரன் இப்பண்ணையை வாங்கிக்கொண்டார். இரண்டு வருடங்களாக அதை நடத்தி ஓரளவு இலாபத்தையும் ஈட்டிக்கொண்டார். இதன் மூலம் வியாபார நுணுக்கத்தைக் கற்றுக்கொண்டபின் அவர் முற்றிலும் புதியதொரு பண்ணையை உருவாக்கத் தீர்மானித்தார். இதன் விளைவாக யாழ்ப்பாணத்திற்கும் மண்டைதீவிற்குமிடையில் இருக்கும் ஒரு சிறிய தீவான சிறித்தீவு இவரது கண்ணில் சிக்கிக்கொண்டது. இரண்டு வருட பிரயத்தனத்தனத்தைத் தொடர்ந்து 2019 இல் ஞானேந்திரனுக்கு இக்கடற் பண்ணைக்கான அனுமதி கிடைத்தது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுமென எதிர்ப்புகளும் கிளம்பின. கடலிலோ அல்லது கரைப்பகுதிகளிலோ நிறுவப்படும் எந்தப் பண்ணையும் ஏன், வீட்டு நிர்மாணம் முதற்கொண்டு அனைத்து தொழிற்சாலைகளுமே சூழல் பாதிப்புக்குக் காரணமாகின்றன. இச்சூழல் பாதிப்பு பொருளாதார இலாபத்தை மீறிவிடுகிறதா என்பதே இங்குள்ள கேள்வி. கடற் பண்ணைகளுக்காக எடுக்கப்படும் இடங்கள் குறிப்பாக சூழல் பாதிப்பை ஏற்படுத்துகின்றனவா அல்லது இவ்விடங்கள் அப்பிரதேசத்தின் சூழல் சமநிலையைப் பேணுகின்றனவா? வலைகள் நீர்மட்டத்தில் இருக்கத் தேவையில்லை காரணம் கடலட்டைகள் கடலினடியில் வாழ்பவை. இதனால் மீன்கள் வலைகளுக்குள் சிக்காமல் இலகுவாகத் தப்பிச் செல்ல முடியும். சூழலை மாசுமடுத்தும் உணவுகள் பண்ணையில் சேர்க்கப்படுவதில்லை காரணம் தேவையான போஷாக்கை அட்டைகள் கடல் மண்ணிலிருந்தே எடுத்துக்கொள்கின்றன என்கிறார் ஞானேந்திரன். கடலட்டை வியாபாரம் பற்றி அரசாங்க அதிகாரிகளே அப்போது அறிந்திராத காலம். யாழ்ப்பாணத்தில் அப்போதுதான் இத்தொழில் பிரபலமாகிக்கொண்டிருந்தது. இரண்டு வருடங்கள் இழுபறியின் பின்னர் 2021 இல் தான் ஞானேந்திரனுக்கு அனுமதி கிடைத்தது. சிறித்தீவுக்கு அருகில் சுமார் 20 ஏக்கர் கடல் நிலத்தில் ஞானேந்திரன் தனது பண்ணையை ஆரம்பித்தார். திருடர்களைக் கண்காணிக்க காவற் கோபுரம் நிர்மாணித்தல், வலைகளை நிறுவுதல், பணியாளர்களுக்கு பயிற்சியளித்தல், அட்டைகளைப் பதனிடுவதற்கேற்ற சூரிய வெளிச்சமுள்ள கட்டிடமொன்றை நிறுவுதல் என அனைத்துப் பணிகளும் துரிதமாக நிறைவேற்றப்பட்டன. இந்த வருடம், 2025 இல், இப்பண்ணையில் மூன்றாவது அறுவடை நடைபெறுகிறது. இப்போது பல பண்ணைகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டு விட்டன. கடற்கரை எங்கும் திட்டு திட்டாக இப்போது அட்டைப் பண்ணைகளால் நிரம்பியிருக்கிறது. சிலவேளைகளில் இவை மித மிச்சமாகவோ இல்லாமலோ இருக்கலாம். அதைத் தீர்மானிக்கும் தகுதி எனக்கில்லை. கோவிட் தொற்றுக் காலத்திலும் இப்பண்ணை தொடர்ச்சியாக இயங்கியது. உற்பத்திகளையும் பணியாளர்களையும் இடத்துக்கிடம் நகர்த்துவதற்கான அனுமதியும் பெறப்பட்டது. கோவிட் தொற்றுக் காலத்தில் இப்பண்ணை 35 பேருக்கு வாழ்வாதாரத்தை அளித்தது. யாழ்ப்பாணத்திற்கும், வட மாகாணத்திற்கும் ஏன் முழு இலங்கைக்குமே இத்துறை வருமானமீட்டிக் கொடுக்கிறது என்பதில் சந்தேகமேயில்லை. இக்கடலட்டைகளைப் பதனிட்டு ஏற்றுமதிப் பண்டமாக்கும் தொழில் பெரும்பாலும் வடக்கிற்கு வெளியே நடைபெறுவதால் இத்தொழில் சார்ந்த உபதொழில்களுக்கான சந்தர்ப்பத்தை வடக்கு இழக்கிறது என்பது உண்மை. உலரவைக்கப்பட்ட கடலட்டைகளின் பெறுமதி பசுமையான அட்டைகளைவிடப் பன்மடங்கு அதிகம். செலவுஅனுமதிப் பத்திரம் கிடைத்ததிலிருந்து 20 ஏக்கர் கடல் நிலத்தில் ஒரு பண்ணையை, ஆரம்பம் முதல் இயங்குநிலைவரை கொண்டுவருவதற்கு சுமார் ரூ.20 மில்லியன் (2024 ஆண்டு விலை) செலவாகிறது என்கிறார் ஞானேந்திரன். கடந்த சில வருடங்களில் யாழ் குடாநாட்டின் கரையோரப் பகுதிகளில் ஏகப்பட்ட அட்டைப்பண்ணைகள் முளைத்திருக்கின்றன. ஆனால் இவற்றில் வெகு சிலவே இவ்வட்டைகளைப் பதனிடும் வேலைகளைச் செய்கின்றன. பெரும்பாலானவை தமது அட்டைகளைப் பதனிடாமலேயே மிகவும் குறைந்த விலைக்கு வெளியாருக்கு விற்றுவிடுகின்றனர். ஞானேந்திரன் தனது சொந்தமான பதனிடும் தொழிற்சாலையை நிர்மாணித்து வருடமொன்றுக்கு 800 கி.கி. உலரட்டைகளைத் தயாரிக்கிறார். இதைத் தயாரிக்க சுமார் 25,000 கி.கி. பசும் அட்டைகள் தேவையாகவிருக்கின்றது. கடலட்டை விலைகள் எப்போதும் நிலையாக இருப்பதில்லை. நாணய மாற்று வீதம் மற்றும் சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான (சீனாவே பிரதான நுகர்வோராகவும் விநியோகிஸ்தராகவும் இருக்கிறது) பாதைகள் ஆகியவற்றைப் பொறுத்து விலையின் ஏற்ற இறக்கம் தீர்மானமாகிறது. ஏற்றுமதிக்கான அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதில் ஊழல் கோலோச்சுகிறது. இதர பல தொழில் துறைகளைப் போலவே இத்துறையின் நன்மைகளையோ அல்லது சமூகத்தின், நாட்டின் நன்மைகளையோ விட சுய இலாபம் தேடும் மாஃபியாக்களினதும் ஊழல் பெருச்சாளிகளினதும் நன்மைகளே முதன்மைப்படுத்தப்படுகின்றன. ஏற்றுமதிக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படுவதை இம் மாஃபியாக்கள் தடுத்து நிறுத்துவதன் மூலம் அனைத்து பண்ணைக்காரரும் உற்பத்திகளைத் தமக்கே விற்கவேண்டுமென நிர்ப்பந்திக்கிறார்கள். இதன் மூலம் கடலட்டை ஏற்றுமதி வாணிபம் முழுவதையும் தமது கட்டுப்பாட்டிற்குள் இம் மாஃபியாக்கள் வைத்திருக்கின்றன. இதற்குள் சீன நிறுவனங்களும் தமது குறுக்கு வழிகளைப் பிரயோகித்து விலை நிர்ணயத்தை தீர்மானிக்கின்றன. நேரடியாகச் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யாமல் ஹொங் கொங்கினூடாகப் பண்டங்களைக் கடத்துவதால் சீன அரசின் கெடுபிடிகளுக்குள்ளாகி இதனால் அட்டையின் விலை குறைக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்து அட்டையின் உயர் தரம்கடலட்டைகளில் யாழ்ப்பாணத்தின் உற்பத்திகளுக்கு மவுசு அதிகமாகவிருக்கிறது. இங்குள்ள மாசற்ற கடல் நீரும் அதன் போஷாக்கு வளங்களும் இவ்வட்டைகளின் தரத்தைப் பேணுகின்றன. செயற்கை உணவுகளின்றி வளர்க்கப்படும் இவ்வட்டைகள் முற்றிலும் இயற்கையானவை. இதனால் உற்பத்திச் செலவுகளும் குறைவாகவிருக்கிறது. 90% மான உற்பத்திச் செலவு கோபுரமமைத்தல், காவலர் சம்பளம், மின்சார வெளிச்சம் போன்ற பாதுகாப்பு செலவுகளுக்கே போகிறது என்கிறார் ஞானேந்திரன். பெரும்பாலான திருடர்கள் யாரென்பது தெரிந்த விடயம் தான். இவர்களில் சிலர் போதை வஸ்து பாவனையாளர். போதை இவர்களுக்கு அதிக நீச்சல் பலத்தைக் கொடுக்கிறது. திருடப்பட்ட கடலட்டைகளை இவர்கள் அரை விலைக்கு விற்கிறார்கள். இவற்றை வாங்குபவர்கள் மேலும் சந்தை விலைகளைச் சரியவைத்துவிடுகிறார்கள். திருடர்களைப் பிடித்து பொலிஸில் கையளித்தால் இவர்களது குற்றம் வன்முறை சாராமையால் அவர்கள் மீது தம்மால் நடவடிக்கை எடுக்கமுடியாது எனப் பொலிசார் கைகளை விரித்து விடுகிறார்கள். பிணையில் விடுவிக்கப்பட்ட திருடர்கள் மீண்டும் திருட்டில் ஈடுபடுகிறார்கள். காவற் கோபுரத்திற்கு மின்சார வழங்கிகளை தருபவர்களுக்கும், டீசல் போன்ற எரிபொருள் வழங்குபவர்களுக்குமே இலாபம் அதிகரிக்கிறது. சந்தர்ப்பம் கடலுணவு மற்றும் கடலட்டை உற்பத்திக்கு வடக்கில் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. இலாப நோக்கைக் கொண்ட முதலீட்டாளர்களுக்கும், வியாபார முகவர்களுக்கும், தரமான உற்பத்திகளைக் கொள்முதல் செய்ய விரும்புபவர்களுக்கும் வடக்கு அரிய வாய்ப்புகளை அளிக்கிறது. இத்தொழில் பற்றிய பூரண அறிவை வளர்த்துக்கொண்ட முகவர்களும் அவர்களது திறமைகளில் நம்பிக்கை வைக்கக்கூடிய முதலீட்டாளர்களும் இணையும்போது தான் இத்தொழிலுக்கான உண்மையான வெகுமதி கிடைக்கும். இத்தரமான யாழ்ப்பாண உணவை உலகின் தரமான உணவகங்களில் பரிமாறுவதற்கு ஏதுவாக இருக்கும் உணவகங்களுக்கும், அங்காடிகளுக்கும்கூட இது ஒரு வகையில் வெகுமதியாகவே அமையும். ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆய்வின்படி இலங்கையின் 40% மான கடற்கரை வடமாகாணத்தில்தான் இருக்கிறது. மீன்பிடி, சுற்றுலா, விளையாட்டு எனப் பல சந்தர்ப்பங்களை வழங்கக் காத்திருக்கும் பாவிக்கப்படாத வளங்கள் இங்குதான் இருக்கின்றன. இலங்கையின் மிக வறுமையான மாகாணங்களில் ஒன்றான வடக்கில் தான் இவ்வாய்ப்பு இருக்கிறது என்பது அதிசயமானதே. ஞானேந்திரனுடனான தொடர்புகளுக்கு: Mobile and WhatsApp: +94 77 293 7949 Email: Victoria.aquapvt@gmail.com ஞானேந்திரனின் நிறுவனங்கள்: Sea food: Victoria International (Pvt) Ltd Sea cucumber: Victoria International Aqua Pvt Ltd இக்கட்டுரை March 27, 2025 இல் வெளியான லங்கா பிஸினெஸ் ஒன்லைன் பத்திரிகையில் ஆங்கிலத்தில் வெளியானது. தமிழாக்கம் த.சிவதாசன் |கடலட்டை ஏற்றுமதி: யாழ்ப்பாணத்தின் வசப்படுத்தப்படாத வாய்ப்...வளரும் வடக்கு ஜெகன் அருளையா திரு.ஞானேந்திரன் யாழ்ப்பாணத்தின் மானிப்பாய்க்கு அருகேயுள்ள நவாலியைச் சேர்ந்தவர். ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் 1975 இல் பிறந்த அவர் மூன்றாம் வகுப்பு முதல் க.பொ.த. உயர்தரம்...
  3. போனை நோண்டுவதால் வந்த வினை. தூங்குவதற்கு 2 மணித்தியாலங்களுக்கு முன் மேற்படி புத்தன் சொன்ன கருவிகளை (GADGETS)நிறுத்தி விட வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது மருத்துவ உலகால்.
  4. தந்தை செல்வா தான் தமிழீழ கோரிக்கையை முன் வைத்தவர் என நினைக்கிறேன். தந்தை செல்வாவுக்கும் ,மே தகுவுக்கும் கடைசிப்பெயர் வேலுப்பிள்ளை என்பது ஆச்சரியமளிக்கிறது.
  5. யாரும் எதையும் முகப்புத்தகத்தில் எழுதலாம். மகிந்த குடும்பம் அல்லது அவரது அமைச்சரவையில் இருந்தவர்கள் பெரும்பாலானோர் புலிகளை வெறுத்தவர்கள். புலிகளின் இலக்காக இருந்தவர்கள். கருணாவை சாட்டி தப்ப முயல்கிறார்கள். அதற்காக கருணா நல்லவர் என்பதல்ல. பாலசந்திரனை கொல்ல கோத்தபய தான் அனுமதி கொடுத்ததாக சொல்லப்படுகிறது. ஒட்டுக்குழுவை உருவாக்கி அவர்கள் மூலம் தமது இலக்கை அடைய தொடக்கம் முதல் இறுதி வரை சிங்களம் தான் தப்ப முயன்றது வரலாறு.
  6. இருவரும் வாய் தர்க்கத்தில் ஈடுபட்ட வேளை யாரோ இருவரின் மைக்கை நிப்பாட்டும் படி கேட்டார். யாரென்று தெரியவில்லை. இளங்குமரனுக்கு அருகில் இருப்பவருக்கு காதால் புகை வந்திருக்கும். 😄
  7. நீதி அமைச்சராக கனடாவில் பதவியேற்று ஒரு சில நாட் களிலேயே கரி ஆனந்தசங்கரி இன்னும் என்னவெல்லாம் செய்ய போகிறார் என நினைக்கும் போது நெஞ்செல்லம் பட பட என அடிக்கிறது.🙂
  8. இளையவர்களுக்கு கிறிக்கட் கிளப்புகளை உருவாக்கியவர் இவர் தானே. (கஸ்டப்பட்ட இளைஞர்களுக்கு)
  9. இப்படி கூறும் பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகள் போர் குற்ற விசாரணைகளை முன்னெடுக்க முயலாதது ஏன்? சிறிலங்கா அரசு குற்றமிழைத்தது. கட்டாயம் அவர்கள் வர மாட்டார்கள். நொண்டி சாட்டு சொல்வார்கள். உள்ளக விசாரணை என காலத்தை இழுத்தடித்து பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை மடையர்கள் ஆக்குகிறார்கள். அதற்கு ஏற்றாற் போல எமது அரசியல்வாதிகளும் வாய்த்து இருக்கிறார்கள்.
  10. இவர்களுக்கு கட்டளை இட்ட சரத் பொன்சேகா, கோத்தபய அடுத்த பட்டியலில் வர வேண்டும். அலி சப்ரி, சரத் வீரசேகர அளவுக்கு துள்ளுகிறார். கரி ஆனந்தசங்கரி மேற்படி செயலை பாராட்டியதாக அறிந்தேன்.
  11. மகிந்தவின் B team தான் ஜே வி பி . மகிந்தவுக்கு எதுவும் நடக்காது.🙂
  12. இவர்கள் தான் மிக மும்முரமாக தமிழர் நிலங்களை அபகரிப்பது மட்டுமில்லாமல் புத்த கோவில்களை கட்டுவதற்கும் பொறுப்பாக உள்ளவர்கள். மிக திட்டமிட்டே இவர்கள் செயற்படுகிறார்கள்.
  13. கிழக்கைத் துண்டாடி சிங்களவர்களுக்கு தாரைவார்க்கவே கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு! [Monday 2025-03-24 06:00] http://seithy.com/siteadmin/upload/srineshan-061224-seithy.jpg கிழக்கு தமிழர் கூட்டமைப்பானது கிழக்கு தமிழர்களின் பலத்தினை குறைக்கின்ற, வடகிழக்கு பிரிவினை ஏற்படுத்தி பிரித்தாளும் ஒரு கூட்டமைப்பாகவே இருக்கின்றது என இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழு பேச்சாளருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார். கிழக்கை பிரித்து துண்டாடி பெரும்பான்மை இனத்தவர்களுக்கு தாரை வார்த்து கொடுக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த அவர், "கூட்டமைப்பாக உருவாகினால் அது நல்ல கூட்டமைப்பாக இருக்கவேண்டும். நாங்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்பட்டவர்கள். ஊழல், மோசடி, இலஞ்சம், கொலை, கொள்ளை, கடத்தல், கப்பம் வாங்குதல் போன்ற செயற்பாடுகளுக்கு எதிரானவர்கள் நாங்கள். ஆனால் கடந்த காலத்தில் ஒரு கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது பிள்ளையான், கருணா, வியாழேந்திரன் போன்றோர் இணைந்து கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்பதனை உருவாக்கி இருப்பதாக ஊடகங்கள் மூலமாகவும் உங்களது கேள்விகள் மூலமாகவும் நான் அறிந்து கொண்டேன். ஆனால் நான் சொல்ல வருகின்ற விடயம் என்னவென்றால் நீதிமன்ற தீர்ப்பு ஒன்று கூறப்பட்டிருக்கின்றது. அண்மையில் நீங்கள் பார்த்திருப்பீர்கள் அந்த நீதிமன்ற தீர்ப்பு சொல்லப்பட்ட விடயத்தை அவ்வாறே கூறுகின்றேன். பிள்ளையான் குழுவைச் சேர்ந்த நால்வருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கின்றது. நாங்கள் சொல்லவில்லை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்றது. ஆகவே கூட்டமைப்பு அமைப்பது என்பது சாதாரண விடயமாக இருக்கலாம். ஆனால் அந்த கூட்டமைப்புக்கு உரியவர்கள் கடந்த காலத்தில் என்ன செய்திருக்கின்றார்கள் என்பதை பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டும். ஒரு காலத்தில் ஒரு விடுதலை போராட்டம் என்பதனை உரிமையோடு போராடிய ஒரு கட்டமைப்பில் இருந்தவர்கள். ஒரு கட்டத்தில் அந்த இயக்கத்தை பிளந்து கொண்டு வந்து அந்த இயக்கத்தை காட்டி கொடுத்தவர்கள் என்று கூட சொல்லுகின்றார்கள் மக்கள். ஆகவே இவ்வாறானவர்கள் சேர்ந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்குகிறார்கள், அதுவும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு என்று கூறுகின்றார்கள். கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்றால் வடக்கு கிழக்கில் தமிழர்கள் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். வடக்கு கிழக்கில் நாங்கள் இணைந்து செயல்படுகின்ற போதுதான் நாங்கள் ஒரு பலம் பொருந்திய சக்தியாக இருக்க முடியும். மாறாக கிழக்கு என்றும், வடக்கு என்றும், மலையகம் என்றும், மட்டக்களப்பு என்றும், யாழ்ப்பாணம் என்றும் நாங்கள் பிரிந்து செயல்படுகின்ற போது எங்களுடைய பலமான சக்தியை அழிக்கின்ற செயற்பாடாக தான் இருக்கும். ஆகவே கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்று உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு தமிழர்களின் பலத்தை குறைக்கின்ற அல்லது வடக்கு கிழக்கு என்று பிரிவினையை ஏற்படுத்தி பிரித்தாளுகின்ற ஒரு கூட்டமைப்பாக இருக்கின்றது. கடந்த காலத்தில் ஒருவர் அம்பாறை மாவட்டத்தில் போட்டி போட்டு அங்கு தமிழ் பிரதிநிதியாக வரவேண்டிய கோடீஸ்வரன் அவர்களின் வெற்றியை தடுத்து அதாவுல்லாவின் வெற்றியை உறுதிப்படுத்தியவர் தான் இப்போது இந்த கூட்டமைப்பில் வந்து சேர்ந்திருக்கின்றார். கடந்த காலத்தில் பல்வேறுபட்ட தவறான செயற்பாடுகளில்,அதாவது லஞ்சம் வாங்குகின்ற செயல்பாடுகள் மற்றும் கையூட்டு வாங்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் என்று போலீசாரால் கைது செய்யப்பட்டவர்களின் கட்சிகள் கூட இதில் இணைந்திருக்கின்றது. எனவே கொலை, கொள்ளை, கப்பம், கடத்தல், காணாமல் ஆக்குதல், திருட்டு, லஞ்சம், தரகு போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டவர்கள் பற்றி மக்கள் அறிவார்கள். எனவே இந்த கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களுக்கு நன்மை செய்கின்ற கூட்டமைப்பு என்பதை விட பேரினவாத்திற்கு துணை போகின்றவர்கள் எனலாம். கடந்த காலத்தில் பெரும்பான்மை இன பேரிடவாதத்திற்கு துணை போய் அங்கு பிரதி அமைச்சர்களாக இருந்தவர்கள் முதலமைச்சராக இருந்தவர்கள்,ராஜாங்க அமைச்சர்களாக இருந்தவர்கள் அனைவரும் இணைந்து இருக்கிறார்கள். ஆகவே தமிழ் மக்கள் மிகவும் தெளிவாக விளங்கிக் கொள்வார்கள். கடந்த காலத்தில் தவறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள்,மக்களின் கடத்தலோடு சம்பந்தப்பட்டவர்கள்,காணாமல் ஆக்குதலோடு சம்பந்தப்பட்டவர்கள் என்று பல்வேறு பட்டவர்கள் இணைந்து செயல்படுகின்ற போது நிச்சயமாக இது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு செயற்பாடாக அமையும். ஆகவே, நீதிமன்ற தீர்ப்புகள் சட்ட நடவடிக்கைகள் என்று எல்லாம் இருக்கின்றது. இவற்றையெல்லாம் ஒட்டுமொத்தமாக பார்க்கின்றபோது இந்த கூட்டமைப்பால் தமிழ் மக்களுக்கு எதுவித பிரயோசனமும் இல்லை. இவர்கள் கிழக்கை பிரித்து துண்டாடி பெரும்பான்மை இனத்தவர்களுக்கு தாரை வார்த்து கொடுக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள். குறிப்பாக மாதவனை மைலத்தமடு இடங்களில் பெரும்பான்மை இணைத்தவர்கள் அத்துமீறி குடியேறிய போது ஒரு சத்தமும் போடாதவர்கள் தான் இந்த கிழக்கு தமிழர் கூட்டமைப்பில் இருக்கின்றார்கள். அது ராஜகா அமைச்சர்களாக இருந்தால் என்ன,பிரதி அமைச்சர்களாக இருந்தால் என்ன மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்ற போது ஒரு சத்தமும் போடாமல் இருந்து கொண்டு தரகு மற்றும் லஞ்சங்களை பெற்றுக்கொண்டு இருக்கின்றவர்கள் இந்த கூட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் நிச்சயமாக தமிழ் மக்களுக்கு எந்த பலனும் கிடைக்காது. ஆகவே, மக்கள் இந்த கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்பதற்கு வாக்களிக்க கூடாது வாக்களிக்க மாட்டார்கள் என நான் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறேன். கிழக்கு மாகாணத்தை பொருத்தவரையில் நாங்கள் எந்த ஒப்பந்தங்கள் உடன்படிக்கைகளில் இதுவரையில் கைச்சாத்திடவில்லை. அவ்வாறு இடம்பெறவும் இல்லை. நான் அறிகின்றேன் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனியாக கேட்கின்றார்கள் நாங்களும் தனியாகத்தான் கேட்கின்றோம் எந்தவித ஒப்பந்த செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை. வடக்கில் அவ்வாறான செயல்பாடுகள் இடம்பெறுகின்றதா என அறிவித்தாயின் நாங்கள் நிச்சயமாக அந்த சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது அங்கு இருக்கின்ற கட்சியின் நிர்வாகத்தோடு தொடர்புடைய செயலாளர்களோடு அல்லது தலைவர்களோடு உரையாடுகின்ற போது அறியலாம் நான் நினைக்கின்றேன். அவ்வாறு கிழக்கில் இடம்பெறவில்லை அவ்வாறான ஒப்பந்தமும் செய்யவில்லை. வடக்கிலும் குறிப்பாக யாழ் மாவட்ட மாவட்டத்திலும் செய்யக்கூடிய வாய்ப்புகள் இல்லை அவ்வாறு இல்லை என்றால் நான் நினைக்கின்றேன் வன்னி மாவட்டத்தில் அவ்வாறு ஏதேனும் நடைபெற்று இருந்தால் நாங்கள் அதனை கேட்டு தான் அறிய வேண்டும் இதுவரைக்கும் நான் அவ்வாறான விடயத்தை அறிந்து கொள்ளவில்லை. மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்கின்றபோது நான் நினைக்கின்றேன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒரே இடத்தில் சந்தித்தபோது நிழல் படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றது. அந்த நிழல் படங்களை வைத்துக்கொண்டு ஒப்பந்தங்கள் செய்ததாக தவறான கருத்துக்கள் கூறப்பட்டிருக்கின்றது. சில சந்தர்ப்பத்தில் சக பாராளுமன்ற உறுப்பினர்கள் என்கின்ற அடிப்படையில் சந்திப்போம் கைகளை கொடுப்போம் தோளில் தட்டி விட்டு வருவோம் இவ்வாறான விடையங்களை வைத்துக்கொண்டு சிலவேளைகளில் தவறான வதந்திகளை பிறக்கின்ற ஒரு செயல்பாடுகள் காணப்படுகின்றது. நிச்சயமாக கூறுகின்றேன் அவ்வாறான தமிழரசு கட்சியும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் ஒப்பந்த ரீதியாக எதுவும் செய்யவில்லை. இது வெறுமனே ஒரு வதந்தியான செயல்பாடாக தான் பார்க்கின்றேன.; அது நிழல் படம் என்பது கதைக்கின்ற போது கை கொடுக்கின்ற போது சில புரளிகளை ஏற்படுத்துவதற்காக படங்களை பிடித்து போடுவார்கள் அது படம் தானே தவிர அதை எதுவிதமான அர்த்தமும் இல்லாத விடயம். பட்டலந்த சித்திரவதை முகாம் என்பது உண்மையில் நடைபெற்ற விடயம் என்பதற்கான ஆதாரம் இப்போது பதிவுகளிலும் பேச்சுக்களிலும் வந்துவிட்டது. ஆகவே அதற்குரிய நடவடிக்கைக்கு முன் ஆயத்தமாக வருகின்ற ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி பாராளுமன்றத்தில் ஒரு விவாதம் இடம்பெற இருக்கின்றது. அந்த விவாதத்தில் நாங்களும் கலந்து கொள்ள இருக்கின்றோம். ஆகவே, பட்டலந்தயில் சிங்கள இளைஞர்கள் ஜேவிபி இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள் சித்திரவதை செய்யப்பட்டார்கள் என்று எல்லாம் சொல்லப்படுகின்றது அதேபோன்று 88 89 காலப்பகுதியில் இந்த வேலைகளை செய்தவர்கள் 90 ஆம் ஆண்டு பிரச்சனைக்கு பின்னர் இதே போன்ற சித்திரவதைகள் கரடியினாறு முகாமாக இருக்கலாம் அல்லது கல்லடியாக இருக்கலாம் முறக்கொட்டான்சேனை, நாவலடி, கொன்டவெட்டுவான், சத்ருகொண்டான் போன்ற பல கிராமங்களில் சித்திரவதைகளும் கொலைகளும், பாலியல் பலாத்காரங்களும் தாராளமாக நடைபெற்று இருக்கின்றது. சத்துருக்கொண்டானை எடுத்துக் கொண்டால் ஒரே நாளில் சுற்றி வளைப்பு செய்து கொக்குவில் சத்துருக்கொண்டான் பணிச்சையடி பிள்ளையாரடி போன்ற கிராமங்களை சேர்ந்த 186 அப்பாவி தமிழ் மக்களை அதிலும் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் இவர்களை எல்லாம் அள்ளிக் கொண்டு சென்று சத்துருக்கொண்டான் முகாமில் அன்று இரவு படுகொலை செய்தார்கள் அதிலும் குழந்தை பிள்ளைகளை அங்கிருந்து தப்பி வந்த ஒருவர் கூறிய சாட்சியதின்படி வளைந்து இருந்த முந்திரிகை மரத்தின் மீது அவ்வாறே குழந்தைகளை வைத்து கத்திகளால் துண்டு துண்டுகளாக வெட்டி போட்டதை அவர் கண்டிருக்கின்றார். இவ்வாறு எல்லாம் படு மோசமான பாவகரமான செயல்கள் சத்துருகொண்டான் முகாமில் மாத்திரம் அல்ல கிழக்கு பல்கலைக்கழகத்திலும் 180 க்கும் மேற்பட்டவர்கள் அவ்வாறு ஏற்றிச் செல்லப்பட்டு நாவலடி முகாமில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கின்றார்கள். எனவே பட்டலந்த முகாம் மாத்திரமல்ல வடக்கு கிழக்கில் அனேகமான படை முகாம்களில் இவ்வாறான சித்தரவதைகள் இடம் பெற்று இருக்கின்றது எனவே அதற்குரிய நடவடிக்கைகளையும் இந்த அரசாங்கம் செய்தால்தான் அவர்களை நாங்கள் சமத்துவவாதிகள் என்று கூறுவோம். அவர்கள் சமத்துவவாதிகள் என்றால் சட்டத்தின் முன்னிலையில் சிங்களவர்கள் முஸ்லிம்கள் தமிழர்கள் பரங்கியர்கள் மலாயர் அனைவரும் சமம் ஆகவே சட்டத்தின் மூலமாக அப்பாவிகளை பாதுகாக்க வேண்டியதும் குற்றம் செய்தவர்களை தண்டிக்க வேண்டியதும் அரசின் கடமை. ஆகவே பட்டலந்த முகாம் நியாயத்தின் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது அது போன்று வடக்கு கிழக்கில் இருந்த முகாம்களில் இடம் பெற்ற அனைத்து சித்திரவதைகளும் படுகொலைகளும் காணமலாக்கப்பட்டதும் சந்திக்க வரவேண்டும் வெளிச்சத்துக்கு வரவேண்டும் என்பது எங்களுடைய விருப்பம். அதனை நாங்கள் பாராளுமன்றத்தில் பிரதிபலித்துக் கொண்டே இருப்போம்." என்றார். http://seithy.com/breifNews.php?newsID=331045&category=TamilNews&language=tamil
  14. மக்களுக்கு சேவை செய்ய தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதில்லை தோழர்.
  15. வியாழேந்திரனும் எனும் போது நம்பாமல் இருக்க முடியவில்லை.
  16. அமைச்சர் சந்திரசேகர் ஒரு ப**ச்சைத் துரோகி: இவரை யாழ்ப்பாணத்தை விட்டு தமிழ் மக்கள் விரட்டுங்கள்: பிரபாகரன் புலி என்று இப்போது நன்றாக நடித்து வருகிறார். மினிஸ்டர் சந்திரசேகர் விமலோடு இருக்கும் போது தமிழ் துரோகியாக இருந்தார்: இப்போது திருந்தி விட்டார்: யார் சொன்னது- அவரே சொன்னார் இந்த ஆர்ப்பாட்ட வரலாற்றை நாம் சொல்கிறோம் கேளுங்கள், அதாவது யுத்த நிறுத்தம் வேண்டாம் என்று தமிழில் கோசங்களை எழுப்பியவர்தான் இந்த சந்திரசேகர், போராட்டத்தில் 50,000 பேர் கலந்து கொண்டனர், இதில் பெருந்தொகையான புத்த பிக்குகள் இருந்தனர். அத்துடன் பல தமிழ் மக்களை சந்திரசேகர் திரட்டினார் பாலியகொடை பகுதியில் போராட்டக்காரர்கள் திரண்டு, பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லம்" நோக்கி செல்ல தொடங்கினர். ஆனால் பிரதமரின் இல்லத்தை பாதுகாத்திருந்த சிறப்பு பணிப்படை படையினர் மற்றும் காவல்துறையினர், ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையில் போராட்டக்காரர்களை நீர்ப்பீரங்கிகளும் கண்ணீர்ப்புகை குண்டுகளும் பயன்படுத்தி தடுத்து நிறுத்தினர். இந்த நிகழ்வை செய்திக்காக ஒளிப்பதிவு செய்ய சென்ற சில ஊடகவியலாளர்களும் தாக்குதலுக்கு உள்ளாகினர். "தி ஐலண்ட்" பத்திரிகையின் புகைப்பட செய்தியாளர் திரு. எரங்க ஜயவர்தன தாக்கப்பட்டு, கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், அவருடைய மதிப்புயர்ந்த நிகொன் டிஜிட்டல் கேமரா (மொத்த மதிப்பு ரூ. 400,000) முற்றிலும் சேதமடைந்தது. ஜேவிபி, ஐக்கிய தேசிய முன்னணி அரசு மற்றும் விடுதலைப் புலிகள் கையெழுத்திட்ட சமாதான ஒப்பந்தம் ஒரு வருடத்தை நிறைவுசெய்வதை எதிர்த்து இந்தப் பேரணியை ஏற்பாடு செய்தது. முன்னதாக, ஜேவிபியின் பிரச்சார செயலாளர் திரு. விமல் வீரவங்ச செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றும்போது, அவரது கட்சி விரைவில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதிராக ஒரு மிகப்பெரிய பேரணியை நடத்தும் என்று தெரிவித்தார். #awareness Thevarasa Kailanathan
  17. மேலே கூறிய கருத்துக்கள் ( சில) புலிகளின் காலத்தில் ஏன் இங்கு எழுதப்படவில்லை என்பது யாருகாவது ஆச்சரியம் அளிக்கிறதா??
  18. இந்தப் பாடல் காதல் உணர்வுகளை மையமாகக் கொண்டது. தலைவி தன் காதலனை நினைத்துப் பாடுகிறாள். அவளது கூந்தல் அழகும், அவள் பாடும் பாட்டும் அவளது உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. இது சங்க இலக்கியத்தின் எளிமையும், ஆழமும் நிறைந்த பாடலாகும்.
  19. உள்ளம் கொள்ளை போகுதே நீல மலை திருடனில் இருந்து.... அபூர்வ குரலாள் ஜிக்கி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.